இருபதாம் நூற்றாண்டு தீர்க்கதரிசி

53-0800

நன என மனவய அறமகபபடததலம? தன, இத லஸ ஏஞசலஸ, கலபரனயவன சகதரர லரய மறறம பல கப. சகதர பரனஹம கறகறர, "நஙகள எஙகள வடடல இரபபதறகக மகழசசயடகறம, சகதரர கப." சகதரர கப கறகறர, "சக.பரனஹம லஸஏஞசலலளள கலவர ஆலயததல இரணட பரய கடடஙகளலம, கரததரகய இயச கறஸத உஙகளடய வரதத மனதரகளடய இரதயஙகள வகயறககவம, வயதயன நலய வகயறககவம பயனபடததனர. சகமளததலன

இருபதாம் நூற்றாண்டு தீர்க்கதரிசி

53-0800ஜெபர்ஸன்வில் இந்தி / சிகாகோ இல்லி181953-08-01

இருபதாம் நூற்றாண்டு தீர்க்கதரிசி

53-0800ஜெபர்ஸன்வில் இந்தி / சிகாகோ இல்லி181953-08-01

1நான் என் மனைவியை அறிமுகப்படுத்தலாமா? தேனே, இது லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் சகோதரர் லெராய் மற்றும் பால் கோப். [சகோதரி பிரான்ஹாம் கூறுகிறார், "நீங்கள் எங்கள் வீட்டில் இருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறோம், சகோதரர் கோப்."] [சகோதரர் கோப் கூறுகிறார், "சகோ.பிரன்ஹாம் லாஸ்ஏஞ்சலிலுள்ள கல்வாரி ஆலயத்தில் இரண்டு பெரிய கூட்டங்களிலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுடைய வரத்தை மனிதர்களுடைய இருதயங்களை வகையறுக்கவும், வியாதியின் நிலையை வகையறுக்கவும் பயன்படுத்தினார். சுகமளித்தலின் அடையாளங்களும், அற்புதங்களும், செய்யப்பட்டதை கவனித்தோம். அது அற்புதமாய் இருந்தது."] [சகோதரர் கோப் கூறுகிறார், "சகோதரர் பிரான்ஹாம், தேவன் உங்களுக்குக் கொடுத்த இந்த தனித்துவமான ஊழியத்தைப் பற்றி மேலும் அறிய நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்."]

2சகோதரன் கார்ப்ஸ் மிகவும் நல்லது. நாம் ஆரம்ப காலத்திற்கு கடந்து செல்வோம். நான் கிழக்கித்திய கெண்டக்கியிலுள்ள பர்க்ஸ்வில்லிக்கு அருகிலுள்ள ஒரு சிறு மர வீட்டில் பிறந்தேன். ஆனால் நான் பிறந்த காலையில் ஒரு ஒளி அறைக்குள்ளாக வந்து என் மேல் தொங்கியது என்று என் பெற்றோர்களால் கூறப்பட்டேன். என் பெற்றோர்கள் பக்தியானவர்கள் அல்ல!. அவர்கள் சபைக்கு சென்றதே இல்லை. உண்மையிலேயே அந்த ஒளி அவர்களுக்கு மத்தியில் ஒரு கலகத்தை உட்படுத்தியது. அது என் ஜீவியம் முழுவதிலும் பின் தொடர்ந்துள்ளது. அன்மையில் அவர்கள் அதன் புகைப்படத்தை எடுத்தனர். இந்த விஞ்ஞான உலகத்தில் அது மெய்பித்து காட்டப்பட்டது. என் மக்கள் மதவாதிகள் அல்லர். அவர்கள் எந்த சபைக்கும் செல்லவில்லை. இது அவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது என் வாழ்நாள் முழுவதும் என்னைப் பின்தொடர்ந்தது. சமீபத்தில், இங்கே காட்டப்பட்டுள்ளபடி அறிவியல் உலகம் இந்த படத்தை எடுத்தனர். இந்த படம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இதுவரை அறிவியல் பூர்வமாக புகைப்படம் எடுக்கப்பட்ட இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று இது தான் என்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்டது. நீங்கள் அந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்கள். தெய்வீக உருவமானது விஞ்ஞான பிரகாரமாக புகைப்படம் எடுக்கப்பட்டு, விஞ்ஞானத்தின் மூலமாகவே நிரூபிக்கப்பட்டது. என்னுடைய தாழ்மையான கருத்து என்னவெனில், அது எகிப்திலிருந்து பாலஸ்தீனாவுக்கு சென்ற இஸ்ரவேல் புத்திரரை பின் தொடர்ந்த அதே தேவனுடைய தூதனென்று நான் விசுவாசிக்கிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே அந்த உடன்படிக்கையின் தூதனாயிருந்தார் என்பதை வேத பண்டிதராகிய நீங்கள் அறிவீர்கள். அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட போது ஒரு மாமனிதனாக பூமியின் மேல் இருந்ததாக உரிமை கோரவில்லை. அவர், "பிதாவானவர் காண்பிக்கிறதேயன்றி, குமாரன் வேறொன்றையும் செய்யமாட்டார் என்றார். அவன்...

3பரிசுத்த யோவான் 5-ஆம் அதிகாரம். ஒரு வேளை நீங்கள் இந்த வேதவாக்கியத்தை அறிந்திருப்பீர்கள். அங்கே இயேசு அநேக முடமானவர்களும், குருடர்களும், சப்பானிகளான ஜனங்களும் பெதஸ்தா குளத்தண்டையிலே தண்ணீர் கலக்கப்படுவதற்காக காத்திருந்திருப்பதை கண்டார். ஆனால் அவர் ஒருவனுக்கு மாத்திரமே உதவி செய்தார் என்று பார்க்கும் போது வினோதமாக இருந்தது. ஆனால் நீங்கள் கவனிப்பீர்களானால் அந்த நபர் எங்கேயிருந்தான் என்பதை அறிந்திருந்தார். அவர் இந்த வருவனையே சுகப்படுத்தினார். பிதாவானவர் அவளுக்கு காண்பித்திருந்தார். ஒரு வேளை அவன ஊனமுள்ளவனாய் இருந்திருக்கலாம். அவன் ஒரு மரசக்கரத்தின் மேல் படுத்திருந்தான். ஆனால் இயேசு அவனை சுகமாக்கினார். பின்னர் அதே அதிகாரத்தில் உள்ள 19-ஆம் வசனத்தில் யூதர்கள் அவரை கேள்வி கேட்டனர், என்பதை நாமறிவோம். அதாவது தேவன், சப்பானிகளையும் குருடான ஜனங்களையும் மற்றெல்லோரையும் சுகப்படுத்தாமல், ஏன் எல்லோரையும் கடந்து போனார் என்பது ஒரு வேளை இன்றைக்கும் ஒரு கேள்வியாக இருக்கலாம். ஆனால் இங்கே தான் அவருடைய வார்த்தைகளை குறிப்பிடுகிறேன். "அவர், மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்ய, குமாரன் காண்கிறது எதுவோ, அதுவேயன்றி வேறொன்றையும் தாமாக செய்யமாட்டார். அவர் எவைகளை செய்கிறாரோ, அவைகளையே குமாரனும் அந்தப்படியே செய்கிறார் என்றார்.

4ஆகையால் அவருடைய வார்த்தையின்படி, அவருடைய ஊழியம் தம்முடைய பிதாவினடத்திலிருந்து வந்த தரிசனங்களின்படி அடிப்படையாக கொண்டிருந்தது. நான் என் பிதாவினடத்திற்கு போகிறபடியால், "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்" என்று அவர் தம் சீஷர்களிடத்தில் வாக்களித்தபடியே அவருடைய ஊழியம் தொடர்ந்து நடைபெற வேண்டுமல்லவா? "இன்னும் கொஞ்சம் காலத்திலே உலகம் என்னை காணாது, நீங்களோ என்னை காண்பீர்கள்! ஏனெனில் நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும், என்றும் மாறதவராயிருக்கிறார்". இந்நாளில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து தம்முடைய ஜனங்கள் மத்தியில் ஜெபித்துக்கொண்டும், அவர் பூமியின் மேல் இருந்தபோது அவர் செய்த அதே அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இது ஒரு உறுதிப்பாடாய் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். ஏழு வயதில் நாங்கள் கெண்டக்கியிலிருந்து இப்பொழுது நாங்கள் வசிப்பதற்கு அருகான இந்தியானாவுக்கு குடிபெயர்ந்து சென்றோம். நாங்கள் நகரமற்றாருடைய கிணற்றிலிருந்து எங்கள் வீட்டிற்கு தண்ணீர் கொண்டு செல்வோம். ஒரு நாள் செப்டம்பர் மாதம் பிற்பகலில் வீட்டிற்கும் குழாய்க்கும் இடையே சுமார் பாதி தூரத்தில் நான் ஒரு பெரிய செண்டுலிங்க மரத்தை கடந்தேன்.

5அப்பொழுது அந்த மரத்தில் ஒரு சுழல் காற்று இருந்தது. நாங்கள் இங்கு அதை சுழல் காற்று என்றே அழைப்போம். அது செப்டம்பர் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாகவே இருந்தது. அது இடம்விட்டு அகலவில்லை. நான் அதை பார்ப்பதற்கு நின்றேன். அதிலிருந்து ஒரு சத்தம் புகைக்காதே, குடிக்காதே, எந்த வழியிலும் உன்னுடைய சரீரத்தை கறைப்படுத்திக் கொள்ளதே! ஏனெனில் உனக்கு வயதாகும் போது நீ செய்ய வேண்டிய ஒரு ஊழியம் இருக்கும் என்று உரைத்தது. நான் திகிலடைந்து துரிதமாக வீட்டிற்கு ஓடினேன். ஒரு மரத்திலிருந்து ஒரு மனிதன் என்னிடம் பேசினாரென்று நான் என் தாயாரிடம் கூறினேன். அவளோ நான் நரம்பு கோளாறு உடையவனென்றும், என்னை படுக்கையில் படுக்க வைக்க வேண்டுமென்று நினைத்தாள். அப்பொழுதிலிருந்தே தரிசனங்கள் வந்தன. இது என் மீது வருகிற போது அது ஒரு தரிசனத்தை தோற்றுவிக்கிறது. நான் ஜனங்களுக்கு அவர்களோடு உள்ள கோளாறு என்னவென்றும் அவர்களுடைய பாவங்கள் என்னவென்றும், அவர்கள் என்ன செய்யவேண்டும் என்றும் கூற முடியும். முப்பத்தேழாவது வயதிலே நான் என் அறையில் ஓர் இரவு ஜெபித்துக் கொண்டிருந்தேன். நான் எழும்பின போது, ஒரு ஒளி தரையின் மீது இருப்பதை கவனித்தேன். அது எங்கிருந்து வருகிறது என்று சுற்றிலும் நோக்கிப் பார்த்தபோது, அது சற்று மேலே தொங்கி கொண்டிருந்த அக்கினி ஸ்தம்பத்திலிருந்து வந்துக் கொண்டிருந்தது. நான் யாரோ ஒருவர் நடந்து வருவதை கேட்டேன். சுமார் 200 பவுண்டுகள் எடையுள்ள மனிதன், அந்த அறையின் வழியாக அந்த வெளிச்சத்தினன்டைக்கு வந்தார். அவர் வெறுங்காலாய், பொன் பழுப்பு நிறத்தோற்றமுடையவராய் இருந்தார்.

6அவரது தோள்பட்டைவரை கறுத்த முடி இருந்தது உண்மையாகவே நான் திகிலடைந்தேன். அவர் பயப்படாதே என்றார். அது எப்பொழுதுமே என்னிடம் பேசினதான அதே சத்தம் என்பதை அடையாளங்கண்டு கொண்டேன். ஆனால் முதல் முறையாக மனித ரூபத்தில் அவரைக் கண்டேன். அவர் நீ வியாதியுள்ள ஜனங்களுக்காக ஜெபிக்க வேண்டுமென்று கூறும்படியாக தேவனுடைய சமூகத்திலிருந்து அனுப்பப் பட்டிருக்கிறீர். மகத்தான அடையாளங்கள் உம்முடைய ஊழியத்தை பின் தொடர, நீ ராஜாக்களுக்கு ஜெபிப்பாய் என்றார். நான் ஒரு ஏழ்மையான மனிதன், கல்வியறிவு அற்றவன். நான் அந்த பணியை செய்யக்கூடியவனாய் இருக்கமாட்டேன். என்று கூறினேன். "அவர் மோசே தன் ஊழியத்தை உறுதிப்படுத்த இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்பட்டது போல, எனக்கு இரண்டு அடையாளம் கொடுக்கப்படும். ஒன்று வியாதியஸ்தருக்காக ஜெபித்தல், மற்றொன்று இருதயங்களை வகையறுத்தலாய் இருக்கும்" என்றார்.

7நான் இதைக் குறித்து ஜெபித்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஜனங்களோ அது பிசாசு என்று கூறியிருந்தனர் என்ற்று நான் அவரிடம் கூறினேன். அவர் எனக்கு அநேக வேதவாக்கியங்களை சுட்டி காண்பித்தார். அதாவது, அங்கே பிலிப்பு, நாத்தான்வேலிடத்தில் கூறினதையும், பிலிப்பு அவனைக் கண்டபோது, அவர் மரத்தின் கீழ் இருந்தானென்று இயேசு அவனுக்கு கூறிய வேத வாக்கியங்களை அவர் எனக்கு சுட்டி காண்பித்தார். கிணற்றன்டையில் இருந்த ஸ்திரீயைக் குறித்து அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்களென்று இயேசு அவளுக்கு கூறினதையும், அவள் ஊருக்குள்ளே ஓடி, இது கிறிஸ்து என்று கூறினதையும் மற்றும் அநேக மற்ற வேத வாக்கியங்களையும் சுட்டி காட்டினார். நான் "செல்வேன்" என்று நான் அவரிடம் கூறினேன். அவர் எப்பொழுதும் என்னோடிருப்பதாக அவர் என்னிடம் உறுதியளித்தார். சகோதரன்.கார்ப்ஸ் இந்த ஊழியத்தில் மகத்தான காரியங்கள் சம்பவிப்பதையும் குறித்து நீங்களும் இந்த உலகமும் அறிந்திருக்கிறீர்கள்.

8நான் நீண்ட காலத்திற்கு முன்பு உண்டான தரிசனங்களை நினைவு கூர்ந்தால் நாம் வியப்படைவோம். நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு சிறு பையன் ஒரு காரினால் மோதப்பட்டு, சாலையின் ஓரத்தில் மரித்து கிடந்து மரணத்திலிருந்து எழுப்பட்டிருந்ததைக் குறித்து ஒரு தரிசனம் எனக்கு உண்டாயிருந்தது. நான் அதைக்குறித்து கனடாவிலும் மற்றும் ஐக்கிய நாடுகளிலும் ஒவ்வொரு வருடமும் தீர்க்கதரிசனமாய் கூறினேன். அவர்கள் அதை ஆயிரக்கணக்கானோர் வேதாகமத்தில் எழுதி வைத்தனர். ஒரு நாள் நாங்கள் ஸ்கேண்டினேவியா தேசத்தில் நடந்த கூட்டங்களை முடித்துக்கொண்டு பின்லாந்தின் வழியாக வருகையில், ஒரு கூட்ட ஜனங்கள் சாலையின் ஓரத்தில் ஒன்று கூடியிருந்தனர். அவர்கள் ஒருவிதமாக பதட்டம் அடைந்த நிலையில் இருந்தனர். அது எனக்கு காண்பிக்கப்பட்ட விதமாகவே அந்த சிறு பையன் அங்கிருந்தான். நான் சகோதரன் மூரிடம் உங்களுடைய வேதாகமத்தை பாருங்கள். இது அந்த தரிசனம் இல்லையா? என்று பாருங்கள் என்றேன்

9அவர் ஆம் என்றார். நான் கீழே முழங்கால் படியிட்டு, அவர் எனக்கு காண்பித்திருந்த அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தராகிய இயேசுவிடம் கேட்டேன். நம்முடைய கர்த்தரால் அந்த சிறுவன் ஜீவனுக்கு கொண்டு வரப்பட்டான். இன்றைக்கு அவன் உயிரோடிருக்கிறான். சகோதரன்.கார்ப்ஸ், அவர் எனக்களித்த இந்த ஊழியத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசு அதாவது ஒரு சில காரியங்களை செய்து கொண்டிருக்கிறார். நாம் அவைகள் சம்பவிக்கிறதை கவனித்துக் கொண்டிருக்கிறோம். அது அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்துவதாய் இருக்கிறதே என்பது எனது தாழ்மையான கருத்தாகும். சகோதரன். கார்ப்ஸ் நான் இஸ்ரவேலில் நம்முடைய கர்த்தருக்கு ஊழியம் செய்ய மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பேன். என்னுடைய ஊழியம். யூதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். யூதர்கள் அடையாளத்தைத் தேடுகிறார்கள், கிரேக்கர்கள் ஞானத்தை தேடுகிறார்கள் என்று வேதம் கூறுகிறது.

10["அநேக யூதர்களும் மற்றும் புனித தேசத்தில் உள்ள மற்றவர்களும், ஒரு கிறிஸ்தவன் யோவேலின் தீர்க்கதரிசினத்தை நிறைவேற்றுவதை காணும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மேசியா என்று விசுவாசிக்க நேரிடுமென்று நாங்கள் விசுவாசிக்கிறோம்."] ஆம், சகோதரன்.கார்ப்ஸ், கடைசி நாட்களில் அவர் தம்முடைய ஆவியை மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவார். குமாரரும், குமாரத்திகளும், தீர்க்கதரிசினம் சொல்லுவார்கள். மூப்பர் சொப்பனங்களையும், வாலிபர்கள் தரிசனங்களையும் காண்பவர்கள். என்று யோவேல் 2:28-யை குறித்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் உறுதியாய் நம்புகிறேன். [சகோதரன்.கார்ப்ஸ் கூறுகிறார், "சரி, சகோதரர் பிரான்ஹாம் இப்பொழுது நாங்கள் பிரியாவிடையுடன் வாழ்த்துக்கள் கூற வேண்டியுள்ளது. இது மனமகிழ்ச்சியாய் உள்ளது. தேவசித்தத்தினால் அடுத்த சில தினங்களில் நாங்கள் உங்களை சிக்காகோவில் காண்போம்."]

11பெருந்தகையோரே! இன்றிரவு எங்களுடைய வீட்டில் நீங்கள் இருந்தது மனமகிழ்ச்சியாய் இருந்தது. நாங்கள் ஒன்று சேர்ந்து சிக்காக்கோ கூட்டத்திற்காக ஜெபத்துடன் கொண்டிருப்போம். தேவனுடைய கிருபையினால் நான் அங்கு உங்களை சந்திக்க மகிழ்ச்சியாய் இருக்கிறேன். [சகோதரி மேடா பிரான்ஹாம் கூறுகிறார், "நீங்கள் நீங்கள் செல்வதற்கு முன் கொஞ்சம் தேநீர் அருந்துவீர்களா?"] [சகோதரன்.கார்ப்ஸ் கூறுகிறார், "சகோதரி.பிரன்ஹாம் உங்களுக்கு மிகவும் நன்றி. அது சரியாகிவிடும்." சகோதரர் லெராய் கோப்பும் அவரது மகன் பால் கோப்புக்கும் "நன்றி" என்று கூறுகிறார்கள்.] நன்றி தேனே. சிக்காக்கோ கூட்டம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும்படி உதவி செய்ய என்னிடத்தில் அனுப்பப்பட்டிருக்கும் தேவனுடைய தூதனானவர், நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து இரண்டு அடி தூரம் கூட இல்லை. நீங்கள் என்னை அவருடைய ஊழிக்காரன் என்று விசுவாசித்தால் நீங்கள் என் வார்த்தையை ஏற்றுக்கொள்வீர்கள். நான் அதை நீங்கள் விசுவாசிக்கும்படி செய்ய முடியாது. நீங்களே காண வேண்டும். ஆனால் இப்பொழுது அவர் மேடையின் மீது இருக்கிறார். ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள். இவர்கள் வியாதியுள்ள ஜனங்கள். இந்த சீமாட்டி எனக்கு அந்நியர் என்று கூறுகிறாள். நான் என் ஜீவியத்தில் கண்டேதேயில்லை. அவளைக் குறித்து அறிவதற்கான வழியே இல்லை. நான் அவளை இரட்சிக்க முடியாதது போலவே, நான் அவளை சுகமாக்கவும் முடியாது. ஆனால் இயேசுகிறிஸ்து கல்வாரியில் மரித்த போது எல்லாவற்றையும் ஏற்கனவே செய்து விட்டார்.

12அவர் தம் சபைக்கு வரங்களை அனுப்பினார், அது உண்மைதானே! அது உண்மைதான் என்றால் ஆமென் என்று கூறுங்கள். [சபையார் சொல்கிறார்கள், "ஆமென்."] அந்த வரங்கள் (என்ன?) சபையை பக்திவிருத்தியடைய செய்யவே. அவிசுவாசிகள் உள்ளே வந்து அது உண்மை என்று சொல்வதற்காகவே! நீங்கள் ஏதோ அன்னிய பாணியில் பேசிக் கொள்ளும் போது, அங்கே அவிசுவாசிகள் உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களை பைத்தியம் பிடித்தவர்கள் என்று கூறுவார்களே!, ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனங்களை சொல்லி, இருதயத்தின் அந்தரங்கங்களை வெளிப்படுத்துகையில் அவிசுவாசியானவன் காண்கையில் மெய்யாகவே தேவன் உங்களோடிருக்கிறார் என்று கூறுவானல்லவா? என்று வேதம் கூறியுள்ளது.

13இப்பொழுது நீங்கள் முழு இருதயத்தோடு தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை தாம் வாக்களித்த காரியங்களை செய்ய இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சீமாட்டியே! நான் சற்று உங்களிடம் பேச விரும்புகிறேன். உங்களுடைய ஆவியோடு தொடர்பு கொள்ளவே நான் இதை செய்துக்கொண்டிருக்கிறேன். இதை முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? உம்மோடு உள்ள கோளாறு தேவன் எனக்கு வெளிப்படுத்தி காட்டினால், நீங்கள் அவரை சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். இப்பொழுது நாம் அந்நியர்கள். நாம் அந்நியர்கள் தானே! நாம் ஒருவரையொருவர் ஜீவியத்தில் கண்டது இல்லை. ஆனால் உங்களோடு உள்ள கோளாறு என்ன என்பதை தேவன் அறிந்திருக்கிறார். உங்களுக்கு இரத்த சோகை உள்ளது. சரிதானே? தேவன் உங்களை சுகப்படுத்துவார் என நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவே இந்த ஸ்திரீயை சுகமாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். பிதாவே, அவளை குணப்படுத்தும். அவள் முழுவதும், பூரணமாக குணமாக்கப்படுவாளாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.

14இப்பொழுது களிகூர்ந்து கொண்டே ஜெபியுங்கள். அது உன்னோடு இருந்த கோளாறு என்ன என்பதை என்பதை கூறினார். அவர் என்ன கூறுகிறார் என்பதை கவனியுங்கள். அவர் என்ன சொல்லுகிறாரோ அதை நீங்கள் செய்யுங்கள். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் அதை ஏற்றுக் கொள்வதாக கூறினீர்கள். அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக் கொண்டு சாட்சி பகருங்கள். நீங்கள் சுகமடைவீர்கள். ஆமென். நாம் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று கூறுவோமாக. ஆமென். நீங்கள் ஒரு போதும் அவிசுவாசிக்க முடியாதபடி ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன். இப்பொழுது அவிசுவாசிப்பதே பாவமாகும். தேவன் தம்முடைய குமாரனை அனுப்பிய பிறகும், ஒரு அடையாளத்தை அனுப்பிய பிறகும், தம்முடைய வேதாகமத்தை அனுப்பிய பிறகும், தம்முடைய பிரசங்கிமார்களை அனுப்பிய பிறகும், தம்முடைய வரங்களை அனுப்பிய பிறகும், இன்னமும் அவரை அவிசுவாசிக்காதீர்கள். முடிவில் ஆக்கினைக்கு உட்படுத்த வேண்டியதே அல்லாமல் உங்களுக்கு வேறொன்றும் விடப்பட்டிருக்கவில்லை. அது சரியா?

15ஆனால் தேவனை மகிமைப்படுத்தக்கூடிய ஒரே காரியம் இயேசுகிறிஸ்துவை வெளிப்படுத்துவதே. அவர் பூமியில் இருந்த போது, அவர் அதே காரியத்தை செய்தார். வேதத்தை வாசிப்பவர்கள் அனைவரும் ஆமென் என்று கூறுங்கள். [சபையார் சொல்கிறார்கள், "ஆமென்."] அவர் நான் போவேன், திரும்பவும் நான் வருவேன், இன்னும் கொஞ்ச காலத்திலே, உலகமோ என்னைக் காணாது, [அது அவிசுவாசிகள்], நீங்களோ காண்பீர்கள் என்றார் [அது என்ன? விசுவாசிகள்.] ஏனெனில் உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். அது உண்மைதானே! ஆகையால் அவிசுவாசிப்பதே பாவமாகும். நீங்கள் போய் இனி பாவம் செய்யாதிருங்கள் அல்லது இனி அவிசுவாசிக்காதீர்கள், இல்லையென்றால் இதைவிட கேடானது உங்கள் மேல் வரும் என்று இயேசு கூறினார். எனவே நாம் விசுவாசிக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் அழிந்து போகத்தான் வேண்டும்.

16நான் தேவனாயிருந்தால் அவர்கள் என்னுடைய வார்த்தையை அதற்காக ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தால் அது அதனை தீர்க்கும். ஆனால் ஜனங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. எனவே இயேசு வாக்களித் திருந்தபடியே அடையாளங்களும், அற்புதங்களும் சபைக்குள்ளாக சேர்க்கப் பட்டிருக்கின்றன. அவர் இப்பொழுது புறஜாதிகளுடன் முடித்துக் கொண்டு, யூதர்களிடம் விரைவாக திரும்புவாரென்று நான் நம்புகிறேன். புறஜாதிகள் தங்கள் குளிர்ந்து போன சம்பிரதாயங்களில் விடப்படுவார்கள். சபையானது எடுத்துக் கொள்ளப்படும். யூதர்களுக்கு செல்லும், ஆமென். ஆமென் என்றால் அப்படியே ஆகக்கடவது என்று பொருள். சரிதான்.

17சகோதரியே என்னை மன்னியுங்கள். எப்பொழுதாவது, ஒரு தடவையாவது என் சிந்தனையை ஓய்வாக்க வேண்டும். இப்பொழுது நாம் அந்நியர்கள். நீங்கள் நிச்சயமாகவே எனக்கு ஒரு அந்நியராய் இருப்பதை காண்கிறேன். நீங்கள் வேறொரு பட்டணத்திலிருந்து வருகிறீர்கள். உங்களுக்கு இருதயக்கோளாறு உள்ளது. அதுசரிதானே? அங்கே முழுவதும் இருளாய் உள்ளது. ஒரு கருப்பு போர்வை பின் தொடர்வதை காண்கிறேன். யாரோ ஒருவர் உங்களிடம் ஒரு பொய்யை கூறியுள்ளார். ["ஆமாம் ஐயா" என்றாள் அந்த சகோதரி] நீங்கள் ஒரு சூனியக்காரி என்று கூறினார். ["ஆமாம்."] அது உண்மைதானே? உங்கள் சபையில் ஒரு கலக்கம் உங்களை தொல்லைப்படுத்தியது. உங்களுடைய போதகர் சுகவீனமாய் இருக்கிறார். அவருக்கு இளம்பிள்ளைவாதம் உள்ளது. சரிதானே? சகோதரியே! அந்த ஜனங்கள் கூறுவதற்கு கவனம் செலுத்தாதீர்கள். அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருக் கிறார்கள், உங்கள் இருதயத்தில் உள்ள கோளாறு நரம்பு தளர்ச்சி. ["ஆமாம் ஐயா."] சமாதானமாய் வீட்டிற்கு செல்லுங்கள், நீங்கள் சூனியக்காரியல்ல.

18நான் வேண்டிக்கொண்டால் உங்களுடைய 'சயரோகத்திலிருந்து சுகமாக்குவார் என்று முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவே! நீர் இந்த ஸ்திரீயை சுகமாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அவள் முழுவதும் சுகமடைவாளாக, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். களிகூர்ந்து கர்த்தாவே உமக்கு நன்றி என்று கூறுங்கள். நீங்கள் சுகமடைவீர்கள். வாருங்கள் சீமாட்டியே! சர்வ வல்லமையுள்ள தேவனே! ஜீவனின் காரணரே! இந்த ஸ்திரீக்கும் பூரண சுகத்தை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் தருவீராக ஆமென். வாருங்கள் சீமாட்டியே! வாருங்கள் சீமாட்டியே! சர்வ வல்லமையுள்ள தேவனே! ஜீவனின் காரணரே! இந்த ஸ்திரீக்கும் பூரண சுகத்தை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் தருவீராக ஆமென். தேவன் உம்மை ஆசிர்வதிப்பாராக. ஒரு நிமிடம். ஏதோ ஒன்று உங்களுக்கு சம்பவித்தது. உங்களுக்கு அது தெரியும் சரிதானே! அது கட்டிடம் முழுவதிலும் இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசித்தால், ஒவ்வொருவரும் பூரணமாக சுகமடையக்கூடும். இதை நீ விசுவாசிக்கிறாயா? [சபை சொல்கிறது, "ஆமென்."] தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். ஐயா, நீங்கள் வாயிற் வரவேற்பார்களில் ஒருவரா? சரி ஐயா!

19அந்த சீமாட்டி புள்ளிகளிட்ட ஆடைகள் அணிந்தவளாய் அங்கே அமர்ந்திருக்கிறாள். சீமாட்டியே, எழும்பி நில்லுங்கள். அவர் அந்த இருதயக்கோளரிலிருந்து சுகமாக்கி விட்டார். அதை முழு மனதோடு விசுவாசிக்கிறீர்களா? சரிதான். ஒரு கைக்குட்டையுடன் ஒரு அம்மாள் அழுதுக் கொண்டிருக்கிறாள். அன்றொரு நாள் தலையில் அடிப்பட்ட காரணத்தால் தலைவலி ஏற்பட்டது, அது சரியா? எழும்பி நின்று சுகத்தை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள். ஆமென். உங்களில் எத்தனை பேர் உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள். இயேசுகிறிஸ்து சுகமாக்க இப்பொழுது இங்கிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சுகமாக்கப்பட விரும்பும் அனைவரும் இப்பொழுது எழும்பி நில்லுங்கள். உங்களுடைய கரங்களை இந்த வண்ணமாய் உயர்த்துங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனே! ஜீவனின் காரணரே! ஒவ்வொரு நன்மையான ஈவையும் தருபவரே! இந்த கட்டிடத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் சுகமாக்கும்படி ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கிறார். இப்பொழுது நான் ஊழியக்காரன் என்ற முறையில் இந்த ஊழிக்காரர்களோடு சேர்ந்து இங்கிருக்கும் ஒவ்வொரு வியாதியையும் சபிக்கிறேன். தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து இங்குள்ள ஒவ்வொரு நபரையும் சுகமாக்குவாராக. சாத்தானே! இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த ஜனங்களை விட்டு போ! ஜனங்கள் தங்கள் கரங்களை உயர்த்தி தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று கூறட்டும். ["கர்த்தருக்கே ஸ்தோத்திரம்" என்று சபையார் கூறுகிறார்கள்.] சரி சகோதரன் போஸ்.