1 அது எங்கே என்று எனக்குத் தெரியாது. அவர்கள்—அவர்கள் அநேகமாக, ஒருவேளை, அவர்கள் அதை எழுதியிருக்கலாம், அது, “ஏசாயா 4:24” என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது, ஏசாயா 4 இதில் மாத்திரமே ஆறு வசனங்கள்தான் உள்ளன, ஆகவே நான்…நீங்கள் ஏசாயா 5:24 என்று கூற முனைந்தீர்களா என்பது எனக்குத் தெரியாது. அது, “ஏசாயா 4:24, அந்த வேத வசனத்தின் அர்த்தம் என்ன, அது எப்பொழுது நிறைவேறும்?” என்று கூறுகின்றது. ஏசாயா 4-ல் ஆறு வசனங்கள்தான் இருக்கின்றன. உங்களால் முடிந்தால்… இதை எழுதியவர் யாராயிருப்பினும், நீங்கள் இப்பொழுது சிந்தித்து, ஒருகால், அதை மறுபடியும் எழுதினால், நான் அதைப் பெற்றுக்கொள்ள முடியும், நீங்கள் பாருங்கள். நீங்கள் எதைக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, “ஏசாயா 4:24, அந்த வேத வசனத்தின் அர்த்தம் என்ன, அது எப்பொழுது நிறைவேறும்?”
22 இப்பொழுது, உங்களை நான் நீண்ட நேரம் வைத்திருக்கமாட்டேன். நான் ஒரு…சரி, உமக்கு நன்றி, சகோதரனே. நான்—நான் செல்ல வேண்டிய இடங்கள் அநேகம் உண்டு, மேலும் இது…நீங்கள் அறிவீர்கள், நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன், நான் ஒரு வேதவசனத்தை இங்கே வைத்திருந்தேன், அல்லது, என்னை மன்னிக்கவும், திரு. பாக்ஸ்டரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. இந்த காலை ஆராதனையை ஆரம்பிக்கும் முன்பு, இதன் பேரில், நீங்கள் என்னுடன் சேர்ந்து சிறிது நேரம் ஜெபம் செய்ய நான்—நான் விரும்புகிறேன். 3 நான்—நான் ஆராதனைகள் முடிந்த பிறகு இன்னும் சிறிது நாட்கள் கழித்து அயல்நாடுகளில் ஆராதனை நடத்த வேண்டும் என்கின்ற, நல்ல எண்ணத்தோடு நான் இருக்கிறேன். சகோதரன் பாக்ஸ்டரிடமிருந்து இப்பொழுது ஒரு கடிதத்தைப் பெற்றேன், சகோதரன் காக்ஸ் நேற்றிரவு தொலைபேசியின் மூலம் அதை எனக்கு படித்துக் காட்டிவிட்டு இன்று காலை அவர் அதை என்னிடம் அளித்தார், இப்பொழுது அவர்கள் அதைத் தள்ளிவைக்க, மீண்டும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். நான் செல்லாதவாறு சாத்தான் தடை செய்கின்றானா, அல்லது சமயம் வாய்க்கத்தக்கதாக தேவன் காத்துக் கொண்டிருக்கின்றாரா என்பது எனக்குத்—எனக்குத் தெரியாது. எனக்குத்—எனக்குத் தெரியாது. அவர்கள் அதை சிறிது தள்ளி வைக்க விரும்புகிறார்கள், அக்டோபர் முதல் அவர்கள் அதைத் தள்ளி வைத்துக்கொண்டுள்ளனர். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, சுமார் நான்கு மாதங்களாக அவர்கள் அதைத் தள்ளி வைத்தனர்.
34 தரிசனமானது இப்பொழுது வந்ததுள்ளது, சரியாக என்ன நடக்கப்போகிறது என்பது என் வேதாகமத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது; ஆனால் எப்பொழுது என்பது, எனக்குத் தெரியாது. இப்பொழுது, இந்த நேரத்தில் ஆயத்தமாயிருக்க வேண்டும் என்று அவர்கள் என்னிடத்தில் என்ன சொன்னார்களோ அதை நான் ஜனங்களிடத்தில் அப்படியே (நல்ல விசுவாசத்துடன்) சொல்லியிருக்கிறேன். 5 நான் நினைக்கிறேன், இப்பொழுது நான் அதைக் குறித்து உண்மையாயில்லை என்று, இப்பொழுது மக்கள் நினைக்கின்றார்கள், “ஓ, என்ன…எப்பொழுது அவர் பெறப்போகிறார்…எப்பொழுது அவர் போகப்போகிறார்?” 6 ஆனால் எனக்கு இந்த கடிதங்கள் கிடைத்தவுடன் அவர்கள் என்னிடம் சொல்கிறார்கள், “பாருங்கள், நீங்கள் அதை இன்னுமாய்ச் செய்ய முடியாது, இதைச் செய்தாக வேண்டும், இதைச் செய்தாக வேண்டும்” என்று சொல்லுகிறார்கள். அப்படியானால் நான்…நான்—நான் மக்களைச் சந்திக்கையில், மோசமாக உணருகிறேன். என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு காரியம், நான் இதை செய்வேன், நீங்கள் எல்லாரும் என்னுடன் இருக்கின்றீர்கள்; அதை நான் தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, “இப்பொழுதும் கர்த்தாவே, நீர் ஆயத்தமா இருக்கும்பொழுது, நானும் ஆயத்தமாய் இருக்கிறேன்” என்று கூறுகிறேன். புரிகிறதா? ஆகையால் நான்…
47 சில சமயங்களில் சபையால் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை, இப்பொழுது அயல் நாட்டு நுழைவுச் சான்று அல்லது ஏதோ ஒன்று. அதைப் போன்ற காரியங்கள் இருக்கும் என்று, நீங்கள் அறிவீர்கள். சாத்தான் அதைச் செய்ய முற்படலாம். ஆகையால் இக்காலை வேளையில் நாம் ஜெபிக்கையில்…வாரம் முழுவதும் நீங்கள் ஜெபம் செய்யும்போது ஒவ்வொரு முறையும் எனக்காக நீங்கள்—நீங்கள் ஜெபித்து அது சாத்தானாயிருந்தால், அவனைப் பாதையிலிருந்து அப்புறப்படுத்திப் போடும்படி…தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள். பார்த்தீர்களா? அது—அது அவருடைய சித்தமாய் இருக்குமானால், அவர் இங்கேயே என்னை நிறுத்தட்டும். புரிகிறதா? சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அறிவார். அவர் வேறொரு காரியத்தின் மூலம் கிரியை செய்து காரியங்களைச் சரிபடுத்துவார். ஆகையால் அவரை முந்திச் செல்ல எனக்கு ஒருபோதும் விருப்பமில்லை. ஓ! நீ அதைச் செய்வாயானால், அது பயங்கரமானது. புரிகிறதா? எனவே நான்—நான் அதைத்தான் உணருகிறேன்…அதாவது—அதாவது அது ஒருக்கால்…எதைக் கூற வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் எனக்குத் தெரியாது.
58 நம்முடைய அருமை சகோதரன், ஜார்ஜர் ரைட் போல. அவருடைய நிலைமைகள் உங்களில் அநேகருக்குத் தெரியுமா, உங்களுக்குத் தெரியுமல்லவா? மருத்துவர்கள் அவரை கைவிட்டுவிட்டார்கள், என்பதை நீங்கள் அறிவீர்கள், ஒரு வாரம், அல்லது அதற்கு முன்பாக, பாருங்கள், சகோதரன் ஜார்ஜ் ரைட் மரித்துப் போயிருக்க வேண்டும். நான் அவரை பார்ப்பதற்கு சென்றிருந்தேன், அங்கே சென்று என்னால் எப்படியெல்லாம் அவருக்காக ஜெபிக்க முடியுமோ அவ்வாறு நான் உத்தமமாய் அவருக்காக ஜெபித்தேன். அதன்பிறகு நான் வீடு திரும்பி என்ன நடக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு சில நாட்கள் கழித்து, பாருங்கள், கடந்த திங்கட்கிழமை காலையில் எனக்கு—எனக்கு ஒரு தரிசனம் உண்டாயிருந்து, காத்துக் கொண்டிருக்கையில்…
69 இப்பொழுது, நான் ஜெபம் செய்த புற்று நோயோடு இருந்த ஒரு—ஒரு பெண், நான் அவள் நிற்கக் கண்டேன் மற்றும் அவள்—அவள்…அவர்கள் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, அவள் புற்றுநோயினால் நிரப்பப்பட்டிருந்தபடியால், அவர்கள் அவளை மறுபடியும் தைத்துவிட்டார்கள். புரிகிறதா? ஆனால் அவள் உயிர் வாழப்போகின்றாள். அது எனக்கு தெரியும். 10 ஆனால், இப்பொழுது, சகோதரன் ஜார்ஜ் ரைட்டைக் குறித்து, சரியான தரிசனம் எனக்குக் கிடைக்கவில்லை. நான் வந்துகொண்டு இருந்தேன்…அதே தரிசனம், நான் வெளியே வந்துக்கொண்டிருந்தபோது நான் அவருடைய—அவருடைய இடத்தை, அவருடைய வீட்டைப் பார்த்தேன். அவருடைய வீட்டின் இடது பக்கத்தில் மரங்கள் அங்கே நின்றுகொண்டு இருந்தன, ஒரு—ஒரு அலரி மரம், அதன் மேலாக ஏறக்குறைய என் கைமூட்டு அளவிற்கு மணல் கட்டிகள், உருண்டு சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அந்த தூதன், ஒரு கல்லறையைப் பற்றியும் சகோதரன் ஜார்ஜ் அவர்களைப் பற்றியும் கூறக் கேட்டேன். 11 இப்பொழுது, அது ஒன்று, அவர்கள் சகோதரன் ஜார்ஜின் கல்லறைக் குழியை தோண்டுகிறார்கள் என்பதாக இருக்கும், அல்லது அதில் எனக்கு தோன்றினதோ… இப்பொழுது, இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், நான் இதைக் கூறமாட்டேன்… மேலும் நாம் பெற்றுள்ள ஒரு ஒலி அமைப்பு முறையானது இங்கே அல்லது சரியாகக் கூறினால், ஒரு பதிவு செய்யும் முறை இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இப்பொழுது நான் அவர்களுக்குச் செய்ததுபோல, நான் இதையும் தெளிவாக்கிக் கூற விரும்புகிறேன், இதுதான் அது…என்று நான் நினைக்கிறேன்.
712 அங்கே ஒரு கூட்ட மக்கள் சிரித்து அவரைக் கேலி செய்துகொண்டிருந்தனர் ஏனென்றால் மருத்துவர் கூறினப் பிறகும் தேவன் தன்னை சுகமாக்குவார் என்று அவர் விசுவாசித்துக் கொண்டிருந்தார், “அவர் சுகவீனமாயிருந்தார். பாருங்கள், அவரால் முடியவில்லை, பாருங்கள், இரத்தக் கட்டியானது அவருடைய நுரையீரல்களுக்குள் சென்று விட்டபடியால், அவர் இரத்தத்தைத் துப்பிக்கொண்டிருந்தார், இன்னும் மற்ற காரியங்கள்.” அவர், “ஒரு சிறு அணு அளவிற்கு கூட அது அவருடைய இருதயத்திற்கோ அல்லது தலைக்கோ சென்றால் அது அவருக்கு பக்கவாதத்தை ஏற்படுத்திவிடும் அல்லது அவரை கொன்றுவிடும்” என்று கூறிவிட்டார். புரிகிறதா? குறிக்கப்பட்ட நாட்களுக்கு மேலாக, அவர் எழுபத்திரண்டு வயதுடையவராய் இருக்கின்றார். 13 ஆனால் அவர் அவரைக் கேலி செய்கின்றவர்களில் சிலருடைய கல்லறைக் குழிகளைத் தோண்டுவார், கல்லறைக் குழியைத் தோண்டுவார் என்பதாய் இது இருந்தது என்று நான் நம்புகிறேன். இப்பொழுது, அவர் குழிவெட்டுகிற ஒருவர் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவர் குழி வெட்டுபவராயிருக்கிறார். நான், பாருங்கள், அவர் கல்லறை குழிகளைத் தோண்டுகிறார் என்று, நான் நினைத்தபோது, அந்த தொழிலைத்தான் அவர் செய்கிறார். அது ஒரு கல்லறையைக் குறித்த ஏதோவொரு காரியமாய் மற்றும் ஒரு கல்லறைக் குழியைத் தோண்டுவதுபோல் தென்பட்டது அல்லது—அல்லது அதுபோன்று ஏதோ ஒன்றாய் இருந்தது, சகோதரன் ஜார்ஜ் ரைட். 14 அவருக்கு விருப்பமானால் அதைத் திரும்பவும் எனக்குக் காண்பிக்கும்படி, கிட்டத்தட்ட நான்கு இரவுகளாக, இப்பொழுது நான் கர்த்தரிடம் கேட்டிருக்கிறேன். அது சுமார் ஒரு காலையில் ஏழு அல்லது எட்டு மணியளவில் எனக்கு வந்தது. ஆகவே அதை அவர் எனக்கு தெளிவாக்குவார் என்று நான் நம்புகிறேன். ஆனால் என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன்… இப்பொழுது, அவரைப் பார்த்து சிரிப்பவர்களில் சிலருக்கு அவர் கல்லறைக் குழியைத் தோண்டுவார் என்று நான் கூறினபோது இது சரியாக அதுவாகதான் எனக்கு இருந்தது, இப்பொழுது, நான் அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டால். ஆனால் அதைக் குறித்து கூட எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அது சகோதரன் ஜார்ஜ் ரைட், ஒரு கல்லறைக் குழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறதைப் பற்றிய ஏதோ ஒரு காரியமாக இருந்தது. அவரைக் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்த யாரோ ஒருவருடைய கல்லறைக் குழியை அவர் தோண்ட வேண்டியதாய் இருந்தது என்று நான் நினைக்கிறேன்.
815 இப்பொழுது, தேவன் அன்பாயிருக்கிறார், மேலும், ஓ, நம்முடைய முழு இருதயத்தோடும் நாம் அவரை நேசிக்கிறோம். 16 இப்பொழுது, இந்த காலை வேளையில் இந்தக் கேள்விகளின் பேரில் நம்முடைய நேரத்தை அதிகமாகச் செலவிட நாம் விரும்பவில்லை. நான் எனக்குத் தெரிந்தவரை சிறந்த முறையில் அவைகளுக்குப் பதிலளிப்பேன். இப்பொழுது, நண்பர்களே, நான் இந்தக் காரியங்களின் பேரில் நிறைய தவறுகளைச் செய்யக் கூடும். நான்—நான் எல்லாரையும் போல ஒரு மனிதன். சகோதரன் நெவில், அல்லது இன்னும் மற்ற ஊழியக்காரர்கள், அல்லது வேறு யாரேனும், என்னால் பதில் அளிக்க முடிந்தது போலவே அவைகளுக்கு பதில் அளிக்க முடியும். ஆனால், ஜனங்களின் இருதயத்தில் என்ன இருக்கின்றது என்பதை ஒரு விதமாக கண்டறியும்படியான, ஒரு நோக்கத்திற்காகவே நான் இதைச் செய்கிறேன். 17 ஆகையால் நான்கு அல்லது ஐந்து காரியங்கள் ஒன்றையே இழுத்துக் கொண்டிருப்பதை நான் காணும்போது, அப்பொழுது நான், “ஹூ-ஒ, இதோ நாம் இங்குள்ளோம். அங்கே, சபையிலே சில சிறிய கேள்விகள் உள்ளன, அதனால் நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிந்தகொள்கிறேன்” என்று நினைப்பேன். இப்பொழுது நாம் சிறிய கேள்விகளைக் குறித்து மறந்துவிடுவோம். எல்லாவற்றுக்கும் மேலான முக்கியமான காரியம் என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய எல்லா பாவத்தினின்றும் அநீதியினின்றும் சுத்திகரிக்கிறது என்று நாம் அனைவரும் விசுவாசிக்கக் கூடுமானால், நாம் சபையை இசைவிலும், தேவ அன்பிலும் ஈடேறச் செய்து தொடர்ந்து முன்னேறச் செய்வதேயாகும். உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஸ்திரீ அல்லது உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மனிதன், இயேசு உண்மையாக நான் காணக்கூடிய விதத்தில் மறுபடியும் வருவார் என்று விசுவாசிக்காவிடினும், எப்படியாயினும் நாம் அதை…ஒப்புக்கொண்டு சரியாக தொடர்ந்து முன் செல்வோமாக. வேதவசனத்தின் பேரில் அவர்களோடு நாம் ஒத்துப்போவதில்லை. ஆனால் சபை இசைவாகச் செல்ல நாம் பிரயாசப்படுவோம், ஏனென்றால் இன்னும் நிறைய மக்களை நாம் பிடிக்கப்போகிறோம். ஆனால் சபையானது இசைவாக இல்லையென்றால், அப்பொழுது நீங்கள்—நீங்கள் சபைக்கும், நீங்கள் பிரயாசம் எடுக்கும் நோக்கத்திற்கு தீங்கு செய்வீர்கள். நீங்கள்…அது வெறுமனே…உங்களால் அதைச் செய்ய முடியாது. ஆனால் நாம் ஒரு காரியத்தின் பேரில் ஒத்துப்போக முடியும், அதாவது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்து நீக்கி நம்மை சுத்திகரிக்கின்றது (அது உண்மை) பாவம் போய்விட்டது, அப்பொழுது நாம் பரலோக வீட்டிற்கு மிக அருகில் வந்துவிட்டோம், சகோதரன் நெவில். இரத்தமானது, நாம் இரத்த-… 18 எனக்கு ஒரு சகோதரன் இருக்கின்றான், நாங்கள் இரத்த சம்பந்தமான உறவுள்ளவர்கள். ஆனால், என்னுடைய, நாம் எப்படி உடன்படுகிறதில்லை; ஹூ, பரிதாபமாக. ஆனால், நாங்கள் சகோதரர்கள், அதுவேதான்.
919 இப்பொழுது, இந்த வாரத்தை, வருகின்ற வாரத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன், நான் வெளி ஊர் பிரயாணம் மேற்கொள்ளவில்லை என்றால், ஒரு வேளை… சகோதரன் காபுள் வந்து, லூயிவில்லில் ஒரு தொடர் கூட்டத்தை தொடங்கி நடத்த விரும்பினார், அந்த இரவு நாம் சிறிய சுகமளிக்கும் ஆராதனை நடத்தின அந்த ஆயுத அரங்கை எடுக்க அவர் விரும்புகிறார். கர்த்தர் சில அற்புதமான காரியங்களை நடப்பித்தார். ஆகவே…ஆனால் டெல் ரியோ, டெக்ஸாஸிலிருந்து அந்த சகோதரர்கள், ஜோசப் சகோதரர்கள் லூயிவில்லில் ஒரு ஆராதனையை ஒழுங்கு செய்து, வருகின்ற வாரங்களுக்கு அங்கே அவர்களுடைய ஒரு சிறந்த பேச்சாளரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று நான் கண்டுகொண்டேன். ஆகவே அவர்தான் எப்பொழுது போகப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவில்லை என்று கூறினார். சார்லஸ், அது அடுத்த வாரம் அங்கே இருக்கும் என்று, நான் நினைக்கிறேன், ஆகவே அப்படிப்பட்ட ஒரு தொடர் கூட்டங்கள் நடக்கும் சமயத்தில் நான் நிச்சயமாக ஒரு எழுப்புதலை ஆரம்பிக்கமாட்டேன். 20 அவர்களும் ஒரு சுகமளிக்கும் தொடர் கூட்டங்களைக் கூட நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆகவே சுகமளிக்கும் கூட்டங்கள் பிற்பகல், இன்றைய பிற்பகல் வேளையில் இருக்கும். ஆகவே அவர்கள் அங்கே கூட்டங்கள் நடத்துகையில் மேலும்—மேலும் நான் கூட்டத்தை ஆரம்பிக்க விரும்பவில்லை, ஏனென்றால் எங்கேயோ இருப்பது என்னவென்று எனக்கு தெரியும் மற்றும் அது… ஓ, உங்களுக்குத் தெரியுமா, நான் கூட்டங்கள் நடத்துகையில் யாராவது எழும்பி அதைப் போன்ற சிறிய கூட்டங்களை ஆரம்பித்துவிடுகின்றனர். அது சரியெனத் தோன்றவில்லை, உங்களுக்குத் தெரியுமா, அது சரியான ஸ்தானத்தில் பொருந்துவதில்லை. ஆகவே நாம் சிறிது காலம் காத்திருப்போம், ஒருவேளை கர்த்தர் நமக்கு உதவுவார். எப்படியாயினும், அவர் நமக்கு உதவி செய்வார், ஆகவே நாம் விசுவாசிக்க மாத்திரம் செய்து அப்படியே நிலைத்திருந்து தேவனிடத்தில் உண்மையுள்ளவர்களாய் இருப்போம்.
10இப்பொழுது நாம் ஜெபம் செய்வோம்: 21 பரலோகத்தில் உள்ள, பிதாவே, நான் இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கச் செல்கையில் உமது ஆசீர்வாதங்கள் தாமே இப்போது எங்கள் மீது பிரகாசிக்கட்டும். ஓ, தேவனே, சரியாக…நான் ஒருபோதும் பார்த்திராத அவைகளில் சில இங்கே இன்னமும் இருக்கின்றன, சிறிது நேரத்திற்கு முன்பு இரண்டு அல்லது மூன்று மாத்திரமே நான்—நான் படித்தேன். பிதாவே சரியானதை மாத்திரம் நான் பேச எனக்கு ஞானத்தையும், புரிந்துகொள்ளும் தன்மையும் எனக்கு அளித்து உதவ வேண்டுமாய், நான் ஜெபிக்கிறேன், பிதாவே. பிதாவே, இதை அருளும். உம்முடைய ஞானத்தை நான் கொண்டிருப்பேனாக மற்றும் பரிசுத்த ஆவிதாமே இப்பொழுது இறங்கி தேவைப்படுகின்ற ஞானத்தை அருளட்டும். கர்த்தாவே, இங்கே இந்த சிறிய கூடார குழுவான, எங்களை ஒன்றாக ஆசீர்வதியும். 22 எங்களுடைய அருமை சகோதரன், சகோதரன் நெவிலை ஆசீர்வதியும், இங்கே, பிதாவே, அவர் தொடர்ந்து உழைத்துக் கொண்டும், இங்கு மேய்ச்சல் நிலத்தில் உள்ள ஒரு மேய்ப்பனாக, அதாவது ஆடுகளை பசுமையான புல்வெளியண்டைக்கும் மற்றும் உயர்ரக புல்லுகளண்டைக்கும், வெளியே தண்ணீர்களண்டைக்கும் மற்றும் மர நிழலுக்கும் வழிநடத்த முயற்சித்துக் கொண்டும், சுகவீனமும், தேவையுமானவைகளையும் மற்றும் முடமான மற்றும் விடாய்த்துப் போனவர்களையும் பராமரித்துக்கொண்டும், அவைகள் உண்மையான ஆடுகளாய் இருக்கும்படிக்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்படிக்கு அவைகளை உள்ளே கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஓ, பிதாவே, நீர் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவருக்கு ஞானத்தையும், அறிவையும், புரிந்து கொள்ளுதலையும் அருளும். 23 பிதாவே, இப்பொழுது எங்கள் எல்லாருக்கும் உதவிச் செய்யும், நாங்கள் உமக்கு துதியை ஏறெடுக்கிறோம். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
1124 இப்பொழுது, இங்குள்ள சிலவற்றிற்கு, நான் வேதவாக்கியங்களைக் கொடுப்பேன், வேதத்தில் உள்ள அநேக பகுதிகளில் அவைகள் எங்கே—அவைகள் எங்கே இருக்கின்றதோ நான் அவைகளை எடுத்து வைத்துள்ளேன். இப்பொழுது நாம் சிலவற்றை ஆரம்பித்து, நம்மால் முடிந்த வரை எல்லாவற்றிற்கும் சரியாக பதிலுரைப்போம். எல்லாவற்றையும் முடிப்போம் என நான் நம்புகிறேன், நாம் அனைவரும் சீக்கிரம் செல்ல, நான் இங்கு கவனமாக இருப்பேன்.
1225 இப்பொழுது, முதலாவது காரியம் ஒரு கேள்வியாய் இருக்கிறது, வெறுமென நேரடியான ஒரு கேள்வி: 8. பதின்மூன்று வயதில் நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன். மறுபடியும் நான் எடுக்க வேண்டுமா? 26 இப்பொழுது, கேட்பதற்கு அது ஒரு—ஒரு அருமையான சிறிய கேள்வியாகும். பாருங்கள், இப்பொழுது, நண்பனே, நான் எப்பொழுதும் அந்த நபரிடமே அதை விட்டுவிடுகிறேன். 27 நினைவில் கொள்ளுங்கள், எனக்குத் தெரியாது…யார் இதை எழுதினது என்ற ஒன்றை மாத்திரம் நான் அறிவேன், அதுதான் இங்கே இருக்கிற இந்த ஒன்று, அந்த மனிதன் தாமே என்னிடம் வந்து கொடுத்தார். யாரோ ஒருவர் என்னிடம் சற்று முன்பு வந்து இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார், அவர்கள் காகிதத்தில் ஒருபோதும் அதை எழுதி வைக்கவில்லை, நான் “எனக்கு இங்கே இவைகளுக்கு போதுமான நேரம் கிடைத்தால் நான் பதிலுரைப்பேன்” என்று கூறினேன். 28 ஆனால் இப்பொழுது இது இங்கே, “நான்…வேண்டுமா…நான்…” பதின்மூன்று வயதில் நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன். மறுபடியும் நான் எடுக்க வேண்டுமா? 29 நீங்கள் பதின்மூன்று வயதிலிருந்து, நீங்கள் ஒரு கிறிஸ்தவனாயிருந்து, கிறிஸ்துவிற்குள் ஒரு விசுவாசியாயிருப்பீர்களானால், நீங்கள் இருப்பது போலவே நானும்—நானும் இருந்துவிடுவேன். நான் இப்பொழுது அதைச் செய்யமாட்டேன், அது முதல் தேவன் உங்களை ஆசீர்வதித்து பரிசுத்த ஆவியை உங்களுக்கு அருளியிருப்பாரானால் நலமாயிருக்கும்.
1330 ஞானஸ்நானம் என்பது ஒரு—ஒரு—ஒரு முறைமை ஆகும், அது உலகத்திற்கு (அல்லது சபையாருக்கு நீங்கள்—நீங்கள் அந்நேரத்தில் இருந்தவர்களுக்கு என்று) காண்பிக்கத்தக்கதாக நீங்கள், சாட்சிகளுக்கு முன்பாக, தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார் என்றும், அவர் மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்தார் என்றும், நீங்கள் அவருடன் அடக்கம் பண்ணப்பட்டு புதிய ஜீவியம் செய்து நடக்க வேண்டும் என்று விசுவாசிக்கிறீர்கள் என்று நிரூபிப்பதற்காகவேயாகும். நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படும்போது உங்களைப் பார்த்த அதே மக்கள் நியாயத்தீர்ப்பில் உங்களைச் சந்திப்பார்கள். புரிகிறதா? 31 ஆகவே பிறகு, யாராவது ஒருவர் (ஒரு அந்நியர்) “நீங்கள் இருந்தீர்களா?” என்று கேட்டால், 32 “ஆம், என்னுடைய…என்னுடைய கர்த்தருடைய மரணத்தினூடாக, அடக்கத்தினூடாக நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளேன்.”
1433 பாருங்கள், நான் நினைக்கிறேன் ஞானஸ்நானம்…ஓ, அது தேவை என்று நான் கூறுகிறேன், அது தேவை அல்ல என்று நான் கூறமாட்டேன். ஆனால் அது தேவையான ஒன்று ஏனென்றால் அது…தேவனுடைய ஒவ்வொரு கட்டளையும் முக்கியமானதாகும். அப்படித்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? நாம் ஞானஸ்நானம் பண்ணப்படுவது மிகவும் அவசியமாகும். இயேசு பரிசுத்த மத்தேயு, அல்லது பரிசுத்த மாற்கு 16-ல் இந்த அறிக்கையைக் கொடுக்கிறார், அவர், “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்” என்றார். அவர் நிக்கொதேமுவிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவர், “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” என்று கூறினார். புரிகிறதா? அது ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், முழுக்கு, ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, புதிய ஜீவியத்தில் எழுப்பப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் நான் விசுவாசமுள்ளவனாயிருக்கிறேன். 34 ஆனால், நீங்கள், “சகோதரன் பில், சிறிய வயதில் அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கையில், நீங்கள் மறுபடியுமாக அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்கலாம். அநேக முறை நான் அதைக் செய்துள்ளேன். 35 வெளிப்படுத்தின விசேஷத்தில் ஒரு வேதவாக்கியம் உள்ளது, 2-ம் அதிகாரத்தில், சபையிடம் பேசுகின்றார், அவர், “மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” என்றார். அவர்களில் அநேகர் இந்த வசனத்தை எப்படி வியாக்கியானம் செய்கிறார்கள் என்றால், அதாவது நீங்கள் திரும்பிச் சென்று அதையே மீண்டும் செய்ய வேண்டும். பாருங்கள், அருமை கிறிஸ்தவ நண்பனே, இதை நீ கவனிப்பாயானால்…
1536 இப்பொழுது, இதனுடன் நான் இணங்காதிருக்கவில்லை, பாருங்கள், ஏனெனில் நம்மிடம் உள்ள ஞானஸ்நானத் தொட்டி நிரப்பப்பட்டுள்ளது. ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று விரும்புவோர் எவருக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாங்கள் ஞானஸ்நானம் கொடுக்க ஆயத்தமாயுள்ளோம். நாங்கள் இணங்காமல் இருந்து கொண்டிருக்கவில்லை. நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்பினால், உங்களுடைய வழியில் ஏதாவது இருக்குமானால் மற்றும் நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று உணர்வீர்களானால், நீங்கள் சென்று அதைச் செய்யுங்கள். அது சரி. நீங்கள் சென்று அதைச் செய்யுங்கள். உங்கள் பாதையில் எதையும் இருக்கவிடாதீர்கள், நீங்கள் உங்களைத்தாமே பூரணமாக தெளிவாக்கிக் கொள்ளுங்கள். 37 அநேக வருடங்களுக்கு முன், நீங்கள் ஏதோவொன்றை எடுத்திருந்து, நீங்கள் அதைச் சரி செய்ய வேண்டும் என்று உணர்வீர்களானால், நீங்கள் சென்று அதைச் சரி செய்யுங்கள். அது என்னவாய் இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் எல்லாவற்றையும் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் அந்த இடத்திற்கு வந்துவிடுவீர்கள், ஏனெனில் உங்கள் பாதையில் இருக்கும் அதை நீங்கள் விலக்கும் வரையில் உங்களால் தொடர்ந்து செல்ல இயலாது, நீங்கள் பாருங்கள். பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கியிருக்கிற எல்லாக் காரியங்களையும் நீங்கள் தள்ளியாக வேண்டும்.
1638 நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று விரும்பினால், அப்படியே செய்யுங்கள், செய்ய வேண்டியது அதுதான். நான் அநேகருக்கு மறுபடியும் ஞானஸ்நானம் கொடுத்துள்ளேன். 39 ஆனால் இப்பொழுது நீங்கள் குறிப்பிடுகின்ற அந்த வேத வாக்கியம், அது ஒரு தனிப்பட்ட நபரிடம் பேசவில்லை, அது சபைக்கு பேசப்பட்டதாகும். பாருங்கள், அந்த சபைக்கு, அவர்கள் என்ன செய்தனர், ஆதியிலே அவர்கள் கொண்டிருந்த தங்களுடைய ஆதி அன்பை விட்டுவிட்டனர், பாருங்கள், அது அவர்கள் உண்மையாகவே ஆதியில் கொண்டிருந்த உன்னதமானதாகும். அவர், “ஆகையால் நீ மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” என்றார், சரியாக அதைச் செய்து அதைக் கைக்கொள். “மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக,” என்று அவர் சபையிடம் பேசுகின்றார். பாருங்கள், இல்லையெனில், நான் விளக்குத் தண்டை எடுத்துவிடுவேன்.
1740 ஆகவே நீங்கள் பதின்மூன்று வயதிலோ, அல்லது எந்த வயதிலோ ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தால், நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்பினால், ஏன், அது உங்களுடைய வழியில் இருப்பின், நீங்கள்—நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படுங்கள். 41 நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று இப்பொழுது வேதபூர்வமாக நான் உங்களுக்கு கூற முடியுமானால், ஜனங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்று நான் கூற முடிந்த—முடிந்த ஒரு வேதபூர்வமான வழிதான் உள்ளது. முழு வேதத்திலேயே ஒரே ஒரு வசனத்தில்தான் மக்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்றிருக்கிறது, பரிசுத்த ஆவியானவர் வருவதற்கு முன்னர் யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட மக்கள்தான் அவர்கள். பவுல், அப்போஸ்தலர் 19:5-ல், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும் என்றால், அவர்கள் மறுபடியுமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று அவர்களிடம் சொன்னான். புரிகிறதா?
1842 இப்பொழுது—இப்பொழுது, நீங்கள் பரிசுத்த ஆவியை பெற ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் உங்கள் இருதயம் சரியாக இருக்கும்போது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறலாம். புரிகிறதா? ஏனென்றால், அப்போஸ்தலர் 2-ல், “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்னும் ஒரு விதியை—ஒரு விதியைப் பேதுரு அளிக்கின்றான். ஆனால் அதன்பின்னர், அப்போஸ்தலர் 10:49, தேவன் திரும்பி புறஜாதியார், ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்கு முன்பே தேவன் அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அளித்தார். நீங்கள் பார்த்தீர்களா? ஆகவே, நீங்கள் பாருங்கள், அது உங்கள் இருதயத்தின் நிலையாயுள்ளது. 43 அப்பொழுது பேதுரு, “ஆரம்பத்தில் நாம் அதைப் பெற்றிருந்ததுபோல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா?” என்றான். உங்களுக்குப் புரிகிறதா? ஆகையால், அப்பொழுது அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று அவன்—அவன் கட்டளையிட்டான். 44 அப்பொழுது பவுல், அப்போஸ்தலர் 19-ல் கூறினான்…பவுல், மேடான தேசங்களின் வழியாய் எபேசுவிற்கு வந்தான், அங்கே சில சீஷர்களைக் கண்டான், அவன் அவர்களிடம் “நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். 45 அவர்கள், “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவேயில்லை…கேள்விப்படவேயில்லை” என்றனர். அவன், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். அவர்கள், “நாங்கள் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றோம்” என்று கூறினர். 46 அவன், “யோவான் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் கொடுத்தான், என்று கூறி, ‘வருகிறவரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல்,’ நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும்” என்றான். அவர்கள் இதைக் கேட்டபோது, அவர்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள். பார்த்தீர்களா? ஆகவே அப்பொழுது அது…
1947 இப்பொழுது, இதன் பேரில், இது…ஆனால் நீங்கள் பதின்மூன்று வயதில் கிறிஸ்தவ ஞானஸ்நானம் பெற்று, இவ்வளவு காலமாக கிறிஸ்தவ ஜீவியம் செய்ததாக இது கூறுகிறதா, அல்லது நீங்கள் சில நேரங்களில் பின் மாற்றம் அடைந்து… 48 அவர்களது பெற்றுக் கொண்டார்களா…பின்மாற்றத்தில் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது, நான், “யாராவது சென்று…அதை என்னிடத்தில் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று எண்ணினேன் ஆனால் பின்மாற்றத்தின் பேரில், நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒவ்வொரு நாளும் பின்மாற்றம் அடைகிறீர்கள், அதை தவிர்க்க உங்களுக்கு ஒரு வழியும் இல்லை. சரி. ஆனால் நீ சபையி-…ஜனங்களிடத்தில் பின் மாற்றம் அடைகிறாய், ஆனால் தேவனுக்கு முன்பாக அல்ல. புரிகிறதா? நீ கிறிஸ்துவின் பேரில் பின்மாற்றம் அடைகிறாய், ஆனால் தேவன் பேரில் அடைகிறதில்லை, ஏனென்றால், நீ அந்நிலையைடைந்தால், நீ பாவம் செய்யும்போது, நீ இழக்கப்பட்டவனாயிருக்கின்றாய். ஆனால் நீ தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கிறாய். பவுல் ஒவ்வொரு நாளும் சாக வேண்டியதாய் இருந்தது. அது சரிதானே? அவன் ஒவ்வொரு நாளும் செத்து, ஒவ்வொரு நாளும் மனந்திரும்ப வேண்டியதாயிருந்தது, எல்லா நேரத்திலும் தொடர்ந்து அவன் மனந்திரும்பிக் கொண்டே இருந்தான். புரிகிறதா? பவுலே அதைச் செய்ய வேண்டியதாய் இருந்ததால், அப்படியானால் நானும், கூட அவ்வாறே செய்தாக வேண்டும். நீங்களும் கூட அல்லவா? அது உண்மை. ஆகவே நாம்… 49 ஆனால் இப்பொழுது, நீ மீட்டுக்கொள்ளப்பட்டவன் என்றும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உன்னை பாவத்திலிருந்து சுத்திகரித்தது என்றும், அப்பொழுது நான்—நான்…நீ ஒரு கிறிஸ்தவ ஜீவியம் ஜீவித்திருப்பாயானால், அது தேவை என்று நான்—நான் நினைக்கவில்லை. ஆனால் நீ அவ்வாறு செய்யப்பட விரும்பினால், சரி, அது அருமையாயிருக்கும். அதைச் செய்ய நாங்கள் மகிழ்ச்சியாயிருப்போம்.
2050 இப்பொழுது இங்கே யாரோ ஒருவர் என்னிடம் அங்கே பின்னால் கொடுத்த ஒரு சிறு குறிப்பு இருக்கிறது: 9. சுவிசேஷமானது யூதர்களுக்குத் திரும்புகையில் சபை எந்த நிலையில் இருக்கும்? 51 இப்பொழுது, இதை எழுதிய நபர், இங்கே லூக்காவைக் குறிப்பிடுகிறார்… அவர்—அவர் என்னிடம் கூறினார், நம்முடைய சகோதரன், “புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேமின் மதில்கள் புறஜாதியாரால் மிதிக்கப்படும்” என்று அங்கு கூறப்பட்டதை அவர் குறிப்பிட்டிருந்தார். அது லூக்கா 21:24-ல் உள்ளது. இப்பொழுது இதைப் புரிந்துகொள்ளும்படி கூர்ந்து கவனியுங்கள். அருமையான கேள்வி! அற்புதமானது. எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். 52 இப்பொழுது, இதை நாம் கூர்ந்து கவனித்துப் புரிந்துகொள்வோமாக. “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்று.” இப்பொழுது, இதைக் குறித்து அநேக குழப்பங்கள் உள்ளன, ஜனங்கள்… ஆனால் வேதத்தைக்கொண்டு சரித்திரப்பிரகாரமாக அதை நீங்கள் அணுகுங்கள்.
2153 இப்பொழுது, ஏழாம் நாள் ஆசரிப்பு சகோதரரே, ஏழாம் நாள் ஆசரிப்பு சகோதரரே, எருசலேம் மறுபடியும் சேனைகளால் சூழப்படும் என்று—என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள். பாருங்கள், இப்பொழுது, அது உண்மையாக இருக்கலாம், ஏனெனில் வேதவசனமானது அநேக அர்த்தங்கள் கலந்து இணைந்ததாய் இருக்கின்றது. 54 வேத வாக்கியமானது ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் அநேக அர்த்தங்களை கொண்டிருக்கிறது என்பதை உங்களில் எத்தனைப்பேர் அறிவீர்கள்? நிச்சயமாக கொண்டுள்ளதே! ஆம், ஐயா. அது அதைக் கூறி இந்த காலத்தைத்தான் அது குறித்துக் காட்டி, திரும்பவுமாக மறுபடியும் இங்கே உள்ள ஏதோ ஒன்றைக் குறித்து கூறும். புரிகிறதா? அதைப் போல…என்னால் அதைக் குறித்து சீக்கிரமாக சிந்திக்க முடிந்தால் அவைகளில் ஒன்றை நான் குறிப்பிட்டுக் காட்டுவேன். ஓ, ஆம், இங்கே லூக்காவில் ஒன்றுள்ளது…மத்தேயு 2-ல், கூறப்பட்டுள்ள, “தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படியாக, இயேசு எகிப்திலிருந்து வரவழைக்கப்பட்டார், ‘என்னுடைய…எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்’” என்று கூறுகின்றது. 55 இப்பொழுது, அந்த தீர்க்கதரிசனம், தீர்கக்தரிசியால் அங்கே குறித்துக் காட்டப்பட்ட அது சரியாக இஸ்ரவேலை குறித்துக் காண்பித்துக் கொண்டிருந்தது (தேவனுடைய குமாரனாயிருந்த) அவன் எகிப்திலிருந்து வர வழைக்கப்பட்டான். அது சரியாக, ஆதியாகமத்தில், யாத்திராகமத்தில் உள்ளது. ஆனால் அது—அது அங்கே—குறிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் அது மீண்டும் குறிப்பிடப்பட்டுக் கொண்டிருந்தது. “உம்முடைய…” இஸ்ரேல் தேவனுடைய குமாரனாக இருந்தான். நீங்கள் அதை அறிவீர்கள். அவர் பார்வோனிடம் சொன்னார், “நீ…” என்றார். “நீ—நீ…” என்றார். அவன் அவருடைய குமாரனுக்கு என்ன செய்தான், அதாவது அவர் அந்த ஜீவனை அழிப்பேன்…அவன் அவருடைய குமாரனை போகவிடவில்லை, ஆகவே பார்வோன்… தேவன் பார்வோனின் குமாரனைச் சங்கரித்தார்…மற்றும்…இல்லை சங்கார தூதன் அந்த இரவில். ஆகவே அது அநேக அர்த்தங்களைக் கொண்டதாயுள்ளது.
2256 ஆகவே, இப்பொழுது, எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருந்ததைக் குறித்து, ஆனால் நிஜமாகவும், சரித்திரப்பூர்வமாகவும், அது கி.பி. 96-ம் வருடத்தில் தீத்து எருசலேமை முற்றுகையிட்டபோது நிகழ்ந்தது. இப்பொழுது நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களானால், உங்களால் வித்தியாசத்தைக் காணக்கூடும், கடைசி காலத்தில் எருசலேம் சேனைகளால் சூழப்படும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் தீத்து அவர்களை முற்றுகையிட்டபொழுது, அந்த அழிவு நடந்தபொழுது, இங்கே இது அதனுடன் ஒத்திருக்கின்றது என்று நான் நம்புகிறேன். 57 இப்பொழுது, “அந்த அழிவைக்” குறித்து…தீர்க்கதரிசி தானியேல்…பேசும்போழுது “அது பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கையில்” என்று கூறுகிறான். கவனியுங்கள், அவன், “நீங்கள் பாழாக்கும் அருவருப்பை, பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது” என்ற கூறுகின்றான். பாருங்கள், “அந்த அருவருப்பு” அருவருப்பு என்றால் “அசுத்தம்.” “பாழாக்குதலைச் செய்கின்ற,” பாழாக்குதல் என்றால் “அப்புறப்படுத்து” “அழித்தல்.” “நீங்கள் பாழாக்கும் அருவருப்பை பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக்காணும்போது,” தீத்து எருசலேமை முற்றுகையிட்டபோது வேதபூர்வமாக நிறைவேறினது, அதை எடுத்து…
2358 இந்த அதிகாரத்தின் துவக்கத்தில் “கடைசி காலம் எப்பொழுது இருக்கும்? கிறிஸ்துவின்…வருகைக்கான அடையாளங்கள் என்ன?” என்று அவர்கள் அவரிடத்தில் கேட்டுக்கொண்டிருந்தனர். தேவாலயத்தைக் குறித்தும், அது எப்படி இருந்தது என்றும், எப்படி மகத்தான கற்களால் அது அலங்கரிக்கப்பட்டதென்றும் அவர்கள் அவரிடத்தில் கூறினர். 59 அவர், “ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் வேளை வரும், எல்லாம் இடித்துப்போடப்படும்” என்று கூறினார். அவர் அவர்களுக்கு அற்புதங்களையும், அடையாளங்களையும் கொடுக்கத் துவங்கினார். அப்பொழுது, இயேசு அவர்களிடையே பேசுகையில், தானியேலுக்கு திரும்புகிறார், ஏனெனில் எல்லா தீர்க்கதரிசனங்களும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து நிறைவேற வேண்டும். முழு வேதவாக்கியங்களும் எங்கேயும் தவறாததாய் உள்ளன. 60 இயேசு, “வேத வசனங்கள் தவறாததாயிருக்கின்றன.” ஆமென். அங்கே…நான் பரலோகத்திற்குப் போகிறேனா? நிச்சயமாக, நான் செல்கிறேனே! வேதவசனங்கள் தவறாததாயிருக்கின்றன. நீங்கள் வேத வசனத்திலிருந்து விலகியிருக்கும்போது, அடையாளங்களையும் அற்புதங்களையும் நீங்கள் எப்படி விசுவாசிக்க முடியும்? வேதவசனங்கள் எவ்வாறு தவறாததாயிருக்கின்றனவோ, அவ்வாறே கிறிஸ்துவையும் (இங்கே மேலே இருக்கின்ற), புறம்பாக்கிட முடியாது. மேலே உள்ள அவரது மகத்தான சரீரம் மற்றும் அவரது சரீரத்தின் ஒவ்வொரு அசைவும் பூமியில் ஒரு செய்கையைப் பிரதிபலிக்கிறது, அது கண்டிப்பாக இருக்கும். ஆகையால் கிறிஸ்து…உங்களுடைய…தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமையானது இங்கே பூமியிலுள்ள மாம்சப்பிரகாரமான அல்லது ஆவிக்குரிய சபையிலிருந்து எடுக்கப்பட்டால், அப்பொழுது அது கிறிஸ்து விலிருந்தும் நீக்கப்பட்டது போன்றதாகும். அவர் இனிமேல்…
2461 ஆனால், ஓ, அந்த உண்மையான திராட்சைச் செடியைப் பற்றியும், கொடிகளாகிய நம்மைப் பற்றியும் என்ன ஒரு அருமையான காட்சி. புரிகிறதா? திராட்சைச்செடி எங்கே செல்கிறதோ, அங்கே கொடிகளும் செல்லுகின்றன. அது சரியா? அவருடைய சரீரமானது அசைவுக்குள்ளும் வல்லமைக்குள்ளும் வருவதுபோன்று, அவருடைய மகத்தான சரீரம், ஓ, அவருடைய மகத்தான இரத்தம் வடிகின்ற கரங்கள், விழுகின்ற கண்ணீர், இரத்தம் வடிகின்ற அவருடைய விலாக்கள், அடிக்கப்பட்ட அவருடைய முதுகு, இதைப் போன்று பூமியின் மேலே தேவனுக்கும் (பிதா) பூமியிலுள்ள அழிவுள்ள மானிடர்களுக்கும் நடுவே தொங்கிக் கொண்டு, பரிந்து பேசிக்கொண்டு அவர்களை நேசிக்கின்றாரே, அது சபைக்குள் அளிக்கப்பட்டுள்ளது என்பது எவ்வளவு அழகான ஒன்றல்லவா. 62 “என்னுடைய கரங்களை இவ்வழியாய் அசைப்பேன்” என்று அவர் கூறுகையில், அவருடைய சரீரமானது அசைகின்றது. “இங்கே சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்,” அந்த சபை சரியாக நேரே செல்வதை நீங்கள் காண்பீர்கள். ஏனென்றால் என் கையினுடைய நிழலானது கையுடனே செல்ல வேண்டும். ஆமென். அது சரியா? ஆமென். ஓ, என்னே, அதைக் குறித்து நான் நினைக்கையில்! அங்கே அவர் இருக்கிறார், அவருடைய சரீரமானது அசைகின்றது, “நீங்கள் உலகமெங்கும் போய், வல்லமையை பிரஸ்தாபித்துக் காட்டுங்கள்.” காரியம் என்னவென்றால் நம்முடைய இறையியல், போதகங்கள் மற்றும் அது போன்றவைகளை இன்னும் செய்வோமானால் நாம் மோசமாகத் தோல்வியுறுவோம். ஆனால் இப்பொழுது தேவனுடைய கரமானது அசைந்து, அடையாளங்களும் அற்புதங்களும் நம் கண்ணெதிரில் தோன்றிக் கொண்டுள்ளன. ஏன், என்னே!
2563 இயேசு கூறினார், அங்கே அவர் பிசாசுகளைத் துரத்திக் கொண்டிருந்தபோது…இப்பொழுது, ஒரு கணம், கேள்வியைவிட்டு அகன்று செல்லவில்லை. ஆனால் இயேசு கூறினார், அவர் பிசாசுகளைத் துரத்தும்போது, அவர், “உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் எதினால் அவைகளைத் துரத்துகிறார்கள்? நீங்கள் இதைவிட சிறந்தக் கொள்கையைப் பெற்றிருந்தால், எங்களுக்குக் காண்பியுங்கள்,” என்றார். புரிகிறதா? “நான் தேவனுடைய விரலினாலே…” ஆமென். தேவனுடைய “விரலைக்,” குறித்து சற்று சிந்தியுங்கள். கிறிஸ்துவிற்கு மேலாக தேவன் இருக்கிறார்; சபைக்கு மேலாக கிறிஸ்து. அங்கே தேவன், பிதா, இன்ன-இன்ன காரியத்தைக் கூறுகிறார்; பிறகு தேவன், குமாரன், தம்முடைய கரத்தை அசைக்க நிழல் அதைத் தொடர்கிறது. “நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்?” 64 கவனியுங்கள், நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஓ, பிசாசு உங்கள்மேல் எவ்வளவு பெரிய ஒரு வியாதியை அல்லது எவ்வளவு பெரிய வருத்தத்தைப் ஏற்படுத்த முடிந்தாலும் பரவாயில்லை, அவைகளை அகற்ற அவருடைய விரல் ஒன்றே போதும். ஓ, என்னே! என்னே! அவைகள் மிகப் பெரிய வலுவான தோள்களும் கரங்களும் தசைகளும் கொண்டுள்ளன என்பதைப் பாருங்கள். ஆனால் அவருடைய விரல் ஒவ்வொரு வியாதியையும் பிசாசுகளையும் துரத்துகிறது. பிசாசு என்னே ஒரு அற்பமான காரியமாய் இருக்கிறானே! அவர் தம்முடைய விரலைக்கொண்டு அவனைத் தூரத் தள்ளிவிடுகிறார். “நான் தேவனுடைய விரலினாலே…”
2665 இப்பொழுது நான் உங்களுக்கு தேவனுடைய அன்பைக் காண்பிக்கட்டும். ஆனால் ஒரு ஆடு தொலைந்தபோதோ, அவர் தம்முடைய விரலை உபயோகிக்கவில்லை, அதைத் தம்முடைய தோள்களின் மீது கிடத்தினார், அவர் தம்முடைய முழு சரீரத்தையும், கைகளையும் பிரயோகித்து, ஆட்டை தம்முடைய தோளின் மீது வைத்தார். ஒரு மனிதனுடைய தோள்களும், முதுகும் ஒரு மனிதனின் மிகவும் பலங்கொண்டதும், வல்லமை கொண்டதுமான பாகங்களாகும். நீங்கள் அதை அறிவீர்கள். அவர் தம்முடைய கைத் தசைகள் மற்றும் தசைகள் செயல்பட, அவர் அந்த ஆட்டை முழுமையாக எடுத்துக்கொள்கிறார்; தூக்கி தம் தோளின் மீது போட்டுக்கொண்டு இதோ அவர் வருகிறார், அவர் ஒரு சிறிய, பழைய பிசாசை ஓட்ட தம் விரலைக்கொண்டு வருவதுபோன்று வரவில்லை, ஆனால் இங்கே தம்முடைய…எல்லா தசைகளையும், கால் தசைகளையும், கை தசைகளையும் கொண்டு, வனாந்திரத்தில் சென்று, காணாமற்போன அந்த ஆட்டை எடுத்து தம் தோளின் மீது வைத்துக் கொள்கிறார். ஓ, என்னே! “நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்?” ஓ, அல்லேலூயா! என்னே!
2766 சரி, இப்பொழுது பொருளிற்கு வருவோம்: ஆனால் எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது… அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும்…வெளியே புறப்படவும், நாட்டுப் புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரிவேசியாமலிருக்கவும் கடவர்கள். எழுதியிருக்கிறபடி யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிகட்டும் நாட்கள் அவைகளே. அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின் மேல் கோபாக்கினையும் உண்டாகும். பட்டயக் கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைபட்டுப் போவார்கள்;
2867 அதைக் குறிப்பாக எடுத்துக் காட்ட இங்கே வேத வாக்கியங்கள் எவ்வளவு அழகாக இருக்கினறன என்பதைக் கவனியுங்கள். முதலாவது காரியம், “பட்டயங்களின் கருக்கினாலே.” கடைசியாக வருவது அணுகுண்டு ஆகும். புரிகிறதா? ஆனால் இது பட்டயக்கருக்கினால் உண்டாகிறது, யூதர்கள் எல்லா நாடுகளுக்கும் சிறையாக்கிக் கொண்டு செல்லப்பட்டனர். அது அவ்விதம் மறுபடியும் இருக்காது, அவர்கள் கடைசி காலத்திற்காக பாலஸ்தீனாவில் ஒன்று சேர்க்கப்படுவார்கள். புரிகிறதா? இது கடந்து போன நாட்களைக் குறிக்கின்றது. அது சரித்திரத்தின்படியே சரியாக, அப்படியே நடந்தேறியது. 68 அவர்கள் எல்லா நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். வானத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு தேசத்திலும், நீங்கள் யூதர்களைக் காணலாம். ஓ, ஒவ்வொரு தேசத்திலும்! நீங்கள் சீனாவிற்குச் சென்றால், நீங்கள் யூதர்களைக் காணலாம். நீங்கள் ரஷ்யாவிற்குச் சென்றால், நீங்கள் யூதர்கள் இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு சிறு தீவுகளுக்கும் செல்லுங்கள், நீங்கள் யூதர்களைக் காணலாம். ஒவ்வொரு தேசத்திலும் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்களே! அது என்ன? தேவனுடைய தீர்க்கதரிசனம் ஆகும். தேவன் அதை எண்ணினார். சகோதரனே, அந்த யூதர்கள்தான் தூரத்தைக் காட்டும் அடையாளக் கம்பங்கள் ஆவர். நீங்கள் அவர்களைக் காணும்போது…
2969 அவர்கள் குருடாயிருந்து கொண்டு செல்லப்பட்டதையும், வஞ்சிக்கப்பட்டதையும் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் நான் அறிவேன், ஆனால் நீங்களும் நானும் காணத்தக்கதாக அவர்கள் தேவனால் வஞ்சிக்கப்பட்டனர். அது சரி. ஆனால் தீர்க்கதரிசன ஆவியைக் கொண்டும், வேதத்தைக் கொண்டும், அதை, நான் கூறுவேன், யூதன் வீட்டிற்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது. ஆம், ஐயா. அவர் ஹிட்லரின் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜெர்மனி தேசத்திலிருந்து அவர்களை விரட்டினார்; முசோலினியின் இருதயத்தைக் கடினப்படுத்தி, ரஷ்யாவை விட்டு அவர்களை விரட்டினார். அவர் அவர்களை வெளியே கொண்டு வர அந்நாட்களில் செய்ததுபோல, அவர் அவர்களை எவ்விடத்திலிருந்தும் விரட்டிக்கொண்டிருக்கிறார். அதன்பிறகு அவர்கள் வனாந்தரத்திற்கு சென்று அங்கே கடந்து செல்ல ஆயத்தமாயிருந்தபோது, என்ன நிகழ்ந்தது? தேவன் மகத்தான வாதைகளையும் மற்ற காரியங்களையும் கொண்டு அந்த தேசத்தைச் சந்தித்தார். அவர் எசேக்கியேல் மற்றும் வெளிப்படுத்தல் 11-ல் வருகின்ற இரண்டு ஒலிவமரங்களாகிய, தமது இரண்டு ஊழியக்காரர் வருகையில் அவர் மறுபடியும் அதைச் செய்வார். அவர் அந்த அற்புதங்களையும் அடையாளங்களையும் மறுபடியும் செய்வார்.
3070 வெளிப்படுத்தல் 11-ல் வரும் அந்த இரண்டு சாட்சிகளைப் பாருங்கள், “என்னுடைய இரண்டு சாட்சிகளுக்கும் நான் அதிகாரம் கொடுப்பேன், அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாட்களிலே வானத்தை அடைப்பார்கள், அல்லது அவர்கள் விரும்புகிறபோதெல்லாம் பூமியின்மேல் வாதைகளை அனுப்புவார்கள்.” அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, கடைசி நாட்களில் இரண்டு சாட்சிகள். 71 “அது பழைய மற்றும் புதிய ஏற்பாடு” என்கின்ற நவீன போதகம் என்பது எனக்குத் தெரியும். அது தவறு! அது தவறு! 72 இரண்டு சாட்சிகள் என்பது, முற்றிலுமாக, மோசேயும் எலியாவும் திரும்பி வருதலாய் இருக்கவில்லையா. அங்கே நீங்கள் மீண்டும் கவனியுங்கள், அவர்களில் ஒருவரும்…மோசே, அவன் மரித்தான், ஆனால் அவன் எங்கு சென்றான்? அவன் மறுபடியும் எழுந்திருக்க வேண்டும். எலியா மரணத்தைக் காணாமல் மறுரூபமாக்கப்பட்டான். அவன் மரிக்க வேண்டும், ஏனெனில் ஒவ்வொரு மானிடனும் மரிக்க வேண்டும், ஆகவே அவன் மறுபடியும் திரும்ப வர வேண்டும். ஆகவே அந்த இரண்டு சாட்சிகள் உள்ளனர்.
3173 இப்பொழுது கவனியுங்கள்: அவர்கள் மிதிப்பார்கள்… அவர்கள்…பட்டயக் கருக்கினாலே விழுவார்கள்,… (24வது வசனம்), புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டு போவார்கள். எருசலேம் புறஜாதிகளால் மிதிக்கப்படும்…(ஆமென்!)… புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும். 74 நமக்கு சிறிது காலம் மாத்திரமே உள்ளது என்பதை அறியும்போது, அது அதிர்ச்சியூட்டுகின்றதாய் இருக்கிறதல்லவா? தேவன் அவ்வாறே கூறியுள்ளார்! நேபுகாத்நேச்சார் ராஜாவோடு புறஜாதியாரின் காலம் துவங்கியது. ஓ, எவ்வளவு குறிப்பிடத்தக்கது! இதன் பேரில் எவ்வளவு நேரமானாலும் என்னால் செலவழிக்க முடியும், ஆனால் இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே உள்ளன! ஆனால் கவனியுங்கள், எல்லாரும் தங்கள் கேள்விக்கு பதிலைப் பெற விரும்புகின்றனர். ஆனால், நாம் இதன் பேரில் பேசுகையில், நாம் இதைக் குறித்து சிந்திப்போமாக, ஏனென்றால் சரியாக இப்பொழுது, அது நமக்கு மிகவும் தேவையான ஒன்றாய் உள்ளது. 75 கவனியுங்கள்! தேவன் யூத மக்களை, நடத்தினார். அவர்கள் ஒரு தேசமாக இருக்கவில்லை, அவர்கள் ஒரு ஜனமாய் இருந்தனர். அவர்கள் ஒருபோதும் ஒரு ஸ்தாபனமாக்கப்பட்ட சபையாய் இருந்ததில்லை, அவர்கள் வெளியே அழைக்கப்பட்ட சபையாய் மாத்திரம் இருந்தனர். இவர்களுக்கு மத்தியிலே ஒரு ஸ்தாபனம் ஒருபோதும் இருந்ததில்லை, அவர்கள் எப்போதுமே தேவனால் வழிநடத்தப்பட்டனர். 76 அதன்பிறகு அரசியல் ரீதியாகவும், தேச ரீதியாகவும், அவர்கள் விரும்பிய ஒரு ராஜா வர வேண்டும் என்பதை…விரும்பினர். ஆகவே தேவன் அவர்களுக்கு ஒரு ராஜாவைக் கொடுத்தபோது அது கிரியை செய்யவேயில்லை. தேவன்தான் அவர்களுடைய ராஜா. தேவன்தான் நம்முடைய ராஜா, அது உண்மை, தேவன்தான் சபையினுடைய ராஜா.
3277 இப்பொழுது, அதன்பின்னர் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனிற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பதைக் கவனியுங்கள், ஏனென்றால் அவர்கள் உலகத்தின் தேசங்களைப் போல பாவனை செய்ய முயன்றனர். இன்றைய சபை அப்பாலுள்ள உலகத்தை பாவானை செய்ய முயல்வதற்கு அது என்ன ஒரு அழகான காட்சியாக இருக்கிறது, தங்களுடைய—தங்களுடைய வாழ்க்கையின் போக்கிலே அப்படியே அடித்துச் செல்லப்படுகின்றனர், அடித்து செல்லப்படுகின்றனர். உலகம் செய்கிறதுபோல சபையும் ஜீவிக்கிறது, அப்படியே செய்துகொண்டு, அப்படியே நடந்து கொண்டு எல்லாவற்றையும் செய்துகொண்டு, தான் சபையென்று கூறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் அதைச் செய்யக் கூடாது. இல்லை, ஐயா. நீங்கள் யார் என்பதை உங்கள் ஜீவியம் நிரூபிக்கிறது. 78 நீங்கள் யாராயிருக்கிறீர்கள்…நான் துவக்கத்தில் கூறினது போன்று, நீங்கள் வேறெங்கேயோ என்னவாய் இருக்கிறீர்களோ அதைத்தான் நீங்கள் இங்கே பிரதிபலிக்கிறீர்கள். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பது, மேலே எங்கேயோ உள்ள உங்களுடைய வானத்துக்குரிய சரீரம் அல்லது பூமிக்குரிய சரீரம் எப்படி உள்ளதோ, உங்களுடைய வானத்துக்குரிய சரீரம் எங்கோ எப்படி உள்ளதோ அதைத்தான் இங்கேயும் நீங்கள் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆவிக்குரிய தேசத்தில், நீங்கள் என்னவாய் இருக்கிறீர்களோ, அதே போன்றுதான் நீங்கள் இங்கேயும் இருக்கிறீர்கள். நீங்கள் ஆவிக்குரிய தேசத்தில் இன்னும் கெட்ட சிந்தையுடையவர்களாய் இருந்தால், நீங்கள் இங்கேயும் கெட்ட சிந்தையுடையவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் பகைமை எண்ணம், பொறாமை, சச்சரவு போன்றவைகளை ஆவிக்குரிய தேசத்தில் கொண்டிருப்பீர்களானால், அது இங்கே திரும்பி பிரதிபலிக்கும். ஆனால் உங்களுடைய முழு உள்ளான காரியங்கள் சுத்தமாக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டிருந்தால், அங்கே நீங்கள் அப்பால் சுத்தமாக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட ஒரு சரீரத்தை (காத்துக் கொண்டிருக்கிறது) பெற்றிருக்கிறீர்கள் என்பதை அது காண்பிக்கின்றது, அது மாம்சத்திலே அந்த விளைவைப் பிரதிபலிக்கின்றது. நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? பாருங்கள், இங்கே இருக்கிறது. “இந்த பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும் நமக்காக ஒன்று ஏற்கெனவே காத்துக்கொண்டிருக்கின்றது.” புரிகிறதா?
3379 இப்பொழுது, இந்தக் காலத்தில், இந்த கடைசி காலத்தில், எப்படி இந்த மாம்சீக ஒப்பனை செய்தல், இப்பொழுது, இந்தக் காலத்தில், இந்த கடைசி காலத்தில், எப்படி இந்த மாம்சீக ஒப்பனை செய்தல். அவர்கள் பாபிலோனுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். அது சரியா? வேதம், “கர்த்தருடைய தூதன் வந்து ‘என் ஜனங்களே, பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்!’ என்று அழைத்தான்” என்று கூறியுள்ளது. 80 குழப்பம்! “நான் ஒரு பாப்டிஸ்ட். நான் ஒரு மெத்தோடிஸ்டு. நான் ஒரு பிரஸ்பிடேரியன்,” இது எல்லாம் வெறுமென குழப்பமே. அதில் இரட்சிப்பு என்பதே கிடையாது. 81 இப்பொழுது, பாப்டிஸ்டு மக்கள், மெத்தோடிஸ்ட் மக்கள் இரட்சிப்பைப் பெற்றிருக்கவில்லை என்று நான் கூறிக்கொண்டிருக்கிறேன் என்று கூறாதீர்கள். நான் அதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கவில்லை. நான் சபையைக் குறித்தும் அதினுடைய அரசியல் வல்லமையைக் குறித்தும் நான் பேசிக் கொண்டிருக்கிறேன், அது அரசியலையே. அரசியல் பூர்வமாகப் பேசுகிறேன், ஏனெனில் நீ மெதோடிஸ்டாக அல்லது பாப்டிஸ்டு அல்லது பிரஸ்பிடேரியன் அல்லது கத்தோலிக்கனாக இருப்பதால், அதனுடன் எந்த சம்மந்தமும் இல்லை. தேவனும் கூட அதை அங்கீகரிப்பதில்லை, மேலும் அது இன்றைக்கு பாபிலோனில் இருக்கிறது. தேவன் தமது சபையை ஏற்படுத்த, இருதயத்தில் சுத்தமுள்ளவர்களை வெளியே இழுத்து, அவர்கள் எல்லோரையும் ஒரு சபையாக அழைக்கிறார். எவ்வளவு அழகானது!
3482 கவனியுங்கள், உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஏதோ ஒன்றை என்னால் கூற முடியும், ஆனால் அது…இப்பொழுது, கவனியுங்கள். உண்மையாக தொழுதுகொண்டவர்கள் மீது நிர்ப்பந்தம் கொண்டு வரப்பட்டபோது, பாபிலோனில்…என்ன நடந்தது…எப்படி பாபிலோனில் என்பதை கவனியுங்கள். நினைவிருக்கட்டும், வெகு சிலரான ஷாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ, தானியேல், அன்று சிறைபிடிக்கப்பட்டவர்களில், தேவனை உண்மையாக தொழுதுகொண்டவர்களாகிய, தாங்கள் யார் என்றும், அவர்களுடைய உண்மையான சுவாபம் என்னவென்றும் காண்பிக்க தேவன் அவர்களை அழைத்தார். ஒரு விக்கிரகத்தை வழிபட அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அது சரிதானே? விக்கிரக ஆராதனை! அவர்கள் விக்கிரகத்தை வணங்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டனர், ஒரு சொரூபத்திற்கு முன்பு தலை வணங்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் அதைச் செய்யாதிருந்ததால், அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். 83 ஓ, தானியேலையும், வெளிப்படுத்தின விசேஷத்தையும் எடுத்து ஒன்றாக இணைத்து வேத வசனத்தின் மூலம் சபையும் வெளியே அழைக்கப்படுவதற்கு முன் அத்தகைய துன்புறுத்தலை அடைவாள் என்பதை காண்பித்தல் என்ன ஒரு அழகான காட்சியாக இருக்கிறது. அந்த விதமாகத்தான் புறஜாதி சபையானது உள்ளே கொண்டு வரப்பட்டது, அந்த விதமாகவே புறஜாதி சபையும் வெளியே எடுக்கப்படும். எப்படி வருகின்றாளோ அவள் அவ்விதமாகவே செல்வாள்.
3584 அவன் எப்படி அந்த சொரூபத்தைக் கண்டான் என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், அந்த சொரூபம்…இப்பொழுது, இப்பொழுது இது சொந்த இடம். கவனியுங்கள், நேபுகாத்நேச்சார் ராஜா செய்த சொரூபம், பரிசுத்த மனிதனாகிய தானியேலுடையது என நான் நம்புகிறேன். நீங்கள் கவனிப்பீர்களானால், நேபுகாத்நேச்சார் அரசன் தானியேலை “பெல்தேஷாத்சார்” (அது அவனுடைய சொரூபமாயிருந்தது) என்று ஏற்கனவே அழைத்திருந்தான். அவன் ஒரு சொரூபத்தை உண்டாக்கினான்—உண்டாக்கினான், இந்த சிங்கக் கெபியில், மற்றும் அது போன்றவைகளில் தானியேலுக்குப் பிறகு யாரும் போடப்படவில்லை. அவன், “தானியேலின் தேவனைத் தவிர, வேறே தேவர்களை யாரும் சேவிக்கக் கூடாது” என்றான். ஆகவே இந்த பரிசுத்த மனிதனின் சொரூபமாக அது அநேகமாக இருந்திருக்கக் கூடும், அந்த மகத்தான சிலையை, இதற்கு எல்லாரும் வணங்க வேண்டியதாயிருந்தது. 85 ஆனால் சபையாகிய, ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ… கிறிஸ்து சபைக்கு தலைவராய் இருக்கிறதுபோல, தானியேல் தலைவனாய் இருந்தான். 86 ஆகவே அவர்கள் இந்த சொரூபத்திற்கு வணங்கி அதை சேவிக்க வேண்டியதாய் இருந்தது. கவனியுங்கள்! நீங்கள் கவனிப்பீர்களானால், அந்த நேரங்களில், தானியேல் அமைதியாயிருந்தான். ஆமென்! ஓ, இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன். தானியேல் அமைதியாயிருந்தான். அவர்களை…அவர்கள் தங்களுடைய சொந்த தெரிந்தெடுத்தலைச் செய்ய வேண்டியவர்களாய் இருந்தனர்.
3687 அந்த நாளில்…புறஜாதிகளின் சமயம் முடிவடையும் நேரத்தில், அங்கே ஒரு சொரூபம் இருக்கும், எல்லாரும் இந்த சொரூபத்தை வணங்கித் அதை தொழுதுகொள்ள வேண்டும். அது எப்போதும்போல பரிசுத்தமாய் இருந்தாலும், நீங்கள் ஒரு சொரூபத்தை தொழுதுகொள்ளக் கூடாது (சொரூப-வழிபாடு). 88 இப்பொழுது, கவனியுங்கள். ஓ, என்னே! கடைசி நேரத்தில் சரியாக, தானியேல் மறுபடியும் உள்ளே வருகிறான். எவ்வளவு மகத்துவமானது! வைப்பாட்டிகளுடனும், மற்றவர்களுடனும் அந்த மகத்தான விருந்து நடக்க இருந்த அந்த இரவில் சுவற்றின் மேல் ஒரு கையுறுப்பு வந்து, “மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்” என்று சுவற்றில் எழுதினது. அது அந்நிய பாஷையில் எழுதப்பட்டிருந்ததால், யாராலும் அதற்கு வியாக்கியானம் அளிக்க முடிவில்லை. யாருமே அதற்கு அர்த்தம் உரைக்க முடியவில்லை. 89 அவர்கள் சென்று சிறந்த ஞானிகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் “எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறினர். 90 அவர்கள் சென்று அவர்களுடைய எல்லா குறிசொல்பவர்களையும், ஜோதிடக்காரர்களையும் அழைத்து வந்தனர். அவர்கள், “எங்களுக்குத் தெரியவில்லை. அதைக் குறித்து எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒரு பாஷையை நாங்கள் ஒருபோதும் பார்த்ததுமில்லை, எங்களுடைய ஜீவியத்தில் இப்படிப்பட்டதை ஒருபோதும் கேட்டதுமில்லை” என்றனர். 91 ஆனால் அங்கே ஒரு மனிதன் இருந்தான்! தேவன் தம்முடைய மனிதனை வைத்திருந்தார், தானியேல் அங்கே இருந்தான். எனவே, “நீங்கள் சென்று அவனைக் கொண்டு வாருங்கள்,” என்று கூறினான், “ஏனெனில் தேவனுடைய ஆவி அவனுக்குள் வாசம் செய்கிறது” என்று கூறினான். 92 ஆகவே தானியேல் அங்கே வந்து, அந்த சுவற்றில் எழுதப்பட்ட அந்த பாஷையைப் படித்து அதை வியாக்கியானம் செய்து, அவன் அளித்ததோ… வியாக்கியானம் என்னவாய் இருந்தது? “ஓ, நீர் ஆசீர்வதிக்கப்படுவீராக, ஓ ராஜாவே நீர் என்றும் வாழ்க” என்றல்ல, ஆனால் ஒரு நேரடியான, கனத்த குரலில், அவன் திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டான் என்னும் ஒரு விதத்தில், “நீ தராசிலே நிறுத்தப்பட்டு, குறையக் காணப்பட்டாய்” என்றான்.
3793 கவனியுங்கள், அது அதே விதமாகத்தான் இருக்கின்றது. இயற்கைக்கு மேம்பட்ட காரியம் எப்படி புறஜாதியாரின் ராஜ்ஜியத்தை உள்ளே கொண்டு வந்ததோ, அதே போன்று இயற்கைக்கு மேம்பட்ட காரியம் இதை புறஜாதியாரிடமிருந்து வெளியே எடுக்கிறது. இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் ராஜ்ஜியம் ஆரம்பித்து, இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் அது வெளியே செல்கிறது. எருசலேமின் மதில்கள் மிதிக்கப்படும்…படும்…அது… “புறஜாதியாரின் காலம் நிறைவாகும் வரை புறஜாதியார் அதைக் கொண்டிருப்பார்கள்.” பிறகு தேவன் யூதர்களிடம் திரும்புகிறார். ஆமென்! ஓ என்னே! 94 ஓ, நண்பர்களே, நாம் அதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் விரும்பவில்லையா? நாம் அந்த ஒரு பொருளின் மேல் சுமார் ஒரு வாரம் நீடித்திருக்கலாம், பாருங்கள், அதனால் வேதவாக்கியத்தினூடாக நாம் அதை முழுவதுமாக ஆராய முடியும்.
3895 அதை, கவனியுங்கள், இப்பொழுது அவர் என்ன கூறினார் என்று கூர்ந்து கவனியுங்கள்—கவனியுங்கள். “புறஜாதிகளின் காலம் நிறைவேறும் வரை எருசலேம் புறஜாதிகளால் மிதிக்கப்படும்.” தீத்து எருசலேமை முற்றுகையிட்டு, பின்னர் உள்ளே வந்து, எருசலேமைப் பிடித்தான். அவர், “இப்பொழுது—இப்பொழுது பாழாக்கும் அருவருப்பை நீங்கள் கேட்கும்போது?” என்றார். “ஆம்.” “பாருங்கள், புறஜாதிகள் உள்ளே வந்த பிறகுதான்.” “ஆம், நாங்கள் அதைப் புரிந்துகொள்கிறோம்” என்று சீஷர்கள் கூறினார்கள். “இப்பொழுது, புறஜாதியார் இப்பொழுது தங்கள் அரசாங்கத்தை கொண்டிருக்கின்றனர்” “நிச்சயமாக.” 96 “எருசலேம் அப்பொழுது புறஜாதியாரின் அரசாங்கத்தின் கீழ் இருந்ததா?” ஆம், ஐயா! ரோமர்கள். அவர்கள் இன்னும் எருசலேமில் அரசாங்கத்தைக் கொண்டிருந்தனர். தானியேல் உரைத்திருந்த அந்த பாழாக்கும் அருவருப்பினால் அது அப்போதே ஆரம்பித்துவிட்டது.
3997 இப்பொழுது அவர், “காலமானது சமீபமாய் இருக்கிறது, ஏனெனில் அவர்கள் முகமதியர், புறஜாதியர், இந்த ஆலயத்தை அழித்துப்போட்டு, ஓமர் மசூதியை இந்த இடத்தில் கட்டுவார்கள், அது இங்கே நிற்கப்போகிறது, அது இங்கே நிற்கப் போகிறது.” என்றார். 98 புறஜாதி என்றால் “அவிசுவாசி” என்று பொருளாகும். இப்பொழுது, அது சபை அல்ல. அது புறஜாதி, பாருங்கள், அவிசுவாசி. இப்பொழுது, புறஜாதியாரின் காலம் நிறைவேற்றப்படும் வரை அது அங்கே நிற்கும். அதன்பின்னர் புறஜாதிகளின் யுகம் முடிவடையும்போது, அந்த மகத்தான பிரபு கடைசிக் காலத்தில் மக்களுக்காக நிற்பார் (அவர் கிறிஸ்து). 99 தானியேலில், “அவனிடத்தில் அவர் வந்தார்,” “அவருடைய சிரசின் மயிர் வெண்மையாய் இருந்தது,” வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரத்தில் நாம் காண்பதுபோன்று, “நீண்ட ஆயுசுள்ளவர். நியாயசங்கம் உட்கார்ந்து புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. புஸ்தகங்கள்” (பன்மை) “திறக்கப்பட்டு எழுதப்பட்டவைகளின்படியே, ஒவ்வொருவரும் நியாயத்தீர்ப்படைந்தனர்.” கவனியுங்கள், புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, “அவன் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் வந்தார், ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்.” அவருடன் பரிசுத்தவான்கள் வந்தனர். அது சரியாக, தானியேலில் உள்ளதா? “புஸ்தகங்கள் திறக்கப்பட்டன,” அதுதான் உங்களுடைய ஜீவியத்தின் புஸ்தகமாகும், “ஒவ்வொரு மனிதனும்—ஒவ்வொரு மனிதனும் இவ்விதம் நியாயந்தீர்க்கப்பட்டான், பாவியும், இவ்விதம் நியாயந்தீர்க்கப்பட்டான். வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது,” அதுதான் ஜீவ புஸ்தமாயிருந்தது, “ஒவ்வொரு மனிதனும் நியாயந்தீர்க்கப்பட்டான்.”
40100 இப்பொழுது கவனியுங்கள், அது மூன்றாக இருக்கின்றது என்பதை, நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இதை நினைவில் கொள்ளவில்லையெனில், நிச்சயமாக நீங்கள் குழம்பிப்போவீர்கள். பூமியின் மேல் பிறந்த மக்களில் மூன்று வகையைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்; ஆதியில் மூன்று வகையினர் இருந்தனர்; கடைசியிலும் மூன்று வகையினர் இருப்பர். என்ன… 101 அவரைத் தொழுது கொண்டிருக்கிற, ஆயிரமாயிரம் பேர்களோடும் இயேசு திரும்பி வந்தார். அவர் கூறினதை நினைவில் வைத்திருக்கிறீர்களா, “உங்களுடைய வணிகம் மற்றும் உங்களுடைய தொல்லைகளை… சட்டத்திற்கு முன் நீங்கள் கொண்டு செல்வது அசாதாரணமான காரியமாய் அல்லது ஒரு அற்பமான காரியமாய் இருக்கவில்லையா, பரிசுத்தவான்கள் உலகத்தை நீயாயந்தீர்ப்பார்கள் என்பதை அறியீர்களா?” பரிசுத்தவான்கள் பூமியை நியாயந்தீர்ப்பார்கள்! அல்லேலூயா! நான் அதைக் குறித்து நினைக்கையில், என்னே! அதே, அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுடன், அவர் வருவதையும், ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு, மீட்பையும் மற்றும் எல்லா காலங்களிலும் மீட்கப்பட்ட யாவரும் அவருடைய பிரசன்னத்தில் நிற்பதையும் காண்பது. இரத்தத்தால் கழுவப்பட்ட மணவாட்டி!
41102 நல்ல ஜனங்களாய் இருப்பவர்கள் அல்ல, அவர்கள் நிச்சயமாக முதலாம் உயிர்த்தெழுதலில் இருக்கமாட்டார்கள். வேதம், “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை,” என்று கூறியுள்ளது. அது சரிதானே? அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் தங்களுடைய பெயரெழுதப்பட்டிருந்தாலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற மறுத்தவர்கள். 103 அந்நேரத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவர் மாத்திரமே உள்ளே செல்கின்றனர். ஆயிரவருட அரசாட்சியில் தெரிந்துகொள்ளப்பட்டவர் மாத்திரமே செல்வர். ஓ, அப்படியானால், சகோதரனே, என்ன விதமான மக்களாய் நாம் இருத்தல் வேண்டும்? நான் ஆயிர வருட அரசாட்சியில் முழுவதுமாக இருக்க விரும்புகிறேன்! நாம் நம்முடைய பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் புறம்பே தள்ளுவோமாக. ஒரு நபர் ஏதோ ஒன்றைக் தவறாக கூறி அல்லது இந்த விதமாக தவறாகச் செய்தால், அவருக்காக ஜெபித்து, தொடர்ந்து சென்றுகொண்டே இருப்போம். உங்களுடைய ஒரே மாற்று வழி தேவனை நோக்கியவாறே இருக்கட்டும். வேறுயாரும் அதைச் சென்றடையவில்லையென்றாலும், நீங்கள் அதைச் சென்றடையுங்கள்! ஏனென்றால் தெரிந்துகொள்ளப்பட்டவர் மாத்திரம் ஆயிர வருட அரசாட்சியியினூடாக ஜீவித்து, கிறிஸ்துவுடன் ஆயிரம் வருடம் ஜீவிக்க உள்ளே சென்று, மகிமையில் அவருடன் சென்று திரும்பவும் வருவார்கள். துன்மார்க்கரின் உயிர்த்தெழுதல் நடை பெற்றவுடன், அதன்பின்னர் ஆயிர வருட அரசாட்சி…ஆயிர வருட அரசாட்சி முடிவடைந்த பின்னர், அப்பொழுது கிறிஸ்து சபையுடன் மேலே செல்வார், ஆயிர வருட கடைசியில் அவர் சபையுடன் திரும்ப வருவார்.
42104 கிறிஸ்து மூன்று முறை வருகின்றார். முதல் முறையாக, அவர் தம்முடைய சபையை மீட்க வந்தார். அது சரிதானே? இரண்டாவது முறையாக, அவர் தம்முடைய சபையை பெற்றுக்கொள்ள வருகிறார். மூன்றாவது முறையாக, அவர் சபையுடன் வருகிறார். புரிகிறதா? அவர் அவளை மீட்க வருகிறார்; அவளை ஆகாயத்தில் எடுத்துக்கொள்ள, வாதைகள் இன்னும் மற்ற காரியங்களின் நேரத்தில் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ள வருகிறார்; ஆயிர வருட அரசாட்சிக்காக திரும்பவும் வருகிறார், ஆயிரம் வருடங்கள் முழுவதும் இருக்கின்றார். 105 அதன்பின் அந்த மகத்தான ராஜாவும் ராணியும் நியாயத்தீர்க்க கீழே வருகின்றனர். வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டு புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. அதோ அங்கே மீட்கப்பட்டவர்கள் அங்கு நின்று கொண்டிருக்கின்றனர், பரிசுத்த ஆவியினாலே பிறந்து ஜீவிக்கிற தேவனுடைய சபை அங்கே அந்த அழகுடன் நியாயந்தீர்க்க நின்று கொண்டிருக்கிறது. “புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டது, ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு நியாயத்தீர்ப்படைந்தான்” அதுதான் பாவியாயிருந்தது. “வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது,” பரிசுத்தாவியால் நிரப்பப்பட்டுள்ள மணவாட்டிக்கு அல்ல, அவள் எடுத்துக்கொள்ளப்படுதலில் இருப்பதினால் அவள் அதில் இல்லை. 106 இந்த காலையில் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தால், தேவனுடைய வல்லமை உங்கள் சரீரத்தின் ஒவ்வொரு தசைநாரிலும் அசைந்து கொண்டிருக்குமானால், நியாயத்தீர்ப்பின் நாளிலே எப்படிப்பட்ட நன்மையை அது உங்களுக்கு அளிக்கும்? நீங்கள் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட, நிரப்பப்பட்ட, ஏற்கெனவே—ஏற்கெனவே கிறிஸ்து இயேசுவுடன் உன்னதங்களுக்குள் வீற்றிருக்க மறுரூபமாக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அப்படி இருப்பீர்கள் என்பதல்ல, நீங்கள் இப்பொழுதே இருக்கிறீர்கள், சரியாக இப்பொழுதே மறுரூபமாக்கப்பட்டுள்ளீர்கள்!
43107 “அவர் எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” இந்தக் காலையில் உலகத்தில் உள்ள ஒவ்வொரு மீட்கப்பட்ட நபரும், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழிருந்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, நித்திய ஜீவனை உடையவனாய் இருக்கிறபடியால் அழிந்து போக முடியாது, ஏற்கனவே கிறிஸ்து இயேசுவோடு உன்னதங்களில் இருக்கிறபடியால், ஆக்கினைத்தீர்ப்புக்குள் ஒருபோதும் வரமாட்டான். அவன் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளான்! அது அற்புதமானதல்லவா? புரிகிறதா? ஏற்கெனவே மீட்கப்பட்டு, கிறிஸ்துவுடனே உன்னதங்களில் அவர்கள் வீற்றிருக்கின்றனர், ஏற்கெனவே மகி-…மகிமைப்படுத்திவிட்டார், ஏற்கெனவே மகிமைப்படுத்திவிட்டார்! 108 நீங்களோ, “சகோதரன் பில், வேதவாக்கியம் அப்படி கூறுகின்றதா?” என்று கேட்கலாம். 109 இயேசு அதைக் கூறினார், அல்லது வேதவாக்கியம் அதைக் கூறுகிறது, அல்லது எழுத்தாளர்கள். இதை எழுதின பவுல், அவன், “எவர்களை அவர் நீதிமான்களாக்கினாரே, அவர் ஏற்கனவே மகிமைப்படுத்தியுமிருக்கிறார். அவர் எவர்களை முந்நியமித்திருந்தாரோ, அவர் முன்குறித்திருந்தார்; எவர்களை அவர் முன்குறித்திருந்தாரோ, அவரே நீதிமானாக்கினார்; எவர்களை அவர் நீதிமான்களாக்கினாரோ, அவர் ஏற்கனவே மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” அது என்ன? ஓ, என்னே! (என்னை மன்னியுங்கள்.) ஏற்கெனவே மகிமைப்படுத்திவிட்டார்! அப்படியானால் நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, நம்முடைய தசைநார்களும், அவையவங்களும் தேவனுக்குள் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டிருக்குமானால், இது நமக்கு முடிந்துபோய், நீங்கள் செல்லத்தக்கதாக ஒரு மகிமையின் சரீரம் ஏற்கனவே உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. அவர் எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர் ஏற்கனவே மகிமைப்படுத்தியுமிருக்கிறாரே! 110 நான் சிறிது நேரத்திற்கு முன் என்ன கூறிக்கொண்டிருந்தேனென்றால், எதிர்மறை மற்றும் நேர்மறையையே. அதை உங்களுக்குத் தெளிவாகப் புரியும்படி செய்ய எனக்கு போதுமான கல்வியறிவு இருந்தால் நலமாயிருக்கும், ஆனால் என்னால் அதைக் கண்டறிய முடியவில்லை. நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன், ஆனால் நான் கூற நினைக்கும் விதத்தில் அதைக் கூறிட என்னால் முடியவில்லை.
44111 [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] …சிவந்த சமுத்திரம் மற்றும் இவைகள் யாவற்றையும் அவைகள் பெற்றுள்ளன. அங்கே பொருட்கள் உள்ளன, யூதர்கள், உண்மையான ஐஸ்வரியம், ஆகையால் அதேக் காரியமே மீண்டும் அவர்களுடைய கூடாரத்தை மாசுபடுத்தும். ஆம்! உலகத்தின் பட்டணங்களினின்று, அவர்கள் சரியாக வருவார்கள். ரஷ்யாவும் வந்து, “அந்த பொருளைப் நாம் பெற்றாக வேண்டும். அங்கே யுரேனியம் மற்றும் ஒவ்வொரு காரியமும் இருக்கின்றன, நாம் அதைப் பெற்றாக வேண்டும்” என்று கூறும். அவர்கள் செல்கையில், அர்மெகதான் யுத்தம் நிகழும். அப்பொழுது தேவன் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலுக்காக நின்று யுத்தம் செய்தாரே அதைப் போன்றே மீண்டும் செய்வார். ஆனால் அது புறஜாதியாரின் காலம் முடிந்தவுடன் நிகழும். காலமானது முடிவுற்றவுடன், அவள் அறுப்புண்டு போடப்படுவாள்.
45112 [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] இப்பொழுது இந்த கேள்வியை இங்கே கேட்ட அருமையான நபருக்கு, இதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து: 10. அந்த நாட்களில் இருந்த அந்த இராட்சதர்கள் யார்? 113 இப்பொழுது, ஜோசபஸ் அங்கே…நிச்சயமாக, எனக்குத் தெரியும், நம்முடைய சபை, நீங்கள் என்னை போன்றுதான் இருக்கிறீர்கள். நான்—நான் ஒரு ஏழுாவது வகுப்பு வரை படித்த ஒரு பேதை, நான்—நான் கல்வியறிவைக் குறித்தோ மற்றவைகளைக் குறித்தோ கவலைப்படுவதில்லை. சுவிசேஷத்திற்கு இருக்கின்ற தடைகளிலே அதுதான் மிகப் பெரிய தடை என்று நான் கருதுகிறேன். ஆனால், இன்னுமாய், சில சமயங்களில், ஒன்று அல்லது இரண்டு புத்தகத்தை நான் வாசிக்கிறேன். இப்பொழுது, என்னைப் போன்ற மக்களிடையே நான் கொண்டிருக்கின்ற தொடர்பு என்னவெனில், நாமெல்லாரும் ஒரே நிலைமையில் உள்ளோம், நாம் சாதாரண மக்களாயிருக்கிறோம். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வேதம், “சாதாரணமக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்டார்கள்” என்று கூறியுள்ளது. அங்கே வேறொரு பிரிவினராகிய, செல்வந்தர் இருந்தனர், ஆனால் சாதாரண மக்களோ…நம்மைப் போல மிகவும் சாதாரண மக்கள், தேவனை நேசித்து இந்த உலகத்தைக் குறித்து அவ்வளவு அக்கறைக் கொள்ளாமல், தங்கள் குடும்பத்துடனும் பிள்ளைகளுடனும் இருக்கும் மக்கள், நாம் தேவனை நேசித்து சபைக்கு செல்ல விரும்புகிறோம், அவருடைய ராஜ்ஜியத்திற்காக நமது துணிகளையும், அதைப் போன்ற எதையாகிலும் கொடுக்கிறோம். நாம் அவரை நேசிக்கின்றோம், நாம் எதையும் செய்வோம், சாதாரண மக்கள் தான் அவருக்குச் செவி கொடுத்தனர். இன்றைக்கும் அதே போன்றுதான், சாதாரண மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்கின்றனர். 114 இப்பொழுது, ஐசுவரியவானுக்கு உலகத்தைக் குறித்து சிந்திக்க நிறைய காரியங்கள் உண்டு, பாருங்கள். மேலும்—மேலும் குறுக்கு வழியில், அங்குள்ள அந்த உண்மையான நபரான அவரோடு உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது, அவன் இதற்கு கவனமே செலுத்தமாட்டான். ஆனால் சாதாரண மக்கள் அவருக்கு விருப்பத்தோடு செவி கொடுத்தனர்.
46115 இப்பொழுது ஜோசபஸ், தன்னுடைய புத்தகங்களில், அவர் கூறினார்… இப்பொழுது, “தேவ குமாரர்கள்” மனுஷக்குமாரத்திகளை பெண் கொண்டதைக் குறித்து அவருடைய வியாக்கியானம் இதோ இருக்கிறது. அவர், “பூமியின்மேல் இருந்த விழுந்துபோன ஆவிகள்…” என்று கூறினார். 116 இப்பொழுது, உங்களுக்குத் தெரியும்…வெளிப்படுத்தின விசேஷம், 11-ம் அதிகாரம், அல்லது, 7வது, இல்லை, உங்களுடைய மன்னிப்பை வேண்டுகிறேன்…வெளிப்படுத்தல் 12-வது அதிகாரம், சூரியனில் நின்றுகொண்டிருந்த ஸ்திரீ. “சிவப்பான பெரிய வலுசர்ப்பம், தன் வாலைக் கொண்டு நட்சத்திரங்களில் மூன்றில் இரண்டு பங்கை இழுத்து பூமியில் விழுத்தள்ளிற்று.” அது சாத்தான் என்று நாம் அறிந்துகொள்கிறோம், ஆதியிலே, அவன் வடதிசைகளில் தன் ராஜ்ஜியத்தை மிகாவேலினுடையதைக் காட்டிலும் —காட்டிலும் அது அழகாக இருக்க வேண்டும் என்று ஸ்தாபித்தான், ஒரு…அப்பொழுது அவன் பரலோகத்தில் யுத்தத்தை அறிவித்தான். மூன்றில் இரண்டு பங்கு தேவ தூதர்களை தன்னுடன் இழுத்துக்கொண்டான். அது சரியா? 117 அந்த காரணத்தால்தான் நாம் சிறுபான்மை மக்களாக இருக்கின்றோம். நான் கருதுவது அந்த—அந்த—பக்கம்…இந்தக் காலையில் சிறு பக்கத்தில், கிறிஸ்தவ பரிமாணத்தில், பரிசுத்த ஆவியால் பிறந்த ஜனங்களாய் இருக்கிறோம், ஏனென்றால் அந்த—அந்த—அந்த சிறு பாகத்தில் இருக்கின்றனர். அது உண்மை.
47118 ஆதியாகமத்தில் எழும்பி வருகின்ற அந்த ஆவிகள் எழும்பத் துவங்குகிறதை நீங்கள் கவனிப்பீர்களானால், அந்த உண்மையான நேர்த்தியான, மிகவும் நேர்த்தியான சபை வழிபாட்டைக் கவனியுங்கள். அது அங்கே காயீனிடம் இருந்ததைக் கவனியுங்கள், இன்றைக்கும் அதைக் கவனியுங்கள். அது சரியாக வந்து, அந்த பரிசேயர்களுக்குள் செல்கிறது. அங்கே இரண்டு வகையினர் இருந்தனர், பரிசேயர், சதுசேயர். பாருங்கள், அது சரியாகச் சென்று கொண்டிருக்கின்றது, கத்தோலிக்கத்தில் மகத்தான அந்த விதமான அசைவுகளில், அழகான ஸ்தலங்களில் அது உள்ளதைப் பாருங்கள். 119 பாருங்கள், சிறிய ஆட்டுக்குட்டியுடன் இருந்த ஆபேலைக் கவனியுங்கள், பாருங்கள், ஒரு சாதாரண காரியம். இயேசுவின் நாட்களில் அது இருந்ததைக் கவனியுங்கள். நீங்கள் அதை ஆய்ந்து பார்க்கும்பொழுது, அது எப்படி உள்ளது என்பதை பார்க்கும்பொழுது, வேத வாக்கியங்கள் முழுவதிலும் அந்தவிதமாக அது வருகிறதைக் கவனியுங்கள். தேவன் காலங்கள்தோறும் தம் சபையை அழைத்தபோது நாம் அந்த நாளில் சரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த சிறிய கோடு, வேதம் முழுவதும் அந்த சிறிய சிவப்புக் கோடு வேதம் முழுவதிலும் அது ஓடுகின்றது, வழி முழுவதும், அது இரத்தத்தால் கழுவப்பட்ட மக்களுடையது. கவனியுங்கள்!
48120 இப்பொழுது, எனது கருத்தின்படி இந்த “தேவ குமாரர்,” இல்லை, ஜோசபஸ் எதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார் என்பது அவருக்குத் தெரியாது என்று கூறவோ அல்லது நிச்சியமாகவே ஒத்துக்கொள்ளாமல் இருக்கவோ அல்லது அறிவாளியாக செயல்படவோ முயற்சிக்கவில்லை, ஆனால் அவர் என்னைப் போலவே ஒரு மனிதனாக இருந்தார். அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாய் இருந்தாலும் சரி, அவர் ஒரு மனிதன் தான். அவர் கொண்டிருந்த ஒரே காரியம், அவர் பண்டைய வசனங்கள், மற்றும் அது போன்றவற்றை, பழைய புனித சின்னங்கள், போன்றவற்றை ஆராய்ந்து பார்த்திருந்தார், ஆனால் நாம் இன்றைக்கு பெற்றுள்ள, பரிசுத்த ஆவியைக் காட்டிலும் அதிகமானதை அவர் பெற்றிருந்திருக்கவில்லை. இப்பொழுது, அவர் மாம்சப்பிரகாரமான சிந்தையின் மூலம் சென்று கொண்டிருந்தார். 121 ஆனால் நாமோ ஆவிக்குரிய சிந்தையின் மூலம் அதை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த “தேவகுமாரர்,” எப்பொழுது, அவர்கள் தூதர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கின்றனர். அவர்கள் அப்படித்தான் என்று நான் விசுவாசிக்கிறேன். நான்—நான் அதை நம்புகிறேன்…
49122 இப்பொழுது, ஜோசபஸ் அதே காரியத்தைத்தான் கூறினார், ஆனால் அவர், “அவர்கள் மானிட சரீரத்தில் தங்களை பலவந்தமாகப் புகுத்திக்கொண்டு, குமாரர்களைக் கொண்டனர்…மற்றும்—மற்றும் மனுஷக் குமாரத்திகளைக் கொண்டார்கள்” என்று கூறினார். இப்பொழுது, நாம் எல்லாரும் ஒரு கலப்படமான கூட்டமாக இருக்கிறோம்; நாம் இங்கே இந்த காலை, மனிதன், ஸ்திரீகள், குட்டிப் பெண்களும் பையன்களுமாக இருக்கிறோம், வயதுவந்தோர் நிச்சியமாகவே புரிந்துகொள்ளத்தக்கதாக இதை நான் பேசுகிறேன். ஆனால்…அவர் “இந்த தூதர்கள் பெண்களின் வாஞ்சையைக் கண்டபோது, மனிதன் ஸ்திரீயோடு எப்படி தொடர்பு கொண்டிருந்தான் என்பதைக் கண்டு, மனித சரீரத்தில் தங்களை பலவந்தமாகப் புகுத்திக்கொண்டனர். ஆகையால்…அவர்கள் மனுஷக் குமாரத்திகளைக் கொண்டார்கள்” என்று கூறுகிறார். 123 பாருங்கள், நான்—நான் அதை நம்புகிறதில்லை. அவர்கள் அங்கே கானானில் பிறந்தவர்கள் என்றே, இதை நான் நம்புகிறேன், அவர்கள் நோத் தேசத்திற்கு அனுப்பப்பட்ட காயீன் கூட்டத்திலிருந்து பிறந்தவர்கள் ஆவர். அவனுடைய கொலை செய்யப்பட்ட நிலமையின் காரணமாக, அவனுடைய சகோதரனை கொலை செய்தபடியினால், அவனை யாரும் கொல்லக் கூடாதபடிக்கு அவன் தன்மேல் ஒரு அடையாளத்தை உடையவனாயிருந்தான். ஆனால், நீங்கள் கவனிப்பீர்களானால், இஸ்ரவேலர் அங்கே சென்றபோது அம்மக்கள் சிலரைக் கண்டனர். அவர்கள் மிகப் பெரியவர்களாய் இருந்தனர், அவர்கள், “அவர்கள் பக்கத்தில், நாங்கள் வெட்டுக்கிளிகளைப்போலக் காணப்பட்டோம்” என்றனர். அது சரிதானே? நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர், மகத்தான, பெரிய முரட்டு மனிதர்கள், பெரிய நபர்கள் இருந்தனர். சில சமயங்களில் அவர்களின் பிணங்களை அவர்கள் தோண்டியெடுத்து, அவர்கள் மிகப்பெரிய மனித உருவம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதைக் கண்டறிந்தனர்.
50124 இப்பொழுது அது எங்கிருந்து வந்தது என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, இங்கே என்னுடைய சொந்த போதகத்தில் சிறியதை இப்பொழுது கூறுகிறேன். இது வெறுமனே சபை மக்களுக்குத்தான், பாருங்கள். காயீன் சாத்தானுடைய குமாரன் என்று நான் நினைக்கிறேன். இதனுடன் நீங்கள் உடன்படமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும், என்னுடைய சொந்த சபை உடன்படுகிறதில்லை. ஆனால் அது இன்னுமாய்…தேவன் வேறுவிதமானதை என்னிடம் காண்பிக்கும் வரை, பாருங்கள், அவன் சாத்தானுடைய குமாரன்தான் என்ற அதேக் காரியத்தைத்தான் நான்—நான் விசுவாசிப்பேன். ஏனென்றால் அந்த தேவனற்ற, கொலைபாதகமான ஆவி தேவனிடத்தில் இருந்து வருகின்றது என்று என்னால் பொருத்திக் கூற முடியவில்லை. இல்லை, ஐயா. அவன் தன்னுடைய தகப்பனை போல் இருக்க வேண்டியதாய் இருந்தது, சர்ப்பத்தின் மேலே சாத்தான் புகுந்தபோது, இங்கே…இது அவனுடைய தகப்பனாயிருந்து. 125 சர்ப்பம் ஒரு ஊரும் பிராணி அல்ல, சாபம் அதை ஊரும் பிராணி ஆக்கிற்று. அது ஒரு மனிதனைப்போல இருந்து, அது நிமிர்ந்து நடந்தது. அது அங்கே இருந்த ஸ்திரீயிடம் இருந்தது, அவள் இந்த விபச்சாரத்தைச் செய்து தன் முதல் குமாரனான காயீனைப் பெற்றெடுத்தாள், தன் தந்தையின் சுபாவம். அந்த பெரிய மிருகம் ஒரு மனிதனைப் போலவே, அது நிமிர்ந்து நடந்தது, இதிலிருந்துதான் இந்த இராட்சதர்கள் வந்தனர் என்று நான் நம்புகிறேன். ஆம், அது முற்றிலும் சரி. இப்பொழுது, அது என்னுடைய சொந்த எண்ணம், அது ஒருவேளை நான்—நான் தவறாய் இருக்கலாம். இது என்னுடைய கருத்து, பாருங்கள். ஆனால் அவர்கள் பெரிய மனிதர்களாயிருந்தனர்.
51126 நீங்கள் கவனித்திருப்பீர்களானால், தேவன் ஆதாமிற்கும் ஏவாளுக்கும் முன்பாக நின்று கொண்டு, அவர், “நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ மண்ணுக்குத் திரும்புவாய். நான்…” என்று கூறுகிறார். 127 “ஏனெனில் நீ கொண்டு வந்துள்ள உன்னுடைய…உன்னுடைய புருஷனுக்கு பதிலாக உன்னுடைய…மிருகத்திற்கு செவி கொடுத்ததால், நீ உலகத்திலிருந்து ஜீவனை எடுத்துவிட்டாய், ஆகையால் நீ அதை உலகத்திற்கு மறுபடியும் கொண்டு வருவாய்.” 128 ஆகவே அவர், “சர்ப்பமே, உன் கால்கள் உன்னைவிட்டு அகலுவதாக, பாருங்கள், நீ இனி நடக்கப்போவதில்லை. நீ ஒரு மிருகமாய் இருக்கப்போவதில்லை, நீ இப்பொழுது ஒரு ஊரும் பிராணியாய் இருக்கப்போகிறாய். நீ உன் வயிற்றினால் நகர்வாய், மண்தான் உன்னுடைய ஆகாரமாக இருக்கும்,” என்றார்.
52129 அங்கேதான் நான் நினைக்கிறேன் அந்த…காயீன், மிருகத்தைப் போன்று…வாழ்ந்த அந்த முரட்டு சுவாபத்தின்படியே, அது இந்த ஸ்திரீயுடன் சேர இந்தப் பிள்ளையைப் பெற்றாள், பாதி மனிதத் தன்மையும் பாதி மிருகத் தன்மையையும் கொண்டிருந்த, ஒரு பெரிய உயரமான நபர். அதன் பிறகு அவன் அங்கே வெளியே செல்ல அவனிடத்திலிருந்து அவனுக்குப் பிள்ளைகள் பிறக்கத் தொடங்கினர், அவர்கள் ஆதியிலே இருந்த தங்களுடைய தகப்பனைப் போன்று மிருகத்தனமாகவும், மாம்சீக இச்சையுடையவர்களாயும் இருந்தனர், அந்த பழைய இச்சையுடைய மிருகம் இந்த குமாரத்திகளையும் மற்றவைகளையும் கண்டு, மனுஷக் குமாரத்திகளையும் அவர்களுக்குக் கொண்டனர். அது சரி. 130 இந்த நபர்களைக் கொண்டு வந்த, நிச்சியமாகவே, அதே விழுந்துபோன ஆவிகள் அவை சந்ததி சந்ததியாக மக்கள்மேல் இறங்கின. நினைவில் கொள்ளுங்கள், அப்பொழுது வாழ்ந்த அதே ஆவிகள், இன்றைக்கும்…வாழ்கின்றன.
53131 இன்றைக்கு அதைக் கவனியுங்கள்! பாருங்கள், நாம் இந்த தேசத்தில் பெற்றுள்ள… இப்பொழுது, நான் இந்த…இது, நான் ஒரு அமெரிக்கன், நான் அவ்வாறு இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இதை நான் உங்களுக்குக் கூறட்டும், உலகத்திலுள்ள நாடுகளில் பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸைக் காட்டிலும், எனக்குத் தெரிந்தவரை இந்த நாடே மிகக் கீழ்த்தரமான நாடாய் இருக்கின்றது. இது மிகவுமாய் இழிந்த நிலையில் உள்ளதே! 132 ஏன், ஆப்பிரிக்கா, ஸ்வீடனில் மற்றும்…அங்கே அயல் நாட்டு மக்கள் கூட, அவர்கள், “அமெரிக்க மக்களாகிய உங்களுக்கு என்ன ஆயிற்று, உங்கள் ஸ்திரீகளுக்கு நீங்கள் மரியாதை கொடுப்பதே இல்லையா? வானொலியில் ஒலிபரப்பப்படும் பாடல்களெல்லாம், ஸ்திரீகளைக் குறித்து ஒரு விதமாக மிகவும் கேவலமாக, இழிவாக உள்ளதே. உங்களுடைய ஸ்திரீகளுக்கு அங்கு நீங்கள் மரியாதையை அளிப்பதில்லையா?” என்று கூறுகின்றனர். 133 நம்முடைய பாடல்களெல்லாம் ஸ்திரீகளைக் குறித்த, அல்லது பாலுணர்வைக் கொண்டதும், இச்சையையுடையதும், அதைப் போன்ற காரியங்களுமாகவே இருக்கின்றன. ஏனென்றால் பிசாசு அதைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றான். அது முற்றிலும் சரி. பழைய ஹாலிவுட் மற்றும் தொலைகாட்சி மற்ற ஒவ்வொரு காரியமும் அந்த கேவலமான, இழிவான, தேவனற்ற காரியங்களை வெளியே அனுப்பிக்கொண்டிருக்க, அது செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், விற்கும் இடங்களிலும், மற்ற இடங்களிலும் செல்லுமே. எல்லாவற்றிலும் ஸ்திரீகள் ஆடைகளை களைந்துப்போட்டிருப்பதும் அல்லது ஏதோஒன்றாய் இருக்கின்றன. அது சரியாக ஆதியில் என்னவாய் ஆரம்பித்ததோ, அதைப் போலவே முடிவும் பெறுகிறது. அது ஒரு அவமானமாகும்!
54134 ஒழுக்கம் என்கிற காரியத்திற்கு வருவோமானால், ஸ்திரீயின் ஸ்தானம் தான் எந்த ஒரு தேசத்திற்கும் முதுகெலும்பாய் இருக்கின்றது. நீ தாய்மையை உடைப்பாயானால், நீ உன்னுடைய தேசத்தை உடைத்துவிட்டாய். நாம் இன்றைக்கு நமது ஸ்திரீகள்…புகை பிடித்துக் கொண்டும், அதைப் போன்ற காரியங்களை, மதுபானத்தைக் குடித்துக் கொண்டும், மற்றவைகளைச் செய்துகொண்டும் இருக்கிற ஒரு இடத்துக்கு வந்துள்ளோம், அது—அது வெட்கக்கேடாயுள்ளது! 135 ஒரு வாலிபன் ஒழுக்கமான, ஒரு கன்னிகையை ஒரு மனைவியாக அடையும்படிக்கு கண்டறிய முயற்சித்தால், அத்தன்மை கொண்ட ஒருவளைக் கண்டடைய, கிட்டத்தட்ட, அவன் சில நல்ல, சிறிய, பழைமையான, பரிசுத்த ஆவி சபைக்குத் தான் செல்ல வேண்டும்; அது முற்றிலும் சரி, அங்கு ஒரு மனிதன் ஒழுக்கத்தோடு உள்ளே வைத்து, அது போன்ற காரியங்களைச் செய்ய, அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் ஒழுக்கமுறையை கற்பித்திருக்க வேண்டும். 136 அது பைத்தியக்காரத்தனமானது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், சகோதரனே, நீங்கள் அதைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள், அது உண்மைதானா என்று பாருங்கள். அது ஒரு அவமானம்! சரி. அவர்கள் தேவ குமாரர்கள்…இப்பொழுது, அதை, நான் என்னுடைய…விளக்கம் முடியும். எனக்கு தெரியும் போது—போது…
55137 இன்றைக்கு எனக்கு இன்னொரு கேள்வி இருந்தது, அவர்கள், “ஏன், சகோதரன் பில், ‘கர்த்தரிடத்திலிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன்’ என்று ஏவாள் கூறினதாக வேதம் உரைக்கிறதே” என்று கேட்கின்றனர். முற்றிலும் உண்மை. அது கர்த்தரிடத்திலிருந்து தான் வரவேண்டியதாயிருந்தது. கர்த்தர் மாத்திரமே சிருஷ்டிராக இருக்கிறார். அவர்…பிசாசை தேவன் சிருஷ்டித்தார். அது எப்படி? தேவன் பிசாசை சிருஷ்டித்தார். ஒவ்வொரு விழுந்துபோன தூதனையும் தேவன் தான் சிருஷ்டித்தார். அது சரிதானே? ஏன், நிச்சயமாக. அது அவர்களுடைய தெரிந்து கொள்ளுதலாயிருந்தது, அவருடையது அல்ல. அவர் உன்னை சிருஷ்டித்தார், அதைக் குறித்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அவர்களைப் போலவே நீயும் நியாயந் தீர்க்கப்படுவாய். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. நிச்சயமாக!
56138 இவர்கள் தேவனுடைய குமாரர்கள், ஆனால் அவர்கள் கிருபையிலிருந்து விழுந்து இந்த மிருகத்தனம் வாய்ந்த மனிதர்களுக்குள் வந்திருந்தபடியால் வெளியே சென்று இச்சித்தனர். அவர்கள் ஸ்திரீகளைப் பார்த்தபோது, இவர்கள் அவர்களை அகப்படுத்திக்கொண்டனர். ஏன், அவர்கள் இன்னும் இங்கே இருக்கின்றனர். அமெரிக்காவின் ஒழுக்கக் கேடானது…தேவனுடைய ஆவியில்லாத ஒரு மனிதனால் நிறைந்து, ஒரு குழந்தையை ஒரு தாயின் கரங்களிலிருந்து பிடுங்கி வீசியெறிந்து, அவளை மானபங்கப்படுத்துகின்றனர். தேவனில்லையென்றால் அவன்—அவன் ஒரு மிருகத்தை விடக் கேவலமானவனாயிருக்கிறான். அவன் இன்னுமாய் மிருகத்தனத்தை, தேவனற்ற சுபாவத்தை கொண்டிருக்கிறான். ஒரு மனிதனோடு…மதம் உங்களை அழைத்துச் செல்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள், மனிதர் மதத்தின் பேரில் பைத்தியம் கொண்டுள்ளனர் என்கின்றனர். மதம் மாத்திரமே ஒரு மனிதனுக்கு அவனுடைய சரியான மனநிலைமையை அளிக்கக்கூடிய காரியமாய் உள்ளது, அது, இயேசு கிறிஸ்துவின் மதம் ஆகும். 139 கிறிஸ்துவை நீ கண்டறியும் வரை நீ சரியான மன நிலையில் இல்லை என்பதை வேதத்தைக் கொண்டு என்னால் நிரூபிக்க முடியும். அது உண்மை. அது மிகவும் கடினமானதாய் இருக்கிறது, ஆனால் அதை வேதத்தைக் கொண்டு என்னால் நிரூபிக்க இயலும். அது உண்மை. நீ இயேசு கிறிஸ்துவைக் கண்டடையும் வரை, நீ மிருகத்தனமாகவும், இச்சைகொண்டவனாகவும், எல்லாவற்றையும் கொண்டவனாக இருப்பாய். அவர்தான் அந்த அருமையான ஒருவர்.
57140 இப்பொழுது, ஜனங்கள் மிகவும் அதிகமாக ஆய்ந்து படிக்கிறார்கள் என்றும், அதிகமாக முன்னோக்கி செல்ல முயற்சிக்கிறார்கள் என்றும், மிக கடினமாக சிந்திக்க முயற்சிக்கிறார்கள் என்றும் நான் ஒப்புக்கொள்வேன், மேலும் கர்த்தரைக் குறித்து ஆய்ந்து படிப்பதன் நிமித்தமாக சில சமயங்களில் அவர்களுக்கு மனநிலை பாதிப்புகளும் மற்ற காரியங்களும் ஏற்படுகின்றன. நீங்கள் அதை விட்டுவிட வேண்டும்! நீங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் அவரில் அன்புகூர்ந்து, அப்படியே அவரை நேசித்து சென்று கொண்டே இருக்க வேண்டும். ஆமென். அது உங்களைத் தானே எதற்குள்ளாகவோ தள்ளிக்கொண்டோ அல்லது நீங்கள் இல்லாத ஒன்றாக உங்களை ஆக்கிக் கொள்ளவோ முயற்சிப்பதில்ல, முன்னே சென்று தேவன் உங்களை எப்படி பயன்படுத்த விரும்புகிறாரோ அவ்வாறே உங்களை அனுமதிக்க வேண்டும். உங்களை விட்டுக்கொடுத்து, உங்களை ஒப்புக்கொடுத்து சந்தோஷமாக, பாடி, களிகூர்ந்துகொண்டே நடப்பதாகும். அதுதான் வழியாகும்.
58141 வேதம், “தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது” என்று கூறியுள்ளது, ஆகவே நீங்கள் அவரில் அன்புகூருவதில் நிச்சயமுள்ளவர்களாய் இருங்கள், அந்த ஒரு காரியத்தையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஆமென்! அவரில் மாத்திரம் அன்பு கூர்ந்து நடந்து செல்லுங்கள்! “கர்த்தாவே நான் உம்மை நேசிக்கிறேன், நான் உம்மை நேசிப்பதை நீர் அறிவீர்” என்று கூறுங்கள். “நீங்கள் இதை நேசிக்கிறீர்களா?” “இல்லை, ஐயா. கர்த்தாவே, நான் உம்மை, நேசிக்கிறேன்.” புரிகிறதா? 142 “பாருங்கள், நீர் விரும்பவில்லையா…நீர் ஒரு மகத்தான பிரசங்கியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீரா? நீர் இதைப் போன்று ஆக விரும்புகிறீரா?” என்று கேட்கிறீர்கள். 143 “இல்லை. இப்பொழுது, கர்த்தாவே, என்ன…அப்படி நான் இருக்க வேண்டும் என்று நீர் விரும்புவீரானால், நான் அப்படி விரும்புவேன். நீர் அப்படி விரும்பவில்லையென்றால், ஆமென். நான் இங்கே சபையின் மிதியடியாகவே, சரியாக இருப்பேன்.” 144 “பாருங்கள், இப்பொழுது, இதைப் போன்று நீர் ஏதாவது ஒன்றைச் செய்வீரானால் மக்களும் உமது சபையைக் குறித்து அதிகமாக நினைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” 145 “மக்கள் என்ன நினைத்தாலும் எனக்குக் கவலை இல்லை, கர்த்தாவே, நீர் என்ன நினைக்கின்றீர் என்பதையே நான் அறிய விரும்புகிறேன். நான்—நான் உம்மோடே சரியாக தரித்திருப்பேன், நீர் என்னிடம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றீரோ அதைச் செய்வேன். நான் எல்லாவற்றையும் நேசிப்பேன், நிச்சயமாக.” “பாருங்கள், இப்பொழுது, சகோதரி இன்னார்-மற்றும்- இன்னாரை நீர் அறிவீரா, நீர் அவளை நேசிப்பதில்லை.” “ஆம், நான் நேசிக்கிறேன், கர்த்தாவே. ஆம், நிச்சயமாக நான் நேசிக்கிறேன். நான் அவளை நேசிக்கிறேன்.” “ஏன்?” 146 “ஏனென்றால் நீர் அவளை நேசிக்கிறீர், நீர் எனக்குள்ளும் இருக்கிறீர். ஆகையால் நான் அவளை நேசித்துதான் ஆக வேண்டும், ஏனெனில் அது நீர் எனக்குள் இருந்து அவளை நேசிக்கின்றீர்” வ்யூ! அதுவே இதைப் புரிந்துகொள்ளும். 147 ஆனால் அந்த மிருகங்கள்தான் அங்கே விழுந்தன, அந்த இச்சையுள்ள மிருகம்தான் விழுந்தது என்று நான் நினைக்கிறேன், பாருங்கள்.
5911. “தேவ குமாரர்” என்றால் தூதர்களையா அல்லது பரலோகத்திலிருந்து வந்த ஆவிகளை பொருட்படுத்துகிறதா? 148 அதுதான் அந்த நபரின் கேள்வி. சரி. அவர்கள் தூதர்கள் அல்ல என்று நான் நம்புகிறேன். பாருங்கள், அவைகள் ஜீவிகளாய் இருந்தனர், “தேவகுமாரர்” என்று வேதம் கூறுகிறது. தூதர்கள் அல்ல, அவர்கள் தேவ குமாரராய் இருந்தனர். அவர்கள் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்தனர், வந்து மாம்சத்திற்குள் வைக்கப்பட்டனர்; அவைகள் “தாங்களே மாம்சத்திற்குள் நுழைந்து கொள்ளவில்லை,” இயேசு கிறிஸ்துவைத் தவிர, மற்ற எல்லா மாம்சமும் பாலுணர்வின் மூலம் பிறந்த ஒன்று என்று நான் நம்புகிறேன். கன்னிப்பிறப்பின் மூலம் பிறந்த நபர் இயேசுகிறிஸ்து ஒருவர்தான் என்று, நான் விசுவாசிக்கிறேன். ஜோசபஸ் மகத்தான சரித்திர ஆசிரியராயிருந்தாலும்கூட, நான்—நான் அதைக் குறித்த அவருடைய கருத்துடன் இணங்குவதில்லை. ஆனால் அவைகள் இயற்கைக்கு மேம்பட்ட ஜீவிகள் என்றும், அவை கீழே வந்து மனிதனின் ஆவியை ஆட்கொண்டன என்றும் நான் நம்புகிறேன். அவைகள் இன்னமும் இங்கே சரியாக இன்றைக்கு இருந்துகொண்டு, இன்னமும் ஜெபர்சன்வில்லில் இன்றைக்கும் சுற்றி நடந்துகொண்டிருக்கிறன என்று நான் நம்புகிறேன், அதே மிருகத்தனமாக, இச்சைக்கொண்ட, தேவனற்ற ஆவிகள் இன்றைக்கு மனிதர்களுக்குள், இருக்கின்றது. இப்பொழுது, என்றோ ஒரு நாளிலே இந்த மனிதர் மரிப்பர்; வேறொரு சந்ததி இருக்குமானால், அவைகள் அவர்கள் மீது வரும். 149 நினைவில் கொள்ளுங்கள், தேவன் தம்முடைய மனிதனை எடுக்கின்றாரேயன்றி தம்முடைய ஆவியை எடுப்பதில்லை, இது பெந்தெகொஸ்தேயில் அவர்கள் பெற்ற அதே பரிசுத்த ஆவியாகும். 150 அதே (மதங்கள் என்ற வடிவில்) கிறிஸ்துவை துன்பப்படுத்தின அதே பிசாசாய் உள்ளது, அதே பிசாசுதான் இன்றைக்கு நீண்ட அங்கிகளை அணிந்து, சபையில் இருக்கின்றது. ஆகவே அவர்கள் அணிய வேண்டியதில்லை…அவர்களுடைய சரீரத்தின் மேல் உள்ள நீண்ட அங்கிகளை நான் குறிப்பிடவில்லை, உங்கள் ஆத்துமாவின் மேல் உள்ள அங்கியை நான் குறிப்பிடுகிறேன். பாருங்கள், “ஏன், அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன, அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை.” அவ்வாறு பேசுபவர்கள் நவீன பரிசேயர்களே! சரியாக அதுதான்.
60151 “ஒரு தரித்து…” வேதம் “அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. விலகியிரு, உங்களை அப்படியே விலக்கிக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறது. அவர்கள் இன்னுமாய் தேவகுமாரர்களாய் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் விழுந்துபோன நிலையில் உள்ளனர். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? அவர்களில் சிலர் ஊழியக்காரர்களாய் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் உதவிக்காரர்களாய் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் மூப்பர்களாக இருக்கிறார்கள், அவர்களில் சிலர் பேராயர்களாக இருக்கிறார்கள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு பக்தியாய் அவர்கள் இருக்கின்றனர்! ஆனால் வேதம்…
61152 இப்பொழுது, சகோதரனே, சிறிது நேரத்திற்கு முன் நீர் கேட்ட கேள்விக்கு நான் பதிலுரைக்கப் போகிறேன். யாரோ கூறினார்: 12. சகோதரன் பிரான்ஹாம், எங்கே என்னால் எதனைக் கொண்டு இணைத்து கூற முடியும் என்ற இடத்தினை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன் “இந்த மனிதன் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறர், ஏனென்றால் ‘இதைச்,’ செய்தார்” அல்லது “இந்த ஸ்திரீ பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறாள், ஏனெனில் ‘அதைச்’ செய்தாள்.” 153 நீங்கள் இதை அறிந்துகொள்ள உங்களுக்கு உலகத்தில் ஒரு வழியும் கிடையாது. அது சரி. நீங்கள் இதை அறிந்துகொள்ள உலகத்திலே ஒரு வழியும் இல்லை. தேவன் நியாதிபதியாய் இருக்கிறார், நாம் நியாயதிபதிகள் அல்ல. புரிகிறதா? நீங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், வாழுங்கள்…
62154 சில காலத்திற்கு முன் ஒரு மனிதன் என்னிடம் வந்தார், கடந்த இரவு நான் கூறியதைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அவர் என் வீட்டிற்கு வந்து, அவர், “சகோதரன் பிரான்ஹாம், சகோதரனே, நான் விரும்பினது—நான் விரும்பினது—நான் இருக்க வேண்டும் என்று விரும்பினது… நான் என் பாவங்களை அகற்ற விரும்புகிறேன். நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார். அவர் என் தாழ்வாரத்தில் அமர்ந்தார். 155 அவர், “சர்வேதச பிரசித்த பெற்ற, மகத்தான மனிதனாகிய, பில்லிகிரகாம் என்னும் பெயர் கொண்ட நபரைக் குறித்து நான் கேட்டிருக்கிறேன்” என்றார். அவர், “ஆகையால் அவருடைய கூட்டங்களுக்கு நான் சென்றேன் மற்றும்—மற்றும—மற்றும அவர், ‘ஒரு கிறிஸ்தவனாவதற்கு விரும்புகிற எல்லாரும், உங்கள் கரங்களை உயர்த்தி கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். ஆகையால் நான் என்னுடைய கரங்களை உயர்த்தினேன். அவர், ‘இப்பொழுது நாமெல்லாரும் எழுந்து, ஜெபம் செய்வோம்’ என்றார். ஆகையால் நான் தரித்திருந்து ஜெபித்தேன்…” (என்னை மன்னிக்கவும்) “எவ்வளவு உத்தமமாக இருக்க முடியுமோ அந்தளவுக்கு உத்தமமாக இருந்தேன்.” அவர், “மேலும், ஆனால் அது எனக்கு ஒரு நன்மையையும் அளிக்கவில்லை” என்றார். 156 அவர், “அதன் பிறகு நான் ஓரல் ராபர்ட்ஸினுடைய கூட்டங்களுக்குச் சென்றேன்” என்றார். அவர், “நான் அவரைக் குறித்து கேள்விபட்டிருக்கிறேன், அங்கே அவர்கள் அவ்வளவாய் மகிழ்ந்து களிகூருவதைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார். மேலும், “நான் ஓரல் ராபர்ஸிடம் சென்று ‘ஒரு கிறிஸ்தவனாக மாற நான் என்ன செய்யவேண்டும்?’ என்று அவரிடம் கேட்டேன். அவர் ‘நீங்கள் அங்கே செல்லுங்கள்…’ நான் பில்லி கிரகாமினுடைய கூட்டத்தில் என்னுடைய கையை உயர்த்தினேன் என்று கூறினேன். அதற்கு அவர், ‘நீங்கள் அந்த கேள்வி கேட்கப்படும் அறையில் சென்று சந்தோஷமாக அந்நிய பாஷைகளில் பேசும் வரை இருங்கள்,’” என்றார். அவர், “நான் அங்கே உள்ளே சென்று அந்நிய பாஷையில் பேச ஆரம்பிக்கும் வரை நான் ஜெபித்தேன்,” என்றார். “நான் வெளியே வந்த பிறகு, அது எனக்கு ஒரு நன்மையும் அளிக்கவில்லை” என்று கூறினார்.
63157 அவர், “அதன் பிறகு நான் வேறொரு கூட்டத்திற்கு சென்றேன், அவர்கள் நான் இன்னும் பரிசுத்தமாக்கப்படவில்லை என்று என்னிடம் கூறினர், எனக்கு கூறினதோ, ‘பரிசுத்தமாக்கப்பட்டு, மகிழ்ச்சியடைந்து சத்தமிடவேண்டும், போதுமான சந்தோஷத்தைப் பெற வேண்டும்’ என்பதேயாகும். ஆகவே நான்—நான் சத்தமிடும் வரை நான் ஜெபித்தேன் ஜெபித்தேன்” என்றார். அவர், “இன்னுமாய்…” என்றார். 158 நான், “சகோதரனே, அந்த எல்லாக் காரியங்களும் சரியானவைகளே, ஒவ்வொன்றும் நன்மையானதே. உன்னுடைய கரங்களை உயர்த்துதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், சத்தமிடுதல், அந்த ஒவ்வொரு காரியத்தையும் நான் விசுவாசிக்கிறேன், ஆனால் இருந்தபோதிலும் அந்த காரியம் அதுவல்ல. பாருங்கள், அது இயேசு கிறிஸ்துவாகிய, அந்த நபரை ஏற்றுக்கொள்வதாகும்” என்றார். புரிகிறதா? பாருங்கள், அது அல்ல… 159 இவைகள் எல்லாம் தன்மைகளாகும். சத்தமிடுதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், ஓடுதல், குதித்தல், அழுதல், ஜெபம் செய்தல், என்னவானாலும், அதுவே தொடர்ந்து வருகின்ற தன்மைகள். முதலாவது காரியம் கிறிஸ்து இயேசுவை, ஏற்றுக்கொள்வதாகும். புரிகிறதா? ஆகையால் அங்கே—அங்கே நாம் கூறத்தக்கதான சாட்சிகள் இல்லை. ஏனென்றால் ஒரு மனிதன் அழுகின்றான் என்பதினாலா? ஒரு மனிதன் அழுது அழுது, முதலைக் கண்ணீர் வடித்து, ஆனால் இன்னுமாய் அவன் தன்னால் இயன்ற மட்டும் மிகப் பெரிய பாவியாயிருப்பதை நான் கண்டிருக்கிறேன்.
64160 கவனியுங்கள், இயேசு நம்மை ஆடுகளுக்கு ஒப்பிட்டார். அது சரிதானே? மேய்ப்பன் தன் ஆடுகளை அறிந்திருக்கிறான். ஒரு வெள்ளாட்டின் சத்தத்தை இங்கிருப்பவர்கள் யாராவது கேட்டிருக்கிறீர்களா? பாருங்கள், சகோதரனே, நீங்கள் வித்தியாசத்தை அறிந்து கொள்ளவேண்டுமானால் நீங்கள் ஒரு மேய்ப்பனாக இருத்தல் நல்லது. ஒரு வெள்ளாடு செம்மறியாட்டைப் போலவே சப்தமிடும். ஹு-ஹூ. அந்த வயதான வெள்ளாட்டு கடாவை எங்கேயாவது நிறுத்தி வைத்து, ஒரு சிறிய செம்மறியாட்டை வேறு பக்கமாக நிறுத்துவீர்களானால், “பா,” அதன்பின்னரும், “பா” என்ற சத்தம் ஒரே விதத்தில் அமைந்திருக்கும். 161 அவர்கள் பீடத்தின் கீழே, “ஓ தேவனே!” என்று சத்தமிட்டு, அந்த விதமாக விம்மிக் கொண்டிருப்பதையும், “ஓ தேவனே!” என்று சத்தமிடுவதையும் நான் கேட்டிருக்கிறேன் மற்றும் எல்லா நேரத்திலும் வெள்ளாடாய் இருக்கின்றனர். அது உண்மை. சப்தமிடுதலா? பாருங்கள், என்னே, அவர்கள்…அளவுக்கு அதிகமாய் சப்தமிட்டு…அவர்கள் தரையில் இங்கும் அங்கமாக ஓடி மேலும் கீழுமாக குதிப்பதை நான் கண்டிருக்கிறேன்.
65162 இப்பொழுது, நீங்கள், “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அழுவதில் நீங்கள் நம்பிக்கைக் கொள்வதில்லையா!” என்று நீங்கள் கூறலாம். 163 நீங்கள் என்னைத் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நிச்சயமாக, அழுவதில் நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். ஆனால் அது சாட்சியைக் குறிக்கவில்லை என்று நான் கூறுகிறேன், பாருங்கள், ஏனென்றால் அவை இரண்டுமே அழுகின்றன. அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக அவர்கள் சப்தமிடுவதை நான் கண்டிருக்கிறேன். ஆம், ஐயா. அந்த விதமாகவே தொடர்ந்து இருந்து, சத்தியத்திற்கு தூரமாய் உள்ளனர், நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன், பிறகு அவர்கள் வெளியே சென்று எவ்வித வாழ்க்கையையும் வாழ்ந்து எதையாகிலும் செய்கின்றனர். அது ஒரு அடையாளமாயிருக்கவில்லை. ஆனால் நீங்கள், “நீங்கள் அதற்கு எதிராக இருக்கிறீர்கள்,” என்று கூறலாம். 164 இல்லை, நான் எதிராக இல்லை. நான் அந்நிய பாஷைகளில் பேசுவதில் விசுவாசம் கொண்டிருக்கிறேன், அது சபையில் உள்ள தேவனுடைய வரம் ஆகும். அதை நான் வெளியே எடுத்தேனென்றால், நான் தேவனுடைய ஒரு பாகத்தை வெளியே எடுத்துவிடுவேன். நான் என்னுடைய நாவை வெளியே எடுத்தால்— இங்கே என்னுடைய நாக்கு என்னுடைய சரீரத்தின் ஒரு அவயம், அப்படியானால் முழுமையான சரீரம் எனக்கு இல்லை. இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் நாவுகள் இருக்கின்றன. இங்கே இருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் சரீரம் நாவுகளைக் கொண்டதாய் உள்ளது; ஆகையால் நீ அதை வெளியே எடுத்தால், கிறிஸ்துவினுடைய ஒரு பாகத்தை நீ வெளியே எடுக்கின்றாய். ஆனால் அதுதான் சரீரம் என்று நீ இன்னுமாய் அதைக் கூறமுடியாது, பாருங்கள். பார்த்தீர்களா? புரிகிறதா?
66165 ஆனால் அது கிறிஸ்து இயேசுவை, அந்த நபரை ஏற்றுக்கொள்வதாகும், அதன் பிறகு இந்த மற்றைய காரியங்கள் சரியாக உள்ளே வந்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து பொருந்திவிடும். ஆகவே இக்காலையில் இச்சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினனும், இந்த சிறிய மக்கள் குழு, நாம் ஒவ்வாருவரும் திரைகளை நம் பக்கமாக இழுத்து வைத்து, இங்கிருக்கும் ஒவ்வொருவரும் கிறிஸ்து இயேசு என்னும் நபரை பெற்றுக் கொள்வோமானால், ஒரு குழப்பமோ, அல்லது விவாதமோ நம் மத்தியில் இருக்கவே இருக்காது. அங்கே ஒரு பரிபூரண அன்பு மாத்திரமே இருக்கும். இன்னும் நீங்கள் இதை நம்புவீர்கள் மற்றும் அதை நம்புவீர்கள், ஆனால் அது நீங்கள் விரும்பும் அன்பினால் நிறைந்ததாக இருக்கும்… புரிகிறதா? அதுதான் இது. இப்பொழுது, இயேசு, “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று கூறினார். ஆகவே ஆவியின் கனி அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், விசுவாசம் என்பதாகும். 166 இப்பொழுது, நான்… நான் அறிந்த இந்த ஒரு காரியத்தை காட்டிலும், ஒரு மனிதன் ஒரு கிறிஸ்தவனாய் இருக்கிறான் என்பதற்கு, ஒரு அத்தாட்சியான மிக நெருக்கமான காரியம் என்று நான் கருதுகிற என்னுடைய மதிப்பீட்டை நான் உங்களுக்கு கூற உள்ளேன். அது என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? அது ஆத்துமாவைக் குறித்த வேதனையோடு கூடிய பிரயாசையாக இருக்கிறது. தேவனுக்காக எப்பொழுதும் மிகவும் பசி தாகம் கொண்டிருக்கிற ஒரு நபர். அவர்கள் வெறுமென எளிமையாய்…இரவும் பகலுமாய், அவர்களால்—அவர்களால் அதைத் தாங்க முடியாது. அவர்கள்—அவர்கள்—அவர்கள் தேவனுக்கென்று ஏதாவதொன்றைச் செய்தாக வேண்டுமென்றிருப்பார்கள். அவர்கள்—அவர்கள் முழுவதுமாக அன்பினால் நிறைந்து மற்றும் அவர்கள் அப்படியே…வேதனையோடு கூடிய ஆத்தும பிரயாசையை, எல்லா நேரத்திலும் அப்படியே வேதனையோடு கூடிய பிரயாசத்தோடு இருப்பார்கள். வேதம், “கண்ணீரோடே விதைக்கிறவன் கெம்பீரத்தோடே அறுப்பான், அறுத்த அருமையான அரிகளை சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்” என்று கூறியுள்ளது. அது சரிதானே? அந்த எல்லாக் காரியங்களுமே.
67167 இப்பொழுது, கவனியுங்கள், அங்கே…இந்த சபையானது… இந்த காலையில், நான் கூறுவேனானால், இங்கே இந்தக் கூட்ட மக்களும் நானும்…தேவன், “இப்பொழுது, வில்லியம் பிரான்ஹாம், கவனி, நீ அந்த ஜன குழுவிற்காக, நீ அவர்களுக்கு என்ன சொல்லுகிறாயோ, அதற்காக நான் உன்னை பதிலுரைக்கச் செய்யப்போகிறேன். இப்பொழுது, அவர்கள் எல்லாரும் சப்தமிட வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?” “நிச்சயமாக, அவர்கள் சப்தமிடவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” “அவர்கள் எல்லாரும் அந்நிய பாஷையில் பேச வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?” “அவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” அவர்கள் “எல்லாரும் ஆவியில் நடனமாட வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?” “ஒவ்வொருவரும் அவ்வாறே செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன்” 168 “சரி, பாருங்கள், அது மிகவும் நல்லது, ஆனால் அவர்களை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய்?” ஹு-ஹூம். 169 “அவர்கள் இந்த பீடத்தினன்டை தரித்திருந்து மற்றும் இங்கேயே இரவும் பகலும் இருந்து மற்ற ஒவ்வொரு காரியத்திற்காகவுமே ஜெபத்தில் தங்களுடைய இருதயத்தில் பாரம் கொண்டுள்ள அப்படிப்பட்ட ஒரு சபையைப் பெற்றிருப்பதையே நான் விரும்புகிறேன்; தங்களுடைய வீடுகளில் தொடர்ந்து ஜெபத்தில் இருந்து தாழ்மையாய் ஜனங்களை தேவன் இடத்தில் கொண்டு வர முயற்சித்து, மருத்துவமனையில் அழைப்புகளை செய்து மற்றும் வியாதியஸ்தரைப் பார்வையிட்டு, ஜனங்கள் சபைக்கு வந்து சரியானதை செய்யும்படி செய்ய முயற்சிக்கிறதையே நான் விரும்புவேன். அந்த மற்ற வரங்கள் யாவும் இருப்பதைக் காட்டிலும், அந்த மற்றவை சரியாய் இருந்த போதிலும் இப்படிப்பட்ட சபையை பெற்றுக்கொள்ளவே நான் விரும்புவேன்; இதுவே சபைக்கு சொந்தமானதாய் இருக்கிறது.”
68170 ஆனால் அதை நான் கொண்டிருக்க விரும்பினால், அந்த ஒன்றை நான் முதலாவதாக வைப்பேன். ஏனெனில் நீ அதை பெற்றுக் கொள்வாயானால், மற்றவை நடந்தேறும். ஹு-ஹூம். புரிகிறதா? நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வீர்களானால், நீங்கள் தேவனுக்காக மிகவுமாக பசி தாகமடைவீர்கள், சப்தமிடுவது தானாக நடை பெறும். நீங்கள் தேவனுக்கென்று மிகுந்த பசியடைவீர்களானால், அந்நிய பாஷைகளில் பேசுவது நிகழும். நீங்கள் தேவனுக்காக மிகவும் பசியடைவீர்களானால், நீங்கள் தாமே தொடர்ந்து பசி கொண்டவர்களாகவே இருந்தால், இதைத் தொடருங்கள். நீங்கள் தானே அலட்சியமாகிக் கொண்டிருக்கிறதைக் காணப்போகிறீர்கள், ஞாபகம் கொள்ளுங்கள், அதை கவனியுங்கள், அங்கே வேறெரு ஆவி கிரியை செய்ய முயல்கிறது என்பதாகும். தேவனுக்கு முன்பாக தாழ்மையாகவும், ஆத்துமாவைக் குறித்த வேதனையோடு கூடிய பிரயாசையோடுருந்து. இருந்து…நல்லவர்களாகவும் பழமை நாகரீகம் கொண்டவர்களாயும் இருங்கள்…
69171 “பரிசுத்த ஆவியினால் முத்திரையிடும்படியாக முதலாவதாக தேவனுடைய தூதன் தேசங்களுக்குச் சென்றபோது, அவன் நகரத்திலே செய்யப்படுகிற சகலவித அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிறவர்களையே அவன் முத்திரையிட்டான்” என்பதை வேதத்தின் மூலம் என்னால் அதை நீரூபித்துக் காட்ட முடியும், எசேக்கியேல், 9-ம் அதிகாரம். அது சரியா? நகரத்திலே செய்யப்படுகின்ற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளிலே ஒரு முத்திரையிட்டான். 172 இப்பொழுது, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், நான் இந்த கேள்வியைக் கேட்கிறேன். (இப்பொழுது என்னால் கூடுமானவரை நாம் சீக்கிரமாக நான் முடித்துவிடுவோம்.) பரிசுத்த ஆவியானவர் தாமே ஜெபர்ஸன்வில், நியூ ஆல்பனி, லூயிவில் ஆகிய இடங்களின் வழியாகச் சென்று, இந்த மத்திய வேளையில் வீட்டில் இருப்போரை முத்தரித்தால் இன்றைக்கு என்ன நிகழும், “தேவனே, ஒரு கூட்டத்திற்காக மிகவும் பசியாய் இருப்பவர்களுக்காக, ஒரு எழுப்புதலை அனுப்பும். ஓ தேவனே, இப்பட்டணத்தின் பாவங்களைப் பாரும். ஓ, தேவனே, அது மிகவும் பயங்கரமானதாய் இருக்கின்றதல்லவா? ஓ, தேவனே, நீர் தயவுகூர்ந்து ஒரு எழுப்புதலை அனுப்பமாட்டீரோ? ஒரு நல்ல பிரசங்கி எவரையாவது அனுப்பும், யாராவது ஒருவரை அனுப்பும். ஓ, கர்த்தாவே, பரிசுத்த ஆவிதாமே…” எங்கே, அவர் எங்கே முத்தரிப்பார்? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்.
70173 இப்பொழுது, “பாருங்கள், சகோதரன் பிரான்ஹாம், நீர் என்ன பொருட்படுத்தி கூறுகிறீர்?” 174 நான் இதையே பொருட்படுத்திக் கூறுகிறேன், நான் இதை இப்பொழுது பயத்தோடும், எளிதில் அறுந்துபோகக் கூடிய கையிறுகளில் நடந்தவாறும் இதைக் கூறுகிறேன். உள்ளே இருப்பவர்களுக்கு, கிட்டத்தட்ட நாளானது முடிவடையப் போகின்றது என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? பார்த்தீர்களா? கதவுகள் ஒன்றாக மூடிக்கொண்டிருக்கின்றன, உங்களுக்கு அதைக் குறித்த பாரம் என்பதே இல்லாமலிருக்கின்றது. 175 பில்லிகிரஹாமும், ஓரல் ராபர்ட்ஸூம், நம்மிடையே உள்ள மற்ற எல்லாரும், தேசம் முழுவதும் கூட்டங்களை நடத்தினோம். நாம் கதறினோம், ஜெபித்தோம், ஜெபித்தோம், மற்ற எல்லாவற்றையும் செய்துள்ளோம். ஆனால், நீங்கள் பாருங்கள், கதவுகள் மூடிக்கொண்டிருக்கின்றன. “அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்.” நான் வேதவசனங்களை மேற்கோளிட்டுக் காட்டுகிறேன், “இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன், இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன், இன்னும் பரிசுத்தமாகட்டும்.” புறஜாதியாரின் கதவுகள் ஒன்றுசேர்ந்து மூடிக்கொண்டிருக்கின்றன என நான் நம்புகிறேன். பார்த்தீர்களா? காலத்தின் நேரத்தின் நாளே கிட்டத்தட்ட முடிவடையப் போகின்றது, இன்னும் வரவேண்டியது சிலர் மாத்திரமே. அதைப் போன்ற ஒரு விதமான கூட்டத்தை இனிமேல் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாததற்கு காரணம், ஆத்துமாவைக் குறித்து வேதனையோடு கூடிய பிரயாசையே இல்லை. நீங்கள்—நீங்கள் அந்த பாரத்தை பெற்றுக்கொள்கிறதில்லை.
71176 அநேக வருடங்களுக்கு முன் சம்பவித்தது என் நினைவிற்கு வருகின்றது. அன்று நடந்ததை அவர்கள் சபையில் பேசுகின்றதை நீங்கள் எப்பொழுதும் கேட்கின்றீர்கள். ஆனால் அதுவோ இன்னுமாய்த் தொடர்ந்திருக்கவில்லை, சிறிதேனும் இல்லை. ஆனால் அன்று அது புதுப்பொலிவுடன் இருந்தது, தேவன் தமது சபையை அழைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் கதறி அழுதுக்கொண்டு, விம்மிக் கொண்டு இரவு முழுவதும் பீடத்தின்மேல் விழந்து கிடந்ததை நான் கண்டிருக்கிறேன். நான் அவர்கள் வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன், நீங்கள் அவர்கள் வீட்டருகில் வரும்போழுது, அவர்களுடைய…அவர்களுடைய படுக்கை அறையில், ஆணும் பெண்ணுமாக, “ஓ, தேவனே!” என்று கதறிக்கொண்டிருப்பதை உங்களால் கேட்க முடியும். 177 அவர்கள் சபையினூடாக நடந்து செல்வதை நீங்கள் காணலாம், அப்பொழுது, இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும் என்று பியானோ கருவியில் இசைக்கப்படுவதை நான் காண்பேன், அங்கே கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், உங்களுக்குத் தெரியுமா. “விம்மி, விம்மி, விம்மி, விம்மி, விம்மி அழுவர்.” இந்த சபைக்குள் செல்வோம், பின்னர் வேறொரு சபைக்கு செல்வோம், அங்கே அருமையான ஒரு ஊற்று என்று அங்கே பாடப்படுவதைக் கேட்போம். “ஓ, தேவனே, என்னுடைய மகனைக் இரட்சியும், என்னுடைய மகளை இரட்சியும். அவள் இழந்து போயிருக்கிறாள், கர்த்தாவே. தயை கூர்ந்தருளும்!”
72178 நீங்கள் இனிமேல் அதைப்போன்று கண்டறிய முடியாது. காரியம் என்ன? தேவனுடைய ஆவி விலக்கப்பட்டுள்ளது. இயேசு இதை முன்னறிவித்துக், கூறினார், அதாவது அன்பு…ஏனென்றால் அநேகருடைய அன்பு…அவர்களுடைய அன்பு தணிந்துபோம். “அக்கிரமம் மிகுதியாவதால், அநேகருடைய அன்பு தணிந்துபோம்.” புரிகிறதா? பாருங்கள், குளிர்ந்து போய், அகன்றுவிடுகின்றனர். அன்பு தணிந்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் அதில் என்னத்தைப் பெற்றுள்ளனர்? வெறுமனே ஒரு வேஷம்; பியானோ கருவியை மேலும் கீழாக வாசிக்க, உண்மையாகவே சத்தமாக, “தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! ஆமென்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கத்துவார்கள். பாருங்கள், அதைப் போன்று, அது வெறும் வேஷமே. உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள், பாருங்கள், உங்களையே அப்படியே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். பாருங்கள், கவனியுங்கள், சகோதரனே, அதுவரை நாம்…நான் இந்தவிதமாக செல்கிறேன், நான் பேசி-… 179 நாம் நம்முடைய சபையைக் குறித்து பேசிக் கொண்டிருக்கவில்லை, அமெரிக்காவைச் சுற்றிலும் நான் கண்டதைக் குறித்தே நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அது வெறுமனே ஒரு வேஷமாகிவிட்டது, அது நம்மிடையே இருந்ததைப் போன்று ஒரு நடிப்பாக ஆகிவிட்டது. அது ஆத்மாவை குறித்து வேதனையோடு கூடிய பிரயாசை, அது கிட்டத்தட்ட முற்றுபெற்றுவிட்டது. ஓ, சகோதரனே, சகோதரியே (தேவன், நம்மேல் இரக்கமாய் இருப்பாராக) தேவன் இரக்கமாயிருப்பாராக!
73180 இந்த எழுப்புதல்களையும், காரியங்களை வலியுறுத்தி, வலியுறுத்தி, வலியுறுத்திக் கூறுகிறதையும் பாருங்கள், சுவிசேஷமானது தெளிவாகப் பிரசங்கிக்கப் படுகிறது, அது…அதை இன்றைக்கு நோக்கிப் பாருங்கள், எழுப்புதலானது முடிவுற்றவுடன், அவர்கள் சென்றுவிடுகின்றனர். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? 181 இதை நான் கூறட்டும். நான் ஏன் இதைவிட்டு விலக முடியவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், கவனியுங்கள், இயேசு, “பரலோக ராஜ்ஜியம் ஒரு மனிதன் கடலிலே போடப்பட்டு சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் வெளியே இழுத்தபோது, உண்மையாகவே, அவன் கடலில் இருந்த அநேக ஜந்துக்களை எடுத்தான். அவன் ஆமைகளை எடுத்தான், அவன் பாம்புகளை எடுத்தான், நீர் நண்டு வகைகள், நீர் பூச்சிகள், மீன்கள் ஆகியவைகளை எடுத்தான். புரிகிறதா? நான் விசுவாசிக்கிறேன் அந்த வலை…
74182 இப்பொழுது, கவனியுங்கள்! இங்கே ஒரு ஆமை உள்ளது, இங்கே ஒரு மீன் உள்ளது. அந்த ஆமை வேறுவிதமாக இருக்க முடியாது, ஏனென்றால் அது ஒரு ஆமையாக இருக்கிறது, அது துவக்கத்திலேயே ஒரு ஆமையாக இருந்தது. அதனுடைய சுபாவம் ஒரு ஆமையாக உள்ளது மற்றும் அதற்கு இருந்ததெல்லாம் அவ்வளவுதான். (இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், நான் ஜெபிக்கப்போவதாக இருந்தேன் என்று நான்—நான் கூறினேன்.) பாருங்கள், அது துவக்கத்திலிருந்தே ஆமையாகத்தான் இருக்கின்றது, இப்பொழுதும் அது ஒரு ஆமைதான். அது பாம்பாக துவங்கியிருக்குமென்றால் இப்பொழுதும் அது பாம்பாகத்தான் இருக்கும். அது ஒரு நீர் பூச்சியாக துவக்கத்தில் இருந்திருந்தால்… 183 அந்த குளத்தில் இருந்த எல்லா மீன்களும் ஏறக்குறைய பிடிக்கப்படும் வரை, அந்த வலையானது போடப்பட்டுக் கொண்டே இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். 184 அதன் காரணத்தால் அவர்கள், “பாருங்கள், என் கைகளை நான் உயர்த்தினேன். தேவனுக்கு மகிமை உண்டாவதாக! நான் இரட்சிக்கப்பட வேண்டும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூறுகின்றனர். அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து, “ஓ, லிடியா, அந்த காரியம் அர்த்தமற்றது என்று உனக்குத் தெரியும்.” “அது சரியாகத்தான் இருந்தது என்று நான் யூகித்தேன்.” ஏன்? அதன் சுபாவம் இங்கே துவக்கத்திலேயே ஒரு நீர் பூச்சாக இருக்கிறது; துவக்கத்திலே, ஒரு சர்பமாக இருந்தது. 185 ஏரியிலிருந்து அந்த மீன் இப்பொழுது கிட்டத்தட்ட எடுக்கப்பட்டிருக்கும். வலை காய்ந்துவிட்டிருக்கும். இயேசு வந்து, அவர் தம்முடைய மீனை அப்பொழுது எடுத்துக்கொள்வார். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? ஓ, கிறிஸ்துவத்தின் ஒரு சிறு துளி மாத்திரம் உங்களில் இருந்தால், தேவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்னும் வாஞ்சை ஒரு துளி இருந்தால், முடிந்த வரை இக்காலை வேளையில் அதை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள், உங்கள் இருதயத்தில் அதை வைத்து பேணி காத்துக்கொள்ளுங்கள்.
75186 “தேவ குமாரர் மனுஷ குமாரத்திகளைக் கொண்டார்கள்.” நிச்சயமாக அவர்கள் தேவகுமாரர்தான். இன்றைக்கும் அவர்கள் இன்னுமாய் தேவகுமாரர்களாய் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் விழுந்துபோன தேவகுமாரர். அவர்களில் சிலர் வேதபூர்வமாக இருக்கின்றனர், வியூ! அவர்கள் எவ்வாறு வேதவாக்கியங்களைப் பேசுகின்றனர்! அவர்கள் தேவகுமாரர். சாத்தான் தேவனுடைய வலது கரமான மனிதனாக விளங்கியவன் என்று, உங்களுக்குத் தெரியுமா. இன்றைக்கு உலகில் உள்ள எந்த—எந்த வேத பண்டிதனைக் காட்டிலும் வேத வாக்கியங்களை அவன் அதிகமாக அறிந்திருக்கிறான் என்பது, உங்களுக்குத் தெரியுமா. அதைக் குறித்து பேசி…அவன் வேதாகம கருத்தரங்குகளை தலைகீழாக ஆக்கிக் கொண்டிருக்கிறான், குறிப்பாக இங்கேயிருந்த பாப்டிஸ்டுகள், “இயேசு கிறிஸ்து ஒரு ரோம போர் வீரனுக்கோ, அல்லது ஜெர்மானிய போர் வீரனுக்கோ பிறந்திருக்க வேண்டும்” என்று கூறுகின்றனர். அதைக் குறித்த புத்தகத்தை நான் வைத்திருக்கிறேன், இந்த நாட்களில் என்றாவது ஒரு நாளிலே அதை நான் உங்களுக்கு காண்பிப்பேன். அது சரி.
76187 துரிதமாக, யாத்திராகமம்…ஓ, நாம் அதை முடிக்கும் வரை அதை புரிந்துகொள்ள முடியாது. நான் அவர்களுக்கு இப்பொழுது துரிதமாக பதில் கூறுவேன். உங்களுடைய நேரத்தை அதிக அளவில் நான் எடுத்துக்கொள்கிறேன் என்று எனக்குத் தெரியும். என்னோடு சிறிது நேரம் பொறுத்துக் கொள்வீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] 13. வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மீதியான யூதர்களில் நாம்…இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர், சபை எடுக்கப்படுதலில் பங்குகொள்வார்களா? (முடிந்து) துவக்கத்தில் இஸ்ரவேல்…அவர்கள் துவங்கி… (என்னை மன்னிக்கவும்) காலத்திலே—காலத்திலே செல்கின்ற…? 188 என்னை மன்னியுங்கள், ஒரு நிமிடத்தில் இது என்ன என்பதை நான் அறிந்துகொள்ளட்டும். அது—அது காகிதத்தில் ஒரு வகையாக எழுதி, இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன மதவாதிகள் நமக்கு சொல்கிறது போல, மனிதனால் வாழ முடிந்ததை காட்டிலும் …கிறிஸ்துவினுடைய ஆயிரம் வருட நேரத்தில் இது சம்பவிக்குமா? ஆம் ஐயா. 189 இப்பொழுது, இதை சரியாக புரிந்து கொள்ளும்படியாக, அப்படியே ஒரு நிமிடம் இருங்கள். இந்த கேள்வி: அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர், நம்மில் மீதியான…? 190 முதலில் அந்த ஒன்றின் பேரில் நம்மை சரிசெய்துகொள்ள நான் விரும்புகிறேன், அதைக் குறித்து நீங்கள் நிச்சயமாக இருக்க… பாருங்கள், அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்… வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மீதமுள்ள யூதர்களாகிய அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் சபை எடுத்துக்கொள்ளப்படுதலில் பங்குடையவர்களாய் இருப்பார்களா? அது இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரா…? 191 இப்பொழுது…நான்—நான்…இதைத் துவங்குவதற்கு முன் நான் இதை என் மனதில் தெளிவாய் பெற்றிருக்க விரும்புகிறேன். வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மீதமுள்ள யூதர்களாகிய இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர், சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலில் பங்குடையவர்களாய் இருப்பார்களா? 192 இதை நான் முதலில் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் மீதமுள்ள யூதர்கள் ஆவர், ஆனால் அவர்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட சபை அல்ல. புரிகிறதா? வெளிப்படுத்தின விசேஷம் 6 ஆம் அதிகாரத்தில், அதை நீங்கள் காணலாம். 193 மற்றொரு பக்கத்தில்—மற்றொன்றின் பேரிலான மற்ற பாகத்தை நாம் புரிந்து கொள்வோம் மற்றும் அவர்கள் அங்கே மற்றொரு கேள்வியை வைத்துள்ளனர். இந்த காரியங்களைக் கவனியுங்கள்.
77194 சரி, இப்பொழுது இங்கே பாருங்கள், வெளிப்படுத்தின விசேஷம் 6-ல், இப்பொழுது, அங்கேதான் நீங்கள் அதை கண்டறிகிறீர்கள். புரிகிறதா? இப்பொழுது, நாம் ஆரம்பிக்கப்போகிறோம், அவன் மேற்சென்று குதிரை சவாரி செய்பவர்கள், இன்னும் மற்றவைகளைக் குறித்து அவன் கூறுகின்றான். “அவர்கள் அதைத் திறந்தபோது…” வெளிப்படுத்தின விசேஷம் 6ஆம் அதிகாரம் 9ஆம் வசனத்தை நாம் பார்ப்போம்: அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது,… 195 நான்—நான்—நான் தவறு செய்துவிட்டேன், நான் தவறான அதிகாரத்தை எடுத்துவிட்டேன். அது 7வது அதிகாரம்: இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று,… 196 ஓ, என்ன அழகான ஒரு கேள்வி, அதைப் பார்க்க சிறிது நேரம்தான் உள்ளது மற்றும் நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும். இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று பூமியின் மேலாவது, சமூத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய, வேறெரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன் … 197 ஓ, நிச்சயமாக, இது ஒரு அற்புதமான கேள்விதான். பார்த்தீர்களா? இப்பொழுது, ஒரு வியத்தகு காட்சியைக் கவனியுங்கள்; யோவான் இப்பொழுது கூறினான், இங்கே…இப்பொழுது பூமியிலிருந்து சென்று, ஆவியில், பூமியைத் திரும்பிப் பார்க்கிறான். அவன், பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் காற்றுகளையும் பிடித்திருப்பதைக் காண்கிறான். 198 இப்பொழுது, வேதத்தில், “காற்றுகள்” என்றால்…வேதவசனங்களை உங்களுக்கு எடுத்துக் கூற எனக்கு நேரம் இல்லை. ஆனால் நம்மால் இதை புரிந்துகொள்ள முடியும். இதற்கு சரியாக பதில் உரைக்கப்படவில்லையெனில், அப்பொழுது நான் வேறொரு சமயத்தில் அதை எடுப்பேன். அந்த நான்கு…வேதத்தில், காற்றுகள் என்றால் “யுத்தங்களும் சச்சரவுகளும்” என்று அர்த்தம். யோபின் காலத்தைப்போல, காற்று கீழே வந்து அவனுடைய குமாரர்களை அழித்துப்போட்டது என்பதை, நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். நான் என்ன கூற முயல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா, அது—அது—அது தொந்தரவு. புரிகிறதா? பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் (நான்கு தூதர்கள், அல்லது “நான்கு செய்தியாளர்கள்”), அவர்கள் அந்த மூலைகளில் நின்றுகொண்டு …அல்லது பூமியின் நான்கு திசைகளிலும் நின்றுகொண்டு, அவர்கள் பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்க கண்டேன்… … அவன் பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி. (இப்பொழுது, அது கர்த்தருடைய வருகையை, அதைக் குறித்து அவன் பேசிக்கொண்டிருக்கின்றான். புரிகிறதா?) நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றியில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். (ஊழியக்காரர்.)
78199 இப்பொழுது, சபையானது அவருடைய ஊழியக்காரர்கள் அல்ல என்பதை, நினைவில் கொள்ளுங்கள். நாம் அவருடைய குமாரர், அவருடைய ஊழியக்காரர் அல்ல. யூதர்கள்தான் எப்பொழுதுமே அவருடைய ஊழியக்காரராயிருந்து வந்துள்ளனர். சபையானது அவருடைய ஊழியக்காரராக ஒருபோதும் இருந்ததில்லை, அது அவருடைய பிள்ளைகளாய் இருந்தது. புரிகிறதா? அந்த ஊழியக்காரர்: முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களி லும் முத்திரைப் போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர். (இப்பொழுது, கவனியுங்கள், எல்லாரும் யூதர்கள்.) 200 இப்பொழுது கவனியுங்கள்! “யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில், பன்னீராயிரம். காத் கோத்திரத்தில், பன்னீராயிரம். ஆசேர் கோத்திரத்தில், பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில், பன்னீராயிரம், மற்றும்—மற்றும் கீழே தொடர்ந்து. சிமியோன் கோத்திரத்தில், பன்னீராயிரம். ஆசேர் கோத்திரத்தில், பன்னீராயிரம். செபுலோன் கோத்திரத்தில், பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில், பன்னீராயிரம்.” இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள், ஆகவே பன்னிரண்டு பன்னிரண்டு…என்ன? ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம். இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் எல்லா கோத்திரத்தாரையும், கவனியுங்கள். அவர்கள் தேவனுடைய “ஊழியக்காரராயிருந்தனர்” என்பதை, இப்பொழுது கவனியுங்கள். 201 இப்பொழுது ஒரு வேளை உங்களுக்கு நான் இதை தெளிவாக்கக்கூடும். இப்பொழுது கவனியுங்கள்: இவைகளுக்குப்பின்பு நான் பார்த்தபோது இதோ சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும், ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக் கூடாததுமான (இப்பொழுது, இங்கே வேறொரு கூட்டம் இருப்பதைப், பாருங்கள்) திரளான கூட்டமாகிய ஜனங்கள் வெள்ளை…தரித்து… வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு,… (இந்த பரிசுத்த ஆவியின் கூட்டத்திற்கு செவிசாயுங்கள்!)… இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனை தொழுதுகொண்டு: ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டவதாக; ஆமென், என்றார்கள். அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன்… (இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள், அது…யோவான் தரிசனத்தில் இருந்தான்)… மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி, என்னை நோக்கி,… (இப்பொழுது, யோவான் ஒரு யூதனாய் இருந்ததால் அவன் இஸ்ரவேலின் அந்த பன்னிரண்டு கோத்திரங்களையும் பார்த்தபோது அவன் அவர்களை அறிந்துகொண்டான்) …வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அவர்கள் எங்கிருந்து வந்தனர்? இப்பொழுது நீ யூதர்களை கண்டிருக்கிறாய், அவர்கள் ஒவ்வொருவரையும் உனக்குத் தெரியும், கோத்திரங்களாக அவர்களை நீ கணக்குப் பார்த்து எத்தனை ஆயிரம் பேர் முத்திரிக்கப்பட்டார்கள் என்று நீ கூறினாய். ஆனால் சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலுமிருந்து வந்தவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? அதற்கு நான்; ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். (வேறு விதமாகக் கூறுவோமானால், “அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு யூதன், நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன், அங்கேயுள்ள என்—என் ஜனத்தை நான் கண்டேன்” என்று யோவான் கூறுகிறான்)… அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து, (பார்த்தீர்களா?) மகா உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்: இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே (சபைகளில் அங்கத்தினர்கள் ஆவதன் மூலம் அல்ல), ஆனால் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். (பார்த்தீர்களா?) ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் அவரைச் சேவிக்கிறார்கள்…
79202 இப்பொழுது, திருமதி. பிரான்ஹாம் எங்கே எனக்குப் பணிவிடை செய்கிறார்? வீட்டிலே. அதுதான் மணவாட்டி. திருமதி. நெவில், அங்கேதானே அவள் தரித்திருந்து, உங்கள் வீட்டிலிருந்து, உங்களுக்கு பணி விடை செய்கிறாள். அங்குதான் மணவாட்டி இருக்கிறாள், ஊழியக்காரர்கள் அல்ல, மணவாட்டி. …சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். இவர்கள் இனி பசியடைவதுமில்லை… (அவர்கள் இங்கேயிருக்கையில் அவர்கள் சில வேளை தங்கள் உணவை அவர்கள் இழந்திருக்கலாம், அதைப்போல் காணப்பட்டனர்) (அப்படித்தானே?) …இனி பசியடைவதுமில்லை…இனி தாகமடைவது மில்லை…வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதில்லை. இவர்கள் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு (ஒரு நிமிடம்) நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் (அங்கே சென்று இருந்த மக்கள் அழுதுகொண்டிருந்த கூட்டமாயிருந்தனர்) யாவையும் துடைப்பார் என்றான். (பார்த்தீர்களா?)
80203 இப்பொழுது, கவனியுங்கள், அவர்கள் பசியுள்ளவர்களாயும், தாகமுள்ளவர்களாயும், அழுதும், முணகியும், கதறியும், உபத்திரவத்திலிருந்து வெளிவந்தவர்களாயும் இருந்தனர் (“அந்த பரிசுத்த உருளையர் கூட்டத்தைப் பாருங்கள், ஓ அவர்கள் பைத்தியக்காரர்கள்!” என கூறப்பட்டது). ஓ, என்னே! ஆம். புரிகிறதா? ஆனால் அவர்கள் அழுதனர் மற்றும் அவர்கள் கதறினர், அவர்களுக்கு சண்டையோ சச்சரவோ ஏற்படவில்லை. அவர்கள் அழுது கதற மாத்திரம் செய்தனர். மேலும், பாருங்கள், அவர்கள் சகல ஜாதிகளும், கோத்திரரும், பாஷைக்காரருமாய் இருந்தனர். 204 இப்பொழுது, இந்த இலசட்த்து நாற்பத்து நாலாயிரம் பேர், யூதர்களாய் இருந்தனர். ஆபிரகாம் தேவனுடைய ஊழியக்காரனாய் இருந்தான். யூதர்கள் எப்போதுமே தேவனுடைய ஊழியக்காரர்களாய் இருந்தனர். புறஜாதியார் அவருடைய ஊழியக்காரர்களாய் எப்போதும் இருந்ததில்லை.
81205 இப்பொழுது, இப்பொழுது இதை சீக்கிரமாக கடந்து செல்வோம், ஏனெனில் நம்மிடையே இன்னும் இரண்டு அல்லது மூன்று கேள்விகள் உள்ளன. என்னால் முடிந்த அளவிற்கு வேகமாக, இவைகளைக் கடந்து செல்வேன். ஆனால் நான் திரும்பவும் வந்து அடுத்த ஞாயிறன்று (கர்த்தருக்குச் சித்தமானால்) இவைகளின் பேரில் அதிக நேரம் செலவிடுவேன். 206 ஆனால், இப்பொழுது கவனியுங்கள், அவன் பூமியின் நான்கு திசைகள் யாவையும் கண்டான், பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நிற்பதை அவன் கண்டான். இப்பொழுது, நீங்களோ, “அது வட்டமாக இருந்தது என்று நான் எண்ணினேன்” என்ற கூறலாம்; நீங்கள் பாருங்கள், அதனால் அங்கு நான்கு திசைகள் இருக்கக் கூடாது என்பதல்ல. சரி.
82207 இப்பொழுது, “பூமியின் நான்கு திசைகளிலும், நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன்.” வேறு விதமாகக் கூறினால், உலக முழுவதும் போரிலும், சச்சரவிலும் இந்த காற்றானது சென்று வீசினது. அது எப்பொழுதாவது நிகழ்ந்துள்ளதா? முதலாம் உலகப் போர் ஆரம்பிக்கும் வரை அது நிகழவில்லை. “காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன்,” உள்ளே செல்லாதப்படிக்கு அவர்கள் கடினமாகப் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தனர். 208 இப்பொழுது, இங்கே வேறெருவன் வருகிறான். இப்பொழுது, அந்தத் தூதனைக் குறித்து நீங்கள் கவனிப்பீர்களானால், எசேக்கியேல் 9-ல், புருஷர் தங்கள் கைகளிலே வெட்டுகிற ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டு எருசலேம் முழுவதுமாக யூதர்களை வெட்டுவதற்காக வாசலிலிருந்து புறப்பட்டபோது, இதே தூதன் தான் அங்கே வந்தான். அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவன், “நிறுத்து! நிறுத்து! நீ நகரமெங்கும் உருவப்போய், அதற்குள்ளே செயல்படுகிற சகல அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு” என்றான். அது சரிதானே? 209 அதன் பிறகு, அவன் அதைச் செய்த பிறகு, அதன்பின்னர் அவர்கள் சென்று படுகொலைகளை செய்ய அவன் அனுமதித்தான். அது தீத்துவின் கீழ் நிகழ்ந்த துன்பமாயிருந்தது. இப்பொழுது, நீங்கள் பாருங்கள், கிழக்கிலிருந்து வருகின்றவனும் அதே தூதன் தான் என்பதை நீங்கள் கவனியுங்கள், (அங்கிருந்துதான் இயேசு வருவார்) அவன் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையை வைத்திருக்கிறான். மகிமை!
83210 இப்பொழுது, ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்றால் என்ன? ஓ, அது உலகத்திலே மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இன்று இருக்கின்றதல்லவா! சிலர் அது ஓய்வு நாள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர், சிலர் அது இதை மற்றும் அதை செய்வது தான் என்று கூறுகின்றனர். ஆனால் வேதம், “பரிசுத்த ஆவிதான் தேவனுடைய முத்திரை” என்று கூறுகின்றதே! எபேசியர் 4:30, “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்” என்று கூறுகின்றது. புரிகிறதா? சரி. அதுவே பரிசுத்த ஆவி. 211 பிறகு என்ன வருகின்றது? இப்பொழுது, கவனியுங்கள்! ஓ, இதைக் குறித்து நான் நினைக்கையில், என் இருதயம் துள்ளி குதிக்கின்றது. இப்பொழுது அவன், “நான்கு காற்றுகளையும் அசையாதபடிக்கு அப்படியே பிடித்திருங்கள்” என்று கூறுகிறான் (வேறொரு வார்த்தையில் கூறுவோமானால்) “நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும்.” அந்த ஊழியக்காரர்கள், அந்த “யூதர்” (யோவான் திரும்பி, “முத்திரை போடப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களை நான் கண்டேன்” என்று கூறினான்.) இப்பொழுது, காற்று அடிக்க ஆரம்பித்து, பூமியை முழுவதுமாக நிரப்பி, முதலாம் உலகப் போரின்போது அர்மெகதோன் யுத்தம் நிகழ்ந்திருக்கும், ஆனால்…
84212 இப்பொழுது, உங்களுக்குக் காண்பிக்கத்தக்கதாக வேறொரு வேதவாக்கியத்தை நான் வைத்திருக்கிறேன். இயேசு அந்த மக்களைக் குறித்து பேசினார்…அவர், “சிலர் ஒன்றாம் மணி வேளையில் வருவர், சிலர் வேறொரு மணி வேளையில் வருவார்கள், அவர்கள் தான் பதினோராம் மணி வேளையில் வந்தவர்கள். பதினோராம் மணி வேளை மக்கள்” என்று கூறினார். இப்பொழுது, ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள், ஏனென்றால் நான் துரிதமாக இங்கும் அங்குமாக தாவ வேண்டியவனாய் இருக்கின்றேன். இப்பொழுது, கவனியுங்கள். “பதினோராம் மணி வேளை மக்களே, உள்ளே வாருங்கள்.” ஆகவே சரியாக இப்பொழுது…“முதலாம் மணி வேளையில் வந்தவர்கள் வந்து கூலியை பெற்றுக் கொண்டார்கள், அடுத்ததாக வந்தவர்களும் கூலியைப் பெற்றுக்கொண்டார்கள், பதினோராம் மணி வேளையில் வந்தவர்களும் முதலாம் மணி வேளை மக்கள் பெற்ற அதே கூலியைப் பெற்றுக்கொண்டனர்.” அது சரிதானே? பதினோராம் மணி வேளை! 213 இப்பொழுது, கவனியுங்கள், யூதர்கள்தான், நாம் பின்பற்றும் தூரத்தைக் காட்டும் அடையாள தூரக் கம்பம். இப்பொழுது, முதலாம் உலகப் போர் நிகழ்ந்தபோது, ஒவ்வொரு யூதனும், அவர்கள் பல நாடுகளுக்கு சிதறி செல்லும்படியானது. முதலாம் வசனத்தைக் குறித்து இன்றைக்கு கேட்கப்பட்டது போன்று, எப்படி அவர்கள் எல்லாரையும் தேசங்களுக்குள் அவர் சிதறடித்திருப்பார், அவர்கள் எல்லாரும் அங்கே உள்ளனர். எல்லா இடங்களிலும், ஒரு உலகப்போர், இங்கே காற்றுகள் எருசலேமிற்குள் செல்ல வருகின்றது.
85214 ஆகவே, அவன், “நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைப் போட்டுத் தீருமளவும் நிறுத்துங்கள், பிடித்திருங்கள்!” என்றான். வேறொரு விதமாகக் கூறினால், “நாம் அவர்களை எல்லா இடத்திலிருந்தும், எல்லா நாடுகளிலிருந்தும் அவர்களைக் கொண்டு வருகிறோம், ஏனென்றால் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை முத்திரை போடத்தக்கதாக நாம் அவர்களை சரியாக உள்ளே கொண்டு செல்லவேண்டும். பிடித்துக்கொண்டிருங்கள்!” 215 ஆகவே, பதினோராம் மணி நேர மக்கள் உள்ளே வரத்தக்கதாக முதலாம் உலகப் போரானது, அந்த வருடத்தின் பதினோராம் மாதத்தின் பதினோராம் நாளில், அந்த நாளின் பதினோராம் மணி வேளையில் முடிவுற்றது. யூதனுக்கு விடுக்கப்படுகின்ற கடைசி அழைப்பு! அவன் அதே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று, ஆதியில் அங்கே பெந்தெகொஸ்தேயில் அவர்கள் பெற்றதற்குத் திரும்பி அதே விதமாக ஞானஸ்நானம் பண்ணப்படுவான், அதேவிதமான எல்லாக் காரியங்களையும் பெற்றுக்கொள்வான். பதினோராம் மணிவேளை மக்கள் உள்ளே செல்கின்றனர். 216 அவன், “இப்பொழுது, நாம் முத்திரைப் போட்டு தீருமளவும், அதைப் பிடித்துக்கொண்டிருங்கள்,” என்றான். “எவ்வளவு நேரமாக நீங்கள் அதைப் பிடித்துகொண்டிருப்பீர்கள்?” 217 “நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரை முத்திரை போட்டுத் தீருமளவும் பொறுத்திருங்கள். இப்பொழுது நாம்—நாம் புறஜாதிகளை முத்தரிக்கின்றோம், அவர்கள் ஆயிரமாயிரம் பேர் இந்த பாடுகளின் மூலமும் மற்றும் உபத்திரவங்களின் மூலமும், அவர்கள் முத்தரிக்கப்பட்டனர். ஆனால் ஒரு நிமிடம் பொறுத்திடுங்கள்! ஒரு நிமிடம் மாத்திரம் பொறுங்கள்! இந்த…நாம் இந்த ஊழியக்காரரை முத்தரிக்கும் வரை அந்த நேரத்தை வரவிடாதிருங்கள்.” ஆகவே அவன் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை முத்தரித்தான்.
86218 பிறகு காற்றுகள் மீண்டும் திறந்து விடப்பட்டன. இப்பொழுது, கவனியுங்கள், முதலாம் உலகப் போர் முதற்கொண்டு யூதருக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. இரண்டாம் உலகப் போரிற்காக ஹிட்லர் எழும்பினான், அவன் ஆரம்பிக்கையில்…என்ன? அவன் முழு உலகத்தையே கிழித்து எறிய புறப்பட்டான். அது சரிதானே? அவன் அதைச் சுற்றிலும், கிழித்தெறிய முற்பட்டான். ஆம், அவன் அவ்விதம் இருந்தான். 219 எல்லாமே கம்யூனிசமாக இருக்கவேண்டியதாயிருந்து. இங்கே என்னை நீங்கள் சிறையில் அடைக்கப்போவதாயிருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த இரவிலே, ரெட்மேன் மன்றம் என்ற இடத்திலே இதே காரியத்தை குறித்துதான் நான் பேசிக்கொண்டிருந்தேன். ஆம், ஐயா. “அங்கே மூன்று கொள்கைகள் தோன்றும். அவை எல்லாம் சேர்ந்து ஒரு கொள்கை ஆகிவிடும், அந்த கொள்கை ஒரு துன்புறுத்தலைக் கொண்டு வந்து இயேசு கிறிஸ்துவை மறுபடியுமாக பூமிக்கு அனுப்பும்” என்று கூறினேன். அது சரியாக அவ்வண்ணமாகவே இருக்கிறது. அதுவே கம்யூனிசமாயிருந்தது, மற்றும்—மற்றும் ஹிட்லர், மற்றும்—மற்றும் நாசி இன்னும் மற்றவை; முஸ்ஸோலினியினுடைய பாஸிசம் கொள்கை, மற்றும் ஹிட்லர், ஸ்டாலின். நான் “அவைகளில் ஒரு காரியம் நிகழ்ந்தேறும். எது எந்த ஒன்றாய் இருக்கும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அது வடக்கில் உள்ள இராஜாவாயிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்” என்றேன். நிச்சயமாகவே இந்தக் காரியங்கள் இங்கே எப்படி அவை போதிக்கப்பட்டன என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள்; சகோதரன் மாஹோனி, அங்கே இருந்து வருபவர்களாகிய நீங்கள், அறிவீர்கள். 220 ஆகவே அவர்கள், “நீ அதை பிரசங்கித்தால்…” என்றனர்.
87221 இந்த என்.ஆர்.ஏ வைக் குறித்த காரியம், நான் “அது மிருகத்தின் முத்திரை அல்ல, நிச்சயமாக அல்ல. அது ஒரு மதச்சம்பந்தமான புறக்கணிப்பு; அது அதுவல்ல” என்றேன். நான், “அதுவே ஜனங்களை ஆயத்தப்படுத்தும்படியான ஒரு முன்னோடியாய் உள்ளது என்றும், இது ஆரம்பம் என்றும், துன்பத்தின் ஆரம்பம் இங்கே உள்ளது என்றும், இங்கேயிருந்துதான் நாம் ஆரம்பிக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறோம். சரியாக இங்கேயிருந்துதான் காலமானது முடிய ஆரம்பிக்கும் நேரம் ஆகும். இப்பொழுது, கவனியுங்கள், அந்த நேரம் அங்கே உள்ளது” என்றேன். 222 இப்பொழுது, யூதர்கள்மேல் துன்புறுத்தல் வருகிறது, அவர்கள் ஒவ்வொரு தேசத்திலிருந்தும் இவர்களை துன்புறுத்த தொடங்கி சரியாக அவர்கள் எருசலேமிற்குள் விரட்டப்படுகின்றனர். அது சரிதானே? ஒவ்வொருவரும், அவர்கள் சரியாக இருக்கப் போவது…ஆகவே அவர் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை உடையவராய் இருப்பார். இங்கு வெளிப்படுத்தின விசேஷத்தில் இன்னுமாய் சற்று பாருங்கள் யோவான்…
88223 திரு. போஹனான் இங்கே என்னிடம் கூறினார், “என்னால் அந்த வெளிப்படுத்தின விசேஷத்தை படிக்க முடியவில்லை” என்று கூறினார். “அங்கே மணவாட்டி சீனாய் மலையின் மீது நின்று கொண்டிருந்தாள்,” என்று கூறினார், “அங்கே மணவாட்டி மேலே பரலோகத்தில் இருக்கின்றாள்,” என்றும் கூறினார். “அங்கே மணவாட்டி இருந்தாள், அந்த தண்ணீர்…அவளுடன் போரிடத்தக்கதாக வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றினது” என்றார். அவர் கூறினார்… 224 நான், “திரு. போஹனான், அது குறித்து காரியம் என்னவென்றால், நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு, அதை ‘மணவாட்டி’ என்று அழைக்கிறீர்கள்” என்றேன். நான், “அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களான, அந்த யூதர்கள் சீனாய் மலையின் மீது நிற்பார்கள். மணவாட்டி, சரியாக, இயேசுவுடன் பரலோகத்தில் இருப்பாள். அந்த வலுசர்ப்பம் மீதமுள்ள ஸ்திரீயின் வித்துக்களுடன் போரிடத்தக்கதாக தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றினது” என்றேன். இந்த குழுதான் இங்கே செல்ல வேண்டியதாயிருக்கிறது, அது அல்ல. புரிகிறதா? மீதமுள்ள ஸ்திரீயினுடைய வித்து, “பரிசுத்தமாக்கப்பட்ட சபை,” பரிசுத்த ஆவியைப் பெறாமல் உள்ள, அவர்களுடன் அவன் போர் செய்கிறான். புரிகிறதா?
89225 இதோ அவர்கள் இருக்கிறார்கள், மூன்று கோத்திரங்களாக உள்ளனர். எப்பொழுதுமே மூன்றை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே அவன் சுற்றிலும், இந்த மகத்தான மீட்கப்பட்ட மணவாட்டியை சுற்றி இந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் இருப்பதைக் கண்டான். இது இந்த மீதியாக விடப்பட்டவர்களாயிருந்தது, அவர்கள் இருக்கிறார்கள், யூதர்கள் உள்ளனர், அங்கே, முத்திரையிடப்பட்டு, இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் இருக்கிறார்கள். இங்கே, பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற மறுத்தவர்கள் உள்ளனர். சபையானது அவர்களுக்கெதிராக துன்புறுத்தும்…அந்த—அந்த ரோம சபை இவர்கள் அவர்களைத் துன்பப்படுத்துவார்கள். ஆனால் மணவாட்டி ஏற்கெனவே எடுத்துக் கொள்ளப்பட்டு பரலோகத்தில் இருக்கிறாள். அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று வேதம் கூறினவிதமாகவே சரியாக அந்த இடத்தில் வைக்கப்பட்டப்பிரகாரமாகவே சரியாக, அவர்கள் உள்ளனர். புரிகிறதா? 226 ஆகவே அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் யூதர்கள் ஆவர், தேவனுடைய ஊழியக்காரர். ஆகவே பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் அவர்களுக்கு பிரசங்கிக்கப்படும்போது ஆதியில் அவர்கள் பெற்றுக்கொண்டதுபோல இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போது, புறஜாதியின் யுகம் முடிவடைகிறது, சபையானது முத்தரிக்கப்பட்டு, எடுத்துக்கொள்ளப்படுதல் வருகின்றது.
90227 புறஜாதிகளின் நாட்களிலே, சுவிசேஷமானது எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கப்பட்டு, புறஜாதிகளிடையே ஆணித்தரமாக கூறப்பட்டு, அங்கே தண்ணீரில் இருக்கும் ஒவ்வொரு மீனையும் பிடிக்க முயற்சித்து, வலைவீசி இழுத்தனர். அவைகளைப் பாருங்கள், அந்த பெரிய …?… ஆமைகள், தண்ணீர் ஜந்துக்கள் இன்னும் மற்றவை பிடிக்கப்பட்டன. ஆனால் எழுப்புதல் முடிவுபெற்றவுடனே அவை மறுபடியுமாக உலகத்திற்குள் சென்று விடுகின்றன. மீனானது ஏற்கனவே எடுத்து வைக்கப்படுகின்றது. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? 228 சுவிசேஷமானது பிரசங்கிக்கப்படுள்ளது! பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக, அழுதல், கதறுதல், முணகுதல் போன்றவைகளை இப்பொழுது நீங்கள் கேட்பதில்லை. அவர்கள் உள்ளே வந்து, ஆம், நூற்றுக்கணக்கானவர்கள் மேல் கைகளை வைக்க விரும்புகின்றனர், அவர்கள் நடனமாடி, ஒருவேளை, அல்லது இன்னும் இதைப்போன்று மற்ற காரியங்களைத் தொடர்ந்து செய்ய விரும்புகின்றனர். அது எல்லாம் சரியே, ஆனால் அதெல்லாம் வெறும் தன்மைகள் ஆகும்.
91229 கிறிஸ்து இயேசுவாகிய அந்த நபர் உண்மையானவைகளை மாத்திரம் பிறப்பித்து, கிறிஸ்து வரும் வரை அந்த நபரை பாதுகாப்பாக வைத்திருக்கிறார். அப்படித்தான் அவர் இருக்கின்றார். இப்பொழுது, இப்பொழுது, அந்த காரணத்தினால்தான் அழுதல் போன்றவை இல்லை, கதவானது மூடப்படுகின்ற நிலையில் இருக்கின்றது. வலையானது சென்றுள்ளது, அது கடைசி முறையாகச் செல்கின்றது, சிலரை தேவனுடைய இராஜ்ஜியத்தில் இழுக்கத்தக்கதாக செல்கின்றது. கதவுகள் மூடப்படுகின்றன! 230 பிறகு அடுத்த காரியம் என்ன? யூதர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும். எல்லா காலங்களிலும் அவர்கள் அதை துன்புறுத்தி அதைக் கேலி செய்தனர்; மேலும், அங்கே, அவர்களுக்கு பரிசுத்த ஆவி அளிக்கப்படும்பொழுது, அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறுகின்றனர். புறஜாதி சபை எடுத்துக்கொள்ளப்படுகின்றது. அதை மறுத்தவர்கள், நீதிமானாக்கப்படுதலில் மாத்திரமே நடந்தவர்கள், அந்த வலுசர்ப்பம் (ரோம அதிகாரம்) வெள்ளத்தை ஊற்றி, அதன் வாயிலாக கம்யூனிசத்துடன் இணைந்து, சபையை அந்த விதமாக ஒரு துன்பத்தில் ஆழத்தும். அவர்கள் சரியாக சித்தரிக்கப்படுகின்றனர்.
92231 ஓ, சகோதரனே, அது வருவதை நாம் காண்கையில், அதன் காரணமாகத்தான் நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன், அந்தக் காரணத்தினால் தான் நான் தேவனிடம், “கர்த்தாவே, அந்த யூதர்களிடம் நான் செல்ல விரும்புகிறேன். நான் அங்கே ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து, அங்கே உள்ள சில புறஜாதிகளிடமும் மற்றும் முகமதியர் களுடனும் பணி செய்யட்டும். நான் இங்கே இருந்து இந்தியாவிற்கு சென்று உண்மையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவருடைய அதிகாரங்களோடு, அவருடைய அற்புதங்களுடனும், அவருடைய ஞானஸ்நானத்தையும், ஒவ்வொரு காரியத்தையும், பரிசுத்த ஆவியையும் அவர்களுக்கு காண்பிக்கட்டும்” என்று கதறுகிறேன். பிறகு நாம் எருசலேமிற்கு வரும்போது… 232 சகோதரன் பீலர், இதைக் குறித்துதான் நீர் கேட்டுக்கொண்டிருந்தீர். அவர்கள் எருசலேமிற்கு வரும்போது அங்கே நின்று, “இப்பொழுது, இயேசு தாம் மரித்தோரிலிருந்து எழுந்த தேவ குமாரனானால், அவர் அன்றைக்கு ஆதியில் செய்ததுபோல அதே காரியத்தைக் குறித்து அவருக்குத் தெரியும், அன்றைக்குச் செய்தது போல அதே ஜீவனை இன்றைக்கு பிறப்பிக்க முடியும். அவ்வாறே அவர் செய்வாரானால், நீங்கள் அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்போம். தேவனுடைய மகத்தான வல்லமைகளை மற்றும் அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையான காரியங்கள் மூலம், அவர் நம்மோடு இருக்கிறார் என்று அப்பொழுது அவரைக் காண்பிப்போம். 233 பிறகு அவர்கள் அதைச் செய்யும்போது, “இப்பொழுது, அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருப்பவர்களே…” என்று கூறுவோம். அவர்களில் ஆயிரக்கணக்கான பேர் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். “பெந்தேகோஸ்தே நாளில் விழுந்த அதே ஆவிதான் இங்கே உங்களுக்காக இருக்கிறது” என்று கூறுங்கள்.
93234 சுவிசேஷமானது சரியாக அந்த நேரத்தில் யூதர்களுக்குச் செல்கின்றது. அங்கே யூதர்கள் மத்தியில் ஒரு எழுப்புதல் இருக்கும் அதனால் பத்தாயிரக்கணக்கான யூதர்கள்… இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர், தேவனுடைய இராஜ்ஜியத்தில் கொண்டு செல்லப்பட்டு, முத்தரிக்கும் தூதனால் முத்திரையிடப்படுவர். 235 அவர் கிழக்கிலிருந்து வருகின்றார் என்று நான் நம்புகின்றேன். அந்தவிதமாகவே அவர் தம்முடைய கையில் அவருடைய முத்திரையுடன் நம்மிடையே இப்பொழுது வந்திருக்கிறார். பிறகு, ஓ, நான் அங்கே கூட்டிச் சேர்க்கப்பட விரும்புகிறேன். “நான் இங்கே ஒரு துன்புறுத்தலையும், அங்கே ஒரு துன்புறுத்தலையும், அனுப்பியிருக்கிறேன், என்னால் முடிந்தவரை கடினப் பிராயசப்பட்டு நான் யூதர்களை விரட்டியிருக்கிறேன். அவர்கள் உள்ளே துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள அநேக யூதர்கள் (அதிலிருந்து அவர்கள் தப்ப முடியாது) ஏற்கெனவே பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனர். ஆனால் அங்கே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ளப்போகிற அங்கே நின்று கொண்டிருக்கும் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை நான் கொண்டிருக்கிறேன்.” 236 சரியாக அங்கே, முத்திரையிடும் தூதன் அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை முத்திரையிட ஆரம்பிக்கையில், புறஜாதி சபையின் கதவுகள் மூடப்படும், யூதர்கள் பரிசுத்த ஆவியை யூதர்களிடம் கொண்டு செல்வர். முழு உலகத்தையும் அசைக்கத்தக்கதான ஒரு எழுப்புதலை அவர்கள் கொண்டிருப்பர். அல்லேலூயா! தேவனுடைய வல்லமையானது யூதர்கள் மத்தியில் வெளிப்படும். ஓ, எவ்வளவு அற்புதம்! வ்வியூ! ஓ, என்னே!
94237 “ஏசாயாவை” நான் துரிதமாக, பார்க்கட்டும். நாம் அந்த “தேவகுமாரர்களைப்” புரிந்து கொண்டோம். இப்பொழுது நாம் பார்ப்போம்: இஸ்ரவேலா…? 238 பாருங்கள் நீங்கள் அதைப் படிப்பீர்களானால், சகோதரனே. நான்…அது ஒன்று சேர்த்து எழுதப்பட்டுள்ளது, இரண்டு முறைகள் அவர் அதை அடித்துவிட்டார். நான் வேறொன்றை எடுக்கிறேன். நீங்கள் விரும்பினால், தயவு செய்து. [சகோதரன் நெவில் கேள்வியைப் படிக்கின்றார்—ஆசி.] 14. [ “பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்பார்கள்” என்னும் ஏசாயாவின் கருத்து கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் நிகழப்போவதா, அநேக நவீன மதவாதிகள் நமக்கு கூறுவது போன்று, வேறுவிதமாக மனிதனால் கொண்டுவரப்படும் ஒன்றா? ] 239 என்னுடைய அருமையான சகோதரனே அல்லது சகோதரியே, நீங்கள் யாராயிருந்தாலும், இது ஒரு மனிதனின் கையெழுத்துபோல் உள்ளது, ஆனால், எப்படியாயினும், யாராயிருந்தாலும் சரி, நீங்கள் முற்றிலும் சரியாக கேட்டிருக்கிறீர்கள்! அப்பொழுது மண்வெட்டிகளை அடிப்பார்கள், அல்லது, பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்பார்கள். அது ஆயிர வருட அரசாட்சியை கொண்டுவரும். இந்த நவீன மதக்கோட்பாட்டுக் குழுக்கள் எங்கும் சென்று மக்களுக்கு அறிவை போதித்து தேவனுடைய இராஜ்ஜியத்தில் சேர்க்க முயல்கின்றனர்… அது தேவன் தாமே இயற்கைக்கு மேம்பட்டவராய், இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையுடன், இயற்கைக்கு மேம்பட்டவைகளை விசுவாசித்து, தேவனுடைய குமாரர்களை வனையும் இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையை பெற்றுக்கொள்ளும் மக்களிடம் வருவதாகும். அல்லேலூயா! அது இனிமேல் படித்தல், எழுதுதல், கணிதம் போன்றவையாய் இருக்காது, அது இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுந்த வல்லமையால்தான் இருக்கும். அப்பொழுது உலகமானது இனி யுத்தத்தைக் கற்பிக்காது.
95240 இன்றுள்ள ஒவ்வொரு நாடும், எந்தவொரு அதிகாரமும், ஒவ்வொரு இராஜ்ஜியமும், பிசாசினால் கட்டுப்படுத்தப்படுகின்றது. வேதம் அவ்வாறு கூறுகின்றது. இந்த நாட்களில் ஒன்றில் இவ்வுலகத்தின் இராஜ்ஜியம் நம்முடைய கர்த்தருடையதும், அவருடைய கிறிஸ்துவினுடைய இராஜ்ஜியங்களாகவும் ஆகிவிடும், அவர் இப்பூமியில் ஆயிர வருடம் அரசாளுவார்; சபை எடுத்துக்கொள்ளப்படும். அன்பான வாசகனே, சரியே, அது முற்றிலும் சரியே.
96241 அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் ஊழியக்காரர் ஆவர். மனிதன் எண்ணக்கூடாத திரளான கூட்டம்…“ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாக ஜனங்கள்,” அவர்கள் புறஜாதிகள் ஆவர். 242 இப்பொழுது இன்னும் ஒரு நிமிடம், அங்கே ஒரே ஒரு சிறு காரியம் இருக்கிறது. என்னால் முடியவில்லை. நான் இன்னும் சில நிமிடங்களில், சபையோடு ஜெபத்தை ஏறெடுக்க உள்ளேன். இங்கே கவனியுங்கள், இப்பொழுது இது மிக முக்கியமான ஒன்று என்று நான் நினைக்கிறேன். நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும், நாம் துரிதப்படுவோம். நாம் பகுத்தறிதலை வைப்பதற்கு பதிலாக, நேராக சென்றுவிடுவோம். நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இங்கே வேறொன்றும் கூட இருக்கின்றது. நான் இதை மாத்திரம் எடுத்துக்கொண்டு அதை அடுத்த ஞாயிறன்று பார்க்கலாம் என்று, நான் யூகிக்கிறேன்.
97243 நண்பர்களே, இதன் பேரில், கவனம் செலுத்துங்கள், எவ்வளவு அழகாயுள்ளது! கவனியுங்கள்! இந்த கேள்வியைக் கேட்ட இந்த நபர் யாராயினும், இப்பொழுது, நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர், இப்பொழுது, அவர்கள் ஊழியக்காரர், அவர்கள் சேவிப்பார்கள். நீங்கள் சரியாக நிலைப்படுத்தி, கவனித்திருப்பீர்களானால், பழைய வேத வசனத்தில்… 244 நிழற்பட நேர்படிவத்தை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் அதன் நிழலை எப்போதும் கவனியுங்கள். அது சரி. அது என்னவென்பதைப் பார்க்க, திரும்பிப் பாருங்கள். இப்பொழுது, சிலுவை முதற்கொண்டு அது எதிர்மாறாக இருக்கின்றது, நீங்கள் நிழல் என்றால் என்ன என்பதை காணவேண்டுமென்றால் நிழற்பட நேர்படிவம் என்ன என்பதைக் காண வேண்டும். அங்கே, சிலுவையை எதிர்நோக்கி சார்ந்திருக்க வேண்டியிருந்தது, சிலுவை எவ்விதமிருக்கும் என்பதைக் காண, (அங்கே) நாம் திரும்பிப் பார்த்து நிழலைக் காண வேண்டியிருந்தது; இப்பொழுது அந்த நிழல் என்ன என்பதைக் காண நாம் சிலுவையிலிருந்து பார்க்கவேண்டியதாய் உள்ளது. புரிகிறதா? கிறிஸ்து அந்த நாளிலே பூமியில் இருந்தபோது என்னவாயிருந்தார் என்றும், அப்பொழுது அவர் என்னவாயிருந்தாரோ இப்பொழுதும் அவர் அவ்வாறு இருக்கிறார் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இதுதான் அவருடைய நிழல். நான் என்ன கூற முயல்கிறேன் என்பதை புரிந்துகொள்கிறீர்களா? துவக்கத்தில் அது எப்படிப்பட்டதாயிருந்தது என்பதை, நான் விவரித்ததை, நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, நான் அங்கேயிருந்து பார்ப்பேனானால், இது எப்படிப்பட்டதாயிருக்கும், சிலுவை என்னவாய் இருந்தது என்பதை அறிந்துகொள்ள, நான் அந்த நிழல் என்ன என்பதை நோக்கிப் பார்க்கவேண்டும்.
98245 இப்பொழுது, ஒரு நாளிலே இஸ்ரவேலிலே பாவம் இருந்தது, அங்கே ஒரு மனிதன் இருந்தான்…அது லேவி என்னும் பேரையுடைய கோத்திரம். அவர்கள் தங்களுடைய பட்டயங்களை உருவி மோசேயுடன் பாளையத்திற்கு சென்று, பாவமாய் இருந்த எல்லாவற்றையும் அழித்துபோட்டார்கள். அது சரிதானே? தேவன் பார்த்து, “நீங்கள் எனக்காக நின்று இதைச் செய்தபடியால் உங்களுடைய…எல்லாரும் உங்களுக்கு பணிவிடை செய்வார்கள். நீங்கள் நேராக சென்று ஆலயத்தில் ஆசாரியர்களாய் இருங்கள்” என்றார். அது சரிதானே? “நீங்கள் ஆலயத்திலேயே இருங்கள், மற்றவர் வேலை செய்து பத்தில் ஒரு பங்கை கொண்டு வந்து உங்களைப் பராமரித்து பார்த்துக்கொள்வார்கள்.” அது சரிதானே? 246 ஓ, அல்லேலூயா! அந்த ஆலயம் என்னவாயிருந்தது என்பதை நீங்கள் காண்பீர்களானால், அந்த லேவியர் மணவாட்டியாயிருந்தனர். இப்பொழுது, பாவமானது ஒவ்வொரு தருணத்திலும் எழும்புகையில் லேவியர் தங்கள் பட்டயங்களை உருவுகிறார்கள். பரிசுத்த ஆவியினால் பிறந்த மணவாட்டி அங்கே நின்றுகொண்டு, “நேர்மறையில் உள்ள இயேசு கிறிஸ்துதான் எதிர்மறையிலும் இருக்கின்றார், அதே தான். பாவம் இன்னுமாக பாவம்தான், அந்த காரியங்களைச் செய்வது தவறு!” என்று கூறுகிறார். அது சரி, அவர்கள் ஒரு பட்டயத்தோடு நின்றுகொண்டிருக்கின்றனர். 247 தேவன், “என் பிதாவினால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே, இப்பொழுது உள்ளே வாருங்கள்” என்று கூறுகிறார். அதுதான் மணவாட்டி.
99248 அங்கே ஊழியக்காரர் உள்ளனர், அந்த ஊழியக்காரர் எங்கே பாளயமிறங்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள். இந்த பக்கம் பன்னிரண்டு… நான் பொருட்படுத்திக் கூறுவதோ, இந்த பக்கமாக நான்கு, அந்த பக்கமாக நான்கு, அந்த பக்கம் நான்கு, அந்த பக்கம் நான்கு; பன்னிரண்டு கோத்திரங்கள். பன்னிரண்டு கோத்திரங்கள்தான் அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர். வெளிப்படுத்தின விசேஷத்தில் பாருங்கள், அந்த நகரம் அதனுடைய பன்னிரண்டு அஸ்திபாரங்களோடிருப்பதை அவன் கண்டான். ஒவ்வொரு வாசலின் மேலும் ஒரு அப்போஸ்தலனுடைய பெயர் எழுதப்பட்டுள்ளது, பன்னிரண்டு வாசல்கள். அதைச் சுற்றி பன்னிரண்டு கோத்திரங்கள், (அல்லேலூயா!), உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. 249 அதன் உள்ளே மீட்கப்பட்டவர்கள் இருந்தனர். அல்லேலூயா! கறுப்பு, வெள்ளை, மஞ்கள், பழுப்பு, மற்றும் அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்ட எல்லாரும் அவருடைய ஊழியக்காரர்களாய் இருப்பர், அவர்கள் அவரோடு இருப்பார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அவர்கள்…சூரியன் அவர்கள் மீது இனி விழுவதுமில்லை, அவர்கள் இனி பசியோ, தாகமோ அடைவதில்லை, முடிவேயில்லாத யுகத்தினூடாக கிறிஸ்துவுடனே கூட அவர்கள் என்றென்றுமாக அரசாளுவார்கள்: இராஜாவாகிய, அவரும்; ராணியாகிய, அவர்களுமே. என்றென்றுமாக அரசாளுவார்கள்!
100250 கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென். நான் இவைகளை வைத்துக்கொள்வேன்; தேவனுக்குச் சித்தமானால், ஒருவேளை இன்றிரவு இவைகளை என்னுடன் கொண்டு வந்து, அவைகளுக்கு இன்றிரவு பதிலளிப்பேன் அல்லது எப்பொழுதாகிலும் சகோதரனே…நாம் ஒன்றாகக் கூடிப் பேசுவோம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. நீங்கள் உங்களுடைய முழு இருதயத்துடன் அவரை நேசிக்கிறீர்களா? ஓ, நான் அவரைக் காண விரும்புகிறேன், அவருடைய முகத்தைக் காண விரும்புகிறேன், அவருடைய இரட்சிப்பின் கிருபையின் மூலம் அங்கே என்றென்றுமாக ஜீவிப்பதற்கு; மகிமையின் வீதிகளிலே நான் என்னுடைய சத்தத்தை உயர்த்தட்டும்; கவலைகளெல்லாம் கடந்து, வீடு வந்து, என்றென்றுமாக களிகூரவே. (ஓ, என்னே!) இந்த தேசத்தினூடாக நான் பயணிக்கையில், பாடிக்கொண்டே நான் செல்கையில், ஆத்துமாக்களை கல்வாரியை, செந்நிற வெள்ளத்தை நோக்கி காண்பித்து, (சபையை நோக்கி அல்ல—அல்ல; கல்வாரியை நோக்கி.) 251 அதைத்தான் நாம் சுட்டிக் காட்டுகிறோம்; வேத சாஸ்திரத்தை நோக்கி அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவினுடைய, செந்நிற வெள்ளத்தை நோக்கி. “இரத்தத்தில் தான் ஜீவன் உள்ளது,” ஆகவே நம்முடைய ஜீவனாயும், இப்பொழுது நமக்குள்ளே வாசம் செய்யும் தேவனுடைய இரத்தம் அவரே. பிணைக்கும், பிணைப்பு ஆசிர்வதிக்கப்படுவதாக!
101252 நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப்போகையில், இப்பொழுது விசேஷமான ஒரு—ஒரு பாடலைப் பாட நான் விரும்புகிறேன். சகோதரி கெர்ட்டி மற்றும் அவருடைய மகள், அவர்களுக்கு விருப்பமானால், இங்கே அவர்கள் வர நான் விரும்புகிறேன். இதுதான் உண்மையான பழைய பாடல், நம்பிடுவாய் என்னும் பாடலை, நீங்கள் அதை எனக்காக பாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அந்த கதவிணன்டை நடந்து வரும்போதும், எல்லா நாடுகளிலும் இந்த பாடல் என்னைப் பின் தொடர்ந்து வருகின்றது என்பதை நான் நினைவில் கொள்கிறேன். அவர்கள் அதைப் பாட நான்—நான் விரும்புகிறேன், அவள் அதை முதன்முறையாக வாசித்தபோது, அதை நான் முதன் முறையாக கேட்டேன். என்னுடைய நண்பர் ஒருவர், பால் ரேடர் அதை எழுதினார். மேலும், நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் முன், தேவனுடைய ஆசீர்வாதங்கள் இந்த வியாதியுள்ள மக்களின் மேல் அமர்ந்திருக்க, இந்தப் பாடலை அவர்கள் பாட நான் விரும்புகிறேன். 253 நாங்கள் நிறைய நேரம் எடுத்துக்கொண்டோம். சகோதரன் நெவில், மன்னிக்கவும், தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நீங்கள் கேள்விகளை விரும்புகிறீர்களா? நான் விரும்புகிறேன். ஓ, அவைகள் உண்மையாகவே நல்லவைகளாக உள்ளன, அவைகள் மிக நல்லவைகளாக இருந்தன. மற்றொரு கேள்விக் கொத்தும் உள்ளது. மேலும், உண்மையாகவே, அவைகளில் சில இன்னும் முழுமையாக படித்துப் பார்க்கப்படவில்லை, இன்னுமாக, ஓ, படித்துப் பார்க்க நிறைய உள்ளன. கர்த்தர் ஆசிர்வதிப்பாராக.
102254 இப்பொழுது எல்லாரும் உங்கள் மனதை கிறிஸ்துவின் மீது வைத்துக்கொள்ளுங்கள், கேள்விகளிலிருந்து தெய்வீக சுகமளித்தலுக்கு நாம் மாறுவோமாக. இங்கே ஜெபம் செய்யப்பட எத்தனைப் பேர் உள்ளீர்கள்? ஜெபிக்கப்பட விரும்புவோரின், கரங்களை நாங்கள் காணட்டும். சரி, நம்முடைய சகோதரிகள் இந்த அருமையான பாடலை பாடி முடித்தவுடன் ஒரு நொடியில், நாம் அவர்களைக் கொண்டு வந்து ஜெபிப்போம். அவர்கள் ஆயத்தமாகையில், இப்பொழுது உங்கள் முன் இருப்பதுதான் அந்த வாக்குத்தத்தம், இது அவருடைய வேதாகமம். [சகோதரி கெர்ட்டியும் அவர்களுடைய மகளும் நம்பிடுவாய் என்று பாடுகிறார்கள்—ஆசி.] நம்பிடுவாய், நம்பி… 255 இப்பொழுது, வியாதியஸ்தர்களாகிய நீங்கள், உங்களால் முடியுமானால், இப்பொழுது பீடத்தை சுற்றி செல்லுங்கள். யாவும் கைகூடும், நம்பிடுவாய்; நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடும், நம்பிடுவாய்.
103256 இப்பொழுது, பரலோகப் பிதாவே, இந்த வேத வசனத்திற்காகவும், “நம்பிடுவாய்” என்ற இந்த பாடலுக்காகவும் இன்றைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். சந்திரரோகத்தைக் கொண்டிருந்த பையனின் தந்தையிடம் “நம்பிடுவாய், ஏனெனில் யாவும் கைகூடும்” என்று நீர் கூறுவதை எங்களால் கேட்க முடிகின்றது. 257 இப்பொழுது, தேவனே, பீடத்தண்டை ஜெபிக்கப்படுவதற்காக இம்மக்கள் வந்து கொண்டிருக்கையில், நாங்கள் இங்கே எதிர்மறையாக, எதிர்மறையாக, இருப்பதையும்; நேர்மறையானது எங்களைச் சுற்றி இருப்பதையும் காண்கிறோம், எங்கள் மீதிருந்த அழியாமையின் ஆவி ஒருபோதும் மரியாது. அது காலாகாலங்களாக இருக்கும். நாங்கள் இப்பொழுது உம்முடைய அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியக்காரராக எங்களுடைய சக மனிதன் சகாயத்தை பெற்றுக்கொள்ள உதவி செய்யும்படி புறப்பட்டு செல்லுகையில், ஒரே ஒரு மாற்று வழிதான் உண்டு, பிதாவே, அது உம்மை அவர்கள் மகிமைப்படுத்துவதேயாகும். இப்பொழுது இந்த காலையில் வியாதியாய், அவதியுற்று, பீடத்தண்டை நிற்பவர்களுக்கு, பரிசுத்த ஆவியானவர் தாமே அவர்கள் ஒவ்வொருவருக்கும் சுகத்தை அளிப்பாராக.
104258 சற்று முன் அந்த சகோதரிகள் “பயப்படாதே, சிறு மந்தையே” என்று பாடியதுபோல, உம்முடைய சிறு—சிறு மந்தையாகிய எங்களுக்கு, கர்த்தாவே, அவர்களுக்கு இராஜ்ஜியத்தை அருளுவது உம்முடைய நல்ல சித்தம் என்பதை, நாங்கள் அறிவோம். நீர் எப்போதும் எங்கள் அருகாமையில் இருக்கிறீர் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம், ஏனென்றால் நீர், “எங்கே இரண்டு அல்லது மூன்றுபேர் என்னுடைய நாமத்தினாலே கூடியிருப்பார்களோ, நான் அவர்கள் மத்தியில் இருப்பேன். அவர்கள் கேட்பது எதுவோ, அதை நான் அவர்களுக்கு அளிப்பேன்” என்று கூறியிருக்கிறீர். 259 இப்பொழுது, ஒருபோதும் தவற முடியாத, தேவனுடைய வார்த்தையின்படி, கர்த்தாவே, ஒவ்வொருவருக்கும் சுகத்தை அருளும். அவர்கள் இங்கே நின்று, காத்திருக்கின்றனர். நாங்கள் அவர்களை எண்ணெயினால் அபிஷேகித்து, அவர்கள் மீது கரங்களை வைத்து, விடுதலைக்காக வேண்டுகையில், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆசனங்களுக்கு, தங்கள் வீடுகளுக்கு, உம்மை துதித்துக் கொண்டு, இயல்பாகவும் பரிபூரணமாகவும் சுகம் அடைந்தவர்களாக செல்வார்களாக. கர்த்தாவே, மறுபடியும் இன்றிரவு திரும்பி வந்து, ஆராதனையில் தாங்கள் சுகமடைந்ததற்காக உம்மைத் துதித்து, தேவனுக்கு மகிமையை செலுத்தட்டும். கர்த்தாவே அதை அருளும். நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துகையில்:
105260 சகோதரன் நெவில், உமக்கு விருப்பமானால், என்னுடன் வாருங்கள். சகோதரன் பிளீமேன், சகோதரன் டீட்ஸ்மேன், அல்லது இங்கே யாராவது, சகோதரன் காக்ஸ், நீங்கள் எல்லாரும் இங்கு வந்து பீடத்தண்டை எனக்கு உதவ நான் விரும்புகிறேன். இந்த நேரத்திலே சபையின் எல்லா மூப்பர்களையும் நான் அழைக்கின்றேன். 261 நாங்கள் அவர்களுக்காக ஜெபிக்கையில், நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு வந்து உதவி செய்யலாம். இங்கே உள்ள எல்லாரும் உண்மையாகவே உத்தமமாக இருக்க நான்—நான் விரும்புகிறேன். நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கையில், நீங்களும் எங்களுடன் சேர்ந்து ஜெபிக்க நான் விரும்புகிறேன். 262 சிறிது நேரத்திற்கு முன்பு மண்டபத்தை விட்டு வெளியே சென்ற, இரத்தப்போக்குடைய, ஒரு சிறு பையன் அங்கே இப்பொழுது பின்புறம் உட்கார்ந்திருப்பதை நான் காண்கிறேன். கர்த்தராகிய இயேசு இப்பொழுது அற்புதமாக அந்த இரத்தப் பெருக்கை நிறுத்தினார். பார்த்தீர்களா? அவருடைய இரக்கம் துதிக்கப்படுவதாக, அவருடைய நாமம் போற்றப்படுவதாக. கடந்த சில நாட்களாக எத்தனைப் பேர் சுகமடைந்திருக்கிறார்கள் என்தைப் பாருங்கள்!
106263 அப்போஸ்தலர் நாட்களில் இருந்த அதே கர்த்தராகிய இயேசு சரியாக இப்பொழுது இங்கிருக்கிறார் என்பதை, நினைத்துப் பாருங்கள். அது புறஜாதிகளின் முடிவை ஆரம்பித்தலாகும். இயற்கைக்கு மேம்பட்ட விசுவாசிகளின் மத்தியில் ஒரு பெரிய அசைவு சென்றுகொண்டிருக்கிறது, ஏனென்றால் தேவன் இங்கிருக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்கிறோம். 264 உங்களுடைய—உங்களுடைய மகிமைப்படுத்தப்பட்ட சரீரம் சரியாக இப்பொழுது இங்கே கூடாரத்தில் இருக்கின்றது என்பதை, சற்று எண்ணிப் பாருங்கள், பரிசுத்த ஆவியின் பிரசன்னம்தான் உங்களுடைய மகிமைப்படுத்தப்பட்ட நிலையாக இருக்கின்றது. நீங்கள் சரியாக இப்பொழுது கிறிஸ்துவிற்குள் மகிமைப்படுத்தப்பட்டுள்ளீர்கள்! “எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” ஒரு பேட்டரி என்ற மின்கலத்திற்குள் மின் சேமிப்பு நடந்துகொண்டிருப்பதுபோல, உங்களுடைய சொந்த மகிமைப்படுத்தப்பட்ட சரீரம், உங்களுக்கு வல்லமையை அளிப்பதற்கு கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக, இப்பொழுது சரியாக உங்கள் அருகிலேயே இப்பொழுது நின்று கொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருக்கின்றது. அது உங்களுடைய சரீரத்தில் புதிய வலிமையை உங்களுக்கு அளிக்கவே இருக்கின்றது, நீங்கள் பெற்றுள்ள சுகவீனத்திலிருந்து உங்களை சுகப்படுத்தி, உங்களை சுகமுள்ளவர்களாக்கும்படிச் செய்கின்றது.
107265 இப்பொழுது, நான் சபையினிடத்தில் விரும்புவது, அவர்கள் விரும்பினால், நம்முடைய சகோதரிகளுடன் சேர்ந்து, அவர்கள் அந்தப் பாடலை மறுபடியும் பாடுவார்களானால் நலமாயிருக்கும். இப்பொழுது, பீடத்தண்டை நீங்கள் ஒவ்வொருவரும்… 266 இப்பொழுது, நண்பர்களே, நான் ஒரு வஞ்சகனாக இருப்பேனானால், அதன் உண்மையை நான் அறியேன். என் முழு இருதயத்துடன் ஜனங்களுக்கு உதவி செய்ய நான் முயற்சித்துக் கொண்டிருக்கிற, ஒரு கிறிஸ்தவனாக இருக்க நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். தேவனுடைய பிள்ளைகளாகிய, உங்களுக்கு நான் உதவ முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நான்—நான் என்னுடைய பரலோகப் பிதாவை நேசிப்பேனானால், அவருடைய பிள்ளைகளாகிய, உங்களையும் நான் நேசிக்கிறேன். நான் அப்படியில்லையெனில்…நான் உங்களை வஞ்சித்துக் கொண்டிருப்பேனானால், நான் தேவனை வஞ்சிக்க முயற்சித்துள்ளேன், நீங்கள் அவருடைய பிள்ளைகள்; தேவனை யாருமே வஞ்சிக்க முடியாது. நான் உங்களுக்கு உதவிடவே முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.
108267 அதன் காரணமாகத்தான் தேவன் என்னுடைய முயற்சிகளை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவைகள் மிகவும் குறைவுள்ளதாக இருக்கலாம், அவைகளில் சிலவற்றைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன், நான் அவைகளைக் குறித்து வெட்கப்பட்டு என்னுடைய முயற்சிகளுக்காக மனம் வருந்துகிறேன் என்பதை தேவன் அறிவார். ஆனால் நான் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காகவும், அவருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கும் உதவத்தான் என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்து கொண்டிருக்கிறேன். இங்கே சரியாக மேடையின் மீது, இயேசுவை இந்த காலை வேளையில் உங்களுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்ளுங்கள், உங்களுடைய ஆசனங்களுக்கும் உங்களுடைய வீட்டிற்கும் நலமுள்ளவர்களாக, சுகமடைந்தவர்களாக திரும்பிச் செல்வீர்கள். 268 இப்பொழுது, இங்கே நூற்றுக்கணக்கானவர்களையும், உலகெங்கிலும் ஆயிரமாயிரம் பேர்களையும் அவர் சுகமாக்குகிறார் என்றால், உங்களை சுகமாக்க அவரால் முடியாதா? விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். சரி, சகோதரிகளே. சகோதரன் நெவில், நீங்கள் வந்து அவர்களை அபிஷேகிக்க நான் விரும்புகிறேன். [சகோதரன் பிரான்ஹாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறார், அவருடைய வார்த்தைகள் புரிந்துகொள்ள முடியாதவைகளாய் இருக்கின்றன—ஆசி.] …?…