1 உயிர்த்தெழுந்த தேவனுடைய குமாரனாகிய, எங்களுடைய அருமையான கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உங்களை மீண்டும் வாழ்த்த, இன்றிரவு, நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் உள்ளே வந்தபோது, அவருடைய பிரசன்னம் ஏற்கனவே இங்கே இருந்தது, எனவே நாங்கள் இன்றிரவு மிகவும், அபரிமிதமான, “நாங்கள் செய்யக் கூடிய அல்லது நினைக்கிற எல்லாவற்றிற்கும் மேலாக,” தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை நம்மீது பொழியச் செய்து, நம் மத்தியில் இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துவார். 2 கடந்த இரண்டு இரவுகளாக நான் பேசிக் கொண்டிருந்தேன்… ஞாயிறு இரவு எங்களுக்கு ஒரு சுகமளிக்கும் ஆராதனை இருந்தது என்று நான் நினைக்கிறேன், திங்கள் இரவு நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். மேலும் கொடுங்கள்…ஞாயிறு காலை கூடாரத்தில் ஒரு பாடப் பொருளைத் துவங்கினேன். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்தை கூட்டிச் செல்வதற்காகக் காத்திருந்தபோது, நான் நினைத்தேன், நான் என்னுடைய உணர்வுகளை ஒருவிதமாக வெளிப்படுத்துவேன். நான்… 3 இந்நாட்களில் ஒன்றில், தேவனுக்கு சித்தமானால், எனக்கு உதவி செய்வார், நீங்கள் பங்கேற்கும் பல தொடர் கூட்டங்களை நான் விரும்புகிறேன், அங்கே நீங்கள்—நீங்கள்…உள்ளே போய் வேதத்தைப் பிரசங்கிக்கவும் அல்லது கற்பிக்கவும், பீட அழைப்புகளைச் செய்து, பீடத்தண்டை வந்து ஜனங்களுக்காக ஜெபித்து, பண்டைய நாகரீக பாப்டிஸ்டுகளாகிய நாம் வழக்கமாகச் செய்வது போன்றே. [யாரோ ஒருவர், “ஆமென்” என்கிறார்.—ஆசி.] இரண்டு பாப்டிஸ்டுகள் மாத்திரமே, “ஆமென்” என்று கூறக் கேட்டேன், ஆகையால் இன்றிரவு நீங்கள் யாவரும் எங்கே இருக்கிறீர்கள்? யாரோ ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் ஒரு பாப்டிஸ்டாக இருந்தீர்களா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம்” என்றேன்.
24 நான் இங்கே ஆர்கன்சாஸில் ஒரு சமயம் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். ஒரு நபர், வயோதிக நபர், சுகமடைந்துவிட்டார். அவர் இருந்தார்…அவர்களிடம் இருந்தது…அவர் ஒரு நசரேயன். அவர் தன்னுடைய முதுகில் ஊன்றுகோலை சுமந்து கொண்டு, அடுத்த நாள், ஒரு—ஒரு அடையாளத்துடன் நகரத்தின் வழியாகச் சென்று, “தேவன் என்னை இதிலிருந்து, நேற்றிரவு விலக்கிவிட்டார்.” அவர் மிகவும் மோசமாக முடமாயிருந்தார். அது லிட்டில் ராக் என்ற இடத்தில் இருந்தது. அவர் பல வருடங்களாக அந்தவிதமாகவே இருந்து வந்தார். எல்லோருக்கும் அவரைத் தெரியும், ஏனென்றால் அவர் சுற்றித் திரிந்து, தன்னுடைய தொப்பியை கீழே வைத்துக்கொண்டு, தொப்பியிலிருந்து பென்சில்களை விற்றுக்கொண்டிருந்தார். எல்லோருக்கும் அவரைத் தெரியும், எனவே அது துவங்கியபோது, நகரத்தில் ஒரு பெரிய காரியத்தை செய்தது. 5 அதற்குப் பிறகு இரண்டு இரவுகள் நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், மேலும்—அவர் எழுந்தார். அவர், “சகோதரன் பிரான்ஹாம், ஒரு நிமிடம் நான் உங்களைக் கேட்டால், உங்களுக்கு ஆட்சேபனையா?” என்று கேட்டார். அதற்கு நான், “இல்லை ஐயா” என்றேன். 6 மேலும் அவர், “பாருங்கள்,” அவர், “நீர் பிரசங்கித்ததை நான் கேட்டபோது, நீர் ஒரு நசரேயன் என்று நான் அறிந்து கொண்டேன்” என்றார். அவர், “அப்பொழுது நான் இங்கு சுற்றிலுமுள்ள எல்லா பெந்தேகோஸ்தே ஜனங்களையும் கண்டேன், அப்பொழுது யாரோ ஒருவர் நீங்கள் பெந்தேகோஸ்தேக்காரர் என்று என்னிடம் கூறினார்” என்றார். அவர், “சற்று முன்னர், நீர் ஒரு பாப்டிஸ்டு என்று நீர் கூறினதை, நான் கேட்டேன்” என்றார். அதற்கு அவர், “எனக்கு இது புரியவில்லை” என்றார். 7 நான், “சரி, அது எளிது. நான் ஒரு பெந்தேகோஸ்தே நசரேய பாப்டிஸ்டு” என்று கூறினேன். அது உண்மை. அது உண்மை. நாம் அப்படியே…விசுவாசிக்கிறோம்.
38 ஓ, நண்பர்களே, நான் எந்த ஸ்தாபன சபையையும் சார்ந்தவனல்ல, அதே சமயத்தில் நான் அவர்கள் ஒவ்வொருவரையும் சேர்ந்தவன். நான் இதைக் குறித்து பேசத் துவங்கினபோது, நான், “கிறிஸ்துவே என்னுடைய தலையாயிருக்கிறார். இந்த வேதாகமம் என்னுடைய பாடப் புத்தகமாக உள்ளது. உலகமே என்னுடைய சபையாயிருக்கிறது” என்றேன். எனவே, நான் சாகும் வரையிலும் அவ்வாறே இருக்க விரும்புகிறேன்.
49 இப்பொழுது, ஓரிரண்டு இரவுகளில், நாம் மீண்டும் ஒரு சுகமளிக்கும் ஆராதனையைத் துவங்க முயற்சிப்போம், நாம் துவங்கும்போதும்… நிச்சயமாகவே, இந்த கட்டில்களும், படுக்கைகளும் இங்கே சுற்றி கிடப்பதைக் காணும்போது, நான் ஒன்றைக் காண விரும்புகிறேன். இங்கே கென்டக்கியில் உள்ள லூயிவில்லில் ஏதோ ஒரு காரியம் சம்பவிக்கக் கூடும் என்று நான் மிகவும் பதறலடைகிறேன், ஏனென்றால் இது என்னுடைய சொந்த மாநிலம். 10 கென்டக்கியில், நீங்கள் ஒரு நல்ல கூட்டம் என்று அழைப்பது போல், நான் ஒருபோதும் ஒரு நல்ல கூட்டத்தை நடத்தியதேயில்லை. நான் அதை எந்த அவதூறோடும் கூறவில்லை. நான்—நான் ஏராளமான மோசமான கூட்டங்களை உடையவனாயிருக்கிறேன். ஆனால் இங்கே என்னுடைய சொந்த இடத்தில், அது மிகவும் கடினமானதாக இருக்கிறது என்று நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். நான்…அது மிகவும் கடினமானது. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இயேசு, “உங்களுடைய சொந்த ஊரிலே,” என்று கூறினார், என்று நான் யூகிக்கிறேன். அது எப்படியிருக்கும் என்றும், அது அநேகமாக அந்த விதமாகத்தான் இருக்கும். ஆனால் நாம் ஒருபோதும் அநேக விசேஷித்த அற்புதங்களை காண முடிவதில்லை. 11 ஏறக்குறைய ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெபர்ஸன்வில்லில் எனக்கு ஒரு ஆராதனை இருந்தது, ஆனால் அந்தப் பெண் இங்கே கென்டக்கியில் எங்கோ இருந்து வந்திருப்பதாக தெரிந்தது. அவள் தன்னுடைய கை கால்களிலிருந்து கீழே சுண்ணாம்பு போல மாறிவிட்டாள்; சரியாகக் கூறினால், அவளுடைய இடுப்பு முதல் கீழே அவளுடைய கால்கள் வரை. அவள்—அவள் பதினேழு வருடங்களாக நடக்காமலிருந்தாள். அன்றிரவு அங்கிருந்த உங்களில் அநேகருக்கு இந்த நிகழ்ச்சி நினைவிருக்கிறது. அவள் எழுந்து இயல்பாக, கூடாரத்தை விட்டு வெளியே வந்தாள்.
512 இப்பொழுது, நான் இங்கே லூயிவில்லில் ஏதோ ஒன்றை துவங்க விரும்புகிறேன், இங்கே இந்த அழகான பெரிய நகரத்தினூடாக ஒரு பண்டைய நாகரீக எழுப்புதல் பரவுவதை என்னால் காண முடிந்தது. 13 இது மற்ற எல்லா நகரங்களையும் போன்றே ஒரு பட்டிணம்; அது எல்லாரும் வெளியேறுவது போன்ற பொல்லாங்காய் உள்ளது. அது உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் கென்டக்கி மக்களை புண்படுத்தவில்லை; ஏனென்றால் நானும் கூட ஒரு கென்டக்கியன் தான். சரி. ஆனால் அது—அது உண்மையாயுள்ளது. அது பொல்லாதது. இது எல்லா மதுபானங்களுக்கும், மதுபான வடி சாலைகளுக்கும், பொல்லாத சாதனங்களுக்கும், மற்றும் அதுபோன்ற எல்லாவற்றிற்கும் தாயகமாயுள்ளது, அது இங்கே கென்டக்கியில் உள்ள லூயிவில்லில் நடக்கிறது, எனவே இது சாத்தானின் ஸ்தலமாக இருக்கிறது. 14 ஆனால் நாம் யாவரும் ஒன்று சேர்ந்தால், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷத்தைக் கொண்டு அதை நாம் துண்டு துண்டாக உடைக்க முடியும். அது உண்மை. நாம் நம்முடைய வல்லமைகளை ஒன்றாக இணைத்து உந்தித்தள்ள வேண்டும்.
615 சில காலத்திற்கு முன்னர், அந்த தேசத்தில் மிகவும் பிரபலமான ஒரு சுவிசேஷகர், இங்கே ஆராதனைகளைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அதற்கு அவர், “சரி, அது என்னவாயுள்ளது என்பது இங்கே உள்ளது” என்றார். அவர், “நான் ஒரு நகரத்திற்குள் செல்லும்போது, தேசம் முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரும் என்னுடைய கூட்டங்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும், இல்லையென்றால் நான் செல்லமாட்டேன். அது உண்மை. சரி, சற்று சிந்தித்துப் பாருங்கள். லூயிவில்லில் ஒருக்கால் அறுபது அல்லது எழுபது பெரிய பாப்டிஸ்டு சபைகள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். பார்த்தீர்களா? மெத்தோடிஸ்டுகளைக் குறித்து என்ன? அது ஒரு மெத்தோடிஸ்டு பட்டணம்; ஆஸ்பரி இங்கே இருக்கிறது. மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் மற்றும் மற்ற எல்லோரையும் விட்டுவிட்டு, இந்த நகரத்திற்கு வந்திருந்தால், அந்த மனிதன் என்ன கிடைத்திருக்கும்? 16 இப்பொழுது இந்த நகரத்தில் எத்தனை முழு சுவிசேஷ சபைகள் உள்ளன? இரண்டு அல்லது மூன்று சிறு ஊழியங்கள் இங்கே எங்கோ உள்ளன, சிறு சபைகள், அங்கும் இங்கும், அவைகள் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டிருக்கின்றன.
717 எனவே நீங்கள் உள்ளே வரும்போது, நீங்கள் உங்களுடைய ஊழியத்தின் பலத்தின் மேல் நிற்க வேண்டும். அது உண்மை. மேலும் கூட…எல்லோரும் உள்ளே நுழையும் அரசியல் போல இருக்கிறார்கள். கர்த்தர் அனுப்பும் எந்தக் காரியத்திலிருந்தும் அதைப் பெற்றுக்கொள்ளும்படியான உங்களுடைய ஊழியத்தின் பலத்தின் பேரில் இது உள்ளது. நான் அதை அந்த விதமாக விரும்புகிறேன். சகோதரனே, இயேசு கிறிஸ்து இங்கே என்னுடைய ஆதரவாயிருக்கவில்லையென்றால், என்னுடைய நம்பிக்கையாயிருக்கவில்லையென்றால், அப்பொழுது நான் சார்ந்திருக்க வேறெந்த காரியமும் இல்லை. அது உண்மை. அவர்…கிறிஸ்து என்னும் திடமான கன்மலையின் மேல், நான் நிற்கிறேன்; மற்றெல்லா நிலங்களும் எனக்கு, அமிழ்ந்துகொண்டிருக்கும் மணலாகவே உள்ளன. அரசியல்ரீதியாக அதற்குள் இழுக்கப்பட்டிருந்த பத்தாயிரம் பேருக்கு பிரசங்கிப்பதைக் காட்டிலும், செய்தியைக் கேட்க தேவன் அனுப்பியதாக எனக்குத் தெரிந்த ஐந்து பேருக்கு நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். அது உண்மை. 18 பத்தாயிரம் பேர் பீடத்தண்டை வந்து “பாருங்கள், நான் அதை முயற்சிப்பேன்” என்று கூறி, நிற்பதைக் காட்டிலும், ”நான் ஒரு பண்டைய நாகரீக மனமாற்றத்தைக் காண பீடத்தண்டை மண்டியிட்டு பூ-வூ என்று அழுவதை காண விரும்புகிறேன். அதை முயற்சிக்கவா? அவர் முயற்சிப்பதற்கான ஒரு கிறிஸ்து அல்ல. அவர் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒருவராயிருக்கிறார். ஜீவித்தாலும் அல்லது மரித்தாலும், மூழ்கினாலும் அல்லது மூழ்கடித்தாலும், எப்படியும் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். அது உண்மை.
819 நான் இன்றிரவு பத்தாயிரம் பேர்களுக்காக ஜெபித்து, அவர்கள் எல்லோரும் காலையில் மரித்துப் போனாலும்; நாளை இரவு நான் இங்கே திரும்பி வந்து வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன், தேவனுடைய வார்த்தை சரியானது என்று விசுவாசிப்பேன். அது உண்மை. 20 நான் மரித்துக் கொண்டிருந்தால்; ஐயாயிரம் ஜனங்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மரித்து, நீண்ட காலமாக நித்தியத்தில் இருந்து, அவர்கள் எழுந்து பூமிக்கு வந்து, “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் அதை நம்ப வேண்டாம். அவர் சரியாயில்லை. அதை நம்ப வேண்டாம். நாங்கள்—நாங்கள் அவரை நம்பி, சென்றோம்; நாங்கள் தவறிப்போய்விட்டோம்” என்று கூறினாலும் சரி. 21 நான் அப்பொழுதும், “நான் இயேசு கிறிஸ்துவுக்குள் மரிக்கட்டும்” என்று கூறுவேன். அது உண்மை. நான் அதை விசுவாசிக்கிறேன். அதுவே என்னுடைய முழு இருதயமாயுள்ளது, எல்லாமே அதில் சரியாக அமைந்திருக்கிறது. நான் அதை என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன், நான் அவர் பேரில் சார்ந்திருக்கிறேன். 22 நான் அவருடைய ஜனங்களை நேசிக்கிறேன். தேவனுடைய இராஜ்ஜியத்தின் உடன் பிரஜைகளே, நான் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களோடு தோளோடு தோள் சேர்ந்து நின்று, பாரத்தை சுமக்க விரும்புகிறேன்.
923 இப்பொழுது, இன்றிரவு; நான் நேற்றிரவில் கூறியிருந்தேன், கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவு நான் சிறிது நேரம் பேசப்போவதாக. உங்களை நீண்ட நேரம் பிடித்து வைத்து, உங்களை சோர்வடையச் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற… 24 இந்தக் கூட்டத்திற்காக கர்த்தருக்கு முன்பாக நான் ஒருவிதமாக வருந்தி கேட்டுள்ளேன். இந்த நகரத்தில் கூட்டம் சுறுசுறுப்பாக நடக்க தேவன் ஏதோ ஒரு காரியத்தைச் செய்வார் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஜெபித்து, உங்களுடைய பங்கைச் செய்யுங்கள்; அதன்பின்னர் நியாயத்தீர்ப்பு வரும்போது, நாம் நம்முடைய பங்கை செய்தோம் என்று நாம் யாவரும் எழும்பி நிற்க முடியும். 25 யாத்திராகமம் 20-ம் அதிகாரத்தில், 7-ம் வசனம் தொடங்கி, நான் ஒரு சில நிமிடங்கள் பேச விரும்புகிறேன். தேவன் அனுமதிப்பாரேயானால், மிக…நல்லது, ஒரு தலைசிறந்த பொருள் அல்ல, ஆனால் ஒரு—ஒரு நல்ல பாடப் பொருள் என்று நான் கூறுவேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்ஸன்வில்லில் உள்ள கூடாரத்தில் நடந்த ஞாயிறு வேதப் பாட பள்ளியில், நாம், “இரத்தத்தினால் மீட்பு” என்பதன் பேரில் துவங்கினோம்.
1026 நான் ஏன் இதை இங்கே செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், இங்கே நான் செய்ய முயற்சித்துக் கொண்டிருப்பது இதுவேயாகும். உங்களில் அநேகர் நான் ஒரு சுகமளிக்கும் ஊழியத்தில் பிரசங்கிப்பதை நீங்கள் ஒருபோதும் கண்டதில்லை என்று கூறுகிறீர்கள், ஆனால் அது ஒரு நோக்கத்திற்காகவே. என்னால் அந்த நொறுங்குண்ட ஆத்துமாக்களைக் கொண்டு பீடத்தண்டை வர முடிந்தால், லூயிவில்லுக்காக தேவனிடத்தில் எனக்கு தயவு கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன், ஜனங்கள் உண்மையாகவே தேவனுக்கு முன்பாக இறங்கி ஜெபிக்கும்போது, அது உண்மை. 27 மேலும், உங்களில் பலர் இருக்கிறீர்கள், நண்பர்களே, அது ஜெபித்துக் கொண்டும், உபவாசித்துக் கொண்டும், நீங்கள் எதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றிப் பிடித்துக் கொள்ள பயப்படுகிறீர்கள். அது உண்மை. பார்த்தீர்களா? நல்லது, நீங்கள் சில கிரியைகளை உடையவர்களாயிருந்தாலொழிய, உபவாசித்து ஜெபிப்பது உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது. உலகத்தில் உள்ள உங்களுடைய எல்லா விசுவாசமும் உங்களுக்கு ஒரு துளி நன்மையையும் செய்யாது நீங்க உடனே அங்கே அடியெடுத்து வைத்தாலொழிய, அதனோடு அணுக்கமாக, அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். எப்படியாயினும், நீங்கள் வெளியேறி, அதைச் செய்ய வேண்டும். நீங்கள் எதையாகிலும் கேட்கும்போது, போய் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுடையது, எனவே வேறெந்தக் காரியத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தேவன் கூறினார். நீங்கள் கேட்டதைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அதைச் செய்து, அது எப்படி வெளிப்படுகிறது என்பதைக் கண்டறியலாம். ஆம். “சரி, நான் இரண்டாவதை எடுத்துக்கொள்கிறேன்.” என்று கூறி பின்வாங்கிச் சொல்லாதே.
1128 நான் முதலாவதை எடுத்துக்கொள்வேன். தேவன் எனக்கு முதலில் வாக்குத்தத்தம் செய்துள்ளார், அதைத்தான் நான் விரும்புகிறேன். இந்த இருபத்தி மூன்று வருடங்களாக நான் அவரை சேவித்திருக்கிறேன், அவர் எனக்கு அந்த ஸ்தானத்தை அளித்திருக்கிறார். நான்…நான் அவரை விசுவாசித்து, அவரை நேசிக்கிற வரையிலும், அவர் என்னை நேசிக்கிற வரையிலும், அது அந்தவிதமாகவே இருக்கும், ஏனென்றால் அவர் தம்முடைய வார்த்தைக்கு கடமைப்பட்டவராயிருக்கிறார். “நீங்கள் ஜெபிக்கும்போது, நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள், நீங்கள் வாஞ்சிக்கிறவைகள் யாவையுமே பெற்றுக்கொள்வீர்கள்.” அதைத்தான் அவர் கூறினார். அது சரியா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அது நல்லது. சரி. 29 நீங்கள், “ஆமென்” என்று கூறுவதை நான் கேட்க விரும்புகிறேன். உங்களுக்குத் தெரியும், சகோதரி ஹூவர், ஆமென் என்பது எனக்கு “அப்படியே ஆகட்டும்” என்று பொருள்படுகிறது, உங்களுக்குத் தெரியும். நான்—நான் தொடர்ந்து பேசுகையில், “ஆமென்” என்று யாரும் கூறுவதை நான் கேட்காவிட்டால், நான்—நான் முழுவதுமாக குழப்பமடைந்துவிடுகிறேன்.
1230 இங்கே சில காலத்திற்கு முன்பு நான் ஒரு சிறு சபையில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். மேலும்—மேலும் நான்…ஓ, நான் அநேக பிரசங்க பீட முறைகளை உடையவனாய் இல்லை, அன்றைய வேத சாஸ்திரத்தின்படி நான் யூகிக்கிறேன், எனவே நான் கொஞ்சம் கட்டுக்கடங்காமல் இருந்தேன் என்று நான் யூகிக்கிறேன். நான் மேடையின் மேல்…நான் மேடையில் குதித்துவிட்டேன் என்று நினைக்கிறேன்-…பிரசங்க மேடையில், அப்படி , என் கையில் இருந்த ஒலிபெருக்கியைப் பிடித்தேன், அங்கே அமர்ந்திருக்க, என்னுடைய கால்கள் ஆடிக் கொண்டிருக்க, என்னால் முடிந்தளவு கடினமாக பிரசங்கித்தேன். நான் சுயநினைவுக்கு வந்தபோது; நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு சில நிமிடங்களில், நான் மீண்டும் சுய நினைவை இழந்து விட்டேன், நான் சுயநினைவை அடைந்தபோது இடைகழியின் நடுவில், என் கால்சட்டையை சுருட்டிக் கொண்டிருந்தேன். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் உண்மையாகவே…அங்கே சிறிது நேரம் தங்கியிருக்க விரும்புகிறேன். அந்த ஒரு காரியத்தைத்தான் நான் கூற விரும்புகிறேன். நான் நிச்சயமாகவே எனக்குள்ளாக களிகூர்ந்து கொண்டிருந்தது எங்கோ இருந்தது. அதன்பின்னர் நான் அதிலிருந்து பல நாட்கள் வாழ்ந்தேன். 31 அங்கே ஒரு மனிதன் என்னிடத்தில் வந்து, அவர், “சொல்லுங்கள்,” என்று கேட்டார், அவர், “அந்த ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று கூறும்போது, உங்களால் எப்படி பிரசங்கிக்க முடியும்?” என்று கேட்டார். நான், “அதுதான் என்னை பிரசங்கிக்க வைக்கிறது.” என்றேன். ஆம்.
1332 நான் முன்பு ஒரு வயதான நாயை வளர்த்து வந்தேன். நான் கூன் மிருகத்தை வேட்டையாடினேன். கூன் வேட்டையை விரும்புகிற ஏராளமான கென்டக்கி நண்பர்கள் எனக்கு இங்கே உண்டு என்று நான் யூகிக்கிறேன். எனவே…அது நாற்றம் கொண்ட விலங்கான ஒரு ஸ்கங்கைத் தவிர, அது மரத்தில் எதையும் ஏற்றிவிடும்; அது அதனுடைய அருகில் கூட செல்லாது. இப்பொழுது, அது அதனை ஒரு புதர்க் குவியலின் கீழ் ஓடச் செய்யும். நான் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவெனில், நான் அதற்குப் பின் அங்கு செல்ல விரும்பவில்லை என்பது, எனக்கு உறுதியாகத் தெரியும். எனவே நான் செய்ய வேண்டிய ஒரே காரியம், புதர் செடியில் இருந்து தூக்கி விட்டு, அதைத் தட்டிக் கொடுத்து, “டேய், அதனைப் பிடி! அதனைப் பிடி!” என்று கூச்சலிடுவேன். அப்பொழுது அவன் சென்று அந்த ஸ்கங்கை பிடித்து வருவான். 33 இப்பொழுது எனக்குத் தெரிந்த மிக மோசமான ஸ்கங் பிசாசே. நீங்கள் சற்று தட்டிக் கொடுக்க விரும்பினால், எப்பொழுதாவது ஒருமுறை “ஆமென்” என்று கூச்சலிடுங்கள். நான்—நான்…நாங்கள் மரத்தில் ஏற செய்த பிறகு, சற்று கழித்து, அதைப் போய் பிடித்துக் கொள்வோம். பார்த்தீர்களா?
1434 வயோதிக படி ராபின்சனை, நீங்கள் அறிவீர்கள், உங்களில் அநேகர் அவரைக் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் கேள்விப்பட்டிருக்கவில்லையா? நாசரேய சபை. அவர், “கர்த்தாவே” என்று கூறி, “ஒரு மரக்கட்டையைப் போன்ற ஒரு முதுகெலும்பை எனக்குத் தாரும். என்னுடைய ஆத்துமாவின் முடிவில் எனக்கு ஏராளமான அறிவை அருளும். எனக்கு ஒரு பல் உள்ள வரைக்கும் நான் பிசாசோடு சண்டையிட்டு, அதன்பின்னர் நான் மரிக்கும் வரைக்கும் இந்த பிசாசை பல்லில்லா வாயோடு கௌவிக் கொள்ளட்டும்” என்றார். அது ஒரு நல்ல… அவர் அதைத்தான் செய்தார். அவர் அதைத்தான் செய்தார்; ஏறக்குறைய நூறு வயதைக் கடந்தும், இன்னமும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார். 35 நான் அந்தவிதமாகப் பிரசங்கிப்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றொரு நாள், நான் தற்செயலாக வானொலியை இயக்கினேன், மொர்தெகாய் எஃப். ஹாம் என்னும் பெயர் கொண்ட ஒரு வயதான சகோதரன், ஏறக்குறைய நூறு வயது நிரம்பியவர், இன்னமும் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார். நான், “தேவனே அவரை ஆசீர்வதியும், அவர் அங்கு சென்றடையும்போது, அவர் தன்னுடைய கிரீடத்தில் நட்சத்திரங்களைப் பிரகாசிக்கச் செய்வாராக” என்றேன். சகோதரன் ஹாம், நான் அவரை அரிதாகவே அறிவேன். இந்நாட்களில் ஒன்றில் அவர் அந்த தேசத்தைக் கடப்பதற்கு முன்பு நான் அவரை சந்திக்க விரும்புகிறேன். எனவே, அவர் அங்குள்ள ஏராளமான மக்களோடு கைகுலுக்க முடியும். அவர் அங்கு வரும்போது, அவர் கரங்களைக் குலுக்குவதற்கு ஏராளமாயிருப்பர் என்பதை நான் அறிவேன், ஓ, ஏனென்றால் அவர் ஒரு வயோதிக வீரராயிருக்கிறார். 36 கர்த்தர் இப்பொழுது உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நாம் இந்த வார்த்தைக்குள் பிரவேசிப்பதற்கு முன்பு, நாம் ஆக்கியோனை இறங்கி வந்து, அதை நமக்கு வெளிப்படுத்தும்படி கேட்டுக்கொள்வோம்.
1537 எங்களுடைய தயவுள்ள பரலோகப் பிதாவே, அந்த அருமையான, மகத்தான உம்முடைய குமாரன் இயேசுவின் நாமத்தில், இன்றிரவு நாங்கள் உம்மை அணுகுகிறோம்; நாங்கள் அவருடைய பரிசுத்த நாமத்தைப் பேச பாத்திரர்களல்ல என்று எங்களுடைய பாவங்களை அறிக்கையிடுகிறோம். ஏனென்றால்…பரலோகத்தின் குடும்பம் முழுவதும் “இயேசு” என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலுள்ள முழு குடும்பமும் “இயேசு” என்று பெயரிடப்பட்டுள்ளது. அவர்கள் பாவிகளாயிருந்தாலும், பரிசுத்தவான்களாயிருந்தாலும், அந்த நாமத்திலே முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் அதை அறிக்கை செய்யும். அப்படியானால், நாம் அவருடைய நாமத்தில் பேசும்போது, நாம் பேசும்போது, நாம் எவ்வளவாக நம்முடைய இருதயங்களில் பயபக்தியோடு நடுங்க வேண்டும். ஆகையால் கர்த்தாவே, இன்றிரவு நீர் எங்களிடம் வர வேண்டும் என்று நாங்கள் அவருடைய நாமத்தில், பயபக்தியுடன் வேண்டிக்கொள்கிறோம். 38 நாங்கள் இங்கே ஒரு பெரிய நகரத்தின் மத்தியில் இருக்கிறோம், எல்லாவிதமான உபாயங்களினாலும் சாத்தான் ஜனங்களை கட்டி வைத்திருக்கிறான், அவர்களுடைய தொழில்களிலும், அவனுடைய சூதாட்டத்திலும், விபச்சாரத்திலும், மதுபானத்திலும், சிகரெட்களிலும் ஈடுபட்டிருந்தான். மேலும், ஓ, தேவனே, மற்றும் அநேக ஊழியக்காரர்கள், பிரசங்க பீடத்தில், அது சாதாரண காரியங்களில் ஒன்றாயிருப்பதுபோல அதைக் கடந்து செல்ல அனுமதித்தனர். 39 ஆனால், தேவனே, நாங்கள் சுவிசேஷத்தை நேராகவும், உண்மையாகவும் பிரசங்கிக்கும்படியான எச்சரிப்பின் சத்தத்தை எங்களுக்கு அருளும், கோடாரியை மரத்தின் வேரருகே வைக்க, மரத்தின் துண்டுகள் எங்கு வேண்டுமானாலும் விழட்டும். ஆனால் கர்த்தாவே, இப்படிப்பட்ட காரியங்களின் மேல் நியாயத்தீர்ப்பு அளிக்கவும், உம்முடைய அருமை குமாரனாகிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும் எங்களுக்கு உதவி செய்யும்.
1640 தேவனே, தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக இந்த நகரத்தை அசைக்கக்கூடிய ஏதோ ஒரு காரியம் சம்பவிக்க அருளும். அதாவது, ஒரு சில அங்கத்தினர்களோடு மூலை முடுக்குகளில் சென்று கொண்டிருக்கிற சபைகளும் கூட, ஓ, தேவனே, இந்த சபைகள் மீண்டும் பிறந்த நல்ல, பண்டைய நாகரீகமான, பரிசுத்தமான ஜனங்களால் நிரப்பப்படுவதாக. கர்த்தாவே, அதை அருளும். நாங்கள் ஒரு எழுப்புதலை, ஒரு பண்டைய நாகரீகத்தை, தேவனால்- அனுப்பப்பட்ட எழுப்புதலைப் பெற்றுக் கொள்வோமாக அது நகரத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் அசைந்து, எல்லா அற்பத்தனத்தையும் அகற்றிவிடும். ஓ, தேவனே, எங்களுக்கு ஒரு நீண்ட கூட்டத்தை அளிக்காதேயும். மதுபானக் கடைகளை மூடும் ஒரு எழுப்புதலை எங்களுக்குத் தந்தருளும், அது காரியங்களை சரிப்படுத்தும்; ஜனங்களை வரவழைக்கும், சபை மணியோசை ஒலிக்கும்போது, பீடத்தண்டை கூட்டமாக வந்து, போதகரின் செய்திக்கு முன்பாக ஜெபித்து, ஆயத்தமாயிருக்க. தேவனே, அதை அருளும். 41 இப்பொழுது, பிதாவே, இன்றிரவு இங்கே சுகவீனமாயிருக்கலாம். நாங்கள் வியாதியஸ்தர் என்ற பேரில் அல்லது வியாதியஸ்தருக்காக பேசிக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் கட்டிடத்தில் உள்ள சுகவீனமான ஒவ்வொரு நபரையும் சுகப்படுத்துவாராக. ஒவ்வொரு பாவியையும் இரட்சியும். பின்வாங்கிப்போன ஒவ்வொருவரும் தன்னுடைய வழி தவறிய வழியிலிருந்து வீட்டிற்கு, திரும்ப அழையும். 42 இப்பொழுது பரிசுத்த ஆவியானவரே இன்றிரவு இந்தப் பொருளின் பேரில் என்னை வழிநடத்தியிருக்கிறார். அவர் தேவனுடைய காரியங்களை எடுத்து, இங்கே தம்முடைய ஊழியக்காரனை ஒரு கருவியாக உபயோகித்து, தேவன் மகிமையைப் பெற்றுக்கொள்வாராக. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
1743 எண்ணாகமம் 20-ம் அதிகாரம் 7-ம் வசனத்தில் நாம் இதை வாசிக்கிறோம். கர்த்தர் மோசேயை நோக்கி: நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; 44 “அவருடைய” தண்ணீர் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. 45 கர்த்தர் இப்பொழுது இந்த சில வார்த்தைகளை எடுத்து, தேவனுக்கு சித்தமானால், நேற்றிரவில் உள்ள நமது பொருளுக்கு நாம் திரும்பிச் சென்று, இதைக் கொண்டு வருவோமாக.
1846 இப்பொழுது, இன்றிரவு இங்குள்ள எல்லா சுகவீனமானவர்களையும் நான் விரும்புகிறேன்… இப்பொழுது, பில்லி இன்றைக்கு ஜெப அட்டைகளை கொடுக்கவேயில்லை, ஏனென்றால் நான் அவனிடம் ஜெப அட்டைகளை கொடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான், “பில்லி, சகோதரன் காபிளிடம் போய் சொல். என்னை விட்டு…” 47 நான் தேவனுடைய மகிமைக்காக ஏதோ ஒன்றை முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளாக நமக்கு ஆத்துமாக்களை கொடுக்குமாறும், நமக்கு உதவி செய்யும்படி வேண்டிக் கொள்கிறோம்; தங்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தி, முன்னேறிச் செல்லும் விசுவாசிகளும், வேறெந்தக் காரியமும் இல்லாமலிருந்தாலும் கூட, அப்படியே நகர்ந்து வந்து, “தேவனே, நான் உம்மை வார்த்தையின் பேரில் விசுவாசிக்கிறேன்” என்று கூறுவார்களாக. அதுதான். அதுவே முதன்மையான, முதல், மிகச் சிறந்த வழியாகும். அது உண்மை. தேவனுடைய வார்த்தையில் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்படியானால் உங்களால் அதைச் செய்ய முடியவில்லையென்றால், அப்பொழுது, உண்மையாகவே, அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்த, தேவன் மற்ற காரியங்களை, ஒவ்வொரு விசுவாசிக்கும் அதை உறுதிப்படுத்த, வரங்கள், அடையாளங்கள் போன்றவற்றை, உள்ளே அனுப்புகிறார், இப்பொழுது, ஞாயிற்றுக்கிழமை, நமக்கு, “இரத்தத்தினால் மீட்பு” உண்டாயிருந்தது.
1948 எகிப்திலிருந்து புறப்பட்டு வரும் அவர்களுடைய பயணத்தில், நாம் இப்பொழுது இஸ்ரவேலரை அழைத்துச் செல்கிறோம், உலகத்திற்கு மாதிரியான அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமான பாலஸ்தீனாவிற்கு செல்லும் வழியில் இருந்தனர். அது ஒரு அழகான காரியம் என்று நான் நினைக்கிறேன். நான் அதை விரும்புகிறேன். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும், நான் உட்கார்ந்து, என்னால் முடிந்தால், யாத்திராகம புத்தகத்தினூடாக அல்லது என்னால் முடிந்தவரை அதை வாசிக்கிறேன். நான் அதை விரும்புகிறேன், ஏனென்றால் அது இன்றைக்கு சபைக்கு ஒரு பரிபூரண மாதிரியாயுள்ளது, அந்த நிலைமை, எப்படி தேவன் அசைவாடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவர் அசைவாடினார், அப்பொழுது அவர் இயற்கையில் என்ன செய்தாரோ, அவர் இப்பொழுது ஆவிக்குரியப்பிரகாரமாக செய்துகொண்டிருக்கிறார். அதைப் பார்த்தீர்களா? 49 இப்பொழுது, அவர் இஸ்ரவேலரை வழி நடத்தினார். மாம்சப் பிரகாரமானதை, அவர்கள் எங்கே கண்டார்கள், பார்த்தார்கள், ஒரு குறிப்பிட்ட தேசத்திலிருந்து அவர்கள் வேறொரு இயற்கையான தேசத்திற்கு சென்றனர். 50 இப்பொழுது நாம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்வோம். நாம் ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அது அவ்வாறில்லையென்றால், நான் உங்களிடம் கூறியிருப்பேன். நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்வேன்” என்றார். அது சரியா? [“ஆமென்.”] இப்பொழுது நாம் ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லப் போகிறோம் ஒவ்வொரு நாளும் ஒரு மைல்கல்லை குறிக்கும். மற்றொரு நாள், மற்றொரு மைல்கல்.
2051 மரணம் என்றழைக்கப்படும், ஒரு பெரிய இருண்ட நிழல் நமக்கு முன்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் நம்முடைய இருதயம் துடிக்கும்போது, நாம் அதற்கு ஒரு படி நெருக்கமாக செல்கிறோம். இந்நாட்களில் ஒன்றில், அது தன்னுடைய கடைசி துடிப்பை எடுக்கப் போகிறது, நாம் உள்ளே செல்லப் போகிறோம். நான் என்னுடைய நேரத்தில் இருக்க விரும்புகிறேன், என்னுடைய பங்கைச் செய்ய விரும்புகிறேன்; இன்றிரவு நீங்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். அது எனக்கு முன்பாக கிடக்கிறது என்பதை நான் அறிந்திருக்கும்போது, நான் அதை சந்திக்க வேண்டும், நான் ஒரு கோழையாக இருக்க விரும்பவில்லை. நான் அவருடைய நீதியின் அங்கியில் என்னையே போர்த்திக்கொள்ள விரும்புகிறேன், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நான் அவரை அறிந்திருக்கிறேன் என்ற நிச்சயமுடையவனாய், இதை அறிந்தவனாய், அதற்குள் நடந்து செல்லுகிறேன். அது உண்மை. அதாவது, அவர் மரித்தோர் மத்தியிலிருந்து அழைக்கும்போது, ஜீவனுள்ளவர்களோடு நான் அழைக்கப்படுவேன். தேவன் ஜீவனுள்ள தேவனாயிருக்கிறார்.
2152 இப்பொழுது, அவர்கள் இந்த தேசத்தில் பிரயாணம் செய்யும்போது, தேவன் அவர்களுக்காக ஒரு திட்டத்தை வகுத்தார் என்பதை நாம் கண்டோம். அவர் இரத்தத்தினால் மீட்பைக் கொண்டு வந்தார். அதன்பின்னர் அவர் மீண்டும் வல்லமையினால் மீட்பைக் கொண்டு வருகிறார் என்று நாம் கண்டறிகிறோம். 53 நாம் நேற்று முந்தின இரவு, அவர் இரத்தத்தை பூசினார் என்று கண்டறிந்தோம்; அது விசுவாசிக்கு ஒரு மிக அழகான மாதிரியாயிருந்தது, அதாவது, அவன் தனக்குப் பதிலாக கிறிஸ்துவின் மரணத்தை ஏற்றுக்கொண்டபோது, அப்பொழுது அவன் ஒரு தேவனுடைய பிள்ளையாகிறான். அவன் தன்னுடைய பயணத்தை துவங்குகிறான். 54 இப்பொழுது, அடுத்த காரியம் அவன் பெற்றிருக்க வேண்டியதாயுள்ளது…அவன் இரட்சிக்கப்பட்ட பிறகு, ஆவிக்குரியப்பிரகாரமாக. 55 இப்பொழுது, குற்றமற்ற ஆட்டுக்குட்டியின் மரணம் குற்றவாளியான விசுவாசிக்கு ஜீவனை அளித்தது. அது இப்பொழுது ஒரு பரிபூரண மாதிரியாயிருக்கவில்லையா? குற்றமற்றவர்களின் மரணம், குற்றவாளிகளுக்கு ஜீவனை அளித்தது. குற்றமற்ற கிறிஸ்துவின் மரணம் குற்றவாளிகளாகிய நமக்கு ஜீவனை அளிக்கிறது. 56 இப்பொழுது, முதலில், தேவன் அவர்களுக்கு இரத்தத்தின் மூலம் ஜீவனை அளித்து, அதை நிரூபித்த பிறகு, அதன்பின், மரணம் அவர்களை கடந்து சென்றது, அவர் அவர்களுடைய பயணத்தை துவங்கினார். நாம் சிறிது நேரம் கழித்து அவர்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
2257 இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் விசுவாசிகளும், பிள்ளைகளுமாக ஆனவுடனே, தேவன் செய்த அடுத்த காரியம், தேவனை ஏற்றுக்கொண்டதால், சரீரப்பிரகாரமான மரணத்தின் சத்துரு அவர்களைப் பின்தொடர்ந்தான். அவன் அவர்களை மூலையில்; ஒரு பக்கத்தில் பாலைவனம்; மற்றொன்று சிவந்த சமுத்திரம்; மற்றொரு பக்கத்தில் மலைகள்; பார்வோனின் சேனை பின்தொடர்கிறது, அவர்களை ஜெயிப்பதற்காக, இலட்சக்கணக்கான வீரர்கள் அணிவகுத்து வருகின்றனர். 58 இப்பொழுது, தேவன் அவர்களுக்கு ஜீவனை அளித்திருந்தார் என்பதை ஆட்டுக்குட்டியின் மரணத்தினூடாக வெளிப்படுத்தியிருந்தார்; இப்பொழுது அவர்களுக்கு சரீரப்பிரகாரமான மீட்பை அவர் காண்பிக்கப் போகிறார். அல்லேலூயா! பாருங்கள், இரட்சிப்புக்கும், சுகமளித்தலுக்கும், பாருங்கள், மாம்சபிரகாரமான மனிதனுக்கும், ஆவிக்குரிய மனிதனுக்கும். 59 தேவன் தப்பித்துக் கொள்ள ஒரு வழியை உண்டுபண்ணியிருந்தார் என்பதை நிரூபித்து, இரத்தத்தின் பலியின் மூலம், அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். இப்பொழுது அவர் சரீரப்பிரகாரமான ஒரு மரணத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரு வழியை உண்டாக்கப் போகிறார். 60 விசுவாசியைப் போல, அவன் இரட்சிக்கப்பட்டவுடனே. ஒருக்கால் ஒரு புற்று நோய் அவனைத் தின்றுவிட்டிருக்கலாம், அல்லது ஏதோ ஒரு வியாதியாயிருக்கலாம். தேவன் வல்லமையினூடாக மீட்பையும் கூட உடையவராயிருக்கிறார். அவர் ஆத்துமாவிற்கான மீட்பை உடையவராயிருப்பது போல, சரீரத்திற்கான மீட்பை அவர் வைத்திருக்கிறார். அது ஒரு…
2361 அவர்கள் இரட்சிக்கப்பட்டனர், அவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டனர். அவர்கள் இரத்தத்தின் கீழ் இருந்தனர், ஆனால், அதே சமயத்தில், பார்வோன் சென்று கொண்டிருந்தான்…சத்துரு அவர்களை அழிக்கப் போவதாயிருந்தான், அவர்கள் எல்லோரையும் அங்கே வனாந்திரத்தில் கொன்றுபோடுவதற்கு, அப்பொழுது தேவன் அவர்களுடைய சரீரத்திற்கான தம்முடைய மீட்பின் வல்லமையைக் காண்பித்தார். உங்களுக்கு அது புரிகிறதா? நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] வல்லமையினால் மீட்பு! அதன்பின்னர், சத்துரு ஏறக்குறைய அவர்கள் மீது இருந்தபோது, இயற்கைக்கு மேம்பட்ட மகத்தான அக்கினி ஸ்தம்பம் இஸ்ரவேலரின் மேல் எழும்பினபோது, இங்கே வந்து அவர்களுக்கும் மரணத்திற்கும் இடையே நின்றது. 62 அது ஒரு சில நிமிடங்கள் பதியட்டும். நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 63 இப்பொழுது, ஒவ்வொரு விசுவாசிக்கும், மீண்டும் பிறந்த தேவனுடைய பிள்ளைக்கு, மரணம் அகால வாசலண்டை வரும்போது, உங்களுக்கும் சுகவீனத்திற்கும் இடையே தேவனுடைய தூதன் நிற்கிறார். இப்பொழுது, நீங்கள் அதற்கு சரியாக செல்ல விரும்பினால், அது உங்களுடைய வேலை; ஆனால் நீங்கள் செய்ய வேண்டியதில்லை. பார்த்தீர்களா? அவர் உங்களுக்கும் மரணத்திற்கும் இடையே நின்று கொண்டிருக்கிறார்.
2464 இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, யூத மருத்துவமனையில், டாக்டர் மோரிஸ் பிளெட்சர் எனக்கு மூன்று மணி நேரம் உயிர் வாழ அவகாசம் கொடுத்தார்; இங்கே நகரத்தில் உள்ள உங்களுடைய மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர், நான் உயிர் வாழ மூன்று மணி நேரம் அவகாசம் அளித்தார். நான் இன்றிரவு ஜீவித்துக் கொண்டிருக்கிறேன். அல்லேலூயா! ஏன்? தேவனுடைய தூதன் என்னைப் பாதுகாக்க எனக்கும் மரணத்திற்கும் இடையே நின்றார், நான் தகுதியற்ற கிருபையினால், அதை ஏற்றுக்கொண்டேன். நன்றியுணர்வோடு, தேவனுடைய கிருபையினால், நான் இன்றிரவு அவருக்கு ஐந்து இலட்சம் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தினேன். 65 ஓ, நாம் அப்படியே பின்பற்றினால், எப்படி காரியங்களை செய்ய வேண்டும் என்பதை தேவன் எப்படி அறிந்திருக்கிறார். தேவனை வழி நடத்த முயற்சிக்காதீர்கள். தேவன் உங்களை வழி நடத்தட்டும். பார்த்தீர்களா? நாம் வழி நடத்தப்பட வேண்டியவர்கள். ஆகையால் தான் தேவன் நம்மை ஆடுகளுக்கு ஒப்பிட்டார் என்று நான் நினைக்கிறேன். 66 காணாமற்போன ஒரு ஆட்டைக் கண்டிருக்கிறீர்களா? ஏன், அது உலகத்திலேயே மிகவும் உதவியற்ற மிருகம். அதனால் தன்னுடைய வழியை எங்குமே கண்டறிய முடியாது. ஓநாய் அதனைத் தின்றுவிடுமளவும் அல்லது அது அங்கேயே மரிக்குமளவிற்கு அது நின்று கொண்டு கத்துகிறது. அதனால் திரும்பிச் செல்லும் வழியைக் கண்டறிய முடியாது. 67 அந்த விதமாகத்தான், அதாவது ஒரு மனிதன் இழக்கப்படும்போது, அவன் முற்றிலும் உதவியற்றவனாயிருக்கிறான். அதைக் குறித்து உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. தேவன், கிருபையினூடாக உங்களை கிறிஸ்துவண்டை வழி நடத்த வேண்டியவராயிருக்கிறார். இயேசு, “பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். அவர் இழுத்துக் கொள்ளுகிற யாவருக்கும் நான் நித்திய ஜீவனை அளிப்பேன்” என்றார். என்னே ஒரு வாக்குத்தத்தம்!
2568 ஓ, நான் இங்குள்ள ஒவ்வொரு நபரையும், அது இடது பக்கத்திலுள்ள ஐந்தாவது விலா எலும்பின் கீழிருந்து, அது இருதயத்தின் மையப்பகுதிக்குள் இறங்கும் வரை வரை உள்ளே கூட்டி வர விரும்புகிறேன். எல்லா வகையான நோய்களோடும், மக்கள் எழுந்து நிற்பதை நீங்கள் காண்பீர்கள், இந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே நடந்து, களிகூர்ந்துகொண்டு, இந்த வியாதியை உடையவர்களாக இருப்பதை மறுத்துக்கொண்டிருக்கிறார்கள். முடமான அவர்கள் நன்றாகவே நடப்பார்கள். அவர்கள் வேறெந்த காரியத்தையும் அறிய மறுப்பார்கள். பார்த்தீர்களா? 69 நீங்கள் பயமடைந்திருக்கிறீர்கள். நீங்கள் துவக்குவதற்கு பயப்படுகிறீர்கள். தேவன் இறங்கி வந்து உங்களை வெளியே இழுப்பதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். தேவன் அதை அந்தவிதமாகச் செய்கிறதில்லை. நீங்கள்தான் அடியெடுத்து வைக்க வேண்டும். அவர் வாக்குத்தத்தத்தை அளித்து, “வாருங்கள்” என்று கூறுகிறார், அப்பொழுது நீங்கள் பின்பற்றுகிறீர்கள்.
2670 இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கவனியுங்கள். தேவன் அவர்களுக்கும் ஆபத்துக்கும் இடையே வந்து நின்றார்; மீட்பின் வல்லமை…சரியாகக் கூறினால் வல்லமையினால் மீட்கப்படுதல். இரத்தத்தினால் மீட்பு; வல்லமையினால் மீட்கப்படுதல். 71 சிவந்த சமுத்திரத்தின் மறுகரையில் உள்ள கரையில் ஊர்ந்து சென்று கொண்டிருக்க, நேற்றிரவு நாம் அவர்களை அங்கே விட்டுவிட்டோம். எல்லா சத்துருக்களும், அவர்களுடைய இரதச் சக்கரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. அவர்களின் குதிரைகள் ஆற்றின் நடுவில் பயந்து போயின, அவை எல்லா பக்கமும் திரும்பிக் கொண்டிருந்தன, இந்த வழியாக செல்லும்போது, சக்கரங்கள் சேற்றில் மூழ்கி கீழே விழுந்தன. ஒரு கூட்ட மனிதர் வெறிகொண்டு ஓடினர், சத்துரு. இஸ்ரவேலர் கரையின் மேல் ஏறிச் சென்று, தேவன் தம்முடைய கரத்தை நீட்டுவதையும், எல்லா சத்துருவையும் அழிப்பதையும் கண்டனர். 72 ஒரு அழகான மாதிரி, விசுவாசி, இரத்தத்தின் கீழ்; அதன்பின்னர் இடையிடையே சுகமடைந்து, தேவனுடைய வல்லமை அவனுடைய ஜீவனைக் காத்து, அதை சிறிது காலம் நீடித்தது. அவர்கள் ஒவ்வொருவரும், அங்கேயே கொல்லப்பட்டிருப்பார்கள்; தேவன் அவர்களுக்கு மத்தியில் நின்றிருக்கவில்லையென்றால், அவன் அவர்களை அங்கே வனாந்திரத்தில் கொன்றுருப்பான். தேவன் எனக்கும் மரணத்திற்கும் இடையே நிற்கவில்லையென்றால், நான் நீண்ட காலத்திற்கு முன்பே மரித்திருப்பேன். இங்குள்ள ஒவ்வொரு விசுவாசியும் நீண்ட காலத்திற்கு முன்பே, மரித்திருந்திருப்பார்கள். தேவன் உங்களுக்கும் மரணத்திற்கும் இடையே நிற்கவில்லையென்றால்; நீங்கள் ஒவ்வொருவரும் மரித்திருந்திருப்பீர்கள். எனவே, தேவன், தம்முடைய இராஜாதிபத்திய கிருபையிலும், இரக்கத்திலும் விசுவாசிக்கும் மரணத்திற்கும் இடையே நிற்கிறார். அல்லேலூயா!
2773 இதோ அது உள்ளது. அப்படியானால் விசுவாசிக்கு அடுத்த காரியம் என்ன? அடுத்தபடியாக பரிசுத்த ஆவியின் அபிஷேகம் கொடுக்கப்படுகிறது. மோசே இஸ்ரவேல் புத்திரரை நேராக சிவந்த சமுத்திரத்திற்கு வழி நடத்தினபோது, சிவந்த சமுத்திரத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். சமுத்திரம், தண்ணீர், ஆவியின் பிரதிநிதித்துவம். அவன் கன்மலையை அடித்தபோது, தண்ணீர் புறப்பட்டு வந்தது. அது யோவான் 3:16-ல் உள்ள கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” கவனியுங்கள், அழிந்துகொண்டிருந்த ஜனங்கள் வனாந்திரத்தில் அடிக்கப்பட்ட கன்மலையினால் இரட்சிக்கப்பட்டனர். அழிந்துகொண்டிருக்கிற ஜனங்கள் (பாவத்தில் அழிந்துகொண்டிருக்கிற, அக்கிரமத்தில் அழிந்துகொண்டிருக்கிறவர்கள்) இன்றைக்கு இரட்சிக்கப்படுகின்றனர், ஏனென்றால் அடிக்கப்பட்ட தேவனுடைய குமாரன் அவர்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார்; தண்ணீர், ஆவி, உருண்டோடிக்கொண்டிருக்கிறதே! 74 கவனியுங்கள், அவர்கள் சிவந்த சமுத்திரத்தினூடாகச் சென்றபோது, நீங்கள் அதை இப்பொழுது காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு மாதிரியாயிருந்தது. விசுவாசியானவன் மரணத்திலிருந்து ஜீவனுக்கென்று மீட்கப்பட்ட பிறகு; தேவனுடைய வல்லமை அவனுடைய சரீரத்தை சுகப்படுத்தினது; இப்பொழுது அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக ஒரு விண்ணப்பிப்பவராக இருக்கிறான். இப்பொழுது அவனுக்கு முன்னால் ஒரு பயணம் உள்ளது; ஆனால் அவன் அப்பால் அந்தப் பயணத்தை சந்திப்பதற்கு முன்பு, அவன் ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். ஆமென். பெந்தெகொஸ்தேயின் பரிபூரண மாதிரி!
2875 கவனியுங்கள், அவர்கள் கரையிலிருந்து ஊர்ந்து வந்தபோது… ஒவ்வொரு விசுவாசியும், நீங்கள் உள்ளே வந்து, இரட்சிக்கப்படும்போது, இயேசுவின் இரத்தத்தை ஏற்றுக்கொண்டு, நீங்கள் இன்னமும் இதைப் பற்றிக் கொள்ள, அதைப் பற்றிக் கொள்ள முயற்சிக்கிறீர்கள், நீங்கள் இதை விட்டுவிட முடியாது, நீங்கள் அதை விட்டுவிட முடியாது. கொஞ்சங் கழித்து, தேவன் உங்களுக்காக நல்ல காரியங்களைச் செய்யலாம்; ஆனால் நீங்கள் உங்களுடைய சிகரெட்டுகளை விட்டுவிட முடியாது, நீங்கள் அவ்வப்போது நண்பர்களோடு மது அருந்த வேண்டும். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது சிவந்த சமுத்திரத்தினூடாக கடந்து செல்ல வேண்டும். 76 அவர்கள் மறுபுறத்தில் வரும்போது (இங்கே அது உள்ளது, நீங்கள் அதைக் காண வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.), அவர்கள் மறுபுறம் வந்து, கரையில் ஊர்ந்து சென்று, திரும்பிப் பார்த்தபோது, அவர்களை அடித்து, அவர்களில் சிலரைக் கொன்ற அந்த பழைய ஆளோட்டிகள் எல்லோரையும் கண்டனர். புற்று நோயும், சிகரெட்டுகளும், புகையிலை, மதுபானம் போன்ற மற்ற எல்லாக் காரியங்களும் பிள்ளைகளை பைத்தியம் பிடிக்கச் செய்கிறது போல, அவர்களை காப்பிடத்திற்கு அனுப்புகிறது, மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறது, ஒரு கூட்ட நரம்பியல் நோயாளிகளுக்கும், மற்றும் உலகில் உள்ள மற்ற ஒவ்வொரு காரியத்தையும் உற்பத்தி செய்கிறது. அவர்கள் திரும்பிப் பார்த்தபோது, அந்த காரியங்கள் யாவற்றையும் போராடி, உதவியற்றவர்களாயும், சமுத்திரத்தில் மரித்துக் கொண்டிருந்ததையும் கண்டபோது, சகோதரனே, நீங்கள் ஒரு மிகப்பெரிய கூட்டத்தைக் குறித்து பேசுகிறீர்களே; அவர்கள் அப்படிப்பட்ட ஒன்றை வைத்திருந்தனர்!
2977 மோசே! ஓ, நான் இதை ஆழமாக பதியவிடப் போகிறேன். அது மிகவும் ஆழமாக பதிகிறது என்று நான் நம்புகிறேன். இயேசு கிறிஸ்துவைத் தவிர, எப்போதும் வாழ்ந்த மகத்தான தீர்க்கதரிசியே, மோசே. மோசேயினிடத்தில் அவர் பேசினது போல, தேவன் ஒருபோதும் கிறிஸ்துவுக்கு புறம்பே, எந்த மனிதனிடத்திலும் ஒருபோதும் பேசியதில்லை. அவர், “உங்களில் ஒருவன் ஆவிக்குரியவனாய் அல்லது தீர்க்கதரிசியாய் இருந்தால், நான் அவனுக்கு தரிசனங்களைக் காண்பித்து, என்னை அவனுக்கு வெளிப்படுத்துவேன். ஆனால் என்னுடைய தாசனாகிய மோசேயை அல்ல; நான் அவனோடு செவியிலிருந்து உதட்டிற்கு பேசுகிறேன்” என்றார். அது உண்மை. 78 மோசே, இந்த கண்ணியமான மனிதன். அவன் அந்த அனுபவத்தினூடாக வந்தவுடனே, அவன் அந்த ஆளோட்டிகள் யாவரும் மரித்துப்போய் கிடப்பதைக் கண்டான், அப்பொழுது அந்த காரியங்கள் யாவும் என்றென்றைக்குமாய் போய்விட்டன என்பதை அவன் அறிந்திருந்தான். அவர்களை துரத்தி, அவர்களை அடித்து, அவர்களை சுற்றி வளைத்து அடித்துவிட்டிருந்த அந்த காரியங்கள் அனைத்தும் முடிந்துவிட்டன. அவன் தன்னுடைய கரங்களை உயர்த்தி ஆவியில் பாடினான். ஓ, என்னே! 79 நாம் அப்பால் உள்ள மகிமைக்கு செல்லும் வரையில் ஒருபோதும் மாதிரியாக்கப்பட்டிருக்கவில்லை, இருக்கப்போவதில்லை. அங்கே நிறைவு செய்யப்பட்டபோது, அவன் ஆவியில் பாடினான். நாம் சரீரத்தில் மீட்கப்படும்போது… 80 அது பெந்தெகொஸ்தே நாளில் நாம் சமுத்திரத்தினூடாக கடந்து சென்றபோது, பரிசுத்த ஆவியின் வருகைக்கு ஒரு மாதிரியாயிருந்தது. அது பெந்தெகொஸ்தேக்கு ஒரு மாதிரியாயிருந்தது. மோசே, அந்த மாதிரியில் அங்கே முன்…அந்தவிதமாக அவன் கடந்து சென்றபோது, அவன் ஆவியில் பாடினான். அது பெந்தேகோஸ்தே நாளில் வந்தது. சரீரம் பரிபூரணமாயிருக்கும்போது, மீட்கப்பட்டு…இப்பொழுது நம்முடைய ஆத்துமா பரிபூரணமாக மீட்கப்பட்டு, சரி, “அழிந்து போக முடியாது; நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டோம்.” வேதம் என்ன கூறுகிறது!
3081 ஓ, நான் நன்றாக உணருகிறேன். ஏன் என்பதைக் கவனியுங்கள். ஏனென்றால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் அறிவேன். என்னுடைய ஆத்துமாவை அங்கே நங்கூரமிட்டு, நடந்து சென்று, “சாத்தானே, நீ விரும்புகிற எல்லாவற்றிலும் எனக்கு, எதிராக சீறொலி. என்னைத் தொல்லைப்படுத்தாதே, ஏனென்றால் நான் விசுவாசித்திருக்கிறவரை அறிந்திருக்கிறேன், நான் அவரிடத்தில் ஒப்புவித்ததை அந்நாளில் அவர் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நான் நிச்சயமாய் நம்புகிறேன்” என்று கூறுகிறேன். ஆமென். 82 இன்றிரவு நமக்குத் தேவை என்னவெனில், ஒரு நல்ல, நொறுங்குண்ட, பில்லி சண்டே, அல்லேலூயா எழுப்புதலே, இங்குள்ள லூயிவில்லில் நமக்குத் தேவையாயிருக்கிறது. அது உண்மை, ஒரு நல்ல, பண்டைய நாகரீகமான, தேவனால் அனுப்பப்பட்ட பெந்தேகோஸ்தே எழுப்புதல் தேவை. ஆம், ஐயா.
3183 அப்படியானால் கவனியுங்கள், நம்முடைய சரீரங்கள் மீட்கப்படும்போது…நாம் இப்பொழுது ஒரு நிழலைப் போன்று தெய்வீக சுகமளித்தலைப் பெற்றுள்ளோம். 84 அது பெந்தெகொஸ்தேயின் நிழலாயிருந்ததுபோல, இரட்சிப்பின் அந்த நிழல் காலத்தில் அவர்கள் என்ன செய்தனர் என்பதைப் பாருங்கள். அவர்கள் தேவனுக்கு முன்பாக எப்படி நடந்து சென்றனர் என்று பாருங்கள், “அவித்து…விளிம்பு மற்றும் அதனால்…நெருப்பின் விளிம்பிலிருந்து தப்பித்து,” அவர்கள் செய்த இவையெல்லாம், “அக்கினிச் சூளைகளிலிருந்து வெளியே வந்து; சிங்கக் குகையிலிருந்தும், எல்லாவற்றிலிருந்தும் வெளியே வந்தனர்,” நிழலினால், அல்லேலூயா, பெந்தெகொஸ்தேயின் நிழலினால். 85 இப்பொழுது கிறிஸ்துவின் இரத்தத்தினூடாக நாம் பரிபூரண மீட்பைப் பெற்றுள்ளோம். அப்பொழுது அவர்களால் பரிபூரண மீட்பைப் பெற்றிருக்க முடியாது, ஏனென்றால் அது காளைகள் மற்றும் வெள்ளாடுகளின் இரத்தத்தின் கீழ் இருந்தது, அது பாவத்தைப் போக்காது; அது பாவத்தை மாத்திரமே மூடியுள்ளது. ஆனால் இயேசுவின் இரத்தம், மகா பரிசுத்தமான நீதியின் இரத்தம் சிந்தப்பட்டபோது, பாவங்கள் இனி மூடப்படவில்லை; அவைகள் விவாகரத்து செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டுவிட்டன, விசுவாசி தன்னுடைய சிருஷ்டிகரின் பிரசன்னத்திற்குள் செல்கிறான். அல்லேலூயா!
3286 அப்பொழுது அவர்கள் அதைச் செய்திருந்தால், அங்கே நிழலாகிய, மோசே ஆவியில் பாடினான். அதன்பின்னர் வெளிப்படுத்தின விசேஷத்தில், பரிபூரண சரீர மீட்பைப் பெற்றுள்ளவர்கள், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் உள்ள கண்ணாடிக் கடலின் மேல் நின்று மோசேயின் பாடலை மீண்டும் பாடினர். 87 ஒரு—ஒரு பரிசுத்த ஆவி கூட்டத்தைக் குறித்து பேசுகிறீர்களா? அவர்கள் அந்தக் கரையில் ஏறியபோது, அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர். சகோதரியே, கவனியுங்கள். சிறிய கண்ணியமான மிரியாம், தீர்க்கதரிசினி, மோசேயின் சகோதரி, ஒரு தீர்க்கதரிசினி, அவள் ஒரு தம்புருவை எடுத்துக்கொண்டு கரையில் ஓடுமளவிற்கு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, இந்த தம்புருவை அடித்து, ஆவியில் நடனமாடினாள். அது மாத்திரமல்ல, ஆனால் இஸ்ரவேல் குமாரத்திகள் யாவரும் அவளைப் பின்பற்றி, ஆவியில் நடனமாடினர். அது பரிசுத்த ஆவியானவர் விழுந்ததாயில்லையென்றால், வேறெந்த ஒன்றையும் நான் கண்டதேயில்லை. ஏன், உண்மையாகவே, அவர்கள், எல்லா சம்பிரதாய முறைமைகளையும், கண்ணியம் வாய்ந்த தேசங்கள் தங்களுடைய தொலைநோக்கியின் மூலம் பார்த்து, அவர்கள், “மதவெறியாட்டம்” என்று கூறியிருப்பார்கள். சரி. ஆனால் அது தேவனாயிருந்தது. சரியே! 88 தேவன் ஆசீர்வதித்திருக்கிறதை கண்ணியமான காரியங்கள் இன்றைக்கு கீழ் நோக்கிப் பார்க்கின்றன. சரியே!
3389 ஒரு கதை எனக்கு நினைவிற்கு வருகிறது. ஒரு நபர் ஒரு பெரிய அருமையான பண்ணையை வைத்திருந்தான். அவன் மகத்தான பெரிய அருமையான களஞ்சியங்களைக் கட்டினான், அது எவ்வளவு கண்ணியமாகவும், தரமானதாகவும் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு இருந்தது, ஆனால் அவன் விவசாயம் செய்ய மிகவும் சோம்பேறித்தனமாக இருந்தான். சரி. அவனுக்கு அருகாமையில் மற்றொரு விவசாயி வாழ்ந்து வந்தான்; அவனுக்கு ஒரு பெரிய களஞ்சியம் இல்லை, ஆனால் அவன் உண்மையாகவே ஒரு விவசாயியாக இருந்தான், அவன் அந்த ஆண்டு அந்த களஞ்சியத்தில் ஏராளமான நல்ல ஆகாரத்தை வைத்திருந்தான். இரண்டு சிறிய கன்றுக்குட்டிகள், ஒன்று ஒரு தொழுவத்தில், மற்றொன்று மற்றொன்றிலும் பிறந்தன. இளவேனிற்காலம் வந்தபோது, அவர்கள் சிறு கன்றுக்குட்டிகளை தொழுவத்திலிருந்து வெளியே விரட்டினர். 90 இங்கிருந்து வந்த அந்த சிறிய கன்றுக்குட்டி, உண்மையாகவே நன்றாக போஷிக்கப்பட்டிருந்தது, என்னே, அந்த காற்று அதை தாக்கத் துவங்கினபோது, ஓ, என்னே, அவன் தன்னுடைய குதிங்கால்களை உதைத்துவிட்டு, அதனால் போக முடிந்த அளவு வேகமாக சென்றுவிட்டது; செறுமுதல், குதித்தல், பக்கவாட்டில் உதைத்துக் கொண்டு, அவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும். 91 அதன்பின்னர் மற்ற விவசாயி தன்னுடையதை அங்கே அவிழ்த்து விட்டான். அவன்—அவனிடத்தில் புசிப்பதற்கு களைகளைத் தவிர வேறொன்றுமே இல்லாதிருந்தது; விவசாயம் செய்ய மிகவும் சோம்பேறித்தனம், அதை போஷிக்க மிகவும் சோம்பேறித்தனம். 92 அது இந்த போதகர்கள் சிலரை நினைவூட்டுகிறது. சரியே! சரியே! மிகவும் சோம்பேறித்தனம்! அது மிகவும் அற்பமானது. நீங்கள் பெற்றுள்ளதெல்லாம் கௌரவமான களஞ்சியங்கள் மாத்திரமேயாகும். கன்றுக்குட்டிக்கு கொஞ்சம் ஆகாரத்தை அங்கே போடுங்கள்! சரி. சரி. வல்லமையினால் பிரசங்கிக்கப்படுகின்ற பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அது அவர்களை சுட்டெரிக்கும். அது உண்மை. ஆனால் அதுதான் அவர்களுக்குத் தேவை, சில நல்ல பண்டைய நாகரீக சுட்டெரித்தல்; சபைக்கு என்ன தேவையோ, அங்கத்தினர்களுக்கு என்ன தேவையோ. கவனியுங்கள்.
3493 இந்த சிறிய மற்ற கன்று நலிவடைந்திருந்தது. பாவம், அந்த சிறு கன்று தொழுவத்திலிருந்து வெளியே வந்தது, அதனால் நடக்கவே முடியாத அளவுக்கு மெலிந்திருந்தது. அது விரிசல் வழியாகக் எதிரே எட்டிப்பார்த்தது. 94 அது அந்த மற்ற கன்று செருமுவதைக் கண்டது. அது மிகவும் பருமனாகவும், கொழுமையாகவும் இருந்தது. அது நலமாக இருப்பதை உணர்ந்தது. அது குளிர்காலம் முழுவதும் புசித்துக் கொண்டிருந்தது. 95 அந்த சிறிய கன்றுக்குட்டி பட்டினியாயிருந்த கன்றுக்குட்டியை நோக்கிப் பார்த்து, “அப்படிப்பட்ட மதவெறித்தனம்!” என்றது. என்னே! நிச்சயமாகவே, அது மிகவும் எலும்பும் தோலுமாக இருந்ததால், வேறெதையும் யோசிக்க முடியவில்லை. 96 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சகோதரனே, குளிர்காலம் முழுவதும் அந்த ஒன்று கொழுத்துப்போனபோது, அது எங்கே இருந்தது என்பதை அது அறிந்திருந்தது. அந்த உஷ்ணமான காற்று அதன் மீது வீசத் துவங்கியபோது, அது ஒரு நல்ல நேரத்தை உடையதாயிருந்தது. 97 தேவனுடைய ஆவியினால் பிறந்த எந்த மனிதனையும், அவர்கள் அவனை ஒரு மதவெறியன் என்றோ அல்லது வேறெந்த காரியத்திற்கோ அழைப்பார்கள். ஆனால் அந்த வெப்பமான, வசந்த காலத்தில், பரிசுத்த ஆவியின் காற்று பெந்தெகொஸ்தே நாளில் வந்தது போன்று வரத் துவங்கினபோது, ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகிறது. சரி. உஷ்ணமான காற்று வீசத் துவங்கியது; சகோதரனே, நீங்கள் யாவரும் சுவிசேஷத்தினால் கொழுக்கப்பட்டவர்களாயும், முழு பலத்தோடும் நல்ல உணர்வோடும் இருக்கிறீர்கள். உங்களுடைய குதிங்கால்களில் குதித்து ஒரு நல்ல நேரத்தைக் கொண்டிருங்கள்.
3598 அந்தவிதமாகத்தான் மிரியாமும் மற்றவர்களும் செய்தனர். அவர்கள் திரும்பிப் பார்த்தபோது, அவர்கள் ஒரு காலத்தில் செய்திருந்த பழைய காரியங்கள் யாவும் மரித்துப் போய்விட்டதைக் கண்டனர். தேவன் இரத்தத்தை ஏற்றுக்கொண்டதை அவர்கள் கண்டிருந்தனர்; தெய்வீக சுகமளித்தலில் தம்முடைய வல்லமையைக் கண்டு, அவர்களுக்கிடையே நின்று; சிவந்த சமுத்திரத்தினூடாக வந்து, ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர்; மற்றொரு பக்கமாக நடந்து, ஒரு நல்ல வேளையைக் கொண்டிருந்தனர். எல்லா ஸ்தாபனங்களும் அதைக் குறித்து என்ன நினைத்தாலும்…அவர்கள் கவலைப்படவில்லை. ஆமென். 99 தைரியமாக அடியெடுத்து வைக்கும் விசுவாசியைக் குறித்து அது இன்றைக்கு என்ன ஒரு பரிபூரண மாதிரியாயிருக்கிறது! 100 தேவன் அவர்களுடைய ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்வதாக வாக்குப்பண்ணினார். அவர் நம்முடைய ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்வதாக வாக்குப்பண்ணினார். அவர் அவர்களிடம், “நான் சுகமளிக்கும் ஒரு வழியை உண்டாக்குவேன்; நான் இதைக் குறித்து ஒரு வழியைச் செய்வேன்; நான் அதைக் குறித்து ஒரு வழியை உண்டாக்குவேன்” என்று சொல்லவேயில்லை. அவர், “நான் உங்களோடு கூட இருப்பேன்!” என்றார். அல்லேலூயா! 101 அதைத்தான் அவர் நம்மிடம் கூறினார். “உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் கூட இருப்பேன்.” நான் கூற வேண்டியதெல்லாம் அவ்வளவுதான். நீங்கள் இதை, அதை அல்லது மற்றதைக் குறித்து வாதிட வேண்டியதில்லை. அவர் இங்கிருந்தால், அது என்னை திருப்திபடுத்துகிறது; தெய்வீக சுகமளித்தல் இங்கே உள்ளது, வல்லமை இங்கே உள்ளது. அவர் அங்கிருந்த ஒவ்வொரு காரியத்திலும், அவர் இப்பொழுதும் இங்கிருக்கிறார், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” எனவே, நீங்கள் உங்களுடைய வேத சாஸ்திரத்தை எடுத்துக்கொண்டு, அதனோடு மூழ்கிவிடலாம். சகோதரனே, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்; “உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் கூட இருப்பேன்” என்றார். ஆம்.
36102 அங்கே அவர்கள் வெளியே வந்தனர், அவர் அவர்களோடு இருந்தார். இப்பொழுது அவர் கூறினார்…ஓ, அவர்கள் தங்களுடைய தலையின் மேல் ஒரு சிறு கூடை அப்பத்தை வைத்திருந்தனர்; அது முழுவதும் புசிக்கப்பட்டு போய்விட்டது. எதுவுமே இல்லை. அவர்கள் அன்றிரவு சற்று பசியோடு படுக்கைக்குச் சென்றனர். ஆனால் அடுத்த நாள் காலையில் அவர்கள் எழுந்தபோது, அங்கே அப்பம் தரை முழுவதும் கிடந்தது. 103 அந்தவிதமாகத்தான் தேவன் காரியங்களைச் செய்கிறார்; உங்களை சரியாக கடைசி நிமிடத்திற்கு வர விடுகிறார், அப்பொழுது அவரால் அதைக் குறித்து என்ன செய்ய முடியும் என்பதை உங்களுக்கு காண்பிக்கவே. அது உண்மை. அவர் அதைச் செய்ய விரும்புகிறார். அவர் அதை விரும்புகிறார். அவர் தம்முடைய ஜனங்களை ஆச்சரியப்படுத்த விரும்புகிறார். 104 புருஷனாகிய நீங்கள் உங்களுடைய மனைவிக்கு அந்தவிதமாக செய்ய விரும்புகிறீர்கள். அவளுடைய பிறந்த நாள் வரை காத்திருக்க செய்து, அவளை சந்தேகத்தின் கீழ் வைத்திருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள். 105 அந்தக் காரணத்தினால்தான் சில சமயங்களில் பாதையின் முடிவிற்கு வர தேவன் நம்மை அனுமதிக்கிறார், ஏனென்றால் அவர் நம்மை நேசிக்கிறார், அவருடைய இயற்கைக்கு மேம்பட்ட மற்றும் அவருடைய வல்லமையை நிரூபிக்க விரும்புகிறார். ஏனென்றால் அவர் நம்மை நேசிக்கிறார், அந்தக் காரணத்தினால்தான் அவர் அதைச் செய்கிறார். ஆம். நாம் கிட்டத்தட்ட கடைசி அடியை வைக்க ஆயத்தமாயிருக்கிற இடத்திற்கு நேராக கீழே செல்ல அவர் நம்மை அனுமதிக்கிறார், அப்பொழுது அவர் காட்சியில் அடியெடுத்து வைக்கிறார். 106 அவர் எபிரெய பிள்ளைகளை அக்கினிச் சூளையில் நடக்க அனுமதித்தார், ஆனால் நான்காவது மனிதன் ஒரு விசிறியோடு நின்று கொண்டிருந்தார். பார்த்தீர்களா? அவர் எப்பொழுதும் அங்கே இருக்கிறார். அவர் ஒருபோதும் விட்டுச் செல்வதில்லை. அவர் எப்பொழுதுமே அருகில் இருக்கிறார். “கர்த்தருக்குப் பயந்தவர்களைச் சூழ அவருடைய தூதன் பாளயமிறங்குகிறான்.”
37107 அன்றிரவு, அவர்கள் அடுத்த நாள் காலையில் அந்த அப்பத்தை எடுத்தனர். சிவந்த சமுத்திரத்தினூடாக கடந்து சென்றிருந்த அந்த இஸ்ரவேலரை என்னால் காண முடிகிறது; இரத்தத்தினாலே மீட்கப்பட்டிருந்தனர்; தேவனுடைய சுகமளிக்கும் வல்லமையைக் கண்டனர், இல்லை தேவனுக்கிடையே நிற்கும் அற்புத வல்லமை… இஸ்ரவேலுக்கும் எகிப்துக்கும் இடையேயும்; அதன் பின்னே உள்ள எதிரிகளை மூழ்கடித்திருந்தது. 108 பழைய புற்று நோய் என்றென்றைக்குமாய் போய்விட்டது போல, குருட்டுத்தனம் போய்விட்டது, செவிட்டுத் தன்மை போய்விட்டது, எல்லாமே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன. நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? என்னே! 109 தெருவில் நடந்து செல்லும்போது, ஒரு பழைய விமர்சகர், “இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள்! நீங்கள் அதைக் குறித்து உறுதியாக இருக்கிறீர்களா?” என்று கேட்கிறான். “என்னிடம் பேசாதே.” ஆமென். ஓ, என்னே! 110 அவர்கள் அங்கு கூடி, ஒன்று கூடி, புசித்து, ஒரு மகிமையான நேரத்தை உடையவர்களாயிருப்பதை என்னால் காண முடிகிறது. ஒரு பண்டைய நாகரீகமான, பரிசுத்த ஆவியின் கூட்டம் போல. இதோ தேவனுடைய ஆவியானவர் ஏதோ ஒரு சிறு பரிசுத்தவாட்டியிடம் அசைவாடி வந்து; அதை அந்தவிதமாக இருதயத்தில் பதித்துக்கொண்டு, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூச்சலிடுகிறார். அதைப் போன்ற ஒரு பண்டைய நாகரீகக் கூட்டம். ஆம், ஐயா. அவர்கள் அதை ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு பரப்பிக் கொண்டு, ஒரு நல்ல நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
38111 இப்பொழுது, அந்த அப்பம் ஒருபோதும் முடிவடையவில்லை. அது அவர்களுக்கான, பிரயாணம் முழுவதும் சென்றது. அது உண்மை. அது நமக்குள்ளே ஒரு பரிபூரண பெந்தெகொஸ்தே மாதிரியாயிருந்தது. அது மாம்சபிரகாரமாக இருந்தது. அந்த அப்பம் ஒருபோதும் நின்றுவிடவில்லை. அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கும் வரைக்கும், அதே அப்பமாகவே அது தரித்திருந்தது. அது சரியா? வேதாகமத்தை வாசிக்கிற நீங்கள் அதை அறிவீர்கள். அதன்பின்னர் நாம்… 112 பெந்தெகொஸ்தே நாளில் விசுவாசிகள் அங்கிருந்தபோது சபையானது துவக்கப்பட்டது. “அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல ஒரு முழக்கம் புறப்பட்டு வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீட்டை நிரப்பினது.” அப்பொழுது விழுந்த அதே பரிசுத்த ஆவி இப்பொழுதும் விழுகிறது. அது அந்த நேரத்திலிருந்து முடிவின் காலம் வரைக்கும் சென்று கொண்டேயிருக்கும். அது தொடர்ந்து செல்லும். அது நம்முடைய அப்பம். அவர்கள் மாம்சபிரகாரமான அப்பத்தினால் போஷிக்கப்பட்டனர்; நாம் ஆவிக்குரிய அப்பத்தினால் போஷிக்கப்படுகிறோம்.
39113 இயேசு, “நானே வானத்திலிருந்து தேவனிடத்திலிருந்து இறங்கி வந்த ஜீவ அப்பம்” என்றார். 114 அவர்கள், “எங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் நாற்பது வருஷகாலமாக மன்னாவைப் புசித்தார்கள்.” என்றனர். அவர், “அவர்கள் ஒவ்வொருவரும் மரித்துவிட்டனர்” என்றார். ஆம், ஐயா. 115 “ஆனால் என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசி நாட்களில் எழுப்புவேன். நான் தேவனிடத்திலிருந்து, வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம். ஒரு மனிதன் இந்த அப்பத்தைப் புசித்தால், அவன் என்றென்றைக்கும் மரிப்பதில்லை” என்றார். அங்குதான் காரியம். அவர்கள் மாம்சப்பிரகாரமானதை உடையவர்களாயிருந்தனர்; நாம் ஆவிக்குரிய பிரகாரமானதை உடையவர்களாயிருக்கிறோம். ஓ, நான் அதை வேறெந்த காரியத்திற்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன். அற்புதம்!
40116 “ஓ,” நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், நீர் ஒரு மதவெறியர் என்பதை நாங்கள் யாவரும் அறிவோம்” என்று கூறலாம். நல்லது, நானும் கூட அவ்வாறு நினைக்கிறேன். நான் கிறிஸ்துவுக்காக ஒரு முட்டாள். நீங்கள் யாருடைய முட்டாள்? நீங்கள் பிசாசின் முட்டாளாக இருக்கலாம். சரி. எனவே, நான் கிறிஸ்துவுக்காக ஒரு முட்டாள்தனமாக இருப்பதையே விரும்புவேன், நீங்களும் அவ்வாறே விரும்புவீர்கள் அல்லவா? சரி.
41117 கவனியுங்கள், இங்கே அந்த மன்னாவைக் குறித்த மற்றொரு காரியம் உள்ளது. அவர்கள் அதை ருசி பார்க்கத் துவங்கினபோது, அவர்கள், “அது தேனைப் போலிருக்கிறது” என்றனர். ஆம், அது இனிமையாயிருந்தது. அந்த வயோதிக பரிசுத்தவான்கள் தங்களுடைய உதடுகளில் சத்தமிட்டுக்கொண்டு புசிப்பதை என்னால் காண முடிகிறது. அது நன்றாக இருந்தது. 118 நீங்கள் இதை எப்போதாவது ருசி பார்த்ததுண்டா? இதுவும் கூட, நல்லதுதான். “ருசித்துப் பாருங்கள், கர்த்தர் நல்லவர். அது கன்மலையின் தேனைப் போலிருக்கிறது” என்றார். நான் இந்தக் கருத்தை அடிக்கடி, அநேக முறை கூறியிருக்கிறேன். பண்டைய தாவீது தன்னுடைய சங்கீதத்தில் அதைக் கூறினபோது, “கன்மலையின் தேனைப் போலிருக்கிறது” என்று கூறினான். 119 தாவீது ஒரு மேய்ப்பனாயிருந்தபடியால், அவன் ஒரு சிறு பையை வைத்திருந்தான், அவர்கள் தங்களுடைய பக்கவாட்டில் வைத்துக்கொண்டு, அதில் எப்பொழுதுமே தேனை சுமந்து செல்வார்கள். பாலஸ்தீனாவில் இருந்தபோதிலும், பண்டைய மேய்ப்பர்கள் அதைச் செய்கின்றனர். அவர்களுடைய—அவர்களுடைய ஆடுகள் சுகவீனமாயிருக்கும்போது, அதன்பின்னர், முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அவன் கீழே கையை நீட்டி, இந்த தேனில் கொஞ்சம் எடுத்து, அவன் அதை எடுத்து அந்த பாறையின் மேல், ஒரு சுண்ணாம்புக் கல்லின் மேல் தேய்க்கிறான். செம்மறியாடு அந்த தேனை விரும்புகிறது, எனவே அது அந்தத் தேனை கன்மலையிலிருந்து நக்குகிறது. சுகவீனமான ஆடுகளை சுகப்படுத்தும் சுண்ணாம்புக் கல்லைக் குறித்த ஏதோ ஒன்று உண்டு. 120 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இன்றிரவு எங்களிடம் ஒரு முழு பை நிறைய தேன் உள்ளது, நாங்கள் அதை கிறிஸ்து இயேசுவாகிய அந்த கன்மலையின் மேல் வைக்கப் போகிறோம். சுகவீனமான ஆடுகள் நக்கப்போகிறது, நீங்கள் நிச்சயமாக குணமடைவீர்கள். அது சரி, நக்குங்கள், நக்குங்கள், நக்குங்கள். தேனை நக்கும்போது, ஏன், நீங்கள் நிச்சயமாகவே சுண்ணாம்புக் கற்களைப் உட்கொள்வீர்கள். அது நிச்சயமாய் இருக்கிறது. இப்பொழுது, நாம் அதை சபையின் பேரில் வைக்கப்போவதில்லை. நாம் அதை கிறிஸ்துவின் பேரில் வைக்கப் போகிறோம். அது உண்மை. காரணம், மற்றெல்லா மீட்பின் ஆசீர்வாதங்களையும் போலவே, சுகமளித்தலும் கிறிஸ்துவுக்கு சொந்தமானது, ஆமென். கவனியுங்கள்.
42121 மற்றொரு காரியம். அது விழத் துவங்கினபோது, ஆரோன் வெளியே சென்று அதில் பல ஓமர் அளவுகளை எடுத்துக்கொள்ளும்படி கட்டளையிடப்பட்டான். 122 இப்பொழுது, அவர்கள் இரண்டாம் நாளுக்காக கொஞ்சம் வைத்திருக்க முயன்றால், அது கெட்டுப் போய்விடும். இன்றிரவு பரிசுத்த ஆவியைக் கொண்ட ஜனங்கள் மத்தியில் அது முழுமையாய் உள்ளது. நீங்கள், “பாருங்கள், இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நாம் ஒரு நல்ல செய்தியைப் பெற்றிருந்தோம். நாம் ஒரு—நாம் ஒரு நல்ல நேரத்தை உடையவர்களாக இருந்தோம்” என்று சிந்திக்க முயற்சிக்கிறீர்கள். இன்றிரவு நீங்கள் என்ன பெற்றுள்ளீர்கள்? அதுதான் காரியம். அவர்கள்… 123 ஒவ்வொரு இரவும் அது விழுந்தது. அது ஓய்வு நாளைத் தவிர, ஒரு போதும் தவறிப்போகவில்லை. அது உண்மை. இப்பொழுது தேவன் ஒவ்வொரு இரவும், புதியதாக அதை அனுப்பியிருக்கிறார்; ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் அது வருகிறது.
43124 கவனியுங்கள், அந்த ஓமர் நிறைய தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தது. அவர், “இப்பொழுது, பாருங்கள், நீங்கள் அந்த தேசத்திற்குள் பிரவேசித்து, உங்கள் பிள்ளைகள் இதைக் குறித்து விசாரிக்கத் துவங்கும்போது…” என்றார். “இப்பொழுது ஆசாரியத்துவத்திற்குள் வரும் ஒவ்வொரு ஆசாரியனும், பரிசுத்த ஸ்தலத்திற்கு வர அனுமதி பெற்ற பிறகு, மற்றும் பல, மற்றும் ஆசாரியனாக நியமித்து, உள்ளே செல்ல அவனுக்கு உரிமை இருந்தது ஆதியில் விழுந்த மூல மன்னாவை ஒரு வாய் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டது. முதலில் விழுந்தவுடனே, அவர்கள் அதை எடுத்து, அதை ஒரு ஓமரில் போட்டு, அது வைத்தனர், அது ஆசாரியத்துவத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டது. 125 இப்பொழுது நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், அது இன்றைக்கு என்ன மாதிரியாக இருக்கிறது?” என்று கேட்கலாம். 126 ஏன், நாம் ஆசாரியத்துவமாயிருக்கிறோம். “நீங்கள் ஒரு ராஜரீக ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், தேவனுக்கு ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துகிற, விசேஷித்த ஜனமாயும், உங்கள் உதடுகளின் கனிகள் அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் செலுத்துபவராய் இருக்கிறீர்கள்.” ஆமென். இதோ அது உள்ளது. இப்பொழுது, அதன்பின்னர், பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவியானவர் விழுந்து கொண்டிருந்தபோது; நம்முடைய மன்னா.
44127 இப்பொழுது, பழைய ஏற்பாட்டின் கீழ், அங்குள்ள ஒவ்வொரு ஆசாரியனும், ஒரு ஆசாரியனாக வரும்போது, அவர்கள் மூல மன்னாவை ஒரு வாய் நிறைய பெற்றுக் கொள்ளப் போவதாக அறிந்திருந்தனர்; ஏதோ மனிதனால் உண்டாக்கப்பட்டவை அல்ல, அதைப் போன்று காணப்பட்ட ஏதோ ஒன்றும் அல்ல. ஆனால் அவர்கள் மூலமானதிலிருந்து சிலவற்றைப் பெற்றுக்கொள்ளப் போவதாயிருந்தனர். 128 பாருங்கள், பெந்தேகோஸ்தே நாளில், நம்முடைய மன்னா விழத் துவங்கினபோது, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல பரிசுத்த ஆவியானவர் வந்தார். இங்கே ஒரு மேல் அறையில் நூற்றி இருபது பேர் கொண்ட சிறிய, கண்ணியமான மக்கள் கூட்டம் இருந்தது; கதவுகள் அடைக்கப்பட்டு, ஜன்னல்கள் மூடப்பட்டு, அங்கே பின்னால் அமர்ந்து, வாக்குத்தத்தத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். ஆம், அவர்கள் நிச்சயமாகவே, இயேசுவோடு இருந்து வந்தனர். அவர்கள் அவருடைய வல்லமையை, மற்றும் அவை எல்லாவற்றையும் அறிந்திருந்தனர், ஆனால் அவர்கள் வாக்குத்தத்தத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். 129 இன்றிரவு அதைத்தான் நாம் விரும்புகிறோம். இருக்க வேண்டும்…இந்த மக்கள் குழுவினர் ஒருமனப்பட்டு, அவர்கள் அன்றிரவில் இருந்தது போலவே, அதேக் காரியம் இன்றிரவும், மீண்டும் இங்கே இந்தக் கட்டிடத்தில், கென்டக்கியில் உள்ள லூயிவில்லில், அது பெந்தேகோஸ்தே நாளில் மீண்டும் நிகழ்ந்தது. அது உண்மை. ஓ, உண்மையாகவே, லூயிவில்லில் அவர்கள் கொண்டிருந்த அதேவிதமான குறை கூறுபவர்களை அங்கேயும் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் யாவரும் ஒருமனப்பட்டு ஒரே இடத்தில் இருந்தனர். திடீரென்று…
45130 அங்கே ஒரு ஊழியக்காரன் வந்தான், அவன் ஒரு கடிதத்தை வைத்திருந்தான், அவர்கள் தங்களுடைய பெயர்களை கையொப்பமிட்டு, ஐக்கியத்தின் வலது கரத்தை உடையவர்களாயிருந்து, சபை ஐக்கியத்திற்குள் பிரவேசித்தார்களா? அது இன்றைக்கு இருக்கலாம், ஆனால் அது அப்பொழுது அவ்வாறு அல்ல. அந்தவிதமாகத்தான் பிராடெஸ்டெண்டுகளும் அதைச் செய்கிறார்கள். கத்தோலிக்கர் பீடத்தண்டை நடந்து சென்று, தன்னுடைய முதல் இராப்போஜனத்தை எடுத்துக் கொள்கின்றனர்; தன்னுடைய நாவை வெளியே நீட்டி அந்த அப்பத்தை எடுக்கின்றனர்; ஆசாரியன் திராட்சரசத்தை பருகுகிறான். அப்பொழுது அவன் அவ்விதமாகிறான். 131 ஆனால், சகோதரனே, “பெந்தெகொஸ்தே நாளில், அவர்கள் ஒருமனப்பட்டு, ஒரு இடத்தில், அப்பொழுது திடீரென்று வானத்திலிருந்து ஒரு முழக்கம் உண்டானது,” மனிதனுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, “பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல. அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் அது நிரப்பியது.” தேவனுடைய வல்லமை அவர்கள் மேல் விழுந்தது! அவர்கள் வெறி பிடித்த ஒரு கூட்டத்தைப் போல் நடந்து கொண்டு, வீதிக்கு சென்றனர்; அவர்கள் சிவந்த சமுத்திரத்தினூடாக வந்தபோது, அவர்கள் செய்தது போன்றேயாகும். அது சரியா? அவர்கள் கூச்சலிட்டனர். அவர்கள் தொடர்ந்து சென்றனர். அவர்கள் தள்ளாடினர். அவர்கள் தங்களுடைய உதடுகளினால் திக்கிப் பேசினர். 132 அவர்கள், ஓ, இப்படி நடந்து கொண்டு, நீங்கள்…அந்த மக்கள், கண்ணியமான சபை, பின்னால் நின்று, “இந்த ஜனங்கள் புது திராட்சரசத்திற்கு வெறி கொண்டிருக்கிறார்கள்” என்றனர். 133 அல்லேலூயா! நீங்கள் என்னை எப்படியும், “பரிசுத்த உருளையர்” என்று அழைக்கப் போகிறீர்கள். எனவே நீங்கள் இப்பொழுதே துவங்குவது நல்லது. சரி.
46134 பாருங்கள், அவர்கள் புதிய திராட்சரசத்தினால் நிறைந்திருந்தனர், அது உண்மை, தேவனிடத்திலிருந்து, வானத்திலிருந்து வந்த திராட்சரசம். குடித்து வெறித்த ஒரு மனிதனை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர் எல்லோரிடமும் அன்பாய் இருக்கிறார், நீங்கள் பாருங்கள். அவர் கவலைப்படுகிறதில்லை. அந்தவிதமாகத்தான் ஒரு மனிதன் ஆவியில் வெறிகொண்டவனாயிருக்கிறான். வேதம், “துன்மார்க்கத்திற்கு எதிரான மதுபான வெறிகொள்ளாமல் ஆவியினால் நிறைந்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது. தேவனுடைய ஆவி உங்களை அவ்வளவாய் வெறிகொண்டிருக்கச் செய்கிறது, நீங்கள் உங்களுடைய எல்லா சத்துருக்களையும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் மறந்துவிடுகிறீர்கள். ஒவ்வொருவரும் உங்களோடு அன்பாயிருக்கிறார்கள். உங்களைச் சுற்றி நின்று கொண்டிருப்பவர் யார் என்பதைக் குறித்து அவர் கவலைப்படுகிறதில்லை. அப்பொழுது நீங்கள் தேசத்திலேயே மிகப்பெரிய மனிதனாயிருக்கிறீர்கள். 135 உங்களுக்கு அடுத்தபடியாக அமர்ந்துள்ள உங்களுடைய அண்டை வீட்டார் ஏதோ ஒரு கௌரவமான சபைக்குச் சென்றாலும் எனக்குக் கவலையில்லை; ஒரு முறை பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது வரட்டும், என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள். உண்மையாகவே நல்லபடியாக, ஆவியில் குடித்து வெறித்து, சரியாகி விடுங்கள், அப்பொழுது என்ன சம்பவிக்கிறது என்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள், “சகோதரியே, நான் அதைப் பெற்றுக் கொண்டேன்! உனக்கும் கூட, அது வேண்டும்!” என்று கூறுவீர்கள். அது உண்மை. ஆம் ஐயா, ஏதோ ஒன்று சம்பவிக்கும்.
47136 அவர்கள் யாவரும், புதிய திராட்சரசத்தை குடித்திருந்தனர். இங்குள்ள சகோதரிகளாகிய உங்களில் சிலர், கவனியுங்கள், அதில் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளும் இருந்தாள் என்பதை நீங்கள் அறிவீர்களா? இப்பொழுது, அவள் அங்கு செல்ல வேண்டியதாயிருந்தது. இயேசு கிறிஸ்துவின் தாயார் அங்கே சென்று, அந்த கூட்ட ஜனங்களுக்குள் சேர்க்கப்பட வேண்டியதாயிருந்தது, அவள் மதுபானத்தையோ அல்லது வேற ஏதோ ஒன்றையோ குடித்திருந்து தள்ளாடுவது போன்று அவள் தள்ளாடுமளவிற்கு ஆவியில் நிறைந்திருந்தாள். 137 உங்களுடைய பாடல் புத்தகத்தை உங்களுடைய கரத்தின் கீழ் வைத்துக்கொண்டு, சபைக்கு செல்வதனால், மணியோசை ஒலிக்க, ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் சபைக்கு நடந்து சென்று, அமர்ந்திருந்து சிலவற்றைக் கேட்டு…திரும்பி நடந்து சென்றால், பரலோகத்திற்குச் சென்று விடுவீர்கள் என்றும் நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் அங்கு ஒருபோதும் செல்லவேமாட்டீர்கள். 138 நீங்கள் அந்த வழியாகத்தான் வர வேண்டும், ஏனென்றால் தேவன் வகுத்துள்ள ஒரே பாதை அதுவேயாகும். நீங்கள் அதில் நடப்பீர்கள், இல்லையென்றால் அங்கே இருக்கமாட்டீர்கள். நான் உங்களுடைய நியாயாதிபதி அல்ல, ஆனால் நான் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். அது முற்றிலும் உண்மை. ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகைகள் அங்கே இருந்தனர், மற்றவர்களைப் போலவே முட்டாள்தனமாக நடந்து கொண்டாள், மற்றவர்களைப் போலவே வெறித்துள்ளாள். இந்த புருஷர்களும் ஸ்திரீகளும், அவர்கள் ஒவ்வொருவரும், புதிய திராட்சரசத்தினால் நிறைந்திருந்தனர். தேவன் அந்த திட்டத்தை எப்போதாவது மாற்றியிருந்தால், எனக்காக வேதவாக்கியத்தை சுட்டிக் காட்டுங்கள்; அது அங்கே இல்லை. இல்லை ஐயா. அது காலத்தின் முடிவு வரையிலும், அந்தவிதமாக, வேதாகமத்தின் முடிவு வரையிலும், இயேசு வரும்போதும் அதேக் காரியமாகத்தான் இருக்கும். 139 பாருங்கள்! அவர்கள் அந்த புதிய திராட்சரசத்தினால் வெறித்திருக்கையில், பாருங்கள், தேவன் உங்கள் எல்லோருக்காகவும் ஒரு ஓமர் அளவு ஒதுக்கித் தருகிறாரா என்று நாம் பார்ப்போம். சரி.
48140 இதோ அவர்கள் எல்லோரும் அங்கே நின்று கொண்டிருந்தனர், பேதுரு என்னும் பெயர்கொண்ட ஒரு சிறிய வயோதிக கோழைத்தனமான பிரசங்கியாரும், “சிறிய கன்மலையானவன்” இயேசுவை மறுதலிக்குமளவிற்கு தன்னுடைய நிலையைக் குறித்து மிகவும் பயந்து, ஓடிப்போய் ஜெபித்து, அவனும் அவர்களோடு கூட்டிச் சேர்க்கப்பட வேண்டியதாயிருந்தது. ஒரு சோப்புப் பெட்டியின் மேல் நின்று அல்லது ஏதோ ஒன்றில் மேல் நின்று கொண்டு, “யூதேயா ஜனங்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிறவர்களே, நீங்கள் ஏன்!” என்று கூறினான். அது மருத்துவர்கள், டி.டி.க்கள். ஓ, “புருஷர்களே நீங்கள்…இஸ்ரவேலரே, எருசலேமில், அது போன்ற இடங்களில், வாசம் பண்ணுகிறவர்களே, நீங்கள் இதை அறியக்கடவீர்கள். பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறபடியால், நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல. ஆனால் இதுவோ…” என்று கூறினான். 141 இது அதுவல்லவென்றால், அது வரும் வரையில் நான் இதைக் காத்துக்கொள்ள விரும்புகிறேன். அந்த ஒரு காரியம்தான். 142 அவர், “இது தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டது. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும், என் ஆவியை ஊற்றுவேன் என்று, தேவன் சொல்லுகிறார்; உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; என் ஊழியக்காரிகள்மேலும் ஊழியக்காரிகள்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; மேலே வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் காண்பிப்பேன்; அக்கினி ஸ்தம்பங்களையும், புகையையும், புகைக்காட்டையும், அது நிறைவேற்றும், கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும் முன்னே கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்” என்றார்.
49143 சுய பாணியிலான, நீண்ட அங்கி அணிந்த அந்தக் கூட்டம், மாய்மாலமான குருமார்கள், “இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். 144 பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்றான். அது எவ்வளவு காலம்? “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தூரத்திலுள்ளவர்களுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் யாவருக்கும்.” 145 ஆகையால் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுகிற ஒவ்வொரு மனிதனும், தேவன் அவனுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அளிக்கிறார், முதலாம் மன்னாவைப் போன்று காணப்படுகிற ஒன்றை அவன் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவன் வாய் நிறைய முதல் மன்னாவை மாத்திரம் பெற்றுக் கொள்ளவில்லை, ஆனால் அவன் இருதயம் நிறைந்த அதே பரிசுத்த ஆவியைப் பெறுகிறான்.
50146 நீங்கள், “அதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறலாம். நான் அதைக் குறித்து சற்று உரத்த குரலில் பேசுகிறேன் என்பதை நான் அறிவேன், ஆனால் என்னால் இதை தவிர்க்க முடியவில்லை. கவனியுங்கள், பாருங்கள். நான் உங்களை நோக்கி சத்தமிடவில்லை. நான் அதிலிருந்து மீண்டு வரலாம். ஆனால், ஓ, நான் உணர்ந்தது போல் நீங்களும் உணர்ந்தால், நீங்களும் கூட சத்தமிடுவீர்கள்.
51147 கவனியுங்கள், ஓ, துவக்கத்தில் விழுந்த மூல மன்னாவினால் இருதயம் நிறைந்தது; அப்பொழுது விழுந்த அதே பரிசுத்த ஆவி, இப்பொழுதும் விழுந்து கொண்டிருக்கிறது. அது எங்கே போகும்? “உங்களுக்கு, உங்களுடைய பிள்ளைகளுக்கு, தூரத்திலுள்ளவர்களுக்கு,” லூயிவில், கென்டக்கி, “நம்முடைய தேவனாகிய கர்த்தர் அழைக்கிற யாவரும், நாங்கள் இங்கே பெற்றுள்ள அதேக் காரியத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.” 148 அதைத்தான் அவர் கூறினார். தேவன் அதை ஆசீர்வதித்தார். அவர் அதைப் பிரசங்கித்தார். பரிசுத்த ஆவியானவர் அதைக் கொண்டு வந்தார்; நான் அதைப் பெற்றுக் கொண்டேன்; அதுவே அதை தீர்த்து வைக்கிறது. ஆமென். அது, அதுவே எனக்கு போதுமானதாக உள்ளது. நான் அவரை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொண்டேன்; அவர் அதைச் செய்தார். நீங்கள் அதை விரும்பினால், நீங்களும் கூட அதைப் பெற்றுக்கொள்ளலாம். அது உண்மை.
52149 எனவே மரித்த நிலையிலிருந்து—வெளியேறி, விழித்தெழுந்து, அந்த விதமாக உங்களை அசைத்து, உங்களை எழுப்புங்கள். முதலாவது காரியம், நீங்கள் சுற்றும் முற்றும் பாருங்கள், ஒவ்வொரு காரியமும் உங்களுக்கு வித்தியாசமாக காணப்படும். நீங்கள் பேசாத அந்த நபரிடம், நீங்கள் அவரண்டை விரைந்து சென்று அவரிடத்தில் பேசுவீர்கள்; ஆம், ஐயா, அவரிடத்தில் பேச வேண்டும், அவ்வளவுதான். ஓ, அந்த எல்லாக் காரியங்களையும், அந்த பழைய டயர் கருவிகள், மற்றும் நீங்கள் அந்த நேரத்தில் உணவகத்தில் இருந்து எடுத்துச் சென்ற அந்த எல்லா… நீங்கள் மேஜையிலிருந்து அந்தப் பழைய துண்டினால் சுற்றி எடுத்த வெள்ளிப் பாத்திரத்தை; நீங்கள் அதைக் கொடுக்க துரிதமாக திரும்ப செல்வீர்கள். நீங்கள் நிச்சயமாக அதைச் செய்வீர்கள். ஆம், ஐயா. அது உங்களை கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக்கும். இப்பொழுது மரியாளைப் பாருங்கள். ஓ, என்னே! நாம் துரிதமாக செல்ல வேண்டும். நாம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோம்.
53150 பண்டைய நாகரீக கூட்டத்திற்குப் பிறகு, அவர்கள் இப்பொழுது வனாந்திரத்தினூடாக இதோ செல்கிறார்கள். இப்பொழுது அவர்கள் தங்களுடைய பயணத்தில் இருக்கிறார்கள். அவர்கள் நேராக சீன்வனாந்திரத்திற்கு, நேராக வனாந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பது விசித்திரமானதல்லவா, கசப்பான தண்ணீர் ஊற்றுக்குள்ளாகச் சென்று விட்டார்களா? அவர்கள் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு கசப்பான தண்ணீர் ஊற்றுகளண்டைக்கு வந்த பிறகு, தேவன் தம்முடைய பிள்ளைகளை எடுத்துக் கொள்வதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நிச்சயமாக. அவர் தம்முடைய அன்பை அவர்களுக்கு மீண்டும் வெளிப்படுத்த விரும்புகிறார். அது உண்மை. அவர்கள் அங்கு சென்றனர். 151 நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போது, நீங்கள் ஏராளமான தடைகளை சந்திக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், தேவன் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிக்கிறார்.” தேவன் அதை எதிர்கொண்டு, உங்களை நேருக்கு நேர் கொண்டு வருகிறார், எனவே அவர் தம்முடைய வல்லமையையும், அவருடைய நன்மையையும் உங்களுக்கு காண்பிக்க முடியும்.
54152 தன்னுடைய ஆட்டின் காலை முறித்திருந்த, எருசலேமில் இருந்த மேய்ப்பனின் கதையை நான் கேள்விப்பட்டேன். அவர்கள், “ஏன், கொடூரமான மேய்ப்பனே, நீர் ஏன் ஆட்டின் காலை முறித்தீர்?” என்று கேட்டனர். 153 மேலும், “பாருங்கள், அது என்னை நேசித்தது போல் அது நடந்து கொள்ளவில்லை” என்று கூறினான். எனவே நான் அதனுடைய காலை உடைத்துவிடலாம் என்று நினைத்தேன், அதனால் நான் அதற்கு விசேஷித்த கவனம் செலுத்த வேண்டும், அப்பொழுது அது முதற்கொண்டு அது என்னை நேசிக்கும்” என்றான். 154 சில சமயங்களில், நீங்கள் மரிக்கப் போகிறீர்கள் என்று மருத்துவர் கூறும்படி, தேவன் உங்களை ஒரு சுகவீனத்தோடு உங்களை படுக்க வைக்க வேண்டியதாயுள்ளது. நீங்கள் இன்னும் சற்று அதிகமாக அவரை நேசிப்பதற்காக தேவன் உங்களுக்கு ஒரு சிறு விசேஷித்த சிகிச்சையை அளிக்க முடியும். அது உண்மை. சிலர் ஜலத்தினூடாகவும், சிலர் வெள்ளத்தினூடாகவும், சிலர் ஆழ்ந்த சோதனைகளினூடாக, ஆனால் யாவும் இரத்தத்தினூடாக; இயேசு தம்முடைய சபையை வழிநடத்துகிறார்.
55155 இப்பொழுது, அவர்கள் அங்கிருந்தபோது, கசப்பான தண்ணீர்கள் இருந்தபோது, அவர்களால் குடிக்க முடியவில்லை, தேவன் ஒரு வழியை அருளினார். அங்கே கரையின் மேல் ஒரு சிறிய பழமையான மரம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது, மோசே அதை வெட்டித் தண்ணீரில் போட்டபோது, முழு காரியத்தையும் மாற்றினது; நல்ல, இனிமையான தண்ணீர். 156 இப்பொழுது நீங்கள் உங்களுடைய கசப்பான தண்ணீர்களில் ஒன்றிற்கு அல்லது அதைப் போன்ற மற்றொன்றிற்கு எதிராக வரும்போது, இன்றிரவு, ஒரு மரம், ஆவிக்குரிய பிரகாரமாக கூறினால், இன்றிரவு, கொல்கொதா அல்லது உலகத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது, அது உங்களை வழிநடத்தக்கூடிய எந்த கசப்பான தண்ணீரையும் இனிமையாக்கும். அது உண்மை. கல்வாரி எந்த அனுபவத்தையும் இனிமையாக்கும். அநேக சமயங்களில் நாம் கடினமான இடங்களுக்குள் செல்லும்போது, எப்படி என்று வியப்புறுகிறோம். எனவே நான் சில சமயங்களில் என் கண்களை மூடி, “அங்கே கொல்கொதாவில், என் மீட்பர் இரத்தம் சிந்தி, என் ஜீவனுக்காக மரித்தார்” என்பதை எண்ணிப் பார்க்கிறேன். அப்பொழுது என்னுடைய சோதனை மிகவும் சிறியதாக தென்பட்டது. நான் ஒருபுறம் தள்ளிவிட்டு நடந்து செல்கிறேன். அது அதனை இனிமையாக்குகிறது. அது எனக்கு எப்போதும் இருந்த ஒவ்வொரு அனுபவத்தையும் இனிமையாக்குகிறது. நான் மாராவாகிய என்னுடைய தண்ணீர்களண்டைக்கு வரும்போது, அவர் எப்பொழுதுமே அதை இனிமையாக்குகிறார்.
56157 இப்பொழுது, இந்த எல்லா மகத்தான அடையாளங்களுக்கும், அற்புதங்களுக்கும் பிறகு, நாம் அவர்களை இப்பொழுது இங்கே வனாந்திரத்தில் பிடிக்கப் போகிறோம். எழுப்புதல் அமைதியடைந்திருந்தது. முதலாவதாக உங்களுக்குத் தெரியுமா, எழுப்புதல் அமைதியடைந்தபோது, ஏன், அவர்கள் அற்புதங்களைக் குறித்த எல்லாவற்றையும் மறந்துவிட்டனர். 158 அது ஏறக்குறைய இன்றைய ஜனங்களைப் போலவே இருக்கிறதல்லவா? கடந்த வருடம் தேவன் செய்ததை அவர்கள் மறந்து விடுகின்றனர். இங்கே உயர்நிலைப் பள்ளியில் உள்ள கூட்டத்தில் தேவன் என்ன செய்தார், அதைக் குறித்த எல்லாவற்றையும் நீங்கள் மறந்து விடுகிறீர்கள். பார்த்தீர்களா? தேவன் என்ன செய்தார் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
57159 இப்பொழுது, கவனியுங்கள், அவர்கள் ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம் செய்யத் துவங்குவதால், “பாருங்கள், நான் உண்மையாகவே, எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ஒரு மெத்தோடிஸ்டு. எங்களுடைய சபை மிகப் பெரியது” என்றனர். “நான் ஒரு பாப்டிஸ்டு, நாங்கள் நித்திய பாதுகாப்பில் விசுவாசம் கொண்டுள்ளோம் என்பதை இப்பொழுதே நான் உங்களுக்கு கூறுவேன். நாம் அதைப் பெற்றுக் கொண்டோம். ஹா, ஹா! எப்படியிருந்தாலும், நீங்கள் யாவரும் அந்த உபதேசத்தைப் பெற்றிருக்கவில்லை.” அப்பொழுதுதான் நீங்கள் தொல்லைக்குள்ளாகும்போது, உங்களுடைய தண்ணீர் விநியோகம் தடைபடுகிறது. அது உண்மை. அது உண்மை. 160 அப்பொழுது தான், வனாந்திரத்தில், அவன் வனாந்திரத்தில் வசிக்கும்போது, முறுமுறுக்கவும், முறுமுறுக்கவும், முறையிடவும் துவங்குகிறான். “பாருங்கள், நான் உங்களுக்கு சொல்லுவேன். அந்த பழைய போதகர் இங்கே இருந்தபோது, அந்தவிதமாக அந்த பண்டைய கால மார்க்கத்தை பிரசங்கித்த அந்த வயோதிக பிரசங்கியார், அவர் கூறுவது சரியா அல்லது இல்லையா என்று எனக்குத்—எனக்குத் தெரியாது. நான் உங்களுக்கு கூறுவேன், அவன்—அவர் என் தாயாரை மிகவும் பித்து பிடித்தவளாக்கி, ஒரு இரவு, அவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள். நான் உங்களுக்குச் சொல்லுவேன், அவள் அந்த விதமாக எழுச்சியடைந்திருந்தாள்.” அவள் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அது உண்மை. “ஓ, நான் அதைக் குறித்து இனிமேல் கேட்க விரும்புகிறேனோ அல்லது இல்லையோ என்று எனக்குத் தெரியவில்லை.” அங்கேதான் உங்களுடைய தண்ணீர் விநியோகம் தடைபடுகிறது. அது உண்மை. அப்பொழுதுதான் நீங்கள் பாலைவனத்திற்குள் வருகிறீர்கள்.
58161 அவர்கள் முறுமுறுக்கத் துவங்குகின்றனர். அவர்கள், “இந்த லேசான அப்பத்தை எங்களுடைய—எங்களுடைய ஆத்துமாக்கள் வெறுக்கின்றன” என்றனர். அவர்கள் எகிப்தின் பூண்டுகளையும், வெங்காயங்களையும் விட்டுவிட்டு, தூதர்களுடைய ஆகாரத்தைப் புசித்துவிட்டு, இன்னமும் முறையிட்டுக் கொண்டிருந்தனர். அது சபையைப் போன்றதல்லவா? இப்பொழுது பரிசுத்த ஜனங்களாகிய நீங்கள் யாவரும்; ஆம், நீங்கள் எல்லோருமே. தூதர்களுடைய ஆகாரத்தைப் புசித்து, அதன்பின்னர், “இன்னும் கொஞ்சம் பூண்டுகளைப் பெற்றுக்கொள்ள நாம் எகிப்திற்கு திரும்பிச் சென்றிருந்தால் நலமாயிருக்கும்” என்று கூறினீர்கள். 162 “கிளேட்டன் மக்மிச்சனும் அவருடைய வைல்ட்கேட்ஸும் இன்றிரவு மதுபானக் கடையில் இருக்கப் போகின்றனர். நான் அந்த பழைய சபையில் சேராமலிருந்திருந்தால், என்னால் அங்கு செல்ல முடியும்” என்றேன். நீங்கள் தொடர்ந்து செல்லலாம். உங்களுடைய பொக்கிஷங்கள் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கிறது. நீங்கள் ஆரம்பித்தபோது, நீங்கள் ஒருபோதும் எதையும் பெற்றிருக்கவில்லை. அது உண்மை. அது உண்மை. “ஓ, நான் இதைச் செய்ய அல்லது அதைச் செய்ய விரும்புகிறேன்.” அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, எப்பொழுதுமே ஒரு புகார்.
59163 அவர்கள் காலங்களின் தன்மலையிலிருந்து தூய நீரைக் குடிக்க, எகிப்தின் சேற்றுத் தண்ணீரை விட்டுவிட்டு, அதைக் குறித்து முறையிட்டுக் கொண்டிருந்தனர். எகிப்தின் உயர்ந்த, பெருமை பேசும் மருத்துவர்கள் இருந்த இடத்தை விட்டு அவர்கள் வெளியேறினர், பெரிய தற்பெருமைக்காரர்கள் மற்றும் யாவரையும் விட்டு, அந்த மகத்தான வைத்தியரிடம் இருப்பதற்கு. “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன” என்று அவர்கள் கூறின அந்த இடத்தை விட்டு, அற்புதங்களையும் அடையாளங்களையும் கொண்ட ஜனங்களோடு இருந்து, இன்னமும் முறையிட்டுக் கொண்டிருந்தனர். ஓ, என்னே! ஆம், ஐயா. அங்கே, உண்மையாகவே, எகிப்தியர்கள், அவர்கள் குளிர்ந்த புறஜாதியாராக, அக்கறையற்றவர்களாக இருந்தனர். அவர்கள் அற்புதங்கள் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியத்தை விசுவாசிக்கவில்லை. 164 அதன்பின்னர், அவர்கள் இங்கே வெளியே இருந்தனர், அங்கே அவர்களைச் சுற்றி ஒரு அக்கினி ஸ்தம்பம் இருந்தது. இன்றிரவு நாம் அதைப் பெற்றுக்கொண்டோம். அவர்கள் வெளியே இருந்தபோது, அவர்கள் முகாமில் சந்தோஷத்தையும், ஆரவாரத்தையும், அற்புதங்களையும் நிகழ்த்திக் கொண்டிருந்தனர், அதன்பின்னர் அதைக் குறித்து முறையிடுகின்றனர். அந்தக் காரணத்தினால்தான் தண்ணீர் வற்றிப்போனது, அந்தக் காரணத்தினால்தான் அவர்களுக்கு புசிக்கவும் குடிக்கவும் ஒன்றுமே இல்லாதிருந்தது, ஏனென்றால் அவர்கள் முறுமுறுத்துக் கொண்டிருந்தனர். 165 இன்றிரவு லூயிவில்லைச் சுற்றியுள்ள சபைகளோடுள்ள காரியமும் அதுதான்; முறுமுறுத்தல், முறையிடுதல். இரக்கம்! மீண்டும் சேணத்தை அணிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான். 166 “அப்படியானால் மோசே, யார் இந்த நபர்? எப்படியாயினும், நாம் ஏன் இந்த பரிசுத்த உருளை பிரசங்கிக்கு செவி கொடுத்தோம்? நாங்கள் இங்கே வெளியே என்ன செய்து கொண்டிருக்கிறோம்?” அவர்களுடைய தண்ணீர் வற்றிப்போனது.
60167 அந்த மகத்தான மனிதனாகிய மோசேயைக் குறித்து நான் நினைக்கிறேன். அவன் எகிப்தியரின் எல்லா ஞானத்திலும் போதிக்கப்பட்டிருந்தான். நாம் ஒரு சில நிமிடங்கள் அவனை நோக்கிப் பார்ப்போம். நாம் மோசேயை, ஒரு நிமிடம் எடுத்துக் கொள்வோம். அந்த நபரைப் பாருங்கள். அவன்… 168 எகிப்தியர்கள், இன்றைக்கு நம்முடைய மருத்துவ விஞ்ஞானத்திற்கு வரும்போது, அவர்கள் நமக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தனர். அவர்கள் நமக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தனர். நம்மால் செய்ய முடியாத அநேக காரியங்களை அவர்களால் செய்ய முடிந்தது. 169 மோசே எல்லா பரிகாரத்தையும் உடையவனாயிருந்தான். அவன் அங்கே வெளியே இருந்தபோது, சிந்தித்துப் பாருங்கள், மோசே அவனோடு ஏறக்குறைய இருபது இலட்சம் ஜனங்கள் இருந்தனர். அவனுக்கு சிறு பிள்ளைகள் இருந்தனர். அவன் வயோதிக மனிதர்களையும், வயோதிக ஸ்திரீகளையும் உடையவனாயிருந்தான். அவனுக்கு முடமானவர்களும், குருடர்களும் இருந்தனர். ஒரே வாரத்தில், ஆயிரக்கணக்கான, குழந்தைகள் பிறந்தன. மோசே, மருத்துவர் மோசே, இந்த ஜனங்கள் எல்லோரோடும் அங்கே வனாந்திரத்தில் இருந்தனர். நான் அவனுடைய மருந்துப் பெட்டியைப் பார்க்க விரும்புகிறேன், நீங்கள் அவ்வாறில்லையா? மருத்துவர் மோசே என்ன மருந்து பெட்டியில் வைத்திருந்தார் என்பதை நான் காண விரும்புகிறேன். அவன் என்ன வைத்திருக்கிறான் என்பதை நாம் சற்று மருந்துப் பெட்டிக்குள் எட்டிப்பார்ப்போமாக.
61170 “மோசே, ஏன், அங்கே உள்ளே என்ன இருந்தது, மோசே?” ஏன், அந்த நாற்பது வருட பயணத்தில், இன்னும் இருபது இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்தன என்பதை நாம் கண்டறிகிறோம். அது உண்மை. “மோசே, நீ எதை உபயோகித்தாய்? நீங்கள் அந்த எல்லா காயங்களுக்கும், வலிகளுக்கும், புற்றுநோய்களுக்கும், குருட்டுத்தன்மைக்கும், செவிடுக்கும், ஊமைக்கும் என்ன உபயோகித்தீர்கள்? ஏன், நீர் வனாந்திரத்திலிருந்து வெளியே வந்தபோது, அவர்கள் மத்தியில் பலவீனமான ஒருவனும் இருக்கவில்லை என்று அவர்கள் என்னிடத்தில் கூறுகிறார்கள்.” கூறப்போனால், இந்த வைத்தியர்களில் சிலர் அந்த மருந்து அலமாரியை ஆராய்ந்து பார்க்க விரும்பமாட்டார்களா? 171 “மற்றொரு காரியம், மோசே, நீ அந்த ஜனங்களின் ஆடைகள் கூட கிழிந்து போகாதபடிக்கு, அவர்கள் மேல் என்ன தெளித்தாய்? அந்த பாறைகளின் மேல் நடந்து சென்ற அவர்களுடைய பாதரட்சைகள் ஒருபோதும் தேய்ந்து போகவேயில்லை.” நீங்கள் எப்போதாவது அங்கு சென்றிருந்தால், அந்த பாலைவனம் எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள், அவர்கள் மூன்று நாட்களில் ஒரு ஜோடி காலணிகளை தேய்த்துவிடுவார்கள். நாற்பது வருடங்களாக, அவைகள் ஒரு துளி கூட தோலை உரிக்கவில்லை. “மோசே, உன்னுடைய மருந்து பெட்டியில் என்ன இருந்தது?”
62172 நாம் அதை நோக்கிப் பார்ப்போம். நான் அவனைப் பார்க்கிறேன், “‘உன்னை குணமாக்குகிற கர்த்தர் நானே’ என்ற ஒரு மருந்து சீட்டு வைத்திருக்கிறான்.” அதுவே அதற்கு தீர்வாகிறது. ஆமென். 173 மேலும், “ஓ, மோசே, என் தகப்பனார் இங்கே இருந்தபோது, அவர் விழுந்து அவருடைய காலை உடைத்துக் கொண்டார். அவருக்காக நீர் என்ன வைத்திருக்கிறீர்?” என்று கேட்டார். 174 “நான் நோக்கிப் பார்க்கட்டும். ‘நீங்கள் என் சத்தத்தைக் கேட்டு, நான் கட்டளையிடுகிற யாவையும் செய்வீர்களேயானால், எகிப்தியர்களுக்கு வரும் வியாதிகளில் ஒன்றையும் நான் உங்களுக்குக் கொண்டுவரமாட்டேன், ஏனென்றால் நான் உங்களை குணமாக்குகிற கர்த்தர்.’ அதை அவனிடம் சொல்லுங்கள்” என்றார். அவர் சுகமடைந்துவிட்டார். ஆமென். அது உண்மை. “ஓ, அவர் மிகவும் சுகவீனமாக இருக்கிறாரே! என் குழந்தைக்கு பெருங்குடல், அல்லது சளி சவ்வு, மிக மோசமாக உள்ளது! மருத்துவர் மோசே, நான் என்ன செய்ய வேண்டும்?” 175 “என்னிடம் என்ன இருக்கிறது என்று நான் பார்க்கட்டும். ‘நானே உன்னை குணமாக்குகிற கர்த்தர்.’” அதுவே அதை தீர்த்து வைக்கிறது. ஆமென். அவர்கள் சென்றுவிட்டனர். அது உண்மை. தொடர்ந்து களிகூருதல். “உன்னை குணமாக்குகிற கர்த்தர் நானே” என்று அவனுக்குத் தேவைப்பட்டது அவ்வளவுதான்.
63176 தெய்வீக சுகமளித்தலைக் குறித்த திட்டவட்டமான வாக்குத்தத்தங்களில் புதிய ஏற்பாட்டில் மாத்திரமே அறுநூறு உள்ளன, அதே சமயத்தில் நாம் இன்றிரவு தேவனிடத்தில் கேள்வி கேட்கிறோம். நியாயத்தீர்ப்பு நமக்காக எதைப் பொருட்படுத்தும்? சரி.
64177 “உன்னை குணமாக்குகிற கர்த்தர் நானே.” ஆம், ஐயா. அதைத்தான் மோசே பெற்றிருந்தான், மருத்துவர் தனது துறையில், தனது…அவனது மருந்துப் பெட்டியில், இது, “உன்னை குணமாக்குகிற கர்த்தர் நானே” என்பதாயிருந்தது. எனவே அவர் எல்லா வியாதிகளையும் சுகப்படுத்தி, அவைகளை பரிபூரணமாக காத்து, அவர்களை வனாந்திரத்தினூடாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் கொண்டு வந்தார். ஓ, என்னே! 178 இந்த மகத்தான வைத்தியரோடு இருக்கும்படி, பெருமையடித்துக்கொள்ளும் அந்த பெரிய மருத்துவர்கள் அனைவரையும் அவர்கள் விட்டுவிட்டனர். அவர்கள் குளிர்ந்துபோன, சம்பிரதாயமான, அலட்சியமான அந்த கூட்ட ஜனங்களை விட்டுவிட்டு, “அற்புதங்கள் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே இருந்ததில்லை” என்று கூறுகின்றனர். சரியாக இங்கே, ஒரு அக்கினி ஸ்தம்பம் அவர்கள் மேல் தொங்கிக் கொண்டிருந்தது. ஜனங்கள் சுகமடைந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு காரியமும், அவர்களுக்கு தேவையாயிருந்த எந்தக் காரியமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு, அதே சமயத்தில் அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, அவர்கள் முறையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அதன்பின்னர் தேவனுடைய இராஜாதிபத்திய கிருபையில், அவை எல்லாவற்றிலும்…
65179 இன்றிரவு நீங்கள் இங்கே லூயிவில்லில் இருப்பது போல, இந்த எல்லாவற்றின் மத்தியிலும், “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. மருத்துவ சங்கம் நாடு முழுவதிலும் தெய்வீக சுகமளித்தலை நிறுத்த முயற்சிக்கிறது.” நீங்கள் அதை ஒருபோதும் நிறுத்தவேமாட்டீர்கள். நீங்கள் இப்பொழுது நிறுத்திக் கொள்ளலாம். உங்களால் சூரியனை நிறுத்த முடியாதது போல அதை ஒருபோதும் நிறுத்த முடியாது. அது உண்மை. 180 இங்கே ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஜெபர்ஸன்வில்லில் முதன் முறையாகத் துவங்கியபோது, தெய்வீக சுகமளித்தலைப் பற்றி பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அது அநேக வருடங்களாக நடைமுறையில் அறியப்படவில்லை. அது ஒரு கடினமான காரியமாயிருந்தது. ஆனால், சகோதரனே, இன்றிரவு கோடிக்கணக்கானவர்கள், எங்கும் கதறிக் கொண்டிருக்கிறார்கள். அதை நிறுத்த முயற்சிக்கிறீர்களா? உங்களால் முடியாது. “கர்த்தராகிய நான் அதை நட்டேன்; என்னுடைய கரத்திலிருந்து எவரேனும் அதை பறித்துக்கொள்ளாதபடிக்கு நான் அதற்கு இரவும் பகலும், தண்ணீர் பாய்ச்சுவேன்.”
66181 இங்கே அண்மையில், விடுதலையின் சிலையிலுள்ள சில சிறிய சிட்டுக் குருவிகளைப் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவைகள் அங்கே அப்படியே படுத்துக்கிடந்தன. சிறிய குருவிகள் வெளிச்சத்தின் கீழ் சுற்றிலும் படுத்துக் கொண்டிருந்தன. நான், “அது என்ன செய்தது?” என்று வழிகாட்டியினிடத்தில் கேட்டேன். 182 அவர், “நேற்றிரவு, அந்த புயலில், அவைகள் தங்களுடைய மூளையை முட்டி சிதறடிக்க செய்துவிட்டன. அவைகள் வெளிச்சத்திற்குள் பிரவேசித்தன, அந்த வெளிச்சம் அவைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றிருக்கும், ஆனால் அவைகள் வெளிச்சத்தை அணைக்க முயற்சித்துக் கொண்டிருந்தன. அவைகள் தங்களுடைய மூளையை சிதறடிக்கும்படி முட்டி, வெளிச்சத்தை அணைக்க முயற்சித்திருந்தன” என்றார். 183 நான், “தேவனுக்கு மகிமை!” என்றேன். அவர் என்னை பைத்தியம் என்று நினைத்திருப்பார் என்று நான் நினைத்தேன். நான், “அது தெய்வீக சுகமளித்தலை முறியடிக்க முயற்சிக்கும் இந்த ஜனங்களில் சிலருடைய சிந்தையில் என்னை வைக்கிறது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை” என்றேன். நீங்கள் உங்களுடைய மூளையை முட்டி சிதறடித்து விடாதீர்கள்; நீங்கள் ஒருபோதும் செய்யமாட்டீர்கள். அதை ஏற்றுக்கொண்டு, அதில் பாதுகாப்பாக பறந்து செல்லுங்கள். அது உண்மை. ஆமென்.
67184 “மோசே, கன்மலையை நோக்கிப் பேசு,” தேவன் மோசேயிடம், “அது அதனுடைய தண்ணீரைக் கொண்டு வரும், அவருடைய தண்ணீரைக் கொண்டு வரும்” என்று கூறினார். 185 இங்கே அண்மையில், நான் ஒரு குறிப்பிட்ட அருங்காட்சியகத்தில் இந்த கன்மலை அடிக்கப்படுவதைப் போன்ற ஒரு புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அது சுமார் பின்னும் ஒரு ஊசியளவு கொண்ட ஒரு சிறு ஓடையைப் போன்று காணப்பட்டது. நான், “இந்தக் கலைஞர்கள் எவ்வளவு கேலிக்குரியவர்களாக இருக்க முடியும்!” என்று எண்ணினேன். ஏன், சகோதரனே, எனக்கு தாகமாயிருந்தால், நான் அது உலர்ந்து போகும் வரை குடிக்க முடியும். ஆம், ஐயா. 186 மோசே அந்தக் கன்மலையிலிருந்து எதைப் பருக வேண்டியதாயிருந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா? எல்லா மிருகங்களையும் தவிர, அவனுக்கு இருபது இலட்சத்திற்கும் அதிகமான ஜனங்கள் இருந்தனர். அவர்கள் குடிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு சுமார் நாற்பதாயிரம் காலன்கள் தேவைப்பட்டது. அல்லேலூயா!
68187 அது அவர்களுடைய மார்க்கத்தில் உள்ள யாரோ ஒருவருடைய சிந்தையில் என்னை வைக்கிறது. ஞாயிறு காலை ஞாயிறு பள்ளிக்குச் செல்ல நீங்கள் போதிய மார்க்கத்தைப் பெற்றுள்ளீர்கள், கொஞ்சம் துப்பிவிட்டு, உங்களை கொஞ்சம் ஈரமாக்கிவிடுகிறது. 188 பெருவெள்ளங்கள் புறப்பட்டுச் செல்லும் ஊற்றண்டை நான் அமர விரும்புகிறேன், அல்லேலூயா, நித்தியத்தினூடாக என்னைக் கொண்டு செல்ல போதுமானது. அல்லேலூயா! நான் அந்த பழைய ஈரமான இடத்தை விட்டு இடம் பெயர்ந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்; அந்த நீரூற்று எல்லா நேரத்திலும் ஊற்றிக் கொண்டேயிருக்கிறது. ஆம், ஐயா. 189 ஜனங்கள் அவர்களை துயரத்திற்குள்ளாக்க போதிய மார்க்கத்தை பெற்றுள்ளனர். “பாருங்கள், என்னால் சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் உட்கார முடியவில்லை. என்னே, நன்மை, அந்த பிரசங்கியார் எவ்வளவு நீண்ட பிரசங்கம் செய்பவர்?” உங்களுடைய இரட்சிப்பு எவ்வளவு ஆழமானது? அது உண்மை. 190 ஒரு ஞாயிறு காலையில் போய், “பாருங்கள், நான் போய் அவர்கள் கூற வேண்டியது என்ன என்று கேட்பேன்” என்று கூறுவீர்கள். நீங்கள் ஒரு சிறு எச்சிலை துப்புமளவிற்கு மாத்திரமே பெற்று திரும்பிச் செல்கிறீர்கள், நீங்கள் பெற்றுள்ளதெல்லாம் ஏறக்குறைய அவ்வளவுதான்.
69191 சகோதரனே, நான் உங்களுக்கு சொல்லுவேன், மோசே அந்தக் கன்மலையை அடித்தபோது, அது முழு வனாந்திரத்திற்கும் தண்ணீர் பாய்ச்சியது. ஆமென். ஆம், ஐயா. ஒரே காரியம், அவர்களுக்கு தேவையாயிருந்த ஒவ்வொரு காரியமும், அவர்கள் அப்படியே கீழே விழுந்து, குடித்து, குடித்து, அவர்கள் நிரம்பி வழியும் வரை குடித்தார்கள். அப்படியிருந்தும், ஒரு நிமிடத்திற்கு சுமார் நாற்பதாயிரம் காலன் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. ஒரு நிமிடத்தில் எத்தனை பேர், பத்து இலட்சம் பேர், இருபது இலட்சம் பேர் குடிக்க முடிந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்; தாகமுள்ள ஜனங்களைத் தவிர, ஒட்டகங்கள், மிருகங்கள், அவர்களுக்கு உண்டாயிருந்தவைகள் எல்லாமே. வேதம், “அது மிகுதியாய் வந்தது” என்று கூறியுள்ளது. அது வனாந்திரத்தினூடாக பீறிட்டு அடித்தது.
70அந்த விதமாகத்தான் இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியை அளித்தார். 192 “நல்லது, நான் சபையில் போய் சேர்ந்து கொள்வேன் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறினால், அது ஒரு சிறு காரியமல்ல. ஓ, என்னே! “ஓ, என்னால் அந்த சத்தத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அது எனக்கு நடுக்கத்தை அளிக்கிறது.” நீங்கள் எப்போதாவது மரித்தாலும், நீங்கள் பரலோகத்திற்கு சென்றுவிட்டாலும், நீங்கள் மரிக்கும்படி உறைந்து போவீர்கள், ஏனென்றால், சகோதரனே, நீங்கள் அங்கு செல்லும்போது, ஏதோ சத்தம் கேட்கப் போகிறது. அவர்கள் இரவும் பகலும், “அல்லேலூயா” என்று சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று வேதம் கூறியுள்ளது, இரவு என்பதே கிடையாது. அது உண்மை. அங்கே இரண்டாம் நாள், நீங்கள் பரலோகத்திற்குச் செல்லும்போது, நீங்கள் நிச்சயமாகவே மரிப்பீர்கள். ஆம், ஐயா. பாருங்கள், நீங்கள்…நீங்கள் என்ன செய்தீர்கள், நீங்கள் போய் சற்று, ஈரமாகிவிட்டீர்கள். 193 நீங்கள் அந்தப் ஊற்றின் அருகே உட்கார மாட்டீர்களா, அது உங்களைக் கழுவிச் செல்லும் வரை அதை ஊற்ற விடமாட்டீர்களா… அல்லேலூயா, மத்தியில் வந்து, நீங்கள் உங்களையே இழந்து, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறியாமலிருக்கிறீர்கள். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] அந்தவிதமாகவே நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்.
71194 நான் என்னுடைய மாமாவிடமும், என்னுடைய தந்தையாரிடமும், உடிகா பைக்கில் உள்ள இந்த சிறிய குளத்தில், “என்னால் நன்றாக நீந்த முடியும்” என்று கூறுவது வழக்கம். 195 ஒரு நாள், தகப்பனார் திரும்பிச் சென்று, ஒரு கால்வாயில் கீழ் செல்லும் மதகின் மேல் உட்கார்ந்து, “நீ நீந்துவதை நான் காண விரும்புகிறேன்” என்றார். அந்த சிறு குளம் ஏறக்குறைய அவ்வளவு ஆழமாயிருந்தது. நான் ஒரு சோப்புப் பெட்டியின் மேல் நின்று கொண்டிருந்தேன். நான் என்னுடைய உடைமைகளை கழற்றி வைத்துவிட்டு, இந்தவிதமாக மூக்கைப் பிடித்துக் கொண்டு, சோப்புப் பெட்டியின் மேல் மேலும் கீழுமாக துள்ளிக் குதித்தேன். நான் குதித்த போது, சேறு இருபுறமும் பறந்து சென்றது, நான் சேற்றை தெறிக்கத் துவங்கினேன். நான், “அப்பா, நான் எப்படி நீச்சலடிக்கிறேன்?” என்று கேட்டேன். 196 “அங்கிருந்து வெளியே போ” என்றார். நீச்சலா? எல்லா நேரத்திலும் சேற்றில் ஊர்ந்து கொண்டிருந்தேன். 197 நமக்கு சேற்றில் ஊர்ந்து செல்லும் ஏராளமான சபை அங்கத்தினர்களும் கூட உள்ளனர். அது உண்மை. அது உண்மை, சேற்றில் ஊர்ந்து செல்பவர்கள். ஆம், ஐயா. 198 ஒரு நாள், என் மாமா என்னை படகில் ஏற்றிச் சென்றார் நான் நீச்சலடிப்பதைக் குறித்து பெருமையாக பேசிக்கொண்டிருந்தேன்; இங்கே ஓஹையோ ஆற்றில், சுமார் இருபது அடி தண்ணீர் உள்ளது. அவர் துடுப்பை எடுத்து, என்னை தண்ணீரில் தள்ளிவிட்டு, “இப்பொழுது அதைக் குறித்து என்ன?” என்றார். ஆமென். அல்லேலூயா! அப்பொழுது நான் நீந்த வேண்டும் அல்லது தண்ணீரில் மூழ்க வேண்டும். ஓ, என்னே!
72199 இப்பொழுது அது நன்றாகப் அதற்குப் பழகிவிடலாம். பொங்கி பீறிட்டு அடிக்கும் அந்த இடத்திற்கு நீங்கள் செல்லுங்கள், தேவன் அங்கே வனாந்தரத்தில் கன்மலையைத் திறந்து, அதை வெளியே ஊற்றினார். அப்பொழுது அவர், “கன்மலையினிடத்தில் பேசு”, “அது தன்னுடைய தண்ணீரைக் கொண்டு வரும்” என்றார். 200 என் நண்பனே, இன்றிரவு ஒருக்கால் நீ அழிந்துகொண்டிருக்கலாம். நீங்கள் கன்மலையினிடத்தில் பேச வேண்டும். அது உண்மை. 201 நீங்கள் ஒருக்கால் எல்லாவிடங்களுக்கும் சென்றிருக்கலாம். நீங்கள் ஒருக்கால் சபைக்குச் சென்று, மெத்தோடிஸ்ட்டில் சேர்ந்து, பாப்டிஸ்டு சபையில் சேர்ந்திருக்கலாம்; அவர்கள் உங்கள் பேரில் கோபமடைந்து, பிரஸ்பிடேரியனுக்குச் சென்றனர்; மீண்டும் பெந்தேகோஸ்தேயினருக்கு, நாசரேய சபைக்கு, யாத்திரீக பரிசுத்த சபைக்கு திரும்பிச் சென்றனர். நீங்கள் இன்னமும் புரிந்து கொள்ளாமலிருக்கிறீர்கள். 202 இன்றிரவு நீங்கள் கன்மலையண்டை பேசுங்கள். அப்படியே…நீங்கள் அவரோடு பேசக்கூடிய நிலையில் இருக்கிறீர்களா? ஆம். அவர், “கன்மலையை நோக்கிப் பேசு, அப்பொழுது அவர் தமது தண்ணீரைத் கொண்டு வருவார்” என்றார். அது அவருடைய தண்ணீரைக் கொண்டு வரும், நீங்கள் அப்படியே…அவரை இனிமேல் அடிக்க வேண்டியதில்லை. அப்படியே அவரிடத்தில் பேசுங்கள். அவரிடத்தில் பேசக்கூடிய நட்பு ரீதியான முறையில், பேசுங்கள். 203 நீங்கள் மருத்துவரிடம் சென்றிருக்கலாம். நீங்கள் சுகமடைய முயற்சிக்க, எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு காரியத்தையும் நீங்கள் செய்திருக்கலாம். நீங்கள் கிட்டத்தட்ட உங்களுடைய வல்லமையில் உள்ள ஒவ்வொரு காரியத்தையும் செய்திருக்கலாம், நீங்கள் சுகமடைந்திருக்க முடியாது. ஒவ்வொரு மருத்துவரும், உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு அலுவலகத்தையும் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள், மருத்துவர், “நீ மட்டும்…உங்களுக்காக எதுவும் செய்ய முடியாது” என்று கூறினார். இன்றிரவு நீங்கள் ஏன் கன்மலையண்டை பேசக்கூடாது? அவர்…உங்களுக்காக ஜீவத்தண்ணீரை அவர் வைத்திருக்கிறார், உங்களுக்கு அபரிமிதமான ஜீவனை அளிக்கிறார்.
73204 ஒரு சமயம் வேதாகமத்தில் ஆகார் என்னும் பெயர் கொண்ட ஒரு ஸ்திரீ இருந்தாள். நான் அவளைக் குறித்து நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் முடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்; அந்த நேரம். ஆகார் என்னும் பெயர்கொண்ட ஒரு ஸ்திரீ இருந்தாள், அவள் ஒரு சிறு குழந்தையைப் பெற்றிருந்தாள். அவள் வனாந்தரத்தில் ஒரு ஒரு சிறிய துருத்தி தண்ணீரோடு அனுப்பப்பட்டாள். அவள் நாள் முழுவதும், அந்த சிறிய துரத்தியிலிருந்து பருகினாள். ஆனால் நடுப்பகலில் தண்ணீர் செலவழிந்து விட்டது, அந்த சிறு குழந்தையோ அலறி அழுது கொண்டிருந்தது. அவனுடைய சிறு உதடுகள் வறண்டு போய், அவனுடைய நாவு வீங்கிக் கொண்டிருந்தது. ஒரு ஏழ்மையான, அருமையான தாய், அவளால் என்ன செய்ய முடிந்தது? அவள் தன்னால் முடிந்த ஒவ்வொரு சிறிய இடத்தையும், கொஞ்சம் தண்ணீரைக் கண்டறியும்படி சோதனையிட்டாள், ஆனால் தண்ணீரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த குழந்தை மரிப்பதை அவளால் சகிக்க முடியவில்லை; எனவே அவள் அதை ஒரு புதரின் கீழ் வைத்துவிட்டு, ஏறக்குறைய ஒரு அம்பு பாயும் தூரத்திற்கு சென்றாள். 205 அவள் முழங்காற்படியிட்டு கன்மலையண்டைப் பேசினாள். அவள் கன்மலையை நோக்கிப் பேசினபோது, ஒரு தூதன் திரும்பிப் பேசி, “ஆகாரே, அங்கே வெளியே பொங்கி வழிந்தோடிக் கொண்டிருக்கிறது என்ன?” என்று கேட்டார். 206 அங்கே முழுவதுமாக தண்ணீர் நிறைந்த கிணறு இருந்தது, அது இன்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அது இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆகார் வந்த அந்த ஊற்று…அங்கே, அதாவது, அது இன்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. அவள் கன்மலையண்டைப் பேசினாள், அந்தக் கன்மலை தண்ணீரைக் கொண்டு வந்தது.
74207 அங்கே சில எபிரெயப் பிள்ளைகள் அக்கினிச் சூளைக்குள்ளாகச் சென்று கொண்டிருந்தனர், அவர்கள் கன்மலையண்டைப் பேசினர். கன்மலையும் அவர்களோடு இருந்தது. 208 ஒரு சமயம், சமாரியாவிலிருந்து ஒரு ஸ்திரீ வெளியே வந்தாள். அவள் திடனற்றுப் போனாள். அவள் பாவமுள்ளவளாய் இருந்தாள், அநேகமாக அவளுடைய வாழ்க்கையில் அநேக காரியங்கள் தொங்கிக் கொண்டிருந்திருக்கலாம். அவள் சோர்வுற்றிருந்தாள். அவள் யாக்கோபின் கிணற்றண்டை நிவாரணத்திற்காக அங்கு வந்து, பிறகு அவள் திரும்பிச் செல்வாள். அவள் யாக்கோபின் கிணற்றண்டை சென்று, திரும்பிச் செல்வாள். ஒரு நாள் அவள் தண்ணீர் பானையண்டை கீழே வைத்து, சோர்வுற்று அங்கே நின்று கொண்டிருந்தாள். அங்கே அவளுக்கு அருகில் அந்த கன்மலை நின்றது. அவள் அந்தக் கன்மலையினிடத்தில் பேசினாள். அவர் அவளுடைய ஆத்துமாவில் ஒரு பெரிய பொழிவைக் கொடுத்தார். அவள் நகரத்திற்குள் ஓடினாள். அவள் இனி ஒருபோதும் தண்ணீர் எடுக்க வரவில்லை. அவள் ஜீவனை உடையவளாயிருந்தாள். அவள், “நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் கூறின ஒரு மனிதனை, வந்து பாருங்கள். இது கிறிஸ்து அல்லவா?” என்று கேட்டாள். அவள் கன்மலையண்டைப் பேசினாள், அந்தக் கன்மலை தன்னுடையத் தண்ணீரைக் கொண்டு வந்தது. 209 ஒரு சிறு ஸ்திரீ இருந்தாள், அவள் தன்னுடைய பணம் முழுவதையும் மருத்துவர்களுக்காகவும், போலி மருத்துவர்களுக்காகவும் வீணடித்திருக்க, அவளுடைய பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டனர். உதிரப்போக்கையோ நிறுத்த முடியவில்லை. அவள் தன்னுடைய பண்ணையை அடமானம் வைத்து, அதை விற்றிருக்கலாம். அவள் உட்கார்ந்து கொண்டு, ஒரு நாள் பின்னல் வேலை செய்து கொண்டிருந்தாள், அப்பொழுது அவள் சாலையில் ஏதோ ஒன்று வருவதைக் கேட்டாள். அவள் கன்மலையினிடத்தில் பேசினாள். கன்மலை திரும்பி, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டது. அவள் கன்மலையண்டைப் பேசினபோது அது முடிந்துவிட்டது. அவர் அவளுக்கு ஜீவனின் பொழிவைக் கொடுத்தார், அது உதிரப்போக்கை நிறுத்தியது. அது துரிதமாக, நிறுத்திவிட்டது.
75210 அங்கே ஒரு வயதான பார்வையற்ற பிச்சைக்காரன் ஒரு நாள் குளிரில் நடுங்கிக் கொண்டு சுவற்றின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். அவனிடமிருந்த யாவும் போய்விட்டன. இதோ அவன் பரிதபிக்கப்படத்தக்கவனாய், ஜனங்களைக் அவனை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். ஏதோ ஒன்று வருவதை அவன் கேட்டான்; “அது என்ன?” என்று கேட்டான். அவன் கன்மலையண்டைப் பேசினான். 211 இருப்பினும்,அவரைச் சுற்றியிருந்த அவருடைய சபை அங்கத்தினர்கள், அவனைத் தடுக்க முயன்று, “தேவையில்லை. உங்களால் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது. விலகி நில். அமைதியாயிரு” என்று கூறினர். 212 ஆனால் அவனோ, “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்! என் மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமாக கதறினான். அவன் கன்மலையண்டைப் பேசினான், அப்பொழுது கன்மலை அவனுக்குப் பெருக்கெடுத்தபோது, அவனுடைய கண்கள் திறக்கப்பட்டன. 213 வனாந்திரத்தில் இருந்த அதேக் கன்மலை இன்றைக்கும் இங்குள்ளது. அது ஜனங்களை களிகூரச் செய்கிறது.
76214 ஒரு நாள், ஒரு தெய்வீக சுகமளிப்பவர், ஒரு பரிசுத்த உருளையர், நகரத்திற்குள் பிரவேசிப்பதைக் காண எருசலேம் முழுவதும் நின்று கொண்டிருந்தனர்; ஒரு சில ஜனங்கள் அங்கே நின்று கொண்டு, தங்களுடைய உச்சக் குரலில் கூச்சலிட்டு, “ஓசன்னா! கர்த்தருடைய நாமத்தினால் வருகிறவருக்கு ஓசன்னா!” என்றனர். 215 அந்த சுய பாணியிலான சபை அங்கத்தினர்கள் தங்களுடைய நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு, தங்களுடைய டி.டி பட்டங்களை அவர்களுக்குப் பின்னால் வைத்துக் கொண்டு, “அவர்கள் அமைதியாயிருக்கட்டும். என்னே, அவர்கள் எனக்கு சிலிர்ப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்றனர். அவர்களை அமைதியாயிருக்கச் செய்யும்” என்றனர். 216 அவர், “அவர்கள் அமைதியாயிருப்பார்களானால், கல்லுகள் உடனே கூக்குரலிடும்” என்றார். அது ஏன் அவ்வாறு இருந்தது? மலையிலிருந்து கைகளால் பெயர்க்கப்படாத கல், எருசலேமுக்குள் உருண்டு, வந்து கொண்டிருந்தது. சிறு பாறைகள் அதிலிருந்து குடித்துக் கொண்டிருந்தன. “கன்மலையை நோக்கிப் பேசு, அப்பொழுது அது தன் தண்ணீரைக் கொடுக்கும்.”
77217 இன்றிரவு உங்களுக்கு இரட்சிப்பு தேவைப்பட்டால், கன்மலையினிடத்தில் பேசுங்கள். அது தன்னுடைய தண்ணீரைப் பிறப்பிக்கும். இன்றிரவு நீங்கள் பின்வாங்கிப்போயிருந்தால்; கன்மலையண்டைப் பேசினால், அது தன்னுடைய தண்ணீரைக் கொண்டு வரும். நீங்கள் இன்றிரவு, கிறிஸ்துவில்லாமல் இங்கிருந்தால்; நீங்கள் நகரத்தில் உள்ள ஒவ்வொரு சபையும் இரட்சிப்பைக் கண்டறிய முயற்சித்திருக்கிறீர்கள்; கன்மலையண்டைப் பேசினால், அது தன்னுடைய தண்ணீரைக் கொண்டு வரும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் தேவனை விட்டு விலகிப் போய், பின்வாங்கிப் போனவர்களாயிருந்தால், உங்களுக்கு ஒரு வாய்ப்பு இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்; கன்மலையண்டை பேசினால், அது தன்னுடைய தண்ணீரைக் கொண்டு வரும். 218 நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு அதை விசுவாசிக்கிறீர்களா? தேவன் அதை அருளுவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய முழு இருதயத்தோடு, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அல்லேலூயா! அவர் இன்றிரவு இங்கே இருக்கிறார். 219 நீங்கள் சுகவீனமாயிருந்து, உலகத்தில் உள்ள ஒவ்வொரு காரியத்தையும் நீங்கள் முயற்சித்திருந்தால், நீங்கள் ஜெப வரிசையில் வர முயற்சித்தீர்கள், உங்களால் ஜெப வரிசையில் பிரவேசிக்க முடியவில்லை; நீங்கள் ஜெப அட்டைகளை வைத்திருக்கிறீர்கள், அதை புறக்கணித்துவிட்டீர்கள்; நீங்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றிருக்கிறீர்கள், நீங்கள் மற்றொரு கூட்டத்திற்கு சென்றிருக்கிறீர்கள்; நீங்கள் போதகரால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள்; நீங்கள் இந்த ஜெப வரிசையினூடாக வந்திருக்கிறீர்கள்; நீங்கள் எல்லாவிடங்களிலும் இருந்தும், உங்களால் சுகமடைய முடியாது, நீர் ஏன் இப்பொழுது கன்மலையினிடத்தில் பேசக் கூடாது? அவர் தம்முடைய தண்ணீரைத் தருவார். அது உண்மை. நீங்கள் ஏன் அவரை ஒருமுறை முயற்சித்துப் பார்க்கக் கூடாது? அவர் கட்டிடத்தில் இருக்கையில், இப்பொழுதே, அவரோடு பேசக்கூடிய முறையில் பேசுவதைத் தொடருங்கள். 220 அவருடைய பிரசன்னம் இப்பொழுது உங்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்த இங்கே உள்ளது. நான் அதை விசுவாசிக்கிறேன், நான் அதை என் முழு இருதயத்தோடு அறிவேன். நான் விசுவாசிக்கிறேன்…எனக்குத் தெரியாத சில காரியங்கள் உண்டு, ஆனால் எனக்குத் தெரிந்த சில காரியங்கள் உண்டு, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார் என்பதை நான் அறிவேன்.
78221 நான் இப்பொழுது என் இருதயத்தில் ஒரு பீட அழைப்பைக் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கையில், இப்பொழுது சரியாக—சரியாக தரிசனங்கள் கட்டிடம் முழுவதிலும் பரவிக் கொண்டிருக்கின்றன. ஓ, அது உண்மை. தேவனுடைய வல்லமைகள் இங்கே சரியாக உள்ளன. அது உண்மை. அவர் இங்கிருந்து அசைவாடுவதை நான் கண்டேன். அது இப்பொழுது எனக்கு ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணத்திற்கு வெளிப்பட துவங்கியுள்ளது; ஏனென்றால் இங்கே சுகவீனமான ஜனங்கள் இருக்கிறார்கள், உங்களுடைய ஜெபமே அதைச் செய்கிறது; இன்றிரவு பேசப்படுவதற்காக அவர் இங்கே இருக்கிறார் என்று கூறி, தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்த, அவர்களுடைய சிந்தனைகளை அறிந்துகொண்ட அதே கன்மலை. அந்த ஸ்திரீ எங்கே இருக்கிறாள் என்றும், அந்த உதிரப்போக்கு போன்றவற்றைக் கண்டேன். அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். நீங்கள் அவரிடத்தில் பேசினால், அவர் தம்முடைய தண்ணீரைக் கொண்டு வருவார். நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? 222 பெண்மணியே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?…அங்கே மையத்தில் உள்ளது. இப்பொழுது, நீங்கள் ஜெப அட்டையை வைத்திருக்கவில்லையா? அந்த பெண்மணி தன்னுடைய கழுத்தைச் சுற்றி வெள்ளை நிற ஆடையை அணிந்து, அங்கேயே அமர்ந்திருக்கிறாள். உங்களுக்கு சர்க்கரை வியாதி உள்ளது, உங்களுக்கு இல்லையா? நீங்கள் ஒரு ஜெப அட்டையை வைத்திருக்கவில்லையா? உங்களுக்கு எந்த ஜெப அட்டையும் தேவையில்லை. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களால் கன்மலையண்டை பேச முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் இப்பொழுதே உங்களுடைய சர்க்கரை வியாதிக்காக, அவரிடத்தில் பேச விரும்புகிறீர்களா? அப்பொழுது எழும்பி நில்லுங்கள். அது சரியா? “இயேசு கிறிஸ்துவை நான் இப்பொழுது என்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறுங்கள். அப்பொழுது தேவன் உங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று, உங்களை சுகமாக்குவார். கன்மலையினிடத்தில் பேசுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. போய், சுகமடைவாயாக.
79223 பெண்மணியே, அவளுக்கு அடுத்தபடியாக உட்கார்ந்து கொண்டிருப்பதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுடைய கால்களில் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் உங்களுக்கு இருக்கின்றன, உங்களுக்கு இல்லையா? அது உண்மை. எழுந்து நில்லுங்கள். அங்கே உங்களுக்கு அடுத்தபடியாக உங்களுடைய கணவர் அமர்ந்திருக்கிறார் அல்லவா? அது சரியா? உங்களுக்கும் சர்க்கரை வியாதி உள்ளது, உங்களுக்கும் இல்லையா? அது சரியா? உன்னுடைய மனைவியின் மேல் உன்னுடைய கரத்தை வை. சரி. நீங்கள் இருவரும் இல்லினாய்ஸிலிருந்து வந்தவர்கள். அது சரிதானே? இப்பொழுது நீங்கள் இல்லினாய்ஸிற்கு திரும்பி போய், அந்த கன்மலையிடம் பேசும்போது, அது உங்களை விட்டுப் போய்விடும், மீண்டும் ஒருபோதும் திரும்பி வராது. அல்லேலூயா! 224 நான் ஒரு காரியத்தை அறிவேன், அதாவது அந்த கன்மலை இங்கே இருக்கிறது, வனாந்திரத்தில் அடிக்கப்பட்ட காலங்களின் கன்மலை. அது உண்மை. 225 அங்கே உங்களுடைய தொப்பியில் மலர்களோடு கூடிய சிறு பெண்மணியே, அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மூட்டு வீக்கத்தோடு அங்கே உட்கார்ந்துகொண்டு, அதைக் மேற்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். மறுபக்கம் திரும்பிப் பார்த்த நீங்கள், தேவன் உங்களை சுகப்படுத்தப்போகிறார் என்று உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் எழும்பி நின்று, உங்களுடைய கால்களை மேலும் கீழும் மிதித்து, “மூட்டுவலி நீங்கிவிட்டது” என்று கூறுங்கள், அது அவ்வண்ணமேயாகும். கன்மலையை நோக்கிப் பேசு, அப்பொழுது அவர் கொண்டு வருவார் …?… 226 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர் எந்தக் காரியத்தையும் வெளிப்படுத்த இங்கிருக்கிறார்…
80227 அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அங்கே அமர்ந்திருந்த பெண்மணி, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறி, அந்த பெண் தொல்லையோடு, ஒரு சிறிய பச்சை நிற மேற்சட்டையுடன் அங்கே அமர்ந்திருப்பதை நீங்கள் கண்டறிகிறீர்களா? அப்படியானால் தேவன் உங்களை சுகப்படுத்தினார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒரு நிமிடம், எழுந்து நில்லுங்கள்; அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு ஸ்திரீகளுக்கான ஒரு கோளாறு உள்ளது. அது ஒரு சீழ் கட்டியாகும். உங்களுக்கு ஒரு குழாய் உள்ளது, அதிலிருந்து ஒருவிதமான வடிகால் வருகிறது. அது சரிதானே? அது உண்மையானால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அதைக் கூற என்னைத் தூண்டுவது எது? அது உங்களிடத்தில் பேசுகிற கன்மலையாயுள்ளது. அவரிடத்தில் திரும்பிப் பேசி, சுகமடைவாயாக. அல்லேலூயா! 228 ஓ, எப்படியாய் அவர் தம்முடைய வல்லமையின் வெளிப்படுத்துதல்களைக் கொண்டுவர விரும்புகிறார்! நான் தேவனுடைய தூதனை, வனாந்தரத்தில் இருந்த புத்திரரைப் பின்தொடர்ந்த அதே அக்கினி ஸ்தம்பம் இப்பொழுது இந்த கட்டிடத்தினூடாக அசைவாடுகிறதை நான் காண்கிறேன்.
81229 நான் ஒரு பெண்ணைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் இங்கே எங்கே இருக்கிறாள்? இங்கே அவர் நிற்கிறார். ஆம், அது ஒரு சிறு பெண்மணி அங்கே நின்று கொண்டிருக்கிறாள், இரண்டாவதாக அமர்ந்திருக்கிறாள். இல்லை, அவள்…அது ஒரு மனிதன் நின்று கொண்டிருப்பதைக் குறித்ததாயுள்ளது. நீங்கள் ஜெபிப்பது ஒரு குடிகார கணவனாய் உள்ளது. பெண்மணியே, அது சரிதானே? அப்படியானால், அங்கேயே உங்களுடைய காலூன்றி எழும்பி நில்லுங்கள். நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்த ஒரு குடிகார கணவனை நீங்கள் உடையவராயிருக்கவில்லையா? அது உண்மையானால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். கன்மலையண்டைப் பேசு, அப்பொழுது தேவன் அவனை அந்தக் காரியத்திலிருந்து வெளியே கொண்டு வருவார்.
82230 நீங்கள் அதை மாத்திரம் செய்தால், தேவன் இங்கே உள்ள எந்தக் காரியத்தையும் செய்வார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவரோடு பேசக்கூடிய தகுதியில் இருக்கிறீர்களா? நீங்கள் இப்பொழுதே எழுந்து நின்று கன்மலையினிடத்தில் பேசினால், அந்தக் கன்மலையானது அவருடைய தண்ணீரைத் தோன்றச் செய்யும். நீங்கள் நிற்பீர்களா? 231 இரட்சிப்புக்காக அவரை விரும்புவது யார்? உங்களுடைய கரத்தை உயர்த்தி, “அவர் என்னுடைய இருதயத்திற்குள் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை, உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக. ஓ, என்னே! ஆம், ஐயா. 232 என் சகோதரனே, அந்தப் புற்றுநோய் உன்னை அங்கே விட்டுச் சென்றுவிட்டது. அது போய்விட்டது. நீங்கள் வீட்டிற்குச் சென்று, இப்பொழுது சுகமாயிருக்கலாம். அல்லேலூயா! அது உண்மை. 233 சுகமாக்கப்பட விரும்புகிற யாவரும், உங்களுடைய கரத்தை உயர்த்தி, “கர்த்தாவே, நான் உம்மிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் உம்மிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறுங்கள். அது உண்மை. 234 அங்கே அவன் செல்கிறான். திருவாளரே, உங்களுடைய மூளையழற்சியானது உங்களை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டது. நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள். வீட்டிற்குச் செல்லுங்கள்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள்.
83235 இங்குள்ள எவரும் அவரை இப்பொழுது கண்டறிய விரும்பினால், உங்களுடைய கரங்களை உயர்த்தி, “கர்த்தாவே, என்னை சுகப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. நீர் என்னை சுகப்படுத்த வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உம்மிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறுங்கள். 236 ஓ இரக்கத்தின் தேவனே, இன்றிரவு உம்முடைய வல்லமையை, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு அனுப்பும், இந்தக் கூட்டத்தார் மீது பெருக்கெடுத்து வந்து அசைவாடிச் செல்ல அவர் இப்பொழுது இந்தக் கட்டிடத்தில் இருக்கையில். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு அற்புதத்தையும் நிகழ்த்துவாராக. இன்றிரவு சுகவீனமான ஒரு நபராகவோ அல்லது ஒரு முடமான நபராகவோ கட்டிடத்தை விட்டு வெளியே செல்லாதிருப்பார்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீர் ஒவ்வொருவரையும் சுகப்படுத்துவீராக.