பயன்படுத்தப்பட்ட ஓர் சால்வை

56-1125M

நன மயபபரட தன இரநதன. நன கறனனஎனன அழககமபட நன நறற அவரடம கடடன. நன கணடறய வநதன, நன நள மழவதம, அழபபகள ஏதமலல, நன, சர, எனன பரசசன எனற வயபபறகறன? ஏத ஒனறஎலலம மகவம அமதயக உளளத எனற நனததன. சறத நரம கழதத, சகதர உட ஒர சல அழபபகளட வநதர. ஆகயல, உஙகளல எவரனம அழததரநதல, எனனடய தலபச சயலழநதவடடத. தலபச ஒலததத, ஆனல அநத ஒல அஙக எதரலககவலல,

பயன்படுத்தப்பட்ட ஓர் சால்வை

56-1125Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி581956-11-25

பயன்படுத்தப்பட்ட ஓர் சால்வை

56-1125Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி581956-11-25

1 நான் மேய்ப்பரோடு தான் இருந்தேன். நான் கூறினேன்…என்னை அழைக்கும்படி நான் நேற்று அவரிடம் கேட்டேன். நான் கண்டறிய வந்தேன், நான்… நாள் முழுவதும், அழைப்புகள் ஏதுமில்லை, நான், “சரி, என்ன பிரச்சனை என்று வியப்புறுகிறேன்? ஏதோ ஒன்று…எல்லாம் மிகவும் அமைதியாக உள்ளது” என்று நினைத்தேன். சிறிது நேரம் கழித்து, சகோதரி உட் ஒரு சில அழைப்புகளோடு வந்தார். ஆகையால், உங்களில் எவரேனும் அழைத்திருந்தால், என்னுடைய தொலைபேசி செயலிழந்துவிட்டது. தொலைபேசி ஒலித்தது, ஆனால் அந்த ஒலி அங்கே எதிரொலிக்கவில்லை, எனவே அந்தத் தொலைபேசி இணைப்பு பலகையில் கோளாறு இருந்தது. நேற்றிரவு சுமார் எட்டு மணிக்கு அல்லது அதற்குச் சற்று முன்னதாக அவர்கள் அதைச் சரிசெய்திருக்கலாம், மேலும், தொலைபேசி, அழைப்புகள் இப்பொழுது வந்து கொண்டிருக்கின்றன.

22 இந்தக் காலை ஆராதனையில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எனக்கு ஒரு மோசமான ஜலதோஷம் உள்ளது, இது வழக்கமாக நான் வீட்டிற்கு வரும்போது எனக்கு ஏற்படும். இடுப்பளவு பனியிலே சுற்றித்திரிந்து, இரவிலே வெளியே உறங்குவதனால் ஏற்பட்டது. இங்கிருந்து வெகுதூரத்தில் தான் அது இருக்கும் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம், ஆனால் நியூ ஆல்பனியில் உள்ள அந்த மலையைக் கடந்து செல்லுங்கள், இந்தப் பள்ளத்தாக்கிற்குள் செல்ல, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான், அப்பொழுதே எனக்குக் கடுமையான ஜலதோஷம் பிடித்தது. அது ஒரு…எனக்குத் தெரியாது, இந்தப் பள்ளத்தாக்கை உஷ்ணம் குறைந்த இடமாக வைப்பதற்கு இங்கே ஏதோ ஒன்று உள்ளது. அது கீழே உள்ளபடியால், என்னுடைய ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இல்லை. 3 இப்பொழுது, நான் கூறியுள்ளபடி, நாங்கள் சபையில் இருப்பதற்காகவும், நமது அன்பான நல்ல போதகர் நமக்காகவும், கர்த்தராகிய இயேசுவிடமும் தம்முடைய விண்ணப்ப வார்த்தையைச் சொல்வதைக் கேட்பதற்காகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும்—மேலும் அநேகர் சுகவீனமாயும், தேவையுள்ளவர்களுமாயிருப்பதைக் கேட்பது வருத்தமாக இருக்கிறது, எப்படியாய் பிசாசு ஒவ்வொருவரையும் சுகவீனப்படுத்துகிற வெறித்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். 4 அங்கே பின்னால் உள்ள ஒரு சிறு பெண்மணி தன்னுடைய சகோதரியைப் பற்றிப் பேசுகிறாள், சகோதரி சாயர் அங்கே அவளுடன் இருப்பதை நான் அறிவேன். மருத்துவர் அவளை இப்பொழுது மரிக்கும்படி வீட்டிற்கு அனுப்பிவிட்டார். அவள் இன்னமும் சுகமடையப் போகிறாள் என்று அவள் விசுவாசிக்கிறாள். அவள் ஒரு மோசமான, மிக மோசமான நிலையில் இருக்கிறாள். என் மாமியாருக்கு, அதே விதமாக, இப்பொழுது எழுபது வயதாகிறது. அவள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாள். நிச்சயமாகவே நாடு முழுவதும் ஏராளமான வியாதிகள் உள்ளன. அப்படியானாலும் பரிசுத்த ஆவியானவர் தேசத்தைச் சுற்றிலும் இருக்கிறார், பாருங்கள், நாம் அவரிடத்தில் தயையைக் கண்டடையக் கூடுமானால், அது நம்முடைய சுகவீனத்தை சுகப்படுத்துகிறது.

35 இப்பொழுது, என்னுடைய தொண்டை புண்ணாயுள்ளது, புண் அல்ல, ஆனால் அது ரணமாக இருக்கிறது. நான் பிரசங்கிக்க முயற்சிக்கப் போவதில்லை, ஆனால் வார்த்தையிலிருந்து சிறிது நேரம் உங்களிடத்தில் பேசி, அதன்பின்னர் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன், அதை நான் செய்வதாக வாக்களித்தேன். ஆனால் இதைச் செய்வதற்கு சற்று முன்பு, நான் இன்னும் சில கூட்டங்களை அறிவிக்க விரும்புகிறேன். நான்… 6 என்னுடைய ஆராதனைகளில் எனக்கு ஒருவிதமான ஒரு சிறு எதிர்ப்பை…எதிர்ப்பு அல்ல, ஆனால் ஒரு சிறு தவறான புரிந்து கொள்ளுதல்கள். அநேக சமயங்களில், என்னுடைய ஆராதனைக்காக எனக்கு—எனக்கு ஒலிபரப்பு நிலையங்கள் இல்லை, களத்தில் உள்ள மற்ற அநேக சகோதரர்களைப் போல, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் போன்றவை. அவ்வாறு செய்யும்போது, ஏன், யாரோ ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம் இங்கே இருக்க வேண்டும்” என்று கூறுவார். இப்பொழுது நான் இந்த வாரத்திற்கான மூன்று இடங்களில், இன்றைக்கு, மூன்று வெவ்வேறு இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை, ஒன்று கென்டக்கியில், இரண்டு கலிபோர்னியாவில். அதைக் குறித்து உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது, ஏனென்றால் எனக்கு வேறு எந்த அதிகாரப்பூர்வ வெளியீடும் இல்லை, எனவே அது ஒருவிதமாகக் கடினமாக்குகிறது.

47 மேலும், ஆம், இங்கே கென்டக்கியில் உள்ள மேடிசன்வில்லைச் சுற்றிலுமுள்ள யாராவது அங்கே இருக்க நேர்ந்தால் நலமாயிருக்கும். கடந்த வாரம் நான் அங்கு இருப்பேன் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் அதைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் அதை அறிவித்திருந்தனர்; அதைச் செய்த சகோதரன் எப்லி, அல்லது, அது அவருடைய பெயர் என்று நான் நினைக்கிறேன், முழுமையான நல்ல விசுவாசத்தோடு, அவர் அதைச் செய்தார். அவர் என்னை அழைத்து, நாம் ஒரு ஆசீர்வாதமாக இருக்க, அவருடைய ஜனங்களிடமிருந்து ஒரு ஆசீர்வாதத்தைப் பெற முடியுமா என்று கேட்டார். அவர் அழைத்தார். நான் அவரைச் சகோதரன் மூர் கேட்கும்படி கூறினேன். அப்படியானால் நான் புறப்பட்டுச் செல்ல வேண்டியதாயிருந்தது. நான் அன்றைய தினம் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று அவரிடம் கூறினேன். பாருங்கள், சகோதரன் மூர் அதை எவருமே அறியச் செய்யத் தவறிவிட்டார். எப்பொழுது, அல்லது எனக்குத் தெரியப்படுத்த, அல்லது என்னுடைய மனைவிக்குத் தெரியப்படுத்தட்டும். எனவே நான் ஐடாஹோவில் இருந்தேன், பின்னர் திரும்பி வந்தேன், கூட்டம் நடந்து கொண்டிருந்தது. 8 எனவே, நான் கண்டபோது, அந்தச் சமயத்தில், லூயிஸியானாவில் இங்கே நடக்கிற காரியங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியாது. எனவே, எனது கூட்டங்கள் முடியும் வரை…கூட்டங்களுக்கான எனது சொந்த ஏற்பாட்டைச் செய்ய, நானே, ஏற்பாடுகளை எடுத்துக்கொண்டேன். நான் ஒருவிதமாக…ஓ, எனக்குத் தெரியாது, அறிக்கையிடுதல் ஆத்துமாவிற்கு நல்லது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? இந்தக் காரியங்களைக் குறித்து நான் மிகவும் ரொம்ப தாமதமா பேசிவிட்டேன். யாரையும், எந்த இடத்திலும், தற்செயலாகப் போக அனுமதிப்பது. அது பலனளிக்காது என்பதை நான் கண்டறிந்தேன். நீண்ட காலத்திற்குப் பிறகு, நீங்கள்…அதற்கு நீங்கள் ஒரு முறைமையைப் பெற்றிருக்க வேண்டும். இப்பொழுது நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

59 நான்—நான் திருமதி ஆர்னால்ட் அவர்களைப் பார்க்கப் போகிறேன். நான்… நான் இங்கே கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோது, இங்கே லூயிவில்லில் மிகவும் நல்ல ஒரு மனிதன் இருக்கிறார், அவருடைய பெயர் சகோதரன் பர்கம் என்பதாகும். அவர் ஒன்று—ஒன்று அல்லது இரண்டு இரவு ஆராதனையை நடத்த விரும்பினார். நான் அவளுடைய குட்டி டெட்டியையும், டெடி ஆர்னால்ட்டையும் இந்த வாரத்தில் ஒரு முறை காணப்போகிறேன் என்று நான் நினைக்கிறேன். 10 அதன்பின்னர் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் என்னால் முடிந்தால், கர்த்தருக்குச் சித்தமானால், நான் மாடிசன்வில்லில் இருக்க விரும்புகிறேன். அவர்கள் அங்கே இருபத்தைந்து, முப்பது ஊழியக்காரர்களை உடையவர்களாயிருந்தனர். அங்கே அமர்ந்திருந்த அவர்கள் யாவரும், வந்திருந்தனர்…அதாவது ஒன்று அறுநூறு மைல்கள் தூரத்தில் இருந்தது. சரி, அங்கே எவருமே இல்லாதபடியால், யாரும் இல்லாத படியால், என்னுடைய சொந்த தவறு இல்லை, ஆனால் நான்…ஆனால் தவறாகப் புரிந்துகொள்ளுதல் அல்லது அவரை அழைக்கப் புறக்கணித்ததன் மூலம். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த வார இறுதியில் நான் அங்கு இருக்க முயற்சிப்பேன். 11 அதன்பின்னர், ஐந்தாம் தேதி முதல் ஆறாம் தேதிவரை, நான் நியூயார்க்கின் புரூக்ளினில் இருப்பேன். அதன்பின்னர் அது முதல் பதினான்காம், பதினைந்து, பதினாறாம் தேதிகளில் மேற்கு வெர்ஜினியாவில் உள்ள பார்க்கர்ஸ்பர்க்கில் நடைபெறும். நேற்றிரவும் இன்று காலையும் அந்த இரண்டு ஏற்பாடுகளைச் செய்தேன். இப்பொழுது, தென் கரோலினாவில் உள்ள சார்லட் என்ற பெயரும் அந்தப் பட்டியலில் உள்ளது, ஆனால் எனக்குத் தெரியாது. அதன்பின்னர் விடுமுறை நாட்கள் வருகின்றன. 12 அதன்பின்னர் நாம் மேற்குக் கடற்கரைக்குச் செல்கிறோம். அங்கே அவர்கள் ஒரு பெரிய அரங்கக் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது, இவைகள்—உயர்நிலைப் பள்ளிகளில் நடக்கும் சிறு கூட்டங்கள், அதைப் போன்ற காரியங்கள். அங்கே மேற்கு கடற்கரையில் உள்ள ஒன்று, ஓக்லாண்ட் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய இரண்டு நகரங்களின் கூட்டு கூட்டமாக இருக்கப்போகிறது. 13 அதன்பின்னர் பீனிக்ஸ் பிரதிநிதிகள் குழு, இந்த ஆண்டுச் சகோதரன் ராபர்ட்ஸ் அங்கு இருக்க முடியாது, நான் பீனிக்ஸில் மாரிகோபா மண்டலம் முழுவதிலும் நடைபெறும் கூட்டத்தில் ஒருவிதமாக அவருடைய இடத்தை எடுத்துக் கொள்வேன். அது ஒரு ஐக்கிய முயற்சி. 14 எனக்காக ஜெபியுங்கள், ஏனென்றால் எனக்கு—எனக்கு அது தேவைப்படுகிறது. ஒவ்வொரு முறையும் விசுவாசம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்போது, பிசாசு நரகத்தில் உள்ள ஒவ்வொரு துப்பாக்கியையும் இந்தவிதமாகச் சுழற்றுகிறான் என்பதை நான் உணர்கிறேன், நீங்கள் பாருங்கள், எனவே அது அதை மிகவும் கடினமாக்குகிறது.

615 எனவே, இந்தக் காலையில், வியாதியஸ்தருக்காக ஜெபிக்க. நான் தேவனுடைய நித்திய வார்த்தையில் சிலவற்றை வாசித்து, வேதவாக்கியங்களிலிருந்து ஒரு சில நிமிடங்கள் பேச விரும்புகிறேன், அதன்பின்னர் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும். ஓ, நான் எவ்வளவாய் அவரைக் குறித்துப் பேச விரும்புகிறேன்! நீங்கள் விரும்பவில்லையா? நான் அவரைக் குறித்து பேச விரும்புகிறேன். 16 இப்பொழுது நான் வேதாகமத்திலிருந்து இரண்டாம் இராஜாக்கள் 2-ம் அதிகாரம், 12-ம் வசனம், ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; 17 இப்பொழுது ஒரு பொருளின் வழியாக அல்லது ஒரு பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன்: பயன்படுத்தப்பட்ட ஓர் சால்வை. எனவே இந்தக் காலையில் நாங்கள் உங்களிடத்தில் பேசுகையில் கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. நீங்கள் எங்களுக்காக ஜெபத்தில் இருங்கள்.

718 இஸ்ரவேல் தேசத்தில் இஸ்ரவேலர் ஆளுகை செய்துகொண்டிருந்த காலத்தில், இஸ்ரவேல் ஒரு தேசமாயிருந்தது, அது ஒரு வல்லமையான தேசமாயிருந்தது, இராணுவத்தின் அங்கத்தினர் மத்தியில் அது ஒருவிதமான அமைதியான நேரமாயிருந்தது. ஆனால் அதனுடைய ஆவிக்குரிய பாகத்தில், அது ஒருவிதமான ஒரு—ஒரு ஆள் மாறாட்டத்தின் நேரமாயிருந்தது. நாம் பழைய ஏற்பாட்டிற்குள் திரும்பிப் பார்ப்போமேயானால், இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு நாம் எப்பொழுதுமே உதாரணங்களைக் கண்டறிய முடியும். எப்பொழுதுமே, வேதத்தில், இப்பொழுது இருக்கிற காரியங்கள் ஆதியில் இருந்ததற்கு எதிர்மாதிரிகளாகவே இருக்கின்றன. 19 இப்பொழுது, ஆதியாகமப் புத்தகம் இன்றைக்கு உலகத்தில் உள்ள ஒவ்வொரு காரியத்தையும் தோற்றுவிக்கிறது. ஆதியாகமத்தில் துவங்காததைத் தவிர உலகில் வேறெதுவும் இல்லை, ஏனென்றால் அது துவக்கமாயிருக்கிறது. அங்கே ஒவ்வொரு கொள்கையும் துவங்கினது. ஆதியாகமத்தில், துவங்கின ஒவ்வொரு காரியமும் துவங்கினது. உண்மையான சபை ஆதியாகமத்தில் துவங்கினது. போலி விசுவாசி ஆதியாகமத்தில் துவங்கினான். அலட்சியம் ஆதியாகமத்தில் துவங்கினது. ஆதியாகமம் துவக்கமாக இருந்தது.

820 இப்பொழுது எலியாவின் ஆளுகையின்போது, இல்லை இங்கே பூமியின் மேல் எலியாவின் யாத்திரையின்போது, அந்த வேளைக்கான தேவனுடைய தீர்க்கதரிசியாக அவன் இருந்தான். 21 தேவன் ஒரு சாட்சி இல்லாமல் தம்மை ஒருபோதும் பூமியின் மேல் விட்டுவிடவில்லை. தேவன் எப்பொழுதுமே, எங்கோ, எங்கோ ஒரு இடத்தில், அவர் தம்முடைய கரங்களை வைக்கக்கூடிய ஒரு நபரை உடையவராயிருந்து, ஒரு சாட்சியாக நிற்கக்கூடிய ஒரு நபரைக் கொண்டிருந்தார். ஆகையால் ஆதியாகமம் முதற்கொண்டே அவர் அதைச் செய்திருப்பாரானால், நிச்சயமாகவே, தேவன் இப்பொழுது தம்முடைய கரத்தை வைக்கக்கூடிய ஒரு மனிதனை எங்கோ வைத்திருக்கிறார். ஏனென்றால் அவர்—அவர் இப்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள், அவர் தம்முடைய கரத்தை வைக்கக்கூடிய அநேக மனிதர்களை உடையவராயிருக்கிறார், ஏனென்றால் நாம் ஒன்று சேர்க்கும் நேரத்திற்கு, அறுவடை காலத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். 22 ஆதியாகமம் விதை நடுதலாயிருந்தது, இந்த ஆறாயிரம் ஆண்டுகளாக அறுப்பு முதிர்வடைந்ததாயிருந்தது. இப்பொழுது அந்த வித்து தானே ஒரு விதையாகிவிட்டது. அது மீண்டும் மலர்ச்சிக்கு, மலர்ச்சியிலிருந்து கனியை அடைந்துள்ளது. இப்பொழுது ஒன்று கூடும் நேரம், அறுவடை நேரம், எல்லா மகத்தான காரியங்களும் துவங்கின. ஆதியாகமத்தில் துவங்கின உண்மையான சபையானது கனியின் காலத்திற்கு, ஆவியின் கனிக்கு வந்துள்ளது. ஆதியாகமத்தில் துவங்கின அந்திக்கிறிஸ்து அதனுடைய கனிக்கு வந்திருக்கிறான். நாம் இந்த உலகத்தின் முழு யுகத்தின் முடிவான நேரத்தில் இருக்கிறோம், இந்த…அழியும் ஜீவியத்தின். நாம்…இது எவரும், அல்லது எந்தக் காலத்திலும், எப்போதும் ஜீவித்ததிலேயே மகத்தான காலம், இதுவேயாகும். இது ஒரு நிலைகுலையச் செய்யும் நேரம். இது பாவிகளுக்கு ஒரு தொல்லைக்குரிய நேரம், ஆனால் கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு ஆச்சரியமான நேரம், ஏனென்றால் நாம் வீட்டிற்குச் சென்று, கர்த்தரை சந்திக்கும்படியான கடைசி சிறு முயற்சிகளையும் ஒன்று திரட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம்.

923 இப்பொழுது ஜனங்களே, இன்றைக்கு நீங்கள் சுற்றும் முற்றும் பார்க்கையில், தேசம் எதிர்நோக்கியிருக்கும் பெரும் தொல்லையையும், துயரத்தையும் காணும்போது, அங்கே…சில இரவுகளுக்கு முன்னர், நான் யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், இங்கே இந்தக் கண்காணிப்பு முகவர்களில் ஒருவர், மேலும் அவர்கள், “சகோதரன் பிரான்ஹாம், வெடிகுண்டு தாக்கினால், ஜன்னலுக்குக் கீழான தரையிலோ அல்லது அடிமட்டத்திற்கு ஒருபோதும் செல்ல வேண்டாம் என்று ஜனங்களுக்கு ஆலோசனை கூறும்படி… நாங்கள் அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டோம், ஏனென்றால் இந்தப் புதிய வெடிகுண்டு மாஸ்கோவிலிருந்து லூயிவில்லில் உள்ள நான்காவது தெருவிற்கு வானொலியில் வழிகாட்டி, நேராக தெருவில் விழுந்து, அதைச் சுடும்போது, அது தார்-…அதில் உள்ள பொருட்கள், வெடிபொருட்கள், அதை இத்தனை ஆயிரங்களாக, இத்தனை ஆயிரங்களாக விண்மீன்கள் மற்றும் ரேடார் மூலம் வழிநடத்தப்பட்டு, ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிலிருந்து, லூயிவில்லில் உள்ள நான்காவது தெருவில் அது சரியாக விழும், அது அங்கே மோதும், ஒரு விமானத்தையோ அல்லது வேறெதையோ உபயோகிக்க வேண்டியதில்லை, அதை இங்கேயே பறக்கவிட்டு விடுங்கள், அப்பொழுது அது அங்கேயே தரையிறங்கும், அது பூமியில் ஒரு துவாரத்தை உண்டாக்கி, நூற்று எழுபத்தைந்து அடி ஆழமும், பதினைந்து சதுர மைல்களுக்கு இரண்டு பக்கமும், பதினைந்து சதுர மைல்கள் பிளக்கச் செய்யும்.” மேலே செல்ல தயாராக இருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது, அவர்களுக்கு நேரம் வரும்போது செய்ய வேண்டிய ஒரே காரியம் அதுதான். 24 சற்று சிந்தித்துப் பாருங்கள், அவர்கள் விரும்பினால், ஒரே நேரத்தில் ஐம்பது பேரையோ அல்லது அவர்களில் நூறு பேரையோ சுட்டுவிட முடியும். இது எல்லாம் முடிந்துவிடும், இடைவெளிக்குள்…நான் நினைக்கிறேன் இது ஒரு அறுபது அல்லது எண்பது நிமிடங்கள், அல்லது ஏதோ ஒன்று, அல்லது வினாடிகள்—வினாடிகளில், சரியாகக் கூறினால், அங்கிருந்து இங்கே, முழு காரியத்தின் முழு அழிவும் சம்பவிக்கும். லூயிவில்லுக்கும் ஹென்றிவில்லுக்கும், லூயிவில்லுக்கும் பார்ட்ஸ்டவுனுக்கும் இடையே, ஒன்றுமே விடப்பட்டிருக்காது, அல்லது அங்கே கீழே, ஆனால் தரையில் ஒரு துவாரமும், மேடு போன்ற தூசியும் படிந்திருப்பதை தவிர. அவ்வளவுதான் மிஞ்சும், அந்தப் பகுதிகளைத் தவிர அது வெளியேறி, அதற்கு அப்பால் உள்ள மைல்கள், மைல்கள், மைல்கள் வரை எரியும். ஒன்று அங்கே விழுந்து கொண்டிருக்கையில், மற்றொன்று அதைச் சந்திக்க, வேறு எங்கோ விழுந்து கொண்டிருக்கிறது.

1025 எங்களுக்கு ஒரு தங்குமிடம் இருப்பதைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். “கர்த்தருடைய நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள்ளாக ஓடிச் சுகமாயிருப்பான்.” எத்தனை குண்டுகள் அல்லது வேறு எந்தக் காரியமாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை…நாம் அங்கே பாதுகாப்பாக இருக்கிறோம். எனவே, உலகமும், பாவியும், இந்த அடைக்கலம் அல்லது இந்தப் பாதுகாப்பான இடம் இல்லாதிருப்பதால், இது ஒரு நிலைகுலையும் நேரமாய் உள்ளது. நான் ஒரு கிறிஸ்தவனாக இல்லாவிடில், எந்த நேரத்திலும் என்ன சம்பவிக்கக்கூடும் என்பதைக் குறித்து யோசித்துப் பார்த்தால் நான் பைத்தியம் பிடித்தவனாக ஆகிவிடுவேன் என்று நான் நினைக்கிறேன். ஒரு வீடு முழுக்க சிறு பிள்ளைகள், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியமும் நிறைந்திருப்பதால், நான் என்ன செய்ய வேண்டும் என்று அறியேன். ஆனால் நான் என்னுடைய வீட்டில் நின்று, எந்த வெடிகுண்டும் தொட முடியாத ஒரு தங்குமிடத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்த முடிந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அல்லது வேறு எதுவும் இல்லை, கர்த்தராகிய இயேசுவின் பாதுகாக்கும் செட்டைகளின் கீழ். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே” என்று கர்த்தர் உரைக்கிறார். பார்த்தீர்களா? அதுவே நம்முடைய பாதுகாப்பு. 26 எல்லா பாவங்களும், போராட்டங்களும், வாழ்க்கையின் சோதனைகளும் சீக்கிரத்தில் முடிந்து விடும் என்பதை அறிந்து கொள்வதற்கு இது என்ன ஒரு மகத்தான, மகிமையான நேரமாய் உள்ளது. இந்நாட்களில் ஒன்றில் இவை யாவும் முடிவடையும், அப்பொழுது நாம் கர்த்தரோடு இருக்கும்படி வீட்டிற்குச் செல்வோம். இப்பொழுது, சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, நம்மால் முடிந்தளவு அநேகரை இந்த மகத்தான துருகத்திற்குள் கொண்டு வரும்படியான ஒரு நேரமே விடப்பட்டுள்ளது.

1127 அதன்பின்னர், இன்றைக்கு நம்முடைய பாடத்தின் மாதிரியை நாம் காண்கிறபடி, எலியா அவனுடைய ஆட்சியின்போது, அவன்…இல்லை, பூமியில் அவனுடைய யாத்திரை, ஏன், அவன் ஒரு மகத்தான, வல்லமையான மனிதனாயிருந்தான். தேவன் அவனை வல்லமையான வழிகளில், வல்லமையான வல்லமையோடு உபயோகித்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில், எலியாவைப் போலபோலப் பாவனை செய்ய முயன்ற ஒரு கூட்ட போலியானவர்கள் இருந்தனர் என்பதை நாம் கண்டறிகிறோம், எலியா செய்த அதே காரியங்களை அவர்கள் செய்ய முயன்றார். 28 ஆகையால் இன்றைக்கும் அதேக் காரியத்தை நாம் காண்கிறோம்; கிறிஸ்தவ மார்க்கத்தை ஆள்மாறாட்டம் செய்து, கிறிஸ்தவர்களைப் போல நடந்து கொள்ள முயற்சிக்கும் ஜனங்கள், தங்களை கிறிஸ்தவர்களாக்கிக்கொள்ள முயற்சிக்கின்றனர். உங்களால் அதைச் செய்ய முடியாது. தேவன் அதைச் செய்ய வேண்டும். அவர் ஒருவரே அதைச் செய்ய முடியும். 29 எனவே அவர்கள் ஒரு பள்ளியை உருவாக்கி, அதை “தீர்க்கதரிசிகளின் பள்ளி” என்று அழைத்தனர். அவர்கள் யாவரும் தீர்க்கதரிசிகளின் பள்ளிக்குச் சென்று, அவர்களுக்குக் கல்வி கற்பித்தனர். அங்கே இருந்த அந்தப் பிரசங்கிமார்கள் யாவரும், எலியா அணிந்திருந்த அதேவிதமான மேலங்கியை அணிந்திருந்ததை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவனுடைய குரலில், அவன் பேசிய விதத்தில் அவனை ஆள்மாறாட்டம் செய்ய முயற்சிப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. மேலும்—மேலும் அவன் தன்னை வெளிப்படுத்திய விதம், எல்லோரும் அதையே செய்ய முயற்சித்தனர், ஏனென்றால் எலியா தேவனால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு மகத்தான மனிதனாயிருந்தான். 30 இன்றைக்கும் அதே காரியத்தை நாம் கண்டறிகிறோம். அண்மையில் நான் ஒரு வானொலி ஒலிபரப்பைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பில்லி லூயிவில்லில் இருந்தபடியால், அவர்கள் இந்தத் தேசம் முழுவதிலும் பில்லி கிரஹாம்மைப் போலக் காண்பித்துக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் அதே காரியத்தைப் பாவனை செய்ய முயற்சித்து, ஏறக்குறைய தங்களுடைய தலைமுடியை ஒரே விதமாகச் சீவுகின்றனர், மற்றும்—மற்றும் அதே காரியத்தை, அதே விதமான குரலில் அதைப் போன்றே பேசுகின்றனர். ஆனால் உங்களால் அதைச் செய்ய முடியாது. நீங்கள் யாராயிருக்கிறீர்களோ, அவ்வாறே தேவன் உங்களை உண்டாக்கின விதமாகவே இருக்க வேண்டும். அது உண்மை. ஆகையால் அது எப்படி, ஒருவேளை, அந்த நாட்களில் அதேக் காரியம் சம்பவித்திருக்கலாம் என்று நாம் கண்டறிகிறோம்.

1231 இப்பொழுது, தேவன், எலியாவின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன என்பதை முன் கூட்டியேக் கண்டு, எல்லோரும் இருப்பது போல, இவ்வளவு காலம் பூமியில் தங்க அவனுக்கு வாய்ப்பு கிடைத்தது, எனவே அவர் எலியாவுக்கு அடுத்தபடியாக ஒரு பின்வருவோரை உடையவராயிருந்தார். அவர் அதைச் செய்தபோது, தேவன் இந்த மனிதனை அழைத்தார். அவர் அவனை அழைத்தபோது, அவன் எந்த வேதபாட கருத்தரங்கிலும் இருக்கவில்லை. அவன் ஒரு வயலில் காளையை, ஒரு நுகத்தடியில் வைத்து உழுது, கொண்டிருந்தான், வேலை செய்து கொண்டிருந்தான், அல்லது தனது தாய் தந்தையரை கவனித்துக் கொண்டிருந்தான். எலிசா, இல்லை, எலியாவின் பின் வருவோராக வரும்படி தேவன் அவனை அழைத்தார். 32 ஒருகால் பள்ளியில் இருந்த அநேகர் தாங்கள் அவனுடைய பின் வருவோனாக வரப்போவது உறுதி என்று நினைத்திருக்கலாம், அவன் அதை முடித்தவுடனே அவர்கள் அவனுடைய சால்வையை அணிந்து கொள்ளப் போவதாயிருந்தனர். 33 ஆனால் தேவன் அழைப்பைச் செய்கிறார். தேவன் தெரிந்து கொள்ளுதலைச் செய்கிறார். தேவன் தெரிந்து கொள்ளுதலைச் செய்கிறார். தேவன் அமைப்பை ஒழுங்கின்படி செய்கிறார். “தேவன் சபையில்: சிலரை அப்போஸ்தலர்களாகவும்; சிலரை, தீர்க்கதரிசிகளாகவும்; சிலரை, போதகர்களாகவும்; சிலரை, சுவிசேஷகர்களாகவும்; போதகர்களாகவும் நியமித்திருக்கிறார்.” தேவன் தாமே அதைச் செய்கிறார். நாம் ஒரு முடியையும் கறுப்பாக்கவோ அல்லது வெள்ளையாக்கவோ முடியாது, நாம் சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் நம்முடைய சரீரத்தின் வளர்ச்சியில் ஒரு காரியத்தையும் கூட்ட முடியாது. தேவன், தம்முடைய முடிவற்ற கிருபையினாலும், அவருடைய தெரிந்து கொள்ளுதலினாலும், அவருடைய முன்னறிவினாலும், இந்தக் காரியங்களை ஒழுங்குபடுத்துகிறார், ஒவ்வொரு சக்கரமும் சரியாக வேலை செய்கிறது. நான் அதை விரும்புகிறேன்.

1334 நான் தெரிந்து கொள்ளுதலையும், தேவனுடைய அழைப்பையும் விசுவாசிக்கவில்லையென்றால், நான் இந்தக் காலையில் ஒரு திடனற்றுப்போன மனிதனாயிருப்பேன். மனிதனின் வல்லமையினாலும், மனித ஞானத்தினாலும், இந்த உலகமானது அதன் விளைவுகளுக்கு விடப்பட்டுவிட்டது என்று நான் நினைத்திருந்தால், மேலும் ஐநா சபையின் பெரிய நான்கு வரிசைகளின் மூலமாகவும், தேவனுடைய நாமத்தைக் கூட ஒருபோதும் குறிப்பிடாதவர்களால், நான் ஒரு மனத்தளர்வுற்ற நபராக இருப்பேன், ஆனால் நான் அதன் விளைவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கவில்லை. 35 நான் இங்கே இந்தப் பழைய புத்தகத்தின் பக்கங்களை நோக்கிப் பார்க்கிறேன், தேவன் அதை எழுதினார், அவர் அதைக் கூறினவிதமாகவே ஒவ்வொரு காரியமும் சரியாக வரும், அவ்வளவுதான். எனவே, நான் செய்ய வேண்டிய ஒரே காரியம் அவர்களோடு வரிசையில் நிற்பதல்ல, ஆனால் கல்வாரியோடு வரிசையில் நிற்பதேயாகும். தேவனோடு சரிபடுத்திக் கொள்ளுங்கள், அவருடைய வார்த்தையோடு சரிபடுத்திக் கொள்ளுங்கள், அவருடைய வார்த்தையில் தரித்திருங்கள். அது அந்த விதமாக இருக்கப் போகிறது என்பது எவ்வளவுதான் காணப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது தேவன் இருக்க விரும்புகிற விதமாகவே இருக்கப் போகிறது. அது வேறொன்றுமாய் இருக்க முடியாது. ஏனென்றால், அவர் எல்லையற்றவராயிருந்து, துவக்கத்திலிருந்து முடிவுவரை அறிந்திருக்கிறார், அவர் எல்லாவற்றையும் தம்முடைய துதிக்கு வரச் செய்தார். அது உண்மை. 36 “எல்லாக் காரியங்களும் ஒருமித்து கிரியை செய்ய வேண்டும்.” ஒவ்வொரு காரியமும் அதனுடைய இடத்திற்கு சரியாக வடிவமைக்கப்பட வேண்டும். என்னே! அது ஒரு கிறிஸ்தவனுக்குள் தைரியத்தை உண்டாக்கவில்லையென்றால்! ஒன்றுமே தவறாகப் போக முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது நம்முடைய யுத்தம் அல்ல; அது அவருடையது. அது நம்முடைய ஞானம் அல்ல; அது அவருடையது. நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவெனில், அங்கே நம்முடைய விசுவாசத்தையும், அசையாமல் நம்பிக்கையையும் வைத்து, தேவனுடைய மகிமையைக் காண்பதேயாகும், அது எவ்வாறு அதனுடைய இடத்திற்குச் சுற்றி அசைகிறது என்பதையும், ஒவ்வொரு சக்கரமும் அசைவதையும் பாருங்கள். அது ஒருக்கால் பக்கத்திலிருந்து பக்கமாகச் சிதறடிக்கப்படலாம், ஆனால் தேவன் வார்த்தையை உரைக்கும்போது, அது சரியாக அதனுடைய சரியான இடத்திற்கு நகரும். 37 அவர் துவக்கத்திலிருந்து முடிவுவரை அறிந்திருந்தார். அவன் தெரிந்துகொள்ளப்படப் போகிறான் என்பதை அவர் அறிந்திருந்தார். உலகம் உண்டாவதற்கு முன்னமே எலியாவின் ஸ்தானத்தை எலிசா எடுத்துக் கொள்வான் என்பதை அவர் அறிந்திருந்தார். ஒவ்வொரு காரியமும் சரியாகச் கிரியை செய்ய வேண்டும். 38 “நம்முடைய அன்பார்ந்தவர்கள் போன்றவர்கள் எப்பொழுதாவது உள்ளே வருவார்களா?” என்பதைக் குறித்து நாம் கவலைப்படுகிறோம். அவர்களுடைய பெயர்கள், அவர்கள் உலகத்தோற்றத்திற்கு முன்னரே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தால், அவர்கள் அங்கே சரியாகக் கிரியை செய்வார்கள். அந்த ஒரு காரியத்தை மாத்திரமே அவனால் செய்ய முடியும். நாம் சாட்சி கொடுத்து, ஒளியைப் பிரகாசிக்கிறோம். தேவன், அந்த ஒருவர், அதை அவர்களிடத்தில் கொண்டு வருகிறார்.

1439 இப்பொழுது கவனியுங்கள், எலியாவில், அவன் தன்னுடைய சால்வையை அவன்மேல் போட்டு, அதை அவன்மேல் சோதித்தப் பிறகு. வேறு வார்த்தைகளில் கூறினால், எலியா தீர்க்கதரிசி, அவன் தேவனுடைய சால்வையைத் தன்னுடைய தோள்களில் சுமந்திருந்தான், அவன் வந்து விவசாயியான, எலிசாவுக்கு அது பொருந்துமா என்று பார்க்க அவன்மேல் அதை வைத்தான். அந்தச் சால்வையை பொருத்த, மாற்றியமைக்க ஏறக்குறைய பத்து ஆண்டுகள் பிடித்தன. 40 தேவன் வழக்கமாக நம்மைச் பட்டறையில் வைத்து நம்மைச் சீர்படுத்துகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, அவர் எலிசாவிற்கு ஏற்றவாறு அவனுடைய சால்வையை மாற்றவில்லை; அவர் எலிசாவுக்கு சால்வையை பொருத்தும்படி கட்டளையிட்டார். அதைத்தான் அவர் இன்றைக்கும் செய்கிறார். அவர் சால்வையைப் பொருத்தும்படி நம்மை மாற்றுகிறார், நமக்குப் பொருத்த சால்வையை அல்ல. சில சமயங்களில் நாம் அந்தச் சால்வையை நமக்குப் பொருத்தமாக உண்டு பண்ண விரும்புகிறோம், ஆனால் நம்மால் அதைச் செய்ய முடியாது. அந்தச் சால்வைக்காக நீங்கள் உங்களையே மாற்றியமைக்க (விட) வேண்டும். அது தேவனுடைய சால்வை, அவர் அதைப் பரிபூரணப்படுத்தினார். நாம் பெற்றுள்ளோம்…நமக்கு அந்த சால்வை பொருத்தும்படியாக, அவர் நம்மை அந்த மண்டலத்திற்குள் கொண்டுவர வேண்டும். 41 எனவே நாம் நம்மையே பரிபூரணப்படுத்த முடியாது. நம்மால் முடியாது என்பதை நாம் அறிவோம். நாம் அவ்வாறிருக்க வழியேக் கிடையாது, அதே சமயத்தில் நாம் அவ்வாறிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். எனவே, ஆனால், அவர் என்ன செய்தாரோ, அவர் நமக்காக ஒரு பாவநிவிர்த்தி பலி செலுத்தினார்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும், அவருடைய நீதியையுமே. அங்குதான் பரிபூரணம் வருகிறது; நம்மிடம் இல்லாத நம்முடைய சொந்த பரிசுத்தத்தைப் புறக்கணிப்பதன் மூலம்; நம்முடைய சொந்த சிந்தனைகள், அவ்விதமாக இருக்கக் கூடாதவைகளாகும். ஆனால் நாம் கர்த்தராகிய இயேசுவின் முடிவுற்ற கிரியையின் பேரில் பயபக்தியோடு சார்ந்திருக்கிறோம். தேவன் அவரைப் பூமிக்கு அனுப்பினார், நாம் இளைப்பாறுவது அவருக்குள் இருந்தது.

1542 கவனியுங்கள், இத்தனை வருடங்களாக, நாம் அறிந்தமட்டில், அவன் அந்த ஒரு சால்வையின் அபிஷேகத்தை மாத்திரமே பெற்றிருந்தான். ஆனால் காலங்களினூடாக, தேவன் மனிதனின் குணாதிசயத்தை, அவனுடைய அழைப்புக்குப் பிறகு, அவர் அந்த சால்வையில் பொருந்தி, அவன் கர்த்தருடைய ஊழியக்காரனாயிருக்க வேண்டும் என்றிருந்தார். 43 அதன்பின்னர் எலியா கடந்து சென்று அதை அவன்மீது போட்டபோது, அவர்கள் கில்காலை நோக்கியும் மற்ற அநேக இடங்களை நோக்கியும் புறப்பட்டுச் சென்று, தீர்க்கதரிசிகளின் பள்ளிக்குச் சென்று, தங்களுடைய பாதையில், பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். முடிவிலே எலியா எலிசாவை திரும்பிச் போக முயற்சித்துக் கொண்டிருந்தான். நீங்கள் அதைக் கவனித்தீர்களா? அவனைத் திரும்பிப் போகச் செய்ய முயற்சித்துக் கொண்டிருத்தல். மேலும், “நான்…” என்றான். இல்லையென்றால், “மகனே, இந்தப் பாதை உனக்குச் சற்று செங்குத்தானதாக இருக்கலாம். ஒரு வேளை நீ நடந்து செல்ல முடியாதபடி அது சற்று குறுகலாயிருக்கலாம்” என்றான். 44 எலியா இருந்த இடம் நேர்மையாயிருந்தது என்பதை, நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய உண்மையான ஊழியக்காரன் எங்கெல்லாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறானோ, அங்கெல்லாம் அது பிரசங்கிக்கப்படுகிற கலப்படமற்ற, நேரான சுவிசேஷமாக இருக்கிறது.

1645 ஏன், ஒரு நாள், அவன் தீர்க்கதரிசிகளின் வேதபாட பள்ளிக்கு அவர்களைச் சந்திக்கச் சென்றான், அவர்கள் அவனை அங்கிருந்து செல்லும்படி கூறினர். அவர்கள், “அது எங்களுக்கு, இங்கே மிகவும் நேராக உள்ளது” என்றனர். 46 இன்றைக்கு நமக்குத் தேவை என்னவென்றால் இன்னும் சற்று நேரான, சுவிசேஷப் பிரசங்கமே அது கோதுமையை பதரிலிருந்து பிரிக்கும், அல்லது சரியானதை தவறானதிலிருந்து பிரிக்கும். சரியானது “சரி” என்றும், தவறானது “தவறென்றும்” இருக்கட்டும். 47 இந்த நபர்கள் யாவரும் தங்களுடைய அனுபவத்தைக் கொண்டும், அவர்கள் இருந்த யாவருமே! அவர்கள் புசிக்க ஏதோ ஒன்றை கொண்டு வரும்படி அனுப்பினர், அவர்களில் ஒருவன் ஒரு பேய்க்கொம்மட்டி கொடியைக் கண்டு, சில காட்டு காய்களைச் சேகரித்து, அவர்களுடைய மதசம்பந்தமான பானையில் மரணத்தைச் சமைத்தனர். மேலும், முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அவர்கள், “பானையில் சாவு இருக்கிறது!” என்று சத்தமிட்டனர். 48 ஆனால் எலிசாவோ என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்தான், எனவே அவன் ஒரு கைப்பிடி அளவு மாவினை பானையில் போட்டான். “இப்பொழுது போய் அதைப் புசியுங்கள்” என்றான். வேறுவிதமாகக் கூறினால், அவர்கள்…

1749 இன்றைக்கு, ஒரு மாதிரியாக, நாம் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன், பெந்தேகோஸ்தே, மற்ற யாவும் ஒன்று சேர்ந்து ஒன்றுக்கொன்று எதிராகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் முழு காரியத்தையும் அகற்றிவிட்டு, அதை ஒழிக்க வேண்டியதில்லை. நமக்கு மற்றொரு கைப்பிடி அளவு ஆகாரம் தேவை. அதே சபையைக் காத்துக்கொள்ளுங்கள். 50 அந்தப் பள்ளியின் வீட்டிலிருந்து வந்த ஆகாரம், ஜனங்கள் கொண்டு வந்த போஜன பலியாகும், அறுப்பின் முதற்பலன்களான ஒவ்வொரு மாவையும் ஒரேவிதமாக உண்டாக்குகிற ஒரு குறிப்பிட்ட இயந்திர சக்கரத்தினால் அரைக்கப்பட்டது. அதன்பின்னர்… 51 இந்த ஆகாரம், ஒரேவிதமாக இருப்பது கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரியாயிருந்தது. ஆகாரம் என்பது ஜீவன். கிறிஸ்துவின் முன்னடையாளமாயிருக்கும்போது, மாவு, அதே போல் அரைக்கப்படும்போது; “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று பொருள்படுகிறது. போஜன பலியில் உள்ள போஜனம், அவர்கள் இந்த ஆகாரத்தை அதற்குள் வைத்தபோது, கிறிஸ்துவை மரணத்திற்குள்ளாக வைப்பது ஜீவனைக் கொண்டு வந்தது. அதுதான் நம்முடைய மரித்த ரூபத்திலும், நம்முடைய வேறுபாடுகளிலும், நம்முடைய மதசம்பந்தமான வாக்குவாதங்களிலும் மற்றும் ஒவ்வொரு காரியத்திலும் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. நாம் கிறிஸ்துவை அதற்குள் கொண்டு வந்தால், நாம் அதைச் செய்தால், அது மரணத்தையும், பிரிவினையையும், ஜீவனுக்குள் மாற்றும். 52 அமெரிக்காவில் ஒரு கோடியே தொண்ணூறு இலட்சம் பாப்டிஸ்டுகள் உள்ளனர். அமெரிக்காவில் ஒரு கோடியே மூன்று இலட்சம் மெத்தோடிஸ்டுகள் உள்ளனர். அமெரிக்காவில் ஒரு கோடியே பத்து இலட்சம் லூத்தரன்கள் உள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஒரு கோடி பிரஸ்பிடேரியன்கள். எத்தனை கத்தோலிக்கர்கள் எந்த ஸ்தாபனத்தையும் விஞ்சி விடுகிறார்கள் என்பதை தேவன் மாத்திரமே அறிந்திருக்கிறார். ஆனால், அவை எல்லாவற்றிலும், நமக்கு என்ன தேவை? ஒரு கைப்பிடி அளவு ஆகாரம். நாம் சபைக்கு ஜீவனைக் கொண்டு வர வேண்டும். கிறிஸ்துவே அந்த ஜீவன். அவர் நமக்கு ஜீவனைக் கொண்டு வர வந்தார்.

1853 எனவே, அவர்கள் தங்களுடைய வாக்குவாதங்களையும், அவர்களுடைய பள்ளிகளையும், அவர்களுடைய வேத…இறை சாஸ்திரங்களையும், போன்றவற்றை உடையவர்களாயிருந்தனர். 54 அப்பொழுது எலியா எலிசாவிடம், “நீ திரும்பிப் போவது நல்லது, ஏனென்றால் வழி சற்று கடினமாயிருக்கலாம்” என்றான். ஆனால் ஒரு தேவனுடைய மனிதன் அதை ஒருமுறை சந்தித்திருந்தால், அல்லது தேவனுடைய நீதியும், வல்லமையும் என்னும் சால்வை தன்னுடைய தோளின்மேல் போடப்பட்டிருந்தால், திரும்பிச் செல்வது அவ்வளவு எளிதல்ல. 55 இந்தக் காலையில் போதகர் கூறியதை நான் கேட்டபோது, நம்முடைய…“அநேகர் சோர்வடைந்து கொண்டிருக்கிறார்கள்.” நமக்குத் தேவை என்னவெனில், சகோதரனே, தைரியமாயிருக்க வேண்டும்! நமக்குத் தேவை என்னவெனில், உற்சாகப்படுத்தப்பட வேண்டும், அது உண்மை. சோதனைகள் வரலாம். நாம் அவர்களிடத்திலிருந்து விடுபடும்படி ஒருபோதும் வாக்குத்தத்தம் பண்ணப்படவில்லை, ஆனால் அவைகளின்னூடாகச் செல்ல அவர் கிருபையை அளிப்பார். மலையானது கடந்து செல்ல முடியாதபடி மிக உயரமாயிருந்தாலும், கீழே செல்ல முடியாதபடி மிக ஆழமாயிருந்தாலும், அதைச் சுற்றிச் செல்ல முடியாதபடி மிகவும் அகலமாயிருந்தாலும், அதைக் கடந்து செல்ல அவர் கிருபை அளிப்பார். அது உண்மை. கவலைப்பட வேண்டாம், ஆனால் உங்கள் கண்களைக் கிறிஸ்துவின் மேல் வையுங்கள், ஏனென்றால் அவர் ஒருவரே நம்மைக் கொண்டு செல்ல முடியும்.

1956 இப்பொழுது, அவர்கள் பிரயாணம் செய்து பள்ளிக்கு வரும்போது, நாம் அவர்களைக் காண்கிறோம். அவன், “நீ இப்பொழுது இங்கேயே தங்கியிரு. இங்கிருந்து, நிலைத்திருந்து, மற்றும் அது போன்ற ஒரு நல்ல வேத சாஸ்திர போதகராயிருக்க வேண்டும். நீங்கள் அநேகமாக என்றோ ஒரு நாள் இங்குள்ள கல்லூரியின் தலைவராகலாம். ஆனால் நான் இன்னும் சிறிது தூரம் கீழே செல்ல வேண்டும்” என்றான். 57 ஒரு தேவனுடைய மனிதன் நின்றுகொண்டிருந்த இடத்தைச் சுற்றிலும் தேவனுடைய வல்லமை இருந்தபோது, அவன் ஒரு கல்லூரியின் தலைவராவதற்கு திருப்தியடைந்திருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இல்லை ஐயா. அவன், “நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்கிறேன்” என்றான். நான் அதை விரும்புகிறேன். 58 அதனோடு நிலைத்திருங்கள், எவ்வளவுதான் மனச்சோர்வடைந்தாலும் கவலைப்படாமல், அது உங்களுடைய தாயாரிடத்திலிருந்தோ, உங்களுடைய தகப்பனிடத்திலிருந்தோ அல்லது உங்களுடைய போதகரிடத்திலிருந்தோ கூட வருகிறது. அவரோடு தரித்திருங்கள்.

2059 அவர்கள் யோர்தானுக்கு சென்றனர். அவர்கள் கடந்து சென்றனர். அப்பொழுது எலியா, “இப்பொழுது, நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். 60 அவன், “உம்மிடத்தில் உள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய் கிடைக்கும் படி வேண்டுகிறேன்” என்றான். அவன் செய்ய வேண்டிய ஒரு வேலை இருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். அவன், “ஒரு இரட்டிப்பான பங்கு” என்றான். வெறுமென ஒரு நல்ல அன்பான அனுபவமல்ல, ஒரு நல்ல கரங்குலுக்குதல் அல்ல, அல்லது சபையின் மற்றவர்களோடு ஒரு நல்ல ஐக்கியம் அல்ல. ஆனால், “எனக்குத் தேவை என்னவெனில், இப்பொழுதுள்ள மிகச் சிறந்ததைக் காட்டிலும் இரட்டிப்பான பாகத்தையே நான் விரும்புகிறேன்.” 61 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு உலகப் பணிக்காகத் தேவன் ஒரு மனிதனை வைக்கும்போது, அவன் உலகம் பெற்றுள்ளதைக் காட்டிலும் மேலான ஏதோ ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். சபை பெற்றுள்ளதைக் காட்டிலும் மேலான ஒன்றை அவன் பெற்றிருக்க வேண்டும். அவன் இரட்டிப்பான பாகத்திற்காகச் செல்ல வேண்டியவனாயிருக்கிறான். 62 எப்பொழுதாவது ஒரு நேரத்தில் இரட்டிப்பான பாகம் தேவைப்பட்டிருந்தால், அது இன்றைக்கு, ஜனங்களின் மண்டலங்களில்; மேலான ஏதோ ஒரு காரியம், ஏதோ மேலான ஒன்று. என்னால் முடியாது…பீன்ஸ் மற்றும் சோள ரொட்டி மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன், ஆனால் சில சமயங்களில் நான் சற்று உயரமாகச் ஏற வேண்டியதாயுள்ளது. நாம் அதைச் செய்கிறோம்; நாம் செய்ய வேண்டும். நாம் தொடர்ந்து ஏறிக் கொண்டேயிருக்க வேண்டும். இஸ்ரவேல் தொடர்ந்து ஒரே இடத்தில் தங்கியிருந்ததால் அவர்கள் பின்மாற்றமடைந்து கொண்டிருந்தனர். அவள் முன்னேறிச் செல்ல வேண்டும் அல்லது பின்வாங்கிக் கொண்டிருக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் சபையும் உள்ளது.

2163 எனவே, அவர்கள் நடந்து செல்லும்போது, அவர் சொல்லச் சில நிமிடங்கள் மட்டுமே ஆனது, “நீ ஒரு மகத்தான காரியத்தைக் கேட்டிருக்கிறாய், ஆனாலும், நான் போகும்போது நீ என்னைக் காண்பாயானால், நீ கேட்டுக்கொண்டதை உனக்குப் பெற்றுக்கொள்ள முடியும்” என்றான். 64 இப்பொழுது, வாக்குத்தத்தத்தின் மேல் உங்களுடையக் கண்ணை வைத்திருத்தல், ஒருமைப்படுத்தப்பட்ட இருதயம், ஒருமுகப்பட்ட தன்மை கொண்ட கண்ணும் கருத்துமுடையதாய் இருக்க வேண்டும். ஹூம்! நீங்கள் இந்தக் காலையில் சுகவீனமாயிருந்தால், நீங்கள் துன்பப்பட்டிருந்தால், ஒரு மகத்தான வாக்குத்தத்தம் உண்டு; எலியாவினால் அல்ல, ஆனால் தேவனால்தாமே. “நீ விசுவாசிக்கக் கூடுமானால், நீ ஜெபிக்கும்போது, நீ கேட்டுக்கொள்வதெதுவோ அதைப் பெற்றுக் கொள்வாய் என்று விசுவாசி, நீ அதைப் பெற்றுக் கொள்வாய்.” இது எவ்வளவு இருக்கிறது அல்லது அது இருக்கிறது என்று மருத்துவர் என்ன கூறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை; வாக்குத்தத்தத்தின் பேரிலான விவாகத்தை காத்துக்கொள்ளுங்கள். 65 எலியா அவனுக்கு ஒரு நிபந்தனையைக் கொடுத்தான்: “நான் போகும்போது நீ என்னைக் கண்டால், அது உன்மேல் வரும்”. 66 “நீ விசுவாசிக்கக் கூடுமானால், விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்” என்ற ஒரு வாக்குத்தத்தம் உண்டு.

2267 சில சமயங்களில் நான் என்னையே பார்த்து, “நான் என் வாழ்க்கையில் அப்படிப்பட்ட ஒரு இழுதுமீனாக இருந்து வருகிறேன். நான் பல்லாயிரக்கணக்கான ஆத்துமாக்களை, இராஜ்ஜியத்திற்காகக் காத்திருந்து, தவறவிட்டிருக்கிறேன், ஏனென்றால் நான் காத்திருந்து, ‘தேவன்…’ ஒரு ஆவிக்குரிய வரத்தின் பேரில் அதிகமாகச் சார்ந்திருந்தேன். மேலும், ‘கர்த்தாவே, என்ன செய்ய வேண்டுமென்று நீர் எனக்கு ஒரு தரிசனத்தைத் தந்தால், நீர் எனக்குக் காண்பிப்பீரானால் நலமாயிருக்கும்’” என்றேன். தேவன் ஒரு தரிசனத்தை அளிக்கிறார். பிறகு நான் திரும்பவும், வேறு யாராகிலும் என்னிடத்தில் பேசி மாற்ற அனுமதிக்கிறேன். 68 மேலும், ஓ, நான் இன்னும் அந்த இடத்திற்கு ஒருபோதும் வரவில்லை, நான்…இந்த நேரத்தில் நான் கொண்டிருப்பது போன்றே, அது ஒரு விசுவாசம் என்பதை நான் உணருகிறேன், நாம் அங்கிருந்து அடியெடுத்து வைக்க வேண்டும், ஏனென்றால் அது ஒரு வாக்குத்தத்தமாயிருக்கிறது. அவர் செய்திருக்கிற காரியங்களையும், அவர் செய்திருக்கிற சுகமளித்தல்களையும், அற்புதங்களையும்; அதனால், அவர் இறங்கி வந்து, அவருடைய புகைப்படம், போன்றவற்றை நமக்குப் பக்கத்தில் எடுத்துக்கொண்டார். அது உலகத் தோற்றம் முதற்கொண்டே ஒருபோதும் அறியப்படாதிருந்தது. அதன்பின்னர் ஒரு இழுதுமீனைப் போல நிற்கிறீர்களா? அது என்னையும் கூடச் சோர்வடையச் செய்கிறது. வாக்குத்தத்தத்தின் மேல் உங்களுடைய கண்களை வைக்க வேண்டிய நேரமிது. 69 தேவனுடைய கிருபையினால் அதைத்தான் நான் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு இருக்கிறேன். நரகத்தின் ஒவ்வொரு பிசாசும் அதைச் சுடும் என்பதை நான் உணருகிறேன். ஆனால், தேவனுடைய கிருபையினால், வாக்குத்தத்தத்தின் மேல் என்னுடைய கண்ணை வைக்க வேண்டும் என்ற நோக்கத்தை நான் கொண்டிருக்கிறேன்.

2370 எலிசா, “நீர்” அல்லது எலியா, “நான் போகும்போது நீ என்னைக் காண்பாயானால், நீ கேட்டுக்கொள்வதை நீ பெற்றுக்கொள்வாய்” என்றான். அது உண்மை. நீங்கள் உங்களுடைய கண்களை அதன் மேல் வைத்திருக்க வேண்டும்; வாக்குத்தத்தத்தைக் கவனியுங்கள். பள்ளிக்கூடத்தில் சிலர் இருந்தால் என்ன செய்வது, அவன் திரும்பிப் பார்த்து, “ஏய், பையன்களே, தீர்க்கதரிசியின் பின்னே செல்லும்போது, நான் இப்பொழுது எப்படியிருக்கிறேன்?” என்று கூறினால், அவன் ஒரு வேளை தவறியிருப்பான். ஆனால் பள்ளி என்ன நினைத்தாலும் அல்லது எல்லா ஆசிரியர்களும் என்ன நினைத்தார்கள் என்று அவன் கவலைப்படவில்லை. அண்டை வீட்டார் என்ன நினைத்தார்கள், அல்லது யார் அவனைப் பார்த்தார்கள் என்று அவன் கவலைப்படவில்லை. அவன் வாக்குத்தத்தத்தில் தன்னுடைய விசுவாசத்தைக் காத்துக்கொண்டான். 71 இன்றைக்கு நமக்குத் தேவை என்னவெனில், தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரில் உள்ள விசுவாசமே, இந்த ஒருவர் என்ன கூறுகிறார் என்பதற்கும் அல்லது அந்த ஒருவர் என்ன கூறுகிறார் என்பதற்கும் கவனம் செலுத்த வேண்டாம். 72 ஒரு சகோதரன் கூறியதுபோல, ஒரு ஊழியக்காரன் ஊமையான இரண்டு பெண் பிள்ளைகளை உடையவனாயிருந்தான், “பிள்ளைகளைச் சுகமாக்க முடியாது” என்று, தெய்வீக சுகமளித்தலின் பேரிலான குறைகூறுதல். 73 கூறுபவர்களுக்குக் கவனம் செலுத்த வேண்டாம். வாக்குத்தத்தத்தின் மேல் உங்களுடைய விசுவாசத்தை காத்துக்கொள்ளுங்கள். தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்! “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், தேவன் அவர்களை எழுப்புவார்.” அவரால் ஒரு செவிடான ஊமையை கேட்கும்படி செய்ய முடிந்தால், அவரால் மற்றொரு செவிடான ஊமையையும் செய்ய முடியும். அவர் அதைச் செய்கிறார் என்று நாம் பிழையற்ற நிரூபணங்களின் மூலம் அறிகிறோம். வாக்குத்தத்தத்தின் பேரில் நம்முடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம். நம்முடைய கண்களை ஒரே நோக்கத்தோடும்; நம்முடைய காதுகளை ஒரே நோக்கத்தோடும்; நம்முடைய இருதயங்களை ஒரே நோக்கத்தோடும்; இயேசு கிறிஸ்துவின் பேரிலான ஒரே காரியத்தில் வைத்திருக்க வேண்டும், அவர் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். ஓ, நாம் அதைக் குறித்து சிந்திக்கும்போது, நாம் அதைப் பெற்றுக்கொள்ளும்போது அது முழு காட்சியையும் மாற்றுகிறது. தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார். தேவன் ஒருவரே அதைக் கூறினார். 74 இப்பொழுது, இங்கே தேவனுடைய பிரதிநிதி அதைக் கூறினார், இப்பொழுது தேவன் தாமே அதைக் கூறியுள்ளார். அப்படியானால் நாம் என்ன செய்ய முடியும்? அதன்பேரில் நம்முடைய சிந்தையை வைத்திருப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. “நான் போகும்போது நீ என்னைக் காண்பாயானால், நீ வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்றான். எலிசா தன்னுடைய கண்களை எலியாவின் மேல் வைத்திருந்தான். ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் என்ன சத்தம் எழுப்பப்பட்டாலும், ஒவ்வொரு பக்கத்திலிருந்து என்ன சம்பவித்தாலும், அதற்கு முன்பு என்ன நடந்ததென்றால், அவன் அதை நோக்கிப் பார்க்கவேயில்லை. அவன் வாக்குத்தத்தத்தின் மேல் தன்னுடைய கண்களை வைத்திருந்தான். அங்குதான் உங்கள் கண்கள் வாக்குத்தத்தத்தின் மேல் உள்ளன. 75 அன்றொரு இரவு நாங்கள் சந்தித்த அந்தப் பெண்மணி, சகோதரி சாவரைக் குறித்து நான் நினைக்கிறேன். அவள் எவ்வளவு மோசமாக இருந்தாள் என்று மருத்துவர் அவளிடம் கூறினார். நான் அவளிடம் கூறவேயில்லை; அன்பார்ந்த ஒருவரிடம் கூறினேன். அவள் சுகமடைவது எவ்வளவு கூடாத காரியம். இப்பொழுது, சகோதரன், அவளுடைய மருமகன் அதைக் குறித்து என்னிடத்தில் கேட்டார். நான், “அவள் வாக்குத்தத்தத்தின் மேல் தன்னுடைய கண்களை வைத்திருக்க முடிந்தால் நலமாயிருக்கும்” என்றேன். என்ன சம்பவித்தாலும் கவலைப்படாமல், உங்கள் கண்களை வாக்குத்தத்தத்தின் மேல் வைத்திருங்கள்.

2476 ஒரு சில வாரங்களுக்கு முன்பு, இங்குள்ள சகோதரி உட், மற்றும் சகோதரன் உட், நம்முடைய இரு நெருங்கிய நண்பர்களும் இங்கே சபையில் இருந்தனர். நான் என்னுடைய நண்பர்களான லியோ மற்றும் ஜீன் ஆகியோருடன் மிக்சிகனில் இருந்தேன். நாங்கள் சிக்காகோ கூட்டத்திலிருந்து புறப்பட்டு, அவர்களுடைய ஜனங்கள் சிலருடன் சென்றிருந்தோம், ஏனென்றால்…மான் வேட்டைக்கு இரண்டு நாட்கள் செல்ல வில்லையும், அம்புகளையும் வைத்துக் கொண்டோம். நான் திரும்பி வரும் வழியில், என் மனைவி என்னிடத்தில், அவள், “திருமதி உட்ஸ் அவர்களின் தாயாருக்காக ஜெபியுங்கள். ஒரு புற்று நோய் அவளுடைய முகத்தை அரித்துவிட்டது” என்றாள். மேலும், “சகோதரி உட் மிகவும் பயமடைந்தை நான் ஒருபோதும் கண்டதில்லை. அவள் அழுதுகொண்டிருக்கிறாள்” என்றாள். தேவன் அவளுடைய கால் ஊனமுற்ற பையனைச் சுகப்படுத்தி, காசநோய் போன்றவற்றிலிருந்து அவளைச் சுகப்படுத்தினது முதற்கொண்டு, சகோதரி உட் எப்பொழுதுமே ஒரு விசுவாச வீராங்கனையாக இருந்து வருகிறாள். ஆனால் அவள் நிலைகுலைந்து போயிருந்தாள். 77 அந்த இரவு அந்த அறையில் நாங்கள் ஜெபித்தோம். திருமதி உட்ஸ் உள்ளே வந்து, “சகோதரன் பிரான்ஹாம், நாங்கள் அங்குச் செல்வோம்” என்றாள். நாங்கள் லூயிவில்லில் இருந்த அவளுடைய தாயாரிடம் சென்றோம். அவளுக்கு அவளுடைய மூக்கின் பக்கத்தில் ஒரு புற்று நோய் இருந்தது. மருத்துவர் அதைச் சிதைத்து, அதைப் பரவச் செய்துவிட்டபடியால்; அவளுடைய மூக்கின் பக்கவாட்டில் ஒரு சிறு வட்டமுள்ளபடி, அவளுடைய கண்ணிலிருந்து சுமார் எட்டில் ஒரு அங்குலம் உயரத்தில் எலும்பு மாத்திரம் இருந்தது. அது எவ்வளவு வேகமாகத் அரித்துவிட முடியுமோ அவ்வளவு வேகமாக அதை அரித்துவிட்டது.

2578 நான் அறைக்குள் சென்று முழங்காற்படியிட்டேன். நான், “நான் அவளிடம் தனியாகப் பேச விரும்புகிறேன்” என்றேன். நான் அந்த ஸ்திரீயோடு ஜெபிக்க அறைக்குள் சென்றேன். நான் அறையில் இருந்தபோது, நான், “ஓ, தேவனே, அந்த ஸ்திரீக்கு என்ன சம்பவிக்கப் போகிறது என்பதைக் குறித்த ஒரு தரிசனத்தை நீர் எனக்குக் காண்பிப்பீரானால் நலமாயிருக்குமே” என்று எண்ணினேன். திரு. மற்றும் திருமதி உட் அவர்கள் தரிசனம் என்ன சொல்லும் என்று காண வெளியில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தனர். 79 ஆனால் நான் அங்கிருந்தபோது, நான் கடிந்துகொள்ளபட்டேன். ஒரு தரிசனத்திற்காகக் காத்திருப்பதால் நான் கடிந்துகொள்ளபட்டேன். ஏதோ ஒன்று பின்னாலிருந்து, “அழைப்பு அது அல்ல. வாக்குத்தத்தம் ஏற்கனவே கூறப்பட்டிருக்கும்போது, உனக்கு ஒரு தரிசனம் தேவையா?” என்பது போலக் குறிப்பிட்டது. எனவே நான் முழங்காற்படியிட்டு ஜெபித்தேன். ஜெபித்துக் கொண்டிருக்கையில், வாக்குத்தத்தத்தின் விசுவாசம், உட்புறத்தில் நங்கூரமிடப்பட்ட ஒன்று. 80 வெளியே திரும்பி வந்தேன். திருமதி உட் அவர்களிடத்தில் நான் அதைக் குறித்து கூறியபோது, அவள், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் எதையாவது பார்த்தீர்களா?” என்று கேட்டாள். 81 நான், “நான் எதையும் சரியாக காணவில்லை, ஆனால் நான் ஏதோ ஒன்றை உணர்ந்தேன் அது அவருடைய வாக்குத்தத்தம் உண்மையானது என்றும், அவர் அதைச் செய்யப் போகிறார் என்றும் என்னிடம் கூறினார். அவர் அதைச் செய்யப்போகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றேன். 82 மேலும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள், அந்தப் புற்று நோயின் முனை உடையத் துவங்கி, அதன் மேல் ஒரு தழும்பு உருவானது. உங்களுக்குத் தெரியும், புற்று நோய் மரித்திருந்தாலொழிய அது தழும்பை ஏற்படுத்தாது. எனவே இப்பொழுதும் அது அங்கிருந்தது. அந்த ஸ்திரீ சுகமடைந்து, வீட்டிலேயே இருக்கிறாள். என்ன ஒரு அற்புதமான கிறிஸ்து! வாக்குத்தத்தத்தின் மேல் நம்முடைய கண்களை வைத்திருப்பதன் மூலமே! தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்!

2683 ஆனால் நாம் சில சமயங்களில் ஜெபிக்கப்படும்போது, நாம் போய், “நல்லது, அது உடனடியாகச் செய்யப்படவில்லை, எனவே நாம் மீண்டும் திரும்பிச் செல்வது நல்லது” என்று கூறுகிறோம். ஓ, இல்லை. 84 வாக்குத்தத்தத்தின் மேல் உங்களுடைய கண்களை வைத்திருங்கள். தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார், அதுவே இதற்குத் தீர்வாகிறது. அவ்வளவுதான். தேவன் அவ்வண்ணமாய் கூறியிருந்தால், தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்ள முடியும், இல்லையென்றால் அவர் அதை ஒருபோதும் நிறைவேற்றவேமாட்டார். 85 ஆபிரகாம் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைத்தான். மேலும், இருபத்தைந்து ஆண்டுகளாக, கூடாத காரியத்தின் பேரில் நின்றான், ஏனென்றால் தேவன் வாக்குத்தத்தம் செய்திருந்ததை நிறைவேற்ற வல்லவராயிருந்தார் என்று அவன் எண்ணினான். ஆமென். நாம் விசுவாசத்தினால் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருக்கிறோம்.

2786 நிச்சயமாகவே, எலியா தன்னுடைய கண்களை, இல்லை, அவர்கள் தொடர்ந்து செல்லும்போதும், எலிசா எலியாவின் மேல் வைத்திருந்தான். சிறிது நேரம் கழித்து, இரதம் வந்து அவர்களை ஒரு பக்கமாகவும், மற்றொரு பக்கமாகவும் பிரித்தது, அதன்பின்னர் அது எலியாவை ஏற்றிச் சென்றது. அதன்பின்னர்…அவன் இரதத்தின் மேல் ஏறிச் சென்று, தன்னுடைய தோளின் மேலிருந்த சால்வையைக் கழற்றி எலிசாவுக்குத் வீசியெறிந்தான். ஏனென்றால் எலிசா அதற்குள் வளர்ந்திருந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள், எனவே அது அவனுக்குச் சரியாகப் பொருந்தினது. உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா…? 87 ஓ, என்னுடைய தொண்டை கரகரவென்றிருப்பதை நான் உணரும்போது, நீங்கள் உங்களுடைய முழுமையான கவனத்தை எனக்குச் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். 88 எலிசா இந்த சால்வையை எடுத்தபோது, அவன் எப்படி உணர்ந்தான் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா, அதைத் தன்னுடைய சொந்த தோளின் மேல் போட்டுக் கொண்டானா? ஓ, என்னே ஒரு உணர்வு!

2889 இது தனிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்று நான் பொருட்படுத்திக் கூறவில்லை, ஆனால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இங்கே பிரசங்க பீடத்திலிருந்து, நான் ஒரு பிரசங்கத்தைப் பிரசங்கித்தேன்; தாவீது தன்னுடைய கையில் ஒரு கவணை ஏந்திய போர்வீரன், அவனுக்கு முன்பாகக் கோலியாத். அந்நாட்களில் நாம் அறிந்ததுபோல, சுகமளிக்கும் கூட்டங்கள் எதுவும் களத்தில் இருக்கவில்லை. மேலும், ஓ, தெய்வீக சுகமளித்தலின் பேரில் ஜனங்கள் எவ்வளவாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்! ஆனால் அவரைச் சந்தித்த பிறகு, ஏதோ ஒன்று இருந்தது. நான் என்னுடைய சிந்தையை இழந்துகொண்டிருப்பதாகவும், அது அவ்வண்ணமாய் இருக்க முடியாது என்றும் போதகர்கள் என்னிடத்தில் கூறினர். ஆனால், இங்கே இதே பிரசங்க பீடத்திலிருந்தே நான் தாவீதைக் குறித்து பேசினேன். மேலும், “ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை, அந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியன் இந்தச் சேனையை எதிர்த்து நிற்க அனுமதிக்கலாம் என்று, நீங்கள் என்னிடத்தில் பொருட்படுத்தி கூறுகிறீர்களா?” 90 ஒரு சிறிய குறுகிய தோள்பட்டைக்காரன், சுருள் முடி கொண்ட ஒரு பையன் செம்மறியாட்டுத் தோலை சட்டையாக அணிந்து, அவனுடைய கையில் ஒரு கவணோடு; ஒரு முழு இஸ்ரவேல் சேனையும் ஆதரவாக நின்று கொண்டிருந்தது. அவன், தனியே, வெளியே நடந்து சென்றான். ஒரு மனிதனுடன், ஒரு—பத்தொன்பது அடி நீளமுள்ள ஒரு ஈட்டியும், அதன் முனையில் இருந்த பொருள் பல சேக்கல் எடையும் கொண்டது, ஒருக்கால் அது இருபது பவுண்டுகள் எடையுள்ள எஃக்கால், கூர்மையாக்கப்பட்ட, பத்தொன்பது அடி நீளமுள்ள ஈட்டியாய் இருந்தது, பதினான்கு அங்குல நீளமுள்ள விரல்களைக் கொண்டவனாய் இருக்கலாம். தாவீது அநேகமாகத் தொண்ணூறு பவுண்டுகள் எடையுள்ளவனாயிருந்தான், அவன் ஒரு சிறு சேவலைப் போல மேலும் கீழும் துள்ளினான், ஓ, என்னே, “அந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனை நீ விட்டுவிடு” என்று “நீ என்னிடம் கூறுகிறாயே!” என்று கூறினான். அவன் தன்னுடைய ஸ்தானத்தில் தரித்திருந்தால், அவன் தரித்திருக்கட்டும், ஆனால் அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை எதிர்க்கிறான்” என்றான். ஓ, என்னே, என்னே ஒரு வீரன்! “நீங்கள் எல்லோரும் போய் அவனுடன் சண்டையிட பயப்படுகிறீர்களா?” அதற்கு அவன், “அவனை நான் பார்த்துக் கொள்ளட்டும்” என்றான். ஓ, என்னே! அவன், “பரலோகத்தின் தேவன் ஒரு சிங்கத்தை ஒரு கவனால் கொல்லும்படி என்னை அனுமதித்தார், அவர் ஒரு கரடியை ஒரு கவனால் கொல்லும்படி என்னை அனுமதித்தார், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனை என் கையில் ஒப்புக்கொடுப்பது எவ்வளவு நிச்சயம்!” நிச்சயமாக.

2991 முதல் ஜெயம் பெற்றபோது, கோலியாத் வீழ்த்தப்பட்டபோது, முழு இஸ்ரவேலின் சேனைகளும் தாவீதைப் பின்பற்றின. அவர்கள் தலைகளைத் துண்டித்து, அடித்து, இஸ்ரவேல்…இல்லை பெலிஸ்தியர்களை அவர்களுடைய சொந்த தேசத்திற்குள்ளாக அடித்து நொறுக்கினர். இவர்கள் அவர்களை மூலைகளில் பின்தொடர்ந்து, அவர்களைக் கொன்று, அவர்களின் நகரங்களையும், எல்லாவற்றையும் கைப்பற்றி, வெற்றி பெற்றனர். 92 சகோதரனே சகோதரியே, அதே காரியம் இயற்கைக்கு மேம்பட்ட மண்டலங்களிலும் செய்யப்பட்டிருக்கிறது, அவர்கள், “தெய்வீக சுகமளித்தல் கிரியை செய்ய முடியாது. அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன” என்று கூறினபோது. அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டால், தேவனுடைய நாட்கள் கடந்துவிட்டன. இயற்கைக்கு மேம்பட்டதை விசுவாசிக்காத சபை முடிவிலே மரிக்கும், தேவன் சபையை விட்டுச் செல்வார். செல்லத்தான் வேண்டும்! தேவன் வாக்குத்தத்தத்தை அளித்தார், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நித்தியமானவை.

3093 இங்கே சில காலத்திற்கு முன்பு சில பெண்கள் கதிரியக்கத்தைக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தபோது, அதைத் தோய்த்து, கைக்கடிகாரங்களில் ரேடியம் வர்ணம் தீட்டுவார்கள். நான் வைத்துள்ள இந்த ஒன்றிலும் சில உள்ளன. ஒரு பெண் தவறுதலாக, அந்தத் தூரிகையை எடுத்துத் தன்னுடைய வாயில் போட்டுக் கொண்டாள். அது அவளைக் கொன்றுவிட்டது. அநேக வருடங்கள் கழித்து, அவர்கள் ஒரு நுண்ணோக்கியை எடுத்து அந்தப் பெண்ணின் மண்டை ஓட்டின் மேல் வைத்து, “பர்-பர்-பர்” என்று ஒலி எழுப்பும் ஒலியை அவர்களால் இன்னமும் கேட்க முடிந்தது. அது முடிவற்றதாயுள்ளது. அது தொடர்ந்து கிரியை செய்து கொண்டேயிருக்கிறது. அதற்கு எந்த நிறுத்தமும் கிடையாது. 94 மேலும், ஓ, சகோதரனே, ரேடியம் அந்த விதமான ஒரு விளைவை நமக்குள் உண்டாக்கினால், முடிவற்ற, நித்திய, இயற்கைக்கு மேம்பட்ட, சர்வ வல்லமையுள்ள, எல்லா முடிவற்ற, சர்வ வல்லமையுள்ள தேவன் இன்னும் எவ்வளவு அதிகமாக இருப்பார்! அவர் தொடங்கிய அதே விளைவை அவர் கொண்டிருக்க வேண்டும். அவர் அதை முழுவதுமாகக் கொண்டிருக்க வேண்டும், இல்லையெனில் அவர் சர்வவல்லமையுள்ள, சர்வ வல்ல தேவன் அல்ல. அவர் இன்னமும் அவருடைய வார்த்தையின் அடிப்படையின் பேரில் சத்துருவுக்கு சவாலிட்டு, அது அவ்வண்ணமாகவே உள்ளது என்று கூறும்படியான ஒரு தீவிரமான விசுவாசத்தோடுள்ள யாரோ ஒருவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

3195 இப்பொழுது மகத்தான சுகமளிக்கும் கூட்டம் துவங்கினவுடனே என்ன சம்பவித்தது? அப்பொழுது ஆயிரக்கணக்கான தேவனுடைய மனிதர், போர்வீரர்கள், ஓரல் ராபர்ட்ஸ், டாமி ஹிக்ஸ் போன்ற சிறு சபைகளில், மற்றும் களத்தில் இருந்த மற்ற தலைசிறந்த மனிதர்கள் அநேகர் தங்களுடைய பட்டயத்தை உருவிக்கொண்டு புறப்பட்டுச் சென்றனர். இந்தப் பட்டயம் வருவதையும், போவதையும், மேலும் கீழுமாக, உள்ளேயும் வெளியேயும் வெட்டி, “நினைவுகளை வகையறுத்து, எலும்பில் உள்ள ஊனை பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறது.” அது சாத்தியம் என்று அவர்கள் கண்டதும், அவர்கள் தங்களுடைய வேதாகமங்களை உருவி, தங்களுடைய பட்டயத்தை உருவி வெளியே நடந்து சென்றனர். முழு உலகமும் ஒரு சுகமளிக்கும் எழுப்புதலைப் பெற்றுக்கொள்ளுமளவிற்கு நாம் தேவனுடைய கிருபையினால் சத்துருவை தோற்கடித்திருக்கிறோம். அது செய்யப்பட முடியும். இரண்டுக்கு நான்கு என்ற அளவுள்ள சபைகளைக் கொண்ட சிறிய மேய்ப்பர்கள், அவர்கள் அனல் கொண்டவர்களாய், தரிசனத்தைக் கண்டு, பட்டயத்தை உருவிக்கொண்டு புறப்பட்டுச் சென்று, சத்துருக்களை எதிர்த்தனர். 96 “அது உள்ளது என்பதை எப்படி நீ அறிவாய்?” மகத்தான மனிதர்கள் உண்டு, காங்கிரஸ்காரர் உப்ஷா, இங்கிலாந்தின் ஜார்ஜ் மன்னன், சுகவீனமாகவும், அவதியுற்று கிடக்கும் அநேக மகத்தான மனிதர்கள் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமையினால் சுகமாக்கப்படுகின்றனர். எனவே அவர்களால் அதைக் குறித்து இப்பொழுது ஒன்றுமே கூற முடியாது. அது முடிந்துவிட்டது. நிச்சயமாக! அவர்…

3297 அதன்பின்னர் எலிசா புறப்பட்டுச் சென்றான். அவனுடைய முழு இருதயமும் அந்த வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாயிருந்தது. அவன் வாக்குத்தத்தத்தை விரும்பினான், அதுவே அவனுடைய நோக்கங்களாக இருந்தன, அதுவே அவனுடைய எல்லாமாயிருந்தது, அதுவே அவனுடைய ஜீவியமாயிருந்தது, அதுவே அவனுடைய நோக்கமாயிருந்தது, எல்லாம், ஒவ்வொரு காரியமும் அந்த வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொள்வதில் இருந்தது. 98 நாம் பேசும் இந்த விஷயத்தில் நாம் உண்மையாக இல்லை என்று நான் நம்ப வைக்கப்படுகிறேன். இந்தக் காலையில் உங்களுடைய முழு நோக்கமும், “என்னுடைய சுகமளித்தலுக்காகத் தேவனுக்குத் துதி செலுத்த வேண்டும் என்பதன் பேரில் சார்ந்திருக்க வேண்டும். நான் தேவனுடைய வல்லமையினால் சுகமாக்கப்பட தீர்மானித்திருக்கிறேன். நான் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழத் தீர்மானித்திருக்கிறேன். நான் தேவனோடு சமாதானத்தில் நடக்க தீர்மானித்திருக்கிறேன். நான் அதைச் செய்யத் தீர்மானமாயிருக்கிறேன். தாய் என்ன கூறினாலும், சபை என்ன கூறினாலும், போதகர் என்ன கூறினாலும், வேறு எவரும் என்ன கூறினாலும், உலகம் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. நான் தீர்மானமாயிருக்கிறேன். அதுவே என்னுடைய இருதயத்தின் ஒரே நோக்கமாயுள்ளது.” அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள். 99 அதன்பின்னர், எலிசா அதைப் பெற்றுக்கொள்ள தீர்மானமாயிருந்ததைக் கண்டபோது, எலிசா உறுதியாயிருந்ததைக் கண்ட எலியா, அவன் அவனுக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தான். இப்பொழுது, வாக்குத்தத்தம் என்னவெனில், “நான் போகும்போது என்னைப் பார்க்க முடிந்தால்! நான் போகும்போது என்னைப் பார்க்க முடிந்தால்!” இப்போது அது எலிசாவின் கையில் விடப்பட்டுள்ளது. அவன் வாக்குத்தத்தத்தைக் கேட்க விரும்பினான், எனவே அவன் வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்டான். இப்பொழுது அதில் ஒரு “என்றால்” உள்ளது. “நான் போகும்போது நீ என்னைக் கண்டால்!” 100 இப்பொழுது, நீங்கள் இந்தக் காலையில் சுகவீனமாயிருந்து, நீங்கள் சுகமாக்கப்பட விரும்பினால், கிறிஸ்து உங்களுக்கு வாக்குத்தத்தம் அளித்திருக்கிறார் என்பதை என்னால் நிரூபிக்க முடியும். வாக்குத்தத்தம் உங்களுடையதாயுள்ளது, “நீ விசுவாசிக்கக் கூடுமானால்! நீ விசுவாசிக்கக் கூடுமானால்!” தோற்கடிக்கப்படாதீர்கள்.

33101 இப்பொழுது எலிசா தீர்க்கதரிசியாகிய எலியாவின் சால்வையை அணிந்திருந்தான். என்னே ஒரு ஜெயவீரரின் அணிவகுப்பு! அவன் எப்படியாய் நடந்து, ஒரு ஜெய வீரனைப் போன்று பரலோகத்தை நோக்கிச் சென்றான்! அவன் வாக்குத்தத்தத்தைக் கேட்டிருந்தான். அவன் வல்லமையை உணர்ந்தான். அவன் ஒரு போர் வீரனைப் போல் யோர்தானுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தான். 102 தேவனுக்கு ஸ்தோத்திரம், நண்பனே! இந்தக் காலையில், கிறிஸ்துவின் நீதியை தரித்திருக்கிற, ஒவ்வொரு விசுவாசியும், யோர்தான் பாதையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறான். அது உண்மை. 103 அணுகுண்டுகள் வரட்டும்; எவ்வாறாயினும் அது வரட்டும். நாம் சால்வையை தரித்து, ஜெயங்கொண்டவர்களாக நடந்து கொண்டிருக்கிறோம். ஆமென். நான்…“பயப்படாதே. நான் உலகத்தை ஜெயித்திருக்கிறேன்.” ஆம், ஐயா! என்ன நினைவிருக்கிறது? “நான் உலகத்தை ஜெயித்திருக்கிறேன்.” கிறிஸ்து அதைக் கூறினார். 104 எலியா ஒரு பயன்படுத்தப்பட்ட சால்வையை அணிந்து, ஒரு ஜெய வீரனைப் போன்று சரியாக யோர்தானண்டை வந்துகொண்டிருந்தான். 105 சகோதரனே, இதை நான் உங்களுக்கு மரியாதையாகக் கூறட்டும். சந்தேகத்திற்கிடமின்றி அந்துப்பூச்சி தின்ற வேறொருவருடைய அங்கியை நீங்கள் தரித்துக்கொள்ளாதீர்கள், இந்த எல்லா தோல்விகளும், மூட நம்பிக்கைகளும், ஏற்றத் தாழ்வுகளும் அதில் ஓட்டைகளை உண்டாக்கி, அவைகள் முழுவதும் கசிந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் ஜெயவீரராகிய கிறிஸ்துவின் வஸ்திரத்தை தரித்துக்கொள்ளுகிறீர்கள். ஒரு காலத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் இரட்சிப்பைக் குறித்து போதித்து, ஒரு காலத்தில் தெய்வீக சுகமளித்தலைப் போதித்து, ஆனால் இப்பொழுது அதை மறுதலிக்கிற உங்களுடைய சபையை நம்ப வேண்டாம், எல்லாமே சந்தேகத்தின் அந்துப்பூச்சிகளாலும் மற்றெல்லா காரியங்களாலும் தின்றுபோடப்படுகின்றன. யுத்தத்தில் ஒருபோதும் தோல்வியடையாத அவருடைய வஸ்திரத்தைத் தரித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் யோர்தானுக்குப் போகும் பாதையில் இருக்கிறீர்கள். ஆமென்.

34106 இப்பொழுது, அவன் ஒரு பயன்படுத்தப்பட்ட சால்வையை அணிந்திருந்தான், அது உண்மை. ஜனங்களில் அநேகர் இந்தக் காலையில் பயன்படுத்தப்பட்ட சால்வைகளை அணிந்துள்ளனர். ஆனால் அவன் யோர்தானண்டை வந்தபோது, சால்வை மாத்திரம் அந்தக் கிரியையைச் செய்யாது என்பதை அவன் உணர்ந்தான். அது உண்மை. சபை, மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தேகோஸ்தே, பிரஸ்பிடேரியன், “ஓ, எங்களுக்குப் பள்ளிகள் உள்ளனவே!…என்னே, நாங்கள் வேதாகமத்தின் எல்லா நெறிமுறைகளையும் மனப்பாடம் செய்துவைத்துள்ளோம். நாங்கள் நெய்த அங்கிகளையெல்லாம் சரியாக வைத்துள்ளோம், வாக்குத்தத்தங்கள். நாங்கள் எல்லாவற்றையும் பெற்றுள்ளோம். ஓ, நாங்கள் முழுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். நாங்கள் அப்போஸ்தல உபதேசத்தில் முக்கியத்துவம் கொண்டுள்ளோம். நாங்கள் அப்போஸ்தல விசுவாசத்தை உடையவர்களாயிருக்கிறோம். நாங்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசங்கொண்டுள்ளோம். நாங்கள் தேவனில் விசுவாசங்கொண்டுள்ளோம். நாங்கள் தேவனுடைய வல்லமைகளில் விசுவாசங்கொண்டுள்ளோம். வேதம் கூறுகிற விதமாகவே நாங்கள் வேதத்தில் ஞானஸ்நானம் கொடுத்துள்ளோம். நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளோம். நாங்கள் அந்நிய பாஷையில் பேசியிருக்கிறோம். நாங்கள் அதையெல்லாம் செய்கிறோம்.” ஆனால், சகோதரனே, அது மாத்திரமே உங்களுக்குத் தேவையாயிருந்தால், நீங்கள் யோர்தானுக்கு வரும்போது, உங்களுடைய குறைவையும் கூடக் கண்டறிவீர்கள். 107 ஓ, நீங்கள் போதிக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் புத்திசாலியாக இருக்கலாம். நீங்கள் ஒரு டி.டி, தெய்வீக டாக்டர் பட்டம் பெற்றிருக்கலாம். நீங்கள் ஒரு பிஎச்.டி., ஒரு தத்துவ முனைவர் பட்டம் பெற்றிருக்கலாம். நீங்கள் லத்தீன் மொழியில் எல்.எல்.டி., முனைவர் பட்டம் பெற்றிருக்கலாம். நீங்கள் எல்லாவிதமான பட்டங்களையும் பெற்றிருக்கலாம். நீங்கள் மெத்தோடிஸ்டு சபையின் அங்கியை அணிந்திருக்கலாம். நீங்கள் பெந்தேகோஸ்தே சபையின் அங்கியை உடையவர்களாயிருக்கலாம். நீங்கள் உங்கள்மேல் அசெம்பளீஸ் என்ற அங்கியை அணியலாம், அல்லது ஒருத்துவம், அல்லது திரித்துவக்காரர், அல்லது அது என்னவாயிருந்தாலும் இருக்கலாம். ஏதோ மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகள், அந்த விதமாகச் சிந்திக்கப்பட்டு, நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்து வந்தாலும், சபையானது ஒரு கிறிஸ்தவராயிருந்து; சரியான அங்கியை அணிந்திருந்தாலும் கூட அது துவக்கத்திலேயே ஒரு பயன்படுத்தப்பட்ட அங்கி மாத்திரமே, அது உண்மை.

35108 ஆனால் எலிசா, தெளிவாக, எழும்பி நின்று, தீர்க்கதரிசிகள் மற்றும் விமர்சகர்களால் நிரம்பிய ஒரு ஆற்றங்கரையில், அவன் என்ன செய்வான் என்று பார்க்க, இதோ அவன் வந்து, எலியாவின் சால்வையை அணிந்து கொண்டு நடந்து வருகிறான், ஓ, என்னே, அல்லேலூயா, அவன் வேறுவிதமாகக் கல்வி கற்றவன், அவன் படித்தவன், அவன் அடிபணிந்தான், அவன் விசுவாசிக்கிறான், அவனோடு எந்தத் தவறும் இல்லை, அவன் யோர்தானண்டை வந்து கொண்டிருக்கிறான், உலகம் அவனைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. 109 ஓ, தேவனே, இன்றைக்கு அது எங்களுக்கு எவ்வளவாய் தேவைப்படுகிறது! அநேக பள்ளிக் கல்வி பயின்ற மற்றும் படித்த அறிஞர்களோடு; அந்த வேதாகமத்தை துண்டாக்கி, அதைக் கணிதத்தில் ஒன்றாக இணைத்து; போதக வழிகளில் மகத்தான காரியங்களைச் செய்யக்கூடிய அநேக மனிதர்கள்; அந்த நொடிப் வரை வேதாகம சரித்திரத்தை அறிந்திருக்கிறவர், மெழுகுவர்த்தி கொளுத்தப்பட்ட நேரத்தையும், அது அணைந்த நேரத்தையும் அவர்களால் உங்களுக்குக் கூற முடியும். இந்த எல்லா காரியங்களையும் அவர்களால் உங்களுக்குக் கூற முடியும். அவர்கள்…அவர்கள் தண்ணீர் ஞானஸ்நானம் பெற்றுள்ளனர். அவர்கள் ஆவிக்குரிய ஞானஸ்நானம் என்று அழைக்கின்றனர், அதாவது அவர்கள் அதை அங்கி என்று அழைக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் ஒழுங்காக அமைத்துள்ளனர்.

36110 எலிசாவும் அவ்வாறே செய்தான், ஆனால் அவன் யோர்தானண்டை வந்து, விமர்சிக்கும் உலகத்தைச் சந்திக்க வந்தபோது, அவன் என்னத்தினால் அழுதான்? “எலியாவின் தேவன் எங்கே?” அதைச் செய்தது எலியாவின் சால்வை அல்ல. எலியாவின் தேவனுடைய வல்லமை அதைச் செய்தது. 111 இந்தக் காலையில் உலகத்திற்குத் தேவையானது எலியாவின் தேவனின் வல்லமையேயாகும். நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசி, சத்தமிட்டு, தரை முழுவதும் ஓடியிருக்கலாம். ஆனால் நமக்குத் தேவை என்னவென்றால், பெந்தெகொஸ்தேயின் தேவனுடைய வல்லமையே, அப்போஸ்தல வல்லமையில், அந்த நாளில் வாழ்ந்த ஜீவியங்களையும் மற்ற காரியங்களையும் தோற்றுவிக்க வேண்டும். 112 ஒரு பயன்படுத்தப்பட்ட சால்வை சரியாயிருந்தது, ஆனால் அவனுக்குத் தேவனிடத்திலிருந்து ஒரு புதிய அழைப்பு அவனுடைய இருதயத்தில் தேவைப்பட்டது. அவனுக்குத் தேவனிடத்திலிருந்து ஒரு புதிய அபிஷேகம் தேவைப்பட்டது. அவன் ஆற்றண்டைக்கு வந்தபோது, அவன் ஒரு பயன்படுத்தப்பட்ட சால்வையை அணிந்திருந்தான், ஆனால் அந்த அற்புதத்தை நிகழ்த்த அவனுக்குத் தேவனிடத்திலிருந்து ஒரு புத்தம் புதிய நேரடி அழைப்பும், தேவனிடத்திலிருந்து ஒரு நேரடியான வல்லமையும் தேவைப்பட்டது.

37113 என் சகோதரனே, நீங்கள் தேவனிடத்தில் எந்தக் காரியத்தையும் கேட்கப் பயப்படாதீர்கள். நீங்கள் தேவனைக் கேட்க வேண்டும் அல்லது அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள எந்தக் காரியத்திற்காகவும் அவரிடத்தில் கேட்க வேண்டும். ஏனென்றால் நான் சர்வ வல்லமையுள்ள, சகல வல்லமையுள்ள தேவனை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தால், நான் தேவனுடைய ஊழியக்காரனாயிருந்தால், நான் தேவனுடைய கிரியைகளைச் செய்ய வேண்டும். நான் தேவனுடைய கிரியைகளைச் செய்கிறேனேயானால், நான் இந்தக் காரியங்களை நிறைவேற்றும்படி தேவனிடத்தில் வேண்டிக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அவர் சாத்தியமற்றதை உருவாக்க என்னிடத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார். நான் அவரிடத்தில் கேட்க வேண்டும். நான் அவரைக் கூப்பிட்டு, அங்கே நின்று, “தேவனே, நீர் அதை வாக்குத்தத்தம் செய்தீர்” என்று கூற வேண்டும். ஒவ்வொரு நபரும், நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டும். 114 “பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல்,” அப்போஸ்தலர் 1:8-ல், “வரும்போது பெலனடைவீர்கள்.” பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வந்தபிறகு! நீங்கள் ஒரு கிறிஸ்தவராக வஸ்திரம் தரித்தப் பிறகு, உங்களுடைய விசுவாசம் கிறிஸ்துவுக்குள் பொருத்தப்பட்ட பிறகு, அப்பொழுது நீங்கள் பெலனடைவீர்கள். அங்குதான் காரியம். ஆம். 115 சகோதரனே, சகோதரியே, நீங்கள் ஒவ்வொருவரும், இந்தக் காலையில், வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு முன்பு, நான் இதைக் கூறுவேனாக: தேவனுடைய ஒத்தாசையினால் நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மேடையில் நின்றுகொண்டு, தாவீதையும், கோலியாத்தையும் குறித்து பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, இப்பொழுது எனக்குத் தடையாக இருப்பது ஒரு கோலியாத் அல்ல, தேவன் எனக்கு முன்னே அவனைக் கொன்று போட்டிருக்கிறார், ஆனால் எனக்குத் தடையாயிருக்கிற காரியம், ஒரு விசுவாசக் குறைபாடே, நான் அறிந்திருந்த ஏதோ ஒரு குறைபாடேயாகும். 116 இந்தக் காலையில், மீண்டும் இந்தச் சிறிய கூடாரத்திற்கு முன்பாக நான் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன்: இந்த வாக்குத்தத்தத்தை அளித்த தேவன் எங்கே? அக்கரையிலே இதனோடு என்னைச் சந்தித்த தேவன் எங்கே இருக்கிறார்? தேவனே, முன்னோக்கி வந்து, எனக்கு ஒரு தைரியத்தைக் கொடும். எனக்கு பெலனைத் தாரும். என்ன வந்தாலும் அல்லது போனாலும் பொருட்படுத்தாமல், எனக்கு ஒரு தீர்மானமான சிந்தையைத் தாரும். அது இருட்டாகக் காணப்பட்டாலும், அல்லது அது காணப்பட்டாலும்…அது எப்படிக் காணப்பட்டாலும், தொடர்ந்து செல்லுங்கள். வாக்குத்தத்தம் உண்மையானது.

38117 சகோதரனே, சகோதரியே, இந்நாட்களில் ஒன்றில்…இன்று காலை இங்குள்ள பாவியான நண்பர்களே, கிறிஸ்தவ மார்க்கத்தை ஆள்மாறாட்டம் செய்ய முயற்சிக்கும் ஜனங்களாகிய உங்களுக்கு, நீங்கள் சபையைச் சார்ந்திருக்கலாம், அது மிகவும் அருமையாயிருக்கலாம், அதற்கு எதிராக நான் ஒன்றும் கூறவில்லை, உங்களுடைய அருமையான கல்வியறிவு கல்விக்கு எதிராக அல்லது உங்களுடைய வேத சாஸ்திரத்திற்கு விரோதமாக ஒன்றுமில்லை, அதற்கு எதிராக நான் ஒன்றும் கூறவில்லை, ஆனால், ஓ, தேவன் எங்கே? 118 எப்படியிருந்தாலும், அது எலியா அல்ல, அந்த நதியைத் பிளந்தது எலியாவல்ல. அது அவனுடைய சால்வையும் அல்ல. எலிசா அதைத் தன் தோளிலிருந்து எடுத்தான். எலியா செய்தது போலவே மடித்தான். ஆனால் அவன் அதை அசைக்க முயற்சிக்கத் துவங்கினபோது, அங்கே வல்லமை இல்லாதிருந்தது. அப்பொழுது தேவன் எங்கோ இருக்கிறார் என்பதை அறிந்து, “அந்தத் தேவன் எங்கே? அவர் எங்கே இருக்கிறார்?” என்று கதறினான். அப்பொழுது ஏதோ ஒரு காரியம் அந்தத் தீர்க்கதரிசியை தாக்கியிருக்க வேண்டும், ஏனென்றால் அவன் அந்தச் சால்வையை அசைத்துத் தண்ணீரை அடித்தான், அது அங்கே பிளந்தது. அன்றைய குருமார்களுக்கு முன்பாக, அந்த நாளின் குறை கூறுபவர்களுக்கு முன்பாக, அவன் யோர்தானை கடந்து சென்றான், அவனுக்கு முன் எலியா செய்தது போல.

39119 நமக்குப் போதகங்கள் தேவையில்லை; எங்களிடம் அது உள்ளது. ஆனால் நமக்கு எலியாவின் தேவன் தேவை. நம்முடைய சபையில், எலியாவின் தேவனுடைய வல்லமை நமக்குத் தேவை. எதையும் பொருட்படுத்தாமல் தேவனுடைய வார்த்தையை “சரி” என்று அழைக்கும் வல்லமை. 120 நாம் ஒவ்வொருவரும் இந்தக் காலையில் மானிட வர்க்கமாக இங்கே யோர்தானுக்கு செல்லும் பாதையில் இருக்கிறோம். “அவன் யோர்தானுக்கு வந்தபோது.” நீங்கள் இந்தக் காலைகளில் ஒன்றில் அல்லது இந்த இரவுகளில் ஒன்றில், அங்கு வரப்போகிறீர்கள். 121 அவன் யோர்தானுக்கு வந்தபோது, அவன் ஒரு ஜெய வீரனைப் போல நடந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் யோர்தானுக்கு வந்தபோது, அதுவே வித்தியாசமாயிருந்தது. அவன் ஒரு பயன்படுத்தப்பட்ட சால்வையை அணிந்திருந்தான். மற்றொரு மனிதன் அதை அணிந்திருந்தான். ஆனால் அது ஒரு நல்ல சால்வையாயிருந்தது, அந்தச் சால்வையை அணிந்திருந்த மனிதன் யாரென்பதை அவன் அறிந்திருந்தான்.

40122 சகோதரனே, சகோதரியே, இந்தக் காலையில் ஒன்றில், நான் யோர்தானுக்கு வந்தாக வேண்டும். 123 சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று பிற்பகல், நாம் சகோதரன் மற்றும் சகோதரி ரைட்ஸ் அவர்களிடம் செல்லப் போகிறோம். அவர்களை மறந்துவிடாதீர்கள். இது அவர்களுடைய பொன்னான திருமண ஆண்டுவிழாவாகும். சபையானது, அவர்களோடு ஒரு—ஒரு இரவு உணவு உண்ணப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஐம்பது வருடங்கள்! என்று நான் அன்றொரு நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவருமே நன்கு வயோதிகராகவும், தளர்வுற்றவர்களாகவும் இருப்பதை நான் காண்கிறேன். அப்பொழுது நான், “ஆம், எனக்கு நாற்பத்தேழு வயதாகிறது” என்று எண்ணினேன். நான் பிறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 124 நாற்பத்தி ஏழு! நான் யோர்தானை நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறேன். நான் கீழே வர வேண்டும். நான் அங்குச் சென்றாக வேண்டும். நான் அங்கு வரப்போகிறேன். அது சாலையில் ஒரு விபத்தாய் இருக்கலாம். நான் ஆகாயத்திலிருந்து, ஒரு விமானத்தில் கீழே இறங்கலாம். எங்காவது ஒரு பிசாசின் ஈட்டியால் நான் சுடப்பட்டு இறந்து போகலாம். நான் எப்படிப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் ஒரு காரியத்தை அறிவேன், நான் போய்க் கொண்டிருக்கிறேன், நான் யோர்தானை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன். 125 ஆனால் நான் அங்குச் சென்றதும், நான் ஒரு காரியத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன், அதாவது நான் ஒரு பயன்படுத்தப்பட்ட சால்வையும் கூட அணிந்திருக்கிறேன். நான் என்னுடையதில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை, ஏனென்றால் அது நன்மையற்றது. ஏனென்றால் எலிசா எலியாவினுடைய சால்வையை எடுத்தவுடனே, அவன் தன்னுடைய அங்கியை துண்டு துண்டாகக் கிழித்து கீழே எறிந்துவிட்டான். நான் கிறிஸ்துவை கண்டபோது அந்தவிதமாகவே அது இருந்தது. நான் என்னுடைய சுயத்தை, என்னுடைய சொந்த கருத்துக்களை, என்னுடைய சொந்த அர்த்தமற்றதை, என்னுடைய சிறிய அற்பமான காரியத்தைக் கிழித்தெறிந்தேன். நான் ஒரு சிறிய பாப்டிஸ்டு பிரசங்கியாக இருந்தபோது, நான் நினைத்தேன், நான் கிட்டத்தட்ட…நான் யாரோ ஒருவன். ஆனால், நான் அதைக் கிழித்தெறிந்தேன்; நான் அவருடைய வஸ்திரத்தை தரித்தேன். நான் யோர்தானுக்கு வரும்போது, நான் அவருடைய வஸ்திரத்தினால் சுற்றியிருப்பதைக் கண்டறிய விரும்புகிறேன். அவர் அதைப் பின்பற்றுவார். நாம் எல்லோரும் ஒரு நாள் அங்கு வருவோம். ஆனால் நாம் சற்று நேரம் ஜெபிப்போமாக.

41126 பரலோகப் பிதாவே, நாங்கள் இந்தக் காலையில் எங்களுடைய யோர்தான் அணிவகுப்பில் இருக்கையில், ஜெயங்கொள்ளுகிறவர்களாக, என்றோ ஒரு நாள், நாங்கள் யோர்தானுக்கு ஏதோ ஒரு காரியத்தை, அதாவது மரணத்தை அளிக்க வேண்டும். மேலும், ஓ, அது என்ன ஒரு பயங்கரமான காரியமாக இருக்கும், தேவனைவிட்டு ஒரு பிரிந்து செல்லுதல்! நாங்கள் கடந்து செல்ல முடியாது, முடியாது. ஆனால் எலிசாவோ, அவன் அங்குச் சென்றபோது, அவன் எலிசாவின் சால்வையை அணிந்திருந்தான்…எலியாவின் சால்வை. உமது பார்வையில் பிரியமாயிருந்த அந்த மனிதனாகிய எலியாவின் சால்வையை அவன் கழற்றிவிட்டு, நீர் அவனை ஏற்றுக்கொண்டு, உம்மோடு பரலோகத்திற்குள்ளே கொண்டு வந்தீர், எலிசா தன்னுடைய சால்வையை அணிந்திருந்ததால், யோர்தானுக்கு மரணத்தையும், எலியாவின் சால்வையையுமே கொண்டு வந்தான். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது, யோர்தான் நதி பிளக்கப்பட்டது, அவன் நடந்து கடந்து சென்றான். 127 அன்புள்ள தேவனே, என்றோ ஒரு நாள் நாங்கள் இறங்கி வர வேண்டும். நாங்கள் எங்களுடைய நற்கிரியைகளை காண்பிக்க முடியாது; எங்களுக்கு ஒன்றுமில்லை. நாங்கள் உலகத்தில் எந்தக் காரியத்தையும் அளிக்க முடியாது. நான் எதையும் முன்வைக்க முயற்சிக்க விரும்பவில்லை, ஆனால் நான் இயேசுவின் தகுதிகளில் முழுவதுமாக நம்பிக்கை வைத்துள்ளேன். நீர் அவரை ஏற்றுக்கொண்டு, மரித்தோரிலிருந்து அவரை எழுப்பினீர், அவர் தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாகக் கொண்டுவரப்பட்டு, அங்கே என்றென்றைக்கும் நிலைத்திருப்பார். மேலும், தேவனே, நான் அதை உமக்கு அளிக்க விரும்புகிறேன், அதாவது நான் அவர்மேல் விசுவாசம் வைத்திருக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன். அவருடைய கிருபையினால் அவர் தமது வஸ்திரத்தினால் நம்மை உடுத்தியிருக்கிறார். பிதாவே, யுத்த நாட்களில் நீர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். தேவனுடைய மனிதர் தேவனுடைய கிரியைகளைச் செய்ய வேண்டிய இடத்தில், பரிசுத்த ஆவியின் வல்லமையாகிய கிறிஸ்துவின் அங்கியை நாங்கள் எடுத்து, அவருக்குள் ஜீவித்துள்ள தேவனை அழைக்க நீர் எங்களை அனுமதியும் என்று நான் ஜெபிக்கிறேன். அதை அருளும். கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம்.

42128 நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில். இங்கே இந்தக் காலையில், இந்த வஸ்திரத்தை அணியாமல், யோர்தானுக்கு நடந்து செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிற ஒரு நபர் உண்டா என்று நான் சற்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் வஸ்திரம் தேவனுடைய குமாரன் ஒரு முறை உடுத்தியிருந்தாலும், அதை அணியாத எவரேனும் இருந்தால், இந்தக் காலையில் நீங்கள் அதைக் கொண்டிருக்கவில்லையென்றால், நீங்கள் உங்களுடைய கரங்களைத் தேவனண்டை உயர்த்தி, “அன்புள்ள தேவனே, இந்த வேளையில், நான் அதை இப்பொழுது ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்.” என்று கூறுங்கள். 129 பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு எவரேனும் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? சிறு பையனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது தங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? ஐயா, அங்கே பின்னால் உள்ள உங்களைத் தேவன் ஆசீர்வதிப்பாராக.

43130 “தேவனுடைய உதவியினால், இந்தக் காலையில், நான் என்னுடைய சுயநீதியை விட்டுவிட விரும்புகிறேன், என்னுடைய சொந்த கருத்துகளையும், இன்பங்களையும், பெரிய நேரத்தையும், நான் வாழ்ந்து வந்த பாவத்தையும் பற்றிய என்னுடைய சிந்தனைகளையும், இந்தக் காலையில் கிறிஸ்து தம்முடைய வஸ்திரத்தை என்மேல் அணிவிக்க, நான் அவருடைய வஸ்திரத்தை உபயோகிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது ஒரு பரிபூரணமான ஒன்று என்பதை நான் அறிவேன்” என்று கூறுங்கள். மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாரோ ஒருவர், “நான் எழுப்புவேன்…” என்று கூறுகிறார்கள். 131 நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “நான் இப்பொழுது என்னுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். நான் அவருடைய நீதியினால் வஸ்திரம் தரிக்கப்பட விரும்புகிறேன். அந்த நாளில் நான் அங்குச் செல்லும்போது, நான் என்னையே முன்னிறுத்தி, சரி, இப்பொழுது, நான் யாரோ ஒருவருக்கு கொஞ்சம் நிலக்கரியை வாங்கினேன் என்பதை நீர் அறிவீர். நான் இதைச் செய்தேன்.’” அது அருமையாயுள்ளது, அது மிகவும் அருமையானது, ஆனால் அது… நீங்கள் ஜீவிப்பதற்காக, ஏதோ ஒரு காரியம் மரிக்க வேண்டியதாயிருந்தது, அந்தச் செயலின் மூலமாக மாத்திரமே நீங்கள் இரட்சிக்கப்பட முடியும். நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? “கிறிஸ்துவே, நான் இப்பொழுது என்னுடைய சொந்த வழியை விட்டுவிட்டேன். நான் உம்முடைய வழியை ஏற்றுக்கொள்கிறேன். நான் பாதையின் முடிவிற்கு வரும்போது, நீர் என்மேல் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறுவீர்களா? சரி. பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. இப்பொழுது நாம் ஜெபம் செய்யப் போகிறோம்.

44132 இப்பொழுது, நீதியுள்ள பரலோகப் பிதாவே, ஏழு, எட்டு, பத்து கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அவர்களுடைய நிலையை நான் அறியேன். அவைகளையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் இன்றைக்கு தேவையுள்ளவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் தேவையுள்ளவர்களாயிருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து, இப்பொழுது சமீபமாயிருக்கிற அந்த மகத்தான வேளையை, அணுகுண்டுகளை, நமக்காக மகத்தான காரியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பதைக் காணவும், துன்ப நேரத்தில் வந்து உதவியை ஏற்றுக்கொள்ள மனப்பூர்வமாய் இருக்கிறார்கள். 133 பரலோகப் பிதாவே, நீர் இந்த ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், இன்றைக்கு உம்முடைய கரத்தை அவர்கள்மேல் வைத்து, அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும், சந்தேகங்களையும் போக்குவீராக. அவர்கள் தங்களுடைய அந்துப்பூச்சி அரித்த தங்களுடைய சுயநீதியின் அங்கியை எறிவார்களாக, அங்குப் புழுக்களும், வண்டுகளும், மூட நம்பிக்கைகள் மற்றும் சபைக் கோட்பாடுகளின் அந்துப்பூச்சிகளும் அதன் வழியாக அரித்து ஓட்டைகளைப் போட்டுவிட்டன, (அவைகள்) அது இனிமேல் நிலைத்திருக்காது. அவர்கள் அதைத் தூக்கி எறிந்துவிட்டு, கர்த்தராகிய இயேசுவின் வஸ்திரத்தை எடுத்துக் கொள்வார்களாக. “நான் அவரை நம்பியிருக்கிறேன். நான் என்னையே என்னுடைய நீதியின் பேரிலோ அல்லது என்னுடைய சொந்த சிந்தனைகளிலோ சுற்றிக் கொள்ளவில்லை. ஆனால், இந்த மணி நேரம் முதற்கொண்டே நான் உம்மையே நம்பியிருக்கிறேன்” என்று கூறுங்கள். பிதாவே, நாங்கள் இதைக் கிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறபடியால், அவர்கள் அதைப் பெற்றுக்கொள்ள அருள்புரியும். ஆமென். 