1அதை போன்ற ஒரு அறிமுகம், யாரையாவது ஒருவரை நலமாக உணரச் செய்யுமா. அதை செய்யுமில்லையா?
2சரி நாம் வார்த்தையை திறப்பதற்கு முன்னால் ஜெபத்திற்காக அப்படியே சிறிது நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
3கர்த்தாவே "கர்த்தருடைய வீட்டிற்கு போவோம்" என்று அவர்கள் சொன்னபோது, நான் மகிழ்ச்சியாயிருந்தேன் என்ற அந்த பழைய வசனத்தைப் போன்று நாங்கள் கூறுகின்றோம். இன்று கர்த்தருடைய சபையாருடன் ஆராதிப்பதில் இங்கிருப்பதைப்போல சரியான எந்த இடத்தையும் நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. வெளியில் மழைபெய்து கொண்டிருக்கலாம். அங்கே வறுமையும் கொடுமையான காரியங்களும் இருக்கலாம். இருந்தபோதிலும் உம்முடைய பிரசன்னத்தில் நாங்கள் இருக்கும்போது, நீர் எங்களை புரிந்துகொண்டு, அப்படியே சரியாக எங்களுக்காக சகலமும் நடந்துக்கொண்டிருக்கிற தென்றும் நாங்கள் அறிந்திருக்கிறோமென்ற இந்த புன்சிரிப்பை நாங்கள் கொண்டிருக்கிறோம்.
4ஆராதனைக்கு வர இயலாதவர்கள் மீது நாங்கள் இந்த காலையில் சிறப்பான ஆசீர்வாதத்தை கேட்கிறோம். வானிலை மிக மோசமாக இல்லாதிருக்குமானால் ஒரு வேளை அநேகர் வந்திருப்பார்கள். உம்முடைய வார்த்தையை வாசிப்பதிலும், இந்த ஜனங்களுக்காக முன்னேற்பாடாக செய்யப்பட்டிருக்கும் ரேடியோ மற்றும் நிகழ்ச்சிகளில் ஊழியக்காரர்களை கவனித்துக் கொண்டிருப்பதிலும் அவர்கள் ஆறுதலை கண்டுக் கொள்ளலாம்.
5இந்த காலையில் கர்த்தருடைய வார்த்தையை கேட்பதற்கும், சங்கீதங்களிலும், ஜெபத்திலும், நன்றி செலுத்துவதிலும், அவருக்கு ஊழியம் செய்வதற்கும் முன்னோக்கி வரும்படியான முயற்சியை எடுத்து, தெய்வீக பிரசன்னத்தில் இருப்பவர்களை நீர் பிரத்தியேகமாக ஆசீர்வதிக்கும்படி நாங்கள் கேட்கிறோம்.
6தேவனே தொலை தூரங்களிலிருந்து ஜெபித்துக் கொள்வதற்காக வந்து, இப்பொழுது காத்துக் கொண்டிருக்கும் வியாதியஸ்தர் மற்றும் தேவையுள்ள வர்களின் சரீரங்களை நீர் தொட வேண்டுமென்று நாங்கள் கேட்கிறோம். தீர்க்கதரிசிகளில் ஒருவர் "என்னை சோதித்துப் பாரும்" என்னில் முயற்சித்து, என்னிடத்தில் தீமை இருக்கமானால் என்று சொன்ன வண்ணமாக இந்த காலை வேளையில் எங்கள் சொந்த சூழ்நிலைகளை சரியான விதமாக புரிந்துக் கொண்டவர்களாய் இருக்கவும், எங்களை நோக்கிப் பார்த்து எங்களோடு நீர் பேசவேண்டுமென்றும் நாங்கள் கேட்கிறோம்.
7கர்த்தாவே எங்களை சோதித்துப் பார்த்ததில் அங்கே எங்களிடத்தில் தீமையை காண்பீரானால் எங்களை சுத்தமாக்கும் கர்த்தாவே எங்களுடைய பாவங்களையும், தீமையான செயல்களையும் தாழ்மையாய் நாங்கள் அறிக்கையிடுகிறோம். எங்களுடைய பாவங்கள் நேர்மை யின்மையினிமித்தமாக, உமது கோபத்தை தணிப்பதற்காக எங்களுக்காக மரித்த உம்முடைய குமாரன் இயேசுவை நீர் பார்க்கும் போது, நீர் எங்களை நினைவு கூறுவதின் நிமித்தமாக நாங்கள் இதை கேட்கிறோம். அவர் இதற்காகவே மரித்து மீண்டும் உயிரோடெழுந்தார். நாங்கள் இவைகளை இந்த காலை வேளையில் அந்த மகத்தான சிலுவையை விசுவாசித்து அறிக்கையிடுகிறோம். அதை அளித்தருளும் கர்த்தாவே. எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாக நீர் பேசுவதை கேட்கும்படியாக நாங்கள் இன்னுமாக காத்திருக்கிறோம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்.
8இந்த காலையில் வேத வாக்கியத்திலிருந்து வாசிக்கும்படியாக தெசலோனிக்கேயரின் புஸ்தகம் 5-ஆம் அதிகாரத்திற்கு நாம் திருப்ப விரும்புகிறோம். மேலும் இந்த காலையில் என்னிடத்திலிருக்கிற ஜெபத்திற்கான வேண்டுகோள் பட்டியலில் உள்ளவர்களுக்காக இந்த பிரசங்க ஆராதனை முடிந்த உடனே அவர்களுக்காக ஜெபிக்கப்படும்.
9நான் நம்புகிறேன்... சிறிது நேரத்திற்கு வேதாகமங்களை திறந்துக் கொண்டிருப்பவர்களாகிய உங்களுக்கு 1 தெச 5ஆம் அதிகாரத்திற்கு திருப்பி சிறிது நேரம் வாசிப்போம். உங்களுடைய வேதாகமத்தை திறந்து கொண்டிருக்கும் நேரத்தில், இன்னும் பிள்ளைகள் தங்களுடைய வெவ்வேறான வகுப்புகளுக்கு கலைந்து செல்லவில்லை என்று நான் வருந்துகிறேன். இப்பொழுது சரியாக உங்களுடைய வகுப்புகளுக்கு போவீர்களா? பதிமூன்று முதல் பத்தொன்பது வயதுக்குட்பட்டவர்களாகிய சிறிய பிள்ளைகளாகிய நீங்கள் மற்றவர்களுடன் சரியாக உங்கள் வகுப்புகளுக்கு செல்லுங்கள்.
10மேலும்......இப்பொழுது 1 தெச 5-ஆம் அதிகாரத்திற்கு உங்களுடைய வேதாகமத்தை திறக்கவோ அல்லது வாசிக்கக் கூடுமானால்...
11சில அலுவலின் நிமித்தமாக ஆராதனைக்கு பிறகு டீக்கன்களின் அலுவலகத்தில் சிறிது நேரம் தர்மகர்த்தா குழு அந்த நேரத்தில் இருக்க முடியுமானால் நான் அவர்களை காண விரும்புகிறேன். அவர்கள் இங்கு இல்லாதிருந்தால், யாராவது ஒருவர் நான் இன்றிரவு அவர்களை ஆராதனைக்கு முன்பாக டீக்கன்களின் அலுவலகத்தில் காண விரும்புகிறேனென்ற வார்த்தையை அவர்களிடம் கூறுங்கள்.
12இப்பொழுது ஒரு பாடத்திற்காக, "திடீரென்று இரகசியமாக சபையானது மறைந்து போகுதல்" என்ற ஒரு பாடத்திற்காக இதை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். நான் அதை திரும்பவும் தெரிவிக்கட்டும். நான் எந்த விளக்கக் குறிப்பின் மீதும் முன்னதாகவே ஆழ்ந்து ஆராய்வதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. நேற்று மிக காலதாமதமாக வெளியேறினோம், இரவிலும் கால தாமதமாகவே வெளியேறினோம். ஆகையால்.... ஆனால் அது அப்படியே என்னுயை சிந்தையில் வருகிறது. யாரோ ஒருவருக்கு நல்லதை செய்யும் ஏதோ ஒன்றை நான் பிடித்துக் கொள்ள முடியும். நான் இந்த பாடத்தை நேசிக்கிறேன். "திடீரென்று இரகசியமாக சபையானது மறைந்து போகுதல்".இப்போழுது 1தெச 5-ஆம் அதிகாரத்தில். சகோதரரே, இவைகள் நடக்கும் காலங்களையும் சமயங்களையும் குறித்து உங்களுக்கு எழுத வேண்டியதில்லை. இரவிலே திருடன் வருகிற விதமாய் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும் போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறது போல, அழிவு சடுதியாய் அவர்கள் மேல் வரும்: அவர்கள் தப்பிப்போவதில்லை. சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக் கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக் கிறவர்கள் அல்லவே. நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாய் இருக்கிறீர்கள். நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாய் இருக்கக்கடவோம். தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள் : வெறி கொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறி கொள்ளுவார்கள்.
13இப்போது அது புவியியலின் பிரகாரம் உங்களுடைய வேதாகமத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தால் 1 தெச 4-வது அதிகாரம் 16-வது, 17-வது, 18-வது வசனங்களுக்கு அப்படியே பக்கத்திற்கு குறுக்காக நீங்கள் நோக்கிப் பார்க்கும்படி நான் விரும்புகிறேன். ஏனெனில் கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்: அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். ஆகையால் இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள். கர்த்தர் தம்முடைய பரிசுத்த வார்த்தையின் வாசிக்கப்படுதலுக்கு தம்முடைய ஆசீர்வாதத்தை கூட்டுவாராக.
14நான் வியாதியஸ்தருக்கு ஊழியம் செய்வதற்கு வருகிற இந்த காலையில் இதைப் போன்ற ஒரு பாடத்தை குறித்து பேசுவதற்கு இது ஒரு வழக்கத்திற்கு மாறான காரியமாக உள்ளது. ஆனால் சரீர பிரகாரமான வியாதியை விட அங்கே ஒரு பெரிய வியாதி உள்ளது. இப்பொழுது நடக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் அந்த மகத்தான சம்பவத்திற்கு, நாம் அறிந்திருக்கிறபடி கர்த்தருக்குள் நித்திரையடைந்தவர்கள், மரித்தவர்களோடு நாமும் ஆயத்தமாக இருப்பது அதிக அவசியமாயுள்ளது.
15கர்த்தருடன் போவதற்கு ஆயத்தமில்லாத ஒரு வியாதியற்ற மனிதனாய் இருப்பதைவிட கர்த்தருடன் ஆயத்தமாக உள்ள ஒரு வியாதிப்பட்ட மனிதனாய் இருப்பதையே விரும்புவேன். ஆயத்தமாய் இருப்பது நல்லது. அது எப்படியாயினும், நாம் ஆத்துமாவிலும், சரீரத்திலும் நலமாக இருப்பதை தான் தேவன் விரும்புகிறார். நம்முடைய எல்லா அக்கிரமங்களையும் அவர் மன்னித்து, நம்முடைய நோய்களையெல்லாம் அவர் குணமாக்குகிறார். அவர் ஒன்று சேர்ந்த நோக்கத்திற்காக மரித்தார்.
16"திடீரென்று இரகசியமாக” என்ற இந்த பாடத்தின் மீது இன்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் அதை விரும்புகிறேன்...கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு சற்று முன்னதாக நாம் இருந்தாலும், அவர் ஒரு தூதர்களின் சேனையை ஒரு வருடமாக அனுப்பப் போவதாகவும், கீழே எல்லா செய்தித்தாள்களும் அல்லது செய்தித் தாள்களின் ஊடாகவும் தெரிவிக்கப்படும் என்றும், அது இன்ன இன்ன தேதியில் இயேசு வருவார் என்றபடி இன்று ஜனங்கள் ஜீவிக்கிறார்கள். அவர் வரும் சரியான நாளையும், சரியான மணி நேரத்தையும் ரேடியோ மூலம் செய்தி ஒலி பரப்பப்படும் என்றும் தொலைக் காட்சிகளிலும் மற்றும் ஒவ்வொரு இடத்திலும் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் சொல்லிக் கொண்டு, இன்றைக்கு ஜனங்கள் அவ்வித மாகத்தான் ஜீவிக்கிறார்கள்.
17ஆனால் இரவில் ஒரு திருடன் வருகிற விதமாக அது இருக்கும் என்று தேவன் தம்முடைய வார்த்தையில் சொல்லியிருக்கிறார். அது அவ்வாறிருந்தால், இன்று உலகமானது நினைக்கிறபடி, "ஓ, நல்லது அங்கே அதிகமான நேரமிருக்கிறது. நான்... அது நன்றாக தெரிவிக்கப்படும் என்றும் ஜனங்கள் சொல்லுகிறார்கள். ஆனால் அது ஒரு இரகசியமான தெரிவிக்கப்படுதல். கர்த்தரை நேசிக்கிறவர் களில், அதை கேட்க விரும்புகிறவர்களுக்காகவும், அதை ஆழ்ந்து ஆராய விரும்புகிறவர்களுக்காகவும் அது தெரிவிக்கப்படுகிறது.
18பவுல் கூறினதை நான் இப்பொழுது நினைக்கிறேன். அவன் அதை கூறினபோது, அங்கே எனக்கு ஒரு நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்கு தந்தருளுவார். பிறகு மேலும் அவன் நிறுத்திவிடுகிறான். நீங்கள் அதை கவனித்தீர்களா?" மேலும், எனக்கு மாத்திரமல்ல, அவருடைய பிரசன்னத்தை விரும்புகிற யாவருக்கும்” என்று சொல்லுகிறான். நாம் அவருடைய பிரசன்னத்தை விரும்பினால்......
19வழக்கமாக இன்று உலகத்தில், ஜனங்கள் கர்த்தருடைய பிரசன்னத்தைக் குறித்து, ஒரு பயங்கரமான, திகில் உண்டாக்குகிற காரியமாக எண்ணுகிறார்கள். "ஓ, உலகமானது ஒரு வேளை அதனிடமாக வரலாம். அதைக் குறித்து என்னிடம் பேசவேண்டாம்” என்று அவர்கள் கூறுகிறார்கள் . அந்த காரியங்களைக் குறித்து அறிந்துக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. அப்படியே தற்போதய நாட்களில் ஜீவிப்பதற்காக, அவர்கள் அவைகளை குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால் கர்த்தரை நேசிக்கிறவர்கள் அவருடைய பிரசன்னத்தை விரும்புவார்கள்.
20உங்களுடைய அன்பார்ந்தவர்களில் ஒருவர், வயதான ஜனங்களில் உங்களில் சிலர், உங்களுடைய தாய் வெளியே போயிருந்து அல்லது உங்களுடைய தகப்பன் அல்லது உங்களுடைய குழந்தை, அநேக வருடங்களாக அவர்கள் வெளியே போயிருந்து, அவர்கள் எந்த நேரத்திலும் பிரசன்னமாகலாம் என்று நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் வீட்டை முழுவதுமாக சுத்தப்படுத்திக் கொள்ளுகிறீர்கள். உள்ளே திரும்பி வரும் ஒவ்வொருவரின் வெளிச்சத்திற்காகவும் நீங்கள் அப்படியே ஆயத்தமாகவும், எதிர் நோக்கிக் காத்துக் கொண்டும் இருப்பீர்கள்; அது அவர்களாக இருக்குமோ என்று நினைக்கிறீர்கள் .
21இப்பொழுது கர்த்தருடைய வருகைக்காக சபையானது கட்டாயமாக எதிர் நோக்கி காத்துக் கொண்டிருப்பதன் வழி அதுதான் : அவர் எவ்வளவு சீக்கிரமாய் வருகிறாரோ அவ்வளவு சீக்கிரம் போவதற்கு எல்லாம் ஒழுங்கிலும், எல்லாம் செய்து முடித்து ஆயத்தமாகவும் இருந்தாக வேண்டும். ஏனெனில் அது ஒரு கண்ணிமைப் பொழுதில், ஒரு குறுகிய காலப்பகுதியில் இருக்கும். கண்ணிமைப்பதற்கு உங்களுடைய கண் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளுகிறது என்பதை அப்படியே முயற்சித்துப் பாருங்கள். அதாவது அவ்வளவு வேகமாக சபையின் எடுத்துக்கொள்ளப்படுதல் சம்பவிக்கும்.
22கர்த்தர் பயன்படுத்தும் உத்திகளையே சத்துரு எப்பொழுதும் பயன்படுத்துகிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவன் ஒரு நீதியான சபையை உடையவராய் இருக்கப்போகிறார் என்பதையும், அவர் செய்யப்போகிற காரியங்களையும் அவன் கண்டபோது, சத்துரு அந்த திட்டத்தையே பயன்படுத்தினான். அவர் ஒரு சபையை பெற்றுக் கொண்டார். அவனும் மிகவும் மதரீதியான ஜனத்தைப் பெற்றுக் கொண்டான். மேலும் அவர்கள் மதரீதியான ஜனத்தைப் போன்று அப்படியே சரியாக காலின் கட்டை விரல் நுனியில் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் கிறிஸ்துவின் சபை அதே வழியில் இருக்கிறதை அவன் அறிந்திருக்கிறான். அவன் வெளியே ராணுவ வாழ்க்கையில் அதை செய்கிறான்.
23சில காலத்திற்கு முன்னால் பியர்ஸ் துறைமுகத்தின் மீது திடீர் தாக்குதல் என்பதை பற்றிய கட்டுரையை நான் வாசித்துக் கொண்டிருந்தேன். அது மிகச் சரியாக அறியப்படாமல் நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை. ஜப்பானியர்கள் தாங்கள் அதை செய்யப்போகிறார்களென்று ஏற்கனவே அவர்களை எச்சரித்திருந்தனர். ஆனால் மோசமான பாகம் என்னவென்றால், அவர்கள் அந்த எச்சரிக்கையை புறக்கணித்தனர். அவர்கள் எச்சரிக்கையின் அடையாளங்களை கண்டுக்கொண்டிருந்தனர். ஜப்பானிய ராணுவம் ஒன்றாகக் கூடிக்கொண்டிருந்தனர். பெரிய கப்பல்கள் வெடிமருந்து, குண்டு முதலியவற்றால் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. அச்சுருத்தல் காற்று வெளியில் இருந்தது. மேலும் அவர்கள் தாக்குதலுக்காக சரியாக வரிசையில் இருந்தனர். ஆனால் அவர்களோ அதை புறக்கணித்தனர்.
24இன்று சபையுடனும் காரியம் அதுவாகத்தான் இருக்கிறது. சபையானது நியாயத்தீர்ப்பின் வரிசையில் உள்ளது. ஆனால் அவர்கள் கர்த்தருடைய வருகையை புறக்கணித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே... நீங்கள் அவரை குறை கூற முடியாது.
25ஜப்பானியர்கள் எந்த நேரத்திலும் தாக்கக்கூடும் என்றும் அவர்களுடைய பெரிய கடற்படை கடல் தண்ணீரில் பிரயாணப்பட்டுக் கொண்டிருக்கிறதென்றும், பியர்ஸ் துறைமுகத்தை நோக்கி மெதுவாகவும் ஆனால் படிப்படியாகவும், சீராகவும் இயங்கிக் கொண்டிருந்து, அது பியர்ஸ் துறை முகத்தில் சுற்றிலும் பரவிக் கொண்டு கூச்சலிட்டபோது, அவர்கள் அதைக் குறித்து நகைக்க மாத்திரம் செய்தனர். மேலும், "ஓ, முட்டாள்தனம். நீங்கள் அச்சத்தை உண்டாக்குபவர்கள். நீங்கள் முக்கியத்துவ மில்லாத விஷயங்களுக்கெல்லாம் கவலைப்படுபவர்கள், உங்களுடைய எண்ணமெல்லாம் ஏதோ பிரச்சனையைப் பற்றியதாகவே இருக்கிறது” என்று அவர்கள் சொன்னார்கள்.
26மேலும் அடுத்த நாள் காலையில் மகத்தான தாக்குதலுக்கு சிறிது முன்னால், சிறிது முன் இரவில், அங்கே பியர்ஸ் துறைமுகத்தில் ஒரு மகத்தான நடனம் அல்லது ஒரு பெரிய குடிவிருந்து, ஆடல், பாடல் கொண்ட நிசழ்ச்சி கொடுக்கப்பட்டிருந்தது. ஜப்பானியர்கள் வந்துக் கொண்டிருந் தார்களென்று அவர்கள் கூறுவதற்கு எவ்வளவு முயற்சித்தனர் என்பது காரியமில்லை, அவாகள் இன்னும் எச்சரிப்பை எடுத்துக்கொள்ள மறுத்தனர்.
27ஒரு சில நிமிடங்களாக அவர்களை நோக்குவோம். அங்கே ஒரு சிறிய வெளியீடு வெளியே செல்லுகிறது. மேலும் செய்தித் தாளின் மூலையில் ஒரு பகுதி, ஏறக்குறைய ஒரு சுகமளிக்கும் கூட்டமானது விளம்பரப் படுத்துவது போல, ஒரு சிறிய இடம், ஜப்பானியர்கள் கடல் தண்ணீரில் தங்களுடைய பாதையில் இருந்தார்கள் என்றும் ஒரு மகத்தான கடற்படையானது அந்த வழியாக முன்னேறிக் கொண்டிருந்ததாகவும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. "மற்றவர்களோ" முட்டாள்தனம் என்று கூறுகிறார்கள். நாங்கள் அதைப்போன்ற காரியத்தில் எந்த நம்பிக்கையும் கொள்வதில்லை. எதை குறித்து நீங்கள் எங்களை அச்சமூட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
28பிறகு நாம் கண்டுக்கொள்ளுகிறோம், இரவு நெருங்குகையில் வீடுகளையும், வீதிகளையும் என்னால் காணமுடிகிறது, பட்டணத்தை விட்டு வெளியேற ஆயத்தமாவதற்கு பதிலாக, வாலிப ஸ்திரீகள் அனைவரும், தங்களுடைய புது மேலாடைகளையும், மற்றவைகளையும் அணிந்துக் கொண்டிருந்தனர்: அவர்கள் கலந்துக் கொள்ளப் போவதாயிருந்த அந்த மகத்தான ஜூபிலிக்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். இவை தவிர ராணுவ அதிகாரிகளும், எல்லா படைவீரர்களும், இந்த பெரிய மது அருந்தும் விருந்தில் கலந்துக் கொள்ளக்கூடிய சிறு பரிமாற்றங்களை எழுதுவதில் அதிக அலுவலாயிருந்தனர், மேலும் பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் முழக்கமிட்டுக் கொண்டும், சுறுப்சுறுப்பாகவும் பீர், வைன் மற்றும் காரியங்களில் சிறந்ததைக் கொண்டு வந்துக் கொண்டிருந்தன. ஆனால் முழு நேரமும் ஜப்பானிய கடற்படையானது அதனுடைய பாதையில் இருந்தது அவர்கள் எச்சரிப்பைக் கேட்கதவறினர்.
29சூரியன் மறைய தொடங்கின போது, அவர்களனைவரும் இந்த ஒரு மகத்தான மது அருந்தும் இடத்தில் கூடினர் பக்கத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருக்கலாம். மது ஊற்றி கொடுப்பவர் மது அருந்தும் இடத்தை தேய்த்து பளபளப்பாக்கிக் கொண்டிருந்தார். யாரோ ஒருவர் ஏதோ ஒன்றை இதைப்போன்று கூறினார். "சொல்லுங்கள் வதந்தியை நீங்கள் கேட்டீர்களா? "இல்லை, நான் கேட்டதாக நான் நம்பவில்லை " என்று பேசின மனிதனிடம் அவன் கூறினான். "ஓ, ஒரு ஜப்பானிய கடற்படை இந்த வழியாக வந்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய ஏதோ ஒன்றை அவர்கள் கூறுகிறார்கள்”.
30பிறகு வேறொருவர் உரையாடலை நிறுத்தினார். மேலும் ஒரு வாலிப அறிவற்ற ஸ்திரீ அங்கே நுழைந்து, தன்னுடைய பாதத்தை மது அருந்தும் அறையின் மீது நீட்டி, நாம் ஒரு நல்ல நேரத்தை அனுபவிக்கும்படியாக இங்கே இருக்க, நீங்கள் ஒரு அச்சமூட்டும் ஒரு யுத்தத்தைப் பற்றி பேசாதிருக்கும்படி உங்களுக்கு தெரியாதா? என்றாள் .
31கர்த்தருடைய வருகையை குறித்த இன்றைய உலகத்தின் போக்கும் ஏறக்குறைய அதே போன்று இருக்கவில்லையா? “நீங்கள் பழைய பாணியிலான நடை, உடைகளை கொண்டிருப்பவர்கள், காலத்துக்கு ஒத்து போகாதவர்கள், உங்களுடைய உடையும் செயலும், உங்கள் செய்கைகளும் எதை உண்டாக்குகிறது?
32ஆனால் நாமோ அந்த கர்த்தருடைய இரகசியமான திடீரென்ற பிரசன்னமாகுதலுக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அங்கே காற்று வெளியில் பரிசுத்த ஆவியானவரின் ஒரு செய்தி இருந்து கொண்டு வருகையானது சமீபமாயிருக்கிறதென்று நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
33பெரிய குழப்பங்களுக்குள்ளாய் சென்றுக் கொண்டிருந்தது, மேலும் அந்த இரவு ஒரு பயங்கரமான காரியமாக இருந்திருக்கத்தான் வேண்டும். இரவின் போது கொஞ்ச நேரமாக, அவர்கள் ஒரு வாலிப ஸ்திரீயை, ஒரு அழகான கட்டமைப்புள்ள வாலிபப் பெண்ணை எடுத்து, அவளிடமிருந்து அவளுடைய உடைகளை களைந்துப் போட்டு, ஒரு கீழ் பகுதி ஆடையுடன், சிறிய குதிரைகள் இழுத்துச் செல்லும் நான்கு சக்கர வண்டியில் அவளை வைத்து, தெருவிலும் மற்ற இடங்களிலும் அவளை ஓட்டிச்சென்று, ஒரு பெரிய நேரம் அவர்களுக்கு இருந்ததாக அது கூறினது. ஜப்பானியர்கள் முழு நேரமும் நிலங்களை வெற்றியுடன் கைப்பற்றிக் கொண்டே சரியாக வந்துக் கொண்டிருந்தனர்.
34ஆகாய விமானங்கள் சமிக்ஞையின் மூலம் கவனித்துக் கொண்டிருந்ததான சூழ்நிலையில், பணியில் இருந்த மனிதர்கள் இரவு முழுவதும் இந்த பெண்களை சுற்றிக் கொண்டிருந்து மயக்கமுற்ற, கலக்கமுற்ற நிலையில், அடுத்த நாள் காலையில் பணியின் மத்தியில் தூங்கிய நிலையில் பிடிபடுமட்டாக அந்த பெரிய விருந்தில் இருந்தார்கள்.
35கர்த்தருடைய வருகையிலும் அதைப் போலவே இருக்கப்போகிறதென்று நான் அஞ்சுகிறேன். சபை கர்த்தருடைய வருகையில், அவர்கள் அமர்த்தப்பட்டிருக்கும் கடமையில் தூங்குகிறவர்களாய் இருக்கப்போகிறார்கள். உலகக் காரியங்களில் கவலை நிறைந்தவர்களாய் மது அருந்திய நிலையில் இருக்கப் போகிறார்கள்.
36பிறகு பட்டணத்தின் மீதாக விமானங்கள் பறந்து குண்டுகளை வீசிக்கொண்டிருந்தது. அவர்கள் அந்த பட்டணத்தை தரைமட்டமாக உருகுலைய பண்ணினார்கள். ஏன்? ஏனெனில் அவர்கள் எச்சரிப்பை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த இரக்கமற்ற ஜப்பானிய படை வீரர்கள் அங்கே உள்ளே ஓடி வந்து, அந்த வாலிப ஸ்திரீயையும், பட்டணத்து ஜனங்களில் மீதியானவர்களையும் தெருவில் கற்பழித்து பிறகு அவர்களை வாளால் துண்டுகளாக வெட்டிப்போட்டார்கள். இப்பொழுதும் நீங்கள் எச்சரிப்பை பொருட்படுத்தவில்லை என்றால், அங்கே ஒரே ஒருகாரியமே விடப்பட்டுள்ளது, அது நியாயத்தீர்ப்பு.
37ஓ, இந்த அமெரிக்கா அதனுடைய ஒழுக்கமற்ற தன்மையும், அதனுடைய மெத்தனத்தினால் கீழ்தரமான நிலைக்கு சென்ற ஒரு நேரம் எப்பொழுதாவது இருந்திருக்குமானால் அது சரியாக இப்பொழுதே.... கடற்கரைக்கு கடற்கரை சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு, அடையாளங்ளும், அற்புதங்களும் நடப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, மேலும் மகத்தான அற்புதங்ளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் அவர்களோ தங்களுடைய காரியம், களியாட்டம், மது குடித்தல், புறக்கணித்தல், கேளிக்கை முதலானவைகளில் தொடர்ந்து செல்கின்றனர்.
38அமெரிக்காவில் ப்ராட்டஸ்டன்ட் சபைகளின் இரண்டு லட்சம் பிரசங்க பீடங்களில், இன்று அவ்விதமான பிரசங்க பீடங்களில் நமக்கு என்ன தேவை என்றால், நாம் பிரசங்கிக்கும் பாவமுள்ள ஜனங்களாகிய இந்த சந்ததியினர் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் இடிமின்னலை முழக்கமிட அஞ்சாத கர்த்தருடைய தீர்க்கதரிசிகளே. "துன்மார்க்க சந்ததியே என்று கூச்சலிடும் ஏசாயாவைப் போன்ற தீர்க்கதரிசிகளே நமக்கு தேவை. மேலும் அவன் எப்படியாக அந்த சந்ததியை கண்டித்து வரப்போகும் நியாயத்தீர்ப்புகளை அவர்களிடம் கூறினான்.
39ஆனால் இன்று நம்முடைய மிகுதியான ஊழியக்காரர்கள் அந்த காரியங்களை கூறுவதற்கு அஞ்சுகிறார்கள். அவர்களுடைய சொந்த அலுவல்களினி மித்தமாக, எச்சரிப்பின் ஒரு நேரடியான சாட்சியை கொடுப்பதற்கு அவர்கள் அஞ்சுகிறார்கள். காரணம் அவர்கள் தங்கள் ஸ்தாபனத்தை விட்டும், தங்களுடைய பிரசங்க பீடத்தை விட்டும் இறங்கியாக வேண்டும். அவர்கள் ஒரு வேளை வெளியே செல்ல வேண்டியதாகவும், மற்ற சபையிலோ அல்லது ஏதோ ஒன்றிலோ அவர்கள் மற்றொரு ஸ்தானத்தை எடுக்க வேண்டி இருக்கலாம். ஆனால் நம்முடைய பிரசங்க பீடங்களில் அந்த மாதிரியான ஜனங்களை பெற்றிருப்பது மிகவும் மோசமானதாகும். முற்காலத்திய சீர்த்திருத்தத்தின் ஜான் வெஸ்லி, மார்டின் லூத்தர் போன்ற மனிதர்கள் நமக்கு தேவை. இயேசு கிறிஸ்துவின் உண்மையான சுவிசேஷத்தின் ஒரு சாட்சியாக இந்த ஜீவியத்திலிருந்து கடந்து போகும்படியாக கருதப்பட்டாலும் கூட, முழுவதுமாக கொடுப்பதற்கும், தங்களையே அர்ப்பணிப்பதற்கும் விருப்பமுள்ள பவுலைப் போன்ற ஜனங்கள் நமக்கு தேவை.
40அது இன்று என்னவாக இருக்கிறது, கல்வியும், சங்கங்களும் மற்றும் சங்கங்களின் சிறு மூர்க்க வெறிக்கொண்ட நேர்த்தியான காரியங்களும், அவர்களின் சொந்த உணர்ச்சிகளும் சபையில் பரிசுத்த ஆவியானவரின் இடத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இன்று அமெரிக்காவுக்கு சத்தமிடுவதற்கு நமக்கு என்ன தேவை என்றால், தவறான காரியங்களுக்கு எதிராக சத்தமிடுவதற்கும், வரப்போகும் நியாயத்தீர்ப்பை குறித்து ஜனங்களை எச்சரிக்கை செய்வதற்கும், பயப்படாத, தேவனால் அனுப்பப்பட்ட, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரம்பின தேவ மனிதர்களே.
41இந்த தேசம் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பும்படி தேவன் ஒரு போதும் விடமாட்டார். தேவன் அவ்விதம் செய்வாரானால், அவர் சோதோம் கொமோராவை எழுப்பி, அவர்கள் அப்படிப்பட்ட ஒரு தீய ஜனங்களாய் இருந்தபோது, அவர்களை என்றென்றைக்குமாய் மூழ்க்கடித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டியவராய் இருக்கிறார். தேவனுடைய பார்வையில் நாம் விதிவிலக்கானவர்களல்ல. அது நம்முடைய அரசியலுக்கு வருகிற போதும், அது நம்முடைய அரசாங்கத்திற்கு வருகிற போதும், இன்று நாம் வந்துக் கொண்டிருக்கும் பாதை எப்படி இருக்கிறது. தூணிலிருந்து கம்பம் வரை அது அழுகிப்போயுள்ளது. இனிமேலும் நேர்மை என்பது கிடையாது. அது தேவனில் மாத்திரமே இருக்கிறது.
42ஓ, யு.எஸ் ஐக்கிய நாடுகள் மீது நாம் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறுகிறோம். யு.எஸ் ஐக்கிய நாடுகள் சபையில் ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஐம்பத்தி ஒன்று சதவிகிதத்தை காட்டிலும் இப்பொழுது அதிகமானவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்கிறார்கள். ஜீவிக்கிற தேவனுடைய. வார்த்தையைத் தவிர நம்பிக்கை வைப்பதற்கு அங்கே எதுவுமில்லை . அரசியல் மீதும் வைக்க முடியாது. நாம் எதன் மீதும் நம்பிக்கை வைக்க முடியாது.
43கூட்டத்திற்காக இந்த கூடாரத்தின் வழியாக பணத்தை கைமாற்றுவதின் மூலம் தவறாக இருந்த ஏதோவொன்றை செய்துக் கொண்டிருப்பதைக் குறித்து அக்கினியின் சீற்றத்தின் அழுத்தத்தைப் போல, என்னை குற்றம் சாட்டும் முயற்சியில், நான் கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களாக வழக்கு விசாரணையில் இருந்துக் கொண்டிருக்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய தர்மகர்த்தா குழு அறிக்கையில் கையெழுத்திட்டனர். அங்கே என்னுடைய கூட்டங்களில் வருகை தர ஒருவரும் இல்லை . ஆனால் எப்பொழுதும் இந்த பணமானது நம்முடைய கூட்டங்களில் இந்த சபை வழியாக நேரடியாக எடுக்கப்பட்டது என்று நான் வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டேன்.
44மேலும் நான் சபை வழியாக அதை முதலீடு செய்த காரணத்தால், நான் அரசாங்கத்தை ஏமாற்ற முயற்சித்தேன் என்றும், அதற்காக கான்ஸாஸிலுள்ள ஃபோர்ட் லீவன் வொர்த்தில் இருபது வருடங்களுக்கு எனக்கு சிறை வாசம் கொடுக்க இருக்கிறார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
45நம்முடைய வழக்கு மன்றங்களின் மீது என்ன எழுதப்பட்டுள்ளது, "நேர்மை” அவர்கள் இனிமேலும் அரசாங்கத்துடன் இருக்கப் போவதில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஏற்கனவே அது அங்கே எழுதப்பட்டிருக்கவில்லை என்பதுதான் அதன் அர்த்தம் என்று நான் கூறினேன்.
46எப்படி ஒன்றை முடிவு செய்து அதை நிரூபிப்பீர்கள். பிறகு அவர்கள் வேறே ஏதோ ஒன்றைத் தேடி தகவலை கண்டறிவார்கள். அது மாத்திரமல்ல, அவர்கள் திட்டவட்டமாக முடிவு எடுக்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள்.
47நான் கூட்டரசு அமைப்பு சார்ந்த வழக்கு மன்றங்களில் இந்த வாக்கு மூலத்தை அளித்தேன். கம்யூனிஸமானது அதில் கிறிஸ்தவத்தை கொண்டிருந்தால், நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்திருப்பேன். ஆனால் நான் அதில் இருக்க முடியாது. ஏனெனில் அது கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எனவே நான் பிடித்துக் கொள்வதற்கு ஒரு கரம் எனக்கிருக்கிறது. அதாவது அவர் சத்தியத்தையும், பண்பொழுக்கத்தையும் மதிப்பார் என்று நான் அறிந்திருக்கும் தேவனுடைய மாறாத கரம். அது நேர்மையை முன்னோக்கி வரவேண்டியதாய் இருக்கிறது என்றேன்.
48கர்த்தருடைய வருகையில் மாத்திரமே அந்த நம்பிக்கை இருக்கிறது. மற்ற எங்கேயும் அந்த நம்பிக்கை என்பதே கிடையாது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
49ஓ, நாம் ஜீவித்துக் கொண்டிருப்பது அப்படிப்பட்ட ஒரு நாளாக உள்ளது. அப்படிப்பட்ட மிக மோசமான நேரம், ஒவ்வொரு காரியமும் உடல் சார்ந்த காரியமாய் இருக்கிறது. சபையும் கூட, சபை ஜனங்கள், சபை ஸ்தாபனங்கள், அவர்கள் ஒருவர் மற்றொருவருடன் ஐக்கியமாய் இருக்க மாட்டார்கள் என்பது வரை, அவர்களுடைய சிறு வித்தியாச பேதங்களைக் குறித்து மிகவும் அக்கரையுள்ளவர்களாய் இருக்கிறார்கள். மேலும் கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது என்ற எச்சரிக்கையை எடுத்துக் கொள்ளவில்லை.
50பில்லி கிரஹாம் மற்றும் ஜேக் ஷல்லர், ஓரல் ராபர்ட்ஸ் மற்றும் அநேக மகத்தான சுவிசேஷர்கள், சார்ல்ஸ் ஃபுல்லர் போன்ற அப்படிப்பட்ட மனிதர்கள் முழு உலகத்திற்கும் சேவை செய்பவர்கள், கர்த்தருடைய வருகையை எச்சரிக்கக் கூடிய ஒவ்வொரு காரியத்தையும் அவர்கள் செய்கின்றனர். சரியானதை செய்ய முயற்சித்த அந்த பழைய மனிதர்கள், நம்முடைய சொந்த அரசாங்கத்தால் துண்டுகளாக கிழிக்கப்பட்ட மனிதர்களாக இருந்தனர்.
51நான் ஒருவரிடம் "மிஸ்டர் என்னுடைய ஜீவியத்தில் இருபத்தெட்டு வருஷங்கள் நான் தேவனுடைய பலிபீடத்தின் மீது கிடந்து சரியானதையே செய்ய முயற்சித்தேன். யாராவது ஒருவர் நான் தவறினதை பார்த்திருந்தால், எதற்காவது யாராவது ஒருவரிடம் எப்போதாவது சண்டை யிட்டிருந்தால் அல்லது என்னுடைய ஜீவியத்தில் எப்பொழுதாவது திருடியிருந்தால் என்னிடம் கூறும்படி நான் விரும்புகிறேன். தேவனுடைய கிருபையால் நான் தெளிவாக இருக்கிறேன்” என்று கூறினேன்.
52அதாவது உங்ளுடைய விரலின் சுடக்கொலியை விட அதிகமானது ஒன்றுமில்லை . "நீங்கள் எப்படியானாலும் குற்றவாளிகளாய் இருக்கிறீர்கள். மேலும் நீங்கள் உங்களுடைய சபையில் ஒரு சர்வாதிகாரியாய் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய விரலை சுடக்குகிறீர்கள். மேலும் செய்யும்படி அவர்களிடம் கூறுவதை உங்களுடைய சபை அப்படியே செய்கிறது."
53நான் ஓ, மனிதன் எப்படி இவ்வளவு நேர்மையற்றவனாய் இருக்க முடியும் என்றேன். அவர், "அவர்களுடைய வீடுகள் எறிந்த போது நீர் ஜனங்களுக்கு நன்கொடைகள் வழங்கினீர். இங்கே உம்முடைய காசோலைகள் இருக்கிறது. அங்கே நீர் விதவைகளுக்கு நூற்றுக்கணக்கான டாலர்கள் கொடுத்து அவர்களுடைய வாடகையை செலுத்தினீர், மேலும் அதைப் போன்ற காரியங்களை செய்தீர்" என்றார். "நீர் உம்முடைய சபைகுழுவிடம் சென்று அப்படிப்பட்டவைகளை செய்யப்போவதாக நீர் அவர்களிடம் கூறினீரா? என்றார். "நான், இல்லை , ஐயா" என்றேன். "நீர் ஏன் செய்யவில்லை ?" நான், “கர்த்தர் தம்முடைய வார்த்தையில் என்னிடம், "உன்னுடைய வலதுகை செய்வதை உன்னுடைய இடதுகை அறியாதிருக்கக்கடவது.” என்று கூறினார் என்றேன். "அப்படியானால் நீ உன்னுடைய வழக்கை ஒரு வேதாகமத்தின் மூலம் வழக்காட முயற்சிக்கிறாய், நாங்களோ சட்டத்தின் மூலம் உன்னிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். நான், "பெரிய சட்டம் எது, மனிதனுடையதா அல்லது தேவனுடையதா?" நான் தேவனுடைய சட்டத்தையே எடுத்துக் கொள்வேன் என்றேன்.
54அப்படியே - இரண்டு வருடங்களுக்கு முன்னால், நான் என்னுடைய விடுமுறையில் இருந்தபோது, என்னுடைய பாதையில் சென்றுக் கொண்டிருந்தேன். இங்கே இந்தியானாவில் பகல் நேரத்தில் வேக சட்டங்கள் மணிக்கு 65 மைல் - அதாவது தடையற்ற நெடுஞ்சாலைகள், வேகமாக பிரயாணம் செய்வதற்கான அகலமான சாலை. மேலும் சூரியன் கீழே சென்ற பிற்பாடு இரவில் அது மணிக்கு 60 மைல்கள் ஆகும். கான்ஸாஸில் அவ்வாறுதான், இல்லினாய்ஸிலும் அவ்வாறு தான், கொலோரோடாவிலும் அவ்வாறுதான், இடாஹோவிலும் அவ்வாறு தான், வையோமிங்கிலும் அவ்வாறு தான்.
55அநேக நாட்களாக ஒரு பனிப்புயல் வீச்சில் கிடந்த பிறகு, பின்னால் என்னுடைய வழிப்பாதையில், நான் ஒரு காட்டுமான் கிடைக்கப்பெற்றேன். என்னுடைய நண்பர்களுக்கு அதை கொடுக்கும்படி வீட்டிற்கான என்னுடைய வழியில் இருந்தேன். அப்படியே எனக்கு பின்னால் இருந்த மற்றொரு பனிப்புயலை தோற்க்கடிக்கும்படி முயற்சிப்பதற்கு நான் துரிதப்பட வேண்டியதாய் இருந்தது. காலத்தாமதப் படுத்துவதினால் இறைச்சி நாசமாகிவிடும்.
56மேலும் நான் வையோமிங்கை விட்டு தாண்டி நெஃப்ராஸ்காவை நோக்கி வந்துக் கொண்டிருந்தேன். சாலையில் நான் ஏறக்குறைய 30 மைல் தூரத்திலிருந்தேன். திடீரென்று நான் பின்னால் கவனித்தேன். ஒரு போலீஸின் சிவப்பு விளக்கை நான் கண்டேன். என்னுடைய ஜீவியத்தில் நான் கைது செய்யப்பட்டது கிடையாது. எனவே நான் தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தேன். நான் முன்னோக்கினேன். அது எந்தவகையான பட்டண மாயிருந்தாலும் 30 அல்லது 40 மைல்களுக்கு அப்பால் நான் 60 மைல் வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தேன். பெரிய நான்கு பாதை நெடுஞ்சாலையில் அப்படியே சென்றுக் கொண்டிருந்தேன் .
57மேலும் மணிக்கு 60 மைல் வேகத்தில் நான் இருப்பதை கவனித்தேன். நான் பின்னால் நோக்கினேன். எனக்கு பின்னால் அவர் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தார். நான் அப்படியே கூர்ந்து கவனித்தேன். சிவப்பு விளக்கானது மினுமினுக் கென்று ஒளி விடுவதை நான் கண்டேன். நான் நினைத்தேன் "நல்லது, அவர் ஏன் என்னை தாண்டிச் செல்லவில்லை. பெருமளவிலான வழியை அவர் பெற்றுக்கொண்டுள்ளாரா என கவனித்தேன். நான் தொடர்ந்து காத்துக் கொண்டிருந்தேன். நான் என்னுடைய ஜன்னலை கீழே இறக்கினேன். நான் ஒரு எச்சரிக்கை சங்கொலியைக் கேட்டேன். நல்லது, நான் எவ்வளவு தூரத்தை அடையமுடியுமோ அவ்வளவு தூரத்தில் நான் இருக்கிறேன்" என்று நினைத்தேன். மேலும் அவர் எனக்கு முன்னாக தாண்டி வந்து சுற்றி வளைத்து என்னை நிறுத்தினார் . நான் காரை விட்டு வெளியே வந்தேன். ஒரு ரேடியோவில் நான் கேட்டிராத ஒரு செய்தியாக அது இருக்கலாம், அது வீட்டில் என்னுடைய மனைவி அல்லது குடும்பத்தை பற்றியதாக இருக்கலாம் என்று எண்ணினேன். நான் எவ்வளவு அப்பாவியாக இருக்க முடியுமோ அவ்வளவு அப்பாவியாக காரை விட்டு வெளியே வந்தேன்.
58அவர், "நான் உம்மை ஏன் நிறுத்தினேன் என்று நீர் வியக்கிறீர் என்று நான் யூகிக்கிறேன். நான், "ஆம் ஐயா" என்றேன். அவரோ, "நீர் வேக சட்டத்தை மீறியிருக்கிறீர்.” என்றார். “நீர் எவ்வளவு வேகமாக போய்க் கொண்டிருந்தீர் என்று உமக்கு தெரியுமா?" என்றார். நான், "அது 65 அல்லவா" என்றேன். "இல்லை ஐயா," இங்கே அது 55. நீர் வேகக்கட்டுப் பாட்டிற்கு 5 மைல்கள் அதிக வேகமாக போய்க் கொண்டிருந்தீர் என்றார். "ஓ, நான் வருந்துகிறேன், நான் அவ்விதம் கருதவில்லை" என்றேன். "உங்களுடைய ஓட்டுரிமத்தை என்னிடம் கொடுங்கள், உங்களுடைய உரிமத்தை என்னிடம் காட்டுங்கள்" என்றார்.
59நான் என்னுடைய பாக்கெட்டிலிருந்து அவைகளை எடுத்தேன். சங்கை என்ற வார்த்தையை அவர் கண்ட உடனே அவருடைய கண்கள் நெருப்பாக மின்னியது. அவர் தன்னுடைய புஸ்தகத்தை வெளியே எடுத்து 24 டாலர்கள் மற்றும் 50 சென்டுகளுக்கான ஒரு அபராத சீட்டை என்னிடம் கொடுக்க எழுதத் துவங்கினார். நான், "ஒரு அபராத சீட்டை என்னிடம் நீங்கள் கொடுக்கப் போகிறீர்களா? என்றேன் . "நீங்கள் சரியாக சொன்னீர்கள். நான் ஒரு அபராத சீட்டை உம்மிடம் கொடுக்கப் போகிறேன்" என்றார். நான் "நல்லது ஐயா" அதெல்லாம் சரிதான். ஆனால் நான் எந்த அடையாள கம்பத்தையும் காணவில்லை" என்று கூறினேன். அவர் "சரியாக மாநில எல்லைக் கோட்டின் வெளியே ஒரு அடையாள கம்பம் இருக்கிறது. அதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும்" என்றார். "நல்லது, நான் நான்கு நாட்களாக பனிப்புயல் வீச்சில் உட்கார்ந்துக் கொண்டிருந்தேன். நான் உண்மையாகவே அதை கவனிக்கவில்லை ஐயா” என்றேன். அவர் "சரி உம்மிடத்தில் நீர் ஏதாவது பணத்தை வைத்திருக்கிறீரா? என்றார். நான் ஏறக்குறைய 12 டாலர்கள் வைத்திருக்கிறேன் என்றேன். அவர், "நல்லது, நீங்கள் அதை செலுத்தும் வரையில் 10 அல்லது 11 வரை நீங்கள் சரியாக இங்கேயே தங்கியிருக்கப் போகிறீர்கள்," என்றார். நான் "ஐயா" என்றேன், என்னவெல்லாம் தவறாயிருந்தது என்பதையும் இறைச்சியையும் மற்றவற்றையும் கூறினேன். அவருக்கு அதை ஒரு காரியமாக கருத முடியவில்லை . எனவே பணத்தை அவர்களுக்கு நான் அனுப்புவேன் என்ற நேர்மையான வாக்கு மூலத்தில் நான் கையெழுத்திட வேண்டியதாய் இருந்தது.
60நான் வீட்டை அடைந்த பின்பு, சிறு பட்டிணத்தின் நீதிபதிக்கு, நான் அதை அனுப்பின சிறு மாவட்ட தலைமை நிலக்கிழாருக்கு எழுதினேன். நான் அவரிடம் கூறினேன், "ஐயா, நான் 20 அல்லது ஏறக்குறைய 25 வருடங்கள் தேவனுடைய வார்த்தையை எடுத்துரைத்திருக்கிறேன். கர்த்தருடைய சேவையில் 26 வருடங்கள் குற்றவாளிகளை கர்த்தராகிய இயேசுவிடம் மனமாற்றத்திற்கும், ஒரு அதிகாரியாய் இருக்கும் உம்முடைய ஜீவியத்தை பாதுகாக்க முயற்சிக்கவும், வாழ்வதற்கு ஒரு சிறந்த இடம் மற்றும் குடும்பங்களுக்கான ஒழுக்க முறைக்காகவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அந்த சேவையில் நான் 20 சொச்சம் வருடங்கள் வற்புறுத்தி வருகிறேன். மேலும் நான் உம்முடைய எல்லைக்கோட்டின் மீது வேகத்தை தாண்டி விட்டேன். அதற்காக "நீர் என்னை மன்னப்பீர் என்று உணருகிறேன்", ஆனால் உம்முடைய அதிகாரி இவை எல்லாவற்றிலும் அதை எதிர்ப் பார்க்கக்கூட மாட்டார். அவர் அவருடைய கடமையை செய்ததற்காக நான் அவரை நம்பலாம். அவர் அவருடைய கடமையை செய்தார் என்றேன் நான்.
61ஆனால் நீதிபதியாக இருக்கும் உம்மை கேட்கிறேன். அது பணமல்ல, அது கொள்கையாக இருக்கிறது. நான் செலுத்துவதிலேயே முதலாவது அபராதத் தொகை, மேலும் சபை வழியாக ஜீவிப்பதற்கு, ஜனங்கள் கொடுக்கும் பணத்திலிருந்து அது வந்தாக வேண்டும். நீங்கள் அதற்காக என்னை மன்னிக்கும்படி இறக்கத்தோடு இருப்பீர்களானால் நான் அதை பாராட்டுவேன், எப்படியிருந்தாலும் அதுதான் சரி என்று நீங்கள் அறிந்துள்ளபடி அதிகாரப்பூர்வமாக இருக்கிற காசோலையை இந்த கடிதத்தோடு வைத்திருக்கிறேன்.
62சகோதரனே அவர் இரத்தம் உறைந்ததுப் போல உணர்ந்தவராய் அதற்கு குறுக்காக தன்னுடைய பெயரை கையெழுத்துப் போட்டார், ஏன்? ஏன்? அழுகிப்போன அரசியல் வழியாக செய்யப்பட்டது. மேலும் மதச் சம்பந்தமான காரணமில்லாத வெறுப்பு... அவர்களில் சிலர் கொலை செய்தலுடன் சமாளிக்கின்றனர், அது அங்கே இருக்கிறது. அப்படிப்பட்ட காரியத்தின் கீழாக அதிக காலம் நம்முடைய சபை இருக்கும்படி தேவன் விரும்பமாட்டார். உலகமானது ஊழலால் நிரம்பிவிட்டது. மேலும் அரசியலும் அழுகிப்போய் விட்டது, சபையும் அழுகிப்போய்விட்டது.
63அதைக் குறித்து அதிகமாக செய்வதற்கு நமக்கு என்ன தேவையென்றால் தேவனுக்கு பயப்படும் ஜனங்கள் ஒன்று சேர்ந்து கர்த்தருடைய நாமத்தை நோக்கி கூப்பிடுவதே அவசியமாய் இருக்கிறது. செய்வதற்கு பிரன்ஹாம் குடும்பத்திற்கு அதுதான் தேவையாய் இருக்கிறது. ஓ, எனக்கு முன்னே அநேக காரியங்களை நான் காணவும், பார்க்கவும் முடிகிறது. சபையானது சென்று கொண்டிருக்கும் வழியில் நாம் எவ்வளவு மன இருக்கத்தோடு இருக்கக்கூடுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன் : ஜனங்களின் ஒழுக்கங்கள் கீழ்தரமான நிலைக்குச் செல்ல அவர்கள் எவ்வளவாக அனுமதிக்கின்றனர். அவர்கள் எப்படியாக, அவர்கள் தங்கள் வழியில் ஜீவிக்கவும், நடனங்களுக்கும், ராக்-அன்ரோல்களுக்கும், அவர்கள் விரும்பும் எந்த வழியிலும் உடையுடுத்தவும் மற்றும் ஒவ்வொன்றிற்கும் எப்பொழுதும் அதேவிதமாக செல்ல விட்டுக் கொடுக்கும் போதகர்களாய் அவர்கள் இருக்கிறார்கள்.
64நமக்கு என்ன தேவையென்றால் "கோடரியானது மரத்தின் வேரில் வைக்கப்பட்டிருக்கிறது, நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்” என்று கூறின யோவான் போன்று, யாரை அது புண்படுத்தினாலும் அதைப் பொருட்படுத்தாது சத்தியத்தை கூறுகிற பழைய பாணியிலான தேவனால் அனுப்பப்பட்ட, பரலோகத்தில் பிறந்த போதகர்கள் தான் நமக்கு தேவை. நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த துன்மார்க்க நிலையை துண்டுத் துண்டாக கிழிக்கிறதற்கான போர் ஆயுதங்களுக்காக தேவனுடைய நியாயத்தீர்ப்புகளை பயன்படுத்தி வார்த்தைகளால் தாக்குகிறவர்கள் போன்ற போதகர்களும், தீர்க்கதரிசிகளுமே நமக்கு தேவை.
65முதுகில் தட்டிக்கொடுப்பதினால் பாவத்தை பின்னால் தூக்கி எரிய உங்களால் கூடாது. நம்முடைய திட்டங்கள் பாழாக்கப்பட்டதும், தோல்வி அடைந்ததுமாயுள்ளது. அங்கே பாவத்திற்கான பரிகாரம் ஒன்று மாத்திரமே . அதாவது கிறிஸ்துவே அந்த பரிகாரம். கிறிஸ்து அறிவுத்திறனுடைய அறிக்கையின் வழியாக அல்ல, ஆனால் ஒரு புதிய ஜீவியத்திற்கு பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் மற்றும் மறுபிறப்பின் வழியாக மாத்திரமே அது சாத்தியமாகும். அது மாத்திரமே பாவத்திற்கான பரிகாரமாகும். நம்முடைய தேசத்திற்கான ஒரே பரிகாரம், நம்முடைய சபைக்கான ஒரே பரிகாரமும் அது மாத்திரமே. ஜனங்களுக்கான ஒரே பரிகாரமும் அது ஒன்று தான் .
66இங்கே சில காலத்திற்கு முன்னால் பிரயாணம் பண்ணின ஜனங்களாகிய உங்களில் அநேகர் அங்கே இருந்திருக்கிறீர்கள் என்று நான் யூகிக்கிறேன். வெளியே மேற்கில் என்னுடைய பிரயாணத்தில் அங்கே அநேக தடவைகள் நான் முழு இரவும் தங்கினதுண்டு. அங்கு செல்லும்படி அரசாங்கத்திடம் விடுதலைப் பெற்று அடுத்த வாரம் நான் அங்கு செல்லவேண்டியிருக்கிறது... அவர்கள் இங்கே என்னை பிடித்து வைத்துள்ளனர். என்னை அவர்கள் தொலைவில் அனுப்பினால், அவர்கள் சரியாக இங்கே என்னை அடைய முடியும். மேற்கு கடற்கரையில் நான் இரண்டு கூட்டங்களுக்கு செல்ல வேண்டியதாய் உள்ளது. மேலும் கர்த்தருடைய சித்தம், ஆர்கான்ஸாஸிலுள்ள வெஸ்ட் மெம்ஃபிஸ் என்று அழைக்கப்படும் இந்த சிறு பட்டணம் வழியாக நான் கடந்து செல்ல வேண்டும். அது டென்னஸியிலுள்ள மெம்ஃபிஸ்ஸிலிருந்து ஆற்றுக்கு குறுக்கேயுள்ளது.
67மேலும் இந்த இடத்தில் குதிரை பந்தய சூதாட்டத்திற்கான அரங்கத்திற்கு இரண்டரை மில்லியன் டாலர்கள் செலவழிக்க அவர்கள் விரும்புகின்றனர். கீழ்தரமான நிலைக்குக் கொண்டுப்போவதற்கும், தவறான வழியில் இழுத்துச் செல்வதற்கும், ஆத்துமாக்களை நரகத்திற்கு அனுப்புவதற்கும் இரண்டரை மில்லியன் டாலர்கள்.
68பில்லி கிரஹாம், ஓரல் ராபர்ட்ஸ், நான் மற்றுமுள்ளவர்கள் சபை வழியாக சட்டப்பூர்வமான பணத்தை கைமாற்றிக் கொள்வதற்கு கிறிஸ்துவின் நிமித்தமாக துன்பப்படுபவர்களை பிடிக்கின்றனர். மேலும் அவர்கள் கூட்டரசு அமைப்பு சார்ந்த சிறையில் இருபது வருடங்கள் கொடுக்க விரும்புகின்றனர் . அது எப்பொழுதும் அதைப் போன்று செயல்புரிவதற்கு உலகத்தின் விருப்பமாய் இருக்கிறது.
69நான் அவர்களிடம் கூறினேன் "கூட்டரசு அமைப்பு சார்ந்த சிறையில் எனக்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். மேலும் “கூட்டரசு அமைப்பு சார்ந்த சிறையில் உங்கள் சகோதரர்கள் இருக்கிறார்களா? என்று வழக்கறிஞரில் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் "இருக்கிறார்கள்” என்றேன். "அவர்கள் யார்” என்றனர்.
70நான் “அவர்களில் ஒருவர் பத்மு தீவில் அல்காட்ராஸ் என்னுமிடத்தில் சகோதரன் யோவான் மற்றும் கூட்டரசு அமைப்பு சார்ந்த சிறையில் சகோதரன் பவுல், மேலும் சகோதரன் தானியேல் அவர் சிறை வீட்டில் இருந்தவர், மேலும் சகோதரன் யோசேப்பு அவர் குற்றவாளியாயிருந்து, ஏதோ ஒன்றை அவர் வெறுத்து, போத்திபாருக்கு ஒரு உண்மையான ஊழியக்காரனாக இருக்க முயற்சிப்பதின் மூலம் வருடக்கணக்காக சேவை செய்தான். போத்திபாரின் மனைவி அவனை வெறுத்தாள். அவனுடைய மீசையும், தாடியும் வளரும் வரை அவன் சவரம் செய்யாமலிருந்தும் கூட, பார்வோனுக்கு முன்பாக அவனை கொண்டு போவதற்கு அவனுக்கு அவர்கள் சவரம் செய்ய வேண்டியதாயிருந்த வரையில் அவன் குற்றவாளியென்று முடிவு செய்யப்பட்டு பலவருடங்களாக சிறையிலிடப்பட்டான்" என்றேன். நிச்சயமாக.
71எதற்காக? அவர்களில் தவறு ஏதாவது இருந்ததா? சரியாக கிறிஸ்துவினிமித்தம் மாத்திரமே. மேலும் மாசுப்படுத்துவதற்கும், சாபமிடுவதற்கும் ஆத்துமாக்களை நரகத்திற்கு அனுப்புவதற்காக ஒரு குதிரைப்பந்தய விளையாட்டு அரங்கத்திற்காக இரண்டரை மில்லியன் டாலர்கள் செலவழிக்கப் போகிறார்கள்... அதே நேரத்தில் தேவன் சீக்கிரம் வருகிறார் என்பதாகவும் பேசிக் கொள்ளுகிறார்கள்.
72ஆனால் ஆர்கன்ஸாஸ் ஜனங்கள் அதை குறித்து ஏதோ ஒன்றை செய்தனர். ஒவ்வொரு சபையும் அந்த சமுதாயத்தில் ஒன்பது அல்லது பத்து வெவ்வேறான ஸ்தாபனங்கள் என்று நான் எண்ணுகிறேன். அவர்களனைவரும் ஒன்றாக இணைந்து "அது தவறு" நாங்கள் அதை பெற்றிருக்கப் போவதில்லை என்று கூறினர். அவர்கள் ஒரு ஜெபக் கூட்டத்தை அமைத்தனர். மேலும் அவர்கள் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமுமாக சங்கிலி ஜெபங்களை செய்தனர். நீதிபதிகளும், கூட்டரசு அமைப்பு சார்ந்த மனிதர்களும் இணைந்து அவர்கள் அதை அமைக்கக் கூடுமா அல்லது கூடாதா என்று அடுத்த நாள் காலையில் அதற்கான முடிவெடுக்கும்படியாக வழக்கு மன்றத்திற்கு சென்று அவர்களை சந்தித்தனர். ஆனால் அது தோல்வியடைந்தது. ஜெபம் காரியங்களை மாற்றுகிறது.
73உலகமானது எவ்வளவு அழுகிப் போயுள்ள தென்றோ , நம்முடைய தேசம், நம்முடைய நாடு, நம்முடைய ஜனங்கள் எவ்வளவாக அழுகிப்போயுள்ளனர் என்றோ நான் கவலைப்படவில்லை. ஜெபமானது காரிங்களை மாற்றுகிறது. ஆனால் நாம் இன்னுமாக ஜெபக்கூட்டங்களில் ஆர்வ மற்றவர்களாய் இருக்கிறோம். நாம் செய்ய வேண்டிய அநேகக் காரியங்களை நாம் வைத்திருக்கிறோம், ஆதலால் நாம் அவ்விதம் எண்ணுகிறோம் .
74பிறகு அது மாத்திரமல்ல, அந்த இடத்தை குதிரைப் பந்தய அரங்கமாக்குவதற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் மேலும் ஆர்கன்ஸாஸ் மாநிலத்தில் வைத்திருக்கக் கூடாதென்றும் அதைப்போன்ற மற்ற ஏதாவதொன்று வர இருக்கின்ற வருடங்களிலும் இருக்கக் கூடாதென்றும் நிறுத்தப்பட்டுள்ளது. ஏன் அவருடைய நாமத்தினால் அழைக்கப்பட்ட ஜனங்கள் தாங்களாகவே ஒன்று கூடி ஜெபித்ததினாலேயே.
75ஓ, இன்று நமக்கு என்ன தேவையென்றால் போதகர்களை சார்ந்திராமல் ஒன்றாக இணைந்தவர்களாய் ஆயத்தப்படுவதேயாகும். ஆனால் நீங்கள் தேவனுக்கு முன்பாக ஒரு தனி மனிதனாக இந்த ஒழுக்கங்கெட்ட காரியங்களுக்கு தப்புவதற்கு, கர்த்தருடைய வருகைக்காக நீங்கள் தாமே ஆயத்தமாகுங்கள். அவர்கள் உங்களை என்னவென்று அழைக்கிறார்கள் என்பதோ, அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதோ காரியமல்லை. அது ஒரு சிறிதும் தேவனை மாற்றுவதில்லை. தேவன் அதை அப்படியே அதே விதமாக அதை செய்வார். அவர் நம் மீது சார்ந்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார், ஓ, என்னே.
76சில ஜனங்கள் "நல்லது, ஞாயிறு காலையில் நான் சபைக்கு செல்லுகிறேன். ஒரு அருமையான போதகரான நம்முடைய போதகருக்கு நான் செவி கொடுத்துக் கேட்கிறேன். உனக்கில்லாமல் போய்விட்டது. இப்பொழுது நீயாகவே முன்பாக வந்து, ஒரு வித்தியாசமான மனிதனாக இருக்கும்படியாக உன்னை தானே கர்த்தராகிய இயேசுவுக்கு உன்னைத் தானே ஒப்புக்கொடுக்கவும், அவரை சேவிக்கவும் போகிறாய் என்பதையும் அறிவதற்கு இந்த காலையில் அது என்னுடைய இருதயத்திற்கு சந்தோஷத்தை கொடுக்கிறது என்றார்.
77அவர் "உங்களுக்கு நன்றி மேய்ப்பரே” என்றார். பிறகு அவர்... நான் உன்னிடம் ஏதோ ஒன்றை கேட்க விரும்புகிறேன். நான் பிரசங்கித்த எந்த செய்தி அல்லது நான் பயன்படுத்திய என்னுடைய எந்த பாடம் அல்லது சபையில் பாடின துதிப்பாடல்களில் எந்த பாடல் நீ இதை செய்யும்படி தீர்மானம் எடுக்கச் செய்தது, என்றார்.
78அந்த மனிதர் அவர் முகத்தை நோக்கியவாறு அவருடைய கன்னத்தில் கண்ணீர்கள் ஓடிக் கொண்டிருக்க, மேய்ப்பரே, உம்முடைய செய்திகள் எவ்வளவு நன்றாக இருந்த போதிலும், அது உம்முடைய செய்திகளினிமித்தமாக எடுக்கப்பட்ட தீர்மானமல்ல, பாடற்குழுவினரின் பாடல்களோ அல்லது தனிச் சிறப்பானவைகளினால் எடுக்கப்பட்ட தீர்மானமும் அல்ல. அவர் "அப்படியானால் இந்த தீர்மானத்தை நீர் ஏன் செய்தீர் என்று இந்த கூட்டத்தினரிடம் கூறுவீர்களா?" என்றார். அதற்கு அவர், "ஒரு கிறிஸ்தவ மனிதருடன் நான் வேலை செய்தேன். நான் அவரைப் பற்றி தவறானவைகளை சொல்லியிருக்கிறேன். நான் அவரை ஒரு பரிசுத்த உருளையர் என்று அழைத்திருக்கிறேன். நான் அவரை ஒரு மத வெறியர் என்றும் மற்றும் வெவ்வேறான பெயர்களினால் அழைத்திருக்கிறேன். அது அவரை ஒரு சிறிதும் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அவர் இவை எல்லாவற்றினூடாகவும், கடைசியாக என்னுடைய இருதயத்தில் வெற்றி பெறுவதுவரை அப்படிப்பட்ட ஜீவியத்தை அவர் செய்தார். அந்த மனிதரைப்போன்று இருப்பதற்கு நான் விரும்புகிறேன். கிறிஸ்துவிடம் வழி நடத்த அவரை நான் கேட்டுக்கொண்டதற்கு அதுதான் காரணம். அவர் சேவிக்கும் கிறிஸ்துவையே நான் விரும்புகிறேன்" என்றார்.
79நீங்கள் பாருங்கள் தேவன் தம்முடைய சபையை ஆயத்தப்படுத்தும்படி மேய்ப்பர் வழியாக கிரியை செய்கிறார். மேலும் அவர் தம்முடைய சபையை ஆயத்தப்படுத்தும்படி பாடல்கள் வழியாக கிரியை செய்கிறார். மேலும் அவர் தம்முடைய சபையை ஆயத்தப்படுத்தும்படி உங்கள் வழியாகவும் கிரியை செய்கிறார். உங்கள் மேய்ப்பர் தவறி, தவறுவதில் தொடர்ந்தால், நீங்கள் உங்களுக்கு வேறொரு மேய்ப்பரை கண்டு பிடிக்கும்படி முழுமையாக தேடுங்கள். சீக்கிரமாக நீங்கள் அதை செய்வீர்கள். உங்கள் பாடற்குழு சரியாக பாடாமலோ அல்லது தனிப்பாடல் பாடுகிறவர்கள் சரியாக பாடாமலிருந்தால் நீங்கள் பாடல் நடத்துபவரிடம் சென்று இனிமேலும் அவர்களை பாட அனுமதிக்க வேண்டாம். நான் பாடும்போது அவர்கள் எனக்கு நரம்பு தளர்ச்சி உண்டாகச்செய்கிறார்கள் என்று சொல்லுங்கள்.
80ஆனால் தனி நபராக உங்களைக் குறித்தென்ன? உங்களுடைய தினசரி ஜீவியத்தில் நீங்கள் எப்படி தவறுகிறீர்கள்? நீங்கள் எப்படியாக தேவனுடன் இணங்குகிறீர்கள் - ஒரு மலையின் மேலிருக்கும் ஒரு பிரகாசிக்கும் விளக்காக நீங்கள் இருக்கும்படியாக தேவன் விரும்புகிறார். உங்கள் வழியை சுற்றிலும் இயேசுவை குறித்து அறிந்து கொள்ளுதல் இல்லாதிருக்கும் போது, அந்த வழியை ஒருவரும் கடந்து செல்ல முடியாது. எந்த மாதிரியான ஜீவியத்தை நீங்கள் ஜீவிக்கிறீர்கள்? அம்மாதிரியானவைகளில் ஒன்று அர்ப்பமாக எண்ணுவது, அவமதிப்பது, எரிச்சலுண்டாக்கவது, அக்கரையற்றிருப்பது அல்லது நீங்கள் கிறிஸ்துவில் கண்டுக்கொண்ட சமாதானத்தையும், அன்பையும் குறித்து நீங்கள் பேச முடியுமா? அவள் தன்னைத் தானே ஆயத்தப்படுத்தினாள்.
81நான் துன்மார்க்கத்தை உங்களிடம் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தேன். சபை காலங்களினூடாகச் சென்று அவைகளை காண்பிக்க நேரமானது என்னை தடை செய்து போடும். பாபிலோனில் கலகம் செய்த இரவு நடனம், குடித்தல் மற்றவைகள் போன்று ஒவ்வொரு முறையும் என்ன சம்பவித்தது? காலங்களினூடாக அதே வழியில் தான் அது சென்று கொண்டிருந்தது. ஒவ்வொரு காலத்திலும் தேவனுக்காக தனித்து நின்று எல்லா பிரபலமானவைகளின் நடுவிலும் அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் காரியத்தை கண்டிப்பதற்கு தேவன் இடியுடன் கூடிய மின்னல் தீர்க்கதரிசிகளை வைத்திருந்தார் .
82அது மாத்திரமல்ல, சிறிய ஸ்தேவானின் காலத்தைக் குறித்து நான் பேசுவேனானால், அவன் ஒரு தீர்க்கதரிசியல்ல, ஒரு மேய்ப்பனுமல்ல, அவன் கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு அங்கத்தினனாக மாத்திரம் இருந்தான். அந்த காலையில் சனகரிப் சங்கத்தினர் முன்பாக இந்த சிறிய நபர் எப்படியாக நின்று தன்னை கண்டித்தவர்களிடம் "வணங்கா கழுத்துள்ள வர்களே, இருதயத்திலும், செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப் போல - நீங்களும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்” நீங்கள் அவ்விதமாகவே செய்கிறீர்கள் என்றான்.
83அவன் ஒரு மேய்ப்பனல்ல. உங்கள் மேய்ப்பன் அதெல்லாவற்றையும் செய்யும்படி நீங்கள் எதிர்ப்பார்க்க முடியாது. உங்கள் தர்மகர்த்தா குழுவோ அல்லது உங்கள் டீக்கன் குழுவோ அதெல்லாவற்றையும் செய்யும்படி நீங்கள் எதிர்ப்பார்க்க முடியாது. நீங்கள் உங்களைத் தானே ஆயத்தம் செய்தாக வேண்டும். அது ஒரு தனி மனிதனின் விவகாரம். மேலும் ஞாபகம் கொள்ளுங்கள், சபையானது ஒரு கண்ணிமைக்கும் நேரத்தில் போகத்தக்கதாக அவருடைய வருகையானது மிக திடீரென்று இருக்கும். தேவனுடைய கடுங்கோபம் போர்க்களத்தின் முடிவிற்காக காத்திருக்கிற நியாயத்தீர்ப்பானது வந்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நாம் எப்படி தப்புவோம்.
84அடையாளங்கள் தோன்றுகின்றன. இயேசு வருகிறார். மகத்தான அற்புதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மைல்கல்லும் அவருடைய சீக்கிரமான வருகையை சுட்டிக் காண்பித்துக்கொண்டிருக்கிறது. மேலும் ஒரு சிறிது நேரத்தில் அது சம்பவிக்கும். இவைகளை நாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில், இந்த காலை வேளையிலே நாம் எங்கே நின்றுக் கொண்டிருக்கிறோம். கர்த்தராகிய இயேசு இந்த காலையிலே சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானங்களிலிருந்து இறங்கி வருவார் என்று நாம் பேசியிருப்போமானால் சபை சரீரமாக நாம் ஆயத்தமாக இருப்பதாக காணப்படுவோமா? தாங்கள் ஆயத்தமாக இருப்பதாக நிரூபிக்கப்பட்ட மரித்தவர்களின் மத்தியிலிருந்து உயிரோடு எழுந்திருக்கிறவர்களோடு, தனிநபராக ஆயத்தமாக நாம் இருப்பதாக நாம் காணப்படுவோமா?
85நாம் ஆயத்தமாக இருக்கிறோமா இல்லையா என்பது காரியமல்ல. கர்த்தராகிய இயேசு குறிக்கப்பட்ட நேரத்தில் சரியாக வருவார். நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். இப்பொழுது அதை நாம் செய்தாக வேண்டும். இனி காத்திருப்பதற்கு நேரமில்லை. நாம் நேரத்தை மீட்டுக் கொண்டு ஆயத்தமாயிருக்க வேண்டும்.
86சில காலத்திற்கு முன்னால் நான் கேள்விப்பட்ட கதை என் மனதில்பட்டது. நான் முடிப்பதற்கு முன்னால்... கர்த்தருடைய இரகசிய வருகையானது, திடீரென்று இரகசியமாக சபை போய்விடுதல்...கவனியுங்கள், இருவர் வயலில் இருப்பார்கள்; நான் ஒருவரை எடுத்துக்கொள்வேன், மற்றவரை கைவிடுவேன். இருவர் படுக்கையில் இருப்பார்கள். ஒருவரை எடுத்துக் கொள்வேன்; மற்றவரைக் கைவிடுவேன். இவை எதை காண்பிக்கிறதென்றால், கர்த்தருடைய வருகை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் காரியமல்ல. அது உலக முழுவதுமாய் இருக்கப் போகிறது. ஒருவர் வயலில் வேலை செய்துக் கொண்டிருப்பார். அது பகலாயிருக்கும், இன்னொருவர் உலகத்தின் மறுபக்கத்தில் படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பார். அது உலக முழுவதும் நடக்கப் போகிற எடுத்துக்கொள்ளப்படுதல். அது ஒரு ஆரவாரத் தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும் வருகிறதாயிருக்கும். மேலும் தேவ எக்காளம் முழங்கும், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப் பார்கள். அவள் இரகசியமாக எடுத்துக் கொள்ளப்படுவாள். ஓ, அதை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன். அந்த மகத்தான மணவாளன் வருகிறார். மணவாட்டி தன்னைத் தானே ஆயத்தப்படுத்திக் கொண்டவளாக இருப்பாள். அந்த இரகசியமான நேரத்திற்கு காத்திருப்பது அவளுக்கே தெரியாது. ஆனால் அவளோ ஆயத்தமாகவும், ஆடை தரித்துக்கொண்டு அதற்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.
87நியாயத்தீர்ப்புக்கு அவள் ஆயத்தமாயிருக்கிறாள் என்று உலகமுழுவதுமாக அடையாளக் கம்பங்களை நாம் பார்க்கிறோம். சபையின் மத்தியில் அடையாள அற்புதங்களை பார்க்கிறோம். மகத்தான காரியங்கள் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. நாம் எப்படிப்பட்ட ஜனங்களாய் இருக்க வேண்டும்? அந்த நேரத்திற்கு ஆயத்தமாயிருப்பது. ஏனென்றால் அவர் எப்பொழுது வருவார் என்பதை அறியாதிருக்கிறோம். எந்த நிமிடத்தில், எந்த மணி நேரத்தில் கர்த்தர் வருவார் என்பதை அறியாதிருக்கிறபடியால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள். ஏனென்றால் பின்பு நீங்கள் ஆயத்தமாக முடியாது. ஏனென்றால் உங்களால் முடியாது என்று அவர் சொல்லியிருக்கிறார்.
88உங்களில் எத்தனைப் பேர் கன்னிகைகளை குறித்து வாசித்திருக்கிறீர்கள். ஒரு வேளை எல்லோரும் இருக்கக் கூடும். சிலர் புத்தியுள்ளவர்கள், சிலர் புத்தியில்லா தவர்கள். கன்னிகை என்றால் "தூய்மை" என்று அர்த்தம். அவர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான். ஒவ்வொருவரும் கன்னிகைகளாய் இருந்தார்கள். சுத்திகரிக்கப்பட்ட தேவனுடைய பாத்திரமாய் இருந்தார்கள். ஆனால் யாருடைய விளக்கில் எண்ணை இருந்ததோ அவர்களே உள்ளே சென்றார்கள். மற்றவர்கள் கைவிடப்பட்டார்கள். ஒவ்வொருவரும் கன்னிகைள்தான், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் விரலை நீட்டி ஒரு தவறையும் சுட்டிக் காண்பிக்கப்பட முடியாதவர்கள்தான். அவர்கள் ஒவ்வொருவரும் கர்த்தருடைய வருகையை விசுவாசிப் பவர்கள். அவர்கள் அவரை சந்திக்கும்படி ஆயத்தமாய் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் எண்ணையை வெளியேற விட்டவர்கள்.
89உங்களுடைய நிலையை அப்படி இருக்க விடாதீர்கள். உங்கள் விளக்கில் எண்ணையை வைத்திருங்கள். எண்ணை என்பது பரிசுத்த ஆவி. உங்களிலிருந்து வழிந்து போக விட்டு விடாதீர்கள். ஏதோ ஒரு காரணத்தினிமித்தமாக கிறிஸ்துவி லிருக்கும் உத்தமத்திலிருந்து உங்களுடைய அன்பு மரித்துக் கொண்டிருக்குமானால், எண்ணையின் ஊற்றை உடையவராயிருக்கிற அவரிடம் துரிதமாய் சென்று உங்களை ஆவியின் அபிஷேகத்தால் நிரப்ப, அவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள்.
90நம்முடைய தேசம் ஒழுக்கமற்றதாகவும், சீரழிந்ததாகவும், நாசமடைந்ததாகவும் போய்விட்டது, நம்முடைய அரசியலும் சீரழிந்துப் போய் விட்டது. நம்முடைய தலைவர்களும்...ஓ, அதை குறித்து நாங்கள் என்ன செய்ய முடியும். நீங்கள் ஒரு நல்ல மனிதனை உள்ளே வைக்க முடியும், அவர் ஒரு வஞ்சகனாக வெளியே வருகிறார். நாம் கொண்டு வரக்கூடிய ஒரே ஒருவர் மாத்திரமே இருக்கிறார். அது கர்த்தராகிய இயேசு. அவருடைய வருகைக்காக நாம் ஆயத்தமாவோம்.
91நான் முடிப்பதற்கு முன்பாக சில வருடங்களுக்கு முன்பாக நான் கேட்ட ஒரு கதையை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். திடீரென்ற, துரிதமான சபையின் எடுத்துக் கொள்ளப்படுதல்.....இப்பொழுது, நீங்கள் சொல்லுகிறீர்கள், “சில காரியங்கள் சம்பவிக்கும், பிறகு நான் ஆயத்தமாவேன்". இப்பொழுதே ஆயத்தமாகுங்கள். பியர்ல் ஹார்பர் மற்றும் சில இடங்களில் அவர்கள் எவ்விதமாக எச்சரிப்பை கேட்க மறுத்தனர். அவர்கள் அதை கவனிக்க மறுத்தனர். தெய்வீக நியாயத்தீர்ப்பைத் தவிர வேறு எதுவும் வைக்கப்படவில்லை.
92இப்பொழுது கிறிஸ்துவின் கீழ் வராத மற்ற அனைவரும் தேவனுடைய கோபத்தின் கீழும், தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கீழும் இருப்பார்கள். தயவு செய்து அது உங்களுக்கு சம்பவிக்க அனுமதிக்காதீர்கள். பிரன்ஹாம் கூடாரம் தன்னை எவ்வளவாய் மாற்றிக் கொண்டாலும் சரி. நீங்கள் அவ்விதமாக இருக்க உங்களை அனுமதிக் காதீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரராய் இருங்கள். அது பிரன்ஹாம் கூடாரத்தை சார்ந்த காரியமல்ல. இரண்டுமல்லாத மற்ற எந்த சபையை சார்ந்த காரியமுமல்ல. கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாயிருப்பது தனிப்பட்ட நபராகிய உங்களை சார்ந்த காரியமாய் இருக்கிறது . நீங்கள் ஆயத்தமாய் இருந்தாக வேண்டும். நான் என்னுடைய காலடிகளை பெருக்கி, துடைத்து சுத்தம் செய்கிறேன். நீங்கள் உங்களுடைய காலடிகளை பெருக்கி, துடைத்து சுத்தம் செய்வது உங்களை சார்ந்தது. என்னுடைய வைகளை நான் சுத்தம் செய்ய என்னை தனியே விட்டு விடுங்கள். உங்களுடையவைகளை சுத்தம் செய்ய நான் உங்களை விட்டுவிடுகிறேன். உங்களுடைய ஆடைகளை நீங்கள் ஆயத்தப்படுத்தியாக வேண்டும்.
93கொலோரோடோவில், வடக்கு பகுதியில், மலைப்பகுதிக்கு சமீபமாக ஒருவருக்கு ஒரு பெரிய பண்ணை இருந்தது . அவர் ஒரு பிரமாண்டமான பண்ணையை உடையவராய் இருந்தார்.
94நீங்கள் யாவரும் அறிந்திருக்கிறபடி என்னுடைய வாழ்கையில் ஒரு சிறிய பண்ணையை நடத்தி வேலையில் போவதும் வருவதுமாய் இருந்தேன். தேவனுக்காக என்னுடைய அழைப்புகளில் ஒன்று ஒருஜோடு பழைய சக்கர தாற்றுமுள், என்னுடைய சேணத்தின் மீது ஒருசுழல் துப்பாக்கி மற்றும் என்னுடைய பக்கவாட்டில் ஒரு கைத்துப்பாக்கி, மரங்களுடைய காற்று வீச்சீன் சத்தத்திலிருந்து, மனித குரலைப்போன்ற ஒரு சத்தம் " ஆதாமே நீ எங்கிருக்கிறாய்?" என்று சொல்லிற்று. நான் நட்சத்திரங்களை மேல் நோக்கிப் பார்த்தபோது நான் அந்த பழைய மெல்லிய சத்தத்தைக் கேட்டேன். டெக்ஸாஸிலிருந்து கால் நடையை மேய்க்கும் வயது சென்ற ஒருவர், ஒரு சிறிய காகிதத் துண்டை தலைவாரும் சீப்பின் மீது வைத்து ஊதுவதைக் கேட்டேன். என் மீட்பர் மரித்த சிலுவையண்டையில் அவ்விடத்திலிருந்து என்னை பாவத்திலிருந்து தூய்மைப் படுத்தும்படி நான் அழுதேன் அவ்விடத்தில் என்னுடைய இருதயத்தின் மீது இரத்தமானது பூசப்பட்டது அவருடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். நான் போர்வையை என்னுடைய முகத்தின் மீது இழுத்து என்னை நானே மறைத்துக் கொள்ள முயற்சித்தேன். காரணம் தேவன் கீழ் நோக்கி அந்த குன்றுகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
95அந்த பண்ணைகளில் ஒன்றில், அந்த பெரிய பெட்டக நிறுவனங்களில், கால் நடைகளை வாங்கி அவைகளை மலைகளில் ஓட்டிச்சென்று, வருடத்தில் இலையுதிர் காலத்தில் அவைகள் குட்டிகளை போட்டபிறகு, அவைகளை வெளிளே கொண்டு வந்து அவைகளுக்கு அடையாளமிட்டு, வயதான மந்தை, இறைச்சிக்கான காளை, மேலும் மற்றவைகளில் சிலவற்றை விற்பனை செய்கின்றனர். மேலும் நேராகச்சென்று... பெரிய மந்தையை சேர்க்கின்றனர்.....
96இந்த குறிப்பிட்ட பண்ணையின் சொந்தக்காரர், பொருப்பாளர், அதை நாம் அங்கே எப்படி அழைப்போம், உயர் அதிகாரி, அவருக்கு ஐந்து குமாரத்திகள் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் இளமையான, திருமணமாகாத அழகான ஸ்திரீகள். அங்கே இந்தப்பெண்களுக்கு பெற்றோரின் உடன் பிறந்தவரின் சிறு பெண் இந்த பெண்களோடு இருந்தாள். அவளுடைய தாயும், தகப்பனும் இருவரும் மரித்துப் போய்விட்டார்கள். தன்னுடைய பெரியப்பாவோடு தங்கும்படியாக அங்கு கொண்டு வரப்பட்டிருந்தாள்.
97அந்த பெண்கள் அலங்காரமான மடிப்புகளையுடைய மேலாடைகளை உடுத்தியிருந்தார்கள், உங்களுக்கு தெரியுமா. அவர்கள் இந்த சிறிய ஏழைப் பெண்ணை தங்களோடு வைத்துக் கொண்டு ஒரு மிருகத்தைப் போல நடத்தினார்கள். எல்லாவிதமான கடினமான வேலைகளையும் அவள் செய்யும்படியாக வைத்தார்கள். அவள் பாத்திரங்களை கழுவினாள். எல்லாவற்றையும் பெருக்கி சுத்தம் செய்தாள். தூங்கும் இடங்களை ஒழுங்குபடுத்தினாள். அவள் அதெல்லாவற்றையும் செய்ய வேண்டியதாயிற்று.
98அவர்கள் தங்கள் நகங்களை மெருகேற்றினவர் களாகவும், நக ஒப்பனை, உதடுகளில் சாயம் பூசுதல், எல்லாவிதமான அலங்கார ஆயத்தத்தோடும், அளவுக்கு மீறிய அலங்காரத்தோடும், பார்த்தீர்களா. விசேஷமாக சிக்காகோவிலிருந்து காரியங்களை கேட்கும்போது இவ்விதமாக இருப்பார்கள். அந்த பெரிய பெட்டக நிறுவனம் , அவையெல்லாவற்றிற்கும் உரிமையாளருடைய வாலிப குமாரன் அந்த பண்ணைக்கு வருகை தரஇருப்பதால், அவர்கள் தங்கள் சிறந்த ஆடைகளோடு, அணிகலன்களோடு, ஓ, அவர்கள் எவ்விதமாக தங்களை உடுத்திக்கொண்டு அவனுடைய வருகைக்காக ஆயத்தமாயிருந்தார்கள்.
99அவர்கள் அந்த வாலிபனை கவர்ந்து, அவனை திருமணம் செய்துக் கொண்டால், அந்த பெரிய பண்ணையை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியும். அதன் மூலம் அந்த குமாரன் எல்லோருக்கும் சுதந்திரவாளியாக முடியும். ஆதலால் அவர்கள் தங்களை ஆயத்தமாக்கிக் கொண்டார்கள்.
100ஆதலால் நீங்கள் பாருங்கள், அங்கே ஒரு ஆயத்தமானது செய்யப்பட வேண்டும். நீங்கள் சபையில் சேர்ந்துக் கொள்வதினாலும், அல்லது மற்றவைகளை செய்வதினாலும் நீங்கள் உங்களை ஆயத்தமாக்கிக் கொள்ளுகிறீர்கள். தேவையாயிருப்பது அப்படிப்பட்ட காரியமல்ல. உங்கள் விளக்குகளில் எண்ணையை வைத்திருக்க வேண்டும். பார்த்தீர்களா? நீங்கள் உங்கள் நல்ல ஆடை அலங்காரத்தோடு செல்லுகிறீர்கள். நாங்கள் ஒரு பெரிய சபையை கட்டுவோம். நாங்கள் ஒரு சிறந்த ஸ்தாபனத்தை சார்ந்தவர்களாய் இருப்போம். கர்தருக்காக நாங்கள் அவர்களுக்கு ஒரு பைப் ஆர்கன் வாங்கித் தருவோம். கம்பளத்தாலான நாற்காலிகளை செய்வோம்.
101தேவனுக்கு தேவையாயிருப்பது அவைகளல்ல. அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நேர்மையான காரியம்தான் தேவனுக்கு தேவையா யிருக்கிறது. அது தான் வஸ்திரமாயிருக்கிறது. அவள் உடுத்துகிறதான அழகூட்டும் அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நேர்மை, நீதி என்று வேதம் சொல்லுகிறது .
102ஆதலால் அந்த வாலிப மனிதனுடைய வருகைக்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டுமென்று அந்த பெண்கள் நினைத்தார்கள். அந்த ஏழை உறவினப் பெண்ணும் கூட .
103எங்கோ ஒரு தூக்கியெரியப்பட்ட காரியத்தை அது எனக்கு ஞாபகப்படுத்துகிறது. நீங்கள் அவளை மெச்சிக் கொள்ளலாம். அவள் ஒரு அழகான பெண். ஓ, அவள் ஒரு நல்ல சிறியப் பெண், ஆனால் அவள் ஒரு உறவினளாகவே, ஒரு பொருட்டாகவோ கருதப்படவில்லை.
104ஸ்தாபனங்களின் முன்னால் இன்று உண்மையான சபையின் நிஜமான படமாக அது இருக்கிறது. ஸ்தாபனத்திற்கு எதிரான குழுவாகவும், ஒரு தூக்கி எரியப்பட்ட குவியலாகவும் எண்ணப்படுகிறது. ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை.
105ஆகையால் அந்த ஏழை சிறு பெண் தன்னுடைய வேலைகளை செய்யும்படியாக சென்றுவிட்டாள். மேலும் அந்த வாலிப மனிதன் வந்த போது, அவர்கள் அதை அறியாதிருந்தார்கள்... (டேப்பில் காலியிடம்) அவன் ஒரு மனைவிக்காக பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த பட்டணத்து பெண்களில், எப்பொழுதும் இருக்கிற வண்ணமாக பொம்மைகளைப் போன்ற அலங்கரிப்பு. மதுபான கடைகளில் சுற்றிலும் அவர்கள் தொற்றிக் கொண்டவர்களாய், காடிலாக் காரில் அவர்கள் சவாரி இன்னும் மற்ற காரியங்களை பார்த்து அந்த வாலிபன் நோயுற்றவனாகவும், சோர்வுள்ளவனாகவும் ஆனான். நான் வடக்க பகுதிக்கு சென்று, என்னுடைய குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக இருக்கக்கூடியவளும், தையல் சங்கத்தில் எப்பொழுதும் தன்னுடைய நேரத்தை செலவழிக்கிறவளாக இல்லாமல், சமூகத்தோடு ஐக்கியம் கொண்டவளாகவும் இல்லாமல், ஒரு உண்மையான தாயாகவும் இருக்கக்கூடியவளுமான ஒரு உண்மையான மனைவியை எனக்கு தேடி கண்டு பிடிப்பேன் என்று நினைத்தான்.
106அவன் அவ்விடத்திற்கு சென்றபோது அவனுக்கு என்ன கிடைத்தது. சிக்காகோவில் அவன் எந்த காரியத்தை நிராகரித்தானோ அதே காரியங்கள் தான் அங்கும் இருந்தது.
107தங்களுடைய விளக்குகளில் எண்ணை இல்லாதவர்களும், செல்வதற்கு ஆயத்தமில்லாதவர்களும், பெயருக்காக ஒரு சபையாய் இருப்பதற்காகவும், ஒரு வேளை கர்த்தராகிய இயேசு நான் அதிசயிக்கும்படி ஒரு ஸ்தாபனமான ஒரு சபையை கண்டுபிடிப்பாரானால், ஓ, அவர்களுக்கு நல்ல மேலாடைகள் இருக்கிறது, அவர்களுக்கு பெரிய சபைகள் இருக்கிறது. ஆனால் தேவனுக்கு அவைகள் தேவையில்லை. அவருக்கு தனிப்பட்ட நபராகிய நீங்கள் தேவை. அவர்களுக்கு நல்ல போதகர்கள் இருக்கலாம். அவர்களுக்கு நல்ல டீக்கன் அமைப்புகள் இருக்கலாம். ஆனால் அவருக்கு எண்ணையோடு இருக்கக்கூடிய நீங்கள் தேவை. எண்ணையோடு இருக்கக்கூடிய மணவாட்டியை எடுத்துச் செல்லும்படியாக அவர் வருகிறார்.
108இந்த வாலிபன் அங்கு பார்த்தபோது அவன் இருதயத்தில் அவன் மீது எந்த பற்றுதலுமில்லாமல் இருந்தான். அந்த இரவு அவர்கள் ஏதோ ஒன்றை வரிசையின்படி வைத்திருந்தார்கள். வெகு காலத்திற்கு முன்பு அவர்களுடைய நாட்களில், அவர்கள் அதை சார்ல்ஸ்ட ன் நடனம் என்று அழைப்பார்கள். அது ராக்-அன்-ரோல் போன்றது. உங்களில் அநேகருக்கு நினைவிருக்கலாம், அந்த சார்ல்ஸ்ட ன் நடனம். நான் சிறுவனாக இருந்தபோது அவர்கள் அவ்விதம் வைத்திருந்தார்கள்.
109நீங்கள் அறிவீர்கள், அந்த நடனம் ஆடுவதற்கு கறுப்பு நிறமும், வெள்ளை நிறமும் கொண்ட ஆடைகளை அணிந்திருந்தார்கள். (ஓ, நான்...அது சார்ல்ஸ்ட ன் என்றும் ப்ளாக் பாட்டம் என்றும் அழைப்பார்கள். அவ்விதம் தான் அவர்கள் அதை அழைப்பார்கள்) அதற்காக இரண்டு வண்ண ஆடைகளை வைத்திருந்தார்கள். அவர்கள் அவ்விதமான நடனங்களை நடத்தப் போகிறார்கள்.
110ஆனால் அந்த வாலிபனோ அவ்விதமான நிகழ்ச்சியின் மூலமாக நோயுற்றவனானான். அவன் ஒரு உண்மையான பெண்ணிற்காக வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஆதலால் அவன் அவர்களுடைய நிகழ்ச்சியிலிருந்து நழுவி விட்டான். அவன் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தான். அவன் அவர்களை பார்க்கும்படியாக உள்ளே சென்றான்.
111அவ்விதமாக எனக்கு இன்னொரு குமாரனைத் தெரியும். இன்னொரு குமாரன் உங்களுடைய சபைக்கு வரப்போகிறார். அவர் வருவார், அவர் தேவனுடைய குமாரன், அவர் அங்கே வருவார். அவர் சுற்றி பார்ப்பார். உங்களுடைய நேர்த்தியான ஆடைகளை அவர் பார்ப்பார். நீங்கள் ஒரு நல்ல அங்கத்தினர் என்பதை அவர் அறிந்து கொள்வார். ஆனால் அவர் சபையின் வழக்கமான செயலுக்கு பதிலாக வித்தியாசமான ஏதோ ஒன்றை அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
112ஆதலால் அவன் சுற்றி பார்த்துக் கொண்டிருந்து, சிறிது நேரத்திற்கு பிறகு, அவன் ஊக்கமிழந்தவனாய் வாசலுக்கு வெளியே போய்விட்டான். சந்திர வெளிச்சத்தில் தூங்கும் இடத்தை நோக்கி நடந்துக்கொண்டிருந்தான். யாரோ வாய்க்குள்ளாக பாடுவது போல இருந்ததை அவன் கேட்டான். அவன் சுற்றி பார்த்தபோது, ஒரு பெரிய பாத்திரத்தில் பாத்திரங்கள் கழுவிய தண்ணீரை வெளியே கொட்டுவதற்கு வெறும் காலுடன் அந்த இரவில் அந்த பாத்திரத்தில் தண்ணீரோடு இந்த சிறிய பெண் சென்றுக் கொண்டிருந்தாள். அவன் அவளைப் பார்த்த உடனே ஏதோ ஒன்று அவனிடம் "அது அவள் தான், அந்த ஒருத்தி அவள்தான்" என்று சொல்லிற்று.
113ஆதலால் அவன் அந்த வழியில் தன்னை பொருத்திக் கொண்டான். அப்பொழுது அவன்...நல்லது, அவன் அந்த கால் நடைகளின் வேலியின் பக்கமாக வந்தபோது, அவள் அவ்விடத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள் ஏறக்குறைய மயக்கமுற்றாள். நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்டான்? மேலும் உன்னுடைய பெயர் என்ன? என்று கேட்டான்.
114அவள் தன்னுடைய பெயரை அவனிடத்தில் சொன்னாள். அது அந்த பண்ணையின் முதலாளியின் பெயராகவே இருந்தது. அவன் சொன்னான் "பின்னும் அது எப்படி என்று விளங்கவில்லை .... அவர் உன்னுடைய அப்பாவா? அவள் சொன்னாள், “நான் அவருடைய அண்ணன் மகள் மாத்திரமே, பார்த்தீர்களா. என்னுடைய தகப்பனாரும், அவரும் சகோதரர்கள். எனக்கும் அதே பெயர் தான் இருக்கிறது, ஆனால் நான்... அவர் தான் எஜமான்”.
115நீங்கள் ஒரு வேளை உங்களுடைய சபையின் பெயரை உங்களுக்கு வைத்திருக்கலாம். ஒரு வேளை பிரன்ஹாம் கூடாரத்தின் பெயரை வைத்திருக்கலாம் அல்லது மெதோடிஸ்ட் அல்லது நீங்கள் செல்லும் சபையின் பெயர். ஆனால் அது அதுவல்ல நண்பர்களே, பாருங்கள். அது வித்தியாசமான ஏதோ ஒன்று; அது உங்களுடைய சிறந்தகுணம்; அதைத் தான் தேவன் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் ஒரு வேளை மெதோடிஸ்டாக இருக்கலாம், நீங்கள் ஒரு வேளை பாப்டிஸ்டாக இருக்கலாம், நீங்கள் ஒரு வேளை பிரஸ்பிடேரியனாக இருக்கலாம்; அது அதுவல்ல, அது தேவன் பார்த்துக் கொண்டிருக்கிற தான சிறப்பான குணம். அது உலகப் பிரகாரமான குணமல்ல, ஆனால் பரிசுத்த ஆவியின் சிறப்பான குணம். "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்" பரி.மாற்கு.16-ஆம் அதிகாரத்தில் இயேசு இவ்விதமாய் சொல்லியிருக்கிறார்.
116அவன் இன்னும் பேசிக்கொண்டே இருக்கப்போகிறான் என்பதை புரிந்துக் கொண்டவளாய் தன்னுடைய தலையை தாழ்த்தி வீட்டிற்குள்ளே ஓடி விட்டாள்.
117அவன் ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ அங்கு இருந்தான். அவன் அங்கு எல்லாவற்றையும் சுற்றி பார்த்தான். மேற்கொண்டு அவளிடம் எதையும் பேசாதிருந்தான். ஆனால் அவளை கவனித்துக் கொண்டே இருந்தான். அவன் அடுத்த நாள் காலையில் புறப்பட வேண்டும். அதற்கு முந்தின இரவு அவர்கள் வேறொரு பெரிய நிகழ்ச்சியை வைத்திருந்தார்கள். அவன் அவளை கவனிப்பதில் இருந்தான். ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. அவள் பாத்திரங்களை சுத்தம் செய்வது இன்னும் மற்ற காரியங்கள், அசுத்தமான வேலை, எல்லாவிதமான வேலைகளையும் அவள் தான் செய்ய வேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான்.
118தேவனுடைய சபையும் கூட அவ்விதமான அசுத்தமான வேலைகள். எல்லாவிதமான அவமானச் செயலின் பெயர்கள். எல்லாவிதமான அர்ப்பமாக எண்ணப்படும் காரியங்க ளெல்லாம் அதன் மீது எரியப்படும். ஆனால் அவள்தான் மகத்தான புள்ளியுள்ள பறவை. மற்ற எல்லா பறவைகளும் ஒன்று சேர்ந்து அந்த பறவையை, அவளை சுற்றி நின்றது. அது பரவாயில்லை, அவளுடைய பெயர் ஆட்டுக்குட்டி யானவருடைய ஜீவ புஸ்தகத்தில் இருக்கிறது. அவள் ஒரு நாளில் தன்னுடைய பெரிய சிறகுகளை பறப்பதற்காக விரிப்பாள். அவள் ஆயத்தமாயிருக்கிறாள். கிறிஸ்துவின் இரத்தம் அவள் மீது தெளிக்கப்பட்டிருக்கிறது. அந்த புள்ளிகள் கிறிஸ்துவின் இரத்தம் என்பதுதான். அதை உங்கள் புஸ்தகத்தில் வேதத்தில் வாசித்திருக்கிறீர்கள்.
119இந்த வாலிபன் அந்த சிறியப் பெண் அந்த இரவில் வெளியே வரும்போது அவளை பிடித்துக்கொண்டான். நான் உன்னை கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான் உன்னை கவனிப்பது என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது. "எனக்கு ஒரு மனைவியை தேடும்படியாக நான் இங்கு வந்திருக்கிறேன்" என்று அவன் சொன்னான். "இது வரை நான் பார்த்ததிலேயே என்னுடைய தேவைகளை நீ தான் சந்தித்திருக்கிறாய்.
120அந்த பெரிய மனிதனின் மகன், நீ எனக்கு மனைவியாய் இருக்கமுடியுமா? என்று அவளிடம் அவன் கேட்டபோது, அவள் எப்படி உணர்ந்திருப்பாள். தங்களுடைய மேலாடைகள் இன்னும் மடிப்புகளாலான ஆடைகள் இன்னும் மற்றவைகளோடு அந்த மனிதனை கெஞ்சிக்கொண்டிருக் கூடிய சூழ்நிலையில், அந்த சிறிய ஒதுக்கப்பட்ட மகளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பதை ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்தபோது அந்த பெண்கள் எவ்விதமாக உணர்ந்திருப்பார்கள் என்று சற்றுயோசித்து பாருங்கள். "நீ என்னை திருமணம் செய்துக் கொள்வாயா" என்று அவன் அவளிடம் கேட்டான். "ஓ, ஐயா நான் அதற்கு தகுதியானவளல்ல" என்று அவள் சொன்னாள்.
121உண்மையான சபையும் கூட அந்த விஷயத்தில் அவ்விதமாகவே உணருகிறது. “நான் அதற்கு தகுதியில்லை , என்னால் முடியும்.... என்னால் பாத்திரங்களை கழுவ முடியுமானால் அது சரியாய் இருக்குமா?" நீங்கள் அந்த இடத்தை எடுத்துக் கொள்ள வாஞ்சையுள்ளவர்களாக இருக்கிறீர்களா? இரவு உணவின் பாத்திரங்களை கழுவ முடியுமா? மதவெறியர் என்று அழைக்கப்படும்படி வாஞ்சை யுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அல்லது தேவனுக்காக சில தேவனுடைய பிள்ளைகளோடு பாடனுபவிப்பதை தெரிந்துக்கொள்வீர்களா? நீங்கள் விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? ஒரு மனிதர் இருக்கிறார், அவர் ஒரு மதப்பற்றுள்ள வெறியர், ஏனென்றால் அவர் குடிக்கமாட்டார்; அவர் புகைபிடிக்கமாட்டார்; அவர் நடனம் பண்ணமாட்டார்; அவர் பெண்களோடு திரியமாட்டார். இவ்விதமாக உங்கள் வேலை ஸ்தலத்தில் அடையாளமிடப்பட்டு காணப்படும்படி நீங்கள் விரும்புகிறீர்களா? ஒரு பெண்மணி இருக்கிறாள், அவள் எப்பொழுதும் தலை கவிழ்ந்தவாறே இருப்பாள். அவள் பட்டினத்தின் ஊடாக இவ்விதமாக நடப்பாள்... நம்முடைய குழுக்களை அவள் சேரமாட்டாள்... அப்படிப்பட்ட வழியை தெரிந்துக்கொள்ள விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வருகைக்காக உங்களை நீங்களே ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
122நீங்கள் அவ்விதம் ஆயத்தமாக இருந்தால்... நீங்கள் அவ்விதம் செய்வீர்களானால், அவர் வருவதற்கு நீங்கள் காத்துக் கொண்டிருப்பீர்களானால், அவர் வரும்பொழுது நீங்கள் பெருமகிழ்ச்சி அடைவீர்கள். அது பயங்கர காரியமாய் இருக்காது. நீங்கள் கர்த்தருடைய வருகையை குறித்து சிந்திப்பீர்களானால், அதுவே ஒரு மகத்தான கிருபை நிறைந்த தருணமாகும். "அவருடைய பிரசன்னத்தை விரும்புகிற யாவருக்கும்."
123ஆக அவன் புறப்படும்போது, ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மறுபடியுமாக அவன் வருவதாக அவளிடம் சொன்னான். மாரிகாலத்தில் நீ அவைகளை பார்க்கும்போது... தொலைவில் மரங்களானது மொட்டுக்களை விடும்போது, அவைகள் மறுபடியுமாக தங்களுடைய புதிய வாழ்க்கையை துவங்கும் போது "வசந்த காலத்தில் மறுபடியுமாக நான் வருவேன் என்று அவளிடம் சொன்னான்”.
124எனக்கு புரிகிறது, அது உண்மையென்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் அந்த பெண் வாரத்திற்கு ஒரு டாலரும் எழுபத்தைந்து சென்ட் மாத்திரமே தன்னுடைய வேலைக்காக வாங்கினாள். ஆனால் ஒவ்வொரு நாணயத்தையும் சேர்த்து வைக்கிறாள். ஏன்? நடக்கப்போகிற திருமணத்திற்காக தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள். இந்த பண்ணையில் தாமே நாம் திருமணம் செய்துக் கொள்ளப்போகிறோம் என்று அவன் சொல்லியிருந்தான். ஆதலால் தன்னுடைய திருமண மேலாடைக்காக தன்னுடைய பணத்தை சேமித்துக் கொண்டிருந்தாள்.
125வருடமெல்லாம் அவள் பணத்தை சேமித்து வந்தாள். அவள் சந்தோஷமாயிருந்தாள். பாத்திரங்களை கழுவுவதைக் குறித்து அவள் கவலைப்படவில்லை. துணிகளை ஸ்திரி செய்வதைக் குறித்து அவள் கவலைப்படவில்லை அல்லது தூங்கும் இடத்தை பெருக்கி சுத்தம் செய்வதையோ அல்லது மற்ற எதைக் குறித்தும் அவள் கவலைப் படவில்லை. அந்த பண்ணையின் எஜமானோடு நிச்சயிக்கப்பட்டிருந்தாள்.
126ஒரு உண்மை கிறிஸ்தவனை குறித்து உலகம் என்ன கூறுகிறது. அதைக் குறித்து நாம் என்ன அக்கறை எடுக்கிறோம்? தாழ்மையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள். எஜமானுடைய குமாரன் ஒரு நாளில் வரப்போகிறார். கலியாண விருந்துக்காக நாம் போய்க் கொண்டிருக்கிறோம். அவருடைய பிரசன்னத்தை நீங்கள் விரும்புவீர்களானால், அது நமக்கு எந்த வித்தியாசத்தை கொண்டு வரப்போகிறது?
127இவைகள் எல்லாவற்றிற்கும் பின்பாக...நாட்களானது கடந்து போனது. சிறியக் குமாரத்திகள், சிறிய உறவினப் பெண்கள் சுற்றி நடனமாடி, அவளை பரியாசம் செய்து இன்னும் மற்ற காரியங்களையும் செய்தார்கள்."புத்தியீனமான அவன் அவ்விதம் செய்வானென்று உனக்கு... ஏன்? அவன் மற்றவர்களைப் போன்ற மனிதன்தான். அவன் உன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்" என்று அவளிடம் சொன்னார்கள்.
128ஆனால் தேவனுடைய குமாரன் ஏமாற்றுவது கிடையாது. "ஒரு மனிதன் மறுபடியும் பிறவாவிட்டால், அவர் மற்ற எந்த வழியிலும்... நீங்கள் பார்ப்பதற்கு எவ்வளவு நல்லவராக இருந்தாலும் அதைக்குறித்து எனக்கு கவலையில்லை. தேசத்தில் உங்களுடைய அந்தஸ்து என்னவாயிருந்தாலும், நீங்கள் ஒரு வேளை ஒரு அரசியல் வாதியாக இருந்தாலும், நீங்கள் ஒருவேளை ஒரு ஸ்தாபன அரசாங்கத்தில் இருந்தாலும்; நீங்கள் ஒரு வேளை ஒரு கத்தோலிக்கராய் இருந்தாலும், பிரஸ்பிடேரியனாக இருந்தாலும், எந்த சபையாய் நீங்கள் இருக்க விரும்பினாலும், அது "ஒருவன் மறுபடியுமாக பிறவாவிட்டால், நீங்கள் அதற்குள் பிரவேசிக்க முடியாது.... விசுவாசிக்கிற வர்களை இந்த அடையாளங்கள் தொடரும்".................. நான் அவருடைய வார்த்தையை மாத்திரம் சுட்டிக் காண்பிக்கிறேன்.
129முடிவாக அந்த மணிநேரம் வந்தபோது, மரங்களில் மொட்டுக்கள் வருவதை அவள் பார்த்தாள், அவன் எந்த நேரத்திலும் வருவான் என்பதை அறிந்திருந்தாள். சூரியன் மறைகிற நேரத்தில் அப்படி செய்ய நான் முயற்சிப்பேன், அப்பொழுது நாம் திருமணம் செய்துக் கொண்டு துரிதப்பட முடியும் என்று அவன் சொன்னான்.
130சூரியன் மறைகிற ஒவ்வொரு மாலையும் அவள் தன்னைத்தானே ஆயத்தமாக்கிக் கொண்டு, தன்னுடைய திருமண ஆடையை அணிந்துக் கொண்டு வாசலில் காத்திருப்பாள். அந்த சிறிய உறவினப் பெண்கள் வந்து, அவளைப் பார்த்து சிரித்து, அவளை பரியாசம் செய்தார்கள். புத்தியில்லாத ஏழை அறியாமைப் பெண்ணே, இந்த நிறுவனத்தின் சொந்தக்காரர் தலைமையாயிருக்கிறவர். அவருடைய மகன் ஒரு பாத்திரம் கழுவும் பெண்ணை திருமணம் செய்துக் கொள்வானா? என்று சொன்னார்கள்.
131அவன் ஒழுக்கத்திற்காக பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆடைகளுக்காக அல்ல. தேவையான எல்லாவிதமான ஆடைகளையும் வாங்குவதற்கு அவனிடம் போதுமான பணம் இருக்கிறது. உங்களுடைய எவ்வளவு பெரிய காரியத்தையும் குறித்து தேவனுக்கு கவலையில்லை.உங்களுடைய பகட்டான பொருட்கள், இந்த உலகத்திலிருக்கும் எல்லாவற்றையும் அவர் உடையவராய் இருக்கிறார். ஆதலால் அவருக்கு ஒழுக்கம் தேவையாயிருக்கிறது. அவருக்கு உண்மையான ஏதோ ஒன்று தேவையாயிருக்கிறது.
132ஆகையால் முடிவாக ஒரு மாலையில், அவள் அங்கு நின்றுக்கொண்டிருந்ததான வேளையில்.....அவர்கள் அவளைப் பார்த்து நகைத்து, பரியாசம் பண்ணி, எவ்வளவு புத்தியீனமாய் இருக்கிறாள் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவர்களில் சிலர் குதிரையின் குளம்புகள் எம்பி குதிக்கிற சத்தத்தை கேட்டார்கள், என்ன நடந்தது? குன்றுகளுக்கு அப்பாலிருந்து ஒரு குதிரைப் பூட்டப்பட்ட வண்டி வந்தது. இப்பொழுது ஒரு குதிரைப் பூட்டப்பட்ட வண்டி என்பது மேல்புறம் திறக்கப்பட்டதாய் இருக்கும் ஒரு சிறிய குதிரை வண்டி, மேற்கு பகுதியில் மிகவும் பிரபலமானது. குதிரைகளெல்லாம் மணியோசைகளோடும், மற்றவைகளோடும் குன்றுகளுக்கு அப்பாலிருந்து இந்த குதிரைப் பூட்டப்பட்ட வண்டி வந்தது. அது அந்த கதவுக்கு முன்பாக நின்றது. அவள் அவனிடமாய் ஓடி "நீ வருவாய் என்று எனக்கு தெரியும்" என்று சொன்னாள்.
133ஒரு நாள் சபையும் கூட அந்த அனுபவத்திற்கு வரும். அவனுடைய கரங்களுக்குள்ளாய் அவள் தன்னை புகுத்திக் கொண்டாள். "இனிமையானவளே, கடந்த வருடம் நான் இங்கிருந்து பறப்பட்ட நாளிலிருந்து நீ என்னவெல்லாம் செய்தாய் என்று ஒரு அறிக்கையை கொண்டு வந்திருக்கும் இங்கு பணியில் இருக்கும் ஒரு மனிதன் எனக்கு இந்த பண்ணையிலே இருக்கிறார்” என்று அவன் சொன்னான்.
134இந்த காலையில் இந்த கூடாரத்தில் பணியில் இருக்கும் ஒரு மனிதன் தேவனுக்கு இருக்கிறார். அவர் பரிசுத்த ஆவி என்று அழைக்கப்படுகிறார். உங்களுடைய இருதயத்திலிருக்கும் இரகசியமெல்லாம் அவருக்கு தெரியும். நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள், நீங்கள் என்னவெல்லாம் நினைத்தீர்கள் என்றெல்லாம் அவருக்கு தெரியும். நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று பிதாவினிடத்தில் சொல்லுகிறார். அவர் செய்தியை கொண்டு வருவதும், கொண்டு போவதுமாய் இருக்கிறார்.
135"நீ காத்திருந்ததாகவும், நீ வேலை செய்ததாகவும், நீ பொறுமையோடு உழைத்ததாகவும், என்னுடைய வருகைக்காக காத்திருந்ததாகவும் அவர் என்னிடம் சொன்னார். இப்பொழுதும் அநேக காலமாக நீ அடிமையாயிருந்தாய். ஆனால் இப்பொழுதோ உன்னுடைய அடிமையின் நாட்கள் முடிந்து விட்டது. என்னோடு கூட ஊழியரையும் அழைத்து வந்திருக்கிறேன். சரியாக இந்த ரோஜாவினால் பின்னப்பட்ட தட்டியின் கீழாக நீ எனக்கு மனைவியாகி விட்டாய்”. அவன் அவளை முத்தமிட்டு, திருமண மோதிரத்தை அவளுக்கு அணிவித்தான். அவளை தூக்கி குதிரை வண்டியில் அவளை அமர்த்தி, அவளை தன்னுடைய கரங்களை சுற்றி அணைத்தவாறு, சிக்காகோவுக்கு வெளியே இருக்கும் அவனுடைய பெரிய புதியமாளிகையை தேடிச்சென்று, தேசத்திலேயே தெரிந்தெடுக்கப்பட்டதான ஸ்தலத்தில், அவனுக்கு மனைவியாய் வாழக்கூடிய இடத்திற்கு வண்டியை ஓட்டிச் சென்றான்.
136ஏன்? அவள் ஆயத்தமாயிருந்தாள். அவன் எதிர்ப்பார்த்த விதமாக, அப்படிப்பட்ட அன்பு நிறைந்த மனைவியாக அவள் வாழ்ந்து வந்தாள். அது யாருக்கும் ஊரு விளைவிக்காத அந்த சமயத்தில் நடந்தது.
137அந்த திடீரென்ற இரகசியமான கர்த்தருடைய வருகை, அது அருகாமையில் இருக்கிறது. அது சம்பவிக்கப் போகிறதென்று உலகத்திற்கு தெரியாது, ஆனால் நமக்கு தெரியும். அவர்களால் ஆடைகளை களைந்து போடப்பட்ட பியர்ஸ் ஹார்பரிலிருந்த அந்த வாலிப பெண்மணியைப் போல இருந்து விடாதீர்கள். நீங்கள் அவமதிக்கப்படும் இடத்திற்கு கீழாக போய்விடுவீர்கள். தன்னைத்தானே ஆயத்தமாக்கிக்கொண்ட அந்த பெண்மணியைப் போல, அவள் தன்னுடைய ஒழுக்கத்தைக் காத்துக்கொண்டு, கர்த்தருடைய வருகைக்காக ஆயத்தமாய் இருந்தாள். ஏனென்றால் அது இரகசியமாகவும், திடீரென்றும் இருக்கும். நீங்கள் இவைகளை சிந்திக்கிறதான வேளையில், வரப்போகிறவராகிய அவருக்கு நம்முடைய தலைகளை வணங்குவோம்.
138நாம் அவரிடத்தில் பேசுவதற்கு முன்பாக ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த வழியில் இருக்கிறான், ஒவ்வொரு ஸ்திரீயும், பையன் அல்லது பெண்.... நான் அவரிடத்தில் பேசிக் கொண்டிருக்கிற வேளையில், உங்கள் கண்களால் காண முடியாத அவருடைய இரகசிய பிரதிநிதி, ஆதலால் அவர் ஒரு இரகசிய பிரதிநிதி, ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவி இந்த கூடாரத்தில் இருக்கிறார். அவர் வரும்போது அவரோடு செல்வதற்கு, ஆயத்தமாயிருப்பதற்கு பிதாவுக்கு முன்பாக அவர் உங்களை நினைவு கூறும்படி விரும்புகிறீர்களா? அப்படி நீங்கள் விரும்புவீர்களானால், உங்களுடைய கரத்தை அவரிடம் உயர்த்துவீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த கட்டிடத்தில் எல்லோருடைய கரங்களும், என்னுடையதும் சேர்த்து என்று நடைமுறையில் நான் யூகிக்கிறேன். பரிசுத்த ஆவியானவரே, என்னை கண்ணோக்கி பார்க்கும்படி பிதாவிடம் சொல்லும்படியாக நான் வாஞ்சிக்கிறேன். நான் அதை... நான் அவருடைய புறக்கணிக்கப்பட்ட ஜனங்களோடு உம்முடைய வழியை நான் தெரிந்துக்கொள்ளுகிறேன். நான் எப்படியாக செல்ல விரும்புகிறேன். நான் ஆயத்தமாயிருக்க விரும்புகிறேன். இப்பொழுதே நான் ஆயத்தமாயிருக்க விரும்புகிறேன். ஏனென்றால் இந்த ஆராதனை முடிவதற்குள் அவர் வந்து விடக்கூடும் . தேசங்கள் உடைகிறது, இஸ்ரவேல் விழித்துக் கொண்டது, தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த காரியங்கள்; புறஜாதியின் நாட்கள் எண்ணப்பட்டிருக்கிறது "ஓ சிதறிப்போனவர்களே, உங்களுடைய சொந்த இடத்திற்கு தரும்பி வாருங்கள்” மீட்பின் நாள் சமீபமாயிருக்கிறது , பயத்தின் மிகுதியால் ஜனங்களுடைய இருதயம் செயலிழந்து போகிறது ; தேவனுடைய ஆவியினால் நிரப்பட்டிருங்கள், உங்கள் விளக்குகள் சீராகவும், தெளிவாக இருக்கட்டும், மேல் நோக்கி பாருங்கள் ! உங்கள் மீட்பு சமீபமாயிருக்கிறது, அத்திமரமானது வளருகிறது; இஸ்ரவேல் திரும்ப அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.....
139ஓ, தேவனே , அத்திமரமானது துளிர் விடுகிறது. இஸ்ரவேல் ஒரு தேசமாக திரும்பிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மேய்ப்பன் இன்று காலையில் இஸ்ரவேலுக்காக பேசுவதற்கு ஜெபித்ததை நான் கவனித்த போது, துளிர் விடுகிறது. அது தான் என்பது உங்களுக்கு தெரியாதா? அந்த நேரத்தில் அவர் வரவேண்டும். “நடு இரவுக்கு முன் மூன்று நிமிடம்" என்ற அந்த படத்தை பார்க்கும் போது, என்னுடைய கேமராவில், அல்லது என்னுடைய திரைப்படம் காட்டும் கருவியில் அதை பார்த்துக் கொண்டிருந்த போது, உலகமெங்கிலுமிருந்து வந்து கொண்டிருந்த அந்த வயது முதிர்ந்த முடமான யூதர்கள் கப்பல்கல்களுக்குள் வரும்போதும் இன்னும் மற்ற காரியங்களை செய்யும்போதும்.... அந்த பேட்டிக் காண்பவர் "சொந்த தேசத்தில் மரிப்பதற்காக உங்களுடைய சொந்த தேசத்திற்கு வருகிறீர்களா?" என்று கேட்டார்."இல்லை நாங்கள் மேசியாவை காணும்படியாக வந்துக் கொண்டிருக்கிறோம்" என்று சொன்னார்கள். அத்திமரமானது வளர்ந்துக் கொண்டிருக்கிறது . (உங்களால் அதை பார்க்க முடியவில்லையா? மீட்கப்படும் நாள் சமீபமாயிக்கிறது.) கள்ள தீர்க்கதரிசிகள் பொய்யானவைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் தேவனுடைய சத்தியத்தை அவர்கள் மறுதலிக்கிறார்கள், கர்த்தராகிய இயேசு தான் நம்முடைய தேவன்; (நாம் எங்கே இருக்கிறோம் என்று உங்களால் பார்க்க முடியவில்லையா?) ஆனால் அப்போஸ்தலர்கள் எங்கு நடந்தார்களோ அங்கு நாம் நடக்கப்போகிறோம், மீட்கப்படும் நாள் சமீபமாயிருக்கிறது, பயத்தின் மிகுதியால் மனிதருடைய இருதயம் செயலிழந்து போகிறது; தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டிருங்கள், உங்களுடைய விளக்குகள் சுத்தம் செய்யப்பட்டதாகவும், தெளிவாகவும் இருக்கட்டும், மேல் நோக்கிப்பாருங்கள்! உங்களுடைய மீட்கப்படும்நாள் சமீபமாய் இருக்கிறது.
140தேவனாகிய கர்த்தாவே இந்த மகத்தான தருணத்தில், இந்த சிறிய கூட்டத்தில், அந்த மகத்தான இரகசிய பிரதிநிதியாகிய பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அருகாமையில் நின்று கொண்டிருப்பதன் நிமித்தமாக, அவர்களுடைய சிவந்த முகங்களையும், கண்ணீர் வழிந்தோடும் கண்ணீரால் கறைபடிந்திருக்கிற கன்னங் களையும் பார்க்கிறேன். இப்பொழுதும் நாங்கள் அந்த புறக்கணிக்கப்பட்ட ஜனங்களோடு நம்முடைய வழியை தெரிந்துக் கொள்வோம். ஜனங்கள் மத்தியில் அக்கம் பக்கத்திலிருப்பவர்கள், சபையின் மத்தியில் இருக்கிறவர்கள், ஆனால் எங்கிருந்தாலும் அந்த சிறிய மனசாட்சியில்லாத காரியம், அது எங்களிடத்தில் ஒன்றும் செய்யாது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இனிமேல் இப்படிப்பட்ட உலகக் காரியங்களாலே நம்முடைய வஸ்திரமானது கறைபடாதபடி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும், ஏனென்றால் ஒரு தருணத்தில், ஒரு நாளில், கண்ணிமைக்கும் நேரத்தில், திடீரென்று இரகசியமாக உங்களுடைய சபை எடுத்துக்கொள்ளப்படும் போது நீங்கள் வரவேண்டும். மலைக்கு அப்பாலுள்ள காலகட்டத்தில், கீழே பக்கவாட்டில் நிற்கும் வானவில் சபையை எடுத்துச் செல்ல வரும்போது, நீங்கள் வந்துக்கொண்டிருப்பீர்கள். "தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள், கர்த்தரை சந்திக்கும்படியாக அவர்களோடு கூட நாமும் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவரோடே கூட என்றென்றுமாய் இருப்போம். ஆகையால் சகோதரர்களே இப்படிப்பட்ட வார்த்தைகளினாலே ஒருவரை ஒருவர் தேற்றுங்கள்" இந்த காலையில் இந்த கூட்டத்தில் ஒவ்வொருவருடைய இருதயத்திற்குள்ளும் அது ஆழமாய் ஒலிக்கட்டும். இயேசுவின் நாமத்தில் நாங்கள் உம்மை ஸ்தோத்தரிப்போம். ஆமென்.