தாய்மார்களின் தினம்

59-0510M

கடரம, எனனடய ஜபமயரககறத. இநதக கலயல, இநதக கடரததன ஆவககரய எழசசயக கண, நன நசசயமகவ மகழசசயடகறன, அத எபபடயய அஙக கயழததக, அவரகள இபபழத ஒர பதய சபயக கடட ஆயததமகககணடரககறரகள. அத அவசயம எனற நன நனககறன. பரஙகள பறகநம பயவடட பறக கரததரகய இயச வர தமதததல, அவரகளநமமடய பளளகள சபககச சலல ஒர இடம இரகக வணடம. நம பரசததவனகளகக ஒரவச ஒபபககடககபப

தாய்மார்களின் தினம்

59-0510Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி611959-05-10

தாய்மார்களின் தினம்

59-0510Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி611959-05-10

1 …கூடாரமே, என்னுடைய ஜெபமாயிருக்கிறது. இந்தக் காலையில், இந்தக் கூடாரத்தின் ஆவிக்குரிய எழுச்சியைக் காண, நான் நிச்சயமாகவே மகிழ்ச்சியடைகிறேன், அது எப்படியாய் அங்கே கையெழுத்தாகி, அவர்கள் இப்பொழுது ஒரு புதிய சபையைக் கட்ட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்கள். அது அவசியம் என்று நான் நினைக்கிறேன். பாருங்கள் பிறகு…நாம் போய்விட்ட பிறகு கர்த்தராகிய இயேசு வர தாமதித்தால், அவர்கள்…நம்முடைய பிள்ளைகள் சபைக்குச் செல்ல ஒரு இடம் இருக்க வேண்டும். நாம் “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராட வேண்டுமென்று” விரும்புகிறோம். அது ஒரு நல்ல காரியம் என்று எண்ணுங்கள்.

22 ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், நான் உள்ளே வந்து கொண்டிருந்தபோது, இங்கே கூடாரத்தில், கடந்த சில கூட்டங்களில், சுகமளித்தல்களைக் குறித்து, ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கிற அநேக சாட்சிகளோடு கூடுதலாயின. அவர்கள் தொடர்ந்து சுகமளித்தல்களையும், மகத்தான அற்புத சுகமளித்தல்களையும், குவித்துக்கொண்டிருக்கிறார்கள். 3 நான் இப்பொழுதுதான், என் மனைவியையும், பிள்ளைகளையும் வாசலருகே விட்டுச் சென்றிருந்தேன்; அங்கே ஒரு சகோதரி இருந்தாள், இப்பொழுதும் உட்கார்ந்து கொண்டு, மிகவும் உணர்ச்சிவசப்படுமளவிற்கு அவள் அழுதுகொண்டே இருந்தாள், சாட்டனூகாவில், அவளுடைய சிறிய பேரனுக்கு ஒரு பெரிய அற்புதம் நடந்திருந்தது என்று, நான் நினைக்கிறேன். திருமதி நாஷ், இங்கே, உங்களுடைய சிறிய பேரன் ஒரு துன்பத்தினால் பீடிக்கப்பட்டிருந்தான், கர்த்தராகிய இயேசு, இங்கே கடைசி கூட்டத்தில், அதைக் கூப்பிட்டார் என்று நான் நினைக்கிறேன், “கர்த்தர் உரைக்கிறதாவது, அதாவது, அது போய்விட்டது. அவன் சுகமடையப் போகிறான்” என்றார். அந்த சிறு பையன் அவனால் இயன்றவரை, நலமாக பரிபூரணமாக இயல்பாய் இருக்கிறான். அது—அது சிலிர்ப்பூட்டுகிறதாயுள்ளது, நீங்கள் அந்த சாட்சிகளைக் கேட்கிறீர்கள்.

34 அப்பொழுது அங்கிருந்த ஒரு வாலிப நபருக்கு, இப்பொழுது இங்கும் கூட இருக்கிறான், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த, திருமதி ஸ்டாட்ஸிற்காக ஜெபிக்கக் கேட்டுக்கொண்டான். அவர்களுடைய ஆர்வம்; பாருங்கள், அவர்களுக்காக நாம் யாரும் ஜெபிக்க விரும்பவில்லையென்றால், ஏன் அவர்களுடைய…நீங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கும் வரை, ஜனங்களுக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவது, அதாவது அவர்களுடைய ஆர்வத்தைக் காண்பிக்கிறது, நீங்கள் பாருங்கள். சில சமயங்களில் அது மிகவும் மோசமாகிவிடுகிறது…மோசமானதாக அல்ல, ஆனால் அநேக, அதாவது நீங்கள் எங்கோ வெளியே ஓடிப்போய், உங்களுடைய தலையைக் காட்டாமல், சிறிது காலம் ஒளிந்துகொண்டு, ஜீவிக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்வதால் நான்—நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவர்களைப் பார்க்க விரும்பவில்லை என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம், ஏனென்றால் அவர்கள்…அவர்களுக்காக நான் ஜெபிக்க எவருமே விரும்பாதிருந்தால், என்னுடைய ஊழியம் எங்கேயிருக்கும்? பார்த்தீர்களா? பார்த்தீர்களா? 5 ஆனால் சில நேரங்களில் நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், ஜனங்கள் அந்தவிதமாக கூப்பிடும்போது, மேலும்—மேலும் நீங்கள் எங்காவது நழுவிச் சென்றுவிடுவீர்கள், என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை,” என்று கூறும்போதே. ஜனங்களுக்காக ஜெபிக்க, அதைச் செய்ய நான் உயிரோடு இருக்க வேண்டும். நீங்கள்…அது இங்கே, ஒரு இடத்தில் மாத்திரம் இல்லை—இல்லை. அது உலகம் முழுவதிலும் உள்ளது. உங்களுக்குப் புரிகிறதா? மேலும்—மேலும் அது உண்மையாகவே கடினமானது. நீங்கள் அதை புரிந்து கொள்வீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். 6 ஓ, ஒரு கிறிஸ்தவனாயிருப்பது மிகவும் நல்லது! அது கிறிஸ்துவுக்காக இல்லையென்றால் நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது, எனவே…கிறிஸ்தவர்களோடு தொடர்பு கொள்ளும்படிக்கு, அதாவது, விலையேறப்பெற்ற விசுவாசத்தைக் கொண்ட ஜனங்கள், தேவனில் விசுவாசங்கொண்டிருந்து விசுவாசித்து அவரை நம்பிக்கொண்டிருக்கிறவர்கள்; என்றோ ஒரு மகிமையான நாளில் நாம் இந்த எல்லா யுத்தத்தையும் முறியடிப்போம் என்று விசுவாசித்து, ஜெயத்தைப் பெற்று, மறுபுறத்தில், அவருடைய சாயலில் மீட்கப்பட்டு நிற்க வேண்டும்.

47 அதன்பின்னர் நான் ஒரு சுருக்கமான அறிவிப்பைச் செய்ய விரும்புகிறேன், அதாவது, கூடாரம் போன்றவை, வரும்போது, நான்…நாம் நம்முடைய அமைப்பை புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம், முக்கியமாக தொடர் கூட்டங்களுக்கான என்னுடைய பங்கு. கூட்டங்கள் முழுவதும், நான் இதில் ஆரம்பித்ததிலிருந்து, சுவிசேஷப் பாகத்தில், அநேக ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அமைப்பை உண்டாக்கிக் கொள்வதற்குப் பதிலாக, மற்றொரு ஜனக்குழு அதை உண்டாக்கிக்கொள்ள, நான் எனக்குத் தெரிந்த அந்த குழுவை உபயோகித்தேன்; மற்றும்…என்னுடைய கூட்டங்கள் யாவும், பிரான்ஹாம் கூடாரம் என்னும் பெயரில் நடத்தப்படும் என்று அடித்தளம் அமைத்தேன். அது நியூ ஆல்பனியில் உள்ள யூனியன் நேஷனல் வங்கியில் பயன்படுத்தப்படும், நிதி எங்கே செலுத்த முடியும் என—அதன் மூலம் செலுத்தப்பட்டது, அதற்கு வரி விதிக்கப்படாது. நான் பிரான்ஹாம் கூடாரத்தை ஒரு அமைப்பாக உபயோகிக்கவில்லையென்றால், நான் அவ்வாறு செய்யாதிருந்தால், எடுத்துக் கொள்ளப்பட்ட பணம் யாவற்றிற்கும் எனக்கு வரி விதிக்கப்படும். 8 நான் அதை அவ்வப்போது அறிவிப்பதை உங்களில் அநேகர் கேட்டிருக்கிறீர்கள். நான் அதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய… அதன்பின்னர்—பின்னர் நாம் இப்பொழுது ஒரு புதிய அமைப்பை நிறுவிக்கொண்டிருக்கிறோம். மேலும் எனக்குத் தெரிந்தவரை…நாம் விரும்புகிறோம். எல்லா ஊதியங்களையும், பிரான்ஹாம் கூடாரத்தின் மூலமாகவே தொடர்ந்து வாங்கி வந்துள்ளேன் என்று, நான் அறிவித்ததை எத்தனை பேர் கேட்டிருக்கிறார்கள்? அப்படியே உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள், எல்லோரும்…நிச்சயமாக, நீங்கள் எல்லோரும். அது எல்லாமே.

59 எனவே ஆராதனை முடிவுறும்போது, நீங்கள் விரும்பினால், நான் ஒரு சிறு அறிக்கையை அங்கே வைத்திருக்கிறேன், எனவே நீங்கள் வெளியே செல்லும்போது, நீங்கள் அதில் கையொப்பமிட்டால் நலமாயிருக்கும். சகோதரன் ராய் ராபர்ஸன் அதை அங்கே பின்னால் வைத்திருப்பார். 10 காரணம், நாம் மற்றொரு அமைப்பை நிறுவப் போகிறோம், அதே காரியம், அப்படியே…ஆனால் மற்றொரு அமைப்பு, கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நம்முடைய நிதிகள் மற்றும் மற்றவைகள் அனைத்தும் வரிவிதிக்கப்படாமல் காத்து, …வழக்கம் போல், யூனியன் நேஷனல் வங்கியில், கூடாரம் வழியாக செயல்பட வைக்கப்பட்டுள்ளது, வேறொரு அமைப்-…அமைப்பைப் பெற்றிருப்பதற்குப் பதிலாக… காரணம், பிரான்ஹாம் கூடாரத்தின் பெயரில், இது ஏற்கனவே ஒரு அமைப்பாக உள்ளது, நீங்கள் பாருங்கள். எனவே இங்கே ஒரு பிரான்ஹாம், அங்கே ஒரு பிரான்ஹாம், இதைப் போன்று, வெவ்வேறு அமைப்புகள் மிக நன்றாக செயல்படவில்லை. 11 நாம் வெளியே செல்லும்போது, சகோதரன் ராபர்ஸன் அதை கவனித்துக்கொள்வார். நாம் அதைப் பாராட்டுவோம்.

612 இப்பொழுது, இந்தக் காலையில், நாம் ஆராதனைக்குள் பிரவேசிப்பதற்கு முன்பு, கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவு நான் திரும்பி வர முயற்சிப்பேன் என்று நான் கூற விரும்புகிறேன். இரண்டு கூட்டங்களையும் நான் சகோதரன் நெவில் அவர்களிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள பிடிக்கவில்லை, ஆனால் அவர் இன்றிரவு என்னை மீண்டும் பேசும்படி தாராளமாக கேட்டுக் கொண்டிருக்கிறார். கர்த்தருக்குச் சித்தமானால், நான் இன்றிரவு ஒரு சுவிசேஷப் பொருளின் பேரில்: இவர் யார்? பார்த்தீர்களா? இவர் யார்? என்று தலைப்பிடப்பட்டதன் பேரில் நான் பேச விரும்புகிறேன். 13 எனவே இந்தக் காலையில், நான்…ஒரு அன்னையர் தினப் பொருளின் பேரில் இக்காலையில் பேச வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த பிற்பகல் மற்றும் காலை முழுவதும் அன்னையர் தின நிகழ்ச்சிகளால் நிரப்பப்பட்டிருப்பதை நான் அறிவேன். எனவே நான் ஏதோ ஒன்றை ஒருவிதமாக இணைக்க நினைத்தேன், ஏனென்றால் இந்த ஆராதனை முடிவுற்ற பிறகு, வழக்கம்போல உடனடியாக வியாதியஸ்தருக்காக நாங்கள் ஜெபிக்க விரும்புகிறோம்.

714 தேவன் ஒரு சுகமளிப்பவராயிருக்கிறார் என்றும், அவர் வியாதியஸ்தரையும், அவதியுறுபவர்களையும் சுகப்படுத்துகிறார் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். அவர் அதைச் செய்கிறார் என்பதை நான் அறிவேன். அது எந்த—எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டதாயுள்ளது, அது, ஏனென்றால், அங்கே அநேக சாட்சிகள் குவிக்கப்பட்டிருக்கின்றன என்பதை, நாங்கள் அதை அறிவோம். 15 நேற்று சகோதரன் ஜீன் மற்றும் லியோ அவர்கள் வைத்திருந்த சாட்சிகளை, அவர்கள் எடுத்திருந்த சாட்சிகளை நான் ஒரு சாக்கு பையில் பார்த்துக் கொண்டிருந்தேன். அது கர்த்தர் ஜனங்களுக்காகச் செய்திருக்கிற ஒரு மகத்தான மிகச்சிறந்த, அற்புத சுகமளித்தலாய் இருந்தது. 16 நான் நினைத்தேன், அது அவ்வண்ணமாய் இருக்குமானால், சம்பவித்த எல்லாவற்றையும் குறித்து நாம் கணக்கு வைத்திருந்தால் என்னவாகும்? புவேர்ட்டோ ரிக்கோவிலும், ஜமைக்காவிலும் மாத்திரமே, அவர் செய்த, கர்த்தருடைய சுகமளித்தலைக் குறித்து, பத்தாயிரமோ அல்லது அதைவிட மேலான, தலைசிறந்த சாட்சிகளாய் இருந்திருக்கும் என்று, நான் நினைக்கிறேன்.

8இப்பொழுது நாம் புத்தகத்தைத் திறப்பதற்கு முன்பு, நாம் ஆக்கியோனிடத்தில் பேசுவோமாக. 17 கர்த்தாவே, நாங்கள் எங்களுடைய தலைகளை வணங்கியிருக்கையில், அதாவது, நாங்கள் உமக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், நாங்கள் மானிட உதடுகளில் திக்கித் திக்கிப் பேசும் வார்த்தைகள்; உம்மோடு தொடர்பு கொண்டுள்ள பையனோ அல்லது பெண்ணோ, ஒரு மனிதனின் அல்லது ஒரு பெண்ணின் இருதயத்தின் உணர்வுகளை, அது வெளிப்படுத்தும் என்று நான் நம்புகிறதில்லை. நாங்கள் எப்படி உம்மை ஆராதிக்கிறோம் என்பதும், நீர் எங்களுக்கு என்ன பொருட்படுத்துகிறீர் என்பதும், எங்களுடைய வந்தனைகளை வெளிப்படுத்துவதற்காகவே. அது எங்களை பாவத்திலிருந்து பிரித்துள்ளது, அது எங்களை உலகத்திலிருந்து பிரித்தது. அது நித்தியமான ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றை எங்களுக்கு அளிக்கிறது. எங்களால் போதுமான வார்த்தைகளைக் கண்டறிய முடியவில்லை. 18 ஒரு சில வாரங்களுக்கு முன்னர், ஒருவிசை ஒரு உயர்ந்த பெருந்தன்மையுள்ள மனிதனால், அவரால் ஏறக்குறைய ஒன்பது வெவ்வேறு மொழிகளில் சரளமாகப் பேச முடியும் என்றும், நம்முடைய அருமையான ஜனாதிபதி, டுவைட் ஐசன்ஹோவரின் ஆலோசகருடன் தன்னுடைய ஸ்தானத்தை வகிக்கிறார் என்றும் கூறப்பட்டது போலவே. ஒன்பது மொழிகளை சரளமாக பேச முடிந்தாலும், அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டபோது, அவர் ஒவ்வொன்றையும் பேச முயற்சித்தபோதும், அவரால் எந்த வார்த்தைகளையுமே பேச முடியவில்லை என்றும், அவர் கூறினார், அவரால் எதையும் வெளிப்படுத்த முடியவில்லை, எனவே உமக்கு நன்றி கூறி வெளிப்படுத்தும்படியாக நீர் அவருக்குக் ஒரு புதிய பாஷையைக் கொடுத்தீர். கர்த்தாவே, நாங்களும் கூட அந்தவிதமாகவே உணருகிறோம், அதாவது, ஜீவியம் முடிவுறும்போது, ஒருக்கால் நாங்கள் முற்றிலும் ஒரு வித்தியாசமான பாஷையில் பேசுவோம், அதனால் நாங்கள் உம்மைக் குறித்து என்ன நினைக்கிறோம் என்பதை நாங்கள் வெளிப்படுத்த முடியும்.

919 இப்பொழுதும் கர்த்தாவே, நீர் இந்த கூடாரத்தையும், இதன் போதகரையும், இதன் தர்மகர்த்தாக்களையும், இதன் உதவிக்காரர்களையும், அதனுடைய கூட்டாளிகள் யாவரையும், இங்கு விஜயம் செய்யும் ஜனங்களையும், வாசல்களின் வழியாக உள்ளேயும் வெளியேயும் வருகின்றவர்களையும் ஆசிர்வதிக்கும்படி, நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அது எப்பொழுதும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், இளைப்பாறுதலின் ஒரு புகலிடமாகவும் காணப்படுவதாக, அங்கே சோர்ந்துபோயிருப்பவர்கள் அதனுடைய வாசல்களிலிருந்து வெளியே வந்து, தங்களுடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலையும், சமாதானத்தையும் கண்டடையவும், சுகவீனமானவர்கள் வாசலண்டை வந்து, சுகமாய் வெளியே போகவும் முடியும், அதன் கூரையின் கீழ் வாசம் பண்ணுகிற சர்வ வல்லமையுள்ள தேவனின் என்றென்றுமுள்ள ஜீவிக்கிற பிரசன்னத்தின் நிமித்தமாகவே. 20 கர்த்தாவே இப்பொழுது அமைக்கப்பட்டு கொண்டு…வருகிற இந்த அடுத்த திட்டத்தில், நீர் முடிவெடுக்கும் குழுவையும் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். இந்த பழைய குளத்தில் ஜெபிக்கப்பட்ட ஜெபத்தின் ஒரு தொடர்ச்சியான நினைவு கூருதல் இருக்க வேண்டும் என்பது உமக்கு மிகவும் பிரியமாயிருக்குமானால், ஒரு நாள் களைகள் முளைத்திருந்த இந்த இடம்; அது இப்பொழுது ஒரு கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது, அந்த ஜெபத்தின் பதிலின் நிமித்தமாக, சோர்ந்துபோகிறவர்களுக்கு இளைப்பாறும் புகலிடமாயிருக்கிறது. 21 இப்பொழுது உம்முடைய மகத்தான சித்தத்திற்கு முரணாக நாங்கள் செய்திருக்கிற, அல்லது கூறியிருக்கிற, அல்லது நினைத்திருக்கிற எந்தக் காரியத்தையும் எங்களுக்கு மன்னியும்; கர்த்தாவே, அது எங்களுடைய இருதயத்திலிருந்து வரவில்லை என்பதை நினைவுகூரும். நாங்கள் அதை எங்களுடைய செயலிலோ அல்லது எங்களுடைய உதடுகளிலோ மாத்திரமே வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால், நீர் சீக்கிரமாய், எங்களுக்குச் செவி கொடுத்தீர். நாங்கள் தவறாயிருந்ததைக் கண்டபோது, நாங்கள் அதை அறிக்கை செய்ய மனப்பூர்வமாக ஆயத்தமாயிருந்தோம். நாங்கள் எங்களுடைய இருதயத்தில், அக்கிரமத்தைப் பற்றிக் கொள்ள விரும்புகிறதில்லை, அப்பொழுது தேவன் எங்களுடையஜெபங்களுக்கு பதிலளிக்க மாட்டார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்; ஆனால் தொடர்ந்து எங்களுடைய தவறுகளை அறிக்கை செய்து கொண்டிருக்கிறோம்.

1022 கர்த்தாவே, நீர் இந்தக் காலையில் இந்த அன்னையர் தினத்தின் நினைவு நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கையில், நாடு முழுவதிலும் உள்ள எல்லோரையும், நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம், ஆனால் இது ஒரு—ஒரு அன்னையர் தினமாக மாத்திரமல்லாமல்; ஒவ்வொரு நாளும் அவ்வண்ணமாய் இருப்பதாக. 23 தேவனே, இந்த காலையில், தாய்மார்கள், ஸ்திரீகள், தேவனை விட்டு அலைந்து திரிபவர்கள், இந்தக் காலையில், அவர்கள் தாங்களாகவே உணர்ந்து, தாய் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்பதை அடையாளங்கண்டு கொள்ள அருள் புரியும், “பிறப்பித்திருக்கிற ஒருவள்.” அவள் தன்னுடைய கணவனோடு கொண்டிருந்த இணைப்பிலிருந்து வந்த சந்ததிகளை, தேவன் அவளுடைய பாதுகாப்பின் கீழ் வைத்துள்ள புனிதமான சிறு இரத்தினங்கள் என்பதை அவள் உணர்ந்து கொள்வாளாக. அப்பொழுது, தேவன் அந்தப் பிள்ளைகளை வளர்ப்பதற்கு அவளை பொறுப்பாளியாக்குவார். வேதம் கூறுவது போல, “அந்த நல்ல ஸ்திரீ, அவள் தாயாயிருக்கிறாள், அவளுடைய பிள்ளைகள் அவளை பாக்கியவதி என்று அழைப்பார்கள்.”

1124 ஓ, கர்த்தாவே, இந்த நாளில் அவர்கள் வேதவாக்கியங்களிலிருந்து வெகுதூரம் விலகி, ஏறக்குறைய மிருகங்களைப் போல் செயல்படுவதை நாங்கள் காணும்போது! தேவனே, அவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்கு அவர்களை திரும்ப அழைக்கும்படியான ஒரு பண்டைய மாதிரியான எழுப்புதலை நீர் எங்களுக்குத் தர வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 25 கர்த்தாவே, உண்மையான தாய்மார்களுக்காக உமக்கு நன்றி கூற, நாங்கள் எந்த வகையிலும் மறக்கமாட்டோம், இன்றைக்கு நாங்கள் அப்படிப்பட்ட ஜீவியத்தை உடையவர்களாயிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்; உண்மையான, அசலான தாய்மார்கள். தேவனே, அவர்களை ஆசீர்வதியும். அவர்கள் எங்களுக்கு மகத்தான பொக்கிஷங்களாயிருக்கிறார்கள், கர்த்தாவே, நீர் அவர்களோடு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், அவர்கள் மகிழ்ச்சியாய் ஜீவித்து தங்களுடைய கர்ப்பத்தின் கனி தேவனுக்கு சேவை செய்வதைக் காண்பார்களாக. 26 தேவனே, இந்தக் காலையில் அவர்களுடைய தாயார் இன்றைக்கு இந்த செயல் காட்சிக்கு அப்பால் கடந்து சென்றுவிட்டார் என்று கூறும்படி, வெள்ளை ரோஜாவை அல்லது வெள்ளை மலரை அணிந்துகொள்கிறவர்களுக்காக, நாங்கள் ஜெபிக்கிறோம்; தேவனாகிய கர்த்தாவே, அவர்கள் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக, அவர்களுடைய பிரயாசங்கள் அவர்களை பின் தொடரட்டும். கர்த்தாவே, அதை அருளும். 27 இப்பொழுதும் கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு, ஜனங்களிடத்தில் பேசி, அவர்களுக்கு ஆறுதல் அளியும், ஏனென்றால் நாங்கள் இங்கே; உம்முடைய பிரசன்னத்தை உணரவும், உம்முடைய வார்த்தையைக் கேட்டு, ஆசீர்வதிக்கப்படவும்; நாங்கள் உள்ளே பிரவேசித்தபோது இருந்ததைக் காட்டிலும் மேலான புருஷர்களும், ஸ்திரீகளும், பையன்களும், பெண்களுமாக இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவுமே கூடி வந்திருக்கிறோம். நாங்கள் இதை தேவனுடைய குமாரனாகிய, இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.

1228 அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையை வாசிப்பதை நான் விரும்புகிறேன். ஆகையால் இப்பொழுது, நாம் இந்தக் காலையில், முதலாம் கொரிந்தியர் புத்தகத்திற்குத் திருப்புவோம், 15-ம் அதிகாரத்தின் ஒரு பாகத்தை 1-ம் வசனம் தொடங்கி வாசிப்போம். அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றபடி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,

1329 நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், அது அன்னையர் தின செய்திக்கு வழக்கத்திற்கு மாறான ஒரு உரையாக உள்ளது” என்று கூறலாம். பாருங்கள், அது உண்மை. ஆனால், தேவன் வழக்கத்திற்கு மாறானவர், அவர் வழக்கத்திற்கு மாறான வழியில் காரியங்களைச் செய்கிறார். 30 மேலும் தாயைப் பற்றிய, எண்ணங்களை, நான் நினைக்கிறேன். தேவனுடைய கிருபையினால், இன்னமும் இங்கே பூமியில் நம்மோடு உள்ள ஒருவரை நான் இன்று காலை வைத்திருக்கிறேன். நான் தாயாருக்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆனால் நமக்கும் கூட, ஒரு சுகமளிக்கும் ஆராதனை இருக்க வேண்டியதாயிருந்தது, இன்றிரவு நான் மீண்டும் வருவேன் என்பதை அறியாமல் இருக்கிறேன், ஆனால் நாம் ஒரு வித்தியாசமான காட்சியை வர்ணிக்க எடுத்துக் கொள்ளலாம் என்று நான் நினைத்தேன்.

1431 தாய் மிகவும் மகத்தானவள். இந்த ஜீவியத்தில், உங்களை முதலில் ஏற்றுக்கொள்வது, உங்களுடைய தாயாயிருக்கிறது என்பதை, நீங்கள் அறிவீர்கள். ஒருவரும் உங்களைத் தொட முடியாது, ஏனென்றால் நீங்கள் கர்ப்பந்தரிக்கப்பட்டீர்கள், அவள் உங்களைத் தன்னுடைய இருதயத்தின் கீழ் சுமந்துகொள்கிறாள். அவள்தான் உங்களை முதலில் அறிந்து, இந்த ஜீவியத்தில், முதலில், உங்களை பற்றிப்பிடித்துக் கொள்கிறாள். அப்படியானால், நீங்கள் பிறக்கும்போது, உங்களைத் தொட்டு, உங்களுடைய கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீரைத் துடைக்கிற முதல் கரங்களில் அவளும் ஒன்றாகும். இந்த ஜீவியத்தில், உங்களை முதலில் தட்டிக் கொடுத்து, உங்களை நேசித்து, உங்களைச் செல்லமாக கொஞ்சுகிறது அவள்தான், உங்களுடைய தாயாகும். இப்பொழுது, ஒரு தாய்க்கு நாம் அளிக்கக் கூடியது போதிய கனம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். 32 தாய் முதலில் குழந்தையோடு இருக்கிறாள், அந்தக் குழந்தை என்னவாயிருக்கும் என்பதற்கு அவள் ஒரு பெரிய பொறுப்பாயிருக்கிறாள், அந்த தாய் அந்த குழந்தை பயணிக்க வேண்டிய பாதையில் துவங்குகிற வழியின் பேரில் அது அடிப்படையாக அமைந்திருக்கும். அந்தப் பிள்ளையை சரியான பாதையில் வைக்கும்படியாக, தேவனிடத்திலிருந்து, தாயானவள் பொறுப்பினை உடையவளாய் இருக்கிறாள். அதனால்தான் தாய்மார்களுக்கு ஒரு விசேஷித்த சிறு தொடுதல் உண்டு என்று நான் நினைக்கிறேன்.

1533 இந்த நகரத்தில் ஒரு பையனை எனக்குத் தெரியும். அவனுடைய தாய் இப்பொழுது இங்கு இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவனுக்கு கிட்டத்தட்ட என் வயது இருக்கும். ஆனால் தாயை புண்படுத்தும்படி நான் இதைக் கூறவில்லை; ஏனென்றால் எல்லா தாய்மார்களையும் போலவே அவளுக்கும் போதுமான வலிகள் உள்ளன. ஆனால் அந்த பையன் மது அருந்துகிறான், அவன் அதிகமாக குடிக்கிறான். அவன் உண்மையாகவே குடித்து வெறித்திருக்கும்போது, அவன் வீட்டிற்கு வந்து, தன்னுடைய தாயோடு படுக்கையில் குதித்து தன்னுடைய கரங்களை அவளைச் சுற்றிப் போட்டுக் கொள்வான். அவனுக்கு பேரப்பிள்ளைகள் உள்ளனர். ஆனால் ஒரு தாயின் தட்டுதலைக் குறித்து ஏதோ ஒன்று உண்டு, மானிடப் பிரகாரமாகப் பேசினால், இந்த ஜீவியத்தில், வேறெந்த காரியமும் தொடமுடியாத ஒரு—ஒரு வித்தியாசமான இடத்தைப் பிடிப்பது போன்று தென்படுகிறது.

1634 உங்களுக்குத் தெரியுமா, மோசேயைப் போன்ற ஒரு மனிதன், அவன்… நான் அவனுடைய குணாதிசயத்திற்கு ஏதாவது ஒன்றைக் கூற முடியுமானால், அதற்குக் காரணம் அவன் தேவனால் அனுப்பப்பட்ட ஒரு தாயை உடையவனாயிருந்தான். யேகோபேத், அவள் ஜெபித்திருந்து, இந்தக் குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருந்தாள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன் பிறந்தபோது, அவள் அவனைக் செல்லமாக கொஞ்சினாள், அவளுடைய பரிதாபமான இருதயம் நொறுங்குண்டு, அவனைக் கட்டித் தழுவி, நாணற்பெட்டியை உண்டு பண்ணி அவனை வைத்தாள். அவளுடைய ஒரே சிறு குழந்தை, அது உலகிலேயே மிகவும் தலைசிறந்த குழந்தையாக இருந்தது. எப்படியாய் ஒரு தாய் எந்த குழந்தையையும் விரும்புகிறாள்! ஆனால் இந்த விசேஷித்த குட்டி நபரைக் காண்பதோ! 35 அப்பொழுது, அவளுடைய இருதயத்தில், அவன் ஒரு நோக்கத்திற்காகவே பிறந்திருந்தான் என்பதை அவள் அறிந்திருந்தாள், அதன்பின்னர் அவனைக் கொண்டுபோய் முதலைககள் இருக்கும் இடத்தில், நதியில் வைக்க வேண்டும். விசுவாசத்தினாலே அவள் அதைச் செய்தாள், தேவன் அவனை கவனித்துக் கொள்ள முடியும் என்பதை அறிந்திருந்தாள்; ஒரு தாயின் அன்பையும், அவளுடைய விசுவாசத்தின் குணாதிசயத்தின் கிரியையையும் சுருக்கமாகக் கூறுவதாகும். ஏனென்றால் விசுவாசம் தான் காணக்கூடிய நிலையற்ற மணல்களின் மேல் தன்னை நிலைநிறுத்துகிறதில்லை; விசுவாசம் தேவனுடைய நித்திய வார்த்தையாகிய அசைக்க முடியாத கன்மலையின் மேல் பயபக்தியோடு சார்ந்திருக்கிறது. “விசுவாசத்தினாலே, அவள் இதைச் செய்தாள்,” என்று வேதம் கூறுகிறது.

1736 விசுவாசமானது கன்மலையின் மேல் தன்னுடைய நிலைப்பாட்டை எடுக்க முடியும், அதாவது அலைகள் அஸ்திபாரங்களை அடித்துத் தள்ளிக் கொண்டிருக்கின்றன, மரணத்தின் முகத்தை நேராக நோக்கிப் பார்த்து, அது இன்னும் சிறிது நேரத்தில் சம்பவிக்கும் என்பதை அறிந்து, “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,” என்று கூறின அவரை விசுவாசம் சமுத்திரத்தினூடாக நோக்கிப் பார்த்து, அலைகள் மோதும் சத்தத்தைக் கூட கேட்கத் தவறிவிடும். 37 அந்தவிதமான விசுவாசத்தையே மோசேயின் தாயாரும் உடையவளாயிருந்தாள். அவள் அவனை பார்வோனின் அரண்மனையில் வளர்த்து, அவன் ஒரு நோக்கத்திற்காக பிறந்தான் என்று அவனுக்குப் போதித்து, அவளுடைய ஜெபத்திற்கு யேகோவா பதிலளித்திருந்தார் என்பதையே அவள் அவனுக்குப் கற்பித்திருந்தாள். மேலும், அவள்…அவனுக்கு இதைவிட மேலான ஆசிரியர் இருந்திருக்க முடியாது. அதுதான் மோசே கொண்டிருந்த குணாதிசயத்தை உருவாக்க உதவி செய்தது.

1838 ஆபிரகாம் லிங்கன் ஒரு காலத்தில் இதைப் போன்ற ஒரு அறிக்கையை கூறியிருந்தார் என்று நான் நினைக்கிறேன்… 39 இப்பொழுது, நான் ஜனநாயகக் கட்சிக்காரனோ அல்லது குடியரசுக் கட்சிக்காரனோ அல்ல, நான்…நான் ஒரு கிறிஸ்தவன். ஏனென்றால், ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினருக்கு எதிராக எதையும் கூற முடியாது என்று நான் நினைக்கிறேன்; அது முழுவதும் ஊழல். ஆனால், ஆபிரகாம் லிங்கன், என்னுடைய சிந்தனையில், ஒரு… இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளிலேயே மகத்தான ஜனாதிபதிகளில் ஒருவராக இருந்தார்; வாஷிங்டன் போன்றவர்கள் உட்பட. 40 ஏனென்றால், ஆபிரகாம் லிங்கனுக்கு ஒரு—ஒரு மோசமான துவக்கம் இருந்தது. அவர் ஏழையாயிருந்தார். கல்வியறிவைக் குறித்தோ, அல்லது—அல்லது ஏதோ ஒரு மகத்தான காரியத்தைப் பொறுத்தோ, அவருக்கு எந்தப் பின்னணியும் இல்லாதிருந்தது, அல்லது பணத்தையோ அல்லது வாஷிங்டனுக்கு செய்யப்பட்டிருந்ததைப் போன்று அவருக்கு உதவி செய்திருக்கக் கூடிய ஏதோ ஒரு காரியத்தையோ உடையவராய் இல்லாதிருந்தார். வாஷிங்டன் ஒரு கல்லூரிப் பட்டதாரி, அவர்—அவர் அறிந்திருந்தார்; அவர் துவக்கத்தில் ஒரு புத்திசாலியான மனிதனாக, ஒரு மகத்தான மனிதனாக இருந்தார். ஆனால் லிங்கன் கென்டக்கியின் பெரிய மைதானத்தின் கீழ் ஒரு சிறிய மர அறையில் வளர்க்கப்பட்டார், இங்கு லூயிவில்லில் ஒரு நினைவுச் சின்னமாக இப்பொழுது அமைக்கப்பட்டுள்ள அந்த சிறிய பழைய அறையில் மண் தரையே இருந்தது. ஆனால், அவர் மகத்தான மனிதனாயிருந்தபடியால், தானியத்தை பயிரிட, அவர் உழுதுள்ள நிலத்தில், எழுதக் கற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது.

1941 ஆனால் நான் இதை வாலிப பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கலாம். ஆபிரகாம் லிங்கனுக்கு இருபத்தியொரு வயதாகும் வரை, அவர் தன்னுடைய வாழ்க்கையில் வேதாகமத்தையும் ஃபாக்ஸ் என்பவருடைய இரத்த சாட்சிகளின் புத்தகத்தையும் தவிர, வேறு எந்த புத்தகத்தையும் சொந்தமாக வைத்திருக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? பாருங்கள், நீங்கள் எதை வாசிக்கிறீர்களோ அதுவே உங்களுடைய குணாதிசயத்தை உருவாக்குகிறது. நாம் இன்றைக்கு ஒரு கூட்ட நரம்புத் தளர்ச்சியுள்ளவர்களை கொண்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை; நம்முடைய செய்தித்தாள் விற்பனை கடைகளில் சிறிய பழைய புனைகதை பத்திரிக்கைகள், மற்றும் இழிவான மற்றும் அர்த்தமற்ற காரியங்களும் வைக்கப்படுகின்றன. அவர் வேதாகமத்தையும், ஃபாக்ஸின் இரத்த சாட்சிகளின் புத்தகத்தையும் உடையவராயிருந்தார். அது அவரை என்னவாக்கியது என்பதைப் பாருங்கள்! 42 ஆனால் இவையெல்லாவற்றையும் எதிர்கொண்டு, ஒரு நாள் அவர் இப்படிப்பட்ட ஒரு அறிக்கையை கூறினார். அவர், “ஏதாவது நன்மையான காரியம் எனக்குள் காணப்படக் கூடுமானால், அது தேவபக்தியுள்ள ஒரு தாயாரின் நிமித்தமேயாகும்” என்றார், அதுவே கர்த்தரை சேவிக்கும்படியாக அவரை வளர்த்தது.

2043 நீங்கள் பாருங்கள், ஒரு குழந்தை தன்னுடைய தாய்க்கு செவிகொடுக்கிறது; அந்தத் தாயைக் குறித்து ஒரு சிறு தொடுதல், அதைத்தான் ஒரு பிள்ளை கவனிக்கும். அது புண்படுத்தப்படும்போது, அது தகப்பனிடம் செல்வதற்கு முன்னர் அது ஆறுதலுக்காக தாயினிடத்திற்குச் செல்லும். ஏனென்றால், அவள் முதலில் அதனோடு இருந்தாள் என்பதை, நீங்கள் அறிவீர்கள். அந்தவிதமாக இருக்க, ஒரு தாய்க்கு தேவன் அளிக்கிற ஏதோ ஒரு வெகுமதி உண்டு; நான் ஒரு உண்மையான தாயைக் குறிப்பிடுகிறேன். இப்பொழுது, தாய்மார்கள் கனமுள்ளவர்கள், தேவபக்தியுள்ளவர்கள் என்று நான் நம்புகிறேன்.

2144 ஆனால் அன்னையர் தினங்கள் போன்றவை, இது போன்ற, ஒரு மோசடி, மலர்கள் மற்றும் மற்ற காரியங்களிலிருந்து ஏராளமான பணம் சம்பாதிக்கின்றன என்று நான் நினைக்கிறேன். ஆனால் அன்னையர் தினம் ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும். அன்னையர் தினத்தில் அவளுக்கு ஒரு கொத்து மலர்களை அனுப்புவது அல்ல, ஆனால் ஆண்டு முழுவதும் முந்நூற்று அறுபத்தைந்து இரவும் பகலும் அவளை நேசித்து, அவளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால், உண்மையாகவே, வர்த்தக உலகம் இதைப் போன்ற காரியங்களில் ஒரு பெரிய பிடியை உடையதாயுள்ளது, அது—அது—அது தாயின் மதிப்பை குறைத்து மதிப்பிடுகிறது. “ஓ, பாருங்கள், கடந்த அன்னையர் தினத்தன்று நான் அவளுக்கு ஒரு கொத்து மலர்களை அனுப்பினேன்.” 45 அவளை இன்னும் அதிகமாகப் பாராட்டி, அமர்ந்து அவளிடம் சிறிது பேசி, அவளுக்கு ஒரு வரியை எழுதி, அவளுடைய தோளில் தட்டிக் கொடுத்து, அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டு, நீ அவளை நேசிக்கிறாய் என்று அவளிடம் சொல்லுங்கள். அது பூக்கடைக்காரரிடமிருந்து நீங்கள் வாங்கக்கூடிய எல்லா பூக்களைக் காட்டிலும் அதிக மதிப்பாகும். அது உண்மை.

2246 அது பத்து கற்பனைகளில் உள்ளதென்று நான் நினைக்கிறேன், காலஞ்சென்ற சிசில் டிமில் என்பவர், திரையுலகின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக அதை எழுதி திரையில் வைத்தார். அது காட்சியில் வைக்கப்படுவதற்கு முன்பு, அல்லது வெளியே திரையிடப்படுவதற்கு முன்பு, சிசில் டிமில் ஓரல் ராபர்ட்ஸ் மற்றும் டெமாஸ் ஷகாரியன், மற்றும் ஒரு கூட்ட முழு சுவிசேஷ ஊழியர்களை அழைத்து, அவர்களை தன்னுடைய சொந்த படிப்புக் கூடத்திற்கு கொண்டு சென்று, பத்து கட்டளைகள் என்ற நான்கு மணி நேர திரைப்படத்தைக் காண்பித்து, அதைக் குறித்த அவர்களுடைய கருத்தைக் கேட்டறிந்தார். தேவன் அவருடைய தீரமான ஆத்துமாவை இளைப்பாறப்பண்ணுவாராக! 47 நான் அதைக் கண்டபோது, அதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிறு கருத்து எப்பொழுதும் என்னைப் பற்றிக் கொண்டது. அதைக் கண்டிருந்த உங்களில் அநேகர், அது பார்வோனின் குமாரத்தியாயிருந்தபோது…மோசே ஒரு—ஒரு எபிரெயன் என்று அவன் கண்டறிந்த பிறகு, அவன் தன்னுடைய ஜனங்களோடு போய் வசிக்க தீர்மானித்திருந்தான். அங்கே ஒரு காலத்தில் அவனுடைய அழகான தாயார், அவளுடைய நரைத்த தலைமுடியோடும், அவளுடைய சுருக்கம் விழுந்த முகத்தோடும் உட்கார்ந்திருந்தாள், பழைய நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்; ஒரு சாதாரண தாய். அப்பொழுது பார்வோனின் குமாரத்தி உள்ளே வந்தாள். அவன், “எப்படியிருந்தாலும், நான் யாருடைய குமாரன்?” என்று கேட்டான். 48 அது தெரியவந்தபோது, யோகோபேத் தான் அவனுடைய உண்மையான தாயாய் இருந்தாள். பார்வோனின் குமாரத்தி, தன்னுடைய வர்ணம் போன்ற, மற்ற எல்லாவற்றையும் பூசிக்கொண்டு; அவள், “ஆனால், பாருங்கள்! அவன் உங்களுடைய மகனாக இருக்கலாம், ஆனால்,” என்று கூறி, அவள், “நான் அவனுக்கு செல்வத்தையும் சிறப்பையும் அளிக்கிறேன். நீங்கள் அவனுக்கு சேற்றுக் குழிகளைத் தவிர வேறொன்றையும் கொடுத்திருக்க முடியாது” என்றாள். 49 ஆனால் அந்த வயோதிப தலை நரைத்த தாய், “ஆனால் நான் அவனுக்கு ஜீவனைக் கொடுத்திருக்கிறேன்” என்றாள். அதுவே வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. “நான் அவனுக்கு ஜீவனைக் கொடுத்தேன்.” தேவன் அவனுக்கு நித்திய ஜீவனை அளித்தார். தாயே, எவ்வளவு உண்மை!

2350 சில சமயங்களில் ஜனங்கள் என்னிடத்தில், பெரும்பாலும் எப்பொழுதுமே என்னுடைய தொடர் கூட்டங்களில், “நான் தொடர்ந்து உயிர்த்தெழுதலைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறுகின்றனர். நான் இன்று காலை, உயிர்த்தெழுதலின் பேரில் உள்ள, முதலாம் கொரிந்தியர் 15-ம் அதிகாரம் 4-ம் வசனத்தை வாசித்தேன். 51 ஆனால், நீங்கள் பாருங்கள், அவர்கள் இன்றைக்கு அன்னைக்கு வைக்கும் விதம், ஒரு மலர் கூடையை ஒரு வயதான பெண்மணியின் அருகில் வைக்கிறார்கள், அவள் வயோதிகமாயும், எழுந்திருக்க முடியாதவளுமாயிருக்கலாம், ஒரு வேளை, பலவீனமானவளாய், தலை நரைத்தவளாய், சுருக்கம் விழுந்தவளாய், ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறவளாயிருக்கலாம். அதுவே முற்றிலுமான உண்மை. ஆனால் நான் என்னுடைய கருப்பொருளை எடுத்து, தாய் என்னவாக இருக்கிறாள் என்பதைக் குறித்த மற்றொரு படத்தை உங்களுக்கு வர்ணிக்க விரும்புகிறேன்.

2452 யாரோ ஒருவர், “நீங்கள் உயிர்த்தெழுதலின் பேரில் மிக அதிகமாக பிரசங்கிக்கிறீர்கள். அநேகமாக ஒவ்வொரு செய்தியும் உயிர்த்தெழுதலைக் குறித்த ஏதோ ஒரு காரியத்தையே பெற்றுள்ளது” என்றார். 53 ஏன், நிச்சயமாக. அது—அது சுவிசேஷத்தின் முக்கிய இளைப்பாறும் ஸ்தலமாய் உள்ளது. அவர் என்ன செய்திருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவில்லையென்றால், அப்பொழுது அவையனைத்தும் வீணாயிருக்கும். அவர் தேவனாயிருந்தார் என்பதை அது, எனக்கு, நிரூபிக்கிறது. அவர் கூறின ஒவ்வொரு உரிமைகோரலையும் நிரூபிக்கிறது; உயிர்த்தெழுதல்! அது ஆத்துமா இளைப்பாறும் ஸ்தலமாகவும் கூட உள்ளது. அதுவே துவக்க இடமாகும். அதுவே நம்முடைய ஆறுதலின் கிரீடமாய் உள்ளது. 54 அவர் மரித்தோரிலிருந்து எழுந்ததை நாம் காணும்போது, அது சுவிசேஷ ஆயுதங்களோடு, சண்டையிட, அந்த இடத்தை பிடித்துக்கொள்ள, நம்மை யுத்த முன்னணியில் வைக்கிறது. ஏனென்றால், “என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காத்துக்கொள்வான்” என்று அவர் கூறினார் என்பதை நாம் அறிவோம்.

2555 இது முழு சுவிசேஷத்தின் மகத்தான முடிசூட்டு விழாவாகவும், உயிர்த்தெழுதலாகவும், அதனுடைய தெய்வீக வாக்குத்தத்தங்களாகவும், அதில் நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அது ஆறுதலை அளிக்கிறதாகவும் உள்ளது என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், அது நாம் மீண்டும் ஒன்றாக இணைவதன் மகத்தான இணைப்பிற்கு வாக்களிக்கிறது. அது எல்லா பாவமும் மறைந்து போவதாக வாக்குத்தத்தம் செய்கிறது. அது எல்லா ஊனங்களும் மறைந்து போவதாக வாக்குத்தத்தம் செய்கிறது, இந்த ஜீவியத்தில், நாம் இதில் அனுபவித்து வந்துள்ள எல்லா துன்பங்களோடும், செல்ல வேண்டியதாயிருந்தது. அது வாக்குத்தத்தம் செய்கிறது, அதனுடைய யாவும் மறைந்து போகின்றன. மரணம் கூட தன்னுடைய பிடியை இழந்துவிடும் என்றும், நாம் இயேசுவின் சாயலில் எழும்புவோம் என்றும் அது வாக்களிக்கிறது. ஆகையால், என்னுடைய கருத்துப்படி, வேதவாக்கியத்தில் உள்ள எல்லா வாக்குத்தத்தங்களிலும் உயிர்த்தெழுதலே மகத்தானது. அங்குதான் அது முத்திரையிடப்பட்டுள்ளது. 56 கடந்த ஈஸ்டரில், நான் ஐந்து காரியங்களின் பேரில் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது: ஜீவிக்கும்போது, அவர் என்னை நேசித்தார்; மரிக்கும்போது, அவர் என்னை இரட்சித்தார்; அடக்கம் பண்ணப்பட்டபோது, அவர் என் பாவங்களை தொலைதூரம் கொண்டு சென்றார்; ஆனால், உயிர்த்தெழுந்தபோது, அவர் என்றென்றைக்குமாய் இலவசமாய் நீதிமானாக்கினார். 57 அதுவே எனக்கான நாள், அந்த மகத்தான நாட்களின் நாள்! உயிர்த்தெழுதலில், நம் எல்லோருக்குமே, அது என்ன பொருட்படுத்தும் என்பதை காணும்படியாக, நாம் பாடுபட்டு, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாட்களுக்காக காத்திருக்கிறோம்!

2658 அது என்றோ ஒரு நாளில் இந்த வயோதிகமான, பலவீனமடைந்த, மெலிந்துபோன, தலை நரைத்துப்போன, நொறுங்குண்ட தாய்மார்கள் மாற்றப்படுவார்கள் என்ற வாக்குறுதியை அளிக்கிறது. தாய் அங்கே, தனியாக உட்காருவாள் என்பது மாத்திரமல்ல, அவளுடைய குடும்பத்தினர் அனைவரும் அவளோடு இருப்பார்கள். 59 அது என்னே ஒரு நாளாய் இருக்கும்! நாம் நன்றாக நேசித்தவர்களின் முகங்களை நாம் நோக்கிப் பார்க்கும்போது, அது என்ன ஒரு நேரமாய் இருக்கும்! நமக்கு அன்பானவர்களை நாம் காணும்போது, மற்றும்—மற்றும் அப்பொழுது அவர்கள் என்னவாயிருப்பார்கள் என்பதைக் கவனிக்கும்போது, அந்த காலையில் என்ன ஒரு வித்தியாசமாக இருக்கும்! எல்லாத் துன்பங்களும் எடுத்துப் போடப்படும். கடுமையான துன்பங்கள் யாவும் தீர்ந்துவிடும். மரணத்தின் மங்கின கன்னங்கள் இனிமேல் இருக்காது. கண்களிலிருந்து இனி கண்ணீர் வராது. உயிர்த்தெழுதல் இவை எல்லாவற்றையும் வாக்குத்தத்தம் செய்கிறது. அங்கே இனி அடக்க ஆராதனைகளே இருக்காது. ஒரு துண்டு கல்லைப் போன்று மாறின, குழந்தையின் கன்னத்தில் தட்டிக் கொடுப்பது இனிமேல் இருக்காது; மரித்தோரை அடக்கம் செய்பவர் தைலமிடப்பட்டு, அதை வெளியே இழுத்து, அது இயற்கையாக தோற்றமளிக்கும்படி, அதற்கு வர்ணம் பூசுதல் போன்றவை இருக்காது. அது மீண்டும், அங்கே தேவைப்படாது.

2760 அப்பொழுது நம்முடைய அன்பார்ந்தவர்களையும், நம்முடைய தாய்மார்களையும், நம்முடைய இனத்தவர்களையும், நம்முடைய நண்பர்கள் யாவரும் அப்பால் நிற்பதை நாம் காண்பதைக் குறித்து நான் நினைத்து பார்க்கிறேன்; அவர்களுடைய அழிவில்லாத சரீரங்களிலும், அவர்களுடைய வானத்துக்குரிய சரீரங்களிலும் அவர்களைக் காணவும்; அவர்களுடைய குணாதிசயங்களைக் கவனித்து, அவர்கள் எப்படி அந்த இனிமையோடும், அமைதியோடும் தங்களை நடத்திக் கொள்கிறார்கள் என்பதையும் காண்கையில், இனிமேல் எந்த பதட்டமோ அல்லது ஏமாற்றங்களோ இருக்காது. கர்த்தராகிய இயேசுவின் சாயலில் அவர்கள் நிற்பதைக் காண்பது, அது ஒரு அற்புதமான நாளாக இருக்கும். 61 நாம் அவர்களை சந்திக்கும்போது, நாம் ஒவ்வொருவரும், நம்முடைய சிந்தைகளில், அந்த ஆறுதலின் வேளைக்காக எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களுடைய அன்பார்ந்த ஒருவரை, ஒருகால் மரித்துப்போன தங்களுடைய தாயைக் குறித்து நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவளை மீண்டும் காணும்போது, அது என்ன ஒரு நாளாயிருக்கும்! தகப்பனாருக்கும், சகோதரனுக்கும், மற்றும்…அன்பானவர்கள் எல்லோருக்கும், இது என்ன ஒரு நாளாக இருக்கும்!

2862 நானும் கூட, இப்பொழுது, சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் என்னுடைய குடும்பத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், அந்நாளில் அது எனக்கு என்ன பொருட்படுத்தும். 63 நான் அதை நினைத்துக் கொண்டிருக்கிறேன், அந்த உயிர்த்தெழுதலின் காலையில், ஒருக்கால் முதலில் என்னை சந்திக்க வருவது என்னுடைய குட்டி சாரோன் தான். இல்லை, அவள் நடுங்கமாட்டாள். அந்த பிசாசு அந்த இடத்திற்குள் பிரவேசிக்க முடியாது. எந்த ஒரு மூளைக் காய்ச்சலும் அந்த தேசத்தைத் தொட முடியாது. அவள் எனக்கு கை அசைத்து விடைபெறமாட்டாள். அந்த சிறிய, நீல நிறக் கண்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும். அவள் தன்னுடைய கரங்களை நீட்டி “அப்பா!” என்று கூச்சலிடுவாள். அவள் இனி ஒருபோதும் மரிக்கமாட்டாள் என்பதை அறிந்து, நான் அவளைக் கண்டு மகிழ்ச்சியடைவேன்; நான் உயிர்த்தெழுதலைக் குறித்து மிகவும் கடினமாக பிரசங்கிக்கக் காரணம் என்னவெனில், இவை யாவும் முடிந்துவிட்டன என்பதை அறிந்துகொள்வதற்காகவே. 64 அப்பொழுது நான் அவளுடைய தாயாரை, என் பையனாகிய, பில்லியின் தாயாரைப் பார்ப்பேன். எனக்கு அநேக நினைவுகள் அங்கே அப்படியே நீடித்திருக்கின்றன. நான் அவளை மேலே அழைத்துச் சென்றபோது; இல்லை திரு. கோம்ப்ஸ், இங்கே, அவளை கடைசியாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்ததை நான் நினைவு கூருகிறேன். நான் அவளை ஒரு காரில், பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். நாங்கள் அங்கே ஏழாவது தெருவில் சென்றபோது; பில்லி, பதினெட்டு மாதக் குழந்தையாயிருந்தான். 65 எப்படியாய் அவர்கள் அவனை வீதிக்கு கொண்டு வந்து, அவள் அவனைப் பார்க்கும்படி செய்வார்கள். அவள் படுத்து அழுது, தன்னுடைய குழந்தையைப் பார்த்துக் கொண்டிருப்பாள், ஆனால் அவளால் அவனை நெருங்க முடியவில்லை.

2966 அதன்பின்னர் சாலையில், ஏழாவது தெருவின் வழியாக அடக்கம் செய்பவர் வந்தார். இங்கே அம்மா அவனை அந்த நேரத்தில் கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் முற்றத்தில் ஒரு ஜோடி குட்டையான கால்சட்டையுடன் நின்று கொண்டிருந்தான், ஒரு சிறிய சிகப்பு தொப்பியை அவனுடைய தலையில் பக்கவாட்டாக இழுக்கப்பட்டபடி அணிந்திருந்தான். அந்த தாய், அந்த கட்டிலின் மேல் படுத்துக்கொண்டு, அந்த மருத்துவ அவசர ஊர்த்தியின் பின்னால், என்னை கவனித்துக் கொண்டிருக்கையில், அவள் தன்னுடைய குழந்தை முற்றத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டபோது, அவள் தான் கடைசியாக சவாரி செய்துகொண்டிருந்ததை அறிந்திருந்தாள், அவள் கட்டிலை விட்டு எழுந்து, கூச்சலிட்டு, தன்னுடைய எலும்பாகிப் போன கரத்தை முற்றத்தில் கட்டித் தழுவ முயன்றாள். ஆனால் அவளால் அவனை அணைத்துகொள்ள முடியவில்லை. 67 ஓ, அந்த நாளில் அவளைக் காண்பது ஒரு மகிழ்ச்சியாயிருக்கும். இல்லை, அவளுக்கு எலும்பான கரங்கள் இருக்காது, அவளுடைய கன்னங்களும் குழி விழுந்ததாய் இருக்காது. ஆனால் அவள் வானத்துக்குரிய அழகில் ஒரு பரலோகத்தின் ராணியாகவும், தாயாகவும் நிற்பாள். அவளுடைய கறுத்த கண்கள், காகங்களின் செட்டைகளைப் போல கறுத்திருந்து, மகிழ்ச்சியினால் சுற்றி வட்டமிடும். அவள் கூனிப் போகமாட்டாள்; அங்கே, அந்த காசநோய் என்ற பிசாசு ஒருபோதும் அந்த தேசத்திற்குள் பிரவேசிக்காது. ஆனால், அழிவில்லாத, அவருடைய சாயலில் நிற்பாள்.

3068 அப்படியானால், அடுத்தபடியாக எட்வர்ட் என்னை சந்திக்க வருவான் என்று நான் நினைக்கிறேன், நாங்கள் அவனை ஒரு சுருக்கமான பெயரில் “ஹம்பி” என்று அழைத்தோம். பிரான்ஹாம் குடும்பத்தின் சங்கிலித் தொடர், ஒன்பது இணைப்புகளைக் கொண்ட பெரிய சங்கிலியின் முதல் நபராக அவன் இருந்தான். அவன்தான் உடைந்துபோன முதல் இணைப்பு; எனக்கு அடுத்தவன். எட்வர்ட் என்னிடம் ஓடி வருவதை நான் காண்பேன். அதே சமயத்தில், அவன் ஒரு பையனாய் இருந்தபோது, பத்தொன்பது வயதுடையவனாய் மரித்துப் போனான். நான் அவனுடைய கரத்தைப் பற்றிக் கொள்ளும்போது, நாங்கள் சிறு பிள்ளைகளாயிருந்த காரணத்தால், சிறுவயதுக் குறித்துப் பேச, அநேக காரியங்கள் எங்களுக்கு இருக்கும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். நாங்கள் ஒன்றாக ஒட்டிக்கொண்டோம். உண்மையான சகோதரர்கள் போன்றே, அவன் என்னை அவனுடைய சூட்டையும் மற்ற—மற்ற—மற்ற காரியங்களையும் அணிய அனுமதித்தான். அவனை மீண்டும் காண்பது ஒரு மகிழ்ச்சியாயிருக்கும். 69 அவன் இதைப் போன்ற ஏதோ ஒன்றைக் கூறுவதை நான் கேட்பேன், “பில், நீ என்னுடைய தகவலைப் பெற்றுக்கொண்டாயா? நான் பூமியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் நேரத்தில், நீ ஒரு கால்நடைப் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தாய். ஆனால் மருத்துவமனையில், ‘பில்லியிடம் எல்லாம் சரியாகிவிட்டது என்று சொல்லுங்கள்’” என்று கூறி அனுப்பினேன். நான், “ஆம், புல்வெளியில், உன்னுடைய வார்த்தையை நான் பெற்றுக்கொண்டேன்” என்று கூறுவதற்கு மகிழ்ச்சியடைவேன்.

3170 அதன்பின்னர், அடுத்தபடியாக என்னுடைய தந்தை வருவார் என்று, நான் நினைக்கிறேன். அவர் செல்ல வேண்டிய அடுத்த இணைப்பாயிருந்தார்…இல்லை. 71 சார்லஸ் அடுத்த இணைப்பு, ஒரு இளைய சகோதரர் என்று நான் நினைக்கிறேன். அவன் ஒரு சிறு பையனாயிருந்தபோது ஒரு மோட்டார் வாகன விபத்து ஏற்பட்டது. அவன் நடக்கும்போது, அவன் தன்னுடைய வலது காலை எப்பொழுதும் இழுத்து நடப்பான். ஆனால், உங்களுக்குத் தெரியும், நான் அவனைக் காணும்போது, அவன் அந்த காலை இழுத்துக்கொண்டு நடக்கமாட்டான். அது யாவும் ஒழிந்துபோய், ஒரு வாலிப மனிதனைப் போன்ற சிறப்போடு நிற்பான். 72 அவன் சிரித்துக்கொண்டே, அவன் இதைப் போன்ற ஒரு காரியத்தை என்னிடத்தில் கூறுவான். அப்பொழுது அவன், “ஆம், பில், இங்கே விபத்துகள் ஏதும் இல்லை. நான் மோட்டார் வாகன விபத்தில் சிக்கிக் கொள்ளப்படுவதற்கு முந்தின இரவு நீ என்னோடு பேசினது எனக்கு நினைவிருக்கிறது. நம்முடைய சிறிய எளிமைமையான வீட்டின் சிறிய வளைவுப் பாதையில் நின்று கொண்டிருந்தாய்” என்று கூறுவான், இப்பொழுது நான் அதன் உச்சியை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். “நீ செல்வதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு, கர்த்தரைக் குறித்து என்னிடத்தில் பேசினாய். நான் போகும் போது நீர் பிரசங்க பீடத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தாய்” என்பான்.

3273 அப்பொழுது அப்பா வருவார். ஓ, என்னால் அவரைக் காண முடிகிறது. அவர் எனக்கு அநேக கசையடிகளைக் கொடுத்த போதிலும், சரியாக அவைகள் எனக்குத் தேவைப்பட்டது, ஆனால் அந்த நாளில், நான் அந்த அடர்த்தியான கருமையான அலை அலையான முடியைக் காண்பேன். அவர் என்னைப் பார்த்து, “என் மகனே, உனக்குத் தெரியுமா, அப்பா இனிமேல் பசியோடு, தன்னுடைய பிள்ளைகளைப் புசிக்க விடும்படிக்கு, இங்கே மேஜையை விட்டு எழுந்திருக்கவேமாட்டார், ஏனென்றால் இங்கே ஒருபோதும் ஒரு குறைபாடும் கிடையாது” என்று கூறுவார். 74 அவர் வேலை செய்வதை பார்க்கும் போது, ஒரு நாளைக்கு ஐம்பது அல்லது எழுபத்தைந்து செண்டுகள் ஊதியமாகப் பெற்று, அதன்பின்னர் பிள்ளைகள் சாப்பிடுவதற்காக மேஜையை விட்டு எழுந்து, மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும். அவருடைய சட்டையானது அவருடைய முதுகில் வெயில் பட்டு எரிந்து போகுமளவிற்கு, அவர் மிகவும் கடினமாக உழைத்தார், தாயார் அதை ஒரு கத்திரிக்கோலால் வெட்டி எடுப்பார். 75 அவர் இதைப் போன்ற ஏதோ ஒன்றைக் கூறுவதை நான் கேட்பேன், “பில், நான் போய்க் கொண்டிருந்தபோது, நீயும் சகோதரன் ஜார்ஜும் எனக்காக ஜெபிக்க வந்திருந்த அந்த இரவு உனக்கு நினைவிருக்கிறதா? உனக்குத் தெரியும், படுக்கையின் அருகே இரண்டு வெள்ளை தூதர்களும், காலடியில் ஒரு சிவப்பு தூதனும் நின்று கொண்டிருந்ததாக நான் அம்மாவிடம் சொன்னேன். சிகப்பு தூதன் என்னை அழைத்துச் செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தான், ஆனால் வெள்ளைத் தூதன் நடுவில் நின்றான். அவர்கள் என்னை வீட்டிற்கு கொண்டு சென்றனர்” என்பார்.

3376 அதன்பின்னர், கூட, அடுத்த இணைப்பில், அல்லது மரித்துப்போன, ஹாவர்ட் வருவான். நான் ஹாவர்டைப் பார்ப்பேன்; நாங்கள் அத்தேசங்களில் ஒன்றாக நெருங்கி நண்பர்களைப் போல வசித்தபோது, எல்லாவிடங்களிலும்; ஒரு ஊழியக்காரனாக இருக்கும்படி அழைக்கப்பட்டான்; மகத்தான ஆளுமை கொண்டவன், ஆனால் அவனுடைய கூட்டாளிகள் அவனைத் தடுத்து நிறுத்தினர். நான் அவனோடு கடைசியாக பேசியபோது, அவன், “நான் போகும்போது, பில்…” என்றான். 77 அவன் மரிப்பதற்கு சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், நான்—நான் ஒரு தரிசனத்தின் மூலம், அவன் மரிப்பதைக் கண்டேன். தகப்பனார் அவனுடைய கல்லறையை அடையாளமிட்டு அதுதான் அடுத்தது என்று கூறுவதை நான் கண்டதாக அவனிடம் சொன்னேன். 78 மேலும் அவனோ, “நீ எனக்காக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றான். அவன், “நான் என்னுடைய வாழ்க்கையில் குழப்பம் விளைவித்துள்ளேன். எனக்கு விவாகம் மற்றும் மற்ற ஒவ்வொரு காரியமும் ஆகிவிட்டது. என்ன சம்பவித்தது என்று எனக்குத்—எனக்குத் தெரியாது” என்றான். நான், “ஹாவர்ட், நீ அவரை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டேன். 79 அவன், “எனக்குள்ள எல்லாவற்றோடும், நான் அவரை விசுவாசிக்கிறேன்” என்றான். அவன் புறப்படுவதற்கு முன்பு சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்களில், அவன் தேவனோடும், சகோதரன் நெவில் மற்றும் அங்கிருந்தவர்களோடு, சமாதானம் செய்து கொண்டான். மேலும் அவன், “நீ செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிற ஒரு காரியம் உண்டு. நான் போகும்போது, பில், அவர்கள் எனக்காக, ‘அவர் புரிந்து கொண்டு, “நன்றாக செய்து முடித்தாய்”’ என்று பாட வேண்டும்” என்றான். 80 நான் ஹாவர்டின் கரத்தைக் குலுக்குவதற்கு முன்பு, அவன் நிறுத்தி என்னைப் பார்த்து, “பில், அவர் புரிந்து கொண்டார்” என்று கூறுவதை நான் கேட்பேன் என்று, நான் நினைக்கிறேன்.

3481 அதற்குப் பிறகு, சகோதரன் சீவர்ட், சகோதரன் பிராங்க் ப்ராய், சகோதரன் ஜார்ஜ் டீஆர்க் ஆகியோர் வருவார்கள். ஓ, உயிர்த்தெழுதல் எனக்கு அதிகம் பொருள்படுகிறது. நான் அந்த மகத்தான முடிசூட்டும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வெளிச்சம் பரவத் துவங்கினபோது, “நாம் அறியப்படுகிறபடியே அறிந்துகொள்வோம்.” நாம் புரிந்துகொண்டு, நமக்கு தெரிந்தவர்களையும், அங்கிருந்தவர்களையும் நினைவு கூருவோம். 82 மேலும்—மேலும் அநேகர், அங்கே இருப்பார்கள் என்று நாம் நினைத்துக்கூட பார்த்திராத அநேகர் அங்கே இருப்பார்கள். ஏனென்றால், உங்களுக்குத் தெரியும், அது அந்த நேரத்தில், “மனிதர்கள் மேல் நாம் போட்ட ஆகாரம், கலங்கிய தண்ணீர்கள், அந்நாளில் நம்மிடத்திற்கு திரும்ப வரும்” என்று நான் விசுவாசிக்கிறேன். நம்முடைய சாட்சியின் பலன்களை நாம் காணும்போது, அதைக் குறித்த அவர்களுடைய செயலை நாம் புரிந்துகொள்ளாத ஜனங்கள், அநேகமாக அங்கே இருக்கலாம். அது என்ன ஒரு நாளாயிருக்கும்! 83 பின்னர், மேலும், நாம் விதைத்த விதைகள், அவர்கள் என்ன செய்வார்கள் என்று கூட நினைக்கவில்லை, ஆனால் அவர்கள் இங்கே உள்ளனர். அவர்கள் விலையேறப்பெற்ற கனிகளைக் கொண்டு வந்தனர், அந்த நாளிலே நாம் அவர்களை, வழி தவறிப்போன அன்பார்ந்தவர்களையும், உறவினர்களையும் காண்போம்.

3584 நான் கண்டிருக்கிற மனமாற்றம்டைந்த ஆயிரக்கணக்கானோர், ஆம், இப்பொழுது இலட்சக்கணக்கானோராவதைக் குறித்து நான் எண்ணிப் பார்க்கிறேன், அவர்களுடைய ஊழியம் என்னவாயிருந்தது. ஓ, அதற்கு ஒரு உயிர்த்தெழுதலைக் காட்டிலும் மேலான காரியம் தேவைப்படும். நான் இப்பொழுது அறியாத காரியங்களைக் கண்டு, கரங்களை குலுக்கிக் கொண்டு, சுற்றிச் சுற்றிச் செல்ல, அதற்கு ஒரு நித்தியமே தேவைப்படும். 85 அந்த வயோதிக தலை நரைத்த தாய்மார்கள், அதாவது நீங்கள் இன்றைக்கு அந்த வெள்ளை மலர்களை அணிந்திருக்கிறீர்கள், அவர்கள் உங்களைக் காண்பார்கள், அவர்கள் அழகாக இருப்பார்கள். ஒரு மலர் கூடையினால், அல்லது நரைத்த தலைமுடியுடைய ஒரு வயோதிக நபரின் ஏதோ ஒரு புகைப்படத்தினால் சுட்டிக்காட்டப்படுவதல்ல; ஆனால் உயிர்த்தெழுதலின் சாயலிலும் அழகிலும், அவர்கள் கிறிஸ்துவின் சாயலில், அவர்களுடைய வானத்துக்குரிய சரீரங்களில், என்றென்றைக்கும் இளமையாகவும், அழகாகவும் நிற்பார்கள். நிச்சயமாக, அதுதான் இளைப்பாறுதல். அந்த அன்னையர் தினத்திற்காகவே நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் முடிசூட்டு விழா. மாம்சப்பிரகாரமான முடிசூட்டு விழா அல்ல, ஆனால் ஆத்துமாவின் முடிசூட்டுதல், ஏனென்றால் தேவன் அவளை மாற்றியிருக்கிறாரே!

3686 நான் என்னுடைய சொந்த தாயாரை, வயோதிகராகவும், பலவீனமாகவும், முடக்குவாதத்தினால் நடுங்குகிறதைக் குறித்து நினைத்துப் பார்க்கிறேன். அவள் அந்நாளில் அவ்வாறு இருக்கமாட்டாள். அப்பொழுது அது வித்தியாசமாக இருக்கும். நாம் சுற்றும் முற்றும் பார்க்கத் துவங்குகையில், அந்த மகத்தான ஒளி பரவத் துவங்கி, பெரிய வட்டமானது பெரிதாகிக் கொண்டே போகும். அவை யாவும் இயேசுவின் அணுகுமுறையையே பிரதிபலிக்கின்றன. “இன்னும் கொஞ்ச காலம் கழித்து,” பாடல் கூறியுள்ளது போல, “நான் இயேசுவைக் கடைசியாகக் காண்பேன்.” அவர் எனக்காக காத்துக்கொண்டிருப்பார், இயேசு, மிகவும் தயவும், உண்மையுமுள்ளவர். அவருடைய அழகான சிங்காசனத்தில் அவர் என்னை வீட்டிற்கு வரவேற்பார் இந்த நாள் முடிந்த பிறகு.

3787 அப்படியானால் நாம் அவரைக் காணும்போது, இப்பொழுது நாம் இருப்பது போன்று இருக்க மாட்டோம். நாம்—நாம் அவரை எப்படி அதிகமாக நேசிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம். நாம் ஒரு சிறு பயத்தோடு பின்வாங்கி நிற்கமாட்டோம்; ஏனென்றால் நாம் அவரைப் போல் இருப்போம். பாருங்கள், அவர் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் நமக்கு ஒரு உறவினராய் இருப்பார். நாம் அவரை நன்றாக புரிந்துகொள்வோம். ஏனென்றால் நாம் அவ்வளவு தூரத்தில் அழிவுள்ள சரீரங்களில் இருக்கிறோம்; அப்பொழுது நாம் அவருடைய மகிமையான சரீரத்தைப் போன்ற ஒரு சரீரத்தைப் பெற்றுக்கொள்வோம். நாம் எப்படி அவரை ஆராதிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம். அவருடைய சரீரத்தின் பிரசன்னம் நமக்கு என்ன செய்திருக்கிறது என்பதை நாம் காணும்போது, அது நம்மை மாற்றிவிட்டதையும், வயோதிகத்திலிருந்து வாலிபமாகவும், உருகுலைக்கப்பட்ட எல்லாவற்றையும் சீராக்கிவிட்டதையும், ஓ, அவருடைய வல்லமை ஏன் நம்மை சுகப்படுத்தியது என்பதை நாம் அப்பொழுது புரிந்துகொள்வோம். 88 நம்முடைய சிந்தையில் இருந்து வந்துள்ள கேள்விகள், “அவரால் அதை எப்படி செய்ய முடியும்? இது என்னவாயிருக்கும்?” எப்படியோ, இரகசியமான முறையில், அவை யாவும் மங்கிப் போய்விடும். நம்முடைய சிந்தையின் பின்னால் கட்டப்பட்டுள்ள முடிச்சுகள், “இது இப்படி இருக்குமா? அது எப்படி இருக்க முடியும்?” என்கின்றன. எப்படியோ, அல்லது வேறுவிதமாக, கம்பீரமான விரல்கள் அந்த சிக்கலை, முடிச்சுகளை அவிழ்க்க, அவை யாவும் ஒரே பெரிய அன்பின் கிரீடமாக மங்கிப்போகும்.

3889 அப்பொழுது நாம் அவரைக் காண்போம். அப்பொழுது நாம் அவரைப் போலிருப்போம். அப்பொழுது நாம் அவரைத் தொழுதுகொள்வோம். அப்பொழுது தேவன் தாயை விரும்புகிறபடியே நாம் அவளைக் காண்போம். அவளுடைய குடும்பம் இல்லாமல் தாய் அங்கே முழுமையாய் இருக்கமாட்டாள். 90 காரணம், அவளுடைய வாழ்க்கையின் மகத்தான தருணம் மேஜையைச் சுற்றிலும் உள்ள பிள்ளைகளைக் காண்பதேயாகும், அவளும் தகப்பனாருடன் அமர்ந்து, அவர்கள் யாவரும் ஆரோக்கியமாயும், மகிழ்ச்சியாயும் இருப்பார்கள்; மேலும்—மேலும்—மேலும் அவள் தேனீர் தருவதை காண்பதும், அல்லது அவள் என்ன செய்தாலும், இரவு ஆகாரத்தை ஆயத்தம் செய்கிறாள். ஏன், அதுவே தாயினுடைய ஜீவியத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான நேரமாயிருக்கிறது, அவளுடைய பிள்ளைகள் யாவரும் வீட்டில் இருப்பதைக் காண்பதேயாகும். 91 இப்பொழுது, அந்த நாளைக் காணத் தவறாதீர்கள், தவறாதீர்கள். உங்களுடைய குடும்பத்தின் மகத்தான சங்கிலி இணைப்பு இணைப்பாக பிணைக்கப்பட்டிருக்கட்டும். ஒவ்வொரு குறுக்குக் கம்பியும் சக்கரத்தில் இருக்கட்டும். அதன்பின்னர் நாம் நம்முடைய குடும்பங்களோடும், குழுக்களோடும் அமரும்போது, நித்தியத்தின் விதானங்கள் முழுவதும், அது என்ன ஒரு நாளாயிருக்கும்! அப்பொழுது நாம் புரிந்துகொள்வோம்.

3992 வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரத்தில், அவர்தான் இதை வாக்களித்தார், அங்கு அது, “அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது. “அவர் தேவனுடைய வார்த்தை என்று அழைக்கப்பட்டார்.” “மரித்தேன், ஆனாலும் சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்று கூறின, அந்த அதே உதடுகளிலிருந்து தான் இதுவும் வந்திருக்கிறது. அதே உதடுகளிலிருந்து, பரிசுத்த யோவான் 6-ல், முப்பது-…அது, “நான் ஒன்றையும் இழந்துபோகாமல், நான் கடைசி நாட்களில் அவர்களை மீண்டும் எழுப்புவேன்” என்று இதைக் கூறுகிறது. வாக்குத்தத்தம் செய்தது அவரே; அந்த அதே விலையேறப்பெற்ற உதடுகள். அவரே நம்மை இரட்சிக்கிறவர், நம்மை சுகப்படுத்துகிறவர், நம்மை மீட்டு, கடைசி நாளில் நம்மை எழுப்புபவராக இருக்கிறார்.

4093 அந்நாளில் இந்த மகத்தான குடும்பத்தின் மறு இணைப்பினை பிரித்துள்ள அந்த சிறிய பலவீனமான இணைப்பாய் நீங்கள் இருந்தால், பரலோகத்தின் தேவன் இந்தக் காலையில், எப்படியாவது ஒரு இரகசியமான வழியில், உங்களுடைய சிந்தையில் கட்டப்பட்டுள்ள அந்த சிறிய முடிச்சுகளை அவிழ்த்து, அவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பை உங்களுக்கு வெளிப்படுத்தி, நீங்கள் இனிமையாக வந்து அவரை சேவிக்கச் செய்வாராக. இந்தக் காரியங்களைக் குறித்து நாம் சிந்திக்கையில், நாம் ஜெபிப்போமாக. 94 நாம் ஜெபிப்பதற்கு முன்பு, நீங்கள் உங்களுடைய தலைகளை வணங்கியிருக்க, நான் உங்களை கேட்கப்போகிறேன். இந்த அன்னையர் தினத்தில், அந்த உயிர்த்தெழுதலுக்காக எதிர்நோக்கிக் கொண்டு, உங்களுடைய ஜீவியங்களை அவருக்கு புதிதாக மறுபிரதிஷ்டை செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் உங்களுடைய கரங்களை அவரிடம் உயர்த்துவீர்களா? ஒவ்வொருவரும்…தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

4195 இப்பொழுது இங்கிருக்கிற ஒரு பாவி, “ஓ தேவனே, நான் இன்னும் அந்த இணைப்பிற்குள் என்னை இணைத்துக் கொள்ளவில்லை. தாயார் சென்று மகிமையினூடாக சுற்றிப் பார்க்கும்போது அங்கு இல்லாத தவறிப்போன ஒருவனாய் நான் இருக்கிறேன். நான் அங்கே இருக்கமாட்டேன், ஏனென்றால் நான் இன்னும் தேவனோடு சமாதானம் ஆகவில்லை. எனக்குள்ளாக நித்திய ஜீவனின் நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் இன்றைக்கு நான்—நான் அதைச் செய்ய விரும்புகிறேன்” என்று கூறுவீர்களா? நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், இந்த நேரத்தில் எனக்காக ஜெபியுங்கள். நான் ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டும் என்று விரும்புகிறேன், ஏனென்றால் எனக்கு அன்பானவர்கள் சமுத்திரத்திற்கு, ஜீவ சமுத்திரத்திற்கு அப்பால் உள்ளனர், நான் அவர்களை சந்திக்க விரும்புகிறேன்” என்று கூறுவீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். 96 அல்லது பின்வாங்கிப்போன யாரோ ஒருவர், இந்த நாளில் திரும்பி வந்து, “கர்த்தாவே, நான் என்னை மீண்டும் உமக்கு அர்ப்பணிக்கிறேன்; உம்மோடுள்ள என்னுடைய உடன்படிக்கையைப் புதுப்பிக்க வருகிறேன்” என்று கூறி, நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா?

4297 எங்களுடைய பரலோகப் பிதாவே, அது நெருங்கிக் கொண்டிருக்கையில், இந்த நாள் அந்த மகத்தான சம்பவத்திற்கு ஒரு நாளை நெருக்கமாக்கும். நாம் ஒவ்வொரு வருடமும், இதைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைக் காண, பலவந்தம்பண்ணப்பட்டிருக்கிறோம். 98 பெந்தெகொஸ்தே நாளன்று ஜனங்கள் வழக்கமாக எருசலேமிற்கு செல்வது போல, கூடாரத்தையும், பரிசுத்த ஸ்தலத்தையும் சுத்திகரிப்பதற்கும், பாவநிவாரண பலியின் பலிக்காகவும், அந்த ஆட்டுக்குட்டி அங்கே மரித்தபோது, ஒவ்வொரு வருடமும், தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர் பாவத்தைப் போக்க, மரிக்க வேண்டிய ஒரு நேரம் வரும் என்பது அவர்களுக்கு நினைவூட்டப்பட்டது. அந்த சிறு ஆட்டுக்குட்டி ஒவ்வொரு முறையும் சத்தமிட, இரத்தம் அவர்களுடைய கரங்களில் தெளிக்கப்பட்டு, தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர் வந்து, “ஏலி, லாமா…? ஏலி, லாமா…?” என்று சிலுவையில் கதறும், ஒரு நேரம் உண்டாயிருக்கும் என்பது அவர்களுக்கு நினைவூட்டப்பட்டது இன்றைக்கு நாங்கள் அதை நோக்கிப் பார்க்கையில்…தேவனே, நான் ஜெபிக்கிறேன்.

4399 ஒரு சில வாரங்களுக்கு முன்னர், கலிபோர்னியாவிற்காக, உம்முடைய ஆராதனையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, இந்த இந்தியானா அப்பட்டமாக மரித்துப்போய், அங்கே ஜீவனே இல்லாதிருந்தது போன்று, தென்பட்டது. கடந்த இலையுதிர் காலத்தில் மரித்துப்போன மலர்கள். மரங்களிலிருந்து இலைகள் உதிர்ந்து போயிருந்தன. மரங்களிலிருந்த சத்து வேர்களுக்குச் சென்றுவிட்டது, எல்லாமே மரித்துப்போயிருந்தன. 100 ஆனால் சூரியன் ஒரு வித்தியாசமான முறையில் பிரகாசிக்கத் துவங்கின ஒரு பருவம் உண்டாயிருந்தது. குளிர்காலம் முழுவதும் பிரகாசித்த அதே சூரியன், ஆனால் மூலக் கூறுகள் மாறிட, அது வித்தியாசமாக பிரகாசித்தது. சூரியனின் பிரகாசத்தினால், மூலக் கூறுகளோடு, எங்கும், ஜீவன் முளைத்தெழுந்தது. இலைகள் மீண்டும் மரங்களுக்கு வருகின்றன. இலை…இலையை விட்டுச் சென்ற ஜீவன், இலை உதிர்ந்துவிட்டது, ஆனால் ஜீவன் நிலத்தில் சென்றது; அது புதிய அழகோடு, இளமையின் பிரகாசத்தோடு திரும்பி வந்தது. அதன்—அதன் நறுமணத்தை விட்டுவிட்டிருந்த அந்த மலர், அது தன்னுடைய பிரகாசிக்கும் அழகை விட்டுவிட்டு பூமியில் விழுந்தது; ஒரு புதிய நறுமணத்துடன், பிறந்து, அதனுடைய இளமை பருவத்தில் மீண்டும் வெளிவந்தது. கர்த்தாவே, இந்த நேரங்களில், நாங்கள் எதைக் குறித்து நினைவூட்டப்பட்டிருக்கிறோம்?

44101 இந்த உலகமானது வறண்ட, பாழான வனாந்திரத்திலிருந்து, அழகான பரதீசாக மாறினது, தேனீக்களும் பறவைகளும் பாடிக்கொண்டிருந்தன, எல்லாமே மகிழ்ந்து சந்தோஷத்தோடிருந்தன, மரங்கள் வெதுவதுப்பான இளவேனிற்காற்றின் காற்றில் உல்லாசமாயிருந்தன. சூ-ரி-ய-ன், சூரியனின் நிமித்தமாக, பூமியின் மேல் மீண்டும் அரவணைப்பும் சந்தோஷமும் உண்டானது. 102 ஆனால் என்றோ ஒரு நாள் கு-மா-ர-ன் தம்முடைய செட்டைகளில் ஆரோக்கியத்தோடு வருகிறார், மரத்திலுள்ள சத்தைப் போல, நிலத்தில் மறைந்திருக்கும் அந்த சிறு ஜீவன்களையும், அந்த மலரின் விதையில் உள்ள ஜீவனைப் போல, அது ஒருபோதும் மங்காத, மீண்டும் ஒரு புதிய தன்மைக்கு கொண்டு வரும். ஓ, நாங்கள் இதற்காக உமக்கு எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம்!

45103 இந்தக் காலையில் அநேக, அநேகருடைய கரங்கள் மேலே உயர்த்தப்பட்டன, ஏனென்றால் அங்கே திரைக்கு அப்பால் ஏதோ ஒன்று உண்டு என்பதை, அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் தாயைக் காண வாஞ்சிக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய அன்பார்ந்தவர்களையும், அவர்களுக்கு அறிமுகமானவர்களையும் காணவும், இந்த இரகசியங்கள் யாவற்றையும், அவர்கள் எவ்வாறு இங்கு வந்தனர் என்பதையும், காலத்தினூடாகவும் கண்டறிய ஏங்குகிறார்கள். அவை யாவும் மறைவான திரைக்குப் பின்னால் உள்ளன. என்றோ ஒரு நாள் நீர் வரப்போகிறீர். அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தினார்கள்; கர்த்தாவே, அவர்கள்—அவர்கள்—அவர்கள்—அவர்கள் நிச்சயமுடையவர்களாயிருக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்களை மீண்டும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள், நானும் அவ்வாறே இருக்கிறேன். இப்பொழுது கர்த்தாவே, எங்களுக்கு உதவி செய்யும். எங்களுடைய விசுவாசத்தையும், எங்களுடைய பெலனையும் புதுப்பியும். 104 கர்த்தருடைய அணுகுதலை நாங்கள் உணருகிறோம். கடந்த நாற்பது ஆண்டுகளில், பூமியில் ஒரு புதிய பெந்தெகொஸ்தே உண்டானது. ஆவியானவர் காரியங்களை வெளிப்படுத்தத் துவங்கினார். இங்கே நாங்கள் வருகைக்கு முன்னர், கடைசி அடையாளத்தில் இருக்கிறோம். கர்த்தருடைய அணுகுதல் சமீபமாயிருக்கிறதை நாங்கள் அறிவோம். வியாதியஸ்தர் தங்களுடைய சுகவீனத்திலிருந்து சுகமாக்கப்படுகின்றதை நாங்கள் காண்கிறோம், அது அப்போஸ்தலர்கள் முதற்கொண்டு, இரண்டாயிரம் ஆண்டுகளாக, உலகத்திற்கு இரகசியமாய் இருந்து வருகிறது. ஆனால் இங்கே அது மீண்டும் தோன்றிக்கொண்டிருக்கிறது, தீர்க்கதரிசிகள் எழும்புகிறார்கள், தூதர்கள் பிரசன்னமாக, அடையாளங்களும், அற்புதங்களும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. அது என்ன? உயிர்த்தெழுதல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கு-மா-ர-ன் வருகிறார்.

46105 கர்த்தாவே, நாங்கள் ஆயத்தமாயிருப்போமாக. நாங்கள் ஒவ்வொரு தெய்வீக வாக்குத்தத்தத்தையும் தழுவிக்கொள்வோமாக; விஞ்ஞானம் போன்றவற்றால், திரட்டப்பட்டிருக்கிற இந்த சிறு முடிச்சுகள், அது சம்பவிக்க முடியாது என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டாம். இக்காலையில், அவைகள் அழிவில்லாதவைகளால் அவிழ்க்க ஆரம்பிக்கட்டும்… [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] அவர் தேவனுடைய வேதாகமத்தின் வார்த்தைகள் முழுவதும் அதிர்வுறச் செய்யும்போது, தாளத்தில் பாடும்படியாக, நன்கு இசைக்கப்பட்ட ஒரு கருவியைப் போல… “நான் மரித்தேன், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்.” “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது; நீங்கள் என்னைக் காண்பீர்கள்.” “நான் உங்களோடும், உங்களுக்குள்ளும், உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன்.” “கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் சொல்லுகிறார்; அற்புதங்கள் மற்றும் அடையாளங்கள்; மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள், வாலிபர் தரிசனங்களைக் காண்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அது பின்மாரியின் அடையாளம் மற்றும் முடிவு காலத்தின் அடையாளம். கர்த்தாவே, இந்தக் காலையில், இது எங்கள் மத்தியில் உணரப்படுவதாக, எங்களுடைய விசுவாசம் பாதுகாக்கப்படுவதாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 