1 சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி. நான் உங்களுடைய கரங்களை குலுக்கியாக வேண்டும். சகோதரன் நெவில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இது உஷ்ணமாக இருந்தாலும் கூட, இங்கே திரும்பவும் வருவது மிகவும் நல்லதாகவே உள்ளது. பழைய ஏற்பாட்டில் ஒருவர், “நாம் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று அவர்கள் சொன்னபோது, நான் மகிழ்ச்சியாயிருந்தேன்” என்பது போன்று கூறினார் என்று நான் நினைக்கிறேன். ஆகவே இப்பொழுது, இது மிகவும் உஷ்ணமான மாலைப் பொழுதாகத்தான் இருக்கிறது. இங்கே எங்களுடன் வந்துள்ளவர்களாகிய நீங்கள், ஏன் இந்தியானாவில், இங்கே இந்த—இந்த சதுப்பு நிலத்தைச் சுற்றி வாழ்வது கடினமானது என்பதை உங்களால் காண முடியும். நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அது தொண்ணூற்று மூன்று பாகை மாத்திரமே, தொண்ணூற்று மூன்று பாகை வெயில்தான். ஆனால் நீங்கள் பாருங்கள், நீங்கள் நூற்றி இருபது பாகை உஷ்ணத்தில் செல்வீர்களானால், லூஸியானா மற்றும் அரிசோனாவில் உள்ளதுபோல, அது எப்படிப்பட்டது என்பதை எப்படியும் அதனுள் செல்ல முடியுமென்பதை…உங்களால் உணரமுடியும், அது—அது மாத்திரம் இங்கேயிருக்குமானால், நாம் மாண்டுபோவோம்; அவ்வளவுதான். ஆனால் இங்கேயிருந்து இந்த ஆராதனையின் நேரத்தை செலவிடுவது மிகவும் நலமான ஒன்றாகும். 2 இக்காலை நான் வீட்டிற்குச் சென்ற பிறகு, நான் உண்மையாகவே, உண்மையாகவே அருமையாக உணர்ந்தேன்… அநேகர் இக்காலை சுகமடைந்தனர் என்று நான் விசுவாசிக்கிறேன், ஒருக்கால், இந்நேரம் வரை அநேகர் அதை—அதை உணராமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் சுகமடைவார்கள்; ஏனெனில் கர்த்தருடைய வார்த்தையானது இக்காலையில் நம்முடைய இருதயங்களுக்கு விலையேறப்பெற்றதாக இருந்தது. 3 நான் சற்று முன்…நான் புறப்பட்டபோது, பரிசுத்த ஆவியானது இங்கே இருக்கையில் இந்த சுவர்கள் முழுவதும் பெரிதாக ஊதப்படுவதுபோல, சுவாசிப்பது போல காணப்பட்டது. அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருந்தேன்.
24 ஆன்டர்சனைச் சார்ந்த, தேவனுடைய சபையின் மேய்ப்பரும், என் நண்பருமாகிய, சகோதரன் ஸ்மித் சற்று முன்னர் ஜெபித்துக்கொண்டிருந்ததை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். சகோதரன் ஸ்மித் ஒரு சிறிய கைப்பிரதியைக் கொண்டிருந்தார், இங்கே அவைகளைக் கூடாரத்தில் கொடுக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அந்த சிறிய கைப்பிரதி உங்களில் யாருக்காவது கிடைக்கவில்லையெனில், நீங்கள் அதை வாசியுங்கள். அது மிகவும் திகைப்படையச் செய்கின்ற சிறிய கைப்பிரதியாகும்; அது முற்றிலுமாக வேதாகம சத்தியமாகும். நான் அவைகளில் பலவற்றை சிக்காகோவிற்கும் பல இடங்களுக்கும் விநியோகிக்கக் கொண்டு சென்றேன், ஏனெனில் அவை உண்மையான சத்தியமுள்ள, அருமையான கைப்பிரதிகளாகும். தேவனை நேசித்து மற்றும் உத்தமமான இருதயத்திலிருந்து அவை எழுதப்பட்டவையாகும் என்பதை நான் அறிவேன். இதில் சகோதரன் ஸ்மித்திற்கு எந்த ஒரு சுயநல நோக்கமும் கிடையாது, எல்லாம் கிறிஸ்தவர்களுக்குமே. ஆகவே அந்தவிதமான பண்பாற்றலுடைய மக்களுடன் இன்றிரவில் ஐக்கியப்பட்டிருப்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சிகொள்கிறோம்.
35 இங்கே கலிபோர்னியாவிலிருந்து வருகின்ற என் நல்ல நண்பர், சகோதரன் பார்டர்ஸைக் காண்கின்றேன் என்று நான் நம்புகிறேன். சமீபத்தில்—கர்த்தருக்காக—அங்கே—சான் ஜோஸ் கூட்டத்தை ஒருங்கே சேர்ந்து துவங்கி அவர் எனக்காக ஒரு மகத்தான பெரிய பணியை செய்தார். அடுத்ததாக வரவிருக்கின்றதற்கும் சகோதரன் பார்ட்ஸ் ஒரு நல்ல பணியை நீங்கள் செய்வீர்களென்று நான் நம்புகிறேன். அவருக்குள் ஒரு சாந்தமான, மென்மையான ஆவியை நான் கண்டறிகிற காரணத்தால், சகோதரன் பார்டர்ஸை எனக்கு பிடிக்கும். அது ஒரு மகத்தான கிரையம் என்று நான்—நான் நினைக்கிறேன். அந்த விதமான ஆவியைக் கொண்டிருக்கிற ஒரு மனிதன் மிக மகிழ்ச்சியாக இருக்கத்தான் வேண்டும்.
46 இங்கே இன்னும் மற்ற அனேகர் இருக்கின்றனர், அதாவது அவர்கள் யாராய் இருக்கிறார்கள் என்பதை என்னால் கணக்கிட முடியாது. நம்முடைய சகோதரனாகிய, சகோதரன் காலின்ஸ் அங்கே பின்னால் இருப்பதை நான் காண்கிறேன், மற்றும்—மற்ற ஊழியக்காரர்கள், மற்றும் வடக்கு சாஸ்கட்சேவான் பகுதியிலிருந்து வருகின்ற, நம்முடைய நல்ல நண்பர் சகோதரன் சாத்மன், அவருடைய குடும்பத்தினர். சகோதரன் ஈவான்ஸ் இங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்; இன்னும் அவரை நான் காணவில்லை, ஆனால் அவருடைய குடும்பத்தாரை நான் பார்த்தேன், மற்றும்—மற்றும் அவர்கள் ஜார்ஜியாவிலிருந்து வருகின்றனர். மற்றும்—மற்றும் ஜார்ஜியாவைச் சார்ந்த சகோதரன் பாமர் அங்கிருக்கிறார், மற்றும்—மற்றும் சகோதரன் வெஸ்ட், அலபாமா அல்லது ஜார்ஜியாவைச் சார்ந்தவர் என்று, நான் நம்புகிறேன். சகோதரன் வெஸ்ட் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? நான்…அது…ஓ, ஹண்ட்ஸ்வில். ஆகவே பிறகு…ஓ, உங்கள் எல்லாரையும் இங்கே காண்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. 7 ஆகவே இப்பொழுது, சகோதரன் லைல், அங்கே உள்ளார், உட், மற்றும் அவருடைய அன்பானவர்கள், வடக்கு இண்டியானாவைச் சார்ந்தவர்கள் இங்குள்ளனர். என்னுடைய பழைய கூட்டாளி—வேட்டை கூட்டாளியான கெண்டக்கியைச் சார்ந்த சகோதரன் சார்லி (கென்டக்கியிலேயே சிறந்த அணில் வேட்டைக்காரர்களில் இரண்டாவது நபர், சிறந்த அணில் வேட்டைக்காரரில் இரண்டாவது சிறந்தவர். அதைக் கூறினதற்காக அவர் எனக்கு எதாவது எதிர்ப்பு தெரிவிப்பார். சரிதானே!) மற்றும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் இங்கிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மற்றும் உங்களெல்லாருக்கும் கிறிஸ்தவ வாழ்த்துக்கள். 8 இங்கிருக்கின்ற ஒரு சிறு சகோதரன், அவருடைய பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை—இங்கே, பலத்தரப்பட்ட பேர் உள்ளனர். ஆனால் கூடாரத்தில் எங்களோடு இன்றிரவு ஆராதிக்க நீங்கள் வந்ததற்காக உங்களை நான் நிச்சியமாகவே மெச்சுகிறேன் என்பதை நீங்களெல்லாருமே அறிவீர்கள்.
59 ஆகவே இப்பொழுது, கூடாரத்தில் இன்றிரவு ஒரு வழக்கத்திற்கு மாறான இரவாகும், ஏனெனில் இது கேள்வி பதில் இரவாகும். இது வழக்கமாக வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தடவை நடைபெறும். நான் அதைச் செய்த காரணம் என்னவெனில், ஜனங்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை என் மனதில் கொண்டு, அதினால் அவர்களுடைய கேள்விகள் என்ன என்பதை நான் அறிந்துகொள்ள ஏதுவாயிருக்கும் என்பதே. எல்லாரும் ஒரு கேள்வியை உள்ளே போடும்படிச் செய்து, பிறகு அதற்கு பிரசங்க மேடையிலிருந்து பதிலளிப்பதாகும்.
610 இப்பொழுது, இதில் நான் பெற்றுக்கொள்ளவில்லை—இது மிகவும் கடினமானதாக இருக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால் என்னிடம் சில கேள்விகள் மாத்திரமே உள்ளன. ஆகவே அவைகளுக்குப் பதிலளிக்க நமக்கு நீண்ட நேரம் எடுக்காது. தட்டு நிறைய கேள்விகள் இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் சில எளிமையான மற்றும் எளிய கேள்விகள் மாத்திரம் உள்ளன. ஆனால் அவைகளில் சில உபதேசத்தைக் குறித்ததாக இருக்கின்றன. 11 ஆகவே இந்த உபதேசத்தைப் பற்றி மக்களின் கேள்விகளுக்கு அவர்கள் யார் என்று அறியாமலே நான் பதிலளிக்க வேண்டியவனாகவுள்ளேன் (ஏனெனில் அநேகர் கேள்விகளில் தங்கள் பெயர்களை எழுதவில்லை); ஆதலால், கூடாரத்தில் எந்த போதகத்திற்காக நாம் நிற்கிறோமோ அதன்படியாகவே நான் அதற்கு பதிலளிக்க வேண்டியவனாகவுள்ளேன். ஆகவே அதைச் செய்வதின் மூலம்…ஆகவே நம்மிடம் வந்திருக்கும் சகோதரருக்கு அல்லது சகோதரிகளுக்கு முரண்பாடான சில காரியங்களை நான் பேச நேரிடுமானால், அதை ஒரு காரணமில்லாமல் நாங்கள் செய்திருக்கமாட்டோம். சிறு வேதப்பிரகாரமான காரியங்களின் பேரில் முரண்பாடு கொண்டிருக்கும் எவர் பேரிலும் நமக்கு நம்பிக்கை கிடையாது. நம்மெல்லாரையும் இரட்சிக்க கிறிஸ்து மரித்தாரென்றும், மேலும் நாமெல்லாரும் அவருடைய இரத்தத்தின் மூலமாகவே இரட்சிக்கப்பட்டோம் என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம்.
712 ஆனால் ஒரு சபையாக மற்றும் ஒரு—ஒரு ஜனமாக, ஒரு சபையாக, ஒரு—ஒரு சபையாக இருக்கத்தக்கதாக நாம் ஒரு போதகத்தைகொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கவேண்டும். ஆகவே நாங்கள் நிற்கிறதான இந்த போதகமே, எங்களுடைய அறிவுக்கு ஏற்ப மிகச் சிறந்த தேவனுடைய சத்தியமாயும், தேவனுடைய வார்த்தையாயுமுள்ளது. இப்பொழுது, உங்களுக்கு விருப்பமானால் அதை ஒரு வித்தியாசமான கோணத்தில் நீங்கள் பார்க்க உங்களுக்கு பரிபூரண உரிமை உள்ளது. ஆதலால், நான்…
813 இங்கே யாரோ கேள்விகள் கேட்டுள்ளனர்…இரண்டு கேள்விகள் நீண்டதாக உள்ளன. எனக்குத் தெரிந்த வரையில் இப்பொழுது நான் பதிலளிப்பேன். 14 இப்பொழுது, ஒரு கேள்வியைக் கையாள நான் முயற்சிப்பது இந்த வழியாகத்தான். ஒரு கேள்வி…ஒரு நபர் ஒரே ஒரு வசனத்தை எடுத்து அது என்ன கூறவேண்டும் என்று நீ விரும்புகிறோயோ அதை ஏறக்குறைய அவ்விதமே கூறும்படிக்குச் செய்யலாம். ஆனால் அந்த வேதவசனம், ஒவ்வொரு வேதவசனமும் சத்தியமாகும். அது மிகவும் பரிபூரணமானதாகும், அந்த வேத வசனத்தை உரைத்த அந்த முடிவில்லாத தேவனைப் போன்றே, அதற்கு ஒரு முடிவே இல்லாதவகையில் அது மிகவும் பரிபூரணமான ஒன்றாயிருக்கிறது. ஆதலால், அது ஆதியாகமம் துவங்கி வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும், அதேவிதமாகத்தான் சென்று கொண்டிருக்கும். அது ஒருபோதும் திசைமாறாது. அப்படியானால், வேதாகமமானது தேவனுடைய வார்த்தையினால் ஏவப்பட்டிருக்குமானால், அது எந்த ஒரு இடத்திலும் தன்னைத்தானே திசைமாற்றிக் கொள்ளாது. அது வேதவசனத்தின் மூலமாகவே செல்லும். 15 இப்பொழுது, அநேக முறைகள்… இக்காலை நான் சிம்சோன் தெலீலாளை மற்றும் உலக பிரகாரமாக இருக்கின்ற சபையைப்பற்றி பிரசங்கிக்கையில் நான் சற்று கடினமாக பேசினேன், ஆனால் நான் கடினமாக பேசுவது என் நோக்கமல்ல, ஆனால் நான் உத்தமமாக இருக்க வேண்டுமென்றே பொருட்படுத்தி கூறுகிறேன், என்னுடைய உறுதியான நம்பிக்கையை போன்று நான்—நேர்மையாக இருக்க வேண்டும்.
916 இப்பொழுது, இந்த வேதவசனங்களில், அவைகள் தவற முடியாத பிழையற்ற தேவனுடைய வார்த்தையாயிருக்கையில், அந்த வேதவசனத்தை சரியாக வியாக்கியானிக்க ஒரு காரியம் மட்டுமே இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன், அது, பரிசுத்த ஆவியாகும். அதாவது நான் நம்புவது…இந்த வேத வசனங்களை எழுதிய அந்த பரிசுத்த ஆவியானவர் தாமே, அவைகள் ஒரு தனிப்பட்ட வியாக்கியானத்திற்காக அல்லவே என்று கூறினார்… அப்படியானால், அது வேதவாக்கியங்களினூடாக அந்த விதமாகவே முழுவதும் பார்த்தால், அப்படியானால் அதை வியாக்கியானிக்கும்படிக்கு, முழுவதுமே, அது அதே பரிசுத்த ஆவியாகத்தான் இருக்க வேண்டும். 17 ஆனால் இப்பொழுது, அநேக மக்கள் தங்களுடைய சபைகளில் மற்றும் தங்கள் விசுவாசங்களில், கருத்து வேறுபாடுகள் கொண்டு, தாங்கள் பிடித்துக்கொண்டிருக்கிற சிறிய ஏதோவொரு காரியத்தின் பேரில் ஒரு சிறு முரண்பாடாக கொண்டிருக்கலாம். அவர்கள் அவ்வாறு இருந்தால், நான் ஒரு செர்ரி பழ பணியாரத்தை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது நான் செய்வது போலவே அதை செய்யுங்கள். நான் கொட்டையை ஒருபோதும் புசிப்பதில்லை. நான் ஒரு கொட்டையைக் கடிக்கும்போது, நான் கொட்டையை வெளியே எறிந்துவிட்டு, தொடர்ந்து அந்த பழச் சதையையேப் புசிக்கிறேன். எனவே அதைத்தான் நீங்களும் செய்ய வேண்டும்.
1018 நம்முடைய சகோதரி வூட்டன் அங்கே தன்னுடைய சிறு குழந்தையுடன் நின்று கொண்டிருப்பதை நான் காண்கிறேன். சகோதரியே, அக்குழந்தை வெப்பத்தை உணருகிறதென்றால், உங்களுக்கு ஒரு இருக்கை இல்லையெனில், நம்முடைய சகோதரரில் ஒருவர் உள்ளேயிருந்து ஒரு நாற்காலியைகொண்டு வந்து, அங்கே மின்விசிறியின் அருகில் வைத்தால் நலமாயிருக்கும், ஏனெனில் சகோதரிக்கு உட்காரும்படி ஒரு குளிர்ந்த இடம் உண்டாயிருக்கும். அதைச் செய்ய நாங்கள் மகிழ்ச்சியடைவோம், நான் நிச்சயமாகவே இந்த சகோதரர்களில் எவராவது… சகோதரியே, அங்கே பின்னால் இருக்கின்ற மின்விசிறி, இந்த விதமாக சரியாக—காற்றை வீசிக் கொண்டிருக்கிறது மற்றும் அங்கே ஒரு இருக்கை உள்ளது. நீங்கள் அதில் உட்கார விரும்பினால், நீங்கள் சென்று அமரலாம். 19 இப்பொழுது, சகோதரரில் யாராவது உங்கள் கோட்டை கழற்ற விரும்பினால், நீங்கள் தாராளமாகச் செய்யலாம், நீங்கள் நலமாக மற்றும் மகிழ்ச்சியாக உணரும்படிக்கும் செய்து கொள்ளுங்கள்.
1120 இப்பொழுது, அவர்கள் எனக்காக ஜெபிப்பார்களா என்று, குழுவை நான் கேட்டுக்கொள்ளப்போகிறேன். ஒரு இரவு ஆராதனைக்காக, நான் அடுத்த வாரத்தில் அங்கே, கலிபோர்னியா செல்ல வேண்டியவனாகவுள்ளேன். கிறிஸ்தவ வர்த்தக புருஷருடைய சர்வதேச கன்வென்ஷன் கூட்டத்தில் ஒரு இரவு மாத்திரம் நான் பிரசங்கிக்கிறேன். ஆனால் அவர்கள் அதை விளம்பரப்படுத்தியுள்ளனர், ஆகவே அநேக ஆயிர மக்கள் அங்கே இருப்பார்களென்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். அவர்களை ஏமாற்றமடையச் செய்ய எனக்கு விருப்பமில்லை. நான் திட்டமிடப்பட்டிருந்த, இந்த நேரத்தில் நான் ஆஸ்திரேலியாவில் இல்லையெனில் நான் அங்கு வருவேனென்று அவர்களிடம் கூறியுள்ளேன். ஆகவே எங்களுக்காக ஜெபியுங்கள்.
1221 உங்களுடைய அன்றாட பணிகளிலிருந்து விடுமுறையில் இருக்கின்ற இந்த பூமியின் அருமையான யாத்ரீகர்களில் யாராவது கூட்டங்களில் ஒன்றிலாகிலும் இருக்க விரும்புவீர்களானால், டென்னஸியிலுள்ள, கிளீவ்லாண்டில், தேவனுடைய சபையில் மூன்று நாள் கூட்டங்கள் இருக்கும். அது டாம்லின்ஸசனின் அசைவான, பெந்தெகொஸ்தே தேவனுடைய சபை என்று நான் நினைக்கிறேன். சகோதரன் லிட்டில் பீல்ட், டேவிட் லிட்டில் பீல்ட், மேய்ப்பராயுள்ளார், அவர் ஒரு அருமையான கிறிஸ்தவ நபர் ஆவார். அவர் வடக்கிலிருந்து, மெய்னிலுள்ள பங்கோரிலிருந்து வருகின்ற ஒரு அமெரிக்கர், ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்தவர், அருமையான சகோதரன். 22 ஆகவே, நீங்கள் உங்களுடைய பிரயாணத்தில் இருந்து வர விரும்பினால், ஒருக்கால் திங்கள் இரவு அவர்கள் கட்டியுள்ள பெரிய, விஸ்தாரமான கூடாரம் பிரதிஷ்டை செய்யப்படும். பிறகு, அடுத்த வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், கர்த்தருக்கு சித்தமானால்—வருகின்ற வாரம் அல்ல, அடுத்த வாரம்—சுகமளிக்கும் ஆராதனைகள் இருக்கும், அது 6ஆம், 7ஆம் மற்றும் 8ஆம் தேதியாக இருக்கும். இப்பொழுது, நாம் வார்த்தையை திறப்பதற்கு முன்னர், ஜெபத்திற்காக ஒரு கணம் அப்படியே நம்முடைய தலைகளை நாம் தாழ்த்தினால் நலமாயிருக்கும் என்று நான் விரும்புகிறேன்.
1323 கர்த்தராகிய தேவனே, எங்கள் எல்லோருக்கும் விலையேறப்பெற்ற பிதாவே, கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து மறுபடியுமாக கொண்டு வந்தவரே மற்றும் அவரை பரிசுத்த ஆவியின் வடிவில் எங்களுக்கு அளித்தவரே. சிலுவையிலறையப்பட்டப் பிறகு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிரோடெழுந்து, மகிமைக்குள்ளாக மேலேறிச்சென்று, மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்துகொண்டு, வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராய், எங்கள் பலவீனங்களுக்காக பரிதபிக்கிற ஒரு பிரதான ஆசாரியராய், இருப்பதிலேயே மிகவும் சிறியதான தெருவில் விழுகின்ற ஒரு குருவியைக் கூட அறிந்தவராக இருக்கின்றாரே, அப்படியானால் வார்த்தையை கேட்க மாத்திரமே இந்த உஷ்ணமான கட்டிடத்தில் இன்றிரவு அமர்ந்திருக்கின்ற தம்முடைய பிள்ளைகளின் உத்தமத்தை அவரால் எப்படி கடந்து சென்றுவிட முடியும். கர்த்தராகிய தேவனே, நாங்கள் கேட்கவில்லை என்றாலும் கூட, நீர்தாமே உம்முடைய ஆசீர்வாதங்களை தங்களுடைய கடமையென்னும் ஸ்தானத்தில் நின்றுகொண்டிருக்கிற இவர்களுடைய தீரத்திற்காக இவர்கள் மீது நீர் ஊற்றுவீர், என்று நான் நிச்சயம் அறிந்திருக்கிறேன். 24 இங்கே சிலர், வருகை புரிந்துள்ளனர், கர்த்தாவே; இவர்களுக்காகவும் இவர்களுடைய சபைகளுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த கேள்விகளுக்கு என்னை விட இன்னும் அதிகமாக பதிலளிக்கக்கூடிய, சுவிசேஷத்திற்காக நியமிக்கப்பட்ட—தேவனால் நியமிக்கப்பட்ட போதகர்கள் இங்கே அமர்ந்துள்ளனர். கர்த்தராகிய தேவனே, நாங்கள் கூறவேண்டிய சரியான காரியங்களை எங்களுக்கு அளித்து, அதுதாமே சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷத்தை எங்கள் இருதயத்திற்குக் கொண்டுவந்து, நாங்கள் ஒன்றாக கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் அமர்ந்து, எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் கெட்ட உணர்வுகள் இல்லாமல் வேதவாக்கியங்களை ஆராய்ந்து, சத்தியம் என்ன என்பதையும் மற்றும் அந்த சத்தியத்தை ஆராதிக்க மாத்திரம் நீர்தாமே பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு எங்களிடம் வரச் செய்யும்படி, நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இதை அருளும்.
1425 எங்களுடைய அருமையான மேய்ப்பராகிய, சகோதரன் நெவிலை ஆசீர்வதிக்குமாறு நாங்கள் கேட்கிறோம், இங்கே ஒன்று கூடுகின்ற இந்த ஆட்டு மந்தையை ஒவ்வொரு ஆண்டும் கடுமையான மற்றும் அசைவில்லாத நேரங்களினூடாக வழிநடத்தி மேய்த்து கடமையில் நிறுத்திப் பெற்றுள்ள ஸ்தானத்தில் நேர்த்தியுடன் துணிவுடன் நிற்கின்றார். உம்முடைய ஆவிதாமே அவர் மீது இருந்து, அவருக்கு உதவுமாறு ஜெபிக்கிறோம். கூடாரத்தோடு தொடர்புடைய எல்லாரையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, உம்முடைய சித்தமாயிருக்கும் பட்சத்தில், ஒரு அழகான, பெரிய கூடாரமானது இங்கே மூலையில், விரைவில் இருக்கவும் அங்கே ஒரு பள்ளியை நாங்கள் அமைத்து, பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக போராடும்படியாக இளம் ஊழியர்களுக்கு போதிக்கும்படி நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். 26 கர்த்தாவே, எங்களுக்கு, எனக்கும் வயதாகிக்கொண்டே இருக்கிறது, விரைவில் நான் வேதாகமத்தை வேறு யாரேனும் ஒருவருடைய கரங்களில் அளிக்கவேண்டும். கர்த்தாவே, இந்த முயற்சியில் எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் அவரில் சார்ந்திருக்கையில், இன்றிரவு எங்கள் கேள்விகளுக்கு பரிசுத்த ஆவியின் மூலமாய் பதிலளியும், இதை உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென்.
1527 இப்பொழுது, மிக அதிக வெப்பமாக இருக்கிறதென்பதை நான் அறிவேன், ஆனால் தேவனுக்கு முன்பாக நான் சரியாக அதற்கு பதிலளித்தேன் என்று நான் கருதும் வரை ஒரு கேள்வியை கடந்து செல்வதில் எனக்கு விருப்பமில்லை. இப்பொழுது, நம்மிடம் அநேக கேள்விகள் இல்லை; நான் அவைகளை எண்ணிப் பார்க்கவில்லை, ஒரு—ஒரு சில கேள்விகள் மாத்திரமே இருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையுமே நாம் பார்க்க முடியாமலும் போகலாம், ஆனால் கூடுமானால் எல்லாவற்றையும் முடிக்க நாங்கள் விரும்புகிறோம். இங்கே இளஞ் சிவப்பு நிறத்தில் இங்கே இருக்கும் இந்த சிறுமியை நான் கேட்கப்போகிறேன்…தேனே, இங்கே வா. இவள் சகோதரன் பீலருடைய சிறு பெண் என்று நான் நினைக்கிறேன். நீ இந்த கேள்விகளை அங்கே கீழே எடுத்துச் சென்று இவைகளை ஒன்றாய்க் கலக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், நான் என்ன கூற வருகிறேனென்று உங்களுக்கு தெரிகிறதா, இவைகளை ஒன்றின் மேல் ஒன்று வைத்து, இதைப்போன்று, உங்களுக்குத் தெரியுமா, ஆகவே—அதன்பின்னர் அவைகளைக் குலுக்கி பிறகு என்னிடம் திரும்பவுமாக கொண்டு வாருங்கள். புரிகின்றதா? நான் ஒரு கேள்விக்கு பதிலளித்தேன் என்று எண்ணிக்கொண்டு, வேறொன்றிற்கு பதிலளிக்கச் சென்று, மற்றொருவருடைய கேள்வியை இடமாற்றாதபடிக்கு இவ்விதம் செய்கிறேன்; அவ்வாறிருக்க நான் விரும்பவில்லை. இந்த சிறுமி இதை ஒன்று சேர்த்து கலந்து, பிறகு நாம் எது மேலே இருக்கிறதோ அவர்களுக்கு பதில் அளிக்க நாங்கள் வருவோம். 28 இப்பொழுது, இங்கே (இனிய இருதயமே, உனக்கு நன்றி)—நான் கூறத்தக்கதாக ஏதாவது கேள்வி யாருடைய மனதிலே இருக்குமாயின், உங்கள் கேள்விக்கு நான் பதிலளித்துவிட்டு, அது உங்களுக்கு திருப்தியளிக்காமல் இருக்குமென்றால், நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தி பதிலளிப்பீர்களானால் நான் மிக்க மகிழ்ச்சியடைவேன். நான் கிரேக்க, எபிரேய—கிரேக்க மற்றும் எபிரேய மூல அகராதியையும் கூட இங்கே வைத்திருக்கிறேன், ஏனெனில் இங்கு நான் வார்த்தைகளைக் குறித்த விவரங்களுக்கு (உங்களுக்கு புரிகின்றதா?), ஏனெனில் அவர்களில் சிலர் எபிரேய மற்றும் கிரேக்க—வார்த்தைகளுக்குக் கூட விவரம் கேட்கின்றனர்.
1629 ஆகவே இப்பொழுது, நாம் பதிலளிக்கையில் கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. நான் உங்களுக்கு அதைத் தெளிவாகக் கூறட்டும்…(அங்கே பின்பாக இருக்கிறவர்களுக்கு நான் பேசுவது தெளிவாகக் கேட்கிறதா, உங்களால் கேட்க முடிந்தால் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அது நல்லது.) இப்பொழுது நான் தெளிவாகக் கூறட்டும், இந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்கையில், இது ஒரு எதிர்ச்சார்பாக இருக்கும்படிக்கு அல்ல, ஆனால் அது போதகத்தையொட்டி இருக்குமானால் அதற்கு இங்கே எங்களுடைய நம்பிக்கைகளின்படி, நாங்கள் அதற்கு பதிலளிக்க வேண்டியவர்களாக உள்ளோம் என்பதை கூடாரத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் நினைவில் கொண்டுள்ளனர், உங்களுடைய சொந்த கருத்துக்களுக்கு முரணாக இருக்கவேண்டும் என்றல்ல, ஆனால்—எங்களுடைய நம்பிக்கைகளை கொண்டு வரவே. சில சமயங்களில் அதை மிக கடுமையாக பதிய வைக்கிறோம். ஆகவே ஆராதிப்பவர் நிச்சயப்படுத்திக்கொள்ளவே இதைச் செய்கிறோம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.
1775. இப்பொழுது, மேலே உள்ள முதலாவது ஒன்று. ஓ, ஆம், இது ஒரு சிறிய கேள்வியாகும். இது ஒரு கேள்வியல்ல, இது ஒரு…பாருங்கள், இது ஒரு கேள்வியாகும். இது வாரத்தின் முதலிலே என்னுடைய தனிப்பட்ட பேட்டியை வைக்க விரும்புகிற ஒருவருடையதாகும். 30 இப்பொழுது, அந்த தனிப்பட்ட பேட்டி, அதை எவ்வாறு நாங்கள் நடத்துகிறோம் என்பதை நான் உங்களுக்கு சொல்வேன். இதுவா, அதுவா, யார் முதலில், என நாம் தற்செயலாக எடுக்க முடிந்ததன் அடிப்படையில் அது பயன்படுத்தப்படுகிறது, ஆனால் நாங்கள் அதற்கு ஒரு முறைமையை கொண்டிருக்கிறோம். ஆகவே, ஜெப வரிசைகளில் வருகின்ற அநேக மக்கள் இருக்கின்றனர், அவர்களில் துரிதமாக செல்லுகின்ற வரிசைகளில் செல்பவர், அல்லது சிலர் அதைக் குறித்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பவர் உள்ளனர், ஆகவே, அவர்கள் கர்த்தரிடம் கேட்க விரும்புகின்றனர். இப்பொழுது, அதைக் கேட்க அவர்களுக்கு பரிபூரண உரிமை இருக்கிறது; அதற்காகத் தான் இந்த தீர்க்கதரிசன வரமானது அளிக்கப்பட்டது, அதற்காகவே, அந்த நோக்கத்திற்காக மாத்திரமே அது அளிக்கப்பட்டுள்ளது.
1831 வேதாகமத்திலே ஏதாவதொன்றை தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பினால், அவர்கள் தீர்க்கதரிசிகளிடம் சென்றார்கள், அவர்கள் ஜெபித்து, தேவன் பதிலளிக்கும் வரை பாடல்களைப் பாடினர். ஏன், ஒரு குழுவை போஷித்து மற்றொரு குழுவை பட்டினிபோடும் ஒரு தேவன் அவரல்ல. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். ஆகையால், அதற்காகத்தான் அது இருக்கிறது. 32 இந்த தனிப்பட்ட பேட்டிகளில், நாங்கள் ஒரு காரியத்தை எடுப்போமானால், அதைக்குறித்து ஒரு வழியில் அல்லது மற்றொரு வழியில் தேவனிடமிருந்து அறியும் வரைக்கும் நான் அதை விடமாட்டேன். அவை சற்று தாமதமாகவே வரும். அது ஆறுமாதம் அல்லது ஒரு வருடம்கூட ஆனாலும், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நாங்கள் பெறுகின்ற வரையிலும் அதிலே நாங்கள் அப்படியே தரித்திருப்போம். பார்த்தீர்களா? ஆதலால், அவைகள் சற்று தாமதமாகவே வருகின்றன, ஆனால் ஆயிரக்கணக்கானோர் அழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்களோ… 33 அன்றொரு நாள் ஒரு மனிதன் அங்கே என்னிடம் வந்திருந்தார்—ஏனென்றால் இது அநேக மாதங்களுக்கு முன்பானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் இந்த மனிதன், ஒரு பாப்டிஸ்ட்டாக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக தேடிக் கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் அவரை அப்படியே விட்டுவிடவில்லை, அவரை வர அனுமதித்தோம், முடிவாக தேவனுடைய கிருபையால் ஒரு தனிப்பட்ட பேட்டியில்… உள்ளே வந்தார்—என்ன காரணம் என்பதை அறிய ஒரு தரிசனத்தை காண அவர் எப்பொழுதும் விரும்பினார்—அப்பொழுது அந்த தரிசனம் வந்தது, அவர் தன்னுடைய நாற்காலியில் உட்கார்ந்தவாறே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்.
1934 பிறகு ஒரு—ஒரு கத்தோலிக்கர், சமீபத்தில் மனமாறிய அவர், ஒரு நாளிலே சிக்காகோ நகரத்திலிருந்து தனிப்பட்ட பேட்டிகளுக்காக வந்திருந்தார்—அவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக பேட்டிகளில் கலந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார்; அறையில் பதினைந்து நிமிடங்களில், நடந்த அவருடைய முதல் பேட்டியில், கர்த்தர் ஒரு தரிசனத்தைக் காண்பித்து, காரணத்தையும் மற்றும் எல்லாவற்றையும், அவர் பரிசுத்த ஆவியை பெறும் முன்னர் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதையும், முழு காரியத்தையும் வெளிப்படுத்தினார். பாருங்கள், அதற்காகத்தான் அது இருக்கின்றது. 35 இப்பொழுது, யாராவதொருவர் எந்த சமயத்திலும்… அழைப்புகள் வரும்போது மற்றும் அவர்கள் வந்து பார்க்கவோ அல்லது இந்த தனிப்பட்ட பேட்டிகளில் சந்திக்க விரும்புகிறவர்கள், பட்லர் 2-1519 என்ற எண்ணிற்கு அவர்கள் தொலைபேசி செய்தால், எந்த இடத்தில் தனிப்பட்ட பேட்டி நடைபெறும் என்ற சரியான தகவலை அலுவலகம் உங்களுக்கு அஞ்சல் செய்யும். [தொலைபேசி எண் மாற்றப்பட்டிருக்கிறது—ஆசி.] அதன்பின்னர், உங்களுடைய தனிப்பட்ட பேட்டி எதற்காக என்பதைக் குறிப்பிடுங்கள், அதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்கலாம் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அப்பொழுது அது நியாயமானதாக இருக்கும், மற்றும் ஒவ்வொரு நபரும்… அந்த ஒதுக்கப்பட்ட நேரமானது போதுமானதாக இல்லாதிருக்கும் பட்சத்தில், அப்பொழுது அந்த குறிப்பிட்ட காரியத்திற்கு நாங்கள் மறுபடியுமாக வருவோம். அது சரியாக பதிவேட்டில் எழுத்து மூலமாக பதிவு செய்யப்படும், எங்களுக்கு தேவனிடத்திலிருந்து ஒரு தரிசனத்திலோ அல்லது தேவன் பேசுகின்ற ஏதாவதொரு விதத்தினாலோ அது அறியப்படும் வரை அந்த பதிவேட்டை நாங்கள் வைத்திருப்போம். ஆகவே இந்த விதமாகத்தான் எங்களுடைய தனிப்பட்ட பேட்டிகள் நடத்தப்படுகின்றன.
2036 ஆகையால், பாருங்கள், நான் வெளியே சென்றிருக்கையில், சில சமயங்களில் மக்கள், “சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் போதுமான அளவிற்கு மக்களை சந்திப்பதில்லை” என்று எண்ணுகின்றனர். மக்களை சந்தித்துக்கொண்டும் அதே சமயத்தில் தேவனோடும் இருக்க முடியாது. புரிகின்றதா? யாரோ ஒருவரை கூர்ந்து கவனிக்கிறேன், மேலும் நான்—நான் குகையிலோ அல்லது எங்கோ ஓரிடத்திலோ ஜெபித்துக் கொண்டிருக்கிறேன், மேலும்—மேலும்… 37 இதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என நான் பார்க்க விரும்புகிறேன். “ஓரிரு நாட்களில்…மேலேயும் வெளியேயும்…அவர்…” என்ன கூறுகிறார்? [ஒரு சகோதரன் சகோதரன் பிரான்ஹாமிடத்தில் பேசுகிறார்—ஆசி.] ஓ, ஆமாம். ஓ, ஆம், ஆம் இது இந்த ஒரு மனிதனாயிருந்தது (ஜீன் இதை இங்கே இப்பொழுது வைத்தார்) அந்த… அன்றொரு நாள் சிக்காகோவிலிருந்து ஒரு மனிதன் வந்தார், மருத்துவர் அவருடைய இருதயத்தை அறுத்தெடுத்து, இருதயத்தை திறந்து அதற்குள்ளாக இருக்கும் கோளாறு என்ன என்பதை பார்க்க வேண்டுமென்றிருந்தார். அது என்னவாயிருந்தது என்பதை சரியாக பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தினார், அதனால் அவருடைய இருதயத்தை அறுத்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லாமற்போயிற்று; அவர் சுகமாக்கப்பட்டார். ஆகவே நீங்கள் பாருங்கள், அது ஏராளமானவைகளை பொருட்படுத்துகிறது. மேலும் அது எவ்வளவு மெதுவாக வருகின்றது என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுவதற்கு, தேவனிடமிருந்து ஒரு பதிலுக்காக, ஒரு தரிசனத்திற்காக, நானே பதினைந்து ஆண்டுகளாகக் காத்திருந்தேன். தேவன்…இன்னொருவர் வருவார், அவர் மூன்று நிமிடங்களுக்கு கூட காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. பார்த்தீர்களா? அது…தேவன் தம்முடைய சொந்த நேரத்தில் தான் பதிலளிக்கின்றார். அதை நாம் கட்டுப்படுத்துவதில்லை, அதுதான் நம்மை கட்டுப்படுத்துகின்றது.
2176. இப்பொழுது, மேலே இருக்கின்ற இரண்டாவது கேள்வியானது… சகோதரன் பில், ஆவிக்குரிய வரங்களில் விசுவாசம் கொண்டிராத ஒரு சபையார் மத்தியில் என் மூலமாக தேவன் பயனளிக்கின்ற கிரியைசெய்ய முடியுமா? 38 இதில் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் ஆவிக்குரிய வரங்களில் விசுவாசம் கொண்டிராத ஒரு சபைக் கூட்டத்தில் அவர்கள் ஊழியம் செய்யும்போது, தேவன் அவர்களோடு கிரியை செய்வாரா என்றறிய இந்த நபர் விரும்புகிறார். அப்படி இருக்குமோ என்று சந்தேகங்கொள்கிறேன். 39 அருமையான நண்பரே, கர்த்தர் உங்கள் மூலமாக பலனுள்ள வகையில் கிரியை செய்வாரா என்று, நான் மிகவுமாக சந்தேகங்கொள்கிறேன், ஏனெனில் நீங்கள் அவிசுவாசிகள் மத்தியில் இணைக்கப்பட்டுள்ளீர்கள், வேதாகமமானது, “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் உங்களை பிணைத்துக் கொள்ளாதீர்கள், ஆனால் அவர்கள் மத்தியிலிருந்து வெளியே வந்து, வேறு பிரிக்கப்பட்டவர்களாயிருங்கள், என்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்” என்று கூறியுள்ளது. நீங்கள் ஒரு நகரத்தில் வசிப்பீர்களென்றால், அடையாளங்களில் மற்றும் ஆவிக்குரிய வரங்களில் விசுவாசம் கொண்டிருக்கும் ஒரு சபை அங்கே இருக்குமானால், அவைகள் உங்கள் மீது கிரியை செய்துகொண்டிருக்குமானால், அதை விசுவாசிக்கின்ற அந்த சபைக்கு நானே சொல்வேன். 40 அதன்பிறகு மற்றொரு காரியத்தையும் நான் கூறுவேனாக, நான்—வழக்கமாக அளிக்கின்ற—ஒரு வேதவசனத்தை அளிக்க விரும்புகிறேன். அருமை நண்பரே, நீங்கள் அநேகமாக, எப்படியாவது இந்த மக்கள் விசுவாசிக்க வேண்டுமென்று உங்களுடைய சிறந்த முயற்சியை நீங்கள் மேற்கொண்டீர்கள், அவர்கள் விசுவாசிக்க வேண்டுமென்று முயற்சித்தீர்கள், ஒருவேளை, அவர்கள் அதை விசுவாசிக்கமாட்டார்கள். அப்படியானால், கர்த்தராகிய இயேசு நமக்கு அளிக்க பிரியப்படுகின்றார் என்று நான் விசுவாசித்து நான் உங்களுக்கு ஒரு வேதவசனத்தை அளிக்கப்போகிறேன்.
2241 நீங்கள் முயற்சி செய்திருந்தால், நீங்கள் அந்த மேய்ப்பரிடம் பேசியிருந்தால், நீங்கள் வெவ்வேறு நபர்களுடன் பேசியிருந்து அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அதை விசுவாசிக்காமல் இருந்தால், இதைத்தான் மத்தேயு 7:6 ல் அப்படிப்பட்டதைக் குறித்துதான் இயேசு கூறினார். பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களை பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து திரும்பி…உங்களைப் பீறிப்போடும். 42 ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் முழு சுவிசேஷத்தையும் விசுவாசியாமல், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசியாமல் இருக்கின்ற ஒரு சபைக் கூட்டத்தோடு நான் இணைந்திருப்பேனா என்பது சந்தேகம் தான். நான் ஒரு சபைக்கூட்டத்தில் உட்கார்ந்து அவர் கிரியை நடப்பிப்பதை அவர் கூறினவிதமாகவே அவர் செய்கிறதை நான் பார்க்கையில், நான் மக்களிடம் இப்படிப்பட்டவைகளிலிருந்து வெளியே வந்து, எல்லா வேதவசனங்களையும் பிரசங்கம் செய்து அவைகளை விசுவாசிக்கும் ஒரு—ஒரு நல்ல சபையை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள் என்று நான் கூறுவது நியாயமானது என்று நான் உணருவது சரியே என்று நான் நினைக்கிறேன்.
2377. இப்பொழுது, அடுத்த கேள்வி: நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தாலொழிய நீங்கள் இரட்சிக்கப்படவில்லை என்பது உண்மையா? 43 அதன் பேரில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஒரு நல்ல விவாதத்தை நடத்தலாம். நீங்கள் கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு தண்ணீர் ஞானஸ்நானத்திற்காக ஆயத்தமாயிருக்கையில், நீங்கள் இன்னுமாக குணப்படவில்லை; நீங்கள் மனந்திரும்புதலுக்காக மாத்திரமே விசுவாசிக்கிறீர்கள். மனந்திரும்புதல் என்றால், “மாற்றப்படுவதற்காக” என்பதாகும்.
2444 இப்பொழுது, இதை இன்னுமாக வலியுறுத்தத்தக்கதாக, தம்மை மூன்றரை ஆண்டுகளாக பின்பற்றி வந்த பேதுருவிடம் இயேசு… மத்தேயுவின் புத்தகத்தில் உள்ள 10 வது அதிகாரத்தில் இயேசு பேதுருவிற்கு அசுத்த ஆவிகளை துரத்த, அவைகளுக்கு எதிராக உபயோகிக்கவும் வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்கவும், சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும் வல்லமையை அளித்தார். இதைச் செய்ய அவனுக்கு வல்லமை இருந்தது. பரிசுத்த யோவான்17:17-ல் இயேசு பேதுருவை சத்தியத்தின் மூலமாக பரிசுத்தப்படுத்தி, வசனமே சத்தியம் என்றும், அவர் தான் அந்த வார்தை என்றும் கூறினார். பிறகு—பெந்தெகொஸ்தேவிற்கு—முன்னர் அவர் கூறினார். “நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்று கூறினார். நீங்கள் விசுவாசித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது நீங்கள் மாற்றப்படத்தக்கதாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
2545 இப்பொழுது, உங்களில் அநேகர், என்னுடைய பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் நண்பர்கள், அதை ஏற்கவில்லை என்பதை நான் அறிவேன், ஏனெனில் நீங்கள் இந்த வேதவசனத்திற்கு திரும்பிச் செல்கையில்…இப்பொழுது, இங்கே தான் இதை நான் ஆணித்தரமாக கூற வேண்டியவனாக இருக்கிறேன். புரிகிறதா? நீங்கள் வேதவசனத்திற்கு திரும்பிச் செல்லுங்கள்; ஆபிரகாம் (ரோமர் 4) தேவனை விசுவாசித்தான் , அது அவனுக்கு நீதியாக கொடுக்கப்பட்டது அல்லது எண்ணப்பட்டது. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், ஆகவே தேவன் அவனுடைய விசுவாசித்தின் அடிப்படையில் அவனுக்கு அதை நீதியாக எண்ணப்படச் செய்தார். ஆனால் ஆபிரகாமை நிரூபிக்க, அவர் அவனுக்கு (பண்புக்குரியவனாக குறித்துக் காட்டப்படுதல், அவன் அவனுடைய பாவத்திலிருந்து பண்புக்குரியவனாக குறித்துக்காட்டப்பட்டான், பிறகு அவர் அவனை அவனுடைய பாவத்திலிருந்து கொண்டு வந்தார்), ஏனெனில் அவன் விசுவாசித்திருந்தான், அவர் அவனுக்கு ஒரு அடையாளத்தை அளித்தார். அங்கே தான் நீங்கள், என்னுடைய அருமையான பிரஸ்பிடேரியன் மற்றும் பாப்டிஸ்டு நண்பர்களாகிய நீங்கள் அதைக் காணத் தவறுகிறீர்கள். புரிகிறதா? தம்மில் அவன் கொண்டிருந்த விசுவாசத்தை அவர் பெற்றுக்கொண்டார் என்பதன் நிரூபணமாக, ஒரு சாட்சியாக விருத்தசேதனத்தின் முத்திரையை அவர் அவனுக்கு அளித்தார். ஆகவே அதன் காரணமாகத் தான் பவுல் அப்போஸ்தலர் 19-ல் அப்பொல்லோவை தங்கள் மேய்ப்பனாகக் கொண்டிருந்த, யோவான் பிரசங்கித்த விதமாக அதை விசுவாசித்த அந்த பாப்டிஸ்ட் சகோதரரிடம், “நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்றான். நீங்கள் பாருங்கள், அவர்கள் விசுவாசித்திருந்தனரேயன்றி இன்னுமாக அவர்கள் குணப்படாதிருந்தார்கள்.
2646 இப்பொழுது, நாம் மாற்றம் என்ற வார்த்தையில் இன்றைக்கு—தவறாக அர்த்தங்கொள்கிறோம். ஒரு மனிதன் மது அருந்துவதை நிறுத்தி மற்ற எல்லாவற்றையும் நிறுத்தி சபைக்கு சென்றால் அல்லது சபையை சேர்ந்து கொள்வானானால் அவன் மாற்றப்பட்டவன் என்று நாம் கூறுகிறோம். ஒருக்கால் அவன் சபையை சேர்ந்துகொள்ளலாம், ஆனால் அவன் மாற்றப்பட்டான் என்பதற்கான அடையாளம் அதுவல்ல. அவனுடைய பழைய ஜீவியமானது மரித்து பிறகு கிறிஸ்துவுக்குள்ளாக அடக்கம் பண்ணப்பட்டு, புதியதான ஜீவியத்தின் உயிர்த்தெழுதலில் அவருடன் எழுந்து, பரிசுத்த ஆவியின் மூலமாக மாத்திரமே வருகின்றதான நித்திய ஜீவனின் ஜீவிக்கின்ற நம்பிக்கையை பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள்ளாக உருவாக்கும் வரை அவன் மாற்றப்படவில்லை. புரிகிறதா?
2747 இப்பொழுது, இப்பொழுது, அந்த மகத்தான வேதவசனத்தை நான் அறிந்துள்ளேன், நானே அதை உபயோகிக்கிறேன்—நான் இங்கே அதை எழுதிவைத்துள்ளேன்—பரிசுத்த யோவான் 5வது அதிகாரம், 24 ஆம் வசனம். இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு வேதவாக்கியம். ஏனெனில் இயேசு இதைக் கூறினார்: “மெய்யாகவே மெய்யாகவே, உங்களுக்குச் சொல்லுகிறேன், ‘என்னை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.’” நான் அதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும்படியாக, நான் அதை வாசிக்கட்டும். பரிசுத்த யோவான் 5, இந்த வேத வசனத்தை நாம் பார்க்கையில் நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், 5:24 வது வசனம். என் வசனங்களைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குப்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 48 “என்னை விசுவாசிக்கிறவனுக்கு.” இப்பொழுது, பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவை கிறிஸ்து என்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும் வேதவசனம் கூறுகின்றது. ஆகவே நீங்கள் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை பெறும் வரைக்கும் இயேசுதான் கிறிஸ்து என்று உங்களால் விசுவாசிக்க முடியாது. மேய்ப்பர் என்ன கூறுகிறாரோ அதை, தாய் என்ன கூறுகிறாரோ அதை அல்லது யாரோ ஒரு அருமையான பிரசங்கி கூறுவதை மாத்திரமே அவர்கள் கூறுகின்ற வேதவாக்கியங்களையே நீங்கள் கூறவோ அல்லது சாட்சி கொடுக்கவோ செய்கிறீர்கள். அவர் தம்முடைய உயிர்த்தெழுதலை உங்களுக்கு சாட்சியாய் அறிவிக்கும் வரை உங்களால் அதை அறிந்துகொள்ள முடியாது. பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவை கிறிஸ்து என்று ஒருவனாலும் சொல்ல முடியாது.
2849 ஆகையால், கேள்வி என்னவென்றால், ஒரு மனிதன் கல்வாரியை நோக்கி பார்த்துக்கொண்டே, அந்த நிலையிலேயே அவன் மரிப்பானென்றால், அவன் இரட்சிக்கப்படுவான் என்று நான் விசுவாசிக்கிறேன். நிச்சயமாக, அவன் இரட்சிக்கப்படுவான் என்று நான் விசுவாசிக்கிறேன்; முன்பு அவன் ஒரு தருணம் பெற்றிராவிடில், அவன் கடந்து செல்வான் என்று விசுவாசிக்கிறேன். ஆனால் அது எதைப் பொறுத்ததென்றால்…நீங்கள் திரும்பிச் சென்று சிலுவையில் மரித்துக் கொண்டிருந்த அந்த கள்ளனைப் பாருங்கள். நினைவில் கொள்ளுங்கள், அதுதான் அவனுக்கு முதலும் முடிவான தருணமாயிருந்தது. நீங்கள் இன்றிரவு ஒன்றைப் பெற்றுள்ளீர்கள். அந்த நேரம் வரைக்கும் நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டாம், ஏனெனில் உங்களுக்கு அது அந்த விதமாகவே இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு ஒரு மரணப்படுக்கையில் அறிக்கை செய்யும் தருணம் இல்லாமல் போகலாம். நான் உங்களுக்கு சொல்கிறேன், அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள், ஆனால் இன்னொரு தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது என்பது சரியானதல்ல. உங்களுடைய மரணப்படுக்கைக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம்; சரியாக இப்பொழுதே இதை ஒரு மரணப்படுக்கையாக கருதுங்கள், அதாவது இப்பொழுது நீங்கள் மரித்து பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களாயிருங்கள்.
29இப்பொழுது, அடுத்த கேள்வி…இப்பொழுது அதன் பேரில் ஒரு கேள்வி இருக்குமானால் உங்கள் கரத்தை மாத்திரம் உயர்த்துங்கள். என்னால் முடிந்ததைச் செய்ய எனக்கு மகிழ்ச்சி. 78. பெந்தெகொஸ்தேயிற்கு பிறகு அப்போஸ்தலர்கள் இராப்போஜனம் எங்காகிலும் எடுத்துள்ளனர் என்பதை எங்காகிலும் உங்களால் காண முடிகிறதா? மக்கள் வார்த்தையை பகுத்தறிவதில்லை என்று பவுல் பொருட்படுத்திக் கூறினானா? தேவனை தொழுதுகொள்வதற்கு பரிசுத்த ஆவியானவர் மாத்திரம் தான் வழியாயிருந்தாரா? நீங்கள் திராட்சை ரசமும் ரொட்டித் துண்டுகளையும் சாப்பிட்டால், வியாதியும் நித்திரையும் உங்கள் மேல் வருமா? 50 இப்பொழுது, இதைக் கேட்டுள்ள இந்த அருமையான நபருக்கு இங்கே ஒரு இடம் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன், அவர்கள் என்ன கேட்கின்றனரோ அல்லது அவர்கள் அதை கேட்காமலிருப்பதோ, இந்த கேள்வியை உத்தமத்தோடும் ஆழத்தோடும் கேட்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே நான்—என் சகோதரன் அல்லது சகோதரி, யாராயிருந்தாலும், நீங்கள் எவ்விதம் பதிலளித்தீர்களோ—இல்லை கேட்டுள்ளீர்களோ அதே விதமாக நானும் மிகவும் ஆழ்ந்த உத்தமத்தோடு அதற்கு பதிலளிப்பேன்.
3051 இப்பொழுது நீங்கள் என்னுடன் அப்போஸ்தலரின் புத்தகம், 2வது அதிகாரத்திற்கு திருப்ப நான் விரும்புகிறேன்—42வது வசனத்திலிருந்து நாம் துவக்குவோம். அப்போஸ்தலர் 2வது அதிகாரம், நான் கூறினவிதமாக, 42வது வசனத்திலிருந்து துவங்குவோம். 52 இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், பவுல் இராப்போஜனம் எடுத்ததைக் குறித்தும், பிறகு பேதுரு சென்று அதைக் கைக்கொண்டதை வேதாகமம் எங்கே கூறுகிறது என்பதை என்னால் சரியாக கூறமுடியும் என்று நான் நினைக்கிறேன்; ஆனால் அவர்கள் சபையைக் குறித்து பேசும் பொழுது, ஒன்றாக இருந்த, எல்லாரைக் குறித்தும் என்றே காணப்படுகிறது. பவுல் ஒன்றைப் பிரசங்கித்து, பிறகு அவன் செய்யாததை, மற்றவர்களிடம் செய்யுமாறு கூறியிருப்பான் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. ஆகவே அப்போஸ்தலரில் இதை நாம் காண்கிறோம்: அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும்…அந்நியோந்நியத்திலும்… (கவனியுங்கள்! அவர்கள் தரித்திருந்தனர், சரீரமாகிய, முழு சபை.)… அப்போஸ்தலருடைய உபதேசத்திலும் அந்நியோந்நியத்திலும்,… ( [ஆங்கிலத்தில்—ஆசி.] மற்றும் என்பதோ, அங்கே வாக்கியத்திற்கு இடையே வரும் இணைச்சொல். புரிகிறதா?)… அப்பம்பிட்குதலிலும். (…அது தான் இராப்போஜனம்.) ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
3153 பிரசங்கிகளாயிருந்த, அந்த அப்போஸ்தலர்கள்… அவர்கள் தங்கள் உபதேசத்திலும், அப்பம் பிட்குதலிலும் (இராப்போஜனம்), அந்நியோந்நியத்திலும் மற்றும் ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். அப்படியானால், அப்போஸ்தலரிடமிருந்து அது இராப்போஜனத்தை எடுத்துப்போடுமென்றால், அது அப்போஸ்தலரிடமிருந்து ஜெபத்தையும் கூட எடுத்துப்போட்டுவிட்டதென்பதாகும். புரிகிறதா? இப்பொழுது, நாம் இன்னுமாக தொடர்ந்து வாசிப்போமாக. புரிகிறதா? எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் ஒவ்வொரு மனிதனுக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து… (அது அப்போஸ்தலர்கள் மற்றும் எல்லாரும்.) … அப்பம்பிட்டு… (அவர்கள் கூடின ஒவ்வொரு தடவையும் இராப்போஜனம்)…
3254 அதுதான் ஆதி சபையின் மற்றும் அப்போஸ்தலர்களின் உபதேசமாக இருந்தது, அதாவது அவர்கள் ஒவ்வொரு தடவையும் ஒன்று கூடினபோது இராப்போஜனத்தை கைக்கொண்டார்கள். ஒவ்வொரு தடவையும்! இப்பொழுது, கிறிஸ்தவ சபைக்கு போகின்ற கிறிஸ்தவ மக்களாகிய உங்களை நான் அறிவேன் (நாம் அறிந்துள்ளபடி அந்த காம்பெல்லைட் சபை… ஏனென்றால் அவைகளில் இரண்டு உள்ளன, ஒன்று கிறிஸ்துவின் சபை ஸ்தாபனம், மற்றொன்றுதான் காம்பெல்லைட் சபை.), நீங்கள், “நாங்கள் ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் அதைக் கைக்கொள்ளுகிறோம். அதன் பேரில் இருக்கிற வேதவசனம் கூட எங்களுக்கு தெரியும்” என்று கூறுகிறீர்கள். நீங்கள் பிரன்ஹாம் கூடாரம் செய்வதைவிட அதற்கு மேலான ஒரு வேத வசனத்தை கொண்டிருக்கிறீர்கள். பிரன்ஹாம் கூடாரம் அதை மாதத்திற்கு ஒரு தடவை கைக்கொள்கிறது. ஆனால் வேதாகமம் நீங்கள் கூடி வரும்போதெல்லாம் என்று கூறுகிறது. அது சரி. அது ஒவ்வொரு தடவையும். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்தில் தொடர்ந்து அநுதினமும் தரித்திருந்து… வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, 55 பாருங்கள், ஒவ்வொரு தடவையும் அப்போஸ்தலர்கள், தேவாலயத்தில் ஜெப குழுக்கள், இந்தக் கூட்டங்களை நடத்தி, ஒவ்வொரு வீடாக, அவர்கள் கூடி வந்தபோதெல்லாம் அப்பத்தைப் பிட்டு இராப்போஜனத்தைக் கைக்கொண்டனர்.
3356 இப்பொழுது, பவுல், முதலாம் கொரிந்தியரில், இராப்போஜனத்தின்போது இங்கே நாம் வாசிக்கின்ற, அந்த 11வது அதிகாரத்தையும் கூட நாம்—நாம் வாசிப்போம்… அது உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்படிக்கு நான் அதை வாசிக்கலாம், முதலாம் கொரிந்தியர் 11வது அதிகாரம். இப்பொழுது பவுல் பேசுவதைக் கவனியுங்கள், 23வது வசனம். நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில் கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று ராத்திரியிலே அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம்பண்ணின பிறகு அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணின பின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தை எடுத்து:… (இப்பொழுது பாத்திரம்)… இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தை தெரிவிக்கிறீர்கள். 57 பார்த்தீர்களா? இதுதான் இராப்போஜனம். ஜீவிக்கிற வார்த்தையாகிய, கர்த்தருடைய சரீரமானது, கிறிஸ்துதாமே என்பதை நான் உணர்ந்து அதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஞானஸ்நானம், கால் கழுவுதல், மற்றும் மற்றைய சபை ஒழுங்குகளைப் போன்றே இவைகளும் அடையாளங்கள்தான். ஆனால் அப்பம், இப்பொழுது, அப்பமும் திராட்சரசமும் ஒரு இராப்போஜனத்திற்கு முற்றிலுமான அத்தியாவசியமான தேவையாகும்.
34இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ… 58 இப்பொழுது, இங்கே கேட்கப்பட்ட கேள்வியானது: “நீங்கள் திராட்சரசமும் ரொட்டித்துண்டுகளும் எடுப்பது—நீங்கள் எடுப்பது, வியாதியும் நித்திரையும் உங்கள் மீது.” பாருங்கள், அது…இந்த கேள்வி என்ன என்று நான் நினைக்கிறேனென்றால், இருக்கின்ற ஒரேயொரு தொழுதுகொள்ளுதல், பரிசுத்த ஆவிக்குள் மாத்திரமே, பரிசுத்த ஆவிக்குள் தொழுதுகொள்வது. சரியாக அதுதான் சத்தியமாகும். நீங்கள் தொழுதுகொள்ள வேண்டியது…பரிசுத்த ஆவிக்குள் எல்லா தொழுதுகொள்ளுதலும், மேலும் பவுல் இங்கே கூற முயற்சிப்பது என்னவெனில், இதை புசித்து பானம்பண்ணும் முன்னர் நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் இருக்க வேண்டும், இல்லையெனில் உங்களுக்குதானே ஆக்கினைத் தீர்ப்பு வரும்படிக்கு ஆகும் என்பதே (புரிகிறதா?)—நீங்கள் இதைச் செய்யும் முன்னர், இந்த கட்டளையானது கைக்கொள்ளப்படும் முன்னர்.
3559 இப்பொழுது, அதை ஆதரிக்க, இங்கே ஜோசபஸ் என்பவர் எழுதியுள்ள ஒன்றை நான் இங்கே வைத்துள்ளேன், ஆதி கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணத்திற்குப் பிறகு, அவர்கள் கர்த்தருடைய சரீரத்தை எடுத்து அதைப் புசித்தபடியால், அவர்கள் மனித மாம்சம் தின்பவர்கள் என்று கருதப்பட்டனர் என அவர் அங்கு கூறினார். அவர்கள் அவருடைய கல்லறையத் தோண்டி, அவருடைய சரீரத்தை எடுத்து, அதைத் துண்டுகளாக்கி, அதைப் புசித்தனர் என்று அவர்கள் நினைத்தனர். இது அவர்கள் இராப்போஜனம் எடுத்ததைக் குறித்ததே ஆகும். புரிகிறதா? இப்பொழுது, கவனியுங்கள், ஏன் இந்த வேதவசனம்—இங்கே எப்படி பவுல் கூறுகிறான் என்று பாருங்கள். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து இந்த அப்பத்தில் புசித்து,… 60 அப்பத்தில் புசித்து. இப்பொழுது, இயேசுதான் ஜீவ அப்பம் என்பதை நான் அறிவேன்; அது உண்மை. ஆனால் இது ஞானஸ்நானத்தைப் போன்றே ஒரு அடையாளம் ஆகும். ஞானஸ்நானம் உங்களை இரட்சிக்கிறதில்லை; நீங்கள் இயேசு கிறிஸ்துவினுடைய மரணம், அடக்கம் உயிர்த்தெழுதலில் விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள் என்பதை சபையாருக்கு சாட்சியாக அறிவிப்பதின் அடையாளம் தான் ஞானஸ்நானமாகும். அது உங்களை இரட்சிக்கிறதில்லை. தண்ணீர் உங்களை இரட்சிக்காது. உங்களை இரட்சிப்பது உங்கள் விசுவாசமாயுள்ளது. ஆனால் ஞானஸ்நானம் என்பது ஒரு கட்டளை ஆகும், அது செய்யப்பட வேண்டும், ஏனெனில் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்று கூறிய பிறகு மறுபடியுமாக அப்படி செய்யத் தேவையில்லை என்று தேவனால் கூறமுடியாது. அதே போன்று இராப்போஜனம் எடுங்கள் என்று கூறிய பிறகு மறுபடியுமாக அதை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவரால் கட்டளையிட முடியாது. நீங்கள் அதைக் கைக்கொள்ளத்தான் வேண்டும். அது தேவனோடு இருக்கின்ற மாறாத ஒரு கட்டளை ஆகும்.
36என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். 61 இப்பொழுது, நீங்கள் அங்கே புரிந்துகொள்கிறீர்களா? கிறிஸ்துவுக்குள்ளாக இல்லாமல், இராபோஜனம் எடுக்க முயற்சித்து திரும்பி வருகிற கிறிஸ்தவன், ஆவியில் ஐக்கியங்கொள்ளாதிருக்கிறவன்; அவன் அதை எடுக்க அபாத்திரனாய் இருக்கிறான். அவன் சென்று புகைபிடித்து, பொய் சொல்லி, திருடி, விபச்சாரம் அல்லது அதைப் போன்றதைச் செய்து, அல்லது ஒரு கிறிஸ்தவ ஜீவியத்தை செய்யாமல் இந்த இராப்போஜனத்தை எடுப்பானானால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். அவன் ஜீவிக்கின்ற அந்தவிதமான ஜீவியத்தை மக்கள் காண்கிறார்கள், பிறகு அவன் உள்ளே வந்து, கிறிஸ்துவின் சரீரம் மற்றும்—மற்றும் மரணத்திற்குரிய இந்த கட்டளையை, ஒழுங்கை எடுத்து, வார்த்தையாகிய கிறிஸ்துவை தன்னுடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டான் என்னும்—என்னும் அடையாளத்தை அவனுக்குள் எடுக்கையில், அங்கே இருக்கின்ற அந்த அடையாளத்தை எடுக்கையில், அவன் கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்.
3762 இப்பொழுது, இன்னும் சில நிமிடங்களில் அந்த அதே கேள்வியை நான் எடுக்கபோகிறேன், நாம் அதை எடுப்போமானால், ஏனென்றால் அது பரிசுத்த ஆவியின் தூஷணத்தின் அதே வரிசையில் வருகிறது. புரிகிறதா? ஏனெனில் ஏதோ ஒன்றை வெளிப்படையாக பிரசங்கித்த பிறகு, நீ செய்யக் கூடாததை செய்வாயானால் நீ ஒரு மாய்மாலக்காரனாகக் காணப்படுகின்றாய். சரி! இதை நான் முடிக்கட்டும், பாருங்கள், பிறகு நாம் நிறுத்துவோம். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். நாம் நியாயந்தீர்க்கப்படும் போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். ஆகையால் என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். (இப்பொழுது கவனியுங்கள்.) … ஒருவனுக்கு பசியிருந்தால்,…
3863 உள்ளே வரவேண்டாம்…ஏனெனில் இங்கே மற்றுமொரு வேதவசனத்தில், அவர்கள் இறைச்சியை, இவ்வளவு பானத்தை, இன்னும் அதைப் போன்றவற்றை, உள்ளே கொண்டு வந்து, கர்த்தருடைய வீட்டை ஒரு—ஒரு புசிக்கின்ற இடமாக்கி, கர்த்தருடைய போஜனபந்தியில் குடித்து வெறித்த நிலையில் இருந்தனர். இங்கே கொரிந்தியர் புத்தகத்தில் அது இருப்பதை நீங்கள் நினைவில் கொண்டுள்ளீர்கள். கர்த்தருடைய போஜனபந்தியில் குடித்து வெறித்திருந்தனர். ஆனால் பவுல் இங்கே கூறுகிறான்: … நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடி வராதபடிக்கு, ஒருவனுக்கு பசியாயிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம் பண்ணுவேன். (புரிகிறதா?)
3964 ஆகையால் இப்பொழுது, நான் நினைப்பதென்னவெனில் ரொட்டித் துண்டைத் தின்பது… இப்பொழுது, ஒரு கோஷர் அப்பத்துக்குப் பதிலாக ரொட்டித் துண்டை வைக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அது ஒரு பரிசுத்தமான புளிப்பில்லாத அப்பமாயிருக்க வேண்டும் என்றே நான் விசுவாசிக்கிறேன், எகிப்தில் செய்யப்பட்ட அந்த புளிப்பில்லாத அப்பத்தைப் போன்று அது புளிப்பில்லாத பரிசுத்த அப்பமாயிருக்க வேண்டும். இரத்தம் திராட்சை பழச்சாறாக இருக்கக்கூடாது, ஆனால் அது திராட்சை ரசமாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். திராட்சை பழச்சாறானது பழையதாகும்போது புளிப்பாகும், பிறகு கெட்டுப்போகும். ஆனால் திராட்சை ரசமோ பழையதாகுகையில் இன்னுமாக சிறப்பையும் வீரியத்தையும் பெறும்; அது தன்னுடைய சக்தியை ஒருபோதும் இழக்கிறதில்லை. கிறிஸ்துவின் இரத்தமும் புளித்து கெட்டுப்போகிறதில்லை; அது பழையதாகுகையில், இன்னுமாக அது வீரியமடைந்து, ஒரு விசுவாசிக்கு நாட்கள் கடந்து செல்லச் செல்ல சிறப்பானதாக இருக்கும். ஆகவே இது திராட்சரசமும் அப்பமும் தான். இராப்போஜன அப்பமானது தங்களைத் தாங்களே அர்ப்பணம் செய்து, தேவனுக்காகத் தங்களையே அர்ப்பணித்துள்ள மக்களால்தான் செய்யப்பட வேண்டும். 65 பாவிகள் சாபமிட்டு கூச்சல் போட்டு, அசுத்தமானதை செய்து கொண்டிருந்த ஒரு சபைக்கு ஒருமுறை நான் சென்றேன், ஒரு பழைய ரொட்டி துண்டை வெட்டி எடுத்து அதை ஒருவிதமான பழச்சாறில் தொட்டு சாப்பிட்டனர். என்னைப் பொறுத்தவரை அது—அது முட்டாள்தனமானதாயிருந்தது. நான் விசுவாசிப்பதென்னவென்றால் அது சரியாக வேதாகமம் கூறியுள்ளவாறே அதேவிதமாகவே இருக்கவேண்டும், வேத வாக்கியங்களிலிருந்து ஒரு இம்மியளவு கூட அது பிசகாமல், சரியாக அதேவிதமாகவே தரித்திருக்க வேண்டும்.
4079. கேள்வி. இப்பொழுது! சகோதரன் பிரான்ஹாம், ஒருகாலத்தில் சாத்தான் வானத்தில் இருந்தவனாக பிறகு வெளியே துரத்தப்பட்டானா, அவனும் அவனுடைய தூதர்களும் கீழே பூமிக்கு வந்தார்களா, அல்லது அது யோவான் பத்மு தீவில் கண்ட தரிசனத்தைப் போன்ற ஒன்றா இது? இதை ஏன் நான் கேட்கிறேனென்றால், அது ஒரு தரிசனமாகும் என்று எனக்கு கூறப்பட்டுள்ளது. 66 யோவான் அதை ஒரு தரிசனமாகக் கண்டான், ஆனால் அதுவோ உண்மையாகவே நடந்த ஒரு சம்பவமாகும். நீங்கள் ஏசாயா 14:12-க்கு திருப்புவீர்களானால். இப்பொழுது, இவை மெதுவாகச் செல்கின்றன, ஆனால் எனக்கோ, இவையெல்லாம்—இவையெல்லாம் பாடங்களாயுள்ளன. இது ஏதோ ஒரு…ஒருக்கால் நீங்கள், “பாருங்கள், இப்பொழுது அது எனக்கு தேவைப்படவில்லை” என்று நினைக்கலாம். தேவனுடைய வார்த்தையின் பேரில் பரிசுத்த ஆவியானவர் எப்படியெல்லாம் போஷிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது. போஷிக்கப்படுதல்—அது வார்த்தையினாலேயே இருக்க வேண்டும், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையின் பேரில் மாத்திரமே, போஷிக்கின்றார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? வேதம் அவ்வாறு கூறியுள்ளது. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” அது சரியே! ஏசாயா 14ஆம் அதிகாரம், இப்பொழுது நாம் 12ஆம் வசனத்திலிருந்து துவங்கப்போகிறோம் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது லூசிபரைக் குறித்து வாசிப்போம். ஓ லூசிபர்;… நீ வானத்திலிருந்து விழுந்தாயே!…(வானத்திலிருந்து விழுந்தவன்) அதிகாலையின் மகனாகிய… (பரலோகத்தைச் சார்ந்த ஒரு தூதன்.) அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, ஓ, லூசிபர், நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே நடந்து— விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும் நான் மேகங்களுக்கு மேலாக உயரத்தில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. 67 ஆகவே நீங்கள் பாருங்கள், அது ஒரு தரிசனம் அல்ல. நிச்சயமாகவே, லூசிபர் வானத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டான்.
4168 இப்பொழுது, ஒரு நிமிடம் புதிய ஏற்பாடு, லூக்கா 10:18-க்கு திருப்பி இயேசு என்ன கூறினார் என்பதைப் பார்ப்போமாக. லூக்காவின் புத்தகத்தில், இந்த கேள்விகளை புரிந்துகொள்ள முயற்ச்சிக்க, இப்பொழுது நீங்கள் வைத்துள்ள உங்கள் வேதாகமங்களை லூக்கா10:18-க்கு திருப்புங்கள், அவர்களை அவர் நோக்கி,… (இயேசு பேசுகின்றார்)… சாத்தான் மின்னலைப் போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். 69 பாருங்கள், சாத்தான் தேவனுடைய மூல பிரதான தூதனாவனன். ஒரு சமயத்தில் அவன் பரலோகத்தில் வாசம் செய்தான். தேவனுக்கடுத்ததாக வானங்களில் அவன் ஒரு சமயத்தில் மிகப்பெரிய நபராக இருந்தான். தேவனுடன் ஐக்கியமாக அவன் தேவனுடைய வலதுகரமாக விளங்கினான், ஆகவே அவன் தன் இருதயத்தில் மேட்டிமை கொண்டவனாக ஆனான்.
4270 இன்றைக்கும் அந்த விதமான வழியே ஜனங்கள் பெற்றுக்கொள்கிறார்கள் அல்லவா? தேவன் ஒரு நபரை ஆசீர்வதித்து அவன் பேரில் சிறிது நம்பிக்கையை வைப்பாரானால், பிறகு அவன் எல்லாம் தெரிந்த ஒருவன் என தன்னை நினைத்துக்கொள்கிறான். பிறகு அவன் ஒரு…அவன் ஒரு ஸ்தாபனத்தையோ, அல்லது வித்தியாசமாகத் தென்படுகிற ஏதோ ஒன்றையோ அவன் செய்ய ஆரம்பித்துவிடுவான். “ஓ லூசிபர், நீ வானத்திலிருந்து விழுந்தாயே!” 71 அது…தேவன் தொடர்புகொள்ளக்கூடிய ஒருவரை, தாழ்மையாக தரித்திருந்து, சாந்தமாக, ஒரு காரியத்தை செய்ய தேவன் அவனை அழைக்கும் வரை அந்த ஸ்தானத்திலேயே தரித்திருப்பவனையே (நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? புரிகிறதா?), தேவனால் ஆசீர்வதிக்கப்பட இயலுகின்ற வகையில் உள்ள ஒரு மனிதன், மேலும் தன்னை ஒரு தூதனாகவோ அல்லது தேவனாகவோ பாவிக்காமல், இன்னுமாக தன்னைத்தான் சாதாரண மனிதனாகவே பாவிக்கின்றவனையே பெற்றுக்கொள்ள முயற்சிக்க அவருக்கு ஒரு கடினமான நேரமாய் இருக்கிறது, அந்த மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவுடனே, தனக்கு ஒன்று அளிக்கப்பட்டவுடன், அவன் ஒரு தேவனாக ஆக விரும்புகிறான்; ஒரு—ஒரு தூதனாக ஆக விருப்பம் கொள்கிறான். அவன் ஒரு மகத்தான மனிதனாக ஆக விரும்புகிறான். “நான் என்ன செய்கிறேனோ, என்னவோ…அது…நான் மற்றும் என்னுடைய மற்றும் என்னுடையது…” அதெல்லாமே. அது தவறான மனப்பான்மையாகும். தேவன் ஆசீர்வதிக்கக்கூடிய மற்றும் ஆசீர்வாதங்களை ஊற்றக்கூடிய ஒருவரை, மேலும்—மேலும் அவர் எவ்வளவு அதிகமாக ஆசீர்வதித்தும், இன்னும் சிறியவனாக ஆகின்ற மனிதனையே அவர் தேடிக்கொண்டிருக்கிறார். 72 ஆகவே நீ ஒன்றுமில்லாதவனாக ஆகும் வரை தேவனிடமிருந்து ஒன்றும் உன்னால் இன்னுமாக பெறமுடியாது. நீ உன்னைத் தானே சிறியவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தன்னைதானே உயர்த்திக்கொள்கிறவனை தேவன் தாழ்த்திவிடுகின்றார். தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளுகிறவனை தேவன் உயர்த்துகின்றார். நீ பெரியவனாக ஆகும் முன்னர், நீ சிறிவனாக ஆகவேண்டும். அப்போது உன்னாலேயே பெரியவனாக இருக்க முடியாது; உனக்குள்ளாக தேவன் பெரியவராக இருக்கின்ற வகையில்தான் நீ பெரியவனாக இருக்க முடியும். புரிகிறதா?
4373 ஆகவே இன்றைக்கு லூசிபர் பூமியின் மேல் இருந்து உலகத் தோற்றத்திற்கு முன்னே அவன் ஆரம்பித்த அந்த அதே நோக்கத்தை நிறைவேற்றத்தக்கதாக சபைக்குள் கிரியை செய்து முயற்சித்துக்கொண்டிருக்கிறான். லூசிபர் வானத்திலிருந்து வெளியே உதைத்து தள்ளப்பட்டான். சரி. 74 இதைக்குறித்து வேறொன்றும் இங்கே உள்ளதென்று நான் நம்புகிறேன், எசேக்கியல் 28 ஆம் அதிகாரம், 12வது வசனம். எசேக்கியல் 28:12 என்ன கூறுகிறதென்று நாம் பார்ப்போமாக. ஆகவே இதை நாம் ஆராய்வதன் மூலம், அதற்குள்ளாக உற்று நோக்கி, கர்த்தர் உரைக்கிறதாவது என்ன என்பதை நாம் காண்கையில், அப்பொழுது உண்மையாகவே அவன் வானத்திலிருந்து விழுந்தானா அல்லது அது ஒரு தரிசனம்தானா என்று நாம் அறிந்துகொள்ளலாம்—28 மற்றும் 12. சரி. 28:12, இதைத்தான் குறித்து வைத்துள்ளேன் என்று நான் விசுவாசிக்கிறேன். சரி. இங்கே நாம் ஆரம்பிப்போம். இப்பொழுது, இங்கே இது ஒரு மகத்தான காரியமாகும்; இதன் பேரில் சிறிது பிரசங்கிக்க நமக்கு சமயமிருந்தால் நலமாயிருக்கும் என்று விரும்புகிறேன் (புரிகின்றதா?), ஏனெனில் உண்மையாகவே ஏதோ ஒன்று உள்ளது.
4475 இப்பொழுது, இதன் பேரில் அடிப்படையாகக்கொண்டு பேசுகின்றபடியால், வானத்தில் லூசிபர் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள முயற்சித்ததையும், தன்னுடைய எஜமானனுக்கும் மேலாக சிறிது பெரியவனாக இருக்க வேண்டும் என்றும் எண்ணினான். ஆகவே அவன் மிகாவேலுக்கு துரோகம் செய்து, தனக்காக வடக்கில் ஒரு பெரிய இராஜ்யத்தை உண்டாக்கிக்கொண்டு, கீழே வந்தான். இப்பொழுது, அவனும் அவனுடைய தூதர்களும் வெளியே தள்ளப்பட்டார்கள். அந்த நபர் கேட்டது வெளிப்படுத்தல்…அது வெளிப்படுத்தல் 12, பத்மு தீவில் கண்டது. ஆனால் இப்பொழுது இங்கே, 12 வது வசனத்தை கவனியுங்கள், அவன் மனிதனுடைய இராஜ்யத்தில் எப்படி உட்கார்ந்துள்ளான் என்று கவனித்துப் பாருங்கள். 76 வானத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு தேசத்தையும் பிசாசானவன் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறான் என்பதை இங்கே எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? பிசாசுகள் அமெரிக்காவை கட்டுப்படுத்துகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டினுடைய அரசாங்கம் பிசாசுதான். ஜெர்மனியின் அரசாங்கம் பிசாசுதான். வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாட்டையும் இயக்கிக் கொண்டிருப்பது பிசாசுதான். பிசாசு ஒவ்வொரு நாட்டையும் கட்டுப்படுத்துகிறான், அவன் அதைச் செய்கிறான் என்று வேதம் கூறுகிறது. மத்தேயு 4ஆம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். சாத்தான் இயேசுவை உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவருக்குக் காண்பித்து, அவைகள் தன்னுடையவை என உரிமை கோரி, “நீர் என்னை பணிந்துகொண்டால் இவற்றை உமக்குத் தருவேன்” என்று கூறினான். இயேசு, “சாத்தானே, நீ பொய் சொல்கிறாய்” என்று கூறவேயில்லை. அவையெல்லாம் அவனைச் சார்ந்திருந்தன என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் வெளிப்படுத்தல் புத்தகத்தில், “வானங்களே, பூமியே களிகூருங்கள், உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தரும் அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின. அவர் பூமியின்மேல் ராஜ்யபாரம்பண்ணுவார்” என்று கூறப்பட்டுள்ளது. 77 ஆயிரவருட அரசாட்சியில் எல்லா அரசாங்கங்களும் ராஜ்யங்களும் உடைந்து போகும் என்றும், அவைகளெல்லாம்வற்றின் மேலும் அவர் தேவனும், அதிபதியுமாயிருப்பார் என்றும் இயேசு அறிந்திருந்தார். அவையெல்லாவற்றிற்கும் சுதந்திரவாளி அவர் தான் என்று அறிந்திருந்தார், ஆதலால், அவர் சாத்தானிடம் “அப்பாலே போ சாத்தானே!” என்றார், ஏனெனில் தாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அவர் அறிந்திருந்தார்.
45இப்பொழுது, இதைக் கவனியுங்கள், இந்த தீர்க்கதரிசி எசேக்கியேல் மேலிருந்த கர்த்தருடைய ஆவியானவர், இந்த ராஜாவிடம், பேசிக்கொண்டிருக்கவில்லை, ஆனால், அந்த ராஜாவிற்குள்ளிருந்த ஆவியிடம் பேசிக் கொண்டிருந்தான். இப்பொழுது இதைக் கவனியுங்கள். 78 எப்படி சபையானது மனிதனுடைய ஸ்தாபனங்களை எடுத்துக்கொண்டதினால் தவறான பாதையில் சென்றுவிட்டது என்று நான் இன்று காலை வேதவசனங்களில் காண்பித்தது உங்களுக்கு நினைவிலிருக்கும். அதே காரியம்தான், இஸ்ரவேலானது தேவனை தன்னுடைய ராஜாவாக இராதபடி புறம்பாக்கி, சவுலை ராஜாவாக கொண்டிருக்க விரும்பி பாதையை விட்டகன்றது. பிறகு அவர்களுடைய உண்மையான ராஜாவாகிய, இயேசு வந்தபோது, அவரை அவர்கள் அறியாதிருந்தனர், ஏனெனில் அவருடைய—அவருடைய பிரசங்கமும் அவருடைய உபதேசமும், பூமிக்குரிய ராஜாக்களைவிட மிகவும் வித்தியாசமாக காணப்பட்டு அவரை அவர்கள் அறியாமல் போனார்கள். இன்றைக்கும், பரிசுத்த ஆவியானவராகிய, சபையின் ராஜா, அவர் இங்கிருக்கையில், மக்களை புதுப்பிக்கத்தக்கதாக, அவர்களுக்கு புதிய பிறப்பை அளிப்பதற்காக அவர் சபைக்குள் வருகையில், அது இந்த ஸ்தாபனங்கள் மற்றும் அமைப்புகளைக் காட்டிலும் மிகவும் வித்தயாசமாகக் காணப்படுவதால் அவர்கள், “ஆ, அவர்கள் எனக்கு பரிசுத்த உருளையரைப் போன்று காணப்படுகின்றர்” என்கின்றனர். புரிகிறதா?
4679 அது உனக்கு எந்தவிதமாகத் தென்படுகிறது என்றல்ல, அதைக் குறித்து தேவனுடைய வார்த்தை என்ன கூறுகின்றது என்பதுதான். பெந்தெகொஸ்தே நாளின்போது என்ன ஆயிற்று, அது எந்தவிதமாக தென்படுகிறது? மற்ற சமயங்களில் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றபோது; அது எந்தவிதமாகத் தென்படுகிறது? ஸ்திரீகளும், புருஷரும், கன்னி மரியாள், மற்றும் அவர்களெல்லாரும், குடித்து வெறித்த மனிதனைப் போன்று தள்ளாடி, பரியாச உதடுகளாலும், மற்றும் அந்நிய பாஷைகளாலும் கூச்சலிட்டு, புரண்டு, ஒரு பைத்தியக்கார கூட்டத்தைபோன்று சத்தமிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு தாங்களே மரித்துக்கொண்டிருந்தனர், அப்போது பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள்ளாக வந்துகொண்டிருந்தார். அப்பொழுது அவர்கள் உலகத்தை தீப்பற்றிக் கொள்ளச் செய்தனர். இன்றைக்குள்ள தேவையென்னவெனில் தங்களுக்குத் தாங்களே மரித்து, தங்களுக்கு தாங்களே அழுகிப்போய், ஒவ்வொரு காரியத்தையும் பின்பாகச் சுட்டெரித்து எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கு சரணடையச் செய்யும் மனிதனேயாகும்.
4780 இப்பொழுது, அந்த ராஜாவுக்குள்ளிருந்த பிசாசிடம் பரிசுத்த ஆவியானவர் பேசுவதை கவனியுங்கள். இந்த ராஜாவை கட்டுக்குள் வைத்திருந்த இவன் யார் என்பதை கவனியுங்கள். அங்கே கீழ்த்தரமான நிலையில் காணப்பட்ட, மோசமான ஆடைகளை அணிந்திருந்த அந்த பெண்கள் கூட்டத்தை, அந்த பெண்ணைப் பற்றி என் மனைவி கூறினதை நான் இக்காலை கூறினது உங்களுக்கு நினைவிலிருக்கிறதா? புரிகிறதா? “அவர்கள் தங்களுடைய சரியான மனநிலையில் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு மனநிலை சரியாயில்லாத ஒரு பெண்தான் அந்த விதமாக தன் நிர்வாணத்தை வெளிக்காட்டுவாள்” என்று கூறினாள். 81 நான், “தேனே, அவள் ஒரு அமெரிக்கன்; அவ்வளவேதான். இங்கே அது வாடிக்கையாய் நடக்கிற ஒன்றுதான். அவர்கள் அதை செய்வார்கள், ஏனென்றால் அது ஒரு வழக்கம்” என்றேன். பாருங்கள், அவர்கள் தங்கள் கல்வியறிவின்படி செயல்படுகின்றனர். ஆனால் உங்களுடைய அறிவாற்றல்கள், நீங்கள் உங்களுடைய சிந்தையின்படி செயல்படுவீர்களானால், நீங்கள் பிசாசினால் கட்டுப்படுத்தப்படுகிறீர்கள். பிசாசானவன் ஒரு மனிதனின் மூளையை எடுத்துக்கொண்டான், ஆனால் தேவனோ மனிதனின் இருதயத்தை எடுத்துக்கொள்கிறார். நீங்கள் ஏதோ ஒன்றைக் காணும்படியாக பிசாசானவன் செய்கிறான். நீங்கள், “பாருங்கள், அது சரிதான், அது சரிதான், யோசியுங்கள், அதை சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறுகிறீர்கள். ஆனால் வேதாகமம் நம்முடைய யோசனைகளை புறம்பாக்கி நம்மால் காணமுடியாதவைகளை விசுவாசத்தினாலே நாம் விசுவாசிக்கிறோம். தேவன் மனித இருதயத்தின் மீது வருகையில் அதைத்தான் அவர் செய்கின்றார்.
4882 ஏதேன் தோட்டத்திலே பிசாசானவன் மனிதனுடைய மூளையை உபயோகித்தான்: தேவனோ அவனுடைய இருதயத்தை தெரிந்துகொண்டார். அந்த மனித இருதயத்தில் தான், தேவன் வாசம்பண்ணுகிற, தேவனுடைய சிங்காசனம் இருக்கின்றது. ஆகவே இப்பொழுது, அது அறிவுப்பூர்வமாக… நிச்சயமாக, தேவனால் பிறந்த எந்த ஒரு மனிதனோ அல்லது பெண்ணோ தாங்கள் எந்த இராஜ்யத்திலிருந்து வந்துள்ளனரோ அந்த விதமாகவே நடந்துகொள்வார்கள். அல்லேலூயா! அது என்னை சத்தமிடச் செய்கிறது. ஏன்? ஏனெனில் நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் வந்திருப்பதனால், நீங்கள் பாவத்தை வெறுத்து, நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள்; ஆதலால் நீங்கள் மரித்தாலும் அல்லது மரிக்காமலிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நிற்பீர்கள். அது தவறாயிருப்பதால், தவறை தவறு என்று கூறி அதை எதிர்த்து நிற்பீர்கள்; தேவனுக்கு முன்பாக நீங்கள் உத்தமராய் நடப்பீர்கள். அது உங்களுடைய ஆவி, உங்களுக்குள் இருக்கின்ற அந்த ஜீவனானது வேறொரு இடத்திலிருந்து வந்திருக்கிறது என்று காண்பிக்கின்றது, அங்கே அது பரிசுத்தமாகவும், சுத்தமாகவும், கற்புடையதாகவும், கறைபடாததாகவும் இருக்கிறது.
4983 நீங்கள், “தெய்வீக சுகமளித்தலா?” என்று கேட்கலாம். நிச்சயமாக! தெய்வீக சுகமளிப்பவர் எங்கே இருக்கின்றாரோ அங்கிருந்துதான் என்னுடைய ஆவியும் வந்திருக்கிறது. தெய்வீக சுகமளித்தலின் தேசத்திலிருந்துதான் நாம் வந்துள்ளோம். ஆமென்! 84 “தேவன் இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்” என்று கூறலாம். நிச்சியமாகவே, இது தேவன் இருந்த இடத்திலிருந்துதான். நாம் ஆபிரகாம் ஈசாக்கைப் போல பரதேசிகளும் அந்நியர்களுமாயிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் நிழலாட்டம் அவர்கள் மேல் வந்தபோது, அவர்கள் அந்த தேசத்தினூடாகச் சென்று தாங்கள் பரதேசிகளும் அந்நியர்களுமென்று அறிக்கை செய்தனர். தேவன் தாமே கட்டி உண்டாக்கின ஒரு நகரத்தை அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர். இப்பொழுதோ, அது நமக்குள் ஜீவிக்கின்றது என்பதற்கான ஆதாரத்தை நாம் பெற்றப் பிறகு, எவ்வளவாக நாம் பரதேசிகளும் அந்நியர்களுமாயிருந்து, உலகத்தினூடாக நடந்து, தீய காரியங்களிலிருந்து நம்முடைய தலைகளை திருப்ப வேண்டியவர்களாயிருக்க வேண்டும், ஏனெனில் நாம் வேறொரு தேசத்தைச் சார்ந்தவர்கள், அப்பாற்ப்பட்ட மக்கள். நிச்சயமாக!
5085 இப்பொழுது நாம் எசேக்கியேல் 28:12 வாசிக்கையில், இப்பொழுது இந்த உலகத்தின் பொல்லாத கட்டுப்பாடுகளைக் கவனியுங்கள். மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக் குறித்துப் புலம்பி, அவனை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது… (இப்பொழுது கவனியுங்கள்; அந்த ராஜாவிற்குள்ளே இருந்த அந்த ஆவியிடம் அவர் பேசுகிறார். புரிகின்றதா?). கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம், நீ ஞானத்தால் நிறைந்தவன்…பூரண அழகுள்ளவன். (சாத்தான், பிரதான தூதர்களிலேயே மிகவும் எவ்வளவு அழகாக சாத்தான் காணப்படுவதை பார்த்தீர்களா?) நீ…ஏதேனில்… 86 தீருவின் ராஜா அந்த நேரத்தில் ஏதேனில் இருந்திருக்கமாட்டான் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள், ஏனெனில் அது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகும். புரிகிறதா? “நீ ஏதேனில் இருந்தவன்,” அவர் பேசிக்கொண்டிருப்பது யாரிடம்? அந்த ராஜாவிற்குள்ளிருந்த சாத்தானிடம் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். அல்லேலூயா! சகோதரனே, நான் பக்திப்பரவசமடைகிறேன். அப்போது…
5187 அப்படியானால், பரிசுத்த ஆவியின் நிரூபித்தலின் கீழ் கிரியை நடப்பிக்கப்படுகிற மக்களை தூஷித்து ஏளனம் செய்கிற மக்களைக் குறித்தென்ன? இப்படிப்பட்ட மக்களை அவர்கள் பரிகசிக்கும்போது அவர்கள் பரிசுத்த ஆவியை தூஷித்துக்கொண்டிருக்கிறபடியால் அது முற்றிலும் மன்னிக்கப்பட முடியாததாயிருக்கிறது. நீங்கள் அந்த மனிதனைக் குறித்துப் பேசவில்லை, அந்த மனிதனுக்குள் அசைவாடிக் கொண்டிருக்கும் ஆவியானவரிடம் தான் நீ பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நாம் ஒருவருக்கொருவர் கனம்பண்ணி, ஒருவரையொருவர் நேசித்து, ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி, ஒவ்வொருவரைக் குறித்து நன்மையானதையே பேச வேண்டும். இதைத்தான் நாம் செய்ய வேண்டும். இப்பொழுது இதைக் கவனியுங்கள். சரி. …நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம், நீ ஞானத்தால் நிறைந்தவன்…பூரண அழகுள்ளவன். நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
5288 இதோ லூசிபர். ஒரு காலத்தில் அவன் ஏதேனில் வாசம் செய்தான். இப்பொழுது, இன்னும் ஒருநிமிடத்தில் நாம் அந்த கேள்வியைப் பார்க்கப்போகிறோம், ஏதேனில் லூசிபர், ஏனெனில், மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய சர்ப்பத்தின் வித்தைக் குறித்ததானது இங்கே எங்கேயோ உள்ளது. நான் அதைக் கடைசியில் பார்க்கலாம் என்று நான் எண்ணியிருந்தேன். 89 ஆனால் அவன், பிசாசானவன் வானத்திலிருந்து உதைத்து வெளியேத் தள்ளப்பட்டான். அவன் எந்த நோக்கத்திற்காக பரலோகத்தில் இருக்க முயற்சித்தானோ அந்த நோக்கத்தை, அவன் பூமியின் மீது வந்த பிறகு, அதை நிறைவேற்றிக்கொள்ள அவன் தன்னால் இயன்ற அளவிற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவன் ராஜாக்களிடமும் அதிபதிகளிடமும் செல்கிறான், அவன் அவர்களை அடைந்தவுடன், பிறகு நேராக சபைக்கு வந்து மக்களை—அல்லது பிரசங்கியை அடைகின்றான். அப்பொழுது பிரசங்கியிடமிருந்து, அவன் நேராக சபையார் மத்தியில் சென்று அந்த சபையாரை அந்த அதே பாதிப்பிற்குள் கொண்டு வருகிறான், அந்த அதே பிசாசானவன் அதே காரியங்களைச் செய்கிறான். “உனக்குத் தெரியுமா, நீ ஒரு பிரஸ்பிடேரியன், நீ ஒரு பரிசுத்த உருளையனாக இருக்க முடியாது. நீ இதுவாக, அதுவாக, அல்லது மற்றவனாக இருக்கிறாய்; அவர்கள் மத்தியில் இருந்துகொண்டு உன்னை நீயே ஏன் அவமானம்படுத்திக்கொள்ள வேண்டும். ஏன், அந்த தெருவில் இருக்கின்ற அந்த பழைய கூடாரங்களில் அல்லது சபைகளில் உட்காருவதைவிட சிறந்தது உனக்குத் தெரியுமே. ஏன், அந்த மக்களுக்கு மனநிலை பாதித்து பித்து பிடித்திருக்கிறது.” இல்லை, இவர்கள் அவ்விதம் இல்லை. இல்லை, அவர்கள் அவ்விதமாக இல்லை; அவர்கள் தங்கள் இருதயத்தின்படியே உள்ளனர்; அவ்வளவுதான். அவர்கள் தங்களுடைய மனநிலையில் பாதிக்கப்படவில்லை; அவர்கள் தங்கள் இருதயத்தின்படியே ஆட்கொள்ளப்பட்டுள்ளனர். தேவன் அவர்களுடைய இருதயத்தில் வாசம் செய்கிறார், ஆதலால் அவர்கள் அவருக்கு சொந்தமான ஜனம், ராஜரீகமான ஆசாரியக் கூட்டம், ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகிறவர்கள்: அதை உணர்ந்தாலும் அல்லது இல்லையென்றாலும் அவர்கள் தங்கள் உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளைக் செலுத்துகின்றனர். அந்தப் பாடலை எழுதினவன் “சில சமயங்களில் அவரை நான் காண்பதில்லை,” என்றும், “நான் அவரை நம்புகிறேன் மற்றும் அவரைத் துதிக்கிறேன்,” என்றான்.
5390 “பாருங்கள், நான் சபைக்குச் செல்வேன், அது எனக்கு பிடித்திருப்பதாக நான் உணர்ந்தால் நான் கர்த்தரைத் துதிப்பேன்” என்று கூறலாம். பாருங்கள் இப்பொழுது, ஒரு ஆசாரியன் பலியைச் செலுத்தவிருக்கிறான். நீங்கள், சபையார், ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகிற, தேவனுடைய பிரதான ஆசாரியர்கள் ஆவர்; அதுதான் உங்கள் உதடுகளின் கனிகளாகிய தேவனுக்கான ஸ்தோத்திரங்கள். 91 நீங்கள் சென்று, “சரி, எனக்கு அது பிடிப்பதாக நான் உணர்ந்தால், நான் சென்று யாருக்காவது சாட்சி சொல்லுவேன்” என்று கூறலாம். பாருங்கள், எப்படியாயினும் அதைச் செய்யுங்கள்! நீ ஒரு பிரதான ஆசாரியனாயிருந்தால், சகோதரனே, நீ அதைச் செய்யவேண்டுமா அல்லது வேண்டாமா என்று உணர்ந்தாலும் சரி, அது உன்னுடைய இருதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. நீ சென்று எப்படியாயினும் அதைச் செய், ஏனெனில் நீ ஒரு பலியைச் செலுத்த வேண்டியவனாக இருக்கிறாய், செய்வதற்கு கடினமான ஒன்றுதான். எப்படியாயினும் அதைச் செய், ஏனெனில் தேவன் இந்த இருதயத்தில் வாசம் செய்வதால் நீங்கள் ஒரு ஆவிக்குரிய ஆசாரியத்துவம் உடையவர்கள்; தேவனுக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுக்கும், ராஜரீக மக்கள்.
5492 இப்பொழுது, நீங்கள் சாத்தானைச் சார்ந்தவர்களாயிருந்தால், அந்த மக்களை விட சிறிது சிறந்தவர்கள் நீங்கள் தான் என எண்ணுவீர்கள். இப்பொழுது, எது சரியென நீங்கள் எப்படி அறிந்து கொள்ளப்போகிறீர்கள்? வேதவாக்கியங்களின்படி அதை எடுங்கள். ஒரு மனிதன் தேவனால் பிறந்தவனாக இருப்பானானால், எழுதப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையையும் அவன் விசுவாசிக்கிறான், இன்றைக்கு அவர் மகத்தானவராக இருப்பதுபோல என்றென்றும் அவர் இருப்பார் என்றும், அவர் மாறாதவர் என்றும், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்றும் அவன் கூறுகிறான். அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தால், பெந்தெகொஸ்தே நாளில் அவர் அளித்த அதே பரிசுத்த ஆவியை அவன் பெற்றிருக்கிறான், அதேவிதமாக அது அவனை கிரியை நடப்பிக்கச் செய்து அதே காரியங்களை அவன் செய்யும்படிக்குச் செய்யும். அவன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருப்பானானால், மாற்கு 16-ல், இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று கூறினார். அது உண்மை! ஆகவே அவன் “நான் ஒரு விசுவாசி” என்று கூறி, அந்த அடையாளங்கள் அவனைப் பின் தொடரவில்லையெனில், அவன் ஒரு பாவனை விசுவாசியாக இருக்கிறான், ஒரு விசுவாசி அல்ல.
5593 மூன்று வகையான மக்கள் உள்ளனர், ஒன்று விசுவாசி, ஒன்று பாவனை விசுவாசி, மற்றும் ஒரு அவிசுவாசி. இந்த மூன்று வகையினர் மட்டுமே உள்ளனர். அநேக பாவனை விசுவாசிகள் உள்ளனர்; அநேக உண்மையான விசுவாசிகள் இருக்கின்றனர்; அநேக அவிசுவாசிகளும் இருக்கின்றனர். ஆனால் நீ ஒரு உண்மையான விசுவாசியாய் இருப்பாயானால், இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்கள் மேல் அவர்கள் காலை எடுத்து வைக்க நேரிட்டாலும் (சகோதரன் இவான்ஸ்) அது அவர்களுக்கு தீங்கு செய்யாது. அவர்கள் வியாதியஸ்தர் மேல் தங்கள் கைகளை வைப்பார்களானால் அவர்கள் சொஸ்தமாவார்கள்!” என்று கூறினார். ஓ, தேவனுடைய வார்த்தை அவ்வளவு உண்மையானது. அதிலிருந்து எதையும் எடுத்துப்போட நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்த வார்த்தையோடே எதையாகிலும் எடுத்துப்போட்டால் அல்லது கூட்டினால், அவனுடையது ஜீவ புத்தகத்திலிருந்து எடுத்துபோடப்படும். தேவன் மிகவும் பரிபூரணமுள்ளவர், ஆதலால் ஒவ்வொரு வார்த்தையும் பரிபூரணமாயிருந்து ஒவ்வொரு வார்த்தையும், தேவனுடைய ஒவ்வொரு கட்டளையும், ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை அதேவிதமாக இருக்க வேண்டும். இப்பொழுது, நீங்களோ அதைக் குறித்து இங்கே ஏதாவதொன்றைக் கூறி இங்கே சிறிது திரித்துவிடுகிறீர்கள்.
5694 ஒரு நாள் நான் சகோதரன் சார்லி மற்றும் சகோதரன் உட் அவர்களுடன் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தேன்; நாங்கள் கென்டக்கியில் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு துப்பாக்கியுடன் வேட்டையாடினோம். நான்…சகோதரன் சார்லி மற்றும் சகோதரன் உட் அக்காலை தங்களுடைய துப்பாக்கியில் குறி வைத்து சுடுதலை சரிப்பார்த்தனர். சுமார் ஐம்பது கெஜம் தூரத்தில் அந்த பெரிய இடம், அணிலைப் போன்று பெரிய இடத்தில் ஒரு இலக்கை சுட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள், “அது சரி” என்று கூறினர். 95 நான் அங்கு சென்றேன்…நான் ஐம்பது கெஜ தூரத்தில் சுட்டுப் பாரத்துக்கொண்டிருந்தேன். நான் அணிலின் கண்ணை சரியாக சுடாமல் அதன் கன்னத்தில் சுட்டுவிட்டேன். நான், “அது சரியல்ல; என் துப்பாக்கி பழுதடைந்தது” என்றேன். அதன்பின்னர் நான் நாள் முழுவதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த மாலையில் நான் சீக்கிரமாகச் சென்றேன். அநேக் குண்டுகளைச் சுட்டுப் பார்த்தேன். நான்…நான் வலதுபக்கம், அரை அங்குலத்திற்கு சிறிது நான் சுட்டேன். ஏன், அது அந்த அணிலின் தலையில் எப்படியும் சுட்டுவிடும்.
5796 ஆகவே சார்லி மற்றும் அவர்களும் அடுத்த நாள் காலை அங்கு இருந்தனர், துப்பாக்கிகள் சுட்டுக்கொண்டிருந்தன, அணில்களை சுட்டுக் கொண்டிருந்தனர், நானோ ஒரு மரத்தின் பின்பாக உட்கார்ந்து கைகளைப் பிசைந்து, “ஓ, என் துப்பாக்கிக்கு என்ன ஆயிற்று?” என்று கூறிக்கொண்டிருந்தேன். நான் என்னைக் குறித்தே மிகவும் வெட்கமடைந்து நான் முழங்கால்படியிட்டு, நான், “தேவனாகிய கர்த்தாவே, எனக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. நீர் ஏன், இவ்வாறாக சற்று, கவலைப்படும்படிக்கு விட்டு விட்டீர்? நான் ஏன் இவ்வாறு இருக்க வேண்டும்? அங்கே அந்த நபர்கள் அணில்களை சுட்டுகொண்டிருக்கின்றனரே, தங்களால் முடிந்தவரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனரே. அவர்கள் ஏற்கெனவே அநேக ஒரு கூட்ட அணில்ககளை வேட்டையாடிவிட்டனர். ஆனால் நானோ இங்கே, ஒரு மரத்தின் பின்னால் உட்கார்ந்துகொண்டு, என் கையை பிசைந்துக்கொண்டு, ‘என்னுடைய—என்னுடைய துப்பாக்கி ஐம்பது கெஜ தூரத்திற்கு கூட, குறித் தவறிக்கொண்டிருக்கிறதே” என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு வெட்டப்பட்ட மரத்துண்டருகே உட்கார்ந்து, நான் அழுதேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வந்தார், ஒரு சத்தத்தில் அல்ல, ஆனால் வெளிப்பாட்டில் வந்து, “ஒரு நோக்கத்திற்காகவே நான் உன்னை அந்த விதமாக உண்டாக்கினேன்” என்றார்.
5897 ஏன்? வேதாகமம் இங்கே ஒன்றைக் கூறும் போது, சபையானது, “பரிசுத்த ஆவி அங்கே இருக்கின்ற அந்த குழுவிற்கு மாத்திரம்தான்” என்பது போன்று கூறினால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது; சபை அவ்விதமாக கூறுகிறது; வேதமோ, “விரும்புகிறவன் எவனெவனோ” என்று கூறுகிறது. அந்த இலக்கை எட்ட வைக்க என்னால் முடியாது. 98 கர்த்தர் பேரில் மாத்திரம் விசுவாசம் வையுங்கள்—அப்போது உங்களுக்கு நித்திய பாதுகாப்பு கிடைத்துவிடும் என்கின்ற—கால்வினிச போதகத்தையும் மற்றும் ஆர்மீனியர்களின் கொள்கையோ, “நான் அதைத் தொடாமலும், கையாளாமலும், சுவைக்காமலும் இருப்பேனானால், அதைச் செய்ய எனக்கு—எனக்கு விருப்பம், ஆனால் அதை என்னால் செய்ய முடியாது என்பதேயாகும்!”… ஆர்மீனிய கொள்கை கால்வினியக் கொள்கையை விட மிகவும் அகன்றுள்ளது, ஆனால் இரண்டுமே தவறானதாகும். நான் எங்கே என்று பார்க்க வேண்டும்…அவர்கள் இருவருமே வேதவசனங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் அது இலக்கை எட்டும் வகையில் சரியாக அமைந்திருக்க வேண்டும். இப்பொழுது, இந்த வேதாகமத்தில் தேவன் ஒரு காரியத்தைக் கூறியிருப்பாரெனில், அது சரியாக இலக்கை அடிக்கத்தான் வேண்டும். அது வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வளையமும் சரியாக அந்த இலக்கு மையத்தை வந்தடைய வேண்டும். அது அப்படித்தான் இலக்கை அடையவேண்டும், ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாகும்; அவர் முடிவற்றவர், ஆதலால் அவர் வார்த்தை மாற முடியாது. ஆமென்! எனக்கு அது பிடிக்கும், ஏனெனில் அது தேவனுடைய நித்திய வார்த்தை என்று பரிபூரணமாக திருப்தியடைந்து உன்னால் இளைப்பாற முடியும். ஆதலால், தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறதென்று பார்க்கத்தக்கதாக நான் அதை பல்வேறு வேதவாக்கியங்களைக் கொண்டு ஆராய முயற்சிப்பேன். சரி.
5999 தேவனாலும் பிரதான தூதனாகிய மிகாவேலாலும் சாத்தான் வானத்திலிருந்து வெளியே பிடித்துத் தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான், அவன் பூமிக்கு வந்து, சர்ப்பத்திற்குள்ளாக புகுந்துகொண்டு, ஏவாளை வஞ்சித்து, பிறகு மனிதனுக்குள்ளாக, பெண்களுக்குள்ளாக புகுந்து, துவக்கத்தில் அவன் ஆரம்பித்த அதே காரியத்தை காலங்களினூடாக செய்து வந்தான்—ஒரு மகத்தான பெரிய இராஜ்யம், மற்றவனைக் காட்டிலும் அழகான ஒன்று, எல்லாவற்றின் மேலும் ஆளுநராக, எல்லாம் அறிந்தவனாக இருத்தல். “எங்கள் ஸ்தாபனம் தான் மிகப் பெரியது, அது—அது—அது மற்றெல்லாரையும் விட உயர்ந்த செல்வாக்கு மிக்கதாகும்.” 100 நீங்களோ, “ஏன், எங்கள் ஸ்தாபனத்தில் அநேக நூற்றுக்கணக்கான பிரசங்கிகள் இருக்கின்றனர். அங்கே நகரத்திலே மிகப் பெரிய சபைகள் எங்களுக்கு உண்டு” என்று அவர்கள் கூறுவதைக் கேட்டுள்ளீர்கள். அது எனக்கு சா-த்-தா-ன் என்று தான் எழுத்து கூட்டிச் சொல்கிறது. அது சரி. என்னைப் பொறுத்த வரை அது எனக்கு பிசாசுதான். ஒரு மனிதன் பிரிந்து, ஸ்தாபித்துக்கொண்டு, சகோதரத்துவத்தை உடைத்து, இந்த சிறிய சபையுடன் ஈடுபடுவதற்கு ஒன்றுங் கிடையாது என்று கூறுகையில்…
60101 நான் இதுவரையில் கண்ட கீழ்த்தரமான ஒரு நபரானாலும், அல்லது நான் இதுவரையில் கண்ட மிகவும் பாவத்தில் உள்ள எந்த ஒரு நபரானாலும்; நான் கண்ட மிகவும் தாழ்த்தப்பட்ட ஒரு—ஒரு பெண்ணானாலும் அல்லது மிகவும் தாழ்த்தப்பட்ட ஒரு மனிதனானாலும், நான் அவனிடம் சென்று, என் கரங்களை அவன் தோள்மீது போட்டு என்னால் கூடிய மட்டும் அதினின்று அவனை வெளியேக் கொண்டு வருவேன். ஒரு கூட்டம் பரிசுத்த-உருளையர்களை, அல்லது நீங்கள் அவர்களை எப்படியெல்லாம் அழைக்கிறீர்களோ, ஆடிக்கொண்டு, சத்தமிட்டுக்கொண்டு, கூச்சலிட்டுக்கொண்டு, அல்லது அவர்கள் எப்போதுமே என்னவோ செய்யலாம், ஆனாலும் நான் அவர்களுடன் அங்கே தேவனை மகிமைப்படுத்தும்படி, ஆடி, குதித்து, கூச்சலிடுவேன் (அது முற்றிலும் உண்மை!) அவன் கறுப்பு, மஞ்சள், பழுப்பு, வெள்ளை நிறத்தவனாயிருந்தாலும் அல்லது அவன் என்னவாயிருந்தாலும் சரி. ஆம், ஐயா! 102 பரிசுத்த ஆவியானவர் ஒரே சீரான நிலையில் வருகின்றார்; அங்கேதான் நீ தேவனுடைய தேவையை பூர்த்தி செய்கின்றாய். நீ அதைப் பெறுவாயானால், நீ தேவனுடைய சீரான சமநிலையில் வருகின்றாய் மற்றும் அதைக் குறித்த உன்னுடைய சொந்த எண்ணங்களின்படியல்ல. சாத்தான் அதை முதல் தரமான இலக்கிய நயம் வாய்ந்த, ஏதோ மகத்தான ஒன்றாக, ஏதோ பெரிய ஒன்றாக, அறிவுப்பூர்வமானதாகக்க முயல்கிறான். அந்த விதமான சிந்தனையை நீங்கள் வெளியே எறிந்து, அதைக் குறித்து வார்த்தை என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் விசுவாசியுங்கள். ஆமென்!
6180. இப்பொழுது, இங்கே வேறொரு கேள்வி; இது என்னவென்பதை நாம் பார்ப்போம். சரி. ஐந்து கன்னிகைகளைக் குறித்த உவமையை விளக்கவும். ஒரு கிறிஸ்தவன் பாவம் செய்கிறானா? 103 இப்பொழுது, ஐந்து கன்னிகைகளைக் குறித்த உவமை—அல்லது அது பத்து கன்னிகைகளைக் குறித்தது, தயவு கூர்ந்து என்னை மன்னியுங்கள். பத்து கன்னிகைகள் மத்தேயு 25:1-ல் காணப்படுகின்றனர். பத்து கன்னிகைகள் மணவாளனை சந்திக்கப் புறப்படுகின்றனர் (இப்பொழுது கவனியுங்கள்!), அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களாயிருந்து தங்கள் தீவட்டிகளில் எண்ணெயைக் கொண்டிருந்தனர், ஐந்து பேர் புத்தியில்லாதவர்களாக தங்கள் தீவட்டிகளில் எண்ணெயைக் கொண்டிராமலிருந்தனர். அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கையில் “மணவாளனை சந்திக்கச் செல்லுங்கள்” என்ற சத்தம்—சத்தம் வந்தது. தங்கள் தீவட்டிகளில் எண்ணெயை உடையவர்களாக இருந்தவர்கள், தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினர், நெருப்பு எரிந்து கொண்டிருந்தது, அவர்கள் மணவாளனைச் சந்திக்கச் சென்றனர். மற்றவர்களோ எண்ணெய்யை வாங்கிக்கொள்ள இவர்களிடம் வந்தனர், இவர்களோ நீங்கள் விற்கிறவர்களிடத்திற்கு போய் உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினர். அவர்கள் சென்றபோது, மணவாளன் வந்துவிட்டார், அப்பொழுது புத்தியுள்ள கன்னிகை உள்ளே பிரவேசித்தாள், உறங்கிக்கொண்டிருந்த கன்னிகை புறம்பேத் தள்ளப்பட்டாள்.
62104 இது உங்களை புண்ப்படுத்தப்போகிறது, உண்மையாகவே புண்படுத்தப்போகிறது, ஆனால் நான் அதை கூற வேண்டியவனாகவே இருக்கிறேன். கேள்வியை நான் கேட்கவில்லை; நான் அதற்கு பதிலளிக்க பொறுப்புள்ளவனாக இருக்கிறேன். இப்பொழுது, இது மிக நெருக்கமாக வருகிறது, சகோதரனே, மிக நெருங்கி காணப்படுகிறது, இது உங்களை புண்படுத்துவதைவிட உங்களுக்கு உதவும் விதத்தில் இருக்கும் என நான் நம்புகிறேன். வழக்கமாக நீங்கள் புண்படுத்த வேண்டிய… தாயார் என்னை அடிக்கையில் வழக்கமாக இவ்வாறு கூறுவார்கள், அவர், “உனக்கு அது நன்மை செய்யும் முன்னர் அது உன்னை புண்படுத்த வேண்டும்” என்பார். பாருங்கள், அது—அது சரியே. புரிகிறதா? அப்பொழுது என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் நான்—நான் இப்பொழுது அதைப் புரிந்துகொள்கிறேன்.
63105 கவனியுங்கள், இந்த…அங்கே புறப்பட்டுச் சென்ற பத்து பேரும் கன்னிகைகள். இப்பொழுது, கர்த்தரை சந்திக்கும்படியாக அங்கே பத்து கன்னிகைகள் இருந்தனர். இப்பொழுது, கன்னிகை என்ற வார்த்தைக்கு, “பரிசுத்தமாக்கப்பட்டது (யாருக்காவது அது தெரியுமா?), பரிசுத்தம், சுத்தமான, பரிசுத்தமாக்கப்பட்ட” என்று அர்த்தம். கர்த்தரை சந்திக்கப் புறப்பட்டுச் சென்ற அவர்கள் பத்து பேர்களாயிருந்தனர். 106 இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் முதல் ஜாமம், இரண்டாவது ஜாமம், மூன்றாம் ஜாமம் துவங்கி, ஏழாம் ஜாமம் வரை நித்திரையில் இருந்தனர். ஆனால் இவர்களோ உண்மையாகவே கர்த்தரைச் சந்திக்கச் சென்றனர். ஆகவே நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது கர்த்தர் வந்தார். அது கர்த்தருடைய வருகையின் நேரமாக இருந்தது. அந்த ஜாமத்தில் யார் இருந்தார் என்றல்ல… 107 சிலர் முதலாம் மணி நேரத்தில், சிலர் இரண்டாம் மணி நேரத்தில் நித்திரை செய்தனர், சிலர்…என்பதை குறித்து இயேசு பேசினார். ஆனால் கர்த்தருடைய வருகையின்போது அவர்கள்ளெல்லாருமே விழித்துக்கொண்டனர். ஆனால் இந்தக் காரியத்தில், இது கடைசி மணி நேரமாக இருந்தது, ஏனெனில் அவர்கள் பத்துபேரும் கர்த்தரை சந்திக்க புறப்பட்டுச் சென்றனர். ஐந்து பேர்களின் தீவட்டிகள் எண்ணெயில்லாமல், புகைபிடித்துபோயிருந்தது; மற்ற ஐந்து பேர்களோ எண்ணெயைக் கொண்டிருந்தனர்.
64108 இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், வேதாகமத்தில் எண்ணெய் எதற்கு அடையாளமாகக் காணப்படுகிறது? யாராவது கூறமுடியுமா? [சபையார், “பரிசுத்த ஆவி” என்று பதிலளிக்கின்றனர்—ஆசி.] பரிசுத்த ஆவி! அப்படியானால் நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிராமல், நீங்கள் சுத்தமாயும், தூய்மையாகவும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். சுத்தமாக்கப்படுதல் என்பது நீங்கள்… 109 இப்பொழுது கவனியுங்கள், நான் இந்த சிறிய புட்டியை எடுக்கப்போகிறேன். இது இங்கே கோழிகளின் முற்றத்தில் கிடக்கிறது, அந்த இடம் முழுவதுமே அழுக்காக இருக்ககின்றது. நான் இதை எடுக்கின்றேன்; அதுதான் நீதிமானாக்கப்படுதல்: “நான் இந்த பாவியை உபயோகப்படுத்தப்போகிறேன்.” பிறகு இதை நான் உபயோகப்படுத்தப்போகிறேன் என்றால் நான் செய்யவிருக்கின்ற அடுத்த காரியம், நான் இதை சுத்தமாக்க வேண்டும். பிறகு, நான் அதை சுத்தப்படுத்தின பின்பு, இதற்கு அடுத்ததாக நான் என்ன செய்வேன்? இதை பரிசுத்தப்படுத்துவேன். பரிசுத்தப்படுத்துதல் என்கிற வார்த்தைக்கு “சுத்தமாக்கு,” இது பரிசுத்தம் என்கிற அதேக் காரியம். பரிசுத்தம்—பரிசுத்தம் என்பது எபிரேய வார்த்தையாகும், பரிசுத்தமாகுதல் என்பது கிரேக்க வார்த்தையாகும். பரிசுத்தமாகுதல் என்ற வார்த்தை “ஊழியத்திற்கென சுத்தப்படுத்தி தனியாக வைத்தல்” என்று பொருள்படும். ஆனால் அதன்பின்னர், நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் நிரப்பப்படுவார்கள், பிறகு அவர்கள் ஊழியத்தில் வைக்கப்படுவார்கள்.
65110 இந்த பாத்திரங்கள்…பழைய ஏற்பாட்டின் கூடாரம், பீடம் பாத்திரங்களை பரிசுத்தப்படுத்துகின்றது, அவைகள் ஊழியத்திற்காக தனியாக வைக்கப்படுகின்றன. அவைகள் நிரப்பப்பட்டபோது, அவைகள் சேவையில் இருந்தன. 111 இப்பொழுது, இங்கேதான், அருமையான, விலையேறப் பெற்ற நசரேயன்களாகிய நீங்கள், இன்னும் மற்றவர்கள் வழிவிலகிப் போயிருக்கிறீர்கள். புரிகிறதா? நாமெல்லாரும்…ஏன் நீங்கள் தவறிப்போகிறீர்கள்? ஏன் பெந்தெகொஸ்தேயினர் உங்களைவிட்டு ஓடிப்போனார்கள். ஏனென்றால் நீங்கள் ஒளியில் நடக்க மறுத்தீர்கள். அது முற்றிலும் சரியே. புரிகிறதா? அது சரிதான். நான் முதன் முதலாக முழங்காலிட்ட பலிபீடம் அந்த விலையேறப்பெற்ற, இங்கே கீழே இருந்த அந்த பழைய நசரேய பலிபீடம்தான். அந்த நல்ல, பரிசுத்தமுள்ள, சுத்தமான சபையாகிய, அவர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக, ஆனால் நீங்கள் அதிகமாக வழிமுறைகளின்படி நடக்கப் பார்க்கிறீர்கள், “நீ இதைச் செய்ய வேண்டும், நீ அதைச் செய்துதான் ஆக வேண்டும். நீ இதை செய்துதான் ஆக வேண்டும்” என்று கூறி, அது தேவனுடைய கிருபையென்றும், நீங்கள் தெரிந்துகொள்ளுதலின்படி அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் உணராதிருக்கிறீர்கள். ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். புரிகிறதா? தேவன் சபையை உலகத்தோற்றத்திற்கு முன்னரே முன் குறித்தார் (இன்னும் சற்று கழித்து அதைக் குறித்த கேள்வி நம்மிடம் இருக்கிறது. புரிகிறதா?), உலகத் தோற்றத்திற்கு முன்பே சபையை முன்குறித்தார்.
66112 கவலைப்படுகிறதினால், உன் சரீர அளவோடு ஒரு முழத்தையும், உன்னால் கூட்ட முடியாது. “என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” புரிகிறதா? பாருங்கள், தேவன் தான் அழைப்பை விடுத்தார், தேவன்தான் இழுத்தார், தேவன்தான் சபையை அமைத்தார். இப்பொழுது, இப்பொழுது, நீங்கள், “சகோதரன் பிரன்ஹாம், அது முழுக்க கால்வீன் கொள்கையாயிற்றே” எனலாம். இல்லை, அது அவ்வாறல்ல. இப்பொழுது, பொறுங்கள்! தேவன் ஒரு மனிதனை எடுத்து, “இதோ, நான் உன்னை எடுத்து பிறகு…” என்று கூறிவிடுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. 113 இந்த எல்லா பாப்டிஸ்டுகளும் மற்றும் பிரஸ்பிடேரியன்களும், “பாருங்கள், நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன், என் மனசாட்சி குற்றப்படுத்துவதற்கான அவசியமே இல்லை!” எனலாம். குற்றப்படுத்துவதற்கு உங்களிடம் ஒன்றுமே இல்லாதிருப்பதில், வியப்பொன்றுமில்லை. அவர்கள், “சரி, நடனமாடுவது என்னைக் புண்படுத்துகிறதில்லை. சமுதாய விருந்தில் சிறிது மது அருந்துவது எனக்கு எந்த பாதிப்பையும் உண்டாக்காது” என்கின்றனர். ஏனெனில் உங்களுக்கு பாதிப்பை உண்டுபண்ண உங்களுக்குள் ஒன்றுமே இல்லை. “கீழ்த்தரமான தரங்கெட்ட நகைச்சுவைத் துணுக்குகள் கூறுவது எனக்கு ஒன்றும் தொல்லைத் தராது.” காரணம் ஏன்? உங்களுக்கு பாதிப்பை உண்டுபண்ண உங்களுக்குள் ஒன்றுமே இல்லை.
67114 நான் சேவை செய்யாவிடில் அவர் என்னை நரகத்திற்கு அனுப்பிவிடுவாரோ என்றெண்ணி நான் கர்த்தருக்கு சேவை செய்வதில்லை; நான் அவரை நேசிப்பதால் அவருக்கு சேவை செய்கிறேன். எனக்குள் ஏதோ ஒன்று இருப்பதால் தான் நான் அவருக்கு சேவை செய்கிறேன். நீங்கள் வெளியில் சென்று, “பாருங்கள், என்னுடைய சபை இதில் விசுவாசம் இல்லாமலிருப்பதால் நான் இதை விட்டுவிட வேண்டியதாயிற்று” என்று கூறினால், நீங்கள் ஒரு மாய்மாலக்காரனைப் போன்று நடந்து கொள்ளுகிறீர்கள். அது உண்மை. ஆனால் நீங்கள் அதை நேசிப்பதனால் அதை செய்வீர்களானால், மற்றும்—மற்றும் அது தேவனுக்கு ஒரு பங்களிப்பாக இருக்குமாயின், உங்கள் இருதயத்தில் ஏதோ ஒன்று தேவனுக்கான உங்கள் அன்பை இந்த காரியங்களைக் காட்டிலும் அதற்கு மேலாக மிகப் பெருகச்செய்யுமென்றால், இப்பொழுது நீங்கள் சரியான நிலையில் இருக்கிறீர்கள். ஆனாலும் நான் இன்னுமாக மது அருந்தாமலும், புகைபிடிக்காமலும், புகையிலையை மெல்லாமலும், சாபமிடாமலும், வேறு எதையும் செய்யாமல் இருந்தாலும் கூட, இன்னுமாக நான் நரகத்திற்குச் செல்வேன். நிச்சயமாக! நான் எல்லா சபைகளையும் சேர்ந்து, ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லா சபைப் புத்தகங்களிலும் என் பெயர் இருந்தாலும், ஒரு நல்லப் பங்கினை செய்திருந்தாலும், நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்.” அது சரியே!
68115 இப்பொழுது இந்த கன்னிகைகள், பத்து பேர்களாக குறைந்திருந்தனர். அது நசரேய மக்களை அப்படியே ஆடிப்போக வைத்தது: ஏனெனில் பரிசுத்த ஆவியின் ஆரம்ப அடையாளமாகிய அந்நிய பாஷையில் பேசுதலை பெந்தெகொஸ்தேயினர் எடுத்துக்கொண்டனர். அவர்கள் மக்களை பலிபீடத்தண்டை கொண்டு வந்து அவர்களை ஏதோ ஒன்றைக் கூறச் செய்து அல்லது மேலும் மேலும் ஒன்றன் மேல் ஒன்றைக் கூறச் செய்து அல்லது பேச வைத்து அந்நிய பாஷை பேசும் வரை காக்க வைத்தனர். ஒரு மெய்யான, உண்மையான பெந்தெகொஸ்தே மக்கள் அவ்விதமாகச் செய்ய விழையமாட்டார்கள். உங்களுடைய நசரேய சபையின் பிசாசும் கூட அநேக காரியங்களை கொண்டிருந்தானே. புரிகிறதா? பெந்தெகொஸ்தே சபையில் அநேகமான காரியங்களை அவன் கொண்டிருக்கிறான், ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பொறுத்த வரையில், அது சத்தியமாகும். அது முற்றிலும் சத்தியம் ஆகும்.
69116 எனக்குத் தெரிந்த வரையில், அவர்களில் அநேகம் பேர் உள்ளனர். மக்கள் அந்நிய பாஷையில் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். என்னால் நியாயந்தீர்க்க முடியாது; நியாயத்தீர்ப்பு செய்ய நான் அனுப்பப்படவில்லை. அவைகளில் அநேகமானவற்றை நான் கேட்டிருக்கிறேன்; சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் அது காணப்படும். ஆனால் அந்நிய பாஷையில் பேசுகின்ற உண்மையான பரிசுத்த ஆவி இருப்பதை நான் அறிவேன். அது உண்மை என்பதை நான் அறிவேன். ஆம், ஐயா! 117 ஆனால் மக்கள் உள்ளே வந்து, “தேவனுக்கு மகிமை, நான் அதைப் பெற்றுக்கொண்டேன்” என்று கூறுவதை அவர்கள் கண்டனர். பாருங்கள் அப்படியானால், அந்த அதே காரியமானது… இப்பொழுது, அவர்கள் மேலும் கீழும் குதித்து அந்நிய பாஷையில் பேசினதால் அதை பெந்தெகொஸ்தே என்று அழைக்காதீர்கள், நீங்கள் அவர்களை யாரோ ஒருவருடைய மனைவியுடனோ அல்லது யாரோ ஒருவருடைய கணவனோடு கண்டிருக்கிறீர்கள். 118 நீங்களோ, “அது பரிசுத்த ஆவியா?” என்று கேட்கலாம். நசரேய ஸ்தாபனத்தாராகிய நீங்கள் தரை முழுவதுமாக புரண்டு கூச்சலிட்டு பிறகு அதே காரியத்தை செய்கிறீர்கள். நீங்கள் கூச்சலிடும்போது அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று நீங்கள் கூறினீர்கள். பார்த்தீர்களா? ஆனால் நீங்கள் ஜீவிக்கும் ஜீவியத்தின் மூலமாக—அதன் மூலமாக அதை நீங்கள் நிரூபிக்க முடிந்ததைத்தவிர வேறெந்த ஒரு வழியும் கிடையாது. “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” இதுவே அந்த வழியாயுள்ளது. தேவபக்தியுள்ள ஜீவியம் மற்றும் கிறிஸ்து உங்களுடன் கிரியை செய்து வார்த்தையை உறுதிபடுத்தி, உங்களுடைய தேவபக்தியுள்ள ஜீவியத்தினால் அடையாளங்களும் அற்புதங்களும் பின்தொடர்ந்தால், அதுதான் உண்மையான காரியமாகும். இப்பொழுது, நீங்கள் ஜீவியம் இல்லாமல் அநேக அடையாளங்களை உடையவராயிருக்கலாம். நீங்கள் அடையாளங்கள் இல்லாமல் ஜீவியத்தை போலியாக நடித்துக் காட்டலாம், ஆனால் நீங்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்பீர்களானால், அப்பொழுது அதுதான் சரியானதாகும். அதுதான் சரியான ஒன்றாகும். இப்பொழுது! அப்படியானால், நினைவுகூருங்கள், மணவாட்டி…இப்பொழுது உங்களுக்கு சில நிமிடங்கள் இருக்குமாயின், அதன் பேரில் தொடர்ந்து பார்த்து நான் இதை முடிக்க ஏதுவாயிருக்கும்.
70119 கவனியுங்கள், ஒரு பெண் தைப்பதற்கு ஒரு ஆடையை வெட்டி எடுக்கப்போகிறாள். அவள் ஒரு பெரியதுண்டு துணியை வைத்திருக்கிறாள். (அதை என்னவென்று அழைப்போம்? பருத்தித் துணி, கட்டங்களிட்டு நெய்யப்பெற்ற பருத்தித் துணி வகை, அல்லது மற்ற ஏதோ ஒன்று, ஏதோ ஒரு பெயரிட்டு அழைக்கிறீர்கள். நாம் அதை பட்டு என்று கூறுவோமாக.) அவளிடம் ஒரு மாதிரி இருக்கின்றது. அவள் இந்த பெரிய துண்டு துணிகளைப் பார்க்கிறாள். இப்பொழுது, அவள் இந்த மாதிரித்துணியை எங்கே வைத்துப் பார்க்கப்போகிறாள் என்பது அவளைப் பொறுத்ததுதான். அது சரியா? அந்த முழுதுணியின் எந்த ஒரு பாகத்தையும் அவள் தெரிந்தெடுக்கலாம், அந்த முழு துணியுமே பரிசுத்தமாக்கபட்ட துணி, சுத்தமான துணி ஆகும். பாருங்கள், அதுதான் தெரிந்துகொள்ளுதல். தேவனின் தெரிந்துகொள்ளுதல். ஆகவே அவர் என்ன செய்கிறார்? தெரிந்துகொள்ளுதலின் மூலம் அவர் அதை எடுத்து இந்த கிறிஸ்துவாயிருக்கின்ற மாதிரி அமைப்பை எடுத்து துணியின் எந்த பாகத்தில் அவர் வைக்க விரும்புகிறாரோ அங்கே அவர் பொருத்திப் பார்க்கிறார். பிறகு அது வெட்டி எடுக்கப்படுகின்றது. இந்த வெட்டி எடுக்கப்பட்ட பகுதி எப்படி பரிசுத்தமாக இருந்ததோ அதே போன்று துணியின் மற்றைய பாகமும் பரிசுத்தமாயிருந்தது, ஆனால் தேவன் தெரிந்துகொள்ளுதலின்படி, தம்முடைய தெரிந்துகொள்ளுதலை உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே செய்தார். பவுல் கொரிந்தியர்—கொரிந்தியர் 8-ல், ரோமர் 8-ல், “குயவன்…களிமண் குயவனை நோக்கி நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?” என்று கூறவில்லையா. நீதியுள்ள, தேவனாகிய, அவர் ஏசா அல்லது யாக்கோபிடம், அந்த இருவரும் பிறப்பதற்கு முன்னர் அல்லது சரியானதை அல்லது தவறானதை செய்யுமுன்னர் எப்படி, “ஏசாவை வெறுத்து யாக்கோபைச் சிநேகித்தேன்” என்று கூறமுடியும்? ஏனெனில் முன்னறிவின்படி ஏசா எப்படிப்பட்டவனென்றும் யாக்கோபு எப்படிப்பட்டவனென்றும் அவர் அறிந்திருந்தார். மனிதனுக்குள் என்ன இருக்கிறதென்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவர் அறிந்திருந்தார், அவர்…
71120 முடிவில்லாத என்கிற வார்த்தையை உங்களால் விவரிக்க முடியுமானால்… ஏன், முடிவில்லாத என்கின்ற வார்த்தையானது…கோடான கோடி கணக்கான கொசுக்கள் உலகத்தில் இருந்து வருகின்றன என்று நான் கூறுகிறேன் (அதற்கும் அதிகமாக இருக்கலாம்), கோடிக் கணக்கான கொசுக்கள் இவ்வுலகில், அவை ஒவ்வொன்றும் தங்கள் கண்களைக் கோடான கோடி முறைகள் கண்மூடித் திறந்திருக்கும். அவைகள் ஒன்றாகிலும் தங்கள் கண்ணை மூடித் திறக்கும் முன்னரே தேவன் அதை உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே அறிந்திருந்தார். அதுதான் முடிவில்லாமை. அதுதான் முடிவில்லாத நிலையில் இருக்கும் ஒன்றாகும். புரிகிறதா? 121 அவர் முடிவில்லாதவர். ஆகவே நீ என்ன செய்வாய் என்பதை உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர் கிறிஸ்துவை அனுப்பினார், வெறுமனே இருப்பதற்காக அல்ல… யாராவது ஒருவர், “பாருங்கள் நான் என்னுடைய இழிவான மனப்பான்மையை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றுவேனானால்” அல்லது அதைப் போன்ற ஒன்றை நினைப்பாரெனில், அவ்வாறல்ல. யார் இரட்சிக்கப்படுவார்களென்பதை அவர் அறிந்திருந்தார், ஆகவே யார் இரட்சிக்கப்படுவர் என்பதை அவர் முன்னதாகவே கண்டவர்களை இரட்சிக்க அவர் கிறிஸ்துவை அனுப்பினார். அது முற்றிலும் சரியே.
72122 இப்பொழுது, சபைதானே நித்திய பாதுகாப்பை உடையதாயிருக்கின்றது. நீங்கள் சபைக்குள் இருப்பீர்களானால், நீங்கள் சபையுடன் பாதுகாப்பாய் உள்ளீர்கள். ஆனால் நீங்கள் சபைக்கு வெளியே சென்றால், நீங்கள் பாதுகாப்பில் இல்லை. புரிகிறதா? இப்பொழுது, நீங்கள் சபையிலேயே தரித்திருக்கிறீர்கள். 123 சபைக்குள்ளாக எப்படி நீங்கள் வருகிறீர்கள்? கைகளைக் கோர்ப்பதினாலா, உங்கள் பெயரை புத்தகத்தில் எழுதுவதாலா? எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம்; அதுதான் சபை. எப்படி? பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மூலமாக நாம் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக முத்திரையிடப்பட்டுள்ளோம். எவ்வளவு காலத்திற்கு? உங்களுடைய மீட்பின் நாள் வரைக்கும். எபேசியர் 4:30, “அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்.” மீட்கப்படும் உங்களுடைய நாள் வரைக்கும் நீங்கள் முத்திரையிடப்பட்டுள்ளீர்கள். இப்பொழுது. நிச்சயமாக, நிச்சயமாக, அதுதான் பரிசுத்த ஆவியாகும்.
73124 ஆகவே இப்பொழுது, அந்த சபையானது எடுக்கப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் கொண்டிருக்கிற மீதியாயிருக்கிற ஸ்திரீயின் வித்தானது (புரிகிறதா?), மணவாட்டியல்ல, மீதமாயிருக்கின்ற அந்த ஸ்திரீயின் வித்து. அப்பொழுது அந்த வலுசர்ப்பமானது தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றி அந்த வித்தின் சந்ததியுடன் யுத்தம் பண்ணப்போயிற்று. சபைகளின் சங்கத்தின் கீழிருக்கின்ற பிராடெஸ்டெண்ட் சபைகள், அதுதான் மிருகத்திற்கு சொரூபமாய், இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ள… இதைப்போன்று எல்லா சபைகளும் புறக்கணிக்கப்படும். 125 இப்பொழுது நாம் இங்கே வரி வசூலிப்பல் இருப்பதுபோல, ஒரு சர்ச்சை, நாம் ஒரு சபையல்ல என்று கூற முயற்ச்சிக்கின்றன, ஆனால் நாம் ஒரு சபைதான் என்று கூறத்தக்கதாக நாம் அரசியல் சாசன உரிமைகளை பெற்றுள்ளோம். அரசியலமைப்பு சட்டம் இருக்கும் வரை, அதில் எந்த திருத்தமும் இல்லை, எவருக்கும் இருப்பதைப் போலவே நமக்கு முற்றிலுமான உரிமைகள் உள்ளன. நம்முடைய முற்பிதாக்கள் அதற்காகத்தான் உறுதியாக நின்றார்கள். ஆனால் நாம் என்ன செய்துள்ளோம், உடைக்கக்கூடிய ஒவ்வொரு அரசியல் சட்டங்களையும் நாம் உடைத்துள்ளோம், எல்லா சபைகளும் ஸ்தாபனங்களையும் உள்ளடக்கிய சபைகளின் சங்கத்தை சீக்கிரமாக உள்ளே வரவேற்றுள்ளோம், ஆகவே பிசாசு இதற்குள்ளாக உள்ளே வந்து உலகப்பிரகாரமான காரியங்களும் மற்றும் எல்லாவற்றையும் உள்ளுர் சபை அங்கத்தினர்கள், இன்னும் மகத்தான சபைகள், மற்றும் உயர்தர வகுப்பார், மற்றும் சமுதாயத்தினர், இன்னும் பிறவற்றைக் கொண்டிருக்கிறான், ஆனால் அந்த பழைய சபையோ மற்ற எந்தப் பிறப்பைப் போன்று ஒரு குழப்பத்திலிருந்து மறுபடியும் பிறந்து, இன்னுமாக அதற்கான கிரயத்தை செலுத்திக் கொண்டு, இன்னுமாக தாழ்த்தி மரித்துக் கொண்டு, பெந்தெகொஸ்தே நாளிலே அவர்கள் எப்படியாக பிறந்தனரோ இன்னும் அதே விதமாகவே செயல்பட்டுக்கொண்டு, அங்கே இருக்கின்ற அதே சபையானது… அவைகள் சபைகளின் சங்கத்தின் கீழாக மூடப்பட்டு அடைக்கப்படும். அது ஒரு சங்கம் அல்லது அதைப்போன்று ஒன்றினால் புறக்கணிக்கப்படும். ஒன்று நீங்கள் உள்ளே வரவேண்டும் அல்லது வெளியே செல்ல வேண்டும்.
74126 மிருகத்தின் முத்திரையானது இப்பொழுது இன்றைக்கு செயலில் உள்ளது, மற்றும்—பரிசுத்த ஆவி தான் தேவனுடைய முத்திரையாகும். அதைப் புறக்கணிப்பதென்பது மிருகத்தின் முத்திரையாகும். நீங்கள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டிய, பரிசுத்த ஆவியைக் காண்கிற எவரும், அதை ஏற்றுக்கொள்ளாமற்போனால், தானாகவே நீங்கள் அந்த மிருகத்தின் முத்திரையை எடுத்துக்கொள்கிறீர்கள், ஏனெனில் இரண்டு சாரார் மாத்திரமே உள்ளனர்: தேவனுடைய முத்திரையை கொண்டிராத எல்லாரும் மிருகத்தின் முத்திரையை பெற்றிருந்தனர். ஆகவே தேவனுடைய முத்திரையைப் பெற பரிசுத்த ஆவியைப் பெறத்தான் வேண்டும். அதை புறக்கணிப்பது மிருகத்தின் முத்திரையை கொண்டிருப்பதாகும். இதோ இதுதான் முழு காரியமும். அது முற்றிலுமாகச் சரியே.
75127 இப்பொழுது, மணவாட்டி மேலே செல்கிறாள், மீதமுள்ளவர்கள் இங்கே விடப்படுகின்றனர். இவளே இரண்டாம் உயிர்த்தெழுதலில் வருகிறவள். “முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான், இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை.” அது சரி. இரண்டாம் உயிர்த்தெழுதலானது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பாக இருக்கும், பிறகு சபையானது… பவுல், “நீங்கள் அறிவீர்களா,” “அவிசுவாசிகளிடத்திற்கும் வழக்கறிஞர்களிடமும் ஏன் செல்கிறீர்கள், பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களே” என்றான். இவ்வித காரியங்கள் சபைக்கு முன்பாக நியாயந்தீர்க்கப்பட வேண்டும், அநீதியான நீதிபதிகள் மற்றும் பலரின் முன்பாக அல்ல, ஆனால் நம்முடைய காரியங்கள் சபைக்கு முன்தான் கொண்டு வரப்பட வேண்டும். நீங்கள் அங்கே ஒருவருக்கொருர் சட்டத்திற்கு கொண்டு செல்கிறீர்கள். ஒரு கிறிஸ்தவனை சட்டத்திற்கு முன் கொண்டு செல்லும் ஒரு மனிதன் மீது தேவன் பரிதாபப்படுகிறார். அது சரி. அவ்விதமாகச் செய்யக் கூடாது என்று பவுலும் கூட அவர்களுக்கு அறைக்கூவல் விடுத்தான். 128 இப்பொழுது, அது தான் மணவாட்டி ஆகும், உறங்கிக் கொண்டிருந்த கன்னிகைகள், பூமியின் மீது விடப்படுகின்றனர். புத்தியுள்ள கன்னிகை தன்னுடைய தீவட்டியில் எண்ணையை உடையவளாக பரலோகத்திற்குள் செல்கின்றாள். இதன் பேரில் அதிக நேரத்தை நாம் செலவிடலாம் என்பதை நானறிவேன், ஆனால் நான்—நான் இதனூடாக துரிதமாகச் சொல்லப்போகிறேன்.
76129 “கிறிஸ்தவர்கள் பாவம் செய்கிறார்களா?” நிச்சயமாக கிடையாது! ஒரு கிறிஸ்தவன் பாவம் செய்கிறான் என்று கூறும் எந்த வேதவாக்கியமும் கிடையாது. அவனால் பாவம் செய்ய முடியாது. அதற்கு ஒரு கோபத்திற்குரியது என்பதை நான் அறிவேன். பாருங்கள், முதலாம் யோவான் 3-க்கு திருப்பி வேத வசனம் என்ன கூறுகிறதென்று நாம் பார்ப்போம். ஒரு கிறிஸ்தவன் பாவம் செய்கிறதில்லை. 130 நீங்கள் எப்பொழுதாகிலும் ஒரு கறுப்பு, வெள்ளை நிறப் பறவை அல்லது வெள்ளை, கறுப்புப் பறவையை கண்டதுண்டா? நீங்கள் ஒரு மனிதனை எப்போதுமே குடிபோதையிலும், அதே சமயத்தில் தெளிவாகவும் கண்டதுண்டா? இல்லையே! நீங்கள் ஒருவனை பாவியாகவும், பரிசுத்தவானாகவும் ஒருபோதும் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை. 131 இப்பொழுது, இது சிறிது புண்படுத்துமானால், நீங்கள் இதற்குள் நிறைய தைலத்தை வைக்க வேண்டும் என்பதை, நீங்கள் அறிவீர்கள், ஆகவே அது—அது சிறிது நேரத்தில் சுகத்தை அளிக்கும்.
77132 இப்பொழுது, நாம் பேசிக்கொண்டிருப்பவைகளின் நம்முடைய முற்றிலுமான, ஒருபோதும் தவறாத ஆதாரங்களாக வேத வசனங்கள் உள்ளன. 1 யோவான், 3வது அதிகாரம் 9வது வசனம். சரி, இதற்கு செவிகொடுங்கள்! பாவங்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்படுத்தப்பட்டார். கவனியுங்கள், நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா? உங்கள் கவச உடைகளைத் தரியுங்கள், சர்வாயுதவர்க்கத்தை இறுக்கிக் கட்டிவிட்டீர்களா? கூர்ந்து கவனியுங்கள், ஏனெனில் இது அதிர்ச்சியளித்துக்கொண்டிருக்கிறது. தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்வதில்லை;… (அது எப்படி?) ஏனெனில் அவருடைய வித்து… (அவருடைய வித்து, தேவனுடையது.)… அவனுக்குள் தரித்திருக்கிறது… (அந்த மனிதன்!) …அவன் தேவனால் பிறந்தபடியினால், பாவஞ்செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படுத்தப்படுகின்றது. நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்பு கூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. ஆகையால் நீங்கள் ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி, வேறுபாடுகளை வரையுறுத்தி, இன்னும் அதைப் போன்றவைகளைத் தெரிந்துகொண்டப் பிறகு, எப்படி நீங்கள் தேவனால் பிறந்தவர்கள் என்று உங்களாலே கூற முடிகின்றது? அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை. அது சாத்தானுடைய ஒரு பரியாசமாகும். அது சரி. ஆனால் தேவனால் பிறந்த ஒரு மனிதனால் பாவமே செய்யமுடியாது; பாவம் செய்வதென்பது அவனால் கூடாத ஒரு காரியமாகும்.
78133 கவனியுங்கள்! இதை என்னால் எடுக்க முடியுமானால் கிறிஸ்து அறையப்பட்டுள்ள சிலுவையை இங்கே ஒரு நிமிடத்திற்கு நான் எடுக்கட்டும். பாவ நிவாரணப்பலியாக இருந்தவர் யார்? இயேசு கிறிஸ்து. நாம் எப்படி கிறிஸ்துவுக்குள் செல்லுகிறோம்? நமக்காக மரித்தவர் யார்? கிறிஸ்து. அவர் எதற்காக மரித்தார்? நம்முடைய பாவங்களுக்காக. என்னுடைய ஆக்கினையை அவர் எடுத்துகொண்டார். அது சரிதானே? ஆகவே அப்படியானால் நான் எவ்வாறு அவருக்குள் செல்கிறேன்? ஒரே ஆவியால் நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். ஆகவே இந்த சரீரத்தில், நாம் இரத்தத்தினாலே மூடப்பட்டு நியாயந்தீர்ப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலைப் பெற்றிருக்கிறோம். அவனால் பாவமே செய்யமுடியாது, ஏனெனில் அவனுக்காக இரவும் பகலுமாக ஒரு இரத்த பலியானது இருந்து கொண்டிருக்கிறது. அல்லேலூயா! அவனால் பாவம் செய்ய முடியாது. பாவம் செய்ய அவனுக்கு விருப்பமே இராது. அவ்வாறு செய்வானானால்—ஏதாவது தவறை அவன் புரிவானானால், அதை வேண்டுமென்றே அவன் செய்திருக்கமாட்டான். வேதாகமம் எபிரேயர் 10 ஆம் அதிகாரத்தில், “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு (அவரே சத்தியமாயிருக்கிறார்), நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே, இந்த தண்டனைக்கு பாத்திரமாய் இருந்தாலும், இன்னும் எவ்வளவு கொடுமையான தண்டனையாய் இருக்க வேண்டும், தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.”
79134 ஏனெனில் நாமெல்லாரும் ஒரே ஆவியாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றவராயிருப்பதால், நம்மால் பாவம் செய்யமுடியாது. நமக்காக ஒரு பாவநிவாரண பலி காத்துக்கொண்டிருக்கிறது. ஆகவே உங்கள் இருதயத்தில் இன்னுமாக பாவம் செய்ய வேண்டும் என்கின்ற வாஞ்சை இருக்குமானால், நீங்கள் இன்னுமாக அந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை, ஏனெனில் நீங்கள் மரித்து உங்கள் ஜீவனானது கிறிஸ்துவுக்குள்ளாக தேவனின் மூலமாகவும் பரிசுத்த ஆவியினாலும் முத்திரையிடப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் பாவமே செய்வதில்லை. அவர்கள் தவறுகள் செய்கிறார்கள், ஆனால் அவர்கள் பாவம் செய்வதில்லை. ஆமென்! அதன் காரணமாகத்தான் அவர்களால் முடியாது, ஏனெனில் அவனால் பாவம் செய்யமுடியாது. 135 என்னால் எப்படி ஒரு…நான் இங்கே நகரத்தினூடாக செல்கையில், நகரத்தின் மேயர், “திரு. பிரன்ஹாம், நீங்கள் வியாதியஸ்தருக்கான ஜெப அழைப்புகளுக்கு செல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். வேகக்கட்டுப்பாடுகள் இங்கே உண்டு. நகரத்தில் அதிகபட்சமாக மணிக்கு முப்பது மைல் வேகத்தில் தான் செல்ல வேண்டும். ஆனால் உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில், தொண்ணூறு மைல் வேகத்தில் செல்ல நான் உங்களுக்கு அனுமதித் தருகிறேன், ஏனெனில் உங்களுக்கு மிக அவசரமான அழைப்போ அல்லது யாரோ ஒருவர் விபத்தில் மரித்துக் கொண்டிருக்கும் தருவாயில் இருந்தாலொழிய மற்ற நேரத்தில் நீங்கள் அதை மீறமாட்டீர்கள் என்ற நம்பிகை உங்கள் மேல் எனக்கு உண்டு. இந்த நகரத்தின் மேயர் என்ற முறையில், நான் உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன், அதாவது நீங்கள் ஒரு சிகப்பு விளக்கை, நீங்கள் என்ன விரும்புகின்றீர்களோ அதை செய்து, வாகனத்தை ஓட்டிச் செல்லலாம்” என்று கூறுகிறார். நான் இங்கே முப்பது மைல் வேகத்தில் செல்ல வேண்டிய பகுதியில் நாற்பது மைல் வேகத்தில் சென்றால் ஒரு சாதாரண அதிகாரியினால் எப்படி என்னை கைது செய்ய முடியும்? அவரால் முடியாது. இந்த நகரத்தில் இருக்கின்ற வேகக்கட்டுப்பாட்டு விதிகளை என்னால் மீற முடியாது. காரணம் ஏன்? ஏனெனில் அந்த வேகக்கட்டுபாடு விதிகளுக்கு மேலாக நான் உள்ளேன். ஆமென்! நீங்கள் அதை புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.
80136 ஆகவே நாம் மரிக்கையில் நம்முடைய மனந்திரும்புதலை தேவன் அங்கிகரிக்கின்றார், நம்முடைய ஞானஸ்நானத்தை அங்கிகரிக்கின்றார், விசுவாசத்தின் மூலம் வைக்கப்பட்ட, அவர் தம்முடைய சொந்த குமாரனின் இரத்தத்தை அங்கிகரிக்கின்றார், அவருடைய முன்குறித்தலை அவர் அங்கிகரித்து, நான் அதைச் செய்வேன் என்று அறிந்திருந்து, கிறிஸ்துவுக்குள்ளாக என்னை அவர் அடையாளங் கண்டுகொண்டு, மரித்த… உலகத் தோற்றத்திற்கு முன்பாக அவர் அடிக்கப்பட்டபோது என் ஸ்தானத்தில் கிறிஸ்து மரித்தார். ஒரு கிறிஸ்தவனாக என்னுடைய பெயர் அவருடைய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அல்லேலூயா! என் மரணத்தை கிறிஸ்து அடைந்தார். கிறிஸ்துதான் என்னுடைய பலி. தேவன் இனிமேல் என் பாவத்தை எண்ணாதிருப்பார். நான் மரணத்தினின்று ஜீவனுக்குள் கடந்து சென்றேன் என்பதற்கான சாட்சியாக பரிசுத்த ஆவியின் முத்திரையை அவர் எனக்களித்தார். வியூ! அதுவே இதைச் செய்கிறது.
81137 அப்படியானால் தேவனால் பிறந்த எவரும் பாவம் செய்வதில்லை, ஏனெனில் அவனால் பாவமே செய்ய முடியாது. பழைய ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பாவத்தைக் குறித்து நினைவுகூரப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் கிறிஸ்து, ஒரே பலியினாலே அந்த வழிபடுபவனை அவர் என்றென்றுமாக பரிபூரணப்படுத்தினார். “ஆராதனை செய்கிறவர்கள் ஒருமுறை சுத்தமாக்கப்பட்ட பின்பு, (எபிரெயர்10)—ஆராதனை செய்கிறவர்கள் இன்னும் பாவங்கள் உண்டென்று உணர்த்தும் மனசாட்சி அவர்களுக்கு இல்லாதிருக்கிறார்கள்.” ஆகவே சபையில் ஓடி, மேலும் கீழுமாக குதித்து, சத்தமிட்டு, அந்நிய பாஷையில் பேசி, ஒரு கிறிஸ்துவனைப் போலவே சரியாக செய்யும் இந்த மக்களை நீங்கள் எடுத்துக்கொள்வீர்களானால், அவர்கள் பிறகு வெளியே ஓடி, அடுத்த வருடம், அடுத்த வாரம் அவர்கள் மறுபடியுமாக வரவேண்டியதாக இருக்கும். அவர்கள் துவக்கத்திலேயே எங்குமே ஒருபோதும் வரவேயில்லை. அவர்கள் போலித்தனமாக மாத்திரமே செய்து கொண்டிருக்கிறார்கள், ஏனெனில் நம்முடைய மீட்கப்படும் நாளுக்கென்று பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்துவுக்குள் முத்திரையிடுகிறார் என்று வேதம் கூறியுள்ளது. அல்லேலூயா! தேவன் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளபடியால், அதுவே என்னை மிகவும் நிச்சயத்திற்குள்ளாக்குகின்றது.
82138 பாவம் இனிமேல் கிடையாது. பாவத்திற்கான கேள்வி தீர்க்கப்பட்டாயிற்று. அதன் காரணமாகத்தான் ஒரு கிறிஸ்தவனுக்கு பாவம் மிகவும் அசுத்தமாகக் காணப்படுகிறது. அதன் காரணமாகத்தான் இங்கே குட்டைக் கால்சட்டைகள் அணிந்து காணப்படுகின்ற பெண்கள் ஒரு கிறிஸ்தவனுக்கு மிக அசுத்தமாகக் காணப்படுகிறார்கள். அதன் காரணமாகத்தான் கொச்சைத் தன்மையான, மற்றும் அநேக அசுத்தமாக காரியங்கள் உள்ளன, அதனால்தான் புகைபிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல், தொலைகாட்சியில் வருகின்ற இந்த தணிக்கை செய்யப்படாத காட்சிகள், எல்லாம் அசுத்தமாயிருக்கின்ற காட்சிகள். ஏன்? ஏனெனில் நீங்கள் வித்தியாசமான ஒரு இராஜ்யத்தை சேர்ந்தவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிறந்து உங்களுடைய மீட்பின் நாள் வரை பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டுள்ளீர்கள். 139 தேவனாலே பிறந்தவன் பாவம் செய்யமாட்டான், ஏனெனில் அவனால் பாவமே செய்ய முடியாது. தேவனுடைய வித்து அவனுக்குள் இருப்பதால், அவனால் பாவமே செய்ய முடியாது. அங்கே உள்ளே பரிசுத்த ஆவி இருக்கும் வரை அது பாவத்தைக் குறித்த ஒவ்வொரு வாஞ்சையும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடுகிறது. ஆமென்! உங்களால் பாவமே செய்யமுடியாது; உங்களுக்குள் வாஞ்சையே இராது. அதன் பேரில் நாம் அதிக நேரம் செலவிடலாம், ஆனால் துரிதமாகப் பார்ப்போம். நாம் அவையெல்லாவற்றினூடாகவும் பார்க்க முடியாமற் போய்விடுமோ என்று, நான் நினைக்கிறேன்.
8381. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து பெண் பிரசங்கிகளை பிரசங்கம் செய்ய அனுமதிக்கின்ற சபைகளுக்கு, அவ்வளவு வல்லமையும் அதிகாரமும் எப்படி அவைகளுக்கு இருக்கிறது? 140 இப்பொழுது, இது கவனமாக கையாள வேண்டிய ஒரு காரியமாய் உள்ளது. இப்பொழுது, இதனோடு கருத்து வேறுபாடு கொள்ளப்போகின்ற மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், ஆனால் ஒரு கிறிஸ்தவன் என்கின்ற வகையில் நான் அதைக் கூறித்தானாக வேண்டும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்த வேதவசனப் பூர்வமான மேற்கோள் வேதாகமத்தில் இல்லவேயில்லை. பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் எந்த ஒரு நபருக்காகிலும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதாக வேதாகமத்தில் எந்த இடத்திலும் இல்லை. அது ஆறாம் நூற்றாண்டில் போதிக்கப்பட்ட ஒரு கத்தோலிக்க பாரம்பரியமாகும். 141 தெளிக்கப்படுதல் என்பதும் வேதாகமத்தில் ஒருபோதும் இருந்ததில்லை, ஏனென்றால் மக்களின் மீது தெளிக்கப்படுதல் அல்லது ஊற்றப்படுதல் என்பது கிடையாது, ஆனால் தண்ணீரில் மூழ்குதல் என்பது உள்ளது. நீங்கள் அதை அறிந்துகொள்ள விரும்பினால், இதைக் குறித்து என்னிடம் கிரேக்க மற்றும் எபிரேய குறிப்புகள் என்னிடம் உள்ளன.
84142 பெந்தெகொஸ்தே நாளிலே, மனிதர் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று பேதுரு முக்கிய நிபந்தனை விதித்தான். ஆகவே பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்பது ஒரு நாமமல்ல. மத்தேயு 28:19, “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளுக்கும் உபதேசித்து,” பிதா, குமாரன், பரிசுத்த ஆவி…“நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து,” என்று கூறியுள்ளது, நாமங்களில் என்று அல்ல, நாமத்திலே, ஒருமை… பிதாவின் நாமத்திலே, குமாரனின் நாமத்திலே, பரிசுத்த ஆவியின் நாமத்திலே அல்ல, ஆனால் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலேதான். பிதா ஒரு நாமம் அல்ல; குமாரன் ஒரு நாமம் அல்ல; பரிசுத்த ஆவி ஒரு நாமம் அல்ல. அவையெல்லாம் ஒரு நாமத்தைச் சார்ந்த பட்டப் பெயர்கள் தாம் ஆகும்.
85143 இப்பொழுது, பத்து நாட்கள் கழித்து பேதுரு, “மனந்திரும்பி, ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினான். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, பாருங்கள் அந்த தீவிரமான திரித்துவ கருத்தானது…பாருங்கள், அதிலிருந்து மூன்று தேவர்களை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். மூன்று தேவர்கள் கிடையாது. இங்கே அதை மூல கிரேக்க வேதாகமத்திலிருந்து உங்களுக்கு வாசித்துக் காண்பிக்க விரும்புகிறேன். அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்த ஒரே வழி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்தான், மூல கிரேக்க மொழியில் வேதம் கூறியுள்ளதோ, அவர்தான் தேவன் என்று அவர்கள் அடையாளங் கண்டுகொள்ளச் செய்ய வேண்டும் என்பதாகும். 144 பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது ஒரே தேவனின் அலுவல்களாகும். அவர் பிதாவாயிருந்தார்; அவர் குமாரனாயிருந்தார்; அவரே பரிசுத்த ஆவியானவராக உள்ளார். இது மூன்று யுகங்களின் மூன்று அலுவல்கள்; பிதாத்துவம், குமாரத்துவம், மற்றும் பரிசுத்த ஆவியின் யுகம். ஆனால் பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கு ஒரேயொரு நாமமுண்டு, அது தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதே. 145 ஆகவே அந்த நாள் முதற்கொண்டு ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்து நாமத்திலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர், மேலும் சிலர் எந்த நாமமும் இல்லாமல் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர், ஆகவே மூல கிரேக்க மற்றும் எபிரேய வேதாகமமும், இயேசுவின் நாமத்திலே கொடுக்கப்படுகின்ற ஞானஸ்நானமானது பாவங்களின் மன்னிப்புக்காகத்தான் என்கிறது, கிரேக்க மற்றும் எபிரேய வேதாகமம் இரண்டுமே. மன்னிப்பு என்றால், “மன்னித்தல்,” என்பதே. நான் ஏதாவதை மன்னித்தால் , அதை எடுத்துப் போட்டுவிடுவதே என்பதாகும். அதை மன்னித்தல்; “அதை எடுத்துப்போடுவதே.”
86146 வேதாகமத்தில் எந்த ஒரு வேதவசனமும் காணப்படவில்லை… மற்றும் அபோஸ்தலனாகிய பவுல் மேடான வழியாய் கடந்து போய் சில பாப்டிஸ்ட் சகோதரர்களைக் கண்டான், அப்போஸ்தலர் 19. அவர்கள் ஒரு மகத்தான நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்; அவர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்; அவர்கள் மகத்தான சந்தோஷத்தையும் மற்றும் மகத்தான காரியங்களையும் உடையவர்களாயிருந்தனர்; அவர்கள் பிரசங்கித்துக்கொண்டும், கூடாரத்தில் சந்தோஷமும் கொண்டிருந்தனர். 147 18ஆம் அதிகாரத்தில் ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் இம்மக்களை சந்தித்திருந்தனர், அப்போலோ; அவர்கள் பாப்டிஸ்டுகளாயிருந்தனர். ஆகவே பவுல் அவர்களிடம் சென்று, “நீங்கள் விசுவாசிகளானது முதற்கொண்டு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “பரிசுத்த ஆவி என்பது உண்டு என்று எங்களுக்கு தெரியாதே” என்றனர். 148 அவன், “எவ்வாறு உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது?” என்று கேட்டான். ஜேமஸ் அரசன் மொழிப்பெயர்ப்பில் அது “அப்படியானால் எந்த” என்று கூறுவதை நானறிவேன்; மூல வேதாகமத்தில், அது, “அப்படியானால் எவ்வாறு” என்று கூறப்பட்டுள்ளது. “எந்த அல்லது எவ்வாறு நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” 149 அவர்கள், “இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்த அதே மனிதனால், யோவானால் நாங்கள் ஞானஸ்தானம் பண்ணப்பட்டுள்ளோம்” என்றார்கள். பவுல், “இனிமேல் அது கிரியை செய்யாது. நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பெற வேண்டும்” என்றான். அவர்கள் இதைக் கேட்ட மாத்திரத்திலே, மறுபடியுமாக அவர்கள் தண்ணீருக்குள் வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே மறு ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். பவுல் அவர்கள் மீது கைகளை வைத்தான், பரிசுத்த ஆவி அவர்கள் மீது வந்தார். இப்பொழுது, அதாவது—பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று, இங்கே கூறி, இங்கேயும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று, கூறுமானால், அது இரண்டுமே ஓரே இலக்கை அடிக்காது. அது சரியாக இருக்கவேண்டும்.
87150 இப்பொழுது, மத்தேயு 28:19, இது தான் மத்தேயுவின் கடைசி அதிகாரம், மற்றும் மத்தேயுவின் கடைசி வசனம். நீங்கள் ஒரு காதல் கதையை வாசித்தால், அது, “ஜானும் மேரியும் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்” என்றிருந்தால், ஜானும் மேரியும் யார்? நீங்கள் திருப்பி புத்தகத்தின் துவக்கத்திற்கு சென்று; அவர்கள் யாரென்பதை கண்டு பிடியுங்கள். பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்த ஜானும் மேரியும் யாரென்பதை புரிந்துகொள்ளுங்கள். இயேசு, “புறப்பட்டுப் போய் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று கூறியிருந்தால், பிதா என்பது ஒரு பெயரல்ல, குமாரன் என்பது ஒரு பெயரல்ல, பரிசுத்த ஆவி, என்பதும் ஒரு பெயரல்ல, அப்படியானால் அவர் பேசிக்கொண்டிருந்தது எதைக் குறித்ததாயிருந்தது? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யார்? அதைக் குறித்து துவக்கத்திற்கு சென்று வாசித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் வம்ச அட்டவணையை நான் மேற்கோள் காட்டுவேன், 1 ஆம் அதிகாரம், 18வது வசனம். இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது… (இப்பொழுது மிக கூர்ந்து கவனியுங்கள். அந்த கம்பத்தை, நாம் அதை பிதா என்று அழைக்கப் போகிறோம், இந்த பிரசங்க பீடம், குமாரன், இது, பரிசுத்த ஆவி எனலாம். இப்பொழுது, இயேசு கிறிஸ்துவினுடைய பிதா யார்? தேவன். நீங்கள் எல்லாருமே அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? தேவன் தான் இயேசு கிறிஸ்துவின் பிதா. அது பிதாவாகிய தேவன். இது தேவனாகிய குமாரன். இது தேவனாகிய பரிசுத்த ஆவி.) இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது… (மத்தேயு 1:18) அவருடைய திருமணமான— தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள்… [சபையார், “ பரிசுத்த ஆவியினால் ” என்று கூறுகின்றனர்—ஆசி.] கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. தேவன் தான் அவருடைய பிதாவாயிருந்தார் என்று நான் நினைத்திருந்தேன். தேவன்தான் அவருடைய பிதாவாக இருந்தார் என்று அவர் கூறினார் என்று நான் நினைத்திருந்தேன். அப்படியானால் தேவனும் மற்றும் பரிசுத்த ஆவியானவராகிய இருவரும், வெவ்வேறு மக்களாக இருப்பார்களானால், இரண்டு பேரும் வித்தியாசமான நபர்களாக தனிப்பட்ட நபர்களாக இருப்பார்களானால், தனிப்பட்ட குணம் வாய்ந்தவராயிருப்பார்களானால், எந்தவிதத்திலும் நீங்கள் அதைப் பொருத்தினாலும், எவ்விதத்தில் இருவரும் அவருடைய பிதாவாக இருக்க முடியும்? அப்படியானால் அவர்கள் அதே தன்மை கொண்ட ஒரே நபராக இருக்கவேண்டும், இல்லையென்றால் அவருக்கு இரண்டு ஆவிக்குரிய தகப்பன் இருந்தார்கள் என்றாகிவிடுமே. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவினாலே… (பிதாவாகிய தேவனால் அல்ல, ஆனால்) கர்ப்பபதியானாள் என்று காணப்பட்டது. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி, ஒரு பிள்ளையை சுமப்பாள்…(புரிகிறதா?) அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள், இம்மானுவேல் என்பதற்கான வியாக்கியானம், தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
88151 அவருடைய நாமம் என்னவென்று அழைக்கப்பட்டது? இயேசு. சரி. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. இப்பொழுது பிதா மற்றும் பரிசுத்த ஆவி இரண்டுமே ஒரே தன்மையுடைய ஆவியானவர்தான். ஆவி என்றால் என்ன? அது தேவனுடைய ஆவியாகும். அது அவ்வாறிருக்கையில், இயேசுவின் ஞானஸ்நானத்தின் மீது வந்து அவருக்குள் வாசம்பண்ணினார், “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்.” அவர் கீழே வந்து இயேசுவுக்குள் வாசம் செய்து, அவரை பூமியின் மீது இம்மானுவேல் ஆக்கினார். ஆகவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் என்னவாயிருந்தது? [சபையார், “இயேசு கிறிஸ்து” என்று கூறுகின்றனர்—ஆசி.] நிச்சயமாக அது அவ்வாறிருந்தது. 152 எனவே அதே வெளிப்பாட்டைத்தான் பேதுருவும் கொண்டிருந்தான். இப்பொழுது, நம்முடைய பார்வையை சரியாக திசை நோக்கச் செய்வோம். நாம் சரியாக குறியை நோக்கி சுடுகிறோம். சீஷர்களும் அதே விதமாகத்தான் சரியாக சுட்டார்களா என்று நாம் பார்ப்போம். ஒவ்வொரு தடவையும் அவர்கள் கூடி வந்தபோது, ஒவ்வொரு தடவையும் ஒரு ஞானஸ்நானமானது கூறப்பட்டபோது, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டியதாயிருந்தது, ஏனெனில் அவர், “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” என்று கூறினார். ஆகவே அது பிசாசின் பொய்யான ஒரு கருத்தாகும், இதை ஆதரிக்க எந்த ஒரு வேதவசனமும் கிடையாது. அது சரியே.
89153 ஆகவே இப்பொழுது, இது புண்படுத்தவில்லையென்று நான் நம்புகிறேன், ஆனால் இது சத்தியமாகும். புரிகிறதா? இது சத்தியமே, சகோதரனே. உங்களால் அதைச் செய்ய முடியாது…பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் யாருக்குமே கொடுக்கப்படாதிருக்கையில், உங்களால் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை ஒரு புறத்திலும் இயேசுவை மறுபுறத்திலும் பொருத்த முடியாது. வேதாகமத்தில் ஒவ்வொரு நபருக்கும் இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது, அவ்விதமாக ஞானஸ்நானம் பெறாதவர்கள், பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளும் முன்னர் மறுபடியுமாக வந்து ஞானஸ்நானம் பெற வேண்டியிருந்தது. அவர்கள் அதிக வல்லமையுடையவர்களாக ஒருக்கால் காணப்படலாம். ஆனால் தேவனுடைய எல்லையற்ற திட்டத்தை நீங்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டும். அது முற்றிலுமாக சரி. சரி. 154 பிதா, குமாரன், பரிசுத்த ஆவி தவறான ஒன்றாகும். இப்பொழுது, பெண் பிரசங்கிகளைப் பொறுத்தவரையில், அது தவறான ஒன்று என்று எந்த ஒருவரும் அறிவர். அதைக் கூட நீங்கள் அறியாமலிருந்தால்! அதைக் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்று, கிரேக்க வேதாகமத்திலிருந்து உங்களுக்கு வாசித்துக் காண்பிக்க எனக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும். “ஸ்திரீகள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது வெட்கக்கேடானதாயும், அவமானம் விளைவிக்கிறதாயும் இருக்கிறதே.” கிரேக்க மொழியை, இல்லை நான் எபிரேய மொழியையே பொருட்படுத்திக் கூறுகிறேன். “அவர்கள் மேய்ப்பர்களுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து பேசாமலிருக்ககக்கடவர்கள் என்று, வேதமும் கூட சொல்லுகிறது (புரிகிறதா?), ஏனெனில் ஸ்திரீகள் சபையில் பேசுவது வெட்கக்கேடானதாயும் அவமானம் விளைவிக்கிறதாயும் இருக்கிறதே.” என்னே, அதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டும். இப்பொழுது…அவைகள் வேதம் முழுவதிலும், மற்றும் தீமோத்தேயு, இன்னும் மற்ற வேதவசனங்களையும், நான் இங்கே எழுதி வைத்துள்ளேன், அது சத்தியமாயிருக்கிறது. சரி.
90155 இப்பொழுது, அப்படியானால் அவர்களிடம் எப்படி வல்லமை இருக்கிறது? நீங்கள், “ஏன் அது செயல்படுகிறது” என்று கேட்கலாம். கவனியுங்கள், சகோதரனே, உங்களை நான் கேட்கட்டும், அல்லது சகோதரியே, இந்த கேள்வியை கேட்டிருப்பவர் யாராயிருந்தாலும் சரி, கவனியுங்கள். முகமதியர்கள் மத்தியில் நடந்த சில மிக வல்லமை மிகுந்த கூட்டங்களை நான் கண்டிருக்கிறேன், அவர்கள் கூச்சலிட்டு, குதித்து, ஒரு கத்தியை எடுத்து இந்த விதமாக சரியாக நேராய் இருதயத்திற்குள் குத்தி மறுபக்கத்தில் அந்த ஓட்டைக்குள்ளாக தண்ணீரை ஊற்றுவார்கள், வெறுங்காலால் நெருப்பிற்குள் நடந்து செல்வார்கள், அதைப் போன்ற மற்ற எல்லாவற்றையும் செய்வார்கள், ஆணிகளாலான படுக்கைகளின் மேல்படுத்துக்கொள்வார்கள், மேலும்—மேலும் ஒரு பட்டயத்தை எடுத்து தங்கள் வாயில் குத்தி அதை நிற்க வைத்து அதை அப்படியே உள்ளே புகுத்துவார்கள்—நீங்களே போய் அதை வெளியே இழுத்து எடுக்கலாம், அதன் மீது இரத்தம் மற்ற எல்லாமும் இருக்கும். அந்த காரியங்களைக் குறித்து நீங்கள் பேசவேண்டாம். பார்த்தீர்களா? அது சத்தியம் அல்ல; அது எதையுமே உறுதிபடுத்துவதில்லை. புரிகிறதா? இயேசு கூறினார்…இங்கே உங்களுக்காக நான் எழுதி வைத்துள்ள வேத வசனங்களை நான் வாசிக்கட்டும், மத்தேயு 7:21-23; “அந்நாளில் அநேகர் என்னிடத்தில் வந்து…‘கர்த்தாவே, கர்த்தாவே,’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை, ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள். அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: ‘கர்த்தாவே, உமது நாமத்தினாலே பிரசங்கித்தோம் அல்லவா. உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தி, தீர்க்கதரிசனமுரைத்து, இந்த எல்லாக் காரியங்களையும் செய்தோம் அல்லவா’ என்பார்கள். அப்பொழுது அவர், ‘நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்’” என்று அவர்களுக்கு சொல்லுவார். புரிகிறதா?
91156 ஆகையால் வேண்டாம்…பாருங்கள், சத்தியம் ஒரேயொரு வழியில் மாத்திரம் தான் வரும் சகோதரனே. இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் மக்கள் எல்லாரும் நரகத்திற்கு போவார்கள் என்று நான் கூறவில்லை. அவ்விதம் நான் கூறவில்லை. தேவன்தான் நியாயாதிபதியாவார்; அவர் என்ன செய்யவிரும்புகிறாரோ அதை அவர் செய்யட்டும், ஆனால் ஒருவனுக்கு பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று வேதாகமத்தில் சட்டப்படியான வேத வசனங்கள் எதுவுமே கிடையாது. 157 இயேசுவின் நாமத்தின்படியல்லாமல் வேறு விதத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்த ஒவ்வொருவரையும் வந்து மறுபடியுமாக இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டான், “வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு போதகத்தை பிரசங்கித்தால் (கலா.1:8), அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்று கூறினான். ஆகவே தான் பவுல், “முன் சொன்னது போல, நான் மறுபடியும் சொல்லுகிறேன், வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொன்றை உங்களுக்கு பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்று கூறினான்.
92158 இப்பொழுது அது முடியாது…இங்கேயும் அங்கேயுமாக ஒரு இலக்கை நீங்கள் அடிக்க முடியாது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, “அவர்கள் கொடுக்கட்டும், அவர்கள் எல்லாம் சரிதான்!” என்று கூறலாம். பிறகு இயேசுவின் நாமம், அதையும் கொடுக்கச் செய்து, “அது சரிதான்” என்று கூறலாம். சரியான ஏதோ ஒன்று இலக்கை அடிக்கத்தான் வேண்டும். தேவன் குழப்பத்திற்கு ஆக்கியோன் அல்ல. 159 நீங்கள் வேதாகமம் முழுவதுமாக எங்கு வேண்டுமானாலும் புரட்டிப் பாருங்கள், அது ஒரு போலியான ஞானஸ்நானம் என்பதை நீங்கள் கண்டு அறிந்துகொள்வீர்கள். பிறகு சரித்திரத்திற்கு சென்று பாருங்கள், அது ஆறாம் நூற்றாண்டில் மகத்தான அக்டோபஸ் என்பவன், அப்படித்தான் என நான் நம்புகிறேன், ஞானஸ்நானம் கொடுத்தவன் அல்லது ஒன்றான…அது அக்டோபஸ் தான் என்று நான் கூறமாட்டேன், ஞானஸ்நானம் பண்ணப்பட்டவனின் பெயரை நான் மறந்துவிட்டேன்… நீங்கள் அதைக் காணவேண்டுமென்றால் அதை— நிசாயா பிதாக்களுக்கு முன் என்ற புத்தகத்தில் காணலாம், 325 கி.பி. நடந்த நிசாயா ஆலோசனை சங்க கூட்டத்திற்கு முன்னர், அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தனர். பிறகு கத்தோலிக்க சபையானது அதிகாரத்திற்கு வந்தபோது அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தை எடுத்துக்கொண்டனர். அந்த சமயத்திற்கு முன்னர் எந்த ஒரு நபருக்கும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்படவேயில்லை. அது ஒரு கத்தோலிக்க பாரம்பரியமாகும்.
93160 அதில் அநேகத்தை லூத்தர் தன்னுடன் வெளியே கொண்டு வந்தார். மற்றதை வெஸ்லி கொண்டு வந்தார், இன்னுமாக நாம் அதனிடம் செல்கிறோம். ஆகவே அந்த கத்தோலிக்க போதகமானது, அதற்கு நம் பிதாக்களின் விசுவாசம் என்று அழைக்கப்படுகிறது, அது 144வது பக்கத்தில் காணப்படுகிறது என்று நான் நம்புகிறேன், அது அதில்தான் உள்ளது என்று நான் நினைக்கிறேன், அவன் கூறினான்—அவர்கள், “பிராடெஸ்டெண்டுகள் யாராவது இரட்சிக்கப்படுவார்களா?” என்று கேட்டனர். “ஒருக்கால் அவர்களில் சிலர் இரட்சிக்கப்படலாம். அவர்கள் வேதாகமத்தின்படியே தான் ஜீவிப்போம் என உறுதி கூறி, ஆனால் அதே நேரத்தில் கத்தோலிக்க போதகத்தை அவர்கள் கைக்கொள்கின்றனர்” என்று கூறினர். பின்னும் அது, “வேதாகமம், ஆதி கத்தோலிக்கர், பிதாவின் நாமத்திலே—கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தனர், நாம் அதிலிருந்து பக்தி பூர்வமானதை எடுத்து, அதை பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் மேல் வைக்கின்றோம், பிராடெஸ்டெண்டுகள் அதை அடையாளங் கண்டுகொள்கின்றனர்” என்றனர். “ஒருக்கால் அவர்களில் சிலர் இரட்சிக்கப்படலாம்” என்றனர். அதனால் அவர்கள் இரட்சிக்கப்பட முடியாது! அது சரி.
9482. ஒன்றுக்கும் மேற்பட்ட உலகம் இருக்கின்றதா? 161 ஆம், அநேக உலகங்கள் இருக்கின்றன, எபிரேயர் 1வது அதிகாரம் 2வது வசனம், எபிரெயர் 11வது அதிகாரம் 3வது வசனம். அநேக உலகங்கள் உள்ளன. தேவன் உலகங்களை உண்டாக்கினார், உ-ல-க-ங்-க-ள், உலகங்களை உண்டாக்கினார்.
9583. ஒன்றுக்கும் மேற்பட்ட வானம் இருக்கின்றதா? 162 ஆம். முதலாம்—இரண்டாம் கொரிந்தியர் 12:3-ல் மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்ட ஒரு மனிதனை தான் அறிந்துள்ளதாக பவுல் கூறினான். மேலும் வெளிப்படுத்தின விசேஷத்தில் இன்னும் பிறவற்றில், அதை விட அதிகமாக உள்ளது. நான் வேகமாக கடந்து செல்லப்போகிறேன், ஏனெனில் இப்பொழுது இது—இது நான் முடிக்க வேண்டிய நேரத்தைக் கடந்துவிட்டதாயுள்ளது. இவைகளில் மற்றவற்றை வாசித்து (சரி!) கருத்தைக் கூறினால் பரவாயில்லையா?
9684. கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கின்ற ஒரு குழந்தை எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லுமா? 163 நிச்சயமாக, அவன் அண்மையில் மறுபடியும் பிறந்திருந்தால். அவன் எவ்வளவு குறுகிய காலத்தில் ஏற்றுக்கொண்டிருந்தாலும் பரவாயில்லை, எப்படியாயினும் அவன் மேலே சென்றுவிடுவான். உங்களுக்கு புரிகின்றதா?
9785. நான் இராபோஜனத்தை எடுக்கத் துவங்கும்போது கிறிஸ்து ஏன் எனக்கு தோன்றுகிறார்? 164 பாருங்கள், உங்கள் இருதயமானது ஒரு நிலைப்பட்டு அதைச் செய்ய பரிசுத்தத்துடன் தேவனிடம் நீங்கள் வந்து கொண்டிருந்ததில் சந்தேகமேயில்லை; அதன் காரணமாகத்தான், உங்களுக்கு அவர் தோன்றினார். பாருங்கள், எனக்குத் தெரிந்தவரையில் அதுதான் உண்மையான காரணமாகும். அதற்கு மேல் என்னால் கூற முடியவில்லை…நாம் பார்ப்போம்.
9886. நாம் தோற்ற…முன்னே இரட்சிக்கப்பட்டிருந்தால் (ஓ, ஓ. இங்கே நாங்கள் நிறுத்த விருப்பமில்லை, அப்படித்தானே?) நாம் உலகத்தோற்றத்திற்கு முன்னே இரட்சிக்கப்பட்டிருந்தால்—நாம் அவ்வாறு இருந்தோமா? 165 ஆம், ஐயா! வெளிப்படுத்தின விசேஷம் 13:8 நீங்கள் இரட்சிக்கப்பட்டு உங்கள் பெயரானது உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்பாகவே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. எபேசியர் 1:4 மற்றும் 5… நான் அதை வாசிக்கட்டும்; அதற்கு ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகாது மற்றும் நீங்கள் பாருங்கள் அதை நான்—நான் மேற்கோள் காட்டவில்லை, நான்—நான்… சரி, இதோ நாம் இருக்கிறோம்; இதை நாம் வாசிப்போமாக. நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு… (எபேசியர் 1ஆம் அதிகாரம் 3 வது வசனம்.) நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்: (கவனியுங்கள்!)… தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு. …(கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, உண்மையாகவே.)… அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரப்புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். 166 இப்பொழுது, வெளிப்படுத்தல் புத்தகத்தில்… இதோ நான் எடுத்துவிட்டேன்; இதை நான் சீக்கிரமாக வாசிக்கட்டும், ஆதலால் நான் அதை மேற்கோள்காட்டவில்லை என்பதை நீங்கள்—நீங்கள் பாருங்கள், அதை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். வெளிப்படுத்தல் 13:8, இதைச் சீக்கிரமாக கவனியுங்கள். உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். (அப்பொழுது தான் அது. சரி.)
9987. அப்படியானால் அப்பொழுது நாம் ஆவிகளாக இருந்தோமா—இருந்தோமா? 167 இல்லை, அப்பொழுது நாம் இருந்திருக்கவேயில்லை, ஆனால் தேவனுடைய சிந்தையில் நாம் இருந்தோம். அவர் அதைப் பேசி அப்பொழுது அது உண்டானது. உலகத் தோற்றத்துக்கு முன்னே இயேசு… உலகத் தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து தான் என்று வேதாகமம் போதிப்பதை எத்தனைப்பேர் அறிவீர்கள். ஏன்? தேவன் அதைப் பேசினார், ஆகவே அதை அவர் பேசினபோது, அது செய்து முடிக்கப்பட்ட ஒன்றாக ஆனது. அவர் என்னைக் கண்டபோது, உலகத் தோற்றத்துக்கு முன்னே உங்களை அவர் பார்த்துவிட்டார், அவருடைய சிந்தையில் நாம் உருவகமாக மாத்திரமே இருந்தோம். பிறகு நாம் பூமிக்கு வந்தபோது, நாம் மனிதன் மற்றும் மனுஷியாக, ஆணும் பெண்ணுமாக இருந்தோம். அவர் ஆணிலிருந்து பெண்ணின் ஆவியை வேறுபிரித்து அதிலிருந்து ஒரு பெண்ணை உண்டாக்கி ஆணின் ஆவியை மனிதனுக்குள் விட்டுவிட்டார். 168 ஒரு பெண் ஒரு ஆணைப் போல் நடந்துகொள்வதை நீங்கள் காண்பீர்களானால், ஏதோ தவறு அங்கே உள்ளது. ஒரு ஆண் பெண்மைத்தன்மையுள்ள ஆவியைப் போன்று பெண்ணாக நடந்துகொள்வதை நீங்கள் காண்பீர்களானால், அங்கேயும் ஏதோ ஒன்று தவறாயுள்ளது. 169 ஆகவே அவர் அப்பொழுது மனுஷனின் பக்கவாட்டில் ஒரு விலா எலும்பை எடுத்து அவனிலிருந்து ஒரு துணைவியை அவர் உண்டாக்கினார், ஆகவே அவர்கள் இருவரும் ஒன்றுதான். 170 ஆனால் உலகத்தோற்றத்திற்கு முன்னே நம்முடைய பெயர்களை…ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது, புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டது, தேவனுடைய சொந்த சிந்தையில் அவர் நம்மை உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே அவருடைய முன்னறிவினால் நம்மை முன்னறிந்து, நம்மை முன்குறித்தார். ஓ, சகோதரனே, இது சபையை எழச் செய்து இருக்கைகளினூடாக ஓடச் செய்யாதா? இதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். மறுபடியும் பிறந்தவர்களாகிய உங்களை, உலகத் தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் உங்கள் பெயர்களை தேவன் எழுதிவிட்டார். கிறிஸ்து மரித்து உங்களை நித்திய ஜீவனுக்கென்று அழைக்கத்தக்கதாக பரிசுத்த ஆவியை இங்கே அனுப்பியுள்ளார். நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்கள்; அவர் உங்களை முத்தரித்தார். உங்களுடைய மீட்கப்படும் நாள் வரை நீங்கள் அங்கேயே இருக்கிறீர்கள். அல்லேலூயா! 171 அப்படியே தரித்திருத்தலைக் குறித்துப் பேசுகிறோம். அது நானே தரித்திருக்கிறேன் என்பது அல்ல; அது, அவர்தான் தரித்திருக்கச் செய்தார். அது நான் என்ன செய்தேன் என்பதல்ல; அது அவர் என்ன செய்தார் என்பதே. அது, “நான் புகைப் பிடிப்பதை விட்டுவிட்டேன்; பொய் சொல்வதை நான் விட்டுவிட்டேன்; திருடுவதை நான் விட்டுவிட்டேன்,” என்பதல்ல. அது அவர் எனக்காக மரித்த காரியம் ஆகும். அவர் என்னிலிருந்து என் ஆவியை வெளியே எடுத்து ஒரு புது சிருஷ்டியாக என்னை மாற்றிவிட்டார். இப்பொழுது கீழே உள்ள அடுத்த கேள்வி…இப்பொழுது சீக்கிரமாக இதை நாம் பார்ப்போம்.
10088. சரீரம், ஆத்துமா, மற்றும் ஆவி இவைகளுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன? அழுகிப்போக வேண்டியதாயிருக்கின்ற; நீங்கள் காண்கின்ற மாம்சம்தான் சரீரமாகும். இந்த சரீரமானது தகப்பன் மற்றும் தாயினுடைய பாலுணர்வின் வாஞ்சையினால் பிறந்ததாகும். இது அழுகிப்போக வேண்டும். இதனால் ஒரு நன்மையும் கிடையாது. ஆகையால், புதியப் பிறப்பில், உயிர்த்தெழுதலில், நீங்கள் ஒரு புதிய சரீரத்தில் கொண்டு வரப்படும்போது, அது தேவன் ஆதாமுக்குச் செய்தது போன்று அவருடைய சிருஷ்டிக்கும் வல்லமையாக அது இருக்கும், அப்பொழுது நீங்கள் வருவீர்கள். யோபு, “எனக்கு ஒரு வாஞ்சை உண்டு. அவர் பேச நான் அவருக்கு பதிலளிப்பேன்” என்றான். புரிகிறதா? இப்பொழுது, சரீரம் என்பது நீங்கள் காண்கிறதாய் உள்ளது, ஆவியோ உங்களை கட்டுப்படுத்துகிறதாயுள்ளது, உங்களுடைய ஆத்மா அந்த ஆவியின் நோக்கமாய் அல்லது அந்த ஆவியின் சுபாவமாய் இருக்கிறது. “பாவம் செய்கிற ஆத்துமா சாகும்.” நீங்கள் இந்த உலகத்தில் ஒரு பாவமுள்ள ஆத்துமாவோடு பிறந்திருக்கிறீர்கள். அது, உங்களுடைய ஆவியின் சுபாவம் பாவமுள்ளதாய் இருக்கிறது. நீங்கள் உலகத்தின் காரியங்களுக்காக ஏங்குகிறீர்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து உங்களை அபிஷேகித்து அந்த ஆவியின் சுபாவத்தை மாற்றுகிறார். அப்பொழுது உங்கள் மீது விடப்பட்டுள்ள அந்த சுபாவம் பரலோகத்துக்குரியதாய் உள்ளது. அதன்பின்னர் நீங்கள் ஒரு அந்நியரும் பரதேசியுமாயிருக்கிறீர்கள் என்று அறிக்கையிடுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் மேலிருந்து பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் மேலிருந்து வந்திருக்கிறீர்கள், நீங்கள் பரலோகத்தின் ஒரு பணியாளாய் இருக்கிறீர்கள், நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்கு ஒரு புது சிருஷ்டியாக இருக்கிறீர்கள், அதே சரீரத்தோடும், அதே ஆவியோடும், அது மாற்றப்பட்டு மாத்திரமே உள்ளது. மேலும் நீங்கள், இல்லை, அந்த ஆவியின் உங்களுடைய சுபாவம் அநீதியிலிருந்து நீதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அது ஆத்துமா, சரீரம், மற்றும் ஆவியாயுள்ளது.
10188b. சகோதரன் பிரான்ஹாம், கிறிஸ்துவாய் இருந்தாலொழிய வேறெந்த மனிதனும் கிறிஸ்துவின் கிரியைகளைச் செய்ய முடியுமா? இல்லை. இப்போது, நீங்கள், அன்புள்ள நபரே, நீங்கள் பொருட்படுத்துகிறதோ, அதாவது…? நான் அதை மறுபடியும் வாசிக்கட்டும். கிறிஸ்துவாய் இருந்தாலொழிய வேறெந்த மனிதனும் கிறிஸ்துவின் கிரியைகளைச் செய்ய முடியுமா? அதுதான் இது, “அவன் கிறிஸ்துவாய் இருந்தாலொழிய?” நிச்சயமாக. அப்படியே ஒரு நிமிடம், நாம் பரிசுத்த யோவானை எடுத்துக்கொள்வோம். பரிசுத்த யோவான் 14 வது அதிகாரம் மற்றும் நீங்கள் நோக்கி பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இப்பொழுது, உங்களால் இதை துரிதமாக புரிந்துகொள்ள கூடுமானால், எனவே நீங்கள்… பரிசுத்த யோவான் 14:12, இதுதான் என்று நான் நினைக்கிறேன். நாம் அதை துரிதமாகப் பார்ப்போம், இதைக் குறித்து இயேசு என்ன கூறினார் என்பதை கவனியுங்கள். சரி, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அவர்…” அது யாராயிருந்தாலும், “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.” எந்த மனிதனும், ஆயினும்…மனிதன்தானே கிறிஸ்துவாய் இருக்க முடியாது, ஆனால் கிறிஸ்துவின் கிரியைகள் ஒவ்வொரு விசுவாசியையும் பின்தொடரும். புரிகிறதா? அவர் கிறிஸ்துவின் திரியைகளை எந்த மனிதனுக்குள்ளும் செய்வார். “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.” “நான் செய்வேன்,” என்று அல்ல, “அவன் செய்வான், அவன்,” “நான்,” அல்ல. “ஆனால் என்னை விசுவாசிக்கிறவன் மற்றும் அவனுடைய விசுவாசத்தை என்னில் அறிக்கை செய்திருக்கிறவன் மற்றும் தனக்குத்தானே மரித்திருக்கிறவன் என்னுடைய ஆவி அவனுக்குள் வாசமாய் இருக்கிறது மற்றும் அவன் என்னுடைய ஒரு பாகமாகிறான்.” இப்பொழுது அது அவனை கிறிஸ்துவாக்குகிறதில்லை. அது அவனை மற்ற சபையோடு கிறிஸ்துவின் பாகமாக்குகிறது. சரி. அவன் கிறிஸ்துவல்ல, ஏனென்றால் அது அந்திக்கிறிஸ்துவாய் இருக்கும், நீங்கள் பாருங்கள். அவன் கிறிஸ்தவனிடத்தில் இருந்து பிரிந்து செல்கிறான். ஆனால் எந்த விசுவாசியும், கிறிஸ்துவின் கிரியைகளை செய்கின்றவனாக, அவன் இருக்க முடியும். சரி. 88c. ஆசிர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த வேதவாக்கியங்களில் இருந்து வீணாக திரும்பத் திரும்ப கூறுவதற்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நாம் அறிவோம், ஏன் சில இடங்களில் பரிசுத்த ஆவி என்ற வார்த்தை [ ஹோலி ஸ்பிரிட் என்று ஆங்கிலத்தில்—ஆசி.] உபயோகிக்கப்படுகின்றதையும் மற்ற இடங்களில் பரிசுத்த ஆவி என்ற வார்த்தை [ ஹோலி கோஸ்ட் என்று ஆங்கிலத்தில்—ஆசி.] உபயோகிக்கப்படுகின்றதையும் எனக்கு தயவு செய்து சொல்லுங்கள். இதைக் குறித்து சரியான ஒரு காரணம் இருக்கிறது என்பதை நான் அறிவேன்…ஏன் என்று இதற்கான காரணத்தை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். அது ஒரே வார்த்தையாக இருக்கிறது. ஆவிக்கு [ஆங்கிலத்தில் ஸ்பிரிட் மற்றும் கோஸ்ட்] என்று உள்ளதும் ஒன்று தான். ஒரு கோஸ்ட் அல்லது ஒரு ஸ்பிரிட் என்று வேறுபாடு ஏதுமில்லை; அவைகள் ஒரே மாதிரியானவை, ஒரே மாதிரியே. சரி. இப்பொழுது நாம் முடிவாக உள்ள கேள்விகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம், இப்பொழுது. 88d. உங்களோடு உள்ள அந்த அக்கினி ஸ்தம்பம் என்றால் என்ன? அது ஒரு நன்மையான ஒன்றாய் இருக்கிறது! கிறிஸ்து! பரிசுத்த ஆவி! அது என்னோடு மாத்திரமல்ல, அது உங்களோடும் இருக்கிறது. அது அங்கே பிரசன்னமானது. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டனர் என்று வேதம் போதிக்கிறபோது, என்ன சம்பவித்தது? ஒரு அக்கினி ஸ்தம்பம் அவர்களைப் பின்தொடர்ந்தது. அற்புதங்களை செய்தது இஸ்ரவேல் புத்திரர் அல்ல, அது அவர்களைப் பின்தொடர்ந்த அக்கினி ஸ்தம்பமாக இருந்தது. அது சரிதானே? உடன்படிக்கையின் தூதனாய் இருந்த, அந்த லோகாஸை எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? ஏன், உண்மையாகவே, அது உடன்படிக்கையின் தூதனாய் இருந்தது என்பதை நாம் அறிவோம். சரி. அது கிறிஸ்துவாய் இருந்தது. எகிப்தின் ஐஸ்வரியங்களைக் காட்டிலும்…கிறிஸ்துவின் ஐஸ்வரியங்களே மகத்தான பொக்கிஷங்கள் என்று மோச எண்ணினான். அது சரிதானே? சரி.
102அப்பொழுது கிறிஸ்துவாய், லோகாஸாய், விடிவெள்ளி நட்சத்திரமாய், அல்பாவாக, ஓமேகாவாக இருந்தது. அவர் பூமிக்கு வந்தார். அவர் அநேக சமயங்களில் காணப்பட்டார். மேலும்—மேலும் நாம் அதை என்னவென்று அழைப்போம் என்றால், ஒரு ஆவிக்குரிய சரீரம் என்றே என்று, நான் யூகிக்கிறேன். அவர்கள் மனித ரூபத்தை இதில் அங்கே முன்னர் ஆரம்ப ஏற்பாட்டில் கண்டனர். ஆனால் அவர் மாம்சமாகி நமது மத்தியிலே வாசம் செய்தார், தேவன் அவருக்குள் பரிபூரணமாக வாசம் செய்தார். சரி. அப்பொழுது அவர், “இன்னும் கொஞ்சம் காலத்திலே உலகம் என்னைக் காணாது. அதே சமயத்தில் நீங்கள் என்னை காண்பீர்கள் ஏனென்றால் நான் உங்களோடு இருப்பேன்…” என்றார். அது சரிதானே? “உலகத்தின் முடிவு பரியந்தம். நான் எங்கிருந்து வந்தேன்…” என்ன? “தேவன்; நான் தேவனிடத்திற்குப் போகிறேன்.” அது சரிதானே? அப்படியானால் அவர் (எதிலிருந்து?) அக்கினி ஸ்ம்பத்திலிருந்து வந்தார். அது சரிதானே? அப்படியானால் அவர் (எதற்கு?) அக்கினி ஸ்தம்பத்திற்குத் திரும்பினார். பவுல் தமஸ்குவிற்கு செல்லும் தன்னுடைய பாதையில் இருந்தபோது அந்த அக்கினி ஸ்தம்பம் அவனை சந்தித்து அவனை குருடாக்கியது. அது சரிதானே? அவர், “சவுலே, சவுலே, நீ ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்?” என்றார். அவன், “ஆண்டவரே…” என்றான். நீங்கள் கவனிப்பீர்களேயானால், ஆங்கிலத்தில் அந்த முதல் எழுத்து எல் என்பது பெரிய எழுத்தில் “ஏலோகிம்” என்று உள்ளது. “ஆண்டவரே நீர் யார்?” அதற்கு அவர், “நான் இயேசு” என்றார். அக்கினி ஸ்தம்பம். அவருடைய காணக்கூடிய பிரசன்னமாகுதலுக்கு முன்னர் இங்கே அவர் இந்த கடைசி நாட்களில் இருக்கிறார், அவர்கள் அதைக் குறித்த ஒரு புகைப்படத்தை எடுக்கும் வரை அவருடைய ஆவியை அவ்வளவு ஆதிக்கமாகவும் அவ்வளவு தத்ரூபமாகவும் அனுப்புகிறார். இங்கே அது சபைக்குள்ளாக வந்து, பரிசுத்த ஆவியின் உதவியினால், அதை இப்பொழுதே செய்ய முடிகிறது, உங்களுடைய இருதயத்தில் வெளிப்படுத்த முடியாத ஒரு ரகசியமும் இருக்க முடியாது. அது தேவனுடைய வார்த்தை என்று, எபிரெயர் 4-ம் அதிகாரத்தில் வேதம் கூறியுள்ளது; இயேசு வார்த்தையாய் இருக்கிறார். “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” அது சரிதானே? “வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாக இருக்கிறது. ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” அப்படித்தான் அது உள்ளது. அது நான் அல்ல. அது நீங்களும் அல்ல. அது அவராய் இருக்கிறது. அதுவே அதைப் பின்தொடர்கிற அக்கினி ஸ்தம்பம். அது பரிசுத்த ஆவியாய் இருக்கிறது; பரலோகத்தின் தேவன்; லோகாஸ்; இயேசு கிறிஸ்து; அல்பா, ஓமேகா; இருந்தவர், இருக்கிறவர், வருகிறவர்; தாவீதின் வேரும் சந்ததியுமானவர்; விடிவெள்ளி நட்சத்திரம்; நான் இருக்கிறேன்; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; ஆலோசனைக் கர்த்தா, சமாதான பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா; அற்புதமானவர். அது அவராகும். அவரை…அவருடைய நாமத்தைச் சொல்ல உங்களால் போதிய பட்டப் பெயர்களைக் கண்டறிய முடியாது. நான் இதன் பேரில் துரிதமாக முடிப்பேன், இதுவே அந்த பெரிய ஒன்றாக உள்ளது.
10389. சகோதரன் பிரான்ஹாம்: ஏவாள் பிசாசினால் காயீனை கர்ப்பந்தரித்தாள் என்கின்ற உங்களுடைய கருத்தை தயவு கூர்ந்து நீங்கள் விளக்கி கூறமுடியுமா? 172 நானாக அதைக் கூறினதே கிடையாது; ஏவாள் காயீனை சர்ப்பத்தினால் கர்ப்பந்தரித்தாள் என்று கூறினேன். ஆதியாகமம் 4ம் அதிகாரம் 1ம் வசனம், “ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று, ‘தேவனால் ஒரு மனுஷனைப் பெற்றேன்’” என்று கூறினாள் என்று, தெளிவாகக் கூறுகின்றது. நிச்சயமாக! எல்லா ஜீவனும் தேவனிடத்திலிருந்துதான் வரவேண்டும். ஜான் டில்லிங்கர் தேவனிடத்திலிருந்துதான் வந்தான். அடால்ப் ஹிட்லர் தேவனிடமிருந்துதான் வந்தான். ஒவ்வொரு…ஜார்ஜ்—ஜார்ஜ் ஒயிட்ஃபீல்ட் தேவனிடமிருந்து வந்தார், அதேபோன்று பாப் இங்கர்சால் கூட. ஒவ்வொரு நபரும் தேவனிடத்திலிருந்து வந்தவர்கள் தான். 173 நான் கூறினதெல்லாம் இதுதான்: இதை யாராவது மறுக்க முடியுமா என்று பார்க்கிறேன். புரிகிறதா? அவர் (ஆதியாகமம் 3:8-ல்) உண்டாக்குவேன் என்று கூறினார். நான்…அந்த…இந்த கேள்வியானது ஏவாளுக்கு ஏதோ ஒன்று நேர்ந்தபோது கேட்கப்பட்டது, அவள் சர்ப்பத்தை சந்தித்தாள்… இப்பொழுது சர்ப்பமானது ஒரு பாம்பாக இருக்கவில்லை; அவன் ஒரு மிருகமாக இருந்தான், சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரமுள்ளவனாயிருந்தான். அங்கே ஒன்றுமே இல்லாதிருந்தது… 174 மனிதனையும் குரங்கையும் ஒன்றாக இணைத்துக் காட்டக்கூடிய ஏதோ ஒரு மிருகத்தின் எலும்பை இன்றைக்கு விஞ்ஞானமானது நோக்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு நெருங்கின இனமாக ஒரு வாலில்லா ஆப்பிரிக்க குரங்கு வகையை அவர்கள் கண்டெடுத்துள்ளனர். அவர்களால் ஒரு எலும்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கமாட்டார்கள், ஏனெனில் அது சர்ப்பமாயிருந்தது. இது தேவனுடைய வெளிப்பாடாகும். 175 கவனியுங்கள்! சர்ப்பமானது ஒரு வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்த மனிதனைப் போன்று, தேவனுக்கு—இல்லை மனிதனுக்கு அடுத்த நிலையில் இருந்த ஒன்று. ஆகவே அதுதான் ஒரேயொரு காரியமாகும். சாத்தான் வேறொரு விலங்கை உபயோகிக்க நேர்ந்திருந்ததேயானால், அந்த வித்தானது ஸ்திரீயினுடைய வித்துடன் கலந்திருக்காது. எந்த ஒரு விலங்கின் வித்துடனும் ஒரு மனிதனின் வித்தை உங்களால் கலக்க முடியாது. அது கிரியை செய்யாது. ஆனால் வித்தைக் கலக்கும் இந்த விலங்கிற்கு முற்றுபுள்ளி வைத்தாயிற்று—அது அழிந்துவிட்டது. தேவன் அவனை ஒரு பாம்பாக மாற்றிவிட்டார். ஆனால் நினைவிருக்கட்டும்… “ஏன் நீ ஒளிந்துகொண்டாய்? ஏன் நீ உன்னையே அத்தி இலைகளினால் மூடிக்கொண்டாய்?” என்றார். அப்பொழுது ஒரு சேனையிலுள்ளவர்கள் செய்வது போல அவர்கள் ஒருவரை நோக்கி ஒருவர் பழி சுமத்த ஆரம்பித்தனர். “பாருங்கள்.” ஆதாம், “நீர் எனக்கு தந்த ஸ்திரீயானவள், அதின் கனியை எடுக்கும்படிக்கு என்னை வசீகரித்தாள்” என்றான். 176 அதற்கு அந்த ஸ்திரீயானவள், “சர்ப்பமானது என்னை வஞ்சித்தது” என்றாள். இப்பொழுது, வஞ்சித்தல் என்றால் என்ன அர்த்தம்? “அவள்— அவன் என்னை வஞ்சித்தான்.”
104177 தேவன், “உன் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் நான் பகை உண்டாக்குவேன்” என்று கூறினார். வித்து! சர்ப்பத்திற்கு வித்தென்பது உண்மையாகவே இருந்தது, அது காயீனின் மூலமாக வந்தது. பெருவெள்ளம் ஏற்பட்ட காலம் வரை அறிவாற்றலுள்ளவர்கள், கல்வி அறிவுப்பெற்ற மக்கள் எல்லாருமே காயீனின் மூலமாகத்தான் வந்தனர். ஆபேல் பிறகு கொல்லப்பட்டான், இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலை பிரதிநிதித்துவப்படுத்தத்தக்கதாக அவனுடைய இடத்தில் சேத் எழுப்பப்பட்டான். அவனிலிருந்து ஆடு மேய்ப்பவர்கள், தாழ்மையான மக்கள் தேவபயமுள்ள மக்கள் இன்னும் பிறமக்கள் வந்தனர். இந்த பிரபஞ்சத்தின் பிள்ளைகள் இராஜ்யத்தின் பிள்ளைகளைக் காட்டிலும் அறிவாளிகளாகவும், சாதுரியமானவர்களாயிருக்கிறார்கள் என்று இயேசு கூறினார். அது உண்மையே! 178 நம்மால் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அவர்களைப் போல உங்களை ஆக்கிக்கொள்ள முயற்சிக்காதீர்கள். தேவனுக்கு முன்பாக உங்களை தாழ்த்துங்கள். அறிவாளியாகவும் சாதுரியவானாகவும் இருக்க விருப்பம் கொள்ளாதீர்கள். இயேசுவை மாத்திரமே அறிந்துகொள்ள வாஞ்சை கொள்ளுங்கள் மற்றும் அதை அப்படியே விட்டுவிடுங்கள், ஏனெனில் அங்கேதான் இன்றைக்கு சர்ப்பத்தின் வித்தானது இருக்கின்றது. விஞ்ஞானிகளும், புத்திசாலியான மனிதர்களும், கல்வி அறிவுப்பெற்றவர்களும், மகத்தான மேதைகளும் தங்கள் சபைகளில் இருக்கிறார்கள் என்று மக்கள் பெருமை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய சபையை சார்ந்துள்ள ஒரு மனிதன் தன்னுடைய மொழியின் முதல் எழுத்துக்களை அறியாமல் இருந்தாலும் அவன் கிறிஸ்துவின் வித்தாக இருக்கும் வரை (சரியாக!) உண்மையாகவே தேவனை அறிந்திருந்துள்ள ஒருவனையே நான் பெற்றுக்கொள்ள விரும்புவேன்.
105179 ஸ்திரீயின் வித்தானது, கிறிஸ்துதான் அந்த ஸ்திரீயின் வித்தாயிருந்தார். கிறிஸ்துவை மரியாள் பிறப்பித்தாள். காயீன் யூதாஸ் காரியத்துக்குள் வந்ததுதான் சர்ப்பத்தின் வித்தாகும். அங்கே சரியாக இயேசு மற்றும் யூதாஸ் மனு உருவெடுத்திருந்தனர், தேவன் மற்றும் பிசாசு. கல்வாரி சிலுவையில் அங்கே நான்கு பேர் மரித்துக்கொண்டிருந்தனர். இயேசுவின் இரு பக்கத்திலும் கள்ளர் இருந்தனர், யூதாசும் ஒரு காட்டத்தி மரத்தில் தூக்கிலிட்டுக் கொண்டான், அதுவும் ஒரு சிலுவையாயிருந்தது: “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்.” அங்கே இருந்த ஒரு கள்ளன், “நீர் தேவனுடைய குமாரனானால், எங்களை கீழே இறங்கச் செய்யும்” என்றான். 180 மற்றவனோ, “கர்த்தாவே, நாங்கள் நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நீரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே. நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று கூறினான். இயேசு, “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசியிலிருப்பாய்” என்று கூறினார். 181 சுவிசேஷப் பிரசங்கியாகிய, இயேசு, சிலுவையின் மீது அங்கே பிரசங்கித்துக் கொண்டிருந்தார். சாத்தான் அவிசுவாசியாகிய, அந்த சர்ப்பத்தின் வித்தை தன்னுடன் எடுத்துக்கொண்டு, திரும்பவுமாக பாதாளத்திற்கு சென்று கொண்டிருந்தான். ஸ்திரீயின் வித்தாகிய, அவருடனே தேவன் ஒரு மனந்திரும்பின பாவியை பரலோகத்திற்கு திரும்பக் கொண்டு சென்றார். நிச்சயமாக! 182 அது பிசாசினுடைய வித்தல்ல; அது சர்ப்பத்தின் வித்தாக இருந்தது. சர்ப்பம் ஒரு வித்தைக் கொண்டிருந்தாகக் காணப்பட்டது; அதற்கு வித்து இருந்ததென்று வேதாகமம் கூறியுள்ளது. அந்த சர்ப்பத்தின் வித்தானது, இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் அதிகளவில்… இப்பொழுது, நீங்கள் அதன் பேரில் மற்றொரு கேள்வியை என்னிடம் கேட்கலாம். நமக்கு மாத்திரம் நேரம் இருந்தால், உங்களுக்கான எல்லா வார்த்தைகளையும் நான் வைத்துள்ளேன், மற்றும்…
10690. முதலாம் யோவான்5:18-ல் காணப்படுகின்ற “பாவஞ்செய்யான்” என்றால் என்ன என்பதை நீங்கள் தயவு கூர்ந்து விவரித்துக் கூறுவீர்களா? என்னே, நாம் இங்கே சரியாக அதில் இருக்கிறோம், என்று நான் விசுவாசிக்கிறேன். ஒருக்கால் அது…இதோ எடுத்துவிட்டேன்; சரியாக இதற்கு திருப்பினேன். ஒருக்கால் நான் இதை வாசிக்கவேண்டுமென்று கர்த்தர் விரும்பியிருக்கலாம். சரி, முதலாம் யோவான், தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று;… 183 நிச்சயமாக இல்லை! நான் அதை முழுவதும் விளக்கிக் கூறினேன். அவனால் பாவம் செய்ய முடியாது; அவன் தேவனால் பிறந்தவனாக இருக்கிறான். “பாவஞ்செய்யான்,” அவனால் பாவம் செய்ய முடியாது, வித்தானது அவனுக்குள்ளாக தரித்திருக்கும். இதற்கு ஒத்ததாக நீங்கள் ஒப்பீட்டுப் பார்க்க வேறொரு வேதவசனம் உள்ளது ரோமர் 4:8, 4 மற்றும் 5-8 தேவன்…சரியாக கூறினால், அநேக வருடங்களுக்கு முன்னர், தாவீது பேசினான், “எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்.” புரிகிறதா? உண்மையாகவே, அவன் பாவம் செய்கிறதில்லை.
107இப்பொழுது, இன்னும் ஒரு கேள்வி உள்ளது மற்றும் அவ்வளவு தான். 91. மத்தே-… (நாம் இதைப் பார்ப்போம்.) சகோதரன் பில், மத்தேயு 19:9-ல் காணப்படுகின்ற வேசித்தனம் மற்றும் விபச்சாரம் இவைகளுக்கு உள்ள வித்தியாசம் என்ன? 184 மத்தேயு 19:9-ல், இயேசு, “ஆதலால், எவனாகிலும் தன் மனைவி, வேசித்தனம் செய்த காரணத்தினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், விபாரஞ் செய்கிறவனாயிருப்பான்” என்று கூறினார். வேசித்தனம் மற்றும் விபச்சாரம் என்பதற்கிடையேயுள்ள வித்தியாசத்தைப் பொறுத்தமட்டில், இந்த வார்த்தையை எப்படி வேண்டுமானாலும் பொருத்தலாம். ஆனால் அவர் அங்கே எதைக் குறித்து பேசுகிறார் என்பதைத் தெளிவாக பார்ப்போமானால், அதாவது—திருமணமாகாத ஒரு பெண்ணால் விபச்சாரம் செய்ய முடியாது, ஏனென்றால், அவளுக்கு புருஷன் இல்லாமல் இருப்பதால் அவனுக்கு மாறாக அவளால் விபச்சாரம் செய்வதற்கில்லை. ஆனால் அது அவளுக்கோ ஒரு அசுத்தமான ஒன்றாகும். அவள் அவ்விதமாகச் செய்திருந்தால் அதை அவள் புருஷனுக்கு அவர்கள் இருவரும் விவாகமாவதற்கு முன்னதாகவே அவள் அறிக்கை செய்ய வேண்டும். அப்படி செய்யாதிருக்கும் பட்சத்தில் அவளுடைய புருஷனுக்கு பின்னர் அது தெரிய வருமானால், அவளை தள்ளிவிட அவனுக்கு உரிமை உள்ளது, ஏனெனில் அவள் ஒரு பொய்யான வாக்கை செய்தவளாகக் காணப்படுகிறாள். ஏனெனில் வேதாகமம், “இது நன்கு…” என்று கூறியுள்ளது இல்லை சடங்கு முறையானது அவ்வாறு கூறுகிறது, “இது உங்களுக்கு நன்றாக அறியப்படுவதாக (எனக்கும் அவ்வாறுதான் செய்யப்பட்டது) தேவனுடைய வார்த்தையின் பிரமாணம் அனுமதிக்கும் விதத்தைத் தவிர அதற்கு மாறாக தம்பதிகள் இணைக்கப்படுவார்களாயின், அவர்களுடைய விவாகம் சட்டப் பூர்வமான ஒன்றல்ல. நீங்கள் செய்யவேண்டியதென்ன என்று நான் கட்டளையிடுகிறதாவது இருதயத்தின் அந்தரங்கங்கள் எல்லாம் பகிரங்கமாக வெளிப்படத்தப்படப்போகின்ற அந்த நியாத்தீர்ப்பின் நாளிலே பதிலளிக்கப்போகிற உங்கள் இருவருக்கும் சட்டப்படியாக நீங்கள் இணைக்கப்படக்கூடாது என்று உங்கள் இருவருக்கும் ஏதாவது தடை இருக்குமானால், இப்பொழுதே அதை நீங்கள் அறிக்கையிடுங்கள்.” அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. புரிகிறதா? 185 ஆதலால் வேசித்தனம் என்பது ஒரு இளம் பெண், அவள் அசுத்தமான ஜீவியம் செய்வாளெனில், அது தான் வேசித்தனமாகும், ஏனெனில் அவளுக்கு புருஷன் இல்லை. ஆனால் அவளுக்கு விவாகமாகி, பிறகும் அதே விதமாகவே அவள் ஜீவிப்பாளெனில், அவள் தன் புருஷனுக்கெதிராக விபச்சாரம் செய்கிறாள்.
108186 சில காலத்திற்கு முன்னர் ஒரு பெண் என்னிடம் வந்தாள், அவள், “ஓ, நான் எல்லாவற்றையும் அறிக்கை செய்துவிட்டேன்” என்றாள். அவள் மிகவும் பதற்றம் கொண்டவளாக, நரம்புத்தளர்ச்சி கொண்டிருந்தாள், “அதைக் குறித்த எல்லாவற்றையும் தேவனிடம் அறிக்கை செய்துவிட்டேன்” என்றாள். 187 நான், “நீ அதை உன் புருஷனிடம் அறிக்கையிட வேண்டும். நீ தேவனுக்கெதிராக விபச்சாரம் செய்யவில்லை; உன் புருஷனுக்கெதிராகத்தான் விபச்சாரம் செய்தாய்” என்றேன். அது சரி. 188 ஆகவே ஒரு மனிதன் ஒரு பெண்ணை விவாகம் செய்யுமுன், அந்தப் பெண் அவனை விவாகம் செய்யும் முன்னர் அசுத்தமான ஜீவியம் செய்து, பிறகு அவள் அவனிடம் வந்து, அவர்கள் திருமணம் செய்து நீண்ட காலம் சென்று, பிறகு அவள் அவனிடம் “தேனே, உங்களிடம் ஒன்றை நான் கூற விரும்புகிறேன். நான் வேறொரு மனிதனுடன் வாழ்ந்து திரிந்து கொண்டிருந்தேன் என்பதை, உங்களிடம் நான் கூறவில்லை,” என்று கூறுவாளானால், அவன் அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் செய்ய இவனுக்கு உரிமையுண்டு என்று இயேசு கூறினார், ஏனெனில் துவக்கத்திலேயே இவர்களுக்கு விவாகமாகவில்லை, ஏனெனில் அவனுக்கு எதிராக ஒரு—ஒரு பொய்யை வஞ்சகமாக கூறியிருந்தாள்.
109இப்பொழுது, வேறொரு காரியம் இங்கேயிருக்கிறது…உங்களுக்கு நன்றி. 92. தயவுகூர்ந்து முதலாம் யோவான் 5:16 ஐ விளக்கிக் கூறவும். முதலாம் யோவான் 5, நமக்கு அது இங்கே கிடைத்துவிட்டது. மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல் செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அந்த பாவத்துக்கு வேண்டுதல் செய்ய நான் சொல்லேன். 189 சரி. நாம் பார்க்கையில்…இதற்கு நாம் நேரடியாக பதிலளித்து சீக்கிரமாக முடிப்போம், இது கடைசி ஒன்றாகும். நாம் மாற்குக்குத் திருப்புவோம், மரணத்துக்கு ஏதுவான பாவம் என்னவென்று சரியாக இது விளக்கும். மரணத்துக்கேதுவான ஒரு பாவமுண்டு, நீங்கள் அந்த பாவத்திற்காக ஜெபிக்கிறது கூட இல்லை. மரணத்துக்கேதுவான ஒரு பாவமுண்டு என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் அதற்காக ஜெபிப்பதும் கூட இல்லை. மாற்குக்குத் திருப்புங்கள், மாற்கு 3ஆம் அதிகாரம். மாற்கு 3 ஆம் அதிகாரம் நாம் எடுத்து பிறகு, சீக்கிரமாக முடிக்கும் முன்னர் இந்த ஒரு வேதவசனத்தை நாம் பார்ப்போம். நாம் 3 மற்றும் 22-க்கு திருப்புவோமாக. எருசலேலமிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயல்செபூலைக் கொண்டிருக்கிறான், (அவர் மக்கள் எண்ணங்களைப் பகுத்தறிந்ததை அவர்கள் கண்டிருந்தனர்.) …இவன் பெயல்செபூலைக் கொண்டிருக்கின்றான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். அவர்களை அவர் அழைத்து ஒரு உவமையாய் அவர்களுக்குச் சொன்னதாவது, சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?… (இப்பொழுது, பிசாசினால் சுகமளிக்க முடியுமானால், எப்படி அவனால் செய்ய முடியும்?)… சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலை நிற்கமாட்டாதே. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலை நிற்கமாட்டாமல், அழிந்துபோவானே. பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக் கூடாது. கட்டினானேயாகில், அவன் வீட்டை கொள்ளையிடுவான். எப்படி அவராலே அவர்களுடைய இருதயங்களுக்குள் சென்று அதை…கண்டுபிடிக்க முடிந்தது. (புரிகிறதா?) அது தேவனாய் இருக்கவில்லையா? மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்த தூஷணங்களும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்; ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ் சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான். (அதுதான் பிரிக்கப்படுதல்!) …(ஏன் அதை அவர் கூறினார்?)… அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்.
110190 கிறிஸ்துவுக்குள்ளிருந்து இந்த அற்புதங்களைச் செய்துகொண்டிருந்த தேவனுடைய ஆவியை இவ்விதமாக அழைத்தல், இவைகளைச் செய்தது பிசாசினுடைய ஆவி என்று அவர்கள் கூறினார்கள்; இதுதான் மன்னிக்க முடியாத பாவம் என்று இயேசு கூறினார். ஆகவே நீங்கள் ஒரு மனிதனைப் பார்த்தல்…அவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசி, பரிசுத்த ஆவியை பரியாசம் செய்வானானால் அவனுக்காக நீங்கள் ஜெபம்—ஜெபம் செய்யாதீர்கள், அவ்விதமான ஒரு நபருக்கு ஜெபம் செய்ய நீங்கள் தடைசெய்யப்பட்டிருக்கிறீர்கள். அதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? ஏனெனில் மரணத்துக்கேதுவான பாவமுண்டு. ஒரே ஒரு பாவம் மாத்திரமே உண்டு. எல்லா விதமான பாவமும் மனுஷ குமாரர்களுக்கு மன்னிக்கப்படும், ஆனால் பரிசுத்த ஆவியை தூஷித்தால் அது மன்னிக்கப்படவே முடியாது என்று இயேசு கூறினார். 191 இப்பொழுது மக்கள், “சரி, பரிசுத்த ஆவியை தூஷித்தல்…” எனலாம். தூஷணம் என்றால் என்ன? “அதைக் குறித்துப் பேசி, கேலியாகப் பேசி, பரியாசம் செய்தல், தூஷணம்” என்று அர்த்தமாகும். சரி! 192 அவரை என்னவென்று தூஷணம் செய்தார்கள்? அவரை கிரியை நடப்பிக்கச் செய்து, அவர் செய்துகொண்டிருந்த காரியங்களை நடப்பிக்கச் செய்து, அவருக்குள் இருந்த பரிசுத்த ஆவியானவரைப் பற்றிச் சொல்லி, அவர்கள், “இவன் பிசாசாகிய, பெயல்செபூலினாலே பீடிக்கப்பட்டுள்ளான். இவனுக்குள் இருக்கின்ற குறி சொல்லுகின்ற ஒருவன், அதாவது பிசாசுதான் இவன் இந்த காரியங்களை நடப்பிக்கும்படிக்குச் செய்கிறான். மக்களுடைய இருதயத்திலுள்ள அந்தரங்கங்களை அறிதல், பிலிப்பு கூட்டத்திற்கு வருமுன்னர் அவன் யார் என்று அறிந்ததாக இவர் கூறுதல், பிசாசுகளை துரத்துதல், இங்கே இந்த காரியங்களைச் செய்தல், இவன் பெயல்செபூலினாலே இதைச் செய்கிறான், இவன் ஒரு பிசாசு” என்று கூறினர். ஆகவே இயேசு இந்த பாவம் ஒருபோதும் மன்னிக்கப்படாது, எனவே இது ஜெபிக்கப்பட முடியாத மன்னிக்கப்பட முடியாத ஒரு பாவமாகும். இது மன்னிக்கப்பட முடியாது. இதை செய்கின்ற ஒரு மனிதனோ அல்லது பெண்ணோ தங்களை, என்றென்றுமாக நித்தியமாக தேவனுடைய பிரசன்னத்திற்குள் வரமுடியாதபடிக்கு முத்திரையிட்டுக் கொண்டார்கள், இவர்களுக்கு மன்னிப்பேயில்லை என்று கூறினார்.
111நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரைநேசிக்கிறேன் ஏனென்றால் முந்தி அவர் என்னை நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. 193 கவனியுங்கள், நீங்கள் மிக அருமையாக இருந்தீர்கள், இந்த கேள்விகள் கடினமானவைகளாக இருக்கின்றன, இவை ஒரு நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டன. இப்பொழுது நீங்கள் இந்த சபைக்குள் ஏழு முப்பது, எட்டு முப்பது, ஒன்பது முப்பது, இரண்டரை மணி நேரமாக, இந்த உஷ்ணமான சபையில் உட்கார்ந்து கொண்டிருந்தீர்கள். நீங்கள் அங்கே அப்படியே உட்கார்ந்திருப்பதற்காக வரவில்லை. இந்த நேரம் வரை சபையாரில் தொண்னூற்றெட்டு சதவீதம் தங்கள் இருக்கையில் அப்படியே இருந்தனர். இதை நான் கூற விரும்புகிறேன்: ஜெபர்சன்வில்லே, நான் இதை உணர்கிறேன்; நீ இந்த கிருபையின் நாளிலே, பாவத்துக்குள்ளாகி விலகிச் சென்றாய். அதை, நான் நம்புகிறேன். முழு அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இதுவேதான் என நான் நம்புகிறேன், ஆனால் உலகத்திலேயே எனக்கு மிகவும் உத்தமமான நண்பர்களில் சிலர் சரியாக இங்கே ஜெபர்சன்வில்லில் இருக்கின்றனர். எனக்காக மரிக்கவும் தயாராக உள்ள மக்கள் இங்கே எனக்குண்டு.
112194 இப்பொழுது, இவ்வாறுள்ள ஒரு உஷ்ணமான இரவு பொழுதில், நம்முடைய வாசலில் உள்ள அந்நியர்கள், ஒருக்கால் நான் வேதவசனங்களின் பேரில் பேசி அதை விவரித்த விதத்தைக்கூட விசுவாசிக்காத ஒரு நபர் இங்கே எப்படி அமர்ந்துகொண்டிருப்பார் என்பதை எனக்கு கூறுங்கள், ஆனால் அவர்களோ பயபக்தியுடன் தேவபயத்துடனே உட்கார்ந்து அதைக் கவனித்தனர். நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்களாக; நட்சத்திரங்கள் தூசிகளாய் மாறினாலும், நீங்கள் தாமே கிறிஸ்து இயேசுவில் வாழ்ந்துகொண்டேயிருப்பீர்களாக. உங்களுக்கு தேவையாயிருக்கின்ற எல்லாவற்றையும் தேவன் அளிப்பாராக. உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையெல்லாவற்றையும் அவர் உங்களுக்கு அளிப்பாராக. நான் அவருடைய ஊழியக்காரன் என நீங்கள் விசுவாசித்து மற்றும் என்னுடைய ஜெபங்கள் உங்களுக்கு உதவும் என்று விசுவாசித்தால், நம்முடைய பாவங்களுக்கு பரிகாரமாக, நமக்காக மரித்த, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எழுப்பின பரலோகத்தின் தேவனானவர், இங்கே இப்பொழுது இந்த கட்டிடத்தில் உள்ள, சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் நிறைந்தவராகிய, அவர் தாமே உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே, உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் ஏறெடுக்கும் உத்தமமான ஜெபமாகும். சூரியன் உங்கள்மேல் வந்து உங்களை சுட்டெரித்துப்போடாத உஷ்ணமான காற்றுகள், உங்கள் மீது வீசாத ஒரு தேசத்திலே, நான் உங்களுடன் வருடக்கணக்காக இலட்சக்கணக்கான வருடங்களாக உங்கள் ஒவ்வொருவருடனும் கூட தேவனுடைய ராஜ்யத்தில் உட்கார்ந்து, இந்த இரவினுடைய நித்தியமான காரியங்களையும், மற்ற காரியங்களையும், மற்றும் எப்படியெல்லாம் நாம் ஒன்றாக உட்கார்ந்திருந்தோம் என்பதைப் பற்றி பேசுவேன் என நான் நம்புகிறேன். எனக்குள்ள எல்லாவற்றோடும் என்னுடைய முழு இருதயத்தோடும் நான் பொருட்படுத்தி கூறுகிறேன். தேவன் உங்களுக்கு, ஒவ்வொருவருக்கும் அதை அளிக்க வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன்.
113195 அவருடைய கிருபை தாமே உங்களுடன் இருப்பதாக. உங்களுடைய வியாதிகளிலிருந்து அவர் உங்களை சுகப்படுத்துவாராக. அவர்தாமே உங்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொடுப்பாராக. இதை நான் இப்பொழுது எவ்வித அவமதிப்பும் இல்லாமல் …கூறுகிறேன், சர்ப்பதின் வித்தைக் குறித்தும், இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானத்தைக் குறித்தும், மற்றவைகளைக் குறித்தும் நான் கூறினது ஏதாவது மனஸ்தாபத்தை விளைவித்திருக்குமானால்… 196 இப்பொழுது ஒருவர், “சகோதரன் பிரன்ஹாம் ஒருத்துவக்காரர்” என்று கூறுகிறார். இல்லை, ஐயா. நான் ஒருத்துவக்காரன் அல்ல. இயேசுவே தம்முடைய சொந்த பிதாவாக இருப்பார் என்று நான் நம்புவதில்லை. இயேசு ஒரு பிதாவைக் கொண்டிருந்தார் என்றும் அவர்தான் தேவன் என்றும் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் தேவன் இயேசு என்று அழைக்கப்பட்ட இந்த சரீரத்திற்குள்ளாக கூடாரமிட்டு வாசம் செய்தார், அவர் இம்மானுவேலாய், தேவன் நம்மோடு இருக்கிறவராய் இருந்தார். இந்த தேவனைத் தவிர வேறே தேவன் கிடையாது. அவர்தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. ஆகவே பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம்: பிதா, கர்த்தர்; குமாரன், இயேசு; பரிசுத்த ஆவி, லோகாஸ், தேவனுடைய ஆவி. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து; அது அவராகும். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது.
114197 சந்தேகத்திற்கிடமின்றி நான் விசுவாசிப்பதோ, நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றோ, தெளிக்கப்பட்டோ, ஊற்றப்பட்டோ அல்லது எந்த விதத்திலோ இருந்தாலும், உங்களை நான் நேசித்து, நீங்களும் நானும் தேவனுடைய ராஜ்யத்தில் சந்திப்போம் என்று என் முழு ஆத்துமாவோடும் சரீரத்தோடும் நான் ஜெபிக்கிறேன், நான் தவறாயிருந்தால், தேவன், என்னை மன்னித்து விட்டுவிடுவார், நீங்களும் தவறாயிருந்தால், உங்களுடைய தவற்றையும் மன்னித்து விட்டுவிடுவார். ஆனால் வேதாகமத்தை பொறுத்தவரை என்னுடைய உறுதியான நம்பிக்கையானது, ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை சரியாக இலக்கை அடிக்க வேண்டும் என்பதேயாகும், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்கவில்லையெனில் மறுபடியுமாக நீங்கள் அவ்விதமாக எடுக்க வேண்டும் என நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன்.
115198 நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லையெனில், உங்கள் ஜீவியம் இனிமையை உணராதிருந்தால், நீங்கள் அந்நிய பாஷையில் பேசியிருந்தாலும், நீங்கள் சத்தம் போட்டிருந்தாலும், நீங்கள் மேலும் கீழும் குதித்திருந்தாலும், நீங்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்து அவர்கள் சுகமாக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் எல்லாவிதமான அற்புதங்களும் அடையாளங்களும் செய்திருந்தாலும் அவை ஒரு பொருட்டல்ல, நீங்கள் ஆவியின் கனிகளாகிய, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, பொறுமை, விசுவாசம் ஆகிய இந்த எல்லா காரியங்களும் உங்களிடம் காணப்படவில்லையெனில், அப்படியானால் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்கு கட்டளையிட்டு உங்களை கட்டாயம்பண்ணுவதென்னவெனில், பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது வரும் வரைக்கும் இடைவிடாமல் ஜெபித்துக்கொண்டேயிருங்கள்! நீங்கள் எவ்வளவாக அந்நிய பாஷையில் பேசியிருந்தாலும், எவ்வளவாய் நீங்கள் சத்தமிட்டிருந்தாலும், எவ்வளவு காலமாக ஒரு சபையின் அங்கத்தினராக நீங்கள் இருந்திருந்தாலும், நீங்கள் இங்கே இருந்திருந்தாலும், அது ஒரு பொருட்டேயல்ல, நீங்கள் என்னவெல்லாம் செய்திருந்தாலும், பரிசுத்த ஆவியானவராகிய கிறிஸ்து உங்களுடைய இருதயத்தில் தம்முடைய ஸ்தானத்தை எடுக்கும் வரை, நீங்கள் உலகத்தின் காரியங்களுக்கெல்லாம் மரித்து, கிறிஸ்துவிற்காக புதிய சிருஷ்டியாக ஜீவிக்கும்வரை, அவையெல்லாம் ஒன்றுமே கிடையாது.
116199 தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாகும். இப்பொழுது நாம் எழுந்து நிற்போமாக. ஓ, இது ஒரு அருமையான சபைக்கூட்டம். நீங்கள் மிக அருமையாக இருந்தீர்கள்; இப்படியே நீங்கள் நிற்கும்படிக்கு விடுவதை நான் வெறுக்கிறேன். [ஒரு சகோதரன் சகோதரன் பிரான்ஹாமிடத்தில் பேசுகிறார்—ஆசி.] அங்கே பின்னால் இருக்கும் சிறு எடித்தின் பிறந்த நாள் இதுவாகும். எடித், என்னால் எண்ண முடிந்த உன்னுடைய…இதை உங்களுக்காக சகோதரன் நெவிலை நான் செய்யச் சொல்லப்போகிறேன். (இங்கே வா.) இந்த வாலிப பெண்ணிற்கு என்ன வயதாகிறதென்று நாம் கண்டறிவோம். [சகோதரன் நெவில், “முப்பத்தெட்டு” என்கிறார்.] முப்பத்தெட்டு வயது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. டேவிட், எங்களுக்கு ஒன்றை கொடுங்கள்…நான் கூறுவதோ, டெடி, சரி, உன்னால் கூடுமானால், உனக்கு மகிழ்சியான பிறந்த நாளாயிருப்பதாக என்னும் பாடலுக்கு, ஒரு சுருதியைக் கொடுங்கள். உனக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாயிருப்பதாக; உனக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாயிருப்பதாக; சகோதரி எடித், மகிழ்ச்சியான பிறந்தநாளாயிருப்பதாக; உனக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாயிருப்பதாக. இப்பொழுது, சபையாரெல்லாருமாக சேர்ந்து, ஒருபோதும் வயோதிகராவதில்லை. வாருங்கள், இப்பொழுது எல்லோருமாக சேர்ந்து பாடுவோம். ஒருபோதும் வயோதிகராவதில்லை, ஒருபோதும் வயோதிகராவதில்லை. அந்த தேசத்திலே நாம் ஒருபோதும் வயோதிகராகமாட்டோம்; ஒருபோதும் வயோதிகராவதில்லை, அங்கு நாம் ஒருபோதும் வயோதிகராகமாட்டோம், அந்த தேசத்திலே நாம் ஒருபோதும் வயோதிகராகமாட்டோம். அந்த இனிமையிலே… நாம் அழகான அக்கரையிலே சந்திப்போம்; சீக்கிரத்தில் அந்த இனிமையிலே, நாம் அழகான அக்கரையிலே சந்திப்போம். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஓ, அவர் அற்புதமானவராய் இருக்கிறார். மிகவும் நல்லவராக, மிகுந்த தயவுள்ளவராக இருக்கிறார். ஒரு சிறு குழந்தையின் பிரதிஷ்டை உண்டா?