1நான்... நாம் இப்பொழுதே ஆராதனையை முடித்துவிட்டால்கூட, இந்தச் சாட்சிகளைக் கேட்டதில் எனக்கு மிகச் சிறந்த உண்டாயிருந்தது என்று நான் சொல்லுவேன். மேலும்—மேலும் நான் உள்ளே நடந்து வந்து இந்தச் சிறிய கூடாரம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதைக் காணும்போது, இங்கே யூடிகாவைச் (Utica) சுற்றியுள்ள மக்கள் சபைக்கு வராதபடிக்குத் தங்களுக்குப் போக்குச்சொல்ல இடமில்லை, அல்லவா? ஒரு அருமையான, சௌகரியமான, அழகான ஸ்தலமாக இதை உருவாக்குவதற்கு, நிச்சயமாகவே இவர்கள் இங்கே மிகச் சிறந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். அன்றியும், நீங்கள் – நீங்கள் - நீங்கள் ஏதோ ஒருவித சங்கடமாக உணரத்தக்க வகையில் இந்த இடம் மிகவும் ஆடம்பரமானதாக (ritzy) இல்லாமல், உண்மையாகவே மிகவும் வசதியாக, நேர்த்தியாக, சுத்தமாக, அழகாக இருக்கிறது. சபையில் இதை நான் விரும்புகிறேன்.
2சகோதரன் கிரஹாம் (Graham) வாசித்த அச்சிறு கவிதை, அவை இரண்டுமே மிகச்சரியாக இருந்தன. நீங்கள் அறிவீர்களா... பொதுவாக மற்றவர்களைக் குறைகூறித் தாழ்த்துகிறவர்கள், தாங்கள் செய்த பிழைகளில் ஒருபோதும் அகப்படாதவர்களாக இருப்பார்கள். ஆனால் சகோதரன் கிரஹாம் அவர்களே, நானோ பலமுறை பிழைகளில் அகப்பட்டிருக்கிறேன், ஆதலால் அதின் அர்த்தம் என்னவென்பதை நான் நன்கு அறிவேன்.
3ஒருமுறை எனக்குச் சொல்லப்பட்டது, அதாவது பல்லார்ட் அண்ட் பல்லார்ட் (Ballard and Ballard) நிறுவனத்தில் வேலை கிடைக்கும்படிக்கு ஒருவன் அங்கே சென்றான், அப்பொழுது அவர்கள் அவனிடம் ஒரு காகிதத்தில் தன் பேரைக் கையெழுத்திடக் கூறினர். அவன் தன் பேரைக் கையெழுத்திடச் சென்றபோது, அவன் எழுதுகோலின் நுனியில் அழிப்பான் எதுவுமில்லாதிருந்தது. அந்த மனிதன் அவனிடம் “உன்னிடம் அழிப்பான் இல்லையே” என்று கேட்டான். அதற்கு அவனோ, “பாரும், நான் தவறுகளே செய்வதில்லை” என்றான்.
4அப்பொழுது திரு.பல்லார்ட் “அப்படியானால் என்னால் உன்னை உபயோகிக்க இயலாது. நீ ஒரு காரியமும் செய்யப்போகிறதில்லை” என்றார். ஆகவே அது ... அதுதான் சரியானது என்றெண்ணுகிறேன். நாம் தவறுகளே செய்வதில்லை என்றால், நாம் எதையுமே செய்து கொண்டிருக்க மாட்டோம். ஆனால் ஒரு நபரிடம் நான் விரும்புவது என்னவென்றால், நீங்கள் ஒரு தவறு செய்வீர்களானால், ஒரு உண்மையான போர்வீரன் என்பவன் மீண்டும் எழுந்து முயற்சி செய்ய ஆயத்தமாக இருப்பான். நாங்கள் பாடக்கூடிய சிறு பாடல் ஒன்று உண்டு.
5நான் விழுந்தாலும், தோற்றாலும் (அதுவோ அல்லது வேறு ஏதோ) நான் எழுந்து மீண்டும் முயற்சிக்கச்செய்யும்; கர்த்தாவே என்னை மன்னியும், மீண்டுமொரு விசை என்னைச் சோதித்தறியும். “நான் எழுந்து மீண்டும் முயற்சிக்கும்படிச் செய்யும்” என நானே என்னைக்குறித்து வெட்கமடையும் மட்டுமாக தேவனிடம் மிக அதிகமாய் அதை வேண்டியிருக்கிறேன். தொடர்ந்து விழுந்த போதிலும், ஒவ்வொரு முறையும், நான் மீண்டும் திரும்பி வருவதற்கு எனக்குச் சகாயம் செய்ய அவர் இரக்கமுள்ளவராகவே இருந்திருக்கிறார்.
6இப்பொழுது, நாம் இதைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், ஒரு நாளில், ஒரு மணிநேரம் கூட, நாம் ஏதாவது ஒரு தவறைச்செய்யாமல் இருப்பது அரிது. மேலும் சிறிய தவறுகள் அல்லது பெரிய தவறுகள் என்று எதுவுமில்லை, தேவனுக்கு முன்பாக அவை யாவும் பெரிய தவறுகளே. ஆனபடியால், அப்போஸ்தலனாகிய பவுல் அநுதினமும் சாக வேண்டியிருந்தால், நாம் இன்னும் எவ்வளவு அதிகமாய் அநுதினமும் சாக வேண்டியிருக்கும்! புரிகிறதா?
7அன்றியும், ஒரு நபர் ஏதோவொரு தவறைச் செய்தபின், அதைச் சரிசெய்ய வாஞ்சிக்கும்போது, அவனை மன்னிப்பதுதான் ஒரு உண்மையான கிறிஸ்தவ மனப்பான்மையாகும். சகோதரன் கிரஹாமே, இன்றைய சபை ஜனங்கள் அதைத்தான் பெரிதும் தவறவிடுகின்றனர் என்று நான் நினைக்கிறேன். அந்த மனுஷனை மீண்டும் தூக்கிவிட முயற்சிப்பதற்குப் பதிலாக, அவர்கள் இன்னும் கீழே தள்ளிக்கொண்டே செல்கிறார்கள். புரிகிறதா? ஏனென்றால், கிறிஸ்துவும், நாம் கீழான நிலையிலிருந்த போது, அவர் தாழ வந்து நம்மைத் தூக்கியெடுத்தாரே, ஆகையால் நாமும் அவ்விதமான ஆவியை உடையவர்களாயிருக்க வேண்டும்.
8என்னால் அவன் பெயரை இப்பொழுது சொல்ல முடியவில்லை; உங்களில் சில சகோதரர்களால் கூற முடியும். நான் இங்கே வந்தது முதற்கொண்டு அதைத்தான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். பவுல், தப்பியோடிப்போன ஒரு அடிமையைச் சந்தித்தான். அவன் பேர் என்னவென்று இப்போது என் நினைவுக்கு வரவில்லை. எப்படி யாயினும், அவன் ஒரு பெரும் கடனைச் செலுத்த வேண்டியவனாக இருந்தான். பவுல் கிறிஸ்துவிடம் அவ்வளவு அதிகம் அன்பு கூர்ந்தவனாய் இருந்ததால், அந்த அடிமையின் எஜமானுக்குச் செய்தி அனுப்பினான். அவன் "இப்பொழுது அவன் ஒரு பிரியமான சகோதரனாகி விட்டதால், அவன் செய்த எல்லாவற்றையும், உம்மிடத்தில் கடன்பட்ட யாவற்றையும், என் கணக்கிலே வைத்துக்கொள்ளும். நான் வரும்போது, நான் உமக்கு அதைச் செலுத்தித் தீர்ப்பேன்." என்று சொன்னான். பாருங்கள், பவுல் நீண்ட காலமாக ஒரு கிறிஸ்தவனாக இருந்ததால், அவன் — அவன் மன்னிப்பது என்றால் என்னவென்பதை, ஒருவனை மன்னிப்பதன் அர்த்தம் என்னவென்பதை அறிந்திருந்தான். அவன் தானே மன்னிக்கப் பட்டவனாயிருந்தான். உண்மையாகவே மன்னிக்கப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவனும், மன்னிப்பின் மேன்மையை அறிந்திருக்கிறான் என்று எண்ணுகிறேன்.
9சகோதரன் பஸ்டியைக் (Busty) குறித்துச் சகோதரன் கிரஹாம் அளித்த சாட்சியை இப்பொழுதுதான் கேட்டேன். அவர் சகோதரி கிரீச்சின் (Creech) தகப்பனாகிய சகோதரன் ரோட்ஜெர்ஸ் (Rodgers) ஆவார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்ட போது, புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தனர், எனவே அப்படியே தையலிட்டு மூடி விட்டனர். ஆகையால் அவருக்காக நாம் தொடர்ந்து ஜெபிப்போம். ஆனால் அதில் இனிமையான காரிய மொன்று என்னவென்றால்... அவரைச் சென்று பார்க்கும்படி சகோதரி கிரீச் என்னை அழைத்திருந்தாள், அவர் மருத்துவமனையில் இருந்தது எனக்குத் தெரியாதிருந்தது. நான் அந்த அறைக்குள் சென்றபோது, அவர் “சகோதரன் பில்”, “ஒருவர் மேல் கைகளை வைப்பதைப் பற்றி நீங்கள் யாவரும் பேசுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்” என்றார்.
10நான் அதற்கு “ஆம், பஸ்டி” என்றேன். நான் அவரை “பஸ்டி” என்றே அழைப்பேன். அது அவருடைய செல்லப்பெயர். உண்மையில் அவருடைய பேர் எவரெட் என்பதாகும். நான் “ஆமாம்” என்றேன்.
11அவர் சொன்னார் "நான் ஏன் இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிந்துகொண்டேன்” “நான் இங்கே வந்தது முதற்கொண்டு அவர் என்னோடே கூட இருக்கிறார்” என்றார். மேலும் அவர் "சற்று நேரத்திற்கு முன் ஏதோவொன்று என்மேல் தம் கைகளை வைத்தது” என்று கூறினார். அந்த அறையின் மூலையிலே அவர் வானவில்லைக் கண்டார். அப்பொழுதே ஏதோவொன்று கிரியை செய்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அந்த வேளை நெருங்கி விட்டது. ஆனால் அதற்குத் தேவனுடைய கிருபை... அவர் சகோதரி கிரீச்சினுடைய தகப்பன் என்பதனால் இதை நான் கூறவில்லை, ஆனால் அவர் ஒரு அருமையான மனிதர். பல வருஷங்களுக்கு முன்பே நான் அவருக்குக் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் சகோதரன் கிரஹாமே, நாம் காண விரும்புகிறபடி அவர் உண்மையான அர்ப்பணிக்கப்பட்ட, மறுபடியும் பிறந்த அனுபவத்தை அவர் பெற்றிருக்கவில்லை. அந்த மருத்துவ மனையில் அப்பொழுதுதான் அது சம்பவித்தது. அவர் ஒரு மாற்றப்பட்ட மனுஷனாயிருக்கிறார். அவருக்கு நித்திய ஜீவனை நியமித்த அந்த தேவனுடைய கிருபை, அவருக்கு ஒரு வானவில்லை அளித்தது. வானவில் என்பது ஒரு உடன்படிக்கையாயுள்ளது, தாம் இவருடன் செய்த உடன்படிக்கையைக் காத்துக்கொள்கிறார், அவரும் இப்போது கடந்து செல்வதற்கு ஆயத்தமாக இருக்கிறார். அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் முதலாம் உலகப்போரின் ஒரு முன்னாள் வீரர் ஆவார்.
12சற்று நேரத்திற்கு முன்பாக, அதாவது இன்று காலை, ஒரு பழைய தோழியைப் பார்ப்பதற்காக அழைக்கப்பட்டேன். அவளைக் கண்டுபிடிப்பதற்கு எனக்குச் சற்று கடினமாயிருந்தது. உங்களில் அநேகருக்கு நகரமையத்தில் இருக்கின்ற திருமதி மோரிசை (Morris) நினைவிருக்கும். சற்று முன்புதான் சகோதரன் ரடெல் (Ruddell) அங்கே காணச்சென்றார். அவள் பல நாட்களாகவே சுயநினைவற்ற நிலையில் இருக்கிறாள். எப்பொழுதும் யாரோவொருவரை அழைத்துக் கொண்டேயிருக்கிறாள். மேலும் நான் அவ்விடத்தை அடைந்த பின், உள்ளே சென்றபோது அவள் என் பெயரை அழைத்துக் கொண்டிருந்தாள். அவள் “பில்லி ஒரு அருமையான பையன்” “அவன் கடினமான காலத்தைக் கடந்து வந்திருக்கிறான்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். "நான் போவதற்கு முன்பாக அவனைப் பார்க்க விரும்புகிறேன்” என்றாள். பின்பு சற்று ஒரு நிமிஷம் காத்திருந்து, “நீங்கள் அவனை இதுவரை எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? நான் நான் பில்லியைப் பார்க்க வேண்டும்” என்றாள். அடுத்த சில நிமிஷங்களில், ஓ, நாற்பது, ஐம்பது வருஷங்களுக்கு முன்பு மரித்துப்போன தன் கணவனிடம் பேசினாள். தனக்கு அன்பானவர்களிடம் பேசத்தொடங்கினாள். அதின் அர்த்தம் என்னவென்று நீங்கள் அறிவீர்களா, அவள் அந்த வாசலுக்கு அருகே இருக்கிறாள் என்பதுதான் அதின் அர்த்தம்.
13அது விநோதமாக இல்லையா? அவள் எவ்வளவு பார்வையற்றவளாக இருந்து... இருண்ட உலகத்தில் இருந்தாலும்... அவள் தொண்ணூறு வயது உடையவளாயிருந்தாள், சரியாக தொண்ணூறு, அல்லது எண்பத் தொன்பது இருக்கும். இப்பொழுதோ, அப்படியிருப்பினும் மறுபுறத்தில் உள்ள காரியங்களைக் காணத்தக்கதாக, அவளுடைய கண்கள் மறுபுறத்திற்கு மிக அருகில் இருந்தது, ஆனால் இந்தப்புறத் திலுள்ளவற்றைக் காண இயலவில்லை. அதைக் குறித்து நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? நேசத்துக்குரிய ஒருவர் பாதையின் இறுதிக்கட்டத்திற்கு வரும்போது அவர்களைக் கவனித்திருக் கிறீர்களா? அவர்களைக் கவனித்துப் பாருங்கள்.
14என் பழைய சக ஊழியக்காரரான வயதுமுதிர்ந்த சகோதரன் பாஸ்வர்த் (Bosworth) ஏறக்குறைய இரண்டு வருஷங்களுக்கு முன்பு மரிக்கும் தருவாயில் இருந்தபோது, அவரைப் பார்ப்பதற்காக நான் புளோரிடாவிற்கு (Florida) விரைந்து சென்றேன், நானும் மீடாவும் சென்றோம். அவருக்குக் கிட்டத்தட்ட எண்பத்து - எண்பத்து நான்கு வயது என்று நினைக்கிறேன். அவர் என்னுடன் ஆப்பிரிக்காவில் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டுத்தான் திரும்பியிருந்தார். தேவபக்தி நிறைந்த இந்த வயதுமுதிர்ந்தவர் ஒரு சிறு மூலையில் படுத்திருந்தார். நான்..நான் உள்ளே சென்றபோது, எழுபது வருஷங்களாகப் பிரசங்கம் செய்திருந்த அந்தப் பழம்பெரும் போர்வீரரின் மெலிந்த கரங்கள் என்னை நோக்கி நீண்டன. நான் அவரை அப்படியே என் கரங்களில் அணைத்துக் கொண்டேன். “என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே” என்று கதறினேன்.
15நான் அவரோடு அந்தப்படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து, அவர் தலையை என் தோளின் மேல் சாய்த்துக்கொண்டேன். நான்... அவர் என்னை மெதுவாகத் தட்டிக்கொடுத்தவாறு சொன்னார் “மகனே, தோற்றுவிடாதே, ஊழியக்களங்களுக்கு விரைந்து செல், ஏனென்றால் நமக்கு அதிக நேரம் இல்லை” என்றார். நான் “நீர் கடந்துபோய்க் கொண்டிருக்கிறீர் என்பதை உணருகிறீரா?" என்று கேட்டேன்.
16அவர் "ஆம், நான் இன்னும் மிகச் சீக்கிரத்தில் போகப்போகிறேன்” என்றார். “சகோதரன் பிரன்ஹாமே, உம்மிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், என் வாழ்நாள் முழுவதிலுமே இதுதான் மிக மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது” என்று கூறினார்.
17அப்பொழுது நான் “சகோதரன் பாஸ்வர்த், நீர் – நீர் மரணத்தருவாயில் இருக்கும் போது ஏன் அப்படிச் சொல்லுகிறீர்” என்று கேட்டேன்.
18அதற்கு அவர் “ஏன், நான் இத்தனை வருஷங்களாக நேசித்த அந்த ஒருவர் எந்தக் கணத்திலும் என்னை அழைத்துச் செல்ல இந்த வாசல் வழியாக உள்ளே வருவதை எதிர்நோக்கியிருக்கிறேன்” என்றார். நான்... நானும் என் மனைவியும் அவரிடமிருந்து விடைபெற்றோம், பிறகு நாங்கள் திரும்பிச் சென்றபோது...
19அவர் மரிப்பதற்கு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்கு முன்பாக... உறங்கிக்கொண்டிருந்த அவர், விழித்தெழுந்திருந்து அந்த அறைக்குள் பார்த்தார். “அப்பா” என்று கூப்பிட்டு, தன் பலத்துடன் எழுந்து அவர் தந்தையுடனும் தாயுடனும் கைகளைக் குலுக்கினார். அவர் "இதோ சகோதரன் ஜான், ஐம்பது வருஷங்களுக்கு முன்பு என் கூட்டத்தில் நீர் மனமாற்றமடைந்தீர். இதோ இன்னார் இன்னார்” என்று கூறினார். அநேகமநேக ஆண்டுகளுக்கு முன்பு மரித்துப்போன தன் மனமாற்றமடைந் தவர்களுடன் கைகளைக் குலுக்கினார்.
20சிநேகிதரே, அப்படியானால் என்ன நடக்கிறது? இவை யாவும் எதைப்பற்றினது என்பதை நாம் இன்னமும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சில சமயங்களில் நாம் ஆராதிப்பதற்காக கூட்டங்களுக்கு வரும்போது கூட, நாம் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறோமோ என்று வியக்கிறேன், வெறுமனே ஒருவரையொருவர் சந்திப்பதற்காக மாத்திரம் வருவதாக எண்ணுகிறோம். அது நல்லதுதான் அதற்கான ஒரு நோக்கமிருக்கிறது, களிகூர்ந்து, ஒரு அருமையான நேரத்தைக்கொண்டிருப்பதாக எண்ணுகிறோம், அதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது, ஆனால் நாமோ ஒரு ஆயத்தமாக்கப்படுதலில் இருக்கின்றோம். நாம் ஏதோ ஒரு காரியத்திற்காக ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்.
21இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். மீண்டுமொரு முறை அதைச் சொல்வது நலமாக இருக்குமென்று நினைக்கிறேன். எனக்கு வயதாகத் தொடங்கி, என் வாழ்நாட்கள் குறைந்துவருவதைக் காணும்போது, சகோதரன் கிரஹாம் அவர்களே, இந்த வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகையில் ஒரு விதத்தில் அது ஒரு – ஒரு பயங்கரக் கொடும் சொப்பனம் போல இருக்கிறது என்று சிந்திக்கிறேன். இங்கேயிருக்கும் நம்மில் பலர் சொப்பனம் கண்டிருக்கிறோம், தீவிரமான சொப்பனத்தில் சிக்கியிருக்கலாம். அதிலிருந்து வெளியேவர போராட முயற்சிப்பீர்கள். உங்களில் அநேகர் அதைச் செய்திருப்பீர்கள். நான் பலமுறை அதைச் செய்திருக்கிறேன். ஏதோவொரு வகையில் நீங்கள் உறங்கிக்கொண்டிருப்பதை அறிந்து, உங்களை நீங்களே விழித்தெழுப்ப முயற்சி செய்வீர்கள்.
22வாழ்க்கையும் அப்படித்தானிருக்கிறது என்று உணர்கிறேன். நாம் சரிசெய்துவிட்டோம், இனி எல்லாம் நன்றாகவே இருக்கும் என்று நினைக்கின்ற வேளையிலே, ஏதோவொன்று வந்து அதை மீண்டும் குலைத்துவிடுகிறது. இப்பொழுது குறிப்பாக என் வயதை எட்டியிருக்கும் நீங்கள் அனைவரும் அதை அறிவீர்கள். வாழ்க்கையின் சோதனைகளும் போராட்டங்களும்! ஆகையால் சிலவேளைகளில் நான் "கர்த்தாவே" என்று சத்தமிட்டு என்னையே விழித்தெழுப்ப முயற்சிக்கிறேன். இந்தக் காலைவேளை ஒன்றில் அல்லது ஏதோவொரு மாலை வேளையில் அல்லது ஏதோ ஒருவேளையில் நான் விழித்தெழுவேன், அப்பொழுது அவருடைய சமூகத்தில் இருப்பேன். அப்பொழுது எல்லா சோதனைகளும் துக்கங்களும் முடிந்துவிடும். அது உண்மையாக நிகழுமென்று நம்புகிறேன். என்றோ ஒருநாளிலே நான் அவருக்கு ஒப்பாயிருக்கும் படிக்கு விழித்தெழுவேன் என்று நம்புகிறேன். அவருடைய சாயலுக்கு ஒப்பாக எழுந்து, அவரைத் தரிசிக்கவேண்டும் என்பதே என் இருதயத்தின் வாஞ்சையாக இருக்கிறது.
23அப்போஸ்தலனாகிய பவுல் கூறினது போலவே, இப்பொழுது நான் சுயநினைவோடு இருக்கும்போதே, நான் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பும் ஒரு காரியம் உள்ளது. “அவரை அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அறிந்திருக்கிறேன்” என்பதை உறுதிசெய்து கொள்ள விரும்புகிறேன். வேறு என்ன நேரிட்டாலும் ஒரு பொருட்டல்ல, நான் ஒரு பரம் ஏழையாக மரித்து, குயவனுடைய நிலத்திலே (Potter's field அடையாளம் தெரியாதவர் மற்றும் தரித்திரரை அரசாங்கச்செலவில் அடக்கம்பண்ணும் பொதுக்கல்லறைத் தோட்டம்) என்னை அடக்கம் செய்தாலும் அல்லது என் கல்லறை ஆற்றின் அடியிலோ, கடலின் அடியிலோ அல்லது எங்கேயிருந்தாலும் சரி, நான் ஒரு காரியத்தை அறிய விரும்புகிறேன். நான் அவரை அறிந்திருக்க வேண்டும். அதுதான் இப்பொழுது முக்கியமானது, அது சரியே, அவரைத் தம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அறிந்திருப் பதுதான் காரியமாயிருக்கிறது.
24ஏனென்றால் எனக்கு முன்பாக ‘மரணம்’ என்றழைக்கப்படுகிற மகா பெரிய கதவு ஒன்று நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன், நம் ஒவ்வொருவருக்கும் முன்பாக அது இருக்கிறது. மேலும், ஒவ்வொரு முறையும் நம் இருதயம் துடிக்கும்போது, நாம் அக்கதவை நோக்கி ஒரு துடிப்பு நெருங்கிச் செல்கிறோம், இருதயம் ஒருமுறை ஒரு துடிப்பைத் துடித்தபின், அதே துடிப்பை மீண்டும் ஒருபோதும் துடிக்கப்போவதில்லை. நாம் ஒரு துடிப்பு நெருங்கிக் கொண்டிருக்கிறோம், இந்நாட்களில் ஒன்றில் நாம் அந்த வாசலண்டையில் வரப்போகிறோம். அது மரணம் என்று அழைக்கப் படுகிறது, நாம் ஒவ்வொருவரும் அதைச் சந்திக்கப்போகிறோம். நான் அங்கே சென்றடையும் போது, நிச்சயமாகவே நான் ஒரு கோழையைப் போல போக விரும்பவில்லை. அவருடைய அங்கிகளால் போர்த்தப் பட்டவனாய், அவருடைய கிருபையோடு அங்கே செல்ல விரும்புகிறேன். ஒரு காரியத்தை அறிந்திருக்கிறேன், ஓர் நாளில் அவர் அழைக்கும்போது, அங்கேயிருந்து நான் வெளியே வருவேன். அவரை அறியவும், அவருக்குச் சேவை செய்யவுமே நான் இன்று ஜீவிக்கிறேன்.
25இங்கேயிருக்கின்ற இளம் ஊழியக்காரர்களான சகோதரன் கிரஹாம், சகோதரன் ரடெல் மற்றும் அவர்களைப் போன்றவர்கள், பற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னே செல்லும்படிக்கு நான் நிச்சயமாகவே புத்திசொல்லுகிறேன். இன்றிரவு நான் உள்ளே வந்து அங்கே உட்கார்ந்து அந்தப் பாடல்களைக் கேட்டபோது.. 'வாருங்கள், விருந்துண்ண’ (Come And Dine) என்ற பாடலை அவர்கள் கைகளைத் தட்டி பாடியபோது, சகோதரி ஸ்நெல்லிங்கும் (Snelling) அங்கே நின்றுகொண்டு தன் கைகளைத் தட்டி 'வாருங்கள், விருந்துண்ண' என்று பாடுவதை என்னால் காண முடிந்தது, மேலும் மரித்துப்போன பழைய பரிசுத்தவான்கள் யாவரையும் அவ்வாறே காணமுடிந்தது. அவர்கள் தூரே எல்லைக்கு அப்பால் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் – நான் – நான் – நான் இந்நாட்களில் ஒன்றில் அவர்களைக் காண விரும்புகிறேன், வயதுமுதிர்ந்த தாயாகிய ப்யூ (Pugh) போன்றோரை, அத்தை நோன் (Noan) உடல்நிலை மிக மோசமாயிருந்த நேரத்தில் வாசலில் நின்றுகொண்டிருந்ததை என்னால் காண முடிகிறது. நான் - சகோதரன் ஜார்ஜ்ம் நானும் அங்கே நடந்து சென்று “பாரும், மரித்தோரின் உயிர்த்தெழுதல் ஒன்று உண்டு” என்றபோது, “நான்தான் அந்த நபர்” என்றாள். என்னால் அவளைத் தெளிவாகக் காணமுடிகிறது, சகோதரி வெபெர் மற்றும் அவர்கள் அனைவரையும் காண முடிகிறது.
26சொல்லப்போனால் ஃப்ராங்கி (Frankie) இப்போது நன்றாகவே இருக்கிறான் என்று நினைக்கிறேன். கடந்த இரவு தொலைதூர அழைப்பின் மூலம் அழைத்து அவனுடன் மீண்டும் ஜெபித்தேன். அவன் -அவன் "பல வருஷங்களுக்குப் பிறகு நான் தேவனுடைய தொடுதலை முதன்முதலாக இப்பொழுதுதான் உணர்கிறேன்” என்றான். "இங்கே, இன்டியானாவிற்குத் (Indiana) திரும்பி வந்ததும், நான் செய்யப்போகும் முதல் காரியங்களில் ஒன்று, சபைக் கூடாரத்திற்கு வருவதுதான்” என்று கூறினான். ஆகவே கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. ஃப்ராங்கி ஒரு நல்ல பையன், ஒரு அருமையான பையனாக இருக்கிறான். அவனுக்கு மேடுபள்ளங்கள் உண்டாயிருந்தது. டான் (Don) இங்கே இல்லை அல்லவா? ஆம். இங்கேயிருக்கிறான் என்று நினைக்க வில்லை. ஆனால் அவனுக்கும் மேடுபள்ளங்கள் உண்டாயிருந்தது, ஆனால் அவன் திரும்பி வராவிட்டால், ஒருநாளில் தேவன் அவனைக் காட்சியிலிருந்து அகற்றிவிடுவார், ஆகையால் நாம் அவனுக்காக ஜெபிப்போம். நாம் திருவசனத்தைத் திறப்பதற்கு முன்பாக, அதை எழுதியவரிடம் நம் தலைகளைத் தாழ்த்துவோம்.
27மகத்தான தேவனுடைய பரிசுத்த ஆவியானவரே, இந்த வாழ்க்கையில், இந்த அழிவுள்ள வாழ்க்கையில் தலைமயிர் நரைத்து, நெற்றியில் சுருக்கங்கள் தோன்றத்தொடங்கும் போது, அழிவுள்ளவர்களாகிய எங்களுக்குள் நித்திய ஜீவனின் அந்த அதிர்வுகளை உணர்கிறோம், அது தொண்டையை அடைக்கும் அளவுக்கு உணர்ச்சிப்பெருக்காய் பொங்குகிறது நீர் மாத்திரம் இல்லையென்றால் இவ்வாழ்க்கை முடிந்த உடன் எல்லாம் முடிவடைந்து போயிருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் பண்டைய காலத்துப் பவுல் “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று கூறினது போல, மரணத்தின் கூர் அவனைத் தீண்ட முடியவில்லை, கல்லறையும் அவனைப் பிடித்துவைக்க முடியாது, இன்றிரவு அந்தப் பரிசுத்த சரீரத்தின் தூளானது உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருக்கிறது, ஆனால் "தேகத்தை விட்டுப்பிரிந்து கிறிஸ்துவுடனேகூட இருப்பது அதிக நன்மையா யிருக்கும்” என்று சொன்ன அவனுடைய, ஆத்துமாவோ கிறிஸ்துவின் சமுகத்தில் இருக்கிறது,
28அவன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோதும் தன் நாட்களில் தைரியமாய் அந்த மகத்தான சுவிசேஷத்தைப் பிரசித்தம் பண்ணினான், அவன் கண்கள் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டிருந்தபோதிலும் பெரிய பெரிய எழுத்துக்களால் அதை எழுதினான். துஷ்டமிருகங்களுடனே போராடியிருந்தான், தன் சரீரத்தில் அநேக அடிகளைப் பெற்றிருந்தான். அந்த அதே மகிமையான சுவிசேஷம், அந்நாள்வரையிலும் தொடர்ந்து முன்னே செல்லத்தக்கதாக எங்களுக்குள்ள எல்லாவற்றையும் கொண்டு நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்.
29இந்தச் சிறிய சபைக்கூடாரத்திற்காகவும், அதின் மேய்ப்பருக் காகவும், அதின் அங்கத்தினர்களுக்காகவும், நிர்வாகிகள் யாவருக் காகவும், இது அமைந்திருக்கும் இச்சிறு நகரத்திற்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்; ஏனென்றால், கர்த்தாவே, உண்மையில் இங்கேதான் என் முதல் பிரசங்கத்தைப் பிரசங்கித்தேன். கர்த்தாவே, இந்தச் சிறுசபையும், அதைக் கட்டியெழுப்புவதற்கு உண்டாயிருந்த ஆவியும் கர்த்தராகிய இயேசுவின் வருகைபரியந்தம் நிலைத்து நிற்கும்படிக்கும், இங்கே அங்கத்தினர்களாயிருக்கிற, இங்கே வருகின்ற யாவரும், அவர்களில் ஒருவரும் இழக்கப் படாதிருக்கும்படிக்கும் வேண்டிக்கொள்ளுகிறேன். இங்கே யூடிகாவில் ஒரு மகத்தான ஆவிக்குரிய எழுப்புதல் உண்டாகும்படி ஜெபிக்கிறேன். இயேசுகிறிஸ்துவின் வல்லமை இச்சிறு பட்டணம் முழுதும் பரவி, அநேகரைக் கிறிஸ்துவண்டை அழைப்பதாக. இக்காரியங்களில் அக்கறை கொண்டுள்ள யாவரையும் ஆசீர்வதியும் கர்த்தாவே.
30பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு எங்களிடம் பேசும்படி வேண்டுகிறோம். அவர்கள் ஞாயிறன்று எதிர்நோக்கியிருக்கும் அந்த மகத்தான கூட்டத்தை அருளும். உம் பிரசன்னத்தினால் அது மகிமையுள்ளதாக இருப்பதாக.
31எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். இன்று இரவு உம்மை அறியாத யாராகிலும் ஒருவர் எங்கள் மத்தியில் இருப்பார்களானால், இந்தக் கிருபையுள்ள நம்பிக்கை அவர்கள் இருதயத்தில் துடிக்காதிருந்தால், கர்த்தாவே, இன்று இராத்திரி அதை, நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற அந்த மகத்தான மகிழ்ச்சியின் நீரூற்றை அவர்கள் கண்டடைவார்களாக. எங்களுடைய தாழ்மையான ஜெபத்தைக் கேட்டருளும்.
32வார்த்தை வாசிக்கப்படுவதை ஆசீர்வதிப்பீராக, ஆவியானவர் இந்த வார்த்தைகளை எடுத்து, அவை எங்கே மிகுந்த நன்மையை விளைவிக்குமோ அங்கே விதைப்பாராக. ஏனெனில் இதை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
33உங்களுக்குத் தெரியுமா, நான் யூடிகாவிற்கு வரும்போது, இங்கே பிரசங்கம் செய்ய வருவது போன்று எனக்குத் தோன்றவில்லை, உங்கள் அனைவரையும் நான் அறிந்திருப்பதால், சிறிது நேரம் ஜனங்களிடம் பேசிவிட்டு, ஐக்கியம் கொள்ளுவதற்காக வருவது போன்றுதான் தோன்றுகிறது.
34இப்பொழுது, இன்றிரவு நாம் மத்தேயு 11-ம் அதிகாரத்திலிருந்து, 15-ம் வசனம் வரையிலும் சில வசனங்களை வாசிப்போம்.
35நான் அவருடைய வார்த்தையை வாசிக்க விரும்புகிறேன், ஏனென்றால் அவருடைய வார்த்தையானது சத்தியமும், அதுவே நித்தியமுமாயிருக்கின்றது. இப்பொழுது அவர் வார்த்தையை நான் வாசிக்க விரும்புவதின் காரணம் என்னவெனில், என் வார்த்தைகள் தவறிப்போகும், நான் ஒரு மனிதனாயிருக்கிறேன், ஆனால் அவருடைய வார்த்தைகளோ ஒருபோதும் தவறிப்போகவே முடியாது. இன்று இராத்திரி இங்கேயிருக்கிற விலையேறப்பெற்ற ஜனங்களாகிய உங்களுக்கு, இந்த வார்த்தையை வாசிப்பதற்கும் மேலாக எதையும் செய்யாவிட்டாலும் கூட, எதையாவது பெற்றுக்கொண்டுதான் நீங்கள் வீட்டிற்குச் செல்வீர்கள், ஏனென்றால் சகோதரன் கிரஹாம் பேசிக்கொண்டிருந்த அந்த ஆகாரம் இதுதான். அதை நாம் வாசிக்கையில் அவர் நமக்கு உயிர்ப்பித்தருளுவாராக. இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளை கொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப் போனார். அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக் குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்திருக் கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசி யையோ? ஆம், தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ள வனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில், இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான் வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
36இப்பொழுது, இந்தப் பொருளின்பேரில் ஒரு பின்னணியத்தை எடுத்து, பேசும்படியாக ஒரு வசனத்தின் சிறு பாகத்தை எடுக்கவேண்டுமானால், எதைப் பார்க்கப்போனீர்கள்? என்னும் இந்த பாகத்தை எடுத்துக்கொள்வேன்.
37உலகத்தாரால் யோவான் ஒரு கரடுமுரடான மனுஷனாகத் தன் நாட்களில் கருதப்பட்டான். அவன் செம்மறியாட்டுத் தோலின் துண்டைப் போர்த்துக்கொண்டு, அரை நிர்வாணமாக இருந்தான், முகம் முழுதும் அடர்ந்த தாடியுடன், தலைமயிரும் ஒருவேளைப் பக்கவாட்டில் நீண்டவாறு இருந்திருக்கலாம். ஆகையால்... உலகத்திற்கு, உலகத்தின் ஜனத்தாருக்கு அவன் ஒரு நாகரிகமற்ற காட்டுமனிதனாகக் காணப்பட்டான். அவன் வனாந்தரத்திலே ஜீவித்திருந்த ஒரு பழைய வனவாசி, ஒரு பயித்தியக்காரன் என்றே அவனை நாம் அழைத்திருப்போம்,
38அவன் பிரசங்கித்த சபைக்கு ஒரு மூடபக்திவைராக்கியம் பிடித்தவனாகத் தோன்றினான். “அந்த மனுஷன் முற்றிலுமாகவே ஒரு மார்க்கப்பித்துப் பிடித்தவன்" என்று சபை எண்ணினது. அவன் இன்று வாழ்ந்திருந்தாலும் கூட அன்று அவனைக்குறித்து என்ன நினைத்தார்களோ அதற்குச் சற்றும் குறைவில்லாமல் இன்றும் கருதப்பட்டிருப்பான், ஏனென்றால் உலகம் மாறவேயில்லை. ஜனங்கள் வருகிறார்கள், புதிய தலைமுறைகள் எழும்புகின்றன, ஆனால் உலகத்தை ஆளுகின்ற அந்த ஆவி அன்று இருந்ததுபோலவே இன்றும் இருக்கிறது. உலகம் ஒன்று இருக்கும் வரையிலும் அது அப்படியே இருக்கும்.
39ஆனால் யோவானை அறிந்திருந்தவர்கள், அவனை விசுவாசித்தவர்களோ, மெய்யான ஒன்றைக் காண்பதற்காகப் போயிருந்தனர்.
40அன்றிருந்தது போலவே இன்றும் மூன்று பிரிவினராகப் பிரிக்கப்படுகின்றனர்: உலகம், சபை மற்றும் உண்மையான மெய் விசுவாசி. இன்று உலகம் அந்த விதமாகத்தான் இருக்கிறது: அவிசுவாசியாகிய உலகம், வெதுவெதுப்பாயிருக்கிற சபை, அதன் பின் அசலான, உண்மையான விசுவாசி. சில ஜனங்கள் அந்தச் சபையில் குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே சபைகளுக்குச் செல்கின்றனர். மேலும் சிலரோ ஒரு சமூக அந்தஸ்துக்காகவோ அல்லது ஒரு மேன்மையான வகுப்பினராக எண்ணுவதற்காகவோ அல்லது ஒரு ஒன்று கூடுகைக்காகவோ சபைகளுக்குச் செல்கின்றனர். மற்றவர் களோ சமாதானத்தைக் கண்டடையவும், உண்மையான ஒன்றில் தேவனைக் கண்டடைவதற்காகவும் செல்கின்றனர். அப்படிப் பட்டவர்கள் தான் கூட்டத்தின் பலனை அடைகிறார்கள். சுவிசேஷமானது அவிசுவாசி, பாவனை-விசுவாசி மற்றும் விசுவாசி என்னும் மூவகை ஜனங்களைக் கொண்டுவருகிறது என்று நான் எப்பொழுதும் சொல்லுவதுண்டு. அது எப்பொழுதும் அந்த விதமாகவே இருக்கிறது. அது நீ எதற்காகப் போகிறாய் என்பதையும், உன்னுடைய மனப்பான்மையையும் மாத்திரமே சார்ந்ததாயிருக்கிறது.
41அவன் பிரசங்கித்த செய்தி இருக்கிறதே, அப்பேர்ப்பட்ட ஒரு செய்தியைக் கேட்க உலகத்தார் செல்ல மாட்டார்கள். அன்று அச்செய்தியை எவ்வளவு கண்டனம் செய்தனரோ அதே அளவுக்கு இன்றும் அதைக் கண்டனம் செய்திருப்பார்கள். அந்த அதே செய்தி இன்றும் பிரசங்கிக்கப்படுமானால், அதே காரியத்தைச் செய்வார்கள்.
42ஆனால் அவனுடைய செய்தி அவ்வளவு மோசமானதாக இருந்திருக்க முடியாது, ஏனென்றால் இயேசுவே சொன்னார் “அக்காலம் வரைக்கும், யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் பிறந்ததில்லை”. இயேசு அவன் செய்தியை அங்கிகரித்திருந்தார். அவர்“எல்லாவற்றிற்கும் வளைந்துகொடுக்கிற, நாணலை அசைக்கிற காற்றையா கேட்கப்போனீர்கள்? யோவான் அப்படிப்பட்டவனல்ல" என்றார். மேலும் அவர் “அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷ னையோ?" என்று கேட்டார். “மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்” என்று கூறினார். அவர் “அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனே யோவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில், அவன் உமக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட அல்லது முன்னுரைக்கப்பட்டவன் இவன்தான்” என்று கூறினார். யோவான் ஒரு மகத்தான மனுஷனாயிருந்தான், ஆனால் உலகத்தால் அவனை அந்த விதமாகப் பார்க்க முடியவில்லை.
43யோவானிடம் கவனத்தை ஈர்த்தது என்னவாயிருந்தது? அவர்களில் சிலர் தன் சரீரம் முழுவதும் ரோமம் மிகுந்தவனாக, அரை நிர்வாணமாய் தன் கைகளை வீசிக்கொண்டிருந்த கரடுமுரடான ஒருவனைப் பார்க்கச்சென்றனர். அவன் ஒரு கரடுமுரடான தோற்றமுடையவனாக இருந்தான், ஒருவேளை அவனுடைய புயங்களும், கைகளும் கூட அப்படி இருந்திருக்கலாம், ஏனென்றால் அவன் எலியாவுக்குப் பரிபூரண மாதிரியாக இருந்தான், எலியாவும் ரோமம் மிகுந்தவனாகத்தான் இருந்தான்.
44மேலும் அவர்கள் அவனைப் பார்க்கப் போனார்கள். அவர்களில் சிலர், வெறுமனே அவன் எப்படித் தோற்றமுடையவனாக இருக்கிறான் என்பதைக் காண்பதற்காகச் சென்றனர். வேறு சிலரோவெனில் அவனுடன் உடன்படாமல் முரண்படுவதற்காகப் பார்க்கப் போனார்கள். இன்னும் மற்றவர்களோ அதிலிருந்து என்ன நன்மை யைக் கண்டறியலாம் என்பதைப் பார்க்கப் போனார்கள். அவன் இன்று வந்திருந்தாலும், அதே நிலையே உண்டாயிருக்கும். இன்று அவன் இங்கேயிருந்தால் அல்லது அவன் செய்தி அப்பொழுது போலவே தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டிருந்தால், அதே காரியம்தான் சம்பவிக்கும். இப்பொழுது நாம்...
45அவனுடைய செய்தி தேசத்தை அசைக்கத்தக்கதாக அவ்வளவு உணர்ச்சி கிளருவதாக இருந்ததென்றால், அவன் என்ன பிரசங்கித்தான் என்று நாம் பார்ப்போம். அவன் பிரசங்கித்த முதல் காரியம் யாவருக்கும் மனந்திரும்புதலைப் பிரசங்கித்தான்.
46மனந்திரும்புதல் எப்பொழுதுமே ஒரு அவிசுவாசியின் கண்களை அல்லது ஒரு சபை அங்கத்தினனின் கண்களைக் குருடாக்கிவிடுகிறது. ஒரு சபையின் அங்கத்தினன் மனந்திரும்புதலுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று எண்ணுகிறான். ஒரு மனிதனோ அல்லது மனிதர்களோ, தங்களுக்கு மனந்திரும்புவதற்கு எதுவுமேயில்லை என்று நினைக்கிற ஒரு ஸ்தலத்தை நீங்கள் அடையும் போது, நீங்கள் மிக ஆபத்தான ஒரு நிலைமையில் இருக்கிறீர்கள். நீ ஒரு-ஒரு- ஒரு திருச்சபையின் அங்கத்தினனாக இருப்பினும், வீதியிலுள்ள ஒரு பாவியை விட அதிக ஆபத்தான நிலையில் இருக்கிறாய்.
47ஏனென்றால், வெளிப்படுத்தின விசேஷ புஸ்தகத்தில், சபையைக் குறித்துப் பேசுகையில், வேதாகமம் இவ்வாறு உரைக்கிறது.“அவள் நிர்வாணியும், நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், குருடனுமாயிருந்தும், அதை அறியவில்லை” என்கிறது.
48இப்பொழுது, ஒருவன் குருடனாக இருந்து, தெருவில் இருப்பானானால் அது கொடுமையான ஒன்று. அவன் தரித்திர னாயிருப்பானானால், அது கொடுமையானது. நிர்வாணியாக இருப்பது மோசமான ஒன்று. ஆனால் அதை அறியாமல் இருப்பதோ, அதுதான் பரிதபிக்கப்படத்தக்க காரியமாயுள்ளது. மேலும் இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று உரிமைகோருகின்றவர்கள், சபையைச் சார்ந்தவர்களாக இருக்கும் ஜனங்கள், அவர்களுக்கு மனந்திரும்புதல் தேவையாயிருக்கிறது என்பதை அறியாதிருக் கிறார்கள். அதை அவர்களிடம் எடுத்துரைக்கும் போது, அது அவர்களைக் கோபமடையச்செய்கிறது.
49இப்பொழுது, யோவான் அந்தச் சபையின் ஜனங்களுக்கு மனந்திரும்புதலைப் பிரசங்கம் செய்யத் தொடங்கின போது, அவர்களோ "இதோ பாரும், ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன். வனாந்தரத்திலிருந்து வரும் இந்த முரட்டுத்தனமான பிரசங்கிகள் எங்களுக்குத் தேவையில்லை. படிப்பறியாத இந்தக்கூட்டத்தினர் எந்த ஸ்தாபனப்பிரிவையும் சாராதவர்கள். அவர்களுடைய எந்தவிதமான கூச்சலும் சத்தமும் எங்களுக்கு வேண்டாம், ஏனென்றால் ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பனாக இருக்கிறார்" என்று கூறினர்.
50ஆகையால், அதே செய்தி இன்றும் சபையைக் குருடாக்குமா, நீங்கள் ஒருவரிடம் "நீர் ஒரு கிறிஸ்தவனா?” என்று சட்டென்று கேட்பீர்களானால், “ஆமாம்” என்பார்கள்.
51உடனடியாகவே அவர்கள் “நீங்கள் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள்?” என்று கேட்பார்கள். இப்பொழுது அது பரவாயில்லை, ஆனால் அதற்கும் கிறிஸ்தவ மார்க்கத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.
52அவர்களில் சிலர் சொல்லுவார்கள் "பாருங்கள், நான் ஒரு மெதடிஸ்டு அல்லது பாப்டிஸ்டு அல்லது பிரஸ்பிடேரியன்,” அல்லது அவர்கள் எந்தச் சபையைச் சார்ந்திருக்கிறார்களோ அதைச் சொல்லுவார்கள். அது முற்றிலும் சரியாக இருக்கலாம், ஆனால் அது கேள்விக்குப் பதில் அளிப்பதில்லை. நீங்கள் இன்னமுமாக மனந்திரும்பியாக வேண்டும், மேலும் மனந்திரும்புதல் ஜனங்களை உலுக்குகின்றது. அவர்கள் தங்களுக்கு மனந்திரும்புதல் தேவையில்லை என்று நினைக்கின்றனர். 53. “நான் - நான் தான் டீக்கன். நான்.. சபையில் சில குறிப்பிட்ட காரியங்களைச் செய்கிறேன்" அது எதற்கும் போக்குச்சொல்லும் படியாயிராது. உனக்கு மனந்திரும்புதல் இன்னமும் தேவையாயிருக்கிறது.
53யோவான் வெறுமனே தேவனுடைய வாக்குத்தத்தத்தை உறுதிப் படுத்திக்கொண்டு புத்திசாதுரிய மிக்க மதமார்க்கத்துக்கு விரோத மாகப் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். மேலும் அவன்... அந்த அதே செய்தி இன்றும் முன்வைக்கப்பட்டால், மதபக்திவாய்ந்த ஜனங்களிடம் அன்று எத்தகைய கலக்கத்தை ஏற்படுத்தினதோ அதே போலவே இன்றும் ஏற்படுத்தும். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பனாக இருக்கிறான்” என்று சொன்னார்கள், இன்று இவர்களோ "பாரும், நான் இன்ன-இன்ன சபையின் அங்கத்தினனாக இருக்கிறேன் என்பதை நீர் அறிய விரும்புகிறேன்” என்கிறார்கள்.
54மேலும் யோவான் கூறினான் “ஆனால் கோடரியானது மரத்தின் வேர் அருகே வைத்திருக்கிறது, ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்." அன்றியும் அவன் “தூற்றுக்கூடையைத் தம் கையில் வைத்திருக்கிறவர் வருகிறார், அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, பதரை அக்கினியினால் சுட்டெரித்து, கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்” என்று சொன்னான்.
55ஓ, “அவனைப்போல் பிறந்தவன் ஒருவனும் இல்லை” என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை. யோவான் இதைச் செய்ததின் காரணம் என்னவென்றால் அவன் விசேஷித்த ஒருவனாயிருந்தான். தேவன் ஒரு மனுஷனை ஆயத்தம்பண்ணும் போது, அவர் தம் சொந்த வஸ்துக்களால் அவனை ஆயத்தம்பண்ணுகிறார். ஏதோ ஒரு அரசியல்வாதியின் பேச்சைப் போன்ற, ஒரு அறிவுப்பூர்வமான சொற்பொழிவைக் கேட்பதற்காக அவர்கள் வனாந்தரத்துக்குப் போகவில்லை. இயேசு “எதைக் கேட்கப் போனீர்கள்?” என்று கேட்டார். யோவான் பேசினதைக்கேட்ட ஜனங்கள், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே முழுவதும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்த ஒருவன் பேசினதைக் கேட்டார்கள். சுவிசேஷத்தைச் சமரசம் செய்கின்ற ஒருவனைக் கேட்கவில்லை. “இதுதான் சரியென்றும் அது தவறு” என்றும் தர்க்கம் செய்துகொண்டிருந்த ஸ்தாபனங்கள் பேசினதைக் கேட்கவில்லை. இருதயத்தை ஊடுறிவிச் செல்லும் ஒரு சுவிசேஷ செய்தியைத்தான் அவர்கள் கேட்டனர்.
56யோவான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணினான். தன்னிடம் இல்லாத ஒன்றை அவன் ஒருபோதும் பிரசங்கிக்கவில்லை. அவன் எதைப்பெற்றிருந்தானோ அதைப் பிரசங்கம் செய்தான்.
57இன்று ஊழியக்களங்களுக்கு அனுப்பப்படும் தேவனுடைய மனுஷருக்கு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாமல் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. ஒரு ஊழியக்காரனின் முதல் தகுதியே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பதுதான்.
58"பிறகு எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ?” என்று கேட்டார் அவர், “மெல்லிய வஸ்திரந்தரித் திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்" என்றார். யோவான் ஹாலிவுட்டிலிருந்து மிகவும் வேறுபட்டவனாக இருந்ததால், பகட்டான வஸ்திரந்தரித்த சமூக அந்தஸ்தை நாடும் ஒரு பிரசங்கியாக இருக்கமுடியவில்லை. “எதைக் கேட்கப்போனீர்கள்? சிறந்த கல்வியறிவு பெற்ற ஒரு மனுஷனையா?”
59சரித்திரம் சொல்கிறபடி, யோவான் ஒன்பது வயதில் வனாந்தரத்திற்குச் சென்றான். அவனுடைய கல்வியறிவு தேவனிடமிருந்து வருகிறது. ஏன், எல்லாச் சபைகளையும் ஒருங்கிணைத்து, கூட்டங்களை ஒழுங்கு செய்யக்கூடிய, சொல்திறமை மிகுந்த அவனுடைய பிரசார மேலாளரையா பார்க்கப்போனார்கள்? நிச்சயமாகவே இல்லை. ஏனென்றால் அவன் பரிசேயர்களையும் சதுசேயர்களையும் கடிந்துகொண்டான். அவன் ஊழியக்காரர் சங்கத்தை “சர்ப்பங்களின் கூட்டம்” என்று அழைத்தான். அவன் “விரியன் பாம்புகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? 'நாங்கள் இதைச் சேர்ந்தவர்கள், நாங்கள் அதைச் சேர்ந்தவர்கள்’ என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளத் தொடங்காதிருங்கள், ஏனென்றால் தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்” என்று சொன்னான். இன்று நமக்குத் தேவைப்படுவதெல்லாம் பரிசுத்த ஆவியினால் நிறைந்த மேலும் பல யோவான் ஸ்நானன் செய்ததுபோன்ற பிரசங்கங்களே. மேலும் அவன் பின்வாங்கவில்லை, அவன் விவாகங்களும் விவாகரத்துக்களையும் பிரசங்கித்தபோது, அவன் பின்வாங்காததினால், அவன் வளைந்து கொடுக்காமல் சரியாகச் செவ்வையான சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததை அவர்கள் பார்த்தனர். ஏன்? அவன் அபிஷேகம் பண்ணப்பட்டவனாயிருந்தான். அவன் அப்படி இருப்பதைத் தவிர அவனால் வேறெதுவும் செய்ய இயலவில்லை.
60நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை உங்களால் தவிர்க்க முடியாது. நீ ஒரு பாவியாக இருந்தாலும் கூட, பாவியாக இருந்ததற்கு நீ உத்தரவாதியல்ல, ஆனால் ஒரு பாவியாகவே நிலைத்திருப்பதற்கு நீதான் உத்தரவாதியாக இருக்கிறாய். உனக்கு ஒரு வழி ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு பாவியாக இருப்பதன் காரணம், நீ அந்த விதமாகத்தான் பிறந்தாய். நீ ஒரு பாவியாக இருப்பதினால் தேவன் உன்னைப் பாதாளத்திற்கு அனுப்புவதில்லை. நீ மனந்திரும்பி, கிறிஸ்துவை உன் இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத தினால்தான் தேவன் உன்னைப் பாதாளத்துக்கு அனுப்புகிறார். நீ சரியான பாதையைத் தெரிந்தெடுக்க மறுக்கிறாய். உன்னை வேதனைக்குள்ளாகத் தள்ளுவது நீயேதான். உன் சொந்த உறுதிப்பாட்டை, உன் சுய விருப்பத்தின் படி தெரிந்துகொள்ளும் சுயாதீனத்தைக் கொண்டு, நீதான் உன்னுடைய ஆத்துமாவை அதின் நித்தியமான சென்றுசேரும் இறுதி ஸ்தலத்துக்கு அனுப்புகின்றாய். தேவன் ஒருவரையும் நரகத்திற்கு அனுப்புவதில்லை. அவர் ஒருபோதும் செய்ததில்லை, அவர் செய்யவும் மாட்டார். இரட்சிப்பின் வழியை ஏற்றுக்கொள்ள மறுப்பதின் காரணத்தால், மனிதர்கள் தங்களைத் தாங்களே நரகத்திற்கு அனுப்புகிறார்கள். தேவன் அனுப்புவதில்லை... அவர் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். அவர் ஒருவரும் கெட்டுப்போக விரும்புவதில்லை; ஒருபோதும் அதை விரும்பியதில்லை.
61மனுஷர்கள் ஒளியில் நடப்பதை விட இருளிலேயே நடக்க விரும்புகிறார்கள். அதின் காரணம் என்னவெனில், அவர்கள்... அவர்கள் அந்த நிலையிலே பிறந்திருப்பதால், ஒளியைத் தெரிந்துகொள்ள எந்த வாஞ்சையுமே இல்லை. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து தூதர்கள் வந்து ஒரு பாவியானவனின் பாதையின் குறுக்கே பாடல் ஆராதனை, சாட்சிகள், பிரசங்கம் போன்ற தடை அரண்களை இடுகின்றனர். ஆகிலும் அவனோ மனப்பூர்வமாய் அதனூடாக நேராக நடந்து சென்றுவிட்டு, அதன் பின் தேவன் தான் பொறுப்பாளி அல்லது குற்றவாளி என்று கூறுகின்றான். தேவன் நல்லவரும் இரக்கம் நிறைந்தவராயும் இருக்கிறார். ஆகையால் அவர் ஒருவனும் இழந்து போவதை விரும்புவதில்லை. ஆனால் மனுஷனோ தன் வாஞ்சையினால் இழக்கப்படவே விரும்புகிறான். அவன் ஒளியில் நடக்க மறுக்கிறான், அதுதான் அவனை இழந்துபோகச் செய்கிறது. சரி.
62இப்பொழுது, யோவான், அறிவுப்பூர்வமான பிரசங்கங்களுக்கு விரோதமாக இருந்தான். அவனுக்குக் கல்வியறிவு இல்லாதிருந்தபடியால், அவன் ஒத்துழைப்பைப் பெற்றிருக்க முடியாது.
63நான் நினைக்கிறேன், இந்த அளவுள்ள இப்பட்டணத்தில் கூட, சகோதரன் கிரஹாம் “இப்பொழுது, நாம் இங்கே ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்துவோம், நாம் பட்டணம் முழுதும் செல்வோம்” என்று சொன்னால்... அவர் ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்தியபோது, சாலைச்சந்திப்புகளில், "யூடிகாவில் எழுப்புதல்” என்று குறிப் பிடப்பட்ட ஒரு சிறு அடையாளத்தைக் கண்டேன். அது எந்தச் சபை என்று குறிப்பிடவில்லை. அது வெறுமனே, “ஒரு எழுப்புதல் நடக்கிறது, வாருங்கள், அனைவரும் வரவேற்கப் படுகிறார்கள்” என்று மாத்திரம் எழுதியிருந்தது. அவர் இங்கே யிருக்கும் நாட்டுப்புறங்களில் ஒவ்வொரு பிரசங்கிகளிடமும் சென்று ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டிருந்தாலும், முழு ஒத்துழைப்பையும் பெறுவதற்கு அவருக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன். அவர் அப்படிச்செய்திருக்க மாட்டார்.
64நான் அவருடன் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்துவதற்காக இங்கே வந்து, சகோதரன் பீலர், சகோதரன் ரடெல் மற்றும் நாங்கள் யாவரும் ஒருமித்து, ஜெஃபர்சன்வில் அல்லது நியூ ஆல்பனி அல்லது வேறு எங்காவது, ஒரு கூட்டத்தை நடத்துவோமானால், பரிசுத்த ஆவியைக் கொண்டு, நம்முடைய சொந்தப் பிரசங்கத்தினால் மாத்திரமே நாம் ஜனக்கூட்டத்தை ஈர்க்க வேண்டியிருக்கும். ஏனென்றால் சபைகள் "பாருங்கள், எங்களுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்கள் எந்த வேதகலாசாலையைச் சேர்ந்தவர்கள்? அவர்களுக்கு ஆதரவு எங்கிருந்து வருகிறது?” என்று சொல்வார்கள்.
65யோவான் சொல்வதைப் போல, எங்களுடைய அங்கிகாரச் சான்று "அது பரிசேயர்களாகிய உங்களிடமிருந்து வருவதல்ல. சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படிக்குத் தேவன் என்னை அழைத்தார், அதுதான் என் அங்கிகாரச் சான்று.” தேவனால் அனுப்பப்பட்ட எல்லா மனுஷர்களும் அதன் அடிப்படையில்தான் நிற்கின்றனர். சபையானது உங்களை அனுப்பவில்லை. தேவனால் அனுப்பப்பட்ட மனுஷனைத் தேவன் தாம் அனுப்புகிறார். யோவான் அப்படிப்பட்ட வகையைச் சேர்ந்தவனாக இருந்தான்.
66இயேசு “எதைப் பார்க்கப்போனீர்கள்? ஒரு-ஒரு பரிசேயனையோ அல்லது ஒரு சதுசேயனையோ பார்க்கப்போனீர்களா? மெதடிஸ்டு அல்லது ஒரு பிரஸ்பிடேரியனையோ? எதைப் பார்க்கப்போனீர்கள்? அவன் சிறந்த வஸ்திரந்தரித்திருந்தானா? அவன் - அவன் பேச்சு சொல்வன்மை மிக்கதாயிருந்ததா?” என்று கேட்டார்.
67அவன் அங்கே நின்று என்ன செய்தானென்றால், தவறான எல்லாவற்றையும் கடிந்துகொண்டிருந்தான்! அந்தக் காற்பங்கு தேசாதிபதி, அதாவது அந்த மாகாணத்தின் ஆளுனரும் அவனைப் பார்க்கும்படிக்கு அங்கே சென்றான். தன் சொந்தச் சகோதரனின் மனைவியுடன் வாழ்ந்துகொண்டிருந்த அவன், அங்கே சென்றபோது, யோவான் அவனிடம் நேராகச் சென்று, “நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்ல” என்று சொன்னான். ஆம்!
68"எதைப் பார்க்கப்போனீர்கள்? ஒரு ஸ்தாபனத்தின் பிரசங்கியையா பார்க்கப்போனீர்கள்? நுண்ணறிவு வாய்ந்த சொற்பொழிவாளரையா பார்க்கப்போனீர்கள்?"
69ஏன், இன்று அது உலகம் விரும்புவதிலிருந்து தூரமாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் பெரிய புகழ்வாய்ந்த கூடாரங்கள், கொடிகள், அல்லது ஏதோ மகத்தான தெய்வீக டாக்டர் பட்டம் இப்பேர்ப்பட்ட சாதுரியமுள்ள ஒன்றை விரும்புகிறார்கள். அறிவுப்பூர்வமான பேச்சுக்களுக்கும், புத்திசாமர்த்தியமுள்ள மனுஷன் முன்னே செல்வதற்குமே சபைகள் அனைத்தும் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.
70ஆனால் நீங்கள் ஒரு தேவமனுஷனைக் காணும்போது, அவன் வழக்கமாக எங்கோ ஒரு ஒதுங்கிய வழித்தெருவில் அல்லது வீதியிலோ அல்லது ஏதோவொரு சிறுகட்டிடத்திலோ நின்று இயேசுகிறிஸ்துவின் கலப்படமற்ற சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருப்பான். சகோதரனே, ஜனங்கள் அதைக்குறித்து என்ன நினைப்பார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், கோடரியை மரத்தின் வேர் அருகே வைத்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருக்கும் அவன்தான் தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன். தனித்து நிற்பான்! 72. “எதைப் பார்க்கப்போனீர்கள், பெரும் கல்வியறிவு படைத்த ஒருவனையோ?” நிச்சயமாக இல்லை, அவனுக்கு அப்படிப்பட்ட கல்வி எதுவும் இல்லாதிருந்தது. ஒன்பது வயதில் வனாந்தரத்துக்குச் சென்றவன், முப்பது வயதில்தான் வெளியே வந்தான்.
71மனந்திரும்புதலைப் பிரசங்கித்தான்! பரிசேயர்களைக் கடிந்துகொண்டான்! அவன் ஏன் அதைச் செய்தான்? அவன் என்னவாயிருந்தான் என்பதை அவனால் தவிர்க்க இயலாதிருந்தது. எலியாவின் ஆவி அவன்மேல் இருந்தது. அவன் அவ்விதமான உடைகளைத் தரிப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை, ஏனென்றால் அதுதான் அவன் சுபாவமாயிருந்தது. எலியாவின் ஆவி அவன்மேல் இருந்ததால், ஸ்திரீகள் ஒழுக்கமின்றி அலைவதைக் குறித்துப் பிரசங்கிப்பதை அவனால் தவிர்க்க முடியாது. அவன் என்னவாக இருந்தானோ அப்படியே இவன் இருந்தான். அவன் ஏரோதியாளின் முகத்திற்கு நேராகக் கடிந்துகொண்டான். அவன் என்ன நினைத்தானோ அதை ஜனங்களிடம் கூறினான். ஏன் அவனால் அதைத் தவிர்க்க முடியவில்லை, அது அவனுடைய அபிஷேகமா யிருந்தது. அவன் எலியாவாக இருந்தான்.
72அப்படியானால் ஒரு புருஷனோ அல்லது ஸ்திரீயோ, உங்கள் மேல் இருக்கும் அபிஷேகம் உங்களை வெளிப்படுத்துகிறது, உங்கள் ஆவி எதுவாக இருப்பினும், அதுதான் உங்களை இயக்குகிறது. நீங்கள் ஒரு ஆவியினால் ஊக்குவிக்கப்படுகிறீர்கள். ஆகையால் ஒரு விசுவாசி யாகிய கிறிஸ்தவன் மேல், இயேசு கிறிஸ்துவின் ஆவி இருக்குமானால், அவன் ஒரு விசித்திரமான மனுஷனாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. அவனுக்குள்ளே ஏதோவொன்று அசைவாடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேவனுடைய அழைப்பு அவனுக்குள் இருக்கின்றது. கிறிஸ்துவின் ஆவி அவனை உந்தித்தள்ளுகிறது, ஆகையால் ஆவியானவர் இயக்குகின்றபடி அவன் நகர வேண்டியிருக்கிறது.
73யோவான் அங்கே நடந்து சென்று “ஓ, அதெல்லாம் பரவாயில்லை, இதெல்லாம் பரவாயில்லை” என்று சொல்லுவதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடியுமா? எலியாவின் ஆவி அவன்மேல் இருந்ததுவரை அவன் எலியாவைப் போலவே நடந்துகொண்டான்.
74இப்பொழுது சிலரை எடுத்துக்கொண்டீர்களானால், “ஓ, நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கப்போகிறேன்” என்று சொல்லித் தொடங்கு கிறார்கள். துவக்கத்தில் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. முதல் காரியம் என்னவென்றால், சுமார் ஆறு மாதங்களில், அவர்கள் பின்னோக்கிச் செல்லத்தொடங்குகின்றனர். இப்படியும் அப்படியு மாகத் திசைமாறுகின்றனர். அபிஷேகம் அவர்களை விட்டு விலகிக் கொண்டிருப்பதைச் சரியாக அப்பொழுதே உங்களால் சொல்ல முடியும். ஏனென்றால், கிறிஸ்துவின் ஆவி உங்களுக்குள் இருக்கும் வரை, அது உங்களைக் கிறிஸ்துவைப்போலவே இருக்கச் செய்யும்.
75இப்பொழுது, அநேக ஜனங்கள் கிறிஸ்துவைக் குறித்துத் தவறான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர். சிலர் கிறிஸ்து பலவீனமான சுபாவமுடைய ஒருவராக இருந்தார் என்று எண்ணுகின்றனர். ஆனால், கிறிஸ்து எல்லா மனுஷரிலும் மிக மகத்தான புருஷனாக இருந்தார். அவர்தான் முன் மாதிரியான மனுஷனாக இருந்தார். அவர் மனுஷன் மாத்திரமல்ல, அவர் தேவ-மனுஷனாக இருந்தார். அவர் "தேவன் நம்மோடிருக்கிறார்; இம்மானுவேலாக" இருந்தார். மனுஷர்களிலேயே மிகவும் தாழ்மையுள்ளவராக இருந்தார். ஆனால், நீங்கள் மிகவும் தாழ்மையுள்ளவர்களாக இருந்து, பிசாசு உங்களை ஒரு கைப்பாவையாக ஆக்கும் அளவுக்குத் தாழ்மையானவர்களாக ஆகி விடக்கூடும். அவர் சீஷரின் கால்களைக் கழுவும் அளவிற்குத் தாழ்மையுள்ளவராயிருந்தார், அவர் கைகளில் ஆணிகளைத் துளைத்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளும் அளவுக்கு மன்னிப் பவராக இருந்தார். ஆனால் கயிறுகளைப் பின்னி காசுக்காரரை வீட்டுக்குப் புறம்பே துரத்திவிடும் அளவுக்குத் தீரமுள்ளவராக இருந்தார்.
76ஆம், யோவான் தாழ்மையும் சாந்தகுணமும் கொண்ட தைரியமானவனாயிருந்தான். யோர்தானின் கரையிலே நிற்பதற்குத் தைரியமுள்ளவனாயிருந்தான். பிரசங்கம் பண்ணுவதற்கு ஒரு பெரிய ஜெப ஆலயமோ அல்லது இடமோ அவனுக்குத் தேவைப்படவில்லை. அவன் தாழ்மையுள்ளவனாக இருந்தான். அவன் விரிந்த நீல வானத்தைத் தெரிந்தெடுத்துக்கொண்டான். சபையின் மேய்ப்பனாக இருப்பதற்கு அதின் ஜனங்களிடம் அவ்வளவு பணம் வேண்டுமென்று கேட்காத அளவுக்குத் தாழ்மையுள்ளவனாக இருந்தான்.
77அவன் வெட்டுக்கிளிகளையும், காட்டுத் தேனையும் வெட்டுக் கிளிகளையும் ஆகாரமாகக்கொண்டு வாழ்ந்தான். அந்தத் தேசத்திலே அவர்கள் அவற்றைப் பதப்படுத்தி வைப்பதுண்டு. அந்த மிகப்பெரிய, நீளமான வெட்டுக்கிளிகளை, அவர்கள் ஊறவைத்துப் பதனமிட்டோ அல்லது புகைப்பதனஞ் செய்தோ, பல விதங்களில் அவற்றைப் புசிப்பார்கள். அதைப் புசித்துத்தான் அவன் உயிர்வாழ்ந்தான். அன்றியும் செம்மறியாட்டுத் தோலின் துண்டை வஸ்திரமாகப் போர்த்திக்கொண்டிருந்தான்.
78இயேசு “எதைப் பார்க்கப்போனீர்கள்? எதைப் பார்க்கப்போனீர்கள்? பரிசேயர்களுக்கு அடிபணியும் ஒருவனையோ; எல்லாவிதக் காற்றினாலும் அசையும் நாணலையோ? சதுசேயர் வருகையில் அவர்களுக்குப் பணிந்துபோகிறவனையோ? ஒரு நாள் அவன் இப்படியாகவும், மற்றொரு நாள் அப்படியாகவும் இருக்கிறவனையோ” என்று கேட்டார். “அப்பேர்ப்பட்ட ஒருவனை நீங்கள் பார்க்கப் போகவில்லை” என்றார். "அருமையான வஸ்திரந்தரித்த ஒருவனைப் பார்க்கப் போனீர்களோ? இல்லை. ஒரு புத்திசாதுரியவானையோ? இல்லை. எதைப் பார்க்கப்போனீர்கள்?” என்று கேட்டார்.
79அவர் சொன்னார்“இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; சப்பாணிகள் நடக்கிறார்கள், குருடர் பார்க்கிறார்கள், செவிடர் கேட்கிறார்கள். மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையா திருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்” என்றார். ஓ, என்னே! மேசியாவின் அடையாளம் அதுதான். அவனிடம் காண்பிப்பதற்கான அடையாளம் அதுவாகத்தானிருந்தது.
80இன்றும் மெய்யான பரிசுத்த சபையின் அடையாளம் அதுவே, அவர்கள் வழுவிக்கொண்டிருந்தாலும் சரி, இயேசுகிறிஸ்து அழைத் ததின் அடையாளம் இன்றும் அதுதான். ஆத்தும ரட்சிப்பிற்கும், சிறுமைப்பட்டவர்களுக்கும், எளிமையானவர்களுக்குமான கலப்பட மற்ற சுவிசேஷத்திற்காக நிற்கும் புருஷர்களும் ஸ்திரீகளும் தான், அப்படியல்லாமல், தரித்திரன் ஒருவன் அவர்கள் சபைக்குள்ளே வருகையில், தான் தகுதியற்ற ஒரு ஸ்தலத்திற்கு வந்துவிட்டது போல உணரவைக்கும் வகையில் உடைகளைத் தரித்திருக்கும் ஒரு கூட்ட உயர்குடி ஜனங்கள் அல்ல, ஆனால் தாழ்மையான ஒருகூட்ட ஜனங்கள் எங்கேயோ அங்கேதான் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. அங்கே வியாதியஸ்தர் சொஸ்தமடைவார்கள், அவர்கள் பிணியாளிகளுக்காக ஜெபிப்பார்கள். தேவன் அவர்களுடைய ஊழியத்தை அடையா ளங்களினாலும் அற்புதங்களினாலும் உறுதிப்படுத்துகிறார். அங்கே தான் தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. “இவைகளை யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்.” ஓ, என்னே!
81படிப்பறிவே இல்லாத ஒருவனைத் தேவன் எப்படியாகத் தெரிந்தெடுத்தார்; உடுத்திக்கொள்ள ஒரு முழுமையான உடை கூட இல்லாத ஒருவனை, தன் தோளின் மேல் தரித்துக்கொள்ள ஒரு அங்கி கூட இல்லாத ஒருவனை, தன் தலைசாய்க்க இடமில்லாதிருந்த ஒருவனை, உட்கார்ந்து புசிப்பதற்கு முறையான ஆகாரம் கூட இல்லாதிருந்த அப்படிப்பட்ட ஒருவனை எடுத்து, அவனைக்கொண்டு தேசங்களை அதிரவைத்தார்.
82அல்லேலூயா! இரக்கம்! நான் அதைக்குறித்து நினைக்கையில் அது ஏதோவொன்றிற்கு தட்டி எழுப்புகின்றது. நாம் செய்ய வேண்டியதென்ன? அன்றொருநாள் நான் என் மனைவியிடம் “தேனே, எனக்கு ஐம்பது வயதாகிவிட்டது. என்னால் இன்னும் அதிகக் காலம் இங்கேயிருக்க முடியாது” என்று சொன்னேன்.
83அதன் பிறகு நான் வெளியே சென்று, காட்டில் நின்று கொண்டிருந்தேன். நான் வேட்டைக்காகப் போயிருந்தபோது, அங்கே காட்டிலே சற்று நேரம் நின்று "ஐம்பது வயது ஆகிவிட்டது. காரியம் என்ன?” என்று எண்ணினேன்.
84அப்பொழுது ஏதோவொன்று என்னிடம் சொன்னது "ஐம்பது நிமிஷம் செய்யும் பணிக்காக, தேவன் ஐம்பது ஆண்டுகள் உன்னைப் பயிற்றுவிக்கக்கூடும்” என்றது. அந்தப் பயிற்சி என்னவாயிருந்தாலும், தாம் செய்துகொண்டிருப்பது என்னவென்பதை தேவன் அறிவார். மோசே தமக்கு நாற்பது வருஷங்கள் சேவைசெய்வதற்காக அவர் அவனை எண்பது வருஷங்கள் பயிற்றுவித்தார். தேவன் தம் ஜனங்களுக்குப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். தேவன் தம் சபைக்குப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். தேவன் தம்முடைய வழியில் செயல்பட நாம் மனதுள்ளவர்களாக இருந்து, சரியானது எதுவோ அதை மாத்திரம் செய்வோமானால், நாம் அவருக்குக் கீழ்ப்படிந்திருக்க மனதுள்ளவர்களாக இருந்தால், அதுதான் நாம் செய்ய வேண்டிய காரியமாயுள்ளது.
85தேவன் எளிமையான காரியங்களையே தெரிந்தெடுக்கிறார். இங்கே நீங்கள் எண்ணிக்கையில் குறைவுள்ள சிறுகூட்டத்திலே இருப்பதாகச் சிலவேளைகளில் நினைக்கலாம். சிறுகூட்டத்தார், தேவன் வழக்கமாக அந்தச் சிறுகூட்டத்தினரோடுதான் இருப்பார். ஆனால், சகோதரனே, அவர் செயல்படத் தொடங்கும்போது, அவர் அச்சிறுகூட்டத்தினரைக் கொண்டு, பெருங்கூட்டத்தினரை அதிரச் செய்வார். அவர் தேவனாயிருப்பதால், எளிமையான காரியங் களைத்தான் தெரிந்தெடுக்கிறார். உலகத்தை உண்டாக்குவதற்கான வஸ்துக்களை அவர் எங்கேயிருந்து பெற்றார்? அவர் “உண்டாகக்கடவது" என்று பேசி உரைத்தபோது, அது உண்டானது.
86வெட்டுக்கிளியையும் தேனையும் புசித்து வனாந்தரத்திலே வளர்ந்தவனாய், உடுத்துவதற்குச் செம்மறியாட்டுத் தோலின் துண்டைத் தவிர போதுமான வஸ்திரம் வேறொன்றும் இல்லாதிருந்த, படிப்பறிவற்ற ஒரு பிரசங்கியை அவர் தெரிந்தெடுத்து, அவனைக் கொண்டு தேசங்களை அசைத்தார். இன்றும் அவனுடைய பேர் அழியாமல் இருக்கிறது. “எதைப் பார்க்கப்போனீர்கள்?” தேவன் எளிமையான காரியங்களை எடுத்துக்கொள்கிறார்.
87அவர் ஒரு சமயம், அடிப்படைக் கல்வியறிவைக்கூட அறிந்திராத ஒரு மனுஷனைத் தெரிந்தெடுத்தார். ஆயிரம் பெலிஸ்தர் அவன்மேல் விழுந்தபோது அவர் தெரிந்தெடுத்த அந்த மனுஷன் ஒரு கோவேறு கழுதையின் தாடையெலும்பை எடுத்தான், ஒரு கோவேறு கழுதையின் வாயிலுள்ள வெறும் தாடையெலும்பை எடுத்து, ஆயுதந்தரித்த ஆயிரம் புருஷரைக் கொன்றுபோட்டான். ஓ, பெருந்துயரத்தை வெற்றி சிறக்கின்ற அவரே நம் தேவன். ஒரு கோவேறு கழுதையின் தாடையெலும்பைக் கொண்டு ஆயிரம்பேரைச் சங்கரித்தார்.
88அதே தேவன், ஒரு முறை, பெரும் வீம்புக்காரனான பெலிஸ்தன் ஒருவன் நதிக்கு அக்கரையில் நின்று இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்துக் கொண்டிருந்த போது, ஒரு சாதாரணக் கவணைத் தன் கையில் வைத்திருந்த, மெலிந்த தோற்றமுடைய வலுவற்ற ஒரு சிறுவனைத் தேவன் எடுத்தார். ஓ தேவனே! ஒரு கவண்; ஒரு துண்டு தோலில் கட்டப்பட்ட வெறுமனே ஒரு கயிறுதான். ஒரு சிறிய கவண் என்கிற எளிதான ஒன்றைக்கொண்டு ஒரு இராட்சதனைக் கொன்று, அந்தச் சேனையைத் தோற்கடித்தார்.
89தேவன் எளிய காரியங்களையே எடுத்துக்கொள்கிறார் மகத்தான காரியங்கள் அல்ல, சரியாக உபயோகப்படுத்தப்படும் சாதாரண எளிய காரியங்கள்தான் தேவை. வெறுமனே எளிய காரியங்களாக இருப்பது மாத்திரமல்ல, ஆனால் அது சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். வனாந்தரத்தில் வாழ்ந்த எல்லா மனுஷனும் யோவான் அல்ல. கவணை வைத்திருந்த ஒவ்வொருவனும் தாவீது அல்ல. கோவேறு கழுதையின் தாடையெலும்பை எடுத்த ஒவ்வொருவனும் சிம்சோனும் அல்ல. ஆனால் தேவனுடைய தாசனின் அபிஷேகிக்கப்பட்ட கைகளினால் உபயோகிக்கப்படும்போது தான் நிகழ்கிறது!
90மோசே ஒரு உலர்ந்த கோலைத் தன் கையில் பிடித்துக்கொண்டு இஸ்ரவேலின் சேனையை... அதாவது எகிப்திய சேனைகளை நிந்தித்தான். ஆமென். ஒரு காலத்தில் கோழையாக கெர்சோமோடும் சிப்போராளோடும் வனாந்தரத்தின் பின்னால் இருந்தவன், பற்றி யெரியும் முட்செடியிலிருந்து ஒருமுறை அபிஷேகிக்கப்பட்டவுடன், அவன் கையில் ஒரு உலர்ந்த கோலுடன், அவன் மனைவியை இடுப்பிலே பிள்ளையுடன் ஒரு கோவேறு கழுதை மேல் உட்காரவைத்து, தாடி காற்றிலே பறக்க, எண்பது வயதான அவன் எகிப்தைக் கைப்பற்றப் போனான். எளிமையான, எண்பது வயது நிறைந்த ஒரு வயோதிபன், ஒரு மேய்ப்பனின் உலர்ந்த கோலைத் தன் கையில் பிடித்துக்கொண்டு, உலகத்தின் முழுச் சேனையையும் எதிர்த்து, ஜெயங்கொண்டவனாய் வெளியே வந்தான்.
91நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததாய் இருக்கிறது. இப்பொழுது உங்களிடம் இங்கே தாழ்மை இருக்கிறது. இங்கே யூடிகாவில் சுவிசேஷத்தைப் பெற்றிருக்கிறீர்கள். நான் சொன்னது போலவே, நீங்கள் ஒரு வேளை அந்த எண்ணிக்கையில் குறைவான சிறுகூட்டமாய் இருக்கலாம். ஆனால் எதைக் கேட்பதற்காக இங்கே வந்தீர்கள்? “நான் சபைக்குப் போகிறேன்” என்று வெறுமனே சொல்லுவதற்காக மாத்திரமா வந்தீர்கள்? நம்முடைய அருமையான சகோதரன் பேசுவதைக் கேட்க மாத்திரம் வந்தீர்களோ? அவையெல்லாம் நல்லதுதான். ஆகிலும் நாம் அதைவிட மேலான ஒன்றைச் செய்வோமாக. நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்காக வருவோம். நாம் இன்று இராத்திரி இங்கேயிருந்து புறப்படும்போது புறப்படும்போது அவருடன் செல்வதற்காக வருவோம். தவறான எல்லாவற்றையும் எதிர்த்துநிற்கும்படியாகச் செல்வோம், வெட்டி அகற்றுங்கள், உங்கள் கையில் தாடையெலும்போ அல்லது எதுவாக இருந்தாலும் சரி, அதைக்கொண்டு போராடுவோம். தேவன் அபிஷேகம் செய்யப்பட்ட கரங்களைக் கொண்டு, சாதாரணமான எளியவற்றை உபயோகித்தார். உங்களிடம் எளிமையான பணிகள் இருக்கலாம், ஒரு எளிய சிறிய பட்டணமாக இருக்கலாம், ஒரு எளிய சிறுகூட்டம், சிறுசபையாக இருக்கலாம், எளிமையான ஒரு சுவிசேஷம் ஆனால் அது அபிஷேகம் பண்ணப்பட்டது. ஆகையால் தேவன்...
92அங்கே இடிமுழக்கமாய்க் குமுறின மகத்தான யேகோவா, நட்சத்திரங்களையும் சூரியமண்டலங்களையும் உண்டாக்கினவர், தோன்றப்படாதவைகளால் பூமியை உண்டாக்கினவர், அதைப் பேசியுரைத்து உருவாக்கினவர், ஆனால் அவர் மனுஷரைச் சந்திக்க வந்தபோதோ, அவர் பொன் இரதத்திலே இறங்கி வராமல், ஒரு - ஒரு மலையோரத்திலுள்ள தொழுவத்திற்கு வருவதைத் தெரிந்து கொண்டார். அவருடைய பிறப்பு ஒரு மிருகஜீவன்களின் தொழுவத்தில் நிகழ்ந்தது. எளிமையான காரியங்கள்தான், ஆனால் அந்தத் தொழுவத்தில் இருந்துதான் இம்மானுவேல் வந்தார். எதைப் பார்க்கப் போனீர்கள்? இன்று உலகத்தை உலுக்குவது எது? அமெரிக்காவில் உள்ளதிலேயே மகத்தான அடையாள அட்டை எது? உலகத்திலேயே மகத்தான அடையாள அட்டை எதுவாக உள்ளது? எல்லாக் காலங்களிலும், எல்லா யுகங்களிலும் மகத்துவமான காரியம் எதுவாகும்? அது ஒரு மலையின் ஓரத்திலுள்ள ஒரு தொழுவத்தில், முன்னணையிலே பிறந்த ஒரு குழந்தையின் ஜீவனும் ஆவியும்தான்!
93எளிய காரியங்கள்! எளிய காரியங்கள்! சபையே அது உன் கரங்களில் அளிக்கப் பட்டிருக்கின்றது. இப்பொழுது அந்த அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டு அதைச் சரியான விதத்தில் உபயோகிப்பாயாக. அவரால் ஒருவேளை... சிறுபிள்ளைகள் யாவரும்... அநேகப் பிள்ளைகள் தொழுவங்களில் பிறந்திருக்கிறார்கள். அநேகப் பிள்ளைகள் முன்னணைகளில் பிறந்திருக்கக்கூடும். ஆகிலும் நீ அதைக்கொண்டு எந்த விதத்தில் என்ன செய்கிறாய் என்பதுதான் காரியம்.
94அநேகர் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதைக் கேட்டிருக்கிறார்கள். சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டதைக் கேட்ட சகோதரர்கள் கிரஹாமிடம் உண்டு. சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டதைக் கேட்ட சகோதரர்கள் என்னிடமும் இருக்கிறார்கள். அவரிடம் சகோதரர்கள் உண்டு, மற்றவர்களிடமும் சகோதரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நீ அதைக் கொண்டு என்ன செய்கிறாய் என்பதுதான் காரியம். அதைச் செய்வாயாக, அதுவே உன்னுடைய...
95நாம் நம்முடைய ஸ்தாபனங்களைக் குறித்தும், நாம் எந்தச் சபையைச் சார்ந்திருக்கவேண்டுமென்றும், எந்தச் சங்கத்தைச் சேர்ந்திருக்க வேண்டுமென்றும் வீணாகத் தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறோம். அவற்றைக் கேட்பதற்காகத் தேவன் மனுஷரை அனுப்பவில்லை. தேவன் தெரிந்துகொண்ட தம்முடைய ஜனங்களை, தெரிந்தெடுக்கப்பட்ட தம் ஜனங்களை, சுவிசேஷத்திற்குச் செவி கொடுப்பதற்காகவே அனுப்புகிறார். "தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது."
96சில காலத்திற்கு முன்பு, கென்டக்கி (Kentucky) மாகாணத்திலுள்ள மலைப்பகுதிகளில், ஒரு கதை கூறப்படுவதுண்டு, பத்து பிள்ளை களையுடைய ஒரு விலையேறப்பெற்ற தாய், காசநோய் என்கிற அந்தக் கொடிய வியாதியினால் மரணப்படுக்கையில் கிடந்தாள். ஓ, அவள் வைத்தியர்களை நாடி, தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் செய்துபார்த்தாள், ஆனாலும் அந்த நோய்க்கிருமி அவளைக் கொன்று கொண்டிருந்தது. அது அவளை அழித்துக் கொண்டிருந்தது. அவள் கொஞ்ச காலத்துக்குள் மரித்துப்போக வேண்டியவளா யிருந்தாள். அவள் அந்தப் பத்துப் பிள்ளைகளை நேசித்தது மெய்தான், ஆகிலும் அவர்களில் ஒருத்தியைத் தவிர வேறு யாரும் வேலை செய்யவில்லை. அவர்களில் ஒருவரும் அவளுக்கு உதவி செய்யவில்லை. அவள் எழுந்திருக்க இயலாமல் மரணத்தருவாயில் படுக்கையில் கிடந்தாள். அவளுடைய மற்றச் சகோதரிகள் விளையாடுவதற்கு அயல்வீட்டிற்கு ஓடிச்செல்லுகையில், இந்த ஒரு சிறுமியோவெனில், துணிகள் துவைப்பதையும், மற்ற யாவருக்கும் சமைப்பதையும் போன்ற எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தாள். உணவு உண்ணும் நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு வந்து, பின்பு பாத்திரங்களைக் கழுவ வேண்டிய நேரம் வரும்போது நழுவிச்சென்று விடுவார்கள். எல்லாவற்றையும் அவளே செய்யவேண்டியிருந்தது. அதைச் செய்ய ஒருவரும் இல்லாதிருந்தனர். இறுதியாக ஒருநாள் மரணம் அந்த வாசற்படியில் வந்து, அவளுடைய தாயை எடுத்துக்கொண்டது
97அதன் பிறகு, இந்த எல்லாப் பிள்ளைகளுக்கும் தாயாக இருக்கும் பொறுப்பு முழுவதும் அவள் மேல் சுமத்தப்பட்டது. அந்தப் பரிதாபமான சிறுமி உழைத்து, உழைத்து, அவள் கைகளில் தழும்பு உண்டாகும் அளவுக்கு உழைத்தாள். அவள் தன் தாயின் ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு, ஒரு தாயாக இருக்கும்படி தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்தாள். கடைசியாக, அவள் மிகக் கடினமாக உழைத்ததினாலும், போதிய ஆகாரமில்லாததினாலும், அந்தக் கொடிய வியாதி அவளுடைய சிதைந்து போன சரீரத்தையும் பற்றிக்கொண்டது இறுதியில் அவளும் படுக்கையில் வீழ்ந்து, மரித்துக்கொண்டிருந்தாள்.
98அப்பொழுது, நாட்டின் மறுபுறத்திலிருந்து, ஒரு ஞாயிறுபள்ளி ஆசிரியை, வாகனத்தில் அவ்விடத்திற்கு வந்து, அவளைப் பார்க்க உள்ளே சென்று, அவளுடைய பெயரைச் சொல்லி அழைத்து, “உன் வியாதி மிக ஆபத்தானது என்பதை நீ உணருகிறாயா?” என்றாள். அவள் அதற்கு, "நான் மரித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்கிறேன்" என்றாள்.
99அவள் "நான் சற்று முன்பு உன் வைத்தியரைச் சந்தித்தேன், அவர் நீ மரித்துக்கொண்டிருப்பதாகக் கூறினார்” என்றாள். அதற்கு அவள் “ஆம், அது சரிதான்” என்றாள்.
100அந்த நல் ஆசிரியை அவளிடம் "இதற்கு நீ ஆயத்தமாயிருக்கிறாயா, இதைச் சந்திக்க நீ ஆயத்தமா யிருக்கிறாயா?” என்று கேட்டாள். அதற்கு அவள் "ஓ, ஆம். நான் கர்த்தராகிய இயேசுவைச் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறேன்” என்று சொன்னாள்.
101அவள் “ஓ, அது மிகவும் அருமையாயுள்ளது. சரி, இப்பொழுது, நீ எந்த ஸ்தாபனத்தைச் சார்ந்தவள்?” என்று கேட்டாள்.
102அதற்கு அவளோ, “நான் எந்தவொரு ஸ்தாபனத்தையும் சார்ந்தவள் அல்ல” என்றாள். “நான் இங்கே மிகவும் கடினமாக உழைத்தேன், உதவி செய்ய ஒருவரும் இருக்கவில்லை, ஆதலால்... நான் நான் எந்தவொரு மதப்பிரிவையும் சார்ந்தவள் அல்ல” என்று கூறினாள்.
103அந்த நல்லாசிரியை “சிறுமியே! நீ ஒரு ஸ்தாபனத்தைச் சார்ந்திருக்க வேண்டும். நீ அவருக்கு முன் வருகையில், எந்த ஸ்தாபனத்தைச் சார்ந்தவள் என்று எதைக் காண்பிக்கப் போகிறாய்?” “நீ எந்த - எந்தக் கூட்டத்துடன் இணைத்துக் கொள்ளப்போகிறாய்? எந்த மார்க்கப்பிரிவைச் சார்ந்தவள் என்று அவரிடம் சொல்லப்போகிறாய்? அவருக்கு உன்னால் எதைக் காண்பிக்க முடியும்?” என்று கேட்டாள்.
104அங்கே உட்கார்ந்திருந்த அந்தச் சிறுமி, படுக்கையின் அடியில் இருந்த தழும்பேறிய தன் சிறு கைகளை வெளியே எடுத்து "நான் என் கைகளை மாத்திரம் அவரிடம் காண்பிப்பேன், அவர் புரிந்து கொள்வார்” என்று சொன்னாள். அது சரியென்று எண்ணுகிறேன்.
105அவர் நம் கைகளில் அளித்தவற்றைக் கொண்டு நாம் என்ன செய்தோம் என்பதை மாத்திரம் அவரிடம் காண்பிப்போம். நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் கொண்டு அதைச் செய்வோமாக. “எதைப் பார்க்கப்போனீர்கள்?” அந்நாளிலே நீங்கள் அவரைச் சந்திக்கும்போது அவர் உங்களிடத்தில் எதைப் பார்க்கப்போகிறார்? அவருக்குக் காண்பிப்பதற்கு அனைத்தும் இப்பொழுது இருக்கையில், உங்களிடம் அவருக்குக் காண்பிக்க எதுவுமே இல்லையென்றால், நாம் இப்பொழுது ஜெபிக்கும் வேளையில், அதைக் குறித்துச் சிந்தித்துப்பாருங்கள். நாம் நம் தலைகளைத் தாழ்த்துவோம்.
106"சகோதரன் பிரன்ஹாம், நான் என் கரத்தை உயர்த்தும் இவ்வேளையில், எனக்காக ஜெபியும். கிறிஸ்து என்னைப் பயன்படுத்துவதற்காக நான் - நான் என்னுடைய இந்தக் கரங்களை அவருக்காகப் பிரதிஷ்டைபண்ண வேண்டுமென்று உணர்கிறேன்” என்று சொல்ல விரும்புகின்ற யாராவது ஒருவர் இருக்கின்றீர்களா? உங்கள் கைகளை உயர்த்தி “எனக்காக ஜெபியும்” என்று கூறுங்கள். உங்கள் கைகளை உயர்த்தும் போது, “என் கைகளை நான் அர்ப்பணிக்கிறேன். நான் அதைச்செய்ய விரும்புகிறேன்” என்று சொல்லுங்கள். 109. “நான் – நான் செய்திருக்க வேண்டிய காரியங்களைச் செய்ய வில்லை என்பதை உணர்கிறேன். நான் மிகவும் அசதியாயிருந்து விட்டேன் என்பதை உணர்கிறேன். ஆயினும் நான் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறேன். நீர் எனக்காக ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் சகோதரன் பிரன்ஹாம், நான் என் கைகளை உயர்த்துகிறேன்” என்று சொல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள் இருக்கலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. 110. “அவர் எனக்கு இன்னும் அதிகமாய் வேண்டுமென விரும்புகிறேன். நான் - நான் அவரை நேசிக்கிறேன், அவரை அந்நாளிலே சந்திக்க விரும்புகிறேன். மேலும் அந்தப் புஸ்தகத்தை நான் திறக்கும்போது 'புஸ்தகத்தில் உன் பெயரை வைத்தாய், ஆனால் நீ ஒன்றுமே செய்யவில்லையே' என்று அவர் என்னிடம் கூற விரும்பவில்லை. நான் ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய விரும்புகிறேன். நான் வெளியே சென்று ஏதாவதொன்றைச் செய்ய விரும்புகிறேன்” நான் ஜெபிக்க விரும்புகிறேன். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது... ஐயா, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக.
107அது சரியே, அநேக கரங்கள், அநேக கரங்கள் உயர்த்தப் பட்டிருக்கின்றன. இப்பொழுது, தங்கள் கரங்களை உயர்த்தி யிருப்பவர்களே, நாம் ஜெபிப்பதற்கு முன்பாக, இன்னும் யாராவது இருக்கிறீர்களா? வாலிப ஸ்திரீயே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, இங்கேயிருக்கிற என் சகோதரனே தேவன் உன்னையும் ஆசீர்வதிப்பாராக.
108இப்பொழுது நான் ஜெபிக்கும் வேளையில், நீங்களும் ஜெபம் பண்ணுங்கள். "கர்த்தராகிய இயேசுவே, நான் இருக்கின்ற இந்த இடத்திலேயே நீர் - நீர் என்னுடன் பேசினீர். இப்பொழுதே, இன்று இராத்திரி முதற்கொண்டு, நான் உம்மைச் சேவிக்கப்போகிறேன். நான் ஒன்றைக் காண்பிக்கும்படியாக நாளை புறப்படப்போகிறேன். நான் என்னைக் குறித்துக் காண்பிப்பதற்காக அல்லாமல், யாவரும் இயேசுவை அறியத்தக்கதாகச் செல்வேன். அவருக்காக ஏதாவ தொன்றைச் செய்யப் போகிறேன். இப்போது என்னையே உம்மிடத்தில் கொண்டுவருகிறேன். இதுவரை நான் காலதாமதம் செய்கிறவனாய் இருந்ததை மன்னித்தருளும்.'
109ஒருவேளை நீங்கள் ஒரு பிரசங்கியாகவோ அல்லது ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியராகவோ இல்லாமலிருக்கலாம், ஆனால் ஏதாகிலும் செய்யுங்கள். சிலவேளைகளில் வெறுமனே வீதியோரத்தில் நின்று சாட்சி பகருங்கள், எவரேனும் ஒருவரிடம் பேசுங்கள். பாவிகள் மத்தியிலே வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில், சென்று கீர்த்தனைகளைப் பாடுங்கள். கர்த்தரைப் பற்றி அவர்களுடன் பேசுங்கள். நீங்கள் செய்யவேண்டியது அதுவே. தேவன் கேட்பது அவ்வளவுதான். உங்கள் கையில் செய்யக்கிடைப்பது எதுவோ அதைச் செய்யுங்கள். அதைச் செய்யுங்கள்.
110இப்பொழுது, விலையேறப்பெற்ற தேவனாகிய பிதாவே, நாங்கள் தாழ்மையோடும் இனிமையோடும் ஆராதனையின் இந்தச் சிறு பாகத்தை நிறைவுசெய்கிறோம்.“எதைப் பார்க்கப்போனீர்கள்?” என்ற எல்லாவற்றிற்கும் போதுமான அக்கேள்வியை அன்று நீர் கேட்ட அந்த வார்த்தையை வாசித்ததினால், இவ்விடமெங்கும் விதைக்கப்பட்ட வித்துக்களை உம்மிடத்தில் கொண்டுவருகிறோம்.
111ஜனங்கள் ஏன் சபைக்குச் செல்கிறார்கள்? வெறுமனே ஒரு குறிப்பிட்ட சபையில் சேர்ந்துகொள்வதற்காகவா, அல்லது மதமார்க்கத்தின் சமூக அந்தஸ்தைப் பெறுவதற்காகவா? எதைப் பார்க்கப்போனீர்கள்? ஒரு சமூக அந்தஸ்துடைய சபையில் சேருவதற்கோ அல்லது அறிவுப்பூர்வமான பிரசங்கத்தையோ கேட்கப் போனீர்களா? அப்படியல்லவென்றால் சமாதானத்தைக் கண்டடை வதற்காகப் போனீர்களா? அந்த இரட்சகரைக் கண்டறிவதற்காகப் போனீர்களா? எதைப் பார்க்கப்போனீர்கள்?
112மேலும், தேவனாகிய பிதாவே, இன்றிரவு உம்முடைய வார்த்தையின் மூலமாக, ஏறக்குறைய பதினைந்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கைகளை உயர்த்தியிருக்கிறார்கள். இன்றிரவு வந்ததின் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பிரதிஷ்டை செய்ய விரும்பு கின்றனர். அவர்கள் ஒருவேளை கிறிஸ்தவ விசுவாசிகளாக இருக்கலாம் ஆனாலும் தங்கள் ஜீவியம் அதைக் காண்பிக்க வேண்டுமென விரும்புகின்றனர். அவர்கள் வார்த்தையைப் பிரசங்கிக்கிற ஊழியத்திற்கோ அல்லது ஞாயிறு பள்ளியில் போதிப்பதற்கோ அழைக்கப்படாததினால், தங்களுக்கு அதில் பங்கில்லை என்று ஒருவேளை எண்ணியிருக் கக்கூடும், ஆனால், எங்கள் கைகளில் ஒரு தாடையெலும்பு முதல் உலர்ந்த கோல் வரை, எதுவாயிருப்பினும், நாங்கள் அதைக் காண்பிப்போமாக. எங்களுக்கு முன்பாக என்ன வைக்கப் பட்டிருந்தாலும், நாங்கள் அதைச் செய்யட்டும்.
113தேவனே, நீர் அவர்கள் வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்தி, அதைப் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யும்படியாக வேண்டுகிறேன். அவர்கள் பாடுவதாக இருந்தாலும், சாட்சிபகருவதாக இருந்தாலும் அல்லது எதைச்செய்வதாக இருந்தாலும், அவர்களுடைய பிரயத்த னங்கள் உம்முடைய கனத்திற்கும் மகிமைக்கும் ஏதுவாக இருப்பதாக. கர்த்தாவே, இதை அருளும்.
114அநேக வருஷங்களாக இந்தப் பீடத்தண்டை நின்று கொண்டிருக்கும் எங்கள் விலையேறப்பெற்ற உண்மையுள்ள சகோதரன் கிரஹாமை ஆசீர்வதிப்பீராக. இச்சிறு சபையானது எங்கள் கூடாரத்தினுடைய ஐக்கியத்தின் உடன்பிறந்த சபையாக விளங்குகிறது, இன்றிரவு நான் உள்ளே பிரவேசித்தபோது, பிரசங்க பீடத்தின் மேல் மூன்று சிலுவைகள் இருப்பதையும், சபையின் இருக்கைகளையும் கண்டேன், ஆண்டவரே நிச்சயமாகவே இது ஒரு உறவின்முறைச் சபையே. இந்தப் பட்டணத்தில் வெளிச்சத்தைப் பிரகாசிக்கின்ற ஒரு உடன்பிறந்த சபையாக இருக்கிறது. தேவனே அவள் ஒரு வல்லமையான சபையாக வளரச் செய்வீராக. கர்த்தாவே அதை அருளும். இங்கேயிருந்து சுவிசேஷ ஒளியானது மற்ற பட்டணங் களுக்கும் பிரகாசிக்கக்கடவதாக. சுவிசேஷத்தை உலகத்தின் ஏனைய பாகங்களுக்கு எடுத்துச்செல்லும்படிக்கு இங்கே இந்தச் சபையி லிருந்து, இங்கே உட்கார்ந்திருக்கிற இந்த வாலிப புருஷர்களிடமிருந்து, அபிஷேகம் பெற்ற பிரசங்கிகளை எழும்பிவரச் செய்வீராக.
115அதின் உதவிக்காரர்களையும், அதின் தர்மகர்த்தாக்களையும், அதின் அங்கத்தினர் யாவரையும் பெலப்படுத்தி அநுக்கிரகிப்பீராக. கர்த்தாவே நீரே மகிமை எடுத்துக்கொள்ளும். என்றோ ஓர் இரவிலோ அல்லது பகலிலோ அல்லது எப்பொழுதாயிருப்பினும், அந்தக் கடைசி அழைப்பு விடுக்கப்பட்டு, உன்னதத்திலிருந்து நாங்கள் அழைக்கப் படுகையில், உமக்காக நாங்கள் ஜெயித்தவற்றை உம்மிடம் அளிப்பதற்காக, அந்த விலையேறப்பெற்ற வெற்றிச்சின்னங்களை உம் பாதத்தில் சமர்ப்பிக்கத்தக்கதாக நாங்கள் வருவோமாக. இன்று இரவு நீர் எங்கள் இருதயங்களில் வைத்த அந்தக் காரியங்களைக் கொண்டு நாங்கள் எங்களுடைய முழுப் பலத்தோடும் பணிசெய்வோமாக. இந்த ஜனங்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு வரங்களை அளித்து, உமக்காக ஊழியம் செய்யும்படிக்கு, ஆவியின் வரங்களை அருளுவீராக. இப்பொழுது, உம்முடைய ஊழியக் காரனாகிய நான், இயேசுகிறிஸ்துவினால் கொடுக்கப்பட்ட கட்டளையின் படி, சேவைக் கென்று அவர்களைத் தேவனுடைய கரங்களில் ஒப்புவிக்கிறேன், இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்.
116பழைய பாடல் ஒன்று உள்ளது "ஊற்றண்டை இடமுண்டு” அதை நம்முடைய இந்தச் சகோதரி வாசிக்க இயலுமா என்று எனக்குத்தெரியவில்லை, உன்னால் அதை வாசிக்க இயலுமா? நல்லது. எத்தனை பேர் அதை அறிவீர்கள்? இடமுண்டு, இடமுண்டு, ஆம், இடமுண்டு, அந்த ஊற்றண்டையில் எனக்கோர் இடமுண்டு.
117பல வருஷங்களுக்கு முன்பு, நாங்கள் அந்தப் பாடலை பீடத்தண்டை முழங்காற்படியிட்டவண்ணம் கூடாரத்திலே பாடுவதை நினைவுகூருகிறேன். உங்களுக்குத் தெரியுமா, அங்கே கூடாரத்தில் எப்படியாக நாங்கள் கைகளைத்தட்டி, கர்த்தரைத் துதித்து, ஒரு அருமையான நேரத்தைக் கொண்டிருப்போமோ, அதே விதமாக நீங்கள் யாவரும் அந்த சுயாதீன மார்க்கத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.
118சகோதரன் ரடெல், நெடுஞ்சாலையோரத்திலே அதுபோன்றதொரு கூடாரத்தைக் கொண்டிருப்பதாக என்னிடம் சொன்னார்கள். வரும் நாட்களில் ஏதோ ஓர் இரவில் நான் மெல்ல சென்று அவர் பிரசங்கிப்பதைக் கேட்பேன். அவரை உந்தித்தள்ளுவதற்கு நான் மிக சிரமப்பட வேண்டியிருந்தது, ஆனால் இறுதியில் அவரோ இப்பொழுது அங்கே அவர்களை அனல்மூட்டிக் கொண்டிருக்கிறார். சகோதரன் ரடெல் அவர்களே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.
119சரி, அந்த இசையை எங்களுக்கு மீட்டுவாயா. [பியானோ வாசிப்பவர், “அதைத் தொடங்குங்கள்" என்கிறார்.] ஓ, சகோதரன் கிரஹாமே, இப்பொழுது அவர்களுக்காக நீர் அதைத் தொடங்குவது நலமாயிருக்கும். நான் இதைப் பாட விரும்புகிறேன். இடமுண்டு, ஆம், இடமுண்டு, அந்த ஊற்றண்டையில் உனக்கோர் இடமுண்டு; இடமுண்டு, இடமுண்டு, ஆம், இடமுண்டு, அந்த ஊற்றண்டையில் உனக்கோர் இடமுண்டு.
120அதை நீங்கள் விரும்புகிறீர்களா? இப்பொழுது கவனியுங்கள், மெதடிஸ்டிகளே, பாப்டிஸ்டுகளே பெந்தெகொஸ்தேயினரே, நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நாம் இந்தப் பாடலை மீண்டும் பாடும்போது, நாம் அதைப் பாடும் வேளையில், உங்களுக்கு முன்பாக இருப்பவர் களுடனும், பக்கத்திலே, இரு பக்கத்திலும் உள்ளவர்களிடமும், உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களுடனும் நம் கைகளைக் குலுக்குவோம். இப்பொழுது யாவரும் முன்னே வாருங்கள். நம் யாவருக்கும் இப்பொழுது இடமுண்டு. இடமுண்டு, இடமுண்டு, ஆம், இடமுண்டு, அந்த ஊற்றண்டையில் உனக்கோர் இடமுண்டு; இடமுண்டு, இடமுண்டு, ஆம், இடமுண்டு, அந்த ஊற்றண்டையில் உனக்கோர் இடமுண்டு. இடமுண்டு, இடமுண்டு, மிகுந்த இடமுண்டு, அந்த ஊற்றண்டையில் உனக்கோர் இடமுண்டு; ஓ, இடமுண்டு, இடமுண்டு, ஆம், இடமுண்டு, அந்த ஊற்றண்டையில் உனக்கோர் இடமுண்டு.
121நீங்கள் அதை விரும்பவில்லையா? உங்களுக்குத் தெரியுமா, யாக்கோபு ஒரு துரவை வெட்டினபோது, பெலிஸ்தர் அவனை அங்கிருந்து துரத்தினார்கள், ஆதலால் அவன் அதற்குத் “துர்க்குணம்” என்று பேரிட்டான். பின்பு அவன் வேறொரு துரவை வெட்டினான், பெலிஸ்தரோ அங்கிருந்தும் அவனைத் துரத்தினார்கள், ஆகையால் அவன் அதற்கு “வாக்குவாதம்" என்று பேரிட்டான். பின்பு அவன் மூன்றாவதாக, மற்றொரு துரவை வெட்டி "நம் யாவருக்கும் இடமுண்டு" என்றான்.
122அப்படியே தேவன் லூத்தரன் சபையில் ஒரு துரவை வெட்டினார், அப்பொழுது லூத்தரன்களோ, மற்ற யாவரையும் அங்கிருந்து துரத்திவிட்டனர். பின்பு அவர் பரிசுத்தமாக்கப்படுதல் என்பதன் கீழ், மெதடிஸ்டு சபையில் ஒரு துரவை வெட்டினார். லூத்தரன்கள் நீதிமானாக்கப்படுதலில் இருந்தார்கள். பின்பு அவர் பரிசுத்தமாக்கப் படுதலில் ஒரு துரவை வெட்டினபோது, இப்பொழுது அவர்கள் எல்லாரையும் அங்கேயிருந்து துரத்தினர்.
123இப்பொழுது அவரோ மற்றொரு துரவை வெட்டியிருக்கிறார். அதற்கு எந்தப் பெயரும் இல்லை, எந்த ஸ்தாபிக்கப்பட்ட மார்க்கப் பிரிவும் இல்லை. அது வெறுமனே நன்மையும், தூய்மையுமான பரிசுத்த ஆவியாயிருக்கிறது, ஆகையால் நம் யாவருக்கும் இடமுண்டு. நீங்கள் ஒரு திமில் கொண்ட ஒட்டகத்தின் மேல் ஏறி வந்தாலும் சரி, இரண்டு- திமில் ஒட்டகங்கள் அல்லது மூன்று-திமில் ஒட்டகங்கள் மேல் ஏறி வந்தாலும் அல்லது எதுவாயிருந்தாலும் சரி, நம் யாவருக்கும் இடம் உண்டு. இடமுண்டு, இடமுண்டு, ஆம், இடமுண்டு, அந்த ஊற்றண்டையில் உனக்கோர் இடமுண்டு; ஓ, இடமுண்டு, இடமுண்டு, ஆம், இடமுண்டு அந்த ஊற்றண்டையில் உனக்கோர் இடமுண்டு
124அந்தப் பழைய பாடல்களை நீங்கள் நேசிக்கவில்லையா? ஓ, நான் அவைகளை மிகவும் நேசிக்கிறேன். பிரசங்கித்த பின், சில நேரங்களில், அது மிகவும் கடினமாகவும் கண்டிப்பானதுமாக இருப்பதாக நான் - நான் எண்ணுகிறேன். அதன் பின்பு, நாம் அதை முடித்துவிட்ட பின், உங்களுக்குத் தெரியுமா, அது உங்களை விளக்கிக் கழுவி விடுவதால், நீங்கள் அறிக்கை செய்து, உங்களுடைய எல்லாப் பாவங்களும் நீக்கப்பட்டு, முழுவதும் சுத்திகரிக்கப்பட்டதாக, விடுதலை பெற்றவர்களாக உணருகிறீர்கள். ஓ, அதன்பின்பு நான் பாட வேண்டுமென உணர்வதுண்டு. நீங்கள் அப்படி உணர்வதில்லையா? அதுவே ஆராதனை. பவுல் கூறினது போல, அவன் பாடும்போது, அவன் ஆவியில் பாடினான். அவன் தொழுதுகொள்ளும் போது, ஆவியில் தொழுதுகொண்டான்.
125இந்தச் சகோதரியால் இதை இசைக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை என்னால் அதைப் பாட இயலாது. ஆனால் நான் இந்தப் பாடலை விரும்புகிறேன். சகோதரியே உன்னால் அதை இசைக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. சிலுவையருகே என்னை வைத்துக்கொள்ளும் இயேசுவே, விலையேறப்பெற்ற ஓர் ஊற்று அங்கேயுண்டே, யாவருக்கும் இலவசமான, சொஸ்த நீரோடை, கல்வாரியின் ஊற்றிலிருந்து ஒழுகிடுதே. சிலுவையே, சிலுவையே, என்றென்றும் அதுவே என் மேன்மை, என் ஆத்துமா எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்த நதிக்கு அக்கரையிலே இளைப்பாரும் மட்டும்.
126பிரியமானவர்களே, அதை நீங்கள் விரும்பவில்லையா? உங்களுக்குத் தெரியுமா, யூடிகாவிலுள்ள இந்த சிறப்பான சத்தங்களால் பாடுவதைக் கேட்பதற்காகத்தான் நான் அதைச் செய்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா. முன்பெல்லாம் நீங்கள் கூட்டங்களை நடத்தும்போது, அந்தப் பழைய இசைக்கருவியை இங்கே வைத்திருப்பீர்கள். யூடிகா ஜனங்களே, உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? நீங்கள் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் சென்று பாடல்களைப் பாடுவது போன்றவற்றைச் செய்வீர்கள். ஓ, நான் அப்படிப்பட்ட ஓரிடத்திற்கு மீண்டும் சென்று அதைப் பாட விரும்புகிறேன். ஓ, என்னே அருமையானது!
127நம் விலையேறப்பெற்ற இரட்சகராகிய அவரை நாம் சந்திக்கப்போகிறோம் என்பதைச் சற்றுச் சிந்தித்துப்பாருங்கள். அது எப்போது என்று தெரியாது; ஒருவேளை விடியற்காலத்துக்கு முன்பாக இருக்கலாம். அதனால் என்ன வித்தியாசம் உண்டாகப் போகிறது? அதனால் என்ன வித்தியாசம் உண்டாகப் போகிறது? சொல்லுங்கள். எப்படியாயினும் அவரைச் சந்திக்கத்தான் போகிறோம், ஆனபடியால் நாம் ஆறுதலடைந்தவர்களாயிருப்போம். விசுவாசமுடையவர்களாய் இருங்கள். அவரிடத்தில் அன்புகூருங்கள். சிலுவையருகே என்னை வைத்துக்கொள்ளும் இயேசுவே, விலையேறப்பெற்ற ஓர் ஊற்று அங்கேயுண்டே, யாவருக்கும் இலவசமான, சொஸ்தமாக்கும்...(நீங்கள் அறிவீர்களா, அது உங்களை ஆற்றுகிறது) கல்வாரியின் ஊற்றிலிருந்து ஒழுகிடுதே. சிலுவையே, சிலுவையே, என்றென்றும் அதுவே என் மேன்மை, என் ஆத்துமா எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்த நதிக்கு அக்கரையிலே இளைப்பாரும் மட்டும் என் இரட்சகர் மரித்த அந்தச் சிலுவையண்டை, பாவம் கழுவிடக் கதறினேன்; அங்கேயென் இருதயத்தில் இரத்தம் தெளிக்கப்பட்டதே; அவர் நாமத்திற்கே மகிமை! ஓ, அவர் நாமத்திற்கே மகிமை, அந்த விலையேறப்பெற்ற நாமத்திற்கே! அவர் நாமத்திற்கே மகிமை! அங்கேயென் இருதயத்தில் இரத்தம் தெளிக்கப்பட்டதே; அவர் நாமத்திற்கே மகிமை! இப்பொழுது, இந்தப் பல்லவியைப் பாடுகையில் நாம் நம் கைகளை உயர்த்துவோம் பாவத்திலிருந்து எவ்வளவு அதிசயமாய் இரட்சிக்கப்பட்டேன், எவ்வளவு இனிமையாய் இயேசு எனக்குள் வாசம்செய்கிறாரே, அந்தச் சிலுவையண்டை என்னை ஏற்றுக்கொண்டார்; அவர் நாமத்திற்கே மகிமை! அவர் நாமத்திற்கே மகிமை என்போம், அந்த விலையேறப்பெற்ற நாமத்திற்கே! ஓ, அவர் நாமத்திற்கே மகிமை! அங்கேயென் இருதயத்தில் இரத்தம் தெளிக்கப்பட்டதே; அவர் நாமத்திற்கே மகிமை!
128பரலோகத்திற்குச் செல்ல எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? நிச்சயமாகவே, நாம் அதை விரும்புகிறோம். ஆம், ஐயா. நானும் அங்கே செல்ல விரும்புகிறேன். நான் அந்தப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன். என் சகத் தோழர்களும், சகோதரிகளும் என்னோடு சேர்ந்து செல்வதை அறிவதினால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆம், ஐயா. என்னைச் சுத்திகரித்த இந்த ஊற்றண்டை வந்து, உன் சிறுமையான ஆத்துமாவை இரட்கரின் பாதத்தில் ஊற்றி; ஓ, இன்றே அதில் மூழ்கி, பூரணமாய் மாறு; அவர் நாமத்திற்கே மகிமை! அவர் நாமத்திற்கே மகிமை! அவர் விலையேறப்பெற்ற நாமத்திற்கே மகிமை! அங்கேயென் இருதயத்தில் இரத்தம் தெளிக்கப்பட்டதே; மகிமை... அது மிகவும் அருமையாயுள்ளது! பாவத்திலிருந்து எவ்வளவு அதிசயமாய் இரட்சிக்கப்பட்டேன், எவ்வளவு இனிமையாய் இயேசு எனக்குள் வாசம்செய்கிறாரே, அந்தச் சிலுவையண்டை என்னை ஏற்றுக்கொண்டார்; அவர் நாமத்திற்கே மகிமை! ஓ, அவர் விலையேறப்பெற்ற நாமத்திற்கே மகிமை! அவர் நாமத்திற்கே மகிமை! அங்கேயென் இருதயத்தில் இரத்தம் தெளிக்கப்பட்டதே; அவர் நாமத்திற்கே மகிமை! இத்தனை ஐசுவரியமும் மதுரமுமான ஊற்றண்டை வந்து, உன் சிறுமையான ஆத்துமாவை இரட்கரின் பாதத்தில் ஊற்றி. நீங்கள் முன்னே வந்து, சற்று நேரம் முழங்காற்படியிட விரும்புகிறீர்களா? ...இன்றே பூரணமாய் மாறு; அவர் நாமத்திற்கே மகிமை! பாடுவோம், அவர் நாமத்திற்கே மகிமை, அந்த விலையேறப்பெற்ற நாமத்திற்கே! ஓ, அவர் நாமத்திற்கே மகிமை, அந்த விலையேறப்பெற்ற நாமத்திற்கே! அங்கேயென் இருதயத்தில் இரத்தம் தெளிக்கப்பட்டதே; அவர் நாமத்திற்கே மகிமை! பாடுவோம், மகிமை...
129இப்பொழுது உங்களில் சிலர் முன்னே வந்து பலிபீடத்தைச்சுற்றி முழங்காற்படியிட விரும்புகிறீர்களா? அந்தச் சிறுபையனுடன் வாருங்கள். வாருங்கள். விலையேறப்பெற்ற அவர் நாமத்திற்கே மகிமை! ஓ, அங்கேயென்...
130சகோதரன் பீலர். சகோதரன் பீலர். சகோதரன் பீலர். சகோதரர்களே இங்கே வாருங்கள். சகோதரன் ரடெல். ...அவர் நாமத்திற்கே! பாடுவோம், அவருக்கே மகிமை...
131இன்னும் யாராவது முன்வந்து முழங்காற்படியிட விரும்புகிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கும்போதே, உங்கள் வாழ்க்கையைத் தேவனுக்குப் பிரதிஷ்டை செய்ய விரும்புவீர்களானால், முன்னே வாருங்கள். அங்கேயென் இருதயத்தில் இரத்தம் தெளிக்கப்பட்டதே; அவர் நாமத்திற்கே மகிமை! இத்தனை ஐசுவரியமும் மதுரமுமான ஊற்றண்டை வந்து; உன் சிறுமையான ஆத்துமாவை இரட்கரின் பாதத்தில் ஊற்றி; ஓ, இன்றே அதில் மூழ்கி, பூரணமாய் மாறு; அவர் நாமத்திற்கே மகிமை! பாடுவோம், அவர் நாமத்திற்கே மகிமை, அந்த விலையேறப்பெற்ற நாமத்திற்கே! ஓ, அவர் நாமத்திற்கே மகிமை! அங்கேயென் இருதயத்தில் இரத்தம் தெளிக்கப்பட்டதே; அவர் நாமத்திற்கே மகிமை! பாடுவோம், அவர் நாமத்திற்கே மகிமை, அந்த விலையேறப்பெற்ற நாமத்திற்கே! அவர் நாமத்திற்கே மகிமை! ஓ, அங்கேயென் இருதயத்தில் இரத்தம் தெளிக்கப்பட்டதே; அவர் நாமத்திற்கே மகிமை! இத்தனை ஐசுவரியமும் மதுரமுமான ஊற்றண்டை நீ வாராயோ; உன் சிறுமையான ஆத்துமாவை ஊற்றாயோ...
132இன்று இரவு நீங்கள் மண்டியிட்டு, ஜெபிக்க முன்னே வரமாட்டீர்களா? யாராவது வரவிரும்பினால், முன்னே வாருங்கள். இன்றே... பூரணமாய் மாறு; ஓ, அவர் நாமத்திற்கே மகிமை! பாடுவோம், அவர் நாமத்திற்கே மகிமை, அந்த விலையேறப்பெற்ற நாமத்திற்கே! அவர் விலையேறப்பெற்ற நாமத்திற்கே மகிமை! ஓ, அங்கேயென் இருதயத்தில் இரத்தம் தெளிக்கப்பட்டதே; அவர் நாமத்திற்கே மகிமை!
133ஓ, எவ்வளவு அற்புதமான சமயம்! ஓ, அந்தப் பழைய பாடலை நாம் எப்படியாகப் பாடுவோம். உனக்கது அற்புதமான நேரமாயிருக்கும், எனக்கும் அற்புதமான நேரமாயிருக்கும். நம் ராஜா இயேசுவைச் சந்திக்க நாம் ஆயத்தமானால், அது எத்தனை அற்புதமான நேரமாயிருக்கும்.
134அந்தவிதமாக ஆவியினாலே ஆராதனைசெய்வதை நீங்கள் நேசிக்கவில்லையா? ஆம், ஐயா. அது உங்கள் ஆத்துமாவின் மூலமாய் உங்களைப் போஷிக்கின்றது. அல்லேலூயா! அல்லேலூயா!
135பில்லி அவ்விதமாக உணர்வதைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவன் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக! இப்பொழுது நாம் இந்தப் பாடலைப் பாடுவோம் இம்மானுவேலின் இரத்தநாளத்தைப் பிளந்துவந்த இரத்தத்தால் நிறைந்த ஓர் ஊற்றுண்டே அவ்வூற்றில் மூழ்கின பாவிகள் தங்கள் குற்றக்கறைகள் யாவும் நீங்கப்பெற்றனரே. இப்பொழுது நாம் யாவரும் சேர்ந்து பாடுவோம். சகோதரன் கிரஹாமே, எங்களுக்கு பாட உதவும். இம்மானுவேலின் இரத்தநாளத்தைப் பிளந்துவந்த இரத்தத்தால் நிறைந்த ஓர் ஊற்றுண்டே அவ்வூற்றில் மூழ்கின பாவிகள் தங்கள் குற்றக்கறைகள் யாவும் நீங்கப்பெற்றனரே. தங்கள் குற்றக்கறைகள் யாவும் நீங்கப்பெற்றனரே. தங்கள் குற்றக்கறைகள் யாவும் நீங்கப்பெற்றனரே. பின்பு அவ்வூற்றில் மூழ்கின பாவிகள்...
136உங்களுக்குத் தெரியுமா, நான் அந்தப் பாடலை நினைக்கும் போதெல்லாம், ஒரு சமயம் என்னிடம் சொல்லப்பட்ட ஒரு கதையை நினைக்காமல் இருக்க இயலாது. அது அரிசோனாவிலுள்ள (Arizona) பழங்குடியினர் குடியிருப்புப் பகுதிகளில் நடந்தது. அங்கே டிம் கோய் (TimCoy) என்பவர் இருந்தார். அவர் இந்தியர்களுக்கு வழிகாட்டியாகவும் [அமெரிக்கப் பழங்குடியினரை, இந்தியர் அல்லது செவ்விந்தியர் என்று அழைக்கப்படுவதுண்டு), ஒரு வாலிப மிஷனரியாகவும் இருந்தார். ஒருமுறை அவர் பாலைவனத்தில் வழி தவறிப்போனார், வெளியேறும் வழியை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தண்ணீரும் தீர்ந்துபோன நிலையில், அவர் தன் குதிரையின் மேல் சவாரி செய்துகொண்டிருந்தார். இரண்டு மூன்று நாட்களாக அவர் அங்கே வழி தொலைந்திருந்ததால், வெளியே வருகின்ற நம்பிக்கையே இழந்துவிட்டார். ஒரு கூட்டத்தில் அவர் சாட்சிபகரும்போது, அது மிகவும் பயங்கரமான இருளார்ந்த நேரமாயிருந்ததாகக் கூறினார். அப்பொழுது அந்தப் பாலைவனத்தில் ஒரு மானின் கால்தடத்தைக் கண்டார், அவர் சவாரி செய்து கொண்டிருந்த அந்தக் குதிரையோ பெலன் முழுவதையும் இழந்துவிட்ட நிலையில் இருந்தது. அதன்..அதன் பெயர் பெஸ் (Bess) என்று சொன்னார் என்று நினைக்கிறேன். அவர் - அவர் அந்தக் குதிரையின் மேல் பரிதாபம் கொண்டார். ஆகையால் அவர் நடந்தே சென்றுகொண்டிருந்தார். அங்கே சில மணற்புயல்கள் உண்டானதால், நாசிகள் முழுவதுமாக மணலால் அடைக்க பட்டிருந்தன.
137அதனால்தான் அவர்கள் அத்தகைய கழுத்தில் அணியும் சால்வையை அணிகின்றனர். மணற்புயல் வீசும்போது, அவர்கள் அதைத் தங்கள் முகத்தின் மேல் மூடிக்கொள்வார்கள். நான் அநேக முறை சவாரி செய்திருக்கிறேன், என் சுவாசக்காற்று ஈரமாயிருப் பதினால், சவாரி செய்யும்போது, அது முகத்தின் மேல் ஒரு திடமான படலம் போல படிந்துவிடும். உங்களுக்குத் தெரியுமா, அந்தப் புழுதி, நமக்கு முன்பாகச் செல்லும் கால் நடைகள் மற்றும் அவை யாவும் சேர்ந்து, மணற்புயல் அப்படியாக வீசும்.
138அவர் தன் வாழ்க்கைப்பாதையின் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்தார் என்று சொன்னார். அவரும் தள்ளாடிக்கொண்டிருந்தார், அவர் குதிரையும் தள்ளாடியது. அவரால்... ஒரு குதிரையை விட உங்களால் அதிக நேரம் தண்ணீரின்றி இருக்க முடியும். ஆக, அவர் தள்ளாடியபடியே சென்றுகொண்டிருந்தார். இந்த மானின் தடம் செல்லும் பாதையைக் கண்டவுடன் அவர் மனநிம்மதியடைந்தார். அவர் அந்த மானின் தடத்தைப் பின்தொடரத் தொடங்கினார். அவர் குதிரையின் மேல் ஏறிச்சவாரி செய்யத்தொடங்கினார். சற்று தூரம் அந்தப் பாதையில் சென்றபோது, ஓ, அங்கே நூற்றுக்கணக்கான மான்கள் அந்தப் பாதையில் சென்றதுபோலத் தோன்றினதாகக் கூறினார். அப்பொழுது “சரி, அந்த மானின் தடம் தண்ணீரண் டைக்குத்தான் நடத்துகிறது, ஆகையால் நான் தண்ணீரைக் கண்டுபிடித்துவிடுவேன்” என்று நினைத்தவாறு தன் குதிரையுடன் தொடர்ந்து சென்றதாகச் சொன்னார்.
139மேலும் அவர் சொன்னார், அந்தத் தடத்தின் மூன்று அல்லது நான்கு கிளைகள் ஒரு புறமாகப் பிரிந்து சென்ற ஒரு இடத்திற்கு வந்தார், அப்பொழுது அந்தக் குதிரை, அந்தப் பாதையில் போக விரும்பியது. அவர் அந்தக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து "ஓ, இல்லை பெஸ். நீ அந்தப் பாதையில் செல்லக்கூடாது” என்று சொல்லி, இந்தப் பக்கமாக இழுத்தார். "இந்தப் பாதையில் செல், இது நன்றாகத் தடம் பதிந்திருக்கிறது. எல்லா மான்களும் இந்த வழியாகத்தான் தண்ணீர் குடிக்கச் சென்றிருக் கின்றன” என்றார். ஆனால் அந்தக் குதிரையோவெனில் திரும்பி தொடர்ந்து கனைத்துக் கொண்டே யிருந்தது என்று சொன்னார். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதால், தன்னிடமிருந்த தாற்றுமுள் சக்கரத்தால், அந்தக் குதிரையை இரத்தம் சொட்டும் வரைக்கும் குத்தினார், ஆனால் அது நகரவில்லை என்றார். அந்தக் குதிரை இந்தச் சிறு வழித்தடத்தில் செல்லவே விரும்பினது.
140பாருங்கள், ஜனங்கள் அநேகருடைய வழியும் அப்படித் தானிருக்கிறது. அவர்கள் தொலைக்காட்சியையும், திரைப்பட நட்சத்திரங்களின் பாதைகளையும் பின்பற்றிச்செல்ல விரும்பு கின்றனர், பிரபலமான புகழின் பாதையைத் தெரிந்துகொண்டு, ஏதோ ஒரு பெரிய மனிதனாகத் திகழ விரும்புகிறார்கள். புரிகிறதா? அவர்கள் அச்சிறு வழித்தடத்தைக் கவனிப்பதேயில்லை. பரலோகத்திற்குச் செல்லும் பெரும்பாதை ஒன்றுண்டு, அது மங்கலான ஒற்றையடிப்பாதை என்கின்றனர்; அழிவிற்குச் செல்லும் பாதையோ விசாலமாயும் வழியெங்கும் பகட்டான அடையாளங்கள் மின்னும். மகத்தான மந்தைதிரட்டல் உண்டாகும் என்று சொல்கிறார்கள், அப்போது மாடுமேய்ப்பவர்களோ திக்கற்ற கன்றுகளைப்போல நிற்பார்கள்; நியாயத்தீர்ப்பின் குதிரைவீரர்களால் குறியிடப்படுவார்கள், அவர்கள் ஒவ்வொரு அடையாளத்தையும் இனத்தையும் அறிவார்கள். நீங்கள் அந்தப் பாடலைக் கேட்டிருக்கிறீர்கள். நானோ கதியற்ற கன்றைப்போல, மரண ஆக்கினைக்குத் தீர்க்கப்பட்ட ஒரு மனிதனாக குதிரைவீரரின் எஜமான் கடந்துபோகையில் அந்தக் குணமற்ற கூட்டத்தோடு நானும் பிரிக்கப்பட்டு ஒதுக்கப்படுவேன் என்றெண்ணுகிறேன்.
141அவர் அதைப்பற்றிச் சிந்தித்ததாகக் கூறினார். “நான் அதைக் கேட்டேன்...” அவர் அந்தக் குதிரையை நோக்கி, இவ்விதமாக நினைத்தார் "பெஸ், நீ – நீ என்னை இவ்வளவு தூரம் சுமந்து வந்திருக்கிறாய். நான் மரிக்கப்போகிறேன் என்று நினைத்தபோது, நீ என்னை இவ்வளவு தூரம் தாங்கி வந்திருக்கிறாய். குதிரைகளுக்குத் தண்ணீர் எங்கேயிருக்கிறது என்பதைக் கண்டறியும் உள்ளுணர்வு இருப்பதாகப் பலமுறைக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆகையால் இம்மட்டும் நான் உன்னை நம்பியிருப்பேன் என்றால், அந்த மங்கலான வழித்தடத்திலும் உன்னை நம்பித் தொடருவேன்” என்றார்.
142இந்தச் சுவிசேஷத்தைக் குறித்து நானும் அவ்விதமாகவே உணர்கிறேன். உங்களைச் சுமந்துசெல்லும் ஒரு குதிரையுடன் அதை ஒப்பிடவில்லை, ஆனால் இந்த வாழ்க்கை முழுவதினூடாக நான் இப்படித்தான் கர்த்தரை நம்பியிருக்கிறேன். பாதையின் முடிவில் அந்த வழித்தடம் மங்கலாகத் தென்படும்போது, நான் தொடர்ந்து அவரையே நம்பியிருக்க விரும்புகிறேன். புரிகிறதா? முப்பது வருஷங்களுக்கு முன்பு என்னை இரட்சித்த இந்தப் பண்டையகாலத்து-மார்க்கமானது, இத்தனை தூரம் என்னைச் சுமந்து வந்திருக்கின்றது. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடக்கும்போதும், நான் இந்த அதே இருதயப்பூர்வமான அனுபவத்தைக் கொண்டிருக்கவே விரும்புகிறேன். நான் அப்பொழுதும் அதையே நம்புவேன்.
143அவர் குதிரையின் மேல் ஏறி, அந்தப் பாதையில் செல்லத்தொடங்கினார். அவர் சற்றுதூரம் கூட செல்வதற்கு முன்பாகவே, அந்தக் குதிரை ஒரு பெரிய நீர் நிலைக்குள் தலை குப்புறக் குதித்தது. அவர் அந்தத் தண்ணீரில் மூழ்கி, தண்ணீரை வாரி இறைத்துக்கொண்டு, உரத்த சத்தமாய் தேவனை மகிமைப் படுத்தினாராம். அவர் அந்தக்குதிரையின் நாசியைக் கழுவிவிட்டு, தன் மேல் தண்ணீரை அள்ளித்தெளித்து ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார் என்றார்.
144அவர் தண்ணீரை விட்டு வெளியே வந்தபோது, யாரோ ஒருவர் சிரிக்கும் சத்தம் கேட்டது என்றார், கரையை நோக்கிப்பார்த்தபோது, ஒரு மேற்புறம் மூடப்பட்ட வண்டியுடன் ஒரு கூட்ட ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்தனர். அவர்கள் வேட்டைக்களியாட்டம் அல்லது அதுபோன்ற ஏதோவொரு பெரிய களியாட்டத்திற்காக அங்கே வந்திருந்தனர். அவர்கள் யாவரும் குடித்துவெறித்திருந்தனர், மேலும் அவர்களுக்கு இவர் யாரென்று தெரிந்திருந்ததாகத் தோன்றியது என்றார். ஒருவன் “வெளியே வா” என்றான். அவர் அதற்கு “நன்றி, தோழரே” என்றார்.
145"நீ சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறாய் என்று நினைக்கிறோம்” என்றபோது, தான் பல நாட்களாக வழிதவறி தொலைந்து போனதை அவர்களிடம் கூறி “ஆமாம்” என்று சொன்னார்.
146"எங்களிடம் கொஞ்சம் வேட்டையாடின மான் இறைச்சி இருக்கிறது” என்று சொன்னான். ஆகவே அவர்கள்... அவர் அந்த மானிறைச்சியைப் புசித்தார். பின்பு அவன் “சரி, நீர்தான் இந்தியர்களுக்கு வழிகாட்டியாயிருக்கும் ஜாக் அல்லது டிம் கோய் அல்லவா?” என்று கேட்டான். “ஆம்” என்றார்.
147"சரி, இப்பொழுது கொஞ்சம் அருமையான மான் இறைச்சியைப் புசித்ததால், இந்தக் குடுவையிலுள்ள அருமையான பானம், உனக்கு நல்ல உதவியாக இருக்கும்” என்று சொல்லிக் குடுவையை அவரிடம் கொடுத்தான்.
148அதற்கு அவர் “வேண்டாம், பையன்களே. நன்றி. நான் மது அருந்துவதில்லை” என்று சொல்லிவிட்டு, தான் செல்லவேண்டிய திசையை நோக்கி, செல்வதற்கு ஆயத்தமாகி எழுந்து நின்று, அங்கபடியில் காலை வைத்துக் குதிரை மேல் ஏறினார்.
149அப்பொழுது பாதிப் போதையில் தள்ளாடிக்கொண்டிருந்த ஒருவன் ஒரு வின்செஸ்டர் ரகத் துப்பாக்கியை எடுத்து, அதில் தோட்டாவைத் திணித்தவாறு அவரை நோக்கி “இதோ பார், டிம்! எங்கள் மான் இறைச்சி உனக்குப் புசிப்பதற்குப் போதுமானதாக இருந்தால், எங்களுடைய சாராயத்தை உன்னால் அருந்த முடியாத அளவிற்கு நீ அவ்வளவு நல்லவன் என்று நினைத்துக்கொள்ளாதே!" என்றான். குடிகாரர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா.
150அவர் அதற்கு “தோழரே, பாரும், நான் மிகவும் நல்லவன் என்பதினால் அதைக் குடிக்கவில்லை என்று எண்ணவில்லை, ஆனால் நான் குடிப்பதில்லை, நான் ஒரு கிறிஸ்தவன்” என்று சொன்னார்.
151அதற்கு அவனோ “ஆ! அந்தப் பேச்சையெல்லாம் விடு, இந்தச் சாராயத்தைக் குடிக்கவேண்டும், இல்லையென்றால் சுட்டுத் தள்ளிவிடுவேன்" என்று வெற்றுவீம்பு பேசி மிரட்ட முயன்றான்.
152அவர் "ஒரு நிமிஷம் சற்றுப்பொறும், என் மேல் அந்தத் தோட்டாவைப் பாய்ச்சுவதற்கு முன்பு, என் கதையை உம்மிடம் சொல்கிறேன்.”, “நான் கென்டக்கி மாகாணத்தில் பிறந்தேன், என் தகப்பன் ஒரு குடிகாரனாக, தன் காலணிகளைக்கூடக் கழற்ற முடியாத நிலையில் மரித்தார், நாங்கள் ஒரு சிறு மரக்குடிலில் வாழ்ந்தோம். ஒரு நாள் காலையில் சூரியன் உதிக்கத்தொடங்கிய போது, மரப் பலகையால் கூடத் தரையை மச்சுப்பாவாத அந்தப் பழைய சிறிய குடிலின் தரை வழியாக, சூரியக்கதிர்கள் ஊடுறுவினது, அங்கே சோள உமியால் செய்யப்பட்ட படுக்கையில் ஒரு விலையேறப்பெற்ற தாய் மரணத்தருவாயில் இருந்தாள். என் தாய்தான் அவள், அப்பொழுது எனக்கு எட்டு வயதுதான் ஆயிருந்தது. தாய் என்னைப் படுக்கையருகே அழைத்து, அணைத்து, முத்தமிட்டு, 'டிம், நான் உன்னை விட்டுப் போகிறேன், உன் தகப்பன் ஒரு குடிகாரனாக, சூதாட்டக்காரனாய், துப்பாக்கியால் சுடப்பட்டு மரித்தார். டிம் நான் மரிப்பதற்கு முன்னால் வாக்குக்கொடு, நீ ஒருபோதும் மதுபானத்தைத் தொடவோ, சூதாடவோ மாட்டாய் என்று வாக்குக்கொடு என்று கேட்டபோது "நான் என் தாயை முத்தமிட்டு அவளிடத்தில் விடைபெற்றபோது, அவளுக்கு அதை வாக்குக் கொடுத்திருந்தேன்” என்றார். “என் வாழ்க்கையில் அந்த நாள் முதல் ஒருபோதும் நான் மதுவைத் தொட்டதில்லை. இப்பொழுது, நீ என்னைச் சுட விரும்பினால், சுட்டுவிடு” என்று சொன்னார்.
153அந்தச் சமயத்தில் திடீரென ஒரு துப்பாக்கி வெடித்தது. அவன் கையிலிருந்த அந்தச் சாராயக்குடுவை வெடித்துச் சிதறியது. கோரமான தோற்றமுடைய ஒருவன் அந்தப் பள்ளத்தாக்கிலிருந்து வந்தான், தேடப்பட்டு வந்த ஒரு குற்றவாளியான அவன் ஒரு கொள்ளைக்கூட்டத்தானாக இருந்தான். அவன் "டிம், ஒரு நிமிஷம் சற்றுப் பொறும். "நானும் கென்டக்கியைச் சேர்ந்தவன்தான், நானும் ஒருபோதும் குடிக்கமாட்டேன் என்று என் தாயிடம் வாக்குக் கொடுத்திருந்தேன்” என்றான். தொடர்ந்து அவன் “இவர்கள் அனைவரும் நன்றாகக் குடித்து வெறிக்கும் வரை நான் காத்திருந்தேன்; அதன் பின்பு அவர்கள் ஒவ்வொருவரையும் தலையில் அடித்துச் சாய்த்துவிட்டு, வேட்டைக் காரர்களாகிய அவர்களிடம் இருக்கும் பணத்தைத் திருடிக்கொண்டு போகலாம் என்றிருந்தேன், அதற்காகத்தான் இங்கே நின்று கொண்டிருந்தேன். ஆனால் நான் உன் சாட்சியைக் கேட்டபோதோ, ஏதோவொன்று என் இருதயத்தோடு பேசினது. என் தாயாருக்கு நான் பண்ணின வாக்கைத் தவறினதற்காக மனம் வருந்துகிறேன்” என்றான், “ஆனால் என் துப்பாக்கி வெடித்ததின் சத்தம் அந்தப் பரலோகத்தின் மகத்தான பள்ளத்தாக் குகளில் தொனித்த போது, 'நான் இந்த நேரம் முதற் கொண்டு, இனி ஒருபோதும் மதுவைத் தொடமாட்டேன்' என்று பண்ணின வாக்கை அவள் கேட்டிருப்பாள்.” “மது அருந்துவதை ஒழித்துவிடும் சமயம் இதுவே” என்று கூறினான். நான் அதைக்குறித்துப் பலமுறைச் சிந்தித்ததுண்டு. இம்மானுவேலின் இரத்தநாளத்தைப் பிளந்துவந்த இரத்தத்தால் நிறைந்த ஓர் ஊற்றுண்டே, (இந்தப் பழைய மங்கலான வழித்தடத்தில் நீங்கள் சென்றாலும் அது ஒரு பொருட்டல்ல) அவ்வூற்றில் மூழ்கின பாவிகள் தங்கள் குற்றக்கறைகள் யாவும் நீங்கப்பெற்றனரே. தங்கள் குற்றக்கறைகள் யாவும் நீங்கப்பெற்றனரே. அப்படித்தான் நீங்கள் அதைச் செய்யமுடியும். அவ்வூற்றில் மூழ்கி தங்கள் குற்றக்கறைகள் யாவும் நீங்கப்பெற்றனர்.
154இதோ எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு பாடல். இது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று உறுதியாக நினைக்கிறேன். என் விசுவாசம் உம்மை நோக்குதே, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகா; இப்பொழுது என் மன்றாட்டைக் கேட்டு, என் குற்றங்களையெல்லாம் அகற்றிடும், இந்நாள்முதல் நான், முற்றிலும் உம்முடையவனாயிருக்கச் செய்திடுமே.
155அந்தப் பாடல் உங்களுக்குத் தெரியுமல்லவா? அதை நேசிக்கிறீர்களா? அப்படியானால், நாம் அதைப் பாடுவோம். அதைப் பாடும்போது, நாம் எழுந்து நிற்போம். என் விசுவாசம் உம்மை நோக்குதே, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகா; இப்பொழுது என் மன்றாட்டைக் கேட்டு, என் குற்றங்களையெல்லாம் அகற்றிடும், இந்நாள்முதல் நான், முற்றிலும் உம்முடையவனாயிருக்கச் செய்திடுமே. வாழ்வின் காரிருள் பாதையில் நான் நடந்தாலும், பெருந்துக்கம் என்னைச் சூழ்ந்தாலும், நீரே என் வழிகாட்டியாயிரும்; இருளெல்லாம் மாற்றிவிடும்... சகோதரன் கிரஹாம் அவர்களே.