COD 10 பரிசுத்த ஆவியின் பேரில் கேள்விகளும் பதில்களும்

59-1219

நறற இரவககப பறக நமலலரம நரபபபபடடளளம. அநகர பரசதத ஆவயப பறறககணடனர எனனம நலல அறகககள இனற நன களவபபடடரககறன. அதறகக நஙகள மகழசசயடகனறம. 2 சகதரன கரகம இனறரவ நமமடன கட இரபபதல மகழசசயடகறம, அவர இஙகளள அநத கடரதத சரநத நமமடய கடடளகளல ஒரவர. அவர ஊடகவலளள பரசதத சபயன பதகரக இரககறர. சகதரன ஜகஸன, கடநத இரவ அவர இஙகரநதர, அவர இரநதர எனற ந

COD 10 பரிசுத்த ஆவியின் பேரில் கேள்விகளும் பதில்களும்

59-1219ஜெபர்ஸன்வில் இந்தி1601959-12-19

COD 10 பரிசுத்த ஆவியின் பேரில் கேள்விகளும் பதில்களும்

59-1219ஜெபர்ஸன்வில் இந்தி1601959-12-19

1 நேற்று இரவுக்குப் பிறகு நாமெல்லாரும் நிரப்பப்பட்டுள்ளோம். அநேகர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர் என்னும் நல்ல அறிக்கைகளை இன்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். 2 சகோதரன் கிரகாம் இன்றிரவு நம்முடன் கூட இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம், அவர் இங்குள்ள அந்த கூடாரத்தை சேர்ந்த நம்முடைய கூட்டாளிகளில் ஒருவர். அவர் ஊடிகாவிலுள்ள பரிசுத்த சபையின் போதகராக இருக்கிறார். சகோதரன் ஜாக்ஸன், கடந்த இரவு அவர் இங்கிருந்தார், அவர் இருந்தார் என்று நான் நினைக்கிறேன், அல்லது இப்பொழுது இங்கே கூட்டத்தில் பின்னால் எங்கோ உள்ளார், யாரோ ஒருவர் சொன்னார்…ஆம், சகோதரன் ஜாக்ஸன் இப்பொழுது கூட்டத்தில் பின்னால் உள்ளதைக் காண்கிறேன். மற்றும்—மற்றும் சகோதரன் ரடல், இன்றிரவு அவர் இங்குள்ளாரா? அவரும் “62,”-ல் நம்மைச் சேர்ந்த கூட்டாளிகளில் ஒருவர். அவர்கள் இங்கிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள்…ஓ, சகோதரன் பாட், மற்றும் இந்த எல்லா சகோதரர்களும், நாங்கள்—கூட்டத்திலுள்ள மற்றவர்களும். நீங்கள் அனைவரும் இன்றிரவு இங்கு வந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

23 இப்பொழுது, இது நியாயமென்று என்னால் காண்பிக்கமுடியுமானால், உங்களிடம் பேசுவதற்கு சிறந்த போதகர்களில் சிலரை இங்கு அழைக்கலாமென்றிருக்கிறேன், ஏனெனில் நேற்றிரவு அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய நேரம் இருந்த காரணத்தால், என் தொண்டை சற்று கரகரப்பாயுள்ளது. 4 இப்பொழுது என் மனைவி என்னை திருத்துபவளாயிருக்கிறாள்; சகோதரரே, நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நேற்றிரவு பின்னால் இருந்த ஜனங்களால் நான் பேசுவதை சரியாக கேட்கமுடியவில்லையென்று அவள் கூறினாள், ஏனெனில் நான் இதற்குள் பேசிக்கொண்டிருந்தேன். இப்பொழுது, நாம் துவங்கும் முன்பு, நான் ஒன்றை முயற்சி செய்யப்போகிறேன். இப்பொழுது, அது மேலானதாயிருக்குமா என்று நான் எதிர்பார்க்கிறேன். மிகவும் பின்னால் உள்ளவர்களுக்கு நன்றாகக் கேட்கிறதா? அல்லது நான் பின்னால் சென்று பேசினால் இதைவிட நன்றாகக் கேட்கிறதா? அல்லது இது நல்லதா? இப்பொழுது, தேனே, நீ இந்த முறை சரியாகக் கூறவில்லை. இங்கு நின்றால்தான் நன்றாகக் கேட்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர். சரி. ஓ, என்னே! அவள் ஒரு ஸ்திரீ. அது ஒரு நல்ல விஷயம், அவளை நீண்டகாலமாக நான் பெற்றிருக்கிறேன். அவள் கூறுவது வழக்கமாக சரியாயிருக்கும்.

35 பாருங்கள், இந்த மூன்று இரவு ஆராதனைகளிலும் நாம் நிச்சயமாகவே மகத்தான நேரத்தை அனுபவித்து வருகிறோம்; நானும் அனுபவித்தேன். இப்பொழுது, இந்த ஒலி நாடாக்கள், நேற்று இரவு ஒலிநாடாக்களைத் தவிர…நான் சகோதரன் கோட்டை அழைத்து, கூடாரத்துக்கென்று இந்த ஒலி நாடாவை பதிவு செய்யும்படி கூறினேன். ஆனால் பில்லி பால் அவருடைய காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன். எனவே எனக்குத் தெரிந்த வரையிலும், ஒலிநாடா கூடாரத்துக்கென்று பதிவு செய்யப்படவில்லை. எனவே அதை நாம் இழந்துவிட்டோம். நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்று—யாராகிலும் கூற—அதை சபையின் நிமித்தமாக நான் அதை சபையில் வைத்திருக்க விரும்பியிருப்பேன்.

46 இப்பொழுது, நான் நேரத்தோடு கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்துவிட்டால், இன்றிரவு நான் மகத்தான கலந்துரையாடல் என்பதன் பேரில் பேசப்போகிறேன். அதன்பிறகு, நாளை காலை சுகமளிக்கும் ஆராதனை உள்ளது. நாங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப்போகின்றோம். ஆகையால், நாங்கள் சென்று—இல்லை “இப்பொழுது, நான் உன்னை, உன்னை, உன்னை அழைத்துச் செல்லப் போகின்றேன்” என்று கூறமுடியாது. அது சரியாக இருக்காது. ஆனால் நாங்கள் ஒரு தொகுதி ஜெப அட்டைகளை வழங்குகிறோம், எங்கிருந்தாவது அந்த அட்டைகளோடு, நான் ஒரு சிலரை மேடையின் மேல் அழைப்பேன். அப்பொழுது பரிசுத்த ஆவி வெளிப்படுத்தத் துவங்கினால், அது கூட்டத்தின் மத்தியிலும் சென்று சுகமளிக்கும் ஆராதனைக்காக ஜனங்களைத் தேர்ந்தெடுக்கும். பின்னர், நாளை காலை, கர்த்தருக்கு சித்தமானால், சுகமளிக்கும் ஆராதனைக்கு முன்பு நான் பேசுவேன். 7 என் மனைவி சிரிப்பதை நான் காண்கிறேன். தேனே, நான் பேசுவதை உன்னால் கேட்கவே முடியயில்லையா? ஓ, நான் பேசுவதை உன்னால் கேட்க முடிகிறது. பாருங்கள், அது அருமையாயுள்ளது. அவள் மிகவும் பின்னால் உட்கார்ந்து கொள்வாள், நான் பேசுவதை கேட்க— முடியவில்லையென்றால், அவள் தன்னுடைய தலையை அசைத்து, “நீங்கள்…நீங்கள் பேசுவதை கேட்க முடியவில்லை, நீங்கள் பேசுவதை கேட்க முடியவில்லையே” என்பாள்.

58 எனவே நாளை—நாளை இரவு தண்ணீர் ஞானஸ்நான ஆராதனையுடன் கூடிய ஒரு சுவிசேஷக் கூட்டம் இருக்கும். அதன்பிறகு, நாளை இரவு நான் பிரசங்கித்து முடிந்தவுடன், நாம் திரைகளை இழுத்து, நாளை இரவு தண்ணீர் ஞானஸ்நானம் இங்கு கொடுப்போம். கர்த்தருக்கு சித்தமானால், கர்த்தருக்கு சித்தமானால், காலை நான்—இல்லை நாளை இரவு நான் ஒரு பொருளின் பேரில் பேச விரும்புகிறேன்; அது ஒரு—ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டது என்பதாகும். அதன்பிறகு, புதன்கிழமை இரவு இங்கு நாங்கள் இருந்தால், புதன் கிழமை இரவு நான் இங்கு இருக்க கர்த்தர் அனுமதித்தால், நான் பேச விரும்பும் பொருள்; நாங்கள் கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்துகொள்ள வந்திருக்கிறோம் என்பதாகும். இப்பொழுது, அது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தின மாலையாகும். 9 பிறகு, கிறிஸ்துமஸ் முடிந்தவுடனே, கிறிஸ்துமஸ் விடுமுறை வாரம். அப்பொழுது தான் நாங்கள் கடிதங்கள் அனைத்திற்கும்…சகோதரன் மெர்ஸியரும் மற்றவர்களும் கடிதங்களை வழக்கமாக அனுப்புவதுண்டு. நாங்கள் அவைகளைப் பரப்பி, இந்த கடிதங்களுக்கு ஜெபத்தை ஏறெடுத்து, உலகின் எந்த பாகத்துக்கு நாங்கள் செல்ல வேண்டுமென்று கர்த்தர் எங்களை வழிநடத்தவேண்டுமென்று ஜெபிப்போம்.

610 இப்பொழுது, அவர்கள், கிறிஸ்தவ வர்த்தக புருஷர்கள், பிளாரிடாவில் உடனடியாக நடைபெறவிருக்கும் தங்களுடைய மாநாட்டில் இருக்கும்படி ஒரு மகத்தான அழைப்பு விடுத்துள்ளனர். அங்கிருந்து நான் கிங்ஸ்டனுக்கு சென்று, பிறகு ஹய்டிக்கு சென்று, அங்கிருந்து போர்டோ ரிக்கோவுக்கும், தென் அமெரிக்காவிற்கும் சென்று, மெக்ஸிகோ வழியாகச் செல்கிறேன். 11 ஆனால் கர்த்தர் என்னை நார்வேக்கு வழி நடத்துவதாகத் தோன்றுகிறது. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. “ தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் ” என்னும் சிறு புத்தகம் உங்களுக்குத் தெரியுமல்லவா? அதுவே நார்வேயில் மார்க்க சம்பந்தமான மிகப்பெரிய வெளியீடாயுள்ளது. தேவன் அங்கு என்ன செய்துள்ளார் என்று சற்று யோசித்துப் பாருங்கள். நான் அங்கிருந்தபோது, வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்க அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. நான் மூன்று இரவுகள் அங்கிருந்தேன், அவர்களோ வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்க என்னை அனுமதிக்கவில்லை. எனவே தேவனால் என்ன செய்ய முடியுமென்று நீங்கள் பாருங்கள். அங்கு ஜனநெருக்கம் அதிகமாயிருந்தபடியால் அவர்கள் குதிரைகள் மேலேறிய காவற்படையினரைக் கொண்டு வந்து, நான் அந்த இடத்தை அடையும்படி ஜனங்களை தெருக்களினின்று விலக்கினர். நான் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்கவில்லை. அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைக்கும்படி செய்து; நான் அவர்களுக்காக ஜெபித்தேன். 12 எனவே… [யாரோ ஒருவர் சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகின்றார்—ஆசி.] ஆம், அதன் பின்னர், நான் நிச்சயம் செய்வேன். இப்பொழுது, நாளை காலை…இப்பொழுது, இன்றிரவு, இந்த கேள்விகளை நாம் பார்க்கலாம், ஏனென்றால் நாம் உண்மையாகவே சில நல்ல கேள்விகளைப் பெற்றுள்ளோம். கர்த்தர் எவ்வளவு நேரம் நம்மை அதன் பேரில் வைத்திருக்கப் போகின்றார் என்று எனக்குத் தெரியாது. பின்னர், நாளை காலை பில்லி பால், ஜீன், அல்லது லியோ, இவர்களில் ஒருவர் இங்கு எட்டு மணி முதல் எட்டு முப்பது மணி வரைக்கும் இங்கே ஜெப அட்டைகளை வழங்குவார். இப்பொழுது, நகரத்துக்குப் புறம்பேயிருந்து வந்துள்ளவர்களே, நீங்கள் மறந்துபோகாதபடிக்கு நான் உங்களிடத்திற்கு மறுபடியும் வருவேன். நீங்கள் ஜெபவரிசையில் வரவிரும்பினால், கூடுமான வரையிலும், நாங்கள் நகரத்துக்குப் புறம்பேயுள்ளவர்களை வரிசையில் வரவழைப்போம்.

713 இப்பொழுது, சில நேரங்களில் இங்கே இந்த சபையில் அவர்கள், “எப்படியோ…” என்று சொல்லக்கூடிய நிலையை நாங்கள் அடைகிறோம். நகரத்துக்குப் புறம்பேயுள்ளவர்களை நாங்கள் இங்கு கொண்டுவரும்போது…யாராகிலும் ஒருவர், “பாருங்கள், அவர்களுக்கு என்ன கோளாறு இருந்தது என்று எனக்குத் தெரியாது. ஒருக்கால் அவர் தவறாக கூறியிருக்கலாம்” என்கிறார். ஆகையால் நாங்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு வந்தால்; அவர்களோ, “நீர் அவர்களை ஏற்கனவே அறிந்திருந்திருக்கலாம்” என்கின்றனர். எனவே…பிறகு அவர்கள்—அது கூறப்பட்டுள்ளது, “பாருங்கள், நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அது ஜெப அட்டைகளிலேயே உள்ளன” என்கின்றனர். பாருங்கள், ஜெப அட்டைகளை வைத்திராதவர்களைக் குறித்து என்னவாயுள்ளது. ஒவ்வொரு நாளும் இவ்வாறு…கூறப்பட்டு வருகிறது. என்ன சொல்லுகிறீர்கள்? [சகோதரன் பிரான்ஹாம் ஒலிப்பெருக்கிக்கு சற்று பின்னால் நிற்கும்படியாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்—ஆசி.] ஒலிப்பெருக்கில் இருந்து பின்னால் நிற்கவேண்டுமா? பாருங்கள், நான் எப்பொழுதும் பாதையின் நடுவிலிருந்து பிரசங்கிப்பவன் என்று உங்களுக்குத் தெரியும். எனவே நான் அந்தவிதமாக அதை வைக்கலாம். இது பரவாயில்லையா? இது மேலானதாயுள்ளது. இது அருமையாயுள்ளது. அது என்னவென்று உங்களிடம் கூறுவேன். இங்குள்ள நம்முடைய—நம்முடைய ஒலிப்பெருக்கி அமைப்பு தரம் குறைந்தது, மிகவும் தரம் குறைந்தது. இப்பொழுது நல்ல ஒன்றை வாங்க நாங்கள் முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை, ஏனெனில் புது கூடாரத்தை நாங்கள் உடனடியாகக் கட்ட விரும்புகிறோம். அப்பொழுது எங்களுக்கு விசாலமான அறை உண்டாயிருக்கும் (புரிகிறதா?), நாங்கள் இங்கே சுற்றிலும் உள்ள இடத்தை சற்று விசாலமாக்கி, இன்னும் கூடுதலான இடங்களை அதில் ஏற்படுத்தினால், அப்பொழுது நாம் இங்கே இருக்கும் போது கூட்டங்களை ஏற்பாடு செய்யலாம்.

814 இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், காலையில் பையன்கள், அவர்களில் ஒருவர் அல்லது மூன்று பேரும் எட்டு முப்பது மணிக்கு இடையே, இல்லை, எட்டு மணி முதல் எட்டு முப்பது மணி வரைக்கும் ஜெப அட்டைகளை வழங்குவார்கள். அப்போது எல்லோரும் வந்து இடங்களில் அமர போதிய ஒரு வாய்ப்பை அளிக்கிறது. அவர்கள் எப்படி ஜெப அட்டைகளைக் கொடுக்கின்றனர், ஏன் அதைக் கொடுக்கின்றனர் என்பதைக் குறித்தும் நான் உங்களிடம் கூறிக்கொண்டிருந்தேன். இது ஒழுங்காக இருக்க வேண்டும். பார்த்தீர்களா? இப்பொழுது, நான் இங்கு வந்தால், இப்பொழுது போலவே, “ இந்த ஸ்திரீ வரட்டும், இந்த ஸ்திரீ, அந்த மனிதன், இந்த ஸ்திரீ…” என்று கூறினால் என்னவாகும்? நீங்கள் பாருங்கள், அது ஒருவிதமாக—அது ஒருவிதமாக கடினமாயிருக்கும். புரிகிறதா? பிறகு நீங்கள்…நான் அப்படி பலமுறை செய்திருக்கிறேன். நாளை காலையும் அநேகர் இல்லாமற்போனால், ஒருக்கால் நான் அப்படியே செய்யக்கூடும். நான், “நகரத்துக்குப் புறம்பேயிருந்து இங்கு வந்துள்ள எத்தனைபேருக்கு கோளாறு உள்ளது, எழுந்து நில்லுங்கள்” என்பேன்.

915 சகோதரன் மெர்ஸியர், நீங்கள் என்னை மீட்க வருகிறீர்கள். நீங்கள் எனக்கு உதவி செய்யப்போகிறீர்களா? [சகோதரன் மெர்ஸியர் பதிலளிக்கிறார்—ஆசி.] ஓ, நீங்கள் வருகிறீர்கள்…அவர் தன்னைக் விடுவித்துக்கொள்ளவே வருகிறார். நான் இன்று உங்கள் பெண் சிநேகிதியிடம் பேசினேன். இப்பொழுது, நீங்கள் என்னிடம் நல்லவராயிருப்பது நலம். புரிகிறதா? சரி. அது நல்லது. சகோதரன் லியோ, அந்த தைரியத்தை நான்—நான் மெச்சுகிறேன். அது சரியில்லாதிருக்கும்போது, நாம் அதை எப்படி சரிபடுத்துவது என்று நாம் அறிந்துள்ளபடி, நம்மால்—நம்மால் இயன்ற வரையில் மிகச் சிறப்பாக, அதை சரிபடுத்துவோமாக. 16 எனவே இப்பொழுது, நகரத்துக்குப் புறம்பேயிருந்து வந்துள்ளவர்களில் கோளாறோடு உள்ளவர்களை தங்கள் கரங்களை உயர்த்தும்படி கேட்பேன். அதன்பிறகு அங்கு நான் நின்று கொண்டு, பரிசுத்த ஆவி வரத் துவங்கி முழுகூட்டத்தையும் ஆட்கொள்ளும் வரைக்கும், யாராகிலும் ஒருவர் பேரில் கவனம் செலுத்திக்கொண்டிருப்பேன். இங்கு அப்படி நடப்பதைக் கண்டவர்கள் எத்தனை பேர் இங்குள்ளனர்? நிச்சயமாக! பாருங்கள், பாருங்கள்? எனவே எந்த முறையை கடைபிடித்தாலும், அதனால் பாதகமொன்றுமில்லை. அது சரியாக…

1017 இதை நீங்கள் நினைவில் கொள்ள விரும்புகிறேன், நான் மறு படியும் அதை நாளை காலை கூற முயற்சிப்பேன். புறஜாதிகளுக்கு, அவர்களுக்கு அருளப்பட்ட சுவிசேஷம் ஒரு விசுவாச சுவிசேஷமாயுள்ளது, அது கிரியைகள் அல்லவே அல்ல. பார்த்தீர்களா? நான் நேற்று இரவு கூறினதுபோன்றேயாகும். பெந்தெ கொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி விழுந்தபோது, அவர்கள் யூதர்களிடம் சென்றபோது (அப் 19:5), அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள அவர்கள் மேல் அவர்கள் கைகளை வைக்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் சமாரியரிடம் சென்றபோதும், அவ்வாறே அவர்கள் மேல் அவர்கள் கைகளை வைக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவர்கள் புறஜாதியாரிடம் கொர்நேலியுவின் வீட்டுக்குச் சென்றபோது, “இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில்…” அங்கு கைகள் யார் மேலும் வைக்கப்படவில்லை.

1118 ஆசாரியனாகிய, யவீருவின் மகள், அந்த சிறு பெண் மரணப்படுக்கையிலிருந்தபோது, அவன், “நீர் வந்து அவள் மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள்” என்றான். ஆனால் புறஜாதியான, அந்த ரோம நூற்றுக்கு அதிபதியோ, “நீர் என் வீட்டு வாசலுக்குள் பிர வேசிக்க நான் பாத்திரன் அல்ல, ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்” என்றான். அதுதான். பார்த்தீர்களா? 19 அந்த சீரோபேனிக்கியா தேசத்து ஸ்திரீ, உண்மையில் அவள் கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள், அவள்—இயேசு அவளிடம் கூறினபோது, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்றார். அவள், “மெய்தான் ஆண்டவரே; ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே” என்றாள். அப்பொழுது அவர், “நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப் போயிற்று” என்றார். ஆகையால் நீங்கள் நல்ல காரியங்களைக் கூறுங்கள். மற்றவரைக் குறித்து நல்லதான எதையாவது கூறுங்கள். இயேசுவைக் குறித்து பேசுங்கள். விசுவாசமுள்ள எதையாகிலும், உண்மையான எதையாகிலும் கூறுங்கள். பிசாசுகளை அப்புறப்படுத்துவதற்கு அதுவே வழி. அவர் ஒருபோதும் கூறவில்லை—அவர் அந்த பெண் ணுக்காக ஒருபோதும் ஜெபம் செய்யவில்லை. அவள் சுகமடைந்துவிட்டதாக அவர் ஒரு வார்த்தையும் கூறவில்லை; அவர், “நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம், நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம்…” என்றார்.

1220 அன்றொரு நாள், ஹாட்டி ரைட், அவள் ஒன்றையுமே கேட்கவில்லை. அவள் அங்கு வெறுமனே உட்கார்ந்துகொண்டிருந்தாள். ஆனால் அவள் சரியான காரியத்தைக் கூறினாள், அது பரிசுத்த ஆவியைப் பிரீதிப்படுத்தினது. எனவே பரிசுத்த ஆவி அவளிடம் திரும்பிப் பேசி, “ஹாட்டி, உனக்கு விருப்பமான எந்தக் காரியத்தையும், உனக்கு தேவைப்படுகிறதை நீ பெற்றுக்கொள்ளும்படிக் கேள். அது உண்மையில் நடக்கிறதா அல்லது இல்லையாவென்று கண்டறிந்துகொள். எது வேண்டுமானாலும் கேள் (முற்றிலும் இழுத்துக்கொண்டு அங்கு உட்கார்ந்திருந்த ஊனமுள்ள அவளுடைய சகோதரியின் சுகத்துக்காக; அங்கே மலைகளின் மேல் அவள் தோண்டி கஷ்டப்படுவதைத் தவிர்க்க பத்தாயிரம் டாலர்கள்; குன்றிப்போயிருந்த அவளுடைய உடலில் வாலிபம் திரும்பளிக்கப்பட); நீ எதைக் கேட்க வேண்டுமானாலும், நீ அதை இப்பொழுதே கேள். அது வந்து உனக்கு இப்பொழுதே கொடுக்கப்படவில்லையென்றால், நான் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி.” அது—அது ஏதோ ஒரு காரியமாயுள்ளது, இல்லையா? 21 இயேசு, “இந்த மலையைப் பார்த்து…” என்றார். இப்பொழுது என்ன நடந்துள்ளது என்பது பற்றி—நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; அதுவே நாம் பிரவேசித்துக் கொண்டிருக்கும் ஊழியமாயுள்ளது. நாம் அந்தப் பாதையில் இப்பொழுது அதிக தூரம் சென்றுள்ளோம். விரைவில் கர்த்தராகிய இயேசுவின் வருகை இருக்கும். ஒரு நொடியில், ஒரு இமைப்பொழுதில் சபை மறுரூபமாக்கப்படுவதற்கு நமக்கு எடுத்துக்கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசம் இருக்க வேண்டும், இல்லையென்றால் நாம் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லவே முடியாது. ஆனால் கவலைப்படாதிருங்கள், அது அங்கிருக்கும். அது அங்கிருக்கும். இந்த சபையின் வல்லமை எழும்புகிறபோது, அது அதனுடைய சகோதரர்களை கொண்டு வரும்; அந்த சபையின் வல்லமை எழும்பி, அதனுடைய சகோதரர்களை கொண்டு வரும்; அந்த சபையின் வல்லமை அதன் மற்ற சகோதரர்களை கொண்டு வரும்; பின்னர் ஒரு பொதுவான உயிர்த்தெழுதல் உண்டாயிருக்கும். நாம் அதை முன்னோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

1322 இப்பொழுது, மறந்துபோக வேண்டாம், ஜெப அட்டைகளை காலை எட்டு மணியிலிருந்து எட்டு முப்பது மணி வரைக்கும் கொடுப்பார்கள். பிறகு எத்தனை அட்டைகள் மீதமுள்ளது என்று நான் கேட்பேன், பிறகு அட்டைகள் வழங்குவதை நிறுத்திவிட்டு, நான் திரும்பிச் சென்று உட்கார்ந்துகொள்வேன் (பார்த்தீர்களா?), ஏனென்றால் அவர்கள் ஒருக்கால் அதற்குள் எல்லா அட்டைகளையுமே விநியோகம் செய்திருக்கக் கூடும், அல்லது அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அட்டைகளை அங்கே எங்கிருந்தாவது கொடுத்திருப்பார்கள். பையன்கள் எழுந்து நின்று, உங்கள் முன்னிலையில் எல்லா அட்டைகளையும் ஒன்றொடொன்று கலந்துவிடுவார்கள். பிறகு உங்களுக்கு ஒன்று வேண்டுமானால், உங்களுக்கு ஒன்று வேண்டுமானால், அல்லது அதுபோன்று இன்னும்… பிறகு நான் வரும்போது, நான்…எங்கிருந்து கர்த்தர் கூப்பிடச் சொல்லுகிறாரோ… அவர், “கூப்பிட வேண்டாம்” என்று சொல்லிவிட்டால், என்னவானாலும், (பாருங்கள்?), நான் அவர்களை கூப்பிடவேமாட்டேன். 23 நான்…அந்த ஊழியம் கிட்டத்தட்ட மறைந்து கொண்டே வருகிறது; இதைக் காட்டிலும் ஒரு பெரிய ஊழியம் வந்துகொண்டிருக்கிறது. ஞாபகம் கொள்ளுங்கள், இந்த மேடையின் மீதிருந்தோ அல்லது இந்த பிரசங்க பீடத்திலிருந்தோ கூறப்பட்ட ஒன்றாகிலும் இதுவரை தவறினதில்லை. கைப்பிடித்து வியாதியையறிந்த ஊழியத்தைக் குறித்து உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அது என்ன செய்ததென்று பார்த்தீர்களா? இருதயத்தின் சிந்தனைகளை அறிந்துகொள்ளுதல், அது என்ன செய்ததென்று பார்த்தீர்களா? இப்பொழுது இதைக் கவனியுங்கள்: வார்த்தையை உரைத்தல், அது என்ன செய்கிறதென்று பாருங்கள். பார்த்தீர்களா? நான் அநேக ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கூறினேன்—இந்த சபைக்கு (நான் இந்த கூடாரத்தை சேர்ந்தவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்)—அநேக வருடங்களுக்கு முன்பு, மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஒன்று செயல்பட ஆயத்தமாயிருந்தது; அது சம்பவிக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது. அது இப்பொழுது நடைபெறும் நேரத்தில் உள்ளது…அதுதானே இப்பொழுது உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஓ, நாம் எவ்வளவு நன்றியுள்ள வர்களாயிருக்கிறோம். மிக்க மகிழ்ச்சி.

1424 இப்பொழுது, நாம் இங்கு சில மிகக் கடினமான கேள்விகளைப் பெற்றுள்ளோம், அவைகளை உடனடியாக நாம் பார்க்க விரும்புகிறோம். யாரோ ஒருவர் நான் வைத்திருந்த எல்லா புத்தகங்களையும் பார்த்திருக்கிறார். நான், “பாருங்கள், ஒரு அறிவாளிக்கு ஒரு புத்தகம் மாத்திரமே தேவைப்படுகிறது” என்று கூறினேன். ஆனால் நான் ஒரு அறிவாளியல்ல. எனவே ஆராய்ந்து பார்க்கும்படி எனக்கு நிறைய புத்தகங்கள் தேவையாயுள்ளன. பாருங்கள், இது கிரேக்க மொழிபெயர்ப்பு, இது வேதாகமம், இது ஒரு வேதவசன ஒத்துவாக்கியப் புத்தகம். எனவே, அது ஒரு…இந்த கேள்விகளுக்கு பதிலுரைக்க கர்த்தர்தாமே நமக்குதவி செய்து, அவருடைய தெய்வீக சித்தத்தின்படியும் அவருடைய வார்த்தையின்படியும் நம்மை வழிநடத்த வேண்டுமென்று இப்பொழுது நாம் அவரை வேண்டிக் கொள்ளப்போகின்றோம்.

1525 எனவே இப்பொழுது, நாம் ஜெபத்துக்காக சிறிது நேரம் நம்முடைய தலைகளை வணங்கு வோமாக. கர்த்தாவே, கடந்த மூன்று இரவுகளாக நீர் எங்களுக்கு செய்து வந்துள்ளதைக் குறித்து எங்கள் உள்ளத்தின் ஆழங்களிலிருந்து உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஓ, போதகர்கள் பின்னால் உள்ள அறையில் சந்தித்து, கரங்களைக் குலுக்கி, புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்துடன் மேலும்—மேலும் ஒரு புதிய பாதையை ஏற்றுக்கொள்வதைக் காண்கிறோம். தொலைபேசியில் கூப்பிட்டு…உம்முடைய பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வார்த்தை படிப்படியாகக் கூறுவதை ஜனங்கள்—உம்முடைய வார்த்தையில் புரிந்துகொண்டப் பிறகு, அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வதைக் காண்பது எங்கள் இருதயத்தைக் களிகூரச் செய்கிறது. கர்த்தாவே, அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 26 நாங்கள் எளிய மக்கள் என்னும் காரணத்தால், நீர் காரியங்களை எங்களுக்கு மிகவும் எளிதாக்குகிறீர். நாங்கள் எப்பொழுதுமே முழுவதும் எளியவர்களாயிருக்கும்படி செய்ய வேண்டும் என்று—என்று நாங்கள் உம்மை வேண்டிக்கொள்கிறோம். ஏனெனில் அது…அந்தவிதமாக தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். உலக ஞானம் தேவனுக்கு பைத்தியமாயுள்ளது; பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங் கித்தினாலே இழந்துபோனவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.

1627 இப்பொழுது, பிதாவே, அக்கறைகொண்டுள்ள உத்தமமான இருதயங்களிலிருந்து கேட்கப்பட்டுள்ள அநேக கேள்விகள் இங்கே என்னிடம் உள்ளன. அவைகளில் ஒன்றுக்கு தவறாக விடையளிக்கப்பட்டாலும், அது அந்த நபரை தவறான வழியில் நடத்திவிடும், அவர்களைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் அவர்களுடைய கேள்வியின் பேரில் தவறான வெளிச்சம் விழுந்துவிடும். எனவே தேவனாகிய கர்த்தாவே, உமது பரிசுத்த ஆவி எங்கள் மத்தியில் அசைவாடி இந்த காரியங்களை வெளிப்படுத்தித் தருமாறு நான் ஜெபிக்கிறேன், ஏனெனில் வேதத்தில், “கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்; தேடுங்கள் அப்பொழுது நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று எழுதப்பட்டுள்ளது. கர்த்தாவே, அதைத்தான் நாங்கள் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறோம், உமது இரக்கமாகிய கதவண்டையிலே தட்டிக்கொண்டிருக்கிறோம். உமது தெய்வீக நீதியின் நிழலில் நின்றுகொண்டு, தேவனாகிய கிறிஸ்துவின் இரத்தத்துக்காகவும் பரிசுத்த ஆவிக்காகவும் மன்றாடுகிறோம். 28 மூன்று இரவுகள் பரிசுத்த ஆவியின் பேரில் பிரசங்கம் செய்து முடித்துவிட்டு இளைப்பாற வேண்டும் என்னும் காரணத்தால் இன்றிரவு நாங்கள் இங்கு வரவில்லை. நாங்கள் ஆழ்ந்த பக்தியுடனும் உத்தமத்துடனும் இங்கு வந்திருக்கிறோம். இதுவே பூமியில் நாங்கள் இருக்கும் கடைசி இரவு என்பதுபோல் நாங்கள் வந்திருக்கிறோம். எங்களுடைய ஜெபங்களுக்கு நீர் பதிலளிப்பீர் என்று விசுவாசித்து நாங்கள் வந்திருக்கிறோம். கர்த்தாவே, எங்களை உமது நித்திய ஜீவனால் இப்பொழுது திருப்தியாக்கும்படி உம்மை வேண்டிக்கொள்கிறோம். உமது வார்த்தையிலிருந்து பதிலுரைக்கும்போது, பரிசுத்த ஆவியானவர்தாமே…ஓ, தேவனே, அது எங்கள் மத்தியிலுள்ள நீர் என்று நாங்கள் அறிந்துள்ளதால், இன்றிரவு நாங்கள் வாஞ்சிக்கும் காரியங்களை அவர்தாமே எங்களுக்கு வெளிப்படுத்தி தரவேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கள் ஆத்துமாக்கள் இளைப்பாறி, எங்கள் சிந்தைகள் சமாதானம் பெற்று, தேவன் பேரில் விசுவாசம் வைத்து, அவர் வாக்களித்துள்ள ஆசீர்வாதங்களை உரிமைகோருவதற்கு முன்நோக்கி நடக்கவேண்டும் என்பதையே நாங்கள் வாஞ்சித்துள்ளோம். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.

1729 இப்பொழுது, ஒரு கேள்வியைத் தவிர, என்னிடம் கொடுக்கப்பட்ட எல்லா கேள்விகளையும் நான் வைத்துள்ளேன். சென்ற இரவுக்கு முந்தின இரவு, என்னிடம் ஒரு கேள்வி கேட்ட வாலிப சகோதரன் மார்டினுக்கு நான் பதிலளித்தேன், ஒரே ஒரு கேள்வி. அநேக கடிதங்கள் நேற்றிரவு இங்கிருந்தன, ஆனால் அவை ஜெப விண்ணப்பங்களாயிருந்தன. சகோதரன் மார்டின் என்னிடம் யோவான் 3:16—இல்லை யோவான் 3-ஐக் குறித்து கேள்வி கேட்டார், அதாவது, “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், அவன் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” என்னும் வசனத்தை குறித்தே என்று நான் நினைக்கிறேன், நான் எபிரேயர் நிரூபத்தின் பேரில் அனுப்பின ஒலிநாடாவுடன் ஒப்பிட்டுப் பாரத்திருந்தார். நேற்று மாலை இங்கே பின் அறையில் நான் அவரைச் சந்தித்தபோது, மேலும்—அவருக்கு பதிலுரைக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் முன்பே, அப்பொழுது அங்கேயே அந்த பொருளின் பேரில், அவருக்கு பதிலுரைத்தேன். 30 இப்பொழுது, நேற்று இரவு கூட்டத்துக்கு வராதவர் யாராகிலும் இங்குள்ளனரா? உங்கள் கரங்களை நாங்கள் காணட்டும், நேற்று இரவு இங்கு வராதவர். ஓ, நாங்கள், நிச்சயமாகவே நீங்கள் எங்களுடன் இருந்திருப்பீர்கள் என்றே விரும்பினோம். எங்களுக்கு அத்தகைய ஒரு மகிமையான நேரம் உண்டாயிருந்தது. பரிசுத்த ஆவி…

1831 நான் ஒரு நிமிடம் இதை கூற விரும்புகிறேன்…இது புண்படுத்தாது. இது ஒலிப்பதிவாகின்றது. நான் இப்பொழுது கூறப்போவதில், அல்லது கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களில், இங்குள்ள எந்த போதகராவது—அல்லது எந்த நபராவது, இணங்காமலிருக்க நேர்ந்தால், சகோதரனே, அதை நீங்கள் வித்தியாசமாக எண்ணிக்கொள்ளாதீர்கள் என்றே நான் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அது—இந்த ஒலிநாடா இங்குள்ள எங்கள் கூடாரத்தில் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எங்கள் ஜனங்களுக்கு நாங்கள் போதித்துக்கொண்டிருக்கிறோம். வெவ்வேறு விசுவாசங்களைக் கொண்ட போதகர்கள் அநேகர் சுற்றிலும் இங்குள்ளனர். நான் மறுபடியும் இந்த பொருளின் பேரில் சிறிது நேரம் பேசு விரும்புகிறேன், ஏனென்றால் நேற்று இரவு வர முடியாத எங்கள் ஜனங்களில் சிலர் இன்று வந்துள்ளதை நான் காண்கிறேன். நான் சற்று நேரம் பேச, நீங்கள் இதற்கு அனுமதித்தால், நேற்று மாலை நான் பேசியதின் பேரில், அதாவது பெந்தெகொஸ்தேவின் பேரிலும், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதின் பேரிலும் பேச விரும்புகிறேன்.

19இப்பொழுது, கிரேக்க மொழிபெயர்ப்பான எம்பாடிக் டயக்ளாட் என்பதிலிருந்து, நேற்று மாலை நான் படித்தேன், அது இப்பொழுது என் முன்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதுவே கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மூலமொழிபெயர்ப்பு. அது மற்ற மொழிபெயர்ப்பாளர்கள், அது—மற்ற மொழிபெயர்ப்புகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாமல், இது நேரடியாக கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்பொழுது, ஆங்கில வார்த்தைகள், பல சமயங்களில் ஒரே ஆங்கில பதம் அநேக அர்த்தங்களைக் கொண்டதாயுள்ளது, அப்படிப்பட்டதற்கு நான் இப்போது போர்டு என்னும் ஆங்கிலச் சொல்லை கூறவுள்ளேன், போர்டு என்ற அந்த வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள், “பாருங்கள், நாங்கள் அவரை சலிப்படைய செய்துகொண்டிருக்கிறோம் [ஆங்கிலத்தில் போர்டு மற்றும் போரிங் என்ற வார்த்தைகள் ஒரே விதமாக ஒலித்தாலும் வித்தியாசமான அர்த்தங்களைக் கொண்டதாகும்.— மொழிபெயர்ப்பாளர்.] என்றுதான் அவர் பொருட்படுத்திக் கூறினார்” எனலாம். இல்லையே! “ஓ, அவர்—அவர் தனது உணவிற்கு பணம் கொடுத்தார்.” இல்லையே! பாருங்கள், அவர்…“அது அவர் வீட்டின் ஓரத்திலுள்ள ஒரு பலகை .” பாருங்கள், புரிகிறதா? அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்று …இந்த ஒரு வார்த்தையை நான்கு அல்லது ஐந்து வெவ்வேறு அர்த்தங்களில் உபயோகிக்க முடியும்; எனவே நீங்கள் முழு வரியையும் படித்து அர்த்தத்தை அறிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது காணுதல் என்னும் சொல். காணுதல் என்பது ஆங்கிலத்தில் “புரிந்துகொள்ளுதல்” என்று அர்த்தமாகிறது. கடல் [ஆங்கிலத்தில், சீ மற்றும் சி என்ற வார்த்தைகள் ஒரே விதமாக ஒலித்தாலும் வித்தியாசமான அர்த்தங்களைக் கொண்டதாகும்.—மொழிபெயர்ப்பாளர்.] என்பதற்கு “தண்ணீர் நிறைந்த ஒரு பகுதி” என்றும் அர்த்தமாகிறது. காணுதல் என்பதும் “நோக்கிப் பார்த்தல்” என்றே அர்த்தமாகிறது. புரிகிறதா? ஆனால் இந்த மொழிபெயர்ப்புகளில், இங்கே பயன்படுத்தப்பட்ட வார்த்தையை, அதாவது நேற்று இரவு நான் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் உள்ளதைக் குறித்துப் பேசினேன், அங்கே அது, “அக்கினிமயமான நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்தது…” என்று கூறுகிறது. இப்பொழுது, நான் ஒரு விநாடி திரும்பிச் செல்ல விரும்புகிறேன். நாம் மேற்கொண்டு செல்வதற்கு முன்பு ஒரு விநாடி, ஒருவிதமாகவே அதை மறுபடியும் ஆய்ந்து பார்க்க, நீங்கள் விரும்புகிறீர்களா?

2032 இப்பொழுது, உங்களுடைய ஜேம்ஸ் அரசனின் மொழிபெயர்ப்பு வேதாகமம், அல்லது வேறெந்த மொழிபெயர்ப்பை நீங்கள் படித்துக்கொண்டிருந்தாலும் அதைத் திருப்புங்கள்…அதை நான் படிக்க விரும்புகிறேன். இப்பொழுது மிகவும் கூர்ந்து கவனியுங்கள். அதை தவறாக புரிந்துகொள்ளவேண்டாம். இன்று அநேகர், என் சகோதரி உட்பட, அவர்களில் அநேகர் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, கூறினார்கள்…திருமதி. மார்கன்…நேற்று மாலை இங்கிருந்தவர்களில் அநேகர். மருத்துவர்களால் கைவிடப்பட்ட எங்கள் சகோதரிகளில் ஒருத்தி திருமதி. மார்கன்; அவள் பதினாறு, பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பீடிக்கப்பட்டு லூயிவில்லில் மரிக்க வேண்டியவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தாள். அவள் இன்றிரவு இங்கு மீண்டும் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். நான் ஒலிப்பெருக்கியினுள் நேரடியாக பேசின காரணத்தால், அவளால் நேற்று கேட்கமுடியவில்லை என்று அவள் கூறினாள். அப்படிப்பட்டவர்களின் நிமித்தம் நான் இதை மறுபடியும் சிறிது நேரம் கூற விரும்புகிறேன். 33 இப்பொழுது, நான் அப்போஸ்தலர் 2 என்ற இந்த வேதபாகத்திலிருந்து படிக்கிறேன்: பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒரு மனதோடு…(இப்பொழுது, ஒரே கருத்துடையவர்களாய் என்பதைக் காட்டிலும் அது எனக்கு அதிகம் பிடிக்கும்: ஏனெனில் நீங்கள் பெரும்பாலும் ஒரு பொருளின் பேரில் ஒரே கருத்தைக் கொண்டிருக்கலாம், ஆனால் இங்கு அவர்கள் ஒருமனப்பட்டிருந்தார்கள்.)… ஒரு மனதோடு அதே இடத்தில் வந்திருந்தார்கள். அப்பொழுது ஒரு உக்கிரமான காற்று அடிக்கிறது போல வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி , அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதுமாக …நிரப்பிற்று. (முழங்கால்படியவில்லை, ஜெபம் செய்யவில்லை, ஆனால் உட்கார்ந்திருந்தனர்.)… …பிரிந்திருக்கும் நாவுகள் (நா-வு-க-ள்-நாவுகள். “பிரிந்திருக்கும்” என்பது “பிரிக்கப்பட்டது” என்றே பொருள்படுகிறது.)… அக்கினிமயமான… நாவுகள்… அவர்களுக்குக் காணப்பட்டு, ஒவ்வொருவர்…(“ஒவ்வொருவர்” ஒருமை)… அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும்…நிரப்பப்பட்டு (“மற்றும்,” இடைச்சொல்.)… பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே, வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்குகிறார்கள். இப்பொழுது வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவ பக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். … அந்தச் …இந்த செய்தி பரப்பப்பட்டவுடன், திரளான ஜனங்கள் கூடிவந்து , தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவர்கள் ஒவ்வொருவரும் கேட்டபடியினாலே குழப்பமடைந்தார்கள்.

2134 இப்பொழுது கவனியுங்கள்! அக்கினி வந்தபோது, அவை நாவுகளாயிருந்தன; அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அது பாஷையாயிருந்தது. இப்பொழுது, நாவுகளுக்கும் பாஷைகளுக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. நமக்கு இவ்விரண்டும் ஒன்றே. ஆனால், கிரேக்க மொழியில் “நாவு” என்பது இந்த நாவையே பொருட்படுத்துகிறது. [சகோதரன் பிரான்ஹாம் விளக்குகிறார்—ஆசி.] இது காது . புரிகிறதா? அது ஒரு பாஷையைக் குறிக்காது; இது உங்களுடைய சரீரத்தின் பாகமாய் ஒரு நாவு உள்ளதையே பொருட்படுத்துகிறது. நீங்கள் கவனிப்பீர்களேயானால், அக்கினிமயமான நாவுகள் என்பது “நாவுகளைப் போன்றே” என்றே பொருள்படுகிறதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஒரு அக்கினிமயமான நாவைப் போல, ஒரு நீண்ட அக்கினிஜுவாலையைப் போன்றதாகும். இப்பொழுது, இப்பொழுது வலியுறுத்தப்படுகிறதைக் கவனியுங்கள். இப்பொழுது அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவ்வாறிருப்பதை, அதை மறந்து விடாதீர்கள். 35 இப்பொழுது, இன்றிரவு நாங்கள் ஒரு சிறு நாடகம் அளிக்கப் போகின்றோம். அதை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பை நான் உங்களிடம் விட்டுவிடப்போகின்றேன். இப்பொழுது நினைவிருக்கட்டும், அது உங்களுக்கு முரணாகத் தென்படுமானால், அது உங்களைப் பொறுத்தது. ஆனால் எந்த நபரும் தேவனிடத்திலிருந்து பெறக்கூடிய ஒரே வழி, விசுவாசத்தின் மூலமேயாகும். நீங்கள் முன்பே…

2236 நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதில் எனக்கு விசுவாசம் இருப்பதற்கு முன்னர் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிந்திருக்கவேண்டும். நீங்கள் ஏன் உங்கள் மனைவியை மணம் புரிந்தீர்கள்? அவள் மேல் உங்களுக்கு விசுவாசம் இருந்தது. நீங்கள் அவளை சோதித்துப் பார்த்திருந்தீர்கள், அவளை கவனித்து வந்தீர்கள், அவள் எங்கிருந்து வந்தாள் என்றும், அவள் யாராயிருந்தாளென்றும் நீங்கள் கண்டிருந்திருந்தீர்கள். அந்தவிதமாகத்தான் வேதவாக்கியத்தோடும், தேவனோடுமுள்ளது. அதுதான் இந்த தரிசனங்களையும், அந்த—இந்த அக்கினி ஸ்தம்பத்தையும், இந்த எல்லா காரியங்களையும் ஏற்ப்படுத்துகிறது, ஏனெனில் தேவன் அதை வாக்களித்தார். தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார். அவருடைய வார்த்தையினால் நான் அவரை சோதித்துப் பார்த்து, அது உண்மையென்று அறிந்திருக்கிறேன். நீங்கள் அவருடைய வார்த்தையைப் பின் பற்றுகிறீர்கள். எங்காவது ஒரு சிறு குழப்பம் இருந்தால், அப்பொழுது எங்கோ தவறுள்ளது. ஏனெனில் தேவன் (கவனியுங்கள்!)—தேவன் தமது சொந்த—இல்லை தம்முடைய சொந்த பிரமாணங்களுக்கு மாறாக ஒருபோதும் கிரியை செய்ததில்லை அல்லது ஒருபோதும் செய்யப்போவதுமில்லை. குளிர் காலம் கோடை காலத்தில் வராது, அவ்வாறே கோடை காலமும் குளிர்காலத்தில் வராது. இலைகள் வசந்த காலத்தில் உதிர்ந்து, இலையுதிர் காலத்தில் மீண்டும் முளைப்பதில்லை. உங்களால் அதை அப்படி செய்ய முடியாது.

2337 நேற்று இரவு ஆர்டீஷியன் ஊற்றிலிருந்து, உங்கள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதைக் குறித்து நான் கூறினதுபோன்று. அல்லது நீங்கள் பயங்கரமான இருளில் வயலின் நடுவின் நின்றுகொண்டு, நீங்கள், “ஓ, மகத்தான மின்சாரமே, நீ வயலில் இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். இப்பொழுது நான் பாதை தவறிவிட்டேன், எங்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்படி நடப்பதற்கென்று காணும்படி, வெளிச்சம் தா! வயல் முழுவதற்கும் வெளிச்சம் தர போதிய மின்சாரம் உள்ளது” என்று கூறலாம். அது உண்மை. ஆம் ஐயா! போதிய விளக்குகள் இல்லாமலும் கூட, அவை இல்லாமலே இந்த அறைக்கு வெளிச்சம் தர இங்கு போதிய மின்சாரம் உள்ளது. ஆனால் நீங்கள் அதை கையாள வேண்டும். இப்பொழுது, நீங்கள் எவ்வளவுதான் கூச்சலிட முடியாதபடி கூச்சலிட்டாலும், அது ஒருபோதும் வெளிச்சம் தராது. நீங்கள் மின்சார விதிகளின்படி செயல்புரிந்தால், அப்போது நீங்கள் வெளிச்சம் பெறுவீர்கள். 38 பாருங்கள், அதேவிதமாகத்தான் தேவனுடைய வழிகளும் உள்ளன. தேவன் வானங்கள் மற்றும் பூமியின் மகத்தான சிருஷ்கர், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாருதவராயிருக்கிறார். அவர் இன்னமும் தேவனாயிருக்கிறார். ஆனால் நீங்கள் அவருடைய பிரமாணங்களையும் கட்டளை களையும் பின்பற்றும்போது மாத்திரமே அவர் கிரியை செய்வார். நண்பர்களே, இதை நான் கூறுகிறேன்: அது தவறினதை நான் ஒருபோதும் கண்டதில்லை, அது தவறாது.

2439 இப்பொழுது, நாம் கவனிப்போம். சீஷர்கள் இரட்சிக்கப்பட்டு வார்த்தையின்படி பரிசுத்தமாக்கப்பட்ட பின்பு இயேசு லூக்கா 24:49-ல் அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தார்; அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்கப்பட்டனர்; யோவான் 17:17-ல் இயேசு, “பிதாவே, உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம்.” என்று கூறினவிதமாக அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டனர். அவர் வார்த்தையாயிருந்தார். 40 இப்பொழுது, அவர்கள் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், மரித்தோரை உயிரோடெழுப்பவும் அவர் அதிகாரம் கொடுத்தார்; அவர்கள் சந்தோஷத்தோடு திரும்பி வந்தனர். அவர்களுடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தன. அதையெல்லாம் இப்பொழுது நாம் பார்த்தோம் என்று உங்களுக்கு ஞாபகமிருக்கும். ஆனால் அவர்கள் இன்னும் குணப்படவில்லை. இயேசு சிலுவையிலறையப்படும் அந்த இரவு பேதுருவிடம், “நீ குணப்பட்ட பின்பு, உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்றார்.

2541 பரிசுத்த ஆவி என்ன…நீங்கள் நித்திய ஜீவனுக்கு ஏற்ப விசுவாசிக்கிறீர்கள், ஆனால் பரிசுத்த ஆவி வரும்போது, அது நித்திய ஜீவனாயுள்ளது. நீங்கள் அதற்கேற்ப விசுவாசிக்கிறீர்கள்…நீங்கள் பரிசுத்தமாக்கப்படுதலின்போது ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுகிறீர்கள், ஆனால் பரிசுத்த ஆவி வரும் வரைக்கும் நீங்கள் ஆவியினால் பிறப்பதில்லை. அது உண்மை. ஒரு குழந்தை தன் தாயின் கர்ப்பத்தில் ஜீவனைப் பெற்றுள்ளது, சிறு தசைகள் நடுங்குகின்றன; அது ஒரு ஜீவனாயுள்ளது. ஆனால் அது ஜீவ சுவாசத்தை தன் நாசிகளில் சுவாசிக்கும்போது, அது வித்தியாசமான ஒரு ஜீவனாயுள்ளது. அது ஒரு வித்தியாசமானதாயுள்ளது. அதுதான் அது, அது… 42 என் அருமை மெதோடிஸ்டு சகோதரனே, யாத்திரீக பரிசுத்தரே, நசரீன்களே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பரிசுத்தமாக்குதலினின்று வித்தியாசப்பட்டது. பரிசுத்தமாக்கப்படுதல் என்பது சுத்திகரிப்பு, அது ஜீவனுக்கான ஆயத்தப்படுத்துதலாயுள்ளது. ஆனால் பரிசுத்த ஆவி வரும்போது, அதுவே ஜீவனாயுள்ளது. பாண்டத்தை சுத்தப்படுத்துகிறதே ஆயத்தப்படுத்துதலாயுள்ளது; பரிசுத்த ஆவி பாண்டத்தை நிறைத்துக்கொண்டிருக்கிறது. பரிசுத்தமாக்கப்படுதல் என்றால் “சுத்தமாக்கப்பட்டு ஊழியத்திற்கென்று ஒதுக்கி வைக்கப்படுதல்” என்று பொருள். பரிசுத்த ஆவி அதை ஊழியத்தில் உபயோகிக்கிறதாயுள்ளது. நீங்கள்தான் தேவன் சுத்தமாக்கின பாண்டமாயிருக்கிறீர்கள்.

2643 பரிசுத்த ஆவி என்பது உங்களுக்குள் இருக்கும் தேவனே என்று நாம் காண்கிறோம். தேவன் உங்களுக்கு மேலே அக்கினி ஸ்தம்பத்தில் மோசேயுடன் இருந்தார். தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள் உங்களோடு இருந்தார். இப்பொழுது தேவன் பரிசுத்த ஆவியாக உங்களுக்குள் இருக்கிறார். மூன்று தேவர்கள் அல்ல, ஒரே தேவன் மூன்று உத்தியோகங்களில் கிரியை செய்தல். 44 தேவன் தம்மை தாழ்த்தி, மனிதன் மேல் அவர் இருந்த நிலை யிலிருந்து கீழே இறங்கி வந்தார். அவன் அவரைத் தொடமுடியவில்லை, ஏனெனில் அவன் ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்து, அவரிடம் கொண்டிருந்த ஐக்கியத்தினின்று தன்னைப் பிரித்துக்கொண்டான். அப்பொழுது என்ன நேர்ந்தது? அவர் அவன் மேலிருக்க வேண்டியதாயிற்று. காளை, வெள்ளாட்டுக் கடா இவைகளின் இரத்தம் அவன் மறுபடியும் தேவ னிடம் ஐக்கியங்கொள்ள அவனை அனுமதிக்கவில்லை; ஆனால் பிரமாணங்களின் மூலமாகவும் கட்டளைகளின் மூலமாகவும், வரப்போகும் அந்த நேரத்துக்கு முன் நிழலாக, காளைகளும் ஆடுகளும் பலி செலுத்தப்பட்டன… பிறகு தேவன் இறங்கி வந்து பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு சரீரத்தில், கன்னிகையின் மூலம் பிறந்த ஒரு சரீரத்தில் வாசம் பண்ணினபோது, தேவன் தாமே… தேவன் என்ன செய்தாரென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்—அவர் இதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை…அவர் தமது கூடாரத்தை நமது மத்தியில் வைத்தார். தேவன் இயேசுகிறிஸ்து என்றழைக்கப்பட்ட கூடாரத்தில் வாசம் செய்தார். அவர் நமது மத்தியில் தமது கூடாரத்தைப் போட்டார்…(நான்—காலையில் அதைக் குறித்து பிரசங்கித்தேன், எனவே நான் அதை விட்டுவிடுவது நல்லது.) இப்பொழுது, அதாவது—எப்படி தேவன் கூடாரத்தில்-இல்லை நம்மோடு வாசம் செய்தார்…

2745 இப்பொழுது தேவன் நமக்குள் இருக்கிறார். யோவான் 14-ல் இயேசு, “நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்றார். தேவன் நமக்குள் இருக்கிறார். அதன் நோக்கம் என்னவாயிருந்து? அவருடைய திட்டத்தைச் நிறைவேற்றவே. 46 தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. அவர் மனிதர்களிடையே கிரியை செய்ய விரும்பினார், அவர் அதை அக்கினி ஸ்தம்பத்திலே கொண்டு வந்தார், அது இஸ்ரவேல் புத்திரரின்மேல் தொங்கிக்கொண்டிருந்த தெய்வீக அக்கினியாயிருந்தது. பின்பு அதே அக்கினி இயேசு என்னும் ஒரு சரீரத்தில் வெளிப்பட்டது. அவரே அந்த அக்கினி என்று அவர் கூறினார், “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் .” அவரே அந்த அக்கினியாயிருந்தார். அவர், “நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், நான் மறுபடியும் தேவனிடத்துக்குப் போகிறேன்” என்றார். அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, பரிசுத்த பவுல் அவரை—தமஸ்குவுக்குப் போகும்வழியில் சந்தித்தான்—அப்பொழுது அவனுடைய பெயர் சவுல் என்று இருந்தது, அவர் அந்த சமயத்தில் மறுபடியும் அக்கினி ஸ்தம்பத்துக்கு திரும்பிவிட்டிருந்தார். ஒரு ஒளி அவன் கண்களை குருடாக்கினது. அது உண்மை. 47 இன்றைக்கு அவர் இங்கு, அதே அக்கினி ஸ்தம்பமாக, அதே தேவனாக, அதே அடையாளங்களையும், அதே கிரியைகளையும் செய்து கொண்டிருக்கிறார். ஏன்? அவர் தமது ஜனங்களின் மத்தியில் கிரியை செய்து கொண்டிருக்கிறார். அவர் நமக்குள் இருக்கிறார். நான்…அவர் இப்பொழுது உங்களோடுகூட இருக்கிறார், “ஆனால் நான் உங்களுக்குள் இருப்பேன். நான் உங்களோடும், உங்களுக்குள்ளும், உலகத்தின் முடிவுவரை,” முடிவுபரியந்தம் உங்களுக்குள் இருப்பேன். அவர் நம்மோடுகூட இருப்பார்.

2848 இப்பொழுது, கவனியுங்கள். அவர்கள் எருசலேமுக்குச் சென்று அங்கு காத்திருக்கும்படி இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். காத்திருங்கள் என்னும் சொல் “ காத்திருப்பது ” என்றே பொருள்படுகிறது, ஜெபித்துக் கொண்டிருங்கள் என்று அர்த்தமல்ல, “காத்திருப்பது” என்றே அர்த்தமாகிறது. அவர்கள் பிரசங்கிப்பதற்கு இன்னும் தகுதியுள்ளவர்களாகவில்லை, ஏனெனில் அவருடைய உயிர்த்தெழுதலில் அவரை வெளிப்புறத்தில் ஒரு நபராக கண்டதன் மூலமாக மாத்திரமே அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் முதலாவது உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும், அவர்கள் பிரசங்கிக்கவோ அல்லது வேறொன்றும் செய்யவோ கூடாதென்று அவர்—அவர் கட்டளையிட்டிருந்தார். எந்த ஒரு போதகரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமல் தேவனால் அனுப்பப்படவில்லை அல்லது சரியான போதகராக நியமிக்கப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்…ஏனெனில் தேவன் முடிவற்றவராயிருக்கிறார். தேவன் ஒருமுறை என்ன செய்கிறாரோ, அதையே அவர் எல்லா நேரத்திலும் செய்கிறவராயிருக்கிறார். இப்பொழுது, அவர்கள் பெந்தெகொஸ்தேவுக்கு சென்று பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெறாமல் பிரசங்கிப்பதை தேவன் அனுமதிக்காமல் இருப்பாரானால், எந்த ஒரு மனிதனும் அவனுக்கு ஆழ்ந்த விருப்பம் அல்லது ஒரு ஸ்தாபனம் அவனை போதகராக நியமித்திருந்தாலும், அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் வரை ஒரு பிரசங்க பீடத்தில் பிரவேசிக்க உரிமை கிடையாது. அது முற்றிலும் உண்மை. காரணம் அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் வரையில் ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் அறிவால் விளைந்த கருத்தினால் வழிநடத்தப்படுகிறான்; பெற்றப் பிறகே, அவன் புறாவின் ஆகாரத்தை அவர்களுக்கு அளிக்கிறான்; நேற்று மாலை நாம் பேசின, ஆட்டுக்குட்டியும் புறாவும் என்னும் செய்தியைப் போன்றே.

2949 இப்பொழுது கவனியுங்கள். அவர், “நீங்கள் எருசலேமுக்குப் போய் அங்கு தங்கியிருங்கள்; நான் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை அனுப்பும் வரைக்கும் அங்கு காத்திருங்கள்” என்றார். அப்பொழுது, அவர்கள் என்ன செய்தார்கள்? அங்கு புருஷர்களும் ஸ்திரீகளும் நூற்றிருபது பேர் இருந் தனர். அவர்கள் ஆலயத்திலிருந்த ஒரு மேலறைக்குள் சென்றனர். இப்பொழுது, அது பெந்தெகொஸ்தே பண்டிகையின் நாளுக்கு சமீபமாயிருந்தது, பிரகாரத்தை சுத்திகரித்தல், பஸ்கா ஆட்டுக்குட்டி பலி செலுத்தப்படுதல், அந்த—அந்த பெந்தெகொஸ்தே பண்டிகை, அறுப்பின் முதற்பலன்கள், யூபிலி, பெந்தெகொஸ்தே யூபிலி வரை. கட்டிடங்களின் மேல்… 50 இப்பொழுது, நான் இந்த நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். கிழக்கத்திய நாடுகளில் படிக்கட்டுகள் உள்ளே இருப்பது மிக ஆபூர்வம். அவை சாதாரணமாக வெளிப்புறத்தில் இருக்கும். ஆலயத்தின் வெளிப்புறத்தில், ஒரு சிறு அறைக்கு செல்லும் படிக்கட்டு ஒன்று இருந்ததாக நமக்கு கூறப்பட்டுள்ளது; அந்த படிக்கட்டு மேலே சென்று, சென்று, சென்று, முடிவில் நீங்கள் ஒரு சிறு அறையை அடைகின்றீர்கள், ஆலயத்தின் மேலுள்ள சேமிப்பு அறையைப் போன்ற ஒரு சிறு அறை, மேலறையிலுள்ள, ஒருவிதமான ஒரு சிறு அறை. அவர்கள் மேலறையில் கூடியிருந்ததாகவும் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் வேதம் கூறியுள்ளது, ஏனெனில் அவர்கள் கர்த்தராகிய இயேசுவை வழிபட்டதனால் யூதர்கள் அவர்களை சிதறப்பண்ணுவார்களோ என்று அவர்கள் பயந்தனர், பிரதான ஆசாரியனாகிய காய்பாவும், பொந்தியுபிலாத்துவும் அவரை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தனர். எனவே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்ட எவரையும் அவர்கள் ஒழித்துவிடப்போவதாயிருந்தனர். கதவுகள் யாவும் அடைக்கப்பட்டு, அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

3051 இப்பொழுது, அப்படிப்பட்ட அறைகளுக்கு சன்னல்கள் கிடையாது. சன்னல்கள் சிறு தடுப்புகள் போடப்பட்ட கதவுகளைப் போன்றி ருந்தன, அவைகளை நீங்கள் இழுத்துத் திறக்கவேண்டும். அந்த அறைகளில் சிறு எண்ணெய் விளக்குகள் தொங்கவிடப்பட்டு, அவை எரிந்துகொண்டிருக்கும்… நீங்கள் கலிபோர்னியாவிலுள்ள கிளிஃப்டன் சிற்றுண்டிச் சாலையின் அடித்தளத்துக்கு எப்பொழுதாவது சென்றிருந்தால், மேலறையைப் போன்ற ஒன்றை நீங்கள் அங்கு காணலாம். நீங்கள் எப்பொழுதாகிலும் அங்கு சென்றதுண்டா? எத்தனை பேர் அங்கு சென்றிருக்கிறீர்கள்? ஜனங்களே உங்களுடைய தலையை அசைப்பதை நான் காண்கிறேன். பாருங்கள், நான் என்ன கூறிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். சரி. நீங்கள் அங்கு சென்றால், கெத்சமனே தோட்டத்தைக் காண்பீர்கள்; அதற்கு முன்பு நீங்கள் அந்த கிழக்கத்திய அறைகள் ஒன்றில் நுழையவேண்டும். அது முற்றிலும் உண்மை. அங்கு ஒலிவ எண்ணெயால் நிரப்பப்பட்ட ஒரு சிறு விளக்கையும், அதில் ஒரு கம்பளி போன்ற சிறு திரி மூழ்க்கப்பட்டு அது எரிந்துகொண்டிருப்பதையும் காண்பீர்கள். 52 இப்பொழுது, அவர்கள் வெளியேயிருந்த படிக்கட்டுகளின் வழியாக ஏறி அந்த மேலறையை அடைந்தனர் என்று நாம் கூறலாம். அவர்கள் யூதருக்கு பயந்ததால், அவர்கள் உள்ளே சென்று ஒளிந்துகொண்டனர். மேலறைக்குச் செல்லும்படி இயேசு அவர்களிடம் கூறவில்லை. அவர், “எருசலேமில் காத்திருங்கள்” என்று மாத்திரம் கூறினார். அவர்கள் ஒரு வீட்டில் கூடியிருந்தால், என்ன நடந்திருக்குமென்று கூறமுடியாது. ஒருக்கால் யூதர்கள் வந்து அவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருக்கக்கூடும். எனவே மேல் மாடியிலுள்ள ஒரு சிறு பழைய அறைக்கு அவர்கள் சென்று, யூதர்கள் அங்கு வந்து பிடித்துக்கொள்ளாதபடி கதவைத் தாளிட்டுக்கொண்டனர். அவர்கள் அங்கு உட்கார்ந்துகொண்டு பத்து நாட்கள் காத்திருந்தனர்.

3153 இப்பொழுது, இப்பொழுது, நாம் அப்போஸ்தலர் 1-ம் அதிகாரத்தில் இருக்கிறோம். இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். அந்த காட்சி உங்களுக்கு புரிந்துவிட்டதா? கட்டிடத்தின் வெளிப்புறத்தில் படிக்கட்டு மேலே சென்றது, அவர்கள் அதன் வழியாக அந்த சிறு அறைக்குள் நுழைந்தனர். கீழே தேவாலயத்தில் அவர்கள் பெந்தெகொஸ்தே பண்டிகையை ஆசரித்துக்கொண்டிருந்தனர். ஓ, ஒரு மகத்தான நேரம் உண்டாயிருந்தது. இப்பொழுது, பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு, தேவன் தாம் வாக்களித்ததை அனுப்பப்போகிறார் என்னும் விசுவாசமுடையவர்களாயிருந்தனர். அவ்வாறே இங்குள்ள ஒவ்வொரு நபரும் இன்றிரவு ஒருமனப்பட்டு, என்ன நடக்கிறதென்று பாருங்கள். அது மறுபடியும் நிகழ வேண்டும். அவர்களுக்கு இருந்தவாறே, அதே விதமாகவே இது ஒரு வாக்குத்தத்தமாயுள்ளது. பார்த்தீர்களா? 54 அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? கட்டளைகளை பின்பற்றிக்கொண்டிருந்தனர், “அதுவரைக்கும் காத்திருங்கள்…” என்ற அந்த—அந்த—அந்த தேவனுடைய கட்டளையை அவர்கள் பின்பற்றிக்கொண்டிருந்தனர்;

3255 இப்பொழுது, அவர்கள் யூதர்களுக்கு பயந்திருந்தனர். இப்பொழுது, அதை ஞாபகம் கொள் ளுங்கள். அவர்கள் யூதர்களுக்கு பயந்திருந்தனர். இப்பொழுது, அப்பொழுது சடுதியாக பலத்த காற்று அடிக்கிறது போல ஒரு முழக்கம் உண்டானது. அது பலத்த காற்று அல்ல; அது பலத்த காற்று அடிக்கிறது போல ஒரு முழக்கம். மொழிபெயர்ப்பாளர் அளித்துள்ள விரிவுரைகளை இன்னும் சில நிமிடங்களில் நான் படித்து காண்பிப்பேன். அது பலத்த காற்று அடிக்கிறது போல ஒரு முழக்கமாயிருந்தது. வேறுவிதமாகக் கூறினால், அது இயற்கைக்கு மேம்பட்ட காற்றாயிருந்து (ஓ!), அவர்களால் உணர முடிந்த ஒன்று. அந்த காற்று அவர்களுக்குள் இருந்தது. அப்பொழுது ஒரு—ஒரு பலத்த காற்று வந்தது, பலத்த காற்று போல ஒன்று. காற்று பலமாக அடித்துக்கொண்டிருக்கவில்லை, ஆனால் ஒரு பலத்த காற்று அடிக்கும்போது ஏற்படுகிற முழக்கம்போல், அந்தவிதமாக ஒரு முழக்கம் உண்டானது: வ்வுயூ! அதை நீங்கள் எப்பொழுதாவது உணர்ந்ததுண்டா? ஓ, என்னே! ஒரு பலத்த காற்று அடிக்கிறதுபோல. இப்பொழுது கவனியுங்கள். அது நிரப்பிற்று…இப்பொழுது, இங்கு “எல்லாவற்றையும்” என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் கிரேக்க மொழியில் “முழுவதையும் (பெரிய எழுத்தில் மு-ழு-வ-தை-யு-ம்), வீடு முழுவதையும்,” அங்கிருந்த எல்லாவிடத்தையும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அந்த வீட்டில் இருந்த விரிசல், மூலை, சந்து ஒவ்வொன்றையும் அது நிரப்பினதுபோன்று தென்பட்டது. “சகோதரரே, நான் உணருவதை நீங்களும் உணருகிறீர்களா?” என்று கேட்பதல்ல அது. இல்லை! அது ஒரு பலத்த காற்றுபோல, எல்லாவிடங்களையும் நிரப்பினது. இப்பொழுது கவனியுங்கள். “அப்பொழுது ஒரு பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல், வானத் திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி (இணைத்தல். இப்பொழுது அவைகளை இணைக்கும் இடைச்சொற்களை கவனியுங்கள். நீங்கள் அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அது கூறாத ஏதோ ஒன்றை நீங்கள் கூறுவதாகிவிடும். புரிகிறதா?)—அந்தவிதமாக (அதுதான் முதலில் நடந்தது ஒரு முழக்கமாயிருந்து, அவர்கள் மேல் ஒரு—ஒரு பலத்த காற்று அடிப்பது போன்ற ஒரு முழக்கம்)—மேலும் (உங்களுக்கு நினைவிருக்கும், நேற்றிரவு நான் கடைக்குச் சென்று ஒரு ரொட்டியும் இறைச்சியும் வாங்கினேன். அந்த ஒன்று மற்றொன்றுடன் சம்பந்தப்பட்டது. ரொட்டி ஒரு பொருள், இறைச்சி மற்றொரு பொருள். முழக்கம் என்ற ஒரு காரியம் அவர்களிடம் உண்டானது)— அப்பொழுது (அவர்களுக்கு முன்பாக) நாவுகள்—பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டன.”

3356 இங்குள்ள யாராகிலும் சிசில் டிமிலினுடைய “பத்து கட்டளைகள்” என்ற திரைப்படத்தைக் கண்டதுண்டா? அதில் பத்து கட்டளைகள் எழுதப் பட்டபோது நீங்கள் கவனித்தீர்களா? அவர் எப்படி அதை எடுத்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அதில் நான் கண்ட இரண்டு மூன்று காரியங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதலாவதாக அந்த மரகத நிறம் கொண்ட ஒளி, அது அப்படியே தோற்றமளித்தது. பார்த்தீர்களா? மற்றொரு காரியம் அந்த கற்பனைகள் எழுதப்பட்டபோது, அது எழுதி முடித்த பின்பு, அந்த பெரிய அக்கினி ஸ்தம்பத்திலிருந்து சிறு அக்கினி நாவுகள் பறந்து சென்றதை நீங்கள் கவனித்தீர்களா? நீங்கள் அதைக் கவனித்தீர்களா? இப்பொழுது, பெந்தெகொஸ்தே நாளன்றும் இது அப்படித்தான் இருந்தது என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்குக் காணப்பட்டது…எனவே அவர்கள் அதைக் காண முடிந்தது. அது, “அவர்களுக்குள் விழுந்தது” என்று கூறவில்லை. அப்பொழுது அக்கினிமயமான நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு (நாம் அதை அவ்வாறே அழைப்போம்) நாவுகள், இங்குள்ள இந்த நாவைப் போன்ற நாவு [சகோதரன் பிரான்ஹாம் அதை செய்து காண்பிக்கிறார்—ஆசி.] , நாவின் வடிவம் போன்ற, அக்கினி நாவு. இப்பொழுது, காது—நான் கூறினது போன்று, காது என்பது காதைக் குறிக்கின்றது; அவ்வாறே விரல் என்பது விரலைக் குறிக்கின்றது. விரல் என்றால் நீங்கள் விரலைக் கொண்டு தொட்டீர்கள் என்று அர்த்தமல்ல. அது ஒரு விரலைப் போல் காணப்பட்டது என்று பொருள்படுகிறது. அது ஒரு காது என்றால், அவர்கள் காதினால் கேட்டார்கள் என்று அர்த்தமல்ல; அது காதைப் போல் காணப்பட்டது. இது காண்பதற்கு ஒரு நாவைப் போலிருந்த அக்கினியாயிருந்தது, யாரோ ஒருவர் பேசினார் என்றல்ல, அது ஒரு நாவைப் போல் காணப்பட்ட ஒரு அக்கினி.

3457 இப்பொழுது, கவனியுங்கள். கிரேக்க மொழியில் அது இங்கு எவ்வாறுள்ளது என்பதை கவனியுங்கள்: சடுதியாக ஒரு முழக்கமுண்டாகி…ஒரு பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல…(3-ம்—3-ம் வசனம்.) பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டன … (அவர்களுக்குள் பிரிந்திருக்கும் நாவுகள் இருந்ததென்றோ, அல்லது அவர்கள் ஒரு பிரிந்திருக்கும் பாஷையை பேசினர் என்றோ இல்லை; பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டன. இப்பொழுது கவனியுங்கள். அது இன்னும் அவர்கள் மேல் வரவில்லை. அது அங்கே அறையில் இருந்து, இந்தக் காற்றைப் போல சுழன்றுகொண்டிருந்தது.)… அக்கினிமயமான…போலப்…பிரிந்திருக்கும் நாவுகள்…அவர்களுக்குக் காணப்பட்டது… (அது அவர்களுக்கு முன்னால் இருந்தது) அக்கினிமயமான…போலப், (அக்கினி போன்ற நாவுகள்) அவை ஒவ்வொன்றும் (ஒருமை) ஒவ்வொருவர் மேலும் தங்கினது. (அவர்களுக்குள் சென்றது என்றல்ல; ஆனால் அவர்கள் மேல் தங்கினது.) 58 இப்பொழுது, ஜேம்ஸ் அரசனின் வேதாகமத்தில் வித்தியாசமாயிருப்பதைப் பாருங்கள்: “பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள் மேல் வந்தது, இல்லை அமர்ந்தது (அது ஜேம்ஸ் அரசனின் மொழிபெயர்ப்பில் அங்கே எப்படி வாசிக்கப்படுகிறது?) அவர்கள் மேல் அமர்ந்தது.” பார்த்தீர்களா? இப்பொழுது, அது போய் அவர்கள் மேல் உட்கார முடியாது. அது நமக்குத் தெரியும். ஆனால் மூல கிரேக்க வேதம், “அவர்கள் மேல் தங்கினது” என்று கூறியுள்ளது என்று நான் நினைக்கிறேன்; இல்லையா? அதை நான் உண்மையாகவே சரியாக பரிந்துகொள்ளட்டும். ஆம்! “…அவர்கள் ஒவ்வொருவர் மேலும் தங்கினது.” ஒவ்வொரு அக்கினி நாவும் ஒவ் வொருவர் மேலும் தங்கினது. அங்கு பார்த்தீர்களா? உங்களுக்கு இது புரிகிறதா? அதுதான் நிகழ்ந்த இரண்டாவது காரியம். முதலில் காற்று, பிறகு அக்கினி நாவுகள் காணப்படுதல்.

3559 சிறு எண்ணெய் விளக்குகள் எரிந்துகொண்டிருந்த இந்த சிறு அறையில் அது நிகழ்ந்தது. அவர்கள் அங்கு உட்கார்ந்துகொண்டிருந்ததை சற்று யோசித்து பாருங்கள். ஒருவன், “ஓ!” என்கிறான். அவன் கட்டிடத்தைச் சுற்றிலும் பார்த்தான்; அது கட்டிடம் முழுவதிலும் இருந்தது. அப்பொழுது அவர்கள், “பாருங்கள்!” என்றனர். அக்கினி நாவுகள் கட்டிடத்தைச் சுற்றி வரத் தொடங்கின. இப்பொழுது கவனியுங்கள். அக்கினிமயமான நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டன. இப்பொழுது அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்: … ரும் (வேறொரு இடைச்சொல்; வேறொன்று சம்பவித்துது.) அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு,… (நிகழ்ந்த இரண்டாவது காரியம்.) 60 இப்பொழுது பாருங்கள், இதை நாம் மாற்றி அமைத்து, “அவர்கள் அக்கினிமயமான நாவுகளைப் பெற்று, இங்கே சுற்றி பிதற்றிக்கொண்டேயிருந்தனர்; அதன் பிறகு அவர்கள் வெளியே சென்று யாரும் அறியாத பாஷையில் பேசத் தொடங்கினர்.” என்கிறோம். நண்பனே, அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியம் வேதவாக்கியங்களில் இல்லையே. பரிசுத்த ஆவியைப் பெறும்போது, யாரும் அறியாத பாஷையில் பேசுகிறவன் எவனும் வேதத்துக்கு முரணான ஒன்றைச் செய்கிறான். யாரும் அறியாத பாஷை பேசுவதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளவன் என்பதை இன்னும் சில நிமிடங்களில் உங்களுக்கு காண்பிக்கவும் நிரூபிக்கவும் போகிறேன், ஆனால் பரிசுத்த ஆவியைப் பெறும்போதல்ல. அது பரிசுத்த ஆவியின் ஒரு வரமாயுள்ளது. பரிசுத்த ஆவி என்பது ஒரு ஆவி.

3661 இப்பொழுது கவனியுங்கள். இந்த நாவுகள் அக்கினி வடிவில் அந்த அறையில் இருந்தன, அது ஒவ்வொருவர் மேல் தங்கினது. பிறகு அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர் (இரண்டாவது காரியம்), அதன்பிறகு, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பிறகு, பாஷைகளில், அந்நிய பாஷைகளில் அல்ல, வெவ்வேறு பாஷைகளில் பேசினார்கள். நீங்கள் அதைக் கவனித்தீர்களா? ஆவியானவர் அவர்களைப் பேச ஏவினபடியே, அவர்கள் வெவ்வேறு பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். இப்பொழுது, இந்த சத்தம் வெளியே பரவினது. 62 இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, நீங்கள் இதை இப்பொழுது மறந்துபோகாதபடிக்கு நாம் இந்த விளக்கத்தை மறுபடியும் புரிந்துகொள்வோம். வேதவாக்கியத்தின்படி, அவர்கள் மேலறையில் காத்திருக்கையில், சடுதியாய் பலத்த காற்று அடிக்கிறது போன்ற ஒரு முழக்கம், அவர்கள்மேல் வந்தது; அது பரிசுத்த ஆவியாயிருந்தது. அது பரிசுத்த ஆவியின் தோற்றம் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? காற்றைப் போல், இயற்கைக்கு மேம்பட்ட காற்று. பின்பு அவர்கள் கவனித்தனர். அக்கினிமயமான சிறு நாவுகள் தோன்றி, அங்கிருந்த நூற்றிருபது பேர்கள், அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமரத் துவங்கினது. அது என்னவாயிருந்தது? அது என்னவாயிருந்தது? அது அக்கினி ஸ்தம்பம், அது தேவனே தம்மை தமது ஜனங்களின் மத்தியில் பிரித்துக்கொண்டு, ஜனங்களுக்குள் வருதல். இயேசு அதை முழுவதுமாக பெற்றிருந்தார்; அவர் ஆவியை அளவில்லாமல் பெற்றிருந்தார்; நாமோ அதை அளவோடு பெற்றிருக்கிறோம் (நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா?), ஏனெனில் நாம் சுவிகாரப் புத்திரராக இருக்கிறோம். அவருடைய ஜீவன்—அவருடைய நித்திய ஜீவன் உள்ளே வந்தது. இப்பொழுது, என்ன நடந்தது? அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்.

3763 இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அந்த வதந்தி எப்பொழுது தொடங்கினது? அவர்கள் மேலறையிலிருந்து வெளியே வந்து படிக்கட்டுகளின் வழியாய் கீழே இறங்கி வந்து, பிரகாரங்களுக்கு செல்ல—இல்லை—தேவாலயத்தின் வெளிப்பிரகாரத்தை அடைய வேண்டுமானால், அது அவர்களிலிருந்த இடத்திலிருந்து ஒருக்கால் ஒரு நகர வட்டார தூரம் இருந்திருக்கும், அவர்கள் மேலிருந்து கீழிறங்கி, வெளிப்பிரகாரத்தை அடைந்தனர், அங்குதான் ஜனங்கள் எல்லாரும் கூடியிருந்தனர்… அவர்கள் வெளியே வந்தபோது ஆவியினால் நிறைந்து, குடித்தவர்கள் போல் காணப்பட்டனர். ஜனங்கள், “இவர்கள் புது மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்” என்றனர். அவர்கள் அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதேயில்லை. 64 அவர்கள் ஒவ்வொருவரும், “பரிசுத்த ஆவி வந்துவிட்டது. தேவ னுடைய வாக்குத்தத்தம் என்மேல் உள்ளது. நான்—நான் ஆவியினால் நிறை யப்பட்டிருக்கிறேன்” என்று கூற முயன்றனர். அவன் ஒரு கலிலேயன், ஆனால் அவன் அரேபியனிடம் அல்லது பெரிசியனிடம் பேசினபோது, அவனவன் தன்னுடைய சொந்த பாஷையில் அதைக் கேட்டான். 65 “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே (யாரும் அறியாத பாஷையில் அல்ல)—இவர்கள் பேசக் கேட்கிறோமே. பேசுகிக்கொண்டிருக்கிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?” அவர்கள் ஒருக்கால் கலிலேய பாஷையிலேயே பேசினர்…ஆனால் அவர்கள் அதைக் கேட்டபோது, அது தங்கள் ஜென்ம பாஷையில் இருந்தது. இல்லையென்றால், இந்த கேள்விக்கு நீங்கள் எனக்கு—எனக்கு பதில் கூற விரும்புகிறேன்: பேதுரு எழுந்து கலிலேய பாஷையில் பேசினபோது, அங்கு கூடியிருந்த அனைவருமே அவன் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டு எப்படி புரிந்துகொள்ள முடிந்தது? அங்கேயே மூவாயிரம் ஆத்துமாக்கள் கிறிஸ்துவினிடம் வந்தன. பேதுரு ஒரு பாஷையில் தான் பேசினான். நிச்சயமாக! அது தேவன் செய்த ஒரு அற்புதமாயிருந்தது. பேதுரு மெசொப்பொத்தாமியாவில் குடியிருந்தவர்களுக்கும், அந்நியர்களுக்கும், யூதமார்க்கத்தமைந்தவர்களுக்கும், உலகம் முழுவதிலுமிருந்து அங்கு வந்து நின்று கொண்டிருந்தவர்களுக்கும் இதை கூறினான்… பேதுரு நின்று கொண்டு ஒரு பாஷையில் பிரசங்கித்தான், ஆனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் அதைக் கேட்டு புரிந்துகொண்டனர், அதன் விளைவாக மூவாயிரம் பேர் மனந்திரும்பி உடனடியாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றனர். அது எப்படி?

3866 நண்பர்களே, பாருங்கள், என் ஸ்தாபன, பெந்தெகொஸ்தே சகோதரன் இப்பொழுதே இதை ஏற்றுக்கொள்வாரென்று என்னால் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் அதை வேதம் பூராவும் ஆராய்ந்து, அவர்கள் எப்பொழுதாவது பரிசுத்த ஆவியைப் பெற்று, அவர்கள் என்ன பேசுகின்றனர் என்று புரிந்துகொள்ளமுடியாத பாஷையில் பேசினார்களா என்று என்னிடம் கூறுங்கள். அவர்கள் அந்தவிதமாக அதை அங்கு பெற்றிருப்பார்களானால், இராஜாதிபத்திய தேவன்…ஒவ்வொரு முறையும் அது அந்த விதமாகவே இருக்க வேண்டும். 67 இப்பொழுது, என்னால்…இப்பொழுது, கொர்நே-…வீட்டிலே, நேற்றிரவு நாம் சமாரியாவில் என்ன நடந்ததென்று பார்த்தது, நமக்கு நினைவிருக்கிறது, அவர்கள் வேறு எந்த பாஷையிலும் கேட்டதாக அங்கு ஒன்றும் எழுதி வைக்கப்படவில்லை என்பதை நாம் கண்டறிந்தோம், அதைக் குறித்து ஒன்றும் கூறப்படவில்லை. ஆனால் அவர்கள் கொர்நேலியுவின் வீட்டிற்கு சென்றபோது, மூன்று தேசத்தார் அங்கிருந்தனர், அவர்கள் பாஷைகளில் பேசினர். அவர்கள் பேசினபோது, அவர்கள் பேசியிருந்தால், அவர்கள் அதைப் பெற்றிருந்தால், தொடக்கத்தில் அவர்கள் எப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றார்களோ, அதே விதமாகத்தான் இவர்களும் பெற்றுக்கொண்டதாக பேதுரு கூறினான். புறஜாதிகள் தேவனிடத்திலிருந்து கிருபையை பெற்றிருந்தனர் என்று அவர்கள் அறிந்துகொண்டனர், ஏனெனில் தொடக்கத்தில் அவர்கள் பெற்றவிதமாகவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். நான் ஒரு கேள்வியை இங்கே பெற்றுள்ளேன், அதன்பேரில் இன்னும் சில நிமிடங்களில் பார்க்கப் போகின்றோம். அது என்னவென்று நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக, அதற்கு ஆதாரமாக நான் இதைக் கூற விரும்பினேன்.

3968 இப்பொழுது, வித்தியாசமாக கற்பிக்கப்பட்டுள்ள ஜனங்களை என்னால் எதிர்பார்க்க முடியாது… என் அருமையான, விலையேறப் பெற்ற பெந்தெகொஸ்தே சகோதரர்களே, எனக்கு செவி கொடுங்கள். இதை நான் வெளியில் எங்கும் பிரசங்கிக்கமாட்டேன். இது…சர்ச்சையை உண்டாக்க நான் எதையும் செய்யமாட்டேன். ஆனால் நாம் சத்தியத்தை அறிந்துகொள்ளாமல் போனால், நாம் எப்பொழுது தொடங்கப் போகிறோம்? இங்கு நம்மை சரிப்படுத்த நிகழும்படியான ஏதோவொன்றை நாம் பெற்றிருக்கத்தான் வேண்டும். இப்பொழுது நாம் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கேற்ற கிருபையை இங்கே பெற்றுக் கொள்ள வேண்டும். சத்தியம் வெளியில் வரத்தான் வேண்டும். 69 ஒரு மனிதன் செவிடனாகவோ, ஊமையாகவோ இருந்து, அவனால் பேச முடியாவிட்டால் அவன் என்ன செய்வான்? அவனால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியுமா? அவனுக்கு தொடக்கத்திலேயே நாக்கு இல்லாதிருந்தால், அந்த பரிதாபமான நபர் இரட்சிக்கப்பட விரும்பினால், அவன் என்ன செய்வான்? புரிகிறதா? இது பரிசுத்த ஆவியாய், ஒரு அபிஷேகமாயுள்ளது. அந்நிய பாஷைகள் பேசுதல், பாஷைகளுக்கு அர்த்தம் உரைத்தல் போன்ற வரங்கள் அனைத்தும், நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று கிறிஸ்துவின் சரீரத்தில் வந்த பிறகே உண்டாகின்றன. ஏனெனில் அந்த வரங்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ளன.

4070 இப்பொழுது, இதை நான் கூறும் காரணம்…இப்பொழுது, இங்கு பாருங்கள். அப்போஸ்தலர்களுக்குப் பிறகு முதன் முதலாக உலகில் ஸ்தாபிக்கப்பட்ட கத்தோலிக்க சபையை நீங்கள் எதிர்பார்க்க முடியுமா… கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்பட்டதோ, ஓ, கடைசி அப்போஸ்தலன் மரித்து அநேக நூற்றாண்டுகள் கழித்த பின்பே, அப்போஸ்தலர்களுக்குப் பிறகு—சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, நிசாயா ஆலோசனை சங்கம் முடிந்து உடனடியாக, நிசாயா பிதாக்கள் ஒன்றுகூடி ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்ட போது, கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்பட்டது. அப்பொழுது உலகம் முழுவதும் பரம்பின ஒரு சபையை அவர்கள் உண்டாக்கினர், அதுதான் கத்தோலிக்க சபை. அங்கே அவர்கள் ஒரு உலக சபையை ஏற்படுத்தினர். கத்தோலிக்கம் என்றால் “உலகம் முழுவதும்” என்று பொருள்; அது எங்குமுள்ளது. அவர்கள்…ரோமன்—அஞ்ஞான ரோம மார்க்கம் போப்பாண்டவரின் ரோம மார்க்கமாக மாற்றப்பட்டது. அவர்கள் பேதுருவின் இடத்தைப் பிடிக்க ஒரு போப்பாண்டவரை தலைவராக ஏற்படுத்தலாம் என்று அவரகள் எண்ணி, இயேசு ராஜ்யத்தின் திறவுகோல்களைக் கொடுத்தாரென்று அவர்கள் கூறினர். அந்த போப்பாண்டவர் பிழையற்றவராயிருந்தார், இன்னமும் இன்றைக்கும் கத்தோலிக்க சபைக்கு அவ்வாறேயுள்ளார். அதாவது…அவருடைய வார்த்தையே சட்டமும் ஒழுங்குமாயுள்ளது. அவர் பிழையற்ற போப்பாண்டவர். அது இப்படியாக நடந்து கொண்டே வந்தது.

4171 அதன் பின்னர், கத்தோலிக்க உபதேசத்துடன் இணங்காத காரணத்தால் அவர்கள் கொல்லப்பட்டனர், கழு மரத்தில் எரித்து, மற்ற எல்லாவற்றையும் செய்தனர். நாம் அதையெல்லாம் ஜோசிபஸின் புனித நூல்களின் மூலமாகவும், ஃபாக்ஸினுடைய இரத்த சாட்சிகளின் புத்தகம், இன்னும் அநேக புனித…ஹிஸ்லப்பினுடைய இரு பாபிலோன்கள் , அந்த—அந்த மகத்தான வரலாறுகள் ஆகியவைகளின் வாயிலாகவும் அறிந்துகொள்கிறோம். அதன்பிறகு, அது—ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக நீடித்த இருளின் காலங்களின்போது, நாம் அறிந்துள்ளபடி, வேதாகமம் ஜனங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. மேலும் அது—அது ஒரு சிறு பாதிரி யாரால் ஒளித்து வைக்கப்பட்டது என்று நாம் அறிகிறோம். 72 அதன் பின்பு முதலாம் சீர்த்திருத்தம் மார்டின் லூத்தரின் மூலம் உண்டானது. அவர் தைரியமாக வெளிவந்து, கிறிஸ்துவின் உண்மையான சரீரம்—என்று கத்தோலிக்கரால் அழைக்கப்படும் இராப்போஜனம், கிறிஸ்துவின் சரீரத்துக்கு எடுத்துக்காட்டாயுள்ள ஒன்று மாத்திரமே என்று கூறினார். அவர் இராப்போஜனத்தை பீடத்தின் கிராதிகளிலும், படிக்கட்டுகளிலும் எறிந்து, அது கிறிஸ்துவின் உண்மையான சரீரம் என்று அழைக்க மறுத்து, “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்று பிரசங்கித்தார். இப்பொழுது கத்தோலிக்க சபை அவருடன் இணங்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கமுடியாது, நிச்சயமாக முடியாது, அவர்களுடைய பிழையற்ற தலைவர் அவர்களிடம் அதை மறுக்கும்போது. சரி.

4273 நீதிமானாக்கப்படுதல் என்பதைப் பிரசங்கித்த மார்டின் லூத்தருக்கு பிறகு, ஜான் வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதல் என்பதை பிரசங்கிப்பவராய் தோன்றினார். ஒரு மனிதன், நீதிமானாக்கப்பட்ட பின்பு (அது சரிதான்) அவன் பரிசுத்தமாக்கப்பட வேண்டும் என்றும், அவன் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, பொல்லாங்கு என்னும் வேர் அவனிலிருந்து பிடுங்கப் வேண்டுமென்றும் அவர் பிரசங்கித்தார். இப்பொழுது, லூத்தரன்கள் பரிசுத்த மாக்கப்படுதலைப் பிரசங்கிப்பார்களென்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது, ஏனெனில் அவர்கள் அப்படி செய்யப் போவதில்லை. 74 வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலை பிரசங்கித்த பின்பு, அதிலிருந்து பல சிறு பிரிவுகள் தோன்றின, வெஸ்லியன் மெதோடிஸ்டு, நசரீன் போன்றவர், அவர்கள் தங்களுடைய காலத்தில் இந்த அக்கினி எரிந்துகொண்டிருக்கும்படி செய்தனர், பிறகு பெந்தெகோஸ்தேயினர் தோன்றி, அவர்கள், “ஏன், பரிசுத்த ஆவி என்பது ஒரு அபிஷேகம், அதை நாங்கள் பெறும்போது, அந்நிய பாஷைகள் பேசுகிறோம்” என்றனர். நிச்சயமாக. அது தோன்றினபோது, நசரீன்கள், வெஸ்லியன் மெதோடிஸ்டுகள் போன்றவர் அதை விசுவாசிப்பார்களென்று நீங்கள் எதிர்பார்க்கமுடியாது. அவர்கள் விசுவாசிக்கமாட்டார்கள். அவர்கள் அதை பிசாசென்று அழைத்தனர். சரி. என்ன நடந்தது? அவர்கள் விழத் தொடங்கினர்; பெந்தெ கொஸ்தெயினர் எழும்பத் தொடங்கினர். இப்பொழுது ஒரு ஸ்தானத்தை அடையும்படி பெந்தகோஸ்து எழும்பி, அது தன்னுடைய அசைக்கப்படும் நிலையை அடைந்துள்ளது. அது ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டு, வெளியே போய், வேறெதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவர்கள் தங்கள் சொந்த சட்டதிட்டங்களையும் நியமங்களையும் பெற்றுள்ளனர், அத்துடன் அது முடிவு பெறுகிறது.

4375 இப்பொழுது, பரிசுத்த ஆவி வந்து சத்தியத்தைக் குறித்த எந்தக் காரியத்தையும் வெளிப்படுத்தி, அதை தமது சொந்த பிரசன்னத்தினாலும் தமது வார்த்தையினாலும் நிரூபிக்கும் போது, பெந்தெகொஸ்தே ஜனங்கள் “அதை நான் ஒத்துக்கொள்வேன்” என்று கூறுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கமுடியாது. நீங்கள் லூத்தர் செய்தது போலவும், வெஸ்லி செய்ததுபோலவும், மற்றவர் செய்ததுபோலவும் நீங்கள் தனிமையில் நிற்கவேண்டும். அந்த வேளை இங்குள்ளபடியால், நீங்கள் அதனோடு நிற்க வேண்டும். அதுதான் என்னை அவலட்சணமான வாத்துக் குஞ்சாக்குகிறது. அதுதான் என்னை வித்தியாசமாக்குகிறது. 76 நான் என் விலையேறப்பெற்ற சகோதரர் ஓரல் ராபர்ட்ஸ், டாமி ஆஸ்பார்ன், டாமி ஹிக்ஸ் ஆகியவர்கள் போன்று என்னால் துவங்க முடியாது, ஏனெனில் சபைகள் என்னுடன் இணங்காது. அவர்கள், “அவர் நித்திய பாதுகாப்பு என்பதில் நம்பிக்கை கொண்டவராயிருக்கிறார். அவர் ஒரு பாப்டிஸ்டு. அந்நியபாஷை பேசுவது பரிசுத்த ஆவியைப் பெற்றதன் ஆரம்ப அடையாளம் என்று அவர் நம்புவது கிடையாது. அந்த நபரிடமிருந்து விலகியிருங்கள்!” என்கின்றனர். புரிகிறதா?

4477 ஆனால் அதை முகமுகமாய் சந்தியுங்கள். அதை எதிர்கொள்ளுங்கள். அவர்கள் லூத்தரன்களை எதிர்கொள்ள முடியும், அந்த—அந்த மெத்தோடிஸ்டையும் எதிர்கொள்ள முடியும். பெந்தெகொஸ்தேயினர் மெதோடிஸ்டுகளை எதிர்கொள்ள முடிகிறது. நான் இதைக் கொண்டு பெந்தெகொஸ்தேயினரை எதிர்கொள்ள முடியும். அது முற்றிலும் உண்மை. அது உண்மை. அது ஏன்? அவர் ஒளியிலியிருக்கிறதுபோல நாமும் ஒளியில் நடந்துகொண்டிருக்கிறோம். பார்த்தீர்களா? நாம் ராஜாவின் பெரும் பாதையில் நடந்து மேலே சென்று கொண்டிருக்கிறோம், நாம் அதிக தூரம் நடந்து வரும்போது, நமக்கு கிருபை அதிகம் கொடுக்கப்படுகின்றது, வல்லமை அதிகம் கொடுக்கப்படுகின்றது, இயற்கைக்கு மேம்பட்டது அதிகம் கொடுக்கப்படுகின்றது. நாம் அந்நிலையில்தான் இருக்கிறோம். இந்த நேரத்தில்தான் பரிசுத்த ஆவியானவர், அவர் துவக்கத்தில் இருந்தவிதமாகவே ஒரு ஒளியின் ரூபத்தில் இறங்கி வந்து, ஒரு அக்கினி ஸ்தம்பமாக தம்மை வெளிப்படுத்தி, அவர் பூமியில் இருந்தபோது செய்த அதே கிரியைகளை செய்து வருகிறார். இயேசு, “அது சரியா இல்லையாவென்று நீங்கள் எப்படி அறிந்துகொள்வீர்கள்? அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அறிவீர்கள். என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்” என்றார்.

4578 இப்பொழுது, என் பெந்தெகொஸ்தே சகோதரரே. நான் உங்களுடன் கூட இருக்கிறேன். நான் உங்களில் ஒருவன். நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன். நான் அந்நிய பாஷைகள் பேசியிருக்கிறேன், ஆனால் பரிசுத்த ஆவியைப் பெறும்போது அந்நிய பாஷைகள் பேசவில்லை. நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றேன்; நான் அந்நிய பாஷைகள் பேசினேன், தீர்க்கதரிசனம் உரைத்தேன், அறிவு, ஞானம், வியாக்கியானங்கள் போன்ற வரங்களைப் பெற்றேன், மேலும் ஒவ்வொரு காரியமும் சம்பவிக்கிறது. ஆனால் நான் இவைகளில் எந்த ஒன்றுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறேன், ஏனெனில் இப்பொழுது நான் தேவனுடைய பிள்ளை. வல்லமை, தேவனுடைய அக்கினி என் ஆத்துமாவில் உள்ளது; அந்த அக்கினி நாவு அமர்ந்தது—எனக்குள் வந்து அமர்ந்து, தேவனுக்கு முரணாயிருந்த ஒவ்வொரு காரியத்தையும் சுட்டெரித்துவிட்து. இப்பொழுது நான் அவருடைய ஆவியினால் நடத்தப்படுகிறேன். அவர், “ இங்கே போ” என்றால், நான் போவேன். “ இங்கே போ” என்றால்; நான் போவேன். “ இங்கே பேசு” என்றால்; நான் பேசுவேன். “ இதை , அதை , மற்றதை செய்.” அங்கு தான் காரியமே உள்ளது, அதைப் போன்றே…நீங்கள் ஆவியினால் நடத்தப்படுகின்றீர்கள். அது தேவன் உங்களுக்குள் இருந்து கொண்டு, தமது சித்தத்தை நடப்பிக்கிறார். அது என்னவாயிருப்பினும் கவலைப்பட வேண்டியதில்லை, அவர் தமது சித்தத்தை நடப்பித்துக்கொண்டிருக்கிறார்.

4679 இப்பொழுது கவனியுங்கள். நாம் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்குவதற்கு முன்பு, இதை இங்கு சொல் அகராதியிலிருந்து படிக்க விரும்புகிறேன். இப்பொழுது, இது வாடிகன் மொழி பெயர்ப்பிலிருந்து, தொகுதி 7, 190—1205: “அது அந்த ஜனங்களின் குரல் பேசின அந்நியபாஷையா: அல்லது இயற்கைக்கு மேம்பட்ட பலத்த காற்று உண்டானது என்னும் அறிவிப்பு அல்லது வதந்தி ஜனக்கூட்டத்தை உணர்ச்சிவசப்படுத்தினதா என்று தீர்மானிப்பது கடினம்.” அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது கவனியுங்கள். அது ஜனங்களா… 80 நான் அதை விவரிப்பேன். இங்கு எளிய, கந்தை உடுத்திய கலிலேயர்கள் இருக்கின்றனர். அவர்கள் இங்கே வெளியே தெருவுக்கு வந்தனர். அப்படிப்பட்ட ஒன்றை இதற்கு முன்பு கண்டதில்லை: அவர்கள் தங்களுடைய கரங்களை மேலேயுயர்த்தி, அந்த மேலறையிலிருந்து படிக்கட்டுகளின் வழியாய் இறங்கி, தெருவை அடைந்தனர், அவர்கள் நிரப்பப்பட்டிருந்தனர்; ஆனால் அவர்கள் இன்னும் பேசத் தொடங்கவில்லை. பார்த்தீர்களா? அவர்கள் படிக்கட்டுகளின் வழியாய் அங்கு அடைந்தனர். இப்பொழுது, அவர்கள் தள்ளாடிக் கொண்டே வந்தனர் என்றே நாம் கூறலாம். ஜனங்கள் கூறினர்…ஒரு கிரேக்கன் என்னிடம் வந்து, நான் கலிலேய பாஷையில் பேசுகிறேன் என்று கூறுகிறான். நான் அவனிடம் ஓடிச்சென்று, “மகனே, உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்கிறேன். 81 “நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறேன். தேவ னுடைய வல்லமை அங்கே அந்த அறையில் இறங்கினது. எனக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது. ஓ, தேவனுக்கு மகிமை!” என்கிறான். வேறொருவன் இங்கு வருகிறான், அவன் ஒரு கலிலேயனாயிருந்தும், ஒரு அரபு தேசத்தானிடம் அரபிய—அரபிய மொழியில் பேசுகின்றான். 82 இப்பொழுது, அவர்களால் கூற முடியாததோ, அந்த பலத்த காற்று அந்த திரளான ஜனக்கூட்டத்தை ஒன்று சேர்த்ததா, அல்லது அவர்கள் பேசின வெவ்வேறு அந்நியபாஷைகள் அவர்களைக் கவர்ந்து ஒன்று கூட்டினதா என்பதே? இப்பொழுது, வேதம் சரியாக…நீங்கள் கவனிக்க வேண்டிய இரு காரியங்கள் உண்டு. அது அப்படித்தான்…அதாவது—அதாவது வெளியிலிருந்தவன், “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” என்றான். அவர்கள் வெவ்வேறு பாஷைகளில் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படவில்லை, ஆனால் அவர்கள் அப்படி கேட்டுக்கொண்டிருந்தனர்.

4783 பின்பு அதே குழு, அதே ஜனங்கள், இதற்கு விளக்கம ளித்தனர். பேதுரு ஒன்றின் மேல் குதித்து நின்று, “கலிலேயரே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக (அவர்கள் கலிலேய மொழியை உடையவர்களாயிருக்கவில்லை என்று ஜனங்கள் கூறினர்) நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள் (அவர்களெல்லாரிடமும், அவன் எந்த—எந்த பாஷையில் பேசிக்கொண்டிருந்தான்?); ஏன், நீங்கள் நினைக்கிறப்படி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே, தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது: ‘கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேல் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்’” என்று தேவன் உரைத்திருக்கிறார். இப்படியாக அவன் பேசிக்கொண்டே சென்று, “அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையிலே ஆணியடித்துக் கொலை செய்தீர்கள். அவரைக் குறித்து தாவீது…‘அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்’” என்று உரைத்திருந்தான். “ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று யாவரும் நிச்சயமாக அறியக்கடவர்கள்” என்றான். இதை அவர்கள் கேட்டபொழுது…ஆமென்! யார்? வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு மனிதனும். என்ன நடந்ததுகொண்டிருந்தது? அவன், “இப்பொழுது, நான் கலிலேய பாஷையில் பேசவேன்; இந்த பாஷையில் பேசவேன்; நான் இந்த …?… பேசுவேன்” என்று அவன் கூறிக்கொண்டிருக்கவில்லை. 84 பேதுரு இந்த வார்த்தைகளை பேசினபோது, அவர்கள், “சகோதரரே, இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டனர். பேதுரு அவர்களுக்கு அப்பொழுது அந்த விதிமுறையைத் தந்தான். அது எப்பொழுதுமே அவ்வாறே நிகழ்கிறது. பார்த்தீர்களா?

4885 அது முன்னே சென்று, தேவனிடம் நெருங்கி, அருகாமையில் நடத்தல். உங்களுக்கு எப்படி தெரியும்? இப்பொழுது பாருங்கள், லூத்தர் நீதிமானாக்கப்படுதலைப் பெற்றபோது, அவர் அதை பரிசுத்த ஆவியென்று அழைத்தார். அது அவ்வாறிருந்து. தேவன் அதற்குள் சிறிதளவை அப்பொழுது நனைத்தார். அதன்பின்னர் அவர் என்ன சொன்னார்? வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலைப் பெற்று, “மகனே, நீ சத்தமிடும்போது, அதை பெற்றுக்கொண்டாய்” என்றார். ஆனால் அதைப் பெற்றிராத அநேகரும் சத்தமிட்டனர். பெந்தெகொஸ்தேயினர் யாவரும் பாஷையில்—அறியாத பாஷையில் பேசினபோது, “மகனே, நீ பெற்றுக்கொண்டுவிட்டாய்” என்றனர். ஆனால் அவர்களில் அநேகர் அதைப் பெறாமலிருந்தனர். அதை அறிந்துகொள்வதற்கு அடையாளங்கள் என்பது போன்ற அத்தகைய காரியங்கள் ஏதும் இல்லை. இயேசு, “ஒரு மரத்தை நீங்கள் அறிந்துகொள்ளக் கூடிய ஒரே வழி” என்று கூறி, “அது கொடுக்கும் கனிகளினால் மாத்திரமே” என்றார், ஆவியின் கனிகள், ஆவியின் கனி. ஆகையால் வல்லமையினால் நிரப்பப்பட்டுள்ளள்ள ஒரு மனிதனை, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ள ஒரு மனிதனை நீங்கள் காணும்போது, அப்பொழுது நீங்கள் மாற்றப்பட்ட ஒரு வாழ்க்கையை அவனில் காண்கிறீர்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடருவதை நீங்கள் காண்பீர்கள்: “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள். ஒரு சர்ப்பம் அவர்களைக் கடிக்குமானால், அது அவர்களுக்கு தீங்கு விளைவிக்காது. அவர்கள் சாவுக்கேதுவான யாதொன்றையும் குடித்தாலும், அது அவர்களை கொன்றுவிடாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” என்னே! இப்படிப்பட்ட அடையாளங்கள் விசு வாசிக்கிறவர்களைத் தொடரும். ஆனால் நீங்கள் அதற்குள் வருவது எப்படி? இந்த வரங்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ளன. அந்த சரீரத்துக்குள் நீங்கள் எப்படி வருகின்றீர்கள்? நீங்கள் பேசுவதன் மூலம் அதற்குள் வருவதில்லை; ஆனால் அந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப் படுவதனால் (முதலாம் கொரிந்தியர் 12:13). நாமெல்லாரும் ஒரே ஆவியினாலே அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, இந்த வரங்களை அடைகிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக. 86 யாராகிலும் இந்த ஒலி நாடாவைக் கேட்க நேர்ந்து அல்லது இங்குள்ள யாராகிலும் இதற்கு இணங்க மறுத்தால், சகோதரனே, அதை நட்புத் தன்மையுடன் செய்வதற்கு ஞாபகம் கொள்ளுங்கள், ஏனெனில் நான் உங்களை நேசிக்கிறேன்.

4993. இன்றிரவு முதல் கேள்வி: சகோதரன் பிரான்ஹாமே, தொலைகாட்சி உலகத்துக்கே ஒரு சாபம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 87 பாருங்கள், அதை எழுதினவர் யாராயிருப்பினும், நான் உங்களுடன் இணங்கப்போகிறேன். அவர்கள் அதை உலகிற்கு சாபமாக்கிவிட்டனர். அது உலகிற்கு ஆசீர்வாதமாக இருந்திருக்க கூடும், ஆனால் அவர்களோ அதை சாபமாக்கி விட்டனர். என் அருமை ஜனங்களே, அப்படிப்பட்ட ஒன்றை, நீங்கள் எந்தவகையில் நோக்குகிறீர்கள் என்பதை அது பொறுத்தது. தொலைகாட்சி ஒரு சாபமாகக் கருதப்படுமானால், அப்படியானால் செய்திதாளும் ஒரு சாபமே, அப்படியானால் வானொலியும் சாபமே, அநேகமுறை தொலைபேசியும் சாபமாகவே உள்ளது. பாருங்கள், பாருங்கள், பாருங்கள், புரிகிறதா? நீங்கள் அதை எவ்விதம் பயன்படுத்துகிறீர்கள் என்பதையே பொருத்ததாயுள்ளது. ஆனால் அன்றிரவு அந்த சகோதரன் கூறினவிதமாக, தொலைக்காட்சியில் இப்பொழுது சரியான நிகழ்ச்சிகளே இருப்பதில்லை; ஏனெனில் அதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. முழு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் ஏழ்மையான போதகர்கள் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு செலவு செய்ய முடியாது. எனவே…அன்றிரவு சகோதரன், வேறெங்கோ, கூறினாரென்று நான் நினைக்கிறேன், அவர், “உங்கள் வானொலியின் மேலுள்ள தூசியைத் துடையுங்கள்” என்றார், அல்லது யாரோ, அல்லது, “அதை மூலையிலிருந்து கொண்டு வந்து சுவிசேஷ நிகழ்ச்சிகளைக் கேளுங்கள்” என்றார். அது உண்மை.

5088 ஆனால், அன்பார்ந்த நபரே, நீங்கள் யாராயிருந்தாலும், உங்களு டன் நான் நிச்சயம் இணங்குகிறேன். அது மானிட வர்க்கத்துக்கே மிகவும் வெறுக்கப்படத்தக்க காரியங்களில் ஒன்றாய் உள்ளது. அரசாங்கத்துக்கு வரிகளாக செல்ல வேண்டிய எல்லா பணத்தையும் அவர்கள் இங்கே எடுத்து, சிகரெட்டுகள் விஸ்கி போன்றவைகளை விளம்பரப்படுத்துவதற்காக நிகழ்ச்சிகளை நடத்தி, அரசாங்க வரிகளிலிருந்து சலுகை பெறுகின்றனர்; அதன் பிறகு அவர்கள் சுற்றி வந்து சிறு தொகையை பிரசங்கிமார்களிடமிருந்து பறிக்க, இவர்களை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்கின்றனர். நான் உங்களுடன் இணங்குகிறேன் அது மிகவும் மோசமான காரியம். இப்பொழுது, அதுவல்ல…உங்களுக்குத் தெரியும், அது நீங்கள் கண்டறிகிற ஒரு காரியமாயுள்ளது. இந்த கேள்வியைக் கேட்டது சகோதரியோ, சகோதரனோ, யாராயிருப்பினும், உங்களுக்கு என் நன்றி.

5194. இப்பொழுது, இங்கு ஒரு நல்ல கேள்வியுள்ளது. கேள்வி: வேதாகமத்தில் முதலாம் சாமுவேல் 18:10 போன்ற இடங்களில், தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி செயல் புரிந்தது என்று எழுதப்பட்டுள்ளது. “தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி” என்பது எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து இதை விளக்கவும். 89 பாருங்கள், கர்த்தருடைய உதவியினால், என்னால் பதிலளிக்க முடியும். தேவன் பொல்லாத ஆவியாயிருக்கிறார் என்பது இதன் அர்த்தமல்ல. ஆனால் எல்லா ஆவிகளுமே தேவனுக்குக் கீழ்ப்பட்டுள்ளது. அவர் எல்லாவற்றையும் தமது சித்தத்துக்கு ஏற்றவாறு கிரியை செய்யும்படி செய்கிறார். புரிகிறதா? 90 இப்பொழுது, உங்களுடைய கேள்வியில், சவுலைத் துன்புறுத்த தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவியைக் குறித்து நீங்கள பேசிக்கொண்டிருக்கிறீர்கள். சவுல் மனோநிலை சரியில்லாத, நொறுங்கிய நிலையில்—இருந்தான், ஏனெனில், முதலாவதாக, அவன் பின்வாங்கிப் போயிருந்தான். நீங்களும் பின்வாங்கிப் போகும்போது, ஒரு பொல்லாத ஆவியை—உங்களை துன்புறத்த தேவன் ஒரு பொல்லாத ஆவியை அனுமதிப்பார்.

5291 இன்னும் சிறிது நேரத்தில் ஒன்றை உங்களுக்கு படித்துக் காண்பிக்க விரும்புகிறேன். அதை குறித்து எனக்கு இங்கு மற்றொரு கருத்து உள்ளது. புரிகிறதா? ஒவ்வொரு ஆவியும் தேவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். யோசபாத்தும் ஆகாபும் போருக்குப் புறப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? முதலாவதாக உங்களுக்குத் தெரியும், அங்கிருந்த—அவர்கள் ஒலிமுக வாசல்களில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். யோசபாத் ஒரு நீதியுள்ள மனிதனாயிருந்தான், அவன் (அந்த இரண்டு ராஜாக்களும் அங்கு உட்கார்ந்துகொண்டு, தங்கள் சேனைகளை ஒன்று கூட்டினர்) எனவே அவன், “நாம் யுத்தத்துக்கு போகலாமா அல்லது வேண்டாமா என்பதைக் குறித்து கர்த்தரிடத்தில் விசாரிப்போம்” என்றான். 92 ஆகாப் புறப்பட்டுப்போய் தன்னிடத்திலிருந்த நானூறு தீர்க்கதரிசிகள், யாவரையும் வர வழைத்தான். அவன் அவர்களைப் போஷித்து கொழுக்க வைத்திருந்தான்; அவர்கள் திடகாத்திரமுள்ளவர்களாய் இருந்தனர். அவர்கள் அங்கு வந்து, ஒரு மனதுடன் தீர்க்கதரிசனம் உரைத்து, “நீங்கள் போகலாம், தேவன் உங்களுக்கு வெற்றியைத் தருவார். நீங்கள் கீலோயாத்திலுள்ள ராமோத்தின் மேல் யுத்தம் பண்ணப் புறப்படுங்கள், அங்கு தேவன் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்” என்றனர். அவர்களில் ஒருவன் ஒரு உதாரணத்துக்காக தனக்கு இரு கொம்புகளை உண்டாக்கிக் கொண்டு, சுற்றி ஒடத் துவங்கி, “இந்த இரும்புக் கொம்புகளினால், நீர் அவர்களை தேசத்துக்குப் புறம்பே தள்ளிவிடுவீர்; அது உமக்குத் சொந்தமானது” என்றான்.

5393 ஆனால் உங்களுக்குத் தெரியுமா, இதனோடெல்லாம் செல்லாத ஏதோ ஒரு காரியம் ஒரு தேவனுடைய மனிதனிடத்தில் உள்ளது. பாருங்கள்? அது வேதத்துடன் ஒத்துப்போகவில்லையென்றால், ஏதோ தவறுள்ளது. எந்த உண்மையான விசுவாசியும்… எனவே யோசபாத், “பாருங்கள், இந்த நானூறு பேர்களும் காண்பதற்கு நன்றாயிருக்கின்றனர். அவர்கள் நல்லவர்கள் போல் காணப்படுகின்றனர்” என்றான். “ஓ, அவர்கள் நல்லவர்களே,” என்று ஒருவேளை ஆகாப் கூறியிருப்பான். ஆனால் யோசபாத்தோ, “இன்னும் வேறும் யாராகிலும் உங்களிடத்தில் இல்லையா?” என்று கேட்டான். நானூறு பேர் ஒருமனதுடன் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளபோது, உமக்கு ஏன் வேறு யாராகிலும் வேண்டும்? ஏனெனில் சரியாக இல்லாத ஏதோ ஒன்று உள்ளது என்று அவன் அறிந்திருந்தான். பார்த்தீர்களா? ஆகாப், “ஆம், இன்னும் ஒருவன் இருக்கிறான், அவன் தான் இம்லாவின் குமாரனாகிய மிகாயா,” என்று கூறி, “ஆனால் நான் அவனைப் பகைக்கிறேன்” என்றான். நிச்சயமாக. நீர் அவனுடைய சபையை உம்மால் முடிந்த எந்த நேரத்திலும் மூடலாம். நீர் அவனை தேசத்தை விட்டு துரத்தி விடுவீர். பாருங்கள்? நிச்சயமாகவே, “நான் அவனைப் பகைக்கிறேன்.” “நீர் ஏன் அவனைப் பகைக்கிறீர்?” “அவன் எப்பொழுதுமே என்னைக் குறித்து தீமையாக தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன்.” அப்பொழுதே யோசபாத் அங்கே—ஏதோ சரியில்லை என்பதை கண்டு கொண்டான் என்று நான் நினைக்கிறேன். எனவே அவன், “போய், மிகாயாவை அழைத்து வா” என்றான். எனவே அவர்கள் அவனிடம் சென்றனர், அவன் இங்கு வந்து… எனவே அவர்கள் மேலே சென்றபோது, அவர்கள் ஒரு தூதுவரை அனுப்பி, “இப்பொழுது, ஒரு நிமிடம் காத்திரும். இப்பொழுது, அவர்களுக்கு அங்கு தெய்வீக பாண்டித்திய பட்டம் பெற்ற நானூறு பேர் இருக்கின்றனர். அவர்கள் தேசத்திலேயே மிகச் சிறந்தவர்கள் பிஎச், எல்.எல்.டி , பட்டங்களைப் பெற்றவர்கள்” என்றான். மேலும், “இப்பொழுது, உனக்குத் தெரியும், படிப்பறிவில்லாத எளியவனாகிய நீர், அந்த குருவானவர்கள் யாவரும் கூறினதுடன் இணங்காமலிருக்க மாட்டீர்” என்றான்.

5494 இம்லா இதைக் கூறினான், இல்லை மிகாயா இதைக் கூறினான் என்றே நான் கூறுகிறேன்: “தேவன் ஒன்றை என் வாயில் போடாமல் நான் எதையும் சொல்லமாட்டேன், அவர் என்ன கூறுகிறாரோ அதை அப்படியே எடுத்துரைப்பேன்” என்றான். அது எனக்குப் பிரியம். அது எனக்குப் பிரியம். வேறு வார்த்தைகளில் கூறினால், “நான் வார்த்தையோடு தரித்திருப்பேன்.” மற்றவர்கள் என்ன கூறினபோதிலும் கவலைப்படவேயில்லை. அவன், “பார்,” என்று கூறி, “நான் உனக்குச் சொல்கிறேன். நீர் துரத்தப்படாலிருக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் சொன்னதையே சொல்லுவது நல்லதாகும்” என்றான். எனவே அவன் அங்கு சென்றான். அப்போது ராஜா, “நான் போகலாமா?” என்று கேட்டான். அவன், “போங்கள்” என்றான். மேலும், “இன்றிரவு எனக்கு அவகாசம் கொடுங்கள். நான் அதைக் குறித்து கர்த்தரிடத்தில் பேசட்டும்” என்றான். அது எனக்குப் பிரியம். எனவே அன்றிரவு கர்த்தர் அவனுக்கு தோன்றினார், அடுத்த நாள் அவன் அவர்களிடம் சென்றான். மேலும் அவன் சொன்னான், செல்லும்போது என்று சொல்லி விட்டு, அவன், “போங்கள்; ஆனால் இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்” என்றான். ஓ, என்னே! அது ராஜாவை கோபமூட்டியது. அவன், “நான் உம்மோடே சொல்லவில்லையா? எனக்கு அது தெரியும். அவன் எல்லா நேரத்திலும் அந்த விதமாகவே சொல்லுகிறான், எனக்கு எதிராக தீமையான ஒரு காரியத்தைச் சொல்லுகிறான்” என்றான். 95 ஏன்? அவன் வார்த்தையோடு நிலைத்து நின்றுகொண்டிருந்தான். ஏன்? அவனுக்கு முன்பிருந்த ஒரு தீர்க்கதரிசி, அந்த உண்மையான தீர்க்கதரிசியாகிய, எலியாவினிடத்திலிருந்து தேவனுடைய வார்த்தை வந்தபோது, அவன், “நீ குற்றமற்ற நாபோத்தின் இரத்தத்தை சிந்தினதால், நாய்கள் உன் இரத்தத்தையும் கூட நக்கும்” என்று உரைத்திருந்தான். அவன் தீமையானதை சொல்லியிருந்தான். எலியா பரலோகத்துக்கு சென்று விட்டான். ஆனால் எலியா தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான் என்று அவன் அறிந்திருந்தான், எனவே அவன் வார்த்தையோடு தரித்திருந்தான். அது எனக்குப் பிரியம். வார்த்தையோடு தரித்திருங்கள்.

5596 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக் கிறார் என்றும்; அவருடைய வல்லமை இன்றைக்கும் மாறாததாயுள்ளது என்றும்; பரிசுத்த ஆவியை விருப்பமுள்ளவன் வந்து பெற்றுக்கொள்ளக்கடவன் என்று வேதம் கூறியிருக்குமானால், அந்த வார்த்தையோடு தரித்திருங்கள். ஆம், ஐயா! மற்றவர்கள் என்ன கூறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் எவ்வளவு நன்றாக போஷிக்கப்பட்டிருந்தாலும், எத்தனை வேத பள்ளிகளுக்கு சென்றிருந்தாலும், அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. எனவே அப்பொழுது அவன் கூறினான்…தன்னுடைய தலையில் இருப்புக் கொம்புகளோடிருந்த இந்த திடகாத்திரமான நபர், ராஜா அந்த தேசத்துக்கு அப்பாலே அதை—தள்ளிவிடப்போகிறார் என்று சொல்லி, மிகாயாவின் அருகில் சென்று (இந்த சிறு போதகரின் அருகில்), அவனை வாயில் அடித்தான். மிகாயா ஒரு சிறு உருளும் பரிசுத்தன் என்று அவன் அறிந்திருந்தான், எனவே அதைக் குறித்து யாரும் ஒன்றும் கூறப்போவதில்லையென்றே, இவன் அவனை வாயிலே அடித்தான். மேலும் அவன், “நான் உன்னை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன்” என்றான். மேலும், “தேவனுடைய ஆவி எந்த வழியாய் என்னை விட்டு உன்னோடு பேசும்படி வந்தது?” என்றான்.

5697 அப்பொழுது மிகாயா, “நீ சிறைபிடிக்கப்பட்டு உள்ளறையிலே உட்கார்ந்துகொண்டிருக்கும்போது அதை புரிந்துகொள்வாய்” என்றான். அவன், “தேவன் ஒரு சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கி றதைக் கண்டேன் (ஆமென்! இப்பொழுது கவனியுங்கள்!), பரமசேனை அவரைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தது” என்றான். காரியம் என்னவாயிருந்து? ஆகாபுக்கு என்ன நேரிடும் என்பதைக் குறித்து அவருடைய தீர்க்கதரிசி ஏற்கெனவே உரைத்து விட்டிருந்தான். தேவன்…அது எலியா கூறினதாயிருக்கவில்லை; அவன் அபிஷேகம்பண்ணப்பட்ட தீர்க்கதரிசியாயிருந்தான். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்னும், கர்த்தருடைய வார்த்தையாயிருந்து. மிகாயா, “ஒரு மகத்தான கலந்துரையாடலில் பரம சேனையெல்லாம் தேவனைச் சுற்றிலும் நின்றுகொண்டிருப்பதை நான் கண்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கர்த்தர், ‘தேவனுடைய வார்த்தை நிறைவேறும்படி, கொல்லப்படுவதற்காக, அவனை வெளியேக் கொண்டு வர, உங்களில் யார் சென்று ஆகாபை வஞ்சிக்கப் போகிறீர்கள்? நாம் யாரை அனுப்பலாம்?’” என்று கேட்டார்.

5798 பாருங்கள், இந்த ஒருவன் இப்படியும் அந்த ஒருவன் அப்படியும் சொன்னான். கொஞ்சங் கழித்து, ஒரு பொல்லாத ஆவி, ஒரு பொய்யின் ஆவி கீழேயிருந்து புறப்பட்டு வந்து, “நீர் என்னை அனுமதிப்பீரானால் நலமாயிருக்கும். நான் ஒரு பொய்யின் ஆவியாயிருக்கிறேன். நான் போய், பிரசங்கிமார்கள் எல்லாருக்குள்ளும் செல்வேன், ஏனெனில் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவி ல்லை; நான் அவர்களை சொல்லச் செய்வேன் (அவர்கள் வேதப் பள்ளியில்-பயிற்றுவிக்கப்பட்ட பையன்கள்)—நான் சென்று, அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நுழைந்து, அவர்களை வஞ்சித்து, ஒரு பொய்யை அவர்கள் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பண்ணுவேன்.” அது அதைக் கூறினதா? அது, “அந்தவிதமாகத்தான் நாங்கள் வஞ்சிப்போம்” என்றது. எனவே அது பறப்பட்டுச் சென்றது. அப்பொழுது அவர் கூறினார்—தேவன், “நீ போக உனக்கு என்னுடைய அனுமதியை அளிக்கிறேன்” என்றார் என்பதாகக் கூறினான்.

5899 அப்பொழுது பொய்யின் ஆவி இறங்கிச் சென்று வேதாகமப் பள்ளிகளில்-பயிற்சி பெற்றிருந்த அந்த கள்ளத் தீர்க்கதரிசிகள் அனைவரின் வாயிலும் நுழைந்து, அவர்கள் ஒரு பொய்யை தீர்க்கதரிசனமாய் உரைக்கச் செய்தது. அது தேவனுடைய சித்தத்திற்காக கிரியை செய்துகொண்டிருந்த ஒரு பொய்யின் ஆவியாயிருந்து. நான்…நீங்கள் இங்கே புரிந்து கொள்ளும்படியாக வேறொன்றை, அப்படியே ஒரு நிமிடம். இதைக் கவனியுங்கள். என்னுடன் முதலாம் கொரிந்திரியர் 5-ம் அதிகாரம், முதலாம் வசனத்துக்கு வேதாகமத்தை, ஒரு நிமிடம், திருப்பும்படி நான் விரும்புகிறேன். கொரிந்திரியர் முதலாம் நிருபத்தில்…நீங்கள் ஒன்றைக் காண விரும்பினால், தேவன் செய்கிற ஒரு காரியத்தைக் குறித்தும்—எப்படி தேவன் அந்த பொல்லாத ஆவிகளை உபயோகிக்கிறார் என்பதற்கும் இதைக் கவனியுங்கள், அவை—அவை எவ்விதம் கிரியை செய்கிறதென்று…சரி, பவுல் பேசுகிறான்; உங்களுக்குள்ளே விபசாரங்கள் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரங்களா யிருக்கின்றதே. (அது சபை மத்தியில் இருப்பதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?)… ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; … படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். (நாம் பார்ப்போம். நான் இரண்டு பக்கங்கள் திரும்பி விட்டேன் என்று நினைக்கிறேன்…)… நீங்கள்— துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். (இப்பொழுது, இங்கே ஒரு நிமிடம் பொறுங்கள். நான்…ஆம், அது உண்மை. ஆம்.)… துக்கப் …(அதுதான் இது.)… துக்கப்படா…இறுமாப்படைந்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட காரியஞ் செய்தவனை நீங்கள் உங்களை விட்டு நீக்காமலும்.

59100 எனக்குத் தெரியாது. யாராகிலும் இதற்கு விரோதமாக கருத்து தெரிவிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நான் விசுவாசிப்பது சரியென்று கூற முற்படுகிறேன்: ஒரு மனிதன் பரிசுத்த ஆவியினால் ஒரு முறை நிரப்பப்பட்டுவிட்டால், அவன் அதை இழந்துபோக முடியாது. பாருங்கள், புரிகிறதா? நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடே இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல, நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடி வந்திருக்கையில், அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன். 101 தேவன், பரிசுத்த சபைக்கு, இப்பூமியிலுள்ள தமது சரீரத்துக்கு இதை கூறுகிறார், அதாவது (இப்பொழுது, இது பழைய ஏற்பாட்டின் காலத்துக்குப் பிறகு, புதிய ஏற்பாட்டின் காலத்தில்) ஜனங்களின் மத்தியில் மிகவும் அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து, தன் தகப்பனுடைய மனைவியுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவனுக்கு இதைக் கூறுகிறார். அவர், “அப்படிப்பட்ட காரியம் கிறிஸ்துவின் சரீரத்தில் நடந்துள்ளது…நீங்கள், சபையே, அவனை அழிவுக்காக சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள்…” என்றார். புரிகிறதா? தேவன் அனுமதிக்கிறார்…ஒன்று செய்யப்படுவதைக் காணவேண்டுமென்று அவர் நினைக்கும்போது, ஒருவருக்கு சாட்டை அடி கொடுக்க அவர் நினைக்கும்போது, அவர் பொல்லாத ஆவியை அவர்கள் மேல் அவிழ்த்துவிடுவார், ஆகையால் அது அவர்களை வேதனைப்படுத்தி—அவர்களைத் திரும்பக்கொண்டு வரும். இப்பொழுது, நாம் காணும் இந்த மனிதன் பின்னர்…

60102 அதுதான் இன்றைக்கு சபைகளோடுள்ள காரியமாயுள்ளது. ஒரு மனிதன் கிறிஸ்துவின் சரீரத்துக்குள் வந்து அதன் ஒரு அங்கத்தினனாகி, பொல்லாத காரியங்களைச் செய்யத் துவங்கி, நீங்கள் ஒன்று கூடி அதே காரியத்தைச் செய்வதற்கு பதிலாக… நீங்கள், பிரான்ஹாம் கூடாரமே, அதைச் செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் அவனுக்காக முறையிடும் வரைக்கும், அவன் இரத்தத்தின் கீழிருக்கிறான். அவன் அந்த பழைய காரியத்தை மறுபடியும் மறுபடியும் எல்லா நேரத்திலும் செய்து கொண்டேயிருக்கிறான். ஆனால் நீங்கள் ஒன்று கூடி, அவனுடைய ஆவி—கர்த்தருடைய நாளிலே இரட்சிக்கப்படும்படிக்கு, மாம்சத்தின் அழிவுக்காக அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள். தேவனுடைய சாட்டை அப்பொழுது வருவதைக் கவனியுங்கள். பிசாசு அவனை ஆட்கொள்வதைக் கவனியுங்கள். அப்பொழுது ஒரு பொல்லாத ஆவி அவனைத் துன்புறுத்தத் தொடங்குகிறது. 103 இந்தப் பையன் இங்கே சரிப்படுத்திக்கொண்டான். அவன் திரும்பி வருகிறான். அவன் தேவனுக்கு முன்பாக உண்மையாகவே சுத்திகரிக்கப்பட்டான் என்பதை நாம் இரண்டாம் கொரிந்தியரில் கண்டறிகிறோம். 104 யோபுவைப் பாருங்கள், ஒரு பரிபூரணமான மனிதன், ஒரு நீதிமான். அவனுடைய ஆவியின் பரிபூரணப்படுத்துதலுக்காக, பொல்லாத பிசாசு அவன் மேல் வந்து, அவனைத் துன்புறுத்த, மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் செய்ய தேவன் அனுமதித்தார். புரிகிறதா? எனவே பொல்லாத ஆவிகளை…தேவன் தமது திட்டத்தையும் சித்தத்தையும் நிறைவேற்ற அநேக சமயங்களில் பொல்லாத ஆவிகளை உபயோகிக்கிறார்.

6195. இப்பொழுது, இங்கே இது உண்மையில் கடினமான ஒரு கேள்வியாயுள்ளது. கேள்வி (அது அதே நபர் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அதே கையெழுத்து போல் காணப்படுகிறது): குணப்பட்டு எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல ஒரு நபருக்கு பரிசுத்த ஆவி அவசியம் என்னும் போது, கணக்கொப்புவிக்கும் ஆண்டுகளை அடையும் முன்பு மரித்துப்போகும் குழந்தைகளின் நிலையென்ன? அவர்கள் எப்பொழுது உயிரோடெழுவார்கள்? 105 இப்பொழுது, என் சகோதரனே, சகோதரியே, என்னால் அதை உனக்கு சொல்ல முடியாது. அதற்கான வேத வசனத்தை என்னால் வேதாகமத்தில் எங்கும் காணமுடியவில்லை. ஆனால் என் கருத்துக்களை நான் வெளிப்படுத்த முடியும். இப்பொழுது, தேவனுடைய கிருபையில் விசுவாசங் கொண்டுள்ள உங்களை அது பெலப்படுத்தும். நீங்கள் பாருங்கள், இந்த நபர் அறிய விரும்புகிறார் (அது ஒரு நல்ல கேள்வி. பார்த்தீர்களா?) ஒரு குழந்தைக்கு உயிரத்தெழுதலில்—என்ன சம்பவிக்கும் என்பதை இந்த நபர் அறிந்துகொள்ள விரும்புகிறார், எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க வேண்டும் என்றால்… நான் ஏற்கெனவே கூறியுள்ளபடி, அது உண்மை. அது வேதத்தின்படியாயுள்ளது. அதுவே வேத போதனையாயிருக்கிறது. அதாவது பரலோகத்துக்கு செல்லவே முடியாது…பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள் முதலாம் உயிர்தெழுதலில் பங்கு கொள்வார்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். மற்றவர்கள்…மரணமடைந்த மற்றவர்கள் ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பின்பு, இரண்டாம் உயிர்த்தெழுதல், பின்பு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு. புரிகிறதா? அதுதான் வேதத்தில் கூறப்பட்டுள்ள சரியான வரிசைக்கிரமம். ஆனால் இந்த குழந்தைகளைக் குறித்து என்ன என்பதையே இந்த நபர் அறிந்துகொள்ள விரும்புகிறார். அவர்கள்…வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்கள் பிறப்பதற்கு முன்பே பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தனரா? அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டனரா? இப்பொழுது, என்னால் அதைச் சொல்ல முடியாது.

62106 ஆனால் இப்பொழுது, அதை இப்படி நாம் கூறுவோம்: மரிக்கும் குழந்தைகள், அவர்களுடைய பெற்றோர் யாராயிருப்பினும், அவர்கள் காப்பாற்றப்படுகின்றனர் என்று நமக்குத் தெரியும். இப்பொழுது, அதன் பேரில் தீர்க்கதரிசிகளின் வேத சாஸ்திரப் பள்ளி கொண்டுள்ள கருத்தோடு நான் உடன்படுகிறதில்லை. அவர்கள்—அது பாவமுள்ள பெற்றோருக்கு பிறந்ந ஒரு குழந்தை மரிக்க நேரிட்டால், அந்த குழந்தை நரகத்துக்கு சென்று, அழிந்து போகும்; அதற்கு இனிமேல் எதுவுமே கிடையாது என கூறியுள்ளனர். பாருங்கள், இயேசு…இயேசு வந்த போது யோவான், “இதோ உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றான். அந்த குழந்தை ஒரு மானிடக் குழந்தையாயிருந்தால், அது தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குள் வர வேண்டியதாயிருக்கும், பாவத்தைப் போக்க இயேசு மரித்தாரென்றால், இயேசு அந்த நோக்கத்துக்காக மரித்துள்ளபோது, எல்லா பாவமும் தேவனுக்கு முன்பாக நீக்கப்பட்டுவிட்டன. உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன. என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன. நீங்கள் மன்னிக்கப்படக்கூடிய ஒரே வழி, அவருடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வதேயாகும். ஆனால் இந்த குழந்தையோ மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, எனவே அது ஒன்றுமே செய்திருக்கவில்லை. அது ஒன்றையுமே செய்திருக்கவில்லை. எனவே அது பரலோகத்துக்கு செல்வதற்கு முற்றிலும் விடுதலையடைந்துள்ளது. 107 ஆனால் நீங்கள், “அவர்கள் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல் வார்களா?” என்று கேட்கலாம். இப்பொழுது—இப்பொழுது, இது என் சொந்த வார்த்தை; இப்பொழுது இது என் சொந்த கருத்து. இல்லை…இதை என்னால் வேதாகமத்தைக் கொண்டு நிரூபிக்க முடியாது. ஆனால் கவனியுங்கள். பூமியின்மேல் தோன்றவிருக்கும் மானிடவர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும், தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்னே அறிந்திருப்பாரானால்…நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் ஒவ்வொரு கொசுவையும், ஒவ்வொரு உண்ணியையும், ஒவ்வொரு ஈயையும் அறிந்திருந்தார், அவர் பூமியின் மேலிருக்கப்போகும் ஒவ்வொன்றையும் முன்னமே அறிந்திருந்தார். அவர் அதை அறிந்திருப்பாரானால்…

63108 கவனியுங்கள். மோசேயை, நாம் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். மோசே பிறந்தபோது, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். எரேமியா தோன்றுவதற்கு முன்னமே…தேவன் எரேமியாவிடம், “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன், நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி உன்னை ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக கட்டளையிட்டேன்” என்றார். யோவான் ஸ்நானன் பிறப்பதற்கு எழுநூற்று பன்னிரண்டு ஆண்டு களுக்கு முன்பே, ஏசாயா அவனை ஒரு தரிசனத்தில் கண்டு, “அவன் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தமாயிருக்கிறான்” என்றான். 109 தேவனுடைய முன்குறித்தல் அல்லது முன்னறிதல் சிறு குழந்தை களைக் குறித்து எல்லாம் (புரிகிறதா?), அவர்கள் என்ன செய்வார்களென்றும் அறிந்துள்ளது. அவர்கள் மரித்துப் போவார்களென்றும் அவர் அறிந்திருந்தார். அவர் அறிந்திருந்தார். அதைக் குறித்து தேவனுக்குத் தெரியாமல் ஒன்றுமே நடக்க முடியாது. எதுவுமே நடக்க முடியாது…நல்ல மேய்ப்பனைப் போல், எப்படி அவர் உள்ளே சென்று…இப்பொழுது, இதற்கு வேதாகமத்தை எடுத்துக்கொண்டு, வேதம் இன்ன-இன்னவிதமாய் கூறுகிறதென்று என்னால் கூற முடியாது. இது என் சொந்த கருத்தாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

6496. இப்பொழுது, அன்றிரவு நான் கூறினதன் பேரில் யாரோ ஒருவர் விளக்கம் கேட்டிருப்பதே அடுத்தக் கேள்வியாயுள்ள ஒன்றாயிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஒரு பிள்ளைப்பேற்றினால் ஒரு மனைவி இரட்சிக்கப்படுவாள் என்பதை விளக்குங்கள். 110 ஒரு பிள்ளை பெறுவதனால் மனைவி இரட்சிக்கப்படுவதில்லை. ஆனால் இப்பொழுது ஒரு நிமிடம் முதலாம் தீமோத்தேயு 2:8-க்கு திருப்புவோம். பிள்ளையைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறதென்று நாம் காண்போம். இப்பொழுது, அது ஒரு கத்தோலிக்க உபதேசம் என்பதை நான் உணருகிறேன், ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதன் மூலம் ஒரு ஸ்திரீ இரட்சிக்கப்படுகிறாள் என்று கத்தோலிக்கன் கூறுகிறான். ஆனால் நாமோ…அதை நான் விசுவாசிப்பதில்லை. முதலாம் தீமோத்தேயு 2-ம் அதிகாரம், 8-ம் வசனத்திலிருந்து தொடங்கி, இப்பொழுது சற்று நேரம் படிப்போம். சரி, கவனியுங்கள். ஸ்திரீகளும்…தகுதியான வஸ்திரத்தினாலும்…தங்களை… தொழுதுகொள்ள வேண்டும் . (நாம் அதைக் கேட்க வேண்டியதில்லை, நாம் கேட்க வேண்டுமா? இதைக் கேளுங்கள்.) …நாணத்தினாலும், (வ்வுயூ!) தெளிந்த புத்தியினாலும்,… தன்னுடைய மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேற்றப்பெற்ற வஸ்திரத்தினாலாவது (சகோதரரே, நான் உங்களுக்கு இங்கு உதவி செய்கிறேன் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை புது தொப்பிகள் அணிவது போன்றது. உங்களுக்குப் புரிகிறதா? அது கிறிஸ்தவர்களாக இருக்காது.) தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றப்படியே நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரிக்க வேண்டும். உங்களுடைய ஸ்திரீகள் எல்லாவற்றிலும் அடக்கமுள்ளவர்களாயிருந்து, அமைதலோடு கற்றுக் கொள்ளக்கடவர்கள். உபதேசம்பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதியாயிருக்கவேண்டும். என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். … ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். …பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள். (இப்பொழுது, அவன் உலகப் பெண்கள் குழந்தைகளைப் பெறுவதைக் குறித்து இங்கு பேசிக்கொண்டிருக்கவில்லை.)…அவள் விசுவாசத்தில் நிலைகொண்டிருந்தால்… (புரிகிறதா? அவள் நிலைகொண்டிருந்தால். அவள் ஏற்கனவே…அப்படிப்பட்ட ஸ்திரீயைக் குறித்து, ஏற்கனவே இரட்சிக்கப்பட்ட ஸ்திரீயைக் குறித்தே அவன் பேசுகிறான். புரிகிறதா?) முழுவதும் தெளிந்த புத்தியோடு…அன்பிலும் பரிசுத்தத்திலும்

65111 ஒரு குழந்தையைப் பெறுவது அவள் இரட்சிக்கும்படி செய்வ தில்லை, ஆனால் அவள் பிள்ளைகளை வளர்த்து, தன் கடமையை செய்கிறாள், ஒரு பிள்ளைக்குப் பதிலாக, இன்று அவர்கள் செய்வது போல், அவள் பூனைகளையும் நாய்களையும் மற்றும் இன்னும் என்னவெல்லாமோ வளர்ப்பதில்லை, அவர்கள் இரவெல்லாம் வெளியே சுற்றவேண்டும் என்பதற்காக, அதற்கு ஒரு தாயினுடைய அன்பை செலுத்துகின்றனர். சில ஜனங்கள் அதைச் செய்கின்றனர். மன்னிக்கவும், ஆனால் அவர்கள் அதைச் செய்கின்றனர். அதை நான் எடுத்துக் கூறுவது எனக்கே மட்டுமீறிய நாகரீகமற்றதாயுள்ளது, ஆனால் உண்மை உண்மையாகவே உள்ளது. பாருங்கள்? அவர்கள் ஒரு குழந்தையோடு இனணைக்கப்பட்டிருக்க விரும்புவதில்லை. ஆனால் பிள்ளைப்பேற்றினால், அவள் விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும், முழுவதும் தெளிந்த புத்தியோடும் நிலை கொண்டிருந்தால், அவள் இரட்சிக்கப்படுவாள். ஆனால் அது இருந்தால் என்பதாயுள்ளது, நீங்கள் மீண்டும் பிறந்திருந்தால், நீங்களும் கூட இரட்சிக்கப்படுவீர்கள். நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் சுகமடைவீர்கள், உங்களால் சுகமடைய முடியும். நீங்கள் அதை விசுவாசித்தால், அதற்காக ஆயத்தமாயிருந்தால், நீங்கள் அதற்காக ஆயத்தமாயிருந்தால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியும். அது போன்று அவள் இந்த காரியங்களைத் தொடர்ந்து செய்வாளானால் (புரிகிறதா?) அவள் இரட்சிக்கப்படுவாள், ஆனால் அவள் ஒரு ஸ்திரீ என்பதனால் அல்ல. எனவே அது சரிதான், சகோதரனே, சகோதரியே. இது கத்தோலிக்க உபதேசமே அல்ல. இப்பொழுது நான்…இங்கு மற்றொரு கடினமான கேள்வி உள்ளது. அதன்பிறகு நாம் இன்னும் ஒன்றைப் பெற்றுள்ளோம். அதற்கு பதில் கூற நமக்கு நேரம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதை விவரிக்க என் சொந்த நேரத்தை எடுத்துக்கொண்டேன். இப்பொழுது, இவை சற்று—இவை எழுப்புதலின் பின்விளைவுகளாயுள்ளன. இந்தக் கேள்விகள், இவை கூட்டங்களின் பின்விளைவுகளாயுள்ளன.

6697. இப்பொழுது: சகோதரன் பிரான்ஹாமே (இது தட்டச்சு செய்யப்பட்டுள்ளது), ஒரு நபர் அந்நியபாஷைகளில் பேசி அவருடைய சொந்த செய்தியை வியாக்கியானிப்பது வேதத்தின்படியானதா? அப்படியானால், தயவு கூர்ந்து விளக்கவும். முதலாம் கொரிந்தியர் இல்லை கொரிந்தியர் 14:19 மற்றும் கொரிந்தியர் 14:27-யும் கூட. 112 சரி, நாம் வேதாகமத்துக்கு சென்று அது என்ன கூறுகிறதென்று பார்ப்போம். ஆகையால் அதை நாம் வேதப்பிரகாரமாக வைத்திருக்கிறோமா என்று நாம் காண்போம். நாம் எப்பொழுதுமே வேதப்பிரகாரமாக இருக்கவே விரும்புகிறோம். கொரிந்திரியர் 14. இப்பொழுது, இந்த நபர் அறிய விரும்புவது ஒரு மனிதன் தான் பேசின அந்நிய பாஷைக்கான தன்னுடைய சொந்த செய்தியை தானே அர்த்தம் உரைப்பது வேதப்பிரகாரமானதா என்பதேயாகும். “ஆகையால், கொரிந்தியர் 14:19-ஐ விவரிக்கவும்.” நாம் 14 மற்றும் 19-ஐ பார்ப்போம். சரி, இங்குதான் நாம் இருக்கிறோம். அப்படியிருந்தும், நான் சபைகளிலே அந்நிய பாஷைகளில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும். இப்பொழுது, அடுத்தப்படியாக 27-ம் வசனம், அவர்கள் அறிய விரும்புகின்றனர். யாராவது அந்நிய பாஷையிலே பேசினால், அது இரண்டு பேர் மட்டில் அல்லது மிஞ்சினால் மூன்று பேர்…அடக்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.

67113 இப்பொழுது, அந்த நபர் எதை் குறிப்பிட முயற்சிக்கிறார் என்பதையே நான் பொருட்படுத்துகிறேன் (எனக்கு தேவையான—இன்னும் சிறிது நேரத்தில் நான் ஒன்றை படிக்கப் போகின்றேன்). ஆனால் அந்த சகோதரன் அல்லது சகோதரி என்ன குறிப்பிட முயற்சிக்கிறார் என்று நான் கருதுகிறேன் என்றால், “அந்நிய பாஷை பேசும் ஒருவர், அவரே அவர் உரைத்த செய்திக்கு அர்த்தம் உரைப்பது சரியா?” என்பதே. இப்பொழுது, என்னுடைய அருமையான அன்பார்ந்த நண்பரே, நீங்கள்அதே அதிகாரத்தில் 13-ம் வசனத்தைப் படிப்பீர்களானால், அது உங்களுக்கு சொல்லும்: அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன். 114 நிச்சயமாக. அவனே தன்னுடைய செய்திக்கு அர்த்தம் உரைக்க முடியும். இப்பொழுது, நாம் சரியாக…நாம் சரியாக…பாருங்கள், நீங்கள்…அதைக் குறித்த எல்லாவற்றையும் இங்கு படியுங்கள், அப்பொழுது நீங்கள் அதனுடைய…புரிந்துகொள்ள முடியும். முழு அதிகாரத்தையும் சற்று படியுங்கள். அது மிகவும் நல்லது, அது அதை விவரிக்கிறது.

68115 இப்பொழுது, அந்நியபாஷை பேசுதல்…இப்பொழுது அதன் பேரில் நாம் இருக்கையில், இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது, நான் தெய்வீக சுகமளித்தல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, வரப்போகும் உலகின் வல்லமை போன்றவைகளை விசுவாசிப்பது போல்; அந்நியபாஷை பேசுவதிலும் விசுவாசங்கொண்டுள்ளேன் என்பதை நான் கூற விரும்புகிறேன். அவைகளை விசுவாசிப்பது போலவே இதையும் விசு வாசிக்கிறேன், ஆனால் கிறிஸ்துவின் வருகைக்கு அதனுடைய ஸ்தானம் உள்ளது போல; தெய்வீக சுகமளித்தலுக்கும் அதனுடைய ஸ்தானம் உள்ளதுபோல; அந்நிய பாஷையில் பேசுதலுக்கும் அதனுடைய ஸ்தானம் உண்டு என்று நான் விசுவாசிக்கிறேன். ஒவ்வொருகாரியத்திற்கும் அதனுடைய ஸ்தானம் உண்டு. 116 இப்பொழுது, ஜனங்களாகிய உங்களிடம், இப்பொழுது இதைச் கூற எனக்கு ஒரு தருணம் கிடைத்துள்ளது, எனவே நான் அதை விளக்க விரும்புகிறேன். நான் யாரையாவது புண்படுத்தினால், அப்படி செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நான் குழப்பத்தை உண்டாக்க நினைக்கவில்லை. ஆனால் கவனியுங்கள். அந்நிய பாஷைகளில் பேசுகிற பெந்தெகொஸ்தே ஜனங்களோடுள்ள காரியம் என்னவாயிருந்து வருகிறது (நானும் கூட அதில் சேர்ந்தவன்; நானும் பெந்தெகொஸ்தேயினன். பார்த்தீர்களா?)…இப்பொழுது, இதில் இருந்து வருகிற பிரச்சனை என்னவெனில்: அவர்கள் அதை மதிப்பதில்லை என்பதேயாகும். மற்றொரு காரியம், அவர்கள் அதை சீரற்ற முறையில் விட்டு விடுகின்றனர். அவர்கள் வார்த்தைக்கு திரும்ப வருவதில்லை.

69117 இப்பொழுது கவனியுங்கள். இப்படித்தான்—இப்படித்தான் சபை அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, ஒரு பெந்தெகொஸ்தே சபையில், நான் இந்த சபைக்கு போதகராயிருப்பேனானால், அதை எப்படி அமைக்க எனக்கு விருப்பமென்பதை உங்களிடம் நான் கூறுவேன் (புரிகிறதா?), நான்—எல்லா சமயங்களிலும் அதற்கு போதகராக இருக்க நேரிட்டால் நலமாயிருக்கும். நான் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வரத்தையும் ஆதரிப்பேன். முதலாவதாக விசுவாசிகளிடம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறக் கூறுவேன். அப்பொழுது முதலாம் கொரிந்திரியர் 12-ல் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வரமும் இயங்கத்தான் வேண்டும், சரீரம் முழுவதும் இயங்கும் நிலைக்கு, நான் அவைகளைக் கொண்டு வர முடிந்தால் நலமாயிருக்கும். 118 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால்…இப்பொழுது நான் குற்றங்குறைகளைக் கூறவில்லை. ஞாபகமிருக்கட்டும், நான் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் தேவதூஷணம் உரைக்கும்படி—நான் ஒரு வார்த்தையும் முரணாக பேசமாட்டேன். நான் அதை தவறாக கூற மாட்டேன் என்று தேவன் அறிவார். புரிகிறதா? ஆனால் நான் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக வேதாகமத்தை ஆராய்ந்து படித்த பிறகு, வேதாகமம் கூறும் கருத்துக்களை உங்களுக்கு கூற முயற்சித்க்கும்படி மாத்திரமே இதை நான் கூறிக்கொண்டிருக்கிறேன். நான் ஏறக்குறைய முப்பது ஆண்டு களாக பிரசங்கித்து வருகிறேன். நான் எல்லாவற்றின் வழியாகவும் கடந்து வந்திருக்கிறேன்; அது எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும். நான் ஒவ்வொரு மனிதனையும், உலகம் முழுவதிலுமுள்ள அவர்களுடைய உபதேசங்களையும் கவனித்து வந்திருக்கிறேன். அப்படி நான் செய்யக் காரணம், அதன் மீதிருந்த என் ஆர்வமாகும். அது என் பேரில் மாத்திரமல்ல, மானிடர் பேரில் கொண்டுள்ள ஆர்வமாயுள்ளது. நான் இவ்விடம் விட்டு செல்ல வேண்டும். நீங்களும் இவ்விடம் விட்டு செல்லவேண்டும். நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாக இவ்விடம் விட்டுச் சென்றால், நான் என் சொந்த ஆத்துமாவையும் மற்றும் என்னோடு கூட உங்களுடையதையும் இழந்துவிடுவேன். எனவே இது—இது அனுதின அப்பத்தைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது; இது புகழைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது; இது மற்றெல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது; இது எனக்கு ஜீவனாயுள்ளது. புரிகிறதா? நான் எப்பொழுதுமே மிகவும் ஆழ்ந்த உத்தமத்தைக் கொண்டுள்ளவனாய் இருக்க விரும்புகிறேன்.

70119 இப்பொழுது, நீங்கள் ஒரு பெந்தெகொஸ்தே சபைக்குச் சென்றால், முதலாவது காரியம்…(நான் அவர்கள் எல்லாருமே அப்படியென்று கூறவில்லை. சிலர் அப்படியுள்ளனர்…) பெரும்பாலும் நீங்கள் ஒரு சபைக்குச் சென்று அங்கு பிரசங்கம் செய்யத் தொடங்குகின்றீர்கள்; நீங்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும்போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நியபாஷையில் பேசுகின்றார். இப்பொழுது, அந்த அருமையான நபர் ஒருக்கால் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, அது பரிசுத்த ஆவி அந்த நபர் மூலமாக பேசுவதாக இருக்கலாம், ஆனால் அதைக் குறித்த காரியம் என்னவெனில், அவர்கள் பயிற்றுவிக்கப்படவில்லை. மேடையில் நடக்கும் இந்த ஊழியம், பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் பிரசங்கிக்கப்படுமானால், தீர்க்கதரிசிகளின் ஆவிகள் தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கவேண்டும். புரிகிறதா? “சகலமும்…செய்யப் படக்கடவது.” இப்பொழுது, “ஒருவன் பேசும்போது” என்று பவுல் ஏன் கூறுகிறானென்று இங்கே புரிந்துகொள்ளுங்கள், மற்றும் முன்னும் பின்னுமாக… “அவன் உள்ளே வரும்போது, எல்லாமே குழப்பாயிருந்தது.” 120 இப்பொழுது, நான் பீட அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நியபாஷையில் பேசுகிறார். அது…பாருங்கள், அப்படியானால் பீட அழைப்புக் கொடுப்பதை விட்டுவிடுவதே நலம். அது அதைத் தடுக்கிறது. புரிகிறதா?

71121 பின்பு, வேறொரு காரியம். அநேகமுறை ஜனங்கள் எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசுவார்கள், அப்பொழுது ஜனங்கள் உட்கார்ந்துகொண்டு மெல்லும் பசை மிட்டாயை மென்றுகொண்டு, சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். தேவன் பேசிக்கொண்டிருந்தால், அமைதியாயிருந்து, கவனியுங்கள்! அது சத்தியமாயிருக்குமானால், அது அந்த நபரிடத்தில் பரிசுத்த ஆவி பேசிக்கொண்டிருப்பதாயிருந்தால், நீங்கள் அமைதியாயிருந்து கவனித்துக் கேளுங்கள், பயபக்தியாயிருங்கள். அர்த்தம் சொல்லுதல் உங்களுக்கு வரலாம். புரிகிறதா? அமைதியாயிருந்து்; அர்த்தம் உரைத்தலை கேளுங்கள். இப்பொழுது, அர்த்தம் உரைப்பவர் யாரும் சபையில் இல்லாமற்போனால், அப்பொழுது அவர்கள் சபையில் அமைதியாயிருக்கக்கடவர்கள். 122 ஆகையால், அவர்கள் அந்நிய பாஷையில் பேசும்போது, அவர்களுக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவர்கள் என்று வேதம் கூறியுள்ளது. அந்நியபாஷை பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகின்றான். இப்பொழுது, அது அந்நிய பாஷைகள்; கிளை மொழிகள், மொழிகள் வேறு. “அவைகள் ஒன்றுமில்லை” என்று அவன் கூறுகிறான்…ஆனால் ஒரு சத்தம் உண்டாக்கும்போது ஒரு அர்த்தம் இருக்கவேண்டும். ஆனால் நீங்கள்…ஒரு எக்காளம் சத்தமிட்டால், அது என்ன சத்தமிடுகிறது (…அது எப்படி ஊதப்படுகிறது) என்று நீங்கள் அறியவேண்டும், இல்லையென்றால் யுத்தத்துக்கு எப்படி உங்களை ஆயத்தம் பண்ணவேண்டுமென்று உங்களுக்குத் தெரியாது. யாராகிலும் அந்நிய பாஷை பேசி, “டூட்” என்று சத்தமிட்டால், அவ்வளவுதான், என்ன செய்யவேண்டுமென்று யாருக்குத் தெரியும். ஆனால் எக்காளம் எழுச்சி ஒலியில் ஒசையிட்டால், அதற்கு “எழுந்திருங்கள்!” என்று அர்த்தமாகிறது. அது அடையாள அறிவிப்பு ஒலியில் ஒசையிட்டால், “கீழே இறங்குங்கள்” என்று அர்த்தமாகிறது. புரிகிறதா? அது கட்டளை ஒலியில் ஓசையிட்டால், “எதிரியைத் தாக்குங்கள்” என்று அர்த்தமாகிறது. அது ஒரு அர்த்தத்தை கொடுப்பதாய் அமைந்திருக்கவேண்டும், வெறுமனே தனிமையில் பேசுவது அல்ல. எனவே சபையில், அர்த்தம் உரைப்பவர் இல்லையென்றால், ஆனால் அர்த்தம் உரைப்பவர் இருந்தால், அப்பொழுது அந்நிய பாஷைகள் சபைக்கு உரியதாகும்.

72123 இப்பொழுது, என் அருமை நண்பரே, உங்கள் கேள்விக்கு, அப்படியிருந்தும், “நான் சபையிலே ஐயாயிரம் வார்த்தைகளை… (அல்லது அதற்கு மேல் என்ன கூறினாலும்) பேசுகிறதிலும் மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.” அது உண்மை. ஆனால் கீழே படிக்கவும்: “…அது வெளிப்பாட்டினால் இல்லை பக்திவிருத்திக்கேதுவாக அர்த்தம் சொல்லப்படாமற்போனால்.” புரிகிறதா? அது பக்திவிருத்திக்கு. 124 இப்பொழுது, ஒரு சிறு கருத்தை உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன், என்ன—என்ன… எழும்பிக்கொண்டிருக்கும் இந்த சபைக்கு நான் போதகராக இருந்தால், நான் போதகராக இருக்க தேவன் என்னை அழைப்பாரானால், இதோ இந்த விதமாகத்தான் நான் அதை நடத்துவேன்: வரம் பெற்றுள்ள ஒவ்வொரு வரையும் நான் கண்டுபிடிக்க முயற்சிப்பேன். ஆராதனை தொடங்குவதற்கு ஏறக் குறைய ஒரு மணிநேரம் முன்பு அவர்கள் தனியாக ஒரு அறையில் கூடும்படி செய்வேன். அவர்கள் ஆவிக்குள்ளாகி அமரட்டும். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒருவர் வருகிறார், அவர் அந்நிய பாஷையில் பேசும் ஒரு வரத்தைப் பெற்றுள்ளார். அவர் அந்நியபாஷையில் பேசுகின்றார். எல்லோரும் அமைதியாக உட்கார்ந்திருப்பார்கள். வேறொருவர் எழுந்து அவர் பேசினதற்கு அர்த்தம் உரைக்கிறார். இப்பொழுது, அது சபைக்கு அளிக்கப்படும் முன்பு, இப்பொழுது, அது இரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் நிதானிக்கப்பட வேண்டுமென்று வேதம் கூறுகிறது. இப்பொழுது, அது ஆவியைப் பகுத்தறியும் வரம் கொண்ட மனிதர்களாய் இருக்க வேண்டும் (புரிகிறதா?), ஏனெனில் அநேக சமயங்களில் பொல்லாத ஆவிகள் அங்கு நுழைந்துவிடுகின்றன. புரிகிறதா? பவுல் அதைக் குறித்துப் பேசினான். ஆனால், தேவனுடைய வல்லமையும் கூட அங்குள்ளது. பொல்லாத ஆவி இல்லாத ஒரு சபையை எனக்குக் காண்பியுங்கள். தேவபுத்திரர் ஒன்று கூடியிருக்கும்போது, சாத்தான் அவர்கள் நடுவில் இல்லாத ஒரு இடத்தை எனக்கு காண்பியுங்கள். அது எல்லாவிடங்களிலும் உள்ளது. எனவே அதைக் கண்டு முகங் கோணாதீர்கள். புரிகிறதா? சாத்தான் எல்லாவிடங்களிலும் இருக்கிறான். இப்பொழுது, இங்குதான் காரியமே உள்ளது. ஒருவர் அந்நிய பாஷையில் பேசுகின்றார். இப் பொழுது, ஆவியைப் பகுத்தறியும் வரம் பெற்ற மூன்று பேர் அங்கு உட் கார்ந்திருக்கின்றனர். ஒருவர் அந்நிய பாஷையில் பேசி ஒரு செய்தியை அளிக்கிறார். இப்பொழுது, அது வேத வாக்கியங்களை எடுத்துரைப்பதாக இருக்கக் முடியாது, ஏனெனில் தேவன் வீணாக மறுபடியும் மறுபடியும் கூறுவது கிடையாது, நாமும் அப்படி செய்யக்கூடாதென்று நம்மை எச்சரித்திருக்கிறார். புரிகிறதா? எனவே அது அதுவல்ல. அது சபைக்கு ஒரு செய்தி.

73125 இந்த எழுப்புதலில் இதுவரைக்கும் நமக்கு இரண்டு சம்பவங்கள் நிகழந்துள்ளன. அவைகளில் ஒன்று—பரிபூரணமாக, சரியான விதத்தில் அமைந்திருந்ததைக் கவனியுங்கள். பாருங்கள்? உள்ளே நிகழ்ந்தது. ஒரு மனிதர் எழுந்து நின்று, அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைத்து, உடனே திரும்பிச் சென்றார், மேலும் அளிக்கப்பட்ட செய்தி ரூபகாரப்படுத்தப்பட்டது. அன்றொரு இரவு வேறொருவர் எழுந்து நின்று, தீர்க்கதரிசனத்தின் ஏவுதலினால்—கூறி, ஒரு காரியத்தைக் கூறி, அவர் என்ன கூறிக்கொண்டிருகிறார் என்று அறியாமல்; அவர் முடிவிலே, “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” என்றுரைத்தார். அப்பொழுது உடனடியாக ஏதோ ஒன்று என்னை ஆட்கொண்டு, “இல்லையெனில், கர்த்தர் வந்துள்ளார் என்று விசுவாசிப்பவன் பாக்கியவான்” என்று கூறினது. 126 பாருங்கள், அர்த்தம்—பிறகு பரிசுத்த ஆவி நேற்றிரவு கட்டிடத் தில் விழுந்தது. பார்த்தீர்களா? அது பக்திவிருத்திக்காகவே. ஜனங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர்களிடம் கூற முயற்சிக்கும்படிக்கே நான் அங்கு நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது பிசாசும் அவர்கள் மத்தியில் வந்து, “அதற்கு செவி கொடுக்காதீர்கள்; அப்படியே அமர்ந்திருங்கள்” என்றான். என் சகோதரி, “பில், நீங்கள் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியாயிருந்தேன்; நான் எழுந்து மதிலைத் தாண்டிச் செல்லக்கூடும் என்பது போன்ற உணர்ச்சி எனக்கு உண்டானது” என்றாள். நான், “எழுந்து குதி” என்றேன். அவ்வளவுதான். அப்பொழுது அவள், “ஆனால் நீங்கள் அப்படி பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது,” என்று கூறி, “ஜனங்கள் கூச்சலிடத் தொடங்கினர்” என்றும், “அப்பொழுது நான் ஒன்றுமற்றவள் என்னும் உணர்ச்சி தோன்றினது” என்றும் கூறினாள். 127 நான், “அது பிசாசு, அது சாத்தான். அவன் அப்படிப்பட்ட உணர்ச்சியை உண்டாக்க வந்தபோது” என்று கூறி, “நீ எப்படியாயினும் எழுந்திருக்க வேண்டும்” என்றே நான் கூறினேன். நாம் தேவனுக்கு ஆசாரியர்களாயிருந்து நம்முடைய உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலியை—பலியை அவருடைய நாமத்துக்கு செலுத்திக் கொண்டிருக்கிறோம். பார்த்தீர்களா?

74128 இப்பொழுது, இங்கே இதுதான் நடந்தது. அப்பொழுது பரிசுத்த ஆவி யானவர் பேசத் தொடங்கினார், ஏனெனில் அது…“விசுவாசிக்கிறவன் பாக்கியவான்.” இரண்டு, மூன்று இரவுகளாக அதை அங்கே நான் தொடர்ந்து வலியுறுத்த முயன்றேன்; அதன் பின்பு பரிசுத்த ஆவியானவர் பேசி (ஏவுதலின் கீழ்), “கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” என்று உரைத்தார். நான் வேறெதாவது ஒன்றைக் கூறுவதற்கு முன்பே, நான் அதை கூறி முடித்துவிட்டிருந்தேன். “கர்த்தர் இதில் வந்துள்ளார் என்று விசுவாசிக்கிறவன் பாக்கியவான்.” உங்களுக்குப் புரிகிறதா? பரிசுத்த ஆவி என்பது உங்களுக்குள் இருக்கும் தேவனே என்றே நான் இதைக் குறித்து பேசி வந்துள்ளேன். புரிகிறதா? அவர்கள் அதைப் புரிந்து கொண்டனர். பார்த்தீர்களா? பிறகு பரிசுத்த ஆவி ஜனங்களின் மத்தியில் விழுந்தது. அது—அது தீர்க்கதரிசனத்தினால், எவ்வாறு பக்தி விருத்தியடையச் செய்கிறதென்று பார்த்தீர்களா? 129 ஒரு தீர்க்கதரிசிக்கும் தீர்க்கதரிசனத்துக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. தீர்க்கதரிசனம் ஒருவரிடத்திலிருந்து புறப்பட்டு மற்றவரிடம் செல்கின்றது, ஆனால் ஒரு தீர்க்கதரிசியோ தொட்டிலில் பிறந்தது முதல் ஒரு தீர்க்கதரிசியாகவே இருக்கிறான். அவர்களிடம் “ கர்த்தர் உரைக்கிறதாவது ” என்பது உள்ளதே! அவர்களை யாரும் நிதானித்தறிவதில்லை. முன்பிருந்த ஏசாயா, அல்லது எரேமியா, அவர்களில் மற்ற எவருக்கும் முன்பாக அவர்கள் நின்று நிதானிப்பதை நீங்கள் காண்கிறதில்லை, ஏனெனில் அவர்கள், “ கர்த்தர் உரைக்கிறதாவது ” என்பதை உடையவர்களாயிருந்தனரே! ஆனால் ஜனங்கள் மத்தியிலுள்ள ஒரு தீர்க்கதரிசன வரம்; நீங்கள் அதை கவனிக்க வேண்டும், ஏனெனில் சாத்தான் மெல்ல நுழைந்துவிடுவான். புரிகிறதா? இப்பொழுது. அது சரியாவென்று நிதானித்தறியப்பட வேண்டும்.

75130 இப்பொழுது, நாங்கள்—நாங்கள் எழுப்புதல் கூட்டம் ஒன்றை நடத்தப் போகிறோம் என்று வைத்துக்கொள்வோம். போதகர்களே நீங்கள், இதை இப்பொழுது உண்மையாகவே கவனமாய்க் கேளுங்கள். நாங்கள் ஒரு எழுப்புதலை கூட்டத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். சரி. இல்லையென்றால் நாங்கள் வழக்கமான ஒரு சபை ஆராதனையை நடத்திக்கொண்டிருக்கலாம். சபையில் அனல் மூண்டிருக்கிறது. சபை எல்லா நேரத்திலும் அவ்வாறே இருக்கவேண்டும். பாருங்கள், ஒருக்கால் ஆவியின் வரம் பெற்ற ஐந்து அல்லது ஆறு பேர் நம்மிடம் இருக்கலாம்; ஒருவர் அந்நியபாஷை பேசுகிறார், இரண்டு அல்லது மூன்று பேர் ஒருக்கால் அந்நியபாஷை பேசக்கூடும், நான்கு அல்லது ஐந்துபேர் அந்நியபாஷை பேசும் வரம் பெற்றிருந்து, அந்நியபாஷை பேசுக் கூடும். இரண்டு அல்லது மூன்று பேர் அர்த்தம் உரைக்கக் கூடும். அவர்களில் ஒன்று—இரண்டு, அல்லது மூன்று பேர் ஞானத்தின் வரத்தை உடையவர்களாயிருக்கக் கூடும். சரி. வரம் பெற்றுள்ள இவர்கள், அனைவரும் ஒன்றுகூடுகின்றனர்… நீங்கள்…நீங்கள் விளையாடுவதற்காக இந்த வரங்கள் உங்களுக்கு அளிக்கப்படவில்லை, “தேவனுக்கு மகிமை, நான் அந்நியபாஷைகள் பேசுகிறேன்! அல்லேலூயா!” என்று நீங்கள் கூறுவதற்காக இவைகள் உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அப்படியென்றால் நீங்கள்—நீங்கள்—நீங்கள் உங்களையே நீங்கள் தாழ்த்திக்கொள்கிறீர்கள். அவைகளைக் கொண்டு நீங்கள் கிரியை செய்யவே அவை உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. நீங்கள் வகிக்கும் பாகம் சபையின் முக்கிய ஆராதனை தொடங்குவதற்கு முன்பு இடம் பெற வேண்டும், ஏனெனில் ஆராதனையின்போது கல்லாதவர்களும் கூட நமது மத்தியில் இருக்கப்போகிறார்கள்.

76131 நீங்கள் ஒரு அறைக்குச் சென்று, அங்கு நீங்கள் உட்கார்ந்து கொள்கிறீர்கள், நீங்கள் சுவிசேஷத்தில் உடன் ஊழியக்காரராயிருக்கிறபடியால், நீங்கள் ஒன்றுகூடியிருக்கிறீர்கள். அப்பொழுது அங்கு நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள். “கர்த்தாவே, நாங்கள் அறியவேண்டுமென்று நீர் விரும்பும் ஏதாகிலும் இன்றிரவு உண்டா? ஓ, பரலோகப் பிதாவே, எங்களோடு பேசும்,” என்று உங்கள் ஜெபங்களையும், விண் ணப்பங்களையும் ஏறெடுக்கிறீர்கள்; பாடல்களைப் பாடுகின்றீர்கள். அப்பொழுது பரிசுத்த ஆவி இறங்கி வந்து யார் மேலாகிலும் விழுந்து, அவர் அந்நியபாஷை பேசுகின்றார். வேறொருவர் எழுந்து நின்று, “ கர்த்தர் உரைக்கிறதாவது ” என்று கூறி, அதற்கு அர்த்தமுரைக்கிறார். அது என்ன? கவனியுங்கள். “சென்று சகோதரன் ஜோன்சிடம் அவர் வசிக்கும் இடத்தை விட்டு மாறும்படியாக கூறுங்கள், ஏனெனில் நாளை பிற்பகல் அந்த நாட்டை பலத்த புயல் காற்று ஒன்று தாக்கப் போகின்றது; அது அவருடைய வீட்டை சேதப்படுத்தப்போகிறது. அவருடைய சாமான்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டுப் போகக் கூறுங்கள்!” 132 இப்பொழுது, அது—அது நல்லதாகத் தென்படுகிறது. ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள். அங்கு ஆவியைப் பகுத்தறியும் வரம் பெற்ற மூன்று பேர் இருக்க வேண்டும். அவர்களில் ஒருவர், “அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது” என்கிறார். மற்றொருவரும், “அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது” என்கிறார். அது மூன்றில் இரண்டு பேர்— இரண்டு அல்லது மூன்று சாட்சிகள். சரி. அவர்கள் ஒரு துண்டு காகிதத்தில் அதை எழுதுகின்றனர். அதைத்தான் ஆவியானவர் உரைத்தார். சரி. அவர்கள் திரும்பி ஜெபிக்கச் சென்று, கர்த்தருக்கு நன்றி செலுத்துகின்றனர்.

77133 சிறிது கழித்து, “ கர்த்தர் உரைக்கிறதாவது (ஒரு தீர்க்கதரி எழுந்து நின்று) கர்த்தர் உரைக்கிறதாவது, இன்றிரவு , அது நியூயார்க் பட்டினத்திலிருந்து வருகிற ஒரு பெண்ணாய் இருக்கும்; அவள் ஒரு தூக்குப் படுக்கையில் இருப்பாள். அவள் தூக்குப் படுக்கையில் கட்டிடத்துக்குள் கொண்டு வரப்படுவாள். அவள் தலையில் பச்சை நிறமுள்ள ஒரு துணியைக் கட்டியிருப்பாள். அவள் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறாள். அவள் இந்த விதமாயிருப்பதற்கான காரணம் என்னவெனில், கர்த்தர் அவளுக்கு விரோதமாக வைத்துள்ள காரியம்—அவளுக்கு பதினாறு வயது இருக்கும்போது, அவள் அவருடைய சபையிலிருந்து ஒரு முறை பணத்தை திருடிவிட்டாள். அவளிடம் இந்தக் காரியங்களை சொல்லும்படியாக சகோதரன் பிரான்ஹாமிடம் சொல்லுங்கள். கர்த்தர் உரைக்கிறதாவது , அவள் இதை சரிபடுத்திக்கொண்டால், அவள் சுகமடைவாள்” என்று உரைக்கிறார். ஒரு நிமிடம் பொறுங்கள். அது மிகவும் நல்லதாகத் தென்படுகிறது, ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள். ஆவியைப் பகுத்தறிபவரே, உங்கள் பெயரை நீங்கள் இந்தக் காகிதத்தில் கையொப்பமிடப் போகின்றீர்களா? நீங்கள் உங்களுடைய பெயரை கையொப்பமிடப் போகிறீர்களா? 134 “இது கர்த்தரிடத்திலிருந்து வந்தது.” ஒருவர் எழுந்து, “இது கர்த்தரிடத்திலிருந்து வந்தது” என்கிறார். அப்பொழுது—அப்பொழுது நீங்கள், “ கர்த்தர் உரைக்கிறதாவது , இன்றிரவு ஒரு பெண் உள்ளே வருவதாயிருக்கும். இன்ன-இன்ன காரியம் சம்பவிக்கும்” என்று எழுதுகிறீர்கள். ஆவியைப் பகுத்தறியும் வரம் பெற்ற இரண்டு அல்லது மூன்று பேர் அதை ஆமோதித்து கையொப்பமிடுகின்றனர். இந்த செய்திகள் அனைத்தும் அளிக்கப்படுகின்றன. சரி.

78135 சிறிது நேரம் கழித்து மணி அடிக்கும் ஓசையை அவர்கள் கேட்க ஆரம்பிக்கின்றனர். சபை ஆராதனை தொடங்கும் நேரம் வந்துவிட்டது. அவர்கள் எழுதப்பட்ட இந்த செய்திகளைக் கொண்டு வந்து மேசையின் மேல் வைக்கின்றனர். இந்த மேசையில்தான் இவை வைக்கப்படும். நான் எங்கோ ஓரிடத்தில் படித்து, ஜெபித்துக்கொண்டிருப்பேன். பாடல்கள் பாடப்பட்ட பின்பு, சிறிது கழித்து, நான் வெளியே வருவேன். சபை அனைத்து ஒழுங்கையும் கடைபிடித்து, ஜனங்கள் உள்ளே வந்து, உட்கார்ந்து, தியானித்து, ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர்; அப்படித்தான் நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் சபைக்கு வந்து, ஒருவ ரொடொருவர் பேசக்கூடாது, நீங்கள் சபைக்கு வந்து தேவனோடு பேசவேண்டும். உங்கள் ஐக்கியத்தை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். புரிகிறதா? இப்பொழுது நாம் தேவனுடன் ஐக்கியம் கொள்கிறோம். நாம் இங்கு வந்து தேவனுடன் பேசுகிறோம். எல்லாமே அமைதியாயும், பயபக்தியாயும் உள்ளது, ஆவியானவர் அசைவாடுகின்றார். பாடல் ஆராதனை தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே இசைப்பேழையை இசைப்பவர் இசைப்பேழையின் அருகில் வந்து, உண்மையாகவே இனிமையாக இசைக்கத் துவங்குகிறார். என் இரட்சகர் மரித்த அந்த சிலுவையின் கீழ், அங்கே பாவத்திலிருந்து சுத்திகரிப்பிற்காக நான் கதறினேன்,… அல்லது ஒரு நல்ல இனிமையான பாடலை, உண்மையிலேயே அமைதியாக வாசிக்கிறார். அது கூட்டத்திற்குள் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தைக் கொண்டு வருகிறது. பார்த்தீர்களா? சரி.

79136 ஜனங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் உண்மையாகவே—அழத் தொடங்கி, ஆராதனை தொடங்குவதற்கு முன்பே, மனந்திரும்பி பீடத்தண்டை வருகின்றனர். பரிசுத்த ஆவி அங்கே இருக்கிறார். பார்த்தீர்களா? சபை பிரசவவேதனை அடைந்துள்ளது. கிறிஸ்தவர்கள் ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர்; அவர்கள் தங்களுடைய ஸ்தானங்களைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் மெல்லும் பசை மிட்டாயை மென்றுகொண்டு, “ஏய், லிடி, உன் உதடு வர்ணத்தை கொஞ்சம் எனக்குத் தா; எனக்கு வேண்டும்…உனக்குத் தெரியும். உனக்குத் தெரியும். எனக்கு தேவை…உனக்குத் தெரியுமா, அன்றொரு நாள் நான் கடைக்குச் சென்றிருந்தபோது, நான் உனக்குச் சொல்லுகிறேன், நான் உனக்கு அருகிலேயே இருந்தேன். நான் அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டேனா…அதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?” என்று பேசிக்கொண்டு அமரந்திருக்கவில்லை. ஓ, இரக்கம்! அதன் பிறகு இதை தேவனுடைய வீடு என்றழைக்கின்றனர். ஏன், அது ஒரு அவமானம். கிறிஸ்துவின் சரீரம் ஒன்று கூடி வருகின்றது. நாம் அங்கு உட்காருகின்றோம். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதன், “நாங்கள் அங்கு சென்றிருந்தபோது உங்களுக்குத் தெரியும், இந்த இன்ன-மற்றும்-இன்ன மற்றும் இன்ன-மற்றும்-இன்ன-மற்றும்-இன்ன …” என்கிறான். அதெல்லாம் வெளியில் பேச வேண்டும், ஆனால் இங்கே இது தேவனுடைய வீடாயுள்ளது.

80137 ஜெபம் செய்துகொண்டே உள்ளே நுழையுங்கள்; உங்கள் இடத்தில் அமருங்கள். சகோதரரே, நான் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பது, உங்களுடைய சபைகளைக் குறித்தல்ல. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நான் இந்த கூடாரத்திற்கு இதை கூறிக்கொண்டிருக்கிறேன். நான் என் சொந்த சபைக்குள் இதை கூறிக்கொண்டிருக்கிறேன். புரிகிறதா? அது உண்மை. 138 இப்பொழுது, நீங்கள் அப்படி உள்ளே வரும்போது, அப்பொழுது முதலாவதாக உங்களுக்குத் தெரியும், போதகர் வெளியே நடந்து வருகிறார். அவர் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் இது, அது, மற்றதற்கு பதில் கூறவேண்டியதில்லை. அவர் தமது ஊழியத்தின் பனித்துளிகளிலிருந்து—நேரடியாக வெளியே வருகிறார். அவர் பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழிருந்து வந்துள்ளார். அவர் அங்கிருந்து, அதிக அக்கினி நாவுகள் ஒன்றுகூடியுள்ள இடத்துக்கு வருகிறார். அது ஏறக்குறைய இப்பொழுது ஒரு அக்கினி ஸ்தம்பம் (புரிகிறதா?), அது சுற்றி அசைவாடிக் கொண்டிருக்கிறது. அவர் அங்கு வந்து, இதை எடுத்துப் படிக்கிறார். “சபையிலிருந்து ஒரு செய்தி: ‘ கர்த்தர் உரைக்கிறதாவது , சகோதரன் ஜோன்ஸ் தமது வீட்டிலிருந்து வெளியேற வேண்டும். நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு அவருடைய இடத்தை ஒரு பலத்த புயல்காற்று தாக்கும். அவருடைய பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டு செல்ல வேண்டும்.’” சகோதரன் ஜோன்ஸ் அதைக் கேட்கிறார். சரி. அது எழுதி வைக்கப்பட்டுள்ளது. “ கர்த்தர் உரைக்கிறதாவது , இன்ன-இன்ன பெயருடைய ஒரு ஸ்திரீ இன்றிரவு இங்கு வருவாள். அது—அவள் இன்ன-மற்றும்-இன்னதைச் செய்திருக்கிறாள்.” (நான் உங்களிடம் ஏற்கெனவே கூறினது போன்று, பாருங்கள், அதைப் போன்றே.) சரி, அது எழுதப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதுதான் இது. அவர்கள் சபையில் ஏற்கெனவே தங்களுடைய இடத்தில் அமர்ந்துள்ளனர். சரி. 139 பிறகு போதகர் செய்தியளிக்கிறார். முதலாவது உங்களுக்குத் தெரியுமா, அவர் பிரசங்கம் செய்யத் துவங்குகிறார். எதுவுமே தடை செய்வதில்லை; அது ஏற்கனவே பேசப்பட்டுவிட்டது. இப்பொழுது, நாங்கள் தொடர்ந்து பிரசங்கம் செய்கிறோம், நாங்கள் செய்தியளித்து முடிக்கிறோம்.

81140 சற்று கழித்து…முதலாவதாக என்ன தெரியுமா, செய்தியளித்து முடிந்த பிறகு, ஜெபவரிசை தொடங்குகிறது. அங்கு ஒரு ஸ்திரீ வருகிறாள். அவள் வரப்போவதாக ஒருவர் அந்நிய பாஷை பேசி முன்னறிவித்து விட்டார். பார்த்தீர்களா? எனவே என்ன நடக்கப் போகிறதென்று நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். அது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். இப்பொழுது உங்கள் மேல் அக்கினி நாவுகள் நின்றுகொண்டிருப்பதனால் விசுவாசம் எப்படி அதிகரிக்கிறதென்று பாருங்கள். அந்த அக்கினி நாவுகளெல்லாம் இப்பொழுது ஒன்றுசேரத் தொடங்குகின்றன. ஏன், அது ஒரு முடிவு பெற்ற கிரியையாயுள்ளது; அவ்வளவுதான். அந்த ஸ்திரீ…நான், “நியூயார்க் பட்டினத்திலிருந்து வந்து இங்கு அமர்ந்துள்ள திருமதி. இன்னார்-இன்னார் …” என்பேன். பார்த்தீர்களா? “ஓ, அது உண்மை. உங்களுக்கு அது எப்படித் தெரியும்?” “அது கர்த்தரிடத்திலிருந்து சபைக்கு உண்டான ஒரு செய்தி. நீ பதினாறு வயதுடையவளாய் இருந்தபோது, நீ இன்ன-இன்ன இடத்தில் இருந்தபோது, அப்பொழுது—நீ சபையிலிருந்து சிறிது பணத்தைத் எடுத்துவிட்டாய், அதைத் திருடிக்கொண்டு, வெளியே போய், அதனைக் கொண்டு உனக்குத் புதிய துணிகளை வாங்கிக்கொண்டாய் அல்லவா?” “ஓ, அது உண்மை. அது உண்மை.” “அதை தேவன் இன்றிரவு எங்களுக்கு சரியாக சகோதரன் இன்னார்-இன்னார் பேசின அந்நிய பாஷை மூலம் கூறியுள்ளார். அதற்கு சகோதரன் இன்னார்-இன்னார் அர்த்தம் உரைத்தார்; இங்குள்ள சகோதரன் இன்னார்-இன்னார் அதைப் பகுத்தறிந்து, அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது என்று கூறினார். அது உண்மை.” “ஆம்!” “அப்படியானால், கர்த்தர் உரைக்கிறதாவது , அதை சரிபடுத்தி விடு. அப்பொழுது நீ புற்று நோயிலிருந்து சுகம் பெறுவாய்.”

82141 சகோதரன் ஜோன்ஸ் வீட்டுக்குச் சென்று, வண்டிகளை ஆயத்தப்படுத்தி, பொருட்களையும், தன்னுடைய மரச்சாமான்களையும் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்த புறப்பட்டு செல்கிறார். அடுத்த நாள் பிற்பகல் இரண்டு மணிக்கு; ஸோவி! புயல் காற்று எல்லாவற்றையும் நொறுக்கி விடுகிறது. பார்த்தீர்களா? அப்பொழுது சபை தேவனை மகிமைப்படுத்துகிறது…“கர்த்தராகிய இயேசுவே, உமது நன்மைக்காக, உமக்கு நன்றி.” இப்பொழுது, அதுவே சபை பக்திவிருத்தி அடைவதற்கு ஏதுவாக உள்ளது. 142 இப்பொழுது, அவர்கள் கூறியுள்ளது நிறைவேறாமல் போனால் என்ன? அப்பொழுது நீங்கள் ஒரு பொல்லாத ஆவியை உங்கள் மத்தியில் பெற்றுள்ளீர்கள். அந்த பொல்லாத ஆவி உங்களுக்கு வேண்டியதில்லை. ஆகாயங்கள்—உண்மையான பெந்தெகொஸ்தே ஆவியினால் நிறைந்துள்ளபோது, உங்களுக்கு ஏன் இந்த பொல்லாத ஒன்று வேண்டும்? பிசாசினிடமிருந்து அதற்கு பதிலாக பொல்லாத ஒன்றைப் பெற்றுக்கொள்ளாதீர்கள். உண்மையான ஒன்றை பெற்றுக் கொள்ளுங்கள். தேவன் உங்களுக்காக அதை வைத்திருக்கிறார். அப்படியானால் நீங்கள் சரியென்று தேவன் ஏற்கெனவே உங்களை ரூபகாரப்படுத்தியிருந்தாலொழிய இந்த கூட்டங்களை மற்றும் எந்த காரியத்தையும் இங்கு ஒழுங்கு செய்யாதிருங்கள், ஏனெனில் சுவிசேஷத்தின் பணியில் நீங்கள் சபைக்கு உதவி செய்ய வேண்டி யவர்களாயிருக்கிறீர்கள். இப்பொழுது, அது என்னவென்று புரிந்துகொண்டீர்களா?

83143 பாஷைகள், அந்நியபாஷைகள்…அவர் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறாரென்று எந்த மனிதனுமே—புரிந்து கொள்வதில்லை. அவர் பேசுகிறார்; ஆனால் ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு அர்த்தமுண்டு. அதற்கு ஒரு அர்த்தமுண்டு. [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களைக் தட்டுகிறார்—ஆசி.] “க்ளக், க்ளக், க்ளக்!” அது ஒரு—அது எங்கோ ஒரு மொழியாக அமைந்துள்ளது. 144 நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, அதை நான் நம்பவேயில்லை, ஆனால் சத்தம் எழுப்பிய ஒவ்வொன்றுக்கும், அதற்கான ஒருவிதமான அர்த்தமிருந்தது. ஒரு முக்கியத்துவமில்லாமல், ஒரு அர்த்தமில்லாமல் ஒரு சத்தமும் கிடையாது என்றே வேதம் கூறியுள்ளது. எழுப்பப்பட்டுள்ள ஒவ்வொரு சத்தத்திற்கும் ஏதொவொரு அர்த்தம் உள்ளது. ஏன், ஜனங்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன்…நான், “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து” என்பேன். 145 உடனே அவர்களில் ஒருவர் இப்படிக் கூறுவார் [சகோதரன் பிரான்ஹாம் ஆப்பிரிக்க மொழிபெயர்ப்பாளரின் சத்தத்தை பாவனை செய்து காண்பிக்கிறார்—ஆசி.] . மற்றொருவர் இப்படி கூறுவார் [சகோதரன் பிரான்ஹாம் மீண்டும் பாவனை செய்கிறார்.] அது “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து” என்பதாயிருந்து. பார்த்தீர்களா? அது ஒரு…எனக்கு அது ஒன்றும் புரிவதில்லை, ஆனால் அவர்க ளுக்கோ நான் உங்களிடம் பேசிக்கொண்டிருப்பது போன்று, அது ஒரு மொழியாயிருந்து. ஸூலு, ஹோசா, பாசுடோ, இன்னும் அநேக மொழிகளின் மொழிபெயர்ப்பாளர்கள் இதை மொழிபெயர்த்தபோது, அவர்கள் கூறின ஒவ்வொன்றையும் அவர்கள் புரிந்து கொண்டனர். இந்த ஜனங்கள் முணுமுணுப்பதை நீங்கள் கேட்கிறீர்களே, அது உளறுதல் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அப்படியில்லை; அதற்கு ஒரு அர்த்தமுண்டு. எனவே அதற்கு நாம் மதிப்பு கொடுத்து, அதை அதன் ஸ்தானத்தில் பொருத்த வேண்டும்.

84146 இப்பொழுது, ஒருக்கால் ஒரு செய்தியும் இல்லாமல் இருக்கலாம். இப்பொழுது, ஆராதனை முடிவுற்றுவிட்டது; பீட அழைப்பு கொடுக்கப்பட்டுகிறது என்று வைத்துக்கொள்வோம். சிறிது கழித்து ஒருவர் (முன்பு ஒரு செய்தியும் கொடுக்கப்படவில்லை) அவருக்குத் தருணம் கிடைக்கும் போது ஒருவர் எழுந்து நிற்கிறார். பரிசுத்த ஆவி…இப்பொழுது, வேதம், “அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், அவன் பேசாமலிருக்கக்கடவன்” என்று உரைத்துள்ளது. எவ்வளவுதான் பேசப் பிரயாசப்பட்டாலும், பேசாமலிருங்கள். 147 “என்னால் அதைச் செய்ய முடியாது” என்று சொல்லிவிடுங்கள். நீங்கள் அப்படி சொல்லிவிடலாம் என்று வேதம் உரைத்துள்ளது. புரிகிறதா? எனவே அது—அது இதனைத் தீர்க்கிறது. புரிகிறதா? அவன் பேசாமலிருக்ககடவன். 148 பின்னர், எல்லாமே ஒழுங்காயுள்ள இடத்தில் வாய்ப்பு ஏற்பட்டு, செய்தியைக் கொடுப்பதற்காக பரிசுத்த ஆவி ஒருவர் மேல் வந்தால், அப்பொழுது செய்தி கொடுங்கள். அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். அப்பொழுது அர்த்தம் வருகிறது, “இங்கு சாலி ஜோன்ஸ் என்னும் பெயருடைய ஒரு பெண் இருக்கிறாள் (அத்தகைய பெயர் கொண்ட பெண் யாரும் இங்கில்லை என்று நான் நினைக்கிறேன், ஆனால்…) சாலி ஜோன்ஸ். (புரிகிறதா?) இதுவே அவள் அழைக்கப்படும் கடைசி இரவாயிருக்கும் என்று அவளிடம் சொல்லுங்கள். அவள் தேவனிடம் அதை சரிபடுத்திக்கொள்ள வேண்டும், ஏனெனில் இவ்வவுலகில் அவள் குறுகிய காலமே இருப்பாள்.” அப்பொழுது சாலி ஜோன்ஸ் அவளால் இயன்றவரை விரைந்து பீடத்துக்கு ஓடி வருவாள் (புரிகிறதா?), ஏனெனில் அதுவே அவளுடைய கடைசி அழைப்பு. பார்த்தீர்களா? அதுதான் ஒரு செய்தி கொடுப்பது, அல்லது ஒரு ரூபகாரப்படுத்துதல், அல்லது அதைப் போன்ற ஒன்று.

85149 அதுவே இயங்கிக் கொண்டிருக்கும் பெந்தெகொஸ்தே சபை. பொல்லாத ஆவிகள் புகுந்து கொள்ள வழியேயில்லை, ஏனெனில் அது ஏற்கெனவே…வேதம் வெளிப்படையாக, “ஒவ்வொருவராய் அல்லது மூன்று பேர் பேசலாம்; இன்னும் இரண்டு பேர் அது சரியாவென்று நிதானிக்க கடவர்கள்” என்கிறது. அதுதான் சபை. ஆனால் நாம் இதை இன்றைக்கு எங்கே கடைபிடிக்கிறோம்? ஒருவர் அந்நியபாஷை பேசும்போது ஒழுங்கீனமாக, குதித்து, சிரித்து; வேறெங்கோ பார்த்துக்கொண்டு வேறெதாவதைக் குறித்து பேசிக்கொண்டு, சுற்றி கூட்டத்தாரோடு; போதகர் ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருப்பது; அல்லது ஒரு கூட்டத்தார் சுற்றி வருவர். பாருங்கள், அது சரியல்ல. போதகர் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும்போது, யாராவது ஒருவர் எழுந்து தடை செய்வது… வேதாகமத்தைப் படிக்கலாம், மேலும் யாராவது…வேதாகமத்தைப் படிப்பது, வேறெவர் பின்னாலிருந்து அந்நியபாஷை பேசுவது. ஓ, இல்லை! புரிகிறதா? போதகர் பிரசங்க பீடத்தில் பிரசங்கம் செய்யும்போது, யாராவது ஒருவர் எழுந்து நின்று அந்நியபாஷை பேசி அவரைத் தடை செய்கிறார். அது பரவாயில்லை. அது பரிசுத்த ஆவி இல்லையென்று நான் சொல்ல வரவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியை எந்த சந்தர்ப்பங்களில் உபயோகிக்க வேண்டுமென்பதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும் (புரிகிறதா?), அதை எப்படி உபயோகிக்க வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

86இப்பொழுது, நான்—நான் எடுக்கிறேன்…இன்னும் ஒரு கேள்விக்கு உங்களிடம் பொறுமை யுண்டா? பிறகு, நாளை ஞாயிற்றுக்கிழமை. அப்பொழுது, நாம்…நாம்…இங்கு ஒரு கேள்வி உள்ளது. அது மிகவும் அருமையான ஒன்று என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, நீங்கள் இன்னும் சில நிமிடங்கள் என்னுடன் தயவு கூர்ந்து பொறுத்துக்கொள்ளுங்கள். பின்னர், நான்…நீங்கள்—இதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஒரு நோக்கத்துக்காகவே இதுவரை பதில் கூறாமல் வைத்திருந்தேன். இதுவே என் கடைசி கேள்வி. இப்பொழுது, முதலாவது, இந்த நபர் கேட்டிருக்கும் இரண்டு காரியங்களை நான் வாசிக்கப் போகிறேன். அது ஒரு பழையத் துண்டு காகிதத்தில், அழகிய கையெழுத்தால் எழுதப்பட்டுள்ளது. அதை எழுதினது யாரென்று எனக்குத் தெரியாது, எந்த பெயரும்—அதில் கையொப்பமிடப்படவில்லை. 98. சகோதரன் பிரான்ஹாமே, போதகர்கள் தங்கள் ஆராதனை களில் பணத்துக்காக நீண்ட நேரம் நிர்ப்பந்தம் செய்து, கூட்டத்திலுள்ள இத்தனை பேர் இவ்வளவு பணம் கொடுப்பார்களென்று தேவன் அவர்களிடம் கூறினதாக கூறுவது முறையாகுமா? அது சரியாவென்று, நான் அறிய விரும்புகிறேன். அல்லது அது தவறாவென்று, நான் அறிய விரும்புகின்றேன். இது என்னை பயங்கரமாக தொந்தரவு படுத்தியுள்ளது. 150 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், நண்பனே, நான் உனக்கு சொல்லப் போகிறேன், நான் என்ன கருதுகிறேன் என்பதை நான் உங்களுக்குத் சொல்லப் போகிறேன். புரிகிறதா? இப்பொழுது, அது சரி என்று அர்த்தமல்ல. அது பயங்கரமானது என்றே நான் கருதுகிறேன். 151 இப்பொழுது, நான் இதை நினைத்துப் பார்க்கிறேன். தேவன் என்னை சுவிசேஷ ஊழியத்துக்கு அனுப்பினார். என்னிடம்—என்னிடம் பணமே இருக்காது…அவ்வாறு நான் அவதிப்பட்ட நேரத்தை நான் கண்டிருக்கிறேன்… அப்பொழுது நான், “காணிக்கை தட்டை ஜனங்களிடம் அனுப்புங்கள்” என்பேன். மேலாளர் என்னிடம் வந்து, “பில்லி, கவனியுங்கள், மகனே, இன்றிரவு நமக்கு கூட்டத்துக்கான செலவை கொடுத்து தீர்க்க ஐயாயிரம் டாலர்கள் குறைவாயுள்ளது. அதை செலுத்த ஜெபர்ஸன்வில்லில் உம்மிடம் பணம் உள்ளதா?” என்று கேட்பார். 152 நான், “பரவாயில்லை. தேவன் என்னை இங்கு அனுப்பினார், இல்லையென்றால் இங்கு நான் வந்திருக்கமாட்டேன். (புரிகிறதா?) காணிக்கை தட்டை ஜனங்களிடம் அனுப்புங்கள்” என்பேன். ஆனால் கூட்டம் முடிவதற்கு முன்பே, ஒருவர் வந்து, “உங்களுக்குத் தெரியுமா, இதன் செலவுக்காக ஐயாயிரம் டாலர்கள் கொடுக்க கர்த்தர் என் இருதயத்தை ஏவினார்” என்பார். பாருங்கள், பார்த்தீர்களா? முதலாவதாக, அதைச் செய்ய வழி நடத்தப்பட வேண்டும்.

87153 நிர்ப்பந்தம் செய்து, பிச்சையெடுத்து, பணத்தை சேகரிப்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அது ஒரு தவறான காரியம் என்றே நான் கருதுகிறேன். இப்பொழுது, சகோதரனே, நீங்கள் அதை செய்ய நினைத்தால், உங்களுடைய உணர்வுகளை நான் புண்படுத்தாதிருப்பேனாக. புரிகிறதா? அதைச் செய்யும் உரிமையை நீங்கள்—நீங்கள் தேவனிடமிருந்து பெற்றிருக்கலாம். ஆனால் நான் என்னைக் குறித்தே பேசிக்கொண்டிருக்கிறேன். எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது. 154 இப்பொழுது, போதகர்கள் கூறுவதைக் குறித்து நானும் கூட அறிந்திருக்கிறேன்…அண்மையில், நான் நின்றிருந்தேன்… இப்பொழுது, இது பெந்தெ கொஸ்தேயினர் அல்ல, இது…பாருங்கள், அது சபைகள் (பார்த்தீர்களா?), மற்ற சபைகள். அது ஒரு பெரிய தொடர் கூட்ட முகாமிலிருந்தது. கெர்டி, நீங்கள் என்னோடிருந்தீர்கள், அங்கிருந்த அநேகர் இப்பொழுது இருக்கிறீர்கள். ஒரு புகழ்பெற்ற ஸ்தாபனம்—இரண்டு அல்லது அவை மூன்று ஒன்றுசேர்ந்து, அவர்கள் அந்த முழு பிற்பகலையும் இதற்காக உபயோகித்து (அது நகரத்தில் இங்கே உள்ள நம்முடைய நவநாகரீக சபைகளைப் போன்றதான, வழக்கமான, வழக்கமான சபைகள்) ஒரு பெரிய தொடர் கூட்டத்தில்—அவர்கள் முழு பிற்பகலையும் எடுத்துக்கொண்டு, மேடையில் நின்றுகொண்டு—இந்த கூட்டத்திற்காக ஜனங்கள் பணம் கொடுக்காமல் போனால், தேவன் அவர்களுடைய பயிர்களை அழித்து போடுவார் என்றும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு இளம்பிள்ளை வாதம் வரும்படி செய்வார் என்றும், இப்படிப்பட்ட காரியங்களைக் கூறி அவர்களை பயமுறுத்தினர். இந்த வேதம் எனக்கு முன்பாக இருக்க, அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. அப்பொழுது நானோ, “தேவனுக்கும் அவரைப் பின்பற்றுவோருக்கும் இது தேவதூஷணம்” என்றேன். தேவன் உங்களை அனுப்பினால், அவர் உங்களை கவனித்துக் கொள்வார். அவர் உங்களை அனுப்பியிராவிட்டால், ஸ்தாபனங்கள் உங்களை கவனித்துக் கொள்ளட்டும். ஆனால்—ஆனால் நீங்கள்…தேவன் உங்களை அனுப்பினால், அவர் உங்களை கவனித்துக்கொள்வார்.

8899. பரிசுத்த ஆவியுள்ள ஒரு சபையில் கிறிஸ்துமஸ் நாடகம் நடத்துவதைக் குறித்து என்ன? 155 பாருங்கள், அது கிறிஸ்துவைக் குறித்த நாடகமானால், அதனால் பரவாயில்லை. ஆனால் அது சான்டாகிளாசைக் குறித்ததானால், அவன் பேரில் எனக்கு நம்பிக்கையில்லை. நான்—நான் பெரியவனாகிவிட்டேன்—நான் பெரியவனாகி அதிலிருந்து விலகி வந்துவிட்டேன். எனக்கு சான்டா கிளாசின் பேரில் சிறிது கூட நம்பிக்கை கிடையாது. பார்த்தீர்களா? இவர்கள் வைத்துள்ள சில சிறு கிறிஸ்துமஸ் காரியங்கள் மூடத்தனமானது என்று நான் எண்ணுகிறேன். மேலும்…அவர்கள் கிறிஸ்துவை முழுவதுமாக கிறிஸ்துமஸிலிருந்து எடுத்துவிட்டு, அதில் சான்டா கிளாசை அதில் புகுத்திவிட்டனர். 156 சான்டா கிளாஸ் ஒரு கட்டுக்கதை. (குழந்தைகளைக் குறித்த, உங்களுடைய உணர்வுகளை நான் புண்படுத்திக்கொண்டிருக்கவில்லை என்றே நான் நம்புகிறேன்.) ஆனால் நான் உங்களுக்கு சொல்லுவேன். இங்கே அண்மையில், சுமார் இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இங்கே இந்த நகரத்திலுள்ள ஒரு ஊழியக்காரர், இங்கே இந்த நகரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பெரிய சபையின்—போதகர், அதாவது நான் அவரை நன்கு அறிவேன், அவர் என்னுடைய நெருங்கிய நண்பர், அவர் என்னை சந்திக்க நடந்து வந்தார். சார்லி போஹன்னான் (சகோதரன் மைக், உங்களுக்கு என்னுடைய நல்ல நண்பர் சார்லி போஹன்னான் என்ற ஒருவர் ஞாபகமிருக்கும்)… அவர் தமது அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு, “நான் ஒருபோதும் என்னுடைய பிள்ளைகளுக்கோ அல்லது என்னுடைய பேரப்பிள்ளைகளுக்கோ அந்தப் பொய்யை இனி ஒருபோதும் கூறமாட்டேன்” என்றார். மேலும் அவர், “என் சொந்த சிறு பையனுக்கு பன்னிரண்டு வயதான போது, என்னிடம் வந்து சான்டா கிளாசைக் குறித்து பேசினான்” என்றார்…அப்பொழுது அவர் அவனிடம், “ஏன்…தேனே, நான் உன்னிடம் ஒன்றைக் கூற வேண்டும்” என்று கூற, அவனோ, “அம்மா…” என்றானாம். உங்களுக்குத் தெரியுமா, அவர் கூறியதை அவன் போய் கூறினானாம். அதன்பின்னர் அவன் திரும்பி வந்து, “அப்படியானால், அப்பா, இயேசுவும் கூட அது போன்ற காரியம்தானா?” என்று கேட்டானாம். 157 உண்மையைக் கூறுங்கள். சாண்டா கிளாஸ் என்பது கிரிஸ் கிரிங்கில் அல்லது பரிசுத்த நிக்கோலாஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு நபர், அநேக ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஜெர்மானிய வயோதிக கத்தோலிக்க பரிசுத்தவான் பிள்ளைகளுக்கு நன்மை செய்பவராக சுற்றித் திரிந்ததாக கூறப்படுகின்ற ஒரு கத்தோலிக்க கதாபாத்திரம். அவர்கள் அதை வழிவழியாக ஒரு பாரம்பரியமாக கைக்கொண்டு வந்துள்ளனர். ஆனால் இயேசு கிறிஸ்துவோ தேவனுடைய குமாரனாயிருக்கிறார். அவர் உண்மையுள்ளவர், அவர் ஜீவிக்கிறார். இப்பொழுது, இங்கு ஒரு கேள்வி உள்ளது, அதுவே கடைசி கேள்வி, அது ஒரு மிக…

89158 இப்பொழுது கவனியுங்கள். அந்த விஷயத்தில் நீங்கள் என்னுடன் இணங்காமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் என்னோடு இணங்காமலிருந்தால், நினைவிருக்கட்டும், அது நட்பு முறையில் இருக்கட்டும், நீங்கள் அப்படிச் செய்வீர்களா? நான் உங்களை நேசிக்கிறேன், நான்—நான் உங்களை புண்படுத்த விரும்பவில்லை. நான், நான் உத்தமமாய் இருக்க விரும்புகிறேன். என்னால் முடியவில்லையென்றால்…என் மகனிடம் நான் ஒரு பொய்யைக் கூறினால், நான் ஒரு பொய்யன். புரிகிறதா? நான் அவனிடம் உண்மையைக் கூறவே விரும்புகிறேன். 159 இப்பொழுது, நான் அவனிடம் சான்டா கிளாசைக் குறித்து கூறி, நான், “ஆம், நிச்சயமாக, சான்டா கிளாஸ் உண்டு. கிறிஸ்துமஸ் இரவன்று தந்தையைக் கவனி” என்றேன். பார்த்தீர்களா? ஆம். 160 உங்களுக்குத் தெரியுமா, நேற்று முந்தின நாள் நான் அங்கு சென்றிருந்தபோது, ஒரு சிறு பெண்ணிடம் அதைக் குறித்து சோதித்துப் பார்த்தேன். நான் நேற்று முன்தினம் நிச்சயமாகவே சரியான பதிலைப் பெற்றுக்கொண்டேன். நான் அந்த கட்டிடத்தில் இருந்தேன். அவர்கள் அங்கே கீழே உள்ள குவேக்கர் மேய்ட் என்னும் இடத்தில் நின்றுகொண்டிருந்தனர். நானும் மளிகைப் பொருட்கள் வாங்க அங்கே சென்றிருந்தேன். எனவே நாங்கள், மனைவியும் நானும் அங்கிருந்தோம். அங்கு ஒரு சிறு பெண் இருந்தாள், அவள் சுமார் பதினெட்டு மாதங்கள் பூர்த்தியானவளாய் இருந்தாள். அவள் அங்கு நின்றுகொண்டு, “கலகல மணியோசை, கலகல மணியோசை…” என்று பாடினவாறே போவதும் வருவதுமாயிருந்தாள். நான் சொன்னேன்…அவளுடைய சிறிய நிலைத்தாங்கியில், உங்களுக்குத் தெரியும், சிறிய வண்டியின் பின்புறத்தில் அமைப்பது. நான், “நீ சாண்டா கிளாஸுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டேன். அவள், “திருவாளரே, அது என் தந்தை” என்றாள். நான், “தேனே, உன் சிறு இருதயம் ஆசிர்வதிக்கப்படுவதாக. நீ ஞானத்தைப் பெற்றுள்ளாய்” என்றேன்.

90இப்பொழுது, நண்பர்களே, இது உண்மையாகவே ஒரு கடினமான கேள்வியாயுள்ளது. இதில்…அதன் பின்னர் நான் முடித்துவிடுவேன். ஓ, இது—இது அழகான வேத வாக்கியம், ஆனால் அது ஒவ்வொரு நபருக்கும் கடினமாக தோன்றக்கூடிய ஒன்று. அநேக ஆண்டுகளாக அது எனக்குப் புதிராகவே இருந்து வந்தது, ஆனால் தேவனுடைய கிருபையினால் மாத்திரமே… இப்பொழுது அங்கே பின்னால் உட்கார்ந்துகொண்டிருக்கும் என் விலையேற்றப்பெற்ற மனைவி, இந்த பிற்பகல் இந்த கேள்விக்கு நான் பதில் கூற வேண்டுமென்று அறிந்தபோது, அவள், “பில், நீங்கள் எப்படி பதில் கூறப் போகிறீர்கள்?” என்றாள். மேலும் அவள், “நானே அதைக் குறித்து எப்பொழுதுமே யோசித்து வந்துள்ளேன்” என்றாள். “என்னால் அதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை” என்றாள். மேலும் கூறினதோ… நான், “இனியவளே, இன்றிரவு வா. தேவனுடைய உதவியைக் கொண்டு என்னால் முடிந்த வரைக்கும் அதற்கு பதில் கூறுவேன்” என்றேன்.

91100. சகோதரன் பிரான்ஹாமே, தயவுகூர்ந்து எபிரேயர் 6:4 முதல் 6 வரை விளக்குங்கள். 161 அது உண்மையிலேயே ஒரு தரம்…பாருங்கள், இப்பொழுது நீங்கள் நம்முடைய விசுவாசம், கிருபை, விசுவாசிகளின் பாதுகாப்பு, பரிசுத்தவான்களின் விடாமுயற்சி, சரியாகக் கூறினால் பரிசுத்தவான்களின் விடாமுயற்சி போன்றவைகளில் இங்கு கவனம் செலுத்த வேண்டியவர்களா யிருக்கிறீர்கள். எபிரேயர் 6-ம் அதிகாரம், 4 முதல் 6 வசனங்கள். இப்பொழுது, இதை…நான் முடித்தவுடனே, பின்னர் உங்களுக்கு இதை தெளிவுபடுத்தித் தர தேவன் எனக்குதவி செய்வாரென நான் நம்புகிறேன். என்னை மன்னிக்கவும், நான்—நான் இன்றிரவிற்கான செய்தியை வைத்துள்ளேன்; அதையே நான் நாளை காலை—ஆராதனையிலும் பிரசங்கிக்கலாமென்றிருக்கிறேன். பிறகு நான் இங்கிருந்து செல்வேன். 162 இப்பொழுது, இது உண்மையாகவே கடினமான ஒன்று. பார்த்தீர்களா? இப்பொழுது, நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இப்பொழுது நினைவிருக்கட்டும், எழும்பி சத்தமிடும் அனைத்துமே, அந்நியபாஷை பேசும் அனைத்துமே, போதகரிடம் கைகுலுக்கும் அனைத்துமே நித்திய ஜீவனைப் பெற்றிருக்கவில்லை என்று நாங்கள் விசுவாசித்து, இந்த சபையிலும் போதிக்கிறோம். நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், தேவன் உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்திருப்பாரானால், அதை நீங்கள் என்றென்றைக்கும் பெற்றிருக்கிறீர்கள் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். புரிகிறதா? ஏனெனில் கவனியுங்கள். அப்படி இல்லையென்றால், இயேசு ஒரு கள் ளப் போதகராக காணப்படுவார். பரிசுத்த யோவான் 5:24-ல், அவர், “என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குப்பட்டிருக்கிறான்” என்று கூறியிருக்கிறார். இப்பொழுது, அவரோடு தர்க்கம் செய்யுங்கள். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும்…பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னி டத்தில் வரமாட்டான். (நான் வேதவாக்கியங்களை எடுத்துரைத்துக்கொண்டிருக் கிறேன்.) வருகிற யாவும்…பிதா ஒருவனை முதலில் இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான், பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். (பார்த்தீர்களா?) என்னிடத்தில் வருகிறவனுக்கு நான் நித்திய ஜீவனைத் தருவேன் (பரிசுத்த யோவான் 6), கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்.” இது அவருடைய வார்த்தைகள்.

92163 இப்பொழுது கவனியுங்கள். நான் எபேசியர் 1-ம் அதிகாரத்துக் குச் செல்ல விரும்பினால், பவுல் பிரசங்கிக்கிறான்… இப்பொழுது, கொரிந்தியர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் அந்நிய பாஷையையும், ஒரு சங்கீதத்தையும் பெற்றிருந்தனர். மற்ற சபைகளில் இந்த தொல்லை இருக்கவில்லை என்பதை நீங்கள் கவனியுங்கள். அவன் அதைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை. அவன் ரோம சபையிலோ, எபேசு சபையிலோ எங்காவது அந்நிய பாஷையைக் குறித்து ஏதாவது கூறியுள்ளானா? இல்லையே! அவர்களுக்கும் கொரிந்தியரைப் போல் அந்நியபாஷை பேசுதலும் மற்ற வரங்களும் இருந்தன, ஆனால் அவர்கள் அதை ஒழுங்குப்படுத்தியிருந்தனர். ஆனால் கொரிந்தியர்களோ அதை ஒழுங்குபடுத்தவில்லை. புரிகிறதா? பவுல் அங்கு சென்று சபையை ஒழுங்குபடுத்தினான். இப்பொழுது, அவன்…ஓரல் ராபர்ட்ஸ் கூறுவது போல், “தேவன் ஒரு நல்ல தேவன்” என்றே நான் விசுவாசிக்கிறேன். நீங்களும் அதை விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? 164 நீங்கள், “பாருங்கள், சகோதரன் பிரான்ஹாமே, அப்படியானால் அந்நியபாஷைகள் பேசும் பெந்தெகொஸ்தேயினரைக் குறித்தென்ன?” என்று கேட்கலாம். அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக அவர்கள் பெற்றுள்ளனர். சரி, ஏன்? கவனியுங்கள். அவர் நல்ல தேவன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒரு முறை தோமா, “உங்களுக்குத் தெரியுமா, ஆண்டவரே…” என்றான். மற்றவர் அனைவரும் அவரை விசுவாசித்தனர். “ஓ, அவர் உண்மையானவர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்!” என்றனர். “ஓ,” தோமாவோ, “இல்லை, இல்லை, நான் அதை விசுவாசிக்கவில்லை. அதை நான் விசுவாசிக்க கூடிய ஒரே வழி, அதற்கான அத்தாட்சி எனக்கு இருக்க வேண்டும். அவருடைய விலாவிலும், அவருடைய கைகளில் ஆணிகள் கடாவப்பட்டதனால் உண்டான காயங்களிலும் என் விரல்களை நான் போட வேண்டும்” என்றான். அவர் நல்ல தேவன். அவர், “தோமாவே, வா. இதோ உனக்கான அத்தாட்சி” என்றார். “ஓ,” தோமா, “இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன்” என்றான். 165 அவர், “ஆம், தோமாவே, நீ என்னைக் கண்ட பிறகு, என் கையினால் தொட்ட…உன் கைகளை என் விலாவில் போட்டப்பிறகு, விசுவாசித்தாய். ஆனால் காணாதிருந்தும் என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு எவ்வளவு மிகுதியான பலன் உண்டாயிருக்கும்” என்றார். அவர் நல்ல தேவன். அவர் உங்கள் இருதயத்தின் வாஞ்சைகளை அருளுகிறார், நிச்சயமாக. அவரை நாம் விசுவாசிப்போமாக. அது அந்த—அது அந்த—அது சாத்தானுக்கு மரண அடியாக இருக்கிறது. சகோதரனே, ஒரு மனிதன் தேவனை அவருடைய வார்த்தையின் மூலம் ஏற்றுக் கொள்ளும்போது, அது ஒவ்வொரு முறையும் சாத்தானைக் கொன்றுவிடும். ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளும்போது, அதுவே சாத்தானுக்குக் கிடைக்கப் பெறும் மிகவும் கடினமான அடியாக இருக்கிறது. ஆம், ஐயா. நான் கூறினதுபோல, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல (இயேசு, அன்றொரு இரவு), புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்…”

93166 இப்பொழுது, இதைக் கவனியுங்கள். நான் இப்பொழுது முதலாம் வசனத்திலிருந்து துவங்குகிறேன். ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு…பூரணராகும்படி கடந்து போவோமாக; (இப்பொழுது, நீங்கள் அறிய வேண்டுமென்று நான் விரும்புகிற முதலாவது காரியம்; இங்கே பவுல் யாரிடம் கூறிக்கொண்டிருக்கிறான்? எபிரெயரிடம். அவர்கள், “எபிரெயர்கள்” என்று மேலே உள்ளதை கூறுகிறபடியால், எபிரெயர் நிருபமே. அது சரியா? இயேசுவைப் புறக்கணித்த யூதர்கள்…உங்களால்—உங்களால் இப்பொழுது அதைப் புரிந்துகொள்ள முடிகிறதா? அவன் யூதர்களுக்கு இதை கூறி, நியாயப்பிரமாணம் கிறிஸ்துவுக்கு ஒரு நிழலாகவும் முன்னடையாளமாகவும் இருக்கிறதென்று அவன் காண்பிக்கிறான். பழையவை அனைத்துமே புதியவைகளுக்கு முன்னடையாளம். இப்பொழுது கவனியுங்கள்.) …கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு…பூரணராகும்படி கடந்து போவோமாக.

94167 இப்பொழுது அவன் அவர்களிடம் உபதேசங்களை குறித்துப் பேசி வந்திருக்கிறான். இப்பொழுது நாம் பூரணமாக்கப்பட்ட காரியங்களைக் குறித்து பேசுவோம். இப்பொழுது, நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும் பரிசுத்த ஆவியினால் முத் தரிக்கப்படும்போது, நீங்கள் தேவனில் பரிபூரணமடைகின்றீர்கள். “தேவனால் பிறந்த எவனும் (முதலாம் யோவான்) பாவஞ் செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் பாவஞ்செய்யமாட்டான்.” 168 பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ள ஒரு மனிதன், நிரப்பப்பட்டதாக நினைக்கிறவனல்ல, ஆனால் தேவனுடைய ஆவியினால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான். ஏனெனில் தேவனுடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது, அவனால் பாவம் செய்ய முடியாது. புரிகிறதா? வேதம் அதைக் கூறுகிறதா? ஆகையால் அது அப்படித்தான். நீங்கள்…நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றல்ல, என்ன, என்னவாயுள்ளது, உலகம் உங்களை குறித்து என்ன நினைக்கிறது என்றல்ல, தேவன் உங்களைக் குறித்து என்ன நினைக்கிறார் என்பதே முக்கியம் வாய்ந்தது. பாருங்கள், புரிகிறதா? நீங்கள்…இந்நகரத்தின் நகராட்சித் தலைவர், நான் மணிக்கு நாற்பது மைல் வேகம் செல்லலாம் என்னும் உத்தரவு பிறப்பித்திருக்கும்போது, எப்படி எந்த ஒரு காவல்காரனும் என்னை சிறைப்படுத்த முடியும்? என்னை அப்படிச் செய்யவே முடியாது. அதுபோன்று தேவனுக்கு முன்பாக எப்பொழுதுமே இரத்தம் தோய்ந்த பலி இருந்து, அவர் என்னை காணவும் முடியாதபடிக்கு, அது எனக்கும் தேவனுக்குமிடையே ஒரு தடுப்புத் தாங்கியாக இருக்கும்போது, நான் எப்படி பாவம் செய்ய முடியும்? நாம் மரித்தோம், நம்முடைய ஜீவன் தேவன் மூலமாய் கிறிஸ்துவுக்குள் மறைந்து, பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, நீங்கள் எப்படி தேவனுடைய பார்வையில் எந்த தவறையாவது செய்ய முடியும்? “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு (எபிரெயர் 10) நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,” ஆனால் இங்கு மனப்பூர்வமாய் (புரிகிறதா?) பாவஞ் செய்வது கூடாத காரியம்.

95169 இப்பொழுது, நாம் தொடர்ந்து படிப்போம். சரி. …செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத் தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. தேவனுக்கு சித்தமானால் இப்படியே செய்வோம். (இப்பொழுது இங்கே அவர்கள் 4-ம் வசனத்திலிருந்து தொடங்க விரும்பினார்கள்.) ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல் வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது—புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 170 இப்பொழுது, இப்பொழுது, இதை நீங்கள் அங்கிருந்து படிக்கும்போது, ஒரு மனிதன் பரிசுத்த ஆவியைப் பெற முடிந்து, அதன்பின்னர் பின்வாங்கிப் போய் இழந்து போக முடியும் என்பது போல் தென்படக்கூடும். ஆனால் அவன் அப்படி செய்வது கூடாத காரியம். புரிகிறதா? அவனால் அப்படி செய்ய முடியாது. அவன் அப்படி செய்தால், கிறிஸ்து பொய்யுரைத்ததாகிவிடும். புரிகிறதா? ஒரு தரம் பிரகாசிக்கப்படுகிறவர்கள். இப்பொழுது, இங்கு கவனியுங்கள். அவன் யாரிடம் இதை பேசிக்கொண்டிருக்கிறான்? அவன் அந்த எல்லைக்கோடு யூதர்களிடத்தில் இதைப் பேசிக்கொண்டிருக்கிறான். பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு மனிதன் என்று அவன் ஒருபோதும் கூறவில்லை; அவன், “தேவனுடைய நல்வார்த்தையை ருசி பார்த்தவன்” என்றே கூறினான்.

96171 இப்பொழுது, இதை நீங்கள் புரிந்துகொண்டு, இதை இப்பொழுது காணத் தவறாதிருக்கும்படி நான் இதை ஒரு உவமையில் கூறட்டும். இப்பொழுது, அவன் இதை யூதர்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறான். அவர்களில் சிலர் எல்லைக் கோடு விசுவாசிகள். புரிகிறதா? அவன், “இப்பொழுது, நாங்கள் இந்த கிரியைகளைக் குறித்து பேசுவதை விட்டு, பூரணத்தைக் குறித்து பேசப் போகிறோம்” என்றான். மேலும், “இப்பொழுது, நாங்கள் ஸ்நானங்கள், மரித்தோரின் உயிர்த்தெழுதல், கைகளை வைக்குதல், இன்னும் மற்றவைகளைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்; ஆனால் இவைகளைக் குறித்து பேசுவதை நாம் விட்டு விட்டு பூரணத்தைக் குறித்து பேசுவோம். நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் வரவேண்டியதைக் குறித்து நாங்கள் இப்பொழுது பேசப் போகின்றோம். இப்பொழுது, நீங்கள் இந்த கூட்டத்துக்கு நீண்ட காலமாக வந்து கொண்டிருக்கிறீர்கள்…” என்றான். 172 அந்த ஜனங்களை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அவர்கள் சுற்றி சுற்றி இங்கேயே இருப்பார்கள்; அவர்கள் உள்ளேயும் வரமாட்டார்கள் அல்லது வெளியேயும் செல்லமாட்டார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பாராட்டுவார்கள். அவர்கள் சுற்றி வந்து கொண்டேயிருப்பார்கள். ஒருக்கால் பரிசுத்த ஆவி அவர்களுக்கு ஏதாவதொன்றை செய்யும், புருஷர்கள், அவர்கள் எழுந்து, கூச்சலிட்டு, தரையில் மேலும் கீழும் குதிப்பார்கள், ஆனால் அதை பெற்றுக்கொள்ள அவர்கள்தாமே ஒருபோதும் விரும்புகிறதில்லை. இல்லை, இல்லை! புரிகிறதா? அவர்கள், “ஓ, ஆமாம், அது நல்லது. ஓ, ஆனால் அதைக் குறித்து இப்பொழுது அறிந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை” என்று சொல்வார்கள். பாருங்கள், பாருங்கள், பார்த்தீர்களா? எல்லைக்கோடு விசுவாசிகள். அதை ருசிபார்க்கும் அளவுக்கு அவர்கள் அருகாமையில் உள்ளனர், ஆனால் அதேசமயத்தில் அவர்கள் அதைப் பெற்றுக்கொள்கிறதில்லை. புரிகிறதா? இப்பொழுது, அவர்கள் இந்நிலையிலே நீண்ட காலம் இருந்து, பிறகு அவர்கள் முழுவதுமாக அகன்று சென்று விடுகின்றனர். இக்கூடாரத்தில் அதேக் காரியத்தைச் செய்த அநேகரின் பெயர்களை என்னால் கூற முடியும். விழுந்துபோன அப்படிப்பட்டவர்களை, மனந்திரும்புதற்கேதுவாய் மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம், அவர்களுக்கு இனி மனந்திரும்புதலே கிடையாது. அவர்கள் பரிசுத்த ஆவி அவர்களை விட்டுச் செல்லும் அளவுக்கு அவரைத் துக்கப்படுத்திவிட்டார்கள். அவர்கள் மிக அருகாமையில் இருந்து வரும் வரை…

97173 இங்கே, நீங்கள் என்னுடன் கூட வேதாகமத்தை திருப்புவீர்களானால் (இப்பொழுது, உங்களுக்கு நேரமில்லையென்று எனக்குத் தெரியும்) ஆனால் நீங்கள் வேதாகமத்தை உபாகமம் 1-ம் அதிகாரத்துக்கு திருப்பி அதை படித்தால், நீங்கள் அதேக் காரியத்தைப் புரிந்து கொள்வீர்கள். இப்பொழுது இதைக் குறித்துக் கொள்ளுங்கள், உபாகமம் 1-ம் அதிகாரம். இப்பொழுது, 19-ம் வசனம் தொடங்கி 26-ம் வசனம் வரைக்கும் படியுங்கள். உபாகமம்…நீங்கள் காணலாம்…இப்பொழுது பாருங்கள். இஸ்ரவேலர் எல்லாரும்…அந்த ஜனங்கள் என்ன செய்தார்கள், அவர்கள் காதேஸ்பர்னேயாவுக்கு வந்தார்கள். ஓ, நான் ஒன்றைக் காண்கிறேன்! இந்த கூடாரம், இந்த பெந்தெகொஸ்தே உலகம் இப்பொழுது காதேஸ்பர்னேயாவில் உள்ளது. சகோதரன் நெவில், அது முற்றிலும் உண்மை. நாம் காதேஸ்பர்னேயாவில், உலகத்தின் நியாயத்தீர்ப்பு ஆசனத்தில் இருக்கிறோம் (அது நியாயத்தீர்ப்பு ஆசனமாக இருந்தது). 174 வேவுகாரர்கள் புறப்பட்டு சென்றனர். யோசுவா இங்கே, “இப்பொழுது, நான் வேவுகாரர்களை அனுப்பினேன்,” இல்லை, சரியாகக் கூறினால் மோசே, “நான் பன்னிரண்டு வேவுகாரர்களை, உங்களுடைய ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு மனிதனை, தெரிந்தெடுத்து அனுப்பினேன். அவர்கள் தேசத்தை வேவுபார்த்து அங்கிருந்து ஒரு அறிக்கையை கொண்டு வர, அவர்களை அனுப்பினேன்” என்றான். அது சரியா? அவர்கள் திரும்பி வந்தபோது, அந்த பன்னிருவரில் ஒன்பது பேர், “ஓ, அது நல்ல தேசம்தான். ஆனால், ஓ, இரக்கம், நாம் அதைக் கைப்பற்ற முடியாது. ஓ, என்னே! எமோரியர் அங்கே இருக்கின்றனர். அவர்கள் அருகில் நாங்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறோம். அவர்கள் ஆயுதமணிந்தவர்களாயுள்ளனர். அவர்கள் மதில் சுவர்கள் மிகவும் பெரியதாயுள்ளன. ஓ, இது மிகவும்…ஏன், நீர் எங்களை இங்கு கொண்டு வந்ததைக் காட்டிலும் நாங்கள் எகிப்திலேயே மரித்திருந்தால் நலமாயிருக்கும்” என்றனர்.

98175 ஆனால் காலேபும் யோசுவாவும் அங்கு குதித்தெழுந்து அவர்களை அமைதிபடுத்தினர்; அவர்கள், “நாம் எளிதில் அதைக் கைப்பற்றிவிடலாம்” என்றனர். ஆம், ஐயா! அங்குதான் காரியமே. இப்பொழுது பாருங்கள். என்ன நடந்தது? தேவன் அதைக் குறித்த வாக்குத்தத்தத்தை கொடுத்து விட்டார் என்று காலேபும் யோசுவாவும் அறிந்திருந்தனர். “அது எவ்வளவு பெரிதாயிருந்தாலும், தடைகள் எவ்வளவாக இருந்தபோதிலும், அவை எவ்வளவு உயரமாயிருந்தாலும், அவை எவ்வளவு பெரிதாயிருந்தாலும், அதற்கும் இதனோடு எந்த சம்பந்தமில்லை. தேவன் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளார், எனவே அதை நாம் கைப்பற்ற முடியும்” என்றனர். அந்த இருபத்தைந்து லட்சம் பேர்களில் இவ்விருவர் மாத்திரமே, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்துக்குள் கடந்து சென்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் இவர்கள் தேவன் கூறினது உண்மை என்பதில் தங்களுடைய விசுவாசத்தை வைத்திருந்தனர். ஆமென்! 176 இப்பொழுது, கூடாரம், காதேஸ்பர்னேயாவில் நிற்கிறது. பாருங்கள், அந்த ஜனங்கள் அவ்வளவு அருகாமையில் வந்து, அந்த தேசத்திலிருந்து கொண்டு வந்த திராட்சை பழங்களையும் ருசி பார்த்தனர். அவர்கள் அந்த திராட்சை பழங்களைத் புசித்தனர். காலேபும் மற்றவர்களும் அங்கு சென்று திராட்சை குலையைக் கொண்டு வந்தபோது, இவர்கள் அந்த குலையிலிருந்து சில பழங்களை பறித்து புசித்து, “ஓ, அவை ருசி மிகுந்தவை, ஆனால் நம்மால் அதைக் கைப்பற்ற முடியாது” என்றனர். “அவர்கள் தேவனுடைய நற்கிரியையை ருசி பார்த்தனர், அவர்கள் பரிசுத்த ஆவியை ருசி பார்த்து, அதன் நன்மையைக் கண்டிருந்தனர், அதை ருசி பார்த்திருந்தனர், அவர்கள் தேவனுடைய வார்த்தையை ருசி பார்த்தனர்…” அதைப் பார்த்தீர்களா? அப்படியிருந்தும், அவர்களில் ஒருவர் கூட வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் சொந்த தேசத்திலேயே, வனாந்தரத்திலே அழிந்துபோயினர். அவர்கள் கடந்து உள்ளே பிரவேசிக்கவில்லை, அதேசமயத்தில் அதை ருசிபார்க்கும் அளவுக்கு அவர்கள் போதிய அருகாமையில் வந்தனர். ஆனால் அதை சுதந்தரித்துக் கொள்ள அவர்களுக்கு போதிய கிருபையும் விசுவாசமும் இருக்கவில்லை. அதுதான் அது.

99177 இப்பொழுது, இந்த கடிதம் எழுதின அந்த அருமையான நபர் என்ன சொல்லுகிறார் என்று இப்பொழுது கேளுங்கள். நாம் அடுத்த வசனத்தைப் படிப்போம். ஒரு நிமிடம் கவனியுங்கள். பவுலைக் கவனியுங்கள். இப்பொழுதும் நாம் 7-ம் வசனத்தைப் படிப்போம்: எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதங்களைப் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிதற்கேற்றதாயுமிருக் கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. 178 இப்பொழுது, அவன் என்ன சொல்லுகிறான் என்று பார்த்தீர்களா? இப்பொழுது கவனியுங்கள். இதுவே இங்குள்ள கேள்வியாயிருந்தது; இப்பொழுது, அதன்பிறகு நாம் முடித்துவிடுவோம்…இந்தக் காரியம் அநேக ஆண்டுகளாக என்னைக் கொல்வதுபோல இருந்தது.

100179 ஒரு முறை நான் இந்தியானாவிலுள்ள, மிஷாவாகா என்னுமிடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்கு சென்றிருந்தேன், அங்கு ஜனங்கள் அந்நியபாஷை பேசிக்கொண்டிருந்தனர். இப்பொழுது, என் சொந்த கூட்டத்தினரின் முன்னிலையில் நான் இருக்கிறேன். நீங்கள் அந்த ஜனங்களைக் குறித்து…என் சுய சரிதையில் நான் கூற கேட்டிருக்கிறீர்கள், அந்த கறுப்பு மனிதன், “இதோ அவர், இதோ அவர்” என்று கூறினதையும் நான் கூறக் கேட்டிருக்கிறீர்கள். இப்பொழுது, அதை நான் உங்களிடம் கூறிவிட்டேன். 180 ஆனால் அதன் மற்ற பாகம்: நான் இரண்டு மனிதர்களை அங்கு கண்டேன். அவர்கள்…ஒருவர் அந்நியபாஷையில் ஒரு செய்தி கொடுப்பார், மற்றவர் அதற்கு அர்த்தம் உரைப்பார். ஒருவர் அந்நியபாஷையில் ஒரு செய்தி கொடுப்பார், மற்றவர் அதற்கு அர்த்தம் உரைப்பார். சகோதரனே, அவர்கள் அதில் சரியாக இருந்தனர். இது சற்று…அப்பொழுது நான், “என்ன ஆச்சரியம்! இப்படிப்பட்ட ஒன்றை நான் இதுவரை கண்டதில்லை” என்று நினைத்தேன். மேலும் நான், “தேவதூதர்களின் மத்தியில் நான் இருக்கிறேன்” என்று எண்ணினேன். இப்படிப்பட்ட ஒன்றை நான் இதுவரை கண்டதில்லை என்றே நான் நினைத்தேன்…ஒருவர் அந்நிய பாஷை பேசுவார், மற்றவர்…

101181 அங்கு ஒரு வயோதிக பிரசங்கி ஒருவருடன் நான் உட்கார்ந்துகொண்டிருந்தேன், நீங்கள்… [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] … இருவரும் சில நேரத்தில் தங்களுடைய கரத்தைக் குலுக்கிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒன்றை நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் கண்டதேயில்லை. ஒருவர் அந்நியபாஷையில் ஒரு செய்தி கொடுப்பார், மற்றவர் அதற்கு அர்த்தம் உரைப்பார். என்னே, என்னே! அது மிகவும் அற்புதமாயிருந்தது! ஒருவர் பேசி, மற்றவர் அர்த்தம் உரைப்பார். இருவரும்…அவர்கள் தங்கள் கைகளை உயர்த்தும்போது, அவர்கள் முகம் சுண்ணாம்பு போன்று வெளுத்துவிடும். அப்பொழுது நான், “ஓ, என்னே, என்னே, என் வாழ்க்கை பூராவும் நான் எங்கிருந்தேன். இதுதான் அந்தக் காரியமே!” என்று எண்ணினேன். மேலும் நான், “என்னே, பெந்தெகொஸ்தேக்கள் சரியாயுள்ளனரே” என்று கூறிக்கொண்டேன். அது முற்றிலும் உண்மை. 182 இங்கு சுற்றிலும் நடப்பதைத் தவிர, நான் எதையுமே ஒருபோதும் இவ்வாறு கண்டதில்லை, அங்கே…ஒரு சில ஸ்திரீகள் எங்காவது ஒரு ஊழியத்தில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் சண் டையிட்டுக் கொள்வார்கள்; ஒருத்தி மற்றவளை, “சண்டைக் கோழியே” என்று அழைப்பாள்…உங்களுக்கு தெரியும், அதைப் போன்றே, இப்படியாக அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஸ்திரீகளை நான் அவமதிப்பதாக கருத வேண்டாம். ஆனால் சற்று…அது—அது மிகவும் தாழ்வான நிலையில் இருந்தது. உங்களில் யாராவது…சகோதரன் கிரகாம், உங்களுக்கு ஞாபகமிருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் சிறு பையனாக இருந்தீர்கள். எனவே, அந்தவிதமாகத்தான் அது இருந்து வந்தது. நான் அதைக் கேட்டபோது, “ஓ, என்னே, நான் தேவதூதர்களை சந்தித்துவிட்டேன்” என்றே நான் எண்ணினேன்.

102183 ஒருநாள் நான் வீட்டின் மூலையைச் சுற்றி வந்துகொண் டிருந்தபோது, கிட்டத்தட்ட இரண்டாம் நாள், அவர்களில் ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது. நான், “ஐயா, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவரும், “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். மேலும் அவர், “…உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டார். நான், “பிரான்ஹாம்” என்றேன். அவர், “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இங்கிருந்தா?” என்று கேட்டார். அதற்கு நான், “இல்லை, நான் ஜெபர்ஸன்வில்லிருந்து வருகிறேன்” என்றேன். அவர், “ஓ, அது அருமையானது. நீங்கள் பெந்தெகொஸ்தேக்காரரா?” என்று கேட்டார். நான், “இல்லை, ஐயா, நான் அதைச் சேர்ந்தவன் அல்ல” என்றேன். மேலும் நான், “பரிசுத்த ஆவியைப் பெற பெந்தெகொஸ்தேயினர் பின்பற்றும் வழிமுறையை நான் ஏற்றுக்கொள்வதில்லை” என்றும், நான், “எப்படியாயினும்” என்று கூறி, “நான் கற்றுக்கொள்ளவே இங்கு இருக்கிறேன்” என்று நான் கூறினேன். 184 அவர், “பாருங்கள், அது மிகவும் அருமையானது” என்றார். அவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய ஆவியை என்னால் பகுத்தறிய முடிந்தது (கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயைப்போல்), அவர் ஒரு உண்மையான கிறிஸ்தவராயிருந்தார். சகோதரனே, அவர் சரியானவராகத் தென்பட்டார் என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். அவர் நல்லவராயிருந்தார். இப்பொழுது, நீங்கள் எல்லோரும் …உங்களில் எத்தனை பேர் என் கூட்டங்களில் இருந்து, அந்தக் காரியங்கள் சம்பவிக்கிறதைக் கண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு புரிகிறதா? அந்த மனிதன் எல்லாவிதத்திலும் சரியானவராக இருந்தார். எனவே அப்பொழுது, நான்—நான், “அங்கேதான்! என்னே, எவ்வளவு அற்புதம்!” என்று எண்ணினேன்.

103185 சுமார் அன்று மாலையளவில், எப்பொழுதோ பிற்பகலில், அந்த மற்ற மனிதனை நான் சந்தித்தேன். அப்பொழுது நான், “ஐயா, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவரும், “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? உங்கள் பெயரென்ன?” என்று கேட்டார். நான் என் பெயரைக் கூறினேன். அவர், “…நீங்கள் ஒரு பெந்தெ கொஸ்தேக்காரரா?” என்று கேட்டார். நான், “இல்லை, ஐயா! நான் அவ்வாறு நினைக்கவில்லை, நான் சரியான பெந்தெகொஸ்தேக்காரனல்ல” என்றேன். மேலும் நான், “நான் கற்றுக்கொள்ளவே இங்கு வந்திருக்கிறேன்” என்றேன். அவர் கூறினார், நான் கூறினேன், அவர், “நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்களா?” என்று கேட்டார். நான், “எனக்குத்—எனக்குத் தெரியாது” என்றேன். “நீங்கள் எல்லோரும் அதை பெற்றிருக்கிறபடி, நான் அதைப் பெற்றிருக்கவில்லை என்று நான் யூகிக்கிறேன்” என்றேன். அவர், “நீங்கள் எப்பொழுதாவது அந்நியபாஷை பேசியிருக்கிறீர்களா?” என்றார். நான், “இல்லை, ஐயா!” என்றேன். அவர், “அப்படியானால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை” என்றார். 186 நான், “பாருங்கள், நான்—நான் அது சரியென்று யூகிக்கலாம்” என்றேன். நான், “எனக்குத் தெரியவில்லை. நான் குறைந்தது இரண்டு ஆண்டுகளாக பிரசங்கித்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறி, “எனக்கு அதைக் குறித்து அதிகம் தெரியாது” என்று நான் கூறினேன். மேலும் நான், “எனக்குத் தெரியாமலிருக்கலாம்” என்றேன். நான் தொடர்ந்து, “என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை…” என்றேன். காரணம் என்னவென்றால், நான் அங்கே அவருடைய ஆவியை பகுத்தறியும்படிக்கு (புரிகிறதா?), அவரைப் பிடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன். நான் பகுத்தறிந்தபோது, நான் எப்பொழுதாகிலும் ஒரு மாய்மாலக்காரனை சந்தித்திருந்தால், இவர் அவர்களில் ஒருவர். அவருடைய மனைவி கருமை நிறத் தலைமுடியைக் கொண்டவள்; ஆனால் இவரோ பழுப்பு நிறத் தலைமுடியைக் கொண்ட ஒரு ஸ்திரீயுடன் வாழ்ந்து வந்து, அவள் மூலம் இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன; ஆனால் அந்நியபாஷை பேசுதல், அர்த்தம் உரைத்தல் போன்றவைகளில் அவர் பிழையற்றவராக இருந்தார். நானோ, “இப்பொழுது கர்த்தாவே, நான் எதற்குள் பிரவேசித்துவிட்டேன்?” என்றேன். தேவதூதர்களிடமிருந்து, நான் எதற்குள்ளிருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான், “நான்—நான்—நான் அடிப்படை கொள்கைக்காரன்; அது வேதாகமத்தில் இருக்க வேண்டும். அது சரியாயிருக்க வேண்டும். கர்த்தாவே, எங்கோ தவறுள்ளது. இது எப்படி முடியும்?” என்றேன்.

104187 அன்றிரவு நான் கூட்டத்துக்கு சென்றிருந்தேன், அந்த ஆவி அங்கு விழுந்தது; சகோதரனே, உங்களால் அதை உணர முடியும், அது பரிசுத்த ஆவியாயிருந்தது. ஆம், ஐயா! அப்படி இல்லையென்றால், அது பரிசுத்த ஆவியென்று என்னுடைய ஆவியிடம் அது சாட்சி கொடுத்திருக்க முடியாது. நான் அப்பொழுது ஒரு வாலிபப் பிரசங்கியாயிருந்தேன், அப்பொழுது ஒரு ஆவியைப் பகுத்தறிதலைக் குறித்து நான் அவ்வளவு அதிகமாக அறிந்திருக்கவில்லை. ஆனால் நான் அங்கு உட்கார்ந்துகொண்டிருந்தேன். என்னை இரட்சித்த அதே தேவன் அதே உணர்வை எனக்குத் தந் தருளினார் என்று நான் அறிந்திருந்தேன்… நான் மேற்கூரையினூடாக சென்று கொண்டிருப்பதைக் போன்று உணர்ந்தேன், அது அந்தக் கட்டிடத்தில் அப்படிப்பட்ட ஒரு அற்புதமான உணர்ச்சியாயிருந்தது. நான் நினைத்தேன்… 188 அங்கு ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தனர். நான், “என்னே, ஓ, என்னே!” என்று நினைத்தேன். இரண்டு மூன்று குழுக்கள் அங்கு ஒன்று கூடியிருந்தன. அப்பொழுது நான், “சொல்லுங்கள், என்னே! இது எப்படி இருக்க முடியும்? இப்பொழுது, அந்த மகத்தான ஆவி இந்த கட்டிடத்தில் அந்த விதமாக விழுகிறது; இங்கே, அங்கு நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால், அந்த நபர்கள் அந்நியபாஷைகளில் பேசி, அதற்கு அர்த்தம் உரைத்து, பிழையின்றி செய்தி கொடுத்து வருகின்றனர்— ஆனால் அவர்களில் ஒருவர் மாய்மாலக்காரர், மற்றவர் ஒரு உண்மையான தேவனுடைய மனிதனாயிற்றே” என்று எண்ணினேன். மேலும் நான், “இப்பொழுது, நான் முற்றிலும் குழப்பமடைந்துள்ளேனே. என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லையே” என்று எண்ணினேன்.

105189 பாருங்கள், அதன்பிறகு உடனடியாக, என்னுடைய நல்ல நண்பர் ஒருவர், சகோதரன் டேவிஸ் (உங்களுக்குத் தெரியும்), என்னை ஒரு கூத்தாடி பொம்மை என்று சொல்ல ஆரம்பித்தார். அது ஒரு சிறுமியினுடைய விளையாட்டுப் பொருள் என்று உங்களுக்குத் தெரியும். எனவே, அப்பொழுது நான் விவாகமாகாமலிருந்தேன், எனவே நான்…அவர் என்னோடு அவ்வாறு கூறத் தொடங்கி, தொடர்ந்து என்னை கேலி செய்துகொண்டே வந்தார். 190 எங்களுக்கு ஒரு சிறு…உங்கள் தாயும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வெவ்வேறு இடங்களில் சிறு கூட்டங்கள் நடத்தி வந்தோம். அப்பொழுது நான் அந்த நேரத்தில் இந்த கூடாரத்தை நடத்திக் கொண்டிருக்கவில்லை, நாங்கள் வெவ்வேறு இடங்களில் சிறு கூட்டங்கள் நடத்தி வந்தோம். முடிவில் அநேக ஆண்டுகள் கழித்து ஒருநாள், இந்த கூடாரம் கட்டி முடிந்த பின்பு, நான் ஜெபம் செய்வதற்காக கிரீன்மில் என்னுமிடத்திலுள்ள என் குகைக்கு சென்றேன், ஏனெனில் சகோதரன் டேவிஸ் என்னைக் குறித்து பயங்கரமான காரியங்களை—தமது பத்திரிக்கையில் எழுதி வந்தார். நான் அவரை நேசித்தேன். ஒன்றும் நேரிடக்கூடாதென்று நான் விரும்பி, அவருக்காக நான்—நான் ஜெபிப்பதற்காக அங்கே சென்றிருந்தேன். நான் அங்கு சென்று, குகைக்குள் நான் பிரவேசித்தேன். அங்கு சுமார் இரண்டு நாட்கள் தங்கினேன். நான், “கர்த்தாவே, அவரை மன்னியும். அவர்—அவர் அதை வேண்டுமென்று—வேண்டுமென்று செய்யவில்லை” என்றேன். மேலும் நான், “உங்களுக்கு தெரியுமா…” எண்ணினேன். அப்பொழுது நான் ஒரு வேதவாக்கியத்தைக் குறித்து சற்று சிந்தித்துப் பார்க்க நேர்ந்தது.

106191 நான் வெளியே சென்றேன். அங்கு ஒரு மரக்கட்டை இருந்தது (அந்த மரக்கட்டை இப்பொழுதும் அங்குள்ளது, அண்மையில் அதன் மேல் நான் உட்கார்ந்தேன்) அது மலையின் கீழே, ஓடையிலிருந்து வரும் ஒரு சிறு பாதையில் உள்ளது. நான் அந்த மரக்கட்டைக்கு இரு புறமும் என் கால்களை போட்டு உட்கார்ந்து கொண்டு, அங்கே தூரத்தில்—தூரத்திலுள்ள மலையைப் பார்த்துக் கொண்டே, என் வேதாகமத்தை மரக்கட்டையின் மேல் இப்படி வைத்தேன். நான் நினைத்ததோ, “உங்களுக்குத் தெரியுமா…” நான் ஒரு வேதவாக்கியத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன்: அதாவது, “கன்னான் எனக்கு வெகு தீமை செய்தான் என்று கூறப்பட்ட காரியங்கள்.” உங்களுக்குத் தெரியுமா…நான், “அதை நான் படிக்கலாமே என்று நினைத்து” இவ்வாறு எண்ணிக்கொண்டேன். நான் வேதாகமத்தை திறந்தேன், நான், “பாருங்கள்…” கூறிக் கொண்டேன். என் முகத்தை நான் துடைத்தேன், அப்பொழுது காற்று அடித்து, வேதாகமத்தை எபிரேயர் 6-ம் அதிகாரத்துக்கு திருப்பியது. “பாருங்கள்,” நான், “அந்த வேதவசனம் அங்கில்லையே” என்று சொல்லிக்கொண்டேன். நான் வேதாகமத்தை திரும்பவும் இந்தவிதமாக அதன் மேல் வைத்தேன். அப்பொழுது காற்று மறுபடியும் அடித்து அதை மறுபடியும் எபிரேயர் 6-க்கு திருப்பினது. அப்பொழுது நான், “இப்பொழுது, இது விசித்திரமாயுள்ளதே, காற்று மறுபடியும் அந்த வேதபாகத்திற்கே திருப்பியுள்ளதே” என்று கூறிக்கொண்டேன். எனவே நான், “பாருங்கள், அதை படிக்கலாம் என்று நினைத்து” இவ்வாறு எண்ணிக்கொண்டேன். அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: ஏனெனில் ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும்,…பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய…வார்த்தையும், இனிவரும் பெலன்களையும் ருசி பார்த்தும்,…கூடாத காரியம். நான், “பாருங்கள், அதில் ஒன்றையும் நான் காணவில்லையே” என்று நினைத்தேன். அதற்கு கீழே, அதிகாரம் முழுவதையும் படித்தேன். அதில் ஒன்றுமில்லை. நான், “பாருங்கள், அதுவே—அதுவே அதனைத் தீர்த்துவைக்கிறது” என்று கூறிக்கொண்டேன். நான்—நான் அதை இந்தவிதமாக பார்த்துவிட்டு வைத்தபோது, மறுபடியுமாக காற்று அதே இடத்திற்குத் திருப்பினது. அப்பொழுது நான் வேதாகமத்தை கையிலெடுத்து, நான், “சரி, இது என்ன?” என்று கூறிக்கொண்டேன். எனவே நான் அதை தொடர்ந்து வாசித்துக்கொண்டே, அதை வாசித்துக்கொண்டே, அதை வாசித்துக் கொண்டேயிருந்தேன், அப்பொழுதும் நான், “சரி, என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்றே கூறிக்கொண்டேன். அதன்பிறகும் நான் தொடர்ந்து வாசித்தேன்…நான் கீழே வாசித்தேன்: … ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும்,…கூடாத காரியம். அது கீழே இங்கே இவ்வாறு கூறப்பட்டுள்ள இடத்திற்கு வந்தது: எப்படியெனில், தன் மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதங்களைப் பெறும். முள்செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக் கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் நியாயத்தீர்ப்பு.

107192 மேலும் நான், “அதன் அர்த்தம் என்னவென்று தெரியவில்லையே?” என்றே கூறிக்கொண்டேன். நான் சற்று…இப்பொழுது, நான் அப்பொழுது அங்கே எதைக் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. நான் அப்படியே அதையே சிந்தித்துக்கொண்டிருந்தேன். நான் அங்கு உட்கார்ந்துகொண்டிருந்தபோது, சகோதரன் டேவிஸைக் குறித்தும் மற்றவர்களைக் குறித்தும் அங்கே கர்த்தர் எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுப்பார் என்று நான் நினைத்தேன். நான் அங்கு உட்கார்ந்துகொண்டிருந்தேன்; நான் நோக்கிப் பார்த்தபோது, எனக்கு முன்னால் இருந்த குழியில் ஏதோ ஒன்று சுழலுவதைக் கண்டேன். அது ஒரு உலகம் சுழன்று கொண்டிருந்ததாயிருந்தது. அது முழுவதும் வெடிப்புற்றிருந்ததைக் கண்டேன், முழுவதுமாக உழப்பட்டிருந்தைப் போன்று காணப்பட்டது. அப்பொழுது விதைகள் நிறைந்த ஒரு—ஒரு—ஒரு பெரிய பாத்திரத்தை தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு ஒரு மனிதன் புறப்பட்டுச் சென்றார். அவர் சென்றபோது, பூமி முழுவதும் விதை விதைத்துக்கொண்டே சென்றார். அவர் பூமியின் வளைவை சுற்றிச் சென்று, என் கண்களுக்கு மறைந்து போனார். அவர் என் கண்களுக்கு மறைந்து போனவுடனே, உண்மையாகவே இழிவான தோற்றமுடைய ஒரு மனிதன், கறுப்பு உடைகளை அணிந்து, இப்படி சுற்றிச் சுற்றிச் சென்று, வ்வுயூ, வ்வுயூ, வ்வுயூ, வ்வுயூ என்று கெட்ட விதைகளை விதைத்துக்கொண்டே சென்றான். நான் அதை கவனித்தேன், பூமி தொடர்ந்து சுழன்று கொண்டேயிருந்தது…

108193 சிறிது கழித்து, கோதுமை பயிர் வளர்ந்து மேலே வந்தது. கோதுமை பயிர் மேலே வந்தபோது, அங்கே முட்செடிகளும், முட் பூண்டுகளும், களைகளும் கோதுமை பயிரின் மத்தியில் வளர்ந்து மேலே வந்தன. அவையனைத்தும் வளர்ந்தன, பால் களைச் செடிகளும், மற்றுமுள்ள யாவும் ஒன்றாகவே கோதுமையோடு வளர்ந்தன. அவை யாவும் வளர்ந்து கொண்டேயிருந்தன. அப்பொழுது உண்மையாகவே ஒரு மோசமான வறட்சி உண்டாகி, கோதுமைப் பயிர் இப்படி தலையை தொங்கவிட்டன, சிறு களைககள், முட்செடி, முட்பூண்டு, களை இவையனைத்தும் தலையை தொங்கவிட்டன. ஒவ்வொரு களையும் [சகோதரன் பிரான்ஹாம் பெருமூச்சு விடுவது போல் சப்தம் உண்டாக்குகிறார்—ஆசி.] இப்படி பெருமூச்சுவிட ஆரம்பித்ததன. உங்களால் அதைக்கேட்க முடியும். அவையனைத்துமே மழை, மழையையே அழைத்துக்கொண்டிருந்தன. 194 சிறிது கழித்து, மிகப் பெரிய ஒரு மேகம் தோன்றி, மழை பெய்து, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினது. அது அங்கு விழுந்தபோது, கோதுமை பயிர் குதித்து, “மகிமை, அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத் திரம்!” என்று ஆர்ப்பரிக்கத் துவங்கியது. அதே நேரத்தில் சிறு களையும் மேலே குதித்து, “மகிமை, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அல்லேலூயா!” என்றது. முட்களும் மற்ற யாவும் வயலைச் சுற்றி நடனமாடி, “மகிமை, அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று ஆர்ப்பரித்தன. சரி, ஆனால் நான், “என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்று கூறிக்கொண்டேன்.

109195 அந்த தரிசனம் என்னை விட்டு நீங்கினது; அப்பொழுது நான் அதன் பேரில் மீண்டும் யோசித்தேன்: “முள் செடிகளை முளைப்பிக்கிற நிலமோ தகாததாயுமிருக்கிறது.” அப்பொழுது நான் அதைப் புரிந்துகொண்டேன். இயேசு, “மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது” என்றார். ஒரு மனிதன் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு உண்மையாகவே பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் போலவே அந்நியபாஷை பேசி, அவர்களைப் போலவே நடந்து கொண்டு, அதே சமயத்தில் தேவனுடைய ராஜ்யத்தில் இல்லாமல் இருக்க வகையுண்டு. அது முற்றிலும் உண்மை. இயேசு, “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி, ‘கர்த்தாவே, உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் (பிரசங்கித்தோம்) அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?’ என்பார்கள் என்று கூறவில்லையா?” இயேசு, “அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” என்றார். அதைக் குறித்து எப்படி?

110196 இதுதான் இங்கே அதன் சரியான அர்த்தமாயுள்ளது. புரிகிறதா? அவைகள் வானத்திலிருந்து வந்த நல்ல மழையை ருசி பார்த்தன. ஆனால் தொடக்கத்திலேயே, அவர்கள் தவறாயிருந்தனர். தொடக்கத்திலேயே அவர்கள் நோக்கங்கள் சரியாயிருக்கவில்லை; அவர்களுடைய குறிக்கோள்களும் சரியாயிருக்கவில்லை. அது, உங்களால் சொல்ல முடியாது. அந்த…உங்களுக்கு தெரியும், அறுப்புக் காலத்தில் அவன், “நான் போய் அவைகளையெல்லாம் பிடுங்கிப் போடலாமா?” என்று கேட்டான். 197 அவர், “அவைகளை அறுப்பு மட்டும் வளரவிடுங்கள், அந்நாளில் இந்த முள்செடிகளும் முள்பூண்டுகளும் ஒருமித்து சுட்டெரிக்கப்படும், கோதுமையோ களஞ்சியத்தில் சேர்க்கப்படும்” என்றார். இப்பொழுது, உங்களுக்கு எது ஒரு முள்செடி, அல்லது எது ஒரு முள்பூண்டு, அல்லது எது ஒரு கோதுமை என்று எப்படி அறிந்துகொள்ளப் போகிறீர்கள்? “அவைகளுடைய கனிகளினால் அவைகளை அறிவீர்கள்.” நீங்கள் பாருங்கள், சகோதரனே, சகோதரியே, நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுக்காது. எப்படியிருந்தாலும், பாதையில் எங்காவது, அது உங்களை பிடிக்கப் போகிறது. எனவே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நீங்கள் நாடும்போது…அந்த கேள்வியை யார் எழுதியிருந்தாலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். புரிகிறதா?

111198 இப்பொழுது, அந்த காலத்து எல்லைக்கோடு விசுவாசிகள், அவர்கள் அவைகளோடு சரியாகத் தான் இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய விருத்தசேதனத்தின்படி விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் தேவன் வாக்களித்த தேசத்துக்கு, அதனுடைய முனைவரைக்கும் சென்றனர். அநேகர், ஒரு மனிதன் அந்த முனைவரைக்கும் வருகிறான். அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறும் நிலைவரைக்கும் வந்து, அதை புறக்கணிப்பான். அவன் அதை விட்டுவிடவும் விரும்புகிறதில்லை. அவன் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் வேதாகம ஞானஸ்நானம் வரைக்கும் வந்து, பின்னர் புறமுதுகினைக் காட்டி, அதை காணாக் கூடாமல் புறக்கணிப்பான். 199 பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் எவராகிலும் எப்போதாகிலும் ஞானஸ்நானம் பெற்றதாக வேதாகமத்தில் ஒரு வேத வசனம் கூட இல்லை. கத்தோலிக்க சபை அதைத் தொடங்கி, அது லூத்தர், வெஸ்லி அவர்களின் வழியாக வந்து, இது வரைக்கும் நிலைத்திருக்கிறது. அது முற்றிலும் உண்மை. ஆனால் வேத ஒழுங்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானமே. அதுவே அப்போஸ்தலர்கள் கொடுத்த ஞானஸ்நானம். அந்த நாமத்தில் நீங்கள் ஞானஸ் நானம் பெற்று ஒரு ஸ்தாபனத்தில் இருக்க முடியாது. அது உண்மை.

112200 இப்பொழுது, அந்த காரியங்கள் உங்களுக்கு புரிகிறதா? பரிசுத்த ஆவியின் அபிஷேகம், ஆவியின் வரங்கள், தேவன் அளிக்கும் காரியங்கள்… ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், நீடிய பொறுமை (ஓ, நீங்கள், “ஆனால் சகோதரன் பிரான்ஹாமே, தேவனுக்கு ஸ்தோத்திரம். நான் நீடிய பொறுமையோடிருந்து கொண்டிருக்கிறேன்” என்கிறீர்கள். அது அப்படித்தான் தென்படுகிறது. அண்மையில் நான் ஓஹையோவுக்கு சென்றிருந்த போது, யாரோ ஒருவர், நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேனோ என்று ஒரு கடிதம் எழுதி என்னைக் கேட்டிருந்தார். நான் ஒரு வார்த்தையும் கூறவில்லை. ஆனால் எப்படியோ அவர்கள் அதைக் கண்டு கொண்டனர், அப்பொழுது ஒத்துழைப்பு கொடுத்த பதினாறு போதகர்கள் பிரிந்து சென்று விட்டனர். அது நீடிய பொறுமையாயிருக்கவில்லையே!)—நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், பொறுமை, மற்றும் பரிசுத்த ஆவி. புரிகிறதா?

113201 ஓ, சகோதரனே, சகோதரியே, நாம்—நாம் காதேஸ்பர்னேயாவில் இருக்கிறோம். இப்பொழுது நீங்கள் ருசி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நேற்றிரவு பரிசுத்த ஆவி நம்மேல் விழுந்தது, அது ஒரு பலத்த காற்று போல் நம்மேல் வந்தது. உங்களில் அநேகர் மேல் அது அமர்ந்தது. இன்றைக்கு போதகர்கள் இங்கும் அங்கும் வீடுகளுக்குச் சென்று, பரிசுத்த ஆவியை நாடுபவர்களின் மேல் தங்கள் கரங்களை வைத்து அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். வேறொன்றையும் அதற்கு பதிலாக நீங்கள் ஏற்றுக்கொள்ளாதீர்கள். ஒருவிதமான சத்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதீர்கள். ஒருவிதமான உணர்ச்சியை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதீர்கள். தேவன் உங்களை வனைந்து, ஒரு புது சிருஷ்டியாக, ஒரு புது நபராக்கும் வரைக்கும் நீங்கள் அங்கு காத்திருங்கள். இப்பொழுது நீங்கள் ருசிபார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அதை ருசி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள், ஆனால் புறா உங்களை மேசையண்டை வழிநடத்த இடங் கொடுங்கள், மற்றும்—மற்றும் அங்கு ஆட்டுக் குட்டியும் புறாவும் ஒருமித்து உட்கார்ந்துகொண்டு, தேவனுடைய வார்த்தையை என்றென்றைக்கும் புசித்துக்கொண்டிருப்பார்கள். வானமும் பூமியும் இல்லாமல் ஒழிந்துபோனாலும் அது நிலைநிற்கும்; தேவனுடைய வார்த்தை நிலைத்திருக்கும். அது உண்மை.

114202 நான் தீவிரமானவன் என்று தயவுசெய்து எண்ண வேண்டாம். நான் அப்படி இருந்திருந்தால், அப்படியிருக்க வேண்டுமெனும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. நான்…இந்த கேள்விகளுக்கு நான் பதிலளித்துள்ளேன் என்று நான் நம்புகிறேன்; என் அறிவிற்கெட்டின மிகச் சிறந்த முறையில் நான் பதிலளித்துள்ளேன். 203 எனவே, எபிரெயர் 6-ம் அதிகாரத்தில், நீங்கள் பார்ப்பீர்களானால், பவுல், “சரி, நாங்கள் இதுவரை உங்களுடன் கூட வருவோம்” என்று கூறின எபிரெயர்களிடத்தில் இதை கூறிக்கொண்டிருக்கிறான். அவர்கள் அதுவரைக்கும் வருவார்கள். நீங்கள் பார்த்தீர்களா? “இப்பொழுது நீங்கள்…” என்றான். அது வரைக்கும் வந்து ருசி பார்த்துள்ளவர்கள்.

115204 நான் இந்த கட்டிடத்திற்குள் பின்னால் நோக்கிப் பார்க்க நேர்ந்தது. ஒரு ஜீவிக்கிற தேவனின் அத்தாட்சியை உங்களுக்கு காண்பிக்கப் போகின்றேன். இந்த மனிதனை நான் வெளிப்படுத்திக் கூறவில்லையென்று நான் நம்புகிறேன். அண்மையில் நான் ஒரு கூட்டத்திலிருந்து வந்தபோது, ஒரு நல்ல நண்பர் என்று உங்களிடம் அறிவித்தேன், என்னுடைய தனிப்பட்ட ஒரு நண்பர், ஒரு வேட்டைக் கூட்டாளி, எனக்கு ஒரு நல்ல மனிதனாகவே இருந்து வந்தவர், என் சபைக்கு வந்திருந்திருந்த ஒரு மனிதன், என் சகோதரனாயிருந்து வந்தவர்; அவரை நான் பஸ்டி என்றழைத்தேன். அவருடைய பெயர் எவரட் ராட்ஜர்ஸ்; அவர் மில்டவுனில் வசித்தார். அவரைக் குறித்து இங்கு நான் அறிவித்தது எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது? அவர் இங்கு மருத்துவமனையில் படுத்திருந்தார்; மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரைக் அறுவை சிகிச்சை செய்து திறந்து பார்த்தபோது, அது புற்று நோயால் முழுவதும் பீடிக்கப்பட்டிருந்தபடியால், அவர்கள் அவருடைய வயிற்றை மறுபடியும் தைத்துவிட்டனர். “அவர் இப்பொழுதே படிப்படியாக நலங்குன்றிவிடுவார்; இன்னும் சில வாரங்களில் அவர் இறந்து விடுவார்; அவருக்குள்ளதெல்லாம் அவ்வளவுதான். அவர் மரித்துப் போய்விடுவார், அவ்வளவுதான்” என்றனர். 205 நான் இங்கே மேடையின் மேல் நின்றுகொண்டு அவருக்காக ஜெபம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் அங்கு சென்று அவரிருந்த அறைக்குள் நுழைந்தேன், என் இருதயத்தை ஏதோ ஒன்று ஏவிக் கொண்டிருந்தது. நான் அறைக்குள் நடந்து சென்று எல்லோரையும் வெளியே அனுப்பி விட்ட பிறகு…சகோதரன் எவரட் அங்கு படுத்திருந்தார். இது உங்களுக்கு ஞாபகமிருக்கும், நான் உள்ளே நடந்து சென்றேன்; நான், “சகோதரன்—சகோதரன் பஸ்டி” என்றேன். (அவரை பஸ்டி என்று நான் அழைத்தேன்.)

116206 அநேக நாட்களுக்கு முன்பு நாங்கள் பிரஷ் ஆர்பர் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோது, மலையின் மேலுள்ள மெதோடிஸ்டுகள் அனைவரும் (கெர்டி, அவர்களில் ஒருத்தி), மெல்ல நழுவி, நான் என்ன கூறப்போகிறேன் என்பதை கேட்க, அந்தவிதமாக கிரேப் ஆர்பரின் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். மெதோடிஸ்டு சபை அவர்களை வெளியேற்றிவிடுமோ என்னும் பயம் இருந்தது. பிறகு, நான் அங்கு சென்றபோது, ஒரு தரிசனம் உண்டானது, அதில் ஒரு தகரக்குவளையில் முழுவதும் இறைச்சி குவிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். நான் சில மீன்களைப் பிடித்து, அவைகளைக் கயிற்றில்—அவைகளை கயிறுகளில் கட்டி, நான் அவைகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டேன். நான் பார்த்தபோது…இவை யாவும் ஒரு தரிசனத்தில் காணப்பட்டன; அன்றிரவு பிரஷ் ஆர்பரிலுள்ள ஒரு கூட்ட ஜனங்களை நான் விட்டுச்—விட்டுச் சென்று, மலையின் மேலுள்ள சகோதரன் ரைட் என்பவரின் வீட்டிற்கு சென்றேன். அடுத்த நாள் காலை, அவர்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான், “நீங்கள் யாருமே…” என்றேன். 207 நான் அங்கு நின்று கொண்டு பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, அந்த ஒளி அங்கே வந்து; அந்த அக்கினி ஸ்தம்பம் எனக்கு முன்னால் தோன்றி, “நீ இந்த இடத்தை விட்டு காட்டுக்குப் போ; நான் அங்கே உன்னுடன் பேசுவேன்” என்றது. அது அதே நாளாயிருந்து, அதற்கு அடுத்த நாள் அவர்கள் என்னை மலையின் மேல் கண்டு பிடித்தனர். நான் மலையின் மேல் சென்றிருந்தேன்; என் காரை புதரில் மறைத்துவிட்டு, இரவு முழுவதும் மற்றும் அதற்கடுத்த நாளும் ஜெபம் செய்துகொண்டிருந்தேன். சிலர் அங்கு வந்தனர், காரைக் கண்டு பிடித்துவிட்டபடியால் அங்கே வந்தனர்… அன்றுதான் இங்குள்ள சகோதரன் கிரகாம் ஸ்னெல்லிங் பரிசுத்த ஆவியைப் பெற்று, ஊழியத்திற்கு அழைப்பும் பெற்றார்.

117208 அங்கே அந்த மலையின் மேல் நான் படுத்திருந்தபோது, நான் செய்ய வேண்டிய வெவ்வேறு காரியங்களை அவர்—அவர் என்னிடம் கூறினார், நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். இந்த மீன்கள் கோர்வையாக கோர்க்கப்பட்ட ஒரு தரிசனத்தைக் அவர் கொடுத்து, “அது உன்னுடைய மில்டவுன் சபை” என்றார். அதிலிருந்து நான்கு அல்லது ஐந்து மீன்கள் விழுந்துவிட்டன; நான், “அவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அது கை ஸ்பென்ஸரும் அவருடைய மனைவியும். மற்றதோ அங்கிருந்த மற்ற ஸ்பென்ஸரும் அவரைச் சார்ந்தவர்களும்” என்றார். அவர் இன்னும் வேறுபட்ட மற்றவர்களையும், என்ன வீழ்ச்சி உண்டாகும் என்றும் கூறினார். 209 நான் அவர்களிடம் கூறினேன்; நான், “நீங்கள் யாரும் புசிக்க வேண்டாம்” என்றேன். அது என் மனைவிக்கும் எனக்கும்…அது எங்களுக்கு விவாகமாவதற்கு முன்பாயிருந்து; அவள் சகோதரி ஸ்பென்ஸருடன் வீட்டுக்குச் சென்று முழு இரவும் தங்கியிருந்தாள், ஒரு அற்புதமான ஸ்திரீ. கை ஸ்பென்ஸரும் அற்புதமான மனிதன், எல்லாரைப் பார்க்கிலும் ஒரு மிகச் சிறந்த அருமையான மனிதர். அவர்—அவர் அங்கு சென்றார், ஓபல் மேடாவிடம், “இப்பொழுது, பார்…” என்றாள். மேடாவிற்கு, அவள், “இப்பொழுது, மேடா, நான் சகோதரன் பில் சொல்வதை நம்புகிறேன்” என்றாள். மேலும் அவள், “ஆனால் ஓபலுக்கு பசியெடுக்கும்போது, அவள் பன்றி இறைச்சியும் முட்டையும் சாப்பிட வேண்டும்” என்றாள். எனவே அவள் அங்கு சென்று, தன்னுடைய பன்றி இறைச்சியும் முட்டையும் பொறித்து, மேசையினருகில் உட்கார்ந்து, ஜெபம் செய்து, சாப்பிடுவதற்காக மேசையின் மேல் குனிந்தபோது, அவளால் அதை தொடமுடியாமல் அழத் தொடங்கினாள். அதன்பிறகு அவர்கள் வேட்டையாட வந்தனர்.

118210 அந்த நாளன்று அங்கே மலையின் மேல், என்ன நடக்குமென்று அவர் சரியாக கூறிவிட்டார். அவர், “இவர்கள் போய்விடுவார்கள், அப்பொழுது இவர்கள் போய் விடுவார்கள்” என்றார். ஆனால் தகரக்குவளையில் அடைக்கப்பட்ட இறைச்சியை அவர் நிறைய வைத்திருந்தார். மேலும் அவர், “மில் டவுன் ஜனங்களுக்கு மேலும் உபயோகிப்பதற்காக இதை வைத்துக்கொள்” என்றார். அன்றொரு இரவு நான் சகோதரன் கிரீச் பேசுவதைக் கேட்டபோது…அவர் நேற்றிரவு இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தார். எனக்குத் தெரியவில்லை…சகோதரன் கிரீச், இன்றிரவு இங்கிருக்கிறீர்களா? சகோதரன் க்ரீச் என்னிடம் வந்து, என்னைக் கூப்பிட்டார், சகோதரி கிரீச் அழுதுகொண்டிருந்தாள்; அவளுடைய தந்தை அங்கு படுத்துக்கொண்டிருந்தார். அவள், “சகோதரன் பில், அவரிடம் சொல்ல வேண்டாம், அவர் மரித்துக் கொண்டிருக்கிறார்” என்றாள். மேலும், “புற்றுநோய் அவரைத் தின்றுவிட்டது; மருத்துவர்கள் அவர் வயிற்றை அறுத்து பார்த்தபோது, அவர் முழுவதும் புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்தார்” என்றாள். வில் ஹால் (அவரை உங்கள் அனைவருக்குமே ஞாபகமிருக்கும்), அதே மருத்துவர் அவர் வயிற்றை அறுத்து பார்த்தபோது, அவர் முழுவதும் புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்தார்…நான் அணில் வேட்டைக்காக அன்று காலை புறப்பட்டு சென்று விட்டேன். அந்த அறையில் ஆப்பிள் பழங்கள் தொங்குவதை நான் கண்டேன். (அந்த சம்பவம் உங்கள் அனைவருக்கும் ஞாபகமிருக்கிறதா?) அந்த மனிதன் இன்று உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இது அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அவரும் சகோதரன் பஸ்டியும் நண்பர்களாயிருந்தனர். 211 அந்த மருத்துவமனைக்கு, புதிய மருத்துவமனைக்கு நான் சென்றேன் (அங்கே நியூ ஆல்பனியிலுள்ள அதை அவர்கள் என்னவென்று அழைக்கிறார்கள் என்று நான் மறந்துவிட்டேன்) அந்த புதிய மருத்துவமனை. நான் பஸ்டியைக் காண அங்கு சென்றிருந்தேன்; நான் அறைக்குள் நுழைந்தபோது, “சகோதரன் பஸ்டி” என்றேன். அவர், “சகோதரன் பில்” என்றார். என் கையை இறுகப் பிடித்து பலமாக கைகுலுக்கினார்; அவர் முதலாம் உலக யுத்தத்தில் ஒரு இராணுவ வீரராக பணிபுரிந்தவர், அவருடைய முன்னிலையில் இதை நான் கூறவில்லை, ஆனால் அவர் மிகவும் சிறந்த ஒரு இருதயம் படைத்தவர. அவர் என் கையைப் பிடித்துக்கொண்டார். நான் அவருடைய வீட்டிற்கு சென்றிருக்கிறேன்; அவருடைய வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்; அவரு டைய வீட்டில் உறங்கியிருக்கிறேன், நான் அவருக்கு சகோதரனைப் போலிருந்தேன். அவருடைய பிள்ளைகளும் மற்றும் அனைவருமே, நாங்கள்—நாங்கள் இரத்த சம்மந்தமான உறவு கொண்ட சகோதரர்கள் போல் இருந்தோம். அருமையான மனிதன்.

119212 அவர்…ஆனால் அவர் கர்த்தரிடம் ஆழமான அனுபவத்துக்குள் வரவில்லை. அவர்…அவருக்கு நான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். ஆனால் அன்று அந்த மெதோடிஸ்டு போதகர், “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்ற எவரும், என் கூடாரத்தை விட்டு வெளியேறுங்கள்” என்றார். அது சரியானதாயிருந்து. அப்பொழுது ஜார்ஜ் ரைட்டும் மற்றவர்களும் வெளியே நடந்து வந்துவிட்டார்கள். அன்று பிற்பகல் நான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதற்காக டாட்டன் ஸ் ஃபோர்டுக்கு சென்றேன். அவருடைய சபையோர் அனைவருமே தண்ணீருக்குள் நடந்து இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். இவ்வாறு நான் சென்று கொண்டேயிருந்தேன். அது சரியானதாயிருந்தது. தேவன் உங்களுடைய பட்சத்தில் இருந்தால், உங்களுக்கு விரோதமாயிருப்பவன் யார்? அந்த மனிதன் எங்கு சென்றார், அவருக்கு என்ன நேர்ந்தது என்று கூட எனக்கு ஒன்றுமே தெரியாது. 213 எனினும், நான் மருத்துவமனைக்குள் நடந்து சென்றேன். அங்கு பஸ்டி புற்றுநோயினால் முழுவதும் பீடிக்கப்பட்டவராய் படுத்துக்கொண்டிருந்தார், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையும் கூட அளிக்கவில்லை, அவர் அசையாதபடிக்கு அவரை கட்டிலோடு சேர்த்து கட்டியிருந்தனர். பஸ்டி என்னிடம், “சகோதரன் பில், இது ஏதோ ஒரு நோக்கத்துக்காகவே இவ்வாறு நடந்துள்ளது. ஏதோ ஒன்று சம்பவித்தது” என்றார். அதற்கு நான், “ஆம், பஸ்டி” என்றேன். நான் இப்பொழுது உங்களிடம் கூறிக் கொண்டிருந்த அந்த ஆவி பலத்த காற்று அடிப்பதுபோல், உங்களுக்குத் தெரியுமா, உள்ளே நுழைவதை உணரத் துவங்கினேன். அவர் சொன்னார்…நான் அங்கே அறைக்குள் நடந்து சென்றபோது, அந்த மூலையில் ஒரு வானவில் காணப்பட்டு, அந்த மூலையில் நின்றுகொண்டிருந்தது. ஒரு வானவில் ஒரு உடன்படிக்கைக்கு அடையாளம்; தேவனுடைய உடன்படிக்கை. தேவன் அன்று அந்த மலையின் மேல் என்னுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். என் கரங்களை பஸ்டியின் மேல் வைத்து அவருக்காக ஜெபித்தேன். மருத்துவர்கள், “அவர் நலங்குன்றி விடுவார். அவர் மரித்துப் போய்விடுவார். ஒன்றுமே செய்வதற்கில்லை…அவர் இன்னும் சில நாட்களில் இறந்து போவார்” என்றெல்லாம் கூறினர். பஸ்டி ராட்ஜர்ஸ்…அது அநேக வாரங்களுக்கு, அநேக வாரங்களுக்கு, அநேக வாரங்களுக்கு முன்பு, பஸ்டி ராட்ஜர்ஸ், இன்றிரவு நான் என் ஜீவியத்தில் அவரைக் கண்டது போன்றே ஆரோக்கியமுள்ளவராய் பருமனடைந்து, இந்த சபையில் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சகோதரன் பஸ்டி எழுந்து நில்லுங்கள். அதோ அவர் இருக்கிறார். நாம், ஒவ்வொருவரும் தேவனுக்கு துதி செலுத்துவோமாக.

120அவர்கள் மேலறையில் ஒன்றுகூடி எல்லோரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, ஊழியத்துக்கான வல்லமை வந்தது. இப்பொழுது, அன்று அவர் அவர்களுக்கு என்ன செய்தாரோ, அவர் அதையே உங்களுக்கும் செய்வார். “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். இந்த ஜனங்கள் எவ்வித உரிமையையும் பாராட்டாமல் உலகத்தின் கீர்த்தியைக் குறித்து பெருமை பாராட்டாமல் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தங்களுடைய பெந்தெகொஸ்தேவைப் பெற்றுக்கொண்டு, இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றனர். இப்பொழுது அவர்கள் உலகின் எல்லா திக்குகளிலும், அவருடைய வல்லமை மாறாததென்று சொல்லி வருகின்றனர். “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன் (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். இப்பொழுது, என் சகோதரனே வந்து, இந்த ஆசீர்வாதத்தை நாடு அது உன் இருதயத்தைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்கும், அது சந்தோஷ மணிகளை ஒலிக்கத் துவங்கச் செய்து, உன் ஆத்துமாவை அனல்மூட்டும். ஓ, இப்பொழுது அது என் இருதயத்துக்குள் கொழுந்து விட்டு எரிகிறது, ஓ, அவருடைய நாமத்துக்கு மகிமை. “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (நாம் அதைப் பாடுவோமாக!) ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (உங்களில் எத்தனை பேர் அவர்களில் ஒருவராயிருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். ஓ, என்னே! ஓ, நான் அவர்களில் ஒருவனாக இருப்பதற்காக நான் எவ்வளவாக மகிழ்கிறேன்.) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். அவர்கள் மேலறையில் ஒன்று கூடி, எல்லோரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, ஊழியத்துக்கான வல்லமை வந்தது. இப்பொழுது, அன்று அவர் அவர்களுக்கு என்ன செய்தாரோ, அவர் அதையே உங்களுக்கும் செய்வார். “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். இப்பொழுது, அந்த பல்லவியை நாம் மறுபடியும் பாடும்போது, நீங்கள் ஒவ்வொருவரும் திரும்பி, உங்களுக்கு பக்கத்திலுள்ள யாராவது ஒருவரிடம் கைகுலுக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், “நீங்கள் அவர்களில் ஒருவரா?” என்று கேளுங்கள். புரிகிறதா? சரி. ஓ, அவர்களில் ஒருவன் (சகோதரன் நெவில், நீங்கள் அவர்களில் ஒருவர் என்று நான் அறிவேன், சகோதரன் காப்ஸ், நீங்கள் அவர்களில் ஒருவர் என்று நான் அறிவேன். நீங்கள்…நான் அறிவேன் …?… ) …அவர்களில் ஒருவன். ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன்.

121214 ஓ, நீங்கள் அவர்களில் ஒருவராக இருப்பதற்காக மகிழ்ச்சி கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. அவர்களில் ஒருவராக இருப்பதற்கு எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். சரி. இப்பொழுது, நான் இதை உங்களுக்காக பாடப் போகின்றேன். அப்படியானால் என் சகோதரனே, வந்து இந்த ஆசீர்வாதத்தை நாடு அது என் இருதயத்தைப் பாவத்திலிருந்து சுத்திகரித்து, அது சந்தோஷ மணிகளை ஒலிக்கத் துவங்கி, உன் ஆத்துமாவை அனல் மூட்டும். ஓ, இப்பொழுது அது என் இருதயத்துக்குள் கொழுந்து விட்டு எரிகிறது, ஓ, அவருடைய நாமத்துக்கு மகிமை. “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன். “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். 215 அந்த சிறு பெண் பேதுருவைப் பார்த்து, “நீயும் அவர்களில் ஒருவன் அல்லவா?” என்று கேட்டாள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நான் மிகவும் மகிழ்கிறேன், நீங்களும் அப்படித்தானே? உங்களுக்குத் தெரியும், பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு, “இதுதான் அது!” என்று கூறினான். இப்பொழுது, நான் எப்பொழுது, “ இது அதுவாக இல்லாவிட்டால், இதை பெற்றதற்காக நான் மகிழ்கிறேன். அது வருவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறேன். அது உண்மை. இதைக் குறித்து நான் மகிழ்கிறேன். ஏனெனில் நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன்.

122216 ஓ, கிறிஸ்து இயேசுவோடு கூட உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டு, ஆவியுடன் உரையாடி, வார்த்தையின் பேரில் உரையாடி, வரப்போகும் நன்மையான காரியங்களைக் குறித்து பேசுவது, இது அற்புதமானதல்லவா, அது மிகவும் நல்லது. அதைக் குறித்து அறிய நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன், நீங்களும் அப்படித்தானே? நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருப்பதில் மகிழ்ச்சி கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? உங்களுடைய பாவங்கள் இரத்தத்தின் கீழ் இருப்பதற்காக நீங்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? அவர் இந்நாட்களில் ஒன்றில் வருவார், நாம் அவருடன் சென்றுவிடுவோம். அப்பொழுது யோசித்துப் பாருங்கள், முதுமை பருவம் அனைத்தும் நம்மை விட்டு போய்விடும்; வியாதி, துன்பம் எல்லாம் போய்விடும், அழிந்து போகக்கூடிய இந்த வாழ்க்கையே மாறிவிடும். ஓ, என்னே! இங்கு நின்ற அருமையான வயோதிக சகோதரர்களை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. நான் நினைவுகூருகிறேன்…உங்களில் எத்தனை பேருக்கு ரபி லாசனை ஞாபகமுள்ளது? என்னே, ஏறக்குறைய உங்கள் எல்லாருக்குமே. அவர் தமது பழைய கைத்தடியை இங்கு மாட்டி வைப்பார், நான் அங்கு பின்னால் உட்கார்ந்து கொண்டிருப்பேன். அவர் அந்த சிறு பாடலைப் பாடுவார்…(ஒரு நிமிடம் சகோதரன் டெடி.) நான் முயற்சி செய்வேன், அதன் ராகம் எனக்கு வருகிறதா என்று பார்ப்போம். எனக்குத் தெரியவில்லை. ஒரு மகிழ்ச்சிகரமான நாளை எனக்காக காத்திருக்கிறது, அங்கு முத்துக்கள் பதிக்கப்பட்ட வாசல்கள் விரிவாய் திறக்கும், இந்த துன்பத்தின் திரையை நான் கடக்கும்போது, நான் மறுபுறம் இளைப்பாறுவேன். என்றாகிலும் ஒருநாள் அழிந்து போகக்கூடிய உறவினருக்கு எட்டாத தூரத்தில், என்றாகிலும் ஒருநாள், அது எங்கே எப்பொழுது என்று தேவன் மாத்திரமே அறிவார், அழிந்து போகக் கூடிய வாழ்க்கையின் சக்கரங்கள் சுழலாமல் நின்றுபோகும்போது, நான் அப்பொழுது சீயோன் மலையில் வாசமாயிருக்கச் சென்றுவிடுவேன். (ஆம்.)

123217 இந்த சிறு சக்கரங்கள் நமக்குள் சுழன்றுகொண்டிருக்கின்றன— பார்த்தல், ருசி பார்த்தல், உணருதல், முகருதல், கேட்டல் என்ற சிறு புலன்களும் சக்கரங்களும் அழிந்து போகக்கூடிய இந்த வாழ்க்கையில் சுழன்றுகொண்டிருக்கின்றன, என்றாகிலும் ஒரு நாள் அவை சுழலாமல் நின்றுவிடும். அப்பொழுது நானும், நீங்களும் சீயோன் மலையில் வாசம்செய்ய சென்றுவிடுவோம். ஓ, எனக்கு அது பிடிக்கும், உங் களுக்கும் அப்படித்தானே? அந்த ஆசீர்வதிக்கப்பட்ட உறுதியை நாம் பெற்றிருக்கிறோம் என்று அறிந்து கொள்ளுங்கள். சரி, எத்தனை பேருக்குத் நம்முடைய பழைய ஞானஸ்நானப் பாடல் தெரியும்? இப்பொழுது, நாம் அதை மாற்றுவோம். நாம் கூட்டத்தை முடிக்கும்போது பாடும் பாடலைப் பாடுவோம்: இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், துயரமும் துக்கமும் நிறைந்த பிள்ளையே; அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும், நீ எங்கு சென்றாலும் அதை உன்னுடன் கொண்டு செல்.

124218 இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல். நீ போகும்போது, அதை செய். சரி, நாமெல்லாரும் சேர்ந்து பாடுவோம். மறக்க வேண்டாம், நாளை காலை எட்டு மணிக்கு கூட்டத்திற்கான ஜெப அட்டைகள் வழங்கப்படும். கூட்டம் ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பிக்கும். நான் பத்து மணிக்கு பிரசங்கம் செய்வேன். வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் ஆராதனை சுமார் பதினொரு மணிக்குத் தொடங்கும். 219 நாளை பிற்பகல், நாளை மாலை, கூடாரத்தில் ஒரு சுவிசேஷக செய்தி கொடுக்கப்படும். நாளை இரவு, உங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி, இன்னும் ஞானஸ்நானம் பெறாதவர்களுக்கு, அங்கே…தொட்டி திறந்திருக்கும்; நாங்கள் ஜனங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்போம்.

125220 இப்பொழுது நாமெல்லாரும் சேர்ந்து, நமது உச்சக் குரலில் பாடுவோம். சகோதரன் பஸ்டி, நான் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவனாகவும் தேவனுக்கு நன்றியுள்ளவனாகவும் இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா, அவர் மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் அவரைப் பார்த்துவிட்டு, என்ன நினைப்பதென்றே அவருக்குத் தெரியவில்லையாம் என்றே அவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். அவர் அதே நபராயிருந்தார் என்று அவரால் நம்பவே முடியவில்லை. ஓ, தேவனால் என்ன செய்ய முடியும் என்பது இரகசியமில்லை. அது உண்மையல்லவா? சரி. இயேசுவின் நாமத்தை (அதை தொனிக்கச் செய்!) உன்னுடன் கொண்டு செல், துயரமும் துக்கமும் நிறைந்த பிள்ளையே; அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும், இப்பொழுது, நீ எங்கு சென்றாலும் அதை உன்னுடன் கொண்டு செல். விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்!), ஓ, எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையேறப்பெற்ற நாமம் (ஓ, விலையேற்றப்பெற்ற நாமம்!), ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். 221 சரி. நான் இப்பொழுது ஆராதனையை போதகரிடம் ஒப்படைக்கிறேன். அவர் சில வார்த்தைகள் கூறலாம் அல்லது நம்மை அனுப்பி வைக்கும்படி யாரையாவது கேட்கலாம், அவருடைய மனதில் என்ன இருந்தாலும் சரி. 