1 சகோதரன் நெவில் அந்த அறிவிப்புகளைக் கூறிக்கொண்டிருக்கையில், அதாவது சகோதரன் மூர் அவர்கள் அதைக் கூறிக்கொண்டிருந்தபோது, கர்த்தருடைய ஆவியானவர் இக்கட்டிடத்திற்குள் வந்ததை…வந்ததைக் குறித்துக் கூறினார். அவர், “எடுத்துக் கொள்ளப்படுதல் வந்துவிட்டதோ என்று எண்ணி, நான் சுற்றும் முற்றும் பார்த்தபோது, மற்றவர்கள் யாவரும் இங்கே அமர்ந்திருந்ததைக் கண்டேன், எனவே அந்த அளவிற்கு அது அவ்வளவு மகத்துவமாக இருந்தது” என்று கூறினார். மேலும், “இல்லை, இவர்கள் எல்லாம் இன்னும் இங்கே அமர்ந்திருக்கிறார்கள், அப்படியெனில் நானும் இங்கு தான் இருக்கிறேன் என்பதை அறிகிறேன் எனவே எடுத்துக் கொள்ளப்படுதல் இன்னும் வரவில்லை என்று கூறினேன்” என்று குறிப்பிட்டார். எனவே, சில சமயங்களில் கர்த்தருடைய ஆவியானவர் அவ்வாறாக நல்லவராக நமக்கு இருக்கிறார்.
22 இப்பொழுது இக்கட்டிடத்தில் அநேக நண்பர்கள் வந்திருப்பதை நாம் காண்கிறபடியால் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அநேகரை குறிப்பிட்டுக் கூற முடியவில்லை. எனக்கும் என் மனைவிக்கும் திருமணத்தை நடத்தி வைத்த சகோதரன் கார்ப்பெண்டர் அவர்கள் இதோ இப்பொழுது இவ்வாயிலின் வழியாக உள்ளே நுழைந்ததை நான் கவனிக்க நேர்ந்தது. இங்கே சபையில் சகோதரன் கார்ப்பெண்டர் அவர்கள் எங்களுக்கு ஊழியத்தில் மிகவும் ஒரு ஆசீர்வாதமாக இருந்து வருகிறார், அவர் எங்களுக்கு ஊழியத்தின் முறையில், எங்கும், அநேகமாக எங்கு பிரசங்கித்தாலும் அங்கே ஒரு ஆசீர்வாதமானவராக இருந்து வருகிறார். ஓ, அவரோடு இன்னும் ஏனையோரும் இங்கு நம் மத்தியில் இருப்பதைக் குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
33 நேற்று மாலையில் என்னிடம் கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு கேள்வி இங்கே உள்ளது: சகோதரன் பிரான்ஹாம் அவர்களே! மத்தேயு 25-ம் அதிகாரத்தில் காணப்படும் ஐந்து புத்தியில்லாத கன்னியர் புறஜாதிகளில் உள்ள மீதியானவர்கள் என்று எண்ணப்படுவார்களா? ஐந்து புத்தியில்லாத கன்னியர் இரட்சிக்கப்பட்டவர்கள் தான் என்றும், ஆயினும் அவர்கள் மகா உபத்திரவ காலத்தன் வழியாக கடந்து செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். அது சரிதானா? அப்படியாயின் அவர்களுடைய இறுதி முடிவு என்னவாயிருக்கும்? மத்தேயு 25:33, 34 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ள, வெள்ளாடுகளினின்று பிரிக்கப்பட்ட செம்மறியாடுகள் என்று அவர்களைக் குறித்து கருதலாமா? 4 இக்கேள்வியை கேட்டுள்ளவர் சரியான நல்ல வேத பண்டிதன் போன்று தெரிகிறது… [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] …நித்திரை செய்த புத்தியில்லாத கன்னியர் ஐந்து பேர்களும் வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டுள்ள மீதியாயிருப்பவர்கள் தான் என்று நானும் கூட கருதுகிறேன். வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த மீதியானவர்கள் ஸ்திரீயின் வித்தானவர்கள், அவர்கள், தேவனுடைய கற்பனைகளைக் கைகொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவின் சாட்சியை உடையவர்களுமாவர். ஒரு பெண் ஒரு—ஒரு துண்டுத் துணியை எடுத்து அதை விரித்து வைத்து, அதின் மேல் எந்த அளவு அல்லது மாதிரிப்படி துணியை வெட்ட வேண்டுமோ அதை விரித்து வைத்து, துணியை வெட்டுவாள்; ஆனால், அவன் தன் விருப்பப்படி, எந்த இடத்தில் வெட்ட வேண்டுமோ அதை வெட்டியெடுக்கிறாள், வெட்டியெடுத்தது போக மீதியாகும் துணி, மீதியானது என்று அழைக்கப்படும். ஆனால் அவள் தன்னுடைய சொந்த சுயாதீன சிந்தனையினால் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து அவள் அதை வெட்டியெடுக்க தெரிந்து கொள்கிறாள். ஆனால் வெட்டிய பிறகு மீதமாக விடப்பட்டுள்ளதோ மீதியானது என்றே அழைக்கப்படுகிறது. 5 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், அங்கே ஐந்து பேர்கள் புத்தியுள்ள கன்னியரும், ஐந்து பேர்கள் புத்தியில்லாத கன்னியருமாயிருந்தனர். பத்து பேர்களுமே ஒரே விதமான தன்மையுள்ளவர்களாய் உண்டாக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கன்னியராகவே இருந்தனர். ஆனால் தேவனோ தெரிந்து கொள்ளுதலின் மூலமாக உலகத்தோற்றத்திற்கு முன்னரே, தன் மணவாட்டியைத் தெரிந்து கொண்டு, அவர்களுடைய பெயர்களை, உலகத் தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் எழுதியுள்ளார். ஏனெனில் தேவன் முடிவற்றவராய் இருப்பதினால், உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவருடைய சிந்தையில் இது இருந்தது.
46 நாம் சில சமயங்களில் “முன்குறித்தல்” என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம். ஆனால் அது நிச்சயமாகவே நாம் வாழும் இச்சபையின் காலத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. இரத்த சாட்சிகளின் நாட்களில் அது ஒரு மகத்தான காரியமாக நிச்சயமாகவே விசுவாசிக்கப்பட்டு வந்தது, ஏனென்றால் அவர்கள் நிச்சயமாகவே அதை விசுவாசித்தனர். ஆனால் இந்த முன் குறித்தல் என்பது இப்பொழுது விசுவாசிக்காமல் விடப்பட்டு, பிரமாணத்தை கடைபிடிப்பவர்களின் கருத்தினை ஏற்று, அந்த பிரமாணத்தை கடைபிடிக்கும் உபதேசம் சபையில் உண்டாக…அதையே நல்லக் காரியம் என்று ஏற்று, இங்கிலாந்தில் யாவரும் அதைக் குறித்த கால்வீனிய உபதேசத்திற்குள் சென்றனர். மேலும் அவர்கள் எந்த எழுப்புதல்களையுமே உடையவராயிருக்கவில்லை. அதன் பிறகு வந்த ஜான் வெஸ்லி அர்மீனிய உபதேசத்தை பிரசங்கித்தார். அந்த உபதேசம் கால்வின் உபதேசத்தை சீரான நிலைக்குக் கொண்டு வந்தது. தேவன் எப்பொழுதும் சமன்படுத்துவார். 7 புத்தியில்லாத கன்னியரிடம் அவர்களது தீவட்டிகளில் எண்ணெய் இருக்கவில்லை. அவர்கள் புறம்பான இருளில் தள்ளப்படுவார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அங்கே அவர்களுக்கு அழுகையும் புலம்பலும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். நீங்கள் அதைப் ஒப்பிட்டுப் பார்ப்பீர்களானால், அதைப் பற்றி உங்களது வேதாகமங்களின் அடிக்குறிப்புகளில் பார்த்தால் அறிந்து கொள்வீர்கள். அது மீண்டும் மகா உபத்திரவ காலத்திற்குள் கொண்டு செல்லும். புத்தியில்லாத ஐந்து கன்னியரும் கைவிடப்பட்டு, மகா உபத்திரவத்தினுள் செல்பவர்கள் என்றே நான் கருதுகிறேன். நமக்கு நேரம் இருந்தால் இதில் நமக்கு ஒரு பெரிய பாடம் உள்ளது. நீங்கள்…
58 இப்பொழுது, நீங்கள் ஒலி நாடாக்களில் செய்தியைக் கேட்கையில், “நான் இந்தக் காரியங்கள் சரியாயிருக்கின்றன என்று விசுவாசிக்கிற விதத்திற்கேற்றபடியே அப்படியே உள்ளன” என்று நான் முதலில் கூறியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். புரிகிறதா? இப்பொழுது அவைகளை மற்றவர்கள் தவறு என்றால் எனக்கு—எனக்கு அதைப் பற்றி தெரியாது. நான்…நான் என்ன விசுவாசிக்கிறேனோ அதை மாத்திரமே என்னால் கூற முடியும். எவருடைய உணர்வுகளையும் புண்படுத்த வேண்டும் என்று நான் பொருட்படுத்திக் கூறவில்லை. நாம் இங்கே உள்ளே வருகையில் ஏனையோர் என்ன கூறினர் என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, இங்கே சொல்லப்பட்ட காரியங்கள் உண்மையாகவே வேதத்தின் படி சரியாக இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வது தான் மிகச் சிறந்த வழியாயிருக்கும். ஏனெனில் நாம் வாழும் இவ்விதமான நாளில், இந்த தேசத்தில் மக்களால் பலவிதமான உபதேசங்கள் திரும்பத் திரும்ப சேகரித்துக் கிரகித்துக் கொள்ளச் செய்வதென்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால் பல விதமான உபதேசக் குழப்பங்கள் எட்டியிராத கன்னிப் பிரதேசங்களில், நீங்கள் சத்தியத்தை பிரசங்கிக்கும் போது, அவர்கள் அதை உடனே விசுவாசிக்கிறார்கள், அவ்வாறு தான் அது சென்று கொண்டிருக்கிறது.
69 ஆனால் இப்பொழுதோ, ஒருவர் ஒரு கருத்தையும், இன்னொருவர் இன்னொரு கருத்தையும் கொண்டு வருவார். உலகில் நமக்கு இப்பொழுது சுமார் தொள்ளாயிரம் வித்தியாசமான சபை ஸ்தாபனங்களும் அதற்கு மேலும் உள்ளன. ஒவ்வொருவரும் ஏனைய உபதேசங்கள் தவறு என்று கூறிக்கொண்டு தங்கள் (தங்கள் உபதேசங்களைக்) கொண்டு வந்துள்ளனர். ஆனால், ஏதாவது ஒன்றுதான் சரியானதாகவும், ஏனையவைகளெல்லாம் தவறானதாகவும் இருத்தல் வேண்டும். எனவே, இவை யாவற்றின் மத்தியிலும் சத்தியத்தை நிரூபிக்க, நாம் வேதத்திற்கு திரும்பிச் செல்லுதல் வேண்டும். பாருங்கள், வேதம்தான் குறிப்பிட்ட உபதேசம் சரி அல்லது தவறு என்பதை நிரூபிக்க வேண்டும். அநேக சமயங்களில் மக்கள் சொந்த வியாக்கியானத்தை வேத வாக்கியங்களுக்கு அளிக்கின்றனர். ஆனால் நாமோ, எந்த வித மனுஷீக வியாக்கியானத்தையும் அதற்கு அளிக்காமல், வேதத்தின் சாத்தியங்களை அறிய மிகச் சிறந்த வழியை நாடுகிறோம். வேதத்தி அது எழுதியிருக்கிறபடியே அப்படியே வாசித்து, “ஆது அந்தவிதமாகவே இருக்கிறது” என்று கூற வேண்டும். 10 தேவன் கூறியவைகளையெல்லாம் அப்படியே நீங்கள் எடுத்துக் கொண்டு பார்த்தால், அவை ஒவ்வொன்றும் வேத வாக்கியங்களில் அதனதன் இடத்தில் சரியாக பொருந்துகிறதாயிருக்கிறது என்பதை நான் எப்பொழுதும் கவனித்துப் பார்த்திருக்கிறேன். அது எவ்வாறு இருக்கிறதென்றால், ஒரு புதிர் போல் உள்ளது. ஆகவே பல துண்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கிற ஒரு சித்திரத்தை நீங்கள் ஒழுங்காக அடுக்கி அமைப்பதற்கு முன்னர், நீங்கள் அந்த மாதிரியை உற்று நோக்க வேண்டும். நீங்கள் அவ்வாறு அதனுடைய மூலமாதிரியை உற்று நோக்கவில்லையென்றால், நான் எப்பொழுது கூறுவது போன்று, “நீங்கள்…உங்களுடைய காட்சியில் ஒரு பசு ஒரு மரத்தின் மேல் நின்று புல் மேய்வது போல அமைத்திருப்பீர்கள்” ஆகையால் அது—அது சரியாகக் காணப்படாது.
711 எனவே, நாம் வேதத்தை அறிந்து கொள்ள பரிசுத்த ஆவியானவருக்கு இடங்கொடுத்தால்…வேதாகமத்தை எழுதியது யார்? தேவ மனிதர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு வேதாகமத்தை எழுதினார்கள். அப்படியிருக்கையில், நீங்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தாலும், பரிசுத்த ஆவியை உடையவர்களாயிராவிட்டால், நீங்கள் ஒருபோதும் வேதத்தைப் புரிந்து கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் இயேசுவும் கூட, தேவன் அதை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து, கற்றுக் கொள்ளக் கூடிய பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் அவரை ஸ்தோத்தரித்தார். பவுலைத் தவிர ஏனைய சீஷர்கள் யாவரும் ஏறத்தாழ கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர். பவுலுங்கூட, கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்காக, தான் பெற்றிருந்த கல்வி ஞானம் இவற்றையெல்லாம் மறக்க வேண்டியிருந்தது. எனவே அவன் கொரிந்து சபைக்கு கூறும் போது, “…நான் உங்களிடத்தில் வரும்போது சிறந்த வசனிப்போடாவது மனுஷ ஞானத்தோடாவது வரவில்லை…” என்றான். ஏனெனில், மனுஷ ஞானத்தோடு செய்தி வந்திருந்தால், அச்சபையினரின் விசுவாசமும் மனுஷ ஞானத்தின்படி இருக்கும். ஆனால் அவர்களது விசுவாசம் தேவனுடைய வார்த்தையின்படி பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளின் பேரில் சார்ந்திருக்க, அவன் பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், கிரியைகளோடும் வந்தான். அத்தகைய விசுவாசத்தில் தான் நாம் நெருக்கமாக சார்ந்திருக்க இப்பொழுது விரும்புகிறோம். ஏனெனில் இந்த வாரம் முடியும் முன்னர் அல்லது இந்த வாரத்தில் காலம் பூராவும் எவ்வாறு பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்ட மேற்கூறிய ஊழியமானது, தொடர்ச்சியாக அறுப்பட்டுப் போகாமல், வந்து கொண்டேயிருந்தது என்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்,
812 இக்கரும்பலகையை சற்று உயரமாக பொருத்தியமைத்தமைக்காக உங்களுக்கு நன்றி, அது நன்றாக காணப்படுகிறது. 13 இப்பொழுது, ஓ, நாம்…இச்சீதோஷண நிலையானது இன்னும் தொடர்ந்து குளிர் காலமாகவே நமக்கு இருந்துவிட்டால் நலமாயிருக்கும் என்றே நான் விரும்புகிறேன். ஏனெனில் அவ்விதமான சூழ்நிலையில் நாம் தொடர்ந்து அப்பருவ கால முழுவதிலும், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை எடுத்து படிக்கலாம். அது அப்பேர்ப்பட்ட அருமையான உபதேசங்கள் அடங்கிய புத்தகம். இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக என்று நான் நினைக்கிறேன்; அப்போது நமது சபையானது இன்னும் அதின் ஆரம்ப நிலையிலேயே இருக்கையில், ஒரு இலையுதிர் காலத்தில் ஆரம்பித்து ஏறத்தாழ அடுத்த இலையுதிர் காலம் முடிய வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை ஆய்ந்து படித்தோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. 14 இப்பொழுது யோபின் புத்தகத்தை எடுத்து நான் பிரசங்கித்ததை நினைத்துப் பார்க்கிறேன். ஓ சகோதரன் ரைட் அவர்களே! யோபின் புத்தகத்திலிருந்து நீண்ட நாட்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். இறுதியில் ஒரு சகோதரி, “சகோதரன் பிரான்ஹாமே, யோபுவை நீங்கள் சாம்பலிருந்து ஒருபோதும் எழுந்திருக்கச் செய்யப் போவதில்லையா?” என்று என்னை கேட்டு எழுதுமளவிற்கு அது நீண்ட காலம் நீடித்தது. நான் அவ்வாறு நீண்ட காலத்திற்கு யோபு சாம்பல் குவியலின் மேல் இருந்ததைப் பற்றி பிரசங்கித்த காரணம் ஒரு முக்கியமான கருத்தை மக்கள் அறியச் செய்வதற்காகத்தான். ஏனெனில் அந்த இடத்தில் தான், கர்த்தருடைய ஆவியானவர் யோபுவின் மேல் வந்தார் அப்பொழுது மின்னல்கள் மின்னத் துவங்கி, இடிகள் முழங்கின. ஆவியானவர் தீர்க்கதரிசியின் மேல் வந்து அதினால் அவர் கர்த்தருடைய வருகையை கண்டான். இத்தனை மகத்துவமான காரியங்களை நாம் எடுத்துக்கூற வேண்டுமென்ற நோக்கில் தான் யோபு சாம்பல் குவியலின் மேல் துன்பத்தோடு உட்கார்ந்த காட்சியில் யோபுவை நிலைநிறுத்தி அதைக் குறித்து நீண்ட காலம் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அவ்வாறு செய்வது களைப்படையச் செய்துவிடக் கூடும் என்று நான் அறிந்திருந்தேன். யாராவது வேறு ஏதாவதின் பேரில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் அப்பொழுது நானும் கூட சற்று உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். தேவன் ஒரு நோக்கத்திற்காகவே அந்த நபரை அவ்வாறு நடத்திக்கொண்டிருக்கலாம்.
915 இப்பொழுது, நாம் இந்தக் கேள்வியை விட்டுச் செல்வதற்கு முன்பு, இந்த மீதியாயிருப்பவர்கள் என்பதற்கே திரும்ப வருவோம். என்னால் அதை தெளிவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இது…இந்த மீதியாயிருப்பவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்னரே அந்த மீதியானவர்களை தெரிந்து கொண்டிருக்கிறார் என்று நான்—நான் விசுவாசிக்கிறேன். தம்முடைய “முன்னறிவினால்” தெரிந்து கொண்டிருக்கிறார். அந்த வார்த்தையை அல்ல…இப்பொழுது முன்குறித்தல் என்பதைக் கவனியுங்கள். பாருங்கள், ஏனெனில், இது ஜனங்களுக்குள் மிகவும் அற்பமாக எண்ணப்படுகிற ஒன்றாக இருந்து வருகிறது. புரிகிறதா? ஆனால் தேவனோ, உலகத் தோற்றத்திற்கு முன்னரே தனது மகத்தான முடிவில்லாத சிந்தையில், சபையைத் தெரிந்து கொண்டார். இயேசுவைத் தெரிந்து கொண்டார். சபையைத் தெரிந்து கொண்டார். அதினால் அது முடிவில் எவ்வாறிக்கும் என்று துவக்கத்திலேயே அவரால் முன்னுரைக்க முடிந்தது. அவர்…அவர் முடிவற்றவராக, நித்தியமானவராக இருப்பவராயின் அவருக்குத் தெரியாதது ஒன்றுமே இருக்க முடியாது. அவர் பூமியின் மேல் இருக்கும் ஒவ்வொரு உண்ணியையும், அவை எத்தனை தடவை தன்னுடைய கண்ணை சிமிட்டும் என்பதையும் அறிந்துள்ளார், இப்பொழுது அதாவது எவ்வளவு…அவை ஒவ்வொன்றும் எவ்வளவு கொழுப்பை உற்பத்தி செய்கின்றன. பூமியிலுள்ள அவை அனைத்தும் சேர்த்து ஒரே நேரத்தில் எந்த அளவு கொழுப்பை உற்பத்தி செய்யும் என்பதையெல்லாம் அவர் அறிந்துள்ளார். அதுவே முடிவுற்றத் தன்மையாகும். அது முடிவுற்றத்தன்மையாயுள்ளது; நீங்கள்—நீங்கள்…அதை விளக்கிக் கூற வழியேக் கிடையாது.தேவன், அதனால் அவர் எல்லையற்ற தன்மைக்கொண்ட தேவனாயிருக்கிறார்.
1016 ஆகையால், நீங்கள் கவனிப்பீர்களேயானால், கடைசி நாட்களில் பூமியின் மேல் வரப்போகும்…அந்திக் கிறிஸ்துவைப் பற்றி வேதம் கூறியுள்ளது. 17 இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்! ஒரெயொரு பிழை அதுவே…என்னுடைய பிழைகள் லட்சக்கணக்கில் அவரால் கண்டுபிடிக்கப்படக் கூடும் என்று நான் நம்புகிறேன். ஆனால் நம்முடைய விலையேறப் பெற்ற சகோதரனாகிய பில்லி கிரகாம் அவர்கள் அன்றொரு நாளில் மிகவும் குறிப்பிடத்தக்க பிரசங்கத்தை கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நிகழ்த்தினார். அது சரியான நேரத்திற்குரிய செய்தி என்று நான் நிச்சயமாக நினைத்தேன். ஆனால் அவரோ, “தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் கூட சாத்தான் வஞ்சித்துக் கொண்டிருக்கிறான்” என்று அவர் கூறிவிட்டார். 18 முடியாது, வேதமோ, “ கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அவன் வஞ்சிப்பான்” என்றே கூறியுள்ளது. ஆனால் அது கூடாத காரியம். ஏனெனில் தேவன் அவர்களை உலகத்தோற்றத்திற்கு முன்னரே தெரிந்து கொண்டார். புரிகிறதா? ஆட்டுக்குட்டியானவர்…இயேசு கிறிஸ்து உலகத்தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாயிருந்தார். தேவன் தன் சிந்தையில் அதைக் கொண்டிருக்கையில், தேவன் அந்த வார்த்தையை பேசுகையில் அது ஒருபோதும் மாறமுடியாது. ஒரு போதும் அதை மாற்றி அமைக்க முடியாது. பாருங்கள், காரணம் அவர்—அவர்—அவர் முடிவுற்றவராக இருக்கிறார். அவருடைய வார்த்தைகள் நிறைவேறியே ஆக வேண்டும்.
1119 சற்று சிந்தித்துப்பாருங்கள் மிகவும்…நாம் உட்கார்ந்து கொண்டிருக்கிற இந்த பூமியே தேவனுடைய வார்த்தையினால் வெளிப்படுத்தப்பட்டதாயிருக்கிறது. உலகமானது காணப்படாதவைகளினால் தோற்றுவிக்கப்பட்டது. அவர் “இன்னது உண்டாக்ககடவது” என்று மாத்திரமே உரைத்தார். அவை அவ்வாறு உண்டாயின. அவர் உரைப்பதனால் ஒரு சிருஷ்டிப்பை உண்டாக்கக்கூடுமானால், அப்பொழுது தேவனால் ஒரு சரீரத்தை சொஸ்தமாக்குவது எவ்வளவு எளிதானது! அவருடைய வார்த்தையைப் பாருங்கள். அவருடைய வார்த்தையானது. எத்தகையது என்பதை காண நமக்கு மட்டும் போதுமான விசுவாசம் இருக்குமென்றால் அது எப்படியிருக்கும்! நாம் மிகவும் மண்ணானவைகளோடு ஒட்டிக் கொண்டு நம் சிந்தையில் பூமிக்குரிய காரியங்களில் சிக்கிக் கொண்டு இருக்கிறோம்…ஓ, எனக்கு தெரியவில்லை. பல்வேறு விதமான போதகங்கள் நமக்குள் திணிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போதகத்தின் தாக்கம், அந்தப் போதகத்தின் தாக்கம் என்று இவ்வாறாக பலவிதமானவைகளின் தாக்கம் நம்மேல் உண்டாகி, அதினால் யாவும் முற்றிலும் கோணல் மாணலாக ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் இந்த முழு காரியத்தையும் உதறியெறிந்து விட்டு திரும்ப வந்து, அவரே தேவன் என்றும், அவரால் ஒருபோதும் தவறமுடியாததுபோல அவரது வார்த்தைகள் ஒருபோதும் தவற முடியாது என்றும் அறிந்து கொள்ளுங்கள். அந்த வார்த்தை தவறுமென்றால், அப்பொழுது தேவனும் தவறுகிறார் என்பதாகும்; தேவன் அங்கே தவறுகிறாரென்றால்…அவர் தேவனல்ல. புரிகிறதா? எனவே…நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். இயேசு இங்கே ஒன்றைக் கூறிவிட்டு, வேறு ஒரு இடத்தில் வேறொன்றைச் சொல்ல அவரால் முடியாது. அவர் தேவனாயிருக்க வேண்டுமெனில், துவக்கத்தில் அவர் கொண்டிருந்த தம்முடைய முதல் தீர்மானத்தோடு அவர் நிலைத்திருக்க வேண்டும். எனவே, நாம் அப்படியே…
1220 அவர் நம்மிடம் கேட்டுள்ள ஒரேக் காரியம், அவர் கூறியவை சத்தியமென்றும், அவற்றை அவர் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதையும் விசுவாசிக்க வேண்டுமென்பதேயாகும். ஓ, இது எவ்வளவு அழகாயிருக்கிறது! நீங்கள் உடனடியாக ஒன்று சம்பவிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தீர்கள். சில வேளைகளில் ஏதாவது சம்பவிக்க உங்களிடத்தில் சிறிதளவு விசுவாசம் தேவைப்படுகிறது. அது ஒரு அற்புதத்தை நிகழ்த்தாது; ஆனால் நீங்கள் அந்த விசுவாசத்தில் நிலைத்திருப்பீர்களாயின், அது உங்களை வெளியேக் கொண்டு வரும்; அதனோடு அப்படியே தரித்திருங்கள். அவர் கூறியது போல், “எல்லா விதைகளிலும் கடுகு விதையானது மிகவும் சிறியதாயிருக்கிறது.” ஆனால் விதையானது வேறு எந்த விதையோடும் கலக்க முடியாது என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்தீர்களா? கடுகு விதையை எதனோடும் நீங்கள் இனக்கலப்பு செய்யவே முடியாது. அது கலவாது. நீங்கள் விசுவாசமுடையவர்களாக இருந்தால், அதுவும் சிறிதளவு விசுவாசம் இருந்தால், அது ஒருபோதும் அவிசுவாசத்துடனோ, அல்லது சபைக்கொள்கையுடனோ, அல்லது கோட்பாடுகளுடனோ கலப்படையாது. விசுவாசம் அப்படியே தேவனோடு நிலைத்திருக்கும். அப்படியே அதனோடு தரித்திருந்து, உங்களை விசுவாசமானது பனிமூட்டங்களினின்றும் வெளியே விடுவித்துக் கொண்டு வரும். ஆம்! அந்த விசுவாசத்தோடு அப்படியே நிலைத்திருங்கள்.
1321 இப்பொழுது, ஆதியில் தேவனானவர்…வெளிப்படுத்தின விசேஷத்தில் வேதம் கூறியுள்ளது. கடைசி நாட்களில் “அந்திகிறிஸ்து…” இப்பொழுது இந்த சபைகள் யாவும் ஒன்று சேர்ந்து கொண்டிருப்பதைக் கவனியுங்கள். “உலகத்தோற்றத்திற்கு முன்னர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிராத இப்பூமியிலுள்ளவர்கள் யாவரையும் இந்தக் கடைசி நாட்களில் அந்திக் கிறிஸ்து வஞ்சித்துப் போடுவான்.” ஜீவ புத்தகத்தில் எப்பொழுது உங்களுடைய பெயர் எழுதப்பட்டது? உலகம் என்று ஒன்று உண்டாயிருப்பதற்கு முன்னரே, நீங்கள் இந்தக் காலத்தின் பரிசுத்த ஆவியைப்பெறும்படி தெரிந்து கொள்ளப்பட்டீர்கள். 22 எடிப்ரூயிட் என்பவருடன் சேர்ந்து நான் அவருடைய இப்பாடலை பாடுகிறேன்: இளைப்பாறும் துறைமுகத்தில் நான் என் ஆத்துமாவை நங்கூரமிட்டுள்ளேன், இனி கொந்தளிக்கும் கடலைகள் மேல் நான் பயணிக்க வேண்டியதில்லை; கடும்புயல் காற்று கொந்தளிக்கும் ஆழ்க் கடலில் வீசலாம், ஆனால் நாமோ இயேசுவில் எப்போதும், பத்திரமாக என்றென்றும் இருப்போம்.
1423 நம்மை ஒன்றும் பிரிக்க முடியாது. தேவனால் முடியாது…அவருடைய வார்த்தையை விட்டு பின்வாங்கிப் போகாதீர்கள். தேவன் முடிவற்றவராக இருப்பாராயின், உங்களை அவர் இங்கே கைவிட்டுவிடப்போகிறார் என்று அவர் அறிந்து இங்கு உங்களுக்கு அவர் பரிசுத்த ஆவியை அளிப்பவராயின், அப்பொழுது அவர் என்னவிதமான காரியம் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறார்? உங்கள் அனுபவத்தில் நீங்கள் வஞ்சிக்கப்படவில்லையெனில், பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றிருந்தால்! ஆனால் எபேசியர் 4:30 ல் வேதம் என்ன உரைத்துள்ளது என்பதைக் கவனியுங்கள்: “அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்.” அடுத்த எழுப்புதல் வரையில் மட்டும்தானா? அது நல்லதாக தென்படுகிறதா? மீட்கப்படும் நாள் வரையிலும் இருக்கும்படி நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். எவ்வளவு காலத்திற்கு? உங்களுடைய மீட்பு வரையில். 24 நீங்கள் சரக்குகளை ஏற்றிச் செல்லும் இரயில் பெட்டியை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அந்த பெட்டியில் சரக்குகள் முழுவதும் ஏற்றப்பட்டு இருக்கும் நிலையில், அது சரியாக சரக்குகள் ஏற்றப்பட்டு, முறையாக இருக்கிறதா, அல்லது இடைவெளிகள் உண்டாயிருக்கிறதா என்று சோதிக்க அதற்குரிய ஆய்வாளர் வரும் வரையிலும் பெட்டியின் கதவுகளை அவர்களால் மூட முடியாது. பெட்டியில் முழுவதும் சரக்கு ஏற்றப்பட்டிருந்தாலும், ஆய்வாளர் வந்து, பார்வையிடும்போது, ஏதாவது இடைவெளிகள் இருந்தால். நீங்கள் அதை மீண்டும் சரியாக அடுக்க வேண்டும். அதே விதமாகத்தான் நம்மில் அநேகருடைய காரியமும் உள்ளது. நம்மில் அநேகர் இடைவெளிகள் இல்லாதபடி முழுவதுமாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது இல்லை. பரிசுத்த ஆவியானவராகிய ஆய்வாளர் வந்து நம்மில் அநேகம் இடைவெளிகள் காணப்பட்டால், அதை இன்னமும் அவர் முத்திரையிடுவது இல்லை. நீங்கள் பாருங்கள்.
1525 அதாவது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, அன்றொரு நாள் இல்லை மற்றொரு நாள் ஒரு பெரிய வேத பண்டிதர் என்னிடம் வந்து, “நான் உம்மை ஒன்று கேட்க விரும்புகிறேன்” என்று கூறி, அதாவது. “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது அல்லவா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம், உண்மையிலே சரிதான்” என்றேன். மேலும் அவர், “மனிதன் விசுவாசிப்பதைத் தவிர வேறு கூடுதலாக என்னதான் செய்ய முடிவ்யும்?” என்று கேட்டார். அதற்கு நான், “அவ்வளவுதான் அவனால் செய்ய முடிந்தது” என்றேன். 26 அதற்கு அவர், “அப்படியென்றால், இந்த பரிசுத்த ஆவியைப் பெறுவது என்கிற விஷயத்தில் ஏன் வேறு வழியை நீங்கள் தேட வேண்டும்?” என்று கேட்டார். இப்பொழுது, அவர் ஒரு பாப்டிஸ்டாயிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் அவர் கூறினார்—அவர் கூறினார், அவர், “நீங்கள் இந்த பரிசுத்த ஆவியைப் பெற எங்கே செல்வீர்கள்?” என்று கேட்டார். தொடர்ந்து, “அந்த மனிதன் விசுவாசிப்பானேயானால்! நீங்கள் விசுவாசிக்கும் அந்த நிமிடமே, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறுகிறீர்களே” என்றும் கூறினார். நான், “இல்லை, இல்லை. இப்பொழுது, வேதவாக்கியங்களில் நீங்கள்—நீங்கள் ஒரு முரண்பாட்டை உண்டாக்குகிறீர்கள், வேத வாக்கியங்களோ ஒன்றுக்கொன்று முரண்படுவதில்லையே. புரிகிறதா? பவுல், ‘நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்களா’ என்று தானே கேட்டான்” என்று கேட்டேன். அவர் “இருக்கட்டுமே…” என்று கூறினார். 27 நான், “விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம்…தேவனுடைய வாக்குத்தத்தை உடையவனாயிருந்து, தேவனை விசுவாசித்தான் என்பது உண்மையே. அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆனால் தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதற்கு ஒரு அடையாளமாக ஆபிரகாமுக்கு விருத்தசேதனமாகிய முத்திரையைக் கொடுத்தாரே” என்றேன்.
1628 அவர் இன்னமும் உங்களை பரிசுத்த ஆவியினால் முத்தரித்திருக்கவில்லையென்றால், அவர் இன்னமும் அவருக்குள்ளாக உங்களுடைய விசுவாசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. உங்களுக்குள் இன்னமும் சில இடைவெளிகள் நிரப்பப்படாமல் உள்ளன. புரிகிறதா? நீங்கள் விசுவாசித்திருக்கக்கூடும், ஆம். ஆனால் இன்னமும் நிறைய குறைகள் உள்ளன. ஆனால் உங்களிலுள்ள இடைவெளிகள் யாவும் சரியானபடி அடைக்கப்பட்டிருக்குமானால், அப்பொழுது அவர் உங்களை உங்களது மீட்பின் நாள் வரையிலும் இருக்கும்படியாக பரிசுத்த ஆவியினால் முத்திரையிடுகிறார். அவருக்குள்ளாக நீங்கள் அறிக்கையிட்ட அந்த விசுவாசத்தை அவர் ஏற்றுக் கொண்டார் என்பதற்கு அதுவே தேவனுடைய உறுதிப்படுத்துதலாகும். 29 ஆபிரகாம் தன் விசுவாசத்தை அறிக்கையிட்டான். தேவன், “நான் உன் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக இப்பொழுது…உனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பேன்” என்று கூறினார். அவர் அவனுக்கு விருத்தசேதனமாகிய ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். 30 இப்பொழுது, நீங்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் பொழுதும், அவரை விசுவாசிக்கும் பொழுதும், மேலும் உங்கள் வாழ்க்கையை சுத்தமாக்கும்படி நீங்கள் அவரைக் கேட்கும்பொழுதும், அதன் பேரில் அவர் பரிசுத்த ஆவியானவருடன் திரும்ப வந்து உங்களுக்கு பரிசுத்த ஆவியாகிய அடையாளத்தைக் கொடுக்கையில், அப்பொழுது, நீங்கள் உங்களுடைய மீட்பின் நாள் வரையிலும் முத்திரையிடப்படுகிறீர்கள்.
1731 இங்கே இந்த சரக்கு ஏற்றிச் செல்லும் இரயில் பெட்டியைப் பற்றிப் பார்த்தோம். அதில் ஏதாவது இடைவெளிகள், சந்துகள் இருந்தால் …அந்த இடைவெளிகளெல்லாம் நீக்கும்படி சரியானபடி அந்த பெட்டியானது சரக்குகள் இட்டு நிரப்பி ஒன்று சேர்த்து அசையாதபடி உறுதிப்படுத்தப்பட்டு, அதன் பிறகு அதனுடைய கதவு மூடப்பட்டு, அது போய் சேர வேண்டிய இடம் மட்டும் இருக்கும்படி ஒரு முத்திரை அதற்கு போடப்படுகிறது. அந்த முத்திரையை நீங்கள் உடைத்தால், அதற்காக இரயில் போக்குவரத்து நிறுவனம் ஆயுட்கால சிறைதண்டனை உங்களுக்கு கிடைக்கும்படி செய்துவிடும். அம்முத்திரைகளை உடைக்கப்பட முடியாது. அது போய் சேர வேண்டிய இடமட்டும் இருக்கும்படி அம்முத்திரை போடப்பட்டுள்ளது. சரக்கு இரயில் பெட்டியை ஒவ்வொருவரும் வழிகளில் நிறுத்தி, முத்திரையை உடைத்து, திறந்து சோதித்துப் பார்க்கவும், அதிலிருந்து சில சாமான்களை வெளியே எறிந்துவிட்டு, ஏதாவது மற்ற சில சாமாங்களை உள்ளே போடவும் முடியாது. இல்லை, முடியாது! 32 இந்த சபை, நல்லது, அந்த கோட்பாடு, “ இது நல்லதல்ல, இது சரியல்ல” என்று கூறலாம். தேவன் பரிசுத்த ஆவியை உங்களுக்கு அளிக்கும்பொழுது, அத்துடன் அது முடிவு பெறுகிறது! அப்பொழுது நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்து கொள்ளுகிறீர்கள், என்ன நேரிட்டுள்ளது என்றும் நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய மீட்பின் நாள் வரைக்கும் வழி நெடுக, இப்புவி யாத்திரையின் உங்களுடைய பயண இலக்கின் முடிவு வரை நீங்கள் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். ஓ, என்னே! அது எந்த ஒரு நபரையும் விசுவாசத்தை பெற்றுக்கொள்ளவும், தேவனை விசுவாசிக்கவும், பரிசுத்த ஆவியின் வல்லமையில் எழும்பவும் வேண்டும்.
1833 இப்பொழுது, இக்கன்னியர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவில்லை. (உங்களுக்கு நினைவிருக்கிறதா?) அவர்களிடமிருந்து ஒரே குறை தங்களுடைய தீவட்டி எண்ணெய் இல்லாமலிருந்ததே. அது சரியா? எண்ணெய் என்பது “பரிசுத்த ஆவியைக்” குறிக்கிறது என்று வேதாகமம் உரைத்துள்ளது. அந்த காரணத்தினால்தான் நாம் வியாதியஸ்தர்கள் மேல் எண்ணெய் பூசுகிறோம், ஏனெனில் அது பரிசுத்த ஆவிக்கு ஒரு அடையாளமாக உள்ளது. இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் அப்பொழுதும் அவர்கள் மேல் வரவில்லையென்றால், அவர்கள் அதை பெற்றிருக்கவில்லை. மணவாளன் வந்தபொழுது, அவர்கள் கூறினதோ…தங்கள் தீவட்டிகளில் எண்ணெயைப் பெற்றிருந்த கன்னியர்களிடம் அவர்கள் கூறினார்கள்… 34 அவர்கள் சபையின் காலத்தில் இருந்தார்கள் என்பதை நீங்கள் பாருங்கள்; அங்கிருந்த அவர்களில் சிலர் நல்லவர்களாயிருந்தனர், ஆனால் அவர்கள் நடசத்திர ஒளியில் இருக்கவில்லை. அதாவது நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்றால், அவர்களின் திரிகள் எண்ணெயில் மூழ்கியிருக்கவில்லை. அவர்கள் புறம்பாகப் போய்விட்டனர். அவர்கள் தங்களை பிரித்துக் கொண்டுவிட்டனர். பவுல், “விசுவாசமில்லாமல் அவர்கள் நம்மைவிட்டுப் போய் விட்டார்கள்” என்று தன் நாளில் கூறினான். பாருங்கள், அவர்களிடத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், “அவர்கள் நம்முடையவர்கள் அல்லவென்று வெளியாகும்படிக்கே நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள்.” இவ்வாறு இக்காரியம் முதலாவதாக எபேசு சபைக்காலத்தில் சம்பவிக்கத் துவங்கி, அதேவிதமாக இக்காலம் முடிய தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அந்த காரியம் அந்த ஒவ்வொரு காலங்களிலும் நடை பெற்று வந்துள்ளது. அந்தக் காரியம் அந்த ஒவ்வொரு காலங்களிலும் நடைபெற்று, அடுத்து வந்த காலங்களிலும் தொடர்ந்து சம்பவித்து கடைசியில் இக்காலத்திற்கும் அதே சம்பவம் வந்துவிட்டது. சிறிது நேரத்தில் இதைப் பற்றி நாம் ஆழமாக சிந்திக்கப்போகிறோம்.
1935 இப்பொழுது, கவனியுங்கள், இவர்கள் கன்னியராயிருந்த போதிலும், அவள் அழுகையும், புலம்பலும், பற்கடிப்பு உள்ள ஸ்தலத்திற்குச் சென்றாள். 36 எனது விலையேறப்பெற்ற அன்பான நண்பரே, நான் இப்பொழுது இதைச் சொல்லட்டும்: இங்கே இந்த சபையிலே நான் வருகையில், சுகமளிக்கும் ஆராதனையை நடத்த வியாதியஸ்தருக்காக ஜெபித்து, பிறகு வெளியிடங்களுக்கும் செல்வதுண்டு ஆனால் இந்தக் குறிப்பிட்ட வேளை, நான் உங்களிடம் நீண்ட காலமாக கூறிக்கொண்டு வந்திருக்கிறேன், உங்களுடைய உள்மன சாட்சியோடு செவிகொடுங்கள். நாம்—நாம் இப்பொழுது ஒருவருக்கொருவர் உத்தமத்தோடும் உண்மையோடும் இருக்க விரும்புகிறோம்; ஏனென்றால் நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். ஆம்! 37 பரிசுத்தமாகுதல் என்ற உபதேசத்தைக் கொண்டிருக்கிற விலையேறப் பெற்ற “நசரேய சபைக்காரர்கள்” மற்றும் “யாத்திரீக பரிசுத்தர் சபையார்” ஆகிய நீங்கள் அங்கே தான் தவறு செய்துவீட்டீர்கள். புரிகிறதா? யூதாஸ்காரியோத் அந்தக் கட்டம் வரைக்கிலும் சரியா ஜீவித்தான் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? யூதாஸ் கர்த்தராகிய இயேசுவில் இரட்சகராக விசுவாசம் கொண்டு அவரை இரட்சகராக ஏற்றுக் கொண்டிருந்தான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டும் இருந்தான். யோவான் 17:17—ல் “…பிதாவே உம்முடைய சத்தியத்தினால் அவர்களை பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம்” என்று இயேசு கூறியபொழுது அவன் பரிசுத்தமாக்கப்பட்டான். அவர் வார்த்தையாயிருந்தார். சரி! 38 மத்தேயு 10-ம் அதிகாரத்தில் சீஷர்களுக்கு வியாதியஸ்தரைக் குணமாக்கவும், மரித்தோரை எழுப்பும், பிசாசுகளைத் துரத்தவும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தேசத்தின் எல்லாப் பாகங்களிலும் சென்று, பிசாசுகளைத் துரத்திவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு தேவனைத் துதித்து ஆர்ப்பரித்துக் கொண்டு திரும்பி வந்தார்கள். இயேசு அவர்களிடம் “ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல் உங்கள் நாமங்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள்” என்றார். அது சரியா? யூதாஸும் அவர்களோடு இருந்தான், யூதாஸும் அவர்களோடிருந்தான், ஆனால் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக இந்தச் சம்பவம் நடந்தது.
2039 பிறகு பெந்தெகொஸ்தே நாளில், யூதாஸ் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு முன்பாக அவன் யார் என்ற தன்னுடைய உண்மையான சொரூபத்தைக் காண்பித்தான். அவன்—அவன் இயேசுவை மறுதலித்து, அவரைக் காட்டிக் கொடுத்த துரோகியாக மாறினான். அப்படியே தான் அங்கே அந்த ஆவியானது வருகின்றது. லூத்தர், வெஸ்லி ஆகியோரின் காலங்கள் வழியாக சபையானது பரிசுத்தமாகுதல் வரையிலும் வந்த பிறகு, அது கறைப்படாத் கன்னியர் வாழ்வை கொண்டு வந்தது. (நீங்கள் சந்தித்தவர்களிலேயே மிகவும் சுத்தமான; தெளிவான, பரிசுத்தமான, அருமையானவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர்.) ஆனால் அது வரைக்கிலும் வந்தவர்கள்…பின்பு, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுதலும், பரிசுத்த ஆவியைப் பெறுதலையும் பற்றி வரும்போது, நசரேய சபைக் காரர்களும், யாத்திரீக பரிசுத்த சபைக்காரர்களும், சுயாதீன மெத்தோடிஸ்டுகளும், “அது பிசாசினால் உண்டாகிறது” என்று கூறிவிடுகின்றனர். அவ்வாறு கூறுகையில் அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவிக்கெதிராக தூஷணம் பேசி, தங்களையே என்றென்றைக்குமாய் புறம்பாக்கிக் கொள்கின்றனர். ஏனெனில், “எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.”
2140 சீஷர்கள் அனைவரும் அந்நிய பாஷைகளில் பேசினார்கள் என்பது நினைவிருக்கட்டும். இயேசும் சிலுவையில் அந்நிய பாஷைகளில் பேசிக் கொண்டே மரித்தார். உ—ஊ. எனவே நீங்கள் அவர்களோடு இடைபடமுடியவில்லையெனில், அவர்களோடு இங்கே நட்புக் கொள்ள இயலவில்லையெனில், அங்கே இருக்கப்போவதைக் குறித்து என்னவாயிருக்கும்? அவர்களுக்கு…இங்கே இவர்கள் அந்நிய பாஷையில் பேசினால் அது பிசாசு என்று நீங்கள் கூறுவீர்களானால். அவர்களும் அப்படியேயிருந்தனரே. ஆகையால் அது அவனுடைய சுயரூபத்தை எங்கே காண்பித்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? மற்ற ஐவருக்கிருந்தது போல எண்ணெய் இல்லாத ஐந்து கன்னியரும் தூய்மையான, சுத்தமான வாழ்வையுடையவர்களாயிருந்தனர். பழமை நாகரீகம் கொண்ட அந்த நசரேய சபை, மற்றும் யாத்தீரீக பரிசுத்தர் சபையினரையும் நான் எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு எதிராக உங்களுடைய விரலைக் கூட நீங்கள் நீட்ட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் சுத்தமானவர்களாக இருக்கின்றனர். நாமும் அதைப் போலத்தான் ஜீவிக்க வேண்டும் என்ற ஒரு நல்ல காரியமாய் அது உள்ளது. அது உண்மை, அவ்வாறு தான் நீங்களும் வாழ வேண்டும்.
2241 இப்பொழுது, விசுவாசிகளைப் போல பாவனையாக நடிக்கிற அநேகமான பெந்தெகொஸ்தேயினரை நாம் உடையவர்களாயிருக்கிறோம் என்பது நமக்கும் தெரியும். அது உண்மைதான். ஆனால் நீங்கள் ஒரு கள்ள டாலர் நோட்டை காண்கையில் அக்கள்ள டாலரானது ஒரு உண்மையான டாலரைப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது உண்மை. அங்கே—அங்கே ஒரு உண்மையான பரிசுத்த ஆவி, அந்நிய பாஷைகளைப் பேசுகிற, அற்புதங்களையும் அடையாளங்களையும் காட்டுகிறவராகிய உண்மையானவர் ஒருவர் இருக்கிறார். அது பெந்தெகொஸ்தே நாள் முதல் இது வரைக்கிலும் இருந்து வந்திருக்கிறது. எனவே, உண்மையைப் போல நடித்துக் காட்டும் போலியானவனும் நமக்கு இருக்க வேண்டும். ஒரு உண்மையான ஸ்தீரி இருக்கிறாள் என்பதைக் காட்டும்படி அதற்கு நேரெதிராக பொல்லாங்கான ஸ்தீரியும் நமக்கு இருக்க வேண்டும். சூரிய ஒளி மகிமை பொருந்தியது என்று எடுத்துக்காட்ட, நமக்கு கருமையான இருளான இரவு நேரமும் இருக்க வேண்டும். அது உண்மை. நல்ல ஆரோக்கியம் எப்படி என நாம் அனுபவித்திட, நீங்கள் வியாதிப்பட வேண்டும். நன்மைக்கும் தீமைக்குமுரிய பிரமாணமாக அது இருக்கிறது. அவ்வாறே அது காலமெல்லாம் இருந்து வந்திருக்கிறது, காலம் என்று ஒன்று இருக்கும் வரையிலும், அது அவ்வாறே எப்பொழுதும் இருந்து வரும். இப்பொழுது, எனவே, சபையானது அந்த இடத்திற்கு நகர்ந்து வந்துள்ளது.
2342 இப்பொழுது, மத்தேயு 24-ல், “கடைசி நாட்களில்” இயேசு, “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக…என்ற அளவுக்கு இரு ஆவிகளும் ஒன்றையொன்று ஒத்திருப்பது போல் காணப்படும்” என்ற அர்த்தத்தில் நமக்கு கூறவில்லையா? உ—ஊம். ஆனால் உலகத் தோற்றத்திற்கு முன்னே தெரிந்து கொள்ளப்பட்டவன் எவனோ, அவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான். நித்திய ஜீவன் உங்களுக்குள் இருந்தால் அதை உங்களால் வெளியேற்ற முடியாது. தேவனைப் போல் நித்திய ஜீவனும் நித்தியமாயுள்ளது. தேவன் எப்படி முடிந்து போனவராக இருக்க முடியாதோ, அவ்வாறே நித்திய ஜீவனைப் பெற்ற எவரும் முடிந்து போக முடியாது. அது உண்மை. நீங்கள் தேவனின் ஒரு பாகமாக இருக்கிறபடியால், நீங்கள் தேவனுடைய குமாரனும், குமாரத்தியுமாக இருக்கிறீர்கள், உங்கள் வாழ்க்கை அதினால் மாற்றமடைந்துள்ளது. நீங்கள் தேவனின் ஒரு பாகமாக இருந்து, நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளீர்கள். ஓ, நான் அவரை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா?
2443 இப்பொழுது, இன்னொருவர் இங்கே ஒரு குறிப்பை, ஒரு சிறு கேள்வியை என்னிடம் கொடுத்திருக்கிறார், அதற்கு பதிலளிக்க நாம் அதிக நேரம் எடுக்கப்போவதில்லை. நினைவிருக்கட்டும், நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு சிறு கேள்வியை வைக்கும்போதெல்லாம், அதற்குரிய பதிலை அளிக்க நான் என்னால் முடிந்த அளவு முயற்சிசெய்வேன். ஆனால் இது ஒரு முக்கியமான கேள்வியாயிருந்தது: சபையில் பெண்கள் சாட்சிக் கொடுப்பதோ அல்லது பாடுவதோ அல்லது அந்நிய பாஷையில் செய்தி கொடுப்பதோ, செய்திகளை வியாக்கியானம் செய்வதோ அல்லது தீர்க்கதரிசனம் சொல்லுவதோ தவறாகுமா என்பதை ஒருவர் அறிய விரும்பியுள்ளார். 44 இல்லை, அது ஒரு…அது ஒழுங்கின்படி இருக்கும் வரையில் அது தவறல்ல. புரிகிறதா? சபை ஒழுங்கில் இருக்கும் போது மாத்திரமே…பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கம் நிகழ்த்தப்படும் முன்னர் தான் அந்நிய பாஷைகளில் பேசுதலும் அவைகளை வியாக்கியானம் செய்வித்தலும் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதுதான் உண்மையான வழியாகும். பிரசங்கம் நடக்கும்போது அந்நிய பாஷைகளை பேசுதலும், வியாக்கியானம் செய்தலும் இருக்க கூடாது. ஏனெனில் பவுல் கூறிய வண்ணமாக, பரிசுத்த ஆவியானவர் ஒரு சமயத்தில் ஒரு இடத்திலிருந்து தான் கிரியை செய்கிறார். ஆனால் பெண்கள், தீர்க்கதரிசனம் உரைக்கவும், அந்நிய பாஷைகளில் பேசவும், வியாக்கியனம் செய்யவும் வரம் பெற்றுள்ளனர்; ஆயினும் பிரசங்கிகளாக இருக்க அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் பிரசங்கிகளாக இருத்தல் கூடாது. சபைகளில் பிரசங்கிக்க அவர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர் என்பது உண்மையே. சபையில் பெண்கள் பிரசங்கிமார்களின் ஸ்தானத்தை வகிக்கவும் அல்லது போதகர்களாயிருக்கவும் தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வரங்களைப் பொறுத்தமட்டில் பெண்களுக்கு, I கொரிந்தியர் 12-ம் அதிகாரத்தின்படி, எல்லா வரங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்; ஒன்றோ அல்லது ஒன்பது வரங்களில் எதையாகிலும் பெற்றுக் கொள்ளவோ இயலும். அவர்களுடைய வரங்கள் உரிய நேரத்தில் உரிய ஸ்தானத்தில் அதற்குரிய செய்தியைத் தெரிவிக்கக் கூடாதபடிக்கு அவளுக்கு கட்டு ஏதும் இல்லை, நீங்கள் பாருங்கள், ஒவ்வொரு செய்தியும் அதனதன் வேளைக்காக காத்திருக்கிறது.
2545 சபையில் அந்நிய பாஷையில் பேசுகிறவன் ஒருவனுண்டாயிருந்தால், அந்நிய பாஷையை வியாக்கியானம் செய்கிறவன் அங்கே இல்லையெனில், அவன் பேசும் அந்நிய பாஷையை வியாக்கியானம் செய்பவன் ஒருவன் இருக்கிற வரையிலும், அந்நிய பாஷையில் மட்டும் பேசுபவன் அமைதியாக இருக்கக்கடவன். புரிகிறதா? இந்த செய்திகள் ஆராதனையில் பிரசங்கத்திற்கு முன்பாக வந்துவிட வேண்டும். அதன் பிறகு தீர்க்கதரிசியானவள்…அதாவது பிரசங்கியார், ஒரு பிரசங்கியார் ஒரு புதிய ஏற்பாட்டு தீர்க்கதரியாயிருக்கிறான். அவன் வரும்போது, தேவன் அவன் மூலமாக அசைவாடத் துவங்குகிறார், பாருங்கள். ஆகவே அந்நிய பாஷையில் பேசுதல் அர்த்தம் உரைத்தல் முடிந்தவுடனே, அதன்பின்னர் செய்தி அளித்தல் துவங்கும். ஆகையால் பிரசங்கத்திற்கு முன்னமே அது முடிந்துவிட வேண்டும். அதுவே எப்பொழுதும் ஒழுங்காக இருந்து வருகிறது. ஆனால் ஒரு ஸ்தீரிக்கு வரங்களைப் பெற்றுக்கொள்ள உரிமையுண்டு.
2646 அடுத்தபடியாக, இதற்குப் பதிலளிக்க நான் சிறிது நேரம் எடுத்துக் கொள்கையில், அடுத்ததாக, பின்வரும் தலைப்புச் செய்தியை, செய்தித்தாளிலிருந்து நான் வாசிக்கப் போகிறேன். மூன்று விசுவாசத்தில் ஒருங்கிணைந்த ஒரே வேதாகமத்தின் மொழி பெயர்ப்பு ஆரம்பமாகிறது. வாஷிங்டன், அக்டோபர், 15: கத்தோலிக்கர், பிராட்டெஸ்டெண்டுகள், மற்றும் யூத பண்டிதர்கள் ஒரு குழுவாக இயங்கி, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட, ஆதார வேதப் புத்தகம் என அழைக்கப்படும் வேத வாக்கியங்களின் புதிய மொழி பெயர்ப்புக்காக கூட்டாகச் சேர்ந்து பணிபுரிய ஆர்ம்பித்துள்ளனர். 47 இதைப் பற்றி நான் அறிவிப்புச் செய்யும் முன்னர், சில விஷயங்களை பற்றி நான் இன்னும் கொஞ்சம் இங்கே ஆராய விரும்புகிறேன். அதாவது, நாம் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமோ, அவைகள் இந்நாட்களில் நடக்கும் என்று சரியாக வேத வாக்கியங்கள் முன்னுரைத்துள்ளன. இவைகள் யாவும் ஒருங்கிணைந்து, மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கும் என்று வேதம் முன்னுரைத்துள்ளது. அது அப்படியே இருக்கிறது. அவர்கள் அதை முயற்சித்துள்ளனர், அதன் பேரில் அவர்கள் கிரியை செய்து கொண்டிருக்கின்றார்கள். அதை இந்த வேளையில் முன்னிலைப்படுத்துவதற்கு வேறு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இப்பொழுது அவர்களுக்கு சரியான தருணம் வாய்த்துள்ளது. ஏனெனில் அது அவர்களுடைய கரங்களில் தயாராக இருந்து கொண்டிருக்கிறது. இதுவே ஏற்ற வேளை என்று நான் கருதுகிறபடியால் தான், இந்த தீர்க்கதரிசன செய்திகளை நான் இங்கே கொண்டு வருகிறேன்.
2748 ஒவ்வொரு இரவிலும் திரும்பி வருகிறவர்கள் யாராகிலும் இருந்தால், சீக்கிரமாக ஆரம்பித்து, சீக்கிரமாகவே கூட்டத்தை முடித்துவிட முயற்சிப்போம். நான் எடுத்துக் கொண்ட பொருளில் உள்ள செய்தியை நான் அந்தந்தக் கூட்டத்தில் முடிக்காவிடில், அடுத்த நாள் காலையில் நான் அதைப் பற்றி அறிவிப்பு கொடுப்பேன். வெளிப்படுத்தின விசேஷம் 9-ம் வசனம் முதல் 20-ம் வசனம் முடிய உள்ள வசனங்களை நாம் இன்றிரவில் முடிக்க இயலாமற் போனால், நாளை காலை பத்து மணிக்கு மீண்டும் ஆரம்பிப்போம், நாம் எவ்வாறு தொடரப்போகிறோம் என்பதை ஒவ்வொரு ஆராதனையின் முடிவிலும் நீங்கள் அறிந்துகொள்ளும்படி முன் கூட்டியே அறிவித்து விடுவோம். 49 நாளை இரவு எபேசு சபையில் துவங்கி; ஏழு இரவுகளினூடாக எபேசு, எபேசு சபைக்காலம், சிமிர்னா சபைக்காலம், பெர்கமு சபைக்காலம், தீயத்தீரா சபைக்காலம், சர்தை சபைக்காலம், பிலெதெல்பியா சபைக்காலம், மற்றும் அடுத்த ஞாயிற்றன்று, லவோதிக்கேயா சபைக்காலம் என்று வரிசையாக பிரசங்கிக்கப்படும்.
2850 நமது பாதையில் கிடக்கின்ற இந்த மகத்தான விலையுர்ந்த ஆபரணங்களைப் போன்று இருக்கின்ற இச்செய்திகளை நாம் அறிந்திருக்கையில், உரிய வேளை வருகின்ற வரையிலும், அதைப் பற்றி பேசாமலிருக்க என்னால் முடியாது. இந்த மகத்தான செய்திகளை நான் கண்டு, ஆவியானவர் ஜனங்களின் மத்தியில் போஷிப்பதை உணரும்போது, அவைகளைப் பற்றி, விரைவாக ஆவியில் குதித்தெழும்பி பிரசங்கித்துவிட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆயினும், அந்தந்த காலத்தை அதினதின் காலத்திலும், வேளையிலும் வைக்க வேண்டியுள்ளது. ஆகையால் இரவு ஆராதனைக்கு நீங்கள் வர முடியாமற்போனால், ஒலி நாடாக்கள் மூலமாகவது அல்லது வேறெந்த வகையிலாகிலும் இச்செய்தி எங்கும் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டதை நான் உணருகிறபடியால் நான் இதை பிரசங்கித்துள்ளேன். அந்த ஒரேக் காரணத்தினால் தான் நான் இதை செய்துகொண்டிருக்கிறேன். சபைக்கு இது உதவியாக இருக்காது என்று நான் நினைத்தேனேயானால்…மேலும் இந்நாளிலே நினைவுக் கொள்ளுங்கள், இம்மாதிரியான கூட்டங்களை நாம் நடத்த முடியாதபடி அப்படிப்பட்ட வேளையானது விரைவில் வரும் எனவே, இக்கூட்டங்களை நடத்துவதற்குரிய வேளையானது நமக்குக் கிடைத்திருக்கையில் அதை நடத்தியாக வேண்டும். பாருங்கள், எப்பொழுது அவர்கள் இக்கூட்டங்களை தடை செய்வார்கள் என்பது நமக்குத் தெரியாது.
2951 எனவே சபைகள் யாவும் ஒன்று கூடும், அவ்வாறு ஒன்றிணைந்து, சபைகளின் கூட்டமைப்பின் தலைமையை உருவாக்குவார்கள். ஏற்கனவே பெரிய ஐ.நா.சபை ஸ்தாபனம் உள்ளது. அதில் எல்லா சபைகளும் அங்கம் வகிக்கின்றன. அதில் உள்ள சபைகளிலொன்றில் நீங்கள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்; அப்படி இருக்க மறுத்தால், நீங்கள் வெளியே தள்ளப்படுவீர்கள். அந்த வேளையில்தான் நாம் நமது சுய ரூபங்களை காட்ட வேண்டியவர்களாக இருப்போம். நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது. அது அனுமானத்தினால் அறிந்து கொள்ள வல்லது அல்ல. அந்த சிறிய சபையானது, எப்பொழுதுமே சிறுபான்மையாகத்தான் இருந்து வந்துள்ளது. அது மிகவும் சிறிய ஒரு குழுவாகும்…வேதாகமத்தை சுற்றி நிற்கும் ஒரு—ஒரு சிறிய சிவப்பு நூலைப் போல அது உள்ளது. எப்பொழுதும் அதுவே அந்த உண்மையான சபையாக இருந்து வருகிறது. நாம் அதை நினைவில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
3052 நாம் மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கும் முன்னர், ஒரு சிறிய கருத்துரையைக் கூற விரும்புகிறேன். இன்று காலை இயேசு கிறிஸ்துவின் உன்னத தெய்வீகத் தன்மையின் வெளிப்பாட்டை எடுத்துக் கொண்டோம். தேவன் நமக்கு இன்று காலை அவருடைய உன்னத தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தினார். மகத்தானவராக என்பவர் அவர். ( இருந்தேன் அல்லது இருப்பேன் என்று அல்ல) அவர் எப்பொழுதும் இருக்கிறேன் என்பதாகவே இருக்கிறார். வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் வெளிப்படுத்தலைப் பற்றி பார்க்கிறோம்…யாரைப் பற்றிய வெளிப்படுத்துதல் அது? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் அது. முதலாவதாக அவர் இங்கே தன்னைப் பற்றிய வெளிப்பாட்டைத் தருகிறார்? அவர் பரலோகத்தின் தேவன் என்பதாக வெளிப்பாட்டைத் தருகிறார்? தன்னை திரித்துவத் தேவன் என்று அவர் வெளிப்படுத்தவில்லை. ஆனால் தன்னை ஒரே தேவனாகவே வெளிப்படுத்துகிறார். வெளிப்படுத்தின விசேஷத்தில் துவக்கத்திலேயே அவர் தன்னை ஒரே தேவன் என்று அந்தவிதமாகத்தான் வெளிப்படுத்துகிறார். முதலாம் அதிகாரத்தில் அந்த வெளிப்பாட்டை அவர் நான்கு தடவைகள் உரைக்கிறார், எனவே அதில் ஒரு தவறும் இருக்காது. முதலாவதாக நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில்; அவர் வெறும் ஒரு தீர்க்கதரிசியல்ல, அவர் ஒரு—ஒரு இளைய தேவன் அல்ல, அவர் இரண்டாவதாக காணப்படும் நிலையில் உள்ள தேவன் அல்ல, அவர் தேவனே! அவர் தேவனாக இருக்கிறார். எனவேதான். வெளிப்படுத்தலானது வந்தது. நாம் அந்த வெளிப்படுத்துதலோடு இன்றிரவிலும் தொடர்ந்து, அவரது ஏழுவிதமான மகிமையான தோற்றங்களை பெறுகிற வரையிலும் அதனுடன் பார்க்கப் போகிறோம்.
3153 ஓ, இந்த வார்த்தைகளை நாம் போதிக்கையில் தேவன் நமக்கு உதவி செய்வாராக. நான்—நான்—நான் இவைகளின் வரலாற்றுப் பூர்வ அடிப்படையை ஆராய்ந்துள்ளேன். ஆயினும், பிரசங்க பீடத்திற்கு இங்கு வந்து ஆவியின் ஏவுதலைப் பெறுகிற வரையிலும் காத்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் யாவரும் ஒருமித்து கிறிஸ்து இயேசுவுடன் உன்னதங்களில் வீற்றிருக்கிறோம் என்பதை நான் உணருகிறேன். உங்களிலுள்ள உங்களுடைய பாகமான ஆவியானது, அந்த அக்கினிமயமாக நாவானது. (பரிசுத்த ஆவியானவர்) உங்களிலிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது. அவரிலிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது; இப்படியாக மகத்தான தேவனுடைய சரீரம் முழுவதுக்கும் பரவி, அதை அக்கினிமயமாக்குகிறது, அங்கேதான் வெளிப்படுத்துதல் உண்டாகிறது…
3254 “ஸ்திரீகள் இன்னின்ன காரியங்களை சபையிலே செய்யலாமா” என்று என்னிடம் கேட்கப்பட்டிருந்த கேள்வியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருந்தோம். அந்தக் காரியம் தான் சபையை ஆதியில் அதினுடைய குழப்பத்தில் ஆழ்த்த ஆரம்பித்தது. பரிசுத்தமான எல்லாக் காரியங்களையும் அவர்கள் கூட்டத்தாரிடத்திலிருந்து எடுத்துப் போட்டு, பிரசங்க பீடத்தில் தகாத காரியத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஆனால் தேவனோ தான் பேசுகிறதைக் கேட்கிறவர்களாகிய சபையின் தேவனாயிருக்கிறார். ஒவ்வொரு மனிதனிலும் அவர் கிரியை செய்கிறார், அவர் உள்ளே வாசம் செய்ய கூடிய எந்த இருதயத்திலும் ஜீவிக்கிறார். அவர் அந்த வரம் பெற்ற ஜனங்களைக் கண்டு, அவர்களினூடாக கிரியை செய்கிறார். பிசாசினால் அவர்களை எந்தவொரு காரியத்திலும் குறை கண்டு பிடிக்க முடியவில்லையெனில், அப்பொழுது அவன் வந்து ஒன்றுக்கும் உதவாத காரியத்தின் மேல் ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டி, அதினால் மக்களை விலகி ஓடிப் போகப் பண்ணுவான். “சபையாரெல்லாரும் ஏகமாய் கூடி வந்து, எல்லாரும் அந்நிய பாஷைகளிலே பேசிக் கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், ‘அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?’ என்று பவுல் கூறியது போல, சிலர் அந்நிய பாஷைகளில் அப்படியும், இப்படியுமாக தாறுமாறாக பேசிக் கொண்டிருந்தால் அது கிரியை செய்யாது.” ஆனால் பவுல் கூறினான்; “…யாராவது தீர்க்கதரிசனம் சொல்லி இருதயத்தின் இரகசியம் வெளிப்படுத்தப்பட்டால், அப்பொழுது, அவர்கள், ‘மெய்யாகவே தேவன் உங்களுக்குள் இருக்கிறார்’” என்று கூறுவார்கள். ஆனால் ஒருவர் அந்நிய பாஷைகளில் வெளிப்படுத்துதலினால் பேசி, சபையை பக்தி விருத்தியடையச் செய்யும்படி அதனுடைய வியாக்கியானத்தைக் கொடுக்கும் பொழுது, முழு சபையும் அதினால் பக்தி விருத்தியடைகிறது. நாம் அறியாத பாஷைகளில் தேவன் பேசுதல் யாராவது ஒருவர் மூலம் உண்டாகி, அதனுடைய வியாக்கியானமானது இன்னொருவருக்கு கொடுக்கப்பட்டு, அவ்வாறு உரைக்கப்பட்டு, அவ்வாறு உரைக்கப்பட்ட காரியம் உரைத்த வண்ணமாக சம்பவிக்கும் போது, அப்பொழுது, உங்கள் நடுவில் கர்த்தருடைய ஆவியானவர் இருக்கிறார் என்பது தெரிகிறது. ஓ, அவ்விதமான காரியத்திற்காக நாம் முயற்சி செய்வோமாக, நண்பர்களே, அந்த அக்கினியானது நம்மில் தொடர்ந்து பற்றியெரியச் செய்வோமாக.
3355 இப்பொழுது நாம்…திறப்பதற்கு சற்று முன்னர்…இந்த மகத்தான பிரமாணமாகிய வேத வாக்கியங்களை வாசிக்க நாம் நிற்கும் முன்பாக, சில நிமிடங்கள் நாம் யாவரும் எழுந்து நின்று, நமது நிலைகளை சற்று மாற்றிக் கொண்டு, ஜெபம் பண்ணுவோமாக. அது நமக்கு கஷ்டமான காரியமல்ல என்று எண்ணுகிறேன். 56 கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி, இந்த (ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகள் கழித்து) இன்னமும் எங்களுக்கு பிழையேதுமில்லாத பரலோகத்தின் தேவனே, இதற்காக நாங்கள் நன்றியேதுமில்லாத பரலோகத்தின் தேவனாக அவரை அளித்த சர்வ வல்லமையுள்ள தேவனே, இதற்காகவும் அவரது பிரசன்னம் எங்களோடு, தினந்தோறும், எங்களது அன்றாட வாழ்க்கையில் இருக்கிறதற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த குழப்பமான வேளையில் உலகமானது செய்வதறியாது திகைத்து, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பூமிக்கடியில் பதுங்கு குழிகளையும், காரைக் கட்டினால் ஆன பாதுகாப்பரண்களையும் அவர்கள் கட்டிக் கொண்டிருக்கையில், ஓ, தேவனே! தேவனுடைய கோபத்தினின்று அவர்களால் மறைந்துக் கொள்ள முடியாது. ஆனால் ஒரேயொரு நிவாரணம் மட்டுமே உண்டு. கர்த்தாவே, அதை நாங்கள் ஏற்றுக்கொண்டதற்காக மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறோம் அது, “…இரத்தத்தை நான் காண்கையில் உங்களை நான் கடந்து செல்வேன்…” என்பதேயாகும். ஓ, இந்த இராத்திரியிலே, எல்லாவற்றிற்கும் போதுமானதாயிருக்கிற தேவ ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் உண்டான பாதுகாப்புக்காக நாங்கள் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறோம்! அந்த மகாபிரதான ஆசாரியர் இன்று இரவிலே, மகிமையில் நின்று கொண்டு, எங்களுடைய அறிக்கையின் பேரில் எங்களுக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். எங்கள் மத்தியில் இன்றிரவில், அந்த மகத்தான பேச்சாளரை, மகத்தான பரிசுத்தான ஆவியானவரை, மகத்தான அபிஷேகத்தை தருபவரை, மகத்தான ஜீவனை அளிப்பவரை, நாங்கள் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். 57 இப்பொழுதும், தேவனாகிய கர்த்தாவே! இன்றிரவில் இக்கூரையின் கீழே இந்த ஜனங்களை நான் இங்கே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அழைத்திருக்கிறேன். நாங்கள் இங்கே சபையாக அல்லது அதன் ஒரு பாகமாக கூடியிருக்கிறோம். நாங்கள் இந்த கூடாரத்தின் பெயரில் அல்லது எந்த தனிப்பட்ட நபரின் பெயரிலும் ஒன்று கூடியிருக்கவில்லை. அவருடைய சரீரத்தையும் அவரது சிந்தையையும் ஆண்டு கொண்டிருந்ததும், அவரை நிரப்பி ஆண்டு கொண்டிருந்ததுமான அந்த ஆவியானவர் இன்றிரவில் எங்களுக்குள் வந்து, தேவ வசனத்தை வியாக்கியானித்து, அதை அவருக்காக காத்திருக்கிறதான எங்களுடைய பசியுள்ள இருதயங்களுக்கு பிரசங்கித்து, அளிப்பாராக — அவருடைய நாமத்தில் அவருடைய மகிமைக்காக நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் அமரலாம்)
3458 இப்பொழுது வேதாகமத்தை வைத்திருக்கிற நீங்கள், வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரத்திற்கு திருப்பி, அதில் 9-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போமாக. நான் பிரசங்கித்துக் கொண்டே போகையில், சில தேதிகளை நான் கொடுப்பேன். அவைகளை நீங்கள் உங்களுடைய காகிதங்களில் எழுது கோல்களைக் கொண்டு குறித்துக்கொள்ளலாம். 59 இப்பொழுது, இது உண்மையிலேயே…இன்று காலையில் அதிகமாக செய்தியின் மாதிரியோ தெய்வீகத்தன்மையின் பேரிலான வெளிப்பாட்டைக் குறித்த அஸ்திபாரத்தை போடுவதாய் இருந்தது. அதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? தேவன் கிறிஸ்துவில் வெளிப்பட்டார், யேகோவா கிறிஸ்துவில் வெளிப்பட்டார். தேவன் இப்பொழுது எங்கே வெளிப்பட வேண்டும்? அவர் தன்னுடைய சபையில், அவரது ஜனங்களோடு, நம்மில் வெளிப்பட வேண்டும். அதே ஆவியானவர், அதே கிரியைகள், அதேவிதமான வெளிப்படுத்துதல்கள், அதே அன்பு, அதே மன்னிக்கும் தன்மை, அதே நீடிய பொறுமை, சமாதானம், இரக்கம் முதலான கிறிஸ்துவில் இருந்த யாவும், இப்பொழுது அவரது சபையில் இருக்கிறது. நினைவில் கொள்ளுங்கள். இதை சிந்தையில் வையுங்கள். தேவனுடைய தன்மை யாவும் அப்படியே கிறிஸ்துவில் ஊற்றப்பட்டது, (அவர் சரீரப்பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரணமாயிருந்தார்), கிறிஸ்துவின் தன்மை யாவையையும் அவர் சபையில் ஊற்றினார். தேவன் நமக்கு மேலாகவும், தேவன் நம்முடனும், தேவன் நமக்குள்ளும் இருக்கிறார். தேவனின் திரித்துவம், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று வித்தியாசமான விதங்களில் தேவன் வெளிப்பட்டார்.
3560 வெளிப்படுத்தலானது, அவர் மூன்று தேவர்கள் அல்லவென்றும், அவர் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டவரும் அல்ல என்பதையும் காண்பித்தது. ஆனால் அவர் பிதாத்துவத்தின் நாட்களில் இருந்த ஒரே தேவனாய் இருக்கிறார், அவரே குமாரத்துவத்தின் நாட்களிலும் தேவனாய் இருந்தார். அவரே, அதே தேவன்தான் பரிசுத்த ஆவியின் யுகத்தின் நாட்களிலும் தேவனாயிருக்கிறார். மூன்று வித்தியாசமான நபர்கள் அல்ல, மூன்று நபர்கள் அல்ல, மூன்று தனித்தனி ஆள்தத்துவம் உள்ளவருமல்ல. அவர் ஒரே நபர்தான், ஒரே ஆள் தத்துவமுள்ளவர் தான். நீங்கள் ஒரு தனித்தன்மையில்லாமல் ஒரு நபராயிருக்க முடியாது. சிலர், “அவர் மூன்று நபர்கள் அல்ல, ஆனால் அவர் மூன்று ஆள் தத்துவங்களைக் கொண்டவராக இருக்கிறார்” என்று கூறுகின்றனர். நீங்கள் ஆள், ஆள் தத்துவம் என்பனவற்றை வெவ்வேறாக பிரிக்க முடியாது. ஏனெனில், அவர் ஒரு ஆள் தத்துவமுடையவராக இருக்கிறாரென்றால், அப்பொழுது அவர் ஒரு ஆளாக இருக்கிறார். ஒரு ஆளாக இருந்தால் தான் ஆள் தத்துவத்தைக் கொண்டிருக்க முடியும். எனவே, அவர் ஒரு நபர் தான், ஒரு ஆள் தத்துவமுடையவர் தான். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், அல்பா, ஒமெகா, இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவர். ஓ! அவரே எல்லாமுமாயிருக்கிறார். அதை நான் நேசிக்கிறேன்.
3661 அவருடைய தன்மையையும், அவர் ஜீவியத்தையும் அவருடைய கிரியைகளையும் கவனியுங்கள். அவைகள் அவருடைய நாளில் இருந்தது போலவே. இங்கே இப்பொழுதே இந்தக் கூடாரத்திலும் வெளிப்படுத்தப்பட வேண்டும். (இதை நான் தவறான அபிப்பிராயமின்றி கூறுகிறேன், தேவன் அதை அறிவார்) இங்கு மட்டுமல்ல, ஆனால் உலகம் பூராவிலும் அவ்வாறே வெளிப்பட வேண்டும். அவ்வாறே காரியமானது உள்ளபடியால் நான் மகிழ்ச்சியடைகிறேன். அப்பொழுது நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிகிறோம். ஏனெனில், அதே ஆவியான வரை. நாம் நமக்குள் கொண்டிருக்கிறோம், அவர் நம்மோடு அசைவாடி, அவர் இங்கே இருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறார். அது நாம் அல்ல, அது அவராகும்; நாம் இந்தக் காரியங்களைச் செய்ய முடியாது, அது தேவனாயுள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த விஞ்ஞான உலகில் அவருடைய புகைப்படத்தை எடுக்க அவர் அனுமதித்துள்ளார். அவர் நம்மோடு, நம்மில் இருந்து நம்மைச் சுற்றிலுமிருந்து, நமக்கு மேல் இருந்து, நம்மூலமாகவும், நம்மில் உள்ளிலும் புறம்பிலும் கிரியை செய்து வருகிறார். ஓ! இது எவ்வளவு அருமையாயிருக்கிறது. 62 ஒரு சிறிய பாடலை அவர்கள் பாடுவது வழக்கம். நான் எரியும் முட்செடியில் மோசேயுடன் பேசினவராயிருக்கிறேன், நான் ஆபிரகாமின் தேவனும், பிரகாரமான விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன். நான் சாரோனின் ரோஜாவாயிருக்கிறேன்; ஓ, நான் எங்கேயிருந்து வந்தேன் என்று நீ கூற முடியுமா? என் பிதாவை நீ அறிவாயோ அல்லது அவரது நாமத்தை நீ கூற முடியுமா? ஓ! நான் யார் என்பதை நீ கூறுவாயா? அல்லது நான் எங்கிருந்து வந்தேன் என்பதை நீ கூறுவாயா? என் பிதாவை நீ அறிவாயா அல்லது அவரது நாமத்தை நீ கூற முடியுமா? நான் அல்பாவும் ஒமொகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன், சர்வ சிருஷ்டியும் நானே, இயேசு என்பது எனது நாமமே!
3763 ஓ! வெளிப்படுத்தலானது எத்தனை ஆச்சரியமுமாயிருக்கிறது. இப்பொழுது, நீங்கள் வேத பண்டிதர்கள் மூலமாக அதை அறிந்து கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்தவிதமாக அது வராது. அது ஒரு வெளிப்பாடாக மாத்திரமே வரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படுகிற தண்ணீர் ஞானஸ்நானம், வெளிப்படுத்தல் மூலமாக மட்டுமே கொடுக்கப்படும். இயேசுவும் தேவனும் ஒரே நபர்தான் என்பது ஒரு வெளிப்பாட்டினால் மாத்திரமே உண்டாகும். முழு வேதமும் வெளிப்பாடின்மேல் கட்டப்பட்டுள்ளது. முழு சபையும் வெளிப்பாட்டின்மேல் கட்டப்பட்டுள்ளது. மத்தேயு 17-ல் “நான் உனக்கு சொல்லுகிறேன், ‘இந்தக் கல்லின் மேல் (ஆவிக்குரிய வெளிப்பாடு) என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்ளுவதில்லை’” என்று கூறப்பட்டுள்ளது. கத்தோலிக்க சபையைத் தவிர, மார்டின் லூத்தர் காலம் வரையிலும் அதன் பிறகு பிராடெஸ்டெண்ட் சபையிலும் தவிர ஆதியில் எப்பொழுதாவது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தினால் எவருக்காவது ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதா என்பதை வரலாற்றுப் பூர்வமாகவோ அல்லது வேத பூர்வமாகவும் யாராவது நிரூபியுங்கள் பார்க்கலாம் என்று நாங்கள் சவாலிட்டுள்ளோம்.
3864 ஒவ்வொரு பொல்லாங்கும்…நாம் சபை காலங்களுக்குள் ஆய்ந்து படிக்கையில் கவனியுங்கள். முதல் சபையில் காணப்பட்ட ஒவ்வொரு பொல்லாத காரியமும், அப்படியே தனக்கடுத்தான சபையின் காலத்திற்குள்ளும் கடந்து சென்றது. இவ்வாறு அது தொடர்ந்து ஒவ்வொரு சபைக் காலத்திற்குள்ளும் வளர்ந்து கொண்டே போய், முடிவில் கடைசிக் காலத்தில் அது ஒரு விசுவாசத் துரோகமாக முடிவடையும் அளவுக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு தீமையும் இவ்வாறு அடுத்தடுத்து வந்த சபைக் காலத்திற்குள்ளும் நீண்டு கொண்டே வந்துள்ளது. ஒவ்வொரு தவறான கொள்கையும் ஆரம்பித்து, அடுத்தடுத்து வந்த காலங்களுக்குள்ளும் தொடர்ந்து ஆதியாகமத்தில் உள்ளது போல, அந்த கள்ள திராட்சச் செடியானது வளர ஆரம்பித்தது, பின்பு, சபைக் காலத்திற்குள்ளாக படர்ந்து கொண்டே போய் இந்தக் கடைசி நாட்களில் புறப்பட்டு வெளியே வருகிறது. அந்த எல்லாக் காரியங்களிலிருந்து தப்புவது, “அந்த நாளுக்குத் தப்புகிறவர்கள் பாக்கியவான்கள்” என்று வேதம் கூறியது வியப்பொன்றுமில்லையே. ஆம், ஐயா.
3965 இப்பொழுதும், தேவனிடம் கேளுங்கள்…வெளிப்படுத்துதலைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கையில், இதைப் பற்றிய வெளிப்பாட்டை உங்களுக்கு அளிக்கும்படி அவரிடம் கேளுங்கள். ஏனெனில் இது வெளிப்பாட்டினால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். நீங்களும் வெளிப்படுத்தலினால் தான் இரட்சிக்கப்பட முடியும். அதைப் பற்றிய ஒரு அறிவு உங்களுக்கு அறிவுப்பூர்வமாக உண்டாயிருந்தாலும், அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படும் வரையில், நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது. அதைத்தான் வேதம் கூறுகிறது. எந்த மனிதனும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும் வரையில் அவன் இயேசுவை கிறிஸ்து என்று கூற முடியாது. அவர் “போதகர் அவ்வாறு கூறினார், வேதம் அவ்வாறு கூறுகிறது” என்று கூறலாம். அவர்கள் சொன்னது உண்மைதான். “சபை அவ்வாறு கூறுகிறது” எனலாம். அது உண்மைதான். ஆனால், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அதை வெளிப்படுத்தி அவர் உங்களில் வாசம் செய்கிற வரைக்கிலும், நீங்களாக அதை அறியமாட்டீர்கள். “பரிசுத்த ஆவியனாலேயன்றி ஒருவர் இயேசுவை கிறிஸ்து என்று அழைக்க முடியாது.” அறிவினால்ல, மதி நுட்பத்தினால் அல்ல.
4066 பகலும் இரவும் எவ்வாறு ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கிறதோ, அவ்வாறே, தங்களுக்குள் ஒரு வகையிலும் பொருந்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ள யூதர்கள், கத்தோலிக்கர், பிராடெஸ்டெண்டுகள் ஆகிய இவர்கள் மூவருக்கும் பொருந்துபடியான…ஒரு வேதாகமத்தை அவர்கள் எவ்வாறு உருவாக்கப் போகிறார்கள்? யூதர்கள் அதைவிட சரியாக அறிந்துள்ளார்கள் என்றே நான் நினைத்தேன். இவ்வாறு உருவாவதற்குரிய வேளை இதுவே என்று நான் யூகிக்கிறேன். அங்கே தான் அந்த பெரிய விசுவாசத் துரோகத்திற்குள் யாவும் ஒன்று பட வேண்டும். ஆகையால், எல்லா காரியங்களையும் நினைவில் கொள்ளுங்கள், நம்மால் அதைத் தடுக்க முடியாது. ஆனால் நம்மால் செய்யக் கூடியது என்னவெனில் அங்கே நாம் ஒளியை வீசச் செய்ய வேண்டும். அதற்காக நாம் நம்மையே இரத்த சாட்சியாக கொடுக்க வேண்டியதிருக்கலாம். அவ்வாறு செய்து அதை விட்டு நாம் கடந்து செல்லலாம். அவ்வாறு தான் நாம் செய்ய முடியும். ஆனால் அநேகர் அதைச் செய்ய வேண்டியதிருக்கிறது. அந்த விதத்தில் தான் வேதமானது அமைக்கப்பட்டுள்ளது. நாம் ஈடுபட வேண்டிய காரியங்களும் அமைந்துள்ளது. நான் அதை கவனிக்காவிடில், நான் அதற்குள் போய்விடுவேன்.
4167 இப்பொழுது இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் முதலாவது காரியமானது என்னவெனில், இயேசு கிறிஸ்து யார் என்பதைப் பற்றி காண்பிக்கும், இயேசு கிறிஸ்துவைப் பற்றின வெளிப்பாடாக அது முதலாவதாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவே சர்வ வல்லமையுள்ள தேவனாயிருக்கிறார். நாம் அதை அறிவோம். எத்தனைபேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? அப்படியானால், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] அவர் சர்வ வல்லமையுள்ள தேவன், அவருக்கு ஒரே நாமம் உண்டு, வானத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயேசு கிறிஸ்து என்ற அந்த ஒரே நாமத்தினால் மட்டுமே நீங்கள் இரட்சிக்கபட முடியும். தண்ணீர் தொட்டியண்டையில் மட்டும் அவர்கள் ஏன் அதற்குப் பயப்படுகிறார்கள்? அது என்னால் புரிந்து கொள்ள முடியாததாயுள்ளது. ஊ—ஊ புரிகிறதா? ஏனெனில், சிமிர்னா சபையின் காலத்தில் அந்த ஆவியானது உள்ளே நுழைந்து, பிறகு, அது அந்த பெரிய இருளின் காலத்திற்குள்ளும் படர்ந்து, பின்பு அது உபதேசமாக ஆக்கப்பட்டு, இப்பொழுது இந்தக் கடைசி காலத்திற்குள்ளும் பரந்து விரிந்து நிற்கின்றது. இப்பொழுது இந்த வாரத்தில் நாம் வேதத்தையும், வரலாற்றையும் ஆராய்கையில், எவ்வாறு அது—எப்படி அது அந்தக் காரியங்களை வெளிபடுத்துகிறது என்பதை கவனியுங்கள்.
4268 இப்பொழுது அடுத்த காரியம் அது கிறிஸ்துவினால் யோவானுக்கு ஒரு தூதன் மூலமாக, அவருடைய (என்ன?) சபைகளுக்கு கொடுக்கப்படும்படியாக, அதை அவருடைய சபைகளுக்கு வெளிப்படுத்திக் கொடுக்கும்படியாக கொடுக்கப்பட்டது. அவருடைய கரத்திலிருக்கும் அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளுக்குரிய ஏழு தூதர்களாவர். அந்த செய்தியை பெற்றிருக்கிறவன் எவனோ, அவன் அதைப் பெற்றுக் கொள்ளுவான்; அச்செய்தியானது ஆதியில் ஆரம்பித்து அதே உண்மையான செய்தியாகவே இருக்கும். 69 மேலும் தேவன் எவ்வாறு இக்காரியங்களுக்குள் அசைவாடினார் என்பதை காணும்படி, நாம் அந்த ஆழமான இடங்களில் பார்க்கையில், அது ஆச்சரியமாயிருக்கும், உங்களை அது ஆர்ப்பரிக்கச் செய்யும். நான் அதைப் பற்றிப் படிக்கையில், அதைப் படித்துவிட்டு, பின்பு மீண்டும் சற்று சுற்றிலும் நடந்து சப்தமிட்டு, திரும்ப வந்து உட்கார்ந்து, பின்பு மீண்டும் சற்று நடந்தேன். அதைப் பற்றி அறிந்ததினால் இவ்வாறு நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இக்காலத்தில் அதைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும்படி அருளியதற்கு தேவன் எவ்வளவாய் நம்மேல் இரக்கமுள்ளவராய் இருந்திருக்கிறார்! ஏன்? “ஒரு விலையேறப்பெற்ற முத்தைக் கண்டு, போய் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்” என்று இயேசு சொன்னதற்கு ஒப்பாக அது இருக்கிறது. இந்த மகத்தானதை அடையத்தக்கதாக, நீங்கள் உலகின் காரியங்கள் யாவையும் எந்த காரியத்தையும் சார்ந்திருக்கும் ஒவ்வொரு காரியத்தையும் உலகுக்கே விற்று விடுகிறீர்கள். அது உண்மை. உங்களுடைய முழு நங்கூரத்தையும் அந்த மகத்தானதின் மேல் பாய்ச்சி விடுங்கள். அதுவே அவருடைய வார்த்தையைப் பற்றிய அவருடைய வெளிப்பாட்டைப் பார்க்கும்படியான ஆத்தும நங்கூரமாயுள்ளது.
4370 இப்பொழுது, இதை வாசிக்கிற எவனும் பாக்கியவான்கள். அது சரிதானே? இன்று காலையில் நாம் கூறினோம். உங்களால் இதை வாசிக்க முடியவில்லையெனில், அதை வாசிக்கக் கேட்டால் பாக்கியவான்கள். இப்பொழுது, இது, அமர்ந்து வாசிக்கக் கேட்கிறவர்களுக்கு ஆசீர்வாதத்தைக் கூறி துவங்குகிறது. இதோடு எதையாவது எவனாது கூட்டினாலோ, அல்லது இதிலிருந்து எடுத்துப் போட்டாலோ, அவன் மேல் சாபத்தை உரைத்து முடிகிறது. இயேசுவே சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதாக வேதாகமம் வெளிப்படையாக வெளிப்படுத்துகிறதென்றால், அதை வேதத்திலிருந்து எடுத்துப் போடுகிறவன் எவனோ அவனுக்கு ஐயோ! ஆம். அது ஒரு வெளிப்படுத்துதலாக இருக்கிறது. இதோடு எந்த ஒன்றையும் கூட்டுகிற எவனும்…அது வெளிப்படுத்துதலின் முழு பிரமாணமாக உள்ளது. அது தேவனுடைய கடைசிப் புத்தகமாகவும் உள்ளது. அவருடைய கடைசி வசனங்கள்…அவருடைய கடைசி…அதற்கு முரண்பட்டதாக வரும் எந்தவொரு வெளிப்பாடும் கள்ளத் தீர்க்கதரிசிசனமாக இருக்கிறது, அது தேவனல்ல, ஏனென்றால் இதுவே சத்தியமாகும். 71 வேதத்தில் கிறிஸ்து தாமே அங்கீகாரத்தைத் தந்து உறுதிப்படுத்தும் ஒரே புத்தகம் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அவரைப் பற்றிய வெளிப்பாட்டைத் தருகிற ஒரே புத்தகம். இதுவே அவர் தனது முத்திரையைப் பதித்திருக்கிற ஒரே புத்தகம். அவருடைய ஆசீர்வாதங்கள், அவருடைய சாபங்கள் இரண்டையும் இதில் வைத்திருக்கிறார். இதை ஏற்றுக் கொள்ளுகிறவர்களுக்கு ஆசீர்வாதங்களும், ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு சாபங்களும் கிடைக்கப் பெறும்.
4472 இப்பொழுது—இப்பொழுது நாம் துவக்கமாக, பத்மூ தீவுக்குப் போவாம், 9-வது வசனம். முதலாவதாக நாம் இதைக் கூற விரும்புவது…இச்செய்திக்கு பத்மு தரிசனம் என்று தலைப்புக் கொடுப்போமாக. கி.பி.95 முதல் கி.பி.96 முடிய உள்ள காலத்தில் இது சம்பவித்தது. பத்மு என்னும் தீவு தான் இது நடந்த இடமாயிருந்தது. இத்தீவு இருந்த இடம், ஏஜியன் கடலில், எபேசு சபை இருந்த பட்டிணத்திற்கு எதிரே கடலில், ஆசியா மைனரின் கடற்கரைக்கு மேற்கே 30 மைல்கள் அப்பாலும், மத்திய தரைக் கடலை எல்லையாகக் கொண்டும் இருக்கிறது. அந்த ஸ்தானத்தில் தான் அத்தீவு உள்ளது. 73 எண்ணிப் பாருங்கள்! இப்பொழுது, பத்மு என்னும் ஒரு தீவானது, ஏஜியன் கடலில், ஆசியா மைனர் கடற்கரைக்கு அப்பால் 30 மைல்கள் தூரத்திலுள்ளதாகும். பிலதெல்பியா சபைக்கு எதிராக…இல்லை, முதல் செய்தி கொடுக்கப்பட்டது, அச்சமயத்தில் யோவான் மேய்ப்பனாக இருந்ததுமான எபேசு சபை இருந்த எபேசு பட்டிணத்திற்கு எதிர் திசையில் இத்தீவு அமைந்திருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், யோவான் பத்மு தீவில் இருந்து கொண்டு கிழுக்கு நோக்கி, தன்னுடைய சபையை நேராக நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தான். முதல் செய்தியானது அவனது சபைக்குரியதாக இருந்தது, அச்சபை, ஒரு சபை காலத்திற்கு முன்னடையாளமாக இருந்தது. அது சரியே. அவ்வேளையில், எபேசு சபைக்கு மேய்ப்பனாக இருந்த திவ்விய வாசகனாகிய பரிசுத்த யோவானுக்கு தரிசனமாக அருளப்பட்டது.
4574 என்ன விதமான நிலையில் அப்பொழுது இந்த தீவு இருந்தது? அது எங்கே இருந்தது, என்ன நிலையில் அது இருந்தது? சரி வரலாற்றிலுருந்து அத்தீவு, பாறைகளால் நிறைந்ததொரு தீவு என்றும், அங்கே விஷ ஜந்துக்களான சர்ப்பங்களும், தேள்களும், பல்லிகளும் நிறைந்ததுமான தீவு என்றும் அறியப்படுகிறது. அது 30 மைல்கள் சுற்றளவு உள்ளதாகும். முழுவதும் பாறைகளால் நிறைந்திருந்தது. யோவானின் நாட்களில் அது அல்கேட்ராஸ் என்ற இடத்தில் இருந்த சிறைச் சாலையைப் போன்று உபயோகப்படுத்தப்பட்டது. ரோமச் சக்கரவர்த்தியின் அரசானது, சாதரண சிறைச் சாலைகளில் வைக்க முடியாத மிகக் கொடுங்குற்றவாளிகளை பத்மு தீவுக்கே நாடு கடத்தினார்கள். அத்தீவுக்கு நாடு கடத்தி, அக் குற்றவாளிகள் அங்கேயே மரிக்கும் மட்டும் விட்டு விடுவார்கள். 75 கேள்வி: யோவான் ஏன் அங்கே இருந்தான் என்பதற்கு காரணம் என்ன? தேவ பக்தியுள்ள ஒரு மனிதன் அவன், நீதியுள்ள மனிதன், நல்ல கீர்த்தியுள்ள மனிதன், நல்ல குணமுடையவன், ஒரு போதும் தொல்லையில் சிக்கிக் கொள்ளாதவன், இப்படிப்பட்ட மனிதன் ஏன் இங்கே இருந்தான்? வேதம் “தேவ வசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும்” யோவான் பத்மு என்னும் தீவில் இருந்தான் என்று உரைத்துள்ளது.
4676 இப்பொழுது நாம் காட்சியமைப்பைப் பெற்று விட்டோம். ஏஜியன் கடலில், கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 30 மைல்கள் தூரத்தில், பத்மு என்னும் தீவு அமைந்துள்ளது, அங்கே முழுவதும் பாறைகள் நிறைந்திருந்தது. முழுவதும் பல்லி, தேள்கள் மற்றும் இன்னபிற விஷ ஜந்துக்கள் நிறைந்தவையாயிருந்தது. (அல்கேட்ராஸைப் போல) அது ஒரு சிறைச்சாலையாயிருந்தது. அல்கேட்ராஸைப் என்ற இடத்தில், சிறைச்சாலையில் வைக்க முடியாத அளவுக்கு உள்ள மிகக் கொடுங்குற்றவாளிகளைக் கொண்டு போய் போட்டு விடுவார்கள். 77 அவர்கள் இந்த திவ்விய வாசகனாகிய பரிசுத்த யோவான் என்ற இந்த சீஷனை இங்கே கொண்டு வந்து போட்டுவிட்டார்கள்…சீஷர்களிலேயே கடைசியாக இயற்கையாக மரணமடைந்த சீஷன் யோவானே. யோவான் இந்த தீவில் கொண்டு போடப்படும் முன்னதாக, ஒரு “பில்லி சூனியக்காரன்” என்று குற்றஞ்சாட்டப்பட்டான். அவனை அவர்கள் ஒரு கொதிக்கிற எண்ணெய் கொப்பரையில் போட்டு இருபத்தி நான்கு மணி நேரம் கொதிக்க வைத்தார்கள். ஆனால் அந்தக் கொதிக்கிற எண்ணெய் அவனை சுட்டுப் பொசுக்கி அழித்து விடவில்லை. ஒரு நபருக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியை உங்களால் வேக வைக்க முடியாது …?… அது தேவன் தாமே. அவனை எண்ணெய் நிறைந்த கொப்பரையில் போட்டு இருபத்தி நான்கு மணி நேரம் கொதிக்க வைத்தார்கள். ஆனால் அவனுக்கு எத்தீங்கும் அணுகவில்லை. அந்தக் காரணத்தினால் ரோமானியர்கள், “யோவான் ஒரு சூனியக்காரன், எனவே எண்ணெய்க்கு மந்திரம் போட்டு விட்டான்” என்று கூறினார்கள். மாம்ச சிந்தை என்ன விதமாக அதைப் பற்றி சிந்திக்கிறது. பாருங்கள்! அவ்வாறே அவர்கள் “மனோவசியத்தின் மூலம் சிந்தையைப் படிக்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்கள் மற்றும் பெயல்செபூல்” என்று நம்மைக் குறித்தும் அவர்கள் கூறுகையில், எங்கிருந்து அந்த பழைய ஆவியானது வந்துள்ளது என்பதை நீங்கள் பார்த்தீர்களா? ஆனால் அந்த உண்மையான ஆவியானது எங்கிருந்து வந்துள்ளது என்பதை நீங்கள் கண்டீர்களா? அது சபைக் காலங்களிலிருந்து வந்தது. புரிகிறதா? சூடாக கொதிக்கும் எண்ணெயில் இருபத்தி நான்கு மணி நேரம் போட்டு அவனை கொதிக்க வைத்தும், அது அவனை தொடவேயில்லை. ஓ! எவ்வளவாய் தேவன் அவருடைய பரிசுத்த ஆவியானவரை அரணாக வைத்து அவனைப் பாதுகாத்தார்! யோவானுடைய ஊழியமோ இன்னுமும் முடிவடையாமலிருந்தது.
4778 பின்பு அவனை அவர்கள் அத்தீவில் இரண்டு ஆண்டுகள் போட்டிருந்தார்கள். இவ்வாறு அவன் தேவனுக்கென்று தேவனால் தனிமைப்படுத்தப்பட்டபோது. கர்த்தருடைய தூதன் அவனுக்கு வெளிப்படுத்திய பிரகாரம், அவன் இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை எழுதினான். அது முடிந்தவுடன், தன் சொந்த நாட்டிற்கு வந்து, எபேசுவில் இருந்த சபைக்கு அவன் மேய்ப்பனானான். திவ்விய வாசகனாகிய யோவான் எபேசுவில் மரித்து, அங்கேயே அடக்கம் பண்ணப்பட்டான்.
4879 ஓ, இப்பொழுது என்னே ஒரு காட்சியமைப்பு! சரி, அப்பொழுது சபையானது யோவானின் கீழே இல்லை பெரிய உபத்திரவத்தின் கீழே இருந்தது என்று யோவான் 9-ம் வசனத்தில் எழுதுகிறான். உங்கள் சகோதரனும், இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவளுடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன் பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவ வசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன். 80 அதாவது வேறு வார்த்தைகளில் கூறினால், அவன் தேவனுடைய வார்த்தையை எடுத்து, அது தேவனுடைய வார்த்தை தான் என்பதை நீருபித்து கொண்டிருந்தான். கிறிஸ்துவும் அவன் மூலமாக திரும்பி வந்து அவன் சொல்வது சரியே என்பதை சாட்சியிட்டார். அங்குதான் காரியமே உள்ளது. தேவனுடைய வார்த்தை யோவானில் வெளிப்பட்டு, அவன் தேவனுடைய ஊழியக்காரன் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அவர்களால் அதை மறுக்க முடியவில்லை. எனவே அவர்கள் அவனை ஒரு “சூனியக்காரன்” என சொல்ல வேண்டியதாயிற்று. “அவன் எண்ணெயை மந்திரம் செய்துவிட்டான், அது அவனுக்கு ஒரு கெடுதியும் செய்யவில்லை. மக்களை அவன் சூனிய சக்தியினால் மயக்கிப் போட்டான், அவர்கள் சுகமடையவில்லை, அவன் குறி சொல்லுகிறவனாயிருந்தான். அதனால் முடியவில்லை…” என்று இவ்வாறெல்லாம் அவனைக் குறித்து கூறினார்கள். “ஒரு விதமான மோசமான நபர், கெட்ட, வஞ்சக ஆவியை பெற்றவன்” என்றெல்லாம் அவனைக் குறித்துக் கூறியிருப்பார்கள். அவன் மக்கள் சமுதாயத்துக்கு அபாயம் விளைவிக்கக் கூறியவன் எனக் கருதி அவனைக் கொண்டுபோய் இத்தீவில் போட்டுவிட்டார்கள். ஆனால் அவனோ, இத்தீவில் போடப்பட்டதில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவனாகவே இருந்தான். அந்த மோசமான நிலையிலும் யோவானைப் பற்றி தேவனுக்கு ஒரு நோக்கம் இருந்தது.
4981 தேவனால் அவனை உபயோகிக்க முடியவில்லை, எனவே அவனுக்கு எல்லா உபத்திரவங்களும் மற்ற காரியங்களும் உண்டாயின, ஏனென்றால் பரிசுத்தவான்கள் தொடர்ந்து அவனிடம் வந்து, “ஓ, சகோதரன் யோவானே, நாம் இதைக் குறித்து என்ன செய்யலாம்? நாம் என்ன செய்வோம்?” என்று கேட்டுக் கொண்டேயிருந்தனர். 82 யோவான் ஒரு தீர்க்கதரிசி என்பதை நாம் அறிவோம். எனவே அவர்கள் அவனிடம் வந்து இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே தான் தேவன் ரோம சாம்ராஜ்யத்தைக் கொண்டு அவனை எடுத்து அந்த தீவில் போடச் செய்தார். அவர் அவனிடம், “யோவானே வா, நான் சம்பவிக்கப் போகிற ஒரு காரியத்தை காண்பிக்கப்போகிறேன்” என்றார். இதை எழுதுவதற்கு அப்பொழுது அப்போஸ்தலர்களில் யோவானைத் தவிர வேறு யாரும் உயிரோடிருக்கவில்லை. எனவே அவர்கள் அவனை கி.பி 95 முதல் 96 முடிய பத்மு தீவில் போட்டு வைத்திருந்தார்கள். அவன் அதை எழுதினான், அவன் கூறினான்: “…உங்கள் சகோதரனும் உபத்திரவத்தில் உங்கள் உடன் பங்காளனுமாயிருக்கிற…” 83 இப்பொழுது இங்கே யோவான் மகா உபத்திரவத்தைக் குறித்து பேசவில்லை. யோவான் கூறுகிற உபத்திரவம் மகா உபத்திரவ காலம் அல்ல. அது சபைக்கு நேரிடாது. மகா உபத்திரவம் யூதருக்குத் தான் நேரிடப் போகிறது; அது மணவாட்டி சபைக்கு நேரிடப்போகிறதில்லை. எனவே, எனவே அது மகா உபத்திரவமல்ல, உபத்திரவம் மட்டுமே,
5084 இப்பொழுது 10-ம் வசனம்: கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன் கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்… 85 நீங்கள் முதலாவதாக ஆவிக்குள்ளாகாமல் உங்களால் நன்மையானதொன்றையும் செய்ய முடியாது. தேவனால் உங்களை உபயோகிக்க முடியாது. நீங்கள்—நீங்கள்—நீங்கள்—நீங்கள்…ஆவிக்குள்ளாக நீங்கள் முதலில் எதையும் செய்யும் வரையிலும், உங்கள் முயற்சிகளெல்லாம் வீணாக இருக்கிறது. “நான் பாடினால் ஆவிக்குள்ளாகப்பாடுவேன், நான் ஜெபித்தால் ஆவிக்குள் ஜெபிப்பேன்” என்று பவுல் கூறினான். நன்மையான எந்தவொன்றும் உங்கள் மூலமாக வருகிறதென்றால், அது எனக்கு ஆவியால் வெளிப்படுத்தப்பட்டு, (வார்த்தையினால் உண்டாகிற விளைவுகளினால் வார்த்தை வெளிப்பட்டு) வார்த்தையினால் அது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
5186 இதையே இன்னொரு விதமாகக் கூறுவோவெனில், இயேசு கிறிஸ்து தன் வார்த்தையில், நான் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவேமெனில், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவேன் என்று வாக்களித்துள்ளார் என்று நான் கூறுவேனாகில், அப்பொழுது நான் செய்ய வேண்டிய முதல் காரியமென்னவெனில், மனந்திரும்ப வேண்டியதாகும். அது உண்மையானது தான் என்பது எனக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பிறகு நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். அப்பொழுது ஏற்படும் விளைவு என்னவெனில், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வேன் என்பதாகும். 87 நான் சுகவீனமாயிருக்கிறேனென்றால், எனக்கு அவர் செய்துள்ள வாக்குத்தத்தம் என்னவெனில், நான் விசுவாசித்து, சபையின் மூப்பர்களை வரவழைத்து, அவர்கள் எனக்கு எண்ணெய் பூசி ஜெபித்தால், விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் என்பதேயாகும். “கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன். நான் உம்முடைய கட்டளையைப் பின்பற்றுகிறேன். மூப்பன் ஒருவன் எனக்காக எண்ணெய் பூசி ஜெபிக்கட்டும்” என்று நீங்கள் கூறுவீர்களானால் அப்பொழுது அதுவே தீர்வாகிறது, அப்படியே தொடர்ந்து செல்லுங்கள். யாவும் சரியாகிவிடும்.
5288 நீங்கள் ஒருவேளை, “ஓ! எவ்விதத்திலும் ஒரு வித்தியாசத்தையும் உணரவில்லை” என்று கூறலாம். தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுவை தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்னரே பலியிட்டபோது, தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவரை பலியிட்ட போது, இயேசு பிறக்கவில்லை. ஆனால் தேவனுடைய சொந்த சிந்தையில், அவர் ஏற்கனவே அதை செய்து முடித்து விட்டார். நானோ அல்லது நீங்களோ அப்பொழுது இங்கே இருக்கவில்லை. ஆனால் தேவனுடைய புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் எப்பொழுதாகிலும் இடம் பெற்றிருந்திருக்குமானால், அது உலகத் தோற்றத்திற்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டது. 89 தேவன் எதையாகிலும் உரைக்கிறபொழுது. அது சம்பவித்தாக வேண்டும். ஆகவே தேவனுடைய தேவையான காரியங்களை நீங்கள் பூர்த்தி செய்வீர்களென்றால், தேவன் தம்மை வெளிப்படுத்தி மீதமுள்ளதை அவர் பொறுப்பெடுத்துக் கொள்வார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்களோ. அது முடிந்துபோன ஒரு கிரியை என்று முன்னோக்கிச் செல்லலாம். ஓ, இது அற்புதமாயில்லையா? ஓ, என்னே! எண்ணிப் பாருங்கள்! தேவனிடம் கூறுங்கள்…தேவன், “நீங்கள் இன்னின்னதைச் செய்யுங்கள், நான் இதைச் செய்வேன்” என்று கூறினால், அப்பொழுது, நல்லது, நான் போய் இதைச் செய்தால், தேவனும் அதைச் செய்தாக வேண்டும்.
5390 இப்பொழுது பிசாசு, “பார்த்தாயா, அவர் தாமதிக்கிறாரே” என்று கூறுவான். அது எந்த வித வித்தியாசத்தையும் ஏற்படுத்திவிடப் போகிறதில்லை. தானியேல் ஒரு தடவை ஜெபித்த பொழுது தூதன் அவனிடம் வந்து சேருவதற்கு 21 நாட்கள் தாமதமாயிற்று. ஆயினும் தானியலோ மனம் தளர்ந்துவிடவில்லை. எப்படியும் அவர் வருவார் என்று அவன் அறிந்திருந்தபடியினால், அவன் அவர் வருகிற வரையிலும் காத்திருந்தான். அது உண்மை. ஓ, அப்பொழுதான் நீங்கள் விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இதை நாம் பெற்றுக் கொண்டால், உடனே சுகமளித்தல் ஆராதனையை நாம் வைத்துக் கொள்வேமல்லவா? ஆம், அது விசுவாசத்தினால் உண்டானது. ஆனால் நமக்கு ஆத்துமாவை குணமாக்கும் ஆராதனை உள்ளான மனிதன் குணமடைவதற்காக தேவையாயிருக்கிறது. ஏனெனில், அது தான் நிலைத்திருக்கப் போகிறது. நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள், நித்திய ஜீவனானது மறைந்து போவதில்லை. அது முதுமை அடைவதும் இல்லை. அது மாறாமல் நிலைத்திருக்கிறது.
5491 இப்பொழுது, எதுவும் சம்பவிக்கும் முன்பு யோவான் ஆவிக்குள்ளானான். முதலாவது அவன் செய்ததென்னவென்றால், அவன் பத்மு என்னும் தீவில் இருந்தான். (அவன் செய்ததெல்லாம் இது தான்) அவன், “நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன்” என்று கூறினான். மற்றும் ஏனைய காரியங்களை அவன் செய்தான். ஆனால் எதுவும் சம்பவிக்கும் முன்பாக அவன் முதலில் ஆவிக்குள்ளானான். உங்களுடைய வேதாகமத்தில் நீங்கள் அதைக் கவனிப்பீர்களானால், ஆவி என்பது ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் உள்ளது, பரிசுத்த ஆவி. ஆமென். அவன் ஆவிக்குள்ளானான். ஓ! அது அற்புதமானது என்று கருதுகிறேன். கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்… 92 எந்த நாளில்? கர்த்தருடைய நாளில், இப்பொழுது, ஒரு பெரிய விவாதம் இதைப் பற்றி உள்ளது? ஒரு நிமிடம் நாம் அதை சரிப்படுத்துவோம். 93 இப்பொழுது இன்று காலையில் நாம் கூறியபடி, சிலர் பரிசுத்த மத்தேயு சுவிசேஷம் 17-ம் அதிகாரத்தின் வெளிப்பாடு “பேதுரு” என்பதாகும் என்று கூறினர். கத்தோலிக்க சபையானது, “அவர் தன் சபையை பேதுருவின் மேல் கட்டினார்; பேதுரு தான் முதலாவது போப் ஆவார்” என்று கூறியுள்ளது. பேதுரு போப்பாக இருந்து கொண்டு எவ்வாறு திருமணம் செய்தவராக இருக்கமுடியும்? பார்த்தீர்களா? “பேதுரு ரோமாபுரிக்குச் சென்று, அங்கே மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்” என்றும் கூறுகிறார்கள். வரலாற்றிலோ அல்லது வேறு எதிலோ பேதுரு ரோமாபுரிக்குச் சென்றான் என்பதை நிரூபிக்கும் சான்று ஒன்றை நீங்கள் எனக்குச் சொல்லுங்கள் பார்க்கலாம். பார்த்தீர்களா? பேதுரு ரோமாபுரிக்கு செல்லவில்லை, பவுல் தான் சென்றான். அது தான் சரி.
5594 எனவே இந்த எல்லா தவறான கொள்கைகளும் மற்றக் காரியங்களும் உள்ளே நுழைந்தவைகளாகும். பாருங்கள்? ஆனால் இன்றைக்கு ஜனங்கள்…நீங்கள் போகிற இடமெங்கும் அவர்கள் …ஏதோ ஒரு சபையானது, அவருடைய கையில் கடாவப்பட்டிருந்த ஆணிகளில் ஒன்று தன்னிடம் இருப்பதாக கூறி கொள்ளுகிறது. இவ்வாறான ஆணிகள் எத்தனை தங்களிடம் உள்ளன என்று அவர்கள் இன்று கூறிக் கொள்ளுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? பத்தொன்பது ஆணிகள். அவர்களிடம் எலும்புகள் உள்ளன. தொட்டுப்பார்க்கும்படி அவருடைய அங்கியின் துண்டுகள் தங்களிடம் உள்ளன என்று கூறுகிறார்கள். அவைகளெல்லாம் நம்மிடம் இல்லை. நமக்கு அவைகள் தேவையுமில்லை. கிறிஸ்து உயிரோடிருக்கிறார்! அவர் நம்க்குள்ளாக இருக்கிறார், ஏதோ ஒரு ஆணியிலோ அல்லது சிலுவைத் துண்டிலோ அல்லது எலும்புத் துண்டிலோ அல்லது வேறோ ஒன்றில் அல்ல. அவர் ஜீவனுள்ள தேவனாய், நமக்குள் இப்பொழுது ஜீவித்துக் கொண்டு, தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நினைவுச் சின்னமாக நம்மிடையே ஒன்றேயொன்று தான் உள்ளது. அதுவே அவருடைய மரணத்தை நினைவு கூறும்படியாக உள்ள கர்த்தருடைய இராப்போஜனமாகும். ஆனால் கிறிஸ்துவைப் பொருத்தமட்டில், அவர் நம்முடன் இருக்கிறார், அவர் நமக்குள் இருக்கிறார். அதைத் தான் நாம் உலகுக்கு (பரிசுத்த ஆவியானவரின் மகிமை) அசைவாட்டிக் காண்பிக்க விரும்புகிறோம். ஒளியானது மறைந்து போகிற வரையிலும் அதை அசைவாட்டிக் கொண்டிருங்கள். அது சரிதான்.
5695 இப்பொழுது,…எனவே, நாம் சாலையின் வேறு பக்கத்தை எடுத்துக் கொண்டோம் என்பதை நீங்கள் பாருங்கள். இவ்வாறே இருக்க நான் எப்பொழுதும் முயன்றதுண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். நம்முடைய கர்த்தர் எப்பொழுதும் அதை எனக்கு வெளிப்படுத்தியே இருக்கிறார். சாலையின் தீவிர வலது ஓரமும், தீவிர இடது ஓரமும் உள்ளன. ஆனால் சாலையின் நடுவில் சத்தியமானது இருக்கின்றது. பெருவழி ஒன்று உண்டாயிருக்கும் என்பதாக அவர் கூறியதைப் பற்றி ஏசாயாவில் நீங்கள் கவனித்தீர்களா? அது ஏசாயா 35-ல் உள்ளது. “பரிசுத்தத்தின் பெருவழிப் பாதை, பரிசுத்தத்தின் பெரு வழிப்பாதை” என்ற பாடலை நமது விலையேறப்பெற்ற நசரேய சபைச் சகோதரர்கள் எப்படியாய் பாடுவார்கள் என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கும். இப்பொழுது, சரியானபடி உங்கள் வேதத்தை நீங்கள் வாசீப்பீர்களானால், அங்கே, “பரிசுத்தத்தின் பெருவழி” (Highway of Holiness) என்று சொல்லப்படவேயில்லை. வேதம் கூறுகிறது: “…இங்கே பெருவழி ஒன்று உண்டாயிருக்கும், ஒரு வழியும் உண்டாயிருக்கும்;” அது பரிசுத்தத்தின் பெருவழி என்னப்படும் என்றில்லாமல், “பரிசுத்த வழி” என்னப்படும் என்றே கூறப்பட்டுள்ளது. பெருவழி உண்டாயிருக்கும் என்ற வார்த்தைக்குப் பிறகு இணையிடைச் சொல் வந்து அந்த வார்த்தை முடிவடைகிறது. பார்த்தீர்களா? “அதற்கு பிறகு, ஒரு வழி என்பது வருகிறது. அங்கே பெருவழி ஒன்று உண்டாயிருக்கும்; ஒரு வழியும் உண்டாயிருக்கும், அது பரிசுத்த வழி என்னப்படும்…” அது பரிசுத்ததின் பெருவழி என்று கூறப்படவேயில்லை. 96 ஒரு வழியானது , ஒரு சாலையானது போடப்படுகிறது…ஒரு நல்ல சாலையானது உருவாக்கப்படுகிறது. அச்சாலையின் உயர்ந்த பாகமானது அதின் நடுவில் தான் உள்ளது. ஏனெனில், அது எல்லா குப்பை கூளங்களும் கழுவப்பட்டு சாலையில் இரு ஒரங்களுக்கும் போய்விடும்படி செய்துவிடுகிறது. அது மனிதன் உண்மையிலேயே கிறிஸ்துவண்டை வருகையில், அவன் தனது கண்கள் கிறிஸ்துவின் மேல் மாத்திரம் மையம் கொள்ளும்படி வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அவன் சற்று உணர்ச்சிவசப்பட்டவனாக இருந்தால், அவன் ஒரு மூடபக்தியுள்ளவனாக ஆகிவிடுகிறான். அவனோ சற்று குளிர்ந்து போன நிலையில் இருப்பானென்றால், அவன் சாலையின் மற்றொரு பக்கத்திற்கு போய், ஒரு குளிர்ச்சியான வெள்ளிரிக்காயாகிவிடுவான், அந்த மற்ற பக்கத்திற்கு சென்றுவிடுவான்; பாருங்கள், அவனுடைய மதிநுட்பம். ஆனால் பிரதானமான காரியமானது. சாலையின் நடு மையத்தில் உள்ளது. அங்கே, உங்களை அனலுள்ளவர்களாய் வைத்து அசையச் செய்ய போதுமான அளவுக்கு உங்களுக்குள் ஆவியானது உள்ளது. ஆமென்! அது தானே ஆவியானவரின் கீழ்ப்படிதலுக்குள் உங்களை நீங்கள் வைத்துக் கொள்ள போதுமானபடி அறிந்து கொள்ளச் செய்கிறது. அவர் ஆவியானவர் அசைகிறபடி நீங்கள் அசையும்படி செய்கிறார். அவர் அசைவாடப் போகும் வரையிலும் அல்ல, அல்லது அதற்கு பிறகு அல்ல, ஆவியானவர் அசைகிறபடி நீங்களும் அப்பொழுது அசைவதற்காக உள்ளது.
5797 கத்தோலிக்க சபையானது, “வெளிப்பாடானது பேதுருவாகும்” என்று கூறியுள்ளது. பிராடெஸ்டெண்ட் சபை, “அது கிறிஸ்துவாயிருக்கிறது” என்று கூறியுள்ளது. ஆனால் வேதமோ, “தேவன் கிறிஸ்துவைப் பற்றி அளிக்கும் வெளிப்பாட்டின் மேல் (தேவன் அவருக்கு அளிக்கும்) அது கட்டப்பட்டுள்ளது” என்று உபதேசிக்கிறாது. “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.” “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, ஒரு மனிதனோ, ஒரு வேதபாட கருத்தரங்கோ, அல்லது ஒரு குரு மடமோ அல்லது வேறு எதுவுமோ இதை உனக்குப் போதிக்கவில்லை. ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். நீ பேதுருவாயிருக்கிறாய், இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.”
5898 இப்பொழுது இரண்டு வித்தியாசமான கருத்துக்கள் ஏற்படுகிற இன்னொரு இடத்திற்கு நாம் இங்கே வருகிறோம். இப்பொழுது, நான் ஒரு வேளை தவறாயிருந்தால் தேவன் என்னை மன்னிப்பாராக. ஆனால் நான் ஏழாம் நாள் சபைக்காரர்களோடு கருத்தொருமித்துப் போகவில்லை. அச்சபையார் “கர்த்தருடைய நாளில் என்று யோவான் கூறியது வாரத்தின் ஏழாம் நாளைக் குறிக்கிறது” என்று கூறுகிறார்கள். யோவான் கர்த்தருடைய நாளில் என்று குறிப்பிடுவது ஓய்வு நாளைக் குறித்துதான் என்று ஏழாம் நாள் சபைச் சகோதரர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்த அநேகரும் கூறுகிறார்கள். கிறிஸ்துவ சபையானது, “வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக் கிழமை” தான் கர்த்தருடைய நாள் என்று கூறுகிறார்கள். பிராடெஸ்டெண்டு சபையினர். இன்றளவும், ஞாயிற்றுக் கிழமையைத் தான் கர்த்தருடைய நாள் என்று குறிப்பிடுகிறார்கள் என்பதை நாம் அநேக தடவைகளில் கவனித்திருக்கிறோம். அவ்வாறு கூறுவதெல்லாம் வேத பூர்வமானதல்ல. வேதத்தின்படி ஞாயிற்றுக்கிழமையானது வாரத்தில் முதல் நாள் தான், அது கர்த்தருடைய நாளல்ல. அது ஏழாம் நாளாகிய ஓய்வு நாளுமல்ல. கர்த்தருடைய நாள் என்பது ஞாயிறு அல்லது சனி ஆகிய இவ்விரண்டு நாட்களில் ஒன்றாக இருப்பது கூடாத காரியம் ஏனெனில் யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷித்தப் புத்தகத்தை எழுத இரண்டு ஆண்டுகள் பிடித்தது. அது எந்த நாளாயிருந்தது? அக்காலக் கட்டத்திற்குள் அநேகமான ஏழாம் நாட்களும், வாரத்தின் முதல் நாட்களும் வந்து போயிற்றே.
5999 வேதத்தின், வெளிப்படுத்தின விசேஷமானது கி.பி 95 முதல் 96 முடிய உள்ள இரண்டாண்டுக் காலத்தில் எழுதப்பட்டது. அது தான் கர்த்தருடைய நாளாகும். கர்த்தருடைய நாள் என்பது வசனம் என்ன கூறுகிறதோ அதின்படியேயாகும். அது அப்படியே தான் இருக்க வேண்டும். யோவான் கர்த்தருடைய நாளுக்குள் ஆவியில் கொண்டு செல்லப்பட்டான். இது மனிதனின் நாளாகும். ஆனால் கர்த்தருடைய நாளானது இனி வருகிறதாயிருக்கிறது. வேத வாக்கியங்களை படிக்கையில், அவன் கர்த்தருடைய நாளில் இருந்தான் என்றும், அவன் ஆவியில் எடுத்துக் கொள்ளப்பட்டு கர்த்தருடைய நாளுக்குள் கொண்டு செல்லப்பட்டான் என்பதாக நாம் கண்டறிகிறோம். ஆமென்! அது சரியே. பாருங்கள், அவன் கர்த்தருடைய நாளில் இருந்தான். வேதமானது கர்த்தருடைய நாளைப் பற்றி பேசுகிறது. அது சம்மந்தமான அநேக வாக்கியங்களை நாம் சிறிது பார்க்கலாம்.
60100 முதலாவதாக, ஓய்வு நாளானது, நாம் அதைப் பற்றி பேசுகையில், ஒரு குறிப்பிட்ட நாளை ஓய்வு நாளாக ஆசரித்தல் அல்ல என்று பார்க்கிறோம். சனிக்கிழமையை ஓய்வு நாளாக ஆசரிக்க நமக்கு கட்டளையேதுமில்லை. புதிய ஏற்பாட்டில், வாரத்தின் முதலாம் நாளை ஓய்வு நாளாக ஆசரிக்க நமக்கு கட்டளையேதுமில்லை. வேதம், எபிரெயர் 4-ம் அதிகாரத்தில், “யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பிறகு அவர் வேறொரு நாளைக் குறித்து சொல்லியிருக்கமாட்டாரே” என்று கூறுகிறது. அது சரிதான். தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுதல் அல்லது ஓய்வு ஆசரித்தல் காலம் இனிவருகிறதாயிருக்கிறது. விசுவாசித்த நாமும் கூட அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்து, தேவன் தம்முடைய கிரியைகளிலிருந்து ஓய்ந்திருந்ததுபோல நாம் ஓய்ந்திருக்கிறோம். 101 கவனியுங்கள்! ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் எடுத்துக் கூற வார்த்தைகளேயில்லாத அளவிற்கு மிகவும் குதூகலமான உணர்வைப் பெறுகிறேன்.
61102 ஓய்வு நாளைக் குறித்து கவனியுங்கள். தேவன் பூமியை ஆறு நாட்களுக்குள் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அதன் பிறகு ஒருபோதும் அவர் மீண்டும் உலகங்களை உண்டாக்கவில்லை. அதன் பின்னர் அவர் மக்களிடம் ஒரு நினைவு கூருதலாக அதை அளித்தார். இப்பொழுது நீங்கள் அதை ஆசரிக்க முடியாது, ஏனெனில் நீங்கள் இங்கே ஆசரிக்கையில், பூமியின் மறுபக்கத்தில் அப்பொழுது ஞாயிற்றுக் கிழமையாகிவிடுகிறது. பாருங்கள்? இஸ்ரவேல் என்ற ஒரு தேசத்திற்குள். ஒரே பிரதேசத்திற்குள், ஒரே மணி வேளையில் இருந்த மக்களுக்கே அது அளிக்கப்பட்டது என்பதை அது காண்பித்துள்ளது. ஆனால் தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் வருகிறதாயிருக்கிறது. விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத் தோற்ற முதல் முடிந்திருந்தும் …(நான் இங்கே எபிரெயர் 4-ம் அதிகாரத்திலிருந்து குறிப்பிடுகிறேன்) …ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். …தாவீதின் சங்கீதத்திலே…பின்னும் ஒரு நாளியக் குறித்திருக்கிறார்… (குறித்துக் கொள்கிறவர்கள் எபிரெயர் 4 குறிக்கவும்) இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப் பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளை குறித்திருக்கிறார். யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், (நாள்) பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. …இளைப்பாறுகிற (ஓய்வு நாளை ஆசரித்தல்) காலம் இனி வருகிறதாயிருக்கிறது.
62103 “இளைப்பாறுதல்” என்ற வார்த்தை. “சாபத்” (Sabbath) என்பது நமக்கு ஒரு விசித்திரமான வார்த்தையாயிருக்கிறது, அதற்கு “இளைப்பாறுதல்” என்று அர்த்தம்; அது எபிரெய பதமாகும், அதற்கு “ஓய்வு” நாள் என்பதாகும். ஒரு சாபத் நாள், வேலை செய்யாமல், ஓய்வு கொள்ளுதல். யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற (ஓய்வு நாளை ஆசரித்தல்) காலம் இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்தது போல, தானும் தன் கிரியைகளை முடிந்து ஓய்ந்திருப்பான். 104 நாம் இளைப்பாறுதலில் பிரவேசித்து விடுகிறோம். எனவே, நாம் மீண்டும் வாரத்தின் முதல் நாளுக்கு திரும்பிச் சென்று, மீண்டும் நமது கிரியைகளை ஆரம்பிக்கிறதில்லை. இயேசுவும் மலைப் பிரசங்கத்தில், “‘கொலை செய்யாதிருப்பாயாக’ என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டது. ஆனால் நான் உங்களுக்குச் செல்லுகிறேன். தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் அவனை ஏற்கனவே கொலை செய்து விட்டான். ‘விபசாரஞ் செய்யாதிருப்பாயாக’ என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.” ஓ, அது கட்டளையாயிருக்கிறது. “நான் உங்களுக்கு சொல்லுகிறேன். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று” என்றார். அது சரிதானே?
63105 எனவே இந்த காரியங்கள் யாவும் நினைவு கூருதலான காரியங்கள் ஆகும். அவைகள் யாவும் அடையாளங்களுக்காக இருந்தவை. உண்மையானது வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. இயேசுவும் மலைப்பிரசங்கத்தை முடித்துவிட்டு, மத்தேயு 11-ம் அதிகாரத்தில் அவர் இவ்வாறு கூறினார். வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்;… (அது சரிதானே?) வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு ஆத்துமாவில் இளைப்பாறுதல் தருவேன். “நீங்கள் ஒரு நாள் அல்லது பத்து நாட்கள், அல்லது ஐந்து ஆண்டுகள், முப்பத்தைந்து ஆண்டுகள் அல்லது ஐம்பது ஆண்டுகள், அல்லது தொண்ணூறு ஆண்டுகள் வருத்தப்பட்டு பாரஞ் சுமந்திருந்தால், அதினால் நீங்கள் களைப்படைந்து சோர்ந்து போயிருந்தால், நீங்கள் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். பாவ பாரங்கள் யாவையும் நான் உங்களை விட்டு அகற்றி விடுவேன். நான் உங்களில் பிரவேசித்து, உங்களுக்கு பரிபூரண இளைப்பாறுதலையும், திருப்தியையும் தருவேன்” என்கிறார்)
64106 இப்பொழுது, அந்த இளைப்பாறுதல் என்ன? இது என்ன என்பது பற்றி நாம் சற்று சிந்தித்து தீர்வு காண்போமாக. சிலர் இவ்வாறு கூறுகிறார்கள், “ஏன்? நீங்கள் போய் ஒரு சபையில் சேர்ந்து கொள்ளுங்கள்.” அது சரியல்ல. சிலர், “உங்கள் பெயரை சபையின் புத்தகத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்” என்கிறார்கள். அதுவும் சரியல்ல. “ஒரு குறிப்பிட்ட விதமான தண்ணீர் ஞானஸ்நானத்தை எடுத்துக்கொள்” என்கின்றனர் இல்லை. எனவே நாம் இது என்ன என்பதைப் பற்றி தீர்வைக் காண்போமாக. நாம் இங்கே காத்திருக்கையில், நீங்கள் அதைப் பற்றி இங்கேயே சரியாக பார்க்க விரும்புகிறீர்களா? யோவான் எங்கே சென்றான் என்பதை நாம் பார்ப்போம். எந்த விதமான நாளுக்குள் அவன் சென்றிருந்தான்? 107 பூமியில் இயேசு மரித்த பொழுது, பூமியில் அவரது கிரியை முடிவுற்ற பொழுது, அவர் எங்கே பிரவேசித்தார்
65108 நாம் இப்பொழுது ஏசாயா 28-ம் அதிகாரம் 8-ம் வசனத்திற்கு திரும்பிப் போவோம். இப்பொழுது, அது ஏசாயா 28:8 என்று நான் நம்புகிறேன். தீர்க்கதரிசி ஏசாயா 28-ம் அதிகாரத்தில் கூறியுள்ளவைகளைப் பற்றி நாம் படிப்போம். அதில் எழுதியுள்ள காரியம் சம்பவிக்கிறதற்கு 712 ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசி இவைகளைப் பேசுகிறான். இப்பொழுது உண்மையான ஓய்வு நாள் அல்லது உண்மையான இளைப்பாறுதலானது என்ன என்பதைப் பற்றி எத்தனை பேர் அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? இங்கே அது உள்ளது. இப்பொழுது, இங்கே தான் தீர்க்கதரிசி அதைப் பற்றி பேசினான், அது எங்கே நிறைவேறிற்று என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். கவனியுங்கள், ஏசாயா 28:8 …எல்லாம்… (தீர்க்கதரிசி இந்நாட்களைப் பற்றி தீர்க்கதரிசனமாக உரைக்கிறான்) போஜன பீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் (புகைக்கிறவர்களும், மது அருந்துகிறவர்களும், பொய் சொல்லுகிறவர்களும், திருடுகிறவர்களும் கர்த்தருடைய இராப்போஜனத்தை எடுக்கிறார்கள்) நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? இந்நாளில் நீங்கள் யாருக்கு அறிவைப் போதிப்பீர்கள்?
66109 இன்று எத்தனைப் பேர் பில்லி கிரகாமின் பிரசங்கத்தைக் கேட்டீர்கள்? அவர் அருமையானதொரு பிரசங்கத்தை செய்தார். எவ்வாறு மக்கள் ஒரு பொய்யை விசுவாசித்து, அப்பொய்யிலேயே தொடர்ந்து நிலைத்திருந்து, தாங்கள் செய்து கொண்டிருப்பது சரியானது என்று எண்ணி தங்களையே நியாயப்படுத்திக் கொள்கின்றனர் என்று கூறினார். அவர் அமெரிக்காவில் விளம்பரபடுத்தும் சிகரெட்டைப் பற்றிக் கூறும்போது, “ஒரு ஞானமான மனிதனுடைய வடிகட்டி, புகைப்பிடிக்கும் மனிதனின் சிகரெட்” என்ற பிசாசின் பொய்களில் ஒன்றை ஏற்றுக் கொண்டு, ஒரு மனிதன் மடையனாவதற்கு, அவன் யாராயிருந்தாலும் அதைப் புகைத்து தன்னை ஒரு ஞானியாக்க முயற்சிக்கிறான். அவன் அதைப் புகைக்கும் ஒரு முட்டாளாயிருக்கிறான். அது முழுவதும் மரணமும், புற்று நோயும் மற்றுமுள்ள யாவுமாகி, அவன் தன்னுடைய நுரையீரலைக் கெடுத்துக் கொள்கிறான். அவன் ஒரு முட்டாள். அது ஒரு—ஒரு ஞானமுள்ள மனிதனுடைய வடிகட்டி அல்ல. அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. ஒரு ஞானமுள்ள மனிதன் அப்படிப்பட்ட காரியத்தை உபயோகிப்பதில்லை என்றார். 110 “ஓயர்டெல்” ஸ் 92-க்கு அல்லது அதைப்போன்ற காரியத்திற்கு வெளியே ஜீவன் இல்லை என்று ஒரு மதுவைக் குறித்துக் கூறுகிறார்கள். கிறிஸ்துவுக்கு வெளியே ஜீவன் இல்லவே இல்லை, அதுவே உண்மையான ஜீவனாக உள்ளது. ஆடவரும், பெண்டிரும் அதை அருந்தத்தக்கதாக அவர்களை தூண்டுவது எது? ஏனெனில், தேவனால் தாகந்தீர்த்துக் கொள்ளத்தக்கதாக, தேவனைப் பற்றிய தாகத்தை தேவன் அவர்களுக்குள் வைத்திருக்கிறார். ஆனால் அவர்களோ அத்தாகத்தை உலகத்துக்குரிய காரியங்களினால் தீர்த்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காரணத்தினால் தான் நமக்கு அவ்வகையான காரியங்கள் உள்ளன. அவர்களில் காணப்படும் தேவனுக்காக உள்ள தாகத்தை, அவர்கள் தவறான வழிகளில் தீர்த்துக் கொள்ள முனைவதால், அந்தக் காரணத்தினால்தான் ஜனங்கள் அவ்வாறு செயல்படுகிறார்கள், பிசாசும் அவர்களுக்கு ஜீவனுக்குப் பதிலாக மரணத்தையே கொடுக்கிறான்.
67…போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது… 111 மத குருமார்களும் மற்றும் சம்மந்தப்பட்ட ஏனையோரும், அதைப் பற்றி பேசி, “மனமகிழ்வுக்காக சிறிதளவு சுத்தமான வேடிக்கை விளையாட்டு நமக்கு இருக்கலாம்” என்று கூறுகிறார்கள். அவ்வாறான ஒரு காரியம் இருக்கலாகாது. அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால் மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே. (இப்பொழுது நாம் இனி குழந்தைகளல்ல.) கற்பனையின் மேல் கற்பனையும், கற்பனையின் மேல் கற்பனையும். பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும். இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப் பண்ணத்தக்க இளைப்பாறுதல்; (எது? ஓய்வு நாள் ஆசரித்தல்!)…(“வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே. நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்”) … இது ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். 112 எப்பொழுது அது சம்பவித்தது? இது உரைக்கப்பட்டு 712 ஆண்டுகள் கழித்து, பெந்தெகொஸ்தே எனும் நாளில், ஜனங்கள் மேல் பரியாச உதடுகள் வந்தமைந்து, அவர்கள் யாவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, அந்நிய பாஷைகளில் பேசிய பொழுது, பரிசுத்த ஆவியானவர் அவர்களது ஜீவியங்களை ஆட்க்கொண்டபோது, அவர்கள் உலகப் பிரகாரமான காரியங்களிலிருந்து ஓய்ந்திருந்தனர். அப்பொழுது அவர்கள் கிறிஸ்துவோடு ஒரு இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தனர். பவுல் எபிரெயர் 4-ம் அதிகாரத்தில் “தேவன் தனது சிருஷ்டிப்பின் கிரியை முடிந்த பிறகு தனது ஓய்வில் பிரவேசித்தது போல, நாமும் உலகப்பிரகாரமான காரியங்களிலிருந்து விடுபட்டு அவரது ஓய்வுக்குள் பிரவேசித்திருக்கிறோம்” என்று கூறியுள்ளான். அங்கே தான் உங்களுடைய உண்மையான சரியான ஓய்வு நாளானது உள்ளது.
68113 எனவே பவுல் கூட அந்த இளைப்பாறுதலின் ஆவிக்குள்ளாக பிரவேசித்தான். அவன் பரிசுத்த ஆவியினாலே கர்த்தருடைய நாளுக்குள்ளாக எடுத்துச் செல்லப்பட்டான். 114 நமக்கு ஏன் யுத்தங்கள் உண்டாயின? நமக்கு ஏன் தொல்லைகள் உண்டாயின? ஜனத்துக்கு விரோதமாக ஜனமும் ஏன் இருக்கின்றன? ஜீவாதிபதியாக இயேசு வந்தார். அவர்கள் அவரைக் கொன்றனர். 115 இங்கே சில வாரங்களுக்கு பிறகு, ஏன் இப்பொழுதும் கூட, அங்கே பனிச் சறுக்கு வண்டிக் கலைமான், இரவில் குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் கிறிஸ்மஸ் தாத்தா என்ற கட்டுக்கதை, கலகலமணியோசை என்னும் கிறிஸ்துமஸ் பாடல் படம் போன்ற எல்லாவிதமான காரியங்களும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவைகள் அஞ்ஞானப் பண்டிகையாகும். அது கத்தோலிக்க சபையின் கோட்பாடுகளில் ஒன்றாகும். மக்கள் பெரிய விலைகள் கொடுத்து, அன்பளிப்புகளை வாங்கி, ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை மாற்றிக் கொடுத்துக்கொள்கிறார்கள். அவ்விதமான காரியங்கள் அஞ்ஞான கொள்கையாகும். கிறிஸ்துமஸ் என்பது உண்மையில் ஒரு தொழுகையின் நாளாகும்.
69116 இப்படியாக, கிறிஸ்துவானவர் டிசம்பர் 25-ம் தேதியில் பிறக்கவில்லை. அந்நாளில் அவர் பிறந்திருக்க முடியாது. யூதேயாவுக்கு நீங்கள் எப்பொழுதாவது போனால், அங்கேயுள்ள மலைகள் டிசம்பர் மாதத்தில் இந்நாட்டில் உள்ளதை விட மிக மோசமான அளவில், முழுவதும் பனியினால் நிறைந்திருக்கும். இயேசு, இயற்கையானது துளிர்விடும் ஏப்ரல் மாதத்தில் தான் பிறந்தார். 117 ஆனால் அது அவர்களுடைய சடங்காச்சாரமாக உள்ளது. நாம் ஏன்—ஏன் இக்காரியங்களைச் செய்கிறோம்? ஏனெனில், நாம் தேவனுடைய கற்பனைகளை பின்பற்றுவதற்குப் பதிலாக மனுஷனுடைய பாரம் பரியங்களை பின்பற்றுகிறோம். அப்பொழுது அவ்விதமான ஒரு காரியம் பொருட்டாக இருக்கிறதில்லை. ஆனால் அவர்கள் அப்பண்டிகை நாளை ஒரு வியாபாரம் செய்யும் நாளாக ஆக்கிவிட்டார்கள். அவ்விதமானதொரு காரியத்தைச் செய்வது அவர்களுக்கே அவமானமானதாகவும், வெட்கக் கேடானதாகவும் உள்ளது. அது ஒரு அஞ்ஞானப் பண்டிகை! குழந்தைகளுக்கு இரவில் பரிசளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா கதைக்கும் இயேசுவுக்கும் என்ன சம்மந்தம்? ஈஸ்டர் முயலுக்கும், அல்லது ஒருவிதமான மை அல்லது ஏதோ ஒன்று பூசப்பட்ட கோழிக்கும், அல்லது ஒரு சிறிய வெள்ளை முயலுக்கும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் என்ன சம்மந்தம்? எவ்வாறு வியாபார உலகமானது உள்ளது என்று பார்த்தீர்களா? 118 எனவே தான், அவர்கள் இந்த பழைய சுழன்று, நெளிந்து ஆபாசமாக ஆடும் நடனப் பாடல் புத்தகங்களையும், அசிங்கமான ஆபாசமான படங்களையும் விற்கிறார்கள். ஏனெனில் மக்களின் சுபாவமானது அவ்விதமான மூடத்தனமான காரியங்களுக்காக இச்சிக்கிறது. அவர்களுடைய உள்ளங்களில் ஏதோ தவறு இருக்கிறது. அவர்கள் ஒருபொழுதும் தேவனோடு அந்த இளைப்பாறுதலில் பிரவேசித்து இவைகளிலிருந்து ஓய்ந்திருக்கவில்லை. அவர்கள் அதற்குள் பிரவேசித்து பரிசுத்த ஆவியைப் பெறும்போது. அப்பொழுது அவர்கள் உலகத்திலிருந்தும், உலகிற்குரிய காரியங்களிலிருந்து முடிவடைந்துகின்றார்கள்.
70119 தேவன் அவனை மாற்றினார். ஓ, பவுலைப் போல அவன் மூன்றாம் வானத்திற்குள் எடுக்கப்பட்டு அங்கேயுள்ளவைகளை அவன் கண்டான் என்று நான் நினைக்கவில்லை. விலையேறப் பெற்ற பரிசுத்த ஆவியானவர் சில வாரங்களுக்கு முன்பாக நாம் காணும்படியாக செய்ததை…அதாவது, நான் மரணத்தைப் பற்றி பயங்கொண்டிருந்தேன். பரிசுத்த ஆவியானவர் என்னை அங்கே எடுத்துக் கொண்டு போய் அது என்ன என்பதை காண்பித்தார். அதைக் குறித்த சாட்சியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் பின்பு நான் திரும்பி வந்தபோது, “மரணமே உன் கூர் எங்கே?” திரைக்கப்பால் என்ன இருக்கிறது என்பதைக் காண எடுத்துக் கொள்ளப்பட்டேன். திரைக்கப்பால் நாம் அங்கே வெறும் ஆவிகளாகவோ, அல்லது ஆவி உருவங்களாகவோ இருக்கிறதில்லை; திரைக்கப்பால் நாம் ஒரு போதும் மரிக்காத, ஒரு போதும் வியாதிப்படாத வாலிபமான ஆண்களும், பெண்களுமாகவே இருப்போம் என்பதை கண்டு உங்களுக்குச் சொல்ல வேண்டி தேவன் என்னை திரும்பி வரப்பண்ணினார். அவ்விடத்திற்குள் நீங்கள் இழுத்து கொள்ளப்படுவீர்கள். மரணம் இனிமேல் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.
71120 யோவான் பத்மு என்னும் தீவிலிருந்து, ஆவியினால் கர்த்தருடைய நாளுக்குள் எடுத்துச் செல்லப்பட்டான். இது மனிதனின் நாளாகும். இந்நாளில் மனிதர் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்த்தருடைய நாளானது வரப்போகிறது. அப்பொழுது, இந்த இராஜ்யங்களெல்லாம், நம்முடைய கர்த்தருடையதும், அவருடைய கிறிஸ்துவுடையதுமான இராஜ்யமாகிவிடும். அப்பொழுது அந்த மகத்தான ஆயிரவருட அரசாட்சி உண்டாயிருக்கும். கர்த்தருடைய நாள், அவருடைய வருகையின் நாள் அவருடைய நியாயத்தீர்ப்பு. அது கர்த்தருடைய நாளாயிருக்கும். 121 இது மனிதனுடைய நாளாயிருக்கிறது. எனவே தான் அவர்கள் உங்களை கடுமையாகக் கண்டனம் செய்து, தாங்கள் விரும்புகிறபடியெல்லாம் உங்களுக்குச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு வேளையானது வரப்போகிறது. அப்பொழுது…இப்பொழுது அவர்கள் உங்களை “உருளும் பரிசுத்தர் என்றும், மதவெறி பிடித்தவர்கள்” என்றும் அழைக்கிறார்கள். ஆனால் ஒரு நேரம் வரும், பாருங்கள், அப்பொழுது அவர்கள் அவ்விதமாக அழைக்கமாட்டார்கள். அவர்கள் அலறி, புலம்பி உங்கள் பாதங்களில் விழுவார்கள். வேதத்தில் மல்கியா 4-ம் அதிகாரத்தில், நீங்கள் வெளியே புறப்பட்டு போய், துன்மார்க்கர் எரிக்கப்பட்ட பிறகு உண்டாகும் அவர்களுடைய சாம்பலின் மேல் நடப்பீர்கள் என்றும், அந்த நாள் அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும் என்றும் கூறப்பட்டுள்ளது. “நீதிமான்கள் வெளியே புறப்பட்டுப் போய் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் நடப்பார்கள்” என்று வேதம் சரியாகவே கூறுகிறது. அது அவ்விதமாகத்தான் இருக்கிறது. அவர்கள் திரும்பவும் முளைத்தெழும்பாதபடி, அவர்களுக்கு அந்நாள் வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும். அவர்களுக்கு அவ்வாறு நிச்சயமாக சம்பவிக்கும். இப்பொழுது, இது மனிதனின் நாளாயுள்ளது (மனிதனின் செயல்கள், மனிதனின் கிரியைகள், மனிதனின் சபை; மனிதனின் யோசனைகள்). ஆனால் கர்த்தருடைய நாளானது வருகிறது.
72122 யோவான் கர்த்தருடைய நாளில் ஆவிக்குள் இருந்தான். சரி, கர்த்தருடைய நாளில் அவன் ஆவிக்குள்ளாகியிருந்தபோது, முதலாவதாக அவன் ஒரு சப்தத்தைக் கேட்டான். இப்பொழுது நாம் 10-ம் வசனத்தை பார்ப்போம். …கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்…எக்காள சத்தம் போல பெரிதான ஒரு சத்தத்தை அவன் கேட்டான்… 123 இப்பொழுது நாம் ஒரு உவமையையும் விட்டுவிட வேண்டாம். நாளை அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்குமானால் எடுத்துக் கொள்ளலாம், பாருங்கள். நான் அதிகம் தாமதித்து விடாதபடிக்கு, யாராகிலும் ஒருவர் கடிகாரத்தைக் கவனித்துக் கொண்டிருங்கள். 124 நல்லது, இப்பொழுது, “கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்.” இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். முதலாவதாக நீங்கள் செய்ய வேண்டிய காரியமானது என்ன? ஆவிக்குள்ளாகுங்கள்! இவ்வெளிப்படுத்துதல்களெல்லாம் உங்களுக்கு எவ்வாறு வரப்போகின்றது? ஆவிக்குள்ளாகுங்கள். நீங்கள் எப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள்? ஆவிக்குள்ளாகுங்கள். ஆவிக்குள்ளாகுங்கள்! 125 நீங்கள் பாவியாயிருந்தபோது, நீங்கள் ஒரு நடன நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தால் அங்கு அந்த விதமான ஆவிக்குள்ளானீர்கள். ஓ, என்னே, அப்பொழுது நீங்கள் உங்கள் கைகளைத்தட்ட ஆரம்பித்து. உங்களுடைய பாதங்களை தரையில் தட்டி, பெரிய விருந்து நிகழ்ச்சிகளில் உங்கள் தொப்பியை தரையில் எறிந்து, சுற்றி சுற்றி வந்து, அவ்வாறு மூடத்தனமாக நடந்து கொண்டீர்கள். அவ்விதமான ஆவிக்குள்ளாக இருந்தீர்கள். நடனத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிராத ஒருவன் நடன நிகழ்ச்சிக்குப் போய் “நல்லது, உங்கள் யாவருக்கும் அருமையான நல்ல தருணம் உண்டாயிருக்கிறது என நான் கருதுகிறேன்” எனக் கூறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஓ, அவர்கள் அவனைப் பார்த்து, “நீ வெட்கப்பட்டு முடங்கி கிடக்கும் ஒருவன், இங்கிருந்து வெளியேறு” என்பார்கள். பார்த்தீர்களா?
73126 பந்து விளையாட்டுக்குப் போய் சும்மா உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து, அவ்விளையாட்டில் விளையாடுபவர் ஒரு ஓட்டத்தை எடுக்கையில், “ஓ, அது ஒரு மிக நல்ல ஒன்றுதான் என கருதுகிறேன்” என்று கூறினால், அந்த நபர் ஒரு தளக்கட்டப் பந்தாட்ட விளையாட்டில் ஆர்வம் கொண்டவரல்ல. அது தளக்கட்டுப் பந்தாட்ட விளையாட்டிற்குரிய ஆவியில் இறங்குதல் அல்ல. யாரோ ஒருவர் தளக்கட்ட பந்தாட்ட களத்தில் மட்டையாளர் எல்லா தளக்கட்டத்தையும் தொட்டு ஒரு ஓட்டத்தை எடுக்கும்படி பத்திரமான மட்டையடியைக் கொடுக்கையில், “வ்யூ, என்னே! வெல்க!” என்று எழும்பி சத்தமிட்டால், வேறு ஒருவருடைய தலையில் இருக்கும் தொப்பியை இந்தவிதமாக தட்டிக் கீழே தள்ளினால், ஒருவரும் ஒரு வார்த்தையும் அதைப் பற்றி சொல்லமாட்டார்கள். 127 பின்பு, சபையில், நீங்கள் ஆவிக்குள்ளாகும் போது, எழும்பி நின்று, “மகிமை. அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சப்தமிட்டால்! அப்பொழுது உட்கார்ந்திருக்கிற யாரோ ஒருவர், உங்களைப் பார்த்து, “உருளும் பரிசுத்தர்” என்று சொல்லுகிறார். (ஓ, சகோதரன் உட்…) 128 நான் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கப் போகிறேன். நாம் இவ்வாறு செய்கிறபடியினால் நாம் உருளும் பரிசுத்தர் எனப்படுவோமானால், அவ்வாறு நம்மை கேலி செய்கிறவர்கள் உருளும் அசுத்தராக இருக்கிறார்கள். உருளும் அசுத்தராக நான் இருப்பதை விட உருளும் பரிசுத்தராக இருப்பதையே நான் விரும்புகிறேன். (நீங்களும் அவ்வாறு இருக்க விரும்பவில்லையா?) என்னே! நிச்சயமாக! அவர்கள் உருளும் அசுத்தர்தான்.
74129 அவன் ஆவிக்குள்ளாய் இருந்தான். அவன் ஆவிக்குள்ளான போது, காரியங்கள் சம்பவிக்க ஆரம்பித்தது. பிறகு, அவன் அங்கு அடைந்த போது, ஒரு எக்காள சப்தத்தைக் கேட்டான். இப்பொழுது, ஒரு எக்காளம் எப்பொழுதுமே ஏதோ ஒன்று நெருங்கி வருவதையே அறிவிக்கிறதாயுள்ளது. நீங்க்ள் வரும்போது…ஒரு—ஒரு ராஜா வருவது சமீபித்து விட்டால், அப்பொழுது எக்காளம் ஊதி அதை அறிவிப்பார். இயேசு நெருங்கி வருகையில் அவர் எக்காள சப்தமிடுவார். அது சரிதானே? யோசேப்பு புறப்பட்டுச் சென்ற போது, அவர்கள் அதற்கு முன்பாக எக்காள சப்தமிட்டார்கள். இப்பொழுது ஏதோ ஒன்று முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது. யோவான் ஆவிக்குள்ளானபோது. ஒரு எக்காளம் சப்தமிடுவதைக் கேட்டான். அவன் ஆவிக்குள்ளான பிறகு, எக்காள சப்தத்தை கேட்டபோது தனக்குப் பின்னாக கேட்டிருந்த சப்தம் என்ன என்று பார்க்கும்படி யோவான் திரும்பி பார்த்தான்.
75130 ஒரு வேளை அவன் அந்த தீவைச் சுற்றி ஓடி. நடனமாடி குதித்திருப்பான். அவன் ஆவிக்குள்ளாக இருந்தபடியினால் அவனுக்கு ஒரு நல்ல வேளை உண்டாயிருந்தது. அவ்வாறு கூறுவது அவபக்தியான காரியம் போல தோன்றலாம். ஆனால் நான் அந்த விதத்தில் பொருட்படுத்திக் கூறவில்லை, பாருங்கள். அவன் அவ்வாறு செய்திருக்கக் கூடும்! அது…பரவாயில்லை, அவன் அவ்வாறு செய்து கொண்டிருந்திருக்கக் கூடும். அவனுக்கு ஆவிக்குள்ளாக ஒரு அருமையான வேளை உண்டாயிருந்ததென்றும், அதினால் அவன் தேவனைத் துதித்துக் கொண்டிருந்திருப்பான் என்றும் நான் நம்புகிறேன். ஏனெனில், ஆதியில் அவர்கள் மேல் ஆவியானவர் வந்திறங்கியபோது, அதே விதமாகத் தான் சம்பவித்தது. பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழுந்தபோது, குடித்தவர்களைப் போல், ஆணும் பெண்ணும் தள்ளாடினர். குடித்தவர்களைப் போல் அவர்கள் நடந்து கொண்டு தடுமாறிப் பேசினர். அவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து, ஜனங்கள், “இவ்வாறு மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்” என்று கூறினர். ஆதியில் அவர்கள் அவ்வாறு தான் நடந்து கொண்டார்கள், எனவே ஆவியானவர் மீண்டும் வருகையில், யோவானும் கூட அவ்வாறு தான் நடந்து கொண்டிருக்க கூடும். புரிகிறதா? இது—இது புதியது ஒன்றுமில்லை. இது பழங்காலத்து மார்க்கமாகும். ஆம்.
76131 “கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளாதல்.” இப்பொழுது நாம் அதைக் கேட்கிறோம். இப்பொழுது என்ன? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவன் இப்பொழுது அத்தீவிலிருந்து ஆவிக்குள்ளாக மாற்றப்பட்டு கர்த்தருடைய நாளுக்குள் கொண்டு செல்லப்பட்டான். கர்த்தருடைய நாளுக்குள் அவன் சென்றவுடன் அவன் ஒரு எக்காள சப்தத்தை கேட்டான். அது என்னவாக இருக்கிறது? யாரோ நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். மகத்தான ஒருவர் நெருங்கி வந்து கொண்டிருக்கிறார். எக்காளம் முழங்கினால், யாரோ வந்து கொண்டிருக்கிறார் என்பதாகும். அவன் பார்த்தான், அல்லேலூயா! எக்காள சப்தம். அது: நான் அல்பாவும், ஒமொகாவும், முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன் …(இரண்டாவது நபரைப் பற்றியோ, அல்லது மூன்றாவது நபரைப் பற்றியோ, உள்ள அறிவிப்பல்ல இது. ஒரே நபரைப் பற்றியதான அறிவிப்பு தான் இது) … நான் அல்பாவும் ஒமொகாவுமாயிருக்கிறேன் (“நான் எதையாகிலும் உங்களுக்கு காண்பிக்கும் முன்னர், நான் யார் என்பதை நீங்கள் அறியும்படி விரும்புகிறேன்.”) 132 வெளிப்பாடுகள் எல்லாவற்றிலும் மகத்தானது தெய்வீகத் தன்மையைப் பற்றியதாகும், அதாவது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய உன்னத தெய்வீகத்தன்மையைப் பற்றியதேயாகும். அதை நீங்கள் விசுவாசிக்காமல் முதலாவதான அடிப்படைத் தளத்திற்குச் செல்ல முடியாது. அதைத்தான் பேதுருவும், “மனந்திரும்பி, தெய்வீகத்தன்மையைப் பற்றி பாருங்கள்” என்றான். “பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது ஆவிக்குள்ளாக நீங்கள் ஆயத்தமாக இருப்பீர்கள்.” கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையைப் பற்றி நீங்கள் முதலாவதாக அறிந்து கொள்ள வேண்டும். “நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன். நான் மொழியின் முதல் எழுத்திலிருந்து முடிவுமட்டுமானவராயிருக்கிறேன். என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் ஆதியில் இருக்கிறேன். முடிவிலும் நானே இருக்கிறேன். இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையையுள்ளவர்.” அதைப் பற்றி எண்ணிபாருங்கள்! அதைத்தான் அந்த எக்காளம் உரைத்தது.
77133 கவனமாக இரு யோவானே! நீ ஆவிக்குள்ளாகிவிட்டாய் உனக்கு ஒன்று வெளிப்படுத்தப்படப் போகிறது. அது என்ன? எக்காளம் முதலாவதாக கூறியது என்னவெனில், “நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன்” என்பதே. எல்லா வெளிப்படுத்தல்களிலும் முதன்மையானது இது. (ஓ! பாவியே, நேரமானது கடந்து செல்லுமுன்னர், தலைவணங்கி மனந்திரும்பு) “நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன்.” அவர் யார் என்பதை முதலாவதாக யோவான் அறிந்து கொள்ளும்படி செய்தார். (யார் இப்பொழுது வந்து கொண்டிருக்கிறார்? அது இயேசு இராஜாவா? தேவனாகிய இராஜாவா? பரிசுத்த ஆவியாகிய இராஜாவா? அவர் “நான் எல்லாமுமாயிருக்கிறேன். நான் மொழியின் முதல் எழுத்திலிருந்து முடிவுமட்டுமாயிருக்கிறேன். நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். நான் அழியாமையுள்ளவரும் நித்தியமானவருமானவர்!” என்றார். 134 சற்று நேரத்திற்குப் பின்பு நாம் அவரை, அவரது ஏழு விதமான தோற்றங்களில் அவர் என்னவாயிருக்கிறார் என்பதை கவனிப்போம். “நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன். நானே முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். முந்தையது என்ற ஒன்று ஏற்படும் முன்னரே நான் இருக்கிறேன். கடைசி என்ற ஒன்று இல்லை என்பதற்குப் பிறகும் இருக்கிறவர் நானே.” அதாவது வேறு வார்த்தைகளில் கூறினால், “முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன்” என்பதாகும். …நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா எண்ணும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
78135 சரி. வெளிப்படுத்துதல்களிலெல்லாம் முதன்மையானது இயேசுகிறிஸ்துவைப் பற்றிய உன்னதமான தெய்வீகத்தன்மையைப் பற்றியதேயாகும். அந்த சப்தத்தை நீங்கள் கேட்கையில் அவர் யார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சீனாய் மலையின் மேல் பேசிய அதே சப்தம்தான் மறுரூப மலையிலும் பேசியது. அவரேதான், “மனுஷகுமாரனுடைய சாயலுக்கொப்பானவர்” 136 இப்பொழுது அடுத்த வசனத்தை கவனியுங்கள். சரி. நான் திரும்பினேன்… (இப்பொழுது 12-ம் அதிகாரம்) 137 ஒரு நிமிடம் நாம் இந்த சபைகளை விட்டுவிட்டு, கடந்து செல்லப் போகிறோம். ஏனெனில் இந்த வாரம் முழுவதும் இந்த சபைகளைப் பற்றித்தான் படிக்கப் போகிறோம். 138 ஆனால் அவர், “இந்த…நான் உனக்கு காண்பிக்கப்போகிற இச்செய்தியை நீ அனுப்பும்படி உனக்குச் சொல்லப்போகிறேன்” என்றார். அவர் யார்? “நானே முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறென். நான் உன்னதமானவர். நான் சர்வ வல்லமையுள்ளவர். ஏழு சபைகளுக்குக் கொடுக்கும்படியான ஒரு செய்தியை நான் கொடுக்க வந்துள்ளேன். நீ அதை எழுதி ஆயத்தம் செய்யும்படி விரும்புகிறேன்.” புரிகிறதா? “அவைகளை ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்ப வேண்டும்” என்றார். அக்காலத்தில் அப்பிரதேசத்தில் இருந்த அந்த ஏழு சபைகளின் தன்மையானது வரவிருக்கும் ஏழு சபைகாலத்தின் தன்மையை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன.
79139 இப்பொழுது: அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்… 140 “ஏழு பொன் குத்துவிளக்குகள்.” இப்பொழுது அது…உங்களிடம் ஒரு வேளை ஜேம்ஸ் மன்னனின் பதிப்போ அல்லது ஸ்கோபீல்டு வேதாகமமோ அல்லது தாம்ஸன் செயின் ரெபரன்ஸ் வேதமோ அல்லது அவைகளில் ஏதோ ஒன்று இருக்கக் கூடும். அங்கே அவ்வாறு எழுதப்பட்டுள்ளது தவறாகும். மூல வேத மொழிபெயர்ப்பு மெழுகுவர்த்தி விளக்குத் தண்டுகள் என்று கூறவில்லை. அது “விளக்குத் தண்டுகள்” என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. மூல மொழிபெயர்ப்பில் கூறப்பட்டுள்ள இதுவே சரியானது என நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள், வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த ஏழு பொன் குத்துவிளக்குகள். ஏழு சபைகளாம். அவர் சற்று கீழே…20-ம் வசனத்தில் “நீ கண்ட ஏழு பொன் குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்” என்று கூறுகிறார். எனவே, நீங்கள் பாருங்கள், அது ஒரு மெழுகுவர்த்தி என்று இருக்குமானால். ஒரு மெழுகுவர்த்தியானது விரைவாக எரிந்து அழிந்து விடும். ஆனால் அது மெழுகு வர்த்தியல்லவேயல்ல. அது ஒரு—ஒரு விளக்குத் தண்டு. விளக்குத் தண்டு என்று தான் அது கூறுகிறது. “திரும்பினபோது…அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே…மனுஷ குமாரனுக்கொப்பானவரையுங்கண்டேன்.”
80141 இப்பொழுது—இப்பொழுது பாருங்கள். ஒரு மெழுகுவர்த்தியானது சில மணி நேரங்களுக்குள் விரைவாக எரிந்து முற்றிலும் ஒன்றுமில்லாமற் போய்விடும். ஆனால் ஒரு விளக்குத் தண்டோ, ஒரு விளக்குத் தண்டு இவ்வாறு உள்ளது… 142 ஒரு வேத வாக்கியத்தை நாம் இங்கே எடுத்துக் கொள்வோம். நாம் சகரியா 4-ம் அதிகாரம் 1-ம் வசனத்தைப் பார்ப்போம். சகரியாவின் புத்தகத்தில் நமக்கு தேவையானதை நாம் எடுத்துக்கொள்ள முடியும். சகரியா 4:1 நமக்கு தேவைப்படுவதை இங்கிருந்து நாம் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒன்று சேர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன். சகரியாவை செப்பனியாவில் என்னால் காண முடியாது. என்னால் முடியுமா? சரி, சரி எனது பழைய வேதாகமம் கிட்டத்தட்ட கிழிந்து போயுள்ளது. சகரியா 4:1, இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், நீங்கள் இங்கே ஒரு அழகானதொரு காட்சியைப் பார்க்கிறீர்கள். அந்த தூதன்… 143 கிறிஸ்துவுக்கு ஐநூற்று பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பாக இந்த தீர்க்கதரிசி இருந்தான். என்னோடே பேசின தூதன் திரும்பி வந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி: (இப்பொழுது இந்த தீர்க்கதரிசி ஒரு தரிசனம் காண்கிறான்) நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்து விளக்கைக் காண்கிறேன். (இப்பொழுது இதே வார்த்தைதான் விளக்குத்தண்டு என்று மூல வேதத்திலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.) அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், (அதுவே விளக்காயிருக்கிறது.) அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. (பாருங்கள், அதே சபைக்காலங்கள் வந்து கொண்டிருக்கிறது.) புரிகிறதா? அதில் அருகில் …(இப்பொழுது, எந்தவிதமான…வேதாகம நாட்களில் என்ன விதமான எண்ணெயை அவர்கள் அந்த விளக்குகளில் எரித்தார்கள்? யாருக்காவது தெரியுமா? எண்ணெய். என்ன எண்ணெய்? ஒலிவ எண்ணெய்.) இரண்டு ஒலிவ மரங்கள் …(அது என்ன? புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும்; அதின் இருபுறமும் நின்று கொண்டிருக்கின்றன) …கிண்ணத்திற்கு வலது புறமாக ஒன்றும், அதற்கு இடது புறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவ மரங்கள் இருக்கிறது என்றேன். நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே. இவைகள் என்னவென்று கேட்டேன். என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார். ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால் பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல. என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (அவர் எருசலேமை மீட்டுத்தருவார்.)
81144 இப்பொழுது இந்த பொன் குத்துவிளக்குத் தண்டு என்பது என்ன? அது விளக்குத் தண்டு ஆகும். இங்கே இது எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அவன் பார்க்கும்படி திரும்பியபோது வரவிருக்கும் ஏழு சபை காலங்களை அர்த்தப்படுத்தும் அந்த ஏழு பொன் குத்து விளக்குத் தண்டுகளின் நடுவில், மனுஷக் குமாரனுக்குக்கொப்பானவரைக் கண்டான். ஒவ்வொரு குழாயும் இல்லை—இல்லை விளக்குத் தண்டும் பிரதான பெரிய எண்ணெய் ஊற்றிவைக்கும் கலசத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணெயில், வினோதமான அமைப்பு கொண்ட விளக்கிலிருந்து தொங்கும் திரியானது மூழ்கி இருக்கும். அவர்கள் எண்ணெயை பிரதான குழாயின் வழியாக ஊற்றுவார்கள், பிரதான தண்டிலிருந்து பிரிந்து செல்லும் கிளை தண்டுகளின் வழியாக எண்ணெயானது பரவிச் செல்லும் திரியோடு கூடிய விளக்கானது எண்ணெயில் மூழ்கிய நிலையில் இருந்து கொண்டு, இரவும் பகலும் எரிந்து கொண்டேயிருக்கும். நீங்கள் அதை எரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. அது அணைந்தே போகாது. பிராதன குழாயில் அவர்கள் எப்பொழுதும் எண்ணெயை ஊற்றிக் கொண்டேயிருப்பார்கள். இந்த விளக்குத் தண்டுகள் இவ்வாறு ஒவ்வொன்றும் வெளியே வந்து, அவைகள் மேலே விளக்கைக் கொண்டதாக இருக்கும். விளக்கில் உள்ள திரியானது எண்ணெயில் மூழ்கின நிலையில் இருக்கும். இங்கிருந்து அது தனது ஜீவனைப் பெற்றுக் கொள்கிறது. ஓ, எனவே, இதிலிருந்து, ஒரு மெழுகுவர்த்திக்கும் இதற்கும் உள்ள பெரிய வேறுபாட்டைப் பார்க்கிறோம். எவ்வளவு வித்தியாசமாக இது உள்ளது! அது ஒரு விளக்குத் தண்டுதான், அது எண்ணெயை இழுத்துக் கொண்டிருக்கிறது.
82145 இப்பொழுது இந்த விளக்குத் தண்டுகளிலிருந்த நெருப்பானது பழைய ஏற்பாடுக் காலத்தில் எப்படியிருந்ததென்றால்; அவர்கள் ஒரு விளக்கைக் கொளுத்துகையில், அடுத்ததைக் கொளுத்த தங்கள் கையிலிருந்த நெருப்பைக் கொண்டு கொளுத்த முடியாது. ஒரு விளக்கைக் கொளுத்தி, அதிலிருந்து நெருப்பைக் கொண்டுதான் அடுத்த விளக்கை அவர்கள் கொளுத்த வேண்டும். ஓ, அது புரியாமல் உங்களுடைய தலைக்கு மேல் செல்லவில்லை என்று நான் நம்புகிறேன். “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” (பரிசுத்த ஆவியாகிய) அதே அக்கினி, காலங்கள் தோறும் ஒவ்வொரு சபையையும் எரிய வைத்தது.
83146 யோவான் 15-ல் இயேசு, “நானே திராட்சிச்செடி, நீங்கள் கொடிகள்” என்று கூறவில்லையா? இப்பொழுது, அவரே பிரதான திராட்சைச் செடி. நாம் கொடிகளாயிருக்கிறோம். இப்பொழுது, கொடிகள் தானாக கனி கொடுப்பதில்லை… 147 [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] …ஆரஞ்சைப் போல உள்ள எலுமிச்சை வகையைச் சேர்ந்த ஒரு செடியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஆரஞ்ச் செடியில் சிறிது பிளந்து, அதில் ஒரு திராட்சைப் பழ செடியை (Grape Fruit Tree) ஒட்டுச் சேருங்கள், அந்த செடியும் வளரும். எலுமிச்சை கிளையை வெட்டி இந்த ஆரஞ்சுச் செடியோடு ஒட்டுச் சேருங்கள். அதுவும் வளரும், அல்லது ஒரு மாதுளைக் கிளையை எடுத்து அதனோடு ஒட்டுங்கள் அல்லது எந்தவொரு எலுமிச்சை வகை மரக்கிளையையோ அல்லது கிச்சலி பழ வகையையோ அல்லது அது போன்ற ஒரு வகை கிளையை இந்த மரத்தோடு ஒட்டுப்போடுங்கள். இவைகள் யாவும் அந்த ஆரஞ்சு மரத்தின் ஜீவனைக் கொண்டு செழித்து வளரும். ஆனால் அது ஆரஞ்சுப் பழத்தைக் கொடுக்காது. அது திராட்சைப் பழங்களைக் கொடுக்கும். ஒரு வகை ஆரஞ்சுப் பழத்தைக் கொடுக்கும், எலிமிச்சையானது தனது கனியைக் கொடுக்கும். ஆனால் இவைகள்யாவும் உண்மையான செடியின் ஜீவனைக் கொண்டே வாழ்கின்றன. ஆனால் அந்த உண்மையான செடியானது தன்னுடைய சொந்தக் கிளை இன்னொன்றை படரவிடுமானால், அதிலுள்ள அதே ஜீவனைக் கொண்டதாகவே அது இருக்கும். அது ஆரஞ்சுப் பழத்தையே கொடுக்கும். ஏனெனில், ஆதியில், அதனுடைய வேரில் அது ஆரஞ்சு மரத்தின் ஜீவனாக உள்ளது. ஆனால் ஒட்டுப் போடப்படும் ஏனைய மரக்கிளைகள், ஆரஞ்சு மரத்தின் ஜீவனைக் கொண்டு ஜீவித்துக்கொண்டு இருக்க முடியும். ஆனால் அது தன்மையில் கிச்சலி மரத்தின் தன்மையையே கொண்டிருக்கும். ஆனால் அது மூல மரமாகிய ஆரஞ்சு மரத்தின் கனியை கிச்சிலி மரத்தினால் கொடுக்க முடியாது. ஏனென்றால் மரத்தின் தன்மையை அது கொண்டிருக்கவில்லை.
84148 அவ்விதமாகத்தான் சபையும் இருக்கிறது. அவர்கள் மெய்யான திராட்சைச் செடியோடு பிரஸ்பிடேரியன். மெத்தோடிஸ்டு பாப்டிஸ்டு மற்றும் இன்ன பிறவற்றை ஒட்டுச் சேர்த்துவிட்டார்கள். பாப்டிஸ்டு, பாப்டிஸ்டு கனியையும், பிரஸ்பிடேரியன் சபை, பிரஸ்பிடேரியன் கனியையும், மெத்தோடிஸ்டு சபையானது. மெத்தோடிஸ்ட் கனியையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் எப்பொழுதாகிலும் அந்த மூலச் செடியானது தன்னுடைய இன்னொரு கிளையை படரவிடுமானால், அது அதே மரமாகத்தான் இருக்கும். அது பெந்தெகொஸ்தே நாளில் கொண்டு வந்த அதே கொடியை தான் மீண்டும் கொண்டு வரும். அதுவே மெய்யான மூல திராட்சைச் செடியாயிருக்கிறது. அது அந்நிய பாஷைகளில் பேசும், அதனிடம் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையும் அடையாளமும் உண்டாயிருக்கும். ஏன்? ஏனெனில், அது தன்னுடைய சுபாவ சக்தியிலிருந்து பிழைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையாகவே அந்தக் கிளை மூலச் செடியோடு ஒட்டப்படவில்லை. அது மூலச் செடியிலிருந்தே பிறந்ததாக இருக்கிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஓ என்னே! அப்பொழுது இந்த ஒன்றைப் பற்றி சிந்திக்கவில்லை. 149 மற்ற கிளைகளோ ஒட்டப்பட்டவைகள் என்பதைப் பாருங்கள். இந்த மரத்தோடு இவைகள் ஒட்டப்பட்டபோது, அவைகள் தங்கள் தங்கள் கனிகளையே கொடுத்தன. அவைகள் மெய்யான மூலச் செடியின் தன்மையை எடுத்துக் கொள்ள இயலாது. மெய்யானதை அவர்கள் விசுவாசிக்கிறதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் அந்த மரத்திலிருந்து புறப்பட்டு வரும் ஜீவனிலிருந்து பிறந்தவைகளாக அவைகள் இருப்பின், அப்பொழுது அந்தக் கனியைத்தான் அவைகளால் கொடுக்க முடியும். அது மூல மரத்தின் தண்டிலிருந்து புறப்பட்டு வரும் ஜீவனாகும்.
85150 இந்த ஏழு விளக்குத் தண்டுகளும் ஒரு பெரிய கலசத்தோடு பொருந்துகிறதாயிருக்கும். இந்த ஒரு பெரிய கலகத்திலிருந்துதான் இந்த ஏழு விளக்குத்தண்டுகளும் புறப்பட்டுவரும். அவ்வேழு விளக்குகளும் ஒவ்வொன்றும் பிரதான கலசத்திலிருந்து தான் தங்களுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும். பிரதான எண்ணெய் கலசத்தில் ஒவ்வொரு விளக்கின் திரியும் எண்ணெயில் மூழ்கி இருப்பதினால், அவை ஒவ்வொன்றும் எரிகின்றன. ஓ, அவ்வேழு நட்சத்திரங்களில் ஒவ்வொன்றும் பரிசுத்த ஆவியாகிய அக்கினியோடு உள்ளதாக உள்ள இக்காட்சி (அதனை வர்ணிப்பது) எவ்வளவு அழகாயிருக்கிறது! விசுவாசத்தினால் அவன் பரிசுத்த ஆவியைக் கொண்டு எரிந்து கொண்டிருக்கிறான். அவனுடைய ஜீவியமானது ஒரு மெழுகுவர்த்தியாக இருக்கிறது…இல்லை. மெழுகுவர்த்தி அல்ல. (கிறிஸ்துவாகிய) பரிசுத்த ஆவிக்குள் மூழ்கிகிடக்கிற விளக்குத் திரியாக இருக்கிறது. அத்திரியின் மூலமாக தேவனுடைய ஜீவனாகிய எண்ணெயை உறிஞ்சி, அதின் மூலம் தன்னுடைய சபைக்கு ஒளியைக் கொடுக்கத்தக்கதாக அவன் இருக்கிறான். ஓ, ஒரு உண்மையான விசுவாசியின் சித்திரமானது எவ்வாறு உள்ளது! என்னவிதமான ஒளியை அவன் கொடுத்துக் கொண்டிருக்கிறான்? முதல் விளக்கில் இருக்கும் அதே ஒளியைத் தான் கொடுக்கிறான். 151 முதல் சபைக் காலமானது ஆரம்பித்தபோது. அது எபேசு சபைக்காலமாயிருந்தது. ஏழு நட்சத்திரங்களில் ஒன்றானவனான பவுலே அச்சபைக்குரிய தூதனாயிருந்தான். இவ்வேழு நட்சத்திரங்களும் ஏழு தூதர்கள் என்று அர்த்தமாகும். அவர்கள் ஏழு “செய்தியாளர்களாவர்.” இவ்வாரத்தில் நான் வேதவாக்கியங்களைக் கொண்டும் வரலாற்றைக் கொண்டும், குறிப்பிட்ட ஒவ்வொரு மனிதர்தான் அந்த ஒவ்வொரு சபைக் காலத்திற்கும் உரிய உண்மையான தூதன் என்றும், அவர்கள் ஒவ்வொருவரிலும் ஒரே ஒளி தான் இருந்தது என்பதையும் நான் உங்களுக்கு நிரூபிக்க முடியும். அது உண்மையே. இந்த சபை காலங்களில் மத்தியில் தான் அந்த மகத்தானவர் வரவேண்டும்.
86152 கவனியுங்கள், ஒவ்வொரு விளக்கும் இந்த பிரதான எண்ணெய் குழாயிலிருந்து தான் தங்களுக்குத் தேவையான எண்ணெயை, அதாவது ஒளியை…கிறிஸ்துவில் மூழ்கி இருப்பதன் மூலம் எடுத்துக் கொள்கின்றன. நீங்கள் மரித்தவர்களாயிருக்கிறீர்கள். உங்கள் ஜீவனானது கிறிஸ்துவில் மறைந்திருக்கிறது அல்லது தேவனுக்குள் கிறிஸ்துவின் மூலமாக மறைந்திருந்து பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து விலகியிருக்க உங்களுக்கு எந்தவிதமான வழியும் இல்லை. எவ்வாறு நீங்கள் எதைச் செய்ய முடியும்? யாரும் உங்களை வழி விலகச் செய்ய ஏதுவும் உங்களுக்குள் ஊடுவே முடியாது. உங்கள் ஜீவனின் இந்த நுனிவரையும் பரிசுத்த ஆவியினால் எரிந்து கொண்டிருக்கிறது. ஓ, ஒளி கொடுத்து எரிந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய ஜீவனின் மற்றைய நுனியானது எங்கே மூழ்கிக் கிடக்கிறது? கிறிஸ்துவில் மூழ்கிக்கிடக்கிறது. நீங்கள் மரித்து கிறிஸ்துவுக்குள் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள், பரிசுத்த ஆவியானவர் பிசாசு உங்களைத் தொட முடியாதபடி அவனுக்கு வழியை அடைத்துக் கொண்டிருக்கிறார். ஆமென்! அவன் உங்களுக்கெதிராக சப்தமெழுப்பக் கூடும். மரணம் கூட உங்களைத் தொட முடியாது. “மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.”
87153 இந்த வசனத்தின் கடைசியை, நாம் அதை, வாசிப்போம். …திரும்பினபோது ஏழு பொன் குத்து விளக்குகளையும்… அந்த ஏழு குத்து விளக்குகளின் மத்தியிலே…மனுஷகுமாரனுக்கொப்பானவரையுங் கண்டேன். 154 என்னே! நீங்கள் கவனித்தீர்களா? நட்சத்திரங்கள், விளக்குத்தண்டுகள், விளக்குகள்! அது எதனைப் பொருட்படுத்துகிறது? அவைகளுடைய அர்த்தம் தான் என்ன? நாம் வாழ்கிற காலயுகமானது இரவுக் காலமாக உள்ளது. விளக்குத்தண்டுகள், விளக்குகள், நட்சத்திரங்கள் ஆகிய இவைகள் யாவும் இரவு நேரத்திற்குரியவைகளானதால், இது இரவு வேளை என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஒரு நட்சத்திரமானது என்ன செய்கிறது? அது சூரியன் திரும்பி வருகிற வரையிலும், இரவில் சூரியனின் ஒளியை பிரதிபலிப்பதாக உள்ளது. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! தேவனுடைய ஒரு உண்மையான ஊழியக்காரனானவன் ஏதோ ஒரு எரிகின்ற ஒளிவிளக்குகளின் ஒளியையோ, ஒரு நெருப்புக் குச்சியின் வெளிச்சத்தையோ, பதரை எரித்து அதின் ஒளியையோ பிரதிபலிக்காமல், கிறிஸ்துவின் பொன்னிற கதிர் ஒளியையே சபைக்கு பிரதிபலித்து, “அவர் மாறாதவர். அவர் ஜீவிக்கிறார். அவர் என்மேல் பிரகாசிக்கிறார்” என்பதை எடுத்துக் காட்டுகிறான். ஆமென்! அவ்வொளியைத் தான் அவன் பிரதிபலிக்கிறான். நட்சத்திரமானது சூரியனின் ஒளியையே பிரதிபலிக்கிறது, பாருங்கள். எனவே நாமும் தேவனுடைய குமாரனுடைய ஒளியையே பிரதிபலிக்கிறோம். அவர் ஒளி கொடுப்பது போலவே நாமும் செய்கிறோம். என்னவிதமான ஒளியைக் கொடுக்கிறோம்? அவர்களுக்கு சுவிசேஷ ஒளியைக் கொடுக்கிறோம்.
88155 இப்பொழுது நாம் எஞ்சியுள்ள இந்த 13-வது வசனத்தை எடுத்துக்கொள்கையில், நாம் அவரை இன்னும் சற்று கூடுதலாக கவனித்துப் பார்ப்போம். அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே (அது மத்தியில்) நிலையங்கி தரித்து. மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். 156 இப்பொழுது கர்த்தருடைய நாளைப் பற்றிய இந்த உபதேசம் சரியானது தான் என்பதை காண்பிக்கும் இன்னும் கூடுதலான அத்தாட்சி இப்பொழுது இங்கே இருக்கிறது. அவரை நீங்கள் கவனித்தீர்களா? இந்த வேளையில் அவர் ஒரு ஆசாரியனாக இல்லை, அவர் ஒரு ராஜாவாகவும் இல்லை. அவர் ஒரு நியாயாதிபதியாக இருக்கிறார். கவனியுங்கள், ஒரு ஆசாரியன, ஒரு பிரதான ஆசாரியன். பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனைக்காக அல்லது ஊழியம் செய்ய உள்ளே பிரவேசிக்கையில், அவனுடைய இடுப்பைச் சுற்றி ஒரு கச்சையைக் கட்டிக்கொள்வான். அவனுடைய இடுப்பைச் சுற்றி ஒரு கச்சையைக் கட்டியிருக்கிறான் என்றால், அவன் இன்னமும் ஊழியம் செய்து கொண்டிருக்கிறான் என்று பொருள். அவ்வாறு ஊழியம் செய்கையில் அவன் ஒரு போதும் அதை தோளில் கட்டியிருக்கமாட்டான். ஆனால் இங்கோ அவர் மார்பருகே பொற்கச்சை கட்டியவராக, அதாவது இடுப்பிலே அல்ல. இடுப்புக்கு மேலே தோளிலே மார்பருகே இருக்குமாறு கச்சையாகக் கட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டு வருகிறார். பொற்கச்சையை மார்பருகே கட்டியிருக்கிறார். இது என்ன? ஒரு வழக்குறைஞர். ஒரு நீதிபதி. ஒரு நீதிபதியானவர், ஆசாரியனைப் போல் இடுப்பில் கச்சையைக் கட்டுகிறதில்லை. மார்பருகே தோளைச் சுற்றி அக்கச்சையைக் கட்டிக்கொள்கிறார். பாருங்கள், எனவே அவர் இந்த காட்சியில் இப்பொழுது தனது ஆசாரிய ஊழியத்தில் நீடித்திருக்கவில்லை என்றும், யோவான் அவர் நியாயாதிபதியாக கர்த்தருடைய நாளுக்குள்ளாகத்தான் எடுத்துச் செல்லப்பட்டான் என்பதையும் காண்பிக்கிறது.
89157 அவர் ஒரு நியாயாதியாயிருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பரிசுத்த யோவான் 5:22-ஐ நான் உடனே வாசித்து, அவர் ஒரு நியாதிபதியா அல்லது இல்லையா என்பதைப் பார்ப்போம். பரிசுத்த யோவான் 5:22. பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். 158 அது சரிதானே? அவர் நீதிபதி, உன்னதமான நீதிபதி அவர், இங்கே யோவான், இயேசுவானவர் அவரது தீர்க்கதரிசன நாளில் ஒரு தீர்க்கதரிசியாக இன்னமும் இல்லையென்றும், அல்லது அவரது இராஜரீகத்தின் நாட்களில் அவர் இல்லையென்றும், அவர் கர்த்தருடைய நாளில் ஒரு நீதிபதியாக இருக்கிறார் என்பதையே நமக்குக் காண்பிக்கிறான். இப்பொழுது எத்தனை பேருக்கு, ஆசாரியன் தன் இடுப்பிலே கச்சையைக் கட்டியிருக்கக் காண்கையில், அவன் தன் ஊழிய வேளையில் தான் இருக்கிறான் என்பதை அது காட்டுகிறது என்பதை அறிந்திருக்கிறீர்கள்? பழைய ஏற்பாட்டை வாசித்திருக்கிறவர்கள் அதை அறிவார்கள். ஒரு ஆசாரியனானவன் தன் இடுப்பிலே கச்சையைக் கட்டியிருந்தால் அப்பொழுது அவன் ஒரு ஊழியக்காரனாக, தனது ஊழியத்தில் இருக்கிறான் என்பதை அது காட்டுகிறது. ஆனால் அவரோ இங்கே மேலே ஒரு நியாதிபதியாய் கச்சையைக் கட்டியிருக்கிறார்.
90159 இன்னும் தொடர்ந்து வாசிப்போம். …மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த… 160 மார்பருகே அவர் கச்சையைக் கட்டியிருந்தபடியால் அவர் ஒரு நீதிபதி என்பது சரிதான். இப்பொழுது நாம் அவருடைய ஏழு விதமான மகிமையான தோற்றத்தைப் பற்றி படிக்கப் போகிறோம். ஓ, என்னே! இதைப் படிக்கப் போகுமுன்னரே என்னை இது ஆரவாரிக்கச் செய்கிறது. [ஒலி நாடாவில் காலி இடம்.—ஆசி.] இதைக் கவனியுங்கள். ஓ, இது இவ்வளவு அருமையான காரியமாய் இருக்கிறது. சற்று கவனியுங்கள்: …அவரது சிரசு… 161 அவரைப் பற்றி ஏழு காரியங்களை யோவான் குறிப்பிடுவதை இப்பொழுது கவனியுங்கள். அவரது சிரசு, அவரது தலைமயிர், அவரது கண்கள், அவரது பாதங்கள். அவரது சப்தம்…ஆக ஏழு காரியங்கள் அவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் ஏழு விதமான மகிமைத் தோற்றம். அதை நான் வாசிக்கட்டும்: அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜீவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது. 162 என்னே ஒரு தரிசனம்! இங்கே அவன் எதைக் கண்டான்? மகிமைப்படுத்தப்பட்ட தேவகுமாரன் மற்றும் ஒரு அடையாளச் சின்னம். இப்பொழுது நாம் சற்று ஆயத்தமாயிருப்போம்.
91163 ஓ என்னே! இப்பொழுது நான் மணி ஒன்பது என்று நினைத்தேன். ஆனால் மணி எட்டுதான் ஆகிறது. இன்னமும் நான் ஆரம்பிக்கவேயில்லை. சரி. அது நல்லது. இப்பொழுது, இந்த சகோதரர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதற்காக வருந்துகிறேன், நீங்கள் பாருங்கள், அவர்கள் நின்று கொண்டிருக்கிறபடியால் கால் வலிக்கும் என்பது எனக்குத் தெரியும். அது என்னை பதற்றமடையச் செய்கிறது. இதற்காக என்னால் அந்த சகோதரர்களுக்கு ஏதாகிலும் செய்யக் கூடுமானால், நான் நிச்சயமாக செய்வேன், இப்பொழுது, இச்செய்தியை நீங்கள் சரியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்காக நீங்கள் சிறிது நேரம் நிற்பதற்காக தேவன் உங்களுக்கு அபரிமிதமாக பலனளிப்பார் என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது.
92164 அவரது சிரசும் மயிரும் பஞ்சைப் போல் வெண்மையாயிருந்தது என்ற முதலாவதான காரியத்தை இப்பொழுது—இப்பொழுது கவனியுங்கள். அவரது சிரசும் மயிரும் பஞ்சைப் போல் வெண்மையாயிருந்தது. அவரது இத்தகைய தோற்றம், அவர் முதிர் வயதை எய்திவிட்டார் என்பதைக் காட்டவில்லை. இவ்வாறான தோற்றத்தின் காரணம் முதிர்வயது என்பதினால் அல்ல. அவர் முதிர் வயதை எய்திடவில்லை. அவர்…அவரது அனுபவம், அவரது ஸ்தானம் அவரது ஞானம் இவைகளையே இத்தோற்றம் எடுத்துக்காட்டுகிறது. அவர் நித்தியமானவாராக இருக்கிறபடியினால், நித்தியத்துக்கு வயது என்பது கிடையாது. நீங்கள் புரிந்து கொண்டீர்களா? 165 நாம் திருப்பி, அவரது தோற்றத்தைக் கொண்டு அவர் என்னவாக இருக்கிறார் என்பதை நாம் கண்டு, இங்கே முதலாவதாக நாம்—நாம் அவரை சித்தரித்துக் காண்போமாக. நாம் இப்பொழுது தானியேலின் புத்தகம் 7:9—ல் நீண்ட ஆயுசுள்ளவராக அவர் வருவதை, இங்கே உள்ளது போலவே உள்ள அவரது தோற்றத்தை ஒரு நிமிடம் பார்ப்போம். எந்த வேத பண்டிதரும் நாம் இப்பொழுது என்ன விஷயத்தைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை சரியாக அறிவர். தானியேல் 7-ல், 9-ம் வசனம். நான் 8-வது வசனத்திலிருந்து துவங்குகிறேன். அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; 166 இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். பின்னால் இருப்பவர்களுக்கு நான் பேசுவது கேட்கிறதா? அப்படியாயின் உங்களால் முடிந்தால் “ஆமென்” என்று சொல்லுங்கள். பின்னால் இருக்கும் என் மனைவியை நான் கேட்டேன். இங்கிருக்கும் இந்த ஒலிப்பெருக்கி…மிகவும் சரியாகவே வேலை செய்கிறது என்று நான் எண்ணுகிறேன். நான் இதில் சற்று கூடுதலாக சப்தமிடுகிறேன் என்று கருதுகிறேன்.
93167 சரி, இப்பொழுது தானியேல் 7:9: நான் பார்த்துக்கொண்டிருக்கையில் சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் விற்றிருந்தார்: அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது; …(நீண்ட ஆயுசுள்ளவர்) …அவருடைய சிங்காசனம் அக்கினி ஜீவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாய சங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. 168 “வெண்முடி!” பண்டைய காலங்களில் நீதிபதிகள் இவ்வாறு உடுத்தியிருந்தனர் என்பதை எவரேனும் அறிவீர்களா? ஆங்கிலேய நீதிபதிகள் வெண்பனியைப் போல வெண்மை நிறமுள்ள போலித் தலை முடியை அணிவதுண்டு. எத்தனை பேருக்கு அது நினைவிருக்கிறது? முன் காலங்களில் உள்ள நீதிபதிகள் அவ்வாறு வெண்மையான, தலையில் போட்டுக் கொள்ளும் வெண்முடியைப் போல உள்ள தொப்பியை அணிந்து கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் …இங்கே யோவானுக்கு அவன் கர்த்தருடைய நாளில் நிற்கிறான் என்பதை, இக்காட்சியில் அவர் நீதிபதியாக தோற்றமளிப்பதன் மூலம் மறுபடியும் காண்பிக்கிறார். ஆமென்! அவர் இங்கே ஒரு ஆசாரியனாக அல்ல, அல்லது ஒரு இராஜாவாக அல்ல, ஒரு தீர்க்கதரியாகவும் அல்ல. ஆனால் நீதிபதியாக தோற்றமளிக்கிறார். (யோவான் 5:22-ல் கூறப்பட்டுள்ள வண்ணமாக.) பிதாவானவர் நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் முழுவதையும் இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார். அவரது சிரசின் மயிர் வெண்பனியைப் போல் வெண்மையாயிருந்தது. தானியேல் அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடம் மட்டும் வருவதைக் கண்டான். இவையிரண்டும் ஒன்றாக இணைகிறது, அவரைக் கவனியுங்கள். சரி.
94…நியாயசங்கம் உட்கார்ந்து; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுக்களை பேசின … (இல்லை, நான் தவறான வசனத்தை எடுத்துள்ளேன், நான் அவ்வாறு எடுத்துக் கொள்ளவில்லையல்லவா?) 169 தானியேல் 7:9 ஆம் இதோ நாம் இங்குதான் உள்ளோம்: …அதின் சக்கரங்கள்… அக்கினி நதி அவர் சந்ததியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; …அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுக்களை பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலை செய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது (ஊ!) மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால் (அதாவது எல்லா புறஜாதி வல்லமைகளும், ராஜ்யங்களும் விழுந்து போம்) அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும். அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; (இன்று காலையில் அவர் எவ்வாறு வருகிறார் என்று 3-ம் வசனத்தில் நாம் பார்த்தோம்? வானத்து மேகங்களுடனே மனுஷ குமாரன் வருகிறார்) அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டு வரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவம் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.
95170 வெண்பஞ்சைப் போல் வெண்மையான முடியை உடைய நீண்ட ஆயுசுள்ளவர் இடம் மட்டும் அவர் வருகிறார். யோவான் திரும்பிப் பார்த்து மனுஷகுமாரனுக்கொப்பான ஒருவர் ஏழு பொன் குத்து விளக்குகளுக்கு மத்தியிலே வெண்மையான முடியை உடைய ஒரு நீதிபதியாக நிற்பதைக் கண்டான். இடுப்பிலே கச்சை கட்டியவராக அல்ல, ஆனால் மேலே இங்கே மார்பருகே கச்சை கட்டியவராக, ஒரு நீதிபதியாக நிற்கிறார். நீதிபதிகள் தோளிலே போட்டுக் கொள்ளும் கச்சையோடு அவர் நிற்கிறார். அவர் பொன்னான, சுத்தமான, பரிசுத்தமான, சுத்திகரிக்கப்பட்ட, அவருடைய நீதியைக் கொண்டிருந்த கச்சையைக் கட்டியவராக நின்றிருந்தார். அவரை பாதம் வரைக்கிலும் முழுவதும் மூடுகிறதான நிலையங்கியை அவர் தரித்திருந்தார். அவரது ஆள்தத்துவத்தின் மகிமையான ஏழுவிதமான வெளிப்படுத்துதலைக் கவனியுங்கள்.
96171 இப்பொழுது 14-ம் வசனம் என்று நான் நம்புகிறேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜீவாலையைப் போலிருந்தது. 172 அவருடைய சிரசும், மயிரும்; “கண்கள் அக்கினி ஜீவாலையைப் போலிருந்தது.” அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள்! அந்தக் கண்கள் ஒரு காலத்தில் மனுஷ கண்ணீரால் மங்கிப் போய்விட்டிருந்தது. ஆனால் இப்பொழுதோ அக்கினி ஜீவாலையாக ஆயிருக்கிறது. கோபத்தில்…அங்கே அவர் கோபமுள்ள நீதிபதியாக நிற்கிறார்! ஏன் அவரை நீ புறக்கணித்தாய்? ஓ, பாவியே, இதைப் பற்றி எண்ணிப்பார். இதைப்பற்றி, வெது வெதுப்பான சபை உறுப்பினரே, சிந்தித்துப் பார்! அதைப் பற்றி கத்தோலிக்க, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே சபையினரே, எண்ணிப் பாருங்கள்! கத்தோலிக்கரே, அதைப் பற்றி எண்ணிப்பாரும்! உங்களுடைய கன்னிமரியாளுங்கூட பெந்தெகொஸ்தே நாளன்று சென்று, பரிசுத்த ஆவியைப் பெற்று, குடித்த ஒரு பெண்மணியைப் போல தள்ளாட வேண்டியிருந்தது. கிறிஸ்துவின் தாயார் கூட பரலோகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. ஸ்தீரிகளாகிய நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமல் எப்படி அங்கே பிரவேசிக்கப்போகிறீர்கள்? மனிதர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள்!
97173 அவரது முடியும், ஒரு காலத்தில் அவரது கண்கள் மனுஷீக கண்ணீரினால் மங்கிப் போயிருந்தன. ஆயினும் அவரது கண்களைப் பற்றி நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அவர் பூமியில் இருந்தபொழுது, லாசருவின் கல்லறையில் கண்ணீர்விட்டார். ஒரு மனிதனைப் போல் கண்ணீர் சிந்தியதால் அவரது கண்கள் மங்கலாக இருந்தன. உண்மை! முழுவதும் இரக்கத்தினால் அவர் நிறைந்திருந்தார். அவருடைய மனுஷீகத் தன்மை. அவர் உடுத்தப்பட்டிருந்தார், அவர் பாவத்தை எடுத்துபோடும்படியாக மனுஷீகத்தினால் போர்த்தப்பட்ட தேவனாயிருந்தார். ஆனால் அதே சமயத்தில் அந்த மானிட தன்மைப் பின்னால், அவர் மனிதனுடைய இருதயத்திற்குள் பார்க்கவும், அவனைப் பற்றிய யாவையும் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு காரியத்தை அவர் உடையவராயிருந்தார். ஏன்? அவர் அழிவுக்குரிய மாம்ச சதையைப் போர்த்தியிருந்தவராக இருந்தபோதிலும், அதற்குப் பின்னால் ஏதோ ஒன்று மகத்தானது அவருக்குள் இருந்தது. 174 ஆனால் அவர்களுக்கு அவர் யாராயிருந்தார் என்று தெரியவில்லை. அவர், “நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்” என்றார். அது உண்மையே. “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்” ஓ! அவர் எவ்வளவாக அச்செய்தியை, அந்த வெளிப்பாட்டை, அவர்கள் ஏற்றுக் கொள்வதற்காக முயற்சி செய்தார்! அவரால் ஒரு மனிதனின் உள்ளத்திற்குள் ஊடுருவிப் பார்த்து அவனைப் பற்றி யாவும் அறிந்து கொள்ள முடிந்தது. அதைப் பற்றி நான் எவ்வளவாக சிந்திக்கிறேன்! ஓர் சமயம், மலைகளினூடாக ஊடுருவிப் பார்த்த அந்த கண்கள், துன்பப்படுபவரின் முகத்தை பார்த்த கண்கள், ஒரு மனிதனைப் போல் அழ முடிந்த கண்கள், ஆயினும் அம்மனுஷீக பார்வையின் பின்னால் தேவ ஆவியைக் கொண்டு, அவரால் இருப்பவைகளையும், இருந்தவைகளையும், இருக்கப் போகிறவைகளையும், ஆகிய யாவற்றையும் பார்க்க முடிந்தது. இயேசுவில் இருந்த மாம்ச கண்களுக்குப் பின்னால் இருந்தது தேவனாகையால், துவக்கம் முதல் முடிவு வரையிலும் எல்லாவற்றையும் அவரால் முன்னுரைக்க முடிந்தது. தேவன் தாமே உங்களுடைய ஜீவியத்தில் வந்து, அவர் உங்களுடைய ஜீவியத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவராக! அதின் மூலம் அவர் உங்களுக்கு வரப்போகிறவைகளை காண்பிப்பார். ஏனெனில் அது முதற்கொண்டு இனிமேல் அது நீங்களல்ல. அது உங்களுடைய ஜீவியத்தில் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களுடைய மாம்சக் கண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு பார்த்துக்கொண்டு காரியங்களை தெளிவுபடுத்துகிறவராயிருக்கிறார்.
98175 ஓ! தேவனுக்கு மகிமையுண்டாவதாக! “நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களையும் உங்கள் மூப்பர் சொப்பனங்களையும் காண்பார்கள்.” அல்லேலூயா! சில வேளைகளில் அவர் உங்களை உறக்கத்திலாழ்த்தி, உங்கள் மூலமாக அவர் பார்க்கிறார். ஆனால் அவர் நிச்சயமாக அநேக சமயங்களில் உங்களுக்குக் காண்பிப்பார். “உங்கள் வாலிபர் தரிசனங்களைக் காண்பார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள், ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.” “என்னுடைய உதவிக்காரர்கள் மேலும் என்னுடைய போதகர்கள் மேலும் ஊற்றுவேன்” என்று சொல்லப்படவில்லை. “விரும்புகிறவன் எவன்மேலும், மாம்சமான யாவர் மேலும் என்னுடைய ஆவியை ஊற்றுவேன்” என்றே கூறியுள்ளார். நான் இதைப் பற்றி ஏன் சப்தமிட்டு கூறுகிறேன் என்பதைப் பற்றி நீங்கள் வியக்கிறீர்கள். ஆனால் இவைகள் இந்த சபைக் காலங்களில் வருகின்றன.
99176 ஓ, அக்கண்களோடு அவர் இங்கே இருக்கிறார். நினைவிருக்கட்டும், முன்னொரு நாளிலே அதே கண்கள் கண்ணீரினால் மங்கியதாயிருந்தது. இப்பொழுது அதே கண்கள் தான் நியாயத்தீர்ப்பில் நிற்கும். அவரது கண்கள் அக்கினி ஜீவாலையாக நிறைந்ததாக பூமியெங்கும் உளவுகிறது. சம்பவிப்பவைகள் யாவும் அவருக்கு தெரிந்தேயிருக்கிறது. ஓ, என்னே! அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லா அசைவுகளையும் கண்காணித்து எல்லா யோசனைகளையும் வகையறுத்து, நீங்கள் செய்யும் யாவற்றையும் அறிந்து கொண்டு, நீங்கள் செய்ய விரும்பும் காரியங்களுக்கான உங்கள் விருப்பங்களையும் அறியத்தக்கதாக அவரது கண்கள் பூமியெங்கும் உலாவுகிறது. யாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா என்பதை அவர் அறிவார். அவரை சேவிப்பதற்காக உங்கள் விருப்பங்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் அவர் அறிவார். அதைப் பற்றிய யாவையும் அவர் அறிவார். அவர் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் நிற்கையில், நீங்களும் அங்கே நிற்கையில் அவருக்கு முன்பாக எல்லாப் பாவமும் வெளியரங்கமாகும்போது, எவ்வாறிருக்கும்?
100177 தேவனே, அவ்விடத்திலிருந்து என்னை விடுவித்தருளும்! அதை நான் காண விரும்பவில்லை. கோபமடைந்துள்ள தேவன் அவரது கண்களில் அக்கினி ஜீவாலிக்க நீதியோடு, தலையில் நீதிபதிக்குள்ள வெண் முடியோடு நடந்து வரும்போது, அவரது கண்கள் அக்கினி மயமாக ஜீவாலித்ததாயும், உங்கள் இருதயத்தின் ஒவ்வொரு சிந்தனைகளையும் முழுவதும் அறிந்ததாய், நீங்கள் செய்ய விரும்பினவைகள் யாவையும் அறிந்ததாகவும் இருக்கிறது. எனக்காக பிளவுண்ட கன்மலையில் என்னை மறைத்துக் கொள்ளும்! அந்த முதியவர் இவ்வாறு பாடுவது வழக்கம்; “இவ்வுலகமானது நெருப்புக்கிரையாகுகையில், என்னோடிரும்! என்னோடிரும்! அப்பொழுது உமது மடி எனது தலையணையாய் இருக்கட்டும்! பிளவுண்ட மலையினுள் என்னை மறைத்துக் கொள்ளும்.” தேவனே, உம்முடைய நியாயத்தீர்ப்பானது எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டாம்…கர்த்தாவே, எனக்குத் தேவையானது உம்முடைய இரக்கமே, உம்முடைய இரக்கத்தை எனக்குத் தாரும், உம்முடைய நீதியை அல்ல. உம்முடைய இரக்கத்தை எனக்குத் தாரும். உம்முடைய நியாயப்பிரமாணங்களை அல்ல, அவைகளில் ஒன்றும் அல்ல…கர்த்தாவே, உம்முடைய இரக்கத்தை மட்டுமே தாரும். அதற்காக மட்டுமே நான் வேண்டுதல் செய்ய முடியும். என் கரங்களில் ஒன்றும் கொண்டு வரவில்லை. (நான் நல்லவன் அல்ல, கணக்கில் எனக்கு ஒன்றுமில்லை) உம்முடைய சிலுவையை மட்டுமே நான் பற்றிக் கொள்கிறேன். கர்த்தாவே, எனக்குத் தெரிந்ததெல்லாம் அதுவே, என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள ஒருவர் வருகிறார்.
101178 அவருடைய தோற்றத்தின் ஏழுவிதமான தன்மைகளை கவையுங்கள். அப்பொழுது அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் காண்பீர்கள். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜீவாலையைப் போலிருந்தது; (நாம் பார்ப்போம்) அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; 179 இப்பொழுது கவனியுங்கள். நாம் அவர் தலையில் எவ்வாறு மூடியிருந்தார் என்பதை நாம் பார்த்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது கவனியுங்கள். அவரது சிரசு. அவரது கண்கள், இப்பொழுது அவரது பாதங்களைக் கவனிக்கையில் அது வெண்கலம் போலிருந்தது. யோவான் இயேசுவைப் பார்த்தபோது இருந்த சாயலுக்கும், தானியேல் இவ்வுல சாம்ராஜ்யங்களைப் பற்றி விவரிக்கும் பொன் மற்றும் இன்னும் பிற உலோகங்களிலான அச்சிலைக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள். 180 இங்கே நிற்கிற இவருடைய பாதங்கள் எவ்வாறிருந்தன என்பதைக் கவனியுங்கள். அவை வெண்கலம் போலிருந்தன. வெண்கலமானது எதைக் குறிக்கிறது? வெண்கலமானது தெய்வீக நியாயத்தீர்ப்பை எடுத்துக் காட்டுகிறதாயிருக்கிறது. வெண்கலமானது தேவனாயிருக்கிற அவர் இப்பூமிக்கு மாம்சத்தில் வந்து, நமக்காக மரித்து, நியாயத்தீர்ப்பை- தெய்வீக நியாய்த் தீர்ப்பை தன் மேல் எடுத்துக்கொண்டு, உறுதியான, அசையாத தன்மையுள்ள வெண்கலத்திற்கொப்பானதொரு இராஜ்யத்தைப் பெற்றுக் கொள்ளுகிற அவருடைய நோக்கத்தை எடுத்துக் காட்டுகிறதாயிருக்கிறது. வெண்கலத்தை விட கடினமானது வேறொன்றுமில்லை; அதை கடினப்படுத்த வேறு ஒன்றும் இது வரைக்கிலும் கண்டுபிடிக்கவில்லை.
102181 நியாயத்தீர்ப்பு! வெண்கலமானது நிறைவேற்றப்பட்ட தெய்வீக நியாயத்தீர்ப்பைப் பற்றி எடுத்துரைக்கிறது. வனாந்தரத்தில் இருந்த அந்த வெண்கல சர்ப்பத்தை பாருங்கள். வெண்கல சர்ப்பமானது எதற்கு அடையாளமாயிருக்கிறது? சர்ப்பமானது பாவத்திற்கு அடையாளமாயிருக்கிறது. ஆனால் வெண்கல சர்ப்பம் என்பது பாவத்தின் மேல் ஏற்கனவே நியாயத்தீர்ப்பானது செலுத்தப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. 182 எலியாவின் நாட்களையும் குறித்து இப்பொழுது கவனியுங்கள். அவன் நாட்களில் அவனை தீர்க்கதரிசி என்ற முறையில் புறக்கணித்தார்கள். ஆதிக்காலத்து சபையின் அந்த சிறுப்பாண்மையைப் பாருங்கள். இந்நாட்களில் ஒன்றில், இஸ்ரவேலுக்கும் ஏழு சபைக் காலங்கள் இருந்தன என்றும், அவையும், இக்காலத்திய சபைக் காலங்களுக்கு முன்னடையாளமாயிருந்தன என்பதையும் நான் உங்களுக்குக் காண்பிப்பேன். அவர்களுடைய சபைக் காலத்தில், எலியாவின் நாட்களில், எலியாவை அவர்கள் புறக்கணித்தார்கள். அப்பொழுது மூன்று வருடம் ஆறுமாத காலத்திற்கு மழையே பெய்யவில்லை. அந்தப் பண்டைய காலத்து தீர்க்கதரிசி, “ஆகாயம் வெண்கலம் போலிருந்தது” என்று கூறுகிறான். தேவனைப் புறக்கணித்து, யேசபேலுக்கு செவி கொடுத்த தேசங்கள் மேல் தெய்வீக நியாயத்தீர்ப்பானது வந்தது.
103183 பலியானது பலியிடப்பட்ட பலிபீடத்தில் உள்ள வெண்கலமும் கூட தெய்வீக நியாயத்திர்ப்பை எடுத்துக்காட்டுகிறது. அதின் அஸ்திபாரமே வெண்கலம் தான்; அது நியயத்தீர்ப்பை காட்டுகிறது. தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை அவர் மிதித்து, நம்மேல் வரவிருந்த நியாயத் தீர்ப்பை தன் மேல் எடுத்துக் கொண்டார். வெளிப்படுத்தின விசேஷம் 19:15க்கு ஒரு நிமிட நேரம் திருப்புங்கள். அங்கே அவர் என்ன செய்தார் என்பதைப் பாருங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 19:15 ஐ நான் கண்டு பிடிக்க முடிந்தால். நாம் அதை சற்று வாசிக்கலாம். ஆம், நாம் கிட்டத்தட்ட…12-ம் வசனத்திலிருந்து நாம் பார்ப்போம். அவருடைய கண்கள் அக்கினி ஜீவாலையைப் போலிருந்தன. அவருடைய சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குத் தெரியாத ஒரு நாமமு எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே (அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை அல்ல, அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்று அழைக்கப்பட்டது என்பதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். புரிகிறதா?) …அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்று அழைக்கப்பட்டது. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளை குதிரைகளின் மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக் கோலால் அவர்களை அரசாளுவார்; (அது என்ன?) அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை…மிதிக்கிறார்.
104184 அவர் என்ன செய்தார்? நாம் பாவிகளாயிருந்தபடியால், தேவனுடைய கோபம் நம்மேல் இருந்தது. அது சரிதானே? ஒருவரும் தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ள முடியவில்லை. நம்மால் ஒன்றும் செய்ய முடியாதிருந்தது. நாம் யாவரும், “பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, இவ்வுலகுக்கு பொய் பேசுகிறவர்களாக வந்து சேர்ந்தோம்.” அவர் என்ன செய்தார்? அவர் பூமிக்கு வந்து, அல்லேலூயா, தேவனுடைய உக்கிர கோபமுள்ள மதுவாகிய ஆலையை மிதித்தார்! சர்வ வல்லமையுள்ள தேவனுடைய முழு உக்கிர கோபமும் அவர் மேல் ஊற்றப்பட்டது. “நீர் அடிக்கப்பட்டதினால், ஓ தேவனுடைய ஆட்டுக்குட்டியானவரே, நீரே பாத்திரராயிருக்கிறீர்.” சர்வ லோகத்தின் பாவங்களையும் அவர் தன் மேல் எடுத்துக் கொண்டு, நமது பாவங்களை அவர் சுமந்தார், தேவன் தன்னுடைய உக்கிர கோபம் யாவற்றையும் அவர் மேல் ஊற்றிவிட்டார். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதனத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” அவரைப் போல எந்த ஒரு மனிதனும் ஒருபோதும் மரித்ததில்லை. அவருடைய சரீரத்தில் இரத்தமும் தண்ணீரும் பிரியுமட்டாய் அவர் பாடுபட்டார். அவருடைய மரணத்துக்கு முன்பே அவருடைய நெற்றிப் புருவத்திலிருந்து வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையில் விழுந்தது. …சர்வ வல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை…
105185 ஓர் நாளில், அந்த வெண்கலம் போன்ற நீதியின் பாதங்கள், (மகிமை!) அவர் நியாயாதிபதியாக வருகையில், அந்திக் கிறிஸ்துவையும் தம் சத்துருக்கள் அனைவரையும் மிதித்துப் போடுவார். அல்லேலூயா! அவர் பூமி முழுவதும் தன் கரத்தில் இருப்புக் கோலுடன் நடந்து செல்வார். ஆமென்! ஓ! பாவியான நண்பனே! மனந்திரும்புவதற்கு தருணம் இருக்கையில் மனந்திரும்புவாயாக! சொல்லப்படுகிற இவ்விஷயங்கள் யாவும் ஒரு சிறுகதை தான் என்றும், அவைகள் நிறைவேறப் போகிறதில்லையென்றும் எண்ணிக் கொண்டு, மனந்திரும்புவதை தள்ளிப்போட முயற்சித்துக் கொண்டேயிருக்கிறாய், அது நிச்சயம் சம்பவிக்கும். “எனக்கு நேரிட முடியாது!” என்று சொல்லாதே. உனக்கு அது சம்பவிக்கும். 186 அவரது வெண்கலம் போன்ற பாதங்கள் அவருடைய சத்துருக்களை மிதித்துப்போடும். ஏனெனில் அவர் நமது பாவங்களுக்கு கிரயம் செலுத்தும்படி பாடுபட்டு, நம்மேல் வரவேண்டிய தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை அவர் மிதித்தார். பின்பு நாமோ குற்றமுள்ளவர்களாயும், தரித்திரராயும் பரிதாபப்படத்தக்கவர்களாயும் புழுக்களைப்போல் இருந்து, நமது சிறிய மூக்கை உயர்த்திக் கொண்டு, ஏதோ நாத்திகவாத புத்தகத்தைப் படித்துவிட்டு, “தேவன் ஒருவர் இல்லை” என்று எண்ண முயற்சித்தோம். “ அவ்வாறு ஒன்றில்லை, நியாயத்தீர்ப்பு நம்மேல் வரமுடியாது” என்று கூறினோம். அவர் தன்னுடைய வெண்கலம் போன்ற பாதங்களைக் கொண்டு அவருடைய சத்துருவை உதைத்து எறிந்து விடுவார். அந்தி கிறிஸ்துவின் மேல் பலமாக தன் பாதங்களைக் கொண்டு உதைத்து எறிந்துவிடுவார். அவர் அந்த கள்ளச் சபைகளை எடுத்து, காலாகாலங்களாக எரியும் பட்சிக்கும் அக்கினி கடலில் வீசியெறிந்துவிடுவார், அங்கே அவர் அந்த பட்சிக்கும் அக்கினியால் முற்றிலும் எரித்து அழிக்கப்பட்டு இல்லாமற் போவாள். அவளும் அவளுடைய சபையும் சதா காலமும் பூமியிலே அரசாளுவார்கள். மகிமை!
106187 “வெண்பஞ்சைப் போன்று சிரசு வெண்மையாயிருத்தல்” என்பது நீதி, அனுபவம், நாவன்மை, நிறைவையும், ஞானத்தையும் குறிக்கிறது, வெண்மை ஞானத்தைக் குறிக்கிறது. வயதைக் குறிக்கிறது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவரே—அவரே ஞானத்தின் ஊற்று. அவரே அனுபவத்தின் ஊற்று. நனமையான யாவற்றுக்கும் உரிய ஊற்று அவரே. எனவே அவர், சிரசும் மயிரும் வெண்பஞ்சிப் போன்று இருக்கும் முடி தொங்கிக் கொண்டிருப்பவராக மனுஷகுமாரனுக்கொப்பானவரைப் போல் காட்சியளிக்கிறார். தானியேல் அவரை அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர், அதாவது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, கண்டு, “நீண்ட ஆயுசுள்ளவர் மனுஷகுமாரனுடைய சாயலுக்கொப்பானவர் வல்லமையோடு வந்து, நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து இணைந்தார், நியாய சங்கம் உட்கார்ந்தது” என்று கூறினான்.
107188 இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அனலுமின்று குளிருமின்றி வெதுப்பாயிருக்கும் சபையே, உன்னிடம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். பத்துக் கன்னியர் கர்த்தரைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களும், ஐந்து பேர்கள் புத்தியில்லாதவர்களுமாயிருந்தனர். அது ஒட்டுப் போடப்பட்ட மரமாயுள்ளது. இன்று காலையில் அதைக் குறித்துப் பார்த்தோம். அவர்கள் தேவனை சந்திக்க வெளியே புறப்பட்டுச் செல்கையில், இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்…இப்பொழுது கவனியுங்கள், “புத்தகங்கள் திறக்கப்பட்டன” என்று வேதம் கூறுகிறது. தானியேல் 7:9—ல் “புஸ்தகங்கள் திறக்கப்பட்டன.” அது பாவிகளைப் பற்றி கூறும் புத்தகமாகும். “வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது” அவருடன் வந்தது யார்? எடுத்துக் கொள்ளப்பட்ட அவருடைய சபை வந்தது. ஓ! “ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள். கோடா கோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்” அவருடைய மனைவியாகிய மணவாட்டி தான் அது. ஓ, மகிமை! அவருடைய மனைவியாகிய சபை அவருடன் வந்தாள். 189 நியாய சங்கம் உட்கார்ந்தது, புத்தங்கள் திறக்கப்பட்டன. வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அது புத்தியில்லாத நித்திரை செய்த கன்னியரைப் பற்றியது. ஒவ்வொரு மனிதனும் அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே நியாயந்தீர்க்கப்பட்டான். நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை என்று கேட்கப்படுவீர்கள். அதற்கு பிறகு, என்ன? நீங்கள் இப்பொழுது இதை மிகவும் நன்றாக அறிந்து கொண்டுவிட்டீர்கள். இதற்கு முன்பாக அறிந்திருக்கமாட்டீர்கள், ஆனால் இப்பொழுது அறிவீர்கள். புரிகிறதா? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பாவியும் பக்தியில்லாதவனும் எங்கே நிற்பார்கள்? புறக்கணிக்கிறவன், இதைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டே, அதைப் புறக்கணிக்கிறான். அவர்கள் எங்கே வந்து நிற்பார்கள்? அவரது பாதங்கள் வெண்கலம் போன்று பிரகாசித்தது. அது தெய்வீக நியாயத்தீர்ப்பை எடுத்துரைக்கிறது.
108190 இந்தப் பக்கத்தின் கடைசிப் பகுதி வரைக்கும் நாம் இப்பொழுது…சீக்கிரமாக பார்ப்போம். …மயிரும் வெண்பஞ்சைப்போலவும்…அவருடைய கண்கள் அக்கினி ஜீவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; 191 “பெருவெள்ளத்து இரைச்சல்.” தண்ணீர்கள் எதைக் குறிக்கிறது? இதை நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், வெளிப்படுத்தின விசேஷம் 17:15—க்கு திருப்புங்கள். அங்கே வேதம் தண்ணீர்கள் என்பது எதற்கு அடையாளமாயிருக்கிறது என்று கூறுவதை நீங்கள் காணாலாம், “தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.” சரி, “சத்தம்” ஜீவ சமுத்திரத்திலே பாதை தவறுகிற ஆத்துமாவுக்கு அது எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! அவனை வழி நடத்திச் செல்ல ஒரு மாலுமி அவனுக்கு இல்லை; அவனது ஜீவிய படகு அச்சமுத்திரத்தின் கோர அலைகளில் கட்டுப்பாடின்றி மிதந்து, அவன் பெருவெள்ளத்து இரைச்சலைக் கேட்பான். பாதை விலகிச் செல்லும் ஆத்துமாவுக்கு அது எத்தனை பயங்கரமாகிவிடுகிறது! “பெருவெள்ளத்து இரைச்சல்” அவருடைய சப்தமானது என்ன? அது நியாயத் தீர்ப்பாயிருக்கிறது; பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவ ஊழியக்காரர்கள் ஒவ்வொரு காலத்திலும் ஜனங்களை நோக்கி சப்தமிட்டு கூறியவைகள் அங்கே நின்று கொண்டிருக்கின்றன. திரளான ஜனங்கள் மத்தியிலே அதிகமான தண்ணீர்களின் சப்தம் புறப்பட்டுச் சென்றது. அவருடைய கரத்திலிருந்து ஏழு நட்சத்திரங்களாகிய ஏழு தூதர்கள் ஒவ்வொரு சபைக் காலத்திலும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்தும், இயேசுவின் நாமத்தில் உள்ள ஞானஸ்நானத்தைக் குறித்தும், அந்நிய பாஷைகளில் பேசுதலைக் குறித்துத் தேவனுடைய வல்லமையைக் குறித்தும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றியும், இரண்டாம் வருகையைப் பற்றியும், தெய்வீக நியாயத்தீப்பைப்பற்றியும் பிரசங்கித்தனர். மனுஷகுமாரனுடைய சாயலுக்கொப்பானவரிடத்திலுருந்து பெருவெள்ளத்து இரைச்சலைப் போல சப்தமானது புறப்பட்டு வந்தது.
109192 நீங்கள் கூட்டங்களில் உட்கார்ந்து, தேவனோடு நீங்கள் உங்களை ஒப்புரவக்கி கொள்ள வேண்டும் என்றும், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டு அறிந்து கொள்வது எப்படியாயிருக்கும்? நீங்கள் உட்கார்ந்திருக்கிற அதே கூட்டத்தில், பாதை தவறிச் செல்லுகிற ஒரு ஆத்துமா அதே சத்தத்தை தன்னோடு பேசக் கேட்டும், தேவனுடைய நியாயத்தீர்ப்புகளைப் பற்றி பிரசங்கிக்கக் கேட்டும், அதை நிராகரிப்பது அவ்வாத்துமாவுக்கு எப்படியிருக்கும்! உனக்கு சற்றுக் கீழாக அந்த பயங்கரமான பெருவெள்ளமானது இருந்து கொண்டிருக்கிறது. அது உன்னை நித்திய அழிவுக்கு நேராக கொண்டு செல்லும்! 193 பெருவெள்ளத்து இரைச்சல் என்பது அவரது நான்காவதான தோற்றமாயிருக்கிறது. பெருவெள்ளத்து இரைச்சல் மகிமையில் இந்த இராத்திரியிலே இந்த சப்தமானது பதிவு செய்யப்படுகையில், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுடைய சப்தமானது பதிவு செய்யப்படுகிறது. உங்களுடைய எண்ணங்கள் பதிவு செய்யப்படுகிறது. “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்.” கவனியுங்கள், பூமியில் உங்கள் நினைவுகளைவிட உங்கள் சப்தமானது அதிகம் கேட்கிறது. ஆனால் பரலோகத்திலோ உங்கள் சப்தத்தைவிட உங்கள் நினைவுகளே அதிகமாக உரக்க ஒலிக்கிறது என்பதையே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். நிச்சயமாக அவ்வாறுதான் உள்ளது. உங்கள் எண்ணங்களையும் இருதயத்து விருப்பங்களையும் தேவன் அறிவார். அவை யாவற்றையும் பற்றி அவர் அறிகிறார். 194 அவர் பரிசேயரிடம், “மாய்மாலக்காரரே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். என்னை ‘நல்ல போதகரே’ என்று நீங்கள் அழைத்தாலும், உங்கள் உள்ளத்தை ஆராய்ந்து பார்த்து, நீங்கள் மாய்மாலக்காரர் என்றே நான் காண்கிறேன். நீங்கள் மனப்பூர்வமாக என்னை அவ்வாறு அழைக்கவில்லை” என்று அவர்களிடம் கூறினார். 195 ஓ, அநேக சபைக் காலங்களினூடே ஒலித்த அந்த சப்தங்கள் ஒன்று சேர்ந்து அந்நாளில் இடிமுழக்கம் போல் முழக்கமிடும்போது அது எவ்வாறு இருக்கும்?
110196 இப்பொழுது நான் உங்களை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன். இரட்சிக்கப்பட்டுள்ள ஜனங்களே நான் உங்களுக்கு ஒரு காரியத்தை கூறட்டும், நான் இதை உங்களுக்குக் கூறட்டும். 197 இப்பொழுது, பாதை விலகிச் செல்கிற பரிதாபமான ஆத்துமாவான நீ அப்பெருவெள்ளத்திற்குள் அலைந்து செல்கிற ஆத்துமாவே, நீ ஜாக்கிரதையாயிரு. அப்பொழுது உன்னை இரட்சிக்க ஒன்றுமில்லை என்பதை நீ அறிய வரும்போது அது மிகவும் பயங்கரமாயிருக்கும். அப்பொழுது நீ இரட்சிக்கப்பட முடியாது. உனக்கு முன்பாக உன்னுடைய அழிவானது இருக்கிறது என்பதை நீ அப்பொழுது அறிவாய். அதை நீ அறிந்த சில நிமிடங்களூக்குள்ளாகவே, “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று, பிசாசுக்காகவும் அவந்து தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்குள் போய் மாளுங்கள்” என்ற சப்தமானது கேட்கும். இந்த மகத்தானதை விட்டு விலகிச் செல்வதால், அந்நாளில், நீங்கள் இவ்விதமான அநேகக் கூட்டங்களின் சப்தங்களையெல்லாம் ஒரு சேர பெரிய நீர் வீழ்ச்சியின் பெரு வெள்ளத்து இரைச்சலைப் போல் கேட்பீர்கள். ஓ, எவ்வளவு பயங்கரமானதாக அது இருக்கப் போகிறது! அது திகில் சூழ்ந்ததாக இருக்கப் போகிறது. ஜனங்களே அவ்வாறு உங்களுக்கு சம்பவிக்க இடம் கொடுக்க வேண்டாம். ஜனங்களே! மனந்திரும்புங்கள், நீங்கள் சரிபடுத்திக் கொள்ள முடியும்போது, இப்பொழுதே தேவனோடு சரி செய்து கொள்ளுங்கள்.
111198 இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நங்கூரமிடப்பட்டிருக்கிற ஒரு மனிதனுக்கு பசுமையாயிருக்கும் மரத்தின் கீழ் அமர்ந்து, சலசலவென அமைதியாக ஓடிவரும் நீரோடையின் இனிய ஓசையைவிட கேட்பதற்கு இனிமையானது வேறென்ன உண்டு? ஓ! அது தேவனுடைய சப்தத்தோடு உன்னதங்களில் வீற்றிருக்கும் அந்த சபைதான். அது அவ்வாறு இனிமையாக அவர்களோடு பேசுகிறதாயிருக்கிறது, அது என்னவென்று கண்டீர்களா? அது பாவிக்கு ஆக்கினையாகவும், இரட்சிக்கப்படுகிறவனுக்கு ஆசீர்வாதமாகவும் உள்ளது. கிறிஸ்து இயேசுவாகிய கன்மலையிலே பாதுகாப்பாக தன் படகை நங்கூரமிட்டுக் கொண்டவன் அமர்ந்து செவி கொடுக்கிறான். அவன் இளைப்பாறுகிறான் அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசியுங்கள். 199 தண்ணீர்கள் ஓடி வருகிற இடங்களருகில் செல்ல நான் எவ்வளவாய் விரும்புகிறேன். நாங்கள் மீன்பிடிக்க அல்லது வேறு எங்காவது சென்றால், நான் வழக்கமாக, இனிமையான சத்தத்தோடு சலசலவென மெதுவாக ஓடிவரும் இடத்தை எனக்கென தெரிந்து கொள்வேன். ஏனென்றால் அது உங்களை இளைப்பாறச் செய்கிறது. அது இரவு முழுவதும் உங்களோடு பேசுவதை நீங்கள் கேட்கிறீர்கள். ஓ என்னே!
112200 கிறிஸ்துவுக்குள்ளாக உங்கள் ஆத்துமாவை நீங்கள் உண்மையாகவே நங்கூரமிட்டுக் கொள்வது அழகாக இருக்குமல்லவா? அவ்வாறான இடத்தில் நீங்கள் அவருக்கு முன்பாக அமைதி கொள்ள முடியுமே. அங்கே அவருடைய சத்தம் உங்களோடு “நான் உன் பரிகாரியாகிய கர்த்தர், உனக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிற கர்த்தர் நானே, நான் உன்னை நேசிக்கிறேன், உலகத் தோற்றத்திற்கு முன்பே உன்னை நான் அறிந்தேன். புத்தகத்தில் உனது பெயரை நான் பதித்துள்ளேன். நீ என்னுடையவன், பயப்படாதே, நான் தான், பயமடையாதே, நான் உன்னோடு இருக்கிறேன்” என்று பேசுகிறது. அப்பொழுது நான் இவ்வாறு பாடுவேன்: நான் இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிட்டுள்ளேன், நான் இனி சீறும் கடலினில் பயணம் செய்வேன். கடும்புயற்காற்று கொந்தளிக்கும் ஆழத்தில் வீசலாம்; ஆனால் நான் இயேசுவிலே என்றென்றும் பத்திரமாயுள்ளேன். 201 உங்களோடு இனிமையாக பேசும் அதே சத்தம், பாவியை ஆக்கினைக்குள்ளாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நோவாவை காப்பாற்றிய அதே ஜலப்பிரளயம், பாவியை அழித்தது. நான் கூறுவதை புரிந்து கொண்டீர்களா? திரளான தண்ணீர்களின் சத்தம்.
113202 இப்பொழுது கவனியுங்கள்; “சிரசும் மயிரும் வெண் பஞ்சைப் போல் இருந்தது, அக்கினி ஜீவாலையைப் போல் பிரகாசிக்கும் கண்கள், வெண்கலம் போன்ற பாதங்கள், அவருடைய சத்தம் பெரு வெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது.” …தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்;… 203 “ஏழு நட்சத்திரங்கள்:” இப்பொழுது இங்கே நாம் 20-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். என் வலது கரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது: அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; (அல்லது ஏழு செய்தியாளர்கள், ஏழு ஊழியக்காரர்கள்) நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம். 204 இதை யோவானுக்கு ஆண்டவரே, அது என்ன என்பதை அவன் தவறாக அர்த்தம் கொள்ளக் கூடாதபடி, உரிய வியாக்கியானத்தை கொடுக்கிறார். ஒவ்வொரு சபைக் காலத்திற்குரிய ஒவ்வொரு தூதன். இவ்வாரத்தில் நாம் அத்தூதர்களைப் பற்றி வரலாற்றில் பின்னால் திரும்பிப் பார்த்து, அவர்களுக்கு எவ்வாறு சரியாக அவரவர்களுக்கு உரிய ஊழியமானது இருந்தது என்பதைக் காணும்போது. ஓ, அது அழகாக இருக்கப் போகிறது. அதே ஊழியத்தை உடையவர்களாயிருந்தனர். அச்சிறிய சபையில் சபைக் காலங்கள் தோறும் ஊழியமானது அவ்வாறு சரியாக இருந்து வந்தது.
114205 சில காலத்திற்கு முன்னர் ஒருவர், “‘கத்தோலிக்க சபையானது எல்லாக் காலங்களிலும் நிலையாக நிலைத்து நிற்பதால் அதுவே உண்மையான சபை’ என்னும் ஒரு கூற்று கத்தோலிக்க சபையைக் குறித்து உண்டு என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டார். 206 நான் அதற்கு பதிலளிக்கையில், “அது ஒன்றும் பெரிய இரகசியமல்ல, ஏனெனில் அச்சபைக்கு அரசாங்கமும் மற்றும் யாவும் ஆதரவாக இருந்தபடியால். அது நிலைத்து நின்று, புயல்களை சமாளித்தது. ஆனால் எனக்கு மிகவும் இரகசியமானதாக இருப்பதென்னவெனில் எவ்வாறு அச்சிறிய சிறுபான்மையினரான சபையானது வாளால் அறுப்புண்டு, சிங்கங்களுக்கு இரையாக போடப்பட்டு, அக்கினிகிரையாக்கப்பட்டு, மற்றும் எல்லா வித உபவத்திரங்களுக்கும் உட்படுத்தப்பட்டபோதிலும், சீறும் புயல்களையெல்லாம் சமாளித்து பிழைத்து நின்றது என்பது தான்” என்று கூறினேன். அவர்களோடு தேவனுடைய கரம் இருந்தது என்பதை அது காட்டுகிறது. அவ்வளவுதான். இன்னும் அவளது வெளிச்சமானது எரிந்துகொண்டிருக்கிறது. ஆமென்! ஆம் ஐயா!
115207 இப்பொழுது, “எனது வலது கரத்திலுள்ள ஏழு நட்சத்திரங்கள்” என்பதைப் பற்றிப் பார்ப்போம். அவருடைய வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார். ஏழு நட்சத்திரங்களும் ஏழு காலங்களிலுள்ள ஏழு ஊழியக்காரர்கள் என்று அர்த்தமாகிறது. ஓ, இது—இது அழகாக உள்ளது. நாம் பின்னால் திரும்பிப் பார்த்து, எபேசு சபைக்கு செய்தியைக் கொண்டு வந்த ஊழியக்காரன் யார் என்பதை தெரிந்து கொண்டு, பிறகு அடுத்து உள்ள சிமிர்னா சபைக்கு உள்ள தூதன் அதே செய்தியை தன் காலத்து சபைக்கு கொண்டுவந்து மரண பரியந்தம் அதில் நிலைத்திருந்தான் என்றும், இவ்வாறு தொடர்ந்து பெர்கமு, தீயத்தீரா சபைக் காலங்கள் தோறும், கடைசியாக இந்தக் காலம் வரையிலும் செய்தியானது தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது என்பதையும் பார்க்கலாம். அந்த ஒளியைக் கொண்டிருந்த அந்த ஊழியர்கள் அதை தங்கள் காலங்களுக்கு கொண்டு வந்தபோது, அவ்வெளியானது, ஆதியில் இருந்த வண்ணமாகவே மாறாமல் இருந்தது. அதைக் காலங்கள் தோறும் அவர்கள் கொண்டு வந்தார்கள். 208 “அவர் தமது வலது கரத்திலே இந்நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்.” எண்ணிப் பாருங்கள்! வலது கரம் என்பது, அப்படியே தேவனுடைய வலது பாரிசத்திலே கிறிஸ்து அமர்ந்திருக்கிறார் என்பதைப் போல அர்த்தம் உடையது அல்ல. தேவனுக்கு ஒரு வலது கரம் உண்டு என்பதாக இதன் மூலம் அர்த்தம் உண்டாகாது, ஏனெனில் தேவன் ஆவியாயிருக்கிறாரே. ஆனால் கிறிஸ்துவோ வல்லமையின் வலது கரமாயிருக்கிறார். உங்களுடைய வலது கரத்தின் மனிதன் ஒருவன் இருக்கிறானென்றால், அப்படிப்பட்டவன் உங்களுக்கு நெருக்கமாக உங்கள் அருகாமையில் இருப்பவன்.
116209 அவருடைய வலது கரத்திலே அவ்வேறு நட்சத்திரங்களும் இருந்தன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் தங்களுக்குரிய மின்னோட்டத்தை, தங்களுக்குரிய ஒளியை அவரிடத்திலிருந்து கிரகித்துக் கொண்டிருந்தார்கள். அவருடைய வலது கரத்தில், முழுவதும் அவருடைய ஆளுகைக்குள் உட்பட்டிருந்தார்கள். ஓ! ஒவ்வொரு உண்மையான தேவனுடைய ஊழியக்காரனும் அவ்வாறே இருக்கிறான் …யார் அவர்களுக்கு தீங்கிழக்க முடியும்? யார் அங்கே ஆதியில் தூதர்களில் ஒருவன் இவ்வாறு சத்தமிட்டுக்கூறினான். தீங்கிழைக்க முடியும்? ஒரு தூதன் என்றால் “செய்தியாளன்” என்று பொருள்படும் என்பது நினைவிருக்கட்டும். நாம் எந்த ஆழமான காரியங்களை பின்னர் இந்த வாரத்தில் பார்ப்போம். ஒரு தூதன் என்பது “செய்தியாளரையே” குறிக்கிறது. பவுல் “கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை பிரிப்பவன் யார்?” என்று கூறினான். “வியாதி பிரிக்கக் கூடுமோ? நாசமோசமோ? நிர்வாணமோ? பட்டயமோ? மரணமோ? கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பைவிட்டு எதுவும் நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” என்று பவுல் கூறினான். ஏனெனில் நாம் முழுவதுமாக அவருடைய வலது கரத்திற்குள் அடங்கியிருக்கும்படி ஒப்புக் கொடுத்திருக்கிறோம். 210 சிலர், “உருளும் பரிசுத்தர், உருளும் பரிசுத்தர்” என்று கூறலாம். அது ஒன்றும் அவர்களை சிறிது கூட பாதிப்பதில்லை, “நீ ஒரு மத வெறியன்” என்று கூறலாம். ஆனால் அவ்வார்த்தையை அவர்கள் கேட்கக் கூடச் செய்வதில்லை. அவர்கள் முழுவதும் அவருடைய வல்லமையின் வலது கரத்தில் அடங்கியிருந்து, அங்கிருந்து தங்களுடைய ஒளியை கிரகித்துக் கொண்டு, சாந்தத்திலும், தயவிலும், மனத்தாழ்மையிலும், பொறுமையிலும் நடந்து கொண்டு, அவருடைய ஜீவனை அடைந்து கொண்டு அடையாளங்களையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் உடையவர்களாயிருக்கின்றனர். உலகமானது, “அது பில்லிசூனியம்” என்று வேண்டுமானாலும் அழைக்கட்டும். அது நமக்கு எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது. ஏனெனில் நாம் அவருடைய வலது கரத்தினுள் அடங்கியிருக்கிறோம் என்பதை அறிவோம். அது அற்புதமல்லவா? என்னே!
117211 நாங்கள் உங்களை களைப்படையச் செய்ய விரும்பவில்லை, எனவே நாம் விரைவாகச் செல்லுவோம். “அவருடைய வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்கள்.” 212 இப்பொழுது அவருடைய ஏழாவதும் கடைசியுமான அவருடைய தோற்றம்: …அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; இது ஆறாவதான அவரது தோற்றம் என்று தான் நான் பொருட்படுத்தி கூறுகிறேன். …அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது. 213 இப்பொழுது, அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது, அவருடைய வாயிலிருந்து…அவருடைய வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார். …அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது… 214 இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்பது வேதாகமத்தையே குறிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அதைப் பற்றி அறிந்து கிரகித்து கொள்ளத்தக்கதாக எபிரெயர் 4:2 ஐ எடுத்துக் கொள்வோம். வெளிப்படுத்தின விசேஷத்திற்கு ஓரிரண்டு பக்கத்திற்கு சற்று முன்னால் எபிரெயர் உள்ளது. யூதா பிறகு எபிரெயர். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள் …எபிரெயர் 4-ம் அதிகாரம். இதோ நாம் உள்ளோம். சரி, எபிரெயர் 4-ம் அதிகாரம் 12-ம் வசனம். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
118215 ஆனால் அவர்கள் “எண்ணங்களைப் படித்தறியும் மனோவசியக்காரர்கள்” என்று கூறுகிறார்கள். தேவனுடைய வார்த்தையானது அவருடைய சபையில் பிரதியட்சமாகிறது: தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள பட்டயமாயிருக்கிறது. அதிலிருந்து ஒன்றைக் குறித்து நான் சிந்திக்க நேரிட்டது. ஒரு குறிப்பிட்ட வேத வாக்கியத்தை நான் இங்கே எழுதி வைத்துள்ளேனோ இல்லையா என்பது தெரியவில்லை…வெளிப்படுத்தின விசேஷம் 19-ம் அதிகாரத்தை எடுங்கள். அப்படியே ஒரு நிமிடம், நாம் இதை மீண்டும் எடுப்போம், அது சரி என்று நான் நினைக்கிறேன். நான் ஒருகால்…வெளிப்படுத்தின விசேஷம் 19, கிட்டத்தட்ட 11-ம் வசனத்திலிருந்து படிப்போம். பின்பு பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக் குதிரை காணபட்டது, (இங்கே வெண்மை மீண்டும் வருகிறது, நியாயத்தீர்ப்பு,) அதின் மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நீயாயத்தீர்த்து யுத்தம் பண்ணுகிறார். (அவர் யாரென்று நீங்கள் அறிவீர்கள், இல்லையா?) அவருடைய கண்கள் அக்கினி ஜீவாலையைப் போலிருந்தன, (அவர் யாராயிருந்தார்?) அவருடைய சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருந்தன (ஊ—ஊ…இப்பொழுது அவர் இராஜ்யத்தில் வந்துவிட்டார்) …அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு நாமம் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. 216 அவருடைய வாயிலிருந்து என்ன புறப்பட்டுச் சென்றது? என்ன புறப்பட்டுச் சென்றது? வெள்ளைக் குதிரையின் மேல் செல்லுகிறவர்? வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரம்,…8 என்று நான் நினைக்கிறேன். வெள்ளைக் குதிரை…இல்லை, அது 6-ம் அதிகாரம். அதில் ஒரு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறிப்போகிறவன் இருந்தான். அவனிடம் ஒரு—ஒரு வில் கொடுக்கப்பட்டிருந்தது. அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெபிப்பவனாகவும் புறப்பட்டான்.
119217 அவருடைய வாயிலிருந்து ஒரு பட்டயம் புறப்பட்டுச் சென்றது. அவர் என்னவாயிருந்தார்? வெளிப்படுத்தின விசேஷத்தின் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறிப் போகிறவர்? பட்டயத்தைக் கவனியுங்கள். “அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டுச் சென்றது.” அது வார்த்தையாகும். இறுதியாக, அவருடைய வார்த்தையினாலே அது எல்லா தேவ புத்திரருக்கும் பிரத்தியட்சமாகும் போது, அவர் கருக்குள்ள பட்டயமாகிய அவருடைய வார்த்தையினாலே, எல்லா ஜாதிகளையும் அவருடைய பாதத்தின் கீழ் நசுக்கிப் போடுவார். இவ்வசனத்தை நாம் படிக்கையில் என்ன நேரிட்டது என்பதைக் கவனியுங்கள். …அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது. அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது. 218 “இருபுறமும் கருக்குள்ள ஒரு பட்டயம்.” இந்த நபரின் வாயிலிருந்து என்ன புறப்பட்டுச் சென்றது? தேவனுடைய வார்த்தை. அது இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகும். அது என்ன செய்து கொண்டிருந்தது? இருதயத்தின் யோசனைகளையும் எண்ணங்களையும் வகையறுக்கிறதாயிருக்கிறது. அது சதையையும், இரத்தத்தின் உயிரணுக்களையும், எலும்பினுள் இருக்கும் கணுக்களையும் ஊனையும் ஆழமாக ஊடுருவிப் பாய்ந்து, அதற்கும் ஆழமாக உள்ளே கடந்து சென்று, இருதயத்தின் யோசனைகளையும், எண்ணங்களையும் வகையறுக்கிறது. அதை தான் தேவனுடைய வார்த்தையானது செய்கிறது.
120219 “அந்த தேவனுடைய வார்த்தையானது மாம்சமாகி நமக்குள் வாசம் பண்ணினார்.” இப்பொழுது, தேவனுடைய வார்த்தையானவர் தமது சபையில் மாம்சமாகி நமது மத்தியில் வாசம் பண்ணுகிறார். அவருடைய கையில் இருக்கிற தூதர்கள் ஊழியம் செய்கிறார்கள். தேவன் தனது சபையை நம்பியிருக்கிறார். தேவன் தாமே, இந்த சுவிசேஷ ஒளியை, மரித்துக் கொண்டிருக்கிற, பிசாசினால் கட்டப்பட்டிருக்கிற, சாஸ்திர சம்பிரதாயங்களினால் நிறைந்த இவ்வுலகின் மக்களுக்குக் கொண்டு போக வேண்டும் என்பதற்காக, இக்காலத்திலுள்ள நம்மைச் சார்ந்திருக்கிறார். தேவன் அதற்குண்டான பாரத்தை என் மேலும் உங்கள் மேலும் வைத்திருக்கிறார். ஒரு அஞ்ஞானி சுவிசேஷத்தை அறியாமல் மரித்தால். நமக்கு ஐயோ! ஓ, ஸ்தாபனங்கள் அஞ்ஞானிகளுக்கு படிக்கவும். எழுதவும், கணக்குப் போடவும் கற்றுக் கொடுத்து, அவர்களுக்கு சில துண்டு பிரதிகளைக் கொடுத்து, வெறுமனே தங்களது மார்க்கத்தை தழுவிக் கொள்ளும்படி மட்டுமே செய்தேயல்லாமல் வேறென்றும் செய்யவில்லை, நானோ சுவிசேஷத்தைக் குறிப்பிடுகிறேன். சுவிசேஷம் வெறும் வார்த்தையல்ல. பவுல் அவ்வாறு கூறினான். பவுல், “சுவிசேஷமானது நம்மிடத்தில் வெறும் வார்த்தையாக மட்டும் வரவில்லை. அவ்வார்த்தையானது வெளிப்பட்டது” என்றான். வார்த்தை, பரிசுத்த ஆவியினால்…பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு இருதயத்தினுள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் வார்த்தையானது விதைக்கப்படும்போது. வார்த்தை என்ன செய்யும் என்று கூறப்பட்டுள்ளதோ அதையே உருவாக்குகிறது. வார்த்தையானது இருதயத்தின் எண்ணங்களை வகையறுக்கிறது. மகிமை! ஓ, என்னே! ஓ! வார்த்தையானது இருதயத்தின் யோசனைகளையும் எண்ணங்களையும் வகையறுக்கிறதாயிருக்கிறது.
121220 அவருடைய வாயிலிருந்து புறப்பட்டுச் சென்ற இருபுறமும் கருக்குள்ள பட்டயமானது புற ஜாதிகளை விழிப்படையச் செய்கிறது. இந்நாட்களில் ஒன்றில் ஏதோ ஒன்று சம்பவித்தாக வேண்டும். ஆம்! தேவனுடைய வார்த்தை, அவருடைய நாமம், தேவனுடைய வார்த்தையாயிருந்தது, வார்த்தை வெளிப்பட்டது. பாருங்கள், “உலகம் முழுவதும் புறப்பட்டுப் போங்கள்” என்று இயேசு கூறினார். மாற்கு சுவிசேஷம் 16-ம் அதிகாரத்தில், சபைக் காலத்தில் தன்னை வெளிப்படுத்துவதற்காக அவர் திரும்புவதற்கு முன்னர், சபைக்கு தன்னுடைய இறுதியான கட்டளையை அவர் கொடுப்பதை அங்கே பார்க்கிறோம். “உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று அவர் தன் சபைக்கு கட்டளைக் கொடுத்தார். அது என்ன? சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். மாற்கு எழுதின சுவிசேஷம் 16-ம் அதிகாரம். “சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” வார்த்தைகளில் கூறினால், “பரிசுத்த ஆவியின் வல்லமையினால் கிரியை செய்தல்,” என்பதாகத்தான் அது இருக்க வேண்டியதாயுள்ளது.
122221 இப்பொழுது கவனியுங்கள், “ஒவ்வொரு…,” அப்படியாயின், அது வெறுமனே வார்த்தையைப் போதித்தல் மட்டுமல்ல. அவர் ஒருபோதும், “வார்த்தையைக் குறித்து போதியுங்கள்” என்று கூறவில்லை. “சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்” என்றே அவர் கூறினார். வார்த்தையை உபதேசியுங்கள் என்பதாக அல்ல, சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்பதாகவே அது உள்ளது. “சுவிசேஷத்தை விசுவாசிப்பவர்களை இவ்வடையாளங்கள் பின் தொடரும்: என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதென்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” 222 “அவர்கள் புறப்பட்டுப் போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூட கிரியை நடப்பித்து, அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்” என்று வேதம் உரைத்துள்ளது. அது தான் சுவிசேஷம், சுவிசேஷமானது அவ்வாறு தான் ஒரு காட்சியாக இருக்கிறது. 223 எவ்வளவு காலம் இவ்வடையாளங்கள் பின் தொடரும்? உலகத்தின் ஒவ்வொரு காலத்தினூடேயும், அதன் முடிவு பரியந்தமும் இருக்கும். ஒவ்வொரு காலத்தினூடேயும் அந்த சிறு கூட்டமானது அவ்வொளியை விடாமல் பற்றி கொண்டவாறே தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. “பயப்படாதே, சிறு மந்தையே உனக்கு ராஜ்யத்தைக் கொடுக்க பிதா பிரியமாயிருக்கிறார்” என்று இயேசுவானவர் கூறியதில் ஒன்றும் வியப்பில்லை. அது எப்பொழுதுமே சிறு மந்தையாகத்தான் இருந்து வந்துள்ளது, அது ஒரு போதும் பெருங்கூட்டமல்ல.
123224 சரி, இப்பொழுது இன்னும் ஒரு மேற்கோள். நாம் 20-ம் வசனத்தைப் பார்த்தோம். எனவே இப்பொழுது இங்கே இந்த வசனத்தை நாம் பார்ப்போம். இப்பொழுது 16-ம் வசனத்தைப் பார்ப்போம். …அவருடைய வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார். 225 இப்பொழுது அவருடைய முகச் சாயலைப் பற்றிய வசனத்தை நாம் எடுத்துக் கொள்வோம். …அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது…அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்க சூரியனைப் போலிருந்தது… 226 நீங்கள்…மத்தேயு எழுதிய சுவிசேஷம் 17-ம் அதிகாரத்தை நாம் பார்ப்போமாக. இவ்வதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். நாம் இதை எடுக்கையில், அதாவது நாம் இதனூடாக கடந்து செல்லுகையில், அநேகர் அதை எடுத்துக் குறித்துக் கொள்கிறவர்கள் குறித்துக் கொள்ளட்டும், நாம் இதை அறிந்து கொள்ளும்படியாக நாம் அவர்களை வாசிக்க விடுவோம். 227 மத்தேயு 17, சரி: ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும், அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக் கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின் மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவன் முகம் சூரியனைப் போலப் பிரகாசித்தது. அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிற்று.
124228 அவர் மறுரூபமானார். அவர் என்ன செய்தார்? அவர் தம்முடைய வருகையின் நாளுக்குள்ளாக அப்போது இருக்கப் போகும் அவரது ரூபத்திற்குள்ளாக மறுரூபமானார். இப்பொழுது கவனியுங்கள். இந்தக் காட்சிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இயேசுவானவர் இதற்கு முந்தைய அதிகாரத்தில், கடைசி வசனத்தில், “நிற்கிறவர்களில் சிலர்…” நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை உங்களில் எத்தனைப் பேர்கள் அறிவீர்கள்? “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” அது சரிதானே? பழைய ஏற்பாட்டில், எந்த ஒரு காரியமும், வார்த்தையும், மூன்று சாட்சிகளினால் உறுதிப்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டதற்கேற்ப, இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சாட்சிகளையும் மலையின் மேல் கூட்டிக் கொண்டு போனார். 229 முதலாவதாக என்ன வருகிறது என்று கவனித்துப் பாருங்கள். ஓ, என்னால் இங்கு நிறுத்த முடியவில்லையே, நான் இதை புரிய வைத்ததாக வேண்டும். பாருங்கள்! அவர்கள் கண்ட முதல் காரியம் என்ன? அவர் அவர்களை மலையின் மேல் அழைத்துக் கொண்டு போனார். அவர்களுக்கு முன்பாக அவர் மறுரூபமானார். சூரியன் தன் வல்லமைகளோடு பிரகாசிக்கையில் இருக்கும் பிரகாசத்திற்க்கொப்பாக அவரது வஸ்திரம் பிரகாசித்தது. மோசேயும் எலியாவும் அவருக்கு முன்பாக தோன்றினர். இப்பொழுது மனுஷகுமாரன் எந்த ரூபத்தில் வந்து கொண்டிருக்கிறார்? முதலில் தோன்றுபவர்கள், மோசேயும், எலியாவுமாகும்.
125230 இப்பொழுது கவனியுங்கள், இயேசு பூமிக்கு திரும்பி வருவதற்கு முன்னர்…இப்பொழுது, அந்த வேளைக்கு முன்பாக, எலியாவின் ஆவி பூமிக்குத் திரும்பி வந்து, பிள்ளைகளின் இருதயத்தை பிதாக்களின் இருதயத்திற்கு திருப்பும். வேதம் அவ்வாறு கூறியுள்ளது. இயேசு அவரைப் பார்த்தார். அப்போஸ்தலர்களும் அவரை இங்கே பார்த்தார்கள், அதுவே மகிமைப்படுத்தப்பட்ட மனுஷகுமாரன் வருகையின் போது உள்ள நிகழ்வுகளின் ஒழுங்காகும். அவர் மகிமைப்படுத்தப்பட்டு திரும்பி வருவார். அவரைப் பார்ப்பதற்கு முன்பாக அவர்கள் கண்டது என்ன? எலியாவைக் கண்டார்கள். அதன் பிறகு என்ன? மோசே வருகிறான். அங்கே நியாயப் பிரமாணத்தை கைக்கொள்ளுகிற இஸ்ரவேலானது திரும்பி வந்து கொண்டிருக்கிறது. அதன்பிறகு மகிமைப்படுத்தப்பட்ட மனுஷ குமாரன் வருகிறார். அல்லேலூயா! அவருடைய வருகையின்போது நடக்க வேண்டிய காரியங்களின் ஒழுங்கைப் பார்த்தீர்களா? எலியாவின் ஆவி அல்லது கடைசி சபைக் காலத்தினுடைய சாட்சி, பாருங்கள், அவரை வெளிப்படுத்த வல்லமையோடு வருகிறார்.
126231 அதன் பிறகு சீனாய் மலையின் மேல் அந்த இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர் கூடி வருகிறார்கள். அங்கே இஸ்ரவேல் ஒரு தேசமாக ஆகிவிட்டது. உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த ஜாதியினர் அவர்கள்; உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த கொடியையுடைவர்கள் அவர்கள் தான். அவர்களுக்கென சொந்த தேசம், சொந்தக் கொடி, சொந்த இரானுவம், சொந்த நாணயம், மற்றும் யாவும் அவர்களுக்கென உண்டாயிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் சபையில் அவர்களுடைய நாடும் ஒரு உறுப்பினராகிவிட்டது. ஏனென்றால் அவர்கள் ஒரு தேசமாகி விட்டனர். இவையாவும் நிறைவேறும் வரையில் இஸ்ரவேலர் ஒழிந்து போவதில்லையென்று இயேசு கூறினார். 232 புறக்கணிப்பின் காலங்களிலே எவ்வாறு புதிய ஏற்பாட்டுச் சபையானது இக்காலங்கள்தோறும் இருந்து வந்துள்ளதோ அதே நிலையில் காணப்பட்ட இந்த யூதர்களும் எங்கு சென்றாலும் துன்புறுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்டு, துரத்திவிடப்பட்டு, அலைக் கழிக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டு இருந்த நிலையைப் பார்க்கையில் அவர்கள் இன்னும் இருப்பது ஒரு இரகசியமானாதாகக் காணப்படுகிறது. இவ்வாறு இருந்த போதிலும் இயேசு “அத்திமரமானது துளிர்விடுவதை நீங்கள் காண்கையில், அந்த ஜாதியினர் மீண்டும் ஒரு தேசமாக மலரும்படி தங்கள் சுயதேசத்திற்கு திரும்பி வருவதை நீங்கள் காண்கையில் நேரமானது வாசல் வரைக்கும் நெருங்கி விட்டது. இவையெல்லாம் நிறைவேறும் வரைக்கிலும், இந்த சந்ததி ஒழிந்து போவதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். இந்த…இந்த ஜனங்கள் ஒழிந்து போக மாட்டார்கள். ஹிட்லர் அவர்களைக் கொன்று ஒழித்துவிட முயற்சித்தான். முஸோலினி இவர்களை கொன்று ஒழித்துவிட முயற்சித்தான். ஸ்டாலின் இவர்களை கொன்று ஒழித்துவிட முயற்சித்தான் மற்றும் பலரும் முயன்றனர். ஆனால் இவர்கள் பூமியிலிருந்து நிர்மூலமாக்கப்பட முடியாது, அவர்கள் ஒரு ஜனமாக, தேசமாக நிற்பார்கள். ஆமென்! 233 மோசேயும் எலியாவும் வருவார்கள். ஓ! அதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என நம்புகிறேன்.
127234 சரி, “வல்லமையாய்ப் பிரகாசிக்கும் சூரியன்,” அவ்வாறு அவரது முகரூபம் மறுரூபமாகியது. வெளிப்படுத்தின விசேஷம் 21:23 விரும்பினால் குறித்துக் கொள்ளுங்கள். வெளி 21:23-ல் புதிய எருசலேமில், அந்த நகரத்தில் அவர் ஆட்டுக் குட்டியானவராக இருப்பார், அவரே அதின் வெளிச்சமாய் பிரகாசிப்பார், எனவே அவர்களுக்கு நகரத்தில் ஒளியேற்ற வேறு எந்த வெளிச்சமும் தேவையில்லை, சூரியனும் அவர்களுக்கு பிரகாசிக்க வேண்டியதில்லை; ஏனெனில் நகரத்தின் மத்தியில் இருக்கும் ஆட்டுக்குட்டியானவரே நகரத்திற்கு வெளிச்சமாயிருப்பார். இரட்சிக்கப்பட்ட ஜனங்கள் ஆட்டுக்குட்டியானவரின் வெளிச்சத்தில் நடப்பார்கள்! ஆமென்! அவரே, ஆட்டுக்குட்டியானவரின் வெளிச்சமாயிருக்கிறார். ஓ, நீங்கள் அதைக் குறித்து மகிழ்ச்சியடையவில்லையா? 235 அது மாத்திரமல்ல, ஆனால் அவருடைய வருகையிலே (யோவான் அவரை கர்த்தருடைய நாளில் கண்டான்), அவர் நீதியின் சூரியனாகவும் இருப்பார். நாம் மல்கியா புத்தகத்தை எடுத்துக் கொள்வோம். பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் புத்தகம் 4- அதிகாரம்.
128236 அங்கே பின்னால் அமர்ந்திருக்கிற என்னுடைய அருமையான மனைவியைக் குறித்து கூற என்னிடம் ஒரு சிறு கதை உண்டு. நாங்கள் விவாகம் செய்து கொள்வதற்கு முன்பு, நான் அவளுக்கு ஒரு கடினமான சூழ் நிலையைக் கொடுத்தேன். நாங்கள் திருமணம் செய்து கொண்டதற்குப்பின்பு, அவள் அதை மறந்து விடச் செய்ய நான் முயன்றிருக்கிறேன். நான் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமா அல்லது வேண்டாமாவென்பதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அதனால் அவளோ மனமுடைந்து போனாள். அவள் மிகவும் நல்ல பெண்ணாயிருந்தாள், அவளை ஏதாவது ஒரு நல்ல மனிதன் மணந்து கொள்ளட்டுமே, அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்வான், நான் அதற்கு தகுதியானவன் அல்ல, நான் அவளுடைய அன்புக்கு நான் பாத்திரனல்ல என்று எண்ணிக்கொண்டேன். இதையறிந்த அவள் மிகவும் மனமுடைந்து போனாள். என்ன செய்வது என்றறியாது இருந்தாள். இது அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, நடந்த சம்பவம். அவள் இதனால் மனம் நொறுங்கி, இரவும் பகலும் கதறிக் கொண்டிருந்தாள். நான் அவளை விவாகம் செய்து கொள்ளாமல் அவளை விட்டுப் பிரிந்து செல்ல முயன்றேன். நான் அவளை நேசிக்கவில்லையென்பதினால் இவ்வாறு செய்யவில்லை. ஆனால் நான் அவளது சமயத்தை வீணாக்க விரும்பவில்லை, ஏனெனில் அவள் மிகவும் நல்ல பெண்ணாக இருந்தபடியினால், அவளே என்னைவிட ஒரு நல்ல மனிதனை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்றெல்லாம் எண்ணினேன். அவள் என்னை நேசித்தாள் என்பதை நான் அறிந்திருந்தேன். நானும் அவளை நேசித்தேன் என்பதையும் நான் அறிந்திருந்தேன். அப்பொழுது நான், “நல்லது, இவள் என்னைக் குறித்து வெறுப்பாக எண்ணும்படி, அவளுக்கு முன்பாக இன்னொரு பெண்ணை அழைத்துக் கொண்டு செல்வேன்” என்றெண்ணினேன். இவ்வாறு செய்வதினால் அவளை நான் மிகவும் சிரமப்படுத்திவிட்டேன். இதைப் பற்றி நான் பின்னால் எண்ணிப்பார்க்கையில், அது மிகத் தவறானது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவள் மிகவும் மனமுடைந்து போனாள். நான் அவளிடம், “நீ மிகவும் நல்லவள், நான் உன்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று கூறினேன். 237 அதற்கு அவள், “பில், ஆனால் நான் உம்மை நேசிக்கிறேன், நான் நேசிக்க முடிந்ததெல்லாம் நீர் ஒருவர் தான். நான் எப்பொழுதும் உம்மையே நேசித்திருக்கிறேன்” என்று கூறினான். அப்பொழுது, “நான் அதை மெச்சுகிறேன்; ஆனால், நானோ ஒரு துறவி, ஒரு துறவியைப் போலவே வாழ்ந்துவிடப் போகிறேன். பார், இனி நான் விவாகமே செய்து கொள்ளப் போவதில்லை” என்று கூறினேன்.
129238 ஆனால் சிறுமைப்பட்ட அந்த எளிய பெண்ணோ இந்தக் காரியத்தில் பிடிவாதமாக இருந்தாள். அவள் வெளியே சென்று அங்கிருந்த கொட்டகையினுள் முழங்கால்படியிட்டு, “கர்த்தாவே, என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை, நான் உமக்கு கீழ்ப்படியாமற்போக விரும்பவில்லை; ஆயினும் நான் பில் அவர்களை நேசிக்கிறேன். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆண்டவரே, ஒரு சிறு ஆறுதல் எனக்கு அளிப்பீரா? ஒரு சிறிதளவு உதவி எனக்குச் செய்வீரா? என் வாழ்க்கையில் இதற்கு முன்பு இவ்வாறு இதைக் குறித்து உம்மிடம் கேட்டதில்லை. மீண்டும் இதைக் குறித்து நான் உம்மிடம் கேட்கத் தேவையும் இருக்காது என்று நான் நம்புகிறேன். கர்த்தாவே நீர் எனக்கு உதவி செய்வீரானால், அப்பொழுது நான் இந்த வேதாகமத்தை திறக்கையில், ஒரு வேத வாக்கியத்தை எனக்குத் தாரும். அவ்வாறு நீர் ஜனங்களுக்கு தந்ததைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று ஜெபித்திருக்கிறாள். அவ்வாறு ஜெபித்துவிட்டு அவள் வேதாகமத்தை திறக்கையில் அவளுக்கு மல்கியா 4-ம் அதிகாரம் கிடைத்தது. கர்த்தருடைய பயங்கரமான நான் வருகிறதற்கு முன்னே நான் உங்களுக்கு…நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். 239 மேலும் அவள், நான் அங்கிருந்து ஜெபித்துவிட்டு, நிச்சயமாக நாம் விவாகம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற உறுதியான திருப்தியோடு எழுந்தேன் என்றாள். பார்த்தீர்களா? இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துருபாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் செல்லுகிறார். ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் (சூ-ரி-ய-ன்)… உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்;…
130240 “சூரியன் தன் வல்லமையில் பிரகாசித்தல்.” ஓ! தேவ குமாரனின் வல்லமை இன்று நம் மத்தியில் இவ்விரவில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அவர் தம்முடைய ஏழுவிதமான ரூபங்களுடன், நியாயாதிபதியாக, ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறார். நமக்காக பாடுபட்டு மரித்தவராக, தெய்வீக நியாயத்தீர்ப்பை தன் மேல் எடுத்துக் கொண்டவராய், தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை அவரே மிதித்தவராயிருக்கிறார். வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில், பாவிக்கும், உறுதியில்லாத ஆத்துமாவுக்கும், அவர் நாசத்தை உண்டாக்கும் அதிபயங்கர ஜலப்பிரளமாயிருக்கிறார். ஆனால் சபைக்கோ, ஒரு இனிமையான இரட்சகராய், இளைப்பாறுதலில் நங்கூரமிடப்பட்டு, கிறிஸ்துவுக்குள்ளாக முழுவதும் பரிபூரணமான திருப்தியுடன் இளைப்பாறிக் கொண்டு, சலசலவென அசைந்தோடும் அமைதியான மெல்லிய நீரோடைகளின் இனிய ஓசையைக் கேட்டு கொண்டிருப்பவளாக இருக்கிறது. என்னே ஒருவேளை! அவர் தன்னுடைய இன்பமான கதிர்களினால் நம்மேல் பிரகாசித்து, “பயப்படாதே, நான் இருந்தவரும், இருப்பவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ளவர், என்னையன்றி வேறே தேவர்கள் இல்லை, நான் அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீருற்றிலிருந்து இலவசமாக குடிக்கக் கொடுப்பேன்” என்று கூறுகிறார். ஓ, என்னே அற்புதமானதொரு வாக்குத்தத்தம் மற்றும் என்னே ஒரு அருமையான நேசத்தின் காரியம் இது! ஆட்டுக்குட்டியானவர் நகரத்தின் மத்தியில் இருப்பதால், நகரத்திற்கு வேறு வெளிச்சம் தேவையில்லை. அவரே நீதியின் சூரியனாக இருக்கிறார். அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். அவர் பள்ளத்தாக்கின் லீலி அவர்; பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம், அவர் எனது ஆத்துமாவுக்கு பதினாயிரம் பேரிலும் அழகிற் சிறந்தவர். என் துக்கத்தில் ஆறுதலும் அவரே, என் துன்பத்தில் ஆதரவும் அவரே, அவர் என் கவலையெல்லாம் தன் மேல் வைக்கும்படி கூறுகிறார். அல்லேலூயா! அவரே பள்ளத்தாக்கின் லீலி, பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமும், என் ஆத்துமாவுக்கு அவர் பதினாயிரம் பேரிலும் அழகிற் சிறந்தவர்.
131241 ஆம், ஐயா! ஓ, அந்த மகத்தான விடிவெள்ளி நட்சத்திரம் பிரகாசிக்கும்படி புறப்பட்டு வருகையில், வரப்போகும் பகற்காலத்தை முன்னறிவிக்கையில், “பகற்காலமானது விடியப் போகிறது. குமாரன் நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்” என்று அறிவிக்கிறார். அவர் வருகையில், மற்றெல்லா நட்சத்திரங்களையெல்லாம் ஒளிவிடுவதில் தன் பின்னுக்குத் தள்ளி, மற்ற யாவையும்விட தானே மிஞ்சி பிரகாசிக்கிறவராயிருக்கிறார். (ஓ, என்னே) அவருடைய செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் உண்டாயிருக்கும். 242 நம்முடைய செய்திக்கு திரும்புவோம். நாளை இரவுக் கூட்டத்திற்கு ஆயத்தப்படும்படி, நாம் இப்பொழுது முடிக்கிறோம், ஏனெனில் இப்பொழுது நேரமானது இரவு ஒன்பது மணியாக இன்னும் 15 நிமிடங்களே உள்ளன. எவரையும் அதிக நேரம் இங்கு காத்திருக்க வைக்க நாம் விரும்பவில்லை.
132243 சரி, நீதியின் சூரியனானவர் தன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இப்பொழுது அவரது முக ரூபத்தைப் பற்றி பார்ப்போம். அவர் ஒரு நியாயதிபதியாகத் தோற்றமளிக்கிறார். அதாவது, யோவான் வரப்போகும் கர்த்தருடைய நாளுக்குள் கொண்டு செல்லப்பட்டான் என்பதை அவனுக்குக் காண்பிக்க இத்தோற்றம் உள்ளது. நீங்கள் அதை விசுவசிக்கிறீர்களா? யோவான் கர்த்தருடைய நாளுக்குள் சென்று, அங்கே கர்த்தரை நியாதிபதியாகக் கண்டான்; ஒரு ஆசாரியனாக அல்ல, ராஜாவாக அல்ல, ஒரு நியாதிபதியாகத் தான் கண்டான். அவர் நியாதிபதியாக இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? வேதம், அவர் நியாதிபதியாக இருக்கிறார் என்று கூறுகிறது. இங்கே அவர் முழுவதும் நியாயாதிபதியின் தோற்றத்திற்கேற்றவாறு உடுத்தியிருக்கிறார். இதன் மூலம் அவர், தான் என்ன செய்தார் என்பதையும், அவர் எவ்வாறாக இருந்தார் என்பதையும் பாவிக்கு அவர் என்னவாயிருந்தார் என்பதையும், கிறிஸ்தவனுக்கு அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதையும் எடுத்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். இங்கே அவர், பெரு வெள்ளத்து இரைச்சலைப் போல் சத்தமுடையவராய் வல்லமையோடே பிரகாசிக்கும் சூரியனைப் போன்ற முகத்தையுடையவராயும் நின்று கொண்டிருக்கிறார்.
133244 இக்காட்சியின் விளைவுகளை, இப்பொழுது பார்ப்போம். 16-ம் வசனம், “…” இல்லை, நான் உங்களை மன்னிக்க வேண்டுகிறேன், அது 17-ம் வசனம். நான் அவரைக் கண்டபோது செத்தவனைப் போல் அவருடைய பாதத்தில் விழுந்தேன்… 245 என்னே! தீர்க்கதரிசியினால் அவ்விதமான தரிசனத்தை கண்டு நிற்க முடியவில்லை. அவன்—அவன் பெலனிழந்தவனாக அவரது பாதத்தில் செத்தவனைப் போல விழுந்தான். இப்பொழுது கவனியுங்கள். …அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன். 246 ஓ! என்னே! ஒரு தீர்க்கதரிசியல்ல, அவர் தேவன். “நான் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். வெளிப்படுத்திலின் ஆதியாக நான் இருக்கிறேன். வெளிப்படுத்தலின் முடிவாகவும் நானே இருக்கிறேன். இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாய் இருக்கிறேன்.” நாம் பார்ப்போம்: நான்…நான்… …அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என் மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன். மரித்தேன், ஆனாலும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், (இப்பொழுதும், அதன் பிறகு அவர் சப்தமிடுகிறார்.) ஆமென்: நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
134247 இப்பொழுது நீங்கள் பயமடைய வேண்டாம். நாம் ஏன் அஞ்ச வேண்டும்? சபையானது ஏன் அவருடைய வார்த்தையைக் குறித்து சிந்திக்கவும், கைக்கொள்ளவும் தவறிப் போகிறது? நாம் முடிக்கப் போகிறபடியால் சற்று நிறுத்தி இதை கவனிப்போம். ஏன் இந்த சபையானது பயப்படப்போகிறது? அவர் வாக்குரைத்த எதை நமக்கு முன்பாக அவர் வெளிப்படுத்தாமலிருக்கிறார்? நீங்கள் ஏன் ஒரு தண்டனையைக் குறித்தோ அல்லது இந்த ஜீவனுக்குப் பின்னால் வரப்போகும் காரியத்தைக் குறித்தோ அஞ்ச வேண்டும்? “பயப்படாதே! நான் இருந்தவரும், இருப்பவரும் வரப்போகிறவருமாயிருக்கிறேன். நான் முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன். நான் இப்பொழுது இங்கேயே மரணத்திற்கும் பாதளத்திற்குரிய திறவு கோல்களை உடையவராயிருக்கிறேன்” என்று கூறுகிறார். ஏன்? “மரணம், பாதாளம் இவற்றை நான் மேற்கொண்டு, அதின்மேல் ஜெயங்கொண்டுமிருக்கிறேன். (இது கல்லறை மற்றும் பாதாளத்தையுமே குறிக்கும். மரணம் என்பது பாதாளமே) உங்களுக்காக அவையாவையும் நான் ஜெயித்தேன். நான் கல்லறை, மரணம், பாதாளம் இவைகளை ஜெயித்தேன்” என்று கூறுகிறார். அவர் பூமியில் இருக்கையில், அவர் மட்டும் மகத்தான…
135248 அநேக மனிதர்கள் ஜெயிக்க வேண்டும் என்று புறப்பட்டார்கள். நீங்கள் அதை அறிவீர்களா? நெப்போலியன் தன் முப்பது மூன்று வயதில் உலகத்தை ஜெயிக்க வேண்டும் என்று புறப்பட்டான். அவன் தன் பதினேழு வயது முதல் இருபத்தைந்து வயது முடிய மது அருந்துவது மற்றும் அது போன்ற ஏனைய பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காதவனாக இருந்து வந்தான். அவன் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றான். நெப்போலியன் ஒரு அசல் பிரெஞ்சுக்காரன் அல்ல, அவன் ஒரு தீவிலிருந்து வந்தவன். அவனுக்கு பிரான்ஸை பிடிக்காது. ஆயினும், பிரான்ஸை வெல்லவே அவன் அங்கு சென்றான். அவன் பிரான்ஸை வென்றான். அவன் புறப்பட்டுச் சென்று பிரான்ஸை வென்றான். பின்னர் அவன் பிரெஞ்சுக்காரர்களை கொண்டு உலகத்தை வென்றான். அவனது முப்பது மூன்று வயதில், அவன் உட்கார்ந்து, இனிமேல் ஜெயிப்பதற்கு உலகில் ஒன்றுமே இல்லையே என்று வேதனைப்பட்டான். ஆனால் அவன் குடியை வெல்ல முடியாதவனாக, ஒரு குடிகாரனாகவே மரித்தான். தோல்வியடைந்தவனாக அவன் இருந்தான். அவன் தன்னையே ஜெயிக்க முடியாதவனாக ஆகிவிட்டான். பார்த்தீர்களா? அவன் தனது தோல்வியை வாட்டர் லூவில் சந்தித்தான். அவன் தன்னுடைய முடிவை வாட்டர் லூவில் அடைந்தான். நான் அங்கே சென்றிருக்கிறேன், நாங்கள் அந்த தீவில் இருந்தபோது, அந்த பண்டைய காலத்து அடையாளங்களையும், ஞாபகச் சின்னங்களையும், அத்தேசத்திற்குச் சென்றபோது கண்டோம். நாம் இந்த ஜெய வீரணை எடுத்துக் கொள்வோம். அவன் ஒரு இளைஞனாக இருக்கையில், ஜெயிப்பதற்கு தவறானதொன்றை தெரிந்து கொண்டான். அவன் அவமானகரமாக மரித்தான்.
136249 ஆனால் ஓர் காலத்தில் உலகில் தோன்றிய, இன்னொரு இளைஞர் இருந்தார். அவர் முப்பது மூன்று வயதில் மரணமடைந்து, ஜெயிக்கப்பட வேண்டியவைகளையெல்லாம் ஜெயித்தார். அவர் இவ்வுலகில் இருக்கையில், ஆசை இச்சைகளையும், பெருமையையும் ஜெயித்தார், அவர் வியாதிகளையும் ஜெயித்தார், அவர் பிசாசுகளை ஜெயித்தார். அவர் மரித்தபோது, மரணத்தை ஜெயித்தார். அவர் உயிர்த்தெழுந்த போது, பாதாளத்தையும் ஜெயித்தார். அவர் உள்ளே போய் மனுக்குலத்திற்கெதிராக நின்ற அனைத்தையும் ஜெயித்து, தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதித்து, மரணத்தை ஜெயித்து பாதாளம், கல்லறை, வியாதிகள், சடாங்காச்சாரங்கள் மற்றும் அனைத்தையும் ஜெயித்தார். இவ்வாறு அவர் இவை யாவையும் மேற்கொண்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, மனிதனுக்கும், தேவனுக்கும் இடையே தடையாக நின்ற சூழ்நிலைகளை தகர்த்து, பூமியையும் பரலோகத்தையும் ஒன்றாய் இணைத்தார். மகிமை! ஓ, என்னே! வ்வூயூ! 250 அங்கே அவர், தேவாலயத்து திரைச்சீலையை இரண்டாக கிழித்தது முதற்கொண்டு அதோ அவர் வல்லமையான ஜெயவீரராக நிற்கிறார். “மரணத்திற்கும் பாதாளத்திற்குரிய திறவுகோல்கள் என் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. பயப்படாதே” என்று கூறினார். அவர் அவன் மேல் தனது வலது கரத்தை வைத்து (அவரது வல்லமை) தனது வலது கரத்தின் வல்லமையினால் அவனை எழுப்பி, அவனிடம், “பயப்படாதே, இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவராயிருக்கிறேன். நான் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். மரித்தேன் ஆனாலும் இதோ, சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன். ஆமென்!” என்று கூறினார். ஓ! இதோ! இந்த வல்லமையுள்ள ஜெயவீரரைப் பாரீர், இதோ! அவரை தெளிவாகப் பாரீர், அவர் உள் திரையை இரு கூறாய் கிழித்தது முதற்கொண்டு வல்லமையுள்ள ஜெய வீரராய் அங்கே நிற்கிறார்.
137251 ஆமென். ஏதேன் தோட்டத்திலிருந்தது போல, மனிதன் தேவனுடன் இணைக்கப்படும்படி, மனுகுலத்திற்கு இருந்த தடைக் கல்லையெல்லாம் அவர் தகர்த்தெறிந்தார். இப்பொழுது மனிதனானவன்…நான் இப்பொழுது சொல்லப் போவாதைக் குறித்து செல்ல முடியாமல் தடைப்பட்டேன். ஆயினும் நான் அதைப் பற்றி சொல்லிவிடப் போகிறேன். என்னவெனில்; மனிதன் சர்வ வல்லமை படைத்தவன். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லை. ஆயினும், மனிதன் அவ்வாறு தான் இருக்கிறான். தேவனுக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்துள்ள மனிதன் சர்வ வல்லமையுள்ளவனாக இருக்கிறான். மாற்கு சுவிசேஷம் 11:22-ல் இயேசு, “நீங்கள் எதையாகிலும் கூறி, அதை உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவசித்தால், அது சொன்னபடியே ஆகும், நீங்கள் கேட்டுக் கொண்டதைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்று கூறவில்லையா? 252 சர்வ வல்லமையுள்ள ஒரு நபர்கள் சந்தித்தால் என்ன நடக்கிறது? சர்வ வல்லமையினாலே தேவனும் மனிதனும் ஒன்று சேரும் போது, ஏதோ ஒன்று அசைவை உண்டாக்கத்தான் வேண்டும். சிருஷ்டிக்கும் வல்லமையுள்ள தேவனுடைய சர்வ வல்லமையைக் கொண்டு நீங்கள் ஒன்றை உரைத்தால், அவர் அதை வாக்குரைத்திரைத்திருக்கிறார் என்றும், அவர் அதை தம்முடைய வார்த்தையில் உரைத்துள்ளார் என்றும் அறிந்திருக்கும்போது, அப்பொழுது அது வெளியே புறப்பட்டுச் செல்லுகிற ஒரு வல்லமையை சிருஷ்டிக்கிறது. அது உரைக்கப்பட்டவைகளை நிறைவேறும்படி செய்கிறது. இல்லாதவைகளை இருக்கிறவைகளாக இருக்கும்படி செய்கிறது அவ்வல்லமை, ஏனெனில் இரு சர்வ வல்லமைகளும் சந்தித்திருக்கின்றன. அங்கே அவர் நிற்கிறார்! ஓ! அவர் அற்புதமானவராக இல்லையா?
138253 இன்னும் நல்ல விஷயங்கள் நமக்கு உள்ளனவா என்று நாம் பார்ப்போம். 18-ம் வசனம். இப்பொழுது 19-ம் வசனம். அவருடைய முகரூபத்தை யோவான் கண்ட போது என்ன நேரிட்டது? அதன் விளைவு என்ன? அவருடைய பாதத்தில் அவன் விழுந்தான்; அவருக்கு முன்பாக அவனால் நிற்க முடியவில்லை, அவனுடைய மானிட ஜீவனானது அந்த வல்லமைக்கு முன்பாக நிற்க முடியாமல் வலுவிழுந்து போனது. அவர் ஜெயவீரராயிருந்தார். அவர் ஏற்கனவே ஜெயங்கொண்டுவிட்டிருந்தார். 254 இப்பொழுது ஒரு கட்டளையை அவர் கொடுக்கிறார். இந்த அதிகாரத்தை முடிப்பதற்காக இந்த 19-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். நீ கண்டவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது. 255 நாம் ஏற்கனவே 20-ம் வசனத்தைப் படித்தோம்: என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.
139256 ஓ! நண்பனே, இக்காட்சி நம்மை மிகவும் சிலிர்க்கச் செய்கிறது. அவர் அங்கே தனது உன்னத தெய்வீகத் தன்மையின் வல்லமையோடு திகழ்கிறார். அவரே நியாதிபதி, ஆசாரியன், இராஜா, கழுகு, ஆட்டுக்குட்டி, சிங்கம், அல்ஃபா, ஒமெகா, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; அவர் இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர். தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை அவர் மிதித்தார். தேவனை எல்லாவற்றிலும் பிரியப்படுத்தினார். சிலுவையில் தேவன் அவ்வாறு கூறுகிற வரையிலும்…அவரை எழுப்பிய போது, “முடிந்தது” என்று கூறினார். அவர் தேவனைப் பிரியப்படுத்தியதால், அவரை விட்டுப் போன ஆவி உயிர்த்தெழுதல் காலையில் அவரிடம் திரும்பி வந்தது. நாம் நீதியை அடையும்படி, அவரை தேவன் மீண்டும் உயிர்தெழும்படி செய்தார். 257 அங்கே யோவான் அவரை உற்று நோக்கி, அவர் அங்கே பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுடனும், அக்கினி ஜீவாலையைப் போலுள்ள, பூமியெங்கும் உலாவும் கண்களையுடையவராயும் நின்று கொண்டிருக்க கண்டான். யோவான் இக்காட்சியைக் கண்டதற்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக, தானியேல் தீர்க்கதரிசி அதே விதமான மனிதனைக் கண்டான். யோவான் பார்த்தவிதமாகவே அவனும் அவரை அதே நிலையில் அதே மாதிரியில் அங்கே நின்று கொண்டிருக்க கண்டான். நீண்ட ஆயுசுள்ளவரையும், மனுஷகுமாரனுடைய சாயாலுக்கொப்பானவரையும், இவர் அவரோடு சேர்த்து விடுவதையும் இவரிடம் நியாயத்தீர்ப்பு அதிகாரம் முழுவதும் கையளிக்கப்படுவதையும், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் நிற்பதையுங் கண்டான். 258 சிநேகிதரே! இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் பார்த்த பிறகு, என்ன விதமான மக்களாக நாம் இருந்தாக வேண்டும்? தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது. பார்த்தீர்களா? நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவரில் உங்களது ஆத்துமாவை நங்கூரமிட்டுள்ளீர்களா?
140259 நாம் நம்முடைய தலைகளை சற்று நேரம் தாழ்த்துவோமாக. 260 நாம் மெதுவாக, நான் இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிட்டிருக்கிறேன், “எனவே நான் இனி நாசகரமான கொந்தளிக்கும் கடலின் பேரிரைச்சலைக் கேட்கமாட்டேன். ஆனால் என் ஆத்துமாவுக்கு இனிய சமாதானத்தையே பேசுவேன்” என்ற பாடலை பாடும்போது, மென்மையாகவும், அதிக சத்தமில்லாமலும் பாடப் போகிறோம். ஒவ்வொருவரும் இப்பொழுது மெதுவாகவும் பயபக்தியோடும் பாடுவோம். நான் இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிட்டுள்ளேன், இனி கொந்தளிக்கும் கடலில் நான் பயணம் செய்யமாட்டேன்; ஆழ்ந்த ஆழியில் கொந்தளிக்கும் கடலில் கடும் புயல் காற்று வீசிடினும், இயேசுவில் நான் எப்போதும் பத்திரமாயுள்ளேன். நான் இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிட்டுள்ளேன் இனி கொந்தளிக்கும் கடலில் நான் பயணம் செய்யமாட்டேன்; ஆழ்ந்த ஆழியில் கொந்தளிக்கும் கடலில் கடும் புயல் காற்று வீசிடினும், இயேசுவில் நான் எப்போதும் பத்திரமாயுள்ளேன். என்மேல் பிரகாசியும், (கர்த்தாவே! மகிமையின் கதிர்கள்) கர்த்தாவே! என் மேல் பிரகாசியும் கலங்கரை விளக்கத்தினின்றும் ஒளியானது என்மேல் பிரகாசிக்கட்டும்; ஓ என் மேல் பிரகாசியும், கர்த்தாவே, என்மேல் பிரகாசியும், (அவரண்டை நம்முடைய கரங்களை நாம் உயர்த்துவோமாக.) கலங்கரை விளக்கத்தினின்றும் ஒளியானது என்மேல் பிரகாசிக்கட்டும் இயேசுவை போலிருக்க (ஆம், கர்த்தாவே.) இயேசுவைப் போலிருக்க, பூமியில் நான் அவரைப் போலிருக்க வேண்டும்; புவி முதல் மகிமை வரையுள்ள என் வாழ்க்கைப் பயணத்தில் நான் அவரைப் போலிருக்க மாத்திரமே வேண்டுகிறேன். [சகோ. பிரான்ஹாம் பல்லவியை மெளனமாக இசைக்கிறார்—ஆசி.] …ஓ அற்புதமான இரட்சகர், புவியில் நான் அவரைப் போலிருக்க வாஞ்சிக்கிறேன்; புவிமுதல் மகிமையுள்ள என் வாழ்க்கைப் பயணம் முழுவதிலும்,
141261 அவருடைய ஜீவனானது உங்களில் ஜீவிக்கவும், அதினால் அவருடைய பிரசன்னத்தை பிரதிபலித்திடச் செய்யவும் நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் அவ்வாறு விரும்பினால், இதுவரையிலும், அதை நீங்கள் பெற்றுக் கொண்டிருக்காவிடில், அதற்காக ஜெபிக்கும்படி ஜெபத்திற்காக எழுந்து நிற்பீர்களா? ஜெபத்தில் நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நிற்கலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பெத்லகேமின் முன்னணையிலிருந்து… (இப்பொழுது நின்று கொண்டேயிருங்கள், அப்படியே தொடர்ந்து தரித்திருங்கள்…) …நாம் அறியாதவர் ஒருவர் வந்தார். (நீங்களும் உலகத்திற்கு ஒரு அந்நியராயிருப்பீர்கள்) பூமியில் நான் அவரைப் போலிருக்க வாஞ்சிக்கிறேன் புவி முதல் மகிமை பரியந்தமும் உள்ள எனது வாழ்வின் பயணத்தில், நான் அவரைப் போலிருக்க மாத்திரமே வேண்டுகிறேன். இயேசுவைப் போலிருக்க, இயேசுவைப் போலிருக்க…(அதுவே எனது வாஞ்சை) பூமியில் நான் அவரைப் போலிருக்க வாஞ்சிக்கிறேன்; புவிமுதல் மகிமை வரையுள்ள வாழ்க்கைப் பயணம் முழுவதும், நான் அவரைப் போலிருக்க மாத்திரமே வேண்டுகிறேன். [சகோதரன் பிரான்ஹாம் பாடலின் பல்லவியை மெளனமாக இசைக்கிறார்—ஆசி.] …தாழ்மையாய், பணிவாய், தாழ்மையாய்.
142262 இப்பொழுது பரலோகப் பிதாவே! உம்மை ஏற்றுக் கொள்ள விரும்பி அநேகர் நின்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாழ்வின் அலைகடலில் தாங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல், இதில் அலைந்து திரிவதினால் அவர்கள் களைப்படைந்து போயிருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில், பகலொளி தோன்றுமுன்னர் இருதயமானது துடிக்காமல் நின்று விடக்கூடும். அப்பொழுது இந்த அலைந்து திரிகிற ஆத்துமாவானது, முடிவில் தண்ணீர்கள் போய் விழுகிற பேரிரைச்சலோடு கூடிய அழிவின் நீர்வீழ்ச்சியிலே போய் மாண்டு விடுமே என்பதை அவர்கள் அறிவர், அவர்கள் அவர்களைப் போலவே இருந்து வந்துள்ளார்கள். உலகத்தைப் போலவே இருந்து வந்துள்ளார்கள், ஆனால் இப்பொழுதோ, கர்த்தாவே, அவர்கள் உம்மைப் போலவே ஆகிவிட வாஞ்சிக்கிறார்கள். உம்முடைய இராஜ்யத்தில் அவர்களை ஏற்றுக் கொள்ளும். அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. பிதாவே, ஏனெனில் அவர்கள் இருதயத்தின் எண்ணங்களையும், யோசனைகளையும் நீர் அறிந்திருக்கிறீரே. நீ அவ்வாறு எழுதி வைத்திருக்கிறீர், உம்முடைய உதடுகளாலேயே நீர் “என் வசனங்களைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்று கூறினீர். நீர், “இந்த தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், இதைக் கேட்கிறவனும் பாக்கியவான். காலம் சமீபமாயிருக்கிறது” என்றும் கூட கூறியிருக்கிறீர். அவர்கள் காலம் சமீபமாயிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இனிமேலும் அலைந்து திரிய முடியாது. கர்த்தாவே ஜீவ கயிற்றை அவர்களிடமாக தூக்கியெறிந்து அவர்களை உம்மிடமாக இழுத்துக்கொள்ளும், கர்த்தவே! இயேசு கிறிஸ்துவினுடைய ஒளியை பிரதிபலித்துக் கொண்டு அவர்கள் இன்றிரவில் இங்கிருந்து செல்லட்டும். பிதாவாகிய தேவனே! நான் அவர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உம்மிடம் ஒப்படைக்கிறேன். அவர்கள் இங்கே சபையில், ஞானஸ்நானத்தில், கர்த்தரை தாழ்மையுடன் பின் செல்லட்டும். மீதமுள்ள அவர்களுடைய ஜீவிய காலமெல்லாம் இயேசுவைப் போல் இருக்கும்படி, அவர்களுடைய ஜீவியத்தில் பரிசுத்த ஆவியை அவர்களுக்கு அருளும். அவருடைய நாமத்தினால் அதை நாங்கள் கேட்கிறோம்.
143இயேசுவைப் போலிருக்க, அதைப் போலிருக்க… 263 பக்கத்தில் நின்று கொண்டிருக்கிற அல்லது உட்கார்ந்து கொண்டிருக்கிறவர்களிடத்தில் அந்த கிறிஸ்தவர்களிடத்தில் நெருங்கி, அவர்களுடைய கரத்தைப் பிடித்து, அவர்களுடைய கரத்தைக் குலுக்குங்கள். அவர்கள் மேல் உங்கள் கைகளை வைத்து, “அவர்களுடைய ஆத்துமாக்களுக்காக தேவனை துதியுங்கள்.” நம்முடைய பீடங்கள் இங்கே குழந்தைகளால் நிறைந்துள்ளது. அவர்களை நாம் இங்கே கொண்டு வர முடியாது. புவி முதல் மகிமை வரையுள்ள வாழ்வின் பயணம் முழுவதிலும், நான் அவரைப் போலிருக்க மாத்திரமே வேண்டுகிறேன். என் மேல் பிரகாசியும், ஓ, என் மேல் பிரகாசியும். கலங்கரை விளக்கத்தினின்றும் ஒளியானது என் மேல் பிரகாசிக்கட்டும்; ஓ, என் மேல் பிரகாசியும், கர்த்தாவே, என் மேல் பிரகாசியும், கலங்கரை விளக்கத்தினின்றும் ஒளியானது என்மேல் பிரகாசிக்கட்டும்.
144264 நீங்கள் நலமாக உணருகிறீர்கள்? நீங்கள் நலமாக உணரவில்லையா? ஒரு கிறிஸ்தவனாக இருப்பதற்காக நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? நாம் இப்பொழுது ஒரு பாடலை பாடப் போகையில், உங்கள் அருகில் அமர்ந்திருக்கிறவரோடு கை குலுக்குங்கள். நாம் ஒளியில் நடப்போம் , இந்த அழகான ஒளியில், அது மாம்சத்தில் வெளிப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒளியாகும் என்ற பாடல். நாம் ஒளியிலே நடப்போம், அது அவ்வளவு அழகான ஒளியது, பிரகாசமாயுள்ள இரக்கத்தின் பனித்துளிகளண்டை அது வருகிறது; இது இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். அதை யாவரும் பாடுங்கள்: நாம் ஒளியிலே நடப்போம், அது அவ்வளவு அழகான ஒளியது, பிரகாசமாயுள்ள இரக்கத்தின் பனித்துளிகளண்டை அது வருகிறது; இது இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். இயேசுவே உலகின் ஒளியென ஒளியின் பரிசுத்தரே வந்து பிரகடனம் செய்வீர்; அப்பொழுது பரலோகத்தின் மணியொசை இயேசு உலகின் ஒளியாயிருக்கிறார் என்று ஒலித்திடுமே. இப்பொழுது உங்களது கரத்தை உயர்த்துங்கள்: நாம் ஒளியிலே நடப்போம். அது அவ்வளவு அழகான ஒளியது, பிரகாசமாயுள்ள இரக்கத்தின் பனித்துளிகளண்டை அது வருகிறது; இது இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். நாம் தொடர்ந்து இவ்வொளியில் நடப்போம், அது அவ்வளவு அழகான ஒளியாம், இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது; இது இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கிறது, இயேசு, அவரே உலகின் ஒளியாயிருக்கிறார். இவ்வொளியில் நாம் நடப்போம் (சுவிசேஷ ஒளி) அழகான ஒளி, இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது; அது இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கிறது, இயேசு, அவரே உலகத்தின் ஒளியாயிருக்கிறார்.
145265 ஆதியில் பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானது சபையின் மேல் விழுந்த முதற்கொண்டு, செய்தியானது தொடர்ந்து, அடுத்து வந்த சபைக்காலமாகிய சிமிர்னாவுக்குள்ளும் வந்தது. அங்கே ஐரேனியஸ் நின்றார். அவர் தேவனுடைய மகத்தான பரிசுத்தவான் ஆவார். அவர் அந்நிய பாஷையில் பேசி, தேவனுடைய வல்லமையால், மரித்தோரை உயிரோடெழுப்பி, பிணியாளிகளை சொஸ்தமாக்கினார். அவர் ஒளியிலே நடந்து கொண்டிருந்தார். அவருக்குப் பிறகு, மகத்தான வல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்தவானாகிய கொலம்பா வந்தார். அதன் பின்பு வந்த ஏனைய மகத்தான பரிசுத்தர்கள் யாவரும், தொடர்ந்து செய்தியையுடையவர்களாயிருந்து, சுவிசேஷ ஒளியிலே நடந்து வந்தார்கள். அவ்வொளியானது பெந்தெகொஸ்தே நாளில் பிரகாசித்த அதே ஒளிதான். கிறிஸ்துவானவர் தமது ஜனங்களின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறார். அந்த ஏழு பொன் குத்துவிளக்குகளும் நடுப்பகலில் உள்ள சூரியனைப் போல அவருடைய பிரகாசத்தை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. 266 நாம் இங்கே 1961-ம் ஆண்டில் இருக்கிறோம். இவ்வொளியில் நாம் நடப்போம், அது அவ்வளவு அழகான ஒளி, இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது; ஓ, அது இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கிறது, ஓ, இயேசுவே, உலகத்தின் ஒளி. நாம் எழுந்து நிற்போமாக. நாம் தொடர்ந்து இவ்வொளியில் நடப்போம், அது அவ்வளவு அழகான ஒளியாகும், இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது; அது இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கிறது, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனெனில் (காரணம்) அவரே என்னை முதலில் நேசித்தார், சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வரி மரத்தினிலே.
146267 இனி ஒரு போதும் உலகத்தின் காரியங்களுக்குத் திரும்பக் கூடாது. உலகத்துக்கு நான் மரித்தவனாயிருக்கிறேன். உலகம் எனக்கு மரித்ததாயிருக்கிறது. பரிசுத்த ஆவியினால் நடப்பட்டு நான் கிறிஸ்துவுக்குள்ளாக மட்டுமே நடக்கிறேன். அவரை நான் நேசிக்கிறேன், ஏனெனில், அவர் என்னை நேசித்து, அவரது ஆசீர்வாதங்களை என் மேல் பிரகாசிக்கச் செய்து, தனது இராஜியத்தில் எனக்கு ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுத்திருக்கிறார். இப்பொழுது நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம். முடிவில் நாம் எவ்வாறு இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆயினும், அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்பதினால், அவருடைய சொந்த மகிமையின் சரீரத்தை போலவே ஒரு சரீரத்தையுடையவர்களாக நாம் இருப்போம். அப்பொழுது நாம் ஒளியிலே நடந்து கொண்டிருப்போம், அது அழகான ஒளியாகும், இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கிற அந்த இடத்திற்கே அது வருகிறது; இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கும் இயேசுவே, உலகத்தின் ஒளி.
147268 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? செய்தியளிக்கப்பட்டு அது மக்களை வெட்டிய பிறகு, ஜனங்கள் ஆவிக்குள் தொழுது கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கவே நான் விரும்புகிறேன். நல்ல பழமையான பாடுதலைப் போல அழகானது வேறென்றுமில்லை. அது சரி தான். பழமை வாய்ந்த நல்ல பெந்தேகொஸ்தே அனுபவம் வாய்ந்த பாடல் பாடுவதை நான் நேசிக்கிறேன். மிகவும் நீண்ட பயிற்சியெடுத்து, குரலை இழுத்துப் பாடி, கீச்சிட்டுப் பாடி, அதினால் முகமெல்லாம் நீலமடைந்து, தாங்கள் பாடுவது என்னவென்றே தெரியாது பாடுகிறார்களே, அவ்விதமான பாடலை நான் விரும்பவில்லை. யாராவது ஒருவர் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தோடு, ஒரு வேளை சரியான இனிமையான இராகமில்லாவிடினும், பரவாயில்லை, ஆனால் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தோடு பாடுவதை நான் விரும்புகிறேன். ஓ, சிலுவையைப் பற்றிய அவ்வினிமையான பாடல்கள் எத்தனை மகிமையாயிருக்கின்றன! ஓ, என்னே!
148நம்முடைய கலைந்து செல்லும் பாடலை இப்பொழுது பாடுவோமாக இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல் துக்கமும், துயரமுமான பிள்ளையே; அது உனக்கு ஆனந்தத்தையும், ஆறுதலையும் அளிக்குமே, நீ செல்லுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல். நாளை இரவு சரியாக ஏழு மணிக்கு, ஏழு மணிக்கெல்லாம் ஆராதனை துவங்குகிறது. நமது யாத்திரை முடிவுறும்போது, இயேசுவின் நாமத்தில் பணிந்து, சாஷ்டாங்கமாக அவருடைய பாத்ததில் வீழ்ந்து, பரலோகில் இராஜாதி இராஜாவாகிய அவருக்கு நாம் கிரீடம் சூட்டுவோம். நாம் யாவரும் இப்பொழுது பாடுவோம்; இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், துக்கமும், துயரமுள்ள பிள்ளையே; அது உனக்கு ஆனந்தத்தையும், ஆறுதலையும் அளிக்குமே, ஓ, நீ செல்லுமிடமெல்லாம் அதை கொண்டு செல். விலையேறப் பெற்ற நாமம், ஓ, எவ்வளவு இனிமையானது! பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமாமே; விலையேறப்பெற்ற நாமமது. ஓ எவ்வளவு இனிமையானது! (எப்படி இனிமையானது:) பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகின் மகிழ்ச்சியுமாமே.
149269 இன்றிரவு இப்பொழுது நாம் இதை முடித்து விட்டோம். “நாளை காலை ஆராதனை உண்டா” என்று என்னிடம் கேட்கப்பட்டது. இல்லை, நாளைக்கு இல்லை. நாளைக்கு நல்ல ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். நாளை இரவு ஒரு வேளை நான் அந்த செய்தியை எடுக்க முடியவில்லையெனில், அடுத்த நாள் எடுப்பேன். ஒரு நாளில் இத்தொடர் செய்தியை நான் கொடுக்கத் தவறினால் அடுத்த நாளில் கொடுத்து விடுவேன். ஆனால், இந்தச் செய்தித் தொகுப்பு நமக்கு இருக்கிறது, நீங்கள் ஏற்கனவே சபைக் காலங்கள் செய்திக்காக இருக்கிறீர்கள் என்று விசுவாசிக்கிறேன். அப்படித்தானே? சரி இப்பொழுது மெதுவாக நாம் பாடுகையில் நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம்: இயேசுவின் நாமத்தில் பணிகையில் (ஏல்லா நாவுகளும் அதை அறிக்கை செய்யும்.) அவருடைய பாதத்தில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து, நம்முடைய யாத்திரையை முடிவுறும்போது, பரலோகத்தில் இராஜாதி இராஜாவாக நாம் அவரை முடிசூட்டுவோம். விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே; விலையேறப் பெற்ற நாமம், ஓ, எவ்வளவு இனிமையாது! (எவ்வளவு இனிமையானது!) பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமாமே.