1 சகோதரன் நெவில் அவர்களே! உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் அமரலாம். 2 கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபொது மகிழ்ச்சியாயிருந்தேன்” என்பதாக ஒரு சமயம் கூறப்பட்டது என்று நான் நினைக்கிறேன். 3 இப்பொழுது, இங்கு இருக்கிற அனைவருக்கும் உடகார இடவசதி போதுமானதாக இல்லாதிருக்கிறதற்காக நாங்கள் வருந்துகிறோம். ஒரு வேளை இன்னும் வரப்போகும் வாரங்களில் இச்செய்திகளைக் கேட்க மேலும் அதிகமதிகமாக ஜனங்கள் வரக்கூடும். 4 ஆனால் இந்த விசேஷித்த கூட்டங்களுக்கான காரணம் என்னவெனில், நாம் செய்யப் போவதென்னவெனில்… “சபையானது இந்நாளில் இச்செய்தியைப் பெற்றிருத்தல் வேண்டும்” என்ற எச்சரிக்கை உணர்வை பரிசுத்த ஆவியானவர் எனது இருதயத்தில் பதித்திருந்தார். ஏனென்றால் இச்செய்தியானது வேதம் முழுவதிலும் மிகவும் தலைச் சிறந்ததாகக் காணப்படுகிறது என்று நான் விசுவாசிக்கிறேன், காரணம் இது இந்த நேரத்தில் அவருடைய சபையில் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது. 5 ஒருவருக்கு தன் எண்ணங்களையும் விசுவாசத்தையும் ஆதாரமாகக் கொண்டுள்ள ஒன்று இல்லாமல் போனால், எவருக்குமே விசுவாசம் இருக்க முடியாது. அவர் செய்கிறது என்னவென்றும் அல்லது அவர் எங்கே செல்கின்றார் என்றும் அறிந்து கொள்ள இயலாது. எனவே வேத வசனங்கள் கிறிஸ்துவையும் காலத்தின் நிலையையும் நமக்கு இக்கடைசி நாட்களில் வெளிப்படுத்தியிருக்குமானால், அதை ஆராய்ந்து நாம் எங்கிருக்கிறோம் என்பதைக் கண்டு கொள்வது, நமக்கு நன்மை பயக்கும்.
26 இப்பொழுது நமது சபையானது பெரியதாக இல்லாமைக்கு நாம்—நாம் வருந்துகின்றோம். ஒரு நாளில் அவ்வாறான பெரிதான கட்டிடத்தை நாம் பெற்றுக்கொள்வோம் என்று நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம். 7 கடந்த நான்கு தினங்களாக வெளிப்படுத்தின விசேஷத்தின் வரலாற்றுப் பூர்வமானவைகளை நான் ஆராய்ந்து கொண்டிருக்கையில், உண்மையாக இவ்வாறாக சம்பவித்திருக்கும் என்று நான் எதிர்பாராதவைகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். இந்த ஏழு சபை காலங்களைப் பற்றிய செய்தித் தொடர் அளிக்கப்பட்டதற்குப் பிறகு, வரலாற்றையும் வேதத்தையும் அடிப்படையாகக் கொண்டு, “மெய்யான சபை, கள்ளச்சபை” என்ற தலைப்பில் ஒரு செய்தித் தொடரை அளிக்கலாம் என்ற ஒரு—ஒரு எண்ணம் எனக்குண்டானது. ஒரு சமயம் நான் வேதத்தில் காணப்படும் உண்மையான திராட்சை செடி மற்றும் கள்ளத் திராட்சை செடி என்பதைப் பற்றிய தலைப்பில் ஒரு பிரசங்கத்தை நிகழ்த்துவதற்காக பெரு முயற்சியினை எடுத்துக்கொண்டது போலேயாகும். நாம்…
38 ஜனங்களை உட்கார வைக்கப்பட முயற்சிப்பதைக் குறித்து நான் எண்ணிக்கொண்டிருக்கையில், நாம் இன்னும் கூடுதலான இருக்கைகளை பெற முயற்சிக்கப்போகிறோம். நாம் இன்னும் கூடுதலான இருக்கைகளை கொண்டு வந்து பின்னால் உள்ள அறைகளில் நிரப்ப முயற்சிக்கும்போது, இன்னும் அதிகமாகவே சுற்றிலும் ஜனங்களை ஆராதனை நேரங்களில் அமர்த்த முடியும்.
49 இப்பொழுது இந்தக் காரியங்களைப் பற்றி, நான் இங்குள்ளவர்களில் இதைப் பற்றி உண்மையாகவே அக்கறை கொண்டவர்களைப் பார்த்துக் கேட்டுக் கொள்வதென்னவெனில், நாம் இதை விளக்கிக் கூறும் ஒவ்வொரு கூட்டங்களுக்கும் தவறாது வரவேண்டுமென்பதேயாகும். இந்த மகத்தான புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தையும்… [ஒலிநாடாவில் காலி இடம்.—ஆசி.] …ஏழு சபைக் காலங்களைப் பற்றியும் நானே விளக்குவேன் என்பதாக நான் என்மேல் பொறுப்பேற்றுக்கொள்ளமாட்டேன். [ஒலி நாடாவில் காலி இடம்] …பொறுப்பேற்று… [ஒலிநாடாவில் காலி இடம்] … [ஒலி நாடாவில் காலி இடம்] …நான் இதனிடத்தில் நான் வருகையில், அது எனக்கு வெளிபடுத்த வேண்டும் என்று நான் தேவன் பேரில் பயபக்தியுடன் சார்ந்திருக்கிறேன். 10 இச்செய்தியிலுள்ள சரித்திர சம்மந்தமான காரியங்கள், எனக்குத் தெரிந்தவரை மிகவும் தலை சிறந்த வரலாற்றாசிரியர்களின் வரலாறு புத்தகங்களிலிருந்து எடுத்துக் கையாளப்பட்டவைகளாகும். இப்பொழுது எனது படிக்கும் அறையில், ஐந்தாறு விளக்கவுரை புத்தகங்கள் உள்ளன. அவையாவன: ஹிஸ்லோப்பின் இரண்டு பாபிலோன்கள், ஃபாக்ஸ் என்பவரின் இரத்த சாட்களின் புத்தகம் மற்றும் இதர மகத்தான புத்தகங்களாகும். நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு முந்தைய காலம் அதைப் பற்றிய நான்கு புத்தங்கள், ஒவ்வொன்றும் நானூறு பக்கங்கள் கொண்டதாகும். அவைகளில் நாம் நிசாயா ஆலோசனை சங்கம் மற்றும் அனைத்து வரலாற்று உண்மைகளையும் பெறலாம். ஏனெனில் இவ்வொலி நாடாவிலுள்ள செய்திகளை பின்னணியாகக் கொண்டு, ஏழு சபை காலங்களைப் பற்றிய ஒரு வியாக்கியானத்தை எழுதித் தயாரித்து, அதை உலகம் முழுவதிலும் நாம் அனுப்பப் போகிறோம். ஏனெனில் நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். நான் கடைசி காலத்தில் இருக்கிறோம்.
511 இது கடந்த தேர்தல் வரையிலுங் கூட எனதுள்ளத்தில் உதிக்கவில்லை. அதன் பின்புதான் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நான் கண்டேன். அப்பொழுது பரிசுத்தாவியானவர் எனக்கு இதைப்பற்றி வெளிப்படுத்த ஆரம்பித்து, இச்செய்தியை ஜனங்கள் மத்தியில் வைத்து அவர்களை எச்சரிக்க கூறினார். இவ்விதமானதொரு சபையில் இச்செய்தியை போதுமான அளவு என்னால் அளிக்க இயலாது. ஆகையால் நான் அமர்ந்து ஒரு புத்தகத்தை இச்செய்திக்காக எழுதினால்… நான் பிரசங்க பீடத்தில் நிற்கையில், கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதல் எனக்குதவ என் மேல் வருகிறது என்று நான் உணருகிறேன், ஆகையால் நாம் இச்செய்திக்குரிய ஆவியின் ஏவுதலைப் பெறும் காரணத்தால், ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இச்செய்தியை எடுத்து, ஒரு புத்தகமாக நான் அதை எழுத எனக்கு போதுமான திருப்தி உண்டாகும். இங்கே பிரசங்கத்தில் கூறுகிறவைகளெல்லாவற்றையும் புத்தகத்தில் நாம் எழுத முடியாது. ஆகையால் உண்மையாகவே எழுதப்படும் புத்தகம் ஒரு விதமாக சற்று சீர் செய்யப்பட்டதாயிருக்கும். நான் உரைக்கும் பிரசங்கங்களில், சொன்னவைகளை திரும்பச் சொல்லி விளக்குவதில் நிறைய நேரம் எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால் எழுதப்படும் புத்தகத்தில் அவையெல்லாம் சரி செய்யப்பட்டுவிடும். ஆனாலும் நாம் ஒலி நாடாக்களில் உள்ளவைகளில் இருந்து எவ்வளவு அதிகமாக எழுதப்படும் புத்தகத்தில் சேர்க்க முடியுமோ அவ்வளவாக சேர்ர்க முயற்சிப்போம்.
612 இப்பொழுது ஒவ்வொரு இரவிலும் இக்கட்டிடத்தில் வாலிபர் ஒலி நாடாக்களையும் புத்தகங்களையும் வைத்திருப்பர். 13 இந்த ஏழு சபைக் காலங்களின் செய்திகளை அல்லது ஏழு சபைக் காலங்களை, ஏழு இரவுகளில் தேவனுடைய மகிமைக்காக அளிக்க முயற்சிக்க வேண்டுமென்று நாம் தீர்மானித்துள்ளோம். ஆனால் ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு சபைக்கால செய்தியை கொடுத்து விட ஒரு வேளை இயலாமற் போகலாம். நாம் ஒவ்வொரு இரவிலும் ஒரு சபைக் காலத்தை எடுத்துக் கொள்ளலாம். அதாவது, திங்கள் இரவில் எபேசு சபைக் காலத்தையும், செவ்வாய் இரவில் சிமிர்னாவையும், புதன் இரவில் பெர்கமுவையும், வியாழன் இரவில் தியத்தீராவையும், வெள்ளி இரவில் சர்தையையும், சனி இரவில் பிலதெல்பியாவையும், ஞாயிறு காலை, ஞாயிறு இரவில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற லவோதிக்கேயா சபைக்காலத்தையும் நான் எடுத்துக் கொள்ளலாம். ஆதிச்சபையின் வரலாற்றுப் பூர்வ காரியங்களையும், அதன் வரலாற்றையும், அவ்வரலாற்று ஆசிரியர்களைப் பற்றியும், ஒவ்வொரு சபையின் தூதன் யார் என்பதையும், அதனதற்குரிய செய்தியையும் நாம் பார்ப்பதோடு, சபையானது இந்தக்காலம் வரையிலும் எவ்வாறு காலங்கள் தோறும் வளர்ந்து வந்துள்ளது என்பதையுங் குறித்து நாம் பார்க்கலாம். 14 வேத வாக்கியங்களிலுள்ள முன்னுரைத்தல் ஒவ்வொன்றும் அதைக் குறித்த கருத்தும் எவ்வாறு மிகச் சரியாக வரலாற்றோடு அமைந்திருக்கிறது என்பதை பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அவைகளை நான் படித்துப் படித்து என் கண்கள் வீங்கிபோனதுபோல் ஆகிவிட்டது, மேலும் அது எனக்கு மிகவும் ஆச்சரியமானதாயிருந்தது. நான் எனது படிக்கும் அறையிலிருந்து வெளியே வந்தபோது என் மனைவியிடம், “இவ்வாறான வகையில் காரியங்கள் இருந்திருக்கும் என்று நான் ஒரு போதும் கனவு கூட காணவில்லை” என்று கூறினேன். பார்த்தாயா? இது எவ்வளவு மகத்தானதாய் இருந்தது!
715 மேலும் இப்பொழுது, ஒவ்வொரு சபைக்குரிய செய்தியை ஒரே இரவில் நான் அளிக்க இயலாமற் போகலாம். அவ்வாறு ஒவ்வொரு இரவிலும் அந்தந்த சபைக்குரிய செய்தியை பூர்த்தியாக அளிக்க இயலாமற்போனால், அடுத்த நாள் காலை பத்து மணிக்கு மீதியை அளிக்கலாம். ஆகையால் இவ்வாறு இரவு அளித்த செய்தியின் தொடர்ச்சியான மீதமுள்ள செய்தியை அடுத்த நாள் காலையில் கொடுக்கும்போது, வந்து கேட்க விருப்பமுள்ளவர்களுக்காக ஒவ்வொரு இரவிலும் அதற்கான அறிவிப்பு கொடுக்கப்படும். ஏனெனில் நாம் இச்செய்தியை ஒலி நாடாவில் முழுவதும் பதிவு செய்யப் போகிறோம். எனவே இரவில் கொடுத்த செய்தி முற்றுப் பெறாத போது மீதியை அடுத்த நாள் காலையில் கொடுப்பதற்காக, காலை பத்து மணி முதல் பிற்பகல் வரையிலும் ஆராதனை இருக்கும், ஏனென்றால் அவர்கள் செய்தியை ஒலி நாடாவில் பதிவு செய்து கொள்ளலாம். இல்லை… 16 வேதத்தில் உரைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை கருத்தாய் ஊன்றி கற்க நாம் முயன்று கொண்டிருக்கிறபடியால், இவ்விசேஷித்த கூட்டங்களின் நாட்களில் நமக்கு சுகமளித்தல் ஆராதனைகள் இருக்காது என்று நாம் அறிவிப்பு செய்துவிட்டோம். சமீபத்தில்தான், நமக்கு ஒரு சுகமளித்தல் ஆராதனை உண்டாயிருந்தது. ஆகையால் இந்த ஆராதனைகள் முடிவுற்றப் பிறகு நாம் மீண்டுமாக இங்கே சுகமளிக்கும் கூட்டங்களை வைத்துக் கொள்ளலாம்.
817 ஒவ்வொருவருக்கும் நான்—நான் இப்பொழுது, நீங்கள் நினைவில் கொண்டிருக்கத்தக்கதாக, ஒன்றை மிகவும் தெளிவாக சொல்லப்போகிறேன். இச்செய்தியானது, அது அளிக்கப்படுகையில், ஒருவேளை உங்களை வெட்டலாம், உலுக்கலாம், அல்லது பெரிதாக அசைக்கலாம். ஆனால் வசனத்தை பிரசங்கிப்பதைத் தவிர வேறு எதற்கும் நான் பொறுப்பாளி அல்ல. அவ்வளவுதான். வார்த்தையை சரியாக அப்படியே பற்றிக் கொண்டிருப்பதைத் தான் நான் செய்கிறேன். அநேக சமயங்களில் இந்த சபைக்காலங்களில் சம்பவித்தவைகள், யாரோ ஒருவரின் ஸ்தாபனத்தில் நடப்பவைகளை பிரதிபலிப்பதாக இருக்கக் கூடும். அப்படி இருக்குமானால் அதை கடுமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது—அது வேத வாக்கியங்கள் என்ன உரைத்துள்ளவென்றும், அதைக் குறித்து எனக்குண்டான வெளிப்பாட்டையும் எடுத்துரைப்பதாகவே உள்ளது. அதில் நான் தவறாக இருக்கிறேண் என்று நீங்கள் கருதினால், அப்பொழுது அதை எனக்கெதிராக விரோதம் பாராட்டாமல், தேவன் சரியானது எது என்பதை எனக்கு காண்பிக்க எனக்காக ஜெபியுங்கள், ஏனெனில் நான் சரியாகவே இருக்க விரும்புகிறேன். 18 பின்னர் மற்றொரு காரியம் என்னவெனில் ஜனங்களுக்கு போதிக்கும் இவ்வாறான கூட்டங்களில் நான் இப்பீடத்திலிருந்து உரைக்கும் வார்த்தைகளுக்கு பரிசுத்த ஆவியானவர் என்னைப் பொறுப்பாளியாக்குவார் என்பதை நான் நன்கு தெளிவாக உணர்ந்துள்ளேன். எனவே எவ்வளவு பயபக்தியுடன் நாம் இதை அணுகுகிறோம் என்பதை நீங்கள் பாருங்கள். இப்பொழுது, நம்முடைய…
919 நான் இச்செய்தியை வேறு எங்காகிலும் இருந்து அளித்திருக்கலாம். ஆனால் இது உபதேசமாக இருப்பதால் தான் நமது சபையில் இதை அளிக்கிறோம். வெளியில் சுவிசேஷ கூட்டங்களில், நம் ஒவ்வொருவருக்கும் வேறு ஒரு எண்ணமும் அல்லது—அல்லது வித்தியாசமான பகுத்தறிதல் இருக்கும். காலங்கள் தோறும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. மேலும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சொந்த சபைகளையும், நம்முடைய சபைகள் நமக்கு போதிப்பனவைகளே நாம் விசுவாசிப்பவர்களுமாக இருக்கிறோம். நாம்…மற்றொருவருடைய சபையில் போய், அவர்கள் வழிவழியாகப் போதிக்கப்பட்டவைகளுக்கு ஒத்துப்போகாத ஒன்றை அவர்கள் மத்தியில் போதிக்க நான் விரும்பமாட்டேன். ஏனெனில் எனது அறிக்கைகளை தெளிவாக இருக்க செய்யவே நான் முயலுகிறேன். அதாவது ஒரு… 20 ஒரு மனிதன் ஒரு கத்தோலிக்கனாக இருந்தால், தனது இரட்சிப்புக்காக கத்தோலிக்க சபையை அவன் சார்ந்திருந்தால் அவன் இழக்கப்பட்டுப்போவான். ஒருவன் பாப்டிஸ்டாக இருந்தால், பாப்டிஸ்டு சபையை தன் இரட்சிப்புக்காக சார்ந்திருந்தால் அவனும் இழக்கப்பட்டுபோவான், அல்லது ஒருவன் பெந்தேகொஸ்தேயினானாக இருந்தால், அவன் இரட்சிக்கபட பெந்தெகொஸ்தே சபையை சார்ந்து கொண்டால், அவனும் இழக்கப்படுவான். ஆனால், எந்த சபை சார்ந்திருந்தாலும் அவ்வாறே ஆகும்! ஆனால் அந்த தனி நபர் கல்வாரியில் கிறிஸ்துவானவர் செய்து முடித்த கிரியைகளின் பேரிலான விசுவாசத்தின்பேரில் சார்ந்திருப்பாராயின், அவர் எந்த சபையைச் சார்ந்தவராயினும் எனக்கு அக்கறையில்லை, அந்த மனிதர் இரட்சிக்கப்பட்டிருக்கிறார். ஏனெனில், “கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்.”
1021 இப்பொழுது சில வேளைகளில், இதை பிரசங்கிக்கையில்…நான் எனது சொந்த சிறிய இக்கட்டிடத்தை அநேக ஆண்டுகளுக்கு முன்பாக தளமிட்டு கட்டி ஆரம்பித்ததாகும். இதில் அமர்ந்து நான் சிந்திக்கையில், ஒரு விதத்தில் இது நமக்கு ஒரு புனித ஸ்தலமாக இருக்கிறது. இக்கட்டிடத்தில் சரியானதொரு தளம் கூட இல்லாத சமயத்தில், தேவன் முதன் முதலாக சந்திக்க ஆரம்பித்தார். எனவே, ஒரு விதத்தில் இக்கட்டிட அமைப்பை மாற்றி அமைப்பதை நாம் விரும்பவில்லை. ஆனால், இக்கட்டிடமானது மிகவும் பழமையானதாக ஆகிவிட்டபடியால், ஒரு புதிய சபைக் கட்டிடம் இவ்விடத்தில் கட்டி எழுப்ப நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். 22 நான் வெளியில் ஊழியக்களங்களில் சகோதரருக்கு மனம் புண்படாமலிருக்க என் சொந்த உபதேசங்களை பிரசங்கிக்காமல் இருப்பேன், ஆனால் வெளி ஊழியங்களிலிருந்து திரும்பி இந்த எனது சபையில் வந்து இந்த பிரசங்க பீடத்தில் நான் நிற்கையில் எனது சொந்த கருத்தை வெளியிட எனக்கோ உரிமை உண்டு. ஆகையால், “நான் சிறிது வித்தியாசமாக போதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று நீங்கள் கூறினால்…நான் கூறுவேன்…இங்கே வரவிரும்பும் எவரையும் வாருங்கள் என்று நாம் வரவ்வேற்கிறோம். வேறு யாரும் இக்கூட்டங்களை நமக்காக ஏற்படுத்தி தரவில்லை. இங்கே நமது கூடாரத்தில் இது பிரசங்கிக்கப்படுகிறது. வரவிரும்புவோர் எவரையும் வாரீர் என்று வரவேற்கிறோம். வாருங்கள். எனவே ஒவ்வொரு கூட்டங்களுக்கு வரும்போதும், உங்கள் வேதாகமத்தையும், பென்சிலையும், எழுதும் தாளையும் கொண்டு வாருங்கள் என்றே நான் உங்களை அழைக்கிறேன்.
1123 இப்பொழுது, இங்கே நான் மேற்கோள் காட்ட விரும்பும் வியாக்கியானப் புத்தங்களையும், மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் இங்கே கொண்டு வர இயலாது. எனவே, நான் இங்குள்ள இத்தாளில், அவ்வரலாற்று நூல்களிலிருந்தும் வியாக்கியானப் புத்தகங்களிலிருந்தும் சிறு குறிப்புகளை எழுதிவைத்துள்ளேன். அதனால், இப்புத்தங்களையே இங்கு கொண்டு வந்து அதின் பக்கங்களை திருப்பி வாசிப்பதற்கு பதிலாக இச்சிறு குறிப்புகளிலிருந்து நான் தேவையான போது உங்களுக்கு வாசித்துக் காட்டலாம். ஆயினும், வேத வாக்கியங்கள் பற்றிய இடம் வரும்போது, அதற்காக நாம் நமது வேதாகமத்தையே உபயோகித்துக் கொள்வோம். வியாக்கியானப் புத்தகம், மற்றும் வரலாறு, வரலாற்று ஆசிரியர் யார் என்பதைப் பற்றி தேவையான போது நான் விளக்கிக் கூறுவேன். பிறகு, நான் எழுத நினைத்துள்ள அப்புத்தகத்தைப் பற்றியோவெனில், எல்லாம் சரியாக செய்யப்படத் தக்கதாக, நாம் அவையாவையும் தட்டச்சு செய்துக் கொள்ள முடியும்.
1224 சீக்கிரமாய் கூட்டங்களை தொடங்கி சீக்கிரமாய் முடித்து மக்களை அனுப்பிவிட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இக்கூட்டங்கள் ஞாயிறு தொடங்கி, அடுத்த ஞாயிறு முடிய மொத்தம் எட்டு நாட்கள் நடைபெறும். 25 இக்காலையில் நான் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தின் முதலாம் அதிகாரத்தை ஆரம்பிக்கப் போகிறேன். இவ்வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் மூன்று பாகங்களாக அமைந்துள்ளன. இந்த எட்டு நாட்கள் கூட்டங்களில் முதல் மூன்று அதிகாரங்களைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம். ஆனால் ஒரு சபைக் காலத்தைப் பற்றிய செய்தியோ நமக்கு ஒரு மாத காலம் பிடிக்கும். ஆனால் நாமோ, அவற்றிலுள்ள பிரதானமான விஷயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம். பிறகு, நீங்கள் இதை புத்தகமாக பெற்றுக் கொள்ளும்போது, அதில் இன்னும் விரிவாக கூறப்பட்டிருக்கும்.
1326 இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் சபையைப் பற்றியே கூறுகின்றன. பின்பு சபையானது மறைந்து விடுகிறது. நாம் அதை கடைசி வேளை வரையிலும் காண்பதில்லை. வெளிப்படுத்தல் 1 முதல் 3 முடிய சபையைப் பற்றியது. வெளிப்படுத்தின விசேஷம் 4 முதல் 19 முடிய இஸ்ரவேல் என்ற தேசத்தின் முழுமையைப் பற்றியதாகும். பிறகு 19-ம் அதிகாரம் முதல் 22 முடிய இரண்டையும் பற்றி பார்க்கிறோம். அதன் பிறகு வாதைகள் மற்ரும் எச்சரிக்கைகளை முடிவாகப் பார்க்கிறோம். மூன்று பாகங்களாக அமைந்துள்ளன. புரிகிறதா? சபையைப் பற்றியும், நாம் வாழும் சபைக்காலத்தையும் பற்றி உரைக்கிற முதல் மூன்று அதிகாரங்களையும் நாம் எடுத்துக் கொள்கிறோம். 27 முதலில் இது ஒரு விதத்தில் ஏதோ வறட்சியாக காணப்படலாம். ஏனெனில், கடந்த காலத்திற்குள் நாம் திரும்பிச் சென்று ஒரு அஸ்திபாரத்தை நாம் அமைத்துக் கொள்ளுதல் அவசியமாயிருக்கிறது. ஜனங்கள் இச்செய்தியைப் புரிந்து கொள்ளத்தக்கதான முறையில் அவர்கள் மத்தியில் அதை அளிப்பதற்காக, பரிசுத்த ஆவியானவரின் அசைவைப் பெற்றுக் கொள்ளவும், நான் வேதத்தைப் படித்தும், ஜெபித்துமுள்ளேன். இச்செய்தியை நீங்கள் கண்டு கொண்டீர்களாயின், அப்பொழுது, உங்கள் மனக்கண்கள் பிரகாசிக்கப்பட்டு, கிறிஸ்துவண்டை நெருங்கி வரமுடியும். ஏனெனில் நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம்.
1428 சரித்திரங்களை நான் ஆய்ந்து படித்துக் கொண்டிருக்கையில், சபையானது எவ்வாறு துவங்கியது, எவ்வாறு பின்னுக்கு தள்ளப்பட்டது. பின்பு என்ன சம்பவித்தது, எவ்வாறு அந்த சிறிய தேவனுடைய வித்தானது, அந்த ஒவ்வொரு காலங்கள் தோறும் கடந்து வந்து ஒரு கட்டத்தில் சற்று ஏறக்குறைய அது மறைந்தது போல் காணப்படுகிறது என்று கண்டறிந்து இவ்விஷயங்களைப் பார்ப்பதோ அப்பேர்ப்பட்ட ஒரு ஆச்சரியமான காரியமாய் உள்ளது. 29 நாளை இரவு நாம் இங்கு ஒரு—ஒரு விளக்கப் படத்தை வைத்து துவங்கலாம் இல்லை ஒரு விளக்கப்படமல்ல, ஆனால் ஒரு கரும்பலகை, நான் ஒரு கரும்பலகையில் அதை எழுதி விளக்கி போதிக்க விரும்புகிறேன். ஞாயிறு பள்ளி ஆசாரியரிடம் ஒரு கரும்பலகை உள்ளது என்று நான் நினைக்கிறேன். நான் அது பக்கத்தில் உள்ளதைப் பார்க்கிறேன். வாயிற் காப்போனை அக்கரும்பலகையை இங்கு கொண்டு வந்து முன்னால் வைத்திடுமாறு செய்யப் போகிறேன். அதில் நான் விளக்கவேண்டியவைகளை வரைந்தால், நீங்கள் அதைப் பற்றி சரியாக புரிந்து கொண்டு, அவைகளை நீங்களும் உங்கள் தாள்களில் வரைந்து கொண்டு அதை மிகவும் நன்றாக புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
1530 ஆனால், துவங்கும் முன்னர், இதை நான் கூற விரும்புகிறேன். சபைக் காலத்தின் துவக்கத்தைப் பார்க்கவும், அப்போஸ்தலர்கள் உபதேசம் எவ்வாறு இருந்தது. வேதத்தின் அடிப்படை கொள்கைகள் எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றி அறியலாம். பின்பு, இரண்டாவது கட்டத்தில் அப்போஸ்தலர்களையும், சபையையும், அது எவ்வாறு இறுதியில் மங்கிப்போனது என்பதையுங் குறித்த உண்மையான சரியான உபதேசத்தை அறியலாம். மூன்றாவது சுற்றில், சபையானது எவ்வாறு இன்னும் விலகிச் சென்றது, நான்காவது சுற்றில், சபையானது வெதுவெதுப்பானதாகி, அது முடிவாக மங்கிப் போனது எவ்வாறு என்பதையும் பார்க்கலாம். சபையானது இறுதியில் ஒரு வெதுவெதுப்பான சபையைக் கொண்டு வந்தது. 31 அதன்பின்னர் ஒரு ஆவியினால் நிரப்பப்பட்ட சபை! நானோ இதை ஒவ்வொரு மனிதனின் சமயப்பற்றுக்குரிய தேவ பக்திக்கான மரியாதையுடன் கூறுகிறேன். ஆரம்ப முதல் இக்காலம் வரை, உண்மையான அந்த சபையானது, பெந்தெகொஸ்தே சபையாகவே இருந்து வந்துள்ளது. அது உண்மைதான். தேவன் இந்த சபையை காத்தே வந்திருக்கிறார். 32 “பயப்படாதே, சிறு மந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” என்று இயேசு கூறினதைப் பற்றி நான் அடிக்கடி வியந்ததுண்டு. அதன் பொருள் என்னவென்பதைப் பற்றி நான் வியந்ததுண்டு, ஆனால் இப்பொழுது அதை நான் புரிந்து கொண்டேன்.
1633 கடந்த வாரத்தில், லூயிஸியானாவிலுள்ள ஷ்ரீவ் போர்டில் என் வாழ்விலேயே கண்டிராத மகத்தான ஆவிக்குரிய கூட்டம் நமக்கு உண்டாயிருந்தது. ஷரீவ்போர்டிலே! 34 நான்…எனக்கு கிடைத்த இரண்டு நாட்கள் விடுமுறையின்போது, நான் நமது சபையின் உதவிக்காரர்களில் ஒருவரோடு இல்லை தர்மகர்த்தாக்களில் ஒருவராகிய சகோதரன் உட் அவர்களுடன் கென்டக்கி ஊருக்கு வேட்டைக்காக சென்றிருந்தேன். நாங்கள் காடுகளுக்குள் சென்றோம். 35 நான் முதல் அணிலைச் சுட்டேன். அப்பொழுது நான், “சற்று நான் காத்திருக்க வேண்டும்,” என்றேன், காரணம் யாரோ ஒருவர் சில நாய்களுடன் வந்தார். எனவே அணில்கள் இப்பொழுது மரப்பொந்துகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டதால், அவைகள் மீண்டும் பொந்துகளுக்குள் இருந்து வெளியே வரும்வரை, “நான் காத்திருப்பேன்” என்று நான் கூறினேன். அப்பொழுது நான், “அவை வெளியே வரும்போது…நான் இங்கே அமர்ந்து காத்திருப்பேன்” என்றேன். காரணம் அங்கு உண்மையாகவே கடுங்குளிரும், உறைபனியுமாக இருந்தது. அதினால் தான் காதுகள் எரிச்சலெடுத்தன. சிறு பள்ளத்தாக்குகளின் வழியாக தீவிரமான குளிர்காற்றுகள் வீசுவதை நீங்கள் அறிவீர்கள். எனவே நான், “அணில்கள் மீண்டும் வெளியே வரும் வரை காத்திருப்பேன்” என்றேன்.
1736 அவ்வாறு நான் எண்ணி சற்று உட்காருவதற்குள், பரிசுத்த ஆவியானவர், என்னிடம், “எழுந்து, ‘வேட்டைக்காரன் பள்ளத்தாக்கு’ என நீ குறிப்பிடும் இடத்திற்கு போ, நான் அங்கே உன்னுடன் பேசுவேன்” என்றார். 37 “வேட்டைக்காரன் பள்ளத்தாக்கு” என நான் பெயரிட்டுள்ள இந்த இடத்திற்கு நான் எழுந்து சென்றேன். நான் இவ்வாறு அந்த பள்ளத்தாக்குகளுக்கு பெயரிட்டதின் காரணம் என்னவெனில், நான் இருந்த இடம் இன்ன இடம் என்று குறிப்பிட்டு அறிந்து கொள்ளும்படியாகத்தான். “வேட்டைக்காரன் பள்ளத்தாக்கு” என்பதின் காரணம் என்னவெனில், அவைகள் அங்கே…நான் அந்த இடத்திற்குச் சென்றபோது, அங்கே பதினாறு அணில்கள் ஒரு மரத்தின் மேல் இருக்கக் கண்டேன். அவைகளில் எனக்குத் தேவையானவைகளை மட்டுமே சுட்டு விட்டு மீதமுள்ளவைகளை சுடாமல் அவைகள் தப்பித்துப் போகவிட்டு விட்டேன். வேட்டை என்பது இது தான், எனவே தான் அவ்விடத்தை “வேட்டைக்காரன் பள்ளத்தாக்கு” என்று அழைத்தேன். 38 அவர், “நீ ‘வேட்டைக்காரன் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கும் அந்த இடம்” என்று தான் கூறினார். அவர் அவ்வாறு அவ்விடத்திற்கு பெயரிடவில்லை, நான் தான் அவ்வாறு அவ்விடத்திற்கு அந்தப் பெயர் சொல்லி அழைத்தேன். 39 பின்பு, நான் அந்த பள்ளத்தாக்கின் வாயில் வரை சென்று, அங்குள்ள ஓர் வெள்ளைக் கர்வாலி மரத்தின் கீழ் அமர்ந்தேன். அங்கே அரைமணிநேரம் காத்திருந்தேன், ஒன்றும் சம்பவிக்கவில்லை. நான் என் உடலை நெடுஞ்சாண் கிடையாக தரையில் கிடத்தி கைகளை நீட்டிக் கொண்டேன். அப்பொழுது அவர் என்னிடம் பேசினார். 40 அவர் பேசியபோது, இன்று காலையில் இங்கு நாம் பார்க்கப் போகிற இவ்வேத வாக்கியங்களை எனக்கு வெளிப்படுத்தித் தந்தார். என் வாழ்நாள் முழுவதிலும் நான் கண்டிராத வண்ணம் அது இருந்தது. 41 அதன் பிறகு, நான் லூயிஸியானாவிலுள்ள ஷ்ரீவ்போர்ட் என்ற இடத்திற்கு சென்றேன். அங்கே வரம் பெற்ற ஒரு பெண்மணி உள்ளார்கள். அவள் பெயர் திருமதி ஷ்ரேடர் என்பதாகும்.
1842 அநேக ஆண்டுகளுக்கு முன்பாக கர்த்தருடைய தூதன் என்னை இங்கே சந்தித்த அந்த நதிக்கரையில் முதன்முதலாக சந்தித்து, அவ்வொளியில் தோன்றி பொழுது, அவர் பேசிய அதே வார்த்தைகளை, பதினொரு ஆண்டுகளுக்கு பின்பு, ஒரு கூட்டம் நடக்கும் இடத்திற்கு நான் நுழைந்தபோது, அந்த சிறிய பெண்மணி எழும்பி, அந்நிய பாஷையில் பேசி, வியாக்கியானித்து, தூதன் கூறிய அதே விஷயங்களை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உரைத்தார். 43 அதே பெண்மணி, ஷ்ரீவ்போர்டிலுள்ள லைஃப் கூடாரத்திற்குள்…நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு நான் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர் அந்த ஸ்திரீயின் மீது அசைவாடி, அவர் மலையின் மேல் கூறின அதே வார்த்தைகளை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே கூறினாள். அதன்பின்னர், ஆவியானவர், அசைவாட ஆரம்பித்து, வியாக்கியானம் அளித்து, வெளிப்பாட்டினால் நடைப்பெறப் போகிறவைகளை தீர்க்கதரிசனத்தினால் முன்னுரைத்தார். அவ்வாறு முன்னுரைத்தவைகள், அடுத்த நாள்ளிரவில் நடைபெறும் கூட்டத்தில் சம்பவிக்கப் போகிறவைகளைப் பற்றியதாயிருந்தது. ஒரு தடவை கூட அது நிறைவேறாமல் போனதில்லை. 44 இச்சமபவத்திற்கு முன்பு, ஒரு கூட்டத்தில், ஓர் பாப்டிஸ்டு பெண்மணி, செய்வதறியாது எழும்பி நின்றாள். கூட்டத்தினர் நடுவில் அவள் நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவள் மேல் இறங்கி, அதனால் அவள் அந்நிய பாஷையில் பேச ஆரம்பித்தாள். அப்பெண்மணி, ஷ்ரீவ் போர்டிலுள்ள முதல் பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்தவள். அவள் என்ன செய்திருந்தாள் என்பதை அறியாதிருந்தாள். அதன்பின்னர் அவள் அவ்வாறு அந்திய பாஷையில் பேசி முடிந்த பிறகு, அவள் வேறெதுவும் பேசும் முன்பாக, பரிசுத்த ஆவியானவர் அதற்கு வியாக்கியானமளித்தார், அதாவது, “ கர்த்தர் உரைக்கிறதாவது , ‘இன்னும் மூன்று மாதத்திற்குள், இந்தக் கூடாரத்தில், மோசேயின் ஆவியும், எலியாவின் ஆவியும், கிறிஸ்துவி ஆவியும் இருக்கும்’” என்றார். அது அங்கே பரிபூரணமாக சம்பவித்தது.
1945 மிஸிஸிப்பியிலுள்ள மெரிடியன் என்ற ஊரில் ஒரு பாப்டிஸ்டு மனிதர், தனது குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எதையோ எடுக்க வேண்டி, அக்குளிர் சாதனப்பெட்டியின் மேல் கை வைத்த போது, தேவ ஆவியானவர் அவர் மேல் வந்தார். அப்பொழுது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறியாமல் அந்நிய பாஷையில் பேசினார். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்து கொள்ளும் முன்னர், பரிசுத்த ஆவியானவர் அவரிடம் “லூயிஸியானாவிலுள்ள ஷ்ரீவ்போர்ட்டுக்கு போ. என் ஊழியக்காரன் நீ என்ன செய்ய வேண்டுமென்பதை உனக்கு சொல்லுவார்” என்று கூறினார். 46 அவர் இங்கே வந்து, “எனக்கு இது புரியவில்லை; இதற்கு முன்னர் இதுபோல் ஒருபோதும் சம்பவித்ததேயில்லை” என்றார். ஓ, என்னே! நாம் கர்த்தரின் வருகைக்கு முன்னதான கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
2047 பெந்தெகொஸ்தே அனுபவத்தையுடைய அச்சிறிய சபை எப்பொழுதும் சிறுபான்மையாகவே இருந்து வந்துள்ளது. ஸ்தாபன ரீதியிலான பெந்தெகொஸ்தே சபையைக் குறித்து நான் குறிப்பிடவில்லை. அதை நான் குறிப்பிடவில்லை. ஆனால் பெந்தெகொஸ்தேயின் அனுபவத்தைப் பெற்ற மக்களைப் பற்றியே நான் குறிப்பிடுகிறேன். பெந்தெகொஸ்தே என்பது ஒரு ஸ்தாபனமல்ல. அது விரும்பும் எவருக்கும் கிடைக்கும் ஓர் அனுபவமாகும். அது கத்தோலிக்கனோ, யூதனோ, மனமாற்றமடைந்தவனோ, மெத்தோடிஸ்டோ, பாப்டிஸ்டோ, “விருப்பமுள்ளவனெவனோ அவன் வரக்கடவன்” என்பதாய் உள்ளது. அது ஒரு தனிப்பட்ட நபரின் அனுபவமாயுள்ளது… தேவன் ஒரு ஸ்தாபனத்தோடு இடைபடுவதில்லை, அல்லது அவர் புற ஜாதியாரோடு ஒரு—ஒரு இனம் அல்லது ஒரு ஜனம் என்ற ரீதியில் ஒருபோதும் ஈடுபடுகிறதில்லை. அவர் தனிப்பட்ட ஒவ்வொரு நபருடனும் இடைபடுகிறார். “விருப்பமுள்ளவனெவனோ.” அவன் வெள்ளையனாகவோ, கருப்பனாகவோ, மஞ்சள் நிறத்தவனாகவோ, பழுப்பு நிறத்தவனாகவோ இருக்கட்டும்; மெத்தோடிஸ்டாகவோ, பாப்டிஸ்டாகவோ, பிராட்டஸ்டென்ட்டாகவோ, கத்தோலிக்கனாகவோ இருக்கட்டும். அவன் எதுவாக இருந்தாலும் சரி, எவன் விருப்பமாயுள்ளானோ “அவன் வரட்டும்” என்றே அழைக்கிறார். ஆண்டவர் இவ்வாறு ஏற்படுத்தியமைக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நான்… 48 ஒரு தடவை ஒரு நபர் கூறிய வண்ணமாக, ‘வில்லியம் பிரான்ஹாம் வரட்டும்’ என்று என் பெயரை சொல்லி அவர் அழைப்பதை நான் கேட்டதைப் பார்க்கிலும் ‘விருப்பமுள்ளவன் எவனோ’ என்றே அவர் அழைப்பதைக் கேட்க விரும்புகிறேன், ஏனென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட வில்லியம் பிரான்ஹாம் இருக்கலாம். அவ்வாறு அழைக்கும்போது அது என்னையும் குறித்தது என்று நான் அறிவேன். ” ஏனவே அந்தவிதமாகவே நாம் யாவரும் உணர முடியும், “விருப்பமுள்ளவனெவனோ அவன் வரக்கடவன்.”
2149 இப்பொழுது உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ள அநேக ஜனங்கள் இங்கு பெரிய உணவக விடுதிகளிலும், சுற்றுலாவினர் தங்கும் வீதியோர சிறிய உணவக விடுதிகளிலும் தங்கி இங்கு காத்துக் கொண்டிருப்பதை நான் அறிவேன். பார்த்தீர்களா? அயர்லாந்து மற்றும் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து வந்து இந்த சந்திப்பு நியமனங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்காக என் நேரத்தை ஒதுக்க தற்போது முடியாததாய் உள்ளது. நான் இந்த மகத்தான செய்திக்கே எனது நேரத்தையெல்லாம் ஒதுக்க விரும்புகிறேன். அதை நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள். 50 நான் இந்த ஊழியப் பயணங்களிலிருந்து திரும்பி வருகையில், இந்த சந்திப்பு நியமனங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருக்கிறபடியால், யாருக்காவது ஊழியம் செய்ய வேண்டி நான் இங்கு திரும்பி வருவது வழக்கம். ஆனால் இப்பொழுதோ, இம்மகத்தான செய்தி பிரசங்கிக்கப்படுவதற்காக, அந்த சந்திப்புகளை விட்டு விட வேண்டும்.
2251 இப்புத்தகத்திலிருந்து நாம் பிரசங்கிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக ஒரு காரியம். ஆதியில் ஒரு பெந்தேகொஸ்தே சபையானது இருந்தது. அந்த பெந்தெகொஸ்தே சபையானது பரிசுத்த ஆவியின் வல்லமையால் கிரியை செய்து, அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை எழுதிற்று. இரண்டாவது கட்டத்தில் சபையானது நலிவடைய ஆரம்பித்து பெலனற்ற வெறும் சம்பிரதாய ரீதியிலானதாக ஆரம்பித்தது. இரண்டாவது சபைக்காலமானது உண்மையாகவே பெலனற்ற சம்பிரதாயங்களைப் பின்பற்றக் கூடியதாக மாறிவிட்டது. ஆயினும், அச்சிறிய பெந்தேகொஸ்தே வித்தானது, ஆவிக்குரியப்பிரகாரமாக தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. அதன் பிறகு, சபையானது இருளின் காலங்களுக்குள் பிரவேசித்தது, அவ்விருள் காலம் உபத்திரவம் நிறைந்ததாக சுமார் 1400 ஆண்டுகளுக்கு நீடித்தது. அப்படிப்பட்ட இருள் காலத்திலும் கூட அந்த வித்தானது தொடர்ந்து ஜீவித்து வந்தது. அது எவ்வாறு பிழைத்து என்று என்னை கேட்காதீர்கள். அது தேவனுடைய கரமாயிருந்தது, அதுவே அவ்வாறு அவ்வித்தை பிழைத்திருக்கச் செய்திருக்க முடியும். 52 காரணம், அவர்களை கம்பங்களில் கட்டிப் போட்டார்கள். கூர்மையான அடி மரங்களில் அவர்களைத் தூக்கிப் போட்டு, அவர்கள் கால்களில் கூர்மையான மர ஆப்புகளை கடாவி, அவர்களின் பின்புறமாக இருந்து மிருகம், நாய்கள் அவர்களை கடித்திழுத்து, அவர்களுடைய குடல்களை வெளியே இழுத்து, அவர்கள் மரிக்கும் முன்பாகவே, அவர்களை தின்று விடும்படி செய்தனர். பெண்களின் வலது மார்பகத்தை அந்தவிதமாக அறுத்து, உயிர் பிரியும் வரை அவர்களை இரத்தம் வடியும்படி நிற்க வைத்தார்கள். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுக்களை வெளியே எடுத்து அவற்றை அவர்கள் கண்கள் முன்பாகவே காட்டுப்பன்றிகளுக்கும், நாய்களுக்கும் இரையாக கொடுத்தார்கள். அப்படிச் செய்வதுமே கிறிஸ்தவமாக கருதப்பட்டது. ஆனால் வேதமோ கூறியிருந்தது, இயேசு, “உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்” என்றார். பார்த்தீர்களா?
2353 இவ்வாறு அக்காரியமானது ஊர்ந்து அடுத்த சபைக் காலத்திற்கும் வந்தது. பின்பு இறுதியாக அது வெளியே வந்தது. அதன் பிறகு, சபையானது சீர்த்திருத்தக் காலத்திற்குள் வந்து, அதன் பின்பு, மேலும் மேலும் ஆவியானவரை விட்டு வழுவிப் போய்க் கொண்டே இருந்தது, அது இக்கடைசிக் காலத்திலும் வந்து, இப்பொழுது, அது மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கும் கட்டத்திற்கு ஆயத்தமாக தன்னை ஒருமுகப்படுத்திக் கொண்டுள்ளது. 54 ஆனால் இயேசு வரும் வரையிலும் அந்த மகத்தான ஆவியானவர் அவரது ஜனங்களின் உள்ளங்களில் ஜீவித்துக் கொண்டேயிருப்பார். அது அவ்வாறு தான் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 55 காரியமானது அவ்வாறே உள்ளது என்பதை சரித்திரம் மற்றும் அனைத்துக் காரியங்களிலிருந்தும் நாங்கள் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க முடியும். சரித்திரம் என்ன கூறுகிறது என்பதையும், வேதம் என்ன கூறுகிறது என்பதையும் ஒரு சேர எடுத்துப் படித்துப் பாருங்கள். அப்பொழுது அவைகள் எவ்வளவு சரியாக பொருந்துகிறது என்பதைக் காண்பீர்கள். ஓ! 56 இதை வெறும் சொற்பொழிவாக நாம் எடுத்துக் கொள்ளாமலிருப்போமாக, ஆனால் நாம் பயபக்தியுடன் பரிசுத்த ஆவியானவர் அளிக்கும் எச்சரிக்கைகளை எடுத்துக் கொண்டு, இரவும் பகலும் ஜெபிப்போமாக. ஜெபிக்கிறதிலிருந்து எந்தவொன்றும் உங்களை தடை செய்ய வேண்டாம்.
2457 நாம் இவைகளுக்குள்ளாக சென்று, அந்த மகத்தான தேவ மனிதர்களின் வாழ்க்கைகளைத் தோண்டிப் பார்க்கையில் அவர்கள் எவ்வாறு தியாகம் செய்தார்கள் என்பதை காணலாம். அப்பொழுது நீங்கள் எவ்வாறு ஒன்றுமே செய்யவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள். சில சமயங்களில் நான் இதைக் குறித்து சிந்திக்கையில், நான் என்னைக் குறித்து, நமக்கு எப்படி எல்லாம் சுலபமாக உள்ளது, அவர்களுக்கோ எப்படி எல்லாம் மிகவும் கடினமாக இருந்தது என்று எண்ணி வெட்கப்படுவதுண்டு. எபிரேயர் 11-ம் அதிகாரத்தில் பவுல், “…செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போத்துக் கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள்” என்று கூறினான். அவர்களுடைய சாட்சியை விட நமது சாட்சி எந்த விதத்தில் மிஞ்சி நிற்கப் போகிறது? அதனருகில் நம்முடையது எப்படியிருக்கும்? நமக்கோ எல்லாம் அருமையாக இருக்க வேண்டியதாய் உள்ளது.
2558 நாம் இந்தப் புத்தகத்தை திறக்கும் முன்பு, அப்படியே மரியாதையோடு எழுந்து நிற்க முடிந்த நாம் யாவரும் ஜெபத்திற்காக சற்று நேரம் எழுந்து நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, உங்கள் இருதயத்தில் உத்தமத்துடன் தேவனை நோக்கி ஜெபத்தை ஏறெடுங்கள். 59 தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, எல்லா நன்மையும், பரிபூரணமான ஈவுகளையும் அளிப்பவரே, உமக்கெதிராகவும், எங்கள் உடன் சகோதரருக்குள்ளே ஒருவருக்கொருவர் எதிராகவும் நாங்கள் செய்துள்ள எங்கள் பாவங்களையும், எங்கள் மீறுதல்களையும், எங்களுடைய எல்லா வேற்றுமைகளையும் கர்த்தாவே, நீர் எங்களுக்கு மன்னிதருள வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். 60 இவ்விதமாக நாங்கள் ஒன்று சேர்ந்து கூடிவரும் இவ்வேளையானது எங்களுடைய சொந்த ஆத்துமாக்கள் பக்தி விருத்தியடைவதற்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்கு நாங்கள் சென்று இவற்றை கூறுவதற்கேதுவாக, எங்கள் இருதயங்களை அந்த விதத்தில் எங்களை பிரகாசிப்பித்து, எங்களுக்கு ஆவியின் ஏவுதலைத் தாரும். கிறிஸ்துவின் முழு சரீரத்தோடு எங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதற்காக, எங்களை மறுபிரதிஷ்டை செய்து கொள்ளத்தக்கதான ஒரு நேரமாயும், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தப்படுத்துகிற ஒரு நேரமாயும் இது இருப்பதாக. 61 பிதாவாகிய தேவனே, எனது சொந்த உணர்வுகளின்படியல்ல, உம்முடைய ஊழியக்காரனாகிய நானும், மற்றுமுள்ள ஏனைய தேவ ஊழியக்காரர்களாகிய நாங்கள் அனைவரும், இந்த மகத்தான பணிக்கு போதுமானவர்கள் அல்ல என்பதை அறிந்திருக்கிறோம். கடந்த காலங்களில் மறைந்துபோன எத்தனை மகத்தான மனிதர்கள் தங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு இதை வெளிப்படுத்த முயற்சித்தனர் என்றும், இந்த மகத்தான வெளிப்படுத்தின விசேஷத்தை வியாக்கியானிக்கவும் முயன்றார்கள் என்பதையும் தெளிவாக அறிந்திருக்கிறோம்; அதன் பிறகு, நாங்கள் அவர்களை விட எத்தனை அதிகமாக தகுதி குறைவானவர்கள் என்பதையும் உணருகிறோம். ஆனால் நீரே எங்களுடைய நிறைவாக இருக்கிறீர்.
2662 பரலோகப் பிதாவே, நீர் இந்த வேளையில் விசேஷித்ததொன்றை செய்வீர் எனவும், ஒவ்வொரு இருதயத்திலும் பரிசுத்த ஆவியானவர் முதன்மை ஸ்தானம் வகிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். பேசுகிற உதடுகளையும் கேட்கிற செவிகளையும் விருத்தச்சேதனம் செய்யும். இவை யாவும் முற்றுப் பெறுகையில், அதை நாங்கள் உமக்கே அர்ப்பணம் செய்கிறோம். இந்த ஜெபவீட்டின் வாசலை விட்டு நாங்கள் புறப்பட்டுச் செல்கையில், “அங்கே நாம் சென்றது நமக்கு நலமாயிருந்தது, பரிசுத்த ஆவியானவர் நாம் அங்கே அமர்ந்திருக்கையில் நம்மோடு பேசினார். இப்பொழுது சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கையில் நாம் நம்மால் இயன்ற அளவு யாவற்றையும் அவருக்காக செய்திட தீர்மானித்துள்ளோம்” எனக் கூறிக் கொண்டே கடந்து செல்ல அருள் புரியும். கர்த்தாவே. 63 இந்தக் கூட்ட நேரத்தில் புருஷர்களும் ஸ்திரீகளும் ஒரு புதிய பிடிப்பை பெற்றுக்கொள்வார்களாக. அந்நிய பாஷைகளை பேசுகிறவர்களையும் அவற்றை வியாக்கியானிக்கிறவர்களையும் நீர் எழுப்பும். தீர்க்கதரிசன் வரங்களை நீர் எழுப்பியருளும். சபையானது பக்தி விருத்தியடையும்படி பிரசங்கிகளையும், போதர்களையும், சுவிசேஷர்களையும் எழுப்பும். அப்பாலுள்ள தேசங்களுக்கு மகிமையான இச்சுவிசேஷத்தினைக் கொண்டு செல்லத்தக்கதாக மிஷனரிமார்களை எழுப்பும். இந்த வார்த்தை எங்கெல்லாம் செல்லுகிறதோ, அது அங்கே நல்ல நிலத்தில் விழுந்து நூறத்தனையாக பலங்களைக் கொண்டு வருவதாக. ஏனெனில் நாங்கள் காலத்தின் முடிவில் இருக்கிறோம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். முடிவோ சமீபித்துவிட்டது. 64 பிதாவே, இந்தக் காரியங்களை எங்களுக்கு அருளும். கர்த்தாவே, எல்லாவற்றுக்கும் மேலாக, இவ்வேளையில், தேவையுள்ள ஒருவனாகிய எனக்கு நீர் உதவியருளும். இவ்வாராதனைகளுக்காக நான் என்னையே உம்மிடம் ஒப்படைக்கையில் நான் இதை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.
27[ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறார். ஒரு சகோதரன் அதற்கு வியாக்கியனம் அளிக்கிறார்.—ஆசி.] 65 வல்லமையுள்ள தேவனே, இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியவரே, உம்முடைய ஆவியானவர் எமது நடுவில் வாசம் பண்ணுகிறார் என்பதை அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் எப்பொழுதும் உண்மையுள்ளவராயிருக்கிறார். ஒரு போதும் பொய்யுரையாதவர். உம்முடைய மகிமைக்காக, இப்பொழுது பிதாவே, நாங்கள் உமது வார்த்தையை வாசிக்கையில், இன்னும் உறுதிப்படுத்தும். “ஏதோ ஒன்று வரப்போகிறது. அதற்காக ஆயத்தப்பட்டு, தயாராயிருங்கள்” என்று நீர் கூறினது போல, ஒவ்வொரு இருதயமும் ஆயத்தமாயிருப்பதாக. ஜனங்கள் இப்பொழுது செய்து கொண்டு வருகிற தவறான காரியங்களிலிருந்து திரும்பி, உண்மையான பாதைக்குத் திரும்பும்படி, அவர்கள் தங்களுடைய கடைசி எச்சரிப்பை பெறுவார்களாக. பரிசுத்த தேவனே, உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென்.
2866 வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் 1-ம் அதிகாரத்திற்கு இப்பொழுது திருப்புவோம். இப்பொழுது முதலில் வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் முதல் மூன்று வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். இந்தத் தீர்க்கதரிச வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
2967 நான் இதற்கு முன்பே கூறியிருப்பதுபோல, இப்பொழுது இந்தப் புத்தக்கத்தை, சரித்திரப்பிரகாரமாக ஒரு சிறு பகுத்தாய்வு செய்யப் போகிறோம். ஒவ்வொரு தடவையும் நான் இங்கு எழுதி வைத்துள்ள பக்கங்களிலிருந்து குறிப்புகளை காண்பிக்கும் போது, நான் அவைகள் வியாக்கியானப் புத்தகங்களிலிருந்து (Commentaries) எடுத்துள்ளேன். 68 இப்பொழுது, ஒன்று, இந்தப் புத்தகத்தை எழுதியவன் யோவான், திவ்ய வாசகனாகிய பரிசுத்த யோவான் எதிர்கால சந்ததிக்கு எழுதினான். இரண்டாவது அப்போஸ்தலர் காலம் முதல் கர்த்தருடைய வருகை மட்டும் உள்ள ஏழு வெவ்வேறு கிறிஸ்தவ சபைக் காலங்களின் ஏழு வெவ்வேறு தூதர்களுக்கும் எழுதப்பட்டதாகும். கர்த்தர் பரத்திற்கு ஏறின நாள் முதல் அவர் நம்முடைய கர்த்தரின் பரமேறுதலிருந்து அவர் மீண்டும் வரும் வரை இந்த ஏழு சபைக் காலங்கள் தொடர்ந்து ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சபைக் காலத்திற்குரிய அதனதன் ஆவிக்குரிய நிலைமை இதில் விவரிக்கப்பட்டுள்ளது. வேதப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் அவைகளண்டை பேசுவதன் மூலம், ஒவ்வொரு சபைக்காலமும் தன்னைத் தானே உற்று நோக்கிக் கொள்ள முடியும். ஆவியானவரே பேசுகிறபடியால் ஒவ்வொரு சபைக்காலமும் அதனை உற்று நோக்க முடியும். ஒவ்வொரு சபைக்காலமும் புத்தியுள்ள கன்னிகையாகிய கிறிஸ்துவின் மெய்யான திராட்சை செடியையும், புத்தியில்லாத கன்னியராகிய ஒட்ட வைக்கப்பட்ட திராட்சைச் செடியையும் தன்னகத்தே உடையதாகக் காணப்படுகிறது.
3069 இந்த யோவானுடைய வாழ்க்கையை சரித்திரக்காரர்கள் ஒப்புக்கொள்கின்றனர். தனது வாழ் நாளின் இறுதிக் கட்டத்தில் எபேசு பட்டணத்தில் வாழ்ந்து, அங்கேயே தான் அவன் மரித்தான். வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை யோவான் எழுதும் நேரத்தில், அவன் பத்மு என்னும் தீவில் இருந்தான். இதுவோ அவனுடைய வாழ்க்கை வரலாறாயிருக்கவில்லை, ஆனால் எதிர் காலங்களில் உள்ள கிறிஸ்துவின் வரலாற்றைக் கூறுவதாகவே இது உள்ளது. புரிகிறதா? அது ஒரு தீர்க்கதரிசினமாயிருந்தது. இது யோவானின் வாழ்க்கை வரலாறு அல்ல, இது கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறும் அல்ல. ஆனால் இது வரப்போகும் ஒரு காலத்தை குறித்த ஒரு தீர்க்கதரிசனமாகும். இது யோவானின் தீர்க்கதரிசன கூற்றுகளல்ல; ஆனால் பயபக்திக்குரிய கர்த்தருடைய மேன்மைப்படுத்துதல்களாகும். இப்புத்தகம் திவ்ய வாசகனாகிய பரிசுத்த யோவானைப் பற்றிய வெளிப்படுத்துதல் அல்ல, ஆனால் இது கர்த்தராகிய கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாகும். 70 இப்புத்தகம் புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தின் கடைசிப் புத்தகமாகும். அதே சமயத்தில் அது சுவிசேஷ யுகத்தின் துவக்கத்தையும், முடிவையும் பற்றி உரைக்கிறது. அது சரிதான் என்று வேத அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றார்கள். 71 ஏழு சபைக் காலங்களுக்கென்று எழுதப்பட்ட இந்நிரூபங்கள், தீர்க்கதரிசனமாக எதிர் வரும் காலங்களுக்கென்று எழுதப்பட்டவைகளாகும். பவுலும் கூட தன் காலத்தில் இருந்து வந்த ஏழு சபைகளின் காலத்தையும் மற்றும் மகிமையைப் பற்றி எழுதினான். யோவானோ எதிர்வரும் காலங்களில் உள்ள ஏழு சபைகளின் காலம் மற்றும் மகிமையைப் பற்றி எழுதி, அவைகளை நேரடியாக அந்தந்த சபையின் போதகர் இல்லை, தூதர்களுக்கு மற்றும் இந்த வெவ்வேறு ஏழு தூதர்களின் கீழ் வாழும் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் நேரடியாக எழுதிக்கொண்டிருந்தான்.
3172 இப்பொழுது இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை காலை, மாலை என இரு வேளைகளிலும் நாம் ஆராயப்போகிறோம். காலை ஆராதனையை கிட்டத்தட்ட 11 மணி மற்றும் 11.30 மணி அளவில், அதைப் போல முடித்துக் கொள்ள முயற்சிப்போம். அதன் பின்னர் இரவு ஆராதனையை இரவு 7 மணிக்கு ஆரம்பிப்போம்.
3273 இப்பொழுது இந்த முதலாம் அதிகாரத்தின் பொருளடக்க அட்டவணையைப் பார்ப்போம். முதலாம் வசனம், அது—அது உண்மையாகவே தனக்காக பேசுகிறது, ஏனென்றால் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாய் அது உள்ளது. 2-ம் வசனம், திவ்ய வாசகனாகிய பரிசுத்த யோவானே வேதபாரகன் மற்றும் தேவ ஊழியக்காரனாகக் கூறுகிறது. 3-ம் வசனம், ஆசீர்வாதங்களை உரைத்துள்ளது. 4-ம் வசனம் முதல் 6-ம் வசனம் முடிய சபைக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது. 7-ம் வசனம், அறிவிப்பாய் உள்ளது. 8-ம் வசனம் இயேசு கிறிஸ்துவின் உன்னத தெய்வீகத் தன்மையாயுள்ளது. 9-ம் வசனம் முதல் 20-ம் வசனம் முடிய பத்மு தீவு தரிசனம். 74 14-ம் மற்றும் 15-வது வசனங்கள் அவருடைய ஏழுவிதமான மகிமையின் தன்மையை விவரிக்கிறது. ஓ, நாம் கிறிஸ்துவை அவருடைய ஏழுவிதமான தன்மையின் தோற்றங்களில் அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலில் உள்ள ஏழு விதமான தன்மையின் தோற்றங்களில் காணும்போது, அது அழகாயுள்ளது.
3375 இப்பொழுது தலைப்பே குணாதிசயத்தை விவரிக்கிறது. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல்… 76 திவ்விய வாசகனாகிய பரிசுத்த யோவானைப் பற்றிய வெளிப்படுத்துதல் அல்ல இது. ஆனால் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாகும். 77 வெளிப்படுத்துதல் என்ற பதம் கிரேக்க மொழியில் அபோகலிப்ஸ் (Apocalypse) என்பதாகும். அதன் பொருள் “திறக்கப்படுதல்” என்பதாகும். நான் இந்த வார்த்தையை எடுத்துக் கொண்டு அதைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தேன். அதன் பொருள், அதாவது அபோகலிப்ஸ் என்ற இந்த வார்த்தைக்கு, ஒரு சிற்பி ஒரு சிலையைப் செதுக்கி அதை ஒரு திரைச் சீலையினால் மூடி, மறைத்து விட்டு, பின்பு, அதை அவனே அந்தத் திரைச் சீலையை நீங்கி, அந்தத் திரைக்குப் பின்னால் என்ன உள்ளது என்று திறந்து காண்பிப்பதுபோல் உள்ளது. அது திரை நீக்குவதாகும். 78 ஆயினும் இப்புத்தகம் இயேசு கிறிஸ்து என்ற நபரைப் பற்றி மிகவும் அதிகமான அளவில் திறந்து கொடுக்கவில்லை. அதே சமயத்தில் அது நிச்சயமாக அவரது தெய்வீகத் தன்மையைப் பற்றியும், அவருடைய ஏழுவிதமான மகிமையான தோற்றங்களையும், அவர் என்னவாக இருக்கிறாரோ அதைப்பற்றியும், அதாவது, பிரதான ஆசாரியன், இராஜா போன்ற காரியங்களைப் பற்றியும் கூறுகிறது என்பது உண்மையே. ஆனால் வரவிருக்கின்ற அவரது ஏழு சபைக் காலங்களிலும் அவருடைய எதிர்வரும் கிரியைகளைப் பற்றி இது வெளிப்படுத்துகிறது. அது…
3479 நமது கர்த்தர் பூமியில் இருந்தபோது, சீஷர்கள் அவரிடம், “…இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்” என்று கேட்டார்கள். 80 இயேசு, “அந்தக் காலத்தையும் வேளையையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல” என்று கூறினார். ஒருவரும் அதை அறியமாட்டார்கள். “குமாரனுங்கூட அதை இதுவரை அறியவில்லை” என்று கூறினார். 81 ஆனால் அவரது மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் மகிமைக்குள்ளாக பரமேறுதலுக்குப் பின்பு, சபையின் எதிர்காலத்தைப் பற்றி அவர் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார். பின்பு, சபைக்கு இச்செய்தியை கொடுக்க மீண்டும் திரும்ப வந்தார். இது அவரது வருகையைப் பற்றிய செய்தியாயும், மற்றும் காலங்களினூடாக அவருடைய சபைகளின் நிலையைக் குறித்ததுமானதாய் உள்ளது. 82 அவரது மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு முன்பாக அவர் இதைச் செய்ய முடியவில்லை, ஏனெனில் அவர் உலகில் இருக்கையில் இன்னும் அதை அறிந்து கொள்ளவில்லை. ஆனால் இங்கு இந்த குறிப்பிட்ட வசனம் எவ்வாறு வாசிக்கப்படுகிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? …தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும்…வெளிப்படுத்தினதுமான விசேஷம் (கிறிஸ்துவுக்கு),… 83 பிதாவாகிய தேவன், தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு எவ்வாறு அந்த வெளிப்படுத்துதலை அளித்தார்! அவர் தம்முடைய தூதனை யோவானிடத்திற்கு அனுப்பி, இவைகளைத் தெரியப்படுத்தினார். இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவரைப் பற்றி தெரியப்படுத்தினார். ஓ! இது எவ்வளவு அழகாக அமைந்துள்ளது!
3584 இப்பொழுது, இந்த மகத்தான வருகையின் காலத்தை யோவான் கண்டானே! …இப்பொழுது இவைகள், கிறிஸ்து என்னவாக இருப்பார், எவ்வாறு ஒவ்வொரு காலத்திலும் இருப்பார் என்பதைப் பற்றிய கிறிஸ்துவின் குறிப்பிட்ட நோக்கத்தை திட்டவட்டமாக வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்த வெளிப்பாடு யோவானுக்கு அளிக்கப்பட்டது. அந்தக் காரணத்தினால் தான் இன்று காலையில் நான் உங்களிடம், உண்மையான சபையின் மேல் உங்கள் சிந்தையை வையுங்கள் என்று கூறினேன். உண்மையான சபை பெந்தேகோஸ்தே நாளில் துவங்கினது. 85 எந்தவொரு வேத சாஸ்திரியோ, வேத பண்டிதனோ, அல்லது சரித்திரக்காரனோ, உண்மையான சபையானது மார்ட்டின் லூதர் காலத்திலோ, வெஸ்லி காலத்திலோ கத்தோலிக்க காலத்திலோ அல்லது வேறெந்த காலத்திலோ ஆரம்பித்தது என்று கூற முடியாது. அது பெந்தெகொஸ்தே நாளில் ஆரம்பித்தது. அதுவே சபையின் தொடக்க விழாவாயிருந்தது. அதுவே அதன் ஆரம்பமாயிருந்தது. ஆகவே இக்காரியத்தைப் பற்றி எவருடனாவது விவாதிக்க நேர்ந்தால், அப்பொழுது அந்த துவக்கமான பெந்தெகொஸ்தே வாசலண்டையிலே நில்லுங்கள். அவர்களால் வேறு எங்கும் வாதத்தை கொண்டு செல்ல முடியாது.
3686 அது ஒரு முயலை ஒரு விளை நிலத்தில் விடுவதைப் போல் உள்ளது. எல்லாப் பொந்துகளையும் நீங்கள் அடைத்து விட்டால், அப்பொழுது முயலானது அது உள்ளே வந்த அதே இடத்திற்கே திரும்பி வர வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 87 நல்லது, அவ்விதமாகத்தான், சபைகளைக் குறித்தும், சபைக் காலங்களைக் குறித்தும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளைக் குறித்தும் எவரிடத்திலேனும் பேசினால், நீங்கள் மூல நிலைமைக்கு, ஆரம்பத்திற்கே வரவேண்டும். தேவன் முடிவில்லாதவர் மற்றும் அவர் சர்வ வல்லவர் என்ற காரணத்தால் அங்குதான் திரும்பி வரவேண்டும். எனவே அவர் முடிவில்லாதவராதலால், அவர் இங்கு ஒன்றைச் செய்து விட்டு, பின்பு அதற்கு முரணாக இங்கே வேறொன்றைச் செய்ய முடியாது. முதலில் அவர் எப்படிச் செய்தாரோ, அவ்வாறே ஒவ்வொரு தடவையும் அவர் செய்ய வேண்டியவராயிருக்கிறார். 88 புறஜாதிகள் பரிசுத்த ஆவியைப் பெற்ற நாளில் பேதுரு கூறினான். அவன், “நம்மைப் போல் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா?” என்று கூறினான்.
37இயேசு, அவர் பூமியின் மேலிருந்தபோது உரைத்தது, கூறினது, “இது…” 89 ஒருவன் இயேசுவினிடத்திற்கு வந்து, “புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்திரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா?” என்று கேட்டான். 90 அதற்கு அவர் பிரதியுத்தரமாக, “ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன்…” என்றார். அதற்கு அவர்கள், “அப்படியானால் தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டான்” என்றார்கள். இயேசு அதற்குப் பிரதியுத்தரமாக, “ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை” என்று கூறினார். 91 ஆதிக்கே திரும்பிச் செல்லுங்கள். ஆகையால், நாம் சபைக் காலத்தின் பேரில் பேசப்போகிறோமென்றால், காலங்களினுடாக மனிதன் அதைப்பற்றிக் கருத்துரைத்தவைகளை ஒருபுறம் தள்ளிவிட்டு, நாம் துவக்கதிற்கே செல்ல வேண்டும்.
3892 வேதத்திலுள்ள புத்தகங்களிலெல்லாம், வெளிப்படுத்தின விசேஷப்புத்தகமே மிகவும் அதிகாரப்பூர்வமான புத்தகமாகும். இது கிறிஸ்து தனது முத்திரையைப் பதித்திருக்கிற ஒரே புத்தகம். இப்புத்தகம் ஆசீர்வாதத்தோடு ஆரம்பித்து, சாபத்தோடு முடிவடைகின்றது, “இப்புத்தகத்தை வாசிக்கிறவன் பாக்கியவான்” என்று தொடங்கி, “இதிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போடுகிறவன் சபிக்கப்பட்டவன்” என்று முடிவாகக் கூறப்பட்டுள்ளது. 93 இது மாத்திரமே வேதம் முழுவதிலும் கிறிஸ்துவினால் எழுதப்பட்ட ஒரே புத்தகமாகும். அவர் தன்னுடைய விரல்களினால் பத்துக் கற்பனைகளை எழுதினார். அது உண்மை. யூதர்களும் அதைக் கடைபிடித்து வருகிறார்கள். இன்று, இது வெளிப்படுத்தின விசேஷமாயுள்ளது. 94 சாத்தான் வேதத்தில் எந்தப் புத்தகத்தை வெறுக்கிறானென்றால், அது வெளிப்படுத்தின விசேஷப் புத்தகமாகும். அங்கே இரண்டு…அவன் எல்லா வேத வாக்கியத்தையுமே, அதாவது முழு வேத கட்டளைகளையும் வெறுக்கிறான். ஆனால் அவன் அதிகமாக வெறுக்கிறதோ வெளிப்படுத்தின விசேஷம் மற்றும் ஆதியாகமமம் என்பவைகளேயாகும். காரணம் ஆதியாகமம் ஆரம்பத்தைக் கூறுகிறது. வெளிப்படுத்தின விசேஷப் புத்தகமோ, கடைசி நாளில் அவனுக்கு என்ன நேரிடப் போகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. சாத்தான் ஆயிரம் ஆண்டுகள் கட்டிப் போடப்படவிருக்கிறான். அவன் பிறகு, அவனும், கள்ளத் தீர்க்கதரிசியும், மிருகமும் உயிருடன் அக்கினிக் கடலில் தள்ளப்படவிருக்கிறார்கள். 95 அவன் அதிகாரப் பூர்வமாயிருக்கிற ஆதியாகப் புத்தகத்தை தாக்குவான். அவன், அது “அதிகாரப்பூர்வமானதல்ல” என்று கூறுவான். அவன் ஜனங்களின் சிந்தையை கலக்குவான். முதலும் கடைசியுமான ஆதியாகமம் மற்றும் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகங்களில் சாத்தானைப் பற்றிக் கூறியுள்ளவைகளைக் கவனித்துப் பாருங்கள்.
3996 வேதத்திலுள்ள மற்றெந்த புத்தகங்களைக் காட்டிலும், வெளிப்படுத்தின விசேஷப்புத்தகத்தில் தான் அதிகமான அடையாளச் சின்னங்கள் உள்ளன. அது அதிகமான அடையாளச் சின்னங்களை உடையதாயிருக்கிறது, ஏனென்றால் அது ஒரு தீர்க்கதரிசன புத்தகமாகும். அது ஒரு தீர்க்கதரிசன புத்தகமாகும். அது ஒரு தீர்க்கதரிசன வகுப்பினரால் மாத்திரமே புரிந்து கொள்ளப்பட முடியும். இப்புத்தகம் யாவரும் புரிந்து கொள்வதற்கானதல்ல. இதை யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு குறிப்பிட்ட மக்கள் வகுப்பினருக்கு மட்டுமே இது எழுதப்பட்டுள்ளது. உபாகமத்தில், “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்…” என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மையே. அவர் மறைவானவைகளை நமக்கு, தம்முடைய பிள்ளைகளுக்கு வெளிப்படுத்துகிறார். எனவே அது மற்றவர்களுக்கு அல்ல… 97 மாம்ச சிந்தையுள்ள மனிதனால், வேதத்தின் மகத்துவமானவைகளை கிரகித்துக் கொள்ளமுடியாது. ஏனெனில் அவைகள் அவனுக்கு பைத்தியமாக உள்ளது. ஆனால் தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறவர்களோ அதை புரிந்து கொள்வார்கள். சபையாகிய அவர்களுக்கே அந்தப் புத்தகம் எழுதப்பட்டது. “எபேசுவிலுள்ள சபைக்கு, சிமிர்னாவிலுள்ள சபைக்கு மற்றும் தொடர்ந்து வரும் சபைக்கு, சபைகளுக்குத்தான்” இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் அளிக்கப்படுகிறது. சபைக்கு அளிக்கப்படும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல். எனக்கோ அது பிடிக்கும்.
4098 மேலும், கவனியுங்கள், இப்புத்தகம் வேத வாக்கியங்களின் நிறைவான முடிவாயிருக்கிறது. பூளோகரீதியிலும் அது சரியான ஸ்தானத்தில், அதாவது வேதத்தின் இறுதியி வைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள முழுமையான வெளிப்படுத்தலானது, அதை வாசிக்கிறவருக்கும், அதை வாசிக்கக் கேட்கிறவருக்கும் ஆசீர்வாதத்தையும், இதிலுள்ளவற்றோடு எதையாகிலும் கூட்டவோ, அல்லது இதிலிருந்து எடுத்துப் போடவோ செய்வோருக்கு சாபத்தையும் உடையதாக இருக்கிறது. அது தானே முழுமையான பிரமாணமாக உள்ளது, ஓ, அது முற்றிலுமானது. அதனோடு எந்தக் காரியமும் கூட்டப்படக் கூடாது. ஒரு மனிதன் இதிலிருந்து எந்தக் காரியத்தையாவது எடுத்துப் போட முயற்சிக்கும்போது அல்லது இதனோடு எந்தக் காரியத்தையாவது கூட்ட முயற்சிக்கும்போது, அவனுடைய பங்கை ஜீவபுத்தகத்திலிருந்து எடுத்துப் போடுவேன் என்று தேவன் கூறினார். புரிகிறதா? அவன் அதனோடு ஒன்றைக் கூட்டினால், அப்பொழுது அவனுடைய பங்கை ஜீவ புத்தகத்திலிருந்து அவர் எடுத்துப் போடுவார். 99 ஆகையால், நம்முடைய கர்த்தரின் பன்மடங்கு வெளிப்பாட்டை நாம் காணும்போது, அதாவது அவர் யார், அவர் என்னவாக இருக்கிறார் என்ற வெளிப்பாட்டுடன் எந்த நபராவது ஒன்றைக் கூட்டவோ அல்லது அதிலிருந்து எடுத்துப் போடவோ செய்தால், அது ஒரு கள்ளத் தீர்க்கதரிசனமாகும். அநேகர் வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்திற்கு பின்னரும் தாங்கள் வெளிப்பாட்டை பெற்றுள்ளதாக கூற முயற்சித்துள்ளனர். ஆனால் அதுவே அவரது சபைக் காலத்தில், அவரது நாட்களில், இயேசு கிறிஸ்துவைப் பற்றின முழுமையான, வெளிப்பாடாய் இருக்கிறது. நம்முடைய கர்த்தரைப் பற்றின ஒரு வெளிப்படுத்துதலாகும்! 100 ஆகையால், இப்பொழுது—இப்பொழுது திரைநீக்கப்படுதல், கிரேக்க வார்த்தையின்படி அதாவது மறைக்கப்பட்டுள்ள ஒரு காரியம் வெளிப்படுதல், கிறிஸ்துவை “வெளிப்படுத்துதல்.”
41இப்பொழுது, அடுத்த வசனத்தில், 2-ம் வசனத்தில் நாம் கண்டறிகிறோம். 101 முதலாம் வசனமானது கிறிஸ்துவை திரை நீக்கிக் காண்பித்தலாய் உள்ளது, வெளிப்பாடு, அல்லது திறந்து காண்பித்தல். ஓ, எவ்வளவாக அப்போஸ்தலருக்கு கடைசிக்காலம், மற்றும் கர்த்தருடைய வருகையைப் பற்றிய காரியங்கள் மறைக்கப்பட்டிருந்தன! அவர்கள் கேள்வி கேட்டனர், ஆனால் ஒருவன் மட்டுமே வெளிப்பாட்டை பெற உயிர் வாழ்ந்தான். ஆயினும் அவனும் அதைப் புரிந்து கொள்ளவில்லை, ஏனென்றால் அது அப்பொழுது இன்னும் சரித்திரமாக்கப்படாமலிருந்தது. 102 இப்பொழுது, இப்புத்தகத்தின் வரலாறு அல்லது இப்புத்தகத்தின் பொருளடக்கம், அப்பொழுது ஆசியா மைனரில் இருந்த ஏழு சபைகளுக்கு எழுதப்பட்டது. அது அந்த ஏழு சபைகளுக்கு எழுதப்பட்டது. அந்த நாளில் அந்த ஏழு சபைகளைக் காட்டிலும் அதிகமான சபைகள் இருந்தன. ஆனால் ஆசியா-மைனரில் இருந்த அந்த ஏழு சபைகளும், எதிர்வரும் ஏழு சபைக்காலங்களில் இருக்கப்போகும் சபைகளின் தன்மையை பிரதிபலிப்பதாக இருந்தால், அவைகள் முக்கியத்துவம் பெற்றன. எபேசு சபை என்று கூறும்போது, அது எபேசு சபைக்காலத்தின் தன்மையைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. சிமிர்னா, பெர்கமு, பிலதெல்பியா மற்றும் உள்ள சபைகள் ஒவ்வொன்றும், எதிர்வரும் அந்தந்த சபைக் காலத்தின் தன்மையை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன. ஓ! உங்களால் மட்டும்…
42103 எந்தவொரு மனிதனாவது வேத வாக்கியங்களை ஆவிக்குரிய பிரகாரமாக சம்பந்தப்படுத்திக் காண்பிப்பதை கண்டும் கூட, அவை தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டவை அல்ல என்று எவ்வாறு கூற முடியும்? உங்களுடைய கிரியை, நோக்கம், ஜனங்களின் எண்ணங்கள் இவையாவும் வேத வாக்கியங்கள் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டவை என்பதை நிரூபிக்கின்றன. காரணம் தேவன் அவற்றை எவ்வாறு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறார் என்பதைப் பார்க்க முடிகிறது. நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்களோ, அது ஏதோ ஒன்றின் மாதிரியாய் இருக்கிறது. 104 ஆபிரகாம் தனது ஒரே பேரான குமாரன் ஈசாக்கை பலியிட ஒப்புக்கொடுத்தபோது, அச்செயலானது, அநேக நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தேவன் தமது குமாரனை பலியாக ஒப்புக் கொடுத்ததற்கு ஒரு மாதிரியாய் உள்ளது. எவ்வாறு யோசேப்பு தன் தகப்பனால் நேசிக்கப்பட்டு, தன்னுடைய சகோதரர்களால் வெறுக்கப்பட்டு, விற்கப்பட்டு சிறையில் இருந்தது, அது இயேசுவுக்கு மாதிரியாய் இருந்தது. ஒரு மனிதனாகிய யோசேப்பின் மூலம் ஆவியானவர் கிரியை செய்து, கிறிஸ்துவின் வாழ்க்கைக்கு பரிபூரணமான எளிமையான மாதிரியை ஏற்படுத்தினார். எப்படியாய், தாவீதைப் போலவே தாவீதின் குமாரனும் அதே மலையின் மேல் அமர்ந்தார். தாவீது புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக் மலையில் மேல், ஒலிவ மலையின் மேல் ஏறிச் சென்று, திரும்பிப் பார்த்து ஒரு புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக அழுதான். அதன்பின்னர் ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து தாவீதின் குமாரனும் அதே மலையின் மேல் ஏறி, ஒரு புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக எருசலேமைப் பார்த்து அழுதார். ஆவியானவரின் மாதிரியையும் முறையையும் உடையவராயிருக்கிறார். ஓ!
43105 இந்தக் கடைசி நாட்களில் உங்களால் அந்த மகத்தான பெந்தெகொஸ்தே சபையைக் காண முடிகிறதா? பெந்தெகொஸ்தே நாளில் தேவன் எவ்வாறு அதை ஆரம்பித்து வைத்தார் என்பதை உங்களால் காண முடிகிறதா? அந்த ஆவியானவர் எல்லாக் காலங்களினூடாகவும் அந்த சபையில் தொடர்ந்து தரித்திருக்க வேண்டும். 106 அவர்கள் சம்பிரதாயங்களையும், முக்கியத்துவமற்றவைகளையும் பெற்றுக் கொண்டனர். அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை பெற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அவர்கள் சபையையும் அரசையும் ஒன்றாக இணைக்க வேண்டியதாயிற்று, அவர்கள் முடிவிலே அதைச் சாதித்து முடிக்க நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு உபத்திரவத்தை உண்டாக்கக் காரணமாயிற்று, அதன்பிறகு சீர்திருத்தத்தின்போது, அவர்கள் வெளியே வந்தார்கள். அதன் பின்பு ஒவ்வொரு ஆண்டும், ஆவியானவரை விட்டு அவர்கள் தங்களை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துக் கொண்டு மாம்சப் பிரகாரமான காரியங்களை இன்னும் கூடுதலாக தங்களோடு சேர்த்துக் கொண்டே வந்தார்கள். இப்பொழுது வரையிலுமே அவர்கள் அதை மீண்டும் செய்ய ஆயத்தமாயிருக்கிறார்கள். நாம் இந்த கடைசி, முடிவான வேளையில், சபையின் முடிவான வேளையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பிலதெல்பியா…இல்லை, லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருக்கிறோம்.
44107 இப்பொழுது, 1-ம் அதிகாரம், 1-ம் வசனமானது, யோவானை அறிமுகப்படுத்தியது. இப்பொழுது எழுத்தாளர் யார்? யோவன், யோவான். இப்புத்தகம் யோவானைப் பற்றிய ஒரு வெளிப்படுத்துதல் அல்ல, அது அவ்வாறில்லையென்பதை நாம் அறிவோம், ஏனென்றால், இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாகும். யோவான் ஒரு சீஷனாக இருக்கும்படி தெரிந்து கொள்ளப்பட்டான். இப்புத்தகம்தாமே இயேசு கிறிஸ்து தம்மை யார் என்று வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. 108 இது…அனுப்பி…“இது அவர் தம்முடைய தூதனை அனுப்பி யோவானுக்குத் தெரியப்படுத்தினார்.” அந்தத் தூதன் யார் என்பது நமக்குத் தெரியாது. அந்தத் தூதன் யாராயிருந்தார் என்று வேதம் கூறவில்லை. ஆனால், அந்தத் துதன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஏனெனில், வேதத்தில் அதன்பின்னர், “இயேசுவாகிய நானே சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளை அறிவிக்கும்படியாக என் தூதனை அனுப்பினேன்” என்று கூறப்பட்டுள்ளது.
45109 யோவான் அத்தூதனை அவன் காலில் விழுந்து வணங்க முற்பட்டபோது, அத்தூதன், “இப்படி செய்யாதபடிக்கு பார்” என்று கூறினான் என்பதை நாம் கண்டறிகிறோம். அது வெளிப்படுத்தின விசேஷம் 22-ம் அதிகாரம் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவன், “நீ இப்படி செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும், தீர்க்கதரிகளோடும் கூட நானும் உடன் ஊழியக்காரன்” என்றான். அது எலியாவாக இருக்கக் கூடும். தீர்க்கதரிசிகளில் ஒருவனாக இருந்திருக்கக் கூடும். யோவான் அப்போஸ்தலனாக இருந்தான். ஆனால் இத்தீர்க்கதரிசி அனுப்பப்பட்டான். 110 யோவான் அப்போஸ்தலனாக இருந்தபடியால் அவனுடைய ஏனைய நிரூபங்களின் தன்மையைப் பாருங்கள்; அவைகள் வெளிப்படுத்தின விசேஷத்தை யோவான் தானே எழுதவில்லை என்பதை நிரூபிக்கிறது. ஏனென்றால் அதற்கு யோவானின் ஏனைய நிரூபங்களில் காணப்படும் தன்மை இருக்கவில்லை. யோவான் எழுதிய முதலாம் நிரூபம், இரண்டாம் நிரூபம் ஆகியவைகளை எடுத்துப் படித்துப் பாருங்கள். அவைகளினுடைய தன்மையைப் பாருங்கள், அதன்பின்னர் வெளிபடுத்தின விசேஷப் புத்தகத்தின் தன்மையையும் பாருங்கள். யோவான் ஒரு எழுத்தாளனாகவும், ஒரு அப்போஸ்தலனாகவும் இருந்தார். ஆனால் இதுவோ ஒரு தீர்க்கதரிசியின் ஆவியாயிருக்கிறது. அது முற்றிலும் ஒரு வித்தியாசமான நபராயிருக்கிறது. பார்த்தீர்களா? அது யோவானின் எழுத்தாயிருக்கவில்லை. யோவானுடைய வெளிப்படுத்தலுமல்ல. அது சபைகளுக்கு அருளிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தேவனுடைய வெளிப்படுத்துதலாகும். அது…யோவான், சொல்லச் சொல்ல அதை எழுதின ஒரு வேதபாரகனாய் மாத்திரமே இருந்தான். அப்படித்தான் அப்புத்தகமும் அறிவிக்கிறது. 111 இப்பொழுது, இப்புத்தகம் யோவானுக்கு என்று உரைக்கப்பட்டதல்ல. அது சபைகளுக்கு என்று உரைக்கப்பட்டதாகும். சரி. இப்புத்தகத்தை எழுதுகையில் யோவான் எபேசுவிலுள்ள சபைக்கு போதகராயிருந்தான். இப்புத்தகமோ யோவானை விவரித்துப் பேசவில்லை. சபைக்கென்றே பேசப்பட்டது.
46112 இப்பொழுது 3-வது வசனம், அவர் ஆசீர்வாதங்களை அறிவிக்கிறார். இதை கவனியுங்கள். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் காலம் சமீபமாயிருக்கிறது. 113 எந்தக் காலம் சமீபமாயிருக்கிறது? ஒவ்வொரு சபைக் காலத்தினூடாகவும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் பூர்த்தியடையும் போது, இக்காரியங்கள் சம்பவிக்கையில், காலம் சமீபமாயிருக்கிறது. 114 இப்பொழுது அந்தக் காரணத்தினால்தான் அவர் இந்த விதமாக இதை எழுதினார். அவன் கூறியிருந்தால், “இப்பொழுது, அவர்…” அவர்கள் அவருக்காக எதிர்நோக்கியிருந்தனர்; அப்பொழுது இருந்த சபைகள் முடிந்தவுடன் அவர் வருவார் என யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருந்தால், அது வெளிப்படுத்தப்பட்டிருந்தால்…அந்தவிதமாகவே யோவானும் எண்ணியிருந்தான். ஆனால் அது, அந்த சபைகள் அவர்கள் முடிவடைந்தவுடன், அவைகள்…ஆனால் ஏழு நீண்ட சபைக் காலங்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அல்லது பல நூற்றாண்டுகளுக்கு நீடித்திருக்கும் என்று யோவானுக்கு வெளிப்பட்டிருந்தால், அவர்கள் தங்கள் காலத்தில் அவர் வருகைக்காக காத்திருத்தல் உண்டாயிருக்கவே இருக்காது. அவர்கள் தங்கள் சபைக் காலத்தில் வருகையை எதிர்பாராமல் வாழ்ந்திருப்பார்கள். 115 ஆகையால் தேவன் அதைப் பேசினார், அது அவர்களுக்கு வெளிப்படுத்தபடவில்லை. ஜான் வெஸ்லி வேதத்தைப் பற்றி அறிந்திருந்த காரியங்கள் மார்ட்டின் லூத்தருக்கு வெளிப்படுத்தப்படவில்லை. வேதத்தைப் பற்றி பெந்தெகொஸ்தேயினர் அறிந்துள்ளவை பாப்டிஸ்டுகளுக்கு வெளிப்படுத்தப்படவில்லை, ஏனெனில் அது ஒரு வித்தியாசமான காலத்திலிருந்தது. அது ஒரு வித்தியாசமான நேரமாயிருந்தது. தேவன் அந்தந்த காலத்திற்கு தம்முடைய காரியங்களை வெளிப்படுத்துகிறார். ஓ! 116 நீங்கள் வசந்த காலத்தில் விதை விதைத்து, அதே காலத்தில் அறுவடை செய்ய முடியாது. நீங்கள் ஒரு விதையை விதைத்தால், அது முதிர்ச்சி அடையும்படி வளர்கிறது. தேவன் தம்முடைய வார்த்தையை நடுகிறார், அதன்பின்னர் அது வளர்ந்து மீண்டும் வெளியே வருகிறது, அப்பொழுது நாம் திரும்பிப் பார்த்து, “இதோ அது வளர்ந்து விட்டது” என்று கூறுகிறோம். காரணம், நிச்சயமாகவே, அது வெளிப்படுத்தப்பட்ட பின்பே நாம் அதைக் காண்கிறோம்.
47117 இப்பொழுது, 3-வது வசனத்தில், “இப்புத்தகத்தின் இரகசியங்களை வாசிக்கிறவனும், அதை வாசிக்கக் கேட்கிறவனும் பாக்கியவான்கள்” என ஆசீர்வாதத்தின் அறிவிப்பு உள்ளது. 118 மாம்ச சிந்தையுள்ளவன் அதைத் தள்ளிவிடுகிறான். ஏனெனில் மாம்ச சிந்தையுள்ளவன் அதைக் குறித்த ஒரு காரியத்தையும் அறிந்து கொள்வதில்லை. மாம்ச சிந்தையுள்ளவன் அதை அறிந்துகொள்வதில்லை என்பதில் வியப்பொன்றுமில்லை, ஏனென்றால் அந்த மாம்ச சிந்தையில் உள்ளது சாத்தானாயுள்ளது. சாத்தான் வெளிப்படுத்தப்படுகிறான், சாத்தான் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. 119 சாத்தான், அவன் வெளிப்படுத்தப்பட போகிறான் என்பதை அவன் நினைக்கும்போது, அது அவனுக்கு எவ்வளவு பயங்கரமானது என்பதை நீங்கள் கவனிக்கிறீர்களா? மக்களின் செய்கைகளை கவனித்திருக்கிறீர்களா? கூட்டத்தில் நீங்கள் கவனித்துப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட நபருக்குள் இருக்கும் சாத்தான் வெளிப்படுத்தப்படப் போவதற்கு முன்னர், அவர்களுடைய முகமானது மாறுவதை நீங்கள் காணலாம். என்ன சிந்திக்க வேண்டுமென்பதே அப்பொழுது அவர்களுக்குத் தெரியாது. திடீரென பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து, அந்தைப் பிசாசை வெளிப்படுத்துகிறார். ஓ! சாத்தான் அந்த விதமான ஒரு கூட்டத்தை வெறுக்கிறான். அந்தக் காரணத்தினால்தான் அப்பேர்ப்பட்ட ஒரு போராட்ட யுத்தம் நமக்கு இருந்து வருகிறது, ஏனென்றால், தேவனுடைய வார்த்தை பிசாசை வெளிப்படுத்துகிறது. புரிகிறதா? அவன் யாராயிருக்கிறான் என்று அது கூறிவிடுகிறது.
48120 பரிசுத்தாவியானவரின் ஏவுதலின் கீழ் இருக்கையில் நீங்கள், “இங்கே அமர்ந்துள்ள இந்தப் பெண்மணி, அவளுடைய பெயர் குமாரி ஜோன்ஸ் . அவள் இன்ன—இன்ன இடத்திலிருந்து வந்திருக்கிறாள்” என்று நீங்கள் கூறுவது போலவேயாகும். அது என்ன செய்கிறது? அது அப்பெண்மணியின் ஆவியை ஒரு கட்டுப்பாடான நிலைக்கு கொண்டு வருகிறது. 121 “நீங்கள் என்னை எப்படி அறிவீர்கள்? அந்த மனிதன் என்னை அறிந்திருக்கவில்லை, எனவே அது ஒரு ஆவியாகத்தான் இருக்க வேண்டும். அது எந்தவிதமான ஒரு ஆவியாய் உள்ளது?” “அது தேவனுடைய ஆவியாய் உள்ளது” “எப்படி? என்னோடுள்ள காரியம் என்ன?” 122 “உங்களுக்கு காசநோய், புற்று நோய் உள்ளது,” எதுவாயிருந்த போதிலும், “அது கர்த்தர் உரைக்கிறதாவது…” என்பதாக இருக்கிறது. “ஓ!” ஓ, எவ்வளவாக சாத்தான் அதை வெறுக்கிறான். ஏனெனில் அது அவனை வெளிப்படுத்துகிறது. 123 இப்பொழுது மாம்ச சிந்தை அதை நோக்கிப்பார்த்து, “இது மனோவசியம், மனோத்தத்துவம்” என்று கூறுகிறது. அவர்களுக்குத் தெரியாது. அது அவர்களுக்கு பைத்தியமாக உள்ளது. 124 ஆனால் அது என்னவென்று அறிந்தவர்களுக்கோ, ஓ, என்னே ஒரு ஆசீர்வாதமாயுள்ளது! அது என்ன? ஒரு வெளிப்பாடு. யாரைப் பற்றிய ஒரு வெளிப்படுத்துதல்? பிரசங்க பீடத்தில் நிற்கும் அம்மனிதனைப் பற்றிய வெளிப்பாடா? இக்கடைசிக் காலத்தில் சபையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாகும்! அவர் செய்வேன் என வாக்குரைத்ததுபோலவே, தம்மை வெளிப்படுத்துகிறார். புரிகிறதா? 125 அது ஒரு வெளிப்பாடாய் உள்ளது, பாருங்கள் சாத்தான் அதை வெறுக்கிறான். என்னே, அவன் எப்படியாய் அதை வெறுக்கிறான்! அவன் வெளிப்படுத்தப்படுகிறான், அவனுடைய திட்டமும் வெளிப்படுகிறது. சாத்தான் வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தையும் ஆதியாகமத்தையும் வெறுக்கிறான். நான் இங்கே கீழே எழுதி வைத்துள்ளேன். அது முற்றிலும் உண்மை. 126 இப்பொழுது, ஏன் சாத்தான் ஒரு வெளிப்பாட்டை வெறுக்கிறான்? வெளிப்பாட்டிற்கு அவன் ஏன் எதிராயிருக்கிறான்? தேவனுடைய வார்த்தையின் முழு பிரமாணமும், தேவனுடைய சபையும் பயபக்தியுடன் வெளிப்பாட்டின் மேல் கட்டப்பட்டுள்ளதே அதற்கு காரணமாகும். 127 அது ஒரு போதும் ஒரு—ஒரு வேதப்பள்ளியின் மூலமாக ஏற்படாது. நாம் எத்தனை அருமையான வேதக் கலாசாலைகளை உடையவர்களாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவைகள் மங்கின இருண்ட காலத்திற்குள் தான் இருந்து வருகின்றன. வேதமும் சபையும் ஒரு முற்றிலுமான வெளிப்பாடாய் உள்ளது.
49128 நாம் வேதாகமத்தைத் திருப்புவோம். நான் இங்கே சில வேத வாக்கியங்களை எழுதி வைத்துள்ளேன், மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16-ம் அதிகாரம் 18-ம் வசனம். நாம் சற்று நேரம் மத்தேயு 16:18ஐ எடுத்து அந்த வேத வசனங்களை எங்கே உள்ளன என்றும், அங்கே அது வெளிப்பாடாக உள்ளதா என்பதையும் பார்ப்போம். மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள், 17-ம் வசனம். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
50129 இப்பொழுது, கத்தோலிக்க சபையானது, “அவர் அதை பேதுருவின் மேல் கட்டினார்” என்று கூறுகிறது. அது உண்மையிலேயே மாம்ச சிந்தையின்படியானதாகும். ஆவிக்குரிய சிந்தையானது அவ்விதமான ஒரு காரியத்தை கிரகித்துக் கொள்ளும் என்பதை நீங்கள் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது; தேவன் தமது சொந்தகுமாரன் அங்கே நின்றிருக்க, அதே சமயத்தில் ஒரு சாதாரண வழக்கமாக பாவத்தில் பிறந்த மனிதன் மேல் தன்னுடைய சபையைக் கட்டுவார் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அந்த மனிதன் அதை நிரூபித்துவிட்டான். அவன், தன் மேலிருந்த அதே ஆவியோடு, இயேசுவை சபித்து, அவரது முகத்திற்கு முன்பாகவே, அவரை மறுதலித்து விட்டான். ஆகவே பேதுருவின் மேல் சபை கட்டப்படவில்லை. 130 அல்லது சில சபைகள் உரிமை கோருகிறது போல, அங்கே இருந்த ஒரு—ஒரு பாறையின் மேலும் சபையானது கட்டப்படவில்லை. ஒரு பாறையின்மேல் கட்டப்படவில்லை. காரணம் பேதுரு… 131 அவர் அங்கே பேசிக்கொண்டிருந்த அந்தப் பாறையானது, பேதுருவுமல்ல, அல்லது அது தன்னைக் குறித்துமாயிருக்கவில்லை. 132 இப்பொழுது, அநேக பிராடெஸ்டெண்டு ஜனங்கள், “அது இயேசுவாகும். அவர் தன் மேலேயே சபையைக் கட்டினார். அவர் மேலே!” என்று கூற முயற்சிக்கின்றனர். இல்லை, அதுவும் இன்னமும் தவறாயுள்ளது. நீங்கள் கவனித்தீர்களானால் அது இயேசுவாயுமிருக்கவில்லை, அது பேதுருவாயுமிருக்கவில்லை. அது வெளிப்பாடாயிருந்தது. …மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
51133 பாருங்கள்! நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஏதேன் தோட்டத்தில், வேத வாக்கியங்கள் எழுதப்படவில்லை. அப்பொழுது இரு பையன்கள், காயீன், ஆபேல், அவர்கள் இருவரும் தேவனிடம் தயையைப் பெற ஒரு பலியைச் செலுத்த விரும்பினர். அவர்கள் அவ்வண்ணமாய் செய்ய விரும்பியபோது, காயீன் வந்து ஒரு பலிபீடத்தைக் கட்டினான். ஆபேலும் ஒரு பலி பீடத்தைக் கட்டினான். இவ்வளவு தான் தேவனுக்கு தேவை என்பதாக இருக்குமானால், காயீனை ஆக்கினைக்குட்படுத்தியதில் தேவன் அநீதியுள்ளவராயிருப்பார். சரி, அதன்பிறகு, காயீன் பலி செலுத்தினான். அவ்வண்ணமே ஆபேலும் செலுத்தினான். இருவருமே தேவனுக்கு பலி செலுத்தினார்கள். காயீன் தொழுது கொண்டான். ஆபேலும் அவ்வாறே செய்தான். ஆபேல் செய்த ஒவ்வொரு காரியத்தையும் காயீனும் செய்தான். 134 எனவே வெறுமனே ஒரு சபைக்குச் செல்லுதல், ஒரு சபையைச் சார்ந்திருத்தல், பலிகளைச் செலுத்துதல், ஜெபித்தல், தேவனை தொழுது கொள்ளுதல் என்பதே தேவனுடைய தேவையாயிருக்குமானால், அப்பொழுது அவர் செய்யும்படி கூறினதை சரியாக செய்த காயீனை தேவன் ஆக்கினைக்குள்ளாக்கியதில் அநீதியுள்ளவர் என்றாக்கப்படுவாரே.
52135 ஆனால், நீங்கள் பாருங்கள், ஆபேல் ஒரு வெளிப்பாட்டினால், அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேக்கொண்டு வந்தது ஒரு கனியைப் புசித்ததினால் அல்ல என்பதை அவன் அறிந்திருந்தான், மாம்ச சிந்தையுள்ள அநேகர் கனியைப் புசித்ததுதான் காரணம் என்று இன்றைக்கும் எண்ணுகின்றனர். ஆபேல் நிலத்தின் கனிகளைக் கொண்டு வந்தான். தேவன் அதை நிராகரித்தார், ஆனால் அது வெளிப்படுத்தப்பட்டது…நான் பொருட்படுத்திக் கூறுவது, காயீன், தான் அதைச் செய்தான், என்னை மன்னிக்கவும். காயீன் நிலத்தின் கனிகளை காணிக்கையாகக் கொண்டு வந்தான். ஏனெனில், கனியைத் தின்றதினால் தான் அவர்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டனர் என்று நினைத்திருந்தான். ஆனால் அந்த வெளிப்பாட்டைக் கவனியுங்கள். அதனோடு உள்ள கருத்து வேறுபாட்டைக் கவனியுங்கள். அது இன்று எவ்வாறு புண்படுத்துகிறது. ஆனால் அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டு விரட்டியதற்குக் காரணம், கனியைப் புசித்தாயிருக்கவில்லை. ஏவாள் ஒருபோதும் ஆப்பிள் பழங்களை சாப்பிடவில்லை. நிச்சயமாக ஆப்பிள் புசித்ததால், எப்படி தான் நிர்வாணி என்று அவள் கண்டு கொண்டாள்? அது பாலியல் உறவுமுறை சார்ந்ததாயிருந்தது. அது அவ்வாறுதான் இருந்தது.
53136 இப்பொழுது நாம் அதை ஒரு ஆய்வாக எடுத்துக்கொள்வோம். எனவே நாம் அதற்குள்ளாக திரும்பிச் செல்ல வேண்டும். அப்படியல்ல என்று நிரூபிக்க அவர்களுக்கு ஒரு வேத வசனம் கூட இல்லை. 137 அவர்களில் சிலர், “ஏவாள், ‘நான் கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்,’ என்றாளே” என்கிறார்கள். ஆம் ஐயா. விபச்சாரியும் அவ்வாறே கூறினாள். தேவன் எல்லா ஜீவன்களையும் உண்டுபண்ண வேண்டியவராயிருக்கிறார். 138 ஆனால் அது தாறுமாறாக்கப்பட்ட ஒரு வாழ்க்கையாகும். அந்தப் பையனின் சுபாவத்தைக் கவனித்துப் பாருங்கள். அவன் தன் தந்தையினால் உண்டாயிருந்து, தன் தந்தையைப் போலவே, பிசாசாய், பகையுணர்வு, கீழ்த்தரம், கொலைகார குணம் இவற்றையுடையவனாயிருந்தான். புரிகிறதா? 139 அதன்பின்னர் எப்படி, ஆபேல், அவர்கள்…அவனுடைய பெற்றோர் ஒருவேளை தோட்டத்தில் இருந்த மரங்களில் கனிகள் உண்டாயிருந்தன என்றும் சொல்லியிருக்கக் கூடும். ஆனால் அது ஆபேலுக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஆபேல் போய் ஜீவனை எடுத்து, இரத்தம் சிந்துதலின் மூலமாக ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து வந்தான். ஒரு மரத்தின் கனியைக் கொண்டு வரவில்லை, ஆப்பிள்களையோ, வாழைப்பழங்களையோ அல்லது பேரிக் கனிகளையோ கொண்டு வரவில்லை. “ஆனால், ஆபேலோ, ஒரு ஆவிக்குரிய வெளிப்பட்டினாலே,”…“தேவனுக்கு மேன்மையான பலியைச் செலுத்தினான் தேவனே அதைக் குறித்து சாட்சி கொடுத்தார். ஏனெனில் அது அவனுக்கு விசுவாசத்தினாலே வெளிப்படுத்தப்பட்டது.” என்று எபிரெயர் 11 உரைக்கிறது.
54140 அங்கே தான் தேவன் தம் சபையைக் கட்டினார். “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை.” வேதகருத்தரங்கில் இதை ஒருபோதும் கற்கவில்லை. யாரோ இதை உனக்கு எங்கோ ஒருபோதும் போதிக்கவில்லை. “ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.” அங்கே, முழு காரியமும் வெளிப்பாட்டின் மேல் உள்ளது, முழு சபையையும், “இயேசு கிறிஸ்துவைப் பற்றி வெளிப்பாடாகிய இந்தக் கல்லின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன்” என்பதாய் உள்ளது. 141 நீங்கள் உங்களது போதகர் சொல்லுவதை எடுத்துக்கொள்ளலாம். உங்கள் வேதக்கருத்தரங்கு போதிக்கிறதை எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் சபை கூறுவதை எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் அது இன்னமும் சரியல்ல. சொல்வன்மையோடு நீங்கள் அதனை விளக்கலாம். ஆனால் தேவனானவர், இயேசு கிறிஸ்து தம்முடைய குமாரன் என்பதையும், அவரது இரத்தத்தினூடாகவே நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள் என்பதையும் உங்களுக்கு வெளிப்படுத்தும் வரையில் அது சரியானதல்ல. “அவர் எனது இரட்சகர்” என்ற அந்த வெளிப்பாட்டின்மேல் உள்ளது. 142 “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.”
55143 ஆகையால் சாத்தான் ஏன் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்திற்கு மிகவும் எதிராக இருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். வெளிப்படுத்தப்பட்ட எந்த காரியத்திற்கும், ஆவிக்குரிய வெளிப்பாட்டிற்கும், சாத்தான் அதற்கு எதிராகவே இருக்கிறான். அந்தக் காரணத்தினால் தான் அவன் இன்றைக்கு ஊழியத்திற்கு மிகவும் எதிராக இருக்கிறான். காரணம், அது என்ன? அது கிறிஸ்துவின் வெளிப்படுப்படுத்துதல். 144 உலகப் பிரகாரமான சபையானது, தன்னுடைய மகத்தான ஸ்தாபனங்களையும், ஸ்தாபன நிறுவனங்களையும், அதனுடைய அலங்காரமான மிருதுவான செய்திகளோடு போகட்டும், அவ்வாறு அவர்கள் இருக்கும் வரையிலும், சாத்தான் அவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யமாட்டான். அவர்களுக்கு எந்தத் தொல்லையுமில்லை. யாவரும் அவர்களை முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுவார்கள். 145 விசுவாசிகளை பின் தொடரும் அடையாளங்கள் இன்னின்ன என்று தேவன் கூறின அடையாளங்கள் சபையில் வல்லமையோடும் வியாதியஸ்தரை சுகப்படுத்தும் கிரியைகளோடும் வெளிப்பட்டு, மீண்டும் பரிசுத்த ஆவியின் மூலமாக தேவன் கிறிஸ்துவை வெளிப்படுத்தும் ஒரு காலம் வருகிறது. அப்பொழுது சாத்தானானவன், அதற்கெதிராக கிரியை செய்வதற்காக எழும்புகிறான். அவன் அதைக் குறித்த ஏதோ ஒரு காரியத்தைச் செய்கிறான். அந்த நேரம் வரையிலும் நீங்கள் எத்தனை சபைகளில் சேர்ந்தாலும் சாத்தான் கவலைப்படுவதில்லை. எத்தனை சபையில் சேர்ந்தாலும் அவன் கவலைப்படுகிறதில்லை. ஆனால் அவர் தேவனுடைய குமாரன் என்றும், அவர் செய்த கிரியைகளை நீங்கள் செய்வீர்கள் என்றும் வெளிப்படுத்தும்போது, வேறு கிரியைகளை அல்ல, அவர் செய்த அதே கிரியைகளை செய்வீர்கள் என்று கிறிஸ்து உங்களுக்கு வெளிப்படுத்தும்போது சாத்தான் கிரியை செய்ய ஆரம்பிக்கிறான்.
56146 “…என்னை விசுவாசிக்கிறவன்…” பரிசுத்த யோவான் 14:7 “என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். அதே கிரியைகளை, அதைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.” ஏனெனில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மிகப் பெரியதாயிருக்கும் என்று கிறிஸ்து தாமே பிரசங்கிக்க முடியாது. அவரால் அதை அவர்களுக்கு கொண்டு வர முடிய வில்லை, ஏனெனில் பரிசுத்த ஆவி அப்பொழுது அருளப்படாதிருந்தது. ஆனால் இயேசு வந்து தனது ஜீவனை தியாக பலியாக்கியபோது, பரிசுத்த ஆவியானவர் திரும்பி வந்தார், அதன் பின்பு அவர்களால் ஜனங்களுக்கு நித்திய ஜீவனை பகிர்ந்தளிக்க முடிந்தது. இது தான் “பெரிய கிரியைகள்” ஆகும். 147 ஆனால் அடையாளங்களும் அற்புதங்களும் விசுவாசியைத் தொடருவதைப் பற்றி இயேசு தெளிவாகச் சொன்னார். மாற்கு 16-ம் அதிகாரத்தில், “உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று கூறினார். எதுவரைக்கும்? உலகமெங்கும் எத்தனை பேருக்கு? சர்வ சிருஷ்டிக்கும். சுவிசேஷமானது எது வரைக்கிலும் பிரசங்கிக்கபடுகிறாதோ, அது வரையிலும் இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களை பின் தொடரும். சகோதரனே, அது ஒரு வெளிப்பாடாகும்போது, அப்பொழுது நீங்கள் இராஜ்ஜியத்திற்கு சமீபமாயிருக்கிறீர்கள். “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” 148 காரணம், மோசேயிருந்ததைப் போல, அந்த வனாந்திரத்தின் பின்னால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள எந்த ஒரு மனிதனுக்கோ, அல்லது ஸ்திரீக்கோ தேவனுடைய வெளிப்பாடு பரிசுத்த ஆவியின் மூலமாக வெளிப்படுத்தப்படும், எனவே எந்தக் காரியமும் அவனை அசைக்க முடியாது. அவன் அப்பொழுது, எவ்வளவு தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆகிவிடுகிறான். சாத்தான் வெளிப்பாட்டை வெறுக்கிறான். அவன் அதை விரும்புவதே கிடையாது. அது அவனது திட்டத்தையெல்லாம் கவிழ்த்துப் போடுகிறது.
57149 இந்த புத்தகத்தின் தன்மையானது யோவான் இதை எழுதவில்லை என்று காண்பிக்கிறது. அது உண்மை. ஏனென்றால் அவைகள்—அவைகள் மற்றவற்றிற்காக…அவைகள் அவனுடைய எழுத்துக்கள். ஆனால் அவனுடைய ஆவியின் ஏவுதல் அல்ல. அது தேவனுடைய ஆவியின் ஏவுதல் அந்தப் புத்தகத்தை எழுதுகிறது என்பதாயுள்ளது. 150 சரி. வசனம் இப்பொழுது என்ன சொல்கிறது என்று நாம் பார்ப்போமாக. இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. 151 இப்பொழுது, “காலம் சமீபமாயிருக்கிறது.” என்ன? இயேசுகிறிஸ்துவைப் பற்றிய முழுமையான வெளிப்பாடு அவரது சபைகளுக்கு தெரியப்படுத்தப்படும்போது, காலங்கள் செல்லச் செல்ல, அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.
58152 நாம் இப்பொழுது சரியாக கடைசி காலத்தின் முடிவில் இருக்கிறோம். எனவே நாம் இப்பொழுது உண்மையிலேயே உலகத்தின் முடிவின் காலத்தில் இருக்கிறோம். நாம் உலகத்தினுடைய சரித்திரத்தின் முடிவில் இருக்கிறோம். இந்த வாரம் முடிவு பெறும் முன்னர், தேவன் நம்மோடு இருக்கிறபடியால், நமக்கு உதவி செய்கிறபடியால், நாம் சபைக் காலங்களின் முடிவில் இருக்கிறோம் என்பதை நாம் நிரூபிப்போம். நாம் பிலதெல்பியா…இல்லை லவோதிக்கேயா சபையின் காலத்தில், எல்லா காலங்களுக்கும் முடிவான காலத்தில் இருக்கிறோம். நாம் உலக அரசியலின் முடிவில் இருக்கிறோம். நாம் இயற்கையான உலகத்தின் முடிவில் இருக்கிறோம். நாம் எல்லாக் காரியங்களின் முடிவிலும் இருக்கிறோம். நாம் இயற்கையான ஒவ்வொரு காரியத்தின் முடிவிலுமிருந்து, மற்றொன்றிக்குள்ளே பிரவேசிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம்.
59153 அன்றொரு நாள் வருகையில், நான் ஷ்ரீவ்போர்ட்டிற்கு போய்க்கொண்டிருக்கையில் என்று நான் நினைக்கிறேன் இல்லை எங்கோ வந்து கொண்டிருக்கையில், நான் எல்லாவற்றையும் நோக்கிப் பார்த்தேன், அப்பொழுது நான், “மரங்கள் மரித்துக் கொண்டிருக்கின்றன, புற்கள் மரித்துக் கொண்டிருக்கின்றன. மலர்கள் மரித்துக் கொண்டிருக்கின்றன. நான் மரித்துக் கொண்டிருக்கிறேன். உலகமானது மரித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காரியமும் மரித்துக் கொண்டிருக்கின்றது. உலகத்தில் உள்ள ஒவ்வொரு காரியமும் மரித்துக் கொண்டிருக்கின்றன” என்று கூறினேன். இந்த காலை வேளையில் இங்கே அமர்ந்திருக்கிற நாம் மரித்துக் கொண்டேயிருக்கிறோம். 154 நிச்சயமாக எங்கோ ஒரு உலகம் உண்டு, அங்கே ஒன்றும் மரிப்பதில்லை. ஒவ்வொரு காரியமும் மரித்துக் கொண்டிருக்கிற ஓர் உலகம் உண்டென்றால், ஒவ்வொன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கும் உலகம் ஒன்று இருக்கத்தான் வேண்டும். அப்படிப்பட்ட உலகைத்தான் நாம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அங்கே மரங்கள் முதற்கொண்டு யாவும் அழியாமல் நிலைத்து நிற்பவையாகும். ஓ, அங்கே யாவும் அழியாமையைத் தரித்துக் கொண்டு தேவ மகிமையினால் நிலைபெற்றிருக்கும்.
60155 இப்பொழுது, இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தின் முதலாம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களில் உள்ள பின்னணியை நாம் சற்றுப் பார்ப்போம். 1-ம் வசனம் “இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல்” 2-ம் வசனம், “ஒரு தூதனால் யோவானுக்கு இது அருளப்பட்டது,” 3-ம் வசனம், “பாக்கியவான்கள், வாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றும்,” இதை உங்களால் வாசிக்கமுடியாவிட்டால், “இதை வாசிக்க கேட்கிறவன் பாக்கியவான்.” உங்களால் படிக்க முடியவில்லையா? அப்படியானால் நீங்கள் இதை வாசிக்கக் கேளுங்கள். அவ்வளவுதான். “வாசிக்கிறவன் பாக்கியவான்.” உங்களால் இதை வாசிக்க முடியவில்லையென்றால், “வாசிக்க கேட்கிறவனும் பாக்கியவான், ஏனென்றால் காலம் சமீபமாயுள்ளது.” 156 இப்பொழுது இந்த வேதவாக்கியத்தின் பொருளை என்ன என்று யூகித்துப் பாருங்கள், யோவான், அங்கே எழுத்தாளன், அதை எழுதுகையில்… இது யோவான் இங்கே “ஆசீர்வாதங்களை” போன்றவற்றை கூறுவாதாகும். இப்பொழுது நான் இதைப் பற்றி கருதுவது என்னவெனில், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆசாரியன் ஒவ்வொரு நாள் காலையிலும் வேத வாக்கியங்களை வாசிக்கும்படி எழுந்து நின்று வாசிப்பான், அதை சபையார் வாசிக்கக் கேட்டனர். அநேகரால் வாசிக்க முடியாதிருந்தது. ஆகையால் அவன், “இதை வாசிக்கிறவனும், இதை வாசிக்கக் கேட்கிறவனும் பாக்கியவான்” என்றான். புரிகிறதா? வாசிக்கிறவனும், வாசிக்கக் கேட்கிறவனும், இதை வாசிக்கிறவனும், அதை வாசிக்கக் கேட்கிறவனும் பாக்கியவான். எனவே, நீங்கள் அமர்ந்து, இதை வாசிக்கக் கேட்டாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். “இதை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும் பாக்கியவான்கள். ஏனென்றால் காலம் சமீபமாயிருக்கிறது.”
61157 இப்பொழுது 4 முதல் 6 முடிய உள்ள வசனங்கள் சபைக்கு ஒரு வாழ்த்து தெரிவித்தலையுடையதாயிருக்கின்றன. இப்பொழுது 4-ம் வசனம் முதல் 6-ம் வசனம் முடிய நாம் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். 158 இப்பொழுது நாம் இதை ஆராயும் முன்பு, ஒவ்வொருவரும் கடினமாக சிந்தித்துப் பார்க்க முயற்சிக்கும்படி நான் விரும்புகிறேன். அது என்னவாயிருக்கிறது? அது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாயிருக்கிறது. அங்கே தேவன் காலத்திரையை நீக்கிவிட்டார். இங்கே காலம் உள்ளது, இயேசு பூமியிலிருந்தபோது, அவரால் சபைக்காலங்களையும், அவைகளில் என்ன சம்பவிக்கும் என்பவைகளையும் காணமுடியவில்லை. எனவே, தேவன் அத்திரையை நீக்கினார், அதை முன் கூட்டியே நீக்கி, ஒவ்வொரு சபைக் காலத்திலும் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை உள்ளே சென்று காணும்படி யோவானை அனுமதித்து, அதை ஒரு புஸ்தகத்தில் எழுதி ஏழு சபைகளுக்கு அனுப்பும்படிச் செய்தார். 159 அது என்ன? கிறிஸ்து தம்முடைய—தம்முடைய கிரியையின் நாட்களில் வெளிப்படுத்தினார். இது முழு கிரியையுங் கொண்ட புத்தகமாய் உள்ளது. இது கிறிஸ்து அளித்த ஒரு—ஒரு தீர்க்கதரிசிசன புத்தகமாகும். தேவன் தம்முடைய தூதனால் நமக்கு அளித்திருக்கிறவைகளோ யோவானால் எழுதப்பட்டு ஒரு புத்தகமாய் உள்ளது. இதை வாசிப்பவரும், வாசிப்பதை கேட்கிற ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமுண்டு. இவை யாவும் நிறைவேறும்போது, காலமானது சமீபித்துவிட்டிருக்கும்.
62160 இப்பொழுது, நமக்கு நல்ல அடிப்படை கிடைத்துவிட்டது. நாம் சபையை சிந்தையில் கொண்டுள்ளோம் என்பதை நினைவு கூறுங்கள். ஒரு பக்கத்தில் சபையானது ஆரம்பிக்கிறது. மற்றொன்று பக்கத்தில் சபையானது முடிவடைகிறது. திங்கள் இரவில் நாம் சபைக் காலங்களைக் குறித்து படிக்கையில் இன்னும் விபரமாகப் பார்ப்போம். யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்…உங்களுக்கு கிருபையும், சமாதானமும் உண்டாவதாக. 161 இப்பொழுது, இப்பாகத்திலுள்ள அடையாளச் சின்னங்களில் இரகசியமான, ஆழமான காரியங்களின் பாகங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆசியா மைனரிலுள்ள ஏழு சபைகளுக்கும் இது எழுதப்பட்டுள்ளது. அவர்கள்—அவர்கள்…அந்த நேரத்தில் அந்தக் காலங்கள் எதிர்காலத்தில் வரவேண்டியவையாயிருந்தன. அவர் அவர்களை அவர்களுடைய கிரியைகளுக்காகவும், அவர்கள் செய்திருந்தவைகளுக்காகவும் போற்றிப் புகழ்ந்தார். ஆனால் ஆசியா மைனரிலுள்ள அந்த சபைகளுக்கு, ஏழு சபைகளுக்கும் இது கூறப்பட்டுள்ளது.
63162 ஆசியா மைனர் என்ற பிரதேசமானது முழு ஆசியா கண்டமல்ல. அதிலுள்ள ஒரு சிறு பிரதேசமாயிருந்தது. ஆசியா மைனர் என்பது, அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா அல்லது பாருங்கள் அதைப் போன்ற ஒன்றாய் அல்லது கிட்டத்தட்ட இந்தியானா மாநிலத்தின் அளவுக்கொப்பாயுள்ள பரப்பளவைக் கொண்ட ஒரு பகுதியாகும் என்று அவர்கள் உரிமை கோருகின்றனர். இச்சிறிய ஒரு பிரதேசத்தில் தான் அவ்வேழு சபைகளும் அமைந்திருந்தன. அந்த நேரத்தில் அவைகளைப் பார்க்கிலும் அதிகமான சபைகளும் இருந்தன. ஆனால் இந்த சபைகள் அவைகளினுடைய குணாதிசயங்களை வெளிப்படுத்தின. நான் இப்பொழுது அதைக் குறித்த சரித்திரக் குறிப்பிலிருந்து நான் எழுதி வைத்துள்ளதை இங்கே வாசித்துக்கொண்டிருக்கிறேன். 163 “இதை வாசிக்கக் கேட்டும், கவனிக்காதவன் சபிக்கப்பட்டவன்.” 164 இப்பொழுது 4-ம் வசனத்திலிருந்து இங்கே ஒரு காரியத்தை விளக்கிக் கூறும் கட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம். “…இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்…” இப்பொழுது, இந்த “ஆவிகள்” என்பதைப் பற்றி நாம் அவைகளை பின்னால் பார்ப்போம். 165 இப்பொழுது இங்கே இது வெளிப்படுகிறது, நீங்கள் அங்கே கவனிப்பீர்களேயானால், 7-ம், 8-ம் வசனங்களிலும் கூட அவர் மீண்டும் வந்து, மீண்டும் வெளிப்படுத்திக் கூறுகிறார். இப்பொழுது கவனியுங்கள். ஏழு சபைக் காலங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய, ஒரு சமயத்தில் இருந்தவரும், இப்பொழுது இருக்கிறவரும், மற்றும் வருகிறவருமானவர்.” இப்பொழுது, இங்கே அவர், தம்முடைய மூன்றுவிதமான, தனது கிரியையின் மூன்று விதமான வெளிப்படுத்தலை வெளிப்படுத்துகிறார்.
64166 இப்பொழுது நீங்கள் 8-ம் வசனத்தை எடுத்துக் கொள்வீர்களேயானால், நாம் அதற்கு இன்னும் ஒரு நிமிடத்தில் வருவோம். நாம் 8-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர் : நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். 167 இப்பொழுது நாம் 4, மற்றும் 6-வது வசனங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்வோம். இரண்டும் ஒரே கருத்தையுடையவை. ஒன்று, “இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர்” என்று அவர் கூறுகிறார். சபைக்கு முன்பாக தேவன் எதை வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்? அவருடைய தெய்வீகத் தன்மையை. இன்றைக்கு மக்கள் அவரை வெறும் ஒரு—ஒரு தீர்க்கதரியாக்க முயற்சிக்கின்றனர். அவர் ஒரு தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேலானவர். சில ஜனங்கள் அவரை மூன்று தேவர்களாக்க முயற்சிக்கின்றனர். அவர் மூன்று தேவர்களாயிருக்கவில்லை. அவர் மூன்று உத்தியோகங்களில் ஜீவித்த ஒரே தேவனாயிருக்கிறார், ஒரே தேவனின் மூன்று வெளிப்படுத்துதல்கள்.
65168 இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், இது தான் அந்த வெளிப்படுத்துதலாயிருக்கிறது. “…கேட்கிற எவனும், இப்புத்தகத்தில் எழுதப்பட்டவைகளை கைக்கொள்ளாமற் போனால், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனது பங்கு எடுத்துப் போடப்படும்.” இயேசு தன்னை இங்கே மூன்று தேவர்களாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கவில்லை, ஆனால் ஒரே தேவன் மற்றும் மூன்று உத்தியோகங்கள். நாம் அந்த சபைக் காலங்களுக்குள் சென்று, அவர்கள் அதை எங்கே இழந்தார்கள் என்று காணும்போது, ஓ, இதுவோ இன்னும் கொஞ்ச நேரத்தில் உயரியதாயிருக்கப் போகிறது. இதுவே நிசாயா ஆலோசனை சங்கத்தில் ஒரு பெரிய பிளவுண்டாக காரணமாயிருந்தது. இரு மாறுபட்ட கருத்துக்களையுடையவர்கள் தங்கள் கொள்கைகளில் தீவிரமாகப் பிரிந்து சென்றனர். 169 மீண்டும் நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு முன்பின்பிருந்த காலம்போல, இந்த கடைசி நாட்களிலும் அவர்கள் அதேக் காரியத்தை செய்துள்ளனர், ஏனென்றால் மீண்டும் மற்றொன்று இருக்கும். நான் இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அதே விதமான கத்தோலிக்கரும், பிராடெஸ்டெண்டுகளும் ஒன்றாக இணைவார்கள் அல்லது ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போவார்கள். இப்பொழுது இங்கிலாந்தில் கேண்டர்பரி என்ற இடத்தின் தலைமைப் பிராதன பேராயரை கவனித்துப் பாருங்கள். அவை யாவும் ஒன்றுசேர குவிந்து கொண்டிருக்கிறது. வேதத்தில் திரித்துவ தேவனைப்பற்றி உபதேசம் இல்லவே இல்லை. ஒரே ஒரு தேவன் தான் உண்டு. 170 அது தானே இங்கே வெளிப்படுத்தின விசேஷப்புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதினால், முழு வேதப் பிரமாணமும் நிரூபிக்கப்பட்டு, கிறிஸ்து அதின்மேல் தன் முத்திரையைப் பதிக்கிறார். அது தான் இது. எவரேனும் இதனோடு எதையாவது கூட்டினாலோ அல்லது இதிலிருந்து எடுத்துப் போட்டாலோ, ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடையது எடுக்கப்படும். எனவே, இப்புத்தகத்தை சுயநலமில்லாமல், திறந்த இருதயத்துடனும், திறந்த சிந்தையுடனும் இதை அணுகுங்கள்.
66171 ஆதி சபையில் அவர்கள் நிசாயா ஆலோசனை சங்கத்தில், இரு மாறுபட்ட பெரும் கருத்து வேறுபாடுகளுக்குள் போனார்கள். ஓ, ஆதி சபை பிதாக்களில் அநேகர் அந்த நாளில் முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளுக்குள் போனார்கள். அவர்களில் ஒருவர் திரித்துவ தேவனை நம்புகிற திரித்துவக் கொள்கை. மற்றொருவர் ஒரே தேவன் என்பதனை உடையவர்களாயிருந்தனர். அவ்விரு கொள்கைக்காரர்களுமே இன்றும் நீடித்திருக்கிறார்கள். அவையிரண்டும் இரு நேர் கிளைகளைப் போல் ஒன்றையொன்று சந்திக்காமல், அந்தவிதமாக பிரிந்தே செல்லுகின்றன. திரித்துவமானது, மூன்று தனித்தனி நபர்களாகிய தேவர்களைக் குறித்தது. மற்றென்று ஒருத்துவக்காரர்களாவர். ஒன்று அடுத்தத்தைப் போன்றே தவறானது. எனவே அவர்கள் இருவருமே இரு நேர் கிளைகள் போல பிரிந்தே செல்லுகின்றனர். ஆனால் இங்கே சத்தியம் வெளிப்படுகிறது. 172 இயேசு தம்முடைய சொந்த பிதாவாக இருக்க முடியாது அல்லது…பரிசுத்தாவியையன்றி, மற்றொரு பிதா இயேசுவுக்கு இருப்பாரெனில், அப்பொழுது, அவர் முறைதவறி பிறந்த குழந்தையாகிவிடுவார். இல்லை… காரணம் பரிசுத்தாவியினால்தான் அவர் உற்பவித்தார். தேவனே தனது பிதா என்று இயேசு கூறினார். எனவே, பரிசுத்தாவியானவரும், தேவனும்…அது மத்தேயு 1:18-ல் உள்ளது. எனவே பரிசுத்தாவியானவரும், தேவனும் ஒரே நபராகத்தான் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால். இயேசு இரு தந்தைகள் உடையவராகி விடுவார். இயேசு இம்மானுவேல் என்று அழைக்கப்பட்டார். அதற்கு “தேவன் நம்மோடிருக்கிறார்” என்று அர்த்தமாம். இயேசு இப்பூமியில் இருந்த போது, அவரும், பிதாவும் ஒன்றாயிருந்ததாகவே உரிமை கோரினார். 173 நான் இது சம்பந்தமாக எல்லா வேதவாக்கியங்களையும் இங்கு எழுதி வைத்துள்ளேன். ஏனெனில் இதைக்—இதைக் குறித்து நமக்கு கேள்விகள் அல்லது வேறேதோ ஒரு காரியம் உண்டாயிருக்குமாயின், நீங்கள் அதற்கான பதிலை கண்டறியலாம்.
67174 இங்கே, அவர், “இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவர், சர்வ வல்லமையுள்ள கர்த்தர்” என்று இவ்வாறாக அவரது மூன்று விதமான உத்தியோகங்களைக் குறித்து அவர் வெளிப்படுத்தப்படும்போது, அங்கே மூன்று தேவர்கள் இல்லை; ஒரே தேவன் தான் உண்டு. 175 ரோமானிய தேசங்களில் அவர்கள் பல தேவர்களை உடையவர்களாயிருந்த, காரணத்தால்தான் நிசாயா ஆலோசனை சங்கத்தில் அவர்கள் இதைச் செய்தனர், அதாவது திரித்துவக் கொள்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் மரித்துப் போன தங்களுடைய மூதாதையர்களிடம் ஜெபத்தை ஏறெடுத்தார்கள். இங்கே என்னிடம் அவர்களது வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன, அவைகளிலிருந்து நாம் மேற்கோள் காட்ட முடியும். புரிகிறதா? அவர்கள் தங்களுடைய மரித்துப்போன மூதாதையர்களிடம் வேண்டுதல் செய்தனர். அந்தக்காரணாத்தினால் அவர்கள் பரிசுத்த சிசிலியா, பரிசுத்த மார்கஸ், பரிசுத்தவான், பரிசுத்தவான், பரிசுத்தவான், பரிசுத்தவான், பரிசுத்தவான், பரிசுத்தவான், என்று அவர்களிடம் வேண்டுதல் செய்வதை உடையவர்களாயிருக்கின்றனர். 176 அப்போஸ்தலனாகிய பேதுருவும் “தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே, அவர் மனுஷனாகிய கிறிஸ்து இயேசு…” என்று கூறினான். ஒருவரே.
68177 அவர்களுக்கு திரித்துவ தேவன் இருக்க வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் அவர்கள்—அவர்கள் ஜூபிடர், மார்ஸ், வீனஸ் என்ற தேவர்களை உடையவர்களாயிருந்தனர். “எல்லாம் ஒரே தேவனாய் இருந்தது என்று ஒரே தேவன் மேல் சுமத்துவது சரியானதல்ல” என்று கூறி, அவர்கள் அதை கூறுபோட்டு, மூன்று உத்தியோகங்களில் வெளிப்பட்ட தேவனை மூன்று வித்தியாசமான தேவர்களாயிருக்கும்படிச் செய்துவிட்டனர். 178 ஆனால் இங்கே வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் அவர் தன்னை யார் என்று தெளிவாகக் கூறுகிறார். “இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமான சர்வ வல்லமையுள்ள கர்த்தர்” என்று கூறுகிறார். நாம் அதை இன்னும் சற்று நேரத்தில் பார்ப்போம். அவர், “நான் அல்பாவும் ஒமெகாவும்” என்று கூறினார். மொழியின் முதல் எழுத்து முதல் முடிவான எழுத்து வரையிலும் அனைத்தும் இவரே. அல்பா முதல் ஒமெகா முடிய—இது கிரேக்க மொழி அகர வரிசையாகும். “பள்ளத்தாக்கின் லீலி, சாரோனின் ரோஜா, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர், தாவீதின் வேரும் சந்ததியுமானவர்.” அவரே தேவன், தேவனே. I தீமோத்தேயு 3:16-ம் வசனம் உரைப்பதோ, “அன்றியும் தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். தேவ தூதர்களால் காணப்பட்டார். உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார்.” என்பதேயாகும். தேவனே! மூன்றாவது நபர் அல்ல, அல்லது ஒரு தீர்க்கதரிசி அல்ல, ஆனால் தேவன் தாமே மனித ரூபத்தில் வெளிப்பட்டார். இப்பொழுது இது ஒரு வெளிப்பாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
69179 தேவன் ஆதியில் மகத்தான யேகோவாவாக, இஸ்ரவேலுக்கு மேலாக அக்கினி ஸ்தம்பத்தில் இருந்து அவர்களே வழி நடத்தினார். அவர் தேவன், உடன்படிக்கையின் தூதனானவர். அவர் மலையின் மேல் இறங்கி வந்தபோது, மலை முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. மலையிலிருந்து அக்கினி புறப்பட்டு வந்து, அந்தப் பத்து கற்பனைகளை எழுதிற்று. அப்பொழுது அவர், “தேவனின் பிதாத்துவம்” என்று தம்முடைய பிள்ளைகளால், அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களால், யூதர்களால் அழைக்கப்பட்டார். 180 அதன் பின்பு, அதே தேவன் தானே, மரியாளின் கர்ப்பத்தில் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு சரீரத்தை எடுத்து கன்னிப் பிறப்பில் பிறந்து வெளிப்படுத்தப்பட்டார். முன்பிருந்தது போலவே, மானிட வர்க்கத்தின் நடுவில் அவர் ஜீவித்து தனது கூடாரத்தை வாசஸ்தலத்தை ஸ்தாபித்தார். அதே தேவன் தாமே மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணினார். வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. “கிறிஸ்துவில் தேவன் இருந்தார்.” அந்த சரீரம் இயேசுவாயிருந்தது. இயேசு, “அவருக்குள் சரீரப் பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் வாசமாயிருந்தது.” இப்பொழுது நீங்கள் அவரை மூன்று ஆட்களாக முடியாது. மூன்று தேவர்களுக்கென்று ஞானஸ்நானம் கொடுக்காதீர்கள். ஒரேயொரு தேவன் தான் உண்டு. புரிகிறதா? ஒரே தேவன். அந்த தேவன் தான் மாம்சமானார்.
70அவர் “நான் தேவனிடத்திலிருந்து வந்தேன். தேவனிடத்திற்குத் திரும்பிப்போகிறேன்” என்றார். 181 அவரருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் மூலம் பூமியிலிருந்து மறைந்து போனார். பவுல் அவரை தமஸ்குவுக்குப் போகும் வழியில் அவரைச் சந்தித்தான், அப்பொழுது அவன் “சவுல்” என்றே அழைக்கப்பட்டு வந்தான். அப்பொழுது ஒரு சப்தம் உண்டாகி, “சவுலே, சவுலே, ஏன் எனைத் துன்பப்படுத்துகிறாய்?” என்று கேட்டது. அதற்கு அவன், “நீர் யார்?” என்றான். அதற்கு அவர், “…இயேசு நானே” என்றார். 182 அவர் அக்கினி ஸ்தம்பமாக இருந்தார், அவ்வொளி அந்த அப்போஸ்தலரின் கண்களை குருடாக்கியது. அவர் திரும்பிச் சென்றிருந்தார். அதே இயேசுவானவர் பிதாவாகிய தேவனிடத்திற்குத் திரும்பிச் சென்றிருந்தார். அந்தக் காரணத்தினால் அவர், இங்கே, “நான் சர்வ வல்லமையுள்ளவர்” என்று கூறினார். அவர் தாமே மாம்சமானதற்கு முன்பாக இருந்த அதே சாயலுக்கு திரும்பிவிட்டார். அவர் வாழ்ந்த அந்த சரீரம்—இயேசு என்று அழைக்கப்பட்டது. நாம் அறிந்துள்ள அம்மனிதன் இயேசுவே.
71183 அன்பான ஒருத்துவக் கொள்கைக்காரரே, நீங்கள் வெறும் “இயேசுவின் நாமத்தில்” மட்டுமே ஞானஸ்நானங்கொடுக்கிறீர்கள். அதன் மூலம் நீங்கள் தவறு செய்கிறீர்கள். இன்று உலகில் நூற்றுக்கணக்கான இயேசு என்று பெயரிடப்பட்ட நபர்கள் உண்டு. ஆனால், ஒரேயொரு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் உண்டு. அவர் கிறிஸ்துவாகப் பிறந்தார். ஏராளமான இயேசுக்கள் உள்ளனர். அவர்களில் அநேகரை நானே சந்தித்திருக்கிறேன். ஆனால் ஒரேயொரு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் உண்டு, அவரே தேவன். 184 பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவை நாமங்கள் அல்ல. அவைகள் ஒரு நாமத்திற்குரிய பட்டப்பெயர்கள். அவர்கள், “‘பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தினால்’” ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். பிதா என்பது ஒரு நாமம் அல்ல, குமாரன் என்பதும் ஒரு நாமம் அல்ல, பரிசுத்த ஆவி என்பதும் ஒரு நாமம் அல்ல. அது “மானிடன்” என்பது போன்ற ஒரு பட்டப் பெயராயுள்ளது. அந்தவிதமாகத்தான் பரிசுத்த ஆவி என்ற பெயரும் உள்ளது. ஒரு மானிடன்…இல்லை, ஒரு ஆவி, பரிசுத்த ஆவி. அவர்கள், “‘பிதாவின்’ நாமத்தில்” என்று கூறுகிறார்கள். இங்குள்ள பிதாக்களைப் பாருங்கள், உங்கள் குமாரர்களுடைய குமாரர்களைப் பாருங்கள். இங்குள்ள மானிடரைப் பாருங்கள். புரிகிறதா? “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்பது ஒரு நாமம் அல்ல. அது “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து” என்ற நாமத்திற்குரிய ஒரு பட்டமாயிருக்கிறது.
72185 அந்த விதமாகத்தான் அப்போஸ்தல சபையானது ஆதியில் ஞானஸ்நானம் கொடுத்தது. கத்தோலிக்க சபையானது ஸ்தாபிக்கப்படும் வரையில் “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயன்றி” வேறெந்த விதத்தினாலாவது கிறிஸ்தவ சபையில் எவராவது எப்போதாவது ஞானஸ்நானம் பண்ணப்பட்டாரா என்று சரித்திரத்திலிருந்து ஒரு முறையோ அல்லது ஒரு வேத வாக்கியத்தையே எவராவது எடுத்துக் கூறும்படி நான் கேட்கிறேன். அதன் பின்னரே அவர்கள், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்ற ஒரு கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர். இப்பொழுது வரலாற்று ஆசிரியர்களே, உங்களுடைய வரலாறுகளைக் கொண்டு வாருங்கள் பார்க்கலாம். ஆம். அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. கி.பி.304க்கு பின்பு, 304க்கு பிறகே, “தேவனாகிய பிதா, தேவனாகிய குமாரன், தேவனாகிய பரிசுத்த ஆவி” என்று மூன்று தேவர்களுக்காக, திரித்துவ ஞானஸ்நானமானது உண்டானது. அது அஞ்ஞானக் கொள்கையாகும். 186 இந்த வாரம் முடிவதற்கு முன்னர், நான் அதை உங்களுக்கு சில புத்தகங்களிலிருந்து வாசித்து காண்பித்து, பின்னர் வேதத்தின் மூலமும் காண்பிக்கவுள்ளேன். நாம் இந்தக் காலையில் வெளிப்படுத்தலின் பேரில், அதாவது அது எங்கே வருகிறது என்றும், எவ்வாறு அது காலங்கள் தோறும் நிலை பெற்று வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறோம். சகோதரனே! சத்தியத்திற்கு திரும்பு. நாம் கடைசி நாளில் இருக்கிறோம். 187 எபேசு சபைக்கு நாம் வரும் வரைக்கும் காத்திருங்கள். அதை நாம் லவோதிக்கேயா சபை காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து இவ்விரண்டு காலங்களின் நடுவில் என்ன சம்பவித்தது என்பதைப் பற்றிப் பார்ப்போம். எவ்வாறு அந்தக் காரியம் உள்ளே நுழைந்தது என்பதைப் நீங்கள் காண்பீர்கள். லூத்தரின் காலத்தில் அது நுழைந்தபோது, “நீ ‘உயிருள்ளவனென்று’ பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்” என்று அவர்களுக்கு கூறப்பட்டது. சர்தை என்ற வார்த்தை “மரித்துப்போன” என்று பொருள்படுகிறது. 1500 ஆண்டுக்கால இருண்ட காலங்களினூடாக அவர்கள் சத்தியத்தை இழந்தார்கள். அது வரைக்கிலும் அக்காலத்தில் ஒவ்வொரு சபையும் அவ்வுபதேசத்தைக் கொண்டிருந்தனர். அதன்பின்னர் 606-ல் அவர்கள் நிசாயா ஆலோசனை சங்கத்தை ஏற்படுத்தினபோது, அவர்கள் அந்த நாமத்தை அகற்றி விட்டு, அதிலிருந்து மூன்று தேவர்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
73188 அவர் இங்கே, “இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நானே” என்று கூறினார். நிச்சயமாகவே. 189 அவர் இப்பூமியில் மூன்று விதமான உத்தியோக நிலைகளை உடையவராயிருந்தார். அவர் இப்புவியில் இருந்தபோது, மூன்று விதமான உத்தியோக நிலைகளில் இருந்தார், பூமியில் அவர் ஒரு தீர்க்கதரியாக இருந்தார். அவர் பரலோகத்தில் ஒரு ஆசாரியனாகவும் கூட இருக்கிறார். அவர் மீண்டும் பூமிக்குத் திரும்பி வருகையில் அவர் ஒரு இராஜாவாக இருப்பார். தீர்க்கதரிசி, ஆசாரியன், இராஜா. இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர். “இருந்தவர்” என்றால் ஒரு தீர்க்கதரிசியாக விளங்கிய இயேசுவாகும். “இருப்பவர்” என்றால் ஆவிக்குரிய பலிகளை செலுத்துகிற ஒரு ஆசாரியர், அவர் நமது பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியனாவார். அவர் நமது மத்தியில் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி அதை நிரூபிக்கிறார். தீர்க்கதரிசி, ஆசாரியன், மற்றும் இராஜா. ஆனால் ஒரே தேவன்.
74190 அவர் இப்புவியில் இருந்த போது, அவர் ஒரு தீர்க்கதரியாக, வார்த்தையாக இருந்தார். சற்று பின்னால் வேதமானது அவரை, “உண்மையுள்ள சாட்சி” என்று அழைக்கிறது. உண்மையுள்ள சாட்சி என்பது தீர்க்கதரிசியாய் உள்ளது. அவர் ஆசாரியனாயிருந்தார்…அவர் இப்பொழுது ஆசாரியனாயிருக்கிறார், அவர் வரும்போது, அவர் இராஜாவாயிருப்பார். 191 நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 15:3 ல் படித்துப் பார்ப்பீர்களேயானால், உங்களால் வெளிப்படுத்தல் 15:13-ல் பார்க்க முடியும். நாம் இங்கே திருப்பி, அவர் என்னவாய்…அவர் இராஜாவாக இருக்கப் போகிராறென்றால், அவர் வருகையில் அவர் ராஜா என்று இருப்பாரா என்று பார்ப்போம். இப்பொழுது நாம் வெளிப்படுத்தின விசேஷம் 15-ம் அதிகாரம் 3-ம் வசனத்தைப் பார்க்கப் போகிறோம். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும், சத்தியமுமானவைகள்.
75192 அவர் பூமியில் என்னவாக இருந்தார்? தீர்க்கதரிசி அவர் தீர்க்கதரிசியாயிருந்தார் என்பதை ஜனங்கள் எவ்வாறு அறிந்து கொண்டனர்? அவர் மேசியாவின் அடையாளத்தைச் செய்தார், அது ஒரு தீர்க்கதரிசிக்குரியதாயிருந்தது. ஓ, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! அவர்கள் அவரை எவ்வாறு அறிந்து கொள்ளாமல் போனார்கள்? காரணம் அவர்கள் வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் மேசியாவின் அடையாளத்தை செய்து காண்பித்த போதிலும் அவர்கள் அவருக்கு செவி கொடுக்கவில்லை. அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். 193 மோசே, “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார். அது நிறைவேறும்போது அவர்கள் இந்தத் தீர்க்கதரிசிக்கு செவிக்கொடுக்கவில்லையென்றால், அவர்கள் ஜனங்களின் நடுவே இராதபடிக்கு அறுப்புண்டு போவார்கள்” என்று கூறினான். 194 அவர் பூமியில் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார், இப்பொழுது, அவர் ஏன் அவ்வாறு இருந்தார்? “தேவனுடைய வார்த்தைக்கு உண்மையுள்ள சாட்சி” என்பதற்காகவேயாகும். ஆமென். அவர் வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருந்தார். 195 பரிசுத்த யோவான் 1-ம் அதிகாரம். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி,…நமக்குள்ளே வாசம் பண்ணினார். 196 அவர் தாமே, தேவனுடைய நித்திய வார்த்தைக்கான உண்மையும் சத்தியமுள்ள சாட்சியாயிருந்தார். அவர் வார்த்தையாயிருந்தார். அவர் தேவனுடைய வார்த்தையாயிருந்தார். அவர் வார்த்தையாயிருந்தபடியினால், அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தார். ஏனென்றால் தேவனுடைய வார்த்தை அவர் மூலமாக பாய்ந்தோடினது. அவர் ஒரே காரியத்தை மாத்திரமே கூற வேண்டியவராயிருந்தார். “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறென்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.” “நானாக இந்தக் கிரியைகளைச் செய்யவில்லை, என்னில் வாசமாயிருக்கிற பிதாவே கிரியைகளைச் செய்கிறார். நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா என்னில் வாசமாயிருக்கிறார்” என்று மனிதனாகிய, தேவனுடைய கூடாரமாகிய இயேசு கூறினார்.
76197 தேவன் அநேக பட்டங்களை உடையவராயிருக்கிறார். யேகோவா, யேகோவா—யீரே, ராஃபா, மனாசே. ஓ, அநேகம்! அவருக்கு மீட்பின் தன்மையுடைய ஏழு கூட்டுப் பெயர்கள் உண்டு. அவருக்கு அநேக பட்டங்கள் உண்டு. சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. இவையெல்லாம், ஆனால் அவர் ஒரு மானிடப் பெயரை உடையவராயிருக்கிறார். தேவன் ஒரு பெயரை மாத்திரமே உடையவராயிருந்தார், அது, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாயிருந்தது.” 198 கர்த்தராகிய கிறிஸ்துவாக அவர் பிறந்த எட்டு நாட்கள் கழித்து, அவரை பரிசுத்த ஆவியானவர் “இயேசு” என்னும் நாமத்தினால் அழைத்தார். அவரது தாய் அவருக்கு விருத்தசேதனம் செய்து அவரை “இயேசு” என்று அழைத்தார். அவர் கிறிஸ்துவாக பிறந்திருந்தார். 199 நான் பிரான்ஹாமாகப் பிறந்தது போலவேயாகும். நான் பிறந்தபோது, நான் ஒரு பிரான்ஹாமாக இருந்தேன், அப்பொழுது “வில்லியம்” என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. 200 ஆமென். அவர் கிறிஸ்துவாக, இரட்சகராகப் பிறந்தார். அவருக்கு எட்டு நாட்களானபோது, அவருக்கு “இயேசு” என்ற நாமம் சூட்டப்பட்டது. மேலும், அவர் மகிமையின் கர்த்தராக வெளிப்பட்டார். ஆகையால் அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாயிருக்கிறார், மகிமையின் தேவன் நமது மத்தியில் வெளிப்பட்டார். ஓ! அவர் அதோ இருக்கிறாரே!
77201 பூமியில் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார், மகிமையில் அவர் ஆசாரியராய் இருக்கிறார். வருகையில் அவர் ராஜாவாயிருப்பார். ஓ,! எனக்கு அது பிடிக்கும். தீர்க்கதரிசி, “வார்தையின் உண்மையுள்ள சாட்சி” ஆசாரியர், “தனது சொந்த இரத்தத்தைக் கொண்டு தேவனுக்கு முன்பாக நிற்கிறார்.” ராஜா; “பரிசுத்தவான்களின் இராஜா.” இப்பொழுது அவர் உலகின் இராஜா அல்ல. அவர் பரிசுத்தவான்களின் இராஜா. நாம் ஜனங்கள் மீது ஆளுகை செய்யும் பூமிக்குரிய ராஜாக்களை உடையவர்களாயிருக்கிறோம். ஆனால் நமக்கு ஒரு ராஜாவும், ஒரு இராஜ்ஜியமும் உண்டு. அந்தக் காரணத்தினால்தான் நாம் வித்தியாசமான முறையில் செயல்படுகிறோம். 202 அண்மையில் நான் என் மனைவியைக் குறித்துக் கூறினது போல, நாங்கள் இங்குள்ள ஒரு கடைக்கு சென்று கொண்டிருந்தபோது, நாங்கள் கிட்டத்தட்ட ஒரு அற்புதத்தையேக் கண்டோம். அது ஒரு கோடைக்காலமாயிருந்தது, அங்கே ஒரு பெண்மணி ஒரு உடையுடுத்தியிருந்தாள். அப்பொழுது நான், “ஆது ஒரு விநோதமான காரியமாய் உள்ளதே” என்றேன். மேலும் நான், “நான் என்னுடைய நிழற்ப்படக் கருவியை வைத்திருந்திருந்தால், நான் அந்த பெண்மணியை புகைப்படம் எடுத்திருப்பேன்” என்றேன். பார்த்தீர்களா? காரணம் நாங்கள்…அதுவே முழு ஆடையுடன் நாங்கள் கண்ட முதல் பெண்மணியாய் இருந்தது, உங்களுக்குத் தெரியுமா, ஒரு பெண்மணி உடுத்தியிருக்க வேண்டிய விதத்தில் உடுத்தியிருந்தாள். 203 என் மனைவி, “ஏன், பில்லி, நம்முடைய ஜனங்கள் இவ்வாறு உடுத்துகிறார்கள், அவ்வாறு தான் உடுத்த வேண்டும் என்று நமக்கு—நமக்கு கட்டளையிடப்பட்டுள்ளதா?” என்று கேட்டாள். 204 அதற்கு நான், “அது நம்முடைய ஜனங்களல்ல. அது தேவனுடைய ஜனங்கள், தேவனுடைய ஜனங்களுக்கு பரிசுத்தம் தேவைப்படுகிறது” என்று கூறினேன். மேலும் “நல்லது, அவர்கள் சபைக்குச் செல்லுகிறார்களல்லவா?” என்று கேட்டாள். 205 அப்பொழுது நான், “ஒரு குறிப்பிட்ட சபையில் அங்கே அந்த பாடகர் குழுவில் பாடும் ஒரு பெண்மணி இருக்கிறாள்” என்றேன். “அப்படியானால அவர்கள் ஏன் தவறாக உடுத்துகிறார்கள்?” என்று கேட்டாள். 206 அதற்கு நான், “அவளுக்கு எந்த வித்தியாசமும் போதிக்கப்படாதது தான் காரணம்” என்றேன். அது முற்றிலும் உண்மை.
78207 அதுதான் அந்த மாம்சப்பிரகாரமான சபையாயுள்ளது, நாம் அதைப்பற்றி இவ்வாரத்தில் பார்ப்போம்; ஆவிக்குரிய சபையும், மாம்சப்பிரகாரமான சபையும் உள்ளன. அவர்கள் எல்லாரும் தாய் சபைக்குள் வழுவி விழுகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் வேதம் உரைத்துள்ளது. அவர்கள் யாவரும் பின்னிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் அதைப் போன்று செயல்பட்டுக்கொண்டு, ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கி, “நாங்கள் ஒரு குறிப்பிட்ட …நாங்கள் ஸ்தாபனமுண்டாக்கிறோம். நாங்கள் இது , நாங்கள் அது ” என்று கூறுகிறார்கள். ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லையே. சபையிலிருந்து எல்லா வல்லமையையும் அகற்றிவிட்டு, அதை ஒரு பேராயர் அல்லது ஒரு போப் என்பவரின் மேல் அதிகாரத்தை ஒப்புக்கொடுத்துவிட்டார்கள். தேவன் தம்முடைய சபையில் இருக்கிறார், தம்முடைய ஜனங்களின் மத்தியில் இருக்கிறார். தம்மை சபையின் ஜனங்களின் மூலமாக எங்கும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்பொழுது ஆனால் இந்நாளில்… அவள், “நாம் அமெரிக்கர்கள் இல்லையா?” என்று கேட்டாள். 208 அதற்கு நான் “இல்லை, நாம் இங்கு வாழ்கிறோம், ஆயினும் நாம் அமெரிக்கர்கள் அல்ல, நாம் கிறிஸ்தவர்களாயிருக்கிறோம், நம்முடைய ராஜ்ஜியம் உன்னத்தில் உள்ளது” என்றேன்.
79209 நம்முடைய ஜீவன்கள் அங்கிருந்து வருகிறபடியால், நாம் அதைப் போன்றே நடந்து கொள்கிறோம். ஏனெனில் நாம் வந்து…நம்முடைய ஜீவன் ஒரு பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வந்திருக்கிறது. அது வித்தியாசமாக காணப்படுகிறது. அது வித்தியாசமாக உடை உடுக்கச் செய்கிறது. அங்கே இருந்த அப்பெண்மணி, நீண்ட தலைமுடியையுடையவளாயிருந்தாள். அவர்கள் தங்களுடைய முகங்களில் அலங்கார சாதானங்களைப் பூசுவதில்லை. அவர்கள் குட்டைப் பாவாடைகளை அணிவதில்லை. அவர்கள்—அவர்கள் உடலை நன்கு மறைத்து, நீண்ட ஆடைகளையே அணிகின்றனர். அவர்கள் தலை முடியை நீளமாக வளர்க்கிறார்கள். ஆகவே அதற்குரிய சுபாவமானது உன்னத்திலிருந்து வந்தபடியால், அது நம்மேல் பிரதிபலிக்கிறது. 210 அந்த மனிதர் புகைப்பதில்லை, புகையிலே சுவைப்பதில்லை, பொய் சொல்லுவதில்லை, திருடுவதில்லை. அவர்களிடம் வந்துள்ள அவர்களுடைய ஆவிகள் ஒரு பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வந்துள்ளபடியால், அது அவர்களை பரிசுத்தமாக நடக்க செய்கிறது, ஒருவரையொருவர் சகோதரர்களாக அடையாளங்கண்டு கொள்ளச் செய்கிறது. ஊ—ஊ. அதுதான் இது. 211 நாம் ஒரு இராஜியத்தைச் சேர்ந்தவர்கள். நமக்கு ஒரு ராஜா உண்டு. அவர் பரிசுத்தவான்களின் இராஜா. “பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்” என்ற வார்த்தையிலிருந்து தான் பரிசுத்தவான் என்ற வார்த்தை வருகிறது. ஒரு நபர் பரிசுத்தமாக்கப்படும்போது, கிறிஸ்து, பரிசுத்த ஆவி அந்த இருதயத்தினுள் அசைவாடி, அதன் மேல் ராஜாவாகிறார், ஓ, என்னே! அது உங்கள் இருதயத்தை ஆழமாகத் தொட வேண்டும். ஓ! பரிசுத்தமாக்கப்பட்ட தேவனுடைய பாத்திரத்தினுள்…கிறிஸ்து, ராஜா, பரிசுத்த ஆவி உள்ளே அசைவாடுகிறார். அவர்…ஒரு ராஜா தன்னுடைய அதிகாரத்தை உடையவனாயிருக்கிறான். ஆமென். உங்களுடைய முழு சரீரமும் பரிசுத்தவான்களின் இராஜாவால் ஆளப்படுகிறது. ஒரு இராஜ்யம்! பூமியிலுள்ள ஒவ்வொரு ராஜ்யமும் அணுசக்தியானால் அசைக்கப்படும். அவை அடித்து நொறுக்கப்படும். ஆனால் வேதமோ, “அசைவில்லாத இராஜ்யத்தை நாம் பெறுவோம்…” என்று கூறுகிறது. ஆமென். அதோ அவரே பரிசுத்தவான்களின் இராஜாவாயிருக்கிறார்.
80212 வேதத்திலும், இங்கே பூமியிலும் கிறிஸ்துவுக்குரிய அடையாளச் சின்னங்களை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பூமியில் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] ஒரு தீர்க்கதரிசி வார்த்தையாக இருக்கிறான். நாம் அதை அறிவோம். “தீர்க்கதரிசி” என்ற வார்த்தை, “வார்த்தையின் தெய்வீக வியாக்கியானி” என்றே பொருள்படுகிறது. இந்த தெய்வீக வார்த்தையானது எழுதப்பட்டுள்ளது. தீர்க்கதரிசி தெய்வீக தேவனுடைய ஆவியை தனக்குள்ளே உடையவனாயிருக்கிறான். பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசியானவன், “தேவன்” என்றழைக்கப்பட்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள். எத்தனை பேர் அதை அறிந்திருக்கிறீர்கள்? 213 இயேசு, “அவர்கள் தேவர்களாயிருக்கிறார்கள்…என்று உங்கள் வேதத்தில் எழுதப்படவில்லையா? ‘நீங்கள் தேவர்களாயிருக்கிறீர்கள்’ …தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களை, தேவ வசனம் யாரிடத்தில் வந்ததோ அவர் தான் தீர்க்கதரிசி, ‘தேவர்கள்’ என்று அவர்கள் சொல்லியிருக்க, வேதமும் தவறாததாயிருக்க நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?” என்று கேட்டார்.
81214 காரணம், தீர்க்கதரிசியோ “தேவன்” என்று அழைக்கப்பட்டார். ஏனென்றால் அவருக்குள் தேவனுடைய வார்த்தை நிரப்பப்பட்டிருந்தது. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது. எனவே ‘ தீர்க்கதரிசி ’ என்ற பதத்திற்கு அர்த்தம் என்னவெனில், “அத்தீர்க்கதரிசியின் வியாக்கியானம் கலப்படம் செய்யப்படக் கூடாது.” பார்த்தீர்களா?! தேவன்…அவர், “உங்களுக்குள்ளே ஒருவன் ஆவிக்குரியவனாக அல்லது ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததால், கர்த்தராகிய நானே அவனோடே பேசுவேன், அவன் சொல்லுவது நிறைவேறினால் அவனுக்குச் செவி கொடுங்கள், ஏனெனில் நான் அவனோடிருக்கிறேன். ஆனால் அவன் சொல்லும் காரியம் நிறைவேறாமல் போனால் அவனுக்குச் செவி கொடுக்க வேண்டாம். நான் அவனை அனுப்பவில்லை” என்று கூறினார். அந்தவிதமாகத்தான் நீங்கள் அதை அறிந்துகொள்ளுகிறீர்கள். அதன் பின்பு, நீங்கள் பாருங்கள், வார்த்தையின் தெய்வீக வியாக்கியானமானது, சபைக்குரிய இந்த கடைசி வெளிப்பாட்டுடன் முரண்படாமல் ஒத்திருக்க வேண்டும். 215 அவர் சர்வ வல்லமையுள்ள தேவன் ஆவார். பூமியில் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். அது ஒரு கழுகாய் உள்ளது. ஒரு தீர்க்கதரிசி கழுகு என்று கருதப்படுவதை எத்தனைபேர் அறிவீர்கள்? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்—ஆசி.]
82216 பறவைகளுக்குள்ளே நமக்கு இருக்கும் மிகவும் வலிமை வாய்ந்த ஒரேயொரு பறவை கழுகாகும். கழுகு தனது செட்டைகளை விரித்தால், அதின் ஒரு முனை துவக்கி மறு முனைமட்டும் பதினாங்கு அடி நீளமுள்ளதாக இருக்கிறது. கழுகு மிக மிக உயரமாக பறக்கக் கூடியது. வேறு எந்தப் பறவையும் அவ்வுயரத்தை எட்டிப் பிடித்து கழுகுடன் சேர்ந்து பறக்க முயற்சித்தால், தங்கள் சிறகுகள் பிய்ந்து போன நிலையில் உருக்குலைந்து போய் விழுந்து விடும். காரணம் ஏன்? அது விசேஷித்த முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகமிக உயரமாக கழுகு பறக்கையில், அதனால் அவ்வளவு உயரத்திலிருந்து கூர்மையாக பார்க்க முடியாமற் போனால் அது மிக உயரத்தில் பறக்கிறதினால் அதற்கு என்ன நன்மை? ஒரு பருந்தின் கண்ணை குறித்து பேசுகிறீர்களா? நீங்கள் ஒரு கழுகின் கண்ணைப் பார்க்க வேண்டும். 217 ஒரு பருந்து பறக்கையில் ஒரு கோழிக்குஞ்சைப் பார்க்கலாம். அது சரிதான். இன்றைக்கு இந்த சில பருந்துகளின் நிலைமையும் அவ்வாறு தான் உள்ளது. ஊ—ஊ ஆனால் ஒரு கழுகோ, மிக உயரமாக பறக்கிறது, ஒரு பருந்து அதனைப் பின் தொடர முயன்றால் அது மரித்துப் போய்விடும். அதற்கு மூச்சுத்திணறல் உண்டாகும். கழுகு பறக்கும் உன்னத உயரங்களை பருந்தால் எட்டிப் பிடிக்க இயலவே இயலாது. 218 கழுகு மிகுந்த உயரத்தில் அது பறக்கையில், மிகவும் தூரத்திலுள்ளதையும், தெளிவாகப் பார்க்கக் கூடிய ஒரு கண்ணைப் பெற்றுள்ளது. எனவே தான் தனது தீர்க்கதரிசிகளை “கழுகுகள்” என்று தேவன் அழைத்தார்: தீர்க்கதரிசியால் மிகத் தொலைவிலுள்ள காலத்தின் காரியங்களை பார்க்க முடிவும். அவன் ஒரு கழுகாயிருக்கிறான்.
83219 கிறிஸ்து பூமியிலிருந்த போது கழுகாயிருந்தார். அவர் மரித்த போது அவர் ஒரு ஆசாரியனாயிருந்தார். அது அவரை ஆட்டுகுட்டியாக ஆக்கியது. அது சரிதானே? [சபையோர் “அது உண்மை” என்று கூறுகின்றனர்.—ஆசி.] அவர் திரும்பி வருகையில், அவர் இராஜாவாக இருப்பார். எனவே அவர் ஒரு சிங்கமாய் இருப்பார். ஆமென்! யூதா கோத்திரத்து சிங்கம். ஆமென். அவர் ஒரு கழுகு. ஒரு ஆட்டுக்குட்டி, மற்றும் ஒரு சிங்கம். ஆமென்! பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, தீர்க்கதரிசி, ஆசாரியன், மற்றும் இராஜா; அவர் இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ளவர்! அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமானவர், நித்திய தேவன்.
84220 விலையேறப்பெற்ற சில கத்தோலிக்க ஜனங்களாகிய உங்களைக் கேட்க விரும்புவது என்னவெனில், நீங்கள், “தேவனின் நித்திய குமாரத்துவம், தேவனோடு இயேசு கிறிஸ்துவுக்குள்ள நித்திய குமாரத்துவம்” என்று சொல்லுகிறீர்கள். அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நீங்கள் எப்படிக் கூற முடியும்? நான் ஒரு அறிவில்லாதவன், ஏழாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன், ஆனால் நீங்கள் சொல்லுவதை விட தேவனைப் பற்றி எனக்கு மேலாகத் தெரியும். குமாரன் என்ற வார்த்தை ஒரு துவக்கத்தை உடையதாய் இருக்கிறது. ஆகையால் அவர் ஒரு குமாரனாயிருந்து கொண்டு எப்படி நித்தியமாக இருக்க முடியும்? நித்தியத்திற்கு துவக்கமோ அல்லது முடிவோ கிடையாது. ஆகையால், அவர் ஒரு குமாரனாய், நித்திய குமாரனாயிருக்க முடியாது. ஆகையால் குமாரத்துவத்திற்கு ஒரு துவக்கும் உண்டு, ஏனென்றால் ஒரு நித்திய குமாரன் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. ஒரு குமாரனுக்கு ஒரு துவக்கம் உண்டு, ஆகையால் அவர் நித்தியமாயிருக்க முடியாது. 221 நீங்கள் பாருங்கள், அவர் நித்திய தேவனாயிருக்கிறார், நித்திய குமாரனாய் அல்ல. மகிமை! சர்வ வல்லமையுள்ளவர் யேகோவா—யீரே, யேகோவா—ராஃபா, மாம்சத்தில் வெளிப்பட்டார். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது.”
85222 பெந்தெகொஸ்தே நாளிலே, அக்கினி ஸ்தம்பமானது ஜனங்கள் மேல் இறங்கி வந்தபோது, அது தாமே பிரித்துக்கொண்டதை நீங்கள் கவனித்தீர்களா? அக்கினி மயமான நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது. அக்கினிபோன்ற நாவுகள் ஒவ்வொருவருர் மேலும் அமர்ந்தது. தேவன் என்ன செய்து கொண்டிருந்தார்? தம்மை சபைக்குள்ளாக, ஒவ்வொருவருக்குள்ளும், ஆண்களும், பெண்களுமான அவர்கள் எல்லோருக்குள்ளும் பிரித்துக்கொண்டார்; அது அவருடைய ஆவியின் பாகங்களாயிருந்தது, தம்மை தம்முடைய சபைக்குள்ளே பகிர்ந்தளித்தார். 223 அப்படியிருக்க, எப்படி ஒரு மனிதன் வந்து, “போப் ஒரு பரிசுத்த மனிதன், பேராயர் ஒரு பரிசுத்த மனிதன்” என்று கூற முடியும்? நமக்குள் பரிசுத்த ஆவியாயிருக்கிற கிறிஸ்துவே பரிசுத்த மனிதனாவார். சபை ஜனங்கள் கூறும்படியான வார்த்தையில்லை என்று நீங்கள் எப்படி கூற முடியும்? நீங்கள் ஒவ்வொருவரும் கூற வேண்டிய ஏதோ ஒரு காரியம் உண்டு. நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய ஒரு பணியும் உண்டு. நீங்கள் ஒவ்வொருவரும் சுமந்து செல்ல வேண்டிய ஒரு செய்தியும் உண்டு. மகிமை! 224 பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர், பிரித்துக்கொண்டார். தேவன் தம்மை பிரித்துக்கொள்ளுதல். “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.” 225 “அந்நாளில்” பரிசுத்த ஆவியானவர், “எல்லார்மேலும், எல்லோருக்குள்ளும், எல்லோர் மூலமாயும்” இருக்கிறார். ஆமென். அங்குதான் காரியமே உள்ளது. பரிசுத்த ஆவியானவர் தான் விரும்புகிற எவ்விடத்திலும், தான் விரும்புகிற எவர் மேலும் அசைவாட அவருக்கு உரிமையுண்டு. ஏதோ ஒரு பேராயர் அல்லது ஏதோ ஒரு மதகுரு கூறுவதை நீங்கள் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் ஒருவரே நமது ஆசாரியராய், மகா பிரதான ஆசாரியராக இருக்கிறார். இப்பொழுது தீர்க்கதரிசி, ஆசாரியன், ராஜா.
86226 இப்பொழுது: உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், (நாம் அதற்குள்ளாக பார்ப்போம்) பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசு கிறிஸ்துவினாலும்…நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினால் நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவின அவருக்கு… 227 அங்கே கழுவினார் என்று உள்ள இந்த பதத்தின் மூல கிரேக்க வார்த்தையின் அர்த்தம் என்னவெனில் “கட்டவிழ்த்தல்” என்பதாகும். அவர் நம்மை நம்முடைய…கட்டவிழ்த்தார்…நாம் இப்பூமியோடு, நமது பாவத்தினினால் கட்டப்பட்டிருந்தோம். நாம் பரலோகத்தைப் பார்க்க முடியாது, அதைப்பற்றி கேட்க முடியாது, பரலோகத்தைக் குறித்து அல்லது வேறெந்த காரியத்தையுங் குறித்து எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தோம். ஆனால் இயேசுவின் இரத்தம் வந்தபோதோ, அது அந்த பாவக்கட்டை வெட்டி, நம்மை அவிழ்த்துவிட்டது. ஓ!
87228 நான் ஒரு சமயம் ஒரு கதையைப் படித்தேன். அது…இங்கு நன்கு சரியாகப் பொருந்தலாம். ஒரு விவசாயி ஒரு காகத்தைப் பிடித்து அதைக் கட்டிப்போட்டானாம். மேலும் அவன், “மற்ற காகங்களுக்கு இதன் மூலம் ஒரு பாடம் கற்பிப்பேன்” என்று கூறினானாம். எனவே அந்த வயோதிகக் காகத்தை, அதின் காலில் ஒரு கயிற்றைக் கொண்டு கட்டிப் போட்டான். அது பசியினால் மிகவும் வாடியது. அது மிகவும் பெலவீனமடைந்து, அதனால் நடக்க முடியாமற் போனதாம். 229 அந்தவிதமாகத்தான் இந்த சில ஸ்தாபனங்கள் மற்றும் சபைகள் மக்களை கட்டிப்போட்டிருக்கின்றன. “அவைகளால் ஒன்றும் செய்ய முடியாது! நீங்கள் இவ்வளவு தூரம் தான் போக முடியும். அற்புதங்களின் நாட்கள் கடந்து போய் விட்டது.” ஆம் நீங்கள் கட்டப்பட்டிருக்கீறீர்கள். அவ்வளவுதான். “பரிசுத்த ஆவி என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. அவர் முன்பு அந்நிய பாஷைகளில் பேசியது போல் இப்பொழுது பேசுவது கிடையாது” என்கிறார்கள். 230 அவர் தேவனாயிருக்கிறார். “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” எபிரெயர் 13:8, எல்லா சபைக் காலங்களிலும் அவர் ஜீவிக்கிறார். நாம் அதைக் குறித்து இக்காலை நேரம் கடந்த பிறகு பார்ப்போம். புரிகிறதா? ஒவ்வொரு சபைக்காலத்திலும் அவர் ஜீவிக்கிற தேவனாயிருக்கிறார். அவர் ஒவ்வொருசபைக் காலத்திலும் ஜீவிப்பார், நித்தியமாக…தம்முடைய ஜனங்களுக்குள் ஜீவிப்பார். ஏனெனில் நாம் இப்பொழுது நமக்குள்ளே நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம்.
88231 ஆகையால் இந்த ஸ்தாபனமானது மனுஷரை கட்டிப்போட்டிருக்கிறது, பாருங்கள், “அற்புதங்களின் நாட்கள் கடந்து போய் விட்டது, தெய்வீக சுகமளித்தல் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை” என்று கூறுகிறது. அந்தப் பரிதாபமான வயோதிக காகமானது மிகவும் பரிதாபமாகி நடக்க முடியாமற்போகுமளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டது. 232 ஒரு நாள், ஒரு நல்ல மனிதன், கட்டிப் போடப்பட்டிருந்த அக் காகத்தண்டை வந்து, “உங்களுக்குத் தெரியுமா, அந்த பரிதாபமான வயோதிக காகம், நான் இதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். இது கட்டப்படாதிருந்தால் தன்னுடைய தானியத்தை தேடித் தின்று கொண்டிருக்கும். அந்த ஒரே வழியில் தான் அது ஜீவனும் செய்கிறது. அதற்கு சாப்பிட ஏதாவது கிடைக்க வேண்டுமே, இப்படி கட்டப்பட்டிருந்தால் உயிர் வாழ தேவையான உணவு அதற்குக் கிடைக்காதே” என்று கூறி, அதன்பின்னர் அவன் தன்னுடைய…தனது கத்தியை எடுத்து, வயோதிக காகத்தை கட்டியிருந்த கயிற்றை அறுத்திவிட்டான். 233 உங்களுக்குத் தெரியுமா, அப்பொழுது, மற்ற காகங்கள் விடுவிக்கப்பட்ட காகத்தினிடம் வந்து, “ஜானி காகமே, வா போகலாம், நாம் தெற்கு நோக்கிச் செல்வோம். ஏனெனில் குளிர்க்காலமானது வருகிறது,” என்று கூறின. 234 கட்டவிழிக்கப்பட்ட காகம் என்ன கூறியது தெரியுமா? அது கட்டவிழ்க்கப்பட்ட பிறகும் அது கட்டப்பட்டிருந்தபோது நடந்து சென்ற தூரமே அதனால் நடக்க முடிந்தது. எனவே அந்தக் காகம், “என்னால் இதற்கு மேல் போக முடியாது. இந்தக் காலத்திற்கு உரிய காரியம் இது அல்ல. நாம்—நாம் அவ்வாறு பறந்து செல்ல முடியாது,” என்று கூறினதாம். பார்த்தீர்களா? அந்தக் காகம் அதிக காலம் கட்டப்பட்டுக் கிடந்தது, அதினால் விடுவிக்கப்பட்ட பிறகும் தான் கட்டப்பட்டிருப்பதாகவே அது நினைத்துக் கொண்டதாம். பார்த்தீர்களா?
89235 அவ்வாறு தான் அநேகம் மக்கள் இருக்கிறார்கள். நீங்கள் அந்தப் பழைய வேசியாகிய தாயின் ஸ்தாபனங்களாலும், அதன் கொள்கைகளாலும் கட்டப்பட்டிருக்கிறீர்கள். அவள் உங்களிடத்தில், “இயேசு கிறிஸ்து மாறாதவரல்ல. சுகமளித்தல் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியம் இல்லை. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற ஒன்றில்லை. அப்படிப்பட்ட ஒரு காரியம் இல்லை.” அவைகளை உங்களிடத்தில் கூற முயற்சிக்கிறாள். நீங்கள் அநேக காலமாக கட்டப்பட்டிருந்தபடியால், நீங்கள் இன்னமும் கட்டப்பட்டிருப்பதாகவே நினைத்துக் கொள்கிறீர்கள். 236 நல்ல மனிதனாகிய கிறிஸ்து, அவர் நம்மை கழுவி, நம்முடைய பாவத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காக தம்முடைய இரத்தத்தை சிந்தினார். பாவம் என்றால் என்ன? அது என்னவென்று யாராவது நீங்கள் எனக்குச் சொல்லுங்கள். பாவம் என்றால் என்ன? பாவம் என்பது “அவிசுவாசமாகும்.” அது உண்மையே. “விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.” 237 உங்களுடைய பாவம் தான் உங்களை சுதந்திரமாக இருக்க முடியாதபடி உங்களைத் தடுக்கிற ஒரேக் காரியமாய் உள்ளது. உங்கள் அவிசுவாசத்தினின்றும் தேவன் உங்களை கட்டவிழ்க்கிறார். ஆயினும், நீங்கள் சில கோட்பாடுகளினால் கட்டப்பட்டிருக்கிறபடியால், இன்னும் நீங்கள் கட்டப்பட்டுள்ளதாகவே நீங்கள் எண்ணுகிறீர்கள். அப்படியே மரணத்துக்கேதுவாய் பட்டினிகிடக்கிறீர்கள், பாருங்கள், நீங்கள் தட்டுமாறி நடந்துகொண்டு, “நான் பிரெஸ்பிடேரியன், நான் மெதோடிஸ்டு, நான் பாப்டிஸ்டு. அவர்கள் என்னிடம் (நான் சர்ச் ஆப் கிரைஸ்ட்), ‘அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை’” என்று கூறுகிறார்கள் என்று சொல்லுகிறீர்கள். 238 நீ பரிதாபமாய் பட்டினி கிடக்கும் காகம்! நீங்கள் ஏன் இக்காலையில் வரக்கூடாது? ஏன் பறந்து போகக் கூடாது? அல்லேலுயா! “ஒரு விடியற்காலத்து செட்டைகளோடு எழும்பி, தன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் உள்ள நீதியின் சூரியனிடத்தில் பறந்து செல்லுங்கள்,” ஆமென். அது தான் இது. சகோதரனே, சகோதரியே, அப்படித்தான். ஓ! “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.” ஆம், ஐயா!
90239 “நல்லது! என் போதகர்…” அதைக் குறித்து ஒன்றுமேயில்லை. வேதம், “நீங்கள் விடுதலையானீர்கள்” என்று கூறியுள்ளது. அது தான் சரி, நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள், “என்னுடைய சபை…” 240 நல்லது, அதினின்றும் கட்டவிழ்க்கப்படுவாயாக. “அவர் தமது சொந்த இரத்தத்தினால் நம்மை கழுவி, நமது மத ஸ்தாபனங்களினின்றும் நம்மை கட்டவிழ்த்து விட்டியிருக்கிறார்.” அவர் நம்மை சுயாதீனராக்கியிருக்கிறார், எனவே நாம் சுயமாக சிந்திக்க முடியும், சுயாதீனமாக செயல்புரிய முடியும், நமக்காக நாம் கிரியை செய்து, நமக்காக நாம் சுயாதீனமாக பேசி, செயல்புரிய முடியும். 241 “நல்லது நான் திரும்பிச் சென்று எனது போதகரிடம் நான் திரும்ப ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமாமே என்று கூறினால். ஒரு வேளை…” என்று நீங்கள் கூறலாம். 242 “நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள்” என்பதைக் குறித்து என்ன? இது ஒரு வெளிப்பாடாயிருக்கிறது என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். சரி. நீங்கள் விடுதலையாகி இருக்கிறீர்கள். 243 நீங்கள் ஏற்கனவே இந்தளவு சிறிதளவு உப்புக் கலந்த நீரினால், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால்” என்று தெளிக்கப்பட்டிருந்தால், அது சரியானதல்ல. இக்காலையில் இங்கே உங்களுக்கு தண்ணீர் நிறைந்த தொட்டி ஆயத்தமாயுள்ளது. புரிகிறதா? ஆம் ஐயா. 244 எனவே நீங்கள் இனிமேல் கட்டுண்டவர்களல்ல. நீங்கள் விடுதலையாகிவிட்டீர்கள். ஆனால் ஒரு வேளை நீங்கள் அதை அறியாமல் இருக்கலாம். ஆனால் நான் இன்று காலையில் உங்களுக்குச் சொல்லட்டும், வேதம், “நாம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலைப் பெற்றுக்கொள்ளும்படியாக அவர் நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து, நம்முடைய அவிசுவாசத்திலிருந்து விடுவித்தார்” என்று கூறியுள்ளது. எனவே விடுதலையடைந்து செல்லுங்கள்!…இதைக் குறித்து எந்த ஒரு சபை கூறுவதையும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அதைக் குறித்து தேவன் என்ன கூறுகிறார் என்பதையே எடுத்துக்கொள்ளுங்கள். அவர் யார் என்று தம்மை வெளிப்படுத்துவதைப் பற்றிய வெளிப்பாடு இங்கே இருக்கிறது.
91245 “நானும் தேவனாகிய பிதா, நீண்ட வெள்ளைத்தாடியையும், வெண்முடியையும் உடையவர் என்றும், குமாரன் நடுத்தரவயதினர் என்றும், பரிசுத்த ஆவியானவர் ஒரு நற்பேறு கொண்டுவரும் நபர் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.” சகோதரனே, அது அஞ்ஞானக் கொள்கையாகும். நீங்கள் மூன்று தேவர்கள் உண்டு என்பதில் விசுவாசங்கொண்டிருந்தால் அது அஞ்ஞானக் கொள்கையாகும். 246 முதலாம் பிரதான கற்பனை, முதலாம் கற்பனை எது? “இஸ்ரவேலே கேள், உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.” அதுதான் இது. 247 அவர் ஒரே தேவன், மூன்று தேவர்களாயிருக்கவில்லை. அவர் தனது மூன்று அலுவல்களில் இருந்தார், மூன்று இடங்களில் பணியாற்றினார். அவர் தாமே தீர்க்கதரிசி, ஆசாரியன், மற்றும் இராஜாவாக இருக்கிறார். அவர் கழுகு, ஆட்டுக்குட்டி மற்றும் சிங்கமாக இருக்கிறார். அவர்தாமே பள்ளத்தாக்கின் லீலி, சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம், தாவீதின் வேரும் சந்ததியுமானவர். மொழியின் முதல் எழுத்து முதல் முடிவுமாயிருக்கிறார். அவரே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர். அவர் இவை யாவுமாயிருக்கிறார். ஆனால் அவர் ஒருவரே. அவர் ஒரே தேவனாயிருக்கிறார். அந்தப் பட்டங்கள் யாவும் அவருக்கு உரித்தவை தான், ஆனால் ஒரேயொரு தேவன் தான் உண்டு. 248 கத்தோலிக்க சபையானது, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்படும் வரையில் அதற்கு முன்பாக உள்ள காலத்தில் எவரும் அவ்வாறு ஞானஸ்நானம் கொடுத்தனர் என்பதை எந்த வேதாகம பக்கத்திலாவது, அல்லது சரித்திர குறிப்பிலிருந்தாவது காட்டவே முடியாது.
92249 நீங்கள் எனக்குக் காண்பிக்க எது எப்பக்கத்தில் உள்ளது என்று குறிப்பிட்டு, அப்படிப்பட்ட சான்றைப் பற்றிய ஓர் குறிப்பை இப்பிரசங்க பீடத்தில் எனக்காகக் கொண்டு வந்து வைத்து விடுவீர்களானால், அப்பொழுது, நான் இச்சபையை விட்டு, “நான் ஒரு மாய்மாலக்காரன், நான் மக்களுக்கு தவறானதைப் போதித்து விட்டேன்” என்று கூறிக்கொண்டே வெளியேறி விடுவேன். வேதாகமத்தில் எப்போதாவது ஜனங்கள், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்று எனக்கு காண்பிக்க ஒரு வேதப் பாடத்தையோ அல்லது ஒரு சரித்திர குறிப்பையோ, அதிகாரப் பூர்வமான சரித்திரத்தையோ கொண்டு வந்து எனக்குக் காண்பியுங்கள். கத்தோலிக்க சபையின் நிசாயா ஆலோசனை சங்கம் ஸ்தாபிக்கப்படும் வரையில் எவரேனும் எப்போதாவது எங்காவது, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள் என்ற ஒரு மேற்கோளை சரித்திரத்திலோ, சரித்திரப் புத்தகத்தின் ஒரு பக்கத்திலோ, அல்லது ஒரு வேதவாக்கியத்திலோ கொண்டு வாருங்கள். அதை என்னிடத்தில் கொண்டு வாருங்கள். அப்பொழுது நான், என் முதுகின் மேல், “நான் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி, ஜனங்களை தவறாக வழி நடத்துகிறவன்” என்று எழுதி தொங்க விட்டுக் கொண்டு இந்த ஜெபர்ஸன்வில் முழுவதும் நடந்து செல்வேன், அப்பொழுது நீங்கள் என் பின்னே வாகன எச்சரிக்கை ஒலியை எழும்பிக்கொண்டே யாவருக்கு அதை தெரியப்படுத்துங்கள். 250 இங்கே இக்காலையில், போதகர் யாராவது இருப்பார்களாயின், நீங்கள் அதை செய்யுங்கள், அதேபோல நான் அதை உங்களிடத்தில் செய்யும்படி நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும். புரிகிறதா? வந்து எனக்கு காண்பியுங்கள். ஆனால் நீங்களோ பயப்படுகிறீர்கள்.
93251 இது என்னவாக இருக்கிறது? இது வெளிப்படுத்துதலாயிருக்கிறது. இதுவே அந்த வெளிப்படுத்துதலாயிருக்கிறது. இது பரிசுத்த ஆவியாய் உள்ளது, கிறிஸ்து தம்முடைய செய்தியை சபைகளுக்கு அனுப்பியிருக்கிறார். அதற்கு செவி கொடுங்கள். அதற்கு செவி கொடுங்கள். அதைத்தான் வேதம் போதிக்கிறது. 252 இது எங்கே உள்ளே நுழைந்தது? நீங்கள் கோபமடையாதிருந்தால், இவ்வாரம் முழுவதும் தொடர்ந்து கேளுங்கள். நிசாயா ஆலோசனை சங்கத்தில் என்ன நடந்தது என்பதைக் காணுங்கள். அதற்காக நீங்கள்—நீங்கள் நிசாயா ஆலோசனை சங்கம் ஹிஸ்லாப்பின் இரு பாபிலோன்கள் என்ற நூல்களைப் பெற்று படித்துப் பாருங்கள். பெற்று… 253 இப்பொழுது, ஜோஸிபஸ் என்பவர் எழுதிய வரலாறு ஓரளவுக்குத் தான் சரி. ஆனால் கிறிஸ்துவைக் குறித்து எழுதிய ஒரு பத்தியில், இவ்வாறு கூறியுள்ளார். “இயேசு என்று பெயரிடப்பட்ட மனிதர் ஒருவர் இருந்தார். அவர் ஜனங்களை அவர்கள் வியாதியினின்றும் குணமாக்கினார். அவர் மரித்தார், இல்லை, இல்லை, அவரை பிலாத்து கொன்றான், இல்லை ஏரோது அவரைக் கொன்றான். பின்பு அவரது சீஷர்கள் மரித்த அவரது உடலைத் திருடிக் கொண்டு போய் அதை ஒளித்து வைத்திருந்தார்கள். ஒவ்வொரு இரவிலும் அவர்கள் போய் அவர் உடலிலிருந்து ஒரு துண்டை வெட்டி புசித்தார்கள்.” எனவே “அவர்கள் நரமாம்ச பட்சிகளாயிருந்தனர்.” ஆகையால் நீங்கள் பாருங்கள், அவர்கள் அந்தவிதமாகவே இராபோஜனத்தைப் புசித்துக் கொண்டிருந்தனர் என்று எழுதியுள்ளார் அது மாம்ச சிந்தையாயிற்றே! எவருமே ஜோஸிபஸ் கூறுவதற்கு செவிகொடுக்க வேண்டாம்.
94254 ஃபாக்ஸ் என்பவர் எழுதிய “இரத்த சாட்சிகள்” என்ற புத்தகத்தை எடுத்துப் பாருங்கள். அது மிகவும் ஆதாரப் பூர்வமாய் நம்பத் தகுந்தது. ஃபாக்ஸ் என்பவரின் இரத்த சாட்சிகளின் புத்தகத்தை எத்தனை பேர் வாசித்திருக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] நிச்சயமாக பெம்பர்ஸ் எழுதிய ஆதிகாலங்கள் அல்லது—அல்லது ஹிஸ்லாப்பின் இரு பாபிலோன்கள் அல்லது—அல்லது சில மிகவும் அதிகாரப் பூர்வமானதாக உள்ளன. மிகவும் அதிகாரப்பூர்வமானதாக உள்ள நிசாயா ஆலோசனை சங்கம், மற்றும் நிசாயா ஆலோசனை சங்கத்திற்கு முன், நிசாயா ஆலோசனை சங்கம் என்ற புத்தகங்களும் நம்மிடத்தில் உண்டு. இவை, ஒருவரும் எப்போதும் இவ்வாறு பெற்றதாகக் கூறவேயில்லை என்பதை நீங்களில் அங்கே கண்டறியலாம். 255 “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்ற இந்த பட்டங்களை வெறுமனே கூறி எவராவது எப்பொழுதாவது ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று கூறும் வேத வசனங்கள் இருக்கிறதா என்பதை பரிசுத்த வேதத்தில் எடுத்துப் பாருங்கள். அது மூன்று தேவர்களைக் குறிக்கிறது. அது ஒரு அஞ்ஞான மதசடங்காகத்தான் இருக்கிறது. இவ்வுலகில் காணப்படும் கத்தோலிக்க மதமானது, கிறிஸ்துவ ரூபத்தில் உள்ள ஒரு—ஒரு அஞ்ஞான மார்க்கமாகும். கத்தோலிக்க சபையிலிருந்து தான், மார்ட்டின் லூத்தர், ஜான் வெஸ்லி மற்றும் பாப்டிஸ்டு, பிரெஸ்பிடேரியன் ஆகியோர் வந்தனர். 256 ஆனால் இந்தக் கடைசி நாட்களில் இவையாவற்றிற்கும் நடுவில், மீண்டும் ஒரு சத்தியத்தை திறந்து கொடுக்கும் ஒரு வாசலானது வைக்கப்பட்டுள்ளது. அது, “வேதாம் இவ்வாறு கூறியுள்ளது” என்கிறது. அந்த மகத்தான தீர்க்கதரிசியானவர் இக்கடைசி நாட்களில் பூமியின் மேல் வரவேண்டும். அவர் வருகிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். கவனியுங்கள். அவருக்கு ஒரு சபை உண்டாயிருக்கும். இப்பொழுது நாம் அதைப் பார்ப்போம். இப்பொழுது
95257 இப்பொழுது, இது வெளிப்படுத்தலாயுள்ளது என்பது நினைவிருக்கட்டும். நீங்கள் அதிலிருந்து ஒன்றையும் எடுத்து விடமுடியாது. இப்பொழுது, என்னே ஒரு அறைகூவலாயிருக்கிறது! வேதத்தில் அவர்கள் தங்களுடைய பாவ மன்னிப்பிற்காக எவராவது “பிதாகுமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால்” எப்போதாவது ஒரு இடத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள் என்றோ அல்லது தெளித்தார்கள் என்றோ வேதத்தில் ஒரு நபரை எங்காவது பார்த்துச் சொல்லுங்கள் பார்க்கலாம். அப்படி அவர்கள் கொடுக்கவேயில்லை. ஆகவே ஒவ்வொரு நபரும், அவர்கள் வேறெந்த விதத்திலாவது ஏற்கெனவே ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும், அவர்கள் மீண்டும் வந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்” ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது.
96258 அப்போஸ்தலர் 19-ல், “பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுக்கு வந்தான்;” அங்கே சில சீஷரைக் கண்டு, அவர்களை “சீஷர்கள்” என்று கூறுகிறான். அவர்கள் ஒரு பெரிய கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அப்பொல்லோ என்ற மனிதனைப் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த அப்பொல்லோ என்பவன் மனம்மாறிய நியாயசாஸ்திரியாயிருந்தான்; அவன் யோவான் ஸ்நானனை விசுவாசித்த ஒரு பாப்டிஸ்டாயிருந்தான், இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு நிரூபித்துக் கொண்டிருந்தான். 259 அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகம் 8-ம் அதிகாரத்தில் ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோரின் இடத்தைக் கடந்து செல்லுகையில், பவுல் அவர்களை சந்தித்தான் அதன்பின்னர் ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லா ஆகியோரிடத்திற்கு பவுல் உணவருந்தச் சென்றபோது, அப்பொல்லோ என்ற இந்த மகத்தான மனிதனைப் பற்றி அவர்கள் பவுலிடம் கூறினர். அப்பொல்லோ பிரசங்கிப்பதைக் கேட்க அவர்கள் சென்றிருந்தார்கள். அவன் பேசுவதை பவுல் அந்த இராத்திரியில் கேட்டான். “அவன் நன்றாகத் தான் பிரசங்கிக்கிறான். அது அருமையாக உள்ளது. அது நன்றாய் உள்ளது. ஆனால்,” “நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று பவுல் கேட்டான். 260 நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டிருப்பதாக நம்புகிற பரிதாபத்துக்குரிய பாப்டிஸ்டுகளே உங்களைக் குறித்து என்ன? பவுல் அவர்களை, “நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். யாரோ ஒருவர், “அங்கு அவ்வாறு எழுதப்படவில்லை” என்று கூறினார். 261 அதை நான் மறுக்கிறேன். நான் அதிகார பூர்வமானதாக உள்ள மூல கிரேக்க வேதத்தை இங்கே வைத்துள்ளேன். எபிரேய மொழி வேதாகமம் கூட உள்ளது. கிரேக்க எபிரேயம் மற்றும் அரமிய மொழி வேதாகமங்களும், அவ்வாறுதான் கூறுகின்றன. அவைகள் மூன்றிலுமே, நான் அவைகளை இங்கே வைத்துள்ளேன், அதாவது, “நீங்கள் விசுவாசிகளான பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று தான் அவைகளில் உள்ளன. அது உண்மை. “நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியை பெற்றீர்களா?”
97262 இப்பொழுது, அவன், “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றான். அப்பொழுது அவன், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்றான். 263 அதற்கு அவர்கள், “நாங்கள் ஏற்கனவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே ஞானஸ்நான்ம் கொடுத்த மனிதனால் ஞானஸ்நானத்தை பெற்றுள்ளோம், நாங்கள் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்” என்றார்கள். ஒரு வேளை அதே குளத்தில் “அதே மனிதனால்” பெற்றோம் என்று கூறியிருக்கலாம். 264 பவுலோ “அந்த ஞானஸ்நானம் கிரியை செய்யாது, யோவான் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைத் தான் கொடுத்தான். பாவ மன்னிப்புக்காக அந்த ஞானஸ்நானம் கொடுக்கப்படவில்லை” என்று கூறினான். 265 இப்பொழுது, ஒருத்துவக் கொள்கைக்காரர்களே, உங்களில் சிலர், தவறாக ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள். நீங்கள் இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள். தண்ணீர் ஒரு மனிதனை இரட்சிக்கிறதில்லை. மனந்திரும்பும்போது, இரத்தமே அதைச் செய்கிறது. ஞானஸ்நானத்தின் மூலம் மறுஜென்மமடைவதில்லை. இல்லை ஐயா. ஆவியினாலே மறுஜென்மம் உண்டாகிறது. உட்புறத்தில் நடைபெற்றுள்ள மறு ஜென்மம் அடைதலின் கிரியையின் வெளிப்பிரகாரமான தோற்றம் தான் ஞான்ஸ்நானமாகும். புரிகிறதா? சரி. கவனியுங்கள்.
98266 அவன், “விசுவாசிகளான பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அவர்களோ… “பரிசுத்த ஆவியுண்டென்று நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்று அவர்கள் கூறினர். அதற்கு அவன், “அப்படியானால் நீங்கள் எவ்வாறு ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்?” என்று கேட்டான். “யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்” என்றார்கள். 267 அப்பொழுது அவன், “யோவான் மெய்யாகவே பலியாக வரவிருந்த ஆட்டுக்குட்டியானவராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் ‘நீங்கள் விசுவாசமாய் இருக்க வேண்டும்’ என்று கூறி மனந்திரும்புதலுக்கேற்ற, மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானங் கொடுத்தான்” என்றான். இதை அவர்கள் கேட்ட பொழுது, அவர்கள் மீண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றார்கள். பின்பு பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்த போது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று அந்நிய பாஷைகளில் பேசி தீர்க்கதரிசன்ம் உரைத்தார்கள்.
99268 எனவே, புதிய ஏற்பாட்டில் எங்காகிலும் எவராவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தவிர வேறு எந்த விதத்திலாவது ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்களா என்பதை எனக்குக் காண்பியுங்கள், அது வேதத்தில் இல்லையென்றே என்னிடம் சொல்லுவீர்கள். எனக்குக் காண்பியுங்கள். 269 பரிசுத்த அகாபஸ் மற்றும் மற்றவர்களும் நிசாயா ஆலோசனை சங்கத்தின் காலத்திற்கு முன்பு வரையிலும், அவர்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். மிஷெனிமார்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஊழியக் களத்தில் முதலில் பாடுபட்டனர். 270 ஆனால் நிசாயா ஆலோசனை சங்கம் கூடியபோது, அவர்கள் மூன்று தேவர்களின் கொள்கையை தழுவிக் கொண்டார்கள். அவர்களுடைய அஞ்ஞான மார்க்கத்தில் அவர்களுக்கு இருந்த ஜூபிடருக்குப் பதில், அவர்கள் பவுலை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் அஞ்ஞானிகளாக இருந்தபொழுது தொழுது கொண்டு வந்த வீனஸ் தேவதைக்குப் பதிலாக மரியாளை அந்த ஸ்தானத்தில் வைத்துக் கொண்டனர். அவர்கள் எல்லா விதமான தேவர்களையும், எல்லா விதமான பரிசுத்தவான்களையும் ஆராதித்து வந்தனர். அவர்கள் ஒரு திரித்துவ ஞானஸ்நானத்தையும் ஏற்படுத்தி, அதை ப்ராடெஸ்டெண்டுகளுக்கும் போஷித்தனர். அவர்கள் இன்னும் அதை பின்பற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.
100271 ஆனால் சாயங்கால நேர வெளிச்சங்கள் இப்பொழுது வந்துள்ளன. “சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்” என்று தீர்க்கதரிசி கூறினார். சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், மகிமைக்குப் போகும் பாதையை நீ நிச்சயம் கண்டடைவாய்; தண்ணீரின் வழியில் இன்று வெளிச்சம் உண்டு இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் அடக்கம் செய்யப்படுவீர். வாலிபரோ, முதியோரே, உங்களுடைய எல்லா பாவங்களையும்விட்டு மனந்திரும்புவீர், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உள்ளே பிரவேசிப்பார்; சாயங்கால வெளிச்சம் வந்து விட்டது தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்பது உண்மை. 272 நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு, “நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாக அறியக்கடவீர்கள்” என்றான். 2-ம் அதிகாரம் 16-ம் வசனம். ஆம்! “இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாக அறிய வேண்டும், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார்.”
101273 அண்மையில் தாவீதின் வீடு என்றழைக்கப்படும் ஓரிடத்தில் ஒரு யூதருடன் பேசினேன். அவர், “புறஜாதிகளாகிய நீங்கள் தேவனை மூன்று கூறாக்கி அவரை ஒரு யூதனுக்கு அளிக்க முடியாது. நாங்கள் அதைவிட மேலாக அறிந்திருக்கிறோம்” என்றார். 274 அப்பொழுது நான், “ரபீ, அது நியாயம் தான், ஆனால் நாங்கள் தேவனை மூன்று கூறாக்குகிறது இல்லை,” என்றேன். நான், “நீங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நிச்சயமாக” என்று பதிலளித்தார். அப்பொழுது நான், “ஏசாயா 9:6 ஐ நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்” என்றார். அப்பொழுது நான், “யாரைக் குறித்து தீர்க்கதரிசி அங்கே பேசிக்கொண்டிருக்கிறார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “மேசியாவைக் குறித்து” என்று பதிலளித்தார். அப்பொழுது நான், “மேசியாவுக்கும் தேவனுக்கும் என்ன உறவு இருக்கும்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர் தேவனாயிருப்பார்” என்றார். அப்பொழுது நான், “அது சரிதான்” என்றேன். ஆமென். பாருங்கள், அங்குதான் காரியமே உள்ளது. பாருங்கள், உங்களால் மூன்று கூறாக்க முடியாது.
102275 இங்குள்ள மிஷனரிகளில்…அதாவது அவர்களில் ஒருவர் இங்கே யூதர்களிடத்திற்கு செல்லப் போகிறவர், அந்த மனிதர் இங்கு அமர்ந்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். நீங்கள் யூதரிடம் ஒரு போதும், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்று கூற ஒருபோதும் முயற்சிக்காதீர். அது, “நிசாயா ஆலோசனை சங்கத்திலிருந்து” வந்தது என்று அவர் அறிந்துள்ளபடியால், அதைக் கேட்டவுடனே அவர் அதை உங்களுக்கு கூறிவிடுவார். அவர் அதற்கு செவிகொடுக்கமாட்டார். ஆனால் நீங்கள் அவருக்கு தேவன் எங்கே மாம்சமானார் என்றும், அவர் ஒரே தேவன் என்றும், அவரே மாம்ச ரூபத்தில் வெளிப்பட்டார் என்றும், அவர் நம்மை பரிசுத்தமாக்க நம்மிடையே வாசம் பண்ணினார் என்றும், மீண்டும் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் நமக்குள் வருவதற்காக அவர் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பதை புரிந்து கொள்ளச் செய்யுங்கள். தேவன், பிதா, பரிசுத்த ஆவி, எல்லாம் ஒரே நபராயிருக்கிறார்.
103276 வேதத்தில் மத்தேயு சுவிசேஷம் 1-, அதிகாரத்தில் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு கூறப்பட்டுள்ளதே, அதில் “ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்” என்று கூறப்பட்டுள்ளது. அதற்குக் கீழே தொடர்ந்து நீங்கள் படிப்பீர்களானால், அதன் பின்னர்…நான் அதை வாசிக்கட்டும், அதன் பின்னர் நான் இப்பொழுது எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை அறிவீர்கள். மத்தேயு 1-ம் அதிகாரம் நாம்…இப்பொழுது நாம் 18-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள்…கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 277 “‘பிதாவாகிய தேவனால்’” என்றா உள்ளது? அந்தவிதமாக வாசிக்கிறீர்களா? [சபையோர், “இல்லை” என்று கூறுகின்றனர்.—ஆசி.] யாரால் கர்ப்பவதியானாள் என்று எழுதப்பட்டுள்ளது? [“பரிசுத்த ஆவியினால்.’”] [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] பிதாவாகிய தேவனே அவரது பிதா என்று நான் நினைத்துக் கொண்டேனா? அப்படியானால் தேவன், பிதா, பரிசுத்த ஆவி எல்லாம் ஒரே ஆவியாய் உள்ளது. இல்லையென்றால் அவர் இரண்டு தகப்பன்மார்களை உடையவராயிருப்பாரே. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது… 278 “‘பிதாவாகிய தேவனாலா?’” ஊ? [சபையோர், “இல்லை. பரிசுத்த ஆவியினால்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] “பரிசுத்த ஆவியினால்.” அப்பொழுது இயேசு கிறிஸ்துவின் பிதாவாக இருந்தது யார்? [“பரிசுத்த ஆவி.”] பரிசுத்த ஆவி. உங்களுக்குள் இருக்கிற அது என்ன? [“பரிசுத்த ஆவி”] அது தேவனாகிய பிதாவும் கூட. இல்லையா? [“ஆமென்.”] நிச்சயமாக.
104அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக… 279 இங்கு பிதாவாகிய தேவன், இங்கு பரிசுத்த ஆவியாகிய தேவன், இங்கு குமாரனாகிய தேவன், பாருங்கள், அது மூன்று தேவர்கள். வேதம் அதைக் கூறுகிறதில்லை. பரிசுத்த ஆவியும், பிதாவும் ஒருவராகத்தான் இருக்க வேண்டும், அப்படியில்லையெனில், இயேசுவுக்கு இரண்டு பிதாக்கள் இருந்தனர் என்பதாகும். புரிகிறதா? அவர் இரண்டு பிதாக்களை உடையவராயிருக்க முடியாது. நீங்கள் அதை அறிவீர்கள். அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். 280 அதுதான் மத்தேயு 1-வது அதிகாரமாகும். 281 மத்தேயு 28:19-ல் இயேசு, “நீங்கள் புறப்பட்டுப் போய் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்” என்றார். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்றால் என்ன? [சபையோர், “இயேசு கிறிஸ்து” என்று கூறுகின்றனர்.—ஆசி.] உண்மையாகவே இயேசு கிறிஸ்து என்பதேயாகும். 282 நீங்கள் ஒரு காதல் கதையைப் படிக்கிறீர்கள், அதின் முடிவில் “ஜானும், மேரியும் அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்” என்று உள்ளது. யார் இந்த ஜானும் மேரியும்? அதைக் கண்டறிய நீங்கள் கதையின் துவக்கத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும். 283 அப்படிப்பட்ட ஒரு காரியமேயில்லையென்றால், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்பது நாமமேயில்லையென்றால், அப்படியானால் அது யார்? அது யாருடைய பெயர்? அவர் யாரைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் என்று பார்க்க கதையின் முதல் பகுதிக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.
105284 பெந்தெகொஸ்தே நாளில், பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினான். அவனுக்கு வெளிப்பாடு உண்டாயிருந்தது. யோவானுக்கு வெளிப்பாடு உண்டாயிருந்தது. 285 இயேசு வெளிப்படுத்துதலாயிருந்தார் . வேத வாக்கியத்தில் இங்கே அவரே தம்மைப் பற்றி, “இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவராகிய சர்வ வல்லமையுள்ளவராக இருக்கிற நான்” என்று எடுத்துக் காண்பித்துள்ளார். வ்வுயு! சரி. 286 நாம் இப்பொழுது வெளியே செல்லுவதற்கு முன் நம்மால் முடிந்தளவு துரிதமாக உடனே 7-ம் வசனத்திப் பார்ப்போம். …சர்வ வல்லமையுள்ளவருக்கு … மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். …தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். 287 அங்கே அந்த வெளிப்பாட்டைப் பாருங்கள், அது எப்படி வெளிப்படுத்தப்பட்டது? எவ்வாறு தேவன்…பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது யார் என்று கண்டுபிடிக்க முயற்சித்து, மனிதர்கள் தங்கள் தலையைச் சொரிந்து கொண்டு, தங்களுடைய தலைமுடியைப் பிய்த்துக்கொண்டு, மூன்றில் ஒன்று என்கின்றனர். நீங்கள் புரிந்துகொள்ளாமல் உங்களை தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு, தலையைச் சொரிந்து கொள்ளவேண்டாம், மேலே நோக்கிப் பாருங்கள், பரத்திலிருந்தே வெளிப்பாடு உண்டாகிறது. அது உண்மை. அதை அவர் வெளிப்படுத்துவார், அது, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்ற தனி நபர்கள் அல்ல, அது ஒரே தேவன் ஜீவித்த மூன்று உத்தியோகங்களாய் உள்ளன. 288 அவர் தம்மிலே தாமே “ஆவியானவர்” என்ற அலுவலில் இருந்து வந்தார். மானிடவர்க்கம் தாழ்ந்த நிலையில் இருந்தபடியால், அவரும், தமக்கென்று ஒரு சரீரத்தை உண்டாக்கினார், அதில் அவர் ஜீவித்து, தனது சொந்த இரத்தத்தை உண்டாக்கிக் கொண்டார். ஏதேன் தோட்டத்தில் ஏற்பட்ட மாம்ச சம்பந்தமான உடல் உறவில் ஏற்பட்டது போல் இது ஏற்படவில்லை. ஆனால் ஒரு சரீரத்தை உண்டாக்கினார். அந்த கன்னிப் பிறப்பினால் ஏற்பட்ட சரீரத்தினூடாக, நம்மை பரிசுத்தமாக்கின இரத்தத்தை அவர் நமக்களித்து, அவர் மேல் விசுவாசம் வைக்கும்படி நம்மை நம்முடைய அவிசுவாசத்தினின்று விடுவித்தார். அதை நாம் செய்யும் பொழுது, நாம் அவரை நமது இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறோம். அது தேவன் நமக்குள் இருப்பதாகும்; தேவனே; பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாயிருக்கிறார். புரிகிறதா? தீர்க்கதரிசியாக, ஆசாரியனாக, இராஜவாக இருக்கிறார் என்ற அதே காரியம் தான். சரி
106289 இப்பொழுது, நாம் 7-ம் வசனம், இது அறிவிப்பாய் உள்ளது. அந்த அறிவிப்பாவது: இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்… 290 ஓ! நமக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது? அங்கே அது மிகவும் அழகாக உள்ளது. நீங்கள் இன்னும் 30 அல்லது 20 நிமிடங்கள் இதற்காக அளிக்க முடியுமா? [சபையோர், “சரி” என்று கூறுகின்றனர்.—ஆசி.] உங்களால் முடியுமா? [“ஆமென்”] சரி. இப்பொழுது, அதன்பின்னர் நாளை…இன்றிரவிலே, பத்மு தீவு தரிசனத்தில் மீதம் உள்ளதை நாம் பார்க்க முயற்சிப்போம். இன்றைக்கு நாம் இந்த அறிவிப்பின் பேரில் முடிக்கப் போகிறோம். 291 ஓ! நீங்கள் நலமாக உணருகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] நீங்கள் இந்த பண்டைய வேதாகமத்தை நேசிக்கிறீர்களா? [“ஆமென்”] இது வெளிப்பாடாயிருக்கிறது. என்ன, இது என்ன? தேவன் இந்த புத்தகத்தை எடுத்து, அதிலுள்ள திரையை நீக்கி, “இதோ அவர் அங்கே இருக்கிறார்; தீர்க்கதரிசி, ஆசாரியன், இராஜா; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; அவர் இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர், இவையெல்லாம் அவரே, அவர் தேவன் தாமே” என்பதை வெளிப்படுத்துகிறார்.
107292 நாம் இப்பொழுது அப்படியே சில நிமிடங்களுக்கு திரையை நீக்கம் செய்வோம். நம்முடைய கண்களிலிருந்து திரையை எடுத்துப்போட கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. அதாவது… … இதோ மேகங்களுடனே வருகிறார்… 293 இப்பொழுது, அவர் எவ்வாறு வருகிறார்? “மேகங்களுடனே வருகிறார்.” என்ன விதமான மேகங்கள்? மகிமையின் மேகங்கள் இடி மின்னலுடன் வரும் இந்த மழை மேகங்கள் அல்ல இவை. ஆனால் மகிமையின் மேகங்கள். 294 பேதுருவும் மற்றவர்களும் மறுரூப மலையின் மேல் அவருடைய தரிசனத்தைக் கண்டபோது, ஒரு மேகம் அவரை சூழ்ந்திருந்தது, அப்பொழுது அவர் எந்தவிதமான ஒரு மேகத்தினால் சூழப்பட்டிருந்தார் என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். அவர் வஸ்திரமானது பிரகாசித்தது. அவர் ஒரு மேகத்தினால் தேவனுடைய வல்லமையினால் சூழப்பட்டிருந்தார். 295 ஓ, இந்த சபைக் காலங்களைப் பற்றிய செய்தியில் அதைப் பற்றி நாம் பார்ப்போம். அதைக் குறித்து சிந்திக்கையில், என் உள்ளான மனிதனில் ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது என்றே நான் உங்களிடத்தில் கூறுகிறேன். நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிற இந்த நாளை நான் பார்க்கையில், அதில், அவருடைய வருகையைத் தவிர வேறு நம்பிக்கைகள் எதுவுமே விடப்பட்டிருக்கவில்லை.
108296 இப்பொழுது நாம் விரைவாக இதைப் பார்ப்போம். இப்பொழுது நினைவிருக்கட்டும். கண்கள் யாவும் அவரைக் காணும்… 297 இப்பொழுது, அது எடுத்துக் கொள்ளப்படுதலாய் இருக்கவில்லை. அது எடுத்துக் கொள்ளப்படுதலா? [சபையோர், “இல்லை” என்று கூறுகின்றனர்.—ஆசி.] புரிகிறதா? அது எடுத்துக் கொள்ளப்படுதல் அல்ல. அது எடுத்துக்கொள்ளப்படுதலாயிருக்கவில்லை. அவர் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்? இரண்டாம் வருகை. “…அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியின் கோத்திரத்தாரெல்லாம் அவரைப் பார்த்து புலம்புவார்கள்…” 298 இப்பொழுது நாம் சற்று, முந்தைய கால சரித்திரத்திற்குத் திரும்பிப் போய் பார்ப்போம். நாம் சகரியாவிற்கு, சகரியாவின் புத்தகம் 12-ம் அதிகாரத்திற்குத் திருப்புவோம். சகரியா. சரி. 299 “இரட்சிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்.” இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அந்த நல்ல வெளிப்படுத்துதலுக்காக நாம் எவ்வளவாக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! அவருக்காக நீங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கவில்லையா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] இப்பொழுது இச்செய்திகளை மக்களுக்கு அளிக்கும்படியாக நாம் ஒரு புத்தகமாக கூடிய விரைவில் பெற்றுக் கொள்வோம். அப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டு உங்களுடைய அறையில் அமைதியாக படித்து ஆராயாலாம். சரி
109300 சகரியா, சகரியா, இப்பொழுது சகரியா 12-ம் அதிகாரம். நாம் இப்பொழுது இதை உண்மையாகவே ஜெபத்தோடு எடுத்துப் பார்க்க விரும்புகிறோம். நான் தேவனுடைய மகிமைக்காக இதை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது சகரியா 12-ம் அதிகாரம் 9-ம் வசனத்தை எடுப்போம். சகரியா 12-ம் அதிகாரம் நாம் 9-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இங்கே வருகையைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். சகரியா 12, நாம் 9-வது, 9-வது வசனத்தில் துவங்குவோம். …அந்நாளிலே… சகரியா கிறிஸ்துவின் வருகைக்கு 487 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தத் தீர்க்கதரிசனத்தை உரைக்கிறான். அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன். (அதைக் குறித்து எண்ணிப் பாருங்கள்.) நான் தாவீதின் குடும்பத்தாரின் மேலும் எருசலேம் குடிகளின் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து,…
110301 இப்பொழுது, எப்பொழுது சுவிசேஷமானது யூதர்களுக்குத் திரும்பிச் செல்கின்றது? புறஜாதிகளின் காலம் முடிவடைந்த பிறகு, சுவிசேஷம் யூதருக்கு செல்ல ஆயத்தமாயிருக்கும். ஓ, இங்கே இந்த நாளில் தானே, நடைபெறப் போகிற ஒரு காரியத்தை நான் உங்களுக்கு முன்னுரைக்க முடிந்தால் நலமாயிருக்கும், பாருங்கள், உங்களுக்குப் புரிகிறதா? அது நடை பெற இருக்கிறது. நாம் அதை சபைக் காலத்தில் பார்ப்போம். சம்பவிக்க ஆயத்தமாயிருக்கிற இந்த மகத்தான காரியம், வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்திலுள்ள அவ்விரு தீர்க்கதரிசிகளாகிய எலியா, மோசே ஆகியோரை யூதர்களுக்காக திரும்பக் கொண்டு வருகிறது. நாம் அதற்காக ஆயத்தமாயிருக்கிறோம். எல்லாமே சிரமமாக ஆயத்தமாக இருக்கிறது. இந்த புறஜாதிகளுக்கான செய்தியானது முதலில் புறஜாதிகளண்டைக்கு யூதர்கள் தான் கொண்டு வந்ததாகும். புறஜாதிகள் அதை மீண்டும் யூதர்களிடம் எடுத்துச் செல்வார்கள்; எடுத்துக் கொள்ளப்படுதல் அப்பொழுது வரும். 302 இப்பொழுது உபத்திரவ காலத்திற்கு பிறகு உள்ள…இந்த வருகையைப் பற்றி மனதில் வையுங்கள். உபத்திரவ காலத்திற்குள் சபையானது போவதில்லை. நாம் அதை அறிவோம். வேதம் அவ்வாறே கூறுகிறது. புரிகிறதா? சரி.
111303 இப்பொழுது, இஸ்ரவேல் வீட்டார் மேல் அவர் ஊற்றுவார், (எதை?) அதே பரிசுத்த ஆவியைத் தான் ஊற்றுவார். பாருங்கள், புறஜாதி சபை சென்றுவிட்ட பிறகே. …அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளியக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிமோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும். தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும்,…நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்; அவர்கள் நோக்கிப் பார்க்கையில் என்ன சம்பவிக்கும்? அவருடைய இரண்டாம் பிரசன்னமாகுதலில் மகிமையின் மேகங்களுடன் அவர் வரும்போது, என்ன சம்பவிக்கும்?
112304 அவரைக் குத்தின அந்த யூதர்கள்…உங்களுக்குத் தெரியும், இன்னொரு வேத வாக்கியத்தில் அவர்கள் அவரிடத்தில், அவர் இந்த வடுக்களை எங்கே பெற்றுக் கொண்டார் என்று கேட்டார்கள் என்று கூறுகிறது. அவரோ “என் சிநேகிதரின் வீட்டில்” என்று கூறுவார். 305 அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ளாத யூதருக்கு மட்டும் அது ஒரு புலம்பலின் வேளையாக இருக்காது. இந்த நாளுக்கென உள்ள மேசியாவாக அவரை ஏற்றுக் கொள்ளாமல், கைவிடப்பட்ட புறஜாதியாருக்கும் அது ஒரு புலம்பும் வேளையாயிருக்கும். அவர்கள் அழுது புலம்புவார்கள். உறங்கும் கன்னிகைகள் புலம்புவர். அதுவே தன்னுடைய தீவட்டிக்கு எண்ணெய்யைப் பெற்றுக் கொள்ள மறுத்த சபையாகும். அங்கே பத்து கன்னிகைகள் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அனைவருமே நல்ல ஜனங்கள் தான், ஆனால் அவர்களில் ஐந்து பேருக்கு மட்டுமே தங்கள் விளக்குகளில் எண்ணெய் இருந்தது. நல்ல ஜனங்களாய், நல்லவர்களாயிருந்த மற்ற ஐந்து பேர்களும், தங்கள் விளக்குகளில் எண்ணெயைப் பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டார்கள். “அவர்கள் புறம்பான இருளில் தள்ளப்படுவார்கள்; அங்கே அவர்களுக்கு அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.” 306 இங்கோ அது, “அவர்கள் அழுது புலம்புவார்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது. வேதாகமம், “அவர்கள் இருதயம் நொறுங்குண்டு அழுது புலம்புவார்கள்” என்று இங்கே கூறியுள்ளது.
113307 இங்கே, ஆதியாகமம் 45-ம் அதிகாரத்தில் நான் இன்னொரு வசனத்தை உங்களுக்குத் தருகிறேன், நீங்கள் அதை அறிந்து கொள்ளவிரும்பினால் நலமாயிருக்கும். நாம் இன்னும் சிறிது நேரத்தில் ஆதியாகமத்தில் உள்ள அவ்வசனத்தை எடுத்துக் கொண்டு அதையும் கூட வாசிப்போம். அது ஆதியாகமம் 45-ம் அதிகாரம் என்று நான் நம்புகிறேன். நான் அதை இங்கே எடுத்துப் படிக்க விரும்புகிறேன், அதாவது யோசேப்பு தன்—தன் ஜனங்களுக்கு தன்னை தெரியப்படுத்துகிறான். நாம் இதைப் படிப்போம், அந்த நாளில் என்ன சம்பவிக்கும் என்பதைக் குறித்த மாதிரிகளைக் காட்டுகிறது, ஆகையால் நாம் அதை ஒன்று சேர்ந்து பார்ப்போம். அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக் கொண்டிருக்கக் கூடாமல்; யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். 308 இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், யோசேப்பு தன்னை யார் என்று தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறான். அப்பொழுது “யாவரையும் என்னைவிட்டு போகப் பண்ணுங்கள்” என்று சத்தமிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். (அவன் சத்தமிட்டு கதறியிருக்க வேண்டும்.) யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக்கூடாமல் இருந்தார்கள். அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப் போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப் போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான் தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சனை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார் (ஓ! எவ்வளவு அழகாயிருக்கிறது) தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்
114309 இப்பொழுது ஒரு நிமிடம் நான் சகரியா12-ம் அதிகாரத்தோடு எடுத்து ஒப்பிட்டுப் பார்க்கட்டும். இப்பொழுது, நாம் அதில் மாதிரி உள்ளதை அறிவோம். நீங்கல் மாதிரிகளைக் கொண்டு போதித்தால், அப்பொழுது விஷயத்தை எப்பொழுதுமே நன்கு புரிந்து கொள்ளலாம், நான் மாதிரியைக் கொண்டு சிந்திக்கிறேன். 310 இப்பொழுது, யோசேப்பு, அவன் பிறந்தபொழுது, அவனது சகோதர்களால் அவன் பகைக்கப்பட்டான். அது சரி தானே? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] இப்பொழுது நான் உங்களுக்கு, யோசேப்பு ஆவியினால் நிரப்பட்ட சபைக்கு உதாரணமாகத் திகழ்கிறான் என்பதை காண்பிக்க விரும்புகிறேன். யோசேப்பு தன் சகோதரரால் பகைக்கப்பட்டான். ஏன்? ஏனெனில் அவன் ஆவிக்குரியவனாக இருந்தான். தரிசனங்கள் காண்பதை அவனால் நிறுத்த முடியவில்லை. அவன் சொப்பனங்கள் கண்டான், அதை அவனால் நிறுத்த முடியவில்லை. பாருங்கள், சொப்பனங்களை வியாக்கியானம் செய்யவும் செய்தான். அவன் தனக்குள் அதை கொண்டிருந்தான். அவன் தனக்குள் இருந்ததைத் தவிர வேறெதையும் வெளிக்காண்பிக்க முடியவில்லை. அப்பொழுது, அவனது சகோதரர்கள் முகாந்திரமின்றி அவனைப் பகைத்தார்கள். ஆனால் அவன் தந்தை அவனை நேசித்தார். ஏனெனில் அவன் தந்தை ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். 311 இயேசுவின் காரியம் எப்படியிருந்தது என்பதைப் பாருங்கள். தேவன் தன் குமாரனை நேசித்தார். ஆனால் சகோதரராகிய பரிசேயரும் சதுசேயரும் அவரை பகைத்தார்கள்; ஏனெனில் அவரால் வியாதியஸ்தரை குணமாக்க முடிந்தது, வரப்போகிறவைகளை முன்னுரைக்கவும், தரிசனங்கள் கண்டு, அவற்றை வியாக்கியானிக்கவும் முடிந்தது. நான் கூறியதை புரிந்து கொண்டீர்களா? “…முகாந்தரமின்றி அவரைப் பகைத்தார்கள்…”
115312 யோசேப்புக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? அவன் இறந்துவிட்டதாக கதை கட்டி, அவர்கள் அவனை ஒரு குழியில் போட்டுவிட்டார்கள். அவன் தந்தை அவனுக்கு அன்புடன் அளித்திருந்த ஏழு நிறங்களிலான அந்த அங்கியை இரத்தத்தில் தோய்த்து எடுத்தனர்… 313 வானவில்லில் ஏழு நிறங்கள் மாத்திரமே உள்ளன. வானவில், அது என்னவென்று நாம் அறிவோம், அதாவது நாம் அதை இன்றிரவு சற்றுக்கழித்துப் பார்ப்போம் என்று நான் நினைக்கிறேன். இங்கே இயேசுவுக்கு மேலே வானவில்லிருந்தது. அங்கே “அவர் பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாய் இருந்தார். ஒரு வானவில் இருந்து.” ஒரு வானவில்லானது ஒரு உடன்படிக்கையாயுள்ளது. 314 அது யோசேப்பின் மேலிருந்த தேவனுடைய உடன்படிக்கையாயிருந்தது. அவர்கள் அவனுடைய மேல் அங்கியை இரத்தத்தில் தோய்த்து அதை திரும்ப தந்தையிடம் கொண்டு சென்றனர். அவன் மரித்திருக்க வேண்டியதாயிருந்தது. மேலும்… 315 ஆனால் அவன் அந்த குழியிலிருந்து தூக்கியெடுக்கப்பட்டு பார்வோனுக்கு, எகிப்தில் உள்ள ஒருவனிடம் விற்கப்பட்டான், அவனை ஒரு—ஒரு தளபதி தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்தான். அவன் அங்கிருக்கையில், அவனுக்கு எதிராக ஒரு மோசமான பழியானது எழும்ப, அவன் சிறைச்சாலையில் தள்ளப்பட்டான். அவனோ அங்கிருந்த இரண்டு பேர்களான பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் கண்ட வெவ்வேறு சொப்பனங்களுக்கு வியாக்கியானம் செய்து தீர்க்கதரிசனமுரைத்தான், ஒருவன் எங்கே போவான் என்றும் மற்றவன் எங்கே போவான் என்றும் கூறினான். 316 அங்கிருந்தே அவன் பார்வோனின் வலது பாரிசத்திற்கு உயர்த்தப்பட்டான். யோசேப்பு மூலமாயல்லாமல் எவரும் பார்வோனை நெருங்க முடியாத அளவிற்கு உயர்த்தப்பட்டான். [ஒலிநாடாவில் காலி இடம்.—ஆசி.]
116317 இதைக் கவனியுங்கள். இப்பொழுது…யோசேப்பு எகிப்தியரிடம் விற்கப்பட்டபோது …கவனியுங்கள், அவன் செய்திருந்த ஒவ்வொன்றும் கிறிஸ்துவுக்கு மாதிரியாயிருந்தன. இந்த பானபாத்திரக்காரனையும் இந்த சுயம்பாகியையும் பாருங்கள், அவர்கள் இருவரும் சொப்பனங்களைக் கண்டிருந்தனர். இயேசு தனது சிறை வீட்டில் இருந்தபோது, யோசேப்பு சிறையில் இருந்தான் என்பது நினைவிருக்கட்டும். இயேசுவும், தன் சிறையில் இருந்தபொழுது, (எப்படி) அவர் சிலுவையில் அடையபட்டிருந்தபோது, ஒருவன் இரட்சிக்கப்பட்டான், ஒருவன் இழக்கப்பட்டான். யோசேப்பு அவன் சிறையில் இருந்தபோது, ஒருவன் இரட்சிக்கப்பட்டான், ஒருவன் இழக்கபட்டான். 318 கவனியுங்கள், இயேசு சிலுவை மரணத்திற்குப் பிறகு அவர் பரலோகத்திற்கு உயர்த்தப்பட்டு, மகத்தான ஆவியாகிய யேகோவாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். “…என்னையல்லாமல் ஒருவனும் தேவனிடத்தில் வரான்…” என்றார். “ மரியாளே வாழ்க ” என்றல்ல அல்லது இது ஆசீர்வதிக்கப்பட்டது அல்லது அது ஆசீர்வதிக்கப்பட்டது என்றல்ல. ஆனால் இயேசு கிறிஸ்து மூலமாகவே, “தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரே ஒரு மத்தியஸ்தர் தான் உண்டு.” தேவன் நம்மிடையே வாசம் செய்த அந்த விலையேறப்பெற்ற சரீரத்தின் மூலமாக, தேவனுடைய நாமமிடப்பட்டிருந்த அந்த சரீரத்தின் மூலமாகவே அணுக முடியும். தேவன் மானிடப் பெயரை சூடிக்கொண்டார். தேவன் சூடிக்கொண்டதோ…
117319 இங்கு கவனியுங்கள். ஆதியிலே ஆதாம்…அதிலிருந்து நான் விலகிச் செல்ல முடியவில்லை. எங்கோ ஒருவர் இவைகளை புரிந்து கொள்ளாமலிருப்பது போல் தென்படுகிறது. பாருங்கள். ஆதியில்…நான் மீண்டும் உங்களுக்கு ஒரு காரியத்தைக் காண்பிக்கட்டும். பரிசுத்த ஆவியானவர் இதைச் செய்ய என்னை எச்சரிக்கிறார். நான் என்னுடைய பொருளை விட்டு ஒரு நிமிடம் விலகிச் செல்கிறேன். ஆதாமாகிய குமாரன் வீழ்ந்துபோனது பற்றிய செய்தி மகிமைக்கு வருகையில், தேவன் ஒரு தூதனை அனுப்பினாரா? தேவன் ஒரு குமாரனை அனுப்பினாரா? அவர் வேறு யாரையாகிலும் அனுப்பினாரா? வீழ்ந்து போன தனது மைந்தனை மீட்க தாமே புறப்பட்டு வந்தார். அல்லேலூயா! அதைச் செய்ய தேவன் தம்மைத் தவிர வேறு எவரையும் நம்பவில்லை. தேவன் மாமிசமாகி நம்மிடையே வாசம் பண்ணி மனிதனை அவர்தாமே மீட்டுக் கொண்டார். அது…வேதம், “நாம் தேவனுடைய இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளது. அழிவுள்ள, தேவன்…பாவத்தை போக்குவதற்காக, அழியாமையுள்ளவரான தேவன் அழிவுள்ள சரீரத்தை எடுத்துக்கொண்டு, அவர் தாமே ஆட்டுக்குட்டியாகி காணமுடியாதபடி திரைபோட்டு மூடப்பட்டிருக்கும் தேவ மகிமைக்குள் பிரவேசிப்பதற்காக, அவர் தனது சொந்த இரத்தத்துடன் திரைக்கப்பால் தேவனுக்கு முன்பாக பிரவேசித்திருக்கிறார்.
118320 இப்பொழுது யோசேப்பு, அவன் எகிப்திற்குப் போகிறான். அங்கு அவன் சிறையிலிருந்து, பார்வோனின் வலது பாரிசத்திற்கு உயர்த்தப்பட்டு காவற்பொறுப்பாளாராக்கப்பட்டான். யோசேப்பின் நாட்களில் ஒவ்வொருகாரியமும் செழிப்படைந்திருந்தது. 321 இப்பொழுது, இயேசு திரும்பி வருகையில், பாலைவனமும் கூட ஒரு புஷ்பத்தைப் போல செழிக்கும். யோசேப்பின் மாதிரியான அவர் செழிப்பின் குமாரனாயிருக்கிறார். 322 அவர்கள் யோசேப்பை சிறையில் தள்ளினார்கள்…அந்த தளபதி அவனை தன்னுடைய வீட்டில் வைத்திருந்தான். அவர் செய்திருந்த ஒவ்வொரு காரியமும் செழித்திருந்தது. அவர்கள் அவனை சிறைச்சாலையில் போட்டிருந்தனர், முழு சிறைச்சாலையுமே செழிப்படைந்திருந்தது. அவர்கள் செய்திருந்த ஒவ்வொரு காரியத்திலும் அவன் செழிப்படைந்திருந்தான். அவன் பார்வோனால் உரிய ஸ்தானத்தில் பார்வோனுக்கு அடுத்த நிலையில் உயர்த்தப்பட்டபோது, எகிப்தில் உள்ள ஒவ்வொரு காரியமும் உலகில் இருந்த எந்தக் காரியத்திற்கும் மேலாய் செழித்திருந்தது. 323 இயேசுவும் திரும்பி வருகையில், இது ஒரு செழிப்பின் நிலமாக இருக்கும். பழைய பாலைவானங்கள் செழிக்கும், எங்கும் உணவு தாரளமாக் உண்டாயிருக்கும். அவர் ராஜாவாக திரும்பி வருகையில் நாம் ஒவ்வொருவரும் தம் சொந்த அத்திமரத்தின் கீழ் அமர்ந்து மகிழ்ந்து களிகூர்ந்து, அவரது பிரசன்னத்தில் என்றென்றும் வாழ்ந்திருப்போம்.
119324 அவர் மனுஷகுமாரனாயிருந்தார், அதாவது தீர்க்கதரிசியாயிருந்தார். ஆமென்! அவர் மனுஷகுமாரனாயிருந்தார், பலியாக, ஆசாரியன். அவர் இராஜாவான மனுஷகுமாரானாயிருக்கிறார். தமது மகத்துவமுள்ள சிங்காசனத்தில் தாவீதின் குமாரானாக அமர்ந்திருக்கிறார். மனுஷகுமாரன், அவர்…தேவன் மனஷகுமாரானாக வெளிப்பட்டார். உலகத்தின் பாவங்களைத் தொலைக்க அவர் இறங்கி வந்து மனிதனானார். அவர் மனிதனாகி, ஒரு தீர்க்கதரிசியானார். அவர் மனிதனாகி ஒரு ஆசாரியனானார். அவர் மனிதனாகிய் ஒரு இராஜாவானார். பரலோகத்தின் இராஜா, பரிசுத்தவான்களின் இராஜா, நித்திய ராஜா, எப்பொழுதும் இராஜாவாக இருந்தார், எப்பொழுதும் ராஜாவாக, நித்திய ராஜாவாக இருப்பார்.
120325 இப்பொழுது கவனியுங்கள், அதன்பின்னர் யோசேப்பு. யோசேப்பு தேசமெங்கும் புறப்பட்டுச் செல்லும்முன், அவர்கள் முதலில் எக்காள் முழக்கமிட வேண்டியதாயிருந்தது. அப்பொழுது ஜனங்கள், “யோசேப்புக்காக தெண்டனிட்டுப் பணியுங்கள்” என்று சத்தமிட்டனர். யோசேப்பு புறப்பட்டு வருகையில், வழியில் ஒருவன் எதைச் செய்து கொண்டிருந்தாலும் சரி, அவன் எந்த ஒரு பொருளை விற்றுக் கொண்டிருந்தாலும் சரி, எக்காளம் முழங்கும்போது, அவன் முழங்காற்படியிட வேண்டும். ஒருவன் தனக்குச் சேர வேண்டிய பணத்தை கரம் நீட்டி வாங்கும் நேரத்தில், எக்காளம் முழங்கினால், யோசேப்பு வந்து கொண்டிப்பதனால், அவன் முழங்காற்படியிட வேண்டும். ஓ! மற்றவரைப் போல பாவனையாக நடித்துக்காட்டுபவனும் கிட்டத்தட்ட தன்னுடைய செயலைச் செய்ய ஆயத்தமாகையில், அவன் என்ன செய்வான்? அவன் நிறுத்த வேண்டியதாயிருந்தது. “யோசேப்பு வருகிறார்” எக்காளம் முழங்கிவிட்டது. 326 இந்நாட்களிலொன்றில், அனைத்தும், நேரமும் கூட அசைவற்று நிற்கும், “தேவ எக்காளம் தொனிக்கும், அப்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள், பிரகாசமும் அழகுமுள்ள நித்தியத்திற்குள் அக்காலைப் பொழுது விடியும்.” எல்லா முழங்காலும் முடங்கும் “எல்லா முழங்கால்களும் முடங்கி, நாவுகள் யாவும் அவர் நாமத்தை அறிக்கை பண்ணும்.” இப்பொழுதே அதைத் தொடங்குங்கள், “சிலருடைய பாவங்கள் முந்திக் கொள்ளும், சிலருடைய பாவங்கள் அவர்களை பின் தொடரும்.”
121327 ஆனால் இப்பொழுது, என்ன சம்பவித்தது என்று கவனியுங்கள். அது எவ்வளவு மகிமையானது. யோசேப்பு புறஜாதியிலிருந்து தனக்கு ஒரு பெண்ணை விவாகம் செய்து கொண்ட பிறகு, எப்பிராயீம், மனாசே என்ற இரு குமாரர்களைப் பெற்றுக் கொண்டான். முடிவிலே நீங்கள் கவனித்தீர்களா? யோசேப்பு…யாக்கோபு எப்பிராயீம், மனாசே ஆகியோரை ஆசீர்வதிக்கத் துவங்கினபோது, யோசேப்பு மூத்தவனாகிய மனாசேயை தந்தையின் வலது கரத்திற்கு நேராகவும், எப்பீராயீமை தன் தந்தையின் இடது கைக்கு நேராகவும் வைத்தான். ஏனெனில் மூத்தவன் வலது கரத்தின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டுமென்று விரும்பினான். ஆனால் யாக்கோபு ஜெபம் பண்ணுகையில், யாக்கோபின் கைகள்மாறின, அதினால் வலது கரத்தின் ஆசீர்வாதங்கள் மூத்தவன் மேல் வருவதற்குப் பதிலாக இளையவன் மேல் வந்தது. 328 யோசேப்பு, “அப்படியல்ல தகப்பனே” என்று கூறினான். “மனாசேயின் மேல் வைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை எப்பிராயீமின் மேல் வைத்துவிட்டீர்” என்றான். அதற்கு யாக்கோபு, “தேவன் என் கைகளை மாறிப்போகச் செய்தார்” என்றான். 329 என்ன நேர்ந்தது? தேவனால் முதலில் தெரிந்து கொள்ளப்பட்ட பழம்பெரும் மக்களாகிய யூதர்கள் மேல் வரவிருந்த ஆசீர்வாதமானது, சிலுவையின் மூலமாக மணவாட்டியைப் பெற்றுக் கொள்ளும்படி புறஜாதிகள் மேல் வந்துவிட்டது. யூதர்களிடத்திலிருந்து ஆசீர்வாதமானது, சிலுவையின் மூலமாக மணவாட்டியைப் பெற்றுக்கொள்ளும்படி புறஜாதிகள் மேல் வந்துவிட்டது. யூதர்களிடத்திலிருந்து ஆசீர்வாதமானது புறஜாதிகள் மேல் சிலுவையில் மூலம் வந்தது. அவர்கள் சிலுவையை புறக்கணித்தனர். எனவே, அவர் தனக்கென புறஜாதி மணவாட்டியைப் பெற்றுக் கொண்டார்.
122330 இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னர், யோசேப்பு தன் சகோதரால் தள்ளப்பட்டு, அநேகமாண்டுகள் ஒருவருக்கொருவர் தொடர்பற்று இருந்தார்கள். அதேபோல் யூதர்களும் அநேக ஆண்டுகளாக…ஐக்கியமின்றி இருக்கிறார்கள். 331 இப்பொழுது கவனியுங்கள். நாம் இப்பொழுது, மீண்டும் சகரியா தீர்க்கதரிசியின் புத்தகத்திற்கு திருப்புவோம். யூதர்கள் குடும்பம் குடும்பமாக பிரிந்து நின்று அழுது புலம்புகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே புலம்பி, “நாம் எவ்வாறு இந்தத் தீங்கை செய்து விட்டோம்? நாம் எவ்வாறு இந்தத் தீங்குக்கு உடன்பட்டோம்?” என்று கூறுவார்கள். “அவர்கள், உம் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று” கேட்பார்கள்—அவரைக் குத்தினவர்களும் கூட “அவர் மேகங்களுடன் வருவார், அப்பொழுது அவரைக் குத்தினவர்களும் நோக்கிப் பார்ப்பார்கள். யூதர்களின் ஒவ்வொரு குடும்பத்தாரும், துக்கிப்பார்கள். அவர்கள் புலம்பி அழுவார்கள்.” அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியாது.
123332 யோசேப்பு…நீங்கள் அந்த வரலாற்றை அறிவீர்கள். யோசேப்பு தன் சகோதரருக்கு முன்பாக நிற்கையில், தனக்கு எபிரெய பாஷை தெரியாதது போல் காண்பித்துக் கொண்டு, அவர்களோடு பேச ஒரு மொழி பெயர்ப்பாளனை தனக்காக அமர்த்திக் கொண்டான். அவன் எபிரெய மொழி பேசத் தெரியாதவன் போல் நடந்து கொண்டான்; ஆனால் அவன் கண்டு கொள்ளவே இவ்வாறு செய்தான். அதன் பிறகு, இறுதியாக ஒரு நாளில் அவர்கள் தங்களெல்லாரிலும் இளையவனான தம்பி பென்யமீனை யோசேப்பின் முன்பாக கொண்டு வந்து விட்டபோது நீங்கள் கவனித்தீர்களா? யோசேப்பின் உள்ளம் தன் சகோதரன் பென்யமீனுக்காகப் பொங்கினது. 333 நம்முடைய யோசேப்பாகிய இயேசு கிற்ஸ்து திரும்பி வருகையில் அவரது உள்ளத்தை மிகவும் பொங்கச் செய்யுப்போகும் காரியமானது என்ன? ஈரான் போன்ற தூர தேசங்களில் சிதறிக் கிடந்து, தற்போது, புதிதாக பிறந்தவர்கள்போல் பாலஸ்தீனாவில் கூட்டிச் சேர்க்கப்பட்டு தன் ஆதி ஸ்தானத்தில் திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ள, தேவனுடைய கற்பனைகளை கைக்கொண்டு வந்த அவ்விளம் சபையாகிய அந்த யூதர்களினிமித்தம் தான் இயேசுவின் உள்ளம் பொங்கியெழும். அறு முனை கொண்ட தாவீதின் நட்சத்திரம் பொறித்த உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த அக்கொடியுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அத்தேசம் பிறந்துள்ளது. அங்கே இஸ்ரவேல் என்னும் தேசம் உள்ளது. தேசங்கள் உடைந்துகொண்டிருக்கின்றன, இஸ்ரவேலோ விழித்தெழுந்து கொண்டிருக்கிறாள், வேதம் முன்னுரைத்த அடையாளங்களின்படி புறஜாதியார் நாட்கள் எண்ணப்பட்டு, திகில்கள் சூழ்ந்துள்ளன; ஓ, சிதறிப்போனவரே, உங்களுடைய சொந்த தேசத்திற்கு திரும்புவீர் மீட்பின் நாள் சமீபித்துவிட்டது, மனுஷனுடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகின்றன; (அப்படியே அதை நோக்கிப்பார், அவர்கள் எல்லோரும் நரம்புத்தளர்வுற்று வந்துள்ளனர்.) ஆவியினால் நிரப்பப்பட்டு, உங்கள் தீவட்டிகளை சுத்திகரித்து சுத்தம் செய்வீர், மேல் நோக்கிப் பாருங்கள், உங்களுடைய மீட்புசமீபமாயுள்ளது. கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யுரைத்துக் கொண்டிருக்கின்றனர், தேவனுடைய சத்தியத்தை அவர்கள் மறுக்கின்றனர், கிறிஸ்துவாகிய இயேசுவே நமது தேவன்; (மகிமை! ஆனால் வெளிப்படுத்துதலானது வந்திருக்கிறது.) எனவே நாம் அப்போஸ்தலர் நடந்த பாதையில் நடப்போம், (சரியாக அவர்களுடைய அதே ஸ்தானத்தில்) ஏனெனில், மீட்பின் நாள் சமீபமாயுள்ளது, மனுஷருடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகின்றன; தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டு, உங்களுடைய தீவட்டியை சுத்தப்படுத்தி, சரி செய்வீர், மேல் நோக்கிப் பாருங்கள், உங்களுடைய மீட்பு சமீபமாயுள்ளது.
124334 ஓ! ஓ, யோசேப்பு தனது தம்பியாகிய பென்யமீனை அங்கு நிற்கப் பார்க்கையில்! அது அவனது இளைய தம்பி. நீங்கள் இப்பொழுது இளைய பென்யமீனைப் …?… அங்கே அமர்ந்திருக்கப் பார்க்கிறீர்களா? யூதர்கள் பூமிக்குரிய பன்னிரண்டு கோத்திரங்களிலும் இருந்து ஒரு இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர்கள், கிறிஸ்துவின் வருகையில் அவரைக் கண்டு அவரை ஏற்றுக் கொள்ள திரும்பி வருவார்கள். அவர்கள், “…இதோ இவரே நம்முடைய தேவன், இவருக்காக காத்திருந்தோம்” என்று கூறுவார்கள். அப்பொழுது அவர்கள் அவருடைய காயப்பட்டக் கரத்தைப் பார்த்து…“இந்த வடுக்கள் எங்கிருந்து உண்டானது?” என்று கேட்பார்கள். அவர், “என் சிநேகிதர் வீட்டில்” என்பார். 335 அவர்கள் அழுது புலம்புவார்கள். அவர் ஆகாயத்தில் நிற்கக் கண்டு, ஒவ்வொரு குடும்பமும், தாவீதின் குடும்பத்தார் தனியேயும், நப்தலியின் குடும்பத்தார் தனியேயும், அழுது புலம்புவார்கள். தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்த்துப் புலம்புவார்கள். 336 அப்பொழுது அவருடைய செய்தி என்னவாயிருக்கும்? யோசேப்பு கூறியதைக் கவனியுங்கள். அவன் அவர்களிடம் பேசியபோது…
125337 மற்றுமொரு காரியத்தைக் கவனியுங்கள். யோசேப்பின் முன்பாக இஸ்ரவேல் புத்திரர் சேர்ந்து வந்திருந்த பொழுது, அவன் அவர்களை நோக்கிப் பார்த்தான். அப்பொழுது அவன் தம்பியாகிய பென்யமீனை பார்த்தான். அவன் எப்பீராயீமைப் பார்த்தான். அவன் மற்ற யாவரையும் பார்த்தான், காத் முதற்கொண்டு அவர்கள் எல்லோரையும் பார்த்தான். பன்னிரெண்டு கோத்திரங்கள், அப்பொழுது பத்து கோத்திரங்கள் அவனுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தன. அவன் அவர்கள் யாவரும் அங்கே நிற்கக் கண்டான். அவர்கள் யாவரும் தன் சகோதரர்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் தன் தம்பியாகிய பென்யமீனை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவன் தொண்டை துக்கத்தால் அடைத்தது. அவர்கள் அவனது சகோதரர்கள் தான் என்று அவன் அறிந்திருந்தான். அவன் அப்பொழுது என்ன கூறினான்? “எல்லாரும் என்னைவிட்டு அகன்று போங்கள்” என்று கூறினான். அப்பொழுது யோசேப்பின் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சம்பவித்ததென்ன? அவர்கள் அரண்மனைக்குள் சென்றுவிட்டிருந்தனர். 338 புறஜாதி சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலில் எங்கு செல்லும்? அரண்மனைக்குச் செல்லும். மணவாட்டி, அல்லேலூயா, மணவாட்டி எடுத்துக்கொள்ளப்படுதலில் பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவாள். அவரைக் குத்தினவர்களும், அவரைப் புறக்கணித்தவர்களுமான யூதர்களாகிய தன் சொந்த சகோதரர்களுக்கு இயேசு தன்னை அறியப்படச் செய்யும்போது, அதற்காக இயேசு திரும்பி வருகையில், மணவாட்டி இப்புவியில் இருக்கமாட்டாள்.
126339 ஆனால் அவரது மனைவியும், அவருக்குப் பிரியமானவர்களும், அவரது நெருங்கிய சிநேகிதரும், அவருடைய சொந்தமான தேவன் அனுப்பிய அவரது துணையும் ஆலயத்தில் இருப்பர். அவன் நோக்கிப் பார்த்தபோது, அவர்கள்…அவர்கள் அறியாமலிருந்தனர். அவர்கள், “ஓ, இந்த மாகா தேசாதிபதி!” என்றனர். மேலும் அவர்கள் தங்களுக்குள் ஒருவரோடொருவர் யோசேப்புக்கு தாங்கள் செய்த தீங்கைக் குறித்துப் பேசிக் கொள்ளத் துவங்கினர். 340 அது எப்பிராயீம் என்று நினைக்கிறேன். இல்லை, அது எப்பிராயீம் அல்ல, அது யாராயிருந்தது என்று நான் மறந்து விட்டேன். அதாவது, “…நம் சகோதரனாகிய யோசேப்பை நாம் கொன்றிருக்கக்கூடாது” என்றும், “நீங்கள் பாருங்கள், நாம் அதற்குரிய தண்டனையைத் தான் திரும்ப பெற்றுக்கொண்டிருக்கிறேன்” என்றான். ரூபன், ரூபன், “நாம் நம்முடைய சகொதரனை கொன்றிருக்கக் கூடாது” என்றும், “ஏனென்றால், நீங்கள் பாருங்கள், நாம் செய்துள்ளவற்றிற்கான தண்டனையை நாம் திரும்ப பெற்றுக் கொண்டிருக்கிறோம்” என்றான். 341 யோசேப்பு அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்தான்; அவனால் எபிரெய மொழியை புரிந்து கொள்ள முடியாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆனால் அவன் அதை அறிந்திருந்தான். 342 சிலர்…அந்நிய பாஷையில் பேசுவதை புரிந்து கொள்ள முடியாது என்று கருதுகின்றனர். ஆனால் அவர் அதைப் பற்றிய யாவையும் அறிந்தேயிருக்கிறார். ஆம், அவர் அறிந்துள்ளார். புறஜாதி இராஜ்ஜியங்களின் வரிசையில் (முதலாவதான தலையான), பொன்னான தலை வந்த போது, அது விழுந்து போவதற்கு முன்பாக, அந்நிய பாஷையில் பேசுதலும், வியாக்கியானித்தலும் உண்டாயிருந்தது. முதலாவதான புறஜாதி யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது எது? எவரும் அறிந்திராத அந்நிய பாஷையில், ஒரு கையுறுப்புத் தோன்றி, சுவற்றில் எழுதியது. அவற்றை, அங்கேயிருந்த ஒரு மனிதன் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை வியாக்கியானித்துக் கூறினான். அது அந்தவிதமாகவே முடிவடையும். ஆமென். அது உள்ளே பிரவேசித்த விதமாகவே முடிவு பெறும்.
127343 அவர்கள் பேசின பாஷையை யோசேப்பு புரிந்துகொள்ள முடியவில்லை என்று அவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் அவன் அதை அறிந்திருந்தான். அவர்களோ, “நமக்கு என்ன நேரிட்டது என்று நீங்கள் பார்த்தீர்களா?” என்று கேட்டனர். அப்பொழுது, யோசேப்பு அவர்கள் செய்திருந்ததற்காக அவர்கள் வருந்தியதைக் கண்டான். 344 இப்பொழுது, அவரைப் புறக்கணித்ததற்காக அவர்கள் வருத்தப்படுகிற அவர்களுடைய துயரத்தை அவர் காணும்போது, அவர் அழாமல் தன்னுடைய தொண்டையை அடக்கிக்கொள்கிறார். அவர் தம்முடைய சபையை இப்பூமியிலிருந்து எழுப்பி, அவளை மகிமைக்குள் கொண்டு செல்ல ஆயத்தமாயிருக்கிறார். அதன் பின்பு, திரும்பி வருவார், அப்பொழுது பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் புலம்புவார்கள். 345 அவர்கள் என்ன செய்தனர்? ரூபன் முதற்கொண்டு, அவர்கள் அனைவரும், அவர்கள், “ஓ! ஓ!” என்று கதறியழத் தொடங்கினர். அவர்கள் பயமடைந்து, “இது தான் யோசேப்பு. இப்பொழுது நாம் அதற்கான தண்டனையில் தான் இருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். இப்பொழுது யோசேப்பு நம்மைக் கொன்று போடுவான். இப்பொழுதே, அவன்…நாம் இப்பொழுதே அழிக்கப்படப் போகிறோம் என்பதை நாம் அறிவோம், ஏனெனில் யோசேப்பு நம்மை விட்டு அகன்று அநேக காலமாக இருந்து விட்டான். அது நம்முடைய சகோதரனாகிய யோசேப்பு. இப்பொழுது நாம் உண்மையாகவே அதற்கான தண்டனைக்குத்தான் இருக்கிறோம்” என்றனர். 346 ஆனால் யோசேப்போ, “நீங்கள் சஞ்ச்சலப்பட வேண்டாம். ஜீவரட்சனை செய்யும்படிக்கே தேவன் இதைச் செய்தார்” என்றான். 347 தேவன் என்ன செய்தார்? இயேசுவை யூதர்கள் ஏன் புறகணித்ததனர்? தேவன் தமது நாமத்தினிமித்தமாக, தெரிந்தெடுத்து அழைத்த ஜனமாகிய புறஜாதி சபையாகிய மணவாட்டியாகிய நமக்கு ஜீவரட்சணை செய்யும்படியாகவே இதைச் செய்தார்.
128348 அவரைப் புறக்கணித்த கோத்திரத்தார் யாவரும் துக்கித்துப் புலம்புவார்கள். அவர்கள் குகைகளிலும், கன்மலைகளிலும் தங்களை ஒளித்துக்கொண்டு, “மலைகளே எங்கள் மேல் விழுந்து மறைத்துக்கொள்ளுங்கள்” என்பார்கள். அவர்கள் அவரை புறக்கணித்தனர். அவர் நிமித்தமாக பூமியின் கோத்திரத்தார் யாவரும் அழுது புலம்புவார்கள். இஸ்ரவேலருக்குள்ளே அவர்கள் கோத்திரம் கோத்திரமாக பிரிந்தும், குடும்பம் குடும்பமுமாக பிரிந்தும், அழுது புலம்பி, “நாம் ஏன் இதைச் செய்தோம், நாம் அவரை எப்படி புறக்கணித்தோம்? எப்படி? இதோ அவர் நிற்கிறார், இவரே நம் தேவன், இவருக்காக காத்திருந்தோம். அங்கே அவர் தம்முடைய கைகளில் ஆணி கடாவப்பட்டதினால் உண்டான காயத்தழும்புகளுடன் நிற்கிறார், நாமே அதைச் செய்தோம்” என்று கூறிப் புலம்புவார்கள். 349 அதே விதமாகத்தான் எகிப்திலும், “இதோ யோசேப்பு, நாம் அவனை விற்றோம்” என்று யோசேப்பின் சகோதரர்கள் அங்கே திரும்பி வந்து கூறினார்கள். அப்பொழுது யோசேப்பு, “எகிப்திலே விற்றுப்போட்ட உங்கள சகோதரனாகிய யோசேப்பு நான் தான்” என்று கூறினான். 350 “ஓ!” அவர்கள் பயமடைந்துவிட்டனர். அவர்கள் துக்கித்துப் புலம்பி, “நாம் என்ன செய்ய முடியும்?” என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டனர். 351 அப்பொழுது அவன், “நீங்கள் சஞ்சலப் படவேண்டாம், ஏனென்றால் தேவனே இதைச் செய்தார். தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்” என்று கூறினான்.
129352 தேவன் எல்லா மனிதரையும் சிருஷ்டித்தார். அவர்கள் வெள்ளை மனிதராயினும், கறுப்பு மனிதராயினும், பழுப்பு நிறத்தவாயினும், மஞ்சள் நிறத்தவராயினும், ஒவ்வொரு மனிதனையும் தேவன் சிருஷ்டித்தார். அவரே புறஜாதியினரையும், யூதரையும் சிருஷ்டித்தார். அவரே எல்லோரையும் சிருஷ்டித்தார். அது அவருடைய மகிமைக்காகவேயாகும். புறஜாதியிலிருந்து மணவாட்டியைத் தெரிந்து கொள்ள அவர் யூதர்களை புறக்கணிக்க வேண்டியதாயிருந்தது. 353 அந்தக் காரணத்தினால் தான் இந்த எல்லா முன்னடையாளங்களும் உள்ளன. எனவே புறஜாதி மணவாட்டியும், அவளுடைய சந்ததியும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் கழுவப்பட்ட மகிமையால் நிறைந்த பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்ற சபையாய், ஒரு நாளில் எடுத்துக் கொள்ளப்படுதலில் (ஒரு நொடிப் பொழுதில், ஒரு இமைப் பொழுதில்) இயேசுவின் சமூகத்தில் போகும்படி அவர்களுக்குள் வாசம் பண்ணும் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் எடுத்துக் கொள்ளப்படுவாள். இது அவர் திரும்பி வந்து (யாவற்றையும் முடிவுக்குக் கொண்டு வருகையில்) சம்பவிக்கும், அப்பொழுது அவர் தன் சகோதரருக்கு தன்னை வெளிப்படுத்துவார்.
130354 முடிவாக, வேத வாக்கியம் இங்கே என்ன கூறுகிறது என்பதைக் கவனியுங்கள். ஓ! இதோ மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும் (இப்பொழுது அவர் இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார், எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்தல்ல), அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; 355 7-ம் அதிகாரம், 1-ம் வசனம்…இல்லை 1-ம் அதிகாரத்தின் 7-ம் வசனம். …கண்கள் யாவும் அவரைக் காணும்; அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்து புலம்புவார்கள். அப்படியே ஆகும். ஆமென். 356 அதன் பிறகு அவர் அந்த மகத்தான மேற்கோளைத் தருகிறார். இவர் யார்? அவர்கள் நோக்கிப் பார்க்கப் போகிற இவர் யார்? நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன். நான் மொழியின் முதல் எழுத்து முதல் முடிவும் மட்டுமாய் உள்ளேன். (கிரேக்க மொழியின் அகர வரிசையில் “அல்பா” முதலெழுத்தும் “ஒமெகா” கடைசி எழுத்துமாகும்.)
131357 அப்போஸ்தலர் 2:36-ல் பேதுரு, “மனுஷர் இரட்சிக்கப்படும்படி வானத்தின் கீழே வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை” என்றான். இல்லை, இல்லை, நான் உங்களின் மன்னிப்பை வேண்டுகிறேன். நான் அதை தவறாக குறிப்பிட்டு விட்டேன். அவன், “ஆகையினால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாக அறியக்கடவர்கள்” என்றான். 358 யோவான் 14:7 முதல் 12 வரையில் உள்ள வசனங்களில், தோமா, “பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்” என்றான். 359 அதற்கு, “இவ்வுளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?” என்றார். மேலும், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, ‘பிதாவை எங்களுக்குக் காண்பியும்’ என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்றார். 360 நான் ஒரு சமயம் ஒரு நபரிடம் இந்த வசனத்தைக் கூறினேன். அப்பொழுது அந்த பெண்மணி, “ஒரு நிமிடம் பொறுங்கள், திருவாளர், பிரான்ஹாமே, நீங்களும் உங்கள் மனைவியும் கூட ஒன்று தானே” என்றாள். அதற்கு நான், “ஆனால் அது அந்த விதமானதல்ல” என்றேன். அவள், “எப்படி?” என்று கேட்டார். அப்பொழுது நான், “என்னை நீ காண்கிறாயா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “ஆம்” என்றாள். அப்பொழுது நான், “என்னை பார்க்கையில் என் மனைவியையும் பார்க்கிறாயா?” என்று கேட்டேன். அதற்கு அவள் “இல்லை” என்றாள். 361 அப்பொழுது நான், “அப்படியானால், அவர்கள் ஒரு வித்தியாசமான விதத்தில் இருக்கிறார்கள். அவர், ‘நீங்கள் என்னைக் காணும்போது, நீங்கள் என் பிதாவைக் கண்டுவிட்டீர்கள் என்றாரே’” என்று கூறினேன். எனவே அதுவே அதற்கு போதுமானதாயிருந்தது.
132362 ஆகையால் பரிசுத்த யோவானில், இல்லை I யோவான் 5-ம் அதிகாரம் 7-ம் 8-ம் வசனங்கள், நீங்கள் யாவரும் அதைக் குறித்துக் கொள்ளலாம். I யோவான் 5: 7 முதல் 8 வரை, வேதம் உரைத்துள்ளது. இயேசு தந்த வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதிய அதே மனிதன், பேச்சாளன், யோவான் இங்கே கூறுகிறார். அவன், “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை (வார்த்தை தான் குமாரன்)…பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி இந்த மூன்றும் ஒன்றும் தான். பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது என்றான். இவை மூன்றும் ஒன்றல்ல, இவை மூன்றும் ஒருமைப்பட்டிருக்கின்றன.” 363 நீங்கள் குமாரனையுடையவராயில்லாமல் நீங்கள் பிதாவை உடையவர்களாக இருக்க முடியாது. பரிசுத்த ஆவியை உடையவராயில்லாமல், நீங்கள் பிதாவையோ, அல்லது குமாரனையோ உடையவர்களாக இருக்க முடியாது. ஆனால் நீங்கள்…தண்ணீர், இரத்தம் மற்றும் ஆவி இவை மூன்று மூலமான காரியங்களைக் கொண்டு தான் நீங்கள் அவருடைய சரீரத்திற்குள் இடம் பெற முடியும். 364 ஒரு இயற்கைப் பிறப்பு நிகழும் போது, ஒரு ஸ்திரீ ஒரு குழந்தையை பிரசவிக்கும்போது, முதலாவது சம்பவிக்கிற காரியம் என்ன? முதலாவது காரியம் தண்ணீர், இரண்டாவது காரியம் இரத்தம். அது சரிதானே? அடுத்தக் காரியம் ஆவி. அந்தக் குழந்தை தன்னுடைய சுவாசத்தை பெற்றுக் கொண்டு சுவாசிக்க துவங்குகிறது. தண்ணீர், இரத்தம், ஆவி, அதுவே இயற்கையான பிறப்பை உண்டாக்குகிறது. 365 அவ்வாளே ஆவிக்குரியப் பிறப்பும் கூட. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீர் ஞானஸ்நானம்; விசுவாசத்தினால் நீதிமானாகுதல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்தல். தண்ணீர்! அடுத்தது என்ன? இரத்தம்; பரிசுத்தமாகுதல், சுத்திகரிக்கப்படுதல், குழந்தை வெளியேறுதல்.
133366 அங்கே தான் நசரேய சபைக்காரர்களே, நீங்கள் தவறிவிட்டீர்கள். முதலிரண்டு கட்டம் வரைக்கும் மட்டும் போன நீங்கள், அதற்கு மேற்கொண்டு உள்ள கட்டத்திற்குச் செல்லவில்லை. பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரம் பலிபீடத்தின் மேல் சேவைக்காக ஆயத்தமாயிருத்தல், ஆனால் சேவையில் இல்லை. “நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்” பாக்கியவான்கள் என்பதைப் பற்றிய மலைப்பிரசங்கங்கள். பாத்திரம் பரிசுத்தமாக்கப்பட்டுள்ளது. அது உண்மை. 367 அது “கன்னி” என்பதைப் போன்றுள்ளது. “கன்னி” என்ற வார்த்தை, “சுத்தமான, பரிசுத்தமான, கலப்படமில்லாத, பரிசுத்தமாக்கப்பட்ட” என்று பொருள்படும். ஐந்து கன்னியரிடம் எண்ணெய் இருந்தது, மற்ற ஐந்து கன்னியரிடம் எண்ணெய் இருக்கவில்லை. முதல் ஐந்து பேர்களும் ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தனர். மற்ற ஐந்து பேர்களும் பரிசுத்தமாக்கப்படுதலில் தரித்திருந்துவிட்டனர். பாப்டிஸ்டுகளே, பிரஸ்பிடேரியன்களே. “நீங்கள் விசுவாசிகளான பிறகு நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” “பரிசுத்த ஆவி உண்டென்று நாங்கள் கேள்விப்படவேயில்லை.” “அப்படியென்றால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” ஊ—ஊ. 368 அல்லாமலும் பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார். அதாவது அவர்கள் இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட பிறகு, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். சரி.
134369 தண்ணீர், இரத்தம், ஆவி! இயேசு வந்து வாசம் பண்ணும்படி, அவர் ஒரு சபையைக் கழுவி, சுத்தம் செய்து, பரிசுத்தமாக்க வந்தார். அவர் தம்முடைய சொந்த இரத்தத்தினால்; அவர் நம்முடைய பாலியல் பிறப்பிலிருந்து நம்மை கழுவி சுத்திகரித்திடவும், நமக்கு பரிசுத்தமாக்கபட்ட, பரிசுத்த பாத்திரத்தை ஈந்து, அதில் வந்து அவர் தாமே வாசம் பண்ணும்படியாக அவர் தேவனால் பிறந்த தம்முடைய சொந்த இரத்தத்தைத் தந்தார். 370 “இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைக் காணாது, ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள், ஏனெனில் நான்,” தனிப்பட்ட பிரதி பெயர், “உங்களுடனும், உங்களுக்குள்ளும் உலகத்தின் முடிவு பரியந்தமும் இருக்கிறேன்” ஆமென். “சகல நாட்களிலும் நான் உங்களோடும் உங்களுக்குள்ளும் இருக்கிறேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.” தேவன் சபையில்! ஓ, என்னே! தெய்வீகத் தன்மை! “பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை (குமாரன்) பரிசுத்த ஆவி. இம்மூன்றும் ஒருவர் தான்.”
135371 இப்பொழுது நீங்கள் பரிசுத்தமாக்கப்படாமல், நீங்கள் இரட்சிக்கப்பட முடியும். நீங்கள் பரிசுத்த ஆவியை பெறாமலும் பரிசுத்தமாகப்பட முடியும்; சரி. பரிசுத்தமாக்கப்பட்ட ஆவி, பரிசுத்த ஆவியால் நிரப்பப்படாத நிலையில் இருக்கக்கூடும். உங்கள் இருதயத்தை பரிசுத்தப்படுத்தி, உங்கள் இருதயத்தை கழுவியிருந்தும், ஏதோ ஒன்றால் நிரப்பப்படாத நிலையில் இருத்தல். அதைத் தான் அவர், “அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும் போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல், நான் விட்டு வந்த என் வீட்டுக்குத் திரும்பி போவேன் என்று சொல்லி, அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு திரும்பிபோய், அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும், அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்” என்றார். 372 அதுதான் யாத்திரீக பரிசுத்தராகிய உங்களுக்கும், நசரேய சபையாராகிய உங்களுக்கும் மற்ற அதைப் போன்றோருக்கும் சம்பவித்துள்ளது. நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். பரிசுத்த ஆவியானவர் வந்து, அந்நிய பாஷைகளில் பேசி, அடையாளங்களையும் அற்புதங்களையும் அளிக்கும்போது, நீங்கள் அதை “பிசாசு” என்று அழைத்து, தேவனுடைய கிரியைகளை தேவதூஷணமாகக் கூறி, “அசுத்தமான காரியம்” என்று அழைத்தீர்கள். உங்களுடைய சபை எங்கே போய்விட்டது என்று நீங்கள் பார்க்கிறீர்களா? அவளை விட்டு வெளியே வாருங்கள்! அந்த வேளையானது இங்கே உள்ளது, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு போதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையின் கிரியைகளில் வெளிப்படுத்தினார். ஆமென். மீட்பின் நாள் சமீபமாயிருக்கிறது.
136373 இப்பொழுது, அவருக்குள்ளிருக்கும் தெய்வீகத்தன்மை, I தீமோத்தேயு 3:16 அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்கிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்…தேவதூதர்களால் காணப்பட்டார்,…உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார். 374 ஓ, அப்படியே தொடர்ந்து பார்த்துக்கொண்டே போகலாம். ஆனால் நாம் இப்பொழுது எந்த இடத்திற்கு வந்திருக்கிறோம்? 8-ம் வசனத்தில் இறுதிப் பகுதியிலே இருக்கிறோம். 375 இன்றிரவிலே நாம் பத்மு தீவு தரிசனம் என்ற தலைப்பில் 9-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். ஓ, நமக்காக மகத்தான காரியங்கள் ஆயத்தமாக உள்ளன. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்—ஆசி.] நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனெனில் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே.
137376 நீங்கள் உண்மையாக அதைச் செய்கிறீர்களா? அவர் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்று வெளிப்படுத்தப்பட்டு, பாவத்தைப் போக்க தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று தேவன் தம்மையே உங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறாரா? அவர் தனது சபைகளிலே இக்கடைசி நாட்களில் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் தம்மை தெரியப்படுத்துகிறார். 377 இப்பொழுது, சபையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற இந்தக் காரியங்கள், சரியாக இந்தக் காரியங்கள் சம்பவிக்க வேண்டியவைகளாயிருக்கின்றன என்று வேதம் கூறவில்லையா என்று இந்த செய்தியின் முடிவில் கவனித்துப் பாருங்கள். எபேசு சபைக் காலத்திலும், பெர்கமு சபைக் காலத்திலும், தீயத்திரா சபைக் காலத்திலும், மற்றும் ஒவ்வொரு சபைக் காலத்திலும் அவைகள் சரியாக நடைபெறவில்லையா என்றுப் பாருங்கள். 378 லூத்தர் எப்படி செய்வார், வெஸ்லி எப்படி செய்வார் என்பதைப் பற்றியும் கூறப்பட்டது. எவ்வாறு இந்த பெந்தெகொஸ்தே சபை ஸ்தாபனமானது லவோதிக்கேயா சபை காலத்திற்குரிய வெது வெதுப்பான நிலைமைக்குள் போகும் என்பதைக் குறித்தும் கூறப்பட்டது, ஆனால் அதன் நடுவில், அவர் ஜனங்களை வெளியே இழுப்பார். அது உண்மை. அது முற்றிலும் சரியே. நாம் முடிவில் இருக்கிறோம். ஓ! நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஓ, நானே நிலைகுலைந்து போனதுபோல, என் நண்பர்களையும் மற்ற காரியங்களையும் பார்க்கிறேன், உலகம் இருக்கிற நிலையையும் அதில் உள்ள குழப்பமான் நிலையையும் நான் பார்க்கிறேன். ஆகையால் கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாயிருப்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நாம் காலத்தின் முடிவில் இருக்கிறோம்.
138379 மனுஷருடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகிறது. எங்கும் யாவரும் அந்த நிலையில் உள்ளனர். அடிக்கடி வானொலியில், “விமானத் தாக்குதல் பற்றி எச்சரிக்கப்படுகிறோம்; அவர்கள், வான் ஊர்தி தாக்குதல் வரப்போகிறபடியால் ஆயத்தமாயிருங்கள். இதை எடுத்துக் கொண்டு, அதை எடுத்துக்கொண்டு கட்டிடத்தின் அடித்தளத்திற்குள் போய் ஒளிந்து கொள்ளுங்கள்” என்று எச்சரிக்கின்றனர். அதிலிருந்து எப்படி மறைந்து கொள்ளப் போகிறீர்கள்? அதிலிருந்து மறைந்து கொள்ள முடியாது. அது பூமிக்கடியில் 150 அடி ஆழத்திற்கு அந்த குண்டுத் தாக்குதல் போய் எட்டும். 150 சதுர மைல் விஸ்தாராத்திற்கு அத்தாக்குதல் போய் சேதம் விளைவிக்கும். அதன் தாக்கம், காரணம், அந்த இடியானது…இங்கே அதினால் ஏற்படும் அதிர்ச்சி இண்டியானாபோலிலீஸ் என்ற இடத்தை அதிரச் செய்யும், காரணம், அது இண்டியானாபோலீஸ் என்ற இடத்தை சுக்கு நூறாக்கி லூயிவில்லையும் தாக்கும். அவைகளிலொன்றின் தாக்குதலைப் பற்றி பாருங்கள். அதைத் தவிர அவர்கள் வேறென்ன ஆயதங்களை வைத்துள்ளனர் என்று சொல்லவே கடினமாக உள்ளது. 380 பாருங்கள் நீங்கள் செய்ய வேண்டியதில்லை, உங்களுக்குத் தெரியுமா, ருஷியா அதைச் செய்ய வேண்டியதில்ல. கியூபா போன்ற சிறுநாடு அதைச் செய்து விடமுடியும். மிகச் சிறிய ஒரு பிரதேசம், சிறிய இடமான அல்கெட்ராஸ் போன்றதொரு மிகச் சிறிய பிரதேசம் முழு உலகத்தையே அழிக்கக்கூடியதைச் செய்துவிட முடியும். நீங்கள் அதற்காக செய்ய வேண்டியதெல்லாம் எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்திவிட்டு, ஒரு பொத்தானை அழுத்தினால் போதுமானது. உலகமனைத்தும் அழிக்க ஒரு பெரிய இராணுவம் தேவையில்லை. அதைச் செய்ய பிசாசின் கைகளில் கருவியாகவுள்ள ஒரு வெற்கொண்ட மனிதனே அதற்கு போதுமானது. அது முற்றிலும் உண்மை. அவன் அதை செய்வான். அப்பொழுது உலகமனைத்தும் முடிந்து போகும். அப்பொழுது எல்லாமே முற்று பெற்றுவிடும்.
139381 ஆனால் ஓ, நான் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட காரியத்தை உங்களுக்கு கூறட்டும். அந்த அழிவு மிக நெருக்கமாக இருப்பதை நாம் காணும்போது, காலைப்பொழுதுக்கு முன்பாக, அது சம்பவிக்கக் கூடும் என்பதை நாம் காணும்போது, நினைவிருக்கட்டும், அது சமபவிக்கும் முன்னே சபையானது பரலோக வீட்டிற்கு சென்றுவிடுகிறது. 382 இப்பொழுது, நீங்கள் இந்தக் காரியத்தில் குழப்பமடையாமல் இருக்க இயேசு கூறியதை நினைவு கூருங்கள்; “நோவாவின் நாட்களில் நடந்ததைப் போல், லோத்தின் நாட்களில் நடந்ததைப் போல” மழை பெய்வதற்கு முன்னர் நோவா பேழையில் இருந்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புரிகிறதா? நோவா பேழையில் இருந்தான். அவன் இதனூடாகக் ஜலப்பிரளயத்தின் மேலாக கொண்டு செல்லப்பட்டான். இப்பொழுது நோவா யூதருக்கு ஒரு மாதிரியாயிருந்தான். ஆனால், ஏனோக்கு மரணத்தைக் காணாமல் பரலோக வீட்டிற்குப் போய்விட்டான். ஏனோக்கு செல்வதை நோவா கண்டபோது, அதுவே அந்தப் பேழைக்குள் செல்லும் நேரம் என்பதை அவன் அறிந்திருந்தான். அது உண்மை. ஏனோக்கு பரலோக வீட்டிற்குச் சென்றபோது, அது நோவாவினுடைய அடையாளமாயிருந்தது. புறஜாதி சபையானது எடுத்துக்கொள்ளப்பட்டவுடன், அவர் தன்னை இஸ்ரவேலருக்கு வெளிப்படுத்துவார். பார்த்தீர்களா? அது சரியே.
140383 லோத்தின நாட்களைப் பற்றி இயேசு கூறியதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு துண்டு நெருப்புத் தனல் பூமியின் மேல் விழுவதற்குமுன், தூதன் லோத்தை நோக்கி, “இங்கிருந்து சீக்கிரம் புறப்படு, நீ இங்கிருந்து புறப்படும் வரைக்கிலும் என்னால் இந்த ஸ்தலத்தை அழிக்க முடியாது” என்று கூறினான். அக்கினி விழுமுன் லோத்தும் அவனது குடும்பத்தினரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். ஆகையால் எடுத்துக் கொள்ளப்படுதல் உபத்திரவம் வருவதற்கு முன்னர் நிகழும். 384 உபத்திரவக் காலத்தைக் குறித்து அநேகர் குழப்பமாக புரிந்து கொள்கின்றனர். ஆனால், கர்த்தருக்கு சித்தமானால், இந்த வாரத்தில், கர்த்தருடைய உதவியைக் கொண்டு, நாம் அதை சரியாகப் புரிந்து கொள்வோம். நினைவிருக்கட்டும், நீங்கள் மகா உபத்திரவக் காலத்தைக் குறித்து எதிர் நோக்கி, நீங்கள் வேதத்தில் அதற்கு மாதிரியைக் காண்பீர்களாயின், அதற்கு யாக்கோபு தொல்லைக்குள்ளானபோது அவனுக்கு உண்டாயிருந்த இக்கட்டின் நாட்களைத் தான் மாதிரியாகக் கொள்ள முடியும். நீங்கள் பாருங்கள். அதற்கும் புறஜாதிகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. புறஜாதிகளுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. அதற்கு வேதத்தில் எந்த மாதிரியும் இல்லை. புறஜாதி சபையானது எடுத்துக் கொள்ளப்படுகிறது.
141385 நீங்கள், “தண்ணீர் இரத்தமாக மாறுதல்” என்பது போன்ற காரியங்களை எதிர் நோக்குவீர்களாயின், அது இஸ்ரவேலருக்கு மீண்டும் வருகிறது. மோசேயும் எலியாவும் அவர்களுக்காக வரும்போது, எலியா நான்காவது தடவையாக தோன்றும் போது, ஆவியில் திரும்ப வரும்போது, அது சம்பவிக்கிறது. அவர்களிருவரும் மரித்துப்போய்விடவில்லை. 386 இல்லை…மோசே மரித்தான், அவனை அவர்கள் எங்கே புதைத்தனர் என்று அவர்களுக்குத் தெரியாது. மறுரூபமலையின் மேல் அவன் இயேசுவோடு பேசிக் கொண்டிருந்தான். ஆகவே இந்த சம்பவத்திற்கு முன்பாக எப்பொழுதோ அவன் உயிரோடு எழுப்பப்பட்டிருக்க வேண்டும். அவன் பேசிக் கொண்டிருக்கவில்லையா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] பார்த்தீர்களா? 387 எனவே அவர்கள் திரும்ப வந்து கொல்லப்படுவார்கள். அவர்கள் உடல்கள், நமது கர்த்தர் சிலுவையிலறையப்பட்ட “சோதோம்” என்று ஞானர்த்தமாய் அழைக்கப்பட்ட எருசலேமின் வீதிகளில் கிடக்கும். அவர்கள் யூதர்களுக்கு பிரசங்கிப்பார்கள்; அவர்கள் பூமியை வாதைகளால் அடித்து, மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைப்பார்கள். அப்பொழுது புறஜாதி ஊழியத்தின் முடிவில் அதனோடு தொடர்பு கொண்டிருந்த மணவாட்டி சபையானது பரலோகம் சென்றுவிடும், அந்த ஊழியம் தொடர்ந்து நடைபெறும். எல்லாவற்றின் அழிவும் அப்பொழுது உண்டாயிருக்கும். பூமியில் மூன்றில் இரண்டு பங்கினர் கொல்லப்படுவார்கள். அவ்விரு சாட்சிகளின் பிரேதங்கள் மூன்று நாட்கள் அத்தெருவில் கிடக்கும்பொழுது, அது எவ்விதமாக இருக்கும் என்பதை கவனித்துப் பாருங்கள்.
142388 தென் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட, எனக்கு அங்கிருந்து கிடைத்த அந்த புகைப்படங்களைப் பாருங்கள். அது ஒரு பெந்தெகொஸ்தே மிஷனரியும், அவரது மனைவியும், இரு சிறு குழந்தைகளும் கொல்லப்பட்டு, அவர்களது பிரேதங்கள் தெருக்களில் கிடக்கிறதைக் காண்பிக்கிற புகைப்படமாகும். அதில் ஒரு பெண் குழந்தை வயிறு அந்தவிதமாக வீங்கிப்போன நிலையில் கிடக்கிறது. அவர்களை கொன்றவர்கள், அவர்களை புதைக்கக் கூடவில்லை. அப்பிரேதங்களின் பக்கமாக மக்கள் நடந்து சென்று, அதில் துப்பினர். இவ்வாறான நிலையில் அப்பிரேதங்கள் மூன்று அல்லது நான்கு நாட்கள் கிடந்தன. சகோதரன் கோப் என்பவர் அந்தப் புகைப்படத்தை எடுத்தார். நான் அந்தப் புகைப்படங்களை வீட்டிலே வைத்துள்ளேன், அவர்கள் செய்கிற விதத்தைப் பாருங்கள். 389 அதன்பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புகிறார்கள்.வேதத்தில் இக்காரியமானது எவ்வாறு முன்னடையாளமாக குறிக்கப்பட்டிருக்கிறது என்பதை பாருங்கள். எந்த சபையானது அதைச் செய்யப் போகிறது என்பதை நீங்கள் பாருங்கள். அது சரிதான். இப்பொழுது ஒரு பாம்பைப் போல் அது மிகவும் தந்திரமாக அசைந்து, மிகவும் நெருக்கமாக அது வந்து கொண்டிருக்கிறது, அதற்கான காரியங்களின் அடையாளம் இப்பொழுது உள்ளது.
143390 1933-ம் ஆண்டில் கர்த்தர் எனக்குத் தந்த தீர்க்கதரிசினத்தைப் பாருங்கள். அதில், “எவ்வாறு பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள், எவ்வாறு தங்களின் வாக்குரிமையினால் தவறான நபரைத் தேர்ந்தெடுப்பார்கள்” என்பதைப் பற்றியெல்லாம் கூறப்பட்டது. ஏழு காரியங்கள் முன்னுரைக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஐந்து ஏற்கனவே நிறைவேறிவிட்டன. அடுத்தக் காரியமானது, ஒரு மகத்தான் பெண்மணி, ஒரு சபையாய், அல்லது ஒரு வல்லமையாய் அல்லது ஏதோ ஒன்றாய் இருக்கலாம், அது இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளை ஆண்டு கொள்ளும். அதற்கு அடுத்ததாக, அமெரிக்க தேசமே அப்படியே சாம்பலாக ஆகிவிட்டதாக கண்டேன். அங்கே தான் முடிவுண்டாகிறது. அது தான் முடிவு காலமாயிருந்தது. 391 “அவர்களுக்கு ஒரு இயந்திர வாகனம் உண்டாயிருக்கும், ஆனால் அதை ஓட்டிச் செல்ல அதற்கு அவர்களுக்கு ஒரு ஓட்டுநர் தேவையேயில்லை” என்பதாக எனக்குத் தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது. இப்பொழுது அப்படியொரு வாகனத்தை அவர்கள் மிகப் பரிபூரணமாக ஆயத்தம் செய்து விட்டார்கள். அது கூறப்பட்டது…பதினொரு ஆண்டுகளுக்கு… 392 பரிசுத்த ஆவியானவர் என்னிடம் கூறினார். அது செய்தித்தாளில் உள்ளது. நீங்கள்…அது மறுக்கப்பட முடியாது. பரிசுத்த ஆவியானவர் கூறினபடியே அது செய்தித்தாளில் உள்ளது. 393 மாகினட் அரண் கட்டப்படுவதற்கு பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர், நான், “ஜெர்மானியர்…அமெரிக்கா…ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அவர்கள் எல்லாரிலும் பெரும்பாதகனாயிருப்பார்” என்றேன். அது உண்மையே. அவர் அவ்வாறே இருந்தார். 394 ஜனநாயகக் கட்சியினரே, உங்கள் உணர்வுகளை புண்படுத்தவில்லை, ஆனால் நான்—நான் உங்களுக்கு கூறுகிறேன். அது ஒரு ஜனநாயக் கட்சியினரையோ அல்லது ஒரு குடியரசுக் கட்சியினரையோப் பற்றியதோ அல்ல. இது தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். நான் ஜனநாயாகக் கட்சியையோ, அல்லது குடியரசுக் கட்சியையோ சார்ந்தவனல்ல, நான் ஒரு கிறிஸ்தவன். ஆகவே அப்பொழுது அவர்கள், அது என்னவாயிருந்த போதிலும், ஆனால் நீங்கள் அங்கே கவனியுங்கள்.
144395 இங்கே பாருங்கள், அன்றொரு நாள், ஒரு நம்பிக்கைத் துரோகக் கூட்டத்தை நீங்கள் பார்க்க வேண்டுமானால், அந்த வாக்களிக்கும் இயந்திரங்களை எடுத்து அவைகளை அமைத்த விதத்தைப் பாருங்கள், ஒவ்வொரு தடவையும் நிக்சனுக்காக நீங்கள் வாக்களிக்கும் பொழுது, அந்த வாக்கு அந்த மற்ற வேட்பாளருக்கு நீங்கள் அளிப்பதுபோல தந்திரமாக அமைத்திருந்தது. எடி—J எடிகர் ஹூவர் அந்த இயந்திரங்களிலிருந்து கண்டுபிடித்து வெளியே எடுத்தார். எத்தனை பேர் அதை செய்தித்தாளில் வாசித்திருக்கிறீர்கள்? காரணம், நிச்சயமாகவே அது எல்லா செய்தித்தாள்களிலும் செய்தியாக வந்துள்ளது. நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நீங்கள் காண்கிறீர்களா? 396 கிறிஸ்துவை தவிர வேறு எதுவும் உண்மையானதாக இருக்கவில்லை. ஆமென். ஓ! இது ஆசீர்வதிக்கப்பட்ட பண்டைய புத்தகமே! அதுதான் இது. நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்களென்றும், நீங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு சொல்லுகிறது இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஒரே பண்டைய புத்தகம் மாத்திரமேயாகும், (ஆம், ஐயா) ஓ, அதுவே என்னை அவரை நேசிக்கும்படி செய்கிறது. உங்களை அது அப்படி செய்யவில்லையா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] பிதாவில் விசுவாசம், குமாரனில் விசுவாசம், பரிசுத்த ஆவியில் விசுவாசம் இம்மூன்றும் ஒன்று தான்; பிசாசுகள் நடுங்கும்; பாவிகள் விழித்தெழுவர்; யேகோவாவில் வைக்கும் விசுவாசம் எதையும் அசைக்கும்.
145397 ஆமென். என்ன ஒரு மகத்தான நாள் நமக்கு முன்பாக உள்ளது, நண்பர்களே! “இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலை தேவன் தம் தூதனுக்கு அளித்து, அவன் வந்து யோவானுக்கு அளித்து வெளிப்படுத்தினதினால், சபைகாலங்களினூடாக நமக்காக ஆயத்தம் பண்ணி வைக்கப்பட்டுள்ளவைகள் அறிந்து கொள்ளப்படுகிறது.” 398 நாம் எழுந்து நிற்கையில், கர்த்தர் நம்மை இப்பொழுது ஆசீர்வதிப்பாராக. இசைப் பேழையை இசைப்பவர் யாராயினும், இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல் என்ற பாடலுக்கு நீங்கள் விரும்பினால் எங்களுக்கு சுருதி கொடுங்கள். 399 இப்பொழுது கவனியுங்கள். இக்கூடாரத்தில் நம் மத்தியில் இக்காலையில் இங்கே அந்நியர்கள் புதியதாக வந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் அவர்களுடைய கரங்களை குலுக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவர்களை உங்களோடு இல்லத்திற்கு வரும்படி அழையுங்கள். ஒவ்வொருவருக்கும் வரவேற்பு அளியுங்கள். அதை ஒவ்வொரு வரும் நிச்சயம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 400 இன்றிரவு ஆராதனை ஏழு மணிக்கு துவங்கும் என்பது நினைவிருக்கட்டும். ஏழரை மணிக்கு நான் பத்மு தீவு தரிசனம் என்பதன் பேரில் பிரசங்கிப்பேன். நாளையிரவு, கர்த்தருக்கு சித்தமானால், நான் முதலாம் சபைக் காலமாகிய எபேசு சபைக் காலத்தின் பேரில் பேசுவேன்.
146401 நாம் இப்பொழுது, நமது சிறிய கூடாரத்தில் கலந்து செல்லும்போது பாடும் பாடலாகிய இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல் என்ற பாடலை பாடப் போகிறோம். ஒவ்வொருவரும் இப்பொழுது பாடட்டும். சரி. துயரமும், துக்கமும் கொண்ட பிள்ளையே இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல்; அது சந்தோஷத்தையும் ஆறுதலையும் உனக்கு அளிக்கும், நீ எங்கெல்லாம் செல்லுகிறாயோ அங்கெல்லாம் அதை கொண்டு செல். விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமாமே; விலையேறப் பெற்ற நாமம், விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமாமே.
147402 இப்பொழுது நாம் அடுத்த அடியை பாடுமுன், உங்களுக்கு முன்னும், பின்னும், பக்கத்திலும் இங்குள்ள மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தெகொஸ்தேயினர், கத்தோலிக்கர், நசரேய சபையினர், யாத்திரீக பரிசுத்த சபையினர் ஆகிய சுற்றிலும் உள்ள யாவரோடும் கரங்குலுக்கி, “கிறிஸ்தவ யாத்திரீக நண்பரே, இக்காலையில் நீங்கள் இங்கு இருப்பதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களோடு தேவ காரியங்களில் ஐக்கியங்கொண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். நாம் ஒரு மகத்தான நேரத்தை உடையவர்களாயிருந்தோம் என்பதை நான் அறிவேன். இன்றிரவு உங்களை மீண்டும் இங்கே சந்திப்பேன் என்று நம்புகிறேன்” என்று கூறுங்கள். இவ்விதமாக நீங்கள், உங்களுக்கு முன்னாலும், பின்னாலும், பக்கத்திலும், சுற்றிலும் உள்ளவர்களோடு கரங்களை குலுக்கும்போது கூறுங்கள். இயேசுவின் நாமத்தில் வணங்கி, சகோதரன் நெவில், இன்றிரவு, உம்மைக் காண்பேன். உங்களை இன்றிரவு காண்பேன். …பாதத்தில் நம்முடைய யாத்திரை முடிவுறும் போது, பரலோகத்தில் நாம் இராஜாதி இராஜாவாகிய அவருக்கு முடிசூட்டுவோம், விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமாமே; விலையேறப்பெற்ற நாமம், ஓ, எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே. நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை இயேசுவின் பாதத்திலே; (நாம் சந்திக்கும் வரை,) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடிருப்பாராக! இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில்: நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை!