எபேசு சபையின் காலம்

60-1205

கரததர உஙகள ஆசரவதபபரக. இஙகளளவரகளல யரவத ஒர பதயஒர டடஜ, பதய டடஜ மடடர வகனததஉரமம எண WX-2129 உளள வணடய தரவகக அபபல, நறதத வததளளரகள? அவவணடயல உளள மனவளகககள உடபட அனதத வளகககளம அணககபபடமல எரநத கணடரககனறன. அநத வணடய ஓடட வநதவரகள யரவத இஙக இரபபன, வளய பய வளகககள அணதத வடட வரஙகள. எடடம தரவல இடத க பககததல நறததபபடடளளத. அத நய ஆலபன

எபேசு சபையின் காலம்

60-1205ஜெபர்ஸன்வில் இந்தி1381960-12-05

எபேசு சபையின் காலம்

60-1205ஜெபர்ஸன்வில் இந்தி1381960-12-05

1 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ளவர்களில் யாராவது ஒரு புதிய—ஒரு டாட்ஜ், புதிய டாட்ஜ் மோட்டார் வாகனத்தை…உரிமம் எண் WX-2129 உள்ள வண்டியை தெருவுக்கு அப்பால், நிறுத்தி வைத்துள்ளீர்களா? அவ்வண்டியில் உள்ள முன்விளக்குகள் உட்பட அனைத்து விளக்குகளும் அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருக்கின்றன. அந்த வண்டியை ஓட்டி வந்தவர்கள் யாராவது இங்கு இருப்பின், வெளியே போய் விளக்குகளை அணைத்து விட்டு வாருங்கள். எட்டாம் தெருவில் இடது கை பக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அது நியூ ஆல்பனியில் பதிவு செய்யப்பட்ட உரிம எண் என்று எண்ணுகிறேன், அது WX-2129 ஆகும். அது ஒரு சிவப்பு நிற டாட்ஜ் வண்டியாகும். 59ம் ஆண்டு அல்லது 60ம் ஆண்டு மாதிரியை வண்டியாக இருக்க வேண்டும். இங்குள்ளவர்கள் யாராவது எங்கிருந்தாவது அதை ஓட்டி வந்தார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. சரி. அது அங்கு உள்ளது. அது ஒரு நல்லக் காரியம்தான். பெண்கள் இவ்வாறு மறந்து விடுவார்கள் என்று நான் கூறப்போவதில்லை, நானும் கூட இவ்வாறு மறந்துவிடுவதுண்டு.

22 நல்லது, இன்றிரவில் மீண்டும் இவ்வாராதனைக்காக கூடி வந்து, தேவனுடைய வார்த்தையின் பேரில் யாவரும் ஒன்று சேர்ந்து ஐக்கியங்கொள்ளும் வேளையானது நிச்சயமாக நன்றாகவே உள்ளது. அதை நீங்கள் கேட்டு மகிழ்கின்றீர்களா? [சபையார், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] ஓ! நமக்கு ஒரு அற்புதமான, அற்புதமான வேளை உண்டாக்கியிருக்கிறது என்றால் அது சரிதான். இப்பொழுதும், நாம் தொடர்ச்சியாக இதைக் கேட்க தேவன் நமக்கு உதவியளிப்பார் என்று நம்புகிறோம். 3 இப்பொழுது, என்னுடைய சகோதரன் போய் ஒரு கரும்பலகையை இங்கே கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அது—அது போதுமான அளவு உயரத்தில் அமைக்கப்படாமல், மிகவும் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நல்லது; எனவே நாளை, நான் சில வெவ்வேறு விஷயங்களை கரும்பலகையில் வரைந்திட விரும்புகிறேன். அதினால் நீங்களும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். எனவே அதற்கேற்றவாறு நான் கரும்பலகையை சற்று உயர்த்தி அமைத்திடுவேன்.

34 அங்கே…கடந்த இரவு இல்லை நேற்று இரவு என்னுடைய சிறிய மகள் சாராள் ஒருவிதமாக அழகாக எழுதிவைத்துள்ள சிறிய காகிதத்தை நானும் அவள் தாயாரும் பார்த்துக் கொண்டிருந்தோம்; அவள் என்னுடைய பிரசங்கத்திலிருந்து குறிப்புகளை அதில் எழுதி வைத்திருந்தாள். அதில் அவள் ஏசாயா மத்தேயு மற்றும் ஏனைய அதிகாரங்களையெல்லாம் சரியாக குறித்தே வைத்திருந்தாள். அத்தாளின் முடிவில் “மரணத்திற்கு…பாதாளத்திற்கு இனிமேல் எந்த வெற்றியும் கிடையாது, மரணத்தின் கூர் அல்லது கொடுக்கு பிடுங்கப்பட்டு விட்டது” என்று எழுதி வைத்திருந்தாள். அவளுக்கு ஏறக்குறைய ஏழு வயதாகின்றது. அதன்பிறகு “வெளிப்படுத்தல்” (“Revelation”) என்று எழுதுவதற்குப் பதிலாக “புரட்சிகளின் புத்தகம்” (Book of Revolutions) என்று எழுதி வைத்துவிட்டாள். பரவாயில்லை, இவ்வாறு அதில் அவர்கள் எழுதுவதன் மூலம் ஏதோன்றைக் கண்டறிய எப்படியோ ஆர்வமாயுள்ளனர் என்பதையே அது காண்பிக்கிறது. அவர்கள் அப்படியில்லையா? சகோதரன் காலின்ஸ் அவர்களுடைய சிறிய மகளும் பின்னால் அங்கே உட்கார்ந்து இருக்கிறாள். அவர்கள், “புரட்சி” (Revolution) என்ரே எழுதிவிட்டாளா? சகோதரன் நெவில் அவர்கள், “புரட்சிகளின் நாள்” என்று கூறுகிறார். சாரா எழுதியவற்றோடு சகோதரன் நெவில் தன் ஒப்புதலைத் தெரிவிக்கிறார். நாம் யாவரும் அதையே செய்ய வேண்டும் என்று நானும் கருதுகிறேன்.

45 நல்லது, நாம் உண்மையிலேயே மகத்தான வேளையை உடையவர்களாய் இருக்கிறோம். என்னே, கர்த்தர் ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறார். பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு வந்த பின்னர், இக்காலையில் நான் ஓர் அறைக்குள் படிப்பதற்காகச் சென்று விட்டு சற்று முன்னதாகத்தான் வெளியே வந்தேன். அற்புதமானதொரு சமயம் எனக்கு உண்டாயிருந்தது. நேற்றிரவிலும் வெகுநேரம் படித்துக் கொண்டிருந்தேன். 6 அதிகாலையில் இரண்டு முப்பது மணியளவில் வடக்குப் பிரதேசத்திலிருந்து சிலர் வந்து, என்னை எழுப்பி, மரித்துக் கொண்டிருக்கிற ஒரு சிறு பெண்ணுக்கு ஜெபிக்கும்படி கேட்டார்கள். கர்த்தர் அப்பெண்ணை நிச்சயம் நலமடையச் செய்வார் என்று நான் நம்புகிறேன். அச்சிறு பெண்ணுக்கு ஜெபிக்கும்படி அவர்கள் இண்டியானாவிலுள்ள பெட்ஃபோர்ட் என்ற அவ்வளவு தூரமான இடத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இரண்டு மனிதர்கள் அவ்வளவு தூரத்திலிருந்து நேற்றிரவு ஆராதனைக்காக வந்துவிட்டு, பிறகு மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பிப் போய்விட்டு மீண்டும் வந்திருக்கிறார்கள், மறுபடியும் அவ்வளவு தொலைவான தங்கள் ஊருக்கு திரும்பிப் போயாக வேண்டும். இரவு முழுவதும் காரோட்டிக் கொண்டேயிருந்திருக்க வேண்டும். ஆகையால் ஜனங்கள் இத்தகைய நம்பிக்கை உண்டாயிருந்து, தேவனை அவர்கள் விசுவாசிப்பதை அறிய நன்றாக இருக்கிறது.

57 ஓ, நாம் வாழ்ந்துகொண்டிருப்பது ஒரு மகத்தான காலமாகும். இப்பொழுது இச்சபைக் காலங்களின் செய்திகளில் மேலும் மேலும் நாம் புரிந்து கொள்ளப்போகிறோம் என்று இப்பொழுது எதிர்பாத்துக் கொண்டிருக்கிறோம். 8 இப்பொழுது ஒவ்வொரு இரவிலும் நாம் சீக்கிரமாகவே ஆராதனையை ஆரம்பித்துவிட முயன்று கொண்டிருக்கிறோம். அது எனவே அப்படிச் செய்தால், சீக்கிரமாகவே உங்களை திரும்பி போக விட்டு விடலாம். அது மேலானது என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படிச் செய்தால், பணிக்குப் போகிறவர்கள், சீக்கிரமாக வீடுதிரும்பி, தங்கள் பணிக்கு இடையூறின்றி போக வசதியாக இருக்கும். கடந்த இரவில், ஒன்பது மணி கடந்து 5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து, நாம் வெளியூறினோம், அதாவது நான் கூட்டத்தை அப்பொழுது முடித்து விட்டேன். இன்றிரவில் நம்மிடையே வெளியூர்களிலிருந்து இங்கு விஜயம் செய்யும் அனைத்து ஊழியக்காரர்களும் இருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோம். நான்—நான்…நான் சகோதரன் ஜூனியர் ஜாக்சனையும், சகோதரன் கார்பெண்டரையும், அங்கிருக்கும் சபையிலுள்ள நம்முடைய சகோதரனையும், மற்றும் இங்கே மேடையிலும் மற்றும் கூட்டத்திலும் ஏனைய அநேகரையும் காண்கிறேன்.

69 என்னோடு ஊழியங்களில் இருந்து வந்த என்னுடைய விலையேறப்பெற்ற சிநேகிதர் ஒருவர், அதாவது சகோதரன் ஆண்ட்ரு, மற்றும் சகோதரி ஆண்ட்ரு ஆகியோர் நேற்றிரவு கூட்டத்திற்கு வந்திருந்ததாக என்னிடம் கூறப்பட்டது. அவர்கள் சீனா தேசத்தின் மிகவும் உட்பிரதேசத்தில் இருந்து வருகிறார்கள். கடந்த வருடத்தில் ஐமெய்க்கா நாட்டில் எங்களுக்கு அருமையானதொரு சமயம் உண்டாயிருந்தது. எங்களுக்கு ஒரு மகத்தான வேளை உண்டாயிருந்தது. நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என்னுடைய, அது…இன்றிரவுக் கூட்டத்தில் சகோதரன் ஆண்ட்ரு மற்றும் சகோதரி ஆண்ட்ரு ஆகியோர் இங்கே இருக்கிறீர்களா என்று அறிய விரும்புகிறேன். இக்கட்டிடம் சரியாக அமைக்கப்படவில்லை. எனவே…ஆம், அவர்கள் அங்கே கடைசியில் அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் சற்று எழுந்து உங்களைக் காண்பிக்க முடியுமா என்று அறிய விரும்புகிறேன். சகோதரன் ஆண்ட்ரு, சகோதரி ஆண்ட்ரு அவர்களே, ஒரு நிமிடம் சற்று எழுந்து நில்லுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் ஆண்ட்ரு, மற்றும் சகோதரி ஆண்ட்ரு அவர்களே! உங்களிருவரையும் காண நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சென்ற வருடம் அவர்கள் தேசத்திற்கு நான் சென்றிருந்தபோது, இங்கு வரும்படி நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.

710 இப்பொழுது அவர்களுக்கு முன்பாக முகஸ்துதியாக இதை நான் கூறவில்லை, ஆனால் அவர்கள் தான் உண்மையான மிஷனரிமார்கள் என்று நான் அழைப்பதுண்டு. (இன்னும் கூடுதலாக நல்ல காரியங்களை அவர்களைப் பற்றி நான் சொல்ல விரும்பினேன். ஆனால் இப்பொழுது நான் அவற்றை அவர்களுக்கு முன்பாக சொல்ல விரும்பவில்லை). நாளை இரவு அவர்கள் இங்கிருந்தால், நாங்கள் வருவதற்கு முன்னர் அவர்கள் பேசட்டும். மிஷினரி ஊழியக்களங்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டது என்பதைக் குறித்து அவர்கள் கூற நீங்கள் கேட்க விரும்புகிறேன். சீனாவின் மிகவும் உள்ளார்ந்த பகுதிகளில் தூரமான இடங்களில் அவர்கள் இருந்திருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இருந்திருக்கவில்லை. அநேகம் அநேகமாண்டுகளாக அவர்கள் அங்கே இருந்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒரு மோட்டார் வாகனத்தையோ, ஒரு இரயில் வண்டியையோ, அநேகமாண்டுகளாக அங்கே அவர்கள் பார்த்திருக்கவேயில்லையாம். சகோதரி எவ்வாறு அவர்களுடைய ரொட்டியை…அவர்கள் மாவைப் பிசைந்து அடிப்பார்களாம். இவ்வளவு சிரமங்கள் மத்தியில் அவர்கள் செய்த ஊழியம் தான் உண்மையான மிஷனரி ஊழியமாகும். அங்குள்ள ஜனங்கள் காயமடைந்து இரணங்களோடு வரும்போது, அங்கே மருத்துவராகவும் விளங்கிய சகோதரன் ஆண்ட்ரு அவர்கள் கையில் ஊசியையும் நூலையும் கொண்டு இரணங்களை தைத்து விட வேண்டியிருக்கும். அங்கே மக்கள் பிள்ளைகளைப் பெறும்போது, சகோதரி ஆண்ட்ரு செவிலியாகவும் பணிபுரிந்திருப்பார்கள். சகோதரன் ஆண்ட்ரூ மருத்துவராக இருந்திருக்கிறார். அம்மக்கள் இவர்கள் பேரில்தான் சார்ந்திருக்கின்றனர்.

811 இங்கிலாந்து தேசத்திலுள்ள “இங்கிலாந்தின் பெந்தெகொஸ்தே ஊழியங்கள்” என்ற மிஷனரி ஊழிய நிறுவனமானது, “களத்திற்குத் திரும்பிச் செல்ல இவர்கள் இருவரும் இயலாத அளவுக்கு வயது சென்றவர்களாகி விட்டனர்” என்று கூறிவிட்டது. அவர்கள் எவ்வளவாக சிறந்த மிஷனரிகளாக விளங்கினார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுவேன். அவர்கள் ஓய்வெடுத்துக்கொண்டு வசதியாக உட்கார்ந்திருக்கப்போவதில்லை. அவர்கள் வேறு யாரையும் சாராமல் சுயமாகவே அங்கே திரும்பிச் சென்றார்கள். இப்பொழுது ஐமெய்க்காவுக்கு திரும்பிப்போய் அப்பகுதிகளில் மிஷனரி ஊழியத்தைச் செய்து வருகிறார்கள். சகோதரன் ஃபிரட் சாத்மன் அவர்களும் நானும் அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று அவர்களை சந்திக்கும் சிலாக்கியம் எங்களுக்கு உண்டாயிருந்தது. என்னே ஒரு அருமையான நேரத்தை அவர்கள் எங்களுக்கு அளித்தனர்; இனிமையான கிறிஸ்தவர்களாக அவர்கள் எங்களுக்கு இருந்தார்கள். அவர்கள் போன பிறகு அவர்களுக்கு ஒரு பெரிய மலர்வளையத்தை நான் சூட்டுவதைக் காட்டிலும், இங்கே அவர்கள் இருக்கையிலே அவர்களுக்கு ஒரு சிறு ரோஜா மொட்டைக் கொடுக்க விரும்புகிறேன். அவர்கள் உண்மையாகவே கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். நான் என் மனைவியிடம், சகோதரி ஆண்ட்ரு அவர்களைப்போல் ஒரு அருமையான, இனிய கிறிஸ்தவ பெண்மணியை சந்திக்க முடியாது என்று கூறினேன். கிறிஸ்துவுக்குள்ளாக அச்சகோதரியின் வாழ்க்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. சகோதரன் ஆண்ட்ரு அவர்களும் அப்படித்தான். ஆகவே இப்பொழுது உங்கள் நடுவில் எழும்பி நின்ற அவர்களை நீங்கள் பார்த்துவிட்டீர்கள் என்று உறுதியுள்ளவனாயிருக்கிறேன். அவர்கள் இங்கிருந்து கிளம்பிச் செல்லும் முன்னர், இந்த முழுச்சபையும் அவர்களுடன் கைகுலுக்கி, அவர்கள் உங்களிடம் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று விரும்பியுள்ளேன்.

912 இப்பொழுது, நாளை இரவு கர்த்தருக்கு சித்தமானால், ஏன், நாம்…நாம் இரண்டாவது சபைக் காலத்தைக் குறித்த செய்தியைத் துவக்குவோம். இன்றிரவில் நாம் முதலாம் சபைக் காலத்தைக் குறித்த செய்தியை ஆரம்பிக்கிறோம். கர்த்தர் நமக்கென ஒரு ஆசீர்வாதத்தை வைத்து வைத்திருக்கிறார் என்று நான் நிச்சயித்திருக்கிறேன். 13 நான் ஏற்கனவே கூறியதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது, வேத சாஸ்திரத்தைப் பொறுத்தமட்டில், அதைக் கூறுகிறவர்களோடு நாம் சில வேளைகளில் ஒத்துப் போகாமலிருக்கக்கூடும். வரலாற்று ரீதியான வருடம் மாதம் தேதிகளை, நான் அதிகாரப்பூர்வமான—நம்பத்தகுந்த வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளிலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களுடைய குறிப்புகள் ஒருபோதும் எந்தப் பக்கத்திலும் ஒருதலைப் பட்சமாக எடுத்துக்கொள்ள ஆர்வம் கொள்ளாமல், அந்தந்தக் காலங்களில் சபைகள் என்ன செய்தனவோ, அது என்னவாயிருந்தாலும் சரி, அவர்கள் அந்த உண்மைகளை அப்படியே எழுதி வைத்துள்ளனர். நான்…உண்மையிலேயே, தெய்வீக வியாக்கியானப் பாகத்தை எனக்குத் தெரிந்த வரையில், அதை நான் அளிக்கிறேன். சில சமயங்களில் நான் சற்று கடுமையாக பேசுவதைப் போல் இருந்தால், அவ்வாறு பேசவேண்டுமென்று நான் விரும்பி செய்வது கிடையாது. என்னைப் பற்றி அறிந்த எவரும் நான் அவ்வாறு செய்வதில்லை என்றறிவர். நான் விரும்புவது என்னவெனில்…ஆனால் ஒரு கருத்தைச் சரியாக விளங்க வைக்க வேண்டுமெனில், அதை ஆணித்தரமாகத் தான் எடுத்துரைக்க வேண்டும். ஒரு பலகையில் ஒரு ஆணியை வெறுமனே அமுக்கி வைத்தால், அது அதில் உறுதியாகப் பிடிப்புக் கொண்டிருக்காது. ஆனால் ஆணியை பலகையில் நன்கு சுத்தியால் அடித்து இறுக்கி அதை மடக்கி விட்டால் தான் அது பலகையில் உறுதியாக நிலைத்திருக்கும். அவ்விதமாகத்தான் நானும் செய்ய முயன்று கொண்டிருக்கின்றேன். நான் எல்லாவிதமான ஸ்தாபனங்களைக் குறித்துப் பேசுகிறபடியால், எனவே நான் எல்லாவற்றிலும் முரண்பட்டே முயற்சிக்கிறேன் என்பதல்ல. எனவே அது…அவ்விதமல்ல.

1014 மாட்டு மந்தைகளை இனம் பிரிப்பதைக் குறித்து நான் அடிக்கடி கூறியுள்ளேன். அநேகமாண்டுகளுக்கு முன்பாக, நான் மாட்டு மந்தையை மேய்ச்சல் காடுகளுக்கு ஓட்டிச் செல்வதில் ஈடுபட்டிருந்ததுண்டு. வசந்த காலத்தில் இவ்வாறு மாடுகளை அதனதன் இனமாக ஒன்று சேர்த்து மந்தையாக ஆக்குவதற்காக ஓரிடத்தில் சேர்ப்பதற்காக இவ்வாறு ட்ரிஃப்ட் வேலி (Drift Fence) என்று குறிப்பிட்ட ஓரிடத்தில் ஓட்டிச் சேர்ப்பதுண்டு. ஹீயர்ஃபோர்ட் சங்கம் என்ற நிறுவனத்திற்காக நான் இந்த வேலையைச் செய்தேன். அவர்கள் தங்கள் மந்தைகளை ட்ரபிள்சம் ஆற்று பள்ளத்தாக்கு (Troublesome River Valley) என்ற இடத்தில் மேய்த்தனர். நான் அப்பொழுது குதிரையின் சேனத்தின் முகப்புப் பகுதியில் என் காலை தொங்க வைத்துக் கோண்டு மாட்டு மந்தைகள் அவ்வாறு அந்த டிரப்ட் வேலி என்ற இடத்தினூடாக பிரவேசிப்பதை, காட்டிலாகா அதிகாரி கவனித்துக் கொண்டிருப்பதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். 15 இப்பொழுது, நீங்கள்…அரசுக்குச் சொந்தமான ஒரு நிலத்தில் உங்கள் மாடுகளை மேய்க்க வேண்டுமானால், புல்வெளியில் மேய்ப்பதற்கு ஒரு மாட்டுக்கு ஒரு டன் அளவுக்கு அந்நிலத்தில் நீங்கள் புல்லை அதற்கு முன்பே வளர்த்திருக்க வேண்டும். இத்தனை மாடுகளை நீங்கள் மேய்ய வேண்டுமானால் அதற்கேற்ற அளவுக்கு அங்கு புல்லை வளர்த்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாட்டுப்பண்ணை நிலத்திலும் எந்த அளவுக்கு புல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சரியாகத்தான் அதினுள் மாடுகளை மேய்க்க உள்ளே கொண்டு செல்ல முடியும்.

1116 அங்கே அம்மாடுகள் பலவிதமான சூட்டு அடையாளக் குறிகளோடு உள்ளே சென்று கொண்டிருந்தன. சிலவற்றிற்கு “பார் எக்ஸ்” (“Bar x”) என்ற அடையாளக் குறி இருந்தது. எங்கள் பண்ணைக்கு அடுத்தாற்போல் இருந்த திருவாளர் க்ரீம்ஸ் என்பவருடைய மாடுகளுக்கு “டயமண்ட் டி” (Diamono T) என்று குறி இருந்தது. ஒரு முனையில் ‘டீ’ என்றும் மற்ற முனையில் ‘டயமண்ட்’ என்றும் இருந்தது. ட்ரபிள்சம் ரிவர் என்ற இடத்திற்கு முன்னால் “லேஸி கே” (Lazy K) என்று பெயரிடப்பட்டவைகள் இருந்தன. எங்களுடைய மாடுகளுக்கு பெயர் “டர்க்கி ட்ராக்” (Turkey Track) என்பதாகும். எங்கள் மேய்ச்சல் நிலத்திற்கு கீழ்ப்பக்கத்தில் மேய்ந்தவைகளுக்கு “ட்ரைபாட்” (Tripoo) என்ற பெயருள்ளவைகள் இருந்தன. ஆகவே இவ்வாறு பல்வேறு விதமான அடையாளப் பெயர்க் குறிகள் கொண்ட மாடுகள் உள்ளே சென்று கொண்டிருந்தன. 17 இவ்வாறு வெளிநிலங்களில் மேய்ச்சலுக்காக பிரவேசிக்கும் மாடுகளை உற்றுக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த காட்டு இலாக்கா அதிகாரி ஒருபோதும் மாடுகளுக்கு சூடுபோட்டு இடப்பட்டுள்ள அவற்றின் அடையாளப் பெயர் குறிகளைப் பற்றி கவனம் செலுத்தவேயில்லை. சில மாடுகளுக்கு அவ்வடையாளப் பெயர் குறிகள் அவற்றின் இடதுபக்கதில் இடம் பெற்றிருந்தன. எனவே அவரால் அது என்ன பெயர் குறி இடப்பட்டுள்ளது என்பதை கவனிக்க இயலாது. ஆகவே அவர் அதற்கு என்ன பெயர்குறி இடப்பட்டுள்ளது என்பதை கவனித்துக் கொண்டிருக்கவில்லை. எந்த மாட்டிற்கும் அதன் இனத்தைக் காட்டும் அதன் இரத்தத்தின் அடையாளச் சீட்டு அதின் காதில் இருந்தாலொழிய, உள்ளே பிரவேசிக்காமல் இருக்கும்படி நிச்சயப்படுத்தினவராக இருந்தார். ஒவ்வொரு மாடும் சுத்தமான ஹியர்போர்டு என்ற இனத்தைச் சேர்ந்தவைகளாக மட்டுமே இருக்க வேண்டும், இல்லாவிடில் அவைகள் அந்த காட்டுக்குள் மேயப் போக முடியாது. அதற்கு என்ன பெயர்கள் என்பது எந்த வேறுபாட்டையும் ஏற்படுவதில்லை. ஆனால் அது என்ன இரத்தத்தையுடையது என்பதைக் காட்டும் அடையாளச் சீட்டே அங்கு முக்கியம். நியாயத்தீர்ப்பிலும் காரியமானது அவ்வாறே இருக்கும் என்று எண்ணுகிறேன். என்ன வித்தியாசமான பெயர்கள் நமக்கு இருக்கிறது என்பது ஒரு பொருட்டல்ல. கர்த்தர் இரத்த அடையாளச் சீட்டு இருக்கிறதா என்பதை மட்டுமே கவனித்துப் பார்ப்பார். “இரத்தத்தை நான் காண்கையில் நான் உங்களை கடந்து செல்லுவேன்.” [சகோதரன் பிரான்ஹாம் சகோதரன் ஜீன் அவர்களிடம் மின்சார ஒலிப்பெருக்கி அமைப்பைப் பற்றி பேசுகிறார்.—ஆசி] இப்பொழுது நான் சற்று சரியாக பேச முடியவில்லை, ஜீன், நான் பேசுகிறேனா? எதிரொலிக்கிறது. சரி…இரு ஒலிப்பெருக்கி சத்தம் இடையே ஏற்படுகிறது. அது சரிதானே? சரி. சகோதரன் ஜீன், உங்களுக்கு நன்றி. சரி.

1218 இன்றிரவு கூடிய வரை முன் கூட்டியே கூட்டத்தை முடித்துவிட நாங்கள் முயற்சி செய்கிறோம், அதனால் நாளை இரவு கூட்டத்திற்கு வந்து இந்த சபைக் காலங்களைப் பற்றிப் பார்க்க, நமக்கு இயலும். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஓரத்தில் கிடக்கிற சில மகத்தான காரியங்களை நான் முழுவதும் கூறாமல், தேக்கி வைக்க எனக்கு கஷ்டமாக இருக்கிறது. யாவற்றையும் ஒரே இராத்திரியில் கொடுத்துவிட வேண்டும் என்று கூட முயற்சிக்கிறேன். அதுவே என்னுடைய இயல்பு என்று நீங்கள் அறிவீர்களாக. ஆனால் ஒவ்வொரு இரவிலும் கொடுக்கத்தக்கதாக சிலவற்றை தேக்கி வைத்திருந்து ஒவ்வொன்றாகத்தான் கொடுக்க வேண்டியுள்ளது. 19 இப்பொழுது, இந்த மகத்தான புத்தகத்தை நாம் திறக்கும் முன்னர், நம்மால் சற்று நேரம் எழும்பி நிற்கக் கூடுமா என்று எதிர்பார்க்கிறேன் …உங்கள் நிலையினை மாற்றி, நாம் எழும்பி நிற்கையில், நிற்க முடிந்தவர்கள் எழுந்து நில்லுங்கள். நாம் நம்முடைய தலைகளை இப்பொழுது பயபக்தியோடு ஜெபத்திற்காக தாழ்த்துவோமாக.

1320 எங்கள் பரம பிதாவே, நங்கள் மீண்டும், உம்முடைய மகத்தான பரிசுத்த சிம்மாசனத்தை, அசைக்க முடியா விசுவாசத்தில், நாங்கள் வரும்படி, அழைக்கப்பட்டபடியால் அணுகிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இங்கே, ஒரு குறிப்பிட்ட சபையின் பெயராலோ அல்லது ஒரு மதஸ்தாபனத்தின் பெயராலோ அல்லது இங்கிருக்கிற இந்த சபையின் பெயரைக் கொண்டோ, அல்லது எங்களது சொந்தப் பெயரிலோ, உமது சமுகத்தில் வருகிறோம் என்று எங்களால் சொல்லமுடியாது. அந்தப் பெயர்களைக் குறித்து நாங்கள் நிச்சயமற்றிருப்பதோடு, தேவனுடைய சமூகத்தில் அவர் பேசுவதைக் கேட்க எங்களுக்கு சமூகமளிப்பீரோ என்பதும் உறுதியல்ல. ஆனால், “என் நாமத்தினால் பிதாவை நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ, நான் அதை செய்வேன்” என்று இயேசு கூறியுள்ளபோது, நாங்கள் இயேசுவின் நாமத்தில் தான் உம்மிடம் வருகிறோம். பிதாவே, எங்களுக்கு நீர் செவி கொடுக்கப் போகிறீரென விசுவாசிக்கிறோம். 21 கடந்துபோன காலங்களில் வாழ்ந்த இரத்த சாட்சிகளைக் குறித்து நாங்கள் படிக்கையில், அவர்கள் அக்காலங்களில் எவ்வாறு தங்கள் சாட்சியை தங்களுடைய சொந்த இரத்தத்தால் முத்திரையிட்டார்கள் என்பதை அறிய நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களைப் பற்றிப் படிக்கும்பொழுது, இக்காலத்தில் வாழும் நாங்கள் அவர்களை மிகவும் குறைவாகவே செய்கிறோம் என்பதாக உணருகிறோம். நாங்கள் உமக்கடுத்தவைகளிலே செயல்படுகையில், எங்களில் காணப்படுகிற அசட்டையான போக்கை எங்களுக்கு மன்னித்தருள வேண்டுமென நான் உம்மிடம் ஜெபிக்கிறேன், கர்த்தாவே! உம்முடைய வார்த்தையை நாங்கள் படிக்கையில், புதிய அபிஷேகத்தை எங்களுக்குத் தாரும், அதினால் கடந்த காலத்தில், கிரயம் கொடுத்து மீட்கப்பட்ட, ஜீவனுள்ள தேவனுடைய இந்த மகத்தான் சபைக்குரிய பரிசுத்த வேத பிரமாணத்தை அதற்கு உருவாக்கிக் கொடுப்பதற்காக எப்பேர்ப்பட்ட துன்பங்கள் உண்டாயிருந்தன என்பதை நாங்கள் கண்ணுறும்படி எங்களுக்குச் செய்தருளும்.

1422 பரலோகப் பிதாவே, நாங்க என்ன பேசவேண்டும் என்பதை அறியவில்லை. எங்கள் மூலமாக நீர் பேசியருளும் என்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். அவருடைய சபையில் நாங்கள் தேவனுடைய சமூகத்தில் இருந்து, உமக்கு காத்திருந்து இதே ஜெபத்தை ஏறெடுக்கிறோம். இந்த ஜனங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானர், இவர்களுக்குள் இருக்கும் வல்லமைகளையெல்லாம் இன்றிரவில் ஒன்றிணைத்து, ஒவ்வொரு இருதயங்களிலும் சுவிசேஷத்தை விதைத்து, அதினால் நாங்கள் புதியதொரு நிலையை எடுத்துக் கொள்ளவும், வரப்போகும் காலத்திற்கான ஒரு புதிய நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளவும் உதவிசெய்யுமாறு வேண்டுகிறோம். இதை எங்களுக்கு அருளும், கர்த்தாவே ஏனெனில் அத்திமரமானது துளிர்விட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்; இஸ்ரவேல் ஒரு தேசமாக ஆகிக் கொண்டிருக்கிறது; புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுச் கொண்டிருக்கிறது; மகத்தான மீட்பராகிய எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய வருகைக்காக நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 23 கர்த்தாவே, எங்கள் மத்தியில் உலாவியருளும். நேற்றிரவில், “நீர் குத்துவிளக்குகளின் மத்தியில் உலாவுகிறீர்” என்று கூறப்பட்டபடி, கர்த்தாவே, இன்றிரவில் எங்கள் மத்தியில் இருதயங்களுக்கு எச்சரிக்கையருளி, உம்முடைய வசனத்தைக் குறித்து புரிந்து கொள்ளும் அறிவை எங்களுக்கு தந்தருளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம்.

1524 இப்பொழுது, நான் ஏற்கனவே கூறியபடி, ஒவ்வொரு நாளிலும், சம்பவங்கள் நடந்த காலத்தைக் குறித்தும், இடங்களைக் குறித்தும் மற்றும் தேவையான குறிப்புகளை, நான் குறித்து வைத்தவைகளிலிருந்து, எவ்வளவு அதிகமாக கொடுக்க முடியுமோ கொடுக்க முயலுவேன். ஏனெனில் நாம் படிக்கப் போகிறவைகள் வரலாற்று ரீதியாக சம்பவித்தவைகளாகும். சபைக் காலங்களில் நடந்தவைகள் இப்பொழுது வரலாறாக ஆகிவிட்டது. இப்பொழுது இக்காலத்தில் நாம் அவைகளை உற்று நோக்கி, காலத்திற்க்கு ஒரு மாதிரியாக ஆக்கிக்கொள்கிறோம். 25 ஞாயிறு காலை மற்றும் ஞாயிறு பிற்பகல்…இல்லை சரியாகக் கூறினால், ஞாயிறு மாலைக் கூட்டங்களில் நமக்கு மகிமையானதொரு வேளை உண்டாயிருந்தது, நிச்சயமாக நமக்கு அப்படித்தானிருந்தது என்று நான் நிச்சயம் நம்புகிறேன். எனக்கே அவ்வறு தான் இருந்தது. மேலும் வெளிப்படுத்தலைக் குறித்து…

1626 இப்பொழுது நாம் எதைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம்? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு. தேவன் அளித்த அந்த வெளிப்பாட்டில் அவர் யார் என்பதைப் பற்றி வெளிப்படுத்தினார் என்று நாம் கண்டோம். வெளிப்படுத்துதல்களிளெல்லாம் முதன்மையாக அவர் யார் என்பதை தேவன் வெளிப்படுத்தினார். அதாவது இயேசுவானவர், திரித்துவத்தின் மூன்றாம் ஆள் என்றல்ல, திரித்துவம் என்று சொல்லப்படுகிறதே, அதிலுள்ள மூன்றுமே பரிபூரணமாக அவராகத்தான் இருக்கிறது என்பதாக பார்த்தோம். அவரே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதாக உள்ளார். அப்படித்தான் நமக்கு வெளிப்படுத்துதல் உண்டாயிருந்தது. அதே அதிகாரத்தில் நான்கு இடங்களில், அவரே சர்வ வல்லமையுள்ள தேவன் என்பது உரைக்கப்பட்டுள்ளது. இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர்; தாவீதின் வேரும் சந்ததியுமானவர்.

1727 இந்தக் காரியங்களைப் பற்றியுள்ள முழு விஷயத்தையும் நாம் தெளிவுபடுத்த முயற்சித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் காண்கிறோம். ஏனெனில், நாம் மீண்டும் அதைப் பற்றி எப்பொழுது இனி கேட்கப்போகிறோம் என்பதை நான் அறியேன், இனி காலம் செல்லாது எனக் கூறப்படும் காலம் வந்து, நித்தியத்திற்குள் இக்காலங்களும் வேளைகளும் அஸ்தமனமாகிவிடப் போகிறவேளை நெருங்கிக்கொண்டிருக்கிறபடியால், இனிமேல் ஒருவேளை இவைகளைக் குறித்து பேசவும், கேட்கவும் இயலாதபடி ஆகிவிடக்கூடும். இங்கே நான் கூறியபடி, இதைக் குறித்து பேசவும், சரியானபடி வியாக்கியானம் கொடுக்கவும், என்னை விட மிகச் சிறந்த அநேக சகோதரர்களும், போதகர்களும் இருக்கக்கூடும். ஆயினும், இதைச் செய்யும்படி தேவன் என் இருதயத்தில் அருளியுள்ளார். எனவே எது சரியென நான் நினைத்துள்ளேனோ அதை அப்படியே சரியாக நான் கூறாமற் போனால் நான் ஒரு மாய்மாலக்காரனான ஆகிவிடுவேன். புரிகிறதா? எனவே நான்—நான், “நான் எதையும் மறைத்து வைக்கவில்லை” என்று பவுல் கூறியபடி நான் எல்ல வேளைகளிலும் தேவனுக்கு முன்பாக குற்றமின்றி இருக்கவே விரும்புகிறேன். “இரவும் பகலும் கண்ணீரோடே எச்சரித்துக்கொண்டு, அப்படியாக சபையானது நிலை நிற்கும்படியாக செய்து வந்தேன்” என்று பவுல் கூறுகிறான். உங்களில் யாராவது இழந்து போகப்பட்டால், என்னுடைய கைகளில் அந்த இரத்தம் இல்லாது இருக்கும்படியாக, அந்த நேரத்தில் நான் எல்லா மனிதருடைய இரத்தபழிக்கும் நீங்கலாயிருக்க விரும்புகிறேன். எனவே, என்னோடு நீங்கள் முரண்படுவீர்களாயின், அருமையான சிநேக பாவத்தோடு அதைச் செய்யுங்கள். அது நன்றாக இருக்கும். யாருக்கும் சேர்த்து உதவிகரமாக இருக்கத்தக்கதாக இப்பொழுது கர்த்தர் நமக்கு சிலவற்றை வெளிப்படுத்தக்கூடும்.

1828 முதலாவதாக அவர் தன்னைத்தானேயார் என்பதை வெளிப்படுத்தினதாக நாம் பார்த்தோம். இப்பொழுது அவர் யார் என்பதை நாம் அறிவோம். 29 நான் ஏற்கனவே பிரசங்கத்தில், தெளித்தல், மற்றும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்தைப் பற்றி குறிப்பிட்டு, அது ஒரு கத்தோலிக்க ஞான்ஸ்நானம் என்றும், பிராடெஸ்ட்ண்ட் அல்லது புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானம் அல்ல என்றும் எடுத்துரைத்தேன். அதை நான் தெளிபடுத்தி விட்டேன் என்று நான் நம்புகிறேன். கத்தோலிக்க சபை உருவாக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த நிசாயா ஆலோசனை சங்கம் கூடுகிற காலம் வரையிலும் அதற்கு முன்பாக எவராது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்களா என்பதை எனக்கு வேதவாக்கியங்களிலிருந்து, ஒரு வேதவாக்கியத்தின் மூலம் தயவு செய்து, எந்த நபராவது எனக்கு எடுத்துக் காண்பிக்கும்படி நான் கேட்டுள்ளேன். அப்படிக் காண்பித்துவிட்டால், என் முதுகில் “நான் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி” என்று எனக்கு நானே முத்திரை குத்திக்கொண்டு தெருவில் கடந்து செல்லுவேன் என்றும் கூறியிருக்கிறேன். நான் கூறுவது சத்தியமானது என்பதைக் காண்பிக்கத்தக்கதாகத்தான் நான் அவ்வாறு கூறினேனே, தவிர…கடினமாகப் பேச வேண்டும் என்ற நோக்கத்திலல்ல. புரிகிறதா?

1930 அவர் நமக்கு மத்தியிலே மாமிசத்தில் வந்த சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதாக இங்கே வேதமானது அவரைப் பற்றி வெளிப்படுத்துகிறது. புரிகிறதா? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்றல்ல. அது மூன்று தேவர்களல்ல. அல்லது ஒரே தேவன் வெட்டப்பட்டு மூன்று ஸ்தானங்களில் வைக்கப்பட்டதல்ல. மூன்று உத்தியோகங்களில் அல்லது பதவிகளில் ஒரே தேவன் கிரியை செய்தார். பிதாத்துவம், குமாரத்துவம் மற்றும் பரிசுத்த ஆவி. ஏதேன் தோட்டத்திற்குப் பிறகு மீண்டும் மானிட உள்ளங்களில் திரும்பி வந்து வாழத்தக்கதாக வழியை உண்டாக்கி அதினால் மனிடர் தேவனுடைய குமராரும், குமாரத்திகளுமாக மீண்டும் அவரோடு ஆகும்படி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார். தேவன் நமக்கு மேல் இருக்கிறார், தேவன் நம்மோடு இருக்கிறார். தேவன் நமக்குள் இருக்கிறார் என்பதாக அது இருக்கிறது. அதுதான் அதிலுள்ள வேறுபாடாகும். புரிகிறதா? 31 வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் இவ்விஷயங்கள் வெளிப்படுத்தப்பட்டு, தீர்க்கமாக உரைக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில், வேதத்தில், வெளிப்படுத்தின விசேஷப்புத்தகம் ஒன்று தான், இயேசு தன்னுடைய சொந்த முத்திரையைப் போட்டிருக்கிற புத்தகமாக விளங்குகிறது. அதில் முதலாவதாக, “இதை வாசிக்கிறவனும், கேட்கிறவனும் பாக்கியவான்” என்று அவர் கூறியுள்ளார். இப்புத்தகத்தில் முடிவாக “இதிலிருந்து ஒருவன் எதையாகிலும் எடுத்துப் போட்டால், அல்லது இதனோடு எதையாகிலும் கூட்டினால், ஜீவ புத்தகத்தில் இருந்து அவனுடைய பங்கு எடுத்துப்போடப்படும்” என்று அவர் கூறியுள்ளார். எனவே இதிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போடுபவனுக்கு அது ஒரு சாபமாக இருக்கும். இப்புத்தகம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய முழுவதுமான வெளிப்பாட்டைக் கொண்டிருக்கிறது. எனவே, நாம் அவரை மூன்று கூறாக்கினால், என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய பெயர் நீக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள்.

2032 ஆதிகாலத்து சபையோ, அக்காலத்தில் இருந்த எந்தவொரு பிராடெஸ்டெண்டோ, எந்த ஒருவருமே, மூன்று தேவர்கள் உண்டு என விசுவாசிக்கவில்லை. நிசாயா ஆலோசனை சங்கத்தில் தேவத்துத்தைப் பற்றிய விஷயம் ஒரு பெரிய விவாதத்திற்குரிய பிரச்சனையாக ஆகிவிட்டது. அதைப் பற்றி இரு வெவ்வேறான கருத்துக்களை கொண்ட ஒரு சாரராக அவர்கள் அங்கே பிரிந்து கொண்டு, இந்தவிதமாக ஒருவர் வலதுபுறமாகவும், ஒருவர் இடதுபுறமாகவும் சாய்ந்துபோனார்கள். திரித்துவம் உண்டு என்று நம்புகிற திரித்துவவாதிகள் இறுதியாக கத்தோலிக்க சபையை ஏற்படுத்தினார்கள். அவர்கள் முழு திரித்துவ உபதேசக்காரர்களாக ஆகி, தேவனை “மூன்று நபர்கள்” என்று ஆக்கிவிட்டார்கள். இன்னொரு சாரார், “ஒருத்துவக்காரர்கள்” என் அழைக்கப்படும்படி, தேவனை ஒருத்துவம் என்று ஆக்கி இப்படியாக மற்றொரு திசையில் சென்றார்கள். இரு சாராருமே தவறாகத்தான் இருக்கிறார்கள். தேவன் அவ்வாறிருக்க முடியாது. 33 இயேசு தாமே, தனக்குத் தானே தன்னுடைய பிதாவாக இருக்க முடியாது. இயேசுவுக்கென ஒரு பிதா இருந்து, அவர் அப்படியாயின் மூன்று தேவர்கள் இருக்கிறார்கள் என்றாகிவிடுமே. அவ்வாறிருக்க முடியாது. அவர்க்கு ஒரு பிதா உண்டு என்றால், இவரைத் தவிர வேறொருவர் இருக்கிறார் என்றாக வேண்டும் …பரிசுத்த ஆவி என்று வேறொருவர் அவ்வாறிருந்தால், அவர் முறைகேடான குழந்தை என்றாகிவிடும். வேதமானது பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் பிதா என்று கூறுகிறது. நமக்குள் பரிசுத்த ஆவி இருக்கிறதென்றால், பரிசுத்த ஆவி என்ற பெயரில் அந்த உத்தியோகத்தில் பிதாவானவரே நமக்குள் இருக்கிறார் என்று அறிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே ஒரு மனிதனுக்குள் ஆவியாக இருந்த அதே யேகோவா தேவன் தான் மீண்டும் நமக்குள் இப்பொழுது வந்திருக்கிறார். புரிகிறதா?

2134 மூன்று தேவர்கள் இல்லை. மூன்று தேவர்கள் உண்டு என்பது, அஞ்ஞான மற்றும் விக்கிரக வழிபாட்டுக்காரர்களுடைய கொள்கையாகும். அது அப்படியே உள்ளே புகுந்து விட்டது. இவ்வாரம் முழுவதும் இச்செய்தியை விடாமல் தொடர்ந்து கேளுங்கள். உண்மைகளை சரியாகக்கேட்டு அறியும் முன்பே அதைப் பற்றிய தப்பபிப்ராயத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், கவனமாகக் கேட்டு, வரலாற்றுப் பூர்வமாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் மேற்கோள் காட்டும் அதே வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது வேறு யாருடைய வரலாற்றுக் குறிப்புகளை எடுத்துக் கொண்டாலும் சரி. அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் இவைகளையே கூறுகின்றனர் என்பதை அறிந்துகொள்ளுங்கள். யாவரும், எந்த ஒரு பட்சத்திலோ அல்லது கொள்கையின் பேரிலோ சார்ந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களல்ல, ஆனால் அவர்கள் நடந்ததென்னவோ அந்த உண்மைகளை வரலாற்றில் பொறிப்பதில் தான் ஆர்வமுள்ளவர்கள். அந்த “பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தினால் ஞானஸ்நானம்” என்பதானது, எவ்வாறு லூத்தரின் காலத்திலும், பிறகு வெஸ்லியின் காலத்திலும் அப்படியே உள்ளே ஊடுருவி வந்தது என்றும், இப்பொழுது இக்கடைசி காலத்தில் எவ்வாறு அதன் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது என்பதையும் கவனியுங்கள். இக்காலங்களில் கத்தோலிக்க சபையில் எப்பொழுது அது உள்ளே நுழைந்தது என்பதையும், பிறகு லூத்தரின் காலத்தில் ஊடுருவி வெஸ்லியின் காலத்திலும் ஊடுருவியது என்பதையும், ஆனால் வெஸ்லியின் காலத்திற்கும் லவோதிக்கேயாவின் (இறுதிக் கட்டத்திற்கும்) இடையில் அதன் போலித்தன்மை அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். அது உண்மை. இப்பொழுது இதெல்லாம் வரலாற்றுப்பூர்வமானவைகள். வரலாற்றுப் பூர்வமானவைகள் மட்டுமல்ல. வேதப்பூர்வமானவையும் கூட.

2235 நாம் இப்பொழுது இன்றிரவில் ஏழு சபைக் காலங்களை அணுகப் போகிறோம். இப்புத்தகம் எழுதப்பட்ட சமயத்தில் ஆசியாமைனரில் உள்ள ஏழு ஊர்களில் இவ்வேழு சபைகளும் உண்டாயிருந்தன. இச்சபைகள், எதிர்வரும் காலத்தில் வரப்போகும் ஏழு சபைக்காலங்களுக்குரிய அதே குணாதிசயத்தை கொண்டவைகளாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் …அக்காலத்தில் இன்னும் பிற சபைகளும் உண்டாயிருந்த போதிலும், தேவன் இவ்வேழு ஊர்களில் இருந்த இவ்வேழு சபைகளையே அவைகளின் குணாதிசயங்களினிமித்தம் தெரிந்து கொண்டார். 36 இப்பொழுது, அவர் ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் நிற்கக் காண்கிறோம். அவருடைய கரத்தில் அவர் ஏழு நட்சத்திங்களை ஏந்திக் கொண்டிருந்தார். இவ்வேழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார். இவ்வேழு நட்சத்திரங்களைப் பற்றி அவர், வெளிப்படுத்தின விசேஷம் 1ம் அதிகாரம் 20ம் வசனத்தில், “ஏழு சபைகளுக்குரிய ஏழு தூதர்கள்” என்று கூறியுள்ளார்.

2337 வேதத்திலுள்ள இந்த வெளிப்பாட்டை அக்காலத்திலுள்ளவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில், இயேசு திரும்பி வருவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்குமுன்பு அவர்கள் விழிப்புடன் காத்திருப்பதினால் அவர்களுக்கு என்ன நன்மை உண்டாயிருக்கும்? எனவே அது அவர்களுக்கு அருளப்படவில்லை. 38 இங்கு இருக்கிற ஜனங்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன், கத்தோலிக்கரே, லூத்தரன்களே, மெதோடிஸ்டுகளே, ஏனையோரே, உங்களுக்கு நான் கூறுகிறேன்; இன்றைக்கு வேதவாக்கியத்தின் பேரில் கிடைத்துள்ள வெளிச்சமானது மார்ட்டின் லூத்தருக்கு கொடுக்கப்படவில்லை. ஜான் வெஸ்லிக்குங் கூட கொடுக்கப்படவில்லை. லூத்தர் பிரசங்கிக்காமல் விட்ட பரிசுத்தமாகுதலைப்பற்றி ஜான் வெஸ்லி பிரசங்கித்தார். ஒளியானது நமக்கு அவசியமாயிருக்கிறபடியால், ஒளிவருகிறது. தேவன் அதைக் கூறுகிறார். தேவன் அதைத் திறந்து கொடுக்கிற நாள் வரையிலும், அது நம்முடைய கண்களுக்கு மறைவாகவே இருந்து வந்துள்ளது. நாம் போனபிறகு என்ன நடக்குமோ என்று வியப்புறுகிறேன். ஆம், நாம் இன்னும் ஒன்றுமே அறிந்து கொள்ள இயலாத இன்னும் மிகமிக அதிகமான விஷயங்கள் இருக்கின்றன என்றே நான் நிச்சயம் கருதுகிறேன். அது உண்மை. வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தின் முழுவதையும் நாம் எடுத்துக் கொண்டால்…புறம்பாக முத்திரையிடப்பட்ட ஏழு முத்திரைகள் உள்ள புத்தகம் அங்கே உள்ளது. அது இப்புத்தகத்தில் எழுதப்படவேயில்லை. இந்தச் சபைகாலத்தில் தான் அம்முத்திரைகள் திறக்கப்பட்டு, தேவனுடைய கடைசியான ஏழு இரகசியங்களும் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஓ! குளிர்காலம் முழுவதிலும் அதைப் பற்றி தொடர்ந்து பிரசங்கிக்க நான் விரும்புவேன். ஆம், ஐயா! ஏழு சபைக்காலங்கள்.

2439 ஏழு இடிமுழக்கங்களை தானியேல் கேட்ட பொழுது, அவைகளை எழுதாதபடி அவன் தடுக்கப்பட்டான். யோவான் அச்சப்தங்களைக் கேட்டான். இந்தப் புத்தகம் முத்திரையிடப்பட்டது. இப்புத்தகத்தின் புறம்பாகவும் ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருந்தது. ஆனால் இந்நாட்களிலோ, இம்முத்திரைகள் திறக்கப்பட்டு “தேவ இரகசியம் நிறைவேறும்”. வேறு விதமாகக் கூறினால், தேவன் தன்னுடைய சபைக்கு அறியப்படுவார்; மூன்று நபர்களாக அல்ல, ஒரே நபராகத்தான் அறியப்படுவார். “தேவனுடைய இரகசியம் வெளிப்படுத்தப்படும்”. அது முழுவதுமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்பொழுது, ஏழு இரகசியங்களும் சபைக்கு திறந்து கொடுக்கப்படும். ஏனெனில், அப்பொழுது சபையானது பரிசுத்த ஆவியானவரின் ஏழுவுதலின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும்; அவர் அப்பொழுது தாம் உயிரோடிருப்பதையும், நமக்குள் அவர் ஜீவிப்பதையும் அடையாளம் காண்பிப்பவராக உள்ளும் புறம்பும் அசைவாடிக் கொண்டிருப்பார். அப்பொழுது நாம் நமக்குள் இருக்கும் ஜீவனுள்ள கிறிஸ்துவை தொழுது கொண்டிருப்போம்.

2540 பெரிய சபைகளுக்காகவும், பெரிய காரியங்களுக்காகவும் ஒருபோதும் எதிர்நோக்கியிருக்க வேண்டாம். இந்த பெந்தெகோஸ்தேயின் காலத்தைப் பற்றி நாம் படிக்கையில் அவர்கள் எங்கே வழுவிப்போனார்கள் என்பதை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள். அந்த சபைக்காலத்தின் பெயராகிய லவோதிக்கேயா என்பதின் பொருள் என்னவெனில், “ஐஸ்வரியமும், ஒரு குறைவுமில்லாதது” என்பதாகும். ஆயினும், அது நிர்வாணமாயும், நிர்ப்பாக்கியமுள்ளதாகவும், குருடாகவும், பரிதபிக்கப்படத்தக்க நிலையிலும் இருந்து வருகிறது; ஆயினும் அவ்விதமான நிலையிலிருப்பதை அறியாமல் இருக்கிறது. பார்த்தீர்களா? அவர்கள் மிகுந்த பணத்தின் பின்னாலும், பெரிய கட்டிடங்களின் பின்னாலும் சென்று விட்டார்கள். 41 உண்மையான சபையோ எப்பொழுதும் இந்த உலகத்திற்கு துடைத்துப் போடப்பட்டவர்களாயிருந்தார்கள். யாவராலும் வெறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, சந்திகளில் துரத்திவிடப்பட்டு, எங்கெல்லாம் வாழ முடியுமோ அங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருந்தனர். எபிரெயர் 11ம் அதிகாரத்தின் கடைசி 6 அல்லது 8 வசனங்களை எடுத்துப் பாருங்கள். அங்கே, “அவர்கள் வனாந்திரங்களிலேயும், அலைந்து திரிந்தார்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத்தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து குறைவையும் உபத்திரவத்தையும் அனுபவித்தார்கள்”. நியாயத் தீர்ப்பின் நாளில் அவர்களுடைய இத்தகைய சாட்சிகளுக்கு முன்பாக நம்முடைய சாட்சி எவ்வாறு நிகராக நிற்கப் போகிறது? அந்நாட்களில் இருந்த ஜனங்களைப் பாருங்கள்.

2642 இப்பொழுது இந்த சபைக்காலத்திலோ…நமக்கு ஏழு சபைக்காலங்கள் உண்டு. நான் அவைகளை வரைந்து உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். இங்கிருந்து நீங்கள் அவைகளை சரியாக கண்ணுற முடியாதாயென நான் நினைக்கிறேன். ஒருவேளை உங்களில் சிலர் அதைக் காணக்கூடும். உங்களுக்கு பார்ப்பதற்கு இயலாதபடி உள்ளது என்றே நான் சந்தேகிக்கிறேன், ஆயினும் நான் அதைச் செய்ய முயலுகிறேன். (இங்கே உட்கார்ந்திருக்கிறவர்களால் இதை சரியாக பார்க்க முடியாது என்பதை நான் அறிவேன்.) ஆகவே நீங்கள் பார்த்து புரிந்து கொள்ளும்படியாக என்னுடைய கையில் இந்த சபைக் காலங்களைப் பற்றிய அச்சித்திரத்தை ஏந்திக் கொள்கிறேன். 43 பெந்தேகோஸ்தே நாளில் சபையானது தன் துவக்கத்தையுடையதாக இருக்கிறது. அப்படியல்லவென்று யாராவது மறுக்க முடியுமா? இல்லை, ஐயா! பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதத்தோடு சபையானது பெந்தெகொஸ்தே என்னும் நாளிலிருந்து துவங்கியது. அது இயேசு கிறிஸ்துவால் அவர்களில் கிரியை செய்கிற அதே செய்தியுடனும் ஆசீர்வாதத்துடனும் கடைசி நாள் வரைக்கிலும் தொடர்ந்து செல்ல நியமிக்கப்பட்டது. மாற்கு சுவிசேஷத்தில் 16ம் அதிகாரத்தில் அவருடைய சபைக்கு அவர் இட்ட அவரது கடைசிக்கட்டளையானது: “நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் தொடரும்” என்பதாகும். எங்கே போய் பிரசங்கிக்க வேண்டும்? “முழு உலகிற்கும்”. யாருக்கு பிரசங்கிக்க வேண்டும்? “சர்வ சிருஷ்டிக்கும்.” கருப்போ, பழுப்பு நிறமோ, மஞ்சள் நிறமோ, வெள்ளை நிறமோ, எப்படிப்பட்ட சிருஷ்டியாயினும் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன” என்று கூறப்பட்டது. ஒவ்வொரு இரவிலும் ஒரு பெரிய துண்டை, நல்ல இறைச்சியைப் போன்றிருக்கிற இச்செய்தியின் பேரிலிருந்து வெட்டி எடுத்துக்கொண்டு, இறுதியாக நாம் வாழும் நமது சபைக்காலத்துக்குரியதை எடுத்துக்கொள்வோம். இன்றிரவில் அதின் ஓரத்தில் உள்ளதை துவக்கத்தில் உள்ளதை எடுத்துக்கொள்வோம். அதுவே அவருடைய கட்டளை என்று நாம் கண்டறிகிறோம்.

2744 இப்பொழுது முதலாவது சபைக்காலமானது எபேசு சபையாகும். இரண்டாவது சபைக்காலம் சிமிர்னாவாகும். மூன்றாவது சபைக்காலம் பெர்கமுவாகும். நான்காவது தியத்தீரா சபைக்காலமாகும். ஐந்தாவது சர்தை சபைக்காலமாகும். ஆறாவது பிலதெல்பியா சபைக்காலமாகும். ஏழாவது சபைக்காலம் லவோதிக்கேயாவாகும். 45 முதலாவது சபைக்காலமானது கி.பி.53ல் துவங்கியது; அப்பொழுது எபேசு பட்டிணத்தில் பவுல் சபையை ஏற்படுத்தினான். பவுல் தன்னுடைய ஊழிய யாத்திரையின்போது, அவன் எபேசுவில் சபையை நிறுவினான். கி.பி.66ம் ஆண்டில் பவுல் சிரச்சேதம் செய்யப்படும் வரையிலும், சுமார் 22 ஆண்டுக்காலம் பவுல் எபேசு சபையின் மேய்ப்பனாக இருந்து வந்தான். பவுலின் மரணத்திற்கு பிறகு திவ்விய வாசகனாகிய பரிசுத்த யோவான் இந்தச் சபைக்காலத்தில் சில காலம் எபேசு சபையின் மேய்ப்பனாக இருந்து வந்தான் என்று கூறப்படுகிறது. எபேசு சபைக்காலம் கி.பி.170ம் ஆண்டு வரையிலும் நீடித்தது.

2846 பிறகு கி.பி.53 முதல் கி.பி.170 முடிய உள்ள எபேசு சபைக்காலத்திற்கு பிறகு, கி.பி.170 முதல் கி.பி.312 முடிய நீடித்திருந்த சிமிர்னா சபைக்காலமானது ஏற்பட்டது. அதன்பிறகு பெர்கமு சபைக்காலமானது கி.பி.312 கி.பி.606ம் ஆண்டு வரையிலும் நீடித்திருந்தது. அதைத் தொடர்ந்து தியத்தீரா சபைக்காலமானது வருகிறது. அதினுடைய காலம் கி.பி.606ல் துவங்கி கி.பி.1520-ம் ஆண்டு வரை நீடித்தது. அக்காலம் தான் இருண்ட காலங்கள் என அழைக்கப்படுகிறது. அடுத்ததாக சர்தை சபைக்காலமானது கி.பி.1520ல் துவங்கி கி.பி.1750 வரை நீடித்தது. அதுதான் லூத்தரின் காலமாகும். கி.பி.1750 முதற்கொண்டு அடுத்த சபைக்காலமாகிய பிலதெல்பியா சபைக்காலமானது வருகிறது; அதுவே வெஸ்லியின் காலமாகும். அது 1750-ல் ஆரம்பித்தது, 1906-ம் ஆண்டு வரைக்கிலும் நீடித்திருந்தது. 1906ம் ஆண்டில் லவோதிக்கேயா சபைக்காலமானது ஆரம்பித்து, அது எப்பொழுது முடிவுறும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அச்சபைக்காலம் 1977ம் ஆண்டில் முடிவடையும் என நான் முன்னுரைக்கிறேன். நான் முன்னுரைக்கிறேன், கர்த்தர் என்னிடம் அவ்வாறு கூறவில்லை. ஆனால் நானே, சில ஆண்டுகளுக்கு முன்பாக எனக்கு காண்பிக்கப்பட்ட ஒரு தரிசனத்தின் அடிப்படையில் இவ்வாறு முன்னுரைக்கிறேன். (அந்த ஏழு தரிசனங்களில்) ஐந்து ஏற்கனவே சம்பவித்து நிறைவேறிவிட்டது.

2947 கிட்டத்தட்ட…இந்த சபையில் எத்தனை பேர்கள் அந்த தரிசனத்தை நினைவில் வைத்திருக்கிறீர்கள். நிச்சயமாக, அவைகள் சொல்லப்பட்டன. எவ்வாறு கென்னடி கூட கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதும் முன்னுரைக்கப்பட்டது. எவ்வாறு பெண்களும் வாக்களிக்க உரிமையளிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அந்த ரூஸ்வெல்ட் எவ்வாறு உலகை யுத்தத்திற்கு நேராக நடத்திச் செல்வார் என்றும் முன்னுரைக்கப்பட்டது. முசோலினி எத்தியோப்பா மேல் தனது முதல் படையெடுப்பை எடுத்து, அதை வென்றெடுத்து, பின்பு அதுவே அவனது முடிவை ஏற்படுத்தும் என்றும், அதன் பிறகு அவன் மரணமடைந்துவிடுவான் என்று முன்னுரைக்கப்பட்டது. எவ்வாறு இந்த பெரிய கொள்கைகள் தோன்றும் என்றும், அவைகள், முடிவாக வீழ்ந்து, அதைத் தொடர்ந்து கம்யூனிஸம் எவ்வாறு தோன்றும் என்றும் கூறப்பட்டது. ஹிட்லரிசம் முஸோலினியின் கம்…நாசிசம் ஆகியவைகள் தோன்றி, இறுதியாக கம்யூனிசம் தோன்றும் போது இவ்விரு கொள்கை பின்னுக்குத் தள்ளப்பட்டு மறைந்து போய்விடும் என்றும் கூறப்பட்டது. “ஜெர்மனி தேசத்தோடு நாம் யுத்தத்திற்கு செல்லுவோம். ஜெர்மனி தேசம் காங்க்ரீட் சுவர்களால் ஆன மாகினோட் லைன் என்று கூறப்படும் பலத்த அரணை அமைத்துக் கொள்ளும்” என்று அச்சம்பவம் சம்பவிப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாக முன்னுரைக்கபட்டது. அதன்படியே அது நிறைவேறிற்று. உரைக்கப்பட்டதென்னவெனில், அதன் பிறகு விஞ்ஞானமானது மிகப்பெரிய அளவில் முன்னேறிவிடும் என்றும், அப்பொழுது மோட்டார் வண்டிகள் போகப்போக முட்டை வடிவத்தில் அமைந்திருக்கும் மோட்டார் வாகனங்களை கண்டுபிடிப்பார்கள் என்றும் உரைக்கப்பட்டது. முன்பு பழைய…அனாதை இல்லம் இருந்ததும், தற்போது சர்ச்ஆஃப் கிரைஸ்ட் என்ற ஸ்தாபனமானது இருக்கிறதுமான அந்த இடத்தில் தான் அத்தரிசனம் உண்டாயிற்று. சார்லி கெர்ன் என்பவர் அப்பொழுது அங்கு வாழ்ந்து வந்தார். அவர் ஒருவேளை இங்கு இக்கட்டிடத்தில் இருக்கக்கூடும் என்று கருதுகிறேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு அது நேரிட்டது. “ஒரு வாகனத்தை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்; அதற்கு உந்துவண்டி இயக்காழி இல்லாமலே ஏதோ ஒரு சக்தியினால் அது செல்லுவதாக இருக்கும்” என்று தரிசனத்தில் கூறப்பட்டிருந்தது. இப்பொழுது அவர்கள் அதை கண்டு பிடித்துவிட்டார்கள். அது காந்த சக்தியினால் இயக்கப்பட்டு, மின்காந்த இலை கருவி அமைப்பினால் கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. அவர்கள்…நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு உங்கள் மின்காந்த இலைக்கருவியை நிங்கள் அமைத்து விட்டால் போதுமானது. நீங்கள் உந்துவண்டி இயக்காழியைப் பிடித்து ஓட்ட வேண்டியதேயில்லை, அது தானாகவே உங்களை, நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லும்.

3048 மேலும் அத்தரிசனங்களில், “அக்காலத்தில், அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ஒரு பெரிய பெண்மணி எழும்புவாள்” என்று உரைக்கப்பட்டது. அவள் மிகவும் நன்கு உடுத்தியிருந்தவளாகவும், சௌந்தர்யமுள்ளவளாகவும், ஆனால் இருதயத்தில் கொடூரம் கொண்டவளாகவும் அத்தரிசனத்தில் காணப்பட்டாள். அத்தரிசனத்தைப் பற்றிய விவரக் குறிப்புக் கூட நான் அடைப்புக் குறியிட்டு வைத்துள்ளேன். அப்பெண்மணி ஒரு வேளை கத்தோலிக்க சபையைக் குறிக்கக்கூடும் என்று கூறினேன். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அளிக்கப்படுவதினால், அவர்கள் தவறான நபரை இத்தேசத்தின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஏதுவாயிருக்கும். அதை தான் அவர்கள் செய்துவிட்டார்கள். “அதுதான் அதன் ஆரம்பம்” என்று உரைக்கப்பட்டது. 49 இன்னொரு விஷயம் அதில் என்னவெனில்…இதையடுத்து உடனடியாக இத்தேசமானது எரிந்து சாம்பலாகி சிதறிப்போனதைக் கண்டேன். இத்தரிசனங்களில் ஏற்கனவே சில நிறைவேறிவிட்டபடியால், மீதமுள்ளவைகளும் நிச்சயமாக நிறைவேறும். நாம் …அதினால் தான் ஜெபர்ஸ்ன்வில்லில் உள்ள இம்மக்களுக்கு இந்த இராத்திரியில் இச்செய்தியை தாமதமின்றி கொடுத்து, ஒழுங்குபடுத்த நான் முயன்று கொண்டிருக்கிறேன். ஏனெனில், நான் வெளிநாட்டு ஊழியங்களுக்கு விரைவில் மீண்டும் சென்று விட ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன். நான் எப்பொழுது அழைக்கப்படுவேன், அல்லது எடுத்துக் கொள்ளப்படுவேன் என்பது எனக்குத் தெரியாது…நாம் அதை அறியோம். சபையானது அவர்கள் வாழும் நேரத்தைக் குறித்து அறிந்து கொண்டு விட வேண்டுமென்ற விஷயத்தில் நான் நிச்சயமுடையவனாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில், இக்காரியத்தைக் குறித்து, சர்வவல்லமையுள்ள தேவன் என்னை பொறுப்பாளியாக்கிவிடுவார்.

3150 வேதவாக்கியங்களின்படி, இந்த சபைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தூதன் உண்டு. தூதன் என்னப்பட்டவன்… தூதன் என்றால் அர்த்தம் என்ன என்பதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? தூதன் என்றால் “செய்தியாளன்” அல்லது “செய்தியைக் கொண்டு வருபவன்” என்று அர்த்தமாகும். ஏழு சபைகளுக்கும் ஏழு தூதர்கள் என்றால் ஏழு செய்தியாளர்கள் என்று பொருள்படும். இப்பொழுது அவருடைய வலதுகரத்தில் ஏழு நட்சத்திரங்கள் இருந்தன. அவர் கரத்திலிருந்த இந்த—இந்த பன்னி …இவ்வேழு நட்சத்திரங்களும் அவருடைய சமுகத்தின் ஒளியை, நாம் வாழும் இந்த இராக்காலத்தில் பிரதிபலிக்க வேண்டியவர்களாகயிருக்கிறார்கள். இரவில் நட்சத்திரங்கள் சூரியனின் ஒளியை பூமிக்கு பிரதிபலிக்கிறபடியால், இரவு வேளையில் அவ்வெளிச்சத்தில் நம்மால் நடக்கவும், அசைவாடவும் முடிகிறது. 51 அத்தூதர்களில் ஒவ்வொருவரும், தங்கள் தங்கள் காலங்களில் அவரவர்களுக்குரிய ஸ்தானத்தையும், உத்தியோகத்தையும் உடையவர்களாயிருக்கின்றனர் என்பதை நாம் கண்டறிகிறோம். மேலும், சகோதரரே, இந்த இராத்திரியில் நாம் அதற்குள்ளாக பார்க்கப் போகிறதில்லை, ஏனெனில், நாம் முதல் சபையின் இந்த தூதனைப் பற்றி அறிவோம்; ஆனால் ஏனைய சபைகளுக்குரிய தூதர்கள் யார் என்பதைப் பற்றி காணப்போவதும், வரலாற்றில் இருந்து அதின் நிரூபணங்களை எடுத்துக் காணப்போவதும் உங்களுக்கு இரகசியமானதாகவும், மகிமை பொருந்தினதாகவும் இருக்கப் போகிறது. முதலாம் சபைக் காலத்தின் செய்தியாளன் பரிசுத்த பவுல், அவன் அதை நிறுவினான். அவன் தேவனுடைய செய்தியாளன். எபேசு சபையின் தூதன் பரிசுத்த பவுல். சபை…இப்பொழுது நான் இக்காரணத்தைக் கொண்டு…

3252 இப்பொழுது, ஏனைய தூதர்களைப் பற்றி நீங்கள் என்னோடு முரண்படக்கூடும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்னை நிரப்பி, அசைத்து, அத்தூதர்கள் ஒவ்வொருவரும் யார் யார் என்பதைப் பற்றி நான் அறிந்துகொள்ள வைக்கிற வரைக்கிலும், நான் நாட்கணக்கில் அவரது அசைவின் கீழ் அமர்ந்திருந்தேன். எனவேதான் நான் இதைப்பற்றி அறிந்துள்ளேன். நீங்கள் ஒரு சரித்திர ஆசிரியராக இருப்பின், ஒவ்வொரு காலத்திற்கும் தெரிந்துகொள்ளப்பட்ட தூதர்களான இம்மனிதர்களை கவனித்துப் பாருங்கள். அவர்கள் …இன்னின்னார்தான் அத்தூதர்கள் என்று நான் சொல்லும் தூதர்களை வெளிப்படுத்துதலினால் தான் அறிந்து கொண்டுள்ளேன். அவர்கள் தம்தம் காலத்திய சபைகளுக்கு தூதர்களாயிருந்தார்கள். ஆதியில் இருந்தவர்களுக்கு இருந்த அதே ஊழியத்தைப் போலவே இவர்களுக்கு உண்டாயிருந்தது. அவ்வூழியமானது ஒருக்காலும் மாறிப்போகாது, எல்லாக் காலங்களிலும் அது பெந்தெகொஸ்தேயாகத்தான் இருக்க வேண்டும்.

3353 சிமிர்னா சபையின் காலத்திற்கு ஐரேனியஸ் என்பவர் தான் தூதன் என்று நான் அறிவேன். ஆனால் இங்கே அமர்ந்திருக்கும் வரலாற்றாளர்கள் இந்த மனிதனை ஒத்துக் கொள்ளப் போவதில்லை. பாலிகார்ப் தான் தூதர் என்று உங்களில் அநேகர் ஒருவேளை சொல்லக்கூடும். சரியாகக் கூறினால் அவர்தான் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் பாலிகார்ப் அவர்கள் மதசம்பந்தமான ஸ்தாபன வழியில் அதிகமாக சாய்ந்து போனவராகக் காணப்பட்டார். மேலும் அப்பொழுது வளர்ந்து கொண்டு வந்திருந்த கத்தோலிக்க மதஸ்தாபனத்திடமும் சார்புடையவராகவும் காணப்பட்டார். ஆனால் ஐரேனியஸோ, தேவனுடைய வல்லமையையுடையவராயிருந்து, அந்நிய பாஷையில் பேசி, அடையாளங்கள் அவரைப் பின்தொடர்பவராயிருந்தார். ஐரேனியஸ் தேவனுடைய தூதனும் ஒளியாகவும் இருந்தார். பாலிகார்ப் சிலுவையில் அறையப்பட்டு அல்லது கொலைசெய்யப்பட்ட பிறகு, தொடர்ந்து ஒளியை சுமந்து சென்றார். ஐரேனியஸ், பாலிகார்ப்பின் மாணாக்கர்களில் ஒருவராவார். பாலிகார்ப் பரிசுத்த பவுலின்…பரிசுத்த யோவானின் மாணாக்கராவர். பாலிகார்ப் மரித்த பிறகு, அவருடைய இடத்தை ஐரேனியஸ் எடுத்துகொண்டு, தொடர்ந்து ஒளியைக் கொண்டு வந்தார்.

3454 பெர்கமு சபையின் காலத்திற்கு அந்த மகத்தான பரிசுத்தவானாகிய மார்ட்டின் தூதனாகவும் அக்காலத்திற்குரிய ஒளியாகவும் இருந்தார். இயேசு கிறிஸ்துவைத் தவிர்த்து, பரிசுத்த மார்ட்டினை விட ஒரு மகத்தான மனிதன் இருந்தார் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. வல்லமை? அவரைச் சிரச்சேதம் செய்வதற்காக கொலைகாரர்கள் அவரிடம் வந்தபொழுது அவர் கழுத்து வரையிருந்த தன் அங்கியை தளர்த்தி, அவர்கள் தன்னை வெட்டுவதற்கு வசதியாக கழுத்தை நீட்டிக் கொடுத்தார். (அவர் அடையாளங்களிலும் அற்புதங்களிலும் விசுவாசங்கொண்டிருந்து, பெந்தேகோஸ்தே ஆசீர்வாதங்களை உடையவராயிருந்தார்) கொலைகாரன் அவர் தலையை சீவி எறியும் படியாக பட்டயத்தை உருவியபோது, தேவனுடைய வல்லமையானது அக்கொலைகாரனை மார்ட்டினை விட்டு தூரத்தில் எறிந்தது. அக்கொலைக்காரன் முழங்காலிலேயே ஊர்ந்து வந்து கெஞ்சினான் …?… ஆமென். மார்ட்டினே இச்சபைக்குரிய தூதனாவார். 55 மற்றக் காரியங்கள். அவர் எவ்வாறு…அவருடைய சகோதரர்களில் ஒருவர் தூக்கிலிடப்பட்டபோது, என்ன நடந்தது என்பதை மார்ட்டின் அறிய முயன்று, அதற்காக சாலையில் சென்று கொண்டிருந்தார். அவர் அங்குபோனபொழுது, அவரது சகோதரனை அவர்கள் ஏற்கனவே தூக்கில் தொங்க விட்டிருந்தார்கள். அவரை தூக்கிலிருந்து தரையில் நீட்டி படுக்க வைத்திருந்தார்கள். அவர் மரித்து, கண்கள் தலையிலிருந்து வெளியே பிதுங்கிய நிலையிலிருந்தது. மர்ட்டின் முழங்கால் படியிட்டு, பிறகு, தன் சரீரத்தை மரித்தவருடைய சரீரத்தின் மேல் கிடத்தி, ஒரு மணி நேரம் தேவனிடம் ஜெபித்தார். தேவனுடைய வல்லமை அம்மனிதர் மேல் வந்தபோது, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார், அவரது கையைப் பிடித்துக்கொண்டு மார்ட்டின் அங்கிருந்து நடந்து சென்றார். ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், இன்னும் வரலாற்றில் கூறப்பட்டுள்ள ஏனையோரைப் போல, மார்ட்டினைப் பற்றிய இவ்விஷயங்களும் உண்மையான வரலாறாக இருக்கிறது. அது சரித்திரம். 56 ஆம், ஐயா! பரிசுத்த மார்ட்டின் தான் பெர்கமு சபையின் தூதனாவார். அச்சபையின் காலம் தான் மார்ட்டின் மறைவிற்குப் பிறகு கத்தோலிக்க கொள்கைகளுக்கு விவாகம் செய்து கொண்டு அவர்களை அதற்குள் கொண்டு சென்றது.

3557 தியத்தீரா சபையின் காலத்திற்கு கொலம்பா என்பவர்தான் தூதனாவார். 58 மரித்துப்போன சபையாகிய சர்தைக்குரிய தூதர்… சர்தை என்றால் “மரித்தவன்” என்று பொருளாகும். அவருடைய பெயரில்லாத ஒரு பெயரோடு புறப்பட்டு அச்சபை வருகிறது. “உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தாலும், மரித்தவானாயிருக்கிறாய்…” என இச்சபையைக் குறித்துக் கூறப்பட்டது. அந்த நாளில் ஞானஸ்நானத்தை அவர்கள் எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்பதைக் கவனியுங்கள். பாருங்கள், கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து அதைக்கொண்டு வந்தார்கள். முதல் சீர்திருத்தக்காரரான மார்ட்டின் லூத்தர் இக்காலத்திற்குரிய சபையின் தூதனாயிருந்தார். 59 பிலதெல்பியா சபைக்கு ஜான் வெஸ்லி என்பவர் தான் தூதனாயிருந்தார், செய்தியாளனாயிருந்தார். 60 லவோதிக்கேயா சபைக்குரிய தூதன் யார் என்பது இன்னமும் தெரியவில்லை. என்றாவது ஒருநாள் அவர் யார் என்பது தெரியவரும். ஆனால் ஒருவேளை…அவர் இப்பொழுது இப்புவியில் இருப்பார். “காதுள்ளவன் எவனோ…” [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] அவன் அந்தக் காலத்தில் தான் நாம் ஜீவிக்கிறோம் என்பதை அறிவான். அதைக்குறித்த நிதானிப்பை தேவனே செய்வார்.

3661 இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள், வேத வாக்கியங்களில் நாம் முதலாம் சபைக்காலத்தைக் குறித்து பார்க்க திரும்பிச் செல்லுவோம். இப்பொழுது நான் விரும்புவது…சில விஷயங்களை நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன்; நீங்கள் அவைகளுக்கு மிகவும் கவனமாக செவிகொடுக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 62 முதலாம் சபையாகிய எபேசு சபையானது, சபையின் கிரியைகள், தேவனால் எதற்காக கடிந்து கொள்ளப்பட்டதென்றும், அவர்களிடம் அன்பில்லாத கிரியைகள் காணப்பட்டனவே, அவர்களுடைய பலன் ஜீவ விருட்சமாயிருந்தது. 63 சிமிர்னா சபையானது ஒரு உபத்திரவப்படுத்தப்பட்ட சபையாகும். அது உபத்திரவங்களின் வழியாக கடந்து சென்ற்து. அதற்குரிய பலன் ஜீவ கிரீடமாயிருந்தது. 64 மூன்றாம் சபையான பெர்கமு, அதின் காலமானது கள்ள உபதேசம், சாத்தானின் பொய், போப்பு மார்க்கத்தின் ஆட்சியின் அஸ்திவாரமிடுதல், சபையும் அரசும் விவாகம் செய்து கொள்ளல் ஆகியவைகளின் காலமாக விளங்குகிறது. அதற்கு அளிக்கப்படும் பலனானது, மறைவான மன்னாவையும், வெண் குறிக்கல்லுமாயிருந்தது. 65 தியத்தீரா சபையானது, போப்பின் வஞ்சனையைக் கொண்டதாக இருந்தது. அதுவே இருண்ட காலங்களாகும். இச்சபையின் காலத்தில் ஜெயங்கொள்ளுகிறவனுக்கு அளிக்கப்படுவது, ஜாதிகளின் மேல் அதிகாரமும், விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருந்தது. இதைப்பெறுபவர்கள், இவ்விருண்ட காலங்களின் வழியாகச் சென்ற அந்த உண்மையான சிறு கூட்டமே.

3766 சர்தை சபையானது சீர்திருத்தத்தின் காலமாக விளங்கியது, அந்த மகத்தான மிஷினரி காலம்…மிஷினரி காலம் அல்ல, எவரும் அறிய முடியாத மறைவான இரகசியமான பெயர்கள், அவர்களுக்கு சொந்தமான பெயர்கள் இருந்தன. அவர்களுக்கு அளிக்கப்படும் பலன் வெண்வஸ்திரமும், ஜீவபுஸ்தகத்தில் அவர்கள் பெயர்கள் இடம் பெறுதலாகும். (அப்புத்தகம் நியாயத்தீர்ப்பில் வரவேண்டியதாயுள்ளது). ஜீவ புஸ்தகத்தைப் பற்றி அன்றொரு நாள் நாம் பார்த்தோம். ஜீவப்புஸ்தகத்திலிருந்து தான் நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். பரிசுத்தவான்கள் மறுரூபப்படுத்தப்பட்டு, நியாயத்தீர்ப்புக்குட்படுத்தப்படாமல் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் நியாயத்தீர்ப்படைவதில்லை. 67 பிலதெல்பியா சபையின் காலமானது, சகோதர சிநேகத்தின் காலமாயிருந்தது. மகத்தான கட்டளையின் காலம், மகத்தான மிஷினரி ஊழியத்தின் காலமாகும், திறந்த வாசலின் காலமாகும். பலன் என்னவெனில், தேவாலயத்தில் தூணாக ஆக்கப்படுதல், தேவனுடைய நாமங்கள் வெளிப்படுத்தப்படுதல். இக்காலத்தில். இச்சபைக் காலமானது 1906ம் ஆண்டில் முடிவுற்றது. சரி. 68 லவோதிக்கேயா சபைக்காலமானது வெதுவெதுப்பான சபையாகும். அது ஐசுவரியமுள்ளதாகவும், திரவிய சம்பன்னராகவும், ஒன்று குறைவில்லையென்றும் சொல்லிக் கொண்டாலும், நிர்ப்பாக்கியமுள்ளதாகவும், தரித்திரமாயும், குருடாயும், பரிதபிக்கப்படத்தக்கதாயும், நிர்வாணியாகவும் இருக்கிறது. இக்காலத்தில் ஜெயங்கொள்கிறவர்களுக்குரியப் பலன் கர்த்தரோடு அவருடைய சிங்காசனத்தில் உட்காருவதாகும்.

3869 இத்தோடு இதை முடித்துக் கொண்டு, முதலாம் சபைக் காலத்தைப் பற்றி படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 2-ம் அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். இப்பொழுது நாம்… அவர், தாம் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளபடியால், நாம் அவரை அறிவோம். அவர் தேவன்! 70 நான் கூறினபடி, இச்சபைக் காலமானது ஏறத்தாழ கி.பி.53 முதல் கி.பி.170 ஆண்டு வரையிலும் நீடித்திருந்தது. (a) எபேசு பட்டணமானது: ஆசியாவிலுள்ள பெரிய மூன்று பட்டிணங்களிலொன்று ஆகும். கிறிஸ்தவ விசுவாசத்தின் மூன்று பட்டணம் என்று அழைக்கப்பட்டதுண்டு. (முதலாவது எருசலேம் இரண்டாவது அந்தியோகியா, மூன்றாவது எபேசு) …(c) பெரிய அளவில் வாணிபம் மற்றும் வர்த்தகம் செழிந்த ஒரு பட்டிணம்.…(e) அதன் அரசு ரோமானிய அரசாகும்.…(d) அதில் பேசப்பட்ட மொழி கிரேக்கமாகும். யோவான், மரியாள், பேதுரு, அந்திரேயா, பிலிப்பு ஆகிய இவர்கள் யாவரும் இங்கேதான் அடக்கம் பண்ணப்பட்டனர் என்று வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். எபேசு பட்டணம் அதின் அழகுக்கு பெயர் பெற்றது ஆகும்.

3971 எபேசுவில் கிறிஸ்தவம் தழைத்திருந்தபோது, யூதர்களும் அப்பட்டிணத்தில் இருந்தார்கள். எபேசுவில் கிறிஸ்தவமானது கி.பி.யில் சுமார் 53 அல்லது 55 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கிறிஸ்தவ மார்க்கம் பரிசுத்த பவுல் மூலம் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் பிறகு பரிசுத்த பவுல், எபேசுவில் மூன்று ஆண்டுகள் இருந்தான். எபேசுவிலுள்ள விசுவாசிகள் மத்தியில் பவுலின் போதகமானது பெரிய செல்வாக்கைப் பெற்றதாக இருந்தது. அடுத்ததாக, தீமோத்தேயு, எபேசுவிலுள்ள சபையின் முதலாவது கண்காணியாக விளங்கினான். பவுல் எபேசு சபைக்கு நிரூபம் எழுதினான். பவுலின் காலத்தில் எபேசுவிலுள்ள சபையானது மிகச் சிறந்து விளங்கியது. 72 “எபேசு” என்ற பெயருக்கு அர்த்தம் என்னவெனில், “போகவிடு, தளர்த்து, பின்மாற்றம் அடைந்தது” என்பதாகும். “பின்மாற்றம் அடைந்த சபை” என்று தேவனால் அழைக்கப்படுகிறது. தேவன்—தேவன் அவர்களுடைய கிரியைகளையும், அவர்களுடைய பாடுகளையும், அவர்களுடைய பொறுமையுங் குறித்து பிரதானமாக அறிக்கை செய்தார். அவர்கள் ஆதி அன்பை விட்டு, பின் மாறிப்போய், ஒளியை மேலும் சுமந்து செல்லாதபடியிருந்து ஜீவிப்பதைக் குறித்து, அவர்கள் பேரில் தேவன் கடிந்து கொண்டார். எபேசு சபையானது வஞ்சிக்கப்பட்டதொரு சபையல்ல; பரிபூரண அன்பில் நிலைத்திருக்காமல் இருப்பதைக் குறித்த விஷயத்தில் தான் அது வழுவிப் போனது.

4073 எபேசு சபையினைப் பற்றிய சுருக்கவுரை: கனிகள், அன்பில்லாமற்போனது, விசுவாசத்தை விட்டு வழுவிப் போகுதலுக்கு நடத்தப்படுதல். அதற்குரிய வாக்குத்தத்தங்கள், இச்சபையின் காலத்தில் ஜெயங்கொள்ளுகிற பரிசுத்தருக்கு, பரதீசின் மத்தியிலுள்ள ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுக்கப்படுவதாக வாக்களிக்கப்பட்டது. 74 இங்கு அழகானதொரு விஷயம் உள்ளது. ஜீவ விருட்சத்தைப் பற்றி ஆதியாகமத்தில் மூன்று தடவைகளும், வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்று தடவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் ஆதியாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேன் தோட்டத்தில் அது இருந்தது. கிறிஸ்துவே அம்மரமாயிருந்தார். வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்று தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்து பரதீசில் இருந்தார். ஓ, அது ஆழமானது. கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

4175 இப்பொழுது, நாம் எபேசியர் 1ம் அதிகாரத்திலிருந்து துவங்குவோம்…இல்லை, எபேசு சபைக் காலத்தைப் பற்றிக் கூறும் வெளிப்படுத்தல் 2ம் அதிகாரம் 1ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது; 76 அந்நேரத்தில் யோவான் அந்த தூதனாயிருக்கிறான். ஏழு பொன்குத்து விளக்குகளின் மத்தியில் உலாவுகிறவர். சர்வவல்லமையுள்ள தேவன், இயேசு கிறிஸ்துவாகும். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவர் ஒரு குத்து விளக்கின் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கிறார் என்று அவர் கூறவில்லை; அவைகள் யாவற்றின் மத்தியிலும் அவர் உலாவுகிறார். அது எதைக் காட்டுகிறது? ஒவ்வொரு சபைக்காலத்திலும் உள்ள ஒவ்வொரு விசுவாசிக்கும் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதையேக் காட்டுகிறது. அவர் ஒவ்வொரு நபரிடமும் பரிசுத்த ஆவியோடு ஒவ்வொரு காலத்திலும்…வருகிறார். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கிறார்.

4277 “வலது கரத்தில் ஏந்திக் கொண்டிருந்தார்”. “வலது கரம்” என்பதற்கு அவருடைய “அதிகாரமும் வல்லமையும்” என்று அர்த்தமாகும். ஏழு சபைக் காலங்களுக்கும் உரிய ஏழு தூதர்களையும் தனது வலது கரத்தில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அதாவது, அவர்களை தனக்குக் கீழ், தன் (கட்டுப்பாட்டில்) வைத்துக் கொண்டிருக்கிறார். ஓ! அது எனது பிடிக்கும். கிறிஸ்துவானவர் தன்னைத் தன் ஜனங்களுக்கு, அது இருண்ட காலமானாலும் சரி, எல்லா காலங்களிலுமே அறியப்படுத்திக் கொண்டு, இச்சபைகளின் காலங்களின் நடுவில் உலாவி வருவதைப் பாருங்கள். ஒவ்வொரு காலத்திலும், சபையானது வெறும் சடங்காச்சார ரீதியில் ஆகி விழுந்து போய், சிலர் இப்படியும், சிலர் அப்படியாக வழிவிலகிச் சென்றனர், ஆனால் அந்த சிறு கூட்டமானது, உண்மையான சபையானது தொடர்ந்து நிலைத்து நின்றது, கிறிஸ்துவும் அவர்களோடிருந்து கிரியை செய்து, தன் வார்த்தையை உறுதிப்படுத்தினார். அவ்வாறே எப்பொழுதும் இருந்து வந்துள்ளது.

4378 இதை நாம் படிக்க ஆரம்பிக்கையில், இன்று நமக்குள்ளதை நாம் எவ்வாறு பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை மிகவும் சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இப்பொழுது இங்கே துவக்கத்தில்…நீங்கள் யாவரும் இதை இவ்வளவு உயரத்தில் காண முடியும் என்று நான் நம்புகிறேன். [சகோதரன் பிரான்ஹாம் கரும்பலகையை வைத்து அதிலிருந்து விளக்கிக் கூறுகிறார்—ஆசி.] இங்கே ஒரு சபைக் காலம் பெந்தெகொஸ்தேயாக ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது சபைக்காலம், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது சபைக்காலம் வருகிறது. இப்பொழுது இதை உண்மையாகவே கவனமாக பார்ப்பீர்களானால், முதல் சபையானது பெந்தெகொஸ்தே நாளில் துவங்கியது. எத்தனைபேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? பெந்தெகொஸ்தேயில் என்ன சம்பவித்தது என்பதை நீங்கள் பார்த்தீர்களா? அதன் பிறகு, சபையானது தொடர்ந்து போய்க் கொண்டிருப்பதை நாம் கவனிக்கிறோம். அடுத்தடுத்து வந்த காலங்களில், படிப்படியாக அது மங்கலாகிக் கொண்டே வந்து, உண்மையான சபையானது வெளியே சென்று விடுகிறது. 79 இப்பொழுது, கிறிஸ்து…சபையானது எவ்வளவு சிறியதாக இருப்பினும் அதைப் பற்றிக் கவலையில்லை. “ஏங்கே இரண்டு அல்லது மூன்று பேர்கள் என் நாமத்தினால் கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் நான் இருப்பேன்” என்றார். எதன் பேரில் அவர்கள் கூடி வரும்பொழுது? மெதோடிஸ்ட் என்ற பெயரில் கூடி வரும் பொழுதா? பாப்டிஸ்ட் என்ற பெயரில் கூடி வருகையிலா? பெந்தெகொஸ்தே என்ற பெயரில் கூடி வருகையிலா? இயேசுவின் நாமத்தில் கூடி வருகையில்! எங்கே இரண்டு அல்லது மூன்று பேர்கள் அவர் நாமத்தில் கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் இருப்பார். அது எத்தனை சிறியதாயினும் சரி, அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவரது சபையானது கடைசி நாட்களில் மிகவும் சிறிய கூட்டமாக ஆகிவிடும். அது இன்னும் குறைந்து கொண்டே போகும். கர்த்தர் தனது கிரியையை முன் கூட்டியே முடித்துக் கொண்டு விரைந்து வந்துவிடுவார். இல்லையெனில், எடுத்துக் கொள்ளப்படுதலுக்கென்று ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். “எங்கே இரண்டு அல்லது மூன்று பேர்கள் என் நாமத்தினால் கூடியிருக்கிறார்களோ”.

4480 இப்பொழுது, முதலாம் சுற்று, அப்போஸ்தலர்கள். இப்பொழுது, இதுவே சபையின் துவக்கம் என்று நாம் காண்கிறோம். அதுவே பெந்தெகொஸ்தே. அதே மகத்தான தேவன் அவர்கள் நடுவில் அதே மகத்தான அடையாளங்களோடு உலாவுகிறார். ஒவ்வொரு சபைக் காலத்திலுமே அவர் உலாவுகிறபடியினால், அதே மகத்தான அடையாளங்கள் எல்லாக் காலங்களிலுமே தொடர்ந்து வந்து கொண்டிருக்க வேண்டும். யாரை அவர் ஆசீர்வதிக்கிறார்? அவருடைய நாமத்தினால் கூடிவருகிற அவருடைய ஜனங்களையே. 81 சபைக் காலத்தைக் குறித்து நாம் பார்த்துக் கொண்டு போகையில், நீங்கள் இந்த விஷயத்தைக் கவனிக்க விரும்புகிறேன். இந்த முதலாம் சபை இயேசுவின் நாமத்தைப் பெற்றிருந்தது. இந்த இரண்டாம் சபையும் இயேசுவின் நாமத்தை பெற்றிருந்தது. இந்த மூன்றாம் சபையும் இயேசுவின் நாமத்தைப் பெற்றிருந்தது. இந்த நான்காம் சபையும் இயேசுவின் நாமத்தை இழந்துவிட்டது. இந்த ஐந்தாம் சபை லூத்தரின் காலமாக வெளிவருகிறது, அது “உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் மரித்தவனாயிருக்கிறாய்” என்று அழைக்கப்பட்டது. இவ்வாறான நிலைமை இந்த சபையின் காலத்தின் முடிவு ஆறாவது சபைக்காலம் வரைக்கிலும் நீடித்தது. இந்த ஆறாம் சபையின் காலத்திற்கும் இந்த ஏழாம் சபையின் காலத்திற்கும் இடையில் திறந்த வாசல் வைக்கப்படுகிறது. அதுவே நாமத்தை சபைக்கு திரும்ப கொண்டுவருகிறது. வேத வாக்கியங்களை நாம் படித்த பிறகு, அது சத்தியம் தானா என்பதைக் கவனித்துப் பாருங்கள். அது அந்த காலங்களுக்கு இடையில்.

4582 நாளை இரவு இவ்விளக்கப்படத்தை நான் இங்கு பொருத்தி வைக்க முயலுவேன், அதினால் நாம் யாவரும் அதைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும். நாளை பிற்பகல், இங்கு வந்து, நான் பேசப் போகிறவைகளைப் பற்றிய …திட்டங்களைப் பற்றி வரைந்து வைப்பேன். உங்களில் எவரிடமாவது வரலாற்றுப் புத்தகங்கள் இருந்தால் உங்களுடன் கொண்டு வாருங்கள் அல்லது உங்களுடைய குறிப்புகளை நூலகங்களுக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள வரலாற்றுப் புத்தகங்களை வைத்துக்கொண்டு படித்து இது சரிதானா என்று பாருங்கள்.

4683 இப்பொழுது 1-ம் வசனம். அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவர் அவர்களை வாழ்த்திக்கொண்டிருக்கிறார். எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: (யோவானுக்கு) ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கரத்தில் ஏந்திக் கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது, (இது ஒரு வாழ்த்துதல்.) 84 இப்பொழுது இரண்டாம், மூன்றாம் வசனங்களில் அவர்களை அவர் புகழுகிறார். உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்…அறிந்திருக்கிறேன். 85 முதலாம் சபைக்காலத்திலேயே விசுவாசத் துரோகமானது ஏற்பட ஆரம்பித்து விட்டது என்பதைப் பாருங்கள். அங்கே அது ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. ஏனெனில், இயேசு தமது சாட்சியில் உரைத்தபடி, வேதநெறிகளையும், வேதவார்த்தைகளையும் கடைபிடிக்க விரும்பின தெரிந்து கொள்ளப்பட்டதும் உண்மையானதுமான சபையானது ஏற்கனவே பிரிந்துபோக ஆரம்பித்துவிட்டது. அப்பொழுது ஏதோ ஒன்று சம்பவிக்க ஆரம்பித்தது; வேதவாக்கியத்திற்கு முரணானவைகளையும், தவறானவைகளையும், வேதத்தோடு ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ முயற்சி செய்து உபதேசிக்கும் கள்ளப் போதகர்கள் அப்பொழுது எழும்ப ஆரம்பித்தார்கள். 86 அந்தக் காரணத்தினால் தான் இந்த வெளிப்பாட்டை சபைக்குக் கொடுத்து, “இதிலிருந்து ஒன்றை எவன் எடுத்துப் போடுகிறானோ அல்லது இதோடு ஒன்றை எவன் கூட்டுகிறானோ, இவனுடைய பங்கு ஜீவபுத்தகத்திலிருந்து எடுத்துப்போடப்படும்” என்று கூறியுள்ளார். அப்படிச் செய்தால், சகோதரனே, நீ இழக்கப்படுவாய். தேவனுடைய வார்த்தையில் சம்மந்தமில்லாமல் தலையிடாதே. அது யாரை புண்படுத்தினாலும் சரி, அல்லது எதைப் புண்படுத்தினாலும் சரி, அது உரைக்கப்பட்ட வண்ணமாகவே அதை உரை. அங்கே அது எழுதப்பட்ட வண்ணமாகவே உரைக்க வேண்டும். அதுதான் வழி. வேத வாக்கியத்தை நமக்கு வியாக்கியானிக்க பிரபலமான ஒரு நபரோ, அல்லது எந்தவொரு மத குருவோ தேவையில்லை. பரிசுத்த ஆவியாகிய தேவனே நமக்குரிய வியாக்கியானியாயிருக்கிறார். அவரே வியாக்கியானத்தை தருகிறார்.

4787 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், ஏற்பட்ட தீமைகளைப் பற்றியும், கள்ளத் தீர்க்கதரிசிகளைப் பற்றியும் பார்த்த பிறகு, அவர்கள் பொய்யானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டது; தேவபக்தியின் வேஷத்தைத் தரித்தவர்களாயிருந்தார்கள். பாருங்கள், எவ்வாறு சபையானது வெறும் சடங்காச்சார ரீதியில் ஆகியது என்பதைப் பார்த்தீர்களா? பரிசுத்த ஆவியின் அசைவின் கீழ் இருந்த ஜனங்களை அவர்கள் உள்ளம் உடைந்து நொறுங்கும்படி செய்தார்கள், அதினால் பார்க்கிற மற்ற ஜனங்கள் அவர்களை பரியாசம் செய்தனர். 88 இயேசு “நீதியினிமித்தம் துன்பப்பட்டால் நீங்கள் பாக்கியவானாயிருப்பீர்கள்” என்று கூறவில்லையா? நீங்கள் வெறும் குளிர்ந்து போன நிலையில் ஆகிவிடுங்கள் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லையே. அவர் “மகிழ்ந்து களிகூருங்கள். உங்களுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளையும் அவர்கள் அவ்வாறே துன்பப்படுத்தினார்கள்” என்று கூறியுள்ளாரே. மத்தேயு 5ம் அதிகாரத்தில் மலைப்பிரசங்கத்தில் “பாக்கியவான்களாயிருப்பீர்கள்” என்று கூறியுள்ளார். கர்த்தராகிய இயேசுவை நீங்கள் நேசிக்கிறபடியினால் மக்கள் உங்களை பரிகசித்தால், அது உங்களுக்கு ஆசீர்வாதமாகவே இருக்கும். அவர்கள் உங்களை சபித்தால் அதின்மூலம் அவர்கள் உங்கள் மேல் தேவனுடைய ஆசீர்வாதங்களையே கொண்டு வருகின்றனர். அக்காலத்தில் பிலேயாமுக்கு நேர்ந்தது போல், அவர்கள் போடும் சாபம் அவர்கள் மேலேயே திரும்பிவிடுகிறது. நீங்கள் கிறிஸ்தவனாக இருப்பதினிமித்தம் அவர்கள் உங்களைப் பரிகசித்தால், அது அவர்கள் மேலேயே திரும்பிவிடும், தேவன் ஒரு ஆசீர்வாதத்தையே அளிக்கிறார். ஏனெனில், “என் நாமத்தினிமித்தம் மனிதர் உங்களைத் துன்பப்படுத்தினால் நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்” என்று கூறியுள்ளார். அவருடைய நாமத்தினிமித்தம் “நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.”

4889 அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரிக்கிறவர்களாக ஆக ஆரம்பித்தார்கள் என்று நாம் இப்பொழுது கண்டறிகிறோம். 90 இப்பொழுது நான் இந்த இடத்தில் சற்று நிறுத்தி விட்டு, ஒரு காரியத்தை சொல்ல முடியும். நான் அவ்வாறு செய்வேன் என்று நம்புகிறேன். ஒவ்வொரு எழுப்புதலையும் நீங்கள் கவனித்தீர்களா…ஊழியக்காரரான சகோதரர்களே, இதை நீங்கள் இப்பொழுது சோதித்துப் பாருங்கள், அதாவது யாக்கோபும் ரெபேக்காளும் ஏசா, யாக்கோபு என்ற இரட்டையரை பிறப்பித்தது போல, எந்தவொரு எழுப்புதலும் இரட்டையர்களைப் பிறப்பிக்கிறது. நான் யாக்கோபுக்கு என்பதற்கு பதிலாக ஈசாக்கையே பொருட்படுட்த்திக் கூறுகிறேன்…ஈசாக்கும் ரெபேக்காளும் இரட்டையர்களைப் பிறப்பித்தார்கள். தந்தையும் பரிசுத்தமானவன், தாயும் பரிசுத்தமானவள், அப்படியிருக்க, அவர்களுக்கு ஏசா, யாக்கோபு என்ற இரட்டையர்கள் பிறந்தனர். 91 அவர்கள் இருவருமே தேவபக்தியுள்ளவர்களாயிருந்தனர். ஆனால் ஏசாவோ நற்கிரியைகளைப் பொறுத்தமட்டில் பிரமாணங்களை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றுபவன் என்ற ரீதியில், ஒருவேளை எல்லாவகையிலும், யாக்கோபை விட மேலானவனாக இருந்திருப்பான், நீங்கள் அதை அறிவீர்களா? எப்பொழுதும் தன் தாயையே சுற்றி வந்து கொண்டிருக்கும் இளம் பையனாக யாக்கோபு காணப்பட்டான். ஆனால் ஏசாவோ, வெளியே போய் வேட்டையாடி, அதின் மூலம் கிடைத்த மான் இறைச்சியை சமைத்து, வயதானவரும், குருடானவரும் தீர்க்கதரிசியுமான தன் தந்தைக்கு உணவளித்து, அவரை நன்கு கவனித்துக் கொண்டான். ஆனால் யாக்கோபுக்கோ, ஒரே ஒரு காரியம் தான் எப்பொழுதும் அவன் என்ன சிந்தையில் இருந்து வந்தது; அவன் அந்த சேஷ்டபுத்திர பாகத்தையோ பெற வேண்டுமென்றிருந்தான். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருந்து அல்லது அவன் என்ன செய்ய வேண்டியதாயிருந்தாலும் கவலைப்படாமல், அவனுடைய வாழ்க்கையின் பிரதான காரியம் சேஷ்டபுத்திரபாகமாயிருந்தது.

4992 இப்பொழுது நீங்கள் அந்த மாம்சபிரகாரமான மனிதனை இங்கே காணவில்லையா? ஒரு எழுப்புதல் வரும்போது, அதிலிருந்து இரண்டுவிதமான வகுப்பினர் தோன்றுகின்றனர். அவ்வாறு தோன்றும் ஒருவனாகிய மாம்சப்பிரகாரமான மனிதன், அவன் பீடத்தண்டையில் வந்து, “ஆம் ஐயா, நான் கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்” என்கிறான். அவன் அதன் பிறகு புறப்பட்டுச் செல்லுகையில், அவனுக்கு என்ன சம்பவிக்கிறது? அவன் செய்யும் முதல் காரியம், நல்ல குளிர்ந்த, சடங்காச்சார சபையொன்றில் தன்னை இணைத்துக் கொள்கிறான். ஏனெனில் “நல்லது, நான் சபையுடன் சேர்ந்து கொண்டால், அடுத்தவனைப் போலவே நானும் நல்லவன் தானே. இன்ன—இன்னாரைப் போலவே நானும் நல்லவனல்லவா? நான் சபையில் சேர்ந்து என்னுடைய அறிக்கையை செய்யும் வரைக்கும், அதனால் என்ன வித்தியாசம்?” என்று எண்ணுகிறான். நிச்சயம் அது பெரிய அளவில் வித்தியாசமானது தான். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். நீங்கள் சேஷ்டபுத்திரபாகத்தை பெற்றிருக்க வேண்டும். 93 யாக்கோபு எவ்வளவாக பரிகசிக்கப்பட்டாலும் அதைக் குறித்து அவன் கவலைப்படவில்லை. அவனுக்கு அந்த சேஷ்டபுத்திரபாகம் தேவையாயிருந்தது. அவன் அதை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது என்பதைக் குறித்துக் கவலைக் கொள்ளவில்லை.

5094 அநேக ஜனங்கள் சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறதில்லை, ஏனெனில் சேஷ்டபுத்திரபாகம் என்பது, ஜனங்களால் வெறுக்கப்பட்ட ஒன்று என்று அவர்கள் எண்ணுகின்றனர். அவர்கள் பீடத்தண்டை வந்து, முழங்கால் படியிட்டு, கொஞ்சம் அழுது ஜெபிக்கவோ, அல்லது சிலவேளை உணவுகளை வெறுத்திடவோ விரும்பவில்லை. அதைச் செய்ய அவர்கள் விரும்பவில்லை. அநேகம் பெண்கள், தாங்கள் அழுது கண்ணீர் விட்டு ஜெபித்து விட்டால் தங்களுடைய முகத்தில் பூசிக்கொண்டுள்ள அழகு படுத்தும் சாதனங்கள் கண்ணீரில் கரைந்து போய்விடுமே என்றும், அதினால் பீடத்தண்டை வருவதேயில்லை. பரிசுத்த குலைச்சலான ரீதியில் நான் இவ்வாறு சொல்லவில்லை. அந்த அர்த்தத்தில் நான் சொல்வது தொனிக்காது என்று நம்புகிறேன், ஆனால் அது தான் உண்மை. அவர்கள் அதை விரும்புகிறதில்லை. அவர்கள் புதிய பிறப்பை விரும்புகிறதில்லை, ஏனென்றால் புதிய பிறப்பு என்பது ஒருவிதமான அலங்கோலமாய் உள்ளது. அது மற்ற இயற்கை பிறப்பைப் போலவே இருக்கிறது. எந்தவொரு பிறப்பும் சற்று அலங்கோலமாகத்தான் இருக்கும். அது எங்கு நேரிட்டாலும் எனக்குக் கவலையில்லை. அது ஒருவேளை பன்றி அடைக்கும் பட்டியில் நடந்தாலும் சரி, அல்லது ஒரு பண்டகசாலையில் நடந்தாலும் சரி, அல்லது அலங்கரிக்கப்பட்ட ஒரு மருத்துவமனையிலாகட்டும். அது ஒரு அலங்கோலமான காட்சியாகத் தான் இருக்கும். 95 எனவே, புதிய பிறப்பும் அவ்வாறே அலங்கோலமாகவே இருக்கிறது. ஆமென். புதிய பிறப்பு உங்களுக்கு நேரிடும்போது, நீங்கள் செய்வோம் என்று நினைத்துப் பார்க்காத காரியங்களை செய்வீர்கள். நீங்கள் மூலையில் நின்று கொண்டு, தம்புரூவை அடித்துப் பாட்டுப்பாடி, “தேவனுக்கு மகிமை, அல்லேலூயா, தேவனுக்கு ஸ்தோத்திரம், தேவனுக்கு மகிமை” என நீங்கள் ஆர்ப்பரிக்கிறீர்கள். நீங்கள் ஒரு பித்துப் பிடித்த வெறிகொண்டவனைப் போல நடந்து கொள்கிறீர்கள். அப்போஸ்தலர்களுக்கும் அதுதான் நேரிட்டது, கன்னி மரியாளுக்கும் அதுதான் நேரிட்டது. அப்பொழுது அவள் குடித்தவனைப் போல் செயல்பட்டாள். மரியாள் சமுதாயத்தில் ஒரு அலங்கோலமானவனாக இருந்தான். ஆனால் ஜீவனானது பிறப்பின் மூலம் வெளியே வருவதென்றால் அப்படித்தான் அலங்கோலமாகக் காணப்படும். ஆமென்!

5196 ஏதாவது ஒன்று செத்து அழுகிப்போகாவிட்டால், அதிலிருந்து ஜீவனானது புறப்பட்டு வரமுடியாது. ஒரு மனிதன் தன் சிந்தையில் மரித்து அழுகிப்போகாவிட்டால் கிறிஸ்து அவனது இருதயத்தினுள் பிரவேசிக்க முடியாது. ஆனால் நீங்களோ, “இப்பொழுது நான் பீடத்தண்டை போய், ‘ஆம் ஆண்டவரே, நான்—நான் ஒரு அருமையான நபர், நான் உம்மை ஏற்றுக்கொள்வேன். நான் என்னுடைய தசமபாகங்களைச் செலுத்துவேன். நான் இதைச் செய்வேன்’ என்று கூறி,” நீங்கள் உங்களுக்குள்ளே எண்ணிக்கொள்ள முயற்சிப்பதைக் காட்டிலும், நீங்கள் உங்களுடைய சிந்தைகளுக்கு மரித்து, அச்சிந்தைகள் அழுகிப்போக விடவேண்டும். பரிசுத்த ஆவியானவர் உங்களை ஆட்கொண்டு அவர் உங்களோடு என்னாவெல்லாம் செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்யட்டும். அதனால் ஒருவிதமான அலங்கோலத்தை பெற்றுக்கொள்வீர்கள். அது கடுமையாக தொனிக்கக்கூடும், ஆனால் அது பரிசுத்த குலைச்சலான பேச்சல்ல, அது சத்தியமாக இருக்கிறது. நீங்கள் புரிந்து கொள்வதற்கு ஏற்றபடி அழுத்தம் திருத்தமாக சொல்வதற்கு எனக்குத் தெரிந்திருக்கிற முறை இதுவேயாகும். 97 அந்நாளில், அந்த அந்தஸ்து மிகுந்த யூதர்கள் கூட்டத்திற்கு முன்பாக அவர்கள் வெளியே வந்து பரியாச உதடுகளினால் பேசினார்களே, அப்பொழுது அந்த யூதர்களுக்கு அதைவிட அலங்கோலமான காட்சி வேறு என்ன இருந்திருக்க முடியும்? குழறி குழறிப் பேசுதல் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? ஊ, ஊ, உ, உ, உ, உ …?… அந்நிய பாஷைகளில் பேசுதல், குடித்தவர்களைப் போல நடந்துகொள்ளுதல். [சகோதரன் பிரான்ஹாம் எவ்வாறு குடித்தவன் நடந்து கொள்வான் என்பதை செய்து காட்டுகிறார்.] ஊ—ஊ, உ, உ, உ. அப்படித்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அலங்கோலமாகக் காணப்பட்டனரே. 98 அப்பொழுது அவன், “இந்த மனிதர்களெல்லாம் புதுத்திராட்சரசத்தினால் வெறித்திருக்கிறீர்களா?” என்று கேட்டான்.

52ஆனால் அவர்களிலொருவன் ஆவியினால் அந்நிய பாஷையில் பேசுவதை நிறுத்திவிட்டு, அவர்களை நோக்கி, “நீங்கள் எல்லோரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல” என்று கூறினான். ஆனால் அவன் வேதவாக்கியத்திற்கு திரும்பிச் சென்று, “தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. ‘கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்’ என்று தேவன் உரைத்திருக்கிறார்” என்று கூறினான். 99 அவ்விதமாகத்தான் சபையானது முதலில் பிறந்தது. தேவன் முடிவில்லாதவர் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அப்படியாயின் அவரால் மாற முடியாது. எப்படிப்பட்ட சபை ஆதியில் உண்டாக வேண்டும் என்று தேவன் சிந்தை கொண்டிருந்தாரோ, அதைப்போலவே கடைசியிலும் அதேவிதமான சபையைத் தான் அவர் உடையவராயிருப்பார். அவரால் மாற முடியாது. ஆகவே, ஆதியில் நடந்ததை பெற்றுக் கொள்ளாமல், அவைகளை நீக்கி விட்டு, அந்த இடத்தில், அதற்கு பதிலாக இப்பொழுது நீங்கள் கைகளை குலுக்கிக் கொள்ளுதல், தெளித்தல் மற்றும் இன்ன பிற காரியங்களை எப்படி கொண்டு வர முடியும்? ஒவ்வொரு அப்போஸ்தலர்களும் அதற்கே திரும்பி சென்று பின்பற்றினர்.

53100 அவர்கள் இந்த எல்லாவற்றையும் செய்தப் பிறகு…அவர்கள் மேல் பரிசுத்த ஆவி விழுந்த போது, பேதுரு, “நம்மைப் போல் பரிசுத்த ஆவியைப் பெற்ற அவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலககலாமா!” என்று கூறினான். எனவே கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான். அது உண்மை. 101 பவுல், ஒரு சமயம் ஆர்ப்பரித்து, தேவனை மகிமைப்படுத்தி மிகவும் ஆரவாரமான வேளையைக் கொண்டிருந்த ஒரு கூட்டம் பாப்டிஸ்டுகளைக் கண்டான். அப்போஸ்தலர் 19ல் பவுல் “நீங்கள் விசுவாசிகளானது முதற்கொண்டு இது வரையில் பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவேயில்லை” என்றார்கள். “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று பவுல் கேட்டான். அதற்கு அவர்கள், “இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த அதே மனிதனான யோவான் ஸ்நானகனால் நாங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்” என்றனர். 102 அப்பொழுது பவுல், “ஆம், அந்த ஞானஸ்நானம் இனிமேல் உபயோகமாயிராது” என்று கூறினான். புரிகிறதா? பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் அதைத்தான் கூறினான். அவன் திறவுகோலை உடையவனாயிருந்தான். புரிகிறதா? “அது இனிமேல் உபயோகமாயிராது என்றும், நீங்கள் மீண்டும் ஞானஸ்நானம் எடுத்தாக வேண்டும்” என்றும் பவுல் கூறினான். எனவே, அவன் அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞாஸ்நானம் கொடுத்தான். பிறகு, அவன் அவர்கள் மேல் கைகளை வைத்த போது, ஆதியில் அவர்கள் மேல் எப்பேர்ப்பட்ட அனுபவங்கள், விளைவுகள் ஏற்பட்டதோ, அதேவிதமான அனுபவம் இவர்களுக்கும் ஏற்பட்டது. அவர்கள் மேல் பரிசுத்த ஆவி இறங்கினார், அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.

54103 இப்பொழுது காலங்களினூடாக சபையானது இருந்து வருகிறது. இப்பொழுது, இதுவோ இங்கே ஆதியில் ஆரம்பித்தது. “உன் பொறுமையை அறிந்திருக்கிறேன். நீ மிகுந்த நீடிய பொறுமையை உடையவனாய் இருந்து வந்திருக்கிறாய். அது எனக்குத் தெரியும். …குத்து விளக்குகளின் மத்தியில் உலாவுகிறவர் நானே என்பதை நினைவில் கொள்வாயாக. உன்னுடைய பொறுமையையும் உன்னுடைய கிரியைகளையும், உன்னுடைய பிரயாசத்தையும், உன்னுடைய அன்பையும் நான் அறிந்திருக்கிறேன். நீ செய்திருக்கிற யாவற்றையும் நான் அறிவேன். தங்களை ‘தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள்’ என்று தாங்களே அழைத்துக் கொள்ளும் இந்த நபர்களை நீ சோதித்து அறிந்து, அவர்கள் பொய்யரென்று கண்டறிந்ததையும் நான் அறிந்திருக்கிறேன்.” ஓ! மிகவும் திட்டவட்டமாக உள்ளதல்லவா? இதற்கு நான் பொறுப்பாளியல்ல, அவரே பொறுப்பாளி. அவர்கள் பொய்யர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

55104 ஆனால் வேதமோ, “ஒரு மனிதனை சோதித்துப் பார். உங்களுக்குள்ளே ஒருவன் ஆவிக்குரியவனாக இல்லை ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் அல்லது அவன் அவ்வாறு சொல்லிக் கொண்டால், கர்த்தராகிய நான் என்னை அவனுக்கு வெளிப்படுத்துவேன். நான் அவனிடத்தில் தரிசனங்களிலும், சொப்பனங்களிலும் பேசுவேன். அவன் சொல்லும் காரியம் நிறைவேறினால், அப்பொழுது அவனுக்கு செவிகொடுங்கள்; அவனைக் குறித்துப் பயப்படாதிருங்கள், பாருங்கள், ஏனென்றால் நான் அவனோடிருக்கிறேன். ஆனால் அவன் கூறியவைகள் நிறைவேறாமற்போனால், நீங்கள் அவனுக்கு செவிகொடுக்க வேண்டாம். அவன் என்னுடைய வார்த்தையை பெற்றிருக்கவில்லை” என்று கூறியுள்ளது. பாருங்கள், அது அவருடைய வார்த்தையானால், அது அப்படியே சம்பவிக்கும். 105 இப்பொழுது, இந்த நபர்கள் வேதத்தின்படி தொடர்ந்து காரியங்களைச் செய்வதில்லை என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். பாருங்கள், வேறெதோ ஒன்றை அடைய அவர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். (இன்னும் சில நிமிடங்களில் இவ்விஷயத்தில் உள்ள பொற்கட்டி போன்றதொரு கருத்தை நாம் பார்க்க போவதால், நீங்கள் ஆழ்ந்து சிந்திக்க ஆயத்தமாயிருக்கும்படி நான் இப்பொழுது விரும்புகிறேன்). இப்பொழுது, அவர், “நீங்கள் நீடிய சாந்தமுள்ளவர்களாயும், பொறுமையுள்ளவர்களாயும், அவர்களைச் சகித்துக் கொண்டிருக்கிறதையும், அவர்களைச் சோதித்து, அவர்கள் அப்போஸ்தலரல்ல என்று கண்டிருந்ததையும் நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் அப்போஸ்தலரல்ல” என்றார்.

56106 நாம் மீண்டும் இதை துவங்குமுன்னர், ஒவ்வொரு எழுப்புதலும் ஒரு ஜோடி இரட்டையரைப் பிறப்பிக்கிறது என்று நான் கூறினேன். அதில் ஒருவன் ஆவிக்குரியவனாகவும், மற்றவன் பூமிக்குரிய மாம்ச சுபாவ மனிதனாகவுமிருந்தான். “நான் இன்ன சபையைச் சேர்ந்துவிட்டேன், எல்லோரைப்போல நானும் நல்லவன் தான்” என்று கூறுகிறார்கள். எழுப்புதல் இதையுந்தான் பிறப்பித்திருக்கிறது. ஒவ்வொரு எழுப்புதலும் இந்த விதமாகத்தான் உள்ளது. அவ்விதமாகத்தான் லூத்தரினுடைய எழுப்புதல் பிறப்பித்தது. அந்தவிதமாகத்தான் ஐரேனியஸினுடையது பிறப்பித்தது. அந்தவிதமாகத்தான் பரிசுத்த மார்ட்டினுடையதும் பிறப்பித்தது. கொலம்பாவினுடையதும் அதைத்தான் பிறப்பித்தது. வெஸ்லியினுடையதும் அதைத்தான் பிறப்பித்தது. அதைத்தான் பெந்தெகொஸ்தேயினுடையதும் பிறப்பித்தது. அது முற்றிலும் உண்மை. 107 அவர்கள் எவ்வாறு சீர்கெட்டுப் போனார்கள் என்று பார்த்தீர்களா? அவர்கள் தங்களுக்கென பெரிய ஆலயங்களையும் கட்டிக்கொண்டு, அவ்வாறு தொடர்ந்து வழுவிக்கொண்டே போய், அருமையான பெரிய இடங்களை ஏற்படுத்திக்கொண்டு (என்னே, ஓ,) எழுந்து நின்று அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம் என்று ஒன்றைத் திரும்பக் கூறி, “பரிசுத்த ரோமன் கத்தோலிக்க சபையை விசுவாசிக்கிறேன். மரித்த பரிசுத்தவான்களிடத்தில் ஜெபிப்பதில் விசுவாசங்கொண்டுள்ளேன்” என்று அறிக்கையிடுகிறார்கள். மரித்த பரிசுத்தவான்களிடத்தில் ஜெபிப்பதில் விசுவாசங்கொண்டுள்ளேன் என்று ஒருவர் சொன்னால் அந்த நபர் மரித்துப்போன ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் கொள்கையை உடையவராவர். மரித்துப்போன ஆவிகளோடு பேசுகிறேன் என்று கூறி அதில் விசுவாசம் வைக்கும் செய்கையானது பிசாசினால் உண்டாயிருக்கிறது. அது முற்றிலும் உண்மை. மனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியில் ஒரேயொரு மத்தியஸ்தர்தான் உண்டு. அவர் மனிதனாகிய இயேசு கிறிஸ்துவே. அது உண்மை. அதைத்தான் பேதுரு கூறினார். அருமையான கத்தோலிக்க ஜனங்களாகிய நீங்கள், “இயேசுவோடு நடந்த பேதுருவை முதலாவது போப், முதலாவது போப்” என்று அழைக்கிறீர்கள்.

57108 “மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே வேறு எந்த மத்தியஸ்தரும் இல்லை” என்று அவர் கூறுகிறார். நீங்கள் இன்றைக்கு இன்னும் பத்தாயிரம் பரிசுத்தவான்களை மத்தியஸ்தர்களாக கொண்டுள்ளீர்கள். சபையானது மாறாத, பிழையே செய்ய முடியாத தன்மை கொண்டதாக இருக்குமானால், ஏன் நிறைய மாற்றம் ஏற்பட்டது? உங்கள் பூசைப்பலிகள் எல்லாம் இலத்தீன் மொழியில் கூறப்படுவதால், அது மாறாது என்று எண்ணுகிறீர்களா? என்ன நடந்தது? அப்போஸ்தல விசுவாசப் பிரமாணத்தை நீங்கள் வேதத்தில் எங்கே கண்றிகிறீர்கள்? அப்போஸ்தலர்களுக்கு விசுவாசப் பிரமாணம் என்று ஒன்று இருந்திருக்குமானால், அது “மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்ற அந்த பிரமாணம் தவிர வேறெதும் அவர்களிடம் இல்லை. இதைத்தவிர வேறு எதையும் அவர்கள் அறியவோ உச்சரிக்கவோ இல்லை என்பதே நான் கேட்டறிந்ததாகும்.

58109 ஆனால் “பரிசுத்த ரோம சபைகள்” என்பதும் மற்றும் இந்த மற்ற எல்லாக் காரியங்களும், “வானங்களையும், பூமியையும் காப்பற்றுகிற சர்வ வல்லமை பொருந்திய பிதாவாகிய தேவன்” என்பதும் அர்த்தமற்றவை. புரிகிறதா? இவைகள் வேதத்தில் இல்லை. அப்படிப்பட்ட காரியம் வேத வாக்கியங்களில் காணப்படவில்லை. இது அவர்களாகவே கற்பனையாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு கோட்பாடு. கத்தோலிக்கர் ஏறெடுக்கும் அவர்களுடைய ஜெபங்கள் யாவும் கற்பனையாக புனைந்து ஏற்படுத்திக் கொண்டவைகளாகும். 110 இன்றைக்கு நம்முடைய ப்ராடெஸ்டெண்டுகளை நாம் பார்க்கையில், அவர்களும் சத்தியத்தை விட்டு தூர விலகிப் போயுள்ளதை காணமுடிகிறது. சென்ற ஞாயிற்றுக் கிழமை பில்லிகிரகாம், “மக்கள் ரொம்பவும் தவறானதில் இருந்திருக்கிறார்கள், அவர்கள் இவ்வாறு தவறில் இருக்கையிலேயே, தாங்கள் சரியாகத் தான் இருக்கிறோம் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். அவர் கூறியது சரிதான். அது சத்தியமானது தான். இவ்வாறு அவர் கூறியதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறேன். ஜார்ஜ் ஜெஃபரீஸ் என்பவரின் ஊழியத்தில் பில்லி கிரகாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார் என்று எனக்குத் தெரியும். ஆதலால் இந்நாட்களில் ஒன்றில் அவர் அதை விட்டு வெளியே வந்து விடுவார். தேவன் அவரை இப்பொழுது உபயோகித்துக் கொண்டு இருக்கிறார். எனவே அவரால் அந்த இராஜ்யத்தை அசைக்க முடியும், வேறுயாரும் அவரைப்போல் அதனுள் புகமுடியாது. ஆனால் அவருடைய பிரசங்கத்தை நீங்கள் கவனித்தீர்களானால், அதன் பின்னால் ஏதோ இருக்கிறது. காரணம் இங்கே கை குலுக்குவதில் நம்பிக்கைகொண்ட சில பாப்டிஸ்டுகள் உள்ளனர். ஆம், ஐயா!

59111 இப்பொழுது; உன்னுடைய கிரியைகளையும்… உன் பொறுமையையும் …எவ்வாறு நீ அவர்களை… 112 இப்பொழுது இவ்வசனத்தைப் பார்ப்போம். நான்… உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும் அறிந்திருக்கிறேன். 113 அவர்கள் பொய்யரென்று கண்டறிந்துள்ளனர். எவ்வாறு அவர்கள் அதைக் கண்டுபிடித்தனர்? வேதவாக்கியத்தை சரியாக அவர்கள் மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கவில்லை. 114 ஒரு மனிதன், “வேதமானது எபிரேயர் 13:8ல் ‘இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்’ என்று கூறுகிறது” என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து, “ஆ, அற்புதங்களின் காலம் கடந்து போய்விட்டது” என்று சொல்வானாகில் அப்பொழுது அந்த மனிதன் ஒரு பொய்யனாயிருக்கிறான். 115 வேதமானது, “நீங்கள் மனந்திரும்பி வேறொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கையில் வேதத்தில் ஒவ்வொரு இடத்திலும் அதேக் காரியம் தான் உள்ளது. வேதாகம காலத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். அப்படியிருக்கையில், எவனாவது இதற்கு முரணாக தெளித்தல் மூலமோ அல்லது வேறு எந்த விதத்திலோ ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டால், அம்மனிதன் ஒரு பொய்காரன், அவன் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று கண்டுகொள்ளலாம். 116 நான் உங்கள் உணர்வுகளை புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன். ஆனால் நான்…சகோதரனே, இக்காரியத்தில் நீங்கள்—நீங்கள் குழந்தையாயிருக்க முடியாது. நீங்கள் கையுறைகளைக் கழற்றி விட்டு, சுவிசேஷத்தை கையாள வேண்டும். பாருங்கள்? அதுதான் சத்தியம்.

60117 இதற்கு மாறாக எதையாவது காண்பியுங்கள் பார்க்கலாம். இயேசுவின் நாமத்தினாலேயன்றி, கத்தோலிக்க சபைக்கு புறம்பே வேறு எந்த நாமத்தினாலும், எவராவது ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்களா என்பதை எனக்குக் காண்பியுங்கள். பார்க்கலாம். ஆகையால் நீங்கள் அந்த விதமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தால், நீங்கள் கிறிஸ்தவ சபையில் அங்கம் வகிப்பவர் அல்ல; நீங்கள் கத்தோலிக்க சபையில் தான் இருக்கிறீர்கள். ஏனெனில் கத்தோலிக்க சபை ஏற்படுத்திய முறையில் தான் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள். கத்தோலிக்கருடைய “சண்டே விசிட்டர்” அவர்களுடைய சொந்த செய்தித்தாளில் அவர்களுடைய உபதேசப்புத்தகத்தைப் பொறுத்த இவ்வாறான ஒரு கேள்வி காணப்பட்டது. கேள்வியோ, “பிராடெஸ்டெண்டுகள் இரட்சிக்கப்படுவார்களா” என்பதாகும். இதோ இதற்கு அவர்களே அளிக்கும் பதில்; “அவர்கள் அநேகர் இரட்சிக்கப்படுவர். ஏனெனில் அவர்கள் நம்முடைய ஞானஸ்நானத்தையும் நம்முடைய மற்ற அநேகக் காரியங்களையும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளனர். “அவர்கள் வேதத்தைக் குறித்து உரிமை கொண்டாடுகிறார்கள். வேதமோ ‘இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்’ என்று கூறுகிறது. நாமோ அதை அதிலிருந்து அகற்றிவிட்டு, ‘பிதாகுமாரன் பரிசுத்த ஆவி’ யின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று ஆக்கிவிட்டோம். இதை பிராடெஸ்டெண்டுகள் முழுப்பெலத்தோடு பின்பற்றுகிறார்கள்” என்று கூறியுள்ளனர். நிச்சயமாக. பார்த்தீர்களா? அது கிறிஸ்தவ ஞானஸ்நானம் அல்லவே அல்ல, அது ஒரு கத்தோலிக்க ஞானஸ்நானமாகும். 118 அன்றொரு இரவில், “நீங்கள் எப்போதாவது கிறிஸ்தவ ஞானஸ்நானம் எடுத்தீர்களா” என்று கூறப்பட்டதைக் கேட்டீர்களா? கிறிஸ்தவ ஞானஸ்நானம். கிறிஸ்து, “இயேசு கிறிஸ்து” ஏதோ சில பட்டங்களில் அல்ல.

61119 இப்பொழுது மூன்றாம் வசனம். சரி, 2 மற்றும் 3-ம் வசனம். இப்பொழுது 3-ம் வசனம். நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். 120 “என் நாமத்தினிமித்தம்” அவர்களுக்கு பொறுமையிருந்தது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? எதற்காக பிரயாசப்பட்டார்கள்? அவருடைய நாமத்திற்காக—அந்த சபைக்காலத்தில் அவருடைய நாமத்தைப் பற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தீர்களா? இப்பொழுது அதை கவனியுங்கள், இந்த வாரத்தில் நாம் தொடர்ந்து படிக்கையில், எவ்வாறு அவர் நாமத்தைப் பற்றிக் கொள்ளுகிற விஷயத்தில், அது மங்கிக் கொண்டே போய், முடிவில் வேறு நாமத்தில் போய் முடிந்தது. புரிகிறதா? “என் நாமத்தினிமித்தம் பொறுமையாயிருக்கிறதையும், இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.” அவர்…அவர்கள் அவருடைய நாமத்திற்காக பிரயாசப்பட்டார்கள். 121 எந்த சபையின் நாமத்தையும் விட மேலாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தை உயர்த்திட வேண்டும், அதுவே பிரதானமானதாக இருக்கட்டும். “எதைச் செய்தாலும்.…” வேதமோ, “வார்த்தையினாலும், கிரியையினாலும், நீங்கள் எதைச் செய்தாலும், அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே செய்யுங்கள்” என்று கூறியுள்ளது. அது சரிதானே? “வார்த்தையினாலும் கிரியையினாலும் நீங்கள் எதைச் செய்தாலும்.” நீங்கள் விவாகத்தை செய்து வைப்பதாயிருந்தால், மணமக்களைப் பார்த்து, “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீங்களிருவரும் கணவனும் மனைவியுமாக இருக்கிறீர்கள்” என்று சுதந்திரமாக அறிவிக்க உங்களுக்கு இயலாதுபோகுமானால், அந்த அளவுக்கு அவர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தைக் குறித்து சொல்ல, உச்சரிக்க தயக்கமுள்ளவர்களாக இருப்பின், அவர்களைப் போகவிடுங்கள். அவர்களுக்கு நீங்கள் விவாகம் செய்து வைக்க வேண்டாம். சரி, நீங்கள் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமானால், இயேசுவின் நாமத்தில் கொடுங்கள்.

62122 இயேசுவின் நாமத்தில் எந்தக் காரியத்தையாவது செய்ய முடியாதபடி இருக்குமானால், அதைச் செய்ய வேண்டாம்! எவரோ, “சிறிது மதுவை உட்கொள்ளுங்கள்” என்று கூறினாராம். இயேசுவின் நாமத்தில் நீங்கள் அதைச் செய்யவே முடியாது. எனவே நீங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். “கொஞ்சம் சீட்டு விளையாடுங்கள்” என்று யாராவது சொன்னால், நீங்கள் அதை இயேசுவின் நாமத்தில் செய்யவே முடியாது. ஆகவே அதையும் விட்டுவிடுங்கள். உங்களுடைய பெரிய விருந்துகளில் அசிங்கமான, கீழ்த்தரமான நகைச்சுவை துணுக்குகளைக் கூறுவது, அதை நீங்கள் இயேசுவின் நாமத்தில் செய்யவே முடியாது. ஆகவே அதையும் விட்டுவிடுங்கள்! புரிகிறதா? நீங்கள் இயேசுவின் நாமத்தில் குட்டைக்கால் சட்டைகளை அணிய முடியாது. எனவே அதை அப்படியே விட்டுவிடுங்கள். இவ்வாறு நான் கூறிக் கொண்டே போக முடியும்…ஆனால் நாம்…நான் கூறுவது என்ன என்று நீங்கள் அறிவீர்கள். சரி. நீங்கள் அவ்வாறு அதைச் செய்யவே முடியாது. அவர் நாமத்தினால் எதையெல்லாம் நீங்கள் செய்யக் கூடாதோ அவைகளை விட்டுவிடுங்கள். ஏனெனில், “வார்த்தையினாலும் கிரியையினாலும் நீங்கள் எதைச் செய்தாலும், அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே செய்யுங்கள்” என்று அவர் கூறியிருக்கிறார். சரி. இப்பொழுது.

63123 இப்பொழுது நாம்…அதாவது…அவர் அவர்களை அவர்களுடைய கிரியைகளுக்காகப் புகழுகிறார். இப்பொழுது நான் 4ம் அதிகாரத்தில்…இல்லை சரியாகக் கூறினால் 4ம் வசனத்தில் அவர் குறைகூறுதலின் பேரில் பேசப்போகிறேன். ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்குக் குறை உண்டு. 124 ஓ! “உனக்கு விரோதமாக எனக்கு ஒரு காரியம் உண்டு. நீ பொறுமையாயிருந்திருக்கிறாய், என் நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறாய்” இவ்விஷயத்தில், இன்று இங்குள்ள இக்கூடாரத்திற்கும் இது பொருந்துமல்லவா? ஆம், ஐயா! நீ சரியாக இருந்திருக்கிறாய். நீ மிகவும் பொறுமையோடிருந்திருக்கிறாய்; நீ நீண்ட காலம் சகித்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் அதைக் குறித்த காரியமோ…நீ நீண்ட காலம் சகித்துக்கொண்டிருக்கிறாய். என் நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறாய். இவை யாவற்றையும் நான்—நான் மெச்சுகிறேன். அதற்காக நான்—நான் உன்னை புகழுகிறேன். அதெல்லாம் சரிதான். வேதத்திற்கு முரணாகப் போதித்துக் கொண்டு, தங்களைத் தாங்களே அப்போஸ்தலர்கள் என்று அறிவித்துக் கொள்ளும் நபர்களை, நீ சோதித்து அறிந்து அவர்களை பொய்யரென்று நீ கண்டறிந்ததையும் நான் அறிந்திருக்கிறேன். நான்—நான் அவை யாவற்றையும் மெச்சுகிறேன். ஆனால் உனக்கெதிராக நான் கொண்டிருக்கிற ஒரு காரியம் உண்டு. அதென்னவெனில், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிடாய் அந்த அருமையான பழங்காலப் பாணியிலான பரிசுத்த ஆவி கூட்டங்களின் மேல் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டாய். இப்பொழுதோ, நீ அவற்றினின்று ஒருவாறு பின் வாங்கிப் போய் வெறும் சம்பிரதாய முறையிலான ‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே…’ என்று வெறுமென கூற இறங்கி விட்டாய்.” அர்த்தமற்றது! புரிகிறதா?

64125 இந்த சமுதாயம், இவர்களிடம் ஒருவர் பெரிய அங்கியை அணிந்து கொண்டு வரவேண்டும், (உங்களுக்குத் தெரியும், ஆலய பாடகர் குழுவில் பாடுவதற்கு உங்களுக்குத் தெரியும்) அவர்கள் தங்கள் விரல் நகங்களை பளபளவென தீட்டிக் கொண்டும், சிகை அலங்காரம் செய்து கொண்டும், முகத்தில் எக்கச்சக்கமான ஒப்பனைகளுடனும் வந்து இருந்து கொண்டு, பாடகர் குழுவில் அங்கம் வகித்து எப்படியோ பாடுகிறார்கள். அவர்களால் அதை எப்படித்தான் செய்ய முடிகிறதென்று எனக்குத் தெரியவில்லை. 126 நான் அண்மையில் வியாபாரிகளால் நடத்தப்படும் ஒரு கூட்டத்திற்குப் போயிருந்தேன். அது மட்டும் ஓரல் ராபர்ட்ஸ் அவர்களின் கூட்டமாக இல்லாதிருந்தால், அங்கிருந்து ஒரு கூட்டம் மக்களை நான் வெளியே வரும்படி அழைத்திருப்பேன். நான் அந்த இரவு பேசப்போவதாக இருந்தேன். அந்த உணவாக விடுதியில் அதை அவர்கள் நடத்த முடியவில்லை. அவர்கள் என்னை ஓரல் ராபர்ட்ஸ் அவர்களுடைய கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே நான் ஓரல் அவர்களின் படிக்கும் அறையில் அமர்ந்திருக்கையில், அங்கே பெந்தெகொஸ்தே பிள்ளைகள் நின்று கொண்டிருந்தார்கள். (ஓ, பதினாறு, பதினேழு மற்றும் பதினெட்டே வயது நிரம்பிய ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் அடங்கிய) முப்பது அல்லது நாற்பது பேர்கள் அடங்கிய ஒரு குழு ஒரு விதமான பாடலை பாட இருந்தார்கள். அது சைகோவ்ஸ்கி அல்லது வேறு யாரோ ஒருவர் எழுதின பாடல் போல் எனக்குத் தோன்றியது. அதைக் குறித்து பெக்கி பேசுவது வழக்கம். எனக்கு சரியாகத் தெரியவில்லை, அது இலக்கிய காவிய நடையிலான பாடல் என்றே நான் நினைக்கிறேன். அப்பொழுது சகோதரர்கள் கூட்டத்தில் காணிக்கை எடுக்கவிருந்தார்கள். அவர்கள் கையில் சிறு கிண்ணம் இருந்தது. அவர்கள் குருடரைப் போல் நடித்தார்கள். எல்லாவித நகைச்சுவைகளையும் பேசிக்கொண்டு, நீங்கள் கேட்டிருக்க முடியாத அளவுக்கு பேசிக்கொண்டு சென்றார்கள், அப்பெண்பிள்ளைகள், ஓரல் அவர்களின் கட்டிடத்தின் சுவர்களில் பூசப் போதுமான அளவுக்கு வர்ணத்தை, தங்கள் முகங்களில் பூசியிருந்தார்கள். இப்படியெல்லாம் நடந்து கொண்டும் அவர்கள் தங்களை “பெந்தெகொஸ்தேயினர்” என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களிலிருந்த ஆதி அன்பை இழந்து விட்டார்கள்!

65127 “தேவனுக்கு பேரப்பிள்ளைகள் கிடையாது” என்று கூறிய டேவிட் டூப்ளெஸ்ஸில் அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். இல்லை, ஐயா! நம்மிடையே மெதோடிஸ்டு பேரப்பிள்ளைகள் உண்டு. நமக்கு பாப்டிஸ்ட் பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர். நமக்கு பெந்தெகொஸ்தே பேரப்பிள்ளைகள் உண்டு. ஆனால் தேவனுக்கோ, பேரப்பிள்ளைகள் கிடையாது! நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள். உங்களுடைய தாய் அல்லது தந்தையர் நல்ல மனிதராக, நல்ல ஸ்திரீயாக இருக்கிறபடியினால், அவர்களினிமித்தம் நீங்கள் உள்ளே வந்து விட முடியாது. அவர்கள் இந்த சிலாக்கியத்தைப் பெற என்ன கிரயத்தைச் செலுத்தினார்களோ, அதே கிரயத்தை நீங்களும் செலுத்தியாக வேண்டும். அவர்களைப் போலவே நீங்களும் மறுபடியும் பிறக்க வேண்டும். தேவனுக்கு பேரப்பிள்ளைகள் கிடையாது. நீங்கள் ஒரு குமாரனாகவோ அல்லது ஒரு குமாரத்தியாகவோ தான் இருக்கிறீர்கள். இல்லையென்றால் நீங்கள் ஒரு பேரப்பிள்ளையாக அல்ல, அந்த ஒரு காரியம் நிச்சயமாயுள்ளது.

66128 ஒரு அருமையான பெந்தெகொஸ்தே சபையில் நடந்த கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். பையனே, அங்கே குட்டைப் பாவாடை அணிந்து. தலைமுடியை வெட்டி, அறைகுறை ஆடை அணிந்து, ஏறத்தாழ சதையெல்லாம் வெளியே தெரியும்படி உடுத்திக்கொண்டு, உங்களுக்குத் தெரியும், அந்தவிதமாக தோலோடு ஒட்டிக்கொண்டிருக்கும்படியாக ஆடைகளை அவ்வளவு பால் உணர்வினை தூண்டும் அளவிற்கு உடுத்திக்கொண்டு வந்த பெந்தெகொஸ்தே ஸ்தீரிகள் நான் உள்ளே நுழைவதைக் கண்டவுடனே சிதறி ஓட ஆரம்பித்தனர். 129 நியாயத்தீர்ப்பின் நாளில் நீங்கள் இதற்காகப் பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் விபச்சாரம் செய்த குற்றமற்றமுள்ளவர்களாக இருக்கப் போகிறீர்கள். “ஓரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு தன் இருதயத்தில் விபச்சாரம் செய்தாயிற்று” என்று இயேசு கூறினார். எனவே, ஒரு மனிதனின் கண்களுக்கு முன்பாக, இப்படிப்பட்ட கீழ்த்தரமான உடையில் நீங்கள் உங்களை காண்பித்து கொண்டால் இதில் யார் குற்றமுள்ளவர்கள்? நீங்களா அல்லது அந்த மனிதனா? சரியாக இருங்கள்! பொல்லாங்காய் தோன்றுகிற யாவையும் விட்டு விலகுங்கள். புரிகிறதா? எனவே அங்குதான் காரியமே உள்ளது.

67130 நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்களுடைய ஆதி அன்பை விட்டுவிட்டனர். ஓ, நீங்கள் அப்படிப்பட்டவர்களை, அவர்கள் கையில் ஒரு தம்புரு கொடுத்து இசைக்கச் செய்து தெருமூலையில் நின்று, கைகளைத் தட்டி தேவனை பாடித் துதிக்க வைக்க முடியாது. ஓ, முடியாது, அவர்களால் அங்கிகளை அணிந்த சிலரோடு சேர்ந்து கொண்டு, ஒரு விதமான முதல் தரமான இலக்கிய நயம் வாய்ந்த இசையில் பாடல்களை பாட மட்டுமே தெரியும். பாருங்கள், அவர்கள் ஆதி அன்பை இழந்து விட்டார்கள். முதலாம் சபையின் காரியமும் அப்படித்தானிருந்தது. புரிகிறதா? 131 அவர்களுக்கு உலகத்தைப் போல நடக்க வேண்டியதாயிருந்தது. அவர்களுக்கு, உலகத்தைப் போல் உடையுடுக்கவும், உலகத்தைப் போல் தோற்றமளிக்கவும், உலகத்தைப் போல் நடந்து கொள்ளவும் வேண்டியதாயிருக்கிறது. அவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்குகந்த தொலைக்காட்சி நட்சத்திரம் உண்டு. உங்களுக்குத் தெரியுமா? தொலைக்கட்சியை பார்க்காமல் அவர்களால் இருக்க முடியாது. நாங்கள் சூசியை நேசிக்கிறோம் போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் அவர்களுக்கு உண்டு. அதையெல்லாம் அவர்கள் பார்த்தாக வேண்டும். அந்நிகழ்ச்சியைக் காண, அவர்கள் ஜெபக்கூட்டங்களுக்கு வராமல் வீட்டிலேயே தரித்திருக்கிறார்கள். அப்படியே அவர்கள் ஜெபக்கூட்டத்திற்குப் போய்விட்டால், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வீடுகளுக்கு சீக்கிரமாக திரும்ப வசதியாக ஜெபக்கூட்டத்தை சீக்கிரமே முடித்து விட வேண்டுமென தங்கள் போதகரை நோக்கி கூச்சலிடுகின்றனர். தேவ பிரியராயிராமல் உலகத்தின்மேல் பிரியராயிருக்கிறார்கள். 132 அவர்கள் மிகவும் சடங்காச்சாரர்களாக மாறி, “ஆமென்!” சொல்ல இயலாத அளவுக்கு ஆகிவிட்டார்கள். என்னே ஆச்சரியம், அது அவர்களுடைய ஒப்பனைகளையெல்லாம் உடைத்துவிடும். புரிகிறதா? அவர்களிடம் பெந்தெகொஸ்தே அனுபவம் இல்ல. அதுதான் பெந்தெகொஸ்தே. அது பாப்டிஸ்ட் அனுபவமும் அல்ல. ப்ரெஸ்பிடேரியன்களுக்கு தொடக்கத்திலிருந்தே அனுபவம் கிடையவே கிடையாது. நான் பெந்தெகோஸ்தே அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறேன். அது உண்மை. சகோதரனே, நான் கூறுவது சலிப்புண்டாக்கும் என்றறிவேன். ஆனால் இவற்றிலிருந்து நமக்கு ஒரு பிறப்பு உண்டாக வேண்டும். பிறப்பை அடைய ஒரு மரணம் அவசியமாயிருக்கிறது. பாருங்கள்? பாருங்கள்? அது சத்தியமாயிருக்கிறது. ஆனால், நீங்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டீர்கள். நான்…

68133 இந்த சபைக்கெதிராக தேவன் இத்தகைய குறை கூறுதலை கூறினால், அதற்கெதிராகவும் அவர் அதே குறை கூறுதலை கூறுகிறவராயிருக்கிறார். “ஆதி அன்பை விட்டுவிட்டாய் என்று உன் பேரில் எனக்கு குறை உண்டு. உனக்கெதிராக நான் கூறும் குறை ஒன்றுண்டு. முன்பு நீ மகத்தான வேளையை உடையவனாய் இருந்தாய். ஆனால் இப்பொழுதோ லௌகீகம் உன்னிடத்தில்—உன்னிடத்தில் ஊடுருவ இடம் கொடுத்துவிட்டாய், அதினால் வெறும் சடங்காச்சார ரீதியில் நடந்து கொள்ள வேண்டியவனாய் இருக்கிறாய். இன்னும் நீ என்னுடைய நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறாய். சரியான காரியங்களை நீ இன்னும் செய்து கொண்டிருக்கிறாய்; உனக்கு மிகுந்த பொறுமை உண்டு. நீ பாடுபடுகிறாய், நீ ஒரு கோவேறு கழுதையப் போல், புரியாமல் சம்பிரதாயமாய் பாடுபட்டு பிரயாசப்படுகிறாய்.” 134 என்னே! என்னே! என்னே! பார், நீயோ கிருபையையும், விசுவாசத்தையும், வல்லமயையும் பாடுபடுதலுக்காகவும், கிரியைகளுக்காகவும் மாற்றாக விட்டுக் கொடுத்துவிட்டாய். “நல்லது, சகோதரன் பிரான்ஹாமே, நான்—நான் ஒவ்வொரு விதவைப் பெண்மணிக்கும் என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன்” என்று நீங்கள் கூறலாம். நல்லது, அது நல்ல காரியம் தான். அதற்காக நான் உன்னை மெச்சுகிறேன். ஆனால் நீ முன்பு கொண்டிருந்த ஆதி அன்பு எங்கே? உ—ஊ, உ—ஊ. நீ முன்பு வழக்கமாகக் கொண்டிருக்கும் அந்த மகிழ்ச்சி எங்கே? “ஓ கர்த்தாவே, உம்முடைய இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்குத் தாரும்” என்று தாவீது ஒரு சமயம் கதறினான். கன்னங்களில் கண்ணீர் வடிய நீங்கள் ஜெபிக்கும் இந்த முழு இரவு ஜெபக்கூட்டங்கள் எங்கே? என்னே அதிர்ச்சி, உங்களுடைய வேதமானது தூசி படிந்து, சிலந்தி வலைபின்னிய நிலையில் கிடக்கிறது. நீங்கள் உங்களின் பிரிய காதல் கதைகளை வாசிப்பதிலும், பிரசுரிக்கவே தகுதியில்லாமல் ஒரு—ஒரு குப்பைத் தொட்டியில் எறிந்து விடவேண்டியவைகளையெல்லாம், பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நீங்கள் அழுகிப்போன உணவுகளைக் கொண்ட தொட்டியின்மேல் மொய்க்கும் ஈக்களைப் போல் மொய்த்து, வாங்கி வாசிக்கிறீர்கள். அது உண்மை. ஓ, இரக்கம்! நமக்கு தேவையானதெல்லாம் ஆதி அன்புக்கு திரும்புவதே! பெந்தெகொஸ்தேயின் அனுபவத்திற்கு திரும்புவதே! ஓ, இதைப் பற்றி நான் பேசாமல் நீங்கிச் செல்வது நலமாயிருக்கும். சரி, இப்பொழுது, “ஆதி அன்பை விட்டு விட்டதைக் குறித்து” புரிந்து கொண்டீர்களா?

69135 இப்பொழுது 4ம் வசனம், 5ம் வசனம் ஒரு எச்சரிக்கை, 5ம் வசனத்தில் ஒரு எச்சரிக்கை: “நினைத்து, மனந்திரும்பு!” பார்த்தீர்களா? ஆகையால் நீ இன்ன நிலையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து (எங்கிருந்து நீ விழுந்து விட்டாய்? பெந்தெகொஸ்தே அனுபவத்திலிருந்து தற்போது நீ இருக்கும் பின்மாற்ற நிலைக்குள் விழுந்து விட்டாய்) மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக: (பெந்தெகோஸ்தே அனுபவத்திற்கு திரும்பிப்போ); இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத்தில் உன் விளக்குத்தண்டை (அது யாரென்று நீங்கள் கண்டு கொண்டீர்கள் இல்லையா) …அதனிடத்தினின்று நீக்கி விடுவேன். 136 இதையே இன்னொரு விதமாகச் சொல்வோமானால், உங்களுக்கு தேவனால் நிரம்பின, பரிசுத்த ஆவியினால் நிரம்பின போதகர் இருப்பாரெனில் அவரை உங்களுடைய விரல் நுனியில் கட்டுப்படுத்தி வைக்க நீங்கள் எண்ணி, “நல்லது. அவர்கள் நமக்கு அங்கியணிந்த பாடகர் குழு இருப்பதைப் பற்றியோ நாம் போட்டுக்கொள்ளும் அழகுபடுத்தும் சாதனங்களைப் பற்றியோ, பிரசங்கித்தால், நாம் அவரை சபையை விட்டு வெளியே தள்ளிவிடுவோ” என்று சொல்வீர்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நிங்கள் அதைச் செய்வதற்கு முன்னால் தேவனே அதைச் செய்து விடுவார். அப்போதகர் அவ்விதமான வேத விரோத காரியத்தோடு ஒத்துப் போவதற்கு பதிலாக வெளியே புறப்பட்டுப் போய், கல்லுகளுக்கு பிரசங்கிப்பார். சத்தியத்தை உண்மையாகவே உரைக்கும் ஒரு போதகர் உங்களுக்கு இருந்தால், நீங்கள் தேவனை கனம்பண்ணி, ஆவியில் நிலைத்திருந்தும் தேவனை தொழுதுகொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் நீங்கள் இகழ்ந்து போகப்படுவீர்கள் என்பதையும் உணர வேண்டும். புரிகிறதா?

70137 ஆனால் மக்களோ, இன்றைக்கு, “இங்கே புவியில் வாழ்ந்து விடு. அதற்குப் பிறகு ஒன்றுமேயில்லை” என்பது போல் ஜீவிக்கிறார்கள். ஒரு ஆத்துமா உங்களுக்கு உண்டு என்றும், அது இங்கிருந்து கிளம்பி எங்கோ செல்லுகிறது என்பதையும் நீங்கள் உணருகிறதில்லை. நீங்கள் காழ்ப்பு கொண்டு, அற்பமாகவும் மற்றும் இன்னும் வேறு சில காரியங்களையும் செய்கிறீர்கள். நீங்கள் வாழும் விதத்திலும், நீங்கள் செய்யும் செய்கையினாலும், உங்களுடைய போக்கிடத்தை இங்கேயே நீங்கள் முத்திரையிட்டுக்கொண்டு விடுகிறீர்கள். இப்படியெல்லாம் செய்து கொண்டு ஆலயத்திற்கும் ஓடிப்போகிறீர்கள். இப்படியெல்லாம் செய்து கொண்டும் ஆலயத்திற்கும் ஓடிப்போகிறீர்கள். ஓ! உங்களுக்கு இரக்கம் கிடைக்கட்டும். வ்யூ! உங்களுக்கு வெட்கக்கேடு! 138 கிறிஸ்துவுக்குரிய மேலான நோக்கத்தின்மேல் நீங்கள் நிந்தையைக் கொண்டு வருகிறீர்கள். அப்படித்தானே? நாம் அவ்வாறு செய்யவில்லையா? கள்ளச் சாராயம் காய்ச்சுகிறவர்கள் கூட சபையை இழிவுபடுத்தவில்லை. அது அவர்களல்ல. விபச்சாரி சபையை பாழ்படுத்தவில்லை. கிறிஸ்தவர்கள் என அறிக்கை செய்து வரும் மக்கள் தான் சபையைப் பாழ்ப்படுத்துகிறார்கள். ஒரு கள்ளச் சாராயம் காய்ச்சுபவன் யார், ஒரு விபச்சாரியானவள் யார் என்பதை நாம் அறிவோம். ஆனால் நம்முடைய சகோதரிகளே விபச்சாரிகளைப் போல் ஆடையாபரணம் தரித்தால், அது மாறுபாடானது. அதுவே சபையை பாழ்படுத்துகிறது. சகோதரனொருவன் சாராயம் விற்கிறவனைப் போல் குடித்துக் கொண்டிருந்தால், அதுவே சபையை பாழ்படுத்துகிறது. அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டே இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறார்கள். மக்கள் அந்த நாமத்தைக் கொண்டே கவனித்துப் பார்க்கிறார்கள். “இயேசு கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலகக்கடவன்.” புரிகிறதா? அதைவிட்டு விலகுங்கள். 139 ஓ, சகோதரரே நாம் மிகவும் குறைவுள்ளவர்களாயிருக்கிறோம். நானும், நீங்களும், நாமெல்லாருமே எந்த அளவு இருக்க வேண்டுமென்று கிறிஸ்து விரும்புகிறாரோ, அதைவிடக் குறைவாகவே நாம்—நாம் இருக்க்கிறோம். இந்நாளில், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தைத் தள்ளிவிட்டு, நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கிற இப்பந்தய ஓட்டத்தில் பொறுமையோடே ஓட வேண்டிய வேளையாயிருக்கிறது. பிரசங்கிகளாகிய சகோதரர்களே, அது உண்மை. அது முற்றிலும் உண்மை.

71140 “நினைத்து, மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் வந்து நட்சத்திரத்தின் ஒளியை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.” அதனிடத்தினின்று என்றால் என்ன? சபையில் அது இருக்கும் இடத்தினின்று என்பதாகும். “நீ மனந்திரும்பி, ஆதியில் நீ இருந்து வந்த ஸ்தானத்திற்குத் திரும்பி போகாவிடில், நான் உன் போதகரை உன் மத்தியிலிருந்து அகற்றி, வேறு எங்கு என்னுடைய ஒளியை பிரதிபலித்து பிரகாசிக்கச் செய்ய முடியுமோ, அங்கு வைத்து விடுவேன்.” ஊ! இது மிகவும் பயபக்திக்குரியதாக இல்லையா? 141 இது சபைகள் மனந்திரும்ப வேண்டிய வேளையாயிருக்கிறது. பெந்தெகொஸ்தேயினரே! இவ்வேளையில், அந்த மெருகேற்றப்பட்ட மேதைகள் அநேகரை உங்களுடைய பிரசங்க பீடங்களை விட்டு அகற்றி விட்டு, அவ்விடத்தில், பழமைப் பாணியிலான சத்தியத்தையே பிரசங்கிக்கும் பிரசங்கியை வைக்க வேண்டியதாயிருக்கிறது. ஒரு உணவு அனுமதி சீட்டுக்காகவும், மிகுந்த கூலிக்காகவும் மற்றும் அவ்வாறான காரியங்களுக்காகவும் வேண்டி, சபையை உபயோகப்படுத்தவும், உங்களை முதுகில் தட்டிக் கொடுக்கும் போதகர்கள் உங்களுக்கு வேண்டாம். மனோதத்துவத்தை பிரசங்கிப்பதும், சில குதிரைப்பந்தயங்களை நடத்துவதும், சபையில் மாலை நேர சமுதாய விருந்துகளை ஏற்பாடு செய்வதுமான போதகர்கள் வேண்டாம். சுவிசேஷத்திற்குத் திரும்பிப் போக வேண்டிய வேளை வந்துவிட்டது. நீங்கள் எவ்வளவு சிறு கூட்டமாய் இருந்தாலும் பரவாயில்லை. “எங்கே இரண்டு அல்லமூன்று பேர்கள் என் நாமத்தில் கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் நான்—நான் இருக்கிறேன்” என்கிறார். 142 “மனந்திரும்பாவிட்டால், நான் வந்து விளக்குத் தணடை அதனிடத்தினின்று அகற்றிவிட்டு, அவன் தன்னுடைய வெளிச்சத்தை வேறு எங்காவது பிரகாசிக்கும்படி அனுப்பிவிடுவேன்.”

72இப்பொழுது 6ம் வசனம். இங்கேயுள்ள இந்த நபரோடு தான் நமக்கு தொல்லை உள்ளது. மனந்திரும்பாவிட்டால், அவர் வந்து போதகரை அவர்களை விட்டு அகற்றி விடுவார். இது உன்னிடத்திலுண்டு.… 143 இப்பொழுது இதை நினைவில் கொள்ளுங்கள். ஓ, இதை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம். இப்பொழுது நாம் பார்க்கப் போகிற காரியம், நாம் இப்பொழுது வாழ்கிற இந்தக் காலம் வரைக்கிலும் உள்ள ஏனைய காலங்களை இணைக்கிறது. முதலில் ஒவ்வொருவரும் நலமாக உணருகிறீர்களா? [சபையோர் “ஆமென்” என்று சொல்லுகிறார்கள்.—ஆசி.] நீங்கள் அவசரமாக போக வேண்டுமா? [சபையார் “இல்லை!” என்று கூறுகிறார்கள்—ஆசி.] சரி. இப்பொழுது, சரி. அப்படியானால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [சபையில் ஒரு சகோதரர், “இரவு முழுவதும் தங்கித் தரிக்கலாம்” என்கிறார்.] இப்பொழுது…உங்களுக்கு நன்றி. இது உன்னிடத்திலுண்டு… (அப்படியானால் அவர்களிடம் ஏதோ ஒன்றிருந்தது, இல்லையா? அவர்களிடம் என்ன இருந்தது?) …நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய். 144 “நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்.” நான் இன்று இதைக் குறித்து அங்கே ஆய்ந்து படித்துக் கொண்டிருக்கையில், இரண்டு பக்கங்களுக்கு ஒரு குறிப்பை எழுதிவைத்தேன், அதை நீங்கள் கவனமாகக் கேட்க வேண்டுமென்று விரும்புகிறேன். 6ம் வசனத்தில் புகழ்ச்சியும், கருத்தொருமித்தலும் இருக்கிறது. ஒரு விஷயத்தில் தேவனும் சபையும் கருத்தொருமித்து இருக்கிறார்கள். எபேசு சபைக் காலத்தில் இருந்து வந்த உண்மையான சபையாகிய அந்த மெய்யான திராட்சைச் செடி, “தேவன் வெறுத்த நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை தானும் வெறுத்தது.”

73145 ஒவ்வொரு சபைக் காலத்திலும் சபையில், ஆவிக்குரியவர்களும், வெறும் சடங்காச்சார ரீதியியானவர்களும் இருந்தே வந்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு எழுப்புதலின் போதும் இவ்வாறான இரட்டையர்கள் ஒவ்வொரு சபையிலும் பிறந்து ஜீவித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த சபையின் காலத்திலேயே ஆரம்பித்து, இந்த சபையின் காலத்தில் முடிவடைகிறார்கள். இறுதியாக தியத்தீரா சபையின் காலத்தில் மாம்சத்துக்குரியவர்கள் தங்கள் கையில் சபையை எடுத்துக் கொண்டார்கள். லூத்தர் தன் காலத்தில் அதை வெளியே மீண்டும் இழுத்துப் போட்டார். இப்பொழுது அது மீண்டும் வந்து விட்டது. அந்த சடங்காச்சாரமான மார்க்கத்தை உங்களால் காணமுடிகிறதா? அதற்கும் கத்தோலிக்க கொள்கைக்கும் வேறுபாடு ஏதுமில்லை. எல்லாம் ஒன்றேதான். ஒவ்வொரு ஸ்தாபனமும் அதற்குள்ளாகத்தான் அடித்துப் போடப்பட்டுள்ளது. தேவன் ஒருபோதும், தன் சபையை ஒரு மதஸ்தாபனமாக ஆக்கவில்லை. ஆனால் அதைத் தான் அவர்கள் இங்கே செய்யமுயன்று கொண்டிருந்தார்கள். அது அவ்வாறில்லையா என்பதை கவனியுங்கள். எவ்வாறு ஒரு மதஸ்தாபனமானது சபிக்கப்பட்டது என்பதை உங்களுக்குக் காண்பிப்பேன். அது புதிய சபைக்கு, புதிய ஏற்பாட்டு உண்மையான சபைக்கும், அந்நியமானதாய் உள்ளது. பாருங்கள்?

74நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. 146 மெய்யான திராட்சைக் கொடி, நிக்கொலாய் மதஸ்தரின் சம்பிரதாய கிரியைகளை தேவன் வெறுக்கிறது போல தானும் வெறுத்தது. எபேசு சபையின் காலத்தில் நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளாக இருந்தவை, பெர்கமு சபையின் காலத்தில் உபதேசமாக மாறியது. எபேசுவாகிய முதலாம் சபையில், அது ஒரு கிரியையாக இருந்தது. பின்பு அடுத்து வந்த சபைக் காலத்தில் அது ஒரு போதகமாக மாறியது. உங்களால் அதற்கு செவிகொடுக்க முடிகிறதா? நீங்கள் அதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்களா? எபேசுவில் கிரியையாக இருந்தது, பெர்கமுவில் ஒரு போதகமாக மாறியது. முதலில் அது சிறு குழந்தை வடிவில் ஆரம்பித்தது. இன்னும் சில நிமிடத்தில் அது என்ன என்பதைப் பார்ப்போம். பவுல் அதை ஓநாய்கள் என்று குறிப்பிடுகிறார். “நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்.”

75147 இப்பொழுது என்ன…மேற்கொண்டு நாம் செய்தியைக் கேட்பதற்கு முன்னால், நிக்கொலாய் என்ற வார்த்தையை பதம் பிரித்து பார்ப்போமாக. நிக்கொலாய் என்ற வார்த்தை எனக்கு அந்நியமான ஒன்றாகும். என்னால்—என்னால் பார்க்க இயன்ற அளவுக்கு அநேக கிரேக்க மொழி அகராதிகளைப் பார்த்துவிட்டேன். நிக்கொலாய் என்ற வார்த்தை நிக்கொ, நி—க்—கொ என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. பொருத்திருங்கள், நான் அதை இங்கே எழுதி வைத்தேன் என்று நான் நினைக்கிறேன். நி—க்—கொ, நிக்கொ என்றால் “ஜெயங்கொள்ளுதல் அல்லது தூக்கியெறிதல்” என்ற பொருள். நிக்கொலாய்டேன்ஸ் என்றால் “தூக்கியெறிதல் அல்லது சபை மக்களை ஜெயங்கொள்ளுதல்” என்பதாகும். ஜீவனுள்ள தேவனுடைய சபையிலே தேவ ஆவியானவர் வரங்களினால் அசைவாடி, அதற்கு தேவனே மேய்ப்பர்களை தந்து நடத்திவந்தார். அதை மாற்றி, அதற்குப் பதிலாக, சபையை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு, சில பாதிரிமார்கள், பேராயர்கள், போப்புகள் இவர்களை சபை பெற்றிருக்கும்படியாக உபதேசத்தை மாற்றியமைத்துக் கொள்ளும் ஒரு காரியத்தைத்தான் அவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள். அதாவது தேவன் கூறினார், அவர் அதை வெறுத்தார்! இன்றைக்கும் அதை அவர் வெறுக்கிறார். நிக்கொலாய் என்றால் ( நிக்கோ என்றால், “வென்று கீழ்ப்படுத்தல்”) அல்லது “சபையை தூக்கியெறிதல்.” லெய்டி என்றால்; “சபை” என்று பொருள். லெய்டி என்றால் சபை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? சரி. “சபையை தூக்கியெறிந்து, வென்று அதைக் கீழ்ப்படுத்துதல் அல்லது அதின் இடத்தை எடுத்துக் கொள்ளுதல்.”

76148 இதையே இன்னொரு விதமாகச் சொல்வதென்றால், சபையிலிருந்து எல்லா பரிசுத்தத்தையும் அகற்றி, அதிலிருந்து எல்லா வல்லமையையும் அகற்றிவிட்டு, பாதிரிமார்களுக்கு அதிகாரம் கொடுத்து “சபையானது தான் விரும்புகிறபடி வாழ்ந்து கொள்ளட்டும். ஆனால் பாதிரிமார்களே பரிசுத்தமானவர்கள்” என்று அறிவித்துவிட்டார்கள். ஜனங்களை விட்டு பரிசுத்த ஆவியையும், அதோடு தொடரும் அற்புத அடையாளங்களையும் அகற்றி விட்டு, அதற்குப் பதிலாக பரிசுத்த குருத்துவ ஆளுகை முறையை ஏற்படுத்தினார்கள். குருத்துவ ஆளுகை முறையை பரிசுத்த ஆவிக்கு மாற்றாக கொண்டு வந்தார்கள். அது என்ன என்பதைப் பார்த்தீர்களா? முதலாம் சபையின் காலத்தில் அது கிரியைகளாக இருந்து, பின்பு மூன்றாம் சபையின் காலத்தில் அது போதகமாக மாறியது. தீயத்தீரா சபையின் காலத்தில் அது முழுவதும் மேற்கொண்டு விட்டது. லூத்தர் அதை விட்டு வெளியேறியபொழுது, இவ்வுபதேசம் சிறிது காலம் தான் வலுவிழந்திருந்தது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு அது மீண்டு வலுப்பெற்று திரும்பவும் போய் அது தன் ஸ்தானத்தை வென்று எடுத்துக் கொண்டது. பேராயர்களும், தலைமைக் கண்காணிப்பாளர்களும், போப்பாண்டவருக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ளவர்களும் தலைமை ஸ்தானங்களை எடுத்துக்கொண்டனர். ஆனால் தேவனுடைய சபைக்கு தேவனைத் தவிரவேறு எவர் தலைவராக இருக்க முடியும்? ஆமென்! வ்யூ! இப்பொழுது நான் பக்திப் பரவசமடைகிறேன்! சபையை ஆளுகை செய்ய பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்பட்டார்; பிரசங்கியாரை மட்டும் ஆளுகை செய்ய அல்ல, முழுச்சபையையும் ஆளுகிறவர் அவரே!…பிரசங்கியார் மட்டும் பரிசுத்தமாயல்ல, சபை முழுவதும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறது. 149 தேவ ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு அப்பத்துண்டை அல்லது பிஸ்கோத்தை, சிறிது திராட்சைரசத்தோடு எடுத்துக் கொண்டு அதை, “பரிசுத்த யுக்காரிஸ்ட் என்றழைக்கிறார்கள். அதற்கு ‘பரிசுத்த ஆவி’” என்று பொருள். சிறிது திராட்சைரசமும், ஒரு பிஸ்கோத்தும் எவ்வாறு ஒரு ஆவியாக இருக்க முடியும்? இப்பொழுது, அப்படித்தான் இருக்குமென்றால், அப்பொழுது நீங்கள் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தை இவ்வாறு தான் படிக்க வேண்டும்; “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அங்கே ஒரு ரோம குருவானவர் வந்து, சபையினரின் நாக்கில் ஒரு வட்டவடிவ அப்பத்துண்டை வைத்து, ‘இதைப் புசியுங்கள்’ என்று கூறிவிட்டு, குருவானவர் தானே அந்த இரசத்தை பருகி, ‘இப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு விட்டீர்கள்’” என்று கூறினார். அது மிகவும் பயங்கரமானதாக நமக்கு காணப்படுகிறது. அது அப்படித்தான் இருக்கிறது.

77150 இப்பொழுது நாம் தொடர்ந்து பார்ப்போம்; நான் ஒரு பாப்டிஸ்ட் சபையில் நியமனஞ் செய்யப்பட்டேன். நாம் பாப்டிஸ்டுகளை எடுத்துக் கொள்வோம். ஊ—ஊ; உம்? மெதோடிஸ்டுகள், நாம் என்ன செய்ய வேண்டும் என்கிறார்கள்? “நீ ‘இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்’ என்று அறிக்கை செய்தால், நீ இரட்சிக்கப்பட்டுவிட்டாய்” என்கிறார்கள். பிசாசுகூட இயேசு தேவனுடைய குமாரன் என விசுவாசித்து, நடுங்குகின்றான். அநேகமாக சபை அங்கத்தினர்களைவிடக் கூடுதலாக அவன் விசுவாசிக்கிறான். பிசாசும் அதையே விசுவாசித்து, நடுங்கிகிறான். ஏனென்றால் அவன் அழிக்கப்படப் போகிறான் என்பதை அவன் அறிந்திருக்கிறான். 151 இப்பொழுது நாம் மெதோடிஸ்டுகளின் முறைமையை எடுத்துப் பார்ப்போம். அவர்கள்—அவர்கள், “யோவான் முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, தெளித்தலையே செய்தான்” என்று கூறுகிறார்கள். மேலும், “அந்நாட்டில் நிலத்தில் வளைகளைத் தோண்டி வாழும் ஒருவகை ஆமைகள் ஏராளம் உண்டு. அவ்வளைகளில் தண்ணீர் வந்து விடும்போது, ஆமையின் சதையை சுரண்டி எடுத்துவிட்டு, அவ்வோட்டை எடுத்துவிட்டு, அவ்வோட்டை எடுத்து வைத்துக் கொண்டு, அதில் தண்ணீர் நிரப்பி யோவான் ஜனங்களுக்கு ஞானஸ்நானத்தை தெளித்தல் முறையில் கொடுத்தான்” என்று உண்மையாகவே மெதோடிஸ்டுகள் பிரசங்கிக்கக் கூட செய்கிறார்கள். அது அர்த்தமற்றது! ஓ சகோதரனே!

78152 நல்லது, இப்பொழுது இவ்வாறாக இதைப்பற்றிக் கூறுவோம். “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது அவர்கள் யாவரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் கூடிவந்திருந்தார்கள். அப்போதகர் அங்கே வந்து ஒரு அருமையான பிரசங்கத்தை நிகழ்த்திவிட்டு, ‘எனக்கு ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுங்கள். உங்கள் பெயர்களை புத்தகத்தில் எழுதிவிடுவோம்’” என்று கூறினர். அது சரியாக தொனிக்கிறதா? அவ்வாறா இருக்கிறது? நீங்கள் அதை…ஒரு பஞ்சாங்கம் கூட இப்படியான ஒரு காரியத்தைக் கொண்டிருக்காது. அது கூட இவர்கள் சொல்வதை விட சரியாக இருந்து விடும். வயோதிப பெண்மணிகளின் பிறந்தநாள் பஞ்சாங்கம் கூட இதை விட சரியானதாயிருக்கும். 153 அப்படியானால் அதற்கு காரணமாக அமைந்தது எது? இந்த நிக்கொலாய் மதத்தினர், வேதவாக்கியங்களைப் புரட்டவும், ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கவும், அதினால் தேவன் அங்கே அசைவாட முடியாதபடி செய்யவும், அதற்காக ஒரு கூட்டம் மனிதர்களை உள்ளே கொண்டு வந்தனர். அங்கேயே அது மரித்து விட்டது! அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து, “உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் நீ மரித்தவனாயிருக்கிறாய்” என்று கூறினார். அவர்களில் அநேகர் மரித்தவர்களாயிருக்கின்றனர். ஆயினும் அதை அவர்கள் அறியவில்லை.

79154 நானும் எனது—எனது சகோதரனும் சிறுவர்களாயிருக்கையில், ஒரு சமயம், மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். நான் அப்பொழுது தூண்டில் ஒரு வயதான பெரிய ஆமையைப் பிடித்தேன். இந்த வகை ஆமை மிகுந்த தூண்டிலை இழுக்கக் கூடியது. எனவே அது என்னை கடித்துவிடாதபடியிருக்க, உடனே நான் தூண்டிமுள்ளைக் கவ்விய அதன் தலையை வெட்டி ஆற்றுக்கரையில் எறிந்துவிட்டேன். என்னுடைய தம்பி அங்கே வந்து, “சற்று முன்னர் நீ எதைப் பிடித்தாய்?” என்று கேட்டான். நான், “ஒரு ஆமை” என்று கூறினேன். மேலும் அவன், “நீ அதை என்ன செய்தாய்?” என்று கேட்டான். அதற்கு நான், “அதை நான் அங்கே போட்டு விட்டேன். அதோ அதன் தலை அங்கே கிடக்கிறது” என்று கூறினேன். அவன் அதனிடமாகப் போய், “அது செத்து விட்டதா?” என்று கேட்டான். அதற்கு நான், “நிச்சயமாக! அதன் தலையை அதன் சரீரத்திலிருந்து வெட்டி எறிந்து விட்டேன், அது மரித்து தான் இருக்க வேண்டும்” என்று பதிலளித்தேன். 155 எனவே அப்பொழுது அவன் ஒரு குச்சியை எடுத்து, அந்த ஆமைத்தலையை மீண்டும் நதியில்…போட்டு விட எத்தனித்து, குச்சியை அதனருகில் கொண்டு சென்றான். அவ்வாறு அவன் செய்தபொழுது, அந்த ஆமை அக்குச்சியை கவ்வியது. இவ்வகை ஆமையானது, அதன் சரீரத்தினின்று தலையைப் பிய்த்து எறிந்து விட்டாலும், ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்கு அது கடிக்கும். என தம்பி, செத்துப்போனதாக எண்ணப்பட்ட ஆமைத்தலையானது அக்குச்சியை கவ்வியதைக் கண்டதும், துள்ளிக்குதித்து, “ஹேய்! ‘அது செத்துவிட்டது’ என்று சொன்னாய் என்று தானே நான் எண்ணினேன்” என்று கூறினான். “அது மரித்தே விட்டது” என்று நான் கூறினேன். அவனோ, “ஆனால், ஆமைக்கு தான் மரித்து விட்டது தெரியவில்லையா. தெரியவில்லையே” என்று கூறினேன். 156 அவ்விதமாகத்தான் அநேகர், தாங்கள் மரித்தவர்களாயிருந்தாலும் அதை அறிய மாட்டாதவர்களாயிருக்கிறார்கள். நிக்கொலாய் மதஸ்தர் இவர்கள். ஓ, என்னே! ஓ, “நீயும் அதை வெறுக்கிறாய்” என்று அவர் கூறுகிறார். எல்லாவற்றையும் எடுத்து விட்டு, அருமையான பரிசுத்த குருக்கள், போப்பாண்டவருக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள பரிசுத்த குருமார்கள், பரிசுத்த பேராயர்கள் என்று அழைத்துக்கொள்பவர்களை தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள்.

80157 பெந்தெகொஸ்தேயினரே, உங்களில் சிலர், “தலைமை கண்காணிப்பாளர் வந்து, நீங்கள் சுகமளிக்கும் ஆராதனையை இங்கே நடத்தலாமா வேண்டாமா என்பதைப் பற்றி உங்களுக்குச் சொல்லுவார். ஹா, ஹா” என்கிறீர்கள். அல்லேலூயா! தேவனுடைய நித்திய வார்த்தையாகிய பரிசுத்த ஆவியானவர்தான், நீங்கள் இதைச் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். 158 “நல்லது, சகோதரன்.பிரான்ஹாம் அவர்களே, ‘இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுங்கள்’ என்று வேதம் போதிக்கிறது என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆனால் எங்களுடைய சபையின் பொதுக் கண்காணிப்பாளர் அவர்களே, எங்களுடைய சபையில் இதை நாங்கள் செய்ய ஆரம்பித்தால், எங்களை வெளியே தள்ளிவிடுவதாக கூறியிருக்கிறாரே” என்கிறீர்கள். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். அவர்கள் தள்ளிவிடட்டும். நான் அங்கே உதைத்துத் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், இங்கே இவர்களால் உதைத்து வெளியே தள்ளப்படுவதையே நான் விரும்புவேன். இங்கே, வேதத்திலிருந்து நீங்கள் எதையாகிலும் எடுத்துப் போட்டால், அங்கே, தேவனுடைய நகரத்தில் நீங்கள் உள்ளே நுழையாதபடி உதைத்துத் தள்ளப்படுவீர்கள். எனவே அங்கேயிருந்து உதைத்து வெளியே தள்ளாதபடிக்கு, இங்கே உதைத்து வெளியே தள்ளினால், அங்கே உள்ளே தள்ளப்படுவீர்கள். அதுதான் நடக்கும், எனவே வார்த்தையோடு நிலைத்திருங்கள். 159 நாம் சரியாகவே இருக்க விரும்புகிறோம். ஓ, என்னே, சகோதரனே, அது ஒரு மிகவும் முக்கியமான காரியமாகும். நாம் இந்த காரியத்தை சரி செய்து கொள்ளவேண்டியது அவசியமாகும். தேவன் தன் சபையை கட்ட ஒரு உறுதியான அஸ்திபாரம் அவருக்கு கிடைக்க வேண்டும். அது இல்லாதவரையில் நமக்கு ஒரு சபை இருக்காது. ஒரு கூட்ட அர்த்தமற்ற காரியங்களின் மேல் அஸ்திபாரமாகக் கொண்டு, தேவன் ஒருபோதும் தன் சபையைக் கட்டமாட்டார். அவர் தன்னுடைய வார்த்தையின் பேரில் தான் வரவேண்டும். இல்லாவிட்டால் அவர் வரவேமாட்டார். சரியாக அவர் தன்னுடைய வார்த்தையில்தான் இருக்கிறார்.

81160 சமீபத்தில் சிலர், “சகோதரன்.பிரான்ஹாமே, நீங்கள் சான்டாகுவாக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுத்திருக்கின்றனர். சான்டாகுவாக்கு எத்தனை பேர்கள் வந்திருந்தீர்கள்? ஏன், இங்கு பாருங்கள். சபையின் மூன்றில் ஒரு பங்குக்கு மேலானவர்கள் சான்டாகுவாக்கு வந்திருந்தார்கள். அப்பொழுது, அந்த பிற்பகலில் அந்த மனிதன் எழும்பி நின்று அவன் பேசுவது எனக்குத் தெரியவரும் என்று அறியாமல் பேசினான். நீங்களும் அதைக் கேட்டீர்கள். அங்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை எனக்கு என்னுடைய அறையில் தேவன் வெளிப்படுத்த முடியும். அவர் அவ்வாறே செய்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அம்மனிதன் அங்கே எழும்பு நின்று, “சகோதரன் பிரான்ஹாம் ஒரு கர்த்தருடைய ஊழியக்காரர். ஆவியானவர் அவர் மேல் இருக்கையில், அவர் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறார். என்ன நடக்கிறது என்றும், என்ன நடக்கப் போகிறது என்றும், தேவன் அவருக்கு சொல்லுகிறபடியினால் அவர் நிச்சயமாக அதைப் பற்றி அறிந்திருக்கிறார். ஆனால் அவருடைய வேத சம்மந்தமான போதகமோவென்றால், அதற்கு நீங்கள் செவிகொடுக்க வேண்டாம்” என்று கூறினார். 161 என்னே இது ஒரு குழப்பமான கருத்து! ஒரு மனிதன் எவ்வாறு அதை சொல்ல முடியும்? உடைக்கப்பட்ட பீன்ஸ்களுக்கும் காப்பிக் கொட்டைக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் போனால்; இதைப்பற்றி நீங்கள்—நீங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டதொரு காரியத்தை எவ்வாறு உங்களால் எண்ண முடிகிறது? “ஏன்?” தீர்க்கதரிசி என்ற சொல்லுக்கு, “வார்த்தையின் தெய்வீக வெளிப்படுத்துதலைக் கூறுவோன்” என்று பொருள். தீர்க்கதரிசிக்கு கர்த்தருடைய வார்த்தையானது வருகிறது. நானும் ஒரு போதும் என்னை அவ்வாறு அழைத்துக் கொள்ளவில்லை. அவர்களே அவ்வாறு என்னை தீர்க்கதரிசி என்று அழைத்தனர். ஆனால் அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. பாருங்கள்?

82162 எப்படி ஒரு மனிதன்…அவர்களுடைய ஸ்தாபனமானது இதை ஒத்துக்கொள்ளாதபடியினால், ஒரு சிறு சபை போதகத்தை அவர்கள் விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதினால் பரிதபிக்கத்தக்க மாய்மாலக்காரனே! ஏசாவைப் போல், உன்னுடைய சேஷ்டபுத்திர பாகத்தை ஒரு பானை கூழுக்காக விற்றுப் போடுகிறாய். அது உண்மை. ஒரு பானை கூழுக்காக, தேவன் வெறுக்கிற மதஸ்தாபனத்திற்காக, உங்களுடைய சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போடுகிறீர்களே! நினைவிருக்கட்டும், நீங்கள் “ஸ்தாபனம்” என்று அழைப்பதை தேவன் வெறுக்கிறார். அக்காரியமே, சகோதரர்களை பிரிவினைக்குள்ளாக்கியது. இன்றிரவில் தேவனுடைய பந்தியில் ஐக்கியங்கொள்ள வாஞ்சிக்கும் அநேக மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்தால், அதைச் செய்ய ஆரம்பிக்கும் முதல் தடவையிலேயே அவர்கள் வெளியே தள்ளப்படுவார்கள். அது முற்றிலும் உண்மையே. 163 “அம்மா அதைச் சேர்ந்தவர்களாக இருந்தார்” என்று கூறுகிறார்கள். அப்படியானால் அவர்கள் முதற்கண் பேரப்பிள்ளைகளாக ஆகி விடுகின்றனர். ஓ, என்னே! அம்மா எதைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. அவர்கள் தன் நாளில் உண்டாயிருந்த ஒளி முழுவதிலும் நிலைத்திருந்து ஜீவித்தார்கள், நீங்களோ வேறொரு நாளில் ஜீவித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

83164 முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு, விஞ்ஞானமானது ஒரு பந்தை பூமியைச் சுற்றி சுழலவிட்டு, “ஒரு வாகனம் 30 மைல்களுக்கு மேல் உள்ள பயங்கர வேகத்தில் ஓடுமானால் அப்பொழுது, அது புவியின் ஈர்ப்பு சக்தியை விட்டு விடுபட்டு, விண்வெளியில் எடுத்துச் செல்லப்பட்டு விடும்” என்றுரைத்தது. இன்று விஞ்ஞானம் அக்கூற்றை நம்புகிறது என்று நினைக்கிறீர்களா? இப்பொழுது விண்வெளியில் மணிக்கு ஆயிரத்து தொள்ளாயிரம் மைல்கள் வேகத்தில் பறக்க ஆரம்பித்து விட்டார்கள். தாங்கள் என்ன சொன்னோம் என்று அவர்கள் பின்னால் திரும்பிப் பார்க்கிறதில்லை. எதிர் வரும் காலத்தில் என்னத்தை தாங்கள் காணமுடியும் என்று முன்னோக்கிப் பார்க்கிறார்களேயன்றி பின்னோக்கிப் பார்க்கிறதில்லை. 165 ஆனால் சபையோ, எப்பொழுதும் பின்னால் பார்த்து, வெஸ்லி என்ன கூறினார் என்பதையும், மூடி என்ன கூறினார் என்பதையும், சாங்கி என்ன கூறினார் என்பதையும் காண விரும்புகிறார்கள். “விசுவாசிக்கிறவனுக்கு யாவும் கைகூடும்”. முன்னோக்கிப் பாருங்கள். வேதத்தில் கூறப்படும் பின்னால் திரும்பிப்பார்க்கும் தன்மைகொண்ட ஒரே ஜந்து எது? எந்த ஜந்து எப்பொழுதும் பின்னால் திரும்பிப்பார்க்கும் தன்மை கொண்டது என்று உங்களுக்குத் தெரியுமா? மிகவும் கீழான ஒரு ஜந்து அது. ஊர்வனவற்றில் மிகவும் கீழான தன்மை கொண்ட அந்த ஐந்து எது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? தவளைதான் அது. தவளை தான் மிகவும் கீழ்த்தரமான ஜந்து. மனிதன் தான் மேன்மையான ஜீவன். தவளை பின்னால் திரும்பிப் பார்க்கிறது. நான் அந்த கீழ்த்தரமான ஜந்துவை விரும்பவில்லை. நான் முன்னோக்கிப் பார்த்து, விசுவாசித்துக் கொண்டு, அவர் ஒளியிலிருக்கிறது போல, நானும் ஒளியில் நடந்து கோண்டு, அவர் காண்பிக்கும் ஒளியில் நடந்து வாழவே விரும்புகிறேன். ஆமென்.

84166 ஒரு முறை கென்டக்கியில் நான் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கையில், வயது முதிர்ந்த ஒரு மனிதன் அங்கே வந்தார். அவர் “ஓ, நான் அந்த சுகமளித்தலை விசுவாசிக்கவில்லை” என்று கூறினார். அதற்கு நான் “நல்லது, அது சரி, நீங்கள் அமெரிக்கர்” என்றேன். அப்பொழுது அவர், “நான்—நான் எதையும் கண்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன்” என்றார். அதற்கு நான், “நல்லது, அது சரிதான்.” என்றேன். அதற்கு அவர், “இப்பொழுது உங்களுக்கெதிராக எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் கூறுவதை நான்—நான் விசுவாசிக்கவில்லை” என்று கூறினார். அதற்கு நான், “அது நீங்கள் அமெரிக்கர் என்பதனால் உமக்கு உண்டாயிருக்கும் சொந்த சிலாக்கியம். நீங்கள் விசுவாசிக்கத் தேவையில்லை” என்று பதிலளித்தேன். மேலும் அவர், “தெளிவாக ஒன்றை என் கண்களினால் கண்டாலொழிய நான் ஒரு போதும் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.” என்று கூறினார். ஊம்! அதற்கு நான், “நல்லது, இப்பொழுது நான்…அது—அது நன்றாக இருக்கிறது, நீங்கள் மிஸ்ஸௌரியிலிருந்து வந்தவராக இருக்க வேண்டும்” என்றேன். அவர், “இல்லை, நான் கென்டக்கிக்காரன்” என்றார். வ்யூ. ஓ! மேலும் நான், “உங்கள் பேச்சு கென்டக்கியின் பேச்சுபோல் தொனிக்கவில்லையே, எனினும் நீங்கள் அவ்வாறு கருதினால், அப்படியே செய்யுங்கள்” என்றேன். அவர் கூறினார்—அவர் கூறினார்…நான், “நீங்கள் எப்படி வீட்டிற்கு போகப் போகிறீர்கள்?” என்று கேட்டேன். 167 அவரோ, “நான் அந்த மலைக்கு அப்பால் போகப் போகிறேன். அங்கே தான் வாழ்கிறேன்.…நல்லது, என்னுடன் என் வீட்டிற்கு வாருங்கள்,” என்றார். அருமையான மனிதர். “என்னோடு வீட்டிற்கு வந்து இரவில் என்னுடன் தங்குங்கள். சகோதரன் பிரான்ஹாம் அவர்களே” என்று கூறினர். அதற்கு நான், “எனக்கும் விருப்பம் தான் சகோதரரே, ஆனால் நான் என்னுடைய மாமா வீட்டிற்கு இந்தப் பக்கம் போகப் போகிறேன்,” என்று கூறினேன். அவர் கூறினார்…நான், “நீங்கள் என்னுடைய வாகனத்தில் வருகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவரோ, “இல்லை, நான் இந்த மலைக்கப்பால் அங்கே இந்தப் பக்கம் செல்ல வேண்டும். அங்கே ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து மறுபடியும் மலையேறி செல்ல வேண்டும்” என்றார். அது அங்கே எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்பொழுது நான், “நல்லது, எவ்வாறு அந்த இடத்திற்கு போகப் போகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அங்கே உள்ள பாதையில் நான் நடந்து செல்லவேண்டும்” என்றார். அப்பொழுது நான், “ஏன்? இவ்விரவில், உங்களுக்கு முன்னால் உங்கள் கையைக் கூட பார்க்க முடியாதே, எப்படி அங்கே போகப் போகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் கண்ணாடி கூட்டு விளக்கினை வைத்துள்ளேன்” என்றார். நான், “நல்லது, நீங்கள் எப்படி…அதாவது அவ்விளக்கைக் கொளுத்தி அதை கொண்டு நடந்து செல்லப் போகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ஆம் ஐயா,” என்றார். அப்பொழுது நான், “நீங்கள் அவ்விளக்கை கொளுத்தி எரிய வைத்து, சற்று உயரத்தூக்கி இப்படிப் பிடிக்க முடியுமா? அவ்வொளியில் நான் உங்கள் வீட்டைக் காண விரும்புகிறேன்” என்றேன். அதற்கு அவர், “உங்களால் அதைக் காண முடியாது” என்று பதிலளித்தார். அப்பொழுது நான், “அப்படியென்றால், எவ்வாறு அங்கே செல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டேன். அவர், “ஓ! நான் எனது கைவிளக்கை பற்ற வைப்பேன், நான் விளக்கின் ஒளியில் பாதையில் நடந்து செல்வேன்…” என்றார். அப்பொழுது நான், “அப்படித்தான் இதுவும் உள்ளது. ஆமென். ஒளியில் நடவுங்கள்” என்றேன்.

85168 நடந்து கொண்டேயிருங்கள்! அப்படியே நின்று விடாதீர்கள். அப்படி நின்று விட்டால் நீங்கள் எங்குமே சென்றடைய மாட்டீர்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்டிருந்தால், பரிசுத்தமாகுதலை நோக்கி, நடந்து செல்லுங்கள். நீங்கள், “எப்படி அங்கே போக வேண்டும்?” என்று கேட்கிறீர்கள். நடந்து கொண்டேயிருங்கள். “பரிசுத்தமாகுதலுக்கு பிறகு, பரிசுத்த ஆவியின் அபிஷேகமா? அதை நான் எப்படி பெறுவேன்?” ஒளியில் நடந்து கொண்டேயிருங்கள். “அப்புறம், அடையாளங்களும், அற்புதங்கள், அதிசயங்களுமா…?” தொடர்ந்து ஒளியில் நடந்து கொண்டேயிருங்கள். புரிகிறதா? விடாமல் அதைச் செய்யுங்கள். நீங்கள் உங்கள் காலடியை முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு தடவையும், ஒளியானது உங்களுக்கு சற்று முன்னே வழிகாட்டிக் கொண்டே முன் செல்லும். ஏனெனில், அவர் எப்பொழுதும் உங்களுக்கு முன்னே போகிறார். அவர் உங்களை பின்னால் இருந்து கொண்டு தள்ளி விடுவதில்லை. அவர் உங்களை வழி நடத்திச் செல்லுகிறார். அவரே ஒளியாயிருக்கிறார். ஓ, அதைக்குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? அவர் ஒளியாய் இருக்கிறார். அவரில் இருளேதும் இல்லை.

86169 “நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்.” அக்கிரியை போதகமாக மாறியது. இப்பொழுது பவுல் என்ன கூறுகிறான் என்று பார்ப்போம்…இப்பொழுது யாருடைய சபை…இந்த சபையை நிறுவியது யார்? பவுல், எபேசு. 170 நாம் இப்பொழுது அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில் 20ம் அதிகாரத்திற்கு ஒரு நிமிடம் போவோம். அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகம் 20-ம் அதிகாரத்தில் அங்கே பவுல் என்ன கூறுகிறான் என்று பார்ப்போம். பவுல் ஒரு தீர்க்கதரியாயிருந்தான் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக அவன் அவ்வாறு தான் இருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசி தான். ஒரு இரவில், அந்த கொந்தளிக்கும் கடலில், பவுலுக்கு உண்டான தரிசனம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்பொழுது…அதைக் குறித்த யாவும். இப்பொழுது அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகம் 20ம் அதிகாரம் 27-ம் வசனத்திலிருந்து நாம் இப்பொழுது ஆரம்பிப்போம். நாம் இவ்வசனத்தை வாசிக்கையில் மிகவும் கவனமாகக் கேளுங்கள். இப்பொழுது, இங்கே, இந்த பவுல் ஒரு தீர்க்கதரிசியானபடியால், வரப்போகும். காரியத்தை முன்னுரைக்கிறான். தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே. 171 ஆசீர்வதிக்கப்பட்ட அந்த மனிதன்! ஓ, அந்நாளில் நான் அங்கே நின்று, இரத்த சாட்சிகளுக்குரிய அந்த கிரீடமானது அவனது சிரசில் சூடப்படுவதைக் காண வேண்டுமென்று விரும்புகிறேன். அங்கே அழுகை ஒன்று இருக்குமானால் நானும் அழுவேன். நான் அப்பொழுது பவுலைப் பார்த்து ஆர்ப்பரித்திடுவேன். பிரகாசமும், அழகுள்ளதுமான அங்கியணிந்து, மகத்தான அப்போஸ்தலனும், பரிசுத்தவானுமாகிய பவுலைப் பாரீர். நாம் யாவரும் அங்கே செல்லுகையில், நிச்சயம் ஆர்ப்பரிப்பு உண்டென்று கருதுகிறேன்.(நீங்கள் அப்படிச் செய்வீர்களா?)

87172 இப்பொழுது; தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்கவில்லை. 173 அது சரியா? இப்பொழுது, கிறிஸ்தவர்களே, இந்தப் பக்கம் பாருங்கள். நான் உங்களை ஒன்று கேட்கப்போகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அல்லாமல் வேறுவிதமாக ஞானஸ்நானம் பெற்றவர்களை, மீண்டும் சரியானபடி ஞானஸ்நானம் பெறும்படி மக்களுக்கு கட்டளையிட்டது யார்? [சபையார், “பவுல்” என்று பதில் அளிக்கின்றனர்.—ஆசி.] அவன் தேவனுடைய முழு ஆலோசனையையும் பிரசங்கித்தான். அது சரிதானே? சரிதானே? 1தெசலோனிக்கேயர் 1ம் அதிகாரம் 8ம் வசனம் என்று நான் எண்ணுகிறேன். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை…அங்கே பவுல் என்ன கூறுகிறான்? “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், வானத்திலிருந்து ஒரு தூதன் நாங்கள் பிரசங்கித்ததையல்லாமல், வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால்…” (இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் மீண்டும் எடுக்கும்படி மனிதருக்கு கட்டளையிடாமலும், பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்தை அல்லாமல் வேறு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தாலும்) …அது “வானத்திலிருந்து வருகிற தூதனாயிருந்தாலும் சரி” (ஏன், அது ஒரு பேராயரோ, போப்பிற்கு அடுத்தவரோ, அல்லது ஒரு பொதுக்கண்காணிப்பாளரோ, அல்லது ஒரு போதகராயினும், சரி, அவர் எப்படிப்பட்டவராயினும் சரி, அக்கறையில்லை) …“வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது நாங்கள் பிரசங்கித்தையல்லாமல், வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.” அது உண்மை. அது சரிதானே? அவன் என்னக் கூறினான், அது கலாத்தியர் 1:8ல் உள்ளது. நான் அதைக் குறித்து சற்று நினைக்க நேர்ந்தது. சரி. நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது கலாத்தியர் 1:8, ஆகும். பவுல் என்னக் கூறினான் என்பதைப் பாருங்கள்.

88174 இப்பொழுது இங்கே அவன் கூறுகிறான்…இப்பொழுது 27-வது, 27-ம் வசனம் என்றே நான் நினைக்கிறேன். தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்கவில்லை. 175 இப்பொழுது இவ்வசனத்தைக் கவனியுங்கள், இது ஒரு தீர்க்கதரிசனம். ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள். 176 யார் சம்பாதித்தது? யாருடைய இரத்தம் அது? அது தேவனுடைய இரத்தம் என்று வேதம் கூறியுள்ளது. தேவன் தம்முடைய சுய இரத்தத்தினால். அது சரிதானே? தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு. 177 நாம் தேவனுடைய இரத்தத்தினாலே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று வேதம் கூறியுள்ளது. அதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? நிச்சயமாக, அதுவே அதைச் செய்கிறது. சரி: …தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்டார். நான் போனபின்பு, மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி ,…(வரப் போகிற காலத்திற்குள் உற்று நோக்கி, சம்பவிக்கப்போகிற காரியத்தை அம்மனிதன் பார்க்க முடிந்தது என்பதை கவனியுங்கள்) … சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

89178 [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] அநேக ஆண்டுகள் கழித்து,…ஒரு கூட்ட மனிதர்கள் எழும்பி, ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்க விரும்பினார்கள். அவர்கள் பரிசுத்தமானதை அகற்றி, பரிசுத்த ஆவியை சபையை விட்டு தள்ளிவிட்டு, பேராயர்களையும், போப்புகள், குருமார்கள் இவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்து, அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்று அறிவித்து, சபையார் தங்கள் இஷ்டப்படியெல்லாம் வாழ்ந்து கொள்ளலாம் என அனுமதித்தார்கள். அவர்களை நரகத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டி, சபைக்குருவானவர் அவர்களுக்காக வேண்டுதல் செய்ய அதற்குரிய கட்டணமான, குருக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும், இன்னும் இதைப் போன்ற மற்ற ஒவ்வொரு காரியத்தையும் உள்ளே கொண்டு வந்தார்கள். அதுவே நிக்கொலாய் மதஸ்தரின் போதகம், “நான் அதை வெறுக்கிறேன்” என்று தேவன் உரைத்தார். இப்பொழுது கவனியுங்கள். நீங்கள், “தேவன் அதை வெறுப்பதாகக் கூறினாரா? நானும் அதைப் பார்க்கட்டும்” என்கிறீர்கள். 179 இப்பொழுது அவர் அவ்வாறு சொன்னாரா என்று பார்ப்போம்: நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய். இது உன்னிடத்திலுண்டு. 180 தேவன் மதஸ்தாபனத்தை வெறுக்கிறார். அது சரியா? அவர்கள் அங்கே என்ன செய்யவிருந்தார்கள் என்றும், என்ன செய்து விட்டார்கள் என்பதையும் அப்படியே நீங்கள் காணலாம். தொடர்ந்து வந்த ஒவ்வொரு சபைக் காலத்திலும் அவர்கள் அதையே செய்தார்களா இல்லையா என்பதை கவனியுங்கள். தேவன் ஒரு ஸ்தாபனத்தை வெறுக்கிறார்! ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்;…

90181 இப்பொழுது, பவுல், ஓநாய்கள் வரும் என்று எச்சரித்தான். அதுதான் “நிக்கொலாய் மதஸ்தரின்” போதகமாக ஆகியது. அவர்கள், பழைய ஏற்பாட்டிலுள்ள லேவிய முறைமையின்படியான ஆசாரியத்துவ குருத்துவ முறையை உண்டாக்க முயன்று கொண்டிருந்தார்கள். அம்முறையானது புதிய ஏற்பாட்டு உபதேசத்திற்கு முற்றிலும் அந்நிய காரியமாகும். ஆமென்! நிக்கோ என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் நிக்கோ என்ற வார்த்தைக்கு, “வென்று மேற்கொள்ளுதல்” என்று பொருள், எதை மேற்கொள்ளுதல்? சபையை, பரிசுத்த ஆவியை. உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவையும், விசுவாசிகள் மத்தியில் உண்டாயிருக்கும் அற்புத அடையாளங்களையும் விட்டு அகற்றிவிட்டு, அதற்குப்பதிலாக, ஒரு மனிதனைப் போப் அல்லது மாம்சீகமான போப்பாண்டவருக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ளவரை அல்லது ஒரு கண்காணி ஆகிய பதவிகளுக்கு, தங்கள் வாக்குகளினால் தேர்ந்தெடுத்து, அவர்களை சபையின் மேல் பரிசுத்த மனித ஒழுங்கு என்ற மனித ஒழுங்கின்படி, அதிகாரிகளாக வைத்து விட்டார்கள். அதனால் பரிசுத்த ஆவியை சபையை விட்டு நீக்கிவிட்டார்கள். அவர்களை அவர்கள் “மேய்ப்பர்கள்” என்று பொருள்படுகிற போதகர்கள் என்று அழைக்காமல், பிதாவே என்று அழைக்கின்றனர். (Father ஃபாதர்) ஆனால் இயேசு, “பூமியின் மேல் எந்த மனிதனையும் பிதா என்று அழைக்காதிருங்கள்” என்று சொன்னார். அந்த தீமையான காரியத்தைப் பார்த்தீர்களா? நாம் என்ன செய்து விட்டோம்?

91182 ஓ, நாம் முடிக்க முடிந்தால் நலமாயிருக்கும். இவ்வாறு இந்த இரவுகளிலெல்லாம் நாம் எல்லாவற்றையும் ஒரேடியாக சேர்த்து வைத்துப் பார்க்காமல் இருப்பது நலமென்று எண்ணுகிறேன். நாளை இரவு வெளிப்படுத்தின விசேஷம் 12ம் அதிகாரத்தை படித்து அதிலுள்ள அந்த பழைய மகாவேசி உட்கார்ந்திருக்கிறதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். அவ்வாறு…அவள் அழைக்கப்பட்டதற்குக் காரணம், அவள் தேவனுக்கெதிராக…வேசித்தனம் செய்தாள், அவள் தன்னை விதவை என்று அழைத்துக்கொண்டாள். அவள் தானே வேசிகளுக்கெல்லாம் தாயானவள். அது சரிதானே? இப்பொழுது, நாம் அது ரோமாபுரி என்பதை அறிவோம், ஏனென்றால் அவள் ஏழு மலைகளின் மேல் அமர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு காரியமும் சரியாக, அவளில் உள்ள ஒரு மனிதன், மிருகத்தின் இலக்கம் போன்றவை. அது என்னவாயிருந்தது என்பதை நாம் யாவரும் முந்தைய பாட போதனையிலிருந்து அறிந்துள்ளோம். ஆனால் அதனுடைய வருத்தமான காரியமென்னவெனில், அவள் வேசிகளுக்கெல்லாம் தாயானவள் என்பதுதான். இங்கே ரோமாபுரியில் அவள் ஆரம்பித்ததன் காரியம் இதுதான், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்றே தங்களை அழைத்துக் கொண்டார்கள். அப்படித்தான் துவங்கினார்கள்.

92183 கவனியுங்கள்! இதை மெய்ப்படுத்த, தேவன் எனக்கு உதவி செய்யட்டும். ஒரு கூட்ட கிறிஸ்தவர்கள் இதுபோன்ற சபையில் இருந்து கொண்டு, அவர்கள் சடங்காச்சார ரீதியில் மாறினார்கள். அவர்கள் மாறுபாடானவர்களாகி தங்களுக்கென ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். இருண்ட காலத்தில், அவர்கள் சபையை அரசுடன் ஒன்றாக இணைத்து விட்டனர். அரசும், சபையும் ஒன்றாக இணைந்த நிலையில் அது எவ்வாறு ஆகியது? கிறிஸ்தவ சபையாக இருக்க வேண்டியது. “பரிசுத்த கத்தோலிக்க திருச்சபை” என்று அழைக்கப்பட்டது. ( கத்தோலிக்கம் என்றால், “அகில உலக” என்று பொருள்), “மகத்தனா அகில உலக கிறிஸ்தசபை.” அந்நிய பாஷிகளில் பேசுபவர்களையும், ஆர்ப்பரிக்கிறவர்களையும், பிணியாளிகளை சொஸ்தமாக்குகிறவர்களையும், அவர்கள் “வேதப்புரட்டர்கள்” என்று அழைத்தனர். இறுதியாக, யாராவது அந்த முறையில் தேவனைத் தொழுது கொள்ளுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை பலாத்காரமாக மிரட்டி, கத்தோலிக்க மதத்தை தழுவிக்கொள்ள அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். அதற்கு இணங்க மறுத்தால் அவர்கள் சிங்கக் கெபியில் தூக்கியெறியப்பட்டனர். சபைக்குண்டான உபத்திரவ காலத்தின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் உபத்திரவம் தொடர்ந்தது. ஆனால் சபையோ ஒருபோதும் மரிக்கவேயில்லை. அதை நீங்கள் கொல்ல முடியாது. அது இறுதிவரை ஜீவிக்கும், முடிவில் அதற்கு ஜீவக் கிரீடம் கொடுப்பதாக தேவன் கூறியுள்ளார். அது அந்த உபத்திரவக் காலங்களின் வழியாக வந்தது.

93184 அதன் பிறகு மார்ட்டின் லூத்தர் வந்து சபையின் காலத்தை தொடரச் செய்து, நீதிமானாகுதல் என்பதன் கீழ் சபையைத் திருப்பினார். லூத்தர் மரித்த பிறகு என்ன நேரிட்டது? லூத்தரன் சபையை ஸ்தாபித்தப் பொழுது, என்ன செய்தார்கள்? தங்கள் பிறப்புரிமையை அல்லது சேஷ்டபுத்திர பாகத்தை ரோமானியக் கொள்கையிடம் மீண்டும் விட்டுக் கொடுத்தனர். அது முற்றிலும் உண்மை. 185 அப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் அதை விட்டு வெளியேறினார், வெஸ்லி அதைக் கண்ணூற்றார். வெஸ்லி, ஒயிட் பீல்ட், ஜார்ஜ் ஒயிட் ஃபீல்ட், ஆஸ்பரி மற்று இவர்களைப் போல் இன்னும் அநேகர் மகத்தான எழுப்புதல் பிரசங்கிகளாக இருந்தார்கள். அந்நாளில் இவர்கள் உலகம் இரட்சிப்படைய காரணமாயிருந்தார்கள். அந்த பிலதெல்பியா சபையின் காலத்தில் அவர்களுக்கு ஒரு எழுப்புதல் உண்டாயிற்று. இங்கிலாந்தும், அமெரிக்காவும் இரட்சிப்பைக் கண்டடைய அவ்வெழுப்புதல் காரணமாயிற்று. அவர்கள் கூட்டங்களில், புறம்பே தள்ளப்பட்டு, “உருளும் பரிசுத்தர்” என்று அழைக்கப்பட்டனர். மெதோடிஸ்டுகள் மேல் தேவனுடைய வல்லமை இறங்கி, அவர்கள் தரையில் வீழ்ந்தபோது, அவர்கள் மேல் தண்ணீர் தெளித்து, அவர்களுக்கு விசிறி விட்டிருக்கின்றனர். அது உண்மை. தேவனுடைய வல்லமையின் கீழ் அவர்கள் இருந்தபோது அவர்கள் மிகவும் துள்ளிக் குதித்தனர். அவர்களிடம் துள்ளிக் குதித்தல்கள் உண்டாயிருந்தன. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அசைக்கப்பட்ட பொழுது, அந்நாட்களில் அவர்கள் இவ்வாறு துள்ளிசாடியிருக்கின்றனர். இப்படியாக இருக்கிறது. மெதோடிஸ்டுகளின் வரலாறு. அதிலிருந்து போலிகள் வெளிவந்தனர். ஆனால் இப்பொழுது அவர்கள் ஒரு மதஸ்தாபனமாக ஆகிவிட்டனர்.

94186 அவர்கள் இந்த மெதோடிஸ்டு, பழைமையான மெதோடிஸ்டு, அந்த மெதோடிஸ்டு, இந்த மெதோடிஸ்டு, என்றெல்லாம் ஏற்படுத்திக் கொண்டு, இறுதியில் இப்பொழுது மெதோடிஸ்டுகள் தங்களுடைய பாடல் புத்தகங்களிலிருந்து, “இரத்தம்” என்ற வார்த்தையையே அகற்றிவிட விரும்புகிற அளவிற்கு வந்துவிட்டார்கள். 187 அன்றொரு நாள் இரவில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண (என் தாயார் என்னைக் கூப்பிட்டார்கள்.) அதில் தோன்றிய இண்டியானாவிலுள்ள மெதோடிஸ்டு போதகர் ஒருவர், சபையில் சுழன்று ஆடும் ராக் அண்டு ரோல் நடனத்தை கற்பித்துக் கொடுக்கிறோம். அவர் அந்த நிகழ்ச்சியில் “சபைக்குள் இருக்க வேண்டிய இந்த அழகான கலையை நாம் காணத் தவறிவிட்டோம்” என்பது ஒரு அவமானமாயுள்ளது என்று கூறினார். 188 அது ஒரு கள்ளத்தீர்க்கதரிசிக்குள் இருக்கும் பிசாசு! உண்மையே! நான் இவ்வாறு சொல்வதின் மூலம் உங்களுடைய உணர்வுகளை புண்படுத்த விரும்பவில்லை, சகோதரனே, அது தேவனுடைய சத்தியமாயிருக்கிறது. இவ்வாறு கூறுவதினால் நான் ஒரு வேளை உங்களை கோபமடையச் செய்தாலும், உங்களை வேதவாக்கியங்களை படிக்கச் செய்து, தேவனோடு உங்களை சரிபண்ணிக்கொள்ளும்படி செய்வேனேயல்லாமல், இதை உங்களுக்குக் கூறாமலிருப்பதினால், நீங்கள் முடிவில் கைவிடப்பட்டிருக்க நான் விரும்பமாட்டேன். இப்பொழுது நீங்கள் என்னை விரும்பாமலிருக்கலாம். ஆனால் ஒரு நாளில், நீங்கள் என் தோளில் உங்கள் கையைப் போட்டு, “சகோதரன். பிரான்ஹாமே, அது சத்தியமாயிருக்கிறது” என்று கூறுவீர்கள். இங்கே இப்பொழுதே, அவர்கள் அதற்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள். அங்கேதான் அவர்கள்…அது அங்கே தான் இருக்கிறது. வேதம் அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று கூறியிருக்கிறது.

95189 வெஸ்லிக்கு பிறகு; வெஸ்லி அதைச் செய்தாரென்றால், அதற்குப் பிறகு பெந்தெகொஸ்தேயினர் வந்தார்கள். அவர்கள் வரங்கள் திரும்பளிக்கப்படுதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் போன்றவற்றை பெற்றார்கள். 190 எவ்விதமாக தானிய விதையானது நிலத்திலிருந்து முளைத்தெழும்பி வருகிறதோ, அதுபோல, முதலாவதாக அவ்விதை பூமியில் விதைக்கப்பட்டதும், அழுகுகிறது. அதன் பிறகு இரண்டு முளைகள் வருகின்றது. அதன்பின்னர் அது…நீங்கள் ஒரு தானிய வயலுக்குச் சென்று பாருங்கள். அந்த முளையானது வளர்ந்து பயிரில் பட்டுக்குஞ்சம் போன்ற அமைப்பு உண்டாகிறது. இது முதலில், லூத்தரனாக இருந்தது. பட்டுக்குஞ்சம், இது என்னவாயிருந்தது! மெதோடிஸ்டு, மகரந்தம், சகோதரசிநேகம், சுவிசேஷ ஊழியம், மகரந்தம் மற்றவைகளுக்குள் செல்லுதல். 191 ஏன், இயற்கையே இதற்குச் சபைக் காலங்களைப் பற்றிக் கூறுகிறது. லூத்தரின் காலத்தின் குழப்பமான நிலையிலிருந்து…மெதோடிஸ்டு காலம் வெளிவருகிறது. வந்து, சகோதர நேசத்தாலே சுவிசேஷ காலத்திற்குள் பிரவேசிக்கிறது.மிஷினரி ஊழியத்தின் காலம் அது. மெதோடிஸ்டுகளின் காலம் தான் உலகம் இதுவரை அறிந்திராத மகத்தான மிஷினரி ஊழியத்தின் காலத்தை அளித்தது. அது உண்மை. அது தன் மகரந்தப் பொடியை எங்கும் தெளிந்தது.

96192 அதிலிருந்து என்ன புறப்பட்டு வந்தது? பயிரின் குஞ்சத்திலிருந்து தானியத்தின் கதிரானது வந்தது. அதுதான் பெந்தெகொஸ்தேயினர். பூமியில் விதைக்கப்பட்ட தானியத்தைப் போலவே, மேலே வருவதும் இருக்கிறது. இலையல்ல, பட்டுக்குஞ்சம் அல்ல, ஆனால் ஒரு தானியமணி. பெந்தெகொஸ்தேயினர் தற்போது, அந்த தானிய மணியின் மேல் பூஞ்சாணம் பிடித்துப் போனதாக ஆக்கிவிட்டார்கள். அதினால் அந்த மணியையே பார்க்க இயலாதபடி ஆகிவிட்டது. இப்போது, அதை சுத்தம் பண்ண வேண்டிய வேளையாக இருக்கிறது. ஆமென்! பெந்தெகொஸ்தேயினர் என்ன செய்தார்கள்? மெதோடிஸ்டுகளைப் போலவே இவர்களும் செய்தனர். ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொண்டு ஒரு சாரர் தங்களை “நாங்கள் அசெம்பிளீஸ் ஆஃப்காட்” என்று அழைத்துக் கொண்டனர். இன்னொரு கூட்டத்தினர் “நாங்கள் பெந்தெகொஸ்தே பரிசுத்தம்” என்று அழைத்துக் கொண்டனர். மற்றொரு கூட்டத்தினர் “நாங்கள் ஒருத்துவக் கூட்டத்தினர்” என்றனர். “நாங்கள் இருத்துவ கூட்டத்தினர்” என்றனர். ஏனையோர் இப்படியாக அவர்களில் அநேக பிரிவினர் தோன்றிவிட்டனர். என்னே! ஒன்று ஒரு திமில் ஒட்டகம், இன்னொன்று இரு திமில்கள் உள்ள ஒட்டகம், மற்றது மூன்று திமில்கள் உள்ள ஒட்டகம், இப்படியாக பல்வேறு கூறாக உள்ளனர். ஓ, இப்படிப்பட்ட வெவ்வேறு வகையான ஸ்தாபனங்கள் அறுபது அல்லது முப்பது அல்லது நாற்பதுக்கு மேல் உள்ளனர்.

97193 அவர்கள் என்ன செய்தனர்? மறுபடியும் ரோமானியக் கொள்கைக்குள் போய், ரோமன் கத்தோலிக்க சபையின் ஞானஸ்நானத்தை கொடுத்தனர். வேதத்தில் எவராவது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டனரா என்பதை எனக்கு காண்பிக்குபடி பெந்தெகொஸ்தேயினரை நான் கேட்கிறேன். கத்தோலிக்க சபையைத் தவிர அதற்கு வெளியில் அதற்கு முன்பு, வேறு எவராவது எப்பொழுதாவது இவ்வாறு ஞானஸ்நானம் கொடுத்தனர் என்பதை எனக்கு எந்த பேராயராவது, போப்பிற்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ளவராது, எந்தப் போதகராவது காண்பிக்கட்டும் என்று நான் கேட்கிறேன். லூத்தர் கத்தோலிக்கத்தை விட்டு வெளியேறும்போது, தன்னுடன் அந்த ஞானஸ்நானத்தையும் மற்றும் கத்தோலிக்க மதத்தின் ஞான உபதேச மற்றும் ஏனைய காரியங்களையும் கொண்டுவந்தார். அதன்பின் வந்த மெதோடிஸ்டுகள் அதில் தொடர்ந்து நீடித்தனர். பெந்தெகொஸ்தேயினரே, நீங்கள் வெட்கமடைய வேண்டும்! சுத்தப்படுத்துங்கள்! தேவ வார்த்தைக்கு திரும்பிச் செல்லுங்கள்! மனந்திரும்புங்கள், இல்லாவிடில் தேவன் உங்கள் நடுவிலிருந்து விளக்குத்தண்டை அகற்றிவிடுவார். உங்கள் நடுவில் நீங்கள் பெற்றிருக்கும் ஒளியும் அகன்றுவிடும். ஆமென்! சரி.

98194 சபைக்கு தலைவராயிருந்த பரிசுத்த ஆவியை அவர்கள் அகற்றிவிட்டு, மனிதனுடைய ஒழுங்காகிய பரிசுத்த ஒழுங்கு என்னப்பட்டதை கொண்டு வந்து அதை சபையின் மேல் வைத்தனர். “போதகர்கள், மேய்ப்பர்கள்” என்று அவர்களை அழைக்கவில்லை. (நாம் போதகர்கள், “மேய்ப்பர்கள்” என்று அழைக்கப்பட வேண்டும், அதுவே போதகர் என்ற வார்த்தையுடன் பொருள்படும்.) ஆனால் “பிதா, போப்பாண்டவரின் அடுத்த ஸ்தானத்தில் உள்ள குருவானவர், தலைமை பேராயர், பொதுக்கணக்காணி” என்றெல்லாம் அழைக்கப்படலாயினர். இந்தக் காரியத்தை உண்மையானவர்கள் வெறுத்தனர். அவர்கள் இவ்விதமான கிரியைகளை வெறுப்பதைக் குறித்து தன்னுடைய அங்கிகாரத்தை தெரியப்படுத்தும்படி தேவன், “நானும் இதை வெறுக்கிறேன்” என்றார். ஏனெனில், சபைக்கு பொதுக்கண்காணி, தலைமைப் பேராயர், போப் ஆகியவற்றை தேவன்தாமே வகிக்கிறதாக இருக்க வேண்டும். அவர் தனிப்பட்ட நபரோடு கிரியை செய்து இடைபடுகிறார். ஒரு ஸ்தாபனத்துடன் அல்ல, ஒரு தனி நபரிடம் தான் தேவன் கிரியை செய்கிறார். 195 இப்பொழுது விசித்திரமான ஒரு காரியம்…நாம் முடிக்கப் போகிறபடியால், கவனியுங்கள். நமக்கு இன்னும் ஒரு வசனம் உள்ளது.

99196 இங்கே தான் கத்தோலிக்க சமயத்தின் கோட்பாடு ஆரம்பமாகிறது. அதாவது, அப்போஸ்தலப் பட்டத்திற்கு வம்சா வழியில் வாரிசுமுறை. எத்தனை பேர்கள், அதை அறிவீர்கள்? அப்போஸ்தல உத்தியோகத்திற்கு வம்சவழியில் வாரிசாக ஏற்படுதல், கத்தோலிக்க சமயத்தவர், “இன்றைக்கு இருக்கும் போப் அப்போஸ்தலனாகிய பேதுருவின் வாரிசு” என்கின்றனர். அப்போஸ்தல உத்தியோகத்திற்கு வம்சாவழியாக வாரிசாக வந்திருக்கிறவர் என்கின்றனர். அப்படியொரு காரியம் கிடையவே கிடையாது. எவ்வாறு உங்களுடைய மாம்சீக, பால் உணர்வினால்…பரிசுத்தமான ஒரே தாய், தந்தைக்குப் பிறந்த இரட்டையர்கள் ஏசாவும், யாக்கோபும் ஆவார்கள். ஆனால் அவர்களில் ஒருவன் ஒரு கிறிஸ்தவனாகவும், அவர்களில் மற்றவன் ஒரு பிசாசாகவும் இருந்தான் என்பதை பார்த்தீர்களா? உ—ஊம். அது எப்படி முடியும்? ஏனெனில் பாவம் பாவம் தான். பாலுணர்வு பாலுணர்வு தான், ஆனால் தேவனோ புதிய பிறப்பைக் கொடுக்கிறார். 197 தேவன் நம்மை உலகத்தோற்றத்திற்கு முன்னரே தெரிந்தெடுத்திருக்கிறார். அதை நீங்கள் அறிவீர்களா? வரலாற்றாளாலர்கள் எழுதியுள்ளதை நாம் வாசிக்கும் வரைக்கும் காத்திருங்கள். ஐரேனியஸ் எவ்வாறு உலத்தோற்றத்திற்கு முன் தேவன் அவரை தெரிந்துகொண்டதற்காக எவ்வாறு ஸ்தோத்திரம் செலுத்தினார். பரிசுத்தன் மார்டினும் மற்றவர்களும் அதற்காக எவ்வாறு அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள். தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; “…ஏனென்றால்…” ஜனங்கள் அவரைக் குறித்துப் பேசுகையில், “அவர் உலகத் தோற்றத்திற்கு முன்பே தெரிந்துகொள்ளப்பட்டார்” என்றனர். அது வேதப்பூர்வமானது. அச்சகோதரர்கள் தேவனோடு ஓரணியில் நின்றிருந்தனர். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளில் இருண்ட யுகத்தின் வழியாக வந்த இந்த சபையானது, விளக்கில் கரும்புகை பிடித்தல் எவ்வாறு விளக்கொளியை மறைக்குமோ, அது போல ஒளியை மறைத்த நிலையில் இருக்கிறது. ஆனால், “சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்” என்று கர்த்தர் கூறினார்.

100198 வம்ச பரம்பரையாக அப்போஸ்தலப் பட்டத்திற்கு வாரிசு உருவாகுதல், ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். ஒருவர் போப்பாக ஆக வேண்டுமென்றால் போப்புகளின் வம்சாவழியில் நீங்கள் வந்தவராக இருக்க வேண்டும். ஓ, என்னே, என்னே! அர்த்தமற்றது. சபையின் ஜனங்கள்…பரிசுத்தமாய், நீதியாய் அல்ல, ஆனால் சபை ஜனங்கள்…தங்கள் பாவத்தை விட்டு வெளியே வரவும், அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படவும், குருமார்களிடம் பாவ அறிக்கை செய்யவும், அதற்காக சபையின் குருவானவர் ஜெபிக்க வேண்டுமானால் அவருக்கு பணம் கட்டவேண்டும். 199 பிராடெஸ்ட்டெண்டுகளும் அதே போல செய்கின்றனர். அவர்கள்…தங்கள் மேய்ப்பரை முதுகில் தட்டிக் கொடுத்து, உலகத்தாரைப் போல ஜீவிக்கிறார்கள். மேய்ப்பன் எப்படி தேவனை அறிந்திருக்கவில்லையோ, அதேபோல் சபையோரும் தேவனை அறிந்திருக்கவில்லை. இந்த விதமான நிலையில், அந்த மேய்ப்பனுடைய சபையில் தங்கியிருக்க அனுமதித்து, அவர்களை சபையின் அங்கத்தினர்கள் என்று அவர் அழைக்கிறார்; அவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் அவர்களுக்கு அறிவித்து விடுகிறார். அவர்கள் மறுபடியும் பிறவாதபடியினால், அந்த நாளில் எந்த அளவுக்கு ஏமாறப் போகிறார்கள்! பரிசுத்த ஆவியைப் பெறாமல் இருந்தால் நீங்கள் இழக்கப்படுவீர்கள். பரிசுத்த ஆவியினாலேயல்லாமல் ஒருவனும் “இயேசுவே கிறிஸ்து” என்று கூறமுடியாது.

101200 எபேசு சபைக்காலத்தில் இருந்த உண்மையான சபையானது, இப்படிப்பட்ட மெருகேற்றப்பட்ட, புத்திசாலித்தனமான பேச்சுகளினால், ஏமாறவில்லை, வஞ்சிக்கப்படவில்லை. அவர்…அதை அவர்கள் வெறுத்தனர். அவர்கள் வஞ்சிக்கப்பட முடியாது என்று அவர்கள் அறிந்திருந்தனர். 201 இந்த நபர்கள் கொண்டிருந்த கள்ள வெளிப்பாடுதான் நிக்கொலாய் மதஸ்தரின் போதகமாயிருந்தது. அது தேவனுடைய வார்த்தையோடு ஒத்துப்போகவில்லை. “ஒரு குருவானவரிடம் அறிக்கை செய்தல்” என்றொரு காரியம் போதிக்கப்பட்டுள்ளது என்பதை வேதத்தில் எங்கு கண்டீர்கள் என்பதை எனக்குச் சொல்லுங்கள் பார்க்கலாம். பாவமன்னிப்புக்காக “தெளித்தல்” என்றொரு போதகம் வேதத்தில் போதிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் எங்கே வாசிக்கிறீர்கள் என்பதை எனக்குச் சொல்லுங்கள்? யாராவது, தங்களது பாவமன்னிப்புக்கென, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” யின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்களா என்பதை நீங்கள் வேதத்தில் எங்கே காண்கிறீர்கள்? “ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுத்து பெயரை சபையின் புத்தகத்தில் பதிந்து விட்டால் எல்லாம் முடிந்தது” என்ற இந்த எல்லாக் காரியத்தையும் நீங்கள் எங்கே காண்கிறீர்கள்? வேதத்தில் நீங்கள் எங்கே பார்க்கிறீர்கள்? அது என்ன? தேவ வார்த்தையோடு சரியாக இல்லாத நிக்கொலாய் மதஸ்தராகிய குருத்துவம் தான் அது. “நான் அவைகளை வெறுக்கிறேன்” என்று தேவன் கூறினார். வேத வார்த்தைக்கு திரும்பி வாருங்கள்! சகோதரர்களே, இது மிகவும் கடினமாக இருக்கிறது என்று நான் அறிவேன். ஆனால் நான் அதற்கு பொறுப்பல்ல, வாக்குவாதம் செய்வதாயிருந்தால் இயேசுவினிடத்தில் அதைச் செய்யுங்கள்.

102202 வார்த்தைக்கு முரணாக உள்ள வெளிப்படுத்தல்கள். அவர்களை தேவன் “பொய்யர், கள்ள அப்போஸ்தலர்கள், கள்ளத் தீர்க்கதரிசிகள்” என்றே அழைத்தார். ஆனால், உண்மையான சபையோ, பரிசுத்த பவுலுடைய மூல உபதேசத்தையும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், பவுல் போதித்த தேவனுடைய வார்த்தையை உணர்த்தும்படி தொடர்ந்து வரும் அற்புத அடையாளங்களையும் விடாமல் பற்றிக் கொண்டவர்களாயிருந்தனர். ஆமென்! தெளித்தல் என்ற வார்த்தையை தேவன் எங்காவது உறுதிப்படுத்தியுள்ளாரா என்பதை எனக்கு காட்டுங்கள் பார்க்கலாம். வெறுமனே கைகளை குலுக்கிக் கொள்வதையும், சபையின் பதிவேட்டில் தன் பெயரை பதிந்து கொள்வதையும், தேவன் எங்காவது உறுதிப்படுத்தி, அந்நிய பாஷையில் பேசுதலையும் மற்றும் மகத்தான காரியங்களையும் செய்திருக்கிறாரா என்பதை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். வெறுமனே கைகுலுக்கிக் கொண்டு, சபையின் புத்தகத்தில் பெயரை பதிவு செய்து கொண்டிருந்தால் அதுவே போதும் என்றெண்ணி, இன்னமும் புகையிலை மென்றுகொண்டு, புகைத்துக்கொண்டு, மது அருந்திக்கொண்டு, பொய்களை கூறிக்கொண்டு, சீட்டு விளையாடிக்கொண்டு, கொஞ்சம் களியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்…ஓ, இரக்கம்! சிநேகிதனே, அது மாம்சமான, கள்ள தீர்க்கதரிசி, ஆம் ஐயா.

103203 தேவனுடைய வழி பரிசுத்தமானது. இங்கிருக்கிற கிறிஸ்துவின் சரீரத்தின் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் இவ்விஷயம் தெரிந்திருக்கட்டும்! நீங்கள் ஒரு பரிசுத்த ஜீவியத்தைச் செய்கிற வரைக்கிலும், தேவன் உங்கள் பலியை ஏற்றுக்கொள்கிறதில்லை. பலியானது, பரிசுத்தமான கரங்களினால் படைக்கப்பட வேண்டும். அது …?… சரி. பிரதான ஆசாரியனானவன், தேவ சமுகத்தில் பலி செலுத்துவதற்கு முன்னால், அதற்காக அங்கு அவன் நடந்து உள்ளே வருவதற்கு முன்பே, பரிசுத்தமாக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, பரிமள தைலம் பூசப்பட்டு இருக்க வேண்டும். அது உண்மைதானே? அப்படியில்லாமல் உங்கள் அயலகத்தாரோடு சண்டையிட்டுக்கொண்டு, ஏமாற்றி, திருடிக்கொண்டும், வாக்குவாதம் செய்து கொண்டும், சண்டையிட்டுக்கொண்டும் இருந்து விட்டு, இங்கே உள்ளே வந்து, “ஓ தேவனாகிய கர்த்தாவே! இயேசுவுக்கு துதி! அல்லேலூயா!” என்றெல்லாம் எவ்வாறு கூற முடியும்? 204 “அவர்களில் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன்” என்று மக்கள் கூறுகிறார்கள். அதினால் அவர்கள் பரிசுத்த ஆவியினைப் பெற்றிருக்கிறார்கள் என்றாகிவிடாது. “அவர்கள் சப்தமிடுவதை நான் கேட்கிறேன்” என்று சொல்லலாம். அதுவும் கூட அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறார்கள் என்றாகிவிடாது. பரிசுத்த ஆவி என்பது ஜீவனாகும்.

104205 (எபிரெயர் 6-ம் அதிகாரத்தில்) வேதம், “தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலம்,” “ஆனால் முட்செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ, சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு” என்று உரைத்துள்ளது. 206 “சூரியனானது நல்லோர் மேலும், தீயோர் மேலும் உதிக்கிறது. மழையானது நீதியுள்ளவர்கள் மேலும், அநீதியுள்ளவர்கள் மேலும் பொழிகிறது.” மழையானது கோதுமைப் பயிரை (அப்படி நாம் அதை அவ்வாறு அழைப்போம்) முளைக்கச் செய்ய வருகிறது. நிலத்திலுள்ள ஒவ்வொரு களைக்கும் கூட அம்மழை வருகிறது. கோதுமைப் பயிர் தாகமாயிருக்கிறது. அதேபோல களையும் தாகமாயிருக்கிறது. கோதுமைக்கு நீர் பாய்ச்சுகிற அதே மழை தான் களைக்கும் நீர் பாய்ச்சுகிறது. அந்த சிறிய கோதுமை பயிரானது. தன் தலையை உயர்த்தி, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! அல்லேலூயா! இந்த மழை கிடைத்ததற்காக நான் மகிழ்கிறேன்!” என்று சொல்லுகிறது. பக்கத்தில் இருக்கும் களையுங்கூட “தேவனுக்கு மகிமை! தேவனுக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! மழை கிடைத்ததற்காக நான் மகிழ்கிறேன்” என்று கூறுகிறது. 207 “ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை நீங்கள் அறிவீர்கள்.” அது சரி. “அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அவர்களிய அறிவீர்கள்.”

105208 7-ம் வசனம், அதன் பின்னர் நாம் முடிக்கப் போகிறோம், இது கடைசி சபைக் காலமாய் உள்ளது. இப்பொழுது நாம் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் தாமதமாக முடிப்போம், அப்படியே ஒரு நிமிடம். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன்கேட்கக்கடவன்: யங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன் என்றெழுது. 209 ஜெயங்கொள்ளுகிறதற்கு உங்களுக்குள்ள வழி இதுவே என்பதைப் பாருங்கள், நண்பர்களே. முதலில் நீங்கள் ஜெயங்கொள்ள வேண்டும். அதன்பிறகு தான் நீங்கள் கனியைப் புசிக்க முடியும். அது ஜெயங்கொள்ளுகிறவனுக்கானதாயுள்ளது. கடந்த இரவில் உண்டாயிருந்த நம்முடைய உபதேசத்தை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? யோவான் எந்த ஒன்றையும் காணும் முன்னர், அவன் முதலில் ஆவிக்குள்ளாக வேண்டியதாயிருந்தது. “அவர் ஒரு பாப்டிஸ்டு அல்லவென்றால், நான் அவருக்கு செவிகொடுக்க மாட்டேன்” என்று எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்? “அவர் ஒரு பிரஸ்பிடேரியன் அல்லவென்றால், நான் அவருக்கு கொடுக்க மாட்டேன்.” “என் சபை போதிக்கிற விதமாக சரியாக அவர் போதிக்காவிடில் நான் செவிகொடுக்க மாட்டேன்,…” என்றெல்லாம் கூறுகிறீர்கள். நீங்கள்—நீங்கள்—நீங்கள் ஜெயங்கொள்ளப் போகிறதில்லை. நீங்கள் இன்னும் ஆவிக்குள்ளாகவில்லை. நீங்கள் யாவரும் ஒழுங்கற்றுக் காணப்படுகிறீர்கள். 210 தேவனுடைய ஆவிக்குள்ளாகி, “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். நீர் பொருத்தமானது என்று காண்கிற எதையும் எனக்கு வெளிப்படுத்தி அதை என்னிடம் கொண்டு வாரும்” என்று அவரிடம் கூறுங்கள். அப்பொழுது நீங்கள்—அப்பொழுது நீங்கள் சரியான வழியில் வந்து விடுவீர்கள். அது உண்மை.

106211 வேதாகமத்தில் ஆதியாகமத்தில் மூன்று இடங்களிலும், வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்று இடங்களிலும் ஜீவ விருடசத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். அன்றைக்கு அதைக் குறித்து நாம் பார்த்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஞாயிற்றுக்கிழமை, நேற்று பார்த்தோம் …பிசாசானவன் வேத வாக்கியங்கள் யாவையுமே வெறுக்கிறான். ஆனால் அவன் ஆதியாகமம் மற்றும் வெளிப்படுத்தின விசேஷத்தை மிகவும் மோசமாக வெறுக்கிறான். ஆதியாகமம் மிகவும் நம்பத்தகுந்ததால், அவன் அதை எதிர்க்கிறான். அதில் கூறப்பட்டுள்ளவைகள் உண்மையல்ல என்று மக்கள் நம்பும்படி செய்ய அவன் விரும்புகிறான். “ஆதியாகமத்தில், ஆதியில் அவர்களுக்கு என்ன நேரிட்டது என்று தேவன் கூறினாரோ அதன்படி காரியம் நடக்கவில்லை. இந்த சிருஷ்டிப்புக்கு இவ்வாறு உள்ளதற்கு காரணம் மற்றொரு காரியம்” என்று அவன் கூறுகிறான். ஆகவே அந்த விதமாக அவன் தாக்குகிறான். வெளிப்படுத்தின விசேஷத்தை விட்டு மக்களை சாத்தான் விலகிப் போகச் செய்கிறான், ஏனெனில் அப்புத்தகம், இயேசுவே தேவன் என்றும், சாத்தான் அந்த பிசாசு, (அவன் நாசமடைகிறான்) என்றும், தேவனுடைய வாசஸ்தலத்திற்கு போகப் போகும் பரிசுத்தமாக்கப்பட்ட சபையின் மகிமையைப் பற்றியும், கள்ளத் தீர்க்கதரிசிக்கு ஏற்படப்போகும் முடிவைப் பற்றியும், மற்று பொய்யையும், தீங்கானவைகளையும் நடப்பிக்கிற அனைவரும் அக்கினிக்கடலில் தள்ளப்படப் போகிறதைப் பற்றியும் வெளிப்படுத்துகிறது. அவர்களை இப்புத்தகத்தை விட்டு பிசாசானவன் விலக்கியே வைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஆனால் இவ்விரு புத்தகங்களும் பரதீசியிலுள்ள ஜீவவிருட்சத்தைக் குறிப்பிடுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

107212 இப்பொழுது, “மரம்” என்பதைப் பற்றி ஒரு நிமிடம் பார்ப்போம். பரிசுத்த யோவான் எழுதிய சுவிசேஷம் 6ம் அதிகாரம். நீங்கள் வேண்டுமானால் குறித்துக் கொள்ளுங்கள். இயேசு, “நானே ஜீவ அப்பம்” என்று கூறினார். இப்பொழுது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 213 இதோ இங்குள்ள இவ்விரு கம்பங்களையும் நமது பாடத்திற்கு அடையாளக் குறிப்பாக நாம் பயன்படுத்தப் போகிறோம். எனவே, இப்பொழுது முடிக்கும் முன்னர், இங்கே எனது வலது பக்கத்தில் உள்ளது தோட்டத்தில் இருந்த “ஜீவ விருட்சம்” என்ற மரமாகும். எனது இடது பக்கத்தில் உள்ள மரம், தோட்டத்தில் இருந்த “நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்” என்ற மரமாகும். அங்கே “ஜீவ விருட்சம்” என்று ஒரு மரம். “நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்” என்று ஒரு மரமும் இருந்ததாக வேதம் கூறுவதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? இப்பொழுது, மனிதனானவன், இந்த ஜீவ விருட்சத்தைக் கொண்டு தான் பிழைக்க வேண்டும் என்று இருந்தது: அவன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை தொடக்கூட வேண்டாம் என்று சொல்லப்பட்டிருந்தான். அது சரிதானே? நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை முதன் முதலாக தொட்ட அந்த நிமிடமே அவன் தன்னுடைய சிருஷ்டிகரிடமிருந்து தன்னைத் தானே வேறு பிரித்துக் கொண்டான். அவன் முதலில் முதலாக நன்மை தீமை அறியத்தக்க கனியை கடித்த அதே வேளையில் தானே, தேவனோடிருந்த, தன்னுடைய—தன்னுடைய ஐக்கியத்தை இழந்துவிட்டான். இப்பொழுது அதைப் பற்றி தீவிரமாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய குறிப்புகளை எழுதி கொண்டிருக்கிற உங்களுக்கு, நீங்கள் அதை சரியாகப் புரிந்து கொள்ளும்படியாக தருணம் அளிக்கிறேன், ஏனெனில் நீங்கள் இதை தவறவிடக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.

108214 பரிசுத்த யோவான் 6-ம் அதிகாரத்தில் இயேசு, யூதர்கள் ஒரு கிணற்றிலிருந்து தண்ணீர் குடித்து, தங்கள் கைகளை உயர்த்தி, தங்கள் பிதாக்கள் ஆவிக்குரிய கன்மலையிலிருந்து தண்ணீர் குடித்ததாகக் கூறி, அதை ஒரு பரிகாசமான செயலாக செய்து கொண்டிருந்தனர். இயேசு, “வனாந்தரத்தில் இருந்த அந்தக் கன்மலை நானே” என்றார். 215 அவர்கள் அவரிடம், “ஆபிரகாம் உண்டாகிறதற்கு ‘முன்னமே’ நான் இருக்கிறேன்” என்று சொல்லுகிறாயே, உனக்கு ஐம்பது வயது கூட ஆகவில்லையே, அப்படியிருந்தும், ஆபிரகாமை நீ ‘கண்டதாகக் கூறுகிறாயே?’ இப்பொழுது நீ பைத்தியம் பிடித்தவன் என்றும், நீ ஒரு பிசாசு என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றனர். புரிகிறதா? 216 அதற்கு அவர், “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார். இருக்கிறேன் என்பவர் எரிகின்ற முட்செடியில் மோசேக்கு தரிசனமானார். “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார். “இருந்தேன்” என்று அவர் கூறவில்லை. 217 இப்பொழுது, அற்புதங்களின் காலம் கடந்து போய் விட்டது என்று கூறுகிறவர்களே, அப்படியென்றால், வேதத்தில் “இருந்தவராகிய நான், அந்த மகத்தான இருந்தவராகிய நான்” என்று வேத வாக்கியத்தை உங்களுக்கென நீங்கள் திருத்தியே வாசித்துக் கொள்ள வேண்டும். 218 “இருந்தேன்” என்பதாக அல்ல, “இருந்தேன்” என்பதாகவும் அல்ல, “இருக்கிறேன்”, அதுவே எல்லா நேரத்திலும் கூறப்பட்டது. அவர் நித்தியமானவர். “இருக்கிறேன்” என்ற வார்த்தை நித்தியமானதாய் உள்ளது, அவர்களுடைய எல்லா காலத்திலும், எல்லா நேரத்திலும், ஏழு பொன் குத்துவிளக்குகள் மத்தியிலும், ஒவ்வொரு சபையிலும், ஒவ்வொரு ஸ்தலத்திலும், ஒவ்வொரு இருதயத்திலும் “இருக்கிறேன்” என்பவராக இருக்கிறார். (“இருந்தேன்” என்பதாக அல்ல, “இருப்பேன்” என்பதாகவும் அல்ல.) “நான் எப்படி கடந்த காலத்தில் இருக்கிறவராக இருந்தேனோ அதைப் போலவே இப்பொழுதும் இருக்கிறேன்” என்கிறார். பாருங்கள்? “எக்காலத்திலும் இருக்கிறேன்” என்பதாகவே இருக்கிறார்.

109219 “எங்கள் பிதாக்கள்…நாங்கள் உன்னை அறியோம். நீ ஒரு பிசாசென்று அறிவோம்” என்று யூதர்கள் கூறினார்கள்…“வனாந்தரத்தில் எங்கள் பிதாக்கள் நாற்பதாண்டுக் காலம், மன்னாவைப் புசித்தார்கள்” என்று கூறினார். 220 இயேசு “அவர்கள் ஒவ்வொருவரும் வனாந்தரத்தில் மரித்தார்கள்” என்று கூறினார். அது சரி தானே? அவர்கள் யாவரும் மரித்தார்கள். “ஆனால், நானோ…” ஓ! “நானே பரலோகத்திலுள்ள தேவனிடமிருந்து இறங்கி வந்த ஜீவ அப்பம் …ஒரு ஜீவ அப்பம். அந்த அப்பத்தை புசிக்கிறவனெவனும் மரிப்பதில்லை” என்று இயேசு கூறினார். 221 “இந்த மனிதன் தன் சரீரத்தையே புசிக்கக் கொடுப்பானோ?” எனவே அவர்கள், “இப்பொழுது அவன் நிச்சயமாகவே பைத்தியம்” என்றனர். 222 ஜீவ அப்பமானது, ஜீவ விருட்சத்திலிருந்து வந்ததாகும். அதிலிருந்து தான் ஏதேன் தோட்டத்தில் அவர்கள் புசிக்க வேண்டுமென்று இருந்தது. அவரே ஜீவ விருட்சமாயிருந்தார். இப்பொழுது, ஜீவ விருட்சம் என்பது ஒரு நபராக இருந்ததென்றால், அப்பொழுது நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் என்பதும் ஒரு நபராகத்தான் இருந்தது. சர்ப்பத்திற்கு ஒரு வித்து இருக்கவில்லை என்று கூறுகிறார்களே! ஜீவனானது மனிதனால் வருகிறது என்றால், ஸ்திரீயினால் மரணம் வருகிறது. ஆகவே, இவள்தான் மரண விருட்சமாயிருந்தாள்.

110223 இந்த (சர்ப்பமானது) ஸ்திரீயானவளை கெடுத்த பிறகு, அவள் (“சர்ப்பமானது என்னை வஞ்சித்தது” என்று கூறினாள். அது உண்மை. அவன் தரையில் ஊர்ந்து செல்லும் வெறும் ஒரு பாம்பல்ல. மிருகங்கள் எல்லாவற்றிலும் சர்ப்பமானது மிகவும் தந்திரமுள்ளதாயிருந்தது, அவன் மனிதனுக்கும், மனித குரங்குக்கும் நடுவில் இருந்ததான ஒரு மிருகம். ஒரு மிருகத்தின் வித்தானது ஒரு ஸ்திரீக்குள் சென்று கருத்தரிக்க முடியாது. ஆனால் இவனுக்கோ முடிந்தது. இவன் மனிதனுக்கு அருகாமையில் இருந்த ஒருவனாயிருந்தான். தேவன் அவன்மேல் ஒரு சாபத்தைப் போட்டு, அவனுடைய வயிற்றில் ஊர்ந்து செல்லவும், கால்கள் இல்லாமற்போகவும், அவனிலுள்ள எல்லா எலும்புகளையும் அகற்றிவிட்டு, மனிதனைப்போல் தோற்றம் தரும் அவனது தோற்றத்தையெல்லாம் மாற்றிப் போடவும் செய்தார். விஞ்ஞானமானது அதை நிலத்தில் தோண்டியெடுக்க முயன்று கொண்டிருக்கிறது. இது தேவனுடைய பரதீசின் மத்தியில் உள்ள தேவனுடைய இரகசியங்களில் மறைக்கப்பட்டுள்ளது. அங்கேதான் உங்களுடைய வெளிப்படுத்துதல் இருக்கிறது.

111224 அவள், காயீன் என்ற தனது முதல் மகனை பிறப்பித்தாள். (அது சரியா?) அவன் சாத்தானின் மகன், சாத்தானின் மகன், காயீனை சாத்தானின் மகன் அல்லவென்று நீங்கள் கூறினால், அவனில் வெளிப்பட்ட அந்த தீங்கு எங்கிருந்து—எங்கிருந்து வந்தது? தேவனுடைய குமாரனாகிய ஆதாமிடத்திலிருந்தா வந்தது? காயீனுடைய தந்தையாகிய பிசாசினிடத்திலிருந்தே வந்தது. காயீன் கொலை செய்தான். முதல் கொலைக்காரன் பிசாசாய், பிசாசின் குமாரனாயிருந்தான். 225 அதன்பிறகு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். காயீனின் வம்ச வரலாற்றைக் கவனித்துப் பாருங்கள். அந்த சந்ததியில் உதித்த ஒவ்வொருவரும் மகத்தான மனிதர்களாயும், விஞ்ஞானிகளாகவும் விளங்கினர். அதைப் பற்றி வேதத்தில் படித்துப் பாருங்கள். அவர்கள் கட்டிடங்களைக் கட்டினார்கள். உலோக வேலை செய்தார்கள். அவர்கள் விஞ்ஞானிகளாக விளங்கினார்கள். ஆனால், சேத்திலிருந்து வந்த அவனது வம்சத்தினரே, (ஆபேல் மரித்தான், அவன் இயேசுவுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறான், இயேசு மரித்தார். ஆபேல் மரித்தான், சேத் அவனது ஸ்தானத்தை எடுத்துக் கொண்டான். மரித்தல், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல்)…சேத்திலிருந்து, தாழ்மையான பயிர்த்தொழில் செய்வோர், ஆடு மேய்க்கிறவர்கள் ஆகிய இத்தொழில்களைச் செய்யும் சந்ததியினர் உதித்தனர்.

112226 இப்பொழுது இயேசு, “உங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தனர். ஆனால் அவர்கள் யாவரும் மரித்தார்கள். ஆனால் நானோ ஜீவ அப்பமாயிருக்கிறேன்” என்று இயேசு கூறினார். (ஜீவ அப்பம்—அது என்ன? அது ஏதேனிலிருந்து வந்ததாகும்.) “இந்த அப்பத்தைப் புசிக்கிற எவனும் மரிப்பதில்லை.” ஜீவ விருட்சத்தின் கனியை மனிதன் புசித்து என்றென்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்ய, ஜீவ விருட்சத்தை யாரும் தொடாதபடிக்கு, அதற்குப் போகும் வழியை காவல் செய்ய தூதனை தேவன் வைத்தார். அது சரியா? 227 காரணம் அவர்கள் இந்த மரத்தின் பேரிலேயே தொடர வேண்டியிருந்து மரிக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். அது சரிதானே? இந்த மரத்தின் கனியை புசிக்கிற வரைக்கிலும் அவர்கள் மரித்துக் கொண்டேயிருக்கத்தான் வேண்டும். நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திலிருந்து நீங்கள் புசித்துக் கொண்டிருக்கிற வரையிலும், நீங்கள் மரிப்பது நிச்சயமே …இப்பொழுது நாம் இந்த நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் என்னவென்று பார்ப்போம். அது என்ன செய்தது என்று பார்ப்போம். அது என்ன செய்கிறது என்று நாம் பார்ப்போம். முதலாவது காரியம், நாம் பார்ப்போம், அது…நாம் பார்ப்போம்…அது வெடி மருந்தைக் கண்டுபிடித்தது. அது நமது தோழர்களைக் கொல்கிறது. அது உண்மை, அது வெடி மருந்தினால் ஒருவரையொருவரைக் கொல்லுகிறது. அது நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திலிருந்து வந்த அறிவு. அடுத்ததாக நாம் செய்துள்ளதோ, என்னே, நாம் பார்ப்போம், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தைக் கொண்டு, நாம்—நாம் மோட்டார் வாகனத்தை கண்டுபிடித்தோம். அது வெடிமருந்தைக் காட்டிலும் கூடுதலாக மனிதரைக் கொல்லுகிறது. ஓ, ஆம்! இப்பொழுது நாம் ஹைட்ரஜன் குண்டுகளை தயாரித்துள்ளோம். தேவன் எதையும் அழிப்பதில்லை. மனிதன் தன்னுடைய அறிவினாலேயே தன்னை அழித்துக் கொள்ளுகிறான்.

113228 ஆனால் தேவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும், அவற்றையெல்லாம் தேவன் மீண்டும் எழுப்புவார். தேவன் தன்னுடையதொன்றையும் இழப்பதில்லை, இயேசு அவ்வாறு கூறினார், அது உண்மை, “இந்த அப்பத்தைப் புசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” என்றார். அது அவருடைய வாக்குத்தத்தமாயிருக்கிறது. இப்பொழுது தேவன்… 229 அவர்கள் தொடர்ந்து நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திலிருந்து மரித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதை விட்டு விட்டு, இந்த ஜீவ விருட்சத்தினிடத்தில் வந்து விட்டால் அவர்கள் என்றென்றும் ஜீவிப்பார்கள். 230 எனவே இப்பொழுது, ஒரு தூதனானவன் ஜீவ விருட்சத்தினிடத்தில் யாரும் நெருங்கி வராதபடிக்கு துரத்திக் கொண்டிருந்ததற்குப் பதிலாக, சபைகளின் தூதர்கள், “இது ஒவ்வொரு நபருக்கும் உரியது” என்று கூறி, ஜீவ விருட்சத்தினிடம் நெருங்கிப் போகத்தக்கதாக மனிதரை ஜீவ விருட்சத்தை நோக்கி துரத்திக் கொண்டிருக்கிறார்கள். அதினால் அவர்களை தேவனுடைய பரதீசின் மத்தியில் நிற்கிற ஜீவ விருட்சமாகிய இயேசு, கிறிஸ்துவின் நாமத்தினிடத்தில் திரும்பி வரச் செய்து கொண்டிருக்கிறார்கள். வ்யூ! என்னே! நீங்கள் அதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நாம் நம்புகிறேன். பரதீசின் மத்தியில் நிற்கிற ஜீவ விருட்சமானது, நீங்கள் அதின் கனியைப் புசித்து, தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாகி, என்றென்றும் ஜீவிப்பதற்காக இருக்கிறது. “என்னுடைய வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தினின்று நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.”

114231 சகோதரனே, சகோதரியே இப்பொழுது நான்…நான்…நிச்சயமாக…நான்—நான் நிச்சயமாக உங்கள் மனதை புண்படுத்தியிருக்கிறேன். ஆனால் நான்—நான் அவ்விதமாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருக்கவில்லை. புரிகிறதா? தேவன் அதை அறிவார். ஆனால் நான் இவ்விதமாகத்தான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஏனெனில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை உண்மையாக நீங்கள் கண்டு கொள்ளச் செய்ய அது தான் சரியான வழியாகும். இன்னும் நீண்ட காலம் நாம் தங்கியிருக்க வேண்டியதாயிருக்கும் என்று நான் நம்பவில்லை. நீங்கள் ஒரு ஸ்தாபனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால், நீங்கள் கிறிஸ்தவரல்லாதவர் என்பதாகச் செய்ய நான் முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை. அது அவ்வாறு இல்லை. மக்கள் சூழ்நிலைகளுக்கு பலியானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் பெற்றோர் யாவரும் எப்பொழுதுமே அவர்களை ஒரு சபை ஸ்தாபனத்தில் போய் சேரும்படி செய்துவிட்டனர். 232 ஆனால் சகோதரனே, நாம் பிரிந்து செல்லும் முன் ஒருகாரியம், இந்த ஒரு மேற்கோளை நான் உங்களுக்குக் கூறட்டும், தீர்க்கதரிசி கூறினார்…நீங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீர்களா? வேதமானது தீர்க்கதரிசிகளுக்கு செவி கொடுக்க வேண்டுமென கூறியுள்ளது. “ஒரு நேரமானது வரும். அது பகலுமல்ல, இரவுமல்ல, அது ஒரு விதமான மப்பும் மந்தாரமுமான நாளாக இருக்கும். ஆனால் சாயங்கால வேளையில், சூரியனானது அஸ்தமிக்கிறதற்கு முன்பு, வெளிச்சம் உண்டாகும்” என்று தீர்க்கதரிசியானவன் கூறியிருக்கிறான். அது சரிதானே?

115233 இப்பொழுது நமக்கு என்ன கிடைத்ததென்று பார்ப்போம். இப்பொழுது நாம் நோக்கிப் பார்ப்போம். பூலோக ரீதியாக சூரியனானது எப்படி எங்கே எழும்புகிறது? அது கிழக்கில் உதிக்கிறது. அது சரிதானே? அது மேற்கில் போய் மறைகிறது. நான் விரும்பியிருப்பதோ…நான் நாளை இரவு ஒரு பூலோகப் படத்தை கொண்டு வந்து உங்களுக்குக் காண்பிப்பேன். எருசலேமில் பரிசுத்த ஆவி விழுந்தபோது, அது தன் பாதையில் ஒரு பரிபூரண எட்டு என்னும் எண் வடிவத்தைப் போட ஆரம்பித்தது. அங்கிருந்து நேராக அயர்லாந்து தேசத்தின் வழியாகக் கடந்து சென்று, அங்கிருந்து மேற்குக் கடற்கரைக்கு வந்தது. அது மீண்டும் அப்படியே பாதையை திருப்பிக் கொண்டு வருகிறது. பூமி முழுவதிலும் அது சென்ற பாதை எட்டு எண் என்ற வடிவத்தில் போனது. அப்பாதையில் சுவிசேஷமானது சென்றது. சூரியனுடன் நாகரீகமும் பிரயாணம் செய்து வந்துள்ளது. எத்தனைப்பேர் அதைப் பற்றி அறிவீர்கள்? நீங்கள் அதைக் குறித்து போதிக்கப்பட்டு அதை அறிந்தவர்களாக இருக்கிறீர்கள். மிகவும் பழமையான நாகரீகம் சீனாவில் இருந்தது. அங்கிருந்து அது கிழக்கத்தி தேசங்களுக்குப் பிரயாணம் செய்தது. பரிசுத்த ஆவியானது இவ்வாறு குமாரனின் பாதையில் (SON) சென்றது. சூரியனின் (SUN) பாதையில் அல்ல.…

116234 சூரியனானது (Sun) பனி மூட்டத்தினூடாக, இரவில் உண்டான மூடுபனியினூடாக, அதன் வழியாக பிரகாசிக்கையில், வித்தானது எங்கிருந்தாலும் சரி, அது பிழைக்கும். ஏனெனில் அனைத்து தாவர உயிர்களும் சூரியனால் தான் பிழைக்கின்றன. நாம் அதை அறிவோம். நீங்கள் புற்களின் மேல் கொஞ்சம் சிமெண்ட் கலந்த தளத் துண்டைப் போட்டு விட்டாலும், அடுத்த வசந்தத்தில் அடர்த்தியாக வளர்ந்துள்ள புற்கள் எங்கே உள்ளன? சிமெண்ட் தளத்துண்டின் முனையிலிருந்து புற்கள் வெளிக்கிளம்பி வருகிறது. ஏன்? அடியில் அந்த ஜீவனானது இருக்கிறது. உண்மையான ஜீவனை நீங்கள் மறைந்து வைத்துவிட முடியாது. அச்சிறிய ஜீவனானது, சூரியன் அங்கே ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்த உடனேயே, அது பாதியளவான நகரத்தின் சதுக்கத்தின் பரப்புக்குள் உள்ள அந்த சிமெண்ட் தளத்துண்டினூடாக நெளிந்து வளர்ந்து பரவி, வெளியே தலையை தூக்கி தேவனை துதிக்கிற அளவுக்கு வளர்ந்து விடுகிறது. 235 உங்களால் ஜீவனை மறைத்து வைக்க முடியாது. அது உண்மை. ஜீவன். நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாக ஆகிவிட்டால், உங்களால் அதை மறைத்து வைக்க முடியாது. நீங்கள் ஜீவனைப் பெற்று விட்டால், அப்பொழுது ஏதோ ஒன்று உங்களுக்குள் இருந்து ஆர்ப்பரிக்கத்தான் செய்கிறது.

117236 இப்பொழுது, எல்லாக் காரியங்களும் இப்பொழுது மரித்திருக்கின்றன. சிறிய விதைகள் வெடித்து வெளிவருகின்றன. உள்ளேயுள்ள சதையெல்லாம் போய்விட்டது. அது மரித்து விட்டது. ஆயினும் அதனுள் ஜீவன் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது, சூரியன் வசந்த காலத்தில் பிரகாசிக்க ஆரம்பிக்கிறபோது, சிறுசிறு பூக்கள் பூக்கின்றன. யாவும் மீண்டும் தலையைத் தூக்கிப் பார்க்கின்றன. (பாறைத்துண்டுகளின் அடியிலிருந்தும், மரக்கட்டைகளின் அடியிலிருந்தும், பாறைகளின் அடியிலிருந்தும்) அவைகள் மீண்டும் எழும்பி, ஜீவிக்க ஆரம்பிக்கும். அது சரியா? ஏனெனில் சூரியன் (Sun) பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. 237 ஒரு நாளில் குமாரன் (Sun) பிரகாசிப்பார். அவரே நித்திய ஜீவனின் ஆக்கியோன். நித்திய ஜீவனுக்காக அவரிடத்தில் முளைப்பிக்கப்பட்டிருக்கிற யாவையும், அவர் “நான் கடைசி நாளில் அவர்களை எழுப்புவேன்” என்றார். நான் கூறுவதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நித்திய ஜீவனையுடையவர்கள் கடைசி நாளீல் எழுப்பப்படுவார்கள். அவர்கள் உங்களை சமுத்திரத்தில் புதைத்து விட்டாலும், உங்கள் சரீரத்தை எரித்து, அதை பூமியின் நான்கு திசைகளிலும் பறக்கடித்துவிட்டாலும், கடைசி நாளில் தேவன் அதை எழுப்புவார். பசியோடிருக்கும் ஒரு சிங்கத்தின் வயிற்றை நிரப்பும் ஆகாரமாக நீங்கள் இருக்கவேண்டியதாயிருந்தாலும் அல்லது உங்கள் சரீரத்தில் இருக்கும் பதினாறு வகையான பெட்ரோலிய மற்றும் இயலுலக ஒளி இவையெல்லாம் சரீரத்தினின்று அற்றுப்போக வைக்கும் அக்கினிச் சூளையில் உங்களைப் போட்டு விட்டாலும், தேவன் உங்களை எழுப்புவார். “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.” ஆமென்! தேவன் அதை எழுப்புவார். 238 இப்பொழுது இங்கே கவனியுங்கள். இப்பொழுது, ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயினால் மரிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு மனிதனும், ஒரு மனிதனால் பிழைத்திடுவான். அந்த விதமான ஜீவனில் ஸ்திரீயினிடத்தில் பங்கு பெற்றவன், மரித்திட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மரிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியேயில்லை. பங்கு பெற்றுக் கொள்வது எந்த அளவுக்கு உங்களுக்கு நிச்சயமாக இருக்குமோ, அந்த அளவுக்கு அதாவது, ஜீவ விருட்சத்தில் நிச்சயமாக நீங்கள் பங்கு பெற்றால், அதின் கனியைப் புசித்தால், நீங்கள் ஜீவனோடிருப்பீர்கள். ஜீவனை அடைவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியேயில்லை. ஆமென்! அது மரணத்தைப் பிறப்பிப்பது நிஜமானால், அது ஜீவனைப் பிறப்பிப்பதும் நிஜமானதாகும். நீங்கள் ஜீவனைப் பெற்றுக் கொள்ள இது ஒன்றே வழியாயிருக்கிறது.

118239 இப்பொழுது, “சாயாங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” என்று தீர்க்கதரிசி கூறினான். இப்பொழுது பாருங்கள். வெளிச்சமின்றி இருளுமின்றி, மந்தாரமான நாளாக அது இருக்கும். இது பகலுமல்ல, இரவுமல்ல, அதுதானே ஒரு வகையான மேக மந்தாரமான பனிமூட்டமுள்ள, குளிர்ந்த நாளாக இருக்கும். ஆயினும், சூரியன் (Sun) ஒளியைத் தந்து கொண்டிருக்கும். பனிமூட்டம், மேகங்கள் இவற்றிற்கு மேலாக குமாரனானவர் ஒளியைத் தந்து கொண்டிருக்கிறார். அது நீங்கள் நடப்பதற்கு போதுமான ஒளியைத் தருகிறது, எவ்வாறு சுற்றி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்களால் காண முடிகிறது, ஆனால் அதே சமயத்தில் அது—அது பிரகாசமான, அழகான நாளல்ல, பாருங்கள்? எந்த ஒன்றும் அந்நாளில் பிழைத்திருக்க முடியாது. 240 சூரியன் தன் ஒளியை வீசச் செய்ய முடியாத எந்த இடத்திலும் நீங்கள் எதையும் நட்டு வைக்கலாம். அப்படிச் செய்தால் அதன் வளர்ச்சி குன்றிப் போகும். அது சரியா? விவசாயிகளாகிய நீங்கள் அறிவீர்கள். தானிய விதையை நிழலில் எங்காவது விதைத்து விட்டு கவனித்துப் பாருங்கள். அதன் வளர்ச்சி குன்றிப் போகிறது. ஃப்ரெட் அவர்களே! உங்களுடைய கோதுமைப் பயிரிலிருந்து நீங்கள் அதைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். நீங்கள் விதைத்திருக்கிறபொழுது, ஓ, அது குளிரும் மழையும் கொண்ட மோசமான கோடைக்காலமாக இருந்து விட்டால், பயிரின் வளர்ச்சி குன்றிப் போய்விடுகிறது.

119241 இச்சபை காலங்கள் தோறும் சபையைக் குறித்த காரியமும் அவ்வாறு இருந்து வந்துள்ளது. இதன் வளர்ச்சி குன்றிப் போனதாக இருந்தது. ஸ்தாபனங்களினால் சபையின் வளர்ச்சி குன்றிப் போனது. “உங்களுடைய பெயரை புத்தகத்தில் பதிவு செய்யுங்கள். தேவன் ஒருவர் ஒருவர் உண்டு என்பதை அறிய நாம் போதிய வெளிச்சத்தை உடையவர்களாயிருக்கிறோம்.” நான் அதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். “கிறிஸ்து ஒருவர் இருக்கிறார் என்பதை அறியவும், நியாயத்தீர்ப்பு ஒன்று வருகிறதாயிருக்கிறது என்பதைப் பற்றி அறியவும் நாம் போதுமான வெளிச்சத்தை உடையவர்களாயிருக்கிறோம். நாம் வெளிச்சத்தை பெற்றுள்ளோஎம். எனவே நாம் நமது பெயர்களை புத்தகத்தில் எழுதி, நம்முடைய போதகரோடு கைகளைக் குலுக்கி, இன்னும் ஏனைய காரியங்களையும் செய்துவிட்டோம்” என்கின்றனர். சரி, ஆனால் இப்பொழுதோ சாயங்கால வேளையாயிருக்கிறது. 242 இப்பொழுது, நாகரிகமானது கிழக்கிலிருந்து உதயமாகி, மேற்கு நோக்கி நகர்ந்து வந்துள்ளது. நாம் இப்பொழுது மேற்குக் கடற்கரையில் இருக்கிறோம். நாம் இதற்குமேல் போக முடியாது. நாம் கடந்தால், மறுபடியும் கிழக்குச் செல்வோம். நாம் இனி, முன்னோக்கி செல்ல முடியாது. நாம் மேற்குக் கடற்கரையில் இருக்கிறோம்.

120243 இப்பொழுது வேதம், “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” என்று உரைத்துள்ளது. இப்பொழுது, சாயங்காலத்தில் பிரகாசிக்கும் சூரியன் எத்தகையதாயிருக்கிறது? காலையில் உதிக்கும் சூரியனை விட அது வேறுபட்டதா? அது அதே சூரியன் தான். அது சரிதானே? நல்லது அப்படியானால், தேவன் என்ன வாக்குத்தத்தம் கொடுத்தார்? நாம் தற்போதைய காலத்தைக் குறித்துப் பேசுகையில், அதைக் குறித்து பேசப்போகிறோம். அதை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். வேதம் அவ்வாறு கூறியுள்ளது. “சாயங்கால நேரத்தில் மேற்குத் திசையில் வெளிச்சம் உண்டாகும் என்றும், அது நீதியின் சூரியனை தன் செட்டையின் கீழ் ஆரோக்கியத்தோடு திரும்பக் கொண்டுவரும் என்றும், இந்த சபைக்காலங்களைப் பற்றி நாம் படித்துக் கொண்டே வருகையில் நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிப்பேன். கிழக்கில் நடைபெற்ற அதே அற்புத அடையாளங்கள் யாவும், கடைசி நாளில் பரிசுத்த ஆவியின் மற்றொரு ஊற்றப்படுதலோடு மேற்கிலே நடைபெறும்.” சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், மகிமைக்குப் போகும் பாதையை நீங்கள் நிச்சயம் கண்டடைவீர்கள்; அந்தத் தண்ணீரின் வழியில் இன்றைக்கு வெளிச்சம் உள்ளது. விலையேறப்பெற்ற இயேசுவின் நாமத்தில் அடக்கம்பண்ணப்படுங்கள். வாலிபரே வயோதிபரே உங்களுடைய எல்லா பாவங்களையும் விட்டு மனந்திரும்புங்கள், பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உள்ளே பிரவேசிப்பார், சாயங்கால வெளிச்சம் வந்து விட்டது தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்பது உண்மையே. ஓ, சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், மகிமைக்குப்போகும் பாதையை நீங்கள் நிச்சயம் கண்டடைவீர்கள்; இத்தண்ணீரின் வழியில் இன்று வெளிச்சம் உள்ளது, விலையேறப்பெற்ற இயேசுவின் நாமத்தில் அடக்கம்பண்ணப்படுங்கள். வாலிபரே வயோதிபரே உங்களுடைய எல்லா பாவங்களையும் விட்டு மனந்திம்புங்கள், பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உள்ளே பிரவேசிப்பார்; அச்சாயங்கால ஒளியானது வந்து விட்டது. 244 இதைத்தான் பேதுருவும், “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும், கிறிஸ்தவுமாக்கினாரென்று நீங்கள் நிச்சயமாய் அறியக்கடவீர்கள்” என்றான். மேலும் அவன் “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றான்.

121245 நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூறட்டும். மருத்துவர் கொடுக்கும் மருந்துச்சீட்டைப் பற்றி அன்றொரு நாளில் நான் பேசிக்கொண்டிருந்தேன். மருத்துவ கொடுக்கும் மருந்து சீட்டின்படி மருந்து எடுத்துக் கொள்ள மக்கள் விரும்புகிறதில்லை. ஒரு மருத்துவர் உங்களுடைய பிணியிலிருந்து உங்களை சொஸ்தமாகத்தக்கதான ஒரு நிவாரணத்தை, ஒரு மருந்தை கொடுத்தால், நீங்கள் அதை எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டால், அதினால் நீங்கள் மரித்தால், அதற்கு மருத்துவர் பொறுப்பாளியல்ல, இல்லை ஐயா, அது உங்களுடைய தவறாய் உள்ளது, ஏனெனில் நீங்கள் மருத்துவர் கொடுத்த மருந்தை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டீர்கள். 246 இப்பொழுது, ஒரு மருத்துவர் மருந்துச் சீட்டு ஒன்றைக் கொடுத்தால்,…நீங்கள் அதை ஒரு போலி மருந்துக் கடைக்காரரிடம் எடுத்துச் சென்றால், மருத்துவர் எழுதிக் கொடுத்துள்ள மருந்தோடு சேர்க்கக்கூடாத வேறு எதையோ ஒன்றை சேர்த்துக் கொடுத்தால், அது உங்களைக் கொன்றுவிடும். அது சரிதானே? உங்கள் சரீரத்திலுள்ள கிருமிகளைக் கொல்வதற்கான விஷமுள்ள மருந்துகளைப் பற்றியும், அவ்விஷ மருந்துகளுக்கு மாற்றாக, உங்களைக் கொல்லாமல் தடுக்கிற விஷமுறிவான மருந்துகளைப் பற்றியும், மருத்துவர் தன்னுடைய படிப்பாராய்ச்சியின் மூலம் நன்கு அறிந்திருக்கிறார். அவ்விரண்டும் சமச்சீராகக் கொடுக்கப்பட வேண்டும். அளவுக்கதிகமான மாற்று மருந்து என்று கூறப்படும் முறிவான மருந்தை கொடுத்து விட்டால், அதனால் நோயாளிகளுக்கு பயனேதும் இல்லை. அதிக விஷமுள்ள மருந்தைக் கொடுத்து விட்டாலும், அது நோயாளியைக் கொன்று போடும். எனவே, சமச்சீரான அளவில் மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.

122247 “கீலேயாத்தில் பிசின் தைலம் இல்லையோ? அங்கே இரண வைத்தியம் இல்லையோ” என்பதே தீர்க்கதரிசி கேட்ட கேள்வியாகும். அவன் மேலும், “அப்படியிருந்தும் ஏன் இன்னும் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?” என்று கேட்டான். சபையின் நிலைமை என்ன? நமக்கு அநேகம் வியாதிப்பட்டுள்ள சபைகள் உண்டாயிருப்பதற்கான காரணம் என்ன? ஏனெனில், நமக்கு சில போலியான மருந்துகடைக்காரர்கள் இருந்து கொண்டு தவறான மருந்துச் சீட்டு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது உண்மை. “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்… 248 மருத்துவரின் மருத்துச் சீட்டு என்ன கூறிற்று? இங்கே பேதுரு இருக்கிறான். அவனிடம் இராஜ்ஜயத்தின் திறவு கோல்கள் இருந்தன என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இயேசுவே அவ்வாறு கூறியுள்ளார். அவர் என்ன கூறினார்? அதாவது வேறு வார்த்தைகளில் கூறினால், மருந்துச் சீட்டு கொடுப்பதற்காக, அதை எழுதுவதற்காக, மையினால் பேதுரு நிரப்பிய பேனாவை வைத்திருந்தான். 249 (அவர்கள் ஆர்ப்பரித்து, சப்தமிட்டு, அந்நிய பாஷிகளில் பேசிக் கொண்டு அப்படிப்பட்ட ஒரு நேரத்தை உடையவர்களாயிருந்தனர்.) இச்சப்தம் மக்களுக்கு கேட்டதுபோது, ஜனங்கள் சீஷர்களைப் பார்த்து, “இவர்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கிறார்கள்” என்று பரிகசித்தார்கள். 250 அதற்கு பேதுரு அவர்களைப் பார்த்து, “நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே, தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. ‘கடைசி நாட்களில் இது சம்பவிக்கும்’ என்று தேவன் கூறியுள்ளார். ‘நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். இப்பொழுது உங்கள் குமாரரும், குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப்பூமியிலே இரத்தம், அக்கினி புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெனவோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்’” என்றான்.

123251 மேலும் பேதுரு, “கோத்திரப் பிதாவாகிய தாவீதும் இதை முன்பே கண்டு கூறினான். ‘அதினால் என் இருதய மகிழ்ந்தது; என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்’ என்று தாவீதைக் குறித்து கூறினான். மேலும் சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக் குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள். அவன் மரணமடைந்து அடக்கம் பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள் வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. என்றான். பாருங்கள், தாவீது தீர்க்கதரிசியாக இருந்தபடியால், கிறிஸ்து உயிர்த்தெழுவதைக் கண்டான். நீங்கள் சிலுவையில் அறைந்த அந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்” என்றான். 252 இதை அவர்கள் கேட்டபொழுது இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து, “சகோதரரே” என்றார்கள். “மருத்துவர் சீமோன் பேதுரு அவர்களே, நாங்கள் எவ்வாறு இதைப் பெற முடியும் என்பதை தெரிவித்து, அதற்குரிய சீட்டு எழுதிக் கொடுங்கள். பாவத்திலிருந்து எங்களுக்கு சுகமளித்தல் வேண்டும்” என்றனர். ஓ!.

124253 இப்பொழுது பேதுரு என்ன கூறினான் என்பதைப் பாருங்கள். இப்பொழுது இந்த சபைகள் எங்கே பாதை தவறின என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். பேதுரு “சற்றுப் பொறுங்கள்! நான் உங்களுக்கு ஒரு மருந்துச் சீட்டு எழுதித்தரப் போகிறேன், அது தானே நித்திய காலமாக விளங்கும் மருந்துச் சீட்டாகும், அது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும், தூரத்திலுள யாவருக்கு உண்டாயிருக்கிறது” என்றான். 254 அவன் என்ன கூறினான்? எவ்வாறு அதை அவன் நிர்ணயித்தான்? அது கத்தோலிக்கர் பெற்றுள்ளதுபோல் இருந்ததா? அது பாப்டிஸ்டுகளின் பெற்றுள்ளது போல் இருந்ததா? அது மெதோடிஸ்டுகள் பெற்றுளதுபோல் இருந்ததா? அவர்கள் ஒவ்வொருவரும் அதனோடே ஒன்றைக் கூட்டினார்கள். அல்லது ஒன்றை அதிலிருந்து எடுத்துப் போட்டார்கள். அது பெந்தெகொஸ்தேயினரைப் போல் இருந்ததா? அவர்களும் கூட்டினார்கள், இதிலிருந்து எடுத்துப் போட்டார்கள். ஆனால் பேதுரு என்னக் கூறினான்? “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரு பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்றான். நித்தியமான நிவாரணச் சீட்டாயிற்றே! “அது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் உரியது, இது ஒவ்வொருவரு சபைக் காலத்திலும் கொடுக்கத்தக்கதாக இருக்கிறது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் அதைக் கொடுங்கள்.”

125255 ஓ தேவனே, என் கைகளை சுத்தம் செய்யும், என் இருதயத்தை சுத்தம் செய்யும், கர்த்தாவே, என் சிநேகிதர் ஒவ்வொருவரையும் நான் இதன் காரணமாக இழக்க நேரிட்டாலும் அந்த வைத்தியர் என்னவிதமாக இந்த நிவாரணச்சீட்டை கொடுக்கச் சொன்னாரோ, அதேவிதமாக நான் இதைக் கொடுக்கட்டும். 256 அந்தக் காரணத்தினாக் தான் நீங்கள் அநேக மரித்த சபைகளையும், அநேகர் மரித்த அங்கத்தினர்களையும் உடையவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் நிறைய முறிவு மருந்துகளை அளவுக்கு மேல் எடுத்துக் கொண்டும் கொடுக்கப்பட்டுள்ள நிவாரண மருந்தாகிய தேவனுடைய வார்த்தையிலிருந்து அநேகத்தை நீக்கிப் போட்டும் விடுகிறீர்கள், அதினால் அந்த மருந்து சீட்டில் எந்தப் பயனும் இல்லாமல், அது எவரையும் குணப்படுத்துவதில்லை. கைகுலுக்கி சபையிலே சேர்ந்து கொள்ளுதல், மற்றும் தெளித்தல் ஓ, இரக்கம் வேண்டும், அது மருந்துச் சீட்டு அல்ல அது மரணமாயிருக்கிறது. உங்களுக்கு ஜீவன் வேண்டுமானால், பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமானால், தேவன் கூறியவைகளைப் பின்பற்றுங்கள். மருந்து சீட்டை ஏற்றுக்கொள்ளுங்கள்! அவர் கூறினவிதமாகவே, “அதனோடு ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம்.” இங்கே தானே, வெளிப்படுத்தலின் புஸ்தகத்தில், “இதனோடே ஒன்றை எவராவது கூட்டினாலோ குறைத்தாலோ, ஜீவ புத்தகத்திலிருந்து (அவனுடைய பங்கு) எடுத்துப் போடப்படும்” என்று சொல்லப்பட்டுள்ளது. ஓ, என்னே, அவரே பிரதான வைத்தியராவார். ஓ, நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா?

126257 ஓ, அந்த மகத்தான எபேசு சபைக்காலத்தில், இந்த வேதப்புரட்டு, ஸ்தாபனங்களை உண்டாக்க உள்ளே மெதுவாக நுழைய ஆரம்பித்தபோது, சபைக்கு தேவன் ஏற்படுத்திய மேய்ப்பர்களுக்கு பதிலாக, போப்பிற்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ளவர்கள், பேராயர்கள், போப்புகள், கண்காணிகள் சபைக்கு நியமிக்கப்பட்டனர். பரிசுத்த ஆவியைக் குறித்து அவர்கள் சபையாரிடம், “நீங்கள் அதை இனிமேல் இங்கே கொண்டிருக்க முடியாது!” என்றார்கள். சபைக்கு யார் தலைவர்? 258 “இயேசுவின் நாமத்தில் இனிமேல் நீ பிரசங்கிக்கக்கூடாது. நீ பிரசங்கிக்கிறதாயிருந்தால் பிரசங்கிக்கலாம், ஆனால் இயேசுவின் நாமத்தினால் அதைச் செய்யக்கூடாது” என்று ஒரு தடவை பேதுருவுக்குக் கூறப்பட்டது. ஓ, பிசாசு அந்த நாமத்தை வெறுக்கிறானே! 259 பேதுரு, “இது எனக்கு…” என்றார். வேதம், “பேதுரு முழுவதும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் இருந்தான்” என்று கூறியுள்ளது. (ஸ்தாபனத்தினால் நிறைந்திருந்தானா?) ஓ, ஆஹா, “பரிசுத்த ஆவியினால்.” அவன் “பொறுங்கள், நான் போய் பொதுகண்காணி அவர்களைப் பார்த்து, இந்தப் பரிசுத்த ஆவியைப் பற்றி அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கிறேன்” என்று கூறினானா?

127260 நான் உங்களுக்கு கூறட்டும். அசெம்ப்ளீஸ் ஆஃப்காட் என்ற சபையில், எந்த ஒரு மனிதனையும் மிஷனரியாக அனுப்புவதற்கு முன்னால், அவர் மிஷனரியாக இருப்பதற்கு மனோநிலை ரீதியாக அவரது தகுதி போதுமானதானா என்பதை சோதித்தறிய அவரை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் கொண்டு செல்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்? அம்மனோதத்துவ நிபுணர் அவரை சோதித்து அவர் தகுதியுள்ளவர்தானா என்பதை நிதானிக்க வேண்டுமாம். பெந்தெகொஸ்தே அசெம்பிளீஸ் ஆஃப்காட் சபையில் அவ்வாறு நடக்கிறது. அதைப்பற்றி எத்தனைபேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? நிச்சயமாக நீங்கள் யாவரும் அறிந்திருக்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது. மிஷனரியை சோதித்து, அவரைத் தேர்ந்தெடுக்க நீதிபதியாக இருப்பது யார்? மனோதத்துவ நிபுணரா அல்லது பரிசுத்த ஆவியா? பாருங்கள், மனித ஆளுகைக்குள் சபையை வைத்திருக்கையில், அப்படிப்பட்ட காரியம்தான் நடக்கும். மனிதன் உண்டாக்கிய கொள்கைகள், மனிதனால் உண்டாக்கப்பட்ட உபதேசங்கள் இருப்பதைப் பாருங்கள், பெந்தெகொஸ்தேயின் காலத்திற்குள் நாம் வரும் வரை காத்திருந்து அதில் நடப்பதைப் பாருங்கள்! தேவன் உலகத்தை அக்கினிக்கிரையாக்குவது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அதையும் சுட்டெரிப்பார். ஆம், ஐயா, நிச்சயம் அப்படித்தான். காலம் முழுவதிலும் அந்த அக்கினி பற்றியெரிகிறதை நீங்கள் பார்ப்ப்பீர்கள். ஊம், ஹூம். சரியாக.

128261 ஆனால், மகிமை பொருந்திய ஓர் நாளில் அவர் வருவார். நினைவில் வைத்து கவனியுங்கள். ஏழு சபைக்காலங்கள் உள்ளன. அது சரிதானே? ஏழு சபைக்காலங்கள் உள்ளன. உங்களுக்கு நினைவிருக்கட்டும், மணவாளனை எதிர்கொள்ள அவர்கள் புறப்பட்டுப் போனபோது, சிலர் முதலாம் ஜாமத்தில் நித்திரையடைந்தனர். (அது சரியா?) சிலர் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் ஜாமங்கள் மட்டும் நித்திரையடைந்தார்கள். கவனியுங்கள். (நிச்சயமாக, அவர்கள் மரிக்கவில்லை, நித்திரையடைந்தார்கள்.) ஏழாம் ஜாமத்தில் “இதோ மணவாளன் வருகிறார், அவரை எதிர்கொள்ள புறப்பட்டுப் போங்கள்” என்ற ஒரு சப்தம் உண்டாயிற்று. என்ன சம்பவித்தது? நித்திரையாயிருந்த கன்னியர் யாவரும் விழித்திருந்தனர்! அந்த பிரகாசமான மந்தாரமில்லாத அக்காலையில் கிறிஸ்துவுக்குள் மரித்தோர் எழும்பொழுது,(மேகமில்லாத சாயங்காக வெளிச்சம் பிரகாசிக்கும்.) பிரகாசமுள்ள, அழகான காலைப்பொழுது, நித்தியத்திற்குள் விடியும் வானங்களுக்கப்பால் உள்ள தங்கள் வீடுங்களுக்குள் பூமியிலுள்ள இரட்சிக்கப்பட்டோர் கூடிச் சேருவர் அத்தேசத்தில் பெயர்ப்பட்டியல் வாசிக்கும்போது நான் அங்கிருப்பேன். அத்தேசத்தில் பெயர்ப்பட்டியல் வாசிக்கும்போது, அத்தேசத்தில் பெயர்ப்பட்டியல் வாசிக்கும்போது, அத்தேசத்தில் பெயர்ப்பட்டியல் வாசிக்கும்போது, அத்தேசத்தில் பெயர்ப்பட்டியல் வாசிக்கும்போது, நான் அங்கிருப்பேன். காலை விடியலிருந்து முதல் மாலை அஸ்தமனம் வரை நமது எஜமானுக்காய் நாம் உழைப்போமாக, நாம் அவரது அற்புதமான நேசத்தையும், பராமரிப்பையும் குறித்து பேசுவோமாக. ஜீவியமெல்லாம் முடிந்து, பூமியில் நம் கிரியை முடிவு பெறுகையில், அத்தேசத்தில் பெயர் பட்டியல் வாசிக்கப்படும்போது… ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் இப்பொழுது உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள்: அத்தேசத்தில் பெயர் பட்டியல் வாசிக்கப்படுகையில், அத்தேசத்தில் பெயர் பட்டியல் வாசிக்கப்படுகையில், அத்தேசத்தில் பெயர் பட்டியல் வாசிக்கப்படுகையில், அத்தேசத்தில் பெயர் பட்டியல் வாசிக்கப்படுகையில், நானும் அங்கிருப்பேன். (ஓ!)

129இனிமையான அந்த வரப்போகும் நாளில் அந்த அழகான அக்கரையில் நாம் சந்திப்போம் இனிமையான அந்த வரப்போகும் நாளில், அவ்வழகான அக்கரையில் நாம் சந்திப்போம். 262 சபையின் இப்பழங்காலபாடலை நீங்கள் நேசிக்கிறீர்களா? ஓ! சம்பூரணரான நம் பரம பிதாவுக்கு அவரது அன்பின் மகிமையான ஈவுக்காகவும், நம் நாளை பரிசுத்தமாக்கும் அவர் தம் ஆசிகளுக்காகவும், நாம் நம்முடைய துதியின் காணிக்கையைச் செலுத்துவோம். இனிமையான வரப்போகும் அந்நாளில் அந்த அழகான அக்கரையில் நாம் சந்திப்போம். இனிமையான அந்த வரப்போகும் அந்நாளில், நாம் அந்த அழகான அக்கரையில் சந்திப்போம். இப்பொழுது உங்களைச் சுற்றியுள்ள யாருடனாவது கரங்குலுக்குங்கள், அந்தவிதமாக சுற்றியுள்ள யாவரோடும் செய்யுங்கள். அது நல்லது. இனிமையான அந்த வரப்போகும் அந்நாளில் (“நான் சகோதரனே உங்களை சந்திப்பேன்” என்று கூறுங்கள்.) அந்த அழகான அக்கரையில் நாம் சந்திப்போம். இனிமையான அந்த வரப்போகும் அந்நாளிலே நாம் அழகான அக்கரையில் சந்திப்போம். நாம் அந்த அழகான கரையில் பாடுவோம், அந்த இனிமையான பாடலை… (யாவரும் அதை இப்பொழுது பாடுவோம்.) நமது ஆவி இனிமேல் துக்கமாயிராது. பெருமூச்செறிவதில்லை, ஏனெனில் இளைப்பாறுதலின் ஆசிகள் நமக்கு உண்டே. ஒவ்வொருவரும் கரங்களை உயர்த்தியவாறே: இனிமையான அந்த வரப்போகும் நன்னாளில், ஓ, நாம் அந்த அழகான அக்கரையில் சந்திப்போம்; இனிமையான அந்த வரப்போகும் நன்னாளில், நாம் அந்த அழகான அக்கரையில் சந்திப்போம்.

130263 நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்தியவாறே இப்பொழுது நாம் இதைச் சொல்லுவோமாக: கர்த்தராகிய இயேசுவே, [சபையோர், “கர்த்தராகிய இயேசுவே” என்று கூறுகின்றனர்.—ஆசி.] நான் உம்மை நேசிக்கிறேன். [“நான் உம்மை நேசிக்கிறேன்.”] இயேசு கிறிஸ்து [“இயேசுகிறிஸ்து”] தேவனுடைய குமாரனென்று [“தேவனுடைய குமாரனென்று”] நான் விசுவாசிக்கிறேன். [“நான் விசுவாசிக்கிறேன்.”] என் பாவத்தைப் போக்க [“என் பாவத்தைப் போக்க”] தேவன் மாம்சத்தில் [“தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்”] வெளிப்பட்டார். [“வெளிப்பட்டார்”] என்னுடைய தகுதிகளின் பேரில் நான் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை. [“என்னுடைய தகுதிகளின் பேரில் நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.”] ஏனெனில் நான் ஒன்றுமில்லை. [“ஏனெனில் நான் ஒன்றுமில்லை.”] ஆனால் நாம் பயபக்தியுடன் [“ஆனால் நாம் பயபக்தியுடன்”] என்னுடைய இரட்சகரும், [“என்னுடைய இரட்சகரும்”] என்னுடைய தேவனும், [“என்னுடைய தேவனும்”] என்னுடைய இராஜாவுமாய் இருக்கிற [“என்னுடைய இராஜாவுமாய் இருக்கிற”] இயேசுகிறிஸ்துவின் [“இயேசு கிறிஸ்துவின்”] தகுதிகளின் பேரிலேயே [“தகுதிகளின் பேரிலேயே”] நம்பிக்கைக் கொண்டுள்ளேன். [“நம்பிக்கைக் கொண்டுள்ளேன்.”] நான் அவரை நேசிக்கிறேன். [“நான் அவரை நேசிக்கிறேன்.”] ஆமென். [“ஆமென்.”]

131264 நாளை இரவு ஏழு மணிக்கு, கர்த்தருக்கு சித்தமானால், நாம் சிமிர்னா சபையின் காலத்தைக் குறித்துப் பார்ப்போம். இனிமையான… (நம்முடைய தலைகள் இப்பொழுது வணங்கியிருக்கட்டும்) …ஓ, அந்த வரப்போகும் நன்னாளில் சீக்கிரத்தில் நாம் அந்த அழகான கரையில் சந்திப்போம் சீக்கிரத்தில்; இனிமையான அந்த வரப்போகும் அந்நாளில் நாம் அந்த அழகான அக்கரையில் சந்திப்போம். இப்பொழுது ஒவ்வொருவரும், மெதுவாக, இனிமையாகப் பாடுவோம்: ஓ, சம்பூரணரான நம் பரம பிதாவுக்கு, அவரது மகிமை பொருந்திய அன்பின் ஈவுக்காக… அவருக்கு நமது துதியின் காணிக்கையைச் செலுத்துவோம், [சகோதரன் பிரான்ஹாம் சபையோர் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கையில் புறப்பட்டுச் செல்லுகிறார்—ஆசி.] 