1 மிகுந்த மகிமை பொருந்திய பிதாவே, எங்களுடைய ஜீவனில் நாங்கள் அழியாமையைப் பெற்றிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதில் இன்றிரவு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் தேவனின் ஜீவனானது, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அக்கினிமயமான நாவுகளாகப் பிரிந்து அமர்ந்து, அவர்கள் எல்லொரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்; அதினால் ஆவியானவர் அவரவருக்கு தந்தருளினதின்படியே. அவர்கள் வெவ்வேறே பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். ஓ, பிதாவே, நீர் உம்மையே சபையின் நடுவில் பங்கீட்டுக் கொடுத்தீர் என்பதற்காக நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். “நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்று எங்களுடைய கர்த்தர் கூறியதில் வியப்பொன்றுமில்லை. எப்படியாய் பரலோகத்தின் தேவன் தம்முடைய ஜனங்களும் மத்தியில் வாசம் செய்கிறார்! “இன்னும் கொஞ்சம் காலத்தில் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், ஏனெனில் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் உலகத்தின் முடிவுபரியத்தமும் சகல நாட்களிலும் இருக்கிறேன்” என்று கூறினீர். ஒவ்வொரு சபைக்காலத்திலும் நீர் இங்கே, நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராக இருந்து வந்திருக்கிறீர். நீர் நடப்பிக்கிற கிரியைகளின் மூலமாக நாங்கள் உம்மை அறிகிறோம். “விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் தொடரும்.”
22 கர்த்தாவே, எல்லாக் காலங்களின் உச்சகட்டத்தை நாங்கள் காண்கையில்—காண்கையில், காலமானது ஒரு முடிவையடையப் போகிறது, அப்பொழுது நித்தியமானது உதிக்கிறது. பிதாவாகிய தேவனே, இன்றைக்கு, அந்த மீதியானவர்களுக்குள் நாங்கள் ஜீவித்துக் கொண்டிருப்பதைக் குறித்து அறிந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய ஜீவியத்தை கருத்தாய் காவல் செய்து, நாங்கள் கொண்டிருக்கும் நோக்கங்களையும், இலக்கையும் பார்த்து, பரிசுத்த ஆவியானவர் எங்களை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறதையும் பார்க்கிறோம், தேவனே, தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் இன்றிரவில், நாங்கள் வாழும் இச்சபைக் காலங்களைப் பற்றி உணர்ந்து கொள்ளவும், கர்த்தராகிய இயேசுவினிடத்தில் வேகமாக ஓடிப்போகவும் செய்யும், ஏனெனில், “கர்த்தருடைய நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” என்று மிகவும் தெளிவாக எழுதப்பட்டுள்ளதே. 3 ஓ, தேவனே, இன்றிரவில் வந்து எங்களை அபிஷேகியும், ஓ கர்த்தாவே, மனங்குழம்பி, அலைந்து திரிகிறவர்களை கொண்டு வாரும். ஓ, கர்த்தாவே, இந்த எளிய ஆடுகளைக் கண்ணோக்கிப் பாரும், அவர்களுக்கு எவ்விடங்களிலிருந்தும் மேய்ப்பர்களின் அழைப்புகள் வரப்பெற்று கொண்டிருக்கிறார்கள். எனவே எதை விசுவாசிப்பது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆடுகளின் பெரிய மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அவர்கள் செவிகொடுக்கச் செய்ய வேண்டுமென நாங்கள் ஜெபிக்கிறோம், பிதாவே. அவருடைய மகத்தான ஆவியானவர் இன்றிரவில், “என் பிள்ளையே, என்னிடம் வா. நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன். அது உன்னை உன்னுடைய நித்திய பயண இலக்கிற்கு முத்திரையிட்டுவிடும்” என்று அவர்களிடம் பேசட்டுமே. நேரமானது விரைவாக முடிந்து விடப்போவதை நாங்கள் காண்கையில், அவர்கள் அடிபட்டு, அலையுண்டு ஓடுகிறதாக இருக்க வேண்டாம். இதை அருளும், பிதாவே. பிரசங்கியின் மூலம் பேசியருளும், கேட்கிறவர்களுடைய செவிகள் வாயிலாக செவி கொடுத்தருளும், நாங்கள் யாவருமே செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
3உட்காருங்கள். 4 இப்பொழுது, இன்றிரவில் நாம் இரண்டாவது சபைக் காலத்தைப் பற்றி படிக்கப் போகிறோம். அநேகர் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். அந்தக் காரணத்தினால்தான் நான் இவைகளை ஒவ்வொரு தடவையும் தெளிவாகக் கொடுக்க விரும்புகிறேன். 5 இப்பொழுது, இரண்டாவது சபைக் காலமானது, சிமிர்னா சபைக் காலம் என்று அழைக்கப்பட்டது. எபேசு சபைக் காலம் முடிந்தவுடனேயே சிமிர்னா சபைக் காலம் ஆரம்பித்துவிட்டது. எபேசு சபைக் காலம் கி.பி 55 முதல் 170 வரை நீடித்தது. சிமிர்னா சபைக் காலம் கி.பி.170 முதல் 312 முடிய நீடித்தது. இந்தச் சபை உபத்திரவப்படுத்தப்பட்ட சபையாகும். உபத்திரவத்திலிருந்து வந்து இந்த சபை இரத்த சாட்சிகளின் கிரீடத்தை அணியும். அந்தக் காலத்தில் தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு ஜீவ கீரீடம் அளிக்கப்படுவது தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது.
46 ஒவ்வொரு சபைக் காலத்திற்கும் தேவன் தம் கரத்தில் ஏந்தியுள்ள ஒரு நட்சத்திரம் உண்டு. அந்த நட்சத்திரம் அந்தந்த சபைக்கு அளிக்கப்பட்ட செய்தியாளனுக்கு அடையாளமாகத் திகழ்ந்தது. எபேசு சபைக் காலத்திற்குரிய தூதன், நான் நன்கு அறிந்திருக்கிறதின்படி, பவுல் அப்போஸ்தலந்தான். (ஏனென்றால் அந்த ஒவ்வொரு தூதர்கள் இன்னார் என்று வேதத்தில் பெயர் குறிப்பிடப்படவில்லை); காரணம், எபேசுவில் சபையை நிறுவியவன் பவுல்தானே, அவனே அந்த சபைக் காலத்திற்குரிய ஊழியக்காரனுமாவான். அவனுடைய ஊழியம் சபைக்கு ஒளியைக் கொண்டு வந்தது. அப்பொழுது பரிசுத்த யோவான் பவுலுக்குப் பிறகு ஊழியத்தை மேற்கொண்டான். அதன் பிறகு, பாலிகார்ப் என்பவர்…தொடர்ந்து உள்ள காலத்தில் வந்தார்.
57 இப்பொழுது, சிமிர்னா சபையின் காலத்திற்கு, நான் அறிந்து கொண்ட அளவுக்கு, ஐரேனியஸ் என்பவர் தான் தூதன். ஏன் பாலிகார்ப்பை நான் இச்சபைக்குரிய தூதனாக தெரிந்து கொள்ளாமல், ஐரேனியஸை தெரிந்து கொண்டேன் என்பதற்கான காரணத்தை நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன். அநேக சபை குருமார்களும், (வேத போதகர்களும்,) அந்த தூதன் பாலிகார்ப்தான் என்று எண்ணுகிறார்கள். பாலிகார்ப் பரிசுத்த யோவானின் சீஷன் என்பது உண்மையே. பாலிகார்ப் தன்னுடைய சாட்சியை, தான் இரத்த சாட்சியாக மரித்ததின் மூலம் முத்திரையிட்டார், அவரை அவர்கள் அவரது இருதயத்தின் கீழ் கத்தியால் குத்திக் கொன்றார்கள். ஆனால் அவர் ஒரு மகத்தான மனிதர்தான், ஒரு குறிப்பிடத்தக்க மனிதர்தான், தேவ மனிதர்தான், இனிமையானவர் கூட. நமக்கு கிடைத்த மகத்தான கிறிஸ்தவர்களுக்குள் அவர் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய வாழ்க்கைக்கு எதிராக நீங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. 8 ஐரேனியஸை நான் தெரிந்து கொண்டதின் காரணம் என்னவெனில், பாலிகார்ப்பை விட, ஐரேனியஸ் பரிசுத்த வேதத்திற்கு மிகவும் அதிகமாக நெருக்கமாக இருந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஸ்தாபனத்தை உண்டாக்குகிறதான ரோமானிய யோசனைக்கு பாலிகார்ப் இணக்கமாக இருந்தார். ஐரேனியாஸோ மிகவும் உறுதியுடன் அதை எதிரித்தார். அவர் முழுவதுமாக அதை வெளிப்படையாகக் கண்டித்தார். அதன் பிறகு, நிசாயா ஆலோசனை சங்கம் கூடியபொழுது, நாம் யாவரும் அறிந்திருக்கிறபடி, அங்கே அந்த விஷயம் விவாதத்திற்கு வந்தது; மிகப்பெரிய தீர்வு செய்து கொள்ள வேண்டிய விஷயமாக அவர்களுக்கு இருந்தது என்னவெனில், தேவன் மூன்று நபர்களோ, அல்லது ஒருவரா என்பது தான். தேவன் தேவனாகவே இருக்கிறார், அவர் ஒரு ஆள்தான் என்ற அந்தக் கருத்தின் பட்சத்தில் ஐரேனியஸ் நின்றார்.
69 நான் இப்பொழுது “நிசாயாவுக்கு முந்தின காலத்தின் பிதாக்கள்” (Ante-Nicene Fathers) என்ற புத்தகத்தின் தொகுதி 1-ல் பக்கம் 412-ல் இருந்து ஒரு சிறிய மேற்கோளை வாசிக்கட்டும். நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது “நிசாயாவுக்கு முந்தின காலத்தின் பிதாக்கள்” என்ற புத்தகத்தில் உள்ளது. பன்னிரெண்டாம் பக்கத்தில்…அது…1-வது தொகுதியில். இப்புத்தகத்திற்கு மூன்று தொகுதிகள் உண்டு. நீங்கள் அவை முழுவதையுமே வாசிக்கலாம். அநேக அத்தியாசங்கள் அதில் உண்டு. நான் இப்பொழுது இதின் கடைசிப் பாகத்தில், கடைசி—கடைசி இருபது, முப்பது வசனங்களை வாசிக்கிறேன். அவைகள் யாவும் நான் வாசிக்காமல் அதன் ஒரு பாகத்தை மட்டும் வாசிப்பேன். “அவர் வேறு என்னவெல்லாமாக் அழைக்கப்பட்டாரோ…அவையெல்லாம், அந்த ஒருவருக்கே கொடுக்கப்பட்ட பட்டமாகும்.” (பாருங்கள், அவர்கள் அவரை ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று அழைத்தனர். “அவை யாவும் பட்டங்களே தவிர நாமங்கள் அல்ல, ஒரே நபரின் பட்டங்கள்” என்று இவர் இங்கே கூற முற்படுவதைப் பாருங்கள். இன்றைக்கும் நாம் இன்னமும் சரியாக் அதைத்தான் போதிக்கிறோம்.) “உதாரணத்திற்கு” (அதன் பிறகு விவரக் குறிப்பு காணப்படுகிறது) “(ஆங்கிலத்தில்): வல்லமையுள்ள ஆண்டவர், யாவர்க்கும் பிதாவாகிய கர்த்தர், சர்வ வல்லமையுள்ள தேவன், உன்னதமானவர், சிருஷ்டிகர், உருவாக்கியவர் போன்றவை. இவைகள் யாவும் தொடர்ந்து வருகிற வெவ்வேறு நபர்களுக்குரிய பட்டங்களும், பெயர்களும் அல்ல, இவை ஒருவராயிருக்கிற அவருக்கு உரித்ததாகும்”, (ஆமென்!) “ஒரே நாமத்தினால் ஒரே தேவனாகிய பிதாவானவர் …பிழைத்திருக்கும்படியான தயவை யாவற்றுக்கும் அளித்திருக்கிறார்.”
710 ஐரேனியஸூம், “இந்தப் பட்டங்கள் யாவும் ஒரே நாமத்திற்குள்ளாக அதற்குரியதாகவே இருக்கிறது; அது ஒரு தேவனுக்குரியதாகும், அவைகள் யாவும் பட்டங்களாக மாத்திரம் இருந்தது. அவர் என்னவாக இருக்கிறாரோ அதைப் பற்றிக் கூறுபவைகளாக மட்டும் இருக்கின்றன” என்று கூறியுள்ளார். அவர் சாரோனின் ரோஜா, அது அவருக்குரிய பட்டமாகும். அவர் என்னவாக இருக்கிறாரோ அதைப் பற்றி கூறுகிறது. இப்பட்டம். அவர் விடிவெள்ளி நட்சத்திரம், அவர் அல்பாவும், ஓமெகாவுமாயிருக்கிறார். இவைகளெல்லாம் அவர் என்னவாக இருக்கிறாரோ அதைப் பற்றிக் கூறும் அவருடைய பட்டங்கள் மட்டுமே. அவர் பிதா, அவரே குமாரன், அவரே பரிசுத்த ஆவியானவர், ஆனால் ஒரேயொரு தேவன்தான் உண்டு. ஒரேயொரு தேவன், அவர் நாமமும் ஒன்றே. இவ்வாறாக ஐரேனியஸ் வேதவாக்கியத்தைக் குறித்த தன்னுடைய—தன்னுடைய ஆய்வுறுதியை இல்லை சரியான வியாக்கியானத்தைப் பெற்றிருந்தார். இந்தக் காரணத்தினால்தான் நான் ஐரேனியஸ் சரியாக இருந்தார் என்று கருதுகிறேன்.
811 இன்னொரு விஷயத்தையும் நான் உங்களுக்கு வாசித்துக் காட்ட விரும்புகிறேன். அது, “எவ்வாறு அது சம்பவித்தது?” என்ற புத்தகத்திலிருந்து இப்புத்தகம் வரலாற்றாளர்களால் எழுதப்பட்டதாகும். ஆர்.சி.ஹேஸ்ல்டன் என்பவர் ஆதிகாலத்து சபைகளைப் பற்றி எழுதிய சரித்திரம் தான், “ எவ்வாறு இது சம்பவித்தது ” என்ற புத்தகமாகும். அப்புத்தகத்தின் 180-ம் பக்கத்தில், “கி.பி.177 முதல் கி.பி.202 முடிய உள்ள ஐரேனியஸின் காலத்தில் இருந்த ஆவிக்குரிய வரங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நான் மேற்கோள் காட்டுவதன் நோக்கம் என்னவெனில், இச்செய்தி ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது, பாருங்கள். மேலும் புத்தக வடிவிலும் இது வரவுள்ளது. “ஐரேனியஸின் காலத்தில், பிரான்ஸ் தேசத்தில் இருந்த அநேக அப்போஸ்தல சபைகளில், பரிசுத்த ஆவியின் எல்லா வரங்களுமே இருந்தன.” ஐரேனியஸ் அவர்களுக்கு போதித்து வந்திருந்தபடியினால் நிலைமை அவ்வாறு இருந்தது, பாருங்கள். பிரான்ஸில் உள்ள லையான் பட்டணத்தில், “லையான் பட்டணத்தில் இருந்த ஐரேனியஸின் சபையின் உறுப்பினர்கள் யாவருமே அன்னிய பாஷைகளில் பேசினார்கள். யாராவது மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்படுவதைக் காண்பது ஏதோ அசாதாரணமான நிகழ்ச்சியல்ல. எல்லாவிடங்களிலும் சுவிசேஷ சபைகளில் பிணியாளிகள் சொஸ்தமடைதல்—சொஸ்தமடைதல் என்பது அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது.” ஐரேனியஸ் எப்படி போதிக்க வேண்டுமென்று அறிந்திருந்தார். “அற்புதங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. உண்மையில் ஐரேனியஸ் காலத்து சபைகள், தேவனுடைய பிரசனத்தின் அதிசய வெளிப்படுத்துதலைப் பெற்றிராமல் ஒரு போதும் இருக்கவில்லை. அப்பிரத்தியட்சமாகுதல், ஒன்று தரிசனத்தில் மூலமாகவோ, இயற்கையின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதன் மூலமாகவோ, ஒரு அற்புதத்தின் மூலமாகவோ நடைபெற்றன. இவையெல்லாம், அன்றைக்கு இருந்த சுவிசேஷக் கிறிஸ்தவர்களுக்கு, தாங்கள் தேவனுக்குப் பிரியமான சீஷர்கள் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டவே நடைபெற்றன. ஆனால் கடந்தகால வரலாற்றைப் பார்க்கையில், முதலாவது ரோமச் சபையில், எப்பொழுதாகிலும் மரித்தவனை உயிரோடெழுப்பிய ஒரு சம்பவத்தைப் பற்றிய நிரூபணம் கூட சேகரிக்க நம்மால் முடியவில்லை.” 12 இவ்வரலாற்றை எழுதின் அந்த ஜனங்கள்…எந்த ஒரு அணியையும் சார்ந்துகொள்ள ஆர்வங்கொண்டவர்களல்ல. அவர்கள் வரலாற்றாளர்களானபடியால், அவர்கள் உண்மைகளே கூறியிருக்கின்றனர்.
913 எனவேதான் நான் ஐரேனியஸ் சிமிர்னா சபைக்குரிய தூதன் என்று விசுவாசிக்கிறேன் ஏனெனில், நீங்கள் பாருங்கள், பவுலும் ஏனைய அப்போஸ்தலர்களும் ஒப்படைத்துச் சென்ற அதே விசுவாசத்தையும், அதே வேத உபதேசங்களையும் கொண்டவராக ஐரேனியஸ் இருந்தார். அந்தக் காரணத்தினால் தான்…தேவனுடைய வார்த்தையின் அடிப்படையின் மேல் அதே வேத உபதேசங்களைப் போதித்தல் ஒவ்வொரு தடவையும், அதே விதமான கிரியைகளையே பிறப்பிக்கும். நீங்கள் தேவனுடைய விதிமுறையை எளிமையாக விசுவாசித்து, அதை அப்படியே எழுத்துக்கு எழுத்து நிறைவேற்றினீர்களானால், சபைகள் என்ன சொல்லுகின்றன் என்பது பற்றி அக்கரையில்லை, அது கூறுகிறதின்படி அப்படியே பின்பற்றினால், ஆதியில் நடந்த அதே கிரியைகள் இப்பொழுது ஏற்படும். அதைத் தான் ஐரேனியஸூம் செய்தார்.
1014 பாலிகார்ப் ஒரு அருமையான மனிதனாயிருந்தார் என்று நான் கருதுகிறேன். ஆனால், நிக்கொலாய் மதஸ்தர் எவ்வாறு ஸ்தாபன முறைமைகளை உண்டாக்கிட முனைந்தார்களோ, அதேபோல் இவரும் அவ்விதமான கிரியைகளின் பட்சத்தில் மிகவும் அதிகமாக சார்ந்தவராக இருந்தார் என்பதை நான் உங்களுக்கு கூறுகிறேன். சபையை அவர்கள் ஸ்தாபன ரீதியாக ஆக்கி, அவ்விதமான முறையில் சகோதரத்துவத்தைக் கொண்டு வந்து யாவரையும் ஒன்றாக இணைக்க அவர்கள் கிரியை செய்தனர். இது மனித ஞானத்தின்படி சரியாக தோன்றலாம். ஆனால், நீங்கள் பாருங்கள், ஆவியானவர் மானிட அறிவுக்கு மிகவும் தொலைவில் இருக்கிறார். அறிவு பூர்வமாக நீங்கள் சிந்தித்தால் ஆவியின் சிந்தைக்கு விரோதமான சிந்தை கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள். தேவன் “என் நினைவுகள் உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் உயர்ந்தவைகளாயுள்ளன. என் வழிகள் உங்களுடைய வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவைகளாயுள்ளன” என்று கூறுகிறார். அவரை திட்ட வரைபடத்திற்படி (Blue Print) பின்பற்றுவது ஒன்று தான் நாம் செய்ய வேண்டியதாயிருக்கிறது. அது உண்மை.
1115 இப்பொழுது, நீங்கள் இங்கிருந்து போவதாயிருந்தால் …நான் இங்கிருந்து இன்றிரவில் சிக்காகோ போகிறதாக நாம் வைத்துக் கொள்வோம். நான் இங்கிருந்து வெளியேறி, ஒரு திசை காட்டும் கருவியை வைத்துக் கொண்டு “சிக்காகோ இந்த திசையில் இருக்கிறது, சரி நான் புறப்படுவேன்” என்று சொன்னால், ஜெபர்சன்வில்லை விட்டுக்கூட புறப்பட முடியாது. புரிகிறதா? நான் சரியாக சிக்காகோ போக வேண்டுமானால் வழிகாட்ட எனக்கு ஒரு சாலை வரைப்படம் தேவை. அங்கே—அங்கே…அதின்படி போனால் அங்கே பாதையானது ஒழுங்காக தன் வழியே செல்லும், அதில் ஒரு மோட்டார் வாகனத்தில் பயணம் புறப்பட்டுப் போனால், ஆறு அல்லது ஏழு மணி நேரத்தில் சிக்காகோ போய் சேர்ந்து விடலாம். ஆனால் அங்கு உள்ள பாதைக்கு எப்படி வேண்டுமானாலும் போக முடியாது. விமானமும் தன் ஆகாய மார்க்கத்தில் எப்படி வேண்டுமானாலும் தன் பாதையில் செல்ல முடியாது, அதற்குரிய உயரத்தில், அதற்குரிய பாதையில், அதற்குரிய ஒரு—ஒரு மார்க்கத்தில்தான் பறந்திட வேண்டும். 16 ஒரு வழி உண்டாக்கப்பட்டிருக்கிறது. தேவன் ஒரு வழியை உடையவராயிருக்கிறார். தேவன், தன் சபைக்கென, தன் ஜனங்களுக்கென, ஒரு வழியை வைத்திருக்கிறார். அவ்வழியானது, ஒரு போதம், போப்புகள், போப்பிற்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ளவர்கள், பேராயர்கள் அல்லது பொது கண்காணிகள் ஆகிய மனிதர்களால் ஆளுகை செய்யப்பட வேண்டுமென்று அவர் நோக்கங் கொள்ளவில்லை. ஜீவனுள்ள தேவனுடைய சபையை எழுப்பிக் கொண்டுவர, பரிசுத்த ஆவியானவரே அதற்கு போதகராக இருக்கிறார். பரிசுத்தமெல்லாம் போப்பிற்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள ஒருவருக்கு அல்லது ஒரு மத குருவுக்கு ஏகபோகமாக உரிமையாகி, அவர்களை பரிசுத்த மனிதர்கள் என்று சபையில் அழைப்பதற்காக அது இல்லை. பிரசங்கியார், மேய்ப்பர், உதவிக்காரர், தர்மகர்த்தா ஆகியோருக்கு எந்த அளவுக்கு பரிசுத்த ஆவியினிடத்தில் உரிமை உள்ளதோ, அதே அளவுக்கு சபையின் ஜனங்களுக்கும் உள்ளது. சபையோருக்குமே!
1217 அது நிக்கொலாய் மதஸ்தர் என்று அழைக்கப்பட்டதன் காரணம் என்னவெனில் …நேற்று இரவு அதைப் பற்றிப் பார்த்தோம். அவ்வார்த்தையை பதம் பிரித்து பொருள் கண்டோம். அது கிரேக்க மொழியிலுள்ள “நிக்கொ” என்றால்… நிக்கோ என்றால் “வென்று கீழே தள்ளுதல்” என்று பொருள். எதை வென்று கீழே தள்ளுதல்? நிக்கொ-லெய்டேன் லெய்டி -அதாவது, “சபையின் ஜனங்களை வென்று மேற்கொண்டு விடுதல்” என்று பொருள். அவ்வாறு அவர்களை வென்று கீழே தள்ளி, அவர்களுக்குள் ஒரு மனித ஒழுங்கை, நியமத்தை திணித்து, மத குருமார்கள் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தி, இவர்கள் ஒன்று கூடி எவ்வாறு போதிக்க வேண்டுமென்று முடிவு கட்டுகிறார்களோ, அதற்கேற்ப ஜனங்களுக்கு போதிப்பது என்ற விதமாக நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் ஆரம்பித்தன. இந்தவிதமாகத் தான் நிசாயா ஆலோசனை சங்கத்தில் நடந்தேறியது. ஏனெனில் அதேவிதமான மக்கள் நிசாயாவில் நடந்த ஆலோசனை சங்கத்தில் ஒன்று கூடி இவ்வாறு ஒரு மனித நியமத்தை நிர்ணயித்தார்கள். நாம்…வியாழக்கிழமை இரவில் நிசாயா ஆலோசனை சங்கத்தைப் பற்றி பார்க்கப் போகிறதினால், நான் இதைப்பற்றி இன்று அதிகம் பேசப் போகிறதில்லை. 18 ஆனால் அங்கே தான் ரோமன் கத்தோலிக்க சபையானது உருவாக்கப்பட்டது. பவுல், ஐரேனியஸ், பரிசுத்த மார்டின் ஆகியோரின் ஊழியத்தில் கிடைத்த ஆத்துமாக்களைக் கொண்ட குழுவிலிருந்து சிலரை வேறு பிரித்துக் கொண்டு கத்தோலிக்க சபை உருவாயிற்று. அவர்கள் அஞ்ஞான மார்க்கத்திலிருந்து மனந்திரும்பி…கிறிஸ்தவர்களானார்கள். ஆனால் அவர்கள் சபைக்கு பழைய ஏற்பாட்டு முறைமையிலான ஊழிய முறைமைக்குள் மீண்டும் இழுத்துக் கொண்டு வர விரும்பினர். பழைய ஏற்பாட்டில் எப்படி, பிரதான ஆசாரியர்கள் வமசவழி ரீதியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனரோ, அதே போல் அப்போஸ்தலப்பட்டத்திற்கு வாரிசு தேர்ந்தெடுத்தல் என்று கொண்டு வந்து, போப்பை அந்த ஸ்தானத்தில் வாரிசாக வைத்து, ஒரு போப்பிற்குப் பிறகு அடுத்த போப்பை வாரிசு முறையில் தேர்ந்தெடுத்து, இவ்வாறாக அடுத்தடுத்து போப்புகளை தேர்ந்தெடுக்கிற முறையைக் கொண்டு வந்தனர். இவ்வேதாகமம் முழுவதிலும் நாம் ஆராய்ந்து பார்த்ததால், அது எப்படி சத்தியத்திற்கு விரோதமானது என்றும், தேவன் அதை ஆரம்ப முதலே எவ்வாறு கடிந்துகொண்டு கண்டனம் செய்தார் என்பதையும் நீங்கள் காணலாம். இது சத்தியமாயிருக்கிறது. “நான் இதை வெறுக்கிறேன்” என்று தேவன் கூறுவதைப் பற்றி, நேற்றிரவில் பிரசங்கித்த சபைக் காலத்தைப் பற்றிய செய்தியில் கேட்டோம். சபையும் இதை வெறுத்தது.
1319 சபையானது மனிதனால் நடத்தப்பட வேண்டும் என்பது ஒருபோதும் தேவனுடைய நோக்கம் அல்ல. தேவனே தம்முடைய சபையை நடத்திச் செல்கிறார், அவர் ஆவியின் வரங்களைக் கொண்டு சபையை நடத்திச் செல்கிறார். ஆவியில் சீர்த்திருத்தம் கொண்டு வரவே தேவன் சபையில் ஆவிக்குரிய வரங்களை அளித்திருக்கிறார். அவருடைய சபையில் ஐந்து ஊழிய உத்தியோகங்கள் அவருக்கு உள்ளது. அவைகளில், முதலாவது, அப்போஸ்தலர்கள், அதாவது மிஷினரிகள் ஊழியம். மிஷினரி அல்லது அப்போஸ்தல ஊழியமானது இருக்கிற அழைப்புகளிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும். மிஷனரி என்ற வார்த்தைக்கு “அனுப்பப்பட்டவன்” என்று அர்த்தமாம். அப்போஸ்தலன் என்ற வார்த்தைக்கும் “அனுப்பப்பட்டவன்” என்னும் அதே அர்த்தம் தான். அவர்கள் ஏன் தங்களை மிஷனரி என்று அழைக்கப்படுவதையே தெரிந்துகொண்டார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் அப்போஸ்தலர்களே. சரி. அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள். இப்பொழுது அது அவருடைய சபைக்கென தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட உத்தியோகங்களாகும். 20 அதன் பின்பு, ஒவ்வொரு உள்ளூர் சபையிலும் ஒன்பது வரங்கள் மக்கள் மத்தியில் வருகிறது, அவை, விவேகம், ஞானம், சுகமளிக்கும் வரங்கள், அற்புதங்களைச் செய்தல், அன்னிய பாஷைகளில் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் செய்தல் போன்றவை. இவ்வரங்கள் யாவும் உள்ளூர் சபைகளில் இயங்குகின்றன. சபையிலுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் உரிய தனிப்பட்ட ஊழியம் ஒன்றுண்டு. அந்த தனிப்பட்ட ஊழியமானது மற்ற ஊழியத்தோடு இணைந்தே போகிறது. இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை பக்தி விருத்தியடைவதற்காகவே இவ்வூழியங்கள் உள்ளன. மற்றும் ஒருபோதும்…
1421 இப்பொழுது, இதை நினைவில் கொள்ளுங்கள், அதாவது இங்கே…இந்த கோடுகளை நான் இன்றிரவு இங்கே வரைந்துள்ளேன். முதல் சபை எபேசு, பிறகு சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா. இப்பொழுது, இவை தொடர்ந்து செல்கையில் நினைவிருக்கட்டும், இந்த முதலாம் சபைக்கு ஆவியின் பரிபூரணம் உண்டாயிருந்தது, ஆனால் இந்த சபைக்காலத்தின் முடிவில் அவையெல்லாம் வெளியே தள்ளப்பட்டது என்று நாம் காண்கிறோம். அடுத்த சபைக்காலம் கொஞ்சம் வெளித்தள்ளியது; அடுத்தது இன்னும் கொஞ்சம், அதற்கடுத்து இன்னும் கொஞ்சம், இவ்வாறு கடைசியில் ஒரு சிறு துளி மட்டுமே இருக்கக் கூடிய அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. ஓ, தியத்தீரா சபையின் காலத்தைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம், “உன்னிடம் சில காரியங்கள் உண்டு” என்று அவர் கூறினார்.
1522 தியத்தீராவுக்குப் பிறகு, தேவன் மார்டின் லூத்தர் என்ற பெயருள்ள ஒரு ஜெர்மானியரை எழுப்பினார், அவர் சபையை மீண்டும் தன் நிலைக்குத் திரும்பினார். அது மீண்டும் கொஞ்சம் சரியாக இயங்க ஆரம்பித்தது. அவர் நீதிமானாகுதல் என்பதைப் பற்றி பிரசங்கித்தார். மார்ட்டின் லூத்தர் வந்து நீதிமானாகுதலைப் பிரசங்கித்தார். அதற்குப் பிறகு, ஜான்வெஸ்லி வந்து, பரிசுத்தமாகுதல் பற்றி பிரசங்கித்தார். இப்பொழுது இங்கேயுள்ள ஏழாவது சபைக் காலத்தில் மீண்டும் அவரர்கள் அற்புத அடையாளங்களைக் கொண்டிருந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறுதல் என்ற நிலைக்கு நேராக திரும்பி வந்தார்கள். ஆயிரத்து ஐநூறு ஆண்டுக்காலம் சபையானது இங்கே இருண்ட காலங்களுக்குள் இருந்து வந்திருக்கிறது. அங்கேத் தான்…சபைக் காலத்தில் மிகவும் நீளமான, மிகவும் இருண்டாதாக, சபைக்காலம் அங்கே இருக்கிறது. நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறுதல் ஆகியவற்றின் காலங்களில் தான் முறையே படிப்படியாக சபையானது இருண்ட காலங்களிலிருந்து இங்கே வெளியே வர ஆரம்பித்தது. “ இந்த காலத்தின் முடிவில், சிறுபான்மையோர் பிழிந்தெடுக்கப்படுவார்கள். ஏனென்றால், பெந்தேகோஸ்தேயில் இருந்தது போலுள்ள அதே சபையானது கடைசியில் தோன்றி, ஆதியில் செய்ததுபோல கிரியை செய்வார்கள், நிக்கோலாய் மதஸ்தரின் கிரியைகள்.” (ஓ, தேவனே, நான் அந்த விஷயத்திற்குப் போகிற வரையிலும், பேசாதபடி என் வாயை மூடிக் கொண்டிருக்கட்டும்.) நீங்கள் பார்த்தீர்களா? ஆனால் அதை நான் காணமுடிகிறது. நீங்கள் அதைக் காணும் வரை பார்த்திருங்கள். இக்கடைசி சபைக் காலத்திற்குரிய தூதன் ஸ்தாபனங்களை வெறுக்கிறவனாக இருப்பான் என்பதை நான் உங்களுக்கு காண்பிப்பேன். ஆவியானவர் பிள்ளைகளை எழுப்புவார். அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. இப்பொழுது நாம் ஒரு…
1623 இப்பொழுது, நீங்கள் இதை கவனித்துப் பார்ப்பீர்களேயானால், அது இங்கே ஆதியில் எவ்வளவு மகத்தானதாயிருந்து, போகப் போக அடுத்து வந்த காலங்களில் எப்படி அது ஒடுங்கிப் போய் கடைசியில் முற்றிலும் அற்றுப் போகிற நிலைக்கு வந்தது. பிறகு, மீண்டும் அது ஆரம்பிக்கிறது. லூத்தர் அதை வெளியே இழுத்தார்; நீதிமானாகுதல் என்ற செய்தியின் மூலம். அதன் பிறகு, பரிசுத்தமாகுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ஆகிய செய்திகள் வந்தன. கடைசி சபைக் காலத்தில், ஒளியானது முழுவதும் நீங்கிப் போகிறது போலுள்ள அளவுக்கு நிலைமை மிகவும் மோசமடைகிறது. அங்கே மிகச் சிறிய அளவுக்கு உண்மையான சபை சுருங்கிப் போயுள்ளதால், தேவன், “அதற்காக அவர் தன்னுடைய கிரியையை தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நிமித்தம் சீக்கிரமாகவே முடித்துக் கொள்ளாவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை” என்று கூக்குரலிடுகிறார். புரிகிறதா? அப்பொழுதுதான் நீங்கள் சரியாக கடைசி காலத்தில் இருப்பீர்கள். இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
1724 நாம் இப்பொழுது சிமிர்னா சபையின் காலத்தைப் பற்றி பார்க்க துவக்கப் போகிறோம். முதலாவதாக, நான் இதைப் பற்றி சற்று பாகம் பாகமாக பிரித்து தாளில் எழுதி வைக்க விரும்புகிறேன். இப்பொழுது இரண்டாவது சபைக் காலம் சிமிர்னா ஆகும். அந்த சபைக் காலத்தின் நட்சத்திரமாக, ஐரேனியஸ் விளங்கினார் என்று நான் விசுவாசிக்கிறேன். அதை நீங்களும் என்னோடு ஒத்துக் கொள்வீரர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். (நீங்கள் அதை அரை மனதோடு நம்பினாலும் சரி, முழுவதுமாக நம்பினாலும் சரி.) ஐரேனியஸ் தேவனுடைய தூதனாக இருந்தார், ஏனெனில், அவரது ஊழியம் ஃப்ரான்ஸ் (கோல்) தேசத்தையே அசைத்தது. அங்கே சபைகளை அவர் நிறுவினார், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொண்டு அச்சபைகள் அந்நிய பாஷைகளில் பேசவும், மரித்தோரை எழுப்பவும், பிணியாளிகளை குணமாக்கவும், மழையை நிறுத்தவும், தினந்தோறும் அற்புதங்களை செய்துகொண்டும் இருந்தன. ஜீவனுள்ள தேவன் தங்கள் மத்தியில் ஜீவிக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.ஐரேனியஸ் தேவனுடைய மனுஷனாயிருந்தார்; ஏனென்றால் இயேசு, “ஒருவனும்…” இல்லை ஜனங்கள், “ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்” என்றனர். அது நிக்கொதேமு இயேசுவிடம் அதைக் கூறினதாகும்.
1825 சிமிர்னா பட்டணத்தில் வாணிபம் சிறப்புற்றிருந்தது. மேற்கத்திய நாடுகளுக்கும், லீதியாவுக்கும், அவற்றின் பொருட்களுக்கு சிமிர்னா ஒரு வர்த்தகச் சந்தையாக விளங்கியது. ஆசியாவிலுள்ள மூன்றாவது பெரிய நகரமாகவும், பெரிய துறைமுக நகரமாகவும் சிமிர்னா விளங்கியது. சிமிர்னா பட்டணத்தின் செல்வம், ஆலயங்கள், கட்டிடங்கள், கல்விச் சாலைகள், மருத்துவம், விஞ்ஞானம் இவை குறிப்பிடத்தக்க அளவுக்கு இருந்தது. சிமிர்னாவில் வாழ்ந்த யூதர்கள், சிமிர்னா பட்டணத்து மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள். பாலிகார்ப்தான் சிமிர்னாவின் முதல் கண்காணியாவார். பாலிகார்ப்பும் ஏனைய உத்தம ஊழியக்காரர்களும், சிமிர்னாவின் விசுவாசிகளுக்குள் தேவனைப் பற்றும் ஆழமான விசுவாசத்தை நிலைநாட்டினார்கள். ஆதிகாலத்து சபையின் பிதாக்கள் சிமிர்னாக்காரர்களுக்கு சத்தியத்தைப் பற்றி நல்லா ஆலோசனைகளைக் கூறினார்கள். 26 இச்சபைக் காலத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர் சிமிர்னா, சிமிர்னா என்றால் “கசப்பு,” வெள்ளைப் போளம் என்று அர்த்தமாம். கசப்பு மரணத்தை எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் அச்சபைக் காலத்து மக்கள் மரித்துக்கொண்டிருந்தபடியால், அது மரணத்தோடு தொடர்புடையதாயிருந்தது.
1927 ஒரு உபத்திரவப்படுத்தப்பட்ட சபை, “உபத்திரவப்படுத்தப்பட்டவர்கள்” என்று தேவன் அவர்களை அழைத்தார். தேவன் அவர்களுடைய உபத்திரவங்களை நோக்கிப் பார்த்து, அதைத் தாங்கிக் கொள்ள கிருபை அளித்தார். அவர் அவர்களுடைய உபத்திரவங்களை பார்த்துக் கொண்டிருந்து, அவர்களுக்கு மரணத்தின் மேல் ஜெயங்கொடுத்தார். அவர்களுடைய வறுமையைப் பார்த்துவிட்டு, அவருக்குள் அவர்களுக்கு ஐசுவரியங்களைக் கொடுத்தார். சிமிர்னா சபையானது, உபத்திரவம் என்னும் அக்கினி சூளையினுள் கடந்து சென்று பலியாக எரிந்து, அதினால் தேவனுக்கு சுகந்த வாசனையாக திகழ்ந்தனர். அது சிமிர்னாவில் சபையிலுள்ள மீதானவர்கள். அந்த முழு சிமிர்னா சபையையல்ல, அதிலுள்ள மீதியாயிருக்கிறவர்களைப் பற்றி கூறுகிறேன். அவர்கள் பத்து நாட்கள் உபத்திரவப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருந்ததன் பொருள், “அதிக இரத்தம் சிந்தப்பட்ட பத்தாண்டு உபத்திரவமாகும்.” 28 அக்காலத்தில் ரோமச் சக்கரவத்தியொருவன் இருந்தான். அவனது பெயரைக் கூட என்னால் சரியாக உச்சரிக்கக் கூடுமோ என்னவோ தெரியவில்லை. கி.பி. 67-ல் இருந்த கொடுங்கோலன் நீரோ மன்னனுக்குப் பிறகு வந்த மன்னர்களிலேயே மிகவும் இரத்தவெறி பிடித்த கொடுங்கோலனான இம்மன்னன் கி.பி.303 முதல் கி.பி 312 முடிய அரசாண்டான். அவன் பெயர் ட—ய—க்—ளீ—டி—ய—ன்.
2029 தேவன், மரணபரியந்தம் அவரைப் போல உண்மையாயிருக்கும்படி சிமிர்னாவினருக்கு புத்தி சொல்லுகிறார். “பிதா எனக்குத் தந்தது போல, நான் உனக்கு ஜீவ கிரீடத்தைத் தருவேன்” என்று கூறினார். (உபத்திரவங்களில்), ஜெயங்கொள்ளுகிறவனுக்கு இரண்டாம் மரணத்தின் மேல் ஜெயங்கொள்வதற்கான வாக்குத்தத்தத்தை செய்துள்ளார். “உங்கள் சரீரத்தை கொல்ல வல்லவர்களுக்குப் பயப்படாமல், சரீரத்தையும் ஆத்துமாவையும் கொல்ல வல்லவருக்கே பயப்படுங்கள்.” அது…சிமிர்னாக்காரர்கள் முடிவு பரியந்தமும் நிலைத்திருக்க வேண்டியதாயிருந்தது. “மனிதருக்குப் பயப்படாதேயுங்கள், ஜீவ கிரீடம் உனக்குக் கொடுக்கப்படும்” என்று சொல்லப்பட்டது. சபைக் காலங்கள் தோறும், கிறிஸ்தவத்திற்கு வந்த உபத்திரவங்களுக்கு சிமிர்னா சபைக்காலம் தான் முன்னுதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது, இது மிகவும் முக்கியமானது. கர்த்தருக்கு சித்தமானால் அதைப் பற்றி இன்னும் சிறிது பார்ப்போம். 30 உங்களில் சிலர், சிலவற்றைக் குறித்துக் கொள்ளாமல் விட்டுப் போயிருந்தால்…நீங்கள் எழுதக் கூடாத அளவுக்கு நான் வேகமாக எழுதினால், அக்குறிப்புகளை எங்களிடமிருந்து நிச்சயமாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம், அதை உங்களுக்குக் கொடுக்க நாங்கள்…நாங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறோம். (என்னை மன்னிக்கவும்)
2131 இன்றிரவு, வெளிப்படுத்தின விசேஷம் 2-ம் அதிகாரம் 8-ம் வசனத்திலிருந்து நாம் துவங்க இருக்கிறோம். நேற்றிரவில் எந்தக் கட்டத்தில் அவரை விட்டுவிட்டு சென்றோம்? அவர் நிச்சயமாகவே…நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை வெறுக்கிறார் என்று பார்தோம். அது சரிதானே? இப்பொழுது, தேவன் என்ன செய்கிறார்? நாம் முதலில் எதைப் பற்றி கண்டறிந்தோம்? இயேசு கிறிஸ்து யார் என்றும், அவர் என்னவாக இருக்கிறார் என்பதைப் பற்றி வெளிப்பாட்டினைத்தான் நாம் பார்த்தோம். அதற்கு அடுத்ததாக, நாம் கண்டுகொண்ட மகத்தான காரியம் என்னவெனில், தேவனைத்தவிர, வேறு எதையும் தேவனுடைய சபையின் மேல் ஆளுகை செய்ய ஏற்படுத்துவதை தேவன் வெறுக்கிறார் என்று நாம் கண்டறிகிறோம். அவர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறார். 32 இங்கே நமக்கு நான்கே வசனங்கள் உள்ளன. ஒரு விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட நான் சற்று இங்கே எப்படியாய் நிறுத்த விரும்புகிறேன். இஸ்ரவேல் ஜனங்கள் உலகத்து மக்களைப் போல் தாங்களும் நடந்து கொள்ள விரும்பியபோது, அங்கே நின்று கொண்டிருந்த அந்த நல்ல தீர்க்கதரிசியாகிய சாமுவேல் கூறினது உங்களில் எத்தனை பேர்களுக்கு அதை நினைவு கூற முடிகிறது? உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? தீர்க்கதரிசி அவர்களிடம், “நீங்கள் தவறாயிருக்கிறீர்கள்” என்று கூறினான். ஆனால் அவர்களோ, பெலிஸ்தியரைப் போலவும், ஏனையோரைப் போலவும் நடந்து கொள்ளவே விரும்பினார்கள். சரிதான், அதே காரியம் தான் இந்த முதலாவது சபைக் காலத்திலும் அப்படியே நடைபெற்றது. தேவன் தங்களை நடத்திச் செல்வதை ஜனங்கள் விரும்பாதது விசித்திரமான காரியம் தான். அவர்கள் பின்பற்ற விரும்பினது…அவர்கள் ஒரு மனிதனைப் பின்பற்ற விரும்பினார். இஸ்ரவேலரோ எப்போதும் செய்திருந்ததிலேயே மிகப் பெரிய தவறைச் செய்தனர். தேவனுடைய கிருபையானது, அவர்களுக்கு ஏற்கனவே ஒரு தீர்க்கதரிசியையும், ஒரு தலைவனையும், பாவப் பரிகாரத்திற்காக அவர்களுக்கு ஒரு ஆட்டுக்குட்டியை அளித்து, வானத்திலிருந்து அவர்களுக்கு ஆகாரத்தையும் அளித்திருந்தது, எல்லா நன்மையான காரியங்களையும் கிருபையானது அவர்களுக்கு அளித்திருந்தது. அப்படி அளித்திருந்த போதிலும், யாத்திராகமம் 19-ம் அதிகாரத்தில் அவர்கள் ஒரு பிரமாணத்தை அவர்கள் விரும்பினர். அவர்கள் தங்களுக்கு தெய்வீக பாண்டித்திய பட்டம் பெற்ற வேத பண்டிதர்களையும், சில மனிதர்களையும் வேண்டுமென்று விரும்பி, அதில் ஏதோ ஒன்றைப் புகுந்த விரும்பினர்.
2233 மனிதன் எப்பொழுதும் தன்னை உண்டாக்கிய சிருஷ்டிகரை விட புத்திசாலித்தனத்தில் மிஞ்சிவிட வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் தன்னையே அழித்துக் கொள்கிற ஒரு காரியத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்கிறதில்லை. சில ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்பாக, நான் “ கலப்பு மார்க்கம் ” என்ற தலைப்பில் பிரசங்கித்தேன். அந்தவிதமாகத் தான் உள்ளது. நீங்கள் எந்தக் காரியத்தையும் கலப்பினமாக்கும்போது, அது ஒருபோதும்…அத்தோடு அது முடிந்துவிடுகிறது! அது முடிவுற்றுவிடுகிறது, அது இனி ஒருபோதும் மீண்டும் முளைத்தெழும்ப முடியாது. ஒரு கோவேறுக் கழுதை மீண்டும் இன்னொரு கோவேறு கழுதையைப் பிறப்பிக்க முடியாது, ஏனென்றால் அது—அது ஒரு கோவேறு கழுதை, அது ஒரு கலப்பினம். நல்ல கலப்பற்ற தானியத்தை, உங்களால் நல்ல கலப்பில்லா தானியத்தை கலப்பு தானியத்திலிருந்து பிறப்பிக்க முடியாது. அது—அது நன்றாக வளரும், ஆனால் அது—அது, ஓ, நல்லதல்ல. நீங்கள் அதைச் செய்ய முடியாது. இனக்கலப்பு செய்யப்பட்ட எந்த ஒன்றும் நல்லதல்ல. 34 ஒரு கலப்பு மார்க்கம் நல்லதல்ல. தேவன் கூறியவைகளோடு நீங்கள் எதையாகிலும் கூட்டினாலோ, அல்லது நீங்கள் செய்யக் கூடாது என்று தேவன் கூறியவைகளில் இருந்து நீங்கள் எதையாகிலும் செய்வதே, அதுவே ஒரு கலப்பு மார்க்கமாயுள்ளது. அது காண்பதற்கு அழகாகக் காணப்படலாம். ஓ, வித்துக் கலப்பு மூலம் பிறபிக்கப்பட்ட வீரிய ஒட்டுரக தானியம், இயற்கையான தானியத்தைவிட பெரியதாய் இருக்கும். இரண்டு குதிரைகள் செய்கிற வேலையை கூடுதலாக கோவேறு கழுதை கிரியை செய்யும். நல்லது, அது…சகோதரனே, கிரியைகளினால் நாம் இரட்சிக்கப்படாமல் கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம், “கிரியைகளினால் இரட்சிக்கப்படாமல், கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்” எனவே அது…இப்படி குறிப்பிடுபவைகளை …நீங்கள்—நீங்கள் சிரமத்தோடு அமர்ந்து கேட்கிறீர்களோ என்று நான்—நான் கருதுகிறேன். நீங்கள் பாருங்கள்? ஏனெனில், பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு மற்றும் பல்வேறு சபைகளைச் சேர்ந்தவர்கள் இங்கு இருக்கிறீர்கள். நாங்கள் அதை அறிவோம். எனவே நான்—நான் அவ்வாறு கருதுகிறேன். அவ்வப்பொழுது சற்று இறுக்கமான நிலையிலிருந்து உங்களை தளர்த்திக் கொள்ளுங்கள், அவ்வித நிலையிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.
2335 இப்பொழுது கவனியுங்கள். இனக்கலப்பு செய்யப்பட்ட எதுவும் நல்லதல்ல. தேவன் உண்டாக்கிய விதமாகவே இருக்கிற மூல அசல் வித்தையே நீங்கள் எடுத்துக் கொள்ளும்போது, நிஜமானவற்றையே நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். 36 இஸ்ரவேல் சபையானது, அவர்கள் யாத்திரை செய்து கோண்டு போகையில், தேவன் அவர்களை போஷித்தது, அவர்கள் நலனில் சிரத்தையெடுத்து, அவர்களுக்காக யாவற்றையும் செய்தார் என்பதை நாம் கண்டறிகிறோம். கடைசியில் அவர்கள் சுற்றிலும் இருந்த பெலிஸ்தியரையும், அம்மோனியரையும்…மற்றோரையும் பார்த்துவிட்டு, “எங்களுக்கு ஒரு இராஜா வேண்டும்! அவர்களுக்கு இருப்பது போன்று எங்களுக்கு இல்லையே” என்று கேட்டார்கள். 37 ஜனங்கள் இன்றைக்கும் அதேக் காரியத்தையேச் செய்கிறார்கள். நமது சகோதரிகள் தொலைக்காட்சியில், க்ளோரியா ஸ்வான் மற்றும் இன்னும் யார் யாரையோவெல்லாம் …நிகழ்ச்சிகளில் பார்த்துவிட்டு, அவர்கள் உடுத்தியிருக்கும் ஒருவிதமான உடைகளை தாங்களும் அணிய வேண்டுமென்று விரும்பி, அதை வாங்குகிற வரையிலும் அவர்களால் அமைதியாக இருக்க முடியாது என்ற அளவில் இருக்கிறார்கள். பாருங்கள்? நகர்புற மையத்தில் ஏதாவது ஒரு பெண்மணியைப் பார்த்துவிட்டு, அவள் உடுத்தியிருக்கிறதை நீங்கள் சுட்டிக்காட்டி, “அன்பே, இது அழகாயில்லையா?” என்று கேட்பீர்கள். அப்பெண்மணி என்ன உடுத்த வேண்டும் என்று விரும்புவதைக் குறித்து, உங்களுக்கு என்ன அக்கறை தேவை? ஜனங்கள் இன்றைக்கு அவ்வாறுதான் இருக்கிறார்கள். ஒருவரைப் பார்த்து இன்னொருவர் பாவனை செய்ய விரும்புகிறார், ஒருவர் இன்னொன்றைப் போல பாவனை செய்ய விரும்புகிறார்கள். நீங்கள்…எல்விஸ் பிரெஸ்லியை எடுத்துக் கொண்டால், இன்றைக்கு அவரைப் போல பாவனை செய்யும் அநேகர் இருக்கிறார்கள். அவருடைய நிகழ்ச்சிகளுக்கு வருகிறவர்களை இரயில் வண்டிகளில் நன்கு திணித்தாலும் இடம் போதாது, அவ்வளவு பெருங்கூட்டம் அவருடைய நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள். ஏனெனில் அவர் மாம்சப் பிரகாரமான கூட்டத்தினர் நடுவில் மிகவும் பிரசித்தி பெற்றவராக ஆகிவிட்டார்…போலியாக பாவனை செய்தல்!
2438 மார்க்கத்தில் நமக்கு இதே காரியம் உள்ளது. நான் அன்றொரு நாள் மாட்டின் லூத்தருடைய வரலாற்றை படித்துக் கொண்டிருந்தேன். உங்களில் எந்த வரலாற்றாசிகளுமே இதை அறிந்துள்ளீர்கள். அதில் கூறப்பிட்டுள்ளதென்னவெனில், லூத்தர் கத்தோலிக்க சபையை எதிர்த்து நிற்பவராக நின்றதும், அசைக்க முடியாதபடி அவர் நிலை நின்றதும் ஒரு பெரிய இரகசியமல்ல, ஆனால் அவருடைய ஊழியத்தில் ஏற்பட்ட எழுப்புதலைத் தொடர்ந்து ஏற்பட்ட மதத்தீவிரவாதம், மூட பக்தி இவைகளின் நடுவில் அவர் தன் தலையை நிமிர்த்தி தேவ வார்த்தையோடு நிலைநின்றது தான் மிகப்பெரிய இரகசியம் என்றே வரலாற்றாளர்கள் கூறியுள்ளனர். தேவன் இப்படிப்பட்ட சூழ்நிலையில் லூத்தரை தெளிவுற்றவராகவும் உத்தமமாகவும் இருக்கும்படி காத்துக்கொண்டரே, அதுதான் அற்புதமாகும்.
2539 இப்பொழுது, அவர்கள் இந்த சாமுவேல் தீர்க்கதரிசியினிடம் வருகிறார்கள். வந்து, “எங்களுக்கு ஒரு தீர்க்க…இல்லை ஒரு—ஒரு இராஜாவை ஏற்படுத்தும்” என்று கேட்டார்கள். அப்பொழுது கர்த்தர் சாமுவேலிடம், அந்த யோசனையை நிரகாரிப்பதாகக் கூறினார். தேவன் இங்கே ஸ்தாபனங்களைப் பற்றிய காரியத்தை எப்படி நிராகரிக்கிறாரோ, அதைப் போலவே அப்பொழுதுள்ள காரியமும் இருக்கிறது. 40 சாமுவேலின் காலத்தில் தேவன் எப்படி அதை நிராகரித்தாரோ, அப்படியே ஸ்தாபனத்தையும் நிராகரிக்கிறார். அவர் ஜீவனையுடைய, இசைவாய் இயங்கிடும் உறுப்புகளை நிராகரிப்பதில்லை. ஆனால் அவர் சபை ஸ்தாபனத்தை நிராகரிக்கிறார். நமக்கு ஜீவனோடு இயங்கும் அமைப்பு வேண்டும். ஆனால் நமக்கு ஜீவனற்ற ஸ்தாபன சபையானது தேவையில்லை. ஏனெனில் அது பிரிவினைக் கோடுகளை உண்டாக்குகிறது. “நாங்கள் இன்னார்—இன்னார் ” என்கிறது. நீர் ஒரு கிறிஸ்தவரா என்று கேட்டால், “நான் மெதோடிஸ்ட்” என்று பதில் வருகிறது. நீர் ஒரு கிறிஸ்தவரா என்று கேட்டால் “நான் பாப்டிஸ்டு” என்கிறார்கள். இவையெல்லாம் பன்றிக் கொட்டிலுள்ள பன்றிக் கொப்பானது என்பதைத் தவிர வேறு விசேஷமான அர்த்தம் கொண்டவை அல்ல. இவ்விதப் பெயர்களும் கிறிஸ்தவன் என்ற அழைப்புக்கும் சம்மந்தமே இல்லை. ஒரு கிறிஸ்தவன் என்பதே அர்த்தமுள்ளது! 41 அன்றொரு இரவில், நான் ஒரு பெண்ணிடம் மேடையிலிருந்து, “நீ கிறிஸ்தவளா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “ஏன், நான் நீங்கள் புரிந்துகொள்ளும்படி கூற விரும்புவது என்னவெனில், நான் ஒவ்வொரு இரவும் ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைக்கிறேன்” என்றாள். கிறிஸ்தவத்திற்கும் இதற்கும் என்னவோ சம்மந்தம் உள்ளது போல்! 42 இன்னொரு மனிதன், “நான் நிச்சயமாக ஒரு அமெரிக்கன்” என்று கூறினான். அது நல்லது தான். ஆனால் கிறிஸ்தவத்திற்கும் அதற்கும் எந்த ஒரு சம்மந்தமேயில்லை. நீங்கள் வேறொரு இராஜ்யத்தைப் சார்ந்தவர்களாக இருப்பதால், நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கிறீர்கள். அது சரிதான். நீங்கள்—நீங்கள் உன்னத்தில் இருக்கும் இன்னொரு இராஜியத்தில் உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.
2643 சாமுவேல் என்ன செய்தான்? இங்கே தேவன் என்ன செய்தாரோ அதே தான் சாமுவேல் செய்தான். சாமுவேல் இஸ்ரவேலரையெல்லாம் கூடிவரச் செய்து, “இப்பொழுது நான் சொல்வதைக் கேளுங்கள், நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன். எப்பொழுதாவது ஒரு முறையாவது நான் உண்மையல்லாத எவற்றையாவது உங்களுக்கு கூறினதுண்டா?” என்று கேட்டான். மேலும், “நான்—நான் உங்கள் மத்தியில் தேவனுடைய தீர்க்கதரிசியாயிருக்கிறேன். நான் உங்களிடத்தில் கர்த்தரின் நாமத்தில் கூறின எந்தக் காரியமாவது எப்போதாவது ஒரு முறையாவது நிறைவேறாமல் போனதுண்டா?” என்று கேட்டான். அதைத்தான் சாமுவேல் அவர்களிடத்தில் கூறினான். அவன் மேலும் “தேவன் உங்களைப் போஷித்து, உங்களை காப்பாற்றி, உங்களுக்கு இந்தக் காரியங்களையெல்லாம் செய்யவில்லையா? மற்ற புறஜாதிகளைப் போல் நடந்துகொள்ள நீங்கள் முயலுவதனால், நீங்கள் பாவம் செய்கிறீர்கள்” என்று கூறினான். அவர்கள், “ஓ…” என்றார்கள். 44 அவன், “இன்னொரு காரியத்தை நான் உங்களிடம் கேட்கப் போகிறேன். உங்களிடத்திலிருந்து நான் எப்பொழுதாவது ஏதாவது பணம் பறித்துக் கொண்டதுண்டா? எப்பொழுதாவது உங்களிடம் காணிக்கைக்காக கையேந்தினதுண்டோ? அல்லது கர்த்தருடைய நாமத்தினால் உங்களிடம் உரைத்த எந்தக் காரியமும் நிறைவேறாமல் போனதுண்டா?” என்றான். அதற்கு அவர்கள், “இல்லை, நீர் ஒருபோதும் எங்களுடைய பணத்தை பறித்துக் கொண்டதில்லை என்பது உண்மைதான். நீர் கர்த்தருடைய நாமத்தினால் எங்களுக்கு உரைத்த எதுவும் நிறைவேறாமற் போனதில்லை” என்றார்கள். அப்பொழுது சாமுவேல், “அப்படியானால் எனக்குச் செவி கொடுங்கள்! ஏனைய ஜனங்களைப் போல் நடந்து கொள்ள விரும்புவதன் மூலம் நீங்கள் பாவம் செய்கிறீர்கள்” என்று கூறினான். ஆனால் அவர்களோ எப்படியாயினும் ஒரு ராஜா வேண்டுமென்றனர்! அது சரியோ, தவறோ, அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல், அவர்கள்—அவர்கள் தங்கள் யோசனையை செயல்படுத்த விரும்பினர். 45 அதேவிதமான காரியத்தைத்தான் சபையானது இங்கே எபேசுவிலும் செய்தது, அவர்கள் நிக்கொலாய் மதஸ்தரின் போதனையை ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் அதைச் செய்தபொழுது, அது அவர்களை, சடங்காச்சார ரீதியில் மதமாறிய அஞ்ஞானிகளின் கூட்டத்தோடு கிறிஸ்தவர்களின் கூட்டமும் ஒன்றாகும்படி தள்ளிவிட்டது. அச்செயல், ஆயிரத்து ஐநூறு ஆண்டுக்கால இருண்ட காலங்கள் ஏற்பட காரணமாக அமைந்தது. லூத்தர் வந்தபோது, அவர்களை அதிலிருந்து வெளியே இழுத்துவிட்ட போதிலும், லூத்தரன்கள் (இரண்டாவது சுற்றில்,) எபேசுவில் அவர்கள் செய்தது போலவே மீண்டும் வழுவிப் போனார்கள். சரியாக!
2746 இப்பொழுது நீங்கள் கவனித்துப் பார்த்தால், இந்த குத்து விளக்கு அந்தவிதமாக அமைந்திருக்கவில்லை. அவை இந்த விதமாக தொடங்கி மேலே மேலே வருகின்றன. அவர் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இங்கே உயரமாக இருக்கும் இந்த ஒரு அகல் இங்கே உள்ளது. சிலுவையைப் போல் தோற்றமளிக்கும் இதில் அவர் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து அகன்ற பொழுது, கிறிஸ்தவமானது மங்கிப் போயிற்று. இவ்விளக்கை சிலுவையைப் போல் பார்த்தால், அவருடைய வலது கரம் விளக்கின் இந்த அகலிலும், அவரது இடம் கரம் ஏழாவதாக அந்த அகலிலும் அமைந்திருக்கிறது என்பதையே 4-ம் அதிகாரத்தில் அவரை இவ்வாறு நாம் பார்த்தோம். இப்பொழுது சரியாக இங்கே , அவருடைய கரம் முதல் சபையின் மேலும் கடைசி சபையின் மேலும் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிறார். அல்பா மற்றும் ஓமெகாவாகிய இவ்விரு எழுத்துக்களுக்கிடையில் உள்ளதெல்லாம் மற்ற எழுத்துக்கள். ஆனால் அவர் “அல்பாவும் ஓமெகாவும்” என்று சிறப்பித்துக் கூறியுள்ளார். அவர் தம்முடைய சிரசிற்கு மேலே ஒரு வானவிலை உடையவராயிருந்தார், அது அவருடைய உடன்படிக்கையாயிருந்தது.
2847 இப்பொழுது, பெந்தெகொஸ்தேயில் ஏற்பட்ட ஒளியானது, அது துவங்கிய இடத்திலிருந்து நீங்கள் அதைக் கவனித்தால், அது படிப்படியாக மங்கிக்கொண்டே வந்துள்ளது என்பதைக் காணலாம், இந்த மனிதர்கள், ஐரேனியஸ், பாலிகார்ப் மற்றும் ஏனையோரும், தங்கள் சாட்சிகளை தங்களுடைய இரத்தத்தினால் முத்திரையிட்டார்கள். இது முடிவிலே கிறிஸ்தவத்தை பிழிந்தெடுத்துவிட்ட அளவிற்கு மிக இருண்ட நாட்களுக்குள் கொண்டு சென்றது. 48 இப்பொழுது பாருங்கள், குத்துவிளக்கின அந்தப் பெரிய வளைவில் முதல் சபையையும், மறுபக்கத்தில் இருந்த சபையையும், முதலில் சிறிது ஒளியும் பிறகு ஒளி அதிகரித்துக் கொண்டேயும் வந்துள்ளது. அந்த நாள் வரைக்கிலும் வந்து அது எவ்வாறு பிரகாசிக்கிறது என்பதைப் பாருங்கள். இப்பொழுது இந்த காலத்தில் முடிவில், லவோதிக்கேயா என்ற “வெதுவெதுப்பான” காலத்திற்குள் அது வரும் என்று இங்கே முன்னுரைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இங்கே அது உள்ளது, காரணம், இந்தக்காரியம் அவர்களை அந்த நிக்கொலாய் மதஸ்தரின் போதகமானது அந்தக் கேட்டுக்குள் கொண்டு போய் விட்டுவிட்டதென்றால், பெந்தேகொஸ்தேயில் இருக்கும் நமக்கு ஏன் அது வேண்டும்? 49 “ஒரு மிருகம் இருக்கும்” என்று வேதம் கூறியதை நீங்கள் அறிவீர்கள். அதுதானே ரோமாபுரியின் போப்பு மார்க்கமாகும் என்பதை நாம் அறிவோம். அது முற்றிலும் உண்மை. அப்பொழுது அவர்கள் அம்மிருகத்திற்கு ஒரு சொருபத்தை உண்டாக்குவார்கள். சொரூபம் என்பது என்ன? ஒன்றைப் பார்த்து அதைப் போலவே செய்தல். அதுதான் சபைகளின் சங்கமாகும். பெந்தெகொஸ்தே ஸ்தாபனமும் அதில் உள்ளது. ஒரு வேளை வருகிறது, அப்பொழுது நீங்கள் ஒன்று ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், அல்லது உங்களது கதவுகளை நீங்கள் திறந்து வைத்துக் கொண்டிருக்க முடியாது. அது உண்மையில்லையா என்பதைப் பாருங்களேன்! எனவே தான் அந்த காரியத்திற்கு நாம் மரண அடி கொடுக்கிறோம். ஆம், ஐயா. நீங்கள்…அவர்கள் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டு, அதில் நீங்கள் சேராவிட்டால், அதாவது அந்த ஸ்தாபன அடையாளத்தை உங்கள் மேல் போட்டுக் கொள்ளாவிடில், நீங்கள் விற்கவோ கொள்ளவோ இயலாது என்ற நிலைமை வரும்.
2950 அந்நாட்களில் அவர்கள் சுட்டெரிக்கப்பட்டு அழிக்கப்பட்டார்களே, அதை போலவே அது இருக்கும். அவர்கள்…நான் அங்கிருந்த அந்த பண்டைய அரங்க சாலைக்குள் நின்றேன். அங்கே அந்த கேளிக்கைக்காக ரோமாபுரியில் போரிடும் வாட் போர் வீரர்கள் நிற்கும் இடத்தில் நின்று அங்கே நோக்கிப் பார்த்தபோது, ஒரு குழந்தையைப் போல அழுதேன். அங்கே என்னுடைய கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் சிறு குழந்தைகள் அநேகர் சிங்கங்களினால் கிழித்து, கொன்று புசிக்கப்பட்டதைக் குறித்து நான் அறிந்தேன். அவர்கள் யாவரும் விசுவாசத்திற்காக அவ்வாறு கொல்லப்பட்டுப் போயிருந்தால், நான் இப்பொழுது அவர்களை கைவிட்டுவிடுவேனோ? இல்லை, ஐயா, இல்லை சகோதரனே! பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நான் தைரியமாக நிற்கட்டும். அதனால் எவ்வளவாய் புகழ்ச்சிக் குறைவாக எண்ணப்பட்டாலும் பரவாயில்லை…
3051 சிலர் என்னிடம், ஒரு விஷயத்தைப் பற்றி கூற விரும்பியதுண்டு…“நல்லது…” அண்மையில் யாரோ ஒருவர் …ஓ!, எத்தனையோ பெரிய ஊழியக்காரர்களில் அநேகர் என்னைக் கூப்பிட்டு, “சகோ. பிரான்ஹாமே, நீங்கள் அதைக் குறித்து பிரசங்கிப்பதை நிறுத்தாவிட்டால், எல்லா ஸ்தாபனங்களுமே உங்களுக்கெதிராக ஆகிவிடும்” என்று கூறினார்கள். 52 அப்பொழுது நான், “ஏன், ஒரேயொருவர் மட்டும், பரலோகத்தில் இருக்கிற அந்த ஒருவர் மட்டும், எனக்கெதிராக இருக்கமாட்டார், நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒருவர் அவரே” என்றேன். பாருங்கள்? ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் உள்ள மக்களை நான் நேசிக்கிறேன். நிச்சயமாக. ஆனால் நிறைவேறாத எந்த வார்த்தையையாவது நான் கர்த்தருடைய நாமத்தினால் உங்களுக்கு எப்பொழுதாவது உரைத்ததுண்டோ? பாருங்கள்? உரைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு காரியமும் சரியாக நிறைவேறியதுண்டா? உங்களிடம் எப்பொழுதாவது நான் பணத்திற்காக கெஞ்சியது உண்டா? அப்படியானால் ஸ்தாபனத்தைவிட்டு வெளியே நில்லுங்கள், கிறிஸ்துவுக்குள் சுயாதீனராக நிலைத்திருங்கள். பரிசுத்த ஆவியானவர் தாமே எப்பொழுதுமே சபைக்கு உள்ளும் புறமும் அசைவாடட்டும்.
3153 முக்கியமான ஒரேயொரு காரியம் என்னவெனில், உங்களுக்குள் நிலவும் சிறு சிறு வேறுபாடுகளையெல்லாம் களைந்து போடுங்கள். சிறு சிறு கொள்கைகள், சகோதரர்களைப் பற்றி சிறிய விசித்திரமான எண்ணங்கள், மேலும் அதைப் போலுள்ள காரியங்கள் இவற்றை உதறி எறியுங்கள். உங்கள் ஆத்துமாவுக்குள் ஒரு போதும் கசப்பான வேர் முளைத் தெழும்பிவிட வேண்டாம். அப்படியிருக்க நீங்கள் அனுமதித்தால், அது உங்களை அரித்துப் போடும். அது உண்மை. அன்பில் தொடர்ந்து நிலைத்திருங்கள். மக்கள் உங்களை எவ்வளவாய் வெறுத்தாலும், அதைப் பற்றி எனக்கு அக்கறையில்ல்லை. நீங்கள் எப்படியாயினும் அவர்களை நேசியுங்கள். அதை உங்களால் செய்ய முடியவில்லையென்றால் இன்னும் உங்களிடத்தில் தளர்வுகள் உள்ளன. நீங்கள் இன்னும் முத்திரையிடப்படவில்லை. எனவே திரும்பி வந்து கிறிஸ்துவின் இரத்தத்தினால் சரியாக முத்திரையிடப்படுங்கள். அதுவே உங்களை எல்லா கசப்பான வேர்களிலிருந்தும் சுத்திகரிக்கும். ஆம்.
3254 இப்பொழுது, பாருங்கள், நாம் அதை மறுபடியும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். பெந்தேகொஸ்தேயின் ஆசீர்வாதம் 1906-ம் ஆண்டில் விழுந்தது. திபெத்து நாட்டிலிருந்து வந்திருக்கிற ஒரு மிஷனரி இன்றிரவில் அங்கே அமர்ந்திருக்கிறார். அவர் இங்கிருக்கிறபடியால்…நான் இதைப் பற்றிச் சொல்லவில்லை. அவன் இன்னும் வீடு திரும்பவில்லை என்று எண்ணுகிறேன். அவர் இன்னமும் இங்கே தான் இருக்கிறார் என்று எண்ணுகிறேன். நான் இறங்குவதற்கு முன்னால் அவர் நம்மிடையே பேசப் போகிறார். முதலில் விழுந்த அந்த பெந்தேகோஸ்தே எழுப்புதலை அந்த மனிதர் நினைவில் வைத்திருக்கிறார். அப்பொழுது எந்த ஒரு ஸ்தாபனமும் ஏற்படவில்லை. யாவரும் எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபதித்தார்கள். ஓ, தவறான அடியை, நடையை எடுப்பது அப்போது எவ்வளவு சுலபமானதாகவும், அறிவாளிகளுக்கு அது எவ்வளவு நல்லதாகவும் காணப்பட்டிருக்கும்.
3355 இஸ்ரவேல் அந்நதிக்கரையில் நின்று ஆர்ப்பரித்தபோது, அவர்களுக்கு என்ன தெரியவில்லை என்றால் …“இந்த விதமான மார்க்கம் ஏதோ புதிதாக இருக்கிறதே” என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஏன், இது மிகவும் பழமையான மார்க்கம். நிச்சயமாக. உலகமானது உண்டாவதற்கு முன்பே, அவர்கள் ஆர்ப்பரித்து, தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டிருந்தார்கள். தேவன் அவ்வாறு கூறினார். அவர் யோபைப் பார்த்து, “விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே அப்பொழுது நீ எங்கிருந்தாய்?” என்று கேட்டார். உலகமானது உண்டாக்கப்படுவதற்கு முன்னரே அது நடந்தது.
3456 ஆனால் இப்பொழுது இஸ்ரவேலரைப் பாருங்கள். அவர்கள், அற்புதங்களைப் பார்த்திருக்கின்றனர். அது ஆதிகாலத்து பெந்தெகொஸ்தேயாக இருந்தது. இஸ்ரவேல் அந்நாளைய பெந்தெகொஸ்தேயாக திகழ்ந்தது. அவர்கள் எகிப்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர். தேவன் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு எல்லாவிதமான அற்புதங்களையும், அடையாளங்களையும் அளித்து, அவர்களை விடுவித்தார். அவர்கள் அந்த செங்கடலில் கரையில் நின்றபோது, அவர்களுக்கு ஒரு பெந்தேகொஸ்தே கூட்டம் உண்டாயிருந்தது…அவர்கள் ஆர்ப்பரித்தனர்! இப்பொழுது கவனியுங்கள். மோசே ஆவியில் பாடினான், மியாமும் ஒரு தம்புருவை எடுத்துக் கொண்டு அதை அடித்து, கடற்கரை முழுவதும் ஓடியாடிப்பாடி, ஆவியில் நடனமாடினாள், இஸ்ரவேலின் குமாரத்திகளும், அவளைப் பின்பற்றி, ஆவியில் நடனமாடினார்கள். அது பெந்தெகொஸ்தே கூட்டம் இல்லை என்றால், நான் அவ்விதமான கூட்டத்தையே பார்த்திருக்கவில்லை என்று தான் அர்த்தமாகிறது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமானது, இன்னும் நாற்பதாண்டுகள் யாத்திரை மேற்கொண்ட பிறகுதான் வரும் என்பது அவர்களுக்கு அப்பொழுது ஒன்றுமே தெரியாது. ஆனால் அத்தேசம் சுமார் நாற்பது மைல்கள் தூரத்தில் தான் இருந்தது. ஆனால் அவர்கள் தவறான காரியத்தைத் தெரிந்து கொண்டபடியினால், நாற்பது மைலகள் தூரத்தில் இருந்த அத்தேசத்தைப் போய் சேர்ந்திட நாற்பதாண்டுகள் பிடித்தது. பரிசுத்த ஆவி தங்களை நடத்த அனுமதிப்பதற்குப் பதிலாக, அக்கினி ஸ்தம்பம் அவர்களை அழைத்துக் கொண்டு போய் நடத்தட்டும் என்பதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு பிரமாணத்தையே பெற்றிருக்க விரும்பினர். அவர்கள் தாங்களாகவே ஏதோ ஒன்றை செய்ய வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். அவர்கள் சில குறிப்பிட்ட மதகுருமார்கள் தங்களுக்கு இருக்க வேண்டுமென்றும், சில பிரசித்தி பெற்ற நபர்கள் இருக்க வேண்டுமென்றும், தாங்கள் தர்க்கமிட்டுக் கொள்ள தங்களுக்கு ஒரு வேத சாஸ்திரம் இருக்க வேண்டுமென்றும் விரும்பினார்கள். பரிசுத்த ஆவியானவர் தங்களை நடத்துவதற்கு பதிலாக இவைகளையே அவர்கள் தெரிந்து கொண்டனர். அவர்கள் ஆவியில் பாடினர், தேவன் அவர்களுக்கு யாவற்றையும் அளித்திருந்தார், ஆனால் தாங்கள் அதற்குள் கிரியை செய்ய வசதியாக அவர்களுக்கு ஏதோ வேண்டுமென்று விரும்பினர்.
3557 மீண்டும் இனக்கலப்பு செய்தல் போன்றே ஏற்பட்டது. பசுவானது பசுவாகவே இருந்துவிட்டு போகட்டும், குதிரையானது குதிரையாகவே இருந்துவிட்டு போகட்டும், உணவும் அவ்வாறு இருக்கட்டும், அவர்கள்… ரீடர்ஸ் டைஜ்ஸ்ட் என்ற பத்திரிக்கையில் ஒரு விஞ்ஞானக் கட்டுரையில், உணவுப் பொருளில் இனக்கலப்பு செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது, ஜனங்களும் அதைப் புசிக்கிறார்கள் …என்று விஞ்ஞானம் கூறியுள்ளது. கோழிகளை எடுத்துக்கொண்டால், அவைகளுக்கு இறக்கைகளும், கால்களும் போதுமான அளவு இல்லாத அளவிலான பரிதாபமான இன கோழிகளை அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். அவைகள் முட்டையிடுமானால் அவை துரிதமாக மரித்துப்போகும், அதன் ஆயுட்காலம் ஒரு வருடம்தான். அவைகளின் திசு மிகமிக மென்மையானவை, எனவே நீங்கள் கடித்து மென்று தின்னவே வேண்டியதில்லை. அதை புசிக்கிற மக்களை, அது தாறுமாறான நிலையில் ஆக்கிவிடுகிறது. அது உண்மை. 58 அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சென்ற வருடத்தில், ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவோர் நாற்பது சதவிதமாக அதிகரித்திருக்கிறதாம், தற்காலத்தில் பெண்களின் தோள்கள் விரிவடைந்தும், அவர்கள் இடுப்பு குறுகிக் கொண்டும், ஆண்களின் தோள்கள் குறுகிக் கொண்டும், இடுப்பு விரிவடைந்து கொண்டும் வருகிறதாக விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? காரணம் என்னவெனில், நீங்கள் ஒரு தாறுமாறாக்கப்பட்ட விதை கொண்ட ஆகாரத்தை புசித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தாறுமாறாக்கப்பட்ட ஆகாரத்தை புசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இயற்கையான அசலான பொருட்களை உண்டு வாழவே உங்கள் சரீரம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. இந்த புரட்டான உணவு என்ன செய்கிறது? புருஷர்கள், ஸ்திரீகள் ஆகிய இருபாலருக்கும் உள்ள இயற்கையான தன்மையையே மாற்றி விடுகிறது. அதனால், ஹாலிவுட் என்ற நவநாகரீக திரைப்படத்துறை, நமது அரசாங்கம் உள்பட அனைத்து விஷயங்களிலும் முழுவதும் கோணல்மாணலான தாறுமாறான ஆட்கள் நிரம்பியிருக்கிறார்கள். அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவர்கள் தங்களுடைய சொந்த விருட்சமான அறிவின் விருட்சத்தின் மூலம் இத்தீங்கையெல்லாம் தங்கள் மேல் வருவித்துக் கொண்டு, தங்களையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
3659 ஆதிக்க திரும்பிச் செல்லுங்கள்! இயற்கையை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள்! தேவனுடைய வழியில் குறுக்கிடாதீர்கள். சபையானது பரிசுத்த ஆவியிலேயே தொடர்ந்து நிலைத்திருக்கட்டும். தேவன் இந்த பேராயர்கள் மற்றும் போப்புகளோடு உள்ள, எல்லாவித உபதேசங்களிலிருந்தும் விலகிச் செல்லுங்கள். நாம் எங்கே துவங்கினோமோ, அதற்குத் திரும்பிச் செல்லுங்கள். திரும்பிச் செல்லுங்கள். இயேசு இன்றிரவு வருவாரானால், அப்பொழுது நீங்கள், “நான் ஒரு மெத்தோடிஸ்டு” என்று கூறினால், அதற்கு அவர், “ஆதி முதலாய் அப்படியிருக்கவில்லையே” என்பார். “நான் பிரெஸ்பிடேரியன்” என்று கூறினால், “ஆதி முதலாய் அப்படியிருக்கவில்லையே” என்று பதிலளிப்பார். ஆதியில் என்ன இருந்தது? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் உண்டான பெந்தெகொஸ்தே அனுபவன் தான் உண்டாயிருந்தது. அந்த விதமாகத் தான் அது ஆரம்பித்தது. 60 ஆனால் நாம் அதை தாறுமாறாக்கிப் போட்டோம் என்பதைப் பாருங்கள். ஓ, தாறுமாறாக்குதல் அதை அதிக அழகுள்ளதாகச் செய்கிறது, நிச்சயமாக. அந்த சிறிய சபை ஆவியில் நடனமாடி தெருக்களில் ஆர்ப்பரித்துக் கொண்டு சென்றனர். ஜனங்களோ அவர்கள் மேல் கற்களை வீசியெறிந்தனர், அவர்களைக் குறித்து பரிகசித்தனர், இன்னும் அதுபோன்ற ஒவ்வொரு காரியத்தையும் அவர்களுக்குச் செய்தனர். அது மிகவும் அழகானதாய் இருக்கவில்லை. “ஆனால் எங்களுக்கு பெரிய துதிப்பாடல்களும், அப்போஸ்தல பிரமாணமும் உண்டு, ஓ, எங்களது மேய்ப்பர், வேதபண்டிதர், பி.எச்.டி., எல்.எல்.டி, இரட்டை எல்.எல்.டி ஆகிய இன்ன—இன்ன பட்டங்களைப் பெற்றவர்” என்று பெருமையடித்துக் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்து “ஆமென்” என்பதற்குப் பதிலாக கிண்டலாக “ஆ—மேன்” என்று கூறுகிறார்கள். பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட கன்றுக்குட்டியை போல் அந்த எல்லாக் காரியங்களும் உள்ளன. 61 நான்—நான் இவ்வாறு கூற வேண்டுமென நோக்கங் கொண்டிருக்கவில்லை. என்னை மன்னியுங்கள். நான் அந்தவிதமாக கூற வேண்டும் என்று பொருட்படுத்திக் கூறவில்லை. புரிகிறதா? நான் அந்தவிதமான பொருட்படுத்தவில்லை. ஊழியக்காரனுக்குரிய இலட்சணம் அல்ல.
3762 ஆனால் அப்படிப்பட்ட செயல்களைப் பாருங்கள், நான்…அது என் நினைவுக்கு வந்தது, பாருங்கள், ஆனால் அதைப் போன்ற வித்தியாசமான காரியங்களையெல்லாம் அவர்கள் கூறி, செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியும், “இப்பொழுது, இல்லை, நீங்கள் அதை சரியாக கூறுகிறதில்லை. ‘ஆ—மேன்’” என்று கூறுகிறீர்கள். நான் ஒரு நல்ல பழமையான ஒரு பெந்தெகொஸ்தே ஆராதனையையே விரும்புகிறேன், ஏனெனில் அங்கே, தேவனுடைய வல்லமையான விழுந்து, சப்தமிட்டு, ஆர்பரித்து, தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டு ஆராதிக்கிற ஒரு மகத்தான வேளை உண்டாயிருக்கிறது. அந்தவிதமாகவே ஆவியானவர் ஜனங்களை பற்றிக் கொள்ளுகிறார். ஆனால், நாம்…இவர்கள் மத்தியிலோ நீங்கள் ஒரு “ஆமென்” யைக் கேட்க முடிவதில்லை. அவர்கள் கூறுவது, “ஆ மனிதனே” என்பது தான். ஸ்தாபனங்களில் இப்படிப்பட்ட காரியத்தைத்தான் பார்க்க முடியும், நீங்கள் பாருங்கள். இந்த ஸ்தாபனங்கள் வணங்காதவர்களாய், பெருமை கொண்டவைகளாய் காணப்படுகின்றன…
3863 இப்பொழுது…இதைப் பற்றி ஏதாவது தீர்க்கதரிசனம் உள்ளதா? கடந்த இரவில் நாம் பவுலின் தீர்க்கதரிசனத்தைப் பார்த்தோமே, நினைவிருக்கிறதா? “நான் போன பின்பு, மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும், உங்களுடைய சொந்த சபையிலிருந்து சிலர் எழும்பி, (அவர்கள் நடுவிலிருந்து தான் ரோமக் கத்தோலிக்க சபை ஏற்பட்டது) சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்வார்கள்.” பவுல் முன்னுரைத்த ஓநாய்கள் தான் நிக்கொலாய் மதஸ்தரின் போதகர் உண்டாகக் காரணமாயிருந்தன என்பதை நாம் கண்டறிகிறோம். 64 தீர்க்கதரியினூடாக ஆவியானவர் மறுபடியும் பேசுவதைக் கவனியுங்கள்; “கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக, எப்படியெனில் மனுஷர்கள் தற்பிரியராய் (நான் டாக்டர் பட்டம் பெற்ற இன்னார்—இன்னார் , இப்பொழுது அதைக் குறித்து நீ எனக்கு சொல்ல வேண்டியதில்லை, நான் ஒரு பிரெஸ்பிடேரியன் என்பதை நீ புரிந்துகொள்ளும்படி நான் உனக்கு கூற விரும்புகிறேன். அல்லேலூயா! அல்லது ‘நான் ஒரு பெந்தெகொஸ்தேகாரன்’)” என்றெல்லாம் தற்பிரியராய் பேசுகிறார்கள். நீங்கள் சுபாவ ரீதியாக பெந்தெகொஸ்தேகாரராக இல்லாவிடில், அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது? பெந்தெகொஸ்தேயின் அனுபவம்தான் காரியம், பாருங்கள். ஆம் ஐயா! “நான் அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையை சேர்ந்தவன்” என்கிறார்கள். அதாவது…தேவனுக்கு இந்தப் பெயர்கள் எல்லாம் எந்தவொரு வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகின்றது? ஆனால் நீங்களோ உன்னதத்தின் இராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், பாருங்கள். அது உண்மை.
3965 இப்பொழுது நீங்கள் பார்பீர்களேயானால்…இந்த ஸ்தாபனக் கூட்டங்களெல்லாம், களியாட்டுமிக்க கதம்பக் கூட்டாகும். இப்பொழுது, வேதம், “அவர்கள் துணிகரமுள்ளவர்களாகவும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவ பிரியராயிராமல் சுக போகப் பிரியராயும் இருப்பார்கள்” என்று கூறியுள்ளது. ஓ, தொலைக்காட்சியில் அவர்களுக்கு நல்லதாகப்படும் ஒரு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்துவிட்டால், சபைக்கு கூட செல்லமாட்டார்கள். ஓ, என்னே! எப்பொழுதும் அவர்கள்…சபைகளில் கூட நடனக் குழுக்கள், சமுதாய இரவு விருந்துகள், மட்டைப்பந்தாட்ட குழுக்களும் இருக்கின்றன. “தேவ பிரியராயிராமல் சுகபோகப் பிரியராகவும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” இவர்கள் அவர்களை பகைக்கிறார்கள், பாருங்கள் இவர்கள் அவர்களைப் பகைக்கிறார்கள், பாருங்கள் இவர்கள் அவர்களைப் பகைக்கிறார்கள் அவர்களை ஒடுக்கிறார்கள். நல்லோரைப் பகைக்கிறவர்களாய் இருப்பார்கள் . 66 ஓ, நீங்கள், “சகோதரரே, அவர்கள் பொதுவுடமைக் கொள்கையினராயிருக்கிறார்கள்” என்று கூறுகிறீர்கள். ஓ, இல்லை, இல்லை, இல்லை.
4067 “துணிக்கரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல், சுகபோகப்பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து…” அது தான் ஸ்தாபன அனுபவம், பாருங்கள். “தேவபக்தியின் வேஷந்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” 68 இந்த நாளில் நீங்கள் என்னவாயிருப்பீர்கள்? பாருங்கள், “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து” ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமையில் போய் அங்கே மிகவும் பக்தியாக காண்பித்துக் கொண்டு, பிறகு, மத்தியானத்தில் குட்டையான உடையை அணிந்து கொண்டு, புல்வெளியில் புல்வெட்டி விட்டு, பிறகு ஓர்டெல்ஸ் 92 என்ற மதுவை உறிஞ்சுகிறார்கள். அவர்களுடைய மேய்ப்பர் வெளியே போய் ஒரு சிகரெட்டைப் புகைத்துவிட்டு வருகிறார்கள், உங்களுக்குத் தெரியுமா? “தேவ பக்தியின் வேஷத்தை தரித்துக்கொள்ளுதல்!” 69 “நல்லது, மேய்ப்பரே, அவர்கள் அங்கே ஒரு சபையை வைத்துள்ளார்களாம், அங்கே ஒரு பெண்மணி புற்றுநோயிலிருந்து சுகமடைந்தாளாம் என்று அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள்…” “ஹம்ம், ஹம்ம் அர்த்தமற்றது! அற்புதங்களின் நாட்கள் முடிவடைந்துவிட்டன” என்று மேய்ப்பர் கூறுகிறார். 70 “உங்களுக்குத் தெரியுமா? நான்—நான்—நான் அன்றிரவு அந்த சிறிய சபைக்குச் சென்றேன், அந்த மூலையில் இருக்கிற சபை அது, யாரோ ஒருவர் எழும்பி நின்று ஏதோ பிரசங்கித்தார்…” “ஓ, தேனே, அதைப் போன்ற நபர்களோடு நீங்கள் ஒருபோதும் சேராதீர்கள். அவர்கள் பைத்தியம் பிடித்த நாய்கள். என்னே! அவர்களிடம் சுற்றிக் கொண்டு உங்களை ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். அது பரிசுத்த உருளைகள். நீங்கள் ஒருபோதும் அங்கு செல்லாதீர்கள்…”
4171 “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு எப்போதும் கற்றாலும் ஒரு போதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக் கொள்கிறார்கள்.” அது முற்றிலும் உண்மை. ஸ்திரீகளுக்கான இந்த சங்கம், அந்த சங்கம், என்று பல்வேறு அமைப்புக்கள் ஸ்தாபனங்களில் இருந்து வருகிறது. பரிதாபமான சபைகளில் இவ்வாறாக பெண்களுக்காக பல அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு அவைகளிலேயே நேரத்தை செலவிடுவதால், சுவிசேஷத்தை இனிமேல் பிரசங்கிக்கவே இயலாதபடி நிலைமை ஆகிவிட்டது. போதகர் இருபது நிமிடங்களுக்கு மேல் பிரசங்கிக்க முடியாது, மேலும் அவர் வேறு எதையாவது அந்த வேளையில் பிரசங்கிக்க வேண்டும். புரிகிறதா? அவர் அதற்கு மேல் பிரசங்கித்தால், அப்பொழுது உதவிக்காரர்களின் குழுபோய் அவரை சந்திப்பார்கள். ஆம் ஐயா. 72 ஓ, சகோதரனே, இன்றைக்கு ஒரு நல்ல மேய்ப்பர் என்பவர் என்ன செய்ய வேண்டும்? எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியுமோ அந்த அளவுக்கு செய்ய வேண்டும். தேவையற்றவைகளை என்ன நேரிட்டாலும் வெட்டிவிட வேண்டும், விளைவுகள் என்னவாக இருந்தாலும் சரி, தேவையற்றவைகளை அகற்றிவிட வேண்டும். அவ்வளவு தான். ஆம் ஐயா. அது தான் சரியானது. யாரை பாதிக்கிறதாயிருந்தாலும் கவலைப்படாமல், வார்த்தையை பிரசங்கித்து, வார்த்தையோடு நிலைந்து நிற்க வேண்டும். வார்த்தையை, ஆணியை சுத்தியினால் நன்றாக அடித்து இறுக்குவதுபோல் உரைக்க வேண்டும். அவர்கள் உங்களை சிறையில் தள்ளினாலும், சிறையிலும் அதைப் பிரசங்கியுங்கள். அவர்கள் உங்களை வெளியே தள்ளினால், நீங்கள் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் பிரசங்கியுங்கள். தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டேயிருங்கள். அதுவே சரி. அவ்வாறுதான் சம்பவித்துள்ளது. அவர்கள் உங்களை செயல்பட முடியாதபடி செய்கிறார்கள்.
4273 நாம் இப்பொழுது சிமிர்னா சபையின் காலத்திற்கு வருகிறோம். 8-ம் வசனம். சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்; முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது; 74 அவர் ஒவ்வொரு சபைக் காலத்திலும், முதலாவதாக, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவ்விதமான ஒவ்வொரு அறிமுகத்திலும், அவர் தன்னுடைய தெய்வீகத்தைப் பற்றி ஏதாவது குறிப்பிடவே செய்கிறார். அதாவது முதல்காரியம் என்னவெனில், அவர் சபைக்கு தன்னுடைய தெய்வீகத்தன்மையை தெரியப்படுத்த முயற்சிக்கிறார். அவர் தேவனாயிற்றே! ஐரேனியஸுக்கும் மற்றவர்களுக்கும் முன்னே இங்கே பெரிய சர்ச்சைக்குரிய பிரச்சனையாயிருந்ததை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? அவர்கள் தேவன் மூன்று நபர்களில் இருக்கிறார் என்று கூற முயற்சித்தனர். அது மூன்று நபர்களில் ஒரு தேவன் இருக்கிறார். இதில் தேவன் என்று கூறினார். ஆனால் ஐரேனியஸோ, “அப்படியொரு காரியம் இல்லை. அவைகள் ஒருவராய் இருக்கிறவருடைய மூன்று பட்டங்கள், அவரே சர்வ வல்லமையுள்ள தேவனாயிருக்கிறார்” என்று கூறினார். அது தான் சரி. எனவே நீங்கள்…அவர்கள் எப்பொழுதும் அதை கூறி வந்தனர். தேவன் துவக்கத்தில் தன்னுடைய—தன்னுடைய தெய்வீகத் தன்மைகளில் ஒன்றைப் பற்றி சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறார். நீங்கள் பாருங்கள், அவர் இங்கே தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறார், முதல் இங்கே, “இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ளவர்” என்று கூறுகிறார். இங்கே அவர் சிமிர்னா சபையின் காலத்தை இப்பொழுது ஆரம்பிக்கிறார்.
4375 இப்பொழுது நாம் அவருக்கு செவிகொடுப்போம்: “நான்…” சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்…( அத்தூதன் ஐரேனியஸ் தான் என்று நாம் விசுவாசிக்கிறோம்) …முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது… புரிகிறதா? “இந்தச் சபைக் காலத்தின் தேவன் நானே இங்கே நான்கைந்து வெவ்வேறு தேவர்கள் இருப்பதை நான் விரும்புவதில்லை. நானே—நானே தேவன், பாருங்கள், அவ்வளவுதான்” என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறோம். …மரித்திருந்து பிழைத்தவருமானவர்… (ஆமென்!) 76 அதுதான் அறிமுகம் செய்தல். இப்பொழுது—இப்பொழுது சிமிர்னா என்ற வார்த்தைக்கு “கசப்பு” என்று அர்த்தமாம். இது வெள்ளைப் போளம் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. முதலாம் சபையான—முதலாம் சபையான எபேசு சபை தங்களின் ஆதி அன்பை இழந்துவிட்டார்கள். இந்த சபையோ, அதன் துவக்கத்தில், “கசப்பான வேரை” தங்களில் முளைத்தெழும்பத்தக்கதாக அவர்கள் நிலைமை இருந்தது. ஏனினில் இந்த சபையானது, பிரதான சபையில் பெரிய அளவு எண்ணிக்கை கொண்டோர் (எப்போதும் அவர்களில் பெரும்பான்மையோர்) பரிசுத்த ஆவி ஆளுவதை விரும்பாமல், தங்களை தாங்களே ஆள வேண்டுமென விரும்பியவர்களாக இருந்தனர். அவர்கள் ஒரு ஆசாரிய முறைமையை அமைத்துக்கொள்ள விரும்பினர். அவர்கள் பழைய ஏற்பாட்டு ஜனங்கள் செய்ததுபோல செய்யவிரும்பினர். அவர்கள் குருக்களாட்சி முறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினர். அவர்கள்…தங்களுக்கு மதகுருமார்கள் இருக்க வேண்டுமென விரும்பினர். அவர்கள் கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முன்பு, அஞ்ஞானிகளாக இருக்கையில், அவர்களுடைய அஞ்ஞான தேவர்களாகிய ஜூபிட்டருக்கும், வீனஸூக்கும் மத குருமார்கள் இருக்கப் பெற்றிருந்தனர். அவர்கள்—அவர்கள் அதே முறையை மதம் மாறிய பிறகும் இந்த மனிதர் இங்கும் கொண்டுவந்துவிட விரும்பினர். பாருங்கள், முழுக்காரியமும் அஞ்ஞான முறைமையின்படியாக துவக்கத்தில் அமைந்தது. பொய்யான அஞ்ஞானிகள் தங்களுக்கு மத குருமார்களை உடையவர்களாக இருந்தனர். ஆனால்—ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கோ இந்தக் காரியங்களெல்லாம் அந்நிய காரியமாயிருந்தன. கிறிஸ்துவே நம்முடைய ஆசாரியராய், நம்முடைய பிரதான ஆசாரியராய் இருக்கிறார். நமக்கு ஒரு பிரதான ஆசாரியன் உண்டு. நாம் புசிக்கத்தக்கதான ஒரு பீடமும் நமக்கு உண்டு.
4477 இப்பொழுது இந்த சபையானது “கசப்பான வேர்” தன்னகத்தே கொண்டதாக ஆரம்பித்தது ஏன்? பரிசுத்த ஆவியின் ஆளுகையை தொடர்ந்து கொண்டிருக்க விரும்பியவர்கள் கசப்புடன் எதிர்க்கப்பட்டனர். அன்பானது மங்கிப் போய் விட்டது, அன்புக்கு பதிலீடாக, மாற்றாக, மதக் கோட்பாடுகளுக்கும், ஸ்தாபன முறைமைகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து, பரிசுத்த ஆவியானவரின் தலைமையை விட்டு அகன்று போய்க் கொண்டிருந்தனர். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! எனவே தான் அவர்களுக்குள் கசப்பானது காணப்பட்டது. சரி. 78 முதலாவது சபையிலேயே இந்த…கசப்பானது மெல்ல ஊடுருவ ஆரம்பித்தது. இரண்டாவது சபையில் இன்னும் கூடுதலாக அது அதிகரித்தது. இறுதியாக அது நன்றாக உள்ளே ஊடுருவி முழுவதும் வியாபித்து நின்றது, ஏனெனில், “அவர்கள் இன்னும் சிறந்த சபையை உருவாக்கிவிட்டோம்” என்று நினைத்தார்கள். அவர்களுக்குள் மிகுந்த மதிப்புக்குரிய காரியங்கள் இருந்தன, உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் ரோமானியர்கள் எல்லாம் இப்பொழுது சபைக்குள் வர அவர்களுக்கு—அவர்களுக்கு பிரவேசம் கிடைத்துவிட்டது. ஏன்? அவர்களுக்கு ஒரு போப் உண்டு, அவர்களுக்கு பெரிய மனிதர்கள் மற்றும் போப்பிற்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ளவர்கள் எல்லாம் அவர்களுக்கு இருந்தனர், அவர்கள் நன்கு உடை உடுத்தியிருந்தார்கள். அவர்கள் மிகுந்த ஆர்ப்பரிப்போடும் சப்தத்தோடும் ஆராதிக்கிற கூட்டங்களை விட்டு தூர வந்துவிட்டார்கள். இப்பொழுது மிகவும் அமைதியாக இருக்கிறது. அவர்கள் மரித்துக் கொண்டிருக்கிறதையே அது காட்டியது. ஊ—ஊ. ஊ—ஊ அவர்கள் மரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கனம் பொருந்தியதொரு நிலையை அடைந்துவிட்டார்கள், அவர்களுக்கு இன்னும் மேன்மையுள்ள ஒரு அமைப்பை கண்டுவிட்டார்கள். முதலாவதாக, இங்கே அவர்கள் ரோமன் கத்தோலிக்க சபையை, குருக்களாட்சியில் நடத்தப்படுகிற ஒரு பெரிய ஸ்தாபனமாக, இருண்ட காலத்தில் ரோமன் கத்தோலிக்க சபையை ஏற்படுத்தினார்கள். இப்பொழுது அவர்களுக்குள் மேட்டுக் குடியினரும், கனவான்களும் இருந்தார்கள்.
4579 பவுல் எபிரெயர் நிருபம் 11-ம் அதிகாரத்தில், “செம்மறியாட்டுத் தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக் கொண்டு அலைந்து திரிந்து, வாளால் அறுப்புண்டு, பரிகசிக்கப்பட்டு, கேலி செய்யப்பட்டு, விசுவாசிகள் இருந்தார்கள்” என்று கூறியுள்ளானே, அதைப் போல் சபையானது இப்பொழுது இருக்க வேண்டிய சிரமமே இல்லை. அது முன்போல், தெருக்களில் நிற்க வேண்டியதில்லை. அந்த சிரமம் எல்லாம் இப்பொழுது இல்லை, சபையானது இப்பொழுது மிகவும் கனம் பொருந்திய நிலையில் ஆகிவிட்டது. 80 சபையானது, உயர்வான நிலையில், பெரியதாக இருக்கிறது. அருமையான அங்கிகளும், அங்கிகளுக்கு உள்ளே அணியும் ஆடைகளும் அணிந்து மற்றும் ஏனைய உயர்தரமான காரியங்களும் உடையவர்களாக இருக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் கனம் பொருந்தியவர்களாக காட்சியளித்தார்கள். “தந்தை, சங்கைக்குரிய, டாக்டர், தந்தை இன்னார் இன்னார் ” என்று போட்டுக் கொள்கிறார்கள். ஓ, என்னே! அவர்களால் “டாக்” என்று ஆங்கிலத்தில் போட்டுக் கொள்ள முடிகிறதோ, “நாய்” என்று தான் அங்கே உண்மையிலேயே இருக்கிறது. 81 ஆனால், நீங்கள் பாருங்கள், அது ஒரு இனக்கலப்பு முறையில் பிறப்பிக்கப்பிட்ட ஒன்றுதான். கலப்பினமாயிற்றே! பாருங்கள், அது தன்னுள் எந்த ஜீவனைப் பெற்றிருக்கவில்லை. அவர்களால் ஆதிக்கு திரும்பிப் போக முடியவில்லை. எனவே தான் அவர்கள் திரும்ப எழும்ப முடியவில்லை. லூத்தரன்கள் எழுப்புதலைத் திரும்பப் உயிர்பெற முடியவில்லை. அதே போல் வெஸ்லி காலத்து எழுப்புதலும், மீண்டும் உயிர்பெற முடியவில்லை. நசரீன்கள் எழுப்புதலும் மீண்டும் உயிர்பெறவில்லை. அதேபோல் பெந்தெகொஸ்தே எழுப்புதலும் திரும்ப உயிர்பிக்கப்பட்டு எழும்பப் போவதில்லை. ஏன்? ஏனெனில், நீங்கள் அதைக் கொன்று விட்டீர்கள். நீங்கள் அந்த எழுப்புதலை உலகத்தோடும், நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தோடும், இனக்கலப்பு செய்தும், பரிசுத்த ஆவியானவர் தன் விருப்பம் போல் கிரியை செய்ய அனுமதிக்காமலும் செய்து விட்டீர்கள். அது உண்மை. சபையை இனக்கலப்பு செய்துவிட்டபடியால், அதனால் இன விருத்தி செய்து கொள்ள முடியாமற் போய்விட்டது. நீங்கள் அசல் வித்தைப் பிறப்பிக்க முடியாமல் அதற்குப் பதிலாக மெதோடிஸ்ட் தன்னிலிருந்து அதிக மெதோடிஸ்டையே பிறப்பிக்கிறது, பாஸ்டிஸ்ட் இன்னும் அதிகமாக பாப்டிஸ்டுகளையே பிறப்பிக்கின்றது. கத்தோலிக்கம் மீண்டும் அதிக கத்தோலிக்கர்களையே பிறப்பிக்கின்றது. நீங்கள் தானியத்தை அதன் மேல் உள்ள ஓட்டைப் பிரிக்கையில் அதேவிதமான விதைதான் கிடைக்கும். ஆனால் நான் ஒன்று உங்களுக்குச் சொல்லட்டும், பரிசுத்த ஆவி திரும்பி வருகையில், அது புதிய பிறப்பையும் புதிய ஜீவனையும் கொண்டு வருகிறது; மாற்றம். ஆவியின் அபிஷேகம் சபையை மீண்டும் அதன் ஆதி ஸ்தானத்திற்கு கொண்டு வந்து அதற்குள் மீண்டும் ஜீவனை வைக்கிறது. 82 இனக்கலப்பு செய்யப்பட்ட தானிய விதை தன்னில் ஜீவனை கொண்டதாய் இருப்பதில்லை. அதில் என்னதான் ஜீவன் உள்ளது? உள்ளதெல்லாம் சாரமற்றுப் போயிற்றே. இப்பொழுது, இருண்ட காலத்தில் அதைப் பற்றி நாம் பார்ப்போம். அவர், “உனக்குள்ளதை நான் வரும் வரை பற்றிக்கொள்” என்று கூறினார். ஆனால் உள்ளதையெல்லாம் பிழிந்து வெளியே எறிந்து விட்டார்கள். ஆனால் இப்பொழுது அதினால் தன்னை மீண்டும் பிறப்பித்துக் கொள்ள முடியாது. இப்பொழுது…
4683 ஆனால் இயேசு கிறிஸ்துவின் சரீரமானது ஒரு ஸ்தாபன சபை அல்ல. இயேசு கிறிஸ்துவின் சரீரமான சபை, காணக்கூடாத சரீரமான சபையாக இருக்கிறது. அது ஒரு சரீரமாகிய…இயேசு கிறிஸ்து தாமே பூமியில் ஏற்படுத்தி வைத்துள்ள ஒரு ஆவிக்குரிய இராஜ்யமாக அது இருக்கிறது. இந்த இராஜ்யத்திற்கு இயேசு கிறிஸ்துவே இராஜாவாக இருக்கிறார். இந்த இராஜ்யத்தில் பரதேசியாய் திரிகிறவர்களுக்கு, பலி செலுத்துவதற்காக பிரதான ஆசாரியனாக அவரே இருக்கிறார். அவரே (வார்த்தையாகிய) தீர்க்கதரிசியாக இருந்து, இந்த இராஜ்யத்தில் சத்தியத்தை பிரசங்கித்து, தேவனுடைய ஒளியைக் கொண்டு வருகிறவராயிருக்கிறார். இந்த இராஜ்யத்தில் அவரே தீர்க்கதரிசியாகவும், ஆசாரியனாகவும், இராஜாவாகவும் இருக்கிறார். எவ்வாறு இந்த இராஜ்ஜியத்தில் நாம் பிரவேசிக்கிறோம்? ஸ்தாபனத்தினாலா? கடிதத்தினாலா? கைகுலுக்குவதினாலா? ஆனால், “அந்த ஒரே ஆவியினால் நாம் யாவரும் அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்.” அச்சரீரம் காணக் கூடாத இயேசு கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறது. நாம் அந்த ஒரே சரீரத்திற்குள், ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம், தண்ணீரினால் அல்ல, தெளித்தலினால் அல்ல, நீரை ஊற்றுவதினால் அல்ல, எந்தவிதமான தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்தினாலும் அல்ல, அந்த ஒரே ஆவியாகிய பரிசுத்த ஆவியானலேயே, நாம் யாவரும் அந்த ஒரு சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். I கொரிந்தியர் 12-ம் அதிகாரம். ஆம், நாம் அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக அந்த ஒரே ஆவியினாலே, பரிசுத்த ஆவியினாலே, ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். அப்பொழுது நாம் கிறிஸ்துவைத் தவிர வேறு எந்தக் காரியத்தையும் சேர்ந்திருக்கிறதில்லை. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாக இருக்கிறீர்கள். அது காணக்கூடாத தேவனுடைய இராஜ்யமாய் அமைக்கப்பட்டுள்ளது, அதனுள் நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் உள்ளே பிரவேசிக்கிறோம். நான் அதை நேசிக்கிறேன்! உம்ம்ம்!
47பெந்தெகொஸ்தில் விழுந்த அக்கினியால், சுத்திகரிக்கப்பட்டு, சுத்தமான ஜனங்கள் எங்கும் உள்ளனர், அவர்கள் இதயங்களோ அவ்வக்கினியால் ஜூவாலிக்கிறது, ஓ, இப்பொழுது அது என் இதயத்திற்குள்ளே கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது, ஓ, அவர் நாமத்திற்கே மகிமையுண்டாகட்டும்! நானும் அவர்களில் ஒருவன் என என்னால் கூறிட முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்கிறேன் நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என என்னால் கூறிட முடியும் என்பதில் நான் மகிழ்கிறேன், அல்லேலூயா! நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதில் நான் இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இம்மக்கள் கல்லாதோர் ஆயினும் (டி.டி.டி. பி.எச்.டி பட்டங்கள் பாருங்கள்)…இலையென்றாலும், உலக கீர்த்தியடைந்தோம் என்று பெருமைப்பட ஏதுவில்லை ஆயினும் அவர்கள் யாவரும் தங்கள் பெந்தேகோஸ்தேவைப் பெற்றிருந்தனர், இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர்; அவரது வல்லமை இன்னமும் மாறாதது என்று எங்குமுள்ள யாவருக்கும் கூறிக்கொண்டிருக்கின்றனர், இவர்களில் நானும் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்கிறேன். நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? ஆம், ஐயா. அவர்களில் ஒருவராக இருங்கள். அவ்வளவுதான்.
4884 மெம்ஃபிஸிஸ் பட்டணத்தின் வழியாக நான் நடந்து சென்ற போது அந்த வயதான கறுப்பர் நிற பெண்மணியைச் சந்தித்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். அப்பொழுது அந்த அம்மாள் தன் தலையை சாய்த்து வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து, “காலை வணக்கம், போதகரே” என்றாள். அப்பொழுது, “நான் ஒரு போதகர் என்பது உனக்கு எப்படித் தெரியும்” என்று நான் கேட்டேன். அதற்கு அவள், “கர்த்தர் என்னிடம், ‘தெரு வழியாக அவருடைய போதகர் வருகிறார், தலையில் அவர் பழுப்பு நிற தொப்பியை அணிந்து, ஒரு கைப்பெட்டியை கையில் வைத்துக் கொண்டு வருவார்’” என்று கூறியிருந்தார். எனவே, “நீங்கள் வருவதை நான் கண்டபோது, நீங்கள்தான் அந்த போதகர் என்று நான் அறிந்து கொண்டேன்” என்றாள். பாருங்கள்? ஓ, அவளும் அவர்களில் ஒருவள். அது உண்மை. ஓ, தேவன் எவ்வளவாய் நல்லவராயிருக்கிறார்!
4985 இப்பொழுது நான் ஒன்றை விசுவாசிக்கிறேன்… [சகோதரன் பிரான்ஹாம் அவரிடம் கொடுக்கப்பட்ட ஒரு குறிப்பை வாசிக்கிறார்—ஆசி.] “பெட்ஃபோர்ட் என்று இடத்திலிருந்து வந்திருந்த அச்சிறு பெண்ணுக்கு நீங்கள் ஞாயிறு இரவு ஜெபித்தீர்கள். அவள் சற்று முன்பு இறந்துவிட்டதாக கருதப்படுகிறது. இது…தயவு செய்து ஜெபிக்கவும்.” பெட்ஃபோர்ட்டில் இருந்து இங்கு வந்த ஒரு சிறு பெண்ணுக்கு கடந்த ஞாயிறு இரவு ஜெபித்தோமே, “அவள் சற்று முன்பு மரித்துவிட்டாள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். நாம் ஜெபம் செய்வோம்: 86 கர்த்தராகிய இயேசுவே, எப்படியாவது அந்த பிள்ளைக்காக நாங்கள் ஏறெடுக்கும் ஜெபம் எப்படியாவது கர்த்தாவே ஏற்றுக் கொள்ளப்படட்டும் என்றே நான் ஜெபிக்கிறேன். எங்கள் பிதாவாகிய தேவனே, நாங்கள் உம்மிடத்தில் அச்சிறுமியை ஒப்படைக்கிறோம். அச்சிறு பெண்ணுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டு, இங்கிருந்து ஜெபித்துக் கொண்டு இருந்த அந்த மனிதர்களை நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம். ஓ, பிதாவாகிய தேவனே, நாங்கள் கேள்விப்படுகிற இச்செய்தியின்படியே இருக்க வேண்டாம். பிதாவே, எங்களுக்குத் தெரியாது, ஆனால் நீர் இரக்கமும், பெலனும் அளித்து, அதினால் அச்சிறுமி உயிரோடெழுந்து தேவனுடைய மகிமைக்காக ஜீவிக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். கர்த்தராகிய இயேசு தாமே தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக.
5087 இப்பொழுது, ஒரு சபை, இப்பொழுது சபையின் பெயர், அதனுடைய சுபாவ குணாதிசயத்தோடு சம்பந்தமுள்ளதாகவே இருக்கிறது. சிமிர்னா என்றால் “கசப்பு” என்ற அர்த்தத்தை நீங்கள் கவனீத்தீர்களா? ஒவ்வொரு சபைக்கும் இருக்கும் பெயரானது, அந்தந்த சபைக்கு உள்ள சுபாவத்தையும் குணாதிசயத்தையும் பற்றிய அர்த்தத்தோடு இருக்கிறது. நான் ஒன்றை இங்கே கூற முடியும். ஆனால் நீங்கள் என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதபடி நான் அதைச் சொல்லாமலிருந்தால் நல்லது. புரிகிறதா? 88 உங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர்கள் கூட அவ்வாறே உள்ளது. நீங்கள் அதைப் பற்றி அறியாமலிருக்கலாம். ஆனால் அது அப்படித்தான். ஓ, ஆம். “அது எண் கணித அடிப்படையில் ஆனது” என்று நீங்கள் கூறலாம். இல்லை, அது அப்படியல்ல. யாக்கோபு பி றக்கையில், அவர்கள் அவனை யாக்கோபு , அதாவது “ஏமாற்றுகிறவன்” என்று அர்த்தத்தில் அழைத்து வந்தனர். ஆனால் அவன் தேவனுடைய தூதனானவரோடு போராடுகையில், தேவன் அவன் பெயரை இஸ்ரவேல் , “ஒரு இளவரசன்” என்று மாற்றினார். அது சரிதானே? சவுல் “தர்சு பட்டணத்து சவுல்” என்றழைக்கப்பட்டான். அவன் ஒரு அற்பமானவன். ஆனால் அவன் இயேசுவிடம் வந்தபொழுது, “பவுல்” என்றழைக்கப்பட்டான். சீமோனின் பெயர் “சீமோன்” என்றிருக்கையில், அவன் இயேசுவிடம் வந்தபோது, “ஒரு சிறிய கல்” என்று அர்த்தம் உள்ள பேதுரு என்று பெயரிடப்பட்டான். ஓ, ஆம், ஐயா…நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ…, அவற்றோடு உங்கள் பெயருக்கும் சம்பந்தமுண்டு. உங்களுடைய குணாதிசயத்தின் பிரதிபலிப்பாக அது இருக்கிறது.
5189 இந்த சபைக்காலமானது சிமிர்னா என்றழைக்கப்பட்டது. ஏனெனில் அது மரித்துக் கொண்டிருந்தது. சிமிர்னா என்றால், “கசப்பு” என்று அர்த்தமாம். அதாவது வேறு வார்த்தைகளில் கூறினால், ஒரு கசப்பான வேர் முளைத்தெழும்பி, அதை எழும்பவிடாமல் நெருக்கிக் கொண்டிருந்தது. அது தானே வெள்ளைப் போளத்தைப் போல் உள்ள நிலைமைக்கு நேராக போய்க்கொண்டிருந்தது. வெள்ளைப் போளத்தைக் கொண்டு மரித்த சரீரங்களை அவர்கள் சுகர்ந்த வர்க்கமிட்டு அபிஷேகிப்பார்கள், பாருங்கள். வெள்ளைப்போளம், தூபவர்க்கம் ஆகியன தைலமாக உள்ளன. வெள்ளைப்போளம் மரித்த சடலங்களை அபிஷேகித்து அதன் பிறகு அவைகளை சுகர்ந்தவர்க்கமிட பயன்பட்டு வருகிறது. ஆகவே வெள்ளைப் போளம் என்றால் மரணத்தோடு சம்பந்தமுள்ளது என்று அறிந்து கொள்ள வேண்டும். சபையானது மரித்துக் கொண்டிருந்தது. 90 ஓ, சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஜீவனோடிருந்த அந்த பெந்தெகொஸ்தே அசைவானது இப்பொழுது மரித்துப்போய், அதற்கு வெள்ளைப் போளத்தால் சுகந்த வர்க்கமிடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதை உங்களால் இன்று காண முடியவில்லையா, நண்பர்களே? பாருங்கள்? மரணத்திற்கு அடையாளமாயிருக்கும் அதே பரிமளதைலம் இங்கே இந்த சபையிலும் இருந்தது, அது தொடர்ந்து அடுத்து வந்த சபைக்கும் உண்டாயிருந்தது. அவர்கள் பரிசுத்தவான்களுக்குரிய வெண்வஸ்திரத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் குருக்களாட்சியின் அழுக்கான கந்தையை போர்த்திக் கொண்டதினால் மரித்திருந்தனர். மெய்யான பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தது, அந்நிய பாஷைகளில் பேசி, அக்காலத்தில் வாழ்ந்த அந்த சிறு மந்தையோவெனில் “தங்கள் ஜீவியங்களில் தேவனை பிரத்தியட்சமாக்கிக் காண்பித்தனர்.” அவர்கள்—அவர்கள் மிகவும் உத்தமமாயிருந்தார்கள். நீங்கள் அவர்களை முழுக்க முழுக்க உண்மையாகவே, எங்கும் நம்பத் தகுந்தவர்களாய் இருந்தார்கள். ஆனால் இன்றோ, எதை நம்புவது, யாரை நம்புவது என்பது உங்களுக்கு தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறீர்கள். புரிகிறதா? அந்த அளவுக்கு ஏதோ நடந்துவிட்டது. ஏதோக்காரியம் சம்பவித்துவிட்டது. அது என்ன? அவர்களுக்கு கசப்பான வெள்ளைப் போளம் பூசப்பட்டுள்ளது. ஒரு காரியம் எழும்பி வருகிறது. ஒன்று…
5291 அதற்கு என்ன காரணமாயிருந்தது? நாம் வாழும் இக்காலத்தில் ஒரு பிரிவினர் எழும்பி, முதலில் சபையை பொது ஆலோசனை குழு என்று அழைத்தார்கள். பின்னர் அவர்கள் அதையே அசெம்பளீஸ் ஆஃப் காட் என்று அழைத்தனர். அந்த அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபையிலிருந்து தான் சர்ச் ஆஃப் காட் ஸ்தாபனம் பிறந்தது. சர்ச் ஆஃப் காட் சபையிலிருந்து கொண்டே மற்றவரைப் பார்த்து, “நீங்கள் அசெம்ப்ளீஸ் ஆஃப் காட்” என்று மட்டமாகப் பேசினார்கள். இவர்கள் அவர்களைப் பார்த்து, “நீங்கள் சர்ச் ஆஃப் காட்” என்றார்கள். அதிலிருந்து ஐக்கிய பெந்தெகொஸ்தே சர்ச் ஆஃப் காட் என்ற பெயர்கொண்ட சபையானது, ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சனையின் பேரில் வெளியேறி ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு, முதலாவதாக நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில், அவர்கள் வெளிச்சத்தை ஏற்றுக் கொண்டு, அதில் நடப்பதற்குப் பதிலாக, அவர்கள் ஒளியை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு தங்களை ஸ்தாபனமாக ஆக்கிக் கொண்டுவிட்டார்கள். 92 “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்” நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவது சரியல்ல, அதற்குப் பதிலாக “இயேசு கிறிஸ்துவின்” நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறுவதுதான் சத்தியம் என்று அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபைக்கு சத்தியமானது உரைக்கப்பட்டபோது, அவர்கள் ஏற்கனவே தங்களை “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்ற ஞானஸ்நான உபதேசத்தில் நங்கூரமிட்டுக் கொண்டுவிட்டபடியினாலே, அதை மாற்றிக் கொள்ள அவர்களால் இயலவில்லை. அதுவே சத்தியமென்று அவர்களுக்கு நன்கு தெரியும். வேதத்தின்படி அது சரியல்ல என்பதை அவர்கள் எவராவது காண்பிக்கட்டும் என்று நான் அவர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். அதுவோ முழுவதுமாக சத்தியமாய் இருக்கிறது. ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாருங்கள், ஏனெனில், அதை ஏற்றுக்கொண்டால், அவர்களுடைய மதக்கோட்பாட்டை அவர்கள் தகர்ந்தெறிந்துவிட வேண்டியது வந்துவிடும். ஆகவே அவர்களால் இயலாது.
5393 பின்பு, ஒருத்துவக் கொள்கைக்காரர் என்ன செய்த்தார்கள்? சத்தியத்தை ஏற்றுக் கொண்டு, முன்னேறிச் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் வெற்றாச்சாரமுள்ளவர்களாகி, “தேவன் என்றென்றும் ஸ்த்தோதரிக்கப்படுவதாக! எங்களிடம் வெளிச்சம் உள்ளது. உங்களிடம் வெளிச்சம் இல்லை. நாங்கள் தான்…” என்று கூறினார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டார்கள். தேவனை நீங்கள் ஸ்தாபனமாக ஆக்க முடியாது. தேவனுக்கு உருவ அமைப்பு கிடையாது என்று வேதம் கூறுகிறது. தேவனைக் குறித்த ஒரு புறம்பான அமைப்பு ஒன்றும் இல்லை. இல்லை. 94 பின்பு, அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபையார், தேவனை ஸ்தாபனமாக ஆக்க முயன்று, தங்களையே…எல்லாவற்றுக்குள்ளும் உண்மையான சபையென்று பறைசாற்றிக் கொள்ள முயன்றனர். அதன் பிறகு, ஒருத்துவக் கொள்கைக்காரர் ஸ்தாபனம் உண்டாக்க முயன்று, “தங்களுக்கு கூடுதல் வெளிச்சம் உள்ளது” என்று கூறினர். எனவே அவர்கள் என்ன செய்துவிட்டார்கள்? அவர்கள் தங்களுடைய சொந்த சுயநலமான, கசப்பான வழியில் சென்று, தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டனர். சாரமேற்றிட உப்பையும், மகிழ்விக்க இனிப்பையும் வழங்குவதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் விரோதங்கொண்டு, ஐக்கியத்தை குலைத்துக் கொண்டனர். அதுதான் நடந்தது. இவ்விதமான காரியம் வேகமாக நடந்தது. அதன்பிறகு இன்னொரு குழுவினர் பிரிந்து வெளியே வந்து, அவர்கள் இன்னொரு சபையை ஸ்தாபிதம் செய்தனர். ஒரு பிரிவார், “அவர் வெளைக் குதிரையின் மேல் வருகிறார்” என்றார்கள். இன்னொரு பிரிவினர், “அவர் வெண் மேகத்தின் மேல்தான் திரும்ப வருகிறார். தேவனுக்கு ஸ்தோத்திரம். நான் இந்த உபதேசத்தின் மேல் ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பிப்பேன்” என்றார்கள். எந்தவிதமாக அவர்கள் செயல்பட்டார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் கசப்பை—கசப்பை பரவச் செய்தனர். அவர்கள் என்ன செய்தனர்? அது சகோதர சிநேகத்திற்கு கதவை அடைத்துப் போட்டது.
5495 இன்றிரவில், அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபையை சேர்ந்தவர்களில் அநேக ஆண்களும், பெண்களும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள முன் வர விரும்புவர். ஏனெனில் அதுவே தேவனுடைய சத்தியம் என்று அவர்கள் அறிவர். ஆனால் அப்படி செய்தால், தங்கள் சபையைவிட்டு அவர்கள் வெளியே தள்ளப்படுவார்கள். 96 அநேக ஒருத்துவக்காரர்கள்…நான் ஒருத்துவக்காரன் அல்ல. ஒருத்துவக்காரர்கள், “ஒருத்துவத்தில்” விசுவாசங் கொண்டுள்ளவிதமாக நான் அதில் விசுவாசங்கொள்வதில்லை, ஒருவத்துவக்காரர் கூறுகிறவிதமான “இயேசு” வில் நான் விசுவாசங்கொள்ளவில்லை. ஏனெனில் “ இயேசு ” என்னப்பட்டவர்கள் அநேகம் இருந்தார்கள். நானோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டுள்ளேன். அதுதான் சரி. நான்…அவர்கள் விசுவாசிக்கிற வண்ணமாக நான் விசுவாசிக்கிறதில்லை. அதிலிருந்து மாறுபட்டது எனது விசுவாசம். அவர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானங் கொடுக்கிறார்கள், மறு பிறப்பையடைவதற்காக இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். அதாவது, “ஞானஸ்நானம் பண்ணப்படுதல் கிறிஸ்துவுக்குள் (மறுபிறப்பை) உங்களுக்கு கொண்டுவருகிறது, உங்களுடைய தண்ணீர் ஞானஸ்நானம் அதைச் செய்கிறது” என்கின்றனர். நான் அதை விசுவாசிக்கவில்லை. மறுபிறப்பானது, பரிசுத்த ஆவியினூடாக இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே உண்டாகிறது. அது தான் சரி. தண்ணீர் ஞானஸ்நானமானது, ஏற்கனவே உள்ளே நடைபெற்றுள்ள மறு பிறப்புக்கான கிரியைப் பற்றி புறம்பே நிகழ்த்தப்படுகிற ஒரு செயல் தான். புரிகிறதா? ஆகவே, நான் அதை ஒத்துக் கொள்கிறதில்லை. இதெல்லாம் இப்படி இருந்தாலும், அவர்களும் என்னுடைய சகோதரர்கள் தான்.
5597 நான் முதலில் ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியாக ஊழியத்தைத் துவங்கியபோது, இரு சாராருமே என்னிடம் வந்து, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீங்கள் எங்களிடம் வாருங்கள். எங்களிடம் அந்த அனுபவம் உள்ளது. நாங்கள்—நாங்கள் தான் இங்கே இதைத் தொடர்ந்து கொண்டு வந்தோம்” என்றனர். 98 அப்பொழுது நான், “நான் உங்களிருவரில் எவரையும் சேர்ந்தவனல்ல. உங்கள் இருவருக்கும் நடுவில் நான் இருக்கிறேன். ‘நாம் சகோதரர்கள்!’ எந்த ஒரு மனிதனாவது என்னுடன் முரண்பட்டால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அது எந்தவித ஒரு சிறு துளி வேறுபாட்டையும் எனக்கு உண்டாக்குகிறதில்லை. அவர் இன்னமும் தொடர்ந்து என்னுடைய சகோதரனாகவே இருப்பார்” என்று அவர்களுக்கு கூறினேன். 99 எனக்கு ஆப்பிள் பை என்ற ஆகாரத்தை விரும்பி சாப்பிடுகிற ஒரு சகோதரன் உண்டு. எனக்கு செர்ரிபை என்ற ஆகாரம் மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்காக அதை சாப்பிடும் அவரோடு நான் ஐக்கியங்கொள்ளாமலிருக்கமாட்டேன். அவர் தன்னுடைய ஆப்பிள் பையை சாப்பிடட்டும், நான் என்னுடைய செர்ரி பையை சாப்பிடுவேன். நான் என்னுடைய ஆகாரத்தின் மீது கன்றின் எச்சிலைத் தடவி சாப்பிடுவேன், அவர் அதை விரும்பவில்லையென்றால் அவர் அதை விட்டுவிடட்டும். அது என்ன? அவர்கள் அதன் மீது “நன்கு அடிக்கப்பட்ட ஒரு வகை இனிப்பு பாலேட்டு பசையை” தடவுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனக்கு அது பிடிக்கும். நான் அதைச் சாப்பிடுவதற்கு இப்பொழுது எனக்கு வயதில்லை. ஆனால் அது ஒரு…ஆனால் நான்—நான்—நான்…எனக்கு அது விருப்பமானது. என் சகோதரனுக்கு அது விருப்பமில்லையெனில், அவர் அதை சாப்பிட வேண்டியதில்லை. அவ்வளவுதான். நான் எனக்கு விருப்பமானதைச் சாப்பிட்டுக் கொள்வேன். ஆனால் அவர் இன்னும் என் சகோதரன் தான். அது உண்மையே. 100 ஆகவே எனக்கு—எனக்கு அதைப் பிடிக்கும், அதைப் போல, நான் ஐக்கியத்தை விரும்புகிறேன். ஆனால் நமக்கிடையே பிரிவினைகளை உண்டாக்கிக் கொண்டு, “இல்லை, இது எங்களுடைய ஸ்தாபனம்” என்று கூறிக்கொண்டு, அடுத்த மனிதனிடம் கையை நீட்டி அவரோடு கைகுலுக்கிக் கொண்டு, “தேவனுக்கு ஸ்தோத்திரம், சகோதரனே!” என்று சொல்லாவிட்டாலும், என்னே! நீங்கள் அதை அப்பொழுதும் சொல்லாவிட்டாலும், ஐக்கியம் என்று அழைக்கிறீர்கள். நீங்கள் உண்மையாக ஐக்கியங்கொள்ளாவிடில், சிமிர்னாக்காரர்கள் அன்றைக்கு கொண்டிருந்தைப் போல கசப்பான வேரையே பெற்றுள்ளீர்கள். நீங்கள் அதேக் காரியத்திற்கு காரணமாயிருக்கிறீர்கள். சரி. ஆகையால் அவர்களுடைய பெயர் “கசப்பு” என்பதாயிருந்தது.
56101 நிக்கொலாய் மதஸ்தர், இருண்ட காலம் வரையிலும் அவர்களை எழும்பவிடாமல் அழுத்திக்கொண்டே இருந்தனர். லூத்தரின் காலத்தில், கிருபை என்ற முதல் அடியைக் கொண்டு அதை விட்டு வெளியே வந்தார்கள். அப்பொழுது ஒரு சிறு அளவுக்கு ஒளியானது பிரகாசிக்கத் தொடங்கியது. அதன் பிறகு, ஜான் வெஸ்லி பரிசுத்தமாகுதல் என்ற அடுத்த அடியை வெளியே எடுத்து வைக்க வந்தார். அப்பொழுது ஒளியானது இன்னும் கூடுதலாக பிரகாசித்தது. அதன் பிறகு பெந்தெகோஸ்தேயின் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வந்தது. அதனால் பிதாக்களுடைய விசுவாசம் திரும்பக் கொண்டு வருவதற்கு வழி கோரியது. ஆனால் அவர்களால், அதை அதே விதமாக நீடித்து வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. இவர்களும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, மீண்டும் நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்வார்கள் என்று வேதம் கூறியதற்கேற்ப சரியாக அவ்வாறே நடந்தது.
57102 இப்பொழுது, நான் இங்கே நேரத்தை கவனிக்க வேண்டும் அல்லது நான் நிறுத்த வேண்டும்…அதிக நேரம் இது வரையிலும் ஆகிவிட்டது. நாம் இப்பொழுது 2-ம் வசனத்திற்குப் போவோம். இல்லை…அது 8,9-வது வசனம். சரி, இப்பொழுது 9-ம் வசனம் இதில் உபத்திரவத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது. உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும்…தரித்திரத்தையும், (நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்)…(ஓ, என்னே!) …இப்பொழுது அவர் சபையினிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறார், உண்மையான சபையினிடத்தில், மற்றவர்களிடத்தில் அல்ல; அவர்கள் அந்த நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை வெறுத்தனர்) … தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன். 103 அவர்கள் முறையிட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் வறுமையில் வாடினர். அவர்களுக்கு இருந்தவைகள் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன. அவர்கள் இது போன்ற தங்களுக்கு ஒரு சிறிய சபையைக் கட்டி எழுப்பியிருந்தனர். அவர்கள் சிறு கூட்டமாக இருந்தபடியால், பெருங்கூட்டமாக இருந்த மற்ற சபை அவர்களை வெளியே தள்ளி, அவர்களை ஒடுக்கியது. தேவனோ, “நீங்கள் அந்த மூலையில் சந்திக்க வேண்டும் என்பதை நான் அறிவேன், நீங்கள் ஒதுங்கிய நடைபாதையில் சந்திக்கிறீர்கள், அல்லது உங்களால் முடிந்த எந்த இடமாயினும் அங்கு சந்திக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று கூறினார். (நான் நிலத்தடி கல்லறை எனப்படும் இடத்திற்கு சென்றிருக்கிறேன். அங்குள்ள பூமிக்கடியிலான கல்லறை தோட்டத்திற்குள் போய் தான் அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.) “உனக்கு இருக்கிற உபத்திரவத்தையும், உனக்கு உண்டாயிருக்கிற தொல்லைகளையும் அறிந்திருக்கிறேன். ஆனால் உனக்கு ஏற்பட்டுள்ள உபத்திரவங்களே உன்னை ஐசுவரியவானாக்கியிருக்கிறது” என்று தேவன் கூறுகிறார். ஓ, என்னே! சபையின் மேல் உபத்திரவமானது வரும் போது, அது சபையை பெலப்படுத்துகிறது, அவ்வாறில்லையெனில் எனக்குச் சொல்லுங்கள். உபத்திரவங்களில் அகப்படும் சபையானது அதினால் அப்பொழுதும் பெலப்படவே செய்கிறது. “உனக்கிருக்கிற உபத்திரவத்தை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் நீ ஐசுவரியவானாயிருக்கிறாய்” என்கிறாய். காரணம், “நீ என்னை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறாய், ஆனால் நீ ஐசுவரியவனாயிருக்கிறாய், ஆனால் உன்னுடைய உபத்திரவங்கள் உன்னை சேதப்படுத்தவில்லை” என்கிறார்.
58104 இப்பொழுது…நீங்கள் கவனித்தீர்களா? நிக்கொலாய் மதத்தினருக்கு இப்பொழுது ஒரு ஜெப ஆலயம் கிடைத்திருக்கிறது. வேதம் அவ்வாறு இங்கே கூறியுள்ளது. அதை நீங்கள் 9-ம் வசனத்தில் இங்கே கவனித்துப் பார்த்தீர்களா? இராமல், சாத்தானுடைய கூட்டமாயிருக்கிற… 105 உ—ஊ, உண்மையான சபையானது புறம்பாக்கப்பட்டது. நிக்கொலாய் மதஸ்தர் இப்பொழுது சபையை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு விட்டனர். பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்த அந்த மக்களை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டனர். ஆகையால் அவர்கள்—அவர்கள் இவர்களுக்கு உபயோகமில்லாதவர்களாக ஆகிவிட்டனர். ஆசிய மைனரிலுள்ள சிமிர்னாவானது, இரத்த சாட்சிகளுக்கு உரிய ஜீவ கிரீடமானது தங்களுக்கென காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அறிந்திருந்தால், அது அவர்களை அசைத்திருக்கும். பாருங்கள்? அதாவது இப்பொழுது வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த தீர்க்கதரிசனமானது எழுதப்பட்டு இந்த சபைக்கு அனுப்பப்பட்டு, இந்த சபை அதைப் பற்றிக் கொண்டு, இத்தீர்க்கதரிசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, இரத்த சாட்சிகள் அணியும் கிரீடம் பெறப்போவது தாங்கள் தான் என்று அறிந்தபோது, அது அவர்களை மரணத்திற்கேதுவாக அச்சுறுத்தினது. அவர்கள் அதை எந்த வேளையிலும் எதிர்பாத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது அவர்களுடைய காலத்தில் வரவில்லை. அவர்களில் யாராவது சிலர், “உங்களுக்குத் தெரியுமா—உங்களுக்குத் தெரியுமா அவர்களில் யாராவது சிலர், அந்த தீர்க்கதரிசியாகிய யோவான் தவறாக இருந்திருக்கிறான் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் அவன் உரைத்தவைகள் ஒன்றும், நமக்கு சிமிர்னாவில் நிறைவேறவேயில்லை” என்று கூறியிருக்கக் கூடும். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்துத்தான் அது நிறைவேற வேண்டும். பாருங்கள்? ஆனால் தேவன் எந்தக் காரியத்தையாவது உரைக்கிறபோது, அது நிறைவேறியே ஆக வேண்டும்.
59106 அங்கேதான், அதாவது நாம் நம்முடைய விசுவாசத்தை தேவனுடைய வார்த்தையின் பேரில் தான் அஸ்திபாரமிடுகிறோம். தேவன் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் காத்துக்கொள்கிறார். என்னவானாலும் சரி…ஒரு குறிப்பிட்ட வாக்குத்தத்தம் நிறைவேற வேண்டிய வேளை இதுவே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது சம்பவிப்பதற்குரிய தேவனுடைய வேளை அதுவாக இல்லாமலிருக்கக் கூடும். “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” தேவன் எப்பொழுதும் தம்முடைய வசனத்தை கனம் பண்ணி, அதற்குரிய நல்ல வேளையில் அது பலனளிக்கத்தக்கதாக செய்வார். 107 எனவே இந்த ஜனங்கள், அதாவது முதல் சபைக்குரியவர்கள், அவர்கள் காலத்துக்குரிய குணாதிசயங்கள் சிமிர்னா சபையின் காலத்தில் வெளிப்பட்டது. அவர்கள் இரத்த சாட்சிகளுக்குரிய கிரீடத்தை அணிய வேண்டியவர்கள். எனவே அவர்களில் அநேகர் கொல்லப்பட வேண்டியதாயிருந்தது.
60108 இப்பொழுது 10-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். நாம் இதை வாசிப்போம். நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; (சாத்தானின் கூட்டம்) இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாக பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்து நாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவ கீரிடத்தை உனக்குத் தருவேன். 109 ஓ, என்னே! தங்களுடைய—தங்களுடைய மார்க்கத்திற்காக அவர்கள் மரிக்க அழைக்கப்பட்ட பொழுது, அவர்கள் அஞ்ச வேண்டாம் என்று அவர்களுக்கு கூறப்பட்டது. இப்பொழுது சகோதரி உட் அவர்களே, நீங்கள் எங்கிருந்தாலும், நான் இப்பொழுது கூறுவது உங்களுக்கு உதவியாயிருக்கும் என்று நம்புகிறேன். அன்றொரு நாளில், சகோதரி உட் அவர்கள், சிலர் மட்டும் விடுவிக்கப்பட்டிருக்க, ஏன் வேறு சிலர் மட்டும் விடுவிக்கப்படாமல் ஒப்புக்கொடுக்கப்பட்டனர் என்பது புரியாத புதிராக தனக்கு இருக்கிறதாக என்னிடம் கூறிக்கொண்டிருந்தார். சில சமயங்களில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்…தேவன் இந்த ஜனங்களிடம், “இப்பொழுது நீங்கள் அதைக் குறித்துப் பயப்பட வேண்டாம், ஏனென்றால் சாத்தான் உங்களை அதற்குள் தள்ளிவிடுவான், ஏனென்றால் இந்த நிக்கொலாய் மதஸ்தர் அனைத்து ஆயத்தங்களுடன் வந்திருக்கிறபடியால், உங்களை உபத்திரவத்திற்குள் தள்ளி விடுவார்கள், என்னுடைய காரியமாக நீங்கள் மரிக்க நான் உங்களை விட்டு விடுவேன். ஆனால் நான் உங்களுக்கு ஜீவ கிரீடத்தை தருவேன்” என்று கூறினார். ஆகையால்…
61110 இப்பொழுது கவனியுங்கள், அவர் கூறினார்…இப்பொழுது நாம் இந்த 10-ம் வசனத்தை வாசிக்கையில் நீங்கள் கவனித்தால் நலமாயிருக்கும். நான் அதை மீண்டும் வாசிக்கட்டும். “நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்து நாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரண பரியந்தம்… (மரணம் வருகிற வேளை வரையிலும் என்று அல்ல என்பதை நீங்கள் கவனித்தீர்களா? மரணம் வரும் வரை என்றல்ல, ஆனால் மரணபரியந்தம். உங்களுக்கு இது புரிகிறதா?) …உண்மையாயிரு. (பார்த்தீர்களா? அவர்கள் அவ்வாறே அது முடிய உண்மையாயிருந்தார்கள்.) 111 இப்பொழுது அவர் கூறினார், சாத்தான்,…அதாவது அவர்—அவர் யாரை சாத்தானுடைய ஜெப ஆலயத்துக்காரர்கள் என்று அழைத்தார்? “நிக்கொலாய் மதஸ்தினரைத்” தான் தேவன் அவ்வாறு அழைக்கிறார். அதை நாம் அறிவோம். அது அப்படித்தானே உள்ளது? இந்த நிக்கொலாய் மதஸ்தர், அங்கே ஒரு ஸ்தாபனமாக இருந்தார்கள். அதில் குக்களாட்சி ஏற்பட்டு அது எழும்பி, இந்த மக்களை துன்புறுத்தவும் செய்தபொழுது, இவர்கள் மரணம் ஏற்படுகிற வரைக்கிலும் சுவிசேஷத்திற்கு உண்மையாயிருக்க வேண்டுமென்று கூறப்பட்டனர். நீங்கள் திருமண விழாவில் வாக்குறுதியளிக்கும்போது கவனித்துள்ளீர்களா? மணமக்களை, மரணத்திற்கு முன் வரையிலும் என்றில்லாமல், “மரணம் நம்மை பிரிக்கும் வரையில்” என்று தான் கேட்கப்படுகிறது. புரிகிறதா? மரணம் நேரிடுகிறதற்கு முன்னால் வரையிலும் என்பதற்கும், மரணத்திலும் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. மரணத்திலும் அவர்கள் கிறிஸ்துவுக்கு உண்மையாயிருக்க வேண்டியதாயிருந்தது. “அதனுடன் நீங்கள் மரணத்திற்குள் செல்லுங்கள். அஞ்ச வேண்டாம். ஏனெனில் நான் உங்களுக்கு ஜீவ கிரீடத்தைத் தருவேன்” என்று வாக்குரைத்திருக்கிறார்.
62112 இப்பொழுது இங்கே “பத்து நாட்களைப்” பற்றி அவர்கள் பேசுகிறார்கள், வேதத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடத்தைக் குறிக்கும். “பத்து நாட்கள்” என்று வேதம் கூறியது, “பத்து ஆண்டுகள்” ஆகும். அதாவது ரோமர் சக்கரவர்த்தியாகிய “ட—ய—க்—ளீ—ஷ—ன்” டயக்ளீஷன், டயக்ளீஷன் என்பவனின் முடியாட்சிக் காலத்தின் இறுதி பத்தாண்டுக்கால ஆட்சியாகும். இச்சபைக் காலத்தின் இறுதிக் கட்டத்தில், பெரிய பேரரசனின் டயக்ளீஷன் ஆளுகை செய்தான் …எபேசு சபைக்காலம் முதல் சிமிர்னா சபைக்காலம் முடிய உள்ள காலங்களில் பல மன்னர்கள் அரசாண்டார்கள். அவர்களில் நீரோ என்பவன் ஒருவன் என்று நினைக்கிறேன். இந்த டயக்ளீஷயன் என்பவன் சபையின் உபத்திரவ காலத்தின் இறுதிக் கட்டத்தில் அரசாண்ட கடைசி மன்னன் ஆவான். இவனது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பத்தாண்டுக்கால ஆட்சியின் போது தான், இவன் எல்லோரையும் மிஞ்சுகிற அளவுக்கு பயங்கரமான, இரத்த வெறிபிடித்த உபத்திரவம் கொடுத்தவனாக இருந்து வந்தான். அவன் இந்த நிக்கொலாய் மதஸ்தர் குழுவினரின் சார்பில் இருந்தான். அவர்கள்—அவர்கள் கிறிஸ்தவர்களைக் கொலை செய்தனர், அவர்களைக் கொன்றனர், அவர்களை எரித்துப் போட்டனர்; மற்றும் இன்னும் எத்தனையோ கொடுமைகளும் இரத்த ஆறு ஓடுமளவுக்கு பத்து ஆண்டுக்கால உபத்திரவமும் உண்டாயிருந்தது. அவனது இந்த ஆளுகைக் காலம் கி.ப்.302 முதல் 312 முடிய நீடித்தது. அத்தோடு சிமிர்னா சபைக் காலமும் முடிவுக்கு வந்தது. கி.பி.312-ல் கான்ஸ்டன்டைனில் ஆட்சி மலர்ந்தது. கான்ஸ்டன்டைன் ஆட்சிக்கு வந்தான். அந்தப் பத்தாண்டுக்கால உபத்திரவம்தான், பத்து நாட்கள் உபத்திரப்படுவீர்கள் என்று சொல்லப்பட்டதன் பொருளாகும். நீரோ மன்னன் கி.பி 64-ல் ஆட்சிக்கட்டில் ஏறிய பொழுது கிறிஸ்தவ சபைக்கு உபத்திரவம் ஆரம்பித்தது, டயக்ளிஷ்யனில் ஆட்சி முடிவடைந்ததோடு, உபத்திரவம் முடிவடைந்தது.
63113 இப்பொழுது, 11-ம் வசனம் ஒரு வாக்குத்தத்தத்தைக் கொண்டதாக இருக்கிறது. இப்பொழுது முடிப்பதற்கு முன்பாக நாம் இதைச் சற்று பார்ப்போம். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது. 114 இப்பொழுது, இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டியவனாக இருக்கிறேன் …நான் இருதயத்தில் நினைப்பதை உங்களிடம் சொல்லாமல் விட்டுவிட்டால் நான் ஒரு மாய்மாலக்காரனாக இருப்பேன். பாருங்கள்? இந்த வேத வாக்கியத்தில் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அது என்ன என்று நான் கண்டுகொள்ளுகிற வரையிலும், வெகு காலமாக அது எனக்கு புரியாத மிகப் பெரிய புதிர்களில் ஒன்றாக இருந்தது. இப்பொழுது நாம் இந்த வசனத்தை மிகவும் கவனமாக வாசிப்போம். பாருங்கள்? ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்… (வேறு வார்த்தைகளில் கூறினால், “காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்றால், பாருங்கள், “ஆவியானவர் சொல்வதைக் கேட்க காதுகள் திறந்திருக்க வேண்டும்.”) இப்பொழுது, பாருங்கள் ஒவ்வொரு சபையிலும் காணப்பட்ட அதே காரியங்கள், உபத்திரவங்கள் யாவும், மற்றும் ஒவ்வொரு காரியமும், அனைத்து சபைகளிலுமே காணப்பட்டது. சபைகளில். …ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை…ஜெயங்கொள்கிறவன் … (எந்த சபைக்கு? எபேசு சபைக்கா? ஆம், சரி, சிமிர்னாவுக்கா? ஆம், அவர்கள் எல்லாருக்குமே) …எல்லா சபைகளிலுமே ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது. 115 லவோதிக்கேயா சபையின் காலத்தில் ஜெயங்கொள்ள வேண்டியவன் எதன் மேல் ஜெயங்கொள்ள வேண்டும்? நிக்கொலாய் மதஸ்தரை, ஜெயங்கொண்டு, உலகத்தின் காரியங்களை ஜெயங்கொண்டு, இந்த ஸ்தாபனங்களை ஜெயங்கொண்டு, இந்த குருக்களாட்சி முறைகளை ஜெயங்கொண்டு, உலகத்தின் ஒவ்வொரு காரியத்தையும் ஜெயங்கொண்டு, கிறிஸ்துவை நேசிக்க வேண்டும். அப்படிச் செய்தால், இரண்டாம் மரணம் உங்களை சேதப்படுத்துவதில்லை. ஏன்? அவரிடம் நித்திய ஜீவன் இருக்கிறது. நித்திய ஜீவன் மரிக்க முடியாது. இயேசு “எனக்கு செவி கொடுப்பவன் மரியாமல் நித்திய ஜீவனை உடையவனாயிருப்பான்; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” என்றார்.
64116 இப்பொழுது, இப்பொழுது, அங்கே…இப்பொழுது, நீங்கள்…அநேகர் இதனோடு ஒத்துப் போகமலிருக்கலாம், ஆனால் அதன் பேரில் உங்கள் தீர்மானத்திற்கு நீங்கள் வரும் முன்னர், அதைப் பற்றி நீங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டுமென விரும்புகிறேன். புரிகிறதா? நான் இப்பொழுது ஒரு காரியத்தைக் கூறப்போகிறேன். 117 அந்தக் காரணத்தினால்தான் நித்தியமான நரகம் ஒன்று உண்டு என்பதை நான் விசுவாசிக்கவில்லை. நித்தியமானதொரு நரகம் இருக்கவே முடியாது. ஏனெனில் நித்தியமான நரகம் என்று இருக்குமானால், அப்பொழுது அந்நரகமானது முடிவே இல்லாதபடி நித்தியமாக இருக்கும் என்று ஆகிவிடும். ஏனென்றால் நித்திய …எப்படியெனில், ஒரெயொரு வகையான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு. அதை அடையவே நாம் பாடுபடுகிறோம். நீங்கள் நித்தியமாக நரகத்தில் எரிந்துகொண்டிருக்கப் போவதாயிருந்தால், அப்பொழுது நித்திய ஜீவனோடு எரிதல் உங்களுக்கு உண்டாயிருக்க வேண்டும். அப்பொழுது தேவனும் நித்தியமாக எரிந்து கொண்டிருப்பார் என்று ஆகிவிடுமே. எனவே, நித்தியமான நரகம் என்ற ஒன்றை நீங்கள் கொண்டிருக்க முடியாது. எப்படியெனில், “நரகம் சிருஷ்டிக்கப்பட்டது” என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. அப்படி அது சிருஷ்டிக்கப்பட்டது என்றால், அப்பொழுது அது நித்தியமானது அல்ல. நித்தியமானது எதுவும் ஒருபோதும் சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றல்ல. அது எப்பொழுதுமே இருந்து வருகிறது. அது நித்தியமானதாக இருக்கிறது. “பிசாசுக்கும் அவனுடைய தூதர்களுக்காகவும் நரகம் உண்டாக்கப்பட்டது” என்று வேதம் உரைக்கிறது. நரகமானது உண்டாக்கப்பட்ட ஒன்று. எனவே அது நித்தியமானதல்ல. ஒரு நபர் நித்தியமாக தண்டிக்கப்படுவான் என்பதை நான் விசுவாசிக்கவில்லை.
65118 “ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை” என்று இங்கே வேதமானது தெளிவாக கூறுகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது “மரணம்” மரணம் என்ற வார்த்தை “பிரிவு” என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. நாம் பாவத்தினால் தேவனை விட்டு பிரிக்கப்படும் பொழுது, நாம் ஏற்கனவே மரித்தவர்களாயிருக்கிறோம். வேதம் அவ்வாறு கூறியுள்ளது. நாம் தேவனை விட்டு பிரிக்கப்படுகிறோம், நாம் அறுப்புண்டு போகிறோம்; நாம் பாவத்திலும், அக்கிரமங்களிலும் மரித்தவர்களாயிருக்கிறோம். அதினால் தேவனுக்கும் அவருடைய காணியாட்சிக்கும் அந்நியராகிவிடுகிறோம். நாம் தேவனை ஏற்றுக் கொள்ளும்பொழுது நித்திய ஜீவனைப் பெற்று, அவருடைய பிள்ளைகளாகவும், அவருடைய பாகமாகவும் ஆகிறோம்.
66119 என்னுடைய சிறு பையன் ஜோசப், அவன் என்ன செய்திட்ட போதிலும், அவன் என்னில் ஒரு பாகமாக இருக்கிறான். அவன்…நான்…அவன் இல்லாமலிருக்கலாம் …நான் ஒரு பெரிய ஐசுவரியவனாயிருந்து, ஏராளமான ஆஸ்தியை உடையவனாயிருந்தால், அவன் அவைகளை சுதந்தரித்துக் கொள்ளாது போய்விட்டாலும், அவன் என்னில் ஒரு பாகமாக இருக்கிறான். அவன் என்னுடைய மகனாகவே இருந்து வருகிறான். நிச்சயமாக அவன் என்னுடைய பாகமாக இருக்கிறான். நான் என்னையே எப்படி மறுதலிக்க முடியாதோ, அதே அளவுக்கு அவனையும் நான் மறுதலிக்க முடியாது. ஏனெனில் அவன் என்னுடைய பாகமாயிருக்கிறான். இரத்தப் பரிசோதனை அவன் என்னுடையவன் தான் என்பதைக் காட்டிவிடும். புரிகிறதா? 120 அந்த இரத்தப் பரிசோதனை, நீங்கள் தேவனுடையவர்களா இல்லையா என்பதையும் காண்பித்து விடும். புரிகிறதா? நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறீர்கள், எனவே உங்களுக்கு நித்திய ஜீவன் இருக்கிறது. ஆனால் பாவஞ் செய்கிற ஆத்துமாவோ, அந்த ஆத்துமா பிரிக்கப்படும். அது சரிதானே? அதன் பிறகு அது இனிமேல் இருக்காது. இப்பொழுது பாருங்கள், சிருஷ்டிக்கப்படும் எந்த வொன்றும் தன்னில் ஒரு துவக்கத்தைக் கொண்டதாக இருக்கிறது. அவ்வாறு துவக்கத்தையுடைய எந்தவொன்றும் நிச்சயம் முடிவையும் உடையாதாகவே இருக்கிறது. ஆனால் தேவன் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல. அவர் எப்பொழுதும் தேவனாகவே இருக்கிறார். அவர் சிருஷ்டிக்கப்பட்டார் என்பதற்கு இடமேயில்லை. நித்திய ஜீவன் நாம் பெற்றுக் கொள்வதற்காக உள்ள ஒரேயொரு வழி என்னவெனில், அந்த சிருஷ்டிப்பின் ஒரு பாகமாக நீங்கள் இருக்க வேண்டும். மகிமை! ஓ, நாம் இதை கண்டு கொள்ள முடிந்தால் நலமாயிருக்குமே! பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு என்ன செய்கிறார் என்று பார்க்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் என்பவர் பிதாவாகிய தேவனாகிய சிருஷ்டிகர் தானே. அவரே ஆவியின் ரூபத்திலிருந்து “பரிசுத்த ஆவி” என்றழைக்கப்பட்டார். ஏனென்றால் அவருடைய குமாரனாகிய இயேசு என்று அழைக்கப்பட்ட சரீரத்திற்குள் அவர் இருந்தார். அவர் அந்த சரீரமாகிய இயேசுவை சிருஷ்டித்தார், அந்தக் காரணத்தினால் அந்த சரீரம் மரிக்க வேண்டியதாயிருந்தது. தேவன் அந்த மாம்ச சரீரத்தில் வாசம் செய்தார். அதிலுள்ள ஜீவனும் இரத்த ஜீவ அணுவானது உடைக்கப்பட்டு மனிதர்மேல் திரும்பி வந்தது.
67121 எனவேதான், பழைய ஏற்பாட்டின் காலத்தின் இருந்த தேவனைத் தொழுது கொள்ளுகிறவர்கள் மிருகத்தை பலி செலுத்திய பிறகும் கூட, அவன் பிராயச்சித்தத்திற்காக பலி செலுத்துவதற்கு முன்னால் அவன் உள்ளத்தில் தன்னில் பாவம் உண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி இருந்ததே, அதே உணர்வுடன் தான் பலி செலுத்திய பிறகும் புறப்பட்டுப் போகிறான். ஆனால் புதிய ஏற்பாட்டிலோ, எபிரேயரில் கூறப்பட்டுள்ளபடி, “ஒரு தரம் சுத்தமாக்கப்பட்ட பின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனசாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால் என்ற நிலைமை இருக்கிறது.” 122 பழைய ஏற்பாடுக் காலத்தில் ஆராதனை செய்கிறவன், ஒரு ஆட்டுக்குட்டியை கொண்டு வந்து அதன் மேல் தன் கைகளை வைக்கிறான். ஆசாரியன் அந்த பலி மிருகத்தின் தொண்டையில் அறுக்கிறான், இரத்தத்தை கீழே வடியவிடுகிறான், அவ்வாட்டுக்குட்டியின் கதறல் சப்தத்தை ஆராதனை செய்கிறவன் கேட்கிறான். பின்பு அது மரித்து விடுகிறது. அது விறைத்துப்போனபொழுது அது மரித்ததை அவன் உணருகிறான். தான் அடைய வேண்டிய அம்மரணத்தை அவ்வாட்டுக்குட்டி எடுத்துக்கொண்டு விட்டது என்பதை உணருகிறான். அப்பொழுது அந்த ஆசாரியன் இரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் மேல் அதைத் தெளிக்கிறான், பலி மிருகம் தகனிக்கப்படும்போது, அதிலிருந்து எழும்பும் புகையானது, ஆராதனை செய்கிறவனுக்காக ஏறெடுக்கப்படும் பாவ மன்னிப்புக்கான ஜெபமாக இருக்கிறது… [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] …பலியான அம்மிருகத்தில் ஜீவனானது, மீண்டும் மனிதனுக்குள் வந்து, மனிதனின் ஆவியோடு தரித்திருக்க முடியாது. ஏனெனில் அது மிருகத்தின் ஆவியாயிருக்கிறது. மிருகத்தின ஆவியும், மனிதனின் ஆவியும் இணைய முடியாது. ஆனால்…ஆகவே தான், மிருகத்தைப் பலி செலுத்தியவர்கள், பலி செலுத்திய பிறகும் கூட பாவத்தின் மேல் உள்ள அதே இச்சையோடு வெளியே செல்லுகிறார்கள். விபச்சார பாவத்தைப் பற்றி குற்ற உணர்வுள்ளவன், அதிலிருந்து மன்னிப்புக் கோரி பலிசெலுத்த உள்ளே வருகிறான். செலுத்தி முடிந்த பிறகும், தன் சிந்தையில் அதே உணர்வுடன் தான் வெளியேறுகிறான். அது உண்மை.
68123 ஆனால் இங்கு ஆராதிப்பவனோ…ஓ! தேவனுடைய சபையே, நான் கூறப் போவதை பெற்றுக் கொள்ளத் தவற வேண்டாம்! ஆனால் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இப்பொழுதோ, ஆராதனை செய்கிற ஒருவன், தேவனுடைய குமாரனிடத்தில் உண்மையாக நடந்து வந்து, விசுவாசத்தினால் அவர் மேல் தன் கைகளை வைக்கிறபோது (ஓ, என்னே!) முகத்தில் துப்பட்டவராக தொங்கிக் கொண்டிருக்கிறதையும், அவருடைய முகத்தில் இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறதையும் வலியின் வேதனையில், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கதறுகிற அவரது முகத்தைப் பாருங்கள். ஓ சகோதரனே, அவர் மரித்ததினால் என்னே ஒரு மகத்தான கிரயத்தை அவர் உனக்காகக் கொடுத்து மரித்தார் என்பதைப் பாருங்கள். அவர் யார், அவர் நான் உன்னுடைய ஸ்தானத்தில், உனக்குப் பதிலாக, மரிக்கிற இம்மானுவேல் என்ற தேவன். 124 அப்பொழுது என்ன நடந்தது? தேவனுடைய குமாரனில் இருந்த இரத்த அணுக்கள் பிளந்தபோது…அந்த இரத்த அணுக்களை உண்டாக்கியது எது? 125 நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் தந்தையிலிருந்து ஒரு மிகச்சிறிய ஜீவ அணுவாகத்தான் புறப்பட்டு வந்திருக்கிறீர்கள். அவ்விதமான ஒரு அணு பெண்ணிடம் கிடையாது. அவள் சினை முட்டையை மாத்திரமே உடையவளாயிருக்கிறாள். ஆணிடமிருந்து வரும் ஜீவ அணுவை கருத்தரிக்கச் செய்து, தன்னகத்தே, அதை குழந்தையாகப் பிறப்பிப்பதை மாத்திரமே செய்கிறாள். ஆனால் இரத்தமானது ஆணிடமிருந்தே வருகிறது, அந்தக் காரணத்தினால்தான் பிறக்கும் குழந்தையானது தந்தையின் பெயரை எடுத்துக் கொள்கிறது. ஒரு மனிதனை விவாகம் செய்து கொள்ளும் பெண், அவனுக்கு தான் பெற்றெடுக்கும் குழந்தைகளினிமித்தம், அவனது பெயரையும் தனக்கு சூட்டிக் கொள்கிறாள். அவள் தானே அவனுக்குப் பெற்றுக் கொடுக்கப்போகும் குழந்தைகளுக்காக அவயங்காக்கிறவளாக ஆகிறாள். ஆனால் நான் கூறியபடி, ஒரு பெட்டைக்கோழி ஒரு சேவலுடன் சேராமலேயே முட்டையிடலாம். ஆனால் சேவலோடு சேராமல் போடப்பட்ட முட்டையோ, அடையில் வைத்து குஞ்சு பொறிக்கப்பட முடியாத முட்டையாக இருக்கும்.
69126 அதைப் போலவே, நான் ஏற்கனவே கூறியபடி, இன்றைக்கு நமக்கு அநேக ஜீவனற்ற, புறம்பான ஆசாரங்களையுடைய குளிர்ந்து போன நிலையிலுள்ள பழமையாகிவிட்ட ஏராளமான சபைகள் உள்ளன. அவர்கள் இந்த நிக்கொலாய் மதஸ்தரின் போதனைகளை கைக்கொண்டு, அதினால் அவர்களுடைய கூடுகள் முழுவது அழுகிப்போன முட்டைகளால் நிறைந்ததாய் இருக்கின்றன; அவைகள் ஒருபோது குஞ்சு பொறிக்க முடியாதவைகளாகும் …நீங்கள் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டாலும் ஒன்றும் நடக்காது. (அவர்களை பேராயர்கள், உதவிக்காரர்கள் என்றெல்லாம் நீங்கள் அழைத்தாலும் பயனில்லை.) விசுவாசிகளை தொடரக்கூடிய அடையாளங்களை அவர்கள் ஒருபோதும் விசுவாசிக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவோடு இணைந்திருக்கவில்லை. அந்த மணவாளனால் தேவனுடைய வல்லமையைக் கொண்டு அவர்கள் கருத்தரிக்கப்பட்டிருந்தால்…
70127 அந்த் இரத்த ஜீவ அணுக்கள் கல்வாரி சிலுவையில் பிளக்கப்பட்டபோது, அந்த சிறிய யேகோவாவில் இருந்த அந்த ஜீவன்…ஓ! இவ்விஷயம் உங்களை அசைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்! 128 ஒவ்வொருவரும் ஒரு அடையாளத்திற்காகப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அவ்வாறில்லையா? “ஓ, ஒரு அடையாளத்தைக் காண்பியும்” என்று ஒவ்வொருவரும் கேட்கிறார்கள். யூதன் “எனக்கொரு அடையாளத்தைக் காண்பியும்” என்றான். 129 நான் ஒரு அடையாளத்தை உங்களுக்கு கொடுக்கட்டும். தேவன் ஒரு சமயம் ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அவர்கள் ஒரு அடையாளத்தைக் கேட்டார்கள். இஸ்ரவேல் ஒரு அடையாளத்தைக் கேட்டார்கள். இஸ்ரவேல் ஒரு அடையாளத்தைக் கேட்டது. அவர் தீர்க்கதரிசியிடம், “நான் உங்களுக்கு ஒரு நித்திய அடையாளத்தைக் கொடுப்பேன்; இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள். ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி குமாரனைப் பெறுவாள்” (ஆமென்), “அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்” என்று கூறினார். இம்மானுவேல் என்பதற்கு ‘தேவன் நம்மோடிருக்கிறார்’ என்று அர்த்தமாம். அதுவே கொடுக்கப்பட்ட அடையாளங்களிலெல்லாம் மிகப்பெரிய அடையாளம். 130 வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்த தேவன், இந்த சூரியக் குடும்பத்தையும் உண்டாக்கினர். பலோமர் என்ற அந்த மலையின்மேல் நின்று கொண்டு தொலை நோக்கியின் மூலம் தூரத்தில் பார்த்தால், அங்கிருந்து நூற்றிருபது மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் விண்வெளியில் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதை மைல்கணக்கில் கொண்டு வந்து பாருங்கள். அதற்கு அப்பாலும், சந்திரனும், நட்சத்திரங்களும், உலகங்களும் இன்னும் ஏராளம் உண்டு. அவரே அவையாவையும் உண்டாக்கினார். அவைகள் யாவும் அவருடைய கரத்திலிருந்து அந்தவிதமாக வெடித்துப் புறப்பட்டன். ஆம்!
71131 அந்த மகத்தான சிருஷ்டிகர் என்னுடைய இரட்சகரானார். அந்த மகத்துவமுள்ளவர் ஓர் சிறிய இரத்த ஜீவ அணுவினுள் பிரவேசித்து, அவ்வணுவானது, ஒரு மனிதன் மூலமாக அல்ல, ஆனால் கன்னியான ஒரு ஸ்திரீயினுள் வைக்கப்பட்டு, அவர் தனக்கென ஒரு சிறிய வாசஸ்தலத்தை உருவாக்கிக் கொண்டு, அதனுள் அவர் ஜீவித்தார். ஓ, அது—அது—அது அசைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்! யேகோவா! யேகோவா, யேகோவா வைக்கோல் நிறைந்த முன்னணையில் தொழுவத்தின் சாணம் குவிக்கப்பட்டுள்ள இடத்தில், ஒரு குழந்தையாக அழுது கொண்டு இருக்கிறார். இதுவே இந்த சில பெருந்தலைகளான மக்களுக்குக் கொடுக்கப்பட்ட நித்திய அடையாளமாயிருக்கிறது. யேகோவாவாகிய தேவன் நாற்றமெடுக்கும் முன்னணையில் குழந்தையாக கிடத்தப்பட்டிருக்கிறார். (அல்லேலூயா!) அப்படியிருக்க, நாம் பெரியவர்கள் என்று நம்மை நினைத்துக் கொள்கிறோம். மழை பெய்தால், அது உங்களை மூழ்கடித்துவிடும் அளவிற்கு உங்களுடைய மூக்கினை மேலே தூக்கியவாறு செல்கிறீர்கள். நீங்களோ உங்களை பெரியவர்கள் என்று நினைத்துக் கொள்கிறீர்கள். யேகோவா! ஒரு—ஒரு சாணக்குவியலின் மேல் ஒரு முன்னணையில் அழுது கொண்டிருக்கும் ஒரு சிறு…குழந்தையாக கிடத்தப்பட்டிருக்கிறார். அது எவரையும் அசைக்கக் கூடியதாக இருக்க வேண்டுமே! அதுவே ஒரு அடையாளம். “நான் உங்களுக்கு நித்திய அடையாளத்தைக் கொடுப்பேன்” என்று தேவன் கூறினார். அதுவே ஒரு மெய்யான அடையாளமாயிருக்கிறது. விளையாடிக் கொண்டு இருக்கிற ஒரு சிறுவனாக யேகோவா இருந்தார். யேகோவா! யேகோவா ஒரு பணிமனையில் மரத்தை அறுத்து பணி செய்யும் ஒரு தச்சராக இருந்தார். அல்லேலூயா! என்னே, ஓ, என்னே! மீன் படிக்கிறவர்களின் கால்களை யேகோவா கழுவினார். “ஒரு அடையாளத்தை நான் தருவேன்” என்றாரே. 132 “ஓ, ஆனால் நாமோ கழுத்துப்பட்டையணிந்த, அங்கிதரித்த குருக்கள் வேண்டும் என்கிறோம். உங்களுக்குத் தெரியுமா?” பாருங்கள்? ஓ!
72133 “நான் உங்களுக்கு நித்திய அடையாளத்தைக் கொடுப்பேன்.” யேகோவா அரண்மனை முற்றத்தில் முகத்தில் காரிதுப்பப்பட்ட நிலையில் நின்று கொண்டிருக்கிறார். யேகோவாஅ நிர்வாணமாக வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கிக் கொண்டிருந்தார். சிலுவையின் அவமானத்தை அவர் துச்சமாக எண்ணினார். நாம் அவருக்கு ஒரு சிறு துணியை இடுப்பில் சுற்றிய நிலையில் சிலை செய்து வைத்துள்ளோம். ஒரு சிற்பி அவ்வாறு செதுக்கினான். ஆனால் அவர்கள் அவரை நிர்வாணமாக்கி அவரை இக்கட்டான சூழ்நிலையில் வைத்தனர். ஓ, ஒரு கூட்டம் மாய்மாலக்காரர்கள், அந்த நேரம் வந்த போது! இது மனிதனின் நாளாக இருக்கிறது. கர்த்தரின் நாள் வந்து கொண்டிருக்கிறது. யேகோவா! யேகோவா, மரித்துக் கொண்டிருந்தார், ஆம், ஒன்றும் நடைபெறவில்லை, யேகோவா ஜெபித்துக் கொண்டிருந்தார். ஒன்றும் சம்பவிக்கவில்லை. ஊம்ம். அது உண்மை. அது உங்களை அசைக்க வேண்டுமே! அது நித்திய அடையாளமாயிருக்கிறது. அதுவே எல்லா மனிதரும் அறிய வேண்டிய அடையாளம். அப்பொழுது அவர் மரித்தார், யேகோவா மரித்தார். அப்பொழுது பூமி அசைக்கப்பட ஆரம்பித்தது. ஓ, என்னே!
73134 மரித்தோரிலிருந்து அவர் உயிரோடெழும்பி, உன்னத்திற்கு ஏறினார். தன் ஜனங்களாகிய தன் சபையில் வாசம் பண்ணும்படி, யேகோவா பரிசுத்த ஆவியாக திரும்பி வந்தார். மகிமை! யேகோவா அவர்களுடைய சபை வழியாக நடந்து சென்று, அவர்களது இருதயத்தில் சிந்தைகளை பகுத்தறிந்தார். யேகோவா பிணியாளிகளை குணமாக்கினார். யேகோவா மனிதன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மனித உதடுகளினூடாகப் பேசினார், அதே யேகோவா, தான் இன்னொரு மனிதனின் மூலம் பேசியவைகளை இங்கே, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வியாக்கியானிக்கிறார். ஒரு அடையாளம் தேவையா? ஆமென்? அதே யேகோவா ஒரு வேசியினிடத்தில் இறங்கி வந்து அவளை எழுப்புகிறார். அவளை—அவளை நாய்கள் கூட ஏறிட்டுப் பார்க்கக்கூடாத அளவுக்கு மிகவும்—மிகவும் கீழ்த்தரமான நிலையிலிருந்தபோது, அவர் அந்தவிதமான நிலையிலிருந்து அவளை தூக்கியெடுத்து, அவளை கழுவி, உறைந்த வெண்பனியிலும் வெண்மையாக ஆக்கி, லீலி புஷ்பத்தைப் போன்ற சுத்தமான இருதயத்தை அவளுக்குக் கொடுக்கிறார். ஓ, என்னே! ஓதுக்கமான சந்துகளில் குடித்து வெறித்து, ஈக்கள் வாயைச் சுற்றிலும் மொய்க்கும் அளவுக்கு மயங்கி கிடக்கிறதான குடிகாரனை யேகோவா தூக்கியெடுத்து, சுத்தமாக்கி, அவனை சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி செய்கிறார்…? இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை சுத்திகரிக்கிறது!
74135 அவர் பூமியில் இருந்தபொழுது, உலகிலேயே மிகவும் தாழ்வான நகரத்திற்கு, மிகவும் தாழ்வான மக்களிடத்திற்குச் சென்றார். அவருக்கு அவர்கள் மிகவும் கீழ்த்தரமான பெயரை சூட்டினர். அது உண்மை. அவர்கள் அவரை மிகவும் கேவலமாக நடத்தி, அவரை “பெயல்செபூல்”, ஒரு பிசாசு என்ற மிகமிக மட்டமான நாமத்தை சூட்டி அழைத்தனர். அவர்களை அவரை, அதாவது மனிதன் அவரை மிகவும் கீழ்த்தரமான நாமத்தினால் அழைத்தான். 136 அவனால் தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவர் பரலோகத்தையே குனிந்து பார்க்க வேண்டியளவிற்கு அவருக்கு மிக உன்னத ஒரு சிங்காசனத்தை அளித்தார். ஆமென்! மகிமை! வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லா நாமங்களுக்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். அந்த நாமத்தினால் தான் பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள முழுக் குடும்பத்திற்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மனிதன் அவரைக் குறித்து இவ்வாறு தாழ்வாகத்தான் சிந்தித்தான். அவரைக் குறித்து தேவன் மிகவும் உயர்வாக சிந்தித்தார். ஓ தேவனே, என் சிந்தனைகள் யாவும் உம்முடைய சிந்தனைகளைப் போல் இருக்கட்டும், பிதாவே. ஆம் ஐயா, ஓ, விலையேறப்பெற்ற நாமம்!
75137 “என்னை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவநாயிருக்கிறான்.” ஒரேயொரு விதமான நித்திய ஜீவன் தான் உண்டு என்றால், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் மூலமாக அந்த ஜீவனை அடைய நாம் நாடிக் கொண்டிருக்கிறோம். அது தேவனுடைய ஜீவனாயிருக்கிறது. தேவனுடைய குமாரனில் இருந்த ஜீவ அணுக்கள் பிளக்கப்பட்டபோது, இயேசு என்ற இந்த மனிதனில் அந்தச் சிறு யேகோவா அடங்கியிருந்தார் (அவரில் தேவத்துவத்தில் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக வாசமாயிருந்தது), இப்பொழுது அந்த இரத்தத்தை நாம் நம்முடைய பாவ மன்னிப்பிற்காக ஏற்றுக் கொள்வோமானால், அந்த ஆவி அது மனிதனில் இருந்த ஆவியல்ல, தேவனில் இருந்த அந்த ஆவி …நம்மேல் வருகிறது. மகிமை! அது “தேவனுடைய இரத்தம்” என்று வேதம் கூறுகிறது. 138 “யூதர்களை பற்றி நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டாம்…அவர் ஒரு யூதன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று ஒருவர் கூறினார். இயேசு ஒரு யூதனல்ல. அவர் யூதனுமல்ல, புறஜாதியானுமல்ல. அவர் தேவன். அதுதான் சரி. அவர் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட இரத்தம். தேவன் விசேஷித்த விதமாக அதை உண்டாக்கினார். அந்த இரத்தம் அவரது சொந்த இரத்தமாகும். சிருஷ்டிக்கப்பட்ட அந்த இரத்தத்தின் மூலமாக நாம் அதை நம்முடைய பாவ மன்னிப்புக்காக ஏற்றுக்கொள்கிறோம், ஏனென்றால் அவர் நமக்காக அந்தவிதமான மரணத்தில் மரித்தார். அந்த இரத்த அணுவானது உடைக்கப்பட்டு, அதிலிருந்து பரிசுத்த ஆவி திரும்ப நம்மேல் வரும்படி வந்து, ஒரு ஆவியின் பிறப்பினூடாக இப்பொழுது நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திக்களுமாயிருக்கிறோம். ஆகையால் ஆதியும் அந்தமுமில்லாத தேவனுடைய ஜீவனானது, இயேசு கிறிஸ்துவுக்குள் உண்டான தேவனுடைய கிருபையினாலே, எனக்கும் உங்களுக்கும் உரியதாய் இருக்கிறது. அங்குதான் காரியமே உள்ளது.
76139 இப்பொழுது மீண்டும் “நரகம்” என்ற வார்த்தைக்கு சிறிது நேரம் திரும்பிப் போவோம். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அதாவது—அதாவது…எரிகிற நரகம் உண்டென்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா! வேதம் அக்கினிக் கடலைப் பற்றி கூறியுள்ளது. இப்பொழுது, ஆனால் அது ஒருக்காலும் நித்தியமானதாக இருக்க முடியாது. வேதம் ஒருபோதும் நித்திய நரகம் என்று கூறவில்லை. அது “சதாகாலங்களுக்கு இருக்கும் நரகம்” என்று கூறுகிறது. நித்தியம் என்ற வார்த்தையை கூறாதேயுங்கள், அது “சதாகாலங்களுக்கு நரகம்” என்றே கூறுகிறது. நரகம் பிசாசுக்காகவும், அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டதொன்றாகும். அது சதாகாலங்களுக்கும் இருக்கும், ஆனால் நித்தியமானதாக இருக்காது. நான் அறிந்தவரையில், ஆத்துமாவானது அதன் செய்க்கைக்காக, ஒரு வேளை, நூறு இலட்சம் ஆண்டுகள் நரகத்தில் வாதிக்கப்படக் கூடும். தேவனுடைய பார்வையில் சதாகாலம் என்பது எப்படிருக்கக் கூடும் என்பது எனக்குத் தெரியாது. அது ஒரு வேளை ஐந்து நிமிடங்களாக இருக்கலாம் அல்லது ஒரு வேளை பத்து இலட்சம் ஆண்டுகள் என்றிருக்கலாம். அது ஒரு வேளை நூறு இலட்சம் ஆண்டுகளுக்குக் கூட இருக்கலாம். ஆனால், எப்படியும் அந்த ஆத்துமா இல்லாமல் போகிற ஒரு வேளை வரும்.
77140 வேதம் இங்கே இவ்வாறு கூறியுள்ளது, பாருங்கள். பாருங்கள்: …ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. 141 முதல் மரணமானது நமக்குப் பிரியமானவர்களிடமிருந்து நம்மை பிரிக்கக் கூடியதாக இருக்கிறது. நாம் மரித்தாலும், தேவனுடைய சமூகத்திற்குள் செல்லுவோம். அவருடைய பிரசன்னத்தை விட்டு அகலமாட்டோம். புரிகிறதா? இரண்டாம் மரணம் என்ற ஒன்று இருக்குமானால், அது நிச்சயமாக ஆத்துமாவின் மரணமாகத்தான் இருக்க வேண்டும். உலகத்தை ஜெயங்கொள்ளுகிறவன் அல்லது உலகத்துக்குரிய காரியங்களை ஜெயிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருப்பான்; இரண்டாம் மரணமானது அவனைத் தொடுவதில்லை. நித்திய ஜீவன் என்பது அதுதான். ஆனால் பாவியோ…வேதம், “சுகபோகமாக வாழ்கிற ஸ்திரீ உயிரோடு செத்தவள்” என்று வேதம் கூறியுள்ளது. அது சரிதானே? “பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்” சாவதென்றால் என்ன? “முழுவதுமாக பிரிக்கப்படுதல்,” “இனி இல்லாதிருத்தல்,” புரிகிறதா? முழுவதும் அறுப்புண்டு போகுதல், என்பது சரியே. அறுப்புண்டு போம், இனிமேல் இல்லை என்றுள்ள கட்டம் எப்பொழுது ஏற்படும்? புரிகிறதா? அது எவ்வளவு காலம் இல்லாமற்போக நேரிடும்? அது எவ்வாறு அங்கு ஏற்பட்டதோ, அதே நடைமுறையில் தான் அது, இனி ஒன்றுமே இல்லை என்கிற நேரம் வரைக்கிலும் போகும். அது எதிலிருந்து உண்டாக்கப்பட்டதோ அங்கே அது திரும்பிச் செல்லும்.
78142 நாம் அந்த ஜீவ அணுவை எடுத்துக் கொண்டால், அதைப் பிளந்து பார்த்தால், அதை ஆராய்ந்து கொண்டே போனால், அப்பொழுது நீங்கள் இறுதியில் முதல் ஜீவ அணுவுக்கு வருவீர்கள். அந்த ஜீவ அணுவை நீங்கள் பிளந்தால், அப்பொழுது நீங்கள் இரத்தத்தின் வேதிப் பொருளைப் பெற்று, இரத்தத்தின் பல்வேறு வேதிப் பொருட்களுக்குள் வருகிறீர்கள். கடைசியாக அந்த ஜீவ அணுவின் மிகவும் நுண்ணியமானதொரு பாகத்துக்கு வருகிறீர்கள். அதுதான் ஜீவன் ஆகும். அவர்கள் அதைக் கண்ணுற முடியாது. அதைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அந்த ஜீவனானது, ஒன்றுமே இல்லை என்று கருதுகிற அளவுக்கு உள்ள கட்டத்திற்கு வருகிறது. அந்த ஜீவனின் வேதியியல் பண்பு என்ன? அதற்கு அந்த வேதிப் பொருளும் உள்ளது என்பதை நான் விசுவாசிக்கவில்லை. அது ஆவிக்குரியதாக இருக்கிறது. 143 அதன் பிறகு, அக்கட்டத்தில், இறுதியாக அது முழுவதும் பிரிக்கப்பட்ட, இனிமேல் இல்லாமல் இருக்கிற ஒரு கட்டத்தை அடைந்து விடுகிறது. “பாவஞ் செய்கிற ஆத்துமா சாகவே சாகும்” என்று வேதம் கூறியுள்ளது. “இந்த சபைக் காலங்களில் ஜெயங்கொள்ளுகிறவர்கள் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.” சரீரம் முதலில் மரித்துவிடுகிறது, அடுத்து ஆத்துமா மரிக்கிறது, அதன் பிறகு அது இனி இல்லாமற் போய் விடுகிறது. பாருங்கள்? அதனுடைய…அதை வேதம் கூறுகிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
79144 இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், நரகம் நித்தியமானது என்று இருக்குமானால், அப்பொழுது வேதம் தவறானதாகப் போய்விடும். ஏனெனில், வேதத்தில் “நரகம் சிருஷ்டிக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது. ஒரு மனிதன் நரகத்தில் நித்திய நித்தியமாக எரிந்து கொண்டிருப்பான் என்றால், அவன் உயிரோடு எரிய அவனுக்குள் நித்திய ஜீவன் இருக்க வேண்டும். அது சரிதானே? நல்லது, எத்தனை விதமான நித்திய ஜீவன்கள் உண்டு? ஒரேயொரு நித்திய ஜீவன் தான் உண்டு. அது உண்மை. ஒரேயொரு நித்திய ஜீவன் மட்டுமே. 145 இப்பொழுது நீங்கள் புறப்பட்டுப் போய், “சகோதரன் பிரான்ஹாம் நரகம் உண்டென்று விசுவசிக்கவில்லை” என்று சொல்லிவிடாதீர்கள். சகோதரன் பிரான்ஹாம் நரகம் உண்டென்று தான் விசுவாசிக்கிறார். நரகம் ஒன்று உண்டென்று வேதம் போதிக்கிறது. இளைப்பாறுதலுக்கென ஒரு—ஒரு வாசஸ்தலம் உண்டு என்பது எவ்வளவு நிச்சயமோ அதே நிச்சயமாய் தண்டனைக்கும் ஒரு ஸ்தலம் உண்டு. தனக்கெதிராக பாவம் செய்கிற ஆத்துமாவை தேவன் நிச்சயமாக தண்டனைக்குட்படுத்துவார். இயேசு கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிப்பதினிமித்தம், நீ நிச்சயமாக தண்டிக்கப்படுவாய். ஆனால் நீ முற்றிலுமாக இனிமேல் இல்லாமற் போகும் வேளை வரப் போகிறது. ஆனால் நீ முற்றிலும் நிர்மூலமாக்கப்பட எத்தனை இலட்சம் ஆண்டுகள் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு கால வரையறை உண்டு…
80146 நீங்கள் மறுபடியும் பிறக்கிற வரையிலும், நேரம், காலத்திற்கு கட்டுப்பட்ட வரையறைக்குட்பட்ட பிறவிகளாக இருப்பீர்கள். மறு பிறப்படைந்ததும் நீங்கள் முடிவில்லாத நித்திய பிறவிகளாக இருப்பீர்கள். நித்திய ஜீவனையுடையவர்களாக இருப்பதற்கு உங்களுக்கு இருக்கிற ஒரே வழி என்னவெனில், நீங்கள் உங்களில் தேவனின் பாகத்தையுடையவர்களாக இருத்தல் வேண்டும். இதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? நிச்சயமாக. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். 147 நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? நித்திய ஜீவனை அடைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அது என்னை இனிமேல் வருத்தப்படுத்துவது இல்லை, ஏனெனில் இப்பொழுது நமக்கு நித்திய ஜீவன் உண்டாயிருக்கிறது. நான் அதை அறிந்திருக்கிறேன். நாம் யாவரும் அதைப் பெற்றிருப்போம் என்று நான் நம்புகிறேன்.
81148 ஆம், நான் இங்கே ஐரேனியஸைப் பற்றி ஒரு குறிப்பு எழுதி வைத்துள்ளேன். அது சம்பந்தமாக “இந்த வரலாற்றுக் குறிப்பை வாசிக்கவும்” என்று எழுதி வைத்துள்ளேன். ஐரேனியஸ் தன் ஊழியத்தில் அந்த பெந்தெகொஸ்தே (மூல) சபைக்குரிய அடையாளங்களையெல்லாம் அவரைப் பின் தொடரும்படிப் பெற்றிருந்தார். 149 இப்பொழுது, தேவன்…சபையானது பெந்தெகொஸ்தேவில் துவங்கியது என்பதை எத்தனை பேர்கள் விசுவாசிக்கிறீர்கள்? சரி. எத்தனைபேர், பெந்தெகொஸ்தேவில் ஏற்பட்ட சபையை தேவன் அங்கீகரித்து உறுதிப்படுத்தினார் என்பதை விசுவாசிக்கிறீர்கள்? சரி, ஐயா. அது தேவனுடைய முதல் சபை என்றிருந்ததென்றால், “சபை” என்று அதைத்தான் அவர் அழைத்தார். இப்பொழுது அவர் திராட்சைச் செடியாக இருக்கிறார். நாம் அதன் கொடிகள். அந்தத் திராட்சைச் செடி இன்னொரு கொடியை படரவிட்டால், அது எப்படியிருக்கும்? அதுவும் பெந்தேகோஸ்தேவாக இருக்கும். ஆம்! பெந்தெகொஸ்தே என்று பெயர் போட்டுக் கொள்வதினால் அப்படியாக முடியாது. இப்பொழுது நம்மிடையே பெந்தெகொஸ்தே என்று பெயர் போட்டுக் கொண்டுள்ளவைகள் உண்டு, அதுவும் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரெஸ்பிடேரியன், பெந்தேகோஸ்தே ஆகியவைகளைப் போலுள்ளவைகள் தான். அது வெறும் பெயர் தான். அதில் ஒரு பயனும் இல்லை. அதில் எந்த அர்த்தமும் இல்லை, பாருங்கள். ஆனால் பெந்தெகொஸ்தே அனுபவத்தை உங்கள் இருதயத்திலும், உங்கள் ஆத்துமாவிலும் பெற்றிருந்தால், நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாக இருப்பீர்கள், அப்பொழுது தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தமாக, “இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை” என்று உரைத்திருக்கிறார். ஏனெனில் நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள். அதினால், இரண்டாம் மரணம் உங்களைத் தொட முடியாது . பாருங்கள்? நீங்கள்…உங்களுக்கு… 150 “தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்.” அதை நீங்கள் துக்கப்படுத்தாதிருங்கள் (தவறான காரியங்கள் செய்வதின் மூலம்). நீங்கள் அப்படிச் செய்தால், அதற்கு உரிய தண்டனையை அடைந்திட வேண்டியது வரும். ஏனெனில் வேதம், “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்” என்று கூறியுள்ளது. அது சரிதானே? “பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்.”
82151 ஓ! எதிர் வரும் காலங்களில் உள்ள ஒரு காலையில், அந்த நாளானது அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. உயிர்த்தெழுதல் அகில உலகத்திலும் ஒரே நேரத்திலேயே நடைபெறும் என்பதைக் காண்பிக்கும் முகமாக, “இரண்டு பேர் வயலிலிருப்பார்கள், ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு பேர் படுக்கையிலிருப்பார்கள். அதில் நான் ஒருவரை எடுத்துக் கொள்வேன்” என்று கூறியுள்ளார். பாருங்கள், பூமியில் ஒரு இடத்தில் பகலாயிருக்கையில், இன்னொரு பக்கத்தில் இரவாயிருக்கும்; ஆகவே உயிர்த்தெழுதலும், எடுத்துக் கொள்ளப்படுதலும் உலக முழுவதிலும் ஒரே நேரத்தில் நடைபெறும். தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது இந்த ஏழு சபைக்காலங்களிலும் இருந்த அந்த சிறு மந்தையான ஒவ்வொரு சபையும், இங்கே, இங்கே, இங்கே, அங்கே அந்த இருண்ட காலங்களுக்குள் சென்ற அந்த மிகச்சிறிய சபையும், இங்கே, இங்கே, இங்கே இந்த சிறு கூட்டம் உயிரோடெழுந்திருப்பார்கள். 152 ஏழாவது ஜாமத்தில் காணப்பட்ட அந்தக் கன்னியரும், அந்தக் கன்னியரும் கர்த்தரை சந்திக்க எதிகொண்டு போனார்கள்…இப்பொழுது அவர்களில் ஏழு கன்னியர் புத்தியுள்ளவர்கள் என்பதை நினைவிருக்கட்டும். அது சரியா? இல்லை, ஐந்து கன்னியர் என்றே நாள் பொருட்படுத்துகிறேன் …கர்த்தரை சந்திக்க பத்து கன்னியர் புறப்பட்டதில் ஐந்துபேர் புத்தியுள்ள கன்னியர், ஐந்து பேர் புத்தியில்லாத கன்னியராயிருந்தனர். அது சரிதானே? இப்பொழுது, அங்கே ஏழு ஜாமங்கள் உண்டாயிருந்தன, ஏழாவது ஜாமத்தின் இறுதியில் (சிலர் இந்த ஜாமத்தில் உறங்கச் சென்றார்கள். சிலர் இந்த ஜாமம், சிலர் அந்த ஜாமம் சிலர் இந்த ஜாமம், சிலர் அது …) ஏழாவது சாமத்தில் “இதோ மணவாளன் வருகிறார். அவரை எதிர் கொள்ளப் புறப்பட்டுப் போங்கள்” என்ற சத்தம் உண்டாயிற்று. அவர்கள் எழுந்து தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். மற்றவர்கள் யாவரும் இங்கிருந்து எழும்பினார்கள். ஓ, ஒரு அற்புதமான வேளையாக அது இருக்குமல்லவா?
83ஓ, நாம் ஒரு சிறு பாடலை பாடுவதுண்டு: அது உனக்கும் ஒரு அற்புதமான வேளையாயிருக்கும், அது எனக்கும் என்னே ஒரு அற்புதமான வேளையாயிருக்கும்; நம் இராஜா இயேசுவை சந்திக்க நாம் ஆயத்தமானால், அது என்னே ஓர் அற்புத வேளையாயிருக்கும். இங்கே, நம்மால் அதைப் பாட முடியா என்று நாம் பார்ப்போம்: உமக்கு ஓர் அற்புத வேளையது, எனக்கும் ஓர் அற்புத வேளையது; நாமெல்லாரும் நம் இராஜ இயேசுவை சந்திக்க ஆயத்தமானால், என்னே ஓர் அற்புத வேளையாய் இது இருக்கும். (அது அற்புதமாயிருக்குமல்லவா?) சுமக்கவோ பாரம் ஏதுமில்லாத ஓ, அங்கே அது அற்புதமாயிருக்குமல்லவா? இருதயத்து மணியோசை அனைத்தும் ஒலிக்க மகிழ்வுடன் பாடுவோம், ஓ, அது அற்புதமாயிருக்குமல்லவோ அங்கே?
84153 அந்த பரம வீட்டை நீங்கள் அடைந்துவிடுவீர்கள் என்று உங்களில் எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்? அந்த வாசலை விட்டு புறம்பே போய்விடுவீர்கள் என்று எத்தனை பேர் அறிவீர்கள்? உங்களுக்கு தெரியாது. உங்களில் எத்தனை பேர்கள், வெளியே போய்விட்டால் திரும்பி வந்து விடுவோம் என்பதை அறிந்துள்ளீர்கள்? உங்களால் சொல்ல முடியாது. ஆகவே, இந்த இராத்திரியைத் தவறவிட வேண்டாம். இந்த இராத்திரியில் தேவனை விட்டு விடாதீர்கள். ஏனெனில் இந்த இராத்திரி ஒருவேளை உங்களுக்கு தருணம் அல்லது ஒரு சமயம் கிடைக்கும் கடைசி இராத்திரியாக இருக்கக்கூடும். நீங்கள் யார்? நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? எங்கே போகப் போகிறீர்கள்? அதைப் பற்றி உங்களுக்குச் சொல்ல முடிந்த, உலகில் உள்ள ஒரேயொரு புத்தகம் இங்கே உள்ள இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பழமையான வேதாகமம் மட்டுமே. அந்த வேதத்தைத் தான் நாம் விசுவாசிக்கிறோம். அந்தத் தேவனைத் தான் நாம் விசுவாசிக்கிறோம். 154 நீங்கள் அந்த மணவாட்டியில் இல்லாவிட்டால், சிறுபான்மையான அந்தச் சிறு குழுவினுள் நீங்கள் இல்லாவிடில், ஸ்தாபனக் கோட்பாடுகளினாலும், ஸ்தாபனங்களினாலும் இங்கே கசக்கிப் பிழியப்பட்டு புறம்பாக்கப்பட்ட அந்த சிறு மந்தையில் நீங்கள் இல்லாவிடில் …அந்த சிலாக்கியத்தைப் பெறுவதற்காக நீங்கள் இந்த கூடாரத்தைச் சேர்ந்து கொள்ள வேண்டியதில்லை, நீங்கள் எதிலும் சேர்ந்து கொள்ள வேண்டியதில்லை, அந்த இராஜ்யத்தினுள் நீங்கள் பிறக்க வேண்டும். மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரெஸ்பிடேரியன் ஆகியவற்றில் நீங்கள் ஐக்கியங்கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் எங்கே ஐக்கியங்கொண்டிருக்க விரும்பினாலும், அது உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்தது. பாருங்கள், நீங்கள் விரும்புகிற எவரோடும் உங்கள் ஐக்கியத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் மறுபடியும் பிறந்துவிட்டால், அப்பொழுது, “ஒரேவிதமான சிறகுள்ள பறவைகள்” என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னே!
85155 ஒருவர் என்னிடம் ஓர் சமயம் கேட்டார்; “சகோதரர் பிரான்ஹாமே, ஜனங்களை ‘மெதோடிஸ்டு சபைக்கு திரும்பிச் செல்லுங்கள்’ என்று கூறுகிறீர்களே?” என்று கேட்டார். அதற்கு நான்; “நிச்சயமாக. அவர்கள் இவர்களை தூக்கியெறியட்டும், அப்பொழுது அவர்களுக்கு போவதற்கு வேறு இடமே இருக்காது” என்றேன். அப்பொழுது நாம் பார்ப்போம்… அதெல்லாம் சரிதான். திரும்பிச் செல்லட்டும், நீண்ட காலம் அங்கு இருக்கப் போவதில்லை. நீங்கள் பாருங்கள், அங்கு நீடித்து இருக்க முடியாது. மீண்டும் வருவார்கள். 156 உங்களுக்குத் தெரியும்…நோவா பெரிய ஜலப்பிரளயத்திற்கு பிறகு, பாதுகாப்பான இடமாகிய நோவாவின் பேழையிலே, நோவா ஓர் சமயம், பேழையை விட்டு காகத்தை வெளியே அனுப்பினான். காகம் கரைந்துவிட்டு சற்று முற்றும் பார்த்து விட்டுச் சென்றது. அது அழுகின மாம்சத்தை தின்னும் பறவையானதால், அது மிகவும் திருப்தியோடிருந்தது. அது ஒரு மரித்துப்போன உடலைவிட்டு இன்னொன்றுக்கு பறந்து சென்று, செத்துக் கிடக்கும் கோவேறு கழுதையின் அழுகிப்போன மாம்சத்தை வயிறு புடைக்க உண்டுவிட்டு, அங்கிருந்து பறந்து, செத்து அழுகிக்கிடக்கும் ஆட்டின் மாம்சத்தை வயிறு புடைக்க உண்டுவிட்டு, பிறகு அங்கிருந்து இன்னொன்றின் மாம்சத்தை தின்னப் போயிற்று. பல வகையான அழுகிப்போன உடல்கள் அதற்கு கிடைத்துவிட்டது. 157 எனவே இந்தக் காகம் இவ்வாறு அந்த அழுகிய உடல்கள் மேல் உட்கார்ந்து தின்று கரைந்து கொண்டேயிருந்தது. “ஓ எனக்குத்தானே குதூகலம் உண்டாயிருக்கிறது” என்று காகம் கரைந்து கொண்டே சென்றது.
86158 ஆனால் அவர்கள் இந்த சிறிய புறாவை வெளியே திறந்து விட்டபொழுது, அது வித்தியாசமான சுபாவத்தையுடையதாயிருந்தது. அந்த அழுகிய மாம்சத்தின் நாற்றத்தை “அதினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உம்ம்ம்!” ஏன்? புறாவுக்கு பித்தம் கிடையாது. பித்தம் இல்லாத ஒரே பறவை புறா தான். அவற்றையெல்லாம் அதினால் ஜீரணிக்க முடியாது. எனவே புறாவினால் செய்ய முடிந்த ஒரேக் காரியம், அது நேரே பேழைக்கு திரும்பிப் போய் கதவை தட்டினது. 159 நீங்கள் போக விரும்பும் இடமெங்கும் செல்லுங்கள். நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், இராஜ்யத்திற்குள் வாருங்கள் என்ற ஒரேக் காரியம் மாத்திரமேயாகும். அப்பொழுது நீங்கள் எங்கே போவீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களால் இனிமேல் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது, சகோதரனே! எனவே நீங்கள், “நான் வேறுபிரிக்கும் கோட்டை கடந்துவிட்டேன். நான் இந்த உலகத்தை என் பின்னே விட்டுவிட்டேன்” என்று கூறுவீர்கள். ஆம் ஐயா. அதுதான் நிச்சயம்.
87ஓ, அவர்கள் மேல்வீட்டறையில் கூடி வந்து யாவரும் அவர் நாமத்தினால் ஜெபித்துக் கொண்டிருந்தனர், அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர் ஊழியத்திற்கான வல்லமை வந்தது; அந்நாளில் அவர்களுக்கு அவர் என்ன செய்தாரோ அதையே உங்களுக்கும் அவர் செய்வார் நானும் அவர்கள் ஒருவன் என்று என்னால் கூறமுடியும் என்பதில் நான் மகிழ்ச்சியுறுகிறேன் (நீங்கள் மகிழவில்லையா?) அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் என கூறிட முடிந்ததால்…நான் மிகவும் மகிழ்ச்சியாயுள்ளேன், அல்லேலூயா; அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக்கூறிட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாயுள்ளேன். இன்றிரவு அதைக் குறித்து எத்தனைபேர் மகிழ்ச்சியாயிருக்கிறீர்கள். ஓ, என்னே! வாரும் என் சகோதரனே, இவ்வாசீர்வாதத்தை நாடிடுவீர், அது உன் இருதயத்தை பாவத்திலிருந்து சுத்திகரிக்கும், அது ஆனந்த மணியோசை உன்னில் ஒலித்திடச் செய்யும், அது உன்னுடைய ஆத்துமாவில் தொடர்ந்து சுடர்விடச் செய்யும்; ஓ, அது என் இருதயத்தினுள் கொழுந்து விட்டெரிகிறது, ஓ, அவர் நாமத்திற்கே மகிமை, நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததில்…நான் மிகவும் மகிழ்கிறேன். நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என நான் கூறிட முடிந்ததால்…நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன், அல்லேலூயா; அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூறிட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
88160 இப்பொழுது நாம் பாடலின் அடுத்த அடிகளை பாடுகையில் நீங்கள் ஒவ்வொரு இரவும் செய்கிறதுபோல, நீங்கள் உங்களை கைகளை மெதோடிஸ்ட்டுகள், பாப்டிஸ்ட்டுகள், ப்ரெஸ்பிடேரியன்கள் ஆகியவர்களுடன் குலுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒருவர் மெல்லும் பசையை (Chewing Gum) இன்னொருவர் வாங்கி சுவைத்துக் கொள்ளுகிற அளவுக்கு சிநேக பாவத்தைக் காட்டுங்கள். நம் அதைப் பாடுகையில், இப்பொழுது ஒருவருக்கொருவர் சிநேகிக்கத்தக்க உண்மையுள்ள, உண்மையான சிநேகத்தை காட்டுங்கள். அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் எனக்கூறிட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்கிறேன். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் எனக் கூறிட முடிந்தால் நான் மிகவும் மகிழ்கிறேன். இந்த ஜனங்கள் கல்லாதவராயினும் உலகக் கீர்த்தியில்லாதவராயினும், அவர்கள் யாவரும் தங்கள் பெந்தெகொஸ்தேயை பெற்றுக் கொண்டு, இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர், அவர்கள் இப்போது தூரத்திலும் எங்கும் அவரது வல்லமை இன்னமும் மாறாமல் உள்ளதென்று அறிவித்துக் கொண்டிருக்கின்றனர். நான் இதை கூறிட…முடிந்தால் நான் மிகவும் மகிழ்கிறேன். இப்பொழுது நாம் இதை உண்மையாகவே பாடுவோம்: ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் எனக் கூறிட முடிந்ததால்…நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன், அல்லேலூயா; அவர்களில் ஒருஅன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் எனக் கூறிட முடிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
89161 சிமிர்னாக்காரர்களைப்போல அவருக்காக இரத்த சாட்சியாக மரிக்க நீங்கள் விரும்புவீர்களா? மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற கட்டம் வந்தால், அதை எதிர்கொள்ளுவீர்களா? அல்லது பின்வாங்கிவிடுவீர்களா? ஆம், ஐயா, ஓ தேவனே, அது எனக்கு இன்பமாயிருக்கும். ஆம், ஐயா. அந்த விதமாகத்தான் இந்த பிரசங்க பீடத்திலிருந்தே, நான் போக விரும்புகிறேன். அது உண்மை. சமீபத்தில் ஜெர்மனி தேசத்தில் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஓ, என்னைக் கொல்லவிருந்தவர்கள், இரவிலும் இலக்கு தவறாது சுட வசதியுள்ள தொலை நோக்கிப் பொருந்திய துப்பாக்கியால் சுட்டுவிட இருந்தனர். ஜெர்மன் இராணுவ வீரர்கள் என்னைச் சுற்றிலும் காவலிருந்து அந்தவிதமாய் என்னை காத்தனர். அப்பொழுது நான் “இங்கே இந்த ஊழியக் களத்திலேயே என்னுடைய கர்த்தருக்காக நான் மரிப்பது என்ன ஒரு அற்புதமான காரியமாயிருக்கும்” என்று எண்ணினேன். ஓ, என்னே! அது என்ன ஒரு—ஒரு அற்புதமான காரியமாயிருக்கிறது.
90162 நான் ஒரு சிறிய பாடலை பாடட்டும். நான் பாடலாமா? ஒரு சிறிய பாடலுக்கு உங்களுக்கு—உங்களுக்கு நேரம் இருக்கிறதா? சரி. நான் அதை பாட முடிவதில்லை. அதை நான் பேசவதுபோலத் தான் பாடுகிறேன். ஓ, நான் எப்பொழுதும் பாட விரும்புவதுண்டு. வரும் நாட்களிலொன்றில், நீங்கள் பரதிசீலுள்ள உங்களுடைய இனிமையான அந்த பெரிய வீட்டிற்குப் போவீர்கள், போகும்போது, அந்த காடுகளுக்குள்ளாக நானும் ரஸ்ஸில் க்ரீச்சும் இந்த வேட்டைக்காக ஒன்றாக செல்வதுபோல அங்கிருப்போம். அங்கே தானே ஒரு சிறிய மர வீடு மூலையில் அமைந்திருக்கும். அதைப் பற்றி சகோதரர் நெவில் பாடுவதுண்டு. மகிமை வாழும் தேசத்தில்…அம்மூலையில் எனக்கு ஒரு மர வீட்டை கட்டுமே என்ற பாடலை அவர் பாடுவார். (அவர் என்னுடைய இடத்தைப் பற்றித்தான் பேசுகிறார் என்று நான் நினைக்கிறேன்) …வரும் நாட்களில் ஒன்றின் காலைப்பொழதில், நீங்கள் அந்த மகத்தான முகப்பு மண்டபத்தினுள் நடந்து செல்கையில் சுற்றும் முற்றும் இந்த விதமாய் பார்க்கையில், அங்குள்ள மூலையில் ஒருவர் இவ்வாறு பாடுவதை நீங்கள் கேட்பீர்கள்: ஆச்சரியமான கிருபை, எத்தனை இனிமை அதன் தொனி, அதுவே ஈனனான என்னை இரட்சித்தது! 163 நீங்களோ, “நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம், ஓ, வயோதிக சகோதரர் பிரான்ஹாம் இங்கு வந்துவிட்டார். அதோ அவர் அங்கே இருக்கிறார். அங்கே அவர் இப்பொழுது நின்று கொண்டு ஆச்சரியமான கிருபை என்று பாடுகிறதை நான் கேட்க முடிகிறது” என்று கூறுவீர்கள். 164 என்னை அங்கே கொண்டு போய்ச் சேர்ப்பது அந்த ஆச்சரியமான கிருபை தான். அது உண்மையே.
91ஆனால் இது இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது, ஆம், (அதனால் தான் நான் இதை பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன்) அது இரத்தம் சொட்டிக் கொண்டு இருக்கிறது, பரிசுத்த ஆவி சுவிசேஷம் இரத்தத்தால் சொட்டிக் கொண்டு இருக்கிறது. சத்தியத்திற்காய் மரித்த சீஷர்களின் இரத்தம், இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் தொடர்ந்து இரத்தம் சொட்டுகிறது. இந்த பரிசுத்த ஆவியின் திட்டத்திற்காக உயிர் நீத்த முதலாமானவர் யோவான் ஸ்நானன்தான், ஆனால் அவர் ஒரு மனிதனைப்போல் மரித்தார்: பின்பு கர்த்தராகிய இயேசு வந்தார், அவர்கள் அவரை சிலுவையிலறைந்தனர். ஆவியானவர் மனிதனை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்று அவர் போதித்தார். அங்கே பேதுருவும், பவுலும், திவ்விய வாசகனாகிய யோவானும் இருந்தனர் இந்த சுவிசேஷம் பிரகாசிக்கப்பதற்காக அவர்கள் தங்கள் உயிரை துறந்தனர்; பண்டைய தீர்க்கர்களின் இரத்தத்தோடு தங்கள் இரத்தத்தையும் இவர்கள் கலந்தனர், அதினால் உண்மையான தேவனுடைய வார்த்தையை உத்தமமாக உரைக்க முடிந்தது. பலிபீடத்திற்குக் கீழேயுள்ள ஆத்துமாக்கள் (இந்த இரத்த சாட்சிகள்), “எது வரைக்கிலும்?” என்று கதறினர். தீங்கிழைத்தவர்களைக் கர்த்தர் தண்டிப்பதற்கு இன்னும் எவ்வளவு காலம் உள்ளது; (கவனியுங்கள்! விரைவாக!) ஆனால் இன்னும் அநேகர் தங்கள் ஜீவனின் இரத்தத்தைக் கொடுக்க விருக்கின்றனர் இந்த் பரிசுத்த சுவிசேஷத்திற்காகவும், அதனுடைய சிவப்பு இரத்த வெள்ளத்திலுமே; அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, ஆம், அதில் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த பரிசுத்த ஆவி சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, அது சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம், இந்த பரிசுத்த ஆவி சுவிசேஷம் தொடர்ந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது.
92165 ஓ, அங்கே இருக்கப் … [ஒரு சகோதரி அந்நிய பாஷைகளில் பேசுகிறார், ஒரு சகோதரன் அதற்கு வியாக்கியானம் அளிக்கிறார். ஒரு சகோதர அந்நிய பாஷையில் பேசுகிறார். ஒரு சகோதரி அந்நிய பாஷைகளில் பேசுகிறார். ஒலி நாடாவில் காலி இடம். ஒரு சகோதரன் ஒரு வியாக்கியனத்தைத் தருகிறார்—ஆசி.] மகிமை ஆமென். ஆமென். ஊம். ஊம். மகிமை, ஆமென். ஆம் 166 ஆமென் “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” நான் அவரை நேசிக்கிறேன்… இப்பொழுது ஆராதியுங்கள், அவர் என்ன செய்வார் என்று பாருங்கள். நீங்கள் இதற்கு முன்னால் ஒரு போதும் அவரை நேசித்திருக்காவிடில், இப்பொழுது நீங்கள் அவரை நேசிக்க விரும்புகிறீர்களா? அப்படியாயின், நீங்கள் எழும்பி நின்று அவரை அடையாளம் கண்டு கொண்டு, உங்கள் இரட்சகராக அவரை ஏற்றுக் கொள்வீர்களா? …என்னை, (தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே) சம்பாதி… யாராவது எழும்பி நின்று, “இப்பொழுதே அவர் எனக்குத் தேவை, நான் அவரை நேசிக்க விரும்புகிறேன்” என்று கூற விரும்புவீர்களா? …இரட்சிப்பை கல்வாரியிலே… தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. பின்னால் இருக்கிற அந்த வாலிபமான பெண்மணியை தேவன் ஆசீர்வதிப்பாராக. நான் அவரை நேசிக்கிறேன்… ஆவியானவர் சபைக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன். அவர் என்னை முந்தி நேசித்தார் சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தினிலே.
93167 எங்கள் பரம பிதாவே, இங்கே நின்று கொண்டிருக்கிற இம்மூவரையும் நீர் பார்க்கிறீர். ஓ தேவனே, நித்தியமானவரே, நீர் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். அவர்களுடைய ஒவ்வொரு பாவத்திற்கும் மன்னிப்பையருளி, இரட்சிப்பையும், அவர்கள் ஜீவியத்தில் பரிசுத்த ஆவியையும் அருளும், அதினால் அவர்களுடைய ஜீவியத்தில் அவர்கள் இரண்டாம் மரணத்தினால் தொடப்படமாட்டார்கள். இன்றிரவில், அவர்கள் இங்கே நின்று கொண்டிருக்கையில், ஏதோ ஒன்று சமீபமாயிருக்கிறது என்பதை அவர்கள் தெளிவாக உணருகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார். தேவனுடைய ஆவியானவர் ஜனங்களுக்குள் இறங்கி, வேதவாகியங்களின்படியே அது கிரியை செய்து, மூன்று செய்திகள் உரைக்கப்பட்டன். ஓ தேவனே ஒவ்வொரு நபருக்கும் ஒரு செய்தி. 168 இப்பொழுதும், பிதாவே, நீர் இரக்கமாயிருக்க வேண்டுமென நாங்கள் ஜெபிக்கிறோம். அந்த விலையேறப்பெற்ற ஆவியானவர் எங்கள் மத்தியில் நிலைத்திருக்கட்டும். அதை நாங்கள் பயபக்தியோடு கனம் பண்ணுவோமாக. தேவனே அதை அளித்தருளும். இந்த ஆத்துமாக்களை உம்முடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும், பிதாவே. இவர் இந்த இராத்திரியில் கொடுக்கப்பட்ட செய்தியின் கனிகளாயிருக்கிறார்கள். அது எங்கள் மத்தியில் உரைக்கப்பட்ட பரிசுத்த ஆவியினிடத்திலிருந்து வந்த செய்தியாகும். பிதாவாகிய தேவனே, நீர் அவர்கள் ஜீவிய காலம் முழுவதிலும் அவர்களோடு கூட இருக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். கிறிஸ்துவின் இரத்தத்தாலும், கிருபையாலும் இரட்சிக்கப்பட்ட அவர்களை அங்கே அந்த “முடிவில்லாத உலகில்” நாங்கள் சந்திக்க உதவி செய்யும். நாங்கள் அவர்களை உம்மிடம் கொடுக்கிறோம், பிதாவே, அவர்களை உமது பரிசுத்த ஆவியினாலே நிரப்பும். நாங்கள் இயேசுவின் நாமத்தினால் இதை கேட்கிறோம். ஆமென்.
94169 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரர்களே. அந்த ஜனங்களுக்கு அருகாமையில் நின்று கொண்டிருக்கிற கிறிஸ்தவர்களே, அவர்கள் அமரும்போது, அவர்களோடு கை துலுக்கி, அவர்களுக்கு தேவனுடைய வாழ்த்துதலை அவர்களுக்குக் கூறுங்கள். 170 பரிசுத்த ஆவி எவ்வளவாய் ஒழுங்குள்ளதாய் இருக்கிறது என்றும், அது எப்படி சரியானபடி, ஆராதனையின் முடிவில், கிரியை செய்கிறது என்பதையும் பார்கிறீர்களா? “யாராவது அந்நிய பாஷையில் பேசுகிறதுண்டானால் அது இரண்டு பேர் மட்டில் அல்லது மிஞ்சினால் மூன்று பேர் மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய் பேசவும்” என்று வேதம் கூறியுள்ளது. நீங்கள் பாருங்கள். நான் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கும் போது அல்ல, அது முடிந்த பிறகே பேச வேண்டும். அவ்விதமாகத்தான் அக்காரியம் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் உண்மையான பயபக்தியோடு ஆவியானவர் என்ன சொல்லுகிறாரோ அதற்கு செவி கொடுக்க வேண்டும். அப்பொழுது என்ன நடக்கிறது? பாவிகள் உணர்த்துவிக்கப்பிட்டு, மனந்திரும்ப எழும்புகிறார்கள். ஓ, எண்ணிப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் கூட, வார்த்தை வெளிப்பட்டுக் கொண்டிருக்கையில், அமைதியாய் இருக்கிறார். உரிய நேரத்தில் வந்து, பிரத்தியட்சமாகிறார். 171 அந்நிய பாஷைகளில் பேசுகிற இங்கிருக்கிற ஜனங்களில் சிலரை நான் அறிவேன். இன்று அந்நிய பாஷைகளில் பேசிய மூவரையுமே நான் அறிவேன். பாஷைகளுக்கு வியாக்கியானம் கொடுத்தவர்களையும் நான்—நான் அறிவேன்; அவர்கள் வாழ்க்கை தேவனுக்கு முன்பாக பாவமற்று இருக்கிறதை நான் அறிவேன். இங்கே சகோதரன் நெவில் அவர்கள், நம்முடைய மேய்ப்பன், ஒரு மெதோடிஸ்டு ஊழியக்காரராயிருந்தார். இங்கே அமர்ந்திருந்த மெதோடிஸ்டு சபை ஊழியக்காரராயிருந்த சகோதரர் ஜீனியர் ஜாக்சன் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார். மற்றொரு மெத்தோடிஸ்டு பிரசங்கியாரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார். அது உண்மை, இவர்களுக்கு அந்நிய பாஷைகளில் பேசுதலும், பாஷைகளின் வியாக்கியானித்தலும் உண்டு.
95172 நாம் எவ்வாறு சபையைப் பெற்றுள்ளோம் என்றும், ஒவ்வொருவரும் எப்படி பயபக்தியாயிருக்கிறோம் என்பதை நீங்கள் கவனியுங்கள்; தேவன் பேசுகிறார். அவர் எவ்வாறு வேதத்தின்படியே சரியாக பேசுகிறார் என்பதை நீங்கள் பாருங்கள். செய்தியானது சரியாக மக்களை போய் எட்டவில்லையென்றால், அவர் அதை மீண்டும் பேசுகிறார். ஆனால் மூன்று தடவைகளுக்கு மேல் பேசுவதில்லை. பாருங்கள், இது வேதவாக்கியங்களின்படி உள்ளதாகும். பாருங்கள் அவர் அந்த செய்தியைக் கொடுப்பார். ஆனால் பிரசங்கத்தினூடே குழப்பிவிடுவதாக அது இருக்காது. “ஏனெனில், தீர்க்கதரிசிகளின் ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறது.” ஒவ்வொருவரும் அமைதியாக கேட்கவும்… 173 இப்பொழுது அந்தவிதமாகத்தான் சபையானது ஒழுங்குக்குள் இருக்க வேண்டும். வெளியில் இருந்து இங்கு வந்திருக்கிற ஜனங்களே, நான் உங்களிடம் கூறுவது என்னவெனில், இதைப் பற்றி நான் கூறுவதை கேட்டிருக்கிறீர்கள், அந்த விதமாகத்தான் அது இருக்க வேண்டும். பாருங்கள், செய்தியானது புறப்பட்டுப் போகிறது. அதற்குரிய பலங்களைப் பார்க்கிறீர்களா? அது அப்பொழுதே சம்பவிக்கிறது. பகுத்தறிதல் அல்லது வேறு ஏதோ ஆவி அதைப் போல ஏதாவது சம்பவிக்கிறது. அவர் அற்புதமானவரல்லவா? ஓ, இங்கே பரிசுத்த பவுலினால் ஏற்படுத்தப்பட்ட அதே காரியம் இன்னும் இங்கே ஒழிந்து போகவில்லை, அது அப்படியே இங்கேயும் தொடருகிறது என்பதை அறிந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். மாறாமல் அப்படியே இருக்கிறது. ஓ, நான் அவர்களில் ஒருவன் என்று கூறிக் கொள்ள முடிந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் அவ்வாறில்லையா? சரி.
96174 நாளை இரவு ஏழு மணிக்கு நாம் லவோதிக்கேயாவின் காலத்தை எடுத்துக் கொள்ளப் போகிறோம், அது விவாகம் நடந்த காலம். உங்களால் முடிந்தளவு நீங்கள் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இன்றிரவு சற்று தாமதாக வந்தேன். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் பேசுவதினால். ஆனால் இன்றிரவில் முந்தியே முடிந்துவிட்டது. ஒன்பது இருபது மணிக்கெல்லாம் முடிந்துவிட்டது. வழக்கமாக நான் இங்கே பத்து அல்லது பதினொரு மணி வரைக்கிலும் இங்கிருப்பதுண்டு. ஆகவே இன்றிரவு சற்று முன் கூட்டியே முடித்துள்ளோம். கர்த்தருடைய செய்தியை நீங்கள் கேட்டு மகிழ்ந்தீர்களா? உண்மையாகவே நீங்கள் கேட்டு மகிழ்ந்தீர்களா? அது உங்கள் ஆத்துமாவைப் போஷிக்கிறதாயிருக்கிறது. 175 என் பிள்ளைகளே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். சில வேளைகளில் ஆவியானவர் என்னை பற்றிக் கொள்ளும்போது, இரு பக்கங்களிலுமே அது வெட்டுகிறது …அவ்விதமாகத்தான் வார்த்தையானது இருக்கிறது. அது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாய் இருக்கிறது. அது உள்ளும் புறமும், வருகையிலும், போகையிலும் ஒவ்வொரு வழியிலும் வெட்டுகிறது. ஆனால் அது நம்மை விருத்தசேதனம் செய்கிறது. விருத்தச்சேதனம் மிகையான மாம்சத்தை, நாம் பெற்றிருக்க வேண்டியிராத காரியங்களை வெட்டியெடுத்துவிடுகிறது. 176 நீங்கள் இன்று பாஷைகளின் வியாக்கியானத்தில் ஆவியானவர் கூறியதை கேட்டீர்களா? அதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதில், “அந்த மதியீனத்தை நிறுத்துங்கள்” என்று கூறப்பட்டது. அது நம்மை விருத்தசேதனம் செய்கிறது. உண்மையாயிருங்கள்! நாம் யாவரும் பாதையைவிட்டு தவறிப் போய்விட்டோம். ஆனால் தேவன் எவ்வாறு நம்மை சரியான பாதையில் கொண்டுவர வேண்டுமென்பதை அறிந்திருக்கிறார். அவர் அறிந்திருக்கவில்லையா? அவர் நிச்சயமாகவே அவ்வாறு செய்கிறார். நான் அதற்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நீங்கள் அவ்வாறில்லையா?
97177 நீங்கள் தான் இங்கே இசைப்பேழையை இசைக்கிறவரா? நான் பார்க்கவில்லை…டெடி இருக்கிறாரா…? அவரை நான் எங்கும் பார்க்க முடியவில்லை. இது இவரா…? சரி, சகோதரியே, நீங்கள் விரும்பினால் வாசியுங்கள், சகோதரன் டால்ட்டன் அவர்களே, அது உங்களுடைய மகளா? மருமகள். சரி. நல்ல அருமையான இளம்பெண்மணி, நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சரி. நம்முடைய ஆராதனைக்கு முடிவாக நாம் பாடும் அழகான நல்ல அந்தப் பாடல் என்ன? முடிக்கும் முன்னர் ஒரு பாடலைப் பாட இப்பொழுது முயற்சிப்போம். சகோதரியே, இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் என்ற பாடலைப் பாடும் முன் ஒரு நிமிடம் சற்று பொறுங்கள். 178 குடும்ப ஜெபத்தை மறக்க வேண்டாம் என்ற அந்தப் பாடலை எத்தனை பேர் அறிவீர்கள்? எத்தனை பேர்கள் உங்களுடைய குடும்பத்தில் குடும்பமாக ஜெபிக்கிறீர்கள்? ஓ, அது நல்லது. இப்பொழுது பழங்காலத்தில் பாடப்படும் அதைப் பாட ஒரு முறை நாம் முயற்சிப்போமாக: குடும்ப ஜெபத்தை மறக்க வேண்டாம், இயேசு அங்கே உங்களை சந்திக்க விரும்புகிறார்; அவர் உங்களுக்கான எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார், ஓ, குடும்ப ஜெபத்தை மறக்க வேண்டாம். நீங்கள் அதை விரும்புகிறீர்களா? நாம் மீண்டும் அதை முயற்சிப்போமாக. குடும்ப ஜெபத்தை மறக்க வேண்டாம், இயேசு உங்களை அங்கே சந்திக்க விரும்புகிறார்; (அவரை சந்தித்து பேச ஒரு நேரம் உங்களுக்கு இப்பொழுது கிடைத்துவிட்டது) அவர் உங்களுக்கான எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார், ஓ, உங்களுடைய குடும்ப ஜெபத்தை மறக்க வேண்டாம்.
98179 [ஒரு சகோதரி, “சகோதரர் பிரான்ஹாமே, நான் ஒன்றைக் கூறலாமா?” என்று கேட்கிறார்.—ஆசி.] நிச்சயம் கூறலாம், சகோதரி. [அச்சகோதரி பேசத் துவங்குகிறார். ஒலி நாடாவில் காலியிடம்] சகோதரி நாஷ், அது மிகவும் அருமையானது. ஓ, நீங்கள் அப்படியே நம்பினால் நலமாயிருக்கும், நாம் சந்தேகமின்றி நம்புவோமானல், அவர் நிச்சயம் விடுவிப்பார்; உங்கள் பாரத்தை கர்த்தரிடம் கொண்டு சென்று அங்கே அவைகளை விட்டுவிடுங்கள். அங்கேயே அவைகளை விட்டுவிடுங்கள், அங்கேயே அவைகளை விட்டு விடுங்கள், உங்கள் பாரத்தை கர்த்தரண்டை கொண்டு சென்று அவைகளை அங்கேயே விட்டுவிடுங்கள்; நாம் சந்தேகமின்றி நம்புவோமானால் அவர் நிச்சயம் விடுவிப்பார்; எனவே உங்கள் பாரத்தையெல்லாம் கர்த்தரிடம் எடுத்துச் சென்று அவைகளை அங்கே விட்டுவிடுங்கள்,
99180 நீங்கள் இந்த பழங்காலத்து ஞானப் பாட்டுகளை விரும்பவில்லையா? ஓ, நான்…அப்பாடல்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு தங்கள் பேனாக்களை எடுத்து எழுதியுள்ளார்கள் என்பதை அவைகளைப் படித்துப் பார்க்கையில் தெரிகிறது. 181 பேஃனி க்ராஸ்பி என்ற அந்த குருடான பெண்மணியையோ, அந்நாட்களில் இருந்த உலகப் பிரகாரமான மக்கள் அணுகி, அவளை உலகப்பிரகாரமான பாடல்களை தங்களுக்கு எழுதும்படி செய்ய முயன்றனர். “நீ ஒரு ஒரு ஐசுவரியமான பெண்ணாகலாம்” என்று கூறினார்கள். அந்த பெண்மணி, “நான் என் வாழ்க்கையையை கிறிஸ்துவுக்கென அர்ப்பணித்துள்ளேன். என்னுடைய எல்லா திறமைகளையும் அவருக்கே அர்ப்பணித்துள்ளேன்” என்றாள். உங்களுக்குத் தெரியுமா? அப்பெண்மணி குருடாயிருந்தாள். “என்னுடைய ஜீவியம், மற்றும் என்னுடையதெல்லாம் கிறிஸ்துவுக்கே சொந்தம்” என்றாள். அவள் கூறினாள்… 182 அந்த உலகப் பிரகாரமான மக்கள் அவளுக்கு அளித்த அந்த வாய்ப்பினை அவள் தள்ளிவிட்டபடியினால், அவளிடம் கடுகடுப்பாக பேசினர். அவள் தன்னுடைய சேஷ்ட புத்திரபாகத்தை, திரு.ப்ரெஸ்லி இன்னும் மற்றவர்களைப் போல் விற்றுப் போடவில்லை. ஆனால் அவள்—அவள் தன் உத்தமத்தைக் காத்துக் கொண்டாள். எனவே அவள்—அவள்…அவர்கள்—அவர்கள் அவளை விட்டுவிட்டனர். ஆனாலும் அவர்கள் அவளிடம், “நீ பரலோகத்திற்குப் போகும்போது, இங்கு இருக்கிறது போலவே இருக்கும்படியான ஒரு இடமாக அது இருந்தால், அப்பொழுது நீ இங்கிருப்பது போலவே குருடாகவே இருப்பாய்” என்று கூறி, அப்பொழுது “நீ குருடாயிருந்தால் , நீ எப்படி அவரை அறிந்து கொள்வாய்?” என்று கேட்டனர். அதற்கு அவளோ, “நான் அவரை அறிவேன். நான் அவரை அறிவேன்” என்றாள். அவர்களோ, “நீ அங்கும் குருடாகவே இருந்துவிட்டால், நீ அங்கும் குருடாகவே இருந்து விட்டால்?” என்று கேட்டனர். அதற்கு அவள், “அவருடைய கரத்திலுள்ள ஆணி கடாவப்பட்டதின் காயத் தழும்புகளை தடவிப் பார்த்து அறிந்து கொள்வேன்” என்றாள். இவ்வாறு கூறிவிட்டு, அவர்களை விட்டு நடந்து சென்று, இதைப் பாடினாள்: அவரை நான் அறிந்திடுவேன், அவரை நான் அறிந்திடுவேன், மீட்கப்பட்டு அவர் பக்கத்தில் நான் நிற்பேன்; ஆணிகடாவப்பட்ட அவருடைய கைகளில் உள்ள காயத் தழும்புகளினால் நான் அவரை அறிவேன், நான் அவரை அறிவேன்.
100183 ஓ என்னுடைய இயேசுவே, எனக்காக அப்பால், அந்த ஐந்து விலையேறப் பெற்ற இரத்தம் கசிந்து கொண்டிருக்கிற காயங்களைப் பார்க்கையில், நான் எவ்வாறு விலையேறப் பெற்ற அவரை மறுதலிக்க முடியும்? நான் மரிக்கட்டும், நான் போகட்டும், …எந்த வழியிலாயினும் நான் செல்லட்டும், ஆனால் நான் அங்கே எனக்காக மரித்து இரத்தம் கசிந்த நிலையில் இருக்கும் விலையேறப்பெற்ற அவரை ஒருபோதும் மறுதலியாமலிருக்கட்டும். ஆம். 184 நீங்கள் இன்றிரவு இங்கிருந்து புறப்பட்டுச் செல்லுகையில், இயேசுவின் நாமத்தை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள் என்று நீங்கள் பாட வேண்டும். சரி, சகோதரியே. நாம் யாவரும் இப்பொழுது எழுந்து நிற்போமாக. இயேசுவின் நாமத்தை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள், துயரமும், துக்கமுமான பிள்ளையே; அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும், நீர் செல்லுமிடமெங்கும் அதை எடுத்துச் செல்லுங்கள். விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்), ஓ எவ்வளவு இனிமை! (ஓ எவ்வளவு இனிமை) பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமாமே; விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்), ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியுமாமே. இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், மெதுவாக பாடுவோம்: இயேசுவின் நாமத்தில் பணிந்து, அவரது பாதத்தில் முகங்குப்புற விழுந்து வணங்கி, நம்முடைய யாத்திரை முடிவுறும்போது, பரலோகில் இராஜாதி இராஜாவான அவருக்கு நாம் முடிசூட்டுவோம். விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமாமே; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமை! (எவ்வளவு இனிமையானது!) பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமாமே.