பெர்கமு சபையின் காலம்

60-1207

சர, எனனப பறததமடடல அத அணதத வடவத நலலத. சர. 2 கரததரடய ஆரதனயல மணடம இனறரவ இஙக இரபதறகக நம மகவம மகழசசயயரககறம. நறறரவல நன உணமயகவ ஆயரவரட அரசடச வநத வடடத பல உணரநதன. நம இபபழத சல களவகளப பறறளளம, இஙக சல களவகள உளளன எனற நன நமபகறன. அவகள எனனடய சடடப பயல வததக களவன. எனவநனநன இத இத ஜப உறமல என நனககறனஜபபபதறகக உளளன. நமஇககளவகளக

பெர்கமு சபையின் காலம்

60-1207ஜெபர்ஸன்வில் இந்தி1601960-12-07

பெர்கமு சபையின் காலம்

60-1207ஜெபர்ஸன்வில் இந்தி1601960-12-07

1 சரி, என்னைப் பொறுத்தமட்டில் அதை அணைத்து விடுவது நல்லது. சரி. 2 கர்த்தருடைய ஆராதனையில் மீண்டும் இன்றிரவு இங்கே இருபதற்காக நாம் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். நேற்றிரவில் நான் உண்மையாகவே ஆயிரவருட அரசாட்சி வந்து விட்டது போல உணர்ந்தேன். நாம் இப்பொழுது சில கேள்விகளைப் பெற்றுள்ளோம், இங்கே சில கேள்விகள் உள்ளன என்று நான் நம்புகிறேன். அவைகளை என்னுடைய சட்டைப் பையில் வைத்துக் கொள்வேன். எனவே…நான்—நான் இதோ இது ஜெப உறுமால் என நினைக்கிறேன்…ஜெபிப்பதற்காக உள்ளன. நாம்…இக்கேள்விகளுக்கு என்னால்—என்னால் முடிந்த அளவுக்கு நான் பதில் அளிக்க முயற்சிப்பேன்.

23 நீங்கள் டாக் அவர்களிடம், என் முகத்தில் கண் கூசும்படி அடித்துக் கொண்டிருக்கிற அவ்விளக்கை “அணைத்துவிடும்படி” நான் இவ்விதமாக கூறினால் நலமாயிருக்கும். மேடை பிரகாச விளக்குகள் என்மேல் அடித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நான்—நான் இந்த மேடை பிரகாச விளக்கில் காணப்படும் பிரசங்கிகளில் ஒருவன் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அது இல்லாமலிருப்பதே நல்லது என்று நான் கருதுகிறேன். கடந்த… 4 நான் தான் அதைச் செய்ய சொன்னேன் டாக் அவர்களே. நான்—நான் அதைப்பற்றி என் மனதை மாற்றிக் கொண்டு விட்டேன். நீங்கள் பாருங்கள். ஓ, ஓ, நீங்கள் என்ன …?… நீங்கள் அந்தப் பக்கமாக அதைத் திருப்பி விட்டு, அதில் வேலை செய்ய வேண்டியுள்ளதா? [சகோதரன் பிரான்ஹாம் அவர்கள் தன் சகோதரன் டாக் அவர்களோடு உரையாடுகிறார்.—ஆசி] ஓ, நல்லது, அதை, அப்படியே விட்டுவிடுங்கள். ஆம். நல்லது, அதை அப்படியே விட்டுவிடுங்கள். ஓ இல்லை! அதை அப்படியே இப்பொழுது விட்டுவிடாதீர்கள். ஆம். இப்பொழுது அவ்விதமாக இருப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன். சில சமயத்தில்…நேராக நம் முகத்தில் கூசுகிற அளவுக்கு மிகவும் பிரகாசமான விளக்கு அடித்துக் கொண்டிருப்பதை நான் விரும்புவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது என் முகத்தில் அடிக்காமல், திருப்பி விடப்பட்டதால், என்னால் சரியாக பார்க்க முடிகிறது. ஐயா, நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அது அவருக்கு அதிக பணியை ஏற்படுத்திவிடும்.

35 உங்களுக்குத் தெரியும், இந்த சபைக் காலங்களைப் பற்றி படிப்பதில் நீங்கள் முடித்துவிட முடியாத அளவில் அவை உள்ளன. இன்றைக்கு நான் இந்த ஒன்றின் பேரில், படித்துக் கொண்டிருக்கையில், என் மனைவியிடம், “ஓ, என்னே! இதிலிருந்து ஐம்பது பிரசங்கங்கள் நான்—நான் செய்கிற அளவுக்கு இதில் பாடப் பொருள்கள் அடங்கியிருக்கின்றன” என்று நான் கூறினேன். பாருங்கள்? அவைகள் அப்படியே…எனவே அவைகளில் உள்ள எல்லாவற்றையும் கூற வழியில்லாதபடியால், மிக முக்கியமான சாரமான விஷயங்களைப் பற்றி மட்டும் தொட்டு விட்டு பின்னால் இதை புத்தக வடிவில் தயாரிக்கையில் நாங்கள் இன்னும் கூடுதல் விஷயங்களை அதில் சேர்க்க முயற்சிப்போம்.

46 சகோதரன் வெஸ்ட் அவர்களே, நான் உங்களை இங்கே காணவில்லை, சகோதரனே, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? நான் ஒரு நல்ல செய்தியைக் கேள்விப்பட்டேன்; அதாவது சகோதரன் டால்டன் அவர்களின் குடும்பத்தில் கடைசி மகள் கர்த்தருக்குள் வந்து விட்டதாக அறிந்தேன். அப்பெண் பத்தாவதானவள் தானே. ஒன்பது. புதிய ஊழியத்தின் கீழாக அவரிடம், கர்த்தர்…அவரது குடும்பம் இரட்சிக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். நான் அங்கு நின்று கொண்டு அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரியாமலிருக்கையில் அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், “உன் குடும்பத்தை நான் உனக்குத் தருகிறேன்” என்று கூறினார். பாருங்கள்? உ—ஊ. அவ்வாறே, அவர்கள் ஒவ்வொருவரும் வந்து விட்டனர். கர்த்தர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைப் பார்த்தீர்களா? பாருங்கள், அவருடைய வார்த்தைகள் பரிபூரணமாக இருக்கின்றன. அவைகள் ஒருபோதும், ஒருபோதும் தவறுவதில்லை. நல்லது ஒரு தீர்க்கதரிசின பாகத்தை நாம் எவ்வளவு காலம் முடியுமோ…அவ்வளவு காலத்திற்கு படித்துக் கொண்டிருப்போம். அந்த சமயத்தில் நாம் தெய்வீக சுகமளித்தல் ஆராதனையை நடத்த விரும்பவில்லை.

57 இன்றிரவில் நாம் இந்த பெரிய இரண்டாவது …இல்லை மூன்றாவது சபைக் காலத்தைப் பற்றி படிக்கையில், நான் அதைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகளை எடுத்து பேசப்போகிறேன். அதை நீங்கள் கேட்டு களி கூருகிறீர்களா? அது அற்புதமாய் உள்ளது. நான் உண்மையிலேயே எண்ணுவது என்னவெனில், கர்த்தராகிய இயேசு எவ்வளவாய் நம்மை ஆசீர்வதித்து, இந்த காரியங்களையெல்லாம் நமக்கு அளித்துள்ளாரே, அது எவ்வளவு அற்புதமாயுள்ளது என்பதேயாகும். எதிர்காலத்தில் என்ன சம்பவிக்கப் போகிறதாயுள்ளது என்பதை நாம் முன் கூட்டியே அறிந்து கொள்ளும்படி செய்ததற்காக நம்முடைய முழு இருதயத்தோடு நாம் போற்றுகிறோம். அவர் துவக்கம் முதல் முடிவு வரை அறிந்திருக்கிறார், எனவே நாம் அதற்காக மிகவும் சந்தோஷமாயிருக்கிறோம். ஆகவே, கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும்படியாக நாம் அவரையே நம்பிக் கொண்டிருக்கிறோம்.

68 நேற்றிரவில், (ஆராதனைக்குப் பிறகு,) பரிசுத்த ஆவியானவர் நமக்கு மூன்று செய்திகளையும், மூன்று ஆத்துமாக்களையும் கொடுத்தை நீங்கள் கவனித்தீர்களா? சரியாக அவ்வாறே உள்ளது. ஆவியானவர் பேசிக் கொண்டிருந்தபோது பிறகு கடைசி வியாக்கியானத்தில் திரும்பவும் வந்து, “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை…” என்று வார்த்தைகளை திரும்பவும் உரைத்தார். ஓ, “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்” அதாவது…ஆவியானவர் சபையிலுள்ள வரங்களின் மூலம் அதையே கூறுகிறார். ஓ, சபையானது அதை பயபக்தியுடன் இப்பொழுது பற்றிக் கொள்ளட்டும். பாருங்கள், அப்படியே அதை பயபக்தியோடு காத்துக் கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்; சாத்தான் தொடர்ந்து வந்து, உங்களை அதினுடைய தீவிரமான ஓரங்களுக்கு விரட்டிவிடுவான். ஒவ்வொரு முறையும் அது பரிசுத்த ஆவியானவர்தானா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அது பரிசுத்த ஆவியானவராக இருந்தால், அப்பொழுது அவர் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அந்தக் காரியத்தைப் பற்றி நேரடியாகவே பேசுவார். அது சபையின் பக்திவிருத்திக்காக கொடுக்கப்பட்டுள்ளது. புரிகிறதா? இவைகளில் நீங்கள் பயபக்தியோடு இருப்பீர்களானால், தேவன் இன்னும் கூடுதலாக உங்களுக்குக் கொடுப்பார். பாருங்கள், இன்னும் கூடுதலாக தேவனிடமிருந்து பெற்றுக் கொண்டே போங்கள். மேலும்…

79 இன்று சிலர் தொலைபேசியில் அழைத்து சுகமளிக்கும் ஆராதனைகள் இனி எப்பொழுது நடத்தப்படும் என்று கேட்டார்கள். இந்த ஆராதனைகளுக்குப் பிறகு அவை முடிந்த உடனேயே, அடுத்த ஞாயிறு மாலையில், நான் சில நாட்களுக்கு வெளியே சென்று தொண்டைக்காக கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வேன், கர்த்தருக்கு சித்தமானால், வரும் ஞாயிறு, வருகின்ற ஞாயிறு காலையில் நாங்கள் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை நடத்துவோம். அது…என்ன தேதியில் வரும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் வருகின்ற வாரம்… 18-ம் தேதி, ஞாயிறு காலையில்…அது சரிதானே. சகோதரன் நெவில் அவர்களே? [சகோதரன் நெவில் அவர்கள் “ஆம், ஐயா” என்கிறார்.—ஆசி.] 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில், வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்தல் இருக்கும். 10 இங்கேயுள்ள நமது மேய்ப்பன் அவர்களைப் பற்றி நான் அதிகம் கூறுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் இல்லை. ஆனால் நீங்கள் யாவரும் அவரைச் சந்திக்கும்படி விரும்புகிறேன். நிச்சயமாகவே அவர் கிறிஸ்துவுக்குள்ளாக மிகவும் உண்மையான ஒரு சகோதரராவார். மெதோடிஸ்டு பின்னணியில் பரிசுத்தத்தை கடைப்பிடிக்கிற குடும்பத்தில் வளர்த்து ஆளாக்கப்பட்டவர். அவ்விதமான ஒரு சகோதரரை நாம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் …இங்கிருக்கிற நாம் யாவருமே ஆர்மன் நெவில் அவர்களை நன் கறிவோம். அவருடைய வாழ்க்கை குற்றஞ்சாட்டப்படாததாக இருக்கிறது. நான் இவ்வாறு அவரைக் குறித்து கூறுவது அவருக்கு பிடிக்காது. ஆனால், அவர் உலகை விட்டு போனபிறகு, அவருக்கு ஒரு மலர்வளையத்தை சாற்றுகிறதைவிட, அவர் இங்கு இருக்கையில் அவருக்கு இப்பொழுதே ஒரு ரோஜா மொட்டையாவது அளிப்பதையே நான் விரும்புவேன். புரிகிறதா? இப்பொழுதே அதற்குரிய வேளையாயுள்ளது.

811 ஓரிரவில் நான் சபைக்கட்டிடத்தை விட்டு புறப்பட்டு வெளியே சென்று கொண்டிருக்கையில், ஒருவர், “ஓ சகோதரர் பிரான்ஹாம் அவர்களே, நான் நிச்சயமாக அப்பிரசங்கத்தை மெச்சுகிறேன்” என்றார். நான் அதற்கு, “உங்களுக்கு நன்றி” என்று பதிலளித்தேன். 12 அப்பொழுது வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு ஊழியக்காரர் (இதே கூடாரத்தில் அநேக ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்தது) “நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. எவரும் என்னிடம் அவ்விதமாகக் கூறுவதை நான் விரும்புவதில்லை.” என்று கூறி, பாருங்கள்? “எல்லா மகிமையுமே தேவனுக்குப் போவதையே நான் விரும்புகிறேன்” என்றார். அப்பொழுது நான், “நல்லது, அது அவருக்குத்தான் போகிறது” என்றேன். புரிகிறதா? மேலும் நான், “நான், நான் அதை விரும்புகிறேன். நான் உண்மையிலேயே அதை விரும்புகிறேன். நான் உண்மையாயிருக்க வேண்டும்” என்றேன். அவர், “நல்லது, மக்கள் என்னைக் குறித்து அவ்வாறு கூறுவதை நான் விரும்பவில்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக” என்றார். அப்பொழுது நான், “இந்த விஷயத்தில் எனக்கும் உங்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. நான் இந்த விஷயத்தில் அதைக் குறித்து உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அவ்வாறு இல்லை” என்று கூறினேன். 13 எவரும் அதை விரும்புவர்…ஒரு சிறு குழந்தையை நீங்கள் எடுத்துக் கொண்டால், அதை நீங்கள், கொஞ்சம் மெச்சினால், அப்பொழுது அது நன்றாக செயல்படும். பாருங்கள்? அது உண்மை. புரிகிறதா? தேவனும் எப்பொழுதும், தன் பிள்ளை சரியானதைச் செய்யும் பொழுது அதை அவர்களிடம் சொல்லவே விரும்புகிறார். தன் பிள்ளை தவறிழைக்கும் போது தேவன் அதைச் சுட்டிக் காட்டுகையில், அவர்கள் சரியானதைச் செய்யும் பொழுது, ஏன் அதை அவர்களுக்குச் சொல்லக் கூடாது? புரிகிறதா?

914 எனவே நிச்சயமாகவே நான் இங்கிருக்கிற இந்தக் கூடாரத்திலுள்ள மந்தையின் மேல் சகோதரன் நெவில் அவர்கள் மேய்ப்பராக இருப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன். அவர் மெதோடிஸ்டு பின்னணியிலிருந்து வந்தவர்…தவறான இடத்தில் புசிக்க விரும்பினவர். எனவே…ஆனால் மகத்தான பரிசுத்த ஆவியினூடாக அதைக் கண்டு பிடித்தார். இப்பொழுது இவ்வரங்களைப் பெற்று இயங்குகிறார். எவ்வளவு சரளமாக பாஷைகள் அவர் பேச பரிசுத்த ஆவியானவர் அவரை உபயோகப்படுத்துகிறார் என்பதை கவனியுங்கள். அப்பொழுது அவர் தன் சொந்த சிந்தையை உபயோகிப்பதேயில்லை. அதேவிதமான சத்தத்தோடு வியாக்கியானம் பண்ணுதல், பிழையின்றி, சரியான ஏற்ற இறக்கத்தோடு பெயர் சொற்கள் மற்றும் பிரதிபெயர்கள் முதலியன போல அதற்கு மீண்டும் பதில் வருவதை கவனியுங்கள். 15 இந்த எளிய சகோதரர், நான் நினைக்கிறேன்…ஜூனியர் ஜாக்சன் அவர்கள். நல்லது, ஜூனி உங்களை நான் புகழாமல் அமைதியாயிருப்பேன். ஜூனி ஜாக்சன் அவர்களுக்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். அச்சகோதரர் நிச்சயமாகவே கர்த்தரிடத்திலிருந்து ஒரு பெரிய வரத்தைப் பெற்றிருக்கிறார்.

1016 எப்பொழுதும் தாழ்மையாகவே இருங்கள். இப்பொழுது, சபையில் ஒவ்வொருவருக்குமே செய்ய வேண்டிய பணி ஏதாவது இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அப்பணியை வேறு ஏதாவது ஒன்றிற்காக தள்ளி வைத்து விடாதீர்கள். உங்களுக்கு இருக்கும் ஊழியம் சபையின் ஏனையோருக்கிருக்கிற ஊழியத்தோடு சரியாக இணைந்து செல்லட்டும். தேவனுக்காகவே அனைத்து காரியங்களும் உள்ளன. எல்லோருமே அந்நிய பாஷைகளில் பேசுகிறார்களா? பாருங்கள்? பாருங்கள்? எல்லோருமே வியாக்கியானம் செய்கிறார்களா? 17 ஏதாகிலும் நன்மையானதையே செய்ய முயலுங்கள். எப்பொழுதும் நல்லவர்களாகவே இருங்கள். பிறருக்கு கெடுதல் செய்யும் எண்ணம் கொண்டிருக்காதீர்கள். காழ்ப்பு கொள்ளாதிருங்கள். எந்தவித கசப்புக்கும் இடங்கொடாதிருங்கள். ஒருவர் உங்களைக் குறித்து எவ்வளவு கெட்டதாக பேசினாலும் சரி, அவர் எவ்வளவு கெட்டவராயிருந்தாலும் சரி, அவருக்கெதிராக நீங்கள் ஒரு போதும் உங்கள் உள்ளத்தில் தீமையாக எண்ணாதீர்கள். ஏனெனில், அவ்வாறு நீங்கள் எண்ணினால் பிசாசு உள்ளே புகுந்து ஏதாவது கிரியை செய்துவிடுவான். தெய்வீக அன்பினாலும் அறிக்கையினாலும் அதை மூடிப்போடுங்கள். ஒப்புரவாகுதலை நாடி, உங்களுக்கு தீங்கு செய்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். இயேசு, “உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் நீங்கள் விசேஷித்து செய்கிறது என்ன? ஆயக்காரர்களும் அப்படியே செய்கிறார்களே,” என்று கூறினார். பார்த்தீர்களா? பாவிகளும் மற்ற யாவருமே, தங்களிடம் நல்லபடியாக நடந்து கொள்கிறவர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்ள முடியும். ஆனால் உங்களுக்கு நன்மையே செய்யாதவர்களுக்கு நீங்கள் நன்மை செய்ய வேண்டும், உங்களுக்கு எந்த உதவியுமே செய்யாதவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யுங்கள். உங்களைப் பற்றி தீதாகப் பேசும் ஒரு மனிதனுக்கு, ஒரு நல்ல வார்த்தையையே அவரைப் பற்றி பேசுங்கள். அந்தவிதமாக உங்கள் இருதயத்திலிருந்து கசப்பையெல்லாம் அகற்றிவிடுங்கள். அன்பிலே நிலைத்திருக்கிற வரையிலும், நீங்கள் எல்லோரிடத்திலும் அன்பு கூருவீர்கள்.

1118 இப்பொழுது நீங்கள், “இருக்கட்டும், அவர்கள் அதைச் செய்தார்கள்” என்று கூறலாம். நாம் நியாதிபதியல்ல. தேவனே நியாதிபதியாவார். நீங்கள் அந்த நபரை தள்ளிப்போட விரும்புவீர்களோ? நீங்கள் அப்படிச் செய்வீர்களா? அவர்கள் யாராயிருந்தாலும், நீங்கள் நிச்சயம், அவ்வாறு செய்ய விரும்பமாட்டீர்கள். நீங்கள் அவ்வாறு நடந்து கொள்ள விரும்பமாட்டீர்கள், எனவே அவர்களிடம் தயவு காட்ட முயற்சியுங்கள். “அன்பு திரளான பாவங்களை மூடும்” உ—ஊ. ஆம், ஐயா. அன்பு, அந்த நல்ல, கிறிஸ்தவ, தெய்வீக அன்பு. 19 ஒரு மனிதன் உங்களிடம் வந்து, உங்களை “உருளும் பரிசுத்தர்” என்றும், இன்னும் பல்வேறு விதமான பெயர்களை உங்களுக்கு சூட்டி அழைத்ததால், இப்பொழுது—இப்பொழுது அதேவிதமாக நடந்து கொள்ள வேண்டாம். புரிகிறதா? அவ்வாறு உங்களால் செய்யமுடியாவிடில், அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள். ஆனால் உங்கள் இருதயத்தில், அதாவது, அந்த நபரிடம், “சகோதரனே, ஒரு வேளை நான் இதைப் புரிந்து கொண்ட வண்ணமாக நீங்களும் புரிந்து கொண்டிருப்பீர்களானால், அப்பொழுது நான் உணருகிற வண்ணமாக நீங்களும் அதைக் குறித்து உணருவீர்கள்” என்று அவரிடம் கூறும் ஒரு நிலையில் இருக்க வேண்டும். புரிகிறதா? அப்படியே அவரிடத்தில் உண்மையாகவே இனிமையாயிருக்க வேண்டும். அந்தவிதமாகவே தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். கிழக்கு மேற்கிலிருந்து எப்படி தூரமாயிருக்கிறதோ, அதுபோல் ஒரு வேளை நாம் வேறுபட்டிருந்தாலும், அது எந்தவித வித்தியாசத்தையும் ஏற்படுத்திவிடுவதில்லை.

1220 நான் அன்றிரவில் என் சகோதரன் மெல்வின் என்பவனைப் பற்றி கூறினேன், அதைப்போல் இது உள்ளது. அவன் நல்ல தேகக் கட்டு கொண்ட நபர், உயரமானவன், மஞ்சள் நிற தலைமுடியை உடையவன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உடன்பிறப்புகள் என்று கண்டு கொள்ளுகிறதற்கு ஏதுவாக அவன் தோற்றம் இருக்காது.நாங்கள் உருவத்தில் ஒத்திருக்கமாட்டோம். எங்களுக்குள் வேறுபட்ட நாட்டங்களும், விருப்பங்களும் உண்டு. ஆனால் அதே சமயத்தில் அவனுடைய தாயார் எனக்கும் தாயார் தான். அவனுடைய தந்தையார் எனக்கும் தந்தை தான். அவன் என்னுடைய சகோதரனாயிருக்கிறான், புரிகிறதா? ஏனென்றால் நாங்களிருவரும் ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் தான். 21 இப்பொழுது நாங்கள் வித்தியாசமானவர்களாக இருக்கிறோம். மெல்வின் ஒரு கிறிஸ்தவனல்ல. அவன் தளகட்டப்பந்து விளையாட்டையும், குதிரை பந்தயத்தையும் விரும்புகிறவன். அவனுக்கு சாக்லேட் பை என்றால் மிகவும் விருப்பம் என்று நான்—நான் நினைக்கிறேன், நான் நிச்சயமாகவே அவனிலிருந்து வேறுபட்டவன், அவ்வாறே நாங்கள் உள்ளோம். எனவே எனக்கு—எனக்குக் குதிரைப் பந்தயங்கள் அல்ல தளக்கட்டப் பந்தாட்டங்கள் பிடிப்பதில்லை, எனக்கு மீன்பிடித்தல் மற்றும் வேட்டை ஆடுதல் முதலியவை விருப்பமானவை. பாரித்தீர்களா? அவன் நான் விரும்புகிறவைகளையே திரும்பிக் கூட பார்க்கமாட்டான். அவனுக்கு விருப்பமானவைகளில் நான் திரும்பிக்கூட பார்க்கமாட்டேன். நான் “செர்ரிபையை” விரும்புகிறேன். அவனோ “சாக்லேட் பையை” விரும்புகிறான். ஆகையால்…

1322 நான் ஜாடையாக இதைக் கூறிக்கொண்டிருக்கவில்லை, பாருங்கள். ஆனால் எங்கோ ஓரிடத்தில், ஒரு கூட்டத்தில் நான், சாக்லேட் பை பிடிக்கும் என்று கூறிவிட்டேன். அடுத்த நாள் இரவில் சுமார் ஐந்து சாக்லேட் பைகள் வந்துவிட்டன…இல்லை செர்ரி பைகள் நான்கைந்து வந்துவிட்டது. சகோதரிகள் அவைகளை தயார் செய்து எனக்கு கொண்டு வந்து விட்டனர். என்னே! என்னுடைய அறையில் அன்று எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஆனால் நான்—நான் அதே சமயத்தில் அந்த விதமான அர்த்தத்தில் சொல்லவில்லை. புரிகிறதா? 23 எனவே நீங்கள் பாருங்கள், உங்களுக்கு வித்தியாசத்தைக் காண்பிக்கவே நான் இதைப் பொருட்படுத்தி கூறுகிறேன். ஆனால் அவன் எப்படியிருந்தாலும், அவன் என்னுடைய சகோதரனாக இருக்கிறபடியினால், நான் அவனை நேசிக்கிறேன். அவன் ஒரு கிற்ஸ்தவனாக இல்லை, ஏனெனில் காரியங்களை வேறொரு வெளிச்சத்தில் பார்க்கிறான். நானோ கிறிஸ்துவின் ஒளியிலே காரியங்களைப் பார்க்கிறேன். இருந்தபோதிலும் கூட அவன் என்னுடைய சகோதரன் அல்ல என்று என்னால் கூற முடியாது. ஏனெனில் நாங்கள் ஒரே குடும்பத்தில் உடன்பிறந்த சகோதரர்கள்.

1424 நேற்று மாலை, நான் கடைசியாக ஒரு மேற்கோளைக் கொடுத்தேன். இந்தக் கூட்டத்தில் இரகசியமான காரியங்கள் அநேகரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று சபைக்கு கென்டக்கியில் வந்த முதல் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு உள்ளவைகளை நீங்கள் அறிவீர்கள். ஞபாகத்தில் வைத்திருக்கிறீர்களா? அது ஒலி நாடாவில் பதிவாகி உள்ளது. புரிகிறதா? நேற்றிரவில் அவைகளில் ஒன்று வெளிப்படுத்தப்பட்டது. எனவே, ஒரு விநாடி நேரத்திற்கு அப்படியே நின்று விட்டது போல் ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் அதைக் கிரகித்துக் கொண்டீர்கள் என்று நிச்சயமாயிருக்கிறேன். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தாமே அந்த விஷயத்தைக் கொண்டு வந்தார்: “வேதத்தில் நித்தியமான நரகம் என்பது இல்லை” என்பதுதான் அது. 25 நித்தியமான நரகம் என்ற ஒன்று கிடையாது. நீங்கள் நித்தியத்தை… நித்தியமாக நீங்கள் நரகத்தில் எரிந்து கொண்டிருப்பீர்களானால், அப்பொழுது அங்கே நீங்கள் முற்றிலும் ஒழிந்து போகாமல் இன்னும் உயிருடன் நித்தியமாக எரிந்து கொண்டேயிருப்பதற்காக, நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும். ஒரேயொரு நித்திய ஜீவன் தான் உண்டு, அது தான் தேவனுடையது. பாருங்கள்? ஆகவே நித்தியமான நரகத்தைக் குறித்து வேதம் போதிக்கவேயில்லை. ஆனால் வேதமோ “சதாகாலங்களிலும்” எரியும் நரகம் பற்றித்தான் போதிக்கிறது. சதாகாலமும் என்றால், அது ஒரு வேளை பத்தாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு இருக்கலாம், எனக்குத் தெரியாது. அது முற்றிலும் இல்லாமல் ஒழிந்து போகத்தான் வேண்டும். 26 நான் இந்த செய்தியை இங்கே தான் முதலில் கொண்டுவர வேண்டியதாயுள்ளது. எனவே நான் மற்ற சபைகளில் இதைப் பற்றி கூறவில்லை…அதைக் கூறுவது என்னைப் பொறுத்ததாயுள்ளது. இன்னும் பல விஷயங்கள் நான் உரைப்பதற்காக உள்ளன, அவைகளை நாம் ஒவ்வொரு இரவிலும் பார்ப்போம்.

1527 ஆனால் இப்பொழுது, இன்றிரவிலிருந்து, உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையைத் தரித்துக் கொள்ள ஆரம்பியுங்கள். பாருங்கள். பரிசுத்த ஆவியானவரில் உங்கள் சிந்தை தோய்ந்ததாக இருக்கட்டும். சத்தியத்தை நீங்கள் கேட்டு, அதை நீங்கள் ஒத்துக் கொள்ள முடியாமற்போனால், நீங்கள் போய், “பாவம் சகோதரன் பிரான்ஹாம். நிச்சயமாக அவருக்கு தெரியவில்லை, நான் அவருக்காக ஜெபிக்கப்போகிறேன்” என்று சொல்லுங்கள். நீங்கள் அதைச் செய்தால், அப்பொழுது எது சத்தியம் என்பதை கர்த்தர் எனக்குத் தெரியப்படுத்துவார். ஆனால் நீங்கள் எனக்காக அனுதாபப்படுங்கள். என்னை புறம்பே தள்ளி விடாதீர்கள். அதுவும் ஒரு வேளை உண்மையாக இருக்கக்கூடும். ஆனால், ஓ, இந்த விதமாக நான் சிந்திப்பதில் மிகவும் நல்ல அருமையான வேளையை உடையவனாக நான் இருக்கிறேன். எனவே அது வித்தியாசமான கருத்துடையவர்களை ஒன்றாயிருக்கச் செய்கிறது. நான், ஓ, நான்—நான் ஒரு வேளை தவறாக இருக்கக் கூடும். ஏதாவது ஒன்றில் தொடர்பற்ற பாகங்கள் இருக்கக்கூடும். அதை நான் முற்றிலுமே அறிந்திராமல் இருக்கக்கூடும். ஒரு வேளை நீங்கள் அதை அறிந்திருக்கக் கூடும். கர்த்தர் அதை எனக்குக் காண்பிக்கும்படி எனக்காக ஜெபியுங்கள். 28 இப்பொழுது, எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவருக்காக ஒருவர் ஜெபித்துக்கொண்டேயிருங்கள்; பிசாசானவன் ஏதாவது கசப்பை எங்காவது காண்பிக்கும்படி அவனுக்கு ஒருபோதும் இடங்கொடுத்து விடாதீர்கள், புரிகிறதா? இந்த வேளையில் உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாய் இருக்கும்படி காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இவ்வுலக வரலாற்றின் இறுதிக் கட்டமான வேளைகளில் நாம் இருந்துக் கொண்டிருக்கிறோம். பாருங்கள்? நண்பர்களே, எந்தவித சந்தேகத்தின் நிழலிற்கு இடமின்றி, நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம்.

1629 நாம் இந்த சபைக் காலங்களைப் பற்றிப் படித்துக்கொண்டே வருகையில், ஒருவேளை இன்றிரவில், அவைகளில் அநேக காரியங்களை வெகுவிரைவில் பார்க்கப் போகிறோம். ஏறத்தாழ, நாம் கடந்த காலத்திற்குள் திரும்பிச் சென்று, இவற்றின் பின்னணியை நாம் பெற்றுக் கொள்வோம். அதை வைத்துக் கொண்டு இதை முடிவுக்குக் கொண்டு வரலாம். இன்றிரவில் சில உண்மையான ஆவிக்குரிய காரியங்களை நாம் வெளிப்படுத்துவோம். இக்காரியத்தில் உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையை தரித்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறியுள்ளதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் வேதவாக்கியங்களை கவனியுங்கள். அது வேத வாக்கியத்தில் இருக்க வேண்டும். வேத வாக்கியங்களின் மூலமாக இருத்தல் வேண்டும். பாருங்கள்? இப்பொழுது நினைவிருக்கட்டும்…“நான் உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றேன், நான் வேதக் கல்லூரியில் கற்றேன், நான் கல்லூரியில் கற்றேன்” என்றெல்லாம் கூறிக்கொண்டு, வேத வாக்கியத்தின் வெறும் அறிவை மட்டும் பெற்றிருந்தால் போதாது. அதினால் எந்த விதப் பயனும் இல்லை. பரிசேயர் மற்றும் வேதபாரகர் அனைவரும் அதையே செய்தார்கள். அதின் மூலம் அவர்கள் இயேசுவைப் பற்றி அறிகிற அறிவில் பத்து இலட்சம் மைல்கள் தூரமாய் இருந்தார்கள். புரிகிறதா?

1730 வேத வாக்கியங்கள், வேத வாக்கியங்களைப் பற்றிய வெளிப்பாடு, “ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைக்கப்பட்டு, கற்றுக் கொள்ள விரும்பும் பாலகருக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.” எனவே, நீங்களும் நானும், நாம் யாவரும் பாலகராக ஆகி, நம்முடைய இருதயங்களை வெறுமையாக வைத்து, அவரிடம், “கர்த்தாவே, நீர்—நீர் எங்களுக்குச் சொல்லும், நாங்கள்—நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்” என்று சொல்லுங்கள். அதன் பிறகு ஆவிக்குரிய கண்ணோட்டத்தை பிடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இதை நினைவில் கொள்ளுங்கள். இன்றிரவிலிருந்து கூறப்படும் வார்த்தைகளின் பேரில் உள்ள ஆவிக்குரிய கண்ணோட்டத்தை பிடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நாம் மிகவும் பெரிய இரகசியமான சபைக் காலத்திற்குள் வந்து கொண்டிருக்கிறோம்.

1831 அவ்வளவு தான் என்று எண்ணுகிறேன். நாளை இரவு அடுத்த சபைக் காலத்தைப் பற்றி பார்ப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாளைக்கு நமக்கு இவைகளைப்பற்றி பார்க்க ஏராளமான நேரம் இருக்கிறது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அதன் பிறகு நாளை இரவும் கூட. அவ்வாறு நேரம் இருக்கும் என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். ஆனால், அநேகர் வேலை செய்து கொண்டு இருப்பார்கள் என்பதைப் பாருங்கள். எனவே நான், இச்செய்தியின் மிகவும் குறிப்பிடத்தக்க முக்கியமானவைகளை நீங்கள் பெற்றுக் கொள்ள நான் முயலுவேன். மேலும், இங்கே பேசப்பட்டவைகளில் முக்கியமான அம்சங்களை தொட்டுக் காண்பித்து விடுவேன். உங்களுக்கு புரிகிறதா? ஆனால்…அதன்பின்னர் நீங்கள் அவைகளை குறிப்பெடுத்துக் கொண்டு அவைகளை வீட்டில் போய் ஆய்ந்து படியுங்கள். நான் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பேன். நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொண்டிருங்கள். அவருடைய விசுவாசிக்கும் பிள்ளைகளாகிய நம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. 32 நாம் இப்பொழுது துவக்குவதற்கு முன்பாக, நாம் எழுந்து நிற்பது உங்களுக்கு கடினமாக இருக்காது என்று நான் எதிர்பார்க்கிறேன்.

19ஏன் எழும்பி நின்று ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? இயேசு, “நீங்கள் நின்று ஜெபிக்கையில், ‘பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே,’ என்று ஜெபித்து, உங்கள் தப்பிதங்களை ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்று கூறினார். உங்களுக்குப் புரிகிறதா? கிதியோன் ஒரு சமயம், தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிக்கிறவர்களான ஒரு கூட்டத்திற்கும், அப்படிக் குனியாமல் நின்று கொண்டு தண்ணீரைக் குடிக்கிறதான ஒரு கூட்டத்திற்கும் இடையே தனக்கென ஒரு சேனையைத் தெரிந்து கொண்டான். உங்களுக்குப் புரிகிறதா? எனவே விக்கிரகங்களுக்கு முன்பாக முகங்குப்புற வீழ்ந்து வணங்கிவர்கள் குனிந்து தண்ணீரை எடுத்துக் குடித்தார்கள். அவர்கள் தனக்கு சேனையாக இருப்பதற்கு உரியவர்கள் அல்ல என்று கிதியோன் அறிந்து கொண்டான். எனவே மற்றொரு கூட்டத்தினர், நிமிர்ந்து நின்று, எப்பொழுதும் தங்கள் கண்களால் ஜாக்கிரைதையாக கவனித்துக் கொண்டிருக்கிறவர்களையே தனக்கு சேனைக்குரியவராக இருக்கத் தெரிந்து கொண்டான். அவ்விதமாகத்தான். நாமும் நின்று கொண்டு ஜெபிக்கிறோம். இப்பொழுது முழங்கால்படியிட்டு ஜெபிப்பதிலும் கூட நான் விசுவாசங்கொண்டுள்ளேன். ஆனால் நின்று கொண்டு ஜெபிப்பதில் நமக்கு ஏதோ உள்ளர்ந்த அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நாம் இப்பொழுது, நம்முடைய தலைகளை வணங்கியிருப்பதோடு, ஒவ்வொரு இருதயமும் கூட வணங்கியிருக்கட்டும்.

2033 கிருபையுள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் இப்பொழுது பயபக்தியுடன் உமது நீதியின் சிங்காசனத்தை அணுகுகிக்கொண்டிருக்கிறோம். நீதியை அருளும்படி கேட்டுக் கொண்டு உம்மிடம் வரவில்லை. ஏனெனில், அப்படிக் கேட்டால், நாங்கள் யாவரும் பட்சிக்கப்பட்டு விடுவோம். ஆனால் நாங்களோ, “ஓ கர்த்தாவே இரக்கமாயிரும்” என்று கெஞ்சிக் கொண்டு உம்மிடம் வருகிறோம். இன்றிரவில் எங்கள் மேல் உம்முடைய பரிசுத்த ஆவியை ஊற்றியருளும். ஏனெனில், நாங்கள் தகுதியுள்ளவர்களாயிருக்கிறோம் என்று அல்ல, நாங்கள் தகுதியற்றவர்கள் என்பதை உணர்ந்தும், அதை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதினிமித்தமாகவே. இவ்விண்ணப்பத்தை எங்களுடைய நாமத்தினாலே கொண்டு வரவில்லை, (ஏனெனில் எங்களுடைய நாமம் அதற்குப் போதுமானது அல்ல). எங்களிடம் நியாயம் இல்லை, எங்களிடம் எதுவுமேயில்லை. எங்களுடைய அதிகபட்ச நீதியெல்லாம் உமது பார்வையில் அழுக்கான கந்தையாகவே இருக்கும். எனவே நாங்கள் பணிவுடன் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே வருகிறோம்; அவரை எங்களுக்கு முன்பாக கொண்டு வந்து, அவருடைய உடன்படிக்கையின் இரத்தத்தை எங்கள் இருதயங்களில் பூசிக்கொண்டவர்களாய், “தேவனே, துன்ப வேளையில் இரக்கத்திற்காக கெஞ்சும் பாவிகளாகிய எங்களிடம் இரக்கமாயிரும்” என்று கேட்கிறோம். ஒரு நாளில் கடைசி பிரசங்கமானது பிரசிங்கிக்கப்பட்டிருக்கும், அந்த நாள் எப்பொழுது என்று எங்களுக்குத் தெரியாது. கடைசி நேரத்தில், ஆகாயத்தில் ஒரு ஆரவாரம் உண்டாகும், பிரசங்க பீடத்தில் வேதப்புத்தகமானது மூடப்பட்டிருக்கும், கரங்கள் குவிக்கப்பட்டிருக்கும், எக்காளமானது தொனிக்கும், சூரியன் அஸ்தமித்து போகும். ஓ தேவனே! அப்பொழுது என்னை, நித்திய கன்மலையே, அந்த வேளையில் மறைத்துக் கொள்ளும்.

2134 இப்பொழுது உமது மூலமாய் அல்லாமல் வேறு எவ்விதத்திலும் நாங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. நாடுகள் உடைந்து கொண்டிருக்கின்றதை நாங்கள் காண்கிறோம். வேதம் நிறைவேறுகிறதை நாங்கள் பார்க்கிறோம். இஸ்ரவேல் விழித்துக் கொண்டிருக்கிறதை நாங்கள் காண்கிறோம். சபைக்கு வந்துள்ள செய்தியை பார்க்கிறோம். மகத்தான காரியங்கள் வெளிப்படுத்தப்படுகிறதும், ஏழு முத்திரைகள் திறக்கப்படுகிறதுமான வேளையில் நேரமானது ஏறத்தாழ முடிவடைந்து இருக்கிறது. 35 தேவனே, தேவனே, ஓ தேவனே, எங்களிடம் இரக்கமாயிரும், இரக்கத்திற்காக நாங்கள் கெஞ்ச்சுகிறோம். மேலும் உம்முடைய ஊழியக்காரன் என்னும் முறையில், இன்றிரவில் தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் இரக்கம் வேண்டி கெஞ்சுகிறேன். எங்களுக்குள், தங்கள் ஆத்துமாவில் பாவத்தையுடைய ஒரு நபர் கூட இங்கு இருக்கவேண்டாம், தேவனே, இப்பொழுதே அவ்வாத்துமா கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தாலே சுத்திகரிக்கப்பட்டு, அதினால், நாங்கள் யாவரும் ஆகாயத்திற்கு அப்பால் தொலைவில் உள்ள அந்த பேரின்ப வாசஸ்தலத்தில் சந்திக்கட்டும். 36 பிதாவே, இன்றிரவில், இவ்வேதவாக்கியத்தை நான் அணுகுகையில், ஓ நான் போதிய தகுதியுள்ளவனாக இருக்கவில்லை. தேவனே, எங்களில் எவரும் போதிய தகுதியுள்ளவர்களல்ல, பிதாவே, நாங்கள் ஒன்றும் அறியாதவர்கள் என்பதை அறிக்கையிடுகிறேன். ஆனால் நாங்கள் பயபக்தியுடன், பரிசுத்த ஆவியானவர்தாமே வெளிப்படுத்திக் கொடுக்க வேண்டி, அவரையே சார்ந்துகொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களுக்கு நீர் அளித்திருக்கும் எங்களுடைய மன அறிவின்படி, சரித்திரத்தை திறந்து பார்க்கையில், பரிசுத்த ஆவியானவர் எங்கள் இருதயங்களில் ஆவிக்குரிய கண்ணோட்டத்தை அளிப்பாராக. பிதாவே, இதை அருளும், ஏனென்றால் உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தினால் உமக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம்.

2237 வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் இரண்டாம் அதிகாரத்தில் மூன்றாம் சபைக்காலத்தை … [ஒரு சகோதரி அந்நிய பாஷைகளில் பேசுகிறார்—ஆசி.] என்னை மன்னிக்கவும். 38 பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. பிதாவே! நீர் எங்களோடிருந்து, எங்களை ஆசீர்வதித்து, மக்கள் மத்தியில் உள்ள இந்த துன்பமான வேளையில், நாங்கள் ஞானமுள்ளவர்களாகவும், சிறந்த சிற்பாசாரிகளாகவும் இருக்க எங்களுக்கு உதவி செய்யும். குழப்பம் மற்றும் இன்னும் பிற காரியங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், கர்த்தாவே, உம்முடைய தலைசிறந்த ஊழியக்காரர்களாக இருக்க கிறிஸ்துவின் நாமத்தினூடாக எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 39 நீங்கள் அறிந்து கொள்ளத் தக்கதாகத் தான் நான் அதை முதலிலேயே கூறிவிட்டேன். வார்த்தைக்கு உரிய வியாக்கியானம் வரவில்லை என்பதைக் கவனித்தீர்களா? நம்முடைய சகோதரி சந்தேகத்துக்கிடமின்றி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். வார்த்தையானது வந்ததற்குப் பிறகு, அவர்கள் செய்தியைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் நீங்கள் பாருங்கள். அச்செயல் அதற்குரிய ஒழுங்கை விட்டு விலகிய செயலாக இருக்கிறது. அருமையான சகோதரியே, நீங்கள் பாராயிருந்தாலும் சரி, உங்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் வந்திருக்கையில், ஓ, உங்களால் அடக்கி வைத்திருக்க இயலாது என்பதை நான் அறிவேன், அது சரி தான், அது எப்படியிருக்கிறதென்றால்…அல்லது, நீங்கள் ஒன்றைக் கூறிக்கொண்டிருக்கையில் இன்னொருவர்… பாருங்கள், ஆனால் அது சரிதான். ஆனால், ஒரு வேளை, நாங்கள் ஆரம்பிக்கிறதற்கு முன்பாகவே, நீங்கள் அதைப் பற்றி உணர்ந்து கொண்டிருக்கக்கூடும். அதனால் தான், ஆவியானவர் கிரியை செய்யும் பொழுது, அது திரும்ப வருகிறது. தீர்க்கதரிசிகளின் ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே, நீங்கள் பாருங்கள். அது நீங்கள் தான்.

2340 மறுபடியும், உங்களை அவர் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கக் கூடும்,…அவ்வாறு செய்கிறார் என்று நான் நம்புகிறேன். ஆராதனையானது முடிந்தபிறகு, பாஷை பேசியதின் வியாக்கியானம் வருவதற்காக அப்பொழுது பார்த்திருங்கள், ஏனெனில், அப்பொழுது அது, சரியாக, அதற்கான ஒழுங்கின்படி இருக்க வேண்டும், நீங்கள் பாருங்கள், ஆனால் நாம் இப்பொழுது வார்த்தையை அணுகிக் கொண்டிருக்கிறோம் என்பதை இங்கே நீங்கள் பாருங்கள். எனவே, இப்பொழுது அது உண்மையிலேயே தேவனிடத்திலிருந்து வந்ததாகத்தான் இருந்தது. அது உண்மையிலேயே அவ்வாறிருந்தது. அதை நான் என் முழு இருதயத்தோடும் விசுவாசித்து உணருகிறேன். பின்னால் வரவேண்டியது முன்பாகவே வந்து விட்டது. நீங்கள் பாருங்கள், ஆனால் பரிசுத்த ஆவியானவர்…அதற்குரிய வேளை அதுவாயிருக்கவில்லை. சபைக்கென ஒரு செய்தியை தேவன் சகோதரிக்கு கொடுத்தால், ஆனால் இப்பொழுது அவர் தனது செய்தியை கொடுக்க இங்கே கிரியை செய்து கொண்டிருக்கிற வேளையாக அல்லவோ இருக்கிறது. நீங்கள் பாருங்கள், அவர் தன்னைத் தானே குழப்பிக் கொள்ளமாட்டார். அவர் எல்லாவற்றையும் ஒரு ஒழுங்குக்குள் வைக்கிறார். அதுவே சரி என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்கிறீர்கள் என்பதை நிச்சயமாக அறிகிறேன். நீங்கள் பாருங்கள்.

2441 இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் இரண்டாம் அதிகாரத்தில், பெர்கமு சபையினை நாம் இன்றிரவில் ஆரம்பிக்கிறோம். 12-ம் அதிகாரத்தைப் பார்ப்போம். நேற்றிரவில் நாம் 11-ம் வசனத்தோடுவிட்டிருந்தோம். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது. 42 நாம் முதலாம் சபையின் கால்த்தில்தான் நிக்கொலாய் மதஸ்தரின் போதகமானது ஆரம்பித்தது என்று பார்த்தோம். தேவன் தன்னையே வெளிப்படுத்தினார்…இயேசு தன்னை சர்வ வல்லமையுள்ள தேவனாக வெளிப்படுத்தினார். தேவனுடைய எந்தவொரு பாகமாகவோ, துண்டாகவோ தன்னை வெளிப்படுத்தவில்லை. அவரே தேவனாயிருக்கிறார். அவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

2543 கடந்த இரவில் நாம் பார்த்த அச்சபைக் காலத்தைப் பற்றிய செய்தியில், அவர் வாசலில் நின்று, சபைக்கு இக்காரியங்களை எழுதினார் என்று பார்த்தோம். அவர்களிருக்கும் வறுமையைப் பற்றி அவர் அவர்களுக்கு கூறினார். ஆனால் அவர்கள்,…தேவன் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் போதக்காரர்கள் மத்தியில் இருப்பதைக் குறித்து அவர்களுக்குச் கூறினார். 44 கடந்த இரவில், அவர்கள்…அணிந்து கொள்ள இரத்த சாட்சிகளின் கிரீடத்தை பெறுவதைப் பற்றிப் பார்தோம். அவர்கள் மரணமடையப் போகிறதைக் குறித்து அஞ்ச வேண்டாம் என்றும், தான் அவர்களுடன் இருப்பதாகவும் உரைத்தார். அதன்பின்னர் முடிவில் அவர், “ஜெயங்கொள்ளுகிறவன்! ஜெயங்கொளுகிறவன் எவனோ அவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை” என்று கூறினார்.

2645 ஒரு மரணம் இருக்கிறதென்றால், நாம் அதைக் குறித்து அறிந்திருந்தால், அப்பொழுது எங்கோ இன்னொரு மரணமும் இருக்கத் தான் வேண்டும். ஏனெனில் நாம் அடைகிற ஒரு மரணம் இப்புவியில் மாம்சத்தில் அடைவதாகும். இரண்டாவது மரணம், ஆவியில் ஆத்துமாவில் அடைகிற மரணமாகும். “பாவஞ்செய்கிற ஆத்துமா சாகவே சாகும்.” மரிப்பது என்றால், “முழுவதுமாக எல்லாவற்றிலிருந்துமே அகன்று ஒழிந்து போகுதல்” என்பதாகும். நீங்கள் பாருங்கள், நீங்கள்—நீங்கள்… மரணம் என்றால் “முழுவதும் நீங்கிப் போதல், முழுவதும் அகற்றப்படுதல், மறைந்து போதல்,” என்பதாகும். நமக்குப் பிரியமானவர்கள் மரிக்கும்பொழுது, அவர்கள் நாம் அறிந்திருக்கிற மட்டில், நிலைத்திருக்காமற் போகிறார்கள். அதை நாம் மரணம் என்றழைக்கிறோம். 46 ஆனால் ஒரு கிறிஸ்தவன் மரிப்பதில்லை. கிறிஸ்தவன் மரிக்கிறான் என்பதற்கான ஒரு வேதவாகியமும் இல்லை; ஏனெனில் அவன் நித்திய ஜீவனை உடையவனாய் இருக்கிறான். ஒரு பாவி மரிக்கும்போது, அவன் முடிவுற்றுவிடுகிறான், அவனுடைய ஆத்துமா முடிவிலே ஒரு நாளில் மரிக்கும். ஆனால் ஒரு கிறிஸ்தவன் மரிக்கையில், அவன் தானே திரும்ப வருதற்காக இயேசுவோடு காத்துக்கொண்டிருக்கிறான். ஓ, இன்று இராத்திரியில் இத்தரிசனத்தின் இறுதியில் அதைப்பற்றி பார்ப்பதற்கு எனக்கு நேரம் இருக்கும் என்று நம்புகிறேன். அதைப் பற்றி பார்ப்பதற்கு நாம் திரும்ப வருவோம். அதில் நீங்கள், எவ்வாறு அந்த இரண்டாம் மரணத்தின் காரியமானது கொண்டு வரப்படுகிறது என்பதை காணலாம். இன்று இராத்திரியில் நாம் படிக்கப்போகும் இதே அதிகாரத்திலேயே அதே காரியமானது கொண்டு வரப்படுவதை காணலாம், அது மிகவும் அழகான முறையில் இங்கே பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது.

2747 இப்பொழுது—இப்பொழுது, இவ்விரவில் விரைவாக இக்கடிதத்தை நாம் படிக்கப் போகிறோம். ஏனெனில் என்னிடம் வரலாற்று ரீதியான சில தகவல்கள் உள்ளன, அவைகளை நாம் முதலில் காண விரும்புகிறோம், உங்களை வெகு நேரம் இங்கே வைத்துக் கொள்ளாமல் இருக்க முயலுவோம். இப்பொழுது…இந்த ஆராதனைகள் முடிவுற்ற பிறகு, எந்த நேரத்திலும் எவ்வாறு அவைகள் பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் காணும்படியாக, நான் உங்களுக்காக விரைவாக வாசிப்பேன். சகோதரன் மெர்ஸியர் அவர்களிடம் அவைகள் யாவும் உள்ளன. நான் அவைகளை அவரிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவர் அந்தப் புத்தகத்தை எழுதிக் கொண்டிருப்பதினால், அதில் உங்களுக்கு—உங்களுக்கு தேவையானதை அவர் கொடுக்க முடியும். அது சரியாக இருக்குமல்லவா, சகோதரன் மெர்ஸியர்.

2848 12-வது வசனம். பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை, இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப்போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் … (எபேசுவில் கிரியைகளாயிருந்து, இங்கே “போதகமாக” ஆகிவிட்டது) (…நான் அன்று இரவில் எவ்வாறு அது அதனிடம் அணுகி விந்துவிட்டது என்று கூறிக் கொண்டிருந்தேனே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? கிரியைகளாக எபேசுவில் இருந்தது, இப்பொழுது “போதகமாக” ஆகிவிட்டது)…கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். உம்! நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால்… (உண்மையான சபையோடு அல்ல)…அவர்களோடே யுத்தம் பண்ணுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து அவனுக்கு(அவனுக்கு) வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி, வேறெருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது. இப்பொழுது நாம் இதைப் பார்க்க முயற்சிக்கையில் கர்த்தர் தாமே இதனுடன் தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டித் தந்து, நமக்கு உதவி செய்வாராக.

2949 இப்பொழுது இந்த சபையின் பின்னணியைப் பார்ப்போம். இது மூன்றாம் சபைக்காலம் ஆகும். இது பெர்கமு என்றழைக்கப்படுகிறது. இச்சபைக்காலம் கி.பி.312, கி.பி.312 முதல் 606 முடிய நீடித்திருந்தது. 50 இக்காலம் கள்ளப்போதகம், சாத்தானின் பொய், போப்புமார்க்க ஆட்சியின் அஸ்திவாரமிடுதல், சபையும் அரசும் விவாகம் செய்து கொள்ளல் ஆகியவை இடம் பெற்ற காலமாகும். 51 இச்சபையின் காலத்தில் அளிக்கப்படும் பலன்; மறைவான மன்னாவும், வெண்மையான குறிக்கல்லும் ஆகும். 52 இந்த சபைக்காலத்திற்குரிய தூதன், நட்சத்திரம் யாரெனில், பரிசுத்த ஆவியானவர் எல்லா வகையிலும் அதைச் செய்வதற்காக என்னை அனுமதித்ததின் பேரில், நான் பரிசுத்த மார்ட்டின் என்பவரை தேர்ந்தெடுத்துள்ளேன். அக்காலத்தில் வாழ்ந்த ஏனைய பரிசுத்தவான்களைப் பற்றியும் நான் அச்சமயத்தில் படித்ததில், அவர்கள் யாவருக்குள்ளும் இவரை தெரிந்து கொள்ள, அதற்கான வெளிப்படு எனக்கு அளிக்கப்பட்டது. பரிசுத்த மார்ட்டின் ஒரு தேவ மனுஷனாயிருந்ததால் நான் அவரை தெரிந்து கொண்டேன். என்னுடைய கருத்துப்படி, அதே காலத்தில் வாழ்ந்த் பரிசுத்த பேட்ரிக் என்ற அப்போஸ்தலரை விட, பரிசுத்த மார்டின் பத்து மடங்கிற்கு மேல் அப்போஸ்தலனாயிருந்தார். 53 இப்பொழுது பரிசுத்த பேட்ரிக் பரிசுத்த மார்ட்டினுடைய மருமகன் ஆவார். பரிசுத்த மார்ட்டினுடைய சகோதரி, பரிசுத்த பேட்ரிக்கின் தாயார் ஆவார். எனவே, பரிசுத்த மார்ட்டின்…உண்மையாகவே பரிசுத்த பேட்ரிக்கின் மாமன் ஆவார்.

3054 பரிசுத்த மார்டின் கி.பி.315 முதல் கி.பி.399 வரையில் வாழ்ந்து வந்தார். அந்நாட்களில் வாழ்ந்து வந்த ஏனைய பரிசுத்தவான்கள் எல்லாரிலும், பரிசுத்த மார்ட்டினை நான் தெரிந்து கொண்டதற்கான காரணம் என்னவெனில், அவர் உறுதியாக நிலைநின்று, விட்டுக்கொடுக்காமல் இருந்தது தான். தேவனுடைய ஆவியின் ஏவுதலின் கீழ், நான் அதை… 55 கத்தோலிக்க சபை மார்ட்டினை பரிசுத்தவானாக நியமிக்கவில்லை. அவர்கள் அவரை அங்கீகரிக்கவில்லை. மார்ட்டினை நாம் தேர்ந்தெடுபதற்கு அதுவே இன்னொரு காரணமாகும். ஹூம்—ஹூம், உ—ஊ. நாம் பார்க்கிற இவர்கள் யாவரையும், அவர்கள் ஆவிக்குரிய ஊழியத்தை உடையவர்களாக இருந்ததினால், ஆதியில் இருந்த நிக்கொலாய் மத சபை நிராகரித்தது. அவர்கள் ஆவிக்குரியவர்களாயிருந்தனர். நான் இங்கு வரைந்திருக்கிற சித்திரத்தின்படி, சபையானது நெருக்கப்பட்டது, நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தை பெரும்பான்மையினர் கைக்கொள்வதாக இருந்தனர். உண்மையான சபையானது சிறுபான்மையினராகவே எப்பொழுதும் போல் இருந்தது. 56 நான் துவக்கத்திலிருந்து குறிப்பிட்டு வந்ததுபோல, இயேசு, “பயப்படாதே, சிறு மந்தையே, உனக்கு இராஜ்ஜியத்தைக் கொடுக்க உன் பிதாவானவர் பிரியமாயிருக்கிறார்” என்றார். எனவே தான், நான் இராஜ்ஜியத்தை, ஒரு ஆவிக்குரிய இராஜ்யத்திற்கு என்று உபயோகிக்கிறேன். நமக்கு…ஒரு ஆவிக்குரிய இராஜ்ஜியம் உண்டு. அதைப்பற்றி நாம் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். இந்த இராஜ்ஜியத்திற்கு ஒரு இராஜா இருக்கிறார். அவர் பரிசுத்தவான்களின் ( பரிசுத்தமாக்கப்பட்டவர்களின் ) இராஜவாக இருக்கிறார். அவரே அவர்களை வழி நடத்துகிற இராஜாவாக் இருக்கிறார்.

3157 சபைக் காலங்களிலேயே மிகவும் மகத்தான அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கையை உடையவர்களுள் பரிசுத்த மார்ட்டினுடையதும் ஒன்று. பரிசுத்த பவுல் முதற்கொண்டு தொடர்ந்து வந்த காலங்களில் வாழ்ந்த மகத்தான ஆவிக்குரிய மனிதர்களுள் பரிசுத்த மார்ட்டினும் ஒருவர் ஆவார். அவர்… 58 அவருடைய ஜீவியத்தில் நடந்த முதலாம் அற்புதங்களில் ஒன்று என்னவெனில்…அவர் ஒரு இராணுவ வீரராக இருந்தார் என்று நம்புகிறேன். ஒரு நாள் அவர் நடந்து வந்து கொண்டிருக்கையில்…சாலையில் ஒரு—ஒரு மனிதன் குளிரினால் நடுங்கிக் கொண்டு படுத்துக் கிடந்தான். நல்ல சமாரியன் உவமையில் ஆசாரியனும், லேவியர்களும் காயமடைந்தவனைப் பார்த்துவிட்டு, ஒதுங்கிச் சென்றது போல், இந்த மனிதனைப் பார்க்கிறவர்கள் யாவரும், விருப்பமில்லாமல், உதவிடாமல் ஒதுங்கிப் போனார்கள். ஆனால் பரிசுத்த மார்ட்டின் வந்தபோது, ஒரு கிறிஸ்தவ விசுவாசி என்ற முறையில் தனக்குள்ள கடமையை உணர்ந்து கொண்டவராய், தான் அணிந்திருந்த மேலங்கியை தன் பட்டயத்தால் இரண்டாக வெட்டி, ஒரு பாகத்தை அப்பிச்சைக்காரனுக்கு போர்த்தி விட்டு சென்றார். அந்த இராத்திரியிலே, மார்ட்டின் பிச்சைக்காரனுக்கு போர்த்திவிட்ட தனது பாதி மேலங்கியை இயேசு கிறிஸ்து போர்த்திக் கொண்டு இருக்கிறவராய், தரிசனத்தில் பிரதியட்சமானார். அன்று முதல் அவரது ஊழியம் தொடங்கியது. இவரது இச்செயல், “இந்தச் சிறியரில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை நீங்கள் எனக்கே செய்தீர்கள்” என்ற வேத வாக்கியத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது.

3259 எனவே அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாருக்காவது எதையாவது செய்தால், அதை நீங்கள் கிறிஸ்துவுக்கே செய்கிறீர்கள். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள்…நாம் யாவரும் இதை சேர்ந்து சொல்லுவோம். [சகோதரன் பிரான்ஹாமும், சபையாரும் சேர்ந்து ஒருமித்து இதைச் சொல்லுகிறார்கள்—ஆசி.] : “நீங்கள் மற்றவர்களுக்கு எதைச் செய்கிறீர்களோ, அதை கிறிஸ்துவுக்கே செய்கிறீர்கள்.” பிறன் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறாரோ, அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் உங்கள் பிறனைப் பற்றி என்ன நினைக்கிறீர்களோ, பாருங்கள், அது ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது.

3360 அதுவே அவரது முதலாம் அற்புதமாகும், அதுவே அவரது ஊழியத்தின் துவக்கமுமாகும். அவரைப் பற்றி கூற வேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு. ஆனால் எனக்கு—எனக்கு நேரமில்லை. ஏனெனில் நாளை இரவும் நீங்கள் இங்கே வந்து விட வேண்டும். என்றும், ஒவ்வொரு இரவிலும் தவறாது நீங்கள் வந்து விட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். எனவே உங்களை அதிக நேரம் இங்கே தாமதிக்க வைக்க விரும்பவில்லை. 61 சரி, அவரது ஊழியத்தில் நடந்த அடுத்த அற்புதத்தை நான் இந்த இரவில் பேசத் தெரிந்துகொண்டேன். 62 அவர் முற்றிலுமாக அஞ்ஞானத்தை இடித்து கீழே தள்ளிக் கொண்டிருந்தார், மேலும் அவர் ரோமன் சபையை உறுதியுடன் எதிர்த்து நின்றார். முதல் ரோமன் சபையின் பேராயர்களோடு அவர் முழுவதுமாக ஒவ்வாதிருந்தார். அவர்…அவர்கள் உலகப்பிரகாரமாக நடந்து கொண்டு வந்தனர். எனவே அவர்களை அவர் எதிர்த்து நின்றார். அவர் உறுதியாக அவர்களுக்கு எதிர்த்து நின்றார். அந்த விதமான நேரங்களில் மார்ட்டின் உயிரோடிருந்தது ஒரு அற்புதமாகும். இப்பொழுது…

3463 ஒரு நாள் மார்ட்டின் அஞ்ஞான தேவர்களின் விக்கிரத்தோப்பு ஒன்றை வெட்டி அழித்துக்கொண்டிருந்தார். ஒரு அஞ்ஞான பலிபீடத்தை வெட்டி கீழே சாய்த்தார். அந்த அஞ்ஞான பலிபீடத்தற்கருகில், அஞ்ஞானிகள் புனிதமென்று கருதிய ஒரு மரம் இருந்தது. அதை அவர் வீழ்த்துவதற்காக வெட்டி கொண்டிருந்தார். அப்பொழுது அதனருகில் நின்றிருந்த அஞ்ஞானிகள் அதை கோபமடைந்து எதிர்த்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவர், “நான் ஒரு தேவனுடைய மனிதனாயிருந்தால்…என்னை இந்த மரத்தில் கட்டுங்கள். பின்பு, இம்மரத்தை வெட்டி சாயுங்கள். இந்த மரத்தை வெட்டினால் எந்தப் பக்கம் சாயுமோ அந்தப்பக்கத்தில் என்னை கட்டி விடுங்கள். நான் ஒரு தேவனுடைய மனிதனாயிருந்தால்…நான் தேவனுடைய மனிதனாக இல்லையென்றால், அப்பொழுது மரமானாது வெட்டப்படும்பொழுது என பக்கமாக சாய்ந்து என்னை நசுக்கிக் கொல்லட்டும், நான் தேவனுடைய மனிதனானால், அப்பொழுது, மரம் வெட்டப்படும்போது, இயற்கையின் பிரமாணத்திற்கு எதிராக, என் தேவனால் மரமானது எதிர் திசையில் சாயும்படி சுற்றி விடப்பட்டுவிடும்” என்றார். சரியானதொரு சவாலாயிற்றே! அதை ஏற்றுக் கொண்ட அஞ்ஞானிகள், மார்ட்டினை மரத்தோடு வைத்துக் கட்டி, அது விழும்போது, மார்ட்டின் பக்கமாக விழுந்து அவரை நசுக்கிக் கொல்லட்டும் என்று எண்ணி அதற்கேற்றவாறு, மரத்தை வெட்டினார்கள். வெட்டப்பட்ட மரமானது சாய ஆரம்பித்தபொழுது, இயற்கைக்கு மாறாக எதிர்த்திசையில் திருகிக்கொண்டு சாய்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு கூட்ட மக்களை நசுக்கிக் கொன்றது. தேவன் மலையின் மேல் மரத்தை திருப்பிவிட்டார். ஒரு அற்புதமாயிற்றே! ஓ, எல்லா நேரத்திலும் அவருடைய கூட்டத்தில் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டேயிருந்தன.

3564 நான் பேச் நினைத்த இன்னொரு அற்புதம் என்னவெனில்; இறந்துபோன குழந்தையின்மேல் தன் உடலைக் கிடத்தி, அதற்காக சிறிது நேரம் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, அக்குழந்தை உயிரோடு எழுப்பப்பட்டது. 65 மிகவும் தலைசிறந்ததாக எனக்கு விளங்கும் இன்னொரு அற்புதம் என்னவெனில்: ஒரு அரசனுக்கு முன்பாக இது நடந்தது. அவ்வரசன் தேவனுடைய பரிசுத்த ஆவியினினால் நிரப்பப்பட்ட மக்களை கொல்வதற்கு இருந்தான். அம்மன்னன் முதல் ரோமன் சபையின் பேராயருடைய வலதுகரமாக விளங்கினான். முதல் ரோமச் சபையின் பேராயர் (Bishop) என்பது போப் தான். போப் என்று அழைக்கப்படுவதற்கு முன்னால், ரோமன் சபையின் பேராயர் என்றே ஆதியில் அழைக்கப்பட்டார். அவன் பெயர் ட—ம—சூ—ர் என்பதாகும். அம்மன்னன் கிறிஸ்தவர்களில் யாரையெல்லாம் பிடித்து கொலை செய்ய முடியுமோ, அவர்களையெல்லாம் கொன்று குவித்தான். இம்மன்னனின் மனைவி ஒரு அஞ்ஞானியாயிருந்தாள். அவளுடைய இருதயத்தின் மேல் அந்தகாரம் குடிகொண்டிருந்தது. 66 அப்பொழுது இந்த, பரிசுத்தமாக்கப்பட்ட பரிசுத்த மார்ட்டின்; கிறிஸ்தவர்களை கொல்வதை நிறுத்த வேண்டுமென அவர்களுக்காக பரிந்து பேச வந்தார். அக்கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்படக்கூடாது என்று அவர்களுக்காக பரிந்து பேசுவதற்காக இம்மன்னனை காணச் சென்ற போது, அவனுடைய மனைவி அதை அவனுக்கு அறிவித்தாள். அவன் எந்த ஒன்றையுமே செய்ய மறுத்துவிட்டான். ஏனெனில் இவன் இந்த போப்புக்கு வலதுகரமாக விளங்கினான்; எனவே தான் அவன் பரிசுத்த ஆவியால் நிரப்பட்ட கிறிஸ்தவர்களைக் கொன்று வந்தான்.

3667 ஆனால் பரிசுத்த மார்ட்டின் மன்னனை நேரில் கண்டு பேச விரும்பினார். காவலாளிகள் வாயிலில் அவரை தடுத்து நிறுத்தினார்கள் பரிசுத்த மார்ட்டின் முகங்குப்புற விழுந்து, அங்கேயே கிடந்து, உள்ளே போ என்று தேவன் தன்னிடம் சொல்லும் வரையிலும் ஜெபித்துக் கொண்டிருந்தார். அவர் எழும்பிய பொழுது, அவருக்கு முன்பாக பூட்டப்பட்டிருந்த கதவுகள் தாமாகவே திறந்து கொண்டதால், அவர் அதனுள்ளே நடந்து சென்றார். 68 இது சரித்திரம் ஆகும். யாரோ ஒருவர் இவரைக் குறித்து எழுதி விடவில்லை. வெறுமென ஒரு சிறு… அதில் ஏதாவது உண்மையைக் கண்டறியாமல் தப்பான அபிப்பிராயமாக எழுதி இருந்தால் அப்பொழுது, அது சபையால் சொல்லப்பட்ட விஷயம் என்று தள்ளிவிடலாம். போப்பு மார்க்க சபையினரால் எழுதப்பட்டிருந்தால் அவர்கள் இவைகளை குறிப்பிடவே மாட்டார்கள். ஆனால், பாருங்கள், வரலாறு சத்தியத்தையே குறிப்பிடுகிறது. புரிகிறதா?

3769 ஆக, இந்த மனிதன், பரிசுத்த மார்ட்டின், திறவுண்ட கதவுகள் வழியாக அரண்மனைக்குள் காவலாளிகளைக் கடந்து சென்று, நேரே அம்மன்னனுக்கு முன்பாகவே போய் நின்றார். தேவனுடைய ஊழியக்காரனை கனம் பண்ண அம்மன்னன் விரும்பவில்லை. அவ்விதம் செய்வது முறையானது அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அம்மன்னன் மார்ட்டினுக்கு மரியாதை செலுத்தாமல் தன் தலையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான். தேவன் அப்பொழுது என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? மார்ட்டின் மன்னோடு பேச முயன்று கொண்டிருந்தார். அரசனோ, தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு விட்டான். எனவே தேவன் தன்னுடைய ஊழியக்காரனுக்கு அந்த அஞ்ஞானி மரியாதை கொடுக்கும்படி செய்தார். எனவே அவன் உட்கார்ந்திருந்த சிங்காசனத்தில் திடீரென்று தீப்பிடித்து, அமர்ந்திருந்த அரசனின் மேல் சுட்டுவிட்டதால், அது அவனை எழுந்திருக்கச் செய்தது. 70 இப்பொழுது இது நிசாயா ஆலோசனை (Nicene Council) என்ற புத்தகத்தில் எழுதப்பட்ட வேதகால வரலாறு ஆகும். அம்மன்னன் தேவனுடைய ஊழியக்காரனை கனம் பண்ண வேண்டியதாயிருந்தது. தேவன் அவனை எழுந்து நிற்கச் செய்தார். அரசன் அமர்ந்திருந்த சிங்காசனத்தை அது சுட்டெரித்துவிட்டது. அக்கினி அவருடைய சரீரத்திலிருந்து புறப்பட்டு இருக்கையின் அடிப்பாகம் தீப்பிடித்துக் கொண்டதால், உட்கார்ந்திருந்த மன்னன் குதித்து எழுந்து நிற்க வேண்டியதாயிற்று. காரியங்களைச் செய்வதற்காக தேவனுக்கென்று ஒரு வழியுண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். உ—ஊம். “இந்தக் கல்லுகளினாலே தேவன் ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ன வல்லவராயிருக்கிறார்.” அதே தேவன் இன்று இரவில் நம் மத்தியிலும் வாசம் பண்ணுகிறார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அது அதே தேவன் ஆகும். சரி.

3871 இன்னொரு அற்புதத்தைப் பற்றி சொல்லிவிட்டு அத்தோடு முடித்துக் கொள்கிறேன். என்னிடம் இன்னும் சில உள்ளன… இந்த ஒரு குறிப்பிட்ட அற்புதமானது எனக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். ஒரு நாள் மார்ட்டின் தன் சபையின் ஜனங்களுக்காக செய்தி கொடுக்க தேவ சமூகத்தில் காத்திருந்து தன்னுடைய படிக்கும் அறையில் ஜெபித்துக் கொண்டு இருந்தார். 72 மார்ட்டின்—அவர் ஒரு மகத்தான மனிதனாயிருந்தார். அவர் பரிசுத்த ஆவியில் நிரப்பட்ட இந்த சபையை, வழி நடத்தி…ஓ அவர் ஒரு… அவர்கள் யாவரும் ஆவியினால் நிரப்பட்டிருக்கும்படி செய்தார்; தன் முழு சபையாரும் அதைப் பெற்றிருக்கச் செய்தார். தேசம் முழுவதிலும் கிறிஸ்தவர்கள் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்கள். 73 பாருங்கள், தேவன் தம்முடைய தூதனிடம் பேசுகிறார். தூதன் சபையின் ஜனங்களிடம் பேசுகிறார். அப்பொழுது அது தான் நடக்கிறது. நீங்கள் பாருங்கள். அவர் ஜனங்களையும் தூதனையும் தேவனுக்குள்ளாக ஒரே விதமாக வைக்கிறார்; நீங்கள் பாருங்கள், அந்த குழுவினரினூடாக பரிசுத்த ஆவியானவர் நிரம்பி வழிகிறார்.

3974 கிறிஸ்தவர்களை அவர்கள் அநேக வேளைகளில் கொலை செய்தபோது, அவர்களிலிருந்து, ( அந்தவிதமாக ) தனியாக அவர்களது ஊழியக்காரரை நிறுத்தி, ஒரே நேரத்தில் அவர்கள் அனைவரையும் கொன்றார்கள். என்னென்ன கொடுமைகளையெல்லாம் அவர்கள் கிறிஸ்தவர்களுக்குச் செய்தார்கள்! அவர்கள் கிறிஸ்தவர்களை சுட்டெரித்தனர். அவர்கள் மரக்கட்டைகளில் கிறிஸ்தவர்களை ஆணியறைந்து, காட்டு நாய்களை அவிழ்த்துவிட்டு அவர்களை பின்புறப் பகுதியிலிருந்து கடித்து மாம்சத்தை தின்னும்படி செய்தனர். அவர்கள் மரிக்கும் முன்னரே அவர்களது குடல்கள் வெளியே இழுக்கப்பட்டு விடுமாறும் செய்தனர். பெண்களை எடுத்து, வலது மார்பகத்தை அறுத்துவிட்டு, அப்படியே நின்றபடியே இருக்க வைத்து, இருதயம் துடிக்க துடிக்க, இரத்தம் சொட்ட சொட்ட, பதைபதைக்க அப்படியே தலை கீழாக விழுந்து மரித்துப் போகும்படி செய்தனர். நிறைமாத கார்ப்பிணிகளின் வயிற்றைக் கீறி, குழந்தைகளை வெளியே எடுத்து, தாய்மார்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கச் செய்து, அந்த சிசுக்களை பன்றிகளுக்கு இரையாகக் கொடுத்தார்கள். இவ்வாறு எல்லா விதமான கொடுமைகளையும் அவர்களுக்கு இழைத்தார்கள்.

4075 கிறிஸ்தவத்தை பின்பற்றுவதாக அறிக்கை செய்கிற மக்கள் இவ்விதமான கொடுமைகளையெல்லாம் செய்வார்கள் என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்க்க மாட்டீர்கள். ஆனால் கவனியுங்கள்; “உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்கு தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்” என்று வேதத்தில் இயேசு கூறினாரே. இதைச் சொன்ன அதே இயேசுவானவர், மீண்டும் கடைசிக் காலத்தில் இப்படியிருக்கும் என அதை ஆவியினால் முன்னுரைத்திருக்கிறார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அது வந்தாக வேண்டும். இந்த மற்றக் காரியங்கள் வேதத்தோடு பூரணமாக சரியாக ஒத்திருக்கையில், இது சரித்திரத்தின் மூலமாக மிகவும் சரியாக வேதவாக்கியங்களோடு பொருந்துகிறதா இல்லையா என்பதைக் கவனித்துப் பாருங்கள். இவ்வாறு நடக்கும் என்று தேவன் கூறினார். அது அவ்வாறே நடைபெற்றது என்பதைக் கூற வரலாறு இங்கே உள்ளது. அது இங்கே சம்பவிக்கும் என்று தேவன் கூறினார். இங்கேயே அது சம்பவித்தது. பாருங்கள், மிகவும் சரியாக இருந்திருக்கிறது. அப்படியானால், நாம் வாழ்கிற இந்த லவோதிக்கேயா சபைக் காலத்தில் (பாருங்கள், நாம் இப்பொழுது எங்கேயிருக்கிறோம்) அதற்கெதிராக உரைக்கப்பட்டுள்ள ஆபத்துகள் மற்றும் காரியங்களைப்பற்றி நாம் என்ன செய்யப் போகிறோம்?

4176 எனவே இப்பொழுது, அடுத்தபடியாக இது, அதாவது, ஒரு நாள் மார்ட்டி அறையில் ஜெபித்துக் கொண்டிருக்கையில், சபையார் காத்திருந்தனர். அச்சமயத்தில் ஒரு பிச்சைக்காரன் வந்து அவரது கதவைத் தட்டினான். (அவர் ஜெபிக்கிற அலுவலாக இருந்த போதிலும்) அவனுக்கு கதவைத் திறந்தார். அப்பிச்சைக்காரன் தனக்கு தன் நிர்வாணத்தை மறைக்கவும், குளிருக்கு உடுத்தவும், ஒரு—ஒரு ஆடை வேண்டும் என்று வேண்டினான். அவன் கூறினான்…மார்ட்டின் அவனை தலைமை உதவிக்காரரிடம் (Chief Deacon) அனுப்பினார். தலைமை உதவிக்காரர் அப்பிச்சைக்காரனிடம் எரிச்சலைக் காண்பித்து, அவனை வெளியே துரத்தினார். அப்பிச்சைக்காரன் மீண்டும், பரிசுத்த மார்ட்டினிடமே திரும்பி வந்து, உதவிக்காரர் தன்னை துரத்திவிட்டதைப் பற்றிக் கூறினான். 77 எனவே அப்பொழுது அந்த சமயத்தில் தலைமை உதவிக்காரர் அங்கு வந்து மார்ட்டினிடம், “உங்கள் சபையார் உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீர் அவர்களை காக்கவைத்துக் கொண்டிருக்கிறீர்களே!” என்று சற்று கடுமையாக பேசினார். ஆனால் மார்ட்டின் ஜெபத்தில் தரித்திருந்தார். தேவனால் நடத்தப்பட்டு, பிரசங்கிக்க அவர் புறப்படுகிற வரைக்கிலும், அவர் ஜெபத்தில் தரித்திருப்பதே நல்லது என இருந்தார்.

4278 இந்தப் பிச்சைக்காரன் மீண்டும் திரும்பி கதவைத் தட்ட மார்ட்டினிடமே வந்தார். பரிசுத்த மார்ட்டின் தன்னுடைய சொந்த நல்ல ஆடையை கழற்றி அப்பிச்சைக்காரனுக்கு கொடுத்து விட்டு, தலைமை உதவிக்காரரை அனுப்பி தனக்கு இன்னொரு ஆடையைக் கொண்டுவரும்படி சொன்னார். ஆகவே தலைமை உதவிக்காரர் வேறு வழியில்லாமல் ஒரு ஆடையைக் கொண்டு வந்து, அதை பரிசுத்த மார்ட்டினுக்கு அணிவித்தார். மார்ட்டின் தான் கொடுத்து விட்ட தன்னுடைய நல்ல உடைக்குப் பதிலாக, அதைவிட சாதாரணமாக ஒரு உடையையே உடுத்திக்கொண்டு மக்களின் முன்னால் வந்தார். 79 பாருங்கள். இது எடுத்துக்காட்டுவது என்னவெனில், உங்களிடத்திலிருக்கும் மிக நல்லதையே கொடுங்கள். உங்களுடைய ஜீவனைக் கொடுங்கள். உங்களுடைய நேரத்தைக் கொடுங்கள். உங்களுடைய எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கு கொடுங்கள் என்பதைத் தான் காண்பிக்கிறது. கிறிஸ்துவில் ஜீவித்த அதே ஆவியானவர் உங்களிலும் ஜீவிக்கிறார். அது உங்களுடைய அயலகத்தாரிடமும் நீங்கள் இடைபடுகிற மக்களிடமும் ஒரு செல்வாக்கை உண்டு பண்ண வேண்டும். அப்பொழுது கிறிஸ்துவைப் போலவே உங்கள் வாழ்க்கை அமைந்து, கிறிஸ்து செய்த அதே கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.

4380 கடைசியாக, நிழல்களில் கிடத்தப்பட்டிருந்த மக்கள் சுகமடைந்தனர். அவர்களைச் சுற்றி தேவனுடைய அன்பின் வல்லமை அவ்வளவாய் சூழ்ந்திருந்தது. சபையோரே, “பரிசுத்த மார்ட்டின் அந்த சாதாரண அங்கியை உடுத்திக் கொண்டு வந்து பிரசங்கித்த போது, அவரைச் சுற்றிலும் ஒரு ஒளி பிரகாசிப்பதைக் கண்டோம்” என்று கூறினர். உ—ஊ, பார்த்தீர்களா? பாருங்கள், அவர் சரியான காரியத்தைச் செய்திருந்தார். 81 எப்பொழுதும் சரியானதையே செய்யுங்கள். தேவனுக்கென உள்ள உங்களுடைய கடமையைச் சரிவர செய்யுங்கள். சரியானதையே சிந்தியுங்கள். உங்களுக்கென உள்ள கடமை அதுவே. நீங்கள் பிழையற்ற விதத்தில் இயங்க வேண்டும். அதுவே சரியானது, நீங்கள் அவ்வாறே செய்ய வேண்டும்.

4482 இப்பொழுது இன்றிரவு இதன்பேரில் வேதபூர்வமான விளக்கங்களை நாம் கூறும்படி முயற்சிக்கத் துவங்க விரும்புகிறோம். ஏனென்றால் இது மிகவும் வலுவான காரியமாக இங்கே உள்ளது. இப்பொழுது , பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது; 83 இன்றிரவில் அவர் மீண்டும் தன்னுடைய தெய்வீகத்தைக் குறித்து தெரியப்படுத்த கூறுவதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு சபைக் காலத்திலும் அவருடைய மகிமையான நிலை விவரிக்கப்பட்டுள்ளது; பன்னிரெண்டு…இல்லை. “தம்முடைய கையில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தவர்.” இந்த சபைக்காலத்தில், “இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர்” என்று கூறப்பட்டுள்ளதைப் பாருங்கள். பாருங்கள், “வெண்கலம் போன்ற பாதங்களை உடையவர், அக்கினி ஜீவாலையைப் போன்ற கண்கள்” இவ்வாறெல்லாம் அவர் தன்னுடைய தேவத்துவத்தைப் பற்றி திரும்பவும் தெரியப்படுத்துகிறார்.

4584 இப்பொழுது நீங்களோ, “‘இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர்’ என்ற வசனத்தில், ‘தேவத்துவத்தைப் பற்றிய விஷயம் எங்கே இருக்கிறது?’” என்று கேட்கலாம். 85 நல்லது, பட்டயம் என்பது “வார்த்தை” யைக் குறிக்கும். நாம் ஆரம்பத்தில், அவருடைய தெய்வீகத்தைக் குறித்து படிக்கையில் எபிரேயர் 4-ம் அதிகாரத்தில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைப் பற்றிப் பார்த்தோம். “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானத்தாயும் இருக்கிறது” என்று எபி.4:12 ல் பார்த்தோம். அது சரிதானே? அதுவே தேவனுடைய வார்த்தையாயுள்ளது. அப்படித்தானே? இப்பொழுது கவனியுங்கள், நீங்கள்…இந்த வியாக்கியானங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். வார்த்தையைப் பற்றி யோவான் எழுதின சுவிசேஷம் 1-ம் அதிகாரத்தில் பார்ப்போம். “ஆதியிலே (முன்னர்) வார்த்தை இருந்தது,” “அது தான் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தது.” அது சரிதானே? “அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தெய்வத்துவமாயிருந்தது. அந்த தெய்வத்துவம் மாம்சமாகி நம்மத்தியில் வாசம்பண்ணினார்.” அது சரி தானே? “அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள் வாசம் பண்ணினார்.” 86 ஆதியில் இருந்தவர் இதோ இங்கே நின்று கொண்டிருக்கிறார். “‘நான் தான் தேவனுடைய வார்த்தை’ என்பதை இந்த பெர்க…பெர்கமு சபையின் தூதனுக்குச் சொல்லுங்கள்” என்கிறார். ஓ, நாம் அவரை வெளிப்படுத்தின விசேஷத்தில், இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை உடுத்தியவராய், சிரசில் கிரீடம் சூட்டியவராய், வெள்ளைக் குதிரையின் மேல் ஏறினவராய், அவரது தொடையில் “தேவனுடைய வார்த்தை” என்ற நாமம் எழுதப்பட்டவராய் வருகிறதை காண்கிறோம். ஓ, நான் அதை விரும்புகிறேன். அவரே வார்த்தை, அவரே தேவனுடைய வார்த்தை. எனவே அவர் தானே வார்த்தை என்பதை ஆதியில் இருந்த தெய்வத்துவமானவர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்துவதை நாம் காண்கிறோம்.

4687 அவர் ஜீவிக்கிற வார்த்தையாயிருக்கிறாரென்ரால், அப்பொழுது இந்த வேதாகமத்தில் எழுதப்பட்ட வார்த்தை அவரது பாகமாகும். நீங்கள் இந்த எழுதப்பட்ட வார்த்தையை அவருக்குள்ளாக ஏற்றுக் கொள்வீர்களானால், அப்பொழுது (வார்த்தையாயிருக்கிற) இந்த வார்த்தையானது விசுவாசத்தினால் உங்களுக்கு வந்து, அதை ஜீவிக்கச் செய்கிறது, ஏனென்றால்…ஓ! அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். வார்த்தையானது உங்களுக்குள் வருகிறது, அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அங்கே உள்ளேயிருந்தால், அது உயிர்பெற்று, ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுக்கு உண்மையாக ஆகிறது. வேறொன்றுமில்லை…“இந்த மலையைப் பார்த்து ‘பெயர்ந்து போ’ என்று சொல்லி, உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அது பெயர்ந்து போகும்.” அது (என்ன?) ஏனெனில், தெய்வத்துவம் உள்ள நீங்கள் இப்பொழுது பேசுகிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. நீங்கள் சந்தேகப்படாமலிருந்தால், நீங்கள் உரைப்பது நிறைவேறியே தீரும். உங்களிலிருந்து உலகப்பிரகாரமான காரியங்கள் அனைத்தையும் முழுவதுமாக கழித்து வெளியே தள்ளி விட்டால், அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் ஒரு முழுமையான தேவனுடைய குமாரனும், தேவனுடைய குமாரத்தியுமாக ஆவீர்கள். உள்ளே லெளகீகம் இல்லை, அல்லது ஆக்கினைத்தீர்ப்பு இல்லை, சந்தேகம் இல்லை. அந்தவித நிலை என்னவாயிருக்கும்? இனி நீங்களல்ல, உங்களிலுள்ள தேவன் என்ற நிலை உண்டாகும். அப்பொழுது நீங்கள் அவருடைய வார்த்தையை எடுத்துக்கொள்கிறீர்கள், அது ஒரு வாக்குத்தத்தமாக இருக்கிறது. ஆகையால், “பிதாவே, இது உம்முடைய வாக்குத்தத்தம்” என்று கூறுகையில், “சாத்தான்…” ஏதோ ஒரு அசைவு உண்டாக வேண்டும். புரிகிறதா? புரிகிறதா?

4788 அந்த விவகாரம் எப்படியிருக்க வேண்டும் என்று தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துகிற வரையிலும், நீங்கள் அதைச் செய்யமுடியாது. பாருங்கள்? அது என்ன விதமான விவகாரம் என்று வெளிப்படுத்தப்பட்டு அறியும் பொழுது, அப்பொழுது நீங்கள் இயேசுவைப் போல் உரைக்க முடியும். அவரே வார்த்தையாயிருக்கிறார். அது சரிதானே? அதே சமயத்தில் இயேசுவாகிய மனிதன், அந்த கூடாரம், “பிதா எனக்குக் காண்பிக்கிறதெதுவோ அதையே நான் செய்கிறேன்” என்று கூறினார். 89 உங்களுக்கு வார்த்தையானது முதலில் வெளிப்படுத்தப்படாமல் இருக்கிற வரையிலும் நீங்கள் வார்த்தையைப் பெற்றிருக்கவில்லை. நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? “அற்புதங்களின் காலம் கடந்து போய்விட்டது” என்று ஜனங்கள் கூறுவது ஆச்சரியமல்ல, ஏனெனில் அவர்களுக்கு வார்த்தையானது வெளிப்படுத்தப்படவில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியில் விசுவாசங் கொள்ள முடியாததில் வியப்பொன்றுமில்லை, ஏனெனில் வார்த்தை அவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உள்ள ஞானஸ்நானத்தைப் பற்றிய வெளிப்பாட்டை அவர்களால் புரிந்து கொள்ள முடியாததில் வியப்பொன்றுமில்லை, ஏனெனில் வார்தையானது அவர்களுக்கு இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. அதே சமயத்தில் வேறுவிதமாக எவராவது எங்காவது ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்கள் என்பதற்கு ஒரு வேத வாக்கியம் கூட அவர்களுக்கு எந்த இடத்திலும் இல்லை.

4890 பரிசுத்த ஆவியைக் குறித்து வேதம் கூறுவது என்னவெனில், “பரிசுத்த ஆவியினாலேயன்றி, ஒருவனும் இயேசுவானவர் கிறிஸ்து என்று அழைக்க முடியாது” என்று கூறியுள்ளது. அப்படியிருக்க. ஜனங்கள் பரிசுத்த ஆவி சரியென்று விசுவாசிப்பதே இல்லை. புரிகிறதா? பாருங்கள், அவர்களுக்கு அது அருளப்படவில்லை. இயேசு, “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுத்தவை யாவும் (கடந்தகாலம்) என்னிடத்தில் வரும்” என்று கூறினார். ஓ, இது அழகாக இருக்கவில்லையா? “என் பிதா எனக்குத் தந்தவர்கள் யாவரும் என்னிடத்தில் வருவார்கள். கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல் வேறு எவரும் கெட்டுப்போவதில்லை. நான்…(அவன் அந்த நோக்கத்திற்காகவே பிறந்தான்.) என் பிதா எனக்குத் தந்தவர்களை நான் கடைசி நாளில் எழுப்புவேன்” என்றார். 91 ஓ, என்னே! உலகத் தோற்றத்திற்கு முன்னரே, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் ஜீவபுஸ்தகத்தில் நமது பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. ஓ, இது அழகாக இல்லையா? நாம் எவ்வாறு சந்தேகப்பட முடியும்?

4992 ஓ தேவனே, எங்கள் மத்தியிலிருந்து சந்தேகத்தை எடுத்துப்போடும், பெலவீனமான எங்களுடைய மனுஷீக இருதயங்களில் கொஞ்சம் கூட சந்தேகம் என்பதே இல்லாத அளவுக்கு, விருத்த சேதனம் செய்தருளும். அதுவே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. எல்லா சந்தேகங்களையும் நீக்கிப் போடும், கர்த்தாவே. நான் இனிமையானவனாக, பணிவுள்ளவனாக, தேவனுடைய ஒரு ஆட்டுக் குட்டியாக இப்பூமியில் நடமாட எனக்கு அருள்புரியும். அவர் நடந்தது போல் நானும் நடக்கட்டும். அவர் பேசுகிறது போல் நானும் பேசட்டும். அவரது நோக்கங்களைப் போலவே எனது நோக்கங்களும் இருக்கட்டும். மற்றவர்கள் என்னில்—என்னில்…என்னில் இயேசுவை காணட்டும். நான் என்னையே இழந்து, அதை உம்மில் நான் காணட்டும், கர்த்தாவே, நான் என்னையே முற்றிலுமாக இழந்துபோய், அதை உம்மில் கண்டறியட்டும். சந்தேகம் என்பதற்கு கொஞ்சம் கூட இடமேயில்லாதபடி, அவர் கூறுவதை அப்படியே விசுவாசிக்கும்படி என்னை கிறிஸ்துவுக்குள்ளாக முழுவதுமாக மறைத்துக்கொள்ளும். 93 இப்பொழுது இங்கிருந்து புறப்பட்டுச் சென்று, “தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம்! நான் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? தேவனுக்கு மகிமை!” என்று கூறாதிருங்கள். நீங்கள் இன்னும் அதைப் பெறவில்லை என்பதைத் தான் அது காண்பிக்கிறது. அவர் அதை அவ்விதமாகச் செய்யவில்லை, அவர் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, “என்னால் என்ன செய்ய முடியும் பார்க்கிறீர்களா? ஆம் ஐயா, நான் தான் குமாரன்” என்று கூறவில்லை. இல்லை. அவர் எதற்கும் புகழ்ச்சியை எடுத்துக் கொள்ளவில்லை. அவர் அதைத் தேவனுக்கே கொடுத்துவிட்டு, மிகவும் பணிவுடனும், இனிமையாகவும் நடந்து கொண்டார். ஜனங்கள் அவரைச் சூழ எப்பொழுதும் இருக்க விரும்புகிற அளவுக்கு, அவரைச் சுற்றி அவ்வளவு இனிமையான சூழ்நிலை இருந்தது. தன் சத்துருக்களை…அவர் அவர்களையும் மிகவும் நேசித்தார். அவர்களுக்காக அவர் தொடர்ந்து எப்போதும் ஜெபித்தார். அவர் நமக்கு செய்ததுபோல நாம் மற்றவர்களுக்கு செய்வதற்காக, உங்களுக்கும் எனக்கும் அவர் முன்மாதிரியாக இருந்தார்.

5094 இப்பொழுது, நாம் இங்கே மீண்டும் 2-ம் வசனத்தில், அதாவது 13-ம் வசனமாயுள்ளதைக் கவனிக்க வேண்டும். உன் கிரியைகளையும், சாத்தனுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறதையும்…என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் நான் அறிந்திருக்கிறேன். 95 பாருங்கள், சாத்தானின் சிங்காசனம் இருக்கிற இடத்தில் அவர்கள் குடியிருந்த போதிலும், அவர்கள் இயேசுவின் நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். “என்னைப்பற்றும் விசுவாசத்தை மறுதலியாமலிருக்கிறதை” என்பதைப் பாருங்கள். என்ன விதமான விசுவாசத்தை தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்? ஆதியில் உள்ள பெந்தெகொஸ்தேயின் விசுவாசத்தையே கொடுத்தார். அக்காலத்தில் நிக்கொலாய் மதஸ்தரின் விசுவாசம் இருந்தது. அதினால் ஒரு ஸ்தாபன சபையானது எழுப்பப்பட்டுக் கொண்டு இருந்தது. ஸ்தாபனக் கட்டுப்பாட்டுடன் ஒரு சபையானது உருவாகிக் கொண்டிருந்தது. ஆனால் உண்மையான சபையைப் பார்த்து தேவன், “நீ அவர்களை விட்டு விலகி இருக்கிறாய். நான் அவர்களுடைய கிரியைகளை வெறுப்பதுபோல நீயும் வெறுக்கிறாய். என்னுடைய நாமத்தை நீ மறுதலிக்கவில்லை. அவர்களுடைய அந்த கோட்பாடுகளின் பின்னால் நீ சென்று விடவில்லை. நீ ஒழுங்கானபடி என்னுடைய நாமத்திற்காக உறுதியாக நின்றாய். ஆதியில் இருந்ததுபோல, இன்னமும் நீ அந்த விசுவாசத்தைக் கொண்டவளாய் இருக்கிறாய்” என்று கூறினார். ஓ, நான் அதை விரும்புகிறேன்! சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன்… (நீங்கள் அதை அ—ந்—தி—ப்—பா என்று உச்சரிக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்) கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.

5196 “சாத்தானின் சிங்காசனம்”, இந்த இடத்தில் நான் ஒரு நிமிடம் நிறுத்தப் போகிறேன். இந்த விஷயங்களின் பேரில் நாம் நமது முழுக்கவனத்தையும் செலுத்தி இதை ஆராய்வோம். நீங்கள் அதை கிரகித்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் அதைப் பற்றி நிச்சயமுடையவர்களாயிருங்கள். “சாத்தானின் சிங்காசனம்.” சாத்தானின் சிங்காசனம் எங்கேயுள்ளதென்று தேவன் ஆதியாகமத்தில் அறிவித்தார். அங்கே அது பாபிலோனிலிருந்தது. அது எப்பொழுதும் சாத்தானின் சிங்காசனமிருந்த இடமாக இருந்தது. மேலும் வெளிப்படுத்தின விசேஷத்திலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது. ஆனால், பாபிலோனானது, தன்னை அஞ்ஞான மார்க்கம் என்றிருப்பதை “போப்பு மார்க்கம்” என்று மாற்றிக் கொண்டுவிட்டது என்பதை நீங்கள் கவனித்தால் நலமாயிருக்கும். 97 சாத்தானுடைய சிங்காசனம் பெர்கமுவில் ஒரு பெரிய ஒன்றை ஸ்தாபிப்பதற்கு (சில ஆண்டுகளுக்கு) முன்பாக இது நடந்தது. நீங்கள் அவனை கல்தேயர்களின் ராஜ—மதகுரு…என்று அழைப்பீர்கள் என்று நான் யூகிக்கிறேன். பாபிலோனில் இருந்த அ—ட்—ல—ஸ், அட்லஸ் என்னும் பெயர் கொண்ட பெரிய ராஜ—மதகுருவாயிருந்தவன், பெர்சியர்கள் அவனை பின் தொடர்ந்து வந்து படையெடுத்தபோது அவன் பாபிலோனை விட்டு ஓடிவந்து பாபிலோனிய குருக்களாட்சியான தன்னுடைய சிங்காசனத்தை மாற்றிக் கொண்டான். பெர்சியர்கள் படையெடுத்து, பாபிலோனைக் கைப்பற்றி அட்லஸ் என்ற அவர்களுடைய ராஜ—மதகுருவான பாபிலோனிய மன்னனை துரத்திய போது, அவன் கல்தேயர்களிடத்திலிருந்து பெர்கமுவுக்கு ஓடி வந்து, தன்னுடைய சிங்காசனத்தி ஸ்தாபித்துக் கொண்டான். “சாத்தனுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும்.” இதைப் புரிந்து கொண்டீர்களா?

5298 “சாத்தனுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும்” என்று ஆண்டவர் கூறிய பொழுது, வரலாற்று ரீதியாக இவ்வசனத்தின் நிறைவேறுதலாக எங்கே, என்ன நடந்தது என்பதைக் காணவே…நான் சபைச் சரித்திரத்திற்குள் நுழைந்து இவ்வரலாற்று குறிப்புகளை கண்டெடுத்தேன். 99 “‘சாத்தானின் சிங்காசனம்’ என்ற அந்த குறிப்பிட்ட இடம் எங்கே இருக்க முடியும்?” என்று நான் எனக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் இந்த பாபிலோனிய பெரிய அரசன் தன் நாட்டை வென்றெடுத்து பெர்சியர்களுக்கு முன்பாக துரத்துண்டு ஓடிப்போனபொழுது (இது தானியேலின் தரிசனத்தின்படி நடந்த ஒரு காரியமாகும்), அவன் ரோமாபுரியிலுள்ள இந்த பெர்கமுக்கு வந்து, அங்கே தனது தலைமைப் பீடத்தை ஏற்படுத்திக் கொண்டான். சாத்தான் தனது தலைமைப் பீடத்தை பாபிலோனிலிருந்து பெர்கமுக்கு மாற்றிக் கொண்டான். அங்கே தானே (எதிர்காலத்து) புதிய பாபிலோனை சாத்தான் ஸ்தாபிக்கப்போகிறான். ஓ, என்னே! நாம் இப்பொழுது எங்கே இருக்கிறோம் என்பதற்கான ஒரு பின்னணியை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். சரி. 100 அந்திப்பா என்ற இந்த அருமையான சகோதரனை அங்கே தான் அவன் கொன்றான், அங்கேதான் அவன் கொலை செய்யப்பட்டான்.

53101 பின்பு அவன் தன்னுடைய செயல்முறைத் தந்திரத்தை மாற்றிக்கொண்டான். முதலில் அவன் கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்துகிறவனாக இருந்தான். ஓ, கிறிஸ்தவ வழியை அவன் எவ்வளவாய் வெறுத்தான். அவன் தானே ஒரு மதகுரு—இராஜாவாக இருந்தான். சுபாவத்தில் விக்கிரக தேவர்களை வணங்கும் தேவனற்ற அஞ்ஞானியாக இருந்தான். பிறகு அவன் தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு கான்ஸ்டன்டைன் என்ற அரசனுடன் இணைந்து கொண்டு கிரியை செய்ய ஆரம்பித்தான். 102 கான்ஸ்டன்டைன் அரசன் எப்பொழுதும் கொலம்பஸின் வீரர்கள் (Knights of Colombus) என்ற ஸ்தாபனத்தின் மூல கர்த்தா என்று கருதப்படுகிறான். (இப்பொழுது அது முழுவதும் போப்பு மார்க்கத்தின் ஆளுகைக்குட்பட்டிருக்கிறது) அது தான் அந்த இரத்தம் சிந்தத்தக்கதான ஒரு ஆணை சபதத்தைக் கொடுத்தது. (நான் பயபக்தியோடும், மரியாதையோடும் இதைச் சொல்லுகிறேன்), வரலாற்றில் நான் படித்த வரைக்கிலும், எனக்குத் தெரிந்தவரை, கான்ஸ்டன்டைன் ஒரு பொழுதும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்ட மனிதனாயிருக்கவேயில்லை.

54103 ஓர் இரவில் அவன் ஒரு சொப்பனங்கண்டான், அதாவது அவன்…அதில் அவன் ஒரு சிலுவையை கண்டான். இதன் கரணமாக அவன் யுத்தத்தில் வெற்றி பெற்று விடுவான் எனக் கூறினான். அவன் கிறிஸ்தவர்களிடம், தான் யுத்தத்தில் ஜெயிப்பதற்காக ஜெபித்துக் கொள்ளும் படியும், தான் ஜெயித்தால் தானே கிறிஸ்தவனாக ஆகிவிடுவதாகவும், கிறிஸ்தவர்களுக்கு இருந்து வந்த உபத்திரவங்களிலிருந்து அவர்களை விடுவிப்பதாயும் அவன் வாக்களித்திருந்தான். அவன் அன்றிரவில் படுத்து நித்திரை செய்து சொப்பனங்கண்ட அந்த பாலத்தின் கரையிலிருந்து எதிர்ப் பக்கத்து முனையில் நான் நின்று பார்த்தேன். அவன் அங்கு சொப்பனங்கண்டு விழித்து, எழுந்து தன் கேடயத்திலும், தனது வீரர்களின் கேடயங்களிலும் வெண்மை நிறத்தில் சிலுவையை வரைந்தான். அங்கே தான் கொலம்பஸின் வீரர்கள் என்ற நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. அது ரோமன் கத்தோலிக்க ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கிறது. ஆனால் அவன் ஒரு போதும் பக்தி மார்க்கத்துகுகந்த எந்த ஒரு காரியமும் செய்யவில்லை. அவன் மார்க்க சம்மந்தமாக செய்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரேயொரு காரியம் பரிசுத்த சோஃபியா ஆலயக் கட்டிடத்தின் மேல் ஒரு சிலுவையைப் பொறித்ததே. (ஊ!) ஆனால் அவன் ஒரு அரசியல்வாதியாக இருந்தான். அவன் ரோமாபுரியில் அரசனாக இருந்தபொழுது, அவனும் இந்த அஞ்ஞான மதகுருவும் சேர்ந்து கொண்டு, நிக்கொலாய் மதஸ்தர் என்றழைக்கப்பட்டு அவ்வேளையில் வெதுவெதுப்பாயிருந்த சபையை ஒருங்கிணைந்து உருவாக்கினார்கள். கிறிஸ்தவமார்க்கம் ஒரு குருக்களாட்சியை நோக்கியவாறே சாய்ந்திருந்து, அதில் தங்களுடைய சபையை நிறுவ விரும்பினர், நாம் தானே, எபேசு மற்றும் சிமிர்னா சபைக் காலங்களில் நிக்கொலாய் மதஸ்தரைப் பற்றி ஏற்கனவே படித்தோம்.

55104 நிக்கொலாய் மதஸ்தருடைய ஒரு…“கிரியைகளாக” இங்கே முந்தின சபைக் காலங்களில் விளங்கியவை. இப்பொழுது இங்கே இச்சபை காலத்தில் நிக்கொலாய் மதஸ்தருடைய “போதகமாக” ஆகிவிட்டது. ஆதியில் அது “கிரியைகள்” என்றிருந்தது. அங்கே அவர்கள் உள்ளே நுழைய முயற்சி செய்தார்கள். ஆனால் இங்கே இந்த மூன்றாம் சபையின் காலத்தில் அது “போதகமாக” ஆகிவிட்டது. இப்பொழுது அவர்களுக்கு தலைமை மதகுரு மற்றும் பிரபலமானவர்களெல்லாம் உண்டு. இந்த சபைக்காலத்தில் தலைமை மதகுருவை போப் என்று இன்னமும் அழைக்கவில்லை. ஆனால் அவர்கள் பிரதான அத்தியட்சகர் (Arch Bishop) பெரிய நபர்கள் மற்றும் பல கீர்த்தி வாய்ந்த பட்டங்களை சூட்டி அழைத்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களுடைய உபதேசமானது சம்பிரதாய ரீதியில் உள்ளதாக இருந்தது. 105 அவர்கள் ஆவியினால் நிறைந்த, பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட்ட சபையினைவிட்டு தூரமாய் விலகிக்கொண்டே போனார்கள். ஆவியினால் நிறைந்திருந்த சபையை அவர்கள் அப்படியே சிறுபான்மையான கூட்டமாக போகவிட்டு விட்டார்கள். அவர்கள், இவர்களைப் போல் பெரிய ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொள்ள ஒத்துக் கொள்ளாததால், அவர்களை “மததுரோகிகள்” என்று அழைத்தனர். ஆனால் உண்மையான சபையோ, பரிசுத்த ஆவியின் வல்லமையின் ஆளுகை வரம்புக்குள் சுயாதீனராக இருக்கவே விரும்பினர். ஏனெனில் கிறிஸ்து, அவர்களுக்கு இராஜா என்றும், அவர்களோடு இருப்பேன் என்றும் வாக்குத்தத்தம் செய்திருந்தார். ஓ! அவரே அவர்களின் இராஜா!

56106 உண்மையான சபையானது ஒரு போதும் தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. தான் ஒரு குழுவினரால் ஆளப்படவோ… இப்பொழுது நீங்கள் அவர்களை எப்படி அழைக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. அவர்கள் போப்பிற்கு அடுத்த ஸ்தானத்தவர்கள், அத்தியட்சர்கள், போப்புகள், பிழையே செய்ய முடியாதவர்கள் என்பதாக இருக்கிறார்கள். பிழையே செய்ய முடியாதவர் ஒரேயொருவர் தான் உண்டு என்று நாம் விசுவாசிக்கிறோம். அவர் நமது இராஜாவாக இருக்கிறார்; இப்பொழுது பரிசுத்த ஆவியின் ரூபத்தில் நம்மோடு இருக்கிற இயேசு கிறிஸ்து தாமே அவர். தேவன் நம்மில் இருக்கிறார். நமது மத்தியில் வாசமாயிருக்கிறார். நம்மை வழி நடத்திச் செல்கிறார். அவர் தம்மை யாரென்று வெளிப்படுத்துகிறார். ஆதி காலத்து பரிசுத்தவான்களுக்கும், இரத்த சாட்சிகளுக்கும், தாமே சிருஷ்டிப்பின் தேவனாகிய கர்த்தர் என்றும், பிணியாளிகளை சொஸ்தமாக்குகிறவர், மரித்தோரை உயிரோடு எழுப்புகிறவர், தரிசனங்களை காண்பிக்கிறவர், பிசாசுகளைத் துரத்துபவர் என்று காண்பித்துக் கொண்டிருந்தது போல நமக்கும் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

57107 வரலாற்றில் எந்தவொரு இடத்திலும், நிக்கொலாய் மதஸ்தரின் சபை பேராயர்கள் எவரும், எந்த ஒரு சமயத்திலும், எங்காவது மரித்தோரை உயிரோடு எழுப்பியதுண்டா என்ற அதுபோன்ற எந்த காரியத்திற்குமான சான்றை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் (உயிர்த்தெழுந்த) கிறிஸ்து அவர்களின் இருதயங்களில் இருக்கவில்லை. அவர்கள் தங்களுடைய வழிகளில் தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டு, ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்குவதற்காக விலகிப் போய், அதன் மூலம் தங்களுடைய சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப் போட்டார்கள். ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபையோ தன்னில் கிறிஸ்துவின் வல்லமையைப் பெற்று இருந்தது. மற்ற சபையோ அதில் பிரமுகர்களைக் கொண்டிருந்தது; ஆனால் உண்மையான சபை ஆவியானவரோடு நிலைத்து நின்றது. நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? சரி.

58108 இப்பொழுது இது…இந்த கான்ஸ்டன்டைன் அரசன் தன் இராஜ்யம் பிளவுபடாமல் இணைந்து இருப்பதற்காக இங்கே இந்த ஒரு காரியத்தைச் செய்தான். அவன் இந்த நிக்கொலாய் மதஸ்தரைத் தெரிந்து கொண்டு, அவர்களிடம் போனான். (அதுவே கிறிஸ்தவ மார்க்கத்தின் வேஷமாயிருந்தது) நீங்கள் அதை தெளிவாக புரிந்து கொண்டீர்களா? அவர்கள் வெறும் பெயர்க் கிறிஸ்தவர்கள், அவர்களை பரிசுத்த ஆவியைப் பெறாமாலேயே தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள். ஓ, உங்களுக்குள் இந்தக் காரியம், நீங்கள் இதை அசட்டையாக விட்டு விடாதபடி, ஆழமாகப் பதிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாருங்கள்? அது, பரிசுத்த ஆவியைப் பெறாத கிறிஸ்தவர்கள் என பெயர் சூட்டிக்கொண்ட மதஸ்தாபன கிறிஸ்தவர்களாவர். அவர்கள் பெயரளவில் கிறிஸ்தவர்களாயிருந்தனர். அவர்கள் கூடிவருதலால் கிறிஸ்தவர்கள் என்று காண்பித்துக் கொண்டனர். அவர்கள் இராப்போஜனம் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் நியமங்களை ஆசரித்தார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலை அவர்கள் நிராகரித்தனர். அவர்கள் மத்தியில் அற்புத அடையாளங்கள் இருக்கவில்லை, அவைகள் கடந்த காலத்தில் நடந்ததாக அவர்கள் கூறிக்கொண்டனர். ஒரு ஆளுகைக்காகவே தாங்கள் ஒரு சபையை நிறுவிட வேண்டியுள்ளது என்று கூறினர். என்ன விதமான ஆளுகை என்பதைப் பற்றி இன்னும் ஒரு நிமிடத்தில் பார்ப்போம். புரிகிறதா?

59109 எனவே பரிசுத்த ஆவியைப்பெற்ற சபையானது, அவ்விதமான காரியங்களில் இருந்து தன்னை விலக்கியே வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், பெர்கமுவில், அக்காலத்துக்கென்று சொல்லப்பட்டவைகள் யாவும், அச்சபைக் காலத்துத் தூதனுக்கே சொல்லப்பட்டிருக்கிறது. புரிகிறதா? காரணமென்னவெனில், இதைச் செய்வது தூதனுக்குரிய பொறுப்பாயிருந்தது. 110 ஆனால் கான்ஸ்டன்டைன் உண்மையான கிறிஸ்தவ வழியைப் பற்றி அக்கறையுள்ளவனாய் இருக்கவில்லை. அவன் தன்னுடைய அஞ்ஞான முன்னோர்களின் வழியையும், அவனது அஞ்ஞான சபையையும் கொண்டுவர விரும்பினான். லவோதிக்கேயாவில் வேரூன்றியிருந்த… இல்லை நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் மற்றும் போதகங்கள் ரோமாபுரியில் ஆழமாக வேரூன்றிப் போய் ஒரு பெரிய ஆடம்பர தோற்றத்தையுண்டாக்கியது. அதில் இருந்த மக்கள் அநேகர் பெயரளவில் தான் கிறிஸ்தவ விசுவாசிகளாக, வெறும் ஆசார ரீதியில் இருந்தார்கள். உண்மையான சபை சிறுபான்மையினாராக இருந்தது. எப்பொழுதும் அப்படியே இருந்தது. எப்பொழுதும் அப்படியே இருக்கும். நான் ஒரு நிமிடம் காத்திருக்கப்போகிறேன், அது உண்மையாகவே ஆழமாய்ப் பதியட்டும். புரிகிறதா? 111 ஞாபகத்தில் வைத்திருங்கள். உண்மையான சபை எப்பொழுதும் சிறு கூட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. அது மற்ற சபைகளிலிருந்த வெளியே தள்ளப்பட்டவர்களின் கூட்டம். உண்மையான சபை ஒரு போதும் மத-ஸ்தாபனமாக ஆகவில்லை. அது புவியில் வாழும் காணக்கூடாத இயேசுகிறிஸ்துவின் சரீரமாகும். அதன் உறுப்பினர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் அசைவாடிக் கொண்டிருக்கிறார். எனவே, கிறிஸ்துவை நீங்கள் இயக்கமற்ற ஒரு ஸ்தாபனமாக ஆக்க முடியாது. நீங்கள் அவரை அவ்வாறு செய்ய முடியாது. இப்பொழுதுள்ள லவோதிக்கேயா சபையின் காலத்திற்கும் இதே நிலையை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இவைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் உரைக்கிற ஒவ்வொரு வார்த்தையும், ஒலி நாடாவில் பதிவாக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய உண்மையான சபை ஒரு போதும் ஸ்தாபனமாக ஆக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதை சிந்தையில் வைத்திருங்கள்.

60112 கத்தோலிக்க சபை தான் உலகிலேயே முதலாவதாக ஏற்பட்ட ஸ்தாபனமாகும். அதற்கு முன்பாக ஸ்தாபனம் ஏதுமில்லை. கத்தோலிக்கர்கள் இன்று கூறுகிறபடி, அது தான்—அது தான் “தாய்ச் சபை” ஆகும். அதுதான் “தாய் சபையாகும்.” ஸ்தாபன சபைகளுக்கெல்லாம் தாய் அவள் தான். வேதம் அவளை அவ்வாறே அழைக்கிறது. எனவே நீங்கள் அதைக் குறித்து சர்ச்சை செய்ய முடியாது. அவர்கள் “அதுவே தாய்ச்சபை” என்று சொல்லும் பொழுது, அது சரி தான். அவள் தான் தாய்ச்சபை. வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் அவளை சித்தரித்து காண்பிக்கப்பட்டுள்ளது. நாம் நேரடியாகவே அவளைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். சரி.

61113 கான்ஸ்டன்டைன், தன் இராஜ்யபாரத்தை பெலப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தை மனதில் கொண்டவனாய், (ரோமாபுரி எப்பொழுது செய்ததுபோல, உலகத்தின் திறவுகோலை அது பெற்றிருக்கும்படி) தன் அஞ்ஞான மதத்தின் கொள்கைகளை கொண்டுவந்து, கிறிஸ்தவ போதனைகளை அகற்றிவிட விரும்பினான். இவ்வாறு செய்வது எப்படியாயினும் அவர்களை ஒருங்கிணைத்து, அதன் மூலம் தனது இராஜ்யபாரத்தை பிளவுபடாமல் பலப்படுத்திக் கொள்ளவும், தன் இராஜ்யம் எல்லாவற்றிலும் முதன்மையாக விளங்கவும் விரும்பினான். பார்த்தீர்களா? ஏனென்றால் அவன்…அது கான்ஸ்டன்டைன் அரசனை உலகிலேயே தலைசிறந்த அரசன் என்று ஆக்கிவிடும். 114 மனந்திரும்பின விஷயத்தில் அவன்—அவன் ஒரு அரசியல்வாதியாகவே இருந்தான். ஆனால் அவன் தேவனுடைய பரிசுத்தவான் அல்லவே அல்ல. ஆனால் சிலர் அவனை அவ்வாறு ஆக்க முயற்சிக்கிறார்கள். அவன் அவ்வாறு இல்லை! அவன் ஒரு போதும் கிறிஸ்தவ சத்திய வழிக்கு கொஞ்சமாவது ஒத்து இருக்கும் எந்தவொரு கிரியையும் செய்ததாக எனக்குத் தென்படவில்லை. அவன் நிக்கொலாய் மதஸ்தரின் சபை ஒன்றில் ஒரு சிலுவையை ஸ்தாபித்தான். கிறிஸ்தவத்திற்கு சம்மந்தம் உள்ளது போல் காண்பித்த அந்த கிரியை ஒன்று தான் அவன் செய்ததாகும். ஆனால் அது எனக்கு கிறிஸ்துவமாக தென்படவில்லை. அவன்…அன்றிரவில் அவன் சிலுவையை சொப்பனத்தில் கண்டபோது, அவன் வீரர்களின் கேடயங்களில் சிலுவை அடையாளத்தைப் பொறித்தான். ஏனென்றால் அவன் யுத்தத்தில் ஜெயிக்க வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் அவனுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தனர். 115 அது, அவனது இராஜ்ய பாரத்தை பெலப்படுத்தும் என்பதினால் தான் அவன் அப்படி செய்தான். இதை அவன் செய்வதற்காக, அவன் இந்த நிக்கொலாய் மத கிறிஸ்தவ சபையினுள், அஞ்ஞான வழிபாட்டு முறைகளைக் கொண்டு வந்தான். அவன் உருவாகிக்கிட்ட அதை சடங்காச்சார சம்பிரதாய முறைகளைக் கொண்ட ஸ்தாபன சபை என்று தான் அழைப்பேன். அவன், இந்த நிக்கொலாய் மதஸ்தரின் சபைக்குள் அஞ்ஞான வழிபாடுகளை கொண்டு வந்தான். அதுவே கத்தோலிக்க மதத்தின் பிறப்பாயிருந்தது.

62116 சகோதரனே, நான் இப்பொழுது வரலாற்றிலிருந்து மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஆயிரக்கணக்கான கத்தோலிக்க நண்பர்கள் உண்டு. பிராடெஸ்டென்டுகள் எனக்கு நண்பர்கள் போல இவர்களும் நண்பர்கள். ஆனால் ப்ராடெஸ்டெண்டுகள் அவர்களைப் பார்த்து சப்தமிட முடியாது. இன்றிரவு முடிகிற வரையிலும் பொறுத்துக் கொள்ளுங்கள். பாருங்கள். பாருங்கள்? ப்ராடெஸ்டெண்டுகளும் அதே காரியத்தைத் தான் செய்தார்கள் என்பதை நீங்கள் காணப் போகிறீர்கள். பானையானது கொப்பரையைப் பார்த்து, எண்ணெய் பிசுக்காய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பாருங்கள், காரணம் இதுவும்—இதுவும் அப்படித்தான் இருக்கிறது. அதே ஆவிதான் அவர்கள் மத்தியிலும் நிலவி வருகின்றது. நான் ஏன் ஸ்தாபனத்தை எப்பொழுதும் கண்டனம் பண்ணி வருகிறேன் என்பதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளப் போகிறீர்கள். ஏனெனில் அது தவறாக இருக்கிறது! என்னிலிருக்கிற ஆவியானவர் அவைகளுக்கெதிராக சப்தமிடுகிறார், அப்பொழுது என்னால் அதைப்பற்றி எப்போதும் வாயை மூடிக்கொண்டு இருக்க முயற்சித்தாலும் முடியவில்லை. அவர்கள்…

63117 பெரிய மனிதர்களும், மதத் தலைவர்களும் என்னிடம், “நீர் உம்முடைய ஊழியத்தை பாழாக்கிகொள்வீர் சகோதரன் பிரான்ஹாம், ஏனென்றால் உங்களுக்கு சம்மந்தமில்லாததையெல்லாம் நீர் செய்து கொண்டிருக்கிறீர். அது உங்களுடைய வேலையல்ல. தேவன் உம்மை வியாதிப்பட்டவர்களுக்கு ஜெபிக்கத்தான் அழைத்தார்.” என்று கூறியிருக்கிறார்கள். 118 தேவன் பிணியாளிகளுக்கு ஜெபிப்பதற்காக என்னை அழைத்ததைக் காட்டிலும் மேலான காரியத்திற்காகவும் என்னை அழைத்திருக்கிறார். பிணியாளிகளுக்காக ஜெபிப்பதன் மூலம் ஏற்படும் ஒரு காரியம், மக்களுடைய கவனத்தை ஈர்த்துக் கொள்ள முடிகிறது. அது அவ்வளவுத்தான். பிணியாளிகளுக்காக ஜெபிப்பது ஒரு சிறு காரியமாகும். புரிகிறதா? செய்தி இருக்கிறதே அது தான் நாம் பேசிக் கொண்டிருக்கிற முக்கிய காரியம் ஆகும். மற்ற காரியங்களெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும். வியாதிப்பட்டிருக்கும் ஒரு மனிதன் வியாதியிலிருந்து குணமடைந்து, பிறகு மீண்டும் அவன் மரிக்கலாம். ஆனால் தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு மனிதனே, நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறான். ஆகையால் தேவன் வெறுமென சுற்றித்திரிந்து வியாதியஸ்தரை குணமாக்கிக் கொண்டே மட்டும் செல்லுவதில்லை. அந்த வரமானது சபையிலே, உள்ளூர் சபையிலே உள்ள ஒன்று, ஒன்று, அதன்பின் மற்றொன்று, அதன்பின் மற்றொன்று, புரிகிறதா? அந்த வரங்களில் சபையினூடாக கிரியை செய்து கொண்டே போகிறது. ஆனால் நித்திய ஜீவனோ அதை விட மேலானது. நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். சரி.

64119 கிறிஸ்தவர்களைக் கவரவும், அஞ்ஞானிகளைக் கவரவும் வேண்டி அவைகளை ஒன்று சேர்த்து இணைத்து, ஒரு சபையாக உருவாக்கவே, கத்தோலிக்க சமயம் பிறந்தது. 120 ஓ, இங்கே அன்றொரு இரவு, யாரோ ஒருவர் கொடுத்த ஒரு துண்டு தாளில் குறிக்கப்பட்ட குறிப்பொன்றை நான் இப்பொழுது உடையவனாயிருந்தால் நலமாயிருக்கும், ஆனால் வைத்துவிட்டு வந்துவிட்டேன். நான் அதைக் கொண்டு வரப் போவதாயிருந்தேன். ஆனால் நான் அதை மறந்துவிட்டேன். அங்கே அறையில் உள்ள அதில் அநேக காரியங்கள் உள்ளன. அதில், இதே விதமான காரியத்தை இன்றைக்கும் எவ்வாறு செய்து வருகிறார்கள் என்பது விவரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலில் நீங்கள் அந்த மனிதனை தேர்ந்தெடுத்ததின் மூலம் அதைச் செய்ய ஆரம்பித்தீர்கள். இப்பொழுது அவர்கள் கத்தோலிக்கரைப் பாதிக்காத வரையிலும், யூதரைப் பாதிக்காத வரையிலும், பிராடெஸ்டெண்டுகளைப் பாதிக்காத வரையிலும் இருக்கதக்கதான எல்லோரும் ஒத்துக் கொள்கிற மாதிரி உள்ள ஒரு வேதாகமத்தை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்களாம். எல்லோருக்கும் ஏற்ற மாதிரி உள்ள ஒரு வேதாகமம் அவர்கள் தயாரிக்கப் போகிறார்கள். இன்னொரு கான்ஸ்டன்டைனின் தந்திரத்தைக் கண்டீர்களா? வரலாறு தானே மீண்டும் திரும்புகிறது. இப்பொழுது நீங்கள் பாருங்கள், நான்…அதைப்பற்றி அன்றொரு இரவில் நான் ஒரு குறிப்பை படித்துக் காட்டினேன், அதை நீங்கள் கேட்டீர்களல்லவா? அக்குறிப்பை நான்—நான் வீட்டில் விட்டு வந்து விட்டேன். அவர்கள் நீண்டகாலமாக அம்முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்கள்.

65121 இப்பொழுது அவர்களை கூறுவது, “62-ல் அவர்கள்…” “XXXII—வது போப் யோவான், அனைத்து குமாரத்தி சபைகளையும், தாய்ச் சபையிடம் திரும்பி வந்துவிடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். கவலைப்படவே வேண்டாம். அவள் வந்து விடுவாள். அவர்கள் வந்து விடுவார்கள். அவள் வந்து கொண்டு, அதாவது ஏற்கனவே திரும்பி வந்து விட்டாள். அவர்கள் திரும்பி போக வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே இப்பொழுது அங்கேயிருக்கிறார்கள். 122 நான் கூறிக்கொண்டிருந்தது போலவே, “இந்த தேசமும், ‘நல்லது, திரு.கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டால், கத்தோலிக்கரள் மேற்கொண்டு விடுவார்கள்” என்று கூறியுள்ளது. மேற்கொண்டு விடுவார்களா? நீண்ட காலத்திற்கு முன்பாகவே அவர்கள் அதை செய்து விட்டார்கள். ஆனால் நீங்கள் அதைக் குறித்து ஒன்றும் அறியவில்லை. அவர்களுடைய ஆசிரியர்களுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்கள்? எவ்வாறு அவர்கள் தங்களுடைய பள்ளிகளுக்கு இதெல்லாம் கிடைக்கும்படி செய்து கொண்டு, கத்தோலிக்க சமயக் கோட்பாடுகளை எவ்வாறு தங்கள் பள்ளிகளில் கற்பிக்கிறார்கள்? வரி செலுத்துகிற நீங்கள் அதற்காகவும் செலுத்துகிறீர்கள்? ஓ, சரியாக உங்கள் கண் முன்னே, இக்காரியம் நடைபெறுகிறது. ஓ, என்னே! அவன் எவ்விதமாய் கிரியை செய்திருக்கிறான்! வேதம் அவன் முகஸ்துதிகளினால் அதை எடுத்துக் கொள்வான் என்று கூறியுள்ளது. அவன் அவ்வாறே செய்தான். பாருங்கள், அது உண்மை; பாருங்கள், ஒன்றுமில்லாததன் பேரில் வரி செலுத்துதல். எனவே, ஓ, இவ்வாறு அதிகமான காரியங்கள் இங்கே கூறப்படக் கூடும். நான் இத்தோடு நிறுத்திக் கொண்டு விஷயத்திற்கு திரும்பிப் போக வேண்டும்.

66123 இந்தக் காரியம் ஒழுங்காய் நடைபெற, கான்ஸ்டண்டைன் சபைக்குள்ளாக, அஞ்ஞானிகள் மற்றும் கிறிஸ்தவர்களின் கவனத்தை கவரும்படியாக, ஏராளமான உலகப் பிரகாரமான பொழுது போக்கு அம்சங்களை ஏற்படுத்தினான். நீங்கள் ஆவிக்குரிய சிந்தையைக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? இது இவ்வேளைக்குரிய செய்தியாக இல்லையா? சபையில் சூதாட்ட சீட்டு விளையாட்டு, விருந்துகள், வாகன திறவுகோல்களை ஒன்று சேர்த்து குலுக்கி எடுத்தல் போன்றவை உள்ளன. அந்த வல்லரசை இப்படியாக மீண்டும் ஒன்று சேர்த்து, ஒரு குறிப்பிடத்தக்க ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள கிரியை நடக்கிறது. சரியாக இங்கே இவையாவும் உள்ளன. 124 இப்பொழுது, அது சரித்திரமாய் இருக்கிறது. இதில் எவருக்கும் எந்தவித சுயநலமும் இலாப நோக்கும் கிடையாது. என்ன நடந்ததோ அதை அப்படியே சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அவன் அதைச் செய்தான், நிக்கொலாய் மதஸ்தருடைய சபையை ஒருங்கிணைக்க, சபை ஐக்கியமாக இருப்பதற்காக, அவன் உலகப் பிரகாரமான உல்லாசப் பொழுதுபோக்குகளை சபையில் கொண்டு வந்தான். ஆனால் அவனால் மறுபடியும் பிறந்த சபையை தொடவே முடியவில்லை என்பது நினைவிருக்கட்டும். இல்லை ஐயா, அவர்களில் எவரையும் தொட முடியவில்லை. ஆனால் சம்பிரதாய ஆச்சாரங்களைக் கொண்ட நிக்கொலாய் மதஸ்தரின் சபையோ அதற்காக விழுந்துவிட்டது.

67125 நம்முடைய பராடெஸ்டெண்டு சபைகளில் நாம் என்ன உடையவர்களாயிருக்கிறோம்? இரவு நேர சமுதாய விருந்துகள், களியாட்டுகள், செயற்கை சறுக்கு விளையாட்டு, (ஓ, என்னே!) துணி விற்றல் மற்றும் இன்ன பிற காரியங்கள் உள்ளன, பாருங்கள். இப்பொழுது, அது உண்மையென்று நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, நண்பர்களே, அது தேவனுடைய வார்த்தையானால், அது சத்தியமாயிருக்கிறது. எல்லா பிராட்டெஸ்டண்டு சபைகளும் குற்றமுள்ளவைகளாக இருக்கின்றனவே! புரிகிறதா? 126 இவ்விதமான இரவு நேர சமுதாய விருந்துகளையும், நடனங்களையும், அடிதளத்தில் நடத்துகிறார்களே, இதெல்லாம் தங்களுடைய சபைப்போதகருக்கு தசமபாகம் கொடுப்பதற்கு பதிலாக, அதற்குப் பதிலாக ஏதாவது கொடுத்துத் தீர்க்கவே செய்கிறார்கள், இவையெல்லாம் தேவனுடைய திட்டம் அல்ல. ஜனங்கள் தங்கள் தசம்பாகங்களை செலுத்த போதிக்கப்பட்டிருந்தால் அங்கே யாவும் அதற்கேற்றபடி இருக்கும். அது தேவனுடைய திட்டமாயிருக்கிறது. தேவனுக்கு ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால் மனிதனோ, தன்னுடைய சொந்த திட்டத்தை தேவனுடைய திட்டத்தோடு கலப்படம் செய்துவிடுகிறான். சரி.

68127 இவ்வாறெல்லாம் அக்காலத்தில் அவர்கள் செய்து, தங்களை ஒருங்கிணைத்து, ஆதிக் கத்தோலிக்க சபையை உருவாக்கினார்கள். அதன் பிறகு அந்த முதலாவதான நிசாயா ஆலோசனை சங்கத்தில்…அதைப் பற்றி நான் படிக்கையில், நான் முழங்கால் படியிட்டேன். மகத்தான நிசாயா ஆலோசனை சங்கம் கி.பி.325-ல் கூடிய பொழுது, யாவரும் ஒன்றாக இணைக்கப்பட்டனர். அத்தியட்சகர்கள், கிறிஸ்தவ விசுவாசப் பிதாக்கள் எனப்பட்டவர்களும் நிசாயாவில் கூட்டி சேர்க்கப்பட்டனர். அது கி.பி.325-ல் நிசாயா என்ற இடத்தில் நடந்ததால் தான் நிசாயா ஆலோசனை சங்கம் என்றழைக்கப்படுகிறது. ஆயிரத்து ஐநூறு பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டனர். வந்திருந்த பிரதிநிதிகளில் சபையின் மக்கள் அத்தியட்சகர்களைவிட, அதிகமாயிருந்தனர். அதாவது ஐந்துக்கு ஒன்று என்ற (பிரதிநிதிகள்) விகிதத்தில் சபை ஜனங்களும் அத்தியட்சர்களும் முறையே இருந்தனர். ஆனால் நிக்கொலாய் மதத்தினரினூடாக (குளிர்ந்து போன சடங்காச்சாரங்கள்) மற்றும் கான்ஸ்டன்டைனின் அரசியல் ரீதியிலான திட்டத்தின் மூலமாக உண்மையான சபையானது தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் வென்றார்கள். அதன் பேரில் மனிதன் பரிசுத்த குருத்துவ ஒழுங்கின் மூலம் எல்லா அதிகாரமும் அத்தியட்சகர்கள், உதவிப் பேராயர்கள், போப்புகள் ஆகியவர்களுக்கு கையளிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தை விட்டு அகற்றப்பட்டார்.

69128 கடந்த தேர்தலில் இதேவிதமான வஞ்சகச் செயலை ஜனநாயாகக்கட்சி செய்தது. அது உண்மை. இப்பொழுது நாம்…நான்…குடியரசுக் கட்சியினருங் கூட அதேவிதமாக கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட காரியத்தைப் பற்றி நான் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன், அதாவது அவர்கள் அநேக இடங்களிலும் ஒரேவிதமாக ஒட்டுப்போடும் இயந்திரங்களை நிறுவியிருந்தார்கள். அதில் நீங்கள் நிக்சனுக்கு வாக்களித்தால், கென்னடிக்கும் ஒரு வாக்கு பதிவாகிவிடுமாம். அந்த அளவுக்கு அதை அமைத்திருந்தார்கள். அவர்கள் (எட்கர் ஷூவர் எனபவர்) மூலம் கலிபோர்னியாவில் அதைப் பற்றி நிரூபித்துவிட்டார்கள். நிக்சனுக்கோ வெற்றி பெறும் ஒரு வாய்ப்பே இல்லாதிருந்தது. இப்பொழுது அது தவறு அவர்கள் நிரூபித்து விட்டனர். அப்படியிருந்தும் ஏன் இன்னமும் அவர்கள் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை? நாம் அப்படிப்பட்டதான் ஒரு வேளையில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். அவர்கள் மோசடியாக இதைச் செய்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டபோதிலும், அவர்கள் அதை அறிந்திருந்தும், அவர்கள் அதைப்பற்றி ஏதும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்.

70129 அது அன்றைக்கு இருந்த வஞ்சக திட்டமாக இருந்தது. இன்றைக்கு அதன் மறுபிறப்பையும் இக்காலத்தில் பார்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட மனிதனை தேர்ந்தெடுக்கவும். ஒரு போதகத்தை நம்பவைத்து ஏற்றுக் கொள்ள வைக்கவும். இவ்வஞ்சகம் கிரியை செய்கிறது. நிக்கொலாய் மதஸ்தருடைய போதகம், முன்பு கிரியை களாக மட்டுமே இருந்து வந்தது. இப்பொழுது அது “போதகம்” ஆகிவிட்டது. ஆனால் ஆல் ஸ்மித்தின் நாட்களில் அது கிரியைகளாக இருந்ததோ, இப்பொழுது அது ஒரு “போதகமாக” ஆகிவிட்டது. உ—உ, உ—ஊ. இப்பொழுது இது இங்கே நம்மேல் வந்து இருக்கிறது. “ஓ அவன் ஒரு கவர்ச்சிகரமான ஜனாதிபதியாக திகழுவான்” என்கிறார்கள். அதைப்பற்றி என் மனதில் எந்த சந்தேகமுமில்லை. அடுத்த பதவிக் காலத்திற்காக, அவன் இந்த அஞ்ஞானிகளையும் சடங்காச்சார கிறிஸ்தவர்களையும் ஒன்று சேர்த்து இணைத்து வைப்பான். 130 போப்பிற்கு அடுத்த ஸ்தானத்தவர்களையும், போப்புகளையும் ஒன்று சேர்ப்பதற்காக, அவர்கள் ஒரு வேதாகமத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இங்கிலாந்திலிருந்தபோது, நான் இங்கிலாந்தின் தலைமைப் பேராயர் அவர்களையும், கான்டர்பரியின் தலைமைப் பேராயரையும் நான் சந்தித்து, நான் கைகுலுக்கி, அவரோடு சம்பாஷித்தேன். (ஓ!) கிட்டத்தட்ட அவருடைய இடுப்பிலிருந்து இருக்கமான காலுறையணிந்து ஒரு விதமான விசித்திரமான அங்கியுடுத்தியவராக அவர் இருந்தார். ஆனால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆங்கிலிகன் சபை தலைமை பேராயர் தான் போய் போப்பை சந்தித்தார். அது என்ன? நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம்.

71131 எனவேதான் நான் இங்கே மேடைகளில் நின்றிருந்து பிரசங்கித்து, வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு பதிலாக இன்றிரவு இங்கே நான் நின்று கொண்டிருக்கிறேன். அவர்கள் யாவரையும் நான் இங்கே இந்த மேடையில் இருந்து சந்திக்க இயலாது. (இந்த செய்திகள் ஒவ்வொன்றாக வருகின்றன). எனவே தான் நாம் இச்செயல்களை ஒலி நாடாவில் பதிவு செய்து உலகம் முழுவதும் அனுப்பி, அவர்களை எச்சரித்து, விசுவாசத்திற்கு திருப்பும்படியாக செய்து கொண்டிருக்கிறோம். 132 ஆதி கிறிஸ்தவ காலத்தின் இறுதியில், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்திற்கு முன்னால் உள்ள யூதாவின் நிரூபம் எழுதப்பட்டது. பரிசுத்த யூதா இயேசுவின் வளர்ப்பு சகோதரன். அதாவது இயேசுவோடு (உடன் வளர்க்கப்பட்ட சகோதரன்) என்று கருதப்படுகிறது. “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாக போராட வேண்டும்” என்று யூதா எழுதினான். கர்த்தராகிய இயேசுவின் மரணத்திற்குப் பின்னால் அவர்கள் விசுவாசத்தை விட்டு வழி விலகிப்போனார்கள். இன்றிரவு அவர்கள் இன்னும் எவ்வளவு அதிதூரமாக விலகிப் போய்விட்டார்கள்? பாருங்கள்.

72133 இந்த முதலாவதாக நிசாயா ஆலோசனை சங்கம் கி.பி. 330…கி.பி.325-ல் நடைபெற்றது. சுமார் ஆயிரத்து ஐநூறு பிரதிநிதிகளும் பேராயர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் சபையை, ஜனங்களை, அந்தக் குழப்பமான, கொந்தளிப்பான நிலையில் இருந்த அந்த ஆலோசனை சங்கத்தில், மதகுருக்கள் கை ஓங்கி, அவர்கள் இவர்களை கட்டுபடுத்திவிட்டார்கள். அவர்கள் மக்களை தடுத்தாட்கொண்டு, நிக்கொலாய் மதஸ்தர் சபையை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கு வசதியாக, அதன் சார்பாக வாக்களித்தார்கள். இதனால் சபைக்கு இருந்த அதிகாரமானது பேராயர்களிடம் கையளிக்கப்பட்டு, அவர்கள் தான் சபையை ஆள வேண்டும் என்றும், அவர்கள் தான் வார்த்தையின் பேரில் எந்தவொரு காரியத்தையும் செய்யவேண்டியதாயிருந்து என்னும் நிலை ஏற்படுத்தப்பட்டது. 134 இன்றைக்கு கத்தோலிக்க சபையில் உள்ள நிலையை நீங்கள் கவனித்தீர்களா? “நீங்கள் வேதத்தை வாசிக்கக் கூடாது, அதற்கு வியாக்கியானம் கொடுப்பது உங்களுக்கு அடுத்தது அல்ல. பேராயர் தான் செய்ய வேண்டும்” என்ற நிலை உள்ளது. அது எங்கிருந்து வந்தது என்று பாருங்கள். இப்பொழுது நிக்கொலாய் மதஸ்தர் எவ்வாறு தந்திரமாக மெல்ல தவழ்ந்து ஊர்ந்து உள்ளே நுழைவதற்கு முன்னால், எப்படியிருந்தார்கள் என்பதை நீங்கள் காணமுடியும். அங்கேயே தான் அது பிறந்தது. அது உண்மை. அது ஒரு கிறிஸ்தவ வேஷமாயிருந்தது; இன்னமும் அப்படியே தான் உள்ளதே! 135 அதன் பிறகு ப்ராடெஸ்டெண்டுகள் அதே மாதிரியாக இருக்கிறார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில், வேதம், “தாயும் அவளுடைய குமாரத்திகளும்” என்று கூறியுள்ளது. கர்த்தருக்கு சித்தமானால் நாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் அதைப்பற்றி பார்க்கவுள்ளோம். இன்றைக்கும் அதே விதமாகத்தான் உள்ளது என்பதை நீங்கள் கவனியுங்கள். அவர்கள் கைவசப்படுத்திக் கொண்டு விட்டார்கள். கான்ஸ்டன்டைன் பிலேயாமின் தந்திரத்தை உபயோகித்தான்.

73136 இப்பொழுது, நீங்கள் உங்களால் முடிந்தளவு இதை மிகவும் கவனமாக கேட்க முயற்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, இங்கே, தேவன் வேதத்தில் “என் விசுவாசத்தை நீ பற்றிக் கொள்” என்று கூறினார். இப்பொழுது: …சில காரியங்களைக் குறித்து உன் பேரில் எனக்குக் குறை உண்டு; (அப்படிப்பட்டவர்கள் இங்கே இல்லை, ஆனால் அங்கே; அவர்கள் அப்படிப்பட்டவர்களை உடையவர்களாயிருந்தனர், “பெர்கமு சபையில் அங்கே உன்னிடத்தில் இருக்கிறார்கள்,” பாருங்கள்) …விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு. 137 பிலேயாம் கையாண்ட அதே தந்திரத்தைத்தான் கான்ஸ்டன்டைனும் கையாண்டான். நிசாயா ஆலோசனை சங்கம் கூட்டத்திற்குப் பிறகு, அவர்கள் ஒரு கூட்டத்தை கூட்டினார்கள். நிசாயா கூட்டத்தில், அத்தியட்சகர்களை சபைகளின் மேல் ஆதிக்கம் செலுத்த வைத்து, சபையிடமிருந்து அனைத்து அதிகாரத்தையும் பறித்துவிட்டார்கள். “சபையோர் தங்களுக்கென சிந்தித்துப் பார்க்க தேவையில்லை. வேத வாக்கியங்களை வியாக்கியானிக்கவும் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை” என்று ஆக்கப்பட்டது. வேத வாக்கியங்களைப் பற்றி வியாக்கியானிக்கவும் மற்றும் இன்ன பிற காரியங்களையும் செய்யவும் மதகுருவுக்கு மட்டுமே அதிகாரம் இருந்தது.

74138 இறுதியாக, சிறிது காலத்திற்குப் பின்பு, அவர்கள்…ஒரு பிரதான குருவை ஏற்படுத்தினார்கள், அவன் தான் போப், பிரதி-குரு. ஆனால் இப்பொழுது, “எல்லா ஞானமும் அறிவும் மதகுருவுக்கே உரித்தானதாகும். எனவே சபையார் வேதத்தைப் படிக்க வேண்டியதில்லை; அவர்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை” என்ற அளவுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். வெளிப்படையாகச் சொன்னால், அவர்கள்…வேத புத்தகம் அவர்களிடத்திலிருந்து தங்களுக்கென எடுத்துக் கொண்டு விட்டார்கள். அது நல்லதாக காட்சியளித்ததால், சபையின் மக்களுக்கென அவர்களே—அவர்களே இதைத் தெரிந்தெடுத்து விட்டார்கள். 139 அவர்கள் ஐஸ்வரியவான்களாக இருந்தபடியால் அந்தக் காரியம் நல்லது போல் தோன்றியது. அந்த பெரிய கூட்டத்தில் அவன் அவர்களை ஒன்றாக அழைத்து, கான்ஸடன்டைன் அத்தியட்சகர்களுக்கு அருமையான கட்டிடங்களைக் கொடுத்தான். அவனிடம் ஏராளமான பணமும், பெரிய பெரிய கட்டிடங்களும் இருந்தன. அவன் அவைகளிலிருந்து சபைக்கென, அவர்கள் சபை வீடுகளாக உபயோகிக்கும்படி கொடுத்தான். ஓ, அவை அருமையான கட்டிடங்கள், யாவும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவைகளை அவன் சபைக்கென்று கொடுத்தான்.

75140 அதுவுமல்லாமல், அவ்வரசன், அந்த அத்தியட்சகர்களை மகத்தான பெரிய அங்கிகளினால் உடுத்துவித்து, நல்ல உள்ளாடைகளையெல்லாம் செய்வித்தான். அதுவுமட்டுமின்றி, பெரிய கட்டிடத்தை கட்டி, அதில் அவர்களை விக்கிரகம் போல் அமரவைத்தான். அவர்கள் அமர்ந்திருக்கிற இடத்திற்குக் கீழாக, சலவைக் கற்களால் ஆன பீடங்களையும் உண்டாக்கினான். அஞ்ஞான வழிபாட்டில் காணப்படும் முறைமைகளை அப்படியே கடைப்பிடித்து, அவைகளை கிறிஸ்துவமதத்திற்குள் கொண்டுவந்து, அதில் அத்தியட்சகரை வைத்துவிட்டான். பாருங்கள், அவர்கள் விக்கிரகத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் அத்தியட்சகரை வைத்துவிட்டனர். பாருங்கள், அவனுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, அதே காரியம், அவனை தேவனாக ஆக்கிவிட்டனர். அத்தியட்சகரை அங்கே ஏற்படுத்தி, அவன் கூறுவதே சட்டம் என்று ஏற்படுத்தி, அவனை மிக அலங்காரமான உடை உடுத்துவித்து, ஒரு தேவனைப் போல அவனை ஆக்கிவிட்டான். அவர்களுடைய அஞ்ஞான தேவர்களைப் போல் அத்தியட்சகர் காட்சியளிக்க வைப்பதை செய்யாமல், இயேசு அணிந்திருந்தது போல ஒரு அங்கியை அவனுக்கு உடுத்துவித்தனர். பாருங்கள்? அத்தியட்சகரை ஒரு விக்கிரத்தைப் போல் தோற்றமளிக்கும்படி உட்கார வைத்தனர். 141 ஓ, அன்றைக்கு இருந்த அஞ்ஞானி ஒருவன் என்ன சொல்லியிருப்பான் என்பதை கற்பனை செய்து பார்க்கலாம். “நல்லது, அங்கே நம்மோடு பேசி நமக்கு பதிலளிப்பதற்கு ஒருவர் இருக்கிறார். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியும், நாம் இதுவரைக்கிலும் பேசமாட்டாத ஒரு விக்கிரகத்தோடு மட்டும் பேசிக் கொண்டிருந்தோமே” என்று கூறியிருப்பான்.

76142 கிறிஸ்தவர்கள் எவ்வாறு எண்ணியிருப்பார்கள் என்றால், “நல்லது, அது ஒரு அருமையான காரியம் தான். இப்பொழுது நாம் விரும்பும் எந்தவொரு காரியத்தையும் நாம் செய்து கொள்ளலாம். ஏனென்றால் நம்முடைய தேவன் அங்கிருக்கிறார். நாம்…நம்மால் அவரிடத்தில் பேச முடியும். நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் நமக்கு திரும்பி பதிலளிப்பார். நாம் பாவம் செய்தால் நாம் அதைப்பற்றி அவரிடம் போய் சொல்லலாம். ஏதாவது கொஞ்சம் அவருக்கு நாம் கொடுத்தால் போதும், அல்லது சிறிது நோன்பு செய்தாலும் போதும் முதலாவது காரியமென்னவெனில், இவைகளையெல்லாம் நாம் செய்துவிட்டால் அப்பொழுது நாம் சுத்தமாகி விடுகிறோமே. எனவே மறுபடியும் புறப்பட்டுச் சென்று விருப்பப்படி நாம் செய்து கொள்ள நாம் விடுதலையடைந்திருக்கிறோம். நாம் எதை பற்றியும் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறியிருப்பார்கள். 143 மாம்ச சிந்தையுள்ள மனிதனுக்கு இன்னமும், “ஓ, அது நன்றாகத்தான் காணப்படுகிறது. நிச்சயமாக” என்று சொல்லுகிற அளவுக்கு அது இருக்கிறது—ஆனால் மறுபடியும் பிறந்த தேவ பிள்ளையிடம் நீங்கள் அதை நுழைத்துவிட முடியாது. அவர்களை அதைச் செய்யும்படி ஒருபோதும் செய்ய முடியாது. அவன், தான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிந்திருக்கிறான், அவரிடத்தில் அவன் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறான். பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருக்காக இலக்கை நோக்கி, அவன் தொடருகிறான். ஆமென்! ஓ, நான் எவ்வளவய் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்!

77144 சலவைக்கல் பலிபீடம் அவனுக்கு கீழாக அமைக்கப்பட்டது. பிரமாதமாக உடுத்தியிருந்த, சொகுசான சபை. ஓ, என்னே, எல்லாம் நேர்சீராயிருந்தது. சரி. இந்த பலிபீடம் சலவைக் கற்களால் கட்டப்பட்டு, மிகவும் அழகாக இருந்தது. நீங்கள் அதைப் பார்க்க வேண்டும். அதே விதமாகத்தான் இருக்கிறது. பொன்னிலும், முத்துக்களினாலும், ஆபரணங்களினாலும் பலிபீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது அழகாயிருந்தது! நிக்கொலாய் மதஸ்தருக்கும், அஞ்ஞானிகளுக்கும் ஏற்றதாக அது அமைந்திருந்தது. அவன் என்ன செய்தான் என்று பார்த்தீர்களா? அவன் அஞ்ஞானிகளின் சடங்குகளையும், அஞ்ஞான கொள்கைகளையும் எடுத்துக் கொண்டான், கிறிஸ்துவ மார்க்கத்தையும் எடுத்துக் கொண்டான். அவர்கள் குளிர்ந்து போன சம்பிரதாய முறைகளை அறியாமலும், அவர்களை வித்தியாசமாக நடத்திச் செல்ல பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளாமலுமிருந்தனர். அவர்களுக்கென ஒரு தேவனை பூமியில் உண்டாக்கி, அவர்களுக்கென்று ஒரு பலி பீடத்தையுண்டாக்கி, அவர்கள் பாவங்களை மன்னிக்க அங்கே அமரத்தக்கதான ஒரு தேவனையும் உண்டாக்கிக் கொடுத்தான். நீங்கள் ஆவிக்குரியவர்களாக இருக்கிறீர்களா? நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அது என்னவென்று புரிகிறதா? பாவமானது பூமியில் பாவ மன்னிப்பை கொடுத்துக் கொண்டிருந்தது. 145 நான் இதை என்னுடைய சிந்தையிலிருந்து எடுத்து மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கவில்லை. அது சரித்திரமாக இருக்கிறது. ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன் மற்றும் கெட்டிஸ்பெர்க் யுத்தத்தைப் பற்றியும் நான் குறிப்பிட்டால் அது எந்த அளவுக்கு உண்மையாக இருக்குமோ அதை போல் இதுவும் இருக்கிறது. எனவே வரலாற்றில் பக்கம், எண் இவைகளை நான் உங்களுக்கு குறிப்பிட்டுக் கூறமுடியும். தூய்மையானதாக வரலாறும் இருக்கிறது. நன் இங்கே மேற்கோள்காட்டிக் கொண்டிருக்கிற அந்தக் காரியங்களெல்லாம் சரித்திரமாயிருக்கின்றன.

78146 இப்பொழுது, அப்பொழுது அது மிகப்பொருத்தமாய்…மறுபடியும் பிறந்த சபைக்கு இருக்கவில்லை. இல்லை, ஐயா! அவர்கள் அங்கே ஒரு மனிதனை அத்தியட்சகராக நியமித்து, அவன் சடங்காச்சார விழாக்களில் பிரமாணங்களை மனப்பாடமாகக் கூறும்படிச் செய்தார்கள். அதினால் பூரண சுவிசேஷம் முழுவதும் வெளியே தள்ளப்பட்டது. இன்றைக்கும் அவ்வாறே அது செய்யப்படுகிறது. அந்த காலங்களில் நடந்த காரியங்கள் யாவும் அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு காலத்திற்குள்ளும் நீடித்து பரவி வந்தது. பாருங்கள். வேறு ரூபத்தில், வேறு நாளுக்குள் என்று இருந்தது. ஓ, அவர்கள் அங்கே ஒரு பெரிய கெளரவமிக்க பிரமுகரை தேவனைப் போல் வைத்தபோது, அவன் சில சடங்காச்சார ஜெபங்களை சொல்லி வந்தான். 147 அஞ்ஞானிகள் தங்களுடைய இறந்த போன முன்னோர்களிடம் வேண்டுதல் செய்து வந்தார்கள் என்பதைக் கவனியுங்கள். ஒரு ப்ராடெஸ்டெண்டு சபையானது நின்று கொண்டு, “நான் பரிசுத்த ரோமன் கத்தோலிக்க சபையையும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தையும் விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிறது. மெத்தோடிஸ்டுகளே, பிரஸ்பிடேரியங்களே, லூத்தரன்களே, உங்கள் முகங்களை மூடிக்கொள்ளுங்கள். மரித்த ஆவிகளோடு பரிந்து பேசும் எந்தக்காரியமும் மரித்த ஆவியுலக தொடர்பு கோட்பாடாயுள்ளது. நிச்சயமாக. ஆனால் இப்பொழுது ப்ராடெஸ்டெண்டுகள் கத்தோலிக்கரைப் பார்த்து பரிகசிக்க முடியாது. ஏனெனில் அவர்களும் இதே காரியத்தையே செய்கிறார்கள். கத்தோலிக்கரின் இந்த சர்வ பரிகார அறிக்கையை இவர்களும் விசுவாசித்து அதைச் செய்கிறார்கள்; கத்தோலிக்க முறையிலேயே தண்ணீர் ஞானஸ்நானத்தையும் கொடுக்கிறீர்கள். சரியான ஒழுங்கிலே வாழ முயலும் மக்களை இவர்கள் புறக்கணித்து, அவர்களை கேலி செய்கிறார்கள். தேவனுடைய வல்லமையால் ஆரவாரிக்கும் மக்கள் நிறைந்த ஒரு சபைக்குச் சென்று, அங்கே வெளியே நின்று கொண்டு அவர்களை பரிகசிக்கிறார்கள். இவையணைத்தும் செய்கிறார்கள்.

79148 பாருங்கள், ஆவிகள் மரிப்பதில்லை; மக்கள் மரிக்கிறார்கள். ஆனால் ஆவிகள் மரிப்பதில்லை. பாருங்கள்? பரிசுத்த ஆவி மரிக்க முடியாது. அது இயேசுவின் மேலிருந்தது, இப்பொழுது அது சபையில் இருக்கிறது, அது அவர் தம்முடைய சபைக்காக திரும்ப வருகிறவரையிலும் தொடர்ந்து இருக்கும், ஏனென்றால் அது அவருடைய ஒரு பாகமாக் உள்ளது. புரிகிறதா? கிறிஸ்தவர்களை அன்றைக்கு துன்பப்படுத்தினவர்கள், அவர்களை—அவர்களை அந்நாட்களில் பரிகசித்தார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு ஜீவிக்கிறார்கள். தேவன் தன்னுடைய மனிதனை பூமியிலிருந்து எடுக்கிறார், ஆனால் தன்னுடைய ஆவியை பூமியை விட்டு எடுத்துக் கொள்ளவில்லை. பிசாசு தன்னுடைய மனிதனை எடுத்து விடுகிறான். ஆனால் ஆவியையோ பூமியிலிருந்து எடுப்பதில்லை. 149 இயேசுவின் மரணத்தை தீர்ப்பளித்த அந்த ஆசாரியர்கள், அவரைக் “குறி சொல்லுகிறவர்” அல்லது “பிசாசு” என்று அழைத்தார்கள். அவர்கள் பெரிய பக்திமான்கள். அது உண்மை. அவர்கள் வேத வாக்கியத்தை எழுத்துக்கு எழுத்து என்பதின்படி அறிந்திருந்தார்கள். ஆனால் அதற்குரிய உண்மையான வியாக்கியானத்தையோ அறியாதிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த கருத்தினை உடையவர்களாய் இருந்தார்கள், அவர்கள் வேறு எதற்கும் செவி கொடுக்காதவர்களாய் இருந்தனர். அவர்கள் அவரைக் கண்டபொழுது,… இயேசுவைக் குறித்து ஒவ்வொரு தீர்க்கதரிசியும் கூறினவைகளை நிறைவேறத்தக்கதாக இயேசு அப்படியே சரியாக இருந்தபோதிலும், அதை எவ்வாறு அவர்கள் காண தவறினார்கள்? ஆனால் அவர்கள் குருடாயிருந்தார்கள். நாம் இரட்சிப்புக்கான ஒரு தருணத்தை அடையும்படி, தான் அவர்களை ஒரு நோக்கத்திற்காக குருடாக்கினார் என்று தேவன் கூறினார்.

80150 இப்பொழுது வேதம் மீண்டும் இதை முன்னுரைத்துள்ளது; பெந்தெகொஸ்தேயின் காலத்தில் நாம் இருக்கிறோம். இக்காலத்தைப் பற்றி, “நிர்வாணி, நிர்பாக்கியமுள்ளவன், குருடன், அதை அறியாமலிருக்கிறான்” என்று சொல்லப்பட்டுள்ளது. அதுவே சபையின் நிலைமையாயுள்ளது. பிலதெல்பியா. ஓ, சடங்காச்சாரமான பாப்டிஸ்டுகளே, பிரஸ்பிடேரியன்களே, பெந்தெகொஸ்தேயினரே! நீங்கள் அங்கே இருப்பதைப் பாருங்கள். சில சமயங்களில் இங்கே உட்கார்ந்து இருக்கிற உங்களை நான் குறிப்பிடுகிறதில்லை. என் செய்தி ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது எங்கேபோகிறது என்பதை நான் அறிவேன். புரிகிறதா? மனந்திரும்புங்கள்! வேதாகமத்திற்கு திரும்பி வாருங்கள்! கிறிஸ்துவண்டைக்கு திரும்பி வாருங்கள்!

81151 சரி, பரிபூரண சுவிசேஷம் வெளித்தள்ளப்பட்டது, ஆனால் அதுதான் சம்பவித்தது. சபையில் இருந்த அடையாள அற்புதங்கள் இல்லாமற் போய்விட்டன. தங்கள் நடுவிலிருந்து பரிசுத்த ஆவியைப் பெற்ற மக்களை அவர்கள் வெளியே தள்ளிய பொழுது, அற்புத அடையாளங்கள் இருந்த அப்படியொரு நாளே இருந்ததில்லை என்று மறுதலிக்கவும் செய்தார்கள். இன்றைக்கும் அவர்கள் அதே காரியத்தைத் தான் செய்கிறார்கள். அது சரியாக அதேவிதமாயுள்ளது. அதனுடைய ஆவியை உங்களால் காண முடியவில்லையா? நான் ஆரம்பத்தில் கூறியவாறு, நீங்கள் உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள். தேவன் உங்களது இருதயத்தை திறக்கட்டும். முன் கூட்டியே ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம். உட்கார்ந்து செவிகொடுத்து, “பரிசுத்த ஆவியானவரே, எனக்கு வெளிப்படுத்தும், நான் அதைக் காண்கிறேன். அதோ அது அவ்வாறேயுள்ளது” என்று கூறுங்கள்.

82152 மத சடங்காச்சார விழாக்கள், எங்கே அவையுள்ளன? பாப்டிஸ்டுகள், ப்ரெஸ்பிடேரியன்கள், பெந்தெகொஸ்தேயினர் கூட, மதசடங்காச்சார விழாவினை உடையவர்களாக ஆகிவிட்டார்கள். ஒரெயொரு காரியம் என்னவெனில், இசைப்பேழையை அடித்து வாசித்து, மேலும் கீழும் குதிக்கிறார்கள்; இசைப்பேழையின் இசை நின்றதும் நின்று விடுகின்றனர். அங்கிருந்து வெளியே புறப்பட்டுப் போய், திருடி, ஏமாற்றி, பொய்சொல்லி மற்றும் இன்ன பிற காரியங்களைச் செய்கிறார்கள். ஆனால் உண்மையில்…இவர்களுக்கு சண்டையிட போதுமான முன்கோபமுள்ளவர்களாயிருந்து, மற்றவர்களைப் பற்றியும், மற்ற காரியங்களைப் பற்றியும் பேசிக் கொண்டேயிருப்பார்கள். பாருங்கள்? அங்குதான் காரியமே உள்ளது. மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரெஸ்பிடேரியன்கள், கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, ஆனால் இந்த லவோதிக்கேயாவின் காலத்தில் உள்ள பெந்தெகொஸ்தே சபையுங்கூட அவ்வாறுதான் உள்ளது. 153 ஓ, உங்களுடைய முற்பிதாக்கள் பெற்றிருந்த அந்த உன்னத நிலைக்கு நீங்கள் ஏன் திரும்பிச் செல்லக்கூடாது? நம்மை பரிசுத்தப்படுத்தி, பரிசுத்த ஆவியினால் நம்மை நிரப்பக்கூடியதும், கிறிஸ்துவை நம்மண்டை கொண்டு வரக்கூடியதுமான உண்மையான பெந்தெகொஸ்தே அனுபவத்திற்கு நாம் ஏன் திரும்பி வரக்கூடாது. அதுவே நமக்குத் தேவையாயிருக்கிறது. சரி. அதே அனுபவம் தான் இன்றைக்கு நமக்குத் தேவை!

83154 பெர்கமு என்ற வார்த்தைக்கு, “விவாகம் செய்து கொண்ட” என்று அர்த்தமாம். பெர்கமு என்ற அதே வார்த்தைக்கு “விவாகம் பண்ணிக் கொண்ட” என்று அர்த்தமாம். (சடங்காச்சார ரீதியில் இருந்து வந்து நிக்கொலாய் மதஸ்தருடைய பெயர்க் கிறிஸ்தவ மதமானது) அரசியல் ரீதியிலான அரசாங்கத்துடன், அஞ்ஞான சடங்காச்சாரங்களுக்குள் விவாகம் செய்து கொண்டு விட்டது. அஞ்ஞான சடங்காச்சார விழாக்கள், அந்நாளில் அவ்விவாகம் தான் கத்தோலிக்க சபையின் பிறப்பைக் கொண்டு வந்துது. 155 கத்தோலிக்க சபை நிசாயா ஆலோசனை சங்கத்தில் தான் தோன்றியது என்பதை எவரும் அறிவர். அதற்கு முன்பாக அது நிக்கொலாய் மதஸ்தர் என்று தேவனால் அழைக்கப்பட்டது. அதனுடைய அர்த்தம் நிக்கோ—நிக்கோ —“வெல்லும்படி” மேற்கொள்ளுதல், அல்லது “சபையை வீழ்த்தி அடக்கி ஆளுதல்” என்பதாம். அவர்கள் அதைச் செய்தபொழுது, மக்கள் மத்தியில் ஆவியானவரும், போதகர்களும் இருக்க அவர்கள் விரும்பவில்லை. போதகர்கள் என்றால் மேய்ப்பர்கள் என்று அர்த்தமாம். பரிசுத்த ஆவியானவரை வழி நடத்த அனுமதிக்கும்படி விரும்பவில்லை…

84156 “ஏன் மதகுரு ஒரு மேய்ப்பனாக இருக்க முடியாது?” என்று நீங்கள் கேட்கலாம். என்னவிதமான உணவை அவர் உங்களுக்குத் தருகிறார்? பெந்தெகொஸ்தே நாளில் உண்டானது போன்ற அதே பலன்களை நீங்கள் பெற்றுள்ளீர்களா? நிச்சயமாக இல்லையே! “மரியே வாழ்க” என்ற கோஷத்தை பெந்தெகொஸ்தே நாளில் எங்கே காண்கிறீர்கள்? நோன்புகளும், தெளித்தலும், ஊற்றுதலும், திரித்துவ தேவ நாமத்தினால் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினால்) செய்கின்றார்கள். அவைகளை நீங்கள் பெந்தெகொஸ்தே நாளில் எங்காவது காண்கிறீர்களா? “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவை தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்பதை இஸ்ரவேல் வீட்டார் அறியக்கடவீர்கள்” என்று இயேசு கூறினார். அது உண்மையே. இப்படியிருக்க, இந்தக் காரியங்களை எங்கே நாம் பெற்றுக்கொள்கிறோம்? அது துவக்கத்தில் நிக்கொலாய் மதஸ்தருடைய கிரியைகள், பிறகு போதகமாக ஆகி, பிறகு கத்தோலிக்கம் உருவாகிட காரணமாகியது.

85157 இப்பொழுது நீங்கள், “நான் அவர்களுக்கு மத்தியில் இருக்கவில்லை என்பதற்காக நான் நிச்சயம் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் அதைப்பற்றி மிக உறுதியாக இருக்க வேண்டாம். பாருங்கள்? இப்பொழுது நீங்கள் நிக்கொலாய் மதஸ்தரின் கிறிஸ்தவ மார்க்கத்தை நினைவில் கொள்ளுங்கள். அந்த கதையை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? இதற்கு மேற்கொண்டும் நாம் பார்க்கும் முன்னர், கவனமாக செவி கொடுங்கள். இன்றிரவில் நாம் நடு இராத்திரி வரை தங்கியிருக்க வேண்டியிருந்தாலும், அதை நீங்கள் கிரகித்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனவே உ—ஊம்…எனவே,…ஏனெனில் சகோதரனே, அது உனது ஆத்துமாவைப் பற்றியதாயிருக்கிறதே! நீங்களோ, “நான் இன்ன சபையைச் சேர்ந்தவன்…” என்று கூறக்கூடும். அது அதுவல்ல—அது அதுவல்ல. நீங்கள் பரிசுத்த ஆவியையே பெற்றிருக்கவில்லையென்றால் சகோதரனே, நீங்கள் எத்தனை சபைகளைச் சார்ந்திருந்தாலும் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நீங்கள் இழக்கப்பட்டிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால், நீங்கள் தேவனுடைய ஆவியினால் மீண்டும் மறுபடியும் பிறந்திருக்காவிடில், நீங்கள் இழக்கப்பட்டுப்போவீர்கள். ஏனெனில் உங்களுக்கு நித்திய ஜீவன் இல்லை. நித்திய ஜீவனைப் பெற்றவர்களை மாத்திரமே தேவன் எழுப்புவார். ஏனெனில் அந்த ஒரே ஜீவன் மாத்திரமே ஒழிந்து போகாமலிருக்கும்.

86158 ஒரு தானிய விதையானது…நான் ஏற்கனவே இங்கே வேளாண்மை நேரத்தில் செய்யப்பட்ட ஒரு ஒலிபரப்பைப் பற்றி கூறியிருக்கிறேன். ஹென்றிவில் என்ற இடத்தில் உள்ள மெதோடிஸ்டு பிரசங்கியாராகிய அந்த பழங்காலத்து சகோதரன் ஸ்பர்ஜனை எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள்? ஒரு அற்புதமான குணாதிசயம் படைத்த பழங்காலத்தவர். நாங்கள் ரெட் ஃபர்னிஷ்ன் அங்காடியில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்பொழுது எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கூட்டத்தைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது வானொலியில் வேளாண்மை ஒலிபரப்பின் வேளையாக இருந்தது. ரெட் கடையில் இருந்த வானொலிப்பெட்டியை அவர்கள் திருப்பினர். அவர்கள் எங்கிருந்தோ பேசிக்கொண்டிருந்தனர்…உண்மையிலேயே அந்த செய்தி லூயிவில்லிருந்து ஒலிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இயந்திரத்தின் மூலமாக 4-H என்ற நிறுவனம் செய்றகையாக, தேவையான பெட்ரோலியம், கால்ஷியம் இவைகளை செலுத்தி, செயற்கை சோளமானது உற்பத்தி செய்யப்பட்டதைப் பற்றி அதில் கூறினார்கள். அது செயற்கையான முறையில் சோளத்தை உருவாக்கி, அது இயற்கையான சோளத்திலிருந்து சிறிது கூட வேறுபடாமல் அதைப் போலவே இருக்கும்படி செய்திருக்கிறார்களாம்…

87159 4-H என்ற நிறுவனம் அதை செய்திருந்தது, விஞ்ஞானமும் அந்த தானியம் மிக உண்மையான தானியம் போன்ற பரிபூரணமானது என்று கூறியிருந்தது. அவர்கள் (இயந்திரத்தில் உருவாக்கிய) அந்த சோளத்தை, இயற்கையாக நிலத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட சோளத்தைப் போலவே, சோள அவல் மற்றும் சோள ரொட்டி செய்யப்பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தது. நீங்கள் அதை ஆராய்ச்சிக் கூடத்திற்கு எடுத்துச் சென்றால், அங்கே இந்த செயற்கையான வித்தையும், இயற்கையான சோளத்தையும் நீங்கள் உற்று நோக்கினால் ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்திக் காண முடியாதபடி இரண்டும் ஒன்று போல இருக்கின்றனவாம். செயற்கையிலும் இயற்கையிலுள்ளதைப் போலவே, அதே அளவு பெட்ரோலியம், கால்சியம், ஈரப்பசை மற்றும் என்னவெல்லாம் இயற்கையான தானிய மணியில் இருக்குமோ அவைகள் யாவும் அப்படியே செயற்கையான விதத்திலும் இருந்தது. 160 வானொலி நிகழ்ச்சியில் பேசியவர், “நிலத்தில் இயற்கையாக விளைந்தது எது என்றும், இயந்திரம் உற்பத்தி செய்த வித்து எது என்றும் நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமென்றால், இரண்டிலுமே கைப்பிடி அளவு எடுத்த அதை பூமியில் விதையுங்கள். இரண்டுமே அழுகி, அதில் இயந்திரத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட விதை முளைத்து மண்ணுக்கு மேலே கிளம்பி வராது. ஆனால் தேவன் வளர்த்த அந்த விதையே மீண்டும் ஜீவிக்கும்” என்று கூறினர். ஏன்? ஏனெனில் செயற்கையான வித்து உயிர்ப்பிக்கப்படவில்லை.

88161 நீங்கள் ஒரு கிறிஸ்தவரைப் போல காணப்படலாம், ஒரு கிறிஸ்தவரைப் போல நடந்து கொள்ளலாம், உங்களால் செய்ய முடிந்த ஒவ்வொரு நற்கிரியையும் செய்யலாம். உங்களுடைய சபைக்கு உண்மையாக இருக்கலாம். ஆனால் தேவனுடைய ஜீவனாக இருக்கும் நித்திய ஜீவனானது உங்களுக்குள் வந்து, பரிசுத்த ஆவியினால் நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு முளைப்பிக்கப்பட்டாலொழிய மற்றப்படி பயனில்லை. அறிக்கை செய்வதனால் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவி என்னும் வரத்தினால் தான் முளைப்பிக்கப்பட முடியும். நீங்கள் அதை எவ்வாறு பெறுகிறீர்கள்? பெந்தெகொஸ்தே நாளில் மருத்துவர் மருந்து சீட்டு எழுதிக் கொடுத்தார், அது என்னவெனில், “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்பதேயாகும். பரிசுத்த ஆவியின் வரம் தான் நித்திய ஜீவன் ஆகும். அந்த நித்திய ஜீவனையுடையவர்களையே தேவன் மீண்டும் எழுப்புவார். ஜீவனோடிருக்கிறது அது ஒன்று மாத்திரமே, அதை மட்டுமே தேவன் எழுப்பமுடியும். பார்த்தீர்களா? அது ஒன்று மாத்திரமே தேவனிடம் போக முடியும். அது தெளிவாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். தேவனே தெளிவாக இருக்கிற அதை அருளும்.

89162 நிக்கொலாய மதத்தினர் சடங்காச்சார ரீதியிலாக இருந்தார்கள். அவர்கள் அஞ்ஞான சபையை விவாகம் செய்து கொண்டு, அஞ்ஞான பலிபீடங்களை உள்ளே கொண்டு வந்து அதை கிறிஸ்தவ வேஷமணிந்த பீடங்களாக ஆக்கினார்கள். ஒரு அஞ்ஞான கடவுளை உள்ளே கொண்டு வந்து, பேசவும், சொல்லவுமான ஒரு அத்தியட்சகரின் ரூபத்தில் அதை வைத்தார்கள். அதை அங்கே அமர வைத்து, அதற்கு அங்கியணிவித்து, ஒரு தேவனைப் போல் காட்சியளிக்க செய்தார்கள். உங்களுக்குப் புரிகிறதா? அது வெளியே இருக்கிறதானதாக அல்ல, அது உள்ளே இருக்கிறதாகவே இருந்தது. அதாவது இயற்கையும் செயற்கையுமான இரு வித வித்துக்கள் புறத்தோற்றத்தில் ஒன்று போலவே தோற்றமளித்தன. ஆனால் வேறுபாட்டை உண்டாக்கியது எதுவென்றால், உட்புறம் தான். பாருங்கள், அசலான ஒன்றின் உள்ளே ஜீவன் இருந்தது. ஆதி கத்தோலிக்க சபையின் பிறப்பிடம் அங்கிருந்தே உண்டாக்கப்பட்டது, அவளே எல்லா ஸ்தாபன சபைகளுக்கும் தாய் ஆவாள்.

90163 இப்பொழுது நீங்கள், “நல்லது, நான்…சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் கத்தோலிக்கனாக இல்லாத வரைக்கிலும்…” என்று கூறலாம். 164 இப்பொழுது ஒரு நிமிடம், நாம் இங்கே ஒரு வினாடி நிறுத்துவோம், நாம் ஒரு நிமிடம் வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்திற்கு திருப்புவோம். நேராக அந்தப் பகுதிக்கு திருப்புங்கள். இது யாரைப் பற்றிய வெளிப்பாடாக இருக்கிறது? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு, அவரது சபைகளுக்கு அளிக்கப்படுதலாக இருக்கிறது, நான் வாசிக்கையில் கவனமாக கேளுங்கள்: ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே, பூமியின் இராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; 165 இப்பொழுது, நான் ஒரு சாட்சியை அதற்கு உடையவனாயிருக்கும்படியாக, வேதத்தில் ஒரு ஸ்திரீ என்பது, ஒவ்வொரு முறையும் வேதத்தில் ஒரு அடையாளமாக ஸ்திரீ என்று கூறப்பட்டிருப்பது சபையே குறிப்பிடுகிறதை என்பதை எத்தனைபேர் அறிவீர்கள்? சரி. அதே அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள “மகாவேசி”, “ஏழுமலைகள் மேல் அமைந்திருக்கிற நகரம்” தான் அவள் என்று எத்தனை பேர் அறிவீர்கள்? சரி. 166 இப்பொழுது “தண்ணீர்கள்” என்னப்படுவது வேதத்தில் யாரைக் குறிக்கும் என்பதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? அவள் இங்கே “திரளான தண்ணீர்கள்” மேல் அமர்ந்திருக்கிறாள், தண்ணீர் என்றல்ல, ஆனால் “தண்ணீர்கள்” என்று உள்ளது. தண்ணீர்கள் என்பதற்கு “ ஜனங்கள் ” என்று அர்த்தம். ஏன் 15-ம் அதிகாரத்தில் நீங்கள் அதைப் பற்றி இங்கே பார்க்கலாம். பாருங்கள், 15-வது வசனம், பாருங்கள். …அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்கள் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்” (புரிகிறதா? பார்த்தீர்களா?)

91167 இந்த ஸ்திரீயானவள் விசுவாசத்தை விட்டுவிட்டவள் ஆவாள். அப்படிப்பட்டவளாக அவள் இல்லையா? இது உபதேசமாக இருக்கிறது. எனவே, நீங்கள் இப்பொழுது உங்களுடைய மனச்சாட்சியை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். பாருங்கள்? “வேசி” என்று அழைக்கப்படுகிற அந்த அசுத்தமான ஸ்திரீ என்னவாயிருக்கிறாள்? தன்னுடைய திருமண வாக்குறுதிக்கு உண்மையில்லாத ஒரு ஸ்திரீயாக இவள் இருக்கிறாள். இப்பொழுது சபையானது, கத்தோலிக்க சபையானது, தான் கிறிஸ்துவின் மணவாட்டி, கிறிஸ்துவின் மனைவி என்று உரிமை கொண்டாடுகிறாள். கன்னியாஸ்திரீகள் கூட தங்கள் தலைமுடியை முழுவதும் வெட்டிவிட்டுக் கொண்டு, பற்றாசையே இல்லாதவர்களாக இருக்கிறார்கள். “கிறிஸ்துவண்டையே அவர்கள் தங்களுடைய எல்லா பற்றாசையும் வைத்துள்ளனர்” என்று கூறப்படுகிறது. அது சரி தானே? நிச்சயமாக அல்லது வேறு யாராகிலும்… 168 நானும் ஒரு கத்தோலிக்க பின்னணியிலிருந்தே வந்தவன். பாருங்கள். என்னிடம், நமது விசுவாசத்தைப் பற்றிய உண்மைகள் என்ற கத்தோலிக்கப் புத்தகமும், இன்னும் அவர்களுடைய மற்ற புத்தகங்களும் உள்ளன. ப்ராடெஸ்டெண்டுகள் மற்றும் பாப்டிஸ்டுகள் ஆகியோரே நீங்கள் என்ன விசுவாசிக்கிறீர்கள் என்பதைப் பற்றிய புத்தகங்கள் என்னிடம் உள்ளன. நான் அவைகளை படிக்கிறேன், ஏனெனில், அவர்கள் யாரவது வந்து என்னிடம் ஏதாவது கூறினால், “போ!” உங்களுடைய சொந்த புத்தகத்திலிருந்தே எடுத்து சுட்டிக் காட்டுவேன் என்று சொல்லமுடியும் அல்லவா? புரிகிறதா? எனவே இது வெறியேறுவதற்கான வேளையாய் உள்ளபடியால், அந்த நேரம் வந்து விட்டது. 169 முதலாவதாக, தேவன், மக்கள் அறிந்து கொள்ளும்படி செய்ய, தேசம் முழுவதிலும் அசைவாடி, அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து காண்பிக்க வேண்டியதாயிருந்தது. தேவனுடைய ஆடுகள் அவருடைய சத்தத்தை அறியும். அவர்கள் அறிவார்கள். அவர்கள் சரியாக அறிவார்கள். நீங்கள் முதலில் கண்டு பிடிக்க வேண்டும் …அறிந்து கொள்ளாமலேயே நீங்கள் புறப்பட்டுச் சென்றால்…அப்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் அப்பொழுது முன்னைவிட இன்னும் அதிகமாக தீங்கு உண்டாக்குகிறீர்கள். அதை தேவன் தாமே கவனித்துக் கொள்ள நீங்கள் அனுமதிக்க வேண்டும். புரிகிறதா?

92170 “அந்த மகாவேசிக்கு வரப்போகும் நியாயத்தீர்ப்பை நான் உனக்கு காண்பிப்பேன்” அவள் தான் அந்த ஸ்திரீ என்று இருந்ததால், அப்பொழுது அவள் இல்லாத ஒன்றை தான் விசுவாசிப்பதாக கூறிக் கொள்ள வேண்டுமே…அவள் விபச்சாரம் செய்து கொண்டிருந்தாள்! அது சரிதானே? அது சபை என்றால், அவள் தேவனுக்கு எதிராக விபச்சாரம் செய்கிறாள் என்பது புலப்படுகிறது. அது சரிதானே? விபச்சாரம் என்பது இங்கே வேசித்தனமாய், ஆவிக்குரிய வேசித்தனமாய் உள்ளது. அவள் தேவனுடைய வார்த்தையல்லாத ஒரு காரியத்தைக் குறித்து மக்களுக்கு போதித்துக் கொண்டிருக்கிறாள். அது சரிதானே? உண்மையல்லாத ஒரு காரியத்தை அவள் போதித்துக் கொண்டிருக்கிறாள். அதுவே நிக்கொலாய் மதத்தினரின் காரியமாகும். இங்கேயும் அது வருவதைக் கண்டீர்களா? போப்புகளை நியமித்து, மதகுருமார்களை நியமித்து, பரிசுத்த ஆவியானவரை அகற்றி விட்டு, “அற்புதங்களின் நாட்கள் கடந்து போய்விட்டன” என்று கூறுகிறார்கள். வேதம், “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறியுள்ளது. வேதம், “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளது. ஆனால் அவளோ, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்று கூறி, தெளிக்கிறார்கள். சுற்றிலும் ஊற்றுகிறாள். ஓ, என்னே! பார்த்தீர்களா?

93171 சரி, இந்த ஸ்திரீ என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதை கவனியுங்கள். …பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணுனார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே. 172 “குடித்து வெறிகொண்டிருந்தார்களே!” உங்களை கொலை செய்வார்கள். உங்களை மரணாக்கினைக்குள்ளாக்குவார்கள், உங்களை சுட்டுக் கொல்வார்கள் அல்லது வேறு எதையும் அவர்கள் செய்வார்கள், சகோதரரே, அவர்கள் முற்றிலும் அந்தவிதமான காரியத்தால் குடித்து வெறித்திருக்கிறார்கள். புரிகிறதா? 173 “மது.” அவள் தன்னுடைய வேசித்தனமாகிய தன்னுடைய மதுவை, அதைதான் அவள் ஊற்றிக் கொடுக்கிறாள். நான் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லட்டும்! என்னுடைய தாயும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவள் தான். “நானும்…” என்று நீங்கள் கூறலாம். சரி. 174 “அது பயங்கரமானாது” என்று நீங்கள் கூறலாம். ப்ராடெஸ்டெண்டுகளே, ஒரு நிமிடம் பொறுங்கள். ஹூ! (நான் இந்த ஒலிநாடாவைக் கேட்கப் போகிறவர்களுக்காகப் பேசுகிறேன், பாருங்கள்.)

94ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது…சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்—கண்டேன். 175 சிவப்பு நிறம் எதைக் காண்பிக்கிறது? அது “ராஜரீகத்தை” குறிக்கிறது. நான் பொருட்படுத்துவது,…பொருட்படுத்துகிறதோ, “இராஜரீகம், இராஜரீகம், இராஜரீகம்” என்பதேயாகும். பாருங்கள், ராஜாக்களைப் போலவே. …ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான… 176 இந்த ஏழு தலைகளும் , ஏழு “மலைகளாம்”, அதின் மேல் தான் அந்நகரம் அமைந்துள்ளது. அந்த ஸ்திரீதான் அந்த நகரமாகும் என்பதை நாம் அறிவோம். …அந்த ஸ்திரீ இரத்தாம்பர ஆடை தரித்திருந்து… 177 “ஸ்திரீ.” மிருகம் சிவப்பு நிறமுள்ளதாக இருந்தது. ஆனால் அந்த ஸ்திரீ இரத்தாம்பர ஆடை தரித்திருந்தாள். நான் அன்றொரு நாளில் மூன்று விதமான திரைகளைக் குறித்து உங்களை எச்சரிக்கவில்லையா? இன்னும் எவ்வளவு காலம் நான் உயிரோடிருப்பேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதை நினைவில் கொள்ளுங்கள். “ருஷியாவை கவனியுங்கள்” என்று நான் அநேகம் ஆண்டுகளுக்கு முன்பாகக் கூறியது போல். அங்கே மூன்று விதமான திரைகள் உள்ளன. ஒன்று இரும்புத்திரை (iron). மூங்கில் திரை (Bamboo) நாடு ஒன்றுள்ளது. ( அதுவே செஞ்சீனம் ஆகும்) இந்திர நீலத்திரை (Purple) ஒன்றும் உள்ளது. நீங்கள் அந்த திரையை கவனித்திருங்கள், அதுவே வஞ்சிக்கிறவன் ஆகும். ஆகவே அதிக…

95அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு,… (நிக்கோலாய் மதஸ்தரின் முதல் பீடம் எப்படிப்பட்டதாயிருந்தது என்று நான் ஏற்கனவே பேசியுள்ளதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா? புரிகிறதா? ஸ்திரீ “சபைக்கு” அடையாளமாய் இருக்கிறாள்… தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். (உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பலிபீடம் பொன்னினால் மூடப்பட்டிருந்தது. இங்கு பொற்பாத்திரம் உள்ளது. அதிலிருந்து அவள் வேசித்தனமாகிய மதுவை ஜனங்களுக்கு ஊற்றிக் கொடுத்தாள்) 178 அவள் ஜனங்களுக்கு அதைத்தான் கொடுத்துக் கொண்டிருக்க, அவர்கள் அதை விழுங்கிக் கொண்டே இருந்தார்கள். நிச்சயமாக! அவர்கள் அதைத்தான் குடித்து வெறித்திருக்கிறார்கள்! அப்படியே குடித்து வெறித்திருக்கிறார்கள்! ஐயர்லாந்துக்காரர்கள், பிரெஞ்ச்சுக்காரர்கள் இன்னும் மற்றவர்கள், அந்த சபைக்கெதிராக ஒரு காரியத்தை நீங்கள் சொல்லிவிட்டால் உங்களது தொண்டையை அறுத்துவிடுவார்கள். நிச்சயமாக அவர்கள் அவ்வாறே செய்வார்கள். பார்த்தீர்களா? மேலும், இரகசியம், மகா பாபிலோன் …என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. 179 பாபிலோன் எங்கே இடம் மாறி வந்தது? பாபிலோனிலிருந்து அது பெர்கமுவுக்கு வந்தது. சாத்தான் தன்னுடைய சிங்காசனத்தை பாபிலோனிலிருந்து பெர்கமுக்கு இடமாற்றம் செய்துவிட்டான். ஓ, நீங்கள் இதை கண்டு கொள்ளத்தக்கதாக வெளிப்படுத்தின விசேஷம் முழுவதிலும் நான் ஆராய வேண்டுமென விரும்புகிறேன். …மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய். 180 அவள் என்னவாயிருந்தாள்? வேசிகளுக்கு தாயாயிருந்தாள். அவர்கள் புத்திரர்களாயிருக்கவில்லை. அவர்கள் அப்படியாயிருந்தார்களா?

96181 [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] …அவர்களுடைய சபை. ஆம் ஐயா, “வேதத்தில் சபையானது ‘பாபிலோன்’ என்று அழைக்கப்படவில்லையா?” பாருங்கள் அவர்களுடைய சொந்த புத்தகத்தில். சரி. 182 அவள் ஒரு வேசியாயிருந்தால், ஒரு விபச்சாரக்காரி, அவள் வேசிகளுக்கு தாயாகவும் இருந்தாள். அப்பொழுது அவளுக்கு குமாரத்திகள் இருக்க வேண்டும். அவர்கள் தாய் வேசிக்கு குமாரத்திகள் என்றால், அப்பொழுது அவர்கள் பெண்கள் என்று தெரிகிறது. அப்படியென்றால், அவர்கள் சபைகளாக இருக்கிறார்கள். இப்பொழுது ப்ராடெஸ்டெண்ட் சபை எங்கிருந்து வந்தது? அது சரிதானே? ஒரு விபச்சாரிக்கும், வேசிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இரண்டும் ஒன்று தான்.

97183 மார்ட்டின் லூத்தர் வெளியே வந்து, திருப்பும்படி, ஒரு உண்மையான சபைக்கு ஒரு சந்தர்பம், அதேபோல் வெஸ்லி, அதேபோல் பெந்தேகோஸ்தேயினர்; அதிலிருந்து வெளியே வந்த அவர்கள் ஒவ்வொருவரும் மீண்டும் அதே நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்திற்கு உள்ளே சென்று அக்கொள்கையின்படி, ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். இப்படி ஆனவுடன், அவர்களுக்கு பொது கண்காணிகள் மற்றும் இன்ன பிற மனித ஆளுகைக்காரர்கள் உண்டாயினர்; அதே ஞானஸ்நானத்தைக் கடைபிடித்தனர். அதேவிதமான சடங்குகள், ஆச்சாரங்கள், மற்றும் அநேகர் கடைபிடித்திருந்த கத்தோலிக்க ஞானோபதேசமான, ‘ மரியே வாழ்க.’ மரியாள்களே வாழ்க அல்ல, ஆனால்…அதேக்காரியத்தைக் குறித்த அதன் பெயர் என்ன? அதற்கு ஒப்பானது, அப்போஸ்தலருடைய விசுவாசப்பிரமாணம் ஆகிய காரியங்களையும் பின்பற்றினார்கள். சகோதரனே, அப்போஸ்தல விசுவாசப்பிரமாணம் இதை வேதத்தில் எங்காவது எனக்குக் காண்பியுங்கள். அப்போஸ்தலர்களுக்கு என்று ஏதாவது பிரமாணம் ஒன்று இருந்திருக்குமானால், அது அப்போஸ்தலர் 2:38 தான். யாவரும் அதைக் கைக்கொள்ள வேண்டும் என்று அது கட்டளையிடப்பட்டது. எந்தவொரு அப்போஸ்தலனாவது, எப்பொழுதாவது, “நான் பரிசுத்த ரோமன் கத்தோலிக்க சபையை விசுவாசிக்கிறேன். பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை விசுவாசிக்கிறேன்” என்று சொல்லும் பிரமாணத்தை உருவாக்கினார்களா? 184 திறவுகோல்களையுடையவனாயிருந்த பேதுருவும், “தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் கிறிஸ்து இயேசுவைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று கூறினான்.

98185 ஆனால் ப்ராடெஸ்டெண்டு சபைகளைப் பாருங்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் திருப்தியடைந்திருக்கவில்லை. வெளியே வந்த ஒவ்வொருவரும், தங்களுடன் ஒரு பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்துடன் வெளியே வந்தார்கள். அது முற்றிலும் உண்மை. மார்ட்டின் லூத்தர் கூட அன்னிய பாஷைகளில் பேசியுள்ளார். அது முற்றிலும் உண்மையே. அவர், “தேவனே, இது என்ன நான் முணுமுணுத்த இந்த பயங்கரமான வார்த்தைகள், அவை என்னவென்று எனக்குத் தெரியவில்லை” என்று தனக்குள்ளே மன்னிப்பைக் கோரினார். புரிகிறதா? நிச்சயமாக அவர் அதை விசுவாசித்தார். நிச்சயமாகவே அவர் விசுவாசித்தார். 186 காலங்கள் தோறும் அவர்கள் ஆவியைப் பெற்றிருந்தார்கள். ஆனால் தங்களுக்கு முதலில் எழுப்புதலுக்குக் காரணமானவர்கள் மறைந்த பிறகு, அவர்கள் எப்பொழுதும் விலகிப்போய் ஸ்தாபனத்தைத் தான் ஏற்படுத்திக் கொண்டார்கள். நீங்கள் லூத்தரன் சபையை ஸ்தாபனம் ஆகவிடாமல் பார்த்துக்கொண்டு, அதே எழுப்புதலோடு தொடர்ந்து நீடித்திருக்க விட்டிருந்தால் அப்பொழுது, அது பெந்தெகொஸ்தேயாக இருந்திருக்கும். பெந்தெகொஸ்தே சபை என்றால் என்ன? நான் உண்மையான பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்றவர்களைத் தான் குறிப்பிடுகிறேன். இப்பொழுதுள்ள பெந்தெகொஸ்தே ஸ்தாபனமல்ல. அது மீண்டும் இப்பொழுது, “பானையும், கிண்டியும்” என்ற நிலையில் உள்ளது. பாருங்கள்? ஆனால் பெந்தெகொஸ்தேயினரும், ஆதியில் நிக்கொலாய் மதத்தின் கிரியைகள் வந்தபோது சபை அதின் வழியில் சென்றது போல், இவர்களும் செய்கிறார்கள். எத்தனை பேர் அதை புரிந்து கொள்கிறீர்கள்? அப்படியெனில், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையார், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] அது உண்மை. இப்பொழுது, நீங்கள் புரிந்து கொண்டதற்காக கூறும் வார்த்தையை நான் கேட்பதற்காகவே…

99187 “வேசிகளின் தாய்” என்பதைப் பாருங்கள். அவர்கள் வேசிகளாயிருந்தால், எவ்வாறு அவர்கள் வேசிகளாக ஆகினர்? தேவனுடைய வார்த்தைக்கெதிராக வேசித்தனம் செய்ததினால் அவ்வாறு ஆனார்கள். தேவனுடைய வார்த்தையானது, “மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று உரைத்துள்ள போது, ஒவ்வொருவரும் அப்படியே இயேசுவின் நாமத்தில் ஆதியில் ஞானஸ்நானம் பெற்றிருக்க, அதன் பின்னர் நீங்கள், “பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால்” என்று ஞானஸ்நானம் எடுத்துக் கொள்கிறீர்கள். அது தான் விபச்சாரம் செய்தல்! அது சரிதானே? ( பாப்டைஸோ (Baptizo) என்ற கிரேக்க வார்த்தைக்கு) முழுக்குதல் என்று அர்த்தமாகையால், வேதத்தில் ஞானஸ்நானத்திற்கு பாப்டைஸோ என்ற வார்த்தையே உபயோகிக்கப்பட்டிருக்க, நீங்கள் எப்படி இந்த தெளித்தலையும், ஊற்றுதலையும் செய்கிறீர்கள்? அது எங்கிருந்து உள்ளே வந்தது? பரிசுத்த ஆவியைப் பெறுவதற்குப் பதிலாக, நீங்கள் அதற்கு பதிலீடாக அந்த இடத்தில் கைகளைக் குலுக்கி கொள்ளுதல், மொறுமொறுப்பான நற்கருணை அப்பத்துண்டை உங்களுடைய உதட்டில் வைத்து விழுங்குதல் மற்றும் இன்ன பிற காரியங்களை செய்தலை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழுக்கமுண்டாகி, பரிசுத்த ஆவி இறங்கி வந்து ஜனங்களை நிரப்பி, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசவும் ஆர்ப்பரிக்கவும் செய்தது. ஆவியினால் நிறைந்திருந்த பொழுது, அவர்கள் குடித்தவர்களைப் போல நடந்துகொண்டனர். ஆவியைப் பெறுவதற்குப் பதிலீடாக, கைகளைக் குலுக்குதல், ஒரு சபையில் தன் பெயரைப் பதிவு செய்து கொள்ளல் மற்றும் அதுபோல ஏனைய காரியங்களையும், இவ்வாறு வார்த்தையை விட்டு சோரம் போய் நீங்கள் செய்துகொண்டிருக்கிற ஆவிக்குரிய வேசித்தனங்களை விட்டு நீங்கள் எப்படி விலகப்போகிறீர்கள்?

100188 சகோதரரே, அதைப்பற்றி நீங்கள் உங்களையே கேட்டுப் பாருங்கள். உங்கள் சுய சிந்தையை நீங்கள் களைந்து விட்டு, உங்கள் இருதயத்தை திறந்து உத்தமமாக இருங்கள். நாம் சாலையின் முடிவில் இருக்கிறோம். இக்கூட்டங்கள் வீணாக ஏற்பாடு செய்யப்படவில்லை. இவைகள் தேவனால் கட்டளையிட்பட்டவைகளாகும். நான் அதை அவ்வளவு நிச்சயமாக விசுவாசிக்கிறேன்,…நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரனென்று விசுவாசியுங்கள். இங்கே வருவதற்கு என் இருதயத்தின் மேல் தேவன் பாரத்தை வைத்தார் என்பதை நான் இயேசுவின் நாமத்தினால் கூறுகிறேன். இதைச் செய்வதற்காக நான் ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளவில்லை. நான்—நான்—நான்—நான்—நான் வேறு எங்காவது இந்த சமயத்தில் வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டு, அல்லது அதைப்போன்ற ஒன்றை செய்துகொண்டு அல்லது நான் மீன்பிடிக்கப் போய் விடவோ சென்று, என் சம்பளத்தை வாங்கிக் கொள்ளலாம். சபையிடமிருந்து நான் சம்பளம் பெற்று வருகிறேன். ஆனால் தேவன் அதைப் பற்றி என் உள்ளத்தில் பேசினார். அவர் என் உள்ளத்தில் அதைப்பற்றி கூக்குரலிட்டுக் கொண்டேயிருந்தார். எனவே அதிலிருந்து என்னால் விலகமுடியவில்லை. என்னால் முடிந்த அளவு நான் அதைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் கர்த்தருடைய நாமத்தினால் இங்கே இருந்து கொண்டு, எப்படி செய்ய வேண்டும் என்று நான் அறிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். அது உங்களை கடந்து செல்ல விட்டு விடவேண்டாம்.

101189 இப்பொழுது ப்ராடெஸ்டெண்டுகளே! கத்தோலிக்க மற்றும் பிராடெஸ்டெண்டு சபை என்று நான் எதைக் குறிப்பிட்டு கூறி பொருட்படுத்துகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? அப்படியே…ஒன்றைப் போலவே தான் மற்றதும் உள்ளது. அதுதான் முற்றிலும் உண்மை. 190 இப்பொழுது விவாகம் செய்துகொண்ட என்று பொருள்படுகிற, அதாவது பெர்கமு என்றால் “விவாகம் செய்து கொண்ட” என்று அர்த்தமாகும். 191 இப்பொழுது நாம் பார்ப்போம்…அவர், “பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு” என்று கூறினார். நாம் அதை எடுத்துக் கொள்வோமாக. 192 நமக்கு நேரம் இருக்கிறதா? என்னால் இயன்ற அளவு விரைவாக நான் முடிப்பேன்; அல்லது நீங்கள் கொஞ்சம் காத்திருந்து, காலையில் மீண்டும் வர இயலுமா என்று பார்ப்பீர்களா? எத்தனைபேரால் இப்பொழுது இன்னும் சிறிது நேரம் காத்திருந்து தொடர்ந்து கேட்க முடியும்? இருக்கட்டும்…சரி. இங்கே உஷ்ணமாக இருக்கிறது என்பதை நான்—நான் அறிவேன். நீங்கள் இந்த உஷணத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் இங்கே என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்குப் புரிகிறதா? ஆனால், ஓ, என்னே, நாம் இந்த உஷ்ணமாயிருக்கிற இடத்தை விட்டு சீக்கிரமாக புறப்பட்டுவிட முயன்று கொண்டு இருக்கிறோம். பாருங்கள், அது—அதுதான் இது, ஏனென்றால் நாம் நித்தியமாக இருக்கிறோம்.

102193 இப்பொழுது உண்மையாகவே அவர்கள் அப்படிப்பட்ட ஒரு சபையை நிறுவியபோது, என்ன நடந்தது? என் பிள்ளைகளே, இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். என்ன சம்பவித்தது? ஏனென்றால் உண்மையாகவே அவர்கள் சபையை விட்டு பரிசுத்த ஆவியை அகற்றினர். அவர்களுடைய அத்தியட்சகர்கள் எவரும் மரித்தோரை உயிரோடெழுப்புவதையோ, அற்புதங்கள் செய்வதையோ செய்யவில்லை என்பது வியப்பொன்றுமில்லை. இந்த பரிசுத்தவான்களில் சிலரை தங்களுடைய சபையில் இருந்தவர்கள் என்று அவர்கள் குறிப்பிட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த பரிசுத்தவான்களை இவர்கள் எதிர்த்தனர், ஆனால் அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்களை தங்களுடையவர்களாக உரிமை கொண்டாடுகின்றனரே! 194 அந்த வாலிபப் பெண்ணாயிருந்த ஜோன் ஆஃப் ஆர்க் எனபவள் பற்றி, கத்தோலிக்கரே அல்லது ப்ராடெஸ்டெண்டுகளே, உங்களில் எவரையாவது, அதாவது நான் உங்களைக் கேட்கிறேன். அவள் தன்னுடைய நாளில் அங்கே பிரான்ஸில் இருக்கவில்லை, ஆனால் கத்தோலிக்க சபை அப்பொழுது பரிசுத்தவான்களை ஒடுக்கியது. ஆனால் தேவன் அப்பெண்ணின் மேல் அசைவாடினார். அவள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தாள். அவள் என்ன செய்தாள்? கர்த்தர் அவளுக்கு நடக்க போகிறவைகளைப் பற்றி தரிசனங்களைத் தருவதுண்டு, அதினால் அவள் வரப்போகிற காரியங்களைப் பற்றி முன்னுரைக்க முடிந்தது. வியாதியஸ்தருக்காக அவள் ஜெபித்தாள். ஒரு மரித்துப்போன குழந்தைக்காக அவள் ஜெபித்தபோது, உயிர் அதற்குள் திரும்பவும் வந்தது. அதுதான் பெந்தெகொஸ்தேயாகும். பாருங்கள்? கத்தோலிக்க சபையை அவள் எதிர்த்தபடியினால், கத்தோலிக்க சபை அவளுக்கு என்ன செய்தது? அவளுக்கு ஒரு வழக்கு விசாரணையை வைத்து, அவளை “சூனியக்காரி” என்று கூறி ஒரு கம்பத்தில் கட்டி வைத்து எரித்துவிட்டனர்.

103195 இப்பொழுதோ நீங்கள், “பரிசுத்த ஜோன் ஆஃப் ஆர்க்” என்றும் கூறுகிறீர்களே. ஏறக்குறைய இரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னால், ஓ சபை தாங்கள் செய்திருந்தது தவறு என்று கண்டு கொண்ட போது, உண்மையிலேயே அவர்கள் அதற்காக மனமாறுதல் அடைந்து, அவளை பரிசுத்தவாட்டி ஆக்கிவிட்டார்கள். அவளுக்கு மரண தண்டனை விதித்த குருமார்களின் உடல்களை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து, அவைகளை நதியில் வீசியெறிந்துவிட்டனர். இதனால் கத்தோலிக்க சபையின் கரங்கள் இரத்தப் பழிக்கு நீங்கலாக்கி இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? “ஒவ்வொரு இரத்த சாட்சியின் இரத்தமும் அவளது கைகளில் காணப்பட்டது” என்று வேதம் கூறியுள்ளது. “ஒவ்வொரு கொலையும் இல்லை ஒவ்வொரு இரத்த சாட்சியும், கொன்று குவிக்கப்பட்ட இரத்த சாட்சிகள் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தமெல்லாம் நிக்கொலாய் மதஸ்தரின் காலம் முதற்கொண்டு, பாபிலோனில் காணப்பட்டது” என்று கர்த்தருடைய தூதனானவர் கூறினார். அதைப் பற்றி எண்ணிப்பாருங்கள். (உங்களுக்காக நன்றி சகோதரன் பென் அவர்களே.) இப்பொழுது, அதைப் பற்றி எண்ணிப்பாருங்கள்.

104196 இப்பொழுது, இன்னும் கொஞ்சம் இருக்கிறது. கிறிஸ்தவ சபையானது பாபிலோனுக்கு விவாகம் செய்து வைக்கப்பட்டது. பெர்கமு என்றால் “விவாகம்” என்றே பொருளாகும். 197 இப்பொழுது “பிலேயாமின் போதகம்.” “பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.” 198 ஓ, நான் இந்த காரியங்களை நேசிக்கிறேன். ஓ, அவை ஒன்றில் நீங்கள் இன்னும் தரித்திருந்து ஆராய்ந்து பார்த்தால்…ஆனால் நீங்கள்… நீங்கள் அதைப் புரிந்து கொள்ளும்படி செய்யவே நாங்கள் விரும்புகிறோம், அடுத்து ஏதாவது ஒன்றை ஆராய கடந்து செல்ல வேண்டும். ஏனெனில் அவை முழுவதும் தங்கக் கட்டிகளாக இருக்கின்றன. நான் ஒரு கனிவள நாடுநர்; எனவே நான் போய் இந்த தங்கக் கட்டிகளை தோண்டியெடுத்து, அவைகளை இவ்விதமாக பளபளப்பாக்கி, அவைகளை பளப்பளப்பாக காணப்பட விரும்புகிறேன். அவைகள் ஒவ்வொன்றும் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கிறவையாக இருக்கின்றன. அவைகள் ஒவ்வொன்றுமே, பாருங்கள். அவைகள் ஒவ்வொன்றும் இயேசுவை பிரதிபலிக்குமே! அவரே அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறார். அவரே தங்கக்கட்டியில் உள்ள தங்கக் காரட்டாக இருக்கிறார். அது உண்மை. அவர் அதனுடைய ஒவ்வொரு துணுக்குமாயிருக்கிறார். அந்த காரணத்தினால்தான் அவர் நம் மத்தியில் மாம்சத்தில் வெளிப்பட்ட தெய்வத்துவமாயிருக்கிறார்.

105199 இப்பொழுது…நான்—நான் இதற்குமேல் நேரம் எடுத்துக் கொள்ளமாட்டேன், ஏனென்றால் நான்…நான் மணி ஒன்பது ஆகிவிட்டதைக் காண்கிறேன். தேவனுக்கு சித்தமானால் நான் இன்றிரவில் பேச இன்னொரு காரியத்தையும் வைத்துள்ளேன், எண்ணாகமம் 22 முதல் 25 முடிய. நீங்கள் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளை நீங்கள் வாசியுங்கள். நீங்கள் அதை இப்பொழுது என்னோடு சேர்ந்து வாசியுங்கள். நான் வாசிக்கையில் நீங்கள் கவனித்துக் கொண்டே வாருங்கள். இப்பொழுது—இப்பொழுது எண்ணாகமம் 22 முதல் 25 வரை. 200 இஸ்ரவேல்—இஸ்ரவேல் ஜனங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் என்பதை நாம் அறிவோம். அது சரி தானே? அவர்கள்…அவர்கள் பெந்தெகொஸ்தேயினராக இருந்தனர். அவர்கள் மத்தியில் ஆவியானவர் இருந்தார். நேற்றிரவில் அளிக்கப்பட்ட செய்தியை நீங்கள் ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா? எப்படியாய் மோசே சிவந்த சமுத்திரத்தை கடந்த பிறகு, அவன் பின்னால் திரும்பிப் பார்த்தபோது அச்சிவந்த சமுத்திரத்தில் இரத்தமாக இருக்கக் கண்டான். எகிப்தில், தன்னையும் எல்லா இஸ்ரவேல் புத்திரரையும் எப்போது அடித்து வேலை வாங்கிய ஆளோட்டிகளின் இரத்தத்தையும் கண்டான். எனவே மோசே தன்னுடைய கரத்தை உயர்த்தி ஆவியில் பாடினான். ஓ, நாம் ஒவ்வொருவரும் ஒரு மோசேயாகி, கர்த்தராகிய இயேசு நமக்காய் சிந்தின சிவப்பான இரத்தத்தை நாம் திரும்பிப் பார்த்து, அதில் மரித்துக்கிடக்கிற ஒவ்வொரு பழைய குடிகாரனையும், ஒவ்வொரு பழைய புட்டிகளையும், ஒவ்வொரு பழைய அருவருப்பான் ஸ்திரீயையும், மற்றும் நாம் நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் செய்த பழைய அழுக்கான காரியங்களையும், அவையாவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் மரித்துக் கிடக்கிறதையும் காணலாம். அது நம்மை ஆவியில் பாடச் செய்கிறதே! சிகரெட்டுகளும், புகையிலையும், கெட்ட பழக்க வழக்கங்களும் மற்றும் இன்னபிற காரியங்களும் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்திற்குள் மரித்துக்கிடக்கின்றன. அப்பொழுது நாம் நமது கைகளை உயர்த்தி ஆவியில் பாட முடியும். புரிகிறதா?

106201 தீர்க்கதரிசினியாகிய மிரியாம் செய்ததைப் பாருங்கள். அவள் ஒரு தீர்க்கதரிசினி என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். அவள் தம்புரூவை கையில் எடுத்து அடித்துப் பாடி ஆவியில் நடனமாடினாள். இஸ்ரவேலின் குமாரத்திகளும், சிவந்த சமுத்திரக்கரையில், மிரியாமைப் பின்பற்றி, தம்புரூவை அடித்துக் கொண்டு, ஆவியில் பாடி நடனமாடினார்கள். உண்மையான பெந்தேகொஸ்தேயாயிற்றே! 202 பிறகு அவர்கள் மோவாபியரண்டை வந்தபோது, நடந்ததை நீங்கள் கவனித்தால் நலமாயிருக்கும். இப்பொழுது நாம் திரும்பி…அதாவது நாம் இப்பொழுது “பிலேயாமின் போதகம்” என்பது பற்றி வேத வாக்கியங்களில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். மோவாபியர்—மோவாபியர் இஸ்ரவேலின் சகோதரன். மோவாப் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? சரி. மோவாபியரை நான் கலப்பினம் என்று அழைக்கிறேன். ஏனெனில் மோவாப் லோத்தின் குமாரத்திகளிடமிருந்து பிறந்தவர்களில் ஒருவன். லோத்துக்கு அவனுடைய இரு குமாரத்திகள் மூலம் இரு புத்திரர்கள் பிறந்தனர். அவ்விருவரில் மோவாப் ஒருவனாயிருந்தான். அந்த மோவாபியரின் கோத்திரந்தான் மோவாப் தேசத்தை உருவாக்கியது. உண்மையாகவே, லோத்து ஆபிரகாமின் சகோதரனின் மகனாவான். இருவரும் உண்மையிலேயே ஒரே வம்சத்தில் பிறந்தவர்கள் தான். நாம் அதை அறிவோம். இப்பொழுது மோவாபியர் அஞ்ஞானிகள் அல்ல என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன், நம்முடைய நாடகங்கள் சிலவற்றில், சமீபத்தில் கூட அவை நடத்திக் காண்பிக்கப்பட்டன. அவர்கள் விசுவாசிகள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இஸ்ரவேலர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அணிவகுத்து வரும் தங்கள் பாதையில் வந்து கொண்டிருக்கையில், அவர்கள் தங்கள் கடமையின் பாதையிலிருந்தபோது, அங்கே வழியிலே மோவாப் தேசம் இருந்தது. எனவே அவர்கள் மோவாபியருக்கு தூதர்களை அனுப்பி, “நாங்கள் உங்கள் சகோதரர் உங்களுடைய தேசத்தின் வழியாக கடந்து செல்வோமாக” என்று கேட்டுக் கொண்டார்கள்.

107203 இப்பொழுது, மோவாப் நிக்கொலாய் மதத்தினருக்கு அடையாளமாய் இருக்கின்றனர். இப்பொழுது அதை நீங்கள் இன்னும் ஒரு நிமிடத்தில் காணலாம். இஸ்ரவேலானது உண்மையான சபைக்கு அடையாளமாயிருக்கிறது. பிலேயாம் அவர்களுடைய அத்தியட்சகர்களில் ஒருவனாக, போப்புகளில் ஒருவனாக இருந்தான். இப்பொழுது கவனித்துப் பாருங்கள்; மாம்ச சிந்தையுள்ள கிறிஸ்தவமார்க்கம். அவன் வரம் பெற்று இருந்தான் என்பதை நாம் கவனிப்போம். அதைக் குறித்து சந்தேகமேயில்லை. அவர்களில் அநேகர் அருமையான பேச்சாளர்கள், மனோத்தத்துவத்தில் பாண்டித்திய பட்டம் பெற்றவர்கள், மற்றும் பெரிய மனிதர்கள் ஆவார். உங்களால் அதை மறுக்க முடியாது. ஆனால் “தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்கள்.” 204 அந்த மூல பெந்தேகோஸ்தேவிற்குத் திரும்புங்கள்! அதனிடத்தின்று விலகிப் போக வேண்டாம். நீங்கள் விலகிச் செல்லும்போது, நீங்கள் இழக்கப்பட்டுப் போவீர்கள். அந்த ஆசீர்வாதத்தோடு நிலைத்திருங்கள். அது தான், ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிக்கிறவர்.

108205 இஸ்ரவேலர் பயணம் செய்து வருகையில் நடந்ததைக் கவனியுங்கள். இந்த சடங்காச்சார, கலப்பட சபையிடமாக அவர்கள் வந்தடைந்து, அவர்களிடம், “நாங்கள் ஒரு எழுப்புதலினூடாக கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நாங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். எனவே உங்கள் தேசத்தினூடாக செல்ல நீங்கள் எங்களை அனுமதிப்பீர்களா? எங்களுடைய கால்நடைகள் புல்லை மேய்ந்துவிட்டாலோ, அல்லது அவைகள் தண்ணீரைக் குடித்துவிட்டாலோ, அதற்கு நாங்கள் பணம் செலுத்தி விடுகிறோம்” என்றார்கள். 206 அப்பொழுது அவன் என்ன செய்தானென்றால் …?… அப்பொழுது பாலாக் ராஜா, அவன் மிகவும் கலவரமடைந்தான். அவன் தன்னுடைய சபையிலோ, அல்லது தனது தேசத்திலோ அவ்விதமான ஒரு கூட்டம் நடைபெற விரும்பவில்லை. எனவே அவன் என்ன செய்தான்? எனவே, அவன் அப்பொழுது போப்பாக இருந்த அல்லது அத்தியட்சகராக இருந்த, கூலிக்காரத் தீர்க்கதரிசியான பிலேயாமுக்கு ஆள் அனுப்பினான். பிலேயாம், தேவனை நேசித்ததைவிட பணத்தை அதிகம் நேசித்திருந்தான். பாலாக் ராஜா பிலேயாமுக்கு, “நீர் இங்கே வந்து இந்த ஜனங்களை சபித்தீரென்றால், நான் உம்மை ஒரு பெரிய மனுஷனாக ஆக்கிவிடுவேன்” என்று கூறினான். தேவன் பாலக்கோடு பேசினார்…இந்த இராத்திரியில் அவ்விதம் சம்பவிக்குமா என்று நான் எதிர்பார்க்கிறேன்…நான் பிலேயாமையே குறிப்பிடுகிறேன். இந்த உலகத்தில் இன்றிரவில் எத்தனை பிலேயாம்கள் இருக்கின்றனர் என்று நான் வியப்புகிறேன்? மெத்தோடிஸ்டு ஊழியக்காரர்கள், பாப்டிஸ்டு ஊழியக்காரர்கள், கத்தோலிக்க மதகுருமார்கள், (இரக்கம்!) பிலேயாமைப் போலவே தேவனைப் பற்றி அறிந்து வைத்துள்ளார்கள். நான் படித்திருக்கிற அதே வரலாற்றையும், அதே புத்தகத்தையும் நீங்கள் படித்திருந்தால் நலமாயிருக்கும். “பிலேயாம்!”

109207 இப்பொழுது கவனியுங்கள். அப்பொழுது பாலாக், “வந்து இந்த ஜனங்களை சபியும்” என்று கூறியிருந்தான். அதற்கு பிலேயாம், “நான் தேவனை கேட்பேன்” என்றான். தேவன் “நீ போக வேண்டாம்” என்றார். 208 ஆனால் அடுத்த நாள் காலையில், அவன்…வந்திருந்தவர்கள் திரும்பிச் சென்று ஆசாரியனிடம் இல்லை இராஜாவிடம் பிலேயாம் சொன்னதை எடுத்துரைத்தார்கள். அவன் திரும்பவும் ஆட்களை அனுப்பி, “ஓ, நான்—நான் உன்னை ஒரு பெரிய மனிதனாக்குவேன்” என்றான். எனவே பிலேயாம் தொடர்ந்து தேவனிடம் கேட்க, தேவனோ, “அப்படியானால் போ, நீ போ” என்றார். 209 பாருங்கள், நீங்கள் சத்தியத்தை பின்பற்ற விரும்பாவிடில்…நிக்கொலாய் மதத்தினரே, தேவன் நீங்கள் செய்து கொண்டிருக்கிற விருப்பத்தின்படி செய்ய அவர் அனுமதிக்கொண்டிருக்கிறாரே என்று நீங்கள் எண்ணலாம். தேவனுடைய மூலசத்தியம் இருக்கிறது! ஆனால் நீங்கள் தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தை தான் எடுத்துக் கொள்கிறீர்கள். “தேவன் எங்களுக்கு பரிசுத்த ஆவியைத் தருகிறார். அவர் எங்களை ஆசீர்வதிக்கிறார், நாங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுள்ளோம்” என்று நீங்கள் கூறலாம். நீங்கள் பிலேயாம்கள்! பிலேயாமின் போதகத்தைப் பாருங்கள். பிலேயாம் மிகவும் கர்வமுள்ளவனாய் இருந்ததால், தேவன் அவனை போகச் சொல்லிவிட்டார். அவன் தன் இஷ்டப்படி நடந்து கொள்ள அவர் விட்டு விடுகிறார். நீங்கள் அஸ்திபாரமான சத்தியத்திற்கே, சத்தியத்திற்கே திரும்பி வர வேண்டும். வேதத்திற்கு திரும்பிச் செல்லுங்கள். “ஓ, தேவன் எங்களை ஆசீர்வதித்திருக்கிறார்…” என்றெல்லாம் நீங்கள் கூறலாம். ஓ, நான் அதை அறிவேன். தேவன் பிலேயாமிடம், “நீ போகலாம், நீ போக விரும்பினால், அந்த வழியாக நீ போக வேண்டியது அவசியம் என்றால், நீ அந்த ஸ்தாபன மார்க்கத்தின் வழியாக போக விரும்பினால்,…அதை நீயே தெரிந்து கொள். அதில் நீ போகலாம்” என்று கூறினார்.

110210 அப்பொழுது பிலேயாம் தன்னுடைய கோவேறு கழுதையின் மேல் இல்லை, கழுதையின் மேல் குதித்து ஏறி, புறப்பட்டுச் சென்றான். கடந்த முதல் காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? வழியில் கர்த்தருடைய தூதனானவர் குறுக்கே நின்றார். அந்த தீர்க்கதரிசி, அல்லது போப், பேராயர், போப்பிற்கு அடுத்த ஸ்தானத்தவர், இப்படியாக இதில் எந்த பதவியை அவன் வகித்தானோ அப்படிப்பட்ட இவன், ஐப்பிராத்து நதிக்கரையில் வாழ்ந்து வந்த இவன், தான் பதவி உயர்வை அடையப் போகிறதைப் பற்றிய சிந்தையில் கொண்டிருந்ததால், ஆவிக்குரிய காரியங்களுக்கு மிகவும் குருடாக்கப்பட்டிருந்தான். “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்” என்று கூறப்பட்டது, பேதுரு மேல் அல்லது ரோமாபுரியில் உள்ள ஒரு கல்லின் மேல் கட்டப்படுவதாகும் என்று எண்ணிப்படுவது போல, பிலேயாமும் அது ஏதோ ஒரு சுதந்தர வீதம் என்றெண்ணினான் என்றே நான் யூகிக்கிறேன். ஆனால் அவன் அந்த இடத்திற்குச் சென்ற போது, உருவப்பட்ட பட்டயத்தோடு கர்த்தருடைய தூதனானவர் அவனது வழியில் அவனுக்கு குறுக்காக நின்றார். அவன் அவரைக் காண முடியாதபடி குருடாக்கப்பட்டிருந்தான். பிலேயாம் ஏறியிருந்த அந்தக் கழுதையோ அவனுடைய காலை சுவரோடு வைத்து உரசியது. அவன் அப்பொழுது தொடர்ந்து சென்றான். மறுபடியும் கர்த்தருடைய தூதனானவர் குறுக்காக நின்றார். தேவன் ஒவ்வொரு வாசலையும் அடைப்பார். இந்த கழுதை இன்னமும் போகாமல் திரும்பியது. பிலேயாம் கழுதையிலிருந்து குதித்து, தன்னுடைய தடியை எடுத்து அது கத்தும்படிக்கு அதை அடிக்கத் துவங்கினான். இந்த சிறு கழுதை தன் தலையில் அடிக்கப்பட்டு அங்கே படுத்து கிடந்தது.

111211 நிச்சயமாகவே அவனை மாற்றியது எது, அவனை உணரச் செய்தது எது, அல்லது அவன் தவறாயிருந்தான் என்று அவனிடம் கூறியது எது? அக்கழுதை அந்நிய பாஷைகளில் பேச தேவன் அனுமதித்தார். அது ஒரு கோவேறு கழுதையல்ல. ஒரு கழுதை தான்! அவன் ஏறியிருந்தது “கோவேறு கழுதை” என்று கூறவேண்டாம். கலப்படமாய் பிறந்த கோவேறு கழுதை அந்த அனுபவத்தைப் பெற முடியாது. உங்களுக்குப் புரிகிறதா? அக்கழுதை மூலவித்தாயிருந்தது. 212 மோவாப், “அடையாளங்கள் கடந்து போய்விட்டன, அனைத்தும் கடந்து போய்விட்டன” என்று கூறிக்கொண்டிருந்தது, இஸ்ரவேலுக்கோ அடையாளங்கள் பின் தொடர்ந்தன. 213 ஆனால் இந்த சிறிய கழுதையானது பிலேயாமிடம் “நான் இத்தனை ஆண்டுகளாக உம்முடைய கழுதையாயிருக்கவில்லையா? நான் எப்பொழுதாவது…” கண் சொருகிப் போன அந்த—அந்த பேராயர், கழுதையின் மேல் உட்கார்ந்து, அதை இன்னும் அடித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அக்கழுதை அவனோடு பேசியது. அது அந்நிய பாஷைகளில் பேசியது. அப்பொழுது அவன், “ஆம், நீ—நீ என்னுடைய கழுதை” என்கிறாய். “உம்மை நான் எப்பொழுதாவது சுமந்து செல்லாமல் இருந்தது அல்லது உம்மை சுமந்து செல்ல எப்போதாவது தவறியதுண்டா—உண்டா?” என்று கேட்டது. அதற்கு அவனோ, “இல்லை, நீ அப்படிச் செய்யவில்லை. ஆனால் என்னிடம் பட்டயம் இருந்தால் நான் உன்னைக் கொன்று போடுவேன். இக்கூட்டத்தை நான் நிறுத்திப் போடுவேன். நான் அந்த உருளும் பரிசுத்தர் கூட்டத்தை இத்தேசத்தின் வழியாக கடந்து வரவிடாமல் தடுப்பதற்காக போகும் என்னுடைய பிரயாணப் பாதையில் இருக்கிறேன். நான் உன்னைக் கொன்று போடுவேன்” என்று கூறினான். பார்த்தீர்களா?

112214 முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா. “இது விசித்திரமாயுள்ளதே, இக்கழுதை பேச நான் கேட்கிறேன்” என்று அவன் எண்ணி சுற்றும் முற்றும் பார்க்க நேர்ந்தது. 215 ஓ பிலேயாமே! உம்ம்! பாருங்கள், தேவன் எப்பொழுதும் ஜனங்களோடு அந்நிய பாஷைகளில் பேசியிருக்கிறார். அவர்…“அவர் பெந்தெகொஸ்தே நாளில் மட்டும் தான் பேசினார்” என்று நீங்கள் கூறலாம். ஓ, இல்லை, இல்லை, இல்லை. பெல்ஷாத்சார் விருந்திலே, அவர் அந்நிய பாஷையில் பேசினார், அதை சுவரில் எழுதினார். அவர்கள் மத்தியில் அந்நிய பாஷைகளை வியாக்கினிக்கும் வரம் பெற்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் அதை அவர்களுக்காக வியாக்கியானித்து, அது என்னவாயிருந்தது என்று அவர்களிடத்தில் கூறினான். இன்றைக்கும் அதேக் காரியம் தான் உள்ளது.

113216 எனவே, வியாக்கியானம் செய்ய யாரும் அங்கே இல்லாததால், தேவன், இந்த பிலேயாம் (இந்த போப்பின் அடுத்த ஸ்தானத்தவர்) விழிப்படைந்து, அது என்ன என்று உணர்ந்து கொள்ளச் செய்தார். அதன் பிறகும் அந்த குருடான பிலேயாம், மேற்கொண்டும் தன் பயணத்தை தொடர்ந்தான் என்பதை அறிவீர்களா? நிச்சயமாக. அவ்விதமாகத்தான் அவர்கள் இன்றைக்கும் அதேக் காரியத்தைச் செய்கிறார்கள். மோவாபியர்கள், நிக்கொலாய் மதத்தினர் தொடர்ந்து அப்படியே செய்கிறார்கள். இஸ்ரவேலர் அங்கே சென்றனர்…அவனும் சென்றான்…இப்பொழுது கவனியுங்கள், தேவன் அஸ்திவாரமான உபதேசத்தை மட்டும் கொண்டிருந்ததனால் கனம் பண்ண வேண்டியவராயிருக்கிறாரென்றால், அப்பொழுது அவர் மோவாபையும் ஆசீர்வதிக்க கடமைபட்டவராயிருக்கிறார். ஏனெனில் பிலேயாம் ஏழு பலிபீடங்களைக் கட்டினான் என்பதைக் கவனியுங்கள். அதைச் சரியாக அவன் செய்தான். 217 ஏழு என்ற எண்: ஏழு சபை காலங்கள். அதன் ஆவிக்குரிய பயன்படுத்துதல் எப்படி என்பதை கவனித்தீர்களா? இப்பொழுது அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆவிக்குரிய பயன்படுத்துதல். நான் அதற்கு இன்னும் ஒரு நிமிடத்திற்குள், ஒரு கடினமான இடத்திற்குள் வரப்போகிறேன். பாருங்கள், ஆவிக்குரிய பயன்படுத்துதல் ஏழு பலிபீடங்கள், ஏழு காளைகள் (சுத்த மிருகங்கள்) ஏழு ஆட்டுக்கடாக்கள், கிறிஸ்து வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவருடைய வருகையை அறிவிப்பதாய் உள்ளன.

114218 ஆனால் அவர்கள் விசுவாசித்தார்கள். அவர்கள் எதை விசுவாசித்தார்கள்? அவர்கள் யேகோவா தேவனில் விசுவாசங் கொண்டிருந்தார்கள். அவர்கள் வேறெதை விசுவாசித்தார்கள்? அவர்கள் ஒரு சுத்தமான மிருகத்தை பலி செலுத்த வேண்டுமென்பதை அறிந்திருந்தார்கள். அது உண்மையே. மேசியா வருகிறார் என்பதை தாங்கள் விசுவாசிப்பதாக அவர்கள் கூறிக் கொண்டனர். ஏனெனில் அவர்கள் ஆட்டுக்கடாவை, ஒரு ஆட்டுக்கடாவை பலியாக செலுத்தினார்கள். அது சரியா? 219 இப்பொழுது இக்காரியத்தை நீங்கள் ஒரு முறை பாப்டிஸ்ட்டுகளின் செயலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களும் சரியாக இப்படிக் கொத்த காரியங்கள செய்யவில்லையா என்பதைப் பாருங்கள். அது முற்றிலும் உண்மை. 220 அப்படியானால் இப்பொழுது என்ன வேறுபாடு அங்கேயுள்ளது? மலையடிவாரத்தில் இங்கே இஸ்ரவேலர் பாளயமிறங்கியிருந்தனர். மலையுச்சியில் மோவாபியர் எந்த தேவனுக்கு எவ்விதமான பலியைச் செலுத்தினார்களோ, அதே விதமான பலியை, அதே தேவனுக்குத் தான் இஸ்ரவேலர் செலுத்தினார்கள். அதே தேவனிடம் தான் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். நிக்கொலாய் மதத்தினரை அங்கே உங்களால் காணமுடியவில்லையா? கலப்பினமாற்றே! அதைக் கண்டீர்களா? உண்மையான ஆவிக்குரியவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்களுக்கிடையே என்ன வித்தியாசம் காணப்படுகிறது? அவர்களில் ஒரு சாராருக்கு அடையாளங்கள் பின் தொடர்ந்து வந்தன! மற்ற சாரார் சடங்காச்சாரர்களை உடையவர்களாய் இருந்தனர். மற்ற சாராருக்கோ அடையாளங்கள் பின் தொடர்ந்தன.

115221 அதேவிதமான காரியம் தான் நிசாயா ஆலோசனை சங்கத்திலும் நடைபெற்றது. நிக்கொலாய் மதத்தினராகிய சடங்காச்சார கிறிஸ்தவ மதத்தினர் அங்கே இருந்தனர். பரிசுத்த ஆவியானவர் திரும்பி வந்து, “பிலேயாமின் போதகத்தைக் கைக் கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு” என்று கூறினார். பாருங்கள்? நீங்கள்…“நான் நிக்கொலாய் மதத்தினரின் கிரியைகளை, அவர்கள் கொண்டுள்ள போதகங்களை வெறுக்கிறேன். ஏனென்றால் அது இஸ்ரவேலருக்கு முன்பாக இடறலை போடும்படி போதித்த பிலேயாமின் போதகமாயிருந்தது.” அதை அவன் எவ்வாறு செய்தான்? 222 பிலேயாம் அந்த ஜனங்களை சபிக்கும்படி புறப்பட்டுச் சென்றபோது, தேவன், “நான் உன் நாவை கட்டிப் போடுவேன், நான் சொல்லுவதைத் தவிர நீ வேறேதுவுமே சொல்ல முடியாது. நான் ஆசீர்வதித்திருக்கிறதை நீ சபிக்க முடியாது” என்றார். எனவே அவன் மலையிலிருந்து கீழே உற்றுப் பார்த்தான். 223 இந்த மாய்மாலக்காரனை பாருங்கள்! ஓ, நாம் இதைப்பற்றி விடாமல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கலாம், பாருங்கள். இந்த பாலாக் இராஜாவைப் பாருங்கள், அவனே எல்லாவற்றிற்கும் தலைமையாக இருந்தான். அவன் இங்கே இந்த கள்ளத்தீர்க்கதரிசியிடம், “நீ அங்கே போய் அவர்களுடைய பின் பகுதியைப் பார்” என்று கூறினான்.

116224 அதேவிதமாகத்தான் தேவனுடைய சிறு மந்தையிடம் பெரிய சபைகள் சொல்ல விரும்புகின்றன. “என்ன என்று உனக்குத் தெரியுமா? அவர்களில் ஒருவனை நான் அறிவேன். பையனே! அவன் என்ன செய்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன்—அவன் இதைச் செய்தான்! அவன் அதைச் செய்தான். அவர்கள் பெந்தெகோஸ்தேகாரர்கள், நிச்சயமாக” என்று பேசுகிறார்கள். ஓ, ஆனால் அவர்களைப் பற்றிய உண்மையை நீங்கள் அறிந்தால் நலமாயிருக்கும், ஆனால் பத்திரிக்கைகள் அவர்களுடைய காரியங்களைப் பற்றி வெளியிடக்கூடவிடாது. ஆனால் எங்காவது ஒரு சிறிய பெந்தெகோஸ்தேக்காரர் நல்வழியை விட்டு விலகி விட்டால் போதும், அப்பொழுது இம்முழுத்தேசம் அதைப் பற்றி எப்படியாவது எக்காளமடிப்பார்கள். நிச்சயமாக. ஆம் ஐயா. 225 ஆனால், இப்பொழுது கவனியுங்கள், பாலாக், “அவர்களுடைய மோசமான பின்பகுதியைப் போய் பார்” என்று கூறினான். அதற்குப் பிலேயாம், “ஆம், நான் அவர்களுடைய பின்பகுதியைப் போய்ப் பார்ப்பேன். அவர்கள் மோசமாக நடந்துகொள்வதைப் பார்ப்பேன். அந்தப் பின்பகுதி அதைக் காண்பிக்கும். அவர்களுடைய கீழ்த்தரமான வாழ்க்கையை நான் பார்ப்பேன். அவர்கள் நல்ல நிலையில் இருக்கவில்லை.” ஏனெனில் அவன் அவர்களுடைய மோசமான பகுதியை பார்த்தால், அவர்கள் அவ்வாறே நல்ல நிலையில் இருக்கமாட்டார்கள். அது உண்மை. அட்டவணையில் உள்ள ஒவ்வொரு பாவத்தையும் அவர்கள் செய்திருந்தார்கள். ஆனால் பிலேயாம் அவர்களின் மத்தியில் உள்ள அடிக்கப்பட்ட கன்மலை, வெண்கல சர்ப்பம், அவர்களின் மத்தியில் இருந்து வருகிற ராஜாவின் ஜெயகம்பீரம், சுகமளித்தல், அடையாள அற்புதங்கள் மற்றும் அவர்களுக்கு மேலாக தொங்கிக் கொண்டு இருந்த அக்கினி ஸ்தம்பம் ஆகிய இவைகளை காணத் தவறிவிட்டான். 226 அந்த குருடாக்கப்பட்ட தீர்க்கதரிசியால் அதைக் காணமுடியவில்லை. இல்லை ஐயா. ஆனால் அவனோ இஸ்ரவேலருடைய அசுத்தமான பின்பகுதியை காண்பித்துக் கொண்டிருந்தான், “அதாவது அவர்களில் ஒருவன் இன்னொருவனின் மனைவியோடு ஓடிப்போய் விட்டதை நான் அறிவேன். இதைப் பற்றி எனக்குத்—எனக்குத் தெரியும். அவன் கொஞ்சம் பணம் திருடிவிட்டான்” என்றெல்லாம் பின்பகுதியைப் பற்றி கூறிக்கொண்டிருந்தான். அது சரிதான். அது சரி தான். நான் அதை ஒத்துக் கொள்வேன். ஆனால் அவர்கள் மத்தியிலும் அதே காரியங்கள் உள்ளன. ஆனால் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. பாருங்கள்? எனவே பாலாக் அவனுக்கு அவர்களுடைய மோசமான பாகத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தான். 227 ஆனால் அவர் கூறினார், தேவன் பிலேயாமிடம், “நான் என்ன சொல்லுகிறனோ அதை மட்டுமே நீ உரைக்க வேண்டும்” என்றார். பிலேயாம் ஆவியினால் நிறைந்து தரிசனங்கண்டான். இஸ்ரவேலரை சபிப்பதற்குப் பதிலாக அவன் அவர்களை ஆசீர்வதித்தான். ஆமென்! அங்குதான் அவன் காரியமேயிருந்தது.

117228 தேவன் அடிப்படையான உபதேசங்களை மட்டும் பெற்றிருப்பவர்களை ஏற்றுக்கொள்கிறார் என்றால், இந்த வேதபாட சாலைகள், வேதாகம பெரிய கருத்தரங்குகள், கல்லூரிகள், பிஹெச்.டி.பட்டங்கள், டி.எல்.டி.பட்டங்கள், ஓ, எல்லாவித டி.டி.பட்டங்கள்… இவைகளை தேவன் மதிக்க வேண்டுமெனில், அப்பொழுது மோவாபியர் செலுத்திய பலிகளையும் தேவன் அங்கீகரித்தாக வேண்டும். பாருங்கள்? ஆனால் அவரோ, இந்த இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனையை ஏற்றுக் கொண்டு அவர்களை ஏற்கெனவே ஆசீர்வதித்துள்ளார். ஏனெனில், ஆவியானவர், இராஜா,… “இராஜாவின் ஜெயகெம்பீரம் அவர்களுக்குள் இருக்கிறது” என்று கூறப்பட்டது. என்ன? என்ன? அவர் “பரிசுத்தவான்களின் இராஜா” மகிழ்ச்சி ஆரவாரம் அங்கே உண்டு. எதனுடையது? இன்னொரு இராஜ்யம். 229 இவர்கள் மதஸ்தாபனங்களாக இருக்கவில்லையென்பதை நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிப்பேன். நான் அதைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அதற்காக ஒரு வேதவாக்கியத்தை நான் இங்கே குறித்து வைத்துள்ளேன் என்று நான் நினைக்கிறேன். ஆம், ஐயா, இஸ்ரவேல் ஒரு மதஸ்தாபனமாக இருக்கவில்லையென்பதை நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்கட்டும்,…நாம் எண்ணாகமத்திற்கு திருப்பி, அவர்கள் அவ்வாறில்லை என்பதை நீங்கள் அங்கே காணலாம். அவர்கள்…இப்பொழுது, மோவாபியரோ ஒரு பெரிய மதஸ்தாபனமாக இருந்தனர். நாம் இப்பொழுது எண்ணாகமம் 23: 9 — ஐ பார்க்கப் போகிறோம். நான் 8-ம் வசனத்திலிருந்து எடுத்துக் கொள்ளவுள்ளேன். தேவன் சபிக்காதவர்களை நான் சபிப்பதெப்படி? (பிலேயாம் கூறினான்) கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? (உ—ஊ.) 230 அவர் என்ன கூறினான் என்பதை…இப்பொழுது கவனியுங்கள். கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, (அது தேவன், பள்ளத்தாக்கிலிருந்து அல்ல, ஆனால் கன்மலைகளின் உச்சியிலிருந்து பார்க்கிறார். ஓ! “அவரது கண்கள் அடைக்கலான் குருவியின் மேலுள்ளது. அவர் என்னை நோக்கிப் பார்க்கிறார் என்று நான் அறிவேன்.”)… கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு , (ஆமென்! ஏதோ ஒரு பள்ளத்தாக்கிலிருந்து நீங்கள் அவர்களது மோசமான பின் பகுதியை காண்பது அல்ல, “நான் முழு காரியத்தையும் பார்த்தேன்” என்று தேவன் கூறினார்) … கன்மலையுச்சியிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலைவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.” 231 அதுவே இதைத் தீர்த்து வைக்கிறதா? அவர்கள் ஒரு மத ஸ்தாபனமாக, “தேசங்களாக” இருக்கவில்லை. ஓ, அவர்கள் தேசாந்திரிகளாக, கூடாரங்களில் வசித்தவர்களாக, மூலை முடுக்குகளில், தெரு மூலையில், சிறு பகுதியில் வாழ்ந்தார்கள். அவர்களை, புறக்கணித்து புறம்பாக்கினார்கள். அவர்கள் வேறு எங்கோ போக வேண்டுமென்று தேவன் விரும்பிக்கொண்டிருந்தார். புரிகிறதா? அலைந்து திரிபவர்களாயிருந்தனரே! உண்மையே!

118232 ஜமெய்காவில் சமீபத்தில், ஒரு அருமையான பெந்தெகொஸ்தேயைச் சேர்ந்த தெய்வீகத்தில் பட்டம் பெற்ற ஒருவர் நின்று கொண்டு இருந்தார். நான் அவரிடம், “ஓ, கர்த்தர் ஆதி பெந்தெகொஸ்தே சபையை எவ்வளவாய் ஆசீர்வதித்தார், அவர்களுக்கு சொந்தமாக ஒன்றுமேயில்லை. அவர்கள் அலைந்து திரிந்தார்கள்” என்று கூறினேன். அவர், “ஊ, அப்படியா சகோதரன் பிரான்ஹாமே?” என்றார். அப்பொழுது நான், “ஆம், சகோதரன்” என்றேன். நான் அவரை நேசிக்கிறேன்; அருமையான சகோதரன் அவர், “நீங்கள் அதில் தவறாயிருக்கிறீர்கள் என்று காண்பிக்கவே நான்—நான் விரும்பினேன்” என்றார். நான் சொன்னேன். “நான் அதைக் குறித்து அறிய மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். நான்—நான் எங்கே தவறாக இருக்கிறேன் என்பதை எப்பொழுதும் அறிந்து கொள்ளவே விரும்புகிறேன். ஏனெனில் தேவனும் நான்—நான் தவறாயிருக்ககூடாது என்று அறிந்துள்ளார்” என்றேன். “நல்லது நான் தவறாக இருந்தால் அதைப் பற்றி நிச்சயம் அறிந்து கொள்ள விரும்புகிறேன். சகோதரரே. உமக்கு நன்றி” என்றேன். அப்பொழுது அவர், “நீர் எப்பொழுதும் அந்த பெந்தெகொஸ்தே மக்களை புகழ்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறீர்” என்றார். அதற்கு நான் “ஆம்!” என்றேன். அப்பொழுது அவர், “அவர்கள் செய்ததெல்லாவற்றிலும் மிகவும் பயங்கரமான தவறை, தங்கள் ஆஸ்திகளை விற்று விட்டதன் மூலம் செய்துவிட்டார்கள்” என்றார். அவர் மேலும், “சபைக்கு உபத்திரவம் வந்தபோது, அவர்கள் போய் இருந்து கொள்ளத்தக்க வீடு ஒன்று அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்களுக்கு போய் தங்க வேறு இடமே இல்லை, எனவே அவர்கள் அலைந்து திரிந்தார்கள்” என்றார். அதற்கு நான், “அது சரியான தேவனுடைய சித்தமாயிருந்தது” என்றேன். அதற்கு அவர் “ஏன்?” என்றார். 233 அப்பொழுது நான், “அவர்களுக்கு ஒரு வீடு உண்டாயிருந்தால், அவர்கள் திரும்பிப் போய் இருந்திருப்பார்கள். ஆனால் அவர்களோ, இங்கும் அங்கும் சிதறிப்போய், பரிசுத்த ஆவியானவர் வந்திருக்கிறார் என்னும் செய்தியை பரப்ப வேண்டியவர்களாயிருந்தார்கள். தேவன் ஒரு தவறு செய்கிறார் என்று ஒருபோதும் என்னிடம் சொல்லாதிருங்கள். அவர் ஒரு போதும் தவறு செய்வதில்லை. எக்காரியத்தையும் எவ்வாறு செய்ய வேண்டுமென்பதை அவர் அறிந்தேயிருக்கிறார். அவர்கள் தங்களுடைய ஆஸ்திகளை விற்றுவிட்டு, நாடோடிகளைப் போல் ஆகி, எங்கும் செய்தியை பரப்பினார்கள்” என்றேன். மேலும், “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டி, எல்லாவற்றையும் விட்டு விட்டு நாடோடிகளாகத் திரிந்த அவர்களைக் கொண்டு செய்தியானது உலகமெங்கும் பரவி, யாவரும் அதை அறிந்திருந்தார்கள்” என்றேன். அந்த மக்கள் ஒரு மத ஸ்தாபனத்தைச் சார்ந்தவர்களாயிருக்கவில்லை. பார்த்தீர்களா?

119234 இப்பொழுது, நினைவிருக்கட்டும், “பிலேயாமின் போதகத்திற்குள் நுழைந்திருக்கிறது” என்றே தேவன் ஸ்தாபனத்தைக் குறித்து அழைக்கிறார். ஆகையால் பிலேயாம், அவர்களை இந்த மதஸ்தாபன அமைப்புக்குள் கொண்டு வர இயலாத பொழுது, என்ன செய்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது நாம் முடிவான கட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். எனவே இப்பொழுது மிகவும் கவனமாகக் கேளுங்கள். அன்றைக்கு பிலேயாம் என்ன செய்தானோ அதே காரியத்தைத் தான் நிசாயா ஆலோசனை சங்கத்திலும் அவர்கள் செய்தார்கள். அந்தக் காரணத்தினால்தான் தேவன், “பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு” என்று கூறினார். 235 இப்பொழுது, நிக்கொலாய் மதஸ்தினரான மக்கள்தான், பின்வாங்கி, மதஸ்தாபன அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினவர்கள். அது இறுதியாக…நான் ஸ்தாபனத்தைப் பற்றிக் கூறும்போது, அது உண்மையென்று எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்? அதுவே ஸ்தாபனத்தைப் பற்றிய தேவனுடைய உண்மையாயுள்ளது. அவர்கள் முடிவிலே உலகிலேயே மிகப்பெரிய மதஸ்தாபனத்தை உருவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் அதை என்னவாக உருவாக்கினர்? ஒரு கத்தோலிக்க ஸ்தாபனம். கத்தோலிக்கம் என்றால் என்ன அர்த்தம்? “உலகளாவிய” என்று அர்த்தம், உலகளாவிய அளவில் ஒரு ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது. “இந்த சிறிய குழுக்களெல்லாம் ஒரே சபை அமைப்புக்குள் வந்துவிட வேண்டும்” என்று கூறப்பட்டது. நீங்கள் இதை கவனிப்பீர்களானால், ஓ, நான்…இன்னும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே போகலாம்.

120236 கவனியுங்கள்! பாபிலோன் என்னவாயிருந்தது? யார் அதை ஸ்தாபித்தது? நிம்ரோது. அவன் என்ன செய்தான்? அவன் ஒரு பெரிய நகரத்தில் கோபுரத்தைக் கட்டினான். மற்ற பட்டணங்களெல்லாம் இந்த பாபிலோனுக்கு கப்பங்கட்டும்படி செய்தான். ஸ்தாபன அமைப்பு! அதுவே இவைகளின் பின்னணியாகும். நிச்சயமாக. அதேக் காரியம் மீண்டும் இந்த சபைக்காலத்திற்குள்ளாக வந்து, மீண்டும் ஸ்தாபன அமைப்பை ஏற்படுத்தி, முழு தேசங்களையுமே அதற்குள் கொண்டு வந்துவிட்டது. வேத வாக்கியத்தில் அதைப்பற்றி சரியாக இங்கே, “…அந்த வேசியானவள் வேசித்தனமாகிய மதுவை பூமியின் குடிகளுக்குக் குடிக்கக் கொடுத்தாள்” என்று கூறப்பட்டுள்ளது. “கிறிஸ்தவள்” என்று கூறிக்கொண்டு, அவள் தன்னுடைய வேசித்தனத்தை செய்துகொண்டு அவர்களுக்கு ஞானோபதேசம், ஜெபப்புத்தகம் மற்றும் இன்னபிற காரியங்களைக் கொடுத்தாள். ப்ராடெஸ்டெண்டுகள் அவ்வண்ணமாகவே வந்து, சரியாக அவளது பாதையை பின்பற்றினார்கள்.

121237 சரி, இன்னும் சிறிது தொடர்ந்துசென்று பார்ப்போம். சரி, சரி. இப்பொழுது. அவர், “இவை பிலேயாமின் போதகம்” என்றார். 238 இஸ்ரவேலரை சபிக்க இயலாது என்பதை கண்டறிந்த பிலேயாம் மேற்கொண்டு என்ன செய்தான்? பிலேயாம் பாலாக்கிடம், இஸ்ரவேலரை மோவாபியருடைய தேவர்களின் பண்டிக்கைக்கு அழைப்பது ஒரு நல்ல யோசனையாயிருக்கும் என்று கூறினான். அவர்களுக்கு ஒரு பெரிய பண்டிகை அங்கே உண்டாயிருந்தது. அவர்கள் அங்கே போக வேண்டியிருந்தது. அப்பண்டிகை, “பாகால் பே—யோ—ரி—ன் பாகால்பேயோர், பாகால்பேயோர் பண்டிகை” என்றழைக்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன். அது அத்தேவனை அவர்கள் வணங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு—ஒரு பண்டிகையாயிருந்தது. 239 பிலேயாம், “பாலாக்கே, நான் உமக்கு ஒரு நல்ல யோசனையைத் தருகிறேன். நீர் மட்டும்…தேவன் அவர்களை சபிக்கவேமாட்டார். அதுதான் அங்குள்ள காரியம். இதை நான் உனக்கு தெரிவிக்கிறேன். எனவே நாம் என்ன செய்யலாம் என்பதை உமக்குச் சொல்லுவேன். நாம் அவர்களை வெளியேற்ற முடியாது. ஆனால் அவர்களை நீர் விருந்துண்ண அழைத்தால், அப்பொழுது அந்த முழுக் கூட்டத்தையும் உம் வழிக்கு இழுத்துக் கொள்ளலாம்” என்றான். 240 பாருங்கள், கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் இதை போலத்தான் கான்ஸ்டன்டைனும் செய்தான். சரியாக! எனவே தான், “பிலேயாமின் போதகம்” என்று இக்காலத்தில் கூறப்பட்டுள்ளது.

122241 அவர்கள் என்ன செய்தார்கள்? பிலேயாமின் போதகமானது பிறகு இஸ்ரவேலருக்குள் வந்துவிட்டது. மோவாபியர் அனைத்து இஸ்ரவேலரையும் இந்தப் பெரிய விருந்துக்கு அழைத்தார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு பெரிய விருந்து உண்டாயிருந்தது. ஓ, ஒரு பெரிய விருந்து, ஒரு பெரிய அளவில் ஒன்று கூடி களியாட்டம் போடுதல் உண்டாயிருந்தது. அந்த விருந்துக்கு இஸ்ரவேலர் சென்றபோது, ஏன்? இந்த இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே அழகான பாலுணர்ச்சியை தூண்டும் வகையில் ஆபசமாய் உடை உடுத்தியிருந்த மோவாபிய ஸ்திரீகளை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆம். அங்கே அடிவாரத்தில் பாளயமிறங்கின தங்களுக்குள் இருக்கும் சாதாரண பெண்களைப் போல் மோவாபிய பெண்கள் இருக்கவில்லை. “ஓ, அவர்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். என்னே! எப்படி அழகாக அவர்கள் தோற்றமளிக்கிறார்கள். ஓ, அவர்கள் எப்படியாய் தங்கள் அழகையெல்லாம் வெளியே காண்பிக்கிறார்கள்” என்றெல்லாம் கூறினார்கள். அவர்கள் அக்காரியத்தில் விழுந்து போய், விபச்சாரம் பண்ண ஆரம்பித்தார்கள். தேவன் அவர்களை சபிக்காமற்போனால், பிலேயாம் அவர்களை இந்த ஸ்தாபன அமைப்புக்குள் கொண்டு வந்தால், அதின் மூலம் அவர்கள் மேல் தேவனுடைய கோபத்தை தேவன் சொரிய காரணமுண்டாக்கி, அவர்களை தேவனே கொன்று போடச் செய்துவிடலாம் என்று பிலேயாம் அறிந்திருந்தான். தான் அவர்களை சத்திய பாதையை விட்டு வழிவிலகச் செய்து விட்டால், தேவன் தாமே அவர்களைக் கொன்று போடட்டும் என்று நினைத்திருந்தான்.

123242 பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறுவதற்குப் பதிலாக நீங்கள் புறப்பட்டுச் சென்று ஏதாவது ஒரு சபையைச் சார்ந்து கொண்டு விடுவீர்களாயின், அப்பொழுது நீங்கள் மரித்துப் போனவர்களாயிருக்கிறீர்கள்! உங்களுக்காக அல்ல இது, ஆனால் இங்கே, அது சற்று உன்னத்தில் பதிய வேண்டும் என்றே நான் இதை கூறிக்கொண்டிருக்கிறேன். செத்தவனாயிருக்கிறானே! சர்தை சபையின் காலத்தில் இங்கே லூத்தரிடம், “நீ உயிருள்ளவன என்று பெயர் கொண்டிருந்தும்” என்று கூறினார். சர்தை என்ற வார்த்தையின் பொருள், “மரித்துப்போயிருத்தல்” என்பதாகும். “நீ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.” அதைத் தான் தேவன் அங்கே கூறினார். ஆம். புரிகிறதா? 243 சபையானது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு விவாகம் செய்வதை விட்டு விலகி, மதஸ்தாபன அமைப்புக்கு தன்னை விவாகம் செய்வித்துக் கொண்டுவிட்டபடியினால், அவர்கள் ஆவிக்குரிய வேசித்தனத்தை செய்து, மரித்துப்போய்விட்டார்கள். அங்குதான் காரியமே உள்ளது. சபைகளண்டை பேசிய போது தேவன் இவ்வாறு தான் உரைத்தார் என்று வேதம் கூறியுள்ளது. 244 இப்பொழுது நான் ஒன்றை இங்கே உங்களுக்கு வாசிக்க விரும்புகிறேன், அதாவது நான்…

124245 தேவன், அவர் என்ன செய்தார்? அவர்கள் இந்த தீமையான காரியத்தைச் செய்தபோது, அவர்கள் விபச்சாரக் குற்றத்தில் அகப்பட்டார்கள். ஒரே நேரத்தில் அவர்களுக்குள் நாற்பத்திரண்டாயிரம் பேரை தேவன் கொன்று போட்டார். விபச்சாரம் செய்ததற்காக அவர்களில் நாற்பத்திரண்டாயிரம் பேர்களை ஒரேயடியாக தேவன் கொன்று போட்டார். சபைக்காலத்தில் இங்கே அது எவ்வாறு கூறப்பட்டுள்ளது? “கிறிஸ்தவன்” என்று நீங்கள் உங்களை அழைத்துக் கொண்டுவிட்டு, அதே சமயம் உலகப் பிரகாரமாக நடந்து கொள்கிறீர்கள். இதுவே ஆவிக்குரிய விபச்சாரமாக இருக்கிறது. ஓ, சகோதரனே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த பழைய கோட்பாடுகளையும் மற்ற காரியங்களையும் விட்டு விலகுங்கள்,…அவைகள் மரித்தவைகளாயுள்ளன. அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணக் கோட்பாடு அல்லது ஏதோ ஒரு விதமான ஒரு பிரமாணத்தை மனப்பாடமாக ஒப்பித்தல், ஒரு ஜெப புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள சில ஜெபங்களை கூறுவது அல்லது அதைப் போன்ற ஒரு காரியத்தைச் செய்வது. இயேசு ஒரு போதும் ஒரு ஜெபத்தை புத்தகத்திலிருந்து வாசித்து சொல்ல வேண்டுமென தன் ஜனங்களுக்குச் சொல்லவில்லை. அவர், “ஜெபம் செய்யுங்கள்” என்றும் கூறியுள்ளார். ஜெபம் செய்யுங்கள். சரி.

125246 பிலேயாமைப் போலவே, கான்ஸ்டன்டைனும் விருந்துக்கழைத்தான். இப்பொழுது கவனியுங்கள். பிலேயாமின் அஞ்ஞான பண்டிகை விருந்தைப் போலவே, கான்ஸ்டன்டைனும் அஞ்ஞான விருந்து படைத்தான். சரி, பெர்கமு சபை அவ்விருந்துக்கு வரும்படி அழைக்கப்பட்டது. இப்பொழுது இதைக் கவனியுங்கள்… 247 நான் ஒரு குறிப்பை இங்கே எழுதி வைத்துள்ளேன். நான் இதைக் குறிப்பிடாமல் அப்படியே விட்டுவிடப் போகிறேன். சரி. சரி. நான் எழுதி வைத்துள்ள ஒன்றை…இக்குறிப்பை இங்கே கவனத்தில் எடுத்துக் கொள்ளும்படி நான் முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறேன். 248 பெர்கமு விருந்துக்கழைக்கப்பட்டது. சரி, நிசாயா ஆலோசனை சங்கத்துக்குப் பிறகு ஒரு விருந்துக்கு அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் விண்டர் சொலாஸ்டைஸ் என்ற விருந்துக்கு அழைக்கப்பட்டனர். அதன் பொருள், “சூரியன், சூரிய ஆராதனை” அது ஒரு அஞ்ஞான கடவுளாயிருந்தது. அது டிசம்பர் 21-ம் தேதி வருகிறது. ஒரு ஆண்டில் மிகவும் குறைந்த அளவே பகல் இருக்கிற நாள் அது தான். வருடத்திலேயே…டிசம்பர் 25-ம் தேதி வரைக்கிலும் இந்த நேர அளவு மாறுவதில்லை. அனைத்து அஞ்ஞானிகளும் அதை தேவனுடைய பிறந்தநாளாகக் கொண்டாடினார்கள். சூரிய தேவனுடைய பிறந்தநாளான டிசம்பர் 21-ம் தேதி தான் வருடத்தின் மிகக் குறைந்த அளவு பகற்காலம் உள்ள நாளாகும். சபைகளைப் பற்றிய வரலாற்றைப் படித்தறிந்தவர்கள் எவரும், அந்நாளை அஞ்ஞானிகளே ஆராதித்துவந்தனர் என்பதை அறிந்திருந்தனர். அது ஒரு கொண்டாட்டமாக இருந்தது. 249 ரோமர்கள்…தங்களது வட்டவடிவமான விளையாட்டரங்களில் அந்நாளில் பெரிய விளையாட்டுக்களை நடத்துவார்கள். அதைப்பற்றி அண்மையில் வெளியான “பென்ஹர்” திரைப்படத்தில் எத்தனை பேர் பார்த்தீர்கள்? பார்த்தீர்களா? ரோமானியர்கள் அவ்விதமான விளையாட்டுக்களை சூரியனின் நாளில் ரோம அரசங்க சாலைக்குள், சூரியக்கடவுளின் பிறந்த நாள் கொண்டாட்டமாகக் கொண்டாடினார்கள். பாருங்கள்?

126250 அவர்கள் இந்த பெரிய விருந்து கொண்டாடுதலைச் செய்து, அதற்கு நிக்கொலாய் மதஸ்தரை அழைத்தார்கள். ஓ!, அது பூரணமாக உள்ளதல்லவா? “பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு” என்று வார்த்தைக்கேற்ப இது இல்லையா? பாருங்கள், பெர்கமுவிடம் தேவன், அவர்களுக்குக்கிருந்த அந்தப் பெரிய பந்தயங்களைப் பற்றி சொல்லுகிறார். அவர்கள் நினைத்ததோ…இந்த நிக்கொலாய் மதத்தினர், “இது நல்லது, அருமையாக இருக்கிறது, இந்த பெரிய பண்டிகை வருடத்திற்கொருமுறை கொண்டாடப்படுகிறதே? ஆம்” என்று எண்ணினர். ஆகவே, இந்த பிரதான பேராயர் என்று அழைக்கப்பட்ட அல்லது அவன் என்னவாயிருந்தாரோ, இப்படிப்பட்ட பதவிகளை வகித்தவர்களுக்கு வந்த அழைப்பினாலே, அவர்கள் அதை தொடர்ச்சியான ஒரு காரியமாகச் செய்ய ஒப்புக் கொண்டனர்; இவ்வாறாக அவர்கள் வேசித்தனங்களை, விபச்சாரங்களை உள்ளே கொண்டு வந்தனர், கத்தோலிக்க சபையை உருவாக்கினர். அதில் ஒவ்வொரு ப்ராடெஸ்டெண்ட் சபையுமே அங்கம் வகிக்கின்றனர் (ஸ்தாபனம்) தேவனுக்கு ஸ்தாபனம் ஏதுவும் கிடையாது. அவர் அந்தப் பெயரையே வெறுக்கிறார் வேதம் அவ்வாறு உரைத்துள்ளது. 251 அவர்கள் அதைச் செய்தபொழுது என்ன சம்பவித்தது? அவர்கள்—அவர்கள் இப்பொழுது கூறினதோ…அவர்கள் ஒரு ஆவிக்குரிய பயன்படுத்துதலை செய்ய வேண்டி, அவர்கள் (கர்த்தராகிய இயேசுவாகிய) தேவ குமாரனின் பிறந்த நாளை (Son of God’s Birthday) அது ஏற்பட்ட ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் 25-ம் தேதிக்கு மாற்றினார்கள். (எந்த அறிஞரும் அவர் ஏப்ரலில் தான் பிறந்தார் என்றறிவர். ஆவிக்குரிய வெளிப்படுகளைப் பெற்ற எந்தவொரு மனிதனும், அவர் பிறப்பு இயற்கையோடு சரியாக ஒத்திருந்தது என்றும், இயற்கை பூத்துக் குலுங்கும் மாதம் ஆட்டுக்குட்டிகள் மற்றும் யாவும் பிறக்க ஏதுவான ஏப்ரலில் தான் அவர் பிறந்தார் என்பதை அறிவர்.) அப்படி மாற்றிவிட்டு, கிறிஸ்துமஸ் எனப்பெயர் சூட்டி இன்னமும் ஆராதிக்கின்றனர். இப்பொழுது அதில் சாண்டாக்ளாஸ் என்பதையும் சேர்த்து விட்டார்கள். என்ன…ஓ, இரக்கம். பாருங்கள்? இன்னும் அதிகமான அஞ்ஞான பண்டிகைகளும் கிறிஸ்தவத்தோடு சேர்த்துக் கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டது. அவ்வளவுதான். பிலேயாமின் விருந்துக்கழைத்தலை அங்கே காண்கிறீர்கள். “பிலேயாமின் போதகத்தைக் கைக்கொளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.” இதுதான் அது. (ஓ தேவனே, அதை வெளிப்படுத்தும், பிதாவே.) பாருங்கள்? ஏப்ரலில் இருந்து பிறந்த நாளை மாற்றினார்கள்…

127252 வரலாற்றாளார்கள், “எல்லா ஜீவன்களும் பிறக்கும் மாதமாகிய ஏப்ரலில் தான் இயேசுவும் பிறந்திருக்க வேண்டும் என்பதற்கு அனைத்து சான்றுகளும் உள்ளன” என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அஞ்ஞான சூரியக் கடவுளின் பிறந்த நாளான டிசம்பர் 21-ம் தேதிக்குப் பதிலாக ஐந்து நாட்களை தள்ளி வைத்து, டிசம்பர் 25 என்று வைத்துக் கொண்டனர் (பாருங்கள்?) எனவே தங்களுடைய சடங்காச்சார விழாக்களை ஒன்றாக வைத்துக் கொள்ள முடிந்தது. அஞ்ஞான மார்க்கத்தையும் கிறிஸ்தவமார்க்கத்தையும் ஒன்றாக இணைத்தனர். கத்தோலிக்க மதம், அஞ்ஞான மூட நம்பிக்கைகள் நிறைந்த ஒரு கூட்டமாகத்தான் உலகில் இருந்து வருகிறது. கிறிஸ்தவத்திற்கு புறம்பாக்கப்பட வேண்டியவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இருக்கிற ஒரு ஸ்தாபனம் அது. அது உண்மையே. அது உண்மை. இதற்கு உட்பட்டு இணங்கி நடந்து கொள்ளும் ப்ராடெஸ்டெண்டுகள், தாய் வேசியின் மகளுக்குரிய எல்லா சிறப்போடும் நடந்து கொள்கிறார்கள். சரியாக அப்படியே நடந்து கொள்கிறார்கள். 253 தேவ பக்திக்குரியதாயில்லாத எந்தவொன்றையும் உண்மையாகவே எதிர்க்கக்கூடியவர்களாக நாம் இருப்பதற்கு தேவன் நமக்கு உதவி செய்வாராக. பாருங்கள்? ஓ!

128254 அதனோடு ஆவிக்குரிய சம்மந்தமுள்ளதாக ஆக்க இந்த பேராயர் என்ன சொன்னார் என்று உங்களுக்குத் தெரியுமா? பேராயனே, “நமக்கு இவ்வாறு செய்து கொள்ளுவதற்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் இயேசுவும், ‘நீதியின் சூரியன்’” ஆகத் தானே இருக்கிறார் என்று கூறினார். உம்ம்ம்! ஓ, மத்தேயு 28:19-ல் உள்ள “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால்” என்று சொல்லப்பட்டதை அவர்கள் எடுத்துக் கொண்டது போல, அவர்கள் ஒரு சாதகமாக தவறாக பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் அதை ஆவிக்குரிய விதமாக பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு ஒரு சாக்குப் போக்கு சொல்ல ஒரு சந்து நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அது அவ்வாறில்லை… 255 வேதம், “சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்களுடைய வாக்கினால் நிலைவரப்படும்” என்று கூறியுள்ளது. தேவன் அதைக் கூறினார். அதை அவர் மூன்று தடவைகள் கூறியிருக்கிறார். எந்த ஒன்றையாவது சாட்சிகளினால் உறுதிப்படுத்த தேவன் விரும்பியபொழுது, அப்பொழுதெல்லாம் அவர், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரையும் அழைத்துச் சென்றார். அவர் செய்த காரியங்களில் எல்லாம் அவ்வாறு இரண்டு அல்லது மூன்று சாட்சிகளை அவர் வைத்துக் கொண்டார், வேதம் முழுவதும் அவர் அவ்வாறே செய்தார். அது உண்மை. 256 ஆனால், நீங்கள் பாருங்கள், அவ்வாறு இருக்கும்படி அவர்கள் அதை எடுத்துக்கொள்ளும்படியாக, இந்த சிறிய காரியங்கள் வர வேண்டியதாயுள்ளது. தேவன் அதை உலகத்தோற்றத்திற்கு முன்னரே அறிந்திருக்கிறார். அங்கே அவர்கள் அந்த ஆவிக்குரிய பயன்பாட்டிற்காக அதை வைத்திருந்தனர், “ஏனென்றால், அவர் தேவனுடைய குமாரனாக (S—O—N of God) இருக்கிறார். நாம் அந்த அஞ்ஞான சூரியக் கடவுளின் பிறந்த நாளை (S—U—N God’s Birthday) எடுத்து, அதை தேவ குமாரனின் பிறந்த நாளாக (S—O—N of God’s Birthday) ஆக்கிவிடலாம், ஏனெனில் அவரும் ‘நீதியின் சூரியனாக (S—U—N of RIGHTEOUSNESS) இருக்கிறார்’” என்றனர். உம்ம்! உம்ம்! ப்ராடெஸ்டெண்டுகள் இன்னமும் அந்த பிழைக்கு உடந்தையாக இருக்கிறார்கள், அதைபோன்ற காரியத்திற்கே அவர்கள் நிச்சயமாக வேதத்திலுள்ளதை தங்களுக்கு செளகரியமாக உள்ள ஒரு காரியத்திற்காக மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். ஓ, என்னே! நான்…நாம் ஒரு நிமிடம் அப்படியே நிறுத்துவோமாக. சரி.

129257 நான் கூற விரும்பும் இன்னும் ஒரு சிறு காரியம் இங்கே உள்ளது. இதையும் நாம் பார்த்து விடுவோம். கடைசியாக உள்ள இந்த வசனங்களை நாம் வேகமாக எடுத்துக் கொள்வோம். நம்மால் அவ்வாறு செய்யமுடியுமா? ஆம, நல்லது. நாம் இப்பொழுது மிக மிக விரைவாக இந்த வசனத்தை பார்ப்போம். அதிலுள்ள முக்கியமான கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். சரி. நாம் இப்பொழுது எங்கே இருக்கிறோம்? ஆகிலும் சில காரியங்களைக் குறித்து உன் பேரில் எனக்குக் குறை உண்டு…பிலேயாம்… அது உண்மை, நான் அதை ஏற்கனவே எடுத்துக் கொண்டு விட்டேன். …நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு… நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். 258 என்னே! இங்கே கான்ஸ்டன்டைன் அக்காரியத்தைச் செய்தபோது…அவர்கள் அந்த பெரிய பண்டிகையை குறித்த பொழுது …நான்—நான் அதை விட்டு விலகிப் போய்விட்டேன். நான் அதைப் பற்றி குறிப்பை படிப்பதற்கு முன்னால், நான் கொஞ்சம் காத்திருக்கப் போகிறேன். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் என்னை பின்னால் உள்ள காரியங்களை எடுத்துப் பேசும்படி செய்தார். “நீ அதை சொல்லாமல் அடக்கி வைக்க வேண்டாம்” என்று உரைக்கப்பட்டது புரிகிறதா? இங்கே அது வருகிறது! ஊ—ஹூ. ஊ—ஹூ. சரி. அதன் காரணம் என்னவெனில்…

130259 அவர்கள் அந்த பெரிய காரியத்தை நியமித்தபோது, (நீங்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக, என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.) அது தான் ஆயிரவருட காலத்திற்கு பிந்திய காலம் பிறந்ததாக இருக்கிறது. ஏனெனில் சபையானது ஐசுவரியமடைந்து விட்டது, அது எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஐசுவரியமடைந்துவிட்டது. அது என்னவாயிருந்தது? வல்லமையுள்ளதாயுள்ளது. அது அரசாங்கத்திற்கு மேலாக அதிகாரமுள்ளதாக உள்ளது; அரசும் சபையும் ஒன்றாக இணைந்துவிட்டன. 260 இப்பொழுது தேவனுக்கு ஒரு இராஜ்யம் கிடைத்து விட்டதா? பிசாசானவன் இயேசுவுக்கு உலகத்தின் இராஜ்யங்களையெல்லாம் காட்டி, “இவை ஒவ்வொன்றும் என்னுடையவை, எனக்குப் பிரியமானதை நான் அவைகளுக்குச் செய்கிறேன்” என்று கூறினான் என்று இயேசுவானவரே கூறவில்லையா…அப்படியிருக்க தேவனையும் பிசாசையும் ஒன்றிணைத்து விடமுடியுமா? ஓ, நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது! நிச்சயமாக அவ்வாறு நீங்கள் செய்ய முடியாது. அதனால் தான் அரசானது ஸ்தாபனமாக உள்ளது. தேவன் இந்த ஸ்தாபனம் அல்ல. நிச்சயமாகவே அல்ல, நீங்கள் அதைச் செய்ய முடியாது.

131261 ஆனால் அவர்கள் அதை அப்பொழுது அவ்வாறு ஆக்கிவிட்டார்கள். கிறிஸ்தவ மதம் என்றழைக்கப்பட்ட தங்களுடைய சபையை ரோம இராஜ்யத்தோடு முழுவதும் இணைத்துக் கொண்டார்கள். அங்கு இருந்த ரோம பேராயர் தான் எல்லாவற்றிற்கும் மேலாக அதிகாரம் உள்ளவராக இருந்தார். கொஞ்சங்கழித்து அவர்கள் அவரை போப் என்று அழைத்தனர், ஆனால் அப்பொழுது அவர்—அவர் பேரயாராகவே இருந்தார். மூன்றாம் போனிஸ்பேஸ் என்பவரே முதல் போப்பாக ஆனார். 262 இவ்வாறாக அவன் உண்மையிலேயே ஒரு போப்பை அங்கே ஏற்படுத்தியபோது, அவர்களுக்கு மனித உருவில் கிடைத்துள்ள ஒரு கடவுள் என்றே கருதினர். அவர்களுக்கு ஒரு பெரிய பலிபீடம் இருந்தது. அவர்களுக்கு எல்லாச் செல்வங்களும் உண்டாயிருந்தன. அவர்களுக்கு மகத்தான விலையுயர்ந்த சலவைக் கற்கள் பொருந்திய முத்துக்களினால் அலங்கரிக்கப்பட்ட பீடங்கள் இருந்தன. பெரிய ஆலயக் கட்டிடங்கள் அவர்களுக்கு இருந்தன. அவர்கள் அரசாங்கத்தின் மேலும் ஆதிக்கம் உடையவர்களாக இருந்தனர். என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? “அதுவே ஆயிரவருஷ அரசாட்சி” என்று அவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். யூதர்களுக்குள்ள வாக்குத்தத்தங்களெல்லாம் இப்பொழுது அவர்களுக்கு கிடையாது, “அவர்களை தேவன் கைவிட்டார்” என்றார்கள். (தேவன் அவ்வாறு ஒருபோதும் தன்னால் செய்ய இயலாது என்று கூறியிருக்கிறார்). இவ்வாறு கூறி, கர்த்தராகிய இயேசு வருவதற்கு முன்னால், ஆயிர வருஷ அரசாட்சியைக் கொண்டு வந்துவிடலாம் என்று முயற்சித்தனர். ஆனால் இயேசு வருகிறபோதே ஆயிரவருட அரசாட்சி ஆரம்பிக்கிறது.

132263 அந்த இடத்தில் தான், “ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு உள்ள காலம்” என்ற கொள்கையின் பிறப்பிடமாகியது. அக்காரணத்தினால்தான் கத்தோலிக்கர்கள் இன்று வரையிலும் இயேசுவின் வருகையைக் குறித்து உபதேசிக்கிறதில்லை. “அதெல்லாம் சபையில் இருக்கிறது. இதுவே ஆயிர வருஷ அரசாட்சி. சபைக்கு யாவும் சொந்தமாக இருக்கிறது. இதுதான் அது” என்று கூறினர். பாருங்கள், இயேசு கிறிஸ்து திரும்பி வராமலேயே ஆயிர வருட அரசாட்சி நடக்கிறது என்ற அவர்களின் கொள்கையைப் பார்த்தீர்களா? (ஓ, என்னே!) இச்சபையின் காலம் கான்ஸ்டன்டைன் கொலை செய்யப்படும் வரைக்கிலும் நீடித்தது. அது 312…கி.பி.312 முதல் 606 முடிய உள்ள காலம் வரை நீடித்தது. மூன்றாவது போனி பேஃஸ் என்பவன் அகில உலகத்திற்கும் பேராயராக, அல்லது அகில உலக சபையின் முதல் போப்பாக ஆக்கப்பட்டான்.

133264 நாம் இந்த வசனத்தை முடித்துவிடுவோம் என்று நான் நினைக்கிறேன். அதன் பின்னர் நாம் அதை எடுத்துக் கொள்வோம். தேவனுக்கு ஸ்தோத்திரம். புரிகிறதா? இப்பொழுது, நான் அப்படி ஒரு நிமிடம் நிறுத்தி வைக்கிறேன். 17-வது வசனம்: ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்க்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும், அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது. 265 இதை நாம் நாளை இரவு வரை காத்திருந்து பார்ப்போமா, அல்லது இப்பொழுதே பார்த்து விடுவோமா? [சபையார், “இப்பொழுதுதே” என்று பதிலளிக்கிறார்கள்—ஆசி.] சரி.

134266 பரலோகப் பிதாவே, இப்பொழுது இந்த ஜனங்களும் (இந்த ஒலிநாடாக்கள் செல்லுகிற இடமெங்கும் கேட்பவர்களும்) இதைப் புரிந்து கொள்ளும்படிக்கு செய்ய வேண்டும் என்றும், இது—இது நீர் எனக்கு அளித்திருக்கிற தெய்வீக வியாக்கியானமாயிருக்கிறபடியால் நான் இதைக் கூறுகிறேன் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

135…ஜெயங்கொள்ளுகிறவனுக்கு… 267 நீங்கள் முதலாவதா ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புவது; ஒவ்வொரு சபைக் காலத்திற்குரிய செய்திகளும் சபைக்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கவில்லை, ஆனால் அந்தந்த சபைக்காலத்திற்குரிய தூதனுக்கே அது கூறப்பட்டுள்ளது. முதல் சபைக்கு எபேசுவுக்கு…என்ன சொல்லப்பட்டது என்று பாருங்கள். … எபேசு சபையின் தூதனுக்கு …(அது சரியா?) 268 சரி, அடுத்த சபைக்காலம், 8-வது வசனம்; … சிமினா சபையின் தூதனுக்கு … 269 சரி, 12-ம் வசனம்: … பெர்கமு சபையின் தூதனுக்கு …(அது சரியா?) 270 செய்தியானது சபையின் தலைவனுக்குத் தான் கொடுக்கப்படுகிறது. அச்செய்தியிலிருந்து விலகிச் செல்லுகிறவனுக்கு தேவன் உதவி செய்வாராக! ஆனால் அது ஒரு தூதனுக்குக் கொடுக்கப்பட்டது. அத்தூதன் அவருடைய கரத்தில், அவருடைய ஆதிக்கத்திற்குள் இருந்து கொண்டு, அவருடைய வலது கரத்திலுள்ள வல்லமையை கொடுத்துக் கொண்டிருக்கிறதாக இருக்கிறான். அவர்களே அவருடைய வலதுகரமாக இருக்கிறார்கள். அதாவது, அவர்கள் இங்கே இப்பூமியில் இருக்கையிலேயே, உன்னத அதிகாரத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் அவரிடத்திலிருந்து வரும் ஒளிகளாக, அந்த சபைக்காலத்திற்கு ஒளியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறவர்களாக இருக்கிறார்கள். புரிகிறதா? “ சபையின் தூதனுக்கு ” என்பதைப் பாருங்கள். அந்தந்த (சபைக் காலத்திற்கு) பொறுப்பாயுள்ள நட்சத்திரத்திற்கு இவைகளைக் கூறியுள்ளார். சபையின் தூதன் வார்த்தையைப் பிரசங்கியாதிருந்தால், அவனே அதற்கு பொறுப்பாளியாயுள்ளான். அது உண்மை. நியாயத்தீர்ப்பில் அவன் அதற்கு பதில் கூறியேயாக வேண்டும்.

136271 அண்மையில் நான் இங்கே கூறின தரிசனத்தைப் பற்றி எத்தனைபேர் நினைவில் வைத்திருக்கிறீர்கள்…இங்கே பாருங்கள். நான், படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் வந்தார். நான் திரும்பிப் பார்க்கையில் அங்கே என் மனைவியைக் கண்டேன். நான் அங்கே படுத்துக்கொண்டிருந்தேன், அதே சமயத்தில் தேவ சமூகத்திற்குப் போனேன். அங்கிருந்த எல்லா ஜனங்களையும் நான் பார்த்தேன். அதைப்பற்றி நான் கூறியதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா? நீங்கள் அனைவருமே நினைவில் வைத்துள்ளீர்கள். பாருங்கள்? அப்பொழுது நான்: “அவர்கள். யார்…?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர்கள் உம்முடையவர்கள்” என்று கூறினார். அப்பொழுது நான், “அவர்கள் யாவரும் பிரான்ஹாம் குடும்பத்தினரா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “இல்லை” என்றார். அவர்கள் இலட்சக்கணக்கில் இருந்தார்கள். மேலும் அவர், “அவர்கள் உன்னுடைய ஊழியத்தில் மனந்திரும்பியவர்கள்” என்றார். அப்பொழுது நான், “மனந்திரும்பியவர்களா?” என்று கேட்டேன். 272 அதற்கு அவர், “இதோ அங்கே நீ பார்த்த ஒரு பெண்மணியை இளவயதும் அழகும் உள்ளவள் என்று நீ மெச்சினாயே. அவள் தொண்ணூறு வயதை கடந்தவளாய் இருக்கையில், நீ அவளை கிறிஸ்துவண்டை நடத்தினாய்” என்றார். அப்பொழுது நான், “ஓ!” என்றேன். மேலும் நான், “அப்படியென்றால் நான் இதைக் குறித்தா பயனமடைந்திருந்தேன்?” என்றேன். அப்பொழுது அங்கிருந்தவர்கள், “நாங்கள் கர்த்தருடைய வருக்கைகாக இங்கே காத்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

137நான் அதற்கு, “நான் அவரைக் காண விரும்புகிறேன்” என்றேன். 273 “அவரை நீர் இப்பொழுது காணமுடியாது, ஆனால் அவர் சீக்கிரம் வருவார். நாங்கள் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் வரும்போது முதலில் அவர் உம்மிடம் வருவார். நீர் பிரசங்கித்த சுவிசேஷத்தின்படியே நீர் நியாயந்தீர்க்கப்படுவீர். நாங்கள் உம்முடைய பிரஜைகளாக இருப்போம்” என்று அவர்கள் கூறினர். “நல்லது,” மேலும் நான், “இவர்களுக்கெல்லாம் நான் பொறுப்பாளி என்று நீர் பொருட்படுத்துகிறீரா?” என்று கேட்டேன். “எங்கள் யாவருக்கும்” என்றார். அப்பொழுது நான், “நல்லது, ஒவ்வொருவருக்குமா…?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நீர் ஒரு தலைவனாகப் பிறந்தீர்” என்றார். அப்பொழுது நான், “ஒவ்வொருவரும் பொறுப்புள்ளவர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ஒவ்வொரு தலைவனும் அவ்வாறுதான்” என்று பதிலளித்தார். அப்பொழுது நான், “பரிசுத்த பவுலைக் குறித்து என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர் தன் காலத்திற்கான பொறுப்பளியாவார்” என்றார். மேலும் நான், “நல்லது,” என்று கூறி, “நான் பவுல் பிரசங்கித்த அதே சுவிசேஷத்தையே பிரசங்கித்தேனே” என்று கூறினேன். அப்பொழுது இலட்சக்கணக்கான சப்தங்கள்: “நாங்கள் அதின் பேரில் தான் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்” என்று எழும்பிக் கூறின. [சபையார், “ஆமென்” என்று கூறுகிறார்கள்—ஆசி.] புரிகிறதா? அங்குதான், “இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள்.” 274 எனவே தேவனுடைய தூதனாகிய , சபையின் செய்தியாளன், தான் வசனத்தைப் பிரசங்கிக்காமல் இருந்தால், பதில் சொல்ல வேண்டிய பொறுப்புள்ளவனாயிருக்கிறான். சரி.

138275 “மறைவான மன்னா.” அதைப்பற்றி நம்மால் முடிந்த அளவு சிறப்பான வியாக்கியானத்தை நாம் தருவோமாக. “மறைவான மன்னா” என்பது எதற்கு சாயலாக இருக்கிறது? மறைவான மன்னா என்பது, வேதத்தில்…ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த மன்னாவாயிருந்தது இல்லை சமூகத்தப்பம் எனப்படுவதாகும், அது ஆசாரியர்களுக்கு மட்டும் புசிப்பதற்கென உள்ளதாகும். எத்தனைபேர்கள் அதை அறிந்திருக்கிறீர்கள்? பாருங்கள்? அது சபையாருக்கு அல்ல…அவர்களிடத்தில் சபையாருக்கென உள்ள அப்பம் உண்டு, ஆனால் ஆசாரியனுக்கென்றே ஒரு விசேஷித்த அப்பம் இருந்தது. அது சரிதானே? 276 இது தானே ஒரு விசேஷமான அப்பமாகும், ஒரு விசேஷித்த அப்பம், மறைவான மன்னா அது. அது என்ன? நமது மன்னா யார்? கிறிஸ்துவே. சரி. பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷம் 6-ம் அதிகாரம் 48 முதல் 50 முடிய உள்ள வசனங்கள், நீங்கள் வேண்டுமானால் அதை குறித்து வைத்து கொள்ளுங்கள். இயேசு “வானத்திலிருந்து தேவனிடமிருந்து வந்த ஜீவ அப்பம் நானே” என்றார். மன்னா.

139277 நல்லது, “மறைவான மன்னா” என்பது என்ன? சபையார் யாவருக்கும் இந்த மன்னா கொடுக்கப்படுவதில்லை. வார்த்தையைப் பற்றி வெளிப்பாடு சபையின் தூதனுக்குத் தான் ஊற்றப்படுகிறது. புரிகிறதா? வார்த்தையைப் பற்றிய வெளிப்பாடு அந்தந்த காலத்திற்கு உரிய தூதனுக்கு அளிக்கப்படுகிறது, ஏனென்றால் அது மற்றவர்களுக்கு மறைக்கப்பட்டு, (அதுவே மறைவான மன்னா)…சபையின் தூதனுக்கு அளிக்கப்படுகிறது. புரிகிறதா? நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? கிறிஸ்து யார் என்பதைப் பற்றிய வெளிப்பாடு மற்றவைகளைவிட சற்று மேலானதாக, சற்று மேலான அழைப்பைக் கொண்டதாக இருக்கிறது.

140278 லூத்தர் அதை அடையாளங் கண்டு கொண்டாரா என்று வியப்புறுகிறேன். வெஸ்லி தன்னுடைய நாளில் அதைக் கண்டு கொண்டாரா என்று வியப்புறுகிறேன். ஓ, பரிசுத்த மார்ட்டின் அதைக் கண்டு கொண்டாரா என்று வியப்புறுகிறேன். ஐரேனியஸ் அவ்வாறேயிருந்தாரா? சபையானது இம்மனிதர்களையெல்லாம் அவர்கள் இறந்த பிறகு பரிசுத்தவான்களாக நியமிக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களெல்லாம் இவர்களுக்கு பரிசுத்தவான்கள் அல்ல; ஆனால் அவர்களோ அடையாளங்கள் பின்தொடர்ந்ததை உடையவர்களாக இருந்தனர். கத்தோலிக்க சபையோ, தங்களுடைய பேராயார்கள் போன்றவர்களை, அவர்கள் இறந்த பிறகு பரிந்துபேசும் பரிசுத்தவான்கள் என்று அறிவித்தது. 279 சமீபத்தில் ஒரு பெண்மணி “பரிசுத்த மார்ட்டின் வாழ்க்கை சரிதை ” என்ற புத்தகத்தை ஒரு ஆங்கிலப் புத்தகக் கடையில் வாங்கச் சென்றாளாம். அப்பொழுது…அவள் “பரிசுத்த மார்ட்டின்” என்று சொன்னாள். 280 புத்தகக்கடைக்காரர், புத்தக அலமாரியை இழுத்துப் பார்த்துவிட்டு, “அவர் வரலாற்றில் அவ்வளவாய் அறியப்பட்டவரல்ல, அவர் இறந்தபிறகு அவர் பரிசுத்தவானாக்கப்படவில்லையே” என்றாராம். பார்த்தீர்களா? இன்று வரையிலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் தேவனோ அவருடைய நாமத்தை அறிந்திருக்கிறார். மார்ட்டின் யார் என்று தேவன் அறிவார்.

141281 பாருங்கள், அதுவே வேறுபாடாகும். சிலர் தங்களுடைய நாமங்களை சில பெரிய ஸ்தாபனங்களில் பதிந்து கொண்டு விடவேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் தேவனுடைய ஜனங்களோ அவ்விதமான காரியத்தை புறக்கணித்து விடுகிறார்கள். அவர்கள் பெரிய ஆடம்பரமான காரியங்களை, பெரிய ஏதோ ஒரு காரியத்தை விரும்புகிறதில்லை; அவர்கள் பணிவாகவே இருக்க விரும்புகிறார்கள். தாழ்மையையே விரும்புகிறார்கள். மேலே செல்லும் வழி கீழே உள்ளது. “தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். தன்னைத் தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்.” அவர் தன்னைத் தான் தாழ்த்தினார். ஏதோ ஒரு பெரிய ஆளாக உங்களை காண்பித்துக் கொள்ள வேண்டாம். தாழ்மையாயிருக்கவே முயற்சியுங்கள், நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். புரிகிறதா? தேவனுக்கு முன்பாக எளிமையாக இருங்கள். உங்கள் சொந்த பார்வையிலும் நீங்கள் எளிமையாக இருங்கள். உங்களைப் பார்க்கிலும் எல்லோரும் உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொள்ளுங்கள். “…உங்களில் பெரியவனாயிருக்க விரும்புகிறவன் உங்கள் யாவருக்கும் ஊழியக்காரனாயிருக்கடவன்.” 282 தன் அரையைக் கட்டிக்கொண்டு, சீஷர்களில் பாதங்களைக் கழுவின இயேசு கிறிஸ்துவை விட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்? அவர் பாதங்களை கழுவிவிடுகிற ஒரு அடிமையானார். பரலோகத்தின் தேவன், வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவர், அங்கே கால்களில் படிந்த தூசியோடும், சாணத்தோடும் உள்ள பாதங்களோடும், அழுக்கான ஆடைகளோடும் இருந்த அந்த மீன் பிடிக்கிறவர்களின் பாதங்களை (ஓ!) கழுவி விடுகிற ஒரு அடிமை வேலைக்காரனைப் போல், கழுவி சுத்தம்பண்ணிக் கொண்டிருந்தார். அப்படியிருக்க நாமோ, “நம்மை ஏதோ பெரிதாக நினைத்துக் கொள்ளுகிறோம். நாங்கள் டாக்டர் பட்டம் பெற வேண்டும்; பிஹெச்.டி.பட்டம் பெற வேண்டும், இன்ன—இன்ன பட்டம் பெற வேண்டும்” என்று எண்ணுகிறீர்கள். ஓ, என்னே! அது கிறிஸ்துவுக்குரிய சிந்தையல்ல. அது அன்புள்ள இயேசு கிறிஸ்துவை காண்பிக்கிறதாக இல்லை. அவர் எல்லோருக்கும் பணிவிடைக்காரனார். அது உண்மையே. அவர் நமக்குச் செய்ததுபோலவே நாமும் ஒருவருக்கொருவர் செய்யும்படி நமக்கு அவர் முன் மாதிரியாக இருந்து நமக்குப் போதித்தார். ஓ, அதுவே—அதுவே என்னுடைய ஆண்டவர். அவர் பெரியவராக இருப்பதற்கு காரணம் அவர் சிறியவரானதால் தான். பாருங்கள், அதுவே அவரை அந்நிலைக்கு உயர்த்தியது.

142283 என் வாழ்க்கையில் சில பெரிய மனிதர்களை நான் சந்திக்கும் சிலாக்கியம் கிடைத்தது. தாங்கள் பெரிய மனிதர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த சில மனிதர்களை சந்திக்கும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஒரு உண்மையான பெரிய மனிதன், நீங்கள் தான் பெரியவர் என்று உங்களை நினைக்க வைக்கிறதற்கேதுவாக செய்து, தன்னை ஒன்றுமில்லாதவராகக் காட்டுகிறார். பாருங்கள்? இராஜாக்களையும், உண்மையிலேயே பெரிய மனிதராயிருக்கிறவர்களையும் சந்தித்திருக்கிறேன். உண்மையான, உறுதியான கிறிஸ்தவர்களை, நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஒட்டுப்போடப்பட்ட அது போன்ற உடைகளை உடுத்தினவர்களாக இருந்தார்கள். இன்னும் சிலர் பிரசங்க பீடத்திற்கு வருகையில், மேளமுழக்கத்தோடு வருகிறார்கள். அப்படியிருக்க…பாருங்கள்? ஓ, என்னே! நல்லது, இது வரையிலும்…சரி.

143284 “மறைவான மன்னா” என்பது சிறப்பானதொன்றாகும் . அதில் என்ன அப்படிச் சிறப்பு உள்ளது. ஏதோ ஒன்று என்றல்ல…பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களா? ஓ, இல்லை, அது முழு சபைக்கும் உரியதாகும். ஆனால் “மறைவான மன்னா” என்றால், அது தானே ஒரு விசேஷமான வெளிப்படுத்துதலாயிருக்கிறது. ஏனெனில் மற்றவர்களுக்கு அவன் போதிக்க வேண்டியவனாயிருக்கிறான். புரிகிறதா? மற்றவர்களுக்கு போதிக்கும்படி, சபையின் தூதனுக்கு, வேதத்தின் பேரில் ஏனையோரைக் காட்டிலும் சற்று கூடுதலான அறிவை தேவன் கொடுத்தலாகும். அவன் அவ்வாறு தான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது சரியா? நீங்கள் உங்களுடைய மேய்ப்பனைவிட மேலாக இருந்து விடமுடியாது. அதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், பாருங்கள். ஆகையால்…அவன் உங்களைப் போஷிப்பதற்காக தேவன் ஏற்படுத்தியுள்ள மேய்ப்பனாயிருக்கிறான். அவன் மேய்பனாக இருப்பானெனில், ஆடுகளைப் போஷிப்பதற்காக உள்ள மன்னா எங்கேயிருக்கிறது என்பதை அவன் அறிந்திருக்க வேண்டும். அது சரிதானே? இப்பொழுது, அது சற்று சிறப்பானது. இதை ஒரு நிமிடம் கவனித்துப் பாருங்கள். வெளிப்பாடு, மறைவான மன்னா.

144285 இப்பொழுது, “வெண்குறிக்கல்லை அவன் பெற்றுக் கொள்வான்.” இந்த தூதன் ஒரு வெண்குறிக்கல்லைப் பெறுவான். அது ஒரு பாறை அல்லவா? [ஒரு சகோதரன், “தூய்மை” என்று கூறுகிறார்.—ஆசி.] …அவர் கூறினது சரியே, “சுத்தத்தைக்” குறிக்கிறது. 286 அவர்—அவர் ஒரு சமயம் சீமோன் என்ற பெயரையுடைய ஒரு மனிதனைச் சந்தித்தார். அவனது பெயரை பாறை என்று அர்த்தம் கொள்ளும் “பேதுரு” என்ற பெயராக மாற்றினார். ஏன்? அவன் திறவுகோல்களை உடையவனாயிருந்தான். அது சரிதானே? அவனது பெயரை ஒரு பாறை என்று அர்த்தம் கொடுக்கும் பெயராக மாற்றினார். அது சரிதானே? பேதுரு திறவுகோல்களை உடையவனாயிருந்தான், ஏனென்றால் அவனே இராஜ்ஜியத்தின் திறவுகோல்களை உடையவனாயிருந்தான். 287 “இதைப் பெறுகிறவனேயன்றி வேறெருவனும் அறியக்கூடாத ஒரு புதிய நாமத்தை அவனுக்குக் கொடுப்பேன்” என்றார். அவன் யார் என்பதை அவன் அறிவான். ஆனால் மற்றவர்களுக்கு அவன் சொல்ல முடியாது. புரிகிறதா? புரிகிறதா? அவனைத் தவிர வேறுயாரும் அறிந்திருக்கமாட்டார்கள். பார்த்தீர்களா? பேதுரு திறவுகோல்களை பெற்றிருந்ததை அறிந்திருந்தான். ஆனால் அவன் அதைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளவில்லை. பாருங்கள்? தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளும் இந்த நபர்கள் வழக்கமாகவே ஒன்றுமில்லாதிருக்கின்றனர். ஊ—ஊ, உ—ஊ. “ஒரு வெண் குறிக்கல்லும், அதில் குறிக்கப்பட்டுள்ள ஒரு புதிய நாமமும்.” அது அம்மனிதனின் சொந்த பெயரல்ல. ஆனால் அவனுடைய வேறு பெயர்,(புரிகிறதா?) அதை அவன் மட்டுமே அறிவான்; வெண் குறிக்கல்லைப் பெறுகிறவன் தான் அந்த நாமத்தை அறிவான். பாருங்கள், அது சபையைப் போஷிப்பதற்காக அளிக்கப்படும் விசேஷித்த மன்னா அது, நினைவில் கொள்ளுங்கள்.

145288 நினைவிருக்கட்டும், உண்மையான சபைக்கு இது நடக்கும்பொழுது, அதே காலத்தில் தான் (இது வெளிப்படுத்தப்பட்ட இதே சமயம் தான்) அந்த நிக்கொலாய் மதத்தினர், தங்களுடைய சபைக்கு மேல் ஒரு தலைமைக் குருவை ஒரு போப்பாக ஏற்படுத்தினார்கள். அவனுக்கு கீழே ஒரு வெண்மையான பாறையினால் செய்த பீடம், ஒரு சலவைக் கல் பீடம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அது சரியா? அது அலங்கார கற்களினால் பதிக்கப்பட்டிருந்தது, அது அவனுக்கு விலையேறப்பெற்றதாயிருந்தது. 289 ஆனால் இந்த கர்த்தருடைய தூதன் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டின் மூலமாக, தான் யாராயிருந்தான் என்பதை, அதாவது அவன் ஒரு தேவபுத்திரன் என்பதை, அறிந்திருந்தான். 290 இந்த நிக்கொலாய் மதத்தினர் தங்களுக்கென ஒரு தலைவனை ஏற்படுத்திக் கொண்டு, அவனுடைய பாதத்தின் கீழாக சலவைக் கற்களால் ஆன ஒரு பீடத்தை செய்து வைத்தபோது (பாருங்கள்?), தேவன் தன்னுடைய ஆவியினால் நிரப்பட்ட தலைவனை, தன்னுடைய ஆவியால் நிறைந்திருக்கிற குழுவின் மேல் ஏற்படுத்தினார். அவருடைய தூதன், அவர் ஒரு நாமத்தை அவன் மேல் முத்திரையிட்டு வைக்கிறார். ஆனால அவன் அதை யாருக்கும் வெளிப்படுத்தக்கூடாது; அவன் அதை தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும். பாருங்கள், “அதைப் பெற்றுக் கொள்ளுகிறவனைத் தவிர வேறொருவனும் அறியான்.” 291 “மறைவான மன்னா, ஒரு கல், ஒரு புதிய நாமம், அதைப் பெறுகிறவனுக்கே தவிர வேறு ஒருவனுக்குந் தெரியாது,” அது அச்சபையின் தூதனுக்கு அளிக்கப்பட்டது. லூத்தர் அதைப்பற்றி அறிந்திருந்தாரா என்பதைப் பற்றி நான் வியக்கிறேன். வெஸ்லி அதைப் பற்றி அறிந்திருந்தாரா என்று நான் வியக்கிறேன். ஏனைய மகத்தான தூதர்கள் அதை அறிந்திருந்தார்களா என்பதைப் பற்றி நான் வியக்கிறேன்.

146292 இன்றைக்கு நான் வியப்புறுகிறேன்…இவ்வுலகத்தில் விரைவில் அந்த மகத்தான ஒளியின் தூதன் நம்மிடத்தில் வரவிருக்கிறார். அந்த மகத்தான பரிசுத்த ஆவி, வரப்போகும் அந்த வல்லமை, அது நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவண்டை வழி நடத்தும். அத்தூதனுக்கே அநேகமாக அதைப்பற்றித் தெரியாமல் இருக்கக்கூடும். ஆனால் அவர் இந்நாட்களில் ஒன்றில் இங்கு இருப்பார். தேவன் அத்தூதன் யார் என்பதை தெரியப்படுத்துவார். அத்தூதன் தன்னைத் தானே யார் என்று தெரியப்படுத்த வேண்டியதில்லை, தேவனே அவனைப் பற்றி தெரியப்படுத்துவார். தேவன் தனக்குச் சொந்தமானவனை நிரூபித்துக் காண்பிப்பார். இயேசு இங்கே இருக்கையில், அதைத்தான் அவர் கூறினார், அவர்கள் அவரை அறிந்து கொள்ளவில்லை, பாருங்கள். அவர், “நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்யாதிருந்தால் என்னை விசுவாசியாதிருங்கள். ஆனால் நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்தால், என்னை விசுவாசிக்க முடியாவிட்டால், என் கிரியைகளின் நிமித்தமாவது என்னை விசுவாசியுங்கள்” என்றார். அது சரி தானே?

147293 ஓ, அவர் அற்புதமானவரல்லவா? வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம். இப்பொழுது சபைகள் எங்கே உள்ளன என்பதை நீங்கள் காண்கிறீர்கள் அல்லவா? அவர்கள் எவ்வாறு வெளியே தள்ளப்பட்டார்கள் என்பதை பார்த்தீர்களா? சபையானது எவ்வாறு வெளியே போய்விட்டது என்பதை கண்டீர்களா? நாளை இரவு கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த சபைக் காலத்திற்குப் போகப் போகிறோம். 294 இப்பொழுது, நான் உங்களை நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டேன் என்பதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் நீங்கள் ஒன்றைக் கற்றுக்கொள்வீர்கள் என்று நான்—நான்—நான் நம்புகிறேன். குறிப்புகளை இன்னும் எடுத்துப் பேச,…அதாவது…என்னிடம்—என்னிடம் இன்னும் மூன்று நான்கு பக்கங்களுக்கு குறிப்புகள் உள்ளன. ஆனால் அவைகளை எடுத்துக் கொள்ள எனக்கு நேரம் இல்லை. ஏனெனில், இப்பொழுது மிகவும் நேரமாகி விட்டது, கிட்டத்தட்ட ஒன்பது மணிக்கு பதினேழு நிமிடங்கள் உள்ளன. ஆனால் இதை நாம் புத்தகமாக வெளியிடும்போது அப்போது நாம்—நாம்—நாம் இக்குறிப்புகள் அதில் இடம் பெறச் செய்துவிடலாம்.

148295 இப்பொழுது, உங்கள் முழு இருதயத்தோடும் அவரை இப்பொழுது எத்தனை பேர்கள் நேசிக்கிறீர்கள்? எத்தனை பேரகள் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்கள்? ஓ!, நாம் ஸ்தாபனங்களில் அங்கம் வகிக்கவில்லையென்பதால், நாம் ஒரு ஸ்தாபனமாக இல்லையென்பதால், நான் இங்கே நின்று இவைகளைக் கூற முடிகிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்கிறீர்களா? சகோதரரே, நான்—நான் ஏன் (என் வாழ்நாள் முழுவதும்) அந்தக் காரியத்திற்கு எதிராக போராடி வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? பாருங்கள், அது பரிசுத்த ஆவி. நான் ஏன் இவ்வாறாக இருந்து வந்திருக்கிறேன் என்று என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பாக வரைக்கிலும் நான் அறியவில்லை. பாருங்கள்? அது எதற்காக என்னை அவ்வாறு செய்யத் தூண்டியது என்பதை நான் அறிந்துகொள்ளவில்லை. நான் ஏன் எப்பொழுதும் ஸ்திரீகள் தவறாக வாழ்வதைக் குறித்து கூக்குரலிட்டுக் கொண்டிருந்திருக்கிறேன் என்பதும் எனக்கு தெரியாமல் இருந்தது. எனக்கு அது தெரியாமலேயே இருந்தது. ஆனால் நான் இப்பொழுது அறிந்திருக்கிறேன். பாருங்கள்?

149296 இப்பொழுது, கர்த்தர், இந்தக் காரியங்களெல்லாம் தவறாக இருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறார். அவர்களுடைய காரியம் சரியானபடி வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது…வேதமானது உரைத்துள்ளது போல… இப்பொழுது இங்கே கவனியுங்கள், சபைக்காலங்களில் இன்னின்னவாறு நடைபெறும் என்று (முன்கூட்டியே) உரைத்துள்ளது. இப்பொழுது நாம் அதை அறிந்து கொண்டோம், நாம் அறிந்து கொண்டோமல்லவா? நாம் குறிப்பிட்ட சபைக் காலத்திற்குரிய வரலாற்றை எடுத்துப்பார்கையில், வேதம் முன்னுரைத்தபடியே அங்கே சம்பவமானது நிறைவேறி நடந்து விட்டதை நாம் பார்க்கிறோம். அது சரிதானே? அதற்குப் பிறகு நாம் வாழ்கிற சபைக் காலத்தைக் குறித்து நாம் பார்க்கையில், நம்முடைய சபைக் காலத்திற்கென அவர் முன்னுரைத்தது என்னவோ, அதே காரியம், தேவன் எவ்வாறு நடக்கும் என்று கூறினாரோ அதே விதமாக அது சம்பவிக்கும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஓ! நீங்கள் விரும்பவில்லையா… ஓ நான் அவரைக் கண்டு, அவருடைய முகத்தை நோக்கிப் பார்க்க விரும்புகிறேன், அவருடைய இரட்சிப்பின் கிருபையை என்றென்றுமாய் அங்கு பாடுவேன்; மகிமையின் வீதிகளில் என் சத்தத்தை நான் உயர்த்தட்டும்; கவலைகள் யாவும் கடந்த பிறகு, முடிவில் வீட்டிற்கு சென்று எப்போதும் களிகூருவேன். ஓ, நான் அவரைக் கண்டு, நோக்கிப் பார்க்க விரும்புகிறேன்…(எத்தனைபேர் வாஞ்சிக்கிறீர்கள்?) அவரது இரட்சிக்கும் கிருபையை பற்றி என்றென்றும் பாடுவேன்; மகிமையின் வீதிகளில் என் சத்தத்தை நான் உயர்த்தட்டும்; கவலைகள் யாவும் கடந்த பிறகு, முடிவிலே வீடு சென்று, எப்போதும் களி கூருவேன்.

150இப்பொழுது நீங்கள் உங்களுக்கு முன்னும், பின்னும், சுற்றிலும் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரோடும் கைகுலுக்கிக் கொள்ளுங்கள். அனைத்து மெதோடிஸ்டுகளுடனும், பாப்டிஸ்டுகளுடனும், பிரெஸ்பிடேரியன்களுடனும், அவர்கள் யாராயிருந்தாலும், அவர்களோடு கைகுலுக்கிக் கொள்ளுங்கள். நான் இத்தேசத்தினூடாக பயணம் செய்கையில், நான் பாடிக் கொண்டே போவேன், ஓ, கல்வாரி…ஆத்துமாக்களை சுட்டிக்காட்டி…(சபையண்டையல்ல, கல்வாரியண்டை) இரத்த ஆறு ஓடும் இடத்தினூடாக… அநேகம் அம்புகள் என் ஆத்துமாவை உள்ளும், புறமும் உருவக் குத்துகிறது; ஆனாலும் என் ஆண்டவர் என்னை தொடர்ந்து வழி நடத்துகிறர், அவரையே நான் பற்றிக் கொள்ள வேண்டும் நாம் இப்பொழுது எழுந்து நிற்போமாக: ஓ, நான் அவரைக் கண்டு, அவருடைய முகத்தை நோக்கிப் பார்க்க விரும்புகிறேன், அங்கே என்றென்றும் பாடுவேன்… (நம் கைகளை நாம் உயர்த்துவோமா.) …இரட்சிக்கும் கிருபை; மகிமையின் வீதிகளில் நான் என் சத்தத்தை உயர்த்தட்டும்; கவலைகள் யாவுங் கடந்து, முடிவிலே வீடு சென்று, என்றென்றும் மகிழ்ந்திடுவேன்.

151297 ஓ, நான் எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன். நான் எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன்! அற்புதம்! அற்புதம்! அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தர், சமாதான பிரபு, வல்லமையுள்ள தேவன் அவர்; ஓ, எல்லா பாவத்தையும், அவமானத்தையும் நீக்கி என்னை இரட்சித்தார் என் மீட்பர் அற்புதமானவர், அவருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம்! நான் ஒரு காலத்தில் காணாமற்போனேன், இப்பொழுது நான் கண்டுபிடிக்கப்பட்டு, ஆக்கினையிலிருந்து விடுதலையானேன், இயேசு விடுதலையையும், முழு இரட்சிப்பையும் தருகிறார்; அவர் என்னை இரட்சித்து, எல்லாப் பாவம் மற்றும் அவமானத்தினின்றும் என்னைக் காக்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவரது…ஸ்தோத்திரம். ஒவ்வொருவரும் உண்மையாகவே சப்தமாகப் பாடுவோம்; அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தராம், சமாதானப் பிரபுவாம், அவர் வல்ல தேவனாம், ஓ, என்னை இரட்சிக்கிறார், பாவம், நிந்தை யாவற்றினின்றும் அவர் என்னைக் காக்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவரது நாமத்திற்கு ஸ்தோத்திரம்! ஓ எவ்வளவு அற்புதமானவராக இருக்கிறார்! ஓ, அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, அவர் ஆலோசனைக் கர்த்தர், சமாதானப் பிரபு, வல்லயையுள்ள தேவனவர்; அவர் என்னை இரட்சிக்கிறார், பாவம், நிந்தையாவற்றினின்றும் அவர் என்னைக் காக்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவரது நாமத்திற்கு ஸ்தோத்திரம்!

152298 “அவர் நாமத்திற்கு ஸ்தோத்திரம்” என்று நாம் சேர்ந்து சொல்லுவோமாக [சகோ. பிரான்ஹாம் அவர்களும் சபையாரும் சேர்ந்து சொல்லுகிறார்கள்.—ஆசி.] : “அவர் நாமத்திற்கு ஸ்தோத்திரம்!” என்னுடைய மீட்பர்! நினைவிருக்கட்டும், நாளை இரவு ஏழு மணிக்கு நீங்கள் மீண்டும் திரும்பி வரும் வரைக்கிலும், இதைச் செய்யுங்கள்: துன்பமும் வருத்தமும் நிறைந்த பிள்ளையே உன்னுடன் இயேசுவின் நாமத்தை எடுத்துச் செல்; அது மகிழ்ச்சியையும், ஆறுதலையும் கொடுக்கும்…(சகோதரர்களே உங்களை இங்கே காண்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.) …நீ செல்லுமிடமெங்கும் விலையேறப் பெற்ற நாமம் அது, (விலையேறப் பெற்ற நாமம்) ஓ எவ்வளவு இனிமையானது! (ஓ எவ்வளவு இனிமையது!) பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே; விலையேறப் பெற்ற நாமம் (விலையேறப் பெற்ற நாமம்), ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே. 299 ஜெபத்தில் நாம் நம்முடைய தலைகளை வணங்குகையில், கடைசி பாட்டை இல்லை கடைசி சரணத்தைப் பாடுவோம்: இயேசுவின் நாமத்தில் பணிந்து …சாஷ்டங்கமாய் வீழ்ந்து…(தேவனாகிய கர்த்தாவே, இவர்களை குணமாக்கும் கர்த்தாவே!, நாங்கள்…)…நம் யாத்திரை முடிகையில், நாம் அவருக்கு முடிசூட்டுவோம். 