தியத்தீரா சபையின் காலம்

60-1208

இபபழத, இனறரவல, நமஇநத மகததன சபககலததல நம பரவசககம மனனர நமத கரததர நமமல தமமடய ஆவய ஊறறநமம மணடம ஆசரவதபபர எனற நனநன நமபகறன. இபபழத இதலளள மக மககயமன வஷயஙகள மடடம நமமல பரகக இயலம, ஏனனல, அநத மகததன வள வநத கணடரககறத, நம இவவரம மழவதம இஙக இரககபபகறம. ஓ, நறற இரவல நமகக அபபடபபடட ஒர மகமயன நரம உணடயரநதத! 2 நலலத, இபபழத, நம வதவகக

தியத்தீரா சபையின் காலம்

60-1208ஜெபர்ஸன்வில் இந்தி1001960-12-08

தியத்தீரா சபையின் காலம்

60-1208ஜெபர்ஸன்வில் இந்தி1001960-12-08

1 இப்பொழுது, இன்றிரவில், நாம்…இந்த மகத்தான சபைக்காலத்தில் நாம் பிரவேசிக்கும் முன்னர்… நமது கர்த்தர் நம்மேல் தம்முடைய ஆவியை ஊற்றி…நம்மை மீண்டும் ஆசீர்வதிப்பார் என்று நான்—நான் நம்புகிறேன். இப்பொழுது இதிலுள்ள மிக முக்கியமான விஷயங்களை மட்டுமே நம்மால் பார்க்க இயலும், ஏனெனில், அந்த மகத்தான வேளை வந்து கொண்டிருக்கிறது, நாம் இவ்வாரம் முழுவதும் இங்கே இருக்கப்போகிறோம். ஓ, நேற்று இரவில் நமக்கு அப்படிப்பட்ட ஒரு மகிமையான நேரம் உண்டாயிருந்தது! 2 நல்லது, இப்பொழுது, நாம் வேதவாக்கியங்களை வாசிப்பதற்கு முன்னால், ஜெபத்திற்காக நாம் நம்முடைய—நம்முடைய நிலைகளை சற்றுநேரம் மாற்றி எழுந்து நிற்போமாக.

23 எங்கள் கிருபையுள்ள பரலோகப் பிதாவே, எல்லாவற்றிற்கும் போதுமான நாமமாகிய கர்த்தராகிய இயேசுயென்னும் நாமத்தில் நாங்கள் வருகிறோம். ஒரு நாளில் நீர் வருவீர் என்பதை நாங்கள் அறிந்தவர்களாயிருக்கிறோம். நீர் ஜீவிக்கிற தேவ குமாரனாயிருக்கிறீர் என்ற அந்த மகத்தான வெளிப்பாட்டை மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, அவர்களுடைய இருதயங்களை ஆயத்தம் பண்ணுவதற்காக நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம். நீர் மரித்தவராயல்ல, சதாகாலமும் உயிரோடிருக்கிறவராக இருக்கிறீர்; நீர் உம்முடைய சபையில் பெந்தேகோஸ்தேவின் சாட்சியாக ஜீவித்துக் கொண்டிருக்கிறீர், கர்த்தருடைய பிரசனத்திலிருந்து இளைப்பாறுதலின் நேரம் வரும்போதே அந்த மகத்தான நேரம் உண்டாகிறது. ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும், அந்த மகிழ்ச்சியான வேளைகளை இப்பொழுதும் அனுபவிக்க முடிந்ததற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். 4 பிதாவே, உம்முடைய வலது கரத்திலே, ஏழு நட்சத்திரங்களை நீர் ஏந்திக் கொண்டிருந்தீர், அவர்களை “சபைக் காலங்களுக்குரிய தூதர்கள்” ஊழியக்காரர்கள் என அழைத்தீர்; ஒவ்வொரு காலத்திலும் இருந்த அம்மகத்தான மனிதர்களுக்கு மரியாதை செலுத்தும்படி நாங்கள் தாழ்மையாய் எங்கள் தலைகளை வணங்குகிறோம். எபேசுவின் காலத்தில் வாழ்ந்த மகத்தான பரிசுத்தவானாகிய பவுலுக்காக நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம்! உம்முடைய மகத்தான ஊழியக்காரனாகிய ஐரேனியஸூக்காக, ஓ கர்த்தாவே, நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம்! பரிசுத்த மார்ட்டினுக்காகவும், இன்றிரவு பரிசுத்த கொலம்பவிற்காகவும் நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, இந்த மனிதர்களுக்காக நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அந்தகார ரோமானிய கொள்கைகள், சபையில் நுழைந்த அஞ்ஞானக் கொள்கைகள், இவற்றின் மத்தியில், இம்மனிதர்கள் பெந்தெகொஸ்தே செய்திக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் மிகுந்த தீரத்துடன் நின்றனரே, இவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி, மகத்தான அற்புத அடையாளங்கள் செய்தல், பிணியாளிகளை குணமாக்குதல், மரித்தோரை எழுப்புதல் முதலியவற்றை உடையவர்களாயிருந்தனரே.

35 கர்த்தாவே, அவர்களில் அநேகர் வீணாக குற்றஞ்சாட்டப்பட்டு, கொல்லப்பட்டு, சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டனர். இன்னும் பெரிய காரியங்களெல்லாம் நடைபெற்றன. நீதிமான்களின் இரத்தத்தால் பூமியானது குளிப்பாட்டப்பட்டிருக்கிறது. பிதாவே, அவர்களது இரத்தம் அந்த துன்மார்க்க, விபச்சார சபைக்கு எதிராக இன்று கதறுகிறது. என்றோ ஒரு நாள் நீர் உற்றினபோது…நீரோ, “தூதனாவன் தேவனுடைய கோப கலசத்தை அதன் மேல் ஊற்றினான், ஒவ்வொரு இரத்த சாட்சியின் இரத்தமும் அதில் காணப்பட்டது” என்று கூறினீர். 6 கர்த்தாவே, காலமானது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறபடியால், இப்பொழுது நிலைநிற்க எங்களுக்கு…உதவி செய்தருளும். இரண்டு கொம்புகளையுடைய மிருகம் பூமியிலிருந்து எழும்புவதை நாங்கள் காண்கையில், அம்மிருகம் திரளான ஜனங்களின் நடுவிலிருந்து எழும்பப் போவதில்லை. அது “ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.” இப்பொழுது வேளையானது சமீபித்துவிட்டது என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம், பிதாவே, இந்த சபைகளெல்லாம் தங்களை ஒன்றாக ஒரு கூட்டமைப்பாக்கிக் கொள்கிற இவ்வேளையில், அவர்கள், “மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கும்போது” கர்த்தாவே, அவர்களோடு கைகோர்த்துக் கொள்ளாத அந்த சிறு மந்தையின் மேல் அது பயங்கரமாயிருக்குமே. உம்முடைய ஜனம் அப்பொழுது புறக்கணிக்கப்படுவார்கள், ஆனால் அவ்வேளையில் உம்முடைய சபையை எடுத்துக்கொள்வதாக நீர் வாக்களித்திருக்கிறீர். கர்த்தாவே எங்களுக்கு உதவி செய்யும்.

47 ஒரு துளி மழை கூட விழாதபோது, நோவா பேழைக்குள் இருந்தான். சோதோமில் அக்கினி விழுவதற்கு முன்னால், லோத்து வெளியேறிவிட்டான். பிதாவே, அணு ஆயுத சக்திகள் வெடித்து இப்பூமியை தூள்தூளாக சிதறிப்போகும்படி செய்வதற்கு முன்னால், சபையானது இப்பூமியைவிட்டு போய்விட்டிருக்கும். கர்த்தாவே, அதற்காக நாங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறோம். இன்றிரவில், அணுகுண்டுகளோ ஆயுத கிடங்குகளில் ஆயத்தமாய் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். 8 நாங்கள் பரலோகத்தை நோக்கிப் பார்த்து, மனுஷ குமாரன் தன்னுடைய சபையை எடுத்துக் கொள்வதற்காக, தனது சிங்காசனத்தை விட்டு எழும்பி பூமியை நோக்கிப் புறப்படுவதை காணமுடிகிறது. அவ்வேளையில், இந்த பாவமான பூமியை அவரது விலையேறப்பெற்ற பாதங்கள் தொடாது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அது ரெபெக்காள் ஒட்டகத்தின் மேல் வருகையில், தன் மணாளனை தூரத்தில் பார்த்தபோது, ஒட்டகத்தை விட்டு குதித்து கீழிறங்கி, ஆபிரகாமுடைய வீட்டிற்கும் வயல்வெளிகளுக்கும் நடுவே, தன் மணாளனை சந்திக்கப் புறப்பட்டாளே, அதைப்போல் இது இருக்கிறது. ஓ, தேவனே, சபையானது தன்னுடைய மணவாளனை ஆகாயத்தில் சந்திப்பாள், “உயிரோடிருக்கிற நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை; தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடு கூட (வெளியிலே) ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்.” 9 ஓ, இன்றிரவில் எங்களுக்கு உதவி புரியும். கர்த்தாவே, ஆவியின் இனிமையை எங்களுக்குத் தாரும். எங்களிடமிருந்து எல்லா கசப்பையும், அலட்சியத்தையும் அகற்றியருளும். நாங்கள் பரிசுத்த ஆவியோடு முழுவதும் ஒன்றிப்போய்விடுவோமாக. தேவனுடைய தூதனானவர் இன்றிரவில் ஆளுகை செய்யட்டும். 10 கர்த்தாவே, இந்த மக்களுக்கு என்ன கூற வேண்டும் என்பதை நான் அறியேன். நீர் என்ன செய்தீர் என்பதைப் பற்றிக் கூறும் வரலாற்றுக் குறிப்புகளை நான் குறித்து வைத்துள்ளேன். ஆனால் எதிர் காலத்தைப் பற்றி நீரே வெளிப்படுத்தி வியாக்கியானிக்க வேண்டியதாயுள்ளது, எனவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தினூடாக நீர் அதை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

511 இப்பொழுது நாம் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்திற்கு திரும்புவோம். இன்றிரவில்…நாம் நான்காவது சபைக்காலமாகிய தியத்தீரா சபைக்காலத்தைப் பற்றி படிக்கப் போகிறோம். இக்காலம் ஒரு பெரிய சபைக்காலம், இக்காலமானது இருண்ட காலம் என்று அறியப்பட்டுள்ளது. இச்சபைக் காலம் கி.பி.606-ல் துவக்கி, கி.பி.1520-ல் முடிவுற்றது. நான்…என்னால் முடிந்த அளவு நான் கண்டுகொண்டது இதுதான். அநேக வேதாகம மேதைகள் இச்சபைக் காலத்திற்கு பரிசுத்த பேட்ரிக்கை அதன் நட்சத்திரமாக தெரிந்து கொள்கிறார்கள்…அல்லது…ஒவ்வொரு… 12 ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைக்காலங்களுக்குரிய “ஏழு தூதர்களாக” இருக்கின்றனர். நாளை இரவோ ஐயத்திற்கிடமின்றி லூத்தரை ஐந்தாம் சபையின் தூதராகக் காண்போம் என்று நாம் அறிந்திருக்கிறோம். அதன் பின்னர் வெஸ்லி, லவோதிக்கேயா சபைக்குரிய நட்சத்திரம் யாராக இருக்கும் என்பதை நாம் அறியோம். அது…1906-ம் ஆண்டில் பெந்தெகொஸ்தே காலம் துவங்கியதிலிருந்து நாம் அச்சபைக்காலத்தில்தான் இருந்து வருகிறோம். ஆனால் ஒரு தூதன் எழும்பி, சபையானது பரம வீட்டிற்கு செல்ல ஆயத்தம் பண்ணும்படி எல்லா கோட்பாடுகளையும் தகர்த்தெறிவான்; ஆவிக்குள் போதகனான ஒருவன் அற்புத அடையாளங்களோடு எழும்புவான்.நாம் அவனைக் கண்டுகொள்ள தேவன் நமக்கு உதவி செய்யுமாறு இப்பொழுது நான் ஜெபிக்கிறேன்.

613 வரலாற்றினூடாக உற்று நோக்கி, தூதனைக் தெரிந்தெடுக்கையில், பரிசுத்த பேட்ரிக் என்பவர் ஒரு மகத்தான மனிதராக இருந்தார். பண்டையகால தொன்மையான கையெழுத்துப் பிரதிகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், அங்கே பரிசுத்த பேட்ரிக் ஒரு கத்தோலிக்கர் அல்லவே அல்ல என்பதைக் காண்கிறோம். அவர் கத்தோலிக்க சபையை எதிர்த்தார். சீர்த்திருத்த காலத்தில், மறைக்கப்பட்ட கோட்பாட்டினை அவர்கள் தோண்டியெடுத்து, பரிசுத்த பேட்ரிக் கத்தோலிக்கத்தை எதிர்த்தார் என்பதை நிரூபித்துவிட்டனர். அதாவது…பரிசுத்த பேட்ரிக் ஒரு ஸ்தாபன மனிதனைப் போலிருந்தார். அவர் சொந்தமான ஒரு வேதாகம பள்ளியை உடையவனாயிருந்தார். அவர் முதலில்…அவர் ஒரு நாள் தன் இரு சகோதரிகளோடு சமுத்திரக் கரையில் இருக்கையில் கடத்தப்பட்டார், அதன் பின்னர் தன்னுடைய சகோதரிகளைக் குறித்து ஒன்றுமே கேள்விப்படவில்லை. அவர்கள் அநேகமாக ரோமாபுரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடிமைகளாக விற்கப்பட்டிருக்க வேண்டும். பேட்ரிக்கும் கொண்டு செல்லப்பட்டு, ஒரு அடிமையாக விற்கப்பட்டார். விலைக்கு வாங்கினவன் அவருக்கு பன்றிகளை மேய்க்கிற வேலையைக் கொடுத்தான்.

714 அவர், தான் மேய்க்கும் பன்றிகளை பார்த்துக் கொள்ள நாய்களை பழக்குவித்தார். பல்வேறு விதமாக பன்றிகளைப் போல் உறுமி பலவிதமான காரியங்களை அவைகளுக்கு அவர் கற்பித்திருந்தார். முடிவாக ஒரு படகில் அவர் படுத்துக் கொண்டு, தன் மேல் நாய்கள் மூடிக் கொள்ளும்படி செய்து அங்கிருந்து தப்பிக்கும் வழியை கண்டறிந்தார். அதன்பின்னர் தன்னுடைய சொந்த தேசமாகிய அழகான அயர்லாந்திற்குப் போய் உயிரோடிருந்த தன்னுடைய தாயையும் தகப்பனையும் கண்டார். மகத்தான பரிசுத்த மார்ட்டினின் சகோதரியின் மகன்தான் பரிசுத்த பேட்ரிக் ஆவார். 15 இயேசு கிறிஸ்துவின் காலம் முதற்கொண்டு வாழ்ந்து வந்த மகத்தான மனிதர்களுள் நமக்குக் கிடைத்த ஒரு மகத்தான மனிதன் பரிசுத்த மார்ட்டின் ஆவார். பரிசுத்த மார்ட்டினுடைய சபைகள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, அவர்கள் யாவரும் அந்நிய பாஷைகளில் பேசி, அடையாளங்களையும், அதிசயங்களையும் அற்புதங்களையும் உடையவர்களாயிருந்தனர். எல்லாவிதமான அற்புதங்களுமே நிகழ்ந்து கொண்டிருந்தன. கத்தோலிக்கக் கொள்கைகளோடு விவாகம் செய்து கொண்டு, அஞ்ஞானமார்க்கமும், நிக்கொலாய் மதஸ்தினரும் விவாகம் செய்து கொண்டு ஸ்தாபனங்களை உருவாக்கிக் கொண்ட அந்த சபைக்காலத்தின் மத்தியில் மார்ட்டின் பெந்தெகொஸ்தே விசுவாசத்தை காத்துக் கொண்டு வந்தார். நிக்கொலாய் மதஸ்தினர் உருவாக…அதாவது நிக்கோ என்பதை “ஜெயங்கொள்ளுதல்” என்றே நாம் அழைக்கிறோம். “ஜெயங்கொள்ளுதல் அல்லது சபையை வென்று வீழ்த்துதல்” என்பதேயாகும். சபையிலிருந்து பரிசுத்த ஆவியை அகற்றி விட்டு, “மதகுரு என்ற மனிதன் பரிசுத்தமானவர்” என்று கூறினர். புரிகிறதா? அவர்கள் தாங்கள் விரும்புகிற எந்தவிதத்திலும் வாழ்ந்து, அதே சமயத்தில் தங்கள் பாவங்களை அந்த குருமாரிடம் அறிக்கையிட்டுவிட்டால் போதுமானது என்று ஏற்படுத்திவிட்டனர் என்றே நான் யூகிக்கிறேன். அதன்பின்னர் அவர்கள்…

816 கடந்த இரவில், கான்ஸ்டன்டைன் சபையின்மேல் முதலாவது பேராயரை ஏற்படுத்தினான், அவர்களுக்கு இந்த கட்டிடங்களையெல்லாம் கட்டிக் கொடுத்தான் என்று கண்டறிந்தோம். இவைகள் நடந்த காலங்களைப் பற்றி தேதிகளையும் மற்ற காரியங்களையும் நீங்கள் ஏற்கனவே குறித்து வைத்துக் கொண்டுள்ளீர்கள். அதன்பின்னர் ஆண்டின் மிகக்குறைந்த பகலையுடைய டிசம்பர் 21-ம் தேதி கொண்டாடப்பட்ட சூரிய மண்டல திருப்புமுகம் என்ற பண்டிகையும் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் இந்த வேதப் புரட்டைக் கொண்டுவந்து, அதுவே அவருக்கு “சண்டே” (Sun day) என்ற “ஞாயிற்றுக் கிழமை” என்பது என்று கூறினர். பாருங்கள், சூரியனின் பிறந்த நாளையே அவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாக ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் 25-ம் தேதிக்கு கொண்டு வந்தார்கள். 17 டிசம்பர் 25-ம் தேதி. ஐந்து நாட்களுக்கு ரோமர்களுக்கு பெரிய கொண்டாட்டங்கள், மற்றும் விளையாட்டரங்கத்தில் கேளிக்கை விளையாட்டுகளும் உண்டாயிருந்தன. அது அவர்களுக்கு அஞ்ஞான மார்க்க மகாவிருந்தாக இருந்தது. அவர்கள் இம்மனிதனை கடவுளைப் போன்ற ஸ்தானத்தில் உயர்த்தி அவனுக்கு அதற்கேற்றவாறு உடையுடுத்தினார்கள். அவர்கள் தங்கள் கடவுளை தங்களோடு இருக்கப் பெற்றிருந்தனர். சபையானது ஆயிர வருட அரசாட்சியில் இருப்பதாக அவர்கள் எண்ணினபடியால், அது ஆயிர வருட அரசாட்சிக் காலம் என விசுவாசிக்கிற கொள்கைக்காரர்கள் அப்பொழுது ஏற்பட்டார்கள். பாருங்கள், ஏனெனில், அவர்கள் ஐசுவரியமுள்ளவர்களாகவும், ஒன்றும் குறைவில்லாததாகவும், அரசாங்கமும் சபையும் ஒன்றாக இணைந்திருக்க செய்துவிட்டனர். “ஆயிர வருட அரசாட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்ற கத்தோலிக்க உபதேசம் இந்நாள் வரைக்கிலும் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. புரிகிறதா? இப்பொழுது “ஆயிரவருட அரசாட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்பது தவறான உபதேசமாகும் என்பதை நாம் அறிவோம். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப் பிறகு தான் ஆயிர வருஷ அரசாட்சி வருகிறது. அதுதான் உண்மை. பூமியானது இனிமையான விடுதலையின் நாளுக்காக ஏங்கித் தவிக்கிறது, நம்முடைய கர்த்தர் பூமிக்கு மீண்டும் திரும்பி வருகையில்.

918 இப்பொழுது, இக்காலத்தில் வாழ்ந்த மகத்தான பரிசுத்தவான் கொலம்பா ஆவார். அவர் ஒரு மகத்தான தேவ மனிதனாயிருந்தார். 19 இப்பொழுது, நான் இங்கே அவருடைய வரலாற்றை எழுதி வைத்திருக்கிறேன். நான்காவது சபைக்காலம் தியத்தீரா சபைக் காலம் ஆகும். தியத்தீரா என்றால், “தளர்ச்சியான, உறுதியில்லாத” அல்லது “நிச்சயமற்ற” என்று பொருளாகும். புரிகிறதா? இச்சபையின் காலம் முறைகேடானதாக, கி.பி.606 முதல் கி.பி.1500 முடிய நீடித்திருந்தது. 20 கொலம்பா என்பவர் தியத்தீரா சபைக்காலத்தின் நட்சத்திரமாக இருக்கிறார். இவர் அயர்லாந்து ஸ்காட்லாந்து தேசத்தைச் சேர்ந்தவர். இவர் பரிசுத்த மார்ட்டினின் மருமானான பரிசுத்த பேட்ரிக்கிற்கு சுமார் அறுபது ஆண்டுகள் கழித்து தோன்றி, வாழ்ந்து வந்தார். எனவே பரிசுத்த பேட்ரிக்கிற்கு பிறகு கிட்டதட்ட அறுபது ஆண்டுகளுக்குப் பின்னரே கொலம்பாவின் ஊழியம் துவங்கியது. அவருடைய… 21 அவர் ஒருபோதும் ரோமானிய உபதேசத்தை ஏற்றுக் கொள்ளவேயில்லை. அவர் மகத்தான விசுவாச மனிதனாயிருந்தார். அவர் ரோமான் கத்தோலிக்க உபதேசத்தை நிரகாரித்தார். அவர் ஒருபொழுதும் ரோமாபுரிக்கு செல்லவேயில்லை. அவர் அதை முழுவதுமாக புறக்கணித்தார். கொலம்பா இறந்த பிறகு அவர்கள் அவரை பரிசுத்தவான் ஆக்கினார்களா என்பதைக் காணமுடியவில்லை. எவ்வாறு பரிசுத்த மார்ட்டின், ஐரேனியஸ், மற்றும் ஏனையோரையும் அவர்கள் பரிசுத்தவான்கள் ஆக்கவில்லையோ, அதைப்போலவே கொலம்பாவையும் பரிசுத்தவான் ஆக்கவில்லை, ஏனெனில் பெந்தெகொஸ்தேயின் அடையாள அற்புதங்களை பெற்று விசுவாசிக்கும் அந்த சபையில் அவர்கள் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர் ஒருபோதும் ரோமச் சபையின் உபதேசத்தையும், அவர்களுடைய உபதேசங்களையும் எடுத்துக் கொள்ளவேயில்லை. பரிசுத்த மார்ட்டினின் சகோதரியாகிய தேவபக்தியுள்ள தன் தாயார் விசுவாசித்திருந்தது போல, அவ்வுபதேசங்களின்படியே வேதத்தை அவர் விசுவாசித்தார். எந்தவொரு சமயத்திலும் ரோமானிய சபையின் உபதேசங்களை அவர் பின்பற்றவேயில்லை. ஒவ்வொரு விசுவாசியையும் மாற்கு 16-ம் அதிகாரத்தில் வாக்குரைக்கப்பட்டுள்ள அடையாளங்கள் பின்தொடர வேண்டும் என்று அவர் போதித்தார். ஆமென்! நான்…அவ்விதமான ஒரு நபரைத்தான் நானும் விரும்புகிறேன், விசுவாசிக்கிறவர்களையே. ஆம், ஐயா. 22 தேவன் அவரை—அவரை, காதால் கேட்கக் கூடிய சப்தத்தினால் அழைத்தார். அது அவருக்கு இன்னொரு நல்ல அடையாளம், பாருங்கள். அதன்பின்னர் ஒன்றுமே அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை, அவர் சென்று கொண்டேயிருந்தார். அவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது காதால் கேட்கக் கூடிய தேவனுடைய சத்தத்தைக் கேட்டார்.

1023 ஒரு அற்புதம்…நான் இங்கே பல அற்புதங்களை எழுதி…வைத்துள்ளேன், ஆனால் நாம் இந்த ஒன்றை எடுத்துக் கொள்வோமானால் நலமாயிருக்கும். கர்த்தர் அவரை அனுப்பிய ஒரு நகரத்திற்கு அவர் சென்றபோது, அந்நகரத்தார் அவரை ஏற்றுக் கொள்ளவிரும்பவில்லை. எனவே நகரத்தின் வாயிலை அவர்கள் அடைத்து விட்டு, இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களைக் கொண்டுவந்து, கொலம்பாவின் பிரசங்கம் கேட்கக்கூடாதபடி, அவரது சபதத்தை அடக்கிப் போடும்படி, இசையை மிக உரத்த சப்தத்தோடு இசைக்க வைத்தனர். கொலம்பா அப்பொழுது பிரசங்கிக்க ஆரம்பித்தார். தேவ வல்லமையால், அவரது பிரசங்கம் இசைக் கலைஞர்களின் வாத்திய இசைப்பின் உரத்த சப்தத்தை அடக்கிப் போட்டு பிரசங்கத்தை யாவரும் கேட்கும்படி செய்ததுமல்லாமல், அடைக்கப்பட்ட நகரத்தின் வாயிற்கதவுகள் தானாகவே திறவுண்டது. கொலம்பாவும் நகரத்தின் உள்ளே சென்று பிரசங்கித்தார். அங்குள்ளவர்கள் யாவரும் இரட்சிக்கப்பட்டுவிட்டனர். 24 நான் இங்கே இன்னொரு சிறிய சம்பவத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். கொலம்பா ஒரு நகரத்திற்குள் சென்றார். அந்நாட்களில் உண்மையாகவே அவர்கள் மதில்கள் சூழ்ந்த பட்டிணங்களை தங்களுக்கு உடையவர்களாயிருந்தனர். எனவே அவர் அந்நகரத்திற்குச் சென்றபோது, அந்நகரத்து மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல், அவரைத் துரத்தி விட்டனர். எனவே அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். அப்பொழுது அந்நகரத் தலைவனின் மகன் மிகவும் கடுமையான சுகவீனமடைந்தான். அவர்கள் உடனே இந்த நல்ல பரிசுத்தவானை திரும்ப அழைத்து வரும்படி ஆளனுப்பினர். அப்பொழுது கொலம்பா திரும்பி வந்து, அப்பையன் உடலின் மேல் படுத்து ஜெபித்த பொழுது, மரித்துக் கொண்டிருந்த அச்சிறுவன் குணமடைந்து உயிர் பெற்றான்.

1125 அவருடைய சபை பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தது, தன்னுடைய சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும், கண்டிப்பாக பரிசுத்த ஆவியை பெற்றிருத்தல் வேண்டும் என்றும், அதற்குக் குறைவான எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை என்பதில் அவர் மிக உறுதியாய் இருந்தார். ரோமானிய சபையின் குருக்களாட்சியை அவர் எதிர்த்து, அதை மிகவும் கடுமையாக வெறுத்தார். கொலம்பா தான் இந்த சபையின் நட்சத்திரம் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அந்நிய பாஷைகளில் பேசி, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து, மற்றும் இன்னபிற காரியங்களையும் செய்து, ஆதி சபை மக்கள் செய்ததான இக்கிரியைகளை விடாமல் நிறைவேற்றிக் கொண்டே போனார். தேவன் முடிவில்லாதவராக இருப்பாரானால், துவக்கத்தில் தன் சபையை எவ்விதம் நிறுவத் தீர்மானித்தாரோ அதேவிதமாகத்தான் அது காலங்கள் தோறும், அது (சிறுபான்மையாக ஆகினாலும் கூட) தொடர்ந்து நீடித்து வரவேண்டும். ஏறத்தாழ அது முற்றிலும் இங்கு நசுக்கப்பட்டு அற்றுப் போகிற நிலையில், அது மீண்டும் லூத்தர் மூலமாக தோன்றுகிறது.

1226 இப்பொழுது நாம் ஆரம்பிக்கப் போகிறோம். இப்பொழுது இந்த வசனங்களிலிருந்து நம்மால் ஆரம்பிக்க முடியுமா என்று பார்ப்போம், நாம் 18-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம்: தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: 27 எழுதப்பட்ட இவைகளை—இவைகளை நீங்கள் கவனித்தீர்களா? அந்த சபைக் காலத்துக்குரிய ஒளியை ஏந்திக் கொண்டிருந்த அச்சபையின் தூதன் அல்லது ஊழியக்காரனுக்குத் தான் இந்த செய்திகள் எழுதப்பட்டுள்ளன. பாருங்கள்? இப்பொழுது, கடந்த இரவில் நாம் பார்த்த பெர்கமு சபைக்காலத்தின் முடிவில், சபையின் தூதனிடத்தில், (இந்த சபையில் ஜெயங்கொள்ளுகிறவன்) ஒரு கல்லைப் பெற்றுக்கொள்வான் என்று கூறப்பட்டது. அந்த கல்லில்… 28 நாம் அந்த “கல்” என்ன என்பதையும், அது எதற்கு அடையாளமாக இருக்கிறது என்பதையும் பார்த்தோம். அதன் அர்த்தம் “பாறை” என்பதாகும். அத்தூதன் “கல்” என்று அழைக்கப்பட்ட பேதுருவைப் போல் இருப்பான்.

1329 உங்களுடைய பெயர் உங்களுடைய ஜீவியத்துடன் சம்மந்தப்பட்டதாக இருக்கும் என்பதைக் கண்டறிகிறோம். இப்பொழுது நான் அதைப் பற்றி அளவுக்கதிகமாக பேசக் கூடாது. ஏனெனில் பிசாசானவன் ஒரு பொய்யான எண் கணித ஆய்வினைக் கொண்டவனாக இருக்கிறான். நாம் அதை அறிவோம். அதைக் குறித்த ஜனங்களின் உணர்வு தவறாக இருக்க துவங்கினால், அது மரித்த ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் பிசாசின் காரியத்திற்காக கொண்டு போய்விடும். மரித்த ஆவிகளோடு தொடர்பு கொள்ளுதல் பிசாசாயிருக்கிறது. நாம் அதை அறிவோம். அந்தவிதமாகவும் நீங்கள் அதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். அவர்கள்… 30 அவர்கள் இயேசுவை “பெயல்செபூல்,” “பிசாசு” என்று அழைத்தனர். ஏனெனில், நீங்கள் பாருங்கள், அவர்களுடைய சிந்தைகளை அவரால் பகுத்தறிய முடிந்தது. பாருங்கள், ஆனால் அவரோ தேவனுடைய வார்த்தையாக இருந்தார். எபிரேயர் 4-ம் அதிகாரம், “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயுமிருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. பாருங்கள்? அவர் வார்த்தையாயிருந்தார், அவர் ஜீவிக்கிற வார்த்தையாயிருக்கிறார். ஜீவிக்கிற வார்த்தையானது நமக்குள் வந்து, அது என்னவாயிருக்கிறதோ, அதே விளைவை நமக்குள் ஏற்படுத்துகிறது. பாருங்கள், அதே, ஏனென்றால் அது அதே வார்த்தையாயிருக்கிறது. பாருங்கள், அது நமக்கு மத்தியில் அதே காரியமாயிருக்கிறது. அந்தவிதமாகத்தான் அது உள்ளது. சில வேளைகளில் அந்த அடைப்புகளுக்குள் இல்லாதவர்கள், அந்நிய பாஷைகளில் பேசுகிறார்கள். இன்னொருவர் அதை வியாக்கியானம் செய்கிறார். அது என்னவாக இருக்கிறது? வார்த்தையானவர் மீண்டும் நம்மில் மாம்சமானதையே அது காட்டுகிறது.

1431 அதன்பின்னர், இந்தத் தூதன்…பெர்கமு சபையின் தூதன் “கல்லைப்” பலனாக பெறுவான்…என்று கூறப்பட்டதை நாம் கவனிக்கிறோம். அக்கல் ஒரு வெண்மையான குறிக்கல்லாயிருந்தது. அதன் பொருள் அவனுடைய சுய நீதியல்ல, ஆனால் “தேவனுடைய சொந்த நீதியே” என்பதாகும். 32 இக்கல்லின் மேல் “ஒரு புதிய நாமம்” எழுதப்பட்டிருந்தது, அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததாக அந்த நாமம் இருந்தது. அவனைத் தவிர வேறு எவரும் அப்பெயரை அறிந்து கொள்ள முடியாது. எனவே இந்த நபர்கள் முகஸ்துதியாக உங்களிடத்தில் அந்த பெயர்களை, அதாவது, “யோவான்,” “பவுல்” அல்லது “மரியாள்,” “ இது ” அல்லது “ அது ”, அல்லது “ மற்றது ” என்று கூறுவதை நீங்கள் கேட்கும்போது, அதை நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில், அது அப்படியிருந்தால், அதைக் குறித்து அவர் ஒன்றும் சொல்லியிருக்கமாட்டார். புரிகிறதா? அது உண்மை. அவனே தன்னுடையதை அறிந்து கொள்ள வேண்டும். அவன் அதை அறிந்திருப்பான். அவனைத் தவிர வேறுயாரும் அவனுடைய பெயரை அறிந்திருக்கமாட்டார்கள்; ஆனால் அவன் அறிந்திருப்பான், ஏனென்றால் ஜெயங்கொள்ளுகிற ஒவ்வொரு பரிபூரணமானவரும் அந்த—அந்த—அந்தவிதமாக—ஒரு புதிய நாமத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.

1533 ஆபிரகாம், முதலில் ஆபிராம் என்றழைக்கப்பட்டான் என்றும், ஆனால் தேவன் அவனை உபயோகிக்கப்போகிறபொழுது, அவனது பெயரை “ஆபிரகாம்” என்று மாற்றியதை கவனித்தீர்களா? சா—ரா—யாகவே சாராய் இருந்தாள், ஆனால் தேவன் அவளை உபயோகிக்கவிருந்தபொழுது, அவளது பெயரை “இளவரசி” என்று அர்த்தம் கொள்ளும் “சாராள்” என்று மாற்றினார். அந்த யாக்கோபை…நீங்கள் கவனித்தீர்களா? யாக்கோபு என்றால், “வஞ்சிக்கிறவன்” என்று அர்த்தம். அவ்வாறே அவன் இருந்தான். ஏசா என்றால், “சிவப்பான,” ரோமமுள்ள என்று அர்த்தம். தலை மற்றும் உடல் முழுவதும் சிவப்பான முடியையுடையவனாக ஏசா இருந்தான். இப்பொழுது, யாக்கோபு “வஞ்சிக்கிறவனாய்” இருந்தான். வஞ்சிக்கிறவன் என்பது ஒரு “ஏமாற்றுக்காரன்” என்பதாகும். ஏசா, “அவன் பெயர் யாக்கோபு என்றழைக்கப்பட்டதனால், வஞ்சிக்கிறவனாயிருக்கிறவில்லையா?” என்று கூறினான். ஆனால் யாக்கோபு கர்த்தரோடு இரவு முழுவதும் போராடி மேற்கொண்ட பொழுது, அவன் ஆசீர்வதிக்கப்பட்டு, தேவன் அவனது பெயரை யாக்கோபு எனப்படுவதிலிருந்து, இஸ்ரவேல் என்று மாற்றினார். அதற்கு “தேவனோடு ஒரு இளவரசன்” என்று பொருளாகும். பவுல் தன்மேல் பிரகாசித்த ஒரு ஒளியின் ரூபத்தில் பரிசுத்த ஆவியானவரை சந்திக்கும் வரையில் அவன் சவுல் என்றே அழைக்கப்பட்டான், அதன் பிறகு அவனுடைய பெயர் சவுல் என்பதிலிருந்து “பவுலாக” மாற்றப்பட்டது. சீமோன், அவன் இயேசுவை சந்தித்தபோது, அவர் அவனுடையப் பெயரை “பேதுவுருவாக” மாற்றினார். அதாவது… 34 இயேசு ஜெயங்கொண்டபொழுது, அவரது பெயரும் மாற்றப்பட்டது. அவர் அந்த நாமத்தை வெளிப்படுத்துவார், “அவர் ஜெயங்கொண்டது போல் அவரோடுள்ளவனும் ஜெயங்கொள்ளுவான், அவன் ஒரு புதிய நாமத்தைப் பெற்றுக் கொள்ளுவான், என்னுடைய புதிய நாமத்தை நான் அவனுக்கு வெளிப்படுத்துவேன்” என்று கூறுகிறார். பாருங்கள்? ஒவ்வொரு ஜெயங்கொள்பவனும், அவர்களுடைய தலைவர்கள் போன்றவர்களையே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன், அவர்களுக்கு மத்தியில் தலைவர்களாயிருந்தவர்கள், இப்பொழுது உண்மையாகவே எல்லா இஸ்ரவேல் புத்திரரும் தங்களுடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. அது உண்மை. ஆனால் அந்த உயர்ந்த தலைவர்கள், அவர்கள் ஜெயங்கொள்கிறபோது, அவர்கள் ஒரு புதிய நாமத்தைப் பெற்றுக்கொண்டனர். அது எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது என்று பார்த்தீர்களா? அப்படியே பரிபூரணமாகப் பொருந்துகிறது.

1635 அத்தூதன் “மறைவான மன்னா” வையும் கூட பெற்றுக் கொள்ளுகிறதை நாம் இப்பொழுது கண்டறிகிறோம். மறைவான மன்னாவானது ஆசரிப்புக் கூடாரத்தில் பரிசுத்த ஸ்தலத்தில் மேசையின்மேல வைக்கப்படும் சமுகத்தப்பதைக் குறிப்பதாகும். சமுகத்தப்பம் ஆசாரியனுக்கு மட்டுமே உரியதாகும். அது உண்மையே. சமூகத்தப்பம் ஆசாரியனுக்காகவே இருந்தது. அவைகள்… அது ஆசாரியர்களுக்காக, தலைவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு விசேஷ காரியமாயிருந்தது, இந்த மனிதன் ஜெயங்கொள்ள வேண்டும். முழு சபையாரும் மன்னாவைப் பெற்றனர், ஆனால் அவன் ஒரு மறைவான (விசேஷித்த) மன்னாவை, அதாவது ஒரு “விசேஷித்த வெளிப்பாட்டை ” பெற்றான். ஓ, அதாவது இயேசுவானவர் யார் என்பதைப் பற்றியும், அவரைப் பற்றியும், அவரைப் பற்றி காரியம் அனைத்தும் அறிந்து கொள்கிறான். பாருங்கள், அத்தூதன் ஜெயங்கொண்டால் அந்த வெளிப்படுத்துதல் கிடைக்கிறது. “…அதைப் பற்றிக் கொள்…ஏனெனில் ஜெயங்கொள்கிறவன் எவனுக்கும்” அவன் ஜெயங்கொண்டிருக்கிறான். சபையின் தூதனுக்கு இவைகள் எழுதப்பட்டன. புரிகிறதா?

1736 இப்பொழுது, நாம் அப்பொழுது கண்டறிந்த, இன்றிரவு நாம் துவங்குவோம்; தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது; 37 நாம் அவரை துவக்கத்தில், எபேசு சபையின் காலத்தில் அல்லது வெளிப்படுத்தின விசேஷத்தின் துவக்கத்தில் கண்டபோது அவருடைய மகிமையடைந்த ஏழுவிதமான தோற்றங்களில் நாம் அவரைக் கண்டோம். “சிரசும்…” யோவான் கர்த்தருடைய நாளில் அவரைக் கண்டான் என்று நாம் கண்டறிகிறோம். 38 அவர் இப்பொழுது வருகையில், அவர் ஒரு ஆசாரியனாயிருக்கிறார். அவர் இப்பூமியில் இருந்தபோது, அவர் ஒரு தீர்க்கதரிசியாக தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் தன்னுடைய சொந்த இரத்தத்தை எடுத்து பிதாவின் சமூகத்திற்குப் போனார், அது அவரை ஒரு ஆசாரியனாக ஆக்குகிறது. அவர் திரும்பி வருகையில் ஒரு இராஜாவாக இருப்பார். தீர்க்கதரிசி, ஆசாரியன், இராஜா. அவர் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் ஒரு கழுகாயிருந்தார். அவர் தேவனுடைய ஆசாரியனாக இருந்தார். அவர் ஒரு ஆட்டுக்குட்டியாயிருந்தார். அவர் திரும்பி வருகையில், அவர் சிங்கமாக, ஆளுகை செய்யும்படியான (யூதா கோத்திரத்து சிங்கமாக) இருப்பார்.

1839 பரிசுத்த ஸ்தலம் இன்னும் இருந்து கொண்டிருக்கையில், அவரது ஆசாரிய ஊழியமானது இன்னும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிற வேளையில் அவர் அங்கே நின்று கொண்டு இருப்பதை நாம் காண்கிறோம். யோவான், தான் “கர்த்தருடைய நாளில்” ஆவிக்குள்ளானதைக் கூறுகிறான், அது ஏழாம் நாளுமல்ல, ஞாயிற்றுக்கிழமையுமல்ல, அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. வேதம் முழுவதிலும் அது ஆராயப்பட்டபோது, அது கர்த்தருடைய நாளாயிருந்தது. இது மனிதனுடைய நாளாய் உள்ளது. கர்த்தருடைய வருகையே அவருடைய நாளாயிருக்கும். 40 யோவானை நாம் கர்த்தருடைய நாளில் காண்கிறோம். அவன் அவரைக் கண்டபோது, அவருடைய “சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போன்று” இருந்ததாகக் கூறுகிறான். அவ்விதத் தோற்றம் ஒரு நீதிபதியைக் குறிக்கிறதாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். 41 மற்றொரு காரியம், அவர் அப்பொழுது ஆசாரியனாக இல்லை. ஏனெனில், ஆசாரியன் கச்சையை, பணிவிடை செய்பவனுக்கு அடையாளமாக இடுப்பில்தான் கட்டியிருப்பான். ஆனால் இங்கே இயேசு கச்சையை மார்பருகே கட்டினவராக இருந்தார். எனவே அது அவர் ஒரு நியாதிபதியாக இருந்தார் என்பதையே பொருட்படுத்தினது. ஆமென்! அவர் ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியில் உலாவிக்கொண்டிருக்கிறதையே நாம் கண்டோம். 42 தானியேலின் புத்தகத்திற்கு நாம் பின்னால் திரும்பிச் சென்று, தானியேல் அவரை வெள்ளை சிங்காசன நியாயத்தீர்பில், “சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போன்று இருந்த நீண்ட ஆயுசுள்ளவர்” என்ற தோற்றத்தில் காண்கிறான் என்று நாம் கண்டோம். 43 இப்பொழுது, “வெண்மை.” பழங்காலத்து ஆங்கிலேய நீதிபதிகள் காலகாலமாக நீதி வழங்குவதற்காக நீதிபதிகளின் ஆசனத்தில் அமருகையில், தங்கள் தலையின் மேல் ஒரு வெண்மையான பொய் முடித்தோகையை அணிந்து கொள்வர், ஏனென்றால் அவர்கள் நீதிபதிகளாயிருந்தனர். கர்த்தருடைய நாளில் அவர் நீதிபதியாக இருக்கையில், யோவான் அவரை அவ்வாறு கண்டான். ஆமென்!.

1944 “அவர் அக்கினி ஜீவாலைப் போன்ற கண்களை உடையவராயிருந்தார்” என்று இப்பொழுது நாம் கண்டறிகிறோம். அப்பொழுது அந்தக் கண்கள் அக்கினி ஜூவாலைப் போலிருந்தன…ஒரு காலத்தில் அவருடைய கண்கள் மனுஷீக கண்ணீரினால் மங்கிப்போயிருந்தது, ஒரு மரித்த மனிதனுக்காக அவர் அழுவதை அவர்களால் நின்று பார்க்க முடிந்தது, அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் அவன் மீண்டும் உயிரடையப் போகிறதை அவர் அறிந்திருந்தார். அப்படியறிந்திருந்தும் அவர் அழுததே மானிட பரிவிரக்கமாயிருந்தது. ஆனால் அக்கண்களுக்குப் பின்னால், ஒரு மனிதனின் ஜீவியத்திற்குள்ளாக பார்த்து, அவன் யார் என்பதைப் பற்றியும், மற்றும் அவனைப் பற்றி அனைத்து காரியங்களையும் கூறக் கூடிய வல்லமை இருந்தது, காரணம் அக்கினி ஜூவாலையைப் போன்ற கண்களின் பிரதிபலிப்பாக அது இப்பொழுது வந்தது. என்ன நடக்கிறது என்பதை அறிய பூமி முழுவதும் சுற்றிப் பார்க்கக் கூடிய கண்கள் அவைகள். அப்படியானால் நியாயத்தீர்ப்பின் நாளில் நீ எங்கே நிற்பாய்? அவருக்கு முன்பாக உங்களுடைய பாவங்கள் நிர்வாணமாக இருக்கும். 45 “இருபுறமும் கருக்குள்ள ஒரு—ஒரு பட்டயம் அவருடைய வாயிலிருந்து புறப்பட்டது” என்பதை நீங்கள் கவனியுங்கள். அது தேவனுடைய வார்த்தையென்று நாம் பார்த்தோம். 46 அவருடைய பாதங்கள், “பிரகாசமான வெண்கலம்” ஆக இருந்ததை நாம் கண்டோம். அது “அவருடைய அஸ்திபாரத்தை” பொருட்படுத்தினது. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை அவர் மிதித்து, பாவங்களை தன் மேல் எடுத்துக் கொண்டு, அதைப் பரிகரித்து, தேவனைப் பிரியப்படுத்தினார். அது உண்மை. அவருடைய அஸ்திபாரமே நம்முடைய அஸ்திபாரமாயிருக்கிறது. நான் கிறிஸ்து என்னும் திடமான கன்மலையின் மேல் நிற்கிறேன்; (எடி ப்ருயிட் இவ்வாறு கூறினார்) மற்றெல்லாம் நிலங்களும் அமிழ்ந்து கொண்டிருக்கும் மணலே. (அதுவே உண்மை.)

2047 ஒவ்வொரு சபைக் காலத்தையும் அவர் சந்திக்கையில், அவ்வேளையில், அவர் தனது தெய்வீக பெயர்களில் ஒன்றைக் குறிப்பிட்டே அத்தூதனுக்கு உரைக்கிறார் என்பதை நாம் இங்கே கண்டறிகிறோம். இப்பொழுது, நாம் இயேசு கிறிஸ்துவின் (உன்னத தெய்வீகத் தன்மை) தெய்வீகத் தன்மையைப் பற்றிய வெளிப்பாட்டை, ஏனைய வெளிப்பாடுகளிலிருந்து முதன்மையாக ஏற்கனவே பார்த்தோம். “இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவர், நானே முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள தேவனாயிருக்கிறேன்” என்றார். பாருங்கள், முதல் வெளிப்பாடு. யோவான் தன்னிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறவரை பார்க்கும்படிக்குத் திரும்பினான். அவர் அவனிடத்திலே பேசிய முதல் காரியம்… 48 எந்த ராஜாவும், அவன் பேசும் போது, அவன் யாராயிருக்கிறான் என்பதை அவன்—அவன்—அவன் கூறுகிறான்; எவருமே. “நான் உங்களிடத்திற்கு பேசும்போது, நான் இன்னார்—இன்னார் என்றும், உங்களுக்கு என்னைத் தெரியாது என்றும் கூறுகிறேன். நான் வில்லியம் பிரான்ஹாம், நான் ஜான் டோ ” என்கிறது போன்றேயாகும். அது என்னவாக இருந்தாலும் அதைக் கூறுகிறோம். 49 அவர், “நான் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன் மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்று கூறினார். ஓ, என்னே! அவருடைய தெய்வீகத்தன்மை! இங்கே நாம், அவருடைய மகிமைப்படுத்தப்பட்ட ஏழுவிதமான தோற்றங்களைக் கொண்டவராய் இருப்பதை அவரில் காண்கிறோம். ஒவ்வொரு சபைக்காலத்திலும், அவர்—அவர் இந்த ஏழுவிதமான மகிமையான தோற்றங்களில் ஒன்றைத் தெரியப்படுத்தி அச்சபைக் காலத்தை அணுகுகிறார்.

2150 இன்றிரவில், அவர் கண்களில் அக்கினி ஜூவாலையுடன் வருகிறார். அவர் லவோதிக்கேயா இல்லை இந்த தீயத்தீரா சபைக்காலத்திற்குள்ளாக அவ்விதமான கண்களுடன் உற்று நோக்குகிறார். இக்காலத்தில் தான் சபையானது கத்தோலிக்க மதக்கொள்கைகளுக்குள்ளும், அஞ்ஞான மதக் கொள்கைகளுக்குள்ளும் விவாகம் செய்து கொண்டது. அதாவது, நிக்கொலாய் மதத்தினரும் அஞ்ஞானிகளும் சேர்ந்து விவாகம் செய்து கொண்டு, முதலாவதாக மதஸ்தாபன சபையைப் பிறப்பித்தது. 51 (எபேசு சபை காலத்தில்) நிக்கொலாய் மதத்தினரின் கிரியைகளாக இருந்தது, சிறிய பெர்கமு சபையின் காலத்தில் “போதகமாக” மாறியது, அது “ஒரு பிலேயாமின் போதகமாயிருந்தது.” இஸ்ரவேலர் புறப்பட்டு போய் வேசித்தனம்பண்ணும்படி பிலேயாம் கற்பித்திருந்தான், அதாவது மோவாபியரோடு அவர்கள் வேசித்தனம் பண்ணினர், (மோவாபியர் வெதுவெதுப்பான சபை அங்கத்தினராயிருந்தார்), அதாவது சாதாரண சபையாய், பெரிய ஸ்தாபனமாயிருந்தனர். நிக்கொலாய் மதத்தினர் போதகம், சபையில் இருக்கிற அனைத்து, அதிகாரத்தையும் எடுத்துப் போட்டு விட்டு, அதை ஒரு ஸ்தாபனமாக ஆக்கிவிட்டது என்று தேவன் கூறினார் என்பதை நாம் கண்டறிகிறோம், அவர், “நீ இதை வெறுக்கிறாய், நானும் அதை வெறுக்கிறேன்” என்று கூறினார். அவர், “அதை வெறுக்கிறேன்! அதை வெறுக்கிறேன்! அதை வெறுக்கிறேன்!” என்று தொடர்ந்து கூறிக் கொண்டேயிருக்கிறார். இங்கே அது முழு உபதேசத்திற்குள்ளாக வருகிறது. சபையானது எவ்வாறு நசுக்கப்பட்டு, அது மிகவும் சிறுத்துப் போய், இன்றைக்கு நமது சபைக்காலத்தில் இருக்கிற மிகச்சிறிய அளவுக்கு குறுகிவிட்டது என்பதைப் பாருங்கள்.

2252 இப்பொழுது, இந்த வெளிப்பாடானது வந்த நாளில் இல்லை இச்சபைக்கு உண்டான நாளில்தான், ரோமாபுரியானது, தனது இடத்திலுள்ள பிரம்மாண்டமான கற்களின் மேல் புல், வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் சபையைக் கட்டியிருந்தது. ஆனால் அவர் இந்த சபையினிடம், “அவர் அப்பொழுதும் அக்கினி ஜூவாலையைப் போன்ற கண்களுடன் காலங்கள்தோறும் நோக்குகிறார் என்றும், அவரது அஸ்திபாரம் புல், வைக்கோல் அல்ல, உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான, உறுதியான வெண்கலம்” என்பதாகக் கூறுகிறார். அஸ்திபாரம் நிச்சயமானதாயிருக்கிறது. நான் அதை நேசிக்கிறேன். நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம்.

2353 சரி: உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். 54 சரி, இச்சபைக்காலத்தில் சபையானது ஏறத்தாழ அறுப்புண்டு போன நிலையில், மிகவும் குறைந்து போன நிலைக்கு ஆகிவிட்டது. இக்காலத்தில் அவர்கள் மகத்தான ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்களைப் பெற்றிருப்பதிலிருந்து அகன்று, கிரியைகளைச் சார்ந்து கொள்ளும் நிலைக்குப் போய்விட்டார்கள். நாம் நம்முடைய கிரியைகளின் பேரில் சார்ந்திருப்பதை தேவன் விரும்பவில்லை. 55 அது ஒரு—ஒரு ஸ்தாபன அமைப்பின் அடையாளமாயுள்ளது. “நாங்கள் செல்வி ஜோன்ஸூக்கு விறகு கட்டைகளைக் கொடுக்கிறோம். நாங்கள் இன்னாருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் துணி மணிகளைக் கொடுக்கிறோம்” என்று சொல்லுகிறார்கள். அது நல்லதுதான். ஆனால் நீங்கள் அதன் பேரில் சார்ந்திருக்க வேண்டாம், நீங்கள் அதை செய்வதில் சார்ந்திருக்க வேண்டாம். சகோதரனே, அது—அது—அது நல்ல செயல்கள் தான்; ஒரு நல்ல, ஒழுக்கமான குடிமகனும் அதைச் செய்வான். ஆனால் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதற்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் உண்டாகின்ற மறுபடியும் பிறந்த அனுபவமே தேவையாயிருக்கிறது. சரி. 56 அவர்கள் அன்பு, விசுவாசம் ஆகியவைகளைக் கொண்டிருப்பதில் நலிவுற்று, அதற்குப் பதிலாக கிரியைகளையே சார்ந்து கொள்ளத் தலைப்பட்டனர். காலம் செல்லச் செல்ல அவர்கள் அதில் பெருகிக் கொண்டே சென்றனர்.

2457 சரி: உன் கிரியைகளையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும்…அறிந்திருக்கிறேன். 58 ஆனால் நாம் இப்பொழுது 20-ம் வசனத்தை எடுத்துக் கொள்ளப் போகிறோம். இதைக் கவனியுங்கள். ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய். 59 இப்பொழுது, “ஸ்திரீயானவள்”: நேற்றிரவில் ஸ்திரீயானவள் எதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறாள் என்று பார்த்தோம்? “சபைக்கே.” இப்பொழுது, இப்பொழுது அவர்கள் “நிக்கொலாய் மதத்தினரின்” மற்றும் “பிலேயாமின் போதகம்” என்றும் அழைக்கப்பட்டனர் என்பதை நாம் கண்டறிகிறோம். இப்பொழுது அது ஒரு “யேசபேல்” ஆக மாறிவிட்டது.

2560 இப்பொழுது, “யேசபேல்.” நீங்கள் கவனிப்பீர்களேயானால், இது ஒரு பெரிய சரித்திரமாய் உள்ளது. இப்பொழுது நீங்கள் அதைக் குறித்துக் கொள்ள விரும்பினால், 1 இராஜாக்கள் 16-ம் அதிகாரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். யேசபேல் ஒருபோதும் ஆபிரகாமின் குமாரத்தியல்ல. இங்கு உள்ள அஞ்ஞான ரோமாபுரியாகிய இந்தக் குழுவினரும் ஆபிரகாமின் குமாரத்தியல்ல. நிக்கொலாய் மதத்தினர் ஒரு குளிர்ந்துபோன, உண்மையான கிறிஸ்தவர்களிடத்திலிருந்து தங்களை வேறுபிரித்துக் கொண்டு, “விசுவாசமில்லாமல் காணப்பட்ட” சம்பிரதாய முறைமை கொண்ட கிறிஸ்தவ கூட்டமாயிருந்தனர். அவர்கள் இன்றைக்கு இருப்பது போல், அவர்கள் ஒரு சபையை ஒரு தங்கும் விடுதியைப் போன்றாக்கவே அவர்கள் விரும்பினர்; அதில் பரிசுத்த ஆவியே இல்லை. “அற்புதங்களின் காலம் கடந்துவிட்டது, அது வேறொரு காலத்திற்குரியது. நமக்கு சகோதர ஐக்கியம் கிடைத்திருக்கிறது” என்கிறார்கள். ஒரு நல்ல மேசான், ஆட் ஃபெலோ போன்ற சகோதர சிநேகத்தை வலியுறுத்தும் சர்வதேச சங்கங்கள் அல்லது அதை போன்று எந்த சங்கமும் அதையேப் பிறப்பிக்கின்றன. அது சரிதான். ஆனால் அது ஒருபோதும் இயேசு கிறிஸ்துவுக்குள்ளான ஒரு புதிய பிறப்பின் ஸ்தானத்தை, ஆத்துமாவிற்கான இரட்சிப்பின் ஸ்தானத்தை எடுக்கவே முடியாது, இதுவே சத்தியம்.

2661 சரி, இந்த யேசபேல். இப்பொழுது அவள் ஒரு ஆபிரகாமின் குமாரத்தியாயிருக்கவில்லை, அது உண்மை, அவள் ஒரு விக்கிரக ஆராதனைக்காரனின் இளவரசியாவாள். அந்த நேரத்தில் அந்த இராஜ குடும்பமோ, அவளது ராஜ குடும்பமானது பாகாலிடத்தில் காட்டு மிராண்டித்தனமான, கொடூரமான முறையில் பிரபலமானவர்களாக்கப்பட்டு, விசுவாசம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவளுடைய தந்தை அ—ஸ்—த—ரோ—த்—து என்னும் விக்கிரகத்தின் ஒரு பூசாரியாக இருந்தான். (நீங்கள் அதை எப்படி உச்சரிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, நான் அதை வரலாற்றில் இருந்து எடுத்தேன்.) கான்ஸ்டன்டைனைப் போலவே ஆகாப் தன்னுடைய மூல தந்திரத்தை பயன்படுத்தினான். இது அடுத்த மகத்தான வலிமையான தேசமாக இந்த இஸ்ரவேல் விளங்கியது. எனவே… 62 நேற்றிரவு கான்ஸ்டன்டைன் என்ன செய்தான் என்று பார்த்தோம்? அவன் இரட்சிக்கப்பட்டவனாயிருக்கவில்லை. அவன் ஒரு அரசியல்வாதியாயிருந்தான். அவன் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான்? அவன் கிறிஸ்தவர்களை எடுத்துக் கொண்டான், அவர்கள் அவனுக்காக ஜெபிப்பதாகக் கூறினர்… (இப்பொழுது அங்கே, நினைவிருக்கட்டும். அவன்…நாம் இப்பொழுது நிக்கொலாய் மதஸ்திரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்). அவர்கள் ஜெபித்து, அதனால் அவன் இந்த யுத்தத்தில் ஜெயித்தால், அப்பொழுது அவன் ஒரு கிறிஸ்தவனாகிவிடுவதாக அவன் கூறினான். அவன் இதைப்பற்றி ஒரு சொப்பனங்கண்டான். அதன் பேரில் அவன் தன்னுடைய வீரர்களின் கேடயங்களை வெண் வர்ணம் பூசி, அந்த இராத்திரியில், சிலுவைச் சின்னத்தைப் பொறித்தான். அச்சமயத்தில் தான் கொலம்பஸின் வீரர்கள்(Knights of Columbus) என்ற ஸ்தாபனமாது பிறந்தது. அங்கேதான் அவர்கள் தங்களுடைய நிலையை எடுத்து இருக்கிறார்கள். ஆனால் கான்ஸ்டன்டைன் ஒரு போதும் கிறிஸ்தவர்களுக்குரிய நிலையை எடுத்துக் கொண்டதேயில்லை. செயின்ட் சோஃபியா சபை என்னப்பட்ட ஒரு நிக்கொலாய் மதஸ்தருடைய சபையின் கட்டிடத்தின் மேல் அவன் ஒரு சிலுவைச் சின்னத்தைப் பொறித்தான். நான் நேற்றிரவு கூறியது போல, வரலாற்றின் பக்கங்களில், கிறிஸ்தவம்போல் தோற்றமளிக்கும் இந்த ஒரு காரியத்தைத் தவிர வேறு எதுவும், சபைக்குரியதாக அவன் செய்தான் என்று சொல்லும் எதையும் என்னால் காணமுடியவில்லை. வேறு அநேக வேத பண்டிதர்களும் அதையேக் கூறுகிறார்கள். இப்பொழுது அவனுடைய மனமாற்றத்தைக் குறித்த எதையும் நாம் அறியோம். அவன் எந்தவிதமான நிலைக்குள் சென்றான்? அவன் செய்ய நினைத்ததென்னவெனில், அவன் ரோமாபுரி முழுவதையும் பார்த்தான்.

2763 இப்பொழுது அவனுடைய தந்திரத்தைப் பாருங்கள். இக்காரியம் சம்பவிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே வேதத்தில் எப்படியாய் தேவன் அதைப்பற்றி கூறி உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆகாப் உபயோகித்த அதே தந்திரத்தைத்தான் கான்ஸ்டன்டைனும் கடைப்பிடித்தான், தேவனே அதை இங்கே கூறியுள்ளார். 64 கான்ஸ்டன்டைனின் ஜனங்களில் பெரும்பாலோர் இந்த நிக்கொலாய் மதத்தினரான கிறிஸ்தவர்களாயிருந்ததைக் கண்டான். அவர்களில் வேறு சிலர் “சமய எதிர்பாளர்கள்” என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் தான் பெந்தெகொஸ்தேக்கள்: அவர்களோ, “சமய எதிர்ப்பாளர்கள் மற்றும் பரிசுத்த உருளைகள்” என்றும், இன்னும் இன்ன பிற பெயர்களால் அழைக்கப்பட்டனர். அங்கே அவர்களிடமே உண்மையான அற்புதங்களும் அடையாளங்களும் உண்டாயிருந்தன. ஆனால் மாம்சபிரகாரமான சபையோ அப்பொழுது ஒரு ஸ்தாபன அமைப்பிற்குள்ளாக உருவாகிக் கொண்டிருந்தது. கான்ஸ்டன்டைன் என்ன செய்தான்? அவன் மிகவும் சாதுரியமானதொரு வேலையைச் செய்தான். அவன் தன்னுடைய அஞ்ஞான விக்கிரக ஆராதனைக்கார நண்பர்களையும் கிறிஸ்தவ நண்பர்களையும் ஒன்று சேர்த்து இவ்விரு சபைகளையும் இணைத்து, …ஒரு—ஒரு…அஞ்ஞானக் கொள்கைகளை கிறிஸ்தவத்திற்குள் கொண்டு வந்தான். அவ்வாறு பெர்கமு சபையின் காலத்தில் கிறிஸ்தவமும், அஞ்ஞான மதமும் விவாகம் செய்து கொண்டன.

2865 இந்த சபைக்கு தேவன் இன்றிரவில் இங்கே என்ன கூறுகிறார்? ஆகாப் தனது இராஜ்யபாரத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டி, விக்கிரக ஆராதனைக்காரியாகிய யேசபேலை மணந்தான். அதே காரியம் தான் இங்கும் நடந்தது. தனது இஸ்ரவேலின் இராஜ்யத்திற்கு பலம் சேர்க்க அவன் இவ்வாறு செய்தான். 66 அதைத்தான் சபைகளும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டில், 1962-ல் யாவருக்கும் ஒத்துப் போகிறதான வேதாகமத்தை அவர்கள் உருவாக்கி வெளியிட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனித்தீர்களா? கத்தோலிக்கரையும், ப்ராடெஸ்டெண்டுகளையும், யூதர்களையும் பிரியப்படுத்தத்தக்கதான ஒரு வேதாகமமாக அது இருக்குமாம். ஓ, சகோதரனே! அதைப் பற்றிய செய்தியை செய்திப் பத்திரிக்கையில் இருந்து கத்தரித்து வைத்திருக்கிறேன். இன்றிரவில் நான் என்னோடு அதை இங்கே கொண்டு வரவில்லை. அன்றிரவு நான் அதிலிருந்து வாசிக்க நீங்கள் கேட்டீர்கள். அங்குதான் காரியம், நீங்கள் பாருங்கள்.

2967 ஓ, இவ்வாறான காரியங்களை அவர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்! தங்களை எண்ணிக்கையில் பெருக்கிக் கொள்ள வேண்டி, தேவனுடைய பரிசுத்தமான காரியங்களை எடுத்து இஷ்டப்படி வீயெறிந்துவிடுகிறார்கள். சபை அதைத்தான் செய்திருக்கிறது. சபையானது தனக்குள் ஆட்களை சேர்த்துக் கொள்வதற்காக, ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கிக் கொள்ளுதலின் அடிப்படையில் ஆட்களை சேர்த்துக் கொண்டு, அதன் மூலம் மறு ஜென்ம அனுபவத்தை அடையாத ஆட்களான துரோகிகளை, விசுவாசமில்லாதவர்களைக் கொண்டதாக அது இருக்கிறது. ஆனால் கிறிஸ்துவின் உண்மையான சரீரமாகிய சபையோ ஒரு மத ஸ்தாபனமல்ல, அது இரகசியமான—இரகசியமான கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறது. அதற்குள் நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறுதல் என்னும் ஒரேயொரு வழியாகத்தான் உள்ளே நுழைய முடியும். அது உண்மையே! அப்போஸ்தலர்கள் பெற்றிருந்த அதே அடையாளங்களை உண்மையான சபையானது பெற்றிருக்கிறது. அது முற்றிலும் உண்மையே!

3068 நாம், “நல்லது, நாம் அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபையோடு சேர்ந்து கொள்வோம். நாம் ஒருத்துவ மக்களோடு(Oneness) சேர்ந்து கொள்வோம், நாம் இந்த சபையோடு சேருவோம் அல்லது பாப்டிஸ்டோடு அல்லது மெத்தோடிஸ்டோடு சேர்ந்து கொள்வோம்” என்று கூறி அவ்விதமாக நாம் தவறோடு ஒத்துப் போக வேண்டியதில்லை. நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து கொள்வோமாக! இந்தக் காரியங்களிலிருந்து விலகி சுயாதீனராயிருப்போம். அந்த ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றும் நன்றாகத்தான் காணப்படுகின்றன. ஆனால் அவர்களுக்கென கொள்கைகளும், கோட்பாடுகளும் உள்ளன; நீங்கள் அவர்களுடைய தேசத்திலுள்ள சபையில் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டுமானால் அவர்களுடைய பொது கண்காணியைப் போய் பார்த்து, அவர் அனுமதிக்கிறாரா என்று முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் என்ன போதிக்கிறார்களோ, அதன்படி சரியாக நீங்கள் போதிக்காவிடில், அவர்கள் உங்களை புறம்பாக்கிப் போடுவார்கள். அவர்கள் விருப்பப்படி போதித்தால் அப்பொழுது நீங்கள் வேதத்தோடு நிலைத்திருக்க முடியாது. தேவன் அதைச் செய்ய இயலாது, அவர் அதை வெறுக்கிறார். எந்தவொரு மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனும் அவ்வாறே செய்கிறான். அங்கிருக்கிறவர்கள் அநேகர் முற்றிலும் ஊழியம் செய்யவும், ஐக்கியங்கொள்ளவும் வாஞ்சிக்கின்றனர். ஆனால் உங்களால் அதைச் செய்ய முடியாது, அவர்கள் உங்களை வெளியே தள்ளிவிடுவார்கள். நல்லது, அவர்கள் உங்களை வெளியே தள்ளினால் தள்ளட்டும், நீங்கள் எப்படியாகிலும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதுவே முற்றிலும் சரியானது. ஆனால், நீங்கள் பாருங்கள், அவர்களோ—அவர்களோ அந்த—அந்த கோட்பாட்டைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். ஏராளமாக பணம் கிடைக்கக் கூடிய அளவுக்கு அதற்கேற்ப நிலைக்கு நீங்கள் போய்விட விரும்புகிறார்கள். 1944-ம் ஆண்டில் பாப்டிஸ்டுகள் ஒரு கோஷத்தை எழுப்பினார்கள்; “1944-ம் ஆண்டில் புதிதாக இன்னும் பத்து இலட்சம் மக்களை சேர்த்து எண்ணிக்கையைப் பெருக்குவோம்” என்கிற கோஷம் அது. அவர்கள் என்ன பெற்றுக் கொண்டார்கள்?

3169 மகத்தான சுவிசேஷகர் பில்லி கிரஹாம் கூறினதுபோல, அவர் லூயிவில்லில் இருந்தபோது, “நான் ஒரு பட்டணத்திற்குப் போகிறேன். அங்கே முப்பதாயிரம் பேர்கள் என் கூட்டத்தில் கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுக்கிறார்கள். நான் அடுத்த ஆண்டில் அதே பட்டணத்திற்குப் போகும் போது, அவர்களில் முப்பது பேர் கூட தேறமாட்டார்கள். ஆனால் பவுல் அப்போஸ்தலன் ஒரு பட்டணத்திற்குப் போனால், ஒரு ஆத்துமா அவனது ஊழியத்தில் இரட்சிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். பவுல் அதே பட்டணத்திற்கு அடுத்த ஆண்டில் திரும்பிப் போகும்போது, அந்த ஒரு ஆத்துமாவிலிருந்து இன்னும் முப்பது ஆத்துமாக்கள் அங்கே இரட்சிக்கப்பட்டிருக்கிறதை காணலாம். அந்த ஒன்றிலிருந்து நிறைய பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என்று எண்ணிக்கை கூடுகிறது” என்று கூறினர். அவர் என்ன கூறினார், இவ்வாறு அவர்—அவர் ஒரு நல்ல அறிக்கையை பண்ணியிருக்கிறார். ஆனால் நம்முடைய விலையேறப் பெற்ற சகோதரன் சரியாகத்தான் கூறினார் என்று நான் விசுவாசிக்கவில்லை. மேலும் அவர், “சோம்பேறி பிரசங்கியார்களே! நான் அவ்வாத்துமாக்களின் பெயர்களையும், முகவரிகளையும் கொடுத்திருந்தேனே, நீங்களோ அவர்களை நேரில் போய் சந்தித்து அவர்களோடு சம்பாஷிக்காமல், அதற்குப் பதிலாக வெறும் ஒரு கடிதத்தை அனுப்பிவிட்டு, உங்கள் காலை மேசையின்மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு சுகமாக இருந்துவிடுகிறீர்கள்” என்று கூறிவிட்டார்.

3270 இவ்வாறு அவர் வெளிப்படையாகப் பேசியதை நான்—நான் மெச்சுகிறேன். ஒரு மனிதன் மாய்மாலக்காரனாக இராமல், தான் என்னவாக இருக்கிறானோ அப்படியே தன்னைக் காண்பித்தால் நான் அப்படிப்பட்டவனையே விரும்புகிறேன். நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதைவிட மிஞ்சி எண்ணாமல், உள்ளபடியே எண்ணவேண்டும். அதை நான் விரும்புகிறேன். ஆனால் நான் ஒன்று கூற விரும்புவேன், “பில்லி அவர்களே! பவுலின் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்ட அந்த ஒரு ஆத்துமாவை வழி நடத்திச் செல்ல அவனுக்கு யார் இருந்தார்கள் என்று உங்களை கேட்க விரும்புகிறேன். பில்லி! நீங்கள் அவர்கள் ஸ்தாபனங்களுக்கு திரும்பிப்போய் கைக்குலுக்குதல் போன்றவைகளை மட்டும் செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் விழித்திருந்து ‘ஆம், நான் இயேசுவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்’ என்று அவ்வனுபத்தில் நிலைத்திருந்து, அவன் மாம்ச சிந்தனைக்கு மரித்து அழுகி, பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறக்க விட்டுவிடுங்கள். அப்பொழுது அவன் புதிய ஆத்துமாக்களை ஆதாயம் செய்வான்.” 71 சகோதரனே, நீங்கள்…அப்பொழுது அவன் அப்படிப்பட்ட ஆத்துமா அக்கினிப் பந்தாக இருப்பான். அவனில் உள்ள அக்கினியை உங்களால் அணைக்கவே முடியாது. அவன் பெருங்காற்றினால் விசிறிவிடப்பட்டு கோரமாக எரியும் ஒரு வீட்டைப் போல் இருப்பான். அதை நீங்கள் அணைக்கவே முடியாது. ஓ, ஒரு உண்மையான கிறிஸ்துவுக்குள் இரட்சிக்கப்பட்ட அவனுக்குள் உள்ள அக்கினி எங்கும் பரவுகிறது; அவனால் அப்படியே அமைதியாக இருக்க முடியாது. அவன் அசைந்து கொண்டேயிருப்பான். ஓ, நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்! ஓ, என்னே! பழங்காலத்துப் பாணியிலான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உங்கள் ஆத்துமாவை அக்கினிமயமாக்குகிறது. பெருத்த முழக்கத்தோடு வீசும் பலத்த காற்று உங்களுக்கு அவ்வக்கினியை மேலும் பற்றியெரியச் செய்கிறது. அது அமைதியாக இருக்க முடியாது. அவ்விதமான நிலையில், நான் கொஞ்சம் விறகை எடுத்து நெருப்பில் வைத்து விட்டுப் போய்விடுகிறேன். அது அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. ஆம், ஐயா! பவுலின் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாவை யாவரும் வழி நடத்திச் செல்ல வேண்டியதில்லை. ஏனெனில், பவுல் அந்நபரை, தன் சுயத்தில் மரித்து, கிறிஸ்து அவருக்குள் ஜீவிக்கத்தக்க அளவுக்கு கிறிஸ்துவுக்குள் ஆழமாக கொண்டு போய் விட்டுவிடுவான். மீதியை அவர் பார்த்துக் கொள்வார். அது உண்மை! அது செய்யப்பட வேண்டிய காரியமாயிருக்கிறது.

3372 பாப்டிஸ்டு சகோதரர்கள் அருமையானவர்கள் தான். ஆனால் இன்னும் பத்து இலட்சம் மக்களை புதிதாக சேர்ப்பதனால் என்ன பயன்? உங்களுக்கு இன்னும் கூடுதலாக பத்து இலட்சம் பெயர்கள் தான் கிடைக்கின்றன. சபைப் பதிவேட்டில் எப்படியாவது யாரையாவது சரிக்கட்டி சேர்த்து, அதில் எழுதி விடுவது தான் நடக்கிறது. அதெல்லாம் சரிதான், சகோதரரே, ஆனால் தேவையானது என்னவெனில், உலகத்தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்ட பெயர்களே நமக்கு வேண்டும். அவர்கள் இரத்தத்தால் கழுவப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, அடையாள அற்புதங்கள் தங்கள் ஜீவியத்தில் கொண்டவர்களாக இருப்பார்கள்.

3473 வரலாற்று நூல்களை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் யாவரும் ‘நிசாயா ஆலோசனை சங்கம் என்ற புத்தகத்தை வாங்கி, எவ்வாறு அந்த இரத்த சாட்சிகள் பெந்தெகொஸ்தேயின் அக்கினியை விடாமல் பற்றிக் கொண்டிருந்தனர் என்பதை வாசித்துப் பார்க்க விரும்புகிறேன். இப்பொழுது சகோதரனே, பாப்டிஸ்ட்டுகளே, மெதோடிஸ்டுகளே, நீங்கள் யாராயிருந்தாலும் நான் உங்களுக்கு கூறுவது என்னவெனில், உண்மையான அசலான ஒளியானது…அது பெந்தேகோஸ்தே ஸ்தாபனம் அல்ல, இப்பொழுது; ஆனால் உண்மையான, அசலான ஒளியோ ஒரு பெந்தேகோஸ்தே அனுபவமாயிருக்கிறது. நான் அநேக நாட்கள் இதைப் பற்றி வரலாறுகளை தோண்டி ஆராய்ந்து பார்த்ததில் பெந்தேகொஸ்தேயின் ஜூவாலையானது, பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு, இந்தக் காலம் வரை அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. ஆம் ஐயா! ஆனால் அது தள்ளப்பட்டுவிட்டது.

3574 அவர்களில் சிலரோ, “நல்லது, மகத்தான கத்தோலிக்க சபையானது எதிர்ப்பலைகளையெல்லாம் சமாளித்து நிலைத்து நின்றுவிட்டது: அது தான் உண்மையான சபை என்பதை இதனால் நிரூபிக்கிறது” என்று கூறுகின்றனர். அவள் நிலைத்து நின்றது ஒன்றும் ஆச்சரியமானதாக எனக்குத் தென்படவில்லை, ஏனெனில் அச்சபையின் பின்னால் பக்கபலமாக அரசாங்கமும் மற்றும் ஏனைய சக்திகளும் இருந்தபடியினால் அது நீடித்திருக்க முடிந்திருக்கிறது. ஆனால் மிகவும் விநோதமான காரியமென்னவெனில்—என்னவெனில் அந்த சிறுபான்மையினரான சிறு மந்தையானது, புறம்பாக்கப்பட்டும், சிறையில் அடைபட்டும், வாளால் அறுப்புண்டும் இருந்தது. அவர்கள் எப்படி நீடித்து நிலைத்து நின்றனர்? அவர்களுக்குள் ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானவர் அசைவாடிக் கொண்டிருப்பதினால் அது நீடித்து நிற்க முடிந்தது. பாதாளத்தின் அனைத்து பிசாசுகளும் அதை மேற்கொள்ள முடியாது. “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” அதுவே உண்மையான காரியமாக உள்ளது. மெதோடிஸ்டு பிரசங்கியார்களுக்கும் இந்த பரிசுத்த ஆவியானது கொடுக்கப்பட்டால் இதே காரியம் நடக்கும். பாருங்கள், அது அவர்களை எழுப்பி அதேவிதமான காரியங்களைச் செய்யும். அது ஒரு போதும் தவறாது.

3675 அந்த மாய்மாலக்காரனான ஆகாப் பாருங்கள், அங்கே போய், அவன், “இப்பொழுது நான் என் இராஜ்யத்தை பெலப்படுத்திக் கொள்ள வேண்டும். அதினால் எனக்கு பெரிய தேசம் உண்டாயிருக்குமே, நான் போய் அந்த இராஜாவின் மகளை விவாகம் செய்து கொள்ளுவேனென்றால், நாம்—நாம் சிநேகிதராகி விடலாம்” என்றெல்லாம் கூறினான். அவன் என்ன செய்து கொண்டிருந்தான்? அவன் தனது சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போட்டான். 76 இப்பொழுது, பிராடெஸ்டெண்ட் சபையும் இதே போல் திரும்பிப் போய் கத்தோலிக்க சபையோடு இணைந்து கொண்டுவிட்டால் , முன்பு நடந்தது போலவே அது இருக்கும். ஆகாப் வாழ்ந்த நாளில்… 77 அது மூன்று தடவைகள் இருந்து வந்துள்ளது. இஸ்ரவேலின் பிரயாணத்தில் ஆகாபுக்கு நள்ளிரவு அனுபவம் உண்டாயிருந்தது. இங்கே அது மீண்டும் நள்ளிரவு வேளையாக இருக்கிறது. அடுத்து நாம் மீண்டும் இக்காலத்தில் நள்ளிரவு ராத்திரி வேளைக்குள் வந்திருக்கிறோம். மூன்று சந்ததிகள் இந்த அனுபத்துக்குள் கடந்து சென்றுவிட்டன; இங்கே, இங்கே, இங்கே.

3778 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், ஆகாப் தன் ஜனங்களை வலுப்படுத்த வேண்டி, யேசபேலை மணந்து கொண்டான். சரியாக அதேவிதமான காரியத்தைத்தான் கான்ஸ்டன்டைனும் செய்தான். அவன் ஒரு பெரிய சபையை நிறுவி, சலவைக் கற்களால் ஆன பலி பீடத்தை உண்டாக்கி போப் என்ற மனிதனை எடுத்து அவனுக்கு உடுத்துவித்து அவனை அங்கே மேலாண்மையுள்ளவனாக ஏற்படுத்தினான். அவனே உயிருள்ள தெய்வமாக இருந்து கொண்டிருந்தான், அவனால் அவர்களிடத்தில் பேச முடிந்தது, அவர்களுடைய பாவங்களைக் குறித்து அச்சபையினிடத்தில் கூற முடிந்தது, அது அந்த பழைய வெதுவெதுப்பான சபைக்கு பிரியமானதாயிருந்தது, அதோடு திருப்தியடைந்து அவர்கள் சென்றனர். நிச்சயமாக! அதுதான்! ஆனால் மறுபடியும் பிறந்த மனிதனுக்கோ, அவர்கள் இவ்வனுபவத்தை அகற்றிவிட்டு, ஜெபங்களை வாசித்து சொல்வது, மற்றும் அஞ்ஞான சடங்குகளை உள்ளே கொண்டு வந்தது பிரியமாயிருக்கவில்லை. அவர்கள் என்ன செய்தார்கள்? ஜூப்பிட்டரை விலக்கி அந்த இடத்தில் பேதுருவை வைத்தார்கள். அவர்கள் வீனஸ் தேவதையே விலக்கி விட்டு அந்த இடத்தில் மரியாளை வைத்தனர். அது கிறிஸ்தவ மக்களுக்குள் அஞ்ஞான மூட நம்பிக்கைகளை கொண்டு வந்தது—கொண்டு வந்தது.

3879 ஆகாப் யேசபேலை மணந்து கொண்டபோது, அதே விதமான காரியத்தையே செய்தான். அவன் இஸ்ரவேலுக்குள் விக்கிரக ஆராதனையை கொண்டு வந்தான். யேசபேல் என்ன செய்தாள்? தீர்க்கதரிசிகளில் எவர் மேலெல்லாம் அவளால் கைபோட முடியுமோ, அவர்களையெல்லாம் அவள் கொன்று போட்டாள். அவள் அப்படிச் செய்யவில்லையா? அதேவிதமாகத்தான் போப்புகளும் செய்தார்கள். உண்மையான கிறிஸ்தவர்களில் யார் மேலெல்லாம் அவர்களால் கைபோட முடியுமோ, அவர்கள் மேல் கைபோட்டு, அவர்களை கொன்றனர். 80 ஆனால் அந்த காலத்திற்குரிய ஒரு நட்சத்திரமாக வயோதிக எலியா இருந்தான்! ஓ, ஆம், ஐயா! பாவங்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்க அவன் பயப்படவேயில்லை. ஆம் ஐயா! அவன் அந்தக் காலத்திற்குரிய தேவனுடைய நட்சத்திரமாக விளங்கினான். ஒரு சமயம், அவன் “கர்த்தாவே நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்” என்று சொல்லும்படியான கட்டம் வந்தது. 81 தேவன் அவனுக்கு பிரதியுத்திரமாக, “ஒரு நிமிடம் பொறு, ஒரு நிமிடம் பொறு, ஒரு நிமிடம் பொறு, எலியாவே, உ—ஊ. நான் எனக்காக எழுநூறு பேர்களை மீதியாக மறைத்து வைத்திருக்கிறேன். பார்த்தீர்களா? அவர்கள் எங்கேயுள்ளனர் எனபதை நீ அறியாய். அவர்கள் அங்கே பரிசேயர், சதுசேயர், பாப்டிஸ்டுகள், மெதோடிஸ்டுகள், ப்ரெஸ்பிடேரியன்கள் ஆகியோர் நடுவில் அவர்கள் மறைந்து உள்ளனர். ஆனால் நான்—நான் அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வருவேன். நீ கொஞ்சம் பொறுத்துக்கொள். புரிகிறதா? நான் அவர்களை அங்கே வைத்திருக்கிறேன். அங்கே…அவர்கள்—அவர்கள்—அவர்கள் என்னுடையவர்கள், அவர்கள் இதுவரையிலும் பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடவில்லை” என்று கூறினார். ஆனால் வயோதிக எலியா அந்த நாளில் தேவனுடைய சத்தமாய் இருந்தான். அவன் நிச்சயமாகவே இயேசுகிறிஸ்துவின் முதல் வருகைக்கு தேவனுடைய சத்தத்தின் முன்னடையாமாயிருந்தான். எனவே அது வேதவாக்கியங்களின்படி மீண்டும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலும் சத்தத்தின் முன்னடையாளமாகவே இருக்கும்.

3982 இந்த அற்பமான யேசபேல், அவள் அங்கு ஆளுகையை மேற்க்கொண்டபோது, தேவனுடைய பலிபீடங்களையெல்லாம் இடித்துப் போட்டு, தன்னுடைய சொந்த பலிபீடங்களையே நிறுவிட வேண்டுமென்று கட்டினாள் என்பதை நாம் கண்டறிகிறோம். அவள் ஒரு விக்கிரகத்திற்கு முன்பாக இஸ்ரவேலரை பணிந்திடும்படி செய்தாள். கான்ஸ்டன்டைனும் கத்தோலிக்க சபையை நிறுவிய போது, அவனும் சரியாக இதேவிதமான காரியத்தையே செய்திட்டான். அவன் அஞ்ஞான விக்கிரக ஆராதனைகளை கிறிஸ்துவ சபைக்குள் கொண்டு வந்தான். அவன் கிறிஸ்தவர்களை விக்கிரங்களுக்கு முன்பாக பணிந்திடும்படி செய்திட்டான். அது மீண்டும் சரியாக ஒரு இருண்ட காலமாகவே இருக்கிறது; இஸ்ரவேலின் இருண்ட காலம், சபையின் இருண்ட காலம்; மக்களை விக்கிரங்களை பணியச் செய்திடும் காலம். எலியா தன்னுடைய நாளில் நட்சத்திரமாக இருந்தான். 83 யேசபேல் அனைத்து இஸ்ரவேலரையும் பாகாலை வணங்கிடச் செய்தாள். எனவே அதே காரியத்தைத் தான் தீயத்தீரா சபைக் காலத்திலும் கத்தோலிக்க சபை செய்தது.

4084 இப்பொழுது, இங்கே இன்னொரு ஆச்சரியமான காரியத்தை நீங்கள் கண்டுணர நான் விரும்புகிறேன். நான் இங்கே என்னுடைய வரலாற்றையும் பார்த்தேன். இயேசு, அவள்…தன்னைத் தானே தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்கிறாள் என்று கூறினார். “தன்னை தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்ளும் (தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும்) யேசபேல் என்ற அந்த ஸ்திரீயானவள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் பாருங்கள், கத்தோலிக்க சபையானது தங்களுடைய ஜனங்கள் வேதத்தை வாசிக்க அனுமதிப்பதில்லை, ஏனெனில் வேதத்தை வாசித்து, அதற்குரிய தெய்வீக வழியில் வியாக்கியானிக்க மதகுரு ஒருவருக்கு மட்டுமே இயலும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 85 நல்லது, அதுவே ஒரு தீர்க்கதரிசியின் உண்மையான வியாக்கியானம். ஒரு தீர்க்கதரிசியானவன் தேவனுடைய வார்த்தையைப் பற்றிய தெய்வீக வியாக்கியானத்தை தன்னில் கொண்டவனாயிருப்பான். அது முற்றிலும் சரி, ஒரு நபர் ஒரு மனிதனை “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்று அழைத்து விட்டு, “அவருக்கு தவறான வெளிப்பாடு இருக்கிறது” என்று எப்படி கூற முடியும்? இது நித்திய குமாரத்துவம் உண்டு என்பதை போல் இருக்கிறது. நீங்கள் பாருங்கள். பாருங்கள்? பாருங்கள் அது—அது… தீர்க்கதரிசி என்றால், “தேவனுடைய வார்த்தையை சரியாக வியாக்கியானிக்கிறவன்” என்று பொருள்; அவனுக்கு கர்த்தருடைய வார்த்தை வருகிறது. அவனுக்கே வார்த்தையைப் பற்றிய வெளிப்பாடு வருகிறது. தீர்க்கதரிசி என்ற வார்த்தையின் பொருள் “தெய்வீக வார்த்தையின் ஒரு தெய்வீக வியாக்கியானி” என்பதாகும். இயேசு, “உங்களுக்குள்ளே தீர்க்கதரிசி ஒருவன் இருந்தால், கர்த்தராகிய நான் அவனோடு பேசுவேன். அவன் உரைத்தவை சம்பவித்தால் அப்பொழுது அவனுக்கு செவி கொடுங்கள். நான் அவனோடு இருக்கிறேன். அவன் உரைத்தவை சம்பவிக்காவிடில், அப்பொழுது அவனுக்கு செவி கொடுக்க வேண்டாம்” என்றார். அவ்வளவுதான் அது—அது தேவனுடைய தெய்வீக வார்த்தையாயிருக்கிறது, கர்த்தருடைய வார்த்தையானது தீர்க்கதரிசிகளுக்கு வருகிறது.

4186 இப்பொழுது, இந்த சபையில் அப்பொழுது “ஒரு தீர்க்கதரிசி” இருந்தான் என்று அவர்கள் கூறினர். இது இப்பொழுது நிக்கொலாய் மதஸ்தினரிலிருந்து மாற்றப்பட்டது, அது “ அவள் ” என்று மாற்றப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு இது புரிகிறதா? ஒரு “யேசபேல்.” இப்பொழுது நேற்றிரவில் “பிலேயாமின் போதகம்” என்பதை பார்த்தோம். பாருங்கள், “நிக்கொலாய் மதத்தினரின் போதகம்” மற்றும் “பிலேயாமின் போதகம்.” 87 இஸ்ரவேலர் வேசித்தனம்பண்ணக் காரணமாயிருந்தவன் பிலேயாம்தான். நிக்கொலாய் மதத்தினர் இங்கே என்ன செய்தனர்? ஸ்தாபன சபையை உருவாக்கினார்கள். எனவே அவைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்துப் பார்த்தால் நீங்கள் அவள் “சபையாக” இருப்பதைப் பார்க்கலாம். நிச்சயமாக அப்படித்தான்! வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் “திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசி” என்று கூறப்பட்டது. ஸ்திரீ, வேசி. அவள் என்னவாக இருக்கிறாள், அல்லது அவள் எப்படி ஒரு வேசியாயிருக்கிறாள்? அவள் வேசித்தனங்களை, ஆவிக்குரிய வேசித்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறாள், ஜனங்களுக்கு வேதவாக்கியத்தைப் பற்றி தவறாக வியாக்கியானித்துக் கொண்டிருக்கிறாள். அந்த மதவெறியை விட்டு விலகுங்கள்! அது உண்மையில் மதவெறிதான். அது உண்மை.

4288 இப்பொழுது, அவள் தன்னைத் தானே தீர்க்கதரிசினி என்று அழைத்துக் கொள்வதைப் பாருங்கள். “நாம் தான் அந்த சரியான ஒருவர்! நாம் தான் ஆலோசனை சங்கம்! நாம் தான் மீண்டும் லவோதிக்கேயா ஆலோசனை சங்கம், மனித ஆலோசனை சங்கம், நாம் இதை, இதை இந்த விதமாக தீர்மானித்துள்ளோம். ஆகையால் நீங்கள் எங்களுக்கு செவிகொடுங்கள்!” என்கிறாள். ஆனால்… 89 எலிசபெத் ஃப்ரேசியர் அல்லது அந்த ஃப்ரேசியர் பெண்ணைப் பற்றி என்னை அந்த—அந்த கத்தோலிக்க பாதிரியார் பேட்டி கண்டார். “போப்பிற்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ளவர் அல்லது பேராயர் அவர்களை நீங்கள் அந்த ஃப்ரேசியர் பெண்ணுக்கு ஞானஸ்நானம் கொடுத்தீர்களா என்று அறிய விரும்புகிறார்” என்று கூறினார். மேலும் அவர் “அவள் இப்பொழுது ஒரு கத்தோலிக்களாக ஆகிக் கொண்டிருக்கிறாள்” என்றார். அதற்கு நான், “ஆம், நானும் அதைப்பற்றி கேள்விப்பட்டேன்” என்று கூறினேன். அப்பொழுது அவர், “அவளுக்கு நீங்கள் தான் ஞானஸ்நானம் கொடுத்தீர்களா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம் ஐயா” என்றேன். அப்பொழுது அவர், “எந்தவிதமாக நீங்கள் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், “கிறிஸ்தவ ஞானஸ்நானத்தில்” என்றேன். உ—ஊ. அப்பொழுது அவர், “என்ன அர்த்தத்தில் அவ்வாறு கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான் “வேதம் கூறுகிறபடியான கிறிஸ்தவ ஞானஸ்நானம். கிறிஸ்தவ ஞானஸ்நானத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. ஒவ்வொரு நபரும் வேதத்தில் தண்ணீரில் முழுக்கி ‘இயேசு கிறிஸ்துவின்’ நாமத்தில் தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறார்கள்” என்று பதிலளித்தேன்.

4390 அவர் அதையெல்லாம் துவக்கித்திலிருந்து இந்தவிதமாக எழுதிக் கொண்டே வந்தார். அப்பொழுது அவர், “கத்தோலிக்க சபையும் அதையே முன்பு செய்து வந்தது தெரியுமா” என்று சொன்னார். நான், “எப்பொழுது” என்று கேட்டேன். மேலும் நான், “என்னிடத்தில் பண்டைக் காலத்திய வரலாற்று நூல்கள் அனைத்தும் உள்ளன. இலண்டனிலிருந்தும் இன்னும் வேறு பல இடங்களிலிருந்தும் அவைகளை வரவழைத்திருக்கிறேன். இந்த மணி வேளை விரைவில் நெருங்கி வருகையில், ஏதோக் காரியம் சம்பவிக்கப்போகிறது, எனவே இவ்வேளையில் இதைப் பற்றி படிக்க நான் அவைகளை வைத்திருக்கிறேன்.” என்றேன். ஊம். மேலும் நான், “அது எங்கே நீங்கள் சொல்லுகிற மாதிரி நடந்துள்ளது என்பதை அறிய நான் விரும்புகிறேன்” என்று கேட்டேன். நான் போக வேண்டும்… அப்பொழுது அவர், “ஓ, அது வேதத்தில் கூறப்பட்டுள்ளது” என்று அவர் பதிலுரைத்தார். அதற்கு நான், “நீங்கள் அதைச் சொல்லுகிறீர்களா…?” என்று கேட்டேன். அப்பொழுது அவர், “இயேசுவே கத்தோலிக்க சபையை ஸ்தாபித்தார்” என்று கூறினார். அதற்கு நான், “அப்படியானால் பேதுரு தான் முதலாவது போப் ஆக இருந்தாரா?” என்று கேட்டேன். அப்பொழுது அவர், “அதிக நிச்சயமாக” என்று பதிலுரைத்தார். நான், “சபையானது பிழையில்லாதது, அது மாறுவதில்லை என்றும், அனைத்து பூசை பலிகளும் இலத்தீன் மொழியிலேயே கூறப்படுவதால், அது மாற்றமடைய முடியாது என்று நான் நினைத்தேன்” என்றேன். அதற்கு அவர், “அது உண்மைதான்” என்றார். 91 அப்பொழுது நான், “ஆனால் அது முதற்கொண்டு நீங்கள் நிச்சயமாக சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். வேதமானது கத்தோலிக்க புத்தகமாய் இருக்குமானால், அப்பொழுது நான் ஒரு ஆதிகாலத்து பாணியிலான கத்தோலிக்கனாக இருப்பேன்” என்று கூறினேன். பாருங்கள்? அது உண்மை. மேலும் நான், “அப்பொழுது நானும் ஒரு ஆதிகாலத்து பாணியிலான கத்தோலிக்கன்” என்றேன். நான் தொடர்ந்து, “அது நிச்சயமாக…” என்றேன்.

44அவர்: “நல்லது, இப்பொழுது நீங்கள் பாருங்கள். வேதமானது வெறும் கத்தோலிக்க சபை சரித்திரத்தைத்தான் கொண்டதாகும். தேவன் தனது சபையில் இருக்கிறார்” என்று கூறினார். அதற்கு நான் “தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார்” என்றேன். அது உண்மை. 92 “எந்த மனுஷனும் பொய்யன், என்னுடைய வார்த்தை மட்டும் உண்மையாய் இருக்கிறது.” இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் இங்கே இருக்கிறதே, இது ஒன்று தான் இயேசு நேரில் தோன்றி உரைத்து உறுதிப்படுத்திய புத்தகமாகும். (நான் அதை மீண்டும் கூறட்டும்) முதல் காரியமாக அவர் தன்னுடைய தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துவதையே அதில் செய்திருக்கிறார். அவர் அதை முழுமையாக செய்திருக்கிறார். “எவராவது இப்புத்தகத்திலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டாலோ அல்லது இதோடு ஒன்றைக் கூட்டினாலோ (அவனுடைய பங்கு) ஜீவப் புத்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும், இப்புத்தகத்தின் வசனங்களை வாசிக்கிறவனும், அதை வாசிக்கக் கேட்கிறவனும் பாக்கியவான்…” இதிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போடுகிறவனோ, அல்லது இதோடு எதையாகிலும் கூட்டுகிறவனோ சபிக்கப்பட்டவனாயிருப்பான். அங்குதான் காரியம், எனவே அந்த அபாயகரமான பாகத்தைப் பாருங்கள். எனவே அதனோடு எதையும் கூட்டிவிடாதீர்கள். அது இருக்கிற வண்ணமாகவே அப்படியே விட்டு விட்டு, தொடர்ந்து சொல்லுங்கள்.

4593 நீங்கள் தாழ்மையாக இருந்தால் அவரிடத்தில் கேளுங்கள், அப்பொழுது ஆவியானவர் அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். புரிகிறதா? அதுதான் உண்மை. இப்பொழுது, அது சிக்கலாக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை. “பிதாவே, நீர் இவைகளை ரபீக்களுக்கும், பேராயர்களுக்கும், போப்பின் அடுத்த ஸ்தானத்திலுள்ளவர்களுக்கும், பொது கண்காணிகளுக்கும் மறைத்து, கற்றுக் கொள்ள விரும்பும் பாலகருக்கு வெளிப்படுத்தியதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்” என்று கூறி இயேசு பிதாவுக்கு ஸ்தோத்திரம். செலுத்தினார். புரிகிறதா? 94 அதுதான் உங்களுக்குத் தேவையானது. அது அவர் கூறியபிரகாரமாகவே மாத்திரம் வரக்கூடிய ஒரு தேவனுடைய வெளிப்பாடாய் உள்ளது. அவர், “ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார். பேதுருவோ, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று கூறினான். 95 இயேசு, “சீமோனே, நீ இதை ஒருபோதும் ஒரு வேதக் கல்லூரியில் கற்றறியவில்லை. புரிகிறதா? யாரும் அதை உனக்குச் சொல்லவில்லை. அது பரலோகத்திலிருந்து ஒரு வெளிப்படுத்துதலாகத் தான் வருகிறது. இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை” என்றார். 96 அப்படியே சரியாக ஆதியில் ஆபேலும் வெளிப்படுத்துதலைத் தான் பெற்றான். அது வெளிப்பாடாய் அப்பொழுதும் இருந்தது. அது இப்பொழுதும் வெளிப்படுத்துதலாகவே உள்ளது. அது எப்பொழுதும் வெளிப்படுத்தலாகவே இருக்கும். அது உண்மை.

4697 அது இப்பொழுது ஒரு ஸ்திரியாக இருந்ததை நாம் இங்கே கண்டோம். ஒரு ஸ்திரீ ஒரு “சபைக்கு” அடையாளமாயிருக்கிறாள். (அது சரிதானே? கிறிஸ்து யாருக்காக வருகிறார்? மணவாட்டிக்காகத்தான், ஒரு ஸ்திரீ, கற்புள்ள கன்னிகை.) இங்கேயுள்ள இந்த வயோதிக ஸ்திரீயோ தன்னை தேவனுடைய சபை என்று சொந்தம் கொண்டாடிக் கொள்ளுகிறாள். ஆனால் அவளோ ஐசுவரியத்திலும், முத்துக்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் நிறைந்த பொற்பாத்திரத்தை கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாள். அம்மதுவை, பூமியின் இராஜாக்கள் அனைவரும் குடிக்கும்படி செய்தாள். அது சரியா? 98 அவள் “யேசபேல்” என்று அழைக்கப்பட்டிருப்பதை நாம் இங்கே காண்கிறோம். யேசபேல், இஸ்ரவேலரை ஆளத் துவங்கியவுடனே அவள் இஸ்ரவேலரை கொலை செய்து, தன்னாலான எல்லாவற்றையும் செய்து, தன்னுடைய சொந்த பலிபீடங்களை எழுப்பினாள். அது சரியா? அதைத் தான் கத்தோலிக்க சபையும் செய்தது. அதைத்தான் சரியாக செய்தது. இப்பொழுது இன்னும் மேற்கொண்டும் படிப்போம். ஆனால் இது உங்களை திகைக்க வைக்கப் போகிறது, இன்னும் கூடுதலாக நீங்கள் புசிக்கும்படியாக சில சமயத்தில் நீங்கள் திகைப்படைகிறீர்கள்.

47…தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற …(“இப்பொழுது, நான் மட்டுமே வார்த்தையின் வியாக்கியானி” என்று அவள் கூறுகிறாள்) என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து… 99 அந்த சகோதரரனொருவர் ஏதேன் தோட்டத்தில் இருந்த “சர்ப்பம்” மற்றும் “ஏதேன் தோட்டத்திலுள்ள கனியைப் புசித்தல்” என்பது பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே இங்கே இயேசு, “புசிக்க” என்று கூறியபொழுது, அது என்னவென்று நீங்கள் பாருங்கள், (நீங்கள் பார்க்கவில்லையா?) அது என்னவென்றால் ஆவிக்குரிய பிரகாரமானதாயிருந்தது. நீங்கள் பாருங்கள். அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் ( என்ன விதமான கட்டில்? உலகப்பிரகாரமான காரியங்கள். அந்தவிதமாகத்தான் சரியாக அவள் இன்றைக்கு இருக்கிறாள் ) தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டல் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, ( அவர்கள் மகா உபத்திரவத்திற்குள் போகப் போகிறார்கள் ) அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்…

48100 ஓ! அவளுக்கு என்ன இருக்கிறது? இந்த வயதான பெண்ணுக்கு சில குழந்தைகள் உண்டு. இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரம். உங்களில் எத்தனை பேர்…? நேற்றிரவில் இப்பொழுது இங்கிருக்கிற அனைவருமே வந்திருந்தீர்கள் என நான் நினைக்கிறேன். சரி. வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் இந்த பழங்காலத்து வேசி, கத்தோலிக்க சபை, “ஒரு வேசி” என்றும், அவள் ஒரு “வேசிகளின் தாய்” என்றும் அழைக்கப்பட்டாள். அவர்கள் பையன்கள் அல்ல, அவைகள் சபைகளாய் இருந்தன. 101 லூத்தரன் சபை மற்றும் இதைப் போன்ற ஏனைய சபைகளும் எங்கிருந்து வந்துள்ளன? ஒவ்வொரு சபை ஸ்தாபனமும் எங்கிருந்து வந்தது? லவோதிக்கேயா எதிலிருந்து துவங்கியது? நிக்கொலாய் மதத்தினர் முடிவாக ஸ்தாபன சபையை உருவாக்கி அதற்குள் இணைந்தனர். அதே காரியம் தான் மீண்டும் சம்பவித்துள்ளது. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, சகோதரனே. ஓ, எலியா தன்னுடைய நாளில் அந்தக் காரியத்திற்கு எதிராக குரல் கொடுத்தான். யோவானும் தன்னுடைய நாளில் அதற்கு எதிராக குரல் கொடுத்தான். ஆம், ஐயா! யோவான், “ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்” என்று கூறினான். புரிகிறதா? அவர்கள் இவ்வாறாக இருப்பதை தடுக்க முடியாது.

49102 அவளுக்கு பிள்ளைகள் உண்டாயிருந்தார்கள். உண்மையான யேசபேலுக்கு பிள்ளைகள் இருந்தார்களா? ஆம், ஐயா! கவனியுங்கள். …நான் அவள் பிள்ளைகளைக் கொல்லுவேன்… 103 என்ன? கத்தோலிக்க சபை, அவளுடைய பிள்ளைகள் பிராடெஸ்டெண்டு ஸ்தாபனமாகும். பாருங்கள், அது முற்றிலும் உண்மை; ஏனெனில் அவர்கள் இதே காரியத்தைத் தான் செய்கிறார்கள். தங்களுடைய நடைமுறைக்கு மாறாக ஞானஸ்நானம், வேதப்பிரகாரமாயிராத ஞானஸ்நானமான கத்தோலிக்க ஞானஸ்நானத்திற்குள் பிராடெஸ்டெண்டுகளும் அப்படியே ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளார்கள். பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு பதிலாக கைகளை குலுக்கிக்கொள்ளுதல். “இயேசு கிறிஸ்துவிற்கு” பதிலாக “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” ஒவ்வொரு காரியத்தையும் அப்படியே வேதத்திற்கு முரணாக செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னமும் அப்படியே! அவர்கள் அதைத்தான் கடைபிடிக்கிறார்கள்.

50104 அவளுடைய மகள் அத்தாலியாள், அ—த்—தா—லி—யா—ள் என்று பெயரினால் அழைக்கப்பட்டாள். அவள் தன்னுடைய…அவள், யேசபேல், தன் மகள் அத்தாலியாளை யூதாவின் இராஜாவின் குமாரனாகிய யோராமுக்கு விவாகம் செய்வித்தாள். இதன் மூலம், விரைவாக பாகாலின் பலி பீடங்கள் எருசலேமிலும் கட்டியெழுப்பப்பட்டன. அதை அறிவதற்காக நீங்கள் வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டியதில்லை. வேதமே இதைப் பற்றி கூறுகிறது. பாருங்கள்? யேசபேலின் குமாரத்தி அத்தாலியாள், யோசபாத்தினுடைய மைந்தன் யோராமை விவாகம் செய்து கொண்டாள். அவளுடைய குமாரத்தியும் தன் தாய் யேசபேல் செய்த அதேக் காரியத்தையே செய்தாள். 105 ஓ, என்னே! இதை உங்களால் கண்டு கொள்ள முடியவில்லையா? இந்த மத ஸ்தாபனங்களெல்லாம் எப்படி இவ்விதம் நடந்து கொண்டன என்பதை சகோதரரே, பார்த்தீர்களா? இந்த விதமான கிரியை லூத்தரின் காலத்திற்குள்ளாகவும் நுழைந்து, அதேவிதமாக கிரியை செய்து, பரிசுத்த ஆவி வழி நடத்துவதற்கு விட்டுக் கொடுப்பதற்கு பதிலாக, ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார்கள். பெந்தெகொஸ்தேயும் சரியாக இதே விதமாகத் தான் செய்தனர். பரிசுத்த ஆவியானவரை அவர் சித்தப்படி தங்களை வழி நடத்திச் செல்லவிடாமலும், அவர் தன் வழியை தங்கள் மத்தியில் கொண்டு இருக்கவிடாமலும், ஒளியானது அவ்வப்பொழுது வந்தபொழுது, அதை வார்த்தையைக் கொண்டு சோதித்துப் பார்த்து, தொடர்ந்து முன்னேறிச் செல்லாமலும் இவர்களும் ஆகிவிட்டார்கள். தங்களை வழி நடத்திச் செல்ல பரிசுத்த ஆவியை அனுமதிக்க அவர்களால் முடியாமல், அதற்கு பதிலாக ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டு, தொடர்ந்து வந்த தேவனுடைய காரியங்களிலிருந்து தங்களை துண்டித்துக் கொண்டனர். நேராக திரும்பிச் சென்று, அந்தக் காரியத்துடன் தங்களை விவாகத்தில் இணைத்துக் கொண்டுவிட்டனர். சரியாக. அந்தக் காலத்தை நாம் பார்க்கையில், இங்கே நாம் இருக்கிற காலம் வரையிலும் உள்ள பாதையில் என்ன நேரிட்டிருக்கிறது என்பதையும், அங்கே உங்களுக்கு என்ன காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் கவனித்துப் பாருங்கள். திரும்பிப் போய் யேசபேலின் மார்க்கத்தோடு விவாகம் செய்து கொண்டுவிட்டார்கள்! இயேசு இங்கே கூறுகிறார், “அவளுடைய…இந்த யேசபேல், அவள் தன்னை தீர்க்கதரிசியானவள் என்று அழைத்துக் கொள்கிறாள். நான் அவளை உலகத்துக்குரிய விதத்தில் கட்டில் கிடையாக்குவேன். அவளுடைய பிள்ளைகள் மரணத்தினால் கொல்லுவேன்.” (இப்பொழுது என்னவிதமாக…) “ஒரு மரணத்தைக் கொண்டு கொல்லுவார்”

51106 என்ன…என்னவிதமான ஒரு மரணத்தினால் அவளுடைய பிள்ளைகள் கொல்லப்படுவர்? அவர்கள் இப்பொழுது மரித்தவர்களாயிருப்பதை நீங்கள் பாருங்கள். அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்திருக்கின்றனர்! அவர்களுக்கு வெளிப்படுத்தல் இல்லை! அவர்கள் தங்களுடைய ஸ்தாபனத்தையே அறிந்துள்ளனர், அவர்களுக்கு தங்களுடைய ஸ்தாபனத்தின் ஞான உபதேசம் தான் தெரியும்; அவர்களுக்கு தங்களுடைய சபையின் போதகத்தைப் பற்றித்தான் தெரியும். ஆனால் தேவனைப் பற்றிய அறிவை அடைந்தாக வேண்டும் என்ற கட்டம் வரும்போது அவர்கள் நிலைமை எப்படியுள்ளதென்றால், எப்படி ஒரு ஹாட்டன்டாட் என்ற ஆப்பிரிக்க மேய்சல் தொழில் கொண்ட நாடோடிக்கு அரேபிய இரவுகள் கதையைப் பற்றி தெரிந்திருக்காதோ, அதே போல் இவர்கள் நிலையும் இருக்கிறது; அது உண்மை. உண்மையாக பரிசுத்த ஆவியானவரைப் பற்றி அறிந்து கொள்ளுதல் என்ற நிலை வரும்போது, அவர்கள் அவ்வாறே உள்ளனர். ஆவிகளைப் பகுத்தறிதல், பிசாசுகளைத் துரத்துதல் மற்றும் இது போன்ற காரியங்களை தேவனுடைய ஆவியானவர் செய்யும்பொழுது, அதை “குறி சொல்லுகிறவர்கள்” என்றும், “ஒரு பிசாசு” என்றும் அவர்கள் கூறுவது விந்தையாக இருக்கிறது. “காரணம் அவர்கள் எங்களுடைய ஸ்தாபனத்தைச் சேராதவர்கள், அந்த குழுவினரா, ஓ, பூரா ஊ” என்று கூறி விடுகிறார்கள். பாருங்கள், அவர்களுக்கு அது என்னவென்று தெரியாது. அதன் பிறகு அவர்கள் நம்மேல் “இவர்கள் இயேசு மாத்திரமே” அல்லது “உருளும் பரிசுத்தர்” என்று ஒரு விதமான பெயர் சூட்டி அல்லது—அல்லது அது போன்ற ஒரு காரியத்தைக் கூறி பரிகசிக்கிறார்கள். அவர்களுக்கு என்னவென்று தெரியவில்லை.

52107 அந்த சங்கதியானது வெளிப்படுத்தப்படப்போகிற நேரமானது சமீபமாயுள்ளது. அது முற்றிலும் உண்மை. நான் இங்கே இந்த பிரசாங்க பீடத்திற்குப் பின்னால் உங்களுக்கு முன்பாக நின்று கொண்டிருப்பது எவ்வளவு உண்மையோ அதேபோல், தேவன் நிச்சயமாகவே அதைச் செய்வார். ஏனென்றால் அவர் தம்முடைய பிள்ளைகளை நான் இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அதிலிருந்து அசைத்துக் குலுக்கி வெளியே இழுத்து விட்டு விடுவார். பரலோகத்தின் தேவன் அதை அறிவார். நீங்கள் என்னை ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசி என்று, கர்த்தருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்கள்; அப்படியெனில், நான் சொல்வதைக் கேளுங்கள். அவள் சமீபமாயிருக்கிறாள். ஆம், ஐயா.

53108 “நான் அவளுடைய பிள்ளைகளை ஆவிக்குரிய மரணத்தினால் கொல்லுவேன்” என்று கூறியுள்ளார். அவர்களைப் பாருங்கள்: அங்கே அவர்கள் குளிர்ந்து போய், வெறும் சடங்காச்சாரமுள்ளவர்களாக இருக்கிறார்கள். பாருங்கள்…பாருங்கள் நம்முடைய… பாப்டிஸ்டுகளையும், மற்றும் ப்ரெஸ்பிடேரியன்களையும் பற்றி நாம் பேச வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் பல ஆண்டுகளாகவே மரித்தவர்களாயிருக்கிறார்கள். என்ன… 109 நீதிமானாகுதல் என்ற செய்தியோடு லூத்தர் தன்னுடைய எழுப்புதலைப் பெற்றிருந்து, அவர்… அவர் அதில் தொடர்ந்து முன்னேறியிருந்திருப்பாரானால், இப்பொழுதுள்ள இந்த—இந்த மகத்தான பெந்தெகொஸ்தே எழுப்புதல் லுத்தரன் சபையில் வந்திருக்க வேண்டும். வெஸ்லியின் காலத்தில் பரிசுத்தமாகுதல் செய்தியிலேயே பெந்தெகொள்ஸ்தே எழுப்புதலுக்கான வெளிச்சமும் உண்டாயிருந்திருக்கும். பாருங்கள், லூத்தர் அதை தொடர முடியவில்லை, இல்லை, ஐயா! அவர்கள் ஏற்கனவே லூத்தரன் சபையினராக ஆகிவிட்டனர்.

54110 எனவே அவருக்குப் பிறகு வெஸ்லி வந்தார். வெஸ்லி இறந்த பிறகு என்ன சம்பவித்தது? அவர்கள் வெஸ்லியன் மெதோடிஸ்டு, பழைமையான வெஸ்லியன்…ஓ, இன்னும் பல்வேறு விதமான மெதோடிஸ்டு சபைகளை ஸ்தாபித்துக் கொண்டுவிட்டார்கள். பாருங்கள்? மெதோடிஸ்டுகளுக்கு முந்தி மகத்தான எழுப்புதல் உண்டாயிருந்தது. ஆனால் அவர்கள் தங்களை மத ஸ்தாபனங்களாக ஆக்கிக் கொண்ட பிறகு, அக்காலத்தைத் தொடர்ந்து, அன்னிய பாஷைகளில் பேசிக் கொண்டும், வரங்கள் திரும்ப அளிக்கப்படுதல் என்ற பெந்தெகொஸ்தே எழுப்புதல் வந்தபோது என்ன சம்பவித்தது? மெத்தோடிஸ்டுகளால் அவர்களோடு தொடர்ந்து சேர்ந்துகொள்ள முடியாமல் அவர்களை பிசாசுகள் என்று அழைத்தனர். 111 பெந்தெகொஸ்தே என்ன செய்தது? இவர்களும் அதே காரியத்தைத் தான் செய்தார்கள்! அவர்கள் இப்பொழுது எங்கேயிருக்கிறார்கள்? சந்தேகத்துக்கிடமின்றி அவர்கள் மரித்தவர்களாயிருக்கிறார்கள். ஆம் ஐயா! சரியாக அவ்விதமாகத்தான் உள்ளது. “நான் அவளது பிள்ளைகளை மரணப்படுக்கையில் தள்ளி அவர்களை கொல்லுவேன்” என்று கூறியுள்ளார். நீங்கள் இங்கே பார்க்கும்படி நான் அதை படிக்கட்டும், அது 22-ம் வசனம் என்று நான் நினைக்கிறேன்: இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, (மகா உபத்திரவ காலத்திலே)…

55112 அந்தவிதமான நிலைக்குள் தான் அது போய்க் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் நான் ஒரு நிமிடம் சற்று நிறுத்தட்டும், அந்த—அந்த மகா உபத்திரவத்தின் காலத்திற்குள்ளாக போகப்போகிற அந்த ஜனங்கள், தங்கள் தீவட்டிகளில் எண்ணெயைப் பெற்றிராத புத்தியில்லாத உறங்கும் கன்னியர்கள் தள்ளப்படுவார்கள். அவர்கள் நல்லவர்களாக இருப்பினும், ஆலயத்திற்கு ஒழுங்காக போய் வந்தாலும், ஸ்தாபனங்களைச் சார்ந்து கொண்டவர்களாக ஆகிவிட்டனர். எண்ணெய் வாங்க அவர்கள் வருகிறார்கள். ஆனால் அப்பொழுது மிகவும் கால தாமதம் ஆகிவிட்டது. பாருங்கள், அவளை தேவன் மகா உபத்திரவத்திலே தள்ளிவிடுவார். அவள் அதற்குள் செல்வாள். கத்தோலிக்க சபை மகா உபத்திரவ காலத்திற்குள் போகப் போகிறது. அவளுடைய பிள்ளைகள் யாவரும் தங்கள் தாயோடு சேர்ந்து மகா உபத்திரவ காலத்திற்குள் போகப் போகிறார்கள். …அவர்கள் தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பாவிட்டால்… 113 அதிலுள்ள பிள்ளைகளுக்கு விரோதமாக அல்ல—அல்ல; ஆனால் அந்த சபையும், அவளுடைய பிள்ளைகளாகிய (ஸ்தாபனங்களும்) போவார்கள். அதில் உள்ள ஜனங்களுக்கு எதிராக கூறவில்லை, அதிலுள்ள அப்பாவிகளான கத்தோலிக்கர்கள், பாப்டிஸ்டுகள், ப்ரெஸ்பிடேரியன்கள், பெந்தெகொஸ்தேயினர். நான் அவர்களுக்காக் பரிதாபப்படுகிறேன். அப்படியே, “நல்லது, நான்…” “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?” என்று கேட்டால், “நல்லது, நான் ஒரு ப்ரெஸ்பிடேரியன்” என்று பதிலளிக்கிறார்கள். ஓ! 114 “ஒரு பன்றிக்கு பந்தயக் குதிரைக்குப் போடப்படும் பக்கவாட்டு சேணத்தைப் போட்டு பார்த்து, அப்பன்றி பந்தயக் குதிரை போலுள்ளதே” என்று கூறினால் எப்படி அது சம்மந்தமில்லாமல் இருக்குமோ, அது போலத்தான். எனவே நீங்கள் அதைக் குறித்து உலகத்தில் என்ன செய்ய முடியும்? ஏன்? ஒன்றுமே செய்ய முடியாது. நான் இதை நகைச்சுவைக்காக் கூறவில்லை. இந்த இடம் நகைச்சுவைகளைக் கூறும் இடமல்ல, இது—இது சுவிசேஷத்திற்குரிய இடமாகும். பாருங்கள்? நான் ஒரு எடுத்துக்காட்டைக் கூற வேண்டும் என்றே கூறினேன். பாருங்கள், ஆனால் அது—அது உண்மை. பாருங்கள், ஆகவே அவர்கள் கூறுவது கிறிஸ்துவத்திற்கு கொஞ்சம் கூட சம்மந்தம் உடையதல்ல. “நான் பெந்தெகொஸ்தேகாரன்” என்கிறார்கள். 115 அதுவும் அப்படித்தான். கிறிஸ்தவத்திற்கும் அதற்கும் கொஞ்சமும் சம்மந்தம் இல்லை. நீங்கள் அவர்களுடைய எண்ணிலடங்கா ஸ்தாபனங்களில் ஒன்றைச் சார்ந்தவராக இருக்கக்கூடும். ஆனால் நீங்கள் மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளையாக இருக்கிறீர்களா? எவரேனும் உங்களுக்கு என்ன செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் உண்மையாகவே உங்களுடைய முழு இருதயத்தோடும், உங்களுடைய முழு ஆத்துமாவோடும் ஒவ்வொருவரையும் நேசிக்கிறீர்களா? தேவனை நீங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அனுதினமும்…நீங்கள் நேசிக்கிறீர்களா? நீங்கள் நிமிர்ந்து நின்று கொண்டு கோபத்தோடு “ஹூம்” என்று கண்டபடி இரைச்சலிட்டுக் கொண்டிருந்தால், பரிசுத்தாவியை எப்பொழுதாவது நீங்கள் பெற்றிருந்தீர்கள் என்றால், அது உங்களைவிட்டு அகன்றுவிட்டது என்பதைத்தான் அது காண்பிக்கிறது.

56116 கவனியுங்கள்: … அவள் அந்த கிரியையைவிட்டு மனந்திரும்பாவிட்டால்… …நான் அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன். 117 “அவளுடைய பிள்ளைகள்” ஆகும். யேசபேலுடையதாகும். யேசபேல் இப்பொழுது என்ன செய்தாள்? தன் மகளை பிரிதொரு பிரிவாகிய (யூதாவுக்குள்) விவாகம் செய்து கொடுத்தாள். இப்பொழுது ஆவிக்குரிய பிரகாரமாக பிரயோகத்தை கவனிப்போம். நான் இதை வரைந்து காண்பிக்க விரும்புகிறேன். இங்கே இதை மிகவும் கவனமாக இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். 118 இங்கே யேசபேலும் இஸ்ரவேலும் உள்ளார்கள். ஆனால் இங்கே யூதா கோத்திரம் உள்ளது, ஒரு வித்தியாசமான மாதிரி இங்கே உள்ளது, மற்றொன்று; இது இங்கிருப்பது யோசபாத். சரி. இப்பொழுது இது இங்கே ஆகாப் இருக்கிறான்; இப்பொழுது இங்கே யேசபேலும் இருக்கிறாள். இப்பொழுது யேசபேல் இங்கே உள்ளே வந்து, அனைத்து இஸ்ரவேலரையும் விக்கிரக ஆராதனைக்குள் கொண்டு செல்ல காரணமாயிருந்தாள். 119 கான்ஸ்டன்டைன் நிக்கொலாய் மதத்தினரான ( இங்குள்ள குளிர்ந்து போன சடங்காச்சார சபையினர்) அச்சபையை அஞ்ஞான விக்கிரக ஆராதனைக் கூட்டத்தோடு இணைத்தபோது, அஞ்ஞான விக்கிரகாராதனையின் சாயலை ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவமாக அது உருவெடுத்து அதினால் உண்டான கத்தோலிக்க மதமானது, அக்காலத்தில் யேசபேல் செய்தது போல் செய்தது. கத்தோலிக்க மக்களே, நான் உங்களை புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் நான் தேவனுக்கு முன்பாக பொறுப்புள்ளவனாக இருக்கிறேன். மூட நம்பிக்கைகள், விக்கிரகங்கள் மற்றும் இன்னபிற காரியங்களைனைத்தும் கொண்டதாக கத்தோலிக்க சபை உள்ளது, அது கிறிஸ்தவ மார்க்கத்தின் உருவிலான ஒரு அஞ்ஞான மார்கமாய் உள்ளது. அது முற்றிலும் உண்மை, அப்படியே ஒரு அஞ்ஞான ரூபத்தில் உள்ளது. இப்பொழுது அதுதான் உண்மை. நான் இந்த நிமிடத்தில் மரித்துக் கொண்டு இருந்தாலும், அது சத்தியமாகத்தான் இருக்கிறது. பிராடெஸ்டெண்டுகளும், வேறு பிரிவைச் சார்ந்திருப்பது போல் இருந்தாலும், அதே நிலையில் தான் உள்ளார்கள்.

57120 இப்பொழுது யேசபேல் செய்ததைக் கவனியுங்கள். அப்பொழுது பிசாசின் வேலையை…நீங்கள் பாருங்கள். யேசபேல் அவனுக்கு முழுவதும் தன்னை ஒப்புக் கொடுத்திருந்தாள். எனவே அவள் தன் குமாரத்திகளை எடுத்து…யேசபேலுக்கு இங்கே ஒரு மகள் பிறந்திருந்தாள், அவள் மறுபக்கத்திலுள்ள யூதாவுக்குப் போய் அந்த பரிசுத்த மனிதனாகிய யோசபாத்தின் மகனை மணந்து கொள்ளுகிறாள். அவ்வாறு மணந்து கொண்டு, தன் தாய் ஏற்படுத்திய அனைத்து பாவமான காரியங்களையும், இங்கே யூதாவுக்குள் கொண்டுவந்து விடுகிறாள். 121 இப்பொழுது, ஸ்தாபன சபையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பிய அனலில்லாமல் குளிர்ந்து போய்விட்ட சடங்காச்சார கிறிஸ்தவர்களான உண்மையான நிக்கொலாய் மதத்தினர், நிக்கொலாய் மதஸ்தினர், அஞ்ஞான மதத்தோடு இங்கே விவாகம் செய்து கொண்டுவிட்டனர். இப்பொழுது அதேக் காரியத்தைக் கவனியுங்கள். அவர்கள் யேசபேலை இங்கே விவாகம் செய்து கொண்டு (கத்தோலிக்க சபையாகின்றனர்) இந்தப் பக்கத்தில் யேசபேல் தன் மகளை (அவளுடைய ஸ்தாபனங்களை) எடுத்து இங்கே விவாகம் செய்து கொடுத்துவிடுகிறாள். அதே காரியம் தான் இங்கும் நடைபெற்றது. “அவளுடைய பிள்ளைகளை மரணத்தினால் கொல்லுவேன்,” ஆவிக்குரிய மரணத்தினால் கொல்லுவார். அவர்கள் மரணத்துக்கேதுவாக ஸ்தாபன சபையை அமைத்துக் கொண்டுவிட்டார்கள். அப்பொழுது முதலாவதாக நடந்தது என்னவெனில், ஆவியானவர் முழுவதும் அகன்றுபோய்விட்டார்.

58122 நான் உங்களை ஒரு காரியம் கேட்கட்டும், இங்குள்ள எந்த சரித்திர ஆசிரியராவது எனக்கு பதில் சொல்லட்டும். இங்கே ஐந்து அல்லது ஆறு சரித்திர ஆசிரியர்களாகிய நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள். சபைகளில் ஏதாவதொன்று விழுந்துபோய், ஸ்தாபனமாக ஆனபிறகு, ஒரு எழுப்புதல் அதில் மீண்டும் ஏற்பட்டு, அவைகள் எப்பொழுதாவது மீண்டும் எழும்பின என்பதை நிரூபிக்கும் வேத பூர்வமான அல்லது வரலாற்று பூர்வமான சான்று ஒன்றை நீங்கள் என்னிடம் கொண்டு வந்து காண்பிக்க விரும்புகிறேன். எனக்குச் சொல்லுங்கள். அவைகள் ஸ்தாபனமாக ஆனபிறகு எப்பொழுதாகிலும் அவர்களுக்குள் எழுப்புதல் ஏற்பட்டதா? இல்லை, ஐயா! ஆவியானவர் அவர்களை விட்டு நீங்கிவிட்டார். நான் பெந்தெகொஸ்தேயினரையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன். 123 பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதங்கள் விழுந்தபோது, முன் காலத்தவரே, நீங்களெல்லாம் அந்நிய பாஷைகளில் பேசினீர்கள். மகத்தான பெந்தெகொஸ்தே அசைவைப் பெற்றிருந்தீர்கள். ஆயினும் அதுவும் விழுந்து போனது. சில காலம் கழித்து, நீங்கள் உங்களுக்கு பொது ஆலோசனைக் குழு என்ற ஒன்றை நிறுவிக் கொண்டீர்கள். கூட்டிணைவமைப்பு சரிதான். ஆனால் ஸ்தாபன அமைப்பாவது சரியல்ல. நீங்கள் அறிய வேண்டிய முதலாவது காரியம் என்னவெனில், உங்களால் நிலைத்து நிற்க முடியாமல், பின்னுக்குப் போய், ஸ்தாபனமாக ஆகி, அதன் மூலம் “சாத்தானின்…பிள்ளையாக” ஆகிவிட்டீர்கள்.

59124 பிறகு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினைப் பற்றிய இன்னொரு கூடுதலான வெளிச்சம் வந்தது. அப்பொழுது அவர்கள் யாவரும் அத்தோடு தேங்கிப் போய் நின்று விட்டு, “தேவனுக்கு துதியுண்டாவதாக, ‘இயேசு’ வின் நாமத்தை நீங்கள் பெற்றிராவிடில் நரகத்திற்கு போவீர்கள். நாங்கள் அதைப் பெற்றுள்ளோம். நீங்கள் அதைப் பெற்றிருக்கவில்லை” என்று கூறினார்கள். மரித்து, அதிலிருந்து ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிவிட்டனர். பார்த்தீர்களா? அந்த வெளிச்சம் தொடர்ந்து சபைக்குள்ளாகப் பரவி வளர்ந்து கொண்டே போவதற்குப் பதிலாக, அது தானகவே தன்னுடைய ஸ்தானத்தை அடைந்துவிட்டது. ஆனால் நீங்கள் உங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டீர்கள். அது என்ன? ஒரு யேசபேலின் பிள்ளை. அவர்கள் யாவரும் ஒருமித்து மரித்துப்போயினர். 125 நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன். அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் அல்லது அவர்களைச் சேர்ந்த ஏனையோர் எவராவது, எப்பொழுதாவது, ஒரு பெரிய ஐக்கியமாக இணைந்து எழுப்புதலை பெற்றிருக்கிறார்களா? இல்லவே இல்லை! அந்த கடைசி எழுப்புதல் சற்று முன்பு ஏற்பட்டது. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் 1933-ல் அந்த நதிக்கரையில் இறங்கி வந்தார். (அங்கேயிருந்தவர்களில் அநேகர் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்) மகத்தான தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகள் “உலக முழுவதையும் அசைக்கப் போகிறது” என்று தெரியப்படுத்தப்பட்டது. அவ்விதமாக அது நிறைவேறிய பொழுது, அது ஒருபோதும் பல்வேறு ஸ்தாபன சபைகள் மூலம் வரவேயில்லை. தேவன் ஸ்தாபனங்களின் எல்லைகளை விட்டு, வெளியே, எழுப்புதலை ஆரம்பிக்க ஏறத்தாழ ஒரு அஞ்ஞானியைப் போலுள்ள ஒருவனை எழுப்பினார். அது என்ன செய்துள்ளது என்பதைப் பாருங்கள்! புரிகிறதா? 126 அந்த ஸ்தாபனங்கள், அவ்வாறு அவைகள் ஸ்தாபனமாக ஆனது முதற்கொண்டே மரித்துவிட்டன. அவர், “நான் அவள் பிள்ளைகளை மரணத்தினால் கொல்லுவேன்” என்று கூறினார். ஓ, என்னே! நான் உங்களை அறிவேன்…நான் இதைச் சொல்வதினால் நீங்கள் தயவு செய்து என்னைப் பற்றி மோசமாக எண்ணாதீர்கள். ஆனால் நான்… நான் இதை அறிந்திருந்து, அதை கூறவில்லையென்றால், அப்பொழுது நான் ஒரு கீழ்த்தரமான மாய்மாலக்காரனாக ஆகிவிடுவேன். அதற்காக தேவன் என்னை பொறுப்பாளியாக்கிவிடுவார். பவுல், “தேவனுடைய ஆலோசனைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்கவில்லை” என்று கூறியது போல் நானும் இருக்க விரும்புகிறேன். அது தான் சரியானது. சரி. சரி.

60127 இப்பொழுது, அவர்கள் எருசலேமில் பலி பீடங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். இப்பொழுது நான் பார்க்க விரும்புவது…யேசபேல் ஆகாபை மணந்து கொண்டபோது, அவள் இஸ்ரவேலுக்குள், அவர்கள் பணிந்து கொள்வதற்காக, விக்கிரகங்களைக் கொண்டு வந்தாள். அதே விதமாகத் தான் நிக்கொலாய் மதத்தினரின் போதகமும் அஞ்ஞான விக்கிரக ஆராதனையோடு விவாகம் செய்து கொண்டு, அஞ்ஞான மார்க்கத்திலுள்ள ஜூப்பிடரை எடுத்துப் போட்டு, அதை பேதுருவாக மாற்றி, வீனஸ் தேவதையே எடுத்துப் போட்டு அதை மரியாளாக்கினார்கள். வேதம் “இஸ்ரவேலர் எல்லோரும் பாவஞ்செய்வதற்கு காரணமாக அவள் இருந்தாள்” என்று கூறியுள்ளது. 128 அதைப் போலவே கத்தோலிக்க சபையும் தன்னுடைய குமாரத்திகள் யாவரையும் ஒரு ஸ்தாபன அமைப்புக்குள் விவாகம் செய்வித்தாள். யேசபேல் தன் மகளுக்குச் செய்தது போல, அனைத்தும் பாவமான காரியமாக அமைந்து விட்டது. சரி. குருக்களாட்சி முறை ஏற்பட்டபோது, மூன்றாம் போனிஃபேஸ்—போனிஃபேஸ் என்பவன் போப்பாக தன்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டான். அவர்கள் சிம்மாசனத்தில் அமர்ந்த ஒரு—ஒரு தேவனைப் பெற்றுக் கொண்டனர். அன்று முதல் அவர்களுக்கு சபையில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவசியமில்லாமல் போயிற்று. அது உண்மை. இப்பொழுது அவர்களுக்கு கோட்பாடுகளும், சடங்காச்சாரங்களும் கிடைத்து விட்டன. அதில் அவர்கள் தொடர்ந்து சென்றார்கள்.

61129 ஸ்தாபன சபைகள் அதே கோட்பாட்டை ஏற்றுக் கொண்டபோது, சபைக்கு பரிசுத்த ஆவியினால் அளிக்கப்பட்டிருந்த சுயாதீனமானது காலின் கீழ் மிதித்துப் போடப்பட்டு, பாப்டிஸ்டு, பிரெஸ்பிடேரியன், மெதோடிஸ்டு போன்றவை அவ்வாறு செய்தன. அவர்கள் நிச்சயமாகவே செய்தனர்! இயேசு கூறிய திராட்சைச் செடியைப் போல் படிப்படியாக அவர்கள் வாடிவதங்கி மரித்துக்கொண்டிருக்கிறதை நாம் காண்கிறோம். இப்பொழுது, பரிசுத்த ஆவியினாலே உள்ள அற்புத அடையாளங்களெல்லாம் இப்பொழுது அவர்களுக்கு ஒரு கடந்த கால சம்பவமாகிவிட்டது. இவர்கள் கத்தோலிக்க சபையைப் போல் இப்பொழுது ஐசுவரியவான்களாக ஆகிவிட்டார்கள். எனவே அவள் முழு உலகமும் பாவஞ்செய்ய காரணமாகி விட்டாள். ஏனெனில் அவளும் அவளது குமாரத்திகளும் ஒவ்வொரு தேசத்தையும் போய் அடைந்து விட்டார்கள். அது உண்மை. 130 இப்பொழுது இன்னொரு சபைக் காலத்தில் தேவன் அவளை அழைக்கிற விதத்தைக் கவனியுங்கள். அவர் தன்னுடையவளை அழைப்பதைக் கவனியுங்கள். முடிவில் அவர் வழக்காடி, தன்னுடையவளாகிய மீதியானவர்களை வெளியே எடுப்பதைப் பாருங்கள். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால் மாம்சமான எவரும் இரட்சிக்கப்பட முடியாது. எனவே “தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நிமித்தமாக,” அவர்களோ எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களாக இருப்பார்கள்.

62131 வெளிப்படுத்துதல் 13:6-ல் அது எழுதப்பட்டுள்ளது போல, நீங்கள் அதை ஒரு நிமிடம் எடுக்க விரும்புகிறீர்களா? அதை அவர் கூறினார்…அவர்…அதாவது, “இந்த ஸ்திரீயானவள் யாவரும் ஒரு முத்திரையைப் பெற்றுக் கொள்ள காரணமானாள், ஒரு முத்திரைப் பெற்றுக் கொள்ளச் செய்தாள். (இந்த மிருகம் இதைச் செய்தது), இந்த மிருகம் தரித்திரர் முதற்கொண்டு (சிறியோர், பெரியோர், அவர்கள் யாராயிருந்தாலும்), ஒரு மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளும்படி செய்தது,” அது ரோமன் கத்தோலிக்க சபையாயிருந்தது. 132 இதையும் செய்தார்கள். அதுவுமல்லாமல் அவர்கள் ஒரு சொரூபத்தை உண்டாக்கினர்…வெளிப்படுத்தின விசேஷம் 13:14-ல் கூறியுள்ளபடி அவர்கள் ஒரு மிருகத்திற்கு சொருபத்தையும் உண்டாக்கினார்கள். நீங்கள்—நீங்கள்…நீங்கள் யாவரும் அதை வாசிக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன். இன்னும் நீங்கள் வாசிக்கவில்லையெனில், ஏன், நாம் அதை எடுத்து வாசிப்போம். வெளிப்படுத்தின விசேஷம் 13:14 மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே (அது தான் இந்த சபைகளின் கூட்டமைப்பு) …மிருகத்திற்கு முன்பாக…செய்யும்படி…பூமியின் குடிகளை மோசம் போக்கி, (அஞ்ஞான மார்க்கம்) பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு (போப்பின் அதிகாரத்தினூடாக அஞ்ஞான ரோமாபுரி போப்புமார்க்க ரோமாபுரியாக ஆகியது. புரிகிறதா?) … ஒரு சொரூபம் பண்ண வேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.

63133 “அவளுக்கு ஒரு சொரூபத்தை உண்டுபண்ண வேண்டியது.” அது என்னவாக இருக்கும்? அவர்கள் இப்பொழுது சரியாக அதையே தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த சபைகளின் கூட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் அந்தக் காரியத்தைச் செய்ய அத்திசையை நோக்கி அசைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். “அனைத்து சபைகளும் இந்த ஸ்தாபனத்தையே சார்ந்ததாக இருக்கின்றன. அவைகள் யாவும் இந்த ஒரு குழுவுக்குள் ஒரு சேர போய்விடும்.” இப்பொழுது அவர்கள் அதற்கான ஒரு வேதாகமத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். போப் ஜான் அவர்கள் யாவரையும் திரும்பி வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார். ஆங்க்லிகன் சபையின் தலைவராகிய காண்டர்பரியின் பிரதான பேராயரும் கூட அங்கே போயிருக்கிறார். நீங்கள் அறிய வேண்டிய முதல் காரியம் என்னவெனில், அவர்கள் அனைவரும் வேசிகளாயிருக்கிறபடியால், தாய் வேசியிடம் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். புரிகிறதா? அவர்கள், “நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பெரியதொரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, கம்யூனிசத்தை எதிர்த்துப் போராடுவோம்” என்று கூறுகிறார்கள். தேவனே கம்யூனிசத்தை எழும்பியுள்ளார் என்பது அவர்களுக்கு தெரியாது. (நான் இந்த வேதாகமத்தைக் கொண்டு அதை நிரூபித்துக் காண்பிக்க முடியும்) பூமியின் மேல் சிந்தப்பட்ட பரிசுத்தவான்களின் இரத்தத்திற்காக பழிவாங்க தேவன் அதை எழுப்பியிருக்கிறார் என்பதை அவர்கள் மனதில் பதித்துக் கொள்ளச் செய்வேன். இஸ்ரவேலை தண்டிக்க தேவன் எவ்வாறு நேபுகாத்நேச்சாரை எழுப்பினாரோ, அதைப் போலவே, அதே விதமான நோக்கத்திற்காகவே தேவன் கம்யூனிசத்தையும் எழுப்பியுள்ளார். அவர் கம்யூனிசத்தை எழுப்பினார், ஒரு நாளில் கம்யூனிசம் ரோமாபுரியை உலக வரைப்படத்திலிருந்து இராதபடி, அதின் மேல் குண்டைப்போட்டு வெடித்து சிதறிப்போகச் செய்யும். [ஒலிநாடாவில் காலி இடம்.—ஆசி.] அது முற்றிலும் உண்மை. தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார். அது உண்மை. நான் கம்யூனிஸத்திற்கு எதிராக இருக்கிறேன்; இது தேவனுக்கு எதிராயுள்ளது. நிச்சயமாக அது அவ்வாறே உள்ளது. ஆனால் நீங்கள் அந்த இரும்புத் திரைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டாம். ஆனால் அந்த இந்திர நீலத்திரையைக் கவனியுங்கள். பாக்ஸ் என்பவர் எழுதிய இரத்த சாட்சிகளின் புத்தகத்தில் படித்துப்பாருங்கள், நீங்கள் இதை புரிந்து கொள்வீர்கள், அது உண்மை.

64134 இப்பொழுது நாம் எங்கே…நாம் பார்ப்போம்…(தரித்திரர், ஐசுவரியவான்கள்) முதற்கொண்டு யாவரும் ஒரு அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளச் செய்தாள் என்பதை நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவினரான மக்களை அவள் தொடக்கூடாது. அதை நீங்கள் அறிவீர்களா? வெளிப்படுத்தின விசேஷம் 13:…8 135 இதைக் கேளுங்கள், நான் இதை வாசிக்கட்டும்: பின்பு, நான் கடற்கரை மணலின் மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வரக்கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் (அதுதான் அந்த ஏழு மலைகளாம், நேற்றிரவில் நாம் அதைப் பார்த்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்) பத்துக் கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின் மேல் தூஷணமான நாமமும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது. அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் இருந்தன; வலு சர்ப்பமானது தன் பலத்தையும் (இந்த வலுசர்ப்பம் தான், அந்த ஸ்திரீயின் குழந்தையைப் பட்சிப்பதற்காக அந்த ஸ்திரீக்கு முன்பாக நின்ற சிவப்பான பிசாசாகும். அது ரோமாபுரியாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்) தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; (அஞ்ஞான மார்க்கத்தைப் பாருங்கள்) ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. (போப்பு மார்க்கம் அதன் இடத்தை எடுத்துக் கொள்கிறது. கிறிஸ்துவ மார்க்கத்தின் வேஷம் தரித்த நிக்கொலாய் மதஸ்தினரோடு சேர்ந்து கொள்ளுகிறது) பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, 136 கத்தோலிக்க மதமானது வானத்தின் கீழே உலகின் அனைத்து தேசத்திலும் தீவிரித்து பரவிவிட்டது. அது உண்மை. இரும்பும் களி மண்ணும் ஒன்று சேர்ந்திருப்பதைப் பற்றி தானியேல் கூறினானே, அதைப் போல் தான் இது உள்ளது.

65137 “இரும்பும் களிமண்ணும்” என்கிற காரியத்தைப் பற்றி ஒரு சிறு விஷயத்தை நான் உங்களுக்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் எப்போதாவது உங்களுக்கு அதை குறிப்பிட்டுள்ளேனா? அதாவது ஐக்கிய நாடுகளின் மகா சபையின் கடைசிக் கூட்டத்தில், ரஷியப் பிரதமர் குருஷ்சேவ் அவர்கள் தன்னுடைய காலணியைக் கழற்றி அதை மேசையின் மேல் அடித்தார் என்று கூறியதை நீங்கள் கவனித்தீர்களா? அங்கே ஐந்து கிழக்கத்திய தேசங்களும், ஐந்து மேற்கத்திய தேசங்களும் முக்கியமாக இருந்தன. குருஷ்சேவ் அவர்கள் கிழக்கத்திய தேசங்களுக்கு தலைமை வகித்தார்; ஐசன்ஹோவர் அவர்கள் மேற்கத்திய தேசங்களுக்கு தலைமை வகித்தார். அவர்கள் இருபெரும் வல்லரசுகளின் தலைவர்கள். அவர்கள் தான் அந்த இரு பாதங்கள். குருஷ்சேவ் என்ற ரஷ்ய வார்த்தைக்கு “களிமண்” என்று பொருள். ஐசன்ஹோவர் என்ற வார்த்தை அமெரிக்காவில், ஆங்கிலத்தில் “இரும்பு” என்று பொருள். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங் கொடுத்த (அதுவே இக்கூடாரத்தில் இங்கே நம்முடைய அடுத்த செய்தி என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்) … வலு சர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும், மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். 138 அதாவது வேறுவிதமாகக் கூறினால், இங்கே கவனியுங்கள். ஐசன்ஹோவர் அமெரிக்காவில் பெயர் பெற்று விளங்குகிறார். ஆனால் ரோமாபுரியில் அவர் ஒன்றுமில்லை; ரஷியாவிலும் அவருக்கு மதிப்பு இல்லை. அதைப்போல் குருஷ்சேவுக்கு ரஷியாவில் மதிப்பு உண்டு, ஆனால் அவருக்கு அமெரிக்காவில் மதிப்பு கிடையாது. ஆனால் ஒரேயொரு மனிதன் எங்கும் பெரியவராக இருக்கிறார், அதுதான் போப்பு. (அது உண்மை.) “நாம் தானே நம்மை ஸ்தாபனமாக உருவாக்கிக்கொண்டு ஒன்று சேர்ந்து விடுவோம்” என்கிறார்கள்.

66பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அது தேவனைத்தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து , (“மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்தல்; துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், சுகபோகப் பிரியர், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்”) … அவருடைய நாமத்தையும் (“கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்” நாமத்துக்குப் பதிலாக “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” யை ஏற்றுக் கொள்ளுதல். பாருங்கள் ) …அவருடைய வாசஸ்தலத்தையும் பரலோகத்தில் வாசமாயிருக்கிறவைகளையும் தூஷித்தது. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம் பண்ணி (இதோ உபத்திரவம் எழும்புகிறது) …அவர்களை ஜெயிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும் பாஷைக்காரர் மேலும் ஜாதிகள் மேலும் அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். (ஒ, ஒ, ஒ, ஒ, ஒ, ஒ, ஒ.) 139 “உலகத்தோற்றத்திற்கு முன்னரே.” அப்போதிருந்த புத்தகத்திலேயே நம்முடைய பெயர்கள் இடம் பெற்றுவிட்டன. இயேசு, “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கின்றன” என்றார். (அது தான் ஆகாரம், பாருங்கள்) ஆனால் “அன்னியனின்…” 140 ஆகவே அவன், “நல்லது, நான் ஒரு சபையை சேர்ந்து கொண்டு விட்டேன். உன் அளவுக்கு நானும் நல்லவனாய் ஆகிவிட்டேன்” என்று கூறலாம். இது ஆடுகளுக்குரிய ஆகாரம் அல்ல. 141 இங்கே தானே ஆடுகளுக்குரிய ஆகாரம் உள்ளது. “உன்னதங்களிலே கிறிஸ்துவோடு உட்கார்ந்திருத்தல்.” ஓ, அவர் மிகவும் அற்புதமானவர்! அவர் அவ்வாறில்லையா? சரி.

67142 இப்பொழுது நேரம் கடந்து விட்டபடியினால் நாம் சீக்கிரம் முடித்து விடுவோம். சரி, “ஆனால் நான் கூறுவதோ…” நாம் இப்பொழுது பார்ப்போம். நான் 23-ம் வசனத்தை எடுத்துப் படிக்கவுள்ளேன்: அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லா சபைகளும் அறிந்து கொள்ளும், அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். தீயத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக் கொள்ளாமலும், மற்றவர்களாகிய… (அது என்ன விதமான போதகமாயிருந்தது? ஸ்தாபனம், பேராயர்கள், பிரதான பேராயர்கள், மற்றும் போப்புகள் பாருங்கள். ) உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; 143 “இந்தப் போதகத்தைப் பற்றிக் கொள்ளாமலும்” மோவாபிய தேசத்தின் வழியாக கடந்து வந்த இஸ்ரவேலர் அப்பொழுது ஒரு தேசமாக இன்னும் ஆகவில்லை என்று நேற்றிரவு நாம் பார்த்தோம். அவர்கள் பூமியின் மேல் சுயாதீனமுள்ள ஜாதியாராக வாழ்ந்தார்கள். அது சரிதானே? அது ஒரு முன்னடையாளம்; அவர்கள் கூடாரங்களி வசித்து, பரதேசிகளாய் அலைந்து திரிந்தார்கள். அதேவிதமாக பெந்தெகொஸ்தே குழுவினரும், அதாவது உண்மையான பெந்தெகொஸ்தே குழுவினரும், இடத்திற்கு இடம் பெயர்ந்து அலைந்து திரிகிறவர்களாய் இருக்கிறார்கள். புரிகிறதா? சரி.

68…இந்தப் போதகத்தைப் பற்றிக் கொள்ளாமலும், (தங்களுக்கென ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள்) சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்து கொள்ளாமலுமிருக்கிற… 144 சாத்தானுடைய சிங்காசனம் எங்கேயிருந்தது என்று நாம் பார்த்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். நேற்றிரவில் இதைப் பற்றிய விஷயத்தின் துவக்கத்திற்கே சென்று கவனமாகப் பார்த்தோம். ஆதியில் அவனது சிங்காசனம் எங்கே வைக்கப்பட்டிருந்தது? பாபிலோனில் தான். பாபிலோன்…குருக்களாட்சி, பாபிலோனின் ஒரு இராஜ—மதகுரு, கல்தேய தேசம் பெர்சியரால் ஜெயிக்கப்பட்டபோது, அவன் பெர்கமுவுக்கு ஓடிவந்து விட்டான். வந்தவன் அங்கே தன் சிங்காசனத்தை ஸ்தாபித்தான். பாருங்கள். சிநெயாரின் தேசத்திலிருந்து பெர்கமுக்கு அவன் தன் சிங்காசனத்தை மாற்றிக் கொண்டுவிட்டான். அதைப்பற்றி வரலாற்றிலிருந்து நேற்றிரவில் நாம் வாசித்து அறிந்து கொண்டோம். அங்கே தான் அவன் அதை உருவாக்கினான். கத்தோலிக்க சபை உருவாகியது அங்கே தான், மகா பாபிலோன், வேசிகளின் தாயாகிய கத்தோலிக்க சபை தான் இன்னமும் இருந்து வருகிறது. சரி, “சாத்தானுடைய சிங்காசனம்.” சாத்தானுடைய சிங்காசனம் என்று அவர்கள் சொல்லுகிறார்களே …நான் உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்… 145 “வேறொரு பாரத்தையும் நான் சுமத்தமாட்டேன்; ஏற்கனவே உள்ளதுக்கு மேலாக வேறு எதுவும் இனி இருக்காது.” இந்த சபைக்காலத்திற்குள் இருந்த அந்த சிறுமந்தையானது எவ்வாறு இருண்ட காலத்திற்குள்ளாக ஒடுக்கி நசுக்கப்பட்டது என்பதைப் பாருங்கள். ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் நீடித்திருந்த இருண்ட காலத்திற்குள் அவர்கள் இவ்வாறு நிலைத்து நின்றார்கள். உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள் (வேறு வார்த்தைகளில் கூறினால், “அதாவது இன்னமும் உங்கள் இருதயங்களில் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளீர்கள். நான் வந்து உங்களுக்கு இளைப்பாறுதலை கொடுக்குமளவும் அதைவிடாமல் பற்றிக்கொண்டிருங்கள். ஏனெனில் இதற்கடுத்த காலமானது அடுத்தபடியாக வருகிறது” என்பதாகும்.) ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப்படுவார்கள்.

69146 நீங்கள் பாருங்கள், அந்த அஞ்ஞான விக்கிரகாராதனை சபைக்கெதிராக, இருண்ட காலத்திற்குள்ளாக வந்த அந்த உண்மையான சபையானது நியாயத்தீர்ப்பில் நிற்கையில், அது எவ்வாறிருக்கும்? அவர்கள் மோதி கீழே தள்ளப்படுவார்களா? அந்த வெண்கலப் பாதங்கள் அவர்களை மிதித்து நசுக்கிப் போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். வேதம், “மண்பாண்டங்களைப் போல் அவர்கள் நொறுக்கப்படுவார்கள்” என்று கூறுயுள்ளது. விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். (அது என்னவென்று நீங்கள் அறிவீர்களா? கிறிஸ்துவே “விடிவெள்ளி நட்சத்திரமாயிருக்கிறார்.” சரி) ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது .

70147 ஓ, என்னே! நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா! இப்பொழுது சற்று தாமதமாகிவிட்டது. நான் இன்னும் சில விஷயங்களை கூற வேண்டியதாயுள்ளன, அவைகளை நான் ஒரு வேளை நாளை எடுத்துக் கொள்வேன், அதுவே இந்த இரண்டாயிரம் வருஷங்களைப் பற்றியதாகும். ஆனால் அவர் பள்ளத்தாக்கின் லீலி, பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம், அவர் என் ஆத்துமாவிற்கு ஆயிரம் பதினாயிரம் பேரிலும் சிறந்தவர்: பள்ளத்தாக்கின் லீலியை, அவரில் மட்டுமே நான் காண்கிறேன். என் தேவையெல்லாம்…என்னை முழுவதும் சுத்தமாக்க வேண்டும் என்பதேயாம். வருத்தத்தில் அவர் என் ஆறுதல், தொல்லையில் அவர் என் புகலிடம் அவர் தன்மேல் பாரம் யாவையும் வைத்து விடச் சொல்லுகிறார். அல்லேலூயா! அவர் பள்ளத்தாக்கின் லீலி, பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம், அவர் என் ஆத்துமாவுக்கு ஆயிரம் பதினாயிரம் பேரிலும் சிறந்தவர். 148 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஓ, நான் அப்படியே நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன், நான்… (இப்பொழுது எல்லா வெட்டுகிற வார்தைகளுக்காவும், செய்திக்காகவும் நாம் அவரை ஆராதிப்போம்.) முதலில் அவர் என்னை நேசித்தால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே.

71149 அவர் அற்புதமானவராயிருக்கிறாரல்லாவா? நான் அவரை நேசிக்கிறேன். உண்மையாகவே நான் இங்கே கூறாமல் விட்டுவிட்ட காரியங்கள் யாவும் புத்தகங்களில் இடம்பெறும். ஏனெனில் ஒரு இரவில் முழு சபைக்காலத்தையும் பிரசங்கித்துவிட முடியாது. என் தொண்டை சற்று கரகரப்பாகி விட்டபடியினால் நான் இன்றிரவில் சற்று பேசுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால், ஓ அவர் அற்புதமானவராயிருக்கவில்லையா? ஓ! ஹூம்! பெந்தெகொஸ்தேயில் விழுந்த அக்கினியால் கிட்டத்தட்ட எல்லாவிடத்திலிருந்து வந்திருந்த ஜனங்களின் இருதயங்கள் கொழுந்துவிட்டு எரிந்தது, அதுவே அவர்களை சுத்திகரித்து சுத்தமாக்கியது; ஓ, அது என் இருதயத்திற்குள்ளும் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது, ஓ, அவருடைய நாமத்திற்கு மகிமையுண்டாவதாக! நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன். ஓ, அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அல்லேலூயா! அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன்.

72150 நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறீர்களா? சாட்டானூகா என்ற இடத்திலிருந்து ஓர் இரவு நான் திரும்பி வந்து கொண்டிருந்தபோது நடந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் பயணம் செய்த விமானம் டென்னஸியிலுள்ள மெம்ஃபிஸ் என்ற இடத்தில் தரையிறங்கியது. அப்பொழுது அவர்கள் என்னை அந்த பெரிய, அருமையாக அங்கிருந்த உணவக விடுதியில் தங்க வைத்தனர். மேலும் “விமானம் நாளை காலை ஏழு மணிக்கே புறப்படும்” என்று என்னிடம் கூறிவிட்டனர். 151 நான் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபடியால், எனது நண்பர்களுக்கு எழுதின சில கடிதங்களை எடுத்துக்கொண்டு அஞ்சல் பெட்டியில் போடுவதற்காக சென்றேன். அவ்வாறு நான் நடந்து கொண்டே செல்லுகையில் பரிசுத்த ஆவியானவர் என்னிடம் “நடந்து கொண்டேயிரு” என்றார். நான் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தேன். அவ்வாறு நடந்து, கருப்பு இனமக்கள் வாழும் பகுதிக்குள் வந்துவிட்டேன். 152 நான் அங்கு நின்று கொண்டு, “என்னே! இங்கே பார், இது அந்த விமானம் புறப்படுவதற்கான நேரமாயுள்ளதே” என்று நான் எண்ணினேன். 153 பரிசுத்த ஆவியானவரோ, “தொடர்ந்து போய்க் கொண்டேயிரு” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். அன்றொரு நாளில் அவர் அந்த காட்டில் “நடந்து கொண்டேயிரு” என்று சொன்னாரே, அதைப் போலவே இப்பொழுதும் சொன்னார். எனவே நான் நடந்து சென்று கொண்டேயிருந்தேன். 154 அப்பொழுது நான் அங்கே உள்பகுதிக்குள் ஏழை கருப்பு இன மக்கள் வாழும் மிகச் சாதாரணமான சிறிய வீடுகளில் ஒன்றினைப் பார்க்க நேர்ந்தது. அதன் வாயிலில் ஜெமீமா என்னும் பெயருடைய ஒரு வயதான பெண்மணி, தன் தலையில் பையன்கள் அணியும் சட்டை ஒன்றை தலையில் கட்டிக் கொண்டு…இந்தவிதமாக சாய்ந்து கொண்டு நின்றிருக்கக் கண்டேன். 155 நான் அங்கே இவ்வாறு பாடிக்கொண்டே சென்று கொண்டிருந்தேன்; நான்…அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஓ அல்லேலூயா! (“நீர் என்ன விரும்புகிறீர் கர்த்தாவே?” என்று கேட்டேன்.) அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் (ஆவியினால் நடந்தப்படுவதை நீங்களும் விசுவாசிக்கிறீர்களா? ஆம், நிச்சயமாக.) நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன்.

73156 இது கிட்டதட்ட பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது. அப்பெண்மணி வேலி ஓரமாக நின்று பார்த்துக் கொண்டேயிருந்தாள். ஓ நானோ கிட்டத்தட்ட அவளுக்கு பாதி தூரத்தில் வந்து கொண்டேயிருந்தேன். இந்த வயோதிக கறுத்த பெண்மணி என் மேலேயே கண்ணை வைத்து உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள், உங்களுக்குத் தெரியுமா? நான் பாடுவதை நிறுத்திவிட்டு, தொடர்ந்து நடந்து சென்றேன். அந்த அம்மையாரிடம் நான் நெருங்கி விட்டேன். அப்பொழுது அவள் பருத்த கன்னங்களிலிருந்து பெரும் கண்ணீர் வழிந்தோடியது. அவள் என்னை உற்று நோக்கி, “காலை வணக்கம், போதகர் அவர்களே!” என்றாள். 157 நான் அந்த அம்மையாரை நோக்கி, “எப்படியிருக்கிறீர்கள், அம்மா?” என்று கேட்டேன். அவள் கூறினாள்…நான் பார்த்தபோது, அவள் சிரித்துக்கொண்டிருக்க, அவளுடைய முகத்திலோ ஒரு பெரிய புன்முறுவல் உண்டாயிருந்தது. அப்பொழுது, நான், “என்னை ஒரு பார்சன் என்று எப்படி அறிந்தீர்கள்?” என்று கேட்டேன். தெற்குப் பகுதியில் ஒரு பிரசங்கியாரை ஒரு “பார்சன்” என்று அழைக்கிறது வழக்கம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் நான், “என்னை ஒரு போதகர் என்று எப்படி நீங்கள் அறிவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அந்த அம்மையார், “நீங்கள் வரப்போகிறதாக முன்கூட்டியே நான் அறிந்து கொண்டேன்” என்று பதிலளித்தாள். அப்பொழுது நான், “நீங்கள் எப்படி அதை அறிவீர்கள்? என்னை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “தெரியாது, ஐயா” என்று கூறி, தொடர்ந்து அவள், “நீங்கள் வரப்போவது எனக்குத் தெரியும். சூனேமியாளைப் பற்றிய கதையை எப்போதாவது நீர் கேட்டிருக்கிறீரா?” என்று கேட்டாள். நான் “ஆம், தெரியும்” என்றேன்.

74158 அப்பொழுது அவள், “நான் அந்தவிதமானதொரு பெண்மணிதான்” என்று கூறினாள். மேலும் அவள், “கர்த்தர் எனக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்தார். நான் அவனை சரியானபடி வளர்ப்பேன் என்று அவரிடம் கூறினேன். நான் ஒரு ஏழைப் பெண்மணி. ஜீவனத்திற்காக நான் வெள்ளை நிறத்தவருக்கு கழுவுதல் மற்றும் வீட்டு வேலைகள் செய்து கொடுக்கிறேன். ஆண்டவர்—ஆண்டவர் எனக்கு ஒரு பிள்ளையைக் கொடுப்பதாகச் சொன்னார். நான் அவரிடம், அவனை எனக்குத் தெரிந்த அளவுக்கு சிறப்பாக வளர்ப்பேன் என்று கூறினேன்” என்று கூறினாள். அவள் தொடர்ந்து, “அவ்வாறே நானும் அவனை எனக்குத் தெரிந்த அளவு சிறப்பாக வளர்த்து வந்தேன். ஆனால் அவனோ, பார்சன் அவர்களே, தவறான கூட்டாளிகளோடு சேர்ந்து கொண்டுவிட்டான். அவனுக்கு ஒரு வியாதியுண்டாயிற்று. நாங்கள் அது என்னவென்றே அறிந்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு அந்த வியாதி முற்றிப்போய் விட்டது. அவன் இப்பொழுது படுக்கையில் மரித்துக் கொண்டிருக்கிறான். அவன் இரண்டு நாட்களாக இப்பொழுது சுயநினைவிழந்த நிலையில் இருக்கிறான்” என்றும் கூறினாள். மேலும், “மருத்துவர் வந்து பார்த்து, ‘அந்த வியாதியானது அவனுடைய இருதயத்தைக் கூட தின்றுவிட்டது. அது இரத்தத்தோடு வேறு கலந்து விட்டது. அதனால் மிகுந்த பாதிப்பை அவனில் அது ஏற்படுத்திவிட்டது என்று சொல்லிப் போனார். அவர்கள் கொடுத்த மருந்து ஒன்றும் அவனுக்கு உதவி செய்யவில்லை’” என்றாள். தொடர்ந்து அவள், “அவன் இப்பொழுது மரித்துக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு பாவியாக மரிப்பதை என்னால் நின்று காண முடியவில்லை” என்றே கூறினாள். எனவே, “நான் ஜெபித்தேன், நான் ஜெபித்தேன், இராமுழுவதும் நான் ஜெபித்தேன். கடந்த இரண்டு நாட்களாக அவன் சுய நினைவிழுந்த நிலையில் காணப்படுகிறான். எனவே அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை” என்றாள்.

75159 அவள் மேலும் “நான் ஜெபித்தேன், ‘ஆண்டவரே, நீர் அந்தக் குழந்தையை எனக்குக் கொடுத்தீர்,’ ‘அந்த சூனேமியாளுக்கு நீர் கொடுத்தது போலக் கொடுத்தீர்?’ ‘அப்படியானால் எங்கே உமது எலியா? அவர் எங்கே…?’ தொடர்ந்து, ‘எனக்கு உதவி செய்யக் கூடிய ஒன்று எங்கே உள்ளது?’” என்று கேட்டேன். 160 அவள் தொடர்ந்து, “நான் முழங்காலில் நின்று ஜெபிக்கையில் உறக்கத்தில் ஆழ்ந்தேன். அப்பொழுது கர்த்தர் என்னோடு என்னுடைய சொப்பனத்தில் பேசினார்” என்றாள். அப்பொழுது அவர் “நீ போய் வாசலருகே நின்று கொண்டிரு. அங்கே ஒரு மனிதன் தன் தலையில் பழுப்பு நிற தொப்பியணிந்து மங்கின நிறமுள்ள சூட் அணிந்தவராய் வீதியில் வருவார். அவர் உன்னிடம் பேசுவார்” என்று என்னிடம் கூறியிருந்தார். 161 எனவே, “நான் விடியற்காலத்திற்கு முன்பிருந்தே இங்கேயே நின்று காத்துக்கொண்டிருக்கிறேன்” என்றாள். பனியினால் அவளது முதுகுப் பாகம் நனைந்திருந்தது. அப்பொழுது அவள், “நீங்கள் பழுப்பு நிற தொப்பியணிந்து வருகிறதைக் கண்டேன். நீங்கள் ஒரு சிறிய தோள்பட்டையைக் கொண்ட பையைக் கூட உங்களுடன் கொண்டு வந்திருக்க வேண்டுமே” என்று கேட்டாள். 162 அதற்கு நான், “நான் அதை எனது உணவக விடுதியில் விட்டு விட்டு வந்துவிட்டேன்” என்றேன். பார்த்தீர்களா? அப்பொழுது நான், “உங்களுடைய பையன் சுகவீனமாயிருக்கிறாரா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “அவள் மரித்துக் கொண்டிருக்கிறான்” என்றாள். அப்பொழுது நான், “என்னுடைய பெயர் பிரான்ஹாம் என்பதாம். என்னை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கு அவளோ, “இல்லை ஐயா, பார்சன் பிரான்ஹாம் அவர்களே, நான் உங்களைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டதேயில்லை” என்றாள். அப்பொழுது நான், “நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறதுண்டு” என்று கூறினேன். அவளோ அதில் ஆர்வம் காட்டவில்லை. அவள் தன்னுடைய மகன் பாவியாக மரிக்க விரும்பவில்லை.

76163 நான் உள்ளே நடந்து சென்றேன். அவர்கள் அங்கே ஒரு பழைய கதவினை உடையவர்களாயிருந்தனர், அதாவது அக்கதவை திறந்த பிறகு அது தானே திரும்பிப் போய் மூடிக்கொள்ளும், (ஒரு வேளை அது என்னவென்று வடக்கே உள்ளவர்களுக்கு தெரியாது) நான் வீட்டிற்குள் நடந்து சென்றேன், அது ஒரு சிறிய, பழைய இரு அறைகளையே உடையதாயிருந்தது. (ஒரு சிறிய அளவு கொண்டதாகவே காணப்பட்டது…நாம் அதை “இரண்டே அறைகளையும் கொண்ட ஒரு மிகச் சிறிய வீடு” என்றே அழைக்கிறோம்) அதைப்போன்றே அங்கே அமைந்திருந்தது; இங்கே ஒரு அறை, வரவேற்பறை, படுக்கை அறையும் ஒரே இடத்திலேயே இருந்தது. சமையலறை அங்கே பின்னால் இருந்தது. நான் உள்ளே நுழைந்தபோது…சுவர்களில் வெளையடிக்கப்பட்டிருந்தது. அருமையாக பக்கங்களில் மெல்லிய பலகைகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தது. எனவே அப்பொழுது…இல்லை, கூரையில் தார் பூசப்பட்ட கனத்த அட்டையால் வேயப்பட்டிருந்தது என்று நான் நினைக்கிறேன், அது பனித்துளியினால் ஏற்பட்டதைப் போல், ஆங்காங்கே நீர்க்குமிழிகள் மேலே தொங்கிக் கொண்டிருந்ததை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது.

77164 நான் உள்ளே நுழைந்த பிறகு, கதவுக்கு அப்பால் உள்ளே சுவற்றில், “தேவன் எங்கள் வீட்டை ஆசீர்வதிப்பாராக” என்ற ஒரு அடையாளப் பலகை தொங்கிக் கொண்டு இருந்தது. இந்த மூலையில் ஒரு பழைய கட்டில் காணப்பட்டது. அந்தப் பக்கம் இன்னொரு கட்டிலும் காணப்பட்டது. அங்கே தானே ஒரு பெரிய உருவங்கொண்ட ஒரு நபர் (தரை விரிப்புக்கூட இல்லை) பெரிய உருவத் தோற்றமுடையவன், பெரிய உருவத்தில் திடகாத்திரமாய் காணப்படுகின்ற ஒரு பையன் படுத்திருந்தான். அவன் ஏறத்தாழ ஆறடி உயரமும், நூற்றெழுபது அல்லது நூற்றெண்பது பவுண்டுகள் எடையுள்ளவனாகவும் இருந்தான் என்று கருதுகிறேன். அவனுடைய கையில் துப்பட்டியை பிடித்துக் கொண்டிருந்தான், அவன், “ஊம், ஊம்” என்று முனங்கிக் கொண்டிருந்தான். 165 அவள், “அம்மாவின் குழந்தையே” என்று அவனை அழைத்தாள். 166 நான், “இவள், ‘அம்மாவின் பிள்ளையே’ என அழைக்கிறாளே” என்று வியந்தேன். ஆயினும் அவன் மேகப் புண் என்னும் சமூக வியாதியினால் பீடிக்கப்பட்டிருந்தான். அவனோ—அவனோ மரித்துக் கொண்டிருந்தான். 167 அவள் அவனது நெற்றியில் முத்தமிட்டு, “அம்மாவின் மகனே” என்று அழைத்து அந்தவிதமாக அவனைத் தட்டிக் கொடுத்தாள்.

78168 அது என்னுடைய இருதயத்தை ஆழமாகத் தொட்டது. அப்பொழுது நான், “ஆம், நீ எவ்வளவு ஆழமாக பாவத்தில் ஆழ்ந்திருந்தாலும், நீ இன்னமும் அவளுடைய பையன் தான்” என்று எண்ணிக் கொண்டேன். பிறகு நான் எண்ணினேன், “பார்த்தாயா? அவன் எவ்வளவு கெட்டவனாயிருந்தாலும் அக்கறையில்லை, அவன் அவனது தாய்க்கு இன்னமும் ‘அம்மாவின் குழந்தை’ தான்.” மேலும் நான், “‘ஒரு தாய் தன்னுடைய பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை. உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்’ என்று தேவன் கூறியதையே” எண்ணிப்பார்த்தேன். பாருங்கள்? அது எப்படி முடியும்! 169 அந்த வயதான பரிசுத்தவாட்டி அங்கே நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். சகோதரனே, அவளுடைய வீட்டில் ஒன்றுமே இல்லை என்பதை நீங்கள் பார்த்ததும் கூறிவிட முடியும். ஆனால் அவளிடம் அவளுடைய வீட்டில், ஒரு காரியம் இருந்தது. அது இண்டியானாவிலும் மற்றும் எங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்றாகும். அது தான் தேவன். ஆபாசமான, அருவருக்கத்தக்க, பாலுணர்வைத் தூண்டும்படி தோற்றமளிக்கும் பெண்களுடைய படங்கள் மாட்டப்பட்ட ஆடம்பரமான படாடோபமான வீடு ஒன்று எனக்கு இருப்பதைவிட, தேவனுடைய அப்படிப்பட்ட எளிய வீடு ஒன்றைப் பெற்றிருப்பதையே நான் விரும்புகிறேன். பழைய வேதாகமம் ஒன்று அங்கே திறந்துவைக்கப்பட்டிருந்தது, அதில் பக்கங்களை உபயோகித்து கசங்கிப்போய் பழையதாயிருந்தன. 170 நான் அவளை நோக்கிப் பார்த்தேன். அவள், “தேனே, பிரசங்கியார் உனக்காக ஜெபிக்க வந்திருக்கிறார்” என்றாள். 171 அவனோ, “உம்.உம். இருட்டாயிருக்கிறது. உம்” என்றான். 172 அப்பொழுது நான், “அவன் என்ன கூறிக்கொண்டிருக்கிறான்?” என்று கேட்டேன்.

79அதற்கு அவள், “அவன் கூறுவது என்னவென்று அவனுக்கே தெரியாது. மருத்துவர், ‘அவன் தன் சுயபுத்தியில் இல்லை’” என்று கூறிச் சென்றார். அவன் “ஏதோ ஒரு கொந்தளிக்கும் ஆழ்கடலில் ஒரு படகை வலித்துக் கொண்டு போகையில் அவ்வலைகடலில் தான் சிக்கிக் கொண்டதுபோல உணருகிறான்.” அதைத்தான் “என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை போதகரே.” என் மகன் “இழந்து போகப்பட்டவனாக, இரட்சிக்கப்படாமல் மரிக்கிறதை தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் எனக்கு உதவி செய்ய வருவீர்கள் என்பதை நான் அறிவேன், ஏனென்றால் கர்த்தர் என்னிடம் அவ்வண்ணமாய் கூறியிருந்தார்” என்றாள். அப்பொழுது, “நான் அவனுக்காக ஜெபிப்பேன். ஒரு வேளை கர்த்தர் அவனை வியாதியிலிருந்து குணமாக்குவார்” என்று நான் சொன்னேன். 173 வியாதியிலிருந்து மகன் குணமடைய வேண்டுமென்பதைப் பற்றி சற்றேனும் அக்கறைப்படவில்லை. மகன் எழும்பி நின்று, தான் ‘இரட்சிக்கப்பட்டதாகக்’ கூற வேண்டும் என்பதைப் பற்றித் தான் அவள் விருப்பங்க் கொண்டவளாய் இருந்தாள். அவ்வளவுதான், அவன் இரட்சிக்கப்பட வேண்டும். அவன் குணமடைந்தாலும், என்றாகிலும் ஒரு நாள் அவன் போகத்தான் வேண்டும். ஆனால் அவன் இரட்சிக்கப்படவேண்டும். ஓ, அவ்விதமான ஒரு மனப்பான்மையை மட்டும் நான் கொண்டிருந்தால் அது எப்படியிருக்கும்! தூரத்தில் நித்திய வீடு ஒன்றுண்டு என்றும், மகன் இரட்சிக்கப்பட்டிருந்தால், தான் அங்கே மீண்டும் அவனோடு வாழ்வேன் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். அவளோ, “அவன் ‘இரட்சிக்கப்பட்டேன்’ என்று கூறுவதை என்னால் கேட்க முடிந்தால் நலமாயிருக்கும்” என்றே கூறினாள். நான், “நாம் தலைவணங்கி ஜெபிப்போம்” என்றேன். அவள் முழங்கால்படியிட்டாள். நான் அவனது பாதங்களை பற்றிக் கொண்டேன். அவனது பாதங்கள் குளிர்ந்து போய் பிசு பிசுவென்று இருந்தது. அவன் மேல் ஒரு சிறு—சிறு மெல்லிய துப்பட்டியை அவனது தாய் போர்த்தியிருந்தாள். அவன் அரைக்கால் சட்டையை அணிந்திருந்தபடியினால் என்னால் துப்பட்டியை இழுத்து அகற்றமுடியவில்லை. உங்களுக்குத் தெரியுமா?

80174 எனவே அவன்…அவன் ஒரு படகில் இருந்து கொண்டு, அவன் படகின் துடுப்பை இறுகப் பற்றிக் கொண்டு வலிக்கிறது போல் எண்ணிக் கொண்டு அவ்வாறு கைகளை அசைத்துக் கொண்டிருந்தான். மேலும் அவன் “இங்கு மிகவும் இருளாய் இருக்கிறது, ஊ. ஊ. மிகவும் இருளாய் இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். எனவே அவனது தாய் அவனிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவனோ தொடர்ந்து “இங்கே இருட்டாகவும், குளிராகவும் இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே படகு வலிக்கிறவனைப் போல் செய்து கொண்டேயிருந்தான். 175 பின்பு நான்—நான் அவளை நோக்கிப் பார்த்து, அங்கே முழங்காற்படியிட்டிருந்த அவளை, “அம்மா, நீங்கள் நம்மை ஜெபத்தில் நடத்துவீர்களா?” என்று கேட்டேன். அவளும், “சரி, ஐயா” என்றாள். 176 அந்த அறையில், அத்தாயாரும், நானும், அந்தப் பையனும், பரிசுத்த ஆவியானவரும் மட்டும் தான் இருந்தோம். அந்த வயதான பரிசுத்தவாட்டி ஜெபித்தாள். என்னே! அவள் அவரிடம் பேசிய பொழுது, ஏற்கனவே இதற்கு முன்பு அவரிடம் பேசியிருந்தது தெரிய வந்தது. ஆம், ஐயா! தான் யாரிடம் பேசுகிறோம் என்பதை அவள் அறிந்தேயிருந்தாள். “கர்த்தாவே, நீர் என்ன செய்யப் போகிறீர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் யாவும் நீர் கூறியிருந்தபடியே இருந்து கொண்டிருக்கிறது” என்று ஜெபித்தாள்.

81177 ஓ, என்னே! ஓ! ஆதியில் அப்பரிசுத்தவான்களுக்குள் இருந்த அதே இயேசு இப்பொழுதும் இருக்கிறார் என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் இன்றைக்கும் அதே இயேசுவாக இருக்கிறார். 178 நான் அந்த அம்மையாரை, அவள் பாப்டிஸ்ட்டா, அல்லது பெந்தெகொஸ்தேயினாரா அல்லது என்ன என்பதைப் பற்றிய அவளுடைய மார்க்கத்தைப் பற்றியெல்லாம் ஒன்றுமே கேட்கவேயில்லை. அது என்னுடைய வேளையாயிருக்கவில்லை. நான்—நான் பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலை பின்பற்றிக் கொண்டிருந்தேன். அந்த அம்மையாரும் அதையேதான் செய்து கொண்டிருந்தாள். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை நாங்கள் காண விரும்புகிறோம். 179 எனவே நாங்கள் முழங்காற்படியிட்டோம், அந்த அம்மையார் ஜெபிக்க ஆரம்பித்தாள். அவள் ஜெபித்து முடித்தபோது, எழும்பி, தன் மகனின் தலையில் முத்தமிட்டு, “என் குழந்தையே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்றாள். 180 அதன்பின்னர் அவள், “இப்பொழுது நீங்கள் ஜெபிப்பீர்களா, பிரசங்கியாரே?” என்று கேட்டாள். 181 “சரி, அம்மா” என்றேன். அப்பொழுது நேரம் சரியாக கிட்டத்தட்ட எட்டரை மணியாகிவிட்டது. ஒரு வேளை ஒன்பது மணியாக இன்னும் கால்மணி நேரம் இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். விமான நிலையத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில்…நான் இருந்து கொண்டிருந்தேன். என்னுடைய விமானமோ ஏழு மணிக்கு புறப்பட்டிருக்க வேண்டும். எப்பொழுது அங்கிருந்து கிளம்பிச் செல்லப் போகிறேன் என்பதும் எனக்குத் தெரியாதிருந்தது.

82182 எனவே, நான் என்னுடைய கைகளை அவனுடைய பாதங்களின் மேல் வைத்தேன். பின்னர் நான், “பரலோகப் பிதாவே, இது என்னவென்று எனக்குப் புரியவில்லை. நீர்…ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக நான்—நான் விமானத்தில் ஏறிப் போயிருந்திருக்க வேண்டும். ஆனால், நீர் தொடர்ந்து ‘நடந்து செல்’ என்று கூறிக் கொண்டேயிருந்தீர். இது வரைக்கிலும் நான் இந்தக் காரியத்தைத் தான் கண்டிருக்கிறேன். நான் வருவதைக் குறித்து நீர்…காண்பித்ததாகவும், நான் வருவதைக் கண்டதாகவும் அவள் கூறினாள். கர்த்தாவே, நீர் தான் அதைச் சொன்னீர் என்றால், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, நான் என்னுடைய கைகளை இந்தப் பையன் மேல் வைக்கிறேன்” என்று கூறி ஜெபித்தேன். 183 அந்தப் பையன், “ஓ, அம்மா, இந்த இடத்தில் இப்பொழுது வெளிச்சம் பரவிக் கொண்டிருக்கிறது” என்று கூறினான். சுமார் ஐந்து நிமிடங்களுக்குள்ளாக படுக்கையின் மேல் பக்கத்தில் அவன் அமர்ந்து கொண்டு தன் தாயாரை தன் கைகளினால் அணைத்துக் கொண்டான். 184 அப்பொழுது நான் அங்கிருந்து மெதுவாக நழுவி வெளியே வேகமாக வந்து, ஒரு வாடகை காரைப் பிடித்துக் கொண்டு உணவக விடுதி அறைக்கு வந்து எனது கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு, விமான நிலையத்திற்கு விரைந்தேன். நான் அங்கு போய் அடுத்த விமானத்தைப் பிடிக்க இரண்டொரு நாட்கள் காத்திருக்க நேரிட்டு விடும் என்று நான் எண்ணினேன். காரணம் அந்நாட்களில் அவ்வாறான நிலைமை இருந்து வந்தது, உலகயுத்தம் முடிந்ததற்கு பிறகு, உடனே அக்காலத்தில் அங்கெல்லாம் ஒரு விமானத்தை பிடிக்க வேண்டுமென்றால் மிகவும் கடினமான காரியமாக இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நான், “இரண்டு நாட்கள் நான் காத்திருக்க வேண்டும்” என்றே எண்ணினேன். 185 நான் அங்கே போய்ச் சேர்ந்ததுமே, “விமான எண்.196 லூயிவில், கெண்டக்கிக்கு இப்பொழுது புறப்படப் போகிறது” என்று அவர்கள் அறிவித்தனர். அவ்வாறு தேவன் அவ்விமானத்தை எனக்காக அந்தவிதமாக தாமதிக்க வைத்திருந்தார். ஓ, அதை நான் விசுவாசிக்கிறேன்!

83186 அப்பொழுதிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து, நான் இரயில் வண்டியில் அரிசோனாவுக்கு போய்க் கொண்டிருந்தேன். சகோதரன் ஷாரிட் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்திற்காக நான் போய்க் கொண்டிருந்தேன். எனவே வழியில் நான் சகோதரன் மூர் மற்றும் ஏனையோரோடும் சேர்ந்து கொண்டேன். எனவே நான் அங்கு செல்லும்போது, நான் வழியில் இரயில் மெம்ஃபஸில் நின்றபோது, அங்கே நின்றேன். இந்தவிதமாக மேற்கு நோக்கிச் செல்லும் வண்டிகள் எவ்வாறு அதற்கென உள்ள சுழல் வட்ட வடிவ தண்டவாளப் பாதையில் போய் சுற்றி திரும்பி நின்று கொள்ளும் என்பது உங்கள் யாவருக்கும் தெரியும். 187 இறைச்சி கலந்த ரொட்டிகளை இரயிலில் வாங்கினால் ஒரு துண்டுக்கு அறுபது செண்டுகள் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் வேறெங்காவது வெளியில் வாங்கினால் அதன் விலையோ பத்து அல்லது பதினைந்து செண்டுகள் தான். எனவே இறைச்சி கலந்த ரொட்டிகளை வாங்குவதற்கு வண்டி நிற்பதற்காக நான் காத்திருந்தேன். பையில்…பாதி அளவுக்கு அந்த ரொட்டிகளை வாங்கி, பயணத்தில் உண்மையாகவே குதூகலமடையலாம் என்று எண்ணினேன். எனவே நான் வண்டி நின்றதும், குதித்து இறங்கி விரைவாக ஓடிப்போய் அந்த ரொட்டிகள் வாங்க கடைகளைத் தேடினேன். அங்கே வண்டி கிட்டதட்ட முப்பது நிமிடங்கள் நிற்கப்போவதாயிருந்தது.

84188 எனவே அந்த இறைச்சி கலந்த ரொட்டிகளை வாங்க ஆரம்பித்தபோது யாரோ ஒருவன், “ஹலோ, இதோ அங்கே பார்சன்(பிரசங்கியார்) நின்று கொண்டிருக்கிறார்” என்று கூறும் சத்தம் கேட்டது. நான் சுற்றும் முற்றும் பார்த்தோன். அங்கே சிவப்பு நிறத்தொப்பி அணிந்த ஒருவன் நின்று கொண்டு கண்ணை சிமிட்டிக் கொண்டு என்னை பார்த்து, “உங்களுக்கு என்னைத் தெரியுமல்லவா?” என்றான். அதற்கு நான் “மகனே, நீ யார் என்று தெரியவில்லையே” என்றேன். அப்பொழுது அவன், வாருங்கள், வந்து “என்னை நன்றாகப் பாருங்கள்” என்றான். அதற்கு நானோ, “அப்படியா? உன்னை எனக்குத் தெரியும் என்று நான் நினைக்கவில்லை” என்றேன் அப்பொழுது அவன், “உங்களை எனக்குத் தெரியும். நீங்கள் பிரசங்கியார் பிரான்ஹாம்” என்று கூறினான். அதற்கு நான் “ஆம், அது சரிதான். நீ எப்பொழுதாவது என்னுடைய கூட்டங்கள் ஒன்றில் இருந்திருக்கிறாயா?” என்று கேட்டேன். அபொழுது அவனோ, “இல்லை ஐயா” என்றான். மேலும் அவன், “நீங்கள் ஒரு நாள் காலையில் எங்கள் வீட்டிற்கு வந்தீர்களே, என் தாயார் கூட…” என்றான். அப்பொழுது நான், “ஓ, அந்தப் பையனாக நீ இருக்க முடியாது” என்றேன். அதற்கு அவனோ, “ஆம், நான் தான் அவன், ஆம், நான் தான் அவன். போதகரே, நான் சுகமானேன். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். அது மாத்திரமல்ல, நான் இப்பொழுது ஒரு கிறிஸ்தவனாகவும் ஆகியிருக்கிறேன்” என்று கூறினான். 189 ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஓ! அவர்கள் யாவரும் மேல் வீட்டறையில் ஒன்று சேர்ந்து கூடி அவருடைய நாமத்தினால் ஜெபித்தார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டிருந்தனர், ஊழியத்திற்கான வல்லமையும் வந்தது; அந்நாளில் அவர்களுக்கு அவர் என்ன செய்தாரோ இப்பொழுது அவர் உங்களுக்கும் அதையே செய்திடுவார், (நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா?) நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன், அல்லேலூயா! அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன்.

85அவர்கள் பெரிய கல்வி இன்னும் மற்றக் காரியங்கள் உடையவர்களாயிருக்கவில்லை: இந்த ஜனங்கள் கல்லாதவராயினும், உலகில் புகழ் பெறாவிடினும் அவர்கள் யாவரும் தங்களின் பெந்தெகொஸ்தேயை பெற்றிருந்தனர், இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்தனர்; அவரின் வல்லமை மாறாமல் உள்ளது என்று இப்பொழுது இங்கும் தூரத்திலும் கூறிக்கொண்டிருக்கின்றனர். நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அல்லேலூயா! அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அல்லேலூயா! அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். வாரும் என் சகோதரனே, இவ்வாசீர் நாடுவீர், அது உம் இதயத்தை பாவத்திலிருந்து சுத்தி செய்யுமே, அது ஆனந்த மணியோசை ஒலிக்கச் செய்ய துவங்கும், உம் ஆத்துமாவை தொடர்ந்து ஜூவாலிக்கச் செய்யும்; ஓ, அது என் இருதயத்திற்குள் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கிறது, ஓ, அவர் நாமத்திற்கே மகிமை, …அதாவது நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இப்பொழுது, உங்கள் முன்னால், பின்னால் சுற்றிலும் உள்ள யாருடனாவது கைகுலுக்கிக் கொள்ளுங்கள்: ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன், அல்லேலூயா! அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்…? …அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அல்லேலூயா! அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கும் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.

86190 பண்டைகால மார்க்கம் என்றால் என்ன? அது இங்கே ஆரம்பித்தது. அதன் பாதை முழுவதும் காலங்கள் தோறும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. ஓ, என்னே! ஓ, அந்த சுவிசேஷத்திற்காக நான் எவ்வளவாய் மகிழ்ச்சியாயிருக்கிறேன். ஓ! ஓ, ஆம் ஐயா! அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, ஆம், அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, அது சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம் (இரத்த சாட்சிகள் உள்பட யாவருடைய) பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, அது என்னவிதமான சுவிசேஷமாக இருக்கிறது? அது பெந்தெகொஸ்தேயில் ஆரம்பித்தது போலவே உள்ளது, பாருங்கள். இந்த பரிசுத்த ஆவியின் திட்டத்திற்காக முதலில் மரித்தது யோவான் ஸ்நானன் தான் (பாருங்கள், அவன் அதை தன் தாயின் கர்ப்பதிலேயே பெற்றுக் கொண்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள்)…ஒரு மனிதனைப் போல் மரித்தான்; பின்பு கர்த்தராகிய இயேசு வந்தார், அவர்கள் அவரை சிலுவையிலறைந்தனர், ஆவியானவர் மனிதரை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்று அவர் பிரசங்கித்தார். இரத்தம் தொடர்ந்து சொட்டிக் கொண்டிருக்கிறது, ஆம், இரத்தம் சொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டே இருக்கிறது, அது சத்தியத்திற்காக மரித்த சீஷர்கள் இரத்தம், இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கிறது.

87அதை உங்களால் ஸ்தாபனமாக ஆக்க முடியாதே! ஊ—உ! அங்கே பேதுருவும், பவுலும், திவ்விய வாசகனாகிய யோவானும் இருந்தனர், இச்சுவிசேஷம் பிரகாசிக்க அவர்கள் தங்களுடைய ஜீவனைத் தந்தனர்; அவர்கள் பண்டைய தீர்க்கர்களின் இரத்தத்துடன் தங்கள் இரத்தத்தை கலந்தனர், அதனால் மெய்யான தேவனுடைய வார்த்தை உண்மையாய் கூறப்பட முடிந்தது. இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, ஆம், இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, அது சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம், இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் தொடர்ந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் தீங்கிழைத்தோரை கர்த்தர் தண்டிக்கும் காலம் “இன்னும் எதுவரைக்கும்?” என்று தொடர்ந்து கூப்பிடுகின்றனர். ஏனென்றால் இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷத்திற்காகவும், அதனுடைய சிவந்த இரத்த வெள்ளத்தில், இன்னும் அதிகமானோர் தங்களுடைய ஜீவியத்தின் இரத்தத்ததை சிந்தியிருக்கிறார்கள். இரத்தம் பாய்ந்தோடுகிறது, ஆம், இரத்தம் பாய்ந்தோடுகிறது, இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தத்தால் வழிந்தோடுகிறது, அது சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம், இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது.

88191 பெந்தெகொஸ்தேயின் நாள் முதல், பெந்தெகொஸ்தேயில் பலியாகிய இரத்த சாட்சிகள் இருந்தனர். எபேசு சபைக் காலம் முதல், தொடர்ந்து வந்த காலங்களில், பெர்கமுவிலும், தியத்தீராவிலும், சர்தையிலும், எபேசுவிலும் இல்லை பிலதெல்பியா தொடர்ந்து லவோதிக்கேயாவிலும் அப்படியே இருந்தது. இப்பொழுது இங்கே முடிவாக என்ன சம்பவிக்கப் போகிறது? வேதம் கூறுகிறபடியாவும் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த மிருகமானது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றும். 192 1933-ம் ஆண்டு ஏற்பட்ட தரிசனத்தைப் பற்றி இங்கே வாசிக்கப்பட்டதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா? அப்பொழுது சபைக் கட்டிடமானது கட்டப்படக் கூட இல்லை. அப்பொழுது தரிசனம் என்றால் என்ன என்று கூட தெரியாது. அது ஒரு “ஞானதிருஷ்டி” என்றே அழைத்தேன். நான் அப்பொழுது வெறும், ஒரு வாலிப பாப்டிஸ்டு பிரசங்கியாராக மட்டுமே இருந்து வந்தேன். நாங்கள்… 193 என் வாழ்நாள் முழுவதும் அத்தரிசனங்களை கண்டுள்ளேன். அவைகளில் ஏதாவது ஒன்று எப்போதாவது தவறிப்போயிருந்தால், எவரேனும் எழும்பி அதை கூறும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். இல்லை, ஒருபோதும் அப்படியாகவில்லை! அது ஒருபோதும் தவற முடியாது! பார்த்தீர்களா? இனியும் தவறாது.

89194 நான் அன்று ஞாயிற்றுக் கிழமை வேத பாடத்தை ஆரம்பிக்கையில், உடனே நான் ஞானதிருஷ்டி அடைந்தேன். சபை ஆராதனையை அப்பொழுது, சார்லி கரன் என்பவருடைய இடத்தில், பழைய மேஸன்கள் வீடு என்ற இடத்தில் வைத்திருந்தோம். நாங்கள் ஒரு சிறு கூட்டமாக அங்கே வருவோம். நான் அத்தரிசனத்தில் இந்த ஜனாதிபதி ரூஸ்வெல்ட் உலகை, ஒரு உலகயுத்தத்திற்குள் நடத்திச் செல்வதைக் கண்டேன். அது அப்படியாக முன்னுரைக்கப்பட்டது. மேலும் நான், “மூன்று விதமான இஸம்கள் தோன்றும், ஒன்று நாசிசக் கொள்கை, இன்னொன்று பாசிசக் கொள்கை, மூன்றாவது கம்யூனிசக் கொள்கை” என்று கூறினேன். நான் கூறினதை…(எத்தனை பேர் இங்கே ஞாபகத்தில் வைத்துள்ளீர்கள்?) நான், “உங்கள் கண்களை கம்யூனிசத்தின் மேல் கவனமாய் வைத்திருங்கள். அவையாவும் அதில் தலையெடுக்கும்” என்றேன். மேலும் நான், “முஸோலினி எத்தியோப்பியாவின் மீது படையெடுத்துப் போய், அங்கே அவன் வீழ்வான்” என்றேன். நான், தொடர்ந்து, “நாம் முடிவாக ஜெர்மனியோடு யுத்தத்திற்குப் போவோம். ஆனால் ஜெர்மனி மேகினாட் லைன் என்ற ஒரு பெரிய உறுதியான சிமெண்ட் கலவை மதில் சுவரினால் அரணையேற்படுத்திக் கொள்ளும்” என்றும் கூறினேன். மேகினாட் லைன் கட்டப்படுவதற்கு பதினோரு ஆண்டுகளுக்கு முன்பாகவே அது முன்னுரைக்கப்பட்டது.

90195 நான், “அப்பொழுது யுத்தத்திற்குப் பிறகு…யுத்தத்தின் முடிவில் நாம் வெல்வோம், அந்த யுத்தம் முடிந்த பிறகு விஞ்ஞானம் பெரிய பெரிய புதிய காரியங்களையெல்லாம் கண்டுபிடிக்கும்” என்றும் கூறினேன். மேலும் நான், “அவர்கள் வடிவமைக்கும் மோட்டார் வாகனம், முடிவிலே முட்டையைப்போல் வடிவம் பெறும்” என்று கூறினேன். (1933-ம் ஆண்டில் ஒரு மோட்டார் வாகனத்திற்கு எவ்விதமான உருவமைப்பு இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.) இப்பொழுது, அப்பொழுதே நான், “அவைகள் முட்டைகளைப் போன்ற வடிவத்தில் மாறி, முட்டைகளைப் போன்றே காணப்படும். அது பெரிய நெடுஞ்சாலையில் ஓடுகையில், அதற்கு உந்து வண்டி இயக்காழி எனப்படும் ஸ்டியரிங்க் சாதனம் வண்டியை ஓட்டிச் செல்ல இருக்கவில்லை. அது ஏதோ சக்தியினால் இயக்கப்பட்டது” என்றும் கூறினேன். அவர்கள் அதை இப்பொழுது உருவாக்கியிருக்கிறார்கள். 196 நான், “அந்த காலத்தில்…இப்பொழுது அவர்கள் ஸ்திரீகளுக்கு வாக்கு அளிக்க உரிமை அளிக்கிறார்கள், ஸ்திரீகளின் வாக்குரிமையைப் பற்றியும். அது முடிவில் என்னவாகும் என்றும்… இது ஒரு ஸ்திரீயின் தேசம் என்றும், அது ஒரு ஸ்திரீயினால் அடையாளமிடப்பட்டுள்ளது. தீர்க்கதரிசனத்தின் மூலம் எங்கும் ஒரு ஸ்திரீயின் ரூபத்திலேயே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. பதிமூன்று என்ற எண் எங்கும் தரிசனத்தில் உள்ளது” என்று கூறினேன். நான் தொடர்ந்து, “இது ஒரு ஸ்திரீயின் தேசம். அவள் இங்கே தன்னுடைய உரிமைகளைப் பெற்றுக்கொள்வாள். அவள் இத்தேசத்தைப் பாழ்படுத்திப்போடுவாள். அவளே உலகம் முழமையும் பாழ்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறாள்” என்றும் கூறினேன்.

91197 (ராய், அவர்களே, அந்த மகாஸ்திரீயை பற்றிய கேள்வியைக் கேட்டிருந்த உங்கள் கடிதம் எனக்குக் கிடைத்துள்ளது. “ஒவ்வொரு குற்றக் காரியத்தை பற்றியும், நான் அதன் பின்னணியைக் கண்டுபிடிக்க அலசி ஆராய்ந்தபோது, அமெரிக்காவில் நிகழும் ஒவ்வொரு குற்றத்திற்கும் பின்னர் அதற்கு காரணமாக ஒரு ஸ்திரீயானவள் இருக்கிறாள்.” அது மிகவும் சரியாக இருக்கிறது. அது ஒழுக்கங்கெட்ட ஸ்திரீகளினால் ஏற்படுகிறது. நீங்கள் பாருங்கள்.) 198 அப்பொழுது நான், “அந்த சமயத்தில் ஸ்திரீகளுக்கு வாக்களிக்க உரிமையளிக்கப்படும். அதினால் அவர்கள் தவறான நபரை தேர்தலில் தேர்ந்தெடுப்பார்கள்.” என்று கூறினேனே. அவர்கள் கடந்த தேர்தலில் அதையே செய்துவிட்டார்கள். அது உண்மை. “அது ஒரு வல்லமையான பிடியை துவக்கும். அந்த சமயத்தில் ஒரு மிகவும் செளந்தர்யமாக அலங்கரித்துக் கொண்டுள்ள ஒரு மகா ஸ்திரீ அமெரிக்காவில் தோன்றுவாள்” என்றும் கூறினேனே. நான் அதை அடைப்புக் குறியிட்டு வைத்துள்ளேன்: “(ஒரு வேளை அது கத்தோலிக்க சபையாயிருக்கலாம்)” புரிகிறதா? “அந்த ஸ்திரீயானவள் அமெரிக்காவில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, மற்றவர்களையும் அடக்கியாள்வாள். அவள் பார்ப்பதற்கு செளந்தர்யமுள்ளவளாக இருப்பாள். ஆனால் அவள் முடிந்தளவு கொடூர இருதயங் கொண்டவளாயிருப்பாள்” என்றும் கூறினேன்.

92199 மேலும் நான், “அப்பொழுது நான் அமெரிக்காவை நோக்கிப் பார்த்தேன். அது எரிந்து சாம்பலாகி புகைக்காடாக மாறியது. அங்கே மீதியாக ஒன்றுமே விடப்பட்டிருக்கவில்லை” என்றும் கூறினேன். 200 நான் அப்பொழுதே முன்னுரைத்தேன், “இப்பொழுது, அதுவே, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருந்தது.” 201 சிந்தித்துப் பாருங்கள். அவ்வேழு தரிசனங்களின் முன்னுரைத்தலில், ஐந்து ஏற்கனவே நிகழ்ந்து விட்டது. 202 கத்தோலிக்க சபையானது அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும், அதுவே முடிவு காலத்தின் வருகையாகும். 203 மேலும், “நான் தரிசனங்கண்டு கூறினேன்: எங்கும் அடிமரங்கள் எரிந்து கொண்டிருந்தது போல் இருந்தது. பாறைகள் வெடித்துச் சிதறியது. முழு அமெரிக்காவும் வெறுமையாக காணப்பட்டது. நான் நின்ற இடத்திலிருந்து என்னால் பார்க்க முடிந்தளவு எங்கும் பார்த்தாலும் அது அந்தவிதமாகவே காட்சியளித்தது” என்றே கூறினேன். 204 நான், “அத்தரிசனத்தின் சம்பவங்களைக் கொண்டு யாவும் 33-ம் ஆண்டு முதல் 77-ம் ஆண்டு முடிய உள்ள காலத்தில் ஒரு சமயத்தில் நடைபெற வேண்டும் என்று நான் முன்னுரைக்கிறேன்” என்றே கூறினேன். அது மிக மிக துரிதமாக நிறைவேறியே ஆக வேண்டும். 205 நண்பர்களே, நாம் ஒரு வெடிமருந்து பீப்பாய் மேல் உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறோம். யாவும் ஆயத்தமாக இருக்கின்றது.

93206 ஓ, ஆனால் வாக்களித்துள்ள எங்கள் விலையேறப்பெற்ற பரலோகப் பிதாவே, அவரே எங்களுக்கு வாக்களித்தார். கிறிஸ்துவின் ஊழியக்காரனாயிருப்பது அற்புதமானது அல்லவா? எல்லாக் காரியங்களையுமே அவர் வாக்களித்துவிட்டாரே! இதை எண்ணிப் பார்க்கையில், நாங்கள் சிலாக்கியம் பெற்றதை அறிகிறோம். அவர் இங்கே ஜீவித்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்பொழுதே எங்களோடிருந்து, எல்லா இருதயத்தின் இரகசியத்தையும் அறிந்தவராய், உங்களுடைய எல்லாவற்றையும் அறிந்தவராய் இருக்கிறார்; அக்கினி மயமான கண்கள் எங்களுடைய இருதயங்களை ஊடுருவிப் பார்க்கிறது, அவைகள் எங்களைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறது, அவர் எங்களை நேசிக்கிறார். 207 இன்றிரவு அந்த விசுவாசத்தை காத்துக்கொள்கிற அந்த சிறு மந்தைக் குழுவில் நீங்கள் இருப்பதற்காக மகிழ்ச்சியடையவில்லையா? ஏனென்றால், “பயப்படாதே, சிறு மந்தையே, உங்களுக்கு இராஜ்ஜியத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப் போவதில்லை” என்பது அவருடைய கட்டளையாயிருக்கிறது. பாருங்கள், நாம் சரியாக கடைசி காலத்தில் இருக்கிறோம்.

94208 பெந்தெகொஸ்தேயின் ஸ்தாபனங்கள் குளிர்ந்து போய், வெது வெதுப்பாக ஆகி, தேவனுடைய வாயிலிருந்து வாந்திப் பண்ணிப் போடப்பட்டு இருக்கிறது. 209 ஒரு சிறு கூட்டம் இங்கே வெளியே இழுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள், ஆனால் அவர்களில் தான். “இதோ மணவாளன் வருகிறார்” என்பது உண்டாகிறது. அந்த சத்தம் உண்டாகும்போது, ஒவ்வொரு ஜாமத்திலும் நித்திரையடைந்தவர்கள், ஒவ்வொரு ஜாமத்திலும் நித்திரையடைந்தவர்கள்… ஏழு ஜாமங்கள் உண்டு என்பது நினைவிருக்கட்டும். நாம் இந்த கடைசி ஜாமத்தில் இருக்கிறோம். ஆனால் அந்த ஒவ்வொரு ஜாமங்களினூடாகவும் மரித்த கன்னியர்கள் இங்கே உயிரோடெழுவர். ஆமென்! ஓ, அது என்ன? அதே பரிசுத்த ஆவியானவர். 210 சபையானது உள்ளே போய்விட்ட பிறகு…சென்ற ஞாயிற்றுக் கிழமை இரவில் நாம், யோசேப்பு எவ்வாறு தன் சகோதரரான இஸ்ரவேலுக்கு தன்னை வெளிப்படுத்திட விரும்பியபோது, அவன் தன் மணவாட்டியையும் மற்றும் எல்லோரையும் அனுப்பிவிட்டான் என்றும், அவர்களை அரண்மனைக்குள் அனுப்பிவிட்டான் என்றும் பார்த்ததுபோலவே இது உள்ளது. அவன் யூதர்களோடு தனித்து நின்று, “நான் உங்கள் சகோதரனாகிய யோசேப்பு” என்றான். 211 அவர்கள் ஒரு நாளை ஏற்படுத்தி அதில் அவருக்காக புலம்புவார்கள், ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியே புலம்பும் என்ற வேத வாக்கியத்தை சரியாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 212 அப்பொழுது அவர்கள், “இந்த வடுக்கள் உமக்கு எங்கே கிடைத்தன?” என்று கேட்பார்கள். “…உம்முடைய கைகளி…?” என்று கேட்பார்கள். “உம்முடைய கையில் உள்ள இந்த வடுக்கள் யாது?” என்று கேட்பார்கள். அதற்கு அவரோ, “என் சிநேகிதரின் வீட்டிலே உண்டானது” என்பார். 213 “அவரைக் குத்தினவர்கள் யாவரும் அவரை நோக்கிப் பார்ப்பார்கள்.” இதோ அங்கே அவர் யோசேப்பைப் போல் நிற்கிறார். 214 அப்பொழுது அவர், “வேண்டாம்…” என்பார். யோசேப்பைப் போல, “நீங்கள் உங்களுக்குள்ளே கோபப்பட வேண்டாம், ஏனென்றால் ஜீவரட்சனை செய்யும்படிக்கே தேவன் இதைச் செய்தார்” என்பார். அது என்ன? புறஜாதி சபையின் ஜீவனைக் காக்கும்படியாகத்தான். “புறஜாதிகளிலிருந்து அவருடைய நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்து கொள்வார்.”

95215 ஓ, என் சகோதரரே, நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். நாம் இங்கே இருக்கிறோம்! கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! நாம் இந்தப் பண்டைய நல்ல பாடலை, பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்ற சகோதர சகோதரிகளாக ஒன்று சேர்ந்து பாடுவோம். இப்பொழுது நீங்கள், “நான் ஒரு பாப்டிஸ்டு” என்று கூறலாம். ஆனால் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றிருந்தால், நீங்களும் பெந்தெகொஸ்தேக்கள் தான். உ—ஊம். சரி. சரி. கிறிஸ்தவ அன்பில் நம் இதயங்களை பிணைக்கிற அந்த சுட்டுகள் ஆசீர்வதிக்கப்படுவதாக; ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் மேற்கூறியது போன்றே இருக்கும். 216 இப்பொழுது, நண்பர்களே செவிகொடுங்கள். இங்கே நம் மத்தியில், யாரிடமாவது தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சிறிய கசப்புணர்ச்சி உங்கள் இருதயத்தில் வந்திருந்தால் (எனக்கு செவிகொடுங்கள்!) அதை இப்பொழுதே களைந்து போடுங்கள். அதை வெளியேற்றுங்கள், அதை அனுமதிக்க வேண்டாம்… [ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறாள். ஒலிநாடாவில் காலி இடம். ஒரு சகோதரன் ஒரு செய்தியைக் கூறுகிறார்.—ஆசி.] ஆமென். [ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசி, அதன்பின்னர் வியாக்கியானிக்கிறார்—ஆசி.] ஆமென். ஆமென்.

96217 கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் இந்த செய்திகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அது எங்களை எழுச்சியடையச் செய்கிறது, நாங்கள் அதைத் தவிர்த்துவிடாமல் அந்த விசுவாசத்தை காத்துக் கொண்டுள்ளோம் என்பதை கர்த்தாவே அறிந்திருக்கிறீர். ஓ, தேவனே, ஆவியானவர் சபையில் தொடர்ந்து தரித்திருக்க வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன். பிதாவே எங்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக வைத்தருளும். உம்மோடு எங்களை வைத்துக் கொள்ளும். நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த கடைசி குத்துவிளக்கின் காலத்தில், கர்த்தாவே எங்களுக்கு மத்தியில் உலாவும். எங்களுடைய வெளிச்சமாயிரும். கர்த்தாவே, இந்த பெரிதான அந்தகார வேளைகளில் எங்கள் மேல் பிரகாசியும், ஏனென்றால் அந்தக் குத்துவிளக்கு, நட்சத்திரங்கள் “அந்தகாரத்தைக்” குறித்து பேசுகிறதை நாங்கள் தெளிவாக உணருகிறோம். கர்த்தாவே நாங்கள் ஒளியின் பிள்ளைகளாயிருந்து, தேவனுடைய ஒளியில் நடக்கிறோம் என்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் பூமிக்குரிய காரியங்களினால் பூமிக்குரியவர்களாயிருக்கவில்லை, ஆனால் நாங்கள் உம்முடைய பிள்ளைகளாயிருக்கிறோம். நாங்கள் இந்தக் காரியங்களுக்காக உமக்கு எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம். 218 நீர் உம்முடைய வார்த்தையின் உறுதிபடுத்தலாக இந்த செய்திகளை அனுப்பினதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பிதாவே, நீர் எப்பொழுதும் எங்கள் மத்தியில் கனப்படுத்தப்படுவீராக. நீர் எங்களிடத்திலிருந்து உலகத்தின் கசப்பையெல்லாம் எடுத்துப் போடுவீராக. எங்களுடைய ஜீவியங்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, தூய்மையாய், சுத்தமாய், உமக்கு முன்பாக பரிசுத்தமாயிருக்கும்படி எங்களைக் காத்துக் கொள்ளும். கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் இரத்தமே இதை எங்கள் ஒவ்வொருவருக்கும் செய்வதாக. சரியில்லாத எந்தக் காரியமாவது காணப்படுமாயின், அதை எங்கள் மத்தியிலிருந்து எடுத்துப் போடும். கர்த்தாவே அதை எங்களிடத்திலிருந்து எடுத்துப் போடும். இதுவே ஆராய்ந்து பார்க்கிற வேளையாய் உள்ளது. 219 எங்களுடைய இருதயங்களை ஆராய்ந்து பார்க்குபடியான அந்த நோக்கத்திற்காகவே இந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நீர் உம்முடைய அக்கினி ஜூவாலையான கண்களோ, “இருதயத்தின் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து அறிந்துள்ளது” என்று கூறினீர். பிதாவே, நீர் நிச்சயமாகவே அதைச் செய்கிறீர். வந்துகொண்டிருக்கிற அந்த வேளைக்கு எங்களை தொடர்ந்து ஆயத்தம்படும்படி…எங்களிடத்தில் கூற எங்களிடத்தில் திரும்ப பேசும். 220 ஓ, பிதாவே, நாங்கள் இதற்காக உமக்கு எவ்வளவாய் நன்றி கூறுகிறோம். நாங்கள் உம்முடைய கிருபையினால் எங்களுக்குள்ள எல்லாவற்றோடும் அதைச் செய்வோம். ஆமென்.

97221 ஓ, நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? இப்பொழுது, நமக்கு மத்தியில் ஒரு அந்நியர் இருப்பாராயின், அது ஆதியில் இருந்தவிதமாகவே இருக்கும். இயேசுவானவர் இங்கே பூமியின் மேலிருந்தபோது, அவர் கூறினர், யாரோ ஒருவர் அவரிடம் விவாகமும் விவாகரத்தும் என்ற ஒரு காரியத்தை அல்லது ஏதோ ஒரு காரியத்தைக் குறித்துக் கேட்டபோது, அவர், “ஆதி முதலாய் அப்படியிருக்கவில்லையே” என்றார். எனவே ஆதிக்கே திரும்பிச் செல்ல வேண்டும். 222 ஆதியில் ஒரு பெந்தெகொஸ்தே சபை இருந்ததென்றால், அவர் திராட்சை செடியாயும், நாம் கொடிகளுமாயிருந்தால், ஒவ்வொரு முறையும் அந்த திராட்சை செடி ஒரு சபையை பிறப்பிக்கும்போது, அது ஒரு பெந்தேகோஸ்தே சபையாய், பெந்தெகோஸ்தே கொடியாகவே, அதாவது ஒவ்வொரு முறையும் அது ஆதியில் இருந்த அதேக காரியமாயிருக்கும். (புரிகிறதா?) நீங்கள் அதில் மற்ற செடிகளை ஒட்டுப் போட்டால் அது ஒட்டுப்போடப்பட்டதினுடைய கனியையே தரும். நீங்கள் ஒரு—ஒரு ஆரஞ்சு மரத்தில் ஒரு எலுமிச்சை மரக் கிளையை ஒட்டுப்போட்டால், அது ஆரஞ்சு மரத்தின் ஜீவனில் ஜீவித்துக் கொண்டு எலுமிச்சைப் பழங்களையேத் தரும். அதற்கு பக்கத்தில் கிச்சலி மரக்கிளையை ஒட்டுப் போட்டால் அது கிச்சலி பழத்தைக் கொடுக்கும், ஏனென்றால் அது ஒரு நாரத்தை எலுமிச்சை, கிச்சலி மரப்பேரினமாய் உள்ளது.

98223 ஆகையால், இந்த ஸ்தாபன அமைப்புகள், ஸ்தாபனங்கள் மற்றக் காரியங்கள் அங்கே ஒட்டப்பட்டு, கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றன, அவர்களால் கிறிஸ்தவ ஜீவியத்தின் மூலம் பிழைக்க முடியும். அது முற்றிலும் உண்மை, ஆனால் அவைகள் ஸ்தாபன கனிகளையே கொடுக்கும். அது உண்மை. காரணம் அந்தவிதமாக அவைகள் அங்கே ஒட்டவைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த கிளைதானே மற்றொரு கிளையை தோன்றப்பண்ணினால்…அதாவது அந்த திராட்சை செடி மற்றொரு திராட்சைக் கொடியை தோன்றப் பண்ணினால், அது…அது தனக்குப் பின்னே ஒரு அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தை எழுதும். அது முற்றிலும் உண்மை. காரணம் அதுதான் முதல் முறையில் சம்பவித்தது. ஆரஞ்சு மரத்தின் ஒவ்வொரு கிளையும் தன்னுடைய மற்றொரு கிளையை தோன்றப்பண்ணும்போது ஆரஞ்சு பழங்களையே ஒவ்வொன்றும் தரும். வேதமோ அது பன்னிரெண்டு கிளைகளை தன்மேல் உடையதாயிருந்தது என்றே உரைத்துள்ளது. 224 ஓ, நான் அந்தக் கிளையின் கீழே ஜீவிப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன், நீங்கள் அவ்வாறிருக்கவில்லையா? ஆம் ஐயா, ஓ, அது அற்புதமானது. 225 சரி, நாளை இரவு பிலதெல்பியா சபைக்காலம்…இல்லை சர்தை சபைக் காலம் என்பதை பார்க்கப் போகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் …? மார்டின் லூத்தரன்…லுத்தரன் ஸ்தாபனத்திலிருந்து வெளிவந்த …?… 