1 …இராஜா. என்னுடைய சகோதரர் சற்று முன்பு என்னிடம், இந்த கைக்குட்டைகள் புற்று நோயினால் இறந்து கொண்டிருக்கிற யாரோ ஒருவருக்காக ஜெபிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார். இன்னும் சிறிது நேரத்தில் நாம் அவைகளுக்காக ஜெபிப்போம். [சகோ.நெவில், “இங்கு இரண்டு விண்ணப்பங்கள் உள்ளன” என்று கூறுகிறார்—ஆசி.] இரண்டு ஜெப விண்ணப்பங்களா? சரி, நான் நல்லது… [“அவைகளில் ஒன்று. இந்த ஒன்று ஒரு விண்ணப்பம்.”] சரி, ஐயா. நான் அவைகளுக்காகவும் ஜெபிக்கும்படி அவைகளை இங்கே வைப்பேன்.
22 பின்பு, நாளைக்கு உள்ள ஆராதனையைப் பற்றி…ஒருவர் இங்கு சுற்றி வந்து ஒரு குறிப்பைக் கொடுத்தார். வெளியிலிருந்து இங்கு எங்கள் மத்தியில் விஜயம் செய்துள்ளவர்கள் நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு எங்கள் மத்தியில் இங்கு வர வேண்டும். அதைக் குறித்து நிச்சயம் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நாளை பிற்பகலில் அவர்கள் ஒலிநாடாவில் செய்திகளைக் கேட்கும் ஆராதனை கூட்டங்கள் நடத்தப்போகிறார்கள். நீங்கள் ஏற்கனவே கேட்டிராத ஒரு செய்தி அக்கூட்டத்தில் ஒலி நாடாவில் இயக்கப்படும், அதன் பிறகு ஜெபக்கூட்டம் நமக்கு இருக்கும். நாளை மதியம் உங்களுக்கு வேறு முக்கியமான அலுவல் ஏதுமில்லையெனில், வந்துவிடுங்கள். நமக்கு நிச்சயமாக நாளை மதியம் இரண்டு மணிக்கு நல்ல அருமையான வேளை உண்டாயிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். நாளை இரவும், ஞாயிறு காலை மற்றும் ஞாயிறு இரவுக் கூட்டங்கள் எனக்கு இருப்பதால், பாருங்கள், மிகவும் அலுவல்கள் உள்ள நாட்களாக அவை எனக்கு இருக்கப்போகிறது. அக்கூட்டங்களில் அந்த சபைக்காலங்களில் வரலாறுகளை எடுத்துக் கூற வேண்டியதுள்ளது.
33 இப்பொழுது, ஞாயிறு காலையில் கர்த்தருக்குச் சித்தமானால், ஒரு மகத்தான வேளை இருக்கும் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். சனிக்கிழமை இரவிலிருந்தே விடுமுறை தான்…லவோதிக்கேயா சபைக்காலம். ஞாயிறு காலையில் நான் நித்திரை செய்யும் கன்னியர், உயிர்த்தெழுதல், நாற்பத்து…மற்றும் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் ஆகியவற்றைப் பற்றியும், இந்தச் செய்தியோடு தொடர்புடைய அதை இணைக்கிற சில துண்டு துணுக்குகளையும் பற்றி நாம் எடுத்துக் கொள்வோம். நாளை காலை ஆராதனை ஒன்பது மணிக்கு துவங்கும். மேய்ப்பரே, சரி தானே? ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு, “நித்திரை செய்யும் கன்னியருக்கும், புத்தியுள்ள கன்னியருக்கும் என்ன நேரிடுகின்றது? அவர்கள் எப்பொழுது திரும்பி வருகிறார்கள்? அல்லது இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் எங்கே தோன்றுவார்கள்?” என்ற அதுபோன்ற காரியங்களை நாம் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். அதுபோன்ற அநேக காரியங்களை ஒன்றாக இணைந்து இந்த செய்தியோடு அது சரியாக பொருந்துவதை நாம் ஞாயிறு காலைக் கூட்டத்தில் கண்டு கொள்வோம். அதன் பிறகு ஞாயிற்றுக் கிழமை இரவில் லவோதிக்கேயா சபை காலத்திற்குரிய அந்த மகத்தான தூதனைப் பற்றியும், அதற்குரிய செய்தியைப் பற்றியும், கர்த்தருக்கு சித்தமானால் எடுத்துக் கொள்வோம்.
44 அதன் பின்னர், நாளை மதிய ஆராதனையில் இங்கே ஒலி நாடாவில் பதியப்பட்டிருக்கும் செய்தி ஒன்றினைக் கேட்போம். சகோதரர் ஜீன் அவர்கள் என்னிடத்தில் கூறினார், அதாவது அவர்கள்…நாம், நாளை மதியம் இரண்டு மணிக்கு கூட்டத்தைத் துவங்குவோம் என்றார். செய்திகளைக் கேட்க இங்கு வர விரும்புகிற ஜனங்களாகிய உங்களுக்கும், பீடத்தை சுற்றி நின்று ஜெபித்துக் கொள்ள விரும்புவோர்க்கும், பரிசுத்த ஆவியைத் தேடிக் கொண்டிருக்கிற உங்களுக்கும் அல்லது எந்த ஒரு காரியத்திற்கும் அது அற்புதமான வேளையாயிருக்கும். கர்த்தரைத் தேடிட வேண்டி, ஜெபிக்க விரும்பி இங்கே வர விரும்பும் எவருக்கும் எந்த வேளையிலும், இந்த சபையானது அருமையாகவும், உற்சாகத்தோடும் ஆயத்தமாக திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது. சபை கதவுகள் திறந்தும், உங்களுக்காக காத்துக் கொண்டும் இருக்கிறது. நாம்…அதேவிதமாகவே நாளை மதிய கூட்டத்திற்கு உங்களை ஆவலுடன் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.
55 எந்த வேளையில் வந்து ஜெபிக்க நீங்கள் விரும்பி வந்தாலும் சபையின் கதவுகள் உங்களுக்கு எப்பொழுதும் ஆயத்தமாக திறந்தேயிருக்கும். சில வேளையில் ஒரு வேளை கதவுகள் சாத்தப்பட்டு இருந்தால், இவ்வாலையத்தின் காவற் பொறுப்பாளராக இருக்கும் என் சகோதரன் வீடு இத்தெருவின் நேர் எதிர் மூலையில் உள்ள 411 என்ற எண் என்று நான் நினைக்கிறேன்…இல்லை. 811 கதவிலக்கம் உள்ளதில் வசிக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். (அதுதானே…?) 811, எனவே…அவரிடமோ அல்லது அவரது மனைவியிடமோ சாவி இருக்கும். கதவுகளை அவர்கள் இழுத்துச் சாத்தியிருந்தால், காலையில் ஒரு வேளை திறந்து வைப்பார்கள். இரவில் உள்ள ஆராதனைக்குப் பிறகு, கதவுகள் சாத்தப்படுகின்றன. ஏனெனில் பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடி விளையாடி, ஜன்னல்களை உடைத்து விடாமலிருக்கவே அவ்வாறு செய்கின்றனர். விசேஷமாக இந்நாட்களில் சிறு பிள்ளைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அந்த காரணத்திற்காகவே நாங்கள் அதை மூடி வைக்கிறோம். எந்த வேளையாயிருந்தாலும் சபையின் கதவுகளை மூடி விடுவதை நாங்கள் வெறுக்கிறோம். வேறொரு கட்டிடம் நாம் கட்டியபிறகு, அதில் நாம் வேறு ஏற்பாடு செய்து, எப்பொழுதும் கவனித்துக் கொள்ள ஒருவரை ஏற்பாடு செய்து, அதினால் ஜனங்கள் எந்த நேரத்திலும் இங்கே வந்து ஜெபித்து, வியாதியிலிருந்து விடுதலையடையவும் பரிசுத்த ஆவியைப் பெறவும் தேடலாம். 6 உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியைப் பெற்றிராதவர்கள், இங்கே வந்து இராமுழுவதும் தங்க விரும்பினாலும் தங்கி ஜெபியுங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரையிலும் தங்கியிருங்கள்.
67 சற்று முன்பு, “தேவன் என்னில் எங்ஙனம், முழுவதிலும், தேவன் எங்கும் இருக்கிறார்” என்ற பாடலை பாடியது யார்? நான்—நான் கூட எடுத்துக் கொள்ளப்படுதலே வந்து விட்டதோ என்றெண்ணி, சுற்றுமுற்றும் பார்த்து, யாவரும் இங்கிருக்கிறார்களோ என்று தேடினேன். அது உண்மையிலேயே அற்புதமானதாயிருந்தது; நான் அதைப் பாராட்டுகிறேன். நாம் அதை எவ்வளவு நேரம் கேட்டாலும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். ஆம் ஐயா. அதாவது…நான் அதைக் கேட்கும்படியாக நேரத்தோடே உள்ளே வந்துவிட்டேன். 8 இந்தக் கூட்டங்களிலெல்லாம் நான் நல்ல பாடல்களை கேட்கத் தவறிவிட்டேன். ஏனெனில் நான் எண்ணினேன். ஒரு வேளை அந்த… ஓ, நான் மிகவும் அதிகமான அலுவலில் இருந்துவிட்டேன். அது எப்படிப்பட்டதென்று நீங்கள் அறிவீர்கள். மக்கள்—மக்கள் விமானத்திலும், இரயில் வண்டியிலும் வந்து கொண்டேயிருக்கிறார்கள்… நீங்கள்—நீங்கள் அதை ஒருபோதும் அறியீர்கள், நீங்கள் பாருங்கள், ஏனென்றால் தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள். அவர்களையெல்லாம் போய் சந்தித்து, அவர்களுக்காக போய் ஜெபிக்க வேண்டியுள்ளது. இந்தக் காரியம் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது. அதுவுமல்லாமல், ஆய்ந்து படிக்கவும் வேண்டியது உள்ளது. அது சரியான பிரச்சினையைத் தோற்றுவிக்கிறது. ஆனால் நாங்கள் எப்பொழுதும், மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களுக்காக எங்களால் முடிந்ததை செய்கிறோம், ஏனென்றால் அது…அதாவது எங்களுடைய… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜனங்களுக்குரிய பொது வேலைக்காரனாக இந்நாளில் நாங்கள் இருக்கிறோம். இப்பொழுது நாங்கள் செய்வதைவிட இன்னும் அதிகமாக செய்ய விரும்புகிறோம், ஆனால் எங்களால் செய்ய முடியவில்லை.
79 இன்று காலையில் ஒரு அருமையான நபரான ஊழியக்காரர் அதிக உழைப்பினால் தளர்ச்சியடைந்து, நிலைகுலைந்து போன நிலையில், மயக்க நிலையில் என்னிடம் கொண்டு வரப்பட்டார். ஏனென்றால் அவர்…அவர் அதிகமாய் வேலை செய்திருந்தார். அவர் எழும்பியபொழுது, அவரது சிறிய மகள் அறையில் நின்று கொண்டிருந்திருந்தாளாம். அவரது பார்வையில் அவரது மகள் அப்படியே சுழலுவதுபோல் தெரிந்திருக்கிறது. அவள் சிவப்பு நிற தளர்ச்சியான இரவு ஆடை அணிந்திருந்தாளாம். அவர் மூர்ச்சையடையும் முன்னர், கடைசியாக அவர் பார்வைக்கு ஒரு சிவப்பு நிற புள்ளி மட்டுமே சுழன்று சுழன்று கொண்டிருந்ததாக அவர் கூறினார். அப்படியே அவர் மூர்ச்சையடைந்த நிலையில் ஆகிவிட்டார். உடனே அவர்கள் அவரை விரைவாகக் கொண்டு வந்துவிட்டார்கள். அதிகமான உழைப்பு, நீங்கள் பாருங்கள். முழு பாரமும் நம்மேல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் நினைத்துப் பார்க்கிறோம் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். ஆனால் தேவன் தம்முடைய ஊழியக்காரரை எங்கும் வைத்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நம்மால் முடிந்த அளவுக்கு சிறப்பானதை நாம் செய்கிறோம். ஆனால் அந்த தயவுள்ள ஊழியக்காரர் இக்கடைசிக் காலத்தில் தன்னுடைய கர்த்தருக்காக தன்னால் முடிந்ததையெல்லாம் செய்ய முயற்சிக்கிறார். நானும் நிச்சயமாக…கர்த்தர், அவரை சரியாக அங்கே விடுவித்து, அவரை திரும்ப அவரது இயல்பு நிலைக்குள் கொண்டு வந்து சரிப்படுத்தினார். அவர் அருமையான நபராயிருந்தார். அவர் களிகூர்ந்தவராய் தன் வழியே போனார்.
810 ஓ, இன்று ஒரு மகத்தான காரியம் சம்பவித்தது. அந்த விஷயங்களைப் பற்றி பேசத்துவங்க நான் விரும்பவில்லை. ஆனால்…உங்களுக்குத் தெரியுமா? நான் என் மனைவியிடம் கூறினேன்: அதாவது நான், “ஒரு மனிதன் வருவார், அவர் குட்டையாகவும் கனத்த சரீரமுள்ளவராகவும், கருமையான முடியும், கருமையான கண்களும் உடையவராயிருப்பார். அவர் வந்து அந்த எழுதப்பட்டுள்ள அறிவுப்புப் பலகையை வாசித்து விட்டுப் புறப்படுவார். ஆனால் அப்பொழுது அவரை நீ கூப்பிடு, பாருங்கள். ஏனெனில் கர்த்தர் அவருக்காக ஒரு செய்தியை வைத்திருக்கிறார்” என்றேன். நான் எழுந்து, வேதத்தை திறந்து வைத்து, பின்னர் நான், “அம்மனிதன் செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிற காரியங்களை நீங்கள் சரியாகக் காணும்படி நான் இங்கே இந்தக் காரியங்களை இங்கே வைக்கப் போகிறேன்” என்றேன்.
911 எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக போலந்தில் பிறந்து வளர்ந்த ஒரு போலந்து தேசத்தவர்… என்னுடைய ஒரு கூட்டத்தில் மேடைக்கு வந்தார். அவர்கள் கூறினார்கள்… இல்லை, பரிசுத்த ஆவியானவர் அவரை பார்த்து, “நீ குழப்பமடைந்திருக்கிறாய்” என்று கூறினார். நான் அதைக் கூறினேன் என்று அந்த மனிதர் நினைத்தார். ஆனால் பரிசுத்த ஆவியானவர்தான் அதைக் கூறினார். ஆயினும் அந்தக் குழப்பம் அவரோடு அப்படியே தொடர்ந்து இருந்து வந்தது. கடைசியில் கடந்த இரவில் பரிசுத்த ஆவியானவர் அவரை கான்சாஸ் நகரத்திலிருந்து இந்த கட்டிடத்திற்கு இழுத்துக் கொண்டு வந்தார். அதன் பிறகு, அவர் தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பற்றி கேட்டபோது உண்மையாகவே அவர் குழப்பமடைந்து விட்டார். அவர் தனது உணவக விடுதி அறைக்குத் திரும்பிச் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர் அவரிடம், “இப்பொழுது எழுந்திருந்து அவரிடம் செல்” என்று கூறியிருக்கிறார். யாரோ ஒருவர் அவரோடு கூட வர விரும்பியிருக்கிறார். ஆனால் அவரோ, அவரை கூட்டிக் கொண்டு வர விரும்பவில்லை. ஏனெனில் எனக்குக் காண்பிக்கப்பட்ட தரிசனத்தில், அவர் ஒருவர் மாத்திரமே வரப்போகிறதாகக் காண்பிக்கப்பட்டது. புரிகிறதா? அவர் பெருந்தகையோரைப் போலக் காணப்பட்டார். அவ்வாசகத்தை வாசித்துவிட்டு, அவர் திரும்பிப் போக முற்பட்டார். அப்பொழுது என் மனைவி என்னை அழைத்தாள். நான் வாசலண்டை சென்று, “அவர் தான் அந்த—அந்த மனிதர், அவர் இங்கே வரட்டும்” என்றேன். 12 அவர், “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அவர் அதைக் கண்டு கொண்ட பிறகு, “இப்பொழுது நான் அதைப் புரிந்து கொள்கிறேன்” என்றார். அப்பொழுது நான், “நீங்கள் பாருங்கள், நீர் இப்பொழுது இதை அறிந்து கொள்ளும்படியாய் நான் இதை உமக்கு காண்பிக்க விரும்புகிறேன்” என்றேன். மேலும் நான், “நீ வரப்போவதாயிருந்ததை கர்த்தர் முன் கூட்டியே என்னிடம் அறிவித்துவிட்டார்” என்று கூறினேன்.
1013 இப்பொழுது அவர் இங்கே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறும்படி இங்கே இருக்கிறார். எனவே …?… எனக்குத் தெரிந்த வரை அவர் இங்கே இப்பொழுது அமர்ந்திருக்கக் கூடும் என்று கருதுகிறேன். சகோதரனே, நீர் இங்கே தான் இருக்கிறீரா? போலந்து தேசத்து சகோதரர் அவர். ஹூ? ஆம், பின்னால் அந்த மூலையில் அவர் அமர்ந்திருக்கிறார். ஆம். எழுப்புங்கள்…உங்களை யாவரும் பார்க்கும்படி தயவு செய்து உங்கள் கரத்தை உயர்த்திக் காண்பியுங்கள். சரி. பரிசுத்த ஆவியின் கிரியையைப் பாருங்கள்…அது எல்லா நேரங்களிலுமே சம்பவிக்கிறது. தரிசனங்கள் மேடையில் தான் வரும் என்று எண்ணுகிறார்கள். ஓ, அங்கே மட்டும் அது ஏற்படுகிறதில்லை. சகோதரன் லியோ அவர்களே, அதைப் பற்றி என்ன? அது எங்கும் ஏற்படுகிறது என்பதைப் பாருங்கள். நல்லது, நடந்தவற்றில் இது ஒரு சிறு பாகம் தான். இது சிறிதளவு தான் இங்கே நடைபெற்றது. அங்கே அது இரவும் பகலும் நடைபெறுவதுண்டு. நீங்கள் பாருங்கள். ஆம், என் மனைவியையும், அவளை…அல்லது அங்கே உள்ள என்னுடைய அண்டை வீட்டுக்காரராகிய சகோதரன் வுட் அவர்களையும், மற்றும் சுற்றியுள்ளவர்களை கேட்டுப்பாருங்கள். ஓ, என்னே! இங்கே சிறு—சிறு காரியங்கள் தான் நடைபெற்றுள்ளன. ஆனால் அங்கோ பெரிய காரியங்கள் தான் நடை பெற்றுள்ளன. அவற்றில் பாதி கூட வெளியில் கூறப்படவேயில்லை. ஓ! நமது கர்த்தர் சீக்கிரமாக வரப்போகிறார். அப்பொழுது நாம் அவரோடு என்றென்றும் இருப்போம் என்பதை நான் அறிந்து கொண்டதில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். சதாகாலமும் அல்ல, ஆனால் நித்தியமாக இருப்போம், நித்தியமாக இருப்போம்.
1114 கர்த்தருக்குச் சித்தமானால், அது ஞாயிற்றுக் கிழமை பதினெட்டாம் தேதி என்று எண்ணுகிறேன். ஞாயிறு, பதினெட்டாம் தேதி, எனக்கு கடுமையான போராட்டம் உண்டாயிருந்தது. சாத்தான் இந்தப் பகுதியில் இங்கு எங்கும் காணப்படுகிற சளிக் காய்ச்சலை எனக்குக் கொடுக்க முயற்சித்துக் கொண்டேயிருந்தான். நானோ அதை அவனிடமே திருப்பிக் கொடுத்துக் கொண்டேயிருந்தேன்: அவன் அதை என்னிடமே கொடுக்கப் பார்த்தபோது, நான் அவனிடமே அதை திருப்பிக் கொடுத்துவிட்டேன். எனவே…எனவே எனக்கு சரியானதொரு போராட்டம் உண்டாயிருந்தது. ஆகையால் நாம் அநேகமாக அடுத்த வாரமும் போராடுவோம். அதன்பின்னர் கர்த்தருக்கு சித்தமானால், வரும் ஞாயிற்றுக் கிழமைபோக அதற்கடுத்த ஞாயிற்றுக் கிழமையாகிய 18-ம் தேதி நமக்கு வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கிற ஒரு ஆராதனையை நடத்த முயற்சிக்கப் போகிறோம், ஏனென்றால் அவர்கள்…மிகவும் அவசரமான பிணியாளிகளுக்கு மட்டும் நம்மால் முடிந்த வரையிலும் ஜெபித்து விட முயற்சிப்போம். எந்த இராத்திரியில் வந்து போனாலும் நாம் அவர்களுக்காக அதைச் செய்கிறோம். எனவே பதினெட்டாம் தேதி நமக்கு வழக்கமான தெய்வீக சுகமளிக்கும் கூட்டம் உண்டாயிருக்கும். உங்களுக்குப் பிரியமானவர்கள் யாருக்காவது ஜெபிக்க வேண்டுமென்றால், அவ்வேளையில் நீங்கள் அவர்களை அழைத்து வரலாம்.
1215 ஜெபர்ஸன்வில்லைச் சேர்ந்த அநேக ஜனங்கள் என்னிடம், தாங்கள் காலை கிட்டத்தட்ட ஐந்து அல்லது (ஆறு) மணிக்கே இங்கே வந்துவிடுவதாகவும், ஆனால் தாங்கள் கார்களைக் கொண்டு வந்து நிறுத்துவதற்குக் கூட இடமில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனவே அவர்கள்…அப்பொழுது நான், “பரவாயில்லை, நீங்கள்…இவர்கள் வெளியூர்களிலிருந்து விஜயம் செய்துள்ள அநேக சகோதரர்களும், ஊழியக்காரர்களுமாவர்” என்றேன். மேலும் நான், “இந்த மகத்தான செய்தியின் உபதேசத்தைத் தீவிரமாகக் கேட்டறிந்து கொள்வதில் இவர்கள்—இவர்கள் கவனமாக இருக்கிறார்கள்” என்றேன். 16 நாம் இவற்றின் சாரமான முக்கியப் பகுதிகளை ஆராய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அதற்குப் பிறகு, சிறிது காலத்தில், இவற்றை புத்தகவடிவில், இன்னும் சற்று கூடுதலானவைகளை சேர்த்து நீங்கள் படித்துப் பார்க்கத்தக்கதாக, புத்தகமாக வெளியிடுவோம். ஏனென்றால் இரவு… கடந்த இரு இரவு நேரங்களில், நான் இங்கே உரக்க சத்தமிடாமல் பேசியதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஏனெனில் பெரிய உச்சகட்டமான விஷயம் வரும்போது அதையே முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அங்கே தான் கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் இக்காலத்தில் உண்டாகிறது. அது என்னவென்பதைக் குறித்துப் பாருங்கள்.
1317 இப்பொழுது நாம் வேதவாக்கியங்களை வாசிப்பதற்கு முன்னர்… நாளைய தினம் நாம், நமது சனிக்கிழமை இரவு மளிகை சாமான்களை வாங்கும் பெரிய வாணிப நாளாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். அவைகளை நாம் சனிக்கிழமை காலையிலோ அல்லது மதியத்திலோ வாங்கியாக வேண்டும். அதினால் சனிக்கிழமை இரவு கூட்டத்திற்கு நாம் வருவதற்கு வசதியாக இருக்கும். எனவே நீங்கள் நாளை இங்கு வர அதிகக் களைப்படையாதபடிக்கு, நாங்கள் இன்றிரவில் சீக்கிரமாக முடித்து அனுப்பி விட முயற்சி செய்வோம். அதினால் நாளை மதியம் ஒலி நாடாவிலிருந்து செய்தி கேட்கும் ஆராதனையில் கலந்து கொள்ளவும், இரவு ஆராதனையில் கலந்து கொள்ளவும் உங்களுக்கு வசதியாயிருக்கும். நீங்கள் விரும்பினால், நாம் இப்பொழுது சற்று ஜெபத்திற்காக எழும்பி நிற்போமாக. 18 நாம் ஜெபிப்பதற்கு முன்பாக, இங்கு யாருக்காவது விசேஷித்த ஜெப வேண்டுகோள் இருக்குமா என்று நான் எதிர்பார்க்கிறேன், நீங்கள் அதை தங்கள் கரங்களை உயர்த்திக் காண்பிப்பதின் மூலம் தெரியப்படுத்தலாம். தேவன் காண்கிறார். இப்பொழுது நாம் தேவையுள்ள ஒரு உலகத்தில் இருக்கிறோமா அல்லது இல்லையா என்பதை சகோதரரே நீங்கள் பார்க்கலாம். இங்கு குழுமியுள்ளவர்களில் தொண்ணூற்றைந்து அல்லது தொண்ணூற்றெட்டு சதவிகித மக்கள் தங்கள் கரங்களை அதற்காக உயர்த்தியுள்ளனர் என்றே நான் யூகிக்கிறேன்… இப்பொழுது தேவன் அதை அறியாமல் உங்களால் அசையவும் கூட முடியாது என்பதை நினைவில் வையுங்கள். புரிகிறதா? அவர் உங்களுடைய உள் நோக்கங்களை அறிவார், நீங்கள் எதற்காக வேண்டிக் கொள்கிறீர்கள் என்பதையும் அவர் அறிவார். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
1419 கிருபையுள்ள பரலோகப் பிதாவே, இன்றிரவு நாங்கள் உமது பரிசுத்தத்தை, எங்கள் ஜெபத்திற்கு செவிகொடுப்பீர் என்று நீர் கூறின உமது வாக்குத்தத்தத்தின் மூலமாக உமது சிங்காசனத்தை நாங்கள் அணுகிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் விசுவாசித்தால், நாங்கள் கேட்பவைகளை நீர் எங்களுக்குத் தருவீர். எங்களுடைய எல்லா தவறுகளையும் நாங்கள் உம்மிடம் அறிக்கை செய்கிறோம். உம்முடைய எந்தவொரு ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள நாங்கள்—நாங்கள் பாத்திரர் அல்ல என்பதை நாங்கள் தெளிவாக உணருகிறோம். நாங்கள்—நாங்கள் பாத்திரமானவர்கள் அல்ல—நாங்கள் முழுவதும் அபாத்திரராயிருக்கிறோம். நாங்கள் ஏதோ தகுதியுள்ளவர்கள் என்றும், நாங்கள் ஏதோ மகத்தான காரியத்தை செய்து விட்டோம் என்பதுபோல நாங்கள் உம்மண்டை வரவில்லை. ஓ, பிதாவே, நாங்கள் கல்வாரியை நோக்கிப் பார்க்கையில், அது எங்களிடத்திலிருந்து எல்லா மேன்மையானவைகளையும் எடுத்துப் போட்டுவிடுகிறது, அப்பொழுது நாங்கள்—நாங்கள் கிறிஸ்துவையும், சிலுவையில் அறையப்பட்ட அவரையும் தவிர வேறு எதையும் அறியமாட்டோம். பின்பு மூன்றாம் நாளில் வேதவாக்கியத்தின்படி, எங்களை நீதிமான்களாக்க அவர் மரித்தோரிலிருந்து எழும்பி, நாற்பது நாட்கள் கழித்து எங்கள் மத்தியில் வாசம் பண்ணும்படி, அவர் திரும்பி பரிசுத்த ஆவியின் ரூபத்தில் வந்திருக்கிறார் என்றும், அவர் மீண்டும் கடைசி காலத்தில் காணும்படியாக ஆகாயத்தில் தோன்றுவார் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். இப்பொழுது கடைசி காலமானது உண்மையாகவே மிகவும் தீவிரமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. கர்த்தாவே, நாங்கள் மிகவும் சந்தோஷமான மக்களாக இருக்கிறோம். ஏனெனில் நீர் எங்களுக்கு இந்த மகத்தான சிலாக்கியத்தை தந்திருக்கிறீர்.
1520 பிதாவே, இருதயங்களை தாழ்த்தினவர்களாக, அமைதியாக அமர்ந்து செவி கொடுக்கிறவர்களாக உள்ள இந்த செவி கொடுக்கிற சபையாருக்காக உமக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் …?… .மேலும் கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு பிரசங்கிக்க உம்முடைய பிரசங்க பீடத்தண்டை நான் இன்றிரவிலும், ஒவ்வொரு இரவிலும், ஒவ்வொரு நேரத்திலும் வருகையில், என்னுடைய உதடுகளை நீர் பரிசுத்தமாக்க வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன். காரணம் கர்த்தாவே, நான் ஒரு போதும் பிழையானவைகளை பேச விட்டு விடாதேயும். சிங்கங்களோடு தானியேல் இருக்கையில் அவைகளின் வாயை நீர் அடைத்ததுபோல, இன்றைக்கும் வாய்களை அடைக்க நீர் வல்லமையுடையவராயிருக்கிறீர். உம்முடைய சித்தத்தின்படியில்லாத எதையாவது நான் எப்பொழுதாவது சொல்லப் போவதாக இருந்தால், நான் அதைப் பேசாதபடி, கர்த்தாவே, முன் கூட்டியே என் வாயை அடைத்தருளும் எனது சிந்தனைகள் தவிகக்கப்படட்டும். என்னை சரியான பாதையில் நிலை நிறுத்தியருளும், கர்த்தாவே. அப்பொழுது நான் உமது சத்தியத்தைத் தவிர வேறெதையும் பேசாதிருப்பேன். அந்த மகத்தான் நாளிலே இந்த ஜனங்கள் அப்பால் உள்ள தேசத்தில் காத்திருப்பார்கள் …அதாவது எனக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தின்படி நான் அவர்களுக்கு பிரசங்கித்ததைப் பற்றிக் கொண்டதினால் அங்கே காத்திருப்பார்கள் என்பதை நான் தெளிவாக அறிவேன். நீர் உம்முடைய நட்சத்திரங்களில் யாரையாவது, உமது தூதர்களில் எவரையாவது, உம்முடைய ஊழியக்காரர்கள் யாரையாவது உமது பணி செய்கிறவர்கள் யாரையாவது எடுக்க வருகிறீரென்றால், முதலாவதாக, இங்கு பிரசங்கிக்கப்பட்டு வரும் இந்த செய்திகளின்படியே அவர்கள் தூற்றுக்கூடையினால் நன்கு விளக்கப்பட வேண்டும். நீர் உம்முடைய ஊழியக்காரர்களை அதற்காக பொறுப்பாளிகள் ஆக்குவீர். 21 இப்பொழுதும் பிதாவே, நீர் மனிதனல்ல, பரிசுத்த ஆவியானவரே பேசிடச் செய்தருளும் என்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் அவருக்கு செவிகொடுக்கத்தக்கதாக, எங்கள் இருதயங்களை விருத்தசேதனம் செய்தருளும். பிதாவே நானும் செவி கொடுத்துக் கொண்டிருப்பேன். வியாதிப்பட்டவர்களையும், துன்பப்படுபவர்களையும் நீர் குணமாக்க வேண்டுமென ஜெபிக்கிறேன். எங்கும் தேவையுள்ளவர்களாக இருக்கும் அனைத்து மக்களோடும், உமது கிருபையும் இரக்கமும் இருப்பதாக. கைகளை உயர்த்திக் காண்பித்ததின் மூலம் தங்களது ஜெப வேண்டுகோள்களைத் தெரியப்படுத்திய ஒவ்வொருவரது வேண்டுகோள்களுக்கும் ஏற்றவாறு அருளிச் செய்யும். தேசத்தின் தொலைதூரங்களில் துன்புற்றுக்கொண்டிருக்கிற மற்ற அநேகருக்காகவும், இந்த சுட்டிக்காட்டும்படியாக உள்ள உருமால்கள் செல்லுகிற ஜனங்களுக்காகவும், என் கரத்தின் கீழேயுள்ள இந்த வேண்டுதல்களுக்காகவும் நான் ஜெபிக்கிறேன். பிதாவே பரிசுத்த ஆவியானவர் தாமே அவர்கள் ஜெபத்திற்கு பதிலளித்து, வியாதியஸ்தரைக் குணமாக்குவாராக. எழுதப்பட்ட உம்முடைய வார்த்தையினூடாக உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக இப்பொழுது எங்களோடு பேசியருளும். நாங்கள் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம்.
1622 இன்றிரவில், இப்பொழுது, சபைக்கட்டிடத்தில் சற்று வெப்பமாக இருக்கிறது. மகத்தான லவோதிக்கேயா சபைக்கால செய்தி வந்து கொண்டிருக்கிறது. இன்றிரவில் ஐந்தாம் சபைக் காலமாகிய அந்த மற்றொரு மகத்தான சபைக் காலத்தை நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம். நாம் முதலாம் சபைக் காலமாகிய எபேசு சபைக்காலத்தைப் பற்றிப் பார்த்திருக்கிறோம். இங்கு எழுதி வைத்துள்ள குறிப்புகளிலிருந்து, ஆரம்பத்தில் சொல்லப்பட்டவைகளை நான் மீண்டும் உங்களுக்கு வாசிக்கப் போகிறேன், அதினால் நீங்கள் உங்கள் தாள்களில் குறித்து வைத்துள்ளவைகளோடு சரிபார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
1723 முதலாம் சபைக்காலம் எபேசு சபைக்காலமாயிருந்தது. அது கி.பி.55 முதல் 170 முடிய நீடித்தது. பவுல்தான் அச்சபைக் காலத்திற்குரிய நட்சத்திரமாக விளங்கினான். அது முதலாம் சபைக்காலமாகும். அவர்களைப் பற்றிய தேவனுடைய குறை என்னவெனில், “அன்பற்ற கிரியைகள்” அவர்களுக்குக் கொடுக்கப்படும் பலனானது, “ஜீவ விருட்சம்” ஆகும். 24 இரண்டாவது சபைக்காலம் கி.பி.170 முதல் 312 முடிய நீடித்தது. ஐரேனியஸ் தான் அச்சபைக் காலத்தின் தூதனாவார். குறையானது…அதாவது அச்சபை உபத்திரவங்களின் வழியாக கடந்து சென்றது. அது உபத்திரவப்படுத்தப்பட்ட சபையாக இருந்தது. அதற்கு அளிக்கப்படும் பலன், “ஜீவ கிரீடம்” ஆகும். 25 மூன்றாம் சபைக்காலம் பெர்கமுவாயிருந்தது. பரிசுத்த மார்ட்டின் அச்சபைக் காலத்திற்குரிய தூதனாவார். அந்த சபைக் காலம் கி.பி.312 முதல் கி.பி.606 முடிய நீடித்தது. அச்சபைக் காலத்தைப் பற்றிய குறை என்னவெனில், “கள்ள உபதேசம், சாத்தானின் பொய், போப்பு மார்க்க ஆளுகைக்கு அஸ்திவாரமிடுதல், அரசும் சபையும் ஒன்றாக இணைதல்” என்பதாயிருந்தது. ஜெயங்கொள்ளுகிறவனுக்கு அளிக்கப்படும் பலனானது, “மறைவான மன்னாவும், வெண்குறிக்கல்லும்” ஆகும். 26 நான்காவது சபைக்காலமானது தியத்தீராவாகும்; கொலம்பாதான் அச்சபைக் காலத்திற்குரிய தூதனாவார். இச்சபைக் காலம் கி.பி.606 முதல் 1520 முடிய நீடித்தது. இந்த சபைக்காலத்தில் தான் போப்பு மார்க்க வஞ்சனை ஏற்பட்டது. இருண்ட காலங்கள் என்று அது அழைக்கப்படுகிறது. (கடந்த இரவில் இருண்ட காலங்களைப் பற்றி படித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்). அக்காலத்தில் அளிக்கப்படும் பலனானது, “ஜாதிகளை ஆளுகை செய்வது, விடிவெள்ளி நட்சத்திரம்,” தூதனுக்கு கொடுக்கப்படுகிறது.
1827 இப்பொழுது இன்றிரவில் நாம் ஐந்தாம் காலத்தைப் பற்றித் துவங்கப்போகிறோம். இச்சபைக்காலம், சர்தை சபைக்காலம், ச—ர்—தை, சர்தை என அழைக்கப்படுகிறது. இந்த சபைக் காலத்திற்குரிய தூதன் மார்ட்டின் லூத்தர் ஆவார். இவர் இன்றைக்கு வேத பண்டிதர்களுக்கும், வேத போதகர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் கூட நன்கு அறிமுகமானவர் ஆவார். இந்த சபைக்காலமானது கி.பி.1520-ம் ஆண்டு தொடங்கி கி.பி.1750-ல், 1520-லிருந்டு 1750-ல் முடிவுற்றது. இந்தக் காலத்தை நாம் “சீர்திருத்தக்காலம்” என்று அழைக்கிறோம். இச்சபைக் காலத்தைப் பற்றிய குறை என்னவெனில், “தங்களுடைய சொந்த நாமத்தைக் கொண்டிருத்தல்” என்பதாயிருந்தது. இச்சபைக்காலத்தில் சிறுபான்மையினரான அந்த மீதியானவர்களுக்கு அளிக்கப்படும் பலன் என்னவெனில் “வெண்வஸ்திரம் தரித்து அவருக்கு முன்பாக நடத்தலும், ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் அவர்களுடைய பெயர் காணப்படுதலுமேயாகும்.” நாம் இதை படிக்க எடுத்துக் கொள்கையில் கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. 28 இப்பொழுது இந்த சபைக் காலத்திற்கு, வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தின் முதலாம் வசனத்திலிருந்து நாம் துவங்குவோம். சர்தை சபைக்குரிய செய்தி, சீர்த்திருத்தத்தின் காலம், விசுவாசிக்கிற ஒரு சிறு மீதியான கூட்டம், ஏறக்குறைய அற்றுப் போகும் நிலை.
1929 இதைப்பற்றி நான் மீண்டும் இங்கே சொல்வதற்குக் காரணம்,…அதாவது புதிதாக வந்திருப்பவர்கள் இவ்விஷயங்களில் பின் தங்கியிருக்காமல் இருப்பதாற்காகத்தான். இது சரியாகக் கூறினால் சற்று மெருகில்லாததாகக் காணப்படுகிறது என்பதாயிருக்கலாம். சில வேளையில் நாம் நம்முடைய செய்திகளை மதிய வேளையில் வந்து, அவற்றை வரைந்து வைத்து விடுவோம். ஒரு வேளை ஞாயிற்றுக் கிழமையில் அதைச் செய்வோம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழு ஆகிய சபைகளைக் குறிப்பாகக் காட்டும் படியான படத்தை வரைவோம். இது பிலதெல்பியா சபையில் ஆரம்பிப்பதாக அது இருக்கும்… 30 முதலாவதாக உள்ள இந்த சபை, பெந்தெகொஸ்தேயின் வல்லமைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறது. அதாவது அது பெந்தெகொஸ்தே நாளில் ஏற்பட்ட ஒரு சபையாகும். ஆனால் அவர்கள் பின்காலத்தில், “நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்” என்று அழைக்கப்படும் ஒரு—ஒரு—ஒரு ஸ்தாபன ஆவியை அவர்களுக்கு மத்தியிலே அனுமதித்து, துவக்கத்திலேயே சபையை மிகவும் பெரியதாக்க, ஸ்தாபனமாக ஆக்கிட முயற்சித்தனர். பின்னால் இருப்பவர்களுக்கு நான் பேசுவது கேட்கிறதா? கேட்கிறதா? சரி. அது முதலில் “நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்” என்பதாக இருந்தது. அது இன்னமும் அப்பொழுது ஒரு போதகமாக மாறவில்லை. “கிரியைகள்,” “நிக்கொலாய்” என்ற வார்த்தையை நாம் பிரித்து அது எத்தகையது என்பதைப் பற்றி பார்த்தோம். நிக்கொலாய் மதஸ்தினர், அது நமக்கு ஒரு அன்னிய பெயராயிருக்கிறது, எனவே நான் கிரேக்க மொழி அகராதியை எடுத்துப் பார்த்து அதன் அர்த்தம் என்னவென்பதை பிரித்துப் பார்த்தேன். “நிக்கோ” என்றால் “ஜெயிப்பது” அல்லது “மேற்கொள்ளுவது” என்று அர்த்தம் அல்லது ஒன்றை “கீழே வீழ்த்துதல்” என்று பொருள். “நிக்கொலாய்டேன்” லெய்டின் என்றால் “லெய்டி” சபையைக் குறிக்கும். “நிக்கொலாய்டேன்” அது சபையை அதற்குரிய ஸ்தானத்திலிருந்து கீழே விழத் தள்ளும் ஒரு—ஒரு கிரியையாகும். இது சபையின் மேல் ஒரு தலைமையான நபரை ஏற்படுத்தி, அல்லது பேராயர் போன்றவரை ஏற்படுத்தி அவர் மேல் அனைத்து ஆசீர்வாதங்களையும் சாற்றி, வேதத்தை அவர் ஒருவர் மாத்திரமே படிக்கலாம். அவர் ஒருவர் மாத்திரமே வியாக்கியானம் அளிக்கலாம் என்பதாயிருந்தது.
2031 அதன்பின்னர் இரண்டாவது சபைக்காலத்தில் சபையானது இன்னமும் ஒடுக்கப்பட்டது என்று பார்த்தோம். முதலாவது இன்னமும் பெந்தெகொஸ்தெயாகத் தான் இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த இரண்டாவதோ ஸ்தாபனமாக ஆகியது (ஸ்தா). 32 இப்பொழுது, மூன்றாவது சபைக்காலமாகிய பெர்கமுவில், பெந்தெகொஸ்தே அனுபவமானது ஏறத்தாழ அற்றுப் போகத்தக்க நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் ஸ்தாபனத்தைப் பற்றிய போதகமானது, முதல் சபைக்காலத்தில் இங்கே “கிரியைகள்” என்ற கட்டத்திலிருந்து அது நெடுக வளர்ந்து கொண்டு போய், முடிவாக அது இங்கே மூன்றாம் சபைக்காலத்தில் “போதகமாக” ஆகியது. அவர்கள் அங்கே விவாகம் செய்து கொள்ளுகிற கட்டத்துக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் விவாகம் செய்துகொண்டனர்! …இந்தக் குழுவானது பெந்தேகோஸ்தே அனுபவத்தைப் பெற்ற குழுவை மேற்கொண்டது. 33 சகோதரரே, அதைப்பற்றி நான் கூறுவதோ முற்றிலும் உண்மை, அது பிழையற்ற சரியான வரலாற்று நூல்களின் படியாயுள்ளது. நிசாயா ஆலோசனை சங்கம், ஃபாக்ஸ் என்பவர் எழுதிய இரத்த சாட்சிகளின் புத்தகம் ஆகிய பண்டைக்காலத்து மகத்தான வரலாற்று நூல்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். மிகவும் பழமை வாய்ந்த சில பிரதிகளும் என்னிடம் உள்ளன. அவைகள் ஒவ்வொன்றும்…இதை, நான் ஒரு பெந்தெகொஸ்தேகாரன் என்ற ரீதியில் கூறவில்லை. நான் “பெந்தெகொஸ்தே” என்று கூறுகையில், நாம் வாழ்கிற இக்காலத்தில் உள்ள பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைப் பற்றி கூறவில்லை. அது மற்ற சபைகளைப் போலவே பெந்தெகொஸ்தேயும் குற்றமுள்ளதாக இருக்கிறதே. ஆனால் நான் உண்மையான பெந்தெகொஸ்தேயை, உண்மையான தேவ ஆவியைப் பெற்றிருக்கிற, மூல உபதேசத்தையுடைய, மூல ஆசீர்வாதங்களை பெற்றிருக்கிற மூல நாமங்களையுடைய, ஆதியில் ஆரம்பித்தபோது ஒவ்வொருகாரியமும் சரியாக வேதத்தின்படியாயிருந்து வந்த ஒன்றைப் பற்றியே குறிப்பிட்டுக் கூறுகிறேன்.
2134 நாம் இப்பொழுது இந்த சபைக்காலத்திற்கு வரும்போது, பெந்தெகொஸ்தே எதுவரைக்கிலும் வந்துள்ளது என்று நீங்கள் காண்கிறீர்கள். பின்னால் உள்ளவர்களால் சரியாக இங்கு வரையப்பட்டதை காணமுடிகிறதா? அங்கே பின்னால் உள்ளவர்களால் இதைப் பார்க்க முடிகிறதா? சரி. இப்பொழுது நேற்றிரவில் நாம் இங்கே வந்து இந்த பெரிய சபைக்காலத்தை இங்கேப் பார்த்தோம். கான்ஸ்டண்டைன், கான்ஸ்டன்டைன்—இவன் பெயரை இங்குள்ள இந்த வரைபடத்தில் நான் சுருக்கமாக கா—ன்—ஸ் என்று குறிக்கிறேன். அவன் ஒரு அஞ்ஞான விக்கிரகாரதனைக்காரனாக இருந்தான். இங்கே அவன் இந்த சபைக்காலத்தில் இருந்த கிறிஸ்தவர்களை(அதாவது நிக்கொலாய் மதஸ்தினரின் போதகத்தைக் கைக்கொண்டிருந்தவர்களை) தான் யுத்தத்தில் ஜெயிக்குமாறு வேண்டிக்கொள்ள கேட்டுக்கொண்டான். அப்படி இவர்கள் ஜெபித்தால், அதில் தான் வென்றால், தான் ஒரு கிறிஸ்தவனாக மாறி விடுவதாகவும் கூறினான். அவன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கையில், ஒரு சொப்பனம் கண்டான். அதில் அவனுக்கு முன்பாக வெள்ளை சிலுவை ஒன்று நிறுத்தப்பட்டதாகவும், “இதன் மூலம் நீ ஜெயிப்பாய்” என்று அதில் கூறப்பட்டதாகவும் அவன் கண்டானாம். அதுதான் உண்மை. அதன் பின்னர் அவன் உறக்கத்திலிருந்து விழித்து தன் இராணுவத்தினரையும் எழுப்பி, அவர்களுடைய கேடயங்களில் வெண்மை நிற சிலுவையை வரைந்திட்டான். கத்தோலிக்க சமயம் தோன்றுவதற்குக் காரணமாக இதுதான் அமைந்தது. அதுவே இன்றைக்கு கொலம்பஸின் வீரர்களின் குழு (Knights of Columbus) என்று அழைக்கப்பட்டது.
2235 வரலாற்றில் எந்த இடத்திலும், கான்ஸ்டன்டைன் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டான் என்பதற்கான…சான்று எதையும் நீங்கள் கண்டெடுக்க முடியாது. அவன் நேர்மையற்ற ஒரு அரசியல்வாதி என்பதைத் தவிர வேறு எவ்விதத்திலும் அழைக்கப்படத்தக்கவனல்ல. அவனுடைய மனதில், தன்னுடைய இராஜ்யத்தை ஒருமைப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதைப் பலப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தையுடையவனாக இருந்தான். எனவே, அஞ்ஞானியான அவன் விக்கிரகங்களை தொழுது கொண்டு வந்தவனாக இருந்தபடியால், அப்பொழுது அவன் அக்காலத்தில் இருந்து வந்த சடங்காரச்சார கிறிஸ்தவர்களாகிய நிக்கொலாய் மதத்தினரின் போதகத்தைப் பார்த்தான். அது ஏறத்தாழ ஜீவனற்ற நிலைக்கு அப்போது வந்திருந்தது. எனவே அவனும் நாம் நேற்றிரவில் பார்த்த அதே தந்திரத்தைக் கையாண்டான். 36 பிலேயாமின் போதகமானது போதிக்கப்படும் என்பதை இயேசுவானவர், அது நடப்பதற்கு முந்நூற்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்னுரைத்தார். பிலேயாம் இஸ்ரவேல் புத்திரரை எவ்வாறு வஞ்சித்து, அவர்கள் வேசித்தனம் பண்ணவும், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிக்கும்படியும் செய்தானோ, அதைப் போலவே இங்கும் நடந்தது. “விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளைப் புசித்தல்” என்பது உண்மையாகவே அவைகளைத் தொழுது கொள்ளுவதாகும் என்பதை நாமறியோம். அவர்கள் அதற்குள் போய், விக்கிரகங்களுக்கு முன்பாக பணிந்து கொண்டு, கிறிஸ்தவ சபைக்குள் அவ்விக்கிரகங்களைக் கொண்டு வந்து, அங்கே பிலேயாம் இஸ்ரவேலரை வேசித்தனம் பண்ணவும், விக்கிரகத்திற்கு படைக்கப்பட்ட அந்த பெரிய விருந்துக்கு அவர்கள் போகும்படி செய்தது போலவே, இவர்களும் செய்தார்கள்.
2337 கான்ஸ்டன்டைன் இதே தந்திரத்தைக் கையாண்டு இதே காரியத்தைச் செய்து, ஒரு சபையை உருவாக்கினான். நிசாயா ஆலோசனை சங்கத்தில், அவன் சபைக்கு ஏராளமானவைகளைக் கொடுத்தான். அப்பொழுது அவர்கள்… அவனிடம் இருந்த பெரிய பெரிய கட்டிடங்களையெல்லாம் அவன் ஆலயங்களாக மாற்றி சபைக்கு கொடுத்தான். அதன்பிறகு அவன் சலவைக்கற்களால் ஆன ஒரு பெரிய பலிபீடத்தைச் செய்வித்து, அதை பொன்னினாலும், முத்துக்களினாலும் அலங்கரித்தான். அதற்கு மேலே உயரத்தில், அவன் ஒரு சிங்காசனம் போன்றதொன்றை வைத்து, அதின் மேல் உட்கார ஒரு புருஷனை நியமித்து, அவன் தலைமையாக்கி, “பேராயர்” என்று அழைத்திட்டான். இந்த சிங்காசனத்தின் மேல் அவர்கள் மூன்றாம் போனிஃபேஸ் என்பவனை அரியணையில் ஏற்றினார்கள். அவன் அவ்விதமான ஆடையலங்காரத்துடன் நடந்து திரிந்தது மட்டுமின்றி, அவனுக்கு அவர்கள் பெரிய விலையுயர்ந்த அங்கிகளை செய்வித்து, அவனைக் கடவுள் போல் அலங்கரித்து, அவனை அச்சிங்காசனத்தில் அமரப்பண்ணி, அவனை “பிரதிகுரு” என்றழைத்தனர். பிரதிகுரு, அவனை வைகாரியஸ் ஃபிலி டை, அதாவது அதன் பொருள், “தேவனுடைய குமாரனுக்கு பதிலாக” என்பதாகும்.
2438 ஞானமுள்ளவனெவனோ அதை எழுதிக் கணக்குப் பார்க்கக்கடவன்; வைகாரியஸ் ஃபிலி டை நீங்கள் ஒரு கோட்டை வரைந்து, அதனதற்குரிய எண்களை வரிசையாக எழுதி அதைக் கூட்டிப் பார்த்தால், தேவன் கூறிய மிருகத்தின் இலக்கம் சரியாக வருகிறது. அறுநூற்று அறுபத்தியாறு அதன் இலக்கம். பாருங்கள், வைகாரியஸ் பிலி…நான் ரோமாபுரிக்குச் சென்ற போது வாடிகன் நகரத்திற்கு (Vatican) சென்றிருக்கிறேன். அங்கே முப்பரிமான கிரீடத்தை நான் பார்த்தேன். அந்த மூன்றும், பரலோகம், நரகம், உத்தரிக்கிற ஸ்தலம் ஆகிய மூன்றின் மேலும் போப்புக்கு ஆளுகை அதிகார வரம்பு உள்ளது என்பதைக் காட்டுகிறதாம். பாருங்கள்? அக்கிரீடத்தையும், போப்பு உடுத்தும் அங்கியையும் மற்ற எல்லாவற்றையும் அங்கே பார்த்தேன். 39 நான் வாடிகனில் இருந்தபோது, அங்கே ஒரு வியாழக்கிழமையன்று, மதியம் மூன்று மணிக்கு கடைசியாக இருந்த போப்பை நான் சந்திப்பதாக இருந்தது. பேரன் வோன் ப்ளாம் பெர்க் என்பவர் என்னிடம் வந்து, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீங்கள் போப்பைச் சந்திக்கச் செல்லும்போது, அவரண்டை வந்ததும் நீங்கள் உங்கள் வலது முழங்காலில் முழங்கால்படியிட்டு, வணங்கி, அவரது விரலிலுள்ள மோதிரத்தை முத்திமிட வேண்டும்” என்று கூறினார். 40 அப்பொழுது நான், “அது முடியாத காரியம். அது முடியாத காரியம்.அதை மறந்து விடுங்கள்” என்றேன். மேலும் நான், “நான் கூறினதோ…அந்த மனிதருக்கு எதிராக கருத்து ஒன்றும் எனக்கில்லை. அவர்…?” … ஆனால் நான், “ஒரு காரியம், ஒரு மனிதனுக்கு அவனுக்குரிய பட்டத்தைச் சொல்லி நான் அழைப்பேன். அவர் ஒரு ‘சங்கை’ என்றிருந்தால் அதைக் குறிப்பிட்டு விடுவேன். அது பரவாயில்லை. அவர் ஒரு ‘பிஷப், மூப்பர், டாக்டர்’ என்றெல்லாம் இருந்தால் அவைகளைக் குறிப்பிட்டு அவர்களை அழைப்பேன். அவ்வாறு அழைத்து அவர்களை நான் மகிழ்ச்சியாய் வாழ்த்துவேன். ஆனால் ஒரு மனிதனை ஆராதிக்க வேண்டுமா? ஒரேயொரு மனிதனுக்கு மட்டுமே நான் என்னுடைய மரியாதையான பயபக்தியைத் தெரிவிப்பேன். நான் பணிந்து முழங்காற்படியிட்டு இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதனுக்கு முன்பாக மட்டுமே ஆராதனை செய்வேன்” என்று கூறினேன். எனவே நான், “போப்பை சந்திப்பதைப் பற்றிய விஷயத்தை மறந்து விடுங்கள். அச்சந்திப்பை இரத்து செய்துவிடுங்கள்” என்று கூறிவிட்டேன். நான் அதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். எனவே நான்… 41 நான் தாய் நாடு திரும்பியதும் இன்னொரு மகத்தான அமெரிக்கர் இதே காரியத்தை செய்தார் என்பதை நான் கண்டு கொண்டேன். அவர் தான் டெடி ரூஸ்வெல்ட். அவர் அதைச் செய்ய மறுத்துவிட்டார். வரலாற்றில் அதைப்பற்றி கூறப்பட்டுள்ளதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா? போப்புடைய மோதிரத்தை பணிந்து முத்தமிட வேண்டுமென்பதால், போப்பை சந்திக்க அவர் மறுத்துவிட்டார். போப்பின் கால் கட்டை விரலில் கூட ஒரு மோதிரம் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே…ஓ, வேண்டாம், முடியாது அத்தகையது வேண்டாம். ஆகையால் அதன்பின்னர்…
2542 எப்படியாயினும்…இப்பொழுது…கடந்த இரவில் நாம், பிலேயாம் செய்ததைப் போலவே, அவர்கள் சபையையும், அஞ்ஞானத்தையும் ஒன்று சேர்த்து விவாகம் செய்து, சபைக்குள்ளாக அஞ்ஞான உபதேசங்களையும், அஞ்ஞான விக்கிரகங்களையும் கொண்டு வந்தார்கள் என்று பார்த்தோம். ஜூப்பிட்டர் கடவுள், சூரியக்கடவுள், மார்ஸ் கடவுள், வீனஸ் கடவுள் ஆகிய யாவற்றையும், அவற்றின் விக்கிரகங்களையும் அஞ்ஞான மார்க்கத்திலிருந்து இரவல்வாங்கி, அவைகளுக்கு பவுல், பேதுரு, கன்னி மரியாள் என்று பெயர் சூட்டினார்கள். பேதுருவிடம் இயேசு, “…திறவுகோல்களை நான் உனக்குக் கொடுக்கிறேன்” என்று கூறியதால், அவன் ஒரு அப்போஸ்தலப்பட்ட வாரிசு பரம்பரை என்று போதித்து, இவ்வாறாக ஒரு மனிதனை, “இதோ உங்களுடைய பிரதி குரு” என்று அறிமுகப்படுத்தினர். இன்றைய வரைக்கிலும் அது கத்தோலிக்க உபதேசமாக இருக்கிறது. அவர்கள் விக்கிரகங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். பின்பு அவர்கள் என்ன செய்தார்கள்? கிறிஸ்தவத்திற்குள், போலியான கிறிஸ்தவத்திற்குள் விக்கிரகாராதனையைக் கொண்டு வந்தார்கள். அவர்களால் உண்மையான கிறிஸ்தவத்திற்கு அதைக் கொண்டு வர முடியவில்லை. ஏனென்றால் சிறிய கூட்ட பெந்தேகோஸ்துக்கள்…
2643 இப்பொழுது நினைவிருக்கட்டும், நான் கூறவில்லை…நான், “இந்த இடத்தில் பாப்டிஸ்டுகள், மெதோடிஸ்டுகள். ப்ரெஸ்பிடேரியன்கள்” ஆகியோரைப் பற்றி கூறவில்லை, அவர்கள் எல்லோரும் உள்ளே இருக்கிறார்கள். ஆனால் உண்மையான அசலான தேவனுடைய சபையானது பெந்தெகொஸ்தேயாக இருக்கிறது. அப்படியே இருந்தது. இருக்கிறது. அப்படியே இனியும் இருக்கும். அங்கே தான் சபையானது ஆரம்பித்தது, முதல் காலத்தில் பெந்தெகொஸ்தேயின் வல்லமையோடு சபையானது ஆரம்பித்தது. 44 இப்பொழுது நீங்களோ, “அது சரிதானா, சகோதரன் பிரான்ஹாம் அவர்களே?” என்று கேட்கலாம். நீங்கள் வரலாறுகளை எடுத்துப் பார்க்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன், அதில் நீங்கள் பார்க்கையில், காலத்தின் நீரோடை வழியாக நீங்கள் கவனித்து வருவீர்களாயின், உண்மையான, அசலான தேவபிள்ளைகள் அந்த பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதங்களை விடாமல் பற்றிக் கொண்டிருந்ததை கண்டறியலாம்; அந்நிய பாஷைகளில் பேசியும், பாஷைகளை வியாக்கியானித்தும், அற்புத அடையாளங்களை ஊழியத்தில் கொண்டிருந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தும் வந்தார்கள். ஆதி அப்போஸ்தலர்கள் என்னவெல்லாம் செய்தார்களோ, அதையே காலங்கள்தோறும் உண்மையான சபையானது செய்து வந்துள்ளது. எனவே தான், நான் வரலாற்றை ஆராய்கையில், அற்புத அடையாளங்களைக் கொண்டிருந்த பவுல், ஐரேனியஸ், பரிசுத்த மார்ட்டின், கொலம்பா ஆகிய இவர்கள் ஒவ்வொருவரையும் (இங்கே இந்த காலத்திற்குள்ளாக) நான் தெரிந்து கொண்டேன்.
2745 சரி. அவர் கூறினது…ஒலி பெருக்கியானது சரியாக வேலை செய்யவில்லையென்று தெரிகிறது. அது பரவாயில்லையா? சரி. இல்லை, இப்பொழுது நான் பேசுவது கேட்கவில்லை போலும். எனவே தான் அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து அதைத் தெரிவிக்கிறார்கள். பில்லி! சரி. உங்களால்…? இதுவா…? இப்பொழுது, நான் பேசுவது இப்பொழுது கேட்கிறதா? இப்பொழுது அது எப்படியிருக்கிறது? அது நன்றாகவுள்ளதா? ஆம், இப்பொழுது யாவரும், “சரியாக இருக்கிறது, பேசுங்கள்” என்கிறார்கள். நல்லது, பால், உனக்கு ஒரு மதிப்பெண் குறைகிறது. சரி.சரி.
2846 இந்த சபைக்காலத்தில் இந்தப் பெரிய சபையை அவன் உருவாக்கியபொழுது, இம்மனிதனை உலகளாவிய அனைத்து சபைகளின் தலைமைக்குரு—அத்தியட்சகராக நியமித்து, ஏராளமான பணத்தை வாரியிறைத்து, இன்னும் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து, சபையையும், அரசாங்கத்தையும் ஒன்றாக இணைத்து, கடைசியில் சபையானது அரசாங்கத்தை கட்டுப்படுத்தி ஆளுகை செய்ய விட்டுவிட்டான். அவனை ஒரு மகத்தான மனிதனாக்கிவிட்டான். எனவே சரியாக… கான்ஸ்டன்டைன் செய்த இதே காரியம் தான், பழைய ஏற்பாட்டு சபையிலும் செய்யப்பட்டதாக தேவன் கூறினார். அதாவது, எலியாவின் நாட்களில், இவர்கள் யேசபேல் என்னும் அப்பெண்மணி, கர்த்தருடைய பிள்ளைகளை கீழ்ப்படுத்தும்படி விட்டுவிட்டனர். அதே சம்பவம் இருண்ட காலத்தில் சம்பவித்தது. இங்கு பெந்தெகொஸ்தேயானது எவ்வாறுள்ளது என்பதைப் பாருங்கள். என்னே, என்னே! அது கருமையடைந்து விட்டது. கொஞ்சங்குறைய ஆயிரம் ஆண்டுகள் இந்நிலையில் இருந்தது. அது…கி.பி.சுமார் 500 முதல் கி.பி.1500 முடிய கி.பி.606 முதல் 1530’ல்…1520 முடிய இக்காலம் இருந்தது. இருப்பினும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் கணக்காகிறது. அவர்கள்…இரத்தம் சிந்தும் கொலைவெறியின் உபத்திரங்களில் இருந்தனர். சரித்திரத்தை படித்துப் பாருங்கள்.
2947 ஒரு கத்தோலிக்கன் உங்களிடம், தாங்கள் தான் கிறிஸ்தவ சபை என்று கூறுவான். அவர்கள் மதஸ்தாபன சபையாகிய கிறிஸ்தவ சபையினர். ஆனால் உண்மையான பெந்தெகொஸ்தேயினரோ நசுக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். போப்புகளாலும், அத்தியட்சகர்களாலும் கொலை செய்யப்பட்டனர். முடிந்த அளவு இரத்தம் சிந்தப்பட்டது. 48 அதைக் கூறுவதால், ஒரு நாள் என்னுடைய ஜீவனுக்கும் ஆபத்து நேரிடப் போகிறது, பாருங்கள், ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நான் எங்கே போகிறேன் என்பதை அறிந்தேயுள்ளேன், நான் இப்பொழுது அறிவேன். தொடர்ந்து இந்தப் பாதை இரத்தம் வழிந்தோடினதாக இருக்கிறது. ஆனால் இத்தேசத்தில் நடப்பதைப் பார்க்கையில், இனிக்காலம் செல்லாது. அந்த வேளையானது நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். நீங்கள் சத்தியத்தைவிட்டு ஒருபோதும் பின் வாங்காதீர்கள்! அது சத்தியமாயிருக்கிறது. அதோடு தரித்திருங்கள். அந்நாட்களில் அவர்கள் செய்ததைப் போலவே, உங்களுடைய இரத்தத்தை அதனோடு கலந்திடுங்கள்.
3049 இங்கே என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அதன்பிறகு இங்கே யேசபேலின் போதகமானது உள்ளே வருகிறது. யேசபேல் ஒரு அஞ்ஞான பெண்மணியாவாள். கான்ஸ்டன்டைன் செய்த அதே காரியத்தைத் தான் ஆகாபும் செய்தான்; தனது இராஜ்யபாரத்தை பெலப்படுத்திக் கொள்வதற்காக இந்த பெண்மணியை விவாகம் செய்து கொண்டான்: அதன் மூலம், இஸ்ரவேலுக்குள் அவன் விக்கிரக ஆராதனையைக் கொண்டு வந்தான். இதே காரியத்தைத் தான் கான்ஸ்டன்டைனும் சபைக்காலத்தில் செய்திட்டான். பெந்தெகொஸ்தே அனுபவம் ஏறத்தாழ முழுவதும் அற்றுப் போனது போல் ஆகிவிட்டது. 50 இப்பொழுது, தேவன் மார்டின் லூத்தரை எழுப்பினார். எவ்வாறு ஒளியானது ஒவ்வொரு சபைக்காலத்திலும் படிப்படியாக மங்கிக் கொண்டே வந்து இங்கே நான்காவது சபைக்காலத்தில் முற்றிலும் மங்கி, இங்கே அதிகம் இருள் சூழ்ந்து விடுகிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பின்பு, மீண்டும் ஒளி இங்கே கொஞ்சம் அதிகரித்து இங்கே மீண்டும் மங்கி விடுகிறது. கர்த்தருக்கு சித்தமானால் ஞாயிறு இரவில் அது பெரியதொரு பாடமாக இருக்கப் போவதால், இங்கே நான் சற்று குறித்திருக்கிறேன்.
3151 நாம் இங்கே தான் மாட்டிக்கொண்டோம் என்று நான் நினைக்கிறேன். இங்கே இதிலிருந்து இருண்ட காலம் கி.பி.606 முதல் கி.பி.1520 முடிய சரியாக இங்கே உள்ளது. நீங்கள் புரிந்து கொள்ளும்படி நான் இதை இங்கே வரைகிறேன்…606 முதல் 1520 முடிய உள்ள காலமாகும். அது இருண்ட காலம், இருண்ட காலங்களுக்குள் சென்ற சபை இங்கே உள்ளது. இப்பொழுது நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே வரும் இந்த சபை லூத்தரன் சபையாயுள்ளது. 52 கடந்து சென்ற சபைக்காலத்திற்குள் இருந்த இந்த ஜனங்கள் மரித்தனர்… ஐரேனியஸ், மார்ட்டின், கொலம்பா ஆகியோரைப் போன்ற இந்த ஜனங்கள் அக்காலங்களில் மரித்து கடந்து சென்றனர். இப்பொழுது எந்தவொரு நம்பத்தகுந்த வரலாற்று நூலையும், எவரேனும் ஆராய்ந்து பார்க்க விரும்பினால், நீங்கள் சரித்திரத்தை ஆய்ந்துப் பாருங்கள். “பரிசுத்த பேட்ரிக் ஒரு கத்தோலிக்கன்” என்று அவர்கள் கூறுகிறபோது, அவர்கள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாதிருக்கிறார்கள். பரிசுத்த பேட்ரிக் கத்தோலிக்க சபையை மறுதலித்தார். அவர் ஒரு போதும் ரோமாபுரிக்குச் சென்றதேயில்லை. மேலும் அவர் உறுதியாக அவர்களுடைய போதகத்தை மறுத்தார். அது முற்றிலும் உண்மை. இங்கிலாந்தின் வடக்குப் பிரதேசத்திற்கு போங்கள் அல்லது இன்றைக்கு அயர்லாந்துக்குச் செல்லுங்கள். அதே காரியத்தை நீங்கள் அங்கு காணலாம். பரிசுத்த பேட்ரிக் ஒரு தேவனுடைய மனிதனாயிருந்தார். ஆனால், பரிசுத்த பேட்ரிக் அவர் அயர்லாந்து தேசத்திலிருந்து எல்லா பாம்புகளையும் துரத்திவிட்டார் என்று கூறப்படுகிறதே, அது வெறும் கட்டுக்கதை தான்.
3253 வில்லியம் டெல் என்பவர் தன் மகனின் தலையில் ஆப்பிளை வைத்து சரியாகக் குறி வைத்து அந்த ஆப்பிளை சுட்டுத் தள்ளினார் என்ற கதையை எத்தனை பேர்கள் கேட்டிருக்கிறீர்கள்? அது கத்தோலிக்க சமயத்தின் ஒரு கட்டுக் கதையாகும். அதைப் பற்றி எந்தவொரு சான்றும் கிடையாது. அது சம்பவித்ததாக கூறப்படும் அதே ஸ்தலத்தில் நேரில் போய்ப் பார்த்தேன். அங்கே சுவிட்சர்லாந்தில் உள்ள அந்த இடத்தில், “இது வெறும் கதைதான். உண்மையாக அப்படியில்லை” என்றே எழுதப்பட்டுள்ளது. அத்தேசத்தில் லுசர்ன் என்ற ஏரியின் பக்கத்தில் அது நடந்ததாக கதை சொல்லப்படுகிறதே. அதே இடத்திற்கு நானும் பில்லியும் நேரில் போயிருந்தோம். அவர் ஒரு மனிதனை சுட்டுவிட்டார். அதுதான் உண்மை. அவர் மகனின் தலையில் ஒரு ஆப்பிளை வைத்து ஆப்பிளை சுடவேயில்லை. அது வெறுமென கட்டுக் கதை, மூடத்தனமான காரியங்கள், அது அவ்வண்ணமாய் ஒருபோதும் நடக்கவேயில்லை. அவ்வாறு அவர்கள் செய்தார்கள் என்பதை நிரூபிக்கும் ஆவணம் ஒன்று கூட கிடையாது அங்கே. அங்கு நடந்தது என்ன அல்லது அவர்கள் செய்த காரியம் தான் என்ன என்பதைப் பற்றிய கட்டுக்கதை உண்மையாக வெளிப்பட்டுள்ளது. எனவே அவர்கள் சொல்வது என்னவாயிருந்தது என்பது உண்மையிலே பொய்யென கசிந்து விட்டது. ஆனால் அவர் அதை செய்தார். ஆனால் நாம் கையாளும் விஷயங்களோ முற்றிலும் சரித்திரம் உண்மையாகவே கூறதாதுபோன்றதல்ல இச்செய்திகளில் கூறப்படுகிற காரியங்கள். பாருங்கள்.
3354 எனவே இங்கே இந்த சபைக் காலத்தில் ஒளியானது கொஞ்சங் குறைய முற்றிலும் அற்றுப்போய் விட்ட நிலையில் ஆகிவிட்டது. அதற்கடுத்து வந்த சபைக்காலம் சீர்திருத்த காலமாக வருகிறது. இது முதற்கொண்டு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகாலம் இருண்ட காலத்திற்குள் சபை சென்றது. அப்பொழுது ஒளி மங்கி இருட்டாயிற்று. ஐரேனியஸின் காலத்தில் இருந்த பார்வை இங்கே முழுவதும் இல்லாமல் மங்கிப் போய்விட்டது. ஐரேனியஸ் ஒரு மகத்தான மனிதனாய், ஒரு தேவ மனிதனாயிருந்தார். எனவே இவரைப் போன்ற இன்னும் அநேக நூற்றுக்கணக்கான விலையேறப்பெற்ற பரிசுத்தவான்கள், அந்த (அரங்கத்தில் நின்றிருந்து), கிறிஸ்துவினிமித்தம் தங்கள் ஜீவியங்களின் இரத்தத்தை, தாராளமாக சிந்தி உயிர் நீத்தனர். அவர்கள் தங்கள் இரத்தத்தை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்திற்காகவும், அந்நிய பாஷைகளில் பேசினதற்காகவும், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் ஜீவனை தங்களில் பெற்று தெய்வீக பிரசன்னத்தோடு ஜீவித்ததற்காகவுமே சிந்தினார்கள். அவர்களை கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் தான் உபத்திரவப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அது உண்மை. அது முற்றிலும் உண்மையே.
3455 ஓ, பாதாளத்தில் உள்ள பிசாசுகளில் லேகியோன் கூட்டம் அவர்களை கொடுமைப்படுத்த கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது போலும். இதை இவ்வாறு கூறுவதைத் தவிர வேறு எவ்விதத்திலும் பாத்திரமானவாறு அழைக்க எனக்கு தெரியவில்லை. அவ்விதமாக வந்து, தங்களுக்கென சபையை உருவாக்கி, தங்களைத் தாங்களே பெரிதுபடுத்திக்கொண்டு இருந்தனர். “அவள் தன்னைத் தானே தீர்க்கதரிசியானவள், அதாவது வார்த்தையின் தெய்வீக வியாக்கியானி, தன்னைத் தவிர வேறு யாருமில்லை. குருக்களைத் தவிர வேறு யாருக்கும் வேதத்தை வியாக்கியானிக்க முடியாது” என்றெல்லாம் ஆக்கிக் கொண்டார்கள். அவள் தன்னைத் தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொண்டாலும் அவள் அப்படியல்ல. அவள் ஒரு பொய் சொல்லுகிறவளாய் இருந்தாள். உங்களுக்குப் புரிகிறதா? அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, பாருங்கள். ஆனால் அதே சமயத்தில் தேவனோ, சத்தியத்தைப் பெற்றிருந்த தன்னுடைய தூதனை அங்கே வைத்திருந்தார். சத்தியமானது எப்பொழுதும் அதற்கு திரும்பிப் போகும். புரிகிறதா? எப்பொழுதும் அது மூல வார்த்தைக்கு திரும்பிப் போகிறதாய் இருக்கிறது. ஏனெனில் தேவன் அதிலிருந்து ஒருபோதும் மாறுகிறதில்லை. 56 கடந்த இரவிலும், நாம் இங்கிருந்து கடந்து செல்லும் முன், இதைப் பற்றி பார்த்தோம். எனவே அது உங்கள் இருதயத்தில் ஆழப் பதிந்துவிடும். அது மட்டுமின்றி…முன்னடையாளமாக அந்த யேசபேலுக்கு ஒரு குமாரத்தி இருந்தாள். அது உங்கள் நினைவிலுள்ளதா? வெளிப்படுத்தின விசேஷம் 13-ம் அதிகாரத்தில், இந்தக் கள்ளச்சபையான ரோமுக்கும் குமாரத்திகள் இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. “அவள் தான் வேசிகளின் தாய் ஆவாள்.” அது உண்மையல்லவா? யேசபேலுக்கு ஒரு குமாரத்தி உண்டு. அவளை யேசபேல் என்ன செய்தாள்? பாருங்கள், அவைகள் யாவும் எப்படியாய் முன்னடையாளமாகவும், சாயலாகவும், நிழலாகவும் உள்ளது என்பதைப் பாருங்கள். யூதாவின் இராஜாவாகிய யோசபாத்தின் குமாரன் யோராம் தன் மகளை விவாகம் செய்யும்படி அவள் ஏற்பாடு செய்தாள்.
3557 அந்த நேரத்தில் இஸ்ரவேலானது இங்கே இந்தவிதமாக இரண்டாக பிளவுபட்டிருந்தது. அதாவது இங்கே ஒரு பக்கத்தில் இஸ்ரவேலும், இங்கே மற்றொரு பக்கம் யூதாவுமாய் இங்கே எருசலேமில் இருந்தன. இந்தப் பக்கம் ஆகாபும் மறுபக்கம் யோராமும் இருந்தனர். இப்பக்கத்தில் இஸ்ரவேலை யேசபேல் முழுவதும் வசப்படுத்தி வென்று , அவர்கள் விக்கிரகங்களை வணங்கும்படி செய்தாள். அப்பொழுது…(ஆனால் எலியாவும் அந்த சிறிய கூட்டமான உண்மையான ஜனங்களும் இப்பாவத்திற்கு உடன்படவில்லை) சரி, இப்பொழுது இந்த மறுபக்கத்தில் யூதேயாவில், யோராம் அரசாண்டான்; யேசபேல் ஆகாபின் மூலம் இம்மகளைப் பெற்றெடுத்து, அவள் பெரியவளான போது, யோராமினுடைய மகனுக்கு… இல்லை அவளை யூதாவின் இராஜாவாகிய யோசபாத்தின் மைந்தன் யோராமுக்கு விவாகம் செய்வித்தாள். இவ்விவாகத்தின் வாயிலாக, யூதாவுக்குள் விக்கிரக வணக்கம், மற்றும் எருசலேமில் அஞ்ஞான பலி பீடங்களும் எழும்பின. 58 சரியாக அதைத்தான் கத்தோலிக்க சபையானது செய்தது. அவள் ஸ்தாபன உபதேசத்தில் நிலைத்திருந்து, பரிசுத்த ஆவி சபையில் இல்லாமல் போகும்படி செய்து, தன் மகள் சபையிலும் அவ்வாறே ஆகும்படி செய்துவிட்டாள். (அவைகள் லூத்தரன் சபை, மெதோடிஸ்டு சபை, பாப்டிஸ்டு சபை, பெந்தெகொஸ்தே மற்றும் இன்ன பிற சபைகள்). அதே காரியத்தையே அவள் செய்தாள். வேதம், “அவள் வேசிகளின் தாய்” என்று கூறியுள்ளது. 59 இப்பொழுது நீங்கள் வேத வாக்கியங்களின் வாயிலாக இதைப் பாருங்கள். நீங்கள் பாருங்கள், நான் இங்கே கூறியுள்ளதற்கு மாறாக, வேறுவிதமாக வேதவாக்கியங்களில் உங்களுக்குத் தென்படுகிறதென்றால், அதை எடுத்துக் கொண்டு ஒரு பண்புள்ள மனிதராய் நீங்கள் என்னிடம் வாருங்கள். புரிகிறதா? அதுதான் சரி. அது அவ்வாறு வேதத்திற்கு மாறாக இல்லையே.
3660 பிராடெஸ்டெண்டு மார்க்கமானது இருப்பதிலெல்லாம் அதிகம் விஷம் நிறைந்ததான ஸ்தாபனங்களைக் கொண்டதாக இருக்கிறது. அவைகளில் மனிதர் சபையை ஆளும்படி அவர்கள் செய்கிறார்கள். அங்கே சிங்காசனத்தில் ஒரு மனிதனை தேவன் போல் அமர வைத்தார்களே, அதைப் போலவே இங்கும் இன்னொரு சொரூபத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். பெந்தெகொஸ்தேயின் தலைமை அத்தியட்சகர் அல்லது பொது கண்காணிகள் போன்றவர்கள் என்று கூறுகிறார்கள். “நல்லது, அவரது உபதேசம் என்ன என்று நான் பார்க்கட்டும்? ஓ, அவர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுள்ளாரா? அவரால் இதில் உள்ளே வர முடியாது. இல்லை ஐயா, சகோதரனே நீங்கள் அதைப் புறக்கணிக்கிறீர்கள்.” அதுவும் கூட புறக்கணிக்கப்பட்டதே. அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்; “நான் உங்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன். உங்களில் எவரும் அங்கே அக்கூட்டத்திற்குப் போகக் கூடாது. அதற்கு என் அங்கீகாரம் கிடையாது. நீங்கள் எவ்வளவு அதிகமாக வியாதிப்பட்டிருந்தாலும் சரி, அதை விட்டு விலகியிருங்கள். அங்கே தேவன் என்ன செய்தாலும் அதைப் பற்றி அக்கறையில்லை. நீங்கள் நம்முடைய போதகக் கண்ணாடி வழியாக பார்க்காவிடில், ஏன்? உங்களுக்கு பார்வையில்லை” என்கின்றனர். இவ்வாறாக மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டு பண்ணுகிறார்களே! அந்த சொரூபம் பேசும்படி அதற்கு உயிர் கொடுக்க வேண்டியதாயுள்ளது. அது சரியாக அப்படித்தான் உள்ளது. அவனுக்குப் பேச முடியும் என்று நீங்கள் எண்ணாதீர்கள். ஒரு தடவை அவனை சற்று குறுக்கிட்டுப் பாருங்கள். ஊ—ஹூ, நீங்கள் நிச்சயமாக தொல்லையில் அகப்படுவீர்கள்.
3761 நான் ஒக்லஹாமாவில் உள்ள டூல்சா என்ற இடத்திற்குப் போயிருந்ததைப் பற்றி நான் எண்ணிப் பார்க்கிறேன். ஓ, அங்கே நான் சங்கடமான குழப்பத்தில் அகப்பட்டுக் கொண்டேன். அந்த ஸ்தாபனங்களெல்லாம் அங்கே வந்து குழுமிவிட்டார்கள். நான் அந்த அக்கட்டிடத்தில் ஒரு நாள் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது நான் ஒரு தரிசனம் கண்டேன். அதில் நான் ஒரு அழகான சிறிய பூனைக்குட்டி ஒன்றைக் கண்டேன். அப்பூனை பட்டுத் தலையணையில் படுத்திருந்தது. அது மிகவும் அழகாக இருந்தது. நான் அதனண்டையில் சென்றேன். (நான் ஒரு பூனையைக் கண்டால் பயப்படுகிறவன்) நான் அதனண்டை சென்று, அதைத் தடவிக்கொடுக்க ஆரம்பித்த போது, “பர்ர்ர் பர்ர்ர்” என்றது. அது எவ்வாறு அவ்விதமான விசித்திரமான சப்தத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். “அழகான சிறிய பூனைக்குட்டியே” என்று கூறி நான் அதைத் தடவிக் கொடுத்தேன். அது “பார்” என்றது. மிகவும் அருமையாக இருந்தது. உங்களுக்குத் தெரியுமா? 62 அப்பூனையின் பின்னால் இருந்த தலையணையை நான் பார்த்தபோது, அதில், “பெந்தேகோஸ்தே பூனைக் குட்டி” என்று எழுதியிருந்தது. அப்பொழுது நான், “இப்பொழுது இது விசித்திரமாக இல்லையா” என்று எண்ணினேன். மேலும் நான், “இது ஒரு தரிசனமாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறினேன். 63 அப்பொழுது ஏதோ ஒன்று என்னிடம், “நீ இதன் உரோமத்தை இவ்வாறு இழுத்து தடவி விடும் வரையில் ஒன்றும் பாதகமில்லை. ஆனால் இப்பொழுது இது உண்மையில் எதனால் உண்டானது என்பதை காண விரும்பினால் அப்பொழுது அதன் உரோமத்தை பின்பக்கமாக தடவிடு” என்றது. புரிகிறதா? எனவே நான் அவ்வாறே அதன் உரோமத்தை பின்பக்கமாக தடவி விட்டபோது, அதன் கண்கள் நிலைக்குத்தி வெளியே வந்து, பச்சை நிறம் கொண்டு, அது ஒரு பெரிய ராட்சத மிருகம் போல் ஆகி, என் மேல் கடுமையாக சீறினது. நீங்கள் அதை பின்பக்கமாக தடவி விட்டுப் பாருங்கள். அதாவது, அதனுடைய ஞானஸ்நானம், “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில்” அவர்கள் கொடுக்கிற ஞானஸ்நானமானது பிசாசினுடையது, கத்தோலிக்க சபையினுடையது என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள். அப்பொழுது என்ன நடக்கிறதென்று கவனித்துப் பாருங்கள். புரிகிறதா? அது சீறி எழுந்து விடும். 64 நான் கீழே இறங்கி வந்து சகோதரன் ஜீன் இன்னும் மற்றவர்கள்…ஓ, சகோதரன் லியோ, மற்றும் உள்ளவர்களிடமும், “எனக்கு இந்தக் கட்டிடத்தில் பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்களைப் பற்றிய ஒரு உண்மையான தரிசனம் உண்டாயிருந்தது” என்று கூறினேன்.
3865 இப்பொழுது நாம் 3-ம் அதிகாரத்திலிருந்து படிப்போம். முதலாவது…சர்தை சபையானது மரித்த சபையாக உள்ளது. அது மரித்ததாயிருந்தது, ஏனெனில், அது இந்தக் காலத்தில் கொல்லப்பட்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களுக்குள் இக்காலத்தில் ஜீவனானது ஒரு சிறிதளவே இருந்தது என்பதைப் பார்ப்போம். கி.பி.1520 முதல் கி.பி.1750 முடிய சர்தை சபையின் காலம் நீடித்தது. இந்த சபைக் காலத்திற்குரிய நட்சத்திரம் அல்லது தூதன், அல்லது செய்தியாளன் அவரது கரத்தில் இருக்கிறார். அது தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதா? அந்த நட்சத்திரம் ஒரு தூதனாயிருந்தது. அத்தூதன் அக்காலத்துக்குரிய செய்தியாளன் ஆவார். சரி. சரி.
3966 இப்பொழுது நாம் நிசாயா ஆலோசனை சங்கத்தோடு முடித்துள்ளோம். சபையானது அங்கே மரித்துவிட்டது. சபையும் அரசும் ஒன்றாக இணைந்துவிட்டது. அப்பொழுது அவர்கள் அதிகாரத்திற்கும், மகிமைக்கும் உயர்ந்தார்கள். கடந்த இரவில் நம்முடைய பாடத்தில், மக்கள் அப்பொழுது என்ன நினைத்தார்கள் என்பதைப் பார்த்தோமே, அது நினைவிருக்கிறதா? “ஆயிர வருட அரசாட்சி துவங்கி விட்டது” என்றார்கள். அவர்கள் “கிறிஸ்து வராமலேயே ஆயிரமாண்டு அரசாட்சி வந்துவிட்டது” என்று போதித்தார்கள். பாருங்கள்? கிறிஸ்துவின் வருகைக்கு பிறகு தான் ஆயிரம் வருட அரசாட்சி ஏற்படும். அந்நாட்களில் நடந்ததைப் பற்றி வரலாற்றில் நீங்கள் பார்த்தால், கள்ள இயேசுக்கள் எழும்பினார்கள் என்றும், இன்னும் பலவிதமான இவ்வித காரியங்கள் ஏற்பட்டன என்றும் அறியலாம், பாருங்கள். அவர்களோ இயேசுவானவரே போப் என்று கருதினார்கள். அவரை பிரதிகுரு என்று அழைத்தார்கள், அதற்கு அர்த்தம், “தேவனுடைய குமாரனுக்கு பதிலாள்” என்பதாகும். ஆம், அவர்களுடைய பெரிய பரிசுத்த தேவனைப் போலுள்ளவன் அங்கே அமர்த்தப்பட்டிருக்கிறான்.
4067 நான் ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்லட்டும். இயேசு வருவதற்கு முன்னால், “கள்ளத் தீர்க்கதரிசிகளும், கள்ள இயேசுக்களும் எழும்புவார்கள்” என்று வேதம் கூறுகிறது. அது உண்மை, “இதோ இங்கே…” ஆனால் சபையானது மகிமையில் எடுத்து கொள்ளப்பட்டு போகிற வரைக்கிலும், இயேசுவானவர் இப்பூமியின் மேல் தன் பாதங்களை வைக்கமாட்டார் என்பதை நான் உங்கள் இருதயங்களில் பதியச் செய்யட்டும். இப்பொழுது, நீங்கள் அதை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்புவார்கள். ஆனால் இயேசுவானவர் இப்பூமியின் மேல் கால் வைக்கமாட்டார். இயேசு ஒருபோதும் இதற்குமுன் பூமிக்கு வருவதில்லை. ஏனென்றால் எக்காளம் தொனிக்கும், நாம் அப்பொழுது அவரை ஆகாயத்தில் சந்திப்போம். அப்பொழுது சபையானது ஏற்கனவே புறப்பட்டு போய்விட்டிருக்கும். பிறகு இயேசு தோன்றும் பொழுது, அவருடைய திரும்பி வருதலாக இருக்கும். புறஜாதி மணவாட்டி, அவரைச் சந்திக்க ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அங்கே அவரை சந்திப்பாள். அது வேத வாக்கியங்களின் படி இருக்கின்றதா? புரிகிறதா? அவர்கள் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டு அவரை ஆகாயத்தில் சந்திப்பார்கள், நாம் இப்பொழுது மேலே போய்விடுவோம். இயேசு…அவர் தம்முடைய சபையை மகிமையில் எடுத்துக் கொண்டு, தன் வாசஸ்தலத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து முடிந்த பிறகு அவர் யூதர்களில் மீதியானவர்களுக்காக பூமிக்குத் திரும்பி வருகிற வரையிலும், அதற்கு முன்னால் இம்மண்ணின்மேல் அவர் பாதங்கள் ஒருபோதும் படுவதேயில்லை.
4168 நிசாயா ஆலோசனை சங்கம் முடிவடைந்த பிறகு, சபையானது விழுந்தது. அதன் பிறகு போப்பு மார்க்க ஆளுகையின் கீழ் கொஞ்சங்குறைய ஆயிரமாண்டுக் காலம் சபை உட்பட்டது. அவர்களோடு முரண்படுகிற யாவரையும் அவர்கள் கொன்று தீர்த்தார்கள். அது உண்மை. யேசபேல் இஸ்ரவேலுக்கு செய்தது போல், ஒன்று கத்தோலிக்க சமயத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற நிலைமையே நீடித்தது. 69 இஸ்ரவேலில் பாகலுக்கு முழங்காற்படியிடாத எலியாவும் அவனோடு மீதியான இஸ்ரவேலர் சிலருமாகிய ஒரு கூட்டம் அன்றைக்கு இருந்ததுபோல, இச்சபைக் காலத்திலும், வெகு சிலரே பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களாக நீடித்தனர். மற்றபடி, பரிசுத்த ஆவி கொஞ்சங்குறைய முற்றிலும் நீங்கிப் போன நிலைதான் நீடித்தது. அதைப்பற்றி நீங்கள் வாசித்துப் பார்க்க விரும்பினால் I இராஜாக்கள் 19-ம் அதிகாரம், 18-ம் வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே எலியா ஒரு கெபியின் வாயிலில் நின்று கொண்டு, “போதும் கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளையெல்லாம் அவர்கள் கொன்று போட்டார்கள். அவர்கள் எல்லாக் காரியங்களைச் செய்துவிட்டார்கள். நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்” என்று கூறினான். ஆனால் தேவனோ எலியாவிடம், சபையில் இன்னும் பாகாலுக்கு முழங்கால் படியிடாத சில நூற்றுக்கணக்கானவர்களை மீதியாக வைத்திருக்கிறதாகக் கூறினார்.
4270 இப்பொழுது நாம் சர்தை சபையை ஆரம்பிக்கிறோம். முதலாம் வசனத்தில் சர்தை என்ற வார்த்தை உள்ளது. சர்தை என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் நீங்கள் அதன் அர்த்தத்தை காண விரும்பினால், “தப்பித்துக்கொண்டவன்” என்று பொருள். சர்தை என்பதற்கு உண்மையான அர்த்தம் “தப்பித்துக் கொண்டவன்” என்பதாகும். அதுதான் சர்தை என்பதற்கு அர்த்தமாகிறது, சரி, “தப்பித்துக்கொண்டவன்.” இப்பொழுது, பாருங்கள், “தப்பித்துக் கொண்டவன்.” 71 நாம் இப்பொழுது முதலாம் வசனத்திலிருந்து துவங்கப் போகிறோம். நாம் இந்தக் காலத்தை சீர்திருத்தக் காலம் என்று அழைக்கப் போகிறோம். நாம் இதை இவ்வாறு இச்சபைக் காலம் “சீர்த்திருத்தக் காலம்” என்றழைப்பது மிகவும் பொருத்தமானது தான். ஏனெனில் அது…சீர்திருத்தம் தான் “தப்பித்துக் கொண்ட ஒன்றாக” இருந்தது. அதிலிருந்து அது தப்பித்து வெளியேறியது.
4372 நாம் இப்பொழுது முதலாம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்; தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். 73 முதலாவது வாழ்த்துதல், ஏழு ஆவிகள் என்னப்பட்டவைகள்…“ஏழு ஆவிகளும், ஏழு நட்சத்திரங்களும்.” ஆவிகள் ஆகிய தூதர்கள், நட்சத்திரங்களாகிய செய்தியாளரிடம் வந்தன. “ஏழு ஆவிகள்” என்றால், ஏழு வித்தியாசமான காலங்களில் பரிசுத்த ஆவியானவர் ஒரு செய்தியாளனை அபிஷேகிப்பார், அப்பொழுது அவன் தன்னுடைய நாளில் ஒரு நட்சத்திரமாக இருந்து வந்தான். ஆவி நித்தியமானது. குத்து விளக்கான இந்த சபைக்காலங்களின் இருளான வேளைகளில் ஒளியை பிரதிபலிக்கிற காரியத்தை செய்யும்படி நட்சத்திரமானது உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதைத் தான் நட்சத்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. தூதனாகிய ஆவி நட்சத்திரத்திடம் சென்றது. அப்பொழுது பரிசுத்த ஆவியின் ஒளியை அந்த சபைக் காலத்திற்குரிய நட்சத்திரத்தின் வாயிலாக அது பிரதிபலித்துக் காட்டியது. இந்த ஏழு ஆவிகள் யார் என்று நீங்கள் அறிய ஆவலோடு இருந்திருப்பீர்கள். அது ஏழு சபைக் காலங்களுக்குரிய ஏழு செய்தியாளர்களாகிய தூதர்கள். புரிகிறதா? ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட நட்சத்திரமானது காட்சியில் தோன்றிய பொழுது, பரிசுத்த ஆவி இறங்கி வந்து, அந்நட்சத்திரத்தை அபிஷேகித்து, முதலாவது நட்சத்திரம் எவ்வாறு இருந்ததோ, அதே வண்ணம் இதுவும் இருக்கச் செய்தது.
4474 இப்பொழுது நான்—நான் அதை உங்களுக்கு உறுதிபடுத்தட்டும். அது என்னவிதமான நட்சத்திரமாயிருந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று பவுல் கூறினான். ஏனெனில், சாத்தானும் ஒரு நட்சத்திரம் தான். அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி என்பது நினைவிருக்கட்டும். இப்பொழுது கவனியுங்கள், பவுல் கூறினான்…பவுல் எபேசு சபையின் நட்சத்திரமாயிருந்தான் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவன் கூறினான், இப்பொழுது அது உண்மையா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். கலாத்தியர் 1:8-ல் பவுல் இவ்வாறு கூறினான். அவன் ஏற்கனவே, தான் போனபிறகு, மந்தையை தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் வரும் என்று எச்சரித்திருக்கிறான். “வானத்திலிருந்து வரும் தூதன். வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால்…” (இப்பொழுது, இந்த மனிதன் ஒரு தூதனைப் போல் காட்சியளித்து, ஒரு பெரிய பிரதிகுருவாக காணப்படுவான் என்பதை அவன் அறிந்திருந்தான்.) பவுல், “நாங்கள் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை வானத்திலிருந்து வருகிற தூதன் அல்லது வேறு யாராவது பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன்” என்று கூறினான். அது சரிதானே?
4575 அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்றிராவிடில், மீண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நான்ம் பெறும்படி பவுல் தான் எபேசியரை வற்புறுத்தினான். “பரிசுத்த ஆவியைப் பெறுவதற்காக மீண்டும் சரியானபடி ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று பவுல் கூறினான். அப்போஸ்தலர் 19:5. அவன் அவர்கள் மேல் தன் கைகளை வைத்தபோது, அவர்கள் வரங்களைப் பெற்று சபைக்குரிய ஒழுங்கில் நிலை நாட்டப்பட்டு, அற்புதங்களை நடப்பித்தல், தெய்வீக சுகமளித்தல், அந்நிய பாஷைகளில் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் செய்தல் போன்ற வரங்களைப் பெற்று விளங்கினார்கள். அது சரிதானே? I கொரிந்தியர் 12-ம் அதிகாரத்தில் பவுல் என்ன கூறுகிறான் என்று பாருங்கள். கொரிந்தியர் முதலாம் நிரூபம் 12-ம் அதிகாரத்தில் நீங்கள் அதைக் கண்டறியலாம். அவர் சபையில்…தேவன் சபையில் இந்த மகத்தான வரங்களை அளித்தார். தேவ மகிமைக்காக அவ்வரங்களை அவர்கள் பயன்படுத்தும்படி, சபையில் அதற்கேற்ற ஒழுங்கை பவுல் ஏற்படுத்தினான். பவுல் அதைப் பற்றிக் கூறினான். ஆகையால் எந்த ஒரு மனிதனானாலும், எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி. அன்னிய பாஷைகளில் பேசுதலும், பாஷைகளில் வியாக்கியானம் செய்தலும், தெய்வீக சுகமளித்தலும், அற்புதங்களை நடபித்தலும், உண்மையான ஞானஸ்நானத்தைப் பற்றி பரிசுத்த ஆவியானவரின் சாட்சி ஆகிய இவற்றின் நாட்கள் கடந்து போய்விட்டன என்று உங்களிடம் சொன்னால், அப்படிப்பட்டவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். பவுலின் மேல் இருந்த அதே ஆவியானவர்தான் அடுத்து வந்த சபைக் காலத்திற்குள்ளும் அனுப்பப்பட்டார். அதே ஆவியானவர் தான் அதற்கடுத்து வந்த சபைக் காலத்திற்குள்ளும் வந்தார். இப்படியாக ஒரே ஆவியானவர்தான் அடுத்தடுத்து வந்த சபைக்காலங்களுக்குள்ளும், கடைசியாக சபைக்காலத்தின் முடிவு வரைக்கிலும் அப்படியே வந்து கொண்டிருக்கிறார். அதே ஆவியானவர் தான். பரிசுத்த ஆவியானவர் அவர். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?
4676 இது இங்கு எழுதப்பட்டுள்ளதை நீங்கள் கவனிப்பீர்களேயானால் நலமாயிருக்கும். வேதத்தை எழுதினவர் அறிந்திருக்கிறார். “ஏழு ஆவிகள்” (“Sevan Spirits”) என்பதில் “ஸ்பிரிட்ஸ்” என்ற ஆங்கில வாத்தையில் முதல் எழுத்து ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் உள்ளதைக் கவனியுங்கள். உ—ஊ, ஒரேயொரு பரிசுத்த ஆவியானவர் தான். அதே பரிசுத்த ஆவியானவராகிய அந்த ஒருவர் தான். ஏழு தடவைகளில், ஏழு சபைக்காலங்களுக்குள்ளும், அதே ஒளியை சுமந்து கொண்டு வருகிறார். இப்பொழுது அதைப் புரிந்து கொண்டீர்களா? ஏழு சபைக் காலங்களில், இந்த பரிசுத்த ஆவியானவர் இதே செய்தியை எடுத்துக் கொண்டு செல்லுவார். அதை மாற்றுகிற எவன்மேலும் சாபம் கூறப்பட்டிருந்தது. 77 முழுக்காரியத்தின் வெளிப்படுத்துதலோடு அது பொருந்திப் போகிறதா என்பதைக் கவனியுங்கள். அவர், “எவனாவது இதிலிருந்து ஒன்றை எடுத்துப் போட்டாலோ, இதோடு ஒன்றைக் கூட்டினாலோ, அவனது பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும்” என்று கூறினார். அங்கே தான் எல்லாவற்றையும் அடக்கினதாக அது இருக்கிறது. எனவே நீங்கள் இதிலிருந்து எதையாவது எடுத்துப்போடவோ அல்லது கூட்டவோ அங்கே இடமேயில்லை. பாருங்கள், ஏனென்றால் அது அவ்வாறு உள்ளது. அதைத் தான் தேவன் கூறினார். அதைத் தான் ஆவியானவர் கூறினார். அதைத் தான் சபைகள் கூறின. பவுல் போதித்தவைகளுக்குப் பதிலாக இன்னும் வேறு எதையாவது நீங்கள் உள்ளே திணிக்க முற்பட்டால், அது பிழையான காரியமாகும், வேதமானது சரியானதாக இருக்கிறது. அவருடைய ஜீவன்…இயேசு, “அவனது பங்கை ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடுவேன்” என்று கூறினார். 78 நீங்களோ, “ஜீவ புஸ்தகத்தின் எந்தப் பகுதியிலிருந்து?” என்று கேட்கலாம்.
4779 ஜீவ புஸ்தகத்தில் தங்களுடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ள மக்களில் அநேகர் நிச்சயம் தவறிடப் போகிறார்கள். அதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் அறிவீர்களல்லவா? அன்றொரு இரவில் கொடுக்கப்பட்ட அதைப்பற்றி பிரசங்கித்த உபதேசத்தை நினைவில் வைத்திருக்கிறீர்களா? நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? அதைப்பற்றி நான் மீண்டும் விளக்குவேன். ஏனெனில் இன்னும் அது சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை போன்றே உள்ளது. பாருங்கள். 80 யூதாஸ் காரியோத்து சாத்தானின் குமாரனாயிருந்தான், அவன் மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்ட பிசாசாயிருந்தான். அவன் அப்படிப்பட்டவன் என்று வேதம் கூறியுள்ளது. வேதம், “அவன் கேட்டின் மகனாகப் பிறந்தான்” என்று உரைத்துள்ளது. 81 இதை ஒரு நிமிடம் கவனியுங்கள். இப்பொழுது, இயேசு நடுவில் இருக்க, வலது புறத்தில் ஒருவனும், இடது புறத்தில் ஒருவனுமாக இரு கள்ளர்கள் அங்கே இருக்கிறார்கள். இப்பொழுது…இயேசு தேவனுடைய குமாரனாயிருந்தார். அது சரிதானே? இப்பொழுது, சிலர் மூன்று சிலுவைகளை மட்டுமே காண்கிறார்கள். ஆனால் நான்கு சிலுவைகள் அங்கே இருந்தன. நான்கு சிலுவைகள்! இப்பொழுது ஒரு சிலுவை என்றால் என்ன? அது ஒரு மரத்தினால் ஆனது. அது சரிதானே? வேதமோ, “மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவனாயிருக்கிறான்” என்று கூறியுள்ளது. அவர் நமக்காக சாபமானார். அவர் ஒரு மரத்தில் தொங்கினார். அது வெட்டப்பட்டுள்ளது. ஆனால் அது ஒரு மரமாயிருந்தது. அது சரிதானே? சரி. இங்கே மலையின் அடிவாரத்தில், மற்றொன்று நின்றிருந்தது. யூதாஸ்தானே ஒரு காட்டத்தி மரத்தில் தூக்கிலிட்டுக் கொண்டான். அது சரிதானே? 82 பாருங்கள்! இதோ இங்கே பரலோகத்திலிருந்து வந்தவரான தேவ குமாரன் தன்னோடு பாவத்திலிருந்து மனந்திரும்பிய ஒருவனை எடுத்துக் கொண்டு, மீண்டும் பரலோகத்திற்கே திரும்புகிறார். இதோ அங்கே கேட்டின் மகன் தொங்குகிறான். அவன் பாதாளத்தில் இருந்து வந்தான். மீண்டும் பாதாளத்திற்கே, மனந்திரும்பாத பாவியொருவனை அழைத்துக் கொண்டு செல்லுகிறான். அந்த மனந்திரும்பாத பாவி இயேசுவைப் பார்த்து, (“நீர் தேவனுடைய குமாரனேயானால்), நீர் தேவனுடைய குமாரனேயானால், உம்மையும் எங்களையும் இரட்சித்துக் கொள்ளும்” என்று கேட்டான். 83 ஆனால் இந்தக் கள்ளனோ, “நாமோ…” (சுவிசேஷம் பிரசங்கிக்கிறவனாக அச்சுவிசேஷகன் இருக்கிறான்) “நாமோ குற்றம் செய்து அடிக்கப்படுகிறோம். அவரோ ஒரு குற்றமும் செய்யவில்லை என்று கூறி பின்னர் ஆண்டவரே, நீர் உம்முடைய இராஜ்ஜியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று கேட்டான். அவன் யாராயிருந்தான்?
4884 …?… கடந்த இரவோ, அல்லது அதற்கு முந்தின இரவோ சொல்ல வேண்டியவை விட்டுப் போயிற்று. இந்தப் பக்கம் தேவனின் ஆபேல்; அந்தப் பக்கம் பிசாசின் காயீன். காயீன் ஆபேலை பலிபீடத்தண்டையில் கொன்றான். யூதாஸும் இயேசுவை பலிபீடத்தண்டையிலே கொன்றான். அது உண்மை. அந்தப் புகையானது அங்கே ஏதேனில் எழும்பி மீண்டும் இங்கே தான் அமைகிறது, அது முற்றிலும் உண்மை. 85 ஓ, அந்த பண்டை கால பாதை மகிமை பொருந்தினதாய் இருக்கிறது. அது ஆசீர்வதிக்கப்பட்ட பழைய பாதை, அப்படியே முழுவதும் மகிமையால் நிறைந்துள்ளது. 86 இப்பொழுது, இப்பொழுது நாம் இங்கே கண்டறிகிறோம் (என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.) இந்த சர்தை சபையின் தூதனுக்கு அவர் கூறினார். “ஏழு ஆவிகள், அந்த ஏழு ஆவிகளை உடையவர்” சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது;
4987 தேவன் ஒரே ஆவிதான் என்பதை எத்தனைபேர் அறிவீர்கள்? நிச்சயமாகவே தேவன் தான் பரிசுத்த ஆவியானவர். பிதாவாகிய தேவனே பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார், எல்லாம் ஒரே நபர், ஏனெனில் மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள். இப்பொழுது…ஆனால் தேவன் இந்த ஒரே ஆவியானவரை, ஏழு வெவ்வேறு காலங்களில் சுவிசேஷ ஒளிகளாக ஏழு சபைக் காலங்களுக்கு அனுப்பினார். நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்களா? ஏழு சபைக் காலங்கள். 88 இப்பொழுது நீங்களோ, “தேவன் அப்படிச் செய்யமாட்டார்” என்று கூறலாம் ஓ, ஆம், சகோதரனே. 89 கவனியுங்கள்! எலியா எடுக்கப்பட்ட பிறகு, எலியாவின் ஆவியை தேவன் உபயோகித்தார். எலியா போனபிறகு எலியாவில் இருந்த ஆவியின் இரட்டிப்பு மடங்கை எலிசா பெற்றுக் கொண்டான். எலிசா வியாதிப்பட்டு மரித்துப் போன பிறகு, அந்த ஆவி மீண்டும் யோவான் ஸ்நானகன் மேல் வந்தது. அதே ஆவி தான் இவனையும் அந்த எலியாவைப் போலவே நடந்து கொள்ளச் செய்தது. இவனும் அவனைப் போலவே வனாந்திரத்தில் வாழ்ந்தான். அது சரிதானே? அது கடைசி நாட்களில் மீண்டும் வரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது, பாருங்கள். தேவன் அதே ஆவியை தொடர்ந்து வரும் காலங்களில் உபயோகிக்கிறார்.
5090 இயேசுவானவர் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டு, நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தார். அது சரி தானே? இயேசுவின் மேல் இருந்த அதே ஆவியானவர், நேராக சபைக்குள் பெந்தெகொஸ்தே என்னும் நாளில் திரும்பி வந்தார். அடுத்து வந்த காலத்திற்குள்ளும் அதற்கடுத்து வந்த காலத்திற்குள்ளும் பின்னும் தொடர்ந்து வந்த காலங்களுக்குள்ளும் அதே ஆவியானவர் தொடர்ந்து அப்படியே வந்து கொண்டேயிருந்திருக்கிறார். அது என்ன? அதே ஆவியானவர், ஒரே ஆவியானவர்தான் அது. ஓ, உங்களால் அதைக் கண்டு கொள்ள முடியவில்லையா? தேவன் நமக்கு மேலே, பிதாவாக; தேவன் நம்முடனே, குமாரனாக; தேவன் நமக்குள் பரிசுத்த ஆவியாக, அது மூன்று உத்தியோகங்கள் தான். மூன்று தேவர்களல்ல. புரிகிறதா? அந்த மூன்று பட்டங்களாகிய (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) இவை யாவும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே நாமத்திற்குரியவையாகும். சரி.
5191 இப்பொழுது, தொடர்ந்து நாம் பார்க்கையில் கவனியுங்கள். “ஏழு ஆவிகளை” உடையவர்…வேறு வார்த்தைகளில் கூறினால், அதாவது: “ஏழு செய்தியாளர்களை உடையவர்.” (முதலாம் ஒருவரான) அந்த தூதனாகிய பவுலை அபிஷேகித்திருந்த அதே ஆவிதான், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய சபைக் காலங்களின் தூதர்களையும் அபிஷேகித்திருந்தது. ஓ, அவர்கள் யாவரும் அவருடைய வலது கரத்தில் இருக்கிறார்கள். அவருடைய வலது கரத்திலிருந்து தங்களுடைய வல்லமையையும், ஒளியையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். 92 அவர் உன்னதத்திற்கு ஏறிப் போனார். பிலிப்பு, அவன் மரித்துக் கொண்டிருக்கையில்…இல்லை ஸ்தேவான் மரித்துக் கொண்டிருக்கையில், “வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறதையும் காண்கிறேன்” என்று கூறினான். “தேவனுடைய வலது கரத்தில்” என்பது தேவனுக்கு ஏதோ பெரிய வலது கரம் இருப்பதாகவும், அந்தக் கையின் மேல் இயேசு உட்கார்ந்திருப்பதாகவும் அர்த்தமல்ல. வலது கரம் என்றால், “வல்லமையும் அதிகாரமுமாகிய” வலது கரம் என்று தான் பொருள்.
5293 தேவன் சிருஷ்டித்த அந்த சரீரம்…“என்னுடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர். அவரது ஆத்துமாவை நான் பாதாளத்தில் விடேன். நான் அவரை எழுப்பி, அவரை பலி பீடத்தின் மேல் ஆவியானவரின் இடத்தில் உட்கார வைத்தேன்” கவனியுங்கள்! அவர்கள் அவரைக் கண்டபோது—பலி பீடத்தின் மேல் உட்கார்ந்திருந்த அவருடைய கரத்தில் ஒரு புத்தகம் இருந்தது, அதை பூமியிலுள்ள எந்தவொரு மனிதனோ, பூமிக்கு கீழேயுள்ள ஒருவனோ, அல்லது எங்குள்ளவனாக இருந்தாலும் சரி, அப்புத்தகத்தை திறக்கவோ, அதை நோக்கிப் பார்க்கவோ பாத்திரவானாகக் காணப்படவில்லை; ஆனால் உலகத் தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே; இவரே ஆதிகாலத்தில் மீட்கப்பட்ட இந்த சரீரத்தைக் குறித்து முதலில் சிந்தையில் கொண்டிருந்தார், இவர் வந்து சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலிருந்து அப்புத்தகத்தை வந்து வாங்கி அவரே அதன்மேல் உட்கார்ந்து கொண்டார். ஆமென். அங்குதான் காரியம். அது வேத வாக்கியங்களாய் உள்ளன. அது மிகவும் அழகாக இருக்கிறது, பாருங்கள்.
5394 இப்பொழுது, “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடு கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ, அவனும் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்.” அதாவது வேறு வார்த்தைகளில் கூறினால், “நான் என்னுடைய சரீரத்திற்குள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு, (சோதனைகளின் மூலமாக) உலகத்தின் காரியங்களையெல்லாம் நான் ஜெயித்தேன். நான் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு விட்டேன்.” (“தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசாமாயிருக்கிறது.”) அவர், “வானத்திலும் பூமியிலும் உள்ள சகல அதிகாரமும் என் கரங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றார். அனைத்து அதிகாரமும்! அப்பொழுது தேவன் வேறொரு நபர் என்றிக்குமானால் அப்பொழுது, தேவன் அதிகாரமில்லாதவர் என்றாகிவிடுமே. ஏனென்றால் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினதாக வேதம் கூறியுள்ளது.
5495 இயேசுவானவர் ஆயிரம் பதினாயிரம் பேர்களான தமது பரிசுத்தவான்களோடு வருகிறார் என்றும், “பரலோகத்தில் அரைமணி நேரமளவும் காலியாக இருந்தது” என்றும் வேதம் கூறுகிறது. அப்படியானால், தேவன் என்ற இந்தப் பெரியவர் எங்கே? உ—ஊ. புரிகிறதா? அவர் கிறிஸ்துவில் இருக்கிறார். நிச்சயமாக! நாமும் அவரைப் போலவே, பரிசுத்த ஆவியினால் ஜெயங்கொள்ளும் பொழுது, நாமும், அவர் பூமிக்குரிய தாவீதின் சிங்காசனத்தை எடுத்துக் கொள்கையில், அவரோடு கூட உட்கார்ந்து, அவர் அங்கே செய்ததுபோலவே(ஆமென்) வல்லமையோடும், அதிகாரத்தோடும், பூமி முழுவதையும் ஆளுகை செய்வோம். “அவர்கள்…தேவ புத்திரர் வெளிப்படுவதற்காக பூமியானது பிரசவ வேதனைப்பட்டு தவித்துக் கொண்டிருக்கிறது. தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக.” 96 ஏனெனில், மொத்தத்தில் இவ்வுலகமானது தேவனால் ஆளுகை செய்யப்படுவதற்கென கொடுக்கப்படவில்லை. நாம் அது உண்மையென்று கவனித்தறிவோமாக. இப்பூமியின் தேவன் யார்? மனிதன்! அது அவனுடைய ஆதிக்க வரம்பு. பூமியிலுள்ள அனைத்தும் மனிதனுக்குக் கீழ்ப்பட்டவையாகும். பாவத்தினால் அவன் வீழ்ந்தான். கிறிஸ்துவின் மீட்கும் வல்லமையால், அவன் மீண்டும் அதிகாரத்திற்கு வருகிறான். அது உண்மையே, ஏனென்றால் பூமியானது மனிதனுக்கு சொந்தமானது ஆகும். அது அவனுக்கு அளிக்கப்பட்டு, அவன் யாவற்றையும் ஆளுகை செய்ய வேண்டுமென்றிருந்தது. இயற்கை யாவும் ஏகமாய் தவிக்கிறது. தேவ புத்திரர் பிரத்தியட்சமாவதற்கான அந்த நாளுக்காக அவைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஓ, என்னே; ஓ என்னே! தேவ புத்திரர் வெளிப்படுதல். நாம் இப்பொழுது இதோடு இதை விட்டு விடுவதே மேலானதாகும்.
5597 ஆனால், அந்த செய்தியாளர்கள் அவருடைய வலது கரத்தில் இருந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாம் அவர் அவர்களை அனுப்புகிறாரோ, அங்கெல்லாம் சென்று, ஒரே காரியத்தையே அவர்கள் பேசுவார்கள். கிறிஸ்துவில் இருந்த அதே பரிசுத்த ஆவிதான்…ஓ! கிறிஸ்துவில் இருந்த அதே ஆவி! அவர் உலகத்தை விட்டு போகும்போது, அவர், “இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னை காணாது…” காஸ்மோஸ் என்ற கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “உலக ஒழுங்கு” என்பதாகும்; பூமியல்ல, உலகம், உலக ஒழுங்கு) “…இனி என்னைக் காணாது…” (ஸ்தாபனங்கள், அல்லது இன்னும் என்ன அமைப்பானாலும்) “…என்னைக் காணாது. ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள்…” (சபை, விசுவாசி காண்பான்) “…ஏனென்றால் நான்…” (“நான்” தனிப்பட்ட பிரதிபெயர் சரியாய் உள்ளது “…நான் உங்களோடும் உங்களுக்குள்ளும் உலகத்தின் கடைசி பரியந்தம் இருப்பேன்” என்றார். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா?
5698 பெந்தெகொஸ்தே நாளில் வந்தது கிறிஸ்துவின் பரிசுத்த ஆவிதான் என்றும், அவரே அக்காரியங்களையெல்லாம் செய்தாரென்றால், இது கிறிஸ்துவினுடைய பரிசுத்த ஆவியானவர் இங்கே தள்ளப்பட்டிருக்கிறார், இங்கே கிறிஸ்துவினுடைய பரிசுத்த ஆவியானவர் இன்னமும் பற்றிக் கொண்டிருக்கிறார், இங்கே கிறிஸ்துவினுடைய பரிசுத்த ஆவியானவர் இன்னமும் பற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு உலகத்தின் கடைசி பரியந்தமும் இங்கே பற்றிக் கொண்டிருப்பார். பவுலை பரிசுத்த ஆவியால் நிரப்பி, அம்மகத்தான காரியங்களைச் செய்யச் செய்த அதே பரிசுத்த ஆவியானவர் தான் இந்த (ஐரேனியஸையும்) முழுவதும் நிரப்பினார். அதே பரிசுத்த ஆவியானவர் தான் மார்டினையும் நிரப்பினார் மற்றும் ஏனையோர்களையும் முழுவதுமாக அதே பரிசுத்த ஆவியானவர் தான் நிரப்பினார். அவர் தான் உங்களையும் என்னையும் முழுவதும் பரிசுத்த ஆவியினால் நிரப்பியுள்ளார். அது ஒரு சபைக் காலத்திலிருந்து மற்றொரு சபைக் காலத்திற்கான ஒரு பெந்தெகோஸ்தே ஆசீர்வாதமாய் உள்ளது. அவர் அல்ஃபாவும் ஓமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறார். அவரே எல்லாம்: தாவீதின் வேரும் சந்ததியுமானவர்; விடிவெள்ளி நட்சத்திரம்; சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, இன்னும் என்னவெல்லாம் உண்டோ எல்லாம் அவரே, பிதா குமாரன், பரிசுத்த ஆவி, அவர் இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர், அல்ஃபாவும் ஓமேகாவுமாயிருக்கிறார். எல்லாமுமாய், எல்லாவற்றிலும் எல்லாமுமாயிருக்கிறார்! ஓ, என்னே! அது என்னை ஒரு பாடலைப் பாடச் செய்கிறது: ஓ, என்னை யாரென்று நீர் சொல்கிறீர் (இயேசு சொன்னார்) நான் எங்கிருந்து வந்தேனென்கிறீர்கள்? என் பிதாவை உங்களுக்குத் தெரியுமா? அல்லது அவரது நாமத்தை நீங்கள் சொல்ல முடியுமா? அவர் சொன்னார்: நான் அல்ஃபாவும் ஓமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன், நான் முழு சிருஷ்டியாயிருக்கிறேன், இயேசு என்பது என் நாமம். எரியும் முட்செடியிலிருந்து மோசேயுடன் பேசியது நானே, நானே ஆபிரகாமின் தேவனும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாமே. (அது உண்மை.) சாரோனின் ரோஜாவும் நானே, நான் வந்தது எங்கிருந்து என்று அறிவீரோ? முழு சிருஷ்டியும் நானே, இயேசு என்பது எனது நாமம்
5799 பூலோகத்திலும் பரலோகத்திலுமுள்ள முழுக்குடும்பமும் அந்த ஒன்றினால் கட்டப்பட்டுள்ளனர். (உலகளாவிய அளவில் ஆசீர்வதிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, குதித்து, பரிசுத்த ஆவியினால் நாமம் சூட்டப்பட்டு, பரிசுத்த ஆவியினால் பேசி பரிசுத்த ஆவியானால் மறுபடியும் பிறந்தவர்களாயிருக்கிறார்கள்) அது உண்மை. பரலோகத்தின் தேவனுக்கு முன்பாக பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பமும், மற்றும் யாவும், எல்லா முழங்கால்களும் அந்த நாமத்திற்கு முடங்க வேண்டும். “நாம் இரட்சிக்கப்படும்படி வானத்தின் கீழேங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை.” ஒரு வேளை என்றல்ல, இரட்சிக்கப்படும்படிக்கு, ஆனால் இரட்சிக்கப்படவேண்டும் என்றே கட்டளையிட்டப்பட்டுள்ளது. ஓ, நான் அதை நேசிக்கிறேன். அது நன்றாக இருக்கிறது. சரி.
58100 “அவருடைய வலது கரத்தில்” அது என்னவென்று கண்டு கொண்டீர்களா? அது பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்ற சபையாக வல்லமையோடும், அற்புத அடையாளங்களோடும் காலங்கள் தோறும் அதை நடப்பித்து வந்திருக்கிறதாக இருந்து வந்துள்ளது. இப்பொழுது நாம்…அது இருண்ட காலத்தினூடே சென்றபோது, ஏறத்தாழ அது அவிந்துபோனதாக ஆகிவிட்டது. இப்பொழுது நாம் 2-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். ஓ, இந்த முதலாம் வசனத்திலிருந்து இன்னும் கூட கொஞ்சம் நாம் பார்க்கலாம் என்று நான் நம்புகிறேன். உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய் 101 இதற்கு அடுத்த சபைக்காலத்தை இங்கே திரும்பிப் பாருங்கள், “என்னுடைய நாமத்தை நீ மறுதலியாமலிருக்கிறதையும்” என்பதை நீங்கள் கண்டறியலாம். இதையடுத்து வரும் சபைக்காலத்தில், “என் நாமத்தை மறுதலிக்கவில்லை” யென்றும் கூறுகிறார். ஆனால் இந்த சபைக் காலத்திலோ, “உனக்கு ஒரு பெயர் உண்டு ” என்று கூறப்படுகிறது. இங்கே கவனியுங்கள்! இந்த சபை அவர் நாமத்தைப் பற்றியிருந்தது. இந்த சபை அவர் நாமத்தைப் பற்றியிருந்தது; இந்த சபை அவருடைய நாமத்தை பற்றியிருந்தது; இந்த சபை இருண்ட காலத்திற்குள் சென்றது. அங்கே அதைப் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. அச்சபைக் காலத்தை விட்டு வெளி வந்து, ஜீவனிடம் அவர்கள் இந்தப் பக்கத்தில் வரும்போது லூத்தர் அவர்களை வெளியே இழுத்தபோது, தப்பியவர்களான அச்சிறு கூட்டம் இருந்தது; “நீ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்” என்ற கூறப்பட்டது. இயேசுவின் நாமத்தை உபயோகிப்பதை அவர்கள் விட்டு விட்டபிறகு, எந்த நாமத்தை அவர்கள் உபயோகித்தனர்? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. அப்படிப்பட்ட ஒரு காரியம் அங்கே இல்லை. அது மரித்ததாயிருக்கிறது—அது ஒரு மரித்துப்போன வேத சாஸ்திரம்.
59102 பிதா என்பது ஒரு நாமமா என்பதை எனக்குச் சொல்லுங்கள். இங்கே எத்தனை பிதாக்கள் உண்டு? உங்களுடைய கைகளை உயர்த்துங்கள். உங்களில் யாருக்காவது பிதா அல்லது குமாரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதா? மனிதர்கள் ஆக இருக்கிறோம். அது தான் அது. அது பெயரல்ல…பரிசுத்த ஆவியின் பெயர் பரிசுத்த ஆவியல்ல. அதுதான், அது பரிசுத்த ஆவியாயிருக்கிறது. பெயரோ…பரிசுத்த ஆவி என்பது அதன் பெயரல்ல. பரிசுத்த ஆவி ஒரு பட்டமாயிருக்கிறது. பிதா குமாரன், பரிசுத்த ஆவி. 103 எனவே நீங்கள் அங்கே பாருங்கள், நித்திய குமாரன் என்ற உபதேசத்தைப் போலவே இதுவும் ஆதாரமற்றதாய் இருக்கிறது. நித்திய குமாரத்துவம் என்ற ஒன்று இல்லை. ஒரு குமாரனெனப்பட்டவன் துவக்கமுள்ளவனாகப் பிறக்கிறான். நித்தியத்திற்கு ஒருபோதும் துவக்கம் என்பதே ஏதுமில்லை.
60104 நான் அன்றிரவு கூறியது போல, நித்திய நரகம் என்ற ஒன்று இல்லை. நித்திய நரகம் என்ற ஒன்று உள்ளது என்று எப்படி உங்களுக்கு தோன்றுகிறது? அப்படியென்றால், நரகமானது எப்பொழுதும் இருந்த ஒன்று என்றாகிவிடும், வேதமோ “அது பிசாசுக்காகவும், அவனது தூதர்களுக்காகவும் உண்டாக்கப்பட்டது” என்று கூறியுள்ளது. எப்பொழுதும் அங்கே ஒரு நரகம் உண்டாயிருக்கும் என்றால், எப்பொழுதும் அங்கே ஒன்று இருக்குமானால், அப்பொழுது அது ஆதியிலும் உண்டாயிருந்திருக்க வேண்டியதாயுள்ளது. என்ன…அப்படியானால் அவர், ஏல், ஏலா, ஏலோஹிம் , “தானாகவே இருக்கிறவர்” என்பவராக இருக்கையில், அப்பொழுது ஒன்றுமே சிருஷ்டிக்கப்படாமல், ஒன்று மற்ற நிலையில், யார் அந்த நரகத்தை உபயோகப்படுத்தினார்கள்? அப்பொழுது நரகமானது அவர் ஆதியில் இருந்தது போலவே அதுவும் அவரோடு இருந்திருக்க வேண்டுமே. பாருங்கள்? “நரகமானது பிசாசுக்காகவும், அவனது தூதர்களுக்காகவும் உண்டாக்கப்பட்டதாகும். துன்மார்க்கர் யாவரும் அதில் தள்ளப்படுவார்கள்.” அது முற்றிலும் உண்மை. அவர்கள் செய்துள்ள பாவத்திற்காக ஒருகால் கோடிக்கணக்கான ஆண்டுகள் தண்டிக்கப்படலாம். ஆனால் அவர்களுக்கு இரண்டாம் மரணமே உண்டாகும் ஒரு நேரம் உண்டாகும். அவர்களுக்கு ஒன்றுமே விடப்பட்டிருக்காது. துவக்கத்தையுடைய எந்த ஒரு காரியத்திற்கும் முடிவு உண்டு. எனவே நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்போது, நாம் ஒரு மூலக்கூறும் உண்டாயிருப்பதற்கு முன்பிருந்த அந்த இயலுக ஒளியின் பாகத்தையேப் பெற்றுக்கொள்கிறோம். உ—ஊ. அந்த தேவனுடைய ஒளியானது நாம் இயேசுவை காணும்படி ஒளியூட்ட நம்முடைய இருதயத்திற்குள்ளக வருகிறது. வேதம், “நாம் எல்லாக் காரியங்களையும் காண்கிறதில்லை, ஆனால் நாம் இயேசுவைக் காண்கிறோம்” என்று கூறியுள்ளது.
61105 இப்பொழுது, அவர், “நான் அது யார் என்று…அறிவேன். ஏழு சபைகளுக்கு அனுப்புகிற ஏழு ஆவிகளை உடையவராகிய நானே அவர். நான் உன்னுடைய கிரியைகளையும், அதைக் குறித்த யாவையும் அறிந்திருக்கிறேன், ஆனால் நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்” என்றார். இப்பொழுது நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: இது யாருடைய காலமாயிருந்தது? மார்டின் லூதர், லுத்தரன் காலம். இப்பொழுது அவர்கள் துவக்கதிலேயே கண்டனத்திற்குள்ளாக்கப்பட்டனர். அவர்கள் துவங்கக் கூட இல்லை, அவர்கள் துவக்கத்திலேயே மரித்தவர்களாயிருந்தனர். அவர்கள் மரிக்க வேண்டியவர்களாயிருக்கவில்லை, அவர்கள் துவக்கத்திலேயே மரித்துவிட்டனர். பாருங்கள், அவர்கள், “வெளியே பறிக்கப்பட்டவர்கள்.”
62106 இப்பொழுது இதைக் கவனியுங்கள். இப்பொழுது நாம் அடுத்த வசனத்தை எடுத்துக் கொள்வோமாக: விழித்திருங்கள்! நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. 107 அவர் இப்பொழுது லூத்தரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நாம் யாவரும் இந்தக் காலம் லூத்தரன் காலம் என்றும், அது சீர்திருத்தத்தின் காலம் என்றும் ஒத்துக் கொள்கிறோம். அவர் என்ன சொன்னார்? “நீ உயிருள்ளவன் என்று பொய்யாக பெயர் ஒன்றினைக் கொண்டிருக்கிறாய், ஆனால் நீயோ மரித்தவனாயிருக்கிறாய்.” அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் மீண்டும் சபையை ஸ்தாபனமாக்கிவிட்டார்கள். “கரிச்சட்டி கிண்டியை பார்த்து ‘நீ கருப்பாய் இருக்கிறாய்’ என்றதாம்” அதே போல் ப்ராடெஸ்டெண்டுகள், “கத்தோலிக்கர்கள்” என்று கேலி செய்ய வேண்டாம். பாருங்கள், ஏனெனில் நீங்களும் அந்நிலைக்கே திரும்பிச் சென்று, கத்தோலிக்க சமயத்தின் அதே கோட்பாடுகளையும், பட்டப்பெயர்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். லூத்தர் வெளியே வந்த பொழுது, அவர் தன்னோடு கத்தோலிக்க சமயத்தின் ஞான உபதேசங்கள், மற்றும் கத்தோலிக்க சபை கொண்டிருந்த ஒவ்வொன்றையும், கொண்டு வந்து, தாங்களாகவே ஒரு பெயரை சூட்டிக்கொண்டனர். பாருங்கள், “நீ ‘உயிருள்ளவன்’ என்று பெயரைக் கொண்டிருக்கிறாய். அந்த மரண அந்தகார ஆயிர வருடங்களிலிருந்து வெளி வந்து இன்னமும் மரித்ததாகவே இருந்து கொண்டு, இன்னமும் உயிரோடிருக்கிறதாகக் கூறும் அந்நாமத்தைக் கொண்டிருக்கிறாய்” இது ஞாபகத்தில் உள்ளதா? 108 இதை உறுதிப்படுத்தும் வகையில், மற்ற சபைகளைப் பற்றி இயேசு, “நீ என் நாமத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறாய்” என்று கூறியுள்ளார். இந்த ஐந்தாம் சபைக் காலத்தில் அவர்கள் “அந்நாமத்தை இழந்து விட்டார்கள்.” இருண்ட காலத்திலிருந்து வெளியே வந்த பிறகு, அது “‘உயிருள்ளவன் என்று பெயர்’ கொண்டிருந்தாலும் அது மரித்ததாகவே இருக்கிறது” என்று கூறினார்.
63109 ஓ, மெத்தோடிஸ்டுகளே, பாப்டிஸ்டுகளே, பிரஸ்பிடேரியன்களே, பெந்தேகொஸ்தேயினரே, நீங்கள் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். புரிகிறதா? அந்த பழைய மரித்த கோட்பாடுகளையும் தன்னுடைய குமாரத்திகளோடு சுட்டெரிக்கப்படப் போகிற கத்தோலிக்க சபையைச் சார்ந்த காரியங்களையும் விட்டு அகன்று போங்கள். 110 ஒருவரும் “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்” நாமம் சரி என்று சொல்லமுடியாது. அவை வெறும் பட்டப் பெயர்களே… அவை அவர்கள் “பரிசுத்த திரித்தவம்” என்று அழைக்கிறார்கள். திரித்துவமா? வேதாகமத்தில் திரித்துவம் என்ற வார்த்தையை யாராவது கண்டறிந்து எனக்கு எடுத்துக் காண்பியுங்கள் பார்க்கலாம். யாராவது திரித்துவம் என்ற வார்த்தையை வேதாகமத்தில் கண்டால், வந்து என்னிடம் சொல்லுங்கள் பார்க்கலாம். வேதாகமத்தில் அந்த வார்த்தையே கிடையாது. அவ்விதமான ஒன்று கிடையாது.
64111 இப்பொழுது, இப்பொழுது: …சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை… 112 “உங்களுக்குள்ளதை பற்றிக் கொண்டிருங்கள், லூத்தர் உங்களை பற்றி வெளியே இழுத்தார். அதைப்பற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது சாகிறதற்கேதுவாயிருக்கிறது. நீங்கள்…அவர்கள் மறுபடியும் உன்னை அதற்குள் இழுத்து விட்டு விடுவார்கள். அதைப் பற்றிக் கொள். அது சாகிறதற்கேதுவாக இருக்கிறது.” 113 இப்பொழுது: …உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. 114 இது அருமையாக அமைந்துள்ளதல்லவா? ஓ, என்னே! நான் அதை விரும்புகிறேன். “நிறைவுள்ளதாக இருக்கவில்லை” ஏன்? அவர்கள் நீதிமான்களாக்கப்பட்டிருந்தனர், லூத்தர் நீதிமானாகுதலைப் பிரசங்கித்தார். அதன்பின்னர் நீங்கள் பரிசுத்தமாக்கப்பட வேண்டியதாயிருந்தது, அதன்பின்னர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும். அதன் பிறகு அவர்கள் தனக்கே சொந்தமானவர்களல்ல. அவர்களுக்குள் உள்ள பரிசுத்த ஆவியினால் நிறைவுள்ளவர்களாக ஆக்கப்படுகிறார்கள். அது கிறிஸ்தவனுடைய நிறைவு அல்ல, அது அவனுக்குள்ளிருக்கிற நிறைவான பரிசுத்த ஆவியாயுள்ளது. புரிகிறதா? அதைத் தான்…நான் ஏற்கெனவே கூறியபடி, “அந்த மலை பரிசுத்த மலையல்ல, அம்மலையின் மேல் உள்ள பரிசுத்தமான தேவன் தான். சபை பரிசுத்தமான சபை என்றல்ல, பரிசுத்த மக்கள் என்றல்ல, ஆனால் சபையிலும் மக்களிலும் இருக்கிற பரிசுத்த ஆவியானவர் தான்.” அதுவே பரிசுத்தமுள்ள பாகம் ஆகும். பாருங்கள்.
65115 “உன் கிரியைகள் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. நீங்கள் பரிபூரண நிலைக்கு வரவில்லை.” ஏனெனில் அவர்களுக்கு நீதிமானாகுதல் என்ற நிலை மட்டுமே இங்கே உண்டாயிருந்தது என்பதை நாம் கண்டறிகிறோம், நீதிமானாகுதல். இது…இல்லை, நான் உங்கள் மன்னிப்பை வேண்டுகிறேன். இங்கே லூத்தர் செய்தியின் கீழ், நீதிமானாகுதல் வந்தது. அடுத்து இங்கே பரிசுத்தமாகுதல், அதற்கடுத்து இங்கே பரிசுத்த ஆவியின் அபிஷேகம். புரிகிறதா? இப்பொழுது இம்மூன்று மூலக்கூறுகளும் முறையே கடைசியான மூன்று சபைக் காலங்களிலும் கிரியை செய்தது. அதுவே ஒரு முழுமையான பிறப்பை உண்டாக்குகிறது. அவர்கள் ஒரு சிறு கிருமியாக மாத்திரமே தாயின் கர்ப்பத்தில் உருவானார்கள். அவ்வளவுதான். ஆனால் பரிசுத்த ஆவியே பிறப்பை உண்டாக்குகிறது.
66116 நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். ஒரு இயற்கையான பிறப்பு ஏற்படும்பொழுது, முதலாவது என்ன சம்பவிக்கிறது? தண்ணீர். அதற்கடுத்த காரியம்? இரத்தம். அது சரியா? அதற்கடுத்து என்ன? ஆவி. அது சரியே. 117 இயேசு மரித்த பொழுது அவருடைய சரீரத்திலிருந்து என்ன வெளிவந்தது? அவருடைய விலாவிலே அவர்கள் ஈட்டியால் குத்தியபோது, விலாவிலிருந்து, தண்ணீரும் இரத்தமும் வெளியே வந்தது. “உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்றார். தண்ணீர், இரத்தம், ஆவி. 118 “இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமானகளாக்கப்பட்டிருக்கிறபடியால்” ரோமர் 5:1 “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.” நீதிமான்களாக்கப்படுதல். பரிசுத்தமாக்கப்படுதல், எபிரெயர் 13:12-13. “தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனங்களை பரிசுத்தம்பண்ணும்படி இயேசு நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.” லூக்கா 24:49, “நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள். பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்பொழுது, நீங்கள் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்…” 119 நீங்கள் அத்தியட்சகராக ஆகும்பொழுது அல்ல, நீங்கள் உதவிக்காரராக ஆகும்பொழுது அல்ல, நீங்கள் மேய்ப்பனாக ஆகும்பொழுது அல்ல, நீங்கள் போப்பாக ஆகும் பொழுது அல்ல, “ஆனால் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்பொழுது, நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்.” நீங்கள் உங்களுடைய சபையைக் குறித்தும், உங்களுடைய கோட்பாட்டைக் குறித்து மட்டுமே சாட்சி பகர முடியுமென்றால், நீங்கள் வெறும் உதவிக்காரராக மட்டும் இருந்தால், நீங்கள் வெறும் ஒரு மேய்ப்பனாக மட்டும் இருந்தால், நீங்கள் வெறும் ஒரு போப்பாக மட்டும் இருந்தால், அல்லது நீங்கள்…அப்பொழுது நீங்கள் ஒரு சடங்காச்சார கோட்பாட்டிற்கு மட்டுமே சாட்சியாக இருக்க முடியுமே! ஆனால் பரிசுத்த ஆவி உங்கள் மீது வரும்போது, அப்பொழுது நீங்கள் அவரைக் குறித்து சாட்சியை உடையவர்களாய் இருப்பீர்கள். அவர் செய்த கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள். ஏனெனில் அவருடைய ஜீவன் உங்களில் இருக்கிறது. ஓ, ஓ! என்னே, என்னே! அதைப் போலவே, ஆம், ஐயா. ஓ, நான் இங்கு இதைக் கூறும்போது, உங்களைவிட நான் இதில் அதிக நல்லுணர்வைப் பெறுகிறேன் என்று நான் நினைக்கிறேன்.
67120 “சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து.” இப்பொழுது அவர் இங்கே இப்பொழுது 3-ம் வசனத்தில் கூறுகிறார். ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக் கொண்ட வகையை நினைவு கூர்ந்து (நான் அதை விரும்புகிறேன்)… அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு, நீ விழித்திராவிட்டால், திருடனைப் போல் உன் மேல் வருவேன்; நான் உன் மேலும் வரும் வேளையை அறியாதிருப்பாய். 121 “நீதிமானாகுதல் என்பதில் நீ நிலைத்திரு, அதைப் பற்றிக் கொண்டிரு.” உன்னிடத்திலிருந்து அவர்கள் அதை திரும்ப எடுத்துப் போடவிடாதே. “நீ பெற்றுக் கொண்டதையும், நீ கேட்டதையும்.” அதே வேதாகமத்தைத் தான் அவர்களும் வாசிக்கிறார்கள். பாருங்கள். ஆனால் அவர்களோ அதன் முழுமையையும் எடுத்துக் கொள்ளவில்லை, ஏனெனில் அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. அது அவர்களுடைய காலத்திற்குரியதல்ல. அக்காரணத்தினால்தான். அவர்கள் உயிர்த்தெழுதலில் வருவார்கள். அவர்கள் நடப்பதற்கென எந்த அளவு ஒளி அவர்களுக்குக் கிடைத்ததோ, அவ்வொளியில் அவர்கள் நடந்து வந்தார்கள். எனவே, அவர்கள் உயிர்த்தெழுதலில் வருவார்கள்.
68122 இப்பொழுது ஞானஸ்நானத்தைப் பற்றி பிரசங்கிக்கிற அநேக பெந்தெகொஸ்தேகாரர்கள் “லூத்தர் காலத்து லூத்தரன்கள் மற்றும் ஏனையோர் எழும்பி வரமாட்டார்கள்” என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். ஓ, ஆம். அங்கேயிருக்கிற டாக்டர். ஹேக்கரி அவர்களை சந்தித்ததைப் பற்றி ஒரு சிறு சம்பவம் உண்டு. நான் அவரிடம் கூறினேன்…அவர், “நாங்கள் என்ன நிலையில் இருக்கிறோம்?” என்று கேட்டார். நான் கூறினேன்…அதாவது அவர்கள் மினியாபோலிஸ் என்ற இடத்தில் உள்ள பெத்தானியில் அந்த பெரிய லூத்தரன் வேதாகமக் கல்லூரியைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர், “லூத்தரன்களாகிய நாங்கள் என்னத்தைப் பெற்றிருக்கிறோம்?” என்று கேட்டார். அப்பொழுது நான், “சரி, நான் உங்களுக்கு கூறுவேன், நீங்கள் கிறிஸ்துவைப் பெற்றிருக்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று பதிலளித்தேன். அதற்கு அவர், “நல்லது, நாங்கள்—நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறோம்—விரும்புகிறோம். நாங்கள் அதைப் பெற்றுள்ளோம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்டார் அப்பொழுது நான், “மறைமுகமாக” என்றேன். மேலும், நான், “நீங்கள் அதைப் பற்றி விசுவாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றேன். அதற்கு அவரோ, “நீர் கூறுவதன் பொருள் என்ன?” என்று கேட்டார்.
69123 அவர்களுக்கு உள்ள வேதாகமக் கல்லூரியைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உண்டு…அங்கே கல்வி பயிலும் மாணவர்களால் கல்லூரிக் கட்டணத்தைக் கட்ட இயலவில்லையெனில், அம்மாணவர்கள் இவ்விளை நிலங்களில், தானியம் விளைவித்தும், அதன் மூலம் தங்கள் கட்டணத்தை ஈடுகட்டி விட அனுமதிக்கப்படுவார்கள். நான், “நல்லது…” என்றேன். அங்குள்ள அந்தபெரிய வேதக் கல்லூரியில் எனக்கு பெரிய மேஜையில் உயர் ரக எல்லாவகையான உணவுகளையுங் கொண்ட விருந்து ஒன்றை அளித்தனர். அவர்கள் அருமையான மனிதராயிருந்தனர். அந்த விருந்தில் டாக்டர் ஹேக்கரி அங்கே அந்தப் பக்கமும், சகோதரன் ஜேக் மூர் இந்தப் பக்கமுமாக அமர்ந்திருந்தனர். ஏனென்றால், டாக்டர் ஹேக்கரி அவர்கள் பெரிய பண்டிதரானபடியால், அவர் பேசும்பொழுது உபயோகிக்கும் பெரிய பெரிய வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்று நான் அறியாதபடியினால், என் அருகில் அமர்ந்திருந்த ஜாக்மூரின் காலை என் காலினால் அழுத்தி அவர் சொல்லுகிறது என்னவென்று கேட்டு அறிந்து கொள்ளத்தான், நீங்கள் பாருங்கள். எனவே, அதன்பின்னர், நான் கூறினேன்… 124 அவர் என் அருகில் அமர்ந்திருந்தார். அப்பொழுது அவர், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமென்றால், இங்கே ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும்” என்றர். மேலும், “நாங்கள் தேவனுக்காக பசியாயிருக்கிறோம்” என்றார். அப்பொழுது அவர், “நாங்கள் வரங்கள் என்ற தலைப்பில் பெந்தெகொஸ்தேகாரர் எழுதின ஒரு புத்தகத்தை படித்தோம். நாங்களும்…அதாவது எங்களில் சில சகோதரர்களும் இது சம்மந்தமாக இப்புத்தகத்தை எழுதின அந்த மனிதரை சந்திக்க கலிஃபோர்னியாவுக்குச் சென்றிருந்தோம்” என்று கூறினார். (நான் அம்மனிதரை அறிவேன்) மேலும் அவர், “அந்த வரங்களில் சில கிரியை செய்வதைக் காண நாங்கள் விரும்புகிறோம்” என்றார். தொடர்ந்து அவர், ‘அவைகளில் எதையும் நான் பெற்றிருக்கவில்லை. ஆனால் நான் அவைகளைப் பற்றி எழுதினேன்’” என்றார். எனவே அவள் கூறினார்…மேலும், “நாங்கள் இங்கே வந்தபிறகு, நாங்கள் இதைக் கண்டோம். நாங்கள் பசியாயிருக்கிறோம். எங்களுக்கு தேவனே தேவை” என்றும் கூறினார்.
70125 நான் அவரிடம், “ஒரு சமயம் ஒரு மனிதன் புறப்பட்டுச் சென்றான்” என்றேன். நீங்கள் பாருங்கள், உங்களுக்குத் தெரியுமா? அவனுடைய சொந்த நிலங்கள் அங்கிருந்தன. மேலும், “ஒரு மனிதன் புறப்பட்டு போய், அந்த பெரிய நிலத்தை உழுதான். அவன் எல்லா களையின் வேர்களையும் பிடுங்கிப் போட்டுவிட்டு, அதன் பின்னர் தானியத்தை நட்டான். ஒவ்வொரு நாள் காலையிலும் அவன் வாசல் வழியாக எட்டிப்பர்த்து, தானியம் விளைந்து விட்டதா என்று கவனித்துக் கொண்டே வந்தான். ஒரு நாள் காலையில் உங்களுக்குத் தெரியுமா முதலாவதாக அப்பயிரில் இரண்டு சிறு துளிர்கள் முளைத்தெழும்பி தலை நிமிர்த்தி நின்றன” என்று கூறினேன். (மக்காளச் சோளத்தை பயிர் செய்தவர்கள் இங்கு யாராவது உண்டா…எங்கே ஜார்ஜ் ரைட் மற்றும் ராய் ஸ்லாட்டர் ஆகியோர்? விதை முளைத்ததும் வரும் இரு துளிர்களை நீங்கள் அறிவீர்கள்) மேலும், ‘“ஓ’, அப்பொழுது அவனோ, ‘என் வயலின் தானிய விளைச்சலுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்’ என்றான்’” என்று கூறினேன். அப்பொழுது நான், “தானிய விளைச்சலை அவன் வயலில் பெற்றுவிட்டானா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ஒரு வகையில் அதைப் பெற்றுக்கொண்டான்” என்றார். 126 அப்பொழுது நான், “மறைமுகமாக இருக்கிறது, ஆம்” என்றேன். மேலும் நான், “அதே விதமாகத்தான் லூத்தரன்களாகிய நீங்களும், முதலாவதாக ஏற்பட்ட சீர்திருத்தத்தின் காலத்தில், இரு சிறு துளிர்களைவிட்டீர்கள். பாருங்கள்” என்றேன். “நல்லது” தொடர்ந்து நான், “அந்த தானியமோ படிப்படியாக வளர்ந்தது” என்றும் கூறினேன். நீங்கள் பாருங்கள், அப்பொழுது நான் “காய்ந்து ஜீவனற்றுப்” போவதைக் குறித்தோ தானியம் வளர்ந்தது என்பதோடு மட்டும் அவர் புரிந்துகொள்ளும்படி விட்டுவிட்டேன்.
71127 நான் மேலும், “தானியமானது மேலும் வளர்ந்து சிறிது காலம் கழித்து பட்டுக் குஞ்சம் என்ற கட்டத்தை அடைந்தது. அப்பொழுது அந்த தானியச் செடியின் மேல்பகுதியில் வந்திருக்கும் மகரந்தப் பொடியையுடைய பட்டுக் குஞ்சம் பகுதி, கீழ் நோக்கி அந்த இலையைப் பார்த்து, ‘ஹஹ்ஹஹ்ஹா, உங்களிடம் ஒன்றுமில்லை. நீங்கள் பழைய சடங்காச்சார லூத்தரன்கள்’ என்று பரிகசித்ததாம். புரிகிறதா? மேலும் அந்தப் பட்டுக் குஞ்சம், ‘நான்…நான்—நான் தான் இனப்பெருக்கம் செய்பவன், மகத்தான மிஷனரி ஊழியத்தின் காலம் என்னுடையது தான்’ என்றது. காற்று வீசிய பொழுது மகரந்தப் பொடியையுடைய அந்தப் பட்டுக் குஞ்சப்பகுதி, வீழ்ந்து தன்னிடத்திலுள்ள் மகரந்தப் பொடியை சிதறச் செய்தது. அது தான் வெஸ்லியின் ‘பரிசுத்தமாகுதல்’ என்ற செய்தி” என்றே கூறினேன். புரிகிறதா? அதாவது நமக்கு எப்போதுமிருந்த எல்லாக் காலத்தையும் விட அக்காலம்தான் மகத்தான மிஷனரி ஊழியத்தின் காலமாயிருந்தது. அது தான் வெஸ்லியின் சபையின் காலமாகும். அந்த வெஸ்லியின் காலமானது, இந்தக் காலத்தையும் மிஞ்சியதாக இருந்தது. வெஸ்லி சபைக்காலமானது, ஒரு மிஷனரி காலமாக இருந்தது. அது எங்கு பரவச் செய்தது. அது என்ன செய்தது? அது—அது எங்கும் பரவச் செய்தது. 128 பாருங்கள், இயற்கை கூட இந்த ஆவிக்குரிய மூன்று கட்டங்களைப் பற்றி சாட்சி கொடுக்கிறது. இயற்கை கூட, தேவன் ஆதியில் அது அந்த விதமாகவே இருக்கும்படியாக உண்டாக்கினார். வேதாகமம் கூட உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் இயற்கையை உற்று நோக்கியே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொண்டு விடலாம். புரிகிறதா?
72129 அதன்பின்னர்…சிறிது காலம் கழித்து அந்த மகரந்தப் பொடி அங்கே உதிர்ந்து போனது. அதிலிருந்து என்ன புறப்பட்டு வந்தது? அதிலிருந்து தானியத்தின் கதிர் புறப்பட்டு வந்தது. அதற்குள் தான் தானியமானது இருக்கும். அக்கதிர்ப்பகுதிதான் பெந்தெகொஸ்தே குழுவாகும். பெந்தெகொஸ்தே குழுவினரும், இங்கு உள்ள மற்ற குழுவினரைப் போலவே இருந்தார்கள். முதலில் இங்கே இரு முளைகள் முளைத்தெழும்பி வந்தன. அது தான் லூத்தரின் காலம்; அதற்கடுத்து இங்கே மகரந்தப் பொடியையுடைய பட்டுக் குஞ்சப் பகுதியாகும். அது வெஸ்ல்யின் காலமாகும். அதற்கடுத்து இங்கே தானியத்தையுடைய கதிர்ப்பகுதி இருந்தது. (என்ன?) ஆதியில் இருந்தது போலவே இங்கும் வந்து விட்டது. அதேக் காரியம் தான். 130 இப்பொழுது இங்கு இது என்னவாயிருந்தது? நீங்களோ, “இப்பொழுது நல்லது,” பெந்தேகோஸ்தேக்களோ, “மெத்தோடிஸ்டுகளாகிய உங்களோடும், அல்லது லூத்தரன்களாகிய உங்களுக்கும் எங்களுக்கும் எந்த உபயோகமுமில்லை என்று கூறுகின்றனர்” எனலாம். ஆனால் மொத்தத்தில் முதலில் இருமுளைகள் எழும்பி அதிலிருந்த ஜீவன் தான், தனக்கு மேலே அடுத்து வரும் பட்டுக் குஞ்சப்பகுதி உருவாகக் காரணமாயிருந்து, பட்டுக் குஞ்சப் பகுதியில் இருக்கும் ஜீவன் தான், அதற்கடுத்து வரும் கதிர்ப்பகுதி உருவாகக் காரணமாக அமைந்தது. எனவே, நீங்கள் பாருங்கள், இவை யாவும் தேவனுடைய திட்டமாக இருக்கிறது. அவர்கள் மறைமுகமாக பரிசுத்த ஆவியை உடையவர்களாயிருந்தனர்; அவ்வண்ணமாகவே பரிசுத்தமாகுதல் செய்தியின் கீழ் வெஸ்லி சபைக்காரர்களும் இருந்தார்கள். ஆனால் இன்று அந்நிய பாஷைகளில் பேசுதலும், வரங்கள் திரும்ப அளிக்கப்படுதலுமான காரியம் இங்கே திரும்ப கொண்டு வரப்பட்டுள்ளது. அதே பரிசுத்த ஆவியானவர், நீங்கள் பாருங்கள். உண்மையானது ஒன்று. ஆமென். ஆம்.
73131 சரி, “நீ கேட்டவைகள் விட்டுவிடாதபடிக்கு, அவைகளை பற்றிக் கொள்.” இப்பொழுது நான்காம் வசனம், அதுதான் என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சில பேர் சர்தையிலும் உனக்குண்டு. அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடு கூட நடப்பார்கள். 132 “நீங்கள் அதிலிருந்து ஸ்தாபனத்தை உண்டாக்க வேண்டாம். நாம் அதைச் செய்ய விரும்புகிறதில்லை.” இல்லை. நான்…நான் தவறான வசனத்தை வாசித்து விட்டேன், நான் அப்படித்தானே செய்துவிட்டேன்? அல்லது நான் செய்யவில்லையா? ஆம், ஆம். அது உண்மை. ஆம் சரி. ஆம். “சர்தையில் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சில பேர்கள் உள்ளனர்.” சர்தையில் இன்னும் ஒரு சிறு கூட்டமாக மக்கள் அத்தீட்டான காரியத்திற்கு தலைவணங்காமல், தங்களை சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் இருக்கும்படி காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆவியால் நிரப்பப்பட்ட பண்டைய பெந்தேகொஸ்தே அனுபவத்தின் அடிச் சுவடுகள் இங்கும் தென்படுகிறது. லூத்தரின் காலத்தில் அவர்களில் அநேகர் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் என்ன செய்தனர்? வேதம் கூறுவது போல் “அவர்கள் தங்கள் தாயைப் போல் நடந்து கொண்டு,” அதே போல திரும்பவும் செய்ய ஆரம்பித்தார்கள். திரும்பவும் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கினர். ஆனாலும் அவர்களில் வெகு சிலர் அச்செயல்களுக்கு உடன்படாமல் தனியே ஒதுங்கி, தேவனுக்காக விலகி நின்றார்கள். தேவன் அவர்களைப் பற்றி “நல்லது, உங்களில் சில பேர், எனக்கு முன்பாக நடக்க பாத்திரராய் இருக்கிறீர்கள். அவர்கள் வெண்வஸ்திரந்தரித்து நடப்பார்கள்.நீங்கள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நீங்கள் நிக்கொலாய் மதஸ்தினரின் போதகத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். மீண்டும் உங்களுடைய ஸ்தாபனத்தை நீங்கள் ஆரம்பிக்க வேண்டாம். தேவனில் சுயாதீனராக தங்கியிருங்கள். நீங்கள் தொடர்ந்து செல்லுகையில் பரிசுத்த ஆவியானவர் உங்களை நடத்துவாராக. அவர்களில் இன்னும் சிலர் மீதியாக விடப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.
74133 இப்பொழுது 5-ம் வசனம் என்றே நான் நினைக்கிறேன்: காதுள்ளவன் எவனோ அவன்… 134 இல்லை, நாம் இதைப் பார்ப்போம். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். 135 இப்பொழுது, “சிலபேர்” வெகு சிலர், மிகச் சிறிய மீதியானவர்கள் அக்காலத்தில் மீதியாக இருந்தார்கள். அவர்கள் கத்தோலிக்க சமய போதகத்தால் மேற்கொள்ளப்பட முடியவில்லை. சரி.
75136 நாம் இப்பொழுது சீர்திருத்தத்தைப்பற்றி பேச வந்தோம். நான் பேச விரும்புவது…லூத்தரைப் பற்றி வரலாற்றை நான் விட்டு, இந்த விஷயத்தை பார்ப்பதற்காக எடுத்துக் கொண்டேன். இப்பொழுது அடுத்த வசனம் இவ்வாறு கூறியுள்ளது. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். 137 அவர்கள் இந்த நிக்கொலாய் மதத்தினரின் போதகத்தை விட்டு விலகியிருக்கும்படி தேவன் எச்சரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். “அதிலிருந்து விலகி இருங்கள்! உங்களுடைய வஸ்திரங்களை உலகத்தின் காரியங்களினால் அசுசிப்படாமல் வைத்துக் கொள்ளுங்கள்.” அவரில் சுயாதீனமுடையவர்களாக தரித்து இருங்கள். அப்பொழுது அவர் அவர்களை வழி நடத்தி வழிகாட்டி அழைத்துச் செல்லுவார். இப்பொழுது அதுவே முதல் துவக்கமாயிருக்கிறது.
76138 இப்பொழுது, நான் சீர்திருத்தம் என்று குறிப்பிடும் போது “தப்பித்துக் கொண்டவர்களைக்” குறிப்பிடுகிறேன். சர்தை சபையின் காலத்தில் தப்பித்து கொண்டவர்கள். நான் கூறுவதன் கருத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அந்தப் பயங்கரமான காரியத்திலிருந்து கூட சிலர் தப்பியிருந்திருக்கின்றனர். இப்பொழுது இது…நாளை இரவு மீண்டும் நாம் இதை எடுத்துக் கொண்டு அதை படிப்படியாக பெந்தெகொஸ்தே காலத்திற்குள் வரும் வரைக்கும் ஒப்பிட்டுப் பார்த்து, அது சரியாக அவ்வாறு இருப்பதை உங்களுக்குக் காண்பிப்போம். இப்பொழுது இந்தக் காரியங்கள் சிலவற்றை நாம் பேச விருக்கிறோம்: “அவர்கள் எவ்வாறு அதில் தப்பினர்?” நாம் அடுத்த காலத்திற்குள் மீண்டும் இதை எடுத்துப் பார்ப்போம். பாருங்கள், நாம் எடுத்துப் பார்த்து அதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதாயுள்ளது. நீங்கள் அவ்வாறு செய்யாவிடில், அப்பொழுது நீங்கள்—நீங்கள்—நீங்கள்—நீங்கள் அதை தீர்க்கமாக ஆழ மனதில் பதியத்தக்கதாக எடுத்துரைப்பதிலிருந்து தவறிவிடுகிறீர்கள். இதை அடுத்த காலத்திற்குள் சரியாக இருப்பதை நீங்கள் காண வேண்டும். வேதம் எவ்வாறு அதைப்பற்றி உரைக்கிறதோ, அதேவிதமாக நீங்கள் ஜனங்கள் அதைப் பெற்றுக் கொள்ள செய்ய வேண்டும். பாருங்கள். சரி.
77139 தப்பித்துக் கொண்டவர்களைப் பற்றித் தான் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த சபைக் காலத்தில் வாழ்ந்து வந்த அந்த சிறு மந்தையான ஜனங்கள் நீதிமானாகுதலினால் ஜீவித்தார்கள். இப்பொழுது பாருங்கள்! அவர்கள் வெளிச்சத்தைக் கண்டு பிழையை விட்டு வெளியேறினர். லூத்தர் அவர்களை சரியான பாதையில் திருப்பினார். லூத்தரின் மரணத்திற்குப் பிறகு, அவரைப் பின்பற்றின ஒரு சாரார் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். லூத்தர் அல்ல, லூத்தர் ஒருபோதும் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கவேயில்லை. அதை உருவாக்கியது அவருக்குப் பின்வந்த ஒரு கூட்டமாயிருந்தது. வெஸ்லி ஒருபோதும் ஒரு ஸ்தாபன சபையை உண்டாக்கவேயில்லை. அவருக்குப் பிறகு ஏற்பட்ட அந்த குழுவினர் தான் அதைச் செய்தார்கள். பெந்தெகொஸ்தே அசைவின் அந்த பண்டைய ஸ்தாபகர்களும் ஒருபோதும் ஸ்தாபனத்தை உண்டாக்கவேயில்லை. அதற்கு பிறகு ஏற்பட்ட அந்தக் குழுவினர் தான் அதைச் செய்தனர். அவர்கள் தான் அதைச் செய்கிறார்கள், இரண்டாம் சுற்றில் உள்ளவர்கள் தான் அதைச் செய்கின்றனர். வெளிச்சத்தின் உண்மையான தூதன் ஒருபோதும் ஸ்தாபன சபையை உருவாக்குவதேயில்லை. அதே காரியத்தை நீங்கள் பெந்தெகொஸ்தேயின் காலத்திலும் அந்த ஸ்தாபனத்தின் முடிவில் என்ன நேரிடுகிறது என்பதையும் காணலாம். பாருங்கள், அதைப்பற்றி பரிசுத்த ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்தித் தருகிறார்.
78140 இப்பொழுது, அவர், “உங்களுக்கு ஒரு சிறிதளவு ஒளியே மீந்திருக்கிறது. மிகச்சிறிய அளவில் அது உள்ளது. அதுவும் அணைந்து போகப்போகிறது. அது மங்கிக் கொண்டே வருகிறது. நீதிமானாகுதல் என்ற செய்தி மட்டுமே உங்களிடம் உள்ளது. அது உங்களை எந்த பக்கத்திலும் திருப்பி விட முடியும். நீங்கள் இன்னும் ஜீவனைப் பெற்றிருக்கவில்லை; ஏனென்றால் நீங்கள் தவறான நாமத்தை எடுத்துக் கொண்டீர்கள். ஆனால் நீங்கள்—நீங்கள்…பிழையிலிருந்து பறித்து வெளியே இழுத்துக் கொண்டு வரப்பட்டீர்கள். பாருங்கள், நீங்கள்…நீங்கள்—நீங்கள் ரோமன் சபையிடமிருந்து தப்பிவிட்டீர்கள். நீங்கள் அந்த எல்லா கோட்பாடுகளையும் விட்டு தப்பித்துக் கொண்டீர்கள். நீங்கள் இந்த அளவாவது வந்திருக்கிறீர்களே” என்று கூறினார். இப்பொழுது நீங்கள் அதே வேதாகமத்தைத் தான் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது, ஆனால் அதே வேதாகமந்தான் பரிசுத்த ஆவியைப் பற்றிப் போதிக்கிறது…அவர்கள் எதைப் பெற்றிருந்தார்களோ அதை அவர் ஒருபோதும் கடிந்து கொள்ளவேயில்லை. மேலும், “இப்பொழுது அது…எதைப் பெற்றிருந்தார்களோ அதை நான் வருகிற வரையிலும் விடாமல் பற்றிக் கொள்ளுங்கள். அதைத் தொடர்ந்து பற்றிக் கொண்டேயிருங்கள்” என்று கூறினார். பாருங்கள்.
79141 ரோமானிய அகில உலக கத்தோலிக்க சபை தன் முழு வீச்சில் இருந்தபோது, இச்சபைக்காலம் கிட்டத்தட்ட கி.பி.1520-ல் துவங்கியது. கி.பி.1570-ம் ஆண்டு அக்டோபர் 31-ல் (நீங்கள் இதை குறித்துக் கொண்டால் நலமாயிருக்கும்.) மார்ட்டின் லூத்தர் அவர்கள் தன்னுடைய தொண்ணூற்றைந்து கொள்கை முழக்கங்களை ஜெர்மனி தேசத்திலுள்ள விட்டன்பர்க் என்ற ஊரில் உள்ள ஆலயக் கதவில் ஆணியறைந்து, அதை பிரசித்தம் செய்தார். அது வரையிலும் ரோமானிய சபை முழு வீச்சில் இயங்கி வந்தது. அதற்குப் பிறகுதான் அது மட்டுப்பட்டது. அதிலிருந்து சீர்திருத்த காலம் ஆரம்பமாகிறது. நீங்கள் அந்த தேதிகளை குறித்துக் கொண்டீர்களா? நீங்கள் உறுதியாக தெரிந்து கொள்வதற்காக நான் அவைகளை மறுபடியும் சொல்லுகிறேன். கி.பி.1570-அக்டோபர் மாதம் 31-ம் தேதி ஜெர்மனியிலுள்ள விட்டன்பர்க் வி—ட்—ட—ன்—ப—ர்—க், விட்டன்பர்க் ஆலயக்கதவில் மார்டின் லூத்தர் தன்னுடைய தொண்ணூற்றைந்து கொள்கைப் பிரபந்தங்களை ஆணியறைந்து வைத்தார். சீர்திருத்தகாலம் துவங்கின நாள் முதல், அக்கினியானது பற்றியெறிந்தது. அவர் அங்கே நின்று கத்தோலிக்க சபையை எதிர்த்தார். “இதுவா இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த சரீரம்? இது வெறும் அப்பமும் சிறிது திராட்சைரசமுமே” என்று சொல்லி, “டம்ம்!” என்று அதைக் கீழே வீசியெறிந்து விட்டார். அது உண்மை.
80142 அவர் கத்தோலிக்க சபையை எதிர்த்தார், அப்பொழுது அதிலிருந்து மக்கள் வெளியே தப்பித்து வெளியேறுவது நடந்தது. சரி,…அது அவ்வாறு நடந்துகொண்டே வந்தது. ஆனால் அக்காரியம், உண்மையான சபைக்காகவும், கிறிஸ்தவ நேறிமுறைகளுக்காகவும் என்ற போராட்டமாக இருப்பதைக் காட்டிலும், அது அரசியல் அதிகாரச் சண்டையாக அதிக அளவில் இருந்தது. அவர்கள் ஒரு சபையிலிருந்து வெளிவரவும். வெளியே வந்து இன்னொரு சபையை உருவாக்கிக் கொள்வதற்காக மாத்திரமே சண்டையிட்டனர். அவர்கள் கத்தோலிக்க சபையை விட்டு வெளியேறி, சபையில் பரிசுத்த ஆவியையும், வல்லமையையும் திரும்பக் கொண்டு வருதலான சீர்திருத்தத்தை செய்வதற்குப் பதிலாக அதை மறுதலித்தார்கள். ஹூ? அது ஒரு அரசியல் ரீதியிலான அணிவகுப்பாக மாறியது. “நீ உயிருள்ளவன் என்ற பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்” என்ற அந்த கண்டனத்திற்கு அது பொருத்தமாக அமைந்துவிட்டது. அதையே வேறு வார்த்தைகளில் கூறுவோமானால், அவர் ஒரு பிராட்டெஸ்டென்ட் ஸ்தாபன சபையைத் தான் வெளியேக் கொண்டு வந்தார். அவ்வளவு தான். சபையிலிருந்து அவளுடைய மகளைத்தான் அவர் வெளியே கொண்டு வந்தார். வெளியே…அவர் மகா வேசியினிடத்திலிருந்து ஒரு வேசியையே வெளியேக் கொண்டு வந்தார். சரியாக அது தான் சம்பவித்தது. யேசபேலிடமிருந்து ஒரு அத்தாலியாளை வெளியே கொண்டு வந்தார்.
81143 இப்பொழுது, சீர்திருத்தத்தைப் பற்றிய வரலாற்றைப் படித்திருக்கிறவர்கள் எவரும் அது அவ்வாறு தான் நடந்தது என்பதை அறிவர். ஏனென்றால் அவர் வெறுமென சாதாரண… அதாவது கத்தோலிக்க சபையில் காணப்பட்ட பழைய நினைவுச் சின்னங்களை வணங்குதல், சடங்காச்சாரங்கள், சில ஒழுங்குகள்…ஆகியவைகளை அவர்—அவர் ஒழித்துக் கட்டினார். ஆனால் ஆதியில் இருந்தது போல் சபையில் திரும்பவும் பரிசுத்த ஆவியை இங்கு கொண்டு வருகிற காரியத்தை அவர் செய்யவேயில்லை. அவர் அதைச் செய்யவில்லை. இல்லை, ஐயா. அது ஆவிக்குரிய போராட்டமாக இருப்பதைக் காட்டிலும், அரசியல் ரீதியிலான போராட்டமாகவே இருந்தது. அது பரிசுத்த ஆவிக்குப் பதிலாக அரசியலாக இருந்தது. பரிசுத்த ஆவியானவர் இன்னும் சபைக்குள் திரும்ப பிரவேசிக்கவில்லை. ஓ, சகோதரனே, அந்த சபைக்காலத்திற்குள் பரிசுத்த ஆவியானவர் இன்னும் திரும்பி வரவில்லை. அவர் இங்கே இக்காலத்திலேதான் திரும்பி வருகிறார், அங்கே அந்த சபைக் காலத்தில் அல்ல.
82144 பரிசுத்த ஆவிக்காகவும், பரிசுத்த வேதவாக்கியங்களுக்காகவும் அணி வகுத்து ஒன்று சேருதலாக அவர்கள் இருக்காமல், அது பெரிய அரசியல் ரீதியிலான அணி சேருதலாக ஆகிவிட்டது. பழைய நினைவுச் சின்னங்களாகிய சிலுவை போன்றவற்றை வணங்குதல், “மரியே வாழ்க” என்பன போன்ற காரியங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் அரசியல் ரீதியில் மட்டும் ஒன்று திரண்டிட லூத்தர் செய்தார். அப்படியிருந்தும் கூட, லூத்தர் கத்தோலிக்க சபையிலிருந்து ஞான உபதேசத்தை கொண்டு வந்து விட்டார். இன்னும் அவர் வேறு சிலவற்றையும் தன்னுடன் கொண்டு வந்தார்.…நீங்கள் அதை என்னவென்று அழைக்கிறீர்கள்? அதாவது ஈஸ்டர் காலையில் உள்ள அர்பணிப்பு செய்யும் ஆராதனைகள், கிறிஸ்துமஸ் காலையில் மேய்ப்பர் சபையாரைப் பார்த்து, “மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ்” என்று வாழ்த்துதல் கூறுவது போன்ற காரியங்களையும் தன்னுடன் கொண்டு வந்து விட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களை “கிறிஸ்துமஸ் காலம் வரையிலும் உங்களை பார்க்கமாட்டோம்” என்று அவரே கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதாவது…ஓ அடுத்து, திடப்படுத்துதல் என்னும் பூசை, நான் கூற முயற்சித்துக் கொண்டிருப்பது என்னவெனில்: ஜனங்களை எடுத்து அவர்களுக்கு முதல் நற்கருணையை கொடுத்து அவர்களை திடப்படுத்துதல் செய்கிறார்கள். திடப்படுத்துல் என்றொரு காரியம் கிடையாது. வேதத்தில் கூறப்பட்டுள்ள உறுதிப்படுத்துதல் எல்லாம், தேவன் அற்புதங்களையும் அடையாளங்களையும் தொடரச் செய்து தமது வார்த்தையை உறுதிப்படுத்துவதே. அதுவே உறுதிப்படுத்துதல், லூத்தரன் சபையை சேர்ந்து கொள்ளும் உறுதிப்படுத்துதல் அல்ல அது. அது உங்களில் தேவன் தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்துவதாகும். “கர்த்தர்…அவர்களோடிருந்து கிரியை நடப்பித்து, அற்புத அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார்” என்று மாற்கு 16-ல் கூறப்பட்டுள்ளது. அதுவே உண்மையான பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்ற சபைக்குக் கொடுக்கப்படும் உறுதிப்படுத்துதல் ஆகும். அந்நிய பாஷைகளில் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் செய்தல், ஆதியில் அவர்கள் செய்தது போலவே கிரியை நடப்பித்தல் ஆகியவைகளின் மூலம் சபையில் தேவன் தன்னை அற்புதங்களைச் செய்கிற தேவன் என்று காண்பித்து தம்மைத்தாமே ஜீவனுள்ளவராக உறுதிபடுத்துகிறார்.
83145 நான் உங்களை களைப்படையச் செய்து கொண்டிருக்கிறேனா? [சபையார் “இல்லை” என்று பதிலளிக்கிறார்கள். ஆசி.] சரி. அவர்கள் பரிசுத்த ஆவியின் எழுப்புதலை சபைக்குள் திரும்பக் கொண்டு வரவில்லை என்பதைக் கவனியுங்கள். அவர்கள் ஒரு புதிய சபைக்காலத்தைத் தான் திரும்பக் கொண்டு வந்தார்கள். அவர்கள் ரோமச் சபைக் குருக்களாட்சியிலிருந்து தப்பித்து வெளியே வந்து, ஒரு ப்ராடெஸ்டென்ட் குருக்களாட்சி முறையைக் கொண்டு தப்பித்துக் கொண்டவர்களை திரும்பவும் அதே நிலைக்கு கொண்டு வந்தனர். அந்த ஒரு காரியத்தை மாத்திரமே அவர்கள் செய்தார்கள். அவர்கள் சட்டியிலிருந்து நேரே கீழே உள்ள நெருப்பில் குதித்து விட்டார்கள். பாருங்கள். அது—அதுதான் உண்மை. சரியாக. 146 யேசபேல் இப்பொழுது ஒரு மகளை பெற்றெடுத்தாள். நான் புத்திசாலியாக என்னைக் காட்டி கொள்ள இதை சொல்லுகிறேன் என்று எண்ணிக்கொள்ளாதிருங்கள். வேதம் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளபடியால், நான் அதைக் கூறுகிறேன். வேதம் வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில், “அவள் வேசிகளின் தாய்” என்று கூறியுள்ளது. இயேசு இங்கே, “யேசபேல் செய்ததைப் போலவே இவளும் செய்வாள்” என்று கூறினார். அவள் குமாரத்திகளை ஈன்றெடுத்து, தீட்டுப்படாத தேசம் ஏதாவது இருந்தால், அதையெல்லாம் தீட்டுப்படுத்திப் போட்டாள். ப்ராடெஸ்டெண்ட் கொள்கையானது, உண்மையான தேவனுடைய ஆவிக்கு எதிராக அந்த தீட்டுப்படுத்தும் காரியத்தையே செய்து, மீண்டும் இன்னொரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டது. தேவனுக்கு சித்தமானால், ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர்கள் மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கினார்கள் என்பதையும், அம்மிருகம் ரோமபுரி தான் என்பதையும் நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அவர்கள் அதைப் போன்ற ஒரு சொரூபத்தை உண்டாக்கினார்கள். அது என்னவாயிருந்தது? ஒரு ஸ்தாபனமே! ஓ, இது ஜனங்களுடைய இருதயங்களுக்குள் ஆழமாய் பதிகிறது என்று நான் நம்புகிறேன்.
84147 நான் என் ஜீவிய காலமெல்லாம் ஸ்தாபன முறைமைகளுக்கெதிராக ஏன் கடினமாக போராடுகிறேன் என்று நீங்கள் வியந்து கொண்டிருப்பீர்கள். எனக்கே அது ஏன் என்று தெரியாதிருந்தது. ஆனால் என்னிலிருந்து ஏதோ ஒன்று அதற்கெதிராக குரல் கொடுத்துக் கொண்டே வந்தது. அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் ஏன் பெண்களின் பிழையான காரியத்தைப் பற்றி கண்டனம் செய்கிறேன் என்று வியந்ததுண்டு. புரிகிறதா? என் ஜீவிய காலமெல்லாம் அவ்வாறே இருந்து வந்துள்ளது. நான் உண்மையான ஸ்திரீகளைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. ஒழுக்க நெறிகளை விட்டு வழுவிபோய்விட்ட அந்த விதமான ஸ்திரீகளுக்கெதிராகத் தான் நான் கூறி வருகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தவிதமாக என்னிலிருக்கிற… ஏதோ ஒன்றாய் அது உள்ளது. 148 நான் ஒரு சிறுவனாக இருந்தபொழுது, தங்கள் கணவன்மார்கள் வேலைக்குப் போயிருக்கும் சமயத்தில், குடித்து வெறித்து வேற்றுப் புருஷனோடு சரசமாடி சாலையில் அங்குமிங்கும் ஸ்திரீகள் அலைந்து திரிவதை நான் கண்டிக்கிறேன். அவர்களை மதுவின் வெறியிலிருந்து தெளியவைத்து, அவர்களது கணவரின் இரவு உணவை சமைப்பதற்கென வீடுகளுக்கு அனுப்பி வைத்தாக வேண்டும். ஒரு சுத்தமான துப்பாக்கி ரவை கூட அவர்களை துளைத்துச் செல்வதற்கு அவர்கள் பாத்திரர் அல்ல. அது உண்மை. அவ்வாறான காரியத்தைச் செய்வதால் அவர்கள் ஒரு மிருகத்தை விடக் கேவலமானவர்கள் என்று நான் சொல்வதுண்டு. நான்…நான் பதினேழு அல்லது பதினெட்டு வயதாயிருந்தபோது, ஒரு பெண் வீதி வழியாக வருவதைக் கண்டால், அவள் வரும் பாதையை விட்டு விலகி எதிர்த் திசையில் போய் அதன் நிலையை எண்ணி, “அந்த நாற்றமெடுத்த விரியன் பாம்பு” என்று கூறுவதுண்டு, பாருங்கள்? அவ்வாறே நான் முழுவதுமே ஸ்திரீகளை வெறுப்பவனாகவே இருந்து வந்திருப்பேன். ஆனால் நான் தேவனை என் இருதயத்தில் ஏற்றுக் கொண்ட போது, அவர் சில சமபத்துக்களை அங்கிருந்து உடையவராயிருக்கிறார் என்றும், அவர் சில உண்மையான பெண்மணிகளை உடையவராயிருக்கிறார் என்பதையும் தேவன் என்னை அறியும்படிச் செய்தார். அவர்கள் எல்லாருமே அவ்விதமான முறையில் தங்களை அசுசிப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். அதற்காக தேவனுக்கு நன்றி.
85149 நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, நான் ஸ்விட்சர்லாந்தில் இருந்தபொழுது, நான் ரோமாபுரியில் இருந்தபொழுது, “அமெரிக்காவில் உங்களுக்கு பண்பட்ட ஸ்திரீகளே கிடையாதா, சொல்லுங்கள் சகோதரன் பிரான்ஹாம் அவர்களே? அங்கிருந்து வரும் ஒவ்வொரு பாடலும், உங்கள் பெண்களைப் பற்றி கீழ்த்தரமாக வர்ணிக்கும் பாடலாக இருக்கின்றனவே?” என்னும் கேள்வி என்னிடத்தில் கேட்கப்பட்டது. 150 அதற்கு நான், “அவர்கள் அமெரிக்கர்கள், ஆனால் நாங்கள் வேறொரு இராஜ்யத்தில் அங்கே இருக்கிறோம், அதுதான் தேவனுடைய இராஜ்யமாகும். அதில் உள்ள பெண்மணிகள் மிகவும் பண்புள்ளவர்கள்” என்று கூறினேன். அவர்கள் அவ்விதமாக பண்புள்ளவர்களாக இருக்கிறார்களே!
86151 வேதத்தில் தீர்க்கதரிசிகள் இவ்வாறு கூறினார்கள். அது ஏறக்குறைய ஏசாயா 5-ம் அதிகாரம் என்றே நான் நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அது 5 அல்லது 6-ம் அதிகாரத்தில் அங்கே இருக்கும். அதாவது “இவைகளுக்கெல்லாம் தப்பி மீந்திருக்கிற சீயோன் குமாரத்தி ஆசீர்வதிக்கப்பட்டவளாகக் கூறப்பட்டிருக்கிறாள்” என்று கூறுகிறது. அவள் எவ்வாறு வீதியில் நடப்பாள் என்றும், அவள் தன்னுடைய காலுறைகளை சுருட்டிவிட்டுக் கொண்டிருப்பாள் என்றும், அவள் நடக்கும்போது எப்படி ஒய்யாரமாய் நடப்பாள் என்றும், அந்தவிதமாக நெளிந்து நடந்து, அவள் இந்தக் காரியங்களை செய்வாள் என்று உரைத்துள்ளது போல சரியாக இப்பொழுது அவர்கள் அதேவிதமாக பிழையின்றி செய்கிறார்கள். ஆண்களைப் போல் உடையுடுத்திக் கொள்ளுகிறார்கள். அது தேவனுக்கு முன்பாக அருவருப்பாக இருக்கிறது.
87152 கொஞ்சங் காலத்திற்கு முன்னர் நான் ஒரு மத ஸ்தாபன சங்கம் ஒவ்வொரு இரவிலும் ஏற்பாடு செய்திருந்த ஒரு பெரிய விருந்துக்கு ஜனங்கள் செல்வதைக் கண்டேன். அப்பொழுது இந்த ஸ்திரீகள் யாவரும் முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான கால்சட்டைகளை அணிந்து சென்றனர். அல்லது இல்லை…என்ன—அல்லது நீங்கள் அவைகளை என்னவென்று அழைக்கிறீர்கள்? குட்டைகால் சட்டைகள் அல்ல, ஆனால் மற்ற மாதிரியான ஒன்று. ஆம், அவைகள் கெண்டைக்கால் வரை அணியும் கால்சட்டைகள் அல்லது அந்த விதமான ஆடைகள். எல்லோருமே… அவர்களுக்கு கெண்டைக்கால் வரை அணியும் கால் சட்டையே தேவைப்படுகிறது, சரி, சகோதரனே, கிட்டத்தட்ட அந்த அளவு ஒரு பரந்த பலகை போன்று விரிந்திருக்கும். அது உண்மை. அவர்களுக்கு தேவை எதுவென்றால் தலையிலிருந்து “உங்களுடைய பாதம் வரை உள்ள” பாதசாரி ஆடையேயாகும். அது தான் உண்மை. 153 ஆனால், ஓ, நீங்களோ, “பரவாயில்லை, இப்பொழுது இது ஒரு பாவாடையைக் காட்டிலும் ஸ்திரீகள் அணிந்து கொள்ள மிகவும் நாணயமுள்ளதாக உள்ளது என்று நான் கருதுகிறேன்” என்று கூறலாம். 154 தேவன், “இவ்விதமான ஆண் ஆடையைப் பெண் தரிப்பது தனது பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது” என்று கூறியுள்ளார். ஒரு ஸ்திரீயானவளை தன்னுடைய தலைமுடியை ஒரு மனிதனைப் போல வெட்டிக்கொள்ளும்போது…ஒரு ஸ்திரீ ஒரு ஸ்திரீயைப் போல காணப்பட வேண்டும் என்றும், ஒரு ஸ்திரீயைப் போல உடை உடுத்த வேண்டும் என்றும், ஒரு ஸ்திரீயாகவே நடந்து கொள்ள வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார்.
88155 ஒரு ஆணானவன் இந்தவிதமாக நீளமான கிருதா வைத்துக் கொள்வதையும், அது அவன் தலைக்குப் பின்னால் இந்தவிதமாக ஒரு வாத்து உட்கார்ந்திருப்பதைப் போல் காட்சியளிக்கும் தலைமுடியை வளர்ப்பதையும் அவர் விரும்புவதில்லை. அவன் ஆணைப்போல் காட்சியளிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆம் ஐயா, என்னே, ஆணா அல்லது பெண்ணா என்பதைக் கண்டு கொள்ள முடியாதபடி, அவர்கள் பெண்ணைப் போல் உடுத்திக் கொள்கிறார்கள். இது—இது பரிதாபமாயுள்ளது, இந்த நவீன பாடற் கவர்ச்சி கலைஞர்களான பீட்னிக்குகள் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் நாம் உடையவர்களாய் இருக்கிறோம். நாம் கடைசி காலத்தில் ஜீவிக்கிறோம் என்பது ஆச்சரியமல்ல; உலகத்தின் மேல் தேவன் தம்முடைய உக்கிர கோபத்தை ஊற்றி, அவர்களை சுட்டெரிப்பதைத் தவிர வேறு எதுவும் இனிமேல் நடக்கப் போவதில்லை. அவ்வளவுதான். நீதியும் பரிசுத்தமுள்ள ஒரு தேவனால் இதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது. 156 இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அவர்கள் உதறித் தள்ளிவிட்டார்கள்! அவர்கள் தங்களுக்கென சமயச்சாரக் கோட்பாடுகளை உண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் ஒரு ஸ்தாபனத்திற்குள் பிரவேசித்துவிட்டார்கள். வயோதிக…ஏதோ திருமணமாகாத கழுத்துப்பட்டையை திருப்பி உடுத்திக் கொண்டிருக்கும் அந்த வயதான பரிசுத்த தந்தை எனப்பட்டவர் பீடத்தண்டையில் வந்து, “ஆசீர்வதிக்கப்பட்ட என் பிள்ளைகளே” என்று கூறுகிறார். அது ஒரு பெண் பன்றி கூறுவதற்கும் இதற்கும் வித்தியாசம் ஏதுமில்லை. 157 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இன்றைக்கு நமக்குத் தேவையெல்லாம் வேதத்திற்கு திரும்பிச் செல்லுதலும், பரிசுத்த ஆவியைப் பெறுதலுமேயாகும். சகோதரனே, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையானது சபைக்குள் திரும்பி வந்து, அற்புத அடையாளங்களை சபைக்குள் நிகழ்த்துவதுமே தேவையாயுள்ளது. ஆமென்! அது தான் சுவிசேஷமாயிருக்கிறது.
89158 ஆம்…எனவே…ஆம், அது சரியே. அது செய்துள்ளது. அந்தக் காலத்தில் ஏற்பட்ட எழுப்புதலானது சில அருமையான காரியத்தைச் செய்துள்ளது என்பது உண்மையே. ஆனால் அவ்வெழுப்புதல் பரிசுத்த ஆவியைக் கொண்டு வரவில்லை. இக்காலம் முதற்கொண்டு, லவோதிக்கேயாவின் காலம் துவங்கும் முன்னர் வரையிலும் ஏற்பட்ட எழுப்புதல் பரிசுத்த ஆவியைக் கொண்டு வரவில்லை. ஆனால் அது ஒரு காரியத்தை செய்தது. இந்த எழுப்புதல் செய்த சில காரியங்களில் அவர், “இதை இப்பொழுது மரிக்க விட்டுவிடாதீர்கள். அதை ஸ்திரப்படுத்துங்கள். அதோடு இன்னும் கூட்டிக் கொண்டேயிருங்கள்” என்று கூறினார். பாருங்கள்? 159 இது மக்கள் மீண்டும் வாசிப்பதற்கென சுயாதீனமாக வேதப்புத்தகத்தைக் கொண்டு வந்தது. லூத்தரின் காலம், இலவசமான வேதாகமத்தைக் கொண்டு வந்தது. அவர்கள் தங்களுக்கு அச்சகத்தை ஏற்படுத்தி, உலகிற்கு வேதாகமத்தைக் கொடுக்கத் துவங்கினர். தேவன் லூத்தரன்களை அதற்காக ஆசீர்வதிப்பாராக. ஆம் ஐயா! அவர்கள் சபையாரின் கைகளில் வேதப்புத்தகம் திரும்பக் கிடைக்கச் செய்தனர். அதற்கு முன்னால் குருக்கள் மட்டுமே அதை வைத்துக் கொண்டிருந்தனர். அதற்கு முன்னால், மக்கள் வேதத்தைப் பார்க்கக் கூட முடியாதிருந்தது. ஏனெனில் போப் அவ்வாறு கூறியிருந்தார். போப் அவர்களுக்கு ஒரு தேவனாக இருந்தார். எனவே அவர் என்னவெல்லாம் கூறியிருந்தாரோ அதையே அவர்கள் செய்திருந்தனர்.
90160 எனவே இப்பொழுது லூத்தரன் எழுப்புதலில், அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றிருந்தனரென்றால், “ஸ்திரப்படுத்திக் கொள்ள” வேண்டியிருந்தது. இப்பொழுது நீங்கள் உங்கள் கரங்களில் வேதாகமத்தைப் பெற்றுள்ளீர்கள், இப்பொழுது அதை வாசித்துப் பாருங்கள்! அதை விசுவாசியுங்கள், அதை வெறுமனே அலமாரியில் வைத்து “நல்லது, நாம் ஒரு வேதாகமத்தை வைத்துள்ளோம்” என்று கூறாதீர்கள். அவ்வாறு கூறுவது உங்களுக்கு எந்த ஒரு நன்மையையும் உங்களுக்குச் செய்யப் போவதில்லை. இன்றைக்கு பெந்தெகொஸ்தேவில் அதிகமான லூத்தரன்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேதாகமத்தை வாசிக்காமல் வைத்துக் கொண்டு, அதைக் குறித்து வேறு யாராவது எதையாவது கூறுவதை எடுத்துக் கொள்கிறார்கள். சகோதரனே, வார்த்தையை வாசி! “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே, அவைகளால் நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே” என்று இயேசு கூறினார். அதுவே செய்ய வேண்டிய காரியமாகும்; வார்த்தையை வாசியுங்கள்!
91161 இப்பொழுது அவர், “அதைப் பற்றிக் கொண்டிருங்கள்…அதை விட்டு விடாதீர்கள்” என்று கூறினார். அவர்கள் இன்னொரு காரியத்தையும் பற்றிக் கொண்டிருக்கும்படி அவர் விரும்பினார். அதாவது அவர்களுக்கு இருந்த கொஞ்சம் பெலனில் அவர்கள் நிலைத்திருக்க வேண்டுமென்றே விரும்பினார். லூத்தரன் எழுப்புதலானது, இரண்டாவதாக செய்த காரியம் என்னவெனில்: வேதத்திலுள்ள “விசுவாசத்தினால் நீதிமானாகுதல்” என்ற உபதேசத்தை ஒளியூட்டி வெளிக் கொணர்ந்தது. கத்தோலிக்க சபை நீதிமானாகுதலை ஏற்றுக்கொள்ளவில்லை, அது கத்தோலிக்க சபையாயுள்ளது. 162 அந்த கத்தோலிக்க மதக் குரு கூறியதுபோல, அவர்கள் இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்னர் அந்த ஒலி பரப்பை நிறுத்த வேண்டியதாயிருந்தது. அதாவது அவர், “கத்தோலிக்க சபையைத் தவிர வேறு எதிலும் இரட்சிப்பு இல்லை” என்று கூறினார். இரட்சிப்பு கிறிஸ்துவில்தான் உள்ளது. கத்தோலிக்க சபையில் இல்லை. ப்ராடெஸ்டெண்ட் சபையிலும் இரட்சிப்பு இல்லை. அது கிறிஸ்துவில் தான் உள்ளது, இரட்சிப்பு. ஆனால் கத்தோலிக்கர் விசுவாசிப்பது…அவர்களுக்கு வேதம் என்ன கூறுகிறது என்பதைப் பற்றி அக்கறையில்லை, அவர்களது சபை என்ன சொல்லுகிறது என்பதுதான் முக்கியம். புரிகிறதா? நீங்கள் அவர்களோடு பேச முடியாது, ஏனெனில் அதற்கு வழியே கிடையாது—அவர்களிடம் பேச வழியில்லை. அவர்கள் அதைக் குறித்து அக்கறை கொள்வதில்லை…அவர்கள் பெற்றுள்ள…அவர்கள் தங்களுடைய ஞான உபதேசத்தின் பேரில், அதுபோன்ற எந்தக் காரியத்தைக் குறித்தும் உங்களிடம் பேசுவார்கள்; ஆனால் நீங்கள் வேதத்தண்டை பேச வந்தால், அப்பொழுது அவர்கள்—அவர்கள் அதை தள்ளி விட்டுவிட்டு, “சபை என்ன சொல்லுகிறதோ அது தான்” என்கிறனர்.
92163 ஆனால் இவ்விஷயத்தை பொறுத்த மட்டில், இயேசு கூறினார்: இயேசுவானவர் தாமே, “இதிலிருந்து எதையாகிலும் ஒருவன் எடுத்துப் போட்டாலோ, அல்லது இதோடு எதையாகிலும் கூட்டினாலோ, அவனுடைய பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும்” என்றார். இயேசு “தேவனே சத்தியபரர், எந்த மனுஷனும் பொய்யன். வானமும் பூமியும் ஒழிந்து போம். என்னுடைய வார்த்தையோ ஒழிந்து போவதில்லை” என்றார். அது சரிதானே? ஓ, அது தான் உண்மையானது, சகோதரனே. 164 நான் தேவனுடைய வார்த்தையின் பேரில் உள்ள விசுவாசியாயிருக்கிறேன்! அது உண்மை. அங்கே தேவன் பேசுகிற அந்த வார்த்தை மட்டுமல்ல, கிறிஸ்து என்னில் ஜீவிப்பதற்காக, அவ்வார்த்தையை உறுதிப்படுத்த எனக்கு பரிசுத்த ஆவியை இப்பொழுது தரும்படி பரலோகப் பிதாவை நான் வேண்டிக்கொண்டேன். அதாவது நான் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறேன் என்பதை நான் அறிவேன், நான் அதற்கு பாத்திரமானவன் என்பதினால் அல்ல, ஏனென்றால் அவருடைய கிருபை அதை எனக்கு அளித்திருக்கிறது. அது கன்மலையாய் உள்ளது. அவர், “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்” என்று கூறினார்.
93165 சரி, நீதிமானாகுதல். சரி. அதைக் குறித்த காரியமாயிருந்ததோ, அவர்கள் மரித்துப்போகும்படி விடாதபடியான ஏதோ ஒரு காரியத்தை ஏற்கெனவே அவர்கள் பெற்றிருந்தனர். அதாவது அவர்கள் மீண்டும் வேதப்புத்தகம் தங்கள் கைகளில் கிடைக்கப் பெற்றிருந்தனர். லூத்தரன்கள் அக்காரியத்தைச் செய்தனர். மற்றொரு காரியம் அவர்கள் “விசுவாசத்தினால் நீதிமானாகுதல்” என்ற உபதேசத்தையும் பெற்றிருந்தனர். அதைத்தான் லூத்தர் போதித்தார். அது அவருடைய உபதேசம் என்பதை யாரும் அறிவர். நீதிமானாகுதல்…அது எவ்வளவு பரிபூரணமாக இருக்கிறது என்று உங்களால் பார்க்க முடிகிறதா? அதன் பின்னர் வெஸ்லி பரிசுத்தமாகுதல் என்பதோடு தொடர்ந்து வந்தார். அதையடுத்து, பெந்தெகொஸ்தே அனுபவமாகிய பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இங்கே வருகிறது. இது எவ்வளவு பூரணமானதாக் இருக்கிறது. இப்பொழுது நான்…
94166 “நீ கொஞ்சம் நல்ல காரியங்களைப் பெற்றிருக்கிறாய், அவைகளை நீ மரிக்கவிடாமல் ஸ்திரப்படுத்து, நீ அதைப் பற்றிக் கொள்ளாவிடில், நான் திருடனைப் போல் சீக்கிரமாய் வருவேன். நீ மீண்டும் ஸ்தாபனத்திற்குள் போய்விடுவாய்” என்று கூறுகிறார். சரியாக அதே விதமாகத்தான் அவர்கள் செய்தார்கள், மீண்டும் அதற்குள்ளே திரும்பிப் போய்விட்டனர். அதாவது, “நீங்கள் மீண்டும் நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்திற்குள் போய்விடப் போகிறீர்கள், ஏனெனில் நீங்கள் மீண்டும் ஒரு ஸ்தாபனமாக ஆகப் போகிறீர்கள். எனவே உங்களுக்குள்ளதைவிடாமல் பற்றிக் கொள்ளுங்கள்! தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள். நீதிமாகுதலைத் தொடர்ந்து பற்றியிருங்கள். தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்” என்று கூறினார். ஆனாலும் இந்த சபைக்காலத்திலும் தேவனுக்கென்று மீதியானவர்கள் வெளியே வந்தனர். ஒரு சிறு கூட்டமான மீதியானவர்கள். 167 முதலில் லூத்தர் வந்த பிறகு; அதன் பிறகு ஸ்விங்லி வந்தார்; அதைத் தொடர்ந்து கால்வினும், தொடர்ந்து வெஸ்லியும் வந்தனர். ஆனால் பரிசுத்தமாகுதலை போதிக்கப்பட்ட அந்த சிறு எண்ணிக்கையிலான மீதியானவர்கள் இருந்தனர். பரிசுத்தமாகுதலிருந்து அந்த மீதியான சிறு கூட்டம் வெளியே வந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்குள் சென்றனர். பாருங்கள், அந்த சிறு கூட்டமான மீதியானவர்கள் தொடர்ந்து அங்கே அதை உயிரோடே அதைக் காத்துக் கொண்டிருந்தனர். சரி.
95168 ஆனால் மூன்றாவதாக, அவர்கள் கத்தோலிக்க சபையை விட்டு வெளியேறிய பொழுது, அநேகம் அஞ்ஞான சடங்காச்சார உபதேசங்களை, தங்களோடு, அதாவது தவறான ஞானஸ்நானம், போன்றவற்றைக் கொண்டு வந்து விட்டனர். அவர்கள் தெளித்தல், பிதா குமாரன் பரிசுத்த ஆவி போன்றவற்றோடு வெளிவந்தனர். அவர்கள் ஞான உபதேசத்தைக் கொண்டு வந்தனர். உண்மையாகவே…அவர்களது இந்நிலை, இயேசுவானவர் இங்கே கூறி அவர்களுக்கு இட்ட பெயருக்கேற்றவாறு அப்படியே அமைந்துவிட்டது. “நீ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்” என்று கூறினார். அது சரியாக இருக்கிறது. சரி.
96169 நான்காவதாக இக்காலத்தில் ஏற்பட்ட சீர்திருத்தமானது, கத்தோலிக்க மதத்தின் புனிதச் சின்னங்கள் என்னப்பட்டவைகளை வணங்குதல் போன்ற சடங்குகளெல்லாம் ஒழிந்து போகக் காரணமாகியது என்பது உண்மையே. ஆனால் இது சபையில் இந்த சீர்திருத்தம் திரும்ப அளித்தலைக் கொண்டுவரத் தவறிவிட்டது. அதாவது அடையாளங்களோடு கூடிய பூரண சுவிசேஷ போதகமானது திரும்ப கிடைக்கச் செய்ய தவறிவிட்டது. லூத்தரன் சபை இதை ஒருபோதும் பெற்றிருக்கவில்லை. அவர்கள் ஒரு போதும் அதைப் பெற்றிருக்கவில்லை. வெஸ்லியின் காலத்திலும் அவர்கள் அதை ஒருபோதும் திரும்பப் பெறவில்லை. இந்த லவோதிக்கேயாவின் காலத்தின் முடிவில் தான் அவர்கள் அதை பெற்றிருந்தனர். 170 நாம் இதைப்பற்றி ஆராய்கையில், நாம் மீண்டும் வேதவாக்கியங்களுக்குச் சென்று, எவ்வாறு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது என்பதை சரியாக உங்களுக்கு காண்பிப்போம். அவர்கள் பெற்றுக் கொள்ளாமலிருந்ததோ…அது பரிசுத்த ஆவியின் எழுப்புதலைத் திரும்பக் கொண்டு வரவில்லை.
97171 அவர்கள் விக்கிரங்களிலிருந்து விலகினர். அவர்கள் விக்கிரகங்களை விட்டு விட்டது உண்மைதான். அவர்கள் மரியாள், யோசேப்பு, பேதுரு, பவுல் ஆகியோரின் சிலைகளையெல்லாம் சபையைவிட்டு அகற்றிவிட்டனர். அவர்கள் விக்கிரகங்களை விட்டுத் திரும்பினர், ஆனாலும் அவர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவண்டைத் திரும்பவில்லை. லூத்தர் அவர்களை விக்கிரங்களை விட்டு திரும்பப் பண்ணினார். ஆனால் அதிலிருந்து திரும்பிய அவர்கள் ஒரு அரசியலைப் போல, இல்லை ஒரு—இல்லை ஒரு ஸ்தாபனத்தைப்போல அல்லது ஸ்தாபன அமைப்பைப்போல தங்களை இன்னொரு ஸ்தாபனமாக்கி, தாங்கள் விட்டு வந்த ஸ்தாபனத்தை மிஞ்சி விட வேண்டும் என்று முயற்சித்து, ஸ்தாபன எண்ணத்தோடு செயல்பட்டார்கள். (அது முந்தினதைப் போலவே இன்னொரு சொரூபமாகத்தான் ஆகியது.) 172 அவர்கள் இன்னும் சண்டையிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். மெதோடிஸ்ட்டுகள் இன்னமும்…பாப்டிஸ்ட்டுகள் அனைவரும் மெதோடிஸ்ட்டுகள் ஆகிவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அனைத்து லூத்தரன்களும், ஏனைய பாப்டிஸ்ட்டுகள், மற்றும் மெதோடிஸ்ட்டுகள் ஆகியோர் லூத்தரன்கள் ஆகிவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள். பெந்தெகொஸ்தேக்களோ எல்லா பாப்டிஸ்டுகளும், லூத்தரன்களும், மற்றுமுள்ள யாவரும் பெந்தெகொஸ்தேயினராகிய வேண்டுமென்று விரும்புகின்றனர். பாருங்கள், நீங்கள் அப்படியே தொடர்ந்து உங்களுடைய ஸ்தாபனத்திற்கே கூட்டத்தைச் சேர்த்துகொண்டேயிருக்க விரும்புகிறீர்கள். ஆனால் பிரதானமான காரியம் என்னவெனில், தேவனுடைய திட்டம் அது அல்லவே அல்ல. ஆதியில் இருந்தது போலவே யாவற்றையும் சபைக்கு திரும்ப அளிப்பது ஒன்றுதான் தேவனுடைய திட்டமாகும்.
98173 கவனியுங்கள்! அதை மீண்டும் சபைக்கு அளிப்பது தான்! இப்பொழுது இப்புத்தகம் தரையில் விழுந்து விடுமெனில், அது இருந்த இடத்தில் வேறொரு புத்தகத்தை எடுத்து வைப்பது என்பது புத்தகத்தை திரும்ப அளித்தல், அல்லது புத்துயிரூட்டுதல் என்பதாகாது. கீழே விழுந்த அதே புத்தகத்தைத் தான் மீண்டும் அது இருந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆமென். ஆகவே சபையானது இருண்ட காலத்திற்குள் மரித்துவிட்ட நிலையில், அது இங்கே அஞ்ஞானத்தன்மை கொண்டதாக மாறி விட்ட பிறகு, அப்பொழுது அதிலிருந்து முழுமையாக மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருதலே தேவையாக உள்ளது… அது சீர்திருத்தும்படியான ஒரு சீர்த்திருத்தமாகும்; ஆனால் சீர்திருத்தப்படுதல் மற்றும் மீண்டும் பிறத்தல் இரண்டு காரியங்களாய் உள்ளன. புரிகிறதா? அவர்கள் தங்களுடைய கத்தோலிக்க சமயத்தின் ஏராளமான விக்கிரகங்கள் மற்றும் இன்னபிற காரியங்களிலிருந்து மீண்டும் வந்து சீர்திருத்தத்தைப் பெற்றனர். ஆனால் அவர்கள் ஒரு போதும் சபைக்கு மீண்டும் பரிசுத்த ஆவியைத் திரும்பக் கொண்டு வரவில்லை. ஓ, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! சகோதரனே, சகோதரியே. இதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? அவர்கள் ஒரு போதும் சபைக்கு பரிசுத்த ஆவியைத் திரும்பக் கொண்டு வரவில்லை, ஏனெனில், உண்மையான சுவிசேஷ ஒளியை இங்கே உண்மையாகவே கொண்டு வருகிற ஒருவர்…இப்பொழுது நீங்கள் சற்று ஆழமாக யோசியுங்கள். உண்மையான சுவிசேஷ ஒளியைக் கொண்டு வருகிற ஒருவர் இங்கே கீழே உள்ள இந்த சபைக் காலத் தூதனாவார். இப்பொழுது நாம் அதை ஞாயிற்றுக்கிழமை பார்க்கப் போகிறோம்.
99174 அவர்கள் மிக உயர்ந்த ஒளி, கிறிஸ்தவ ஒளியை பெற்றுக்கொள்வர். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் அந்த ஸ்தாபன அமைப்புக்குள் திரும்பவும் போய் விடுவார்கள். ஆனால் அவர்களுக்கெதிராக நிற்கக்கூடிய ஒருவன் தோன்றுவான் (ஆம் ஐயா) நான் இந்தப் பிரசங்க பீடத்தில் இப்பொழுது நின்று கொண்டிருப்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறதோ, அதே அளவு உண்மையாக, அவன் ஸ்தாபனங்களிலிருந்து கர்த்தருக்கென மீதியாயிருக்கிற ஒரு கூட்டத்தை பிரித்தெடுப்பான். அது உண்மை. அவன் ஆதியில் இருந்த நிலைக்கு திரும்பக் கொண்டு போவான். லவோதிக்கேயா சபையின் தூதன், அவனே அதைச் செய்வான் என்பதையும், நான் பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் வேத வாக்கியங்கங்களை எடுத்து உங்களுக்கு நிரூபித்துக் காட்டுவேன். அது உண்மை, அவன் மூல உபதேசத்திற்கு திருப்பிக் கொண்டுபோய், இந்தக் காரியத்தை இங்கே மீண்டும் உயிர்த்தெழுச் செய்வான். இங்கே இக்காலத்தில் உயிர்த்தெழுதல் உண்டாகும். அது உண்மை.
100175 ஆனால் லூத்தர் சபையை வெளியே இழுத்தார், தப்பித்துக் கொண்ட ஒருவன். தப்பித்துக்கொண்ட ஒருவன் , ஒரு அடி, பரிசுத்த…நீதிமானாகுதல், தப்பித்துக் கொண்ட ஒருவன், அவர் அஞ்ஞான மார்க்கத்திலிருந்து ஒரு அடி வெளியே எடுத்து வைத்தார். அது நல்லது தான். அடுத்த காலத்தில், இரண்டு அடிகள் தேவைப்படுகிறது. அவ்வளவுதான். 176 வேதத்தில், ஆலயத்தின் வாசற்படியின் கீழிருந்த தண்ணீரானது புறப்பட்டுச் சென்றதை நீங்கள் கவனித்தீர்களா? முதலாவது தண்ணீர் முழங்காலளவு இருந்ததாகவும், அடுத்து இடுப்பு வரையிலும் இருந்ததாகவும், கடைசியாக தலைக்கு மேலே தண்ணீர் சென்றதாகவும் தீர்க்கதரிசி கூறுகிறான். ஆனால் தலைக்கு மேலே தண்ணீர் சென்ற கட்டம் வந்தபோது, அவன் நீந்த வேண்டியதாயிற்று. பாருங்கள். அவன் நீந்த வேண்டியதாயிற்று. 177 ஆகையால் நாம் இப்பொழுது இன்று நீந்திக் கரை சேர வேண்டும். அல்லாவிடில் மூழ்கி அமிழ்ந்து விட வேண்டும் என்ற ஒரு நிலைமைக்குள்ளாக சென்று கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான். ஒன்று அது உங்களை மூழ்கடித்து முழுவதும் போக்கடித்துவிடும். இல்லையேல், உங்களை அது கரை சேர்க்கும். எனவே அது நீத்திக் கரைசேர் அல்லது மூழ்கிவிடு என்று இருக்கிறது. அல்லேலூயா! ஓ, பரிசுத்த ஆவியைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் அவ்வாறு இல்லையா? நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். நானும் அவர்களில் ஒருவன்…(யார் அவர்கள் ? இது, அது , அல்லது அது அல்லது அது என்றல்ல) நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அல்லேலூயா; அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் அவர்களில் நானும் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
101அது நன்மையாக தென்படவில்லையா? கவனியுங்கள்; அவர்கள் மேல் வீட்டில் கூட்டப்பட்டு, அவருடைய நாமத்தில் யாவரும் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டிருந்தனர், ஊழியத்திற்கான வல்லமை வந்தது; இப்பொழுது அவர்களுக்காக அந்நாளில் அவர் என்ன செய்தாரோ அவர் அதையே உங்களுக்காகவும் செய்திடுவார், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். ஓ, அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன், அல்லேலூயா; அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். 178 அவர்கள் வேத பாட கருத்தருங்களுக்கு சென்றர்களா? இல்லை. அவர்களில் சிலர், தங்களுடைய சொந்தப் பெயரைக் கூட எழுத இயலாதவர்களாய் இருந்தார்கள். அது உண்மை. பேதுருவும் எழுத முடியாதவனாயிருந்தான். அவனும் யோவானும் படிப்பறியாதவர்களும், பேதமையுள்ளவர்களுமாய் இருந்தார்கள் என்று வேதம் கூறியுள்ளது. ஆனால் அவர்கள் இயேசுவோடு கூட இருந்தவர்கள் என்று அறிந்து கொண்டதால், அவர்கள் கூறுவதை யாவரும் செவிகொடுத்து கேட்க வேண்டியதாயிருந்தது. இந்த ஜனங்கள் கல்லாதவர்களாய், (கல்விபயிலாதவர்களாய்,) உலகப்பிரகாரமான கீர்த்தி கொண்ட பெருமையில்லாதவராயிருந்தனர்.(“ஓ தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் இன்னின்ன பட்டங்களைப் பெற்றுள்ளேன்.”) அவர்கள் யாவரும் தங்கள் பெந்தெகொஸ்தேயை பெற்றனர். இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். அவரது வல்லமை இன்னமும் மாறாதது என்று அவர்கள் எங்கும் இப்பொழுது கூறிக்கொண்டிருக்கின்றனர். நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்; அவர்களில் ஒருவன, அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
102179 நீங்கள் அதைக் குறித்து மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? அவர்களில் ஒருவராயிருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியடையுங்கள். நான் அறிந்த எந்தக் காரியத்தைக் காட்டிலும், அவர்களில் ஒருவனாக இருப்பதையே நான் விரும்புவேன். ஓ, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவராக விரும்புவதைவிட அல்லது இவ்வுலகின் மேல் ஒரு ராஜாவாயிருக்க விரும்புவதை விட, நான் அவர்களில் ஒருவனாக இருப்பதையே விரும்புவேன். நான்…கர்த்தராகிய இயேசு இங்கே நடந்து வந்து “நான் உன்னை இருபது வயதுள்ளவனாக மாற்றி, உன்னை ஒரு கண்காணிப்பாளாராகவோ, உலகின் மேல் ஒரு ராஜாவாகவோ ஆக்கி, உனக்கு இப்புவியில் பத்தாயிரம் ஆண்டுகள் ஆயுட் காலத்தை நீடித்து, அக்காலம் முழுவதும் உனக்கு இருபது வயதே இருக்கும்படி செய்து, ஒருபோதும் சுகவீனமான ஒரு நாள் இல்லாமலும், இருதய வேதனையில்லாமலும் இருக்கச் செய்து, ஒவ்வொரு காரியத்திலும் மகிழ்ச்சியாய் பத்தாயிரம் ஆண்டுகள் ஜீவிக்கும்படி உலகிற்கே இராஜாவாயிருக்கச் செய்யவா அல்லது அவர்களில் ஒருவனாக நீ இருந்து கொண்டு, அதினால் இப்பொழுது நீ போராடிக்கொண்டிருப்பது போலவே காலமெல்லாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க வேண்டிய அவர்களில் ஒருவராக இருக்க விரும்புகிறாயா?” என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம். 180 அப்பொழுது நான், “அவர்களில் நானும் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கே நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றே கூறுவேன். பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு என்ன இருக்கிறது? ஆனால் இதுவோ, நித்தியமாய் இருக்கிறது. சகோதரனே, அது எங்கிருந்து வந்தது? ஓ, அது இரத்தத்தினூடாகவே வந்துள்ளது. அது உண்மை. அது நீண்ட காலமாக வந்து கொண்டிருக்கிறது. அது தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டு, நம்மிடையே வாசம் பண்ணியதால் உண்டானது.
103மனிதரை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்க ஓர் பாலகன் வெகு காலம் முன்பே ஒரு முன்னணையில் பிறந்தார், அது உண்மை என்பதை நான் அறிவேன். என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவரை யோவான் நதிக்கரையில் கண்டான், ஓ, அவரே சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து. ஓ, கலிலேயாவிலிருந்து, கலிலேயாவிலிருந்து வந்த அம்மனிதனை நான் நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் எனக்காக மிக அதிகமானதைச் செய்துள்ளார். அவர் என் பாவங்களையெல்லாம் மன்னித்தார், என்னில் பரிசுத்த ஆவியை ஈந்திட்டார். ஓ, நான் நேசிக்கிறேன், நான் கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதனை நேசிக்கிறேன். கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயின் எல்லாப் பாவங்களையும் அவர் கூறிவிட்டார். (அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.) எப்படியாய் அவளுக்கு அந்த நேரத்தில் ஐந்து கணவர்கள் இருந்திருந்தனர், அவளது பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட்டு, ஒரு ஆழ்ந்த சமாதானம் அவளுக்குள் குடிகொண்டது; அவளோ, “கலிலேயாவிலிருந்து வந்த இந்த மனிதனை வந்து பாருங்கள்!” என கூப்பிட்டாள். ஓ, கலிலேயாவிலிருந்து, கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதனை நான் நேசிக்கிறேன். ஏனெனில் அவர் எனக்கு மிக அதிகம் செய்துள்ளார், அவர் என் பாவங்கள் யாவையும் மன்னித்து, பரிசுத்த ஆவியை எனக்கீந்தார். ஓ, நான் நேசிக்கிறேன், நான் கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதனை நேசிக்கிறேன். ஆயக்காரன் ஒருவன் அங்கே ஒரு நாள் ஆலயத்தினுள் ஜெபிக்கச் சென்றான். அப்பொழுது அவன், “ஓ, கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று கதறினான். அவன் பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட்டு, ஒரு ஆழ்ந்த சமாதனம் அவனில் குடிகொண்டது. அப்பொழுது அவனோ, “கலிலேயாவிலிருந்து வந்த இந்த மனிதனை வந்துப் பாருங்கள்” என்றான். எனக்கு அது பிடிக்கும். உங்களுக்கு பிடிக்கவில்லையா? முடவர் நடந்தனர், ஊமையர் பேசினர், கடலின் மேல் அவ்வன்பின் வல்லமை உரைக்கப்பட்டது; குருடர் பார்வையடைந்தனர், கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதனின் இரக்கம் மாத்திரமே இதைச் செய்ய முடிந்தது என்பதை நான் அறிவேன். என்னோடு சேர்ந்து இதைப் பாடுங்கள்: ஓ கலிலேயாவிலிருந்து, கலிலேயாவிலிருந்து வந்த அம்மனிதனை நான் நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் எனக்கு மிக அதிகமானதாய் செய்துள்ளார். அவர் என் பாவங்களெல்லாம் மன்னித்தார், என்னில் பரிசுத்த ஆவியை தந்தருளினார்; ஓ, நான் நேசிக்கிறேன், நான் அந்த கலிலேய மனிதனை நேசிக்கிறேன்.
104181 நீங்கள் அதை நேசிக்கவில்லையா? ஓ, என்னே! இது நல்லது, பரிசுத்த ஆவியின் சுவிசேஷம், ஓ, நான் அதை எவ்வளவாய் நேசிக்கிறேன். நான் அவரை என் முழு இருதயத்தோடு நேசிக்கிறேன். அவர்களோடு நான் எண்ணப்பட்டிருக்கிறேன் என்பதற்கு நான் இன்றிரவு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாம் யாவரும் சகோதர சகோதரிகளாக கூடி வந்திருக்கிறோம். பாப்டிஸ்ட், மெதோடிஸ்ட், பிரஸ்…கத்தோலிக்கர். ப்ரஸ்பிடேரியன் மற்றும் இன்னும் என்னவெல்லாமோ, தேவன் நம்மை பல்வேறுவிதமான வாழ்க்கைகளிலிருந்து நம்மை வெளியே கொண்டு வந்து, இங்கே இந்த மகத்தான பரிசுத்த ஆவியின் ஐக்கியத்திற்குள் இங்கே கொண்டு வந்திருக்கிறார். இங்கே எந்த ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவில்லை. மற்றவர்கள் விரும்புவதை செய்வது அவர்களைப் பொறுத்தது, ஆனால் நாமோ, ஒரு காணக்கூடாத இராஜ்ஜியத்தில் இருக்கிறோம். நாம் பரிசுத்த ஆவியினால் இயேசு கிறிஸ்துவின் காணக்கூடாத சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். யார் இது? மெதோடிஸ்ட்டோ, பாப்டிஸ்டோ, ப்ரெஸ்பிடேரியனோ, யாராயினும், அவன் வரட்டும். 182 இயேசு, “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவேன்” என்றார். ஓ, என்னே! இங்கே பீடத்தண்டையில் ஒரு பழைய பாடலை நாம் பாடுவதுண்டு: நாம் அதைப் பாட முடியுமோ அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. “இடம், இடம், ஆம், இடமுண்டு, ஊற்றண்டையில் எனக்கு இடமுண்டு,” என்பதே. நீங்கள் அதைப் போன்ற பழைய பாடல்களை நீங்கள் விரும்புகிறீர்களா? அதை எப்படித் துவங்க வேண்டும் என்று அறிந்துள்ள யாராவது, யாரவது எங்களுக்கு ஒரு சுருதியைக் கொடுங்கள். நம்முடைய இசைப் பேழையை இசைப்பவர் எங்கே? அவள் இங்கிருக்கிறாளா? அல்லது சகோதரன் டெடி அல்லது அவர்களில் எவரேனும் இங்கே இருக்கிறார்களா? அவர்களா? ஓ, என்னே, நான்—நான் அவரை எங்கும் காணவில்லை. இடம், இடம், ஆம், இடமுண்டு, அங்கே ஊற்றண்டையில் உனக்கு இடமுண்டு, இடம், இடம், ஆம், இடமுண்டு, அங்கே ஊற்றண்டையில் உனக்கு இடமுண்டு.
105183 அவ்விதமான பழைய பாடல்களை நீங்கள் விரும்புகிறீர்களா? நானும் கூட இதை விரும்புகிறேன்: என் இரட்சகர் மரித்த சிலுவையண்டையிலே, பாவத்திலிருந்து சுத்திகரிக்க நான் அங்கே கதறினேன்; ஓ, அங்கே என் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது, அவருடைய நாமத்திற்கே மகிமை! அவர் நாமத்திற்கு மகிமை! அவருடைய விலையேற்றப்பெற்ற நாமத்திற்கு மகிமை! ஓ, மகிமை… (நாம் அப்படியே நம்முடைய கண்களை மூடி, அதைப் பாடுவோமாக.) ஓ, அங்கே என் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை! நான் ஆச்சரியமாய் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டேன், இயேசு எனக்குள்ளே மிக இனிமையாய் தரித்திருக்கிறார், சிலுவண்டையே அவர் என்னை ஏற்றுக் கொண்டார்; அவருடைய நாமத்திற்கே மகிமை! அவர் நாமத்திற்கே மகிமை! அது விலையேறப்பெற்ற நாமம்! அவருடைய நாமத்திற்கு மகிமை! விலையேறப்பெற்ற நாமம்! அங்கே என் இதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை! 184 இப்பொழுது இந்த பின்வரும் சரணத்தை நாம் பாடுகையில், நீங்கள் உங்களுக்கு முன்னும், உங்களுக்கு பின்னும், உங்களுக்கு பக்கவாட்டில் உள்ள யாவரோடும் கரங்குலுக்குங்கள். மிகவும், உயரியதும், இனிமையுமான இந்த ஊற்றண்டை வாரீர், உம்முடைய பாவ ஆத்துமாவை இரட்சகருடைய பாதத்தில் வைப்பீர்; ஓ, இன்றைக்கே மூழ்கி, சுத்தமாவீர்; அவருடைய நாமத்திற்கே மகிமை! அந்த விலையேறப் பெற்ற நாமம் அவரது விலையுர்ந்த நாமத்திற்கே மகிமை! அங்கே என் இதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை! ஓ, நான் அதை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா? அவருடைய நாமத்திற்கே மகிமை! விலையேறப் பெற்ற நாமம்! அவருடைய நாமத்திற்கே மகிமை! அங்கே என் இதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை! 185 ஓ, என்னே! நான் அதற்காக மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். நீங்கள் அவ்வாறில்லையா? என்னால் மிகவும் உயர்ந்ததும், இனியதுமான இந்த ஊற்றண்டையில் வந்து, எனது பாவ ஆத்துமாவை இரட்சகருடைய பாதத்தில் வைக்க முடியும் என்பதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
106186 நான் பதினெட்டு வயது வாலிபனாக இருக்கையில் கர்த்தரை விட்டு விலகி ஓடிக்கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட நாளை நான் நினைவு கூறுகிறேன். நான் மேற்கு பகுதிக்கு சென்றேன். நான் விரும்பினேன்…என் தந்தை குதிரை சவாரி செய்யும் பணியை செய்தவர். நான் அங்கே சென்று குதிரைகளைப் பழக்குவிக்கிற வேலையை செய்ய விரும்பினேன். அப்பொழுது, என் இருதயத்தில் ஏதோ ஒன்றுக்காக நான் பசியாயிருந்தேன். ஓ, நான் அதை உங்களுக்கு சொல்லுவேன்! 187 நான் பாப்டிஸ்டு பிரசங்கியாரிடம் சென்றபோது, அவர், “நீ எழும்பி நின்று, ‘இயேசு தேவனுடைய குமாரன்’ என்று கூறு, நாங்கள் உன்னுடைய பெயரை சபைப் பதிவேட்டில் பதித்துக் கொள்வோம்” என்றார். அது என்னை திருப்திபடுத்தவில்லை. 188 நான் எல்லா இடத்திற்கு சென்றபோது, ஒவ்வொருவரும்…ஏழாம் நாள் ஆசாரிப்பு என்ற சபையைச் சேர்ந்த சகோதரன் பார்கர் (Brother Barker) என்ற ஒரு அருமையான மனிதன், அன்பான சகோதரனிடம் சென்றேன், அவரோ, “பில்லி, நீ வந்து, கர்த்தருடைய ஓய்வை ஏற்றுக் கொள்” என்று கூறினார். (நான் இப்பொழுது உடையவனாயிருக்கிறேன்.) ஆனால் அவரோ, “ஓய்வு நாளை ஏற்றுக் கொள்” என்று தான் கூறினார். அப்பொழுது, நான், “ஓ, என்னே, இதுவும் நான் தேடுவதைக் கொடுப்பதாக இல்லையே” என்று எண்ணினேன். நீங்கள் பாருங்கள்.
107189 நான் மேற்கில் சென்றேன். நான் நினைத்தேன்…அன்றொரு இரவில் நாங்கள் மந்தையை மேய்த்து அதை மடக்கினோம். உங்களுக்குத் தெரியுமா? குதிரையை விட்டு சேணத்தை எடுத்து விட்டு, அங்கிருக்கும் முகாம் பையையும் எடுத்துக் கொண்டு, படுத்துறங்கப் போகையில், உங்களுடைய சேணத்தையே ஒரு தலையணையைப் போல் உபயோகிக்கலாம். எனவே நான் அன்றிரவில் மிக பழையான தேவதாரு மரங்களின் கீழே படுத்துக் கொண்டிருந்தேன். நான் பகல் நேரத்தில் கண்காணிப்பு வேலையைச் செய்து வந்தேன். எனவே இரவு நேரத்தில் வேலை செய்யும் பையன்கள் மந்தையை உள்ளே கொண்டு வந்தார்கள். அவர்களில் டெக்ஸாஸிலிருந்து வந்திருந்த “ஸ்லிம்” என்றழைக்கப்படும் ஒரு வயதான மனிதர், அவர் ஒரு—ஒரு சிறு வீணையை அங்கே வைத்திருந்தார். அவர் இவ்வாறு பாடலை இசைத்துக் கொண்டிருந்தார்: அவருடைய நாமத்திற்கே மகிமை! 190 இன்னொரு நபர் ஒரு சீப்பின் மேல் ஒரு காகித தாளை வைத்து அதை ஊதி இசைத்தார். [சகோதரன் பிரான்ஹாம் அவர்கள் அவருடைய நாமத்திற்கே மகிமை என்ற பாடலை மெளனமாக இசைக்கிறார்—ஆசி.] அவர்கள் வேறு பாடல்களையும், குதிரை மீது அமர்ந்து கால்நடைகளை மேய்பவரின் நாட்டுப்புற பாடல்களையும் பாடினர். மீட்பர் மரித்த குருசண்டையில் என்ற பாடலையும் பாடினார்கள். 191 என்னே! நான் புரண்டு படுத்தேன். என் தலையில் மேல்பக்கமாக கம்பளியை இந்தவிதமாக எடுத்துப் போட்டுவிட்டேன். பின்னர் நான் திரும்பிப் பார்த்தேன். உங்களுக்குத் தெரியும், இரவில் காணப்பட்ட நட்சத்திரங்கள் கீழே இறங்கி வந்து அங்கே அந்த தேவதாரு மரங்களின் உச்சிக்கு அருகில் தொங்கிக் கொண்டிருப்பது போலவும், அங்கிருந்த மலைகள் மேலும் வந்திறங்கி விட்டது போலவும் காணப்பட்டது. தேவதாரு மரங்களில் இருந்து சதாகாலமும் முணுமுணுக்கும் அந்த வழக்கமான சப்தமாகிய, “ஆதாமே, நீ எங்கேயிருக்கிறாய்?” என்று அவர் என்னை நோக்கி கூப்பிட்டது போன்று என்னால் கேட்க முடிந்தது.
108192 அதற்கு மூன்று வாரங்கள் கழித்து, நான் நகரத்திற்குள் சென்றேன். அந்தப் பையன்கள் யாவரும் மது அருந்தியிருந்தனர். நான் குடிக்கவில்லை. நான் எப்படியாவது அவர்கள் யாவரையும் மோட்டார் வாகனத்தில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தாக வேண்டியதாயிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் முன்பாத விரல்களை சுட்டுக் கொண்டு, அபாயகரமான நிலையில் இருந்தனர். அவர்கள் அங்கே ஒரு நேர்க்கோடு ஒன்றை போட்டு, அதில் வளையாமல் கோட்டின் மேல் நேராக யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு ஐந்து டாலர் என்று பந்தயம் கட்டிக் கொண்டு நடப்பார்கள். அவர்களால் குடித்த நிலையில் பாத சாரிகளுக்கென போடப்பட்டிருக்கும் நடைபாதையிலேயே சரியாக நடக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தவிதமாகவே அவர்கள் ஆட்டம் போட்டு, பின்பு, குடிவெறி தெளிந்து தங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு போவார்கள். 193 நான் அங்கிருந்தபோது அவர்கள் யாவரும் குடித்து வெறித்திருந்தார்கள், நானோ தனியே அப்புறம் போய் உட்கார்ந்தேன். அப்பொழுது நான், “என்னே! என்னே!” என்று எண்ணினேன். இது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்றே நான் யூகிக்கிறேன். நான் தனியே போய் உட்கார்ந்தேன். அப்பொழுது பீனிக்ஸ் ஒரு சிறிய இடமாயிருந்தது, நாங்கள் விக்கன்பர்கிலிருந்து அங்கே வந்திருந்தோம். நான் அவ்வாறு உட்கார்ந்து கொண்டிருக்கையில், வாலிபமான ஒரு ஸ்பானிய பெண்ணொருத்தி, குலுக்கி கொண்டு அவ்வழியாக வந்தாள், பெரிய தொப்பி என் தலைக்குப் பின்னால் நான் தொங்கவிட்டுக் கொண்டு அங்கே அமர்ந்திருந்தேன். அவ்வழியாக கடந்து சென்ற அவள், தனது சிறிய கைக்குட்டை ஒன்றை என்னருகில் கீழே போட்டு விட்டுச் சென்றாள், உங்களுக்குத் தெரியுமா? அப்பொழுது நான் அவளை நோக்கி, “ஏய், உனது கைக்குட்டையை கீழே போட்டு விட்டுச் செல்கிறாயே” என்றேன். நான் அவள் சைகையின் பேரில் ஆர்வம் காட்டவில்லை.
109194 நான் அங்கே வீதியிலே, சத்தம் கேட்டு அங்கே சென்றேன். அவர்களிலிருந்து மனமாற்றமடைந்திருந்த ஒரு வயோதிகர் அங்கிருந்த தொழுவ அடைப்பினண்டையில் அமர்ந்து, தன் முகமெல்லாம் சின்னமை வடுக்கைகளை கொண்டிருக்க, தன்னுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட அங்கே ஒரு சிறு வீணையை இசைத்து இப்பாடலை பாடிக்கொண்டிருந்தார்: அவருடைய நாமத்திற்கே மகிமை! 195 ஓ, என்னே! அவரது முகத்தில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது, நான் அவரருகில் சென்றதும் அவர் பாடுவதை நிறுத்திவிட்டு, “சகோதரனே இந்த அற்புதமான கிறிஸ்துவை நீ பெற்றுக் கொள்கிற வரையிலும், இது என்னவாயுள்ளது என்பதை நீ அறியமாட்டாய்” என்று கூறினார். அவருடைய நாமத்திற்கு மகிமை! 196 நான் என்னுடைய பெரிய தொப்பியை கீழே இழுத்து விட்டுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன். ஓ, என்னே! அவர் சமுகத்திலிருந்து நீங்கள் மறைந்து கொள்ள முடியாது. நீங்கள் வெளியே வந்து, உங்கள் பாவங்களை அவரிடத்தில் அறிக்கை செய்தாக வேண்டும். ஓ! அவர் அற்புதமானவராக இருக்கிறார். ஆம், அவர் அப்படித்தான் இருக்கிறார். நான் ஆச்சரியமாய் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டிருக்கிறேன், இயேசு எனக்குள்ளே மிகவும் இனிமையாய் தரித்திருக்கிறார், (உள்ளே தரித்திருக்கிறார் ) அங்கே சிலுவண்டையிலே அவர் என்னை ஏற்றுக் கொண்டர்; அவருடைய நாமத்திற்கு மகிமை! அவருடைய நாமத்திற்க்கே மகிமை! நாமம்! அவருடைய நாமத்திற்கே மகிமை! ஓ, அங்கேதான் என் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கு மகிமை! ஓ, இந்த மிக உயரிய இனிய ஊற்றண்டை வந்து, உங்களுடைய பாவ ஆத்துமாவை இரட்சகருடைய பாதத்தில் வையுங்கள்; ஓ, இன்றே மூழ்கு, முழுமையாய் சொஸ்தமடையுங்கள்; …மகிமை இப்பொழுது நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்தி, நம்முடைய கரங்களை அப்படியே இப்பொழுது உயர்த்துவோமாக: அவருடைய நாமத்திற்கே மகிமை!(மகிமை, மகிமை!) (ஓ, தேவனே) விலையேறப்பெற்ற நாமம்! அங்கே என் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை!
110197 தேவனுக்கு மகிமை! நாம் எழுந்து நிற்போமாக. ஓ, அப்படியே ஒரு நிமிடம் சற்று பொறுமையாயிருங்கள்… [ஒரு சகோதரி அன்னிய பாஷையில் பேசுகிறார். ஒரு சகோதரன் வியாக்கியானம் செய்கிறார்—ஆசி.] ஆம், கர்த்தாவே. 198 இது என்ன என்பதைப் பற்றி அறியாத யாராவது இருப்பீர்களென்றால், அது பெந்தெகொஸ்தேயின் அனுபவம், பரிசுத்த ஆவியினால் பேசுவது என்று அறிந்து கொள்வீர்களாக. இயேசு, “உலகம் முழுவதும் போய் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களைப் பின் தொடரும் அடையாளங்களாவன; அவர்கள் நவமான பாஷைகளைப் பேசுவார்கள். வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார். அவர் உரைத்த இக்காரியங்களெல்லாம் சம்பவித்து நிறைவேறியாக வேண்டும். 199 ஓ, நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் வந்து அந்த வார்த்தையை உறுதிபடுத்தியதைப் பார்த்தீர்களா? ஒரு வெளிச்சம், அதை ஏற்றுக் கொள்ளுங்கள், அதை சந்தேகிக்காதீர்கள். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு குழந்தையைப் போல் நீங்கள் இருந்தால், அப்பொழுது அவர் உங்களோடு இடைப்பட்டு, உங்களை சரியான பாதையில் கொண்டு வருவார். அதைச் செய்வது பரிசுத்த ஆவியானவரின் இனிமையல்லவா? பரிசுத்த ஆவியானவர் நம்மேல் இருக்கிறார். 200 ஒரு சமயம் வேதத்தில் கர்த்தருடைய ஜனங்கள், எந்த வழியாக சத்துருவின் சேனை வருகிறது என்பதை அறியாதிருந்தபொழுது, அவர்களில் ஒருவன் மேல் இந்தவிதமாக பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து இவர்கள் எவ்வழியாகப் போய் அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சரியாக உரைத்திட்டதை நான் நினைவு கூறுகிறேன். கர்த்தருடைய வார்த்தையின்படியே இவர்கள் சென்றபொழுது, சத்துருவின் சேனையை தேவன் குழப்பமுறச் செய்து, அவர்களை சுற்றி வளைக்கும்படிச் செய்தார். அது உண்மை. 201 ஓ, நாம் இன்னும் வேதாகம நாட்களில் ஜீவிக்கிறோம்! நாம் அப்படி ஜீவிக்கவில்லையா? ஆமென். எப்பொழுதும், அங்கே பரிசுத்த ஆவியானவர் இருக்கும் வரையில்.
111202 ஓ, நாம் பாடுகையில் எழும்பி நிற்போமாக: இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல்… (செய்தியை ஞாபகங்கொள்ளுங்கள்.) துயரமும் துக்கமும் கொண்ட பிள்ளையே; அது உனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும், நீ செல்லும் இடமெல்லாம் அதைக் கொண்டு செல். விலையேறப் பெற்ற நாமம், விலைறேப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையேறப் பெற்ற நாமம், அந்த விலையேறப்பெற்ற நாமம்! எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக; சோதனைகள் உன்னை சூழும்போது, அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. (தேவனுக்கு ஸ்தோத்திரம்!) ஓ, விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையேறப்பெற்ற நாமம், விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்
112இந்த சரணத்தை கவனியுங்கள். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல். ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக; சோதனைகள் உன்னைச் சூழும்போது, அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. ஓ, அதை நாம் மீண்டும் பாடுவோமாக: இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக; சோதனைகள் உன்னைச் சூழும்போது, அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. இப்பொழுது நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக: விலையேறப்பெற்ற நாமம், விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமை! எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்.