பிலதெல்பியா சபையின் காலம்

60-1210

சகதரன சனற எனககக ஒர பரய சடன சரரப Cherry pie வஙகக கணட வநதர. எனகக சரரப படககம எனற நன உஙகளடததல ஜடயக சலவத பயன அளககறத. அவர, எனன எனறர. அதபபறற எனன நனககறரகள, சகதரன நவல அவரகள? அத அவர இரககறர. நஙகள பரததரகள? அத ஒர வரபபமளள தனபணடமபல கணபபடகறத. அத உணமயலய அரமயக இரககறத. நஙகள சரரப சபபடமபத, அதப பறற நன கற வரமபவத, நஙகள சபப

பிலதெல்பியா சபையின் காலம்

60-1210ஜெபர்ஸன்வில் இந்தி1241960-12-10

பிலதெல்பியா சபையின் காலம்

60-1210ஜெபர்ஸன்வில் இந்தி1241960-12-10

1 சகோதரன் சென்று எனக்காக ஒரு பெரிய சூடான செர்ரிபை (Cherry pie) வாங்கிக் கொண்டு வந்தார். எனக்கு செர்ரிபை பிடிக்கும் என்று நான் உங்களிடத்தில் ஜாடையாக சொல்வது பயனை அளிக்கிறது. அவர், “என்னே…” என்றார். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள், சகோதரன் நெவில் அவர்களே? அதோ அவர் இருக்கிறார். நீங்கள் பார்த்தீர்களா? அது ஒரு விருப்பமுள்ள தின்பண்டம்போல் காணப்படுகிறது. அது உண்மையிலேயே அருமையாக இருக்கிறது. நீங்கள் செர்ரிபை சாப்பிடும்போது, அதைப் பற்றி நான் கூற விரும்புவதோ, நீங்கள் சாப்பிடும்போது சில சமயங்களில் ஒரு கொட்டை அகப்பட்டுவிட்டால், அப்பொழுது நான்—நான் செர்ரி பை-யை தூக்கி எறிந்து விடுவதில்லை, அங்கே வாயில் அகப்படுகிற அதன் கொட்டையைத் தான் நான் தூக்கியெறிந்துவிட்டு, தொடர்ந்து செர்ரி பையை சாப்பிட்டுக் கொண்டேயிருப்பேன். 2 அவ்விதமாகத்தான் நீங்கள் இந்த செய்தியைக் குறித்தும் செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன், நீங்கள்…செய்தியை என்னோடு நீங்கள் புசித்துக் கொண்டே போகையில், உங்களால் ஜீரணிக்க முடியாத—முடியாத ஏதாவதொரு விஷயம் வரும்போது, ஏன்? அப்படியே…அதற்காக முழு விஷயத்தையுமே வீசியெறிந்து விடாதீர்கள், எது உங்களுக்குப் புரியவில்லையோ, அதை (அந்த விதைப்) பாகத்தை மட்டும் அகற்றி வைத்து விட்டு, தொடர்ந்து செய்தியாகிய அந்த பையை (pie) சாப்பிட்டுக் கொண்டேயிருங்கள். காரணம், ஒருமுறை நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள், உ—ஊம். 3 நீங்கள்…நீங்கள் பொறித்த கோழியை விரும்புகிறீர்களா? ஏறத்தாழ யாவருமே அதை விரும்பத்தான் செய்கிறார்கள். நீங்கள் கோழிக் கறி சாப்பிடும்போது, நீங்கள் எலும்பினை கடிக்கும்போது, அப்பொழுது நீங்கள் கோழிக்கறியையே தூக்கியெறிந்து விடுவதில்லை, ஆனால் நீங்கள் வாயிலகப்பட்ட எலும்பை மட்டுமே தூக்கியெறிகிறீர்கள். அது சரிதானே, பேட் அவர்களே? நீங்கள் எலும்பை வீசியெறிந்து விட்டு, தொடர்ந்து கோழிக் கறியை புசித்துக் கொண்டேயிருக்கிறீர்கள். 4 நல்லது, நமக்கு எலும்போ, அல்லது கொட்டையோ அகப்படாத ஒரு உணவினை நாம் புசிக்க முடிந்ததற்காக நாம் சந்தோஷமாய் இருக்கிறோம். “மன்னா” என்றழைக்கப்படும், முழுவதும் பரலோகத்தின் இனிமையினால் நிறைந்திருக்கும் அப்பங்கள் பரலோகத்திலிருந்து இறங்கி வந்துள்ளன. 5 உங்களுக்குத் தெரியும், தாவீது ஒரு சமயம், “கன்மலையின் தேனைப் போல் மதுரமுள்ளது” என்று கூறியிருக்கிறான் என்று நான் நம்புகிறேன். ஒரு புலவனும், “அது கன்மலையில் உள்ள தேனாக இருந்தது” என்று கூறினான் என்று நான் நம்புகிறேன், ஓ, என் சகோதரனே, கன்மலையின் தேனைப்போல் மதுரமுள்ள தேனை நீங்கள் ருசி பார்த்ததுண்டா? “என் சகோதரனே, அது கன்மலையின் தேனாக இருக்கிறது.” அவ்விதமாகத்தான் அது உள்ளது.

26 இப்பொழுது, உங்களுக்குத் தெரியுமா? ஒரு சமயம், “கன்மலையில் உள்ள தேன்” என்றால் அது எதைப் பொருட்படுத்தியுள்ளது என்று நான்—நான் யோசித்ததுண்டு. நான், “நல்லது, ஒருவேளை அவர்கள் ஒரு கன்மலையில் எங்காவது ஒரு தேன் கூட்டைக் கண்டு பிடித்திருப்பார்கள் என்பதாய் இருக்கும்” என்று எண்ணினேன். ஆனால் அதைப் பற்றி தியானித்துக் கொண்டேயிருக்கையில், எனக்கு அதன்பேரில் சிறு ஆவியின் ஏவுதல் உண்டானது. நான் அதை கண்டறிய முயற்சித்துக் கொண்டிருந்த நேரத்தில் அல்ல, ஆனால் அதைப் பற்றி பின்னர் நான் அறிந்து கொண்டதோ, அதாவது ஆட்டு மந்தையை மேய்க்கும் மேய்ப்பர்கள் ஒவ்வொருவரும்… அதைப்பற்றி ஒரு காரியம் உண்டு என்று நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நமது சரீரங்கள் பூமியின் மண்ணினால் உண்டாக்கப்பட்டவையாகும். உயிருள்ள ஒவ்வொன்றும்—ஒவ்வொன்றும் மண்ணிலிருந்தே தோன்றினவையாகும். இந்த மேய்ப்பர்கள், தங்கள் மந்தையின் ஆடுகள் வியாதிப்பட்டால், அல்லது ஏதாவது சுகவீனம் உண்டானால், சுண்ணாம்பு அவைகளுக்கு உதவி செய்கிறது என்று நம்பினார்கள். வியாதிப்படும் அவ்வாடுகள் பாறையை நாக்கால் நக்கிட வேண்டும் என்று விரும்பிடும், அவ்வாறு ஆடுகள் பாறையில் போய் நாக்கால் நக்குவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவ்வாறு ஆடுகள் பாறையில் தங்கள் நாக்கால் நக்கும்படி செய்வதற்காக அவர்கள் கொஞ்சம் தேனை அப்பாறையில் ஊற்றிவிடுவார்கள். அப்பொழுது தேன்தடவப்பட்ட அப்பாறையை ஆடுகளானது போய் நாக்கால் நக்கும், தேனை நக்குகையில், நீங்கள் பாருங்கள், அவைகள் அப்பாறையையும் நக்கி விடும்.

37 இங்கே நம்மிடம், சிறிய பை நிறைய தேன் உள்ளது. நாம் அதை பாறையாகிய கிறிஸ்து இயேசுவிலே ஊற்றிடுவோம், எந்த ஒரு சபையின் மேலுமல்ல, ஆடுகளாகிய நீங்கள் போய் அக்கன்மலையில் வடிந்தோடும் அத்தேனை நக்குங்கள்; அப்பொழுது நிச்சயமாக நீங்கள்—நீங்கள்—நீங்கள்—நீங்கள் குணமடைவீர்கள், அக்கன்மலையை நீங்கள் நக்கும்பொழுது—நக்கும்பொழுது பாவத்தொல்லைகள் யாவும் உங்களை விட்டு அகன்று போய்விடும். அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். 8 சுகமளித்தலைக் கொடுக்கக்கூடிய ஒரு பாறையைப் பற்றி ஒரு விஷயம் உண்டு. முன் காலங்களில் நாய் கடிக்கான ஊசிமருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், “மேட் ஸ்டோன்” (Mad Stone) அழைக்கப்பட்ட ஒரு பாறையை வைத்திருப்பார்கள், ஒரு நபர் வெறி நாய் ஒன்றினால் கடிக்கப்பட்டால், அவனை அந்த “மேட் ஸ்டோன்” என்ற கல்லின்மேல் அமரவைப்பார்கள். இப்பொழுது, அந்த மேட் ஸ்டோன் என்ற அக்கல்லானது…அந்நபர் அந்த பைத்தியம் பிடித்தவர்களைக் குணமாக்கும் கல்லோடு ஒட்டிக் கொண்டுவிட்டால், அவன் குணமடைந்தான். அவனோடு அந்தக் கல் ஒட்டிக்கொள்ளாவிடில், அந்நோயாளி வியாதி முற்றிப்போன நிலையில் ஆகிவிட்டான் என்பதாக அர்த்தம். அந்நபர் மரித்துப் போய்விடுவான். 9 ஆகவே அது இன்றைக்கும் அவ்வண்ணமாகவே உள்ளது. எனக்குத் தெரிந்த வரையில் மிக மோசமான வெறி நாய்க்கடி இல்லை. பிசாசினால் ஏற்படுவது தான் மிக மோசமாக இருக்கிறது. நாம் அதற்காக ஒரு கல்லை உடையவர்களாயிருக்கிறோம், அது காலங்களின் கன்மலையாகும். அதை இருகப் பற்றிக் கொள்ளுங்கள். அதை நீங்கள் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிற வரையிலும் நீங்கள் நலமுடன் காணப்படுவீர்கள், நீங்கள் பிடியைத் தளர்த்தி விடாதீர்கள். அதனோடு பற்றிக் கொண்டவாறு இருங்கள். நீங்கள்—நீங்கள் நலமடைவீர்கள்.

410 நாம் இன்றிரவுக்குரிய நம்முடைய பாடத்திற்கு இப்பொழுது போகுமுன்னர் நம்மால் முடிந்தால் ஜெபத்திற்காக சற்று நேரம் நாம் எழுந்து நிற்க வேண்டும். 11 நீங்கள் ராபர்ட் டாட்டரியினுடைய சகோதரியல்ல, நீங்கள் அவர்களுடைய சகோதரியா? இங்கே, அவள் நேற்று என்னை தொலைபேசியில் அழைத்து, தனக்கு ஜெபம் தேவைப்படுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் என்று நான் நம்புகிறேன். எனக்குத்—எனக்குத் தெரியவில்லை, நீங்கள் சற்று அவர்களைப் போலக் காணப்பட்டதால், நீ அவள்தானோ அல்லது இல்லையோ என்று எனக்குத் தெரியவில்லை. நான் நேற்று மாலையில் உங்களை இங்கே கண்டேன்.

512 இப்பொழுது எத்தனைபேர் தேவனுக்கு முன்பாக நினைவு கூரப்பட்ட வேண்டும் என்று விரும்புகிறீர்கள், அல்லது எத்தனைபேர் தேவன் தங்களை நினைத்தருள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அப்படியே… 13 எங்கள் பரலோகப் பிதாவே, சிக்காகோவிலுள்ள எங்களுடைய அந்த பாடல் நடத்துபவர் வழக்கமாக பாடும், “கண்ணீர் வழிந்தோடுகையில் என்னை நினைத்தருளும்” என்ற பாடலின்படி, கர்த்தாவே என்னை இப்பொழுது நினைத்தருளும். மரண நேரம் சூழ்கையிலும், வாழ்க்கை முழுவதிலும், கர்த்தாவே நீர் எங்களை நினைத்தருள வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். எங்களை பாவிகளாக அல்ல, அவ்வண்ணமாக எங்களைக் குறித்து நினைத்தருளாமல், எங்கள் பாவங்களை அறிக்கை செய்துவிட்ட கிறிஸ்தவர்களாகவும், உம்முடைய குமாரனும் எங்கள் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களாகவும் எங்களைக் குறித்து நீர் நினைத்தருள வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அவரே எங்களின் பாவங்களுக்காக, பாவ பிராய்ச்சித்தமாயிருக்கிறாரே. அதாவது, அதுவே எங்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பாய், ஒரே வழியாய், ஒரே இரட்சிப்பின் வழிமுறையாயுள்ளது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அது எந்தவொரு சபையின் மூலமாகவும் அல்ல, அல்லது வேறு எந்த இயந்திர சாதனத்தின் மூலமாகவும் அல்லாமல், அல்லது ஒரு ஸ்தாபன சங்கத்தின் மூலமாயும் அல்ல, அவனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே, அவர் மூலமாக மட்டுமேதான் உள்ளது. 14 எனவே நாங்கள் இன்றிரவில் அவரது நாமத்தில் அணுகுகிறோம். நாங்கள் உம்முடைய வேதத்தை படித்து, இன்றிரவில் எங்களுக்காக என்ன வைத்திருக்கிறீர் என்பதை அறிவதற்காக கூடி வந்திருக்கையில், எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். ஜீவனுள்ள சபையாக எங்களுடைய ஆவிக்குரிய சரீரங்களை கட்டுவதற்கு உதவி செய்யும். நீர் வாசம் பண்ணுவதற்கும், உலாவவும், தடையற்ற செளகரியத்தை உணரவும், உம்முடைய ஜனங்கள் சஞ்சரிக்கவும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீர் எங்களுக்கு எடுத்துரைக்கவும், நாங்கள் அதைச் சரியாகச் செய்ய அறிந்திருக்கவும் கூடியதான ஒரு சபையாக நாங்கள் ஆகட்டும். 15 பிதாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம், ஆனால் நாங்கள் இன்னும் நீர் விரும்புகிறபடி எங்கள் மூலம் பேசத்தக்கதான நிலையில் நாங்கள் இருக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம், எனவே இன்றிரவில் நீர் எங்களை எந்த நேரத்திலும் உபயோகிக்கும்படி நாங்களும் எங்களை முழுவதுமாக உமக்கென அர்பணித்திடும்படியாக நீர் எங்களில் இருக்கிற தேவைக்கு மேலதிகமாக காணப்படும் மாம்சமாகிய மதியீனத்தை விருத்தசேதனம் செய்து அகற்றிப்போடும் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே, இந்த வேதாகமத்தின் தங்கக் கட்டிகளை கொண்டு வந்து, அவைகளை மெருகேற்றும்படிச் செய்து, இந்த மகத்தான சபைக்காலத்தில் கிறிஸ்துவின் பிரதிபலிப்பை ஜனங்கள் காணும்படிச் செய்ய நீர் எங்களை பயன்படுத்தும் நேரமாய் இன்றிரவு இருப்பதாக என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.

616 நாம் இதுவரை சபைக் காலங்களைப் பற்றி பார்த்து வந்தோம். இன்றிரவில் ஆறாவது சபைக் காலத்தைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம். இவ்வாறு ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு சபைக் காலத்தைப் பற்றி நாம் பார்த்து வந்துள்ளதில் நாளை இரவில் சபைக்காலங்களைப் பற்றி படித்து முடிந்திருப்போம். நாம் இவைகளை திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இன்றிரவில் நாம் பார்க்கப் போவது பிலதெல்பியா சபைக் காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சபைக் காலத்திற்குரிய நட்சத்திரமாக விளங்கியவர், அல்லது தூதர், தூதர்—செய்தியாளராக விளங்கியது ஜான் வெஸ்லி தான் என்று நாம் பயபக்தியுடனும், முழு இருதயத்துடனும் விசுவாசிக்கிறோம். இந்த சபைக்காலம் 1750-ல் ஆரம்பித்தது. அப்பொழுதுதான் லூத்தரன் சபைக்காலமானது முடிவுற்றது. இந்த சபைக்காலமானது கி.பி.1900 வரை, அதாவது கி.பி.1906-ம் ஆண்டு வரை நீடித்தது, இது வெஸ்லியின் சபைக்காலம் ஆகும். அது முடிவுற்றபிறகு லவோதிக்கேயாவின் காலம் பிறந்தது. 17 இந்த சபைக்காலமானது “சகோதர சிநேகத்தின்” காலமாகும், மகத்தான “மிஷனரி” யுகமும், “திறந்த வாசல்” யுகமும் இதுவே. இச்சபைக்காலத்தில் ஜெயங்கொள்ளுகிறவனுக்கு அளிக்கப்படும் பலனானது, தேவலாயத்தில் “தூணாக ஆக்கப்படுத்தலேயாகும்,” மற்றும் மூன்று நாமங்களின் வெளிப்படுத்துதலும் கிடைக்கிறது. அவையாவன: தேவனுடையா நாமம், தேவனுடைய நகரத்தின் நாமம், தேவனுடைய புதிய நாமம் இவற்றின் வெளிப்படுத்துதல் இந்த சபைக்கு இந்த காலத்தில் அளிக்கப்படுகிறது. இப்பொழுது, சபையானது…இந்த சபைக்காலம் வெளிப்படுத்தின விசேஷம் 3:7-ல் துவங்கி 13-ம் வசனம் உள்ளடக்கியவாறு, 13-ம் வசனத்தில் முடிவடைகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 3:7 முதல் 13 வசனம் வரை.

718 நாம், இச்சபைக் காலங்களைப் பற்றி ஒவ்வொரு இரவிலும் சிறிது பின்னோக்கிப் போய் திரும்பிப் படிக்கிறோம். முதலாவதான சபைக்காலம் எபேசு சபைக்காலமாகும், அந்த சபைக்காலத்திற்குரிய தூதன் அல்லது ஒளி (ஊழியக்காரன்) யார் என்பதை யாரவது கூறமுடியுமா? பவுல், எபேசு சபைக் காலமானது கி.பி.55 முதல் 170 முடிய நீடித்தது. கி.பி.55-ஐ இச்சபைக்காலத்தின் துவக்கமாக நான் எடுத்துக் கொண்டதற்குக் காரணம், அவ்வாண்டில்தான், பவுல், தனது மிஷனரி பிரயாணத்தை துவக்கினான். அப்பொழுது தான் அவன் எபேசு என்ற அந்த பட்டணத்தில் சபையை நிறுவினான் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் ஏனைய சபைகளையும் அவன் நிறுவினான். 19 சரி, இரண்டாவது சபைக்காலமானது சிமிர்னா சபைக் காலமாயிருந்தது. சபையில் யாராவது இந்த சபையின் தூதன் யார் என்பதைக் கூற முடியுமா? அது ஐரேனியஸ் தான் என்பது சரி. சரி, இச்சபைக் காலமானது. கி.பி 170முதல் கி.பி.312 முடிய நீடித்தது. 20 மூன்றாம் சபைக்காலமானது பெர்கமு சபைக் காலமாயிருந்தது. இச்சபைக் காலத்தின் பரிசுத்தவான் யார் என்பதை சபையில் உள்ள யாரவது நினைவு கூர்ந்து செல்ல முடியுமா? பரிசுத்த மார்ட்டின் என்பது சரிதான். கி.பி.312 முதல் கி.பி.606 முடிய இச்சபைக்காலம் நீடித்தது. 21 அதற்கடுத்த சபைக்காலம், தியத்தீரா சபைக்காலமாயிருந்தது. இச்சபைக் காலத்தின் பரிசுத்தவான், செய்தியாளன், தூதன் யார் என்பதை நினைவில் வைத்திருக்கிறீர்களா? அது கொலம்பா என்பது சரியேயாகும். அது கி.பி.606 முதல் 1515 வரை நீடித்தது. 22 அதற்கடுத்த சபைக்காலம் சர்தை சபைக்காலமாயிருந்தது. அதை நாம் நேற்றிரவில் பார்த்தோம், மேலும், யாராவது…அச்சபைக் காலத்திற்குரிய தூதன் யாராயிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது ஞாபகத்திலுள்ளதா? மார்டின் லூத்தர்தான். இவருடைய சபைக்காலம் கி.பி.1520 முதல் கி.பி.1750 முடிய நீடித்தது. 23 இன்றிரவில் நாம் பிலதெல்பியா சபைக்காலத்தைப் பற்றிப் படிக்கப் போகிறோம். அந்நாளிக்குரிய அச்சபைக்காலத்தின் தூதன் ஜான் வெஸ்லியாவார். கி.பி.1750 முதல் கி.பி.1906 முடிய இச்சபைக் காலம் நீடித்தது. அது “சகோதர சிநேகத்தின்” காலமாக விளங்கியது. 24 இப்பொழுது, சபைக்காலங்களில், இந்த சபைகள் ஒவ்வொன்றும் அந்தந்த சபையின் குணாதிசயத்தையே வெளிப்படுத்தின என்பதை நாம் கண்டறிகிறோம். அது—அது சபையானது என்னவாயிருந்தது என்றும், சபையின் குணாதிசயங்களையும், சரியாகக் கூறினால் அதன் விசேஷமான பண்பினையும் எடுத்துக் காட்டியது.

825 நேற்றிரவில் நாம் மார்ட்டின் லூத்தரைப் பற்றி பார்த்தோம். இவைகளில் நான்…இதை நான் பிரசங்கிப்பதற்கும், அவைகள் ஒலி நாடாக்களில் வாலிபப் பிள்ளைகளால் பதிவு செய்யப்படுவதற்கும் காரணம் என்னவெனில்…நான் இதைக் குறித்து நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறேன். “நாள் முழுவதும் படித்து விட்டு, வரலாற்றிலிருந்து ஒரு சிறிதளவே இங்கு வந்து கூறுகிறீர்களே” என்று நீங்கள் கூறக் கூடும். இல்லை. வரலாற்றுக் குறிப்புகளோ நாம் தயாரிக்கப் போகும் புத்தகத்தில் இடம் பெறும் பாருங்கள். இங்கே கூடி வந்திருக்கிற நாம், இச்செய்தியினை ஆவியின் ஏவுதலினால் அளிக்கப்படும் விஷயங்கள் பெற்றுக் கொள்வதற்காக, இவைகளை இங்கு பிரசங்கிக்கிறேன். வரலாற்று ரீதியான விஷயங்களை நான் உரிய புத்தகத்திலிருந்து வாசித்தளிக்க முடியும். ஆனால் தெய்வீக ஏவுதலினால் கிடைக்கும் ஆவிக்குரிய விஷயங்களைப் பெறுவதற்குத்தான் நான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாம் அவைகளை ஒலி நாடாவில் பதிவு செய்து கொள்கிறோம். நாம் அதிலிருந்து அவற்றை வேண்டும்போது பெற்றுக் கொள்ள முடியும், அதன் பிறகு, நாம் சபைக் காலங்களைப் பற்றிய வரலாற்று தகவல்களையும், இங்கே இப்பொழுது நாம் கிறிஸ்து இயேசுவோடு உன்னதங்களிலே வீற்றிருக்கையில் நமக்கு பரிசுத்த ஆவியானவர் அளித்திருக்கிறவைகளை நாம் ஒருங்கிணைத்திடுவோம். அப்படிப்பட்டதான ஒன்று, இந்த சபைக்காலங்களைப் பற்றிய ஒரு சிறிய மிகச் சிறந்த வியாக்கியானப் புத்தகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். கர்த்தர் தாமே அவருடைய ஆசீர்வாதங்களை அதற்கு அளிப்பாராக.

926 இப்பொழுது, நேற்றிரவில் நாம் சர்தை சபைக்காலத்தைப் பற்றிப் பார்த்தோம். கிரேக்க மொழியில் “சர்தை” என்ற சொல்லுக்கு உண்மையிலேயே “தப்பித்துக் கொண்டவன்” என்று பொருள். ஆனால் ஆங்கில மொழி பெயர்ப்பின்படி “மரித்தவன்” என்று பொருளாகிறது என்று நான் நம்புகிறேன். அது “மரித்த” நிலையில் உள்ளதாகவும், அதே சமயத்தில் “தப்பித்துக்கொண்டவன்” என்ற நிலையினையும் உடையதான சபையாகவும் உள்ளது. ஏனெனில் அந்த சபையானது கி.பி.1500 வரையிலும், அல்லது 1520 வரையிலும் போப்புமார்க்க ஆட்சியின் கீழ், இருண்ட காலங்கள் என்றழைக்கப்பட்ட அக்காலத்தில், மரித்துப் போன நிலையில் இருந்தது, அக்காலத்தில் தான் கிறிஸ்தவம் தனது மிகக் கேடான சரிவுற்ற நிலையில் காணப்பட்டது. அதுபோல் ஒரு காலத்திலும், ஏன் இந்த லவோதிக்கேயா சபைக்காலத்தில் கூட இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையில் இருந்தது.

1027 இந்த சபைக்காலங்களின் துவக்கத்தை உங்களுடைய சிந்தையில் வைத்துக் கொள்ளும்படியான குறிப்பிடத்தக்க காரியங்களில் ஒன்று உண்டு. அதென்னவெனில், ஒவ்வொரு சபைக்காலமும் ஆரம்பித்தபோது, அச்சபைக் காலத்தில் என்ன நிலைமை காணப்பட்டதோ, அடுத்தடுத்து வரும் சபைக் காலங்களிலும் அதே போன்ற நிலைமை காணப்பட்டது. அந்த சபைக் காலங்கள் ஒவ்வொன்றும், அடுத்து வரும் சபைக்காலத்தின் மேல் கொஞ்சம் நீண்டு தொடுத்துக் கொண்டு இருந்தது (lap over). வரலாற்றை நீங்கள் கூர்ந்து ஆராய்ந்தால், நீங்கள் அதைக் கண்டு கொள்ளுவீர்கள். 28 அது, ஒன்றின் முடிவுப் பாகம் அடுத்ததின் துவக்கப் பாகத்தில் மேல் இந்த விதமாக நீண்டிருப்பதாக இருந்தன, ஒரு சபைக்காலம் முடிந்து போகிறபோது, அதன் மத்தியில் வருகிற அச்சபையின் தூதன், அது இழந்துபோன விசுவாசத்திற்கு அதை திரும்ப அழைக்கிறான், அவ்வாறே எக்காலமும் இருந்து வந்துள்ளது. 29 யூதா புத்தகத்தில் பாருங்கள், வேதாகமத்தில் உள்ள கடைசி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் என்ற புத்தகத்தை நீங்கள் படிப்பதற்கு முன்பு உள்ள புத்தகம், பாருங்கள். யூதா, “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாக போராட வேண்டுமென்று உங்களுக்கு எழுதி—எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது” என்றான். வெளிப்படுத்தின விசேஷ புத்தகம் வருவதற்கு முன்னரும், அப்போஸ்தல நிருபங்களின் முடிவின் இடையிலும் தொங்கிக் கொண்டிருக்கிற ஒன்றாக இந்நிருபம் இருக்கிறது. ஏனெனில் அப்போஸ்தலர்களில் அநேகர் அப்போது மரித்து விட்டிருந்தனர், பாருங்கள், அவர்கள் கடந்து போய் விட்டனர். அச்சயமத்தில் ஜீவித்து வந்தவன், திவ்யவாசகனாகிய பரிசுத்த யோவான் தான், அவன் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை எழுதுவதற்காக, கர்த்தருடைய தூதனிடத்திலிருந்து வெளிப்படுத்தலைப் பெற்று, அதை எழுதினான்.

1130 இப்பொழுது, பாருங்கள், அவைகள் ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று என இருந்து வருகின்றன. எனவே இப்பொழுது நீங்கள்…நான் விளக்கிக் கூறிக் கொண்டு வருகையில் நீங்கள் அதை கவனித்து, அதை புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். சர்தை சபைக்காலத்திலும்கூட, விவாக காலமாக இருந்த அக்காலத்தில் அது எவ்வாறு இருந்தது. உண்மையில், தியத்தீரா வரையிலும் சபையானது தன் முழு நிலை நிற்றலில் உண்மையாக வரவில்லையே, ஆனால் அது சர்த்தையில் வந்தபோது, விவாகம் செய்து கொண்டதாக சபை ஆனது. சர்தை என்றால் “ஒரு—ஒரு விவாகத்தில் இருத்தல்” என்று அர்த்தம். 31 இப்பொழுது—இப்பொழுது அது இங்கே விவாகம் செய்து கொண்டு, அதன்பின்னர் வந்த அடுத்த சபைக்குள்ளும் நீண்டுபோய் முடிவடைகிறது என்பதை நீங்கள் கவனித்தால் நலமாயிருக்கும். கடந்த இரவு லூத்தர் “மரித்துப்போன” என்ற நாமத்தோடு வெளியே வந்தார் என்பதை நீங்கள் கவனித்தீர்கள். மரித்துப் போன என்னும் ஒரு பெயரோடு புறப்பட்டு, பிறகு “தப்பித்துக் கொண்டவன்” என்று அர்த்தம் கொள்ளும் பெயரைப் பெறுகிறார். பாருங்கள், அது அங்கே மரித்தவன் என்ற நிலையில் இருந்து வந்திருக்கையில், அக்காலத்தில் அந்த சிறு கூட்டமான மீதியாயிருக்கிறவர்கள் தப்பித்து கொண்டு, அதற்கடுத்த சபைக் காலத்திற்குள் வந்து சேருகிறார்கள். 32 இன்றிரவில் நாம் பிலதெல்பியா சபைக்காலத்தை பார்த்து முடிக்கையில், அது லவோதிக்கேயாவின் சபைக்காலத்தின் துவக்கத்திற்கு கொண்டு வருகிறது.

1233 அதன்பிறகு, நாளை இரவில், ஏழாம் சபைக்காலமானது முடிவடையும் தருணத்தில், அதின் இறுதிக் கட்டத்தில், (சரியாக கடைசிக் காலத்தில்) தூதன் தோன்றுவதை கவனியுங்கள், அவன் வந்து சபையை, அது ஆதி அன்பை இழந்ததற்காகவும், காலங்கள் தோறும் மக்கள் செய்தது போலவே இவர்களும் தேவனே விட்டு விலகிவிட்டதற்காகவும் கடிந்துகொள்வான். அந்த நேரத்தில், சபையை பரம வீட்டிற்கு எடுத்துச் செல்ல எடுத்துக்கொள்ளப்படுதல் உண்டாகிறது, சபையானது செய்தியின் நேரத்திலேயே மேலே செல்கிறது. எனவே நாம்—நாம் இப்பொழுது அந்த காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம், அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? சரி. புரிகிறதா? சரி, பாருங்கள், சரியான நேரத்தில் அந்த சபையின் தூதன் (அக்காலத்தின் செய்தியாளன்), சபையானது தங்களிலிருந்து ஆதி அன்பை இழந்துவிட்டதற்காக அதை கடிந்து கொள்ளுவான், அதை திரும்பக் கொண்டுவர முயலுவான். 34 இன்றிரவில் நாம் பார்க்கப்போகும் சபைக்குரிய செய்தியாளனும், தூதன்—செய்தியாளன்…திரும்பி வந்து அவர்கள் செய்தவற்றிற்காக அவர்களை கடிந்து கொள்ளுவான், (ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே இருந்து வந்துள்ளது.) ஒவ்வொரு சபைக் காலங்களிலும் படியில் ஏறிச் செல்லும் போது, ஒரு படியிலிருந்து அடுத்த படிக்கு தாண்டுவதுபோல ஒரு சபைக்காலம் அடுத்த சபைக் காலத்திற்குள்ளும் நீண்டதாகவே இருந்தது.

1335 இன்றிரவில் ஜான் வெஸ்லியாகிய தூதனைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒன்று இங்கே என்னிடம் உள்ளது. ஜான் வெஸ்லி தான் இச்சபைக் காலத்திற்குரிய நட்சத்திரமாக விளங்கினார். அவர் 1703-ம் ஆண்டில் ஜீன் மாதம் 17-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள எப் வொர்த் என்னும் இடத்தில் ஒரு மத குருவின் வீட்டில் பிறந்தார். அவரது பெற்றோருக்கிருந்த பத்தொன்பது பிள்ளைகளில் இவர் பதினைந்தாவது மகனாக நிகழ்ந்தார். ஜான் மற்றும் சூசன்னா வெஸ்லி ஆகியோர் அவருடைய தாய் தந்தையாராவார். தந்தையார் ஒரு பிரசங்கியாராயிருந்தார், தாயாரோ ஒரு அர்பணிக்கப்பட்ட பரிசுத்தவாட்டியாயிருந்தார்; பத்தொன்பது பிள்ளைகளையும் அத்தாய் கவனிக்க வேண்டியிருந்தாலும், தன்னுடைய மிகுந்த அலுவல்கள் மத்தியிலும் பிள்ளைகளுக்கு வேதாகமப் பாடங்களையும், வேதாகமக் கதைகளையும், சொல்லிக் கொடுத்து, அவர்களுக்காக ஜெபிப்பதற்கு அத்தாய்க்கு நாள் தோறும் அதிக நேரம் கிடைத்தது. அது தான் அச்சிறுவர்களை தேவ பக்தியுள்ளவர்களாக உருவாக்கியது. ஜான் வெஸ்லியினுடைய சகோதரன் சார்லஸ் என்பவர் பிரசித்தி பெற்ற பாடலாசிரியராவார். அவர் உலக்கு நமக்கு இருந்துவந்த பாடல்களை விட மிகவும் ஆவியினால் ஏவப்பட்டு எழுச்சியூட்டுகிற பாடல்கள் சிலவற்றை கொடுத்தவராவார்.

1436 ஜார்ஜ் வொயிட் ஃபீல்ட் என்பவரின் ஒரு கூட்டாளியாக ஜான் வெஸ்லி விளங்கினார். ஜான்—ஜான் வெஸ்லி, ஜார்ஜ்—ஜார்ஜ் வொயிட் ஃபீல்ட் ஆகிய இருவர் தான் மெமோடிஸ்ட் சபை உருவாகக் காரணமானவர்கள். பரிசுத்தமாகுதல் செய்தி அதிலிருந்து வந்தது. 37 ஜான் வெஸ்லியிடம் அதிகாலையில் எழும்பும் பழக்கம் இருந்தது. அவரது ஆயுட்காலத்தில் அறுபது ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான்கு மணிக்கே அவர் எழும்பி விடுவார். அந்த ஒரு காரியத்தில் சபையானது தவறியிருக்கிறது. ஐம்பது ஆண்டுக்காலம் தொடர்ந்து ஒவ்வொரு நாளிலும் அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி ஐந்து மணிக்கு பிரசங்கிப்பார். சில வேளைகளில் அவர் ஒரு நாளில் இரண்டு முதல் நான்கு தடவைகள் பிரசங்கிப்பார். “அவர் ஒரு ஆண்டிற்கு நாலாயிரத்து ஐந்நூறு மைல்கள் குதிரையின் மேல் பயணம் செய்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்கிறார்” என்று அவரைக் குறித்து இங்கிலாந்து தேச மக்கள் கூறுகிறார்கள், நாலாயிரத்து ஐந்நூறு மைல்கள் ஒரு ஆண்டிற்கு… அது ஆங்கிலேய மைல்களாகும். அவை நம்முடைய மைல்களை விட நீளமானவை என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வளவு தூரம் பயணத்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்கிறார்.

1538 அவரது நாட்களில் அவரைப் பரிகசித்தும் தூஷித்தும் அநேக புத்தகங்கள் எழுதப்பட்டன. ஆனால் அப்புத்தகங்களும், அவைகளது ஆக்கியோன்களும் வெகுகாலமாக மறக்கப்பட்டே போய் விட்டார்கள். ஒரு தேவ பிள்ளைக்கெதிராக உங்களால் எதுவுமே செய்ய முடியாது. அப்படி எதுவும் செய்துவிட்டு, தப்பித்துக் கொள்ளவும் முடியாது. அச்செய்கை நீங்கள்—நீங்கள் வெறும் ஆகாயத்துடன் சண்டை போடுவதுபோல் தான் இருக்கும், தேவன் தனது பிள்ளையை எப்படியாகிலும் விடுவித்துக் காப்பார். 39 அவர் ஒரு “மெதோடிஸ்ட்” என்று அழைக்கப்பட்டார்; ஏனெனில் அவர் காரியங்களைச் செய்வதற்காக ஒழுங்குகளைக் கொண்டவராக (Methods) இருந்தார். “அவரது ஆயுட்காலத்தில் அவர் நாற்பதாயிரத்திற்கு மேலதிகமாகவே பிரசங்கங்கள் பிரசங்கித்துள்ளார்” என்று அவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அதைக் குறித்து எண்ணிப் பாருங்கள்; நாற்பதாயிரம் பிரசங்கங்கள். அவர் இவ்வுலகத்தை விட்டு 1791-ல் கடந்து சென்றபிறகு, உலகத்தில் மெதோடிஸ்ட் ஸ்தாபனமானது தனது வேர்களை பரவவிட்டு மெதோடிஸ்ட் சபை அதிலிருந்து ஆரம்பித்தது. அப்பொழுது உண்மையாகவே ஆஸ்பரி மற்றும் ஏனையோர்களும் அந்த நேரத்தில் இருக்கத்தான் செய்தார்கள்.

1640 நாம் இப்பொழுது 7-ம் வசனத்திலிருந்து துவங்கும்பொழுது, பிலதெல்பியா சபைக் காலத்திற்குரிய செய்தியாளனுக்கும், சபைக்கும் கொடுக்கப்படும் வாழ்த்துதலை கவனிக்கிறோம். உண்மையான சபையானது…உண்மையான சபையானது நல்ல அறிக்கைபண்ணுகிறது, நல்ல அறிக்கை பண்ணுகிறது, நல்ல அறிக்கைபண்ணிய உண்மையான சபையாக அது இருக்கிறது …பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: 41 ஒவ்வொரு சபைக்காலமும் அடுத்துவரும் சபைக் காலத்திற்குள் நீண்டு இருக்கும் காரியத்தைப்பற்றி உங்கள் கவனத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். இப்பொழுது நீங்கள் அந்த தூதனைக் குறித்து தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். மெதோடிஸ்ட் காலத்தை அவர் எவ்வாறு கொண்டு வந்தார் என்பதை நீங்கள் கவனிப்பீர்களானால் …மெதோடிஸ்ட் காலமானது பெந்தெகொஸ்தே காலமாகிய லவோதிக்கேயாவின் சபைக் காலத்திற்குள்ளும் சிறிது நீண்டு இருந்தது. பின்பு நாளையிரவில், பெந்தெகொஸ்தே காலத்திற்குரிய செய்தியாளன் திரும்பி வந்து இச்சபைக்காலத்து மக்களே விழுந்து போனதற்காக கடிந்துகொள்ளுவான். எப்படி இந்த சபைக்காலத்து தூதன் தனக்கு முந்தின சபைக் காலமாகிய சர்தையின் காலத்தில் (லூத்தரின் காலம்) உள்ள மக்களை வழுவிப் போனதற்காக கடிந்து கொண்டதைப் போன்றே அடுத்து வரும் காலத்திற்குள்ளும் அது சற்று நீடித்திருக்கும்.

1742 சகோதர சிநேகம். இது மகத்தான மிஷனரிகளையும், மிஷனரி ஊழியங்களையும் கொண்ட மகத்தான காலமாக இருந்தது. உலகமானது இந்த அளவுக்கு அது வரையிலும் இவ்வளவு அதிகமான மிஷனரி ஊழியங்களைப் பார்த்ததேயில்லை. அது நமது காலத்திற்குள்ளும் கூட நீடித்திருக்கிறது. உலகின் எப்பகுதியிலும் மிஷனரிகள் இருப்பதான வேளையாக, உலகம் இதுவரை காணாத அளவுக்கு இருந்து கொண்டிருக்கிறது. உலக வரலாற்றின் மிகக் குறிப்பிடத்தக்க காலங்களில் ஒன்றான இக்காலத்தில், கடந்த நூற்றைம்பது ஆண்டு காலமாக உலகின் சகல பாகங்களிலுமே சுவிசேஷத்தோடு மிஷனரிமார்கள் பரவியிருக்கின்றனர். அது… 43 எழுத்துத் துறையில்—எழுத்துத் துறையில் எடுத்துக் கொண்டால் சுவிசேஷ செய்தியானது கைப்பிரதிகள் புத்தகங்கள் ஆகியவற்றின் வாயிலாக வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு தேசத்தையும் நீண்ட காலமாக சென்றடைந்து கொண்டிருக்கிறது. எனவே, நீங்கள் பாருங்கள், இயேசுவானவர் கூறிக்கொண்டிருந்தது இதைப் பற்றியல்ல என்பது நிரூபணமாகிறது. அவர் ஒருபோதும், “உலகமெங்கும் போய் வேதாகம பள்ளிகளை உண்டாக்குங்கள்” என்று கூறவில்லை. மேலும் அவர் “உலகமெங்கும் போய் பத்திரிக்கைகளையே விநியோகியுங்கள்” என்றும் கூறவேயில்லை.

1844 அந்தக் காரியங்கள் அருமையாயிருக்கின்றன, ஆனால் அவருடைய கட்டளை சபைக்கு என்னவாயிருந்ததென்றால், “உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்பதேயாகும். சுவிசேஷமானது முற்றும் வெறும் வார்த்தையாக இருக்கவில்லை. ஆனால் அது வார்த்தையை ஜீவிக்கச் செய்கிறதாக இருக்கிறது. புரிகிறதா? ஏனெனில் இயேசு, உடனடியாக, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன்” என்றும் கூறினார். சபைக்கான அவரது கடைசி—அவரது கடைசிக் கட்டளையைக் கொண்ட மாற்கு 16-ம் அதிகாரம் உங்களுக்குத் தெரியும்: “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன.” மத்தேயு 10-ம் அதிகாரத்தில் சபைக்கு அவருடைய முதல் கட்டளையென்னவெனில், “வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்குங்கள். மரித்தோரை எழுப்புங்கள். பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்பதாயிருந்தது. சபைக்குரிய அவரது கடைசிக் கட்டளையானது என்னவெனில், “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான், விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன;” என்பதாகும். 45 அநேகர் இங்கே இப்பகுதியை துண்டித்துவிடுகிறார்கள் அல்லவா? “ மற்றும் ” என்பது வாக்கியத்தை ஒன்று சேர்க்கின்றதாயுள்ளது. பாருங்கள்? இப்பொழுது அவர், (“நீங்கள் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று மட்டும் அனேக ஊழியக்காரர்கள் கூறுவார்கள்.) “இப்பொழுது விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், மற்றும் விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான், மேலும் இந்த அடையாளங்கள் அவர்களைப் பின்தொடரும். அவர்களை பின் தொடரும் : விசுவாசிக்கிறவர்களையே . என்னுடைய நாமத்தினால் பிசாசுகளைத் தூரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும், அது அவர்களைச் சேதப்படுத்தாது: வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார். ஜீவனுள்ள தேவனின் அடையாளங்கள் ஜனங்கள் மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கின்றன, ஓ! எவ்வளவு தூரத்திற்கு? உலகம் முழுவதிலும், நீங்கள் அதை அறிந்து கொண்டீர்களா? உலகம் முழுவதிலுமே.

1946 ஆகவே நான் பெந்தெகொஸ்தே செய்தியானது என்று கூறும்பொழுது… (இப்பொழுதிருக்கிற பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைப் பற்றி நான் குறிப்பிடவில்லை.) பெந்தெகொஸ்தே செய்தி மாத்திரமே தேவனிடத்திலிருந்து வந்துள்ள ஒரே உண்மையான செய்தியாக இருக்கிறது. இப்பொழுது மாற்கு 16-ம் அதிகாரத்தைப் பாருங்கள். நீங்கள் அதை வாசித்துப் பார்ப்பீர்களா?, சரி, இங்கே இயேசு தனது சபைக்கு கட்டளையிட்டார்; அதாவது “உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்; இவ்வடையாளங்கள்: அந்நிய பாஷைகளில் பேசுதல், பிணியாளிகளைச் சொஸ்தப்படுத்துதல், அற்புதங்களை நடப்பித்தல்…” போன்றவை நடைபெறும் என்று கூறினர். எந்த தேசம் வரைக்கிலும்? “உலகமெங்கும்.” எவ்வளவு—எவ்வளவு பேருக்கு? “சர்வ சிருஷ்டிக்கும்.” அந்தவிதமாக இங்கே “உலகத்தின் முடிவு பரியந்தமும்” அது பிரசங்கிக்கப்பட வேண்டும். சரி. இந்த சபைக்கு மட்டும்தானா இவ்வடையாளங்கள் பின் தொடரும்? “உலகெங்கும் விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் பின் தொடரும். முழு உலகத்திற்கும், சர்வ சிருஷ்டிக்குமே இவ்வடையாளங்கள் பின் தொடரும்,” இது மட்டுமல்ல, விசுவாசிக்கிறவர்களையெல்லாம் , எனவே அதுவே ஒரு பெந்தெகோஸ்தே சபையாக உள்ளது. புரிகிறதா?

2047 இப்பொழுது நாம் இன்றிரவில், இந்த பிலதெல்பியா சபையின் காலத்தைப் பற்றி படிக்க எடுத்துக் கொண்டுள்ளோம், பி—லெ— , பிலதெல்பியா சபைக் காலம். அந்த சபைக் காலத்தில் மிஷனரிமார்களைக் கொண்டு சுவிசேஷம் பிரசங்கித்தலும், முழு உலகத்திற்கும் பத்திரிக்கைகள், கைப்பிரதிகள் வாயிலாக சுவிசேஷம் பரம்பியது. 48 இயேசு, “இந்த சுவிசேஷமானது— சுவிஷேமானது எனக்கு சாட்சியாக உலகமெங்கும் பிரசங்கிக்கப்படும்—பிரசங்கிக்கப்படும், அப்பொழுது முடிவு வரும்” என்று கூறினார். அவர் பத்திரிக்கைகளை எங்கும் விநியோகம் செய்தலும், நன்கு படிக்கவும், எழுதவும், கணக்குப் போடவும் உள்ள உயர்கல்வியுள்ள மிஷனரிகளை அனுப்பவும், துண்டுப் பிரதிகளை விநியோகித்தலும், ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கிக்கொண்டு தேவன் ஒருவர் உண்டு என்று விசுவாசித்தலும் ஆகிய இவைகளைப் பற்றிதான் உரைத்திருக்கிறார் என்றால், அதுதான் எல்லாம் என்றால், அப்பொழுது இயேசுவானவர் திரும்பிவரும் நேரம் அதிகம் தாமதித்துவிட்டது என்றாகிவிடுமே. உ—ஊ. எனவே இது எதைக் காண்பிக்கிறதென்றால்…, சுவிசேஷம்…அதாவது பவுல், “சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்துதலோடும் வந்தது” என்று கூறினான். 49 இயேசுவானவர், “உலகம் முழுவதிலும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று கட்டளையிட்டதோடு, “உலகம் முழுவதிலும் போய் சுவிசேஷத்தின் வல்லமையை யாவருக்கும் பிரத்தியட்சப்படுத்துங்கள்” என்றும் கூறியிருக்கிறார். ஓ! நான் அதை விரும்புகிறேன். “சுவிசேஷத்தின் வல்லமையை பிரதியட்சப்படுத்துதல்.” வார்த்தையை எடுத்து, அது என்ன கூறுகிறதோ, அதன்படி வல்லமையான கிரியைகளை செய்து காட்டி அவர்களுக்கு சுவிசேஷத்தை வெளிப்படுத்திக் காட்டவேண்டும். ஓ, அது அந்தவிதமாகத்தான் செய்யப்பட வேண்டும். அதுவே வார்த்தையை நிருபிக்கிறதாக இருக்கிறது.

2150 ஓ, உலகிலேயே பெரிய மிஷனரி ஸ்தாபனமாக சூடான் மிஷன்களின் தலைவர் மோரிஸ் ரீட்ஹெட் என்பவர் அன்றொரு நாளில் எனது அறையில் நின்று கொண்டு, “சகோ.பிரான்ஹாம் அவர்களே. நீங்கள் ஒரு பாப்டிஸ்டாக இருக்கிறபடியினால் சத்தியமானது என்னவென்று உங்களுக்குத் தெரிந்தேயிருக்க வேண்டும்” என்று கூறினார். அப்பொழுது நான், “வேதாகமமே சத்தியமாயிருக்கிறது” என்று கூறினேன். அதற்கு அவர், “நல்லது…” என்று கூறி, அப்படியானால், “இந்த பெந்தேகோஸ்தேக்கள் பெற்றுள்ளது என்ன?” என்று கேட்டார். அப்பொழுது நான், “பரிசுத்த ஆவி” என்று பதிலளித்தேன். பாருங்கள்? எனவே அவர், “ஓ, அவர்கள் தட்டுமுட்டு சாமான்களை உதைத்து எறிவதை நான் கண்டிருக்கிறேன்” என்று கூறினார். 51 நான் அதற்கு, “ஆம்! நீங்களெல்லாம் அந்த ஒரு விஷயத்தில் தான் அவர்களைவிட்டு பின்தங்கிப்போய், உங்களை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளீர்கள்” என்றும் கூறினேன். அவர்கள் ஏராளமான நிராவி சக்தியைப் பெற்றிருக்கிறார்கள். அதைக் கொண்டு அவர்கள் வண்டியின் சக்கரங்களைச் சுழலச் செய்வதற்கு பதிலாக, வெறுமனே விசிலை ஊதியே அதைப் போக்கடித்து விடுகிறார்கள். நீங்கள் பாருங்கள். மேலும் நான், “அவர்கள் அதை இங்கே சரியாகப் பயன்படுத்தினால், அவர்கள் அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் பெற்றிருப்பார்கள், ஆனால் அவர்களுக்கு அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதை கொண்டு ஏதாவதொன்றை செய்தாக வேண்டும், எனவே அவர்கள் கூக்குரலிட்டே முடித்துவிடுகிறார்கள். அவர்கள் அதை ஊதி அணைத்து விடுகிறார்கள்” என்றேன். 52 உம்ம்ம், நான் நீராவியற்று ஊதாமல் இருப்பதைவிட நீராவியைப் பெற்று அதை ஊதிக் கொண்டேயிருப்பதையே விரும்புவேன். நீங்கள் அவ்வாறு செய்ய விரும்பமாட்டீர்களா? அந்த வயோதிக நபர் வழக்கமாக கூறுவதைப் போல், “அக்கினியே இல்லாமலிருப்பதைவிட ஒரு சிறிது அளவு காட்டுத் தீயையாவது நான் உடையவனாக இருப்பதையே விரும்புவேன்” என்பேன்.

2253 இன்று அதைக் குறித்த தொல்லை என்னவெனில் “முன் காலத்தில் பெந்தெகொஸ்தே நாள் அன்று, இவ்வாறு அவர்கள் செய்தார்கள்” என்று கூறி அதை விளக்க அவ்வக்கினியைப் பற்றிய ஒரு சித்திரத்தையே வரைந்து வண்ணந்தீட்ட நாம் முயலுகிறோம். இப்பொழுது, குளிர்ந்து உறைந்துபோன நிலையில் உள்ள, (மரிப்பதற்கேதுவாக உறைந்துபோன நிலையிலுள்ள ஒரு மனிதனுக்கு) இவ்வாறு அக்கினியைப் பற்றி வரையப்பட்ட சித்திரத்தைக் காண்பித்தால், அது என்ன நன்மை அவனுக்கு செய்துவிடப்போகிறது? அது அவனுக்கு ஒரு சிறிதளவு கூட உதவிடப் போகிறதில்லை. இல்லை, நீங்கள் பெற்றிருக்க வேண்டும்…அவன் தன்னில்தானே அவ்வக்கினியை பெற்றிருக்க வேண்டும். பெந்தேகோஸ்தேக்களை கர்த்தருக்காக கிரியை செய்ய வைக்க, அவர்கள் செய்த அடையாளங்கள் ஆகியவற்றை செய்ய வைக்கும்படியாக தேவனுடைய வல்லமையானது ஒன்று இருக்குமானால், அப்பொழுது அவ்வனுபவத்திற்காக அக்கினியைப் பற்றிய ஒரு படம் வரைந்து காண்பிப்பதை நிறுத்தி விட்டு, அச்சித்திரத்தில் உள்ள அக்கினியை நிஜமாக அவர்களுக்கும் கிடைக்கச் செய்தால் அவர்கள் பெற்றிருப்பது போன்ற அதே அனுபவத்தையும், அதே இரட்சிப்பையும், இவர்களும் பெற்று, தங்கள் சாட்சியை அவர்கள் முத்திரையிட்டது போலவே, இவர்களும் செய்திட முடியும். பாருங்கள்? ஆனால் அவர்கள் அதைப் பெற்றிட நீங்கள் வழி செய்ய வேண்டும். ஏதோ மற்ற சந்ததிக்கு உரியதாக அதை நீங்கள் ஆக்கிவிடாமல், இக்காலத்துக்கும் உரியதாகவே அது இருப்பதால் இங்கும் அதைப் பெற்றிட கொண்டு வரவேண்டும்.

2354 இப்பொழுது நாம், இந்த சகோதர சிநேகத்தின் காலமாகிய இது, ஒரு மகத்தான மிஷனரி ஊழியத்தின் காலமாக இருக்கிறது என்று கண்டோம், இயேசு, “உலகம் முழுவதிலும் சர்வ சிருஷ்டிக்கும் பிரசங்கியுங்கள் மற்றும் இவ்வடையாளங்கள் பின் தொடரும்” என்று கூறினார். 55 நாம் வரலாற்றையும் வேதாகமத்தையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகையில் நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு இரவிலும்… என்ன சம்பவிக்கும் என்பதைப்பற்றி யோவானுக்கு இயேசுவானவர் கூறியதை நாம் வேதாகமத்தில் வாசித்தோம், இதே இடத்தில் நாம் வரலாற்றையும் எடுத்துக் கொண்டு, வேதத்தில் கூறியுள்ளபடியே அது நிறைவேறினது என்பதையும் நிருபித்தோம், சரியாக அவ்வாறே நடந்துள்ளது. எனவேதான் நான் வேதத்தில் கூறியுள்ள இச்செய்தியை சுமந்து செல்லும் அத்தேவ ஊழியக்காரனான அந்த மனிதன் காலங்கள்தோறும் எங்கே இருக்கிறான் என்பதை வரலாற்றில் ஊன்றிக் கருத்தாய் ஆராய்ந்து பார்த்துக் கொண்டு இருந்தேன், அவன் அங்கே இருந்தான். வேதத்தில் கூறியுள்ளபடி ஆதியில் இருந்ததைப் போலவே, செய்தியை பற்றிக் கொண்டிருக்கிற அம்மனிதன் காலந்தோறும் இருக்கிறதை நான் கண்டேன். ஒருபோதும் ஏமாற்றமடையச் செய்யாமல் அது சரியாக இருந்து வந்துள்ளது. 56 அதன்பின்னர் அது கிட்டத்தட்ட ஒழிந்து போயிற்று என்ற நிலையினை நாம் கண்டபோது, அவர் அதேக் காலத்தை ஒரு “மரித்த காலம்,” இருண்டது என்பது என்றே அழைத்தார். அதன்பிறகு, சிறிது ஒளி வெளிவந்தது, அப்பொழுது சற்றுக் கூடுதலான பெலனும் வந்தது. அதன்பிறகு (உண்மையான அனுபவமாகிய) பெந்தெகோஸ்தேக்குள் இக்கடைசி காலத்தில் அது சென்றடைந்துவிட்டது. அதன் பிறக்கு மணவாட்டி எடுத்துக் கொள்ளப்பட்டாள், அவள் போய் விட்டாள், மகா உபத்திரவக் காலமானது, மீண்டும் ஏற்பட்டது, அது முழு உலகிற்கும் ஏற்படப்போகிறது.

2457 மகத்தான மிஷனரி ஊழியங்களின் காலமாகவும் சகோதர சிநேகத்தின் காலமாகவும் இக்காலம் திகழ்கிறது, அக்காலத்தில் வாழ்ந்த சில மகத்தான தேவ மனிதர்களின் பெயர்களை நான் உங்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன். (அவர்களது பெயர்களை தான் இங்கு எழுதி வைத்துள்ளேன்): ஜான் வெஸ்லி, ஜார்ஜ் வொயிட்…வொயிட் பீல்டு, இவர் கிட்டத்தட்ட 1739-ல் இருந்தார். சார்ல்ஸ் ஜி, ஃபின்னி; ட்வைட் மூடி, வில்லியம் கேரி, ஒரு மகத்தான மிஷனரியான இவரோ இந்தியாவுக்கு 1773-ல் சென்றார். டேவிட் லிவிங்ஸ்டன் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். பாருங்கள், மகத்தான மனிதர்களில் சிலர் இவர்கள், சகோதர சிநேகத்தின் காலத்தில் வாழ்ந்த இன்னும் அநேகரின் பெயர்களை இங்கே குறித்து வைத்துள்ளேன், கறுப்பு மனிதன், வெள்ளையன், பழுப்பு நிறத்தவன், மஞ்சள் நிறத்தவன் ஆகிய தடுப்புச் சுவர்களெல்லாம் தகர்ந்தெறியப்பட்டது. இம்மனிதர்கள் ஊழியக் களங்களுக்கு சென்றனர். சகோதர சிநேகமானது எங்குமுள்ள அனைத்து தேசங்களிலும் பரவியிருந்தது. அவர்கள் அவ்வாறு போக முடிந்தளவுக்கு எங்கும் வாசல் திறக்கப்பட்டிருந்தது. மற்றொரு திறந்த வாசலின் காலமாக இது திகழ்ந்தது, ஏனெனில் அவர்களால் இயலவில்லை…இக்காலத்திற்கு முன்னால் அவர்களால் அவ்வாறு மிஷனரி ஊழியங்களுக்கு பரவித் திரிந்து செல்ல இயலாதபடி, ரோமபுரியின் போப்பு மார்க்கமானது எங்கும் வாசலை அடைத்து வைத்திருந்தது, ஆனால் இந்த சபைக் காலத்தில் வாசலகள் திறக்கப்பட்டிருந்தன, ஏனெனில் இது, “திறந்த வாசலின் காலம்” என்று அவர் கூறியிருந்தார்.

2558 இந்தக் காலத்தில் அநேக வாசல்களை அவர்கள் திறந்தார்கள், சுவிசேஷத்திற்காக வாசலும், ஊழியக் களங்களுக்கான வாசலும், கிறிஸ்துவிடம் திரும்புவதற்காக வாசலும், மற்றும் அந்த காலத்தில் ஒவ்வொரு காரியத்திற்கும் வாசல் திறக்கப்பட்டிருந்தது. அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை உங்களால் காண் முடிகிறது. அக்காலத்தில் சகோதரர்கள் மகத்தான பணியை செய்தார்கள். 59 சர்தை சபையின் காலத்திற்குப் பிறகு வந்த வந்த நட்சத்திரமான வெஸ்லியின் காலத்திலிருந்து, அவர் வந்து சர்தை சபையின் காலத்திலிருந்தவர்களை உறக்கத்திலிருந்து எழுப்பியதற்குப் பிறகு (இதற்கு முன் வேறு எந்த வேளையிலும், காலத்திலும் இல்லாத அளவுக்கு) மகத்தான மிஷனரிமார்கள் கடந்த 150 ஆண்டுக்காலமாக பூமி முழுவதிலும் சுவிசேஷத்தைப் பரப்பச் செய்தார்கள். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு நேரமும் தேவனுடைய வார்த்தையை கேட்டிருக்கிறது, அநேக, அநேக ஆண்டுகளுக்கு முன்பாகவே பூமி முழுவதும் கூறி முடிக்கப்பட்டிருக்கிறது, பாருங்கள், ஆனால் சுவிசேஷத்தையல்ல, வெறும் வார்த்தையை மட்டும்தான் அறிவித்தார்கள், “எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.” புரிகிறதா?

2660 நான் தென் ஆப்பிரிக்காவில் பிரசங்க மேடையில் அன்றொரு நாள் நின்றிருந்த போது, முகமதியர்கள் அங்கே பல்லாயிரக் கணக்கில் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். அப்பொழுது நான் முகமதியர்களுக்கு பிரசங்கிக்கிற மிஷெனரியை சந்தித்தேன். இந்த முகமதிய மிஷெனரி, “ஓ, அந்த விலையேறப்பெற்ற ஆத்துமாவிற்காகத்தான்” என்று கூறினார். அந்த மிஷெனரி இங்கே அநேகமாண்டுகளாக இருந்து வருகிறார், இருப்பினும் அவர் ஒரேயொரு முகம்மதியரை மட்டுமே கிறிஸ்துவண்டை வழி நடத்தியிருக்கிறார். ஏனெனில் முகம்மதியர்கள் மேதிய பெரிசியரிலிருந்து தோன்றியவர்கள், அவர்களது பிரமாணமானது மாறுவதில்லை. அவர்களது சட்டங்கள் மாற்றப்படுவதோ திருத்தப்படுவதோ கிடையாது, அவர்கள் முகம்மதியர்கள் என்றால் எக்காலத்தும் முகம்மதியராகவே இருக்க வேண்டும். 61 எனவே, அவர்களுக்கு இருந்த இந்த சகோதரன் குறிப்பிட்ட அந்த ஒரே ஆத்துமாவனது, தென் ஆப்பிரிக்காவின் தலை நகரான பிரிடோரியாவின் மைதானத்தில் நின்று கொண்டிருந்தார். அது சுதந்தர மாகாணத்தில், சுதந்தர மாகாணத்தில் உள்ளது, அது ட்ரான்ஸ்வாலில் உள்ள ஆரஞ்ச் மகாணத்தில் உள்ளது. 62 எனவே அங்கிருந்து நாங்கள் கேப்டவுனுக்கும், ப்ளோம்ஃபோன்டைனுக்கும் போய், அங்கிருந்து திரும்பி கிரஹாம்ஸ்வுடன், கிழக்கு லண்டன் வழியாக மறுபடியும் ஜோன்ஹன்ஸ் பெர்க் வந்து சேர்ந்து கரையோரத்தில் வந்தோம். கேப்டவுனிலிருந்து புறப்பட்ட பிறகு இங்குதான் வந்தோம்.

2763 சரி, கடைசியாக நாங்கள் சென்ற நகரம் ட்ர்பன் ஆகும், அங்கே முகம்மதிய மதத்தைச் சேர்ந்த ஒன்றரை இலட்சத்திலிருந்து இரண்டு இலட்சம் வரை எண்ணிக்கையுள்ள பழங்குடியினரைக் கூட்டிச் சேர்ந்திருந்தோம், அவர்கள் அங்கே அமர்ந்திருந்தார்கள். முகமதியர்கள், பழங்குடியினர்கள்…அக்கூட்டங்களுக்காக நாங்கள் வாரக்கணக்கில் அங்குள்ள குதிரைப் பந்தய மைதானத்தை எடுக்கவேண்டியதாயிருந்தது. உலகத்திலேயே அது இரண்டாவது பெரிய பந்தய மைதானமாகும், சர்ச்சில் டெளன்ஸ் என்ற இடத்தில் உள்ளதைவிட பெரியது அது, லண்டனில்தான் மிகப் பெரிய மைதானம் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் மற்றும் சர்ச்சில் டெளன்ஸ் என்ற இந்த இடத்திலும் உள்ளது. அப்பொழுது அங்கே அவர்கள் வேலி போட்டிருந்தார்கள், ஏனெனில் அப்பழங்குடியினருக்குள் சண்டை நடந்து கொண்டிருந்தது. காவல்துறையினர் (இரு நூறு அல்லது முன்னூறு காவலர்கள்) ஒவ்வொரு பழங்குடிப் பிரிவினரையும் தனித்தனியே ஒதுக்கி வைத்து, அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதவாறு, அவ்வேலிகளுக்குள் அனுப்பவிட்டார்கள், ஏனென்றால் அவர்கள் ஈட்டிகள் மற்றும் கூரான சிறு கூர்மையான ஆயுதங்களை கொண்டுவந்திருந்தனர். அம்மைதானத்தில் அமர்ந்திருந்து, அவ்வேலிகளின் வழியாக ஒரு வகுப்பினர் மற்ற வகுப்பினரை உற்று நோக்கிக் கொண்டு, இவ்வாறு அப்பழங்குடிகள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட எதிர் நோக்கியிருந்தனர். அவர்களுடைய தலைவர்கள் தங்கள் ராணியோடு, சிலர் விசிறியால் அவர்களுக்கு விசிறச் செய்து அமர்ந்திருந்தனர். இருபத்தேழு இரயில் பெட்டிகளைக் கொண்ட இரயில் வண்டி நிறைய ஆட்களோடு ரொடீஷியாவிலிருந்து, ரொடீஷியாவின் இராணியும் அக்கூட்டங்களில் கலந்துகொள்ள வந்திருந்தாள். ஒரு—ஒரு விசேஷ இரயில் வண்டியே வந்திருந்தது.

2864 கர்த்தர் அக்கூட்டங்களில் மகத்தான காரியங்களை, மகத்தான அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து கொண்டிருந்தார். நாங்கள் என்ன கண்டோம்? டர்பன் நகரத்தின் நகரத் தலைவரான சிட்னி ஸ்மித் என்பவர் அங்கு போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அப்பொழுது நான், “அந்த நபர் யார்…அந்தச் சிறு அடையாள அட்டையை தன் கழுத்தில் அணிந்திருக்கிறானே?” என்று கேட்டேன். அட்டையை அணிந்திருந்தவன் ஒரு கருப்பு மனிதன். நாம் அவர்க்ளை நிக்ரோ இனத்தவர் என்று இங்கே அழைக்கிறோம். அவர்களுக்குத்தான் நான் அங்கே பிரசங்கிப்பதாக இருந்தேன். அவர்களில் அநேகர், ஆண்கள் பெண்கள் இருவருமே உடையுடுத்தியிருக்கவேயில்லை. அப்பொழுது அம்மனிதன் தன் கையில் ஒரு விக்கிரகத்தை உடையவனாயிருந்தான். அவனது கழுத்தில் ஒரு அட்டை தொங்கிக் கொண்டிருந்தது, அப்பொழுது நான், “அவர்களின் கழுத்தில் காணப்படும் அவ்வட்டைகள் எதைக் குறிக்கிறது?” என்று கேட்டேன். “அவர்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறினார். அப்பொழுது நான், “கிறிஸ்தவரா? அப்படியானால் கையில் ஒரு விக்கிரகத்தை வைத்திருக்கிறார்களே?” என்று கேட்டேன். 65 அதற்கு அவர், “இப்பொழுது, சகோ.பிரான்ஹாம் அவர்களே, அம்மனிதன் ஹோங்காய் பாஷை பேசுபவன், என்னால் அவனுடைய பாஷையைப் பேசமுடியும்” என்றார். மேலும், “நாம் அவனிடம் அங்கே காரோட்டிச் சென்று, அவனிடம் நீங்கள் பேசுங்கள். நீங்கள் விரும்புகிற எந்தப் பெயரை வேண்டுமானாலும் அவனுக்கு வைத்துக் கூப்பிடுங்கள். நீங்கள் எந்த கேள்விகளை அவனிடத்தில் கேட்கப்போவதாயிருந்தாலும் அவனிடத்தில் கேளுங்கள், நான் அதை அவனிடம் எடுத்துச் சொல்லி, அவன் என்ன பதிலளிக்கிறானோ அதை உங்களுக்கு திரும்ப எடுத்துரைப்பேன்” என்றார்.

2966 ஆகவே நான், “தாமஸ், நீ எப்படியிருக்கிறாய்?” என்று கேட்டேன். நான் அவனை தாமஸ் என்று அழைத்தேன், ஏனெனில் அதுவே அவனுக்கு நல்ல பொருத்தமான பெயராக இருக்கும் என்று நான் எண்ணினேன். எனவே நான் கூறினேன்—நான், “நீ எப்படியிருக்கிறாய் தாமஸ்?” என்று கேட்டேன். அவன் என்னை உற்று நோக்கினான். அப்பொழுது நான், “நீ ஒரு கிறிஸ்தவனா?” என்று கேட்டேன். “ஆம்,” அவன்—அவன் ஒரு கிறிஸ்தவனாயிருந்தான். 67 நான் கூறினேன்…ஓ, உண்மையாகவே அவனுக்கு என்னை தெரியாது. அவன் ஒருபோதும்…அவர்களில் எவருமே அதுவரையிலும் எங்களைப் பார்த்ததேயில்லை. எனவே நான், “நீ இந்த விக்கிரகத்தோடு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன். அதற்கு அவனோ, “ஓ, தன்னுடைய தந்தை அதை சுமந்துகொண்டிருந்தாகக் கூறினான்” பாருங்கள், அவனுக்கு அது—அது கடவுளாயிருந்தது. புரிகிறதா? 68 அப்பொழுது நான், “உன் தந்தை அதை சுமந்து திரிந்தார் என்ற காரணத்தால் நீ அதை சுமக்க வேண்டும் என்பதில்லையே. நீ கிறிஸ்தவன் என்றால், நீ அதை சுமக்கக்கூடாது” என்றேன். 69 அதற்கு அவன், “ஒரு நாள் சிங்கமானது அவனுடைய தந்தையை துரத்தியபொழுது, அவன் ஒரு சிறு தீயை மூட்டி, மந்திரவாதி தனக்குச் சொல்லிக் கொடுத்த ஒரு மந்திரத்தை இவ்விக்கிரகத்தின் பேரில் கூறியதாகவும், அப்பொழுது அவ்விக்கிரகம் அச்சிங்கத்தை துரத்திவிட்டது” என்றுமே கூறினான். அங்கெல்லாம் மிருகங்கள் அநேகரை கொன்று விடுவதுண்டு,

3070 அப்பொழுது நான், “பார், அந்த மந்திரவாதி சொல்லிக் கொடுத்த மந்திரம் ஒன்றும் அச்சிங்கத்தை துரத்திவிடவில்லை, அந்நெருப்புத்தான் அதைத் துரத்திவிடக் காரணமாய் அமைந்திருந்தது, சிங்கமானது நெருப்பைக் கண்டு பயப்படக் கூடியது” என்று கூறினேன். மேலும் நான், “தாமஸ், ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில், நீ விக்கிரகத்தை சுமக்கக்கூடாது, அதற்கும் உனக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது” என்று கூறினேன். 71 அதற்கு அவன், “ஓ, நல்லது” என்று கூறி, அவன், “அமோயா…” என்றான். அது காணக் கூடாத சக்தி, நாம் காணாத நம்முடைய தேவன் என்பதாம். அமோயா என்பது “காற்றைப் போன்ற ஒரு சக்தி” என்றே பொருள்படுகிறதாம். எனவே அவன் “அமோயா காப்பாற்றத் தவறினாலும், இந்த விக்கிரம் தவறாது” என்றான். எனவே அவன் இரண்டையும் நம்புகிறேன், ஏனெனில், “ஓன்று கைவிட்டால் இன்றொன்றாவது கைகொடுக்குமே” என்ற எண்ணத்தில் தான். இப்பொழுது, அங்குள்ள கிறிஸ்தவத்தின் பெலன் இதுவாகத்தான் இருக்கிறது, உ—ஊ, ஆம், ஓ, என்னே!

3172 ஆனால் அன்று மத்தியானத்தில், அந்த குதிரைப் பந்தய மைதானத்தில் நடந்த கூட்டத்தில் நான் வேதவாக்கியத்தை எடுத்துக் கொண்டு பேசின பிறகு, பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்த ஆரம்பித்த போது… 73 ஏறக்குறைய ஒரு மணி நேரம், அதாவது எனது பிரசங்கத்திற்கு உண்மையிலேயே பதினைந்து நிமிடங்கள் தான் பிடித்தது, ஏனென்றால் அவர்கள் பதினைந்து வெவ்வேறு மொழி பெயர்ப்பாளார்களை வைத்து அந்தந்த மொழியில் மொழிபெயர்த்து சொல்ல வேண்டியிருந்தது. எனவே நான், “இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று சொல்லுகிறனென்றால், இந்த ஒருவர் கூறுவார், ஆ, பா, பா, பா, பா” என்றும், இன்னொரு மொழி பெயர்ப்பாளர் “குளூ, குளூ, குளூ, குளூ” என்பார்: அதற்கடுத்த மொழிபெயர்ப்பாளர், “உம், உம், உம்” என்பது போல ஏதோ சொல்லுவார். ஆக மொத்தத்தில் இம்மொழி பெயர்ப்பாளார்கள் பல்வேறு விதமான பாஷைகளில் கூறியதெல்லாம், “இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்” என்று நான் கூறியதைத்தான், அவர்கள் இத்தனை மொழிகளில் மொழிபெயர்த்து சொல்லி முடித்த பிறகு, நான் மீண்டும் பிரசங்க வாக்கியத்தை தொடர வேண்டிய என்னுடைய முறை வருகையில், நான் என்ன சொன்னேன் என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். மொழி பெயர்பாளர் என்ன சொல்கிறார் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் முடிக்கிற வரையிலும் காத்திருக்க வேண்டும்.

3274 பிறகு, நான் பிரசங்கத்தை தொடரும் பொழுது, “உங்களை இரட்சிக்க வருகிற இயேசு என்ற ஒருவரைப்பற்றி உங்களுக்கு மிஷெனரி கூறியிருக்கிறார்” என்று கூறினேன். மிஷெனரி என்று கூறியபோது, உங்களுக்குத் தெரியுமா? பல்வேறுபட்ட பழங்குடிகளான அவர்கள் ஒருவரையொருவர் மேலுங்கீழுமாக இந்தவிதமாய் பார்த்துக் கொண்டார்கள். நான், “மிஷெனரி உங்களுக்கு அதைக் கூறினார். ஆனால் அந்த மிஷெனர் கூறினதை…இந்த புத்தகத்தில் வாசிக்கும் போது, அங்கே அவர் மகத்தான சுகமளிக்கிறவராக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர் தன் ஜனங்களுக்குள், தான் திரும்பி வருகிற வரையிலும் காலங்கள் தோறும் ஜீவித்திருப்பார் என்று கூறியுள்ளாரே, அதை அறிந்து கொண்டிருக்கிறீர்களா? ‘நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்’ என்று கூறினாரே. கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக அந்த அட்டைகளை கழுத்தில் தொங்க வீட்டுக் கொண்டிருக்கிறவர்களே, இயேசு இன்று இங்கே திரும்பிவந்து, மக்கள் மத்தியில் உலாவி, அவர் பூமியில் இருந்தபோது செய்த அதே காரியத்தைச் செய்வதைக் காண விரும்புகிறீர்களா?” என்று கேட்டேன். 75 ஓ, அவர்கள் எல்லோருமே, “நிச்சயமாகவே காண் விரும்புகிறோம்” என்றனர். அவர்கள் அதைக் காண விரும்பினர், நீங்கள் பாருங்கள். அவர்கள் அதை விரும்பினர். 76 அப்பொழுது நான், “அவர் பூமியிலிருந்தபொழுது செய்த அதே காரியத்தை, இங்கேயிருக்கிற எங்களை உபயோகித்து நாங்கள் அதைச் செய்யும்படி அவர் கிரியை செய்வாரானால், அப்பொழுது நீங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசிப்பீர்களா?” என்று கேட்டேன். “ஓ நிச்சயமாக!” என்றனர். அங்கே அமர்ந்திருந்த முகம்மதியர்கள் அதைச் சொன்னார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

3377 முதலாவது…இரண்டாவதாக மேடையின் மேல் வந்தது ஒரு முகமதிய பெண்மணியாவார். பரிசுத்த ஆவியானவர் பேசிகொண்டிருக்க, நான் அப்பெண்மணியிடம், “இப்பொழுது எனக்கு உன்னைத் தெரியாது என்று நீ அறிவாய், உன்னுடைய பாஷையைக் கூட என்னால் பேச இயலாது” என்று கூறினேன், அதை அவள் ஒத்துக் கொண்டாள். 78 அவளது கண்களுக்கு இடையில் ஒரு சிவப்பு நிற பொட்டு இருந்தது, உயர்குடியில் பிறந்த முகம்மதியர் என்பதை அப்பொட்டு பொருட்படுத்துகிறதாம். எனவே நான், “இப்பொழுது உனக்கான சுகமளித்தலை, நான் உன்னை குணப்படுத்த முடியாது” என்றேன். ஆனால் நான், “இன்று மத்தியானத்தில் நான் பிரசங்கித்த செய்தியை நீ புரிந்து கொண்டாயா?” என்று கேட்டேன். 79 அப்பொழுது அவள் அந்த முகம்மதிய மொழி பெயர்ப்பாளிரிடம் அவள் ஒரு இந்தியப் பெண் என்றும், அவள் என்னவாயிருந்தாள் என்றும் பதில் கூறினாள். மேலும், அவள், “ஆம், அவள், அதை புரிந்து கொண்டாள். அவள் புதிய ஏற்பாட்டை வாசித்திருக்கிறேன்” என்றும் கூறினாள். ஓ, ஆம். உ—ஊ. 80 அவர்கள் தேவனில் விசுவாசம் கொள்ளவும்கூட செய்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள், அவர்களும் ஆபிரகாமின் சந்ததியாகக்கூட இருக்கிறார்கள். புரிகிறதா? ஆனால், “அவள் தேவனில் விசுவாசங்கொண்டிருக்கிறாள். ஆனால் முகம்மது தேவனுடைய தீர்க்கதரிசி என்று அவள் விசுவாசிக்கிறாள்” என்று அவள் கூறியதைப்பற்றி எனக்கு எடுத்துரைக்கப்பட்டது, நாமோ இயேசுவே அவருடைய குமாரன் என்று விசுவாசிக்கிறோம், புரிகிறதா? எனவே அவள் கூறினாள், ஓ, அவள்—அவள், “தேவனை விசுவாசித்திருந்ததாகவே” கூறினாள்.

3481 அப்பொழுது நான், “நீ பழைய ஏற்பாட்டை அறிந்திருப்பாயானால், ஆதிகாலத்தில் தேவன் மனிதனில் எவ்விதமாக இருந்தார் என்பதும் உனக்கு தெரிந்திருக்கிறதென்றால், நாங்கள், கிறிஸ்து, என்றழைக்கும் இயேசுவானவர், அப்பொழுது, தேவன் தீர்க்கதரிசியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வாய். அவர்…அவர்கள் அவரை கொலை செய்தார்கள், அவர்கள் கொல்லவில்லை என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். ஏனெனில், அவர் ஒரு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறிப்போய்விட்டார் என்று கூறுகிறீர்கள், அவ்விதமாகத்தான் உங்களது மதகுருவினால் நீங்கள் போதிக்கப்பட்டிருக்கிறீர்கள், ‘அவர் ஒருபோதும் கொல்லப்படவில்லை, சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எங்கோ இயற்கையான மரணத்தில் மரித்துவிட்டார்’” என்றே போதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றேன். 82 நான், “நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். ஆனால் இந்த இயேசுவானவர்,…புதிய ஏற்பாட்டின்படி மரித்து உயிர்த்து எழும்பி, தனது சபையின் மேல் மீண்டும் தனது ஆவியையே அனுப்பினார்” என்று கூறினேன். இப்பொழுது இங்கேதான் நீங்கள் அவர்களை மடக்குகிறீர்கள், பாருங்கள் அதே விஷயத்தில் தான் அந்த முகம்மதியன் பில்லி கிரஹாமுக்கு சவால் விடுத்தான், பாருங்கள். அதே விஷயம், அதே கொள்கை. 83 மேலும் நான், “இப்பொழுது…முகமது உங்களுக்கெல்லாம் எந்த வாக்குத்தத்தையும் ஒருபோதும் கொடுக்கவேயில்லை. ஆனால் இயேசு எங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார், அதாவது அவர் செய்த அதே கிரியைகளை நாங்களும் செய்வோம் என்பதேயாகும். இப்பொழுது, அவர் பரிசுத்த யோவான் 5:19-இல், ‘பிதாவானவர் எனக்கு காண்பிக்கிற வரையிலும் நான் எதையும் செய்வதில்லை’ என்று கூறினார்” என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும். நான் தொடர்ந்து, “இப்பொழுது, இயேசுவானவர் வந்து, உன்னுடைய தொல்லை என்ன என்றும், அல்லது நீ இங்கே எதற்காக இருக்கிறாய் என்பதையும் எனக்குக் காண்பித்து, உன்னுடைய விளைவு என்னவாயிருந்தது என்றும், உன்னுடைய கடந்த காலம் என்னவாயிருந்தது என்பதையும், உன்னுடைய எதிர்காலம் என்னவாயிருக்கும் என்று கூறச் சொன்னால், அவர் உன்னுடைய எதிர்காலம் என்னவாயிருக்கும் என்பதை கூற முடிந்தால்…உங்களுடைய கடந்த காலத்தையும் கூறக் கூடுமென்றால், அப்பொழுது நிச்சியமாக நீ எதிர்காலம் என்னவாயிருக்கும் என்று அவர் கூறுவதையும் உன்னால் விசுவாசிக்க முடியும்” என்று கூறினேன். அவளோ “அது உண்மைதான்” என்று கூறினாள். பாருங்கள், மொழிபெயர்ப்பாளர் மூலம் கூறினாள். அப்பொழுது நான், “சரி, அவர் அதைச் செய்யலாம்” என்றேன்.

3584 உங்களுக்குத் தெரியுமா? அப்பொழுது அந்த முகம்மதியர்கள் அனைவரும் எழுந்து நின்று, கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், “உன்னுடைய கணவன் குட்டையான, கருத்த மீசையையுடைய பருமனான சரீரமுள்ள மனிதன், மூன்று நாட்களுக்கு முன்னர் நீ ஒரு மருத்துவரிடம் போயிருந்தாய், உனக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு, அந்த மருத்துவர் பெண்களுக்குரிய சோதனையை உன்னில் செய்தார், அப்பொழுது அவர், ‘உன்னுடைய கருப்பையில் ஒரு கட்டி இருக்கிறது’ என்று அவர் கூறினார்” என்று கூறினேன். அவள் கீழ் நோக்கிப் பார்த்து, தன்னுடைய தலையை வணங்கி, “அது உண்மை” என்று கூறினாள். 85 மேலும் நான், “இப்பொழுது, நீ புதிய ஏற்பாட்டை வாசித்திருப்பாயானால், கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயிடம் இயேசு கிறிஸ்து கூறியது போன்றே இது உள்ளதல்லவா?” என்று கேட்டேன். அவளோ, “அது உண்மையே” என்றாள். 86 மேலும் நான், “நீ ஏன் ஒரு கிறிஸ்தவனைப் போல என்னிடம் வந்திருக்கிறாய்? நீ ஏன் உன்னுடைய முகம்மதிய தீர்க்கதரிசியிடம் போயிருக்கக் கூடாது?” என்று கேட்டேன், அதற்கு அவளோ, “நீர் எனக்கு உதவி செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினாள். 87 அப்பொழுது நான், “ஏன்னால் உனக்கு உதவி செய்ய முடியாது. ஆனால் இப்பொழுது இங்கிருக்கிற, உன்னுடைய ஜீவியத்தை அறிந்திருக்கிற, உன்னைக் குறித்த யாவற்றையும் அறிந்திருக்கிற இந்த இயேசுவை நீ ஏற்றுக்கொள்வாயானால், அவர் உனக்கு உதவி செய்வார்” என்றேன். அப்பொழுது அவள், “நான் இயேசுவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினாள். 88 அதுதான் கிரியை செய்தது, அதுதான் காரியம், அன்று மத்தியானத்தில் பத்தாயிரம் முகமதியர்கள் கிறிஸ்துவண்டை வந்தனர். பார்த்தீர்களா? ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் அந்த மிஷெனரி ஊழியக்களத்தில் கைப்பிரதிகள் மூலம் ஒரெயொரு மனிதனைத் தான் கிறிஸ்துவண்டை கொண்டுவர முடிந்திருக்கிறது, ஆனால் ஐந்தே நிமிடத்தில் சுவிசேஷமானது வெளிப்படுத்தப்பட்டபோது பத்தாயிரம் பேர் வந்துவிட்டனர்.

3689 தேவன் நம்மிடத்தில் ஒருபோதும் சபைகளைக் கட்டும்படிக் கூறவேயில்லை. வேதாகம பள்ளிகளை ஏற்படுத்தவும் நம்மிடம் ஒருபோதும் கூறவேயில்லை. அவைகளெல்லாம் நல்லதுதான். மருத்துவமனைகள் மற்றும் ஏனைய காரியங்கள் நமக்கு தேவைதான் என்பதை தேவன் அறிவார். அது அவருடைய திட்டமே, ஆனால் சபைக்கு தேவன் கொடுத்த கட்டளையென்னவெனில், “சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்!” என்பதேயாகும். ஆனால் நாமோ இந்த அருமையான ஸ்தலமாகிய ஆஸ்பரியிலிருந்து வந்த கைப்பிரதிகள், பத்திரிக்கைகள் ஆகியவைகளே விநியோகிக்கிறோம், இங்கே கெண்டக்கியில் உள்ள வில்மோர் என்ற இடத்தில் உள்ள அந்த நல்ல மெதோடிஸ்ட் வேத கல்லூரியின் மக்களை தேவன் ஆசீர்வதிப்பாராக, இவ்வேளையில் உலகில் உள்ள மிகச் சிறந்த ஆவிக்குரிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று என்று நான் கருதுகிறேன். அவர்கள் அருமையான ஜனங்களாய் உள்ளனர்.

3790 நான் ரொடீஷியாவிலுள்ள ஒரு நகரத்திலிருந்து வந்து கொண்டிருந்தேன். அந்தப் பட்டிணத்தின் பெயரை மறந்து விட்டேன், எனக்குத் தெரியவில்லை, பில்லி உனக்கு அது ஞாபகமிருக்கிறதா? [பில்லி பால் “சாலிஸ்பரி” என்று கூறுகிறார்-ஆசி.] சாலிஸ்பரி, அது சரிதான், நீயூ சாலிஸ்பரி. (அவன் தான் எனது ஞாபகசத்தியாக இருக்கிறான்.) நியூ சாலிஸ்டரி, ரொடீஷயா, நாங்கள் ரொடிஷியாவிலிருந்து வந்தபோது, நான் ஒரு அமெரிக்க அரசாங்க பயண இசைவுச் சீட்டைக் கண்டேன், அவர்கள் ஒரு இளைஞனும், மூன்று பெண்பிள்ளைகளுமாய் இருந்தனர். நான் அவர்களிடம் சென்று “ஹெலோ. உங்களிடம் அமெரிக்க அரசாங்க பயண இசைவுச்சீட்டு இருக்கிறதைக் காண்கிறேனே” என்றேன். அப்பொழுது அந்த பையன், “நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?” என்று கேட்டான். அப்பொழுது நான், “ஆம், நான்—நான் ஒரு அமெரிக்கன்” என்று கூறினேன். அதற்கு அவன், “நல்லது. அது அருமையானது” என்று கூறினாள். மேலும் நான், “நீங்கள் சுற்றுலா போய்க் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவனோ, “இல்லை, நாங்கள் மிஷனரிகள்” என்று பதிலளித்தான். அப்பொழுது நான், “ஓ, எவ்வளவு அருமையாயுள்ளது!” என்றேன். தொடர்ந்து நான், “உங்களை சந்திப்பது நிச்சயமாகவே மகிழ்ச்சியாயிருக்கிறது என்றும், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும், எந்த சபை என்றும், நீங்கள் ஒரு ஸ்தாபனத்தோடிருக்கிறீர்களா அல்லது சுயதீனமாக இருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவன், “இல்லை, நாங்கள் மெதோடிஸ்ட்டுகள், நாங்கள் கென்டக்கியிலுள்ள வில்மோரிலிருந்து வந்திருக்கிறோம்” என்று கூறினான். அப்பொழுது நான், “அது என் வீட்டிற்கு கொல்லைப்புறத்தில் உள்ளதுபோல் மிக அருகாமையில் உள்ளதாயிற்றே” என்றேன். நான், நான் கூறினேன்… அதற்கு அவன், “நீங்கள் அந்த சகோதரன் பிரான்ஹாம் தானே?” என்று கேட்டான். 91 அப்பொழுது நான், “ஆம் ஐயா, அது சரியே” என்றேன். அது—அது அவனை அங்கேயே கலக்கியது. நீங்கள் பாருங்கள். அவன் அதற்குமேல் ஒன்றுமே பேசவில்லை. அந்த வேளையில் அவன் மேற்கொண்ட அவனது மனப்பான்மையை நான் பார்த்தேன். அவன் அப்பெண்களை முழித்துப் பார்த்தான். அவர்கள் இந்தவிதமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்பொழுது நான், “ஒரு நிமிடம், மகனே” என்றேன். அவன் ஒரு இளைஞனாகத்தான் இருந்தான். நான் கூறினேன்…அப்பெண்பிள்ளைகளும் அப்படித்தான், எனவே நான், “உங்கள் யாவரோடும் ஒரு நிமிடம் கிறிஸ்தவ நெறிமுறை கொள்களைப் பற்றி பேச விரும்புகிறேன். நாம் யாவரும் இங்கே ஒருவிதமான மகத்தான நோக்கத்திற்காகவே வந்திருக்கிறோம். அப்பொழுது நான், ‘நீங்கள் இங்கே கடந்த இரண்டு ஆண்டுக் காலமாக இருந்து வருவதாகக் கூறிகிறீர்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால், நீங்கள் இப்பிரதேசத்தில் கர்த்தருக்காக ஒரு ஆத்துமாவையாவது, ஆதாயப்படுத்தினோம் என்று விரலை மடக்கிக் கூறக்கூடுமோ?’ என்று வாலிபனே உன்னையும் மூன்று வாலிபப் பெண்களே, உங்களையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்று நான் கேட்டேன், அவர்களால் அதற்கு பதில் கூற முடியவில்லை, ஒரு ஆத்துமாவை கூட ஆதாயப் படுத்தவில்லை. 92 அப்பொழுது நான், “நான் உங்களுடைய உணர்வுகளை ஒருபோதும் புண்படுத்த விரும்பவில்லை” என்றேன். மேலும் நான், “நீங்கள் செய்து கொண்டிருக்கிற காரியத்தைப் பற்றி நான் பாராட்டுகிறேன், ஆனால் பெண் பிள்ளைகளாகிய நீங்களோ, உங்கள் வீடுகளில் இருந்து உணவு வகைகளை சமைக்க உங்கள் தாயாருக்கு உதவியாக இருக்க வேண்டும். அது தான் சரியானது. உங்களுக்கு இங்கே எந்த வேலையும் கிடையாது. அதுவே முற்றிலும் உண்மை” என்றேன்.

3893 பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு, வல்லமையான கிரியைகளை நடப்பித்ததோலோடு கூடிய பிரசங்கித்தலை நிகழ்த்தினாலொழிய மற்றபடி வேறு எவருக்குமே ஊழியக் களங்களுக்கு செல்லும் வேலையே கிடையாது. அந்த—அந்த ஒரு காரியம் மாத்திரமே அம்மக்களை அசைக்கக் கூடியதாயுள்ளது. உண்மையான சுவிசேஷமானது அப்பிரதேச மக்களுக்கு பிரசங்கிக்கப்படாததினால், அங்கெல்லாம் மக்களின் கலங்கங்கள், கிளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன, அவர்களுக்கு வெறும் வார்த்தை ரூபத்தில் மட்டுமே சுவிசேஷம் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவாயிருக்கிறது என்று பாருங்கள்? அதுதான் உலகுக்கு, சுயாதீனமாக வேதமும், சுயாதீனமான அச்சகமும் கிடைக்கச் செய்த லூத்தரின் காலமாகிய “தப்பித்துக் கொண்ட” காலத்தின் தொடர்ச்சியாக அது இருக்கிறது.

3994 இப்பொழுது, இப்பொழுது இந்த காலம், ஒரு மகத்தான காலமாகும். இப்பொழுது நாம் துவங்குவோம்,… நாம் 7-ம் வசனத்தில் உள்ளோம் என்று நான் நினைக்கிறேன், அது வாழ்த்துதலைக் கொண்டதாயிருக்கிறது. பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும், திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; 95 சரியானதொரு அறிக்கை இது! இது அவ்வாறில்லையா? இன்னும் ஒரு நிமிடத்தில் அவ்வசனத்திற்கு நான்—நான் திரும்பி வரப்போகிறேன், ஏனெனில் அது—அது வேதத்தில் இக்காலத்தையும் தாண்டியுள்ள காலத்திற்கு பொருந்துகிறதாயிருக்கிறது. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்: உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல் என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். 96 சகோதர சிநேகமும், மகத்தான மிஷனரி ஊழியத்தின் அசைவும் தேசங்களினூடாக அவர்கள் கொண்டிருந்த காரியம் சென்றடைந்தப் பிறகு வரும் வேளையை கவனியுங்கள். பத்திரிகைகள், துண்டுப் பிரதிகள் ஆகியவற்றை உலகின் பல பாகங்களில் விநியோகித்தலாகிய காரியத்தைப் பற்றி நான் ஒன்றும் விரோதமாகச் சொல்லவில்லை, இப்பொழுது ஸ்தாபன சபையானது கல்வியறிவு, கிரியைகள் ஆகியவற்றுக்கு திரும்பிப் போய்விட்டது, திரும்பிப்போய்விட்டது என்பதைப் பாருங்கள். 97 மகா ஸ்தாபனமானது ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பிறகு இயேசுவோ “திறந்த வாசலை” வைக்கிறார், வெஸ்லியின் காலம் வந்ததற்குப் பிறகு, பூமியில் மெதோடிஸ்ட் சபையானது ஸ்தாபிக்கப்பட்டது. அது வேர்கொண்டு வளர்ந்து, இன்றைக்கு இருக்கிறது போல மகாபெரிய சபையாக உருவாகியது. ப்ராடெஸ்டெண்ட் சபைகளுக்குள் உள்ள பெரிய சபைகளுள் ஒன்றாக அது திகழ்கிறது. அச்சபை உருவான அக்காலத்தில் தான், சபையானது லவோதிக்கேயா சபைக் காலத்தினுள் பிரவேசிக்கும் முன்னர், சபைக்கு இயேசு “திறந்த வாசலை,” வைத்தார்.

4098 ஒரு சபைக்காலம் அடுத்த சபைக்காலத்திற்குள் சற்று நீண்டு நீடித்தது என்பதைப்பற்றி நான் கூறிய காரியத்தை நீங்கள் புரிந்து கொள்வதற்காகத்தான் நான் இதை இவ்விதமாகக் கூறுகிறேன். பாருங்கள்? இது மிஷெனரி காலத்தின் வாசலாயிருந்தது முதற்கொண்டே இருந்து வருகிறது. ஆனால் நீங்கள் பாருங்கள், அவர் தாவீதின் திறவுகோலை உடையவராயிருந்தார் என்று அவர் அவர்களிடத்தில் கூறினார். ஆனால் இங்கே அவர் இப்பொழுது சபைக்கு முன்பாக அதை வைத்திருந்ததாக அவர் கூறினார். வொயிட்ஃபில்ட், ஃபின்னி, சாங்கி மற்றும் மூடி, (கடைசியாக இருந்து வந்த ஒருவரான மூடி) ஆகிய மிஷெனரிகள் தோன்றிய மிஷெனரி ஊழியக்காலத்திற்குப் பிறகு, இப்பொழுது வந்து, சபைக்கு முன்பாக அவர் திறந்த வாசலை வைக்கிறார். ஓ, இப்பொழுது, இங்குதான் நீங்கள் கவனிக்க வேண்டியதாயிருக்கிறது, அது பிலதெல்பியா சபையின் காலத்திற்கும், லவோதிக்கேயா சபையின் காலத்திற்கும் இடையில் உள்ளதாக இருக்கிறது.

4199 இயேசு வாசலாயிருக்கிறார்! இப்பொழுது நீங்கள் என்னோடு யோவான் 10:17க்கு திருப்புவீர்களேயானால், இப்பொழுது இதை ஆதாரப்படுத்தி நிச்சயப்படுத்துவோமாக. உங்களில் அநேகர் விசுவாசிப்பீர்கள். அதன் பின்னர் யாராவது, “நான்—நான் ஒருபோதும்…அவர் அதைக் கூறினார்” என்று கூறலாம். எனவே நான் அதை வாசிக்க விரும்புகிறேன். யோவான் எழுதின சுவிசேஷம் 10-ம் அதிகாரம் 17-ம் வசனம், யோவான் 10:17. சரி, நாம் இந்த வசனங்களை வாசிப்போம். நான் உங்களுடைய மன்னிப்பை வேண்டுகிறேன், அதாவது யோவான் 10:7,17 அல்ல. இயேசு…அவர்களே நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 100 அது ஆசீர்வாதத்திற்குள் திரும்பவும் போக வைக்கிறது. எவ்வாறு நாம் கிறிஸ்துவுக்குள் பிரவேசிக்கிறோம்? அவர் என்னவாயிருக்கிறார்? ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல். நான் அடிக்கடி, “இது என்ன? அவர் ஒரு மனிதனாயிருக்க, அது எப்படி அவர் வாசலாயிருக்க முடியும்?” என்று எனக்குள் வியந்ததுண்டு. ஒரு நாள் நான் கிழக்கத்திய தேசங்களில் ஒன்றில், மேய்ப்பனானவன் ஆட்டுத் தொழுவத்திற்குள் ஒரு வாசல் வழியாக ஆடுகளையெல்லாம் இரவு நேரத்தில் ஓட்டிவிட்டுவதைக் கண்டேன். அதன்பின்னர் அவன் அவையெல்லாம் அங்கே உள்ளே அனுப்பியப்பிறகு, அவைகள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கிறனவா என்று அவை யாவற்றையும் அவன் எண்ணிப் பார்க்கிறான். அதன் பின்னர் அவனே அத்தொழுவத்தின் வாசலுக்கு குறுக்கே படுத்துக் கொள்கிறான், அவனைத் தாண்டிப் போகாமல், யாதொன்றும் உள்ளே இருக்கும் ஆடுகளண்டையில் போகவோ, அல்லது ஆடு ஒன்று வெளியே ஓடி விடவோ முடியாது, எனவே, பாருங்கள், இயேசுவே ஆட்டுத்தொழுவத்திற்கு வாசலாயிருக்கிறார்.

42101 நாங்கள் ஒரு பிர்ட்டன் ஜீப் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம், அப்பொழுது என்னுடன் ஜீப் வாகனத்தில் வந்தவரிடம் நான், “அவர்கள்…இது என்ன விஷயம்? மேய்ப்பர்கள் நகருக்குள் வந்தவுடன் ஒரு ஊதல் ஊதப்படுகிறது, அப்பொழுது அனைத்து வாகனங்களும் ஓடாதபடி சடுதியாக நிறுத்தி விடுகிறார்களே” என்றேன். அப்பொழுது ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளோடு நகரின் பிரதான பகுதி வழியாக கடந்து சென்று கொண்டிருந்தான். 102 இங்கேயிருப்பதைப்போல் கிழக்கில் இருக்கவில்லை. அவர்கள் அங்கே வீட்டருகில் சந்தைகளில் நற்பலன்களாகிய விளைபொருட்களை கொண்டு வந்து குவிக்கிறார்கள், அங்கே ஆப்பிள் பழங்களும், பேரிக்காய்களும், இன்னும் பலப்பலவிதமான கனிகளும், திராட்சையும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன, அதற்குரிய அலமாரிகளில் அவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு விற்பனையாளர்களும் தங்களுடைய பழங்களையும் பொருட்களையும் உங்களை வாங்கச் செய்ய, அவர்கள் அங்கே நின்றுக்கொண்டு உங்களை தன் பக்கம் இழக்க முயற்சிக்கின்றனர்.

43103 இந்த மேய்ப்பனானவன் நகரின் பிரதான வீதியின் வழியாக இப்பொழுது அவன் வரத் துவங்கினான். அப்பொழுது நான், “சகோதரனே, இதோ இங்கே இந்த அமளியை உண்டாகப் போகிறதை, நான் நின்று கொண்டு அதை கவனிக்கப்போகிறேன்” என்று கூறினேன். 104 அப்போது என்னோடிருந்த சகோதரனோ, “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கவனியுங்கள்” என்றார். யாவுமே நின்று விட்டன. மேய்ப்பன் எதையுமே கவனிக்காமல் நெடுக நடந்து செல்ல, ஒவ்வொரு ஆடும் சரியாக அவனைப் பின் தொடர்ந்து சென்றது. அவனையே பின் தொடர்ந்து சென்றன. அவனுடைய ஒவ்வொரு அசைவையும், திரும்புதலையும் பொறுத்து அவைகளும் அவனைப் பின்பற்றி அவ்வாறே செய்தன. ஒவ்வொன்றும் அணி பிசகாமல் சரியாக யாவும் அவனை அப்படியே பின்பற்றின. 105 ஓ, அந்த விதமாகத்தான் நாமும் மேய்ப்பரைப் பின்பற்றுகிறோம், அது உண்மை. பிராதன வீதியின் நடுமையத்தில் அவ்வாடுகள் தங்கள் மேய்ப்பனை ஒரு நாயைப்போல் பின்பற்றிச் சென்று, மறுமுனையில் ஏதோ ஒன்றைப் பெறுவதற்காக சென்றன. வழியில் சந்தையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கனிவர்க்கங்களையெல்லாம் அவை ஏறெடுத்துப் பார்க்கின்றன. ஆனாலும் தங்கள் மேய்ப்பனையே அவை பின்பற்றிச் சென்றன. ஓ அது எனக்கு பிடிக்கும்! நீங்கள் பாருங்கள். அப்பொழுது நான், “ஓ சகோதரனே, எனக்கு இந்த பாஷையை பேச முடிந்தால் நலமாயிருக்கும். அப்படி முடிந்தால் இப்பொழுதே நான் பிரசங்கிப்பேன்” என்று கூறினேன். அங்குதான் காரியமே உள்ளது, ஆம். அவ்வாடுகள் வலது புறமோ அல்லது இடது புறமோ சாயாமல், சரியாக மேய்ப்பனின் பின்னையே சரியாக தரிந்திருந்தன.

44106 அந்தவிதமாகத்தான் சபையானது நடந்து வந்த பாதையினூடாக மேய்ப்பரை பின் தொடர்ந்து, நித்திய ஜீவனுக்குள் நம்மை வழி நடத்துகிற பரிசுத்த ஆவியானவரை பின்பற்றி நிலைத்திருத்திருக்கிறது. இது ஒரு பெரிய பகட்டான சபை என்றும், இதில் இன்னார்—இன்னார் என்ற அநேக வேதபண்டிதர்கள் இன்ன—இன்னவிதமாயிருக்கின்றனர் என்ற காரணத்தினால் திரும்பிச் செல்லாமல் மேய்ப்பனின் பின்னே தரித்திருக்கின்றனர். மேய்ப்பன் போகிற இடமெல்லாம், ஆடுகள் பின் செல்லுகின்றன.…“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கிறது, அவைகள் அன்னியனுக்குப் பின் செல்லுவதில்லை.” அது சரிதான். அவர்…அந்த மேய்ப்பன் ஆடுகளை நடத்திச் செல்ல எழுப்பக்கூடிய ஒலிகளையெல்லாம் அறிந்திருக்கிறான். 107 அதன் பிறகு நாங்கள் நகரத்தை விட்டு வெளியே வந்தபொழுது, அங்கே ஒரு ஆச்சரியமான காரியமிருந்தது, அங்கே வெளியே ஒரு—ஒரு வயலில் சில மனிதர்கள் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்கள் வசமாக கழுதைகளும், பசுமாடுகளும், பன்றிகளும், ஆடுகளும், வெள்ளாடுகளும் அங்கு இருந்தன. அப்பொழுது நான், “அங்கேயிருக்கிற ஆட்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “மேய்ப்பர்கள்” என்று கூறினார். அப்பொழுது நான், “ஒரு மேய்ப்பன் கழுதைகளையா மேய்த்துக் கொண்டிருப்பான்?” என்று கேட்டேன். அவர், “ஆம், ஐயா” என்று கூறினார். அப்பொழுது நான், “மேய்ப்பன் என்றால் ஆடுகளை மேய்ப்பவன் என்றுதான் பொருள் என்று நான்—நான் நினைத்திருந்தேனே” என்றேன். 108 அவர் அதற்கு, “இல்லை இங்கு ஒரு மேய்ப்பன் என்பவன் ‘எந்த மந்தையையும் மேய்க்கிறவன் என்று தான் பொருள்’ உங்களுடைய தேசத்தில் அவர்கள் கால்நடைகளை மேய்க்கும் மனிதர்கள் என்றே இவர்களைக் கூறுகிறார்கள்” என்று கூறினார். அப்பொழுது நான், “ஓ, ஒரு மேய்ப்பன் என்றால் இங்கே மந்தையை மேய்ப்பவன் என்பதை நான் புரிந்து கொண்டேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவர், “ஆம்” என்றார். மேலும் நான், “அவன் மந்தையை காத்துக் கொள்கிறான்” என்றேன். 109 அதற்கு அவர், “அது சரிதான்” என்றார். அவர் மேலும், “வினோதமான காரியம் இரவு நேரத்தில், நீங்கள்…அது இப்பொழுது தோன்றுகிறது. நீங்கள் ஒரு ஊழியக்காரராக இருக்கிறபடியினால் நான் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லக்கூடும்” என்றார். தொடர்ந்து அவர், “இரவு நேரம் வருகையில்…அவைகள் ஒவ்வொன்றையுமே அவன் மேய்த்து, வழி நடத்தி, பகற்காலத்தில் அவைகள் உண்பதற்கு நல்லவைகளைப் பெற்றுக் கொள்ளும்படி அவன் பார்த்துக்கொண்டு, அவ்வாறு அவைகளுக்கு அவன் உதவி செய்கிறான் என்பது உண்மையே. ஆனால் இரவு நேரம் வருகையில்…அம்மேய்ப்பனிடத்தில் இருக்கிற கோவேறு கழுதைகள், கழுதைகள், ஒட்டகங்கள் மற்றும் வேறு என்னவெல்லாம் கால்நடைகள் அவன் வசமாய் இருக்கின்றனவோ, அவைகளையெல்லாம் வயல்வெளியிலேயே விட்டு விடுகிறான். ஆனால் அவன் ஆடுகளையோ, சுற்றிவளைத்து, அழைத்துக் கொண்டு போய் தொழுவத்துக்குள் சேர்த்துவிடுகிறான்” என்று கூறினார்.

45110 “ஓ” அப்பொழுது நான், “கர்த்தாவே, நீர் என்ன செய்தாலும் சரி. என்னை ஒரு ஆடாக ஆக்கும்” என்றேன். புரிகிறதா? காரணம் இரவு நேரம் வருகையில், நான் ஆட்டுத் தொழுவத்திற்குள் போய்விட விரும்புகிறேன். வாசல் வாழியாய் பிரவேசிக்க வேண்டும், வாசல் வழியாகவே வரவேண்டும். யோவான் 17:7-ல் இங்கே, இல்லை—இல்லை—அவர், “நான்…” சரியாகக் கூறினால் 10:7-ல், “நானே ஆட்டுத்தொழுவத்திற்கு வாசல். எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள். ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவான்” என்றார். 111 “இப்பொழுது இந்த சபைக்கு முன்னால், அதாவது பிலதெல்பியா சபையின் காலத்திற்கும் லவோதிக்கேயா சபையின் காலத்திற்கும் இடையில், ஒரு திறந்த வாசலை வைக்கிறேன்.” ஓ, நீங்கள் அதை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? நீங்கள் இதைப்பற்றி மிகவும் கவனமாய் கருத்தாய் எண்ணிப் பார்க்கிறீர்களா? இப்பொழுது கவனியுங்கள், இது அருமையாயிருக்கிறது. அது கன்மலையின் தேனாக இருக்கிறது. அதிலிருந்து தங்கக் கட்டிகளை அது வெளிக்கொணர்ந்து பிரகாசிக்க வைக்கிறது என்றே நான் உங்களுக்குச் சொல்கிறேன். “நானே ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல்!” இப்பொழுது இங்கே வைக்கப்பட்டுள்ள அந்த வாசல் என்ன?

46112 நம்முடைய சிந்தையில் நாம் பின்னோக்கிச் சென்று பார்ப்போம். பரிசுத்தமாகுதலின் செய்தியோடு உலகம் முழுவதிலும் பரவிய மெதோடிஸ்டுகளின் அந்த மகத்தான மிஷெனரி காலத்திலிருந்து பார்ப்போம். லூத்தரின் மூலமாக நீதிமானாகுதல். வெஸ்லியோ பரிசுத்தமாகுதல் என்ற செய்தியோடு வந்தார். மெதோடிஸ்டுகளின் காலத்தின் முடிவில் அது வேர் பிடிக்கும்போது, அது பெரிய ஸ்தாபனமாக ஆக ஆரம்பித்தது. எந்தவொரு சபையும் எப்பொழுதாவது… 113 இப்பொழுது, கவனியுங்கள், இது நம்பமுடியாத கருத்தாய் உள்ளது. ஆனால் இவ்விஷயத்தைக் குறித்து யாராவது எனக்கு வரலாற்றிலிருந்து சேகரித்து எனக்கு காண்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பெந்தேகொஸ்தே வழியில், ஸ்தாபனமாக அமையாமல், தேவனால் எழுப்பப்பட்ட எந்தவொரு சபையும் ஸ்தாபனமாக தன்னை ஆக்கிக்கொண்ட உடனேயே மரித்தது. அது ஒருபோதும் திரும்ப எழுந்திருக்கவேயில்லை. ஓ, உறுப்பினர் அதிகரித்துவிட்டனர், ஆனால் அதன்பின்னர் அவர்களுக்கு ஒரு எழுப்புதல் இருந்ததேயில்லை. லூத்தரினுடைய எழுப்புதல் ஒருபோதும் மீண்டும் உண்டாகவில்லை. மெதோடிஸ்டுகளுக்கு ஏற்பட்ட எழுப்புதலும் மீண்டும் உண்டாகவில்லை. பெந்தேகோஸ்தேயினருக்கு ஏற்பட்ட எழுப்புதலும்கூட திரும்ப வரப்போகிறதில்லை. இல்லை, ஐயா! அவர்கள் யாவரும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டுவிட்டார்கள். “அக்காரியத்தை வெறுப்பதாக” அவர், நிக்கோலாய் மதஸ்தரின் போதகத்தை வெறுப்பதாக தேவன் சபைக்காலங்களில் கூறியிருக்கிறார்.

47114 இப்பொழுது, நாம் யாருக்குமே எதிராக பேசிக்கொண்டிருக்கவில்லை என்பது நினைவிருக்கட்டும். நல்ல ஜனங்கள் சிதறடிக்கப்பட்டிருக்கின்றனர். தேவனுடைய ஆடுகள் அங்கே வெளியே உள்ள எல்லா இடங்களிலுமே உள்ளன. அது உண்மைதான். மொதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், அவர்கள் யாராயிருந்தாலும் சரி, தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்திருந்தால் அவர்கள் தேவனுடைய ஜனங்கள். அவர்கள் தேவனுடைய ஜனங்களாய் இருக்கின்றனர், ஆனால் ஸ்தாபனங்களோ அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கின்றன. அவர்கள்—அவர்கள் மெதோடிஸ்டிலிருந்து கடிதம் பெற்றுக் கொண்டு இடம்விட்டு இடமாக பாப்டிஸ்டுக்கும், அதிலிருந்து, கேம்ப்பெல்லிட்டுகளிடமும் போகிறார்கள்.

48115 சரி, அந்த சபையின் காலத்தின் முடிவில் கர்த்தர் எவ்வாறு கூறினாரென்றால், “ஆட்டுத்தொழுவத்திற்கு நானே வாசல்” என்று கூறினார். இப்பொழுது இயேசுவைப் பற்றி என்னவிதமான வாசல் இவ்விருகாலங்களுக்கும் இடையில் திறக்கப்பட்டது? ஏறக்குறைய 1906-ம் ஆண்டில் மெதோடிஸ்டுகளின் காலம் மங்கிக்கொண்டே வந்தது. அப்பொழுது ட்வைட் மூடி போன்றவர்கள் வந்து, அவர்களின் ஊழியமும் முடிவுறுகிற கட்டத்தில், மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுதலும், அந்நிய பாஷைகளில் பேசுதலும் மற்றும் இன்னபிற காரியங்கள் செய்தலும், சபைக்குள் மீண்டும் ஏற்பட்டது. ஏறக்குறைய 1906-ம் ஆண்டில் அது அங்கே சம்பவித்தது. 116 சரி, அப்பொழுது என்ன சமபவித்தது? அதற்கு பிறகு தொடர்ந்து துவங்கியது, முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் ஸ்தாபித்துக்கொண்டு சென்ற பண்டைய பொது ஆலோசனை சங்கம் இப்பொழுது அசம்பளீஸ் ஆஃப் காட் என்று அழைக்கப்பட்டது. பாருங்கள், முந்தின காலத்திலிருந்து அடுத்த காலத்திற்குள்ளும் சற்று நீடித்து இருந்து கொண்டிருந்த சபையிலிருந்துதான் இது நடந்தது. அதன்பிறகு என்ன சம்பவித்தது? அவர் ஒரு திறந்த வாசலை வைத்தார், “திறந்த வாசல்.”

49117 நாம் இப்பொழுது அதை வாசிப்போம். வார்த்தைக்கு வார்த்தை அவர் கொண்டு வருகிறபடியே அதனுடைய வியாக்கியானத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், பாருங்கள், “இதோ…” நாம் பார்ப்போம். …அதை ஒருவனும் பூட்டமாட்டான்… …திறந்த வாசலை உனக்கு முன்பாக வைக்கிறேன்… 118 இது மற்ற பக்கத்தில் காணப்படுகிறது. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அதை ஒருவனும் பூட்டமாட்டான்… 119 “ஒரு திறந்த வாசல்.” அது என்னவாக இருந்தது? அது இயேசுகிறிஸ்துவின் உன்னத தேவத்துவத்தைப் பற்றிய வெளிப்படுத்துதலாயிருந்தது, திரித்துவத்தின் இரண்டாவது நபர் என்பதாக அல்ல, ஆனால் தேவன் தாமே மாம்சமாகி நம் மத்தியில் வாசம் பண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதாகும். வெளிப்படுத்துதல்… 120 இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களேயானால், அப்படியே ஒரு நிமிடம், நாம் இன்னும் சற்று அடுத்த படியாக உள்ளதை வாசிப்போம். …பூட்டி…உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்…என் நாமத்தை மறுதலியாமல்… 121 நாமத்தை இழந்துபோன இந்த சபைக்காலத்திற்குப் பிறகு, இப்பொழுதுதான் முதன்முறையாக மீண்டும் இச்சபைக்காலத்தில் , நாமத்தைக் குறித்து பேசப்பட்டிருக்கிறது. லூத்தரின் காலம் உயிருள்ளவன் என்ற நாமத்தோடு வெளிவந்தது. அது மரித்ததாயிருந்தது . (அது சரிதானே?) “பிதா குமாரன் பரிசுத்த ஆவி.” இங்கே மீண்டும் இவ்விரண்டு காலங்களுக்கிடையில், இயேசுவின் நாமம் மீண்டும் வெளிவருகிறது. இரு காலங்களுக்கிடையில், “திறந்த வாசல்” வருகிறது. இப்பொழுது, அவர் என்னவாயிருந்தார் என்பதின் ஒரு வெளிப்பாடாக அது இருக்கிறது. தெய்வீகத்தன்மை, அவருடைய தெய்வீகத் தன்மையைப் பற்றிய வெளிப்பாடு.

50122 இப்பொழுது, அதைத்தான் அவர் முதல் சபைக்காலத்தில் வெளிப்படுத்தினார். இப்பொழுது கவனியுங்கள். அவர் ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் நின்று கொண்டிருப்பதை யோவான் காண்கையில், அவர் தன்னுடைய கைகளை விரித்தவராக நின்று கொண்டு இருக்கிறார். இங்கே முதலாவது குத்து விளக்கு, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழு ஆகிய இவற்றின் நடுவே இயேசு சிலுவையில் இருப்பது போல் கைகளை விரித்தவாறு நிற்கிறார். அவர் “நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன்” என்று கூறினார். அதாவது வேறு வார்த்தைகளில் கூறினால், “நான் முதலாவதில் உன்னதமானவராயிருப்பது போலவே கடைசியானதிலும் உன்னதமானவராயிருக்கிறேன்” என்பதாகும். ஒளியானது கிழக்கில் உதயமாகி மேற்கில் அஸ்தமிக்கிறது. அது இருண்ட அந்தகாரமான நாளாக இருந்திருக்கிறது. ஆனால், “சாயங்கால நேரத்திலே வெளிச்சம் உண்டாகும்.” கிழக்கில் ஒரு கையின் பகுதியில் இங்கே எழும்பிப் பிரகாசித்த அதே சுவிசேஷ வல்லமையானது இப்பொழுது மேற்கில் மற்றொருகையின் பகுதியில் பிரகாசித்து, “நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன். ஆதியும் நானே, அந்தமும் நானே” என்கிறார். அவரது கரத்தில்! நீங்கள் புரிந்து கொண்டீர்களா?

51123 வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் அவர் என்ன செய்தார்? முதல் சபையாகிய எபேசுவுக்கு அவர் தன்னுடைய உன்னத தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தினார். அப்படித்தானே? நல்லது, இப்பொழுது கவனியுங்கள். அதையடுத்து வந்த இந்த ஒவ்வொரு சபைக்கும் தம்முடைய மகிமைபடுத்தப்பட்ட ரூபத்தில் உள்ள தெய்வீகத் தன்மையை அவர்தாமே வெளிப்படுத்தினார். ஆனால் இந்த கடைசி சபைக் காலத்தில் அவர் மொழியின் கடைசி எழுத்தாகி, மீண்டும் அது ஆதி நிலைக்கு திரும்புகிறதாயிருக்கிறது. பாருங்கள், “ஆதியும் அந்தமும்.” முதலாவது காலம். இப்பொழுது கடைசி காலம், ஏனெனில் அவர், “நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்” என்று கூறினார். 124 ஆனால் நீங்களோ, “அது எப்படி சம்பவித்தது? எந்த நபர் அதைச் செய்தது?” என்று கேட்கிறீர்கள். அது ஒரு வெளிப்படுத்துதலாயிருந்ததே! இங்கே உங்களில் அநேகர் அதைப் பெற்றிருக்கிறீர்கள். ஏனெனில் அவருடைய…நான் இப்பொழுது ஒரு காரியத்தைக் கூறப் போகிறேன். கவனியுங்கள்! அவருடைய முழு சபையும் அவரைப் பற்றிய தெய்வீக வெளிப்பாடுகளின் மேல் கட்டப்பட்டுள்ளது. அது சரிதானே? அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையென்றால், நாம் மத்தேயு 16:18-ம் வசனத்திற்குத் திருப்புவோம். அங்கே நீங்கள், முழு வெளிப்படுத்துதலுமே அவர் மேலே கட்டப்பட்டுள்ளது என்பதை இன்னும் ஒரு நிமிடத்தில் காண்பீர்கள். அவரைப் பற்றிய வெளிப்பாடுகளின் மேல் அவரது முழுச்சபையும் கட்டப்பட்டுள்ளது. நாம் இப்பொழுது இங்கிருந்து துவங்குவோம்…நாம் துவங்குவோம்…நாம் கிட்டத்தட்ட 14-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்னும்… கேள்வி என்னவாயிருந்தது என்றால், இயேசு கூறினார்; …பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்: 13-வது வசனம், அதாவது 16:13 இப்பொழுது அதற்கு அவர்கள்…

52125 இப்பொழுது கவனியுங்கள். இங்கேதான் முதல் முறையாக இயேசு சபை என்னும் சொல்லைக் குறிப்பிடுகிறார் …அவர் கடைசியாக வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் இந்த சொல்லை உபயோகிக்கிறார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். இப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார் (அந்த முழு குழுவினரிடமும்) சீமோன் பேதுரு பிரதியுத்திரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். (ஓ, என்னே!) இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 126 ஓ, என்னே! “நீ இதை ஒருபோதும் ஒரு வேதபாட கருத்தரங்கிலிருந்து கற்றுக்கொள்ளவில்லை. நீ இதை வேறெந்த வழியிலும், யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ இதைப் பெற்றுக் கொள்ளவில்லை. நீ அதைப் பெற்றுக்கொண்ட ஒரே வழி, நானே இவர் என்ற ஒரு ஆவிக்குரிய வெளிப்பாடு, பரலோகத்திலிருந்து உனக்கு வெளிப்படுத்தப்பட்டதின் மூலமாகவேயாகும்” என்றார். இயேசு, “நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள். நானே அவர்!” என்று கூறினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்: பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 127 அது என்னவாக இருக்கிறது? ஆவிக்குரியது! ஆவிக்குரியது! அது ஆவிக்குரிய சத்தியமாயிற்றே! கர்த்தருடைய வார்த்தையாயிற்றே!

53128 இப்பொழுது, தேவன் இவ்விரண்டு காலங்களுக்கு இடையில், இங்கே சபைக்கு இக்கடைசி காலத்தில் அனுப்பி தன்னையே வெளிப்படுத்திக் கொடுத்துள்ள “திறந்த வாசல்” என்பதே இந்த மகத்தான வெளிப்பாடாய் உள்ளது என்பதை நாம் கண்டறிகிறோம். அது லவோதிக்கேயா சபைக் காலத்தில் கொடுக்கப்படவில்லை, அல்லது, இந்த மற்ற காலமான (பிலதெல்பியா சபையின் காலத்திலும்) கொடுக்கப்படவில்லை. ஆனால் இவையிரண்டுக்கும் இடையில் உள்ள (ஒரு சபைக்காலம் முடிவடைந்த பிறகும், அதற்கடுத்த சபைக்காலத்திற்குள் சற்று நீண்டு இருக்கிற அந்தக் காலத்தில்) தான் இது ஏற்பட்டது. காரணம்…இன்னும் சற்று கடந்து போய், நான் உங்களுக்கு அதை நிருபிப்பேன், இப்பொழுது நீங்கள் அதை பெற்றுக்கொள்வீர்கள், நீங்கள் பாருங்கள். நீங்கள் அதைக் காண விரும்பினால், உங்களால் அதைக் கண்டு கொள்ள முடியாமல் இருக்காத அளவிற்கு நாங்கள் அதை சிறப்பாக எடுத்துக் காண்பிப்போம், பாருங்கள். சரி. 129 அவருடைய சபையை அவர் எங்கே கட்டியிருக்கிறார் என்றால், அவரைப் பற்றிய வெளிப்படுத்துதலின் மேல்தான். இப்பொழுது அது தான் உண்மை என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? அவர் தம்முடைய சபையை தன்னைப் பற்றிய வெளிப்பாட்டின் மேல் கட்டியிருக்கிறார். சரி. இப்பொழுது அவர் என்ன கூறினார்? “ஏந்த மனிதனும் அதைப் பூட்ட முடியாதே!”

54உன்னுடைய கிரியைகளை அறிந்திருக்கிறேன்…இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்… 130 “திறந்த வாசல்” என்பது என்ன? இயேசு கிறிஸ்துவின் உன்னத தெய்வீகத் தன்மையைப் பற்றிய வெளிப்படுத்துதலாயிற்றே! அவர் தன்னுடைய முதல் சபைக்கு, அதின் காலத்தில் என்ன கூறினார்? அவர், “இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமானவர் நானே! முந்தினவரும் பிந்தினவருமாகியவர் நானே! சர்வ வல்லமையுள்ளவர் நானே!” என்று கூறினார். அதை அவர் மூன்று வெவ்வேறு சமயங்களில் கூறியிருக்கிறார். இந்த முதல் சபைக்கு இங்கே அவர் தன்னுடைய தெய்வீகத் தன்மையைப் பற்றி வெளிப்படுத்தினார். கடைசி சபைக் காலத்திற்குள் போகும் முன்னர் அவர், “திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்” என்று கூறினார். நீங்கள் வெளிப்படுத்தலை காண விரும்பினால் இது இங்கே தான் உள்ளது. அவர் தம்முடைய சபையை அங்கே கட்டுவார். அவர் தம்முடைய சபையை எடுத்துக் கொள்வதற்குரிய ஒரே வழி, அதைத் திரும்ப, தாம் யார் என்பதைப் பற்றிய வெளிப்படுத்தலுக்கு கொண்டு செல்வதேயாகும். உண்மையே!

55131 கவனியுங்கள்! ஆபிரகாம் ஒரு உடன்படிக்கை செய்தபொழுது இல்லை, தேவன் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்தபொழுது, அந்நாளில் அவன் “இக்காரியங்கள் எப்படியாகும்? நான் வயது முதிர்ந்தவனாயிருக்கிறேனே? இதோ இந்த என்னுடைய ஊழியக்காரனும், தமஸ்கு ஊரானாகிய எலியேசர் தான் என்னுடைய சுதந்தரவாளியாயிருக்கிறான். எனக்கு வயதாகி விட்டது, நீர் எனக்கு குழந்தையை தருவதாக வாக்களித்துள்ளீரே, அதை நீர் எவ்வாறு செய்வீர்? அது எவ்வாறு செய்யப்படும்?” என்று கேட்டான். 132 அவனுக்கு அயர்ந்த நித்திரை உண்டானது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படுவதுபோல் அயர்ந்த நித்திரை அவனுக்கு உண்டாயிற்று, அது மரணம். அப்பொழுது ஒரு—ஒரு சூளையின் புகை அங்கு உண்டானதை அவன் கவனித்தான், ஒவ்வொரு பாவியும் பாதாளத்திற்குப் போவதற்கு பாத்திரவானவனாக இருக்கிறான். அவன் ஒரு மிருகத்தை (ஒரு கிடாரியைக்) கொன்றான், ஒரு வெள்ளாட்டையும், ஒரு ஆட்டுக் கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாகுஞ்சையும் அவன் பலி செலுத்தியிருந்தான். அவன் காட்டுப் புறாவையும், புறாக்குஞ்சையும் துண்டிக்கவில்லை. அங்கே அப்பொழுது, இந்த சிறிய வெண்மையான ஒளி முன்னும் பின்னும், துண்டிக்கப்பட்ட மிருகங்களின் துண்டங்களின் நடுவே ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, கடந்து சென்றன.

56133 ஜப்பானில் ஒரு உடன்படிக்கையை அவர்கள் செய்யும் பொழுது, எவ்வாறு அதைச் செய்வார்கள் என்பதை, ஜப்பானியர் யாராவது இங்கிருந்தால் அதை அறிந்திருப்பர், அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் உப்பை ஏறிந்துகொள்வர். ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் உப்பை வைத்துக் கொண்டு அங்கே அமர்ந்து, அவர்கள், “நீ இன்னின்னதை செய்வாயா?” “ஆம், நான் இன்னின்னதைச் செய்வேன்” என்று பேசிக் கொள்வார்கள். அதன் பின்னர் அவர்கள் ஒரு உடன்படிக்கையை செய்து கொள்ளுவார்கள். அப்பொழுது அவர்கள் கொஞ்சம் உப்பை ஒருவர்மேல் ஒருவர் எறிந்து கொள்வார்கள், ஏனெனில் உப்பானது பத்திரப்படுத்தி பாதுகாப்பதாக இருக்கிறது, பாருங்கள். அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் உப்பை எறிந்துகொள்வது ஒரு உடன்படிக்கையைக் குறித்து காட்டுவதாக இருக்கிறது. 134 இங்கு அமெரிக்காவில் நாம் ஒரு உடன்படிக்கையை எவ்வாறு செய்கிறோம்? நாம், “நல்லது, நீ இந்தக் குறிப்பிட்ட காரியத்தைச் செய்வாயா?” என்று கேட்க, மற்றவர், “நான் இன்ன காரியத்தைச் செய்வேன்” என்று கூறுகிறார். அப்பொழுது நாம் செய்கிற முதலாவது காரியத்தை நீங்கள் அறிவீர்கள், நாம் ஒருவருக்கொருவர் கரத்தை குலுக்கிக்கொள்கிறோம், “அதன் பேரில் கரங்குலுக்கிக்கொள்கிறோம்” அதுவே ஒரு உடன்படிக்கையாயிருக்கிறோம்.

57135 ஆனால் கிழக்கத்திய தேசங்களில், அவர்கள் ஒரு உடன்படிக்கை செய்யும் முறையானது எவ்வாறு உள்ளதென்றால்: அவர்கள் ஒரூ உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டுமென்றால், அவ்வுடன்படிக்கையை எழுதிக்கொள்வார்கள். பின்னர் அவர்கள் ஆபிரகாமின் காலத்தில் ஒரு மிருகத்தைப் பலியிட்டார்கள். அவர்கள் அம்மிருகத்தை வெட்டிப் பிளந்து, அதன் நடுவில் நிற்பார்கள். ஒப்பந்தத்தை எழுதிக் கொண்ட அந்த பத்திரத்தை இந்தவிதமாக இரண்டாக கிழித்துக்கொண்டனர். ஒருவர் ஒரு துண்டையும், மற்றவர் மற்ற துண்டையும் எடுத்துக்கொள்வர். அதன் பிறகு அவர்கள், “இவ்வொப்பந்தத்தை சம்மந்தப்பட்டவர்கள் முறித்துப் போட்டால் அப்பொழுது, பிளக்கப்பட்ட இந்த மரித்த மிருகத்தின் உடல்களைப் போல் அவர்கள் ஆகக்கடவர்” என்று ஆணையிட்டுக் கொள்ளுவார்கள். இந்த ஒப்பந்தத்திற்கு நகல் எடுத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது. இது கிழிக்கப்பட்ட இரு துண்டுகளைத்தான் மீண்டும் சரியாக ஒன்று சேர்க்க வேண்டும், அது மாத்திரம் இந்த ஒப்பந்தத்திற்கான வழியாகும்.

58136 இப்பொழுது, தேவன் என்ன செய்யப்போவதாயிருந்தார் என்பதை அவர் ஆபிரகாமுக்குக் காண்பித்துக் கொண்டிருந்தது என்னவாயிருந்தது? ஈசாக்கு வழியாக வந்த ஆபிராகாமின் சந்ததியான இயேசுவை அவர் எடுத்து, அவரைக் கல்வாரி சிலுவையில் வைத்து, அங்கே அவரைக் கிழிக்கப்போவதாயிருந்தார். தேவன் அவருடைய சரீரத்திலிருந்து ஆவியை கிழித்து எடுத்துவிட்டு, அவருடைய சரீரத்தை உயிர்த்தெழச் செய்து உன்னதமானவருடைய வலது பாரிசத்தில் அவரை உட்காரச் செய்து, பரிசுத்த ஆவியை சபையின்மேல் திரும்ப அனுப்பப் போவதையே காண்பித்துக் கொண்டிருந்தார். அதுவே இரண்டாகக் கிழிக்கப்பட்ட தேவனுடைய உடன்படிக்கையாயுள்ளது. நாம் ஆவியைப் பெற்றுக்கொண்டோம், அவர் சரீரத்தை உடையவராயிருக்கிறார். அது திரும்ப ஒன்றாக சேரும்பொழுது, நமக்குள்ளாக இருக்கிற அந்த ஆவி அவரோடு மணவாட்டியாக ஒன்று சேருகிறது. ஆமென். எந்தவொரு ஸ்தாபனமும் அதனோடு பிணைக்கப்படவே முடியாது. இல்லை ஐயா. அது கலப்படமில்லாத, சுத்தமான, பரிசுத்த ஆவியின் பிறப்பினால் பிறந்ததாக இருக்கிறது, அவ்வளவுதான், அதுவே உடன்படிக்கையாயுள்ளது.

59137 இப்பொழுது, அவர், “திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்” என்று கூறியதை நாம் கண்டோம், எத்தனை வித விதமான, மனிதனால் உண்டாக்கப்பட்ட ஸ்தாபன அமைப்புகள், அல்லது ஸ்தாபனங்கள் தோன்றினாலும் எனக்கு அதைப்பற்றி கவலையில்லை, பாதளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை. நீங்கள் அதை மேற்கொள்ள, அதை சேர்ந்துகொள்ள ஒரே வழி மாத்திரமே உண்டு. அவ்வளவுதான். நீங்கள் அதில் சேர்ந்துகொள்ள முடியாது, எனவே நீங்கள் அதற்குள் பிறக்க வேண்டும். உண்மையே: எனவே இயேசுகிறிஸ்துவின் உன்னத தெய்வீகத் தன்மையைப் பற்றிய வெளிப்பாட்டையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்தையும் பற்றிய செய்தியை எவரும் தடுத்து நிறுத்தமுடியாது. பாதளத்தின் வாசலகள் அதை மேற்கொள்ளுவதில்லை. 138 நீங்களோ, “அது சரியானதுதான் என்று நீங்கள் எப்படி அறிவீர்கள்?” என்று கேட்கலாம். அது சரியாக வார்த்தையோடு பொருந்தினதாக இருக்கிறது. அதைப்பற்றி எவரும் எதுவும் சொல்ல முடியாது. மிகவும் சரியானபடி உள்ளதே! அது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தினால் எவரும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டதாக வேதத்தில் எந்த ஒரு இடத்திலும் இல்லை.

60139 எபேசு சபைக் காலத்து தூதனாக விளக்கிய இந்த மகத்தான பரிசுத்த பவுல், ஞானஸ்நானம்பண்ணப்படாத எந்த நபரும், அல்லது வேறு எந்தவிதமாகவது ஏற்கனவே எவரேனும் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் சரி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்காவிடில், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மீண்டும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி கட்டளையிட்டான், மேலும் அவன், “வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறு எதையாகிலும் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கடவன்” என்று கூறினான். 140 எனவே, இக்கடைசி நாட்களில் வரும் தூதனானவன் எந்தவிதமான் செய்தியைக் கொண்டு வருவான் என்பதை நீங்கள் காணமுடியும், நாம் ஒருவேளை அத்தூனுக்கு நேராக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கக்கூடும், ஆனால் அத்தூதன் வருகையில், அவன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்தை குறித்து பிரசங்கிப்பான் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் அதை விசுவாசிக்காவிடில், நாளை இரவு நீங்கள் வந்தீர்களென்றால், நான் வேதவாக்கியங்களிலிருந்து அதை நிரூபித்துக் காண்பிப்பேன், அவன் நிச்சயமாக அவ்வாறே செய்வான், பெந்தெகொஸ்தே நாளில் அவர்களுக்கு உண்டாயிருந்ததுபோல, இருதய விருத்தச்சேதனமும், தெய்வீக அற்புதங்களும், வல்லமையான கிரியைகளை நடப்பித்தலும் உண்டாயிருக்கும். பெந்தெகொஸ்தேயின் அதே மூல ஆசீர்வாதம் இக்காலத்தில் இருக்கிற மீதியாருப்பவர்களிடத்தில் திரும்பி வந்து அவர்களை மேலே கொண்டு செல்லும், முதலாவது உடன்படிக்கையானது ஏற்பட்ட வண்ணமாக சரியாக அதே போல் இந்தக் காலத்திலும் இருகூறாகப் பிளந்த உடன்படிக்கையானது உண்டாக்கும். ஓ, நான் அவரை நேசிக்கிறேன்! நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன், மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். என்னால்—என்னால் அதை போதுமான அளவு இதற்குமேல் உறுதியாக வெளிப்படுத்திக் கூற முடியவில்லை. நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்!

61141 என்னுடைய சகோதரர் யாவரும் அந்தவிதமாகவே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த மகத்தான காரியத்தை உலகெங்கிலும் உள்ள என்னுடைய சகோதர, சகோதரிகள் யாவரும், என்னுடைய விலையேறப்பெற்ற சிநேகிதர் யாவரும், கண்டு கொள்ள வேண்டுமென்று நான் வாஞ்சிக்கிறேன். நான்—நான்—நான் இன்றிரவு விருப்பமாயிருப்பதை, தேவன் அதை அறிவார். எனக்கு வளர்க்கும்படியாக ஒரு குட்டிப் பையன் ஜோசப்பும், குட்டிப் பெண்களாக சாராளும், ரெபெக்காளும் இருக்கின்றனர். என்னுடைய அருமையான மனைவியை விட்டுப் பிரிந்து வருவதை நான் வெறுக்கிறேன். ஆனால் நான் அறிந்துள்ள என்னுடைய சகோதரர்கள்…இந்த உலகத்தில் நான் அறிந்துள்ள ஜனங்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசித்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுவிட்டால், அப்பொழுது நான் இவ்வுலகத்தை விட்டுச் செல்ல ஆயத்தமாயிருப்பேன். அது முற்றிலும் உண்மை. புரிகிறதா? ஓ, எனக்கு இயலுமென்றால்…உங்களால் முடியவில்லையென்றால்…நீங்கள் கனிவாகப் பேசினால், அவர்கள்மேல் நாம் எதையோ புகுத்திவிட முயலுகிறோம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். வார்த்தையோடு சரியாக நிலைத்திருந்து அதை ஆணித்தரமாக உறுதியான முறையில் பதியவைப்பது தான் அதை செய்வதற்கான ஒரே காரியமாய் உள்ளது. அதுவே சரியானதாக இருக்கிறது, வார்த்தையோடு சரியாக நிலைத்திருங்கள், ஓ, நான் எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன்!

62142 அவரைப்பற்றிய, அவரது உன்னத தெய்வீகத் தன்மைப் பற்றிய ஒரு வெளிப்பாடு என்ன, அவர் அதைச் செய்தாரா? எப்படியாயினும் அதை விட்டுவிட என்னால் முடியவில்லை, அதை அவர் எபேசு சபையின் காலத்திலே வெளிப்படுத்தினார் அது சரிதானே? அப்பொழுது தான் ஒளியானது, அதாவது கிறிஸ்தவ ஒளியானது, முதன் முதலாக ஒளிர்விட்டு பிரகாசிக்கத் தொடங்கியது, அது சரிதானே? பரிசுத்த ஆவியின் காலம், சரியாக இங்கே எபேசுவினே துவங்கிற்று. 143 தீர்க்கதரிசியோ, “ஒரு நாள் உண்டு. அது பகலுமல்ல இரவுமல்ல, ஆனால் சாயங்கால நேரத்திலே வெளிச்சம் மீண்டும் உண்டாகும்” என்று கூறினான். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? பாருங்கள். பாருங்கள், இந்த அந்தகாரமான நாள், அங்கிருந்தே வருகிறது, (ஸ்தாபனங்கள் மற்றும் யாவும்) இங்கே அந்தகாரமுள்ளதாயிருக்கிறது, ஆனால் இந்தக் கடைசி நாட்களில் இங்கே அவர் திறந்த வாசலை வைக்கிறார். இயேசு, “நானே வாசல்” என்று கூறினார்.

63144 நீங்கள் எப்போதாவது, “நானே வாசல், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று அவர் கூறியதை கேட்டிருக்கிறீர்களா? புரிகிறதா? நீங்கள் எப்போதாவது, “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது” என்று அவர் கூறுவதை கேட்டிருக்கிறீர்களா? வாசல் என்பதற்கு ஆங்கிலத்தில் ஸ்ட்ரெயிட் என்று குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தையின் ஆங்கில எழுத்துக்களை எப்போதாவது கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? அதாவது S—t—r—a—i—t என்ற எழுத்துக்களைக் கொண்ட தண்ணீர் என்ற பொருளில் உள்ளது. ஒரு வாசல் என்பது “தண்ணீரையே” பொருட்படுத்துகிறது என்று அந்தவிதமாக ஆங்கில எழுத்துக்களைக் கொண்டுள்ளது. (S—t—r—a—i—g—h—t என்பது வேறு எழுத்துக்களைக் கொண்டிருப்பதைப் பாருங்கள்.) இந்த ஸ்ட்ரெயிட், என்பதோ “தண்ணீரே வழியாய் உள்ளது. அந்த தண்ணீரே வாசலாயும், நெருக்கமான வழியாயுமுள்ளது.” தண்ணீர் என்றால் என்ன? அது தான் கதவு, அதுதான் அந்த வாசல் பாருங்கள்?, அதை எப்படி திறப்பது? “கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் தண்ணீரின் மூலமாகவேயாகும். தண்ணீரே வாசலாயிருக்கிறது, வழி நெருக்கமுமாயிருக்கிறது.” இயேசு…“தண்ணீரே கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் பிரவேசிப்பதற்கென வாசலாய் இருக்கிறது.” 145 “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது கல்வாரியை நீங்கள் நீங்கள் நோக்கிப் பார்க்கையில், பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்…உண்டாயிருக்கிறது.” (அவர்களில் சிலர் அவ்வாக்குத்தத்தம், “அப்போஸ்தலருக்கு மட்டுமே உரியது” என்று கூறுகிறார்கள்.) “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.” அவ்வளவுதான். “நம்முடைய தேவனாகிய கர்த்தர் வர வழைக்கும் யாவருக்கும் உண்டாயிருக்கிறது” நீங்கள் மருந்துச் சீட்டு எழுதப்பட்டுள்ளபடியே வாசித்து அதேவிதமாக வருவீர்களானால், வாக்குத்தத்தம் ஒவ்வொருவருக்கும் உரியதாயிருக்கிறது. அது உண்மை.

64146 “நான் இந்த வழியில் சுற்றி உள்ளே நுழைந்து விடுவேன்” என்று சொல்லாதீர்கள். 147 ஒரு சமயம் வேறு வழியாக உள்ளே நுழைந்துவிட்ட ஒரு மனிதனைப்பற்றி நீங்கள் அறிவீர்கள், அதை நீங்கள் அறிவீர்களா? அதைக் குறித்த உவமையை நீங்கள் எப்பொழுதாவது வாசித்திருக்கிறீர்களா? உள்ளே வேறு வழியாக நுழைந்துவிட்ட மனிதனொருவன் அங்கே இருந்தான், கிழக்கத்திய தேசத்தில் அவர்கள்—அவர்கள் கலியாண விருந்துக்குப் போகும்போது…நாம் அதை நாளை காலையில், அதாவது கலியாண விருந்திலே, அந்த மனிதன் அங்கே எவ்வாறு இருந்தான் என்பதைப் பார்ப்போம். நாம் நாளைக் காலையில் அதை எடுத்துக் கொள்ள முயற்சிப்போம். நான் அதைப்பற்றி இப்பொழுது பேசலாம் என்று இருந்தேன், ஆனால் இப்பொழுது அதை பேசாமல் விட்டுவிடவுள்ளேன். அக்கலியாண விருந்துக்கு அம்மனிதன் எவ்வாறு அந்த இடத்திற்குள் உள்ளே நுழைந்தான் என்பதைப் பற்றி நாளைக் காலையில் பார்ப்போம். 148 சரி. “தண்ணீரே வாசலாயிருக்கிறது. வழி நெருக்கமாயிருக்கிறது.” தண்ணீரே வாசலாயிருக்கிறது, தேவனாகிய கர்த்தரிடம் பிரவேசிப்பதற்கு அதுவே நுழைவு வாசலாக இருக்கிறது.

65149 “நான் திறந்த வாசலை வைத்திருக்கிறேன். என்னிடத்தில் திறவு கோல்கள் உள்ளன. நான் ஒருவர்தான் அதை திறக்க முடியும். நான் தான் அதை வெளிப்படுத்திக் கொடுக்கமுடியும், என்னிடத்தில் திறவு கோல்கள் உள்ளன என்று கூறினார்.” அது சரிதானே? “என் பிதா ஒருவனே இழத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். என் பிதா எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.” இயேசு கிறிஸ்துவின் மூலமாயல்லாமல் எந்த ஒரு மனிதனும் இரட்சிக்கப்பட முடியாது. எந்த சபையின் மூலமாயுமல்ல, எந்த ஸ்தாபனத்தின் மூலமாயுமல்ல, எந்த அத்தியட்சகரோ, போப்போ ஆகியோர் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவின் மூலமாக மட்டுமே இரட்சிப்படைய முடியும், அவரே திறவுகோலை வைத்திருக்கிறார், அவரால் மாத்திரமே முடியும்…எதற்குரிய திறவுகோல்? தாவீது, எதிர்காலத்தில் நிகழும் ஆயிர வருட அரசாட்சியில் அவர் தாவீதின் சிங்காசனத்தில் அமருவார், “நான் தாவீதின் திறவுகோலை உடையவனாயிருக்கிறேன், நான் இந்தக் கதவைத் திறப்பேன், ஒருவனும் அதை பூட்டமுடியாது. என்னையன்றி ஒருவனும் எனக்கு அதைப் பூட்ட முடியாது.”

66150 அது எப்படி இருக்கமுடியும்? எந்த மனிதனுக்கும் அவர் தம்மை வெளிப்படுத்தும் வரையில் அவரே கிறிஸ்து என்பதை எப்படி அவன் அறிந்து கொள்ள முடியும்? பாருங்கள், அவர் தம்மைத் தாமே வெளிப்படுத்துகிறார், அவர் திறவுகோலை உடையவராயிருக்கிறார். அவரால் தான் அதைத் திறக்க முடியும், அல்லது திறக்காமல் விட்டுவிடவும் முடியும். பாருங்கள்? “வாசலுக்குரிய திறவுகோலை நானே உடையவராயிருக்கிறேன். நானே வாசல், நானே வழி, நானே சத்தியமாயிருக்கிறேன், நானே ஒளியாயிருக்கிறேன்.” ஓ! “நானே அல்பாவாக இருக்கிறேன். நான் ஒமெகாவுமாயிருக்கிறேன். நானே முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நானே பிதாவாயிருக்கிறேன். நானே குமாரனாயிருக்கிறேன். நானே பரிசுத்த ஆவியாயிருக்கிறேன். நான் இருக்கிறேன்! நான் இருந்தேன் என்றல்ல, இருப்பேன் என்றும் அல்ல, நான் இருக்கிறவராக இருக்கிறேன்! அதாவது—அதாவது—அது முழு காரியத்தையும் கூறிவிட்டதாயிருக்கிறது. நான் இருக்கிறேன், நான் ‘இருந்தேன்’ அல்லது ‘இருப்பேன்’ என்றல்ல. நான் இருக்கிறேன் என்பதன் பொருள், ‘நித்தியமாக ஜீவிக்கிறவர்’ என்பதாகும். நான் இருக்கிறவராக இருக்கிறேன் என்பதைப் பாருங்கள்! எப்பொழுதும் இருந்தேன், எப்பொழுதும் இருப்பேன், நான் எப்பொழுதும் இருந்ததுபோல, நான் எப்பொழுதும் இருப்பேன் என்பதுபோலவே நான் இப்பொழுது இருக்கிறேன்.” பாருங்கள், அவர்—நான் இருக்கிறேன் என்பவராக அவர் இருக்கிறார்!

67151 இராஜியத்திற்கான தாவீதின் திறவுகோலை அவர் உடையவராயிருக்கிறார், “ஒருவனும் அதைப்பூட்ட முடியாது.” 7-ம் வசனம் அது சரியென்று நிரூபிக்கிறது, அதாவது “ஒருவரும் பூட்டக்கூடாதபடி,” அவர் தாவீதின் திறவுகோலையுடையவராயிருக்கிறார். 152 இப்பொழுது அடுத்த காரியம் என்னவாயுள்ளது என்பதைப் பற்றி நாம் துரிதமாகப் பார்ப்போமாக: …உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும்… 153 ஓ! இங்கே இச்சபைக் காலத்திலுள்ள அந்த சிறிய குழுவினருக்கு அவர், “உனக்கு சிறிதளவே பெலன் இப்பொழுது இருக்கிறது” என்று கூறினார். அதன் அர்த்தம் என்ன? மரித்துப்போன மனிதன், கொஞ்சம் தன்னை அசைந்து கொடுத்து, மெதுவாக உயிரடைந்து, சிறிது புத்துணர்ச்சி பெற்று, ஜீவனைப் பெற்றுக் கொள்வதைப் போல் உள்ளது. நீங்கள் அந்த பழைய கோட்பாடுகள் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்திலிருந்தும் வெளியே வந்து, நீங்கள் கொஞ்சம் ஜீவனைப் பெறத் துவங்கி, உங்களையே அசைத்துக் கொண்டு, நீங்களாகவே ஒருவிதமாக நடப்பதாகும். “உனக்கு கொஞ்சம் பெலன் உள்ளது. நான் உனக்கு முன்பாக இப்பொழுது திறந்த வாசலை வைத்துள்ளேன்” என்று கூறுகிறார். அவர்கள் போப்புமார்க்கக் கொள்கைகளையும், லூத்தரன் சபைக்கொள்கைகளையும் விட்டுவிட்டு, மற்றும் ஏனைய கொள்கைகளையும் மெதோடிஸ்ட்டு கொள்கைகளையும் விட்டுவிட்டு வெளியே வந்தபிறகு அவர், “நான் உனக்கு முன்பாக திறந்தவாசலை வைத்துள்ளேன். உனக்கு கொஞ்சம் பெலன் இருக்கிறது. அதைக் குறித்து நீ என்ன செய்யப்போகிறாய்? அது உனக்கு முன்பாக திறவுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. நீ விரும்புகிறதற்கேற்றவாறு, அதனுள்ளே அல்லது வெளியே நடந்து செல்லலாம், இவ்விரண்டில் ஏதாவதொன்றைச் செய்யலாம். வாசலானது உனக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ கொஞ்சம் பெலனை உடையவனாயிருக்கிறாய், ஜீவனண்டை வந்து கொண்டிருக்கிறாய், நீ துவங்கிக்கொண்டிருக்கிறாய்”என்றார்.

68154 எனவே, அது ஆதி சபையோடு இருந்தது. லவோதிக்கேயா சபையின் காலத்தின் இறுதிக்கட்டத்தை நீங்கள் கவனித்தால், அது மீண்டும் கிரியைகளைச் சார்ந்து கொண்டது. நீங்கள் இங்கே கவனிப்பீர்களேயானால், இந்த சபையானது இந்த இரண்டிற்கும் இடையே உள்ளது. நீங்கள் லவோதிக்கேயா காலத்திற்குள் போகும் பொழுது அல்லது நீங்கள் லவோதிக்கேயா சபைக் காலத்திற்குள் போகும்போது, “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்” என்று லவோதிக்கேயா சபையின் காலத்தினுடைய இறுதி கட்டத்தில் கூறுகிறார். அது என்னவாயிருந்தது? “உன்னுடைய கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் இருக்கிறதையும்,” சாத்தனுடைய சிங்காசனமானது என்ன? பாருங்கள், அவர்கள் மீண்டும் ஒரு ஸ்தாபனத்திற்குள்ளாச் சென்றுவிட்டனர். 155 அசெம்ப்ளிஸ் ஆஃப் காட் சபையினராகிய நீங்கள், பெந்தெகொஸ்தே ஒருத்துவக்காரர்களே, மற்றும் சர்ச் ஆப் காட் சபையோரோ,! ஓ, சகோதரர்களே, என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் காண்வில்லையா? தேவன், வெறுத்த, சகோதரத்துவத்தை உடைத்துப்போட்ட காரியத்திற்குள் நீங்கள் நேராக திரும்பிச் சென்றீர்களே, அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபைக்காரர்களேப் பாருங்கள். உலகத்திலேயே அருமையான ஜனங்கள் அசெம்பளீஸ் ஆஃப் காட் சபையில் உள்ளனர். ஐக்கிய பெந்தேகோஸ்தே சபையினரைப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இதுவரை சந்தித்திருக்கிறவர்களிலேயே அருமையானவர்களாய் இருக்கிறார்கள், சர்ச் ஆஃப் காட் சபையில் பாருங்கள். அவர்களுடைய அந்த ஸ்தாபங்களினிமித்தமாக, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, வம்புப் பண்ணிக்கொண்டு, ஒருவருக்கொருவர் கூச்சலிட்டுக் கொண்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டு, “பருந்துக் கூடு” என்றும், “எலி வளை” என்றும் அழைத்துக் கொள்கிறார்கள், ஏன் இது ஒரு அவமானமாக இருக்கிறது. 156 “சகோதரர்களுக்கு இடையில் விரோதத்தை உண்டுபண்ணுகிற” ஒரு காரியத்தை தேவன் வெறுக்கிறார். அது உண்மையே. அந்த ஸ்தாபனங்களே அதைச் செய்கின்றன. சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டு பண்ணுகிறது. நாம் இடைவெளியில் நின்று, “நாம் சகோதரர்கள்” என்று கூற வேண்டும். நாம் பிரிந்திருக்கவில்லை, நாம் யாவரும் ஒரே சரீரம்; நம்பிகையிலும், உபதேசத்திலும் நாம் ஒன்றாகவேயிருக்கிறோம். (வேதத்தின் உபதேசத்தில்.) அன்பிலும் ஒன்றாகவேயிருக்கிறோம். 157 முன் செல்லுவீர், கிறிஸ்துவின் போர் வீரரே என்ற அந்தப் பழைய பாடலை நான் விரும்புகிறேன். ஆம் ஐயா.

69158 லவோதிக்கேயர்கள் இறுதியில் அவர்கள் மீண்டும் கிரியைகளுக்குத் திரும்பிச் சென்றனர். அதாவது பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்கள். ஒரு ஸ்தாபனமாக ஆகிட திரும்பிச் சென்றனர். நாம் 15-ம் வசனத்தை எடுத்துக்கொள்வோம். நான் இங்கே குறித்து வைத்துள்ளேன், “வெளிப்படுத்தினவிசேஷம் 3-ம் அதிகாரம் 15-ம் வசனம்.” இப்பொழுது அது சரியாயிருக்கவில்லையா என்று பாருங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரம்…நான் அவ்வசனத்தை சரியாக குறித்து வைத்துள்ளேனா என்று நாம் பார்ப்போம். வெளிப்படுத்தின விசேஷம்…ஓ, இல்லை, இல்லை, நான்—நான் தவறாகக் குறித்துவிட்டேன், 15-ம் வசனம். அது இந்த அதே அதிகாரத்தில் 15-ம் வசனம்தான், அதே காரியத்தையே இங்கே அது காட்டுகிறது. ஆம், உ—ஊ: உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்: நீ குளிருமல்ல. அனலுமல்ல;… 159 “உன் கிரியைகளே அறிந்திருக்கிறேன்.” அதுவோ அவர்கள் தங்கள் பழைய நிலைக்கே திரும்பிவிட்டார்கள் என்பதைத்தான் காண்பித்துவிட்டது. தங்களுடைய பெலத்தோடு திரும்பிப் போய்விட்டனர், பெந்தேகோஸ்தே ஸ்தாபனங்களுக்குத் திரும்பிப் போய்விட்டனர். அதே அதிகாரம் 15-ம் வசனம். சரி.

70160 இரு சபைக்காலங்களுக்கும் இடையில் அவர்களுக்கு சிறிதளவு பெலன் இருந்தது. இரண்டு மதஸ்தாபன நிக்கொலாய் மதத்தினரின் போதகத்தின் காலத்திற்கு இடையில் அவ்வாறிருந்தது. இங்கே இந்த லூத்தரன்கள் உருவாகி வந்தபொழுது, அவர்கள் மீண்டும் குருக்களாட்சித் தத்துவத்தைக் கொண்டிருக்கும் நிக்கொலாய் மதத்தினரின் போதகத்திற்கே திரும்பிச் சென்றனர். அதன்பிறகு வெஸ்லி வந்தார். அதன்பிறகு அவர்கள் ஸ்தாபித்து, கேன்டர்பரியிலுள்ள தலைமை அத்தியட்சகர் இந்த பெரிய மாற்றங்களையெல்லாம் ஏற்படுத்தி, பதவியை உண்டாக்கிக்கொண்டு, அந்த காலத்தில் உள்ள சபைகளில் எல்லாம் அவை காணப்பட்டன. அதற்கடுத்து வந்த பெந்தெகொஸ்தேயினர் காலத்தில், அவர்களும் அப்படியே மீண்டும், அந்தவிதமான காரியத்திற்குள் திரும்பிச் சென்று, நிக்கொலாய் மதத்தினரின் போதகப்படியான அவர்களுடைய பெரிய பெரிய ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். ஆனால் இவ்விரண்டு காலங்களுக்கும் இடையில், அவர் வாசலைத் திறந்து சபைக்கு கொஞ்சம் பெலனை அளித்து, அது தன்னுடைய தலையை அசைத்துக் கொள்ளும்படி போதுமான உயிர்ப்பித்தலை அதற்குக் கொடுத்து, வெளியே எட்டிப்பார்த்து, அது தான் எங்கேயிருக்கிறோம் என்று பாத்துக்கொள்ளும்படி அதற்கு வெளிப்படுத்துதலைக் கொடுத்தார். உங்களுக்குத் தெரியுமா, நாம் ஒரு மிருகத்தை சுட்டு கீழே வீழ்த்தினால், முதலாவதாக அது செய்வதென்னவெனில், தலையை அசைத்து, நிமிர்ந்து சுற்றுமுற்றும் திரும்பிப்பார்க்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

71161 நான் கடந்த இரவில் அதைப் பற்றி ஒரு சொப்பனங் கண்டேன், சார்லி! நான் ஒரு அணிலைச் சுட்டுடேன் என்று நினைக்கிறேன், நான் அதை அதினுடைய காலில் சுட்டேன். அப்பொழுது அங்கே ஒரு வயதான ஸ்திரீ இருக்கிறதைப் பார்த்தேன், ஓ, அவள் என் மேல் கோபங்கொண்டு, என்னைப் பிடிக்க என்னண்டை வருதாயிருந்தாள். இந்த சிறிய அணில் தன் கழுத்தைச் சுற்றி ஒரு வெள்ளை நிற வளையத்தை உடையதாயிருந்தது: அது அங்கே விழுந்து கிடந்து, தன் தலையை இரண்டு மூன்று தடவைகள் அசைத்து என்னை நோக்கிப் பார்த்துவிட்டு, இயன்ற அளவு விரைவாக காட்டுக்குள் திரும்ப ஓடிவிட்டது. 162 உங்களுக்குத் தெரியுமா? அந்த வயதான ஸ்திரீ ஒரு வேளை சபையைக் குறிக்கக் கூடும். அப்படி ஒரு வேளை இருக்கலாம் அல்லவா? அவள் என்னே மிதித்துக் கொன்றுவிடலாம் என்று முயற்சித்தாள். எப்படியோ அவளிடமிருந்து நான் தப்பித்துக் கொண்டுவிட்டேன். ஆனால் ஓ, ஒரு சிறிய ஒளி உண்டாயிருந்தாலும், வழியை அறிய போதுமானதாயிருந்தது… நான் வீதியினூடாக சென்றுவிட்டதை நான் அறிவேன், அவள் என்னை அங்கே வெட்டி வீழ்த்திவிட போவதாயிருந்தாள், நான் உடனே எனது ஃபோர்ட் மோட்டார் வாகனத்தையும், மற்றும் அதனோடிருந்த இணைப்பு வாகனத்தையும் விரைவாகத் திருப்பி ஒட்டிச் சென்றேன். எனக்குப் பின்னால் அவர்கள் பாதையை வெட்டிக் கொண்டிருந்தார்கள். வேறு வழியாக நான் திருப்பிக் கொண்டு, அவள் என்னைப் பிடிக்காதபடிக்கு, தப்பிச் சென்றேன். நான் பிடிபடாமல் தப்பித்துக் கொண்டேன்.

72163 “உன்னிடம் கொஞ்சம் பெலன் மீதியாக விடப்பட்டுள்ளது. அதைக் கொண்டு, நீ இந்த இரு ஸ்தாபனங்களுக்கு நடுவில் அவைகளுக்கெதிரான நேர் எதிர் திசையில் திரும்புவதற்காக அதை உபயோகிக்க நீ விரும்புகிறாய்.” நீங்கள் கவனித்தீர்களா? “அவருடைய வசனத்தைக் கைக்கொண்டாய்!” அடுத்த வசனத்தை இப்பொழுது கவனிப்போம்: உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்…என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே… 164 “என் வசனத்தை கைக்கொண்டபடியினால்,” அந்தவிதமாகத்தான் அவர்கள் தங்களுடைய பெலனைப் பெற்றுக் கொண்டார்கள். அந்தவிதமாகத்தான் அவர்கள் தங்களுடைய வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டனர். லூத்தர் வேதாகமத்தை அச்சிட்டுக் கொடுத்தபோது, அது வெஸ்லியின் காலத்தினூடாக தொடர்ந்து இக்காலத்துக்கு வந்தபோது அவர்கள் அதைப் பற்றிக் கொண்டு, அவருடைய வசனத்தைக் கைக்கொண்டார்கள். அதிலிருந்து இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டை தேவன் மாம்சத்தில் நம் மத்தியில் வெளிப்பட்டதை மற்றும் இயேசுவின் நாமத்தில் உள்ள தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பற்றிய வெளிபடுத்துதலையும் அவர்கள் பெற்று, அவ்வாறு சென்றார்கள். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அப்பொழுதுதான் அவர்கள்—அவர்கள் அவருடைய நாமத்தைப் பெற்றுக் கொண்டார்கள். பார்த்தீர்களா? ஏன்? அது செய்தித்தாளில் படிப்பதைவிட மிகவும் தெளிவாக உள்ளது. புரிகிறதா? நீங்கள் அதை மறுதலிக்க முடியாது, ஏனென்றால் சரியாக அது இங்கே உள்ளது. இங்கே வேதத்திலும் சரியாக அது காணப்பட்டுள்ளது. அது இதோ இங்கே உள்ளது, நாம்…அது சரித்திரமாயுள்ளது. சரியாக அக்காலத்தில்தான் பெந்தெகொஸ்தே சபையானது ஆரம்பித்து, பெயர் பெற்று விளங்கி, பின்னர் கிட்டத்தட்ட 1908, 1910, 1912-ம் ஆண்டில்தான் அது விழத் துவங்கிவிட்டது.

73165 இப்பொழுது சரி: …நாமத்தை மறுதலியாமல்…என் நாமத்தை மறுதலியாமல்… 166 நான் அதை விரும்புகிறேன். இப்பொழுது அவரிடம் தாவீதின் திறவுகோல் உள்ளது. அவர் தனது வார்த்தையை காத்துக்கொண்டு உங்களை இராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளுவார். அவருடைய நாமமும் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் “உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிற” சபையைவிட்டு வெளியேறி, ஜீவனை அளிக்கும் நாமத்தையுடைய சபைக்குள் பிரவேசித்துவிட்டார்கள். புரிகிறதா? “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்ற மரித்துப்போனதிலிருந்து வெளியே வாருங்கள். “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தினால் என்பது அர்த்தமற்றதாயுள்ளது. பாருங்கள், இது வெளிப்படுத்துதலுக்காக அங்கே கொடுக்கப்பட்டுள்ளது: அவருடைய முழு வேதாகமமும் வெளிப்படுத்துதலின் பேரில் எழுதப்பட்டுள்ளது. அந்தவிதமாகத்தான் அது உள்ளது. அவர் தன்னையே வெளிப்படுத்துகிறார்.

74167 இப்பொழுது அவர், மத்தேயு 28:19-ல் “நீங்கள் புறப்பட்டுப் போய், ஜனங்களுக்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று கூறினார். இப்பொழுது, நீங்கள் அவைகளில் எதனுடைய நாமத்தை உபயோகப்படுத்தப் போகிறீர்கள்? இப்பொழுது அநேக திரித்துவக்காரர்கள். “பிதாவினுடைய நாமத்தினாலும், குமாரனுடைய நாமத்தினாலும், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலும்” என்றே ஞானஸ்நானங் கொடுக்கிறார்கள். அது வேதப்பிரகாரமானதல்ல. எவரை வேண்டுமானலும் கேட்டுப் பாருங்கள். அப்படித்தானே பாருங்கள்…அது நாமத்தில் என்று தான் கூறப்பட்டுள்ளது. ஒருமை, நாமங்கள் அல்ல, நாமம்! பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால். பாருங்கள்? சரி. பிதா என்பது ஒரு நாமமல்ல; குமாரன் என்பதும் ஒரு நாமமல்ல; பரிசுத்த ஆவியென்பதும் ஒரு நாமமல்ல. எனவே அது என்னவாகத்தான் இருக்கிறது? மரித்துப்போன ஒரு காரியமாயிற்றே! அவைகள் அவற்றின் நாமமல்ல. ஆனால் அந்த மரித்த பட்டங்களின் மூலமாக…

75168 கிறிஸ்துவின் ஜீவனின் மூலமாக அது வெளிப்படுகிறது. பேதுரு திறவுகோல்களைப் பெற்றிருந்தவனாக…அங்கே அவன் பரலோக இராஜியத்திற்குரிய திறவுகோல்களைத் தன்னுடைய கையில் கொண்டவனாக நின்று கொண்டிருந்தான். இராஜ்யம் என்பது பரிசுத்த ஆவி. இராஜ்யத்தின் திறவுகோல்கள் தன்னுடைய பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தன. வேறு வார்த்தைகளில் கூறினால், வெளிப்பாடாகும், ஏனென்றால் இயேசு அவனிடம் கூறினார். ஓ, சகோதரனே, அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? சத்தியத்தின் வெளிப்பாட்டினால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவனாக பேதுரு இருந்தான். அவன் அங்கே நின்று கொண்டிருந்தபோது, இயேசுவானவர், “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து” என்று கூறினதை பேதுரு கேட்டான். 169 பேதுரு அவர் பக்கமாகத் திரும்பி, “கர்த்தாவே, நிச்சயமாகவே இதற்கான திறவுகோலை நான் பெற்றிருக்கிறேன். அது எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றிய வெளிப்படுத்துதலே நான் பெற்றிருக்கிறேன், ஏனென்றால், பிதா என்பது ஒரு நாமமல்ல, குமாரன் என்பதும் ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவி என்பதும் ஒரு நாமமல்ல என்பதை நான் அறிவேன். ஆனால் அதன் நாமம் என்னவென்பதை நான் அறிவேன்” என்று கூறினான், “எனவே நான் உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானங் கொடுக்கிறேன்.” ஆமென். வ்வூயு! அது சரியே.

76170 இப்பொழுது, இது நீங்கள் ஒரு காதல் கதையை படித்துக் கொண்டிருந்தது போல் உள்ளது. நீங்கள்…அது மத்தேயுவின் புத்தகத்தின் கடைசி அதிகாரம், மத்தேயுவின் கடைசி பாகம், பெண்மணிகளாகிய உங்களில் சிலர், நீங்கள் வாசிக்கும்படியாக ஒரு காதல் கதையைத் தெரிந்து கொண்டு இருப்பீர்களானால்…நீங்கள் அதைச் செய்கிறதில்லை என்பதை நான் அறிவேன், நிச்சயமாக நீங்கள் அதைச் செய்யமாட்டீர்கள்; இல்லை, இல்லை. பார்த்தீர்களா? ஆனால் நீங்கள் ஒரு பாவியாயிருந்தபோது, நீங்கள் அதை செய்தீர்கள், பாருங்கள், நீங்கள் ஒரு கதைப் புத்தகத்தை எடுத்து, வாசிக்கையில், உங்களுக்குத் தெரியும், வாலிபமான பெண்ணாக இருக்கிற காலத்தில் அப்படிப்பட்டவைகளையெல்லாம் வாசித்திருக்கையில், கதையின் இறுதியில் “ஜானும் மேரியும் அதற்குப் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்,” என்று வாசித்திருப்பீர்கள். ஹூ! யார் இந்த ஜானும், மேரியும்? இப்பொழுது ஜானும், மேரியும் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஒரே வழி நீங்கள் கதைப் புத்தகத்தின் முதல் பாகத்திற்குத் திரும்பிச் சென்று அங்கிருந்து படித்துப் பார்க்க வேண்டும். அது சரிதானே? 171 நல்லது, அதைப்போலவே, இயேசுவானவர் மத்தேயுவின் புத்தகத்தின் கடைசியில், கடைசி வசனத்தில், இயேசு, “நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞான்ஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்” என்று கூறினார். எனவே இப்பொழுது, பிதா என்பது ஒரு நாமமல்ல, குமாரன் என்பது ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவி என்பதும் ஒரு நாமமல்ல என்றால், இது என்ன என்று காண இப்புத்தகத்தின் ஆரம்பப் பகுதிக்கு சென்று கண்டறிவதே மேலானதாகும். புரிகிறதா? இப்பொழுது நாம் மத்தேயு சுவிசேஷத்தின் புத்தகம் முதலாம் அதிகாரத்திற்கு திரும்பிச் சென்றால், நீங்கள் இதைக் கண்டறியலாம்.

77172 ஒருக்காலும் இதைக் கண்டுகொள்ளாத சிலர் இங்கு வந்திருக்கக்கூடும், அவர்கள் நிமித்தமாக நான் இந்த பின்வரும் ஒரு சிறு எடுத்துகாட்டின் மூலமாக இதை விவரிக்க விரும்புகிறேன். இதைக் கவனியுங்கள். இதுதான் பிதா, இதுதான் குமாரன், இதுதான் பரிசுத்த ஆவி என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். பிதா குமாரன், பரிசுத்த ஆவி, அதைத்தான் இயேசு மத்தேயு 28:19-ல் கூறினார். அது சரிதானே? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. இப்பொழுது இது யார்? பிதாவா? சபையோரோ கவனியுங்கள். பிதா, பரிசுத்த ஆவி, குமாரன் இப்பொழுது இது யார்? பரிசுத்த ஆவி. இது யார்? [சபையார் “பிதா” என்று பதிலளிக்கின்றனர்—ஆசி.] இது யார்? [சபையார் “குமாரன்” என்கின்றனர்—ஆசி.] குமாரன் சரி. இப்பொழுது இவர் யாருடைய பிதாவாயிருந்தார்? இயேசு கிறிஸ்துவின். அது சரிதானே? 173 இப்பொழுது நாம் மத்தேயு 1-ம் அதிகாரம் 28 வசனம், நாம் அதை வாசிப்போம். நாம் இப்பொழுது இந்த காதல் கதையை எடுத்துக்கொண்டு அது என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம். அவர், “நீங்கள் புறப்பட்டுப் போய் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று கூறினாரே, இந்த நபர் யார்—இந்த நபர் யாராயிருந்தார் என்று நாம் பார்ப்போம். சரி. இப்பொழுது, மத்தேயு 1-ம் அதிகாரம் வம்ச வரலாற்றுடன் துவங்குகிறது: ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்… 174 இவ்வாறு வம்ச வரலாறு தொடர்ச்சியாக 18-ம் வசனம் முடிய தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. இப்பொழுது, நீங்கள் முன்னால் உள்ள இங்கே 17-ம் வசனத்தை படித்துப் பாருங்கள் … இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்: தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்: பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலை முறைகளுமாம். இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில்… 175 என் பின்னே நீங்கள் இதை வாசித்துக் கொண்டு வருகிறீர்களா? கூர்ந்து கவனியுங்கள். …அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பிதாவாகிய தேவனால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 176 அங்கே இவ்விதமாகவா எழுதப்பட்டுள்ளது? யாரால் கர்ப்பவதியானாள்? [சபையார் “ பரிசுத்த ஆவியினால் ” என்று பதிலளிக்கின்றனர்—ஆசி.] இது முதலில் பிதாவாயிருந்தவரே அவருடைய பிதாவா என்று சிலர் கூறினர் என்றே நான் நினைத்தேன். பரிசுத்த ஆவியானவர் ஒரு தனி நபர் என்றும், பிதா வேறொரு நபர் என்றும் இருக்குமானால், அப்பொழுது அவர் இரண்டு பிதாக்களை உடையவராக இருந்தார் என்றாகிவிடுகிறதே. நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? அது முறை தவறிப் பிறந்த பிள்ளை என்றாகிவிடுமே, “ஓ” நீங்கள், “அவர்கள் தவறுதலாக அவ்வாறு அச்சுப்பிழையாக அடித்துவிட்டனர்” என்று கூறுவீர்கள். சரி. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே: அவளிடத்தில் உற்பத்தியாருக்கிறது … [சபையார் “பரிசுத்த ஆவியினால் உண்டானது” என்று கூறுகின்றனர்—ஆசி.]

78177 “சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.” புரிகிறதா? உ—ஊ. பரிசுத்த ஆவியானவர் அவருடைய பிதாவாயிருந்தார். அவர், “தேவன்” தனது பிதாவாயிருந்தார் என்று கூறினார். இப்பொழுது அவர்கள் இருவரும் இரு வெவ்வேறு நபர்கள் என்றிருக்குமானால், இவர்கள் இருவரில் யார் இயேசுவின் பிதாவாயிருந்தது? நீங்கள் உங்களையே புரியாமல் குழப்பிக்கொள்வீர்கள். அப்பொழுது நீங்கள் ஒன்றுமே புரியாத நிலையில் இருந்து கொண்டிருப்பீர்கள். புரிகிறதா? இப்பொழுது நீங்கள் இங்கே பரிசுத்த ஆவியானவர் தேவன் தாமே என்று கூறத்தான் வேண்டும். பரிசுத்த ஆவியானவர் தேவனாயிருக்கிறார். (இப்பொழுது நீங்கள் மூன்று நபர்களுக்கு பதிலாக இரண்டு நபர்களைப் புரிந்துகொண்டீர்கள்.) சரி. 178 சரி, 21-ம் வசனம்: …அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது… (அவளிடத்தில் இதை ஜெநிப்பிக்கச் செய்தது யார்? பரிசுத்த ஆவியானவர். சரி.) அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; (நாமம்), ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.

79179 அவரது நாமம் என்னவாயிருந்தது? இப்பொழுது, பின்னர் எப்போதும் சந்தோஷமாக வாழ்ந்த ஜானும் மேரியும் யார்? பிதா, குமாரன், பரிசுத்த் ஆவியின் நாமமானது என்ன? இயேசு பூமியில் பிறந்தபோது, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவாக இருந்தார். அவர் விருத்தசேதனம் செய்யப்பட்ட (எட்டாம் நாளில்) அவரது தாயார் அவருக்கு பெயர் சூட்டினாள். அவரது தகப்பன் “இயேசு” என்று நாமத்தை அவருக்கு சூட்டினார். அப்பொழுதிலிருந்து அவர் இயேசு கிறிஸ்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாயிருந்தார். 180 அவர் கர்த்தராயிருந்தார்! அவர் பிறந்தபொழுது, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவாக இருந்தார். அதன்பிறகு, அவர் தனது நாமமாகிய “இயேசு” என்ற நாமத்தைப் பெற்றுக் கொண்டபோது, அது அவரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக்கினது. அதுவே சரியாக பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்டது, அவர், “நீங்கள் போய் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று கூறினபோது, ஜானும் மேரியும் யாராயிருந்தனர் என்பதை அறிந்து கொண்டதைப் போல பேதுரு அறிந்து இருந்தான். பேதுருவுக்கு வெளிப்பாடுகளின் வரம் இருந்ததை இயேசு அறிந்திருந்தபடியால் அது வெளிப்படுத்தப்பட்டது. அது பரத்திலிருந்த ஆவியினால் அவனுக்கு ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டிருந்தபடியால், அவன் அதை அறிந்திருந்தான். ஒரு மனிதனால் உன்னதத்திலிருந்து வரும் வெளிப்படுத்துதல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தேவன் காண்கையில் அவர் அந்த மனிதனில் நம்பிக்கை வைத்து, அவனோடு ஏதொரு காரியம் செய்ய முடிகிறது. அது அவனுக்கு வெளிப்படுத்தப்படும்போது, காரணம் அவர், “பிதா தவிர வேறு எவரும் இதை வெளிப்படுத்த முடியாது” என்று கூறினார். தேவன் ஒருவர் மாத்திரமே அதை வெளிப்படுத்த முடியும். பேதுரு ஆவியானவரோடு தொடர்பு கொண்டிருப்பவன் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே, அவன்… 181 பேதுரு அந்த வெளிப்படுத்துதலை அறிந்திருந்தான். எனவே தான், அவன் எழும்பி நின்று, “நீங்கள் மனந்திரும்பி, பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினான்.

80182 இப்பொழுது, அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான், இயேசு பேதுருவிடம், (அவர் யாராயிருந்தார் என்ற வெளிப்பாட்டை அவன் பெற்றுக்கொண்ட அதே நேரத்தில் அவர் அவனிடம், “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை” என்று கூறினார்), “நீ பேதுருவாய் இருக்கிறாய், நான் உனக்குத் திறவு கோல்களைக் கொடுப்பேன்” என்றார். ஓ! “இராஜ்ஜியத்திற்குரிய திறவுகோல்கள்! நான் உனக்குத் திறவுகோல்களைத் தருவேன். நீ பூலோகத்தில் கட்டுவது எதுவோ அதை நான் பரலோகத்தில் கட்டுவேன். நீ பூலோகத்தில் கட்டவிழ்ப்பது எதுவோ, அதை நானும் பரலோகத்தில் கட்டவிழ்ப்பேன்” என்றார். 183 இயேசு, “நீங்கள் புறப்பட்டுப் போய், பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானங் கொடுத்து” என்று கூறியதை பத்து நாட்களுக்கு பிறகு சபையின் துவக்க நாளான பெந்தெகொஸ்தே நாளிலே, பேதுருவும் ஆவிக்குரிய வெளிப்படுத்துதலினாலே, வெறுமனே: “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம்” என்ற அப்படிப்பட்ட ஒன்று கிடையாது என்பதை அறிந்திருந்தான், கத்தோலிக்க காலம் வரைக்கிலும் அப்படிப்பட்ட தொன்றை எவருமே சிந்தித்தது கிடையாது. “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே” என்று ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு நபரும் உண்மையாகவே கத்தோலிக்க விசுவாசத்தில் தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள், (அது உண்மையே) அது கிறிஸ்தவ ஞானஸ்நானம் அல்லவே அல்ல. மீதியானவர்கள்…

81184 இப்பொழுது, பெந்தெகோஸ்தே நாளில், அவர்கள் யாவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார்கள்: அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசிக் கொண்டிருந்தார்கள்: அவர் நடந்து கொண்டவிதம் குடித்தவர்களைப்போல் இருந்தது. அவர்கள் குடித்திருந்தார்கள், அவர்கள் புதிய திராட்சரசத்தைப் பருகியிருந்தனர். அது உன்னத கானானகிய பரலோகத்திலிருந்து வந்திருந்த புதிய திராட்சரசமாகும். அவர்கள் யாவரும் கூக்குரலிட்டுக் கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும், அவர்கள் குடித்திருந்தவர்களைப் போல நடந்து கொண்டிருந்தபோது, பேதுரு அவர்கள் மத்தியில் எழும்பி நின்று, அவர்களிடத்தில், “நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல. ஆனால் அவர்கள்—அவர்கள்… தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. ‘அவர் தம் ஆவியை ஊற்றுவேன்’ என்று உரைத்தபடியே நடந்ததாகும் இது” என்று கூறினான். 185 அப்பொழுது அவர்கள்—அவர்கள், “சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்? சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள், அதுவே கேள்வியாயிருந்தது. “அதை நாங்கள் எவ்வாறு பெறப்போகிறோம்? யாரிடம் திறவுகோல்கள் உள்ளன?” 186 “சீமோனே இங்கே வா. நீ திறவுகோல்களை வைத்திருக்கிறாய், அவைகளை உன்னுடைய பக்கவாட்டிலிருந்து எடு. நீ என்னக் கூறப் போகிறாய்? இப்பொழுது நினைவிருக்கட்டும், இயேசு கிறிஸ்து, ‘நீ பூலோகத்தினால் கட்டுகிறது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். நீ பூலோகத்திலே கட்டவிழ்ப்பது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்’ என்று கூறினாரே, அவர் தேவனாயிருக்கிறபடியால், அவர் தனது வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டும்.”

82187 இப்பொழுது கத்தோலிக்க குருமார்களாகிய நீங்கள் உங்களுடைய, “பாவமன்னிப்பை” எனக்குக் காண்பியுங்கள். ஒரு சமயம் ஒரு கத்தோலிக்க குரு என்னிடம், “‘எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவைகள் மன்னிக்கப்படும்’ என்று இயேசு கூறவில்லையா?” என்று கேட்டார். அப்பொழுது நான், “அவர் அதைக் கூறினார்” என்றேன். மேலும் அவர் “எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ. அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் அல்லவா?” என்றார். அதற்கு நான் “ஆம்” என்றேன். “அது எவர்களுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவர்களுக்கு மன்னிக்கப்படும். எவர்களுக்கு நீங்கள் மன்னியாதிருக்கிறீர்களோ, அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்” என்றார். அப்பொழுது நான் “அது தான் சரியாக அவ்வாறே கூறப்பட்டுள்ளது” என்றேன். அதற்கு அவர், “கிறிஸ்து தனது சபைக்கு, அவருடைய சபையாயிருக்கிற நமக்கு பூமியிலே பாவங்களை மன்னிக்கிறதற்கான அதிகாரத்தை கொடுக்கவில்லையா?” என்று கேட்டார். 188 அதற்கு நான், “நிச்சயமாகவே அவர் அவ்வாறு கூறினார்” என்று பதிலுரைத்தேன். மேலும் நான், “இப்பொழுது, அப்போஸ்தலர்கள் அவர்களை மன்னித்தவண்ணமாகவே நீங்களும் செய்தால், நான் உங்களுடன் கூடச் செல்லுவேன்” என்றேன். ஆம். நான் தொடர்ந்து, “அவர்கள் எவ்வாறு அவர்களின் பாவங்களை மன்னித்தார்கள்? அவர்கள் இவர்களிடம், போய் ‘ஒரு நோன்பு அல்லது ஏதோ ஒரு காரியத்தைச் செய்யுங்கள்’ அல்லது ‘நீங்கள் செய்கிறவிதமாக செய்யுங்கள்’” என்று கூறினார்களா?

83189 இல்லை ஐயா. பேதுரு, “மனந்திரும்புங்கள்!” என்றான். ஆமென். திறவுகோலோ, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்பதாயிருக்கிறது. இதைப் பேதுரு கூறியபொழுது, திறவுகோலானது “க்ளிக்” என்று திறந்தது, பரலோகத்திலும் அவ்வாறு “க்ளிக்” என்று திறந்து கொடுத்தது. அதுதான் அந்த திறவுகோலாகும். 190 அந்தக் காரணத்தினால் தான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்த அதே மனிதனால் ஏற்கனவே ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்த சிலரை பவுல் சந்தித்தபொழுது, “நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விபடவேயில்லை” என்றனர். அப்பொழுது அவன், “ எந்த… ” என்றான். நீங்கள் உங்களுடைய கிரேக்க வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள், “நீங்கள் எவ்வாறு ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்களோ, “யோவான் கொடுத்ததை…” என்றார்கள். அப்பொழுது அவன், “அது இனிமேல் கிரியை செய்யாது. அதற்குப் பரலோகம் அடைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வந்து ‘இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்’ ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும்” என்று கூறினான். 191 எனவே இதை அவர்கள் கேட்டபொழுது, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். அவர்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபோது, பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தான், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார், அவர்களும் அந்நிய பாஷைகளில் பேசி, தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். 192 ஓ, சகோதரனே, அது ஆதி நிலைக்கு திரும்பிச் செல்லுதலாகும். அதுவே சரியானதாகும். அதுதான் இங்கே வைக்கப்பட்டுள்ள “திறந்த வாசலாகும்.” பூகோள ரீதியாக அது சரியாக சாயங்கால வெளிச்சங்களின் வேளையாக இருக்கிறது. வேதத்தில் உள்ள ஒவ்வொரு வேத வாக்கியமும் சரியாக அதற்கு வழி நடத்துகிறது.

84193 இங்கே மணிக்கணக்கில் நாம் நின்று கொண்டிருக்க முடியும். எனக்கு இன்னமும் பதினைந்து நிமிடங்கள் உள்ளன. எனக்கு இன்னும் ஏறக்குறைய முப்பத்தைந்து வெவ்வேறு கருத்துரைகளை இங்கே கொடுக்க வேண்டியுள்ளது. இன்றிரவில் நாம் அவைகளை பார்க்க முடியாவிடில், நாம் பார்க்கவில்லையென்றால், அப்பொழுது நாம் அவைகளை காலையில் பார்க்கலாம். சரி. 194 இப்பொழுது சரி: உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே …(சரி) …அதை ஒருவனும் பூட்டமாட்டான். 195 நாம் அதைப் பெற்றுக்கொண்டோமே! “என்னுடைய நாமத்தை மறுதலிக்கவில்லை.” நாமம் வெளிப்படுத்தப்பட்டது, முந்தைய சர்தை பழைய செத்த ஸ்தாபனத்தினின்று விடுபட்டு, ஜீவிக்கிற சபைக்குள் வந்துவிட்டிருந்தது. 196 இப்பொழுது, நாம் 9-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். இப்பொழுது நாம் கவனிக்கப் போகிறோம், நாம் மிகவும் ஆபத்தான ஒரு காரியத்திற்குள்ளாக வந்து கொண்டிருக்கிறோம். இதோ யூதரல்லாதிருந்தும் தனக்ளை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்து கொள்ளும்படி செய்வேன். 197 அது முழு இரவும் பேசக்கூடிய விஷயமாயிருக்கிறது. கவனியுங்கள்! அவர்கள் இப்பொழுது என்னவாயிருக்கிறார்கள்? அவர்களோடு அவர் பேசி, அவரது நாமத்தை அவர்கள் கண்டுகொண்ட இந்த காலத்திற்கு பிறகே, இக்காலத்தில் தான் இங்கே “திறந்த வாசலுக்குள்” வந்து இயேசு கிறிஸ்துவை (ஜீவ வார்த்தைப் பெற்றுக்கொண்டு, பரிசுத்த வார்த்தை ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கின்றனர்.) இப்பொழுது, அவர், “சாத்தனுடைய கூட்டத்தார் உங்களுக்கு மத்தியில் இருக்கிறார்கள்” என்றார்.

85198 இப்பொழுது, என் சகோதரனே! வெளிப்படுத்தின விசேஷம் 2:31-ல் பெர்கமு சபைக்கு நீங்கள் ஒரு நிமிடம் திரும்பிச் சென்றால், உண்மையாகவே அது என்ன என்பதை, அதாவது அது ஸ்தாபனம் என்பதை நான் இங்கே உங்களுக்கு காண்பிப்பேன். உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும்…அறிந்திருக்கிறேன். 199 அங்கேதான் காரியமே உள்ளது. அந்த லவோதிக்கேயா…அல்லது அந்த நிக்கொலாய் மதஸ்தரின் சபைக்காலமான அக்காலத்தில் அவர்கள் மதஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டுவிட்டார்கள். கவனியுங்கள், அவர்கள் ஒரு சபையை, ஒரு கூட்டத்தை, ஒரு சபையை, ஒரு சபை ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டதையேக் காண்பிக்கிறது. ஓ, சகோதரனே! “சாத்தானின் கூட்டம்.” அப்படியானால் ஸ்தாபனத்தின் கிரியைகள் பிசாசினால் உண்டாயிருக்கிறதே! அவர்கள் கிறிஸ்தவர்களல்ல, இப்பொழுது அதை நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் கிறிஸ்தவர்களாயிருக்கின்றனர். ஆனால் ஸ்தாபனமாகவே இருக்கிறார்கள். சரி. 200 இப்பொழுது, “உன் நடுவில் தங்களை யூதரென்று கூறிக்கொள்ளுகிறவர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் பொய்யரென்று கண்டறிந்தாய்” என்று அவர் கூறியதை நீங்கள் கவனித்தீர்களா?

86201 இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். இந்த மகத்தான தூதன்…இப்பொழுது அவர் யாரிடம் இதைப் பேசிக்கொண்டிருக்கிறார்? இந்த கடைசி சபைக்கு, இந்த இரண்டு சபைகளுக்கு இடையே இந்த திறந்த வாசலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 202 இப்பொழுது, முதலாம் சபைக்காலமானது யாரால் போதிக்கப்பட்டிருந்தது? பவுல், நாம் இப்பொழுது ரோமர் 2:29-க்குப் போவோம், அப்பொழுது யூதன் என்னப்பட்டவனைக் குறித்து நான் கூறுவது எனது சொந்தக்கருத்தல்ல என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளும்படியாக ஒரு யூதன் என்னவாயிருக்கிறான் என்று பார்ப்போம். ரோமர் 2-ம் அதிகாரம், 29-ம் வசனம், ரோமர். சரி இங்கே நாம் பார்ப்போம்: உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்: இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது. 203 ஒரு யூதன் என்னவாக—என்னவாக இருக்கிறான்? ஒரு ஆவியால், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட கிறிஸ்தவனே! “அவர்கள் ‘பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறார்கள்’ என்று கூறுகிற பரிசுத்தமாக்குதலின் காலத்திற்குப் பிறகு உள்ள காலத்திற்கு நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் அவன் அதைக் கூறினான், நான் ஒருபோதும் கூறவில்லை” என்கிறார். அடையாளங்கள் பின்தொடாராமல் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாக அவர்கள் கூறிக்கொண்டனர். ஆனால் அவரோ, “அவர்களை ஒரு பொய்யர்” என்று கூறுகிறார். “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன” அவரைப் பொய்யராக்க முடியாது. ஓ, சகோதரனே! அது உங்களை சுற்றி, சுற்றி குருடாக்குகிறது. புரிகிறதா? ஓ, என்னே! இதோ, யூதரல்லாதிருந்தும், தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் … (“அவர்கள் தாங்கள் ‘ஆவியினால் நிரப்பப்பட்ட கிறிஸ்தவர்கள்’ என்று தங்களைக் குறித்து கூறிக் கொள்ளுகின்றனர். அவர்கள் சாத்தானுடைய கூட்டத்தார், ஸ்தாபன சபையைச் சேர்ந்தவர்களாவர், அவர்கள் ‘பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டதாக’ நான் அவர்களைக் கூறும்படிச் செய்வேன். அவர்களை எல்லோரையும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளச் செய்வேன். அவர்கள் இன்னும் வெளிப்பாட்டை பெற்றுக்கொள்ளவில்லை!” புரிகிறதா? சரி.)… தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய …(அவர்கள் தங்களை கிறிஸ்தவர்களென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்) … சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன், இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன் மேல் அன்பாயிருக்கிறதை அறிந்து கொள்ளும்படி செய்வேன்.

87204 சரியாக இங்கே இந்த இடத்தில் உள்ள செய்தியானது, காலை அளிக்கப்போகும் என்னுடைய செய்தியோடு வந்து இணைகிறது. அதுவே அங்கேதானே நித்திரை செய்யும் கன்னியர்களாய் இருக்கின்றனர். உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறதா? அது எப்பொழுது இருந்தது? கடைசி காலத்திலே. ஓ, அவர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இங்கேயே…பாருங்கள்? அவர்கள் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டுள்ளனர், பரிசுத்தமாக்கப்பட்டனர். லூத்தரினுடைய செய்தியினூடாக நீதிமான்களாக்கப்பட்டு, இங்கே இக்காலத்தினூடாக பரிசுத்தமாக்கப்பட்டுள்ளனர், ஆனால் “திறந்த வாசலை” அவர்கள் கண்டு கொள்ளத் தவறிவிடுகின்றனர். அதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? லூத்தரினூடாக விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்; வெஸ்லியினுடைய காலத்தினூடாக பரிசுத்தமாக்கப்படுதல். 205 அவர்களில் அநேகர் விலையேறப் பெற்ற நசரேயர், யாத்திரீக பரிசுத்தர், வெஸ்லியின் மெதோடிஸ்டு போன்றவர், அவர்கள் எல்லோருமே ஒரு நல்ல, சுத்தமான ஜீவியத்தை, பரிசுத்தமாக்கப்பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள், அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றிருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள்: ஒரு நபர் அந்நிய பாஷைகளில் பேசிவிட்டதை கேட்டுவிட்டு அவனைக் குறித்து எள்ளி நகையாடுகின்றனர், அந்நபரைக் குறித்து பரிகசித்துவிட்டு, “அது பிசாசினால் உண்டானது” என்று கூறிவிடுகின்றனர். சகோதரனே, அதை நீங்கள் செய்தபோது உங்களுடைய அழிவை நீங்களே முத்தரித்துவிட்டீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைத் தூஷணம் செய்துவிட்டீர்கள். அது மன்னிக்கப்பட முடியாதாயுள்ளது. 206 நல்லது, நீங்கள், “நாங்கள் முதல் சபையைச் சேர்ந்தவர்கள்” என்று கூறுகிறீர்கள். நீங்கள் எத்தனை சபைகளைச் சேர்ந்திருந்தாலும் அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. கூட்டவோ குறைக்கவோ முடியாத தேவனுடைய வார்த்தைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. “சாத்தானுடைய கூட்டம்” என்பது உண்மை!

88207 நான் உங்களை புண்படுத்திவிடவில்லை என்று நம்புகிறேன். நான்—நான் இவ்விதமாக பேச வெறுக்கிறேன், ஆனால் அங்கே—எனக்குள்ளாக ஒன்று இதைச் செய்திட என்னை நெருக்கி ஏவுகிறது. நான் ஏன் இவ்வாறு செய்கிறேன் என்று எனக்கும் தெரியவில்லை. நான் அவ்வாறு பேசிட விரும்புகிறதில்லை என்பதை நீங்களே அறிவீர்கள். நான் அவைகளைக் கூறுகையில் மிகவும் மோசமாக உணருகிறேன். ஆயினும் அதே சமயத்தில் நான் அதைக் கூறியாக வேண்டியதாயுள்ளது. அங்குள்ள ஏதோ ஒன்று என்னை அதை கூற வைக்கிறது. ஸ்திரீகளைக் கடித்துகொள்வதை எப்பொழுதும் வெறுத்துள்ளேன், நான்—நான் அவ்வாறு உணருகிறேன்…ஒரு ஸ்திரீயானவள் அழுதுவிட்டால், நான் பயங்கரமாக உணருகிறேன். நான் ஸ்திரீகளை கடிந்துகொள்வதை வெறுக்கிறேன், ஆனால் ஏதோ ஒன்று என்னுள் அதைச் செய்ய வைக்கிறது. புரிகிறதா? ஒரு ஒழுக்கக்கேடான ஸ்திரீயைக் கண்டால் (ஓ, என்னே!) என்னால் அதை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. ஏனெனில் எனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று, தவறானவைகளுக்கு எதிராக என்னை பேச வைக்கிறது. அதுதான் பரிசுத்த ஆவி. 208 நான் இங்கே வார்த்தையில் உற்று நோக்கி, நான், “கர்த்தாவே, நான் தவறாக இருந்தால், அதை எனக்குக் காண்பியும், நான் அவ்வாறு தொடர்ந்து செய்துகொண்டே போகவிடாதேயும். ஜனங்கள்…நான்…நான் ஜனங்களை நேசிக்கிறேன், நான் நேசிப்பதை நீர் அறிவீர். தேவனே, நான் யார் மனதையும் புண்படுத்த என்னை விடாதேயும், நான் வேண்டுமென்றே அவ்வாறு செய்திட விரும்பமாட்டேன் என்பதை நீர் அறிவீர்” என்று எண்ணியே ஜெபிக்கிறேன். 209 ஆனால் பரிசுத்த ஆவியானவர், எழுந்து நின்று, “அந்த வார்த்தையில் நில்! அங்கே நிலைத்திரு! அந்த வார்த்தையின் பேரில் அங்கேயே நிலைத்திரு!” என்று கூறுகிறார். 210 அதற்கு நான், “சரி, கர்த்தாவே. அது…நீர் என்னுடைய சிறந்த சிநேகிதர். எனக்கு நீர் ஒருவர்தான் உண்டு…நீர் என்னுடைய உண்மையான நண்பர், நீர் ஒருவர்தான், இந்த வாழ்க்கை மங்கிப்போகையில், எனக்கு உதவி செய்கிறவராக இருக்கிறீர். எனவே நான் அப்பொழுது, உம்மோடு கூட நிற்பேன், கர்த்தாவே” என்று கூறுகிறேன். 211 இதோ நான் பின்பற்றி வருகிறேன். நான் எவரையுமே புண்படச் செய்யும் நோக்கங்கொண்டிருக்கவில்லை. ஸ்தாபனங்களையும் அவற்றின் காரியங்களையும் குறித்து நான் கண்டனம் பண்ணி கடிந்து கொள்கையில், தயவு கூர்ந்து என்னைத் தவறாக நினைத்திடாதிருங்கள். இதைக் குறித்து நான் எதையும் அறியும் காலத்திற்கு முன்னரே, என் வாழ்நாள் முழுவதும் நான் அதைக் குறித்து கடிந்துரைத்திருக்கிறேன். ஸ்தாபனங்களை ஒருபோதும் விசுவாசித்ததில்லை, அந்தக் காரணத்தினால்தான் நான் அதனோடு இணைந்து கொள்ளமாட்டேன். சரி. அதிலிருந்து என்னை விலக்கிக் காத்ததற்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.

89இதோ தங்களை ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் என்று கூறியும் அப்படியில்லாதவர்களான பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தனுடைய கூட்டத்தாரில் சிலரை …உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து கொள்ளும்படி செய்வேன்… 212 நித்திரை செய்த கன்னிகைகள் எப்பொழுது நித்திரையை விட்டு எழும்பினார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொண்டுள்ளீர்களா? இப்பொழுது நினைவிருக்கட்டும், அவள் என்னவென்று அழைக்கப்பட்டாள்? அவர்கள் பத்துபேர் மணவாளனை சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அது சரிதானே? அவர்களில் ஐந்து பேர்கள் புத்தியுள்ளவர்களாய், தங்கள் தீவட்டிகளில் எண்ணெயைக் கொண்டிருந்தனர். வேதாகமத்தில் எண்ணெயானது எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? எண்ணெய் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. இப்பொழுது எவருமே, “பத்துக் கன்னியரைக் குறித்து, நீங்கள் பரிசுத்தமாக்கப்படவில்லை, நான்…” என்று கூறிட முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும், பரிசுத்தமாக்கப்பட்டேயிருந்தனர். அவர்கள் அனைவரும் பரிசுத்தமாக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் ஐந்து பேர் (வெளிப்படுத்துதலின் ஞானத்தைப் பெற்றுக் கொள்வதற்கும்) வாசலை அடைவதற்கு, பாருங்கள், ஆவியினால் நிரப்பப்பட்டு போதிய ஞானமுள்ளவர்களாயிருந்தனர். அவர்கள் தங்கள் தீவட்டிகளில் எண்ணையை உடையவர்களாக இருந்தனர். மற்றவர்களோ எண்ணெய் இல்லாமலிருந்தனர். அவர்கள் அனைவரும் நித்திரை தெளிந்து எழுந்தபோது அவர்கள் இவர்களிடம் வந்து, “ஓ! ஓ! உங்களுடைய பரிசுத்த ஆவியை, எண்ணெய்யை எனக்குக் கொடுங்கள். எனக்கும் கொஞ்சம் கொடுங்கள்” என்று கேட்டனர். 213 இவர்களோ, ஆம், “மன்னிக்கவும் சகோதரி, எனக்குப் போதுமான அளவுதான் என்னிடம் உள்ளது. உங்களுக்கு கொடுப்பதற்கு நிச்சயமாகவே உபரியாக என்னிடம் இல்லை” என்று கூறினார்கள்.

90214 எனவே…அப்பொழுது…அவர் “போய் ஜெபியுங்கள்” என்று கூறினார். அவ்வாறு அவர்கள் போய் கொஞ்சம் எண்ணெயை பெற்றுக்கொள்ளப் போயிருக்கையில், மணவாளன் வந்துவிட்டார். உடனே புத்தியுள்ள கன்னியர் கலியாண விருந்துக்காக உள்ளே பிரவேசித்துவிட்டனர். அப்பொழுது புத்தியில்லாதவர்கள் கைவிடப்பட்டனர், அவர்கள் உபத்திரவக் காலத்தினூடாக செல்வார்கள்… இன்னும் கொஞ்சம் கவனித்து, மேற்கொண்டு வரும் இரு வசனங்களைப் படித்தால், அவர்கள் நேராக உபத்திரவ காலத்திற்குள் செவதை நீங்கள் காணலாம். புரிகிறதா? 215 இப்பொழுது நித்திரை செய்யும்…நாம் அதை நாளை காலையில் எடுத்துக் கொள்வோம். ஆம். நாம் அதற்காக காத்திருந்தால் சற்று நலமாயிருக்கும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் நான் இங்கே இப்பொழுது ஏறக்குறைய முடித்துக்கொண்டிருக்கிறோம்.

91216 இப்பொழுது நாம் காண்போமாக: இதோ, நான்… அவர்கள் அவர்களிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்றும் அவர்கள் பொய்யரென்றும் கண்டறிந்தார்கள். 217 நாம் இங்கு கூடியிருக்கையில், ஒரு சிறிய காரியத்தை தயவு செய்து பார்ப்போம். நான் நேற்றிரவு கூறியதுபோல, யூதாஸ்காரியோத்து கேட்டின் மகனாக இருந்தான். வேதம், “அவன் கேட்டின் மகனாகப் பிறந்தான்” என்று உரைத்துள்ளது. அப்பொழுது அவன்…இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாகப் பிறந்தார். அப்பொழுது தேவன் கிறிஸ்துவில் வாசம் பண்ணினார். அது சரியல்லவா? சாத்தான் யூதாஸில் வாசம் பண்ணினான். இயேசு தேவனுடைய குமாரனேயானால், தேவனுடைய குமாரனாக பிறந்திருந்தால், மாம்சத்தில் பிறந்த தேவனுடைய குமாரனேயானால்; அப்பொழுது சாத்தானானவன் கேட்டின் மகனாகப் பிறந்திருந்தான். கேட்டின் மகனாக, பிசாசாகிய சாத்தான் மனித உரு எடுத்திருந்தான்.

92218 இப்பொழுது, அவனும், இயேசுவோடு தன்னை இணைத்துக் கொண்டு அவருடைய கூட்டத்தாரில் ஒருவனானான் என்பதை நீங்கள் கவனித்தீர்களானால் நலமாயிருக்கும். புரிகிறதா? இப்பொழுது, அவன் அதைச் செய்யக்காரணம் என்னவெனில், இந்த நாளுக்குள் சபையில் அவன் மீண்டும் நுழைந்து, அதே வஞ்சத்தை உள்ளே நுழைத்து விட அவன் விரும்பியதே காரணமாகும். இப்பொழுது, இயேசு, “அவர்கள் சாத்தானுடைய கூட்டத்தார்” என்றார். ஓ, என்னே! அது மனதில் பதிந்ததா? அவர்கள் சாத்தானுடைய கூட்டத்தாராயிருகின்றனரே! அதுவே கிறிஸ்தவனாயிருக்கும்படி பாவனையால் நடிக்கும் யூதாஸாய் உள்ளது. 219 யூதாஸின் முக்கியமான காரியமாய் இருந்தது எது? அது பணமாக இருந்தது. இன்றைக்குள்ள இந்த ஏராளமான காரியங்களின் மிகப்பெரிய இழுப்பெல்லாம் பணமாகத்தான் இருக்கிறது. அசெம்பளீஸ் ஆஃப் காட் சபையினரைப் பாருங்கள், அவர்களுடைய சபைக் கட்டிடத்தை அறுபது இலட்சம் டாலர் செலவில் இங்கே கட்டி முடித்திருக்கிறார்கள். “கர்த்தருடைய வருகை சீக்கிரமாய் இருக்கிறது” என்றும் போதிக்கிறார்கள். “ஓ, அணுகுண்டுகளோ யாவற்றையும் அழிக்க ஆயத்தமாக தலைக்குமேல் தொங்கிக் கொண்டு இருக்கின்றன,” ஆனால் அவர்களோ இலட்சம் டாலர்கள் செலவில் அக்கட்டிடத்தை தட்டியுள்ளனர். ஓ, என்னே. ஐஸ்வரியவான்களாகவும், ஒன்றும் குறைவுபடாதவர்களாயுமிருக்கின்றனர்…கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு நாம் அதைப் பார்ப்போம்.

93220 இப்பொழுது இங்கே கவனித்துப் பாருங்கள், ஓ, சபைக் கட்டிடங்களை, எவ்வளவு பெரிதாக இந்த ஸ்தாபனங்கள் கட்டியெழுப்பியுள்ளன என்பதை பாருங்கள். அவர்கள் தங்கள் பணத்தையெல்லாம் ஒரு பொது நிதியாக சேர்த்து வைத்திருக்கிறார்கள்…ஓ, இரக்கம்! அவர்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள். அவர்கள் நிதியுதவி செய்யும்…கடன் வழங்கும் சங்கங்களைக் கூட தங்களுக்குள் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள், சபைகள் கடன் வழங்குவதைக் கூட செய்து வருகின்றன. சகோதரரே, அது அப்போஸ்தல ஊழியம் போல் எனக்கு தோன்றவில்லை. 221 பேதுரு, “என்னிடத்தில் வெள்ளியும் பொன்னுமில்லை. ஆனால் என்னிடத்தில் உள்ளதை நான் உனக்கு தருகிறேன்” என்றான்…உனது பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு அதை எனக்கு தந்துவிடு. அதுவே சரியானது. “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை. என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன்: இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்…” அதைத்தான் அவன் உடையவனாயிருந்தான், அந்த நாமத்தைக் குறித்த வெளிப்பாடு. “நான் உனக்குத் தருகிறேன்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எழுந்து நட” என்றான்.

94222 சரி, இப்பொழுது, இங்கே நாம் அவர்கள் யாவரும் “சாத்தனுடைய கூட்டத்தார்” என்று கண்டு கொண்டோம். இப்பொழுது அவர்கள் எவ்வாறு அப்படி இருக்க முடியும்? இப்பொழுது, யூதாஸானவன் வந்த பொழுது…இப்பொழுது கவனியுங்கள்! கிட்டத்தட்ட இயேசுவானவர் காட்சியில் தோன்றின அதே சமயத்தில் யூதாஸும் காட்சியில் தோன்றினான். நீங்கள் அதை கவனித்தீர்களா? இயேசு காட்சியை விட்டு மறந்த அதே வேளையில்தான், யூதாஸும் காட்சியை விட்டு மறைந்தான். பரிசுத்த ஆவி திரும்ப காட்சியில் தோன்றிய அதே சமயத்தில்தான், யூதாஸும் மீண்டும் காட்சியில் தோன்றினான். அந்தி கிறிஸ்துவின் ஆவி கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியை செய்ய வந்தது, அவர்கள் வேதத்தை மதியாமலும், ஸ்தாபனத்தைப் பற்றி மதிக்கிறவர்களாக மட்டும் இருந்தார்கள். புரிகிறதா? அவர்கள் தங்களுக்கென ஒரு சபை சங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இயேசு இங்கே அதைக் குறித்து, “அது சாத்தானுடைய கூட்ட சபையாக இருக்கிறது” என்றே கூறினார். எங்கே? இங்கே இந்த சபைக் காலத்திற்குள் வந்து அமைகிறது. இங்கே அது எவ்வாறு ஆரம்பித்தது? ஒரு ஸ்தாபனத்தின் மூலமாக. அதே காரியம்தான் இங்கேயும் அது செய்தது. “சாத்தனுடைய ஒரு கூட்டம்.” நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா? 223 “சாத்தானுடைய கூட்டம்,” அவரோ, “அவர்கள் ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளுகிறார்கள்” என்று கூறினார். இப்பொழுது, அவர்களால் எப்படி அவ்வாறு கூறிக்கொள்ள முடிகிறது? 224 யூதாஸ், அவன் இங்கே பூமியில் இருந்தபொழுது, இயேசுவை அவன் சந்தித்து, தான் இயேசுவில் விசுவாசம் கொண்டுள்ளவன் என்ற ஒரு அறிக்கையை அவன் செய்து, அவருடைய கூட்டத்தில் ஒரு பொக்கிஷதாரியாகி, பணத்தையெல்லாம் சுமந்து கொண்டிருந்தான், அது சரிதானே? நீங்கள் யாவரும் அதை அறிவீர்கள். இப்பொழுது, அவன் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்திருந்தானென்றால், அவன் (போலியாக) நீதிமானாக்கப்படுதலை ஏற்றுக் கொண்டான். அப்படித்தானே? ரோமர் 5:1-ல் “…விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்…” அது சரி. சரி.

95225 இப்பொழுது இன்னொரு காரியம் பரிசுத்த யோவான் 17-17-ல் இயேசு அவர்களை சத்தியத்தினால் பரிசுத்தமாக்கினார். அவர், “உமது வசனமே சத்தியம்” என்று கூறினார். அவரே வார்த்தையாக இருந்தார். 226 அவர் சீஷர்களுக்கு அசுத்த ஆவிகளின் மேல் அதிகாரம் கொடுத்தார்; அவர்கள் புறப்பட்டுப் போய், சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், எல்லாவிதமான அற்புதங்களைச் செய்யவும் அதிகாரங்கொடுத்தார். அவர்கள் ஊழியம் செய்துவிட்டு திரும்பி வந்தபொழுது, யூதாஸும் அவர்களோடு இருந்தான்…இப்பொழுது கவனியுங்கள், நசரயே சபைக்காரர்களே, வெஸ்லியின் மெதோடிஸ்டுகளே! சீஷர்கள் களிகூர்ந்து கொண்டே, மிகுந்த மகிழ்ச்சியோடு தேவனைத் துதித்துகொண்டு, ஆரவாரத்தோடு திரும்பி வந்தார்கள். ஏனெனில் பிசாசுகளும் அவர்களுக்கு கீழ்படிந்திருந்தன. அப்பொழுது இயேசு, “பிசாசுகள் உங்களுக்கு கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டதற்காக மகிழ்ந்து களிகூருங்கள்” என்றார். 227 அவர்களில் யூதாஸூம் ஒருவனாக இருந்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! பாருங்கள், சபையை அவனால் அது வரைக்கிலும் வஞ்சிக்க முடிந்தது. அவர்களோடு ஒன்றாக நின்று கொண்டே, அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் பெந்தெகொஸ்தே நாள் வந்தபொழுது, அவன் தனது சுயரூபத்தைக் காட்டிவிட்டான். அதே காரியத்தைத்தான் அவன் பழமையான மெதோடிஸ்ட்டு சபையில் செய்தான். அதைத்தான் அவன் லூத்தரன் சபையிலும் செய்தான். அதைத்தான் அவன் நசரேய சபையிலும் செய்தான், சர்ச் ஆஃப் காட் சபைகளுக்குள்ளும் மற்றவைகளுக்குள்ளும் செய்தான். அவர்கள் பரிசுத்தமாக்குதல் வரைக்கிலும் வந்து, அதன்பிறகு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு வந்தபொழுது, அந்நிய பாஷைகளில் பேசி, அற்புத அடையாளங்களைச் செய்தலை, அவர்கள் அதைக் கண்டனம் செய்தனர்.

96228 உங்களுக்காக அவர்கள் தெய்வீக சுகமளித்தல் வழி வரைக்கிலும் செல்வார்கள். நிச்சயமாக அப்படித்தான் யூதாஸும் செய்தான். புரிகிறதா? ஆனால் அப்பொழுது…அநேக தெய்வீக சுகமளித்தல் ஊழியங்கள் இருக்கின்றன. அவர்கள் இன்று அந்த ஊழியக்களத்தில் இருக்கிறார்கள், சகோதரனே, அவர்கள் இரண்டு மணி நேரமாக நின்றிருந்து, “ஒரு இரவுக்கு ஐம்பது டாலர்கள் நீங்கள் கொடுக்காவிடில், உங்களுடைய பயிர்கள் எரிந்து போகப்போகிறது” என்று கூறுகின்றனர். அவ்விதமான அநேக காரியங்கள் உள்ளன. அவைகளெல்லாம் பிசாசினால் உண்டானவையாக இருக்கின்றன. நிச்சயமாக அவைகள் அப்படித்தான். நான் என் முழு இருதயத்தோடு தெய்வீக சுகமளித்தலில் விசுவாசங்கொண்டிருக்கிறேன். ஆனால் இவ்விதமான காரியம் பிசாசினால் உண்டானதாக இருக்கிறது, முற்றிலும் அது பிசாசினால் உண்டானதாகும். நீங்கள் எந்த அளவு செய்ய முடியும் என்பதோ அல்லது இன்னும் கூடுதலாக எவ்வளவு செய்ய முடியும் என்பதைப் பற்றியோ கவலையில்லை; ஏனெனில் யூதாஸூம் கூடப் பிசாசுகளைத் துரத்தினான். 229 இயேசு, “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: ‘கர்த்தாவே, கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?’ என்பார்கள்” என்று கூறினார். 230 அப்பொழுது அவர், “நீங்கள் அவைகளை செய்திருந்தால், நான் அதைக் குறித்து ஒன்றுமே அறியேன். அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள், நான் உங்களை ஒருக்காலும் அறியேன்” என்பார். நிச்சயமாக. 231 ஓ, சகோதரனே, “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது: அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” நாம் இந்த “சிலரை” பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஏனெனில் நாம் இருக்கிற இந்த கடைசி காலத்தில் அது மிகவும் கொஞ்சப் பேராகத்தான் இருக்கப்போகிறது. தயவு செய்து என்னுடைய சகோதரர்களே, அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

97232 நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள்…சரியாகக் கூறினால் நான்…அது நானாக இருந்தால்… நான்—நான்…எனக்காக நான் என்னோடு ஒத்துப் போக முடியும், அதாவது, “அசெம்பளீஸ் ஆஃப் காட் அல்லது இன்னொரு இயக்கத்தை நாம் சேர்ந்து கொள்வோம். அவர்களோடு ஒத்துப்போய் விடுவோம்” என்று சொல்லுவேன். ஆனால் ஓ, சகோதரனே, நான் அப்படிச் செய்தால், எனக்கு ஐயோ! எனக்கு ஐயோ! அதைவிட மேலாக நான் அறிந்திருக்கிறேன். அவ்விதமானதொரு காரியத்தை நான் செய்வதற்காக, தேவன் என்னை நரகத்திற்குத் தான் அனுப்புவார். ஆம் ஐயா. நான்…நான் என்னுடைய சாட்சியை என் ஜீவனைக் கொண்டு முத்தரிக்க வேண்டும். நான் அவ்வாறு முத்தரிக்க வேண்டும். அவ்வளவுதான், ஏனெனில் எனக்குள்ளாக ஒரு காரியம் உண்டு, உலகத்தில் உள்ள எந்தக் காரியத்தைக் கொண்டும் என்னால் அதை ஒருபோதும் செய்யவே முடியாது. 233 இது சத்தியமாயிருக்கிறது என்பதை நான் அறிவேன், சத்தியமானது எதுவோ, அதனைக் கொண்டே நான் நின்றாக வேண்டும், வேதமும் அதையே ஆதரிக்கிறது. ஸ்தாபனங்கள் அதற்கெதிராக உள்ளன. ஆனால் அது சரியாயிருக்கிறது என்றே வேதம் கூறுகிறது. “தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன்…” அதுவே சத்தியமாயிருக்கிறது, அது தான் இது, அதோடு நிலைத்திருங்கள்.

98சாத்தனுடைய கூட்டத்தாரில் சிலரை (சரி)…உன் பாதங்களுக்கு முன்பாக வந்து…நான் உன் மேல் அன்பாயிருக்கிறதை…அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்வேன். என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால்…சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். 234 இப்பொழுது கவனியுங்கள், நான் பேசிக் கொண்டிருப்பது இந்த மெதோடிஸ்ட்டின் காலத்தைக் குறித்தல்ல என்பதை காண்பிக்கிறேன். அதே சமயத்தில் இது இரண்டு சபைக் காலங்களுக்கும் இடையில் உள்ள இடைப்பட்ட ஒரு காலமாகும். பாருங்கள்! அதைப் பற்றிக் கேட்க நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? ஒவ்வொருவரும் ஆயத்தமா? இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்: என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால் சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னை காப்பேன். (அந்த சிறு மீதியாயிருக்கிற கூட்டம் அது)… 235 சபையானது நீங்கள் இந்த ஸ்தாபன அமைப்புக்குள் பிரவேசிக்கும் ஒரு இடத்திற்கு வரப்போகிறது அல்லது—அல்லது… நீங்கள்—நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள். சகோதரனே. அப்படித்தான். நீங்கள் ஸ்தாபனத்தை அமைத்துக் கொண்டு மிருகத்தின் முத்திரையை எடுத்துக் கொண்டாக வேண்டும் என்ற நிலை வருகிறது. ஒன்று நீங்கள் ஒரு ஸ்தாபனத்தை அமைத்துக் கொண்டாக வேண்டும் என்ற நிலையோ, அல்லது ஸ்தாபனத்தில் சேர்ந்து விட வேண்டும் என்ற நிலையோ வருகிறது. (அது தான் மிருகத்தின் முத்திரையைக் கொண்டு வரப் போகிறது), ஏனென்றால் அது ஒரு புறக்கணிப்பாயுள்ளது. புரிகிறதா? பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற… இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.

99236 இப்பொழுது இந்த பெரிய “சோதனையானது” பூமி முழுவதின் மேலும் சோதிக்கும்படியான வரப்போகிற அந்த சோதனைக் காலமானது உபத்திரவ காலத்திற்குள் செல்லுகிறது. இன்னும் சில நிமிடங்களுக்குள் நாம் அதைப் பற்றிப் பார்ப்போம். இது சோதனைக் காலத்திற்குள் செல்லுகிறது. வெஸ்லியின் காலத்தில் இந்த உபத்திரவமானது வரவில்லை. எனவே எந்தக் காலத்தில் நாம் இருக்கிறோம்? வைக்கப்பட்ட இந்த “வாசலானது” என்னவாயிருக்கிறது? வெஸ்லியின் காலத்திற்கும் அதற்கடுத்த காலத்திற்கும் இடைப்பட்ட காலமாக இருக்கிறது. அங்கே சபையானது ஏற்கனவே லவோதிக்கேயா சபைக் காலத்திற்குள் முன்னோக்கிச் சென்றுவிட்டது. ஆனால் இடைப்பட்டதாக இங்கே இருக்கிற இந்த் சிறிய காலத்தில் கடந்த முப்பத்தைந்து, நாற்பது ஆண்டுக் காலத்தில், உள்ளே பிரவேசிக்கிறதற்காக மக்கள் முன்பாக, மக்களுக்கென “திறந்த வாசலானது” வைக்கப்பட்டுள்ளது: தேவன் மீதியாயிருக்கிற அச்சிறு கூட்டத்தை எடுத்து முத்தரித்துவிடுகிறார். மற்றவர்களோ அனலுமின்றி குளிருமின்றி வெதுவெதுப்பாகப் போய்விடுவார்கள். தேவன் அவர்களை தன் வாயிலிருந்து வாந்தி பண்ணிப் போட்டுவிடுவார். சீக்கிரமாய் காரியமானது செய்து முடிக்கப்பட்டு, சபையானது மேலே செல்கிறது, இங்கே அழிவுக்காக அந்திகிறிஸ்து வருகிறான். இது மிகவும் பரிபூரணமாய், முழு வேதத்தோடும் சுற்றிலும் நன்கு பொருத்தமாக அமைகிறது. சரி, இப்பொழுது.

100237 அப்பொழுது இங்கே நித்திரை செய்யும் கன்னியர் தோன்றுவதும் கூட ஏற்படுகிறது. சபைக்காலங்களின் இறுதிக்கட்டமானது, பெந்தெகொஸ்தேயின் முதல் பாகத்திற்கு நகர்ந்து செல்லுகிறது என்பதை இங்கே நிரூபிக்கிறது, ஏனெனில் அவர்கள் மகா உபத்திரவத்திற்குள் செல்வார்கள்…அது வெஸ்லியின் காலத்தில் வரவில்லை. 238 11-ம் வசனம், சரி, “ஒரு ஜீவ கிரீடம்” என்று அங்கே 11-ம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது: இதோ சீக்கிரமாய் வருகிறேன் …(என்ன? இப்பொழுது இதற்குப் பிறகு சீக்கிரமாக, பாருங்கள்.) இதோ…ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு (அதைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிரு). 239 ஒரு “கிரீடம்” என்றால் என்ன? ஒரு கிரீடம் என்றால் என்ன? அது ஒரு—அது ஒரு—அது ஒரு… கிரீடமானது நீங்கள் “ஒரு ஆளுகையைப் பெற்றிருப்பதையை” பொருட்படுத்துகிறது. நீங்கள் கிரீடம் சூட்டப்பட்டீர்களென்றால், நீங்கள் ஒரு இராஜாவாக இருக்கிறீர்கள். புரிகிறதா? நித்திய ஜீவனால் நாம் முடி சூட்டப்படுகையில், நாம் தேவனுடைய புத்திரராயிருக்கிறோம். அப்பொழுது நம்முடைய ஆளுகை பூமியில் உள்ளது. “தேவனுக்கு முன்பாக உங்களை ஆசாரியர்களும் இராஜாக்களும் ஆக்கினார்” அது சரிதானே? அங்குதான் உங்கள் காரியமே உள்ளது.

101240 புதிய எருசலேமில் எவ்வாறு பூமியின் இராஜாக்கள் அந்நகரத்தினுள் தங்களுடைய மகிமையைக் கொண்டு வந்தார்கள்? ஓ, அது அற்புதமாயிருக்கிறதே! அதை நீங்கள் எடுத்துக் கொள்ள விரும்பினால், பாருங்கள், நட்சத்திரங்களைப்போல் பிரகாசிக்கும் கிரீடங்கள். தானியேல் 12:3 அதைக் குறித்த மகத்தான, பெரிய விவரத்தை அளிக்கிறது. நீங்கள் அதைக் குறித்துக் கொள்ள விரும்பினால் குறித்துக் கொள்ளுங்கள். அதைப் பார்ப்பதற்கு நமக்கு இன்னும் சில நிமிடங்கள் மாத்திரம் உள்ளது. தானியேல் 12-ல் அதிகாரத்தில் அவன் என்ன கூறுகிறான் என்பதை நாம் பார்ப்போம். சரி. நாம் 12-ம் அதிகாரம் முதலாம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல்… (புரிகிறதா? ஓ, இவர் யார் என்று நீங்கள் அறிவீர்களா?) … அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; (இது என்ன? இக்காலத்திற்குப் பிறகு வரும் உபத்திரவகாலமாகும்!) … அக்காலத்தில் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும்… (கிரீடம்) சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கு விழித்து எழுந்திருப்பார்கள். ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். 241 ஓ, சகோதரனே, அங்கேதான் உங்களுடைய “கிரீடம்” காணப்படுகிறது. அது நித்திய ஜீவனின் மகிமையான கிரீடமாயிற்றே! ஒரு நித்திய ஜீவனின் கிரீடம்.

102242 12-ம் வசனம், நாம் விரைவாகப் பார்ப்போம்…அதற்கு பிறகு நாம் இங்கிருந்து போய்விடலாம் என்று நான் எண்ணுகிறேன். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூனாக்குவேன்… 243 இப்பொழுது நாம் இதை உண்மையாகவே விரைவாக பார்க்கப் போகிறோம். ஏனெனில் நான் ஏற்கனவே குறிப்பிட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் போய்விட்டேன். ஆனால் நீங்கள் காலையில் கொஞ்சம் கூடுதலாக உறங்கிக் கொள்ளலாம். உங்களால் முடியாதா? அம்மாவை, அப்பாவை கொஞ்சம் நீங்கள் உறங்கவிட்டுவிடுங்கள். நீங்கள் எழுந்து விடுங்கள், ஆனால் அப்பாவுக்கு எழும்ப ஒருவிதமாக சற்று கடினமாயிருக்கும் ஆனால் நீங்கள் அவரை சற்று உறங்கும்படி விட்டுவிடுங்கள், மெதுவாக நழுவிச் சென்று, அவருக்கு காபியை ஆயத்தப்படுத்தி அல்லது அவர் பருகுகிற வேறெந்த பானமாயினும் ஆயத்தப்படுத்துங்கள். அப்பொழுது அவர் நல்ல மனமகிழ்வோடிருப்பார்.

103ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்… 244 ஓ, ஒரு நிமிடம் நாம் இவ்வசனத்தை வார்த்தைக்கு வார்த்தையாக எடுத்துக் கொண்டு பார்ப்போமாக. இன்னும் சற்று நேரம் நீங்கள் என்னைப் பொறுத்துக் கொள்வீர்களா? வெப்பமாய் இருக்கிறதை நான் அறிகிறேன். இங்கும்கூட உஷணமாக இருக்கிறதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நாம் இதை பார்ப்போமாக. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்… 245 “தூண்” ஒரு தூண் அல்லது ஒரு “அஸ்திபாரம்.” ஆலய வீட்டில் அல்லது தேவனுடைய வீட்டில் உள்ள அஸ்திபாரம். “என் தேவனுடைய ஆலயத்தில் ” அல்லது “என் தேவனுடைய ‘வீட்டிலே’”, அது ஒரு தூணாக, அஸ்திபாரமாக இருக்கிறது. அவர்கள்தான் தாங்கள் கேட்ட வசனத்தை ஏற்றுக் கொண்டு (8-ம் வசனத்தில்) அஸ்திபாரத்திற்குத் திரும்பிச் சென்றவர்கள்.

104246 இப்பொழுது எபேசுவின் சபைக்காலத்திலுள்ள எபேசியருக்கு எழுதின நிருபம் 2:19-ஐ நாம் இப்பொழுது எடுத்துக் கொள்வோம். நீங்கள் எபேசுவுக்கு திரும்பிப் போயாக வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் அது துவக்கமாயிருந்தது. அது சரிதானே? சரி, நாம் எபேசுவுக்கு திரும்பிச் செல்வோம், அங்கிருந்தே பவுல் சபையை நிறுவினான். நாம் எங்கேயிருக்கிறோம் என்பதை இப்பொழுது நாம் பார்ப்போமாக. சரி. எபேசுவிலுள்ள சபை. நாம் இப்பொழுது திரும்பிச் சென்று அங்கே இந்த அஸ்திபாரமானது என்னவென்று பார்ப்போம், மற்றும் அங்கே அந்த முதலாம் சபைக்காலத்தில் அஸ்திபாரத்தைக் குறித்து பவுல் என்ன கூறியுள்ளான் என்பதை பார்ப்போம். இப்பொழுது அவன் எபேசியரிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறான்: ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள் ;… (லூத்தரன் இல்லை பாப்டிஸ்ட்டுகளே…இப்பொழுது பொறுத்துக் கொள்ளுங்கள். நான் வேறு வசனத்தை எடுத்துக் கலந்துவிட்டேன், நான் அவ்வாறு செய்துவிட்டேனோ? உ—ஓ.) அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

105247 ஒவ்வொன்றும் இயேசுவாகிய வாசலில் தான் பிரவேசித்தன. “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ, அவனை…தூணாக்குவேன்.” அதாவது வேறுவார்த்தைகளில் கூறினால், அஸ்திபாரத்தின் பாகமாக்குவேன். “நான் அவனுக்கு என்னக் கொடுப்பேன்? ஆதி முதற்கொண்டு இருந்து வந்த அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகளின் உபதேசத்தில் அவனை நிலைநாட்டுவேன். அவனுக்கு வெளிப்பாட்டைக் கொடுப்பேன்.” அவரைக் குறித்து தீர்க்கதரிசிகள் என்ன சொல்லுவார்கள்? அவர் ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்று அந்தவிதமாகத்தான் அவர்கள் தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் அவரைக் குறித்து கூறினர். “இந்த சாத்தானுடைய கூட்டத்தார் யாவரையும் ஜெயங்கொண்டு, தன்னை சுயாதீனமாக வைத்துக் கொண்டு, நேராக வாசலை உற்று நோக்குகிறவனை நான் அவனை ஒரு தூணாக்குவேன், என் தேவனுடைய வீட்டில் உள்ள எனது வார்த்தையின் அஸ்திபாரத்திலே மீண்டும் அவனை நிலை நாட்டுவேன்.” ஓ, என்னே! “நான் அவனை அங்கே அந்த தூணிலே வைப்பேன். வார்த்தையோடு சரியாக நிற்கும் அந்த அஸ்திபாரத்தில் அவனை வைப்பேன்” என்கிறார். ஆமென். சகோதரனே எனக்கு அது பிடிக்கும், அது நன்றாயுள்ளது. நான் வேடிக்கையாக நடந்து கொள்வதுபோல தென்படலாம், நான்…ஆனால் நான் நலமாகவே உணருகிறேன். சரி.

106…அவனை ஆக்குவேன்… ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன். அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை… என்னவாயிருக்கிறது? அவன் ஒரு தூணாக இருப்பானெனில் இனி அவன் அகன்றுவிடமாட்டான். அவன் மணவாட்டியாயிருக்கிறான்! அது சரிதான். 248 எபேசு காலத்திலிருந்து போல, பவுல் அப்போஸ்தல நடபடிகளில் அவர்களுக்குப் போதித்தது போல…இப்பொழுது ஒரு நிமிடம் பொருத்திருங்கள். நீங்கள் ஒரு தூணாக இருக்க வேண்டுமென்றால்…நாம் மணவாட்டியைப் பற்றி பார்க்க போகுமுன்னர், நான் இங்கே குறித்து வைத்திருந்த இன்னொரு வேத வாக்கியத்தைப் பற்றி உங்களுக்குக் குறிப்பிட நான் விரும்புகிறேன். நீங்கள் ஒரு தூணாக இருக்கப் போகிறீர்களென்றால். நீங்கள் எபேசுவுக்கு திரும்பிச் செல்லப் போகிறீர்கள். பவுல் இருந்த காலத்திற்கு நீங்கள் திரும்பிச் செல்லப் போகிறீர்கள். பவுல் எபேசு சபைக்காலத்திற்குரிய தூதனாயிருந்தான். அது சபையின் ஆரம்பமாயிருந்தது, அஸ்திபாரமாயிருந்து, அவன் எபேசியருக்கு போதித்ததென்னவெனில் “எவராவது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தவிர வேறு எவ்விதத்திலாவது ஞானஸ்நானம் பெற்றிருந்தால் மீண்டும் சரியானபடி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றாக வேண்டும்” என்பதேயாகும். அது உண்மையே, அப்போஸ்தலர் 9 இல்லை 5:10 இல்லை சரியாகக் கூறினால் 19:5. கலாத்தியர் 1:8-ல் அவர், “ஒரு தூதனாவது வேறெதையாவது பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றார்.

107249 ஆலயத்தில் இருந்த அவர்கள் மணவாடியாகவும் இருந்தனர். இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 7- அதிகாரத்தை எடுத்துக் கொள்வோமாக, வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரத்தில் அவர்கள் மணவாட்டியா என்பதைப் பார்ப்போம். 250 இப்பொழுது நான், நான்—நான்…நாம் இஸ்ரவேலில் மீதியான இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் நாம் அதைச் சற்று தாண்டிச் சென்று 12-ம் வசனத்தில் உள்ளதைப் பற்றிப் பார்ப்போம். உதாரணமாக, அது ஒரு பெந்தெகொஸ்தே கூட்டம் போல் இருக்கிறது. இந்த ஜனங்கள்…ஓ, பாருங்கள்…நாம் இங்கே 9-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம், ஏனெனில் முதலில் உள்ளது இஸ்ரவேலருக்கு சம்மந்தமுள்ளதாகும், அது முத்திரையிடப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேராயிருந்தது. நாளைக்கு நாம் அதைப் பற்றி பார்க்கப்போகிறோம். இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல…ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்…நிற்கக் கண்டேன்.

108251 இப்பொழுது, இவ்வதிகாரத்தில் 4 முதல் 8 முடிய உள்ள வசனங்கள் இஸ்ரவேலரைப் பற்றியது என்பது நினைவிருக்கட்டும், அவர்கள் ஆலயத்தைக் காக்கிற அண்ணகர்களாயிருந்தனர். பாருங்கள், கர்த்தருக்குச் சித்தமானால். நாளை காலை நாம் இதைப் பற்றிப் பார்ப்போம். இப்பொழுது அவர் அங்கே பன்னிரண்டு கோத்திரங்களை முத்திரையிடுகிறார். யூதா கோத்திரத்தில், அவர் பன்னிராயிரம் பேர்களை முத்தரித்தார். ரூபன் கோத்திரத்திரத்தில் பன்னீராயிரம் பேர்களை அவர் முத்தரித்தார். காத் கோத்திரத்தில் அவர் பன்னிராயிரம் பேர்களை முத்தரித்தார். மேலும் லேவி சேபுலோன் மற்றும் பென்யமீனை ஒவ்வொரு கோத்திரத்திலும் பன்னீராயிரம் பேர்களை முத்தரித்தார். இஸ்ரவேலில் எத்தனை கோத்திரங்கள் உண்டு? [சபையார், “பன்னிரெண்டு” என்று பதிலளிக்கின்றனர்.—ஆசி.] எனவே பன்னிரெண்டாயிரத்தை பன்னிரெண்டால் பெருக்கினால் எவ்வளவு வருகிறது? இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள். அவர்கள் தான் இஸ்ரவேல் புத்திரராவார். அவர்கள் ஒவ்வொரு வரும் யூதர்கள் என்பதை யோவான் அறிந்திருந்தான், ஏனென்றால் அவன் ஒரு யூதனாயிருந்தான்.

109இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும்… (இதோ வருகிறார்கள் புறஜாதிகள்) …ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைப் பிடித்து; 252 அக்கூட்ட ஜனங்களே அக்காலங்களில் பரிசுத்த ஆவி சுவிசேஷத்திற்காக நின்றபொழுது, (சிங்கங்களினாலும் மற்றவைகளினாலும் பட்சிக்கப்பட்டு) தங்கள் இரத்தத்தை சிந்தினவர்களாக இருந்த எளிமையான சிருஷ்டிகள் ஆவர். ஆயிரமாயிரமான சிறு குழந்தைகள் தெருக்களில் தங்கள் மண்டைகள் உடைக்கப்பட்டு உயிர் நீத்தனர். ஆயினும் அவர்கள் நிலை நின்றனர். அவர்கள் வெண்ணங்கி தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்தவர்களாய் நின்றிருந்தனர். ஓ, என்னே! அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக… தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுது கொண்டு: 253 கவனியுங்கள், இது ஒரு பெந்தெகொஸ்தே கூட்டமாயுள்ளது என்று நீங்கள் கருதவில்லையென்றால், வேறெது பெந்தெகொஸ்தே கூட்டம். ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். 254 வ்வுயு! இங்கே எனக்கு ஒரு தொடர் கூடார கூட்டம் உண்டாயிருக்கிறது போன்றே தென்படுகிறது, இது அவ்வாறில்லையா? உ—ஊ.

110அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். “இப்பொழுது நீ ஒரு யூதன், நீ அனைத்து பன்னிரெண்டு கோத்திரத்தாரையும் அறிந்திருக்கிறாய். இப்பொழுது, இந்த ஜனங்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அவர்கள் வெண்ணங்கி தரித்தவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் எங்கிருந்து வந்திருப்பார்கள்? இவர்கள் பென்யமீன் கோத்திரத்தாரோ மற்றவர்களோ அல்ல. இங்கு உள்ள இவர்கள் யார்?” 255 யோவான் …?… அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கு தெரியும் என்றேன். (“இது—இது எனக்கு புதிராயுள்ளதே! நான்—நான்…” புரிகிறதா?) … அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்ந்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, (வீட்டின் உள்ளே) இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்: சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். (இவர்கள் சற்று பசியடைந்திருப்பவர்களை போன்றே காணப்பட்டனர், இல்லையா?) இவர்கள் இனி பசியடைவதுமில்லை, (மகிமை!) இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்ந்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். அதோ அவர் இருக்கிறார்; அதோ மணவாட்டியிருக்கிறாள். ஓ, என்னே! எவ்வளவு அழகாயிருக்கிறது! மணவாட்டி!

111256 அவர் இப்பொழுது இங்கே என்னே கூறினார் என்று நாம் பார்ப்போம், எனவே நாம் அதை தவறவிட்டுவிடாமல் நாம் நிச்சயம் பார்ப்போம், 12-ம் வசனம். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன். அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை… மணவாட்டி அங்கே மணவாளனுடன் நின்று கொண்டிருக்கிறாள். ஓ! 257 ஓ, ஓ, நாம் அதைக் குறித்து பார்க்கும்படி நமக்கு சமயம் உண்டாயிருந்தால் நலமாயிருக்கும், (அதை நான் புத்தகத்தில் வெளியிட வைத்திருக்கிறேன்); வெளிப்படுத்தின விசேஷத்தில் “பூமியின் இராஜாக்கள் யாவரும் தங்களுடைய கனத்தை அதற்குள் கொண்டு வந்தார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அந்தவிதமாக…லேவி கோத்திரம் (மாதிரி) அதாவது அந்த கோத்திரத்தாருக்கு மற்றவர்களெல்லாம் தசம பாகங்களைக் கொண்டு வந்ததைப் போல உள்ளது. நீங்கள் பாருங்கள்; ஒரு அமாவாசியிலிருந்து மற்றொன்றுக்கு, ஒரு ஓய்வு நாளிலிருந்து மற்றொன்றுக்கு, அவர்கள் தொழுது கொள்ளும்படி போனார்கள். அது என்ன ஒரு நாளாயிருக்கும்! சரி. “நான்…” “…அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை” என்பதை நாம் பார்ப்போம். சரி.

112…என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்,…என் தேவனுடைய நாமத்தையும்…அவன் மேல் எழுதுவேன். 258 இப்பொழுது, தேவனுடைய நாமம் என்பது என்ன? இயேசு. இதை நீங்கள் குறிப்பெடுத்துக் கொள்ள விரும்பினால் (நாம் கொஞ்ச நேரம் கழித்து அதை பார்க்கப் போகிறோம்) “இயேசு!” எபேசியர் 3:15-ல் “பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ளவைகளெல்லாம் இயேசு என்று நாமம் சூட்டப்பட்டுள்ளது” என்பதை நீங்கள் பாருங்கள். சரி. சரி, இப்பொழுது சரி: …என் தேவனால் பரலோகத்திலிருக்கிறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும் , … (ஓ! நீங்கள் காண்பீர்களானால், அவையாவும் அதே நாமத்தைத்தான் உடையவனவாய் உள்ளன என்பதை நீங்கள் ஏற்கனவே கண்டு பிடித்திருக்கலாம். புரிகிறதா? பார்த்தீர்களா?) …அவன் மேல் எழுதுவேன். 259 “நகரம்.” அவர் தொடர்ந்து “அது புதிய எருசலேம்” என்கிறார். பாருங்கள், புதிய எருசலேம். “நான் அவன்மேல் புதிய எருசலேமின் நாமத்தையும் எழுதுவேன்” என்கிறார். இப்பொழுது மணவாட்டி அல்லது சபைதான் புதிய எருசலேமாயுள்ளது. நீங்கள் அதை அறிவீர்களா? சபைதானே புதிய எருசலேமாயுள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?

113260 நாம் அதை நிரூபிப்போமாக. அது வெளிப்படுத்தின விசேஷம் 21-ம் அதிகாரம் என்று நான் எண்ணுகிறேன். அவ்வதிகாரத்தை நான் எடுத்துப் பார்க்க விரும்புகிறேன். சரி. நாங்கள் உங்களுக்கு காண்பிக்கும்படியாக நாம் இங்கே திரும்பிப் பார்ப்போம். வேதமோ, “எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள்” என்று உரைத்துள்ளது. பாருங்கள். இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 21-ம் அதிகாரம். ஓ, சரியாக இதற்கு செவி கொடுங்கள் …இதற்கு…நீங்கள் அவருடைய (தேவனுடைய நாமத்தையுடைய) இந்த புதிய நகரம் என்ன என்று காண விரும்பினால், இதற்கு செவி கொடுங்கள். பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்: முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின: சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன். அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. 261 இந்த புதிய—புதிய சபையானது புறஜாதி சபையாகிய மணவாட்டியாகும். மணவாட்டி ஒரு புறஜாதியாயிருக்கிறாள், புறஜாதியார் அவருடைய நாமத்தை உடையவராயிருக்கிறார்கள். அவர் தமது நாமத்திற்காக புறஜாதியிலிருந்து ஒரு ஜனத்தை தெரிந்தெடுத்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 262 நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், அப்போஸ்தல நடபடிகள் 15:14-க்கு திருப்பி, அதைக் கண்டறியுங்கள். ஒரு வினாடி நீங்கள் அப்:15:14-க்கு திருப்புவீர்களானால், நாம் …அப்பொழுது நீங்கள்…அப்போஸ்தலர் 15-ம் அதிகாரம் 14-ம் வசனம், நாம் அதில் அதை கண்டறியலாம் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது நாம் கிட்டத்தட்ட முடிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறோம். அப்போஸ்தலர் 15-ம் அதிகாரம் 14-ம் வசனம்: அவர்கள் பேசி முடித்த பின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்து கொள்ளும்படி முதல் முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே. உ—ஊ. சரி, அதோ அங்கே அவள் இருக்கிறாள். ஓ!

114263 இப்பொழுது இது முடிவானதற்கு மிக அருகில் வந்துவிட்டது என்று நான் எண்ணுகிறேன். இப்பொழுது அது அவர்தான் என்று கூறுவதோடு நாம் முடித்துக் கொள்வோம். …என் தேவனுடைய நாமத்தையும்…என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும்…அவன் மேல் எழுதுவேன். இதன் நாமமெல்லாம்: இயேசு, இயேசு, இயேசுதான். மணவாட்டி இயேசுவை விவாகம் செய்து கொண்டுவிட்டபடியால், அவள் திருமதி இயேசு என்று ஆகிவிடுகிறாள். பாருங்கள். 264 இன்றிரவில் இந்தக் கட்டிடத்தில் அருமையான உயர் மதிப்பிற்குரிய ஸ்திரீகள் வீற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் எனக்குச் சொந்தமானவள் ஒருவளே இருக்கிறாள். அவளே என் நாமத்தைத் தரித்தவளாயிருக்கிறாள். நீங்கள் அதை புரிந்து கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். அவள் என் பெயரை தரித்துக்கொண்டிருக்கிறதுபோல, அவருடைய மணவாட்டியும் அவருடைய நாமத்தை தரித்தவளாயிருப்பாள். சரி:

115…என் தேவனுடைய நாமத்தையும்…என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். 265 நான் அதை அப்படியே விட்டுவிடுவது மேலானதாயிருக்கும், இருக்காதா? சரி. கவனியுங்கள், அங்கே “அவன்” என்று ஒருமையில் உள்ளது. இப்பொழுது நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 2:17-க்கு ஒரு நிமிடம் திரும்பிச் செல்வீர்களேயானால், அப்படியே ஒரு நிமிடம், அதை ஒரு வினாடி மறுபடியும் கவனித்துப் பாருங்கள்: ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான் குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது:

116266 நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? அவர் அற்புதமானவரல்லவா? நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே 267 நீங்கள் பெற்றுக்கொண்ட இந்த கடிந்து கொள்ளுதல் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்திற்கும் பிறகான இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நான் ஆவியில் பாட விரும்புவேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் விரும்பவில்லையா? ஓ, அப்படியானால் நான் ஆவிக்குள்ளாக எவ்வளவாய் விரும்புகிறேன். வார்த்தை! பாருங்கள், வார்த்தையானது இப்பொழுது விழுந்திருக்கிறது. இப்பொழுது அதற்குத் தேவையான ஒரேக் காரியம் கொஞ்சம் ஈரப்பசைதான். பாருங்கள், கொஞ்சம் துதி செலுத்துதல், அப்பொழுது அது முளைத்து வளர ஆரம்பிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஓ, நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? நாம் நம்முடைய கரங்களை உயர்த்தி, அதைப் பாடுவோமாக: நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன். ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே.

117268 ஓ, நாம் நம்முடைய தலைகளை வணங்கி, இவ்வாறு கூறுவோம்: “பிதாவை, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நாங்கள் உம்மை நேசிக்கிறோம். ஓ, நாங்கள் எவ்வளவாய் உம்மை நேசிக்கிறோம்! கர்த்தாவே. நாங்கள் உமக்கு மிகுந்த நன்றி செலுத்துகிறோம். ஓ, எங்களுடைய—எங்களுடைய மானிட இதயங்களால் உம்முடைய சொந்த இரத்தத்தில் நீர் எங்களை எவ்வாறு கழுவியிருக்கிறீர் என்பதை நாங்கள் எப்படி எங்களுக்குள்ளாக உணருகிறோம் என்பதை வெளிப்படுத்த முடியவில்லை. கர்த்தாவே, நாங்கள் அன்னியராயிருந்தோம். நாங்கள்—நாங்கள் இவ்வுலகின் காரியங்களை நேசித்து, நாங்கள் வெளியே அங்குள்ள உலகத்தின் காரியங்களில் எல்லோருமாய் குழப்பமடைந்திருந்தோம், அப்பொழுது நீர் உம்முடைய கிருபையினால் இறங்கி வந்து, உம்முடைய பரிசுத்த விலையேறப்பெற்ற கரங்களால் பாவச் சேற்றில் மூழ்க்கிக்கிடந்த எங்களை தூக்கியெடுத்து, எங்களைத் தெரிந்து கொண்டு, எங்களை கழுவி, எங்களை சுத்திகரித்து, எங்களில் ஒரு புதிய ஆவியை வைத்து, பரத்திலுள்ள காரியங்களின் மேல் நாங்கள் எங்களுடைய பாசங்களை வைக்கும்படிச் செய்தீர். நாங்கள் எவ்வளவாய் உம்மை நேசிக்கிறோம். கர்த்தாவே!” 269 இந்த வஞ்சிக்கப்பட்ட காலத்தில், கர்த்தாவே, எங்களுக்காக உலகத்தில் ஒன்றுமே விடப்பட்டிருக்கவில்லை. உலகத்திற்காகவும் ஒன்றுமே விடப்பட்டிருக்கவில்லை, இது—இது—இது முடிவுகாலமாயுள்ளது. நாங்கள் வேதாகமத்தின் மூலமாக ஒவ்வொரு காலமும் முடிந்துவிட்டதைக் காண்கிறோம். நாங்கள் இப்பொழுது துரிதமாக சென்று கொண்டிருக்கிற காலத்தின் முடிவில் இருக்கிறோம். இயேசு வருவதற்கு இன்னும் நீண்ட காலம் பிடிக்காது. ஓ, தேவனே, எங்கள் இதயங்களை கொழுந்துவிட்டு எரியச் செய்யும், நாங்கள் அமைதியாக அமர்ந்திருக்கவிடாதேயும். மகத்தான பரிசுத்த பவுல் இன்றிரவில் இங்கே இருந்தானெனில் இப்பொழுது இருக்கிற காரியங்களை அதின் போக்கில் பார்த்தால், அவன் என்ன செய்வான் என்பதைப் பற்றி நான் எண்ணிப்பார்க்கிறேன். எப்படியாய் அவன்…அதாவது விடியற்கால வெளுப்பு வரும் முன்னர் அம்மனிதனை அவர்கள் சிறையில் அடைத்து வைத்திருக்கக் கூடும். அவன் வெளியே வந்து, கர்த்தருடைய வருக்கைக்காக ஆயத்தமாயிருக்கும்படி ஜனங்களுக்கு இங்கே சொல்லிக் கொண்டிருந்திருப்பான்.

118270 இந்த வேளையில், கர்த்தாவே, அநேகர் சுகவீனமுள்ளவர்களாக இருக்கின்றனர். ஏனெனில், இங்கே ஜெப உருமால்களும், வேண்டுகோள்களும் வைக்கப்பட்டுள்ளன. பிதாவே நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் குணமாக்கவேண்டுமென நான் ஜெபிக்கிறேன். “விசுவாசியை பின்தொடரும் அடையாளங்கள்” என்பது சத்தியமாயிருக்கும்படி நீர் பிழையின்றி நிரூபிக்கிற உம்முடைய ஊழியத்தின் ஒரு பாகமாக அது இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். பவுலின் சரீரத்திலிருந்து அவர்கள் உருமால்களையும் கச்சைகளையும் எடுத்து வியாதியஸ்தருக்கு அனுப்ப, அசுத்த ஆவிகள் அவர்களை விட்டு வெளியேறின, ஜீவனுள்ள தேவனில் அவர்கள் விசுவாசங்கொண்டபடியினால் அவர்கள் குணமடைந்தனர். நான் அவர்களை இயேசு கிறிஸ்துவினூடாக உம்மண்டை ஒப்புவிக்கையில், பிதாவே, இன்றிரவு அதை மீண்டும் அருளும். 271 இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய ஆத்துமாக்களை உம்முடைய கரத்தில் எடுத்து எங்களை கழுவி, எங்களை சீர்ப்படுத்தியருளும் என்று நான் ஜெபிக்கிறேன்: ஏனெனில் “கறை திறையற்ற ஒரு சபைக்காகத்தான் நீர் வருகிறீர்” என்று கூறப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியாகிய சலவையானது எங்களை நன்கு அழுத்தி, எங்களிலிருக்கிற சுருக்கங்களெல்லாம் நீக்கி விடட்டும். அப்பொழுது நாங்கள் மனுஷகுமாரனுடைய வருகைக்காக ஆயத்தமாக காத்துக்கொண்டிருப்போம். 272 இப்பொழுது, பிதாவே, எங்கள் மேல் உம்முடைய ஆசீர்வாதங்கள் தங்கியிருக்க வேண்டுமென நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே, ஆராதிக்கையில் எங்களோடிரும். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நாங்கள் இன்றிரவு நின்று, எங்களுடைய இதயங்களை உமக்கு அளிக்கிறோம். நாங்கள்… [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] 