1 இப்பொழுது, அவர் அதை ஒருபோதும் முடிக்கவில்லை. நான், “என்னுடைய திருமணத்திற்கு நான் பிந்திவிட்டேன் …நான் சிறிது காலந்தாழ்ந்து பிறந்தேன். திருமணத்திற்கும் எனக்கு நேரம் பிந்திவிட்டது. என்னுடைய அடக்கத்திற்கும் நான் பிந்திவிட எனக்கு இயலுமென்றால்!” என்று கூறினேன். அந்த ஒன்று தான் உண்மையாகவே காலந்தாழ்ந்து நடைபெற வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 2 இல்லை, நான் புறப்படமுடியாமல் இருக்கும்படி வீட்டில் அநேக தொலைபேசி அழைப்புகள் எனக்கு உண்டாயிருந்தன. என் மனைவியும் மற்றவர்களும் வீட்டை விட்டு சீக்கிரமாகவே புறப்பட்டு விட்ட பிறகு, உடனேயே, எனக்கு அநேக வேலைகள் உண்டாயிருந்தன. பின்பு அநேக இடங்களிலிருந்து மக்கள் ஜெபித்துக்கொள்ள வந்தனர். இப்பொழுது தான் நான் உள்ளே நுழைக்கிறேன். ஒரு சகோதரனுக்காக கர்த்தரிடத்திலிருந்து வெளிப்படுத்துதல் உண்டாயிற்று. சுகவீனமான நிலையில் அங்கே பின்னால் நின்று கொண்டிருக்கிற சகோதரியே, நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படியே ஓய்வின்றி தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டேயிருக்கிறேன். ஜார்ஜியாவிலிருந்தும் மற்றும் கனடா தேசத்திலிருந்தும், மற்றும் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலிருந்தும் இங்கு வந்திருக்கிற என் நண்பர்கள் சிலரோடு நான் கைகுலுக்கக் கூட என்னால் இயலாமல் இருக்கிறது. உங்களோடு கைகுலுக்கிட இயலாமற் போனதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
23 அடுத்தப்படியாக இன்றிரவில் சகோதரன் பிரட், ஃப்ரெட் சாத்மன் அவர்கள் எங்கேயிருக்கிறார்? ஃப்ரெட் அவர்களே, நீங்கள் கனடாவிலிருந்து என்னை தொலைபேசியில் கூப்பிட்ட அந்த வேளை உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? நீங்கள் அப்பொழுது அங்கிருந்து வந்து கொண்டிருந்தீர்கள். நீங்கள் மோட்டார் வாகனத்தில் வர வேண்டாம் என்று உங்களுக்கு கூறினேன் அல்லவா? ஆனாலும் நீங்கள் அப்படித்தான் வந்தீர்கள். அவருடைய மோட்டார் வாகனம் நொறுங்கிச் சேதமடைந்து, அவருடைய மனைவி ஏறக்குறைய கொல்லப்படக் கூடிய அளவுக்கு ஆகிவிட்டது. குடும்பத்தினரும் கூட, அவரது மூக்கு உடைந்துவிட்டது. இதினால் அவர்கள் யாவரும் மருத்துவமையில் சேர்க்கப்பட்டார்கள். 4 சற்று நேரத்துக்கு முன்னால் பிற்பகலில் நான் புறப்பட்டுக் கொண்டிருக்கையில், இங்கு நின்று கொண்டிருக்கும் சகோதரன் பென் அவர்கள் என்னண்டையில் வந்தார். ரோஸல்லாவும் அங்கே வந்து, “நான் வீட்டுக்குப் போகிறேன்” என்றாள். நான் “ரோஸல்லா” என்றேன். அதற்கு அவள், “என்ன விஷயம் சகோ.பிரான்ஹாம் அவர்களே” என்றாள். அப்பொழுது நான், “நான் அதைப் பற்றி விசித்திரமாக உணருகிறேன்” என்றேன். பாருங்கள்? அதற்கு அவள், “ஏதாவது சம்பவிக்கப் போகிறதா?” என்று கேட்டாள். அப்பொழுது நான், “எனக்கு தெரியாது. ஏதோ ஒன்று என்னை எச்சரித்தது போல் எனக்குத் தென்படுகிறது” என்றேன்.
35 சில நிமிடங்களுக்கு முன்பாக அவள் என்னை அழைத்து, அவள் ஒரு விபத்தில் சிக்கியதாகத் தெரிவித்தார். ஒருவரும் காயப்படவில்லை. ஆனால் அது கர்த்தருடைய கரமாக இருந்தது. (வடக்கே எங்கும் பனியாயிருக்கிறது). எனவே அதில் அவள் சறுக்கி விழுந்து விட்டாள். இண்டியானா போலீஸ் என்ற இடத்தில் தான் அவளது வாகனம் பனியில் பாதையை விட்டு இந்தவிதமாக வேகமாக சறுக்கிச் சென்றது. “ஓ கர்த்தாவே, எனக்கு உதவி செய்யும்” என்று அவள் அந்த சமயத்தில் கதறினாள். அப்பொழுது வாகனமானது மீண்டும் இந்தப் பக்கமாக சறுக்கிக் கொண்டே வந்து சாலையில் சரியான பாதைக்குள் வந்து, மீண்டும் சரியாக ஓட ஆரம்பித்தது. அவள் சாலையில் சரியான படி வாகனம் போவதைப் பார்த்தபொழுது, “என்னே என்னே, அந்த ஆபத்திலிருந்து தப்பிதத்தைக் குறித்து நான் எவ்வளவாய் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்” என்று கூறினாள். ஏனெனில் மற்ற மோட்டார் வாகனங்கள் மிகவேகமாக அதே பாதையில் வந்து கொண்டிருந்தன. எனவே அவள் சாலைக்கு அப்பால் சென்று வாகனத்தை நிறுத்தினாள். ஒரு கோப்பை காபி வாங்கி அருந்துவதற்காக அவள் நிறுத்தினாள் என்று நான் நம்புகிறேன். அவ்வாறு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியே வருவதற்கு முன்னர் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து மோதிய வாகனங்கள் யாவும் அங்கே அடுக்கடுக்காக குவிந்து போய்விட்டன. ஆனால் அவள் சிறிது அதிர்ச்சியடைந்து மாத்திரமே தவிர மற்றபடி வேறு கெடுதல் ஏதும் ஏற்படவில்லை என்று கூறினாள். ஆனால் அவள் கர்த்தருக்கு நன்றி தெரிவிக்க விரும்பி, என்னை தொலைபேசியில் அழைத்து தான் சேதம் ஏதும் அடையாமல் தப்பித்தற்கு சபையானது கர்த்தருக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளவும், மேலும் தான் பத்திரமாக வீடு போய்ச்சேர தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டாள். பாருங்கள், அவள் இப்பொழுது தான் வாகன ஓட்டுவதற்குரிய உரிமம் பெற்றுள்ள ஒரு புதிய வாகன ஓட்டுபவராவாள். எனவே நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.
46 ஆனால் அந்த கர்த்தருடைய எச்சரிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வது எப்பொழுதும் பயனளிக்கிறதாக இருக்கிறது. “நல்லது, எனக்கு ஒரு நாள் வேலை போய்விடும்” என்றாள். ஒரு நாள் வேலையானது என்ன? வாகனத்தின் சேதமடைந்த பின்பகுதியை சீர் செய்வதற்கு ஆகும் செலவை விட அது ஒன்றும் அதிகம் நஷ்டத்தை ஏற்படுத்த போகிறதில்லை. எனவே கர்த்தரோடு தங்கியிருப்பது எவ்வளவோ மேலானது ஆகும். அது சரியானது தானே? அவர் நமக்கு ஏதாவது சொல்வாரானால், அதிலே நாம் நிலைத்திருப்பது நமக்கு நல்லது ஆகும். ஏனெனில் அவர் எப்பொழுதும் சரியானவராக இருக்கிறார். அவர் அவ்வாறு இருக்கவில்லையா? எப்பொழுதும் அவர் சொல்வது சரியாகத்தானிருக்கும்.
57 இப்பொழுது, ஓ…இந்த வாரமானது ஒரு அற்புதமான வாரமாக இருந்திருக்கிறது. இந்த அற்புதமான வாரத்தைப் பற்றி தேவனிடத்திலும் உங்களிடத்திலும் எவ்வாறு எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. என் வாழ்க்கையில் நான் பிரசங்கித்த நாட்களிலேயே, இந்த எட்டு நாட்கள் தான் மிகவும் மகிழ்ச்சியான நாட்களாக இருக்கின்றன. அது உண்மையே. கர்த்தருடைய காரியங்கள் அநேகமானவைகளை நான்—நான் கற்றுக் கொண்டுள்ளேன். அவருடைய மென்மையான இரக்கங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். அவர் என்னவெல்லாம் நமக்கு செய்திருக்கிறார் என்பதைப் பற்றியும் சபையில் அவருடைய ஆவியானது மீண்டும் கிரியை செய்வதையும் நான் அறிந்து கொண்டேன். மீண்டும் சபையில் ஆவியின் வரங்கள் கிரியை செய்வதை காண்பதற்கு நான் மகிழ்ச்சியிருக்கிறேன். புரிகிறதா? 8 இப்பொழுது, ஒரு தடவை நீங்கள் வெளியே போயிருக்கும் சமயம், யாராவது ஒருவர் உள்ளே நுழைத்து சபையை அசுசிப்படுத்துவார்கள் என்பது போன்று தென்படுகிறது, உங்களுக்குத் தெரியும், அவர்கள் எதையாவது செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். வரங்களை நீங்கள் கனவீனப்படுத்தினால், தேவன் உங்களை கனவீனப்படுத்துவார். புரிகிறதா? அது உண்மையே. அவைகளை நீங்கள் சீர்படுத்திட வேண்டும். நாம் எவ்விதமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமென்றால், அது அதனுடைய ஒழுங்கின்படி இருக்க வேண்டும். இவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுகிற விதத்திலும் அந்த ஒழுங்கு இருக்க வேண்டும். வெறுமென வேத வாக்கியங்களை மேற்கோள் காட்டுதல் மட்டும் போதாது; ஆனால் என்ன நடக்கப் போகிறதோ அதைப் பற்றி முன்னுரைத்தல் இருக்க வேண்டும், நீங்கள் அதனுடன் தொடர்ந்து உண்மையான பயபக்தியோடு இருப்பீர்களாயின், அது ஆரம்பிக்கும்… ஒரு சபையில் யாராவது ஒருவர் ஒழுங்கான வழியை விட்டு விலகிச் சென்றால், பரிசுத்த ஆவியானவர் வெளிப்படையாக யார் அதை செய்கிறவர்கள் என்பதை உரைத்து விடுவார். அப்பொழுது சம்மந்தப்பட்டவர்கள் கடிந்துரைக்கப் பட்டு குத்தப்பட்டு, பீடத்தண்டை சென்று அறிக்கையிடுவார்கள். அதற்காகத்தான் வரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
69 இங்கே இருக்கிற நமது மேய்பராகிய சகோதரன் நெவில் அவர்களைப் பார்க்கையில், அவர் ஒரு காலத்தில் கூச்ச சுபாவங்கொண்ட, ஒரு விதமாக மறைத்துக் கொள்ளுகிற ஒரு வாலிபனாக இருந்தார். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்…பெந்தேகொஸ்தேயைப் பொறுத்த மட்டில் அவர் அதை ஒரு போதும் பிடித்துக் கொள்ளவே மாட்டாரோ என்பது போல் தோன்றியது. ஆனால் அவர் எழுந்து நின்று, பாஷைகளை வியாக்கியானம் செய்து தீர்க்கதரிசனம் சொல்லுவதைப் பார்க்கையில், அவர் நீண்ட அனுபவதிற்குள்ளாக வந்து விட்டார் என்றே நான் உங்களுக்குக் கூறுவேன். உண்மை. நாம் நமது மேய்ப்பருக்காக ஜெபிப்போமாக. 10 பாருங்கள், சபையில் வரங்கள் வர ஆரம்பிக்கின்றன. இங்கே இன்னொரு எளிய தாழ்மையான சகோதரனொருவர், இங்கு எங்கோ தான் இருக்க வேண்டும். அவர் எப்பொழுதும் இங்கே இருக்கிறார் என்றே நான் யூகிக்கிறேன். சகோதரன் ஹிக்கின்பாதம் என்ற சகோதரன் தான் அவர். அவர் சபையின் தர்மகர்த்தாக்களில் ஒருவராக முன்பு இருந்தார். அவர் ஒரு எளிய, தாழ்மையான விலையேறப் பெற்ற தேவ பக்தியுள்ள மனிதனாவார். அவர் அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தை பெற்றிருக்கிறதைப் பார்க்கையில், சகோதரன் ஹிக்கின்பாதம் இவ்வாறெல்லாம் செய்வார் என்று யார் எண்ணிப் பார்த்திருக்க முடியும்? அவருங்கூட ஒரு நாணமுள்ள, மறைத்துகொள்ளும் சுபாவங்கொண்டவர், யாருக்கும் தெரியாமல் பின்னால் அமர்ந்திருக்கிறார். ஆனால் பாருங்கள். தேவனோ அவ்விதமான ஒரு மனிதனை எடுத்து உபயோகிக்க முடியும், பாருங்கள், ஏனெனில், அவர் தன்னை முன்னுக்குத் தள்ளிக் கொண்டு ஏதாவது செய்ய விரும்புவதில்லை, அவர் அவ்வாறு செய்ய விரும்பியிருந்திருப்பாரானால், அவர் பெருமையுள்ளவராய் இருந்திருப்பார். ஆனால், அவரோ அப்படிச் செய்ய விரும்பாமல் இருக்கிற வரையிலும், அவ்விதமாக தேவன் அவரை ஒரு வேளை உபயோகிக்க முடியும். 11 ஜூனி இங்கிருக்கிறார், அவர்…ஓ, அவர் என்னிடத்திலிருந்து நேராக அங்குள்ள அந்த கம்பத்தின் பின்னால் இருக்கிறார்.
712 அநேகர் அன்னிய பாஷைகளில் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன் என்பதைப் பற்றி நான் கூறுவேன். அவை யாவும் தேவனிடத்திலிருந்தே வருகிறது என்றே நான் எண்ணுகிறேன். ஏன்னெனில், யாருக்காவது, எங்காவது ஏதாவது அர்த்தம் இல்லாமல் எதையாவது நீங்கள் தொனிக்கச் செய்ய முடியாது. “எத்தனையோ விதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது. அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல” என்று வேதம் கூறுகிறதை நீங்கள் அறிவீர்கள். அப்படியென்றால் ஒவ்வொரு பாஷைக்கும் ஒரு அர்த்தமுண்டு என்று அர்த்தமாகிறது. ஏதோ ஒரு அர்த்தம் இல்லாமல் நீங்கள் எதையும் உரைக்க முடியாது. நான் ஆப்பிரிக்காவுக்குப் போகிற வரையிலும் அதைப் பற்றி நான் இது எவ்வாறு இருக்கும் என்று வியந்து கொண்டிருந்ததுண்டு. அங்கே நான் அந்த அநேக விதமான சத்தங்களைக் கேட்டு, அது யாரோ ஒருவருடைய பேச்சு என்பதை கண்டு கொண்டேன். சில வேளைகளில் அது ஒரு தூதனின் பேச்சாகவும் இருக்கிறது.
813 ஆனால் ஜூனி ஜேக்சன் அவர்கள் ஒரு நாணமுள்ள, பின்னே மறைந்தே இருந்து வந்த மிகவும் மென்மையான நகர் புறத்து பிரசங்கியாக எலிசபெத் இண்டியானாவில், மெதோடிஸ்ட் சபையில் இருந்து வந்தார். அப்பிரதேசம், நாட்டை விட்டே மிகவும் தூரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியின் பக்கமாக இருந்தது. அமைதியாக இருப்பார். ஒன்றும் அதிகம் பேசமாட்டார். பின்னாலேயே மறைந்து கொண்டிருப்பார். சில வேளைகளில் நான் அவரைப் பார்த்து அசைத்துக் கைகுலுக்கி “ஏதாவது சொல்லுங்கள் ஜூனி, என்னைப் பார்த்துக் கொண்டே அங்கே அப்படியே அமர்ந்திருப்பதை விட்டு விடுங்கள்” என்று கூற வேண்டும் போல் தோன்றினதுண்டு. 14 நாங்கள் காட்டில் வெட்டப்பட்ட அடி மரத்தில் உட்கார்ந்து கொள்வோம். அவர் உட்கார்ந்து கொண்டு “நல்லது,…நான் கருதுகிறேன்…எல்லாம் சரிதான்” என்பார். 15 அப்பொழுது நானோ, “ஓ ஜூனி, உங்களுக்குப் பதில் நானே பேசி விடலாம் போல நான்—நான் உணருகிறேன். நீங்கள் பாருங்கள். ஏனெனில் நீங்கள்—நீங்கள் என்னிடம் மிக மெதுவாகப் பேசுகிறீர்கள்” என்று அவரிடம் கூறுவதுண்டு, பாருங்கள். தேவனோ அவருக்கு அந்நிய பாஷைகளில் பேசும் ஒரு—ஒரு—ஒரு வரத்தை அளித்துள்ளார். என் வாழ்க்கையில் இதை விட மிகத் தெளிவான பாஷையை ஒரு போதும் கேட்டதேயில்லை. பாருங்கள்?
916 சபையில் அவரைக் கவனித்துப் பாருங்கள். மற்ற பெண் மணியைப் பற்றி அறிந்திராத இந்த ஒரு பெண்மணி பேசியதைப் பார்த்தீர்களா? அவர்கள் ஒருவரையொருவர் இன்னார் என்று அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களிருவரும் ஒரே விதமான தொனியில் பேசியதைப் பாருங்கள். அது வியாக்கியானம் செய்யப்பட்ட பொழுது அதே தொனியில், உயிரெழுத்துக்களையும், நிறுத்தற்குறிகள் யாவும் அதேவிதமாக திரும்ப தொனித்ததைக் கேட்டோம். செய்தியானது சபைக்கு பூரணமாக இருந்தது. அது எவ்வாறு இருக்கிறது என்பதைப் பாருங்கள். இப்பொழுது, நாம் இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் உங்களை மட்டம் தட்டிக் கொண்டு விடுவீர்கள். அப்பொழுது பிசாசு உங்களை பற்றிக் கொள்வான். எனவே தாழ்மையோடு இருங்கள். “ஓ கர்த்தாவே, என்னை பின்னாலேயே மறைத்து வையும். வேளைக்கு முன்பாக நான் என்னை உயர்த்திக் கொள்ளாதபடி செய்யும்” என்று அவரிடம் கூறுங்கள். 17 அவர் ஒரு போதும் சரியான வழியை விட்டு விலகச் செல்லமாட்டார். சில சமயம், நீங்கள் அப்படிச் செய்தால், அப்பொழுது இங்கிருக்கிற மேய்ப்பன் அதைப் பற்றி உங்களுக்கு சுட்டிக் காட்டுவார். பாருங்கள், நாம் பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், அப்போது வரங்கள் குறுக்கிடக் கூடாது. வழக்கமாக சபையில் வரங்கள் நல்ல விதமாக கிரியை செய்து கொண்டிருக்குமானால், மற்ற ஆராதனைக்கு முன்பாக நமக்கு இன்னும் கூடுதலான கூட்ட வேளையை நாம் உடையவர்களாக அப்போது இருப்போம். அந்த விஷயத்தில் கர்த்தர் உங்களோடு கிரியை செய்வாராக, நீங்கள் பாருங்கள். ஏனெனில் செய்தி அளிக்கும் வேளையில் இந்த பாகம் குறுக்கிடாமல் இருக்கத்தக்கதாக அப்படியிருக்கட்டும். நாம் சபையில் கூடி வந்திருக்கையில், கொஞ்ச நேரம் நீங்கள் அமைதலாயிருத்தல் வேண்டும். ஆனால் தேவன் கொடுக்கத்தக்க செய்தியை வைத்திருப்பாராயின், எங்காவது அதை அவர் கொண்டு வருவார், பாருங்கள். அவர் கிரியை செய்ய விடுங்கள். ஆனால் அது வேதபோதனையின்படியே தான் இருக்கும். ஒரு வேளை சகோதரன் நெவில் அந்தக் காரியங்களைப் பற்றி போதிப்பார். நாம் அதின்படி செய்ய முயலுவோம். நான் அவருக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய முயலுவேன். நாங்கள் இருவரும் சேர்ந்து, எங்களால் முடிந்தளவு அது எவ்வாறு உபயோகிக்கப்பட வேண்டும் என்கிற விஷயத்தை உங்களுக்கு தெளிவாகக் காண்பிப்போம்.
1018 என்னுடைய போலந்து நாட்டு சகோதரனே, நீங்கள் நன்றாக இருக்கிறதாக உணருகிறீர்களா? அது அருமையாயிருக்கிறது. ஓ, கர்த்தர் எப்படியாய் அவரை ஆசீர்வதித்தார்! எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெறப் போகிற ஒரு காரியத்தைப் பற்றி அவருக்கு கூறினேன். அவர் ஒரு கண்டிப்பான திரித்துவவாதி. அவர் மிகவும் குழம்பிப் போயிருந்தார். அன்றொரு நாளில் கர்த்தர், “ஒரு மனிதன் வருகிறார், கறுமையான முடியையுடையவரும், பழுப்பு நிற கண்களை உடையவரும் கனத்த தேகமுள்ளவருமானவராக இருப்பார். அவரை திருப்பி அனுப்பிவிடாதே, நான் தான் அந்த மனிதனை உன்னிடம் அனுப்புகிறேன்” என்று கூறினார். அவர் எங்கே குழப்பமடைந்திருந்தாரோ அதைக் குறித்ததான வேதவசனத்தை நான் எடுத்து, ஒரு சிறு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி, அங்கே வைத்தேன். சிறிது நேரம் கழித்து, அவர் அங்கே வந்தார். அப்பொழுது என் மனைவியோ, “இங்கே ஒரு மனிதர் உங்களை காண வந்திருக்கிறார்” என்று கூறினாள். அதற்கு நான், “அவர் தான் அந்த மனிதர், அவரை உள்ளே கொண்டு வா” என்று கூறினேன்.
1119 பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினாலே அவருக்குச் சொல்லப்பட்டதை பற்றி என்னிடம் அவர்—அவர் கூறினார். எவ்விதமாக அவர் விசுவாசித்திருந்தார் என்பதையும் பற்றியும், தன் ஜனங்களின் மத்தியில் செய்தியை பற்றிக் கொண்டிருந்ததைப் பற்றியும் அவர் கூறினார். அதே சமயத்தில் அவர் குறை கூறப்பட்ட போதிலும், செய்தியோடு உறுதியாக நிலைத்து இருந்திருக்கிறார். சிறிது காலத்திற்கு முன்பாக, ஒரு கூட்டத்தில் நான் அவரை அவரது பெயரைச் சொல்லி அழைத்தேன். நான் அந்தப் பெயரை எவ்வாறு உச்சரித்தேன் என்பது எனக்கே தெரியாது. நான் அந்தப் பெயரை அக்கூட்டத்தில், ஒவ்வொரு எழுத்தாக அல்லது ஏதோ ஒன்றாக அல்லது வேறுவிதமாக பிரித்துக் கூறினதாகக் கூறினார். அவர் தன்னுடைய கரத்தில் ஒரு குழந்தையை சுமந்து கொண்டிருந்ததாகவும் அதற்கு முகத்தில் வடுக்களால் நிறைந்து இருந்ததாகவும், அது முழுவதும் குணமடைந்தாகவும் கூறினார். கர்த்தர் எவ்வாறு… 20 அப்பொழுது நான், “நல்லது, இப்பொழுது உங்களுக்குத் தேவையானது என்னவெனில் நீங்கள் சபைக்குப் போய், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டும்” என்று கூறினேன். 21 நான் மலையுச்சியிலே சற்று நேரத்திற்கு முன்பாக அவரைச் சந்தித்தேன். ஏனெனில் அவர் இறங்கி வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றார். இப்பொழுது அவர் முழுவதும் திருப்தியடைந்தவராக, நல்ல உணர்வோடு, வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். அவர் வரவிருக்கும் நாட்களில் ஒன்றில், போலந்திலும், ஜெர்மனியிலும் இன்னும் அங்குள்ள ஏனைய இடங்களிலும் எனக்கு மொழிபெயர்ப்பாளாராக இருப்பார் என்று நான் நம்புகிறேன். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. என் சகோதரனே.
1222 அநேக பெரிய காரியங்களை நம்முடைய கர்த்தர் செய்கிறார். அவருடைய—அவருடைய இரக்கத்தை நாம் காண்கையில், அவர் கிழக்கு மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளிலெல்லாம் இருந்து தன்னுடைய அருமையான பிள்ளைகளை வழி நடத்திக்கொண்டிருக்கிறார். அவர்களை ஒன்றாக சேர்த்து, வெளியே பிரித்தெடுத்து, அசைத்து கொண்டிருக்கிறார். எவ்வளவோ காரியங்கள் கூறப்பட்ட வேண்டியதாயுள்ளது! 23 இப்பொழுது, அடுத்த ஞாயிறு இரவு மறந்து விட வேண்டாம், கர்த்தருக்கு சித்தமானால், அடுத்து ஞாயிறு இரவில் நமக்கு…அடுத்த ஞாயிறு காலையில் ஒரு வேளை சுகமளித்தல் ஆராதனை இருக்கும். நான் இவ்வாறு கூறுவதற்கான காரணம் என்னவெனில் ஒரு ஞாயிறு காலையில் அளவுக்கதிகமாக நபர்கள் இருந்தால், நான் அப்பொழுது ஞாயிறு இரவில் அதை வைத்துக் கொள்ளலாம். நீங்கள் பாருங்கள் ஆனால் ஞாயிறு காலையிலேயே நான் எல்லோருக்கும் ஜெபித்து அனுப்பிவிட முடிந்தால் அதுவும் நல்லது தான். 24 புதன் இரவு வாரத்தின் நடுவில் நடத்தப்படும் ஒரு ஜெபக் கூட்டமாகும். இங்கே அருகாமையில், வீடுகளை உடையவர்கள் இங்கே கூடி வந்து அந்த ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். அதை நீங்கள் விட்டு விட வேண்டாம். அதில் தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள், பாருங்கள். ஜெபியுங்கள். நெருக்கமாக தேவனைத் தேடுங்கள். உங்கள் மத்தியில் ஒரு போதும் மதவெறி நுழைந்து விட இடம் கொடுத்து விடாதீர்கள். ஒரு பொய்யை ஏற்றுக் கொள்ளக் கூடாதபடிக்கு உண்மையானது மிதமிஞ்சி உள்ளது. பாருங்கள், எனவே தவறான பாதையில் போய் விடாதீர்கள். சரியானதில் நிலைத்திருங்கள்.
1325 ஒரு பழக்கப்பட்ட “ஆமென்” சப்தத்தை நான் கேட்டேன். அதை நான் அநேக ஆண்டுகளாக கேட்டுப் பழக்கமானதாகும். அது சகோதரன் ரஸ்ஸல் க்ரீச்தான். அன்றொரு இரவில் பேட்டி அவர்கள் தான் அந்நிய பாஷையில் பேசியது என்று என்னிடம் கூறினார்கள். பேட்டி அவர்களே எங்கேயிருக்கிறீர்கள்? தேனே, இங்கே இருக்கிறாயா? ஆம், என்னே, நான் அவளைப் பார்த்தால், அவளை அடையாளங் கண்டு கொள்ள மாட்டேன். ஆனால் நான் அவளை என் கரங்களில் குழந்தையாயிருக்கையில் சுமந்து, இதே இடத்தில் கர்த்தருக்கென பிரதிஷ்டை செய்தேன். மேடா, “அவள் இப்பொழுது ஒரு அழகான இளம் வாலிபப் பெண்ணாக பரிசுத்த ஆவியின் வல்லமையை தன் மேல் பெற்றுக் கொண்டவளாக இருக்கிறாள்” என்று கூறினான். ரஸ்ஸல் அவர்களே, நீங்கள் ஒரு ஐசுவரியவான். ஆம் நீங்கள் அப்படித்தான். 26 சகோதரி க்ரீச் எங்கேயிருக்கிறார்? நான் அவர்களைப் பார்க்கவேயில்லை. இங்கே எங்காவது இருக்கிறாரா? ஓ, அங்கே பின்னால் இருக்கிறார். ஓ, சகோதரி க்ரீச் அவர்களே, அவ்விதமாக ஒரு பிள்ளையை தேவன் உங்களுக்குக் கொடுத்தற்காக நான் எவ்வளவாய் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். அதாவது, ஏன்? எவ்வளவு—எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும் என்பதை நீங்கள் உணருகிறதில்லை. இளம் வாலிபப் பருவத்திலே பெண் பிள்ளைகளோ கொக்கரித்துக் கொண்டும், நகைத்துக் கொண்டுமிருக்கின்றனர். உங்களுக்குத் தெரியும், வாத்து போன்ற சிகை அலங்காரங்கொண்ட இந்தப் பையன்களோடு அர்த்தமற்ற காரியங்களையும், இன்னும் இன்னபிற காரியங்களை செய்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இந்த சிறு பெண்ணோ பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு அந்நிய பாஷையில் பேசிக் கொண்டிருக்கிறாள். ஒ, என்னே! 27 ஹூம்! பெந்தெகொஸ்தே பிரசங்கிகளே, எத்தனை புருஷர்கள் தங்களுடைய வாலிபமான பெண்கள் சுழன்று நடமாடும் ராக் ரோல் குழுவினரோடு நடனமாட வெளியே போகிறவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்களால் காண முடிந்தால், அவர்களுடைய முழு ஜீவியத்தை ஒப்புக் கொடுப்பார்களா?
1428 அதை மதிப்பிடுங்கள், சகோதரனே, நீங்கள் அங்கே அரசாங்கத்தினரிடையே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிவேன். நானுங்கூட என் பிள்ளைகளை வளர்ப்பதற்கு அநேக நாட்கள் பாடுபட்டிருக்கிறேன், சகோதரனே…ஆனால் நினைவில் கொள்ளுங்கள். தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் பலனளிக்கிறார். ஆம், உண்மையாகவே! “நான் திரும்ப அளிப்பேன்” என்று கூறுகிறார். 29 பேட்டி, தேனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உன்னைப் பார்த்தால் என்னால்—என்னால் நீ யார் என்று அறிந்து கொண்டிருக்க முடியாது என்று நான் யூகிக்கிறேன். தேனே, ஆனால் அந்த நேர்பாதையை விட்டு விலகாதே. ஒரு எலுமிச்சையாக இருப்பதை பொன்னிற ஆப்பிள் பழம்போல் ஏமாற்றிக் காட்டுவதைப் போல், பார், பிசாசு உனக்குள் அந்தவிதமாக எதையாவது போட்டுவிடுவதை அனுமதித்து விடாதே. அதை அப்படியே போட்டுவிட்டு விலகி விடு. உன் கண்களை சிலுவையின் மேல், கிறிஸ்துவின் மேல் வைத்து விடு. வேளையானது சமீபித்துவிட்டபடியினால் முன்னேறிச் சென்று கொண்டேயிரு. புரிகிறதா?
1530 தேவனுடைய ஆசீர்வாதங்களை குறித்து இன்னும் எத்தனையோ புத்திமதிகளை நான் சொல்லிக் கொண்டே போகலாம். அநேகரை நான் சந்திக்கவே இயலாமற் போய்விட்டது. இந்த வார முழுவதிலும் ஐம்பது பேர்களுக்குக் கூட நான் ஜெபிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன், வருவோரும், போவோர்களும், அவசர அழைப்புகளும், இருந்தன, ஆனால் நான் தீவிரமாக ஆய்ந்து படித்து கொண்டேயிருக்கிறேன். ஆனால் இப்பொழுது, அடுத்த ஞாயிறன்று கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிறு காலையில் ஜனங்களுக்காக ஜெபிப்போம், அதற்கு கர்த்தர் தாமே இறங்கி வந்து, நமக்கு மகத்தான வல்லமையை அருளி, நமக்கு தம்மை வெளிப்படுத்தித் தரும்படி கேட்போம்.
1631 ஓ, இந்த சபை காலத்தைக் குறித்து ஆரம்பிக்கிறதை நான் விரும்பவில்லை, ஏனெனில் அவற்றின் இறுதியானது இதுதான் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இப்பொழுது இச்சபைக் காலமானது ஏழு சபைக் காலங்களின் முடிவாக அது இருக்கப் போகிறது. நீங்கள் அதனைக் கேட்டு மகிழ்ந்துள்ளீர்களா? [சபையார் “ஆமென்” என்று பதிலளிக்கிறார்கள்—ஆசி.] இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். நான் துவக்கத்தில் கூறினது போலவே முடிவிலும் இதைக் கூறுகிறேன், அநேகக் காரியங்கள்—அநேக காரியங்கள், அதாவது நீங்கள் அநேகக் காரியங்களை ஒத்துக் கொள்ளாமலிருக்கலாம், ஆனால் அவைகளை எனக்கெதிராகக் கொள்ள வேண்டாம். பாருங்கள். எவ்வாறாயினும் என்னை நேசியுங்கள், ஏனென்றால் நீங்கள் என்ன செய்தாலும் அல்லது என்னக் கூறினாலும் அது எந்த வித்தியாசத்தை உண்டாக்காது, நான் உங்களைப் பற்றி ஒரே விதமாகத் தான் கருதுவேன். இன்னும் கூடுதலாக ஏதாவது இருக்குமானால் உங்களைப் பற்றி நான் இன்னும் கூடுதலாக சிந்தித்துக் கொள்வேன். ஆனால் நான் உங்களை நேசிக்கிறேன் என்பதை தேவன் அறிவார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தைத் தொழுது கொள்ளும் எந்தவொரு மனிதனையும் நான் நேசிக்காமல் இருந்ததில்லை. புரிகிறதா?
1732 நாம் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்டிருந்த போதிலும், நான் ஒருபோதும் உங்களுக்கெதிராக எந்தவிதமான கசப்போ அல்லது அலட்சியமோ கொண்டிருக்கவில்லை. ஒரு மேசையில் நாம் அமர்ந்திருக்கையில் நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பணியாரத்தை சாப்பிடுகிறவர்களாக இருப்போம். அதேபோல்தான் இங்குள்ள காரியமும், ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்ளுகிறது என்பதில், நாம் ஒருவரையொருவர் நேசிக்கிறவர்களாயிருக்கிறோம். அப்படி நாம் செய்யாவிடில் நாம் அதை செய்தாக வேண்டும். நாம் அதை செய்கிறவரையிலும் நாம் தேவனுக்குள்ளாக ஒரு போதும் அதிக தூரம் செல்லமாட்டோம். 33 ஒரு விஷயத்தை மறந்து விட வேண்டாம். வரங்களில் எல்லாம் மிகப்பெரிய வரமானது அன்பு என்பதை ஒருபோதும் மறந்திட வேண்டாம். “நான் மனுஷர் பாஷைகளைப் பேசினாலும் தூதர் பாஷைகளைப் பேசினாலும் என் சரீரத்தை சுட்டெரிக்க கொடுத்தாலும், சகல அறிவையும் நான் உடையவனாயிருந்தாலும், நான் ஒன்றுமில்லை…நிறைவானது…அன்பு…வரும்பொழுது…” அனைத்து ஆவிக்குரிய வரங்களும், அன்போடு இசைந்ததாயில்லாவிடில், அது ஒன்றுமில்லை. வேறு எதுவும் ஒழிந்து போம். “ஆனால் அன்போ நிலைத்திருக்கும்.” பாருங்கள் அது I கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தில் உள்ளது.
1834 இப்பொழுது இன்றிரவில் இந்த மகத்தான சபைக் காலத்திற்குள் பிரவேசிக்கிறோம். ஓ, என்னே! (இன்றிரவு) ஒன்பது மணிக்கு மேல் கால்மணி நேரம் அதிகமாக ஒரு வேளை நமக்கு ஆகலாம். இப்பொழுது இங்கிருக்கிற ஒவ்வொருவரையும் உட்கார வைக்க போதுமான இடவசதி இல்லை என்பதற்காக நிச்சயமாக நான் வருந்துகிறேன். சரியாகக் கூறினால் நாம் அதை உடையவர்களாக இல்லை. ஆனால் ஒரு நாளில் நமக்கு இடம் கிடைக்கும். 35 இப்பொழுது நீங்கள் எனக்கு ஒரு தயவு செய்ய வேண்டுகிறேன். என்னுடைய நிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு நாளில் எனக்கு அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் பாருங்கள், நேரமானது சமீபித்து விட்டது. பார்த்தீர்களா? இப்பொழுது இதை நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதாவது நீங்கள் எனக்காக எப்பொழுதும் ஜெபியுங்கள். நினைவிருக்கட்டும், எவ்வளவு உத்தமமாயிருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு நான் அறிந்தமட்டில் உத்தமமாய் இருந்திருக்கிறேன். பாருங்கள். நான் இனி குழந்தை அல்ல என்பதை நான் உணருகிறேன். எனக்கு ஐம்பத்தியொரு வயதாகிறது, நான்—நான்…தேவன் என்னை அழைக்கும் வரையில் நானாக போக முடியாது. நான் எந்த விதமாகப் போக வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அந்த வழியாகத் தான் நான் போவேன். பாருங்கள்? அவ்விதமாகத்தான் அது இருக்கும். புரிகிறதா? ஆனால் என்னவானாலும் நான் உத்தமமாயிருந்து சத்தியத்தை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். எனவே, சில சமயங்களில் அது ஒரு தனிமையாக சஞ்சரிப்பதாய் இருக்கிறது என்பதை நான் அறிவேன். ஆனால் அவர் உங்களோடு இருக்கிற வரையிலும், அது என்ன வித்தியாசத்தை உண்டாக்கிவிடப் போகிறது? புரிகிறதா?
1936 இப்பொழுது, இந்த மகத்தான சபைக் காலத்திற்குள் நாம் பிரவேசிக்கும் முன்னர், சற்று நேரம் மீண்டும் நாம் ஜெபத்திற்காக எழுந்து நிற்க இயலுமா என்று நான் அறிய விரும்புகிறேன். அவ்வாறு எழுந்து நிற்பது சற்று செளகரியமாக உணரச் செய்யும். ஆராதனையின் முடிவில்…எத்தனை பேர்கள் தேவனுக்கு முன்பாக ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டுமென விரும்புகிறீர்கள்? அப்படி விரும்புகிறவர்கள், “ஓ, கர்த்தாவே, காலத்தின் முடிவில் உள்ள என்னை நினைவுகூரும்” என்று தேவனை நோக்கி உங்கள் கரங்களை உயர்த்துங்கள்.
2037 எங்கள் பரலோகப் பிதாவே, கடந்த வார முழுவதிலும், எங்கள் மத்தியில் நிலவியிருந்த ஜீவனுள்ள தேவனின் பிரசன்னத்திற்காகவும் உம்மிடத்திலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டவைகளுக்காகவும். காலங்கள் தோறும் எவ்வாறு உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தினீர் என்பதற்காகவும், உம்முடைய வார்த்தையை எவ்வளவாய் நீர் எங்களுக்கு தெளிவாக்கிக் கொடுத்தீர் என்பதற்காகவும் நாங்கள் உமக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்வதற்கு எங்களுக்கோ போதிய நாவுகள் கிடையாது. நாங்கள் எவ்வளவாய் உமக்காக காத்திருந்தோம், எங்களின் அன்பை நாங்கள் தெரிவிக்க முயற்சித்தோம், அதையோ சரியாகச் செய்ய எங்களால் இயலாமற் போயிற்று, கர்த்தாவே, ஏனென்றால் அழிவுக்கேதுவான நாவுகளால் அதைச் செய்ய முடியாது. எங்களை நீர் இரட்சித்ததற்காகவும் உமக்கென்று ஒரு பசியை எங்களில் தந்ததற்காகவும் நன்றி செலுத்துகிறோம். “நீதியின் மேல் பசியுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. (நீதியின் மேல் பசியாயிருப்பதே ஒரு ஆசீர்வாதமான காரியமாகும்) அதன் பிறகு நீர் அந்த பெரிய மேற்கோளைக் கூறினீர், அதாவது, “அவர்கள் திருப்தியடைவார்கள்” என்றீர் இப்பொழுது கர்த்தாவே, நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். எங்களுடைய குறைகளை எங்களுக்கு மன்னியும். 38 லவோதிக்கேயா என்ற பெயருள்ள இந்தக் கடைசி சபைக் காலத்திற்குரிய செய்திக்குள் நாங்கள் பிரவேசிக்கையில், வேத வாக்கியங்களையும், வரலாற்றையும் நாங்கள் பார்க்கையில், அது மிகவும் சரியாக இசைவாக இருக்கிறது. எனவே, பிதாவே, இக்கடைசி காலத்தைக் குறித்து உம்முடைய தீர்க்கதரிசன வார்த்தைகளில் உள்ள மேற்கோளை நாங்கள் அறிவோம். அது ஏனைய ஆறு காலங்களைப் போலவே இருக்கும். பிதாவே, இன்றிரவில் இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் எங்களிடமாய் வந்திட நீர் அனுமதித்து, நாங்கள் மேற்கொண்டு உமக்காக காத்திருக்கையில் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென், நீங்கள் அமரலாம்.
2139 கர்த்தருக்கு சித்தமானால், இச்செய்திப் புஸ்தகமானது நம்மால் முடிந்த அளவு விரைவாக… சகோதரன் லியோ இந்த ஒலி நாடாவிலிருந்து சுருக்கெழுத்தில் அவைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். அதிலிருந்து தட்டச்சு செய்ய அதுபோகும், பிறகு புஸ்தக வடிவில் அது கிடைக்கும். 40 அதற்கடுத்தபடியாக ஒரு குடிகாரி இரட்சிக்கப்பட்டாள் என்ற தன்னுடைய சாட்சிப் புத்தகத்தை சீக்கிரத்தில் ரோஸல்லா தயாரித்து வெளியிடுவாள். நீங்கள் எல்லோருமே அவளுடைய கதையை நினைவில் வைத்திருக்கிறீர்கள். மேலும், பரிசுத்த ஆவியானவர் அவளை ஒரு கூட்டத்தில் எவ்வாறு அழைத்தார் என்பதையும் அறிவீர்கள். மதுப்பழகத்திற்கு அடிமையானவர்களை திருத்தும் நான்கு பெரிய நிறுவனங்களாலும், சிக்காகோவில் உள்ள மருத்துவமனைகளாலும் அவள் மீட்கப்பட முடியாது என்று கைவிடப்பட்டிருந்தாள். கர்த்தராகிய இயேசுவோ, ஒரே நொடிப் பொழுதில் அவளைவிட்டு அவை யாவற்றையும் அகற்றிப் போட்டுவிட்டார். அவள் சிறைச் சாலையிலிருந்து மற்றும் ஏனைய இடங்களுக்கும் சென்று, எவ்வாறு தேவன் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை விடுவிக்க முடியும் என்பதைப் பற்றி சாட்சி கூறிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய சாட்சியினால் அநேகர் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
2241 இப்பொழுது முதலாம் சபைக் காலம், அது என்னவென்று நீங்கள் கூறக்கூடுமோ? அது எபேசு, இரண்டாவது? சிமிர்னா, மூன்றாவது? பெர்கமு, நான்காவது? தியத்தீரா, ஐந்தாவது? சர்தை, ஆறாவது? பிலதெல்பியா, ஏழாவது? லவோதிக்கேயா. 42 முதலாம் சபைக் காலமானது கி.பி.55-ம் ஆண்டு முதல் 170 முடிய இருந்தது. அது எபேசுவாகும். சிமிர்னா 170 முதல் 312 வரை இருந்தது. பெர்கமு 312 முதல் 606 முடிய இருந்தது. தியத்தீரா 606 முதல் 1520 முடிய இருந்தது. சர்தை 1520 முதல் 1750 முடிய இருந்தது. பிலதெல்பியா 1750 முதல் 1906 முடிய இருந்தது. அப்பொழுது தானே லவோதிக்கேயாவின் காலம் ஆரம்பித்தது. ஆறாம் சபைக் காலமானது ஏழாம் சபைக் காலத்திற்குள் சற்று நீண்டு போயிருந்தது. நேற்று இரவில் நாம் சற்று நீண்டிருந்த அந்த காலத்தைக் குறித்துத் தான் பார்த்தோம். இப்பொழுது, இன்றிரவில், நாம் லவோதிக்கேயா சபைக் காலமாகிய முடிவுக் காலத்தைக் குறித்து காண்போம்.
2343 கி.பி 1906-ல் லவோதிக்கேயா சபைக் காலமானது ஆரம்பித்தது என்று நாம் விசுவாசிக்கிறோம். இப்பொழுது நான் “முன்னுரைக்கிறேன்,” இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், விசேஷமாக ஒலி நாடாவில் செய்தியைக் கேட்கிறவர்களே கவனியுங்கள். அவ்வாறு நிச்சயம் நடக்கும் என்று நான் உரைக்கவில்லை; ஆனால் 1977 என்ற வாக்கில் அது முடியும் என்று நான் முன்னுரைக்கிறேன், அதாவது சபையானது முற்றிலும் விசுவாச துரோகத்திற்குள் சென்றுவிடும். அவள் தேவனுடைய வாயினின்று வாந்தி பண்ணிப்போடப்படுவாள். இரண்டாம் வருகை இல்லை கிறிஸ்துவின் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல் எந்த நேரத்திலும் வரலாம். இப்பொழுது, அவ்விஷயத்தில் நான் ஒரு ஆண்டு தவறவிட்டிருக்கக்கூடும் அல்லது ஒரு வேளை இருபது ஆண்டுகள் தவறவிட்டிருப்பேன் அல்லது நான் அது நடப்பதைப் பற்றி நூறு ஆண்டுகள் கணக்குத் தவறுதலாக சொல்லிவிடக் கூடும். அது எங்கே எப்பொழுது நடக்கும் என்பதை நான் அறியேன். ஆனால் அவர் எனக்குக் காண்பித்த ஒரு தரிசனத்தின் அடிப்படையிலும், காலமானது முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறதின் அடிப்படையிலும், அது 33-க்கும் 77-க்கும் இடையில் இருக்கலாம் என்று நான் முன்னுரைக்கிறேன். இந்த மகத்தான தேசமானது, ஒரு யுத்தத்திற்கு சென்று அதினால் அது தூள் தூளாக நொறுக்கிவிடும், பாருங்கள். அது மிகவும் சமீபமாக இருக்கிறது. அது பயங்கரமான விதமாக சமீபமாயிருக்கிறது. நான் தவறாய் இருக்கக் கூடும், நான் அதை முன்னுரைத்துக் கொண்டிருக்கிறேன். எல்லோரும் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் புரிந்து கொண்டால் “ஆமென்” என்று கூறுங்கள். [சபையார், “ஆமென்!” என்கின்றனர்—ஆசி.] புரிகிறதா?
2444 ஆனால் கர்த்தர் 33-ல் 1933-ம் ஆண்டில், பெரிய வல்லமை படைத்த ஒரு ஸ்திரீயைக் குறித்து எனக்கு தரிசனத்தில் காண்பித்தார். அது எழுதி வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு “ரூஸ்வெல்ட் அவர்கள் உலகம் யுத்தத்திற்கு செல்லும்படி செய்துவிடுவார்” என்பதைப் பற்றியும் சொல்லப்பட்டது. எவ்வாறு “முசோலினி எத்தியோப்பியா தேசத்தின் மேல் தனது முதலாவது படையெடுப்பை எடுப்பான் என்பதும், அத்தேசத்தை அவன் கைப்பற்றுவான் என்பதும், ஆனால் அவன் அவமானகரமான முடிவை எய்துவான்” என்பதும் தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு, எவ்வாறு “நாஸிஸக்கொள்கை, பாசிசக்கொள்கை, கம்யூனிசக் கொள்கை என்ற மூன்று விதமான கொள்கைகள் தோன்றும் என்பதும், இவையாவும் கம்யூனிசத்தில் போய் முடிவடையும்” என்பதும் காண்பிக்கப்பட்டது. அக்காலத்தில் எத்தனைபேர் நான் பின்வரும் காரியத்தை நீங்கள் நின்று திரும்பக் கூறும்படி செய்ததை நினைவில் வைத்திருக்கிறீர்கள்? “ருஷ்யாவைக் கவனி, வடதிசை இராஜாவாகிய ருஷ்யாவை கவனி. வடதிசை ராஜாவாகிய ருஷ்யாவைக் கவனி! வடதிசை ராஜாவாகிய ருஷ்யாவை கவனி!” என்று மீண்டும் மீண்டும் கூற வைத்தேன். எத்தனை பேர்கள் நான் இவ்வாக்கியங்களை கைகளை அசைத்து மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப கூறியதைக் கேட்டிருந்தீர்கள்? முன் காலத்தவர்கள், நீங்கள் பாருங்கள், சபையின் ஆரம்பக் காலத்தில் இருந்தவர்கள் அதை அறிவார்கள். அப்படியே அங்கு நின்று, “ருஷ்யாவை, வடதிசை ராஜாவைக் கவனி! என்றும், பாருங்கள், அவன் என்ன செய்வான் என்பதும், அந்த எல்லாக் கொள்கைகளும் முடிந்து ருஷ்யாவில் போய் குவிந்து விடும்” என்றும் திரும்ப திரும்ப உரைக்கப்பட்டது.
2545 அதன் பிறகு நான், “இந்த தேசம் ஜெர்மனியோடு யுத்தத்திற்குச் செல்லும் என்றும், ஜெர்மனியானது அதன் எல்லையில் சிமெண்ட் கலவையினால் கட்டப்பட்ட மதிலினால் அரணாக்கப்படும்” என்றும் கூறினேன். அதுதான் மேகினோட்லைன் என்ற சுவராகும். பதினொரு ஆண்டுகளுக்கு முன்பே, அது கட்டப்படுவதற்கு பதினொன்று ஆண்டுகளுக்கு முன்பே முன்னுரைக்கப்பட்டது. மேலும் நான், “அமெரிக்கர்கள் அந்த சுவரண்டை மிக மோசமாக தோற்கடிக்கப்படுவார்கள்” என்றும் கூறினேன். இங்கேயுள்ள சில சகோதரர்கள் அங்கே அந்த சிமெண்ட் கலவையினால் கட்டப்பட்ட சுவரண்டை இருந்திருக்கிறார்கள். சகோதரன் ராய் ராபர்சன் அவர்களும் மற்றும் ஏனையோரும் தான் அங்கே இருந்தார்கள். என்ன நடைபெற்றது என்பதை அவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள். அவ்வாறு தான் அமெரிக்கர்களுக்கு நிச்சயம் நடந்தது. உண்மையே. “ஆனால் முடிவாக” நான், “நாம் ஜெயிப்போம். நமக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில் ஜெயிப்பதில் நாமும் ஒருவராக இருப்போம்” என்று கூறினேன்.
2646 நான், “அந்தக் காலத்திற்கு பின்னர் விஞ்ஞானமானது மிகவும் முன்னேறிப்போய்விடும்” என்றும் உரைத்தேன். அவ்வாறே அது நடந்தது. அவர்கள் அணுகுண்டையும் இன்னபிறவற்றையும் செய்தார்கள். மேலும் நான், “அவர்களுடைய முன்னேற்றத்தின் கட்டத்தில் அவர்கள் தொடர்ந்து முட்டை வடிவம் போன்ற மோட்டார் வாகனங்களைச் செய்யத் துவங்குவார்கள்” என்றும் உரைத்தேன். 1933-ம் ஆண்டில் இருந்த அந்த பழைய காலத்து பெரிய மோட்டார் வாகனமானது முன்பக்கமாக நீண்டு, இந்தவிதமாக பின்னால் பெரிய வடிவில் அமைந்து, அதன் பின்னே உபரி சக்கரம் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்பொழுது உள்ள வாகனங்களைப் பாருங்கள் அவைகள் ஒரு முட்டை வடிவத்தில் இப்பொழுது வடிவமைக்கப்பட்டுள்ளன. “இறுதியாக அவர்கள் ஒரு மோட்டார் வாகனத்தைக் கண்டு பிடிப்பார்கள். அதற்கு திருப்பு சக்கர கருவியே அதில் இருக்காது. ஒரு குடும்பத்தினர் கண்ணாடியினலான மேல் மூடியையுடையதான அந்த அருமையான மோட்டார் வாகனத்தில் ஒரு பெரிய அழகாக காட்சியளிக்கும் சாலைகளில் பயணம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த பொழுது அவ்வாகனமானது யாராலும் ஓட்டிச் செல்லப்படாமல், தானாகவே இயங்கி அது சாலைகளின் வளைவுகளிலும் மற்றும் எல்லாவிடங்களிலும் சென்று கொண்டிருந்தது” என்று நான் கூறினேன். இப்பொழுது அவர்கள் அந்த மோட்டார் வாகனத்தை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே அதைக் கண்டு பிடித்துவிட்டார்கள். அவர்களிடம் இப்பொழுது அவ்வாகனம் இருக்கிறது. அப்பொழுது நான், “விஞ்ஞானமானது அந்நாளில் முன்னேறி விடும்” என்று கூறினேன்.
2747 மேலும் நான், “அவர்கள் பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கிடுவதை நான் கண்டேன். அவ்வாறே அவர்கள் பெண்கள் வாக்களிப்பதற்கும் அனுமதித்துவிட்டார்கள். அவ்வாறு வாக்களிப்பதின் மூலம் அவர்கள் இந்நாட்களில் ஒன்றில் தவறான மனிதனை தேர்ந்தெடுப்பார்கள்” என்று கூறினேன். கடந்த தேர்தலில் நீங்கள் அதைச் செய்துவிட்டீர்கள். பெண்களின் வாக்குகள் தான் கென்னடியைத் தேர்ந்தெடுத்தது. நாம் அதை அறிவோம், பாருங்கள் அங்கே அவர்கள் ஆதாயப்படுத்திருந்த சூழ்ச்சியான இயந்திரங்கள், மற்றும் சில காரியங்களுக்கும் நடுவில் செய்திருந்த சில ஏற்பாடுகள் மத்திய தொடர் இரகசிய புலனாய்வுத் துறையானது அதைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியது. ஏன் அதைக் குறித்து ஏதும் செய்யமாட்டோமென்கிறார்கள்? ஏன் அதைக் குறித்து ஒன்றும் சொல்லமாட்டோமென்கிறார்கள்? ஹா! தங்கள் உத்தியோகத்தை இழந்து விடுவோமா என்ற அச்சத்தினால்தான். நீங்கள் பாருங்கள், அது முழுவதும் அழுகிப்போன அரசியலின் கூட்டம். அவ்வளவு தான் அது. நிச்சயமாக!
2848 எந்த, எந்த—எந்த…என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இத்தேசத்திற்கு இரட்சிப்பே இல்லை. எந்த தேசத்திற்கும் இரட்சிப்பே இல்லை. இரட்சிப்பு இயேசு கிறிஸ்துவில் உள்ளது. அவரில் மட்டும் உள்ளது. உ—ஊ! அதுவே உண்மை. நான் அமெரிக்காவுக்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன்; உலகின் வேறு எந்த நாட்டிலும் வாழ்வதைவிட இத்தேசத்தில் வாழ்வதையே நான் விரும்புகிறேன். ஏனெனில்…கனடாவிற்கு வெளியே …கனடாவும் அமெரிக்காவும் இரட்டையர்கள் என்பதை நாம் அறிவோம், இருவரும் அண்டை நாடுகள், அற்புதமான இடம் தான், ஆனால் வேறு எங்கும் வாழ்வதை விட இங்குதான் நான் வாழ் விரும்புகிறேன், ஏனெனில் இதுவே எனது வீடாகும். நான் ஒரு அமெரிக்கனாயிருப்பதற்காக மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆனால் நான் உங்களுக்கு கூறுவதென்னவெனில், இத்தேசமானது அதற்கு சமமான எழுப்புதலை அவசியம் பெற்று இருக்க வேண்டும். அதற்கு நிச்சயம் அது தேவைப்படுகிறது. ஆனால் அது அதைப் பெற்றுக் கொள்ளாது. இல்லை, ஐயா, அவள் மீண்டும் எழும்பப் போகிறதில்லை, இல்லை ஐயா, அவள் முடிந்து போய்விட்டாள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக சிக்காகோவில் நான் கூறியது உங்களுக்கு நினைவிலிருக்கும். அது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜீன், உங்களிடத்தில் அது இருக்கிறது, அப்பொழுது நான், “ஒன்று இந்த ஆண்டில் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், தவறினால், அவர்கள் தொடர்ந்து அதை புறக்கணித்தே விடுவார்கள்” என்று கூறினேன். அதைத் தான் அவர்கள் செய்து இருக்கிறார்கள். பாருங்கள், அவள் தன்னுடைய முடிவை எய்துகிற வரையிலும் அதையே தான் அவர்கள் செய்வார்கள்.
2949 ஆனால் வல்லமை வாய்ந்த ஒரு ஸ்திரீ தோன்றுவான். இப்பொழுது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் கூட ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வல்லமை பொருந்திய மகத்தான ஸ்திரீ வருவாள், அவள் ஒரு வேளை ஜனாதிபதியாக் இருக்கக் கூடும் அல்லது கத்தோலிக்க சபைக்கு எடுத்துக் காட்டாக இருக்கக் கூடும். (அப்படியிருக்கும் என்று நான் கருதுகிறேன்;) அவள் ஒரு நாளில் இந்நாட்டை தன் கையிலெடுத்துக் கொண்டு, இந்த தேசத்தை ஆட்சி செய்வாள். இந்த தேசம் ஒரு ஸ்திரீயின் தேசமாயுள்ளது. கொடியானது ஒரு ஸ்திரீயினால் உண்டாக்கப்பட்டதாகும். இந்த தேசத்தின் எண் பதிமூன்று, இத்தேசம் பதின்மூன்று நட்சத்திரங்கள், கொடியில் பதின் மூன்று கோடுகள், பதிமூன்று காலனிகள் என்பதோடு துவங்கியது, எல்லாம் பதின்மூன்று, பதின்மூன்று, பதின்மூன்று என்று யாவற்றிலும் அவ்வாறே காணப்படுகிறது. அவளது வெள்ளி டாலர் நாணயத்திலும் பதின்மூன்று நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன, யாவும் பதின்மூன்று என்றே காணப்படுகிறது. இத்தேசத்தின் எண் பதின்மூன்றாகும். அது வெளிப்படுத்தின விசேஷத்தின் பதின்மூன்றாம் அதிகாரத்திலும் காணப்படுகிறது. முற்றிலும் பதின் மூன்று தான். ஒவ்வொரு காரியமும், “ஸ்திரீ, ஸ்திரீ, ஸ்திரீ, ஸ்திரீ, ஸ்திரீ” என்றே இருக்கின்றது. அவள் அனைத்து அலுவலகங்களையும் கைப்பற்றியிருக்கிறாள், திரைப்பட நவநாகரீகத் துறையான ஹாலிவுட்டையும் அவள் தன் கையில் எடுத்துக் கொண்டுவிட்டாள். அவள் தேசத்தையும் மேற்கொண்டுவிட்டாள். அலுவலகங்கள் அவளால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அங்கிருக்கின்ற யாவற்றையும் தன் அதிகாரத்தில் கொண்டு வந்திருக்கிறாள், மனிதனோடு அவள் சரி சமமான உரிமைகளை பெற்றுவிட்டாள். ஆண்களோடு வாக்களிக்கிறாள், ஒரு மனிதனைப் போல சாபமிடுகிறாள், ஒரு மனிதனைப் போல மது அருந்துகிறாள், இன்னும் என்னவெல்லாமோ செய்கிறாள். ஒரு ஸ்திரீயை ஆராதிக்க கத்தோலிக்க சபை பயன்படுத்தும் ஒரு தூண்டிலாகும். எப்படியாயினும் அவர்கள் ஏற்கனவே ஒரு ஸ்திரீயைத்தான் தொழுதுகொண்டிருக்கிறார்கள். 50 ஒரு ஒழுக்கக் கேடான பெண்மணியானவள், சாத்தான் வசத்தில் இருக்கும் வேறெந்த ஒன்றைக் காட்டிலும் மிகவும் சிறந்த தூண்டிலாகும். மதுபான கடைகளைவிட அவள் மோசமானவள். நாட்டிலுள்ள மதுபான கடைகளைவிட அவள் அதிகமான ஆத்துமாக்களை நரகத்திற்கு அனுப்பிட முடியும். அது உண்மை.
3051 “குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்” என்று பூமியிலேயே மிகவும் ஞானமுள்ள மனிதன் கூறினார். ஒரு நல்ல ஸ்திரீயை ஒரு மனிதன் கனம் பண்ண வேண்டும். பாருங்கள் “ஆனால் பொல்லாத ஸ்திரீயோ அவனது இரத்தத்தில் தண்ணீராக இருக்கிறாள்.” அவனது இரத்தம் என்றால், அவனது ஜீவனையே குறிக்கும். நல்ல மனைவிகளை உடைய புருஷர்களாகிய நீங்கள், ஒரு நல்ல மனைவிக்காக நீங்கள் தேவனுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறியீர்கள். ஒரு மனிதனுக்கு ஏதாவது மிக நல்லதை ஒரு துணைக்குப் பதிலாக கொடுக்கக்கூடிய ஒன்று தேவனுக்கு இருக்கிறதெனில், அதை அவர் கொடுத்திருந்திருப்பார். ஆனால் ஒரு ஸ்திரீதான் தேவன் ஒரு மனிதனுக்கு சிறந்த துணையாகக் கொடுக்கக் கூடியதாயுள்ளது. ஆனால் அவர்கள் மாறுபடும்பொழுது…
3152 ஏதேன் தோட்டத்தில் பெண்ணைத்தான் சாத்தான் தனது கருவியாக இருக்கும்படி தெரிந்து கொண்டான். அவன் மனிதனை எடுக்கவில்லை. ஸ்திரீயையே எடுத்துக் கொண்டான். அவன் ஏன் ஆதாமிடம் போய் அவனுக்கு தனது உணர்ச்சிபூர்வமான பாசத்தை காண்பிக்கவில்லை? அவன் ஸ்திரீயினிடத்தில் வந்து அவளிடத்தில் தான் தனது அக்கறையுள்ள பாசத்தை காட்டுகிறான். ஏனெனில் அவளைத்தான் அவன் தெரிந்து கொண்டான். தேவன் மனிதனை எடுத்துக் கொண்டார். சாத்தானோ ஸ்திரீயை எடுத்துக் கொண்டான். 53 முன் நடந்ததையும் முடிவில் நடப்பதையும் பாருங்கள். ஆதியில் பாபிலோனானது ஸ்தாபிக்கப்பட்டபொழுது. ஒரு ஸ்திரீதான் அங்கே இருந்தாள். ஹிஸ்லோப் எழுதிய இரு பாபிலோன்கள் என்ற புத்தகத்தில் பாருங்கள். இப்பொழுது இருக்கிற இந்தக் காலமானது வந்தபொழுது, அது புறஜாதி காலமாக முடிவடைகிறது. பாபிலோன் அவ்வாறு ஆரம்பித்தது. முடிவடையும் பொழுதும், ஸ்திரீ தொழுகையில் (மரியாள்) என்பதில் தான் முடிவடைகிறது. எப்பேர்ப்பட்ட நாளில் நாம் ஜீவிக்கிறோம்!
3254 இப்பொழுது லவோதிக்கேயாவின் காலம், லவோதிக்கேயா என்ற அவ்வார்த்தைக்கு, “வெது வெதுப்பான” என்றும் அர்த்தமாம். அது சகல நன்மைகளும் தன்னிடத்தே பெருகப் பெற்றதாகவும், தனக்கு ஒரு குறைவுமில்லையெனவும் அவள் எண்ணுகிறாள். ஆனால் வேதமோ, அவள், “நிர்பாக்கியமுள்ளவள், குருடாயும், பரிதபிக்கப்படத்தவளாயும், நிர்வாணமான நிலையிலிருப்பதாக” கூறுகிறது. என்னே ஒரு நிலைமை! 55 இந்த சபைக் காலத்தில் ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு அளிக்கப்படும் பலனானது, “கர்த்தருடைய சிங்காசனத்தில் உட்காருவது” ஆகும். 56 இந்த சபைக் காலத்தின் நட்சத்திரம், அல்லது தூதன் அல்லது செய்தியாளன் யார் என்பது தெரியவில்லை. 57 இப்பொழுது முதலாம் சபைக் காலத்தின் தூதன் யார்? பவுல், எபேசு. சிமிர்னாவுக்கு யார்? ஐரேனியஸ். பெர்கமுக்கு? பரிசுத்த மார்ட்டின் ஆவார். தியத்தீரா சபைக்கு? அது கொலம்பாவாகும். சர்தைக்கு? லூத்தர். பிலெதெல்பியா? வெஸ்லி. இந்த லவோதிக்கேயாவுக்கு அது யாரென்று இன்னமும் நமக்குத் தெரியாது. அநேகமாக அது யார் என்பது இக்காலம் முடிவடைகிற வரையிலும் தெரியாமலே இருக்கக் கூடும்.
3358 ஆனால், இந்த தூதன் எப்படியிருப்பான் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி ஒரு மேற்கோளை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். அப்படிச் செய்வது சரியாயிருக்குமா? [சபையார், “ஆம்! ஆமென்!” என்று கூறுகிறார்கள்—ஆசி.] அதில் நமக்கு ஒரு சிறிது நேரம் இருக்கிறது. நான் அதைப் பற்றி என்ன எண்ணினேன் என்பதைப் பற்றி ஒரு சிறு மேற்கோள் ஒன்றை எழுதிவைத்துள்ளேன். 59 லவோதிக்கேயா சபையின் தூதனானவன், அதை முடிக்க வருவான். அதாவது ஏனைய தூதர்களைப் போல, வேதாகமத்தைப் போல, அவன் தானே காலத்தின் முடிவிலே இருப்பான். அவன் காலத்தின் முடிவிலே இருப்பான். சபைக் காலத்தின் துவக்கத்திலே அவன் வருவதில்லை, முடிவில் தான் வருவான். ஏனெனில் அவர்கள் செய்தவைகளுக்காக அவர்களை கடிந்து கொள்ளவே அவன் வருவான். “லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்.” 60 பாருங்கள், “சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்,” பாருங்கள், அந்தந்தக் காலத்தின் முடிவில் அதனதற்குரிய தூதனனவன் வருகிறான். பவுல், அச்சபைக் காலத்தின் முடிவில் வந்தான். இவ்வாறு வரிசையாக ஒவ்வொரு தூதனும் அந்தந்த சபைக் காலத்தின் முடிவில் வந்தார்கள். ஒரு சபைக்காலம் முடிவடைகையில், அது அடுத்த சபைக் காலத்திற்குள் சிறிது நீண்டிருந்து, முடிவடைந்தது. காலத்தின் முடிவு, அது தான் அவ்வாறு சிறிது அடுத்த சபைக்காலத்திற்குள்ளும் நீண்டுபோயிருக்கிறது. பாருங்கள், அது என்னவாயிருந்தது என்பதைப் பற்றி “தூதனுக்கு” இது இங்கே அடுத்த காலத்திற்குள் நீண்டு வருகிறது. “தூதனுக்கு” என்று காலத்தின் முடிவிலே உள்ளது. நாம் படிக்கட்டுகளில் ஏறிப் போகையில் எப்படியிருக்குமோ அவ்வாறு இவ்வேழு சபைக் காலங்களும், ஒவ்வொன்றும் முடிவடைகையில், அது அடுத்த சபைக்காலத்திற்குள்ளும் நீண்டு இருந்து அதிலும் காணப்படுகிறது.
3461 இந்நாளில் வருகின்ற இந்த தூதனானவன்…இங்கே சிலவற்றை நான் எழுதி வைத்துளேன், அதை நான் வாசிக்க விரும்புகிறேன். ஆனால் இந்த சபைக் காலத்தின் இறுதிப்பாகத்தில் அவன் அறியப்படுவான். ஏனெனில் நாம் அதற்கு மிகவும் சமீபமாயிருக்கிறபடியால், அந்த வெளிச்சத்தின் காலத்திற்கு நாம் சமீபமாயிருக்கிறபடியால், அவன் அநேகமாக இப்பொழுது பூமியில் இருக்ககூடும். ஆனால் அவனைத் தெரியாது, பாருங்கள். அவன் தானே சபை உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு—ஒரு வல்லமையான தீர்க்கதரியாக இருப்பான், ஏனென்றால் அவர்கள் தங்கள் பாவங்களில் தொடர்ந்து நீடித்துக் கொண்டே போகிறபடியினால் முடிவிலே தேவனுடைய வாயிலிருந்து, தேவனுடைய பிரசன்னத்தின் வாயிலிருந்து வாந்திப் பண்ணிப்போடப்படுவார்கள். 62 அத்தூதன் எலியாவைப் போல் இருப்பான் என்று நான் விசுவாசிக்கிறேன். அதற்கான காரணங்களை நான் கூறப்போகிறேன், இப்பொழுது, நாம் மல்கியாவின் புஸ்தகத்திற்கு சற்று நேரம் இங்கே திருப்புவோம், அத்தூதன் எலியாவின் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருப்பான் என்று நான் எண்ணுகிறேன் என்பதற்கான காரணத்தை உங்களுக்கு எடுத்துரைக்கப்போகிறேன். இப்பொழுது நீங்கள் உங்களுடைய—உங்களுடைய கிருபையின் தலைப்பாகையை அணிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். மல்கியா 4-ம் அதிகாரம். இப்பொழுது நான் வாசிக்கையில் உங்கள் வேதத்திலிருந்து நீங்கள் கவனியுங்கள். இப்பொழுது அடுத்த சில சிமிடங்களில் நாம் இந்த சபைக் காலத்திற்குள் போகும்முன், இப்பொழுது மிகவும் கவனமாக கூர்ந்து சிந்தியுங்கள். இதோ, சூளையைப்போல் எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 63 அவர் என்ன கூறிக்கொண்டிருக்கிறார்? வரப்போகிற ஒரு நாளைப்பற்றி அவர் பேசுகிறார். அதை நீங்கள் ஒத்துக்கொள்ளுவீர்களா? கர்த்தருடைய வருகையின் நாள். ஆனால்…உங்கள் மேல்…
3564 இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது அவர் இஸ்ரவேலரோடு திரும்ப பேசுகிறார். இப்பொழுது அவர் என்ன கூறினார்? “இதோ சூளையைப்போல எரிகிற நாள் வரும், (அவ்வழியே).” ஆனாலும் என் நாமத்துக்கு பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (இல்லை…அவர் பூமியை அக்கினியால் சுட்டெரிக்கும் நாளில், நாம் அவர்களுடைய சாம்பலை மதிப்போம். அது நிச்சயமாக ஆயிர வருஷ அரசாட்சியின் காலமாகும், பாருங்கள்) ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள். இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். இது பழைய ஏற்பாட்டின் முடிவாக இருக்கிறது.
3665 இயேசு கூறினார்…மத்தேயு 17:10-ல் இதைப் பற்றிப் பேசுகிறார். வர வேண்டிய எலியாவை அனைத்து யூதர்களும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது மத்தேயு 17:10—ல் இதைக் குறித்து இயேசு என்னக் கூறினார் என்பதைக் கவனிப்போம். மத்தேயு 17-ம் அதிகாரம் 9-ம் வசனத்திலிருந்து, 9-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார். (பார்த்தீர்களா? “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், நீங்கள் அறிவீர்கள், ஆனால் அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.) அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி; அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். நீதியின் சூரியனாகிய கிறிஸ்து வருமுன்னர் எலியா ஏன் முந்தி வர வேண்டும்? ஏன் அவர்கள் இதைக் கூறினார்கள்? இதோ நீர் ஏற்கனவே இங்கே வந்துவிட்டீர், ஆயினும் வேதபாரகர் எலியா முந்தி வரவேண்டுமென்கிறார்களே என்று கேட்டார்கள். இப்பொழுது, கவனியுங்கள்: இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக; எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாக மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். (பாருங்கள் அந்த எலியா யாரென்று அவர் கூறவில்லை என்பதைப் பாருங்கள்.) அவர் யோவான் ஸ்நானனைக் குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்து கொண்டார்கள். (யோவான் ஸ்நானன் வரவேண்டியிருந்த எலியாவாயிருந்தான்.)
3766 இப்பொழுது கவனியுங்கள், நான் மீண்டும் மல்கியா 4-ம் அதிகாரத்திற்கு போகப் போகிறேன். அவர் இங்கே, “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்” என்று கூறியிருக்கிறதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது 5-ம் வசனம்: இதோ பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே…நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். [சபையோர், “ கர்த்தருடைய !” என்று கூறுகின்றனர்.—ஆசி.] 67 “கர்த்தருடைய நாளில்” என்பதை நாம் எங்கே காண்கிறோம்? காலத்தின் முடிவிலே! அப்பொழுது உலகமானது சுட்டெரிக்கப்படப் போகிறது. அவர் வெண்மையான தலைமுடியை உடையவராய், மார்பருகே பொற்கச்சை உடுத்தினவராய் இருந்ததை குறித்து நாம் படித்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? அதை நினைவில் வைத்திருக்கிறீர்களா? கர்த்தருடைய நாள் என்பது ஒரு ஓய்வு நாள் அல்ல என்பதையும், அல்லது ஒரு ஞாயிற்றுக்கிழமையும் அல்லவென்பதையும் நாம் வேதத்திலிருந்து நிரூபித்தோம். அது சரிதானே? அந்த நாளில் தான் அவர் நியாயாதிபதியாக வருகிறார். “பூமியை சங்காரத்தால் அடிப்பார்.” அது சரிதானே? கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
3868 இப்பொழுது எலியாவின் இரு வருகையைக் குறித்து கவனியுங்கள். இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால் அனைத்து வேத வாக்கியங்களுமே கூட்டு அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அதை “ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து கற்றுக்கொள்ள கூடிய பாலகருக்கு வெளிப்படுத்தினீர்.” நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? இப்பொழுது மல்கியா 4-ஐ அங்கே வைத்திருங்கள். 69 இப்பொழுது நாம் மத்தேயு சுவிசேஷம் 2-ம் அதிகாரத்திற்கு சற்று செல்லுவோம். இந்தப் பக்கத்திற்கு சற்று பின்னால், மத்தேயு 2-ம் அதிகாரம், மத்தேயு 2-ம் அதிகாரம் என்று கூறியதற்குப் பதில் லூக்கா 2-ம் அதிகாரம் என்று நான் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அதை நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் சில நிமிடங்களுக்கு முன்னால் நான் சற்று துரிதப்படுத்திக் கொண்டிருந்தேன். அறையில் நான் இருக்கையில் பரிசுத்த ஆவியானவர் என் மேல் இருந்தார். நான் ஒரு மகத்தான வேளையை உடையவனாய் இருந்தேன். எனவே நான் 2-ம் அதிகாரம் என்றேன், அதுதானா என்பதை நாம் பார்ப்போம். இப்பொழுது ஒரு நிமிடம் நான் இதை இங்கே படிக்கிறேன். மத்தேயு 2-ம் அதிகாரம் தானே? நான் தேடுவது அதுவல்ல, அப்படித்தானே? சற்று ஒரு நிமிடம் பொறுங்கள்…சற்று நேரத்தில் அதை எடுத்துவிடுவேன்…நான் சற்று நேரம் எடுத்துக்கொள்கிறேன், ஏனெனில் வேத வாக்கியத்துக்கு இரு விஷயங்களைப் பற்றிக் கூறும் கூட்டு அர்த்தம் உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டுமென்று நான் நிச்சயம் விரும்புகிறேன். அன்னாள் துதி செலுத்துதல், நாசரேத்துக்கு திரும்புதல்; பஸ்கா பண்டிகை; யோவானின் ஊழியம். இப்பொழுது, நான் லூக்காவைத் தான் குறிப்பிட்டேனோ என்பதை பார்க்கட்டும். நான் எங்கோ அதைப் பற்றி வாசித்தேனே… லூக்காவுக்குப் பதிலாக நான் மாற்கு என்று குறிப்பிட்டுவிட்டேன். ஒரு வேளை மாற்காக இருக்கலாம். இவ்வாறு நான் மாற்றிக் குறிப்பிட்டது கூட அது கர்த்தருடைய கிரியைதான் என்பதை காணத்தக்கதாக, நீங்கள் இந்த வேத வாக்கியத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். அவரே இவ்விதமாக கிரியை செய்கிறார். நான் எந்த வசனத்தைத் தேடுகிறேன் என்பதை நான் உங்களுக்கு கூறுவேன். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வர வழைத்தேன்” என்று அவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். யாரிடமாவது ஓரக் குறிப்புகளையுடைய வேதாகமம் இருந்தால் விரைவாக அவ்வசனத்தை எடுத்துவிட அல்லது அதை கண்டுபிடித்து விடலாமே? “எகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன்” என்ற வசனம். இப்பொழுது ஒரு நிமிடம்.
3970 [ஒரு சகோதரன், “லூக்கா 1:17” என்று கூறுகிறார்.—ஆசி] சகோதரனே உங்களுக்கு நன்றி. அது சரிதான். லூக்கா 1-ம் அதிகாரம். மாற்கு…லூக்கா 1:17, இரண்டாம் அதிகாரத்திற்குப் பதிலாக. 14-ம் வசனத்தை நான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். அங்கே தான்…அதுதானே சகோதரனே, அது மிகவும் சரியாக இருக்கிறது. லூக்கா 1:17. சரி, நீங்கள் இப்பொழுது அதைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது அது என்ன? அது தானே கர்த்தருடைய ஆசீர்வாதங்களிலிருந்து உண்டானது, ஆம், அது ஆசீர்வதிக்கப்பட்டதாகும். உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும். அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான். திராட்சரசமும் மதுவும் குடியான். 71 வருகின்ற இம்மனிதன் அவனது பிறப்பின் முதற்கொண்டே மது அருந்துதல் மற்றும் பாவ சம்மந்தமான எந்த காரியத்தையும் செய்யாதிருக்கும்படி போதிக்கப்பட்டிருப்பான். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? …தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான். 72 இப்பொழுது அவனைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்கிறோம். யோவானே அந்த நபராயிருந்தான். அது சரிதானே? அந்நாளில் வரவேண்டியவனாக இருந்த எலியா யோவான் தான்.
4073 வேத வாக்கியமானது சில வேளைகளில் இரண்டு காரியங்களை அர்த்தப்படுத்துகிறது என்பதையும் நாமும் கூட அறிவோம். மத்தேயுவில், “எகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன்” என்பதாகக் கூறியிருக்கிற வசனத்திற்கு நாம் ஒரு அர்த்தத்தைக் கூறுவோம். சரி, அதைத்தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன், “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.” “குமாரன்” என்ற வார்த்தைக்கு ஒத்துவாக்கியத்தை நீங்கள் தேடிக்கொண்டேபோனால். அது ஓசியாவுக்குப் போகும். அங்கே அவ்வசனம் அவருடைய குமாரனாகிய இயேசுவைப் பற்றி குறிப்பிடுவதாக இருக்கவில்லை. அது இஸ்ரவேல் , அவருடைய குமாரனாயிருந்தது. “எகிப்திலிருந்து அவர் இஸ்ரவேலை அழைத்தார்.” ஆனால் அவ்வசனத்திற்கு கூட்டு அர்த்தம் உண்டு. ஆனால் அதற்கு இதைவிட மேலான அர்த்தம் உண்டாயிருக்கிறது. அவர் இஸ்ரவேலை வரவழைத்தார் என்று சொன்னால் அது இஸ்ரவேலைவிட பெரியவராகிய இயேசுவின் வருகையைக் குறிக்கிறதாகத்தான் இருக்கிறது. சரி.
4174 அவருடைய முதலாம் வருகையானது, கர்த்தருடைய நாளில் ஏற்படவில்லை என்பதையும்…நாம் காண்கிறோம். அது சரிதானே? இப்பொழுது மல்கியாவுக்குத் திரும்புவோம். முதலில் “கர்த்தருடைய நாளிலே வருதல்” என்பதை பற்றி நாம் தெளிவுபடுத்துவோம். இப்பொழுது அவருடைய இரு வருகைகள் கூட்டாக ஒரே வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனியுங்கள். அதில் அவருடைய முதல் வருகையும், இரண்டாம் வருகையையும் ஒரு சேர குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையை ஆயத்தமாக வைத்திருக்கிறீர்களா? இப்பொழுது 6-ம் வசனம்…“அவர்…” …கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். (அது சரிதானே?) 75 அதுதானே யோவான் அல்ல என்பதை நாம் உணருகிறோம், ஏனெனில், அவன் வந்த நாள் கர்த்தருடைய பயங்கரமான நாளல்ல (அப்படித்தானே?) அவர்…அல்லாமலும் அப்பொழுது ஆண்டவர் பூமியை சுட்டெரிக்கவில்லை. எனவே அது ஒரு முன் காட்சியாகத் தான் அர்த்தப்படுத்திட வேண்டும் அல்லது யோவானின்…அல்லது எலியாவின் இன்னொரு எதிர்வரும் வருகையைக் குறிப்பதாகத்தான் இருக்கவேண்டும். அது சரிதானே? ஏனெனில் அவர், “நான் எலியாவை அனுப்புவேன், நான் முழு பூமியைச் சுட்டெரிக்கப்போகிறேன், அதை நான் சுத்தம் செய்யப்போகிறேன், அப்பொழுது நீங்கள் வெளியே புறப்பட்டுபோய், அவர்களுடைய சாம்பலின் மேல் நடப்பீர்கள்” என்று கூறினார் அது ஆயிர வருட அரசாட்சி என்பதை நாம் அறிவோம். அணுகுண்டு அதை தூள்தூளாக சிதறிப்போகப்பண்ணின பிறகு, அது பூமியை சரி செய்யும். அப்பொழுது இப்பூமியில் ஒரு பெரிய நாள் உண்டாயிருக்கும். இயேசுவோடு கூட சபையானது ஓராயிரம் ஆண்டுக்காலம் ஆட்சி செய்வாள். அது சரிதானே? “ஆனால் எல்லாம் வெடித்துப் போகவிருக்கும் கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன்.” அது சரிதானே? எனவே, அது அவ்விடத்தில் யோவான்ஸ்நானனன் வருவதைப் பற்றி கூறவில்லை. ஏனெனில் கர்த்தருடைய பயங்கரமான நாள் அப்பொழுது வரவில்லை. அது இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்துத்தான் வருகிறது. அது சரிதானே?
4276 இப்பொழுது அடுத்த வசனத்தைக் கவனியுங்கள். இப்பொழுது நீங்கள் சரியானபடி ஆவிக்குரியவர்களாக இருப்பின், இப்பொழுது, இதுதானே காதல் கடிதமாக இருக்கிறது, வாக்கியங்களுக்கிடையில் உள்ள மறைபொருளை நீங்கள் கூர்ந்து கவனித்து வாசிக்க வேண்டும். அப்பொழுது அது சரியாக உங்களுக்குக் காணப்படும். நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். “இயேசு தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார், ஏனெனில் அதை அவர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து (அவர்கள் கண்களுக்கு) பாலகருக்கு வெளிப்படுத்தினதால்” என்று அவ்வேத வாக்கியத்தைக் குறித்து நான் எவ்வாறு கூறினேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என் மனைவி எனக்கு ஒரு கடிதம் எழுதுவதைப் பற்றி ஒரு உவமையை நான் அடிக்கடி கூறியிருக்கிறேன், இது அதைப் போலுள்ளது. கடிதத்தில் அவள் என்ன கூறுகிறாள் என்பதை நான் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நான் அவள் என்ன அர்த்தப்படுத்துகிறாள் என்பதை அறிய வாக்கியங்களுக்கிடையேயான மறைபொருளை ஆராய்ந்து படிப்பேன். பாருங்கள், ஏனெனில் நான் அவளை நேசிக்கிறபடியினாலும், அவளது சுபாவத்தை நான்—நான் அறிவேன். அதேபோல் நீங்கள் தேவனுடைய சுபாவத்தை அறிந்து, அவரை நேசிக்க வேண்டும், அப்பொழுது வேத வாக்கியங்கள் உங்களுக்கு திறந்து கொடுக்கப்படும். அவர் அதை வெளிப்படுத்துகிறார்.
4377 இப்பொழுது அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்: … அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், (இப்பொழுது கவனியுங்கள்) பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான் (பார்த்தீர்களா?) 78 யோவான்ஸ்நானன் எலியாவாக வந்தபொழுது, அவன் அப்பொழுது அவனுடைய செய்தியை ஏற்றுக் கொண்ட பிதாக்களாகிய இஸ்ரவேலரின் இருதயங்களை பிள்ளைகளின் இருதயத்திற்குத் திருப்பினான். ஆனால் எலியா இந்த முறை வரும்பொழுதோ, அவன் தானே சபையாரின் இருதயங்களை பெந்தேகொஸ்தே பிதாக்களிடத்திற்கு திருப்பப் போகிறான். அங்கே அது நிலையெதிர்மாறாக இருப்பதை பாருங்கள். உங்களுக்கு இது புரிகிறதா? இப்பொழுது இதைப் படியுங்கள்! 79 இப்பொழுது கவனமாகக் கேளுங்கள்: …அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்குத் திருப்புவான்…
4480 அந்த பழைய வைதீக ஆசாரியன்; அவன் அவர்களுக்கு, “என் தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ணவல்லவராயிருக்கிறார்…உங்களுக்குள்ளே சொல்ல நினையாதிருங்கள்” என்று கூறுவான். புரிகிறதா? அவன் வந்து, இந்த வயது சென்ற கடினமான வைதீக ஆசாரிய இருதயத்தை எடுத்து, அவர்களுடைய இருதயத்தை இங்கே இந்தப் பிள்ளைகள் கொண்டிருக்கும் விசுவாசத்திற்குத் திருப்பப் போகிறான் என்று இருந்தது. பாருங்கள். “இப்பொழுது, இங்கே ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டு, வரவிருக்கும் மேசியாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களே, யார் உங்களை எச்சரித்தது? விரியன் பாம்புக் குட்டிகளே, வரும் கோபத்திற்கு தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்?” என்று கூவினான். ஓ, என்னே! நீங்கள் பாருங்கள், “அவன் தானே பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்குத் திருப்பினான்.” 81 அடுத்தது, “பிள்ளைகளின் இருதயங்களை பிதாக்களிடம் திருப்புவது,” இப்பொழுது இந்த மகத்தான எலியாவானன் இந்தக் கடைசிக் காலத்தில் வருகையில் அவன் வந்து, பெந்தெகொஸ்தே செய்தியை எடுத்துக் கொண்டும், பிள்ளைகளை பிதாக்களின் விசுவாசத்திற்கு நேராகத் திருப்புவான், ஏனெனில் அவர்கள் ஆதியில் இருந்த அதே விசுவாசத்தை கைக்கொள்ளாமற் போய்விட்டபடியால், அவன் அவர்களை கடிந்து கொள்வான். ஆமென்! அது எலியாவாகத்தான் இருக்கப்போகிறது என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம் என்பதை நான் நம்புகிறேன். நாம் அவ்வாறு நம்பவில்லையா? இப்பொழுது நாம் அதை அறிவோம்.
4582 அது…இப்பொழுது நீங்கள் பாருங்கள், கர்த்தருடைய பயங்கரமான நாள் அப்பொழுது வரவில்லை. “அப்படியெனில் இம்மனிதன் பிரசங்கியாகத் தான் இருப்பானோ?” என்று நான் அடிக்கடி வியந்ததுண்டு. எலியா எல்லா அற்புதங்களையும் செய்தார், அதிகம் பிரசங்கிக்கவில்லை. ஆனால் எலியாவின் ஆவி யோவான் மேல் இருந்த பொழுது அது தானே பிரசங்கிப்பதையெல்லாம் செய்தது. ஆனால் அற்புதங்களைச் செய்யவில்லை. ஏன்? இயேசு அவனைத் தொடர்ந்து வரவிருந்தார். அவரே அற்புதங்களை செய்யவிருந்தார். “…நீதியின் சூரியன் உதிக்கும்…அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்” என்று அவன் கூறினான். எனவே, யோவானுக்கு அற்புதங்களைச் செய்ய வேண்டியதாக இருக்கவில்லை. அவன் கிறிஸ்துவின் வருகையைக் குறித்து அறிவிப்புச் செய்பவனாக மட்டுமே இருந்தான். அவர்கள்… 83 இந்த யோவான்…அல்லது வரவேண்டிய இந்த எலியாவானவன் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். அவன் தான் மேசியா என்று மக்கள் நினைக்குமளவுக்கு அவன் கர்த்தருக்கு முன்பாக அத்தகைய மகத்தான வல்லமை பொருந்திய மனிதனாக இருப்பான். 84 ஏனெனில் அவனது மிகவும் சிறந்த நண்பர்கள் அவனிடம் “நீர் தான் மேசியா” என்று கூறினார்கள். 85 அவனோ, “எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவரது பாதரட்சையின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரனல்ல” என்று கூறினான். 86 ஏனெனில் அவர்கள் ஒரு மேசியாவைக் காண்பதற்காக எதிர்பார்ப்போடு இருந்தார்கள். மேசியா வரப்போகிறார் என்று அவர்கள் எண்ணினர். இந்த மகத்தான விசேஷித்த நிகழ்ச்சி அவர்கள் நடுவில் தோன்றியபொழுது, அவர்கள் “இவரே அந்த மேசியா” என்றார்கள். 87 அப்பொழுது யோவான், “நான் அவரல்ல, அவர் எனக்குப்பின் வருகிறார்” என்று கூறினான். 88 ஓ, என்னே! நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? எனவே அவனுடைய நெருங்கிய நண்பர்கள் அவனே தான் மேசியா என்று எண்ணுவார்கள்.
4689 இப்பொழுது இதைப் போலவே சம்பவிக்கப் போகும் மற்றொரு காரியத்தைக் கவனியுங்கள், அவன் கர்த்தருடைய வருகைக்கு சற்று முன்பாக வருவான். யோவானின் நாட்களில் பூமியானது பற்றியெரியவில்லை. எனவே அது எதிர்காலத்தில் நடைபெற உள்ளதாகும். எலியா முதலில் வருகையில் அவன் பிரசங்கம் மாத்திரமே செய்தான். இரண்டாவது முறையாக அவன் வரும்பொழுதோ, அவன்—அவன் பிரசங்கித்தலையும், இயேசு வாக்குரைத்த அடையாளங்களையும் ஆக இவ்விரண்டையுமே செய்யக் கூடியவனாக இருப்பான். சரி, வரவிருக்கிற இந்த தீர்க்கதரிசியின் இயல்பைக் குறித்து இப்பொழுது நாம் பார்ப்போமாக. 90 இப்பொழுது இந்த கடைசி சபைக் காலத்திற்குரிய இந்த தூதனானவனைப் பற்றி, பழைய ஏற்பாட்டிலிருந்தே முன்னுரைக்கப்பட்டுள்ளது என்று நாம் திருப்தியடைந்துள்ளோம். ஏனையோர்களைப் பற்றி முன்னுரைக்கப்படவில்லை. பவுல் ஐரேனியஸ் போன்றோர்களைப் பற்றி குறிப்பிட்டு முன்னுரைக்கப்படவில்லை. ஆனால் இந்த கடைசி காலமானது, முடிவாயிருப்பதால், உலகத்தின் முடிவாக இருப்பதால், அது அத்தகைய பயங்கரமான வேளையாக இருக்கும், அதுதானே நம்முன்னாலேயே இருந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த காலத்தின் தூதனானவன் வேத வாக்கியத்தின் முன் காலத்திலேயே முன்னுரைக்கப்பட்டுள்ளான். இந்த தொன்மையான வேத வாக்கியத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ளது, இந்தக் காலத்தின் முடிவில் வருவது மகத்தான விதமாக அபிஷேகம் பண்ணப்பட்ட எலியாதான்.
4791 இப்பொழுது கவனியுங்கள்! என்னவிதமான இயல்புடையவனாக எலியா இருப்பான்? முதலாவதாக, அவன் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையுள்ள வல்லமையான ஒரு தீர்க்கதரிசியாக இருப்பான். ஏனெனில் எலியா உண்மையுள்ளவனாகயிருந்தான், யோவானும் உண்மையாயிருந்தான். அது உண்மை. அவன் அற்புத அடையாளங்களை செய்வித்து, பிள்ளைகளுடைய இருதயங்களை பெந்தெகொஸ்தே பிதாக்களுடைய விசுவாசத்திற்கு திருப்புவான். இவனும் எலியாவைப் போல் ஸ்தாபனத்தை வெறுப்பவனாக இருந்தான். அது உண்மை, அவன் அவ்வாறு தான் இருப்பான். அவனுடைய ஊழியத்தின் வேளையானது நமக்கு ஆரம்பித்துவிட்டது என்று நான் எண்ணுகிறேன். அவன் வர வேண்டிய வேளையானது வந்துவிட்டது. அவன் ஸ்தாபனங்களை வெறுப்பான். எலியா அவைகளை வெறுத்தான். அதைப் போலவே யோவானும் ஸ்தாபனத்தை வெறுத்தான். 92 யோவான், “‘ஆபிரகாம் உங்களுக்குத் தகப்பன் என்று நினையாதிருங்கள், பரிசேயரே, சதுசேயரே விரியன் பாம்புகளே, புல்லில் உள்ள பாம்புகளே,” வேறு விதமாகக் கூறினால், “இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றான். 93 எலியாவே, “அவர்கள் யாவரும் வழிதப்பிப் போய்விட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு வரும் போய்விட்டார்களே! நான் ஒருவன் மாத்திரமே மீந்திருக்கிறேன்” என்றான். ஓ, என்னே! 94 அவனுங்கூட நவநாகரிகப் பெண்களை வெறுப்பவன். எலியா அவ்வாறு செய்தான். யேசபேலை எலியா வெறுத்தான். அது சரிதானே? யோவான் ஏரோதியாளை வெறுத்தான். அந்த இரு தீர்க்கதரிகளிலுமே ஒரே ஆவியானவர் தான் இருந்தார். அவர்கள் மத ஸ்தாபன உலகை, சபை உலகை வெறுத்தனர். அவர்கள் இருவருமே. நவநாகரிக பொல்லாங்கான ஸ்திரீகளை வெறுத்தனர். அவர்கள்…அந்த காரியத்திற்கெதிராக அவர்கள் ஆவியில் இருந்த ஒன்று கூக்குரலிட்டது. யேசபேல் எலியாவின் தலையை வாங்க அவனைத் துரத்திக் கொண்டிருந்தாள். அதேபோல் யோவானையும் கொல்ல ஏரோதியாள் திட்டம் தீட்டினாள். அவர்கள் இருவருமே அவ்வாறு இருந்தார்கள்.
4895 இந்த தீர்க்கதரிசியானவன் வனாந்திரத்தை நேசிக்கிறவனாக இருப்பான். எலியாவைப் போலவே! அவனும் வனாந்திரத்தில் தனிமையில் வாழ்ந்தான். யோவானுங்கூட வனாந்திரத்தில் மட்டுமே வாழ்ந்தான். அது எலியாவாகத் தான் இருக்கப் போகிறது என்பதை நாம் அறிகிறோம். சரி. 96 இந்த தீர்க்கதரிசியானவன் உண்மையான தேவ வசனத்தோடு நிலைத்திருப்பான். ஆம். இவன் முழுவார்த்தையோடு நிலைத்திருப்பான். எதற்காக? (எபேசு சபையில்) இருந்த விசுவாசமானது இத்தனை காலமும் இழந்து போய்விட்டிருந்தது. அதை திரும்ப பெற்றளிப்பதற்காகத்தான் தனக்கு முன்பாக “திறந்த வாசலை” பெற்றிருந்து, அதை நிராகரித்து விட்டிருக்கிற சபைக்கு அதை திரும்ப அளிப்பதற்காகவேயாகும். 97 இவன் ஒரு கல்விமானாக இருக்கமாட்டான். திஸ்பியனாகிய எலியாவும் ஒரு கல்விமானாயிருக்கவில்லை. யோவான் ஸ்நானனும் கூட கல்விமான் அல்ல, லூக்கா1:67-ல் வேதம் கூறியுள்ளது, “அவன்…அந்த பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள் வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்” யோவானைப் பற்றி லூக்க 1:67 முதல் 80 முடிய உள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ளது. குறித்துக் கொள்ள விரும்பினால் நீங்கள் அதைக் குறித்துக் கொள்ளலாம்.
4998 இந்த தீர்க்கதரிசியுங்கூட துக்கமான மனநிலை (moody) உள்ளவனாக இருப்பான். எலியா ஒரு பெரிய கூட்டம் நடத்திய பிறகு, யாவரும் அவனோடு ஒத்துப் போக முடியவில்லை. எலியாவுக்கு சுயநினைவிலிருந்து ஆவிக்குள்ளாகும் நிலைகள் உண்டாயிருந்தன. அவன் புறப்பட்டுச் சென்று, வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்து, பாகாலின் பலிபீடங்களை சுட்டெரித்து. மகத்தான காரியங்களைச் செய்தபொழுது, அவன் தானே வனாந்திரத்திற்கு ஓடிப்போய், “கர்த்தாவே, நான் என் பிதாக்களை விட நல்லவனல்ல. நான் சாகட்டும்” என்று கூறினான். அப்படித்தானே அவன் கூறினான்? (மேலும் யோவானும்…) அந்த பெரிய எழுப்புதலுக்குப் பிறகு எலியா—எலியா ஒரு சூரைச்செடியான கீழ் உட்கார்ந்துவிட்டான், இப்பொழுது அவன் சாகவேண்டுமென்றிருந்தான். 99 அவர்கள் யோவானை சிறையிலிட்டபொழுது. (இந்த அவருக்கத்தக்க ஸ்திரீயோ) அவன் அங்கே அமர்ந்து, துயருற்ற மனோபாவத்துடன் இருக்க ஆரம்பித்தான். பெம்பர் என்பவரோ அல்லது வேறு யாரோ “யோவானின் கழுகுக் கண்கள் சிறையிலிருந்து கொண்டு தூரத்தில் நடப்பவைகளை படம்பிடித்தது” என்று கூறினார் என்று நான் நினைக்கிறேன். அவன் தன்னுடைய சீஷர்களில் சிலரை அனுப்பினான்.
50100 காரணம், “இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அவனே அறிக்கையிட்டுமிருந்தான். அக்கினிஸ்தம்பம் அவருக்கு மேல் ஒரு புறாவைப் போல தொங்கிக் கொண்டிருந்ததையும், அது இறங்கி வந்து அவர் மேல் தங்கினதை யோவான் கண்டான். அவை யாவையும் அவன் சாட்சி பகர்ந்தான். மேலும், “அதுவே தேவாட்டுக்குட்டி” என்று கூறினான். “உம்மால் நான் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா” என்று கூறினான். இயேசுவோ, “இப்பொழுது இடங்கொடு” என்று கூறினார். 101 ஆனால் அவர்கள் அவனை சிறைலடைத்தபொழுது, உடனே அவன் சோர்வடைந்த நிலையில் ஆகிவிட்டான். பாருங்கள், அவனைப் புரிந்து கொள்வதே கடினமாக இருந்தது. அவனை அவர்கள் சிறையில் அடைத்தபொழுது, “அவரிடம் போய், உண்மையிலேயே வரவேண்டியவர் அவர்தானா அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா என்று கேட்டு வாருங்கள்” என்றான். எலியா செய்ததைப் போலவே அவனும் அப்படியே செய்தான், பாருங்கள். 102 அவன் தானே ஒரு வகையான மனச்சோர்வுள்ள ஒரு நபராக இருந்தான். அவனுக்காக நாம் பரிதாபப்படுகிறோம். ஏனெனில் அது என்னவாயிருந்தது என்பதை நாம் அறிவோம். சரி.
51103 இப்பொழுது இப்பொழுது…சபையானது அவனுடைய வெளிப்படுத்துதலில்…இந்த விஷயத்தை நான் இத்தோடு விட்டுவிடுவது நல்லது. அவன் வெளிப்படுகையில் சபையானது…தேவன் நமக்கு அனுப்பவிருக்கிற வல்லமை பொருந்திய இந்த எலியாவானவன் தன்னை தெரியப்படுத்தும்பொழுது, எலியா செய்ததுபோல இவன் தன்னை யாரென்று தெரியப்படுத்துகையில், சபையானது விடுவிக்கப்பட ஆயத்தமாக இருந்தது, அஞ்ஞான மார்க்கத்தின் கரங்களிலிருந்து அது விடுவிக்கப்பட்டது. அப்படித்தானே நடந்தது? “யார் மெய்யான தேவன் என்பதை நாங்கள் நிரூபிப்போம்” என்று கூறிக்கொண்டு அவன் வந்தபொழுது, எலியா சபையை விடுவித்தான். யோவான் இயேசுவைக் கண்டபொழுது “அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” என்று கூறினானே, அதைப் போலவே. கர்த்தருடைய வருகைக்கு சற்று முன்பு யோவான் பிரசங்கிக்கத் துவங்கி, தன்னை யாரென்று தெரியப்படுத்தவும் செய்தான். சரியாக முடிவில் வெளிப்படுத்துதல் உண்டாயிற்று. சரி.
52104 இந்த சபையின் காலத்தில் வரவேண்டியவன் தான் அந்த எலியா என்பதை நாம் கண்டு கொண்டோம். அது எலியாதான் என்பதை நிரூபிக்கும்படி எலியா தனது தீர்க்கதரிசனத்தை உரைத்த பிறகு, எலியா மரிக்க வேண்டியதாயிருக்கவில்லை, அவன் மறுரூபப்படுத்தப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். (அவன் தானே வரப்போகும் எலியாவின் காலத்தின் முடிவில்) எடுத்துக் கொள்ளப்படும் சபைக்கு முன்னடையாளமாயிருக்கிறான். அவனது காலத்தின் முடிவில் சபையானது மரணத்தின் நிழல்களுக்குள் போகாமல் எடுத்துக் கொள்ளப்படுதலில் போய்விடும். எடுத்துக் கொள்ளப்படுதல் உண்டாகும். அந்த மகத்தான எலியானவானவன், வரவேண்டிய அந்த மகத்தான அவன், இந்த கடைசி நாளுக்கென தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்ட எலியாவாக இருப்பான் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென்! அவன் அப்படிப்பட்டவனாயிருப்பான் என்று நான் விசுவாசிக்கிறேன். கடைசி நாட்களிலே, (புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட மக்களடங்கிய இச்சபையானது அந்த நிலைமைக்குள் போகும். ஏற்கனவே அப்படிப்பட்ட நிலையில் உள்ளது) அந்த சபைக்கு அவன் ஒரு தூதனாக, செய்தியாளனாக இருப்பான், வேதாகமத்தில் எலியா வருவானென்று வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது என்று நான் எண்ணுகிறேன். அதை நாம் புரிந்து கொள்ள முடியும் என்று நான் எண்ணுகிறேன். அந்த எலியா, இந்த நாளில் வரவேண்டுமென வேதத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒருவன் ஆவான். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
53105 இப்பொழுது நாம் லவோதிக்கேயாவுக்குத் திருப்புவோம். லவோதிக்கேயாவைப் பற்றி நமது கர்த்தர் நமக்கு இன்றிரவில் என்ன கூறவிருக்கிறார் என்பதை நாம் பார்ப்போமாக. அது ஒரு லவோதிக்கேயா. சரி, முதலில் சபைக்கு வாழ்த்துதல் கூறப்பட்டுள்ளது, …கர்த்தருடைய தூதனுக்கு… 106 வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரம் 14-ம் வசனம். கர்த்தருடைய தூதனுக்கு…லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது: 107 ஓ, என்னே! நமக்கு யாவும்…அதன் பேரில் சிந்திக்க நாம் முழு இரவும் எடுத்துக் கொண்டால். அதைக் குறித்து கர்த்தர் எவ்வளவாய் நமக்கு வெளிப்படுத்துவார்! கவனியுங்கள்! 108 “ஆமென்” என்பது “இறுதியாகும்.” கடந்து சென்ற காலமெல்லாம் அவர் வெவ்வேறு வகையில் தோற்றமளித்திருக்கிறார். ஆனால் இங்கே இந்த கடைசி சபைக் காலத்திலோ, “நான் முடிவாக இருக்கிறேன், அதுவே முடிவு” என்று கூறுகிறார்.
54109 அவரே முந்தினவர் என்பதை இப்பொழுது காண்பிக்கதக்கதாக…அவரே “தேவனுடைய சிருஷ்டிக்கு முந்தின பேறுமானவர்:” ஓ! அதை நீங்கள் கிரகித்துக் கொண்டீர்களா? பாருங்கள்? தேவன் ஒரு ஆவியாயிருப்பாரானால், அவர் எப்படி சிருஷ்டிக்கப்பட முடியும்? அவர் எவ்வாறு அப்படியிருக்க முடியும்? அவர்—அவர் நித்தியமானவரக இருக்கிறார்! அவர் ஒரு போதும் சிருஷ்டிக்கப்படவில்லை. அவர் ஒரு போதும் சிருஷ்டிக்கப்படமாட்டார். ஏனெனில் அவர் ஆதியில் தேவனாயிருந்தார். ஆனால், “தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறேன்” என்பது இயேசு கிறிஸ்துவாயிருந்தது, அவர் மாம்சத்தில் வெளிப்பட்டபோது, தேவன் அவரில் வாசம் பண்ணினார். அவர் தேவனுடைய சிருஷ்டியானவர் , ஓ, என்னே! பாருங்கள், “முந்தினவரும், பிந்தினவருமானவர்; ஆமென்; தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறேன்” என்பதைப் பாருங்கள். தேவன் தாமே தனக்கென ஒரு சரீரத்தை சிருஷ்டித்தபொழுது, அவர் தாழ இறங்கி வந்து அதில் வாசம் பண்ணினார். அவர் தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாக இருந்தார். புரிகிறதா? ஓ, அவர் அற்புதமானவராக இல்லையா?
55110 “நான் சர்வ வல்லமையுள்ளவர். நான் இருந்தவரும் இருப்பவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ளவர்” என்று எபேசு சபைக்கு மூன்று தடவைகள் தெரிவித்து, தனது தெய்வீகத்தன்மையை அவர் இங்கே காண்பித்ததை முதலில் நாம் கண்டோம். அது சரிதானே? கடைசியாக லவோதிக்கேயாவில் அவர் வந்து, “நான் தான் ஆமென் என்பவர். அங்கே ஆதியில் நான் முதலாமவராக இருந்தேன். இங்கே பிந்தினவராகவும் இருக்கிறேன். நானே தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமானவர், நமக்கிருக்கும் சபைக்காலங்களின் வழியாக நானே தேவனாயிருக்கிறேன் என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள், மனித ரூபத்தில் சிருஷ்டிக்கப்பட்ட தேவன் நானே. நானே தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறேன்!” என்றார். ஆமென். 111 இவ்வாறு கூறுவது ஒரு ப்ரெஸ்பிடேரியனை கூக்குரலிடச் செய்யும், அதைக் குறித்து எண்ணிப்பாருங்கள்! “தேவனுடைய சிருஷ்டியின் ஆதியானவர்,” இப்பொழுது நான்…ஓ, “தேவனுடைய சிருஷ்டி” எனக் கூறப்பட்டுள்ளதை நான் எவ்வளவாய் விரும்புகிறேன், தேவன் சிருஷ்டிக்கப்பட்டபொழுது, தேவன் இயேசு கிறிஸ்துவிலே மாம்சத்தில் வந்து நம் மத்தியில் வாசம் செய்தபொழுது, “தேவனுடைய சிருஷ்டி” என்று கூறப்பட்டார்.
56112 இப்பொழுது—இப்பொழுது அடுத்த வசனமானது; அவர் (மற்ற சபைகளை) புகழ்ந்துரைத்தார், ஆனால் இந்த சபையை அவர் புகழ்ந்துரைப்பதாக இல்லை, ஆனால் அதற்கெதிராக ஒரு குற்றச்சாட்டை அவர் தெரிவித்தார். புகழ்ந்துரைத்தல் அல்ல, இந்த சபையைப் பற்றி, இந்த லவோதிக்கேயா சபையைப் பற்றி, அவர் ஒரு புகழ்ச்சியையும் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு இத்தனை அளவு ஒளியிலிருந்து கூட அவர்கள் அதிலிருந்து பின்வாங்கினர், ஆகவே அவர்கள் புகழப்பட அவசியம் ஒன்றுமில்லை. உ—ஊ. அவர்களுக்கு ஒரு கடிந்து கொள்ளுதல் தேவையாயிருந்தது. அதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்த சபைக்கெதிராக அவர் புகார் ஒன்று தான் தெரிவித்தாரேயல்லாமல், ஒரு புகழ்ச்சியையல்ல. 113 இப்பொழுது நான் 15-வது மற்றும் 16-வது வசனத்தை இங்கே வாசிக்க விரும்புகிறேன்: உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும், (அதாவது வேறு வார்த்தைகளில் கூறினால், “வெதுப்பாக இருக்க வேண்டாம்” என்று கூறுகிறார்.) இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப்போடுவேன். (உம்ம்!) 114 போதிக்கப்பட்டு…அது புகழ்ச்சியுரையா? இருப்பவையெல்லாவற்றிலும் மிகவும் மோசமான கூட்டமாகிய இந்த தேவபக்தியற்ற லவோதிக்கேயா காலத்திற்கு அது ஒரு கடிந்துரைத்தல், ஏனையோரெல்லாம், எல்லாவிதமான வேதனைகளுக்கும் உட்பட்டு இருந்தனர். அவர்களுக்கு ஒன்றும் இருக்கவில்லை, அவர்கள் வறுமையில் வாடினவர்களாயிருந்தனர், ஆட்டுத்தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போத்திக் கொண்டு ஆதரவற்றவராய் திரிந்தனர், வாளால் அறுப்புண்டனர், தீக்கிரையாக்கப்பட்டனர், சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டனர் மற்றும் இன்ன பிற காரியங்களுக்குள் உட்படுத்தப்பட்டனர். ஆயினும் அவர்கள் விசுவாசத்தைக் காத்துக் கொண்டனர். ஆனால் இந்த லவோதிக்கேயா கூட்டமோ “ஐசுவரியவானும், ஒன்றும் குறையுமில்லையென்றும்” என்ற நிலையில் காணப்பட்டு, ஒரு வேசியாக அது இருந்தது. அது உண்மையே.
57115 இப்பொழுது நமக்கு மகத்தான் பெரியதொரு பாடம் இங்கே உள்ளது. அதை அறிந்து கொள்ள கர்த்தர் நமக்கு உதவி செய்வார் என்று நான் நம்புகிறேன். அவர்—அவர் “நீ குளிருமல்ல அனலுமல்ல…வெதுவெதுப்பாயிருக்கிறாய்” என்றார். 116 பாலை போலுள்ளது அது என்பதைப் பாருங்கள். ஒரு குளிர்ந்த நிலையில் உள்ள பாலானது நல்லதாக இருக்கிறது. அப்படித்தானே? சூடான பாலும் உங்களுக்கு நன்மை பயக்கும். ஆனால் வெதுவெதுப்பான பாலோ உங்களை வாந்தியெடுக்கப்பண்ணும். 117 சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நதியில் நான் வசித்து வருகையில் நான் ஒரு இரவில் வியாதிப்பட்டேன் என்பது நினைவிருக்கிறது. நான் அப்பொழுது ஒரு சிறிய படகு வீட்டில் வசித்து வந்தேன். நான் வியாதிப்பட்டேன், அப்பொழுது அவர்கள், அதாவது என்னுடைய மைத்துனர் வந்து என்னை மருத்துவர் ஐஸ்லர் என்பரிடம் அழைத்துச் சென்றார், அவர் என்னிடம் “என்ன விஷயம்?” என்று கேட்டார். அப்பொழுது நான், “எனக்கு வயிற்றில் குமட்டல் ஏற்பட்டுள்ளது” என்று கூறினேன். 118 அதற்கு அவர், “நீ ஒரு கோப்பை வெதுவெதுப்பான பாலைக் குடித்தாயா?” என்று கேட்டார். ஓ, சகோதரனே! வெதுவெதுப்பான பாலானது என்னை சுகவீனமுறச் செய்தது, எனவே நான் அதை முழுவதும் வெளியேற்றி சுத்தம் செய்து கொண்டேன்.
58119 தேவன், “…நீ அனலாய் இருக்க விரும்புகிறேன். பழுக்க பழுக்க சிவந்து போயிருக்கும் நிலையை அடையும் அளவுக்கு அனலாய் இருக்க வேண்டும் அல்லது உறைதல் நிலையில் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு நிலையில் இருக்க வேண்டும், நீ வெதுவெதுப்பாய் இருக்க வேண்டாம். ஏனெனில் உனது அந்தவிதமான நிலை என்னை சுகவீனப்படுத்துகிறது” என்றரர். 120 இந்த சபைக் காலமானது தேவனுக்கு அவ்வாறான காரியத்தையே செய்தது, அவரை சுகவீனமுள்ளதாக்குகிறது. புரிகிறதா? “ஒன்று பழுக்க சிவந்த அனலான நிலையில் இருக்க வேண்டும் அல்லது குளிர்ந்து போன நிலையில் இருக்க வேண்டும், ஆனால், வெதுவெதுப்பாய் இருக்கக்கூடாது. வெது வெதுப்பான நிலையானது என்னை வாந்திப் பண்ணிப் போடச் செய்துவிடும்.” 121 ஜான் வெஸ்லியின் காலத்தில் ஆங்கலிக்கன் சபையில் காணப்பட்ட குளிந்து போன நிலையானது, அவரை அச்சபையை விட்டு அகன்று வேறு இடத்தில் போய் கூட்டங்கள் நடத்தும்படி அவரை விரட்டியது. ஏனெனில் அது மிகவும் குளிர்ந்து போன நிலையில் காணப்பட்டது. 122 மெத்தோடிஸ்ட் சபையில் காணப்பட்ட குளிர்ந்து போன நிலையானது, வில்லியம் பூத் அவர்களை பழுக்க சிவந்த அனலுள்ள இரட்சண்ய சபைக்காரராக ஆக்கியது. நீங்கள் பாருங்கள், தேவன் “நீ மனந்திரும்பி வராவிட்டால் நான் விளக்குத் தண்டை உன்னைவிட்டு அகற்றிவிடுவேன். அதை வெளியே அகற்றிவிட்டு, அதை வேறு யாருக்காவது கொடுத்துவிடுவேன்” என்று கூறினார். எனவே, மெதோடிஸ்ட் சபையானது ஜான் வெஸ்லியின் பரிசுத்தமாகுதலைப் பற்றிய செய்தியை ஏற்றுக் கொள்ள விரும்பாதபொழுது, வில்லியம் பூத் அவர்கள், இரட்சணிய சேனை சபையை உண்டாக்கிக் கொண்டு வந்தார். அது உண்மை. ஏன்? அவர்கள் அதை ஸ்தாபனமாக்கினர். அதுவே முற்றிலும் உண்மை. அதன் பேரில் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கிக் கொண்டார்கள். தேவன், “நான் அதை வெறுக்கிறேன்” என்று கூறினார்.
59123 எனவே அங்கே வில்லியம் பூத் அவர்கள் அத்தருணத்தில் தோன்றி, அச்செய்தியை எடுத்துக் கொண்டு இரட்சண்ய சேனை சபையை உருவாக்கினார். அதன் பிறகு அவர் என்ன செய்தார்? அவரும் அதையே செய்து திரும்பி வந்து மீண்டும் ஸ்தாபனத்தை உண்டாக்கினார். அவருக்கு பிறகு கேம்ப்பெல்லைட்டுகள் வந்தனர். அவர்கள் சில காலம் நிலைத்திருந்தனர். அதன் பிறகு ஜான் ஸ்மித் என்பவர் பாப்டிஸ்ட் சபையை உருவாக்கினார். அவருக்குப் பிறகு நசரேய சபைக்காரர்கள் எழும்பினர்; நசரேய சபைக்காரர்களுக்குப் பிறகு பெந்தெகொஸ்தே வந்தது. 124 நசரேய சபையினர் என்ன செய்தனர்? அதேவிதமாக அவர்களும் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டனர். 125 அவ்வேளையில் என்ன வந்தது? இரு சிறு கிளைகள், தேவ சபையும் (Church of God) ஏனைய சபையும் அதிலிருந்து முளைத்தெழும்பியது. அவர்கள் என்ன செய்தார்கள்? ஸ்தாபித்துக் கொண்டனர். அது அவ்வாறு போகும்படி அவர் விட்டுவிட்டார். 126 பின்மாரி ஆசீர்வாதத்தோடு பெந்தெகொஸ்தேயினர் அத்தருணத்தில் எழும்பினர், அவர்கள் என்ன செய்தனர்? அவர்களும் ஸ்தாபனமாக்கிக் கொண்டனர். எனவே தேவன் அவர்களை அப்படியே போக விட்டுவிட்டார். அது உண்மையே. 127 இப்பொழுது நாம் முடிவும் கட்டத்திற்குப் போகப் போகிறோம். இன்னும் சில நிமிடங்களில், சரியான பலத்த காரியம் ஒன்றைக் காண போகிறோம். சரி.
60128 சரி, நீங்கள் சிவப்பாக பழுத்துப்போயுள்ள அனலுள்ள நிலையில் இருக்க வேண்டும் அல்லது குளிர்ந்துபோன நிலையில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார், ஒன்று இந்த நிலை அல்லது மற்ற நிலை. நீங்கள் வெதுவெதுப்பாயிருக்க வேண்டாம். நீங்கள் பெற்றிராத ஒன்றை பெற்றுவிட்டதாக நடிக்க வேண்டாம். ஒன்று நீங்கள் தேவனுக்கான அக்கினியாய் இருங்கள் அல்லது ஸ்தாபனத்திற்குள் திரும்பிப் போய் விடுங்கள். வெது வெதுப்பாயிருக்க வேண்டாம்! 129 அதே விதமாகத் தான் இப்பொழுதும் உள்ளது. அதே காரியம் தான் இங்குள்ள இந்த சபைகளிலும் நேரிட்டிருக்கிறது. நீங்கள் அனலாயாவது குளிராயாவது இருக்க வேண்டுமென்று தான் அவர் விரும்புகிறார். அவர் “வெது வெதுப்பாயிருப்பதை” விருமபவில்லை. அப்படிப்பட்டதான நிலைக்குள் தான் பெந்தெகொஸ்தேயும் போய்விட்டது. அது வெதுவெதுப்பாயிருக்கிறது. அவர்கள் இசைப் பேழையையும், மற்றும் ஒரு சில முரசுகளையும் வைத்துக் கொண்டு சிறிது வாசிக்கிறார்கள். போதுமான அளவுக்கு சப்தம் போட்டு, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அல்லேலூயா!” என்று கத்துகிறார்கள். உ—ஊ. அப்பொழுது இசையானது குறைகின்றது. “ஊ, ஊ, ஊ, ஊ” அவ்வளவு தான். ஓ, என்னே, அவ்வாறான காரியம் தேவனுடைய வயிற்றை சுகவீனமாக்குகிறது. புரிகிறதா? உ—ஊ. சரி
61130 செக்கச் சிவந்த அளவுக்கு உள்ள அனலான எழுப்புதலைப் போலுள்ளதொன்று அங்கே அவர்களுக்குள் காணப்படவில்லை. ஆனால் அவர்களுக்குள் ஏராளமான அளவுக்கு இந்த சபையில், செயற்கையான ஒரு காரியம்தான் காணப்படுகிறது. ஏனெனில் அவர்கள் ஐசுவரியவான்களாய் இருந்து அவர்கள் ஒன்று சேர்ந்து, பெரிய கூட்டங்களை நடத்துகிறார்கள். ஓ, என்னே, இந்த சபையின் காலத்தில் ஒரு நல்ல வேளை அவர்களுக்கு இருக்கத்தான் செய்தது. அதெல்லாம் உண்மை தான். ஆனால் அவை யாவும் இப்பொழுது செயற்கைத்தனமாக ஆகிவிட்டது. ஆனால் அங்கே பரிசுத்த ஆவியின் அனல் இருக்கவேயில்லை. புரிகிறதா? 131 இங்கே அவர் என்ன கூறினார் என்பதை கவனியுங்கள், பாருங்கள்: உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல: நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திப் பண்ணிப் போடுவேன். (பார்த்தீர்களா?) 132 இப்பொழுது அவர், “நீ அனலாயாவது அல்லது குளிராயாவது இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனென்றால் நீயோ அவ்வாறு இல்லாதபடியினால், உன்னை என் வாயின்று வாந்திப் பண்ணிப்போட்டு. உன்னை நீக்கி விட விரும்புகிறேன்” என்று கூறினார்.
62133 இப்பொழுது அவர்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. அவர்கள் மகத்தான கட்டிடங்களை உடையவர்களாயிருக்கின்றனர், மாபெரும் காரியங்கள் அவர்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் அவர்களுக்கோ பரிசுத்த ஆவியின் அனலானது இருக்கவில்லை. ஓ, அவர்களிடம் அதிகார இயந்திரம் உள்ளது. ஓ, என்னே! அவர்களுக்கு ஒருங்கிணைந்த ஒரு சபை உண்டு, இது வரையில் அவர்கள் பெற்றிராத மிகப் பெரிய கட்டிடங்கள் அவர்களுக்கு உண்டு. ஆனால் பரிசுத்த ஆவி இல்லை. புரிகிறதா? தேவன் சபைக்கு பரிசுத்த ஆவியைத் தான் அனுப்பினார். இப்பொழுது 16-ம் வசனத்தில் நாம் தொடர்ந்து கவனிக்கையில், 134 அவர்களுக்கு எல்லாவிதமான சங்கங்கள் உண்டு. “ஓ, எங்களுக்கு அதற்குரிய மகத்தான ஆளுகை உண்டு: முதிர்வயதான பெண்களின் உதவி சங்கம் எங்களுக்கு உண்டு. வாலிபருக்கான சீட்டாட்டம் உண்டு. வெள்ளி இரவில், பங்கோ எனப்படும் ஒரு வகையான சூதாட்டம் உண்டு; ஞாயிறு மதியம் கூடைப்பந்தாட்டம் உண்டு. தளக்கட்டுப் பந்தாட்டம்(Base Ball) மற்றும் இன்ன—இன்ன உண்டு. ஆண்கள் அரட்டையடிப்பதற்கு என்றே ஒரு சங்கம் என்றெல்லாம், ஓ, எங்களுக்கு இவ்வாறு எல்லாவிதமான காரியங்களும் உண்டு” என்று கூறுகிறார்கள்.
63135 நான் உங்களுக்கு சொல்லுகிறேன், சபை சங்கங்களும், கழகங்களும், நடனங்களும் இன்னும் இன்ன பிற காரியங்களால் அவள் நிறைந்து காணப்படுகிறாள். ஆனால் பரிசுத்த ஆவியின் அனல் அவளிடம் காணப்படவில்லை. பாருங்கள், உங்களுக்கு பெரிய ஆட்சி முறை உள்ளது. ஆனால் உங்களுக்கோ அனலுண்டாக்க ஒன்றுமே இல்லை. ஆனால் உலகுக்குத்தான் அனலுண்டாக்குகிறீர்கள். ஆனால் தேவனுக்கு அல்ல. எனவேதான் நீங்கள் வெது வெதுப்பாயிருக்கிறீர்கள். 136 ஓ, நிச்சயமாகவே உங்களிடம் ஏற்கனவே இருந்ததை விட இப்பொழுது கூடுதலாக அங்கத்தினர் பெருகியிருக்கிறார்கள். “நிச்சயமாகவே, பையனே! 1944-ம் ஆண்டில் இருந்ததை விட இன்னும் பத்து இலட்சம் மக்கள் கூடுதலாக எங்களுடன் சேர்ந்திருக்கிறார்கள்” என்று பாப்டிஸ்டுகள் கூறினர். ஆனால் நீங்கள் பெற்றிருப்பது என்ன? ஒரு பெரிய இயந்திரமே! 137 அவ்வாறு குறிப்பிட்டுக் கூறினதை நான் கேட்ட அதே சபையில், ஆராதனை நடந்து கொண்டிருக்கையில், நடுவில் பதினைந்து நிமிடங்கள் இடைவேளை விட்டு அப்பொழுது சபையின் மேய்ப்பர் மற்றும் உதவிக்காரர்களும், மற்றோரும் வெளியே போய் சிகரெட் புகைத்துவிட்டு வருவதற்கு ஒரு தருணம் அளிக்கின்றனர். புரிகிறதா? அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. வேதமானது அக்காரியத்தை தெளிவாகக் கண்டம் செய்கிறது. “உன் சரீரத்தை அசுத்தப்படுத்தினால்…”
64138 மருத்துவர்கள் புகைப்பதைக் குறித்து “அது முழுவதும் புற்று நோயினால் நிறைந்திருக்கிறது” என்று கண்டனம் செய்கின்றனர். அப்படியிருந்தும், வானொலியிலோ “சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி” என்று புகைபிடிப்பதை தூண்டும் விளம்பரத்தைச் செய்கிறார்கள், 139 பில்லி கிரஹாம் அவர்கள், “ஒரு மனிதன் அவ்விதமாக சிந்திக்கத் துவங்கினால், அவன் ஒரு முட்டாள்” என்று கூறினது போலவே உள்ளது. 140 “சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி” என்கிறார்கள். ஒரு சிந்திக்கும் மனிதன் ஒருக்காலும் புகைக்கவே மாட்டான், அதுதான் உண்மை, அதைப் பற்றி மறு சிந்தனை கொள்ளுங்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, தற்போதுள்ள நவீன பெண்களின் ஆடைகளை அணிந்து கொள்வதற்கு ஏதுவாக பெண்கள் புகைப்பிடித்தால், அவர்கள் மெலிந்து போவார்கள் என்றும் விளம்பரப்படுத்திக் கூறுகிறான். இப்போது ஆண்களைவிட பெண்கள் தான் அதிகமாக சிகரெட் புகைக்கிறார்கள். ஒரு ஆண் ஒரு சிகரெட் புகைத்தால், அந்த நேரத்தில் ஒரு பெண் மூன்று சிகரெட்டுகள் புகைத்து விடுகிறாள். அது முற்றிலும் உண்மை. ஏனெனில் அவள் மெலிந்துபோக விரும்புகிறாள். ஆனால் அவள் புகைப்பது, காசநோய், புற்றுநோய் முதலியவற்றை உண்டாக்கி அவளை மெலியச் செய்கிறது என்பதை உணருவதில்லை. அவளுக்குள் ஒரு குழந்தை வடிவத்தில் அது உள்ளே வந்து அவ்வாறு மாறி, முற்றிலும் தின்று போட்டு, கொன்று விடுகிறது. அதிலிருந்து தீமையைத் தவிர வேறு எதுவும் வரமுடியாது. அதுதான் உண்மை. புரிகிறதா? ஆனால் அது—அது ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி எனப்படுகிறது. ஹா! ஓ, என்னே!
65141 “இல்லை! இல்லை! ஓ,” அவர்களோ, “ஆனால் எங்களுக்கு உண்டு…சகோ.பிரான்ஹாமே நான் அதை எதிர்க்கிறேன்! எங்களுக்கு மகத்தான கூட்டங்கள் உண்டு! பில்லி கிரகாம் தேசம் முழுவதிலும் எதைப் பெற்றுள்ளார் என்பதை பாருங்கள்” என்றெல்லாம் கூறுகிறார்கள். ஓ, நிச்சயமாக, ஒரு பெரிய ஆட்சிமுறை, பணத்துக்கு அமர்த்திக் கொள்ளப்பட்ட சுவிசேஷகர்கள் ஊதியம் கொடுத்து அமர்த்தப்பட்டுள்ள பாடல் குழு தலைவர்கள் அவர்களுக்கு உண்டு. 142 ஆம். அவர்கள் தங்களுடைய சுவிசேஷகர்களை பணத்துக்கு அமர்த்திக் கொள்கின்றனர், “நல்லது, நான் வந்து அந்த எழுப்புதல் கூட்டத்தை நடத்தினால் எனக்கு எவ்வளவு பணம் தருவீர்கள்? நல்லது, இத்தனை ஆயிரம் டாலர்களை எனக்கு தராவிடில் நான் வரவேமாட்டேன். அப்படித்தான். பாடலை நடத்துவதற்கு யாரை நீங்கள் அமர்த்திக் கொள்ளப்போகிறீர்கள்? நல்லது. நீங்கள் போய் இன்னார்—இன்னாரை அமர்த்திக் கொள்ளுங்கள். அவர் ஒரு பெரிய தனிக்குரலிசைஞர் (soloist) அவரையே நீங்கள் அமர்த்திக் கொள்ளுங்கள். அவரே தனிப்பட்ட விதத்தில் எனக்குச் சேரும் கூட்டத்தில் பாதியளவு கவர்ந்திழுப்பார்” என்று கூறுகிறார்கள். 143 கூலிக்கு அமர்த்திக் கொள்ளப்படும் பாடகர்கள்! கூலிக்கு அமர்த்திக் கொள்ளப்படும் சுவிசேஷர்கள்! ஏன், ஆத்துமா ஆதாயம் என்பதோ ஒரு வியாபாரம் என்ற நிலைக்கு வந்துள்ளது. ஆத்தும—ஆதாயம் என்பது சபையின் வியபாரம் அல்ல. அது சபையில் காணப்படும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் நடப்பதாகும், ஆத்தும ஆதாயம் என்பது…நீங்கள் அதைப் பணத்தைக் கொண்டு விலைக்கு வாங்காதேயுங்கள். இல்லை ஐயா! இல்லை! ஆகவே அவைகள் யாவும் கிரியைகள், கிரியைகள், கிரியைகள் என்பதாகத் தான் இருக்கிறது. கூலிக்கு அமர்த்திக் கொள்ளப்பட்ட சுவிசேஷர்கள். கூலிக்கு அமர்த்திக் கொள்ளப்பட்ட பாடல் குழு தலைவர்கள், கூலிக்கு பாடும் பாடல் குழுவினர் என்று இவ்வாறெல்லாம் உள்ளன. அவ்விதமான கிரியைகளையெல்லாம் தேவன் விரும்பவில்லை, தேவனுக்கு அவை தேவையில்லை. பரிசுத்த ஆவியானவர் உங்களில் கிரியை செய்வதையே அவர் விரும்புகிறார். அது உண்மை.
66144 17-ம் வசனம் கூறுகிறது: நீ நிர்பாக்கியமுள்ளவனும், (ஓ!) பரிதபிக்கபடத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும். எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; (உம்! உம்!) 145 இக்கடைசி கால சபைகளில் உள்ள இந்த பெந்தெகொஸ்தேயினர் தாங்கள் “ஐசுவரியவான்கள்” என்று எண்ணினர். அவர்கள் எண்ணினர்…புறம்பான ரீதியில் அவர்கள் அவ்வாறே உள்ளனர். ஆம் ஐயா. அவர்கள் ஐசுவரியமாயுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த சபையைக் குறித்து எண்ணிப் பாருங்கள், அந்நாட்களில், ஊருக்கு ஊர் துரத்தி விடப்பட்டு மூலையில் போய் நின்றனர். அவர்களுக்கு மிகவும் கடினமான வேளை உண்டாயிருந்தது. ஆனால் இப்பொழுதோ எல்லாவற்றையும் விட பெரிய கட்டிடங்கள் அவர்களிடம் உள்ளன.
67146 அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபைக்கு இன்றிருக்கிற கட்டிடத்தை நீங்கள் பாருங்கள். ஒரு காலத்தில் அவர்களுக்கு இங்கிருப்பதைப் போல், மரத்தாலான சாதாரண கட்டிடமே இருந்தது. இப்பொழுதோ, அவர்கள் ஆறு மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு கட்டிடத்தை கட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களும், “இயேசு சீக்கிரம் வருகிறார்” என்று கூறி கொள்ளுகிறார்கள். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்பதை உங்களுடைய கிரியைகள் நிரூபிக்கின்றனவே. அது மாய்மாலமாயுள்ளது. மில்லியன் டாலர் செலவில் கட்டிடங்கள் கட்டிக்கொண்டும், இன்னும் மற்ற காரியங்களை செய்து கொண்டு, “இயேசு சீக்கிரம் வரப்போகிறார்” என்கின்றனர். ஏழை மிஷனரிகளோ ஊழியகளத்திலே, கால்களில் பாதரட்சை கூட தொடுக்காமல், ஊழியம் செய்கின்றனர். அவர்கள் உண்மையான தேவ பயம் உள்ள மிஷனரிமார்களாவர், கால்களில் அவர்களுக்கு பாதரட்சை இல்லை. வாரத்தில் இரண்டு நாட்களுக்குரிய அரிசி மட்டுமே உணவுப்படியாக கிடைத்து, வாரத்தில் இரண்டு வேளைகள் மட்டுமே உண்டு, சுவிசேஷத்தை காடுகளிலும், தங்களுடைய சகோதரர்களுக்கும் கொண்டு செல்கின்றனர். ஆனால் நாமோ, ஆறு மில்லியன் டாலர் செலவில் கட்டிடங்கள் கட்டுகிறோம்.சபைக் கட்டிடமானது பெரிய வருணம் பூசப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டதாக, பெரிய அளவில் கட்டுகிறோம். அவர்கள் ஓ, சில சமயங்களில் தங்களுடைய சபைகளில் கடன் வழங்கும் சங்கங்கள் ஏற்படுத்தும் அளவுக்கு ஏராளமான பணம் குவிந்துவிட்டது. அது உண்மை! 147 அவர்கள் சபைகளில் அவர்களுடைய சுவிசேஷகர்களையும், மிஷனரிமார்களையும் மருத்துவப் பரிசோதனை செய்வதற்கென்றே மருத்துவரும் உள்ளனர். யாராவது மிஷனரியாகப் போக விரும்பினால், அவரை மருத்துவரின் பரிசோதனைக்குட்படுத்தி அல்லது உளவியல் மருத்துவ நிபுணரைக் கொண்டு (Psychiatrist) உளவியல் ரீதியாக அவரது விவேகம், மூளைத்திறன் சரியாக இயங்குகிறதா என்பதையெல்லாம் பரிசோதித்து அனுப்புகிறார்கள். நீங்கள் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் தான் மனிதனை பரிசோதிக்கிறார். எனவே ஒரு உளவியல் மருத்துவ நிபுணர் உங்களுக்குத் தேவையில்லை.
68148 “ஆனால், நாங்கள் ஐசுவரியவான்கள், எங்களுக்கு ஒரு குறைவுமில்லை” என்று கூறுகிறார்கள். ஓ, நிச்சயமாக உங்களிடம் ஏராளமான பணம் உண்டு. புறம்பான ரீதியில், குறைவற்று ஐசுவரியவான்களாயுள்ளனர். அவர்களிடம் பெரிய கட்டிடங்களும், அலங்கார கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டும் உள்ளன. 149 பேச்சாற்றல் கொண்ட பிரசங்கிமார்கள்! ஓ, என்னே, என்னே, நான் உங்களுக்குக் கூறுவேன், உம், அவர்கள் நிச்சயமாகவே நாவன்மை படைத்தவர்கள் தான். அவர்கள் இரவு முழுவதும் நின்று, ஒரு காரியத்தையும் எடுத்துரைக்காமல் பேசி கொண்டேயிருக்க முடியும். புரிகிறதா? அவர்கள் பிரசங்கிக்க எழும்பி வருகையில்…அவர்கள் கூறக் கூடாதவைகளைப் பற்றி கூறுவதையே நான் குறிப்பிடுகிறேன். நீங்கள் பாருங்கள். அவர்கள் எழும்பி நின்று, இதைப் பற்றியும் இன்ன—இன்ன, அதைப் பற்றியும் சிறிது இன்ன—இன்ன , காரியங்களை அவர்கள் பேசுவார்கள். அது எப்படியுள்ளது என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் கூலிக்கு அமர்த்தி கொள்ளப்பட்ட பாடகர்கள். பிரசங்க பீடத்தில் நாவன்மைமிக்க பிரசங்கிகளாக வருகிறார்கள். பின் தொங்கலற்ற நீண்ட டக்ஸ்டோ சூட் என்னப்படும் ஒரு வகை விலையுயர்ந்த ஆடை அணிந்தவராய், கழுத்துப்பட்டை திருப்பிவிடப்பட்ட நிலையில் அணிந்திருந்து, ஒரு வகையான வால்போல் பின்புறம் நீட்டிக் கொண்டிருக்கும் சட்டையை மேலே அணிந்தவராய் அவர்களுடைய பிரசங்கியார் இல்லாவிட்டால், உண்மையாகவே சபையார் அதனால் சற்று சங்கடப்படுவதை உணருகின்றனர்.
69150 அப்பாடகர் அங்கே வருகிறார்கள், அவர்களில் பெண்களோ, தலை முடியை யேசபேலைப் போல் குட்டையாக வெட்டிக் கொண்டு, முகத்தில் நிறைய வர்ணம் பூசிக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் முகத்தில் பூசப்பட்டுள்ள வர்ணமானது, ஒரு களஞ்சியத்தை வர்ணமடிக்க போதுமானது. பாடல் குழுவில் அணிந்து கொண்ட அங்கியை கழற்றிவிட்டு, உடனேயே அவர்கள் குட்டையான கால்சட்டைகளை, ஆண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளுகிறார்கள். “ஒரு ஆணின் ஆடையை ஒரு பெண் தரித்துக் கொண்டால் அது அவருடைய பார்வையில் அருவருப்பாயிருக்கும்” என்று வேதம் கூறியுள்ளது. தங்கள் முகத்தை மேட்டிமையாய் உயர்த்தினவர்களாக தெருவில் நடந்து செல்கின்றனர். மழை பெய்தால் அவர்கள் நாசியில் தண்ணீர் சென்று அவர்களை மூழ்கடித்து விடும். இறுமாப்பும், திமிர்பிடித்ததும், கர்வமான அதிக கோபங்கொண்ட மன நிலையும் உள்ள யேசபேல்கள் இவர்கள். அக்காரணத்தினால் தான் நமக்கு எழுப்புதல் இல்லை. பெரிய அளவில் வெறும் இயந்திரமான காரியம் தான் உள்ளது. 151 ஓ, பிரதான தூதனின் சப்தத்தையொத்த சப்தம் கொண்டவராக நீங்கள் இருக்கக் கூடும், அதற்காக பதிலளிக்க வேண்டியவராக உங்களைத் தேவன் ஆக்குவார். இந்த எல்விஸ் ப்ரெஸ்லிக்களும், ஏனையோரும், மேலும் எர்ன் போஃர்ட்களும் இன்னும் மற்றுமுள்ளோரும் அருமையான குரல்களையுடையோர், அந்த குரல்களைப் பிசாசுக்காகப் பயன்படுத்துகிறார்கள். தேவன் “நான் அவர்கள் கையில் அதை விசாரிப்பேன்” என்று கூறினார்.
70152 குருடாயிருக்கும் பேஃனி கிராஸ்பியை நான் மதிப்பதின் காரணம் என்னவெனில், அவள் தன்னுடைய வரத்தை ஒரு போதும் உலகுக்கு விற்றுவிடவில்லை. அவள் அவ்வரத்தை தேவனோடு மாத்திரமே வைத்துக்கொண்டார். 153 இவர்களில் அநேகர் இனிய திறமையான குரலையுடைய பாடகர்கள், சொல்வன்மைமிக்க மனிதர் பெரிய மனிதர்கள், தங்களுடைய காலத்தை தேவனுக்காக உபயோகிப்பதற்கு பதிலாக வேறு வகையாக உபயோகிக்கிறார்கள். பிசாசு அவர்களை அவ்வாறான தாறுமாறான வழியில் நடத்தியிருக்கிறான். அவர்கள் பிசாசுக்காகவே கிரியை செய்து வருகிறார்கள். அவர்கள் பெரும்புள்ளிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுகின்ற பெரும் பிரமுகர்கள், தங்களுடைய திறமைகளை தேவனுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக உலகத்திற்கு விற்றுப் போட்டுவிட்டார்கள். அவர்களில் சிலர் ஆலயத்திற்கு வருகிறார்கள். அவர்கள் ஆலயத்திற்கு போய், அருமையான ஒரு பெரிய அங்கியணிந்து அங்கே பாட்டுப் பாடிவிட்டு, அங்கிருந்து திரும்பி போய் அடுத்த நாள் இரவில் சுழன்று உருண்டு ஆடும் ராக் அண்டு ரோல் நடனப் பாட்டுகளை பாடுகிறார்கள், நாம் அறிந்திருக்கிற அவ்விதமான பாடகர்கள், குறிப்பிட்ட சபைகளை சேர்ந்தவர்களாயிருக்கிறார்கள், அவர்கள் திரைப்படங்களில் சுழன்று—உருண்டு ஆடுகின்ற ராக் அண்டு ரோல் நடனப் பாட்டுப் பாடுகிறார்கள், ராக் அண்டு ரோல் பாடகர்களின் அரசர்கள் என்னப்படுகிறார்கள். தேவ பக்தியுள்ளவர்களாக தங்களை அழைத்துக் கொள்கின்றனர், அது பிசாசின் ஒரு தந்திரமேயாகும்!
71154 ஒரு மனிதனுக்கு போதுமான அளவுக்கு நல்ல பொது அறிவு இருந்தது; அதாவது, அவன் தான் ஞாயிற்றுக் கிழமையில் போய் பிரசங்கிக்கப் போவதாகவும், அதை முடித்த பிறகு, வானொலி ஒலிபரப்பில் சுழன்று—உருண்டு ஆடும். ராக் அண்டு ரோல் நடனப் பாடல்களை பாடப் போவதாகவும் மற்றும் அதைப்போன்ற ஒவ்வொன்றையும் கூறினான். முடிவாக அவன் ஒரு கைதுப்பாக்கியை எடுத்து தன் தலையில் சுட்டுக் கொண்டு, மூளை சிதறி செத்துப் போனான். அதைச் செய்ததற்காக நான் அந்த மனிதனை மதிக்கிறேன். அது சரியே. அது சரியே. அவன்—அவன்…அந்தப் பன்றிக் கூட்டம் தங்களுக்குள் அசுத்த ஆவிகள் நுழைந்ததும், கடலுக்குள் ஓடிப்போய் மூழ்கி மாண்டு போய் விட்டன, அந்த அளவுக்கு இந்த மனிதனுக்கும் அறிவு இருந்திருக்கிறது. அந்த அளவு அறிவு கூட சிலருக்கு இருப்பதில்லை. 155 அவ்வளவு கடினமாகப் பேசுவதற்கு நானே வெறுக்கிறேன்…உங்களுக்குத் தெரியும், ஆனால் சகோதரனே, சகோதரியே, அவ்விஷயத்தை நாம் திட்டவட்டமாக எடுத்துக் காட்டியாக வேண்டும். நாம் வாழ்கிற இந்நாள் அதற்காகத் தான் உள்ளது. இயேசு ஏரோதை , “கிழட்டு நரி” என்று அழைத்தாரெனில் யோவான் அவர்களை “விரியன் பாம்புக்குட்டிகளே” என்று அழைத்தாரெனில், சரியே.
72156 அவர்களுக்கு பெரிய கட்டிடங்களும், வர்ணம் பூசப்பட்ட கண்ணாடி ஜன்னல்களும், நாவன்மைமிக்க பிரசங்கிகளும், கூலிக்கு அமர்த்திக் கொள்ளப்பட்ட இனிய பாடகர்களும் உள்ளனர். ஆம் ஐயா, அதில் அவர்களுக்கு என்ன உள்ளது? அதில் என்ன உள்ளது? பரிசுத்த ஆவியின் ஒரு அம்சமும் அதில் இல்லை. அங்கே சபையில் நின்று பாடிவிட்டுப் பிறகு அவர்கள் குட்டையான உடைகளை அணிந்து வெளியே சென்று, பாடற்குழுவில் பாட மீண்டும் உள்ளே வருகின்றனர். நீங்கள் பரிதபிக்கத்தக்க மாய்மாலக்காரராயிருக்கிறீர்களே! ஆம் ஐயா. அது உண்மை. 157 ஓ, பிரசங்கியே, நீர் குறைவாகப் பணம் கொடுக்கும் கூட்டத்தைவிட, எங்கு அவர்கள் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ அக்கூட்டத்திற்குத் தான் பிரசங்கிக்கப் போகிறீர். நீர் பிரசங்க பீடத்தில் நிற்பதற்கு தகுதியுள்ளவர் அல்ல, நீர் ஒரு கயவர். அது தான் உண்மை. பணம் தான் குறிக்கோள்! “ இத்தனை ஆயிரம் டாலர்களை நீங்கள் ஒதுக்கீடு செய்திடாவிடில் எங்களால் வர முடியாது. எங்களுடைய—எங்களுடைய—எங்களுடைய மேலாளர்கள் அங்கே வந்திடுவார்கள். அப்பணத்தை உங்களால் சேர்த்துக் கொடுக்க முடிந்தால் தான், நாங்கள் வருவோம். யாவருடைய முழு ஒத்துழைப்பும் எனக்குக் கிடைக்காவிடில் நான் வரமாட்டேன். (அனைத்து சபைகளிலுள்ள) யாவரும் முழுவதுமாக ஒத்துழைத்தால் தான் எனக்கு ஏராளமாக பணம் கிடைக்கும், அதைக் கொண்டு என் கடன்களையெல்லாம் நான் அடைத்துக் கொள்ள முடியும், ஆகவே இல்லாவிடில் நான் வரமுடியாது” என்றெல்லாம் கூறுகின்றனர். 158 சகோதரனே, ஒரு உண்மையான தேவனுடைய மனுஷனுக்கு, பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதல் அவனுக்கு இருந்தால் போதும், அவன் செல்வான், காணிக்கை என்னவாயிருந்தாலும் பொருட்படுத்தாமல், அவன் சாதாரண திண்பண்டத்தை சாப்பிட்டு, ஓடைத் தண்ணீரைக் குடிக்க நேரிட்டாலும் பொருட்படுத்தமாட்டான். அதுவே உண்மை, அவனே உண்மையான ஒரு தேவனுடைய ஊழியக்காரனாவான்.
73159 ஆனால் மக்களோ, பெருந்தன்மையான பணத்தை சேகரிக்கும் பொருட்டு வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் எல்லாவிதமான உலகக் காரியங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். நான் கூறுவது முற்றிலும் உண்மை. பாருங்கள்? அது தேவனுக்குரியதல்ல. 160 அவர், “ஓ, நீங்களோ ஐசுவரியவான், எனக்கு ஒரு குறைவுமில்லை என்கிறாய்” என்றார். நிச்சயமாக. ஆனால் எது அவசியம் தேவையாயிருக்கிறதோ அது உன்னிடம் இருக்கவில்லை. அது உண்மை. ஆனால் அதை நீ அறியாமலிருக்கிறாய். “ஐசுவரியவானும், ஒரு குறைவுமில்லையென்றும்” என்று இருக்கும் நிலையைப் பாருங்கள். சீட்டு விளையாட்டு போன்ற காரியங்களில் சபையிலேயே ஈடுபட அவர்களுக்கு பணம் செலவழிக்கப்படுகிறது. “ஓ,” நீங்களோ, “எங்களுக்கு பெரிய சபை இருக்கிறது” என்று கூறுகிறீர்கள். ஓ, நிச்சயமாக, ஆம் ஐயா. “இருப்பதிலேயே பெரிய சபைதான். ஏன்? காரணம், இந்நகரத்தின் நகராண்மை கழகத் தலைவராக இருப்பவரே எங்களது சபைக்குத் தான் வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” உம்—உம். சரி. “இன்ன—இன்னார் கூட, அவர்கள் நகருக்கு வருகை தரும்போது, எங்களுடைய சபைக்குத் தான் வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” உ—ஊம். “நாங்கள் எங்களுடைய சபையில் எல்லா முக்கியஸ்தரையும் உடையவர்களாயிருக்கிறோம்.” 161 ஆம், பரிசுத்தவான்களான தரித்திரரும், தேவை உள்ளோரும் சபைக்குள் வரட்டும் பார்க்கலாம். அவர்கள் வந்தால் அது உங்களுக்கு ஒரு கண்டனமாக இருக்கிறது. அவர்கள் அங்கே இருப்பதை கூட நீங்கள் விரும்பவில்லை. அப்படிப்பட்டவர்கள் வந்துவிட்டால், நீங்கள் பிரசங்கம் பண்ணும்போது, “ஆமென்!” என்று சப்தமிடுவார்களே என்று அஞ்சுகிறீர்கள்.
74162 இங்கே ஒரு புத்தகத்தில், ஒரு ஆலயத்தினுள் வந்திருந்த ஒரு எளிய பெண்மணியைக் குறித்து நான் வாசித்திருக்கிறேன். அவள் ஒரு சபைக்குள் வந்தாள், அவள் தன் பிள்ளைகளை தூரமான எங்கோ காட்டுப் பிரதேசங்களிலே, உண்மையான தேவ பக்தியுள்ளவர்களாக, பழைய பாணியிலான சபையில் வளர்த்திருந்தாள், அங்கே அவர்கள் உண்மையாகவே தேவ பக்தியுள்ளவர்களாயிருந்தனர். எனவே…அவளது மகள் ஒருத்தியை ஒரு நாள், ஒரு வாலிபவன் வந்து விவாகம் செய்து கொண்டு போனான். உங்களுக்குத் தெரியுமா? அவன் பெரிய நகரம் ஒன்றில் அப்பெண்மணி சார்ந்திருந்த அதே ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு பெரிய சபையைச் சேர்ந்தவன் என்று கூறினான். எனவே, அவன் அப்பெண்ணின் தாயிடம், தான் ஒரு கிறிஸ்தவன் என்று கூறினான். எனவே அவளது மகளை விவாகம் செய்து கொண்டு அழைத்துச் சென்று விட்டான். 163 அவன் இறுதியாக அப்பெண்ணை மலைகளில் உள்ள நாட்டுப் புறங்களிலிருந்த சபையிலிருந்து அவனுடைய அதே பெயர்கொண்ட இந்த பெரிய சபைக்கு அழைத்து வந்தபோது அவளைவிட்டு யாவும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும்படி செய்து விட்டான். அவள் முன்பு சார்ந்திருந்த அந்த நாட்டுபுறத்து சபையில் பரிசுத்த ஆவி உண்டாயிருந்தது. ஆனால் நகரில் இருந்த அதே சபையில் பரிசுத்த ஆவியே இல்லை, அவர்கள் அப்பொழுது இங்கு வந்து, இந்த பெரிய சபையில் இருந்தனர்.
75164 ஒரு நாள் அப்பெண்ணின் தாயார் தன் மகளை பார்த்துவிட்டு போக விரும்புவதாக தெரிவித்திருந்தாள். அவள் வந்தால் அவளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று மகளும் மருமகனும் திகைத்தார்கள். எனவே அவள் குறிப்பிட்ட நாளில் வந்தபோது ஏதோ பழங்காலத்து நினைவுச் சின்னத்தைப் பற்றி விவரிக்கும் புத்தகத்தில் கூறப்பட்ட ஒரு நபரைப் போன்ற அவர்களுக்கு காட்சியளித்தாள். ஏனெனில் அவள் அணிந்திருந்த உடை உங்களுக்குத் தெரியுமா? கழுத்து வரையிலும் உயரமாக உள்ளதாகவும், முழுக்கை உடையதாகவும் இருந்தது. அவளது தலை முடியானது பின்னால் நீண்டு தொங்கிக்கொண்டு இருந்தது. தலையை உரித்த வெங்காயத்தைப் போல், நன்கு மழித்துச் சீவியிருந்தாள். அவள் வந்தபோது, “நல்லது அல்லேலூயா, தேனே! நீங்கள் யாவரும்; எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். மேலும் அவள், “இன்று ஞாயிறு காலையாயிற்றே, எனவே நீங்கள் எல்லோரும் ஆராதனைக்குப் போவீர்களல்லவா?” என்று கேட்டாள். 165 (மகளுடைய புருஷன், மகளிடம், “இவளை நாம் என்ன செய்யலாம்? இப்படிப்பட்ட இவளை நாம் அங்கெல்லாம் அழைத்துச் செல்ல முடியாது. என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினான்.) அவன், “அம்மா, நாங்கள்…நான் உங்களுக்கு கூறுகிறேன்…” என்றான். 166 “ஓ” அவளோ, “தேனே, ஆனால் என்னால் ஆலயத்திற்குப் போகாமல் இருக்க முடியாது, நான் அங்கே அந்த மூலையில் இன்ன—இன்ன பெயர்கொண்ட ஒரு சபையொன்றைப் பார்த்திருக்கிறேன். நான் போய் வருகிறேன்” என்று தாய் கூறினாள். (அப்பொழுது அவன், “ஓ, நல்லது, வேறு வழியில்லை, நாம் அழைத்துக் கொண்டு தான் போவோமே” என்றான்.)
76167 ஆகவே, அப்பெண்மணியை அழைத்துக் கொண்டு சபைக்கு வந்த பொழுது அவளைப் பற்றி வெட்கமாக நினைத்தபடியால், அவளை முதலில் உள்ளே போக விட்டுவிட்டார்கள். (பார்த்தீர்களா?) இங்கே அவள் தெருவில் அந்த நீண்ட ஆடையை அணிந்து கொண்டு, அக்களத்தில் வேதாகமத்தை வைத்துக் கொண்டு வந்தாள். ஆனால் சகோதரனே ஒரு வேளை உலகில் உள்ள பெரிய தலைவர்கள் பிரமுகர்கள் ஆகியோரைப் பற்றிக் கூறும் இன்னார்—இன்னார் புத்தகத்தில் அவளது பெயர் இடம் பெறாமல் இருக்க கூடும். ஆனால் அவளது பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் இடம் பெற்றிருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதுவே முக்கியமான காரியமாயிருக்கிறது. 168 அவள் சபையினுள் நுழைந்த போது அங்கே பின்னால் ஒரு ஆசனத்தில் அமர்ந்தாள். உங்களுக்குத் தெரியுமா? பிறகு அவள் வேதாகமத்தை திறந்து படிக்க ஆரம்பித்தாள். அங்கிருந்த யாவரும் அவளையே உற்றுப் பார்த்து ஏதோ ஒரு பழங்காலத்து நினைவுச் சின்னம் தான் எங்கிருந்தோ இங்கு தப்பித் தவறி வந்துவிட்டதோ என்று நினைத்தார்கள். அவர்கள் அந்தவிதமாக சுற்றி சுற்றி பார்க்க, “ஓ, என்னே!” உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் லவோதிக்கேயா காலத்திற்கு எடுத்துக்காட்டாய் மிகவும் அருமையான ஆடைகளை அணிந்தவர்களாய் அங்கே அமர்ந்திருந்தார்கள். உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் பின்னால் திரும்பிப் பார்த்து, அமர்ந்திருந்த அப்பெண்மனி தன் முகத்தில் பெரிய புன்முறுவலோடு வேதத்தை வாசித்துக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள்.ஆம்.
77169 சபைப்போதகர், ஆராதனையின் ஏனைய காரியங்களையெல்லாம் முடித்துவிட்டு, கடைசியாக பதினைந்து நிமிட பிரசங்கத்திற்காகத்தான் அவருக்கு நேரம் இருந்தது. எனவே அவர் அதற்காக எழும்பி நின்று “கர்த்தர் நல்லவர்” என்று கூறி ஆரம்பித்தார். 170 அப்பொழுது அவள், “தேவனுக்கு ஸ்தோத்திரம். சரியே, அல்லேலூயா” என்று சப்தமிட்டாள். உடனே யாவரும் ஆண் வாத்தைப் போல தங்கள் கழுத்துகளை நீட்டி சுற்றும் முற்றும் பார்த்து, “யார் அது?” என்று பார்த்தனர். 171 சற்று நேரம் கழித்து, போதகர், “ஹூம்! ஹூம்! ஹூம்!” என்றார். அவர் மேலும் தொடர்ந்து, “ஒவ்வொரு காலத்திலும் கிறிஸ்தவர்கள், தீரமிக்க மகத்தான அருமையான கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும்” என்று கூறினார். இவ்வாறு இன்னும் சில காரியங்களையும் கூறினார். 172 அதற்கு அவள், “தேவனுக்கு ஸ்தோத்திரம், அது சரியானது” என்று கூறினாள். அவர்கள் யாவரும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். 173 போதகர் “ஷூம்” என்று கூறிவிட்டு தன்னுடைய உதவிக்காரர்கள் குழுவை நோக்கிப் பார்த்தார். 174 அந்த உதவிக்காரர் குழு அந்தப் பார்வையின் கருத்தினைப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் பின்னால் போய், அந்தப் பெண்மணியை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய், ஆலய வாசலுக்கு வெளியே கொண்டு போய் விட்டு, “நீ போதகருக்கு இடையூறு செய்கிறாய்” என்று கூறினார்கள். 175 நீங்கள் மரித்திருக்கிறீர்கள், அதை அறியாமலும் இருக்கிறீர்கள். ஆம், ஓ, சித்திரவர்ணம் பூசப்பட்ட உங்கள் ஆலய ஜன்னல் என்னத்திற்கு? மெத்தென்ற பூம்பட்டினால் செய்யப்பட்ட சொகுசான இருக்கைகள் என்னத்திற்கு? உங்களுடைய பெரும் திரளான சபை கூடுகை என்னத்திற்கு? மார்டின் என்ற பறவை எவ்வாறு அதனுடைய கூண்டிலேயே உள்ளதோ அதே போல் நீங்கள் நேராக நரகத்திற்குத்தான் செல்லுகிறீர்கள். உங்களிடத்தில் தேவனுடைய ஆவி இல்லையெனில் நீங்கள் கைவிடப்படுவீர்கள். நீங்கள் மறுபடியும் பிறந்தாலொழிய உங்களால் தேவனுடைய் இராஜ்யத்தைக் காண முடியாது. 176 அவ்வாறு கூறுவது கசப்பாகத் தான் இருக்கும். அது நான் வழக்கமாக விளக்கெண்ணேய் குடிப்பது போலவே உள்ளது. அப்பொழுது நான், “அம்மா, என்னால் அதை சகிக்கவே முடியவில்லை” என்று கூறுவதுண்டு. 177 அதற்கு அவள், “அது உன்னை சுகவீனமாக்கவில்லையென்றால் அது உனக்கு நன்மை பயக்காது” என்று கூறுவாள். எனவே இந்தக் காரியமுங்கூட அந்த விதமாகத்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
78178 ஓ, நீங்கள் அவர்களிடத்தில் பேசுவீர்களேயானால், ஓ, பெரிய அருமையான கட்டிடங்கள் முதலியன. ஓ, அவர்கள்—அவர்கள்—அவர்கள்…நீங்கள் அவர்களுடைய சபைக்கு போவீர்களானால், நீங்கள் சொல்ல நேரிடும்…அவர்கள் சபைக்குப் போய், “நான் உங்களைக் கேட்கிறேன், நீங்கள் பெந்தெகொஸ்தேயினரா?” என்று கேட்டுப் பாருங்கள். “ஓ ஆமாம். ஊ—ஊ. நிச்சயமாக, நாங்கள் பெந்தெகொஸ்தேயினர் தான்” என்பார்கள். “மறுபடியும் பிறப்பதில் நீங்கள் விசுவாசம் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டால், “ஆம்” என்பார்கள். “நல்லது, நான் உங்களுக்கு ஒரு காரியத்தை காண்பிக்க விரும்புகிறேன்…” 179 “ஓ, இந்த கட்டிடத்தைப் பாருங்கள்! இக்கட்டிடத்திற்கு கட்டுமான செலவு எவ்வளவு ஆயிற்று என்பது உங்களுக்குத் தெரியுமா? இதைக் கட்டியெழுப்புவதற்கு 7-5 மில்லியன் டாலர்கள் செலவாயிற்று. உங்களுக்குத் தெரியுமா, எங்களுக்கு முன்பெல்லாம் இம்மாதிரிக் கட்டிடம் கிடையாது. அந்த சந்தில் தான் ஒரு இடத்தில் நாங்கள்—நாங்கள் கூடுவதுண்டு” என்றெல்லாம் கூறுவார்கள். உம்—ஊம், நீங்கள் சுற்றிப் பார்த்தால், அவர்கள் பெற்றிருக்கிற அந்த பெரிய காரியங்களையெல்லாம் நீங்கள் கண்டறியலாம். ஆம் ஐயா. அவர்கள், “ஓ அந்த பெரிய காரியங்களெல்லாம் எங்களுக்கு இருக்கிறது” என்று மேலும் கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கோ இழக்கப்பட்டுள்ள ஆத்துமாக்களைப் பற்றி ஆத்தும பாரம் இல்லை. அவர்கள் எப்பொழுதும் எப்படிப்பட்ட கட்டிடத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று உங்களுக்கு காண்பிக்கவே விரும்புகிறார்கள். “எங்களுடைய ஞாயிறு பள்ளி வருகைப் பதிவைப் பார்த்தீர்களானால், எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை கண்டுணரலாம்” என்பார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்காமல் அது அவர்களுக்கு என்ன நன்மையை செய்யப் போகிறது? அவர்கள், “ஐசுவரியவானும் திரவிய சம்பன்னரும், ஒரு குறைவுமில்லை” என்ற நிலைமையில் இருக்கிறார்கள். 180 அவ்வாறு தான் தேவன் அவர்களைப் பற்றிக் கூறினார், “நீ அவ்வாறே எண்ணுகிறாய், ஆனால் நீ தரித்திரனும், நிர்பாக்கியமுள்ளவனும், பரிதாபப்படத்தக்கவனும், குருடனும், நிவாணியுமாய் இருக்கிறாய், நீ அதை அறியாமலும் இருக்கிறாய்,” பார்த்தீர்களா? அவ்வாறு தான் உள்ளது.
79181 ஓ, நிச்சயமாக, அவர்கள், “உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் முன்பு உபயோகித்து வந்த அந்த ஆலயக் கட்டிடம், அது இப்பொழுது பின்னால் இருக்கிறது. புதிதாக உள்ள இது பெரிய ஆலயமாகும்” என்று கூறுகிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்களுக்கு ஆத்தும பாரம் என்பதே கிடையாது. ஆனால் இந்த மற்ற எல்லாக் காரியங்களும் சரியாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியே அக்கறை கொண்டுள்ளனர். ஸ்திரீகள் நலநிதி மற்றும் இன்ன பிற காரியங்களைப் பற்றித் தான் அக்கறை எடுக்கிறதாக இருக்கிறதேயொழிய இழக்கப்பட்டிருக்கிற ஆத்துமாக்களுக்கான பாரமே கிடையாது. ஓ, மனிதனே, இந்த சபை எதற்குள்ளாக செல்லவிருக்கிறது. 182 அவர்கள் ஆத்தும பாரங் கொண்டவர்களாக இருக்கவில்லை. ஆனால் அவர்கள் ஆஸ்தியைப் பற்றித்தான் பாரங்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது தான் உண்மை. அவர்களுக்கு தவறான பாரம் உள்ளது. அவர்களுடைய ஆஸ்தி பெருகுவதைப் பற்றி பாரம் தான் அவர்களுக்கு உள்ளதேயொழிய இழக்கப்பட்ட ஆத்துமாக்களைப் பற்றிய பாரம் அவர்களுக்கு இல்லை. வேதமானது, “நிர்பாக்கியமுள்ளவர்களும்,” (ஓ!) “பரிதபிக்கப்படத்தக்கவர்களும், குருடராயுமுள்ளதை அறியாமல் இருக்கிறார்கள்” என்று உரைத்துள்ளது.
80183 அவர்கள் பணத்தைக் கொண்டு உலகை மனமாற்றமடையச் செய்ய முடியும் என்று எண்ணுகிறார்கள். “ஓ, நமக்கு மட்டும் ஏராளமான பணத்தை திரட்ட திட்டம் இங்கே இருக்ககூடுமென்றால், உலகை மனந்திரும்பப்பண்ண நம்மால் இயலும் என்று நான் விசுவாசிக்கிறேன். சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, எங்களுடைய சபையிலுள்ள சில ஐசுவரியவான்களைக் கொண்டு, பணத்தை ஒன்று திரட்டி, அதைக் கொண்டு உலகம் முழுவதும் சென்று மனந்திரும்பச் செய்யும்படியான ஒரு சங்கத்தை நாம் உருவாக்கிட முடியும் என்று நான் நம்புகிறேன். நாம் ஆகாய விமானங்களை எடுத்துக் கொண்டு, ஆப்ரிக்கா முழுவதிலும் துண்டுப் பிரசுரங்களை அதிலிருந்து வீசியெறிந்தும் மற்றும் இன்னபிற காரியங்களையும் செய்யலாம். நமக்கு மட்டும் போதுமான பணம் இருந்தால்” என்றெல்லாம் கூறுகிறார்கள். 184 சகோதரனே, உலகை பணத்தால் மனந்திரும்பப் பண்ண இயலாது. பரிசுத்த ஆவியினால் மாத்திரமே உலகை மனந்திரும்பப் பண்ண இயலும், பரிசுத்த ஆவியினால் உண்டாயிருக்கும் வல்லமையான பிரசங்கமும், சிலுவையும் மட்டுமே உலகை மனந்திரும்பப் பண்ணும். தேவனுடைய திட்டம் பணம் அல்ல. அது பரிசுத்த ஆவியினால் உள்ள திட்டமாகும், லவோதிக்கேயா சபைக்காலத்திற்கோ அல்லது வேறு எந்த சபை காலத்திற்கோ, தேவனுடைய திட்டம் இவ்வாறு தான் உள்ளது. ஆம் ஐயா.
81185 அவர்களுக்கு பரிசுத்த ஆவியே வேண்டும். ஓ, அவர்கள், “எங்களிடம் பொன் உள்ளது” என்று கூறுகிறார்கள். அவர்கள் வைத்திருப்பது பொன். சரி, ஆனால் அது சரியான விதமானதல்ல. அவர்களிடம் ஏராளமான பொன் உள்ளது. ஆனால் அது சரியான பொன் அல்ல. எனவே தான் இப்பொழுது அவர்கள் இயேசுவினால் கட்டளையிடப்பட்டனர்; “நீ ஐசுவரியவானாயும், பொன்னை உடையவனாயும், ஒன்று குறைவுமில்லையென்ற நிலையிலும் இருக்கிறாய் என்பதை நான் அறிவேன்” ஆனால்; நிருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை என்னிடத்தில் நீ வாங்கிக் கொள்ளும்படி உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். 186 ஒரு வித்தியாசமான பொன், ஆம், இது அக்கினிச் சூளையில் புடமிடப்பட்ட பொன்னாகும். அது மரணம் என்னும் அக்கினியினூடே கடந்து சென்றதாகும், அது கல்வாரியினூடாக கடந்து வந்ததாகும்.
82187 நீங்கள் இப்பொழுது பெற்றிருக்கிறதான இப்பொன்னானது மங்கிப்போகும். அதைப் பூச்சி அரிக்கும், அது துருப்பிடித்துவிடும். யாக்கோபு எழுதிய நிருபம் 5:1 முதல் 4-ம் வசனம் முடிய நீங்கள் வேண்டுமானால் குறித்துக் கொள்ளுங்கள், அங்கே என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்; “ஐசுவரியவான்களே கேளுங்கள், இப்பொழுது கர்த்தருடைய வருகையின் நாளிலே, உங்கள் மேல் வரும் நிர்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள், உங்களிடத்தில் உள்ள உங்களுடைய பொன் துருப்பிடித்தது.” பாருங்கள், அது அந்தவிதமாக துருப்பிடிக்கிற பொன்னாக உள்ளது. 188 ஆனால் இயேசு தருகிற பொன், பரிசுத்த ஆவியேயாகும், அது பொன்னிறமான ஆவியின் எண்ணெய் ஆகும். அது உங்கள் இருதயத்தில் ஊற்றப்படுகிறது, ஓ, என்னே, “நீ ஐசுவரியவானாகும்படிக்கு, என்னிடத்திலிருந்து பொன்னை வாங்கிக்கொள்” என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். ஓ, ஆம்.
83189 அவர்கள் “குருடராயும்” கூட உள்ளனர். இப்பொழுது, அவ்வாறான நிலை மிகவும் மோசமான காரியமாகும். இந்தக் கிறிஸ்தவர்கள் குருடராயிருப்பதாக நான் எண்ணவில்லை. அவர்கள் “கிட்டப் பார்வை” உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிட்டப் பார்வையுள்ளவர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர்களால் அவர்களுடைய பெரிய ஆலய கட்டிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது. அவர்களால் பார்க்க முடிந்த ஒரே காரியம் அவர்களுடைய பெரிய சபையேயாகும். அவர்களால் நோக்கிப் பார்க்க முடிந்த ஒரே காரியம் அவர்களுடைய பெரிய அங்கிகளையணிந்த, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அவர்தம் பாடகர் குழு மட்டுமே. அவர்கள் கிட்டப்பார்வையுள்ளவர்கள் என்று நான் எண்ணுகிறேன். அவர்களால் தங்களது மூக்குக்கு மேலாக பார்வையை செலுத்த முடியாது. அவர்கள் குருடர் என்று நான் எண்ணவில்லை. அவர்கள் கிட்டப்பார்வை உள்ளவர்கள். அவர்கள் மேற்சொன்ன காரியங்களைத் தவிர அதற்கு மேல் நோக்கிட முடியாதவர்களாய் இருக்கிறார்கள். “என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் இன்ன—இன்ன ஸ்தாபனத்தைச் சார்ந்தவர்கள்” என்று கூறிக் கொள்கிறார்கள். அவர்களுடைய பெரிய ஸ்தாபனங்கள், அவர்களுடைய பெரிய கூட்டம், அநேக உறுப்பினர்கள் எண்ணிக்கை அவர்களுடைய ஞாயிறு பள்ளி, அவர்களுடைய அருமையான கட்டிடங்கள், முதலிய இவைகளேயாகும்.
84190 இயேசு, “அவர்களுக்கு பரிசுத்த ஆவி தேவையாயிருக்கிறது” என்றார். அவர்களுக்கு பரிசுத்த ஆவியே தேவைப்படுகிறது. எனவே கர்த்தர் அவர்களிடத்தில் “உங்களுடைய கண் பார்வை மிகவும் மோசமாயிருக்கிறது. நீங்கள் இங்கே உங்களுடைய பெரிய கட்டிடங்கள், பெரிய அருமையான சபையார், நகராண்மை கழகத் தலைவர் உங்கள் சபைக்கு வருவது, மற்றும் நீங்கள் பெற்றுள்ள உங்களுடைய முக்கியஸ்தர்கள் ஆகியவைகளைத் தவிர வேறு எதையும் உங்களால் காண முடியாதபடி கிட்டப்பார்வையுடையவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் என்னை மறந்தீர்கள்… ஆனால், நீங்கள் அந்த அளவுக்கு குருடாயிருந்தால், உங்களுடைய கண்கள் அந்த அளவுக்கு நோயுற்று இருந்தால், நான் உங்களுக்கு கண்களுக்குப் போடும் கலிக்கத்தை விற்பேன்” என்றார். ஆம். 191 பாருங்கள், வேத சாஸ்திரத்தில் பாண்டித்தியத்தப் பட்டம் பெற்ற இந்த வேத பண்டிதர்கள் கொஞ்சம் கூட அதைப் பெற்றிருக்கவில்லை என்பது விசித்தரமாயுள்ளது. அவ்வாறு இல்லையா? அவர்களுக்கு ஏராளமான வாசனை திரவியம் உள்ளது. ஏராளமான கோட்பாடுகள் அவர்களிடம் உண்டு. ஆனால் அவர்கள் கண்களுக்கு கலிக்கம் தேவையாயிருக்கிறது. அவர்கள் கர்த்தருடைய வருகையை கண்ணோக்குவதற்காகவும், வேதாகமத்தை சரியாக கண்டு கொள்ளவும், வார்த்தையை நோக்கிப் பார்ப்பதற்கு அவர்களுக்கு தேவனுடைய பரிசுத்த ஆவியாகிய கண்கலிக்கமே தேவையாயுள்ளது. “ஆ—மனிதனே” என்று ராகத்தோடு எவ்வாறு உச்சரிக்க வேண்டுமென்றல்லாம் அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் இவ்விதமான எல்லாவிதமான வாசனைத் திரவியமும், பரிமள தைலமும் உண்டு. ஆனால், “அவர்கள் கண்களுக்கோ கலிக்கம் தேவைப்படுகிறது” என்று கர்த்தர் உரைத்துள்ளார். மேலும், “உன் கண்களுக்குப் போகும்படி உனக்கு சிறிது கலிக்கம் தேவைப்படுகிறது, அது உன் கண்களை திறக்கச் செயும்” என்று கூறப்பட்டுள்ளது.
85192 நான் ஒரு சிறு பையனாயிருந்த போது…நான் இதை கூறியிருக்கிறேன், நான் இப்போது கூறப்போகும் விஷயத்தை ஏற்கனவே சபையில் கூறியிருக்கக் கூடும் என்று நான் எண்ணுகிறேன். இப்பொழுது அவ்விஷயம் மீண்டும் என் மனதில் வருகிறது. நான் சிறிது காலம் கென்டக்கியிலுள்ள மலைப்பகுதியில் வளர்க்கப்பட்டேன். நாங்கள் அங்கே மெல்லிய மரப்பலகைகளால் ஆன பழைய வீட்டில் தான் வசித்து வந்தோம். அங்கே, இங்கே…அந்த சிறிய வீட்டில் உள்ளேயே எங்களுக்கு ஒரு மேல் அடுக்குத்தளம் இருந்தது. அதில் நாங்கள் ஒரு வைக்கோலினால் உண்டான சிறகினால் தயாரிக்கப்பட்ட மேலுறை கொண்ட வைக்கோல் மெத்தை என்றால் என்ன்வென்று உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ, அது எனக்குத் தெரியாது. அது ஒரு பழைய மெத்தை, நாங்கள் மிகவும் ஏழைகளாக இருந்தோம். அப்பாவும் அம்மாவும் கீழ்தளத்தில் கட்டில் போட்டுபடுத்துக் கொள்வார்கள். நாங்களோ ஒரு சிறிய ஏணியின் உதவியினால் அந்த மேல் தளத்திற்கு ஏறிப்போய் படுத்துக் கொள்வோம் எங்கள் தாயார் கூரையை மூடிக் கொள்வதற்காக கித்தான் என்ற முரட்டுத் துணி ஒன்றைத் தருவார்கள். உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் அந்த மேல் தளத்தில் படுத்திருக்கையில், பலகையினால் ஆன அக்கூரையில் இருக்கும் பெருந்துளைகள் வழியாக தெரியும் நிலவொளி நன்கு படும். உங்களுக்குத் தெரியுமா? அங்கே இரவில் மின்னும் நட்சத்திரங்களைக் கூட எண்ணிடலாம். அந்த விதமாக பெரிய ஓட்டைகளைக் கொண்டதாய் அந்தக் கூரை அமைந்திருந்தது.
86193 எனவே பனியோ அல்லது வேறேதோ அல்லது மழையோ பெய்யும் போது, சிறு பிள்ளைகளாகிய நாங்கள் மேல் தளத்தில் நனையாமலிருக்க அந்த—அந்த கித்தான் துணியினால் மூடிக்கொள்வோம், உங்களுக்குத் தெரியுமா, சில வேளைகளில் கூரையிலுள்ள அத்துளைகளின் வழியாக அடிக்கும் காற்றினால், எங்களுக்கு ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும். அப்பொழுது எங்களது—எங்களது—எங்களது கண்களில் அழுக்கு பிடித்துக் கொள்ளும், அந்த ஜலதோஷத்தினால் கண்களும் பாதிக்கப்படும். கண்கள் அடைத்துக் கொண்டு திறக்க முடியாதபடி இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே எங்களது தாய் “கீழே வந்துவிடும்படி” எங்களை அழைப்பார்கள். அப்பொழுது, நான், “அம்மா என்னால் வரமுடியாது. ஏனெனில் என் கண்களெல்லாம் அழுக்கினால் அடைத்துக் கொண்டு திறக்க முடியாதபடி உள்ளது.” என்று கூறுவேன். பனியானது கண்களை பாதிப்பதால் இவ்வாறு இருக்கும், உங்களுக்குத் தெரியுமா? கண்களைத் திறக்கக் கூடமுடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னோடு ஒரு சிறிய தம்பியும் ஹம்பி என்பவரும் இருப்பார்கள். அவர்களும் தங்கள் கண்களை திறக்க முடியாதபடி இருக்கையில், திறக்க முயற்சி செய்வார்கள். ஆனால் எங்களால் திறக்க முடியாமல், மூடியேயிருப்போம்.
87194 எனது தாத்தா கண்ணி வைத்து மிருகங்களை பிடிப்பவர், அதாவது மரம் ஏறும் கரடியின் கூன், ரேக்கூன் மிருகங்களை கன்னிவைத்து பிடித்துவிடுவார். அம்மிருகத்தின் கொழுப்பானது ஒரு நல்ல சர்வ ரோக நிவாரணியாக எங்கள் வீட்டில் உபயோகிக்கப்பட்டது. அம்மிருகக் கொழுப்பை கொண்டு, எங்களது காலணிகளைக் கூட மெருகேற்றுவோம். உங்களுக்கு கொடிய இருமல் நோய் இருந்தால், அவர்கள் அந்தக் கொழுப்பில் சிறிது மர எண்ணெய்யை விட்டு கொடுக்க, நீங்கள் அதை அந்த தொண்டனை நோயிலிருந்து விடுபட அதனை விழுங்க வேண்டும். ஆம். 195 இவ்வாறு பனியினால் எங்களது கண்கள், அழுக்கினால் அடைத்துக் கொண்டு விட்டால், அப்பொழுது எங்களது தாயார் இந்தக் கொழுப்பை எடுத்து…“ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள் தேனே” என்று சமையல் அறைக்கு ஓடிச் சென்று, அங்கே அந்த பழைய கோப்பையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த கூன் என்ற மரமேறும் அம்மிருகத்தின் கொழுப்பை எடுத்து அதை நன்கு சூடுபடுத்தி எடுத்துக் கொண்டு மேலே வந்து அதை எங்கள் கண்களில், கண் திறக்கிற வரையிலும் தடவிக் கொண்டேயிருப்பார்கள். சிறிது நேரம் கழித்து என் கண்கள் திறந்து, என்னால் அப்பொழுது பார்க்க முடியும். ஆகவே, அவ்வாறு கண்கள் அடைத்துக் கொண்டு விட்டால், கூன் என்ற அந்த மிருகத்தின் கொழுப்பானது கண்களைத் திறப்பதற்கு உதவுகிற மருந்தாக இருக்கும்.
88196 நமக்கு மிகவும் மோசமான குளிர்ந்த காற்று உண்டாயிருந்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். புரிகிறதா? தேசத்தில் மிகவும் மோசமான குளிர்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. பாப்டிஸ்டுகள், “அற்புதங்களின் நாட்கள் கடந்து சென்று விட்டன. பரிசுத்த ஆவி, அந்நிய பாஷைகளில் பேசுதல் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் என்பதும் இல்லை” என்று கூறுகிறார்கள். ஓ, இவ்விதமான எல்லாவிதமான வாடைக்காற்றுகளெல்லாம் வீசிக் கொண்டிருப்பதால், அது தானே ஆவிக்குரிய குளிர்ந்த நிலையில், அநேகம் கண்களை குருடாக்கி போட்டு விட்டது. சகோதரனே, அவர்களுடைய கண்களைத் திறக்க கூன் என்ற அம்மிருகத்தின் கொழுப்பை விட மேலான ஒரு மருந்தே தேவைப்படுகிறது. அவ்விதமான குருட்டுத்தனத்தை குணமாக்க சுத்தமான பரிசுத்த ஆவியின் அபிஷேகமே தேவைப்படுகிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது …?… அடைத்து இருக்கிற உங்களில் கண்களில் மேல் தடவப்பட்டு, அதைச் சுத்தமாக்கி, உங்கள் கண்களிலிருந்து கிட்டப்பார்வையை உங்களிலிருந்து எடுத்துப் போட்டு, அதினால் தேவனுடைய வார்த்தையே சத்தியமாயிருக்கிறது என்பதைக் காணச் செய்யும். அதுதான் சரி. ஓ, “என்னிடத்திலிருந்து கண்களுக்கு கலிக்கம் வாங்கிக்கொள் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன், உங்கள் கண்களை ஒருவிதமான அபிஷேகத்தால்.” எனவே நீங்கள்…எனவே…
89197 வேத பண்டிதர்கள், தங்களுடைய சொந்த மதக்கோட்பாட்டை உடையவர்களாய் இருக்கிறார்கள். அவர்களிடம் வாசனை திரவியங்களும் மற்றும் இன்ன பிறவும் உள்ளன. ஆனால் அவை போதாது. அவர்களை பார்வையடையச் செய்ய பரலோக வல்லமைகள் கிரியை செய்வதைக் காண்பதற்குரிய ஆவிக்குரிய தரிசனத்தை அடைய அவர்களுக்கு பரிசுத்த ஆவி தேவைப்படுகிறது. பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியின் கலிக்கம்! கலிக்கம் என்பது ஒரு சூடாக்கப்பட்ட எண்ணெய் ஆகும் என்பதை நாம் அறிவோம். எனவே பரிசுத்த ஆவி தேவனுடைய எண்ணெயாக இருக்கிறது. 198 எல்லா வேத சாஸ்திரங்களும், வாசனை திரவியமும், “ஓ, பிரியமான சகோதரனே, நீ சரியாகத்தான் இருக்கிறாய். உன்னிடம் எந்த குறையும் இல்லை. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. நமது நகரத்திலேயே, எல்லாவற்றை விட பெரிய ஆலயம் நமது சபையாகத்தான் உள்ளது” என்று கூறுகின்றன. அந்த வாசனைத் திரவியம் கிரியை செய்யாது! இல்லை ஐயா! அது உன்னை (கிட்டப்பார்வை உடையவனாக) அருகில் உள்ளவைகளை மட்டுமே காணக்கூடியதாக்கும். அதினால், “ஆம், நாங்கள் மிகப் பெரிய சபையை உடையவர்களாயிருக்கிறோம்” என்று கூறுவீர்கள். ஆனால் லவோதிக்கேயா சபைக் காலத்தின் சபை அங்கத்தினர்களே. வரப்போகும் நியாயத் தீர்ப்பில் தேவன் உங்களை கணக்கொப்புவிக்கக் கேட்பாரே, அதைப் பற்றி என்ன? 199 நான் இங்குள்ளவர்களுக்காக மட்டும் பேசவில்லை, ஆனால் எனது பேச்சு ஒலி நாடாவில் பதிவி செய்யப்பட்டு, உலக முழுவதிலும் போய்க் கொண்டிருக்கிறது. நீங்கள் பாருங்கள், எனவே கோடிக்கணக்கான மக்களோடு இந்த வேளையில் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
90200 ஆகவே, இவ்வாறான நிலையில் தான் லவோதிக்கேயா உள்ளது. அது அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பாய், பின்மாற்றமடைந்ததாகவும், கிட்டப்பார்வையுள்ளதாகவும் இருக்கிறது. இன்னும் வேறென்னதாக உள்ளதோ, நான் அறியேன். கோவேறு கழுதைகள்! ஒரு கோவேறு கழுதையானது இன கலப்பு செய்யப்பட்டு பிறந்த ஒன்றாகும். சொல்லப் போனால் அதற்கு முதலில் செயல்படுவதற்குரிய பொது அறிவு என்பதே கிடையாது. அதனிடம் நீங்கள் பேசி பாருங்கள். அது தனது பெரிய காதுகளை உயர்த்திக் கொண்டு, “ஹா!, ஹா!, ஹா!, ஹா!” என்று கத்தும். அதற்கு தயவு என்பதேக் கிடையாது. அது இனக்கலப்பினால் பிறந்த ஒன்றாகும். அது குதிரைக்கும் கழுதைக்கும் இடையே உள்ள பிறவியாகும், அது தான் இப்பொழுது உள்ள காரியமாக இருக்கிறது. நீங்கள் நிக்கொலாய் மதஸ்தினரையும் லவோதிக்கேயரையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் உங்களுக்கு மீண்டும் ஒரு கழுதை தான் கிடைக்கும். நமக்குத் தேவையானது என்ன? அது உண்மை. அவர்களுக்கு தெரியாது. அவர்களிடம் நீங்கள் தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும், இயேசுவின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்தையும் குறித்து கூறுங்கள். அதற்கு அவர்கள், “ஹா! ஹா! என்னுடைய மேய்ப்பர் அவ்வாறு கூறவில்லை. ஹா ஹா! நாங்கள் அதை விசுவாசிக்கிறதில்லை. நாங்கள் ப்ரெஸ்பிடேரியன்கள்” என்பார்கள். அறிவிலிகள்! அவ்வாறு தான் அவர்களை நீங்கள் அழைக்க முடியும் …?…
91201 நான் ஒரு கோவேறு கழுதையை வெறுக்கிறேன். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு நல்ல உயர்ந்த இனத்தில் பிறந்து வந்துள்ள குதிரையை நான் விரும்புகிறேன். அதற்கு நீங்கள் எதையாவது சொல்லி கொடுக்க முடியும். அதற்கு நீங்கள் பணிந்து அடங்குவதைக் குறித்துப் போதிக்க முடியும். அதை நீங்கள் வேடிக்கை விளையாட்டு காட்டும் வட்ட அரங்கத்தில் கொண்டு செல்ல, ஏறத்தாழ ஒரு மனிதனால் செய்ய முடிந்ததை செய்ய கற்பிக்க முடியும். ஏனென்றால் அது…அது ஒரு காரியத்தை அறிந்துள்ளது. அது ஒரு வம்சாவளியை உடையதாயிருக்கிறது. ஒரு கோவேறு கழுதைக்கோ தனது தந்தை யார், தாயார் யார், என்பதே தெரியாது. அதினால் தன்னையே இனப்பெருக்கம் செய்ய இயலாது. அதைப் போலத்தான் இந்த சில பழைய குளிர்ந்து போன சடங்காச்சார ஸ்தாபனங்களின் நிலைமையும் இருக்கிறது. அவர்களால் மீண்டும் ஒருபோது எழும்ப முடியாது. ஒரு சபையானது ஒரு ஸ்தாபனத்திற்குள்ளாக சென்றவுடனேயே, அது மரித்து விடுகிறது. அது மீண்டும் ஒருபோதும் எழும்பாது. அது என்னவாயிருக்கிறது? அது கலப்புமார்க்கமாயுள்ளது! 202 மார்ட்டின் லூத்தர் சரியாகத்தான் இருந்தார். ஆனால் அவர் அதை ஸ்தாபனமாக்கியபொழுது அவர் என்ன செய்தார்? மெதோடிஸ்ட் சரியாகத்தான் இருந்தது. ஆனால் அவர் அதை ஸ்தாபனமாக்கியபொழுது அவர் என்ன செய்தார்? பெந்தெகொஸ்தேயும் சரியாகத்தான் இருந்தது. ஆனால் நீங்கள் அதை ஸ்தாபனமாக்கியபொழுது, நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் அதை கலப்பாக்கிவிட்டீர்கள். அதை நிக்கொலாய் மத போதகத்தை கைக்கொள்ளும் கத்தோலிக்க சபைக்குள் இனப்பெருக்கம் செய்கிறீர்கள். நீங்கள் சரியாக அக்காரியத்தைதான் செய்தீர்கள். அவளது முறைமையின்படியான ஞானஸ்நானத்தையும், அவளது வழிகளையும், செயல்களையும் பின்பற்றினீர்கள். “நீங்கள் ஒரு வேசியின் மகள், அதனால் நீங்களும் ஒரு வேசி, ஒரு வேசியின் மகள்” என்று வேதம் உரைத்துள்ளது. அது சரியாக அப்படித்தான் இருக்கிறது!
92203 ஒரு நல்ல ஜாதி குதிரையானது, ஆம், அது கனிவானதாயுள்ளது. ஓ, அது நல்லதாக இருக்கிறது. நான் அதை விரும்புகிறேன். அது உங்களது தோள்களின் மேல் தலையை வைக்கும், அன்புள்ளதாகவும் பண்புள்ளதாகவும் இருக்கிறது. ஏன்? தனது தகப்பன் யார்? தனது தாத்தா யார்? என்பதையும் அது அறிந்திருக்கிறது. தன் தாத்தாவின் தந்தை யார் என்பதையும் அது அறிந்திருக்கிறது. தனது வம்சத்தில் உள்ள முன்னோர்களின் வம்சாவளியை அறிந்ததாக உள்ளது. 204 அதேபோல் தான் ஒரு உண்மையான, நல்ல வம்சாவளியை அறிந்திருக்கிற கிறிஸ்தவனை நான் காண விரும்புகிறேன். கடந்த வாரத்தில் மெதோடிஸ்ட்டிலும், இந்த வாரம் பாப்டிஸ்ட்டிலும், இந்த வாரமே பெந்தேகோஸ்தேவிலும், அதற்கு அடுத்த வாரம் யாத்திரீக பரிசுத்த சபையிலும் தன்னுடைய கடிதத்தை கொண்டு செல்வதல்ல. அவன் தன்னுடைய தந்தை யார் என்பதையும், தன்னுடைய தாய் யார் என்பதையும் அறியாதிருக்கிறான். ஆனால் தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு மனுஷன் தன் முன்னோர்களின் வம்சாவழியைச் சொல்லும்படியாக அவன் உங்களை பெந்தெகொஸ்தே நாளுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதை நான் உங்களுக்கு கூறட்டும். அவன் தான் வழித்தோன்றிய தனது வம்சாவழியை உடையவனாக, பெந்தெகொஸ்தேகாரனாக இருப்பான் என்பதை உங்களுக்கு கூற முடியும். ஆமென். நான் எனது தலைமுதல் பாதங்களின் அடிப்பாகம் வரையிலும் முழுவதுமாக பெந்தெகொஸ்தேகாரனாக இருக்க விரும்புகிறேன். நான் ஸ்தாபனமாக ஆகியுள்ள பெந்தெகொஸ்தேயை அர்த்தப்படுத்தி கூறவில்லை. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் உண்மையான வல்லமையை, மெய்யான பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தைப் பற்றியே குறிப்பிடுகிறேன். 205 கண்களுக்குப் போடும் கலிக்கம், நாம் பின்னோக்கிப் பார்த்து, அது எங்கிருந்து வருகிறது என்பதை நாம் காணும்படியாக உங்களுடைய கண்களைத் திறக்கிறது. சபையானது இன்றைக்கு என்னவாயிருக்கிறது என்பதையே நீங்கள் நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அது எங்கிருந்து வருகிறது என்பதை நன்கு பின்னோக்கிப் பார்க்க வேண்டும். பின்பு, தேவனை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டேயிருங்கள். அப்பொழுது நீங்கள் இந்த ஸ்தாபனத்தை விட்டு விலகிச் செல்வீர்கள். ஆம். ஐயா.
93206 சரி, நான் இன்னொரு காரியத்தை கவனித்தேன், “அவர்கள் நிர்வாணிகளாயிருக்கிறார்கள், அதாவது நிர்வாணிகளாயிருக்கிறார்கள், ஆனால் அதை அறியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக. 207 ஓ, நிர்வாணிகளாயிருந்தும் அதை அறியாமல் இருக்கிறார்கள். இப்பொழுது, ஒரு மனிதன் நிர்பாக்கியமுள்ளவனும், குருடனாயும், பரிதபிக்கப்படத்தக்கவனும், நிர்வாணியுமாயும் இருந்தால், அந்த நபர் பரிதாபமான நிலையில் இருக்கிறவனாயிருக்கிறான். இப்பொழுது அவன்—அவன் அதை அறிந்தவனாயிருந்தால் அப்பொழுது அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனக்கு உதவி செய்து கொள்ளுவான். ஆனால் அவனோ தனது நிலையைதானே அறியாதவனாயிருந்தால், இந்த பரிதாபத்திற்குரிய நபர், புத்தி சுவாதீனத்தையே இழந்துவிட்டான் என்றாகிவிடுகிறது. அது சரிதானே? வியூ! அவ்வாறு கூறுவது கடுமையான ஒன்றாக இருக்கிறது. அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள இயலாதபடி தன் புத்தி சுவாதீனத்தையே இழந்துவிட்டான். 208 தெருவில் ஒருவன் நடந்து கொண்டிருக்கிறதை நீங்கள் காண்கையில் அவன் தரித்திரனாயும், பரிதபிக்கப்படத்தக்கவனாயும் குருடனாயும், நிர்பாக்கியமுள்ளவனாயும், நிர்வாணியுமாயும் இருக்கக் கண்டால் “சகோதரனே, நீ நிர்வாணியாயிருக்கிறாய்” என்று நீங்கள் கூறினால், அப்பொழுது அவன், “ஓ, நான் அப்படியாயிருக்கிறேன்? ஓ, சகோதரனே, எந்த வகையிலாவது எனக்கு உதவி செய்து நான் துணி உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யும்” என்று கேட்பான்.
94209 ஆனால், நீங்கள் அவர்களிடம் நடந்து சென்று, “நீங்கள் விசுவாசிகளான பிறகு, பரிசுத்த ஆவியை பெற்றீர்களா?” என்று கேளுங்கள். 210 “நீ யார். உருளும் பரிசுத்தனா? நீ என்னத்தை குறிப்பிடுகிறாய்? நான் ஒரு ப்ரெஸ்பிடேரியன், நான் ஒரு பாப்டிஸ்ட், நான் இன்னான்—இன்னான், மற்றும் இன்னார்—இன்னார். ஆகவே என்னிடம் இவ்வாறெல்லாம் பேசாதே” என்று கூறுவர். 211 இவர்கள் நிர்வாணிகளாயும் இருப்பதோடு, அதை அறியாமலேயிருக்கிறார்கள். இப்பொழுது, நான் இவ்வாறு கூறவில்லை. வேதமே இக்காலத்தைப் பற்றி கூறுகையில் “நிர்வாணியாயிருக்கிறதை அறியாமலிருக்கிறாய், எனவே உடுத்திக்கொள்வதற்கு வந்து என்னிடத்தில் வஸ்திரங்களை வாங்கிக் கொள்” என்று கூறுகிறார். அவர் கூறினார் …வெண்வஸ்திரம்… வெண்வஸ்திரம் பரிசுத்தவான்களுக்கு உரியது. அது பரிசுத்தவான்களுடைய நீதியைக் குறிக்கிறது. புரிகிறதா?… 212 நிர்வாணியா? ஓ நிச்சயமாக! ஆம் ஐயா! ஓ, நீங்களோ, “சகோதரர் பிரன்ஹாமே, இது எங்களுடைய சபையைக் குறித்துக் கூறப்பட்டதல்ல. இந்நகரத்திலேயே மிகவும் சிறப்பாக உடுத்தியிருப்பது நாங்கள் தான்” என்று ஒரு வேளை கூறலாம், அதைப் பற்றி எனக்கு ஐயம் இல்லை; நிச்சயமாக நீங்கள் உடுத்துவதெல்லாம், தற்போதைய நாகரிக பாணியில், நேர்த்தியாக வெட்டியெடுக்கப்பட்ட துணிகளும், திரைப்பட நவநாகரீகத் துறையான ஹாலிவுட் நட்சத்திரங்கள் தற்போது புதிய பாணியில் உடுத்துவதுமான மிகவும் கீழ்த்தரமான பால் உணர்வுகளைத் தூண்டத்தக்கதான, தெருவில் போகும் ஒவ்வொரு மனிதனையும் கவர்ந்திழுக்கச் செய்வதுமான ஆடைகள் தான். ஊ—ஊ. நிச்சயமாக. 213 ஒரு பெண்மணி என்னிடம் “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே நீங்கள் எனக்கு என்ன சொல்லுகிறீர்கள்? இப்பொழுது, கடைகளில் இவ்வாடைகளைத் தான் விற்கிறார்கள். அதைத்தான் நாங்கள் வாங்க வேண்டியுள்ளது” என்று கூறினார். 214 அதற்கு நான், “அவர்கள் இன்னும் துணிகளை விற்றுக் கொண்டும், தையல் இயந்திரங்களையும் உற்பத்தி செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள். அது அதற்கான காரணமாக கூறும் போதுமான சாக்குப்போக்கல்ல” என்றேன்.
95215 வேதம், “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு விபசாரம் செய்தாயிற்று” என்று கூறியுள்ளது. அது சரிதானே? நல்லது. அப்படியாயின், ஸ்திரீயானவள் பால் உணர்வுகளைத் தூண்டத்தக்கதாக உடையுடுத்திக் கொண்டு, ஒரு மனிதனுக்கு முன்னால் தன்னை நிறுத்திக் கொள்வானென்றால், அதற்காக யார்மேல் குற்றம் விழுகிறது? அப்பாவத்தை பிறப்பிக்க காரணமானது அந்த ஸ்திரீதான். அது தான் உண்மை. 216 இப்பொழுது, நீங்கள் உங்கள் கணவருக்கு லீலி புஷ்பத்தைப் போல் சுத்தமானவராக இருக்கக் கூடும், உங்கள் வாழ்க்கையில் தவறே செய்யாத இளம் பெண்ணாக இருக்கக் கூடும். உங்கள் கணவரை மணந்து கொள்ளுகையில் ஒரு சுத்தமான கன்னியாக இருந்திருக்கக் கூடும். ஆனால் நீங்கள் இவ்விதமான உடையுடுத்திக் கொண்டால், அதினால் மனிதர்கள் உங்களை இச்சையோடு உற்று நோக்கிடச் செய்திட்டால், அவன் ஏற்கனவே உங்களோடு தன் இருதயத்தில் விபச்சாரம் செய்தாயிற்று. அந்தப் பாவி இச்சையோடு உங்களை உற்று நோக்கினான். ஒரு கிறிஸ்தவள் என்ற முறையில், நகரத்திலேயே மிகவும் சிறப்பாக வெட்டப்பட்ட துணியை உடையவராக நீங்கள் இருக்கலாம். சிறந்த கம்பளித்துணிகள் வாங்கியிருக்ககூடும். ஆனால் ஒரு தேவனுடைய பரிசுத்த வாட்டிக்கு அவ்வாறு உடுத்துவது அழகல்ல.
96217 [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] ஓ, ஆம். இவ்வாறு இருந்தால், நீங்கள் ஒரு தேவ பிள்ளையாக இருக்க முடியாது. 218 “ஓ, இல்லை” என்று அவர்கள் கூறுகிறார்கள். நல்லது, அவர்கள், “எங்கள் சபை…” என்று கூறுகிறார்கள். நீங்கள் சிறப்பாக உடையுடுத்தியிருக்கிறோம் என்கிறீர்களா? அவ்வாறு இருப்பதாக அவர்கள் கூறினார்கள். அவர்கள், “ஐசுவரியவான்களும், ஒரு குறையுமில்லை” என்றும் இருக்கிறார்கள். நிச்சயம் அப்படித்தான். ஏன்? அவர்கள், “எங்களுடைய போதகர் ஒரு பெரிய மகத்தான அங்கியணிந்து வெளியே நடந்து செல்லுகிறார். சபையின் பாடகர் குழுவும் கூட பெரிய அங்கிகளை அணிந்துள்ளனர்” என்று கூறுகின்றனர். அதற்குக் கீழாக பிசாசு ஒளிந்திருக்கிறான். உ—ஊ. உ—ஊ. அது தான் உண்மை. ஓ! உம், உம்! நல்லது, நான் அதை மேற்கொண்டு சொல்லாமல் விட்டுவிடுவது நல்லது. எனவே நான் அந்த ஒன்றை விட்டுவிடட்டும். சரி. 219 ஓ! இந்த பெரியகாரியங்கள்! அங்கியணிந்துள்ள பாடகர் குழுக்கள். கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ள பாடகர் குழுக்கள்: இவர்களுக்கு பாடுவதற்கு பணம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காவிடில், அதை விட கூடுதலாக அவருக்கு பணம் கிடைக்கும் பொறுப்பை அவர் தெரிந்து கொண்டு விடுவார். அவர் தர்மகர்த்தாக்களின் குழுவை கூடிவரச் செய்து, “இப்பொழுது, சகோதரரே, நான்—நான்…இங்கே நீங்கள் இதுவரையிலும் என்னிடம் மிகவும் தயவு காட்டி வந்தீர்கள். நீங்கள் ஒரு வாரத்திற்கு இத்தனை நூறு டாலர்கள் எனக்கு கொடுத்து வந்தீர்கள்” அல்லது அதைப் போன்ற மற்ற ஏதோ ஒன்றைக் கூறுவார். “ஆனால் அந்த மற்ற ப்ரெஸ்பிடேரியன் சபையோ…” (“பெந்தெகோஸ்தே சபை” அல்லது வேறேதோ ஒன்றைக் கூறி) “எனக்கு இன்னும் கூடுதலாக இத்தனை டாலர்கள் கொடுப்பதாக அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்” என்று கூறுவார். ஓ, என்னே!
97220 அப்படியானால் ஏழையான பரிசுத்தவானுக்கு அங்கே என்ன இருக்கிறது? அவர்களுக்கு என்ன வாய்ப்பு உள்ளது? பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு ஏழ்மையான சிறிய சபைக்கு என்ன உள்ளது? எந்த விதமான ஒரு வாய்ப்பினை அவர்கள் பெற்றுள்ளனர்? அதைப் போன்று எதையுமே அவரகளால் கொடுக்க முடியாது. எனவே, கர்த்தர், அவ்வாறான சூழ்நிலையில், உங்களுக்கென ஒன்றை எழுப்புகிறார். ஆமென். அது தானே அவரது சொந்தக்கரத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஒன்றாகவும், அவரே அதின் மேல் கண்காணியாக இருக்கக் கூடியதாகவும் உள்ளது. “என்னிடம் வெண்வஸ்திரத்தை வாங்கிக் கொள் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்” என்று அவர் கூறினார். வேதமோ, “வெண் வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதியே” என்று உரைத்துள்ளது.
98221 இப்பொழுது நான் நினைக்கிறேன் நாம்…நாம் இப்பொழுது 19-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். 20-ம் வசனத்தை நாம் பார்த்தோம் என்று நான் நம்புகிறேன். அதில் மிகச் சிறப்பான காரியத்தை நான் காண முடியும். ஆம், இவ்வசனங்களோடு இது முடிவடைகிறது. இப்பொழுது, இதை நாம் ஆராய்கையில், மிகவும் அமைதியாக இருந்து இதை மிகவும் கவனித்துக் கேளுங்கள். கேளுங்கள்! இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார். 222 புதிய ஏற்பாட்டில் உரைக்கப்பட்டவைகளிலேயே நான் கண்ட தலை சிறந்த வார்த்தைகளில் ஒன்று தான் இதுவாகும். “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்” என்ற வசனத்தை நீங்கள் கவனிக்கும்படி நான் விரும்புகிறேன். பாவிகள் மனந்திரும்புவதற்காக விடுக்கப்படும் அழைப்புக்காக பொதுவாக இவ்வசனமானது உபயோகிக்கப்படுவது, அப்படித்தானே? நாம் பாவிகளிடம், “இயேசு வாசற்படியில் நின்று கதவை தட்டுகிறார்” என்று கூறுகிறோம். ஆனால் இங்கோ அவர் சபையின் வாசற்படியில் நின்று அதின் கதவைத் தட்டுக்கொண்டிருக்கிறார். ஏனெனில் அவர் ஒரு காலத்தில் அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர்களோ, (தங்களது ஸ்தாபன முறைமையினாலும், உலகப்பற்றினாலும், குளிர்ந்து போய்விட்ட நிலையிலும்) அவரை வெளியேற்றிவிட்டார்கள். அவர் இப்பொழுது சபையின் புறம்பே இருக்கிறார்.
99223 நாம் இப்பொழுது முடிக்கப் போகிற வேளையில், சபைக் காலங்களின் துவக்கத்தில் அவர் ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவில் உலாவிக் கொண்டிருந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (அது சரிதானே?) இங்கே முடிவுக் கட்டத்தில், அவர் எந்த சபைக்கு வெளியே நிற்பதாக நாம் காண்கிறோம்? லவோதிக்கேயா, லவோதிக்கேயா சபைக்கு வெளியே. புறம்பே இருக்கிறாள். அவர்கள் அவரை புறம்பாக்கிப் போட்டுவிட்டார்கள். ஏன்? அவர் வெளியே நின்று கொண்டு, உள்ளேத் திரும்பி வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். என்னே ஒரு பரிதாபமானதொரு காட்சியாக இது இருக்கிறது! தனது சொந்த இரத்தத்தால் கிரயத்திற்குக் கொண்ட தன் சபைக்கு வெளியே உலகின் இரட்சகரானவர் நின்று கொண்டிருக்கிறார். அவர்கள் மேல் இது வெட்கக்கேடாக இருக்கிறது! 224 “நான் வாசற்படியிலே நின்று கதவைத் தட்டுகிறேன்” அவர்தாம் வெளியே தள்ளப்பட்ட பிறகு அல்லது புறம்பாக்கப்பட்ட பிறகு, மீண்டும் உள்ளே நுழைய முயன்று, அவர் நகர்ந்து வந்து கதவைத் தட்டுகிறார். புதிய ஏற்பாட்டிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு காரியமாக இது காணப்படுகிறது. லவோதிக்கேயா சபைக் காலத்தில், இவ்வுலகின் இரட்சகரானவர் தனது சொந்த சபையை விட்டு புறம்பாக்கப்பட்டு இருக்கக்கூடிய இதைப் போன்றதொரு வருந்ததக்க காரியம் வேறு ஒன்றும் இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன். அவர்கள் செய்திருக்கும் காரியத்தைப் பற்றி அவர்களுக்கு அவர் சொன்ன பிறகு, அவர்களுடைய ஐசுவரியத்தைப் பற்றியும், அவர்கள் எவ்வாறு உள்ளனர் என்பதைப் பற்றியும், அவர்கள் எவ்வாறு வெது வெதுப்பாயுள்ளனர் என்பதை பற்றியும், அவர் அவர்களுக்கு கூறிய பிறகு, அவர்கள் அவரை…அவர் அவர்களை தம் வாயின்று வாந்தி பண்ணிப் போட வேண்டியதேயில்லை, அவர்கள்—அவர்கள்…அவர்கள் அவரை வாந்தி பண்ணிப்போட்டுவிட்டனர். இப்படியெல்லாம் நடந்த பிறகும் கூட அவர் இன்னமும் வாசற்படியில் நின்று கதவைத் தட்டி மீண்டும் உள்ளே புக முயன்று கொண்டு தான் இருக்கிறார். எதற்காக? அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்காகத்தான். கல்வாரியில் அவரைக் கொன்றவர்களின் ஆத்துமாக்களைக் கூட இரட்சிக்கவே அவர் முயன்று கொண்டிருந்தார். என் வாழ்வில் நான் பார்த்ததிலேயே, நினைத்ததிலேயே மிகவும் ஒரு பரிதாபத்திற்குரிய காட்சியாக அது இருக்கிறது.
100225 புறம்பாக்கப்பட்டார்! அவர் எதிலிருந்து புறம்பாக்கப்பாட்டார்? இப்பொழுது, நண்பர்களே, கவனியுங்கள். இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கிறதல்லவா! அதைப் பற்றிய உண்மைத் தோற்றத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதியட்டும். நமது இரட்சகர் அவர் இப்பூமியில் இருக்கையில், தனது சொந்த ஜனத்தாலேயே புறம்பாக்கப்பட்டார். அவர் புறக்கணிக்கப்பட்டார் அவர் வெளியே தள்ளப்பட்டார். உலகம் அவரை புறம்பாக்கிப் போட்டு சிலுவையில் அறைந்தது. இப்பொழுது அவரது சொந்த சபையை விட்டே அவர் புறம்பாக்கப்பட்டுவிட்டார். அவரை எந்த இடத்திலும் ஏற்றுக்கொள்வாரில்லை. அவர் இப்பொழுது அவர்களுக்கு தேவையில்லை. அவர்களுக்கு ஒரு ஸ்தாபனம் கிடைத்துவிட்டது. அவர்களுக்கு அவர் தேவையில்லை. அவர்களுக்கு ஒரு போப் இருக்கிறார், இனிமேல் அவர் எதற்கு அவர்களுக்கு தேவை? அவர்களுக்கு இப்பொழுது ஒரு தலைமை பேராயர், தலைமைக் கண்காணியும் உள்ளனர். ஆகவே இனிமேல் அவர்களுக்கு பரிசுத்த ஆவியினால் எந்த உபயோகமும் இல்லை. இனிமேல் அவர்களுக்கு பரிசுத்த ஆவி தேவையில்லை. கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு இனி தேவைப்படமாட்டார். எனவே அவர்களுடைய… 226 அவர்கள் எழுந்து நின்று அவரை வெளியே தூக்கி எறிந்துவிட்டார்கள் என்று நான் நம்பவில்லை. ஏனெனில் அவர் சபையில் இல்லாததை அவர்கள் உணரவில்லை. அவர் இல்லாததை அவர்கள் உணரவில்லை ஏனெனில், அவர்கள் இன்னமும் அவரைப் போற்றி பாடல்கள் பாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களது பிரசங்கியார் இன்னமும் அவரைப் பற்றி பிரசங்கித்துக் கொண்டு தான் இருக்கிறார். எனவே அவர் இல்லாததை அவர்கள் உணரவில்லை. ஆனால் அவர்கள் சொந்த உலகப்பற்றும், அவர்களுடைய ஸ்தாபனத்தை ஸ்தாபித்துக் கொண்டு, “அற்புதங்களின் காலம் கடந்து போய்விட்டது, இதைப் போன்ற மற்றும் அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை” என்று கூறிக்கொண்டிருக்கின்றனர்.
101227 நான் உங்களை ஒன்று கேட்கிறேன். (வரலாற்றாசிரியர்களே), இப்பொழுது இங்கே தொடர்ந்து இந்த சபைகளில், எந்த சமயத்திலாவது வந்திட்ட எந்தவொரு எழுப்புதலும், எப்பொழுதும் ஒரு ஸ்தாபனத்திற்கு வெளியே தான் நிகழ்ந்திருக்கிறது. எழுப்புதலை ஆரம்பித்த எந்தவொரு மனிதனும், அதை ஸ்தாபனத்திற்கு வெளியே தான் ஆரம்பித்தான். ஒரு—ஒரு எழுப்புதல் ஏற்பட்ட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு அற்புத அடையாளங்களும் அன்னிய பாஷைகளில் பேசுதலும், வியாதிஸ்தர் குணமடைதலும் மற்றும் இன்ன பிற காரியங்களும் நிகழ்ந்தன. அவ்வெழுப்புதலை ஆரம்பித்த மனிதன் மரித்த உடனேயே அவர்கள் அதை ஒரு ஸ்தாபனமாக ஸ்தாபித்து பிறகு “மரித்த” நிலையில் ஆகிவிட்டனர். அதன் பிறகு அதனோடு தேவன் ஒருபோதும் தன் சமயத்தை வீணடிக்கவில்லை. அது முற்றிலும் உண்மை. 228 இங்கே அவர் கடைசி சபைக்காலத்தில் வாசலுக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவனவர். அதைப் பற்றி எண்ணுகையில், அது—அது என் இருதயத்தை நொறுக்குகிறது. எனது கர்த்தர், தனது சொந்த சபைக்கு வெளியே, அவர்களது உலகப்பற்றினாலும், குளிர்ந்து போன நிலையினாலும், ஸ்தாபனத்தினாலும், அலட்சியத்தினாலும், வாசலுக்கு வெளியே நின்று கொண்டு தட்டிக்கொண்டு, உள்ளே வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். சற்று நேரத்திற்கு முன்பாக நான் அதைப்பற்றி எண்ணிப் பார்க்கையில், நான் எனது மேஜையின் மேல் சாய்ந்து கதற ஆரம்பித்தேன். நான் நினைத்தேன்…
102229 இயேசு அந்தப் பண்டைய பரிசேயனுடைய வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்ததைப் பற்றி அடிக்கடி நான் எண்ணிப் பார்த்ததுண்டு. அங்கே அவரை யாரும் கவனிக்கவேயில்லை. ஆனால் அவரது பாதங்கள் அழுக்காயிருந்தது. அவர்கள் அவரை வாசலண்டை வந்து சந்திக்காமலும், அவர் நடந்து வந்ததினால் அவரது பாதங்கள் சாணத்தினால் அழுக்கடைந்து போயிருந்ததை நீக்கும்படி அவரை கழுவி சுத்திகரிக்காமலும், அவரை எண்ணெயால் அபிஷேகிக்காமலும் இருந்தார்கள். அவர் தெருவில் நடந்து வந்ததினால், தெருவில் குதிரைகள் மற்றும் இன்ன பிறவும் சென்றதினால் உண்டான அழுக்குகள் அவரது ஆடையில் படிந்திருந்தன. அவர்மேல் நாற்றமாக இருந்தது. 230 அவர்கள் எப்பொழுதுமே பாதத்தை கழுவது, அது வழக்கமாயிருந்தது. எப்பொழுதும் வாசலண்டையில் பாதம் கழுவி விடும் ஒரு பணியாள் ஆயத்தமாக இருப்பான். வீட்டிற்கு ஒரு மனிதன் வரும்பொழுது அப்பணியாட்கள் அவனது பாதங்களை கழுவி விடுவார்கள். பிறகு பொறுத்தமானதொரு ஜோடி காலணியை அவனுக்கு அணிவித்துவிடுவார்கள். அதன் பிறகு அவன் சிரசில் தைலத்தால் அபிஷேகித்து, அவன் மேல் நல்ல வாசனை இருக்கும்படி செய்வார்கள். சூரிய வெளிச்சத்தில் அவன் நடந்து வந்ததால் அவனது கழுத்து சூரியக்கதிர்களால் சுட்டெரிக்கப்பட்டிருக்கும், அவனது தலை முடியை நன்கு வாரி விடுவார்கள். அதன் பிறகு அவன் வீட்டினுள்ளே செல்வான்.
103231 வரும் விருந்தாளிக்கு இந்த விதமாக வரவேற்புக் கிடைக்கும். இப்பொழுது இங்கே அவர்கள்… பேட் அவர்களே, இங்கே ஒரு நிமிடம் நில்லுங்கள். நான் உங்களுக்கு ஒன்றை காண்பிக்க விரும்புகிறேன். அவர்கள் இவ்வாறு தான் ஒரு விருந்தாளியை வரவேற்பார்கள். இப்பொழுது, நான் நம்புகிறேன்…இல்லை, இது இவ்விதமாக இங்கே இருக்கும் என்று நான் நம்புகிறேன், வரவேற்பு இவ்விதமாக இருக்கும், பாருங்கள், ஒருவரையொருவர் கட்டித்தழுவுவர். அவ்வாறு அவன் வரவேற்கப்படுவான். 232 ஆனால் பெந்தெகொஸ்தே விருந்துக்கு வருகிறது போல, இயேசு இந்த பரிசேயனுடைய வீட்டு விருந்துக்கு வந்தபொழுது, அவரை எல்லோருமே கவனிக்கத் தவறிவிட்டார்கள். அவர்கள் தங்களுடைய விஷயங்களிலும், பேராயர்களை வரவேற்பதிலும் மற்றும் இன்ன பிற காரியங்களிலும் கவனமாக இருந்தபடியினால், இயேசு அவ்விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தபோதிலும், ஒருவரும் அவரது பாதங்களை கழுவவில்லை. அவர் அங்கே ஒரு மூலையில் அவர் மேனியில் தூசி படிந்து, பாதங்கள் அசுத்தத்தினால் நாற்றமடித்துக் கொண்டு, உட்கார்ந்து கொண்டிருந்தார். ஆனால் எவருமே அவர் அங்கே இருப்பதை அறியவேயில்லை.
104233 அப்பொழுது அங்கே ஒரு ஏழ்மையான வேசி அத்தெரு வழியாக வந்தாள். அவளிடம் ஒரு பையில் சிறிது அளவே பணம் இருந்தது. அவள் எட்டிப் பார்த்தபொழுது, அங்கே இயேசு அழுக்கடைந்த பாதங்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அது அவளது இருதயத்தை உடைத்தது. அப்பொழுது அவளோ, “அந்த மனிதர் தான் அந்தப் பெண்ணின் பாவங்களை மன்னித்தவர். அம்மனிதர் தான் சுகமளித்தலை அளித்தவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் அவரைக் கவனிக்கவேயில்லை?” என்று கூறினாள் 234 ஏனெனில், அங்கே பேராயர்கள், மற்றும் அவர்கள் குழுவும் இருந்தபடியினால் அவரை புறக்கணித்து விட்டார்கள். அங்கே அவர்…அவரை வரும்படி அவர்கள் அழைப்புவிடுத்திருந்தனர். 235 அந்த விதமாகத்தான் நாமும் செய்கிறோம். நமது கூட்டங்களுக்கு அவர் வரும்படி நாம் அழைக்கிறோம். ஆனால் நாமோ அவர் வருகையில், அவரைப் பற்றி வெட்கமடைகிறோம். “ஓ, நான் ‘கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ என்று அங்கு நின்று கூற மாட்டேன். ஓ, இல்லை, அங்கே ஜோன்ஸ் அமர்ந்திருக்கிறார், அவர்கள் என்னை ஒரு உருளும் பரிசுத்தன் என்று அழைப்பார்களே” என்கிறார்கள். நீ மாய்மாலக்காரன்! அது உண்மை. “நான் எங்கே அந்நிய பாஷையில் பேசிவிடுவேனோ என்றும், என்னை ‘அந்நிய பாஷை பேசும் மனிதன்’” என்று கூறுவார்கள் என்று அஞ்சுகிறேன் என்று கூறுகின்றனர். நீர் ஒரு பரிதபிக்கத்தக்க, நிர்பாக்கியமுள்ளவன்! 236 இப்பொழுது இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பாருங்கள். நீங்கள் பரிதபிக்கப்படத்தக்கவரும், நிர்பாக்கியமுள்ளவரும், தரித்திரராயும், நிர்வாணியாயும், குருடாயும் இருந்து கொண்டு, அதை அறியாமலிக்கிறீர்கள்.
105237 கால்கள் கழுவப்படாதவராய் இயேசு அங்கே போவதை என்னால் காண முடிகிறது. ஒரு நிமிடநேரம் நாம் யாவரும் அவளைப் பற்றி பேசுவோமாக. அவள் கடைக்குப் போகிறதை என்னால் பார்க்க முடிகிறது. அங்கு அவள் போய்…அவளது கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடுகிறது. “என்னால்—என்னால் அதைச் செய்ய முடியாது. இந்த பொருளை எடுத்துச் சென்றால் இப்பணத்தை நான் எங்கேயிருந்து பெற்றேன் என்பதை அவர் அறிவார். நான் இதை எப்படி பெற்றேன் என்பதை அவர் அறிவார், ஆனால் என்னிடத்தில் இருப்பதெல்லாம் அது தான்” என்று கூறினாள். 238 அதைத் தான் அவரும் விரும்புகிறார். அதைத்தான் அவரும் விரும்புகிறார். புரிகிறதா? அவர் கவலைப்படுவதில்லை. நீங்கள், “வெறுங்கையாக நான் உம்மிடம் வருகிறேன்” என்று கூறிக்கொண்டு வாருங்கள்.
106239 அவள் அங்கே பரிமள தைலத்தை விலைக்கு வாங்கி வைத்திருந்தாள். அதை அவள் எடுத்துக் கொண்டு வந்தாள். அவள் எழுந்து, “ஓ, நான் அவரைக் காண முடியுமா?” என்று அவள் எண்ணிக் கொண்டே வந்தாள். பின்பு, அவள் அங்கே உள்ளே மெதுவாக நுழைந்து கதவண்டை வந்து விடுகிறாள். 240 இல்லை, அங்கே அவர்கள் அவருக்கு உரிய வரவேற்பு கொடுக்கவில்லை. எனவே அவள் பரிமள தைலம் உள்ள பெட்டியை எடுத்து அதை திறந்து அதை அவரது பாதத்தில் பூசுகிறாள். பின்பு அவரது பாதங்களை கழுவ ஆரம்பிக்கிறாள். அவளோ, “ஓ, இது அவராகத்தான் இருக்க வேண்டும், வேதாகமத்தில் நான் எப்பொழுதும் படித்திருப்பது இவரைப் பற்றித்தான். அவர் என்னை அடையாளங் கண்டு கொள்வார் என்பதை நான் அறிவேன்” என்று கதறி அழுது கொண்டேயிருந்தாள். அதில் முதலாவதான காரியம் என்னவெனில்…அவரது பாதங்களில் விழுந்த மனந்திரும்புதலின் கண்ணீரினால் அவள் அவரது பாதங்களை நனைத்தாள். அது எவ்வளவு அழகான தண்ணீராக உள்ளது! அவரது பாதங்களை தன் கண்ணீரால் அவள் நனைத்து அதைக் கழுவினபோது, அதைத் துடைக்க அவளிடம் துணி ஏதும் இருக்கவில்லை. எனவே அவள் தலை முடியை எடுத்து அதைக் கொண்டு துடைத்தாள். சுருள் சுருளான அவளது முடியை அவள் கலைத்துவிட்டிருந்தாள். அவளது கண்ணீர் இந்தவிதமாக அவளுடைய முகத்தில் வழிந்தோடியது. அதைக் கொண்டு அவரது பாதங்களை அவள் கழுவினாள். அவ்வப்பொழுது அவள் அவரது பாதங்களை முத்தமிடுகிறாள் [சகோதரர் பிரான்ஹாம் முத்தமிடும் ஓசையை உண்டாக்குகிறார்.—ஆசி.] அந்தவிதமாக அவருடைய பாதங்களைக் கழுவினாள்.
107241 அழுக்கடைந்த பாதங்களோடு இயேசு அங்கே இருக்கும்பொழுது, ஒருவரும் அதைப் பற்றிக் கவனிக்கவேயில்லை. இன்றைக்கு உருளும் பரிசுத்த மற்றும் அதைப் போன்ற இன்ன பிற அவனமானகரமான நாமங்களை அவர் பெற்றுள்ளார். அவருக்காக நிற்பதற்கான தைரியம் மனிதனுக்கு இருக்கவில்லை. மரணம் என்னை விடுவிக்கும் வரையிலும், அர்ப்பணிக்கப்பட்ட இச்சிலுவையை நான் சுமப்பேன், நிந்திக்கப்பட்ட சிலருடைய வழியையே நான் தெரிந்துகொள்வேன், நான் இதற்குள்ளே துவங்கிவிட்டேன். இயேசுவே, ஓ கர்த்தாவே நீர் என்னை அழைத்துச் செல்லும். (கர்த்தாவே என்னை அழைத்துச் செல்லும், அதற்கு கிரயம் என்னவானலும் கவலைப்படமாட்டேன்.) 242 யாக்கோபைப் போல், எனக்கு ஒரு கல் என் தலையணையானாலும் அது என்ன வித்தியாசத்தை உண்டாக்குகிறது. அவர் எனக்காக மேலானதை செய்துவிட்டாரே! 243 அங்கே இந்த எளிய விபச்சாரி கதறி அழுது கொண்டு இருக்கிறாள். அவரை விருந்துக்கு அழைத்தவனாகிய சீமோன் என்பவன் அவள் இவ்வாறு செய்து கொண்டு இருக்கையில், “ஹூம், ஹூம், ஹூம், ஹூம்!” என்று உறுமிக் கொண்டே, “அவர் தீர்க்கதரிசியா இல்லையா என்பது, அவள் எப்படிப்பட்ட பெண்மணி என்பதை அவர் அறிந்து கொண்டால் அதிலிருந்து தெரியவந்து விடும்” என்று கூறிக் கொண்டேயிருந்தான். அந்த மாய்மாலக்காரன்!
108244 எனவே, அவள் உள்ளே வந்து விட்டபிறகு…இயேசு தனது பாதங்களை நகற்றவேயில்லை. அவர் அப்படியே உட்கார்ந்து கொண்டு அவளை நோக்கிப் பார்த்து, அவள் செய்வதை கவனித்துக் கொண்டேயிருந்தார். ஓ, நான் அதை விரும்புகிறேன். நாம் செய்கிற பெரிய காரியங்கள் அல்ல, நாம் சில சமயங்களில் செய்யாமல் விட்டுவிடுகிற சிறிய காரியங்களில்தான் காரியமே உள்ளது. அவர் அவளைக் கவனித்தார், அப்படியே அங்கே அமர்ந்து அவளை கவனித்தார். அவரைப் பற்றி யாருமே கண்டு கொள்ளவில்லை. இறுதியாக அவள் அங்கே அழுது கதறிக் கொண்டு, அவரது பாதங்களை கழுவி துடைத்துக் கொண்டிருக்கிறபொழுது, அது தான் அங்கிருந்த மக்களது கவனத்தை ஈர்த்தது. அவர் அவளை கவனித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. 245 சீமோன் அங்கே நின்று கொண்டு, “ஊம்! அவர் தீர்க்கதரிசியா இல்லையா என்பதை நீங்கள் பாருங்கள். நீங்கள் பார்க்கமாட்டீர்களா? ஏற்கனவே உங்களுக்கு சொன்னேன்! உங்களுக்கு சொன்னேன்! அவர் தீர்க்கதரிசியாயிருந்தால், அவள் எப்படிப்பட்ட பெண் என்பதை அவர் அறிந்திருப்பாரே. நீங்கள் பாருங்கள், நாம் இங்கே மகத்தான சபையினராக அமர்ந்திருக்கிறோம். நீங்கள் பாருங்கள், நாம் நன்றாகவே அறிந்து கொண்டுவிட்டோம். அவர் தீர்க்கதரிசி அல்ல என்பதை நாம் அறிந்து கொண்டுவிட்டோம். அப்படியிருந்தால் அவள் யார் என்பதை அவர் அறிந்திருப்பாரே” என்று கூறினான்.
109246 அவள் அங்கே உள்ளே வந்து விட்ட பிறகு கன்னத்தில் வழிந்தோடும் அவளது மனந்திரும்புதலின் கண்ணீரினால் இயேசுவின் பாதங்களை கழுவித்துடைத்தாள். அவள்…இதனால் அவர் சிறிது புத்துணர்ச்சியை அடைந்ததை உணர்ந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். 247 ஓ தேவனே, நான் அங்கு இருந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் அப்பாதங்களை மீண்டும் ஒரு முறை கழுவியிருப்பேன். ஆம். ஐயா. 248 மகனே, இன்றைக்கு பாதங்களை தனது தலை முடியினால் துடைப்பது என்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் கடினமான நேரமாக இருக்குமல்லவா? பாதங்களைத் துடைப்பதற்கென இன்றைய பெண்களுக்கு போதுமான முடியில்லாததால். அதற்காக அவள் தலைகீழாக நின்றால் தான் அதைச் செய்ய முடியும். ஆம் ஐயா, அவர்கள் தலை முடியை வெட்டிக் கொள்கிறார்கள்.
110249 ஆனால் அங்கே இயேசுவின் பாதங்களை ஒருவரும் கவனிக்காத நிலையில், அழுக்கடைந்து, நாற்றமடித்துக்கொண்டு, கனவீனப்படுத்தப்பட்டவராய் (குறை சொல்லப்பட்டவராய்) உட்கார்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவளோ அதை கழுவி விட்டாள். அவர் தம் பாதங்கள் கழுவித் துடைக்கப் பெற்ற பிறகு, அவளை “சரி” என்று சொல்லுவது போல் நோக்கிப் பார்த்தார். 250 அவர் சீமோனைப் பார்த்து, “சீமோனே, நான் உனக்கு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் உண்டு, நீ என்னை இங்கே வரும்படி அழைத்தாய், ஆனால் நீ என்னை வாசலில் வந்து சந்திக்கவில்லை. என் பாதங்களை கழுவ நீ எனக்கு தண்ணீர் தரவில்லை. சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் நடந்து வந்த எனக்கு, நீ என் தலையை எண்ணெயால் அபிஷேகிக்கவில்லை. நான் உள்ளே வந்தபோது, நீ எனக்கு வரவேற்புக்கடையாளமான முத்தமும் கொடுக்கவில்லை. ஆனால் இந்த எளிய பெண்மணி” (ஓ, என்னே.) “இந்த புறம்பாக்கப்பட்டவளோ, தெருவில் உள்ள ஒரு வேசி. இவளுக்கு என் பாதங்களை கழுவ தண்ணீர் இல்லை. ஆனால் அவள் தன் கண்ணீரினால் என் பாதங்களைக் கழுவினாள். துடைப்பதற்கு அவளிடம் ஒன்றுமில்லை, எனவே அவள் தன் தலைமுடியை எடுத்து பாதங்களைத் துடைத்தாள். என் பாதங்களை விடாமல் முத்தமிட்டாள். இப்பொழுது நான் உனக்கு கூறுவதென்னவெனில், அவளுடைய அநேக பாவங்கள் அவளுக்கு மன்னிக்கப்பட்டன” என்று கூறினார். அது உண்மை, அவர் ஒருபோதும் அவனுடையதைக் குறித்துக் கூறவில்லை. ஆயினும் அவர், அவளிடத்தில், “நீ செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்றார்.
111251 அதே போல் இன்றைக்கும், இயேசுவானவர் ஒரு பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தின் வாசலிலும், பாப்டிஸ்ட் ஸ்தாபனத்தின் வாசலிலும், மெதோடிஸ்ட் ஸ்தாபனத்தின் வாசலிலும் வெளியே நின்று கொண்டு, மீண்டும் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தோடு உள்ளே நுழைவதற்காக தட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஜனங்களோ அவரைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். உங்களுடைய உலகப்பற்றும் மற்றும் இன்ன பிற காரியங்களும் அவரை சபையை விட்டு வெளியே தள்ளிவிட்ட பிறகு, அவர் வெளியே நின்றிருந்து, மீண்டும் உள்ளே நுழைவதற்காக முயற்சித்துக் கொண்டு கதறி சப்தமிட்டுக் கொண்டிருக்கிறார். ஓ, இதுவோ என்னுடைய வாழ்க்கையிலேயே நான் கண்டவற்றில் மிகவும் பரிதாபமான காரியமாக இருக்கிறது. அவர்களுக்கு அவர் தேவையில்லை என்றாகிவிட்டது. அவர் வெளியே வாசலருகே நின்று கதவைத் தட்டி மீண்டும் உள்ளே நுழைய முயன்று கொண்டிருக்கிறார். அவர் அதே காரியத்தைத் தான் செய்ய முயன்று கொண்டிருக்கிறார். ஏன்? ஏன்? அவர் வெளியே நிற்கிறார்.
112252 அவர்கள் அவரை வெளியே தூக்கி எறியவில்லை. அவர்கள் இன்னமும் அவரைக் குறித்து துதிப்பாடல்கள் பாடுகின்றனர். அவரைக் குறித்தே பிரசங்கிக்கின்றனர். ஆனால் அவர் தங்கள் சமூகத்தில் இல்லாததை உணரவில்லை. அதுதான் உண்மை. அவர்கள் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ஏன்? அவர்கள் கிட்டப்பார்வையுள்ளவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பெரிய கட்டிடங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஐசுவரியவான்களாயிருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் சார்ந்திருக்கிற பெரிய ஸ்தாபனங்களைக் குறித்து பெருமிதத்துடன் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதை கட்டியெழுப்பி, அதில் மேலும் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்து உள்ளே கொண்டு வர அவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர் இல்லாததை அவர்கள் உணரவில்லை. இல்லை, இல்லை. அந்நிய பாஷைகளில் பேசுதல் அவர்கள் மத்தியில் இல்லாதிருப்பதை அவர்கள் உணரவில்லை. இருதயத்தை உருவக்குத்தி, இருதயத்தை விருத்தசேதனம் செய்து, உலகத்தின் காரியங்களை உங்களைவிட்டு வேரற்றுப்போகச் செய்து, உங்களை பதரைவிட்டு பிரித்தெடுக்கப்பட்ட கோதுமை மணியாக்குகிற மகத்தான வல்லமையான தேவனுடைய செய்திகள் இல்லாதிருப்பதை அவர்கள் உணரவேயில்லை. ஓ, அவர்கள்…
113253 அவ்வாறு நீங்கள் அவர்களது சபையில் பிரசங்கித்தால் அவர்கள் உங்களை வெளியே தள்ளிவிடுவார்கள். அவ்விதமாகத்தான் பரிசுத்த ஆவியானவர் பிரசங்கித்தார். இயேசு அவர்களை நோக்கி, “விரியன் பாம்புக்குட்டிகளே, நீங்கள் புல்லில் உள்ள பாம்புகள்” என்றார். அந்த மகத்தான அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதனாகிய யோவானும் அவ்வாறு செய்து அவர்களது சுய ரூபத்தை வெளிப்படுத்தினான். அது உண்மையே. 254 ஆனால் அவர்கள் அவர் இல்லாததை உணரவில்லை. ஏனெனில் அவர்கள் அந்த உணர்ச்சியை உடையவர்களாயிருக்கவில்லை. பாருங்கள்? அவர்களுக்கு முதுகில் தட்டிக் கொடுக்கும் மலரைப் போல் மென்மையான அலங்காரமான காரியம் உண்டாயிருக்கிறது. அவர்களோ, “நீங்கள் அவர்களோடு சேர்ந்து கொண்டு, உங்கள் பெயரை இங்கே பதித்து கொண்டு விட்டால், நாங்கள் உங்களை உறுப்பினராக்கிவிடுவோம். மற்ற சபைக்குப் போய் உங்களுடைய சான்று சம்மந்தமான தாள்களை வாங்கி வந்து விடுங்கள், அப்பொழுது நாங்கள் உங்களை ஏற்றுக் கொள்வோம். ஒவ்வொரு வருடமும் எவ்வளவு கொடுப்பது என்பதற்கான உங்களுடைய வாக்குறுதி என்ன?” என்றெல்லாம் கேட்கிறார்கள். நீங்கள் பாருங்கள் அதுதான், “ஐஸ்வரியவானும், ஒரு குறைவுமில்லை” என்ற நிலையாயுள்ளது. ஓ! ஆனால் உங்களுக்கு அதைவிட ஒரு மகத்தான காரியம் தேவைப்படுகிறது. ஆனால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இயேசு பெந்தகொஸ்தே ஆசீர்வாதத்தோடு மீண்டும் நுழைவதற்காக, வெளியே நின்றுகொண்டு முயன்று கொண்டிருக்கிறார்.
114255 மெதோடிஸ்ட் சபையின் நடுவில் பரிசுத்த ஆவி விழுந்தால், அதினால் அவர்கள் சப்தமிட்டு, குதிக்க ஆரம்பித்து, அந்நிய பாஷைகளில் பேசி குடித்த மக்களைப் போல் நடந்து கொண்டால், என்ன நடக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? ஏன்? அந்த மெதோடிஸ்ட் சபையை கான்ஃப்ரென்ஸ் என்ற கலந்தாலோசனை சங்கம் மெத்தோடிஸ்டு சபையின் கான்ஃபரென்ஸை தூக்கியெறிந்துவிடும். நீங்கள் அதை அறிவீர்கள். பாப்டிஸ்ட் சபையிலும் அதேபோல் உள்ள காரியம் நடந்திட்டால் என்ன நடக்கும்? அதே தான் இங்கும் நடக்கும். பெந்தெகொஸ்தேயினரே? ஏன்? அதே காரியம் சம்பவித்ததைப் பற்றி அறிந்த அநேகர் உள்ளனர். நிச்சயமாக, ஆம், ஐயா, அவர்கள் அந்த அர்த்தமற்றதோடு இணைத்துக் கொள்ளமாட்டார்கள். அவர்கள், “ஏன்? எங்களுடைய புது தரை விரிப்பைக் கூட நாசம் செய்துவிட்டார்கள்” என்று கூறுவர். ஊ—ஊ, நிச்சயம் அப்படித்தான். என்னே! என்னே! இவர்கள் ஒரு பரிதாபமான கூட்டம் மக்களாய் உள்ளனர். அது உண்மையே.
115256 சரி, அவர் அவர்களோடு ஒரு காலத்தில் இருந்தார். அவர்களோடு ஏழு குத்துவிளக்குகளின் மத்தியில் அவர் உலாவினார். இங்கே தான் பதில் உள்ளது: ஸ்தாபனங்களும், அவைகளுடைய உலகப் பற்றுகொண்ட காரியங்களும் அவர்களுடைய பேராயர்களும், போப்பிற்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ளவர்களும், மற்றும் அவர்களுடைய எல்லா உலகப் பற்றுகொண்ட காரியங்களும் அவரை வெளியேத் தள்ளிவிட்டன, அவர் அங்கு இல்லாததை அவர்கள் ஒரு போதும் உணரவேயில்லை. மேலும் சபையானது… 257 இப்பொழுது, அவரை திரும்பி அழைத்துக் கொள்வதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? இப்பொழுது அவர் பெந்தெகோஸ்தே சபையை விட்டும் வெளியே இருப்பாரானால் அவரை மீண்டும் உள்ளே கொண்டு வருவதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம். அவரை மீண்டும் உள்ளே கொண்டு வருவதற்காக, மக்களின் ஏகோபித்த கருத்துக் கணிப்பைப் பெறலாமா? புதிய போப், போப்பிற்கு அடுத்த பதவியிலிருப்பவரை புதியதாக தேர்ந்தெடுத்துவிட்டால், அவர் உள்ளே வந்து விடுவாரா? அல்லது, புதியதொரு ஸ்தாபனமொன்று எழுப்பப்படுமென்றால் அது சரி செய்துவிடுமோ? அது ஒரு போதும் அதை சரி செய்யாது. அது—அது அக்காரியத்தை ஒருபோதும் சரிப்படுத்தமாட்டாது. ஒரு புதிய ஸ்தாபனம் அதைச் செய்யாது, ஒரு புதிய…போப்பிற்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள ஒரு—ஒரு—ஒரு—ஒரு—ஒரு புதிய பேராயரால் அதைச் சாதிக்க முடியாது. ஒரு புதிய மேய்ப்பராலும் அதைச் செய்ய முடியாது. நிறைய சம்பளம் கொடுக்கப்பட்ட ஒரு புதிய சுவிசேஷகனால் அதைச் சாதிக்க முடியாது. நீங்களாகவே அதைச் செய்யாவிட்டால், உலகில் வேறு எதுவும் அதைச் செய்ய முடியாது. எவ்வாறு அவரை உள்ளே கொண்டு வருகிறோம்? ஒரு வாக்கெடுப்பினால் அல்ல. இல்லை ஐயா. இயேசுவை வாக்கெடுப்பின் மூலம் நாம் மீண்டும் உள்ளே கொண்டு வருவதில்லை. ஏனெனில் இயேசு அவ்விதமாக வரமாட்டார். 258 இதோ இங்கே—இதோ இங்கே அது இருக்கிறது, “ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால்” இப்பொழுது, அப்படியானால் கதவு என்பது என்ன என்பதை நாம் அறிவோம். “ஒருவன் கதவைத் திறந்து என் சத்தத்தைக் கேட்டால்.” 259 “ஒரு சபையோ அல்லது ஒரு ஸ்தாபனமோ என் சத்தத்தைக் கேட்டால்” என்பதாக அல்ல—அப்படியில்லை. இல்லை ஐயா, அவர் அவர்களோடு இடைபடுகிறதில்லை. அவர்கள் மரித்துப் போய்விட்டார்கள், துவக்கித்திலேயே மரித்துவிட்டனர். அதை அவர் வெறுக்கிறார். அவர் அதை எப்பொழுதும் வெறுத்தேயிருக்கிறார். தான் அதை வெறுத்ததாக அவர் கூறினார். இன்றிரவிலும் அதை அவர் இன்னமும் வெறுக்கிறார்!
116260 “ஆனால் எவனாவது” எந்தவொரு மெதோடிஸ்ட் மனிதனோ, எந்தவொரு பாப்டிஸ்ட் மனிதனோ, எந்தவொரு ப்ரெஸ்பிடேரியன் மனிதனாவது அல்லது எந்தவொரு கத்தோலிக்க மனிதனாவது, எந்தவொரு சர்ச் காட் மனிதனாவது, நசரேய சபை மனிதனாவது, பெந்தெகொஸ்தே மனிதனாவது என்பது, “ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடே போஜனம் பண்ணுவேன். அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.” அதுவே பெந்தெகொஸ்தே சபைக்கு உள்ள செய்தியாகும். பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தை எழுப்புதலுக்குட்படுத்த அவர் முயலவில்லை. ஆனால் பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதத்தை தனி மனிதரின் இருதயத்தில் மீண்டும் எழுப்புதலோடு உண்டாக்கவே அவர் முயலுகிறார். அது ஒன்றே வழியாக இருக்கிறது. “நான் அவனோடே போஜனம்பண்ணுவேன். அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.”
117261 அப்படியாயின், இந்தச் சபைக் காலத்திற்குரிய தூதன்…செய்தி நமக்கு என்ன பாடத்தை போதிக்கிறது? ஆவியின் வளர்ச்சி உண்டானது என்றல்ல. இல்லை ஐயா, ஆவியின் நிறைவின் சரிவு. எல்லா நேரத்திலும் சரிவே நமக்கு ஏற்பட்டுள்ளது. முறைமை…சபைக்குரிய செய்தியாளர்களும், ஒவ்வொரு சபைக்காலத்திற்குரிய செய்தியும், ஸ்தாபனமயமாக்கும் போதகத்தை கண்டனம் செய்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு சபைக்காலத்திற்குரிய செய்தியும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. ஆனால் சபையானது தொடர்ச்சியாக சரிவு நிலையிலேயே இருந்து வந்துள்ளது. எனவே வார்த்தைக்கு அவர்கள் செவி கொடுக்கவேயில்லை. சபைக்குரிய செய்தியானது ஸ்தாபனத்தை மதித்ததாக இருக்கவில்லை. ஸ்தாபனமானது கலப்பின கிறிஸ்தவர்களைப் பிறப்பிக்க, பெயரளவில் உள்ளவர்களாக மாத்திரம் அவர்கள் இருந்தார்கள், அது உண்மையே, அவர்களுக்குத் தேவனைக்குறித்தோ, பரிசுத்த ஆவியைக் குறித்தோ தெரியாது. இன்றிரவில் இந்த மேடையில் நான் நின்றியிருப்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவு அவ்விஷயமும் உண்மையாயிருக்கிறது. மிகவும் அருமையான வெதுவெதுப்பான உறுப்பினர்கள். அவர்கள் அவருடைய வாயினின்று வாந்திப்பண்ணிப் போடப்படுவதற்காக மாத்திரமே உள்ளனர்.
118262 புற ஜாதியார் ஒரு கிளையாயிருந்தனர். அவர்களை பவுல் எச்சரிக்கிறான். உங்களில் சிலர், நீங்கள் விரும்பினால் ரோமர் 11-ம் அதிகாரம் 15-ம் வசனம் முதல் 27-ம் வசனம் முடிய எடுத்துக் கொண்டு யாவரும் குறித்துக் கொள்ளுங்கள். காலதாமதாகிக் கொண்டிருக்கிறபடியால், நான் முடிக்கும் முன்னர் அவ்வசனங்களை உங்களுக்கு நான் மேற்கோள்காட்ட விரும்புகிறேன், ஏனென்றால் அது ஒரு… இப்பொழுது ரோமர் 11:15-ல் இருந்து 27-ம் வசனம் முடிய குறித்துக்கொள்ளுங்கள். பவுல் அவர்களுக்குக் கூறினான், அங்கே புறஜாதிகளிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறான், ரோமர்களிடத்தில் அவன் கூறினான், “தேவன்…” நாம் இப்பொழுது சபைக்காலங்களைக் குறித்த செய்தியை முடித்துக் கொண்டிருக்கிற வேளையில் கவனமாகக் கேளுங்கள். பவுல், “அசலான ஒலிவக்கிளையை தேவன் அவிசுவாசத்தினிமித்தம் தப்பவிடாதிருந்தாரானால்” என்று கூறினான். 263 அது சரிதானே? யூதர்கள் வெட்டப்பட்டதின் காரணம் என்ன? ஏனெனில் அவர்கள் பெந்தெகொஸ்தேயை புறக்கணித்தார்கள் அது சரிதானே? பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் பரிசுத்தாவியைக் குறித்து கேலி செய்து அதைத் தூஷித்தார்கள். 264 இயேசு இங்கே இப்பூமியில் இருந்தபோது, அவர் கூறினார்…அவர்கள்—அவர்கள் அவரை “பெயல்செபூல்” என்றழைத்தனர். “அவன் ஒரு பிசாசு” என்றனர். “குறி சொல்லுகிறவன்” என்றழைத்தனர். இன்னும் என்னவெல்லாமோ சொல்லி அழைத்தனர். 265 அவர், “நான் அதற்காக உங்களை மன்னிப்பேன். ஆனால் பரிசுத்த ஆவியானது வரும்பொழுது, அதற்கெதிராகப் பேசாதிருங்கள். காரணம் நீங்கள் அதற்கு எதிராக பேசினால், அது உங்களுக்கு ஒருபோதும் மன்னிக்கப்படமாட்டாது” என்றார்.
119266 “புறஜாதியாரிடத்தில் போக வேண்டாம்” என்றும், “காணாமற்போன இஸ்ரவேலரிடத்திற்கே போங்கள்” என்றும் இயேசு தம் சீஷர்களுக்கு கட்டளையிட்டதை நினைவு கூருங்கள். அப்படித்தானே அவர் கூறினார். 267 அவர்கள் தங்களைத் தாங்களே எவ்வாறு ஆக்கினைக்குள்ளாக்கிக் கொண்டார்கள்? பரிசுத்த ஆவியை தூஷித்ததினாலும், தேவனுடைய ஆவியை “அசுத்தமான ஒன்று” என்று அழைத்ததினாலும் தான். பெந்தெகொஸ்தே நாளில், அவர்கள் ஆவியில் நடனமாடிய போது, ஆவியானவரை அவர்கள் கேலி பரிகாசம் செய்தார்கள். அதைக்குறித்து அந்நகரத்தார் பரிகசித்தார்கள். அதே நகரத்தாரை தீத்து அங்கே கொலை செய்தான். அவர்களது இரத்தம் வாசல் வழியாக பாய்ந்தோடியது. அதே நூற்றாண்டில், அவர்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகளையே கொன்று தின்றார்கள். அது உண்மையே. உலகிலுள்ள மகத்தான தேசங்களிலொன்று மிகவும் கீழ்த்தரமானதாக ஆக்கப்பட்டது. அவர்கள் பூமியின் நான்கு திசைகளிலும் சிதறடிக்கப்பட்டனர், ஏன் அவ்வாறு நடந்தது? அவிசுவாசத்தினிமித்தமே! இஸ்ரவேலாராகிய அவர்களே அசலான அடிமரம், அவர்கள் தான் அசலான மரமாவார்கள்.
120268 பவுல் அங்கே இவ்வாறு கூறவில்லையா? அங்கே அவ்வசனத்தை யார் எடுத்திருக்கிறீர்கள்? பேட் அதை எடுத்துக் கொண்டீர்களா? எழுந்து நின்று, 15-ம் வசனம் முதல் 27-ம் வசனம் முடிய வாசியுங்கள். [சகோதரன் பேட் அவர்கள் பின்வரும் வேத வாக்கியங்களை படிக்கிறார்; அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கீகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போலிருக்கமல்லவோ? —ஆசி.] [ மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால் கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும். ] [ சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், ] [ நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமை பாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல் வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக் கொள் .] [ நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டதென்று சொல்லுகிறாயே. ] [ நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப் போடப்பட்டன,— ஆசி.]
121கவனியுங்கள், “அவிசுவாசம்!” சரி, தொடர்ந்து படியுங்கள், [ …நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு .—ஆசி.] [ சுபவாக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு .] [ ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்த தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்கு தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய். ] [ அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்ட வைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே ,] [ சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவ மரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? ] உம்ம். [ மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும் .] [ இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு விலக்குவார் என்றும்; ] [ நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது .]
122269 நீங்கள் அதை அறிந்து கொண்டீர்களா? பவுல், “இஸ்ரவேலர் இங்கு வந்து, பரிசுத்த ஆவியினால் நடைபெற்ற அடையாளங்களைப் பார்த்த பிறகு வெட்டப்பட்டால்…” என்று கூறினான். ஏனென்றால் அவர்கள் பவுலுடைய செய்தியை நிராகரித்தபடியினால், (இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுதல், மனந்திரும்புதல், இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுதல், விசுவாசிக்கிறவர்களைத் தொடரும் அடையாளங்கள், அற்புதங்கள் போன்றவை) அவ்வாறு ஆகியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் அதைப் புறக்கணித்தார்கள். அவர்கள் கூறினர்; …இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். 270 அது சரிதானே? அவர்கள் முதலில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டது எபேசுவிலே அல்ல, அந்தியோகியாவிலே இவ்வாறு நடந்தது என்று நான் நினைக்கிறேன். அதைப் பார்ப்போம். சரி.
123271 இப்பொழுது—இப்பொழுது, முதல் மரமானது பரிசுத்தமாயிருந்தால், அதன் கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும், அது அசலான ஒலிவ மரமாகும். பவுல் பிரசங்கித்த பெந்தெகோஸ்தேயின் செய்தியை அவர்கள் அவிசுவாசித்தபடியினாலே, (அப்படித்தானே?) தேவன் அவர்களை வெட்டி எறிந்து விட்டு, (புறஜாதியரராகிய நம்மை) காட்டொலிவக் கிளைகளாகிய நம்மை வெட்டி, அசலான ஒலிவ மரத்தில் ஒட்ட வைத்தபடியால், நாம் ஜீவிக்கும்படியாக அதின் வேரிலுள்ள சாரத்திலும் பங்கெடுத்துக்கொண்டோம். 272 இப்பொழுது, சபைக்காலங்களினூடே கடந்து வந்துள்ள இந்தப் பெந்தெகொஸ்தேயின் செய்தியை இந்நாளில் நாம் நிராகரித்தால், அது எவ்வளவு அதிகமாயிருக்கும்? அன்றைக்கு செய்ததை போல், ஒட்டவைக்கப்பட்ட இந்த காட்டொலிவக் கிளைகளை எவ்வளவு அதிகமாய் அவர் வெட்டிவிட்டு, அந்த மற்ற அசலான ஒலிவ கிளையை மீண்டும் ஒட்ட வைக்கிறதற்கு வல்லவராயிருக்கிறாரல்லவா? அவிசுவாசத்தினால் அவன் அதை புறக்கணித்தான். இன்று காலையிலுள்ள பாடத்தோடு இதை சரியாகப் பொருத்திப் பாருங்கள், இப்பொழுது நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா? நாம் தாமே புறஜாதி சபையானது எடுத்துக் கொள்ளப்படுவதற்காக உள்ள கடைசி காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் யூதர்கள் மேல் வந்து இறங்குவதும், இயேசு தம்மை தெரியப்படுத்தப்போவதும், இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் முத்திரையிடப்படுதலும் நிகழப்போகிற கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அங்குதான் காரியம். இஸ்ரவேலராகிய அசலான ஒலிவக்கிளைக்கு (மீண்டும் ஆசீர்வாதத்தை கொண்டு வருதல்) நடக்கப் போகிறது.
124273 இயேசுவானவர் எப்பொழுதுமே உங்களுடைய வாசலில் நின்றிருந்து கதவைத் தட்டிக் கொண்டிருக்கப் போவதில்லை. அவர் போதும் என்ற அளவுக்கு தட்டி முடித்துவிட்டு திரும்பிப் போய்விடும் நேரம் ஒன்று வரும், அப்பொழுது நீங்கள் அவருடைய கதவைத் தட்டுவீர்கள். ஆனால் நீங்கள் ஒரு போதும் அவரை கண்டறியமாட்டீர்கள். வருவதற்கான நேரம் இருக்கையில் வந்து விடுங்கள், ஒரு தட்டுதல் இருக்கும்போதே வந்துவிடுங்கள். பெந்தேகொஸ்தே நாளில் அவர்கள் பெற்றுக் கொண்டதுபோல், அதே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு குறைவாக எதையும் பெற்றுக் கொள்ள எதனோடும் ஒப்புரவாக வேண்டாம். அதே விதமாக தண்ணீர் ஞானஸ்நானம், அன்றைக்கு அவர்கள் செய்த அதே காரியம், இதை தவிர வேறு எதையும் பெற விரும்பாதீர்கள். அதைத் தவிர வேறு எதையும் உங்கள் உள்ளத்தில் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
125274 இப்பொழுது, எனது கத்தோலிக்க நண்பர்களே, உங்களுக்கு நான் ஒன்றைக் கூறட்டும், நீங்கள் கன்னி மரியாளிடத்தில் விசுவாசங் கொண்டுள்ளீர்கள். கன்னி மரியாள் இயேசு கிறிஸ்துவின் தாயானாலும், அவளும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது, அதைப் பெற்றுக் கொண்டபோது, அவளும் ஒரு குடித்தவளைப் போல் நடந்து கொண்டாள். அவளும் அந்த நூற்றிருபது பேரோடு இருந்து, பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டு, அந்நிய பாஷைகளில் பேசி, தேவனுடைய ஆவியினால் நிரம்பியிருந்தபொழுது, குடித்த ஒரு பெண்மணியைப் போல் நடந்து கொண்டாள். கன்னி மரியாள் மகிமைக்குள் போவதற்காக அதை நிறைவேற்ற வேண்டியிருந்தபொழுது, அதற்குக் குறைவானதொன்றை நீங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள்? அதைப்பற்றி எண்ணிப் பாருங்கள். அது தான் சரி. 275 பாப்டிஸ்டுகள்…இங்கே பின்னால் அமர்ந்திருக்கிற பாப்டிஸ்ட் பிரசங்கியார் பாப்டிஸ்டுகளுக்கும் அதே காரியம் தான் கூறப்படுகிறதோ என்று நிச்சயமாக அறிய விரும்புகிறார். யாராயிருந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலையில்லை, யாவருக்கும் அதே தான் வேண்டும். 276 எனவே, வெறுமனே ஒரு சபையில் சேர்ந்து கொண்டு, சமயக் கோட்பாட்டை ஒப்பித்துவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலையிலும் தவறாது ஆலயத்திற்கு செல்வது என்ற காரியங்கள் ஒரு நன்மையும் விளைவிக்காது. நீங்கள் தேவனைக் குறித்து பரியாசம் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒன்று ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருங்கள் அல்லது நீங்கள் முற்றிலும் ஒன்று மற்ற நிலையில் இருந்துவிடுங்கள், ஒன்று நீங்கள் அனலாயிருங்கள், அல்லது குளிராயாவது இருங்கள். ஒன்று…ஏனென்றால் உங்களால்…இருக்க முடியாது, அதாவது கருப்பு வெள்ளை பறவையை நீங்கள் ஒருபோதும் கண்டிருக்கமாட்டீர்கள். குடிக்காரனாயும், குடிக்காதவனாயும் உள்ள ஒருவனை நீங்கள் ஒருபோதும் கண்டிருக்கமாட்டீர்கள். பாவியாயும் பரிசுத்தவானாயும் இருக்கும் ஒரு மனிதனையும் நீங்கள் ஒருபோதும் கண்டிருக்கமாட்டீர்கள். இல்லை, நீங்கள் அவ்வாறு காண்பதில்லை, நீங்கள் அப்படிப்பட்ட அவர்களை உண்டாக்க முடியாது. ஒன்று நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவன் உங்களில் வாசம் பண்ணுதலை உடையவராயிருங்கள், அல்லது அது அற்றவராயிருங்கள், இருந்தால் இப்படிப்பட்ட நிலையில் இருங்கள் அல்லது மற்றும் அற்றுப் போன நிலையில் இருங்கள்.
126277 எனவே, இயேசு உங்களுடைய வாசலில் நிற்கிறார் என்பதையும், இந்நாட்களில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றிய தேவனுடைய வாக்குத்தத்தையும் நீங்கள்—நீங்கள் நினைவுகூர வேண்டும். எதனால் அப்படியாயிற்று? புறக்கணித்தபடியினாலேயாகும். அசலான ஒலிவக்கிளையாகிய இஸ்ரவேலர் வெட்டப்படுவதற்கு காரணம் என்ன? ஏனெனில் அவர்கள் பவுலுடைய பெந்தெக்கொஸ்தே செய்தியை புறக்கணித்தார்கள். இது கடைசி சபைக் காலம் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வேதம் அவ்வாறு கூறியுள்ளது. அவர்களுக்கு என்ன சம்பவிக்கப்போகிறது என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் பெந்தெகொஸ்தே செய்தியை புறக்கணித்து விட்டபடியினால், இவர்களும் வெட்டப்படுவார்கள். அதன் பிறகு தேவன் மீண்டும் யூதர்களிடம் திரும்புவார். 278 அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள், ஏனெனில் அவர் அவர்களை ஒரு தேசமாக எடுத்துக் கொள்வார். தனிப்பட்ட நபர்களாக அல்ல. ஆனால் நீங்களும் நானுமோ, தனித்தனி நபர்களாகத்தான் நம்மை அவர் தெரிந்து கொள்கிறார். ஏனெனில் அவர் யூதர்களிடம் வருவது…அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில், அவர்கள் புறஜாதிகளிடத்தில் வந்தது, “புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை தெரிந்து கொள்ளும்படி” யாகத்தான். அது அவருடைய மணவாட்டியாகும், “ஒரு ஜனம்,” இங்கொன்றும், அங்கொன்றும், இங்கொன்றும், அங்கொன்றும் ஆக அவர் நம்மிடம் தனிப்பட்ட நபர்களாகத்தான் இடைப்படுகிறார். இனம், ஜாதி, நிறம் என்று பாராமல் அவர் நம்மை தெரிந்து கொண்டார். அவர் நம்மோடு தனிப்பட்ட நபர்களாகத்தான் இடைபடுகிறார். அது அவர் தனது பீடத்தின் மேல் வைக்கும் அவருடைய பூச்செண்டாய் உள்ளது. ஆனால் யூதர்களைப் பொறுத்தமட்டிலோ. அவர் இஸ்ரவேலருடன் ஒரு தேசமாகத்தான் இடைபடுகிறார். அவர்கள் ஒரு தேச ஜனம் ஆவார், அவருடைய தேசம்.
127279 நமக்கு இந்த செய்தி கிடைத்திருக்கிறபடியினால் நான் இன்றிரவில் மகிழ்ச்சியாயிருக்கிறேன். நீங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டபடியினால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். உங்களுடைய பங்கேற்பு என்னால் மிகவும் பாராட்டப்படுகிறது. அவர் என்னை இதைக் காண செய்தபடியினாலும், நான் இதை சபைக்கு அளிக்க இயலும்படி செய்தபடியினாலும், நான் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இப்பொழுது அது என் இருதயத்தை விட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளது. சில காலம் பரிசுத்த ஆவியானவர் என் இருதயத்தில் இதைக் குறித்து இடைப்பட்டார். என்னால் அதை அலட்சியம் செய்துவிட முடியவில்லை. நான் அதனோடு இணைந்து செல்ல வேண்டியதாகத் தான் இருந்தது. இரு காரியங்கள் செய்யும்படி நான் நடத்தப்பட்டதை உணர்ந்தேன். 280 லூயிசியானாவிலுள்ள ஷ்ரீவ்போர்ட்டுக்கு சகோதரன் மூர் அவர்களுடன் ஒரு கூட்டத்திற்காக செல்ல வேண்டும். அங்கே அமர்ந்திருக்கிற என் மனைவி அதைப்பற்றி உங்களுக்கு கூற முடியும், “நான் ஷ்ரீவ்போர்ட்டிக்கு போக வேண்டும். ஏன்?” என்று அநேக வாரங்களாக கிட்டத்தட்ட நான் கதறினேன். ஷ்ரீவ்போர்ட்டில் இருந்த யாராவது இங்கிருந்தால், ஏன் என்பதை இப்பொழுது அறிய முடியும். அதைப்போல காரியத்தை அவர்கள் கேட்டிருக்கவோ அல்லது பார்த்திருக்கவோ இல்லை. எவ்விடத்திலுமிருந்து பிரசங்கிகளும், பாப்டிஸ்ட்டுகளும் இன்னும் பல வகையான மக்களும் வந்திருந்தனர். பனிக்கட்டி வைக்கப்பட்டுள்ள பெட்டியின் மேல் கை வைத்த மனிதன் ஒருவன் மேல், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் வந்திறங்கி, “லூசியானாவில் உள்ள ஷ்ரீவ்போர்ட்டுக்குப் போ, அங்கே நீ என்ன செய்ய வேண்டுமென்பது உனக்குக் கூறப்படும்” என்று கூறினார். என்னுடைய பெயரையும் அவருக்குத் தெரியப்படுத்தி, எங்கே காணலாம் என்பதையும் கூறினார். “அவன் உனக்கு நீ என்ன செய்ய வேண்டுமென்பதை கூறுவான்” என்று கூறினார். 281 நான், “படிகளுக்கு அடியில் தண்ணீர் தொட்டியானது ஆயத்தமாயுள்ளது. உனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது தேவையாயுள்ளது” என்றேன். அங்கே… 282 எனவே அந்தவிதமான காரியங்கள், அங்கே நமக்கு மத்தியில் சரியாக நடந்திருந்ததைப் பற்றிய காரியங்களின் முன்னுரைத்தல்களையும், தீர்க்கதரிசனங்களையும் ஜனங்கள் பேசினார்கள்.
128283 பிறகு, “நான் ஜெபர்சன்வில்லுக்கு சென்று இப்புத்தகத்தை எழுதிட வேண்டும், எனெனில் இங்கே இன்னும் எவ்வளவு காலம் நான் இருந்தாக வேண்டும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இம்மகத்தான செய்தியை நான் உரைத்திட்டால், அது புத்தக வடிவம் பெற்றுவிடும், நான் போய்விட்ட பிறகோ அவ்வார்த்தைகள் தொடர்ந்து ஜீவித்துக் கொண்டேயிருக்கும்” என்று நான் கூறினேன். புத்தகத்தில் இடம் பெறப் போகும் இது சம்மந்தமான வரலாற்றுக் குறிப்புகளை எழுதிடச் செய்திட்டேன். பரிசுத்த ஆவியின் ஏவுதலை கண்டறியும்படியாய் நான் இங்கே இச்செய்தியை சபைக்கு கொண்டு வருவதற்காக வந்தேன். நானும் கூட இதற்கு முன் இதைப் பற்றி அறியாதிருந்தேன். அது உண்மையாயிருக்கிறது. இதை கர்த்தருடைய நாமத்தில் உரைக்கிறேன். “நானுங்கூட அவைகளை அறியாதிருந்தேன்” என்பது உண்மையாயிருக்கிறது. 284 நான் இப்பொழுது விடுதலை பெற்றதாக உணருகிறேன். இச்செய்தியை தேவன் தாமே நமக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்று நான் உணருகிறேன். நாம் சாலையின் முடிவுக்கு வந்து விட்டோம் என்று நான் நம்புகிறேன். தேவனின் வெளிப்படுத்துதல் நம் மத்தியில் உண்டாவதற்கான வேளையானது வந்து விட்டது என்று நான் விசுவாசிக்கிறேன். இன்னும் எவ்வளவு காலம் இருக்கும் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் வேளையானது நெருங்கிவிட்டது.
129285 அந்த மகத்தான ஒருவர் எழும்புவதற்காக நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருப்போம். என்னுடைய நாளிலேயே அவன் வரக்கூடும் அல்லது வெகு சீக்கிரத்திலேயே வரக்கூடும். நான் அறியேன். இப்பொழுது அவன் நம் மத்தியிலேயே கூட இருக்கக் கூடும், நம்மால் கூற முடியாது. அந்த வேளை வரையிலும் நம்மை நடத்தப் பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். அப்பொழுது இந்த வழிநடத்தி முன்செல்பவன் நம்மை வழி நடத்துவதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ளும்போது, அவன் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டவனாகவே இருப்பான், வரப்போகிற அந்த மனிதன் உண்மையாகவே எலியாவாகத்தான் இருப்பான். ஆனால் அவன் தானே வழி நடத்திச் செல்கிறவனாக இருந்து, பிள்ளைகளின் இருதயங்களை பிதாக்களின் செய்திக்கென, அவர் தம்முடைய ஆவியை பெந்தெகொஸ்தே நாளில் ஊற்றியபொழுது கொடுக்கப்பட்ட நம்முடைய பரலோகப் பிதாவினுடைய செய்திக்கு திருப்புவான். 286 அச்செய்தியானது எவ்வாறு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை நான் என்னால் முடிந்தவரை, வரலாற்றிலிருந்தும், வேதத்திலிருந்தும் கொண்டு வந்து காண்பித்திருக்கிறேன். அது தானே சபைக்காலங்களின் வழியாக தொடர்ந்து வந்து, இன்றைக்கு அது தான் இச்செய்தி என்பதை காண்பித்திருக்கிறேன், ஸ்தாபனங்கள் தேவனுக்கு முன்பாக சாபக்கேடாக இருக்கிறது என்பதையும் காண்பித்தேன். வேத பூர்வமாகவும், அப்போஸ்தலருடைய நடபடிகளின் வாயிலாகவும் வரலாற்றின் மூலமாகவும் உரைக்கப்பட்ட இச்செய்தியானது உங்கள் சிந்தையில் பதிந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். அது…
130287 தேவன் தம்முடைய சபையை எப்போதுமே ஸ்தாபனமாக ஒருபோதும் ஆக்கியதில்லை. ரோமன் கத்தோலிக்க பரம்பரை குருக்களாட்சி முறைதான் ஸ்தாபன சபைகளின் தாயாக இருக்கிறது. ரோமன் கத்தோலிக்க சபை, அது ஸ்தாபனங்களின் தாயாக உள்ளது. எந்தவொரு ப்ராடெஸ்டெண்ட் குழுவிலும் எழுப்புதல் எப்பொழுதாவது ஏற்பட்டால், அது உடனே திரும்பிச் சென்று, அதே காரியத்தையே செய்தது. வேதமோ, “அவள் ஒரு வேசி என்றும், அவளிடத்திலிருந்து உண்டான சபைகளே அவளுக்கு குமாரத்திகள்” என்றும் உரைத்துள்ளது. அவர்கள் வேசிகள் என்று அழைக்கப்படுவதால் அவர்கள் பெண்களாகத்தான் இருக்க வேண்டும். அங்கே அவள் இருக்கிறாள். எனவே நாம் அமர்ந்து கொண்டிருக்கிறோம்…
131288 ஆனால் அவரும் கூட “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” என்றே இதைக் கூறினார். எனவே நாம் யாவரும் அந்நாளில், மெதோடிஸ்ட்டுகளே, பாப்டிஸ்டுகளே, நீங்கள் யாராயிருந்தாலும் சரி, “ஒருவன் கதவைத் திறந்தால், நான் அவனோடே போஜனம் பண்ணுவேன். அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்” என்றார். 289 என் சகோதரரே, என் சகோதரிகளே, நாம் தானே அந்த நாளிலே அந்த சிறுமந்தையாக எண்ணப்படுவோமாக. அவர் வந்து இப்பூமியை விட்டு எடுத்துக் கொள்வதற்கான அவ்வேளை வரையிலும் காத்திருக்கும் அந்த சிறு மந்தையில் அங்கம் வகிக்கிறவர்களாக நாம் இருப்போமாக. எடுத்துக் கொள்ளப்படுதலானது உலகளாவியதாக இருக்குமே. “இரண்டு பேர் படுக்கையிலிருப்பார்கள். ஒருவரை நான் எடுத்துக் கொள்வேன், இரண்டு பேர்கள் வயலில் இருப்பார்கள். நான் ஒருவரை எடுத்துக்கொள்வேன்” என அவர் கூறுகிறார். இது பூமியின் ஒரு பக்கத்தில் இரவாகவும், மறுபக்கத்தில் இது பகலாகவும் இருக்கும் என்பதைக் காட்டுகிறதல்லவா? பாருங்கள், எனவே, “இரண்டுபேர் படுக்கையிலிருப்பார்கள், இரண்டுபேர் வயலிருப்பார்கள் அவர்களில் ஒருவரைத் தான் நான் எடுத்துக் கொள்வேன்” என்று கூறுகிறார். பாருங்கள்.
132290 நான் இன்று காலையில் கூறியது போல், இந்நாட்களில் ஒன்றில் நீங்கள் சாலையில் உங்கள் தாயுடன் பேசிக்கொண்டு காரோட்டி சென்று கொண்டிருப்பீர்கள். நீங்கள் சுற்றுமுற்றும் பார்க்கையில் உங்கள் தாய் போய் விட்டிருப்பார்கள். நீங்கள் மேசையில் உட்கார்ந்து, உங்கள்—உங்கள் காபியையோ அருந்திக்கொண்டோ அல்லது காலை உணவை அல்லது ஏதோ ஒன்றை புசித்துக் கொண்டிருப்பீர்கள், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் சுற்றும் முற்றும் பார்க்கையில், அப்பா அங்கே இனி ஒருபோதும் இருக்கமாட்டார். அதுவே முற்றிலும் உண்மை. அது வருகிறது. ஆனால் எந்த வேளையில் நடக்கும் என்பதை அறியோம். ஆனால் அதன் காரியம் என்னவெனில், அது நடந்து முடிந்து விட்டதென்றால், அதன்பின்னர் வேறு எதுவும் இல்லை. முடிந்தது தான். அப்பொழுது உங்களால் அதைக் குறித்து ஒன்றுமே செய்ய முடியாது. “அதைப் பற்றி நீண்ட காலமாக கேட்டு வந்திருந்தேன்” என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் உங்களுடைய கடைசி முறையாக நீங்கள் அதைக் குறித்துக் கேட்கப் போகிறீர்கள். அது உண்மையே. அது சம்பவிக்கத்தான் போகிறது, ஏனெனில் அது கர்த்தருடைய வார்த்தையாயிருக்கிறது. நான் பிரசங்கித்து வந்திருக்கிற கடந்த எட்டு நாட்களாக, அது எப்பொழுதாவது தவறிப் போயிருக்கிறதா? ஆனால் இங்கே இயேசு என்ன கூறியிருக்கிறாரோ, அது வந்து நிறைவேறியாகவே வேண்டும். சரியாக ஒவ்வொரு சபைக்காலத்தில் அவ்வாறே நடந்திருக்கிறது.
133291 இந்த சபைக்காலமானது சரியாக இதற்குள் இருக்கிறது. அதன் சரியான வேளையில் அது இருந்து கொண்டிருக்கிறது, இன்று காலையில் கூட, பத்துக் கன்னியர் எதற்கு அடையாளமாக உள்ளனர் என்பதைக் குறித்தும், நித்திரை செய்யும் புத்தியில்லாத கன்னியரின் வேளையைக் குறித்தும் பார்த்தோம். வேதமானது கூறியதைக் குறித்து நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்; அதாவது புத்தியில்லாத நித்திரை செய்யும் கன்னியர்… “இதோ மணவாளன் வருகிறார், இதோ கர்த்தருடைய வருகை” என்ற சத்தம் புறப்பட்டுச் சென்றபோது, வார்த்தையின் பிரசங்கித்தலும் நடந்தபோது, அப்பொழுது என்ன சம்பவித்தது? “காலம் சமீபமாயிற்று அணுகுண்டுகள் மற்றும் இன்ன பிறவும் ஆயத்தமாயுள்ளன” என்று பிரசங்கிகள் தெருகளில் ஓடிச் சென்று செய்தியை பிரசங்கிக்கத் துவங்கினர். 292 அவ்வாறு அவர்கள் செய்த உடனேயே, நித்திரை செய்யும் புத்தியில்லாத கன்னியர் ஆகிய பெரிய சபையானது, “ஆ, நல்லது, நான் இத்தனை காலமாக ப்ரெஸ்பிடேரியன் ஆக இருந்துவிட்டோம். நாம் இதைப் பற்றி ஆராய்ந்து இதைக் கண்டு பிடிப்போம். ஆம், உங்களுக்குத் தெரியுமா, நமக்கு பரிசுத்த ஆவி தேவை” என்று நான் விசுவாசிக்கிறேன். அவர்கள் இப்பொழுது அதைக் குறித்து துண்டுப்பிரதிகளை எழுதி வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள், “அதில் எங்களுக்குக் கொஞ்சம் தாருங்கள்” என்று கூறினார்கள். இவர்களோ, “இல்லை, எங்களுக்குப் போதுமான அளவே எங்களிடம் உள்ளது” என்றனர்.
134293 எனவே இன்றைக்கு, ஸ்தாபனங்களாகிய பெரிய அருமையான சபைகள் செய்வதைப் போல், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்காக ஜெபிக்கும்படி புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்றபோது, மணவாளன் வந்துவிட்டார். எனவே அவர்கள் அதை இப்பொழுது பெற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், பெரிய சபைகள், ஸ்தாபனங்கள், ஸ்தாபனமாக்கப்பட்ட சபைகள் அதைக் குறித்து நடத்தும் பெரிய சர்வதேச கூட்டங்களில், “நாம் பெந்தேகோஸ்தே ஆசீர்வாதத்தைப் பெற்று கொள்ள அதனிடம் திரும்பியாக வேண்டும். சபையில் தெய்வீக சுகமளித்தலின் வரத்தைப் பெற்றவர்கள் நமக்கு இருக்க வேண்டும்; அந்நிய பாஷைகளில் பேசுகிறவர்கள் நமக்கு வேண்டும். அந்நிய பாஷைகளை வியாக்கியானம் செய்கிறவர்கள் நமக்கு வேண்டும், நமது சபையில் இந்த அனைத்து ஆவிக்குரிய வரங்களும் நாம் பெற்றிருக்க வேண்டும். எனவே அதற்கான கூட்டங்களை நாம் ஆரம்பித்து அதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும்” என்று கூறுகின்றனர். அதற்காக ஆலோசனைக் குழுக்களை அமைத்து, அதைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வாறு அவர்கள் அதைச் செய்ய புறப்பட்டு சென்றிருக்கிற பொழுது, அப்பொழுது அந்த வேளையில் தான் மணவாளன் வந்தார். வந்து விளக்கில் எண்ணெய் உள்ளவர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். 294 புத்தியில்லாத கன்னியர் திரும்பி வந்த பொழுது என்ன சம்பவித்தது? அழுகையும் பற்கடிப்பும் நிறைந்திருக்கிற (மகா உபத்திரவ காலமாகிய) புறம்பான இருளிலே அவர்கள் தள்ளப்படுவார்கள். அந்த வேளையில் மணவாட்டியோ பரலோகத்தில் இருப்பாள். ஓ, என்னே!
135295 அதன் பிறகு மூன்றரை ஆண்டுகளின் முடிவில், யோசேபைப் போல அவர் வந்து, தன்னை தனது சகோதரராகிய யூதர்களுக்கு தெரியப்படுத்துவார். அவர்கள் குடும்பம் குடும்பமாக பிரித்துக் கொண்டு, அவருக்காக அழுது புலம்பி, “இந்தக் காயங்கள் எங்கே உமக்கு ஏற்பட்டன?” என்று கேட்டு, தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்ப்பார்கள், அவர் தனது சகோதரர்களுக்கு தம்மைத் தெரியப்படுத்துவார். 296 இப்பொழுது, அவர் தன் சபைக்கு, தன்னை அவர்கள் அறியும்படி செய்திட முயன்று கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களோ அவரை வெளியே தள்ளிவிட்டார்கள். அவரோ இன்னமும் நின்று, தட்டிக்கொண்டு, “அங்கே இன்னும் யாராவது ஒருவர் உள்ளனரா? எனக்காக கதவைத் திறந்து என்னை உள்ளே வரவிட்டு உன்னோடு பேசவிடும்படி செய்ய இன்னும் யாராவது ஒருவர் உள்ளனரா?” என்று கேட்கிறார்.
136297 ஓ, நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன், அதைக் குறித்து மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, சுமார் இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, என்னுடைய இருதயத்தில் அந்த தட்டுதலை நான் உணர்ந்தேன். நான்…அவர் உள்ளே வந்தார், அது முதற்கொண்டு நான் அவரோடு போஜனம் பண்ணிக்கொண்டும், அவர் என்னோடு போஜனம் பண்ணிக்கொண்டிருக்கிறார். நான் பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதமான பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டேன். 298 என்னுடய பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன். என்னுடைய வாழ்க்கையில் நான் ஞானஸ்நானம் பெற்றது ஒரு முறைதான். நான் ஒரு சிறு பையனாக இருந்தபொழுது, யாரும் என்னிடம் மூன்று தேவர்கள் உண்டு என்று சொல்ல முடியவில்லை. இல்லை, அப்போதகத்தை என்னிடம் யாரும் திணிக்க முடியாது. தேவன் எனப்பட்டவர் யார் என்பதை அறிந்திருக்கும் எவரிடமும் நீங்கள் அதை திணித்து விட முடியாது. அது உண்மை. எனவே நான் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபொழுது, ஒரு பாப்டிஸ்ட் பிரசங்கியார் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். “நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டும் என விரும்புகிறேன்” என்று நான் கூறினேன். டாக்டர் ராய் ஈ டேவிஸ் என்பவர் தான், நான் வாலிபனாக இருந்தபொழுது எனக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தார். பார்த்தீர்களா? அது தான் சரியானது. அதை நான் விசுவாசித்தேன்; அதோடு நிலைத்து நின்றேன். அது சத்தியம் என்பதை நான் அறிவேன். அது தேவனுடைய நித்திய வார்த்தையாயுள்ளது. அது உண்மை. அது உண்மை.
137அவர்களில் நானும் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். நானும் அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களின் நானும் ஒருவன் என்று என்னால் கூறமுடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்; அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் ஒருவன் அவர்களின் நானும் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இந்த ஜனங்கள் கல்லாதவராயினும், உலகப்பிரகாரமான கீர்த்தி அற்றவராயினும் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, அவர்கள் எல்லோரும் தங்களுடைய பெந்தேகொஸ்தேயின் ஆசீர்வாதம் பெற்றனரே; இப்பொழுது அவர்கள் எத்திசையிலும் சென்று அவருடைய வல்லமை மாறாதது என்று கூறுகின்றனர். நானும் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். 299 நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறீர்களா? நீங்கள் மகிழ்ச்சியாயிருந்தால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள், அவர்களில் நானும் ஒருவன், நான் அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்; (நீங்கள் அவருடையவராகிவிட்டாலே; அப்பொழுது நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எல்லா பாவத்திற்கு மேலாக இருப்பீர்கள்.) வாரும் என் சகோதரரே, இந்த ஆசியை நாடுவீர், அது உம் இருதயத்தை பாவத்தின்று சுத்திகரிக்குமே, அது உம்மில் சந்தோஷத்தின் மணியோசை ஒலித்திட துவங்கச் செய்யும் அது உம் ஆத்துமாவை அனலுள்ளதாக்குமே; ஓ, இப்பொழுது அது என் இருதயத்தில் கொழுந்து விட்டு எரிகிறது. ஓ, அவர் நாமத்திற்கு மகிமை, நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட என்னால் முடியும் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் நான், நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன், அல்லேலூயா; அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அவர்கள் மேல் வீட்டறையில் கூடிவந்து, எல்லாரும் அவருடைய நாமத்தில் ஜெபித்தனர், அவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டனர் ஊழியத்திற்கான வல்லமை வந்தது; இப்பொழுது அந்நாளில் அவர் அவர்களுக்கு என்ன செய்தாரோ, அதையே அவர் உங்களுக்காகவும் செய்வார் …என்னால் கூற முடிந்ததற்கு நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். 300 இப்பொழுது நாம் முன்னாலும், பின்னாலும் சுற்றிலும் கரங்களைக் குலுக்குவோமாக. அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன்; அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்; அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மகிழ்ச்சியாயிருக்கிறேண். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அவர்களில் நீங்களும் ஒருவர் என்பதால் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? [சபையார், “ஆம்! ஆமென்! அல்லேலூயா!” என்று பதிலளிக்கிறார்கள்—ஆசி.] எனக்கு அது பிடிக்கும். சத்தம் போடுகிற கூட்டம். 301 ஆ! ஆ! [ஒரு சகோதரன் அந்நிய பாஷைகளில் பேசுகிறார். இன்னொரு சகோதரன் அதற்கு வியாக்கியானம் செய்கிறார்—ஆசி.]
138பிதாவே, எவ்வளவாய், அபாத்திரமான எங்கள் மேல் உள்ள உம்முடைய நன்மைக்காகவும், இரக்கங்களுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துக்கிறோம். உம்முடைய செய்தியை இப்பொழுது நீர் உறுதிப்படுத்துவீர் என்பதைக் குறித்து நீர் வாக்குத்தத்தம் செய்துள்ளீர். கர்த்தாவே, அதைப் பற்றி எண்ணிப்பார்க்கிறோம். தேவனே, உம்முடைய இரக்கங்கள் அவர்கள் மேல் தங்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
139302 இங்கே யாராவது அவரை இரட்சகராக அறியாதிருந்தால், இப்பொழுதே நீங்கள் அவரை உங்கள் இருதயத்தில் இரட்சகராக கண்டு கொள்ள விரும்பினால், நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கும்பொழுது எழுந்து நிற்பீர்களா? அவர் தாமே அங்கே இச்செய்தியை…கூறுவதாக கூறினார். அவர் தம்முடைய் வார்த்தையை உங்களுக்கு உறுதிபடுத்த விரும்பினார். அவரை அறியாத யாராவது இங்கிருந்தால், இன்னும் அவரது ஆவியை பெறாமல் இருந்தால் அவர் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். 303 சரி, அதோ அங்கே பின்னால் ஒருவர். நீங்கள் எழுத்து நிற்பீர்களா, சகோதரனே? [சபையிலிருந்து ஒரு சகோதரன் பேசுகிறார்.—ஆசி.] அவர் பரிசுத்த ஆவியினாலே அபிஷேகிக்கப்பட விரும்புகிறார். அப்படித்தானே சகோதரனே? தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இருக்கும் இடத்திலேயே நில்லுங்கள். “பரிசுத்த ஆவியினால் நானும் அபிஷேகிக்கப்பட வேண்டும்” என்று எழுந்து நின்று கூற விரும்புகிற இன்னும் யாராவது உள்ளனரா? சகோதரனே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. எழுந்து நில்லுங்கள். அப்படியே நின்று கொண்டிருங்கள். இன்னும் யாராவது இங்கு பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி, ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்பி, அதற்காக எங்களுடைய ஜெபங்களில் நினைவு கூரப்பட இப்பொழுது விரும்புகிறீர்களா? பரிசுத்த ஆவியினால் நீங்கள் அபிஷேகிக்கப்பட விரும்புகிறீர்களா? நான் கூற வேண்டியதை கூறிடும் முன்னர் இன்னும் யாராவது எழுந்து நின்று சேர்த்துக் கொள்ளப்பட விரும்புகிறீர்களா? ஓ, அவருடைய மந்தையில் ஒருவராக எண்ணப்பட வாஞ்சிக்கிறீரா? (நீங்கள் அதைச் செய்வீர்களா?) கரைதிரையற்று, விழித்திருந்து, அவர் மீண்டும் வரும் காட்சியை காண காத்திருப்பீர்.
140304 அவர் மீண்டும் வருகிறார். அவருடைய பகைவராக இருக்க விரும்புவீரா? அல்லது அவருடைய பிள்ளையாக இருக்க விரும்புவீரா? சினங்கொள்கிற தேவன் அந்தக் காலையில், இயேசுவின் இரத்தத்தைத் தவிர வேறு எதையும் தேவன் அங்கீகரிக்கமாட்டார். அவர் ஒருபொழுதும்…உங்களுடைய சபை அங்கத்துவம் அவருக்கு ஒன்றுமில்லை, இயேசுவின் இரத்தத்தைத் தவிர வேறு எதையும் அவர் பாரார். ஓ, அந்த இரத்தம் ஓட்டம் விலையேறப் பெற்றதாயுள்ளது, அது என்னை உறைந்த மழையிலும் வெண்மையாக்குகிறது; ( …?… ) இயேசுவின் இரத்தமேயல்லாமல் வேறே நதியை நான் அறியேன் இயேசுவின் இரத்தத்தினாலேயல்லாமல் வேறு எதனால் என்னுடைய பாவத்தை கழுவிட முடியும்? இயேசுவின் இரத்தத்தினாலேயல்லாமல் வேறு எது என்னை மீண்டும் முழுமையாய் சுத்தமாக்கும்? ஓ, அந்த இரத்தம் ஓட்டம் விலையேறப் பெற்றதாயுள்ளது அது என்னை உறைந்த மழையிலும் வெண்மையாக்குகிறது; இயேசுவின் இரத்தமேயல்லாமல் வேறே நதியை நான் அறியேன் [சகோதரன் பிரான்ஹாம் அவர்கள் இப்பாடலை தாழ்ந்த குரலில் தனக்குள் பாடிக்கொள்கிறார்—ஆசி.] இயேசுவின் இரத்தமேயல்லாமல் வேறொன்றுமில்லை; இதுவே என்னுடைய எல்லா நீதியுமாயிருக்கிறது, இயேசுவின் இரத்தமேயல்லாமல் வேறொன்றுமில்லை வேறு யாராவது உள்ளனரா? ஓ, விலையேறப்பெற்ற… (ஒன்றும் நிலைக்காது சகோதரனே, சகோதரியே. இவ்வுலகானது மூழ்கிக் கொண்டிருக்கிறது, அது முடிந்து போய்விட்டது!) பனியைப் போல… இயேசுவின் இரத்தமேயல்லாமல் வேறே நதியை நான் அறியேன்.
141305 டெடி அவர்களே, நீங்கள் விரும்பினால், மெதுவாக “இம்மானுவேலின் இரத்தத்தாலே நிறைந்த ஊற்றுண்டே” என்ற பாடலை இசையுங்கள். 306 இப்பொழுது நண்பர்களே, நின்று கொண்டிருக்கிற நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் இனிமையை ஏற்றுக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறீர்கள். இந்தக் காரியங்கள் சம்பவிக்கும் என்று உரைத்த அதே வேதாகமத்தில் அவர் எவ்வாறு வாக்குத்தத்தம் செய்தாரோ அதே விதமாக அவைகளை செய்து நிறைவேற்றினார். “வாக்குத்தத்தமானது உங்களுக்கு உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்று பேதுரு கூறினான். 307 உங்கள் மேல் தேவனுடைய ஆசீர்வாதம் வேண்டுமென்று விரும்பி நீங்கள் எழுந்து நின்றீர்கள். அவருடைய ஊழியக்காரன் என்ற முறையில் நான் இப்பொழுது உங்களுக்காக ஜெபிக்கிறேன். தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொடுக்கும்படி நான் ஜெபிப்பேன். நீங்கள் இதை உங்கள் இருதயத்தில் செய்வீர்களோ என்று நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் உத்தமாயிருந்தால், நீங்கள் இந்த வாக்குறுதியை தேவனுக்கு இவ்வாறு செய்வீர்களா? அதாவது, “தேவனே, இந்த நேரம் முதல், நிற்கும் நான், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தேடிக்கொண்டு இருக்கிற நான், நீர் என்னை பரிசுத்த ஆவியினால் நிரப்பும் வரையிலும், தொடர்ந்து ஜெபித்துக் கொண்டு, காத்துக் கொண்டிருப்பேன்.” நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்திக் காட்டி தேவனுக்கு இந்த வாக்குறுதியை அளிப்பீர்களா? “பரிசுத்த ஆவியின் இனிமையினாலும் நன்மையினாலும் நீர் என்னை நிரப்பும் வரையிலும் நான் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டேயிருப்பேன்” என்று கூறுங்கள்.
142நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில் நான் இப்பொழுது உங்களுக்காக என்னுடைய ஜெபத்தை ஏறெடுக்கிறேன். 308 எங்கள் பரலோகப் பிதாவே, அவர்கள் உம்முடைய சமூகத்தின் வெற்றிச் சின்னமாக இருக்கிறார்கள். அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறபடியால், அவ்வார்த்தைகள் உண்மையானவை என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவைகள் பரிசுத்த ஆவியினால் அளிக்கப்பட்டவை என்று அவர்கள் அறிகிறார்கள். ஏனெனில் அவைகள் தேவனுடைய வார்த்தையாக இருக்கின்றன. அவர்கள் தங்களுக்கு நீர் தேவை என்பதையும், ஜெயங்கொள்ளுகிற வல்லமையை அளிக்கும் பரிசுத்த ஆவியின் இனிமை தங்கள் ஜீவியத்தில் தேவைப்படுகிறது என்றும் உறுதி கொண்டிருக்கின்றனர். ஒரு கிறிஸ்தவ ஜீவியத்தை ஜீவியத்துக் காட்டுவதற்கான வல்லமையை அவர்கள் பெற்றுக் கொள்ளவும், சோதனைகளை ஜெயிக்கிறதற்காக வல்லமையை பெற்றுக்கொள்ளவும், “உன்னதத்திலிருந்து வரும் பெலத்தால் அவர்கள் தரிப்பிக்கப்படுவார்கள்.” “அவர்கள் மேல் வீட்டறையில் அவரது நாமத்தினால் ஜெபித்த பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டனர், ஊழியத்திற்க்கான வல்லமை வந்தது” என்ற பாடலை சற்று முன் நாங்கள் பாடியது போல் ஊழியத்திற்க்கான வல்லமை அவர்கள் மேல் வரவேண்டும், அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். 309 பிதாவே, உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில், நான் உம்மிடம் ஜெபிக்கிறேன், அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தினதை கண்டதினால், அவர்கள் உமக்கு ஒரு உறுதிமொழியை அளித்துள்ளனர். அதாவது அவர்கள் இனிமேல் ஓயமாட்டார்கள் என்றும், அவர்கள் கூறினதை தள்ளிவிடமாட்டார்கள் என்றும் வாக்குறுதியை அளித்துள்ளனர். ஆனால் கர்த்தாவே, அவர்களுடைய ஜீவியத்தில் திருப்தியளிக்கும் பாகமான உம்முடைய பரிசுத்த பிரசன்னத்தை நீர் அவர்களிடத்தில் நிரப்பும் வரை அவர்கள் ஜெபிப்பார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும் என்று கர்த்தாவே, அவர்கள் சார்பில், உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில், நான் என்னுடைய ஜெபத்தை ஏறெடுக்கிறேன். கர்த்தாவே, அது அவர்களுக்கு நேரிடுகிற வரையிலும் இந்த சபையை விட்டு அவர்கள் அகல வேண்டாம் என்று நான் ஜெபிக்கிறேன்; ஒவ்வொரு ஆத்துமாவும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் வரையிலும், அவர்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இதை அளித்தருளும்.
143310 நீர் சர்வ வல்லமையுள்ள தேவன்; உலகத்தின் பாவத்தைப் போக்க நீர் மாம்சத்தில் வெளிப்பட்டீர். நீர் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து உன்னத்திற்கு எழுந்தருளினீர். இன்றிரவில் நீர் எங்கள் நடுவே பரிசுத்த ஆவி என்ற பெயரோடு இங்கே இருக்கிறீர். பிதாவே, அவர்கள் ஒவ்வொருவரையும் எங்கள் விலையேறப்பெற்ற கர்த்தராகிய நீர் உம்மைக் கொண்டே நிரப்பியருளும், அவர்கள் தாமே உம்முடைய இராஜ்யத்திற்கு ஒரு—ஒரு ஆசீர்வாதமாகவும் இனி வரப்போகும் உலகத்திலும் இருக்கட்டும். ஒரு நாளிலே நீர் சாலையின் முடிவுக்கு வரும்பொழுது, அது இன்றைய நாளாகவும் இருக்கக்கூடும். அது எப்பொழுது இருக்கும் என்பதை நாங்கள் அறியோம். ஆனால் கர்த்தாவே எடுத்துக் கொள்ளப்படுதலில் போகிறவர்களுக்குள்ளே நானும் ஒருவனாக எண்ணப்படட்டும். எடுத்துக் கொள்ளப்படுதலில் போகிறவர்களுக்குள்ளே இவர்களும் காணப்படட்டும், தெய்வீக பிரசன்னத்தில் உள்ள ஒவ்வொருவரும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட யாவரும், அவர்கள் தேவனுக்குச் சொந்தமானவர்களாமே, அவர்கள் யாவரும் எடுத்துக் கொள்ளப்படுதலில் போவார்களாக. 311 இன்றிரவே இவர்களை நீர் ஏற்றுக்கொள்ளும் பிதாவே, அவர்கள் இப்பொழுது உம்முடையவர்களாக இருக்கிறார்கள். நான் அவர்களை உம்மிடம் ஒப்படைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
144312 இப்பொழுது, பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்து, இந்த மக்கள் அருகே நின்று கொண்டிருக்கிற மற்றவர்கள் யாவரும் அவர்கள்மேல் உங்கள் கைகளை வையுங்கள். இம்மானுவேலின் இரத்த குழாய்களிலிருந்து வந்த இரத்தத்தால் நிறைந்த ஒரு ஊற்றுண்டே, பாவிகள் அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கி தங்களுடைய எல்லா பாவக் கறையையும் போக்குகின்றனர், தங்களுடைய எல்லா பாவக்கறையையும் போக்குகின்றனர். தங்களுடைய எல்லா பாவக்கறையையும் போக்குகின்றனர். பாவிகள் அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கி தங்களுடைய எல்லாப் பாவக்கறையையும் போக்குகின்றனர். மரித்துக்கொண்டிருந்த கள்ளனும் தன்னுடைய நாளில் அந்த ஊற்றைக் கண்டு களிகூர்ந்தான்; அவனைப் போல நானும் இழிவானவனாயிருந்தாலும், என் பாவங்கள் யாவையும் கழுவுகிறேன். என் பாவங்கள் யாவையும் கழுவுகிறேன், என் பாவங்கள் யாவையும் கழுவுகிறேன்: பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கி, என் பாவங்களையெல்லாம் போக்குகிறேன்.
145313 இப்பொழுது உங்களுடைய கரங்களை உயர்த்தி தேவனுக்கு ஸ்தோத்திரத்தை செலுத்துங்கள். “கர்த்தாவே உமக்கு நன்றி. நான் எழும்பி நின்று, நான் உமக்கு துதி செலுத்துகிறேன். நான் உம்முடைய ஆசீர்வாதங்களுக்காகவும், உம்முடைய நன்மைக்காகவும், எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தந்ததற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்” என்று கூறுங்கள். கர்த்தாவே, உமக்கு நன்றி, கர்த்தாவே உமக்கு நன்றி! அன்புள்ள தேவனே, நீர் கூறின வண்ணமாக உம்முடைய வாக்குத்தத்தை நீர் காத்து…எங்களுக்கு தந்ததற்காக உமக்கு நன்றி. நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம்.
146314 நீங்கள் சந்தோஷமாயிருக்கவில்லையா? “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறுங்கள். டெடி, இன்னும் ஒரு தடவை, “புரிந்து கொள்ள முடியாத அநேக ஜனங்களை நாம் கண்டறிகிறோம்…” இது எனக்கு பரலோகத்தைப் போல் உள்ளது, என்ற பாடல். நாம் ஏன் மிகுந்த மகிழ்சியாயும், விடுதலையாயுமிருக்கிறோம் என்பதையே அநேக ஜனங்கள் புரிந்து கொள்ள முடியாமலிருப்பதை நாம் கண்டறிகிறோம். நாம் யோர்தானை கடந்து கானான் எனும் அழகிய தேசத்தினுள் வந்துவிட்டோம். இது எனக்கு பரலோகத்தைப் போலுள்ளது. ஓ, இது எனக்கு பரலோகத்தைப் போலுள்ளது, ஓ, இது எனக்கு பரலோகத்தைப் போலுள்ளது, ஓ, நாம் யோர்தானைக் கடந்து அழகிய கானான் தேசத்தினுள் பிரவேசித்துவிட்டோம், இது எனக்கு பரலோகத்தை போலுள்ளது. ஓ, நான் மகிழ்ச்சியடைகையில், நான் பாடி ஆர்ப்பரிப்பேன், நான் காண்பதை பிசாசு நம்பவில்லை; ஆனால் நான் ஆவியால் நிரப்பப்பட்டேன், அதில் ஒரு சந்தேகமும் இல்லை, அதுவே என்னோடுள்ள காரியமாயுள்ளது. ஓ, அதுதான்…எனக்கு பரலோகம் போன்றுள்ளது, (தேவனுக்கு ஸ்தோத்திரம்!) ஓ, இது எனக்கு பரலோகத்தைப் போலுள்ளது; நான் யோர்தானைக் கடந்து அழகிய கானானுக்குள் பிரவேசித்துவிட்டேன், இது எனக்கு பரலோகத்தைப் போலுள்ளது.
147315 அது உங்களை சந்தோஷப்படுத்தவில்லையா? நல்லது. யாருடனாவது கைகுலுக்கி, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூறுங்கள். கர்த்தாவே, இது பரலோகத்தைப் போலுள்ளது. துக்கமும், வேதனையும் கொண்ட பிள்ளையே, இயேசுவின் நாமத்தை உன்னோடு எடுத்துச் செல்; அது உனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளித்திடுமே, நீ போகுமிடமெல்லாம் அதை எடுத்துச் செல். விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூலோகத்தின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியுமாமே; விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூவின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியுமாமே. நம் யாத்திரை முடிவு பெறுகையில், நாம் இயேசுவின் நாமத்தில் அவர் பாதத்தில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குவோம், அவரை இராஜாதி இராஜாவாக பரலோகத்தில் நாம் முடிசூடுவோம். விலையேறப் பெற்ற நாமம் ஓ எவ்வளவு இனிமையானது! பூவின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியுமாமே; விலையேறப் பெற்ற நாமமது, ஓ எவ்வளவு இனிமையானது! (எவ்வளவு இனிமையானது!) பூவின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாமே. இப்பொழுது நம்முடைய தலைகளைத் தாழ்த்தி, மெதுவாக… எப்போதும் இயேசுவின் நாமத்தை, ஒவ்வொரு கன்னியிலிருந்தும் காக்கும் கேடயமாமே; சோதனைகள் உன்னை சுற்றி சூழ்ந்து கொள்ளுகையில், அப்பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது!