வெளிப்படுத்தின விசேஷம் 4 அதிகாரம் 1

60-1231

ஆமன. கரததரகக ஸதததரம. ஒலநடவல கலயடமஆச. நனஅத தன அநக ஜனஙகளடய மனபபனமயக இரககறத எனற நன கரதகறன. அஙக இரககற அநத இளம சகதர படய படலன கடச வர மகவம அரமயக உளளத. நன நசசயமக அத பரடடகறன. நமபததணடன இரவல வநத கணடரககயல, இநத இரவறக பரததமன இத வட சறநததர படல படமடயம எனற நன நனககவலல. 2 பததணட நம நலலபடயக ஆரமபததககணடரககறம எனபத பல கணபபடக

வெளிப்படுத்தின விசேஷம் 4 அதிகாரம் 1

60-1231ஜெபர்ஸன்வில் இந்தி901960-12-31

வெளிப்படுத்தின விசேஷம் 4 அதிகாரம் 1

60-1231ஜெபர்ஸன்வில் இந்தி901960-12-31

1 ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] …நானே…அது தான் அநேக ஜனங்களுடைய மனப்பான்மையாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். அங்கே இருக்கிற அந்த இளம் சகோதரி பாடிய பாடலின் கடைசி வரி மிகவும் அருமையாக உள்ளது. நான் நிச்சயமாக அதை பாராட்டுகிறேன். நாம்…புத்தாண்டின் இரவில் வந்து கொண்டிருக்கையில், இந்த இரவிற்கு பொருத்தமான இதை விட சிறந்ததொரு பாடலை பாடமுடியும் என்று நான் நினைக்கவில்லை. 2 புத்தாண்டை நாம் நல்லபடியாக ஆரம்பித்துக்கொண்டிருக்கிறோம் என்பது போல் காணப்படுகிறது; உ—ஊ, ஆண்டின் இந்த சமயத்தில் இண்டியானாவுக்கு உரித்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்றபடி, வெளியே பனி பெய்துகொண்டு, பனிநீர் தெளித்துக் கொண்டும் இருக்கிறது, ஜார்ஜியாவிலிருந்து, ஒஹையோவிலிருந்து மக்களாகிய நீங்கள் வந்துள்ளதை நான் காண்கிறேன். இப்பொழுது சகோதரன் டௌ, சகோதரி டௌ ஆகியோர் ஓஹையோவில் இதே போன்ற சீதோஷ்ண நிலை இருக்கிறது என்பதை அறிவீர்கள். ஆனால் நாம் அந்தவிதமாக எதுவுமில்லாமலிருக்கும் ஒரு பரம தேசத்திற்குப் போய்க்கொண்டு இருக்கிறோம். உ—ஊ. அதுதான் காரியம்.

23 இன்று புத்தாண்டுக்கு முந்திய இரவு வேளையாயிருக்கிறது. நிச்சயமாக ஒவ்வொருவரும் புத்தாண்டுக்காக ஒரு உறுதிமொழியை எழுதி வைக்கிறார்கள். புத்தாண்டுக்காக ஒரு உறுதி மொழியை நீங்கள் செய்யப்போகிறீர்கள், பிறகு, நாளைக்கு மறுநாள் அவையாவும் முறிக்கப்படும். எனவே ஒவ்வொரு ஆண்டும், நீங்கள் புதியதாக ஆரம்பிக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன் பிறகு அதற்கு அடுத்த நாள் காலையில் பழையபடி திரும்பிவிடுகிறீர்கள். 4 ஆனால் ஒரு காரியத்தை மாத்திரம் நான் கூற விரும்புகிறேன். அது, அப்போஸ்தலனாகிய பவுல், “பின்னானவைகளை மறந்து”, கடந்த காலத்தில் உள்ள என் அனைத்து தவறுகளையும், மற்றும் நான் செய்திட்ட அனைத்து காரியங்களையும் தள்ளிவிட்டு, “கிறிஸ்து இயேசுவுக்குள்…பரம அழைப்பின் பந்தய பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்று கூறியதைப் போல கூற விரும்புகிறேன். கடந்த ஆண்டில் உள்ள எனது பிழைகளும், என் ஜீவியத்தின் கடந்த பாகத்தைக் குறித்தும் நான் விசனமடைகிறேன். எனவே, பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருவதற்காக அவருடைய கிருபையை மாத்திரம் நான் தாழ்மையுடன் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நாம் யாவருடைய சாட்சியும் அந்தவிதமாகத் தான் இருக்கும் என்றும், அவ்விதமாகத்தான் நாம் யாவரும் உணருவோம் என்றும் நான் நிச்சயம் நம்புகிறேன்.

35 இன்று இரவில் கால நிலையானது மோசமாக இருப்பதற்காக வருந்துகிறேன். அதனால் ஜனங்கள் வரமுடியாமற் போயிற்று. நான் சகோதரன் நெவில் அவர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவர் இங்கே வரமுடியுமா இல்லையா என்பதை நான் அறியவில்லை. பிறகு சகோதரன் ஸ்கேக்ஸ் அவர்கள் வந்தார். அவர் மிகத் தொலைவிலுள்ள கென்டக்கியிலிருந்து வருகிறார். அங்கே பனிக்கட்டி மூன்று அடி உயரத்திற்கு அல்லது இன்னும் சற்று அதிகமாக பெய்திருக்கிறது. எனவே…அதாவது, “ஏறத்தாழ இங்குள்ளதைப் போலவே இருக்கிறது” என்று அவர் கூறினார். இருமுறை அவர் சென்று கொண்டிருந்த வாகனத்தை ஒரு விவசாயி பனியை விட்டு வெளியே தன்னுடைய இழுவை இயந்திர வாகனமான டிராக்டர் மூலம் இழுத்து வந்து மலையின் மேல் விட்டிருக்கிறார். எனவே, “நல்லது, பனிக்கட்டி இரண்டு அல்லது மூன்று அங்குலங்கள் உயரம் இருக்குமானால், அதைப்போல் இருக்குமளவும், நாங்கள் அதைப்பொருட்படுத்தமாட்டோம்” என்று எண்ணினேன். ஆனால் சாலைகள் வாகனங்கள் கடந்து செல்லத் தக்கதாகத்தான் உள்ளன. யாவரும் பிரயாணம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

46 இப்பொழுது நிச்சயமாக, இன்றிரவானது, வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருக்கிற பல்வேறு ஊழியக்காரர்கள் மூலமாக நாம் பிரசங்கம் கேட்க கூடியதான இரவாக இருக்கிறது. இன்றிரவில் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் ஒருவேளை நடு இரவு வரையிலும் வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அமர்ந்திருந்து, பழைய ஆண்டு கடந்து போகவும், புத்தாண்டு வருவதையும் கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்று நான் எண்ணுகிறேன். வழக்கமாக அவர்கள் பீடத்தண்டையில் கூடி வந்து ஜெபித்து, தேவனுக்கென்று தங்களுடைய புதிய உறுதிமொழிகளை செய்து, ஏற்கனவே செய்த தங்களுடைய—தங்களுடைய உறுதிமொழிகளை புதுப்பித்துகொள்வார்கள். 7 நான் சகோதரன் நெவில் அவர்களிடம் கூறினேன்…அவர் வருகிறாரா என்பதைப் பற்றி அறிவதற்காக நான் அவரை தொலைபேசியின் மூலம் அழைத்துப் பேசினேன். “அவர் வராவிடில், என்னால் முடிந்தவரை சிறப்பான அளவுக்கு தொடர்ந்து ஆராதனையை நடத்திச் செல்வேன். பின்பு காலையிலும் அவரால் வர இயலாமற்போனால், அவர் இல்லாத அவ்வேளையில் நான் முடிந்த வரை நல்ல முறையில் தொடர்ந்து நடத்திச் செல்வேன்” என்று நான் கூறினேன். இன்றிரவில் பதினைந்து நிமிட நேரத்திற்கு மட்டுமே உள்ள ஒரு செய்தியை அளிக்க நான் முயற்சி செய்யப் போகிறதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று நான் அவரிடம் கூறினேன். இங்கே உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்கிற இன்னும் பல்வேறு ஊழியக்காரர்களை நாம் காண்கிறோம். 8 எனவே நான்…இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்திலிருந்து தொடர்ந்து பிரசங்கிக்கும்படி 4ம் அதிகாரத்தை இப்பொழுது எடுத்துக் கொண்டு ஆரம்பிப்பேன் என்று எண்ணினேன். இந்த முறை நாம் இதை முழுவதும் பார்க்க முடியவில்லையென்றால், அடுத்த முறை நாம் தொடர்ந்து பார்ப்போம். அதன்பிறகு நாம் 5ம் அதிகாரத்திற்கும், பின்பு 6ம் அதிகாரத்திற்கும், பின்பு இன்னும் நம்மால் முடிந்த வரையிலும் போவோம். அவைகளினூடாக சென்று பார்க்க கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக.

59 நாம் ஆரம்பிப்பதற்கு முன்னர், ஒரு காரியத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். சற்று நேரத்திற்கு முன்பாக சகோதரன் ட்ரம்மாண்ட் தாம்ஸ் அவர்களும், அவரது மனைவியும் வருகை புரிந்திருக்கின்றனர். இங்கே இன்றிரவில் அச்சகோதரியின் தாயும் தந்தையும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது தான் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்திருக்கிறார்கள். அங்கே அவர்கள் மகத்தான ஆத்தும ஆதாயக் கூட்டங்களையும், தெய்வீக சுகமளித்தல் ஆராதனைகளையும் நடத்திவிட்டு வந்திருக்கிறார்கள். இந்த இளம் பெண்மணி தன்னுடைய பாட்டியின் ஸ்தானத்தை அன்றொரு நாளில் எடுத்துக்கொண்டு சிறைகளில் கூட்டங்கள் நடத்தி வந்தாள். பாவிகள் கர்த்தரிடம் வந்தார்கள். அந்த இளம் தம்பதியினரை தேவன் எவ்வாறு நடத்தி வருகிறார் என்பது எவ்வளவு அற்புதமாயிருக்கிறது. அவர்கள் இப்பொழுது அமெரிக்காவில், சிறிது காலம் சிவிசேஷ ஊழியத்தினிமித்தம் இருக்கிறார்கள். 10 மேய்ப்பர்கள் யாராவது விரும்பினால்…நான் சகோதரன் ட்ரம்மாண்டுக்கு எழுத விரும்புகிறேன். ட்ரம்மாண்ட்…நான், ஆம், இப்பொழுது நான் அந்தப் பெயரை சற்று குழப்பி சொல்லிவிட்டேன். ஏன் அவர் ஒரு ஆங்கிலப் பெயரை தரித்துக் கொண்டு, அந்தப் பெயரை மறந்து விடக்கூடாதா? நாம் அவருக்கு ஒரு எண்ணைக் கொடுப்போம். நீங்கள் என்ன கூறிகிறீர்கள்? ஏனென்றால் எனக்கு சரியாக புரியவில்லை. நம்மில் பாதிபேருக்கு அந்தப் பெயர் வாயில் வராது என்று நான் நினைக்கிறேன். “ட்ராம்மாண்ட்”, அதுதான் சரியான உச்சரிப்பு என்று நான் எண்ணுகிறேன். மற்றும் சகோதரி சார்லெட் அவர்கள். உங்களில் யாராவது விரும்பினால், நீங்கள் அவர்களை உங்கள் சபையில் அழைத்து, பிரசங்கிக்கக் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

611 அந்தப் பெண்மணி, இந்த சகோதரி சார்லெட், அவள் ஒரு சிறுமி. அவள் சற்று முன்னதாக மேடாவிடம் ஆப்பிரிக்காவில் அவளுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பற்றிய சாட்சியைக் கூறிக்கொண்டிருந்தாள். நான் அதை உங்களுக்கு கூற…பில்லி, அது முன் காலங்களை மீண்டும் நினைவுபடுத்தியது, அது ஆப்பிரிக்கா மொழியைப் பேசியதுபோல் இருந்தது. எனவே அங்கேயும் இங்குள்ளது போன்றே போராட்டமானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 12 யாராவது சகோதரன் ட்ரம்மாண்ட் அவர்களையும், அவரது மனைவி சகோதரி சார்லெட்டையும், தங்கள் சபையில் விசேஷித்த கூட்டங்களுக்காக அழைக்க விரும்பினால், நீங்கள் சகோதரன் டோனி ஸேபில் அவர்களுக்கு, எம்எல்ரோஸ் 7-3945-ல் அழைத்துத் தெரியப்படுத்துங்கள். ஊழியக்காரராகிய நீங்கள் யாராவது அதைக் குறித்துக் கொள்ள விரும்பினால் அப்படியே செய்யுங்கள். நான் நிச்சயமாக இச்சகோதரனை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். ஏனெனில் அவர் ஒரு நல்ல பிரசங்கியார் ஆவார். அவர் ஒரு உத்தமமான இளைஞர், அவருக்கு உற்சாகமூட்டி நல்ல ஆரம்பத்தை கொடுப்பது அவருக்கு அவசியமாயிருக்கிறது. அவர் அஞ்சாமை கொண்ட ஒரு நல்ல வாலிபர், எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். இப்பொழுது நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், எம்எல்ரோஸ் எண் 7-3945. இங்கே அவர்களுடைய முகவரி அச்சிட்ட சிறு அட்டையை நான் வைக்கவுள்ளேன். இந்த எண்ணை குறித்துக் கொள்ள உங்களுக்கு இயலாமற்போனால், இன்றிரவில் வெவ்வேறு ஆராதனைகளுக்கு இடையில் வரும் இடைவேளை நேரத்தில் நீங்கள் இங்கே வந்து அந்த அட்டையை எடுத்துக் குறித்துக் கொள்ளலாம். அவர்களுடைய எண்ணைக் குறித்துக் கொண்டு, அவர்களை தொலைபேசியில் அழைத்து, உங்களுடைய சபைகளில் ஒரு கூட்டத்திற்காக அவர்களை அழைக்க விரும்பினால், அதைத் தெரியப்படுத்தலாம். அல்லது உங்களுக்குத் தெரிந்த யாராவது அவர்களை அழைக்க விரும்புவார்கள் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீங்களும் தெரியப்படுத்தலாம். ஏனெனில் அவர்கள் அமெரிக்கா எங்கிலும் ஊழியம் செய்து கொண்டு வருகின்றனர். 13 அது குறிப்பிடத்தக்கதாக இருக்கவில்லையா? ஆப்பிரிக்கா தேசமானது, இங்கே அமெரிக்காவுக்கு மிஷனரிகளை அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளது. இத்தேசம் ஆப்பிரிக்காவை விட மோசமடைந்துவிட்டபடியினால், இங்கேதான் அவர்கள் தேவையாயிருக்கின்றனர்.

714 எனவே எத்தனை பேர்கள் இன்னொரு ஆண்டு முழுவதும் கர்த்தர் உங்களை பாதுகாத்தார் என்பதற்காக சந்தோஷமாயிருக்கிறீர்கள்? இங்கே, நாம்தானே, பாதையின் முடிவுக்கு வந்திருக்கிறோம். தேவன்தாமே நம்முடைய எல்லா பாவங்களையும், குறைகளையும் மன்னிக்கும்படியாக ஜெபிக்கிறேன். 15 இதோ இந்த காரியத்தை, நான் இப்பொழுது பிரசங்கிக்கத் தொடங்கு முன்னர், கூற விரும்புகிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும், மிகவும் வெற்றிகரமான, ஆசீர்வாதமான, ஆரோக்கியமான ஆண்டாக இப்புத்தாண்டு அமைய வேண்டுமென்று நான் வாழ்த்துகிறேன். தேவன் உங்களோடு இருப்பாராக! நீங்கள் தாமே சரீரப்பிரகாரமாவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும், பண காரியங்களிலும், பொருள் ரீதியாகவும் வளருவீர்களாக. உங்கள் மேல் தேவன் கொண்டுவரக் கூடிய ஒவ்வொருக்காரியத்தையும் அவர் கொண்டுவரும்படி நான் ஜெபிக்கிறேன்.

816 இப்பொழுது நானும்கூட ஒரு புதிய ஆண்டை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். எதிர்வரும் காலத்தில் என்ன இருக்கிறது என்பதை தேவன் மாத்திரமே அறிவார். இப்பொழுது தானே நம்முடைய தீர்மானங்களெல்லாம் நாம் செய்தாக வேண்டும். நாம் நம்முடைய எல்லாம் பணிகளையும் பெற்றுள்ளோம். சகோதரன் ஜிம், உலகளாவிய, சர்வதேச அளவிலிருந்து வரும் அழைப்புகளுக்காக, கர்த்தர் நம்மை எங்கே நடத்துவார் என்பதைப் பார்த்துக் கொண்டு, அதற்காக எல்லாவிதத்திலும் களத்தில் நிற்பதற்கான ஆயத்தங்கள் ஆயத்தமாக உள்ளன. நான் தவறாக நடந்து விடாதபடி தடுத்தாட்கொள்ள தேவன் எனக்கு உதவி செய்யும்படி நீங்கள் முழு இருதயத்தோடு ஜெபிப்பதற்காக உங்கள் ஜெபங்களை நான் நிச்சயமாக நாடுகிறேன். நான்—நான்…எந்தவொரு விஷயத்திலும் நான் விரும்புவதெல்லாம், உத்தமமாய் இருக்க வேண்டுவதையும், ஒருபோதும் தவறாக வழி நடத்தப்பட்டு விடாதபடி இருக்கவும்தான். இப்பொழுது, எனக்கு ஒரு நல்ல ஆண்டு உண்டாயிருந்தது.

917 அநேக சமயங்களில் ஜனங்கள் தவறாக புரிந்துகொள்கின்றனர். எனவே அவர்கள், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீங்கள்—நீங்கள் முன்பு வழக்கமாக போகிற இடங்களுக்கெல்லாம், மற்ற ஊழியக்காரர்கள் செய்வது போல், நீங்கள் போகிறதில்லையே” என்று கூறுகிறார்கள். ஒரு பாடத்தை நான்—நான் கற்றுக்கொண்டேன். நான் வேதத்திலிருந்தும், நமது கர்த்தரிடத்திலிருந்தும் கற்றுக்கொண்ட பாடமானது, இயேசுவானவர் தன்னை யாவரும் காண்பதற்குரிய காட்சிப் பொருளாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பது தான். அந்த விஷயத்தில் அவர்—அவர் குறைவுபட்டார். அவரிடத்தில், யாவரும் தன்னைக் காட்சியாக காணவேண்டும் என்ற தன்மையை கொண்டிருக்கவில்லை. பாருங்கள், அவர்—அவர் ஒரு காட்சிப்பொருளாக காட்டுபவராயிருக்கவில்லை. அவருடைய சீஷர்களும் அப்படிப்பட்டவர்களாக இருக்கவில்லை என்றே நான் நம்புகிறேன். ஒருபொழுதும் அவர்கள் தங்களை காட்சிப் பொருளாக, காட்சிக்குரிய மனிதர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை. 18 அங்கே தான் நம்மில் அநேகர் இன்றைக்கு படகைத் தவற விட்டுவிட்டோம். (ஒருவேளை இது என்னுடைய சொந்த அபிப்பிராயமாக இருக்கக்கூடும்.) நாம் யாவற்றையும் பற்றி பெரிதாக தம்பட்ட மடித்துக் கொள்கிறோம். ஏன் என்பதை நீங்களே அறிவீர்கள், அது பரிசுத்தமானதாயிருப்பதைவிட பெரிதாக காட்சிக்குரியதாக தம்பட்ட மடித்துக் கொள்ளுதலாகவே இருக்கிறது என்றே நான் அதைக் கருதுகிறேன்.

1019 கர்த்தருடைய முதலாம் வருகையில், அவரை உண்மையாகவே ஏற்றுக்கொண்டவர்களை கவனித்துப் பார்த்தீர்களா? அதில் சிமியோனும் ஒருவன்; அவன் கர்த்தருடைய வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். ஒருவரும் அவனைக் குறித்து ஒன்றும் கேள்விப்பட்டிருக்கவேயில்லை. ஆலயத்தில் இருந்த குருடான அன்னாள், வனாந்திரத்தில் இருந்த யோவான் ஸ்நானன் ஆகியோரும். இவர்கள் எல்லாம்… 20 யோவான் ஸ்நானன் தனக்கு ஒன்பது வயதானபோது வனாந்திரத்திற்குள் சென்று விட்டு, அவன் முப்பது வயதாகும் வரையிலும் மீண்டும் வெளியே தோன்றவேயில்லை. அதுவரையிலும் அவன் வனந்தரத்திலேயே இருந்து வந்தான். அவ்விதமான மனிதர், இரகசியமாக விசுவாசித்து, தாழ்மையாக இருந்து கொண்டு, கர்த்தருடைய வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருபோதும் தங்களுடைய கூட்டங்களைப் பற்றி பெரிதாக தம்பட்டமடித்துக்கொண்டு, அதைப் பற்றி பெரிய விளம்பரங்களைச் செய்து, (“இந்த மணிநேரம்! இந்த மணி வேளை!”) என்றால்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருக்கவில்லை. அந்த விதமாக செய்திட விரும்புபவர்களுக்கு அதெல்லாம் சரிதான். ஆனால் எனக்கோ, அது கிறிஸ்துவுக்கேற்ற செய்கையாகத் தென்படவில்லை.

1121 அவருடைய சகோதரர்கள் அவரிடம் ஒரு சமயம் கூறியதை நான் அறிவேன். அவர்கள் அவரிடம், “நீர் இந்த அற்புத அடையாளங்களைச் செய்கிறீர், நீர் ஏன் எருசலேமுக்கு போய் வெளியரங்கமாக அவைகளைச் செய்யக்கூடாது? நாங்கள் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போகிறோம், நீரும் அங்கே வந்து, பிரதான ஆசாரியனான காய்பாவை அழைத்து, மற்றும் அவரைச் சேர்ந்தவர்களையும் வரவழைத்து, அங்கே அவர்களுக்கு முன்பாக இவைகளையெல்லாம் ஏன் செய்யக்கூடாது? அவர்களும் அறிந்து கொள்ளட்டுமே! அவர்களுக்கு முன்பாக இவைகளைச் செய்யும், அப்பொழுது அவர்களும் உம்முடைய கிரியைகளை அறிந்து கொள்வார்களே. இப்பொழுது, பாரும், நீரோ ஒரு கூட்ட மீனவர்களோடும் மற்றூம் இன்னபிற மக்களோடும் ஆற்றங்கரையில் உமது நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீரே, அவர்களெல்லாரும் கீழ்த்தரமான மக்களாயிற்றே! நீர் ஏன் அங்கே போய் இவைகளைச் செய்யக்கூடாது? உலகம் அதைப் பார்க்கட்டுமே” என்றார்கள். பார்த்தீர்களா? 22 இயேசுவோ, “என் வேளை இன்னும் வரவில்லை. உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது” என்று கூறினார். உ—ஊ. புரிகிறதா?

1223 யோவான் ஒரு சமயம்…யோவான் ஸ்நானன் அவனது வருகையைக் குறித்து வேதவாக்கியங்கள் முன்னுரைத்துள்ளன. “அவன் வரும்பொழுது…” ஏன், ஏசாயா கூட யோவான் ஸ்நானன் பிறப்பதற்கு எழுநூற்றுப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே “வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று” என்று முன்னுரைத்திருக்கிறான். “மலைகளெல்லாம் ஆட்டுக்குட்டிகளைப் போல் துள்ளியது, இலைகளெல்லாம் கை கொட்டின. பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு சகல மலையும் குன்றும், தாழ்த்தப்பட்டு” என்று ஏசாயா கூறியுள்ளான். 24 இப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்களெல்லாம் கூறப்பட்டுள்ளன! அந்த நாட்களின் ஊழியக்காரர்களெல்லாம் எப்படியிருந்தார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? இத்தீர்க்கதரிசன வாக்கியங்களை படித்த மக்கள், இவ்வாறு கூறியிருக்கக்கூடும்: “என்னே! அந்த மகத்தான தீர்க்கதரிசி வரும்போது, யாவரும் அவரை அறிந்து கொள்ளுவார்கள். தேவன் ஆகாயத்தில் வரவேற்புக் கம்பளம் விரித்து, பரலோகத்தின் நடைக்கூடத்தை தேவன் முன்னுக்கு நீட்டி, அதிலிருந்து அக்கினி இரதத்தை தோன்றச் செய்து அதை கீழே இறங்கப் பண்ணி, ஒரு தூதர்களின் கூட்டம் அவனை பூமிக்கு பாதுகாவலாக கொண்டுவந்து சேர்க்கும்” என்று கூறியிருப்பார்கள். 25 ஆனால், அவன் வந்தபொழுதோ, அவன் கவர்ச்சியற்ற முகத்தையுடைய பிரசங்கியாக, ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு, இடுப்பில் ஒரு தோல்துண்டு கச்சையாக உடுத்திக் கொண்டவனாக வந்தான். ஒருவேளை குளித்திருக்கவே மாட்டான் போலும். ஒருவேளை மூன்று மாதத்திற்கொரு முறை அல்லது நான்கு மாதத்திற்கொரு முறையோ தான் குளித்திருக்கக்கூடும். அவன் வனாந்திரத்திலிருந்து வெளியே வந்து, முழங்கால் அளவு சகதியாக இருந்த இடத்தில் நின்று கொண்டு, “மனந்திரும்புங்கள், பரலோக இராஜ்யம் சமீபமாயிருக்கிறது” என்று பிரசங்கித்தான். அவன் ஒருபோதும் பெருநகரங்களுக்குச் செல்லவேயில்லை. யாராவது அவன் பிரசங்கிப்பதைக் கேட்க விரும்பினால், அதைக் கேட்க விரும்புகிறவர்கள், அதற்காக அவர்கள் யோர்தான் நதிக்கரைக்குத்தான் வரவேண்டும். அவன் என்ன செய்தான்? அவன் தேசத்தை அசைத்தான். அவன் உலகை அசைத்தான்.

1326 அங்கே ஏற்பட்டுக் கொண்டிருந்த ஒரு அசைவைக் குறித்து மக்களோ ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. இயேசு வந்தபொழுது, அவர் ஒருபோதும் பெரும்புள்ளிகள் நடுவில் தன்னை காண்பித்துக் கொள்ளவில்லை. அவர் தமக்கு சொந்தமானவர்களிடத்திற்கே வந்தார். அவர் வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தவர்களிடம் மட்டுமே வந்தார். அங்கே தான் அசைவு வருகிறது. இன்றைக்கு அவர் அதைத்தான் செய்கிறார். தேவனால் அழைக்கப்பட்டவர்களிடம் தான் பரிசுத்த ஆவியானவர் வருகிறார். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நடுவில் மகத்தானதொரு அசைவானது உண்டாயிருக்கிறது. வல்லமையான காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, ஆனால் உலகமோ அதைப் பற்றி ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. 27 அவர்கள் இந்த எல்லாவிதமான பெரிய சொல்வளமான நயமுள்ளதான காரியங்களையே பற்றி சிந்திக்கிறார்கள். உலகளாவிய வானொலி, தொலைக்காட்சி, ஒலி ஒளிபரப்புகளும், பலகோடி டாலர்கள் மதிப்புள்ள கட்டிடங்கள் மற்றும் இவ்விதமான காரியங்களையே அவர்கள் பெரிதாக நினைக்கிறார்கள். அவை தேவனுடைய பார்வையில் மதியீனமாக இருக்கின்றன. தேவன் இவ்வாறான பெரிய காரியங்களைப் பார்க்கிறதில்லை. மனிதன் எதை “மதியீனம்” என்று அழைக்கிறானோ, அதை தேவன் “மகத்தானது” என்று அழைக்கிறார். மனிதன் எதை “மகத்தானது” என்று அழைக்கிறானோ, தேவன் அதை “மதியீனம்” என்று அழைக்கிறார். “பைத்தியமாய்த் தோன்றுகிற பிரசங்கத்தினாலே, இழக்கபட்டவர்களை இரட்சிப்பது தேவனுக்குப் பிரியமாயிருந்தது”.

1428 இப்பொழுது யோவானைப் பற்றி அவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? “அங்கே ஒரு மதவெறியன் இருக்கிறான், கவர்ச்சியற்ற முகத்தோற்றங்கொண்ட நபராய் காணப்படுகிறவன், ஒரு ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு வனாந்திரத்திலிருந்து வெளியே வந்துள்ளான். ஏன் அவன் சேற்றில் நின்று கொண்டு, வெறுங்காலோடு, அங்கே யோர்தானின் கரையில் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான். யாராவது அவன் பேசுவதை போய் கேட்பார்களா?” என்று சொல்லியிருப்பார்கள். 29 இயேசு வந்தபொழுது, “ஒரு மேசியா மாட்டுத்தொழுவத்தில் வைக்கோல் குவியல் மேல், மாடுகள் படுத்துக் கொண்டிருக்கும் இடத்தில் பிறந்திருக்கிறாரா? முறைகேடான ஒரு தாயாரா அவருக்கு உண்டு என்று கூறுகிறாய், அவரது தாயும் தந்தையும் விவாகம் செய்து கொள்ளும் முன்பே, அவள் தாயாகி விட்டாளே? அவர் முறைகேடாகப் பிறந்தாரே? அந்த நபரா?” என்றெல்லாம் கேட்டிருப்பார்கள். ஓ, என்னே! பார்த்தீர்களா? ஆனால் அவரோ மகத்தானவராக இருந்தார். ஆனால் அவர்களோ அதை அறியவில்லை. புரிகிறதா? அவர்கள் அவரை அறியவில்லை. 30 அதேபோல்தான், இன்றைய சுவிசேஷமும் “மகத்தானதாக” இருக்கிறது. சுவிசேஷமானது இதற்கு முன்பு நடந்திராதபடி அந்தவிதமான அசைவைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது, ஆனால் அது மீதியாயிருப்பவர்களிடத்தில் அசைவைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அது உண்மை, அது அவர்களை ஆயத்தமாக்கிக்கொண்டிருக்கிறது.

1531 “அவர் தனக்கு சொந்தமானவர்களிடத்தில் வந்தார். அவருக்குச் சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” அவர் சீஷர்களிடம், “புறஜாதியாரிடத்தில் போகாதிருங்கள், காணாமற்போன இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கே போங்கள். நீங்கள் போகையில் உங்களை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். ஒரு பட்டணத்திற்கு நீங்கள் போகையில், அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ளாவிடில், உங்கள் பாதங்களிலுள்ள தூசியை உதறி விட்டு, அங்கிருந்து புறப்பட்டுப் போங்கள். நியாயத்தீர்ப்பின் நாளிலே அந்தப்பட்டணத்திற்கு நேரிடுவதைப் பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறினார். அம்மனிதர்களை ஏற்றுக் கொள்ளாத நகரங்கள் ஒவ்வொன்றும் இன்றைக்கு சாம்பலாய் கிடக்கின்றன. அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் ஒவ்வொன்றும் ஒரு சிகரத்தைப்போல இன்னும் நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன. அது உண்மையே. பாருங்கள். அவர் பதிலளிப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. ஆனால், தேவன் எப்படியும் பதிலளிக்கிறார். கவலை வேண்டாம். நான் இன்னமும் அந்த ஒன்றை ஆரம்பிக்கவில்லை, நான் ஒருபோதும் வெளிப்படுத்தின விசேஷத்திற்குள் போகவே மாட்டேன் என்பது போலுள்ளது. ஓ! ஓ நான் அவரைக் கண்டு, அவரது முகத்தை நோக்கிட வாஞ்சிக்கிறேன், அங்கே அவரது இரட்சிப்பின் கிருபையைப் பற்றி என்றென்றும் பாடுவேன்; மகிமையின் வீதிகளில் நான் என்னுடைய சத்தத்தை உயர்த்திடட்டும்; அப்பொழுது கவலைகள் யாவும் தீரும்போது, பரம வீட்டில் நீடித்திருந்து என்றென்றுமாய் மகிழ்வேன்.

1632 நான் அதை விரும்புகிறேன். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. நீங்கள் அதை செய்வதற்கு முன்பாக எழும்பி நிற்க விரும்புகிறீர்களா? நான்—நான் நினைக்கிறேன்…வேதம், “நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, மன்னியுங்கள்” என்று உரைத்துள்ளது. இங்கே எத்தனை பேர்களுக்கு ஒரு ஜெப விண்ணப்பம் உள்ளதோ, நீங்கள் கைகளை உயர்த்திக் காட்டுவதின் மூலம் அதைத் தெரியப்படுத்துவீர்களா? தேவன் பார்க்கிறார், அவர் அது என்னை என்பதைப் பற்றி யாவையும் அறிவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1733 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் உம்முடைய தெய்வீக பரிசுத்தத்தைக் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அணுகுகிக்கொண்டிருக்கிறோம். “இயேசு” என்ற நாமம் சகலத்திலும் போதுமானதாக இங்கே மனிதர்களுக்குள் அளிக்கப்பட்டு, பூலோகத்திலும் பரலோகத்திலும் உள்ள குடும்பங்களுக்கு அந்நாமமே சூட்டப்பட்டுள்ளது. 34 கர்த்தாவே, எங்களுடைய நன்றி செலுத்துதலை நீர் ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்று நாங்கள் ஜெபிக்கிறோம். முதலாவதாக, துவக்கமாக, நாங்கள் இன்றிரவு ஆராதனையில் உமக்கு துதி செலுத்திக் கொண்டும், உம்முடைய வார்த்தையை ஆராய்ந்து கொண்டு, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதின் அர்த்தத்தை அறிந்து கொண்டும், இப்படியாக இந்த மரித்துக்கொண்டிருக்கும் ஆண்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருப்பதற்குரிய எத்தையோ காரியங்களை எங்களால் தாளில் எழுதிட முடியுமே! சிறு சிறு ஆபத்துக்களில் நாங்கள் தப்பியது போன்ற காரியங்கள், இந்த கடந்து செல்லும் ஆண்டில் எங்களுக்கு இருந்தன. நீர் மாத்திரம் எங்களோடு இருந்திராடில் சாத்தான் அவ்வேளைகளில் எங்கள் ஜீவனை திக்கு முக்காடச் செய்து அழித்திருப்பான். இதனால்தான் எங்களால் தொடர்ந்து சென்று கொண்டிருக்க முடிகிறது. கர்த்தாவே நாங்கள் இவ்வுலகில் பிறந்து வளர்க்கப்பட்டதெல்லாம் உம்மை கனம் பண்ணவும் மகிமைப்படுத்தவும் மாத்திரமே என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 35 பிதாவே, எங்கள் வாழ்க்கைப் பயணத்தின் நெடுக நாங்கள் செய்துள்ள ஒவ்வொரு மீறுதல்களையும், ஒவ்வொரு பிழையையும் நீர் மன்னிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்களுடைய பிழைகளை நாங்கள் அறிக்கையிடும்போது, அவைகள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் மறதிக்கடலில் மீண்டும் ஒருபோதும் தோண்டி எடுக்கக்கூடாதபடி புதைக்கப்பட்டு நாங்கள் அவைகளை மறந்து, இப்பொழுது பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக பரிபூரண மனிதனாகிய கிறிஸ்து இயேசுவாகிய இலக்கை நோக்கி நாங்கள் தொடருவோமாக. பிதாவே, இதை இன்றிரவே எங்களுக்குச் செய்தருளும்.

1836 உம்முடைய ஊழியக்காரர்கள் பேசும்பொழுது, அவர்கள் ஒவ்வொருவரையும், நீர் ஜீவனின் ஆவியால் அபிஷேகிக்க, அவர்கள் இது வரையிலும் பிரசங்கித்திராத வண்ணம் இன்றிரவில் சபையில் செய்திகளை கொண்டு வந்து பிரசங்கிப்பார்களாக. 37 இச்சிறிய கூரையின் கீழாக நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். கர்த்தாவே, அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். நாங்கள் அமருவதற்காக எங்களுக்கு அவசியம் தேவைப்படுகிற அனலுண்டாக்கும் அக்கினி உண்டாயிருப்பதற்காகவும், எங்கள் தலைக்கு மேல் அமைந்திருக்கிற கூரைக்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 38 எங்களுடைய பொக்கிஷங்கள் இவ்வுலகில் இல்லை. வரப்போகிற உலகில் அவைகள் உள்ளன. தேவனே, அவைகளை நாங்கள் அங்கே தான் சேர்ந்து வைக்கிறோம். அங்கே திருடன் கன்னமிட்டு திருடுவதில்லை. பூச்சி அவைகளை அரிக்கிறதுமில்லை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், ஏனெனில் எங்களுடைய பொக்கிஷங்களெல்லாம் நித்திய ஜீவனாயிருக்கிறது. பிதாவே, எங்களுடைய ஜீவியகாலம் முழுவதும் அவைகளை நாங்கள் போற்றிப் பேணும்படி நீர் அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 39 தகுதியுள்ள ஊழியக்காரர்களாக எங்களை ஆக்கியருளும். கர்த்தாவே கடந்த காலத்தில் எங்களிடத்திலிருந்த எல்லா பொல்லாங்கையும் எடுத்துப்போடும். நாங்கள் உமக்கு முன்பாக தாழ்மையுள்ளவர்களாயும் இனிமையானவர்களாயும் இருக்கும்படியாக, எங்கள் ஜீவியத்தை விட்டு எல்லா பகைமை, எல்லா கசப்புணர்ச்சி என்ற வேர்களையும் அகற்றியருளும், கர்த்தாவே. இதை அளித்தருளும், கர்த்தாவே. வரப்போகும் ஆண்டு, இதுவரையிலும் இருந்த ஆண்டுகளை விட மேலாக, மகத்தானதாக எங்களுக்கு இருக்கட்டும். அதை அளித்தருளும். மேற்கொண்டு உம்முடைய செய்திகளுக்காக நாங்கள் காத்திருக்கையில், இன்றிரவு உம்முடைய வார்த்தையை இப்பொழுது எங்களுக்கு தந்தருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம்.

1940 இப்பொழுது இங்கிருந்து கொண்டு, அங்குள்ள அந்த கடிகாரத்தைப் பார்ப்பது கடினமாய் எனக்கு உள்ளது. நான் என்னுடைய சகோதரர்களை காத்திருக்க வைக்க விரும்பவில்லை. எனவே நான் ஆராதனையின் இந்த பாகத்தை முடிந்த அளவு விரைவாக முடிக்க முயற்சிப்பேன். ஒரு வேளை நம்மால் இதை முடிக்க முடியவில்லையெனில், நாளை காலை, கர்த்தருக்கு சித்தமானால், இதைத் தொடர்ந்து பார்க்க முயற்சிப்போம். அதன் பிறகும் சகோதரன் நெவில் அவர்கள் வரவில்லையெனில், அல்லது என்னவானாலும், அப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால் ஞாயிறு வேதபாட பற்றி ஆராதனையை இங்கிருந்தே நான் தொடர்ந்து நடத்த முயற்சிப்பேன்.

2041 இப்பொழுது, இப்பொழுது நீங்கள் மறக்க வேண்டாம்: உயர் ஸ்தலத்தை போய்ச்சேர, ஜெபி, ஜெபி, அது ஒன்றே வழியாம்; ஜெபி, ஜெபி, விசுவாச ஜெபமே தேவாசீர்வாதங்களை கொண்டு வரும். 42 நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அது ஒன்றே. நாம் அதை சேர்ந்து பாடுவோம். இது இப்பொழுது புதிய வருடத்தினுடையதாய் உள்ளது. நமக்கு ஏராளமான நேரம் இருக்கிறது. உயர் ஸ்தலத்தில் போய்ச்சேர்ந்திட நாம் ஜெபிப்போம், ஜெபிப்போம் அது ஒன்றே வழியாம்; ஜெபியுங்கள், ஜெபியுங்கள் விசுவாச ஜெபமே தேவாசீர்வாதங்களை கொண்டு வரும். 43 எனவே விசுவாச ஜெபமே தேவ ஆசீர்வாதங்களை கொண்டு வருமென்றால், நாம் தொடர்ந்து ஜெபிப்போமாக. இன்றிரவு நாம் மிகவும் சந்தோஷமாயிருக்கிறோம். ஏனெனில் தேவனுடைய இராஜ்ஜியத்தில், கடந்த ஆண்டில் காணாத புதியவர்கள் நமக்கு இப்பொழுது இருக்கிறார்கள். எப்பொழுதும், இன்னும் அதிகதிகமானவர்கள் சேர்க்கப்படட்டும் என்று நான் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். மறுபக்கத்தில் எப்படியிருக்கும் என்பதைப்பற்றி பாதி கூட நமக்கு ஒரு போதும் கூறப்படவில்லை.

2144 நாம் இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் 4ம் அதிகாரத்திற்கு திருப்புவோம். யாருக்காவது ஒரு வேதாகமம் தேவையா? வசனங்கள் வாசிக்கையில் நீங்கள் அதை பின் தொடர்ந்து பார்க்க விரும்பினால், நாங்கள் இங்கே சில வேதாகமங்களை வைத்துள்ளோம். இப்பொழுது வாயிற்காப்போனில், ஒருவர் இங்கே வரட்டும். இங்கே நமக்கு வேதாகமங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அறங்காவலர்களில் ஒருவர், அல்லது வாயிற்காப்போன் அல்லது யாராவது ஒருவர் உடனே இங்கே வாருங்கள். சகோதரன் சேபிள்! இன்னும் ஒருவர் கூட வரட்டும். நீங்கள் இரு பக்கங்களிலும் கொடுக்க விரும்பினால், அப்படியே நடுவிலுள்ள நடைபாதை வழியாக கடைசிவரை செல்லலாம். யாருக்காவது ஒரு வேதாகமம் எங்களோடு வேதவசனங்களை தொடர்ந்து பார்க்க தேவைப்பட்டால், தேவைப்படுகிறவர்களுக்கு அதைக் கொடுங்கள்.

22இப்பொழுது வெளிப்படுத்தின் விசேஷம் 4ம் அதிகாரத்திற்கு நீங்கள் திருப்பும்படி நாங்கள் விரும்புகிறோம். 45 இப்பொழுது பின்னால் அமர்ந்திருக்கிறவர்கள் இங்கே முன்னால் வந்து உட்கார விரும்பினால், நீங்கள் முன்னுக்கு வந்து உட்காருவதற்காக இன்றிரவில் ஏராளமான இடம் இருக்கிறது. உங்களுக்கு வசதியானபடி உட்காருங்கள், பாடத்தில் கவனம் செலுத்துங்கள், நாம் கூடி வந்திருக்கிற இத்தருணத்தில் நமது பாடத்தை படித்து ஆராய எனக்கு உதவி செய்யுங்கள். இங்கே இருக்கைகள் உள்ளன, ஒரு தம்பதி வருவதை நான் காண்கிறேன். இந்த இடத்தில் இரு இருக்கைகள் உள்ளன. ஒருவருக்கு இங்கே ஒரு இருக்கை உள்ளது. இங்கே பின்னாலும் இருக்கைகள் உள்ளன. காற்றோட்டமியக்கும் கருவி (Blower) எங்கும் இயக்க போதுமானபடி இருக்கிறது என்று நான் கருதுகிறேன். 46 ஏழு சபைக்காலங்களின் பேரிலான நமது கடந்த எட்டு நாட்களின் பாடத்தை எத்தனைபேர் கேட்டு மகிழ்ந்தீர்கள்? உங்களுக்கு நன்றி. அது என்னை மிகவும் அருமையாக உணரச் செய்கிறது. ஏனெனில் நானே உண்மையாகவே மகத்தான ஆசீர்வாதத்தை அவைகளிலிருந்து பெற்றேன்.

2347 இப்பொழுது இன்றிரவில், 4-ம் அதிகாரத்தோடு நாம் முடித்துக் கொள்கிறோம். யோவான் லவோதிக்கேயா சபைக் காலத்தோடு பேசியிருக்கிறான். ஏனைய சபைக் காலங்களைக் காட்டிலும் லவோதிக்கேயா சபைக்காலம் தான் மிகவும் அதிகமாக குளறுபடி செய்கிறதாக இருக்கிறது. 48 லவோதிக்கேயா சபைக்காலத்தின் இறுதிப்பகுதியில், மிகவும் பரிதாபமானதொரு காரியத்தை நாம் பார்த்தோம்; அது இயேசு தமது சொந்த சபையிலிருந்து வெளியே தள்ளப்பட்டு, மீண்டும் உள்ளே வர முயற்சித்து கதவைத் தட்டுகிறார் என்பதேயாகும். அது பாவமுள்ளதாயிருக்கவில்லையா? நான் எப்போதும் வாசித்துள்ள வேத வாக்கியங்களிலேயே அதுதான் மிகவும் பரிதாபமான ஒன்றாயுள்ளது என்று நான் கருதுகிறேன். இயேசு மீண்டும் உள்ளே நுழைய தன் சொந்த வாசலுக்கு வெளியே நிற்பதும், அவரது சொந்த சபையே அவரை வெளியே தள்ளிவிட்டிருக்கிறதும், அவர் அவர்களை இரட்சிக்க வேண்டி மீண்டும் உள்ளே பிரவேசிக்க முயன்று கொண்டிருப்பதுமேயாகும். “எவனாவது கதவைத் திறந்தால், என்னுடைய சொந்த வீட்டிற்குள் நான் மீண்டும் திரும்ப என்னை விடட்டும், நான் அவனோடு போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.” அது துயரத்தை ஏற்படுத்துகிற காட்சியாக இருக்கவில்லையா? பரலோகத்தின் தேவனானவர் தனது சொந்த சபையாலேயே, அவர்களது சமயக் கோட்பாடுகளினாலும், ஸ்தாபனங்களாலும், அவர்கள் செய்யப்படும் விதத்தினாலும் வெளியே தள்ளப்பட்டிருக்கிறார், அவர்களுடைய சபையைவிட்டு…அவரை வெளியே தள்ளிவிட்டு, அவர்களுடைய சமயக் கோட்பாடுகளையே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

2449 இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளில் இருந்ததைப் போலவே அது இருக்கிறது. அவர்கள் ஒரு கொலைகாரனாகிய பரபாஸை ஏற்றுக்கொண்டு, இயேசுவை சிலுவையில் அறைந்தார்களே, அதுபோல் உள்ளது. தங்கள் மத்தியில், “ஒரு கொலையாளி” என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு கொலைகாரனை சுதந்திரமாக அவிழ்த்து விட்டனர். ஆனால் ஜீவனை அளிக்கக்கூடிய ஒரே ஒருவரான இயேசு கிறிஸ்துவையோ நிராகரித்தனர். 50 அதே காரியத்தைத் தான் ஒவ்வ்வொரு ஸ்தாபனமும், பெந்தேகோஸ்தே ஸ்தாபனமும் இன்றைக்குக் கொண்டிருகின்றன. அவர்கள் ஸ்தாபனத்தை ஸ்தாபித்துமே உடனடியாக அது மரித்து விடுகிறதை அவர்கள் காண்கின்றனர். (வரலாற்றின் பக்கங்களைப்) புரட்டிப் பார்த்தால் அங்கே ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட எந்தவொரு சபையும் உடனே மரித்ததைத்தவிர வேறு எதுவும் அதற்கு நடக்கவில்லை என்பதைக் காணலாம். அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட உடனேயே அவர்களை விட்டு அற்புதங்களும், எல்லா அடையாளங்களும், எல்லா வரங்களும் நீங்கிப் போயின. கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொண்டு, தங்களில் ஜீவனைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் பின்னுக்குத் திரும்பி, தங்கள் மத்தியில் மீண்டும் பரபாஸை அவிழ்த்து விட்டனர். அது மோசமான ஒன்றாக இருக்கவில்லையா? தேவன் தன் சபையை விட்டு வெளியே தள்ளப்பட்டிருப்பதும், அவர் வெளியே நின்று கொண்டு இக்கடைசி சபைக் காலத்தில் கதவை தட்டிக் கொண்டு, உள்ளே பிரவேசிக்க முயன்று கொண்டிருப்பதும் வியப்பொன்றுமில்லை.

2551 இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகமானது மூன்று பாகங்களாக பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் கண்டறிகிறோம். முதல் பாகமானது முதல் மூன்று அதிகாரங்களில் உள்ளது. அது சபையைக் குறித்தவையாகும். சபைகளின் தூதர்களுக்கு அளிக்கப்பட்ட செய்திகளாகும். அவைகளுக்குப் பின்பு அவள், 3-ம் அதிகாரத்தில் மறைந்து விடுகிறாள்; பின்பு 19- அதிகாரத்தில், தான் மீண்டும் தோன்றுகிற வரையிலும், இடையில் வேறு எங்கும் காணப்படவில்லை. அங்கே 19-ம் அதிகாரத்தில் தான் அவள் திரும்பி வருகிறாள். அதற்கிடைப்பட்ட காலத்தில் தேவன் யூதரோடு இடைபட்டுக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு, அப்பொழுதிலிருந்து, மகத்தான புதிய எருசலேம் நகரம் வருவதற்கும், இஸ்ரவேல் ஜனங்கள் முத்திரையிடப்படுவதற்கும் இடைப்பட்ட கடைசி காலமாக இருக்கிறது.

2652 எனவே இன்றிரவில் நான்…இதற்கு பிறகு, உடனே யோவான் பத்மு தீவில் கண்டான்… கடற்கரையிலிருந்து எவ்வளவு தூரத்தில் பத்மு தீவானது இருந்தது என்பதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? எவ்வளவு தூரத்தில் அது இருந்தது? கரையில் இருந்து முப்பது மைல்கள் தூரத்தில் இருந்தது, அது உண்மையே. பத்மு தீவின் சுற்றளவு எவ்வளவு தூரம்? அதன் புவியியல் அறிந்த சிலர் அதைப் பற்றி நினைவில் வைத்திருக்கிறீர்களா? அது பதினைந்து மைல்கள் சுற்றளவுள்ளதாக இருந்தது. அத்தீவை ரோமானியர்கள் குற்றவாளிகளை நாடு கடத்துவதற்காக பயன்படுத்தி, அங்கே சிறைக்கைதிளை வைத்திருந்தார்கள். யோவான் அத்தீவில் எதற்காக வைக்கப்பட்டிருந்தான்? அவன் அப்படி என்ன செய்துவிட்டான்? எதையாவது திருடிவிட்டானா? இல்லை. அவர்கள் அவனை அங்கே போட்டுவிட்டார்கள். ஏனெனில், அவர்களது பார்வையில், அவன் மக்களுக்கு தொந்தரவு செய்துவிட்டதாகவும், ஏதோ தீமையான காரியத்தைச் செய்து விட்டதாகவும் கருதினார்கள். அவன் அப்படியெதுவும் செய்து விடவில்லை. அப்படியெனில், அவன் எதற்காக அங்கே வைக்கப்பட்டிருந்தான்? தேவனுடைய வார்த்தையினிமித்தமும், தன்னுடைய சாட்சியினிமித்தமும், சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததினிமித்தமும் தான் அவன் அங்கே வைக்கப்பட்டிருந்தான்.

2753 ஒரு கிறிஸ்தவனுக்கு மிகச் சிறப்பாதொன்று சம்பவிக்க வேண்டுமெனில், இது மாதிரியான அனுபவம் இல்லாமல் அது நடக்க முடியுமா? இல்லை, இல்லை, இல்லை. எனவே, தேவன் யோவானை தனியே அத்தீவில் போய் இருக்கும்படி செய்தது எதற்காக? இந்த வெளிப்படுத்தின விசேஷப்புத்தகத்தை நமக்கு அளிக்கத் தான். பாருங்கள், தேவனால் பிசாசினுடைய கண்களை அவர் விரும்புகிற எந்த நேரத்திலும் மறைத்து விட்டு காரியத்தை செய்ய முடியும். அவருக்கு இயலுமல்லவா? அவரால் மிக எளிதாக இயலும், நான் அவரை நேசிக்கிறேன். ஏனெனில் நான் புத்திசாலியாக இருக்கத் தேவையில்லை, பாருங்கள். இப்பொழுது நான் புத்திசாலியாக இருப்பேனெனில், ஒரு வேளை அதைப்பற்றியெல்லாம் நான் மறந்து விடுவேன், ஏனென்றால் தேவனை விட அதி புத்திசாலி வேறு யாரும் கிடையாது என்பதை நான் அறிவேன். எனவே நான்—நான்…எனக்கு உள்ள அனைத்தையும், நான் என்னையே அவருக்கு அர்ப்பணித்து, அவர் என்ன செய்யக் கூறுகிறார் என்பதைப் பார்க்கிறேன். அவ்வளவு தான் சில சமயங்களில் நான் நினைப்பதற்கு அது மிகவும் முரணாக இருக்கிறது. ஆனால் நான் ஒன்றை அறிவேன். அதென்னவெனில், அவர் அதை நடத்திக் கொண்டிருப்பாரானால், அவள் புத்திசாலியாக இருக்கிறார். அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார், நான் அவ்வாறில்லை. எனவே அவர் அதைச் செய்யும்படி நான் விட்டுவிடுகிறேன், நீங்கள் பாருங்கள், அப்பொழுது அது…சரியாயுள்ளது. புரிகிறதா? எனவே அவர் அதைச் செய்யும்படி நான் விட்டுவிடுகிறேன். அதுதான் சகோதரன் நெவில் அவர்களே, ஆம் ஐயா, அவர் கிரியை செய்ய விட்டு விடுங்கள். புரிகிறதா? அவர் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தேயிருக்கிறார், நான் அறியேன். பாருங்கள்? எனவே, நான் எந்த பெரிய பகட்டான காரியத்தையும் பெற்றிருக்க முயற்சிப்பதில்லை. அப்படியே நான் என்னையே தாழ்த்தி, “இதோ நான் இருக்கிறேன், பிதாவே, எந்த வேளையில் நீர் என்னை விரும்பினாலும்,” என்கிறேன். எனவே அவ்வாறு தொடர்ந்து செல்லுங்கள், எனவே அப்படி செய்தால் அது முடிவில் சரியாகத் தான் இருக்கும்.

2854 எனவே யோவான், யோவான் அங்கே இருந்திருக்காவிடில், யோவான் அத்தீவுக்குச் சென்றிருக்காவிடில், நமக்கு வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் கிடைத்திருந்திருக்காது. தேவன் நமக்கு வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை கொடுப்பதற்காக அது அவருடைய வழியாயிருக்கிறது. அவன் அங்கே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இருந்தான் என்று நான் எண்ணுகிறேன்; வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை அங்கே எழுதினான். 55 இப்பொழுது, அழைப்பு விடுக்கும் கடைசி வசனத்தில் நாம் யோவானை வெளி-3:22-ல் விட்டு வந்தோம். “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்”.

2956 இப்பொழுது 4ம் அதிகாரத்தில் ஆரம்பிப்போம். இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம் போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது. 57 நாம் ஒவ்வொரு வசனமாகப் பார்க்கப்போகிறோம். நான் இங்கே அநேக வேதவாக்கியங்களை எழுதி வைத்திருக்கிறேன், அவைகள் எழுதப்பட்ட ஒரு புத்தகம் உள்ளது. அதற்குள்ளாக நாம் எந்த அளவு பார்க்கப் போகிறோம் என்பதை நான் அறியேன். கர்த்தர் நம்மை வழிநடத்துவாராக. இப்பொழுது, கவனியுங்கள், வார்த்தையானது இவ்வாறிருக்கிறது. இவைகளுக்குப் பின்பு (சபைக் காலத்திற்குப் பிறகு)… 58 சபையானது எடுத்துக்கொளப்பட்ட பிறகு, பூமியில் நடை பெறப் போகிறவைகள் தான் இவ்வாறு “இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாருங்கள், எடுத்துக்கொள்ளப்படுதலுக்குப் பிறகு. இச்சம்பம்பவங்கள் இஸ்ரவேலர் சம்பந்தப்பட்டவைகளாக இருக்கப்போகின்றன. சபைக்காலத்திற்குப் பிறகு, சபைக் காலங்களுக்குப் பிறகுள்ளவைகள் இவைகள். அவர்கள்… இதிலிருந்து, வெளிப்படுத்தின விசேஷத்தின் 19-ம் அதிகாரம் வரையிலும் மணவாட்டி சபையானது ஒருபொழுதும் காட்சியில் தோன்றுவதேயில்லை. 19-ம் அதிகாரத்தில் தான் அவள் தன் மணவாளனோடு திரும்பி வருகிறாள். அக்கலியாணத்திற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்!

3059 நாம் அதை வாசிப்போமாக. நாம் இவ்வேத வாக்கியங்களை எடுத்துக் கொள்கையில், நீங்கள் அவைகளை வாசிக்க விரும்புகிறீர்களா? சரி, நாம் வெளிப்படுத்தின விசேஷம் 19-ம் அதிகாரத்திற்குத் திருப்புவோமாக. சரி, ஐயா, வெளிப்படுத்தின விசேஷம் 19ம் அதிகாரம், நாம் 7ம் வசனத்தில் ஆரம்பிப்போம். வெளிப்படுத்தின விசேஷம் 19ம் அதிகாரம், 19ம் அதிகாரம் வருகிற வரையிலும் சபையானது மீண்டும் அதற்கிடையில் ஒருபோதும் தோன்றவேயில்லை. இவ்வதிகாரத்தில் தான் சபையானது மீண்டும் தோன்றுகிறது. நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். 60 ஓ, நள்ளிரவு வரையிலும் அதின் பேரில் என்னால்—என்னால் பிரசங்கிக்க முடியும், ஆயினும் அதில் பாதி கூட விவரித்திருக்க முடியாது. “அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள்” என்ற வசனத்தைப் பாருங்கள்.

3161 சார்லி, நெல்லி மற்றும் உங்கள் யாவரோடும் ராட்னியோடும் அன்றொரு நாள் அங்கே நாம் பேசிக்கொண்டிருந்தோமே. புரிகிறதா? எலிசா அந்த சால்வையை எலியாவின் மேல் போட்டான்…இல்லை எலியா சால்வையை எலிசாவின் மேல் போட்டான். எலியா மீண்டும் தன் கையை நீட்டி அவன்மேல் போட்ட சால்வையை திரும்ப எடுத்து, தன் மேல் போட்டுக்கொண்டு, யோர்தானைக் கடந்து, மலையின்மேல் ஏறி, அக்கினி இரதத்தில் ஏறிச் சென்று, சால்வையை கீழேபோட்டுவிடுகிற வரையிலும், சால்வையோடு நடந்தான். 62 ஒரு கிறிஸ்தவன் முதலாவதாக இரட்சிக்கப்படுகிறபொழுது, அவனது விசுவாசமானது கிறிஸ்துவினிடமாகத் திரும்புகிறது. அப்பொழுது அவன் தனக்குத் தானே ஒன்றைச் செய்ய வேண்டியவனாயிருக்கிறான். இரட்சிக்கப்பட்ட பிறகு அவன் எல்லா அசுத்த பழக்கங்களிலிருந்தும் தன்னை சுத்திகரித்துக் கொள்ள வேண்டியவனாயிருக்கிறான். “பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டு, அவள் தன்னைத் தானே ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.”

3263 நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டே போவதற்கு முன்பாக ஒரு சிறு கதை எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது, எனவே நான் அதை சொல்லியாக வேண்டும். இங்கே மேற்கிலே, அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, இந்த மகத்தான ஆர்மர் அண்ட் ஸ்விஃப்ட் பேக்கிங் நிறுவனம் (Armour and Swift Packing Company) என்ற ஒன்று இருந்தது. அவர்கள் எவ்வாறு தொழில் செய்தனர் என்றால், அவர்கள் அங்கே வந்து, கால்நடைகளையும், அவற்றிற்கான மேய்ச்சல் நிலங்களையும் வாங்குவார்கள். அவைகள் பெரும் மதிப்புள்ளவைகள். அங்கிருக்கும் எல்லா சிறு மேய்ச்சல் நிலங்களையும் வாங்கிவிடுவார்கள். அதினால் அவர்களிடம் கோடிக்கணக்கான ஏக்கர்கள் கொண்ட மேய்ச்சல் நிலங்கள் இருக்கின்றன. அதில் அவர்கள் உயர்ந்த இன ஹியர்ஃபோர்ட் ரக மாடுகளை இந்த பிரிவுகளில் மேய்த்தார்கள். அவர்களுடைய சொந்த…அவர்களுக்கென்று சொந்தமான இரயில் பாதைகள் உண்டாயிருந்தபடியினால், அதில் கால்நடைகளை ஒரு மேய்ச்சல் நிலத்திலிருந்து இன்னொரு மேய்ச்சல் நிலத்திற்கு கொண்டு செல்வார்கள். 64 இந்த ஆர்மர் அண்ட் ஸ்விஃப்ட் நிறுவனத்திற்கு ஒரு பெரிய மேய்ச்சல் நிலம் இருந்தது. அவர்களுக்கு அங்கே கண்காணிப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் அந்த மேய்ச்சல் நிலத்தில் மேல் அதிகாரியாக இருந்தார். அவருக்கு கிட்டத்தட்ட நான்கு இல்லை ஐந்து குமாரத்திகள் இருந்தனர். ஒரு நாள் அந்த பெரிய ஆர்மர் நிறுவனத்தின் முதலாளியின் சகோதரர்களில் ஒருவர் இல்லை சகோதரர்கள் அல்ல, மகன் அந்த மேய்ச்சல் நிலத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டார்கள். அவன் திருமணமாகாத ஒரு வாலிபனாயிருந்தான். அவன் வந்தவுடன் அவன் கவர்ந்திழுத்து மயக்கிட வேண்டுமென இந்த பெண்களெல்லாம் உறுதியாக இருந்தனர். எனவே அவர்கள் யாவரும் அவன் வருகைக்காக எல்லாவிதமான ஆயத்தங்களையும் செய்தார்கள்.

3365 அவன் அங்கே வந்து சேருகையில், அவர்கள் அவனை போய் அந்த நாளில் அந்த எல்லையில் சந்திக்க இருந்தார்கள். அவர்கள் தங்கள் சிறிய குஞ்சம் தொங்க விடப்பட்டுள்ள ஆடைகளையணிந்து கொண்டு, புள்ளி 44 என்ற துப்பாக்கிகளை இடுப்பில் தொங்கவிட்டுக் கொண்டும், தலைக்குப் பின் தொங்கிக் கொண்டிருக்கும் தொப்பியை அணிந்து கொண்டிருந்தனர். உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் சரியான மேற்கத்தியாளர்களுக்கேற்ற விதமாக இருந்தனர். அந்தப் பெண்களில் ஒருவள் அந்தப் பையனை அடைய வேண்டும் என்று இருந்தனர். 66 அவர்களிடத்தில் தாய், தந்தை இருவருமே மரித்து விட்டிருந்த ஒரு—ஒரு உறவு முறைப் பெண் இருந்தாள். அவள் அவர்களுக்கு ஒரு உறவினளாய் இருந்தாள். அவள் அங்கிருந்த யாவருக்கும் ஒரு அடிமையைப் போல் இருந்தாள். அவள் தான் அங்கே பாத்திரம் கழுவுதல் உட்பட அனைத்து மட்டமான வேலைகளையெல்லாம் செய்ய வேண்டியவளாய் இருந்தாள். அவளுக்கு ஆடைகள் இல்லாததால், பிறர் உபயோகித்துவிட்டுக் கொடுப்பவைகளையே அவள் அணிந்து வந்தாள்.

3467 ஆகவே, அவ்விளைஞன் வந்து சேரும் நேரம் சமீபித்த போது அப்பெண்கள் யாவரும் தங்களுடைய நான்கு சக்கர குதிரை வண்டிகளில் ஏறிக் கொண்டு, இரயில் நிலையத்தில் அவனை வரவேற்கச் சென்றார்கள். அவர்கள் துப்பாக்கி வேட்டுக்கள் முழங்க, குதிரைகள் கனைப்புடன் கூடிய வரவேற்பு நல்கினார்கள். பிறகு அவர்கள் அவனை மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். அங்கே அவர்கள் அந்த இரவில் பெரிய நடனம், விருந்து போன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் வைக்கோல் போர் உள்ள இடங்களுக்குச் சென்று, கால்நடைப் பட்டிக்குச் சென்று, அவர்கள்—அவர்கள் பாடல்கள் பாடி, நடனமாடி இரவு முழுவதும் செலவழித்தனர். அவன் அங்கே இரண்டு இல்லை மூன்று நாட்கள் தங்கியிருந்தான்.

3568 இந்த எளிய உறவினளோ…இப்பொழுது, நான் இக்காரியத்தை ஒரு விஷயத்துடன் ஒப்பிடப் போகிறேன். மிகவும் பிரமாதமாக உடையுடுத்திக் கொண்டும், கூர்மையான கோபுர கம்புகளையுடைய ஆலயங்களையுடைய நமது உறவினர்களாகிய சபைகள் உள்ளனவே. அவைகள், பெந்தேகோஸ்தே அனுபவம் உள்ளவர்களுக்கு, மோசமான பெயர்கள் என்னவெல்லாம் உண்டோ அதையெல்லாம் அவர்களுக்கு சூட்டுகிறார்கள். அது மிகவும் தவறான காரியமாகும். அவர்களும் கூட தவறான காரியங்களைச் செய்கிறார்கள். ஆனால் அவர்கள்…நீங்கள் அதைக் குறித்தெல்லாம் கேள்விப்படக்கூடமாட்டீர்கள். நீங்கள் பாருங்கள். அவர்கள் உயர் குடியினராக இருப்பதால், நீங்கள் அதைக் குறித்து கேள்விப்படமாட்டீர்கள். ஆனால் எப்பொழுதாவது ஒரு பெந்தெகோஸ்தே ஊழியக்காரர் ஒருமுறை ஒரு பிழை செய்து விட்டால், சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுவேன், அச்செய்தியை தேசம் பூராவிலும் செய்தித்தாளில் போட்டு தெரியப்படுத்தி விடுவார்கள். ஆம் ஐயா. ஒரு பெந்தெகோஸ்தே சகோதரன் ஒரு குழந்தைக்காக ஜெபித்து, அக்குழந்தை இறந்து விட்டால், நாட்டில் உள்ள ஒவ்வொரு செய்தித்தாளும், “தெய்வீக சுகமளித்தல் ஒரு மத வெறிக் கொள்கைதான்” என்று பரப்புவார்கள். 69 நல்லது, அப்படியென்றால், ஏன் மருத்துவர்களால் காப்பாற்ற முடியாத நபர்களைப் பற்றி ஒவ்வொன்றாக செய்தித்தாளில் போடுவதில்லை? “இவர்களுக்கு ஒரு நியாயம், அவர்களுக்கு வேறொரு நியாமா?” பாருங்கள்? எனவே, அவர்கள் மருத்துவர்களால் பிழக்க வைக்க முடியாத காரியங்களையெல்லாம் செய்தித்தாளில் வெளியிடுவார்களென்றால், அப்படி மரித்தவர்களின் விபரங்களை வெளியிட பத்திரிக்கைகளின் பத்திகளில் இடம் போதாது. நான் கல்லறைக்குச் சென்று, “தெய்வீக சுகமளித்தலின் கீழாக மரித்தவர்கள் யாவரும் எழும்புங்கள்” என்றும், பின்பு, “வைத்திய சிகிச்சையின் கீழாக மரித்தவர்கள் எல்லாம் எழும்புங்கள்” என்றும் கூறுவேனென்றால், முந்தினது ஒன்று என்றால், பிந்தினது பத்து இலட்சம் என்ற விகிதத்தில் தான் இருக்கும். அது முற்றிலும் உண்மையே. எனவே அவர்கள் ஒருவரைக் குறை கூறப்போகிறார்களேயானால், மற்றவர்களையும் குறை கூறுவார்கள். அதுதான் சரி. ஆனால் அவர்கள் ஒரு ஆண்டில் பல இலட்சக்கணக்கில் மக்களை மருந்துகளாலும், அறுவை சிகிச்சைகளாலும் கொன்று விடுகிறார்கள். ஆனால் நீங்கள் அதைப்பற்றி ஒரு வார்த்தையும் கேள்விப்படுகிறதில்லை. உங்களுக்குப் புரிகிறதா?

3670 எனவே இந்தப் பெண், அவள் எல்லாவித கடினமான வேலையும் செய்ய வேண்டியதாயிருந்தது. உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாள் இரவில், இரவு உணவு முடிந்த பிறகு, அவர்கள் நடனமாடிய பிறகு, அப்பெண்கள் ஒவ்வொருவராக தங்களை அழகுப்படுத்திக் காண்பித்த பிறகு, அந்த எளிய ஏழைப் பெண் பழைய கந்தலான ஆடையை அணிந்து கொண்டிருந்தாள். அவள் ஒரு இரவு கூடத்தில் உட்கார்ந்து கொண்டு, இரவு உணவு வேளைக்குப் பிறகு, உணவு பரிமாற்றப்பட்ட பாத்திரங்களையெல்லாம் அவள் கழுவிவிட்டு, பாத்திரங்களைக் கழுவிய தண்ணீரை கொல்லைப் புறத்தில் கொண்டு போய் கொட்ட விரைந்து சென்றாள். அவள் அவ்வேலையை முடித்துவிட்டு, கால்நடைப்பட்டியின் பக்கமாக திரும்பியபொழுது, இங்கே அந்த இளைஞன் பட்டியின் வேலியில் சாய்ந்து கொண்டு நின்றான். அவன் அவளை நோக்கி, “வணக்கம்” என்று கூறினான். 71 அவள் மிகவும் நாணமடைந்தாள், ஏனென்றால் அது அந்த மேய்ச்சல் நிலங்களின் முதலாளியினுடைய பையனாய் இருந்தது. அவள் தன் கையிலிருந்த பாத்திரங்களை கீழே தவற விட்டு விட்டாள். அவன் தான் அணிந்திருக்கிற கந்தலான ஆடையை கவனித்து விடக்கூடாதே என்று எண்ணி, தன் வெறுங்காலுடன் இந்தவிதமாக பின்பக்கமாக நகர்ந்தாள். 72 அவன் அவளை நோக்கி நடந்து சென்று, “என்னைக் கண்டு பயப்பட வேண்டாம்” என்றான். “நான் ஒரு காரியம் கூற விரும்புகிறேன். நான் இங்கே ஒரு நோக்கத்தோடு தான் வந்தேன். நான் ஒரு மனைவியை கண்டு பிடிக்கவே வந்தேன். எவ்விடங்களிலும் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் நகரத்தில் வாழும் எந்தப்பெண்ணையும் மணந்து கொள்ள விரும்பவில்லை. என் சிந்தையில் இருக்கிறபடி ஒரு உண்மையான மனைவியை அடையவே நான் விரும்புகிறேன். நான் எல்லோரையும் பார்த்துவிட்டேன். நான் இங்கு சுற்றிலும் உன்னை கவனித்துக் கொண்டே வந்துள்ளேன். அவர்களுக்கு நீ ஒரு உறவினள் என்பதை சிலர் மூலமாக நான் அறிந்து கொண்டேன்” என்றான். அதற்கு அவள் “அது உண்மை தான், ஐயா” என்றாள். 73 “நான் உன்னை கேட்க விரும்புகிறேன். நீ என்னை விவாகம் செய்துகொள்வாயா”? என்று கேட்டான். அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவள் மிகவும் இக்கட்டான நிலைமையில் ஆகிவிட்டாள். அந்த மனிதனுக்கு எப்படி பதில் சொல்வது என்றே அவளுக்குத் தெரியவில்லை.

3774 ஒ, அவள் எவ்வாறு உணர்ந்திருப்பாள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நீங்கள் அவ்வாறு செய்யவில்லையா? ஒரு காலத்தில் பாவியாயிருந்த நான், ஒன்றுக்குமே உதவாதவனாக இருந்தபொழுது, ஒரு குடிகாரனின் மகனாக இருக்கையில், இயேசுகிறிஸ்து, “நான் உன்னை சொந்தமாக்கிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார். என்னைப்போலுள்ள ஒருவனிடம் அவர் எவ்வாறு வர முடிந்தது? “நான் உனக்கு பரலோகத்தில் ஒரு வீட்டைத் தருவேன்” என்று அவரால் எப்படி கூற முடிந்தது? “நான் உன்னை இரட்சிப்பேன்” என்று எப்படி அவரால் கூற முடிந்தது? என்னைப் போன்ற நிர்பாக்கியமுள்ளவனுக்கு அது எவ்வாறு சாத்தியமாகும்? ஆனால் அவர் அதைச்செய்தார்.

3875 அவள், “ஐயா, நான்—நான்—நான்—நான் பாத்திரமானவள் அல்ல. உம்மைப்போன்ற ஒரு மனிதனுக்கு நான் மனைவியாக ஆவதற்கு என்னால் இயலாது. ஏனெனில் நீர் மேன்மையான காரியங்களுக்கு பழக்கப்பட்டவர். நானோ அவைகளைப் பற்றி ஒன்றுமே அறியேன், நான் ஏழை” என்று கூறினாள். அதற்கு அவனோ, “ஆனால் நீ என்னுடைய தெரிந்தெடுத்தலாயிருக்கிறாய்” என்று கூறினான். 76 அதே காரியத்தை இயேசு, உங்களுக்கும் கூறியது அருமையாக இருக்கவில்லையா? நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு உங்களுக்கு தகுதியில்லை என்பதை நீங்களே அறிந்திருக்கிறீர்கள். அதற்காக நீங்கள் செய்யத்தக்கது ஒன்றுமில்லை. ஆனால் அவர்…அது ஒன்றுமேயில்லை…அவர்—அவரே உங்களை தெரிந்தெடுத்தார். புரிகிறதா? அவர்…அது அவருடைய தயவாக இருக்கிறது. அவருடைய இரக்கம் தான் உங்களைத் தெரிந்தெடுத்தது. நீங்கள் அவரை தெரிந்தெடுக்கவில்லை என்பதை நீங்கள் அறீவீர்கள். அவர் உங்களைத் தெரிந்தெடுத்தார். அது உண்மை. அப்பொழுது அவளோ, “நான்—நான் ஏற்றவளல்ல…” என்றாள். அவளே கூறினாள்… 77 அதற்கு அவன், “நீ உன்னுடைய ஆடைகளைப் பார்க்க வேண்டாம். உன்னுடைய ஆடைகளை நான் பார்க்கவில்லை. நீ என்னவாய் இருக்கிறாய் என்பதைத் தான் நான் பார்க்கிறேன்” என்றான். அவன், “நீ என்னை மணந்து கொள்வாயா?” என்று கேட்டான். இறுதியாக அவர்கள் இருவருக்கும் இடையில் ஒப்பதம் ஏற்பட்டது. அப்பொழுது அவன், “இந்த நாளிலிருந்து ஒரு வருட காலத்தில் நான் திரும்பி வருவேன். நீ ஆயத்தமாயிரு. கலியாண வஸ்திரத்தோடு ஆயத்தப்பட்டு இரு, ஏனென்றால் நான் இதே இடத்திற்கு திரும்பி வந்து உன்னை இங்கேயே வந்து மணந்து கொள்ளுவேன். நான் உன்னை சிக்காகோ பட்டணத்திற்கு புறநகர் பகுதியில் கொண்டு செல்வேன். அங்கு நீ வசிப்பதற்கென உனக்கு ஒரு அரண்மனை உண்டாயிருக்கும். இந்த எல்லா பாத்திரம் கழுவுதலும் அப்பொழுது முடிந்துபோகும்” என்று கூறினான்.

3978 இப்பெண்ணின் ஒன்றுவிட்ட சகோதரிகள் அதைப்பற்றி கேள்விப்பட்டபொழுதும் அவர்களோ, “ஏழ்மையான, எளிய, அறியாமையுள்ள முட்டாளே! ஏன்? அம்மனிதன் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்பதை நீ அறிவாயாக” என்றார்கள். 79 அதேவிதமாகவே இன்றைக்கு கூறவில்லையா? “ஒரு கூட்டம் உருளும் பரிசுத்தர், தங்கள் பெயரைக்கூட எழுதத் தெரியாத ஒரு கூட்டம் மக்கள், எவ்வாறு சபையாக இருக்க முடியும்? எவ்வாறு அவ்விதமானதொரு குழுவினர் அவ்வாறு இருக்க முடியும்?” என்று கூறுகிறார்கள். ஆனால் அதெல்லாம் பரவாயில்லை. நாம் நிச்சயிக்கப்பட்டபோது, நம் பாவங்களை போக்கத்தக்கதாக நம் இருதயத்தில் இயேசு கிறிஸ்துவின் நிச்சயதார்த்த முத்தத்தை பெற்று விட்டபடியினால், ஏதோ ஒன்று, உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அவர் நமக்காகத் திரும்பி வருகிறார் என்பதை நமக்குக் கூறிக் கொண்டிருக்கிறது. ஒரு நாளில் அவர் திரும்பி வருவார்.

4080 ஆண்டுமுழுவதும் அப்பெண் உழைத்தாள். அடிமையாக தினக்கூலியாக அவளுக்குக் கொடுக்கப்பட்ட எழுபத்தைந்து செண்ட் நாணயத்தை அவள் சேமித்துக் கொண்டே வந்தாள். அவள் கலியாண வஸ்திரத்தை வாங்கியுடுத்திக் கொண்டு ஆயத்தமாக இருப்பதற்காக பணத்தை சேமித்தாள். ஓ, அவள் தன்னை ஆயத்தம் செய்து கொள்வதிலேயே சிந்தனையாயிருந்தாள். (அவன்…“அவள் தன்னை ஆயத்தம் செய்து கொண்டாள்.”) அவள் தன் ஆடைகளை சேர்த்தாள், அவளுடைய கலியாண வஸ்திரத்தை பார்த்து அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரிகள் அவளை ஏளனம் செய்தார்கள், அவளைப் பரிகசித்தார்கள். 81 இறுதியாக…முடிவாக அந்த குறிப்பிட்ட நாள் வந்தது. (ஓ!) அவள் தனது கலியாண ஆடையை உடுத்திக் கொண்டு தன்னை ஆயத்தம் செய்து கொண்டாள். அவள் ஆயத்தமாக இருக்கும்படி தன்னை சுத்தம் பண்ணிக் கொண்டாள். அவளுடைய ஒன்று விட்ட சகோதரிகள் வந்து அவளை சுற்றி நின்று கொண்டு, கேலியாக தலைவணங்கி, “மதியீனமுள்ள சிறுமியே, அம்மனிதன் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. உன்னைப் போல் ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்ளவேமாட்டான்” என்று கூறினார்கள். ஆயினும், அவள் எப்படியும் தன்னை ஆயத்தம் செய்து கொள்ளத்தான் செய்தாள்.

4182 எனவே, மாலைப்பொழுது கழியும் நேரம் வந்தது, அவர்கள் அவளை பரிகசித்து, ஏளனம் செய்ய ஆரம்பித்தார்கள். அவளோ, வாசலண்டையில் நின்று காத்துக் கொண்டேயிருந்தாள். எனவே அவள்…அவர்கள், “அவன் எந்த வேளையில் இங்கே வந்து சேருவதாகக் கூறினான்?” என்று கேட்டார்கள். 83 அதற்கு அவளோ, “அவர் சொல்லவில்லை” என்றாள். ஆனால் அவள் கூறினதோ, “அவள் கூறினாள்…அவன் என்னை மணந்து கொண்ட இரவில்…இல்லை எனக்கு நிச்சய மோதிரத்தை அளித்தான். பின்னர் அவர், ‘இப்பொழுதிலிருந்து ஒரு வருடத்தில் வருவேன்’ என்று கூறினான். எனவே, இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது” என்று கூறினாள். ஆமென். அவள் காத்துக் கொண்டிருந்தாள். “எனக்கு இன்னும் ஒருமணி நேரம் இருக்கிறது. இன்னும் முப்பது நிமிடங்கள் உள்ளன. இன்னும் பத்து நிமிடங்கள் உள்ளன” என்றாள். அவர்களோ சிரித்து, அவளை பரிகசித்தனர், அவளை எல்லாவிதமான பெயர் சொல்லி அழைத்தார்கள். 84 ஆனால் இறுதியில், சரியாக அந்த முக்கியமான வேளை வந்தது, அவர்கள் இரதத்தின் சக்கரங்கள் கிளப்பி விடுகிற புழுதியையும், இரதத்தின் சத்தத்தையும், குதிரைகள் காலடி ஓசையையும் கேட்டனர். அந்த இளம் மணவாட்டி தன்னை ஆயத்தம் பண்ணிக் கொண்டு, வாசலிலிருந்து குதித்து, ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட அப்பின்னல் தட்டி வழியாக ஓடி, தான் நேசித்தவனும், தனக்கு கணவனாக ஆகப்போகிறவனும், தன்னை கொண்டு சென்று மணந்து கொள்வதற்காக இரதத்தில் அழைத்துச் செல்லப்போகிறவனுடைய கரங்களில் பறந்தோடி அடைக்கலம் புகுந்து கொண்டாளே, அக்காட்சியோ என்னே ஒரு காரியமாயிருந்தது.

4285 சகோதரனே, “உருளும் பரிசுத்தர், பெந்தெகோஸ்தேயினர்” என்றெல்லாம் பரிகசிக்கிறார்களே …இந்நாட்களில் ஒன்றில்…நாம் காத்துக் கொண்டு இருக்கிறோம், நமக்கு இன்னும் சிறிது நேரம் உள்ளது. அவர்கள், “ஆ, அதெல்லாம் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை” என்று கூறுகிறார்கள். கவலைப்பட வேண்டாம். நமக்கு இன்னும் சிறிது நேரம் உள்ளது. அவர் வாக்குரைத்தப்படி அந்த நொடிப்பொழுதில் அவர் இங்கே இருப்பார். இந்நாட்களில் ஒன்றில் நாம் பறந்து சென்று விடுவோம். ஆயத்தமாயிருங்கள்! கலியாண வஸ்திரம் தரித்தவர்களாயிருங்கள். எல்லாக் கொடுமையும் உங்கள் இருதயத்தைவிட்டு அகற்றி விடுங்கள். அதாவது ஒவ்வொருகாரியமும்…

4386 இவ்வேதவாக்கியம் எவ்வாறு இங்கே வாசிக்கப்படுகிறது என்பதை கவனியுங்கள். நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியாவனருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன். (புரிந்து கொண்டீர்களா?) சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது. அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. (தேவனுக்கு ஸ்தோத்திரம்!). பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். 87 எனவே இந்நாட்களில் ஒன்றில், இனிமை நிறைந்த அந்த எதிர்வரும் காலத்தில், ஆகாயத்தில் ஒரு சந்திப்பை உண்டாக்கப் போகிறது. உ!—ஊ. ஆயத்தமாக நிலைத்திருங்கள்! உங்களை ஆயத்தமாக்கிக் கொள்ளுங்கள்! எல்லா கெட்ட எண்ணங்களையும் உங்கள் இருதயத்தை விட்டு அகற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அது எவ்வளவு இருளாய் தோன்றினாலும், “நீங்கள் ஒரு தவறு செய்து விட்டீர்கள்” என்று எத்தனை பேர்கள் உங்களை நகைத்து, கேலி செய்து கூறினாலும், அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம், தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். பரிசுத்தமக ஜீவித்து, தேவனுக்காக ஜீவியுங்கள். தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள், அந்த வேளையானது வரும்.

4488 எனவே, அவள் மீண்டும் வெளிப்படுத்தின விசேஷம் 19-ம் அதிகாரத்தில் காணப்படுகிறாள் என்பதை நீங்கள் பாருங்கள். இவைகளுக்குப் பின்பு… (யோவான் சபைக் காலங்களைப் பார்த்தபிறகு . ) இவைகளுக்குப் பின்பு, இதோ பரலோகத்தில்…ஒரு வாசலைக் கண்டேன். 89 இப்பொழுது, யோவான் இன்னமும் பத்மு தீவில் தான் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சபைக்காலங்களெல்லாம் முடிவடைந்ததை அவன் பார்த்த பிறகு: …பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன்… 90 “ஒரு வாசல்”. வாசலானது எது? வெளிப்படுத்தின விசேஷம் 3:8. வெளிப்படுத்தின விசேஷம் 3ம் அதிகாரம் 8ம் வசனத்தில் “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்…இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அதை ஒருவனும் பூட்டமாட்டான். ஒருவனும் அதை திறக்கவும் முடியாது,” என்று கூறப்பட்டுள்ளது. அவரே வாசலாயிருக்கிறார்! வாசல்! கிறிஸ்துவே வாசலாயிருக்கிறார். அவர் “ஆட்டுத் தொழுவத்துக்கு நானே வாசல்” என்று கூறினார் என்று பரிசுத்த யோவான் 10-ம் அதிகாரத்தில் உள்ளது. 91 பண்டைய தேசத்தில் மேய்ப்பனானவன் தன் ஆடுகளை தொழுவத்திற்குள் கொண்டு போய் விட்டு விட்டு அவைகள் யாவும் உள்ளே வந்து விட்டனவா என்று அவைகளை எண்ணிப் பார்த்துவிட்டு, வாசலில் அவன் குறுக்காக படுத்துக் கொள்கிறான் என்பதை நீங்கள் கண்டறியலாம். அவன் மேல் நடந்து செல்லாமல், ஓநாய் தொழுவத்திற்குள் நுழையவே முடியாது. ஆடுகளும் அவன்மேல் தாண்டிச் செல்லாமல் தொழுவத்தை விட்டு வெளியேற முடியாது. மேய்ப்பனே ஆட்டுத்தொழுவத்தின் வாசலில் படுத்துக் கொள்வதால், ஓ, ஆடுகள் தாங்கள் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்பதை எவ்வளவாய் உணரும்! 92 பழைய ஏற்பாட்டில், நோவா பேழையின் வாசலில் நின்றான். ஓ, கவனியுங்கள். நான் ஒரு காரியத்தைக் கூறப்போகிறேன்! அவன் பேழையின் வாசலில் நின்று, தன்னைப் பரிகசித்த மக்களுக்கு மனந்திரும்புதலையும் நீதியையும் குறித்து பிரசங்கித்தான். அவன் நின்றிருந்த அதே வாசலைத் தவிர வேறு எந்த வாசல் வழியாகவும் யாரும் பேழைக்குள் பிரவேசித்திட முடியாது. பேழைக்குள் அந்த ஒரு கதவு தவிர வேறு வாசல்கள் இல்லையல்லவா?

4593 அங்கே ஒரேயொரு வழிதான் உள்ளது. சகோதரனே…சரி …?… கிறிஸ்துவின் சரீரத்திற்குள் பிரவேசிக்க ஒரேயொரு வழிதான் உள்ளது. ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு ஒரேயொரு வாசல் தான் உண்டு. அவ்வாசல் இயேசுவே! “நானே வாசல்! அவ்வாசலுக்குப் போகும் சாலையாகிய வழி நானே. ஆட்டுத் தொழுவத்திற்கு நானே வாசல்” என்றார். 94 அவர் இச்சபைக் காலத்திற்கு, “இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்” என்று கூறினார். மெதோடிஸ்ட் சபைக்காலத்திற்கு அவர் இதைக் கூறினார். ஆனால் அவர்களோ அதினின்று விலகிச்சென்று, ஸ்தாபனத்திற்குள் சென்றுவிட்டனர். “ஆனால் நான் உனக்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருக்கிறேன்”. என்கிறார். அவர்கள் தங்கள் காலத்தில் பரிசுத்தமாகுதலை பெற்றுக் கொண்டதற்குப் பிறகு, “நான் திறந்த வாசலை உனக்கு முன்பாக வைப்பேன்” என்றார். திறந்த வாசல் பரிசுத்த ஆவி தான். “ஒரே ஆவியினாலே நாம் எல்லோரும்” (எப்படி?) “கிறிஸ்துவாயிருக்கிற ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்.” அவர் அச்செய்தியை மெதோடிஸ்ட் சபைக்கு முன்பாக வைத்தார். ஆனால் அவர்களோ அதினின்று விலகிச் சென்று விட்டனர். அவர்கள் பரிசுத்தமாகுதல் வரையிலும் வந்துவிட்டு, பரிசுத்த ஆவியைப் புறக்கணித்தனர். அதை ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா? அந்த “திறந்த வாசல்”. 95 நாம் எவ்வாறு கிறிஸ்துவுக்குள் பிரவேசிக்கிறோம்? ஒரே ஆவியினால், பரிசுத்த ஆவியினால் தான், அது கிறிஸ்துவின் ஆவியாகும். நாம் கைகுலுக்கிக் கொள்வதினால் அல்ல, தெளித்தலினால் அல்ல. ஆனால் ஒரே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் உள்ளே பிரவேசித்திருக்கிறோம். பரிசுத்த ஆவியினால் நாம் யாவரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அச்சரீரத்தில் பங்கு கொள்ளுகிறவர்களாக ஆக்கப்பட்டோம். அந்த வாசலில் பிரவேசிக்க ஒரே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தான் உள்ளது.

4696 இந்த வாசல் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது, அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது, அவன் கர்த்தராகிய இயேசுவைக் கண்டான். அவ்வசனத்தின் பாகத்தை தொடர்ந்து பாருங்கள். அவ்வாசல், கர்த்தராகிய இயேசுவே. …இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது;… 97 இப்பொழுது காட்சியானது மாறுகிறது. யோவான் பத்மு தீவில் கவனித்துக் கொண்டிருந்தான். இப்பொழுது மேலே ஏறெடுத்துப்பார்க்கிறான். ஏன்? அவன் பூமியில் இங்கே நடைபெற்று வந்து சில காரியங்களைப் பார்க்கிறான் (இந்த சபைக் காலங்களை), ஏழு சபைக் காலங்களை நெடுகில் உள்ளவைகளைக் கண்டான். அவன் இவ்வாறு இச்சபைக்காலங்களைப் பார்த்த பிறகு, அதன் பிறகு, சபைக்காலங்கள் முடிவடைந்த பிறகும் ஒரு சத்தத்தைக் கேட்டான். அவன் பரலோகத்தை ஏறெடுத்துப் பார்த்து, அங்கே திறந்த வாசலைக் கண்டான். அவன் முதலில் கேட்ட சத்தமானது எக்காள சத்தம்போல் இருந்தது, சரி, இப்பொழுது காட்சியானது பத்மு தீவிலிருந்து பரலோகத்திற்கு மாறினது.

4798 ஏழு குத்து விளக்குகளின் மத்தில் உலாவிய அதே சத்தம் தான் இந்த சத்தமும். அதே சத்தம் தான். சத்தம் மாறவில்லை. ஆனால் அவன் முதலில் அந்த சத்தத்தை கேட்டதுபோது அந்த சத்தம் எங்கேயிருந்தது? முதல் சபைக்காலத்தில் நடந்ததை எத்தனை பேர்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? அவன் அவனுக்குப் பின்னாக, “…கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்…” வெளிப்படுத்தின விசேஷம் 1-1:10…“ஆவிக்குள்” வெளிப்படுத்தின விசேஷம் 1:10,13 ஆகிய வசனங்களுக்கு திரும்புங்கள். “கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்…சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது …சத்தத்தைப் பார்க்கத் திரும்பினபோது ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் ஒருவர் நிற்கிறதைக் கண்டேன்”. 99 இப்பொழுது, அவர் யோவானுக்கு ஏழு குத்துவிளக்குகளின் இரகசியத்தையும், (ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருக்கிறதைப் பற்றியும், அவர் தலையின்மேல் வெள்ளை தலைமுடி தோகையை அணிந்திருப்பதைப் பற்றியும், பாதங்கள் வெண்கலம் போன்று இருப்பதையும், கண்கள் அக்கினி ஜீவாலையாக இருப்பதைப் பற்றியும், இந்த அடையாளங்களைக்) குறித்து உள்ள இரகசியத்தை வெளிப்படுத்திய பிறகு, அப்பொழுது அதே சத்தத்தை அவன் கேட்டான் (கவனியுங்கள்.) பரலோகத்திலிருந்து பேசக் கேட்டான். அவன் மேலே ஏறெடுத்து, திறக்கப்பட்ட வாசலைப் பார்த்தான். ஓ, பரலோகத்திற்குப் போவதற்கு ஒரு திறந்த வாசல்! அதற்குள் நீங்கள் எவ்வாறு பிரவேசிக்கிறீர்கள்? கிறிஸ்து இயேசுவாகிய அந்த ஒரே வாசல் வழியாக, ஒரே வழியாகத்தான். அதைத் தவிர வேறு வழி எதும் இல்லை.

48100 “வேறு வழியாய் ஏறுகிறவன், கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்”. வேறு வழியாக ஏறி, கலியாணவிருந்தில் கலியாண வஸ்திரம் தரித்திராதவனாய் காணப்பட்டவனைப் பற்றிய உவமையில், அவன் குற்றமுள்ளவனாகக் காணப்பட்டு, அவனைக் கட்டி புறம்பான இருளில் தள்ளிவிட்டார்கள். கலியான விருந்துக்கு உள்ளே வருவதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. சமீபத்தில்தான் நான் இங்கே அதைக் குறித்துப் பிரசங்கித்தேன். மணவாளன்…பண்டைய தேசத்தில் ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளும்போது, அவனே அதற்கான அழைப்பைக் கொடுக்க வேண்டும். அவனே கலியாண வஸ்திரமெல்லாம் வருபவர்களுக்கு அளிக்க வேண்டுமாம். எனவே விருந்து மேசையில் கலியாண வஸ்திரம் தரித்திராத அந்த மனிதனை மணவாளன் சந்தித்தபொழுது…இந்த உவமையை எத்தனை பேர்கள் ஞாபகத்தில் வைத்துள்ளீர்கள்? வேதத்தை படித்த யாவரும் நிச்சயம் அறிவீர்கள். அவன் கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனிதனை, கலியாண மேசையருகே அமர்ந்திருக்கிறதைக் கண்டான்.

49101 அது என்னவாக இருக்கிறது? மணவாளன் வீட்டு வாசலில் தானே வந்து நின்று, அழைப்புப் பெற்றவர்கள் வருகையில் அவர்களை வரவேற்கிறான். “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என் பிதா எனக்குத் தந்தவர்கள் யாவரும், அல்லது என் பிதா அழைத்தவர்கள் யாவரும் என்னிடத்தில் வருவார்கள்” என்று கூறினார். இங்கே அழைப்பைப் பெற்றவர்கள் யாவரும் வருகிறார்கள், தங்கள் அழைப்பைக் கொடுக்கிறார்கள். மணவாளன் உள்ளே வந்து யாவரையும் பார்க்கையில் அவர்கள் யாவருமே ஒரே விதமாகத் தோற்றமளிக்கிறார்கள். அது பழங்காலத்து பரிசுத்த ஆவியின் மார்க்கத்தைப் பற்றிய ஒரு நல்ல காரியம். அது யாவரும் ஒரே விதமாகக் காணப்படச் செய்கிறது. அவர்கள் ஐசுவரியவான்களாயினும், தரித்திரராயினும் சரி, அடிமையோ, சுயாதீனனோ, அவர் கறுப்பரோ, அல்லது வெள்ளையரோ, ஆணோ அல்லது பெண்ணோ யாராயினும் அவர்கள் யாவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாக இருக்கிறார்கள். மணவாளன் வாசலில் நின்று, அழைக்கப்பட்டவர்களை வரவேற்று அழைப்புச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, அங்கியினால் அணிவித்து விடுகிறான், எனவே பணக்காரனானாலும் சரி, ஏழையானாலும் சரி, யாவரும் ஒரேவிதமாக தோற்றமளிக்கிறார்கள். தேனுடைய இராஜ்யத்திலும் அதேவிதமாகத் தான் உள்ளது. அங்கே பெரிய மனிதர்கள் என்றும் சிறிய மனிதர்கள் என்றும் வேறுபாடு இல்லை, யாவரும் ஒரேவிதமான நபர்கள் தான். யாவரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறார்கள்.

50102 மணவாளன் திரும்பி வந்து, கலியாண வஸ்திரம் தரித்திராதவனாய் ஒரு மனிதன் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “சிநேகிதனே, இங்கே நீ எப்படி வந்தாய்?” என்று கேட்டான். அதற்கு அவன் பேசாமலிருந்தான். அம்மனிதன் வாசலை வழியில்லாமல் வேறு வழியாக உள்ளே நுழைந்து விட்டான் என்பதைத் தான் இது காண்பித்தது. அவன் ஒரு ஜன்னல் வழியாகவோ, அல்லது கொல்லைப்புற வாசல் வழியாகவோ தான் உள்ளே நுழைந்து இருக்க வேண்டும். அம்மனிதனை அவன் சிநேகிதன் என்று அழைத்தான்; அம்மனிதன் ஒரு சபை அங்கத்தினன் என்பதைத்தான் இது காண்பித்தது. “சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய்?” என்று கேட்டான். இப்பொழுது, இயேசு தாமே இதைக் கூறினார். அவன் பணிவிடைக்காரரை நோக்கி, “இவனை கையுங்காலும் கட்டி…” என்றார். அவனை அழுகையும், புலம்பலும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போட்டார்கள். அவை கிறிஸ்துவின் சொந்த வார்த்தைகளாகும், (உண்மையே.) “அவன் தள்ளப்பட்டான்” ஏனெனில், அவன் கலியாண வஸ்திரம் தரித்திராதவனாய் வாசல் வழியாய் வராமல் வேறு வழியாய் ஏறி உள்ளே வந்து விட்டான் என்பதை அது நிரூபிக்கிறது. அவன் வாசல் வழியாய் பிரவேசித்திருந்தால், அவன் ஒரு கலியாண வஸ்திரத்தைப் பெற்றுக் கொண்டிருந்திருப்பான்.

51103 ஓ, இதைக் கேளுங்கள்! பரிசுத்த ஆவியின் அபிஷேகம் கலியாண வஸ்திரமாக இருக்கிறதென்றால், வேறு எந்தவிதமாக நாம் கலியாண விருந்தில் பங்குகொள்வது? முதலாம் சபைக்காலமானது கிறிஸ்து இயேசுவாகிய வாசல் வழியாகப் பிரவேசித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, கலியாண வஸ்திரம தரித்துக் கொள்வதற்காக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டு வரவேண்டியது அவர்களுக்கு அவசியமாகக் காணப்பட்டால், நாம் வேறு எந்த வழியாக பிரவேசிக்கப் போகிறோம்? நீங்கள் மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே அல்லது வேறு எந்த ஸ்தாபனங்கள் வழியாக வந்தால், நீங்கள் கையுங்காலுமாகக் கட்டப்பட்டு புறம்பான இருளில் தள்ளப்படுவீர்கள். ஒரே வழியும், ஒரே வாசலும் சத்தியமும், ஜீவனுமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவின் வழியாகத்தான் நீங்கள் வரவேண்டும். ஆமென்!

52104 சரி, அதே சத்தம்தான், வெளிப்படுத்தின விசேஷம் 21, இல்லை, வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரம் 10,13 ஆகிய வசனங்கள். அவனிடத்தில் பேசின சத்தமானது ஒரு எக்காள சத்தம் போல் தெளிவாக இருந்தது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு எக்காளமானது எத்தகைய சத்தத்தை தொனிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது கூரிய கீச்சிடுகிற தொனியைத் தான் கொடுக்கிறது. வேதத்தில் எக்காளம் என்பது எதைக் குறிக்கிறது? யுத்தத்தைக் குறிக்கிறது. வேதாகம நாட்களில் ஒரு எக்காளம் முழங்குகிறதை நீங்கள் கண்டால், அதன் தொனி யுத்தத்தைக் குறிக்கும் ஒரு வெளிப்படுத்தலாக இருக்க வேண்டும், அல்லது ஏதோ ஒரு காரியம் நடைபெறவிருக்கிறது என்பதாயுள்ளது.

53105 இப்பொழுது, அவன்…சபைக்காலங்கள் முடிவடைந்த பிறகு, எல்லாம் ஆயத்தமாக வந்த பிறகு, 4ம் அதிகாரமானது, இங்கே சபைக்காலங்கள் முடிவடைந்த நிலையில், ஆயத்தமாக அமைக்கப்படுகிறது. அவர் பூமியை விட்டு கிளம்பி விட்டார் என்பதை நீங்கள் பாருங்கள். ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் இருந்து கொண்டு யோவானோடு அவனுக்குப் பின்னாக இருந்து பேசினவரின் சத்தத்தை நினைவில் கொள்ளுங்கள். கிரியையானது முடிவடைந்துவிட்டது. இப்பொழுது அதே சத்தமானது பரலோகத்தில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறது. அது என்னவாயிருக்கிறது? அவர் தம்முடைய ஜனங்களை மீட்டுக் கொண்டு விட்டார். பூமியில் உள்ள அவரது கிரியையானது முடிவடைந்து விட்டது. அவர் இப்பொழுது மகிமையில் இருந்து கொண்டிருக்கிறார். அங்கிருந்து யோவானை, “இங்கே ஏறிவா” என்று அழைக்கிறார். உ—உம். ஆமென்! இப்புத்தாண்டுக்கு முந்தின இரவு வேளையில், நான் ஆர்ப்பரிக்க வேண்டும் என்று உணரும்படிச் செய்கிறது. ஓ, என்னே! அங்குதான் காரியம், பாருங்கள். ஆயத்தப்படுங்கள். “இங்கே ஏறிவா!.” 106 யுத்தம்! இது பெரிய யுத்தம் ஒன்று நிகழவிருப்பதைக் காட்டுகிறது. தேவனுடைய செய்தியை நிராகரித்தவர்கள். பரிசுத்த ஆவியையே நிராகரித்தார்கள், அவரே ஏழு சபைக் காலங்களின் செய்தியாளர், அவரது இக்கிருபையின் செய்தியைப் புறக்கணிக்கிறவர்களுக்கு, வேறு எதுவும் விடப்படாமல் நியாயத்தீர்ப்பே ஆயத்தமாய் இருக்கிறது. ஓ, அவர் இப்பொழுது பூமியின் மேல் வாதைகளை ஊற்ற ஆயத்தமாகிக் கொண்டு இருக்கையில் “இங்கே ஏறிவா, என்ன சம்பவிக்கப் போகிறதென்பதை நான் உனக்கு காண்பிப்பேன்; கிறிஸ்துவைப் புறக்கணித்த, தேவனற்ற பாவிகள் மேல் நான் என்னுடைய கோபாக்கினையை ஊற்றப் போகிறேன்” என்று அழைக்கிறார்.

54107 காட்சியமைப்பைப் பாருங்கள். ஓ, இந்த இரவில் நாம் மேலும் ஆராய்கையில், இன்னும் கூடுதலான விஷயங்களை நீங்கள் அறிய வருவீர்கள். இங்கே நாம் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு விட முடியாது; நாம் ஒவ்வொரு வேத வசனத்தைக் குறிப்பிட்டுக் கொண்டே தான் போக வேண்டும். கடைசி எக்காளம் தொனிக்கையில், கடைசி யுத்தமானது சண்டையிடப்படும் பொழுது, கடைசி பிரசங்கமானது பிரசங்கிக்கப்படும் பொழுது, கடைசி பாடலானது பாடப்படுகையில், புறக்கணித்தவர்களுக்கு அது எவ்வளவு பயங்கரமானதாக இருக்கப் போகிறது! நாம் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போம். “நீங்கள் ஏன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை?” என்று உங்களிடம் கேட்கப்படும். “நான் உனக்கு கொடுத்த ஜீவனைக் கொண்டு நீ என்ன செய்தாய்?” என்று கேட்கப்படும். சரியான காரணம் ஒன்றை கூறும்படி நீங்கள் கேட்கப்படுவீர்கள். அதன் பிறகு என்ன? 108 நான் அப்பாடலை பாட அல்லது பாட முயன்றதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவ்வேளையில் என்ன? அவ்வேளையில் என்ன? மகத்தான அப்புத்தகம் திறக்கப்படுகையில் அப்பொழுது என்ன? செய்தியைப் புறக்கணித்தவர் யாவரும் காரணம் கூறும்படி கேட்கப்படுவீர்களே, அப்பொழுது என்ன? 109 இப்புத்தகம் எழுதப்பட்டது எவ்வளவு நிச்சயமோ, அந்த அளவுக்கு அங்கே நிற்கப் போவதும் நிச்சயமாமே. நீங்கள் அங்கே நிற்கப் போகிறீர்கள். அப்பொழுது காரணம் கூறும்படி கேட்கப்படுவீர்கள் என்பதைக் கவனியுங்கள். ஓ, என் சகோதரனே, சகோதரியே, தேவனுடைய குமாரர்கள் குமாரத்திகள் என்ற முறையில் நாம் நம்மையே அனுதினமும் ஒவ்வொரு மணி நேரத்திலும் பரிசோதித்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாய் இருக்கிறது. பவுல், “நான் அனுதினமும் சாகிறேன்” “ஆயினும் பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” என்றான். புரிகிறதா? உங்களை சோதித்துப் பாருங்கள், ஏனெனில் பதிலளிக்கும்படி நீங்கள் எந்த மணி வேளையில் உன்னதத்திற்கு அழைக்கப்படப்போகிறீர்கள் என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.

55110 இப்பொழுது “எக்காள சத்தத்தைக் கேட்டேன்.” சரி, குறித்துக்கொள்ளுங்கள், இங்கே இந்த முதலாம் வசனத்தின் கடைசி பாகத்தில் இங்கே யோவான் என்ன கூறினான் என்பதை குறித்துக் கொள்ளுங்கள். …முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா… இங்கே ஏறிவா! நான் உனக்கு பூமியில் உள்ள சபைக்காலங்களைக் குறித்து காண்பித்தேன்; இப்பொழுது இங்கே ஏறிவா, இங்கே நடக்கிறவைகளை நான் உனக்குக் காண்பிக்கப் போகிறேன். 111 பாருங்கள், அப்படியானால் கிறிஸ்து பூமியை விட்டு புறப்பட்டு விட்டார். அவர் மகிமைக்குள் சென்று விட்டார். சபைக்காலமானது முடிவடைந்து விட்டதையையும், அவரது ஆவியின் கிரியை இங்கே முடிவடைந்து விட்டது என்பதையும் காண்பிக்கிறது. அவர் மகிமைக்குள் போய்விட்டார். அங்கிருந்து கொண்டு யோவானை மேலே ஏறி வரும்படி அழைக்கிறார். வேறென்ன சம்பவிக்கப் போகிறது என்பதையும் அவனுக்கு காண்பித்தார். அதற்காக அவனை “இங்கே ஏறிவா” என்று அழைத்தார்.

56112 இப்பொழுது, நாம் யோவானை கவனிப்போம், 2ம் வசனம். 2ம் வசனத்தை கவனியுங்கள். யோவான் உடனே இவ்வாறு கூறினான்: உடனே …(ஆமென்!) 113 ஓ, நான் வினோதமாக நடந்து கொண்டால், நான் மிகவும் நல்ல படியாக உணருகிறேன். யோவான் மேலும் கூறினான். …உடனே ஆவிக்குள்ளானேன்… 114 தேவனுடைய சத்தம் உங்களோடு பேச நீங்கள் கேட்கையில் ஏதோ ஒன்று சம்பவிக்கிறது. ஆமென்! ஓ, அவ்வாறு உங்களுக்கு சம்பவித்ததுண்டா? முப்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பாக எனக்கு அவ்வாறு சம்பவித்தது. அதன் பிறகு நான் முன்பு போல் இருக்கவில்லை. ஓ, அவர் “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று கூறினார். அது என்னை மாற்றினது.

57115 யோவான் கூறினான் : உடனே ஆவிக்குள்ளானேன்… (என்ன ஆவிக்குள்? பரிசுத்த ஆவிக்குள். ஓ!) ஆவிக்குள்ளானேன்…இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார். 116 பாருங்கள், இப்பொழுது யோவான் பூமியை விட்டு புறப்பட்டு விட்டான். கிறிஸ்து பூமியை விட்டு கிளம்பி விட்டு (பரிசுத்த ஆவியின் ரூபத்தில்) மீண்டும் சரீரத்திற்குள்ளாக திரும்பி விட்டார். இன்றைக்கு சரீரமானது ஒரு நினைவுகூறுதலாக, ஒரு பலியாக அங்கே இருந்து கொண்டு இருக்கிறது. இவ்வதிகாரத்தினூடே இங்கே நாம் அவ்விஷயத்தைப் பார்க்கிறோம். ஆனால் கிறிதுவின் ஆவியானது சபைக்குள் வாசம் பண்ணும்படி, நமக்குள் வாசம் பண்ணும்படியாக திரும்பி வந்திருக்கிறது.

58117 இப்பொழுது, இங்கே பூமியில் அவரது கிரியையின் காலத்தின் முடிவைக் குறித்து காண்பித்த பிறகு, உடனே அவர் பரலோகத்திற்குள் சென்றார். அவர், “இவைகளுக்குப் பின்பு சம்பவிக்கப் போகிறவைகளை நான் உனக்குக் காண்பிப்பேன். சபைக்காலங்களுக்குப் பிறகு உள்ளவைகளை காண்பிப்பேன்” என்று யோவானிடம் கூறினார். அவர், “யோவானே, நான் இனிமேல் கீழே பூமியில் இருந்து எதையும் உன்னோடு பேச முடியாது; ஏனெனில் நான் அதைவிட்டு நீங்கிவந்துவிட்டேன். நான் உன்னதத்திற்கு வந்துவிட்டேன். எனவே நீ மேலே என்னோடு வந்துவிடு” என்று கூறினார். ஆமென்! “இதற்குப் பிறகு சம்பவிக்கப் போகிறவைகளை நான் உனக்கு காண்பிப்பேன்” என்றார். ஓ, என்னே! உம்ம்! ஓ! தரிசனத்தில், மகிமைக்குள் எடுத்துக் கொள்ளப்பட்டான். 118 அவனுடைய அனுபவம் பவுலுடைய அனுபவம் போன்றதாகத் தான் இருக்க வேண்டும். 2கொரிந்தியர் 12:2முதல் 4-ஐ குறித்துக் கொள்ள விரும்பினால் அதைக் குறித்துக் கொள்ளுங்கள். 2கொரிந்தியர் 12:2-4. பவுலும் கூட ஒரு நாளிலே தரிசனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டான். அதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? அவன் பார்த்த காரியங்கள், அவைகளைப் பற்றி வெளியே பேசுவதற்கு உகந்ததல்ல எனபதாய் இருந்தது. பதினான்கு வருடங்கள் அவன் அதைப் பற்றி கூட குறிப்பிடவேயில்லை. புரிகிறதா? ஆனால் அவ்விரு அனுபவங்களுக்கிடையேயுள்ள வேறுபாட்டைக் கவனிக்கவும். 119 பவுல் எதைக் கண்டானோ அதைப் பற்றி வெளிப்படையாக பேசவோ அல்லது அதைக் குறித்து சொல்லவோ தடைசெய்யப்பட்டான். ஓ, என்னே! அவனால் அதை வெளியே சொல்ல முடியாமலிருந்தது என்று நான் நினைக்கவில்லை. (ஒரு சிறு பயணமான நான் ஒரு நாள் இவ்வாறு சென்றிருந்தேன். அதைப் பற்றி நான் குறிப்பிட்டதேயில்லை. இனி ஒரு போதும் கூறவும் மாட்டேன்.) பாருங்கள், அவன்—அவன் வெளியே பேச இயலாதபடிக்கு உள்ள காரியங்களை அவன் பார்த்தான். அவன் மூன்றாம் வானம் வரைக்கிலும் எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், அதைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே அவனுக்கு இருக்கவில்லை என்று நான் கருதுகிறேன். மூன்றாம் வானம் வரைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான், பாருங்கள்.

59120 யோவான் எடுத்துக் கொள்ளப்பட்டபொழுது அது எத்தகையதொரு வேறுபாடானதாக இருந்தது! அவன் அப்பொழுது இயேசுவைக் கண்டான், அவர் அவனிடம், “நீ கண்டவைகளை ஒரு புஸ்தகத்தில் எழுதி, அதை அனுப்பு, அதை சபைகளுக்கு அனுப்பு” என்று கூறினார். பவுல் கண்டவைகளைப் பேச தடை செய்யப்பட்டான். ஆனால் யோவானோ, ஒரு புஸ்தகத்தில் எழுதி, அது காலங்கள் நெடுகிலும் போகும்படியாக அவனுக்குக் கூறப்பட்டது. ஓ, என்னே! அது இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது இந்தக் கடைசி நாட்களில் தான் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று இருக்கிறது. யோவானின் நாளில் அது வெளிப்படுத்தப்படவில்லை. நாம் போய்க் கொண்டிருக்கையில், இப்பொழுது அது வெளிப்படுத்தப்படுகிறது.

60121 ஓ! கவனியுங்கள், சபைக்காலம் முடிவடைந்த உடனேயே, யோவான் எடுத்துக் கொள்ளப்பட்டதோ, லவோதிக்கேயா சபைக்காலம் முடிவடைந்த உடனேயே எடுத்துக் கொள்ளப்பட்ட சபைக்கு முன்னடையாளமாக இருக்கிறது. இந்த சபைக் காலத்திற்குப் பிறகு எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிறது. யோவான் மேலே போனது போல, சபையும் தேவனுடைய பிரசன்னத்தில் மேலே போகிறது. ஓ, என்னே! வ்வூயூ! அதை நினைக்கையில் அது என் ஆத்துமாவை எழுச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது. சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது கூறப்பட்டுள்ள…அதாவது வெளிப்படுத்தின விசேஷப்புத்தகத்தில் இந்த இடம் பாருங்கள், சபைக் காலத்திற்கு முடிவிலே எழுதப்பட்டிருக்கிறது.

61122 இப்பொழுது, இங்கே என்னிடம் நான் தெளிவுபடுத்த விரும்புவதான ஒரு விஷயம் இருக்கிறது; அது தானே நீண்ட காலமாக அநேக கிறிஸ்தவர்கள் நடுவில் தீர்க்கப்படாத முடிவு கண்டமையாத விஷயமாக இருக்கிறது. நான் இன்றைக்கு வேத வாக்கியங்களை படித்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்கையில் பல்வேறு பெயர்களையும், வெவ்வேறு நிறங்களையும் எண்ணிப் பார்த்தேன். நாம் சற்றுக் கழித்து வானவில், அடையாளங்கள் முதலியவற்றிற்குள்ளாக சென்று பார்க்கலாம். நான் இவ்வேத வாக்கியங்களை இங்கே குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். அதினால் நான் அவைகளை திரும்பிப்பார்க்கவும், அவைகளை குறிப்பிடவும் சாத்தியமாகுமே என்பதினால் அப்படிச் செய்தேன், ஏனெனில், வழக்கமாக நான் ஒன்றைக் குறித்து இதைப்போல் பிரசங்கிக்கப் போகிறதென்றால், அது வித்தியாசமானதாக இருக்கும், அதை நான் எழுதி வைத்திருக்கிறதைப் பாராமல் பேச அறிவேன். ஆனால் இந்த முறையிலே, உங்களுக்கு சிறிது நேரமே இருக்கையில், இவ்விஷயம் வேத வாக்கியங்களில் முன்னும் பின்னுமாக முழுவதும் சம்மந்தமுள்ளதாக இருக்கிறபடியால், நான் அவைகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

62123 இப்பொழுது, மத்தேயு 16:13-ல் இதை நாம் காண்கிறோம், விரும்பினால் இதைக் குறித்துக் கொள்ளலாம். மத்தேயு…நீங்கள் அதற்கு திருப்ப விரும்பினால், நீங்கள் அதை எடுத்துக் கொள்ளவிரும்பினால்…சரி, மத்தேயு 16:13 அது…ஓ, நாம் அவ்வசனத்தை எடுத்துக் கொண்டு படிப்போம். அப்பொழுது நாம் அதை நிச்சயமாக அறியலாம். மத்தேயு 16-ம் அதிகாரம், 13-ம் வசனம். மத்தேயு 16:13-ஐ நாம் வாசிக்கையில், மிகவும் கூர்ந்து கவனியுங்கள். “பேதுரு வந்தபொழுது…” இல்லை: பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலரை உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர் “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.

63124 இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். சரி. “அது முதல்…அந்த வேளை முதற்கொண்டு அவர்…தொடங்கினார்.” இன்னொரு வசனத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு வாசிக்க விரும்புகிறேன். 28-ம் வசனத்தை இங்கே எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் மீதியுள்ள வசனங்களை நீங்கள் வீட்டிற்கு போய் வாசித்துக் கொள்ளலாம். இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை எழுதி ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 125 ஓ, அதைப்பற்றி எண்ணிப் பாருங்கள்! “இங்கே நிற்கிறவர்களில் சிலர், இங்கே நிற்கிறவர்களில் சிலர், மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை.” என்னே ஒரு அறிக்கை இது! குறை கூறுவோர் அதை எடுத்துக் கொண்டு, தான் எவ்வளவு ஊமையாயிருக்கிறார் என்பதை காண்பிக்கிறார். பாருங்கள். அவர் அதை எப்படி பிடித்துக் கொள்ள விரும்புகிறார், அது நிறைவேறியிருக்கிறது, அவர்கள் அதைக் குறித்து அறிந்திருக்கவில்லை. புரிகிறதா? சரி.

64126 பேதுருவின் கன்மலை பற்றிய அறிக்கைக்குப் பிறகு, அவனுடைய அறிக்கையானது எப்படிப்பட்டது என்று நாம் அறிவோம். இதே பாறையின் மேல் தான் அவர் தன் சபையைக் கட்டுவார். சிறிய கல்லாகிய பேதுருவின் மேல் அல்ல, ரோமன் கத்தோலிக்கர் அவ்வாறு கூற முயலுகின்றனர். ஆனால் பேதுருவின் வெளிப்படுத்தலைப் பற்றிய அறிக்கையிருக்கிறதே, அது தான் சபையாகும். தேவன் அதை வெளிப்படுத்துவார். இந்த மனிதனைப் பற்றிய அறிக்கையல்ல, ஏனெனில் அவன் பிறகு பின்மாற்றமடைந்தான். அவர் தேவனுடைய குமாரன் என்பதைப் பற்றிய பேதுருவின் அறிக்கையல்ல அது; ஏனெனில், அவர் தேவனுடைய குமாரன் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். பேதுரு அப்பொழுது தான் அதைக் கூறினான். ஆனால் அது என்னவாயிருக்கிறது என்றால், அவர் தேவனுடைய குமாரன் என்னும் வெளிப்படுத்தலானது பரலோகத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டது. “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு போதிக்கவில்லை, ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன். இந்தக் கல்லைப் பற்றிய அறிக்கையின்மேல், பாதாளத்தின் வாசல்கள் அதைமேற்கொள்வதில்லை.”

65127 நமக்கு நேரம் விரைவாக கடந்து விடவில்லை என்று நினைக்கிறேன். அப்படியாயின், நாம் இதற்குள் இன்னும் பார்க்கலாம். மானிடருக்குள் இது எவ்வாறு செல்கிறது என்பதை பார்க்க நாம் விரும்புகிறோம். நாம் அதற்குள் பார்ப்போமென்றால், அது ஒரு அழகான சம்பவமாய்க் காணப்படும். சரி, ஆம், இந்த கன்மலைப் பற்றிய அறிக்கை, அவர் தன்னுடைய சபையை பேதுருவின் அறிக்கையின் பேரில் கட்டுவார். அவர், “இங்கே நிற்கிறவர்களில் சிலர், தேவகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை” என்றார். 128 இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், அவர் “சிலர்” என்று கூறினார். சிலர் என்றால் ஒரு நபருக்கும் மேல் என்று அர்த்தம் அல்லவா? சிலர் என்றால் “ஒருவருக்கு மேல் அதிகமான” என்பதாகும். ஆனால், இப்பொழுது கவனியுங்கள். அவருடைய சீஷர்கள் யாவரும் அங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும், அவர், “இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவர், “இங்கே நிற்கிறவர்களில் சிலர், மனுஷ குமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை” என்றார். ஓ, என்னே! என்னே! ஒரு அறிக்கை! சிந்தித்துப் பாருங்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அது கூறப்பட்டது.

66129 தேவனுடைய வார்த்தையானது பிழையின்றி இருக்கிறதா? அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் நிச்சயமாக நிறைவேறுமா? 130 இப்பொழுது நாம் மத்தேயு 17ம் அதிகாரத்திற்கு திருப்ப விரும்பினால்…இங்கே அடுத்த காட்சி …சில நாட்கள் கழித்து, அவர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் கூட்டிக்கொண்டு சென்றார். அவர்கள் சாட்சிகளாயிருக்கும்படி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர்; அவர்கள் தேவனுடைய இராஜ்யம் வல்லமையோடு வருகிறதைப் பார்த்தார்கள். அவர்கள் தேவனுடைய இராஜ்யம் வருவதின் ஒத்திகையைப் பார்த்தார்கள். ஆமென்! ஓ, ஆயிர வருட அரசாட்சிக்கு முன்னர், தேவனுடைய இராஜ்யமானது வருகிறதின் ஒத்திகையை காண்பதற்கு அது அவர்களுக்கு முன்பாக கொண்டு வரப்பட்டது. அவர்கள் ஒத்திகையைக் கண்டார்கள்.

67131 சில காலத்திற்கு முன்பு, சில ஊழியக்காரர்களை ஓரல்ராபர்ட்ஸ் அதில் ஒருவர் …சிசில் பி.டி.மில் அவர்கள் பத்து கட்டளைகள் என்ற படத்தை தயாரித்தபொழுது, அவர் சகோதரன் ஷக்கேரியனையும், சகொதரன் ராபர்ட்ஸையும், மற்றும் தேசத்தில் எங்கிலும் உள்ள பிரசங்கிமார்களையும், இன்னும் வரவிரும்பும் எந்தப் பிரசங்கிகளையும், திரைப்பட எடுப்பு அரங்குக்கு வந்து, அப்படம் பொதுமக்களுக்கு திரையிடப்படும் முன்னர், முன்கூட்டியே அதைப்பார்த்திட அழைத்தார். பொது மக்களுக்கு திரையிடப்படும் பொழுது, ஒரு அனுமதிச்சீட்டுக்கு இருபத்தைந்து டாலர்கள் கட்டணம் வசூலித்தார்கள். ஆனால் அவர்…அதாவது அவர்கள் ஏதாவது விமர்சிப்பதற்குரிய காரியங்கள் இருந்தால் அதைப் பற்றிய கருத்தை அவர்கள் முன்கூட்டியே தெரிவிப்பதற்காகவும், அல்லது அதைப்பற்றி என்ன கூறுவார்கள் என்பதைப் பற்றி தெரிவிக்க, அப்படத்தின் ஒத்திகையைக் கண்டனர். பொதுமக்கள் பார்க்கும் முன்னர் இவர்கள் அதை முன் கூட்டியே பார்த்தனர்.

68132 இயேசு, “இங்கே நிற்கிறவர்களில் சிலர்” (ஆமென்!) “தேவனுடைய இராஜ்யம் வல்லமையோடு வருவதைக் காணுமுன்,” அல்லது “மனுஷகுமாரன் தமது இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை”, சரியாகக் கூறினால் “மனுஷகுமாரன் தமது இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன்” என்பதை பாருங்கள். அதற்கு சில நாட்களுக்குப் பின்னர் அவர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை கூட்டிக் கொண்டு ஒரு உயர்ந்த மலையின் மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவர் அணிந்திருந்த வஸ்திரமானது மிகவும் பிரகாசித்தது. சூரியனைப் பார்க்கிலும் பிரகாசமாயிருந்தது. ஒரு உவமையை நாம் எடுத்துக் கொண்டால், அதை வேதாகமம் முழுவதும் தொடர்ந்து பார்க்க முடியும் என்பதை எத்தை தடவைகள் நாம் கண்டிருக்கிறோம்.

69133 ஒரு குறிப்பிட்ட வேத வாக்கியத்தை நாம் எடுத்துக் கொண்டால், அதை வேதம் முழுவதோடு கட்டி இணைக்கலாம். ஆம் ஐயா, எங்கும் ஒரு கசிவு கூட இல்லை. அவை யாவும் தேவனுடைய வல்லமையால் நிறையப்பட்டதாக இருக்கின்றன. பிசாசானவனால், அவன் விரும்பினாலுங்கூட வேத வசனத்தினுள் எதையாவது அழுத்தி உள்ளே நுழைந்து விடமுடியாது. அது உண்மையே. தங்கள் சாட்சியை உறுதிபடுத்தியிருக்கிற, தேவனுடைய இராஜ்யத்தில் விசுவாசங்கொண்டிருக்கிற, ஒவ்வொரு வேதவாக்கியத்தை எடுத்துக் கொண்டு அதை பரிசுத்த ஆவியின் வல்லமையால் பூசி, இரத்தத்தில் அதைக் கழுவி வைத்திருக்கிற அந்த பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்களுக்குள் பிசாசானவனால் நுழைந்து விடமுடியாது; அதற்குள் உலகம் நுழைந்து விடமுடியாது. பிசாசு அதற்குள் நுழைந்துவிட முடியாது. அவர்கள் மரித்து, அவர்களது ஜீவனானது தேவனுடைய முத்திரை மூலமாக பரிசுத்த ஆவியினால் கிறிஸ்துவுக்குள்ளாக மறைந்திருக்கிறது. அப்படியிருக்க பிசாசு எப்படி அவர்களை தொல்லைப் படுத்த முடியும்? உம்ம்! அவர்கள் இப்பொழுது இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.

70134 இந்த இடத்தில், அப்பொழுது, அவன் வருகையைக் கண்டான், அல்லது அவன் ஒத்திகையைக் கண்டான். அவன் முதலில் எதைக் கண்டான்? வருகையில் முதலாவதாக அவன் கண்டது மோசேயாகும், அவன் மரித்த பரிசுத்தவான்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தான். அங்கே எலியாவும் நின்று கொண்டிருந்தான். 135 ஓ, என்ன நடக்கவிருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். முதலில் அங்கே மோசே இருந்தான்; அதுதான் இந்த ஆறு காலங்களிலும் நித்திரை செய்தவர்களைக் குறிக்கும் ஆறு சபைக்காலங்கள். அது மாத்திரமல்ல, அங்கே எலியாவும் இருந்தான்; கடைசி நாளின் தூதன் தன்னுடைய குழுவினரோடு நிற்கிறான். அவர்கள் தான் எடுத்துக் கொள்ளப்பட போகும், மறுரூபமாகும் குழுவினர். ஆமென்! எதிர்காலத்தில் வரும் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறவர்கள். 136 அவரோடு எல்லோரும்…? அம்மலையின் மேல் கூடி வரவில்லை. ஓ, என்னே! அது என்னவாயிருந்தது? பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருக்கு அவர் அளித்த வாக்குத்தத்தம் நிறைவேற்றப்பட்டது. அது உண்மை. ஏனெனில் அவர், “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தமது இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை” என்று கூறியிருந்தார். அவர்கள் அதனுடைய முன்காட்சியை—ஒத்திகையைக் கண்டார்கள். இதற்குப் பிறகு, உயிர்த்தெழுதலுக்குப் பிறகு…

71137 இன்னொரு காரியத்தையும் நான் உங்களுக்கு முன்பாக கொண்டுவர விரும்புகிறேன். இயேசு மரித்து அடக்கம் பண்ணப்பட்ட பிறகு—பிறகு பரிசுத்த யோவான் 21-20. தவறாக அர்த்தம் கொண்டோர், இவ்வுபதேசத்தை அந்நாட்களில் ஆரம்பித்தார்கள். நாம் மற்ற விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இதைக் குறித்த விஷயத்தையும் நாம் தெளிவுபடுத்தி விடுவோம். பரிசுத்த யோவான் 20:21-ல் இயேசு தன் சீஷர்களை சந்தித்தார். அவர்களை நெருப்புத் தழலில் சுடப்பட்ட மீனையும் அப்பத்தையும் கொண்டு போஷித்தார். அவர்கள் கரைக்குச் செல்லுகையில், யோவான் அவரது மார்பில் சாய்ந்து கொண்டிருந்தான். அப்பொழுது “இந்த மனிதனுக்கு என்ன சம்பவிக்கும்?” என்று பேதுரு கேட்டான். இயேசு யோவானை நேசித்தார். யோவான் மிகவும் அன்புள்ள ஒரு மனிதனாயிருந்தான். எனவே அவன், “இந்த மனிதனுக்கு என்ன சம்பவிக்கும்? அவனுடைய நிலைமை என்னவாயிருக்கப்போகிறது? அவனது எதிர்காலம் என்னவாயிருக்கப்போகிறது?” என்று கேட்டான். 138 இயேசு அவர்களிடம், “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன?” என்று கேட்டார். 139 சீஷர்கள் ஒரு தவறைச் செய்தார்கள். அதாவது—அதாவது—அதாவது “அவர் வருமளவும் ‘அவன் உயிரோடு வாழப்போகிறான்’ என்று இயேசு கூறினதாக” அவர்கள் கூறினார்கள். 140 ஆனால் இயேசு எந்த தவறையும் செய்யவில்லை. வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தில் கிறிஸ்து தமது வார்த்தையைக் காத்துக் கொண்டார். அவர் யோவானை பரலோகத்திற்கு கொண்டு வந்து, அவனுக்கு அனைத்தையும் முன் காணலாக காண்பித்தார். மகிமை! அவன், தானே வரப்போகிற காட்சிகளில் முன் காட்சியைக் கண்டான். அவன்தானே முழு சபைக் காலங்களையும் பூமியில் ஜீவிக்கிறவன் போல் இருந்தும் அவை சம்பவிக்கிறதையெல்லாம், கர்த்தருடைய வருகையையும், வெளிப்படுத்தின விசேஷப் புஸ்தகத்தின் முழு சம்பவங்களையும் முன்கூட்டியே பார்த்துவிட்டான். ஓ என்னே!

72141 அவருடைய வாக்குத்தத்தம் எவ்வளவு பிழையற்றதாய் இருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா? யோவானைத் தவிர யாக்கோபோ, ஏன் பவுலுங்கூட இன்னும் மீதியுள்ளவர்கள் எவரும் அவைகளைக் காணவும், கூறவும் அனுமதிக்கப்படவில்லை. அவர், “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன?” என்று கேட்டார். 142 அவர்கள் அதைச் சொன்னபடியினால், அவர் யோவானைத் தெரிந்துகொண்டு, அவனை உயரே எடுத்து, அவன் மரிப்பதற்கு முன்னதாக, எதிர்காலத்தில் சம்பவிக்கப் போகிறவைகளை அவனுக்கு காண்பித்தார். ஏதோ அக்காலங்களில் அவன் வாழ்ந்தது போல் அவைகளைக் கண்டான். அது என்னவாயிருக்கும் என்பதை அவனுக்குக் காண்பித்தார். (சகோதரன் பேட் அவர்களே, அது அற்புதமானதாக இல்லையா?) ஓ, பாருங்கள், அவனை உயரே தூக்கியெடுத்தார். இங்கே வெளி 4:2 அதை நிரூபிக்கிறது. “அவனுக்கு நடந்தவைகளையும், நடப்பவைகளையும், நடக்கவிருப்பவைகளையும் காண்பித்தார்”. அவர் அவனுக்கு சபைக்காலத்தையும், யூதர்களுடைய வருகையையும், வாதைகள் ஊற்றப்படுதலையும், எடுத்துக் கொள்ளப்படுதலையும், மீண்டும் உள்ள வருகையையும், ஆயிர வருட அரசாட்சியையும், அவரது இரட்சிகப்பட்டவர்களின் நித்திய வீட்டையும் காண்பித்தார். அவைகள் சம்பவிக்கிற காலத்தில் அவன் வாழ்ந்தது போல் இருந்தது. அவன் அவைகள் யாவும் சம்பவிக்க கண்டான். பார்த்தீர்களா? புரிகிறதா? அவனை உயர தூக்கியெடுத்து, அவர் எடுத்திருக்கிற படக்காட்சியை அவனுக்கு முன் கூட்டியே முன் காணலாக—ஒத்திகையை காண்பித்தார். ஓ, என்னே!

73143 வெளிப்படுத்தின விசேஷம் 4:2-ல் அவன் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் அவரது வாக்குத்தத்தம் நிறைவேறியது. யோவான் தனது மரணத்திற்கு முன்பாகவே ஆவிக்குள்ளாக மேலே எடுத்துக் கொள்ளப்பட்டு இனி சம்பவிக்கப் போகிறவைகளை, அவைகள் நிகழப்போகும் காலத்தில் அவனும் உயிரோடிருந்து ஜீவித்துக் கண்டது போல் கண்டான். அவன்—அவன் அவை யாவற்றையும் முன்கூட்டியேக் கண்டான். இவ்விதமாக யோவான் என்ன நடக்கவிருக்குமோ, பூமியில் அக்கால முதல் கர்த்தராகிய இயேசுவின் வருகை பரியந்தம் அப்படியே அக்கால முதல் கர்த்தராகிய இயேசுவின் வருகை பரியந்தம் அப்படியே என்ன நடந்ததோ, நடக்கவிருக்குமோ அவைகளை ஒரு தரிசனத்தில் கண்டான். ஒரு தரிசனத்தில் அதை அவனுக்குக் காண்பித்தார். 144 எனவே, பிறகு அவருடைய சீஷர்களோ…அல்லது வேறு எவருமோ, அவர் அக்காலத்தில் வருவார் என்று கூறவில்லை. அவர், “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன?” என்று கேட்டார். பிறகு அவனை அவர் மேலே எடுத்துக்கொண்டு, சம்பவிக்கப் போகிறவைகளை முன்கூட்டியே ஒத்திகையாக நிகழ்த்திக் காண்பித்தார். ஓ, எனக்கு அது பிடிக்கும். உம்ம்! ஓ, என்னே!

74145 இப்பொழுது கவனியுங்கள், இது என்னவாயிருந்தது என்பதை நாம் பார்ப்போமாக: உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்திலே ஒரு சிங்காசனம் வைக்கப்படிருந்தது, அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார். 146 ஒரு “சத்தம்” அவனை அழைத்தது. ஓ, அந்த சத்தம்! அவனுக்குப் பின்னாக இருந்த அந்த சத்தம், அதைவிட்டு என்னால் அகலவே முடியாது. அப்பொழுது அங்கே அவன் நோக்கிப் பார்த்தான். அவனுக்கு சபைக்காலங்கள் யாவையும் காண்பித்தார், ஏனென்றால் அவன் ஏழு பொன் குத்துவிளக்குகளாகிய சபைக் காலங்களில் நின்று கொண்டிருந்தான். பிறகு அவன், சபைக்காலங்கள் முடிந்த பிறகு, அந்த சத்தத்தைக் கேட்டான். அந்த சத்தம் பூமியை விட்டு மேலே போய்விட்டது. அவர் மகிமைக்குள் பிரவேசித்தபோது, “இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு, பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன்” என்று அங்கிருந்து அவர் கூறி அவனைக் கூப்பிட்டதைக் கேட்டான். ஓ, என்னே!

75147 அந்த சத்தம்! நாம் அந்த சத்தத்தின் பேரில் ஒரு நிமிடம் பேசுவோமாக: சில வேதவாக்கியங்களை நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன். நாம் 1தெசலோனிக்கேயர் 4ம் அதிகாரத்திற்கு போவோம். இங்கே இந்த சத்தம் என்ன கூறப்போகிறது என்பதை கவனிப்போம். ஓ, நாம் அதைப் படிக்கும் முன்னரே…அது என்ன கூறப்போகிறது என்பதை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம், நாம் அறிந்திருக்கிறோமல்லவா? என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை நாம் அறிவோம். “தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவதாக எழுந்திருப்பார்கள்.” அப்படித்தானே? இதைக் குறித்துக்கொண்டிருக்கிறவர்களே, 1தெசலோனிக்கேயர் 4:16-17 ஆகிய வசனங்களைப் படிப்போம். “அந்த சத்தம்,” அந்த சத்தம் கிறிஸ்துவின் சத்தம் ஆகும், அது சரிதானே? அது கிறிஸ்துவின் சத்தம்! …தேவ எக்காளத்தோடும்…அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவதாக எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக…அவர்களோடுகூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்.

76148 யோவான் “மேலே ஏறிவரும்படி” அழைத்த அதே சத்தம், யோவானிடத்தில், “மேலே ஏறிவா” என்று அழைத்த அதே சத்தம், ஒரு நாளில் சபையையும் அழைத்திடும். (ஆமென்!), சபையையும் அழைத்திடும். 149 மேலே ஏறிவரும்படி யோவானை அழைத்த அதே சத்தம் தான் மரித்த லாசருவையும் கல்லறையை விட்டு எழுந்து வரும்படி அழைத்த சத்தமாயுள்ளது. அது தான் பிரதான தூதனுடைய சத்தமாம். கிறிஸ்துவே பிரதான தூதனுடைய சத்தம் ஆவார். “பிரதான தூதனுடைய சத்தம்,” பாருங்கள். ஓ, கிறிஸ்துவின் எக்காள சத்தம் யோவானை மேலே ஏறிவரும்படி அழைத்தது, அதே சத்தம்தான் லாசருவையும் அழைத்தது. நீங்கள் லாசருவின் கல்லறையில் கவனித்தீர்களா? அவர் உரத்த சத்தத்தோடு பேசினார். (“லாசருவே…வெளியே…வா” என்று மெதுவாக பேசவில்லை.) அவர் “லாசருவே, வெளியே வா!” என்று மிகுந்த சத்தமிட்டு அழைத்தார். அதுவே மரித்தோரிலிருந்து எழுந்து வரும்படி அழைப்பாணையிட்டது. 150 அவன், “நான் இங்கே இருக்கிறேன்” என்று பதிலுரைத்தான். அவன் செத்து, அவன் சரீரம் அழுகிப் போன பிறகு, மரித்தோரிலிருந்து எழுந்து வந்தான்.

77151 அதே சத்தம் தான் யோவானிடம், “இங்கே ஏறிவா இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன்” என்று விளம்பினது. 152 அதே சத்தம் தொனிக்கும்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிரோடு எழும்புவர், “ஏனென்றால் எக்காளம்…” எக்காளம்! ஒரு எக்காளம் எதைக் குறிக்கிறது? அது கிறிஸ்துவின் சத்தமாகும். அவர் திரும்பி அவனை மேலே ஏறிவரும்படி உத்தரவிட்டு அழைத்தார். அவன் அந்த சத்தத்தை எக்காளம் போல் தொனிக்கக் கேட்டான். “இங்கே ஏறிவா” என்றார். உயிர்த்தெழுதல் எவ்வாறு இருக்கும் என்பது புரிகிறதா? அது ஒரு நொடிப்பொழுதில், ஒரு இமைப்பொழுதில் நடக்கும். அந்த சத்தமானது தெளிவாகத் தொனிக்கும், ஏனெனில் அவர் “அதைவிட்டு வெளியே வா” என்று அழைக்கிறார். அந்த மகத்தான ஆணையிட்டு அழைக்கும் சத்தம்! தேவனே, நான் அந்நாளில் அந்த சத்தத்தைக் கேட்டிட எனக்கு உதவி செய்திடும்.

78153 நான் அடிக்கடி கூறுகிறபடி…சாவுக்கேதுவானவன் என்ற முறையில் நான் அறிவேன் …ராட்னி அவர்களே…எனக்கு முன்பாக ஒரு பெரிய இருளான வாசலானது வைக்கப்பட்டிருக்கிரது என்று நான் அறிவேன். அது மரணம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் என் இருதயம் துடிக்கும்போது, நான் அந்த வாசலுக்கு இன்னும் ஒரு துடிப்போடு நெருங்குகிறேன். இன்னாட்களில் ஒன்றில் நான் அதற்குள் போகத்தான் வேண்டும். ஆனால் நான் ஒரு கோழையைப் போல் அலறிக் கொண்டும் கதறிக் கொண்டும் போக விரும்பவில்லை. அங்கே நான், அவருடைய நீதியின் வஸ்திரத்தைத் தரித்துக் கொண்டு, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நான் அவரை அறிந்தவண்ணமாய், பிரவேசிக்க விரும்புகிறேன். ஒரு நாளில் அவர் அழைக்கும்பொழுது, நான் மரித்தோரிலிருந்து எழுந்து வருவேன். உன்னதத்தில் பிரசன்னமாகும்படி அவர் என்னை உத்தரவிட்டு அழைக்கையில், தேவ எக்காளம் தொனிக்கும்போது, அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள். நான் உயிரோடு இருப்பேனெனில், ஒரு நொடிப்பொழுதில், ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாக்கப்படுவேன். அவ்விதமாய் ஆகாயத்தில் கர்த்தரை சந்திக்கும்படி மீதியாயிருக்கிறவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவேன். அந்த எக்காள சத்தம் தெளிவாக உரத்து தொனிக்கும். உம்ம். ஓ, அவருடைய வருகையிலும் அதே விதமாக, அதேவிதமாகவே இருக்கும்.

79154 அதைக் குறித்த விளங்காத சத்தமே அல்ல. “இங்கே ஏறிவா” என்று யோவானை அந்த சத்தம் அழைத்தபோது, யோவானுக்கு அது விளங்காத சத்தமாக இருக்கவில்லை. அவன் மேலே ஏறிப் போனான், ஆமென். 155 லாசரு மரித்தோரிலிருந்தபோது, கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டிருந்தபோது, அவனது ஆத்துமா நான்கு நாட்கள் பயணமாக எங்கோ போயிருந்தது; அது எங்கே இருந்தது என்பது எனக்குத் தெரியாது. நம்மில் எவருக்குமே அது தெரியாது என்று நான் கருதுகிறேன். அது எங்கிருந்த போதிலும், அது ஒரு துளி வித்தியாசத்தையும் ஏற்படுத்திவிடுவதில்லை. மரித்து, சரீரத்தின் தோலெல்லாம் தோல் புழுக்களால் அரிக்கப்பட்டு, அழுகி நாறிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை, அவர் சத்தமிட்டு ஒரு அழைப்பு விடுத்தார். அந்த தெளிவான எக்காள சத்தமானது, “லாசருவே, வெளியே வா” என்று அழைத்தது. அங்கே ஒரு மனிதன், மரித்து அழுகிக்கொண்டிருந்தவன் தன்னை உதறிக் கொண்டு, கல்லறையை விட்டு வெளியே நடந்து வந்தான். அந்த சத்தத்தைப் பற்றி எந்தவித நிச்சயமற்ற தன்மையும் கிடையாது, அப்படி ஏதும் உண்டா, சகோதரர்களே? எந்தவித நிச்சயமற்ற விளங்காத தன்மை ஏதும் இல்லை.

80156 தெளிவாக தொனித்துக் கொண்டிருக்கிற சத்தமானது, “பாவியே, மனந்திரும்பு, நான் உனக்கு நித்திய ஜீவனைத் தருவேன்” என்று கூறுகையில், இன்றிரவிலும் அதேவிதமாகத்தான் அது இருக்கிறது. “நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” அது தான் ஆணையோடு அழைக்கிறதாயிருக்கிறது. அதைப்பற்றி எந்தவித விளங்காத தன்மையும் இல்லை. 157 அது உண்மையாயிருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சியாய் இருக்கிறேன். அது உண்மையாயிருக்கிறது என்று கூறும் ஒரு சாட்சியாக, உலகெங்கிலும் பல இலட்சக்கணக்கில் வேறு சாட்சிகளும் இருக்கின்றன. வேதம் தேவனுடைய வார்த்தைகளை உரைக்கும்போது, ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையும் ஒரு எக்காளமாயிருக்கிறது. வார்த்தையின் ஒவ்வொரு தொனிப்பும் ஒரு எக்காளமாயிருக்கிறது. அது சுவிசேஷ எக்காளமாயிருக்கிறது. அது முழங்குகையில், அது சத்தியமாயிருக்கிறது. வார்த்தையானது “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறும்பொழுது, அதைப்பற்றி விளங்காத தன்மை ஏதுமில்லை. அவர் மாறாதவர். ஆம், ஐயா.

81158 “மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” அதைப்பற்றி விளங்காத தன்மை ஏதுமில்லை. 159 “என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். இதை நீ விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். அதைப் பற்றி விளங்காத தன்மை ஏதும் இல்லை. “அவன் பிழைப்பான்”. 160 “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தை பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்”. அதைப் பற்றி எந்தவித விளங்காத தன்மையும் இல்லை; ஒன்றுமேயில்லை; அது நிச்சயமான விளங்கும் சத்தமாக இருக்கிறது. 161 ஓ, நான் அதை அறிந்திருக்கிறேன். என்னுடைய எளிய அயர்லாந்துகார இருதயத்தில், ஒரு நாளில் இந்த எளிய பாவிக்கு, அந்த சத்தம் தொனிக்கக் கேட்டேன். அது எனக்காக எப்படி தொனிக்க முடிந்தது? ஆனால் நான், அது ஒரு தெளிவான விளங்கும் சத்தம் என்று விசுவாசித்து அதை ஏற்றுக் கொண்டேன். அது உண்மையாயிருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சியாயிருக்கிறேன். 162 ஒரு நாளில் அவர் மீண்டும் அழைத்திடுவார். நாம் உலகை விட்டுப் போய்விடுவோம். அந்த எக்காள தொனியைப் பற்றி எந்தவித விளங்காத தன்மையும் கிடையாது. ஆம், ஐயா, ஆம் ஐயா. எக்காலத்திலும் அது விளங்காத சத்தமாக இருக்கவில்லை. 163 அவர் நம்மை அழைக்கையில், இன்று அவர் தெளிவாக தொனிக்கிறார். அவர் நமக்கு எதைக் கூறினாலும், அது மாறாததாயிருக்கிறது.

82164 இப்பொழுது நாம் வசனத்திற்குத் திரும்பிப் போவோமாக. …இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது,… (2ம் வசனம்) …அந்த சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார். 165 “சிங்காசனம்” என்பதைக் கவனியுங்கள். அவர் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தார். அவர் இனிமேல் பூமியில் குத்துவிளக்குகளின் மத்தியில் இருக்கவில்லை. எடுத்துக்கொள்ளப்படுதல் நடந்து விட்டது. அவர் மகிமையில் இருக்கிறார். தமது சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து வாசித்து நீங்கள் கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். நாம் 5ம் அதிகாரத்தில் அது இரக்கத்தின் சிங்காசனம் அல்ல என்பதைக் காண்கிறோம். அது இனிமேல் ஒரு இரக்கத்தின் சிங்காசனம் அல்ல. அது தானே ஒரு நியாயாசனம் ஆக இருந்தது. அது ஒரு கிருபாசனமாயிருக்கவில்லை, அது ஒரு நியாசனமாயுள்ளது, ஏனென்றால் அக்கினியும், மின்னல்களும், இடிமுழக்கங்களும் அதிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இனிமேல் அங்கே இரக்கம் இல்லை, அது முடிந்து விட்டது. சபைக் காலமானது முடிவடைந்துவிட்டது. “அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியாயிருக்கிறவன் இன்னும் நீதி செய்யட்டும். பரிசுத்தமுளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.” இனிமேல் அது கிருபாசனம் அல்ல.

83166 இன்றிரவில் இரத்தமானது அந்த சிங்காசனத்தின் மேல் இருக்கிறது. அதுதானே இரக்கத்தைத் தேடுகிற ஒவ்வொரு பாவிக்கும் கிருபாசனமாக இருக்கிறது. ஆனால் அந்த நாளில் அப்பொழுது அது ஒரு கிருபாசனமாக இருக்காது. அங்கே அது ஒரு நியாயாசனமாக, அதின்மேல் சினம் கொண்ட தேவன் அமர்ந்திருக்கிறதாக இருக்கும். அங்கே…“நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?” அவர் தமது மகிமையின் மேகங்களோடு வரும்பொழுது, மலைகள் கூட ஒளிந்து கொள்ள இடத்தைக் கண்டறிய முயற்சிக்கும். அப்படியிருக்க நாம் அப்பொழுது எங்கே தரித்திருக்கப்போகிறோம்? ஓ, அந்த இரத்த ஓட்டம் விலையேறப்பெற்றதாயுள்ளது, அது என்னை பனியைப் போல வெண்மையாக்குகிறது; வேறே நதியை நான் அறியேன், இயேசுவின் இரத்தமேயல்லாமல் வேறொன்றுமில்லை.

84167 ஓ, என்னே, என்னே ஒரு பாடம்! விளங்காத சத்தமே அல்ல! அவரது சிங்காசனம்; ( அவர்…சிங்காசனத்தின்மேல்…வீற்றிருந்தார். (அவர் இனிமேல் இங்கே இல்லை.) 168 இப்பொழுது, அது இன்னொரு காரியம்; மகா உபத்திரவ காலத்திற்கு முன்பாக சபையானது மேலே எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது என்பதற்கான நிரூபணமாக அது இருக்கிறது. புரிகிறதா? ஏன்? அவர் மகிமையில் இங்கே சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். சபையானது பூமியை விட்டுப் போய்விட்டது. பிறகு, உபத்திரவ காலம் உண்டாகிறது. 169 நான் அதை எப்பொழுதும் நோவாவின் காலத்தோடே ஒப்பிட்டே கூறி வந்திருக்கிறேன். நோவாவின் நாட்களில், ஒரு துளிமழை பெய்யும் முன்னர். நோவா பேழைக்குள் போய்விட்டான். சோதோமில் அக்கினி விழுவதற்கு முன்னர், லோத்து சோதோமை விட்டு வெளியேறி விட்டான். அணுகுண்டு விழுவதற்கு முன்னர் சபையானது மகிமைக்குள் பிரவேசித்து விடும். அது உண்மை, அணுகுண்டு விழுவதற்கு முன்னர் அவ்வாறு நடக்கும். 170 நீங்களோ, “முதலில் விழுந்ததைக் குறித்து என்ன?” என்று கேட்கலாம். அது அஞ்ஞானிகள் மேல் தான் விழுந்தது, கிறிஸ்தவர்கள் மேல் அல்ல.

85171 இப்பொழுது கவனியுங்கள். ஓ! அவர் தம்முடைய கிரியை பூமியில் முடித்தார், அவர் தம்முடைய சபையை பூமியை விட்டு எடுத்துவிட்டு, இப்பொழுது அவர் நியாயத்தீர்ப்பை அனுப்புகிறார். உலகம் அவரைப் புறக்கணித்தது. அவர் தம்முடைய நியாயத்தீர்ப்பை அனுப்புகிறார். அவரும் அவருடைய சபையும் மகிமைக்குள் போய்விட்டனர். 172 பத்மு தீவில் இருந்த யோவான், சபைக்கு வெளிப்படுத்தலைப் பெற்று கொண்டவன்; அவன் “இங்கே ஏறிவா” என்று அழைக்கப்பட்டு, மகிமைக்குள் எடுத்துக்கொள்ளப்பட்ட சபைக்கு முன்னடையாளமானவனாக இருக்கிறான். காண்பிப்பேன்… நீங்களோ, “அவன் சபைக்கு எடுத்துக்காட்டாக இருந்தானா?” என்று கேட்கலாம். 173 இவ்வார்த்தையைக் கேட்கிற ஒவ்வொருவனுக்கும், யோவான் அவனுக்கு பிரதிநிதியாக நின்றான். ஆமென். யோவான் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்திற்கு பிரதிநிதியாகவும், வார்த்தையின் சாட்சியாகவும் இருந்தான். அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு ஒரு சாட்சியாக இருந்தான். கிறிஸ்துவோடு தனிப்பட முறையில் ஐக்கியம் கொண்டு இருந்தான். அவன் சபை முழுவதற்கும் எடுத்துக் காட்டாக விளங்கினான். அதாவது கிறிஸ்துவினால் விசுவாசம் கொண்டு, அவரை அதே அடிப்படையில் ஏற்றுக் கொள்கிற ஒவ்வொரு மனிதனோ அல்லது ஸ்திரியோ, பையனோ அல்லது பெண்ணோ, யாராயிருந்தாலும் சரி, ஒரு நாளில் அவன், “இங்கே ஏறிவா” என்று கூவி அழைக்கப்படுவான். அவர்கள் உபத்திரவக் காலத்திற்கு முன்பாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள். உபத்திரவ காலமானது இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 174 நியாயத்தீர்ப்பு அமையவிருக்கிற வேளையாக இது இருக்கிறது. சபைக்காலத்திற்குப் பிறகு என்ன சம்பவிக்கப் போகிறது என்பது யோவானுக்கு காண்பிக்கப்பட்டது. பாருங்கள்? எனவே அது அவ்வாறு இருந்தது.

86175 இப்பொழுது 3-ம் வசனத்தில் இல்லை 2-ம் வசனத்தில் மீண்டும் கவனியுங்கள். “பரலோகத்திலே ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அதின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்.” பூமியில் இருந்த அதே ஆவியானவர்தான், பூமியை விட்டு கடந்து சென்று, மகிமைக்குள் சென்று, கிருபாசனத்தில், சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். (இன்றிரவு நம்மோடு இருக்கிறவர் அதே இயேசு தான்) வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும், பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம் போல் தோன்றிற்று.

87176 நான் முடிக்கப் போகிறேன், ஏனெனில், பிரசங்கிப்பதற்காக மற்ற சகோதரர்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை காலையில் நான் இதைத் தொடர்ந்து இங்கே பிரசங்கிப்பேன். எனவே “அது பார்வைக்கு மரகதம் போல் தோன்றியது” ஓ, என்னே! ஓ! பெந்தெகோஸ்தே நாளில் விழுந்த அக்கினியின் ஜீவாலையினால், தங்கள் இதயங்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் மக்கள் எவ்விடத்திலும் உள்ளனர் (அதை நீங்கள் விரும்புகிறீர்கள் அல்லவா?), அது சுத்திகரித்து அவர்களை சுத்தமாக்கியது. ஓ, அது என் இருதயத்திற்குள் எரிந்து கொண்டிருக்கிறது, அவருடைய நாமத்திற்கே மகிமை! நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன்.

88177 மனுஷ குமாரன் வருகையை யோவான் காண்பான் என்று அவனுக்கு தேவன் வாக்களித்தபடியே, கர்த்தராகிய இயேசுவால் அழைக்கப்பட்டு, மேலே வரும்படி கூப்பிடப்பட்டான். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் தன் முன்பாக நின்று இருக்க, இயேசுவானவர் அவர்களிடம், “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரனுடைய வருகையைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை” என்று கூறினார். அவர், இங்கே நிற்கிற “யாவரும்” என்று கூறாமல், “சிலர்” என்று மட்டுமே கூறினார். அதற்கு சில நாளைக்குப் பிறகு, அவர்கள் போய், உயிர்த்தெழுதலின் முறையும், கர்த்தருடைய வருகையும் தங்கள் முன்பாக ஒத்திகை போல் நடத்திக் காட்டப்பட்டதைக் கண்டார்கள். 178 மோசே மரித்து உயிர்த்தெழும் பரிசுத்தவான்களுக்கு அடையாளமாகவும், எலியாவோ மறுரூபப்படுத்தப்படும் கூட்டத்திற்கு அடையாளமாகவும் இருக்கிறான். மோசே தான் முந்தினவன். எலியா அதன்பின் என்பது நினைவிருக்கட்டும். கடைசி நாளுக்குரிய தூதனாயிருக்கும்படி எலியா வைக்கப்பட்டிருந்தான். அவனோடும், அவனுடைய குழுவினரோடும் மரிக்காமல் எடுத்துக் கொள்ளப்படுதல் வரும் என்பதையே பொருட்படுத்திக் கூறிகிறேன். மோசே உயிர்த்தெழுதலை பெறும் கூட்டத்தையும், எலியா மறுரூபப்படுத்தப்படும் குழுவினரையும் கொண்டு வருகிறார்கள். அவர்கள் இருவருமே இங்கே, இரு கூட்டத்திற்கும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

89179 சிறிது நேரம் கழித்து, அவர்கள் அக்காட்சியை கவனித்துக் கொண்டிருக்கையில், அவர்கள் அதைக் கண்டபோது, பேதுரு, “நாம் மூன்று கூடாரங்களை போடுவோம். சிலர் நியாயப்பிரமாணத்திற்குக் கீழாகவும், சிலர் எலியாவின் கீழாகவும், (அவர்களில் சிலர்) இந்த வழியாகவும் செல்வோம்” என்று கூறினான். 180 அவர்கள் இன்னமும் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு சத்தமானது பேசி, “இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்கு செவிகொடுங்கள்” என்று உரைத்தது. அப்பொழுது அவர்கள் பார்த்தபோது, அவர்கள் இயேசுவை மாத்திரம் கண்டார்கள். அங்கே இருந்த மற்றவைகளெல்லாம் அந்த ஒருவருக்குள் மறைந்து விட்டது. ஓ, அவரே ஒளியும், சத்தியமும், வழியும், வாசலும், வானவில்லுமாயிருந்தார்.

90181 ஓ, கர்த்தருக்கு சித்தமானால், நாளைக்கு நமக்கு மகத்தான பாடம் ஒன்று இருக்கிறது. நாளைக்கு நாம் “நியாயத்தீர்ப்பை” எடுத்துக் கொள்வோம். நாம், “பதுமராகம்” என்றால் என்ன என்பதையும், அதன் பங்கு என்ன என்பதையும் பார்ப்போம். நாம் “வச்சிரக்கல்” எதைக் குறிக்கிறது என்பதையும் பார்ப்போம். மற்றும் வெவ்வேறு கற்களையும் குறித்துப் பார்ப்போம். அவைகளை எசேக்கியல் மற்றும் ஆதியாகமத்திலும், வெளிப்படுத்தின விசேஷம் பிறகு வேதாகமத்தின் மத்திய பகுதிக்கு வந்து, அவைகள் யாவையும் ஒன்றாக இணைத்து, இந்த வெவ்வேறு கற்களின் நிறங்கள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். அதனிடமாக நாம் திரும்பி வந்து பார்த்து அவை சரியாக இருக்கிறதா என்று பார்த்திடுவோம். புரிகிறதா? அதே நிறம்தானா, மற்றும் உள்ளவைகள் சரியாக அவ்வாறு அங்கும் இருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் பார்ப்போம். அதே தேவன் தான், அதே பரிசுத்த ஆவியானவர்தான் அதே அடையாளங்களையும், அதே அற்புதங்களையும், அவர் வாக்குரைத்தபடி அதேக் காரியங்களையும் செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

91182 பேதுரு, யாக்கோபு, யோவான் மற்றும் அங்கே நின்று கொண்டிருந்த அவருடைய ஏனைய சீஷர்கள் அனைவரிடமும், அவர், “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தமது இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை” என்று கூறினார். 183 யோவானிடத்தில் கூறினார், பேதுரு, “இவனோடு நீர் என்ன செய்யப்போகிறீர்? அந்த—அந்த நபருக்கு, அவனுக்கு என்ன செய்ய சம்பவிக்கப் போகிறது?” என்று கேட்டான். 184 அதற்கு அவர், “நான் வருவதைக் காண இவன் இருந்தால் உனக்கென்ன?” என்று கூறினார். அவன் அதைக் காணுவதற்காக அது வரையிலும் உயிர்வாழ அனுமதித்தார். மற்ற சீஷர்கள் யாவரும் மரித்து விட்ட பிறகு, யோவானோ, கர்த்தருடைய வருகையானது வல்லமையோடு வருவதையும், தன் காலத்திலிருந்து நியாயத்தீர்ப்பானது முடிவு பெறும் வரையிலும், அதன் பிறகும், ஆயிரவருட அரசாட்சி வருவதைக் குறித்தும் ஒத்திகையை முன்கூட்டி காணும்படி வாழ்ந்தான். யோவான் அவைகள் ஒவ்வொன்றையும் கண்டான்; ஆயிரம் வருட அரசாட்சி முடிவு பெறுவதையும், அதன் பிறகு இராஜ்யத்தின் காலம் துவங்குவதையும் கூட கண்டான். ஆகவே, அவர் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார். அவர் காத்துக்கொள்கிறார் அல்லவா?

92185 நாம் 2ம் வசனத்தைக் குறித்துக் கொள்வோம். கர்த்தருக்கு சித்தமானால் நாம் காலையில் 3ம் வசனத்தில் ஆரம்பிப்போம். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 186 என் சகோதரனே, என் (சகோதரியே), உங்களில் எத்தனை பேர்கள், ஒரு நாளில் வரும்படி அவரால் அழைக்கப்படப்போகிறீர்கள் என்பதைக் குறித்து இன்றிரவு இந்த சபையில் அறிந்தவர்களாய் எத்தனைபேர் இருக்கிறீர்கள்? அதற்கு நீங்கள் ஆயத்தமாய் இருந்தாலும் இல்லாமற் போனாலும், தேவனைச் சந்திக்கும்படி வருவதற்காக அழைக்கப்படுவீர்கள். அந்த எக்காளம் தொனிக்கப்போகிறது; அவ்வாறு அது தொனிக்கையில், அது உங்களுடைய ஆக்கினைக்காகத்தான் தொனிக்கும்; அங்கே நீங்கள் மீண்டும் ஜீவிக்க மாட்டீர்கள்; நீங்கள் பிசாசினுடைய நரகக் குழியில் ஒருகால் இலட்சக்கணக்கான ஆண்டுகளாக வாதிக்கப்படுவீர்கள்; அல்லது உன்னதத்தில் மகிமையான பரிசுத்தவான்களை சந்திப்பதற்காக அழைக்கப்படுவீர்கள்.

93187 தேவன், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருக்கு கொடுத்த வாக்கைக் காத்துக் கொண்டது எவ்வளவு நிச்சயமோ, வெளிப்படுத்தலை பெற்றுக்கொண்ட பிரியமுள்ள யோவானுக்கு அளித்த வாக்கை அவர் காத்துக் கொண்டது எவ்வளவு நிச்சயமோ, சபைக்காலங்கள் முழுவதும் அவர் தன்னுடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொண்டது எவ்வளவு நிச்சயமோ, இந்த கடைசி நாட்களில் அவர் பின்மாரியை அனுப்புவேன் என்றும், பூமியில் அவர் இருக்கையில் அவருக்குள்ளிருந்த அதே ஆவியைத் திரும்ப கொண்டு வருவதாகவும், சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும் என்பதாகவும் இந்த கடைசி நாட்களில் இந்த “திறந்த வாசலின்” காலத்தில், அவர் தன் நாளில் செய்திட்ட அதே வல்லமை, அதே அடையாளங்கள் மற்றும் அவர் செய்த யாவையும் மீண்டும் செய்து காண்பிப்பதாக வாக்குரைத்திருக்கிறார் என்பதும் நிச்சயமே. 188 இங்கே அது இருக்கிறது! நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவியானவரை இப்பொழுதே நம்மிடத்தில் நாம் பெற்றிருக்கிறோம். நீங்கள்…அவர் உங்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டும் போதித்துக் கொண்டும், எது சரியானது எது தவறானது என்றும் நீங்கள் கண்டுக் கொள்ளச் செய்ய முயன்று கொண்டும் இருக்கிறார். அது பரிசுத்த ஆவியானவர் தாமே. அவரே மானிட உதடுகள் மூலம் பேசிக் கொண்டும், மனித இனத்தின் நடுவில் கிரியை செய்து கொண்டும், இரக்கத்தையும் கிருபையையும் காண்பிக்க முயன்று கொண்டும் இருக்கிறார். 189 நீங்கள் இன்னும் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களாயிருந்தால், இந்த புத்தாண்டு தின முந்தின இரவில் தேவனண்டை உங்களுடைய கரங்களை உயர்த்தி, “தேவனே, வெளிப்படுத்தின விசேஷத்தை பெற்றுக்கொண்ட யோவான் மேல் இருந்த வல்லமையை நான் பெற்றுக்கொள்ளட்டும். அதினால், நான் யோவானைப் போல், மேலே வரும்படி அழைக்கப்படுகையில், உமக்கு முன்பாக சமாதானமாக வந்து பிரசன்னமாவேன்” என்று கூற விரும்புகிறீர்களா? உங்கள் கரத்தை உயர்த்திடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சபை முழுவதிலும், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. “நான் எனக்கு விடுக்கப்படும் அழைப்புக்காக பதில் உரைக்க ஆயத்தமாக இருக்கட்டும்”.

94190 எங்கள் பரலோகப் பிதாவே, இந்த புத்தாண்டு தின முந்தின இரவில்… இப்போதிலிருந்து இன்னும் இரண்டு மணி நேரம் தான் உள்ளது, அப்போது ஒரு புத்தாண்டு பிறந்துவிடும். இந்த ஆண்டில் நாங்கள் என்ன செய்தோமோ அவைகளை நாங்கள் செய்துவிட்டோம். நான் செய்திருக்கிற அநேக காரியங்களைப் பற்றி நானே வெட்கமடைகிறேன். கர்த்தாவே, நான் அவைகளைக் குறித்து மனஸ்தாபப்படுகிறேன். 191 என்னுடைய சகோதரர்கள் புரிந்து கொள்ளாமலிருக்கிற ஏராளமான காரியங்களை நான் செய்திருக்கிறேன். நான் ஏன் அவைகளைச் செய்தேன் என்பதை வெளியே ஊழிய களத்தில் உள்ள எனது சகோதரர்கள் அநேகர் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், பிதாவே, அவ்வாறு செய்ய நான் நடத்தப்பட்டதால், நான் அவைகளைச் செய்தேன். பிதாவே, அந்த வழி நடத்தல் நிமித்தமாக நான் ஒருபோதும் வெட்கமடையாதிருக்கச் செய்தருளுவீராக என்று நான் ஜெபிக்கிறேன். ஆனால் என்னை தொடர்ந்து வழி நடத்தும், கர்த்தாவே. நான் கிரியை செய்ய வழி நடத்தப்பட்டது போலவே தொடர்ந்து செய்ய என்ன வழிநடத்தியருளும். தேவனே, எனக்கு உதவி செய்தருளும், ஏனெனில் நான் உலகத்தின் மக்களுக்கு ஜீவ அப்பத்தை கொண்டுவரும்படியாக நான் உம்முடைய சித்தத்தை அறிந்து கொள்ள வேண்டுமென உத்தமமாக தேடுகிறேன். (அநேக ஆண்டுகளுக்கு முன்பாக நான் இந்த சபையை விட்டு புறப்பட்டபோது, நீர் எனக்கு காண்பித்தது போல) நான் அந்த பெரிய அப்பமலையைக் கண்டேன், வெண்வஸ்திரம் தரித்த பரிசுத்தவான்கள் பூமி முழுவதிலுமிருந்து வந்து, இந்த ஜீவ அப்பத்தை புசிப்பதைக் கண்டேன். ஓ தேவனே, நான், ஓ, தேவனே, ஜீவ அப்பத்தைக் கொண்டு மக்களை போஷிப்பதிலிருந்து நான் ஒருபோதும் தவறாதிருக்கட்டும்.

95192 இப்பொழுது தங்கள் கரங்களை உயர்த்திட்ட இங்குள்ள இந்த பசியுள்ள ஆத்துமாக்களை ஆசீர்வதியும். அவர்கள் இன்னும் கூடுதலான ஜீவனுக்காக தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும், கர்த்தாவே பரிசுத்த ஆவியால் நீர் நிரப்பிட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், தேவனே, அதை அளித்தருளும். அவர்களுக்கு ஆசீர்வாதங்களை அளித்தருளும். எங்குமுள்ள எங்கள் சகோதரர்களுக்கு உதவி புரிந்தருளும். 193 மீண்டும் இங்கு வருவதற்காக புறப்பட்டுக் கொண்டிருக்கிற எங்களுடைய ஊழியக்கார சகோதரர்களை ஆசீர்வதியும், இன்னும் சில நிமிடங்களில் மற்றவர்கள் பிரசங்கித்துக் கொண்டிருப்பார்கள். பிதாவே, நாங்கள் அந்த சத்தத்தை கவனமாகவும், பயபக்தியோடும் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர்கள் எங்களுக்கு ஜீவ அப்பத்தை தரவேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், அதை அளித்தருளும். 194 எங்களை ஆசீர்வதியும். இந்தப் புத்தாண்டு புதிய நம்பிக்கைகளோடும், புதிய சிந்தைகள், புதிய வெளிப்படுத்துதல்கள், புதிய வல்லமை, ஓ, ஒவ்வொரு காரியத்தையும் கொண்டுவருவதோடு உதயமாவதாக. கர்த்தாவே, உம்முடைய ஆசீர்வாதங்களையும், வாக்குத்தத்தங்களையும் அது எங்களுக்கு மீண்டும் புதுப்பித்துத் தருவதாக. உம்முடைய கரங்களுக்குள்ளாக, எங்களுடைய ஜெபத்தோடு எங்களையே நாங்கள் ஒப்புக்கொடுக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென். என்னுடைய சகோதர, சகோதரிகளே, உங்களுக்கு நன்றி. 195 [சகோதரன் நெவில் பேசுகிறார்; “நமக்கு எந்த அவசரமும் இல்லாதபடியால், நாம் யாவரும் தொடர்ந்து கேட்பதற்கு மகிழ்ச்சி கொண்டிருக்கிறோம் என்றும், நாம் யாவரும் களிகூர முடிகிறது என்றும் நான் நிச்சயம் நம்புகிறேன்; ஏனென்றால் சகோதரன் பிரான்ஹாம் அவர்கள் இன்றிரவும் இந்த செய்தியை நமக்கு இங்கு கொண்டு வருகிறார். தேவன் இன்றிரவும் இந்த செய்தியில் இருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறபடியால் இது நம்மை ஊக்கப்படுத்துகிறது. ஆமென்”—ஆசி.] கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! [“மீண்டும் அவருடைய வருகை வரையிலும் அவர் அதை நன்கு செய்யவும் கூட வல்லவராயிருக்கிறார் என்றே அவர் அதைக் குறித்து கூறியுள்ளார்”.] ஆம். [“அவர் அதைச் செய்வார், அது மட்டுமல்ல, நான் அடிக்கடி கூறியுள்ளேன் அதாவது…நாம் ஜனங்களிடத்தில் அநேக சமயங்களில், ‘இயேசு கிறிஸ்துவால் உங்களை குணப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறோம், மற்றும், நிச்சயமாகவே, வழக்கமாகவே உங்களால் அவர்களை அதற்கு சம்மதிக்க செய்ய முடியும். ஆனால் அதன் காரியம் என்னவெனில், அவர் உங்களை இப்பொழுது குணப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிப்பதேயாகும்.”] ஆமென்! [“அதன் பின்னர் சில சமயங்களில் ஜனங்கள், ‘எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறார்கள். மருத்துவமனையில் மயக்கமுற்ற பெண்மணியை, அவளைப் பார்க்க உள்ளே சென்று, ‘சகோதரியே, இயேசு இரட்சிக்கிறார் என்று நீங்கள் இன்னமும் விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவள், ‘ஆம், நான் விசுவாசிக்கிறேன்,’ என்றாள். அப்பொழுது நான் ‘இயேசு குணப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவள், “ஆம் ஐயா, நான் விசுவாசிக்கிறேன்’ என்று கூறினாள். அப்பொழுது நான், ‘அவர் இப்பொழுதே உங்களை சுகப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘அது எனக்கு தெரியாது’ என்றாள். அதற்கு நான், ‘சகோதரியே, அது உங்களுக்கான வாக்குத்தத்தமாயிருக்கிறபடியால் உங்களால் அதை அறிய முடியும்.’ என்றேன்.] ஆமென்! [“ஆமென். அவர் வாக்குரைத்திருக்கிறார். இப்பொழுது, நாம் இப்பொழுது இங்கே நம்முடைய சகோதரர்களில் மற்றொருவர் பேசக் கேட்கப் போகிறோம். நமக்கு சுற்றிலும் பலர் உள்ளனர், இந்த…புதிய வருட முந்தின இரவு வேளையில், நமக்கு இங்கே முன்கூட்டியே ஏற்பாடு செய்ய நிகழ்ச்சி இல்லை. நாம் ஒன்று கூடி வந்து, தேவன் நடத்துகிற, வழிநடத்தும் விதமாகவே அவர் அசைவாட அனுமதிக்கிறோம்”.] ஆமென்! [“உங்களுக்குத் தெரியும், அது சகோதரன் பேட் டெய்லர் அவர்கள் தன்னுடைய சாட்சியை அல்லது கர்த்தர் அவருடைய இருதயத்தில் என்ன வைத்துள்ளாரோ, அதை அவர் கூற நாம் கேட்டது முதற்கொண்டே நீண்டகாலமாகவே இருந்துவருகிறது. சகோதரன் பேட் அவர்களுடைய இருதயத்தில் தேவன் என்ன வைத்திருக்கிறாரோ அதைக் கூற வரும்படி நாம் கேட்டுக் கொள்ளப் போகிறோம், ஆனால் அவர் இங்கு வருவதற்கு முன்னர், அங்கே பின்னால் உள்ள ஒரு நல்ல கிறிஸ்தவ சகோதரன், சகோதரன் ரான்டால் ஹைமேன் அவர்கள், அவர் இங்கிருக்கிறார், அவர் கர்த்தருக்காக பாடும்படியான திறமையை உடையவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் அந்தத் திறமையை அவர் தேவனுடைய மகிமைக்காக உபயோகிக்கும்படிக்கு செய்ய வேண்டும் என்று நான் வாஞ்சித்துள்ளேன். எனவே சகோதரன் ரான்டால் அவர்கள் மேலே வந்து நமக்காக பாடுவாரா என்று நான் அவரை கேட்டுக் கொள்ளப் போகிறேன். அவர் நமக்காக இங்கு ஒன்று அல்லது இரண்டு முறைகள் பாடியிருக்கிறபடியால், இன்றிரவு, மீண்டும் கர்த்தராகிய இயேசுவிற்காக தன்னுடைய தாலந்தை உபயோகித்து அவர் பாடுவாரா என்று நான் அவரைக் கேட்டுக் கொள்ளப்போகிறேன். அவர் இப்பொழுது வந்து நமக்காக பாடினால் நலமாயிருக்கும். அவர் தனக்கு உதவுவதற்காக சில இளைஞர்களை பின்னால் வைத்துள்ளார்; எனவே அவர் இப்பொழுது எழும்பி வந்து நமக்காகப் பாடுவாராக, அவர் பாடிக்கொண்டிருக்கையில், இங்கே பின்னால் அன்புக்குரிய பெந்தேகோஸ்தே சகோதரன், சகோதரன், சகோதரன் கின்டர் அவர்களும் கூட நம்மிடத்தில் இருக்கிறார், நாம் அவருக்காகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். நம்மிடத்தில் சகோதரன் J.T. பார்நெல் அவர்கள் அங்கே எங்கோ அமர்ந்துகொண்டிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர் வரிசைக்கு வெளியே அங்கே பின்னால் அமர்ந்து கொண்டிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இந்த எல்லா நல்ல கிறிஸ்தவ சகோதரர்களுக்காகவும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்…] பீலர் அவர்கள் அங்கே இருக்கிறார்… [விசுவாச சகோதரர்கள், நாம் பார்ப்போம்.”] சகோதரன் பீலர் அவர்கள் அங்கே பின்னால் இருக்கிறார். [“சகோதரன் பீலர் அவர்களும் கூட இங்கே பின்னால் இருக்கிறார். ஆம். சகோதரன் பீலர் இங்கே இருக்கிறார் மற்றும்…”] 