1 சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி. கர்த்தர் உங்களையும் கூட ஆசீர்வாதிப்பாராக. வேதபாட வகுப்பினரே, காலை வணக்கம். இன்று காலையில் ஒவ்வொருவரும் எவ்வாறு உணருகிறீர்கள்? நன்றாக இருப்பதாக உணருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆமென். நாங்கள் இன்று காலையில் இங்கே இருப்போம் என்பதை மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிவித்திருந்தோம், ஏனெனில் நான் எனது பயண நிகழ்ச்சிநிரலை இன்னும் இறுதியாக்கவில்லை; எப்பொழுது நான் புறப்படுவேன் என்பது முடிவாகவில்லை. இந்நிகழ்ச்சிநிரலானது அடுத்த ஆறுமாத காலத்திற்கென தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே நான் இன்று காலையில் இவ்வாராதனையை நடத்தி விடுவோமே என்று எண்ணினேன்; ஏனெனில் நான் அறிந்த வரையிலும், இலையுதிர் காலத்தில் நான் இங்கு திரும்பி வருகிற வரையிலும், சில காலம் ஆகிவிடுமே.
22 நான்…வருகின்ற வாரத்தில் நான் டெக்ஸாஸிலுள்ள ப்யூமாண்டுக்கு புறப்பட்டு விடுவேன். அங்கே அடுத்த வாரத்தில் ஆரம்பித்து, சுமார் எட்டு அல்லது பத்து நாட்களுக்கு சுயாதீன சபைகளின் சங்கமும் மற்றும் வேறு பல சபைகளும் ஒழுங்கு செய்துள்ள கூட்டங்களில் கலந்து கொள்ளுவோம். டெக்ஸாஸிலுள்ள ப்யூமாண்ட்டில் உள்ள இயேசு நாமக்கார சபைகள்தான் அக்கூட்டங்களை நடத்துகின்றன. அந்த ஊரில் தான் சில காலத்திற்கு முன்பாக நமக்கு மகத்தான கூட்டம் உண்டாயிருந்தது; அது இந்தப் படம் எடுக்கப்பட்ட பிறகு அச்சயமத்தை ஒட்டி நடந்ததாகும். அவர்கள்…ப்யூமாண்டில் நடைபெறும் கூட்டங்களுக்கு வந்து சேருவதற்காக அவர்கள் இருபத்தேழு பெட்டிகள் கொண்ட…ஒரு இரயில் வண்டித்தொடரை அதற்கென ஓடும்படி ஒழுங்கு செய்திருக்கிறார்கள். அங்கே தான் அந்நகரத்தின் நகராண்மைக் கழகத் தலைவர் ஒரு பேரணியை தெருக்களில் நடத்திச் சென்றார். அவர்கள் யாவரும் சென்றார்கள். ப்யூமாண்டில் மகத்தான வேளை நமக்கு உண்டாயிருந்தது. அவ்வூருக்கு நாம் மீண்டும் அடுத்த வாரம் திரும்பிப் போகிறோம். அதற்குப் பிறகு சான் அண்டோனியோ என்ற இடத்திற்கு போவதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் திரும்பி வரும் வழியில் அங்கே போவதற்கு போதுமான சமயம் நமக்கு இருக்காது. 3 நாம் அங்கிருந்து பீனிக்ஸ், லாஸ் ஏஞ்செலிஸுக்குப் போய் விட்டு, பிறகு லாங் பீச்சுக்கும் போகப் போகிறோம். அதன் பிறகு, கர்த்தருக்கு சித்தமானால், நாம் திரும்பி வந்து, கிழக்கு கடற்கரையில், வெர்ஜீனாயாவுக்கும், தெற்கு கரோலினாவுக்கும் போகப்போகிறோம். பிறகு, அங்கிருந்து, ப்ளூமிங்டன், இல்லினாய்க்கு செல்வோம். அங்கிருந்து, ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் லேன் டெக் உயர்நிலைப் பள்ளியில் கிறிஸ்தவ வர்த்தகர் குழு நடத்தும் கூட்டத்திற்குப் போவோம். அதன் பிறகு நான் அங்கிருந்து புறப்பட்டு, வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கும், அலாஸ்கா வரையிலும் சென்று, அப்பகுதிகளில் ஜூன் வரையிலும் இருப்பேன். இப்பொழுது நமக்கு மகத்தான நேரம் உண்டாயிருக்கும் என்று நாம் நம்புகிறோம். 4 இங்குள்ள இச்சபையைக் குறித்து வருமான வரித்துறையினர் என்னிடம் செய்யும் புலன் விசாராணையாவது அந்த சமயத்தின் போது முடிவடைந்து விட வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். அதன் பின்னர் நாங்கள்…அது முடிவடைந்து விட்ட பிறகு, ஜூன் மாதத்தில் வெளிநாட்டிற்கு நான் போக முடியும்; அது ஆப்பிரிக்காவுக்கு போவதற்கு ஏற்ற சமயமாக இருக்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் நான் ஆப்பிரிக்காவில் இருப்பேன். ஆகவே, நிச்சயமாக உங்களுடைய ஜெபங்கள் எனக்குத் தேவையாயிருக்கிறது.
35 நாம் கர்த்தருடைய வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் கூறிய இக்கூட்டங்களெல்லாம், “அது கர்த்தருடைய சித்தமாக இருக்குமானால்” என்று தான் உள்ளன. பாருங்கள், நமக்குத் தெரியாது. அவரால் முடியும்…இக்கூட்டங்களெல்லாம் சரியாக வழிநடத்துதல்கள் பேரில் உள்ளவையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் நமக்கு வந்த அழைப்பையெல்லாம் ஒன்று சேர்த்து, அவைகளின் பேரில் ஜெபித்து, “நாங்கள் எப்பக்கம் செல்லவேண்டும்?” என்று கேட்போம். அது நடத்துதல்போல் தோன்றுகிறது; நான் என்னிடம் மட்டுமே வைத்துக்கொண்டிருக்காமல், அதை மற்றவர்களிடமும் கூறி, அதைப் பற்றி அவர்களும் சிந்தித்துப் பார்த்து, அதன் பேரில் ஜெபிக்கச் செய்து இருக்கிறேன். அப்பொழுது, நாம் தானே இச்சமயம் மேற்கிலும், தெற்கிலும் போக வழி நடத்தப்பட்டது போல் நமக்குத் தோன்றியது. இந்த வேளையில் மேற்கே சுற்றிலும் எல்லா இடங்களிலும் நமக்கு அழைப்புகள் வந்துள்ளன. எனவே நாம் புறப்பட்டு விட்டோம். முதலாவதாக போக வேண்டிய இடமாக ப்யூமாண்ட் அல்லது சான் அண்டோனியோ இருக்கும் என என் இருதயத்தில் உணர்ந்தேன். நமக்கு இரு இடங்களிலிருந்துமே அழைப்பு உண்டாயிருக்கிறபடியினால், எங்கு போக வேண்டும் என்பதை அறிய விரும்பினோம்.
46 ப்யூமோண்டில் ஒரு தொடர் கூட்டத்தை நாம் அறிவித்திருக்கிறோம். அவர்களிடம் நாற்பத்திரண்டு சபைகள் ஐக்கிய பெந்தெகோஸ்தே சபையின் ஒத்துழைப்பாய் இருக்கிறபடியால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து ஐந்து நாட்கள் என்று கூட்டங்களைக் கொடுப்பதை விட, ஒரே இடத்தில் அவர்கள் யாவரையுமே கூடி வரச்செய்து, ஒரு பெரிய அரங்கத்தில் பத்து நாட்களுக்கான கூட்டத்தை ஒழுங்கு செய்வது சிறந்தது என்று நாங்கள் எண்ணினோம். ஆகவே அவ்வாறு ஒரு இடத்தை நடுமையமாக வைத்து கூட்டத்தை நடத்துவது மேலானதாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். ப்யூமோண்டைச் சுற்றிலும், டெக்ஸாஸின் எண்ணெய் வனப்பகுதியின் தொலைதூரப் பிரதேசங்களிலும் தேவையுள்ள மக்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆகவே ப்யூமோண்டில் நாம் ஒரு மகத்தான வேளையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். 7 இப்பொழுது, பெரிய நகரங்கள், பெரிய ஸ்தலங்கள் இருக்கிற இடங்களாகப் பார்த்துப் போவதற்கு நாங்கள் ஒருபோதும் முயலவில்லை. ஆனால் நாங்களோ, அது எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் சரி அல்லது எவ்வளவு பெரிய இடமானாலும் கர்த்தர் நடத்துகிற வண்ணமாகவே போக நாங்கள் முயலுகிறோம். இப்பொழுது எந்த ஒரு சமயத்திலும் நமக்கு ஒரு மக்கதோனிய அழைப்பை அவர் கொடுக்கக் கூடும். அவர் நம்மை அழைத்து என்ன செய்ய சொன்னாலும், எங்கு போகச் சொன்னாலும் அதற்காக நாம் எந்த சமயத்திலும் ஊழியக்களத்திற்கு புறப்பட்டு விடுவோம்.
58 அருமையான மக்களாகிய உங்களோடு, தேவனுடைய வார்த்தையைச் சுற்றிலும் நாம் கொண்டுள்ள இந்த ஐக்கிய வேளையை நிச்சயமாகவே மகிழ்ச்சியோடு அனுபவித்துள்ளோம். இப்பொழுது நீங்கள் உத்தமமாயிருந்து, சபைக்கு ஒழுங்காக வந்து, இங்கேயிருக்கிற தீரமிக்க நமது சகோதரர் நெவில் அவர்கள் மூலமாக கொடுக்கப்படும் வேதாகம உபதேசங்களுக்கு கீழ்ப்படிவீர்கள் என்று நான் நம்புகிறேன். சகோதரர் நெவில் அவர்கள் தேவனாகிய கர்த்தரின் ஊழியக்காரன் தான் என்பதை நான் மிகவும் உயர்வாக பரிந்துரை செய்கிறேன். அவர் தேவனோடு ஆழமாக, இன்னும் ஆழமாக முன்னேறிச் சென்றுக் கொண்டிருக்கிறார், அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். 9 சிறிய சபையே, நீங்கள் தேவனுடைய கிருபையில், உறுதியாக நிலைத்திருக்கவும், எப்பொழுதும் கல்வாரியை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கவும், உங்கள் ஆத்துமா, இருதயத்தினின்று எல்லா கசப்பான வேரையும் அகற்றிவிட்டு, தேவன் எந்த சமயத்திலும் உங்களை உபயோகிக்கத்தக்கதாகவும் இருக்கும்படி நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் எச்சரித்து, அறிவுறுத்துகிறேன். எதையாவது நீங்கள் செய்யும்படியோ அல்லது எதாவது ஒரு வெளிப்பாடோ அல்லது ஏதோ ஒரு காரியம் வினோதமான முறையில் உங்களுக்கு எச்சரிக்கையாக வருமென்றால் அல்லது கவனமாக இருங்கள். மிகவும் சூழ்ச்சியும் சாமர்த்தியும் உள்ளவனாக சாத்தான் இருக்கிறான். புரிகின்றதா? அதை தேவனுடைய வார்த்தையோடு சரிபார்த்து, உங்களது மேய்ப்பனோடு அதைப்பற்றி கலந்தாலோசியுங்கள். புரிகிறதா?
610 வரங்கள் சபையில் நுழைந்து கொண்டிருக்கின்றன என்றும், அவை சபையில் கிரியை செய்து கொண்டிருக்கின்றன என்பதையும் நீங்கள் காண்கிறீர்கள். அவ்வரங்கள் கிரியை செய்யும் முன்பாக, அதைப் பற்றி உங்கள் இருதயத்தில் சரியான நெருக்குதலை முதலாவது உணருகிறீர்களா என்று பாருங்கள். இப்பொழுது சத்துருவானவன் மிகவும் சாமர்த்தியமான வஞ்சகனாக இருக்கிறான். புரிகிறதா? ஒவ்வொரு சமயத்திலும் உண்மையான வரமானது தவறாக பயன்படுதல்தான் சபைகளை சிதறடிக்கிறது. பாருங்கள்? தேவன் செய்ய முயற்சிக்கும் ஒரு காரியத்தில் வரமானது தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அது உங்களை புண்படுத்துவதுமல்லாமல், அது முழு சபையும் உடைத்துவிடுகிறது. பாருங்கள்? அதைப்பற்றி கலந்தாலோசித்து, அதை வேதாகமத்தினூடாக எடுத்துக்கொண்டு ஆராய்ந்து, அது தேவனுடையதா அல்லது இல்லையா என்று பார்த்து, அதை சோதித்தறியுங்கள். அதைத் தொடர்ந்து சோதித்துப் பார்த்து, பரீட்சித்துப் பார்த்து அது கோட்டை விட்டு விலகாமல், தேவனுடைய வார்த்தையோடு சரியாக பரிபூரணமாக இருக்கிறதாக இருக்க நீங்கள் கண்டால், அப்பொழுது சரியான நிலையில் உள்ளீர்கள் என்பதை அறியலாம். 11 வார்த்தையானது வரம் இங்கு உண்டாயிருக்கும் என்றும், அது இன்னவிதமாக கிரியை செய்யும் என்றும் கூறியிருக்கிற வரையிலும், அதனோடு தரித்திருங்கள். ஒரு போதும், யார் என்ன செய்தபோதிலும், அது எவ்வளவு உண்மை போல் தோன்றினாலும், வழி விலக வேண்டாம். அது ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் உள்ள வேத வாக்கியங்களை பிரதிபலிக்கவில்லையெனில், அதை விட்டு விடுங்கள். இப்பொழுது சாத்தான் அவனால் முடிந்தளவு வஞ்சித்துக் கொண்டிருக்கிறான், நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். எனவே அதற்கு இடம் கொடுத்து விடாதீர்கள்.
712 நான் ஒரு எஜமானனின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முயலுவதாகத் தோன்றுமானால், என்னை மன்னியுங்கள். நான் எஜமான அல்ல. பவுல் ஒரு சமயம் தனது சபையாரைப் பார்த்து, “நீங்கள் என் கிரீடத்தில் உள்ள நட்சத்திரங்கள்” என்று கூறினானே, அதைப் போலவே நானும் உங்களிடம் கூறும்படியாக உணருகிறேன். அக்கரையில் இருக்கும் அப்பரம தேசத்திற்கு நான் கடந்து சென்று, உங்களை அந்த மகிமைப்பட்ட நிலையில் நான் சந்திக்கையில், நீங்கள் அங்கே நட்சத்திரங்களாக பிரகாசிக்க வேண்டுமென நான் வாஞ்சிக்கிறேன், புரிகிறதா? நீங்கள் அங்கே இருக்க வேண்டுமென நான்—நான் விரும்புகிறேன். நான் அங்கே இருக்க வேண்டுமென விரும்புகிறேன். 13 கர்த்தருடைய பிரசன்னத்தை, இல்லை அவருடைய ஜனங்களை அக்கரையிலுள்ள மகிமையான தேசத்தில், என் தரிசனத்தில் கண்டதை நான் நினைவுகூறுகிறேன். நான் சுற்றும் முற்றும் பார்த்து, அவர்களிடம் கூறினேன்…அவர்கள் என்னிடம் நான் சுவிசேஷத்தை எவ்வாறு பிரசங்கித்தேனோ, அதன்படியே முதலாவதாக நியாயந்தீர்க்கப்படுவேன் என்று கூறினார்கள். அப்பொழுது நான், “பவுல் அதை பிரசங்கித்தவிதமாகவே நானும் பிரசங்கித்தேன்” என்றேன். 14 அப்பொழுது இலட்சக்கணக்கான ஜனங்கள், “நாங்கள் அதன்பேரில் தான் இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம்!” என்று அங்கு ஆர்ப்பரித்தனர். பாருங்கள்? பாருங்கள். அது அவ்வண்ணமாகவே இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஒரு நாளில் நாம் அங்கே சந்திக்கப்போகிறோம்.
815 தேவன் என்னையும் சகோதரர் நெவிலையும் எஜமான்களாக இருக்க வேண்டுமென்று அனுப்பவில்லை, அப்படி இல்லவே இல்லை. நாங்கள் உங்களுடைய சகோதரர்களாய் மாத்திரமே உள்ளோம் என்பதை நீங்கள் பாருங்கள். நாங்கள் சுவிசேஷத்தை போதிக்கிறவர்கள் மாத்திரமே. ஆகவே நாம் யாவரும் ஒன்று சேர்ந்து உழைப்போமாக. 16 சில சமயங்களில், ஒரு நபர் பெற்றிருக்கிற வரமானது கிரியை செய்யும் விதத்தைக் குறித்து அதை ஒழுங்குபடுத்தும்படி அதைப் பற்றி ஏதாவது கூறவோ, கடிந்து கொள்ளவோ செய்யும்பொழுது, அவ்வரத்தைப் பெற்றிருக்கும் அந்நபர் அதை ஏற்றுக்கொள்ளாமல், அதை நிராகரித்தால், அவ்வரம் சரியான ஒன்றல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதலாவதாக, அது தேவனிடத்திலிருந்து வந்ததே அல்ல. தேவனுடைய ஆவியானது எப்பொழுதும் சீர்த்திருத்தலை ஏற்றுக்கொள்ளும்படியாக, அது இனிமையாகவும், தாழ்மையாகவும், விருப்பமுள்ளதாகவும் இருக்கும். பாருங்கள்? ஆனால் அதற்கு மாறாக, சீர்திருத்தல் வரும்போது எழுந்து நின்று, “நான் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்வேன்” என்று சொன்னால், அவ்விதமான ஆணவத் தன்மையுள்ள ஆவிகள், தேவனிடத்திலிருந்து வந்ததல்ல. புரிகிறதா? எனவே, பூமி முழுவதும் தேவனுடைய மகிமையால் நிரம்பியிருக்கையில், தேவனுடைய உண்மையான வல்லமையால் நிரம்பியிருக்கையில், ஏன் பதிலீயைத் தெரிந்து கொள்ள வேண்டும்? நாம் ஏன் ஒரு பதிலீயைத் தெரிந்து கொள்ளப் போகிறோம்? இப்பொழுது இந்த நாளில் நாம் மிகவும் தாமதமாக இருந்து கொண்டிருக்கிறோம்; ஆனால் நினைவிருக்கட்டும், வேதம் கூறியுள்ளதுபோலவே அவன் வருவான்… என்னவெனில், வஞ்சிக்கிறவன், எவ்வளவு சூதும் வஞ்சகமாயிருக்க முடியுமோ, அந்த அளவுக்கு இருந்து, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கப் பார்ப்பான். பாருங்கள்?
917 சில வேளைகளில் நாம் அந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் கூட்டத்தில் இருக்கிறோம் என்று எண்ணுகிறோம். அதில் நாம் இருக்கிறோம் என்று நானும் நம்புகிறேன்; ஆனால் நாம் வேதத்தோடு சரியானபடி தரித்திருக்கக்கடவோம். அப்பொழுது எல்லாமே வேத வாக்கியங்களின்படியே சரியாக இருக்குமென்றால், தேவனுக்கு மகிமையைக் கொண்டு வருமென்றால், சபைக்கு கனத்தை ஏற்படுத்துமென்றால், அப்பொழுது அது தேவனால் உண்டானது என்று அறிகிறோம். ஏனெனில் வேதமும் அது சரியென்று அதை ஆதரிக்கிறது. ஆனால் நமது உபதேசங்கள் அதை சரியென்று கூறாவிடில், அது நன்மை பயக்காது, அது வீழ்ச்சியடைந்து விடும். 18 ஆகவே, நமக்கு ஏதாவது உள்ளத்தில் தோன்றினால், அது எவ்வளவு உண்மை போல் தோற்றமளித்தாலும், கவலைப்பட வேண்டியதில்லை, வேதவாக்கியங்களின்படி அது இருக்கவில்லையெனில், அதை உடனடியாக விலக்கிக் கொள்ளுங்கள், ஏனெனில் உண்மையான ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது, நீங்கள் பாருங்கள்.
1019 எனவே இப்பொழுது ஜெபியுங்கள். எப்பொழுதும், நீங்கள் என்ன செய்தபோதிலும், எனக்காக ஜெபியுங்கள், எனக்காக ஜெபியுங்கள்; ஏனெனில் கடைசி தடவையாக நாம் ஊழியக் களங்களுக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பது எனது கருத்து, நாம் இப்பொழுது…போய்க்கொண்டிருக்கிறோம்… 20 மகத்தான காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், அவைகளோ உலகத்தார் மத்தியில் அறியப்படாமல் இருந்து கொண்டிருக்கின்றன. இயேசு உலகில் வந்து, வாழ்ந்து, மரித்து, பலியாகி, உயிர்த்து, மகிமைக்கு திரும்பிப்போனார். ஆனால் அதைப்பற்றி கோடிக்கணக்கானோர் அறிந்திருக்கவேயில்லை. பாருங்கள்? அது ஆடம்பரமாக, கோலாகலமாக, மகத்தான பெரிய காரியமாக காணப்படவில்லை. “அவர் தமக்கு சொந்தமானவர்களிடத்திற்கு வந்தார்” என்பதாக இருந்தது. பாருங்கள். …“ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்”. புறம்பேயிருக்கிறவர்களுக்கல்ல. “சபைக்குச் சொல்லப்படுவதை” என்பதாக அது இருக்கிறது. சபைதான் தனக்குரிய அசைவைப் பெற்றுக்கொள்கிறது.
1121 கர்த்தர் ஒருநாள் என்னோடு பேசுகிற வரைக்கிலும், நான் அதைப் பற்றி வேறுபட்ட கருத்தை உடையவனாய் இருந்தேன்; அவர் என்னை தேவனுடைய வார்த்தைக்கு திரும்பிப் போய் அங்கே எவ்வாறு யோவானைக் குறித்து தீர்க்கதரிசிகள், “உயர்ந்த ஸ்தலங்களெல்லாம் பள்ளமாகும், தாழ்ந்த இடங்களெல்லாம் மேடாகும்” என்பதாக கூறினார்களோ, அதைப்பற்றி சிந்தித்துப் பார்க்கும்படி செய்தார். எவ்வாறு தேவனுடைய வல்லமை கிரியை செய்யும் என்பதையுங் குறித்து கூறப்பட்டதைக் காண்பித்தார். “மலைகளெல்லாம் ஆட்டுக்கடாக்களைப் போல் துள்ளினது”. “மரங்களெல்லாம் கைகொட்டும்”. அது சரிதான், அது ஏதோ சம்பவிக்கப் போகிறதைக் குறித்து கூறுவதாக தோன்றியது. பார்த்தீர்களா? எனவே, அக்காரியம் சம்பவித்தபொழுது, என்ன நடந்தது? தாடி வளர்ந்திருந்த வயோதிகன்போல் உள்ள ஒரு நபர் தன் இடுப்பில் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு, வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்தான். வனாந்திரத்தில் எந்தவித சௌகரியங்களும், வசதிகளும் அவனுக்கு இருக்கவில்லை. அவன் அவ்வனாந்தரத்தில் ஒன்பது வயதிலிருந்து இருந்து வந்திருக்கிறான்; அவன் அங்கிருந்து புறப்பட்டு வரும் போது, அவன் முப்பது வயதுள்ளவனாயிருந்தான். வனாந்தரத்திலிருந்து அவன் நடந்து வந்து, தேசத்தில் கால் மிதித்து வந்து, மனந்திரும்புதலைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருந்தான்; அப்பொழுது ஒருவேளை அவன் யோர்தான் நதிக்கரையில் முழுங்காலளவு சேற்றில் நின்று கொண்டிருந்திருப்பான். அப்பொழுது தான் உயர்ந்த ஸ்தலங்கள் பள்ளத்தாக்காக்கியது; பள்ளத்தாக்குகளெல்லாம் மேடான ஸ்தலங்கள் ஆகியது. புரிகிறதா? அது… 22 உங்களுக்கு ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதல் இருக்க வேண்டும். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், தேவன் இப்பூமியில் ஒரு போதும், பகட்டானவற்றில் வாசம் பண்ணவில்லை, அப்படி இனியும் வாசம் பண்ணப்போவதில்லை. அவர் அதற்கெதிராக இருக்கிறார். அவர் ஒருபோதும்…இந்த மகத்தான செய்தியானது ஒருபோதும் “இன்னார் இன்னாரை பெரிதாக்குகள்…” என்பதாக இருக்கவே இருக்காது. அந்தவிதமாக அது செய்வதேயில்லை. அவருடைய ஊழியக்காரர்கள் ஒருபோதும் அந்தவிதமாக கிரியை செய்வதில்லை. அவரது மகிமையும், பகட்டும் உன்னதத்திற்குரியவையாகும்.
1223 நேற்று அல்லது இரு தினங்களுக்கு முன்பாக என் நண்பர் பேங்க்ஸ் வுட் அவர்களோடு கெண்டக்கிக்கு சென்று கொண்டிருந்தோம். அங்கே ஒரு பெண் காவலர் நின்று கொண்டிருந்தார்; அவர் அப்பொழுது, “நாம் வண்டியை சற்று வேகத்தைக் குறைத்து ஓட்டுவது நல்லது, அவள் கடுமையாக இருக்கிறாள்” என்றார். 24 நான், “ஆம் அது சரிதான்” என்று கூறினேன். மேலும் நான், “ஒரு தேசமானது இலட்சக்கணக்கானவர்களை வேலையில் அமர்த்திக் கொள்ள வேண்டியிருக்கையில், அதற்காக அவர்கள் பெண்களை அப்பதவிகளுக்கு நியமித்துக் கொள்வதும், பெண் காவலர்களாக அவர்களை நியமித்துக் கொள்வது, வாடகைக்கார் ஓட்டுனர்களாக அவர்களை நியமித்துக் கொள்வதுமாக இருந்தால், அது நமது தேசத்தின் மேல் படிந்திருக்கும் பெரிய கறைகளில் ஒன்றாக இருக்கிறது” என்று கூறினேன். ஒரு—ஒரு முயலுக்கு எண்ணெய் சட்டியில் எவ்வாறு எந்தவொரு வேலையும் இருக்க முடியாதோ, அதேபோல் பெண்களுக்கும் அவ்விதமான வேலைக்குப் போக சம்மந்தமே இல்லை. பாருங்கள்? அது—அது—அது அவளுடைய ஸ்தானம் அல்ல. மேலும் நான், “அது என்னை மிகவும் பாதிப்பது வழக்கமாயிருந்தது; ஆனால் இப்பொழுதோ நான், ‘இது நம்முடைய இராஜ்யம் அல்லவே’ நாம் இவ்வுலகுக்கு உரியவர்கள் அல்லவே என்பதைக் குறித்து ஞாபகப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன்” என்று கூறினேன். அவர்கள்…உங்களை…
1325 ஏன் ஸ்திரீகள், (நமது ஸ்திரீகள்) குட்டையாக முடியை கத்தரித்துக் கொண்டு, அழுகு ஒப்பனைகளை செய்துகொண்டு, ராக்—அன்—ரோல் நடனமான சுழன்று உருண்டு ஆடுதல் மற்றும் இன்னபிற காரியங்களையும் விரும்பிக் கொண்டிருக்கின்றனர்? காரணம், மக்கள் சாதாரண சபைகளுக்கு போகிறார்கள்; “அது சரியென்று” எண்ணுகிறார்கள். ஏன்? அது…அவர்கள்—அவர்கள் அமெரிக்கர்கள்; அவர்கள் அமெரிக்கர்கள், அமெரிக்க ஆவியைப் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ அமெரிக்கர்கள் அல்ல; நாம் கிறிஸ்தவர்கள்களாயிருக்கிறோம். நாம் ஜீவிப்பது…நம்முடைய ஆவியோ மற்றொரு இராஜ்ஜியத்திற்குரியதாயுள்ளது. நமது ஆவியானது இந்த இராஜ்ஜியத்திற்கு உரியதாக இருக்குமென்றால், அப்பொழுது நாம் இந்தக் காரியங்களோடு தொழுதுகொள்ளுகிறவர்களாக இருப்போம்; அப்பொழுது நாம் இந்த கீழ்த்தரமான பாடல்களை தொழுது கொள்ளுகிறவர்களாக இருப்போம்; இந்த எல்லா ராக்—அன்—ரோல் நடனங்களையும் தொழுதுகொள்ளுகிறவர்களாக இருப்போம். “உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்”. நமது பொக்கிஷங்கள் உன்னதத்தில் இருக்கின்றன. ஆகவே நாம் ஒரு இராஜ்யத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.
1426 இது நம்முடைய வீடு அல்ல; நாம் இங்கே பரதேசிகளாக சஞ்சரித்துக் கொண்டேயிருந்து, மற்ற பிரஜைகளையும் இருளை விட்டு வெளியே கொணர முயற்சித்துக் கொண்டிருக்கிறவர்களாக இருக்கிறோம். இதற்காக நாம் ஒரு நகரத்திற்குள் போய், அங்கே ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு நகரளாவிய ஒரு பெரிய கூட்டத்தை ஏற்படுத்தி, ஒரு வேளை அங்கேயிருக்கிற ஒரேயொரு விலையேறப்பெற்ற ஆத்துமாவுக்காக, அந்நிலத்தை உழுதுகொண்டிருக்கிறோம்; அங்கே அந்த ஒன்று, ஒன்று உட்கார்ந்து கொண்டிருக்கக்கூடும். 27 நீங்களோ, “இந்த கூட்டமானது பெரிய வெற்றியாக அமைந்தது, ஐயாயிரம் பேர்கள் பீடத்தண்டையில் வந்தார்கள்” என்று ஒருவேளை கூறலாம். ஆனால் அவர்களில் ஒரு நபர்கூட, அவர்களில் ஒருவர்கூட இரட்சிக்கப்பட்டிருக்காமல் இருக்கக்கூடும். பாருங்கள்? “இரு நபர்கள் மாத்திரமே பீடத்தண்டை வந்தார்கள்” என்று நீங்கள் எண்ணக்கூடும். ஆனால் அவர்களில் ஒருவர் ஒரு விலையுயர்ந்த இரத்தினமாக இருக்கக்கூடும். நாம் நீரோடையில் வலைவீசிக் கொண்டிருக்கிறோம். தேவனோ அதிலுள்ள மீன்களைப் பொறுக்கியெடுத்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் எது மீன், எது மீனல்ல என்பது அவருக்குத் தெரியும். 28 ஆகவே, பாருங்கள், நாங்கள் பிரசங்கிப்பதை மட்டுமே செய்துகொண்டிருக்கிறோம். அதே காரியத்தைத் தான் இந்தக் கூடாரத்திலும் நீங்கள் செய்கிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கும்” என்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தேவனுடைய சத்தம் அவருடைய வார்த்தையாயிருக்கிறது.
1529 அன்றொரு நாள், இந்த ஜனங்கள், அது ஒருபோதும் இருக்கவில்லை…என்று எவ்வாறு கூறுகிறார்கள் என்பதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஸ்தாபன சபைகளில் ஒரு குறிப்பிட்ட சபையானது, “தெய்வீக சுகமளித்தல் என்பது சரியானது அல்ல. பரிசுத்த பவுல், மேல்வீட்டறையில் கூடியிருந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் ஆகியோர்களைத் தவிர வேறு எவருக்கும் எக்காலத்திலும் தெய்வீக சுகமளித்தல் வரமொன்று அளிக்கப்படவேயில்லை. அவர்களுக்கு மட்டும் தான் தெய்வீக சுகமளித்தல் வரம் கொடுக்கப்பட்டது. அவ்வளவு தான், அதுவே தீர்வையாகும்” என்று கூறிக் கொண்டிருக்கிறது. 30 ஆனால், நீங்கள் பாருங்கள், இங்கே இருக்கிற அந்த சகோதரன் வில்லி நமக்காக மிகவும் அற்புதமான முறையில் அமைத்துத் தந்திருக்கிற இந்த அற்புத வரைபடத்தின் மூலமாக, சபைக்காலங்கள் தோறும் எவ்வாறு அவ்வரங்களின் கிரியையின் தொடர்ச்சியானது தடைபடாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்பதைப் பாருங்கள். அதே ஸ்தாபன சபையானது சரித்திரத்தைப் பற்றியும், ஐரேனியஸ், பரிசுத்த மார்ட்டின் ஆகியோரைக் குறித்தும் என்ன கூறிடும் என்பதையும் பற்றி நான் வியப்புறுகிறேன். அப்போஸ்தலர்கள் யாவரும் மரித்த பிறகு இருந்த காலங்களினூடே நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஜீவனைக் கொடுத்த இரத்த சாட்சிகள் கூட அந்நிய பாஷைகளில் பேசினார்கள், வியாதியஸ்தரைக் குணமாக்கினார்கள், மரித்தோரை உயிரோடெழுப்பினார்கள், அற்புதங்களைச் செய்தனர். முழுச் சபையுமே அவ்வாறு செய்தது. வரங்கள் அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டன என்று அந்த சபை கூறுமானால், இவர்களைப் பற்றி என்ன என்று நான் வியப்புறுகிறேன்.
1631 அது எத்தகையதொரு குறுகிய மனப்பான்மையாயுள்ளது என்பதைப் பார்த்தீர்களா? அவர்களுக்கு சரியான ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதல் இல்லை என்பதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது. பாருங்கள், “குருடராயும் பாவாத்திலும் அக்கிரமங்களிலும் மரித்தவர்களாயுமிருக்கிறார்கள்”. பாவம் என்றால் “அவிசுவாசம்” என்று பொருள். அவிசுவாசமான எந்தவொன்றும் பாவமாயிருக்கிறது. ஒரு நபர் எத்தனை நீளமான பட்டங்களைப் பெற்றிருந்தாலும், அதாவது (டி.டி., இரட்டை எல்., பி.ஹெச்.டி.பட்டங்கள், எல்.எல்.டி.,) ஆகிய பட்டங்களை ஒரு சேரப் பெற்றிருந்தாலும், அந்த நபர், “தெய்வீக சுகமளித்தல் என்ற ஒன்று கிடையவே கிடையாது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பதும் கிடையாது” என்று கூறினால், அம்மனிதன் பாவத்தில் மரித்தவனாயிருக்கிறான். அவன் ஒரு வேளை வேதாகமத்தில் இருந்து எல்லா விதமான இரகசியங்களையும் விளக்கத் திறனுள்ளவனாக இருக்கக்கூடும். ஆனால் அவனது வாழ்க்கையே, (அவனது சாட்சியே) அவன் மரித்தவனாயிருக்கிறான் என்பதை நிரூபிக்கிறது, அவன் பாவத்திலும் அக்கிரமங்களிலும் மரித்தவனாயிருக்கிறான். ஏனெனில் அவன் பாவியாயிருக்கிறான். 32 பாவம் என்பது அவிசுவாசமாகும். பாவம் என்பது விபச்சாரம் செய்வது, சிகெரெட் புகைப்பது, நடனமாடுவது, மற்றும் அது போன்ற இன்னபிற காரியங்களைச் செய்வதல்ல. அவையல்ல பாவம், அவைகள் அவிசுவாசத்தின் தன்மைகளாகும். ஆனால் ஒரு விசுவாசியோ…ஒரு மனிதன் குடிப்பதில்லை, புகைப்பதில்லை, இச்செயல்களையெல்லாம் செய்வதில்லை; ஒரு கெட்ட வார்த்தை கூட சொல்லவில்லை; பத்து கற்பனைகள் அனைத்தையும் கைக்கொள்கிறவன் என்று இருந்தாலும் கூட, அவன் இன்னமும் முதல் தரமான கருமையான பாவியாகவே இருக்கிறான், பாருங்கள். அவன் தேவனுடைய வல்லமை எந்தவொன்றையும் மறுதலித்தால், அவன் ஒரு பாவியாயிருக்கிறான். பாவம் என்ற வார்த்தை அவிசுவாசத்தையே குறிக்கும். அது சரிதானா அல்லவா என்று இப்பொழுது நீங்கள் கண்டறியுங்கள். தேவனுடைய வார்த்தையின் பேரில் அவிசுவாசம் கொண்டுள்ளவன், அவன் ஒரு பாவியாயிருக்கிறான். அவனால் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்கவே முடியாது.
1733 இப்பொழுது, ஓ! இப்பொழுது, கர்த்தருடைய சித்தத்தை நான் மேற்கொண்டவனாக, பரிசுத்த ஆவியானவருடைய கட்டளையின்படி, மீண்டும் இக்கூடாரத்திற்கு வந்திட இன்று காலையில் நான் எண்ணி, ஒருவேளை உங்களை இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செய்தியின் பேரில் காக்க வைத்திடுவேன் என்று நினைத்தேன். ஆனால் நான் போவதற்கு முன்பாக வெளிப்படுத்தின விசேஷம் நான்காம் அதிகாரத்தை முடித்து விட வேண்டுமென்று விரும்புகிறேன். அது உங்களை களைப்படையச் செய்யாது என்று நான் நம்புகிறேன். அது உங்களுக்கு மகிமையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அது உங்களுக்கு நன்மை செய்வதும், எதிர்வரும் நாட்களுக்கென்று உங்களுக்கு உதவி செய்யும் ஒரு காரியமாயிருக்கும் என்றும் நான் நம்புகிறேன். 34 இப்பொழுது ஒருவேளை…இன்று காலையில் இங்கு வருவதற்கு முன்னர் நான் பில்லியிடம், நமது மத்தியில் யாராவது அந்நியர்கள் வந்திருந்தால் அவர்களுக்கு ஜெப அட்டைகளை கொடுக்கும்படி கூறியிருந்தேன்; ஏனெனில், நாங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லப்போகிறோம், இனி எப்பொழுது திரும்பி வருவோம் என்று தெரியவில்லை. தேவன் மாத்திரமே அதை அறிவார். நான் விரும்பினேன்…இது ஒரு வேளை கடைசி கூட்டமாக இருக்கக்கூடும் என்று எண்ணினேன்… சுமார் ஒன்பது மணிக்கு என் மகன் என்னை அழைத்து, “அப்பா, சில மக்கள் ஜெபித்துக் கொள்வதற்காக காத்திருக்கிறார்கள், அவர்களை நான் கேட்டேன், ஆனால் அம்மக்கள்—அம்மக்கள் எப்பொழுதும் சபைக்கு வருகிறவர்கள்தான்” என்று கூறினான்.
1835 அப்பொழுது நான், “அப்படியெனில், ஜெப அட்டைகள் எதையும் கொடுத்திட வேண்டாம், புரிகிறதா?” என்றேன், மேலும், நான், “ஏனெனில் அந்த மக்கள்…நமக்கு இன்று காலையில் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பது இருக்குமென்றால், அப்பொழுது நாம் அவர்களை மேலே அழைத்து அவர்களுக்காக ஜெபிப்போம்” என்று கூறினேன். ஆனால் நான், “நாம் அறிந்திருக்கிற வழக்கமாக கூடாரத்திற்கு வருகிற ஜனங்கள் தான் அவர்கள் என்றால் வேண்டாம். யாராவது புதியவர்கள் வந்திருந்தால்தான் நான் கொடுக்க விரும்புகிறேன்” என்று கூறினேன். 36 பிறகு என் மகன் சில நிமிடங்களுக்கு முன்னர், நான் அங்கே நின்று கொண்டிருக்கையில் வந்து, என்னை சந்தித்தபொழுது, “நல்லது, நான் சில ஜெப அட்டைகளை வழங்கினேன்; நீங்கள் உங்கள் விருப்பப்படியே செய்து கொள்ளுங்கள்” என்று கூறினான். 37 அதற்கு நான், “நல்லது, செய்தி எவ்வாறு போகிறது என்று பார்ப்போம், நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் பார்ப்போம், அதன் பிறகு நாம் போவோம். நான்…” என்று பதிலளித்தேன். 38 அதற்கு அவன், “அநேகர் ஜெப அட்டைகள் தங்களுக்கு தரப்பட வேண்டுமென்று விரும்பினார்கள். ஆனால் அவர்கள் சபையில் உள்ள மக்கள் தான்” என்று கூறினான். பார்த்தீர்களா?
1939 தேவன் தேவனாகவே இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். அவர் செய்கிற காரியங்களைப் பார்க்க எப்படியாயிருக்கிறது! காரணம், பல்வேறு காரியங்களைப் பற்றி ஜெபிப்பதற்காக மக்கள் தொலைபேசி மூலம் தெரியப்படுத்துகிறார்கள். சில வேளைகளில் சிறு காரியங்களைப் பற்றிகூட, தேவன் அவைகளுக்கு எப்படியாய் பதிலளிக்கிறார் பாருங்கள்! 40 என்னுடைய வீட்டிற்கு அன்றொரு பன்னிரண்டு அல்லது ஒரு மணி சுமாருக்கு நியூ ஆல்பனியிலிருந்து அந்த பெண்மணி, அல்லது அவளுடைய கணவர், சீத சன்னி கொண்ட சளிக்காய்சலால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறலுடன் கொண்டு வந்த அக்குழந்தைக்கு என்ன ஆயிற்று என்று அறிய நான் விரும்புகிறேன். அதோ அங்கே. குழந்தை எப்படியிருக்கிறது? [சபையிலிருந்த ஒரு மனிதர், “நலமாயுள்ளது” என்று கூறுகிறார்—ஆசி.] நன்றாயிருக்கிறாள், நலம் தான்; சரி.
2041 நான் ஒரு விஷயத்தை உங்களுக்கு காண்பிப்பேனாக; பாருங்கள், அதென்னவெனில், நீங்கள் புரிந்துகொள்ள முடியாத ஒரு காரியம் இருந்தால், பரிசுத்த ஆவியானவர் பேசிய பிறகு, அது தொடர்ந்தும் அப்படி இருப்பதில்லை. ஃப்ரெட் சாத்மேன்…நமது விலையேறப்பெற்ற சகோதரன் ஃப்ரெட் அவர்கள், “ஆமென்” என்று கூறியதை நான் கேட்டேன். ஆனால் அவர் எங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்பதை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவர் எங்கேயிருக்கிறார்? அவர் இங்கே இருக்கிறாரா? இதோ இங்கே தான் சகோதரன் ஃப்ரெட் சாத்மேன் அவர்கள் இருக்கிறார். அது எவ்வளவு எளிமையாயுள்ளது என்பதை காண்பிக்கும்படியாக…அவரிடத்தில் சில நண்பர்கள் வந்திருந்தனர். அது சகோதரன் வெல்ச் ஈவான்ஸ் என்று நான் அனுமானிக்கிறேன். எனக்குத் தெரியாது. அவர்களிடத்தில் இணைப்பு வண்டி ஒன்று இருந்தது. அதன் கதவை பூட்டி விட்டார்கள், ஃப்ரெட் அதன் சாவிகளையும் தொலைத்து விட்டார். அவர்கள் எல்லா இடங்களிலும் அதைத் தேடிக் கொண்டிருந்தார்கள், அதை எந்த இடத்திலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. சகோதரன் வெல்ச் நேராக வந்து கொண்டிருந்தார். எனவே இங்கு வந்து சேர வேண்டியதான நாள் வந்தது; ஆனால் அவர்களால் அவ்வாகனத்தின் சாவிகளை எங்கு தேடியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எனவே அவர் என்னிடம் என் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, “சகோதரன் பிரான்ஹாம், அந்த சாவிகள் எங்கேயிருக்கின்றன? அவைகளை நாங்கள் எங்கே காணலாம்?” என்று கேட்டார்.
2142 அவ்விதமான கேள்வியை ஒரு மனிதன் கேட்பதைக் குறித்து உங்களில் சிலர் பிரமிக்கக் கூடும். ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள்; ஈசாயின் புத்திரர் கழுதைகளைத் தேடிக் கொண்டுபோன சம்பவத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா? “என்னிடத்தில் ஒரு வரம் இருந்தால் அது எங்கே என்று கண்டுபிடித்து சொல்லி விடுவேன். தீர்க்கதரிசியினிடத்தில் அவ்விஷயத்தைக் கேளுங்கள், அவன் ஒரு வேளை கழுதைகள் எங்கே இருக்கின்றன என்பதை சொல்லி விடுவான்” என்று சொல்லப்பட்டது. அது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? 43 அவன் சாலையில் நடந்து செல்லுகையில், அவர்கள் தீர்க்கதரிசியைச் சந்தித்தார்கள். அப்பொழுது தீர்க்கதரிசி, “நீங்கள் கழுதைகளைத் தானே தேடிக் கொண்டு வந்தீர்கள். நீங்கள் உங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள். அவைகள் ஏற்கனவே வீட்டிற்குப் போய் விட்டன?” என்றான். அது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? 44 நான் ஜெபித்தேன். ஃப்ரெட் நடந்து சென்று, அதைக் கண்டு எடுத்துக் கொண்டார். அதுதான் காரியம். பார்த்தீர்களா? 45 சகோதரன் எட் டால்டன் அவர்களே, நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள்? எட் டால்டன் எங்கேயிருக்கிறார்? அவர் இங்கு எங்கோ தான் இருக்கிறார் என்பதை நான் அறிவேன். சற்று முன்னர் தான் நான் அவரைப் பார்த்தேன். ஓ, பின்னால்…அதோ அங்கே இருக்கிறார். இடைச் செய்தித் தொடர்பு முறையில் அல்லது ஒலி பெருக்கிமூலம் நான் கூப்பிடுவதை அவர் கேட்டார். அன்றொரு நாள் இரவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது; சகோதரன் எட் அவர்கள் மிகக் கடுமையான தொல்லையில் அகப்பட்டிருந்தார். நான் அவருக்கு உதவி செய்ய விரும்பினேன். “இல்லை, நீங்கள் தேவனிடத்தில் எனக்காக விண்ணப்பிக்கவே நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார். அவருக்கு உதவி செய்யும்படி நான் கர்த்தரை வேண்டிக் கொண்டேன். அடுத்தநாள் அவரது மனைவி என்னை தொலைபேசியில் அழைத்து, யாரோ ஒருவர் உதவிக்கு வந்திட்டதாகத் தெரிவித்தார். சரி. அது உண்மைதானே சகோதரன் எட்?
2246 அவர் தேவனாயிருக்க்கிறார் என்பதைப் பாருங்கள். அப்படித்தான். அவர் தேவனாகவே இருக்கிறார். பாருங்கள், அவர்…ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கும், அது எத்தகைய தொல்லையாக இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. எங்கும் எப்பொழுதும், தொடர்ந்து அவர் தேவனாகவேயிருக்கிறார். நாம் சுற்றிலும் போய் அந்தக் காரியங்களைக் குறித்து தற்பெருமையடித்துக் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு நாம் செய்யக் கூடாது. வலது கை செய்வதை இடது கை அறிய வேண்டாம். இடது கை செய்வதை வலது கை அறிந்திட வேண்டாம். நாம் நமக்குள் அதைப்பற்றி பேசிக்கொள்கிறோம்; ஆனால் எங்காவது நாம் தம்பட்டமடித்துக் கொள்வதில்லை. ஏனெனில் “தேவன் ஒரு நபருக்கு மாத்திரமே அதைச் செய்ய முடியும்” என்று கூறுவது போல், அது சுயபெருமை ஆகிவிடும். அவரை விசுவாசிக்கிற எவருக்கும் அதை அவர் செய்ய முடியும். அது விசுவாசமாக இருக்கிறது. விசுவாசம்! நீங்கள் என்ன—என்ன செய்ய விரும்பினபோதிலும் உங்கள் எண்ணங்கள் என்னவாயிருந்தாலும் சரி, அவற்றை தேவனிடத்தில் எடுத்துச் செல்லுங்கள். அவர்—அவர்—அவர்—அவர் எல்லாவற்றையும் அளிக்கிறவராயிருக்கிறார். அவ்வாறு இருக்கவில்லையா? எனவே அவர் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார். அவர் ஒரு…அதாவது தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கிற பிதவாயிருக்கிறார்.
2347 எனவே, இப்பொழுது இத்தொடர் கூட்டங்களின் இறுதியாக கர்த்தருக்கு சித்தமானால், இக்கூட்டத்தின் இறுதியில், ஒரு வேளை இக்கூட்டத்தின் சமயத்தில், இருதயத்தின் எண்ணங்களை பகுத்தறிந்து சொல்லும் ஆராதனையை வைத்துக் கொள்ளலாம் என்று நான் எண்ணினேன். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் அறியமாட்டோம். அந்தவிதமாக இருப்பதை நான் விரும்புகிறேன். எந்த ஒன்றையும் நீங்கள் உறுதியிட்டு நிச்சயப்படுத்தி வைக்க வேண்டாம். அவர் எப்படி செய்ய விரும்புகிறாரோ அவ்வாறே நடக்க விட்டு விடுங்கள். 48 இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, கடிகாரத்தை நிறுத்தி விடுங்கள். 49 [ஒரு மனிதர் பேசும்படிக் கேட்கிறார்—ஆசி.] சரி, சரி, சகோதரனே [அந்த சகோதரன் சாட்சி சொல்ல ஆரம்பிக்கிறார். ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] நிச்சயமாகவே, நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அதை முழுமையாக விசுவாசிக்கிறேன்.
2450 இதோ இங்கே சகோதரன் வெல்ச் ஈவான்ஸ்,—இதோ அங்கே அவர்தான் அமர்ந்திருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன். நாம் வெளிப்படுத்தின விசேஷம் 4ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்கையில்… 51 இங்கே சமீபத்தில் லூயிவில்லில் இந்தக் கார்களைத் திருடி, வெகு விரைவாக அவைகளை கென்டக்கியில் ஏதோ ஒரு இடத்தில், எடுத்துச் சென்றுவிடும் ஒரு திருட்டுக் கும்பலைப் பற்றி நீங்கள் யாவரும் கேள்விப்பட்டும், பத்திரிக்கைகளில் அதைப்பற்றி படித்தும் இருக்கிறீர்கள். கென்டக்கியில் ஒரு மோட்டார் வாகனத்தை உரிமை கொண்டாட அதற்கான உரிமைப்பத்திரம் உங்களுக்குத் தேவையில்லை; அதை கென்டக்கியிலேயே உங்களுக்குத் தயாரித்துக் கொடுப்பார்கள். ஆகவே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அதை நீங்கள் எடுத்துகொண்டுபோய் உரிமைப்பத்திரம் இல்லாமலேயே விற்றுவிட வேண்டியதுதான். எனவே அவர்கள் இவ்வாறு திருடிக்கொண்டு வந்து விற்கப்பட்ட வாகனங்களை எடுத்து ஓட்டிக்கொண்டு போய், அவைகளுக்கு வேறு வர்ணம் பூசி, அவைகளைக் கொண்டு வந்து விற்று விடுவார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவவாகனத்திற்கான உரிமைப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக உங்களுடைய குடியிருப்பின் இலக்கத்தை மட்டும் சொன்னால் போதுமானது. அதைக் கொண்டு அவர்கள் உங்களுக்கு உடைமை உரிமை பத்திரத்தை தயாரித்து அளித்து விடுவார்கள். இப்படியாக அவர்கள் மோட்டார் வாகனத்தை தெருவிலிருந்து திருடிக் கொண்டு, அதை வெகு வேகமாக ஓட்டிச்சென்று, ஏதாவது ஒரு பணிமனையில் கொண்டுபோய் நிறுத்தி, அதற்கு வேறு வர்ணம் கொடுத்து, அவ்வண்டியின் தோற்றத்தை முழுவதுமாக மாற்றியமைத்து, அதை விற்றுவிடுவார்கள். அமெரிக்காவில் எங்கும் இவ்விதமான மோசடியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அது விசேஷமாக கென்டக்கியில்தான் மிக அதிகமாக நடைபெறுகிறது. அதைப்பற்றிய செய்திப் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு விஷயத்தை அண்மையில் படித்தேன்.
2552 பெருந்தன்மையும், நல்ல உள்ளமும் படைத்த, விலையேறப்பெற்ற சகோதரன் ஈவான்ஸ் அவர்களும் அவரது குடும்பத்தினரும் ஜார்ஜியாவிலுள்ள மேகானில் இருந்து மோட்டார் வாகனத்தை ஓட்டிக் கொண்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கு சுவிசேஷத்தை கேட்பதற்கென்றே வந்து கொண்டிருக்கிறார்கள். ஓ, எவ்வளவாய் அவர்கள் உத்தமும், உண்மையுமான சிநேகிதராயிருக்கிறார்கள்! பிறகு அவர் மில்லருடைய உணவகத்தில் சாப்பிட செல்வதுண்டு. 53 மில்லர் நிறுவனத்திற்காக நான் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் லூயிவில் கென்டக்கியின் மிகச் சிறந்த உணவை அவர்கள் விற்கிறார்கள் என்று நான் நிச்சயமாக கருதுகிறேன். நான் உணவு உண்டுருக்கிற தனிப்பட்ட வீடுகளைக் குறித்து நான் ஒப்பிட்டுச் சொல்லவில்லை. (உங்களுக்குத் தெரியும்), வீட்டை விட்டு வெளியே உள்ளவற்றில், நானும் அங்கு சாப்பிடுவது உண்டு. நான் எனது குடும்பத்தை வீட்டில் வைத்து உணவளிப்பதைவிட மிக மலிவாக அந்த உணவகத்தில் உணவளிக்க முடியும். அது உண்மையே. 54 எனவே, அப்பொழுது நான் அங்கே உள்ளே சென்றேன். அதேபோல், சகோதரன் ஈவான்ஸ் அவர்களும் சாப்பிடுவதற்காக, தனது மோட்டார் வாகனத்தை வெளியே நிறுத்தி வைத்துவிட்டு உள்ளே சென்றர். அவர் தானும் தனது குடும்பமாக உணவகத்தை விட்டு வெளியே வரும்போது, (அங்கே அவரது எல்லாத் துணிமணிகளோடும்) அவரது மோட்டார் வாகனமானது காணப்படவில்லை. எல்லாம் போய்விட்டிருந்தது. நம் எல்லாரையும் போலுள்ளவர் தான் சகோதரன் ஈவான்ஸ் அவர்களும், ஏழ்மையான நபர், அவருக்கு அங்கே ஒரு சிறு வியாபாரம் தான் உண்டு. அவர் மோட்டார் வாகனத்தில் வேலை செய்கிறவர். அவர் மிக மோசமாக சேதமடைந்த வண்டிகளை வாங்கி, அவைகளை சீர் செய்பவர். அவர் ஒரு ஏழ்மையான மனிதர், அவர் தனது பணத்தை, இந்த வகையான சுவிசேஷத்தை அவர் விசுவாசிக்கிறபடியினால், அதைக் கேட்பதற்காக செலவழித்துக் கொண்டு வருகிறார். தேவன் தாமே அவர்களுக்காக அத்தேசத்தில் உதவியாக இருந்து இச்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக எங்கிருந்தாவது ஒரு செய்தியாளனனை அனுப்பும்படி நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்.
2655 அப்பொழுது சகோதரன் ஈவான்ஸ் என்ன செய்வது என்றறியாமல் வந்தார். அவர் காவல் துறையினருக்கும் தெரிவித்து விட்டார். அவர்களாலும் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே அவரும், அவரோடு சகோதரன் ஃப்ரெட் அவர்களும் வந்தனர், நாங்கள் அறையில் அமர்ந்து அதைக்குறித்து பேசினோம். அவ்விதமாகத்தான், நாங்கள் என்ன நடக்கிறதென்று அறையில் உட்கார்ந்து பார்த்து, பிறகு தேவனிடத்திற்கு போவது வழக்கம். எனவே நாங்கள் கர்த்தரிடம் ஜெபித்தபொழுது, அவ்வாகனத்தை எடுத்துக் கொண்டு போன மனிதனை சந்தித்து, அவன் எங்கிருந்தாலும் சரி, அவனைத் திருப்பியனுப்பும்படி கேட்டோம். 56 வழக்கமாக இத்திருடர்கள் வண்டியை வெகு வேகமாக காவல் துறையினருக்கு எட்டாத தூரத்தில், அதாவது பௌலிங் க்ரீன் என்ற பகுதியைத் தாண்டி ஓட்டிச் சென்றுவிடுவர், அதனால் அவர்களால் அதைக் கொண்டுபோய் மறுபடியும் வேறு வர்ணம் பூசி, அதை வேறுமாதிரியாக உருவாக்கி விடுவார்கள். திருடப்பட்ட இந்த வாகனம் மிகவும் நல்லதொரு வண்டியாகும். அது ஒரு நான்கு சக்கர பெரிய வாகனம் என்று நான் எண்ணுகிறேன். அப்படித்தானே சகோதரன் ஈவான்ஸ் அவர்களே? ஆம், அது நான்கு சக்கர பெரிய வாகனம்தான்.
2757 எனவே, என்ன நடந்தது? நாங்கள் முழங்கால்படியிட்டு ஜெபித்தோம். எல்லாம் சரியாக இருக்கிறது என்பதாக கர்த்தர் எங்களுக்கு சாட்சியிட்டார். எனவே, அப்பொழுது கர்த்தருடைய வல்லமையானது எங்களுக்குள் வந்தது. சகோதரன் ஈவான்ஸ் ஒரு குறிப்பிட்ட வழியாக போகும்படியாக நடத்தப்பட்டு புறப்பட்டுச் சென்றார். 58 வாகனத்தை திருடியவன் அதை நேரே இங்கே ஜெபர்ஸன்வில்லுக்கே திரும்பக் கொண்டு வந்து விட்டான். அவ்வாகனமானது லூயிவில்லில் திருடப்பட்டது. திருடியவன் பௌலிங் க்ரீன் வரையிலும் அதைக் கொண்டு போய்விட்டு, அதை இங்கே திரும்ப கொண்டு வந்துவிட்டான். அது இங்கே கிட்டத்தட்ட போதுமான எரிவாயுப் பொருளோடு நின்று கொண்டிருந்தது. அவன் வாகனத்தை விட்டு வெளியேறி, அதன் சாவியையும் வண்டியிலேயே விட்டு விட்டு, வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு, நடந்து சென்று விட்டான். ஈவான்ஸ் கண்டு கொள்ள வசதியாக ஜெபர்ஸன்வில்லிலேயே விட்டு விட்டு சென்று விட்டான்; லூயிவில்லில் அல்ல. இவ்வளவு தூரம் திரும்ப இங்கே ஜெபர்ஸன்வில்லுக்கு அவன் வெகுதூரம் ஓட்டிக்கொண்டு வந்து விட்டு விட்டுப் போய் விட்டான். 59 பறவைகள் தனக்குக் கீழ்ப்படியும்படி கர்த்தரால் செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள், மனிதன் அவருக்குக் கீழ்ப்படியும் படி செய்ய அவரால் முடியும். அவருடைய சத்துரு கீழ்ப்படியும் படி செய்ய அவரால் இயலும். ஆம், ஐயா. அவர் தேவனாயிருக்கிறார். ஒரு பொருள் கூட இழக்கப்படாமல், எரிவாயுப் பொருள் சேமிப்பு பெட்டகத்தில் பாதியளவுக்கு எரிவாயுப் பொருள் நிரம்பியிருந்தது. வாகனமானது அங்கே பௌலிங் க்ரீன் வரைக்கிலும் அத்திருடன் அதை ஒட்டிக் கொண்டு போய்விட்டு, அவனால் திரும்பக் கொண்டு வந்து நிறுத்தி விடப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அவனிடம், “வண்டியைத் திருப்பு, வண்டியை ஜெபர்சன்வில்லுக்கு திருப்பி ஒட்டிக்கொண்டு போ, இன்ன இடத்தில் இன்ன தெருவில் நிறுத்திவிடுவாயாக (ஏனென்றால் நான் அவனை, வாகனத்தை கண்டு கொள்ளும்படி அந்த இடத்திற்கு, இன்ன வழியாக அனுப்பப் போகிறேன்)” என்று கூறியிருக்க வேண்டும். அது சரிதானே சகோதரன் வெல்ச் அவர்களே? அது சரிதான். பாருங்கள்.
2860 அவர் தேவனாயிருக்கிறார்! சகோதரன் ராய், அவர் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார். அவர்…சகோதரன் ஸ்லாட்டர்! அதே விதமாகத்தான் அவர் செய்கிறார்; உங்களுடைய சிறிய நாயைக் கூட அவர் குண்மாக்கினார். அவர் சுகமளிக்கிறார் என்பதை நான் அறிவேன். அவர் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார். அவர் இன்னமும் அற்புதங்களைச் செய்கிறார். அவர் இன்னமும் தேவனாயிருக்கிறார். எப்பொழுதும் அவர் தேவனாயிருந்தார், அவர் இன்னமும் தேவனாகவே இருப்பார்! அவர்—அவர் வீட்டின் கூரையின் மேல் தேவனாயிருக்கிறார், (அப்பாடலை சபையில் பாடும் சகோதரன் யார்?) சமையலறையில் தேவன் இருக்கிறார், பண்ணையில் தேவன் இருக்கிறார், வாகனத்தில் தேவன் இருக்கிறார், அவர் எங்கும் தேவனாய் இருக்கிறார்; எல்லாவற்றிலும், எங்கும், எதனூடாகவும் தேவன் தேவனாக இருக்கிறார். 61 ஓ, எவ்வளவு அற்புதமானவர்! நாம் இவ்விதமாக பிரசங்கம் செய்து கொண்டே போகலாம். அப்பொழுது நம்மால் இந்தப் பாடத்திற்குள் செல்லவே முடியாது போய்விடும். சரி, இப்பொழுது ஒரு நிமிடம் நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
2962 கிருபையுள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் உம்முடைய பரிசுத்த வார்த்தையின் மேல் மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம். அதினால் எங்களுடைய இருதயங்கள் எங்களுக்குள்ளாக கொழுந்து விட்டு எரிகிறது. அப்பொழுது நாங்கள், உம்முடைய ஆவி எங்கள் மத்தியில் இறங்கி வருகிறது என்றும், எங்களோடு பேசுகிறது என்றும், எங்கள் இருதயங்கள் முன்வந்து அதைப் பற்றிக் கொள்கிறது என்றும் அறிகிறோம். கர்த்தாவே, அதைக் குறித்து நாங்கள் மிகவும் நல்ல விதமாக உணருகிறோம். 63 மிகவும் அதிகமாக குழப்பம் நிறைந்திருக்கிறதாக இந்த இருளான வேளை இருக்கிறது என்பதை அறிகிறோம். தீர்க்கதரிசியானவன், “கடைசி நாட்களில் ஒரு பஞ்சம் வரும்.” அது இவ்விதமாக இருக்கும். எப்படியெனில், “ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய பஞ்சமுமல்ல. ஆனால் தேவனுடைய உணமையான வார்த்தையை தேடுவதற்காக மனிதர் கிழக்கிலிருந்து மேற்குக்கும் வடக்கிலிருந்து தெற்குக்கும் அலைந்து திரிவார்கள்” என்று கூறியதைப் போல் நிலைமை இருக்கும். வார்த்தை! வார்தை என்பது யார்? இயேசுவே வார்த்தையாயிருக்கிறார். “வார்த்தை மாம்சமாகி நமக்குள் வாசம்பண்ணினார்”. உண்மையான தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுத்துதலைக் காணுவது என்பது, வேதவாக்கியங்களின்படியே காணும்படியாக வெளிப்படுத்தலாகும். வேதவாக்கியம் கூறுகிறபடி, மக்கள் எவ்வாறு பயணம் செய்து வார்த்தையைத் தேடுவார்களென்பதும், அப்படியும் அதைக் காணத் தவறிடுவர் என்பதும் அப்படியே நிறைவேற்றியிருக்கிறது. ஓ, தேவனே, நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம்; அநேக ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் அவரைக் கண்டு கொண்டதாலும், அது எங்களுடைய இருதயத்திற்கு விலையேறப்பெற்றதாக இருப்பதாலும், நாங்கள் ஒரு சிறிதளவு கூட குழம்பியிருக்கவில்லை என்பதைக் காணவும், நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம்.
3064 ஓ தேவனே, “தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, மகத்தான காரியங்களைச் செய்வார்கள்” என்று நீர் கூறினீர். நாங்கள் இந்தக் கடைசி நாட்களில் இருந்து கொண்டு, இன்னின்ன காரியங்கள் இக்காலத்தில் சம்பவிக்கும் என்று இயேசுவானவர் முன்னுரைத்த காரியங்கள் எங்கள் மத்தியில் வந்து நிறைவேறி, வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிற யாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர் செய்த வண்ணமாகவே, அதே அடையாளங்கள், அற்புதங்கள், அதிசயங்கள், நிகழ்த்தப்படுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். “சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய வருகையிலும் நடக்கும்” என்று அவர் கூறியது போலவே இருக்கிறது. 65 கர்த்தாவே, நீர் பரிசுத்த ஆவியினாலே, உம்முடைய வார்த்தையில் சேர்ந்து, அதிலிருந்து உண்மையான காரியங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவைகளை வார்த்தையைக் கொண்டு கல்வாரியோடு இணைத்துப் பார்க்கும்படி எங்களுக்கு செய்து, அவரில் எங்களுக்கு பரிபூரணம் இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளச் செய்திருக்கிறீர். ஐசுவரியவான்களும், ஆசீர்வாதங்களும், மகிமையும் எல்லாம் அவற்றைப் பெற்றுக் கொள்ள பாத்திரராயிருக்கிற அவருக்கே போகிறது. அவர் உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்டிருக்கிறபடியால், பாத்திரராயிருந்து, சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்தில் இருந்த புத்தகத்தை எடுத்துக் கொள்ள வருகிறார், அவர் தாமே சிங்காசனத்தில் உட்கார்ந்துவிட்டார். 66 பிதாவே, அவரைக் குறித்து இன்று காலையில் நாங்கள் பேசுகிறோம். நீர் எங்கள் இருதயங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென நாங்கள் ஜெபிக்கிறோம். அவரது ஆவி எங்கள் மத்தியில் அசைவாடி எங்களை ஆசீர்வதித்து, எங்களுடைய அனுபவத்தை உயர் தரமுள்ளதாக, எங்கள் மத்தியிலுள்ள வியாதியஸ்தரை சுகப்படுத்தி, ஜெயங்கொள்ளுகிறதற்கான கிருபையை எங்களுக்கு அளிப்பதாக. 67 மேலும் தேவனே சத்துருவை முக முகமாய் எதிர்கொள்ள தூரத்திலுள்ள ஊழியங்களுக்கு நான் புறப்பட்டுச் செல்லுகையில், ஜெபம் என்னும் பாதுகாப்பு அரண் ஒவ்வொரு மணி நேரமும் என்னை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது என்பதை நான் உணருவேனாக. ஓ எவ்வளவாய் நான் அந்த பாதுகாப்பு அரணை நம்பியிருக்கிறேன்; சத்துரு அணுகும் வேளையிலெல்லாம் ஜெபமாகிய பாதுகாப்பு அரண் தான் தடுத்து நிறுத்துகிறது; ஏனெனில் மறுபடியும் பிறந்த அனுபவத்தையுடைய, பரலோகத்திற்கு பயணம் செய்து கொண்டிருக்கிற கிறிஸ்தவர்களாகிய தாய்மார்களும், தகப்பன்மார்களும், வாலிபரும், வாலிபப்பெண்களும், தங்கள் முழங்கால்களில் நின்று, “தேவனே, விடுதலையை அளியும்” என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். பிதாவே, நாங்கள் சத்துருவினுடைய வரிசைகளுக்குள் பிரவேசித்து, அங்கே காத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு விலையேறப்பெற்ற ஆத்துமாவையும், ஜெயிக்கத்தக்கதாக நீர் எங்களுக்கு உதவிட வேண்டுமென நாங்கள் ஜெபிக்கிறோம். அவ்வாறு செய்யும், கர்த்தாவே, அவர்களை இருளினின்றும் வெளியே கொண்டு வந்து, ஒளியினுள் பிரவேசிக்கச் செய்தருளும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் இதை வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
3168 இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரம். நாம் 3-ம் அதிகாரத்தை முடித்து விட்டோம்; நாம் பயபக்தியுடன் இருப்போம்; நான் உங்களை அதிக நேரம் இங்கே வைத்துக் கொண்டிருக்க முயற்சிக்க மாட்டேன். ஆனால் இந்த 3-ம் அதிகாரத்தில் யோவான் மேலே எடுக்கப்பட்ட போது, அது சபை எடுக்கப்படுதலுக்கு முன்னடையாளமாகத் திகழ்ந்தது. சபையானது மேலே எடுக்கப்பட்ட முதற்கொண்டு, திரும்பி வருகிறவரையிலும் நடப்பவையெல்லாம் இஸ்ரவேல் சம்மந்தமாகவே இருக்கின்றன. அது எவ்வாறு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? இன்றைக்கு இருக்கிற மக்கள் எப்படியிருக்கிறார்களென்றால், “மகத்தான ஒரு காரியம் முழு உலகையும் அசைக்கப் போகிறது” என்று கூறுகிறார்கள். அது வேதப்பூர்வமற்றதாயிற்றே! இல்லை ஐயா. நடைபெற வேண்டிய சம்பவங்களின் வரிசையின் ஒழுங்கில், அடுத்தபடியாக சபையானது எடுக்கப்படுதல் தான். சபைக் காலங்களில் அதைப் பற்றி படித்து அறியுங்கள், அப்பொழுது என்னவென்பதை நீங்கள் புரிந்துகொகொள்வீர்கள்…
3269 இப்பொழுது, நடைபெற வேண்டிய ஏனைய காரியங்களெல்லாம் சபையானது மகிமையில் இருக்கையில் நடைபெறும் விவாக நிகழ்ச்சியின் போது உள்ளவையாகும். தேவன் திரும்ப வருகிறார். அப்பொழுது யூதர்களால் மகத்தான அற்புதங்கள், சர்வதேச அதிசயங்கள் நிகழ்த்தப்படும், அது சபைக்கு நடக்கப் போகிற காரியமாக இருக்காது. 70 3-ம் அதிகாரம், சபைக்காலத்தை முடித்து வைக்கிறது. அது உண்மை. சபைக்காலமானது, நாம் காண்கிறபடி…மிகச்சிறிய சிறுபான்மையினரோடு முடிவடைகிறது. இங்கே சற்று கவனியுங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரம் 20-ம் வசனம் முதல் 22-ம் வசனம் முடிய உள்ள வசனங்களில், சபைக்காலத்தின் முடிவில் கிறிஸ்து இருக்கிற இடத்தையும், அவரது மனப்பான்மையையும் குறித்துக் கூறுகிறவைகளை நான் இன்று காலையில் மீண்டும் படித்த போது, அது என்னையும் ஏறக்குறைய மிகவும் சின்னாபின்னமாக்கியது. கிறிஸ்து முடிவு காலத்தில் எங்கே இருக்கிறார் என்பதைக் குறித்து எண்ணிப் பாருங்கள். சபைக்காலங்களின் முடிவில் அவர் எங்கே இருக்கிறார்? அவர் தன் சபையை விட்டு வெளியே இருக்கிறார்; மதஸ்தாபனங்களாலும் மதக்கோட்பாடுகளாலும் அவர் வெளியே தள்ளப்பட்டிருக்கிறார். அவரது மனப்பான்மை எப்படியுள்ளது? மீண்டும் உள்ளே பிரவேசிக்க முயன்று கொண்டிருக்கிறார். அது மிகவும் பரிதாபகரமானதொரு நிலையாகுமே!
3371 பிறகு, நாம் இங்கே, “இவைகளுக்குப் பின்பு” அவனோடு பேசுகிற ஒரு சத்தத்தை அவன் கேட்டான் என்பதை நாம் இங்கே காண்கிறோம்… ஓ, அது என்னவாயிருக்கிறது? ஆவியானவர் பூமியை விட்டு புறப்பட்டுப் போய்விட்டார். முதலாம் அதிகாரத்தில் இல்லை—இல்லை முதலாவது வசனத்தில் “இவைகளுக்குப் பின்பு” என்ற வாக்கியத்தோடு வசனம் ஆரம்பிக்கிறது. இவைகளுக்குப் பின்பு, இதோ பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன்… 72 வெளிப்படுத்தின விசேஷம் 4:1, சபையானது போய்விட்ட பிறகு, ஒரு வாசலானது திறக்கப்பட்டது. நாம் அதைப்பற்றியெல்லாம் பார்த்து, அது கிறிஸ்து தான் என்பதையும் கண்டு கொண்டோம். கிறிஸ்துவே அந்த வாசலாயிருக்கிறார் என்பதைக் கண்டோம். ஏழு குத்துவிளக்குகளின் மத்தியில் உலாவிக் கொண்டிருந்தவருடைய அதே சத்தத்தைத் தான், “இங்கே ஏறிவா” என்ற சத்தத்தை பரலோகத்திலிருந்து கேட்ட பொழுதும், அவன் கேட்டான். யோவான் மேலே ஏறிப்போனான். அச்சம்பவம், சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலில் மேலே ஏறிப்போவதற்கு முன்னடையாளமாயிருந்தது. 73 யோவான் ஆவிக்குள்ளானான், அவன் பரலோகத்திற்குள் எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவன் வாக்குத்தத்தம் செய்து, “நான் வருமளவும் அவனிருக்க எனக்கு சித்தமானால் உனக்கென்ன?” என்று சீஷர்களிடம் அவர் கூறிய பிரகாரமாக, எல்லா காரியங்களையும் அவன் முன்கூட்டியே கண்டான். அவன் கர்த்தருடைய வருகையையும் மற்றும் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதையும் அவன் கண்டான். அவன் பூமியிலிருக்கையில் சபையின் எடுத்துக்கொள்ளப்படுதல் வரைக்கிலும் பூமியில் என்ன சம்பவிக்கும் என்பதைக் கண்டான். பின்பு அவன் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகும் நடக்கப் போகிறவைகளையெல்லாம் கூட அவன் கண்டான். ஓ, அது அற்புதமாயிருக்கவில்லையா?
3474 நாம் கடந்த ஞாயிறன்று, வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரம் 4-ம் வசனத்தில் அவனை விட்டுவிட்டு வந்தோம். அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்து நான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்து நான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின் மேல் உட்கார்ந்திருக்கக் கண்டேன். 75 இவர்களெல்லாம் மூப்பர்கள் என்பதை நாம் பார்த்தோம். மூப்பர் என்னும் சொல் ஒரு போதும் ஒரு தூதனையோ அல்லது வேறு எந்த ஜீவ ராசியையோ குறிக்காது. மூப்பர்கள் என்பது மீட்கப்பட்ட மானிட வர்க்கத்தையே குறிக்கும். ஏனெனில் அவர்…சிங்காசனங்களும், கிரீடங்களும், ஆளுகைகளும் ஒருபோதும் தூதர்களுக்கு சம்மந்தமுள்ளதல்ல. ஆனால் கிரீடங்களும் சிங்காசனங்களும் மானிட வர்க்கத்திற்கு சம்மந்தமுள்ளதாகவே உள்ளன. இம்மூப்பர்கள் கிரீடமணிந்து வெண்வஸ்திரம் தரித்தவர்களாய், சிங்காசனங்களில் வீற்றிருந்தார்கள். மற்ற வேதவாக்கியங்களில் அவர்கள் பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும் பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் குறிக்கும் என்பதாகக் கண்டோம். அவர்கள் இருபத்து நான்கு பேர்கள். அதாவது “இருபத்து—நான்கு” என்பது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும், பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களுமாவர்.
3576 பரலோகத்தினின்று தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிற நகரத்தையும் குறித்து நாம் கண்டோம். பூமியானது வெடித்து தூள் தூளாக ஆனபிறகு, பூமியில் எரிமலை வெடிப்பில் உண்டாகும் சாம்பலைத் தவிர வேறு எதுவும் இருக்காது; (அது தான் மீதமாய் விடப்படும்), இனிமேல் சமுத்திரமும் இருக்காது. சமுத்திரம் வறண்டு போகும். 77 நான் நேற்றிரவில் யாரோ ஒருவரிடம், எவ்வாறு பூமியானது ஒரு காலத்தில் காணப்பட்டது என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அது சூரியனைச் சுற்றி இருந்து கொண்டிருக்க, பூமியில் எப்பகுதியிலும் ஒரே சமமான உஷ்ணமானது காணப்பட்டது; பிரிட்டிஷ் பனிக்கண்டத்தில் நீங்கள் ஐந்நூறு அடி ஆழத்திற்கு வெடிப்பில் ஆழப்படுத்தி காண்பீர்களானால், அங்கே ஈச்ச மரங்களைக் காணலாம். குளிர்சாதனம் செய்வது போல் திடீரென அந்நிலை தோன்றி, அவற்றை உறையச் செய்து விட்டது. உங்களுடைய நீரை வற்றச் செய்யும் சாதனம் போல்; மிகு குளிர் பதன சாதனங்கள் ஸ்ட்ராபெர்ரீ என்ற செந்நிற பழங்களைப் பாதுகாத்து அநேக ஆண்டுகாலம் வைத்திருப்பதுபோல், பனிகண்டங்கள் தோன்றி அவ்வாறு செய்தன. புரிகிறதா? அதேவிதமாகத்தான் அக்காலத்தில் ஏற்பட்டது. ஜலப்பிரளய காலத்திற்கு முந்தின காலத்தில் ஒரு அழிவானது ஏற்பட்டு, அது பூமி முழுவதிலும் ஜலப்பிரளயத்தை ஏற்படுத்தியது. அப்படி காரியம் சம்பவித்தபொழுது, அணுசக்தி விசையானது வெடித்து, பூமியை அதனுடைய சுற்றுப் பாதையிலிருந்து விலகும்படி செய்தது, அப்பொழுது அது உறை நிலைக்குப் போய், அங்கே அவ்வாறு அமைந்துவிட்டது. புரிகிறதா? துருவப் பிரதேசங்களில் ஆழமாகத் தோண்டிப் பார்த்தால், பனை ஈச்சமரங்களையும் மற்றும் இன்ன பிறவற்றையும் நீங்கள் அங்கே காணலாம். ஒரு காலத்தில் அது மிகவும் அழகான முறையில் குடியிருக்கப் பெற்றிருந்தது என்பதை காண்பிக்கிறது. ஆனால் இப்பொழுதோ அது நிலைகுலைந்து போயுள்ளது.
3678 ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, ஆழத்தின் மேல் தண்ணீர் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார், ‘வெளிச்சம் உண்டாகக்கடவது’ என்றார்” என்று துவங்குகிற இடத்தை வாசிக்கையில், தேவன் எவ்வாறு தண்ணீரை எங்கிருந்து உண்டாக்கினார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்த்தேன். தேவன் அப்பொழுது தண்ணீரையும் வெட்டாந்தரையையும் வெவ்வேறாகப் பிரித்தார். வெட்டாந்தரையே பூமியாயிற்று. ஆனால் முழு பூமியும் சுற்றிலும் மூடப்பட்டிருந்தது. அவர் என்ன செய்தாரெனில்…வளி மண்டலத்தின் மூலமாக அவர்…வளிமண்டலமானது ஜலவாயு, பிராண வாயு போன்றவற்றால் நிரம்பியிருப்பதாக இருக்கிறது. தேவன் அதை பூமியை விட்டு மேலே எடுத்து அதைப் பிரித்தார். அப்பொழுது பூமியில் சமுத்திரம் இல்லாமல் இருந்தது. தேவன் பூமிக்கு நீரிறைத்தார், அப்பொழுது மழையே பெய்யவில்லை. அவர் ஊற்றுக் கண்களைக் கொண்டு பூமிக்கு நீர்ப்பாசனம் உண்டாகச் செய்தார். அப்பொழுது அவர் செய்த ஒரே காரியம்… 79 மனிதன் பூமியை அதன் சுற்றுப் பாதையை விட்டு விலகச் செய்தபோது என்ன நடந்தது? அப்பொழுது அந்த உஷ்ணப்பகுதி அந்தப் பக்கமும், குளிர்ப்பகுதி இந்தப் பக்கமுமாக இடம் மாறியது. உஷ்ணமும் குளிரும் என்னத்திற்கு ஒன்றாக்கப்படுகிறது? இப்பொழுது இங்கே ஜன்னல்கள் வழியாக வெளியே குளிராகவும், உள்ளே உஷ்ணமாயும் இருப்பதை உணர்ந்து பாருங்கள். வியர்வையைப் பாருங்கள்? மழையானது வியர்வையைத் தவிர வேறொன்றுமில்லை; அது வியர்தல்தான். தண்ணீரானது சாம்பலாய் இருக்கிறது. எனவே, அது…
3780 அப்பாடலை நான் விரும்புகிறேன்: விலையேறப்பெற்ற கர்த்தாவே, நீர் புல்வெளியின் மேல் உமது கரத்தை வைத்தீர் நீர் உமது அற்புதமான கரத்தை மேய்ச்சல் நிலத்தில் வைத்தீர், கர்த்தாவே நீர் நீரூற்றை ஊற்றினீர், மலையை எழுப்பினீர் ஓ! கர்த்தாவே நீர் உமது விலையேறப்பெற்ற கரத்தை என் மேல் வைத்தருளும். சமுத்திரத்திலிருந்து நீர் மழையை உண்டாக்கினீர், சமுத்திரத்திலிருந்து மேகத்தைக் கொண்டு, நீர் மேகங்களை உண்டாக்கினீர், மழையைத் தரும் மேகத்தை உருவாக்கினீர், நீர் எங்களுக்கு பரிபூரண ஜீவனை கொடுப்பதற்காக; நீர் பூமியையும், வானங்களையும் உம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிறீர், கர்த்தாவே. ஓ, உமது விலையேறப்பெற்ற கரத்தை என் மேல் தயவுகூர்ந்து வைத்தருளும். (ஓ, எவ்வளவு மகத்துவமானது! ஆம், பரலோகத்தின் தேவன்.)
3881 பிறகு இந்த மகத்தான வேளையில், அது இப்பொழுது, இவ்விதமாக சார்ந்து கொண்டு இருக்கிறது. அவர் நமக்கு ஒரு வாக்குத்தத்தத்தை கொடுத்தார். “இனிமேல் தண்ணீரினால் அல்ல, அக்கினியினால் தான் இந்த தடவை அழிவு” என்றார். அவர்கள் பூமியை சூரியனை விட்டு அகற்றிவிட்டனர். அதனால் அது குளிர்ந்து போயிற்று. நீங்கள் அதை சூரியனிடம் எறிந்து விட்டால், அது எரிந்து போகும். அவர் முன்பு தண்ணீரினால் அழிந்து, வானத்தில் வானவில்லை வைத்தது போல, “இனிமேல் அவர் செய்யமாட்டார்”. இப்பொழுது, அவர் பூமியை “அக்கினியினால் சுட்டெரிக்கப் போவதாக” வாக்குரைத்திருக்கிறார். அங்கே தான் பாவமும், எல்லா கவர்ச்சியும், அனைத்து அசுத்தமும் அழிவும், அவ்விடத்திற்குத்தான் நீங்கள் வருகிறீர்கள்…
3982 சமீபத்தில் நான் புல்வெளிகள் வழியாக குதிரையில் சவாரிசெய்து போய்க் கொண்டிருந்தேன். நான் சிறுவனாயிருந்த போது, என்னுடைய சரித்திரப் புத்தகங்களையும், புவியியல் புத்தகங்களையும் எடுத்து வைத்துக் கொண்டு, மேற்கத்திய சமவெளிகளைப் பற்றி சிந்தித்துப்பதுண்டு. நான் எனக்குள், “ஒரு நாள், நான் அப்பிரதேசத்தில், பாவமில்லாத அவ்விடத்தில், அமைதியாகவும், சமாதானமாகவும் வாழ்வேன், அங்கே தான் இந்தியரைப் போல நான் அவ்வெளிகளில் அலைந்து திரிந்து, வேட்டையாடுவேன். நான் அங்கே வாழ்நாள் முழுவதும் சமாதானமான வாழ்க்கை வாழ்வேன்” என்று கூறுவது வழக்கம்! ஆனால் இப்பொழுதோ, அங்கே வெள்ளையன் குடியேறிவிட்டான். வெள்ளையன் எங்கெல்லாம் போகிறானோ, அங்கெல்லாம் அவனோடு பாவமும் போகிறது. இப்பூமியிலேயே மக்களையெல்லாம் கொன்று குவித்த பெரிய கொலைகாரன் அவன் தான். எல்லா நிறத்தவரிலும் அவனே துரோகியாக இருக்கிறான்.
4083 சமீபத்தில் பத்திரிக்கையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு விஷயத்தை நான் படித்தேன். (சகோதரன் டாம் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கே வந்திருக்கிறார்.) அதில் கூறப்பட்டுள்ளது என்னவெனில்: “அமெரிக்கர்கள் இன்னமும் தொடர்ந்து ஆப்பிரிக்காவுக்கு போக அனுமதிக்கப்பட்டார்களெனில், இப்பொழுதிலிருந்து பத்து ஆண்டுகளில் பெரிய ஆப்பிரிக்க சிங்கங்கள் மற்றும் யானைகள் முற்றும் ஒழிந்து போய்விடும்”. இந்த துரோகிகள் தங்களால் முடிந்தளவு எங்கு வேண்டுமானாலும் சுடுகிறார்கள். இரண்டு பெரிய ஆண் யானைகள் காயமடைந்த இன்னொரு பெண் யானையை தூக்கி நிறுத்த முற்படுகின்ற படத்தை நான் பார்த்தேன். அவைகளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. பெண் யானைகள் இறப்பதை ஆண் யானைகள் பார்க்க விரும்புவதில்லை. அப்பெண் யானையை தரையில் விழுந்து விடாமல் இந்தவிதமாக தூக்கி நிறுத்தியவாறு இரு பக்கங்களிலும் அவைகள் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றன. அது குண்டுக்காயம் பட்டு சிதறிப் போயிருந்தது. எதையும் அந்தவிதமாக சுடுகிற ஒருவருடைய கையில் ஒரு துப்பாக்கியை வைத்திருக்க அவனுக்கு தகுதியில்லை. அது உண்மை. அதைக் கையாள போதுமான விவேகம் அவனுக்கு கிடையாது.
4184 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய நல்ல நண்பர் ராய் ராபர்சன் நிலத்தில் சில மரை மான்களின் மந்தையை கூட்டிச் சேர்க்க முயற்சித்தேன். கொலராடோவில் நான் அவைகளை வழி நடத்திக் கொண்டிருந்தேன். அங்கே எங்களுக்கு அருமையான மந்தை உண்டாயிருந்தது. ஜெஃப்புக்கும் எனக்கும் அநேக ஆண்டுகளாக அவைகள் உண்டாயிருந்தன. ஏறத்தாழ எண்பது மரை மான்கள் அங்கேயிருந்தன. டென்வரிலிருந்து சில அதிகாரிகளை வேட்டையாடுவதற்காக அவர்கள் உள்ளே விட்டு விட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். அவர்கள் தொள தொளவென்று தைக்கப்பட்டிருக்கும் நீளமான கால் சட்டைகளையும் காலில் பின்னல் வேலையான உறையையும் அணிந்து கொண்டு ஜீப் என்ற பொறிவண்டிகளில் ஒரு குழுவானது வந்திறங்கியது. இவர்களெல்லாம் வேட்டையாடுபவர்கள். ஊ! இதோ அங்கே அவர்கள் ஜீப் என்ற அந்தவிதமான பொறிவண்டிகளில் ஒரு கூட்டமாக வந்து, அவர்கள் எங்கள் பிரதேசத்தில் நுழைந்து விட்டார்கள். 85 நான் இந்த மரை மான் மந்தையை மலையின் மேல் அவைகளின் பின்னால் இருந்து ஓட்டிச் சென்று கொண்டிருந்தேன். அவைகள் வழி நெடுக மேய்ந்து கொண்டிருந்தன. வயதான பெரிய எருதுகள் மற்றும் இன்னபிறவற்றின் மந்தையை நெருக்கலாக வைத்திராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் மந்தையை நீங்கள் உடைந்து போகப் பண்ணுவீர்கள். மாட்டு மந்தையை வளர்ப்பது போல் இவைகளும், வனவிலங்கும் அதேபோல் தான் நமக்கு இருக்கின்றன. இப்படிப்பட்டவைகள் வேட்டையாடுவதற்குரிய இலக்கு அல்ல, நீங்கள் வேட்டையாடுவதற்கான இலக்கு வேண்டுமெனில் அதற்கென அவைகளைச் சுட அங்கே பண்ணையான காடு உள்ளது. அது உண்மை. இவ்விதமான பிராணிகளை வெட்டிச் சாய்ப்பது அவமானகரமான செயலாகும். அது பாவகரமானது, தேவபக்திக்குரியதல்லாத செயலுமாகும்.
4286 அம்மனிதர்கள் இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு நூற்று இருபத்து மூன்று குண்டுகள் சுட்டதை நான் எண்ணினேன். தங்கள் தோள்களில் வைத்துக் கொண்டு சுட்டார்கள் போலும், அடுத்த நாள் காலையில் என்னுடன் இருந்த சகோதரன் பாங்க்ஸ் வுட் அவர்களோடு மலையின்மேல் ஏறிப்போய் இறந்துபோன இரத்தம் தோய்ந்த பத்தொன்பது மரை மான்களைக் கண்டு எண்ணினோம். அவர்களுக்கு வேட்டையாடுதலைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. பெரியதொரு விலங்கை நீங்கள் அவ்வாறு சுடலாம், அதைக் கொல்வதற்காக அவ்வளவு தீவிரமாக சுடலாம். அவர்கள் கட்டு மீறிப்போய் “பேங், பேங், பேங்” என்று ஒவ்வொன்றாக சுட்டனர். அவைகள் மரித்து விடும். என்ன…ஜூரம் அவைகளைப் பீடித்ததெனில், அவ்வளவுதான். நீங்கள் அவைகளைக் கண்டால் அவைகளால் உங்களுக்குப் பயனில்லை. அவைகள் அப்பொழுதே கெட்டுப் போய்விடும். அழுகிய பிணங்களைத் தின்று வாழும் விலங்குகளும், ஓநாய்களும் அவைகளைத் தின்று போடும். அத்துப்பாக்கிகளினால் சுடப்பட்டு குண்டு துளைக்கப்பட்டு, இரத்தமானது இரண்டு அடி உயரத்திற்கு பீறிட்டு வந்து, பெரிய குளம்புகளையுடைய அக்காட்டு ஆண் மான்கள் கொல்லப்பட்டு, அங்கே பத்தொன்பது இறந்துபோன மரைமான்கள் காணப்பட்டன. அவ்விதமான போக்கிரிகளை தங்கள் கையில் துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள அனுமதிக்கவே கூடாது. அது உண்மை. அவனுக்கு ஒரு துப்பாக்கியைக் கையாள்வதற்கான அறிவே இல்லை. ஓ, அது பயங்கரமானதாகும், அவ்வாறு செய்வது பாவமான செயலாகும்.
4387 அது பயங்கரமான செயலாகும். ஆனால் அமெரிக்காவின் செயல் அப்படித்தான் உள்ளது. கனடா தேசமே, கனடா தேசத்திலிருந்து வந்துள்ள விலையேறப்பெற்ற மக்களே! அமெரிக்கர் அங்கு போய்க் கொண்டேயிருந்தால், கனடாவும் அமெரிக்காவைப் போல் சிறிது காலத்தில், கீழ்த்தரமாகப் போய்விடும். கனடாவின் எல்லைகள் நெடுகிலும் போய்ப்பாருங்கள். அங்கே நீங்கள் அமெரிக்க சூழ்நிலையையே பெற்றுக்கொள்வீர்கள். இந்த அமெரிக்கா தேசங்களின் வேசியாயுள்ளது. அவ்வாறு தான் அவள் இருக்கிறாள். இப்பொழுது இருக்கிறதை விட இன்னும் மோசமாக அவள் ஆகப் போகிறாள். அவன் தன் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறாள். வேதாகமம் அவள் தனது அழிவைப் அடையப் போகிறதைப் பற்றி கூறுகிறது. அவள் எவ்வாறு இருக்கப் போகிறான் என்பதைப் பற்றி பேசுகிறது. அமெரிக்கர், கீழ்த்தரமாகவும், அழுகிப்போனதாகவும், அசுத்தமானதாகவும், பொல்லாததாகவும் காணப்படுகிறது. அது முற்றிலும் சரியே. அவள் ஒரு மகத்தான தேசமாக இருந்து வந்தாள். அவள் சுவிசேஷ செய்தியை சுமந்து கொண்டு சென்றாள். அவள் இப்பொழுது இருக்கிற நிலைக்கு அவளை ஆளாக்கியது எது? ஏனெனில் அவள் சுவிசேஷ செய்தியை தள்ளிப் போட்டு, சத்தியத்தை நிராகரித்துவிட்டாள். அவள் பயங்கரமானவளாகிவிட்டாள். அவள் தன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறாள். அதைப்பற்றி நீங்கள் கவைலைப்பட வேண்டாம். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக நான் அதை தரிசனத்தில் கண்டேன். அது வருகிறது. அவள் தன் பாவத்திற்கானதை செலுத்தப் போகிறாள். 88 அமெரிக்கா முன்பு அமெரிக்காவாக இருந்தபோது, அவள் ஒரு மகத்தான தேசமாக இருந்தாள். இஸ்ரவேலின் நாட்கள் முதற்கொண்டு, உலகம் முழுவதிலும் பிரசித்தபெற்ற தேசமாக விளங்கியது அமெரிக்காதான். ஆனால் அவளோ இப்பொழுது தன்னை அசுசிப்படுத்திக் கொண்டு விட்டாள். அவள் செய்தியைப் புறக்கணித்து விட்டாள். அவள் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை…அவள் இப்பொழுது எந்த நிலையில் இருந்து கொண்டிருக்கிறாள் என்பதை நீங்கள் காணலாம். அதை யாவரும் அறிவர். கடந்த தேர்தலில் அவளது ஆவிக்குரிய நிலையானது எப்படியிருக்கிறது என்பதை காண்பித்துவிட்டாள். ஊ—ஊ. அவள் அறியாமல் இருக்கிறாள்.
4489 இப்பொழுது, இங்கே இந்த மூப்பர்கள் சிங்காசனங்களின் மேல் தங்கள் தலையில் கிரீடமணிந்தவர்களாய் வீற்றிருக்கிறார்கள். இப்பொழுது 5-ம் வசனத்திலிருந்து நாம் ஆரம்பிக்கப் போகிறோம். அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்து கொண்டிருந்தன. 90 ஓ, நான் இதை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா? ஓ, உங்களுக்குத் தெரியுமா? எனது மேற்சட்டை எனக்கு பொருத்தமாக இருப்பது போல் நான் உணருகிறேன், நான்…ஓ, உண்மையாகவே நான் ஆவிக்குரிய மேற்சட்டையக் குறித்துக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். சரி. 91 “சிங்காசனத்திலிருந்து”. இப்பொழுது நாம் இந்த சிங்காசனத்தை குறித்து சில நிமிடங்கள் பேசுவோமாக. இது இரக்கத்தின் சிங்காசனமல்ல; இரக்கத்தின் சிங்காசனத்தின் வேளை முடிந்துவிட்டது. இனிமேல் இரக்கம் இல்லை. அது இரக்கமில்லாததாய் உள்ளது. நாம் என்ன செய்யப் போகிறோம்…நியாயசனம் எப்படி கிறிஸ்துவின் நியாயாசனமாக ஆகப்போகிறது? எவ்வாறு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு ஆசனமாக ஆகப்போகிறது? அப்பொழுது அதில் இரக்கம் இருக்கப்போகிறதா? அங்கே ஒரு துளி இரக்கமும் இருக்கப் போவதில்லை. நியாயசனத்தண்டையில் நீங்கள் “இரக்கம்” வேண்டும் என்று கதறும்போது, இனிமேல் கதறவே முடியாது என்ற அளவுக்கு கதறின போதிலும் அங்கே கொஞ்சம் கூட இரக்கம் இராது போய் விடும். நீங்கள் ஆகாயத்தில் கதறித் தீருமட்டும் கதறுவீர்கள், ஏனெனில் அங்கே இரக்கமே இராது போகும்.
4592 இப்பொழுது இரக்கத்தின் நாள் உள்ளது. இப்பொழுது நாம் பழைய ஏற்பாட்டில் சிறிது திரும்பிப் போய், இரக்கமானது என்ன என்பதை நாம் அங்கே காண்போம். திரும்பிப் போய், இந்த சிங்காசனத்திற்கு என்ன நேர்ந்தது என்பதைப் பார்ப்போம். இந்த சிங்காசனம் உண்மையிலேயே நியாயத்தீர்ப்பு ஆசனம் தான். இன்றைக்கு இரக்கம் இருப்பதின் காரணம் என்னவெனில், பாவ பிராயச்சித்த இரத்தத்தால் கிருபாசனமானது தெளிக்கப்பட்டிருக்கிறது. இரத்தம்! நியாயாசனத்தின் மீது அந்த இரத்தமானது இருக்கிற வரையிலும் அது நியாயசனமாக விளங்காது. அது இரக்கமாகவே இருக்கிறது. ஏனெனில் நியாயத்தீர்ப்பினின்று காக்கும்படி ஏதோ ஒன்று மரித்துள்ளது. அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களானால், “ஆமென்” என்று சொல்லுங்கள். [சபையார் “ஆமென்” என்று கூறுகிறார்கள்—ஆசி.] கிருபாசனத்தின் மீது இரத்தமானது காணப்படுகிற வரையிலும், நியாயத்தீர்ப்பை தடுத்து நிறுத்துவதற்காக, ஏதோ ஒன்று மரித்துள்ளது என்பதை அது காட்டுகிறது. ஆனால் சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும்பொழுது, கிருபாசனமானது நியாயசனமாக ஆகிவிடுகிறது!
4693 இங்கே புதிய ஏற்பாட்டிலுங் கூட, பரிசுத்த ஸ்தலத்தில் நியாயாதிபதி தன் ஆசனத்தில் வீற்றிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும் அந்த நியாயாசனம் முழுவதும் புகையால் நிறைந்தது. அது என்னவாயிருக்கிறது? சீனாய் மலையில் இருந்த நியாயத்தீர்ப்பு ஆசனத்தைப் போல் அது உள்ளது. தேவனுடைய சிங்காசனத்தை விட்டு இரக்கமானது அகன்று விட்டது. இரக்கமில்லாமல் தேவன் உலகை நியாயந்தீர்ப்பார். அதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? 94 அந்நாளில் அவர் அங்கீகரிக்கும் காரியம் ஒன்றேயொன்று தான் உண்டு. அது என்ன? அது தான் இரத்தம். கோபமுள்ள தேவனை சாந்தப்படுத்துவது அந்த ஒரு காரியம் மாத்திரமேயாகும்.
4795 ஆதாமும் ஏவாளும் தங்கள் நிர்வாணத்தை மூடிட, எந்தவொரு மெதோடிஸ்ட்டும், பாப்டிஸ்ட்டும், ப்ரெஸ்பிடேரியனும் அல்லது பெந்தெகோஸ்தேகாரரும் செய்ய முடிந்திருக்கிற அளவுக்கு, ஒரு ஆடையைத் தயாரித்தார்கள். ஆனால் தேவனுக்கு அது நிர்வாணத்தை மறைக்கக்கூடியதாயிருக்கவில்லை. எனவே, அவர் ஒரு மிருகத்தைக் கொன்று, இறந்துபோன மிருகத்தின் தோலை எடுத்து அவர்களுக்கு உடுத்துவித்தார். இரத்தமானது அந்த ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அதுவே அவருடைய கோபத்தை தடுத்தி நிறுத்தியது. ஏனெனில் ஒன்று தனது ஜீவனை கொடுத்திருக்கிறது. ஓ, தேவனே! 96 அதைக் குறித்து எண்ணிப் பாருங்கள்! இரத்தம் மாத்திரமே தேவனே தடுத்து நிறுத்தும் ஒரே காரியமாகும். ஒரே ஒரு இரத்தம் மாத்திரமே அவரை தடுத்து நிறுத்தும், அது அவருடைய சொந்த குமாரனுடைய இரத்தமாகும். அவர் தம்முடைய சொந்த குமாரனுடைய இரத்தத்தை காணும்பொழுது, அவர் பின்னிட்டு திரும்புவார். ஏனென்றால் அவர் முன்னறிந்துகொண்டவர்களை மீட்கும்படி தேவன் தம்முடைய குமாரனுக்கு அளித்துள்ள வெகுமதியாய் அது உள்ளது. எனவே அது அவரை நியாயத்தீர்ப்பிலிருந்து திருப்பிக் கொண்டுவருகிறது. ஆனால் அந்த இரத்தமானது நீக்கப்படுகின்றபோது, முன்னறிந்து கொள்ளப்பட்டவர்கள் யாவரும் அந்த விலையேறப்பெற்ற சரீரத்திற்குள்ளாக அழைக்கப்பட்டு அவருடைய சபையானது ஆயத்தப்பட்டு, எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, தேவனுடைய கோபாக்கினை ஜனங்கள் மேல் உண்டாகிறது.
4897 ஓ, சகோதரனே, ஒருபோதும் அங்கு நிற்க விரும்பாதீர்! நான் இயந்திர துப்பாக்கி முன்நிற்கட்டும், நான் துண்டுதுண்டாக்கப்பட்டும், என்னை அங்குலம் அங்குலமாக அறுக்கட்டும், எந்த காரியம் வேண்டுமானாலும் சம்பவிக்கட்டும். (கொலம்பஸ் வீரர்களின் ஆணையுறுதியைப் போல) அவர்கள் எனது வயிற்றை அறுத்து திறந்து என்னிலுள்ள கந்தகம் மற்றும் இன்ன பிற இரசாயனங்களையெல்லாம் சுட்டெரிக்கட்டும், எனது கரங்களும், கைகளும் துண்டாக்கப்படட்டும், எனக்கு என்ன நேரிட்டாலும் சரி, ஆனால் ஒருபோதும் தேவனுக்கு முன்பாக அந்த வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு முன்பாக நான் நிற்கவே வேண்டாம். 98 ஓ, நான் இந்த சிறிய சிங்காசனத்தை இங்கே கிறிஸ்துவின் ஆசனத்தண்டையில் எடுத்துக் கொண்டு போய் அவரது இரத்தத்தை ஏற்றுக் கொள்ளட்டும், கர்த்தாவே, நான் என் கையில் வேறெதுவும் என்னுடன் கொண்டு வரவில்லை. இயேசுவின் இரத்த ஊற்றைத் தவிர வேறே ஊற்றை நான் அறியேன்; (நான் அறிந்துள்ளதெல்லாம் அதைப் பற்றியேயாகும்.) இதுவே என் நம்பிக்கையும், உறைவிடமும், இயேசுவின் இரத்தமேயல்லாமல் வேறொன்றுமில்லை.
4999 எட்டிப் ப்ரூயிட் எழுதியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவர் ஒரு கிறிஸ்தவனாக இருந்தபோது, தீரமான கிறிஸ்தவனாக இருந்தபோது, அவரது பாடல்களை வாங்கிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஒரு நாள் அவர், “நான் ஒன்றை இயற்றுவேன், அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள்” என்று கூறினார். (மக்கள் பக்திப் பாடல்களில் இன்னும் கூடுதலாக நவீனமான ஒன்றை விரும்பிக் கொண்டிருந்தார்கள்). ஒரு நாளிலே ஆவியானவர் அவரை ஆட்கொண்டபோது, அவர் எழுதுகோலை எடுத்து பின்வருமாறு எழுதினார். இயேசுவின் நாமத்தின் வல்லமைக்கே எல்லா வந்தனமும், தூதர்கள் சாஷ்டாங்கமாய் விழுந்து பணியட்டும், ராஜரீக முடியைக் கொண்டுவந்து கர்த்தாதி கர்த்தராகிய அவருக்கு முடிசூட்டுங்கள். நான் கிறிஸ்து என்னும் திடமான பாறையின்மேல் நிற்கிறேன்; மற்றெல்லா நிலங்களும் அமிழ்ந்துகொண்டிருக்கு மணலாயாயுள்ளது, மற்றெல்லா நிலங்களும் அழிந்துகொண்டிருக்கும் மணலே. 100 அது சபையானாலும், அது நண்பனானாலும், அது சத்துருவானாலும், அது தேசமானாலும், அது ஐசுவரியங்களானாலும், அது வறுமையானாலும், அது நன்மையானாலும், அது என்னவாயிருந்த போதிலும், மற்றெல்லா நிலங்களும் அழிந்துகொண்டிருக்கும் மணலே! அந்த ஒரு காரியமாகவேயுள்ளது, அது முடிவிலே ஒழிந்துபோம். ஆனால்: நான் கிறிஸ்து, அந்த திடமான பாறையில் நிற்கிறேன்; மற்றெல்லா நிலங்களும் அழிந்துகொண்டிருக்கும் மணலே. (அதை நினைவில் கொள்ளுவீர்)
50101 கவனியுங்கள்! நாம் இப்பொழுது வேதாகமத்தின் பின்பகுதியில் உள்ள லேவியராகமம் 16-ம் அதிகாரத்திற்குப் போய் அங்கே லேவியருக்குரிய பிரமாணங்களிலே வாசித்துப் பார்ப்போமாக. இங்கே லேவியராகமம்—லேவியராகமம் 16-ம் அதிகாரத்தை பார்ப்போமாக. லேவியராகமம் 16-ம் அதிகாரம் 14-ம் வசனத்தில் துவங்குவோம். ஓ, இந்த காரியங்களின் பேரில் நான்—நான் எனது நேரத்தை எடுத்துக் கொண்டு, இவைகளை நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். லேவியராகமம் 16:14. பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழு தரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன். (கிருபாசனத்தின் மேல்! நாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் இதற்குள்ளாகச் செல்லப் போகிறோம்)… கீழ்ப்புறமாக ;… 102 “கீழ்ப்புறமாக” என்ற வார்த்தையை மறந்து விடவேண்டாம். எத்திசையிலிருந்து இயேசு வருகிறார்? கிழக்கிலே, ஒரு மகிமையின் மேகத்திலே, சூரியன் (S—U—N) எத்திசையில் உதிக்கிறான்? கிழக்கு. குமாரன் (S—O—N) எத்திசையிலிருந்து உதிப்பார்? அதுவும் கிழக்கு. கிருபாசனமானது எத்திசையில் அமைதிருந்தது? கிழக்கு நோக்கி. நான் ஏன் உங்களையெல்லாம் இந்தவிதமாக கிழக்கு நோக்கி அமரப் பண்ணியிருக்கிறேன்? ஏன்? பலிபீடம் கிழக்கு நோக்கியே உள்ளது. அது எவ்வளவு அழகாக அமைந்திருக்கிறது என்பதை இன்னும் சிறுது நேரத்தில் நாம் பார்ப்போம். அதை வரைபடமாக வரையப் போகிறேன். இந்த வரைபடங்களை சில நிமிடங்களில் வரைந்து எடுத்துக் கொள்வதற்காக காகிதங்களைக் கொண்டு வரும்படி, எத்தனை பேர்களிடத்தில் சொல்ல முடியுமோ அத்தனை பேர்களிடத்தில் நான் கூறியுள்ளேன். சரி:
51…கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் இரத்தத்தை ஏழு தரம் தெளிக்கக்கடவன். 103 ஓ, இது மிகவும் அழகாக இருக்கவில்லையா? “கிழக்கு நோக்கி ஏழு தரம்”, அது என்ன? ஏழு சபைக் காலங்கள் இரத்தத்தினால் மூடப்பட்டிருக்கும். அல்லேலூயா! இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது ஒவ்வொரு பாவியையும் இரட்சிக்கவும், ஒவ்வொரு வியாதியஸ்தரையும் குணமாக்கவும், ஒவ்வொரு அற்புதங்களையும் புரியவும், ஒவ்வொரு அடையாளமும் நிறைவேறவும், எவ்வாறு கடந்த காலத்தில் போதுமானதாக இருந்ததோ, அதேபோல் நேற்றும் இன்றும் என்றும், ஒவ்வொரு காலத்திலும் மிகவும் போதுமானதாக இருக்கிறது. கிறிஸ்து வருவதற்கு ஆயிரத்துத் நானூற்று தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாக, வெகு காலத்திற்கு முன்பாகவே, பழைய ஏற்பாட்டின் காலத்தில் “ஏழு தரம்” தெளிக்கப்பட்டது. அதைப்பற்றி எண்ணிப் பாருங்கள். அடையாளச் சின்னம், “ஏழு தரம்…” பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தை திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து, இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன். 104 அது என்னவாயிருந்தது? “கிருபாசனம்”. அவைகள் இப்பொழுது எங்கேயுள்ளன? உடன்படிக்கைப் பெட்டியினுள் என்ன இருந்தது? நியாயப்பிரமாணம். நியாயப்பிரமாணத்தில் ஒன்றை மீறினால் கூட இரக்கமின்றி மரிக்க வேண்டியதுதான். ஆனால் உங்களுக்கு இரக்கம் கிடைப்பதற்காக, இரத்தமானது பலிபீடத்தின் மீது சிந்தப்பட்டு, கிருபாசனத்தின் மீது தெளிக்கப்பட வேண்டியதாயிருந்தது. கிருபாசனமே, நீங்கள் மண்டியிட்டு, இரக்கத்திற்காக வேண்டுதல் செய்யக் கூடிய பீடமாக இருக்கிறது. மனிதர் முழங்காற்படியிட்டு தேவனை நோக்கி இரக்கத்திற்காக கெஞ்சும்படி உள்ள பழங்காலத்துப் பாணியிலான பீடமானது நமது சபைகளை விட்டு நாம் எடுத்துப்போட்டுவிடாதபடிக்கு தேவன் நம்மை தடுத்தாட்கொள்வாராக. கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினிடமிருந்து, இரக்கமானது ஏராளமாகவும் இலவசமாகவும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதும் கூட அந்த இரக்கம் உண்டு. அதுவே இரக்கத்தின் ஆசனமாயிருக்கிறது.
52105 ஆனால் இங்கே இரக்கத்தின் ஆசனமாக இது இல்லை என்பதை நீங்கள் கவனியுங்கள்: ஏனெனில் அங்கே “மின்னல்களும், இடி முழக்கமும் சத்தங்களும்” இருக்கின்றன. இரக்கத்தின் ஆசனத்தில் மின்னலும், இடிமுழக்கங்களும் கிடையாது. அது நியாயத்தீர்ப்பின் சிம்மாசனமாயுள்ளது. 106 நாம் யாத்திராகமத்திற்கு, யாத்திராகமம் 19-ம், அதிகாரம் 16-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். யாத்திராகமம் 19-ம் அதிகாரம் 16-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். …உண்டாயிற்று… என்னவென்று கவனியுங்கள்…தேவன் சீனாய் மலையின்மேல் இறங்கியபொழுது: மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டாயிற்று: (எக்காள சத்தமானது என்ன? பிரதான தூதன்.) பாளயத்திலிருந்து ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள். (கவனியுங்கள்!) 107 “நியாயத்தீர்ப்பு!” வ்யூ! அவர்கள் நடந்து அங்கு சென்றிருந்தார்கள். அவர்கள் பிரயாணம் செய்ய தேவன் அவர்களுக்கு கிருபை அளித்தார். ஆனால் அவர்களோ ஒரு நியாயப்பிரமாணம் வேண்டுமென்று கோரினர். அவர்கள்…தேவன் அவர்களை ஒரு ஸ்தாபன ரீதியாக இல்லாதவர்களாக இருக்கும்படி விரும்பினார். ஆனால் அவர்களோ, தேவனைப் பின்பற்றுவதையும், அவரது ஆதிக்கத்தினுள் வாழ்வதையும், அவரது வல்லமையின் கீழ் வாழ்வதையும் விட, அதைக் கொண்டு ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளவும், எதைப்பற்றியாவது தர்க்கிக்கவுமே விரும்பினார்கள். கிருபையானது அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை, பாவப் பிராயச்சித்தத்திற்காக (ஒரு ஆட்டுக்குட்டியை), அளித்திருந்தது; கிருபையானது இவ்வெல்லா காரியங்களையும் அவர்களுக்கு அளித்தது, ஆயினும் அவர்களோ நியாயத்தீர்ப்பையே விரும்பினார்கள். தாங்கள் கிரியை செய்யும்படி ஒன்றை அவர்கள் விரும்பினர். 108 தேவன், “அவர்களை கூடிவரச் செய்: அது என்னவென்பதை நான் அவர்கள் அறியச் செய்வேன், அது என்னவென்று அவர்களுக்கு காண்பிப்பேன்” என்றார். படியுங்கள்! கவனியுங்கள்! அவ்வெக்காள சத்தமானது வரவர அதிகரித்துக் கொண்டே வந்து, அது பூமியை அசையப் பண்ணத்தக்கதாக அந்த அளவுக்கு பலமாகத் தொனித்தது. நியாயத்தீர்ப்பானது என்னவென்பதை நீங்கள் பார்த்தீர்களா? எனக்கு அது வேண்டாம். எனக்கு இரக்கத்தையே காண்பியும்! 109 [சகோதரன் ஃப்ரெட், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே என்று அழைக்கிறார்—ஆசி.] மற்றும்… [சகோதரன் பிரான்ஹாம்?”] என்ன? [“நீங்கள் கடைசியாக வாசித்த வேதவசனம் எது?”] அது யாத்திராகமம் 19-ம் அதிகாரம் 16-ம் வசனம், சகோதரன் ஃப்ரெட் அவர்களே, யாத்திராகமம் 9:16.
53110 இப்பொழுது, 17-ம் வசனத்தைக் கவனியுங்கள்: அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; (ஓ, என்னே! நான் அவரை சமாதானத்துடன் சந்திக்கவே விரும்புகிறேன், அவ்விதமாக அல்ல.) அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். (தூரத்தில்) 111 அந்த மலையைச் சுற்றிலும் எல்லை வரையறை செய்யப்பட்டிருந்தது. ஒரு மாடு, அந்த மலையைச் தொட்டாலும் அது அப்பொழுதே சாக வேண்டியதாயிருந்தது, தேவனுடைய சமுகத்தில் வர முடியாது. தேவன்…“மோசே ஜனங்களை புறப்படப் பண்ணினான்”. 112 இப்பொழுது, 18-ம் வசனம், அடுத்த வசனம்; கர்த்தர் சீனாய் மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்கடாய் இருந்தது; (அந்தப் புகை சூளையின் புகையைப் போல் எழும்பிற்று;) 113 அவர் எவ்விதம் இறங்கினார்? அவர் தமது ஷெகினா மகிமையில் இறங்கிடவில்லை. ஆனால் அவரது நியாயத்தீர்ப்பின் சினத்தில் தான் இறங்கி வந்தார். … அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. (சகோதரனே, நான் அந்த ஸ்தலத்தில் இருக்க விரும்பவில்லை.) எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் இவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார். (மோசேதான் பேசினான், ஜனங்கள் பேசவில்லை; அவர்கள் மிகவும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்). கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்து போகாதபடிக்கும், நீ இறங்கிப் போய் அவர்களை உறுதியாக எச்சரி.
54114 [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] மக்கள் சபையில் பின்னால் உட்கார்ந்து கொண்டு, அன்னிய பாஷைகளில் பேசுபவரையோ அல்லது ஆவியில் நடனமாடுபவரைக் குறித்தோ பரிகசிக்கின்றனர்; அதனால் பரிசுத்த ஆவியை அவர்கள் தூஷித்தாயிற்று, இனி அவ்வளவுதான், அவர்கள் என்றென்றைக்குமாக முத்திரையிடப்பட்டு விட்டார்கள். “எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை”. அதை நீங்கள் ஏறிட்டுப் பார்க்க வேண்டாம். ஒன்று அதை விட்டு நீங்கியிருங்கள், அல்லது அதை ஏற்றுக் கொள்ளுங்கள். 115 நாம் அந்த வேதவாக்கியத்தை விட்டு கடந்து சென்று விடுவோம். அதைத் தொடர்ந்து மீதியுள்ள வசனங்களை வாசியுங்கள். தேவன் அங்கே என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பாருங்கள். ஜனங்கள் மோசேயிடம், “ஓ, மோசே, நீரே பேசும், தேவன் இனிமேல் பேசவேண்டாம். நாங்கள் இக்காரியத்தை கேட்டேயிருக்கக் கூடாது என்று நாங்கள் கருதுகிறோம்.” பார்த்தீர்களா? “மோசே, நீரே எங்களிடம் பேசும். தேவன் பேசினால் நங்கள் செத்துப் போவோம்.” பாருங்கள், தேவன் ஒரு பாவநிவிர்த்தியை உண்டாக்கினார்.
55116 “சிங்காசனத்தின் சத்தம்” என்பதை இப்பொழுது பார்ப்போம். இந்த சிங்காசனத்தை கவனியுங்கள். “சிங்காசனத்திற்கு முன்பாக ஏழு நட்சத்திரங்கள்,” நட்சத்திரங்களின் சத்தம். “சத்தங்கள்” என்பதை நீங்கள் கவனியுங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தில் அல்லது 5-ம் அதிகாரத்தில் இங்கே நாம் காண்பது என்னவெனில், “அந்த சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன”. ஒரு சத்தம் அல்ல அது, “சத்தங்கள்” என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது. அது என்ன? தேவன் சபையிடம் ஏழு ஆவிகள் மூலமாக தன்னையே பிரதிபலித்து காண்பித்துக் கொண்டு, பேசிக் கொண்டிருக்கிறார். தேவனுடைய உண்மையான அபிஷேகம் பெற்றவர் பேசும் போது அதுவே தேவனுடைய சத்தமாயிருக்கிறது. அதைப் புறக்கணிப்பது, அந்த குத்துவிளக்கை அகற்றிவிடுவதாகும். பார்த்தீர்களா? “சத்தங்கள்,” ஏழு சபைக் காலங்களின் சத்தம் (இந்த மூலையில்) சத்தங்கள் இடிமுழக்கத்துடனும், மின்னலுடனும் பேசிக்கொண்டிருக்கின்றன.
56117 இந்நாட்களில் இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள். “சரி, பிரசங்க பீடத்திலிருந்து ‘நரகம்’ என்ற சொல்லை உபயோகிப்பதை நாங்கள் விசுவாசிக்கவில்லை” என்கின்றனர். ஓ இரக்கம்! எப்பேர்ப்பட்ட அபத்தம்! ஊம்! தேவனுடைய வார்த்தையை அடக்கி வைக்காத மனிதர், அப்படிப்பட்ட தேவ மனிதரே நமக்குத் தேவை. 118 யாவருமே ஒரு பிரசங்கியாக முடியாது, ஆனால் உங்களுக்கு ஒரு சத்தம் உண்டு. ஜனங்களுக்கு ஒரு பிரசங்கத்தை உங்களால் பிரசங்கிக்க முடியவில்லையெனில்…நீங்கள் ஒரு பிரசங்கியாயிருந்தால், நீங்கள் பிரசங்கபீடத்திலிருந்து பிரசங்கிக்க அழைக்கப்பட்டுள்ளீர்கள். அவ்வாறு நீங்கள் அழைக்கப்படவில்லையெனில், அப்படியிருந்தும் ஜனங்களுக்கு முன்னால், உங்கள் வாழ்க்கையே பிரசங்கமாக அமைய வேண்டும், அதன் மூலம் நீங்கள் ஒரு பிரசங்கியாகத் தான் இருப்பீர்கள். உங்களுடைய பிரசங்கமானது உங்களால் வாழ்ந்து காட்டப்படட்டும். அவ்வாறு செய்தால், அதுவே தேவனுடைய சத்தமாக இருக்கிறது. அதை புறக்கணிக்கிறவர்கள் மேல் அது நிந்தையைக் கொண்டு வரும். அவர்கள், “அவன் அல்லது அவளுடைய ஜீவியத்திற்கெதிராக ஒருவரும் குற்றஞ் சுமத்தமுடியாது. அவர்கள் இனிமையானவர்கள், வாழ்ந்து காட்டுகிறார்கள். தேவனுடைய மனிதன் என்று சொல்லும்படி யாராவது ஜீவித்திருக்கிறார்களெனில், அது அந்த மனிதர் தான் அல்லது அந்த பெண்மணி தான்” என்பார்கள். பாருங்கள். நீங்கள் பிரசங்கமாக வாழ்ந்து காட்டுங்கள். நீங்கள் அவர்களுக்கு ஒரு பிரசங்கியாக இருக்கும்படி அழைக்கப்படாவிடில், பிரசங்கியாவதற்கு முயற்சிக்க வேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்யாவிடில், எல்லாவற்றையும் போட்டு குழப்பி, குழப்பம் உண்டாக்கி, மக்களை நீங்கள் சிக்கலில் மாட்டி வைத்து, என்ன நடக்கிறதென்பதையே நீங்கள் கெடுத்து, உங்களையுங் கூட கெடுத்துக் கொண்டு விடுவீர்கள். எனவே உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள். 119 பிரசங்கியானவன் தன்னுடைய பிரசங்கத்தை பிரசங்கிக்க அழைக்கப்பட்டிருப்பதோடு, அதை தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டவும்கூட அழைக்கப்பட்டுள்ளான். உங்களால் பிரசங்கித்ததின்படி வாழ்ந்து காட்ட இயலாவிடில், நீங்கள் பிரசங்கிப்பதையே நிறுத்தி விடுங்கள். ஆனால் உங்களுடைய பிரசங்கங்களின்படியெல்லாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறீர்கள்.
57120 சரி, இங்கே “சத்தங்கள்” இருந்தன. ஓ! ஜெபர்சன்வில்லில் வாழ்ந்து காட்டுகிற சத்தங்கள் நமக்கு ஆயிரக்கணக்கில் தேவையாயுள்ளது. தேவனுடைய இடிமுழக்கமாக இருந்து, இன்றைக்கு பூமியில் கறை திரையின்றி, இனிமையிலும் பரிசுத்தத்திலும், தூய்மையிலும், கறைபடாத ஜீவியங்களிலும் நடந்து தேவனுடைய இடிமுழக்கத்தை முழங்கித் திரிபவர்களாக அவர்கள் இருப்பார்கள். ஆம், ஐயா, உண்மையான கிறிஸ்தவர்கள், சத்துருவுக்கு எதிராக இடிமுழக்கமாக இருக்கிறார்கள். உங்களால் எவ்வளவாய் சத்தமிட முடிகிறது என்பதைக் குறித்து பிசாசு கவலைப்படுகிறதில்லை; உங்களால் எந்த அளவு குதிக்க முடியும் அல்லது உங்களால் இதை செய்ய முடியுமா அல்லது எந்த அளவு சத்தமிட முடியும் என்பதைப் பற்றி பிசாசு கவலைப்படுகிறதில்லை. ஆனால், பரிசுத்தமாக்கப்பட்ட, தேவனுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட பரிசுத்த ஜீவியத்தை பிசாசு காணும் பொழுது, அதுவே அவனை மிகவும் பாதிக்கிறது. அவனைக் குறித்து யார் எது சொன்னாலும், அவனை எப்படியெல்லாமே இழிவாக சொன்னாலும், அவன் எவ்வளவு இனிமையாக இருக்க முடியுமோ அவ்வளவாய் இனிமையாய் இருந்து, தொடர்ந்து நல்வழியில் முன்னேறிச் செல்கிறான். ஓ, என்னே! அவ்விதமான ஜீவியமானது, பிசாசை தூக்கியெறிந்துவிடுகிறது. அதுவே பிசாசை அசைக்கும் இடிமுழக்கமாகும். 121 உதாரணமாக, “பரவாயில்லை” நீங்களோ, “அவரால் ஒரு பில்லிகிரகாமைப் போலவோ, அல்லது ஓரல் ராபர்ட்ஸைப் போலவோ அல்லது மகத்தான புகழ்மிக்க ஒரு பேச்சாளரைப் போலவோ பிரசங்கிக்க முடிந்தால், அவருக்கு அது இப்படியாக இருக்குமே” என்று கூறுகிறீர்கள். ஓ, இல்லை! சில வேளைகளில் பிசாசானவன் அதைப் பார்த்து நகைக்கிறான். ஒன்றுமற்ற ஒன்றைப் போல அதைப் பற்றி அவன் எந்த கவனமும் செலுத்துகிறதில்லை. நீங்கள் வேத சாஸ்திரமெல்லாம் கற்றுள்ளீர்கள், உங்களுக்கு தேவைப்பட்ட எல்லாவித வேதாகம கருத்தரங்கு பயிற்சியும் பெற்றிருக்கிறீர்கள்; பிசாசானவன் பின்னால் உட்கார்ந்து கொண்டு அதைப் பார்த்து நகைக்கிறான். ஆனால் அவன் அந்த ஜீவியத்தைக் காணும்போதோ!
58122 அன்றைக்கு இருந்த சீஷர்களைப் பாருங்கள். சந்திரரோகியாயிருந்த சிறுவனிடத்திலிருந்து பிசாசைத் துரத்த, “பிசாசே, அவனை விட்டு வெளியே வா! பிசாசே அவனை விட்டு வெளியே வா! பிசாசே அவனை விட்டு வெளியே வா!” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். 123 அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த பிசாசானவன், “நீங்கள் உங்களையே வெட்கமடையச் செய்து கொண்டிருக்கவில்லையா? இப்பொழுது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீகள் என்று உங்களுக்குப் புரிகிறதா? என்னைத் துரத்துங்கள் என்று இயேசுவானவர் உங்களுக்கு கட்டளை கொடுத்தார். அவர் உங்களிடம் கூறினார். ஆனால் உங்களில் ஒருவரால் கூட என்னைத் துரத்த முடியாது” என்று சீஷர்களிடம் கூறியிருப்பான். 124 ஆனால் சகோதரனே, அவன் இயேசு வருவதைக் கண்டபோது, அவர் அமைதியாக நடந்து வந்தார். உ—ஊ. ஓ, என்னே! அவர் ஒன்றும் சொல்ல வேண்டியதாயிருக்கவில்லை. ஏற்கனவே பிசாசு அவரைக் கண்டு பயந்துபோயிருந்தேன். அவன் அந்த பிள்ளையை விட்டு வெளியேறியாக வேண்டும் என்பதை அறிந்திருந்தான்; ஏனெனில், ஜீவனுள்ளவர் அங்கே வந்து விட்டார், அவர் வெறும் ஒரு பிரசங்கமாக மட்டுமல்ல, ஆனால் அவர் ஜீவனாகவும் இருக்கிறார். அவர், “அவனை விட்டு வெளியே வா” என்று கூறினார். ஓ, என்னே! அதுவே அங்கு செய்யப்பட்டது! அமைதியாக அவர் பேசினார். அவர் தான் என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பதை அறிந்திருந்தார். அவர் தான் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை அறிந்திருந்தார்.
59125 இப்பொழுது, “சத்தங்கள்” ஏழு எக்காளங்களின் சத்தங்கள்; ஏழு நட்சத்திரங்களின் சத்தங்கள், அது ஏழு தூதர்கள் ஆகும். ஆனால் இப்பொழுது இங்கே கவனியுங்கள். …தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்து கொண்டிருந்தன. 126 “ஏழு தீபங்கள்”. நாம் இங்கு சற்று வரைந்துகொள்வோம். சிங்காசனம், பரிசுத்த ஸ்தலம், சபையோர், இங்கே இந்த இடத்தில் தான் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு) ஆக ஏழு நட்சத்திரங்கள், ஏழு தீபங்கள், ஏழு தூதர்கள்—ஏழு ஆவிகள்; தேவன் ஏழு ஆவிகளில் இருக்கிறார் என்று ஒட்டு மொத்தமாக இங்கு அர்த்தம் கொடுக்கவில்லை, ஆனால் “ஒரே பரிசுத்த ஆவியின் ஏழு வெளிப்படுத்துதல்கள்” என்பதாகும். 127 பரிசுத்த ஆவி எங்கேயிருக்கிறது? இங்கே சிம்மாசனத்திலே, ஒவ்வொரு சபைக்காலகத்திலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்த சபைக்காலமானது தேவனுடைய சத்தங்களாக இருந்து தனக்கடுத்த சபைக்காலத்திற்குள் அதே ஒளியைப் பிரகாசித்து, “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறிக்கொண்டிருக்கிறது! ஏழு என்பதைப் பாருங்கள், அங்கே “சத்தங்கள்” உண்டாயிருந்தன. “ஏழு அக்கினி தீபங்கள்,” ஏழு ஆவிகள், “அவை தேவனுடைய ஏழு ஆவிகளாகும்.”
60128 இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளுக்கு முன்பாக நாம் அந்த பெரிய வைரக்கல்லைப் பற்றி பார்த்தோமே நினைவிருக்கிறதா? ஆனால் அது பல்வேறு முறைகளில் வெட்டி பட்டை தீட்டப்பட்டு, அதினிடத்தினின்று உள்ள அக்கினியையும், தீபங்களையும் பிரதிபலிக்கும்படி செய்யப்பட்டிருக்கிறது. “தேவனுடைய சிருஷ்டிப்புக்கு ஆதியுமானவராக இயேசு கிறிஸ்து இருக்கிறார்” என்பது அந்த விதமாகத் தான். வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரம். அது சரிதானே? அப்படியெனில், தேவன் எப்பொழுது சிருஷ்டிக்கப்பட்டார்? அவர் தேவனுடைய சிருஷ்டிப்புக்கு ஆதியுமானவர். தேவன் நித்தியமானவராக இருக்கிறார். அப்படித்தானே? ஆனாலும் தேவன் சிருஷ்டிக்கப்பட்டபொழுது…கன்னிகையாயிருந்த ஒரு தாயின் வயிற்றில் ஒரு குழந்தை உற்பவித்த பொழுது, அது நடந்தது. அவள் தேவனுடைய சிருஷ்டிப்புக்கு ஆதியாயிருந்த இக்குழந்தையை பிறப்பிக்கும்படி இக்குழந்தைக்குரிய உயிரணுக்களை தனக்குள் வளரும்படி கொண்டிருந்தாள். “தேவன் மாம்சமாகி, நமக்குள் வாசம் பண்ணினார், அவர் இம்மானுவேல், ஆனால், அதற்கு ‘தேவன் நம்மோடிருக்கிறார்’ என்று அர்த்தமாம். இதுவே தேவனுடைய சிருஷ்டிப்புக்கு ஆதியுமானவர்” என்பதாகும். 129 பூமியின் தூளிலிருந்து கிடைக்கக் கூடிய அந்த மகத்தான வைரக்கல்லிலே…ஏனெனில் அவர் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டார். அது சரிதானே? நான் உணவு உண்பதைப் போல அவரும் உணவு உண்டார். நீங்கள் உண்பது போலவே, அவரும் உண்டார். அந்த மண்ணான சரீரத்தில், மண் சரீரத்திற்குரிய கால்ஷியம், பொட்டாஷ், இயலுலக அண்டத்தின் ஒளி (cosmic light) ஆகியவற்றைக் கொண்டவராக இருந்த போதிலும் அவருக்குள் நித்திய ஒளியானது வாசமாயிருந்தது. அந்த சாஸ்திரிகள் அந்நட்சத்திரத்தினிடத்தில், “உம்முடைய பரிபூரண ஒளியினிடம் எங்களை வழிநடத்தும்” என்று கூறியதில் வியப்பொன்றுமில்லையே. 130 ஒரு பரிபூரண ஒளியின் வெளிச்சத்தையே அவர்கள் பிரதிபலித்துக்கொண்டிருந்தனர். அங்கே அவர் இருந்தார், அவரே தேவனுடைய பரிபூரண ஒளியாயிருந்தார். அவரே தேவனுடைய சிருஷ்டிப்பின் ஆதியாயிருந்தார். அவர் அங்கே…
61131 சாஸ்திரிகள் வானத்தில் அவரைக் கண்ட பிறகு, எவ்வாறு அவர் தன்னையே பூமிக்குரிய தனது நட்சத்திரங்களினிடத்திற்கு பிரதிபலித்துக் காண்பிக்க முடிந்தது? அவர்கள் இங்கே பூமியில் ஊழியஞ் செய்கிற ஆவிகளாயினர். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு (அந்த பெரிய வைரக்கல் வெட்டப்பட்டது) நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்”. அது என்ன செய்து கொண்டிருந்தது? ஒளியை பிரகாசித்துக் கொண்டிருந்தது! 132 தேவனுடைய ஊழியக்காரன் என்று கூறிக் கொள்ளுகிற ஒரு மனிதன், தெய்வீக சுகமளித்தலையும், அவருடைய வல்லமையையும் மறுதலிப்பானெனில், அவன் அந்த வைரக்கல்லிடமிருந்து தனது ஒளியை பெற்றுக்கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அது அவரை ஏழு நட்சத்திங்கள் மற்றும் ஏழு சபைக் காலங்களினூடாக பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
62133 ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! பிரசங்க பீடத்திலிருந்துகொண்டு ஒரு ஊழியக்காரன் தேவனை நன்றி நிறைந்த ஸ்தோத்திரத்துடனும், துதியுடனும், கனத்துடன், வல்லமையுடனும் தொழுது கொள்வதென்பது பொருத்தமானது என்றே நான் கருதுதுகிறேன். ஓ, எவ்வளவு உண்மையாய் இருக்கிறது, அது எவ்வளவாய் என் ஆத்துமானை சிலிர்க்கச் செய்கிறது! அதனால் நான் எவ்வளவாய் சத்தமிட முடியுமோ அவ்வளவாய் சத்தமிடவும், எவ்வளவு உயரமாய் நான் குதிக்க முடியுமோ அவ்வளவு உயரமாய் குதிக்கவும் வேண்டும்போல் உணருகிறேன். ஏனெனில், என்னில் இருக்கிற ஒன்று, நான் எப்படியிருந்தேனோ அதிலிருந்து என்னை மாற்றி விட்டதே. நான் என்னவாயிருக்க வேண்டுமோ அதுவாக நான் இருக்கவில்லை; நான் எப்படியிருக்க வேண்டுமென்று விரும்புகிறேனோ அப்படியாயும் இருக்கவில்லை. ஆனால், நான் எப்படிப்பட்டவனாய் இருந்தது வந்தேனோ அதிலிருந்து மாற்றப்பட்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். ஏதோ ஒன்று சம்பவித்திருக்கிறது; ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது! 134 இங்கே நின்றிருந்து, இந்த நித்திய வார்த்தையானது, எழும்பி, ஒவ்வொரு புயலையும் அசைத்தததைக் காணுங்கள்! வேதாகமங்களை அவர்கள் எரிக்க முயன்றபொழுது, அதேவிதமாக அது அப்புயலுக்கெதிராக அசைந்தது. ஏனெனில் வார்த்தையோ, “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” என்று உரைத்துள்ளது.
63135 இப்பொழுது சிக்காகோவுக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் ஒரு ஆலயத்தில் உள்ள பிரசங்க பீடத்தின் மேல் ஒரு—ஒரு வேதாகமமானது வைக்கப்பட்டுள்ளது. முதல் உலகப் போருக்குமுன், ஒரு மிஷனரியானவர்…ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டான். அப்பொழுது அம்மனிதன் அம்மிஷனரிக்கு ஒரு வேதாகமத்தை அளிக்க விரும்பினார். அப்பொழுது அவர், “நான் உமக்கு இந்த வேதாகமத்தை அளிக்க இயலாதவனாயிருக்கிறேன். என் தாயார் எனக்கு இதைக் கொடுத்தார்கள். நான் வீடு திரும்பும் பொழுது உமக்கு ஒரு வேதாகமத்தை அனுப்பித் தருவேன்” என்று கூறினார். 136 அவர் கடலில் பிரயாணம் செய்தபொழுது, ஒரு ஜெர்மானிய நீர்மூழ்கியானது இவன் பயணம் செய்த கப்பலை குண்டு போட்டு தகர்த்து, அக்கப்பலின் உடைந்த ஒரு துண்டைக் கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து, கடற்கரையருகில் ஒரு பெட்டி மிதந்துகொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். மூழ்கிப்போன ஏதோ ஒன்று தான் அங்கே மிதந்து கொண்டிருப்பதாக சிலர் எண்ணினர். எனவே இருவர் சென்று அப்பெட்டியை எடுத்து அதைத் திறந்து பார்த்தார்கள். அதனுள் அத்தாக்குதலுக்குத் தப்பி மீதியாயிருந்ததோ அந்த மிஷனரிக்கு தான் அனுப்பி வைத்திருந்த அந்த வேதாகமம் மட்டுமே இருந்தது. அது சிக்காகோவுக்கு அருகில் ஒரு மெதோடிஸ்டு சபையில் உள்ள ஒரு பிரசங்க பீடத்தில் இன்றைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது. “வானமும் பூமியும் ஒழிந்துபோம் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை”.
64137 1937-ம் ஆண்டில் இவ்வூரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, மண்ணால் போடப்பட்ட தரையுள்ள இங்கேயிருந்த இந்த பழைய சபைக் கட்டிடமானது வெள்ள நீரினால் நிறைந்திருந்தபடியால், ஒரு இழுவைப் படகில் நாம் கட்டிடத்தின் கூரை வரையிலும் செல்லக் கூடிய அளவுக்கு இருந்தது. வெள்ள நீரோ உயரே வரைக்கும் வந்துவிட்டிருந்தது. அன்றிரவு நான் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துவிட்டு, வேதாகமத்தை திறந்தபடி பிரசங்க பீடத்தில் வைத்துவிட்டு நான் வீடு திரும்பிய பிறகு, வெள்ளம் ஏற்பட்டு, மேலே வரைக்கிலும் பெருகியது. நான் வெள்ளம் வரும் என்று முன்னுரைத்திருந்தேன். நான் “இங்கே இந்த ஸ்ப்ரிங் தெருவில் இருபத்திரண்டு அடி அளவு வெள்ளநீர்மட்ட உயரத்தை தூதன் அளப்பதை நான் கண்டேன்” என்று கூறியிருந்தேன். 138 ஜிம் வைஸ்ஹார்ட் என்ற வயதான சகோதரனும் ஏனையோரும் அதைக் குறித்து என்னை கேலி செய்தனர். சகோதரன் ஜார்ஜ் அவர்களே, அது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? நான் கூறினேன்…அவர்—அவர், “ஓ, பில்லி 1884ல் ஸ்பிரிங் தெருவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் ஆறு அங்குல உயரத்திற்குத்தான் தண்ணீர் பெருக்கெடுத்தது” என்று என்னிடம் கூறினார். 139 அப்பொழுது நான், “ஆகாயத்திலிருந்து ஒரு மனிதன் இறங்கி வருவதையும், அவன் ஒரு அளவு கோலை எடுத்து, இருபத்திரண்டு அடி உயரத்தை ஸ்பிரிங் தெருவில் அளந்தான் என்பதையும் நான் கண்டேன்” என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவரோ, “நீங்கள் உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்கள்” என்று பதிலளித்தார். அப்பொழுது நான், “நான் உணர்ச்சி வசப்படவில்லை! அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது!” என்று கூறினேன். 140 ஸ்பிரிங் தெருவில் வெள்ளம் எவ்வளவு அடி உயரத்திற்கு இருந்தது என்பதை அவர்களிடம் கேளுங்கள். மிகவும் சரியாக இருபத்திரண்டு அடி உயரத்துக்கு அது இருந்தது.
65141 அன்றிரவில் நான் பிரசங்கித்து விட்டு வைத்துவிட்டு வந்த அந்த பழைய வேதாகமம் நான் வைத்து விட்டு வந்த அதே இடத்தில்… மழை பெய்ய ஆரம்பித்து, வெள்ளம் பெருக்கெடுத்தது, இப்பழைய சபையில் இருந்த இருக்கைகள், கட்டிடத்தின் கூரை வரையிலும் வெள்ளத்தில் உயர கொண்டு போகப்பட்டது, உள்ளே வெள்ள நீர் நிறைந்திருந்தது, எல்லாவற்றையும் மேலே கொண்டு போய்விட்டது; பிரங்கபீடமோ மேல சென்றுவிட்டது. பின்னரோ அவைகள் கீழே வந்துவிட்டன. ஒவ்வொரு இருக்கையும் அதன் அதன் இடத்தில் திரும்பி வந்து இறங்கி நின்று விட்டது. வெள்ள நீரினால் மேலே கொண்டு போகப்பட்ட வேதாகமம் திரும்ப அதனிடத்திற்கு வந்து எந்த அதிகாரத்தில் திறந்து வைக்கப்பட்டு எங்கே விடப்பட்டு இருந்ததோ, அதே அதிகாரம் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. இவ்வளவு தண்ணீர் பெருகியிருந்துங்கூட இவ்வாறு நிகழ்ந்தது. 142 “வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை”. 143 அவ்வேதாகமம் அந்த உப்புத் தண்ணீரில் இரண்டு ஆண்டுகள் மிதந்து கொண்டிருந்தும் கூட அதன் எழுத்துக்கள் கொஞ்சமும் அழிந்து போகாமல் எப்படியாய் இருந்தது பாருங்கள்! தேவனுடைய வார்த்தைகள் உண்மையாயிருக்கின்றன. ஆமென்.
66144 அதன்பிறகு சகோதரன் ஜிம் வைஸ்ஹார்ட் அவர்கள் அதைப் பற்றி திருப்தியடைந்தவராக இருந்தார். அவருக்கு அடிக்கடி தனது கையில் வலி உண்டாகும். அவருக்கு எழுபத்தைந்து வயதாகியபோது, அவருக்கு வாதநோய் ஏற்பட்டது. இங்கே அந்த வலியோ அவருக்கு வலித்துக்கொண்டேயிருக்கும், அப்பொழுது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரீரத்தில் அவருக்கு வலி ஏற்பட்டால், அவர் ஓடிப்போய் வேதாகமத்தை எடுத்து அந்த இடத்தில் வைத்துக் கொள்வார். இன்னொரு இடத்தில் வேதனை ஏற்பட்டால் அந்த இடத்திலும் இன்னொரு வேதாகமத்தை எடுத்து வைத்துக் கொள்வார். ஒருநாள் நான் அவரைப் பார்க்கப்போனபொழுது, அவர்மேல் எங்கும் வேதாகமங்களினால் மூடியிருந்தது. அதினால் என்னால் அவரைப் பார்க்கவே முடியவில்லை. அவர் சரீரமுழுவதும் வலியுள்ள பாகங்கள் பூராவும் வேதாகமங்களைக் கொண்டு மூடிக் கொண்டிருந்தார். அவர், “இது தேவனுடைய வாக்குத்தத்தம் ஆக இருக்கிறது” என்று கூறினார். அவ்வாறு தான் அது இருக்கிறது. 145 “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழுந்து போவதில்லை”.
67146 அந்த வயதான மனிதர் என்னை சந்தித்து விட்டுப்போவது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அவருடைய ஜனங்கள் ஒருவரும் இங்கே இல்லை என்று நான் நினைக்கிறேன். அவருக்கு நான் சிறிதளவு பண உதவி செய்வதுண்டு. ஏனெனில் அவர் வயோதிபராகவும், பணம் தேவையுள்ளவராகவும் இருந்தார் என்பதை நீங்கள் அறீவீர்கள். அவர் வழக்கமாக வருவதுண்டு. ஒரு நாள் நான் கனடா தேசத்திற்கு போகக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் வந்திருந்தார். வாயிலை விட்டு நான் வெளியே புறப்பட இருந்தபொழுது, அவர் அங்கே வந்து என்னை சந்தித்து, “என் மகனே, பில்லி, இந்நாட்களில் ஒன்றில் நீ திரும்பி வரும்பொழுது, இந்த சாலையில் இந்த வயதான மாமா ஜிம் நடந்து இனிமேல் திரிந்து கொண்டிருக்க மாட்டார்” என்று கூறினார். அதுவே அவரை நான் கண்ட கடைசி சந்திப்பாயிருந்தது. நான் கனடாவுக்குப் போய்ச் சேர்ந்தபொழுது, எனக்கு ஒரு தந்தி வந்து, அதில் சகோதரி மார்கன் அவர்களுடைய கரங்களில் அவர் உயிர் நீத்தார் என்று இருந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அவரை உடனே மருத்துமனைக்கு விரைந்து எடுத்துச் சென்றார்கள்; சகோதரியை நோக்கிப் பார்த்து விட்டு, அவர் மரித்துப்போய்விட்டாராம். 147 சகோதரி மார்ஜி இன்று காலையில் இங்கேயிருக்கிறார்களா? அவள் இங்கே வழக்கமாக வருவதுண்டு. நீங்கள் யாவரும் அதை அறிவீர்கள். அச்சகோதரி பாப்டிஸ்டு மருத்துவ மருந்தகத்தில் பதினேழு ஆண்டுகளாக தீவிர புற்றுநோயால் அவதிப்பட்டுக்கொண்டு அங்குள்ள பதிவேடுகளில் “புற்றுநோயால் மரித்துக் கொண்டிருக்கிறவள்” என்று பதினேழு ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிடப்பட்டு இருந்தவள். அவள் 412 நாப்ளாக் என்ற மரங்களடர்ந்த சாலையில் வசித்து வருகிறார்கள்; இங்கு உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறாள். ஓ ஆச்சரியமான கிருபை, அது எவ்வளவு இனிமையான சத்தம்!
68148 இங்கு லூயிவில்லில் வழக்குரைஞரான ஜிம் டாம் ராபர்ட்சன் என்பவர் இருக்கிறார். ஜி டாமை நாம் யாவரும் அறிவோம். அந்த நிகழ்ச்சி தான் அவரை இந்த செய்தியை விசுவாசிக்கும்படி கொண்டு வந்தது. அவர் அங்கே சென்றிருந்தார். அவருடைய தந்தையார் அம்மருத்துவமனையில் உள்ள பணியாளர்களுக்கெல்லாம் தலைமையானவராக இருக்கிறார். அவர் அங்கு சென்று அச்சகோதரி புற்று நோயால் மரித்துக் கொண்டிருக்கிறாள் என்பது உண்மை தானா என்பதை கண்டறிய அங்கு சென்றிருந்தார். அவள் கைவிடப்பட்டு வீட்டுக்கு அனுப்பி விடப்பட்டிருந்தாள். அவர்கள் கருத்துப்படி ஏறக்குறைய அவள் ஏற்கனவே மரித்தவளாக கருதப்பட்டாள். அவருடைய தந்தையார் முழுவதும் அலசி ஆராந்து பார்த்தார். அது உண்மையாயிருக்கிறது. ஜிம் டாம், “அது ஒரு பொய்; அவள் அங்கே இப்பொழுது நலமுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், நான் அவளிடம் உம்மை கொண்டுச் செல்ல முடியும்” என்று கூறினார். 149 ஓ, ஓ, அவர்—அவர் உண்மையுள்ள தேவன், அவர் அவ்வாறில்லையா? அவர் நம்முடைய பிழைகளையெல்லாம் கண்டுகொள்ளாமலிருக்கிறார் என்பதைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். நீங்கள் அவ்வாறு மகிழவில்லையா? அது அவரை நம்முடைய முழு இருதயத்தோடும் நேசிக்கச் செய்கிறது.
69150 சிங்காசனங்களும், மின்னல்களும்…என்ன? “ஏழு தீபங்கள்” அல்லது விளக்குகள், அல்லது ஏழு நட்சத்திங்கள், அது “ஏழு ஆவிகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. அதாவது, அதன் அர்த்தம் என்னவெனில், ஏழு சபைக்காலங்களில் ஜனங்களுக்காக ஏழு கிருபாசனங்களாயிருந்தும், பரிசுத்த ஆவியின் ஏழு தோற்றங்களுமாயிருப்பது என்பது தான். அவைகள் இவ்வாறு உள்ளன. ஏழு கிருபாசனங்கள், ஏழு ஆசனங்கள், ஏழு சபைகள், ஏழு நட்சத்திரங்கள், ஏழு வெளிப்படுத்துதல்கள், ஏழு ஆவிகள், ஏழு தீபங்கள், ஓ, என்னே, தேவன் எவ்வளவாய் பரிபூரணராய் இருக்கிறார்! ஒவ்வொரு காரியமும்… 151 வேதாகமத்தின் எண்ணியல்களில் அங்கே வைக்கப்பட்டுள்ளன; வேதாகமத்தின் எண்ணியல் பூமியில் உள்ளவைகளிலே மிகவும் பரிபூரணமாயுள்ளன. ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் முடிய வேதாகமத்தின் எண்ணியியலில் உங்களால் ஒரு பிழை கூட அதில் கண்டு பிடிக்க முடியாது. வேறு வகையான இலக்கியத்தில் மூன்று வசனங்கள் வாசிப்பதற்குள்ளாகவே, உங்களால் பிழை கண்டு பிடிக்காமல் இருக்க முடியாது. ஆனால் வேதாகமத்தில் அப்படியல்ல. 152 கர்த்தருடைய ஜெபத்தோடு ஒரு சொற்றொடரை சேர்க்கவோ, அல்லது அதிலிருந்து ஒன்றை எடுத்துவிடவோ கடந்த இருநூறு ஆண்டுக்காலத்திற்கு மேலாக முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அதுவோ பரிபூரணமாயிருக்கிறது. இனி எதையும் அதனோடு சேர்க்கவோ அல்லது இனி எதையாவது அதினின்று அகற்றி விடவோ முடியாது. அந்த ஜெபத்தை இன்னும் சற்று சிறப்பாக ஆக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஏதாவது ஒரு காரியத்தை அதற்குள் திணிக்கவோ, அல்லது வேறு ஒன்றை அதற்குள் சேர்க்கவோ, அல்லது குறிப்பிட்ட இன்ன வசனத்தை அதிலிருந்து அகற்றிவிடவோ முயலுவார்கள். ஆனால் அது சரியான காரியமல்ல. அது பரிபூரணமாயிருக்கிறது என்பதைப் பாருங்கள். தேவனுடைய எல்லா வழிகளும் பரிபூரணமாய் இருக்கிறது. 153 எனவே நாம் பரிபூரணமில்லாதவர்களாயிருக்கிறோம். ஆனால் அவர் “ஆகையால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” என்றார். நாம் எவ்வாறு பரிபூரணமாக முடியும்? விலையேறப் பெற்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலேயே, அதனால் நாம் நம்மையே மறந்து, அப்படியே அவரில் ஜீவிக்கத்தக்கதாக செய்கிறது. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அது எத்தனை விலையேறப்பெற்றதாயிருக்கிறது!
70154 சரி, இப்பொழுது 6ம் வசனத்திற்குள் செல்வோம். “ஏழு தீபங்கள்”. அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன. (ஓ, என்னே! இதைப் பாருங்கள்!) அந்த ஜீவன்கள் கண்களால் நிறைந்திருப்பதைப் பாருங்கள்; முன்னும் பின்னும் கண்களால் நிறைந்திருந்தன. (இப்பொழுது பொறுங்கள்.)… அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது. அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன. அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன. 155 இப்பொழுது “கண்ணாடிக் கடல்” என்பதைப் பார்ப்போம். இங்கே…இது…ஒரு பெரிய அளவுக்கு அடையாளச் சின்னமாகத் திகழவில்லை, ஆனால் ஒரு நிமிடம் இதை கற்பலகையிலிருந்து அழித்து விடுகிறேன். இப்பொழுது, இதைப் பற்றி சிறிதளவு படிப்போம். பழைய ஏற்பாட்டு ஆலயத்தில் கண்ணாடிக்கடல் அடையாளச் சின்னமாகக் கொடுக்கப்பட்டிருந்தது, ஏனென்றால் மோசே பரலோகத்தில் தான் பார்த்ததை போலவே பூமியிலும் ஆலயத்தைக் கட்டும்படியாக தேவனால் கட்டளையிடப்பட்டான். யாவரும் அதை அறிவோம். சரி. 156 இங்கு நான் சற்று வரைந்து காட்டுகிறேன். இதோ இங்கே உடன்படிக்கைப் பெட்டி இருந்தது, பழைய ஏற்பாட்டுக் காலத்தில், அடுத்ததாக, அந்த இடம் “மகா பரிசுத்த ஸ்தலம்” என்று அழைக்கப்பட்டது. இதோ இங்கே பலிபீடமானது இருந்தது. அது “பரிசுத்த ஸ்தலம்” என அழைக்கப்பட்டது. பலிபீடத்திற்கருகில் இங்கே “வெண்கல கடல்” என்பது இருந்தது. அது அவ்வாறே அழைக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறினால், அதாவது, பலிகள் வெண்கல பலிபீடத்தில் படைக்கப்படும் முன்னர் இந்த இடத்தில் தான் கழுவப்பட்டது. வெண்கல பலிபீடத்தில் தான் பலியானது எரிக்கப்பட்டது.
71157 இப்பொழுது இது எங்கே என்பதை நாம் பார்க்க விரும்புகிறோம். இந்த கண்ணாடிக்கடல் சிங்காசனத்திற்கு முன்பாக, பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்; இந்த இடத்தில் தான் ஏழு பொன் குத்து விளக்குகள் இவ்விதமாக வைக்கப்பட்டிருந்தன; அந்த இடத்தில் தான் ஒரு தொட்டியும் வருகிறது. பாருங்கள்? அக்குத்து விளக்குகள் தான் பரிசுத்த ஸ்தலத்திலிருந்த ஒளியை இங்கு பிரதிபலிக்கிறதாக இருக்கிறது. இப்பொழுது நீங்கள்…இல்லை, நீங்கள் விரும்பினால் ஒழிய இதை நீங்கள் எழுதிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அது…உங்களுக்கு கூற வேண்டிய ஒரு விஷயத்தை நான் இங்கே வரைந்திருக்கிறேன். ஆனால் இது வெண்கலக் கடல் என்று அழைக்கப்பட்டது என்பதை நீங்கள் பாருங்கள்; அது ஒன்றும் மிகவும் பெரிதான ஒன்றல்ல. அது ஆலயத்தில் அதற்குரிய இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இவ்விதமாக கண்ணாடிக்கடலானது வைக்கப்பட்டிருந்தது. அது வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒரு தொட்டியாகும்; அங்கே தான் அவர்கள் பலியைக் கழுவினார்கள். பலிகள் சுட்டெரிக்கப்படுவதற்கு முன்பாகவோ அல்லது அது ஏற்றுக்கொள்ளப்படும் முன்னரோ அது கழுவப்பட வேண்டியதாயிருந்தது. 158 ஓ, இப்பொழுதே அந்த விஷயம் ஒரு பிரசங்கத்தை அமைத்துத் தரவில்லையா? வேதபண்டிதரே, ஓ, என்னே! “கழுவப்படல்” என்ற விஷயம் என் கவனத்தைத் தொட்டது. தேவனிடத்தில் எந்த ஒரு பலியும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்பாக, அது முதலாவதாக கழுவப்பட வேண்டும். எப்படி? உணர்ச்சிவசப்படுவதனால் அல்ல, ஆனால் வார்த்தையினால், கழுவுதலில் மூலம். நான் சிவப்பான கிடாரியைப் பற்றியும், தீட்டுக்கழிக்கும் ஜலத்தைப் பற்றியும்; தண்ணீர்கள் வைக்கப்பட்டிருந்தது, வேறு பிரிந்து வருவதற்காக இருக்கிறது என்பதைப் பற்றியும் பிரசங்கித்தபோது, அந்த யூத போதகர் அங்கே இருந்தார். அதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள முடியும். தேவனிடத்தில் நாம் உண்மையான விசுவாசத்தோடு வருவதற்கு முன்பாக, நாம் முதலில் தீட்டு கழிக்கும் ஜலத்தினண்டையில் வரவேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆம், ஐயா, எதன் வழியாக நீங்கள் வரவேண்டும்? வார்த்தையின் மூலமே! 159 ஓ, நீங்கள் இதை சரியாக புரிந்துகொள்ளத்தக்கதாக, இதைக் குறித்து உங்களுக்கு இன்னும் இதன்பேரில் பேசமுடியுமா என்று நான் பார்க்கட்டும். இப்பொழுது ஆவிக்குரிய சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஆடம்பரங்களை அறிவுசார்ந்த சிந்தையை அகற்றி விட்டு, ஆவிக்குரிய சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இப்பொழுது ஒரு விஷயம் வருகிறது. “பலிபீடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் முன்னர் முதலாவதாக அது தீட்டுக்கழ்க்கும் ஜலத்தினால் கழுவப்பட்டாக வேண்டும்”.
72160 இப்பொழுது என்னோடு சேர்ந்து வேகமாக எபேசியர் 5-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிற பகுதியை விடாமல் வைத்துக் கொண்டு கொஞ்சம் சிலபக்கங்கள் பின்னால் போய் எபேசியர் 5-ம் அதிகாரம் 26-ம் வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தாம் அதை சுத்திகரித்து பரிசுத்தமாக்குகிறதற்கும் …(அவர் இங்கே சபையைக் குறித்துப் பேசுகிறார்). 161 பாருங்கள், இப்பொழுது, நான் இந்த வசனத்திற்கு இன்னும் சற்று பின்னால் போகட்டும். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், 21-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள், 162 “உங்களை சமர்ப்பியுங்கள்”. சபையோரே நீங்கள் உங்களை உங்களது மேய்ப்பனுக்கு ஒப்புக் கொடுங்கள். மேய்ப்பனே, நீர் உம்மை உமது சபையோருக்கு ஒப்புக் கொடுங்கள். சபையில் சிறியதொரு கருத்து வேறுபட்ட குழு உருவானால், எந்த ஒரு பட்சத்திலும் சாயாமல் இருந்து முழுச்சபைக்கும் உம்மை ஒப்புக்கொடும். சபையோரே, நீங்கள் ஒரு கருத்துவேறுபட்ட குழுவினை உருவாக்க நேர்ந்தால் அப்பொழுது, நீங்கள் தேவனுடைய பயத்தோடு உங்களது மேய்ப்பனுக்கு உங்களை சமர்ப்பியுங்கள். புரிகிறதா? ஓ, சகோதரனே! ஊம்!
73மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். (ஏனென்றால் அவர் உங்களுடைய ஆண்டவர்.) 163 ஸ்திரீகளே, நீங்கள் எத்தனை பேர் இதை அறிவீர்கள்? அது முற்றிலும் சரியாயிருக்கிறது. வேதாகமம் ஆதியிலே இவ்வாறு கூறியுள்ளது. இதுவரையிலும் அவ்வாறே இருந்து வருகிறது. மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். 164 கணவனும் அந்தவிதமாகவே இருக்கிறான். விவாகம் ஆனவர்களே, வயது வந்தோரே, வாழவேண்டிய விதத்தை அறிந்து கொள்வதற்குரிய பிராயத்தை அடைந்துள்ள பிள்ளைகளே, நீங்கள் இந்த விஷயத்தை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். சரி. …கர்த்தருக்கு… கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறது போல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்பு கூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்பு கூர்ந்து, (மனைவியை அசட்டை செய்யாதீர்கள், நீங்கள் அப்படிச் செய்தால் நீங்கள் ஒரு கணவனாயிருப்பதற்கு தகுதியில்லை. அது உண்மை!) தாம் அதை… கவனியுங்கள்,…இதோ இங்கே இது வருகிறது, அதை எடுத்துக் கொள்ளுங்கள். தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்… [சபையார் “திருவசனத்தைக் கொண்டு” என்ற வார்த்தையக் கூறுகிறார்கள்—ஆசி.] உம்ம்!
74165 ஆகவே, தொழுது கொள்ளும்படியாக வருகிற ஒவ்வொருவரும் இவ்விடத்திற்கு தொடர்பு கொள்ள வருகையில், வார்த்தையின் வழியாகத் தான் வரவேண்டும். அநேகர் வேறுவழியாக வருகிறார்கள். சிறு கதைகளை உதாரணமாக கூறுவதில் நான் நம்பிக் கொண்டுள்ளேன், “தாயார் அநேக ஆண்டுகளுக்கு முன்பாக மரித்து விட்டார்களென்றும், அவர்கள் உங்களுக்காக பரலோகத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஒரு கதை உண்டு. வார்த்தை பயன்படுத்தப்பட்ட பிறகு அது வரலாம். அநேகர் பீடத்தண்டையில் வருகிறார்கள்; ஏனெனில் பரலோகத்திலுள்ள தங்கள் தாயாரை சந்திக்க அவர்கள் விரும்புகிறார்கள். அதெல்லாம் சரிதான். நீங்கள் அதைச் செய்ய வேண்டியதுதான். ஆனால் பீடத்தண்டையில் நீங்கள் வருவதன் காரணம் அதுவல்ல. வசனத்தின்படி, கிறிஸ்து உங்களுக்குப் பதிலாக மரித்தபடியினால், நீங்கள் உங்கள் பாவங்களை அறிக்கையிடும்படி பீடத்தண்டயில் வருகிறீர்கள். 166 எனவே, வார்த்தையின்படி வராத எந்த பலிகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படித்தானே? (ஓ, சகோதரனே, இதை நான் கூற வெறுக்கிறேன். இதைக்கூற எனக்கு விருப்பமில்லை. இதை கூறுவதற்காக என்னை மன்னியுங்கள்.) இக்காரணத்தினால் தான் வேதாகமத்தில் அப்போஸ்தலர் 19-ம் அதிகாரம் இருந்து வருகிறது. “நீங்கள் விசுவாசிக்க ஆரம்பித்திலிருந்து இதுவரையிலும் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளீர்களா?” என்று அதில் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள், “அப்படி ஒன்று உண்டென்றே நாங்கள் கேள்விப்படவில்லை” என்று பதிலளித்தார்கள். “அப்படியென்றால் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்? நீங்கள் ஏன் இதற்குள் வரவில்லை?” என்று கேட்கப்பட்டது. 167 வார்த்தையின் வழியாக அல்லாமல் வேறு வழியாக அவர்கள் வந்து விட்டனர். “ஓ, நாங்கள் விதி முறையின்படி அதன் வழியாக வந்தோம். நாங்கள் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்” என்றார்கள். அவன் அதற்கு, “அது இப்பொழுது பலனளிக்காது, யோவான் மனந்திரும்புதலுக்காக ஞானஸ்நானம் கொடுத்தான், பாவ மன்னிப்புக்கென்று கொடுக்கவில்லை” என்று பதிலளித்தான். 168 இதை அவர்கள் கேட்டபொழுது, அவர்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றார்கள். ஏன்? திருவசனத்தைக் கொண்டு! “திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் கழுவப்படுவதற்காக”. திருவசனமானது, “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்” என்று கூறியுள்ளது. அதனோடு வேறு எதையாவது இணைக்கப் பார்க்கிற எதுவும் பொய்யாய் இருக்கிறதே!
75169 இப்பொழுது எனது விலையேறப்பெற்ற சகோதரனே, இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது என்பதை நான் அறிவேன். இப்பொழுது நீங்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம். தெய்வீக அன்போடு நான் இதைக் கூறட்டும்; இந்தக் காரியங்களின் பேரில் இனிமேலும் நான் அமைதியாயிருக்கக் கூடாத வேளையானது வந்து விட்டது, வருகைக்கு மிக அருகில் இருக்கிறோம். புரிகிறதா? “திரித்துவக் கொள்கை பிசாசினுடையதாயுள்ளது!” அது கர்த்தர் உரைக்கிறதாவது என்றே நான் கூறுகிறேன். அது எங்கிருந்து வந்தது என்பதைக் கவனியுங்கள். நிசாயா ஆலோசனை சங்கத்தில் தான் ஆரம்பித்தது, அப்பொழுது தான், அங்கே கத்தோலிக்க சபையானது ஆளுகைக்கு வந்தது. “திரித்துவம்” என்ற வார்த்தை வேதாகமப் புத்தகம் முழுவதிலும் எங்குமே குறிப்பிடவில்லை. மூன்று தேவர்கள் என்ற கொள்கையைப் பொருத்தமட்டில் அது பாதாளத்திலிருந்து வந்ததாகும். ஒரேயொரு தேவன் உண்டு. அதுதான் சரியானது ஆகும்.
76170 இப்பொழுது நீங்களோ, “இந்த எல்லா திரித்துவக் கொள்கைக்காரர்களும் பாதாளத்திற்குரியவர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்கலாம். இல்லை, ஐயா! அவர்களெல்லாம் கிறிஸ்துவர்கள் என்று தான் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் வேளையானது நெருங்கி வந்து கொண்டிருக்கிறது, சகோதரனே! அவர்கள் உத்தமமாகவே தவறாயிருக்கிறார்கள். 171 எந்த மனிதனானாலும் சரி, எந்த இடமானாலும் சரி, எந்த வேளையானாலும் சரி, இந்த விஷயத்தின் பேரிலும் பேச விரும்புகிறவர்கள் என்னிடம் வரலாம். எந்த ஊழியக்காரரானாலும், பேராயரானாலும், பிரதான பேராயரானாலும் நீங்கள் யாராயிருந்தாலும் சரி. இச்செய்தி ஒலி நாடாவில் பதிவு செய்ப்படுகிறது. இது உலகம் முழுவதிலும் செல்லும். உலகம் முழுவதிலும் செல்லும் இந்த ஒலிநாடாவிலுள்ள எனது செய்தியைக் கேட்டு என்னிடத்தில் வரும் எந்த ஒரு நபரையும் நான் சகோதர அன்போடு கேட்கிறேன். என்னவெனில், திருவசனத்தில் எங்காவது, அல்லது (நம்பத்தகுந்த எந்த வரலாற்றுப் புத்தகத்திலும்) உள்ள ஒரு பக்தியிலாவது, கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்படுகிற வரையிலும் “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்” நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றதாக எந்த ஒரு நபரைக் குறித்தாவது என்னிடத்தில் வந்து எனக்கு காண்பிக்கட்டும் பார்க்கலாம். அப்படிக் காண்பித்தால் நான் எனது உபதேசத்தையே மாற்றிக்கொள்வேன். ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். என்னுடைய விலையேறப்பெற்ற சகோதரர்களே! இக்காரியங்களுக்கு உங்களது கண்கள் குருடாக்கப்பட்டுள்ளன. தேவன் உங்களுக்கு வெளிச்சத்தை கொடுக்கும்படி ஜெபியுங்கள். 172 இப்பொழுது, அதைக் குறித்து ஆதரிக்கும்படியான திருவசனம் உங்களிடம் இருந்தால், நீங்கள் எனக்கு அதைக் காண்பிக்கும்படி உங்களுக்காக நான் எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன். அல்லது உங்களது தொலைபேசி அழைப்பிற்காக எதிர்நோக்கிக் கொண்டிருப்பேன். நீங்கள் இந்த விஷயத்தின் பேரில் எனக்கு சவால் விடுக்காவிடில், நீங்கள் வேண்டுமென்றே ஆவிக்குரிய அறியாமையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த ஒலிநாடாவுக்கு அப்பால் இருக்கிற உங்களுக்கு இதைச் சொல்லுகிறேன். எது வெளிச்சம், எது அந்தகாரம் என்பதை அறிய நீங்கள் விரும்பினால், நாம் அதற்காக தேவனிடத்தில் கேட்கக் கடவோம். நான் கர்த்தர் உரைக்கிறதாவது என்றே கூறுகிறேன் என்பது நினைவிருக்கட்டும். நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப்பீர்களானால்…அது திருவசனத்தின்படி சரியாக இல்லாவிடில், என்னை சீர்படுத்துவது உங்களுடைய கடமையாகும். உ, ஊ, என்ன நடக்கிறது என்று பாருங்கள். உ—ஊ. அது ஒரு தவறாயிருக்கிறதே!
77173 மூன்று தேவர்கள் உண்டு என்று நம்புகிற அநேக ஆயிரக்கணக்கான திரித்துவவாதிகள் கூட இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், அவர்களுக்கு எந்த வித்தியாசமும் அதில் தெரியவில்லை. இச்செய்தியின் பின்னால் இதைப்பற்றி நாம் பார்க்கப் போகிறோம். 174 இப்பொழுது, நீங்கள் உங்களுடைய ஒலிநாடாவை நிறுத்திவிட்டு நீங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டாம். திரித்துவ சகோதரர்களே, இதற்கு செவிகொடுங்கள். ஆனால் நீங்கள் சில நிமிட நேரம் அமைதியாக அமர்ந்திருங்கள். உங்களுக்கு நீங்களே கடமைப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய சபையாருக்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். புரிகிறதா? ஒலிநாடாக்களை பெற்றுக்கொள்வதை நிறுத்தி விடாதீர்கள், அதனோடு நிலைத்திருங்கள். திருவசனத்தைக் கொண்டு அது சரியாயிருக்கிறதா என்று அதை ஆராய்ந்து பாருங்கள். வேதம் “எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள்” என்று கூறியுள்ளது. 175 இது புகழ் பெறாதது என்பதை நான் அறிவேன். இயேசுவும் அப்படியே புகழ் பெறவில்லை; செய்தியும் அப்படியே இருக்கிறது. எப்பொழுதும், அவ்வாறே இருந்து வந்திருக்கிறது. உங்கள் மத்தியில் உள்ள வியாதியஸ்தரையும், வாதிக்கப்பட்டவரையும் குணமாக்க நான் வருகிற பொழுது, நீங்கள் அதை மகத்தானது என்றும், பெரிய கூட்டங்களை சேர்க்கிறது என்றும், சபையை அது கட்டியெழுப்புகிறது என்றும் நீங்கள் எண்ணினீர்கள். இயேசுவும் கூட ஒருநாள் சத்தியத்தைப் பிரசங்கிக்க ஈடுபடுகிறவரையிலும், அப்படியே செய்தார். அவர் அவ்வாறு செய்தபொழுது, அவரோடு இருந்த எழுபது பேர்களும் கூட அவரை விட்டு விலகிப் போனார்கள். அவர் மீதியாயிருந்த பன்னிரண்டு பேர்களிடமாய்த் திரும்பி, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறார்களோ?”என்று கேட்டார். அப்பொழுதுதான், பேதுரு அந்தக் குறிப்பிடத்தக்க வார்த்தைகளான, “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்? நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என்று கூறினான். 176 தேவனுடைய வசனம் மட்டுமே நித்தியமாயிருக்கிறது. ஆகவே எங்காவது யாராவது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தினால் ஞானஸ்நானம் பெறும்படி தேவன் செய்தாரென்பதை எனக்கு கண்டறிந்து காண்பியுங்கள் பார்க்கலாம்.
78177 நீங்கள் மத்தேயு 28;19ஐ எடுத்துக் கொள்ளுங்கள். “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி”. அங்கே மத்தேயு, “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று கூறினான். யாராவது, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்பது ஒரு நாமம் என்று எண்ணினால், அவர்களுடைய படிப்பில் தான் ஏதோ குளறுபடி இருக்கிறது என்பதையே அது காண்பிக்கிறது. ( இதைக் கேட்டுக் கொண்டிருக்கிற பேராயர்களுக்கு ஏழாம் வகுப்புவரை மட்டுமே படித்த மாணவன் கூறுவதோ) பிதா என்பது ஒரு நாமமல்ல, குமாரன் என்பது ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவி என்பதும் ஒரு நாமமல்ல. அவைகள் அந்த நாமத்திற்குரிய பட்டங்களாயுள்ளன, (பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்பதோ) இயேசு கிறிஸ்துவாயுள்ளது 178 இவ்வாறு நான் கூறுவது கோபத்திலல்ல, அன்பினால் இது கூறப்படுகிறது என்பது நினைவிருக்கட்டும், (உலகம் முழுவதிலும்) உள்ள திரித்துவ சகோதரர்களால் அவர்கள் சபைகளில் பேசும்படி நான் அழைக்கப்பட்டதுண்டு; அவர்களிடத்தில் தேவ மரியாதையோடும், அன்போடும் கிறிஸ்துவின் முழு சரீரத்தைப் பற்றியும் கருத்தில் கொண்டு இது கூறப்படுகிறது. நான் உங்கள் நடுவில் இருக்கையில் இதைக் குறித்து பேசியதேயில்லை. நீங்கள் என்னை கேட்பீர்களென்றால், அப்பொழுது நான் உங்கள் ஆலயத்திற்கு வந்து அதைக் குறித்து உங்களோடு பேசுவேன். ஆனால் சபையார் இடத்தில் அதைப் பேசிவிட்டால் அது அவர்களை பெரிதும் கலக்கிடுமே. நீங்கள் தான் உங்கள் மந்தையின் மேய்ப்பன், எனவே அது உங்களுடைய இடம், வெளிப்பாட்டை நீங்கள் உங்கள் மந்தைக்கு கொடுக்க வேண்டும். நான் ஊழியக்காரர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் அதைப் புரிந்து கொள்ளாவிடில், வாருங்கள், நாம் உட்கார்ந்து சேர்ந்து விவாதிப்போம். வேதமோ “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளது.
79179 “கண்ணாடிக் கடலில்” தான் பலி கழுவப்பட்டது. நாம் கழுவப்பட்டிருக்கிறோம். ஓ, அதை நீங்கள் மறந்து விட வேண்டாம். அதைப் பற்றி நாம் சிறிது நேரத்தில் திரும்பவும் பார்க்கப் போகிறோம். “திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்தல்.” அங்கே நீங்கள் பிரவேசிப்பதற்கு முன்னர், நீங்கள் திருவசனத்திற்கு செவிகொடுக்க வேண்டும், ஏனெனில் தேவனை அணுகுவதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அது விசுவாசத்தின் மூலம் ஆகும். அது சரிதானே? “விசுவாசம் கேள்வியினால் வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்”. நமது மனச்சாட்சி கழுவப்படுதல். ஒரு மனிதனை சந்திப்பதற்காக அல்ல, தகப்பனை சந்திக்க அல்ல, தாயை சந்திக்க அல்ல, குழந்தையை சந்திப்பதற்காக அல்ல; (அவைகளெல்லாம் உண்மை தான், நாம் அதையும் செய்வோம்.) ஆனால் நாம் முதலாவதாக வரவேண்டிய இடம் என்னவெனில், தேவனை அணுகுவதற்காக உள்ள வழியில் தான்; நாம் தேவனுடைய வார்த்தையை கேட்கும்போது நாம் கழுவப்படுவோம்.
80180 விசுவாசத்தினால் நாம் நடக்கிறோம். “தேவன் உங்களுக்கு என்ன செய்தாரோ” அது தான் கிருபையாகும். அது உண்மை. தேவனை நீங்கள் விசுவாசித்தீர்கள். தேவன் பேரில் நீங்கள் விசுவாசங்கொண்டுள்ளீர்கள். நீங்கள் உங்களைப் பற்றி மனஸ்தாபங்கொண்டதுமே, நீங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டிருக்கிறீர்கள். 181 நேற்று நான் ஒரு சகோதரனிடம் பேசிக் கொண்டிருக்கையில், அந்த விஷயத்தில் அவர் சற்று குழம்பிப் போயிருந்தார். நான் அவரிடம், “பாரும், சகோதரரே, நீங்கள் உங்கள் மனைவியின் மனதைப் புண்படுத்தும்படியாக கூறினீர்களென்றால், உடனே நீங்கள் அதைப்பற்றி மனஸ்தாபப்பட்டு, உங்கள் மனைவிக்காக வருத்தப்படுவீர்களென்றால், நீங்கள் செய்ததைப் பற்றி மனஸ்தாபங் கொள்ளுகிறீர்கள். நீங்கள் ஏற்கனவே உங்கள் இருதயத்தில் மனந்திரும்பி விட்டீர்கள். அது சரிதான். ஆனால் நீங்கள் அதைப் பற்றிப் போய் உங்கள் மனைவியிடம் கூற வேண்டும் நீங்கள் நிச்சயம் அவளிடம் போய், ‘தேனே, நான் அவ்வாறு கூறியதற்காக வருந்துகிறேன்’ என்று கூறியாக வேண்டும். அவ்வாறு செய்தால் தான் நீங்கள் முழுவதுமாக மனந்திரும்பினீர்கள்” என்று ஆகும். இப்பொழுது தேவனிடத்திலும் காரியம் இப்படியாகத் தான் இருக்கிறது. 182 இந்த விதமாக ஒரு மனிதன் போய் கூறுவானெனில்: “நான் அவளுடைய உணர்வுகளை புண்படுத்தி விட்டேன்; ஆனால் அதனால் ஒன்றும் பாதகமில்லை. நான் அவளிடம் நான் வருந்துகிறேன் என்று சொல்லுகிறேன், ஆனால் உண்மையில் நான் அவ்வாறு வருந்தவில்லை” என இவ்வாறு நீர் கூறினால், நீ ஒரு மாய்மாலக்காரனாயிருக்கிறாய். புரிகிறதா? அது உண்மையே, அது தேவனால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 183 நீங்கள் உங்களுடைய பாவங்களுக்காக முழுவதும் மனஸ்தாபப்பட வேண்டும். அப்படி நீங்கள் உங்களுடைய பாவங்களுக்காக மனஸ்தாபப்படுகிறீர்கள் என்று அறிவீர்களென்றால், அப்பொழுது, “மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது நீங்கள் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்வீர்கள், அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வீர்கள்”. பாருங்கள், வெறுமென எளிமையாயுள்ளது, தேவன் அதை மிகவும் எளிமையானதாக இருக்கும்படி செய்திருக்கிறார்.
81184 இங்கே…இந்தக் “கண்ணாடிக் கடல்” பளிங்குக் கொப்பாகக் கூறப்பட்டிருக்கிறது என்பதை நாம் கவனிக்கிறோம். இப்பொழுது, இந்தக் கண்ணாடிக் கடலானது வெண்கலக் கடல் தொட்டியைக் கொண்டு அடையாளமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. பரலோகத்திலே இது கண்ணாடிக் கடல் என்று இருக்கிறது. மோசே அதைக் கண்ணாடிக் கடலாகப் பார்த்தான். அது தான் “வெண்கலக் கடல் தொட்டி” என்று அழைக்கப்பட்டது. ஒரு வெண்கல பலிபீடம், வெண்கல பலி, சரியாகக் கூறினால் ஒரு வெண்கல பலிபீடம். 185 வேதாகமத்தில் வெண்கலம் எதைக் குறித்து பேசுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நியாயத்தீர்ப்பைக் குறித்தேயாகும். மோசே ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கினான். ஒரு சர்ப்பமானது எதைக் குறிக்கிறது? அடையாளச் சின்னமாக இருந்த அந்த வெண்கல சர்ப்பமானது “அவர் அதன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்று ஏதேன் தோட்டத்தில் சொல்லப்பட்டபொழுது, “பாவமானது ஏற்கனவே நியாயந்தீர்க்கப்ப்பட்டது” என்பதை சுட்டிக் காட்டுவதாய் இருக்கிறது. 186 வெண்கலம், “தெய்வீக நியாயந்தீர்ப்பை” எடுத்துக் காட்டுகிறது. வெண்கல பலிபீடத்தின் மேல்தான் பலியானது சுட்டெரிக்கப்பட்டது. வெண்கலக் கடல் தொட்டியானது பலி திருவசனத்தின் தண்ணீரினால் கழுவப்படுவதற்காக இருக்கிறது. பாருங்கள்? மோ…எலியா, தன் நாட்களிலே போய் வானத்தை அண்ணாந்து பார்த்து விட்டு, “ஆகாயமானது வெண்கலம் போல் காணப்படுகிறது” என்று கூறினான். (புறக்கணித்துவிட்ட தேசத்தின் மேல் உள்ள தெய்வீக நியாயத்தீர்ப்பு.) ஓ, என்னே! வெண்கல, வெண்கலமே!
82187 இப்பொழுது நாம் “கடல் தொட்டி” யண்டையில் இருக்கிறோம். கடல் தொட்டியானது காலியாகவும், பளிங்கைப் போலவும் தெளிவாக இருந்தது என்பதை கவனித்தீர்கள். ஏன்? சபையானது ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டது! 188 இப்பொழுது, இப்பொழுது, நாம் சற்று நேரம் கழித்து உபத்திரவ காலத்து பரிசுத்தவான்கள் மேலே வருவதைக் குறித்து கவனிக்கிறோம். அப்பொழுது முழுவதும் மீண்டும் அக்கினிமயமாக இருப்பதைக் காண்கிறோம். நீங்கள் அறீவீர்களா…அதை நீங்கள் வாசிக்க விரும்புகிறீர்களா? இப்பொழுது நாம் வெளிப்படுத்தின விசேஷம் விசேஷ 15-ம் அதிகாரம் 2-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். அங்கே மீண்டும் அக்கினிமயமான வெண்கலம் போன்றுள்ளதைக் குறித்து பார்க்கலாம். சரி; பின்பு, வானத்திலே, பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய (சரி.) கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது. இப்பொழுது தேவனுடைய “கோபம்”. கவனியுங்கள்; அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், (இப்பொழுது கவனியுங்கள்) மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும்…பாடி… 189 ஓ, உங்களுக்கு இது புரிகிறதா? “உபத்திரவ காலம்.” ஓ! நீங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போக அவசரமாயுள்ளீர்களா? [சபையார் “இல்லை!” என்று பதிலளிக்கிறீர்கள்—ஆசி.] சரி, கவனியுங்கள், இங்கு ஒரு காரியத்தை இங்கே நாம் கவனிப்போம்.
83190 எவ்வாறு நாம் வருகிறோம்? (புறஜாதி சபையாகிய) நாம் இந்த திருவசனத்திற்கு இக்கண்ணாடிக் கடலண்டையில், தண்ணீராகிய திருவசனத்தண்டையில் வந்து, அது எழுதப்பட்டிருக்கிற வண்ணமாக அதை அங்கீகரித்து வர வேண்டும். (அது சரிதானே?) அப்பொழுது பலியானது ஏற்றுக்கொள்ளப்பட்டு, உங்களுக்குள்ளாக பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுகிறது; அந்தக் காலத்திற்குரிய வெளிச்சத்தினால் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து, பரிசுத்த ஸ்தலத்திலிருந்து இதற்குள் வருகிறது. வந்து நட்சத்திரம் இருக்கிற ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு இங்கே வருகிறது. அதைப் புரிந்து கொண்டீர்களா? 191 இந்தக் காலத்தின் முடிவில், வெண்கலக் கடல் தொட்டியை யோவான் காண்கையில், அது பளிங்கைப் போல் தெளிவாயிருந்தது என்பதைக் கவனியுங்கள். அது என்னவாயிருந்தது? வார்த்தையானது பூமியினின்றும் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது; சபையானது எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது, எனவே இனி அதில் இரத்தம் இல்லை; சபைக்காலமானது முடிவடைந்து விட்டது, எனவே தான் அது “பளிங்கைப் போல் தெளிவாய்” இருந்தது.
84192 இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 15-ம் அதிகாரத்தில், ஸ்திரீயின் சந்ததியாகிய மீதியானவர்கள் உபத்திரவ காலத்து பரிசுத்தவான்கள் ஆவர், அவர்கள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்லுகிறார்கள், அவர்கள் இந்தக் கடலின் மேல் (பாருங்கள்!) நின்று கொண்டிருப்பதாகக் காணப்பட்டார்கள். அது அக்கினிமயமாக, இரத்தத்தால் நிறைந்து, சிவப்பான அக்கினி நாவுகள் உள்ளதாக, தேவ அக்கினியானது எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் (ரோமபுரியாகிய) மிருகத்தின் மேலும், அவனது இலக்கத்தின் மேலும், அவனது பெயரின் எழுத்துக்களின் மேலும், அவனது சொரூபமாகிய (சபைகளின் சங்ககூட்ட அமைப்பின் மேலும்) ஜெயங்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை விட்டு வெளியே வந்து விட்டார்கள். இந்த உபத்திர காலத்து பரிசுத்தவான்களாகிய இக்குழுவினரான மக்களை வெளியே கொணருவதற்காக, இஸ்ரவேலுக்காக தோன்றவிருக்கும் அந்த இரு தீர்க்கதரிசிகளாகிய மோசேயும் எலியாவும் செய்கிற பிரசங்கத்தின் மூலமாக அவர்கள் கொண்டுவரப்படுவார்கள். 193 பாருங்கள், இப்பொழுது சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டாகிவிட்டது. ஆனால் இது நடக்கையில் கிறிஸ்துவின் மனைவியானவள் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உபத்திரவ காலமானது…நகரத்தினுள் தனது இராஜாக்களையும், அவர்களுடைய எல்லா மகிமைகளையும் கொண்டு வந்திருக்கிறாள். நாம் வெளிப்படுத்தின விசேஷம் 22-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும்போது நீங்கள் அதைக் காணலாம். இதை நீங்கள் எழுதிக் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டே வந்தால், அதைப்பற்றி நாம் பார்க்கையில், நமக்கு அதின் அர்த்தம் என்ன என்பதை கண்டு கொள்ளலாம். அதனுடைய ஒவ்வொரு சிறு காரியத்தையும் முன்னும் பின்னும் ஆராய்ந்து பார்ப்பதற்கு நமக்கு நேரம் இல்லை. ஆனால் அதனைக் குறித்த முக்கியமான இடங்களைப் பார்ப்போம். பிறகு, ஏதாவது ஒரு நாளில், ஒரு வேளை கர்த்தருக்கு சித்தமானால், அதைப்பற்றி பேசுவதற்கு நமக்கு ஏராளமான தருணம் உண்டாயிருக்கும்.
85194 இப்பொழுது எழும்பி வந்த உபத்திரவ காலத்து பரிசுத்தவான்கள், மகா உபத்திரவ காலத்திற்குள் கடந்து வந்திருக்கிறார்கள். சபையானது உபத்திரவ காலத்தினுள் போகாது. அவர்கள் ஏற்கனவே மகிமையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்களா? இதோ இங்கே உபத்திரவ காலத்து பரிசுத்தவான்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய்…என்னுடையதும் உங்களுடையதுமான தவற்றினால் அவர்கள் ஒருபோதும் வசனத்தை கேட்காதவர்களாய் இருந்தார்கள். அவர்கள் கேட்டிருந்தும், அதை அவர்கள் புறக்கணித்திருந்தால், அவர்கள் நகரத்திற்குத் தான் போவார்கள், அவர்கள் புறம்பான இருளில் தள்ளப்பட்டிருப்பார்கள், ஏனெனில் அவர்கள் வார்த்தையை புறக்கணித்துவிட்டனர். ஆனால் அவர்கள் ஒருபோதும் கேட்டேயிராவிட்டால், அப்பொழுது தேவன் நீதியுள்ளவராயிருக்கிறார்; உபத்திர காலமானது அவர்களுக்கு வருகிறது. 195 இப்பொழுது ஒரு நிமிடம் கவனியுங்கள், அதே வார்த்தையினால் தான் இவர்களும் கழுவப்பட்டுள்ளனர், ஏனென்றால் இவர்களுக்கும் அதே பலிபீடம் தான், அதே கண்ணாடிக் கடல் தான், அதே திருவசனம் தான். வெளிப்படுத்தின விசேஷம் 2:5, அல்ல, வெளிப்படுத்தின விசேஷம் 15:(சரியாகக் கூறினால்)2 முதல் 5-ம் வசனங்கள். ஒரு நிமிடம் கவனியுங்கள். இப்பொழுது நாம் அவர்களிடத்திற்கு ஒருபோதும் வேதவசனத்தை எடுத்துக் கொண்டு போகவில்லை; அதனால் தான் அவர்கள் இவ்வித நிலையில் இருக்கின்றனர். நாம் அவர்களிடத்திற்கு ஒருபோதும் வார்த்தையை கொண்டுபோகவில்லை. அதற்காக நாம் பொறுப்பாளிகளாக்கப்படப் போகிறோம். எனவே நாம் அந்த ஜனங்கள் எல்லோரையும் பிடித்துக் கொள்ள இயலாமல் இருக்கிறது; (இந்த காலத்தில்) உள்ள சத்தியத்தையுடைய சபையானது அப்படி செய்ய இயலாது. அவர்கள் யாவரும் உபத்திரவ காலத்திற்குள் போகிறபடியால், கடந்து போன சபைக்காலங்களில் மரித்த பரிசுத்தவான்கள் அல்ல இவர்கள், ஏனெனில் இவர்களைப் பற்றி “மகா உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. மகா உபத்திரவ காலமானது, சபையானது பரம வீட்டிற்கு எடுக்கப்பட்ட பிறகு எதிர்வரும் காலத்தில் நிகழப் போகும் காரியமாகும்.
86196 ஓ, அங்குதான் உங்கள் காரியமே உள்ளது! ஓ, நான் அதை நேசிக்கிறேன்! கவனியுங்கள்! இன்னும் சற்று அப்பால் பார்ப்போம்; அவர்கள் என்ன விதமான வார்த்தையைக் கேட்டார்கள் என்பதைப் பற்றி நான் பார்க்க விரும்புகிறேன். இப்பொழுது நாம் வெளிப்படுத்தினவிசேஷம் 15-ம் அதிகாரம் 2-ம் வசனத்திலிருந்து துவக்குவோம். அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக்கடல் போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். 197 இப்பொழுது, பாருங்கள், அவர்கள் ஒருபோதும் உள்ளே பிரவேசிக்கவில்லையென்பதையும், ஆனால் அவர்கள் திருவசனத்தைக் காதுகளால் கேட்டிருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள். அவர்கள் திருவசனத்தை கேட்டிருந்தார்கள். இப்பொழுது, கவனியுங்கள், அவர்கள் என்னவிதமான உபதேசத்தைக் கேட்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அது சபையோடு இப்பொழுது ஒத்துப் போகிறதா என்பதைப் பாருங்கள். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் (அப்பாடல் மோசே செங்கடலை கடந்த பிறகு பாடியதாகும்) ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; (யார் அந்த ஆட்டுக்குட்டியானவர்?) ; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். 198 அவர்கள் அவரை யாரென்று அடையாளங் கண்டு கொண்டனர் என்பதைப் பார்த்தீர்களா? திரித்துவத்தில் உள்ள மூன்றாம் ஆளாக அல்ல, ஆனால் அவரை அவர்கள் “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், பரிசுத்தவான்களின் இராஜா” என்பதாகத்தான் கண்டு கொண்டனர். கவனியுங்கள்! நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? 4-ம் வசனம்:
87கர்த்தாவே, (ஆங்கிலத்தில் முதல் எழுத்து பெரிய எழுத்தில் உள்ளது. கர்த்தாவே என்பதற்கு, அது ஏலோஹிம் ஆகும்) யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?… 199 நீங்கள் இப்பொழுது திருவசனத்தைக் கேட்டு, தண்ணீரினால் சுத்திகரிக்கப்படுவதுபோல், அதே தண்ணீரினால் தான் அவர்களும் கழுவப்படுகிறார்கள். அதே விசுவாசம் தான், சர்வவல்லமை பொருந்திய இயேசுகிறிஸ்துவின் அதே வல்லமை தான் இதுவும். ஆதியில் முழு வெளிப்படுத்துதலாக அது இருக்கிறது. இயேசு கிறிஸ்து யார் என்பதைப் பற்றிய வெளிப்பாடு, அதாவது, நம் மத்தியில் மாம்சமான தேவனாகிய இயேசு கிறிஸ்து யார் என்ற வெளிப்பாடு முழுவதும் வெளிப்படுத்தின விசேஷத்தில் சுற்றப்பட்டுள்ளது. உமது நாமம் மகத்துவமும் ஆச்சரியமுமானது… யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின. 200 வேறு வார்த்தைகளில் கூறினால்: அதை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தால், அது என்னவாயிருக்கிறது என்பதைக் காண்கிறோம். உமது நியாயத்தீர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே நாம் இங்கே நிற்கிறோம், இப்பொழுது நாம் கழுவப்பட்டிருக்கிறோம், உபத்திரவ காலத்தின் வழியாக நாம் வந்தபிறகு, நாம் இப்பொழுது கழுவப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் உமக்காக நிலை நின்றோம்; நாங்கள் உம்மை விசுவாசித்தோம். இப்பொழுது நாங்கள் கண்ணாடிக் கடலின் மேல் நின்று கொண்டிருக்கிறோம். உமது பரிசுத்த வசனத்தின் பிரதிபலிப்பில் உம்மை நாங்கள் கனம்பண்ணி, மகிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். உமது விளக்குகள் உண்மையாயிருக்கின்றன, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளவைகள்.
88201 ஓ, என்னே! நாம் அதன் பேரில் ஒரு வாரம் தரித்திருக்கக்கூடும். “பரிசுத்த ஆவியின் அபிஷேகம்”, இப்பொழுது இங்கே வரைந்திட வேண்டிய ஒரு விஷயம் என்னிடத்திலுண்டு, அப்படியே ஒரு நிமிடம், அதை நாம் இப்பொழுது வரைந்து கொள்வோமாக. இப்பொழுது நாம்…நாம் இங்கேயே நாம் எங்கே இருக்கிறோம் என்பதை ஏன் பார்க்கக் கூடாது. 202 இப்பொழுது, இங்கே நாம் கவனித்துப் பார்த்தால், இங்கே ஒரு மகத்தான காட்சி காணப்படுகிறது. இதோ இங்கே மகா பரிசுத்த ஸ்தலம் உள்ளது. சரி. இங்கே பரிசுத்த ஸ்தலம் உள்ளது. இங்கே வருவதற்கு முன்பாக, முதன் முதலாக கடல் தொட்டி உள்ளது. 203 சரி, இப்பொழுது கவனியுங்கள், நாம் எவ்வாறு தேவனை அணுகுகிறோம்? “விசுவாசம் கேள்வியினாலே வரும்,” மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து அந்தந்த காலத்திற்குரிய தூதனுக்குள்ளாக பிரதிபலித்துக் கொண்டிருக்கும் “தேவனுடைய வார்த்தையை கேட்கிறதினால் வரும்”. 204 முன்பு அங்கே…சாலமோனின் ஆலயத்திலே, அந்த குத்து விளக்குகள் தனது விளக்குகளின் ஒளியை அங்கே வெளியேயுள்ள அந்த வெண்கல கடல்தொட்டியின் மேல் பிரகாசித்து பிரதிபலித்தன. எனவே, இங்கே அந்த சபைக் காலத்திற்குரிய தூதனானவன் அக்கடல் தொட்டியின் மேல் ஒளி வீசி பிரதிபலித்துக் கொண்டிருக்கிறான்; இங்கேயிருந்து கொண்டு, அவருடைய இரக்கத்தையும், அவருடைய திருவசனத்தையும், அவருடைய நியாயத்தீர்ப்பையும் , அவரது நாமத்தையும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறவனே அவன். அங்கே யாவும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறன. அதை நீங்கள் விசுவாசிப்பதன் மூலம், அங்கே வேறுபிரிக்கப்படுகின்றீர்கள். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?
89205 இங்கே இது எவ்வளவு அழகாயுள்ளது என்பதை கவனியுங்கள்; நாம் அதைப் பற்றி அன்றைக்கு பேசினோம். கவனியுங்கள். இங்கே, இங்கே “விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருகிறபடியால்,” சரி, கழுவப்பட்ட பிறகு, இரண்டாவது ஸ்தலத்தில் “பரிசுத்தமாக்கப்படுகிறீர்கள்.” அதன்பிறகு, “பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறீர்கள்.” நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம்! உங்களுக்கு அது புரிகிறதா? அவருடைய செய்தியானது எவ்வாறு உள்ளது? கேட்பதினால் நீதிமானாக்கப்படுதல்; பரிசுத்தமாக்கப்படுதல் என்பது, நீங்கள் அதன் பேரில் என்ன செய்கிறீர்களோ அதைப் பொறுத்தாகும்; அதைப் பாராட்டும் வகையில், நீங்கள் என்ன செய்தீர்களோ அதை மதித்து, தேவன் உங்களை பரிசுத்த ஆவியினால் முத்திரையிடுகிறார். 206 இப்பொழுது, என்னுடைய பாப்டிஸ்ட் சகோதரனே, நான் ஒரு காரியத்தை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்களோ, “தேவனை விசுவாசிப்பதைத் தவிர ஆபிரகாமினால் வேறு என்ன செய்திருக்க முடியும்? அது அவனுக்கு தேவனால் நீதியாக எண்ணப்பட்டதே” என்று கூறுகிறீர்கள். 207 இந்த ஸ்தலத்தில் அவனால் அவ்வளவு தான் செய்ய முடிந்தது. அவன் தேவனை விசுவாசித்தான். ஆனால் தேவனோ அவனது விசுவாசத்தை ஏற்றுக் கொண்டதற்காக விருத்தசேதனமாகிய முத்திரையை அவனுக்குக் கொடுத்து, அவனை முத்திரையிட்டு, அவனது விசுவாசத்தை தான் ஏற்றுக் கொண்டதாக அதன் மூலம் காண்பித்தார். நீங்கள் தேவனில் விசுவாசங் கொண்டுள்ளதாக அறிக்கையிடுகிறீர்கள். அப்படியிருந்தும், ஒரு போதும் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்படாதிருக்கிறீர்கள். எபேசியர் 4:30, இவ்வசனத்தை எழுதிக் கொள்ள விரும்பினால் குறித்துக் கொள்ளுங்கள். எபேசியர் 4:30. “…முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.” நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாத வரையிலும், நீங்கள் முத்திரையிடப்படவேயில்லை.
90208 அம்முத்திரை எவ்வளவு காலத்திற்கு நீடித்திருக்கும்? அடுத்த எழுப்புதல் வரைதானா? “நம்முடைய மீட்பு வரையிலும், நாம் மீட்கப்படுகின்ற அந்தநாள் வரையிலும் நீடித்திருக்கும்.” அதை விட்டு அகன்று போக வழியேயில்லை. அதை விட்டு நீங்கள் அகன்று போகவே முடியாது. ஏனெனில், அது உங்களைவிட்டு அகன்றிடவே செய்யாது. பாருங்கள்? ஏனெனில் நீங்கள் மீட்கப்படும் நாள் வரையிலும் முத்திரையிடப்படுகின்றீர்கள். “வருங்காலமோ, நிகழ்காலமோ, நாசமோசமோ, பசியோ, தாகமோ, மரணமோ, அல்லது வேறு எந்த ஒன்றுமோ, கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்கமாட்டாது.” பவுல், “நான் அதைக் குறித்து முழுவதுமாக நிச்சயித்திருக்கிறேன்” என்றான். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அங்குதான் காரியமே உள்ளது. நீங்கள் உங்களுடைய மீட்பின் நாளுக்கென்று முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள்.
91209 கவனியுங்கள், அது மீண்டும் கடந்த—கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்த்த விஷயத்தை திரும்பக் கொண்டுவரும். இதைப் பார்க்க எனக்கு நேரம் இருக்குமா? நான்…கவனியுங்கள். இதைக் கவனியுங்கள். ஆவி…ஆவி, ஆத்துமா, சரீரம். சரி, பாருங்கள்: சரீரம், ஆத்துமா, ஆவி. 210 இப்பொழுது, நான் அந்த வரைபடத்தை அழித்துவிட்டு வேறொன்றை உங்களுக்கு வரையப் போகிறேன். இப்பொழுது நான் ஒன்றை இங்கே உங்களுக்கு வரையப்போகிறேன். கடந்த ஞாயியறன்று இதை வரைய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை, எனவே நான் எனக்காக இந்த மஞ்சள் நிற துண்டுக் காகிதத்தில் வரைந்து வைத்திருக்கிறேன். நான் இதை இங்கே வரைந்திட விரும்புகிறேன்; ஏனெனில், நீங்கள் அதைக் குறித்து வைத்துக் கொள்ளவும், நான் கூறியதின் அர்த்தம் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவும் அது வசதியாக இருக்கும். இப்பொழுது, இதுதான் சரீரம்; இதுதான் ஆத்துமா; இதுதான் (ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் ஆவி என்பதின் முதல் எழுத்து உள்ளது) ஆவி, பரிசுத்த ஆவி. சரி. இப்பொழுது இவைகளினால் தான் நாம் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.
92211 இங்கே நீங்கள் கவனித்துப் பார்த்தீர்களானால், இங்கே பரிசுத்த ஸ்தலம், அடுத்து, மகா பரிசுத்த ஸ்தலம் உள்ளது. இங்கே பலிபீடம், பரிசுத்த ஸ்தலம்; இங்கே கடல் தொட்டியுள்ளது, அவ்விடத்தில் தான் நீங்கள் வார்த்தையைக் கேட்கிறீர்கள். “விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” அது வேறு பிரிந்து வருவதைக் குறிக்கிறது, அது வேறு பிரிந்து வரச் செய்யும் கடல் தொட்டியாகும். இப்பொழுது, இதைக் கவனியுங்கள். இங்கே உள்ளே பிரவேசிப்பதற்கு ஒரேயொரு வாசல் தான் உள்ளது. அதற்காக நீங்கள் இங்கே தான் வர வேண்டும். அது சரிதானே? 212 எனக்கு வரைவதற்கு போதுமான இடம் இருந்தால் நலமாயிருக்கும். அப்படியிருந்தால், நான் இங்கே “கன்னிகைகளை” குறிப்பிடுவேன். “கலியாண விருந்தையும்” வரைந்து காட்டுவேன். அது இன்னொரு விஷம். அந்த கலியாண விருந்தில் அம்மனிதன் எவ்வாறு இங்கே உள்ளே வந்தான் என்பதை பாருங்கள். அவன் வாசல் வழியாக வராமல் வேறு வழியாக உள்ளே நுழைந்து விட்டானே? இங்கே தான் வாசல் உள்ளது. இயேசு “நானே வாசல்” என்று கூறினார். கலியாண விருந்துக்கான மேசை இங்கே வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் மக்கள் அமர்ந்திருந்தனர். இங்கே ஒரு மனிதன் கலியாண வஸ்திரம் தரியாதவனாக உள்ளே நுழைந்திருந்தான். இராஜா வந்தபொழுது, அவர் “சிநேகிதனே, நீ எவ்வாறு இங்கே உள்ள நுழைந்தாய்? எவ்வாறு உள்ளே பிரவேசித்தாய்?” என்று கேட்டார். அவன் வாசல் வழியாக பிரவேசிக்கவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது. அவன் ஒரு ஜன்னல் வழியாகவோ, அல்லது கொல்லைப்புற வழியாகவோ அல்லது ஒரு கோட்பாட்டின் மூலமாகவோ, அல்லது ஒரு மதஸ்தாபனத்தின் வழியாகவோ பிரவேசித்திருப்பான். அவன் வாசல் வழியாக பிரவேசிக்கவில்லையே!
93213 ஏனெனில், பழங்காலத்து கிழக்கத்திய நாடுகளில், இன்னமும் அதே நடைமுறையைத் தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். அதாவது, மணவாளனானவன், தன் கலியாணத்திற்கு அவனே அழைப்பைக் கொடுத்து, அவன் அழைத்துள்ள ஒவ்வொருவரும் வரும்போது அவனே கலியாண வஸ்திரத்தையும் அளிக்கிறான். 214 ஓ, நான் இதைக் குறித்து எண்ணிப் பார்க்கையில், என்னுடைய இருதயம் எப்படியாய் ஆனந்த அதிர்ச்சியடைகிறது. “முதலாவதாக என் பிதா ஒருவனுக்கு அழைப்பு விடுக்காமல், அவன் என்னிடத்தில் வரமுடியாது. என் பிதா எனக்குத் தந்தவைகள் யாவும் என்னண்டையில் வரும்.” நாம் எவ்வாறு அழைக்கப்பட்டோம்? உலகத் தோற்றத்திற்கு முன்னரே, நமது பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன. எதற்காகவென்றால், ஒளியைக் கண்டு கொள்ளவும், உள்ளே பிரவேசிப்பதற்காக பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே. (ஆட்டுக்குட்டியாவனர் அடிக்கப்பட்டபொழுது) ஆட்டுக்குட்டியானவரின் நாமம் அங்கே எழுதப்பட்ட அதே நேரத்தில் தான் நமது நாமங்களும் அங்கே எழுதப்பட்டன. வேதத்தில், “உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புத்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரையும் அவன் மோசம்போக்கினான்” என்று கூறப்பட்டுள்ளது. அதை சிறிது நேரத்திற்குப் பிறகு பார்ப்போம்.
94215 கவனியுங்கள், மணவாளன்தானே வாசலண்டையில் நின்றிருப்பானெனில், அழைக்கப்பட்டவன் தனக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பிதழை கொண்டு வந்து, “இதோ, இங்கே கொண்டு வந்திருக்கிறேன்” என்பான். 216 மணவாளன், “உமக்கு நன்றி” என்று கூறிவிட்டு, அவ்வழைப்பிதழை எடுத்து கீழே வைத்து விட்டு, அவர்கள் யாவரும் ஒரேவிதமாக இருக்கும்படியாக எல்லோருக்கும் கொடுக்கும் ஒரே விதமான அங்கியை அவனுக்கு அணிவிப்பான்; நான் அதை விரும்புகிறேன். பாருங்கள்? தேவனுடைய வல்லமையிலே, ஜீவனுள்ள தேவனுடைய சபையிலே, பணக்காரர், தரித்திரர், அடிமை, சுதாதீனன், கறுப்பு நிறத்தவர், வெள்ளை, பழுப்பு, மஞ்சள் நிறத்தவர் யாவரும் ஒரே விதமாகத்தான் தோற்றமளிப்பார்கள், ஏனெனில் அவர்கள் ஒரே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் தான் உடுத்துவிக்கப்பட்டிருக்கிறார்கள். பார்த்தீர்களா? இப்பொழுது இதுவோ, அம்மனிதன் வாசல் வழியாகப் பிரவேசிக்கவில்லை என்பதையே இது காண்பித்துவிட்டது.
95217 இப்பொழுது இங்கே கவனியுங்கள். ஓ, ஒரு மனிதன் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் (ஏவராவது, யாராவது ஒரு வேதபோதகர் எனக்கு கூறுங்கள்) உள்ளே புக முயற்சித்தால், இங்கே இந்த வாசல் வழியாக வராமல் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் புகமுயற்சித்தால், அவன் மரித்துப் போவான். ஆரோனின் குமாரன் ஒரு நாளிலே அந்நிய அக்கினியை, ஒரு ஸ்தாபன அக்கினியை உள்ளே கொண்டுவர முயற்சித்தபோது, (அது ஸ்தாபன அக்கினியாயில்லாதிருக்கும்போதே) அவர்கள் வாசலண்டை மரித்துப்போயினர், அது சரிதானே? அல்லது ஏலியின் புத்திரர் அவ்விதமான காரியத்தைச் செய்தனர் என்று நான் நினைக்கிறேன். ஏலியின் குமாரர் அவைகளை உள்ளே கொண்டுவந்தனர், அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனின் புத்திரருக்கு அடையாளமாய் இருந்தனர்.
96218 இப்பொழுது, இப்பொழுது, இந்த சரீரத்தினுள் பிரவேசிக்க ஒரு வழியுண்டு. எவ்வாறு இந்த சரீரம் கட்டுப்படுத்தப்படுகிறது? இப்பொழுது மிகவும் கவனமாக கவனியுங்கள். உங்கள் எழுதுகோல்களை ஆயத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். சரீரத்தினுள் செல்லுகிற வாசல் இதோ இங்கே இருக்கிறது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, இப்பொழுது நீங்கள் இதை வரைந்து கொண்டீர்களா? இப்பொழுது இங்கே இந்த முதலாவது வாசல்: பார்த்தல், முகருதல், கேட்டல், ருசித்தல், தொடுதல் அல்லது உணருதல் (அது எது ஒன்றாகவும் இருக்கலாம், பரவாயில்லை) இப்பொழுது இவைகள் சரீரத்தில் இருக்கும் புலன்களாகும். அப்படித்தானே? ஆறு புலன்கள் சரீரத்தை கட்டுப்படுத்துகின்றன என்பதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? இப்பொழுது இதன் வழியாக உள்ளே நுழைந்த பிறகு நமக்கு உள்ளே அங்கே ஒரு ஆத்துமா இருக்கிறது. புலன்கள் புறம்பே உள்ளன. அது தானே புறம்பே இருக்கிற அமைப்பாகும். 219 இப்பொழுது இங்கே ஆத்துமாவில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து தன்மைகள் உள்ளன. இப்பொழுது அவைகளை நீங்கள் எழுதிக் கொள்ள விரும்புகிறீர்களா? முதலாவது ஒன்று கற்பனையாகும், கற்பனை, இரண்டாவது மனச்சாட்சியாகும். மூன்றாவது ஞாபகசக்தி ஆகும். நான்காவது யோசனை, ஐந்தாவது பாசம் ஆகும். 220 இப்பொழுது, இவைகளையெல்லாம் நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் புரிந்து கொள்ளவில்லையெனில், இப்பொழுது எனக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் அவைகளையெல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டீர்களா? பார்த்தல், ருசித்தல், உணருதல், முகருதல், கேட்டல் என்பவைகள் தான் சரீரத்தில் உள்ள திறப்பாக இருக்கிறது. 221 ஆத்துமாவில் கற்பனாசக்தி, மனச்சாட்சி, ஞாபகசக்தி, யோசித்தல், பாசமாகிய புலன்கள் அல்லது தன்னைகள் உள்ளன. இவைகள் ஆத்துமாவில் புலன்களைப் போல் உள்ளன. ஆத்துமாதான் தன்னுள் இருக்கிற ஆவியின் தன்மையாக இருக்கிறது. உங்களுக்குள்ளாக என்ன இருக்கிறதோ அதற்குரிய சூழ்நிலையை வெளியே எடுத்துக் காட்டுகிறதாக ஆத்துமா இருக்கிறது. அதுதானே பரிசுத்தமாகுதல் என்ற ஸ்தானத்தைக் கொண்டதாக இருக்கிறது. ஆத்துமா அவ்வாறு இருந்து அவ்வகையான காரியத்தை அது அங்கே அமைக்கிறது. சரி, யாவரும் அதைக் குறித்துக் கொண்டீர்களா? சரி.
97222 இப்பொழுது, இந்த வாசலுக்கு, அங்கே ஒரேயொரு வாசல் தான் உள்ளது. அது “சுய விருப்பம்” என்று அழைக்கப்படுகிறது. அங்கே உள்ளே என்ன போக வேண்டும் என்பதற்குரிய எஜமானாக நீங்கள் இருக்கிறீர்கள். அது என்ன செய்கிறது? இது என்ன? சரீரமானது கழுவப்பட வேண்டும். கடல் தொட்டியிலே, அடுத்ததாக, இங்கே அது பரிசுத்தமாக்கப்பட வேண்டும்; அடுத்து, அங்கே அது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறது. இது அப்பொழுது மீண்டும் தேவனுடைய நியாயாசனமாக ஆகிவிடுகிறது. மீண்டும், தேவன் அங்கே உங்கள் இருதயத்தில் அமருகிறார், நீங்கள் ஏதாவது பிழை செய்தால், “ஓ, நான் பிழை செய்தேனே” என்கிறீர்கள். 223 சில ஜனங்கள், “நான் குட்டையான முடியைக் கொண்டிருந்தால் அது என்னை எந்த விதத்திலும் குற்றப்படுத்தவில்லை” என்கிறார்கள். ஸ்திரீகள், “கை விரல்களில் வர்ணம் தீட்டிக் கொண்டாலோ, அல்லது முகவர்ணம் தீட்டிக் கொண்டாலுமோ, அல்லது அது என்னவாயிருந்தாலும், அது என்னை ஒரு விதத்திலும் குற்றப்படுத்தவில்லை” என்று கூறியிருக்கிறார்கள். அது “நான் நடனமாடச் செல்லவதற்காக என்னை குற்றப்படுத்துகிறதில்லை. சிறிது வெள்ளைப் பொய் கூறினாலோ அது என்னை குற்றப்படுத்துகிறதில்லை. நான் எனது சீட்டாட்ட குழுவில் சீட்டு ஆடினாலோ, அது என்னை குற்றப்படுத்துகிறதில்லை” என்று கூறுகிறார்கள். அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களை குற்றப்படுத்த உங்களிடத்தில் ஒன்றுமில்லை. “அது எனது மனச்சாட்சியை பாதிக்கவில்லை”. ஒரு பாம்பிற்கு இடுப்பு இல்லாததுபோல உங்களிடத்தில் மனசாட்சி என்ற ஒன்றே இல்லை, உங்களை பாதிக்கச் செய்யும் ஒன்றும் உங்களிடம் இல்லை. நீங்கள் உலகத்துக்குரியவர்களாக இருக்கிறீர்கள். 224 ஆனால் நான் உங்களுக்கு அறிகூவல் விடுத்து கூறுகிறேன், நீங்கள் இயேசு கிறிஸ்துவை இந்த இடத்தில் உள்ளே வர இடம் கொடுத்து விட்டு, அந்தக்காரியங்களை ஒரு தடவை செய்து பாருங்கள் பார்க்கலாம். சகோதரனே, நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் நான் இங்கே நின்றுகொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக கண்டிக்கப்பட்டு, அதினின்று பின்வாங்கி விடுவீர்கள். ஏனெனில் அவர் பரிசுத்தமுள்ளவர். கேளுங்கள். நான் அதற்கான வேதவாக்கியத்தை குறிப்பிடுகிறேன். “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.”
98225 அது எப்படி செய்தது? சுயவிருப்பம். “அதை ஏன் ‘சுய விருப்பம்’ என்று அழைக்கிறீர்கள், சகோதரன் பிரான்ஹாம் அவர்களே?” என்று நீங்கள் கேட்கலாம். ஏனெனில் ஒரு மனிதனையோ அல்லது ஸ்தீரியையோ, அது ஏதேன் தோட்டத்தில் இருந்த ஆதாம் ஏவாளைப் போன்ற அதே நிலையில் வைக்கிறது. எதன் பேரில்? இரு மரங்களின் பேரில், சுய விருப்பம், இந்த ஒன்று மரணமாகவும், இது ஜீவனையும் பற்றியதாக இருக்கிறது. சுயவிருப்பம்…ஒழுக்கக் கேடு…சுயாதீன ஒழுக்க நெறிமுறை! ஒழுக்க நெறியில் நடப்பதற்கான செயல்படுதலை சுதந்திரமாக திர்மானித்துக் கொள்ளட்டும் என்று தேவன் முதல் மனிதனாகிய ஆதாமையும் ஏவாளையும் அனுமதித்து அவர்களை அங்கே வைத்திருந்தார். அதேவிதமாகத்தான் உங்களையும் அவர் வைத்திருக்கிறார். இந்தக்காரியம் இங்கே நிலைப்படுவதற்கு ஒரே வழி உங்களுடைய சொந்த சுயசித்தம். அல்லேலூயா!, உங்களுடைய சுய விருப்பம்! தேவனுடைய சித்தத்தைச் செய்ய நீங்கள் விருப்பங்கொள்ள வேண்டும். உங்களது சுயசித்தத்திற்கு நீங்கள் விடுவிக்கப்பட்டவர்களாகி, அதன் மூலம் தேவனுடைய சித்தம் உள்ளே வர அனுமதிக்க வேண்டும்; அது ஒன்று தான் இருதயத்திற்கு நேராக வழி நடத்தும் வாய்க்கால் வழியாய் இருக்கிறது.
99226 ஓ, பாப்டிஸ்டுகளே, பிரெஸ்பிடேரியன்களே, நீங்கள் சபையில் சேர்ந்து கொள்ளக்கூடும். மெதோடிஸ்ட்டுகளே, யாத்திரீக பரிசுத்த சபையினரே, நீங்கள் பரிசுத்தமாகுதல் என்ற நிலை வரையில் மட்டும் வரலாம். ஆனால் நீங்களோ உங்களது சுய சித்தத்தில், தேவனுடைய சித்தத்தை செய்ய சித்தம் கொண்டு, இங்கே பரிசுத்த ஆவியை உள்ளே பிரவேசிக்க விட வேண்டும். அதன் மூலமாக, “விசுவாசிக்கிறவர்களைப் பின் தொடரும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள், வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் …தங்களுடைய சித்தத்தை என்னுடைய சித்தமாக ஆக்கிட இடம் கொடுப்பவர்களை இவ்வடையாளங்கள் பின் தொடரும்; நான் செய்த கிரியைகளை அவர்களும் செய்வார்கள்”. நீங்கள் இதைக் கவனிக்கத் தவறமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். தேவனுடைய சித்தத்தை செய்ய ஒரு சித்தம் உண்டு. நான் கூறுவதின் கருத்தை நீங்கள் அறிந்து கொண்டீர்களா?
100227 இங்கே பாருங்கள், பரிசுத்த ஸ்தலம், கடல் தொட்டி ஆகியவற்றைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இங்கே விளக்குகள் உள்ளன. விளக்குத் தண்டுகள் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறூ, ஏழு), உள்ளன. அவைகள் ஒவ்வொன்றும் ஒளியைப் பெற்றிருக்கின்றன. அவைகள் எங்கிருந்து பிரதிபலிக்கின்றது? எதை நோக்கி அது பிரதிபலிக்கிறது? அது இங்கே ஒரு மூலையில் ஒரு ஸ்தாபனத்தின் மேல் பிரதிபலிக்கவில்லை. அது திரும்பி வார்த்தையினிடத்திற்கே ஒளியைப் பிரதிபலிக்கிறது. அது தானே தீட்டுகழிக்கும் ஜலமாய் உள்ளது. வ்யூ! 228 “அன்றியும் மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் எருசலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.” (லூக்கா 24:49) எருசலேமிலே, மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் எவ்வாறு போதிக்கப்பட்டது? அது எதுவரைக்கிலும்? அது உலகம் முழுவதற்கும் செல்லவேண்டியதாயுள்ளது. அப்போஸ்தலர் 2:38-ல் பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றான். அந்தச் செய்தி முழு உலகமும் சென்றடைந்திட வேண்டும். அப்பொழுது முடிவு உண்டாகும். இந்தச் செய்தி உலகம் முழுவதுக்கும் சென்றடைந்த பிறகு, அப்பொழுது முடிவானது வரும்.
101229 எங்ஙனம் இந்த விளக்குத் தண்டுகள் இங்கேயுள்ள இந்த சில மெதோடிஸ்ட், ப்ரெஸ்பிடேரியன்கள் அல்லது பெந்தெகோஸ்தே ஸ்தாபனங்கள் மேல் ஒளியை பிரதிபலிக்கச் செய்யும்? நிச்சயமாக அவ்வாறு செய்யாது. 230 அதுதானே ஒளியை “இருக்கிறேன்” என்பதாகத்தான் பிரதிபலிக்கும். “இருந்தேன்” என்பதாக அல்ல. மூன்று அல்லது நான்கு வெவ்வேறு நபர்களாக அல்ல, ஆனால் தேவன் அங்கே அமர்ந்திருந்து தம்மைத்தாமே அந்த ஒவ்வொரு சபைகளுக்குள்ளும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். முந்தைய காலத்தை திரும்பப் பார்த்து அங்கே அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பாருங்கள். (நாம் அதற்கான சரித்திரத்தை ஆய்ந்து வந்துள்ளோம்), அவர்கள் அவரை இருந்தவரும், இருக்கிறவரும், எப்போது இருக்கப் போகிறவராக பிரதிபலித்தனர். 231 ‘இருந்தவர்…” அக்காட்சியை யோவான் கண்ட மாத்திரத்திலேயே, “இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவன், தேவனுடைய சிருஷ்டி, அல்பா, ஒமேகா, ஆதியும் அந்தமுமானவர்” என்று கூறினான். அந்த உண்மையான ஒளிதான் பிரதிபலிக்கப்பட வேண்டும். அதை நீங்கள் காண்கிறீர்களா? ஆமென்! வ்யூ!
102232 பன்னிரண்டு மணிக்குப் பிறகு, நான்—நான்…கவனியுங்கள். நீங்கள் அதை நகலெடுத்துக் கொள்ளத்தக்கதாக நாம் துரிதமாகப் பார்ப்போம். உங்களை அதிக நேரம் காக்க வைக்க நான் விரும்பவில்லை. ஆனால் நான் மீண்டும் எப்பொழுது உங்களை காண்பேன் என்பது எனக்குத் தெரியாது. புரிகிறதா? நண்பர்களே, நீங்கள் இதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன், இது ஜீவனாயிருக்கிறது. இப்பொழுது பாருங்கள். நான் அதைப் பற்றி கூறுகிறபடியால், நான் என்னை உயர்த்திக் கூறுகிறேன் என்பது அர்த்தமல்ல. நான் அவ்வகையில் பிரதிபலித்துக் கொண்டிருப்பேனாகில் அப்பொழுது நான்…நீங்கள் என் இருதயத்தை தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள். “ஓ, இது…நீங்கள் ஒன்றுமற்றவர்கள்” என்று நான் பிரதிபலிக்க முயற்சிக்கவில்லை. நான் அதைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் அந்த ஒளியைப் பெற்றிருக்காவிடில், இங்கே இருக்கிற அந்த ஒருவரையே நான் உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்த பிரசங்க பீடத்திலிருக்கிறவரை அல்ல, அங்கே சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறவரையே சுட்டிக் காட்டுகிறேன். அந்த சிம்மாசனம் உங்களது இருதயமாக மாறவேண்டும். அதுதான் இங்கே பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது என்பதை, சரியாக அதேக் காரியம் என்பதை நீங்கள் அப்பொழுது காண்பீர்கள். 233 இங்கே இது என்னவாயிருக்கிறது? அதுவே இதை பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. இதுவே அந்த வார்த்தையாயுள்ளது. தண்ணீர்களாகிய திருவசனத்தால் கழுவப்படுதல், வார்த்தையினால் கழுவப்படுதல், (வேறு பிரித்தலின் தண்ணீர்களினூடாக,) உலகத்தின் காரியங்களிலிருந்து, உலகத்திலிருந்து வார்த்தையினால் கழுவப்படுதல். “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று வார்த்தை கூறுகிறது. “அவர் பெந்தெகோஸ்தேயின் காலத்திலும் சீஷர்களின் காலத்திலும் மாறாமல் இருந்தார்; பிறகு அடுத்து வந்த காலத்தில் அவர் மாறிவிட்டார்” என்று அது கூறவில்லை. அவ்வாறில்லை. அவர் மாறாமலேயே இருக்கிறார். பார்த்தீர்களா? வேறு எதையாவது கூறும்படி அதை நீங்கள் ஆக்க முடியாது. இந்த விஷயங்களில் ஒன்றை மாத்திரமே நாம் மணிக்கணக்கில் பேசிக் கொண்டேயிருக்க முடியும். ஆனால் நீங்கள் அதைப் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். தேவன் உங்களை அழைத்திருந்தால் நிச்சயமாக நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள். அவ்வாறு தான் நான் விசுவாசிக்கிறேன். சரி, ஐயா.
103234 இப்பொழுது அது என்ன? நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம்; ஆத்துமா, சரீரம், ஆவி; யாவும் ஒன்றுதான். இப்பொழுது இந்த விளக்கு வார்த்தையை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. உண்மையான வார்த்தை எதைப் பிரதிபலிக்கிறது? ஷெகினா மகிமையிலிருந்தே இவ்விளக்கு பிரதிபலிப்பை பெற்றுக்கொண்டிருக்குமானால், இந்த விளக்கு என்னவாயிருக்கும்? அது ஷெகினா மகிமையையேதான் பிரதிபலிக்கும். அப்படிதானே? 235 நீங்கள் உங்கள் ஒளியை ஒரு வேதாகம கருத்தரங்கிலிருந்து பெற்றுக் கொண்டிருப்பீர்களானால், நீங்கள் அந்த வேதாகம கருத்தரங்கையே பிரதிபலிப்பீர்கள். நீங்கள் ஒரு மெதோடிஸ்ட் வேதக் கருத்தரங்கிலிருந்து பெற்றிருந்தீர்களானால், அப்பொழுது நீங்கள் மெதோடிஸ்ட் கொள்கைகளையே பிரதிபலித்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் அவ்வாறே பிரதிபலிப்பீர்களே! பெந்தெகோஸ்தே வேதாகமக் கருத்தரங்கினின்று நீங்கள் அதைப் பெறுவீர்களானால், அப்பொழுது நீங்கள் பெந்தெகோஸ்தே கொள்கைகளையே பிரதிபலிப்பீர்கள். முட்செடியில் பற்றியெரிந்த தேவனுடைய மகிமையில் அதை நீங்கள் பெறுவீர்களாயின்…
104236 ஏன்? மோசே அவருடைய பிரசன்னத்திலிருந்து வெளியே வந்தபோது, ஜனங்கள் அவனுடைய முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தபடியால், அவன் தனது முகத்தின் மேல் ஒரு முக்காட்டைப் போட்டுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அப்படித்தானே? அவன் முழுவதும் தேவனுடைய வல்லமையால் நிறைந்திருந்தான். 237 ஸ்தேவான் முழுவதும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு மனிதனாயிருந்தான். அவனை நிறுத்தப்பார்த்தார்கள். அச்செய்கையானது காற்று பலமாய் அடிக்கிற நாளில் நெருப்புப் பற்றி எரிந்து கொண்டிருக்கிற ஒரு வீட்டை அணைக்க முற்படுவது போல் உள்ளது. ஓ அதை அணைக்க அவர்கள் ஊத, ஊத, அது இன்னும் அதிகரிக்கவே செய்யும். காரணம், அவனை உங்களால் தடுத்து நிறுத்தவே முடியாது. அவனை சனகெரின் சங்கத்திற்கு முன்பாக கொண்டுபோய் நிறுத்தியபோது, வேதமோ, “அவன் அங்கு நின்று கொண்டு, தூதனைப் போல் தோற்றமளித்தான்” என்று கூறியுள்ளது. 238 இப்பொழுது, “ஒரு தூதன்” என்பது, அவன் வெறும் ஒரு குறிப்பிட்ட ஜீவராசியாக நின்று கொண்டிருக்கிறான் என்று நான் எண்ணவில்லை. ஆனால் ஒரு தூதன், அவன் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை சரியாக அறிந்திருக்கிறான். ஆகவே, சபைக் காலத்தில் தூதன் எவனும், செய்தியாளன் எவனும் அவ்வாறே அதைப் பற்றி, நன்கு அறிந்தவனாயிருக்கிறான்; தூதன் எனப்படுவதைப் பற்றி வேதாகம கருத்தரங்குகள் என்ன எண்ணுகின்றன என்பதைப் பற்றி அவர்களிடம் போய் கேட்டு அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. அத்தூதனானவன் தேவன் தம்முடைய வேதத்தில் என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பற்றி அறிந்தேயிருக்கிறான். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரூபிக்கும்படியாக, அவனில் அவ்வல்லமையானது பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. அவன் அஞ்சாதவனாக இருந்து, தான் சத்தியம் எது என்று அறிந்திருக்கிறானோ அதை அப்படியே சரியாகக் கூறுகிறவனாயிருக்கிறான். தேவனும் அவனோடு அங்கே நின்று, அவனுடைய செய்தியை அதேவிதமான அற்புத அடையாளங்களோடும், அதே வார்த்தைகளோடும் ஆதரித்து பின்பலமாக இருக்கிறார். அதுதான் ஒரு தூதனுடைய காரியமாகும்.
105239 ஸ்தேவான் அங்கே நின்று, “நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன்” என்றான். அவன், “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப் போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள், உங்கள் பிதாக்கள் செய்ததுபோல நீங்களும் செய்கிறீர்கள்” என்றான். மேலும், “தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? அதன் பிறகு அவர்களுக்கு கல்லறைகளை அவர்கள் கட்டினார்களே” என்றும் கூறினான். 240 சபை ஸ்தாபனங்களாகிய நீங்கள், அதே காரியத்தை உங்களில் யார் செய்யாமல் இருந்தீர்கள்? பாருங்கள்? நீங்கள் சுற்றிலும் வெள்ளையடிக்கப்பட்ட மாளிகைகளையும், சவக் கிடங்குகளையும் மற்றும் இங்கு சுற்றிலும் மற்றக் காரியங்களையும் கட்டிக் கொண்டீர்கள்; அதன் பின்னர் தேவனைக் குறித்துப் பேசுகிறீர்களே! நீங்கள் தான் அவரைச் சவகிடங்கில் போட்டீர்கள். நீங்கள் தான் அவரைக் கல்லறையில் வைத்தீர்கள். அவரை அங்கே போட்ட அதே மக்கள் தான் அவ்விடத்தில் வெள்ளை மாளிகையான ஒரு ஆலயத்தை எழுப்பியிருக்கிறார்கள்; ஸ்தாபனங்கள், பரிசேயேர் சதுசேயர் தான் அவரை அங்கே கொன்று கிடத்தினார்கள், அதன்பின்னர் அவருக்கு ஒரு நினைவுச் சின்னமும் எழுப்ப முயற்சித்தனர்.
106241 கிறிஸ்து ஜீவிக்கிற ஒருவர் என்பதை நான் உங்களுக்கு கூறுவேனாக. அவர் மரித்துப் போய்விட்ட ஒருவர் அல்ல, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து என்றென்றும் உயிரோடிருக்கிறவராக இருக்கிறார். ஓ, சகோதரனே, நிச்சயமாக. அது என்ன செய்கிறது? அது எதை பிரதிபலிக்கிறது. அது இங்கிருந்து பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. அது என்னவாயிருக்கும்? அவரை உண்மையாக பிரதிபலிப்பது என்ன? அது முதலாவதாக பிரதிபலிப்பது அவருடைய நாமமாயிருக்கும். அது முதலில் பிரதிபலிக்கிறது. அது சரிதானே? அது அவருடைய நாமத்தை பிரதிபலிக்கும். அடுத்து அது பிரதிபலிப்பது, அவருடைய வல்லமையாயிருக்கும். நான் கூறுவதைப் புரிந்து கொண்டீர்களா? அவர் என்னவாயிருக்கிறாரோ அதையெல்லாம் அது அப்படியே பிரதிபலிக்கும். 242 ஆகவே இது இங்குள்ள இந்தக் காலத்திற்கு அவர் என்னவாகவெல்லாம் இருந்தாரோ, அதை இப்பொழுதும் அப்படியே பிரதிபலித்துக் காட்டுகிறதென்றால், அவர் மாறாதவராயிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. வ்யூ, மகிமை! மகிமை! அது என்ன? அது அவரை இருந்தவராகவும், அவரை இருக்கிறவராகவும், அவரை எக்காலத்தும் இருக்கப் போகிறவராகவும் அப்படியே பிரதிபலித்துக் காட்டுகிறது; ஏனெனில், அது நேரடியாக தேவனுடைய சிம்மாசனத்திலிருந்து வருகிறதாய் இருக்கிறது. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அதே தேவன் தான், அதே வல்லமை, அதே மகிமை ஒவ்வொருகாரியமும் அதேவிதமாகவே உள்ளது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஓ, சகோதரனே!
107243 நாம் இன்னும் இதற்கு மேல் உள்ளதையும் கவனிப்போம். நாம் இப்பொழுது இந்த 4-ம் அதிகாரம் 6-ம் வசனத்தின் மீதிப்பகுதியையும் எடுத்துக் கொள்வோம். நான் அதன் பேரில் சில கருத்துக்களை இங்கே எழுதி வைத்துள்ளேன், ஆனால் அவைகளை என்னால் முடிந்த வரை விரைவாகப் பார்க்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இப்பொழுது மீதியாயுள்ளது…இவ்வதிகாரத்தை நீங்கள் கடந்து சென்றபின்…இவ்வசனத்தை வாசித்து முடித்தபிறகு, அந்த ஜீவன்கள் என்ன செய்தன என்பதைக் குறித்து கூறுகிறதாயிருக்கிறது. அதைப்பற்றி நாம் படிக்க முடிகிறதா என்று பார்ப்போமாக. கண்ணாடிக் கடல் (இப்பொழுது நாம் அது என்னவாயிருந்தது என்பதைப் பற்றி அறிவோம்.) … அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும்…நான்கு ஜீவன்களிலிருந்தன… 244 இப்பொழுது இங்கே எத்தனை பேர்களிடத்தில் வேதாகமத்தின் திருத்திய பதிப்பு உள்ளது? உங்களுடைய திருத்திய பதிப்பில், “ஜீவனுள்ள சிருஷ்டிகள்” (living creatures) என்று கூறப்பட்டுள்ளது. ஜேம்ஸ் அரசனின் பதிப்பில் இங்கே ஜீவனுள்ள…எவ்வாறு அது நான்கு “மிருகங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளன என்பதைப் பற்றியும், அது ஏன் அவ்வாறு உள்ளது என்றும் நான் வியக்கிறேன். நல்லது, நான் கிரேக்க—கிரேக்க மொழி அகராதியில் அதைப் பற்றி என்ன அர்த்தம் கூறப்பட்டுள்ளது என்று காண்பேனாக. இதோ அது என்னவென்று இங்கே கூறப்பட்டுள்ளது. இப்பொழுது கவனமாகப் பாருங்கள். இங்கே இந்த வார்த்தை எப்படி மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் திட்டவட்டமாக அறிந்துகொள்ளும்படியாக அதைக் குறித்துக் கொள்ளுங்கள். பாருங்கள், உங்களால் கூடுமென்றால், உங்களுக்கு விருப்பமானால், நான் கூறுவதை குறித்துக் கொள்ளுங்கள். சரி, திருத்திய பதிப்பான ஆங்கில வேதாகமத்தில் “ஜீவிக்கிற சிருஷ்டிகள்” என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது கவனியுங்கள். …அந்த நான்கு மிருகங்களிலும்…சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன… 245 அவ்வசனம் தொடர்ந்து இவ்வாறு “அம்மிருகங்களைப்” பற்றி விவரித்துக் கூறுகிறது. அதைப்பற்றி இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் பார்த்து விடுவோம். இப்பொழுது இம்மிருகங்கள் இங்கே எடுத்துக்காட்டாய் உள்ளன. இந்த மிருகங்கள் என்பனவற்றினைப் பற்றி உங்கள் வேதாகமத்தில் ஓரக்குறிப்பு (Marginal Reading) இருந்தால், உங்களிடத்தில் அவ்வகையான வேதாகமம் இருந்தால், அப்பொழுது அதில் உள்ள ஓரக்குறிப்பைப் பாருங்கள். வேதபண்டிதர் ஸ்கோஃபீல்ட் இங்கே, தன்னுடைய வேதாகமத்தில் அதைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார் என்பதை நான் குறிப்பிடுகிறேன். மிருகங்கள் என்பதைப் பற்றி அவர் இங்கே “ஜீவனுள்ள சிருஷ்டிகள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஓ, என்னே! இப்பொழுது கவனியுங்கள். அதற்குரிய கிரேக்க பதமானது, “Z—O—O—m;…இல்லை Z—O—O—n” என்பதாய் உள்ளது, “Z—O—O—n.” இப்பொழுது கிரேக்க மொழியில் அது சூன் (ZOON) என்று அழைக்கப்படுகிறது; அதன் அர்த்தம் என்னவெனில் “ஒரு சிருஷ்டி” என்பதாகும்.
108246 இப்பொழுது அது அவ்வண்ணமாயல்ல…நீங்கள் அதை இப்பொழுது வாசிக்க விரும்பினால்…நமக்கு நேரம் போதவில்லை. நான் அதை வாசிக்கப்போவதாக இருந்தேன். ஆனால் நான் அவ்வாறு செய்யப்போவதில்லை. எழுதிக்கொள்ளுங்கள், வெளிப்படுத்தின விசேஷம் 11,13,17 ஆகிய அதிகாரங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 11,13,17 ஆகிய அதிகாரங்களில் அங்கே மிருகங்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களில் மிருகங்களுக்கு தேரியன் t—h—e—r—i—o—n என்று வியாக்கினிக்கப்பட்டுள்ளது. கிரேக்க பதமாகிய “தேரியன்” (Therion) என்பதற்கு “ஒரு காட்டு, முரட்டுத்தனமான மிருகம்” என்று அர்த்தமாகும். தேரியான் என்ற கிரேக்க வார்த்தைக்கு “ஒரு காட்டு, முரட்டுத்தனமான மிருகம்” என்று பொருளாகும். 247 ஆனால் சூன் (ZOON) என்பதற்கு “ஒரு சிருஷ்டி” என்று அர்த்தமாகும். பாருங்கள், “நான்கு ஜீவ (சூன்) சிருஷ்டிகள்”. “காட்டு” மிருகங்கள் அல்ல, தேரியான்; ஆனால் “சூன், ஜீவனுள்ள சிருஷ்டிகள்.” 248 தேரியான் என்றால் “காட்டு, முரட்டுத்தனமான கொடூர மிருகங்கள்” என்று அர்த்தமாகும். அதாவது வேறு வார்த்தைகளில் கூறினால், வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தில் நீங்கள் கவனித்தால், “ரோமாபுரியாகிய மிருகம்.” 13-ம் அதிகாரத்தில் “அமெரிக்க ஐக்கிய நாடுகளாகிய மிருகம்”; 17-ம் அதிகாரத்தில் “அமெரிக்கா, ரோமாபுரி ஆக இரண்டையும்” சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. அது தானே கத்தோலிக்க கொள்கைகளோடு ஒன்றிணைந்து கொண்டுள்ள ஸ்தாபன சபைகளைக் குறிக்கும். அம்மிருகங்கள் சுவிசேஷத்திற்கு மனந்திரும்பாத, அடக்கப்படமுடியாதவைகளாகும். வ்யூ! அடக்கப்பட முடியாதவைகள்!
109249 “தேவனுக்கு ஸ்தோத்திரம், நாங்கள் பெரிய மெத்தோடிஸ்ட் சபையிலிருந்து வந்தவர்கள், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்திலிருந்து வந்தவர்கள், நாங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். யாரும் எங்களுக்கு போதிக்க வேண்டியதில்லை” என்கிறீர்கள். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. நீங்கள் கட்டுக்கடங்காத, மனந்திரும்பாத, சுபாவ அன்பில்லாதவர்கள், உடன்படிக்கையை மீறுகிறவர்கள், அவதூறு செய்கிறவர்கள், இச்சையடக்கமில்லாதவர்கள், நல்லோரைப்பகைக்கிறவர்கள். வேஷத்தைத் தரித்து… 250 [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] …இப்பொழுது அதைப் பற்றி பாருங்கள். நான் அதை இன்னும் விளக்கமாக பிரித்து வகைப்படுத்திக் கூற விரும்புகிறேன். ஆனால் நான்…எனவே இது எப்படியாயினும் ஒலிநாடாவில் பதியப் பெற்று விடுமென்பதால் …ஆனால் அதைச் செய்வதற்கு நமக்கு நேரம் போதவில்லை. இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்களா? எத்தனை பேர்கள் புரிந்து கொண்டீர்கள்? புரிந்து கொண்டால் “ஆமென்” என்று சொல்லுங்கள். [சபையோர், “ஆமென்” என்று கூறுகிறார்கள்—ஆசி.] பாருங்கள், இவைகள்…
110251 சூன் (“ZOON”) என்றால் என்ன? ஜீவனுள்ள சிருஷ்டிகள் (living creatures) என்பது தான் அதன் பொருள். அது “சூன்” என்று உச்சரிக்கப்பட வேண்டும். அதை நீங்கள் எவ்வாறு உச்சரிப்பீர்கள்? “சூன்” என்றா? அதை “சூன்” என்று நான் உச்சரிப்பேன். 252 தேரியான், தே—ரி—யா—ன், “தேரியான்” பாருங்கள். எனவே இந்த வார்த்தைக்கு “திருத்தியமையாத குணப்படாத, காட்டுத்தனமான கொடூர மிருகம்” என்று அர்த்தமாகும். மிருகங்கள் அப்படிப்பட்டவைகள் தான். நீங்கள் போய் உங்களுடைய கிரேக்க மொழி அகராதியை எடுத்து அந்த வார்த்தைக்குள்ள அர்த்தம் அப்படியிருக்கிறதா இல்லையா என்பதைப் பாருங்கள். உங்களுடைய கிரேக்க மொழி அகராதியை எடுத்துப் பாருங்கள். கிரேக்க மொழிக்கு பக்கத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எம்ஃப்படிக் டயக்லாட் என்ற (Emphatic Diaglott) வேதத்தை எடுத்துப் பாருங்கள். அதில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பாருங்கள். அங்கே வெளிப்படுத்தின விசேஷம் 11,13,17 ஆகிய அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள “அடக்கியாளப்பட முடியாத மிருகம்” என்ற அர்த்தத்தில் உண்மையாக குறிப்பிடப்பட்டுள்ளன. 253 ஆனால் இங்கே வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தில் உள்ளதோ, “ஒரு ஜீவனுள்ள சிருஷ்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளதேயல்லாமல், ஒரு மிருகம் என்ற அர்த்தத்தில் அல்ல; ஆனால் அது அவ்வாறு அந்த அர்த்தத்தில் அல்ல. எசேக்கியல் 1-ம் அதிகாரம் 8, 1முதல் 28 முடிய உள்ள வசனங்களிலும் அதே விஷயம் உள்ளது. இன்னும் ஒரு நிமிடத்தில் அதைப் பற்றி நாம் பார்க்கலாம். சரி, “கட்டுப்படுத்த முடியாத, மனந்திரும்பாத, காட்டு விலங்கு”—கட்டுப்பாடற்றது! 254 ஆனால் இவைகளோ “ஜீவனுள்ள சிருஷ்டிகள்”. அவைகள் என்ன? அவைகள் தூதர்கள் அல்ல. அவைகள் என்ன என்பதை நான் உங்களுக்குக் கூறுவேன். நாம் வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தில் பார்ப்போம், சரியாக அடுத்த பக்கத்தில் உள்ளது. வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரம் 11-ம் வசனம். பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய (“தூதர்கள்” என்று பன்மையில் உள்ளது) சத்தத்தைக் கேட்டேன். (“மற்றும்” என்ற இணையிடைச் சொல் ஆங்கிலத்தில் உள்ளது.) 255 பாருங்கள், “and” என்பது ஆங்கில இணையிடைச் சொல்லாகும். புரிகிறதா? அந்த ஜீவன்கள் என்னப்பட்டவைகள் தூதர்கள் அல்ல, அவைகள் மூப்பர்களுமல்ல; அவைகள் சிங்காசனத்தில் அருகிலிருந்த “ஜீவனுள்ள சிருஷ்டிகள்!” ஓ, நீங்கள் அதை நேசிக்கவில்லையா? ஜீவனுள்ள சிருஷ்டிகள்! தூதர்களல்ல, ஏனெனில் பின்வரும் வசனத்தில் அதைப்பற்றி நிரூபிக்கிறது, பாருங்கள்: பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும், ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்…
111256 இங்கே மூன்று வெவ்வேறு வகையினங்கள் உள்ளன. இவ்வமைப்பை நீங்கள் யாவரும் இப்பொழுது இங்கே குறித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது நான் அதை உங்களுக்கு காட்ட விரும்புகிறேன். அங்கே மூன்று வெவ்வேறு வகையினங்கள் உள்ளன, மூன்று வெவ்வேறு உயிரினங்கள் சிங்காசனத்தைச் சுற்றிலும் உள்ளன. (இப்பொழுது, பாருங்கள்) 257 இதோ இங்கே சிங்காசனம் உள்ளது. இப்பொழுது இங்கே முதலில் சிங்காசனத்தின் அருகில் இருப்பவை நான்கு ஜீவன்கள் ஆகும். அதற்கு வெளியே இருபத்து நான்கு மூப்பர்கள் (அந்தவிதமாக) தங்களுடைய சிறியதும், கீழாக இருக்கிறதுமான சிங்காசனங்களின் மேல் அமர்ந்திருந்தனர். இதையெல்லாம் சுற்றி, இந்த பெரிய சேனையாகிய தூதர்கள் சிங்காசனத்தைச் சூழ்ந்து நின்றார்கள். நான் கூறுவதைப் புரிந்து கொண்டீர்களா? அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகைப்பட்டவர்கள். அங்கே தூதர்கள் உள்ளனர். இங்கே மூப்பர்கள் உள்ளனர்; இங்கே ஜீவனுள்ள சிருஷ்டிகள் உள்ளன.
112258 நாம் ஒரு நிமிடம் அதை விட்டு விலகிச் செல்லாதிருப்போமாக. நாம் அப்படியே ஒரு நிமிடம் அங்கே பற்றிக் கொண்டிருப்போமாக. “ஜீவனுள்ள சிருஷ்டிகள்”. அந்த ஜீவனுள்ள தூதர்கள் அல்லது மீட்கப்பட்ட மனிதர் அல்லாவிடில் அவர்கள் யார்? அதை நீங்கள் அறிய விரும்புகின்றீர்களா? இதோ அதைப்பற்றி என்னுடைய வியாக்கியானம். அது சரியானது என்று நான் நம்புகிறேன். இதுதான் அதன் அர்த்தம் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தேவனுடைய சிங்காசனத்தைக் காக்கும் தேவனுடைய காவலர்களாயிருக்கிறார்கள். இப்பொழுது நாம் இதை சற்று கரும்பலகையிலிருந்து அழிக்கப் போகிறோம். இப்பொழுது நீங்கள் பாருங்கள், அவர்கள்—அவர்கள் தூதர்களோ, மனிதரோ அல்ல. அவைகள் சிருஷ்டிகள். “ஜீவனுள்ள சிருஷ்டிகள்” ஆகும். 259 இப்பொழுது, இதோ இங்கே தேவனுடைய சிங்காசனம் உள்ளது. இதோ இவைகள் அவருடைய காலவர்கள் ஆவர். இன்னும் சில நிமிடங்களில், அதைப் பற்றி கூறும் வசனத்தை நாம் சிறிது வாசித்து பார்ப்போமாக. பாருங்கள், அவர்கள் தேவனுடைய தூதர்கள், இல்லை, தேவனுடைய சிங்காசனத்தைக் காக்கும் தேவனுடைய காவலர்கள் ஆவர். அவர்கள்… ஒரு நிமிடத்தில் அதைப் பரிந்து கொள்வோமாக. நாம் எசேக்கியல் தீர்க்கதிரிசியின் புத்தகத்திற்கு திரும்பிப் போவோம். நாம் இவைகளைப் பற்றிப் புரிந்து கொள்ள நான் எழுதிக் குறித்து வைத்துள்ளேன். அவைகளைப் பற்றிப் பார்க்காமல் கடந்து செல்ல நான் விரும்பவில்லை. இது ஒரு…நான் அறிவேன்… [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] நாம் எசேக்கியல் 1-ம் அதிகாரம் 12-ம் வசனத்தில் ஆரம்பித்து 17-ம் வசனம் முடிய உள்ளதை ஒரு நிமிடத்தில் பார்ப்போம். அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது…
113260 நாம் இப்பொழுது இன்னும் சில நிமிடங்களில் பார்க்கப் போகிறோம்…நீங்கள் இங்கே இந்த 7-ம் வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இப்பொழுது அவைகளின் தோற்றம், எதற்கொப்பாய் “அந்நான்கும்” இருந்தன என்பதை வெளிப்படுத்தின விசேஷத்தின் அதே அதிகாரத்தின் 7-ம் வசனத்தில் பார்ப்போம். முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன. 261 எசேக்கியல் தேவனுடைய மகிமையைக் கண்டபோது அவன் யோவான் கண்ட அதே காரியத்தையே கண்டான். கடந்த ஞாயிறன்று, தேவனுடைய மகிமையைப் பற்றியுள்ளதை நாம் எவ்வாறு பெற்றுக் கொண்டோம் என்றும், நம்மோடு கூட அதின் படம் எடுக்கப்பட அவர் செய்தார் என்றும் பார்த்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அதை நினைவில் வைத்திருக்கிறீர்களா? “தேவனுடைய மகிமையை” எசேக்கியல் எவ்வாறு இருக்கக் கண்டானோ, அதே விதமாகத்தான் யோவானும் கண்டான், இன்றும் இங்கே அவ்வாறு அது இருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவை எசேக்கியலின் காலத்திலும் மாறாதவராகவும், இப்பூமியில் அதேவிதமாகவும், இன்று நம்மோடு அதே தேவனாக இருக்கவும் செய்கிறது. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருப்பதைக் காண்பிக்கிறது. இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவராகக் காண்பிக்கிறது. ஆத்துமா, சரீரம், ஆவி ஆகியவற்றுக்குள் பிரவேசிக்கும் வாசலான (வார்த்தையாகிய) வெண்கலக் கடல் தொட்டியாக அவர் இருக்கிறார். நமது ஆத்துமாவை பரிசுத்தமாக்குபவராகவும், பரிசுத்த ஆவியினால் நிரப்புகிறவருமாகவும் இருக்கிறார். யாவும் அவரேதான், அவரே தான். பாருங்கள்.
114262 இதை இப்பொழுது கவனியுங்கள். சரி: …ஆவி போக வேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப் பார்க்கவில்லை. 263 அவைகளால் திரும்ப முடியவில்லை. இவைகள் இந்த வழியாக செல்லுமென்றால், அது ஒரு மனிதனைப் போல போயிற்று, இந்த வழியாகக் செல்லுமென்றால், அது ஒரு கழுகைப் போல் போனது: இந்த வழியாகச் செல்லுகிறதென்றால், அது ஒரு காளையைப் போல் போயிற்று; இந்த வழியாகச் செல்லுமென்றால் ஒரு சிங்கத்தைப் போல் போனது. அவைகளால் பின்னால் செல்ல முடியவில்லையே! சென்ற எவ்விடத்தும் அந்த ஜீவன்கள் ஒவ்வொன்றும் முன்னோக்கியே போக வேண்டியதாயிருந்தது. இப்பொழுது வேதத்தில் ஒரு மிருகம் எதைக் குறிக்கும்? வல்லமையைக் குறிக்கும். சரி, “ஒரு வல்லமையைக் குறிக்கும்”.
115264 இப்பொழுது: ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது. அது தேவனாயிருக்கிறது. அக்கினியிலிருந்து ஒளி புறப்பட்டுச் சென்றது; இயலுல ஒளியல்ல, இப்பொழுது, அது நித்திய ஒளி. அந்த ஜீவன்கள்… (நாம் இதைப் பார்ப்போம்)… அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல் ஓடித்திருந்தன. நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன். சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தன; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாபோல இருந்தது. 265 “சகோதரன் பிரான்ஹாம், இந்த அடையாளம் இங்கே என்னவாயிருக்கிறது? அது என்னவாயிருக்கிறது?” என்று கேட்பீர்கள். அதன் அர்த்தம் என்னவெனில் இக்காவலர்கள் தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டி… அவைகளை எசேக்கியல் கண்டபொழுது, அவைகள் தங்களில் சக்கரங்களைக் கொண்டிருந்து, பயணம் செய்து கொண்டு இருந்தன. ஆனால் யோவான் அவைகளைக் கண்டபொழுதோ, அவைகள் ஏற்கனவே பரலோகத்தில் அவைகளுக்குரிய சரியான ஸ்தானத்தை வந்தடைந்து விட்டன. தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியானது பூமியில் இருந்தபொழுது, சக்கரங்களினாலும் ஓடித் திரிந்தது, அவர்கள் அதை இடம் விட்டு இடம் எடுத்துச் சென்றனர், அது பயணம் செய்து கொண்டேயிருந்தது. அவர்கள் அதை வனாந்தரத்தின் வழியாகவும், ஆலயத்திற்குள் போகிற வரையிலும், வழி நெடுகிலும் அதை எடுத்துச் சென்றனர், ஆனால் இப்பொழுது அது உன்னத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. ஏனெனில் சபைக்காலமானது முடிவடைந்து விட்டது. அது மகிமையில் ஏறெடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. பார்த்தீர்களா? அது பரலோகத்தில் இப்பொழுது ஸ்திரமாக அமைந்து விட்டது. அதைச் சுற்றி தூதர்களும் மற்றும் இன்னபிறவும் சூழ்ந்திருக்கத்தக்கதாக உள்ளது. சற்றுப் பொறுத்து, அவர்கள் தங்கள் கிரீடங்களை எடுத்து விட்டு, முகங்குப்புற விழுந்து, அவருக்கு மகிமையைக் கொடுத்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். பார்த்தீர்களா? அவர்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள உடன்படிக்கைப் பெட்டியின் காவலர்கள் தாமே.
116266 இப்பொழுது, இவர்கள் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் அல்லது கிருபாசனத்தின் காவலர்கள் என்பதை நினைவிக் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். யோவான் எத்தனைப் பேர்களைப் பார்த்தான்? நான்கு பேர்கள். எத்தனை பேர்களை எசேக்கியல் கண்டான்? அவனும் கூட நான்கு பேர்களையே, நான்கு ஜீவன்களைக் கண்டார்கள் என்பதை இப்பொழுது கவனியுங்கள். 267 நான்கு என்ற எண்ணானது பூமிக்குரியதாயிருக்கிறது. அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? எத்தனை பேர் நான்கு என்ற எண் பூமிக்குரியது என்று அறிவீர்கள்? நான்கு என்ற எண்ணானது பூமிக்குரிய எண்ணாகும். நிச்சயமாக! நான்கு எபிரெய…போல்…அது பூமிக்குரிய ஒரு எண்ணாக இருக்கிறது. அது “விடுதலையைக்—விடுதலையைக்” குறிக்கும் ஒரு எண்ணாக இருக்கிறது. “விடுதலை” என்பதை நீங்கள் உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நான் இன்னும் ஒரு நிமிடத்தில் மிகவும் தீவிரமாக அதை விளக்கிக் கூறப்போகிறேன். “விடுதலை” என்பதைப் பாருங்கள். அக்கினிச் சூளையினுள்ளே மூன்று எபிரேயப் பிள்ளைகள் இருந்தனர். ஆனால் நான்காவதாக ஒருவர் அங்கே வந்தபோதோ, அது விடுதலையாயிருந்தது. லாசரு மூன்று நாட்கள் கல்லறையில் இருந்தான்; ஆனால் நான்காவது நாள் வந்தபொழுதோ, அவன் விடுவிக்கப்பட்டான். ஆகவே நான்கு “விடுதலையை” அளிக்கும் தேவனுடைய எண்ணாக இருக்கிறது. ஆகவே இந்நான்கு ஜீவன்களும் கூட நிச்சயமாக பூமிக்கு சம்மந்தமுள்ளதாகத்தான் இருக்க வேண்டும் என்பதைத்தான் இது காண்பித்துள்ளது. 268 இப்பொழுது நீங்கள் பசியாயிருக்கவில்லை என்று நான் நம்புகிறேன். உங்களுடைய ஆவிக்குரிய பசியானது இயற்கையான சரீரப்பிரகாரமான பசியை விட மேலானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? சரி.
117269 இப்பொழுது கவனியுங்கள், “அவைகளுக்கு கண்கள் இருக்கின்றன” (இங்கே எசேக்கியலில்) “முன்புறத்திலும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.” அதைப் பற்றி நாம் சற்று வாசிப்போம். இங்கே பாருங்கள். பாருங்கள். நீங்கள் இங்கே காண்கிறீர்கள், இங்கே நான்கு முகங்களுடைய “ஜீவன்களைப்” பற்றி அவர்கள் பேசினார்கள் என்று நான் நினைக்கிறேன், அதாவது கழுகைப் போலுள்ளது, …செட்டைகள், உள்ளும் புறம்பும் கண்களால் நிறைந்திருந்தன. இங்கே பாருங்கள்: அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும்… 270 “அவைகள் பறந்து சென்றன.” “அவைகள் சுற்றிலும் உள்ளேயும் பின்புறமும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன”. அவைகளுடைய விவேகத்தைப் பற்றி அது பேசுகிறது. அவைகள், என்ன இருந்தது, இருப்பது, வரப்போகிறது என்பதைப் பற்றி அறிந்திருந்தன. ஏனெனில் அவைகள் சிங்காசனத்தின் அருகிலே மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. எனவே அவைகள் மானிடருமல்ல. (ஆலய காவலர்கள்…அல்ல அவர்கள் ஆலய காவலர்கள் அல்ல. ஆலயக் காவலர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களாவர்.) ஆனால் இவைகளோ கிருபாசனத்தின் காவலர்களாவர், சிங்காசனத்தின் காவலர்கள் ஆவர். தேவனுக்கு அடுத்து, சிங்காசனத்தின் அருகில் இருப்பவைகள்தான் அந்த “ஜீவனுள்ள சிருஷ்டிகள்,” தேவனுக்கு அடுத்தபடியாக உள்ளன. அவைகள் அங்கே நின்றுகொண்டிருந்தன. இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர் யார் என்பதை அறிந்த விவேகமுள்ளவைகளாய் உள்ளன. அவைகள் தங்களில் “புறம்பே கண்களை” உடையவைகளாய் இருந்தன; எனவே அவைகளால் என்ன வரப்போகிறது என்பதை காண முடியும் என்பதைக் காட்டுகிறது; “உள்ளே கண்களால்” நிறைந்திருந்தன என்றால், இப்பொழுது இருக்கிறதையெல்லாம் அவைகள் அறிந்திருக்கின்றன என்பதைக் காட்டுகிறது; “பின்னால் கண்கள்” இருக்கின்றன என்றால், என்ன இருந்தது, நடந்தது என்பதை அவைகள் அறிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. இருந்ததையும், இருப்பதையும் வரப்போகிறதையும் அறிந்துள்ள இவைகள் “இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாகிய நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற” இயேசு கிறிஸ்துவை சபைக்காலங்களில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.
118271 அவைகளைப் பற்றி அப்படியே கவனித்துக் கொண்டேயிருங்கள். இன்னும் சில நிமிடங்களில் நாம் அதைப்பற்றி விரிவாக கரும்பலகையில் வரைந்து பார்க்கப் போகிறோம். அதைக் கவனியுங்கள். இப்பொழுது, இன்னும் ஒரு நிமிடத்தில்… 272 அவைகளுடைய விவேகத்தைக் குறித்து வெளிப்படுத்தப்படுகிறது. அவைகள் அறிந்திருக்கிறதைப் பற்றி அது காண்பிக்கிறது. அவைகளுக்கு எதிர்வரும் காலத்தைக் குறித்தும், நிகழ்காலத்தைக் குறித்தும், கடந்த காலத்தைக் குறித்தும் எல்லாம் தெரியும். 273 அவைகளுடைய…களைப்படைவதில்லை. அவைகள் ஒருபோதும் களைப்படைவதேயில்லை. மனுஷ சம்மந்தமாக அவைகளிடம் ஒன்றுமில்லை; மனிதனோ களைப்படைகிறான். ஆனால் அவைகளோ களைப்படைவதேயில்லை. அவைகள், “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்! பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்! சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்! பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்!” என்று இரவும் பகலும், ஒவ்வொரு காலத்திலும் ஓயாமல் துதித்துக் கொண்டேயிருக்கின்றன. “பரிசுத்தர்!”
119274 நாம் ஒரு நிமிடம் திரும்பிச் செல்வோம். என் மனதில் ஒரு வேதவாக்கியம் இருக்கிறது, ஒரு நிமிடத்தில் அதற்கு நாம் திரும்பிச் செல்வோம். ஏசாயா 6-ம் அதிகாரத்தை விரைந்து எடுத்துக் கொள்வோம். கவனியுங்கள். சரியாக அதே விதமாக அதே காரியத்தை ஏசாயா கண்டான். 275 கர்த்தரின் ஒவ்வொரு தரிசனமும்…அதைக் குறித்துத்தான் கூறுகிறேன். இன்று நமக்கு கிடைக்கும் தரிசனங்கள் வேதாகம தரிசனங்களுக்கு சரியாக இல்லாவிடில், அவைகள் தவறாக இருக்கும். அவர் என்னவாயிருந்தாரோ அதற்கு மாறாக அத்தரிசனங்கள் பிரதிபலிக்குமெனில், அல்லது எந்தவொரு வெளிப்படுத்துதலும், தேவன் என்னவாயிருந்தாரோ அதற்கு மாறாக இருக்குமெனில், அப்பொழுது அது தவறான வெளிப்பாடாகவே இருக்கும். மத்தேயு 17-ம் அதிகாரத்தின்படி, சபையானது முழுவதும் வெளிப்படுத்துதலின் மேல் தான் கட்டப்பட்டுள்ளது.
120276 நாம் ஏசாயா 6-ம் அதிகாரத்தைப் பார்ப்போம். இந்த வாலிப தீர்க்கதசியானவன் அப்பொழுது இருந்த அந்த நல்ல அரசனின் ஆதரிக்கும் கரத்தில் நிம்மதியாக சாய்ந்து இருந்தான். அந்த அரசன் அவனுக்கு எல்லாவிதமான அருமையான வஸ்திரங்களையெல்லாம் வாங்கிக் கொடுத்திருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். அவன் முன்னேறிச் சென்று கொண்டேயிருந்தான். ஆனால் ஒரு நாள் அரசன் மரித்து விட்டான். எனவே அவன் தனக்காக இடமாற்றம் செய்ய வேண்டியது வந்தது. எனவே அவன் ஜெபம் பண்ணுவதற்காக ஆலயத்திற்கு சென்றான். ஏனென்றால் இராஜாவினுடைய இடத்தில் இருந்து வந்த அவன் அங்கிருந்து வெளியேறிட வேண்டியதாயிற்று. வயது சென்ற அந்த நல்ல அரசன் ஒரு நல்ல பரிசுத்த மனிதனாக இருந்தான். ஏசாயா வெளியே வந்து மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதைக் கண்டு, அவன் ஆலயத்திற்குச் சென்றான். இப்பொழுது கவனியுங்கள். உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. 277 மகிமை! அவருடைய “வஸ்திரத்தொங்கல்” என்பது என்ன? இதோ அதற்கான விளக்கம் இது தான்; அது “தூதர்கள், ஜீவன்கள்” ஆகும். அவரைப் பின்பற்றின அவருடைய வஸ்திரத் தொங்கல். பின்னால் வருகிற வஸ்திரத்தொங்கல், புரிகிறதா? …அவருடைய வஸ்திரத் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களைமூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. 278 என்னே! ஓ, என்னே! அம்மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சரியாக அதே காரியம் தான் தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது என்பதை இக்காட்சி காண்பிக்கிறது. “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்!” என்று அந்த ஜீவன்கள் களைப்படையாமல் இரவும் பகலும் ஓயாமல் “பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தர் பரிசுத்தர்!” என்ற சொல்லிக்கொண்டேயிருக்கின்றன.
121279 நாம் இப்பொழுது இன்னும் ஒரு நிமிடத்தில் வேதத்தில் இந்த ஜீவன்களைப் பற்ற் அறிந்து கொள்ள சற்று பின்னால் திரும்பிப் போவோம். வேதத்தில் முதல் முறையாக ஆதியாகமத்தில் தான் இந்த காவலர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொழுது, ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், நாம் பிரசங்கிக்கும் ஒவ்வொரு விஷயமும் ஆதியாகமும் முதற்கொண்டு வெளிப்படுத்தின விசேஷம் முடிய உள்ளதாக இருக்க வேண்டும். இவ்விஷயத்தில் எப்பொழுதாவது ஏதாவது கேள்வி இருக்குமானால், நீங்கள் என்னிடத்தில் வந்து கேட்கலாம். புரிகிறதா? தேவன் மாறாதவராயிருக்கிறார், எனவே எந்தவொரு விஷயமும் முழு வேதாகமத்தின் அடிப்படையிலும் இருக்கவேண்டுமேயல்லாது, வேதத்திலிருந்து அரைகுறையாக ஏதோ ஒரு பாகத்திற்குட்பட்டதாக இருக்கக் கூடாது. அவர் ஆதியாகமத்தில் என்னவாக இருந்தாரோ, இன்றைக்கும் அதேவிதமாகத்தான் இருக்கிறார்; அவர் நடுவிலுண்டான காலத்திலும் அவ்வாறு இருந்தார், அவர் எப்பொழுதும் மாறாதவராகவே இருக்கிறார். புரிகிறதா? இப்பொழுது ஆதியாகமத்தில் இருந்த கேரூபீன்கள்…அவைகளைப் பற்றி நான் அந்த விதமாகத்தான் தெரிந்து கொண்டேன். அவைகள் ஆதியில் எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றி பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டியதாயுள்ளது.
122280 நாம் இப்பொழுது சற்று ஆதியாகமம் 3:24க்கு திரும்புவோம். ஆதியாகமம் 3-ம், அதிகாரம் 24-ம் வசனம். நீங்கள் அதை விரும்புகிறீர்களா? [சபையார் “ஆமென்” என்று சொல்லுகிறார்கள்—ஆசி.] சரி. இப்பொழுது 22-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். நான்—நான் அதை விரும்புகிறேன். சிறிது கூடுதலாக இவ்வசனத்தை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் ஒரு நாளில் அது மிகவும் நன்மையான ஒரு காரியத்தைச் செய்யக்கூடும். பின்பு…கர்த்தர்: இதோ, மனுஷன்…நம்மில் ஒருவரைப் போல் ஆனான்… 281 இப்பொழுது, எனது அன்புள்ள, விலைமதிப்புள்ள, அருமையான சகோதரிகளே, (நான் இதை இவ்விதமாகக் கூறுவேனாக), உத்தமும், கருணையும், விலையுயர்ந்த அணிகலனாக உள்ள பெண்மையை நான் இழிவுபடுத்துவதாக நீங்கள் எண்ண வேண்டாம். ஸ்திரீயானவளைப் பற்றி, அவள் என்ன என்பதைப் பற்றி இங்கே நான் காண்பிக்க விரும்புகிறேன். தயவு கூர்ந்து கவனியுங்கள். ஒலி நாடாவில் செய்தியைக் கேட்கப் போகும் பெண்களே, நான் உங்களை அவமதித்து வெறுத்தொதுக்க முயன்றுகொண்டிருக்கவில்லை. நான் ஒளியைக் கொண்டு வரும் கர்த்தருடைய ஊழியக்காரனாக மாத்திரமே இருக்கிறேன். ஒரு பெண் கெட்டவளாயிருந்தால், அவள் தான் இப்பூமியில் இருக்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்குள்ளேயே மிகவும் கீழ்த்தரமானவளும், ஒழுக்கக்கேடான ஜென்மமாக இருக்கிறாள். ஒரு மனிதனுக்கு, அவன் அடைந்திருக்கும் இரட்சிப்புக்கு அடுத்தபடியாக, அவன் அடையும் மிகவும் விலையுயர்ந்த அணிகலன் எதுவென்றால், ஒரு நல்ல மனைவியேயாவாள். நான் தாழ்ந்த, ஒழுக்கக்கேடான, தரங்கெட்ட பெண்மணிக்கே இவைகளைக் குறித்துப் பேசுகிறேன். இதோ, இப்பொழுது நான் உங்களுக்கு அதைக் குறித்து காண்பிக்கப் போகிறேன், நான் ஏன்…நாம் இந்த காரியத்தில் இருக்கையில், பெண்கள் பிரசங்கிகளாகவும், மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் அல்லது சபையில் உள்ள எந்தக்காரியத்திலும் ஈடுபடக்கூடாது என்று ஏன் வேதாகமம் போதிக்கிறது என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். இப்பொழுது இதைக் கவனியுங்கள்:
123பின்பு…கர்த்தர்: இதோ, மனுஷன் ( இப்பொழுது, அவர் ஒருபோதும் “ஸ்திரியானவள் நம்மில் ஒருவரைப் போல் ஆனாள்” என்று கூறவில்லை, “மனுஷன் நம்மில் ஒருவரைப் போலானான்” என்றார்.) நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆனான் (ஸ்திரீ அப்படியாகவில்லை, அவள் வஞ்சிக்கப்பட்டாளே, நீங்கள் அதை புரிந்து கொள்கிறீர்களா?) 282 இப்பொழுது, பவுல், “உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கவில்லை …என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான். பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவள் வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்”. எனவே அவள் தேவனில் ஒருத்தியாக ஆகவில்லை. அவளுக்கு எந்த வேறுபாடுமே தெரியவில்லை, அவள் வஞ்சிக்கப்பட்டாள். உங்களுக்கு இது புரிகிறதா? நீங்கள் புரிந்துகொண்டால், “ஆமென்” என்று கூறுங்கள், எனவே நான்… [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவ விருட்சத்தின் கனியையும் பறித்து புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்ய வேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பி விட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவ விருட்சத்திற்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். (அங்கே நான்கு ஜீவன்களைப் பார்த்தீர்களா? கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு வழிகள் நீங்கள் செல்லத்தக்கதாக உள்ளன. இந்த கேருபீன்கள் வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தை ஏதேன் தோட்டத்து வாயிலில் பெற்றவைகளாய் இருந்தன.) எதற்கென்றால்… ஜீவவிருட்சத்துக்குப்போம் வழியைக் காவல் செய்யவே. 283 காரணம் மனிதன் அம்மரத்தை கையை நீட்டிப் பறித்து புசித்து விட்டால், அதன் பின்னர் என்றென்றைக்கும் உயிரோடிருந்து விடுவான்.
124284 இக்கேருபீன்கள் முதலில் குறிப்பிடப்பட்ட இடத்தில், ஏதேன் தோட்டத்தின் கிழக்கே உள்ள வாயிலில் வைக்கப்பட்டிருந்தன; அவைகள் நான்கு புறத்திலும் சென்றன. நான் அதை இதிலிருப்பதை விட சற்று வித்தியாசமாக வரைந்து காண்பித்திருக்க வேண்டும்; தேவனுடைய மாதிரிகளை நான் சரியானவிதமாக அதேவிதமாக வரைந்திட முடியாதுதான். ஆனால் நான் கூறுவதின் அர்த்தம் என்னவென்பதை அறிந்துகொள்வதற்காகத்தான் நான் இதை உங்களுக்கு வரைந்து காண்பித்திருக்கிறேன். அதோ அங்கே ஏதேன் தோட்டம் உள்ளது. இதோ இது தான் ஏதேன் தோட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கான திறந்து மூடும் அமைப்புள்ள வாயிற்கதவு ஆகும். இந்த வாயிற்கதவில் தான் கேருபீன்கள் உள்ளன. கேருபீன்கள் “ஒரு கேருபீன்” என்று அங்கே குறிப்பிடப்படவில்லை. “கேருபீன்கள்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. கேருபீன்கள் எதை காவல் காப்பதற்காக அங்கே வைக்கப்பட்டிருந்தன? ஜீவவிருட்சத்தை காவல் செய்ய ஜீவவிருட்சத்துக்கு போகும் வழியை காவல் செய்யத்தான் அவைகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அந்த வழி, யார் அந்த வழியாக இருக்கிறார்? [ஒரு சகோதரன், “இயேசு” என்று கூறுகிறார்.—ஆசி.] அது எங்கிருந்து கொண்டு பிரதிபலிக்கிறது? இதோ இங்கே பரிசுத்த ஸ்தலம் உள்ளது. இங்கேதான் கேருபீன்கள் உள்ளன. 285 இப்பொழுது கவனியுங்கள். இவைகள் யாவையும் குறித்துக் கொள்ளுங்கள். இதோ இங்கே மகா பரிசுத்த ஸ்தலம் உள்ளது. இதுதான் மகா பரிசுத்த ஸ்தலம், இது பரிசுத்த ஸ்தலம்; இதோ இங்கே இருப்பது கடல்தொட்டி, இங்கே இருப்பது விளக்காகும், இங்கிருந்து வரும் ஒளியை ஏழு குத்து விளக்குகள் பெற்று இங்கேயும், இங்கேயும், இங்கேயும், இங்கேயும், இங்கேயும், இங்கேயும், இருந்து பிரதிபலிக்கின்றன. பார்த்தீர்களா? அவைகள் எதை பிரதிபலிக்கின்றன? அவைகள் தேவனுடைய அக்கினியைப் பெற்று அதை பிரதிபலித்துக் கொண்டே, ஜீவ விருட்சத்துக்கு போகும் வழியை காவல் செய்து கொண்டிருக்கிறன. அவ்வொளியானது. இந்த இடத்திலிருந்து, அதாவது (பிரெஸ்பிடேரியன் வேதக்கருத்தரங்கிலிருந்தோ, அல்லது பெந்தெகொஸ்தே வேதக்கருத்தரங்கிலிருந்தோ) வந்திட முடியாது. அது இங்கிருந்து வரவேண்டும், அது ஒளியைத்தான் பிரதிபலிக்கிறது. சரி.
125286 யோவான் கண்ட இக்கேரூபீன்கள், ஜீவ விருட்சத்துக்கு போகும் வழியைக் காவல் செய்வதில் அக்கறையுள்ளவைகளாய் இருக்கின்றன என்பதை நீங்கள் கவனியுங்கள்; எனவே அவைகள் மானிடரில் அக்கறையுள்ளவைகளாகத்தான் இருக்க வேண்டும். ஆதியாகமத்தை திரும்பவும் எடுத்துக் கொண்டு அதிலிருந்து படியுங்கள். “அவைகள் ஜீவ விருட்சத்துக்கு போகும் வழியை காவல் காத்து நின்றன. ஜீவ வழி.” ஜீவ வழி! அவ்வழி எவ்வாறு உள்ளது? இயேசு, “நானே வழி. வானத்திலிருந்து தேவனிடமிருந்து வந்த அப்பம் நானே, ஒருவன் இந்த அப்பத்தைப் புசித்தால், அவன் என்றென்றும் ஜீவிப்பான்” என்றார். இப்பொழுது, ஜீவ விருட்சத்துக்கு திரும்பிப் போவதற்கு ஒரு வழி உண்டாயிருக்கிறது. அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? 287 இப்பொழுது இங்கே நான் உங்களுக்கு இது ஒரு பலிபீடமாக இருக்கிறது என்பதை காண்பித்து, அதை நிச்சயப்படுத்த விரும்புகிறேன். இதுதானே ஏதேன் தோட்டத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பலிபீடமாக இருந்திருக்க வேண்டும். அது எப்படி என்பதை நான் உங்களுக்கு கூறுவேன். காயீன், ஆபேல் ஆகிய இருவரும் தொழுதுகொள்வதற்காக இங்கேதான் வந்தார்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? எனவே பலிபீடமானது எடுத்து ஏதேன் தோட்டத்தின் வாயிலில் வைக்கப்பட்டது என்பதையும், ஏதேனுக்குள் திரும்பவும் செல்வதற்கு உரிய ஒரே வழியாக இந்த பலிபீடமே உள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இதோ இங்குதான் உங்கள் காரியம் மீண்டும் உள்ளது, பாருங்கள், ஏதேனுக்கு பலிபீடத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதை திரும்பவும் இங்கே பார்க்கிறோம். இந்த பலிபீடமானது இரத்தத்தால் மூடப்படாத வரையிலும், எவரும் உள்ளே பிரவேசிக்கக் கூடாதபடி, அவைகளை போகும் வழியை அவைகள் காத்துக் கொண்டு, அதைக் காவல் செய்ய வேண்டியதாயிருந்தது. 288 (ஓ தேவனே, ஜனங்களால் அதைக் காண முடியாதா?) பாருங்கள், இரத்தம் இல்லாமல் வேறொன்றுமில்லை. அங்கே ஒரு பாவநிவிர்த்தி இருந்தாக வேண்டும், இந்த நியாயத்தீர்ப்பு ஆசனமானது கிருபாசனமாக ஆகிடவேண்டும். இந்த பலிபீடத்தின் மேலிருந்து இரத்தம் நீக்கப்பட்டதுமே, அந்த நியாயத்தீர்ப்பின் நாளிலே, மீண்டும் அம்மரத்தை பாதுகாக்க தேவனுடைய கோபாக்கினையாகிய அக்கினி நிற்கும். மீண்டும் ஏதேனுக்கு இந்த வாசல் வழியாக பிரவேசிக்க ஒரே ஒரு காரியம் தான் உண்டு, அது இயேசு கிறிதுவின் இரத்தத்தினூடாக மாத்திரமேயாம். உங்களுக்கு இது புரிகிறதா?
126289 இப்பொழுது கவனியுங்கள். ஆம், இப்பொழுது காயீன்…ஓ, இங்கே காயீன் இருக்கிறான், இதோ இங்கே ஆபேல் இருக்கிறான். சரி. இப்பொழுது, இந்த இரு வாலிபர்களும் இந்த வாசலண்டையிலே தொழுது கொள்வதற்காக வருகின்றனர். அது சரிதானே? எனவே அது தேவனுடைய பீடமாகத்தான் இருக்க வேண்டும், அப்படித்தானே? இந்த ஒரே பலிபீடத்திற்கு முன்பாக, பதிலியான ஒரு பலிபீடத்தை, வேறொரு பலிபீடத்தை அவர்கள் கட்டினர். இங்கே மனிதனுடைய இருதயத்தில் தான் தேவனுடைய உண்மையான பலிபீடம் உள்ளது. பிறகு, அங்கே இன்னொரு பலிபீடமுள்ளது. அது பரிசுத்த ஸ்தலத்திலுள்ள மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு அடையாளமாகத் திகழ்கிறது. 290 ஓ! ஓ! நான் இப்பொழுது அன்னிய பாஷையில் பேச வேண்டும் என உணருகிறேன். ஓ, என்னே, மகிமை…அது பரிபூரணமாயிருப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? சற்று கவனியுங்கள்! நான் அதைக் கூறியதின் காரணம் என்னவெனில், என்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த, எனது சொந்த ஆங்கில பேச்சு வழக்கில் அதை தெரியப்படுத்த, என்னிடம் போதுமான வார்த்தைகளை என்னால் கண்டறிய முடியவில்லை. பாருங்கள், ஏதோ ஒன்றை வெளிப்படுத்த வேண்டும்.
127291 சகோ.ரோ என்பவர் ஜனாதிபதிக்கு இராஜிய பிரதிநிதியாக இருக்கிறார். நான்கு அல்லது ஐந்து ஜனாதிபதிகளுக்கு அவர் ராஜ்ய பிரதிநிதியாக இருந்திருக்கிறார். அவர் இவ்வாறு கூறினார்: “ஓ சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் ஓர் இரவில் கூட்டத்திற்கு வந்தேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். ஓ, நான் கர்த்தரை என் ஆயுள் முழுவதும் நேசித்திருக்கிறேன். நான் ஒரு எபிஸ்கோபேலியன் சபையைச் சேர்ந்தவனாயிருந்தேன் என்று தான் கூறினார்” என (நான் நினைக்கிறேன்). தொடர்ந்து, “நான் கர்த்தரை அறிந்திருக்கிறேன் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு இரவுக் கூட்டத்தில் நான் என்ன செய்வது என்பதை அறியாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் எக்காரணத்தை முன்னிட்டும் உள்ளே போகமாட்டேன் என்று இருந்தேன். ஆனால் வார்த்தை உரைக்கப்படுவதை நான் கேட்டேன். ஓ, வார்த்தை வரத் துவங்கினது. நான் கூடாரத்திற்கு வெளியே மேலும் கீழும், முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தேன். அப்பொழுது கதவண்டையில் நேரடியாக வருவதற்கு நான் காத்திருக்க முடியாமல், பீட அழைப்பு விடுக்கப்பட்டபோது, அங்கே நான் அதன்கீழே தவழ்ந்து பீடத்தண்டை சென்று, கீழே விழுந்து, ‘கர்த்தாவே, நான் ஒரு பாவி’ என்று கூறினேன். அப்பொழுது அவர் தமது பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பினார்” என்று கூறினார். 292 அவர் மேலும், “எட்டு வெவ்வேறு மொழிகள் என்னால் பேச இயலும்”, என்று கூறினார். ஏனெனில் அவர் ஒரு ராஜபிரதிநியாயிருந்தவர். அவர் ஜனாதிபதிக்கு ராஜபிரதிநியாய் இருக்கிறார். உட்ரோ வில்சன் முதற்கொண்டு நமது ஜனாதிபதிகள் ஒவ்வொருவருக்கும் அவர் தூதராக இராஜபிரதிநியாய் இருந்து வந்திருக்கிறார். அவர் ஒரு அயலுறவுத்துறை ராஜபிரதிநியாய் இருப்பதால், எந்த அந்நிய நாட்டு பாஷையையும் பேச அவரால் முடியும். எனவே அவர், “நான் உலகில் அறியப்பட்டு எழுதப்படுகின்ற எந்த பாஷையையும் நான் பேச அறிந்தவனாயிருக்கிறேன்” என்றார். ஆனால் அவர், “நான் மகிமையால் நிறைந்தபொழுது, அவரைத் துதிக்க எனக்குத் தெரிந்த அந்த பாஷைகளில் எந்தவொன்றையும் என்னால் உபயோகிக்க முடியவில்லை, எனவே கர்த்தர், அவரைத் துதிப்பதற்காக புத்தம் புதிய பாஷையை பரலோகத்திலிருந்து எனக்குத் தந்தருளினார்” என்று கூறினார். ஓ! ஓ! அங்குதான் உங்கள் காரியமே உள்ளது.
128293 “இந்த வாயிலை அவைகள் காவல் காத்துக்கொண்டிருந்தன”. காயீனும் ஆபேலும் இந்த இடத்திற்கு ஆராதிப்பதற்காக வந்தனர். எனவே இந்தக் கேருபீன்கள் காவல் காத்துக் கொண்டிருந்த இது பலிபீடமாகத்தான் இருக்க வேண்டும். அது சரிதானே? 294 இன்னொரு காரியம், இங்கே இன்னொரு அத்தாட்சி உள்ளது. காயீன்…இப்பொழுது வேதாகமத்தை கவனியுங்கள். வேதத்தில் அப்பகுதிக்கு நீங்கள் திருப்ப வேண்டும் என்று நான் விரும்புவேன். ஆனால் அது இருக்கட்டும், அதை நீங்கள் ஆதியாகமத்தில் பார்க்கலாம். சரி, கவனியுங்கள். காயீன் புறப்பட்டு வெளியே போனான். காயீன் ஏதேன் தோட்டத்திலுள்ள வாசலை விட்டு கர்த்தருடைய சமூகத்தினின்று அகன்று சென்று விட்டான். ஆகவே, கர்த்தருடைய பிரசன்னம் வாசலண்டையில் உள்ள அந்த பீடத்தண்டையில்தான் இருந்தது. மகிமை! ஓ! சரி. அது தேவனுடைய வாசஸ்தலமாய், அவருடைய பீடத்தண்டையில் இருந்தது. காயீன் இந்த இடத்திலிருந்து, கர்த்தருடைய சமுகத்தை விட்டு அகன்று போனான். நீங்கள் அதை குறித்துக் கொள்ள விரும்புகிறீர்களா? ஆதியாகமம் 4:16, நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால் அதைக் குறித்துக்கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் இவை யாவையும் எழுதிக் கொண்டீர்களா? 295 இப்பொழுது நான் இன்னொரு விஷயத்தை இங்கே ஒரு நிமிடத்தில் படம் வரைந்து காட்ட விரும்புகிறேன். உங்களுடைய ஆகாரம் கெட்டுப்போய்விடாது என்று நான் நம்புகிறேன், அல்லது உங்களுடைய எந்தகாரியமோ…இப்பொழுது கவனியுங்கள்… அது அழியப் போவது தான். ஆகவே அவைகள் கெட்டுப்போகட்டும். பரவாயில்லை. ஆனால் இங்கே இந்த மெய்யான காரியத்தைப் பற்றி நாம் எண்ணிப் பார்ப்போமாக.
129296 மோசே பரலோகத்திற்கு கொண்டு செல்லப்பட்டான், மோசே பூலோகத்திலிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கருத்தை இங்கே நிரூபிக்க விரும்புகிறேன். அது சரிதானே? நான் என்னுடைய கருத்தினை இங்கே நிரூபிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். நான் என்ன செய்ய முயன்று கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அறியவில்லையா? சரி. அவன் தேவனுடைய பிரசன்னத்திற்குள் சென்றான். தேவனுடைய சமுகத்தை விட்டு அவன் கீழே இறங்கி வந்தபோது, தேவன் மோசேயிடம், “பரலோகத்தில் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே எல்லாவற்றையும் செய்” என்றார். அப்படித்தானே? சரி. 297 அப்பொழுது அவன் அதைச் செய்தபொழுது, அவன் உடன்படிக்கைப் பெட்டியைச் செய்தபோது, அதன்மேல் பெட்டியை காவல் செய்ய இரு கேருபீன்களையும் வைத்தான். அது என்னவென்று பார்த்தீர்களா? அது ஆலயமாயிருக்கிறது…அது பலிபீடமாயிருந்தது…சிங்காசனத்தைக் காவல் செய்பவைகளாய் இருக்கிறது. அவ்விரண்டு கேருபீன்களையும், அவர் “வெண்கலத்தில் அவைகளைச் செய்வித்து, அதன் செட்டைகள், இவ்வண்ணமாக தொடும்படி செய்வாயாக” என்று கூறினார். ஏனெனில், அதே விதமாகத்தான் மோசே பரலோகத்தில் கண்டான். 298 அதேவிதமாகத்தான் யோவானும் பரலோகத்தின் இந்த நான்கு கேருபீன்களையும் கண்டான். பரலோகத்திலுள்ள சிங்காசனத்தின் உடன்படிக்கைப் பெட்டியின் நான்கு பக்கங்களிலும் அவைகளை அவன் கண்டான். அவைகள் உடன்படிக்கைப் பெட்டியின் காவலர்கள் ஆவர். இந்த கேருபீன்கள் கிருபாசனத்தின் மீதில் காவலர்களாய் உள்ளனர். 299 நீங்கள் அவ்வேதவாக்கியத்தை வாசிக்க விரும்பினால், (நமக்கு அதை வாசிக்க போதிய நேரம் இருக்கவில்லை), எனவே யாத்திராகமம் 25:10 முதல் 22 வரை என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 300 தேவன் தம்முடைய ஷெக்கினா மகிமையில் இருந்தபோது, அவைகள் கிருபாசனத்தின் மீதில் காவல் செய்தன. ஷெகினா மகிமையானது எங்கே இருந்தது? கிருபாசனத்தின் மீதில். அது சரிதானே? அவைகள் ஷெகினா மகிமையைக் காவல் செய்தன. உம்ம், வ்யூ! நண்பரே! செவி கொடுங்கள், இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், எந்தவொரு கயவரும் அங்கே உள்ளே நுழைந்து அதில் பங்குபெற முடியாது, அதனுடைய பிரசன்னத்திற்குள் நீங்கள் வரவேண்டுமானால், நீங்கள் முன்கூட்டியே ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்.
130301 ஆரோனை முன்னடையாளமாகப் பாருங்கள். அந்நாட்ளில் சபையார் எந்தவிதத்திலும் கிட்ட நெருங்கிச் சேரக்கூட முடியாது. ஆனால் ஆரோன் உள்ளே பிரவேசித்தபொழுது…எத்தனை தடவைகள் அவன் அதற்குள்ளே உள்ளே பிரவேசித்தான்? வருடத்திற்கொரு முறைதான். அவ்வாறு அவன் உள்ளே பிரவேசிக்கும் பொழுது, விசேஷத்த கரங்களால் விசித்திரமாக உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிந்தவனாய் அவன் உள்ளே பிரவேசிக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் அவன் உடையுடுத்தியிருக்க வேண்டும். அவன் ஆடையில் மாதுளையும், மணியும் பொன்னால் செய்யப்பட்டிருந்து தொங்கிக் கொண்டிருந்தன; அவன் ஒவ்வொரு முறையும் உள்ளே நடந்து சென்றபோது அவைகள், “கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று இசைத்துக்கொண்டேயிருந்தன. அவன் அவ்வாறு இரத்தத்தோடு கிருபாசனத்தை அணுகிக் கொண்டிருந்தான். 302 சாரோனின் ரோஜாவிலிருந்து செய்யப்பட்ட குறிப்பிட்ட பரிமளவர்க்கத்தினால், பரிமளவர்க்கமிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணெயினால், ஆசாரியன் அபிஷேகிக்கப்பட்டிருக்க வேண்டும். இயேசு சாரோனின் ரோஜாவாயிருந்தார். கவனியுங்கள், ஒரு ரோஜாமலரானது தன்னில் வாசனையைக் கொண்டிருக்கும் ஒரு அழகான மலராகும். ஆனால் அம்மலரிலிருந்து வாசனைத் திரவியமானது வெளிவரும் முன்னர், ரோஜா மலரானது நசுக்கிப் பிழியப்பட வேண்டும். அவ்வாறு நசுக்கப்பட்டு, வாசனைத் திரவியமானது பிழிந்தெக்கப்படுகிறது. இயேசுவானவர் தன்னுடைய ஜீவியத்தில், இதுவரையில் வாழ்ந்த எந்தவொரு நபருடைய ஜீவியத்தைவிட மிகவும் அழகான ஜீவியத்தை உடையவராயிருந்தார். ஆனால் அவரால் அந்தவிதமாகவே நிலைத்திருக்க முடியவில்லை. ஏனெனில், அவர் தன்னுடைய சபையை, அது (அவருடைய பரிசுத்தத்தை அணுகுவதற்காக), அபிஷேகிக்க வேண்டியதாயிருந்தது. எனவே அவரது ஜீவனானது பிழிந்தெடுக்கப்பட்டது. அவர்மேல் இருந்த அதே பரிசுத்த ஆவி சபையின் மேல் பொழிந்தருளப்பட்டது. அதனால் அவரை அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதாராயிருக்கிறார் என்பதாகவும், வாசனை மிகுந்த சாரோனின் ரோஜாவாகவும் ஆக்குகிறது. இந்த மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசிக்கும் நபர் எவரும் அதே பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட வேண்டும். அந்நபர் அவ்வாறு உள்ளே பிரவேசிக்கையில், “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று கூறுகிறான். (இதை அவன் தன் வாயில் சுருட்டை வைத்துக் கொண்டே சொல்லுவதில்லை.) “பரிசுத்தர்!” என்று கூறுகையில், (தன் சட்டை கழுத்துப் பட்டையை உயர்த்தியபடி அல்ல,) “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று கூறுகையில் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த அலங்காரத்தில் உரைத்துக் கொண்டே பிரவேசிக்கிறான். உம்ம்! நீர் எவ்வளவு அற்புதமானவராயிருக்கிறீர்! ஓ!
131303 இப்பொழுது “கிருபாசனம்”. இப்பொழுது கிருபாசனமானது இருதயத்திலுள்ளது. அங்கே அவரது—அவரது மகிமையானது, ஷெகினா மகிமையானது அவரது பிள்ளைகளில் யாவரிலும் மானிட இருதயத்தினுள் பிரகாசித்துக் கொண்டேயிருக்கிறது. இங்கே மனுஷ இருதயம் இருக்கிறது. அது சரிதானே? அது கிருபாசனம் தானே? அதனுள் நீங்கள் அந்தப் பல்வேறு அமைப்புகள் வழியாக உள்ளே பிரவேசிக்கிறீர்களா? சுய விருப்பம்—சுய விருப்பத்தின் வழியாக அதனுள் பிரவேசிக்கிறீர்கள். இங்கு உள்ளே வருகிறது, அங்கே அதனூடாக, அங்கிருந்து என்ன புறப்பட்டு வருகிறது? ஷெகினா மகிமைதான். ஷெகினா மகிமை என்பது என்ன—என்ன? அது தேவனுடைய பிரசன்னமாக இருக்கிறது. அந்நிலையில் ஒரு மனிதனோ அல்லது பெண்மணியோ நடந்து செல்லுகையில், அவன் ஷெகினா மகிமையை பிரதிபலித்துக் கொண்டே செல்லுகிறான். அவன் சூதாட்ட சாலைகளுக்குச் செல்லுவதில்லை. அவ்வாறெல்லாம் நடந்து கொண்டு, தேவனுடைய வார்த்தையை மறுதலித்துக் கொண்டு அவன் இருப்பதில்லை. ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைப் பற்றி பொருட்படுத்தாமல் அவன் இருதயமானது ஒரே காரியத்தில் நிலைத்திருக்கிறது. அதுவே தேவன் ஆகும். அவன் தேவனால் உண்மையாக அழைக்கப்பட்டிருந்தால், அப்பொழுது அவர் தம்மையே அந்நபர் மூலமாக ஷெகினா மகிமையைக் கொண்டு பிரதிபலித்துக் காண்பிக்கிறார்; கடந்த காலத்தில் அவர் செய்த அதே கிரியைகளை மீண்டும் செய்கிறார். அதன் மூலமாக அதே சுவிசேஷத்தை வெளிப்படுத்திக் காண்பிக்கிறார், அதே வார்த்தையை பிரசங்கிக்கும்படி செய்கிறார், அப்பொழுது இருந்தது போலவே அதே அளவில் அதே வார்த்தையை வெளிப்படச் செய்துகொண்டிருக்கிறார். உண்மையான பெந்தெகொஸ்தே நாளில் எந்த அளவில் இருந்ததோ, அதே அளவில் மீண்டும் இருக்கும்படி செய்கிறார். ஓ, என்னே!
132304 “கிருபாசனம்”. எசேக்கியலும் யோவானும் ஆகிய இருவருமே ஒரே காரியத்தையே கண்டனர். இப்பொழுது கவனியுங்கள். நாம் கிட்டத்தட்ட இன்னும் சிறிது நேரத்தில் முடிக்கப் போகிறோம். இப்பொழுது, இங்கே தான் ஒரு விஷயத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். ஓ, தயவு செய்து அதைப் புரிந்து கொள்ளத் தவற வேண்டாம். இப்பொழுது, அந்தக் கேருபீன்கள் ஜீவனுள்ள சிருஷ்டிகள் தான் என்றும், அவை மிருகங்கள் அல்ல என்றும் எத்தனை பேர் அறிவீர்கள்? அவைகள்…உன்னதமானதொரு நிலையில் உள்ளவைகளாகும். 305 இப்பொழுது ஒரு தேவதூதன் என்னப்பட்டவன் மனிதனைவிட மேலான நிலையில் உள்ளவனா அல்லது தாழ்ந்த நிலையில் உள்ளவனா? சரி. ஐயா. ஒரு தேவ புத்திரன் மேலானவனா அல்லது ஒரு தேவதூதனா? தேவபுத்திரன் தான் மேலானவன். தனக்கு முன் நின்று ஒரு காரியத்திற்காக வேண்டுதல் செய்யும் தூதனுக்கு தேவன் சிறப்பாக செவி கொடுப்பாரா? அல்லது உங்களில் ஒருவர் செய்யும் வேண்டுதலுக்கு செவிகொடுப்பாரா? உங்களுக்குத்தான்! பாருங்கள், ஏனெனில், நீங்கள் அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறீர்கள். தேவதூதர்கள்—தேவதூதர்கள் பணிவிடைக்காரர்கள். புரிகிறதா? அவர்கள் பணிவிடைக்காரர். நீங்களோ அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறீர்கள். ஆகவே, உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதைப் பற்றி பாருங்கள், நாமோ அதை உபயோகிக்க பயப்படுகிறோம்.
133306 இப்பொழுது இங்கே நீங்கள் இதை கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இதுவோ அழகாயிருக்கிறது. ஓ என்னே! சில விஷயங்களை கூறாமல் நான் விட்டு விட்டு, இந்த விஷயத்திற்கு வருகிறேன். இப்பொழுது உங்களுடைய எழுதுகோல்களை எடுத்துக் கொள்ளுங்கள், உண்மையிலேயே நீங்கள் இந்த ஒன்றை வரைந்து எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்பினேன். [சகோ.பிரான்ஹாம் கரும்பலகையில் ஒன்றை வரைகிறார்—ஆசி.] நாம் அதை சற்று சிறியதாக வரைவது நலமாயிருக்கும். இதை மிகவும் கவனமாக கவனியுங்கள், இஸ்ரவேலர் தங்களது யாத்திரையில், அவர்கள் பாளயமிறங்கியபோது, ஒவ்வொரு திசையிலும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு (இல்லை நான் தவறாகக் குறிப்பிட்டு விட்டேன் என்று நான் நினைக்கிறேன்.) ஒவ்வொரு திசையிலும், ஒன்று, இரண்டு, மூன்று, ஒன்று, இரண்டு, மூன்று, ஒன்று, இரண்டு, மூன்று, ஒன்று, இரண்டு, மூன்று, என்று நாற்திசையிலும் திசைக்கு மூன்று கோத்திரம் வீதம் கிருபாசனத்தைச் சூழ்ந்து பாளயமிறங்கியிருந்தார்கள். இப்பொழுது நீங்கள் யாவரும் அதை அறிவீர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் இப்பொழுது இதைப் பார்த்திருக்கிறீர்கள், அதைக் குறித்து பழைய ஏற்பாட்டில் வாசித்தும் இருக்கிறீர்கள்.
134307 இப்பொழுது இதோ இங்கே கிழக்குத் திசை, கிழக்கு திசை. நான் அதை இவ்வரைபடத்தில் குறித்து விடுகிறேன், அப்பொழுது நீங்கள் நிச்சயமாக அதை குறித்துக் கொள்ள முடியும். கிழக்கு—கிழக்குத் திசையில் எப்பொழுதும் யூதாதான் இருந்தான். இது தான் வாசல். யூ—தா, யூதா கோத்திரம். தங்கள் கொடியோடு, பாளயமிறங்கியிருக்கும் மூன்று கோத்திரங்களும், யூதாதான் தலைமையாக இருந்தான். மூன்று கோத்திரங்களும், தங்கள் கொடியாக யூதாவின் கொடியோடு இருந்தார்கள். உங்களுக்கு நினைவில் இருக்கும்…சிசில் டி மில் தயாரித்த பத்துக் கட்டளைகள்—பத்துக் கட்டளைகள் திரைப்படத்தை எத்தனைபேர் பார்த்திருக்கிறீர்கள்? சரி, அல்லது கிழக்குத் திசையில் யூதா கோத்திரம் இருந்ததாக நீங்கள் இங்கே வேதவாக்கியத்தில் வாசித்திருக்கிறீர்கள். சரி. 308 மேற்குத் திசையில் இங்கே, (இப்பொழுது நீங்கள் அதையும் குறித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதைக் குறித்து யாத்திராகமத்தில் வாசிக்கலாம், அவர்கள் வெளியே வந்தபோது.) மேற்கில் எப்பிராயீம் இருந்தான், எ—ப்—பி. மூன்று கோத்திரத்தார் தங்கள் கொடியோடு இருந்தனர். சரி, எப்பிராயீம். 309 இப்பொழுது தெற்கில் ரூபன் கோத்திரத்தார், ரூ—ப—ன், அங்கே மூன்று கோத்திரத்தார் தங்கள் கொடியோடு இருந்தனர். 310 வடக்கில் தான் கோத்திரம், தாண் மூன்று கோத்திரங்களோடு, மூன்று கோத்திரங்கள், அவர்களுடைய கொடியோடு அங்கே இருந்தன. சரி.
135311 இப்பொழுது அவ்விதமாகத்தான் அவர்கள் பாளயமிறங்கியிருந்தார்கள். இப்பொழுது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இதை நாம் சரியாகப் புரிந்து கொள்வதற்காக, வேத வாக்கியங்களிலிருந்து இதைப்பற்றி சற்று வாசிப்போமாக. நான் 7-ம் வசனத்திலிருந்து திரும்ப ஆரம்பிப்பேன்: முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக் கொப்பாகவும், (இல்லை ஒரு இளம் காளை) மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன. அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர்…என்று இரவு பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: கர்த்தாவே, தேவரீர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரோ சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.
136312 இப்பொழுது, இப்பொழுது, நீங்கள் கவனியுங்கள். கிழக்கு பாகத்தில்—கிழக்கு பாகத்தில் என்னவிதமான முகத்தை அவன் கண்டான்? அதை நீங்கள் கவனித்தீர்களா? அதுதானே சிங்கம், சி—ங்—க—ம், போன்ற முகத்தை, சிங்க முகம் பொறித்த கொடியாயிருந்தது. அதுதான் யூதாவின் கொடியாகும். ஏனெனில், அவர்…இயேசு அதிலிருந்து தான் வருகிறார். அது உண்மை! அவர் யூதா கோத்திரத்து சிங்கமாயிருக்கிறார். 313 இப்பொழுது எத்தனை பேர்கள், ராசி மண்டலத்தைப் பார்த்திருக்கிறீர்கள்? அது என்ன என்பதை உங்களில் அநேகர் அறிந்திருக்கிறீர்கள், அவைகள் நட்சத்திரங்களாகும். புரிகிறதா? அதுவே தேவனுடைய முதலாவதான வேதாகமமாகும். இராசிகளில் முதலாவதான எண்ணாக இருக்கிறது எது? எதிலிருந்து ஆரம்பிக்கிறது? முதல் உருவம் எது? முதலாவது கன்னி இராசியாகும். அது சரிதானே? கடைசியானது என்ன? சிங்கம்—சிம்ம இராசி. கிறிஸ்துவின் முதலாவது வருகையும், இரண்டாவது வருகையும் அவற்றிலெல்லாம் காணலாம். அவர்கள் நண்டின் காலமான புற்றுநோயினை…இல்லை கடக ராசியின் காலமே இந்த புற்றுநோயின் காலமாயுள்ளது. நாம் அதன் வழியாகத்தான் ஜீவிக்கிறோம்.
137314 ஏனேக்கு தன் காலத்தில் அந்த பெரிய கூர்நுனிக் கோபுரத்தை (Pyramid) கட்டியபோது, ஒவ்வொரு கல்லும் அதில் இருக்கிறது என்பதை கவனியுங்கள். அவைகளை அவர்கள் அளந்து, சரியாக என்ன நடக்கும் என்பதை, நடக்கப் போகும் யுத்தங்களைப் பற்றியெல்லாம் எடுத்துக் கூற முடிந்தது. அந்த கூர்நுனிக் கோபுரம் தலைக்கல் ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் பூர்த்தியாக இருந்தது. ஏன்? உங்களுடைய டாலர் நோட்டில் அதை நீங்கள் கவனித்தீர்களா? அதை எடுத்துப் பாருங்கள், இதில் தலைக்கல் இல்லாமல் இருக்கிறது. ஏன்? அதற்கு தலைக்கல் ஒருபோதும் வைக்கப்படவில்லை. கிறிஸ்துவே புறக்கணிக்கப்பட்ட தலைக்கல்லாயிருக்கிறார். அவர் புறக்கணிக்கப்பட்ட தலைக்கல்லாயிருந்தார். அவர் சீக்கிரத்தில் திரும்பி வரப்போகிறார். லூத்தரின் காலத்தில் அந்த சபையைக் கவனியுங்கள். அடிப்பாகத்தில் இருக்கிற சபையைப் பாருங்கள். அது மேலே வர வர அது சிறுபான்மையினராகிக்கொண்டே வந்து, பிறகு பெந்தேகோஸ்தேயின் காலத்தில் கொண்டு வந்து விடுகிறது, அதன் பிறகு, தலைக்கல் வருவதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு கல்லும் சரியாக பொருத்தப்படுகிறது; அந்தத் தலைக்கல் வரும் போது, அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசுவைக் கொண்டு வரும் சபையாக அது இருக்கும். அது எவ்விதத்திலும் பூரணமானதாக இருக்கும்! இப்பொழுது. அவர் யூதா கோத்திரத்து சிங்கமாயிருக்கிறார்.
138315 இப்பொழுது, வேதத்தை வாசித்திருக்கிற எவரும் தாண் கோத்திரத்தின் எண் என்ன என்பதை அறிவீர்கள். ஓ, ஆம், தாணின் கொடி என்ன என்பதை அறிவீர்கள் என்பதை பற்றித்தான் நான் இங்கே குறிப்பிட்டேன். அவனுடைய, அவன் ஒரு கழுகாயிருந்தான். அது தான் உண்மை. அவன் ஒரு கழுகாயிருந்தான். வேதத்தை படித்துள்ள எவருக்கும் தெரியும், அவன் ஒரு கழுகாயிருந்தான். 316 இப்பொழுது, ரூபனுக்குரியது மனுஷமுகமுள்ள கொடியாகும். அவன் தான் மூத்த குமாரன். பிள்ளைகளெல்லாரிலும் அவன் தான் மிகவும் துன்மார்க்கனாயிருந்தான். அவ்வாறு ஆதியாகமம் 49-ம் அதிகாரத்தில் யாக்கோபு கூறவில்லையா? “ரூபனே, நீ என் சேஷ்ட புத்திரன், நீ என் சத்துவமும் என் முதற்பெலனுமானவன் …தண்ணீரைப் போல் தளும்பினவனே, உன் தகப்பனுடைய மஞ்சத்தின் மேல் ஏறினாய், நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்…” ரூபன் தன் தந்தையின் மறுமனையாட்டியோடு வாழ்ந்தான். பாருங்கள், அதுதான் மனித இனத்திற்கே உரித்தான ஒழுக்கக்கேடான செய்கையாகும். உங்களுக்கு புரிகிறதா? மிருகங்கள் அவ்விதமான ஒழுக்கக் கேடுகளைப் பெற்றிருக்கவில்லை. சிங்கமோ அல்லது வேறு எந்த மிருகமும் இவ்வாறு செய்யாது. ஆனால் மனிதன் அவ்வாறு செய்கிறான். பிற மனிதனின் மனைவியோடு ஒழுக்கக் கேடாக நடந்து கொள்கிறான், அதேவிதமாகத்தான் …அதேக் காரியம் தான், யாவும் பூர்த்தியாகிவிட்டன. 317 இப்பொழுது, இங்கு உள்ள இதுவோ, தாணுக்குரியதோ கழுகுகாயிருந்தது. இது, ரூபனுக்கு மனுஷ முகக்கொடி இருந்தது. எப்பிராயீமுக்கு காளை முகங்கொண்ட கொடியாயிருந்தது. இப்பொழுது அந்த சித்திரத்தை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா? எப்பிராயீம்…வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி அவர்கள் அவ்வாறு தான் பாளயமிறங்கியிருந்தார்கள்.
139318 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், தாண் மூன்று கோத்திரங்களுக்கும் தலைவன், யூதா மூன்று கோத்திரங்களுக்கும் தலைவன், ரூபன் மூன்று கோத்திரங்களுக்கும் தலைவன், எப்பிராயீம் மூன்று கோத்திரங்களுக்கும் தலைவனாயிருக்கிறான். மூன்றை நான்கால் பெருக்கினால் பன்னிரண்டு ஆகும். ஆக பன்னிரண்டு இஸ்ரவேலின் கோத்திரங்கள். பாருங்கள், ஒவ்வொருவரும் தம்தம் கொடியோடு இருந்தனர். யூதாவின் கொடியானது சிங்கக் கொடியாகும். ரூபனின் கொடி மனுஷ முகங்கொண்டதாகும். எப்பிராயீமின் கொடி காளை முகங்கொண்டதாகும். தாணுக்கு கழுகு முகங்கொண்ட கொடியிருந்தது. 319 இப்பொழுது, இங்கே யோவான் என்ன கூறினான் என்பதைப் பாருங்கள், “முகத்தையுடைய ஒன்று…” பரலோகத்திலும் இவ்வாறே இருக்கிறதா என்பதைப்பற்றி இப்பொழுது இங்கே நாம் வாசித்துப் பார்ப்போமாக. முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும்… (யூதா…) இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும் (அது இளங்காளையாகும்) … மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன. 320 அதேவிதமாகத்தான் இஸ்ரவேலின் கோத்திரங்கள் சூழப்பாளயமிறங்கியிருந்தார்கள். உடன்படிக்கைப் பெட்டிக்குரிய உரிமையை பூமியில் காவல் காக்கிறவர்களாயிருந்தார்கள். ஓ, அல்லேலூயா! நீங்கள் அதை புரிந்து கொள்ளவில்லையா?
140321 இங்கே! கிருபை, கி—ரு—பா—ச—ன—ம், “கிருபாசனம்”. அக்கோத்திரங்களைத் தாண்டி வேறு எதுவும் அங்கே எந்த இடத்திலும் ஊடுருவி வந்து விட முடியாது. எதைத் தாண்டி வரவேண்டும்? சிங்கத்தைத் தாண்டி—மனுஷனைத் தாண்டி, மனுஷனுடைய விவேகம்—கடுமையாக உழைக்கும் மிருகமாகிய காளையைத் தாண்டி, விரைவாக இயங்குகிற கழுகைத் தாண்டி வரவேண்டும். பார்த்தீர்களா? வானம், பூமி, இதற்கு இடைப்பட்ட, எங்கும் சுற்றிச் சூழ அவர்கள் காவலராயிருக்கிறார்கள். நீங்கள் பாருங்கள், அதற்கு மேலே அக்கினி ஸ்தம்பம் இருந்தது. சகோதரனே, அணுகவேண்டி முறையில் அல்லாமல்…எந்தவொன்றும் கிருபாசனத்தைத் தொடவில்லை. 322 கிருபாசனத்தை அணுக முடிந்த ஒரே காரியம் இரத்தத்தினூடாக மாத்திரமேயாகும். ஆரோன் வருடத்திற்கொருமுறை அங்கே இரத்தத்தோடு பிரவேசித்தான். இப்பொழுது அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது, கவனியுங்கள். இந்த ஒவ்வொரு மூன்று கோத்திரங்களின் தலைவர்கள் ஒவ்வொருவரும் கிருபாசனத்தை காவல் காத்துக் கொண்டிருந்தார்கள்; அதாவது பழைய ஏற்பாட்டின் கிருபாசனத்தை, இதை நீங்கள் யாவரும் குறித்துக் கொண்டீர்களா? இப்பொழுது இதோ இங்கே புத்தம் புதிய விஷயம் ஒன்றுள்ளது. சகோதரனே! இதைக் கவனித்துக் கேளுங்கள், பிறகு நான் போகலாம். அவர்கள் பழைய ஏற்பாட்டிலுள்ள காவலாளிகள் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். எத்தனை பேர்கள் அதை வேதத்தில் வாசித்திருக்கிறீர்கள்? அது சரிதானா என்பதை நீங்கள் அறீவீர்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டின் காவலர்கள் என்பதைப் பாருங்கள்.
141323 இப்பொழுது நாம் வேறொரு காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மகிமை! ஓ, நான் இந்தக் காலத்தை நேசிக்கிறேன்! நீங்கள் நேசிக்கவில்லையா? இப்பொழுது இக்காலத்தில் காக்கப்படும்படியான ஒரு கிருபாசனம் தேவனுக்கு உள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இக்கிருபாசனம் எங்கே காணப்படுகிறது. மனிதனின் இருதயத்தில், அது மனிதனின் இருதயத்திற்குள் எப்பொழுது வந்தது? பெந்தெகொஸ்தே என்னும் நாளில், (தேவனாக இருக்கிற) பரிசுத்த ஆவியானவர் மானிட இருதயங்களில் பிரவேசித்த பொழுது வந்தது. அப்படித்தானே? இப்பொழுது இதை நாம் இங்கே குறித்துக் கொண்டு, நீங்கள் விரும்பினால் வரைந்து கொள்ள ஆயத்தமாவோம். பெந்தெகொஸ்தே, பெ—ந்—தே—கோ—ஸ்—தே, இதை நான் பெந்தேகோஸ்தே என்றே குறிக்கிறேன். இது தான் கிருபாசனம், பரிசுத்த ஆவியானவர். இங்கே குறியுங்கள்…அது என்னவென்று நான் உங்களுக்குக் கூறுவேன். அதை அது மிகவும் பொருத்தமானதாக ஆக்கும். இங்கே “புறா” என்று நாம் குறித்துக் கொள்வோம், அது ஒரு பறவை—பாருங்கள். சரி, அதன் அர்த்தம் என்னவெனில்…இன்று கிருபாசனத்தை காவல் செய்ய தேவனுக்கு காவலாளிகள் உண்டா? இப்பொழுது—இப்பொழுது அது…இது எவ்வளவு அழகாக வரையப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள்.
142324 அன்றொரு நாள் நான் உட்கார்ந்துகொண்டிருக்கையில், இதைப் பற்றிக் கண்டபொழுது, மேலும் கீழும் குதித்து, எனது இருக்கையைச் சுற்றி சுற்றி ஓடிவந்து, “மகிமை! மகிமை! மகிமை! மகிமை! மகிமை!” என்று கத்தினேன், சார்லி, காட்டில் நான் சில சமயம் செய்வதைப் போல. சகோதரி நெல்லி அவர்களே, நான் இவ்வாறு நடந்துகொண்டால், உங்கள் வீட்டை விட்டே என்னை விரட்டிவிடுவீர்கள் என்று நான் அனுமானிக்கிறேன். ஊ? ஓ, எனக்கு ஒரு மகிமையான வேளை உண்டாயிருந்தது. இப்பொழுது அது என்னவென்பதைப் பற்றி கர்த்தர் எனக்குக் கொடுத்ததை கவனியுங்கள். 325 இப்பொழுது, பெந்தேகோஸ்தே, பெந்தேகோஸ்தேக்குப் பிறகு (என்ன) புத்தகம் எழுதப்பட்டது? பரிசுத்த ஆவியானவரின் நடபடிகள் ந—ட—ப—டி—க—ள். அப்படித்தானே? நடபடிகள் புத்தகம் எதனோடு துவங்குகிறது? முதலாவதாக இரட்சிப்பிற்குள் பிரவேசிப்பதா? அப்போஸ்தலர் 2:38. இங்கே கடைசியான ஒன்று. அது சரியா? “அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு…வெவ்வேறு பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். அங்கே பேதுரு எழுந்து நின்று அவர்களுக்கு ஒரு பிரசங்கத்தை நிகழ்த்தினான். அவர்கள் ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நாங்கள் எப்படி அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம்?’ என்று கேட்டனர். பேதுரு, அப்போஸ்தலர் 2:38, ‘நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்’” என்றான்.
143326 இப்பொழுது, தேவன் அந்த கிருபாசனத்தைக் காவல் செய்ய தனக்கென சில காவலர்களை கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிருபாசனத்தைக் காப்பவர்கள் யார்? சரி. ம—த்—தே—யு, கிழக்கில் மத்தேயு; லூக்கா, லூக்கா; மாற்கு மற்றும் யோவான். அவர்கள் எழுதிய நான்கு சுவிசேஷ புத்தகங்களும் வரப்போகிற நடபடிகளின் புத்தகத்தை ரூபகாரப்படுத்துகின்றன. நீங்கள் எந்த வகையில் பார்த்தாலும், அவைகள் தான் அதை காக்கிறவையாக இருக்கின்றன. 327 நாம் இன்னும் ஒரே ஒரு காரியத்தை எடுத்துக் கொள்வோம், நமக்கோ போதிய நேரம் இல்லை. நான் இங்கே இருபது அல்லது அதற்கு மேல் வசனங்களைக் குறித்து வைத்துள்ளேன். ஆனால் இரட்சிப்பிற்காக இந்தப் பொருளின் மேல் இந்த ஒன்றை நாம் எடுத்துக்கொள்வோம். நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க நேரம் இருக்குமா? இல்லை? இப்பொழுது ஒரு மணி ஆகிவிட்டது, எனவே வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும் என்று நீங்களெல்லாம் விரும்பினால் ஒழிய நாம் அதை வைத்துக்கொள்ளப் போவதில்லை. ஆம், இப்பொழுது எனக்கு ஏராளமான நேரம் இருக்கிறது பாருங்கள்? [ஒரு சகோதரன், “நாள் முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்—ஆசி.]
144328 இப்பொழுது இதைக் கவனியுங்கள். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அது என்னவாயிருக்கிறது? சுவிசேஷங்களைப் பற்றிய பூமிக்குரிய எண்ணாக இது இருக்கிறது—நான்கு என்ற எண். சரி, கவனிக்கவும். 329 இப்பொழுது, மத்தேயு 28;19—மத்தேயு 28-ம் அதிகாரம்—மத்தேயு 28;19-ம் வசனம் இதைத்தான் திரித்துவ சகோதரரே, நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள். சரி. மத்தேயுவின் அந்த அதிகாரத்தின் இறுதியான பாகத்தில் “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பெந்தெகொஸ்தே நாளில் இங்கே வந்து பேதுரு, “மனந்திரும்பி இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுங்கள்” என்று கூறினான். 330 அங்கே ஏதோ பிழை உள்ளது. “மத்தேயுவே, நீர்தான் அந்த கிழக்கு வாசலிலுள்ள காவலரா?” 331 அவ்வாசல் எவ்வாறுள்ளது? அந்த வாசல் யார்? இயேசு தான். இயேசு, “வாசலானது தண்ணீர் வழியாயிருக்கிறது” என்று கூறினார். அது சரிதானே? அது ஆங்கிலத்தில்…அது எவ்வாறு ஆங்கிலத்தில் உள்ளதென்றால், s—t—r—a—i—t அதாவது s—t—r—a—i—t என்று தானே உள்ளது? S—t—r—a—i—t என்றால் “தண்ணீர்” என்று அர்த்தமாகும். ஆகவே, “தண்ணீரே வாசலாயிருக்கிறது.” எவ்வாறு நீங்கள் உள்ளே பிரவேசிக்கிறீர்கள்? “நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்”. இதுதான் வாசல்களை திறக்கிறது. ஏய்! வ்யூ! 332 “ஓ, ஆனால், சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, மத்தேயு 28;19 உங்களுக்கு உள்ளதே, அதைப் பற்றி என்ன?” என்று கேட்கலாம். அது மிகவும் சரியாக இருக்கிறது. “ஆனால் மத்தேயுவே நீர் அதற்குரிய காவலரா?” என்று கேட்டால், “நிச்சயமாக, நான் முழுமையானதொரு காவலன் தான்” என்று மத்தேயு கூறுவான்.
145333 இப்பொழுது மத்தேயு 1:18-ஐ எடுத்துக்கொண்டு அது என்ன கூறுகிறது என்று பாருங்கள். இதை காக்கிறதா என்பதைப் பாருங்கள். அப்போஸ்தலர் 2:38-ஐ மத்தேயு 1:18, மத்தேயு 1…28-ஐ காவல் காத்துக் கொண்டிருக்கிறதா என்று பாருங்கள். அது இதனைக் காக்கிறதா என்றுப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது… “இங்கே பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்த ஆவியாகிய தேவன் இருக்கிறார்” என்று அவர்கள் கூற முற்படுகிறார்கள். இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. எந்த ஒன்று? அவர்கள் இருவரையுமே ஒருவர் என்று இது காண்பிக்கிறது. …இதெல்லாம் நடந்தது…இதோ,… அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவனைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். …கர்த்தருடைய தூதன்…அவனிடத்தில் வந்து, (உங்களுக்குத் தெரியும்.) தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. (பார்த்தீர்களா?) அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;… தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவள்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; (ஏசாயா 9;6) ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் …அவருக்கு… [சபையோர், “இம்மானுவேல்”— என்று கூறுகிறார்கள்—ஆசி .] …என்று பேரிடுவார்கள். 334 அவன் அதைக் காக்கிறானா? “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி”. அந்த ஒரே நாமத்திற்குரிய பட்டங்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது. எனவே அதை காத்திட அந்த காவலன் அங்கே நிற்கிறான். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? ஓ, என்னே! இப்பொழுது எத்தனை பேர்கள் இதை அறிவீர்கள்? இதோ, இங்கே அது உள்ளது! அவன் ஒரு காவலனாய் இருக்கிறான்.
146335 இப்பொழுது, நாம்…நான் இரட்சிப்பிற்கான மற்ற முழு காரியத்தையும் எழுதிவைத்துள்ளேன், இந்த மற்றவைகளை எடுத்துப் பார்ப்போம். ஆனால் இப்பொழுது இன்னும் ஒரு நிமிட நேரத்தில் நாம் ஒரு ஜெபவரிசையை ஒழுங்கு செய்யப் போகிறோம். அது சுமார் பத்து நிமிடங்களுக்கு இருக்கும். இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் அக்காரியத்தைச் செய்ய முயற்சிப்போம். இங்கே நான் குறித்து வைத்துள்ள சில வேதவாக்கியங்களை நாம் எடுத்துக் கொள்வோமாக. இதோ அவைகள். சரி. 336 தெய்வீக சுகமளித்தல் என்ற விஷயத்தை மத்தேயு காவல் செய்கிறானா என்பதைப் பற்றி நாம் எடுத்துக் கொண்டு இப்பொழுது பார்ப்போம். நீங்கள் அதைக் குறித்துக்கொள்ள விரும்பினால், உங்களுடைய எழுதுகோல்களை எடுத்துக் கொள்ளுங்கள். சரி. மத்தேயு அதைக் காவல் செய்கிறானா என்பதைப் பார்ப்போம். நாம் இப்பொழுது மத்தேயு எழுதின 10-ம் அதிகாரத்தில் 1-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோமாக. 337 யோவான் அப்படி செய்தானா என்பதைப் பற்றி இரண்டொரு வசனங்களை எடுத்துக் கொண்டு பார்ப்போமாக. யோவான் 14;12, மற்றும் 15:7. 338 தேவனுடைய சிங்காசனத்தைச் சூழ்ந்து நின்று இவர்கள் தெய்வீக சுமகளித்தல் என்பதை காக்கிறவர்கள் என்பதைப் பற்றி நாம் பார்ப்போம். மாற்கு 16, மாற்கு 11:21 மற்றும் 22. லூக்கா 10:1 முதல் 12, லூக்கா 11:29 முதல் 31 முடிய நாம் வேகமாக சில வசனங்களை வாசித்து, அவர்கள் காக்கிறவர்களா என்று பார்ப்போம், அவர்கள் தெய்வீக சுகமளித்தலுக்கான உரிமையைக் காக்கிறார்களா என்பதைப் பற்றி பார்ப்பதுபோன்றே, அவர்கள் இயேசுவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைப் பற்றிய வாசலையும் காக்கிறவர்களா என்று பார்ப்போம். அவைகள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு பார்க்கலாம். அது உண்மை.
147339 நாம் இப்பொழுது மத்தேயு 10:1—க்கு திரும்புவோம். நாம் இதை பார்த்து விட்டு, கர்த்தருக்கு சித்தமானால், அதிக பட்சம் இன்னும் சுமார் ஐந்து, பத்து நிமிடங்களில் முடித்து விடுவோம். சரி, நாம் மத்தேயு 10-ஐ எடுத்துக்கொள்வோம், அப்போஸ்தலர் நடபடிகளை மத்தேயு காக்கிறானா என்பதைப் பற்றி நாம் பார்ப்போமாக. 340 தேவன் தன்னுடைய வார்த்தையைச் சுற்றிச்சூழ ஒரு காவலனைப் போடவில்லை என்று நினைத்தீர்களா? இதோ இங்கே காளை, சிங்கம், மனிதன், கழுகு ஆகியவை உள்ளன. அவைகள் இன்னமும் இங்கே பூமியில் அவ்வாசல்களில் இருந்து கொண்டிருக்கவில்லையா? இங்கே சுவிசேஷங்கள், நான்கு சுவிசேஷங்கள் உள்ளன. பார்த்தீர்களா? நீங்கள் கவனிப்பீர்களேயானால், அவைகள் போன எத்திசையிலும் நேராகச் சென்றன. ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கவில்லை. அவைகள் ஒன்றோடொன்று சேர்ந்தே நின்றன. பாருங்கள்? அவைகளில் ஒன்று மனிதனுடைய விவேகத்தோடும், இன்னென்று கழுகின் வேகமாக செயல்படுகிற தன்மையோடும் போகின்றன. இன்னொன்று ஒரு மேய்ப்பனாக இருக்கிறது. ஒன்று சுவிசேஷகனாய் இருக்கிறது. ஒன்று சுவிசேஷகனைப் போல் பறந்துகொண்டேயிருக்கிறது, பாருங்கள்;…இன்னொன்று மேய்ப்பனாக இருக்கிறது. இன்னொன்று கட்டுறுதி வாய்ந்ததாக இருக்கிறது. இன்னொன்று புத்திக்கூர்மை வாய்ந்ததாக இருக்கிறது. பாருங்கள், அவைகள் ஒவ்வொரு திசையிலும் காவல் செய்தன. தேவன் இந்த பரிசுத்த ஆவி சுவிசேஷத்தை காவல் செய்கிறார்! அதை விசுவாசியுங்கள், சகோதரரே. சரி.
148341 இப்பொழுது நாம் மத்தேயு 10:1-ஐ எடுத்துக்கொள்வோம். அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து…அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்… (உம்ம்!) அவர்கள் மேல்வீட்டறையில் கூடி யாவரும் அவரது நாமத்தில் ஜெபித்தனர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர் அதினால் ஊழியத்திற்கான வல்லமை வந்தது; அந்தநாளில் அவர்களுக்கு அவர் என்ன செய்தாரோ இன்று அவர் உங்களுக்கு அதை செய்வார் நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 342 ஓ, குழந்தைகளை சற்று ஒரு நிமிடம் சமாதானப்படுத்துங்கள். சற்று கவனியுங்கள், கூர்ந்து கவனியுங்கள்: …அசுத்த ஆவிகளைத் துரத்தவும்…அதிகாரங் கொடுத்தார்,… 343 அநேக போதகர்கள் தங்கள் சபைகளில் ஸ்திரீகள் ஆபாச ஆடை அணிவது,செயல்கள் …மற்றும் சீட்டாட்டங்கள், சூதாட்ட ஏமாற்று விளையாட்டுகள், நடனங்கள் மற்றும் சூப் என்ற வடிசாறு விருந்துகள் ஆகிய இந்த அசுத்த ஆவிகள் தங்களுடைய சபைகளில் தங்கும்படி விட்டு விடுகின்றனர். ஓ, இரக்கம்! …அசுத்த ஆவிகளைத் துரத்துவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும்… 344 அக்காவலன் அந்த வாசலில் அமர்ந்திருப்பதைப் பார்த்தீர்களா? எழுதப்பட்டுள்ள அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை சுவிசேஷம் காவல் செய்கிறது.
149345 இப்பொழுது, நான் சமீபத்தில் ஒரு பெரிய போதகர் கூறுவதைக் கேட்டேன். அவர் ஒரு பெரிய மனிதர் அருமையான மனிதன், நான் அவரை சந்தித்து, அவரோடு கைகுலுக்கியிருக்கிறேன், அவர் ஒரு அருமையான சகோதரர். அவர், “ஆனால் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் சபைக்கான வடிவம் கொடுக்கும் ஒரு புறச்சட்டம் மாத்திரமே” (frame work), என்று கூறினார். ஹூ! அதாவது, வேறு வார்த்தைகளில் கூறினால், அவர் இங்கே வெளிப்புறச் சட்டம் என்று கூறிவிட்டார், பாருங்கள். அப்போஸ்தல நடபடிகள் உட்புறத்தில் இருந்தன, இந்த சுவிசேஷங்கள் அப்போஸ்தலர் நடபடிகளை சுற்றி வெளியே இருந்து பாதுகாத்துக் கொண்டு அதினுடைய வடிவத்தை அமைத்துக் கொடுக்கும் புறச்சட்டமாக இருக்கிறது. ஒரு மனித சிந்தை எப்படியாவது எநக் காரியத்தையாவது செய்ய முடியுமா என்பதைப் பாருங்கள். தேவன் அதைக் காண்பித்திருக்காவிடில், நானுங்கூட அவ்வாறே சிந்தித்திருப்பேன். புரிகிறதா? 346 புறவரிச் சட்டம், பெந்தெகொஸ்தே, சுவிசேஷத்தின் புறவரிச் சட்டம் அல்ல (frame work), பெந்தெகொஸ்தேயை தாங்குவதற்காக நான்கு சுவிசேஷங்கள் தான் அதின் புறவரிச் சட்டமாய் உள்ளது. அவர்களுக்கு இந்த புறவரிச் சட்டம் கிடைத்தபிறகு, பெந்தெகொஸ்தே வந்தது. அது சரிதானே? நடபடிகள் புத்தகமா, அல்லது அப்போஸ்தலர்களின் சுவிசேஷங்கள் முதலில் எழுதப்பட்டதா? அப்போஸ்தலர்களின் சுவிசேஷங்கள்தான். இயேசு நடந்து திரிந்து கிரியைகளைச் செய்து, என்ன வரப்போகிறது என்பதைப் பற்றி முன்னுரைத்துக் கொண்டிருந்தார். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு காவலர்களும் வருகின்றனர். அவர்கள் வந்து தாங்கள் கண்ட வரப்போகிற யாவற்றையும், அவைகள் உள்ளபடியே எழுதி, அவைகள் எவ்வாறு நேரிடப் போகின்றன என்பதைப் பற்றியும் கூறி எழுதி வைத்துள்ளனர். உடனே அவைகள் அதைச் சுற்றி புறவரிச்சட்டமாக தங்களை அமைத்துக் கொண்டன, அவ்வாறு அது வருகிறது. ஆமென்! மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர், பெந்தெகொஸ்தே ஆசீர்வாதமாகிய சிங்காசனத்தை, பிரதான ஆலயத்தை காப்பதான காவலாளராக, புறவரிச்சட்டமாக இருக்கின்றனர்.
150347 பெந்தெகொஸ்தே ஸ்தாபனம் அல்ல, சகோதரனே, சகோதரியே, பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்கள் முற்றிலும் புறம்பான நிலையில் மிகவும் தூரமாக, மற்றெந்த சபைகளை விடவும் வெளியே காணப்படுகிறது. லூத்தரன்கள் எவ்வாறிருந்தனரோ, அதைவிட மிகவும் தொலைவில் பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்கள் காணப்படுகின்றன. லூத்தரன்கள் பெந்தெகொஸ்தேயினரை விட சற்று மேலான நிலையில் தங்களை வைத்து இருந்தனர்; அது உண்மை, அதைப் போலவே காணப்படுகிறது. அது மிகவும் சரியாக இருக்கிறது, ஜீன்! ஏனெனில், இப்பொழுது…லூத்தரின் காலத்திலுள்ள லூத்தரன் சபைக்கு வெளியே இயேசு நின்றிருந்தது; உள்ளே பிரவேசிப்பதற்கு முயன்று கொண்டு இருப்பதாக நான் காணவில்லை. ஏனெனில் முதலில் அவர் அதன் உள்ளேயே இருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அவர்—அவர் பெந்தெகொஸ்தே சபைக்குள் இருந்தபோது, வெளியே தள்ளப்பட்டார். அது உண்மையே. இப்பொழுது மத்தேயு 10:1
151348 இப்பொழுது நாம் யோவான் சுவிசேஷம் 14:12-ஐ எடுத்துக் கொண்டு அங்கே யோவான் பெந்தெகொஸ்தேயின் விலையேறப்பெற்ற காரியங்களை காவல் செய்கிறானா? அதை ஆதரிக்கிறானா என்பதைப் பற்றிப் பார்ப்போம். யோவான் சுவிசேஷம் 14-ம் அதிகாரம் 12-ம் வசனத்தில் இயேசு பேசுகிறார்; மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். 349 ஓ, சகோதரனே, அங்கே இருக்கிற அவ்வாசலில் அக்கழுகானது உட்கார்ந்திருக்கிறது; ஏனெனில் அது சுவிசேஷப் பணியாயிருக்கிறது. கழுகைப் போல் பறந்து செல்லுகிறது. விரைந்து பறந்து, தீர்க்கதரிசியின் தேசத்திற்குள் சென்று, இருந்ததைப் பற்றியும், இருக்கிறதைப் பற்றியும், வரப்போகிறதைப் பற்றியும் கூறுகிறது. பாருங்கள்? அங்கே அமர்ந்திருந்து, “நான் செய்கிற கிரியைகளை” என்று கூறப்பட்டுள்ளது. அக்கழுகைக் கவனித்துப் பாருங்கள், பாருங்கள். 350 இதோ இங்கே சிங்கம், ஊழியக்காரன் இருக்கிறான். இயேசு அவர்களுக்கு அதிகாரத்தையளித்தார். அவர் அதைப் பாதுகாக்கிறார். அவர் அப்போஸ்தலர் 2:38ஐப் பாதுகாக்கிறார். அவர் அங்கே அந்த சிங்கத்தை வைத்து அதை ஆதரிக்கிறார். 351 இதோ இங்கே இக்கழுகோடு, சுவிசேஷத்தின் விரைவான தன்மை காணப்பட்டு, “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இதைப் பார்க்கிலும் நீங்கள் அதிகம் செய்வீர்கள்” என்று கூறுகிறது. அதனோடு உலக முழுவதும் பறந்து செல்லுகிறது. குஷ்டரோகியை சுத்தம் செய்வதற்காக புறாவின் தலையைக் கிள்ளி அதன் இரத்தத்தை அதன் ஜோடியான புறாவின் மேல் தெளித்து, அது கீழே சிந்தும் போது, அது “கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று கதறுகிறதே, அதைப் போல் உள்ளது. ஆம்.
152352 இப்பொழுது, என்னிடம் இன்னொரு வசனம் உள்ளது. யோவான் 15:7. நாம் 15-ம் அதிகாரத்தின் 7-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோமாக. நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், (வேதாகமக் கருத்தரங்கினுடைய வார்த்தை அல்ல) … நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். 353 அவ்வாறுதானே அது இருக்கிறது? அப்பொழுது அச்சுவிசேஷமானது இங்கே காவல் செய்கிறது. இந்த பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதத்தை யோவானும் அவனது சுவிசேஷமும் காவல் செய்கின்றனர்; மத்தேயுவும், அவனது சுவிசேஷமும் காவல் செய்கின்றனர்.
153354 இப்பொழுது நாம் அடுத்த சுவிசேஷமாகிய மாற்குவை எடுத்துக் கொள்வோம். மாற்கு 16-ம் அதிகாரம். மாற்கு இந்த பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தை காக்கிறானா என்பதைப் பார்ப்போம். மாற்கு 16-ம் அதிகாரம். இப்பொழுது உயிர்த்தெழுதலைப் பற்றி இச்சுவிசேஷம் கூறுகிறதே, அதற்குப் பிறகு உள்ள வசனத்திலிருந்து நாம் இங்கே பார்க்கத் துவங்குவோம்…இப்பொழுது நாம் மாற்கு 16-ம் அதிகாரம் 14-ம் வசனம் வரை எடுத்துக் கொண்டு பார்ப்போம். அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்தும் இருதய கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார். 355 தங்களுக்கு செய்தியை அளிக்க முயற்சித்துக்கொண்டிருந்த மக்களை அவர்கள் விசுவாசிக்கவில்லை. பாருங்கள், இன்றைக்கும் அவ்வாறு தான் நடக்கிறது. பரிசுத்த ஆவியைக் குறித்து சாட்சியை உடையவர்கள் கூறுவதைக் கேட்கும் மக்கள், “அர்த்தமற்றது, அவர்கள் உருளும் பரிசுத்தர் கூட்டத்தினர்” என்று கூறுகின்றனர். அவரை அவருடைய உயிர்த்தெழுதலின்படி அறிந்திருக்கிற மக்களை அவர்கள் நம்பாததினிமித்தமாக, அவர் அவர்களுடைய இருதயக் கடினத்தினிமித்தம் அவர்களை கடிந்து கொண்டார். பாருங்கள்.
154பின்பு, அவர் அவர்களை நோக்கி; நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். 356 என்ன? இவைகளைப் பிரசங்கிக்க வேண்டுமென அவர்களுக்கு சொல்லப்பட்டது. ஒரேயொரு சுவிசேஷம் தான் உண்டு, அதற்கு நான்கு காவலர்கள் உண்டு. “சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று கூறப்பட்டது. அவர் இந்த நான்கு காவலர்களிடமும் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்), பாருங்கள், ஆகிய நால்வரிடமுமே, “சர்வ சிருஷடிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்!” என்று கூறினார் என்பதை நினைவில் வையுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். (பாருங்கள், இங்கே கூறப்படும் இந்த ஞானஸ்நானத்தினுள் நீங்கள் பிரவேசிக்க வேண்டும்.) விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். (ஓ, சகோதரனே, தயவுசெய்து விசுவாசியுங்கள்.) …(ஆங்கிலத்தில் And என்ற இணையிடைச் சொல்லானது மீதமுள்ள வாக்கியங்களையும் ஒன்றாக இணைக்கிறது.)…விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன;…
155357 மெதோடிஸ்ட்டுகள் என்ன கூறுகின்றனர் என்பதைப்பற்றி நாம் இப்பொழுது பார்ப்போம். “நீங்கள் சத்தமிட்டு, நல்ல வாழ்க்கையை நடத்தினால் போதும்” என்கிறார்கள். பாப்டிஸ்டுகளோ, “வெறும் விசுவாசத்தை மட்டும் உடையவர்களாயிருந்து, ஞானஸ்நானம் பெற்றால் அதுவே போதுமானது” என்று கூறுகின்றனர். எபிஸ்கோப்பேலியன்களோ, “எபிஸ்கோப்பேலியன்களைப் போல் நிமிர்ந்து நில்லுங்கள். சத்தமிட்டு பாடல் பாடப்படும்போது மட்டும் தலை வணங்குங்கள், அது போதுமானது” என்று கூறுகின்றனர். கத்தோலிக்கரோ, “மரியே ‘நீ வாழ்க’ என்று கூறுங்கள், அது போதுமானது” என்கின்றனர். பெந்தெகொஸ்தேயினரோ, “எங்கள் ஸ்தாபனத்தை சேர்ந்து கொள்ளுங்கள்; பிதா, குமார, பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்கின்றனர். அங்குதான் காரியமே உள்ளது. புரிகிறதா? விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே (உம்ம். “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தினாலே அல்ல அது.) என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (ஆமென்! ஓ சகோதரனே!)
156358 இப்பொழுது மத்தேயு 11-ம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதன் பின்னர் நாம் கிட்டத்தட்ட முடிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறோம். மத்தேயு 11-ம் அதிகாரம் 20மற்றும் 21-ம் வசனத்தை நான் எடுத்துக் கொண்டுள்ளேன். இயேசு பேசுகிறார். இவைகள் யாவும் இயேசுவே பேசியவைகளாகும். ஏதோ ஒன்றல்ல, ஆனால் இயேசு என்ன பேசினாரோ அவைகள் தான் அவை ஒவ்வொன்றும். …அவர்களை விட்டுப்…பெத்தானியாவுக்குப் போய், காலையிலே, திரும்பி வருகையிலே, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு… 359 அப்பொழுதுதான் அவர் அந்த மரத்தை சபித்தார். (அது மத்தேயு 21). நான் அதை எழுதிவைத்துள்ளேன்…12, தயவுகூர்ந்து என்னை மன்னிக்கவும். மாற்கு 11:21 மற்றும் 22. பேதுரு நினைவு கூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான். இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். (பார்த்தீர்களா?) எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே (அது உட்புறத்தில் உள்ள விஷயமாகும்) ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 360 தெற்கு வாசலானது காளையினால் காக்கப்படுகிறது. வடக்கு வாசலானது சிங்கத்தால் காக்கப்படுகிறது. வடக்கு வாசல்…நான் கிழக்கு வாசலைத் தான் சிங்கம் காக்கிறது என்று கூறுகிறேன். வடக்கு வாசலானது பறக்கும் கழுகினால் காவல் செய்யப்படுகிறது. யோவான் அந்த சுவிசேஷகன். பிறகு இப்பக்கத்திலுள்ள வைத்தியனாகிய லூக்கா தான் அந்த மனிதன்.
157361 இப்பொழுது நாம் லூக்கா என்ன சொல்லுகிறான் என்பதைப் பற்றிப் பார்ப்போம். லூக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். அதை லூக்கா 10:1முதல் 12-ல் நாம் எடுத்துப் பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன். அதுதானே கட்டளையாயிருக்கிறது. அது என்னவென்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். லூக்கா 10-ம் அதிகாரம் 1முதல் 12முடிய. சரி, நாம் அதை எடுத்துக் கொண்டு வாசிக்கலாம். ஆனால் நமக்கோ அதைச் செய்ய நேரம் போதவில்லை. “புறப்பட்டுப் போங்கள்…” நான் 3-ம் வசனத்தில் துவங்க உள்ளேன். புறப்பட்டுப் போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். பணப்பையையும் சாமான் பையையும் கொண்டு போக வேண்டாம். 362 பாருங்கள், “எந்தவொரு ஸ்தாபனத்தின் பெயராலும் நீங்கள் செல்ல வேண்டாம். நான் அனுப்புகிறபடி நீங்கள் செல்லுங்கள். புரிகிறதா? இந்த எழுப்புதலுக்காக உங்களுக்கு நூறாயிரம் டாலர்கள் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டால் அதன் பேரில் செல்ல வேண்டும். கொடுக்கப்படாவில் நீங்கள் போகமாட்டீர்களே. நீங்கள் பாருங்கள். உங்கள் கூட்டங்களை ஏற்படுத்துங்கள்,” அவர் “நான் உங்களை அனுப்பிடும் இடத்திற்கே செல்லுங்கள்” என்றார். பாருங்கள். பணப்பையையும், சமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டு போக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம். 363 “வழியிலே நின்று, ‘நான் போய் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பார்ப்பேன். இவர்கள் கூட வருகிறார்கள்’ என்றெல்லாம் சொல்ல வேண்டாம். நான் அனுப்புகிற இடத்திற்கு போங்கள். யாரைப் பற்றியும் நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்” என்று கூறினார். ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது; இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும்; இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பி வரும். அந்த வீட்டிலே தானே நீங்கள் தங்கியிருந்து (சரியாகக் கூறினால்) அவர்கள் கொடுக்கிறவறவைகளைப் புசித்து, குடியுங்கள்; (“இறைச்சி புசிப்பதில்லை என்ற கொள்கையைப் பற்றியெல்லாம் சொல்லாமல், கொடுப்பதைப் புசியுங்கள்.” என்னே நற்குணம்! புரிகிறதா?) வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். 364 இன்றைக்கு ஜோன்ஸ் வீட்டுக்கும், நாளை இன்னொரு வீட்டுக்கும், இன்னொரு வீட்டிற்கு அதற்கடுத்த நாளும் விருந்துக்குப் போகுதல் நடக்கிறது. “நீங்கள் அங்கேயே தங்கியிருங்கள்”. அவ்வாறு தான் நான் கூட்டத்திற்குச் செல்லுகையில் செய்வேன். ஏன் நான் விடுதியில் தங்கிவிடுவேன் என்று உங்களுக்குத் தெரியுமா? கடைசி வரையிலும் அங்கேயே தங்கிவிடுவேன். அப்படிப்பட்ட நிலையில் தான் நான் சமாதானத்தைக் காண்கிறேன். புரிகிறதா? வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்! ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக் கொண்டால் அவர்கள் உங்கள் முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து, அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
158365 ஆனால் இப்பொழுது அடுத்துள்ள வசனங்களை நான் வாசிப்பேனாக. யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: எங்களில் ஒட்டின உங்கள் பட்டிணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப் போடுகிறோம்; (இப்பொழுது நாம் பார்ப்போம்.)… ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்து கொள்வீர்களாக என்று சொல்லுங்கள். அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப் பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 366 ஓ, சகோதரனே! அந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குறுதி. அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ளவிடில், நீங்கள் அவர்களிடம், “நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளாவிடில், என் பாதரட்சைகளில் ஒட்டியுள்ள தூசியை நான் உதறிவிடுகிறேன், நான் வெளியேறுகிறேன்” என்று கூறுங்கள். அதாவது வேறுவிதமாகக் கூறினால் “நான் உங்களிடமிருந்து ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. நான் ஏதாவது புசித்தால் அதற்குரிய பணத்தைச் செலுத்திவிடுவேன் என்று கூறிவிட்டுச் செல்லுங்கள்.” அவர், “மெய்யாகவே…” என்று கூறினார். அவர்கள் சென்ற நகரங்கள் ஒவ்வொன்றிலும் அவர்களை ஏற்றுக் கொள்ளாததால், இன்றைக்கு அந்நகரங்கள் மூழ்கிப் போய் விட்டன. அவர்களை ஏற்றுக் கொண்ட நகரங்கள் ஒவ்வொன்றும் இன்றும் நிலைத்து நிற்கின்றன. அங்குதான் காரியமே உள்ளது.
159367 இப்பொழுது, இன்னும் ஒரு வசனம், அதன் பிறகு முடிப்போம். நாம் பார்ப்போம். நாம் 10-ம் அதிகாரத்தைப் பார்த்தோம். 11-ம் அதிகாரம் 29முதல் 31, லூக்கா 11:29 முதல் 31, இதற்குப் பிறகு நாம் முடித்து விடுவோம். ஓ, நான் இதை நேசிக்கிறேன்! ஜனங்கள் திரளாய்க் கூடி வந்திருக்கிறபொழுது… 368 அது லூக்கா 11:29 என்பது சரிதானே? அதைப் பற்றிப் பார்ர்போம். ஆம். இது தான் உரிய வசனம் என்று நான் கருதுகிறேன். ஆம்: ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார். தென்தேசத்து ராஜஸ்திரீ சாலமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினைவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; அதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
160369 இப்பொழுது நான் என்ன கூறிக்கொண்டிருக்கிறேன்? முடிக்கிற வேளையில், மீதமுள்ளவைகளை நான் பேசாமல் விட்டுவிட வேண்டியதாயிருக்கிறது. ஆனால், முடிவாக, நான் இதைக் கூற விரும்புகிறேன், ஏனென்றால் நான் உங்களை ஏற்கனவே நீண்ட நேரம் காக்க வைத்து விட்டேன். அவர் இங்கே என்ன கூறிக்கொண்டிருக்கிறார்? “ஒரு நாள் வரும், அப்பொழுது பொல்லாததும், விபச்சாரமுமான ஒரு சந்ததியானது ஒரு அடையாளத்தைத் தேடும்”. (இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்.) இதுதானே அந்த பொல்லாத விபச்சார சந்ததியார் ஆவர். அவர், “அந்த சந்ததியார் ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்வார்கள்” என்று கூறினார். வேதாகமத்தில் ஏனைய பகுதியின் வழியாக அது எப்படி பொருந்துகிறது என்பதை கவனியுங்கள்…யோனாவின் அடையாளம். “யோனா மீனின் வயிற்றில் மூன்று இரவும் பகலும் இருந்தான். அதேவிதமாக மனுஷகுமாரனும் பூமியின் வயிற்றில் மூன்று நாள் இரவும் பகலும் இருக்க வேண்டும்.” அது என்னவாயிருக்கும்? அதுவே உயிர்த்தெழுதலின் அடையாளமாகும். புரிகிறதா? பொல்லாத விபச்சார சந்தததியின் மத்தியில் உயிர்த்தெழுதலின் அடையாளமானது நிகழ்த்தப்படும், அது அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தில் நடந்தது. இயேசுவானவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பி பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரிடமும் ஏனைய அப்போஸ்தலர்களிடமும் வந்தார். அவர்களே இந்த நடபடிகளின் புத்தகத்தை நிகழ்த்தினார்கள். (அது அப்போஸ்தலர்களின் நடபடிகள் அல்ல), அது தானே பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களில் செய்வித்த நடபடிகளாகும்.
161370 இன்றைக்கும் அது ஒரு மனிதன் அல்ல. அது பரிசுத்த ஆவியானவர் மனிதன் அல்லது மனிதர்கள் மூலம் செய்யும் கிரியையாகும். பாருங்கள். அது மனிதன் அல்ல. மனிதன் வெறும் ஒரு பாத்திரம் மாத்திரமே, பாருங்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரோ அப்பாத்திரத்தில் இருக்கும் எண்ணெயாக இருக்கிறார். புரிகிறதா? 371 அவர்கள் என்ன செய்தனர் என்பதைப் பாருங்கள்; இயேசுவினாலே அவர்கள் செய்த அடையாளங்களைப் பாருங்கள். மற்றவர்கள் அவர்களை அறிந்துகொள்ளவேண்டிய…அதாவது பேதுருவும் யோவானும் படிப்பறியாதவர்களும் பேதமையுள்ளவர்களுமாய் இருந்தனர். ஆனால் அவர்கள் இயேசுவோடிருந்தவர்கள் என்று மற்றவர்கள் அறியத்தக்கதாக, இயேசு செய்த கிரியைகளை தாங்களும் செய்தனர். ஆகவே வேதாகமத்தில் உள்ள இந்நான்கு புத்தகங்களும், இந்நான்கு சுவிசேஷப் புத்தகங்களும், பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்களை அவர்கள் என்ன கூறினார்களோ, அவற்றை அப்படியே ஆதரித்து நிற்கத்தக்கதாக, அதை காத்து நின்றன. நீங்கள் பாருங்கள். எனவே இப்பொழுது, இன்றைக்கு, அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகமானது நான்கு சுவிசேஷப் புத்தகங்களோடு சேர்ந்து, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை ரூபகாரப்படுத்துகிறது. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா?
162அவர்கள் மேல்வீட்டறையில் கூடிவந்து யாவரும் அவர் நாமத்தில் ஜெபித்தனர், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர், ஊழியம் செய்வதற்கான வல்லமை அவர்கள் மேல் வந்தது; அந்த நாளில் அவர் அவர்களுக்கு என்ன செய்தாரோ, அதையே அவர் உங்களுக்கும் செய்வார், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்கிறேன். 372 நான் அதைப் பாடுவேனாக: அவர்கள் யாவரும் மேல் வீட்டறையில் கூடி அவர் நாமத்தினால் ஜெபித்தனர். பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டனர், ஊழியத்திற்கான வல்லமை வந்தது; (இன்றைக்கு நமக்கு அதுவே தேவை.) அந்நாளில் அவர் அவர்களுக்காக என்ன செய்தாரோ அவர் உங்களுக்கும் அதையே செய்வார் நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிகிறேன். இவர்கள் கல்லாதவராயிருப்பினும் (இல்லை…பேதுரு, யாக்கோபு, யோவான் இவர்களைப் போல்.) இவ்வுலக கீர்த்தியும் அவர்களுக்கு இல்லை ஆனால் அவர்கள் இயேசுவின் நாமத்தினால் அபிஷேகிப்பட்டு, அவர்கள் யாவரும் தங்களுடைய பெந்தெகொஸ்தேவை பெற்றுக்கொண்டனர், அவர் வல்லமை இன்றும் மாறாதது என்று (அன்று இருந்தது போலவே அப்படியே உள்ளது) எவ்விடத்திலும் இப்பொழுது அவர்கள் கூறி வருகின்றனர், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிச்சியாயிருக்கிறேன். நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன்; அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், ஓ, நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறமுடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன். ஓ, என் சகோதரரே, வாரும், இவ்வாசியை தேடுவீர், அது பாவத்திலிருந்து உமது இருதயத்தை கழுவிடுமே, அது மகிழ்ச்சியின் மணியோசையை ஒலிக்கச் செய்திடுமே உமது ஆத்துமாவை தொடர்ந்து அனல் மூட்டச் செய்யுமே; ஓ, அது இப்பொழுது என் இதயத்திற்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறதே, ஓ, அவருடைய நாமத்திற்கே மகிமை, நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்கிறேன். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்; அல்லேலூயா! அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறிட முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
163373 [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி] . அநேக மக்களை அது வஞ்சிக்கிறது. இங்கே தெருக்களில் இருக்கிற அநேகம் மக்கள் ஆலயத்திற்கு செல்கின்றனர்; சபைகளைச் சேர்ந்து கொண்டவர்களாய் இருக்கின்றனர், ஆதியில் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப் போலவே அவர்களும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரிகிறதில்லை. 374 ஓ, வந்து ஜீவ விருட்சத்தினை எடுத்துக் கொள்ளுங்கள்; கேரூபீன்களை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக…கேரூபீன்கள் என்று சொல்வதற்குப் பதிலாக வேறு ஒன்றைக் கூற நான் விரும்பினேன். இக்கேரூபீன்கள் இச்சிங்காசனத்தை காவல் புரிந்து வருகின்றன. அவைகள் இங்கே வெளியே நின்று சிங்காசனத்தை காவல் புரிந்து மக்களை விரட்டி விடுவதற்கு பதிலாக மக்கள் ஜீவ விருட்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக அவர்களை நாடி வாசல் வழியாக மீண்டும் ஜீவவிருட்சத்தினிடத்திற்கு கொண்டு வர முயற்சிக்கின்றது. இயேசு, “வானத்திலிருந்து தேவனிடமிருந்து வந்த ஜீவ அப்பம் நானே, என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” என்றார். அது உண்மை. ஓ, நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்!
164375 சுகவீனமானவர் எத்தனைபேர் அறையில் இருக்கிறீர்கள்? நாங்கள் உங்கள் கரங்களைக் காணட்டும், உங்கள் கரங்களை உயர்த்திக் காட்டுங்கள். சரி, எத்தனை பேரிடம் ஜெப அட்டைகள் உள்ளன? பில்லி ஜெப அட்டைகளை கொடுத்தானா என்று எனக்குத் தெரியவில்லை? பில்லி எங்கேயிருக்கிறான்? அவன் ஜெப அட்டைகளைக் கொடுத்தானா? நீ கொடுத்தாயா? [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] சரி, யாரிடம் உள்ளது…? [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] 376 இப்பொழுது நீங்கள் யாவரும் இந்த வழியாய்ப் பாருங்கள். இப்பொழுது, ஒளி மகிமைக்கு கீழாக வருகையில் இருக்கிற வண்ணமாக அது உள்ளது. பாருங்கள். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? அது வருகிறது…இங்கே அந்த ஒளி உள்ளது. நீங்கள் இங்கிருந்து அசைந்து செல்லுகிறீர்கள். நீங்கள் பாருங்கள். இப்பொழுது பாருங்கள். அது—அது அங்கே நீங்கள் பார்க்கிற ஒளியின் பிரதிபலிப்பேயாகும். அதுதான், பாருங்கள். அது ஒளியல்ல. இங்கே தான் ஒளியானது தொங்கிக் கொண்டிருக்கிறது, பாருங்கள், இதோ இந்த பெண்மணியின் மேல் அது உள்ளது. நான் அதைக் காண நேர்ந்தது. அது யாரோ ஒருவர் மேல் உள்ளது என்று நான் எண்ணினேன்.
165377 இப்பொழுது, நீங்கள் ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள், நான் இரண்டை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவைகளில் ஒன்று இயற்கையானது, மற்றொன்றோ இயற்கைக்கு மேம்பட்டது. இங்கே வெளியே ஒரு மனிதன் அவ்வரிசையில் உட்கார்ந்து அவ்வொளியை நோக்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறார், அவ்வொளி அவர் மேல்பட்டது. அவர் இண்டியானாவிலிலுள்ள செய்மோர் என்ற இடத்திலிருந்து வந்திருக்கிறார். அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. ஐயா, நீர் விசுவாசிப்பீரெனில், தேவன் உம்மை அந்த பக்கவாத நோயிலிருந்து குணமாக்குவார். ஆமென்! இப்பொழுதே விசுவாசியுங்கள்! 378 நீர் உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீரா? அது தேவனால் உண்டானது என்பதை நிரூபிக்கும்படி வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவராகிய தேவனாகிய கர்த்தர் நான் ஒன்றைச் செய்ய என்னை அனுமதிப்பாரெனில், அப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிப்பீர்களா? உங்களுடைய நிலையானது இறுதி மாதவிடாயின் காரணமாக ஏற்பட்டுள்ள நரம்புதளர்வு ஆகும். தேவன் உங்கள் குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இங்கே இந்தப் பகுதியில் உள்ளவர்களல்ல.
166379 [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] உங்களுடைய தொந்தரவு என்ன?…அவர் உங்களை குணமாக்குவாரென விசுவாசிக்கிறீர்களா? [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி] … உங்களை குணமாக்கிட முடியும், ஏனெனில் குணமாகிட நீங்கள் விரும்புகிறதினால் அல்ல, அது உங்கள் மகன். புரிகிறதா? அவன் வெர்ஜினியாவில் இருக்கிறான். அவனுக்கு என்ன தொந்தரவு உள்ளது என்பதைப்பற்றி என்னால் உங்களுக்கு தேவனுடைய உதவியினால் கூற இயலும் என்பதை விசுவாசிக்கிறீர்களா? அவனுக்கு குடல் புண் உள்ளது. அது சரிதான். அவனிடத்தில் இன்னொரு காரியம் தவறாய் உள்ளது; அவன் இரட்சிக்கப்படவில்லை. அவனுக்காக நீங்கள் ஜெபித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இப்பொழுதும் திருமதி பேக்கர் அவர்களே, நீங்கள் சொமர்செட் ஊருக்கு திரும்பிச் செல்லுங்கள், உங்கள் முழு இருதயத்தோடும், இயேசு கிறிஸ்து அவனை குணமாக்குவார் என்பதை விசுவாசியுங்கள். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி] …? உங்களை குணமாக்குவார், நீங்கள் அவரை உங்களுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்ளுகிறீரா? உங்களால் சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்ள முடியுமென்றால்… [ஒலிநாடாவில் காலி இடம்.] பவுல் ஒருசமயம் கூறினான்… [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] 380 கர்த்தாவே, இப்பொழுதும் தேவனாகிய கர்த்தாவே, இந்நாளில் இது வரையிலும் மிகவும் கவனமாக செவிகொடுத்தவர்களான இங்கு கூடி வந்திருக்கிற ஜனங்கள் மேல் உமது இரக்கங்களும், தயவும் தங்கியிருப்பதாக. 381 சாத்தானே, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உனக்கு சவாலிடுகிறேன், இந்த ஜனங்களை விட்டு வெளியே வா, இவர்கள் சுவிசேஷத்தைக் கேட்பதற்கு இங்கே தங்கியிருக்கிறார்கள். நீ அவர்களை இனிமேல் பிடித்துவைத்திருக்க முடியாது. இந்த ஜனங்களை கட்டி வைத்திருக்கிற பிசாசின் வல்லமை அவர்களை விட்டு விலகிப் போவதாக!