1 நான் அநேக…பெறவேண்டியதாயுள்ளது, ஆனால் நான் பெற்றுள்ளேன்…நான் என் ஒத்துவாக்கியப் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். நான் அதை இங்கே லியோவிடம், அல்லது அதை நாம் உபயோகிக்க வேண்டுமானால், நீங்கள் விரும்பினால் அருகில் உட்கார்ந்துகொண்டு எனக்குதவி செய்ய மனமுள்ள யாரிடமாவது கொடுத்து வைப்பேன். 2 இப்பொழுது, இந்தப் பெண்மணி அங்கிருந்தால், அங்கே இருந்தால்…அவள்…எங்கே…அவளுடைய கணவன் யார்? ஆம். சரி, உங்களுடைய மனைவி உங்களுடன் உட்கார்ந்துகொள்ள நீங்கள் விரும்பினால், அவர்கள்—அவர்கள் அமர்ந்துகொள்ளலாம், சகோதரரின் மத்தியிலேயே ஒன்றும் சொல்லப்படவில்லையெனில், ஒரு சகோதரியினிடத்தில், என்ன சொல்லக் கூடும். நாங்கள்…உங்களுக்குத் தெரியும். அது—அது சரியா? இப்பொழுது, அவளை உங்கள் அருகில் அமர்த்திக்கொள்வதற்கு நீங்கள் அதிகமாகவே வரவேற்கப்படுகிறீர்கள். டாக், அவளுக்கு அங்கே வெப்பமாக உள்ளதா—உள்ளதா? சரி, பரவாயில்லை, ஆனால் அது அவளுக்கு சிறிது தனிமையாக இருக்கிறது. 3 மேலும் ஒன்றுமேயில்லை—இங்கே உள்ளே ஒன்றுமேயில்லை…சில நேரங்களில் நான் “மனிதர்” என்று குறிப்பிடக் காரணம், ஏனென்றால் மனிதரிடையே மனிதர் கேட்கும் ஒரு கேள்விக்கு அங்கே ஸ்திரீகள் இருக்கும்போது பதில் கூறப்பட முடியாமலிருக்கக் கூடும். ஆனால் அங்கு ஏதுமில்லை, ஆனால் வழக்கமான உள்ளூர் சபைகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்ன பதிலளிக்க முடியும், ஏனெனில் அவை பெரும்பாலும் ஊழியக்காரர்கள் மற்றும் பலவற்றைக் குறித்ததும், மேலும் அவர்களுக்கு—அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டளையைக் குறித்ததும் மற்றும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்ததுமாயிருக்கும்.
24 இப்பொழுது, இது ஒலிநாடாவில் பதிவாகிறது என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை…எனக்கு நிச்சயமாகத் தெரியாது. சகோதரன் கோட், அது எங்கே, இப்பொழுது அது ஒலிநாடாவில் பதிவாகிக்கொண்டிருக்கிறதா? சரி. இதை நாங்கள் செய்யக் காரணம், சகோதர்களே, எது முதன்மையானது, எந்த பாகம், மனிதனின் சிந்தையில் என்ன உள்ளது என்றும், நம்முடைய காரியங்கள் என்னவென்றும்—என்னவென்றும் அறிந்துகொள்ளவேயாகும். 5 நாம்—நாம் எல்லோரும் ஒரே காரியத்தைப் பேச வேண்டும். இப்பொழுது, உதாரணமாக, யாரோ ஒருவர் உள்ளே வந்து, இங்குள்ள சகோதரனின் சபைக்கு அவர்கள் சென்றிருக்கலாம் என்று கூறுகிறார் என வைத்துக்கொள்வோம், (சகோதரனே, உங்களுடைய முதல் பெயர் என்ன? வில்லார்ட். சகோதரன்… இப்பொழுது, இங்கு வில்லார்ட் என்னும் பெயர் கொண்ட இருவர் உள்ளனர், நான் உங்களை வேறொரு பெயரால் அழைக்க வேண்டும். நான்…இப்பொழுது, உங்களுடைய கடைசி பெயர் என்ன? கிரேஸ்) சகோதரன் கிரேஸினுடைய சபை, சகோதரன் கிரேஸ் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் சொல்லுகிறார். அதன்பிறகு அவர் செல்லர்ஸ்பர்கிலுள்ள சகோதரன் ரடல் சபைக்குச் செல்கிறார், சகோதரன் ரடல் அதிலிருந்து வித்தியாசமான ஒன்றைச் சொல்லுவார். அதன்பிறகு அவர் சகோதரன் ஜூனி சபைக்குச் சென்று, முற்றிலும், வித்தியாசமான ஒன்றைக் கேட்பார். முடிவில் அவர் இந்த கூடாரத்துக்கு வந்து, இன்னும் வித்தியாசமான ஒன்றைக் கேட்கிறார். புரிகிறதா? அது ஜனங்களைக் குழப்புகிறது.
36 இப்பொழுது, உதாரணமாக யாரோ ஒருவர், “ஓ, நீங்கள் பெற்றுக்கொள்ள…நீங்கள் உண்மையில் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அது அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக, சகோதரன் க்ரேஸ் அவ்விதம் கூறினதாக வைத்துக்கொள்வோம். அதன்பிறகு நீங்கள் சகோதரன் ரடல் சபைக்குச் செல்கிறீர்கள், அவர், “ஆம், அது அவசியம்” என்று கூறுவார். அதன் பிறகு நீங்கள் ஜூனியின் சபைக்குச் செல்வீர்களானால், அவர், “பாருங்கள், அதனால் வித்தியாசம் ஒன்றுமில்லை” என்று கூறுகிறார். புரிகிறதா? நாம் ஒன்று கூட முடியுமானால்…நாம் அதேக் காரியத்தைக் கூறும்படி ஜெபர்சன்வில்லின் ஊழியர்கள் அனைவரையும் (இந்த ஊழியத்தில் உள்ளவர்களை) நாம் ஒன்று கூடும்படி செய்யவே நான் விரும்புவேன்.
47 ஆகையால், அநேக சமயங்களில், உதவிக்காரர்களும் தர்மகர்த்தாக்களும், அவர்கள் தங்களுடைய கடமை என்னவென்பதை கண்டறிய வேண்டும். இன்றிரவு சபை பொருளாளரும், வாயிற்காப்போனும் இங்குள்ளதை நான் காண்கிறேன், எனவே அவர்களுடைய கடமை என்னவென்பதை நாம் கண்டறியப்போகிறோம். ஆனால் இதில் எல்லாமே பெரும்பாலும் (இங்கு) கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் எந்தவிடத்திலும் கேட்கப்பட்டு, எந்தவிடத்திலும் பதிலளிக்கப்படும். இவை சாதாரண கேள்விகளே, தர்மகர்த்தாக்களின் கடமைகள் போன்றவை, அந்த கடமைகளைச் குறித்து… இப்பொழுது, அது உண்மையான கடமைகளாயிருக்குமானால், தர்மகர்த்தாக்களின் கடமைகளைக் குறித்து, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து இங்குள்ள அந்தக் குழு பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஒருக்கால் நான் நினைத்தேன்…
58 ஒரு கேள்வி அங்கு கேட்கப்பட்டுள்ளது, அது அருமையானது என்று நான் நினைக்கிறேன், கர்த்தருக்குச் சித்தமானால் நாம் அதைப் புரிந்துகொள்ளும்படியாக, நான் அதற்கு சற்று கழித்து பதிலளிப்பேன், இவ்வாறுள்ளது: ஒரு குறிப்பிட்ட நெருக்கடியில், ஒரு உதவிக்காரர் என்ன செய்ய வேண்டும்? அவர் என்ன… ஒரு குறிப்பிட்ட நெருக்கடி எழும்பும்போது, செய்ய வேண்டிய அவருடைய கடமை என்ன? அவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? புரிகிறதா? அல்லது ஒரு நெருக்கடி ஏற்படும்போது, ஒரு தர்மகர்த்தா என்ன செய்ய வேண்டும், ஒரு மேய்ப்பர் என்ன செய்ய வேண்டும், அதைப் போன்ற ஏதோ ஒன்று? அவர்கள் வழக்கமாக செய்ய வேண்டிய வேலை முறை நமக்குத் தெரியும், ஆனால் வழக்கத்துக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று சம்பவிக்குமானால் என்ன செய்வது, பாருங்கள், அப்பொழுது அவர்கள் என்ன செய்ய வேண்டும்? 9 நாம் எங்கே பொருந்த வேண்டும் என்று நமக்குத் தெரியும், அது ஒரு இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது போன்றது, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஸ்தானத்தை அறிந்திருக்கிறோம். இப்பொழுது, இந்த விதமான ஒரு குழுவாக, இந்த கேள்வியின் பேரில் பாதி இரவு வரை நாம் தரித்திருக்க முடியும், அது நமக்குத் தெரியும், ஆனால் அது…அது அவசியமல்ல என்று நான் நினைக்கிறேன். நாம் இதற்கு விடையளிப்போம். இப்பொழுது நான் விரும்புவது ஒவ்வொருவரும்…
610 இப்பொழுது பெயர்கள் எழுதப்படவில்லை, சில கேள்விகளில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன, ஆனால் கேள்விகள் எழுதினவர்களின் பெயர்களை நான் அறிவிக்கமாட்டேன். ஏனென்றால் வெறும்—வெறும் கேள்விகள் எதுவாயிருந்தாலும், நான் அவைகளைப் படிப்பேன். இரண்டு கேள்விகளில் மட்டுமே பெயர் எழுதப்பட்டுள்ளன. மேலும், பொறுங்கள், பெயர் எழுதப்பட்ட வேறொரு கேள்வியையும் நான் ஒருக்கால் கண்டுபிடிக்கக் கூடும். எனக்குத் தெரியும், அது வயோதிக மருத்துவர் இங்கில்மன், நான் 4—426 அந்த—அந்த தெற்கு பகுதியில் நான் அவரை அழைக்க வேண்டியதாயிருந்தது. ஜார்ஜ் டவுனில், வசிக்கும் குணமடைந்த அந்த வயோதிக மருத்துவரின் வீட்டுக்கு, நாங்கள் இன்றைக்கு சென்றிருந்தோம், அதாவது அவர் நீண்ட காலமாக நினைவிழந்திருந்தார், மேலும்—மேலும் அது போன்றிருந்தார். இப்பொழுது, இந்த கேள்விகள் மாத்திரமே பெயர் கொண்டுள்ளன என்று நான் நினைக்கிறேன், இப்பொழுது நான் முதலில் படித்த நமது முதல் கேள்விகளைப் பார்ப்போம். இப்பொழுது நாம் தயவுகூர்ந்து, ஒரு நிமிடம் எழுந்து நிற்போமாக.
711 எங்கள் பரலோகப் பிதாவே, இங்கு நாங்கள் ஒரு மனித கூட்டமாக, உம்மை நேசிக்கிற கிறிஸ்தவ மனிதக் கூட்டமாக கூடி வந்திருக்கிறோம், உம்மில் நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம், எங்கள் வாழ்க்கையையும் சேவைகளையும் உமது ஊழியத்திற்கென்றே அர்ப்பணித்துள்ளோம். இங்கு வாலிபர்கள், நடுத்தர வயதுள்ள ஊழியக்காரர் உள்ளனர், அவர்களுக்கு சபைகள் உள்ளன, அவர்கள் தேவனுக்கு முன்பாக பொறுப்புள்ளவர்களாய் உள்ளனர். இங்குள்ள உதவிக்காரர்கள் இந்த வெவ்வேறு சபைகளில் தங்கள் உத்தியோகங்களில் பொறுப்புள்ளவர்களாக உள்ளனர். இங்கு தங்களுடைய பொறுப்புகளுடன் கூடிய, தர்மகர்த்தாக்கள் உள்ளனர். மேய்ப்பர்கள், சுவிசேஷகர்கள், என்னவாயிருந்தாலும், கர்த்தாவே, நாங்கள் உமக்கு பொறுப்புள்ளவர்களாய் இருக்கிறோம். ஆகையால்தான் நாங்கள் ஒரே காரியத்தைப் பேசவேண்டுமென்று; எங்களுக்கு வேதாகமத்தில் போதிக்கப்பட்டுள்ளதுபோல, நாங்கள் ஒரே காரியத்தைப் பேசுவதற்காக, நாங்கள் இங்கு ஒன்றுகூடி வந்துள்ளோம். நாங்கள் யாவரும் ஒரே மாதிரியாக பேச வேண்டும். 12 மேலும் பிதாவே, இவ்விதமான ஒரு கூட்டத்தில், எங்கள் சகோதரரில் சிலருக்கு அல்லது எங்களில் சிலருக்கு இந்த காரியங்களின் பேரில் ஒரு சிறு கருத்து வேறுபாடு உண்டாயிருக்க வழியுண்டு என்பதை நாங்கள் கண்டறியலாம், இதைக் குறித்த உண்மையென்னவென்று கண்டுகொள்ளவே அவர்களில் சிலர் கேள்விகளைக் கேட்டிருக்கின்றனர். நாங்கள் ஒவ்வொருவரும், குறைவுள்ளவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இங்குள்ள சகோதரர் எவரையாகிலும் நான் இங்கு வரும்படி அழைத்து இந்த கேள்விகளுக்கு விடையளிக்கக் கூறுவேனானால், ஒருவேளை அவர்கள் என்னைப் போன்றே அல்லது என்னைக் காட்டிலும் நன்றாக அவைகளுக்கு விடையளிக்க முடியும். ஆனால் நாங்கள் ஒருமித்து உமது வெளிப்பாடுகளின் மேல் சார்ந்திருந்து, உமது வார்த்தையின் மூலமாயும், மற்றும்…உமது ஆவியினாலும், அதை…நீர் எங்களுக்கு வெளிப்படுத்துவீர் என்றும்…ஒவ்வொரு கேள்விக்கும் எங்களுக்கு விடை கிடைக்குமென்றும் காத்திருக்கிறோம். எங்கள் இருதயங்கள்…நாங்கள் இந்த விடைகளினால் நிறைந்து, நாங்கள் இப்பொழுதுள்ளதைக் காட்டிலும்—காட்டிலும் இன்னும் சிறப்பாக எங்களுடைய உத்தியோகத்தின் மூலமாக உமக்கு சேவை செய்ய நாங்கள் ஆயத்தமாகிவிட்டோம் என்னும் உணர்வுடன் வெளியே செல்லலாம். பிதாவே, இங்கு நாங்கள் வந்துள்ள நோக்கம் அதுவே. அதை இப்பொழுது அருளுவீராக. 13 பிதாவே, நாங்கள் உமக்காக காத்திருக்கையில், எங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பீராக. எங்கள் மனதில் எந்த குழப்பமும் இல்லாதிருக்கட்டும், ஆனால் கேள்விக்கு முழுவதுமாக பதிலளிக்கப்பட்டு, ஆவியினால் நாங்கள் திருப்தியடையும் வரைக்கும், நாங்கள் அதிலே நிலைகொண்டு, உமது பிரசன்னத்தின் நிமித்தம் நாங்கள் ஒருமுகமாக இணங்கும்படி செய்யும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
814 துவக்கத்தில், நான் ஒரு வேத வசனத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ஏசாயா கூறினது போன்று, தீர்க்கதரிசி கூறினான்: ஓ …வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்:… 15 மேலும் நாம் இன்றிரவு இங்கு ஏன் வந்திருக்கிறோமென்றால், விவேகத்துடன் முயற்சித்து, காரியங்களை விவேகத்துடன் அறிந்துகொள்ளவே என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது நான் தொடங்கப்போகிறேன்…எண் வரிசைப்படி சிலவற்றை இங்கு எழுதி வைத்திருக்கிறேன், நான் இதை வைத்திருந்தேன், சகோதரன் உட் வைத்துள்ளார்; நான் அவைகளுடைய பதில்களை இந்த உறையில் வைத்துள்ளேன். மேலும் இப்பொழுது என் அருமை சகோதரரே, உங்களுடைய ஒவ்வொன்றிற்கும், என் அறிவுக்கு எட்டின வவரைக்கும் அதை நான் எவ்வாறு புரிந்துகொண்டேனோ, அதற்கேற்ப மிக சிறப்பாக இந்த பதில்கள் அளிக்கப்படுகின்றன என்பதை—என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.
916 இந்த பதில்கள் பிழையற்றவை அல்ல, பாருங்கள், ஏனென்றால் வேதவாக்கியங்கள் பிழையற்றவை, எனக்குத் தெரிந்தமட்டில் இந்த பதில்கள் வேதவாக்கியங்களுடன் இணைந்துள்ளன. இது தெளிவாயுள்ளது என்று நான் நம்புகிறேன். இந்த ஒலிநாடா, அதை பெற்றுக்கொள்ள விரும்பும் எவரும், அதைப் பெற்றுக்கொள்ளும்படி வைக்கப்பட வேண்டியதாயுள்ளது. ஆனால் இப்பொழுது, வேதவாக்கியங்கள் பிழையற்றவை என்று நானறிவேன், ஆனால் என் பதில்கள் பிழையற்றவை அல்ல. எனவே ஒவ்வொருவரும் அதை புரிந்துகொள்கிறீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். மேலும் அது—அது பிழையற்றவையாக இல்லாமல் இருக்குமானால், அப்பொழுது நீங்கள் எந்த நேரத்திலும் அதைக் குறித்து என்னிடம் கேட்க உங்களுக்கு ஒரு உரிமையுண்டு. 17 அது வேறொருவருடைய கேள்வியாயிருந்தாலும் சரி, அது உங்களுடைய கேள்வியாக இருக்க வேண்டுமென்பதில்லை, ஆனால் அது வேறொருவருடைய கேள்வியாயிருந்தால், ஒருக்கால் அதைக் குறித்து நீங்கள் சிந்தித்துக் கூடப் பார்த்திருக்கமாட்டீர்கள், ஆனால் நாங்கள் உதவி செய்யவே இங்குள்ளோம். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம், நாட்கள் பொல்லாதவைகளாயிருக்கின்றபடியால், இங்கு நாம் ஒன்று கூடி வந்துள்ளோம், மேலும்—மேலும் நாம் பயிற்றுவிக்கப்பட, பள்ளியில் கற்றுக்கொள்ள விரும்புகிறோம்.
1018 சகோதரன் ஸ்ட்ரிக்கர், ஒரு இராணுவ வீரர்; அங்கே பின்னால் உள்ள சகோதரன் கோட், ஒரு இராணுவ வீரர்; ஒருக்கால் இங்குள்ள சகோதரன் ரடலும், ஒரு இராணுவ வீரராய் இருந்திருக்கலாம்; சகோதரன் பீலர்; மேலும் மற்றவர்களும் இராணுவ வாழ்க்கையில் இருந்திருக்கின்றனர்; நீங்கள் ஒன்றாக உட்கார்ந்துகொண்டு, நீங்கள்—நீங்கள் ஆலோசனை நிகழ்த்துகின்றீர்கள், நீங்கள் போர்க்களத்துக்கு செல்வதற்கு முன்பு, போரைக் குறித்து நீங்கள்—நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், மேலும் சத்துருவை நீங்கள் அவனுடைய போர்க்களத்தில் சந்திப்பதற்கென, அவனுடைய எல்லா தந்திரங்களையும் முன் கூட்டியே நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். 19 நான் முன்பு குத்து சண்டையிடுவது வழக்கம், அப்பொழுது அவர்கள் என்னுடைய எதிரி, அவன் என்னவாயிருக்கப் போகிறான் என்றும், அவன் எந்த விதமான ஒரு குத்தை உபயோகிப்பான் என்பதையும் கண்டறிவார்கள், அது மேல் குத்தோ, அல்லது இடது குத்தோ, அல்லது அவனுடைய வலது கை குத்தா, மற்றும் அவன் வலது கை குத்து சண்டைக்காரனா, இடது கை குத்து சண்டைக்காரனா, அவன் எவ்வளவு பெலசாலி, அவன் தன்னுடைய பாதங்களை வேகமாக அசைப்பவனா, அவன் தன்னுடைய கண்களை எப்படி உபயோகிக்கிறான், அவன் எந்த மூலையிலிருந்து வருகிறான், மேலும் நம்மால் முடிந்த பலவிதமான எல்லா தந்திரங்களையும் கண்டறியலாம். மேலும் இதற்கு முன்பு அந்த நபர் சண்டையிட்டதைக் கண்டிருந்த அந்த—அந்த பயிற்சியாளர்கள்…அவர்கள் என்னவென்பதைக் கண்டறிவார்கள். எனவே, அவர்கள் என்னுடன் சண்டை போடவிருக்கும் மனிதனின் அதே தந்திரங்களைக் கொண்ட வேறொரு மனிதனை என்னுடன் சண்டையிடும்படி செய்து, அவன் எப்படி சண்டையிடப் போகிறான் என்பதை அறிந்துகொள்ளும்படிக்கு என்னைப் பழக்குவார்கள். 20 அதற்காகத் தான் நாம் இன்றிரவு இங்கிருக்கிறோம். சத்துரு தாக்கும் விதத்தை நாம் அறிந்திருக்கிறோம். அவனுடைய தந்திரங்கள் என்னவென்று நாம் அறிந்திருக்கிறோம். அவன் அசைய முடியாதபடிக்கு அவனை வேதவசனங்களால் தாக்குவதற்காகவே இன்றிரவு நாம் இங்கிருக்கிறோம், ஏனெனில் சத்துரு எல்லாவிடங்களிலும் இருக்கிறான்.
1121 சகோதரன் ராபர்ஸனை, நான் அவரை அங்கே பின்னால் காண்கையில், ஒரு இராணுவ வீரன் என்றால் என்ன என்பதை அவர் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அவருக்கு நிச்சயமாகவே அதைக் குறித்த ஒரு நேரம் உண்டாயிருந்தது! இங்கு எத்தனை இராணுவ வீரர் உள்ளனர், நாம் பார்ப்போம், இராணுவத்தில் வீரராக பணியாற்றியவர்? இங்கே நோக்கிப் பாருங்கள், பாருங்கள், நீங்கள் ஒரு கூட்ட இராணுவ வீரர். சரி, இப்பொழுது, அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். சகோதரன் ராய், சகோதரன் பீலர், இன்னும் இங்குள்ள மற்ற இராணுவ வீரரே, அதைத் தான் நீங்கள் ஆராய்ந்து படிக்கிறீர்கள், இல்லையா? நீங்கள் எதிரியைக் குறித்து, “அவன் என்ன செய்யப் போகிறான்? அவனுடைய அசைவு என்ன?” என்று ஆராய்ந்து அறிகிறீர்கள், அதன் பிறகு அவனை எவ்விதம் சந்திக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்கிறீர்கள். 22 அதற்காகத்தான் இங்கு நாம் இருக்கிறோம், எதிரியின் அசைவை ஆராய்ந்து அறிந்து, மேலும்—மேலும் அவனை எப்படி சந்திக்க வேண்டுமென்றும், அவனை ஜெயங்கொள்ளும் காரியத்தையும் அறிந்துகொள்கிறீர்கள்.
1223 மேலும் நினைவிருக்கட்டும், சகோதரரே, இதை நான் கூறட்டும், இங்குள்ள இந்த சிறு சபை வரிசையாக வரங்களைப் பெறத் தொடங்கியுள்ளது, பாருங்கள், சபைக்கு வரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. வரங்கள் இருந்தாலும் இல்லாமற்போனாலும், ஒரு வரமே இல்லாமற்போனாலும், நான் உங்களிடம் கூறுவது என்னவெனில், வரம் எப்பொழுதுமே சத்துருவைத் தோற்கடிக்காது, ஆனால் வார்த்தை தோற்கடிக்கும். வார்த்தை அவனை எந்தவிடத்திலும் சந்திக்கும். 24 மேலும் இயேசு, அவர் இந்த உலகில் இருந்தபோது, அதை நிரூபித்தார். அவருடைய…அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாயிருந்தார். ஆனால் அவர் சத்துருவைத் தோற்கடிக்க தமது அருமையான வரங்கள் ஒன்றையும் ஒருபோதும் உபயோகிக்கவில்லை. நாம் மத்தேயுவில் காண்கிறோம்…அது மத்தேயு 2-ம் அல்லது 3-ம் அதிகாரம் என்று நினைக்கிறேன், அவர் சொன்னார்…இல்லை, மத்தேயு 2-ம் அதிகாரத்தில், அவர் சத்துருவைச் சந்தித்தபோது, அவனை வார்த்தையின் அடிப்படையில் சந்தித்து, “எழுதியிருக்கிறதே” என்றார். மேலும் சத்துருவும் திரும்பி வந்து, “எழுதியிருக்கிறதே” என்றான். 25 அதற்கு அவர், “இப்படியும் கூட எழுதியுருக்கிறதே” என்று அந்த விதமாக சத்துருவைத் தோற்கடிக்கும் வரைக்கும் உரைத்தார். தேவன் நமக்கு அளித்துள்ள பொருளின் உதவியைக் கொண்டு சத்துருவை சந்திக்க, அதற்காகவே இங்கு நாம் இருக்கிறோம்.
1326 இப்பொழுது நான் நான்கு கேள்விகளை இங்கு வைத்திருக்கிறேன்…அவை ஒரே—ஒரே துண்டு காகிதத்தில் எழுதப்பட்டுள்ளன, மேலும் நான் அவைகளுக்கு வரிசைக்கிரமமாக: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு…எட்டு, பத்து, என்று அந்த விதமாக எண்களைத் தந்திருக்கிறேன். இந்த காகிதத்தில் உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்தவுடன், அதன்பின்பு அங்குள்ள மற்ற கேள்விகளுக்கு சென்றுவிடுவேன். இது கூறுகிறதென்னவென்றால்: 107. சகோதரன் பிரான்ஹாமே, இந்த கேள்விகள் முறைப்படி இல்லாமற்போனால், அவைகளைத் தள்ளிவிடுங்கள், மேலும் அதைக் குறித்து நான் மோசமாக நினைக்கமாட்டேன், ஏனென்றால் அது கர்த்தருடைய கரம் அல்லவென்று நான் அறிந்துகொள்வேன். கேள்வி எண் ஒன்று: சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்…அதாவது அது—திரும்ப வர வேண்டும்—வேண்டும்… நான் ஊழியத்துக்கு மீண்டும் வரவேண்டுமென்று நீங்கள் சொல்வதை நான் —நான்—நான் கேட்டிருக்கிறேன், நானே அதன் பேரில் சிந்தனை செய்து, அதைக் குறித்து அவரிடத்திலிருந்து திட்டவட்டமான வார்த்தையைப் பெறுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்நாள் வரைக்கும் அது வரவேயில்லை. இப்பொழுது, முடிவு மிகவும் அருகில் உள்ளதென்று நான் அறிந்துள்ளபடியால், கர்த்தராகிய இயேசு என்னிடம் பேசுவதற்கு நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா? அல்லது, நீங்கள் இந்நாளில் அவருடைய சார்பில் பேசும் பேச்சாளராக இருப்பதால், என்னிடம் என்ன கூறவேண்டுமென்று உங்களிடம் கூற அவர் பிரியப்படுவாரா? 27 சரி, இப்பொழுது, சகோதரனே, நான்…நான் அதற்கான என்னுடைய பதிலை இங்கு எழுதி வைத்துள்ளேன். தேவன் இந்த சகோதரனை அழைத்தல், வாழ்க்கையில் ஒரு அழைப்பு, இப்பொழுது, அந்த ஒரு மகத்தான காரியத்தை நாம் ஒரு பொருளாக எடுத்துக்கொண்டு, இரவு முழுவதும் அதன் பேரில் பிரசங்கிக்கலாம், பாருங்கள், “ஒரு அழைப்பு” என்ற அந்த ஒரு காரியம். “உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்,” பாருங்கள். நாம் அழைக்கப்பட்டோமா என்று வியந்துகொண்டிருக்க நாம் விரும்பவில்லை. நீங்கள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் இல்லையெனில் நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள், நாம் ஒரு போரில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். புரிகிறதா? சகோதரனே, உங்களுடைய அழைப்பு தேவனிடத்திலிருந்து வந்துள்ளதென்றும், ஒரு வேலையைச் செய்ய நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் முற்றிலும் நிச்சயமுடையவர்களாயிருந்தால்… 28 இப்பொழுது, சத்துரு உங்கள்மேல் அங்கே ஒரு சூழ்ச்சியைக் கையாளட முடியும். அதாவது நீங்கள் உண்மையில் அழைக்கப்பட்டிருக்கையில், நீங்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்று நினைக்கும்படி அவனால் செய்ய முடியும், அதன்பின்னர் நீங்கள் அழைக்கப்படாதிருக்கையில், நீங்கள் அழைக்கப்பட்டுள்ளதாக நினைக்கும்படி செய்ய முடியும்; இல்லையென்றால் நீங்கள் அழைக்கப்படாதிருக்கையில், நீங்கள்—நீங்கள் அழைக்கப்பட்டுள்ளதாக நினைக்கும்படி செய்ய முடியும்; நேர்மாறாக, இரண்டில் ஒரு வழி. எனவே நீங்கள் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
1429 இப்பொழுது, இதைச் செய்ய வேண்டிய முறை இதுவே. முதலாவது கண்டுபிடியுங்கள்…பாருங்கள், இப்பொழுது, இது ஆலோசனையாயுள்ளது, இதன் பேரில் நான் அளிக்கக் கூடிய ஒரே காரியம் ஆலோசனையேயாகும். புரிகிறதா? ஆனால் உங்களுடைய அழைப்பு தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை உறுதியாக்கிக்கொள்ளுங்கள், அதன் பிறகு உங்கள் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பரிசீலனை செய்து பாருங்கள். புரிகிறதா? இப்பொழுது, அதன் மூலம் நான் என்ன அர்த்தத்தில் கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் பிரசங்கம் செய்வதற்கான உங்களுடைய நோக்கம் என்ன? அது வெறும்…இப்பொழுது உங்களுக்கு உள்ள வேலையைக் காட்டிலும் அது எளிதான வேலை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் அதை மறந்துவிடுங்கள், அது ஒரு அழைப்பு அல்ல. 30 ஒரு தேவனுடைய அழைப்பு உங்கள் இருதயத்தை மிகவும் அனல் மூட்டிக் கொண்டேயிருப்பதால், உங்களால் அதற்காக இரவும் பகலும் இளைப்பாறவே முடியாது. அதிலிருந்து நீங்கள் விலகவே முடியாது, அது உங்களை தொடர்ந்து உறுத்திக் கொண்டேயிருக்கும்.
1531 மேலும்—மேலும் நீங்கள் பிரசங்கிக்க வேண்டுமானால்…பாருங்கள், இப்பொழுது, உங்களுக்கு வேறொரு நோக்கமும் இருக்கக் கூடும், “இப்பொழுது எனக்குள்ள வேலையைக் காட்டிலும், நான் வெற்றிகரமாக சுவிசேஷகனுடைய அல்லது மேய்ப்பனுடைய வேலையைச் செய்து, எனக்கு ஒரு நல்ல சம்பளமும், ஒரு நல்ல வீடு போன்றது கிடைக்கப் பெற்று வாழ நேரிட்டால், அப்பொழுது அது ஒரு நல்ல காரியமாயிருக்கும் என்றும், இப்பொழுது நான் செய்துகொண்டிருக்கின்ற வேலையைக் காட்டிலும் அது எளிதாக இருக்கும் என்றும் நான்—நான் நினைக்கிறேன். மேலும் அது உண்மையிலேயே அவ்விதம் இருக்கும்…” என்று நீங்கள் கூறலாம். இப்பொழுது, பாருங்கள், துவக்கத்திலேயே உங்கள் குறிக்கோள் தவறானது. பாருங்கள், அது சரியல்ல. புரிகிறதா? நீங்கள்—நீங்கள் அதன்பேரில் அங்கே தவறாயிருக்கிறீர்கள். 32 அப்பொழுது நீங்கள், “பாருங்கள், ஒருவேளை அதனால் நான் ஒரு…ஜனங்களின் மத்தியில் பிரபலம் வாய்ந்தவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன்” என்று கூறலாம். பாருங்கள், அப்படியானால் நீங்கள் ஒரு பெரிய தோல்விக்கு ஆயத்தமாயிருப்பதை நீங்கள் கண்டறிவீர்கள். உண்மையாக, பாருங்கள்! 33 ஆனால், இப்பொழுது, உங்களுடைய குறிக்கோள், “நான் மலிவு பிஸ்கோத்துக்களைத் தின்று, ஓடைத் தண்ணீரைக் குடிக்க நேரிட்டாலும் எனக்கு கவலையில்லை” என்றிருக்குமானால் நல்லது. உங்களில் ஏதோ ஒன்று கிழித்து, “நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன் அல்லது மரிப்பேன்” என்று கூறினால் நல்லதே! புரிகிறதா? அப்பொழுது நீங்கள்—நீங்கள் எங்காவது செல்வீர்கள், ஏனெனில் தேவன் உங்களுடன் ஈடுபடுகிறார். தேவன் உங்களுக்கு தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார், ஏனெனில் அது தேவன் உங்களை இளைப்பாறவிடாமலிருப்பதாகும். மேலும், வழக்கமாக, தேவனால் அழைக்கப்பட்ட ஒரு மனிதன் அதைச் செய்ய ஒருபோதும் விரும்புகிறதில்லை. அதை நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? எந்த மனிதனும்…
1634 அண்மையில் மிகவும் விலையேறப் பெற்ற சில சகோதரர்களால் என்னிடம், “சகோதரன் பிரான்ஹாமே, நாங்கள் இப்பொழுது சத்தியத்தின் வழியில் வந்துவிட்டபடியால், நாங்கள் இப்பொழுது கர்த்தரைக் கண்டடைந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டபடியால், நாங்கள் செய்ய வேண்டிய ஊழியத்திற்காக வரங்களை நாடலாமா” என்று கேட்கப்பட்டது. 35 அப்பொழுது நான், “அவ்விதம் ஒருபோதும் செய்யாதீர்கள்” என்றேன். புரிகிறதா? அவ்விதம் ஏதாவதொன்றைச் செய்ய மக்களுக்கு ஆலோசனை கூறாதீர்கள், ஏனெனில் அதைச் செய்ய விரும்பும் ஒரு நபர் வழக்கமாக அதைச்—அதைச் செய்ய முடியாதவனாயிருப்பான். 36 அதைவிட்டு ஓடிப் போக முயற்சி செய்யும் ஒரு மனிதனையே தேவன் உபயோகிக்கிறார். புரிகிறதா? அவன் அதை விட்டு ஓடிப் போக முயன்று, “ஒ, சகோதரனே, நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நான்…அழைப்பு எனக்குள் உள்ளது, ஆனால் நான்…வ்யூ! மனிதனே, அதைச் செய்ய எனக்கு பிரியமில்லை” என்பவனே. பாருங்கள், அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது, நீங்கள் பாருங்கள். அதாவது—ஓடிப் போக முயல்கிறவனே. 37 அவன்—அவன் அதை எப்படியாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால், முதலாவதாக அவன் “பெருமைகொண்ட” ஒருவனாக தன்னைக் காண்பிக்கிறதை நீங்கள் அறிந்து கொள்ளுகிறீர்கள். நீங்கள், “தேவனே, நீர் மலைகளை அசைக்கத்தக்கதாக எனக்கு வல்லமையை அளிப்பீராக, நான் உமக்குச் சொல்லுகிறேன், மலைகளை அசைக்க என்னை நீர் அனுமதிப்பீரானால், உமக்காக நான் ஏதாவதொன்றைச் செய்வேன்” என்று கூறுவது போலாகும். இல்லை, அவன் ஒன்றுமே செய்யமாட்டான், அவன் சரியான மனப்பான்மைக்கே தன்னை செயல்படுத்திக்கொள்ள முடியாது, பாருங்கள், எனவே அவன் தேவனுக்காக மலைகளை ஒருபோதும் அசைக்கவே முடியாது.
1738 பவுலை, உதாரணமாக, எடுத்துக் கொள்ளுங்கள். பவுல் தன் அழைப்பை விட்டு விலகிக்கொண்டிருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஓ, சகோதரனே! அவனால் அதை செய்திருக்கவே முடியாது. அது அவனை இரவும் பகலும் உறுத்திக் கொண்டேயிருந்தபடியால், அவன் தன் சபையை விட்டுவிட்டு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, மேலும்—மேலும் புறப்பட்டு சென்றுவிட்டான்…ஆசியாவுக்குச் சென்றான் என்று நான் நினைக்கிறேன், இல்லையா? அது சரியா தவறா என்றும், தேவன் அவனை உண்மையில் அழைத்திருக்கிறாரா என்பதையும் கண்டுகொள்ள, அவன் அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து வேதத்தை ஆராய்ந்து பார்த்தான். 39 சகோதரனே, எனவே தேவன் உங்களை அழைத்துக்கொண்டிருப்பாரானால், அது உங்கள் இருதயத்தை உறுத்திக்கொண்டேயிருக்கும், அப்படி இருக்குமானால் நான், “பாரமான யாவற்றையும், உங்களை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிடுங்கள்” என்பேன். உங்களுக்குப் புரிகிறதா? ஒருவேளை…ஆனால் அது உங்களை உறுத்திக்கொண்டிருக்கவில்லையென்றால், அப்பொழுது அதைக் குறித்து நான்—நான்—நான் மிகப் பெரிதாக எண்ணமாட்டேன். அது அப்படியே அதனுடைய ஸ்தானத்திற்கு வரட்டும்.
18இப்பொழுது, அவர் கூறினார், இந்த சகோதரன் இங்கே கூறினார்: சகோதரன் பிரான்ஹாம், வேண்டுமா…தேவன் பேசுவார் என்று நீர் நினைக்கிறீரா… (அவரிடம் சொல்லும்படி என்னிடம்.) 40 தேவன் அவரிடம் நேரடியாக பேசுவார் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், உங்களுக்குத் தெரியுமா, தேவன்…அவர் நம்மிடம் பேசும்படிக்கு நாம் அவ்வளவு பெரியவர்கள் அல்ல. அவர்—அவர்—அவர் நம்மிடம் பேசுவார், சரி. பாருங்கள், அவர்…அவர் நம்மிடம் பேசுவார். 41 நான் இதை உங்களிடம் சொல்கிறேன், தேவன் என்னிடம் அதைக் கூறுவாரானால், அப்பொழுது அந்த சகோதரன், “பாருங்கள், தேவன் சகோதரன் பிரான்ஹாமிடம் அவ்விதம் கூறினார், தேவனுக்கு ஸ்தோத்திரம்!” என்று கூறலாம். 42 ஆனால், நீங்கள் பாருங்கள், உங்களுக்கு அழைப்பைக் கொடுப்பது சகோதரன் பிரான்ஹாம் அல்ல, அது கர்த்தராகிய இயேசுவே உங்களுக்கு அழைப்பைக் கொடுக்கிறார். புரிகிறதா? உங்களுக்கு அழைப்பைக் கொடுப்பது கர்த்தராகிய இயேசுவானால், அவரே பேசுவார். புரிகிறதா? நான் உங்களிடத்தில் உங்களுடைய செவிகளில் பேசலாம், ஆனால் கிறிஸ்து உங்களை ஊழியத்துக்கு அழைக்கும்போது, அது உங்களுடைய இருதயத்தில் உள்ளது. புரிகிறதா? அங்குதான் அது நங்கூரமிடப்பட வேண்டும், அதிலிருந்து நீங்கள் விலகிச் செல்லவே முடியாது. இப்பொழுது, நான் நினைக்கிறேன் இரண்டாம் கேள்வியின் பேரில்… 43 இப்பொழுது, அதன் பேரில் ஏதாகிலும் கேள்வி இருக்குமானால், அதற்கு ஏதாவது கேள்வி இருக்குமானால், பாருங்கள், அதாவது ஒரு மனிதனின் அழைப்பு தேவனிடத்திலிருந்து வந்து, அவனுடைய இருதயத்தில் இருக்க வேண்டும். மேலும்—மேலும் வேறொரு சகோதரன்…ஓ, இதை எழுதினது யார் என்று எனக்குத் தெரியும். பாருங்கள், அதை எழுதினது யார் என்று எனக்குத் தெரியும், அது ஒரு விலையேறப்பெற்ற, அருமையான, அந்த கருணையுள்ள சகோதரனுக்கு தேவனுடைய ஒரு அழைப்பு உள்ளதென்று நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். ஆனால் நான்…ஆனால் நான் கூறுவதன் பேரில் அவர் அதைச் செய்வதை நான் விரும்பமாட்டேன் (அதன் காரணமாகத் தான் நான் இவ்விதம் அதற்கு விடையளித்தேன்), பாருங்கள், “பாருங்கள், ஆம், சகோதரன் இன்னார்-இன்னார் ஊழியத்துக்குச் செல்ல வேண்டும்” என்று நான் கூறுவதன் பேரில். புரிகிறதா?
1944 இப்பொழுது நீங்கள், “நான் அதைச் செய்ய வேண்டும் என்று சகோதரன் பிரான்ஹாம் என்னிடம் கூறினார்” என்பீர்கள். பாருங்கள், ஒருகால் சகோதரன் பிரான்ஹாமுக்கு ஏதாகிலும் சம்பவித்து, நான் கொல்லப்பட்டேன், அல்லது மரித்துப்போனேன், அல்லது—அல்லது விலகிவிட்டேன் என்றால் என்னவாகும்? அப்பொழுது, பாருங்கள், உங்கள் அழைப்பு அப்பொழுது முடிந்துவிடும். ஆனால் இயேசு உங்களை அழைப்பாரானால், சகோதரனே, நித்தியம் என்று ஒன்று உள்ள வரைக்கும், அது ஒலித்துக்கொண்டேயிருக்கும். புரிகிறதா? அப்பொழுது நீங்கள் எங்கு நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இப்பொழுது இரண்டாம்… 45 இல்லையென்றால் இப்படி ஏதோ ஒன்று, “இது கடைசி நாட்கள் என்று நான் அறிந்துள்ளதால்.” அதைக் குறித்து அந்த சகோதரனை நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதை அந்த சகோதரன் உணர்ந்துள்ளதைக் குறித்தும் கிறிஸ்துவுக்காக ஏதாவதொன்றைச் செய்ய வேண்டுமெனும், அவருடைய இருதயத்தின் உத்தமத்தைக் குறித்தும் நான் நிச்சயம் அவரைப் பாராட்டுகிறேன்.
20அடுத்த ஒன்று: 108. நம்முடைய விலையேறப் பெற்ற கர்த்தர் அவருக்காக நான் ஒரு சிறிய காரியத்தைச் செய்ய வேண்டும் என்று என்னை அனுமதிப்பாரானால், நான் முன்பு ஒரளவு ஊழியம் செய்திருந்த ஜனசமூகத்தினிடம் திரும்பிச் சென்று…தவறுதலாய் (அதற்காக நான் வருந்துகிறேன்)… அதை அவர் அடைப்புக்குறிக்குள் எழுதியிருக்கிறார்… அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்க முயற்சிக்க வேண்டுமா? அவைகள் அவ்வளவாய்—அவைகள் அவ்வளவாய் என் இருதயத்தில் இருந்து வருகின்றன. 46 இல்லை, சகோதரனே, அதே ஜனசமூகத்தினிடம் நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டியது அவசியமில்லையென்று நான் நினைக்கிறேன். அருமை சகோதரனே, கர்த்தர் உங்களை அழைக்கும்போது, நீங்கள் முன்பு குடியிருந்த ஜனசமூகத்துக்கு உங்களை போகவிடமாட்டார் என்று நான் நினைக்கிறேன், அங்கு நீங்கள் ஒருவேளை வேறு காரியங்களை அல்லது இல்லாதிருந்த காரியங்களை போதித்திருக்கக்கலாம்…அதாவது நீங்கள் இப்பொழுதோ உண்மையாகவே வித்தியாசமாக காண்கிறீர்கள், பாருங்கள், அதாவது அப்பொழுது நீங்கள் போதித்தவைகளிலிருந்து வித்தியாசமான காரியங்களை நீங்கள் இப்பொழுது காணலாம். இப்பொழுது, மேலும் கர்த்தர், அவர் உங்களை அழைத்தபோது, அவர் ஒருக்கால்…அவர் அதை உங்களுக்கு உறுதிப்படுத்துவாரானால், அவர் எந்த இடத்திற்கும் உங்களை அனுப்பலாம். புரிகிறதா? நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஜனசமூகத்திற்கு அல்லது எதற்கும் செல்ல வேண்டியதில்லை. 47 நீங்கள் அங்கே இருந்தபோது, நீங்கள் உத்தமமாய் இருந்தீர்கள். நான் இதைக் கூறக் காரணம், இந்த கேள்விகளை எழுதின சகோதரனை நான் அறிவேன். மிகவும் ஆழமான உத்தமத்துடனும், உண்மையான அசலான கிறிஸ்தவனாகவும், எப்படி செய்ய வேண்டும் என்று நீங்கள் அறிந்திருந்த யாவற்றோடும் உங்களால் செய்ய முடிந்த அளவுக்கு நீங்கள் சிறப்பாக செய்தீர்கள், அவ்வளவுதான் தேவனுக்குத் தேவை. புரிகிறதா? இப்பொழுது, தேவன் உங்களை மீண்டும் அந்த ஜனசமூகத்துக்கு செல்ல அழைப்பாரானால், நான் மீண்டும் அங்கு செல்வேன். ஆனால் அவர் அவ்விதம் செய்யாவிட்டால், அவர் என்னை எங்கு அனுப்பினாலும் நான் அங்கு செல்வேன் என்று நான்—நான் நம்புகிறேன். அதன் பேரில் ஒரு கேள்வி உண்டா?
21எண் மூன்று: 109. ஒருவர் கிறிஸ்துவின் சரீரத்தில் தனக்கு உரிய ஸ்தானத்தை எவ்விதம் அறிந்துகொள்வது? 48 அது ஒரு நல்ல, மிக நல்ல ஒரு கேள்வி, “எவ்விதம்…” இன்றிரவு இங்குள்ள நம்மில் அநேகரின் மத்தியில் இந்த விதமான ஒரு கேள்வி இருக்கும், “நீங்கள் எப்படி சரியாக அறிந்துகொள்வீர்கள்?” இப்பொழுது, இந்த சகோதரன் “கிறிஸ்துவில் என்ன , என்ன ஸ்தானம், கிறிஸ்துவின் எந்த பாகத்தை நான் வகிக்க வேண்டும்?” என்று அறிந்துகொள்ள விரும்புகிறார் என்று நான் ஊகிக்கிறேன். 49 இப்பொழுது, உதாரணமாக, சகோதரனே, நான் இந்த விதமாக, உங்களுக்கு அளிக்க எனக்குத் தெரிந்த சிறப்பான விடையைக் கூறுகிறேன். கிறிஸ்துவில் உள்ள…உங்களுடைய ஸ்தானம் பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அப்படியானால் அதை பரிசுத்த ஆவியா அல்லது இல்லையா என்பதை அறிந்துகொள்ள நீங்கள் விரும்பினால், நீங்கள் செய்துகொண்டிருக்கிறதை அவர் ஆசீர்வதிக்கிறாரா, அல்லது இல்லையாவென்று கண்டறியுங்கள். அவர் அதை ஆசீர்வதித்தால், அப்பொழுது அது அவர்தான். அவர் ஆசீர்வதிக்க வில்லையென்றால்…
2250 அண்மையில் யாரோ ஒருவர் என்னிடம் கூறினார், அவர், “கர்த்தர் என்னைப் பிரசங்கம் செய்ய அழைத்திருக்கிறார்” என்றார். அதற்கு நான், “பாருங்கள், அப்படியானால் பிரசங்கம் செய்யுங்கள்” என்றேன். பார்த்தீர்களா? எனவே அவர்—அவர்… 51 அது இப்படித்தான் என்று நான் உண்மையாகவே நினைக்கிறேன்…சாத்தான், எவராகிலும் ஒருவர் இவ்விதம் நடந்து கொள்ளும்படி அவன் செய்து, அதன்பின்னர் அவர்களை வஞ்சிக்கிறான், அதைத்தான் அவன் செய்ய விரும்புகிறான். அப்பொழுது முழு உலகமும் அங்கே தங்களுடைய விரலைச் சுட்டிக்காட்டுகிறது. சிலர் தங்களுக்கு அந்நிய பாஷைகளில் பேசும் ஒரு வரமும் மற்றும் அதற்கு அர்த்தம் உரைத்தலும் உள்ளதாக எண்ணிக்கொள்கின்றனர்; சிலருக்கு தெய்வீக சுகமளிக்கும் வரம் உள்ளது; சிலருக்கு இது போன்ற வரங்கள் உள்ளன…சில சமயங்களில் அவர்கள் அந்த காரியங்களில் தவறாக உள்ளனர், பாருங்கள். மேலும் சில சமயங்களில் தங்களுக்கு இந்த வரங்கள் உள்ளபோதே அவர்களுக்கு இவைகளை பெற்றிருக்கவில்லையென்று நினைக்கின்றனர். எனவே அது மிகவும் தந்திரமானது.
2352 எனவே, சகோதரரே, இதை எப்பொழுதும் செய்யுங்கள், எப்பொழுதாவது நீங்கள் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் உணரும்போது, நீங்கள் அதை செய்வது வேதப்பூர்வமானதா (அது வேதத்தில் உள்ளதா) என்பதைக் கண்டுபிடியுங்கள். அது வேதத்தில் ஒரு இடத்தில் எழுதப்பட்டிருப்பதல்ல, நீங்கள் அதைச் செய்வதற்கான, உங்களுடைய ஸ்தானம், அது வேதம் முழுவதிலும் உள்ளதையே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன், நீங்கள் ஒரு சுவிசேஷகராக, மேய்ப்பராக, போதகராக, தீர்க்கதரிசியாக இருந்தால், தேவன் உங்களை என்னவாக இருக்கும்படி அழைத்திருக்கிறாரோ அதைக் கூறுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? அல்லது உங்களுக்கு அந்நிய பாஷைகள் பேசும் வரம், பாஷைக்கு அர்த்தம் உரைக்கும் வரம், சபையில் உள்ள ஒன்பது ஆவிக்குரிய வரங்களில் எந்த விதமான—எந்த வரம், சபையின் நான்கு ஆவிக்குரிய உத்தியோகங்களில், ஏதாவதொரு ஸ்தானமாக இருக்குமானால், முதலாவதாக தேவன் அழைத்தாரா என்பதைப் பாருங்கள். 53 அதன்பிறகு, வழக்கமாக, அதை நான் எனக்கான விதத்தில் கவனிக்கிறேன், சரியாக…இது எனக்கானதாயுள்ளது, நான் அந்த நபரின் சுபாவத்தைக் கவனித்துக்கொண்டே வந்து, அவர்கள் எந்தவிதமான வரத்தை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று காண்பேன். பாருங்கள், தேவன் தம்முடைய சிருஷ்டியை உண்டாக்கியிருக்கிற விதமாக அவனோடு கிரியை செய்வார். பார்த்தீர்களா? அவர் ஒரு சிருஷ்டியை உண்டாக்கினால்…
2454 நீங்கள் அவரை உண்மையாகவே நிலையற்றவராயிருக்கவும் மற்றும் அவ்வாறு நடப்பதையும் கண்டால், நீங்கள்…மேலும் அவர், “கர்த்தர் என்னை ஒரு மேய்ப்பனாக இருக்கும்படி, இன்ன-இன்னத்திற்காக அழைத்திருக்கிறார்” என்பாரானால். இப்பொழுது, ஒரு மேய்ப்பன் நிலையற்றவராயிருக்க முடியாது. ஒரு மேய்ப்பன் திடமானவர், நேர்மைவாய்ந்தவர். புரிகிறதா? 55 “தேவன் என்னை போதகராக இருக்கும்படி அழைத்தார்.” அவர் வார்த்தையை எவ்விதம் வியாக்கியானம் செய்கிறார் என்று அவரைக் கவனியுங்கள். புரிகிறதா? அவர் எல்லாவற்றையும் குழப்புவாரானால், அப்பொழுது நீங்கள் அவரைக் குறித்து சொல்லிவிடலாம். புரிகிறதா? 56 ஆனால், அப்படியானால், செய்ய வேண்டிய காரியம், நீங்கள் அதைச் செய்ய முடியுமா இல்லையா என்பதைப் பொருத்து உங்களுடைய ஸ்தானம் வழக்கமாக அறிந்துகொள்ளப்படுகிறது.
2557 இப்பொழுது, தேவன் என்னை ஒரு சுவிசேஷகராக இருக்கும்படி அழைத்தபோது, நான் ஒரு மேய்ப்பனாக இருக்க விரும்பினேன். மேலும் இங்கே வீட்டிலேயே தங்கியிருப்பது நன்றாயிருக்கும் என்று நான் எண்ணினேன். தேவன் என்னை அழைத்தார். முடிவில் எல்லா மக்களும் ஒன்று கூடி…அவர்களில் ஒருவரும் இன்றிரவு இங்கில்லை, அதாவது அவர்கள் மிகவும் அழுது, அங்கிருந்த 1717 ஸ்பிரிங் தெருவிலிருந்து வெளி வந்தனர். இங்கே அருகில் வசித்த திருமதி ஹாக்கின்ஸ், என்ற பெண்மணி என்னைச் சந்தித்து (அழுது கொண்டே, அது பொருளாதார நெருக்கடி உண்டாயிருந்த காலம், அண்டை வீட்டிலுள்ள ஒருவர் ஒரு பானை பீன்ஸ் சமைக்க, நாங்கள் எல்லாரும் வந்து, அதிலிருந்தே உண்போம்), மேலும் அவள், “நீர் மாத்திரம் ஒரு கூடாரத்தைக் கட்டுவீரானால், மேசையில் என் பிள்ளைகளின் ஆகாரத்தை குறைத்துக்கொண்டு, அதற்கு பணம் தருவேன்” என்றாள். புரிகிறதா? 58 என் அழைப்பு சுவிசேஷகராக இருந்தது. அன்று காலையில்…இங்கே இந்த மூலைக்கல்லிலே வைத்துள்ள, இன்றிரவு நாம் அங்குள்ளதை உடைத்தெடுக்க முடிந்தால், நான் சுவிசேஷகனாக இருக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினது அங்கே என் வேதாகமத்தின் கடைசி பகுதியில் உள்ள ஒரு தாளில் எழுதப்பட்டுள்ளதை நீங்கள் காண்பீர்கள். பார்த்தீர்களா? நான் ஒரு வெற்றிகரமான மேய்ப்பனாக இருக்கவேயில்லை, அவ்விதம் இருக்கவும் போவதில்லை, ஏனெனில் ஒரு மேயப்பனுக்கு இருக்க வேண்டிய பொறுமை எனக்கில்லை. புரிகிறதா? எனவே நான் மேய்ப்பனாக இருக்க முயன்றால், ஒரு மேய்ப்பன் சுவிசேஷகனாக இருக்க முயன்றால் அது எப்படி முடியாத காரியமோ, அதுபோல நான் விலகியிருப்பேன். 59 நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? கர்த்தர் உங்களை எந்தவிதமாக அழைத்திருக்கிறாரோ, கிறிஸ்துவின் சரீரத்தில் உங்கள் ஸ்தானம் எதுவோ, அதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். ஏதேனும் ஒரு கேள்வி உண்டா?
26110. பரிசுத்த-ஆவியால்-நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? 60 அது முதலாம் கேள்வி, “பரிசுத்த ஆவியால் நிறைந்த அனைவருமே…” அப்படியானால், இவையனைத்தும் ஒரே கேள்வியில் அடங்கியுள்ளன, இதற்கு இங்கே நான் நான்காம் கேள்வி என்று எண் கொடுத்திருக்கிறேன். ஆனால் அதை முதலிலேயே நான்—நான் கூறுவேன், நீங்கள் பாருங்கள்: பரிசுத்த ஆவியால் நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? “அவர்களெல்லாரிலும் அதிகமாக பாஷைகளைப் பேசினதாக” பவுல் அங்கே கூறினதை நான் காண்கிறேன். சரி, கேள்வி எண் நான்கு: பரிசுத்த ஆவியைப் பெறும்போது எல்லாருமே அந்நிய பாஷைகளில்… அல்லது, இல்லை, அது கூறினதோ: எல்லாருமே அந்நிய பாஷை பேசுகின்றனரா… இல்லை: பரிசுத்த ஆவியால்-நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? 61 இப்பொழுது, சகோதரனே, நான்…இது ஒரு ஆழமான கேள்வி. இப்பொழுது, அங்கே, நீங்கள் அநேகமாக…இதன் பேரிலான சில விடைகளை அநேகமாக நான் பின்பு தரலாம். 62 பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியின் ஒரு பாகம் நீதிமானாக்கப்படுதல். அப்பொழுது நீங்கள் முதலில்…தேவன் உங்களை அழைக்க வேண்டும் இல்லையெனில் நீங்கள் ஒருபோதும் அழைக்கப்படவேமாட்டீர்கள். பாருங்கள், நீங்களாகவே செய்யக் கூடியது ஒன்றுமில்லை. “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” அது சரியா? எனவே பரிசுத்த ஆவியின் ஒரு பாகம் நீதிமானாக்கப்படுதல்.
2763 தானிய வயலைக் குறித்து அந்த லூத்தரன் கல்லூரித் தலைவருக்கு நான் விளக்கிக் கூறினதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? பாருங்கள், “ஒரு மனிதன் வயலுக்குச் சென்று இரண்டு…சோளத்தை, தன் சோள வயலில் விதைத்தான். அடுத்த நாள் காலையில் அவன் வயலில் சென்று பார்த்தபோது, அங்கு ‘ஒன்றுமேயில்லை.’ சற்று கழித்து அவன் இரு சிறு முளைகள் வெளியே நீட்டியிருப்பதைக் கண்டு, அவன், ‘என் சோள வயலுக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்!’” என்றான். மேலும் நான், “அவனுக்கு அப்பொழுது ஒரு சோள வயல் இருந்ததா?” என்று கேட்டேன். அப்பொழுது அந்த லூத்தரன் கல்லூரித் தலைவரோ, “நிகழும் தன்மை மறைவாக” என்றார். 64 நான், “அது சரி, அவன் அதை மறைவாகப் பெற்றிருந்தான்” என்றேன். ஆனால் நான், “அதனால்…” என்றேன். நான், “அது தான் லூத்தரன்களாகிய நீங்கள்” என்றேன். 65 “சிறிது சிறிதாக அந்த முளைகள் வளர்ந்து பட்டுக் குஞ்சத்தின் கட்டத்தை அடைந்தது. அது மெதோடிஸ்டு. சோளத்தின் இரண்டாம் கட்டம், அது ஒரு பட்டுக் குஞ்சம்.” (பண்ணையை வைத்துள்ள சகோதரராகிய உங்களுக்கு, நான் கூறுவது சரியென்று நினைக்கிறேன்.) “அப்பொழுது பட்டுக் குஞ்சம் அந்த இலைகளைப் பார்த்து, ‘ஹ! நான் ஒரு பட்டுக் குஞ்சம், நீயோ வெறும் இலை! பார், இனிமேல் நீ எனக்குத் தேவையில்லை’ என்றதாம். அதன்பிறகு அந்த பட்டுக் குஞ்சம்…மகரந்தப் பொடி பட்டுக்குஞ்சத்திலிருந்து கிழே உதிர்ந்து, மறுபடியும் இலையாக வளருகின்றது; இலை எப்படியும் தேவை.” 66 “மேலும் அதன் பிறகு அது கதிர்விடுகிறது. அதுதான் பெந்தெகொஸ்தே, வரங்கள் புதுப்பிக்கப்படுதல் முதல் நிலைக்குச் சென்று, அசல் நிலைக்கு திரும்பியது. அதன்பின்னர் கதிர் வளர்ந்தவுடனே, அது, ‘பட்டுக்குஞ்சமே, எனக்கு நீ தேவையில்லை. அல்லது இலையே, நீயும் எனக்குத் தேவையில்லை’” என்றதாம்.
2867 ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த—அந்த சோளத்தின் முளையிலிருந்த அதே ஜீவன் தான் பட்டுக்குஞ்சத்தை தோன்றச் செய்தது. மேலும் முளையிலும் பட்டுக்குஞ்சத்திலும் என்ன இருந்ததோ, அதுதான் தானியத்தை தோன்றச் செய்தது. எனவே அந்நிய பாஷைகளில் பேசும் பரிசுத்த ஆவி என்ன? அது நீதிமானாக்கப்படுதலிருந்து மேலும் வளர்ந்த கட்டம். புரிகிறதா? பெந்தெகொஸ்தே சபை என்னவாயுள்ளது? வளர்ந்த லூத்தரன் சபை. புரிகிறதா? 68 ஆனால் இப்பொழுது வளர்ச்சியடைந்துவிட்ட நிலைக்கு வரும்போது, “அப்படியானால் நான் இருந்த இடத்திலேயே இருக்கவா?” இந்த கேள்வி எழக் கூடும். இல்லை! இல்லை, சோளம் முதிர்வடைந்துவிட்டது. புரிகிறதா? நீங்கள் தானியத்தில் தொடங்குகிறீர்கள். நீங்கள் அந்த—அந்த வார்த்தையில், தானியத்தில் தொடங்குகிறீர்கள், அது நீதிமானாக்கப்படுதலை தோன்றச் செய்கிறது. அது பரிசுத்தமாக்கப்படுதலை தோன்றச் செய்யும் வரைக்கும் நீதிமானாக்கப்படுதலில் நிலைத்திருங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் பரிசுத்தமாக்கப்படுதலில் நிலைத்திருங்கள்.
2969 நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும்போது, அது என்ன செய்யும்? அது என்ன…இன்னும் ஒரு கேள்வி உள்ளது, உங்களுக்கு இல்லையா? சரி: 111. “அந்நிய பாஷைகளில் பேசுதல் என்றால் என்ன”? 70 அந்நிய பாஷைகளில் பேசுதல் என்பது உங்களை நீதிமான்களாக்கி மற்றும் உங்களைப் பரிசுத்தப்படுத்தின ஒரு பரிசுத்த ஆவியின் அபிஷேகமேயன்றி வேறல்ல. அது மிகவும் நிரம்பியுள்ளதே! இப்பொழுது, எனக்குத் தேவைப்பட்டுள்ளது…இந்தக் கேள்வி எனக்குத் தேவைப்பட்டது. இந்த மனிதன் இந்தக் கேள்வியைக் கேட்கப்போவதாயிருந்தது, பதில் கூற…அல்லது அதைக் கேட்கப்போவது எனக்குத் ஒருபோதும் தெரியாது என்பதை தேவன் அதை அறிவார். 71 இப்பொழுது, இது மிகவும்…இங்கு மிகவும் உஷ்ணமாக இருந்தால், உங்களுக்கு உறக்கம் வருவதாக இருந்தால் அல்லது வேறெதாவதாயிருந்தால், அந்த கதவைத் திறந்து விடுங்கள். இதை நீங்கள் நன்றாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது—இது உண்மையில் சிறிது உஷ்ணமாயுள்ளது, உங்களுக்கு அது உறக்கத்தை வருவிக்கும்.
3072 இப்பொழுது கவனியுங்கள், இதை கவனியுங்கள்: நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். 73 இப்பொழுது இங்கே பாருங்கள், இங்கே அது உள்ளது. நான் இதை விளக்க விரும்புகிறேன். இப்பொழுது, இங்கு நான் இருக்கிறேன், நான் ஒரு பாவி, நான் இந்த வழியாய் நடந்து சென்று கொண்டிருக்கிறேன். ஒருமுறை, சற்று கழித்து, ஏதோ ஒன்று என்னிடம் பேசுகிறது. தேவனைத் தவிர வேறொன்றும் என்னைத் திருப்ப முடியாது. அது சரியா? நான் இந்த வழியாக திரும்பிவிடுகிறேன். இப்பொழுது, நான் அவ்விதம் திரும்பும்போது, அது தான் என் நீதிமானாக்கப்படுதல். அது சரியா? இப்பொழுது, அந்தப் படமே, பாருங்கள், கிறிஸ்துவின் படமே, என்னுடைய பொருளாயிருக்கப்போகிறது. 74 இப்பொழுது அவரைச் சுற்றிலும் எனக்கு நல்லுணர்வு தோன்றும் ஒரு இடத்துக்கு நான் செல்ல விரும்புகிறேன். பாருங்கள், நான் நீதிமானாக்கப்பட்டுவிட்டேன். இப்பொழுது நான் அவருடன் பேசக்கூடிய இந்த கட்டத்துக்கு இங்கே வந்துவிட்டேன், ஏனெனில்…நான் இன்னும் என்னைக் குறித்தே வெட்கப்படுமடைந்துள்ளேன். நான் இன்னும் புகைப் பிடிக்கிறேன், நான் இன்னும் பொய் சொல்கிறேன், நான் செய்யத்தகாத சில தீய காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறேன், மற்றும் எல்லா நேரங்களிலும் எனக்கு ஏற்றத் தாழ்வுகள், ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, ஆனால் அவர் என்னை இவையனைத்திலுமிருந்து சுத்திகரிக்கும்படியாய் நான் அவரிடம் நடந்து சென்று அவரிடம் பேச வேண்டுமென்று விரும்புகிறேன். புரிகிறதா? சரி, அது இங்குள்ளது, அது பரிசுத்த…பரிசுத்தமாக்கப்படுதலின் கட்டம். அது என்ன செய்தது? அது என்னை நேராக்கியது. பார்த்தீர்களா?
3175 இப்பொழுது நான் பரிசுத்த ஆவிக்குச் செல்கிறேன். புரிகிறதா? மேலும் இங்கு நான் அடையும்போது, ஒரு அபிஷேகத்தினால் நான் பரிசுத்த ஆவியில் இருக்கிறேன். அது சரியா? பரிசுத்த ஆவி என்ன செய்கிறது? அது எனக்கு வல்லமையைத் தருகிறது. ஒரு பிரசங்கியாயிருக்க வல்லமை, ஒரு பாடகனாயிருக்க வல்லமை, அந்நிய பாஷைகளைப் பேசுவதற்கு வல்லமை, பாஷைகளுக்கு அர்த்தம் உரைப்பதற்கு வல்லமை. அது முழுவதும் வல்லமையாயுள்ளது, ஏனெனில் பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய வல்லமை. தேவனுடைய வல்லமையே என்னைத் திசை திருப்பியது. தேவனுடைய வல்லமையே என்னை பரிசுத்தமாக்கியது. இப்பொழுது என்னை நிரப்பியது தேவனுடைய வல்லமையே.
3276 இப்பொழுது, ஒரு குறிப்பிட்ட தருணத்தில், நான் இங்கு நின்று கொண்டு நான் எதையோ கூற முயன்றுகொண்டிருக்க, என்னால் பேச முடியாத அளவிற்கு அப்படிப்பட்ட ஒரு மகத்தான விதத்தில் தேவனுடைய வல்லமை என்மேல் இறங்கி வருகிறது. புரிகிறதா? அப்பொழுது நான் திக்கிப் பேசத் தொடங்குகிறேன். உதாரணமாக, நான், “சகோதரர்களே” என்று கூற முற்படும்போது, இந்த விதமாக நிற்பதுபோல நிற்கிறேன். 77 இது இப்படியுள்ளது, இதை நான் இந்த விதமாக விவரிக்கப் போகிறேன். நீங்கள் அதை நிச்சயமாக புரிந்துகொள்ளும்படி சகோதரர்களாகிய உங்களிடம் பேசப் போகிறேன். “நீங்கள் எப்படி—எப்படி—எப்படி இருக்கிறீர்கள், சகோதரனே?” பாருங்கள், நான் இன்னும் குற்றவாளியாய் இருக்கிறேன். “ஹூ, நான்—அதாவது நான் இன்னமும் உங்களில் ஒருவனாக இருப்பதற்கு நான்—நான் நிச்சயம் மகிழ்ச்சியடைகிறேன். நான்—நான்—நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நீங்கள் பாருங்கள்.” சரி. இப்பொழுது, சற்று கழித்து, என்ன? நீங்கள் என்னை கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றும், நான் அந்த காரியங்களை இன்னும் செய்துகொண்டிருக்கிறேன் என்றும், இன்னும் உலகத்தின் அசுத்தமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறேன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். 78 சற்று கழித்து நான் சுத்திகரிக்கப்படுகிறேன். இப்பொழுது ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது, நான் பரிசுத்தமாக்கப்பட்டுவிட்டேன். அப்பொழுது நான் உங்களை முகத்துக்கு நேராக பார்க்க முடிகிறது, நான் உங்களில் ஒருவனாக இருக்கிறேன். புரிகிறதா? “சரி, சகோதரனே. தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த பரிசுத்த ஆவியின் கூட்டத்தில் நான் இருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். பரிசுத்தமுள்ள சகோதரராகிய உங்கள் மத்தியில் நான் இருப்ப தற்கு மகிழ்ச்சியடைகிறேன்.” ஏன்? நீங்கள் என்மேல் விரலைச் சுட்டிக்காட்டி குற்றப்படுத்த முடியாது, நான் சுத்திகரிக்கப்பட்டு விட்டேன். ஆனால் இப்பொழுது தேவன் என்னை சேவையில் வைக்கப்போகிறார். இப்பொழுது, ஆம், ஐயா! 79 “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் நீதிமானாக்கப்பட்டுவிட்டீர்களா?” 80 “ஆம்! உங்களை ஏறெடுத்தும் பார்க்க முடியாமற்போனபோது எனக்கு நினைவிருக்கிறது. சகோதரனே, இப்பொழுது என்னால் உங்கள் முகத்தைப் பார்க்க முடிகிறது.”
3381 பாருங்கள், நாம் இங்கே இருக்கிறோம். இப்பொழுது, இந்த மற்றது என்ன? இப்பொழுது நான்… இது சுத்திகரிக்கப்பட்டு சேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது, மற்றும் இது சேவைக்குள் வருகிறது. இப்பொழுது பரிசுத்தமாக்கப்படுதல் என்ற அந்த வார்த்தை ஒரு கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது என்றும், “சுத்திகரிக்கப்பட்டு, சேவைக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டது” என்று பொருள்படுகிற ஒரு கூட்டு கிரேக்க வார்த்தை என்பதையும் நாம் யாவரும் அறிவோம். பாண்டங்கள் பலி பீடத்தினருகில் சுத்திகரிக்கப்பட்டு, பீடத்தினருகில் பரிசுத்தமாக்கப்பட்டு, சேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டது. ஆனால் சேவையில் இருக்க வேண்டுமானால் நிறைக்கப்பட்டு சேவையில் வைக்கப்பட வேண்டும். 82 இப்பொழுது, நான் இங்கு சென்று, இப்பொழுது நான் சேவைக்குள் வந்துகொண்டிருக்கிறேன். இப்பொழுது, தேவன்தான், “எனக்குச் செவிகொடு. எனக்குச் செவி கொடு! எனக்குச் செவி கொடு!” என்று சொல்லி என்னைத் திருப்பினார். மேலும் அவர் சொன்னார்… 83 நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? பார்த்தீர்களா? [இங்கு சகோதரன் பிரான்ஹாம் ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவதை விளக்குகிறார்—ஆசி.] …?… பாருங்கள், இங்கே, நீங்கள் மிகவும் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள்…அதுதான் இது. அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது, அதுதான் அந்நிய பாஷைகளில் பேசுதல்.
3484 மேலும் நான் இப்பொழுது இதை நம்புகிறேன்: அந்நிய பாஷைகளில் பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதன் அடையாளம் என்று நான் நம்புகிறதில்லை. இது அதுவல்லவே! ஏனெனில் மந்திரவாதிகளும், பாம்புகளை கையாளுகிறவர்களும், பிசாசுகளும், மற்ற ஒவ்வொருவரும் அந்நிய பாஷைகளில் பேசுகின்றதை நான் கண்டிருக்கிறேன், (நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசும்போது) நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள் என்றும், அது தேவனுடைய பிழையற்ற செயல் என்பதும் அல்ல. ஆனால், நினைவிருக்கட்டும், பரிசுத்த ஆவி அந்நிய பாஷைகளில் பேசுகிறார், மேலும் பிசாசினால் அதை பாவனை செய்ய முடியும். 85 நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதான அந்த—அந்த அத்தாட்சி நீங்கள் வாழும் வாழ்க்கையாயுள்ளது, பாருங்கள், “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” ஆவியின் கனி அந்நிய பாஷை பேசுதல் அல்ல (அவ்விதம் வேதத்தில் எங்கும் காணப்படவில்லை.) ஆவியின் கனி அன்பு, சந்தோஷம், விசுவாசம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, பொறுமை. பாருங்கள், இப்பொழுது, அது தான் கனி. அது எந்தவிதமான மரம் என்று கூறுவதற்கு, இதை தான் அந்த மரத்தில் காண்கிறீர்கள். புரிகிறதா? 86 அது தான் மனிதர் பிரசங்கிகளாகிய உங்களை, உதவிக்காரர்களாகிய உங்களை, தர்மகர்த்தாக்களாகிய உங்களை, சுவிசேஷகர்களாகிய உங்களை கவனித்துக் கொண்டேயிருக்கின்றனர். நீங்கள் இந்த தெருவில் இங்கே நாள் முழுவதும் அந்நிய பாஷையில் பேசினாலும், அவர்கள் உங்களை ஒருபோதும் நம்பமாட்டார்கள். ஆனால் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்களோ அதை நீங்கள் வாழ்ந்து காண்பித்து, கசப்பான வேர் அனைத்தையும் உங்களைவிட்டு களைந்துபோட்டு, இனிமையைக் காண்பிப்பீர்களானால், அப்பொழுது மனிதர் ஏதோ ஒன்று உள்ளதை தெளிவாக உணருவார்கள்.
3587 “அந்நிய பாஷைகளில் பேசுதல்.” இப்பொழுது, அதாவது எப்பொழுதாவது மற்றொருவர், அதாவது தேவனுடைய பலி பீடத்தின் கீழ் தன்னை படைத்திருக்கும் ஆவியினால் நிறைந்த நபர் அந்நிய பாஷைகளில் பேசுவார் என்றே நான் இதை விசுவாசிக்கிறேன். ஆனால் தேவனைக் குறித்து ஒன்றுமே அறிந்திராத அநேகர் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். பார்த்தீர்களா? அவரைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமேத் தெரியாது, இருப்பினும் அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுகின்றனர். அந்த வரங்களில் எந்த ஒன்றும் பாவனை செய்யப்பட முடியும். புரிகிறதா? 88 ஆனால் ஆவியின் கனியோ உள்ளில் உள்ள ஆவி எது என்பதை நிரூபிக்கிறது, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் ஜீவனுக்கு சாட்சி பகருகிறீர்கள். ஏனெனில் ஆப்பிள் மரத்தில் பீச் மரத்தின் சத்து இருக்குமானால், அது உலகம் உள்ளது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக பீச் பழங்களைத் தான் கொடுக்கும். அது உண்மை. பாருங்கள், ஏனெனில் அது தான் அதற்குள் இருக்கும் ஜீவன்.
3689 இப்பொழுது, இங்கும் இது அதே காரியமாய் தான் உள்ளது. ஆனால் இப்பொழுது, நாம் எல்லாரும் ஒரே காரியத்தை அறிந்துகொள்ளும்படியாக, நான் உங்கள் எல்லோருக்கும் இதை விளக்கிக் கூற முடியும். ஆவியினால்-நிரப்பப்பட்ட ஒரு நபர் அதாவது…இப்பொழுது அவன் ஒரு அபிஷேகத்தினால் கிறிஸ்துவுக்குள் வருகிறான் என்று நான் விசுவாசிக்கிறேன், மேலும் வெறுமனே…அதுவல்ல…அந்நிய பாஷையில் பேசுதல் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டதன் ஒரு அடையாளமல்ல. புரிகிறதா? 90 ஒரு அபிஷேகம் என்னும்போது, நீங்கள் பிசாசின் வல்லமையினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, இந்த பிசாசினுடைய வஞ்சக ஆவியின் அபிஷேகத்தினால் அந்நிய பாஷையில் பேச முடியும். அது அவ்வாறு செய்யப்பட்டதை நாம் எத்தனை முறை கண்டிருக்கிறோம்? அது அவ்வாறு செய்யப்பட்டதை நான் எத்தனை முறை கண்டிருக்கிறேன்? 91 அவர்கள் மனிதனின் மண்டை ஓட்டிலிருந்து இரத்தம் குடித்துவிட்டு, அந்நிய பாஷைகளில் பேசுவதும் கூட எனக்குத் தெரியும். 92 வனாந்தரத்திலுள்ள பாம்பைச் சுற்றிக்கொண்டு-நடனமாடுபவர்கள், அவர்கள் பெரிய பாம்பை தங்கள் மேல் சுற்றிக்கொண்டு அந்நிய பாஷையில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். மந்திரவாதி அதைப் போன்று வெளியே வந்து, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி அதற்கு அர்த்தம் உரைக்கின்றனர். 93 நான் மந்திரவாதிகளின் முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன், அவர்கள் ஒரு பென்சிலை அந்த விதமாக கீழே வைப்பார்கள், மற்றும் ஒரு புத்தகத்தையும் இந்த விதமாக கீழே வைப்பார்கள், மேலும் ஒரு பென்சில் புகை போக்கி குழாயில் மேலும் கீழும் ஓடி, “முகச்சவரம் மற்றும் ஒரு சிகை அலங்காரம், இரண்டு துண்டு,” என்னும் பாடலை வாசிக்கும், அது அந்நிய பாஷைகளில் எழுதி, மந்திரவாதி அதற்கு அர்த்தம் உரைத்து, என்ன நடந்ததென்று பிழையின்றி உரைப்பான். அது எனக்குத்—எனக்குத் தெரியும். புரிகிறதா? எனவே நான்…பாருங்கள், உங்களால் முடியாத…
3794 பவுல், “அந்நிய பாஷைகளானாலும், அவைகள் ஓய்ந்துபோம். தீர்க்கதரிசனங்களானாலும், அதுவும் ஒழிந்துபோம். இந்த வரங்கள் அனைத்தும், அவைகள் விரைவில் போய்விடும்,” என்று கூறியுள்ளான். (அந்த கேள்வியை சற்று பின்னால் நாம் பார்க்கவுள்ளோம்.) “ஆனால் நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.” புரிகிறதா? சகோதரரே, எனவே நமக்கு நிறைவானது வேண்டும். புரிகிறதா? நாம் போலியான அநேக காரியங்களையும், அவைகளுக்கு தவறான அர்த்தம் உரைத்ததையும் நாம் கண்டிருக்கிறோம். 95 மேலும் ஒரு நபரை மற்றும்—அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுகின்ற காரணத்தால் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாக ஒருபோதும் நம்பிவிடாதீர்கள். புரிகிறதா? ஆனால் அவர்கள் ஆவியின் கனிகளைக் கொடுக்கின்றபடியால், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனர் என்று நீங்கள் விசுவாசியுங்கள், ஏனெனில் இயேசு “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்றார். புரிகிறதா? அது உண்மை, “அவர்களுடைய கனிகளினாலே.”
3896 இப்பொழுது, ஆனால் இப்பொழுது, அதிலிருந்து இப்பொழுது நான் விலகிச் செல்லா திருப்பேனாக, ஏனெனில் தேவன் அளித்துள்ள அந்த மகத்தான வரத்தை நான் அவமதிக்க விரும்பவில்லை. புரிகிறதா? தேவனுடைய பலிபீடத்தின் கீழ் வாழ்கிற, ஆவியினால்-நிரப்பப்பட்ட ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ, அல்லது ஒரு பிள்ளையோ, அவர்கள் அந்நிய பாஷையில் அங்கு சீக்கிரத்தில் பேசிவிடுவார்கள் என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? அவனோ அல்லது அவளோ அதை செய்வார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். 97 இப்பொழுது, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளலாம், மேலும் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போது ஒருக்கால் அந்நிய பாஷை பேசாமல் இருந்திருக்கலாம். புரிகிறதா? ஆனால் நீங்கள் எல்லா நேரமும் தேவனுக்கு முன்பாக கிடக்கும்போது, அபிஷேகத்தின் மேல் அபிஷேகம் உங்களுக்கு கிடைக்கும்போது, ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. புரிகிறதா? என்றாகிலும் ஒரு நாள் நீங்கள் மிகவும் நிறைந்து, உங்களால் வேறொன்றையும் பேச முடியாத நிலை ஏற்படும்; பாருங்கள், நீங்கள்—நீங்கள்—நீங்கள் ஏதோ ஒன்றைப் பேச முயற்சிப்பீர்கள், உங்களால் அதை ஒருபோதும் பேச முடியாது, உங்களால் அதை பேசவே முடியாது. அநேக சமயங்களில் ஜனங்கள் அது பரிசுத்த ஆவி என்பதை உணர்ந்திருந்தால், அவர்கள் முன்சென்று, தங்கள் இருதயத்தைத் திறந்து, தேவன் அவர்களிடம் பேசுவதற்கு விட்டுக் கொடுப்பார்கள்.
3998 வேதம், “பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன்” என்று உரைத்துள்ளது. ஏசாயா 28, பாருங்கள், 28:18. இப்பொழுது, “பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் பேசுவேன்.” 99 ஒரு “திக்குதல்” என்றால் என்ன? ஒருவர் தெளிவாக பேச முடியாமலிருப்பது, “ஹூ, ஹு, ஹு, ஹூ, ஹு, ஹூ, ஹு, ஹூ,” என்று திக்கிக்கொண்டே போதல். நீங்கள்…நீங்கள் திக்கிப் பேசுகிறீர்கள், “ஹூ, ஹு, ஹூ” என்று பேச முயற்சித்தல். பாருங்கள், ஆவியினால் முழுவதும் நிறைதல்! அவர் பேச முயற்சித்துக்கொண்டிருக்கிறார்…உதாரணமாக நான், “சகோதரன் ஜா-ஜாக்-…ஜா-…சகோதரன் ஜாக்-…சகோதரன் ஜா-ஜா-ஜாக்-ஜாக்- ஜாக்ஸன்” என்று கூறப்போவது போல. பாருங்கள், எனக்கு அது பிடிக்கும், நீங்கள் பேச முயற்சித்துக்கொண்டிருக்கிறீர்கள், ஆனால் உங்களால் பேச முடிவதில்லை. பாருங்கள், அது, ஆவியினால் மிக அதிகமாக நிரப்பப்பட்டிருத்தல்! அது…
40100 சகோதரரே நான் உங்களை கேட்க விரும்புகிறேன், பரிசுத்த ஆவி எப்பொழுதாகிலும் உங்களை மிகவும் அதிகமாக அசைத்து, உங்களால் ஒன்றும் பேச முடியாமல் போய், சிறிது நேரம் நீங்கள் அமைதியாக இருந்து, நீங்கள் அங்கே உட்கார்ந்து அழுகின்ற நிலையை நீங்கள் எப்போதாவது உணர்ந்துள்ளீர்களா? அவ்விதம் நீங்கள் செய்திருக்கிறீர்களா? பாருங்கள், அதுதான் பரிசுத்த ஆவி. நீங்கள் மாத்திரம்…ஜனங்கள் அநேக நேரங்களில் அந்நிய பாஷையில் பேசாததன் காரணம், தங்களை எவ்வாறு ஆவிக்கு சமர்ப்பிப்பது என்பதை அறியாததனால் தான், மேலும் அது அவர்கள் மேலேயே உள்ளபோது, அவர்கள் தொலைவிலுள்ள ஏதோ ஒன்றை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். புரிகிறதா? அந்தக் காரணத்தினால்தான் அவர்களால் முடியாமல்… 101 பின்னர் சிலர் தாங்களாகவே உணர்ச்சிவசப்பட்டு, அர்த்தமே இல்லாத சில அடுக்கடுக்கான வார்த்தைகளைக் கூறுகின்றனர், அவர்கள் இன்னும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை, இருப்பினும் அவர்கள் அந்நிய பாஷையில் பேசினதால் அவர்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதாக கூறிக்கொள்கின்றனர். “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்,” பாருங்கள்.
41102 இப்பொழுது, ஒரு கேள்வி உண்டா? [சகோதரன் ஜூனியர் ஜாக்ஸன், “சகோதரன் பிரான்ஹாமே?” என்கிறார்—ஆசி.] ஆம், சகோதரனே. [“அந்த கேள்வி கேட்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, ஏனென்றால் சந்தேகமேயில்லை நான் நீண்ட காலமாக எதை நம்பி கற்பித்திருக்கிறேன் என்று சிலர் ஆச்சரியப்படலாம். ஆனால் நீங்கள் அதை கற்பித்தது போல நான் அதை விசுவாசிக்கிறேன்.”] சகோதரன் ஜாக்சன், உங்களுக்கு நன்றி. [“நான் எத்தனை முறை அந்நிய பாஷையில் பேசினாலும், அல்லது எந்தக் காரியமாயிருந்தாலும் பொருட்படுத்துவதற்கில்லை, வேதம் உரைப்பதற்கு என் வாழ்க்கை சாட்சி பகராவிட்டால், தெருவில் போகும் ஒரு வெறிபிடித்த நாயைவிட நான் சிறந்தவன் அல்ல.”] அது உண்மை. [“நான் என்னுடைய அபிஷேகத்தைப் பெற்ற பிறகும் ஆறு மாதங்கள் வரைக்கும் அந்நிய பாஷையில் பேசவேயில்லை.”] சகோதரன் ஜாக்ஸன், எனக்கும் கூட, அந்தவிதமாகத்தான் நேர்ந்தது.
42103 பாருங்கள், பின்னால் உள்ள என்னுடைய கொட்டகையில் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டேன். மேலும் ஏறக்குறைய ஒரு ஆண்டு கழித்து, அப்படி ஏதோ ஒன்று, நான்—நான்…அந்நிய பாஷையில் பேசினேன். 104 மேலும் சுமார் ஓன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து, நான் ஒரு சபையில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், நான்—நான் இப்படி மேடையின் மேல் நின்றுகொண்டிருந்தேன், மேலும் நான்…நான் இளைஞனாயிருந்தபோது, இப்பொழுது உள்ளதைப் போல் வயதாகியும் விரைப்பாயும் இல்லை. அப்பொழுது என்னால் சிறிது நன்றாக மேடையில் நடமாட முடியும் மற்றும் நான் பிரசங்கிக்கும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அங்கு நின்றுகொண்டு பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், அப்பொழுது நான் ஒரு மேசையின் மேல் குதித்தேன். அது ஒரு பாப்டிஸ்ட் சபையாயிருந்தது, மில்டவுன் பாப்டிஸ்ட் சபை, நான் அந்த விதமாக மிகவும் பலமாக பிரசங்கித்துக்கொண்டே, உட்பாதைக்குச் சென்றேன். மேலும் நான் பிரசங்கத்தை நிறுத்தினபோது, ஏதோ ஒன்று என்னை ஆட்கொண்டு பல வார்த்தைகளைக் கூறியது, நான்கு, ஐந்து, அல்லது ஆறு வார்த்தைகளை, அந்நிய பாஷையில் பேசினேன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்துகொள்வதற்கு முன், “களைப்படையும் தேசத்தில் கன்மலை, புயலடிக்கும் நேரத்தில் புகலிடம்” என்று நான் கூறுவதை என்னால் கேட்க முடிந்தது. பார்த்தீர்களா?
43105 அதன் பிறகு ஒரு நாள் ஒரு இரயில் பாதையின் வழியாக, நான் இரயில் பாதையின் வழியாக நடந்துவந்து கொண்டிருந்தேன், ஸ்காட்ஸ்பர்குக்கு இந்த பக்கமாக, இரயில் பாதை வழியாக, ரோந்து வந்துகொண்டிருந்தேன். அப்பொழுது காற்று பலமாக அடித்துக்கொண்டிருந்தது, ஓ, என்னே, இரயில் பாதையின் மேல் பனிக் கட்டி படர்ந்திருந்தது, எனக்கு நியமிக்கப்பட்ட முப்பத்து மூன்றாயிரம் எண் நெடுஞ்சாலையில் நான் நடந்து செல்வதற்காக, நான் இரயில் பாதையைக் கடந்து மறுபுறம் சென்றேன்; அறுபத்தாறு எண் கொண்ட நெடுஞ்சாலை மற்றொரு பக்கம் சென்றது, அது ஏறக்குறைய இரயில் பாதைக்கு இணையாக சென்றது. நான் பாதையின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று…நான் பாடிக்கொண்டே அங்கே தனிமையாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். நான் எப்பொழுதும் பாடுவது வழக்கம். நான் ஜெபிக்க செல்ல எனக்கு வெவ்வேறு இடங்கள் இருந்தன. நான் பாடிக்கொண்டே தனிமையாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று நான் அந்நிய பாஷையில் பேசுவதை உணர்ந்தேன், பாருங்கள், நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவேயில்லை. 106 அந்நிய பாஷையில் பேசுதல் அப்படிப்பட்ட ஒரு எரியும் நிலயில் வருவதால் அந்த நபருக்கு தான் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதே தெரியாது, இல்லையென்றால், அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைத்தலும் அவ்விதமாகவே உள்ளது. அர்த்தம் உரைப்பவர்கள் தாங்கள் என்ன சொல்லப் போகின்றார்கள் என்பதை அறிந்திருக்கவேமாட்டார்கள். அவர்கள் அதைக் கூறப்போவதைக் குறித்து அவர்களுக்கு எந்த எண்ணமும் இருக்காது, ஏனெனில் அது இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று. பாருங்கள், நீங்கள் மாம்சப்பிரகாரமானதை அதில் நுழைப்பீர்களானால், அப்பொழுது நீங்கள்…நீங்கள்—நீங்கள்—நீங்கள் மாம்ச சம்பந்தமானதையே பெற்றுக்கொள்கிறீர்கள், நீங்கள் பாருங்கள். ஆனால் ஏதோ ஒன்று உங்களைப் பற்றிக் கொண்டு, உங்களை ஆட்கொள்ளும்போது, நீங்கள் அதை செய்துகொண்டிருக்கிறீர்கள். புரிகிறதா?
44107 [சகோதரன் நெவில், “சகோதரன் பிரான்ஹாமே, இப்பொழுது நான் இங்கே ஒன்றைக் கூறலாமா?” என்று கேட்கிறார்.—ஆசி.] நிச்சயமாக, சகோதரன் நெவில், நீங்கள் கூறலாம். [“இப்பொழுது, நீங்கள் இதை அந்தவிதமாகக் கூறுகிறீர்கள், அந்த அர்த்தத்தில் நீங்கள் கூறவில்லை, அதாவது—அதாவது ஒரு மனிதன் அந்நிய பாஷை பேசுவதை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் போனால், அது ஆராதனையில் ஒழுங்கு முறையாக இருக்க வேண்டுமல்லவா? ஏனெனில் அவன்…ஒரு வரத்தையுடைய ஒரு மனிதன் அதைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறான்.”] அவன் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். ஆம். உதாரணமாக… [“அவர் அந்நிய பாஷைகளில் பேசப்போகிறார் என்பதை அறியும் அளவிற்கு நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்”] ஆம், அது உண்மை [“இல்லையென்றால் அவன் ஒழுங்கை மீறினவனாயிருப்பான்.”] அது உண்மை, அவன் அதை உணருகிறான். புரிகிறதா? இப்பொழுது, வேதம் உரைத்துள்ளதுபோல, “அந்நிய பாஷைகளில் பேசுகிற ஒருவன், அதற்கு அர்த்தம் உரைக்கிறவன் இல்லாமல் போனால், அவன் அமைதியாயிருக்கக்கடவன்.” இப்பொழுது, நிச்சயமாகவே.
45108 உதாரணமாக, நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், யாராகிலும் ஒருவர், நீங்கள் கூச்சலிடவிருக்கிறீர்கள், அதே காரியம். நீங்கள் கூச்சலிடத் தொடங்கும்போது, தேவனுடைய வல்லமை உங்கள் மேல் வருவதை நீங்கள் எப்பொழுதாகிலும் உணர்ந்ததுண்டா? எத்தனை பேர் உணர்ந்திருக்கிறீர்கள்? பாருங்கள், நாம் எல்லோருமே உணர்ந்திருக்கிறோம். பார்த்தீர்களா? நீங்கள் அங்கு உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள், அது வருவதை நீங்கள் உணருகிறீர்கள். இப்பொழுது, அதை நீங்கள் அணைத்து போடக்கூடிய நேரங்கள் உண்டு, பாருங்கள். அதாவது அதை நீங்கள் அடக்கிக்கொள்ள முடியும், பாருங்கள், அந்நேரத்தில் பேசுவது சரியாயிருக்காது. 109 நீங்கள் நின்றுகொண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், அல்லது மாநகராட்சி மன்றத் தலைவரோடு இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள், வேறு எதைக் குறித்தாகிலும் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஒரு கூட்டம் ஜனங்களுடன் ஏதோ ஒன்றைக் குறித்து இங்கே தெருவில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், அப்பொழுது நீங்கள் திடீரென்று மேலும் கீழும் குதித்து, “மகிமை! அல்லேலூயா!” என்று கூச்சலிட்டு, எல்லாவற்றையும் உதைத்தெறிந்து, தெருவில் மேலும் கீழும் ஓடத் தொடங்கினால் என்னவாகும். அப்பொழுது நீங்கள் பைத்தியக்காரர் என்று அவர்கள் கூறுவார்கள். புரிகிறதா? அவர்கள், “அந்த மனிதன் பைத்தியக்காரன்” என்பார்கள். புரிகிறதா?
46110 சரி, பாருங்கள், அவ்விதம் செய்யக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியும். அது உங்களுக்குள்ளாக தூண்டிக் கொண்டேயிருந்து, உங்களால் அதை அப்படியே அடக்கிக்கொள்ளவே முடியவில்லையென்றாலும், நீங்கள் எப்பபடியும் அதை அடக்கிக்கொள்வீர்கள். அப்பொழுது நீங்கள், “ஆம், ஐயா. ஆம், ஐயா. ஹு-ஹூ. ஹு-ஹூ. ஆம். ஆம், ஐயா. ஹு-ஹூ” என்று சொல்லுவீர்கள். அந்த நேரத்தில் அது உன்னை துண்டு துண்டாக தோண்டியெடுத்துக் கொண்டிருப்பினும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்பதை அறிந்திருப்பீர்கள். புரிகிறதா? 111 அண்மையில் இங்கே ஒரு நீதிமன்றத்தில், சில பெந்தெகொஸ்தேயினரை, அவர்கள் ஏதோ ஒன்றைச் செய்ததற்காக, அதிகமாக கூச்சலிட்டதற்கோ அல்லது ஏதோ ஒன்றிற்காகவோ, அவர்களை கொண்டு வந்து நிறுத்தினர், அவர்களை—அவர்களை அவ்வாறு செய்தது முற்றிலும் நியாயமானது, நீங்கள் பாருங்கள், அது சரிதான். ஆனால் நீதிபதி அவர்களிடம் ஏதோ ஒன்றைக் கூற முயன்ற ஒவ்வொரு முறையும், அவர்கள் அந்நிய பாஷையில் பேசத் தொடங்கினர். பார்த்தீர்களா? அப்பொழுது நீதிபதி, “இந்தப் பைத்தியக்கார ஜனங்களை இங்கிருந்து கொண்டு போய் விடுங்கள்” என்று கூறிவிட்டார். பார்த்தீர்களா?
47112 இப்பொழுது, அவர்கள் பேசின அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் உண்டாயிருந்து, அவர்கள் நீதிபதியிடம், “ கர்த்தர் உரைக்கிறதாவது ,” இன்ன-இன்ன காரியம் உண்மையாக நடந்திருக்கும், “கர்த்தர் உரைக்கிறதாவது! நீதிபதி அவர்களே, நேற்றிரவு ஒரு வேசியுடன் வாழ்ந்த நீர், இங்கே நின்றுகொண்டு என்னை நியாயந்தீர்கிறீரா? அவள் பெயர் சாலி ஜோன்ஸ், அவள் அந்த விதமான, இன்ன-இன்ன-இன்ன குறிப்பிட்ட இடத்தில் 44-ம் எண் வீட்டில் வசிக்கிறாள். அப்படியிருக்க, நீர் என்னை ஏன் நியாயந்தீர்க்கிறீர்? அது கர்த்தர் உரைக்கிறதாவது! இப்பொழுது அதை மறுதலிப்பீரானால், நீர் இங்கேயே விழுந்து மரிப்பீர் என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும்.” இப்பொழுது, ஒ, சகோதரனே! அப்பொழுது அங்கு வேறுவிதமான ஒன்று நடந்திருக்கும். 113 ஆனால் நீங்கள் அங்கு நின்றுகொண்டு அந்நிய பாஷை மட்டும் பேசுவீர்களானால், “அப்பொழுது நீங்கள் அவர்களுக்கு ஒரு அந்நியராயிருப்பீர்கள்” என்று பவுல் கூறினான். உங்களுக்குப் புரிகிறதா? இப்பொழுது, நீங்கள் எப்பொழுது அமைதியைக் கடைபிடிக்க வேண்டும், எப்பொழுது கடைப்பிடிக்காமலிருக்கலாம் என்பதை அறிந்திருக்கிறீர்கள். புரிகிறதா? இப்பொழுது, அது…பாருங்கள். நான்…இப்பொழுது நீங்கள் என்னை சரியாக புரிந்துகொள்கிறீர்கள், நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். புரிகிறதா? அதுதான் காரியம். நிச்சயமாக…
48114 நாம் அந்த கேள்வியை இங்கே கீழே பெற்றிருக்கிறோம். இந்த விதமாக அதை நான் கூறாமல் பிடித்து வைத்திருந்த காரணம், அதே காரியத்தை நாம் பெற்றுள்ளோம், “அவர்கள் அமைதியாயிருக்க வேண்டுமென்று கருதப்படுகின்றனரா?” உங்களுக்குப் புரிகிறதா? அதற்காகத் தான் நீங்கள் கேட்கும் வரைக்கும் அதற்கு நான் பதிலளிக்கவில்லை. ஆனால் அந்த நேரம், அதற்கு பதிலளிக்க வேண்டிய நேரம் இப்பொழுதே, பாருங்கள், இப்பொழுதே. மேலும் கீழேயுள்ள இந்தக் கேள்வியையும் கூட நாம் இங்கே பார்க்கலாம், அப்பொழுது ஏற்கனவே கூறினவைகளை நான் குறிப்பிடலாம். எல்லோரும் அந்தக் கேள்விக்கான பதிலை நன்றாக புரிந்துகொண்டீர்களா? [சகோதரன் ஃபிரட், “சகோதரன் பிரான்ஹாமே” என்று அழைக்கிறார்.—ஆசி.] ஆம், சகோதரன் ஃபிரட். [ “ஆவியில் பேசும் ஒரு நபர், அவருடைய பேச்சு (அவர் ஆங்கிலேயன் என்றும், அவரால் ஆங்கிலம் பேச முடியும் என்றும் வைத்துக் கொள்வோம்) அவர் ஆங்கிலத்தில் பேசும்படி ஆவியானவர் அவருக்குத் தந்தருளுவாரா?” ] {: .bold} 115 நிச்சயமாக. ஆம், ஐயா. பாருங்கள், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு பாஷைகளிலும் பேசுகிறார். புரிகிறதா? பெந்தெகொஸ்தே நாளில், வானத்தின் கீழ் காணப்படும் எல்லா பாஷைக்காரரும் அங்கு கூடியிருந்தனர், பாருங்கள். ஆங்கிலத்தில் பேசுகிற… இப்பொழுது, சகோதரன் ஃபிரட்டி, இதை நான் எப்பொழுதும் அறிந்திருக்கிறேன், அதாவது நான்…நான் எப்போதாவது அபிஷேகத்தின் கீழ் ஒரு பிரசங்கத்தைப் பிரசங்கித்தால், அது ஆவியானவர் பேசும்படி தந்தருளுவதே, நீங்கள் பாருங்கள். அது…புரிகிறதா? எனவே அது ஆங்கிலம் புரியாத ஒரு மனிதனுக்கு அது அந்நிய பாஷையாயிருக்கும். ஆனால் அதேசமயத்தில்…
49116 அந்நிய பாஷை என்பது உண்மையில் “அந்நிய பாஷை” அல்ல, அது…அங்கு யாராகிலும் இருப்பார்கள்…பெந்தெகொஸ்தே நாளில், அவர்கள் கூறியது போல, அந்த பாவிகள் அனைவரும், அவர்கள், “நாம் நம்முடைய சொந்த மொழியில் ஒவ்வொரு மனிதன் பேசுவதையும் எப்படி கேட்கிறோம்? இந்த கலிலேயர்கள் பேசுகிறதை நம்முடைய சொந்த மொழியில் நாம் எப்படி கேட்கிறோம் ?” என்றனர். அதைக் குறித்தே “தெரியாத” பாஷையாய் இருக்கவில்லை. பெந்தேகோஸ்தே நாளில் “அந்நிய” பாஷை என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை. இப்பொழுது, பாருங்கள், அது வேதப்பூர்வமானது அல்ல. பார்த்தீர்களா? அங்கு அந்நியமாக…அது அந்நிய பாஷை அல்ல, அது ஒரு பாஷையாயிருந்தது. “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” அங்கு தெரிந்திராத பாஷை ஒன்றுமே இல்லை. பார்த்தீர்களா? அதாவது…இதை நாம் விட்டுச் செல்லும் முன்பு, இதன் பேரில் ஏதாகிலும் கேள்வி இப்பொழுது இருக்கின்றதா? “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேச எப்படி கேட்கிறோம்?” பார்த்தீர்களா?
50117 [ஒரு சகோதரன், “மானிட பலவீனத்தின் காரணமாக அதாவது—அங்கே ஒரு சிறு தவறு நேரிடுகிறது, மேலும் ஜனங்கள் வேறெதையும் ஏற்றுக்கொள்ளத் தவறி, ‘அதை அப். 2:4 ன்படி தவிர, நான் அதை வேறெந்த விதத்திலும் விசுவாசிக்கமாட்டேன்.’ என்கின்றனர்” என்கிறார்.—ஆசி.] பாருங்கள், அவர்கள் அப்போஸ்தலர் 2:4-ன்படி அதை உடையவர்களாயிருந்தால், அவர்கள் அந்நிய பாஷையில் நிச்சயம் பேசமாட்டார்கள். [“இல்லை, ஒரு பாஷையில்.”] உ-ஊ. ஜனங்கள் நீங்கள் கூறுவதை கேட்கக் கூடிய பாஷையில் அவர்கள் பேச வேண்டும், பாருங்கள், ஏனெனில் “ஒவ்வொரு மனிதனும் அவர்கள் பேசுகிறதை தன்னுடைய பாஷையில் கேட்கிறான்.” 118 இப்பொழுது, நான் இப்பொழுதே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வேனானால், நான் கூறுகிற…படியே… பரிசுத்த ஆவியைப் பெற நாடிக்கொண்டிருக்கிற ஒரு சகோதரன் இங்கு உண்டு என்று நான் நினைக்கிறேன், அது சகோதரன் உட். அது சரிதானே, சகோதரன் உட்? உங்கள் பெயரை அறிவிக்க நான் நினைக்கவில்லை, ஆனால் எல்லா…இங்குள்ள நாம் சகோதரரர்கள், இதை நாம் கூற விரும்புகிறோம். மேலும் அவர் பரிசுத்த ஆவியை நாடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது, சகோதரன் பாங்க்ஸ் அங்கே பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தால், அதை சரியான விதத்தில், அதை வேதத்தின்படி பெற்றுக்கொள்வாரானால், அவர் அங்கே எழுந்து நின்று, அதை பேசுவார், அவர் அதை ஆங்கிலத்தில் பேசுவார், அவர், “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்திருக்கிறார்” என்று சொல்லுவார், அவர் அதைச் சொல்லுகிற அனலுறைக்கும் தீர்க்கதரிசனத்தினால் அதைப் பேசிக்கொண்டிருப்பார். “அவர் இருக்கிறார் என்று எனக்குத் தெரியும், ஏனெனில் அவர் இப்பொழுது என் இருதயத்தில் வந்துள்ளார். அவர் தேவனுடைய குமாரன்! என்னுடைய பாவங்கள் போய்விட்டன, எனக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது.” பார்த்தீர்களா? அங்கு தான் காரியமே உள்ளது. அதில் பேசுவது… “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?”
51119 உதாரணமாக, இப்பொழுது இந்தியானாவிலுள்ள நாமும் கென்டக்கி நாட்டிலுள்ளவர்களும் ஒரு வித்தியாசமான பாஷையைப் பேசுகிறோம் என்றும், சகோதரன் பாங்க்ஸ் கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர் என்றும் வைத்துக்கொள்வோமா? மேலும் அவர்கள் அப்பொழுது வேறு ஒரு மொழியைப் பேசினர் மற்றும் அவரால் இந்தியான பாஷையை பேச முடியவில்லை என்பதை நாம் இங்கு அறிவோம். அப்பொழுது அவர் எழுந்து அங்கே இந்தியானா பாஷையில் பேசுவாரானால், அவருக்கு அந்த பாஷை தெரியாது என்பது தெரியும். புரிகிறதா? மேலும் அவர் இந்தியானா பாஷையில் பேசுவதை நாம் கேட்கிறோம், அவர் கென்டக்கி பாஷையில் பேசிக்கொண்டிருக்கிறார் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர், “தேவனுக்கு ஸ்தோத்திரம்! இயேசு மரித்தோரிலிருந்து எழுந்துள்ளார். அல்லேலூயா!” என்று சாட்சி பகர்ந்துகொண்டிருக்கிறார். ஆனால் நாமோ அவர் கூறுவதை இந்தியானா பாஷையில் கேட்டுக்கொண்டிருக்கிறோம். 120 அது பெந்தெகொஸ்தே நாளில் அவ்விதமாகத் தான் இருந்தது. புரிகிறதா? பாருங்கள், “இதோ, பேசுகிற இவர்கள் எல்லாரும் கலிலேயரல்லவா,” பாருங்கள், “ஒவ்வொரு மனிதன் பேசுவதையும், கென்டக்கியர்களாகிய நாம் எப்படி கேட்கிறோம்?” “அப்படியிருக்க இந்தியானா, ஓஹையோ, இல்லினாய்ஸ், மெய்ன், மசாசூசட்ஸ் மற்றும் கலிபோர்னியாவைச் சோந்தவர்களாகிய, நாம் எப்படி நம்முடைய ஜென்ம பாஷைகளில் அவர் பேசவதைக் கேட்கிறோம்?” அந்தக் கருத்துப் புரிகிறதா? பாருங்கள், அது ஆவியின் ஏவுதல். பாருங்கள், அது அவர்கள் கேட்கும்படியான ஆவியின் ஏவுதலாய் உள்ளது, அது அவர்களுக்கான ஆவியின் ஏவுதலாய் உள்ளது.
52121 பாருங்கள், செய்தி…அதைக் குறித்த காரியம், அது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்த ஒரு சாட்சியாயுள்ளது. பாருங்கள், அது உண்மை. இப்பொழுது, தேவன் உங்களுக்குள் அந்த வாழ்க்கையை வாழவில்லை யென்றால், நீங்கள் எவ்வளவுதான் அதைக் குறித்து சாட்சி சொன்னாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் இதை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. புரிகிறதா? அது உண்மை. நீங்கள் எவ்வளவு நன்றாக… 122 இப்பொழுது வேறு கேள்வி உண்டா? [சகோதரன் ராய் ராபர்சன், “சகோதரன் பிரான்ஹாமே, அதை நாம் அந்த ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த பெண்ணின் விஷயத்தில் ஜெப வரிசையில் கண்டோம் என்று நான் எண்ணுகிறேன்” என்கிறார்—ஆசி.] ஆம். மிகவும் நல்லது, சகோதரன் ராய். அங்குதான் நான் இப்பொழுது செல்லப்போகிறேன், பியூமாண்ட்—பியூமாண்டுக்கே. அது பியூமாண்ட் தானே? ஆம், ஐயா. 123 இப்பொழுது, ஜெபவரிசை நிறுத்தப்பட்டது. ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் மேடையின் மேல் வந்தாள். பாருங்கள், வெளிப்படையாகக் கூறினால், நான் வெளியே போகப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன் என்று நான் நினைக்கிறேன், இல்லையா? ஹாவர்ட் எனனை வெளியே கொண்டு சென்றுகொண்டிருந்தார், மேலும்—மற்றும் இது… நான்—நான்—நான் யாரோ அழுவதைக் கேட்டேன், அப்பொழுது அங்கிருந்த ஒரு ஸ்பானிய சிறுமி, ஓ, அவளுக்கு சுமார் பதினைந்து, பதினாறு வயதிருக்கும், சரியாக…ஒரு சிறு பெண். மேலும்—மேலும் நான் பார்த்தபோது, நான் தொடர்ந்து சென்றிருந்தால், அடுத்தபடியாக அவள் வரும்படி ஜெப அட்டையை வைத்திருந்தாள். நான் அங்கே வரிசையில் நிறைய பேரை உடையவனாயிருந்தேன், ஆனால் அவளுடையது தான் அடுத்த ஜெப அட்டை. நான், “அவளைக் கொண்டு வாருங்கள்” என்றேன். எனவே அவர்கள் அவளை மேடையின் மேல் கொண்டு வந்தனர். நான் வேறொரு கூட்டத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது, மேலும் நான், “அவளை மேலே கொண்டு வாருங்கள்” என்றேன். 124 எனவே, நான் கண்டறிந்தேன், நான் அவளிடம் இந்த விதமாக ஏதோ ஒன்றைக் கூறினேன், “இப்பொழுது, நீ விசுவாசிப்பாயா? உனக்குள்ள கோளாறு என்னவென்று உன்னிடம் கூறுவதற்கு இயேசு எனக்கு உதவி செய்வாரானால், அவர் உன்னை சுகமாக்குவார் என்று—என்று விசுவாசிப்பாயா?” என்றேன். மேலும் அவள் தலை குனிந்து கொண்டேயிருந்தாள். அவள் செவிடாகவும் மற்றும் ஊமையாகவும் இருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். புரிகிறதா?
53125 எனவே நான் மறுபடியும் அவளைப் பார்த்தபோது, நான், “இல்லை, அவளுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது” என்று கூறினேன். எனவே அவர்கள் ஒரு மொழிபெயர்ப்பாளரை அங்கு கொண்டு வந்தனர், மேலும் நான் “அதை நீ விசுவாசிப்பாயா?” என்று கேட்டேன். மேலும் அவள் திரும்பி சைகை காட்டினாள்…அப்பொழுது, நான் கூறினதை அவளால் மொழிபெயர்ப்பாளரின் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. பார்த்தீர்களா? 126 பாருங்கள், அப்பொழுது நான் சொன்னேன்…மேலும் நான் பார்த்தபோது, எனக்கு ஒரு தரிசனம் உண்டானது. அப்பொழுது நான், “நீ் ஒரு பழைய காலத்து நெருப்பு மூட்டத்தண்டை உட்கார்ந்து கொண்டிருப்பதையும் மற்றும் ஒரு பெரிய கொதிகெண்டி அதன் மேல் ஊசலாடுவதையும், அது மஞ்சள் சோளக் கதிரினால் நிறைந்துள்ளது. நீ ஒ…” நான் காண்கிறேன். சகோதரன் ராய், உங்களுக்கு அது ஞாபகமிருக்கிறதா? நான், “நீ சோளத்தை அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டுவிட்டாய். அப்பொழுது உன் தாய் உன்னைக் கட்டிலில் படுக்க வைக்குமளவிற்கு நீ மிகவும் வியாதிப்பட்டிருந்தாய் மற்றும் அப்பொழுது உனக்கு வலிப்பு வரத் தொடங்கினது” என்றேன். மேலும் நான், “அன்று முதல் உனக்கு அவைகள் இருந்து வருகிறது” என்றேன். 127 அப்பொழுது அவள் மொழிபெயர்ப்பாளரிடம் திரும்பி தன்னுடைய சொந்த மொழியில் அவரிடம் கூறினாள், “அவரால் ஆங்கிலத்தில் பேச முடியாது…இல்லை ஸ்பானிஷ் பாஷையில் பேசத் தெரியாது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்!” என்றாள். 128 அப்பொழுது அவர் என் பக்கம் திரும்பி, “நீங்கள் ஸ்பானிஷ் பாஷையில் பேசவில்லையா?” என்று கேட்டார். 129 அதற்கு நான், “இல்லை” என்றேன். எனவே நாங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டதை போட்டுக் கேட்டோம், அது முற்றிலும் ஆங்கிலத்தில் இருந்தது.
54130 ஆனால் அப்பொழுது அந்த மொழிபெயர்ப்பாளர், “அப்படியானால் அவர் என்ன சொன்னார் என்று சொல் பார்ப்போம்” என்றார். பாருங்கள், அவர் அந்த வியாக்கியானத்தை புரிந்துகொள்ள வேண்டிய தாயிருந்தது. “அவர் என்ன சொன்னார் என்று நீ எனக்கு சொல் பார்ப்போம்” என்றார். அவள் நான் சொன்ன வார்த்தைகளை அப்படியே அவரிடம் ஸ்பானிஷ் பாஷையில் எடுத்துக் கூறினாள். 131 இப்பொழுது, நான் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்ததை, அவள் தன்னுடைய ஜென்ம பாஷையில் நான் கூறுவதைக் கேட்டாள். அவள் அதை ஸ்பானிஷ் பாஷையில் கேட்டாள். “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” மேலும் அந்த சிறு பெண் சுகமடைந்தாள். பாருங்கள், அதுதான் அது, அது தேவனுடைய அற்புதமான கிரியைகளாயுள்ளன. [ஒரு சகோதரன், “அப்படியானால் பரிசுத்த ஆவியைக் கொண்டுள்ள அந்த பாண்டம் இருக்காதா… ஒரு பாண்டமாக மட்டுமே இருக்கும், மேலும் அதை நிரப்புகிற ஒருவர் அதை எதை கொண்டும்…?” என்று கேட்கிறார்.—ஆசி.] 132 அவர் எதை வாஞ்சிக்கிறாரோ, அது உண்மை. முற்றிலும் உண்மை. அப்படியானால் அது எதைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள், அப்பொழுது, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளீர்களா அல்லது இல்லையா என்பதை அறிந்துகொள்வீர்கள். புரிகிறதா? அது எதைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள். அந்த—அந்த பாண்டம் அசுத்தங்களினால் நிறைந்திருந்தால், அப்பொழுது அது தேவனுடைய பாண்டம் அல்ல. ஆனால் அது தூய்மைகளினால் நிறைந்திருந்தால், அப்பொழுது அது தேவனுடைய பாண்டம். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? [அந்த சகோதரன், “மேலும் அந்த பாண்டம், சில நேரங்களில் உபயோகிக்கப்பட்டு, அறியப்படாமலிருக்கும், அது என்னவாக பயன்படுத்தப்பட்டது அந்த நேரத்தில் அது அறியப்படாமலே இருக்க வகையுண்டு” என்கிறார்.—ஆசி.] ஒ, நிச்சயமாக. [அந்த சகோதரன் ஒரு சாட்சி கூறுகிறார்.] உ-ஊ. உ-ஊ. அது முற்றிலும் உண்மை, நிச்சயமாக. ஓ, நாம் எல்லாருமே, நாம் அதைக் காண்கிறோம். அதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆம், ஐயா. ஆம், ஐயா. நாம் எல்லாருமே…நாம் அந்த காரியங்களோடு அறியப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
55அது எண் நான்கு என்று நான் நினைக்கிறேன்: பரிசுத்த—ஆவியால்- நிரப்பப்பட்ட மக்கள் அனைவருமே—அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? “அவர்கெளல்லாரிலும் நான் அதிகமான பாஷைகளைப் பேசுகிறேன்” என்று பவுல் அங்கே கூறியிருப்பதைக் நான் கண்டறிகிறேன். இப்பொழுது, நான் நினைப்பது என்னவென்றால், இந்த சகோதரனின் கேள்விக்கு பதிலளித்து முடிக்க வேண்டும்: அவர்களெல்லாரிலும் பவுல், அதிகமான பாஷைகளைப் பேசுகிறான். 133 பவுல் ஒரு அறிவுள்ள மனினாயிருந்தான், அவனுக்குத் தாமே, அநேக பாஷைகள் தெரிந்திருந்தது. பாருங்கள், அவனால் பேச முடிந்த…அவன்…அவன் நியாய விசாரணைக்குச் சென்றிருந்தபோது, அவன் இந்த விதமான ஒரு பாஷையை அல்லது அந்த விதமான ஒரு பாஷையை, அல்லது அது என்னவாயிருந்தாலும் பேச முடிந்தது என்பது நினைவிருக்கட்டும். மேலும் அது ஐனங்களுக்கு அந்நிய பாஷையாக இருந்தது, ஆனால் அது ஆவியினால் ஏவப்பட்டதாயிருக்கவில்லை. அவை வழக்கமாக பேசப்படும் பாஷைகளாயிருந்தன, நீங்கள் பாருங்கள். ஆனால்…மற்றும்…
56134 ஆனால் தேவனுடைய பலிபீடத்தின் கீழ் வாழ்கிற ஆவியினால்-நிரப்பப்பட்ட ஒரு நபர், சந்தேகமேயில்லை, விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ, அந்நிய பாஷைகளில் பேசும் அனுபவத்தைப் பெற்றிருப்பான் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் பவுல் விவரித்துள்ளபடி அது தான் வரங்களில் மிகவும் தாழ்ந்த மிகவும் குறைந்த ஒரு வரமாயுள்ளது. நீங்கள் வரங்களை வரிசைப்படுத்தினால், வரங்களின் வரிசையில், பாருங்கள், பாஷைகளைப் பேசும் வரமே கடைசியான காரியமாயுள்ளது. 135 ஆனால் இப்பொழுது, முதலாவதாக, நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறீர்கள்…இங்குள்ள, நீங்கள் ஒவ்வொருவரும் வரங்களாக இருக்கிறீர்கள். நான் வெளியே இருக்கிறேன். இப்பொழுது, “ஒரே வாசலினாலே, ஒரே ஆவியினாலே,” ஒரே வாசல் இந்த அறைக்குள் நுழைகிறது. அது சரியா? இப்பொழுது, நான் அந்த வழியாக வர முடியாது, இந்த வழியாக வரமுடியாது, பின்னால் உள்ள அந்த வழியாக வரமுடியாது. புரிகிறதா? நான் எப்படி இங்கே வருகிறேன்? சகோதரன் ராபர்ஸன் வழியாகவா? இல்லை, ஐயா. பாருங்கள், சகோதரன் லியோவின் வழியாக என்று கூறுகிறீர்களா? அவர் அந்நிய பாஷைகளில் பேசும் வரமாக இருப்பாரானால், பாருங்கள், நான் லியோவின் வழியாகவா இதற்குள் வருகிறேனா? இல்லை, ஐயா. ஊ-உ. பாருங்கள், நான் எவ்வாறு உள்ளே வருகிறேன்? “ஒரே வாசலினாலே, ஒரே ஆவியினாலே.” ஆவி என்பது எல்லாமே பாஷைகள் அல்ல. இல்லை. புரிகிறதா? பாருங்கள், “ஒரே ஆவியினாலே இந்த சரீரத்திற்குள் நான் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறேன்.”
57136 இப்பொழுது, இது ஆவி, நீங்கள் எல்லோரும் வரங்கள். நீங்கள், “பாருங்கள், தேவனை ஸ்தோத்தரியுங்கள்!” என்கிறீர்கள். நான் அங்கு சென்று, சொல்லுவேன், அங்கு—அங்கு சகோதரன் உட் இருக்கிறார், அவர் அற்புதங்கள் செய்யும் வரமாயிருக்கிறார். பார்த்தீர்களா? “ஓ, நான் ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருந்தேன். நான் ஒரு அற்புதத்தை செய்ததனால் எனக்கு பரிசுத்த ஆவி உண்டென்று நான் அறிந்திருக்கிறேன்.” ஒரு “அற்புதத்தினாலே” நாம் எல்லாரும் அந்த சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. 137 நான் பிறகு சகோதரன் ஜூனியிடம் செல்கிறேன், அவர் அறிவு என்னும் வரமாயிருக்கிறார், “பாருங்கள், பாருங்கள், எனக்கு வேதாகம அறிவு உள்ளது! நான் உனக்குச் சொல்கிறேன், அந்த காரணத்தினால், எனக்கு பரிசுத்த ஆவி உண்டென்று எனக்குத் தெரியும்.” இல்லை, நாம் பிரவேசிக்கும் வழி அதுவல்ல. 138 சரி. சகோதரன் லியோவினாலும் அல்ல, சகோதரன் உட்டினாலும் அல்ல, சகோதரன் ஜூனியினாலும் அல்ல—அல்ல. புரிகிறதா? அல்ல. ஆனால் ஒரே எதனாலே? [சபையோர், “ஆவியினாலே!” என்கின்றனர்.—ஆசி.] சரி. இந்த சரீரத்திற்குள்ளாக நான் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறேன், இப்பொழுது நான் அதற்குள் இருக்கிறேன், இப்பொழுது பிதா என்னை எங்கே உபயோகிக்கப் போகிறார்? பார்த்தீர்களா? லியோ வாசலின் அருகே உட்கார்ந்திருக்க நேர்ந்திருக்கலாம்; இது சம்பவிக்கும் முதலாவது காரியங்களில் ஒன்றாக இருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அப்படி இல்லாமலும் இருக்கலாம். நான் இதைக் குறித்த எல்லாவற்றையும் கடந்து சென்று இங்கே சகோதரன் உட்டை அடையுமளவிற்கு நான் ஆவியை அதிகமாக பெற்றிருக்கக் கூடும். நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லையென்று நீங்கள் எனக்குச் சொல்ல முடியாது, ஏனெனில் ஞானஸ்நானத்தின் மூலமாக நான் இந்த சரீரத்திற்குள் இருக்கிறேன். ஆனால், “பாருங்கள், தேவனுக்கு ஸ்தோத்திரம், இப்பொழுது நான் உட்கார்ந்து, அதை எளிதாக எடுத்துக் கொள்வேன். நான் பரலோகத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று யூகிக்கிறேன்” என்று சொல்வதற்காக தேவன் என்னை இங்கு கொண்டு வரவில்லை. “ஹூ! நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? 139 ஆனால் இங்கிருந்து, இதிலிருந்து திரும்பிச், அங்கே திரும்பிச் செல்ல முடியும். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? நான் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செல்ல முடியும், அல்லது நடுபாகத்திற்கு, அல்லது எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆனால் ஏதோ ஒன்று நடக்கும், ஏதோ ஒன்று நடந்தே ஆக வேண்டும். அது என்ன? ஆவியின் அபிஷேகம் நான் அந்த சரீரத்தில் இருக்கிறேன் என்பதைக் காண்பிக்கிறது, “ஒரே ஆவியினாலே.” சகோதரனே, நீங்கள் இதை இங்கே, புரிந்து கொண்டீர்களா? சரி! அது தானே இது? சரி.
58112. அந்நிய பாஷைகளும் தீர்க்கதரிசனங்களும் ஆராதனையின்போது எந்த வரிசைக் கிரமத்தில் உபயோகிக்கப்பட வேண்டும்… (அது ஆராதனையின்போது அவை உபயோகிக்கப்படவே கூடாதே! புரிகிறதா?)… தேவனை மகிமைப்படுத்த …(கூடவே கூடாது!)… சபை பக்திவிருத்தியடையச் செய்யவா? தீர்க்கதரிசியினுடைய ஆவியைக் குறித்து ஜனங்கள் கூறுவதை நான் அறிவேன்…நான் அறிவேன்…நான்—நான் அறிவேன்… (நான் அதை யூகிக்கிறேன்…இல்லை, நான் உங்களுடைய மன்னிப்பை வேண்டுகிறேன், அது, “வேதாகமம்,” வே-தா-க-ம-ம். நான் ஜ-ன-ங்-க-ள் அல்லது அதை ஏதோ ஒரு விதமாக கூறத் துவங்கினேன். இல்லை)… வேதம், “தீர்க்கதரிசிகளுடைய ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது” என்று உரைக்கிறது. (சரியாக) 140 ஆவியில் அந்நிய பாஷைகளில் பேசுதலும் மற்றும் தீர்க்கதரிசனம் உரைத்தலும் சபையை பக்திவிருத்தியடையச் செய்வதற்காகவே, ஆனால் அதற்கு அதற்குரிய சேவை ஒன்றுண்டு. புரிகிறதா? கூட்டம் ஒழுங்கில் இருக்க…சபையின் தீர்க்கதரிசி பேசும் வரை அது தொந்தரவு செய்யாது. புரிகிறதா? அது கூட்டத்திற்கு ஒருக்காலும் இடையூறு விளைவிக்கக் கூடாது. 141 இப்பொழுது, பாருங்கள், “தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள்.” நாம்—நாம் இப்பொழுது மற்றோரு கேள்வியைப் பெற்றுள்ளோம், நாம் ஒரு நிமிடம் அதற்கு செல்வோம். பாருங்கள், இந்த வரங்கள் இயங்குவதற்கு…சரியான வழி…இது அநேக வரங்களுக்கான பதில், நீங்கள் பாருங்கள். நாம் அவைகளுக்கு வரும்போது, இந்த ஒன்றின் பேரில் இங்குள்ள இந்த நபருக்கு, நாம் இந்த முதலாம் ஒன்றில் அதற்கு பதிலளித்துவிட்டோம் என்று நாம் கூறலாம். புரிகிறதா? இது ஐந்தாம் கேள்வி: தேவனை மகிமைப்படுத்த ஆராதனைகளின்போது அந்நிய பாஷைகள் பேசுதலையும் தீர்க்கதரிசனம் உரைத்தலையும் உபயோகிக்கலாமா? 142 நீங்கள் பாருங்கள், இப்பொழுது, போதகர்…ஊழியக்காரன் தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்டு, சபையானது ஒழுங்கில் இருக்குமானால், இப்பொழுது, சரியான முறை…நான்—நான், “அதை ஒழுங்கிற்குள் அமைக்க வேண்டும்” என்பது எப்படி என்பதைக் குறித்து உங்களிடம் பேசியிருப்பது உங்களில் அநேகருக்குத் தெரியும். இந்த வரங்கள் இருக்க வேண்டிய…இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், இதைத்தான் நாம் இந்த கூடாரத்தில் செய்யவிருக்கிறோம். இப்பொழுது, நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன், நான் ஏதோ ஒன்றைக் காண்கிறேன், சகோதரன் நெவிலையும் இந்த மற்ற சகோதரரையும் தவிர மற்றவர்களை இங்கு ஒழுங்குக்குள் கொண்டு வர வேண்டும் என்று கருதுகிறேன். இப்பொழுது நீங்கள்…இந்த சகோதரரில் அநேகர் வாலிப சகோதரராயிருக்கிறீர்கள்.
59143 இப்பொழுது, நான்—நான் உங்கள் எல்லாரையும் விட இந்த விதத்தில் அனுபவத்தில் மூத்தவன். இந்த ஊழியத்தில் நான் முப்பத்தோரு ஆண்டுகளாக இருக்கிறேன். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கல்லை இங்கு நான் நாட்டினேன். சந்திக்க வேண்டிய ஒவ்வொரு காரியத்தையும் நான் சந்திக்க வேண்டியதாயிருந்தது, நீங்கள் இதற்கு வரும்போது, நீங்களும் கூட, எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருப்பது அவசியமாகும். நீங்கள் அதை அறிந்திருப்பது மாத்திரம் மேலானதல்ல, நீங்கள் எடுத்துக் கூறும்போது—அதை நீங்கள் எடுத்துக் கூறும்போது, தேவன் அதை அங்கே ஆதரிக்க வேண்டும் என்பதே அவசியமாகும். 144 இப்பொழுது, இப்பொழுது இதை நீங்கள் மிகவும் வெற்றிகரமாக செய்யக்கூடிய வழி என்னவெனில், நீங்கள் சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தலாம். அதைத் தான் அவர்கள் அங்கு முதலாம் கொரிந்தியர் 14-ல் செய்தார்கள் என்று நான் நினைக்கிறேன், “அங்கே உட்கார்ந்திருக்கிற ஒருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், மற்றவன் பேசாமலிருக்கக்கடவன்.” அது “வரங்களுக்கான ஒரு சிறப்புக் கூட்டமாயிருந்தது” என்று நான் நினைக்கிறேன், அது சரியாயிருக்கும். அவர்கள் ஒரு சிறப்புக் கூட்டம் ஒன்றை வைப்பார்களானால், வரங்களைப் பெற்றுள்ள அனைவரும் வாரத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி, அதன் பிறகு சபைக்கு வருவார்களானால், அது அருமையாயிருக்கும். அந்த கூட்டத்தை அவர்கள் வைக்கட்டும், அங்கு இருக்காது…பிரசங்கம் எதுவும் இருக்காது, அது ஆவியின் வரங்களுக்காகவேயாகும்.
60145 அது வெளியாட்களுக்கும் அவிசுவாசிகளுக்கும் அல்ல. அவர்கள் உள்ளே வந்து, உட்கார்ந்து கொண்டு, சொல்லுவார்கள்…ஒருவர் எழுந்து நின்று, “ஹா-ஹா,” என்று அந்நிய பாஷைகளில் பேச; வேறொருவர், “ஹா-ஹா.” என்பான். “இது என்னவாயிருக்குமோ!” அவர்கள் உள்ளே வந்து, “பாடுதல் எங்கே? அதைக் குறித்த மற்றவை எங்கே?” என்று கேட்கக் கூடும். புரிகிறதா? 146 ஆனால், இப்பொழுது, அந்நிய பாஷையில் பேசுகிற இவர்கள், அவர்களில் அநேகர் (அதற்கு அர்த்தம் உரைப்பவர்கள் போன்றவர்) சுவிசேஷத்தில் குழந்தைகளாயுள்ளனர். புரிகிறதா? அவர்களை புண்படுத்த வேண்டாம்—வேண்டாம், அவர்கள்—அவர்கள் வளரட்டும், அந்த வரம்… அதில் சில, சிலவற்றிற்குள் சாத்தான் எப்படி உள்ளே பின்னிக்கொள்ள முயற்சிக்கிறான் என்பதை நீங்கள் காண முடியும். உண்மையாகவே, அனுபவம் பெற்றுள்ள, நாம்—நாம்—நாம் அதை பார்க்கிறோம். பாருங்கள், அதை நாம் புரிந்து கொள்ள முடியும், மேலும் நீங்கள் அதை கவனிக்கலாம்.
61147 இங்கே அண்மையில் ஒரு குறிப்பிட்ட ஊழியக்காரர், இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார், என்னிடத்தில் வந்து, என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்று, என்னிடம் இதைக் கூறினார், மிகவும் விலையேறப்பெற்ற ஒரு சகோதரர். 148 அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதனால் இதை நான் கூறவில்லை, ஆனால் நீங்கள் எல்லோருமே விலையேறப்பெற்ற சகோதரர்கள். அவ்விதம் நான் எண்ணாமல் போனால், நான் உங்களிடம், “முதலில் நீங்களும் நானும் நமக்கிடையே இந்த காரியத்தை, முதலில் சரிபடுத்திக்கொள்வோம்” என்று கூறியிருப்பேன். புரிகிறதா? அது உண்மை. புரிகிறதா? உங்கள் எல்லோரையும் நான் நேசிக்கிறேன், நீங்கள் பாருங்கள், வேதத்திற்கேற்ப சகிப்புத்தன்மையின் ஆவியில், உதவி செய்வதற்கு மாத்திரமே நான் இங்கு இருக்கிறேன். புரிகிறதா? 149 இந்த சகோதரன் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது…அங்கு ஒரு குறிப்பிட்ட ஸ்திரீ இருந்தாள், அந்த ஸ்தீரி தவறாயிருந்தாள். மேலும் இந்த…அந்த ஸ்திரீயை நான் அதற்கு முன்பு கண்டதில்லை, ஆனால் அவள் பேசினதை ஒலிநாடாவில் கேட்டிருக்கிறேன், அந்நிய பாஷைகளுக்கு அவள் அர்த்தம் உரைப்பதையும், ஏதோ ஒன்றைக் கூறுவதையுமே. அதை கேட்கும்போது, நீங்கள் அதை உடனே அறிந்து கொள்ளலாம்.
62150 ஒரு நாள், வேறொரு ஊழியக்காரரிடம், நான், அணில் வேட்டையின்போது, நாங்கள் ஒரு அடி மரத்தின் மேல் அமர்ந்து, அதே நபரைக் குறித்து, அதைக் குறித்தேப் பேசினோம். இப்பொழுது இங்குள்ள, அந்த இருபோதகர்களுமே, அது என்னவாயிற்று என்பதை அறிந்துள்ளனர். பாருங்கள், சற்று, நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். 151 ஊழியக்காரர்களாகிய நீங்கள் ஒரு வரத்தைக் குறித்து யாரோ ஒருவரைத் திருத்திக்கொண்டிருக்கும்போது, நீங்கள் அவர்களை திருத்திக்கொண்டிருக்கும்போது, வேதப்பிரகாரமாக அவர்களைத் திருத்தும்போது, அவர்கள் இடறலடைந்தால், நினைவிருக்கட்டும், அது தேவனுடைய ஆவியல்ல, ஏனெனில் தேவனுடைய ஆவி அவருடைய வார்த்தையினால் இடறலடைய முடியாது. அவர் தம்முடைய வார்த்தைக்கு வருகிறார். பாருங்கள், அந்த வரத்தை உடையவர் திருத்தப்படுவதற்கு எப்பொழுதுமே சித்தமுள்ளவராயிருப்பார். ஒரு தேவனுடைய உண்மையான பரிசுத்தவான் எவரும் வார்த்தையையே பின்பற்றுவதற்கு விரும்புகின்றனர். ஆம், ஐயா. 152 நான் திருத்தப்பட விரும்புகிறேன். நான் தவறாகச் செய்துகொண்டிருக்கும் காரியங்களில், பரிசுத்த ஆவியானவர் என்னை திருத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனக்கு பதிலீடான ஒன்றும் தேவையில்லை. எனக்கு—எனக்கு உண்மையான காரியமே வேண்டும், இல்லையேல் எனக்கு ஒன்றும் வேண்டாம், என்னைத் தனியே விட்டுவிடுங்கள், வேறொன்றையும் நான் பெற்றுக்கொள்ள வேண்டாம்—வேண்டாம். புரிகிறதா? ஏனெனில் கிறிஸ்துவுக்கு ஒரு நிந்தையைக் கொண்டு வருவதை விட அவ்விதம் செய்வதே நான் விரும்புகிறேன்.
63153 வேதம் கூறினாலொழிய வேறெந்த ஒன்றையும் நான் போதிக்கவோ அல்லது கூறவோ மாட்டேன்… 154 மேலும் ஏதாவது ஒரு சகோதரன், ஒரு கிறிஸ்தவ சகோதரன், தவறான ஒன்றை நான் போதிப்பதைக் காண்பாரானால், ஆராதனை முடிந்த பின்பு அவர் என்னை ஒரு புறம் அழைத்துச் சென்று, “சகோதரன் பிரான்ஹாமே, நான் உம்முடைய அறைக்கு வந்து உம்மிடம் பேச விரும்புகிறேன், நீங்கள் ஒரு விஷயத்தில் தவறாயிருக்கிறீர்கள்” என்று கூறுவாரானால், அதை நான் மெச்சுவேன். புரிகிறதா? சகோதரனே, நான்—நான் அதை நிச்சயம் பாராட்டுவேன், ஏனெனில் நான் சரியாயிருக்க விரும்புகிறேன். அது எனக்குத் தேவை. 155 இப்பொழுது, நாம் எல்லோருமே சரியாயிருக்க விரும்புகிறோம், ஆகையால் தான் இந்த காரியங்களை நாம்—நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். வேதவசனங்களை ஒன்றாக இணைக்க, அவை வேதத்திலிருந்து வரவேண்டும், நீங்கள் பாருங்கள்.
64156 இப்பொழுது, அந்நிய பாஷை பேசுதல் எவ்விதம் இருக்க வேண்டுமென்றால்…இப்பொழுது, சிறிது காலம் கழித்து…இப்பொழுது சிறிது காலத்துக்கு அது அவ்விதமே சென்று கொண்டிருப்பதற்கு விட்டுவிடுங்கள். பாருங்கள், அது அவ்விதமே சென்று கொண்டிருக்க, அவ்விதமே இருக்க விட்டு விடும்படி நான் உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். இப்பொழுது ஊழியக்காரராகிய உங்களைத்தான், மேய்ப்பர்களாகிய உங்களைத்தான், இந்த குழந்தைகள் சற்று பெரியவர்களாக வளரும் வரைக்கும், அது அப்படியே சென்றுகொண்டிருக்கும்படிக்கு விட்டு விடுங்கள். இப்பொழுது, ஒருக்கால், விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ, சத்துரு அந்த நபரை வஞ்சிக்க முயன்றுகொண்டிருந்தால், அது அம்பலமாகி விடும். அதைக் குறித்து நமக்கு நிச்சயமாகத் தெரியாது. 157 இப்பொழுது, இதற்குப் பிறகு, நீங்கள் இதைத் தொடங்குவதற்கு முன்பு, அது என்னவென்று கண்டுபிடிக்க, நீங்கள் பாருங்கள், அங்கே ஞானத்தின் ஆவியுள்ள சிலரை, பகுத்தறியும் ஆவியுள்ளவர்கள் சிலரை கொண்டு வாருங்கள். முதலாவது காரியம், உங்களுக்குத் தெரியுமா, ஒரு சிறு தவறு உள்ளதாக யாராகிலும் ஒருவரை நீங்கள் கவனிக்கத் தொடங்கினால், அதுதான் பகுத்தறிதல். அதன் பின்னர், அது சிறிது காலம் குழந்தையாக இருக்க விடுங்கள். புரிகிறதா? அந்த பகுத்தறிதல் தவறாகின்றது என்பதை நீங்கள் கண்டால், அப்பொழுது அதைத் திருத்துங்கள். அந்தக் காரியம்…அது தேவனிடத்திலிருந்து வந்ததாய் இருக்குமானால், அவன் வார்த்தையோடு திருத்துதலை ஏற்றுக்கொள்ள நிற்பான். புரிகிறதா?
65158 இதை உதாரணமாகக் கூறுகிறேன், நாம் அந்நிய பாஷையில் பேசினோம் என்று நான் கூறப்போவதாக வைத்துக்கொள்வோம், யாரோ ஒருவர், நாம்…இது வரங்களைப் பெற்றுள்ள ஒரு—ஒரு கூட்டம் மனிதர் என்று வைத்துக்கொள்வோம். லியோ எழுந்து நின்று அந்நிய பாஷைகளில் பேசுகிறார்; அதன்பின்னர், அதற்கு இங்குள்ள வேறொரு சகோதரன் வில்லர்ட், அர்த்தம் உரைக்கிறார். சரி. இப்பொழுது, சகோதரன் நெவில் மற்றும் சகோதரன் ஜூனி மற்றும் சகோதரன் வில்லர்ட் காலின்ஸ் பகுத்தறிபவர்கள் என்று நான் கூறப்போவதாக வைத்துக் கொள்வோம், பாருங்கள். இப்பொழுது, லியோ பேசினதால்…இப்பொழுது, இங்கு நாம் பரிசுத்தவான்களின் ஒரு சிறு கூட்டத்தை, ஓரு வரத்தினைக்கொண்ட கூட்டத்தை ஒழுங்கு செய்திருக்கிறோம். லியோ அந்நிய பாஷையில் பேசினார், அதற்கு வில்லர்ட் இங்கு அர்த்தம் உரைத்து, “கர்த்தர் உரைக்கிறதாவது! ‘புதன் இரவன்று இங்கு ஒரு ஸ்திரீ வருவாள், அவள் மிகவும் மூர்க்கத்தனமுள்ளவளாய் இருக்கப் போகிறாள்—போகிறாள். அவளைக் கடிந்துகொள்ள வேண்டாமென்று சகோதரன் பிரான்ஹாமிடம் சொல், ஏனெனில் அவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. ஆனால் அவர் அவளை அந்த மூலைக்கு அழைத்துச் செல்லும்படி சொல், ஏனெனில் அந்த ஒரு மூலையில் தான் அவள் ஒரு பொல்லாத காரியத்தை செய்திருக்க, அப்பொழுது ஒரு குறிப்பிட்ட காரியம் நடந்தது’” என்று அவர் கூறினார் என்று வைத்துக்கொள்வோம். புரிகிறதா? அது மிகவும் நன்றாகத் தான் தொனிக்கிறது, அது தொனிக்கவில்லையா? பார்த்தீர்களா? சரி.
66159 இப்பொழுது, ஆனால் முதலாவது காரியம், உங்களுக்குத் தெரியுமா, பழைய ஏற்பாட்டில், தீர்க்கதரிசி என்ன கூறினான் அல்லது வேறு யாராகிலும் என்ன கூறினர் என்பது ஒரு பொருட்டல்ல, அது முதலில், ஊரீம் தும்மீமினால் பரிசோதிக்கப்பட்டது. பாருங்கள், அது வார்த்தைக்குச் சென்றது. அது ஒளிகளை பிரகாசிக்கவில்லையென்றால், அவர்கள் அதை அப்படியே விட்டுவிடுவார்கள். புரிகிறதா? 160 முதலாவது காரியம், இப்பொழுது, நாம் அதைத் திரும்ப வார்த்தைக்குக் கொண்டு செல்வோமாக. இப்பொழுது, இந்த மனிதன் அந்நிய பாஷைகளில் பேசினார், அது நன்றாக ஒலித்தது. இந்த மனிதன் அதற்கு அர்த்தம் உரைத்தார், அதுவும் நன்றாக தொனித்தது. ஆனால் வார்த்தை “அது இரண்டு அல்லது மூன்று நியாயாதிபதிகளால், முதலில் தீர்ப்பு கூறப்படட்டும்” என்று உரைத்துள்ளது. அதை ஊரீம் தும்மீமுக்கு கொண்டு செல்லுங்கள். 161 இப்பொழுது, முதலாவது காரியம், வில்லர்ட் காலின்ஸ், “அது கர்த்தரால் உண்டானது” என்கிறார். ஜூனியும், “அது கர்த்தரால்—கர்த்தரால் உண்டானது” என்கிறார். அது மூன்றில் இரண்டு பேர். சரி, அது ஒரு தாளில் எழுதப்பட்டு, இந்த சபையில் இங்கே அறிவிக்கப்படுகிறது. அப்பொழுது அது நடக்கும் முன்பு அதை படிக்கக் கேட்கும் மக்கள், அது நடப்பதைக் காணும்போது, அவர்கள், “சகோதரனே, அது தேவன்! பாருங்கள், அது தேவன்!” என்பார்கள். 162 ஆனால் அது நடக்காமல் போனால், அப்பொழுது என்ன நடக்கிறது? பார்த்தீர்களா? (இப்பொழுது நான் இங்கே மற்றொரு காரியத்தை எடுத்துரைக்கப்போகிறேன், “தீர்க்கதரிசனம் அனைத்துமே…அர்த்தம் உரைத்தல்கள் அனைத்தும் மற்றும் செய்திகளும் தீர்க்கதரிசனமாகுமா?”) இப்பொழுது, ஒரு நிமிடம். இப்பொழுது, அது நடக்காமல் போனால் என்ன? அப்படியானால், லியோ ஒரு தவறான ஆவியில் அந்நிய பாஷை பேசினார்; மற்றவர் அதற்கு ஒரு தவறாக அர்த்தம் உரைத்தார்; நீங்கள் ஒரு தவறான தீர்ப்பை அளித்தீர்கள். அந்த காரியத்தை உங்களிடமிருந்து விலக்கிவிடுங்கள். அது உங்களுக்குத் தேவையில்லை. அது தவறானது. அதை தனியே விட்டுவிடுங்கள். அது பிசாசு. புரிகிறதா? [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] “நான் ஒரு பிரசங்கியல்ல, ஆனால் நான்—நான் அர்த்தம் உரைப்பவன். பாருங்கள், கர்த்தாவே, நான் ஒரு அர்த்தம் உரைப்பவன், நான்—நான் ஒரு பிரசங்கியல்ல. நான் …” சகோதரன் லியோ , “கர்த்தாவே, நான் ஒரு பிரசங்கியல்ல, ஆனால் எனக்கு—எனக்கு அந்நிய பாஷைகள் பேசும் வரமுள்ளது மற்றும் பிசாசு என்னை அதன்பேரில் கவிழ்த்துவிட்டான். தேவனே, அதை என்னை விட்டு அகற்றிவிடும்” என்பார். நீங்கள் , “கர்த்தாவே, நீர் எனக்கு பகுத்தறிதலின் ஆவியைக் கொடுத்திருக்கிறீர், அதை நீர் அநேக முறை செய்ததை நான் கண்டிருக்கிறேன், அது ஏன் நேர்ந்தது? பிதாவே, என்னைச் சுத்திகரியும்! என்ன நேர்ந்தது?” என்பீர்கள். நீங்கள் பாருங்கள், அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது, அப்பொழுது நீங்கள் உண்மையானதைப் பெற்றுள்ளீர்கள்.
67163 பாருங்கள், அது ஒரு வழக்கமான பரிசுத்தாவன்களின் கூட்டம். அதுதான் வேதத்தில் இருந்ததென்று நான் நினைக்கிறேன், ஏனெனில் பவுல், “ஒருவர் தீர்க்கதரிசனம் உரைத்து, ஏதாவதொன்று தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டால், ஏதோக்காரியம்…அங்கு உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால்; முந்திப் பேசுகிறவன் முடிக்கும் வரைக்கும் இவன் பேசாமலிருக்கடவன், அவன் முடித்த பிறகு இவன் பேசலாம். நீங்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக தீர்க்கதரிசனம் உரைக்கலாம்” என்றான். இப்பொழுது, அது ஒரு வழக்கமாக நடைபெறும் ஆராதனையாக இருக்க முடியாது, அது உங்களுக்குத் தெரியும், ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் உபயோகிக்க முடியாது. 164 இப்பொழுது, அது தேவனால் உண்டானது என்று நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ள வேண்டுமானால், பாருங்கள், அது மதியீனமாக இருக்குமானால், அது தேவனால் உண்டானதல்ல. அது நிறைவேறுமானால், அது தேவனால் உண்டானது. புரிகிறதா? அது நிறைவேற வேண்டும். மேலும்—ஆகையால் நமது சபைகளில், நீங்கள் பாருங்கள், சகோதரனே, அப்படியானால் நமக்கு ஒரு திடமான சபை உள்ளது, எவருமே எப்போதும் கூறப்பட்ட எந்த காரியத்திலும் அல்லது செய்யப்பட்டதிலும் தவறைக் கூற முடியாது…
68165 நான் அங்கே பொது ஜனங்களுக்கு முன்பாக இருக்கையில், அது எவ்விதமான சூழ்நிலையில் என்னை நிறுத்துகிறது என்பதைப் பாருங்கள். அதைப் பாருங்கள்! அதன் பேரிலான ஒரு தவறைக் குறித்து என்ன? புரிகிறதா? ஏனென்றால் நான் அவரை நம்பியிருக்கிறேன். புரிகிறதா? நான் அவரை நம்புகிறேன். யாராகிலும் ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம், நீர் ஒரு தவறு செய்துவிடுவீரோ என்று பயப்படுகிறீரா?” எனலாம். இல்லை, இல்லை, ஊ-ஊ, தவறு செய்துவிடுவேன் என்று பயப்படுவதில்லை. அவரை நான் விசுவாசிக்கிறேன். அவரே என் பாதுகாப்பு. நான் அங்கே நிலைத்திருக்கும்படியாக இதை நான் செய்யும்படி தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன். 166 நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டுமென்று தேவன் உங்களைத் தெரிந்துகொண்டிருப்பாரானால், அவரே உங்கள் பாதுகாப்பாயிருப்பார். பாருங்கள், அவரே உங்களைப் பாதுகாப்பார். அவர் உங்களை அனுப்பியிருப்பாரானால், அவர் உங்களுடைய வார்த்தையை ஆதரிப்பார். அப்பொழுது நீங்கள் ராஜதூதராயிருக்கிறீர்கள். நீங்கள் அந்நிய பாஷைகளின் வரத்தோடுள்ள ராஜதூதர்; நீங்கள் பாஷைக்கு அர்த்தம் உரைக்கும் வரம் கொண்ட ராஜதூதர்; நீங்கள் பகுத்தறிதலின் வரத்தைப் பெற்ற ராஜதூதர்; நீங்கள் மூவரும். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அப்படியானால் நீங்கள் என்ன பெற்றுள்ளீர்கள்? உங்களுக்கு ஒரு திடமான சபை உள்ளது. நீங்கள் பயப்படமாட்டீர்கள். நிற்பீர்கள், ஆம், நேற்றைவிட இல்லை…
69167 இங்கு, நான் ஒரு கூட்டத்தில் இங்கு இருந்தேன். இங்கு இங்கிலாந்திலிருந்து ஒரு ஆங்கிலேயப் பையன் வந்திருந்தான், அவன் தற்கொலை செய்துகொள்ள முயன்றுகொண்டிருந்தான். சகோதரன் பாங்க்ஸ் அங்கே வந்து, “அந்தப் பையன் நான்கைந்து நாட்களாக இங்கிருக்கிறான்” என்றார். நான் ஏராளமான காரியங்களை செய்ய வேண்டியதாயிருந்தது, ஆனால் அவரோ, “அந்தப் பையன் தற்கொலை செய்துகொள்ளப்போகிறான்” என்றார். அங்கிருந்த வாட்டர் வ்யூ உணவக நிர்வாகிகள் அந்தப் பையனுடைய நிலைமையைக் குறித்து என்னிடம் சொல்லிக்கொண்டேயிருந்தனர். 168 நான் அவனுக்காக ஜெபிக்க அறைக்குள் சென்றேன். நான் மீண்டும் வெளியே வந்து, நான், “இப்பொழுது, சகோதரன் பாங்க்ஸ், அந்தப் பையனை நான் ஒருபோதும் கண்டதில்லை அல்லது அவனைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் அங்கு செல்வதற்கு முன்பு அவனுக்குள்ள கோளாறு என்னவென்று உங்களிடம் சொல்லப் போகிறேன்” என்றேன். அது சரியா, சகோதரன் பாங்க்ஸ்? அங்கு நாங்கள் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர் அங்கு வந்து, அதைச் செய்தது எதுவென்றும், அவனைக் குறித்த எல்லாவற்றையும், அவன் எங்கு சென்றிருந்தான் என்றும் மற்றும் அவனுடைய வாழ்க்கையைக் குறித்த எல்லாவற்றையும் அவனிடம் கூறினார். அவன் ஏறக்குறைய, மயக்கமுற்று விழுந்தான்.
70169 “சகோதரன் பிரான்ஹாமே, நீர் அவ்விதம் ஒரு மனிதனைக் குறித்து கூறும்போது, ஒரு தவறு நேர்ந்துவிடும் என்று பயப்படுகிறீரா?” மேடையின் மேல் நின்று, ஒரு மனிதனிடம் அவன் தன் மனைவிக்கு உண்மையில்லாதவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றும், வேறொரு ஸ்திரீயின் மூலம் அவனுக்குக் ஒரு குழந்தை உள்ளது என்றும், சொல்லுவதைக் குறித்து எப்படியிருக்கும்? அவன் உங்களை சிறையில் போட்டுவிடுவான். ஆகவே நீங்கள் சரியாக கூறவேண்டுமே! புரிகிறதா? பார்த்தீர்களா? அது தேவனால் உண்டாயிருக்குமானால், பயப்படாதீர்கள். ஆனால் நீங்கள் பயப்படாவிட்டால்…அது தேவனால் உண்டானதென்று நீங்கள் அறிந்திராமல் போனால், அப்பொழுது அது தேவனால் உண்டானதென்று நீங்கள் அறிந்துகொள்ளும் வரைக்கும் அமைதியாய் இருங்கள். அது சரியா? நீங்கள் சரியாயிருக்கிறீர்கள் என்று நிச்சயமுடையவர்களாய் இருந்து, அதன் பிறகு முன்செல்லுங்கள். 170 இப்பொழுது, சகோதரனே, இது கடினமான போதகம், ஆனால் நீங்கள் என் சகோதரர். நீங்கள்—நீங்கள்—நீங்கள் வளர்ந்து வரும் இளம் ஊழியக்காரர்கள், மேலும் நானோ வயது சென்றவன், இந்நாட்களில் ஒன்றில் போகப்போகிறேன். பார்த்தீர்களா? எனவே அது—அது சரியென்று நிச்சயமுடையவர்களாய் இருங்கள்.
71171 அறையை விட்டு வெளியே வருகையில்…இங்கே சிறிது நேரம் கழித்து இதைக் கூறுவேன். ஒரு பையன்…பாருங்கள், அதன் ஒரு பாகத்தை இப்பொழுது கூறவுள்ளேன். நேற்று, நானும் சகோதரன் பாங்க்ஸும், அதிக வேலையாயிருந்தோம், (ஓ, என்னே) நான் மிகக் கடுமையான பணியிலிருந்தேன், நான்—நான் இந்தக் கூட்டத்தில் என்ன செய்யப் போவதாயிருந்தேன் என்பதை உங்களிடம் கூறுவேன். லியோவும் ஜீனும் மற்றும் எங்களில் ஒரு கூட்டத்தினரும் அங்கு, சகோதரராகிய, நாங்கள் கூறுகிற பன்றி வேட்டைக்கு, பன்றி வேட்டைக்குச் செல்லப்போவதாயிருந்தோம். நம்முடைய கூட்டம் முடிந்தவுடனே, நம்முடைய கூட்ட முடிவிலே, அரிசோனாவில் ஜாவலினா பன்றி வேட்டைக்கென்று அவர்கள் ஐந்து நாட்கள் ஒதுக்கியுள்ளனர். நாங்கள் பீனிக்ஸூக்கு ஒரு நாள் செல்கிறோம், நாங்கள் மற்றொரு கூட்டத்திற்கு முன்பு ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டும், அவர்கள் மற்றொரு நாள் எங்காவது கூட்டம் தொடங்குவதற்கு முன்பு நான்கு நாட்கள் இருந்தன. நாங்கள் அங்கே அரிசோனாவில் இருக்க வேண்டும். பாருங்கள், அப்பொழுது ஜாவலினா பன்றி வேட்டை காலம் துவங்குகிறது. 172 எனவே என் துப்பாக்கி சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்க, அதை சுட்டுப் பார்க்க விரும்பினேன். பாங்க்ஸ் என்னுடன் வந்திருந்தார். நாங்கள் வாசலுக்கு வெளியே வந்தபோது, வாசலுக்கு வெளியே வந்தோம். இங்கே ஒரு மனிதன் உள்ளே வந்தார் (பாருங்கள், “தயவு செய்து சகோதரன் பிரான்ஹாமை சந்திக்கக் கேட்காதீர்கள்”) என்று மேலே எழுதி வைக்கப்பட்டிருந்தது.
72173 பாருங்கள், அவர்கள் அதைச் செய்யக் காரணம்…வியாதியாயிருக்கிற ஜனங்களுக்காக அல்ல. என்னுடைய, வீட்டிலே, பாங்க்ஸை கேட்டுப் பாருங்கள், அவர் எனக்கு பக்கத்து வீட்டில் வசிக்கிறார். ஜனங்கள் இரவும் பகலும் வந்தவண்ணம் இருக்கின்றனர், சுகவீனமான பிள்ளைகளையும் மற்றும் எல்லோரையுங் கொண்டு வருகின்றனர். நாங்கள் அப்படிப்பட்ட எந்த ஒரு நபரையும் புறக்கணிப்பதில்லை. ஆனால்… 174 லியோவும் மற்றவர்களும், அங்கே அந்த இனணப்பு வண்டியிலிருந்து, அவர்கள் என்னைக் கூப்பிட்டு, ஜிம்மும் மற்றவர்களும், “இங்கு வியாதிப்பட்ட பிள்ளையுடன் ஒருவர் வந்திருக்கிறார். இங்குள்ள ஒரு மனிதனுக்கு புற்றுநோய் உள்ளது” என்றார்கள். நாங்கள் எல்லாவற்றையும் ஒருபுறம் வைத்து விட்டு அவரைக் காணச் சென்றோம்.
73175 நேற்றிரவு மருத்துவமனை அறைக்கு வரும்படி அழைக்கப்பட்டிருந்தேன், யாரோ ஒருவர் அங்கிருந்து தொலைபேசியில் என்னை அழைத்தார், அங்கு நான் சென்றபோது, அங்கிருந்த ஒருவர் நான் அறைக்குள் செல்வதற்கு அனுமதிக்க மறுத்துவிட்டார். பாருங்கள், வேறு யாரோ ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு என்னைக் கூப்பிட்டுவிட்டார். ஆனால் அதனால் பரவாயில்லை, என்னவாயினும் நான் செல்கிறேன். பார்த்தீர்களா? அப்படிச் செல்ல வேண்டியது என் கடமை, பாருங்கள், யாருக்காகிலும் உதவி செய்வதற்காக. 176 பாருங்கள், அப்படிப்பட்டவர்களுக்காக அங்கு அவ்விதம் எழுதி வைக்கப்படவில்லை. ஆனால் இந்த மனிதன், நாங்கள் காரில் ஏறப்போகும் தருணத்தில் வந்தார், சகோதரன் பாங்கஸூக்குத் தெரியும் நான்… நான் எப்படியோ வீட்டில் காத்திருந்தேன். சகோதரன் பாங்க்ஸின் வீட்டுக்கு யாரோ ஒருவர் வந்து அவரை பிடித்து வைத்துக்கொண்டிருந்தார். அவரைக் காண நான் அங்கு சென்றிருந்தபோது, நானும் பிடித்து வைக்கப்பட்டேன். அப்பொழுது நாங்கள் எங்கள் துப்பாக்கியை கையிலெடுத்துக் கொண்டு காரில் ஏறுவதற்காக புறப்பட்ட தருணத்தில், இதோ ஒரு மனிதன் இங்கே உள்ளே நடந்து வந்தார். அவர் அங்கே நடந்து வந்தார். 177 நான் அவரை வெளியே சென்று அங்கு எழுதி வைக்கப்பட்டிருந்த அந்த எண்ணை, தொலைபேசியில் கூப்பிடச் சொல்ல (பட்லர் 2-1519) ஆயத்தமானேன். [தொலைபேசி எண் மாற்றப்பட்டுள்ளது.—ஆசி.] நான், “நாங்கள் அவசரமாய்ப் போக வேண்டும்” என்றேன். அவர், “ஐயா, நீங்கள் அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன்” என்றார். நான், “என் பெயர்…” என்றேன். 178 முதலாவதாக நான் அவரிடம் நடந்து சென்றேன், அவர், “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருக்கு நான் யாரென்று தெரியாது என்பதை அறிந்துகொண்டேன். நான், “என் பெயர் பிரான்ஹாம்” என்றேன். அப்பொழுது அவர், “நீங்கள் தான் சகோதரன் பிரான்ஹாமோ?” என்று கேட்டார். அதற்கு நான், “நான்தான்” என்றேன். 179 அவர், “நான்—நான்…சகோதரன் பிரான்ஹாமே, நான் உங்களைச் சந்திக்க வேண்டும்” என்றார். மேலும் அவர், “நீங்கள் வெளியே செல்ல ஆயத்தமாயிருப்பதைக் காண்கிறேன்” என்றார். நான், “ஆம், ஐயா, அப்படித்தான்” என்றேன். அவர், “நீங்கள் அவசரமாக போக வேண்டும் என்பதை நான் அறிகிறேன்” என்றார். நான், “ஐயா, நான் உடனே போக வேண்டும்” என்றேன். 180 மேலும் அவர், “பாருங்கள், நான் ஒரு சில நிமிடங்கள் உங்களிடம் பேச வேண்டும்” என்றார். 181 நான் அவரிடம் சொல்லப்போவதாயிருந்தேன்; அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், “அவரை அறைக்குள் கொண்டு செல், அவருக்கு நீ உதவி செய்ய முடியும்” என்றார். இப்பொழுது, அங்கே, அது ஒவ்வொரு காரியத்தையும் மாற்றுகிறது. துப்பாக்கி ஒருபுறம் வைக்கப்பட்டுவிட்டது, அது போன்று ஒவ்வொரு காரியமும், தேவனுடைய வேலையே முதலாவதாகும். புரிகிறதா? அவர் சொன்னார்… 182 நான், “என்னுடன் வாருங்கள்” என்றேன். அப்பொழுது நான், “சகோதரன் பாங்க்ஸிடம், சற்று கழித்து வருகிறேன்” என்றேன். அந்த மனிதன், “இது என் ஆத்துமாவைக் குறித்த விஷயம், சகோதரன் பிரான்ஹாமே” என்றார். அப்பொழுது நான், “சரி, உள்ளே வாருங்கள்” என்றேன். வீட்டினூடாகச் சென்றபோது, மேடா, “நீங்கள் இன்னும் புறப்படவில்லையா?” என்று கேட்டாள். 183 நான், “இல்லை, இல்லை, இல்லை, யாரோ ஒருவர் இங்கு என்னைக் காண வந்திருக்கிறார்” என்றேன். மேலும் நான், “பிள்ளைகளை மற்ற அறையில் வைத்துக்கொள்” என்றேன். அவரை நான் அந்த சிறிய படிக்கும் அறைக்குள் கூட்டிச் சென்று, அமர்த்தினேன். அமர்ந்த மாத்திரத்திலே… 184 அந்த மனிதன் நேற்றிரவு சபையில் இருந்தார். அல்லது அவர் வந்திருந்தாரா, பாங்க்ஸ்? நீங்கள்…ஆம், சரி, அவர் நேற்றிரவு வருவதாயிருந்தார். அவர் சரியாக…
74185 முதலாவது காரியம், பரிசுத்த ஆவியானவர் அவர் யாராயிருந்தார் என்றும், அவர் என்ன செய்திருந்தாரென்றும், அவருடைய வாழ்க்கையினூடாக என்ன நடந்ததென்றும், அதைக் குறித்து ஒவ்வொரு காரியத்தையும் அவரிடம் சொல்லத் தொடங்கினார், பாருங்கள், சரியாக, அவரிடம் ஒவ்வொரு காரியத்தையும் கூறினார். அதற்கு பாங்க்ஸ் ஒரு சாட்சியாயிருக்கிறார். அவர் தன்னுடைய வாயைத் திறந்து இரண்டு வார்த்தை கூட என்னிடத்தில் பேசவில்லை; அஙகே அது அவரிடம் வந்து, “நீ அலைந்து திரிகிறவனாய் இருந்து வருகிறாய், நீ உண்மையாகவே மாடிஸனில் வசிக்கிறாய். நீ இந்தியானாவிலுள்ள ஈவான்ஃஸ்வில் என்னுமிடத் திலிருந்து வந்திருக்கிறாய். அங்கு நீ ஒரு பிரத்தியேக கொள்கையை கடைபிடிக்கும் வேதப் பள்ளியில் சேர்ந்து, மிகவும் குழப்பமடைந்திருக்கிறாய். சில நிமிடங்களுக்கு முன்பு தான் நீ லூயிவில்லுக்கு வந்தாய். அங்கு ஒரு மனிதன் இருந்தார், ஒரு மனிதன் உன்னிடம் கூறினார் (அவருடன் நீ உட்கார்ந்து உணவு உண்டாய்), அவர்தான் நீ இங்கு வந்து என்னைக்கணும்படியாகவும், ‘அவர் உன்னை தொல்லையிலிருந்து சரியாக்கிவிடுவார்’ என்றும் உன்னிடம் கூறினார்” கூறினது. நான், “அது கர்த்தர் உரைக்கிறதாவது!” என்றேன். 186 உட்கார்ந்து கொண்டிருந்த மனிதன், தன்னுடைய கண்களை சிமிட்டிக் கொண்டே, என்னைப் பார்த்து, “ஆம், ஐயா!” என்றார். அப்பொழுது நான், “அது உங்களை திகைக்க வைத்தது, இல்லையா?” என்றேன். அதற்கு அவர், “அது அப்படித்தான் செய்தது” என்றார். நான், “நீங்கள் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஐயா, நான் விசுவாசிக்க விரும்புகிறேன்” என்றார். 187 மேலும் நான், “நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் உங்களிடம் கூற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டேன். 188 அதற்கு அவர், “ஆம், ஐயா” என்றார். நான் அவரிடம் அதைக் கூறினேன். அவர், “மேலும், சகோதரனே, அது உண்மை” என்றார். அப்பொழுது நான், “உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்” என்றேன். அவர், “சரி, நான் மாற்றிக் கொண்டுவிட்டேன்” என்றார். நான், “ இது தான் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தது” என்றேன். அதற்கு அவர், “அது உண்மை! அது உண்மை!” என்றார். 189 நான், “இப்பொழுது, உங்களுக்கு ஒரு தரிசனம் தேவையில்லை, நீங்கள் சரிசெய்துகொள்ள வேண்டும்” என்றேன். நான் அவரிடம் கூறின ஒரு காரியத்தை நான் கூறுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அது நீங்களாயிருந்தால், அதை நான் கூறுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அது பயங்கரமான ஒரு மோசமான காரியமாயிருந்தது, அதைச் செய்தது நீங்களாயிருந்தால், அதை நான் கூறுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். மேலும் கர்த்தர் ஜனங்களின் பேரில் என்ன காண்பிக்கிறார் என்பதை நான் சொல்வதில்லை. எனவே நான் அவரிடம், “சரி, நீங்கள் அதைச் செய்வீர்களா?” என்று கேட்டேன். அவர், “நான் செய்வேன்” என்றார். நான், “நீங்கள் போகலாம்” என்றேன்.
75190 நாங்கள் அந்த அறையில் பத்து நிமிடங்கள் கூட இருக்கவில்லை, இல்லையா, சகோதரன் பாங்க்ஸ்? ஏழு நிமிடங்களுக்கும் பத்து நிமிடங்களுக்கும் இடையே. வெளியே நடந்து வந்து, திரும்பவும் சாலை பக்கம் வந்து, சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரும் நானும், சகோதரன் பாங்க்ஸூம், என் சிறிய மகன், ஜோவும் என்று நான் நினைக்கிறேன், ஒன்றுசேர்ந்து பைக் என்ற இடத்திற்கு சென்றுகொண்டிருந்தோம். அவர் என்னிடம் திரும்பி, அவர், “திருவாளரே, நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றார். நான், “கேளுங்கள்” என்றேன். 191 அவர், “எனக்கு சிறிது குழப்பமாயுள்ளது” என்றார். அவர் தொடர்ந்து, “என்னைப் பொறுத்த எல்லா விஷயங்களையும் நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார். பார்த்தீர்களா? பாங்க்ஸ் அங்கே நின்றுகொண்டிருந்தார். 192 நான், “திருவாளரே, நீங்கள் எப்பொழுதாகிலும் என் தரிசனங்களைக் குறித்தும் என் ஊழியத்தைக் குறித்தும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டேன். 193 அதற்கு அவர், “ஒரு மணி நேரம் முன்பு வரைக்கும் உம்முடைய பெயரைக் கூட நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அங்கே லூயிவில்லில் உள்ள யாரோ ஒருவர், இங்கு போகும்படி கூறினார், நான் நடந்து பாலத்தைக் கடந்து வந்தேன்” என்றார். அது சரியா, சகோதரன் பாக்ஸ்? அவர், “நான் ஒருபோதும் உங்களுடைய பெயரைக் கூட அறிந்திருக்கவில்லை, நீங்கள் யாரென்றும் தெரியாது” என்றார். 194 நான், “என் ஊழியத்தில், அது தேவன் அனுப்பின ஒரு வரம்” என்றேன். 195 அவர், “அப்படியானால் அது—அவ்விதம் இருக்குமானால்” என்று கூறி, “இப்பொழுது நான் …” என்றேன். “நான் அப்படியே முழுவதும்…நான் இப்பொழுது சரியாக இருக்கிறேன்,” என்றார், மேலும் அவர், “எல்லாமே போய்விட்டது” என்றார். பார்த்தீர்களா? அவர், “அது என்னவென்றால், தேவன் உமது மூலம் என்னுடன் பேசினார்” என்றார். நான், “சரியே” என்றேன். 196 அவர், “இப்பொழுது, நான் அதை வேதத்தில் புரிந்துகொண்டேன்…ஒருமுறை நான் வேதத்தில் படித்திருக்கிறேன் மற்றும், இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார்,” அவர் “ஜனங்கள்” என்று கூறி, நீங்கள் பாருங்கள். “அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் பேசி, அவர்கள் சிந்தித்துக்கொண்டிருந்த காரியங்களைக் கூறினார்” என்றார். பாருங்கள், “அவர்களுடைய சிந்தனைகளை அறிந்துகொண்டார்” அதைத் தான் அவர் செய்து கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து, “அது அவருடைய பிதா அவர் மூலம் பேசுதல் என்பதாக அவர் கூறினார்” என்றார். நான், “அது உண்மை” என்றேன். 197 அவர், “இப்பொழுது, இப்பொழுது, அப்படியானால் பிதாவானவர் என்னிடம் உமது மூலமாக பேசி, என்னிடம் இந்தக் காரியங்களை சொல்லும்படிக்கும், நீர் என்னிடம் கூறினது உண்மை என்பதை நான் விசுவாசிக்கும்படிக்கும் உம்மை உபயோகப்படுத்தினார்” என்றார். நான், “அது உண்மைதானா?” என்று கேட்டேன். அவர், “ஆம்” என்று கூறினார். “அது தேவனாயிருக்க வேண்டும்” என்றார்.
76198 மேலும் நான், “சகோதரனே, இப்பொழுது இதைக் குறித்து உமக்கு அதிகம் தெரியும்” (நானும் பாங்க்ஸூம் இவ்வாறு கூறினோம்) “கூட்டங்களுக்கு பத்து ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் சிலரை விட உமக்குத் தெரியும், அவர்கள் இதைக் குறித்து இன்னும் அறியாமலிருக்கிறார்கள்” என்றேன். அப்படியே அந்த—அந்த மனிதன்! இப்பொழுது, அதுதான் அது. புரிகிறதா? ஆவியின் மூலம் அந்நிய பாஷை பேசுதலும் (கிரமமாக) தீர்க்கதரிசனம் உரைத்தலும் ஆராதனையின் போது உபயோகிக்கப்படலாமா? 199 இல்லை. அது இந்த விதமாக உபயோகிக்கப்பட்டு, பின்னர் ஆராதனையின் போது அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் இப்பொழுது, தற்பொழுது, அவர்கள் ஆராதனையில் பேசட்டும். இப்பொழுது, ஆனால் அது கட்டுக்கு மீறும் நிலை ஏற்பட்டால், அப்பொழுது நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். இப்பொழுது, சில சமயங்களில் அது தேவனாயிருக்கலாம். அந்த சிறு பிள்ளைகள், ஒரு சிறு பிள்ளை நடக்க முயற்சி செய்யும்போது, இப்பொழுது, அது நான்கைந்து முறை கீழே விழுந்தால்… இப்பொழுது, இந்த சபைக்கு வந்தது முதற்கொண்டு நான் இதைக் காண்கிறேன், மேலும்—மேலும், பாருங்கள், நான்—நான் அதை அப்படியே விட்டுவிடுகிறேன். புரிகிறதா? மேலும், ஆனால், நீங்கள் பாருங்கள், “சகோதரன் பிரான்ஹாமே, இதை ஏன் நீங்கள் திருத்தவில்லை?” என்று நீங்கள் கேட்கலாம். இல்லை, இல்லை. 200 பில்லி பால் முதலில் நடக்கத் தொடங்கினபோது, அவன் விழுந்து எழுந்திருப்பான், அவன் நடப்பதைக் காட்டிலும் விழுவது தான் அதிகமாக இருந்தது. ஆனால் அவனுக்கு எப்படி நடக்க வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் அவனுக்கு நடக்கும் வரம் இருந்தது என்று நான் எண்ணுகிறேன். புரிகிறதா? அவனை சிறிது காலம் நடக்க விடுகிறேன். அதன்பின்னர் அவனுடைய பெரிய கால்கள் தடுக்கி விழும்போது, இப்பொழுது அதைக் குறித்து அவனிடம் கூறுகிறேன். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா? பார்த்தீர்களா? அவன் ஏதோ ஒன்றை பார்த்துக்கொண்டு தடுக்கி விழுந்தால், நான், “மகனே, எழுந்து நில். நீ எங்கே இருக்கிறாய்?” என்பேன். புரிகிறதா? இப்பொழுது, அது—அது தான் வித்தியாசம். நீங்கள் பாருங்கள்.
77201 இப்பொழுது, அவர்களை விடுங்கள்—அவர்கள் தடுமாறட்டும், அவர்கள் சிறிது நேரம் தடுமாறட்டும். இப்பொழுது, நீங்கள் அவர்களை திருத்த வேண்டியிருக்கும்போது, அவர்கள் அதைக் குறித்து கோபப்படும்போது, அப்பொழுது அது தேவன் அல்ல என்பதை நீங்களே அறிந்துகொள்வீர்கள். ஏனெனில் தேவனுடைய ஆவி அடங்கியிருக்கிறது. இங்கு நீங்கள் சிறிது குறிப்பிட்டுள்ள வண்ணமாக, “தீர்க்கதரிசனத்தின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது”. புரிகிறதா? அது உண்மை. [சகோதரன் ஸ்ட்ரிக்கர், “சகோதரன் பிரான்ஹாமே, நான் சில திருத்தங்களைச் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்கிறார் .—ஆசி.] சரி, சகோதரனே. [ “அநேக சமயங்களில் நான் ஆராதனைகளில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, அந்நிய பாஷைகள் பேசப்படுவதையும் அதற்கு அர்த்தம் உரைத்தலையும் நான் கேட்டிருக்கிறேன், பெரும்பாலான சமயங்களில் அதைக் குறித்து எனக்கு மோசமான உணர்வு இருந்து வந்திருக்கிறது. நான் வீடு திரும்பும்போது, வழி நெடுக நான் மனஸ்தாபப்பட்டது போல் தோன்றினது. அது தேவனால் உண்டானதல்ல என்னும் காரணத்தினாலா, அல்லது அது ஒழுங்கின்படி இல்லை என்பதற்காகவா?” ] {: .bold} 202 சகோதரனே, இவ்விரண்டில், ஏதாவதொரு காரணம் இருக்கலாம். புரிகிறதா? நான் கூறவிருப்பதோ…இப்பொழுது, இது—இது வில்லியம் பிரான்ஹாம், பாருங்கள்; நான் வேதவசனங்களுக்கு செல்லும் வரைக்கும், ஏன், அது வரைக்கும் நான் கூறுவது நானே, நீங்கள் பாருங்கள். இப்பொழுது, இதை நான் கூற விரும்புகிறேன், சகோதரன் ஸ்டிரிக்கர், இது இவ்விரண்டில் ஏதாவதொரு காரணமாயிருக்கலாம். அது ஒழுங்கின்படி இல்லாததினால் இருந்திருக்கலாம்; அல்லது உங்களில் ஏதாவது தவறு இருந்திருக்கலாம்; அந்த நபரில் ஏதாவது தவறு இருக்கக் கூடும்; செய்தியில் தவறு இருக்கக் கூடும்; அல்லது ஏதாவதொன்று உங்களுக்கு மோசமான உணர்வு ஏற்பட காரணமாயிருந்திருக்கும்.
78203 இப்பொழுது, இப்பொழுது, இங்கே, நான் உங்களுக்கு இங்கு ஒரு சிறிது உதவி செய்யட்டும், சகோதரன் ஸ்ட்ரிக்கர். புரிகிறதா? எப்பொழுதுமே…உணர்வைக் கொண்டு எதையுமே ஒருபோதும் தீர்ப்பு செய்யாதீர்கள், நீங்கள் பாருங்கள். அதன் தன்மைகளைக் கொண்டு தீர்ப்பு செய்யுங்கள், நீங்கள் பாருங்கள்; அது என்ன கனி கொடுக்கிறதோ, பாருங்கள. ஏனெனில் சில நேரங்களில்… 204 நிச்சயமாக, நீங்கள் உணருகின்ற காரியங்கள், அதாவது பயமுறுத்தும் உணர்வை நாம் தெளிவாக உணருகிறோம். நானே அதைப் பெற்றுக்கொள்கிறேன், மேலும், நான் இப்போதே நகர ஆரம்பிக்கிறேன் என்பதையும்—மிகவும் எளிதானது என்பதையும், நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் ஒன்றையும் கூறவில்லை. இதை அப்படியே தனியே விட்டுவிடுவேன், ஏனெனில் அது என்னவென்று எனக்கு தெரியும் வரைக்கும், நீங்கள் பாருங்கள், அது என்னவாயிருக்கும் என்று எனக்குத் தெரியாது. 205 இப்பொழுது, ஏராளமான ஜனங்கள், “வ்யூ! சகோதரனே, எனக்கு பரிசுத்த ஆவி உண்டென்று எனக்குத் தெரியும்! அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம்!” என்று சொல்லிக்கொள்வது போன்றே. மேலும் அவர்கள் இன்னமும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளாமலிருக்கலாம். அவர்கள் அந்நிய பாஷைகள் பேசக் கூடும், மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் செய்து, கூச்சலிடுகின்றனர், ஆவியில் நடனமாடுகின்றனர், இருப்பினும் அவர்கள் இன்னமும் பரிசுத்த ஆவியைப் பெறாமலிருக்கலாம். ஏனெனில் மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பொழிகிறது. அது உணர்வுகளினால் அல்ல, அது அவர்களுடைய கனிகளினாலேயாம். 206 அங்கு ஒரு…அதைக் குறித்த என் தரிசனம் ஞாபகமுள்ளதா? எப்படி அந்த…எபிரேயர் 6, நீங்கள் பாருங்கள், “தன் மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, முளைப்பிக்கும் நிலமானது, முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும், சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.”
79207 என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், சிறிது காற்றை நான் அறைக்குள் விடுகிறேன், நீங்கள் எல்லோரும் உறங்கிக்கொண்டும் களைப்பாயும் இருக்கிறீர்கள் என்று நான் அறிவேன். எனவே இப்பொழுது, பொறுங்கள், இதை சிறிது வேகமாக முடிக்க வேண்டும், இல்லையென்றால் மற்ற கேள்விகளுக்கு நான் வரவே முடியாது. இதைப் பெற்றுள்ளோம்…நாம் கிட்டத்தட்ட அதைக் குறித்த எல்லா—இங்கே நிறைய வைத்திருக்கிறோம். ஆனால் அவர்கள்…பாருங்கள், அந்த… 208 இங்கு கோதுமை நிறைந்த ஒரு—ஒரு வயல் ஒன்றுள்ளது. அதில் முட்களோடுள்ள களைகளும், ஊமத்தை வகை களைகளும், அல்லது இன்னும்-மற்ற, களைகளும் உள்ளன. பாருங்கள், இப்பொழுது வறட்சி ஏற்பட்டுள்ளது. இப்பொழுது, கோதுமையைப் போலவே முட்களோடுள்ள களைகளும் மற்றும் ஊமத்தை களைகளுக்கும் தாகம் உண்டாகிறதல்லவா? எந்தவிதமான மழை…கோதுமையின் மேல் ஒரு விசேஷித்த மழையும், அதன்பின்னர் ஊமத்தை களையின் மேல் மற்றொரு விசேஷித்த மழையுமா பெய்கிறது? அது சரியா? இல்லை, ஒரே மழை தான் இவ்விரண்டின் மேலும் பெய்கிறது. அது சரியா? அது போன்று ஒரே ஆவிதான் மாய்மாலக்காரன் மேலும் கிறிஸ்தவன் மேலும் விழுகிறது, ஒரே காரியம். ஆனால் அவர்களுடைய “கனிகளினாலே”! சகோதரனே, அது ஆழமாக பதிந்துவிட்டதா?
80209 பரிசுத்த ஆவியின் அடையாளம் அதன் கனியே, ஆவியின் கனி. பாருங்கள், அது…பாருங்கள், இப்பொழுது, நீங்கள், “நான் ஒரு தண்டு, நான் ஒரு ஊமத்தை. கோதுமை தண்டைப்போலவே நானும் ஒரு தண்டு” எனலாம். ஆனால் எந்தவிதமான ஜீவன் உனக்குள் உள்ளது? அதற்குள் இருக்கும் ஜீவன் முட்களைப் பிறப்பித்து, எப்பொழுதும் சண்டையிட்டுக்கொண்டும், புண்படுத்திக்கொண்டும், “கூச்சலிட்டு,” அதன் பொருள் நீச்சத்தனமாயும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியமாயும் உள்ளது. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? கர்வம், பாருங்கள், அது ஆவியின் கனியல்ல. ஆவியின் கனியோ சாந்தம், பொறுமை, தயவு, பாருங்கள், இவையெல்லாம். புரிகிறதா? 210 அவர், “பாருங்கள், உங்களைப் போலவே என்னால் உரத்த சத்தமாய் கூச்சலிட முடியும். தேவனுக்கு ஸ்தோத்திரம், பரிசுத்த ஆவி என் மேல் விழுகிறது!” என்று கூற முடியும். அது முற்றிலும் உண்மையாயிருக்கலாம், ஆனால் அவர் வாழ்கின்ற வாழ்க்கை அவர் கூறுவதை ஆதரிக்கவில்லை. பார்த்தீர்களா? அவர் ஒரு களையாயிருந்தார், அவர் தொடக்கத்திலேயே களையாக இருந்தார். 211 இப்பொழுது, நாம் தெரிந்துகொள்ளப்படுதல் என்னும் பேரில், நீங்கள் பாருங்கள், ஒரு பெரிய கேள்வியை எடுத்துள்ளோம். எனவே அது…நீங்கள் அப்படி இருக்க வேண்டும். நீங்கள் அதை புரிந்துகொள்கிறீர்கள். 212 அவர்கள் தொடக்கத்திலேயே ஒரு ஊமத்தை களையாக இருந்தனர்; இவரோ தொடக்கத்தில் கோதுமையாக இருந்தார். எனவே வறட்சி வந்தது; பிறகு மழை நல்லோர் மேலும் தீயோர் மேலும் பொழிந்தது. சரி, இதைப் புரிந்துகொண்டீர்களா?
81[ஒரு சகோதரன், “ஒரு பிரசங்கியின் கனிகளைக் குறித்தென்ன; அது…வார்த்தையைப் பிரசங்கிக்கும் ஒருவரா?” என்று கேட்கிறார்.—ஆசி.] 213 அதாவது, பிரசங்கி, இன்னமும், அவர் அங்கு எழுந்து நின்று வார்த்தையை ஒரு பிரதான தூதனைப் போல் பிரசங்கித்து, பாருங்கள், வேதத்திலுள்ள இரகசியங்களை அறிந்து, ஒரு நல்ல மேய்ப்பனாக விளங்கி, ஜனங்களை சந்தித்து மற்ற காரியங்களைச் செய்திருந்தாலும், அவர் இழக்கப்பட்டவராயிருக்கக் கூடும். புரிகிறதா? சகோதரனே, அவருடைய கனி ஒவ்வொரு முறையும் அதைக் கூறுகிறது. புரிகிறதா? அவர், எவ்வளவு நல்லவராயிருந்தாலும், அல்லது அவர் என்னவாயிருந்தாலும், அவருடைய வாழ்க்கையில் அவர் பரிசுத்த ஆவியைக் பெற்றிருக்க வேண்டும். புரிகிறதா? 214 இப்பொழுது, இயேசு, “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: ‘கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் (பிரசங்கித்தோம்) அல்லவா? உமது நாமத்தினாலே அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?’ என்பார்கள்” என்று கூறவில்லையா? அவர் அந்நிய பாஷைகளில் பேசியிருந்தார், அவர் அற்புதங்களைச் செய்திருந்தார், பாஷைக்கு அர்த்தம் உரைத்தார், தேவனுடைய காரியங்களின் இரகசியத்தை அறிந்திருந்தார், அங்கே மற்ற எல்லா காரியங்களையும் செய்தார்; அவர், “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்றுபோங்கள்” என்றார். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? [சகோதரன் டெய்லர், “தவறான செய்தியைக் கொண்டு வரும் ஒரு மனிதனைக் குறித்தெப்படி? அவர்—அவர் சரியன்று நினைத்துக் கொள்கிறார், ஆனால் அவர் தவறானதைப் பிரசங்கிக்கிறார்” என்று கேட்கிறார்.—ஆசி.] 215 பாருங்கள், அந்த மனிதன் உத்தமமாயிருப்பாரானால், இங்கு உட்கார்ந்திருக்கும் இந்த சகோதரன் திரும்பிச் சென்று…இவைகளை மீண்டும் ஆராய்ந்து பார்க்க விரும்புகிறதுபோல. அந்த மனிதன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவராயிருந்து, அவர் எப்பொழுதாகிலும் சத்தியத்தின் முன்னிலையில் கொண்டு வரப்படுவாரானால், அவர்—அவர் அதை அடையாளம் கண்டுகொள்வார். பாருங்கள், “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது.” உங்களுக்கு புரிகி-…நான் கூறுவது புரிகிறதா, சகோதரன் டெய்லர்? அதைக் குறித்து தானே நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள்? பார்த்தீர்களா?
82216 இப்பொழுது, உதாரணமாக, சகோதரன் கிரேஸ்—கிரேஸ்—கிரேஸ், அவர் ஒரு பாப்டிஸ்ட் பிரசங்கி என்றும், அவருக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து ஒன்றுமே தெரியாது என்றும், இந்த மற்ற காரியங்களான, ஆவியின் வரங்களைக் குறித்து ஒன்றும் தெரியாதென்றும் வைத்துக் கொள்வோம், அவர் ஒரு நல்லவர், விசுவாசமுள்ள பாப்டிஸ்ட் பிரசங்கி. பார்த்தீர்களா? ஆனால் முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, இது அவருக்கு முன்னால் வருகிறது. தேவனுடைய பிள்ளை ஒவ்வொருவரும்…ஒவ்வொரு காலத்திலும், தேவன் அவரைப் பிடிக்கும் வரைக்கும் வலை போடப்படும். தேவனுடைய சித்தம் செய்து முடிக்கும் வரைக்கும், தேவனுடைய இராஜ்யம் வர முடியாது. அது உண்மை. அவர்களில் ஒருவரும் அழிந்து போக முடியாது. நீங்கள் பாருங்கள். இப்பொழுது, பாருங்கள், அதுதான் வழி. 217 பரலோக இராஜ்யம் கடலில் வலையைப் போட்டு, அதை வெளியே இழுக்கிற ஒரு மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் வலையை இழுக்கும்போது, அதில் எல்லாவிதமானவைகளும் இருக்கின்றன. அவன் மீனை மட்டும் வைத்துக் கொள்கிறான், ஆமைகளும், இதர ஆமை வகைகளும் அங்கு சென்றுவிடுகின்றன. அவன் மறுபடியும் வலையைக் கடலில் போடுகிறான், இன்னும் கொஞ்சம் கிடைக்கிறது, ஒருவேளை அவனுக்கு ஒரே மீன் மட்டும் கிடைத்திருக்கும். ஆனால் எல்லாம் பிடிக்கப்படும் வரைக்கும் அவன் வலையைப் போட்டுக் கொண்டேயிருந்தான். இப்பொழுது நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? 218 ஆனால் அந்த மீன் தொடக்கத்திலேயே ஒரு மீனாக இருந்தது. அது எஜமானின் உபயோகத்திற்காக போடப்பட்டது, அவ்வளவுதான், அவைகளை இன்னும் தெளிவான சுத்தமான குளத்தில், வேறொரு குளத்தில் போட்டார்கள். ஆனால் அவனோ எல்லா மீன்களையும் பிடித்து வெளியே கொண்டு வரும் வரைக்கும், இந்த தவளை குளத்தில் வலையை வீசிக் கொண்டேயிருக்கிறான். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? சகோதரன் டெய்லர், நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று நீங்கள் புரிந்துகொண்டீர்களா? அங்குள்ள உங்களுடையவர்கள் மூலமாகவே இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
83சரி, இப்பொழுது: 113. அவர் அதாவது…எப்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அவருக்கு எல்லா நேரங்களிலும் ஆவியின் மீது கட்டுப்பாடு உள்ளதா? 219 ஆம், ஐயா. ஆம், ஐயா. பரிசுத்த ஆவி கட்டுப்படுத்துகிறது. ஆம், ஐயா. அது உங்களைக் குறித்த கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது, நீங்களும் அதைக் குறித்த கட்டுப்பாட்டைக் உடையவராயிருக்கிறீர்கள், மேலும் நீங்கள் வேதத்திற்கு முரணாக நடந்து கொள்ளும்படி அது ஒருக்காலும் செய்யாது. அது…“ஆவி அயோக்கியமானதைச் செய்யாது.” அது உண்மை. சரி. 220 “உங்களை நேசிக்கும் ஒருவரிடமிருந்து…” ஆம், அது—அது இந்த இடத்தில் உள்ளது. சரி, நாம் வேறொரு கேள்விக்கு இங்கிருந்து சென்று, நாம் எங்கிருக்கிறோம் என்பதைக் காண்போம். 221 இப்பொழுது, அதற்கு ஒரு அடிப்படை இருந்ததென்று நான் நினைக்கிறேன். இப்பொழுது—இப்பொழுது, இந்த கேள்விகளை நான் இப்பொழுது படிக்கவிருக்கும்போது, வேறெதாகிலும் ஒரு கேள்வி… இதன் பேரில் வேறெதாகிலும் கேள்வி உண்டா? நாம் எல்லோரும் புரிந்துகொண்டுவிட்டோமா? இதை நாம் எவ்விதம் விசுவாசிக்கிறோம் என்று நம் எல்லோருக்கும் புரிந்துவிட்டதா?
84222 [ஒருசகோதரன், “எனக்கு ஒரு கேள்வி உண்டு” என்கிறார்.—ஆசி.] சரி கூறுங்கள். இங்கே இன்னும் இதன் பேரிலா? சரி. [“ஆம், அங்கே அந்த ஒன்றின் பேரில் தான். நான் சற்று தயக்கமடைந்தேன், ஆனால் …”] தயக்கம் வேண்டாம், இது—இது… [“நீங்கள் பிரசங்கிக்கும் மனிதனைப் பற்றி பேசிக்கொண்டிருந்தீர்கள், அவருடைய ஊழியத்தில் என்ன நடந்தாலும், அவர் கிறிஸ்து கொண்டு வந்த செய்தியைப் பிரசங்கிக்காமல் இருந்து. அவர் சத்தியத்துடன் தொடர்புகொள்ளும் தருணம் உண்டாகி, அவர் அதை புறக்கணிப்பாரானால், அப்பொழுது என்ன நடக்கும்?”] அவர் இழக்கப்பட்டிருக்கிறார். ஒரு நிமிடம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்… [“முன்குறித்தல் அல்லது உலகத்தோற்றத்துக்கு முன்னர் நியமிக்கப்படுவர் என்ற குறிப்பில் நான் இருந்தேன்.”] அது உண்மை. அது உண்மை. புரிகிறதா? [“அப்படியானால், அவ்விதமாக இருக்க, அவர் அவ்விதாக இருக்க முன்குறிக்கப்படவில்லை.”] தொடக்கத்திலேயே அந்த விதமாக இருக்கவில்லை, பாருங்கள். “அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை, அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள்.”
85223 உதாரணமாக, இதைப் போல், எபிரேயர் 6 ம் அதிகாரத்திலும் அதே காரியம் தான். புரிகிறதா? ஜனங்கள் அந்த வேதவசனத்துக்கு தவறாக அர்த்தம் உரைத்து, அது “கூடாத காரியம்” என்று நினைக்கின்றனர். அவர், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப்போனவர்களை புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்று சொல்லியிருக்கிறார். பாருங்கள், அவர்கள் அதை புரிந்து கொள்ளவேயில்லை. அவர், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்; அவர்கள் தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தங்களைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி கிருபையின் ஆவியை நிந்திக்கின்றனர்” என்று கூறியுள்ளார். 224 பாருங்கள், என்னைப் பொறுத்தவரையில், அது ஒரு வெளிப்பாடு. நிச்சயமாக. அது அப். 2:38, மற்றும் அப்…மற்றும் மத் 28:19-ஐ போன்றது. அதை நீங்கள் கிரகித்துக்கொள்ள வேண்டும், நீங்கள் பாருங்கள். 225 இப்பொழுது பாருங்கள், அது இங்குள்ளது, அதே காரியம்தான். பாருங்கள், இப்பொழுது, அவன் எபிரேயரிடம் பேசிக்கொண்டிருக்கிறான். பார்த்தீர்களா? இப்பொழுது அந்த அதிகாரத்தை நீங்கள் தொடர்ந்து படிப்பீர்களானால், “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது—விழுகிறது பயங்கரமாயிருக்குமே” என்று உள்ளதை முன்னதாகக் கண்டு கூறுங்கள். இப்பொழுது, இங்கு ஒரு மனிதன் அந்த எல்லைக்கோடு விசுவாசியைப் போலிருக்கிறான். இங்கு, இங்கு ஒரு…இங்கு, அதே காரியம்தான் இங்குள்ளது, அதுவே பிழையற்ற உதாரணமாக என் மனதில் உள்ளதை நான் காண்கிறேன்.
86226 தேவன் இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே அழைத்தார். அந்த ஜனங்கள் அனைவரும் வெளியே வந்தனர், அவர்கள் ஒவ்வொருவரும் விடுவிக்கப்பட்டு, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தனர். அது சரியா? சிவந்த சமுத்திரம்…அவர்கள் மோசேயின் செய்திக்கு செவிகொடுத்து, ஆயத்தமாகி, அணிவகுத்து நடக்கத் தொடங்கினர், (நீதிமானாக்கப்படுதல்) அவர்கள் திசைத் திரும்பி, இங்கிருந்து தொடங்கினர். 227 அவர்கள் சிவந்த சமுத்திரத்தண்டை வந்து, (இரத்தம்), அவர்கள் சிவந்த சமுத்திரத்தினூடாக கடந்து சென்றனர், இவர்களுக்குப் பின்னால் எல்லா ஆளோட்டிகளும் மரித்துக் கிடந்தனர். அப்பொழுது அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைய மூன்று நாட்கள் பிரயாணம் மாத்திரமே இருந்தது. புரிகிறதா? அது நாற்பது மைல்கள் தூரம்தான் இருந்தது, அவ்வளவுதான் அவர்களுக்கு இருந்தது, பாருங்கள். ஆகையால் அவர்கள் அங்கிருந்தனர், இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் அதை நன்றாக அடைந்திருப்பார்கள். 228 இன்னும் சில நாட்களில் பீனிக்ஸில் நடைபெற விருக்கும் வர்த்தகரின் கூட்டத்தில் அதைக் குறித்து தான் இந்த மலையின் மேல் தங்கியிருத்தல் என்னும் பொருளின் பேரில் பேசலாம் என்று எத்தனித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் இருக்கும்படி அவர் செய்துவிட்டார், ஏனெனில் அவர்கள்…உ-ஊ! புரிகிறதா?
87229 எனவே அவர்கள் இதனன்டை வந்து, அவர்கள் திரும்பிப் பார்க்கின்றனர், (பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய்) “ஓ, அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம்! தேவனுக்கு மகிமை. அல்லேலூயா! என்னை ஒரு காலத்தில் தொல்லைப்படுத்தின அந்த பழைய காரியங்களெல்லாம் மரித்துப் போய் அங்கு கிடக்கின்றன. நான் முன்பு புகைத்திருந்த சிகரெட்டுகள் போய்விட்டன. நான் முன்பு குடித்திருந்த அந்த மதுபானம் இவையனைத்தும் இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகிய சிவந்த சமுத்திரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. ஒ, தேவனுக்கு மகிமை! அல்லேலூயா!” 230 அவர்கள் ஒவ்வொருவரும் இங்கே வந்து, அவர்கள் கானானை இப்பொழுது எதிர்கொள்ள, யோர்தானைக் கடந்தனர். பாருங்கள், மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு பிரதிநிதியைத் தெரிந்துகொண்டான். அது சரியா? அவன் அவர்களை அங்கு அனுப்பினான். பாருங்கள், அவர்களில் சிலர், “ஆ, ஆ, ஆ, நம்மால் அதைச் செய்ய முடியாது. முடியாது, அது—அது…ஏன், அவர்களுக்கு பக்கத்தில் நாம் வெட்டுக்கிளிகளைப் போல் இருக்கிறோமே!” என்றனர். பார்த்தீர்களா?
88231 “இப்பொழுது, நான் பரிசுத்த ஆவியைக் குறித்தும் அந்த காரியங்கள் அனைத்தைக் குறித்தும் பிரசங்கித்தால், நான் எப்படிப்பட்ட ஒரு சபைக்கு அதை பிரசங்கிப்பேன்? ஏன், எனக்கு காலி இருக்கைகளே இருக்கும். என் மெதோடிஸ்டு ஜனங்கள் வெளியே நடந்து சென்று விடுவார்கள், என் பாப்டிஸ்டு ஜனங்களும், என் பிரஸ்பிடேரியன்களும் கூட எனலாம்.” அவர்கள் வெளியே நடந்து செல்லட்டும். அவர்கள் துவக்கத்திலேயே வெள்ளாடுகளாயிருந்தனரே! உங்களுக்கு வேண்டியது செம்மறியாடுகளே, பாருங்கள். புரிகிறதா? நீங்கள் வெள்ளாடுகளுக்கு மேய்ப்பனாக இல்லை. செம்மறியாடுகளுக்கே மேய்ப்பனாயிருக்கிறீர்கள்! மேய்ப்பனாயிருப்பதற்கு செம்மறியாடுகள் இருக்கும்போது …?… வெள்ளாடுகளுக்கு மேய்ப்பனாயிருப்பதால் என்ன பயன்? புரிகிறதா? இங்கே—இங்கே நீங்கள் இங்கே இருக்கிறீர்கள், பாருங்கள். நான் சத்தியத்தை சபையில் நான்கு கம்பங்களுக்கு பிரசங்கிப்பதையே விரும்புவேன் என்று எப்பொழுதும் கூறியுள்ளேன். ஆம், ஐயா, இங்கே வாருங்கள். 232 ஆனால் இப்பொழுது பாருங்கள், அவன் என்ன செய்தான்? அவர்கள் திரும்பி வருகின்றனர், யோசுவாவும் காலேபும், இரண்டு சதவிகிதம், அல்லது அந்த விதமான சதவிகிதம்… அவர்களில் இரண்டு…அவர்கள் பன்னிரண்டில் இரண்டு பேர், பன்னிரண்டில் இரண்டு பேர். பாருங்கள், அவர்கள் பன்னிரண்டு பேர் இருந்தனர், அது பன்னிரண்டில் இருவராய் இருந்தது, அந்த பன்னிரண்டு பேர்களில் இரண்டு பேர் விசுவாசித்தனர். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குச் சென்று, “இது தங்குவதற்கு ஒரு நல்ல இடம்” என்றனர். பண்டைய யோசுவாவும் காலேபும், அவர்கள் வார்த்தையில் நம்பிக்கைகொண்டிருந்தனர்; தேவன் அதை அவர்களுக்கு கொடுத்து, “அது உங்களுடையது” என்றார். அவர்கள் அங்கு சென்று, ஒரு பெரிய திராட்சைக் குலையை வெட்டி, இப்படி அதை சுமந்து கொண்டு வந்தனர். “வாருங்கள், தோழரே! இது ஒரு அற்புதமான இடம்! எடுத்து ஒரு கடி கடியுங்கள்,” பாருங்கள், இவ்வளவு பெரிய திராட்சை பழங்கள்.
89233 மேலும், ஓ, மனிதனே, அவர்கள் இவர்களைப் பார்த்து, “ஹா, நம்மால் அதை செய்ய முடியாது” என்றனர். அவர்கள் திரும்பிச் சென்றவுடன், அவர்கள், “இல்லை, சகோதரனே, இந்த மோசே நம்மை இங்கே வனந்திரத்துக்கு அழைத்து வந்துவிட்டான்” என்றனர், இந்த பரிசுத்த ஆவியானவர், அவன் பிரதிநிதித்துவப்படுத்துவதை, நீங்கள் பாருங்கள், “அவன் நம்மை இங்கே வனாந்திரத்துக்கு அழைத்து வந்துவிட்டான். இதோ நாம் இங்கிருக்கிறோம், நமது ஊழியம் பாழாகிவிட்டது, அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நம்மால் செய்ய முடியாது” என்றனர். 234 “திரும்பிப் போய்,” பாருங்கள், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டு, விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்.” பாருங்கள், அவர்கள் இந்த இரண்டாம் பலி பீடத்துக்கு வந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைக் காண்கின்றனர். “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டு…பரம ஈவை ருசிபார்த்தவர்கள்.” பாருங்கள், அதை “ருசி பார்த்தவர்கள்.” அதை அவர்கள் அங்கிருந்து கொண்டு வந்தனர். “அது சரியென்று நாம் காண்கிறோம். நாம் அதை உண்மையாகவே காண்கிறோம்.” “பரம ஈவை ருசி பார்த்து, இந்த காரியத்தில் பங்கு கொண்டவர்கள், நீங்கள் பாருங்கள், இந்த பரிசுத்த ஆவியில், இதில் பங்குகொண்டவர்கள்.” 235 “அது நல்லது, அந்த—அந்த மனிதனைப் பாருங்கள். ஏன், அவன் குருடனாயிருந்தான் என்று எனக்குத் தெரியும், இப்பொழுது அவனால் காண முடிகிறது. அந்த வயோதிபனைப் பாருங்கள்…அந்த நபருக்கு என்ன நேரிட்டது? படிப்பில்லாத அந்த நபர் அங்கே வெளியே உள்ளான் என்று யார் நினைத்தாலும்… அவன் தீவிர சாட்சியைக் கொண்டவனாய் உலகத்தில் நின்றுகொண்டிருக்கிறான்.” உங்களுக்குப் புரிகிறதா? புரிகிறதா? பார்த்தீர்களா?
90236 அதன் பிறகு மறுதலிக்கிறவர்கள், பாருங்கள், அவர்களை மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது… அவர்களுக்கு முதலாவது, போடுதலாகிய…நாம்…மீண்டும் மனந்திரும்புதலைக் குறித்து பிரசங்கிக்க வேண்டும். செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல் போன்றவைகளுக்கு மறுபடியும் அஸ்திபாரம் போடுதல், போன்றவற்றைக் குறித்து, உங்களுக்குத் தெரியும். தேவனுக்கு சித்தமானால், அதை நாம் செய்வோம், நீங்கள் பாருங்கள். பாருங்கள், நாம் அதைச் செய்வோம். நாம் திரும்பிச் சென்று அந்த அஸ்திபாரத்தை மறுபடியும் போடுவோம், ஆனால் இவர்களோ திரும்பவும் மனஸ்தாபப்படுகின்றனர், எப்போதும் அங்கே இருப்பதற்காக மனஸ்தாபப்படுகின்றனர். “அங்கு நான் சென்றிருந்ததற்காக வருந்துகிறேன்,” இவன் தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை “அசுத்தமென்றெண்ணி,” கிருபையின் ஆவியை நிந்திக்கின்றான். சகோதரனே, அவன் போய்விட்டான்! அவ்வளவுதான். அவன் முடிந்துவிட்டான். புரிகிறதா? 237 பாருங்கள், இப்பொழுது, பாருங்கள், தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு பிள்ளை அவ்விதம் செய்வது கூடாத காரியம். அவன் அதை செய்யவேமாட்டான். “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது.” அது கானானுக்குள் அல்லது வேறெங்காகிலும் செல்வதற்கு அழைக்கப்பட்டால், அவர்கள் போவார்கள். பார்த்தீர்களா? “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது.” [ஒரு சகோதரன், “ அவர்கள் அப். 2:38 லும், கூட, விசுவாசம் கொண்டிருக்க வேண்டும், அவர்கள் கொண்டிருக்க வேண்டுமல்லவா?” என்று கேட்கிறார் —ஆசி.] 238 அது ஒவ்வொரு வேதவாக்கியத்தையும் ஏற்றுக்கொள்ளும், அது எல்லாவற்றையும் உள்ளே எடுத்துக்கொள்ளும். அது முற்றிலும் சரி, சகோதரனே.
91114. இரண்டு, இரண்டுவிதமான வேதாகம பாஷைகள் உண்டா? தனி ஜெபத்தில் பேசப்படும் பாஷைக்கும், சபையில் அர்த்தம் உரைப்பதற்கு பேசப்படும் பாஷைக்கும் வித்தியாசம் உண்டா? பெந்தெகொஸ்தே நாளில் பேசப்பட்ட பாஷை வெவ்வேறு ஜாதியினரால் புரிந்து கொள்ளப்பட்டது; ஆனால் முதலாம் கொரிந்தியர் 14:2ல், அந்நிய பாஷை தேவனிடம் பேசப்படுகிறது, மனிதரிடம் அல்ல. முதலாம் கொரிந்தியர் 13:1 அத்தகைய மனிதனைக் குறிப்பிடுகிறது… (கொ-ரி, அது கொரிந்தியர் 13 என்று நான் யூகிக்கிறேன், என்ன…)… அத்தகைய மனிதனுக்கும் மற்ற தூதர்களுக்கும். 239 ஒ. ஆமாம். புரிகிறதா? பாருங்கள், அது…இப்பொழுது, சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும், நீங்களே—நீங்களே உங்கள் கேள்விக்கு இங்கு பதில் சொல்லிவிட்டீர்கள். பார்த்தீர்களா? பாருங்கள்: இரண்டு வெவ்வேறு பாஷைகள் உண்டா? (அநேக பாஷைகள் உண்டு. புரிகிறதா?) வேதாகமத்தில் இரண்டு விதமான பாஷைகள், இரண்டு விதமான பாஷைகள் உண்டா? 240 பெந்தெகொஸ்தே நாளில் வானத்தின் கீழிருந்த வெவ்வேறு பாஷைக்காரர் அங்கு குழுமியிருந்தனர். பார்த்தீர்களா? சரி. தனி ஜெபத்தில் பேசப்படும் பாஷைக்கும், சபையில் அர்த்தம் உரைப்பதற்கு பேசப்படும் பாஷைக்குமிடையே வித்தியாசம் உண்டா? ஆம்.
92241 நீங்கள் இங்கே கேட்டுக்கொண்டிருந்ததை கொரிந்தியர் நிருபத்திலும் பவுல் இங்கே கூறியுள்ளான், அவன், “தூதர் பாஷை உண்டு, மனுஷர் பாஷை உண்டு” என்றான். இப்பொழுது, தூதர் பாஷை என்பது ஒரு மனிதன் அவரிடம்—அவரிடம் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, தனிமையில் தேவனிடத்தில் பேசுவதாகும். ஆனால் அவன் சபையில் ஒரு—ஒரு பாஷையைப் பேசும்போது, அது சபையில், சபையின் பக்திவிருத்திக்காக அர்த்தம் உரைக்கப்பட வேண்டும். “அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; ஆனால் பேசுகிறவன்…தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.” எனவே அவன், “நான் சபையிலே அந்நிய பாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்” என்றான். அப்பொழுது அது—அது தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டு பக்திவிருத்தி உண்டாக்குகிறது. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா?
93242 இப்பொழுது, அந்த…இப்பொழுது, இரண்டு வெவ்வேறு பாஷைகள் உண்டு, அது மனுஷர் பாஷை, தூதர் பாஷை. புரிகிறதா? பவுல், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும்” என்றான், பாருங்கள், மனுஷர் மற்றும் தூதர் இவ்விரண்டுமே, அந்த இரண்டு பாஷைகளுமே, முடியாத ஒன்று… 243 இப்பொழுது, அங்கு தான் பெந்தெகொஸ்தே ஜனங்கள், அந்நிய பாஷை பேசுதலே பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளம் என்று, என்னிடம் கூறுகிறார்கள் அதில் ஒருவர், “இப்பொழுது, சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் குழப்பமடைந்திருக்கிறீர்கள்” என்றார். 244 நான், “பாருங்கள், நீங்கள் அப் 2:4-ன்படி, அதை பெறுவீர்களானால், அப்பொழுது அவரவர்களுடைய ஜென்ம பாஷையில் நீங்கள் பேசுகிறதை அவர்கள் கேட்க வேண்டும்” என்றேன். “ஒ!” அவர் கூறினார். மேலும் “இல்லை! இல்லை!” அவர் கூறினார். நான், “நிச்சயமாக. ஆம், ஐயா.” என்றேன். 245 அவர், “இப்பொழுது, சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் மிகவும் குழப்பமடைந்திருக்கிறீர்கள்” என்றார். “நீங்கள் எதைக் குறித்து பேசுகிறீர்கள்…” என்றார். “‘தூதர்’ பாஷை என்று ஒன்றுண்டு. அது பரிசுத்த ஆவி தூதன் இறங்கி வந்து உங்களினூடாகப் பேசுவது” என்றார். 246 இப்பொழுது, அது நன்றாக தொனிக்கிறது, பாருங்கள், அதில் நிறைய சத்தியம் உள்ளது போல் அது தொனிக்கிறது, ஆனால் அது முற்றிலும் சத்தியமல்ல. சாத்தான் ஏவாளிடம், “நீங்கள் நிச்சயம் சாவதில்லை” என்று கூறினபோது, அது ஒரு…அவன் அவளிடம் நிறைய சத்தியத்தை கூறினான், ஆனால் அது சத்தியமல்ல. புரிகிறதா? 247 இப்பொழுது, ‘“மனுஷர் மற்றும் தூதர்,’ மற்றும் அவன் பேசிக்கொண்டிருந்த தூதன்…” என்றான்.
94248 இப்பொழுது, அது எப்படி வேதவாக்கியங்களுடன் ஒன்றாக சேர்ந்து இசைந்துபோவதில்லை என்று நாம் பார்ப்போம். புரிகிறதா? இப்பொழுது, அது “ஒத்துப்போகாது” என்னும் அர்த்தத்தில் தான் கூறுகிறேன். நான் “வேதவாக்கியங்களுடன் சேர்ந்து இசைந்துபோவதில்லை” என்று கூறினதால் என்னை மன்னிக்கவும். நான் வேதவாக்கியங்களுடன் “ஒத்துப்போதல்” என்னும் அர்த்தத்தில் தான் இதைக் கூறுகிறேன் அல்லது “பின்பற்றுதல், வேதவாக்கியங்களோடு ஒருங்கிணைதல்” என்பது மிகச் சிறந்த வார்த்தையாகும். 249 “இப்பொழுது, தூதர் பாஷைகளைப் பேசுகிற மனிதன்,” அவன், “அதுதான் பரிசுத்த ஆவியின் பாஷை,” என்று கூறுகிறான். அவன், “இப்பொழுது, நீங்கள், நாம், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போது” என்றான். நான், “அதை…எப்பொழுது, எங்கே பெற்றுக் கொண்டீர்?” என்று கேட்டேன். 250 பாருங்கள், அவர் பெற்றுக்கொண்ட இடத்தையும், எந்த மணி நேரம், எந்த நிமிடம் என்பதையும் எனக்குத் தெரிவித்தார். அவர் என்ன செய்தார் என்பதை நான் சந்தேகிக்கவில்லை. புரிகிறதா? எனக்கு எந்த…நான் அவருக்கு நியாயாதிபதி அல்ல. புரிகிறதா? அவர், “அங்கு தான் நான் அதை பேசினேன்” என்றார். அவர் எந்த இடத்தில் பேசினார் என்பதை சரியாக அறிந்திருந்தார். மேலும், “எனக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்தது” என்றார். 251 நான், “அதை நான் விசுவாசிக்கிறேன். புரிகிறதா? ஆனால் நீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதன் அடையாளம் இன்னமும் அதுவல்ல” என்றேன். “ஒ, ஆமாம்!” அவரோ, “அது, அதுதான் அது!” என்றார். நான், “இல்லை” என்றேன். அவர், “இப்பொழுது, பாருங்கள், சகோதரனே, நான் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்” என்றார். 252 நான், “உங்களுடைய கூட்டத்தில் இருந்த ஜனங்கள், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதாக கூறும் அந்த இந்தியானாபோலீஸ் சபையில் இருந்தவர்கள், நீங்கள் உயிர்த்தெழுதலைக் குறித்தும் தேவனுடைய வல்லமையைக் குறித்தும் இன்னும் மற்றவைகளைக் குறித்தும் பேசினதை அந்த ஜனங்கள் ஆங்கில பாஷையில் கேட்டனரா?” என்றேன். அதற்கு அவர், “ஏன், இல்லையே! நான் அந்நிய பாஷையில் பேசினேன்” என்றார். 253 நான், “அப்படியானால் நீங்கள் அப் 2:4-ன்படி அதை பெற்றுக்கொள்ளவேயில்லை, ஏனெனில் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும்…ஒரு வார்த்தையும் கூட அறியப்படாமல் இருக்கவில்லை. ‘நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே” என்றேன்.
95254 “ஓ,” அவர், “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் எங்கு குழப்பமடைந்திருக்கிறீர்கள் என்பதை இப்பொழுது காண்கிறேன்” என்று கூறினார். அவர், “நீங்கள் பாருங்கள்,” என்று கூறி, அவர், “தூதர் பாஷை என்று ஒன்றுண்டு, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போது,” என்று கூறி, “அப்பொழுது நீங்கள் அந்த பாஷையில் பேசுகிறீர்கள், அதற்கு யாரும் அர்த்தம் உரைக்கத் தேவையில்லை, அது—அது பரிசுத்த ஆவியானவர் பேசுவதாகும். புரிகிறதா? ஆனால் அதன் பின்னர் உங்களுக்கு அந்நிய பாஷை பேசும் வரம் ஒன்றுண்டு, அதற்கு அர்த்தம் உரைக்கப்பட வேண்டும்” என்றார். 255 நான், “அப்படியானால் நீங்கள் தலைகீழாக இதைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் அதை தலை கீழாக பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று, அந்நிய பாஷைகளில் பேசுவதற்கு முன்பு, எல்லோரும் அறிந்துகொள்ளக்கூடிய பாஷையில் அவர்கள் பேசினார்கள்” என்றேன். புரிகிறதா? எனவே உண்மையாகவே அது…
96256 இரண்டு விதமான பாஷைகள் உண்டு. தூதர்களின் பாஷை, அது மனிதன் தனி ஜெபத்தில் எங்கோ ஓரிடத்தில் தேவனிடத்தில் பேசுவது, தூதர் பாஷையில் தேவனிடத்தில் பேசுவதாகும். இப்பொழுது நடந்த ஒரு சம்பவத்தை நான் உங்களிடம் கூற முடியும், ஆனால் எனக்கு நேரமில்லை. உங்களுக்கு ஞாபகமுள்ளதா, வேத பண்டிதர் அலெக்சாண்டரின் இடமாகிய சீயோன் என்னுமிடத்தில் அந்த ஸ்திரீ அங்கே அரங்கத்துக்கு வந்திருந்தது. அங்கு நான் சென்றிருந்தது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அந்த கூட்டத்துக்கு என்னைக் கொண்டு செல்ல பில்லி வந்திருந்தான், நான், “பில்லி, திரும்பிப் போய்விடு” என்றேன். மேலும் நான்… அவன், “நீங்கள் எதைக் குறித்து அழுகிறீர்கள்? யாராகிலும் இங்கு வந்திருந்தார்களா?” என்றான். 257 அதற்கு நான், “இல்லை, ஐயா. நீ திரும்பிப் போய் சகோதரன் பாக்ஸ்டரிடம் இன்றிரவு பிரசங்கிக்கும்படி கூறிவிடு” என்றேன். 258 மேலும் நான் தரையில் முழங்கால்படியிட்டு, “கர்த்தாவே, என்னோடுள்ள காரியம் என்ன?” என்று நான் கேட்டேன். 259 அப்பொழுது திடீரென்று யாரோ ஒருவர் கதவண்டையில் வேறொரு பாஷையில் பேசுவதை நான் கேட்டேன். அப்பொழுது நான் நினைத்தேன்… அது ஜெர்மன் பாஷையாயிருந்தது. மேலும் நான், “சரி, அந்த நபர் அவரிடத்திற்கு வந்து ஒரு…” என்று நினைத்தேன். நான் ஜெபம் செய்வதை நிறுத்திவிட்டு, உங்களுக்குத் தெரியுமா, அங்கு இந்த விதமாக நின்றுகொண்டு அவர் பேசுவதை உற்றுக் கேட்டேன். மேலும் நான், “சரி, அந்த நபர் எப்படி அதை புரிந்துகொள்வார்?” என்று நினைத்தேன். ஏனெனில் அந்த விடுதியை நடத்தி வந்த மனிதனை எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியுமா, அது நகரத்தை விட்டு சுமார் ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. நான் அங்கிருந்து (சுற்றிலும் அநேக ஜனங்கள் இருந்தபடியால்), அந்த ஒரு சிறு பட்டிணத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியதாயிருந்தது. நான், “சரி, இது விசித்திரமாயுள்ளதே. ஹூ” என்றேன். மேலும் நான், “அங்கே…நல்லது, நீ…என்ன…அந்த நபர் மூச்சுவிடாமல் பேசுகிறதை கேட்டாயா” என்று கேட்டேன். பாருங்கள், நான் அதை சிந்தித்துக் கொண்டிருந்தேன், அவர் அப்படி வேகமாக பேசிக் கொண்டிருந்தாரே! பாருங்கள், நான், “சரி, அதாவது, ஏன், அது நானாயிருந்தது!” என்பதை அறிந்துகொண்டேன். எனவே நான் உண்மையாகவே அமைதியாக இருந்தேன், பாருங்கள், எதையும் கூறவில்லை…அப்படியே உண்மையாகவே இன்னமும் அமைதியாயிருந்தேன். சிறிது கழித்து அவர் பேசி முடித்தார், மேலும், அவர் முடித்தபோது, நான் ஒரு சேனையின் வழியாக ஓடி மதிலைத் தாண்ட முடியும் என்பது போன்ற உணர்ந்தேன்.
97260 நான் வெளியே சென்றேன், அப்பொழுது பில்லி வாசலைவிட்டு வெளியே போய்க் கொண்டிருந்தான், அப்பொழுது நான், “ஒரு நிமிடம் நில்!” என்று அவனை நோக்கி கூச்சலிட்டேன். 261 அவன் திரும்பி வந்தான், அவன் ஒரு குளிர்பானத்தை குடித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன், “அப்பா, என்ன விஷயம்?” என்றான். 262 நான், “ஒரு நிமிடம் நில், ஒரு நிமிடம், உன்னுடன் நான் வருகிறேன்” என்றேன். 263 நான் என் முகத்தை வேகமாகக் கழுவினேன். அவன், “என்ன விஷயம்?” என்று கேட்டான். கூட்டத்துக்குச் செல்லும் விஷயத்தில் என்னுடன் பேசி எந்த பயனும் இல்லை என்று அவனுக்குத் தெரியும். அவன், “என்ன விஷயம்?” என்றான். 264 நான், “ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை. கூட்டத்துக்குப் போகலாம்” என்றேன். 265 நாங்கள் கூட்டத்துக்குச் சென்றோம், அங்கு சகோதரன் பாக்ஸ்டர் உட்கார்ந்துகொண்டு, “ என் ஆத்துமாவுக்கும் இரட்சகருக்கும் இடையே ஒன்றுமில்லை ” என்னும் பாடலை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் உள்ளே வந்தார், அவர், “வ்யூ! நீங்கள் வரமாட்டீர்கள் என்றே நினைத்தேன்!” என்றார். நான், “சூ” என்றேன். மேலே சென்று பிரசங்கிக்கத் தொடங்கினேன்.
98266 நான் பிரசங்கித்தபோது, கிட்டத்தட்ட பிரசங்கித்து முடிக்கும் தருணத்தில், அந்த பெரிய அரங்கத்தின் பின்பக்கத்தில் அங்கே, யாரோ பேசிக் கொண்டிருப்பது போன்று சத்தம் கேட்டது. அவர்கள் ஒலிபெருக்கித் தொடர்பை அங்கே பின்னால் வரைக்கும் கொண்டு சென்றனர், அங்கு ஒரு ஸ்திரீ இடை நடைபிரகாரத்தில் மேலும் கீழும் நடந்து, தன்னால் முடிந்த வரைக்கும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். 267 பார்க்கப் போனால், அவளுக்கு காசநோய் இருந்தது, அவள் டூவின் சிட்டீஸ், செயின்ட் பால் நகரத்தை விட்டுப் புறப்பட்டு வந்திருந்தாள், நோயாளி ஊர்தி அவளைக் கொண்டு வர மறுத்து விட்டது, ஏனெனில் அவளுடைய நுரையீரல்கள் வெடித்துவிடும் என்று அவர்கள் பயந்தனர். மருத்துவர், “என்னவோ, அவளுடைய நுரையீரல்கள் தேன் கூடு போல் ஆகிவிட்டது,” என்று கூறியிருப்பதோடு, “அது உடைந்தால் அவள் இறந்துபோவாள். அவ்வளவுதான்” என்றும் கூறிவிட்டார். சில பரிசுத்தவான்கள் பண்டைய ’38 மாதிரி செவர்லே காரைக் கொண்டு வந்து, பின்னால் உள்ள இருக்கையை நீக்கிவிட்டு, அங்கு படுக்கை போல் ஒன்றை உண்டாக்கி, அவளை அதில் படுக்க வைத்து, காரை சாலையில் ஓட்டிக்கொண்டு வந்தார்கள். மேலும் மேடு போன்ற ஒரு இடத்தின் மேல் கார் ஏறி, குலுக்கல் ஏற்பட்டபோது, அவளுக்கு இரத்தக்கசிவு ஏற்பட ஆரம்பித்தது, அவள் இரத்தத்தை வெளியே கக்கத் தொடங்கினாள், மேலும் அவள்…அந்த இரத்தம் அவளுடைய மூக்கின் வழியாக அந்த விதமாக வெளியேறிக்கொண்டிருந்து. அவள் பலவீனமடைந்து பலவீனமடைந்துகொண்டே வந்தாள், முடிவில்…அவள் காரில் இறக்க விருப்பமில்லை, அவள் காரை நிறுத்தச் சொல்லி, ஒரு புல் தரையில் தன்னை கிடத்தும்படி கூறினாள். 268 அவர்கள் அவளை வெளியே தூக்கி புல்தரையில் கிடத்தினர். அவர்கள் எல்லோரும் அவளைச் சுற்றி நின்றுகொண்டு, ஜெபித்துக் கொண்டிருந்தனர், அப்பொழுது திடீரென்று அவள் மேல் ஏதோ ஒன்று பட்டதாக அவள் கூறி, எழுந்து நின்றாள். அவள் தன்னால் இயன்ற வரை உரக்க சத்தமிட்டுக் கொண்டே சாலையில் பயணம் செய்யத் தொடங்கினாள். இதோ அவள் சபையில், அந்த நடைபிரகாரத்தில் மேலும் கீழுமாக நடந்தாள். 269 அப்பொழுது நான், “சகோதரியே, அது நடந்தது எத்தனை மணிக்கு?” என்று கேட்டேன். பரிசுத்த ஆவியானவர் என் மூலம் பேசின அதே மணி நேரத்தில் அது நடந்தது. அது என்ன? வரங்கள்.
99270 அந்த—அந்த வயோதிக ஆப்போஸம் ஜெபித்துக்கொள்ளப்படுவதற்காக வாசலில் வந்து படுத்துக்கொண்டிருந்ததைக் குறித்து என்ன? ஒன்றும் அறியாத அந்த மிருகம், அதற்கு ஒரு ஆத்துமா கூட கிடையாது, நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் அறியாத ஒன்று; பாருங்கள், அதற்கு ஒரு ஆத்துமா கிடையாது, (அதற்கு ஆவி உள்ளது), அதற்கு ஆத்துமா கிடையாது. 271 அது என்னவாயிருந்தது? பரிசுத்த ஆவியானவர் வேண்டுதல் செய்தல். தேவன் ஒரு வரத்தை பூமிக்கு அனுப்பினார், பரிசுத்த ஆவியானவரால் மேலும் காத்திருக்க முடியவில்லை. எனவே அவர் வந்து என்னை ஆட்கொண்டு, அவரே அந்த விதமாக பேசத் தொடங்கி, அவரே வேண்டுதல் செய்தார். நாங்கள் நேரத்தை ஒப்பிட்டுப் பார்த்தபோது, அதே நேரத்தில் அவள்…அவர்கள் அவளைப் புல்தரையில் கிடத்தி, என்ன நேரத்தில் அது நடந்தது என்று காண விரும்பினர்… ஏனெனில் அவள் மரித்துக்கொண்டிருந்தாள் என்பதை அவர்கள் அறிந்திருந்தபடியால், அவள் எந்த நேரத்தில் மரித்துப்போனாள் என்று அவர்கள் கூறவேண்டும். பரிசுத்த ஆவியானவர் என் மேல் இறங்கி அந்த வார்த்தைகளை உரைத்து வேண்டுதல் செய்த அதே நிமிடத்தில் அவள் சுகமடைந்தாள். வேண்டுதல், வார்த்தைகள், அவைகளை புரிந்துகொள்ள முடியாது, பாருங்கள், அந்த விதமாக வேண்டுதல் செய்தார். அதுதான் பரிசுத்த ஆவியானவர் பேசுதல். 272 அதை நான் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. பாருங்கள், எனக்குப் புரியவில்லை. அது அவளுடைய…அவளுடைய தூதனாக இருக்கலாம். இன்னும் ஒரு சில நிமிடங்களில் அதற்கு நாம் வரப் போகிறோம், பாருங்கள், அந்த தூதன் அங்கே வந்து, அந்த செய்தியை அளித்திருக்கலாம், நீங்கள் பாருங்கள். 273 இப்பொழுது—இப்பொழுது, அது—அது சரி. இரண்டு விதமான பாஷைகள் உண்டு, அவைகளில் ஒன்று…
100274 ஏதாகிலும் கேள்வி உண்டா? சரி, தேவன் என்ன உரைத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முயலுதல், நீங்கள் பாருங்கள். இப்பொழுது, நான்—நான், சகோதரன் ஸ்ட்ரிக்கர், அதில், அந்த விஷயத்தில், அதைக் குறித்து சிந்திக்க முயற்சி செய்யாதீர்கள், பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் பேசுவதற்கு விட்டுக் கொடுங்கள். அது என்னவென்று புரிந்துகொள்ள முயற்சி செய்யாதீர்கள், பாருங்கள், ஏனென்றால், தொடர்ந்து உங்களை பரிசுத்த ஆவிக்கு முழுவதுமாக சமர்ப்பியுங்கள். புரிகிறதா? ஏனென்றால் நீங்கள், “ஹே, நீர் என்ன கூறிக்கொண்டிருக்கிறீர்?” என்று கேட்க முயற்சித்துக்கொண்டிருக்கிறீர்கள். புரிகிறதா? “ஹே, நீர் என்னிடமா பேசிக் கொண்டிருக்கிறீர்? ஹு?” நீங்கள் பாருங்கள், அவர்…பாருங்கள், அவர் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்.
101115. இப்பொழுது. மற்றவர்களுக்காக பீடத்தண்டையில் ஜெபிக்கையில், ஒரு நபர் அர்த்தம் சொல்லுதல் இல்லாமல் [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] அந்நிய பாஷையில் பேசுவது சரியா? [ஒலிநாடாவில் காலி இடம்.] 275 அதன் பேரில் நான் என்ன எழுதி வைத்திருக்கிறேன் என்பதைக் காணட்டும், அதை நான் பார்க்க வேண்டும். அர்த்தஞ்சொல்லுகிறவன் இல்லாவிட்டால், அவர்கள் பேசாமலிருக்கக்கடவர்கள். முதலாம் கொரிந்தியரில், 1-வது அதிகாரம்…14-ம் அதிகாரம் 28-ம் வசனம். யாரிடம் வேதாகமம் உள்ளது? [ஒரு சகோதரன் கீழ்கண்ட வசனத்தைப் படிக்கிறார்—ஆசி.] [ அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், அவன் சபையிலே பேசாமல்,… ] 276 சரி. இப்பொழுது, எந்த நேரத்திலாவது சபையில், சபையில் எங்காவது அர்த்தஞ் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், அர்த்தஞ் சொல்லுகிறவன் இல்லாமற்போனால் பேசாமலிருங்கள்.
102277 பீடத்தண்டையில், ஒரே ஒரு காரியம் யாராகிலும்…ஜனங்கள் பீடத்தண்டையில் செல்வதை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அண்மையில் ஒரு விலையேறப் பெற்ற சகோதரன் பீடத்தண்டையில் சென்று, எவராகிலும் ஒருவரை முதுகில் தட்டி, அதன்பின்னர் அந்நிய பாஷையில் பேசுவதை நான் கேட்டேன், அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று அந்நிய பாஷையில் பேசுபவர் காண்பிப்பது போல் தோன்றினது. பாருங்கள், அது செயற்கையாக பரிசுத்த ஆவியை ஜனங்களிடம் கொண்டு வர (முயல்வது போல்) உள்ளது. அவ்விதம் செய்யாதீர்கள். புரிகிறதா? செய்ய வேண்டியது என்னவெனில், அந்த நபரைத் தனியே விட்டுவிடுங்கள். பரிசுத்த ஆவியானவர் வரும் வரைக்கும் அவர்கள் கரங்களை உயர்த்திக்கொண்டிருக்கட்டும். புரிகிறதா? எனவே அது—அது—அது ஒரு தவறாகும். இல்லை, அவர்கள் சபையில் பேசாமலிருக்க வேண்டும், நீங்கள் பாருங்கள்.
103278 [ஒரு சகோதரன், “சகோதரன் பிரான்ஹாமே?” என்று கேட்கிறார்—ஆசி.] ஆம், சகோதரனே. [“உதாரணமாக ஒரு நபர் ஆராதனையில் இருந்தார் மேலும்—மேலும் ஆராதனையின் முடிவிலே, வழக்கமாக ஒரு செய்தி வரும்போதெல்லாம், இந்த வரத்தையுடைய நபர், அவர்களால் சொல்ல முடியும், அல்லது அந்த—அந்த தூதரின்… தூதரின் பாஷைக்கும் அல்லது அதன் மூலமாக வருகிற செய்திக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன என்று அவர்களால் சொல்ல முடியுமா?”] 279 இப்பொழுது, இதைப் பார்ப்போம். இப்பொழுது… [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] … அவர்கள் உள்ளே வந்து அந்த காரியத்தை எழுதி, அதை என் மேசையின் மேல் வைக்க வேண்டும். புரிகிறதா? அதை நான் இவ்விதமாகப் படிப்பேன். ஆனால் சகோதரனே, அந்த அறைக்குள் நான் சென்றுவிடும்போது, அவ்வளவு தான். புரிகிறதா?
104280 அவர்கள் இங்கு வருவதற்கு முன்பு, அவர்கள் அங்கு பின்னால் நின்றுகொண்டிருப்பார்கள், எல்லோரும் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். அங்கு இருக்கும் சகோதரி, சகோதரி ஐரீன், அங்கே அந்த—அந்த பீடத்தண்டை, குருசண்டையிலே என்னும் பாடலை அங்கே வாசித்துக்கொண்டே, வாசித்துக்கொண்டிருப்பாள். நாம்…வாயில் காப்போர் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் யாராகிலும் பேசிக்கொண்டிருப்பதை கண்டால், அவர்கள் “உஷ், உஷ், உஷ்” என்பார்கள். புரிகிறதா? மேலும் சிறு பிள்ளைகள் சத்தம்போட்டால்…அவர்கள் பக்கத்தில் அமர்ந்து இனிமையாக, அவர்களிடத்தில், “தேனே, இது கர்த்தருடைய வீடு. நீ அவ்விதம் செய்யக் கூடாது. கர்த்தருடைய வீட்டில் இப்பொழுது நீ நல்லபடி நடந்துக்கொள்ள வேண்டும்” என்பார்கள். 281 மேலும் புருஷன் மற்றும் மனைவி, அவர்கள் எல்லோருக்குமே, அவர்கள் தங்களுடைய கோட்டுகளை தொங்கவிடுவதற்கு மற்றும் அது போன்ற காரியங்களுக்கு அவர்கள் உதவி செய்வார்கள். கதவு திறக்கப்பட்டவுடன் அவர்கள் உள்ளே வருவதைக் கவனித்துக் பார்க்க இங்கே கதவண்டையில் யாராகிலும் இருப்பார்கள். அந்த…மற்றும் ஒவ்வொரு காரியமும் நடைபெற ஆயத்தமாகி, உங்களுக்குத் தெரியும், சபை சரியான நிலையில் இருக்கும். எல்லோருக்கும் உட்கார இடம் கிடைத்து அவர்கள் உட்காருந்துவிட்டனரா என்றும் கவனித்துக் கொள்வார்கள்.
105282 நான் அறைக்குள் ஜெபித்துக் கொண்டிருப்பேன், அநேகமாக பிற்பகல் இரண்டு அல்லது மூன்று மணியிலிருந்து இருக்கலாம். யாருமே என்னைத் தொந்தரவு செய்வதில்லை. என் செய்தியுடன் நான் அங்கே செல்வேன். 283 அதன்பின்னர் தொடங்கும் நேரத்தில், பாடல் குழு தலைவர் ஒரு பாடலை தொடங்குவார், “பாட்டுப் புத்தகத்தில் இன்ன-இன்ன எண் பாடலுக்கு நாம் திருப்புவோம்” என்று அறிவிப்பார், உதாரணமாக, மீட்பர் மரித்த குருசண்டை என்னும் பாடலுக்கு, அந்த விதமாக, உங்களுக்குத் தெரியும், அவர்கள் அதைப் பாடிக்கொண்டே இருப்பார்கள். அதன்பின்னர் இரண்டு விசேஷித்த பாடல்களைப் பாடின பிறகு… நாங்கள் பாடல்களில் அதிக நேரம் செலவிடுவதில்லை; அது வார்த்தையில் தான். அவர்கள் ஒரு ஞானப்பாட்டைப் பாடுவார்களானால், அதற்காகத் தான் அவர்கள் ஞானப்பாட்டுகள் பாடும் நேரத்தை வைத்திருக்கின்றனர். நாம்—நாம்…ஜனங்கள் அங்கு முக்கியமாக வருவது வார்த்தைக்காகவே, அது திருத்துதலின் வீடு.
106284 அதன் பிறகு ஒரு கூட்டாளி, உதாரணமாக சகோதரன் ஜார்ஜ், சகோதரன் ஜார்ஜ் டீஆர்க், எழுந்து ஜெபிப்பார். அதன் பிறகு நமக்கு ஒரு விசேஷித்த பாடல் இருக்கும், தனியாக ஒருவர் பாடுவது அல்லது அதைப் போன்ற வேறொன்றாயிருக்கலாம். அதன் பிறகான நேரம், யாராகிலும் ஒருவர் என்னிடம் வந்து, அறையை விட்டுவெளியே வர நேரமாகிவிட்டது என்று அறிவிப்பார். அது சரி, நான் அபிஷேகத்தின் கீழ் புத்துணர்ச்சியுடன் வெளியே வருவேன். புரிகிறதா? 285 சரி, ஒருக்கால் அந்த வாரத்தில் அவர்கள் எங்காவது சபையில் ஒரு கூட்டம் நடத்தியிருக்கக் கூடும், தங்கள் சொந்தக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கலாம். ஒருக்கால் அன்றிரவு ஆராதனை தொடங்கும் முன்னர், அவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கக் கூடும். அது இங்கே இருந்து… அதை நான் இங்கு பெற்று, “அடுத்த வாரம் இந்த தேசத்தில் ஒரு குறிப்பிட்ட புயல் உண்டாகும் என்று இந்த தாளில் இங்கு எழுதப்பட்டிருக்கிறது” என்று கூறுவேன், அல்லது வேறெதாகிலும், மற்ற காரியம், உங்களுக்குத் தெரியுமா, அதைப் போன்ற ஏதோ ஒன்று நடக்கும் என்று கூறுவேன். “அது அந்நிய பாஷையில் பேசப்பட்டு, இங்கே சபையின் இரு பரிசுத்தவான்களால் சகோதரன் இன்னார்-இன்னார், மற்றும் சகோதரன் இன்னார்-இன்னார் அவர்களால் அர்த்தம் உரைக்கப்பட்டு இங்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதைக் குறித்து இங்கே இரண்டு சாட்சிகள் சாட்சி பகர்ந்து, ‘இது தேவனால் உண்டானதாயிருக்கும்,’ என்று, அது பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தங்கள் பெயர்களை இங்கே கையொப்பமிட்டுள்ளனர், அது இன்னார்-இன்னார் மற்றும் இன்னார்-இன்னார் ” என்றுள்ளது. அது என் முதல் பாகம்.
107286 பிறகு நான், “சரி, இதற்காக நாம் ஆயத்தமாயிருப்போம், எல்லோரும் ஜெபத்தில் தரித்திருங்கள். புரிகிறதா? இப்பொழுது யாருக்காகிலும் ஒரு விசேஷித்த விண்ணப்பம் உள்ளதா?” என்று கேட்பேன். உங்களுக்குத் தெரியும். “நாம் ஜெபம் செய்வோம்.” எழுந்து ஜெபிப்பேன். பிறகு நேராக வார்த்தைக்கு, உடனே வார்த்தைக்கு சென்றுவிடுவேன். 287 அதன்பின்னர் ஆராதனை முடிந்தவுடனே, பீட அழைப்பு கொடுக்கப்படும். பார்த்தீர்களா? பீட அழைப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம், பீட அழைப்பு, ஜனங்களை பீடத்தண்டையில் வரவழைத்தல். அதன்பின்னர் பீட அழைப்பு முடிந்த பிறகு, ஒருவேளை நான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன், பாருங்கள், அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்று. 288 ஆராதனை இவ்வாறு நன்றாக முடிவு பெறும், ஏனெனில் தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது.
108289 அதைக் குறித்து தான் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்…அந்த தூதன் என்னிடம் நடந்து வந்ததாக நான் அன்றிரவு கண்ட தரிசனம் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அந்த அறையில் நான் அங்கே உட்கார்ந்து கொண்டு, சிந்தித்துக்கொண்டிருந்தேன். சுமார், ஓ, அந்த நள்ளிரவில், “‘தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு …’என்று கூறியுள்ளதை, அது எப்படி முடியும்?” என்று நான் சிந்தித்தேன். அந்த ஒளி பிரகாசிப்பதை நான் கண்டேன், இதோ அவர் அங்கே நான் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு நடந்து வந்தார். புரிகிறதா? அப்பொழுதுதான் இந்த கூட்டங்களுக்காக, பாருங்கள், அவர் எனக்குக் கட்டளைக் கொடுத்தார். 290 இப்பொழுது, இல்லை, அது அந்த—அந்த செய்தியை அளிக்கும் நபர். அதுவே, உங்களுடைய கேள்வி என்று, நான் நினைக்கிறேன், “செய்தியை அளிக்கும் அந்த நபர், அவருக்கு…செய்தியை அளிக்கும் அந்த நபர், அது கர்த்தருடைய தூதனா அல்லது இல்லையா என்று அவர் அறிந்துகொள்வாரா?” 291 [ஒரு சகோதரன், “இப்பொழுது, கேள்வி என்னவெனில், தூதர் பாஷைகள் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள்…” ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] அவரால் முடியுமென்று நான் நினைக்கவில்லை. இப்பொழுது, அவ்விதமாகத் தான் அதை நாம் இப்பொழுது பெற்றிருக்கிறோம். ஆனால், பாருங்கள், அது இருக்க வேண்டிய விதத்தில் அதை நாம் பெற்றிருப்போமானால், அதற்காக ஒரு வழக்கமான கூட்டத்தை நீங்கள் கொண்டிருப்பீர்களானால், இருக்கட்டும்…
109292 பாருங்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஊழியம் உண்டு. நீங்கள் அந்நிய பாஷையில் பேசுகிறீர்கள் என்று, வைத்துக்கொள்வோம், அவர் அதற்கு அர்த்தம் உரைக்கிறார், மேலும் அவர் அந்நிய பாஷையில் பேசுகிறார், அவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்; நீங்கள் இங்குள்ள சபையோர், சபை, ஆனால் அதேசமயத்தில் நீங்கள் ஒரு ஊழியத்தை பெற்றுள்ளீர்கள் மற்றும் நீங்கள் ஏதோ ஒன்றைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் தேவனுடைய ராஜ்யத்துக்கு உதவி செய்ய முயன்றுகொண்டு, அதற்காக ஏதோ ஒன்றைச் செய்கிறீர்கள், பாருங்கள், எனவே சகோதரராகிய நீங்கள் ஒன்று கூடுகிறீர்கள். ஆகையால்தான் மேய்ப்பர்களாகிய நாங்கள், இந்த விதமாக, ஒன்று கூடுகிறோம், எங்களுக்கு பொதுவாக ஏதோ ஒன்றுண்டு. சகோதரராகிய நீங்கள் ஒன்று கூடி, வேதவாக்கியங்களை ஆய்ந்து படித்து, அந்நிய பாஷையில் பேசி, அதற்கு அர்த்தம் உரைத்து, செய்தியை அளிக்கிறீர்கள், நீங்கள் பாருங்கள்.
110293 ஆனால், இப்பொழுது, இந்த மனிதன், பிறகு, அவர் உணர்ந்தால்…அவர் கூட்டத்திற்கு வந்திருந்தார், அவருக்கு அந்நிய பாஷையில் பேசும் வரமுண்டு. பாருங்கள், அவர் கூட்டத்துக்கு வந்து, அவர் அந்நிய பாஷையில் பேசுகிறார், ஆனால் அதற்கு அர்த்தம் உரைக்கப்படுவதில்லை, அர்த்தம் உரைப்பவருக்கு அது என்னவென்று புரிவதில்லை. [ஒரு சகோதரன், “அப்படியானால் இந்த ஜனங்கள் சரீர பக்தி விருத்தியடையச் செய்கின்றனர், ஆனால் மேய்ப்பர்கள் போதகர்கள் போன்ற உத்தியோகங்கள் சரீரத்தை பரிபூரணப்படுத்துகிறது என்றா கூறுகிறீர்?” என்று கேட்கிறார்.—ஆசி.] 294 ஆம், அதற்காகத் தான் அவையுள்ளன, பரிபூரணப்படுவதற்காக. புரிகிறதா? பரிபூரணப்படுவதற்கென்றே இவை அளிக்கப்பட்டுள்ளன, நீங்கள் பாருங்கள். சபை பரிபூரணப்படுவதற்காகவே, பரிபூரணப்படுவதற்கே அந்த—அந்த—அந்த பரிசுத்த ஆவி அளிக்கப்பட்டுள்ளதென்று, நான் நம்புகிறேன்.
111295 இப்பொழுது, அவர்கள், அந்நிய பாஷையில் பேசுகிறவர்கள், அவர்கள் ஆவியில்- நிரப்பப்பட்டவர்கள், அதில் சந்தேகமில்லை. இப்பொழுது, இங்கே ஒரு மனிதன் இருக்கிறார், அவர் இங்கே கூட்டத்தில் அந்நிய பாஷையில் பேசலாம், மற்றும் அவர் கொடுக்கிற… இப்பொழுது, அவர் அர்த்தம் உரைப்பவர்களுக்கு முன்னால் தான் இருக்கிறார், பாருங்கள், இருப்பினும் யாருமே அதற்கு அர்த்தம் உரைக்கவில்லையென்றால், எங்கோ தவறுள்ளது. அர்த்தம் உரைப்பவர் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது, பாருங்கள். அந்நிய பாஷையில் பேசுகிறவரைப்போலவே அதே விதமாக அவர்—அவர் ஆவியின் ஏவுதலினால் அர்த்தம் உரைக்க வேண்டும். மேலும் அவருக்கு உண்மையாகவே அந்நிய பாஷையில் பேசும் ஒரு வரம் இருக்கலாம், ஆனால் அவர் ஒரு பாஷையை, வழக்கமாக அந்நிய பாஷைகளைப் பேசும் வரத்தை பெற்றிருக்காமலிருக்கலாம். பாருங்கள், அவர்… 296 அப்படியானால் அவர் செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், அவர் இந்த அந்நிய பாஷையை உபயோகிக்கும்போது, அப்பொழுது அவர் காண்கிற… இப்பொழுது, அவர்—அவர் எதையும் முயற்சி செய்யக் கூடாது…அவர் மறுபடியும் அதை பேசத் தொடங்கினால், அவர் பெருமையுள்ளவர் என்று அறிந்துகொள்ளலாம். அவர் செய்யக் கூடாது…அவர்—அவர் தொடக்கத்திலேயே தவறாயிருக்கிறார், நீங்கள் பாருங்கள், அவர் ஒருபோதும் வளர்ச்சியடையமாட்டார். பாருங்கள், நீங்கள், “சரி, தேவனுக்கு ஸ்தோத்திரம், அந்த நபருக்கு நான் பேசின பாஷைக்கு அர்த்தம் உரைக்க பிரியமில்லை. அவ்வளவு தான்” என்று நினைக்கிறீர்கள். இப்பொழுது, பாருங்கள், அவர் தொடக்கத்திலேயே தவறாயிருக்கிறார். சரியாக அவர் அங்கே பெற்றுள்ள—அவர் தவறான நோக்கத்தை, தவறான குறிக்கோளை உடையவராயிருக்கிறார். புரிகிறதா?
112297 ஆனால் அவர் இனிமையும் தாழ்மையும் உள்ளவராக இருப்பாரானால், “சரி, ஒருக்கால் கர்த்தர் தமது சேவையில் என்னை உபயோகிக்க விரும்பவில்லை. ஆனால் இருப்பினும் நான்…அவர் என் ஆத்துமாவை ஆசிர்வதிக்கிறார். அவர் என்னை பக்திவிருத்தியடையச் செய்ய விரும்புகிறார், நான் அந்நிய பாஷையில் பேசும்போது அவருக்கு அருகில் நான் இருப்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். எனவே நான் ஆப்பிள் பழத் தோட்டத்துக்கு நடந்து சென்று, ‘ஓ தேவனே!’ அப்பொழுது வல்லமை என் மேல் விழுந்து, நான் அந்நிய பாஷையில் பேசி, புத்துணர்ச்சி பெற்றவனாய் உள்ளே வருவேன், உங்களுக்குப் புரிகிறதா” என்று கூறுவார். “ஓ, நீங்கள் பாருங்கள், கர்த்தாவே, நீர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறீர், அந்நிய பாஷையில் பேசுவதன் மூலம் என்னை சரியான பாதையில் வைத்திருக்கிறீர்” என்பார். புரிகிறதா? “மேலும், கர்த்தாவே, இன்றைக்கு நான் அந்த மனிதனிடம் பேசியிருக்க வேண்டும். கர்த்தாவே, அதற்காக என்னை மன்னிக்கவும். நான்—நான்—நான் செய்திருக்கக் கூடாத ஒன்றை நான் செய்துவிட்டேன். பிதாவே, தயவு கூர்ந்து மன்னிப்பீராக” என்பார். மேலும் நேரடியாக, அது அந்நிய பாஷையில் பேசுகிறது. “ஆ, வ்யூ, இப்பொழுது அதைக் குறித்து நல்லுணர்வு தோன்றுகிறதே!” 298 நீங்கள் பாருங்கள், அப்படியானால் பரவாயில்லை. பாருங்கள், உங்களுடைய—உங்களுடைய அந்த வரம் சபையில் உபயோகிப்பதற்காக அல்ல, ஆனால் அது உங்களுக்கு பக்திவிருத்தி உண்டாவதற்காகவேயாகும். “அந்நிய (தெரியாத) பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.” புரிகிறதா? இப்பொழுது, அதற்கு அர்த்தம் உரைப்பவர் இல்லாவிட்டால், அப்பொழுது…நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? பாருங்கள், அது தான் இது. எனவே அவனுக்கே அது தெரியாது. அவன்…ஆனால் அவன் அர்த்தம் உரைப்பவர் பக்கத்தில் இருக்கும்போது அதை அவன் அறிந்துகொள்கிறான். இப்பொழுது, இப்பொழுது இவை ஒன்றாக போகும்படி விட்டுவிட வேண்டும், நீங்கள் பாருங்கள், இவ்விரண்டை நீங்கள் பிரிக்கும் வரைக்கும், அந்த ஒன்றை தான் நீங்கள் செய்ய முடியும். அதன் காரணத்தால் தான் நான் நினைக்கிறேன்…
113116. முதலாம் கொரிந்தியர் 14:5-ஐ விளக்குங்கள். 299 இந்த வேதவசனத்தை யார் வேகமாக எடுக்க முடியும்? உங்களில் ஒருவர் அதை எடுத்துவிட்டாரா? [ஒலி நாடாவில் காலியிடம். ஒரு சகோதரன் முதலாம் கொரிந்தியர் 14:5-ஜ படிக்கிறார்—ஆசி.] [… ளெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும் அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன். ] 300 சரி. “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்…விரும்புகிறேன்,” பவுல் என்ன சொல்ல முயல்கிறான் என்றால்…உதாரணமாக சபை, நீங்கள்—நீங்கள் என் சபை. பவுலுக்கிருந்த சபைகளில் சில எனக்கு இங்கு கிடைத்துள்ள அங்கத்தினர்களைப் போல் அவ்வளவு அதிகமான அங்கத்தினர்களைக் கொண்டதாயிருக்கவில்லை. அது உண்மை, சில வேளைகளில் பத்து அல்லது பன்னிரண்டுபேர். புரிகிறதா? புரிகிறதா? இப்பொழுது, இப்பொழுது அவன், “நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்” என்றான். அது உங்களைத் திகைப்படையச் செய்துவிட்டதல்லவா? 301 பாருங்கள், அப்போஸ்தலர் 19-ல் கூறப்பட்டுள்ள…அந்த—அந்த—அந்த சபையில், அதில் ஏறக்குறைய ஒரு டஜன் அங்கத்தினர்கள் இருந்தனர் என்று நான் நினைக்கிறேன். பார்த்தீர்களா? வெகு சொற்பப் பேர், ஊழியக்களத்தில், நீங்கள் பாருங்கள். அது எப்பொழுதுமே சிறுபான்மையோராக இருந்து வந்துள்ளது, பாருங்கள். மேலும் அதில் அவர்கள் ஆண்களும் பெண்களுமாக ஏறக்குறைய ஒரு டஜன் பேராயிருந்தார்கள் என்று, அங்கு கூறப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன், நீங்கள் பாருங்கள்.
114302 இப்பொழுது, இங்கே நீங்கள்—நீங்கள் காண்பீர்களானால், அவன், “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். நீங்களெல்லாரும் பேச வேண்டும், எல்லோரும் அந்நிய பாஷைகளில் பேச வேண்டும், நீங்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, அந்நிய பாஷைகளைப் பேசும்படி நான்—நான் விரும்புகிறேன். ஆயினும்” “அதற்கு அர்த்தம் உரைக்கப்படாவிட்டால், நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்” என்றான். 303 அது அங்கே எவ்வாறு எழுதப்பட்டுள்ளது? யார்…அந்த வசனத்தை அங்கே எடுத்துவிட்டீர்களா, சரி …?… அதை நாம் மறுபடியும் படிப்போம். இப்பொழுது கவனியுங்கள்: 304 [ஒரு சகோதரன் முதலாம் கொரிந்தியர் 14:5-ஜ படிக்கத் தொடங்குகிறார்—ஆசி.] [ நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்… ] இப்பொழுது அதை ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்ளுங்கள், “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்.” [… நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்… ] “நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.” [… ஏனென்றால் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அந்நிய பாஷைகளைப் பேசுகிறவனிலும் மேன்மையுள்ளவன்… ] இப்பொழுது இதை ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்ளுங்கள். 305 இப்பொழுது, “தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறதைவிட மேனமையுள்ளது,” வேறெது? அங்கு தானே நீங்கள் என்னை நிறுத்தச் சொன்னீர்கள்? [ஒரு சகோதரன், ‘“அது ஒரு வித்தியாசமான …?… ’ என்று நான் கூறிக்கொண்டிருந்தேன்” என்கிறார்.—ஆசி.] ஆம், புரிகிறதா? ஆம். பார்த்தீர்களா? இப்பொழுது, இப்பொழுது எங்கே… 306 இப்பொழுது, உதாரணமாக நீங்கள், இப்பொழுது, கல்லாதவர் இருவர் இன்றிரவு நமது மத்தியில் இருக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். இதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, மேலும் நான் உள்ளே வருகிறேன் மற்றும் நீங்கள் எல்லோரும்…இந்த கூட்டத்தை நாம் இங்கே ஆரம்பித்தோம், மேலும்—மேலும் நீங்கள் அந்நிய பாஷையில் பேசத் தொடங்குகிறீர்கள், நீங்கள் ஒவ்வொருவருமே அந்நிய பாஷையில் பேசுகிறீர்கள், அந்நிய பாஷையில் பேசுகிறீர்கள், மேலும் அந்நிய பாஷையில் பேசுகிறீர்கள், மேலும் அந்நிய பாஷையில் பேசுகிறீர்கள். மேலும், பாருங்கள், அது என்ன? பாருங்கள், அந்த கல்லாதவன், “ஹூ! இவர்களெல்லாரும் பைத்தியக்காரர்” என்பான். புரிகிறதா? ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனஞ் சொன்னால், பாருங்கள், அப்பொழுது இந்த கல்லாதவன் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றை அவன் சொல்கிறான்.
115307 இப்பொழுது, மேலே சென்று, அதன் எஞ்சியுள்ள பாகத்தைப் படியுங்கள். [அந்த சகோதரன் தொடர்ந்து படிக்கிறார்—ஆசி.] [… அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், …] அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. இப்பொழுது, “சொல்லாவிட்டால்,” பாருங்கள். நான்—நான்…அர்த்தத்தையும் சொல்லாவிட்டால் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும்—அதனிலும் மேன்மையுள்ளவன். இப்பொழுது, தொடர்ந்து படியுங்கள், பாருங்கள். [… சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு. ] அங்கு தான் காரியமே உள்ளது, பாருங்கள், சபை பக்திவிருத்தியடைகிறது. 308 இப்பொழுது, வேறு விதமாகக் கூறினால், ஏன், சபை, இந்த நபர். இதோ—இங்கே இதில் பலர் இங்கே கல்லாதவர், நீங்கள் இன்றிரவு எங்கள் மத்தியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்; நாங்கள் இந்த கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். இங்குள்ள நாமனைவருமே நம்முடைய கர்த்தரைக் குறித்து அறிந்துகொள்ள விரும்பி…நாடிக்கொண்டிருக்க, நீங்கள் எல்லோருமே அந்நிய பாஷையில் பேசத் தொடங்கிவிட்டீர்கள். யாருமே ஒன்றும் சொல்லவில்லை, அந்நிய பாஷையில் பேசத் தொடங்கிவிட்டீர்கள். “நான் உங்களிடம் விரும்புகிற…நான்…அது அருமையாயிருக்கும்,” பவுல், “நீங்கள் எல்லோரும் அந்நிய பாஷையில் பேசினீர்கள், அது அருமையானது தான்” என்கிறான். ஆனால் உங்களில் தீர்க்கதரிசனம் உரைப்பவர் யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று, “ கர்த்தர் உரைக்கிறதாவது , ‘இங்கு ஒரு மனிதன் உட்கார்ந்துகொண்டிருக்கிறார், அவர் நமக்கு மத்தியில் ஒரு அந்நியர். அவருடைய பெயர் ஜான் டோ . அவர் குறிப்பிட்ட-குறிப்பிட்ட ஒரு இடத்திலிருந்து வருகிறார். அவர் தனது மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் விட்டு இங்கு வந்திருக்கிறார். அவர் உதவியை நாடிக்கொண்டிருக்கிற காரணத்தால், அவர் இன்றிரவு இங்குள்ளார். அவர் இன்று டென்னஸியிலுள்ள, மெம்பீஸில் ஒரு மருத்துவரைக் கண்டார். மேலும் அவர் கூறினார்…அவருக்கு நுரையீரல்களில் புற்று நோய் உள்ளதென்று மருத்துவர் அவரிடம் கூறிவிட்டார். அவர் மரித்துக்கொண்டிருக்கிறார்’” என்று கூறினால் எப்படியிருக்கும்?
116309 அவன், “எல்லோருமே அந்நிய பாஷைகளில் பேசிக்கொண்டிருக்கும்போது, கல்லாதவன் ஒருவன் உள்ளே பிரவேசித்தால், அவன் கூறுவான்…அப்பொழுது அவன், ‘நீங்கள் எல்லோரும் பைத்தியம் அல்லது பித்து பிடித்தவர் அல்லவா?’ என்பானே. ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்து இருதயத்தின் அந்தரங்கங்களை வெளியரங்கமாக்கினால், அப்பொழுது அவன் முகங்குப்புற விழுந்து, ‘தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்!’” என்றான். அங்கே பார்த்தீர்களா? 310 சரி, இப்பொழுது, இங்கே. நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசுகிறீர்கள், ஆனால் ஒருவர் அதற்கு அர்த்தம் உரைத்து, “கர்த்தர் உரைக்கிறதாவது,” இதுதான் அதன் அர்த்தம், அதாவது, “‘இங்கு ஒரு மனிதன் நமது மத்தியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவருடைய மனைவியை விட்டு இங்கு வந்திருக்கிறார், அவர் இன்றைக்கு நாஷ்வில்லில்,’” அல்லது மெம்பீஸில், அல்லது அப்படி ஏதோ ஓரிடத்தில் இருந்தார், ‘“அவருக்கு நுரையீரல் புற்று நோய் உள்ளது. இங்கே உள்ளே வாருங்கள், அவருடைய பெயர் ஜான் டோ, ’” இன்னார்-இன்னார் என்று அந்த விதமாக கூறினார் என்று வைத்துக்கொள்வோம். பார்த்தீர்களா?
117311 “அதற்கு அர்த்தஞ்சொன்னாலன்றி,” பாருங்கள், அது பக்திவிருத்தியை உண்டாக்குகிறது. புரிகிறதா? அப்பொழுது அவர்கள் சொல்லுவார்கள்…அந்த நபர் வெளியே சென்று, “நான் உங்களிடம் ஒன்றைக் கூறட்டும், அந்த ஜனங்களிடம் அங்கே தேவன் இல்லை என்று என்னிடம் கூறாதீர்கள். நிச்சயமாக அவர் இருக்கிறார்! அந்த ஜனங்களுக்கு என்னைத் தெரியவே தெரியாது” என்பார். புரிகிறதா? 312 எனவே நமக்கு தீர்க்கதரிசனம் உரைக்கும் வரங்களும் அதனுடன் அந்நிய பாஷைகளில் பேசும் வரங்களும் அவசியமாயுள்ளன. ஆனால், அந்நிய பாஷைகளில் பேசும்போது, பாருங்கள், அதற்கு அர்த்தம் சொல்லுதல் இருக்க வேண்டும். அப்பொழுது, அதற்கு அர்த்தம் சொல்லும்போது, அது தீர்க்கதரிசனமாகிவிடுகிறது. புரிகிறதா? அது தீர்க்கதரிசனம். இப்பொழுது, இங்கு ஒரு நிமிடம் அதைக் குறித்த ஒரு கேள்வியைப் பெற்றுள்ளேன், எனவே நான்—நான் முடிந்தளவு விரைவாக அதைப் பார்க்கவுள்ளேன். [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.]
118117. மத்தேயு 18:10. [ஒரு சகோதரன் மத்தேயு 18:10-ஐ படிக்கிறார்—ஆசி.] [ இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு… அவர்களுக்குரிய தேவதூதர்கள்—தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ] 313 சரி. இப்பொழுது, சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும், நிச்சயமாகவே பெயர்கள் இல்லை, சிறு காகிதத் துண்டுகள் மாத்திரமே, நீங்கள் பாருங்கள், இதைக் கூறினது யார். நான் நிச்சயமாக நான்… 314 இப்பொழுது, இதைக் குறித்து நீங்கள் இரண்டு விதங்களில் எடுத்துக்கொள்ளலாம், நீங்கள் பாருங்கள். ஆனால் நான் நினைக்கிற அர்த்தம், “இதற்கு விளக்கம் தாருங்கள்” என்று நீங்கள் என்னைக் கேட்பீர்களானால், இது தான் என் விளக்கம். 315 இப்பொழுது, நீங்கள் இரண்டாம் கொரிந்தியருக்குத், யாராகிலும், 5:1-க்குத் திருப்புங்கள், அது, “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும்…” என்று இதில் கூறுகிறது. அது என்னவென்று உங்களுக்குத் தெரியும், பாருங்கள். “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்துபோனாலும், நமக்காக வேறொன்று ஏற்கனவே,” உங்களுக்குத் தெரியும், “காத்திருக்கிறது.” சரி.
119316 இப்பொழுது, இப்பொழுது அவர்…நீங்கள் மத்தேயு 18:10-ஐ கவனிப்பீர்களானால், அவர் சிறு “பிள்ளைகளைக்” குறித்து இங்கு பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் சிறு பிள்ளைகள், சிறிய குழந்தைகள், மூன்று அல்லது நான்கு வயதுள்ளவர்கள், அவர்களைக் கொண்டு வந்தார்கள். “அவர்கள் பிள்ளைகளை, குழந்தையை, அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்.” பிள்ளைகள் என்பது பிள்ளை என்பதன் பன்மைச் சொல். ஒரு குழந்தை என்றால் ஒரு குட்டி—குட்டி நபர், கைக்குழந்தை அல்ல, அதற்கும் பதின்மூன்று வயதுக்கும் இடையே உள்ள ஒரு பருவம். புரிகிறதா? அது தனக்குத் தானாக பொறுப்புள்ளதாயிருக்கும் பருவத்தை இன்னும் எட்டவில்லை. 317 இப்பொழுது, அவர், “நீங்கள் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” என்றார். நீங்கள் உண்மையாகவே அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை எடுத்துக்கொண்டால், “தவறாக நடத்துதல்” என்பதாகும். பாருங்கள், “இவர்களில் ஒருவனை தவறாக நடத்துதல்.” ஒரு பிள்ளையை தவறாக நடத்துதல், நீங்கள் அதைச் செய்யவேக் கூடாது. அவர்கள் பிள்ளைகள், அவர்களுக்குத் தெரியாது. புரிகிறதா? 318 மேலும் இப்பொழுது கவனியுங்கள், “ஏனென்றால் அவர்கள்…அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள்” என்றார், நீங்கள் பாருங்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், “அவர்களுடைய தூதர்கள், அவர்களுடைய—அவர்களுடைய தூதர்கள், அவர்களுடைய சரீரங்கள், அவர்கள் மரித்தால் அவர்கள் செல்லவிருக்கும் அந்த தூதனைப் போன்ற சரீரங்கள், பரலோகத்தில் என் பரமபிதாவின் சமுகத்தில் எப்பொழுதும் இருக்கின்றனர்.” புரிகிறதா?
120319 இப்பொழுது, “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்துபோனாலும், நமக்காக வேறொன்று ஏற்கனவே காத்திருக்கிறது.” அது சரியா? அது ஒரு சரீரம். 320 இங்கு பாருங்கள். இவைகளை விவரிக்க எனக்கு மட்டும் நேரமிருந்தால் நலமாயிருக்குமே! நிச்சயமாகவே, அதை விளக்கிக் கூற எனக்கு—எனக்கு நேரமிருக்கப்போவதில்லை என்பதை நான் அறிவேன். ஆனால், இங்கே, இதை ஒலிப்பதிவு செய்வதால், நான் இதை உங்களுக்கு விளக்கிக் கூறட்டும், அப்பொழுது நீங்கள் அதை எப்படியும் புரிந்து கொள்வீர்கள். 321 பாருங்கள், ஒரு இரவு பேதுரு சிறையிலிருந்தான். அவர்கள் மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவானின் வீட்டில் ஜெபக் கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தனர், பாருங்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன், அந்த அக்கினி ஸ்தம்பம், உள்ளே வந்தார், ஒரு ஒளியாக இறங்கி வந்தது, அந்த ஒளி அவனிடம் வந்ததை பேதுரு கண்டபோது, அவன் சொப்பனம் கண்டுகொண்டிருக்கிறதாக நினைத்தான். வேதம், “அது ஒரு ஒளியாய் இருந்தது” என்று கூறியுள்ளது. பார்த்தீர்களா? அதே ஒருவரே நம்முடன் இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன், பாருங்கள், அவர் இறங்கி வந்தார். மேலும் நாமும் அதே தொல்லையில் அகப்பட்டுக் கொண்டால், அதேக் காரியம் சம்பவிக்கலாம். புரிகிறதா? அங்கு உள்ளே வந்து, அவர், “என்னோடு செல்ல வா” என்றார். 322 எனவே பேதுரு, “இப்பொழுது நான் சொப்பனம் கண்டு கொண்டிருக்கிறேன், இந்த சொப்பனத்தின் அர்த்தம் என்னவென்று பார்க்கலாம்” என்று எண்ணினான். அவன் காவலாளர்களைக் கடந்து சென்றான், மேலும், “ஹூ-ஹு. இப்பொழுது நாம் நடந்து அருகில் செல்லுகையில், கதவு தானாகவே திறக்கிறதே” என்று எண்ணினான். அவன் அடுத்த கதவண்டைச் செல்கிறான், அதுவும் தானாக திறவுண்டது. அவன் நகர வாசல்களை அடைந்தபோது, அதுவும் தானாக திறவுண்டது. அவன் சொப்பனம் கண்டுகொண்டிருக்கிறதாக அப்பொழுதும் அவன் நினைத்துக்கொண்டான். எனவே அவன் அங்கு நின்றபோது, “சரி, இப்பொழுது நான் விடுதலையாகிவிட்டேன், எனவே நான் மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவான் வீட்டுக்குச் சென்று அங்கு ஐக்கியத்தில் கலந்துகொள்வேன்” என்றான்.
121323 அவர்கள் அங்கு பின்னால், “ஓ கர்த்தாவே, உமது தூதனை அனுப்பி பேதுருவை விடுவியும்” என்று கூறிக்கொண்டிருந்தனர். 324 ஏறக்குறைய அதே நேரத்தில் ஏதோ நடந்தது [சகோதரன் பிரான்ஹாம் தட்டுகிறார்—ஆசி.] . அந்த சிறு பெண் கதவண்டையில் வந்து, “யார் அங்கே?” என்று கேட்டாள். ஜன்னல் சட்டங்களைத் திறந்து பார்த்தபோது, “ஏன், அது பேதுருவாயிற்றே!” என்றாள். எனவே அவள் திரும்பிச் சென்று, “பாருங்கள், நீங்கள்—நீங்கள் ஜெபம்பண்ணுவதை நிறுத்திக் கொள்ளலாம், பேதுரு அங்கு இருக்கிறார்” என்றாள். அவன், “ஓ, என்ன! திறவுங்கள்,” என்று கூறி, “நீங்கள்—நீங்கள்—நீங்கள்…” என்றான். பார்த்தீர்களா? 325 [சகோதரன் பிரான்ஹாம் மறுபடியும் தட்டுகிறார்—ஆசி.] “கதவைத் திறவுங்கள்! நான் உள்ளே வருகிறேன்” என்றான். பார்த்தீர்களா? எனவே அவன் திரும்பிச் சென்று, “இல்லை, அது—அது கதவண்டையில் இருப்பது பேதுருதான்” என்றான். 326 “ஓ,” அவர்கள், “பேதுருவை அவர்கள் ஏற்கனவே சிரச்சேதனம் செய்துவிட்டார்கள், அது வாசலண்டையிலே அவருடைய தூதன். பாருங்கள், அவனுடைய பரலோக கூடாரம், அவன் அதைப் பெற்றுக்கொண்டு விட்டான், அதாவது இந்த பூமிக்குரிய ஒன்று அழிக்கப்பட்டது, ஏனெனில் அவன் வருவதற்காக அது பரலோகத்தில் காத்துக்கொண்டிருந்தது” என்றனர். 327 அன்றொரு நாள் நான் கடந்து சென்று, அந்த தரிசனத்தில் என்ன கண்டேன் என்பதை, நீங்கள் அறிவீர்கள். “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனால், நமக்கு வேறொன்று இருக்கிறது.” 328 மேலும் இந்த குட்டி நபர்கள் இன்னமும் எந்த பாவமும் செய்யாதவர்கள், நீங்கள் பாருங்கள்…புரிகிறதா?
122329 ஒரு குழந்தை உருவாகிக்கொண்டிருக்கும்போது—ஒரு குழந்தை ஒரு தாயின் கர்ப்பத்தில் உருவாகிக்கொண்டிருக்கும்போது, அது அங்கு வைக்கப்பட்டவுடன்…பார்த்தீர்களா? பார்த்தீர்களா? ஆனால் அது முதலில் ஆவியாயுள்ளது. அந்த ஆவி மாம்சத்தை தரித்துக் கொள்ளும்போது, ஒரு சிறு ஜீவகிருமி மாம்சத்தைத் தரித்துக்கொண்டு, அதன் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வரும்போது…இப்பொழுது, கர்ப்பத்தில், அது உதறுகின்ற, குலுக்குகின்ற, சிறு தசைகளைக் கொண்டதாயுள்ளது. அது நமக்குத் தெரியும். அவை ஜீவ அணுக்கள். நீங்கள் ஒரு குதிரை முடியை எடுத்து தண்ணீரில் போடுவதுபோல, அது மிதந்து, அசைந்து கொண்டிருக்கும், அதை நீங்கள் தொடும்போது, அது குதிக்கும். அந்தவிதமாகத் தான் ஒரு குழந்தையும் உள்ளது. 330 ஆனால் அது இந்த உலகத்தில் பிறந்து அதன் முதல் சுவாசத்தை சுவாசிக்கும்போது, அது ஒரு ஜீவாத்துமாவாகிறது. புரிகிறதா? ஏனெனில் பூமிக்குரிய சரீரம் இவ்வுலகில் பிறந்தவுடனேயே, அதை ஏற்றுக்கொள்ள, வானத்துக்குரிய ஒரு சரீரம், ஆவிக்குரிய சரீரம் ஒன்றுள்ளது. மாம்சத்துக்குரிய சரீரம் விழுந்தவுடனே, அதற்காக பரலோக கூடாரம் ஒன்று காத்திருக்கிறது. “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்துபோனால், அதற்காக பரலோக கூடாரம் ஒன்று காத்திருக்கிறது.” அந்த குழந்தை பூமிக்கு மாம்சத்தில் வந்தவுடனே, அதை ஏற்றுக்கொள்ள ஆவிக்குரிய சரீரம் ஒன்று காத்திருக்கிறது. இந்த ஆவிக்குரிய சரீரம்…மாம்சத்துக்குரிய சரீரம் அழிந்துபோனவுடனே, ஒரு ஆவிக்குரிய சரீரம் மறுபுறத்தில் காத்திருக்கிறது. புரிகிறதா? அதை நாம் ஒரு “தியாபனி என்ற ஆவிக்குரிய சரீரம்” பாருங்கள், ஒரு ஆவிக்குரிய சரீரம் என்றழைக்கிறோம்.
123[ஒரு சகோதரன், “பாருங்கள், இப்பொழுது, அதாவது இந்த ஒரு சரீரம்…இந்த சரீரத்தின் உயிர்த்தெழுதல் வரைக்கும், அது தற்காலிகமான சரீரமா?” என்று கேட்கிறார்.—ஆசி.] ஆம். புரிகிறதா? ஆம். ஒ, ஆமாம். [ “உயிர்த்தெழுதல் வரைக்கும் அந்த நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போமா?” ] {: .bold} அது உண்மை. பார்த்தீர்களா? புரிகிறதா? 331 அது இன்னும் மனுபுத்திரருக்கு வெளிப்படவில்லை. நான் நினைக்கிறேன்…அதை நான் கண்டேன் என்று எனக்குத்—எனக்குத் தெரியும். புரிகிறதா? ஆனால் அது என்னவிதமான சரீரம் என்று எனக்குத் தெரியவில்லை, உங்களுடைய கரங்களையும் அல்லது வேறு எதையும் உணர்ந்ததைப்போல அவர்களையும் என்னால் தொட்டு உணர முடிந்தது. நிச்சயமாகவே, இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது, நான் போய்விட்ட பிறகு அநேக ஆண்டுகள் கழித்தும் இதை நீங்கள் போட்டுக் கேட்கலாம். உங்களுக்குப் புரிகிறதா? ஆனால்…அது, என்னவாயிருப்பினும், பாருங்கள், நான்—நான் அந்த ஜனங்களைத் தழுவினேன், அவர்கள் கைகளைப் பிடித்தேன், மேலும் நீங்கள் தத்ரூபமாயிருப்பது போல்—போல அவர்களும் தத்ரூபமாயிருந்தனர், இருப்பினும் அது…அவர்கள் புசிக்கவில்லை, குடிக்கவில்லை. அங்கு நேற்று என்றோ அல்லது நாளை என்றோ இருக்கவில்லை. பாருங்கள், அது நித்தியமாயிருந்தது.
124332 இப்பொழுது அந்த கூடாரம்…அவர்கள் அந்த சரீரத்தை விட்டுவிட்டு, அவர்கள் பூமிக்குத் திரும்ப வருகின்றனர், அந்தவிதமான ஒரு சரீரத்தில் அவர்கள் அழியாமையைப் பெற்றிருந்தனர். பூமியின் மண்ணானது எப்படியோ அந்த ஆவிக்குரிய சரீரத்தில் ஒன்று கூடி, அவர்கள் மீண்டும் மானிடராகி, ஏதேன் தோட்டத்தில் அவர்கள் புசித்ததைப் போல் புசிக்கின்றனர். புரிகிறதா? “ஆனால் பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும், நமக்காக ஒன்று ஏற்கனவே காத்திருக்கிறது.” 333 எனவே பாவமே இல்லாத இந்த சிறு பிள்ளைகள், பாருங்கள், இன்னும் பாவம் இல்லை, அவர்களுடைய தூதர்கள், அவர்களுடைய “சரீரங்கள்” (பேதுரு அந்த சரீரத்தில் திரும்பி வந்ததாக கருதப்பட்டான்…) பாருங்கள், காத்துக்கொண்டிருந்தது. “பரலோகத்தில், பரம பிதாவின் சமுகத்தை தரிசித்தவைகளாய்,” அவை எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் உள்ளன; “அவர்கள் அதை அறிந்திருக்கின்றனர்.” அங்கு தான் காரியமே உள்ளது.
125334 [ஒரு சகோதரன், “இயேசு அவருடைய உயிர்த்தெழுதலின் முதலாம் கட்டத்தில், அவர், ‘என்னைத் தொடாதே,’ அவர் இன்னும் மேலே ஏறிப்போகாதிருந்தார். அதன் பிறகு தோமா இருந்த அறைக்குள் அவர் வந்தபோது, அவர், ‘இங்கு வந்து உன் கையை நீட்டி என் விலாவிலே போடு; உன்னுடைய விரலைப் போடு’ என்று சொன்னதைப் புரிந்துகொள்ள சிறிது கடினமாயுள்ளது” என்கிறார்—ஆசி.] அது உண்மை, அவர் இன்னும் மேலே ஏறிப்போகவில்லை. [“மேலும் ஒரிடத்தில் அவர்—அவர் அவர்கள் அவரைத் தொட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தோமாவிடம் அருகில் வந்து அவரைத் தொடும்படி சொல்லுகிறாரே, அந்த—அந்த இரண்டிலும் வேறுபாடு காணப்படுகிறதே.”] அவர் இன்னும் ஏறிப்போகவில்லை, நீங்கள் பாருங்கள். அவர்… [‘“நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை.’”] 335 அது உண்மை, பாருங்கள், அது வரைக்கும் அவர் தொடப்படக் கூடாது…அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு. அவர் பூமியிலிருந்து வெளியே வந்திருந்தார், நீங்கள் பாருங்கள். அவர் கல்லறையிலிருந்து வெளியே வந்து, மனிதர் மத்தியில் நடமாடிக்கொண்டிருந்தார், ஆனால் அவர் இன்னும் ஏறிப்போகவில்லை. அவர் சொன்னார்…அவர் மரியாளிடம், “என்னைத் தொடாதே” என்றார். அவள், “ரபூனி” என்றாள். 336 அவர், “தொடா…என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. ஆனால் நான் என் தேவனிடத்திற்கும் உங்களுடைய தேவினிடத்திற்கும், என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் ஏறிப்போகிறேன்” என்றார். 337 அதன் பிறகு அன்றிரவு, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்த பிறகு, தேவனிடத்திற்கு சென்று வந்தார், தேவனிடத்திற்கு சென்று வந்தார். அங்கிருந்து திரும்பி வந்து, அவரை விலாவில் தொட்டுப் பார்க்கும்படி அவர் தோமாவை அழைத்தார். பாருங்கள், அவர் தேவனிடத்திற்கு ஏறிப்போனார். அது உண்மை. சரி.
126118. இப்பொழுது. முதலாம் கொரிந்தியர் 14-ம் அதிகாரத்தில், “அன்பை நாடுங்கள்—நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. வெப்ஸ்டர் அகராதி, “தீர்க்கதரிசனம் உரைத்தல்: வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்னுரைத்தல், முக்கியமாக தெய்வீக ஏவுதலினால்,” என்று கூறுகிறது. ஒரு செய்தி… இப்பொழுது அவர்கள்…அதாவது—அப்படித் தான் வெப்ஸ்டர் கூறியுள்ளார் மற்றும் அதை தான் அந்த—அந்த சகோதரன் கேட்டார். வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்னுரைக்காத செய்தி “தீர்க்கதரிசனம்” என்று அழைக்கப்பட முடியுமா? இல்லை, ஐயா. தீர்க்கதரிசனம் என்பது “முன்னுரைத்தல்” என்பதாகும். புரிகிறதா? சரி.
127119. இப்பொழுது. முதலாம் கொரிந்தியர் 14:27-ன்படி, அந்நிய பாஷைகளில் அளிக்கப்படும் எல்லா செய்திகளுக்கும் அர்த்தம் உரைக்கப்பட வேண்டும், எந்த ஒரு ஆராதனையிலும் அந்நிய பாஷைகளில் மூன்று செய்திகளுக்கு மேல் கொடுக்கப்படக் கூடாதென்று நான் நினைக்கிறேன். 338 அப்படித் தான் வேதம் கூறுகிறது. அதை இங்கு நான் எழுதி வைத்திருக்கிறேன். நிச்சயமாகவே, நாம்…அதைக் குறித்து நமக்கு நன்றாகத் தெரியும், நீங்கள் பாருங்கள். அது…ஆம், ஐயா, அது…மூன்று பேர் மட்டும். அது முதலாம் கொரிந்தியர் 14-ல் கூட உள்ளது. புரிகிறதா? அது உண்மை, “மூன்று பேர் மட்டும்.” சகோதரரே, இப்பொழுது அதை உங்கள் கூட்டங்களில் கவனித்துக்கொள்ளுங்கள். இப்பொழுது, நீங்கள்—நீங்கள் இப்பொழுது அது நிகழ்வதை கண்டறிவீர்கள், ஏராளமான பேர் உற்சாகமடைகிறதை நீங்கள் கண்டைவீர்கள். அவர்களுக்குப் பரிசுத்த ஆவி இல்லை என்று இப்பொழுது சொல்லிவிடாதீர்கள். ஆனால், நீங்கள் பாருங்கள், கொரிந்து சபையை ஒழுங்குபடுத்துவதற்காக பவுல் சென்றிருந்தான். அது நம்மெல்லாருக்கும் தெரியும், நமக்கு தெரியுமல்லவா? அதை அவன் ஒழுங்குக்குள் கொண்டு வர வேண்டியதாயிருந்தது. அவன், “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” என்றான்.
128339 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், பவுலுக்கு, அங்கே செல்லுகையில், கொரிந்து சபையினால் எப்பொழுதுமே தொல்லை உண்டாகிக்கொண்டிருந்தது. அந்த விதமாக அவனுக்கு…அவன் எபேசு சபைக்கு அப்படிப்பட்ட எதையும் கூறவில்லை. அவர்களுக்கு அவனால் நித்திய பாதுகாப்பைக் குறித்து போதிக்க முடிந்தது. ஆனால் கொரிந்து சபைக்கு அவன் எழுதின நிரூபத்தில், நித்திய பாதுகாப்பைக் குறித்து ஒன்றுமே காணப்படவில்லை. அவர்கள் எப்பொழுதுமே குழந்தைகளாகவேயிருந்து, “ஒருவன் அந்நிய பாஷையைப் பேசினான், ஒருவன் சங்கீதம் பாடினான்.” அது சரியல்லதானே? புரிகிறதா? நீங்கள் உங்கள் சபையோர் அவ்விதம் தொடங்கும்படி விட்டுவிடுவீர்களானால்… 340 மார்டின் லூத்தரைப் போல, அவர் ஆவியில் நிறைந்து அந்நிய பாஷையில் பேசினார். அவர் தன்னுடைய நாட்குறிப்பு புத்தகத்தில் எழுதி வைத்துள்ளார், அவர், “நான் அந்நிய பாஷையில் பேசினேன்,” என்று கூறிவிட்டு, மேலும் அவர், “ஆனால் அதை நான் என் ஜனங்களுக்குப் போதித்தால்” என்று கூறி, “அவர்கள் வரத்தைக் கொடுப்பவரை நாடுவதற்கு பதிலாக வரத்தை நாடிக்கொண்டிருப்பார்கள்” என்று எழுதி வைத்துள்ளார். அவர் கூறினது உண்மை, பாருங்கள், அவர்கள் வரத்தை கொடுப்பவரை நாடுவதற்கு பதிலாக வரங்களை நாடுவார்கள். 341 அதை தான் ஜனங்கள் பெற்றுக் கொள்கின்றனர், அவர்களை அந்நிய பாஷையில் பேச அனுமதிக்கும்போது அல்லது அதைப் போன்ற காரியத்தைச் செய்யும்போது, அப்பொழுது அவர்கள் எல்லோரும் குழப்பமடைந்து பெருமைகொள்கின்றனர். அது தேவனால் உண்டாகாமல் போனால், அப்பொழுது அதுவல்ல…அது ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆனால் நாம்… 342 இப்பொழுது, நவீன சபைகள் அதை தலைகீழாக செய்துவிடுகின்றன, ஆனால் நாமோ அவ்விதம் செய்வதில்லை. அது தேவனுடைய வரம் என்றும், அது தேவனுடைய ஆவியால் அங்கு அளிக்கப்படக் கூடும் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். சகோதரன் ராய், அதைக் குறித்து எப்படி? அது உண்மை. ஆம், ஐயா. அதை சபையில் வையுங்கள்! அது சபைக்கு சொந்தமானது. அந்நிய பாஷைகளில் பேசும் வரம் அங்கே, பாருங்கள், தேவனுடைய சபைக்கு சொந்தமானதாயுள்ளது.
129343 இப்பொழுது, இங்கே அவருடைய கேள்வி சரியாக என்னவாயிருந்தது என்று இப்பொழுது பார்ப்போம். அது, என்ன கூறுகிறதென்றால்: எல்லா செய்திகளுக்கும் அர்த்தம் உரைக்கப்பட வேண்டும்… (அது சரி) …அதுவும் மூன்று பேர் மட்டில் என்று நான் நினைக்கிறேன். 344 அது சரி, பாருங்கள், ஏனெனில் நீங்கள் அதற்கு மேல் அனுமதித்தால்… இப்பொழுது, உதாரணமாக, நீங்கள் கூட்டம் ஒன்றை நடத்துகிறீர்கள் என்றும், நாமெல்லாரும் அங்கு உட்கார்ந்துகொண்டிருக்கிறோம் என்றும் மற்றும்—மற்றும்…நாம் வைத்துக்கொள்வோம். இப்பொழுது, இவரை அந்நிய பாஷையில் பேசவிட்டு, இவரை அந்நிய பாஷையில் பேசவிட்டு, இவரை அந்நிய பாஷையில் பேச விட்டு, இவரை விடுவதனால் என்ன பயன்? ஏன், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று கூட அறியாதபடிக்கு நாமெல்லாரும் மிகுந்த குழப்பமடைவோம். புரிகிறதா? மூன்று பேர் மட்டில், விடு…உதாரணமாக, ஹாலின், அவர் அந்நிய பாஷையில் பேசுகிறார், அவர் அந்நிய பாஷையில் பேசுவாரானால்… 345 அர்த்தம் உரைப்பவர் ஒருவர் இருக்க வேண்டும். இப்பொழுது, நீங்கள் பேசும் அந்நிய பாஷைக்கு நீங்களே அர்த்தம் உரைக்கவில்லையென்றால், அதற்கு அர்த்தம் உரைப்பவர் ஒருவர் இருக்கலாம். இப்பொழுது, நீங்கள்…“அந்நிய பாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்.” அவன் தான் பேசின அந்நிய பாஷைக்கே அர்த்தம் உரைப்பதென்பது, வேறொருவர் அதற்கு அர்த்தம் உரைப்பது எவ்வளவு முறையோ, அவ்வளவு முறையானது. ஆனால் அந்நிய பாஷையில் பேசுவதற்கு முன்பு…அங்கு அர்த்தம் உரைப்பவர் ஒருவர் இருந்தாக வேண்டும். அந்நிய பாஷைகளில் பேசுகின்ற சிலர் அங்கு இருந்து அதற்கு அர்த்தம் உரைப்பவர் இல்லாமல் போனால், அப்பொழுது நீங்கள் என்ன—நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதற்கு நீங்களே அர்த்தம் உரைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள்.
130346 இப்பொழுது, நீங்கள் பெருமைக்காக அப்படிச் செய்யாதீர்கள், ஏனெனில் நீங்கள் உங்கள் பக்திவிருத்திக்காகவே இதை செய்கிறீர்கள், நீங்கள் பாருங்கள். பெருமைக்காக அதைச் செய்யாதீர்கள். நீங்கள் தேவனை மகிமைப்படுத்தவும், சபை பக்திவிருத்தி அடைவதற்கும் ஏதுவாக அப்படிச் செய்யுங்கள். நீங்கள் பாருங்கள், இவையனைத்தும் ஒரு பெரிய காரணத்துக்காகவே, சகோதரனே. இந்த வரங்கள் தேவனை மகிமைபடுத்தவும், சபையை பக்திவிருத்தியடைய செய்வதற்காகவும், ஜனங்களை தேவனிடத்தில் கொண்டு வருவதற்காவும், தேவன் நம்முடன் இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்வதற்காகவுமே. அவர் மரித்துப்போன தேவன் அல்ல, அவர் ஜீவனுள்ள ஒரே தேவனாய் நமது மத்தியில் கிரியை செய்துகொண்டிருக்கிறார். புரிகிறதா? 347 அதை நாம் உண்மையாகவே கூர்ந்து கவனிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம், ஏனெனில், அது போன்ற ஒவ்வொரு காரியத்தையும், நீங்கள் பாருங்கள், உண்மையான வரங்கள் கிரியை செய்வதைக் காண்பதை பிசாசு வெறுக்கிறான். வரங்கள் பலவீனமானவை, எனவே இந்த வரங்களை அவன் உபயோகித்து அவனால் கிரியை செய்ய முடியும். ஓ, இவைகள் ஒவ்வொன்றையும் அவனால் உண்மையில் பாவனை செய்ய முடியும். எனவே அந்தக் காரணத்தால் தான்…
131348 இப்பொழுது, பாருங்கள், தீர்க்கதரிசன வரம் பெற்றுள்ள ஒருவருக்கும் ஒரு தீர்க்கதரிசிக்கும் இடையே வித்தியாசம் உண்டு, அதற்கு இடையே கோடிக்கணக்கான மைல்கள் வித்தியாசம் உண்டு. ஒரு தீர்க்கதரிசனம் அளிக்கப்படுவதற்கு முன்பு…ஒரு தீர்க்கதரிசன வரம் பெற்ற ஒரு மனிதன் என்ன கூறினார் என்பதை சபைக்கு அறிவித்து, இரண்டு அல்லது மூன்று பேர் அதை பகுத்தறிந்து, “அது உண்மை” என்பதை ஆமோதிக்க வேண்டும். அது உண்மை. ஆனால் ஒரு தீர்க்கதரிசிக்கு அல்ல. புரிகிறதா? ஒரு தீர்க்கதரிசி என்பது ஒரு உத்தியோகம். தீர்க்கதரிசன வரம் என்பது ஒரு வரம். ஒரு தீர்க்கதரிசி பிறப்பின்போதே, தீர்க்கதரிசியாகப் பிறந்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டிருக்கிறான், சகோதரனே, தொடர்ந்து அதை உடையவனாயிருக்கிறான். அதில் வேறெதுவும் இல்லை, நீங்கள் பாருங்கள். அது தான் ஒரு தீர்க்கதரிசி. ஆனால் ஒரு தீர்க்கதரிசன வரம், அது ஒரு வரம், நீங்கள் பாருங்கள். ஒன்று தேவனால் அளிக்கப்பட்ட உத்தியோகம், மற்றது தேவனால் அளிக்கப்பட்ட வரம். புரிகிறதா? அது தான் வித்தியாசம்.
132349 இப்பொழுது, செய்திகள், உதாரணமாக, இப்பொழுது, இவ்விதமாக இருக்க வேண்டும். இப்பொழுது, நாம் கூறலாம், சகோதரன் ஜூனியைப்போல, இன்றிரவு, அவர் அர்த்தம் உரைக்கிறார். அவர் அர்த்தம் உரைப்பவர் என்று நமக்குத் தெரியும். சகோதரன் நெவிலும் அர்த்தம் உரைப்பவர், பாருங்கள், அந்நிய பாஷைகளுக்கு அர்த்தம் உரைப்பவர். அது நமக்குத் தெரியும். இப்பொழுது, இன்றிரவு இங்கு நாம் உட்கார்ந்து கொண்டிருக்கையில், ஒ, தேவ ஆவியானவர் பேசுவதற்கு துடி துடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். என்னே! மேலும் நாம் அல்ல…இதை நாம் பெற்றிருக்கிறோம்…காத்திருங்கள், சபை ஆராதனை இன்னும் சில நிமிடங்களில் துவங்கப் போகின்றது. பாருங்கள், சபை துவங்குவதற்கு முன்பாக நாம்—நாம் கூடியிருக்கிறோம். இங்கு நாம் கடைபிடிக்கும் ஒழுங்கின் பிரகாரமாகவே இதை வரிசைப்படுத்தி கூறிக்கொண்டிருக்கிறேன். 350 பாருங்கள், அப்படியானால், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, சகோதரன் ரடல் எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசுகிறார். ஒரு நிமிடம் பொறுங்கள். புரிகிறதா? ஜூனி குதித்தெழுந்து, “ கர்த்தர் உரைக்கிறதாவது , ‘ஒரு குறிப்பிட்ட-குறிப்பிட்ட காரியம் நடக்கப் போகிறது’” என்கிறார். சரி, இங்குள்ள யாராகிலும், ஒருவரைக் குறித்து சொல்லுகிறார், அப்பொழுது பதிவாளர்கள் அதை இங்கே, பாருங்கள், என்ன கூறப்பட்டதோ, அதை எழுதிக்கொள்கின்றனர்; உ-ஊ, நாம் இதை எடுத்துக்கொண்டு வேகமாக பார்ப்போம், ஏனென்றால் அது…அவர் என்ன சொன்னார் என்பதை, தாமதமின்றி பெற்றுக்கொள்வோம். சரி, அவர்கள்…அது மறுக்கப்பட்டால், அப்பொழுது நீங்கள்—நீங்கள் அதை விட்டுவிடுவது மேலானதாகும், பாருங்கள், அதை கிழித்துப் போட்டுவிடுங்கள். ஆனால் அது மறுக்கப்படவில்லையென்றால், அதை இரண்டு பேரால் அங்கீகரிக்கப்படுன்றது, அதன் பிறகு அது இங்கு எழுதப்படுகின்றது, அவர்கள் தங்களுடைய பெயர்களை அதில் கையொப்பமிடுகின்றனர். பார்த்தீர்களா? அது—அது—அது உங்கள் சபைக்காகவே. அது…உங்கள் நன்மைக்காகவே நான் இதையெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன், பாருங்கள், அவர்கள் அவ்விதம் தொடக்கத்திலே செய்தார்களோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது.
133351 முதலாவதாக உங்களுக்குத் தெரியுமா, ஹாலின் குதித்தெழுந்து அந்நிய பாஷையில் பேசுகிறார். இப்பொழுது, அர்த்தம் உரைக்கிறவர் முன்பு கூறின அதே செய்தியை கூறலாம், பாருங்கள், அது அதே செய்தியாக இருக்கலாம், சம்பவிக்கப்போகிற ஒரு குறிப்பிட்ட காரியம், ஒரு தீர்க்கதரிசனம்; பாருங்கள், நடக்கவிருக்கும் ஏதோ ஒரு சம்பவம், அல்லது நீங்கள் செய்ய வேண்டிய ஏதோ ஒன்று. பின்னால், உள்ள சகோதரன் ராபர்ஸன் குதித்தெழுகிறார், அவரும் அந்நிய பாஷையில் பேசுகிறார். சரி. அதுவும் முன்பு மற்றவரால் அளிக்கப்பட்ட அதே செய்தியாக இருக்கக் கூடும், அதற்கு அதே அர்த்தம் உரைக்கப்படக் கூடும், பாருங்கள், அல்லது இவை மூன்று செய்திகளாக இருக்கலாம். 352 இப்பொழுது, தேவன் ஒரே இரவில் ஜம்பது செய்திகளை அளிக்கமாட்டார். அது நமக்குத் தெரியும், ஏனெனில் உங்களால்—உங்களால் அவைகளை கிரகித்துக்கொள்ள முடியாது. உங்களுக்குப் புரிகிறதா? ஆனால் சபையை ஏதாகிலும் துன்புறுத்திக்கொண்டிருந்தால், உதாரணமாக…அல்லது அது எதாகிலும் ஒன்றைச் செய்துகொண்டிருந்தால், அது சபை சீர்பொருந்துவதற்காகவே. புரிகிறதா? அதற்கு மேல் நான்—நான்—நான் அனுமதிக்க மாட்டேன், பாருங்கள், ஏனெனில் “மூன்று பேர் மட்டில் இருக்கட்டும்” என்று கூறப்பட்டுள்ளது. புரிகிறதா?
134353 மூன்று பேர் மட்டில், அதன் பிறகு—அதன் பிறகு நான், “தொடர்ந்து, அவைகளை எழுதி பிரசங்க பீடத்தின் மேல் வைத்துவிடுங்கள்” என்பேன். புரிகிறதா? பிறகு அடுத்த நாள் இரவு நாம் மறுபடியும் சந்திக்கிறோம். புரிகிறதா? இன்றைக்கும் நாளை இரவுக்கும் இடையே ஏதாகிலும் ஒன்று நடக்கவிருந்தால், தேவன் அச்செய்திகளில் ஒன்றில் அதை கூறியிருப்பார். நான் கூறுவது விளங்குகிறதா? அது மூன்று பேர் மட்டில் அடங்கியிருக்கட்டும். இப்பொழுது நான் நினைக்கிறேன், வெப்ஸ்டர் கூறுகிறார் என்றால், தீர்க்கதரிசனமானது… ஒரு கேள்வி…வரப்போவதை முன்னுரைக்காத ஒரு செய்தி தீர்க்கதரிசனம் என்று அழைக்கப்படலாமா? 354 இல்லை. அது தீர்க்கதரிசனமாக இருந்தால், அது தீர்க்கதரிசனம் உரைத்தலாக இருக்குமானால், அது வரப்போவதை அறிவிக்க வேண்டும். அது உண்மையும் கூட.
135355 சரி, நான் நினைக்கிறேன்…இப்பொழுது, நாம் இங்கே இவைகளுக்கு வரும் வரை இதுவே கேள்வியின் கடைசி ஒன்றாகும். 120. சகோதரன் பிரான்ஹாமே, இவைகளில் ஏதாவதொன்று… சகோதரன் பிரான்ஹாமே, இந்த கேள்விகளில் ஏதாவது… இது தட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது மற்றும் இது கிட்டத்தட்ட அழிந்துபோயிருக்கிறது. இந்த கேள்விகளில் ஏதாவது…சகோதரன் பிரான்ஹாமே, இக்கேள்விகளில் ஏதாவதொன்றுக்கு பதில் சொல்லவோ அல்லது உறுதியளிக்கவோ… இல்லை விளக்கம் கூறவோ (ஆம்), விளக்கம் கூறவோ உங்களுக்கு ஏவுதல் இல்லாமற்போனால், அதை ஒருபுறம் தள்ளி வைத்துவிடுங்கள், நான் தவறாக நினைக்கவே மாட்டேன். வேததத்தின்படி, ஒரு உதவிக்காரனின் முழு கடமைகள் என்ன? 356 பாருங்கள், அவர்கள் அதை அங்கு வைத்திருக்கின்றனர் என்று நான்—நான் நம்புகிறேன். அது…இக்கேள்வியைக் கேட்டது நமது சபையின் உதவிக்காரர்களில் ஒருவர் என்று எனக்குத் தெரியும். அதனால் அவர்கள் அங்கே அதைக் குறித்த ஒழுங்கு முறையை வைத்துள்ளனர் என்று நான் நம்புகிறேன். நம்மிடம் வேறு பிரதிகள் இல்லையென்றால், அதில் இன்னும் நில நகல்களை எடுத்து, நமது உதவிக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் அதை கொடுக்க வேண்டும். ஜீன், நாம் அதனுடைய ஒரு நகலை எடுக்க முடியுமா என்று எதிர்பார்க்கிறேன், ஒன்று…அல்லது, நீங்கள் அல்லது சகோதரன் லியோ அல்லது அவர்களில் சிலர், அதைப் பற்றி…சுமார் ஏழு அல்லது எட்டு நகல்கள் எடுத்து அவைகளை நமது உதவிக்காரர்களுக்குக் கொடுங்கள். வேதத்தின்படி, அது ஒரு உதவிக்காரர் என்ன செய்ய வேண்டுமென்ற கடமைகளை, வேத பிரகாசமாக அளிக்கிறது.
136121. நமக்கு ஒழுங்குக்கு அப்பாற்பட்ட தீர்க்கதரிசனம் உரைத்தல், அல்லது அந்நிய பாஷையில் செய்தி அளித்தல் இருக்குமானால், அதை நாம் எவ்விதம் திருத்த வேண்டும்? 357 இப்பொழுது, அது ஒரு நல்ல அவசர நிலையில் உள்ள கேள்வி, பாருங்கள். பார்த்தீர்களா? இப்பொழுது, இதைக் கேட்ட உதவிக்காரரே, தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக, ஏனெனில் இது ஒரு நல்ல காரியம். அதை நீங்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். இப்பொழுது, நீங்கள் ஒரு…இங்குள்ள நமது சபைக்கு யாராகிலும் ஒருவர் வந்து ஒழுங்கின்படி இல்லாமல் அந்நிய பாஷையில் ஒரு செய்தியையோ அல்லது தீர்க்கதரிசனமோ உரைப்பாரானால், அவர்கள் அந்நிலையில் இருந்தால் அதைக் குறித்து நீங்கள் ஒன்றுமே செய்ய முடியாது. புரிகிறதா? நீங்கள்…அவர்கள் ஒழுங்கில் இல்லை என்று அவர்களுக்குத் தெரிகிறது, அது—அது…ஆராதனையை பாழாக்கிவிடக் கூடும். புரிகிறதா? ஆனால், அவ்விதம் அது பாழாக்குகிறதென்றால், உதவிக்கார், செய்ய வேண்டிய மிகச் சிறந்த காரியம், அப்படியே அமைதலாயிருப்பதே. புரிகிறதா? ஏனெனில் மேடையின் மேலுள்ள தீர்க்கதரிசி தான் உண்மையில்… நீங்கள்—நீங்கள் அவருடைய பாதுகாப்பாய் இருக்கிறீர்கள், நீங்கள் அவருடைய காவல்காரர்கள், பாருங்கள், நீங்கள் நமக்கு சுற்றிலும் காவலராய் இருக்கிறீர்கள். புரிகிறதா? 358 இப்பொழுது, அது யாராகிலும் நம்முடைய சபை-…அது யாராகிலும் நம்முடைய சபையைச் சார்ந்திராதவர்களாயிருந்தால், அந்த நபர் இதைக் குறித்து பயிற்சி பெறாதவர், பாருங்கள், அவர்கள் பயிற்சி பெற்றிருக்கவில்லை. அதைத்தான் நாங்கள் இங்கே பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், பாருங்கள், அதாவது என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்—நாம் அறிவோம். நமது ஜனங்களுக்கு எவ்விதம் பயிற்சி கொடுக்க வேண்டுமென்று நமக்குத் தெரியும். ஆனால் அது—அது நமது சபையில் இல்லாத ஒருவராக இருக்குமானால், பாருங்கள், அந்த நபர் எவ்விதம் பயிற்சி பெற்றிருக்கிறார் என்று நமக்குத் தெரியாது.
137359 உதாரணமாக, இது போன்ற…கலிபோர்னியாவிலுள்ள கோஸ்டா மீஸா என்னுமிடத்தில் நடந்த இந்த சம்பவம், பில்லிக்கு ஞாபகமிருக்கும். ஒவ்வொரு முறையும் நான் பீட அழைப்பு கொடுக்க ஆயத்தமானபோது, ஒரு ஸ்திரீ குதித்தெழுந்து, உட்பாதையில் மேலும் கீழும் ஓடி, அந்நிய பாஷையில் பேசி, பீட அழைப்பை சுக்குநூறாக கிழித்தெறிந்தாள். நான் அங்கிருந்து நடந்து செல்ல வேண்டியதாயிருந்தது. ஆவியானவர் துக்கமடைந்ததை நீங்கள் அங்கு காண முடிந்தது, நீங்கள் பாருங்கள். அது ஒழுங்கின்படி இருக்குமானால், அது தேவனுடைய ஆவியை துக்கப்படுத்தாது. புரிகிறதா? [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] …அவள் தொடங்க ஆயத்தமாவதற்கு முன்பே அவள் தன்னை எவ்விதம் ஆயத்தப்படுத்திக் கொண்டாள், ஏனெனில் அவளை நான் கவனித்து வந்தேன். ஒழுங்கின்படி இல்லாத ஒன்றைக் காணும் எந்த ஊழியக்காரனும், அவன் அவ்விதமே செய்வான். அப்பொழுது அந்த ஸ்திரீ அங்கே பின்னால் சென்று பில்லியிடம் கூறினாளாம், அன்றிரவு நாங்கள் திரும்பி வரும்போது பில்லி என்னிடம் கூறினான், “அப்பா, பீட அழைப்பை, இரண்டு இரவுகள், அவைகளை—அவைகளை தடை செய்த அந்த ஸ்திரீயை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான். “தெரியும்” என்றேன். 360 அப்பொழுது, “அவள் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தாள்,” “அவள், ‘தேவனுக்கு மகிமை, பில்லி, இன்றிவு என்னிடம் வேறொரு செய்தி உண்டே!’ என்றாள்” என்று கூறினான். 361 சரி, இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அவளை கூட்டத்தினரின் மத்தியில் கவனித்துக் கொண்டேயிருந்தேன். அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் குழுமியிருந்தனர்; அங்கு டானி மார்டின் சுகமடைந்ததைக் குறித்து தான் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்னும் பத்திரிக்கை டானி மார்டினுக்கு நடந்த அற்புதம் என்னும் தலைப்பில் வெளியிட்டது. எனவே அந்த ஸ்திரீயை நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன், கிட்டத்தட்ட என்னுடைய பீட அழைப்பைக் கொடுக்க நான் தொடங்கின நேரத்தின்போது, அவள்…இப்பொழுது, அவள் சரியான பயிற்சி பெற்றிருக்கவில்லை; அவள் நல்லவள் என்பதில் சந்தேகமில்லை. அவள் சுற்றுமுற்றும் பார்த்து, அவள் தன்னுடைய தலைமுடியை சரிசெய்ய ஆரம்பித்தாள். அவள் தலைமுடியை கத்தரித்துவிட்டிருந்தாள், பாருங்கள். அப்படியானால், நீங்கள் பாருங்கள், அவள் அதை அனுமதிக்கும் அசெம்பிளீஸ் சபையையோ அல்லது அந்த—அந்த வேறெதாவது சபையையோ சேர்ந்திருக்க வேண்டும். அவள் தன்னுடைய தலைமுடியை மேலே கட்டிக் கொண்டிருந்தாள். தன்னுடைய காலுறையை மேலே இழுத்துவிட்டுக்கொண்டு, அந்த விதமாக ஆயத்தமானாள். நான் பீட அழைப்பைக் கிட்டத்தட்ட கொடுக்கத் துவங்கின நேரத்தில்… நான், “இப்பொழுது, இங்குள்ள எத்தனை பேர்… இப்பொழுது எத்தனை பேர் முன்னால் வந்து உங்களுடைய இருதயங்களை கர்த்தராகிய இயேசுவுக்கு அளிக்க விரும்புகிறீர்கள்?” என்றேன்.
138362 அவள் குதித்தெழுந்தாள். நான், “உட்காரு” என்றேன். அவள் மறுபடியும் செய்யத் தொடங்கினாள். அப்பொழுதும் நான், “உட்காரு” என்றேன். பார்த்தீர்களா? மேலும், மகனே, எல்லோருமே…நான் அப்படியே நின்றேன். அவள் நான் சொன்னதைக் கேளாதது போல் மறுபடியும் அதைச் செய்தாள், நான் மறுபடியும் கூச்சலிட்டேன். அந்த முறை அவளுக்கு கேட்டது, ஏனெனில் அங்கிருந்த பெரிய ஒலிபெருக்கியின் மூலம் நான் போட்ட சத்தம் கட்டிடத்தையே குலுக்கியிருக்கும். அவள் உட்கார்ந்துகொண்டாள். 363 நான் தொடர்ந்து, “இப்பொழுது, நான் கூறின வண்ணமாக, எத்தனை பேர் பீடத்தண்டையில் வந்து உங்களுடைய இருதயங்களை தேவனுக்கு அளிக்க விரும்பிகிறீர்கள்?” என்றேன். நான் கூட்டத்தை தொடர்ந்து நடத்தினேன், பாருங்கள். 364 மேலும் அன்றிரவு நான் வண்டியில் புறப்பட ஆயத்தமானபோது, ஒரு கூட்ட ஸ்திரீகள் என்னைச் சூழ்ந்துகொண்டனர். கோழிக் கூட்டம் சத்தமிடுவதைப்போல், உங்களுக்குத் தெரியுமா, “நீங்கள் பரிசுத்த ஆவியை தூஷித்துவிட்டீர்கள்” என்றனர். 365 நான் அதற்கு, “நானா செய்தேன்?” என்றேன். நான், “வேதவாக்கியங்களின் அறிவிப்பை…உபதேச-பின்பற்றுவதினால் நான் எப்படி பரிசுத்த ஆவியை தூஷிக்க முடியும்?” என்று கேட்டேன். புரிகிறதா? 366 இந்த ஸ்திரீ, “நான் தேவனிடமிருந்து நேரடியாக ஒரு செய்தியைப் பெற்றிருந்தேன்” என்றாள். 367 நான், “ஆனால், சகோதரியே, அதை தவறான நேரத்தில் கொடுத்துக்கொண்டிருந்தீர்கள்” என்றேன். நான், “அது…அல்ல” என்றேன். “அது—அது தேவனிடத்திலிருந்து வந்ததல்ல என்றா நீங்கள் கூறுகிறீர்கள்?” என்றாள். 368 அப்பொழுது நான், “பெண்மணியே, என்னால் உனக்கு சொல்ல முடியாது” என்றேன். மேலும் நான், “அது அவரிடமிருந்து வந்தது என்று நான்—நான்—நான் நினைக்கிறேன்” என்றேன். நான், “உன்னுடைய நன்மைக்காக நான் அதைக் கூறவுள்ளேன், அதாவது, ‘அது அவரிடமிருந்து வந்தது என்று நான் கூறுகிறேன்.’ நீ ஒரு நல்ல பெண்மணி என்று நான் நம்புகிறேன், ஆனால் நீ ஒழுங்கைத் தவறிவிட்டாய்” என்றேன். 369 அவளுடைய மேய்ப்பர் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர் அவளுடைய மேய்ப்பராயிருந்தார் என்பதை நான் அறிந்து கொண்டேன், பாருங்கள். மேலும் நான் சொன்னேன்…நான்—நான், “ஒன்றுமட்டும் என்னால் கூற முடியும், ஒன்று நீ மாம்சபிரகாரமாக இருந்திருப்பாய், அல்லது வேதவாக்கியங்களைக் குறித்து ஒன்றுமே அறிந்ததிராமல் உனக்கு பயிற்சி அளித்துள்ள ஒரு மேய்ப்பரை நீ உடையவராயிருக்க வேண்டும்” என்றேன். நான் தொடர்ந்து, “அவர் எங்களிடம் வந்து, சிறிது நேரம் வேதத்தைக் குறித்து பேச வேண்டும். அது தவறு, நீ ஒழுங்கையும் மீறிவிட்டாய். நேற்றுக்கு முந்தின இரவும், மீண்டும் நேற்றும் நீ அநேக ஆத்துமாக்களை இழந்துவிட்டாய், இன்றிரவும் நீ அதையே செய்திருப்பாய்” என்றேன். 370 மேலும் இந்த மனிதன், “சகோதரன் பிரான்ஹாமே,” என்று கூறி, “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார். நான், “நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டேன். 371 அவர், “நீங்கள் முடித்துவிட்டீர்கள், எனவே அவளுக்கு செய்தி அளிக்க உரிமையுண்டு” என்றார். 372 நான், “நான் மேடையின் மேல் இருந்தேன், தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்க வேண்டும். நான் மேடையின் மேல் அப்பொழுது இருந்தேனே” என்றேன். அவர், “பாருங்கள்…” என்றார். 373 நான், “எனக்கு இன்னும் செய்தி இருந்தது. நான் அழைப்பைக் கொடுத்துக்கொண்டிருந்தேன், அவர்களை கூட்டுவதுபோல் கூட்ட. நான் என்னுடைய வலையை வீசி, நான் இப்பொழுது அதை இழுத்துக்கொண்டிருந்தேன். அதை தடுக்க நீங்கள் எந்த தடுக்கலையும் போடக் கூடாது அல்லது அதை நிலைகுலைந்துபோக செய்யக் கூடாது, பாருங்கள்” என்றேன். நான் தொடர்ந்து, “நான் அப்பொழுதும் வலையை இழுத்துக் கொண்டிருந்தேன்” என்றேன். மேலும்—மேலும் நான், “அவளோ ஆத்துமாக்களை உள்ளே கொண்டு வருவதில் தலையிட்டுக் கெடுத்துவிட்டாள். அந்த…பாவிகள் வருவதற்கு நீங்கள் அழைப்பு விடுக்காமற்போனால், பிரசங்கிப்பதனால் அல்லது வேறெதைச் செய்வதினாலும் என்ன பயன்? புரிகிறதா?” என்றேன். 374 அப்பொழுது அவர், “சரி, அவள் செய்தி உங்கள் செய்திக்குப் பிறகு அளிக்கப்பட்டது. அவளுடையது மேடைக்குப் புறம்பே இருந்தது…அவளுடையது நேரடியாக தேவனிடமிருந்து வந்ததாயிருந்தது” என்றார். 375 நான், ‘“ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் கூறுவது கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும். எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட வழக்கமில்லை’” என்று பவுல் கூறியதை மேற்கோள் காட்டினேன், உங்களுக்குத் தெரியுமா. நான், “இல்லை, ஐயா, எதையும் புதிதாக நுழைக்கக் கூடாது! அவர்…இயேசு, ‘நானே சத்தியபரர், எந்த மனுஷனும் பொய்யன்’ என்று சொல்லியிருக்கிறார். பவுல், ‘இங்கு கூறப்பட்டுள்ளதைத் தவிர, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனும் வேறெதாவது கூறினால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்டவன்’ என்று சொல்லியிருக்கிறான்” என்றேன். நான், “திருவாளரே, நீங்கள் வரிசையிலிருந்து நிச்சயமாக விலகியிருக்கிறீர்கள்” என்றேன். நான், “உங்களுக்கு எப்படிப்பட்ட ஒரு சபை உள்ளது? அது ஒரு பெரிய குழப்பமாகத் தான் இருக்கும் என்று நான் நிச்சயமாகக் கூறுகிறேன். புரிகிறதா? ஜனங்கள் இதைச் செய்ய நீங்கள் அனுமதித்தால், உங்கள் பீட அழைப்பை நீங்கள் எவ்விதம் கொடுப்பீர்கள்? அவளுக்கு ஒரு ஊழியம் உண்டு, அவர்கள் எல்லோருக்கும் ஒரு ஊழியம் உண்டு, ஆனால் உங்களுடைய ஊழியத்துக்காக, பாருங்கள், கொடுக்கப்பட்டிருக்கிற நேரங்கள் உண்டு” என்றேன்.
139376 எனவே அது உண்மை. இல்லை, இங்கே சபையில் அந்நிய பாஷையில் பேசும் நம்முடைய சகோதரர்களாலோ அல்லது சகோதரிகளாலோ, இப்பொழுது அந்த விதமாக நம்முடைய சபையில், இந்த விதமாக நேர்ந்தால், இப்பொழுது, சபை முடிந்த பின்பு உதவிக்காரர்கள், நிர்வாகக் குழு அவர்களைச் சந்தித்து, “ஒரு சில நிமிடங்களுக்கு, நான் ஒரு ஒலிநாடாவைப் போட்டுக் காண்பிக்கட்டும், நீங்கள் பாருங்கள்” என்று கூறுங்கள். பாருங்கள், நீங்கள் அதை…அல்லது—அல்லது, போதகர், “போதகர் உங்களிடம் பேச விரும்புகிறார் என்று நான்—நான் நிச்சயம் நம்புகிறேன். எனவே இங்கே படிக்கும் அறையில் எங்களைச் சில நிமிடங்கள் சந்திப்பீர்களா, பாருங்கள், சகோதரனே” என்று கூறுங்கள். அங்கு சென்று அவரிடம் உண்மையாகவே நல்ல விதமாகப் பேசுங்கள். புரிகிறதா? மேலும் எடுத்துக் கூறுங்கள்… 377 ஆனால், இப்பொழுது, எல்லோருமே ஒழுங்கை மீறி உங்கள் போதகரை தொந்தரவு செய்வார்களானால், பாருங்கள், அவர்கள் உங்கள் போதகரை தொந்தரவு செய்வார்களானால், அப்பொழுது மூப்பர்களாகிய நீங்கள் அவரிடம் நடந்து சென்று, “ஒரு நிமிடம்” என்று சொல்ல வேண்டும். நீங்கள் அவர்களை நிறுத்தக் கூறும்படி போதகர் உங்களுக்கு சைகைக் காட்டினால், அப்பொழுது அது என்ன ஆவியென்பதை அவர் கிரகித்துக் கொண்டார், அதாவது அது… அதாவது அவர்கள் கூட்டத்தின் ஆவியை முறிக்கிறார்கள், நீங்கள் பாருங்கள்.
140378 போதகர் பிரசங்கத்தை நிறுத்திவிட்டு, பயபக்தியுடன் தன்னுடைய தலையை தாழ்த்துவாரானால், அப்பொழுது ஒன்றும் சொல்லாதீர்கள். புரிகிறதா? ஒன்றும் சொல்லாதீர்கள்; உங்கள் போதகர் அவ்விதம் செய்ய விட்டுவிடுங்கள். உங்கள் போதகரை கவனித்துக்கொண்டேயிருங்கள். அவர் உங்களுக்கு இப்படி சைகை காட்டி, நீங்கள் அதை நிறுத்த வேண்டும் என்று சொன்னால், அப்பொழுது கிறிஸ்தவ அன்புடன் நடந்து சென்று, “என் சகோதரனே, சகோதரியே,” அது யாராயிருந்தாலும், “நீங்கள் ஒழுங்கை மீறிவிட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் நீங்கள் தீர்க்கதரிசிக்கு தொந்தரவு விளைவித்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் பாருங்கள். அவர் தேவனிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றிருக்கிறார். அவர் தன்னுடைய செய்தியை பிரசங்கித்து முடிக்கும்போது, அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து அதைக்குறித்து நாம் பார்ப்போம்” என்று கூறுங்கள். அது அவருக்கு தொந்தரவு விளைவிக்குமானால், பாருங்கள். 379 ஆனால் யாராகிலும் வெளியே பேசினால், போதகர் மரியாதையுடன் பிரசங்கத்தை நிறுத்தி ஒரு நிமிடம் காத்திருந்தால், அப்பொழுது அவர்…ஒருவேளை அவர் உடனடியாக தொடங்கிவிடலாம், எனவே…நீங்கள் கவனிப்பீர்களானால், இதைப் போன்ற சம்பவங்களில் தொண்ணூறு சதவிகிதம், அர்த்தம் உரைத்தல் போன்றவை, வேத வசனங்களையே எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கும் அல்லது அந்த விதமான ஏதோ ஒன்றாக இருக்கும், அது இரு சாராரிடையேயும் அநேகமாக மாம்சபிரகாரமாக இருக்கலாம். நான் அந்த விதமாக என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். புரிகிறதா? சரி.
141122. அர்த்தம் உரைத்தல் இல்லாமல், ஒருவருக்கும் அதிகமானவர்கள் அந்நிய பாஷைகளில் செய்தியைப் பேச அனுமதி உண்டா? 380 இல்லை. அவை ஒன்றன் பின் ஒன்றாக வரவேண்டும். புரிகிறதா? ஒருவர் பேசி…ஒருவர் அந்நிய பாஷையில் பேசி, அதன் பிறகு அதற்கு அர்த்தம் உரைக்கப்பட வேண்டும். புரிகிறதா? அதன் பிறகு வேறொருவர் அந்நிய பாஷையில் பேசினால், அதற்கு அர்த்தம் உரைத்தாக வேண்டும்; ஏனென்றால் நீங்கள் அவ்விதம் செய்யாமற்போனால், அர்த்தம் உரைப்பவருக்கு அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றே தெரியாது, ஏனெனில் இரண்டு அல்லது மூன்று செய்திகள் ஒரேயடியாக அவர் மேல் இங்கே வரும்போது, அவருக்கு அது குழப்பமாக இருக்கும். தேவன் குழப்பத்துக்கு காரணர் அல்ல, நீங்கள் பாருங்கள். எனவே ஒருவர் அந்நிய பாஷையில் பேசட்டும், அதற்கு வேறொருவர் அர்த்தம் உரைக்கட்டும். புரிகிறதா? அதன் பிறகு…மூன்று செய்திகளை அளியுங்கள், ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உரைக்கப்படட்டும்.
142381 அப்பொழுது நமக்கு…உதாரணமாக சகோதரன் ரடல் அந்நிய பாஷையில் பேச, அதற்கு சகோதரன் நெவில் அர்த்தம் உரைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், சகோதரன் ஃபிரட் அப்பொழுது அமைதியாக இருப்பார். பாருங்கள், அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். முதலாவதாக, இது முதலில், தேவனால் உண்டானதா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். புரிகிறதா? சரி. இப்பொழுது, சகோதரன் ரடல் அந்நிய பாஷையில் பேசுகிறார், சகோதரன் பீலர் அந்நிய பாஷையில் பேசுகிறார், சகோதரன் நெவில் அந்நிய பாஷையில் பேசுகிறார், எதிர்பார்த்ததைவிட அர்த்தம் உரைப்பவருக்கு வரிசையாக மூன்று செய்திகள் இருக்கும்; என்ன—என்ன, அவருக்கு எங்கே என்ன செய்வதென்று தெரியும்? புரிகிறதா? அவரைத் தனியே விட்டுவிடுங்கள். செய்தியை அளித்த பிறகு நீங்கள் அமைதியாயிருங்கள், சற்று காத்திருங்கள். அவருக்கு பக்கத்தில் உள்ளவருக்கு ஏதாவதொன்று வெளிப்பட்டால்; அவர் அமைதியாயிருக்கட்டும், அப்படியே அமைதியாய் இருக்கட்டும். புரிகிறதா? அதன் பின்னர் அர்த்தம் வரட்டும். 382 அதன் பின்னர், நீங்கள் அர்த்தத்தை கேட்கும் போது, அதை எழுதிக்கொண்டு, பகுத்தறிபவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பாருங்கள். புரிகிறதா? அவர்கள், “பாருங்கள், அது—அது தேவனால் உண்டானது” என்பார்களானால். சரி, ஒரு செய்தி இருக்கிறது, பாருங்கள், அதை எழுதி வைக்கவும். அதன் பின்னர் அப்படியே ஒரு நிமிடம் காத்திருங்கள். முதலாவதாக உங்களுக்குத் தெரியுமா, பாருங்கள், ஆவியானவர் அடுத்ததாக யார் மேல் அசைவாடுகிறாரோ, அவர் அந்நிய பாஷையில் பேசுவார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்ன கூறப் போகிறார் என்று அறிய, அர்த்தம் உரைப்பவர் ஒரு நிமிடம் காத்திருப்பார். இதோ அவருக்கு அந்த செய்தியை வருகிறது, நீங்கள் பாருங்கள். அதன் பின்னர் அவர் அதை எழுதி வைக்க வேண்டும், பாருங்கள். அது மூன்று பேர் மட்டில் அடங்கியிருக்கட்டும்.
143123. சகோதரன் பிரான்ஹாமே, நீர் இந்த சபை காலத்துக்கு தேவனால் அனுப்பப்பட்ட செய்தியாளன் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இயேசுவைத் தொடர்ந்த அதே அடையாளங்கள் உம்மையும் தொடருவதை நாங்கள் காண்கிறோம், மேலும்…உம்மை நன்றாக அறிந்திருக்கும் சிலர் நீர் மேசியா என்று ஏன் நினைக்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது. உமக்கும் தேவனுக்கும், கிறிஸ்துவுக்கும் தேவனுக்கும் உள்ள உறவில் என்ன வித்தியாசம் என்று விளக்கிக் கூறுவீர்களா? 383 பாருங்கள், சகோதரரே, அது உண்மையென்று, எனக்குத் தெரியும். பாருங்கள், ஆனால் நாம் சற்று பொறுமையாயிருப்போம், அதைக் குறித்து இங்கு ஒன்றை எழுதி வைத்திருக்கிறேன், ஒரு நிமிடம் பொறுங்கள். பாருங்கள், அநேக சமயங்களில் அது தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. புரிகிறதா? ஆனால், இப்பொழுது, சில நேரம் அந்த நபரில்… உங்களில் சிலர் என்னுடன் லூக்கா, 3-ம் அதிகாரம் 15-ம் வசனத்துக்கு வேதாகமத்தைத் திருப்ப நான் விரும்புகிறேன். நீங்கள் அவ்விதம் செய்துகொண்டிருக்கும்போது, நீங்கள் அதை எடுக்கும்போது…நான் உங்களுக்கு கூறுவேனாக, அதாவது அது லூக்கா 3, அது ஒருகால்…அது…நான் அப்படியே…நான் உடனே முடித்துவிடப்போவதில்லை, ஏனெனில் அங்கு யாரும் இல்லை. சகோதரரே, இதை நான்—நான் உங்களுக்கு புரிந்துகொள்ளும்படிக் கூறட்டும். இதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், அது எல்லாவிடங்களிலும் கூறப்படுகிறது. ஆனால் நான் உங்களிடம் இதைக் கூறட்டும், பாருங்கள், அது அவ்விதமாகத் தான் வர வேண்டும். அது அவ்விதமாகத் தான் வர வேண்டும். அது அவ்விதமாக இல்லையென்றால், நான் என் செய்திக்காக மனஸ்தாபப்படுவேன்.
144384 கவனியுங்கள், சகோதரரே, இந்த விஷயத்தில் நீங்கள் அமைதியைக் கடைபிடிக்கும்படி கிறிஸ்துவின் முன்னிலையில் உங்களுக்குக்—உங்களுக்குக்—உங்களுக்குக் கட்டளையிடுகிறேன், ஆனால் நீங்கள் ஆவிக்குரியவர்களாயிருந்தால், இதை புரிந்துகொள்வீர்கள். புரிகிறதா? அவர் அந்த நதியில் முதலாவதாக என்ன கூறினார் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அவர் என்ன கூறினார் என்பது உங்களுக்கு ஞாபகமுள்ளதல்லவா? “கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, உன்னுடைய செய்தி…” இது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியான செய்தியாகும். அப்படித்தான் கர்த்தருடைய தூதன் உரைத்தார். 385 இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, “யோவான் ஸ்நானன்…” இப்பொழுது, நீங்கள் எல்லோரும் அதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை புத்தகங்களில் வாசித்திருக்கிறீர்கள், அது நடந்தபோது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அதை கேட்டதையும், மற்றும் அதைக் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், அந்த தூதனே, “கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டதுபோல, நீ இந்த செய்தியுடன் அனுப்பப்பட்டிருக்கிறாய், இது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக இருக்கும்” என்னும் அந்த செய்தியை உரைத்தார். இப்பொழுது, “செய்தி.”
145386 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், மற்றும் நான்…லிட்டில் வில்லி அங்கு அந்த நட்சத்திரத்தின் கீழ் என் பெயரை எழுதி வைத்திருக்கிறார், ஆகையால் தான் நான் அதைக் கூறாமல் கடந்து வந்துவிட்டேன், நீங்கள் பாருங்கள், ஏனென்றால் நான்—நான் நினைக்கவில்லை…இப்பொழுது, உங்களிடம் நான் என்னால் முடிந்த வரை உத்தமமாயிருக்கப்போகிறேன். எனக்கும் அந்த செய்தியாளனுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று நான் எண்ணுகிறேன், பாருங்கள். அது உண்மை. அவருடைய சபையில் நான் ஒரு பாகத்தை வகித்து, இந்த முன்னோடி வரும்போது, அவர் வருவார் என்ற ஒரு ஸாதானத்திற்குரிய, அந்த செய்தியை அளிக்க உதவும்படிக்கு நான் அனுப்பப்பட்டிருக்கக் கூடும் என்று நான் நம்புகிறேன். 387 ஆனால் நான் நம்புவதோ, நான் என்னவாயிருக்கிறேனோ, நான் இருக்கிறவிதமாகவே…இந்நாளுக்கான செய்தியை நான் கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். இதுவே இந்நாளுக்கான வெளிச்சம் என்று நான் நம்புகிறேன், இது வரப்போகிற அந்த நேரத்தைச் சுட்டிக் காட்டுகிறதென்று நான் நம்புகிறேன், நீங்கள் பாருங்கள், “நீ கொண்டிருக்கும் அந்த செய்தி” என்பது அவர் அங்கு கூறின அந்த செய்தி என்றே நான் நம்புகிறேன். இப்பொழுது, அங்கு எழுந்த அந்த நட்சத்திரத்தை நீங்கள் கவனிப்பீர்களானால், அது ஒரு…
146388 இதை நான் தெளிவாக்க விரும்புகிறேன்…நான் இங்கே நேரத்தை எடுத்துக்கொள்கிறேன் என்று எனக்குத் தெரியும்—எனக்குத் தெரியும், மேலும் நான் இந்த மற்ற, அருமையான அப்பேர்ப்பட்ட கேள்விகளைப் பெற்றுள்ளேன். எனக்கு வேண்டாம்…இப்பொழுது பத்து மணிக்கு மேலாகிவிட்டது, எனவே, நீங்கள் வீட்டுக்குப் போக விரும்புகிறீர்கள் என்று நான் அறிவேன். பாருங்கள், ஆனால் இங்கே கேளுங்கள். உங்களுக்கு ஒன்றை நான் காண்பிக்கட்டும். நீங்கள் இன்னும் எனக்கு கூடுதலாக சற்று ஒரு—சற்று ஒரு சில நிமிடங்களைத் தருவீர்களா? சரி, சரி. 389 இப்பொழுது பாருங்கள், இப்பொழுது நான் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இப்பொழுது, சகோதரரே நீங்கள் இதை உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். புரிகிறதா? இப்பொழுது, இதை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். இதன் பேரில் நான் உங்களை சரிப்படுத்த வேண்டும், ஏனெனில் நீங்கள் என் மேய்ப்பர்…நீங்கள் என் மேய்ப்பர்கள் மற்ற காரியங்கள், நீங்கள் பாருங்கள், மேலும் இதை நான்—நான் செய்தாக வேண்டும். நீங்கள் இந்த செய்தியில் என்னுடன் உழைக்கும் சகோதரர்கள். புரிகிறதா?
147390 இப்பொழுது, என்னைப் பொறுத்த வரையில், ஒரு மனிதன் என்னும் வகையில், நான் உங்களைப் போன்றவன், உங்களை விட மோசமானவன். நான்—நான்—நான்…உங்களில் அநேகர் கிறிஸ்தவ பிண்ணனி இன்னும் மற்ற காரியஙங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள். “பாவிகளில் பிரதான பாவி நான்,” என்று ஒரு சமயம் கூறப்பட்டது போல, “உங்களுக்கு மத்தியில் இருக்கிறேன்.” நான் அவிசுவாசியாகவும் மற்றும் சந்தேகக்காரனாகவும், மிகவும் தாழ்ந்த வாழ்க்கையே வாழ முடிந்தவனாய், நான் இருந்தேன் என்றும், நான் நினைக்கிறேன். 391 ஆனால் ஒரு பிள்ளை பருவம் முதற்கொண்டு தேவன் ஒருவர் உண்டு நான் எப்பொழுதுமே அறிந்துள்ளேன் என்றும், என் வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்தது என்றும் அறிந்திருந்தேன். என் சகோதரனே, அதைக்—அதைத் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. புரிகிறதா? ஆனால் இதை நான் கூறட்டும், அதாவது செய்தி ஒன்று வரும்—வரும், செய்தியாளன் ஒருவர் வருவார். அது ஒரு மனிதனாயிருக்குமானால்—அது எனக்குப் பின் வருகிற ஒருவராக இருக்கும் என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? அது…ஆனால் நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் இந்த செய்தியானது இந்நாளுக்கான உண்மையான செய்தியாயுள்ளது, மற்றும் இதுவே கடைசி செய்தியாகும். சகோதரரே, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? நான் உங்கள் எல்லோரையும் என் நிலையிலேயே வைக்கிறேன், ஏனெனில் என்னைப் போலவே நீங்களும் இதில் ஈடுபட்டிருக்கிறீர்கள். நீங்கள் இதே செய்தியின் செய்தியாளர்கள்.
148392 இங்கே பாருங்கள், ஒரு விளக்க படத்தை வரைந்துள்ளேன். நான் விளக்க படத்தின் மூலம் இதை நன்றாக விளக்கலாம் என்று நான்—நான் நினைக்கிறேன். சற்று நேரத்திற்காக இந்த கதவை நான் பாதி மூடட்டும். இது இயேசு, அது இயேசு; பாருங்கள், நான் இதை இங்கு, கெத்சமனேயை வரைகிறேன், இது இங்கே மற்றும் அது அங்கே . இப்பொழுது, உங்களால் முடியாது…இதை நான் முன்பு சபைக்குக் கூட கூறினதில்லை. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், ஞானத்தை தேடிக்கொண்டிருந்த மனிதரை, “ உம்முடைய பரிபூரண ஒளியினிடத்தில் எங்களை வழி நடத்திச் செல்ல, ” எந்தவிதமான ஒரு வெளிச்சம் (ஒரு நட்சத்திரம்) நடத்திச் சென்றது? 393 இப்பொழுது நான் இங்கே ஒரு நிமிடம் இதை எளிமையாக்கி உங்களிடம் ஒன்றைக் கூறப் போகிறேன். அதை நாம் உதறித் தள்ளிவிடுவோம்…அங்கு அந்த வில்லி செய்து வைத்தது, அப்படியானால் அதை சரியென்று கூறுங்கள். அது சரியென்றே நாம் கூறுவோமாக. சகோதரரே, அதை என்னால் கூற முடியாது. அப்படி கூறினால் நான் ஒரு பெருமைக்காரன். அதாவது, நான் அப்படி செய்ய மாட்டேன்…அதை நான் நம்பினாலும் கூட, நான் அதைக் கூற மாட்டேன். புரிகிறதா? வேறு யாராகிலும் அதைக் கூறினால், அது அவர்களைப் பொறுத்தது.
149394 ஆனால், இங்கு, அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்ட வண்ணமாக, சில பையன்கள், நடந்த சில காரியங்களைக் குறித்து அவர்கள் ஒரு விதமாக சாட்சி கூறினால் நலமாயிருக்கும். கூட்டங்களில் நடந்த சிலவற்றை நான் பிரசங்க பீடத்திலிருந்து சாட்சி கூறுவது எனக்குப் பிடிக்காது. அதை மேலாளரோ அல்லது யாரோ செய்யட்டும். நான் அதைச் செய்ய விரும்புகிறதில்லை. 395 [ஒரு சகோதரன், “அவர்கள் யோவானிடம் வந்து, ‘நீர் கிறிஸ்துவா’ என்று கேட்டனர்” என்கிறார்—ஆசி.] ஆம், அது தான் இது, நான் என்ன கூற முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் என்றால். [“‘நீர்தான் அந்த தீர்க்கதரிசியா?’”] அவன் அதை மறுத்தான். [“அவன் இவ்விரண்டில் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை, அவன், ‘நான் வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்’” என்கிறான்.] “வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்.” அவன் தன்னுடைய ஸ்தானத்தில் தன்னைப் பொருத்திக்கொண்டான். 396 [வேறொரு சகோதரன், “அவர்கள் அவனிடம் அவன் அந்த தீர்க்கதரிசியா என்று கேட்டபோது, அவன், ‘நான் இல்லை’ என்றான்” என்கிறார்.—ஆசி.] ஆம். இப்பொழுது… அந்த தீர்க்கதரிசி மோசே முன்னுரைத்த அவரே. பாருங்கள், அந்த தீர்க்கதரிசி, பாருங்கள். புரிகிறதா? ஆனால் அவன் யாரென்பதை அறிந்திருந்தான், பாருங்கள். ஆனால் அவன் அதைக் கூறினான், இப்பொழுது, அது…அவன் அவர்களிடம் கூறினான், பாருங்கள், மேலும் அவன், “நான்…கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்” என்றான். அது அவனாயிருந்தது. அவன்—அவன் யாராயிருந்தான் என்பதைக் கூறினான். பார்த்தீர்களா? ஆனால் அவன் ஒரு…
150397 சொல்லுங்கள். [ஒரு சகோதரன், “யோவானைத் தொடர்ந்து கிறிஸ்து வந்தபோது, அவர்கள் அவரிடம் வந்து, அவர்கள், ‘மேசியாவுக்கு முன்பு எலியா வரவேண்டுமென்று விசுவாசிக்கும்படி நாங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்’ அவர், ‘நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால்’ என்றார்” என்கிறார்—ஆசி.] அது அவனாயிருந்தது. அது உண்மை. அது உண்மை. யோவானும், “நான் ஒன்றுமற்றவன்! நான் ஒன்றுமற்றவன்! அவருடைய பாதரட்சையை அவிழ்ப்பதற்கு நான் பாத்திரன் அல்ல!” என்று சொல்லிக்கொண்டேயிருந்தான். 398 ஆனால் இயேசு அவனைக் குறித்து என்ன கூறினார்? அவர், “யாரைக் காண வனாந்திரத்துக்குப் போனீர்கள்?” என்று கேட்டார். ஆம். ஆம். “காற்றினால் அசையும் நாணலையோ? அல்லது மெல்லிய வஸ்திரம் தரித்து ஆடம்பரமாயுள்ள மனுஷனையோ?” என்றார். “அவர்கள் அரசர் மாளிகையில் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு தீர்கதரிசியையா காணப் போனீர்கள்? ஆம், ஒரு தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவனையே என்று நான் சொல்லுகிறேன்” என்றார். அவன் ஒரு தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன், அவன் ஒரு உடன்படிக்கையின் தூதன். அப்படித் தான் அவன் இருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன். அவர், “ஸ்திரீகளில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் இதுவரையிலும் எவனும் இல்லை” என்றார். பார்த்தீர்களா? 399 அவ்விதமாகத்தான் அவன் இருந்தான், பாருங்கள், அவன் ஒரு உடன்படிக்கையின் தூதனாயிருந்தான். இவன்தான், “இதுதான் அவர்” என்று அறிமுகப்படுத்தினவனாயிருந்தான். மற்றெல்லா தீர்க்கதரிசிகளும் அவரைக் குறித்து முன்னுரைத்தனர், ஆனால் யோவானோ, “இது தான் அவர்” என்றான். பார்த்தீர்களா?
151400 இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள். வான் சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தனர். நான் இதை ஒரு சிறிய விதத்தில் எடுத்துக்கொள்ளப் போகிறேன், பாருங்கள். சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று கேட்டார்கள். அந்த பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். “நாங்கள் அவருடைய நட்சத்திரத்தை கிழக்கிலே கண்டு அவரைப் பணிந்துகொள்ள வந்திருக்கிறோம்.” அதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், அதை வேதத்தில் படித்திருக்கிறீர்கள். சரி. 401 “மேற்கு திசையில் நடத்தி, இன்னும் போய்க் கொண்டிருக்கிறது, உம்முடைய பரிபூரண ஒளிக்கு எங்களை வழிநடத்தும்.” பாருங்கள், அந்த நட்சத்திரம் அந்த பரிபூரண ஒளிக்கு வழிநடத்திச் சென்றுகொண்டிருந்தது, ஏனெனில் நட்சத்திரம் ஒளியைப் பிரதிபலிப்பதாக மட்டுமே அமைந்திருந்தது. அன்றொரு நாள் அதைக் குறித்து நாம் பார்த்தோம். பார்த்தீர்களா? அதை காண ஞாயிற்றுக்கிழமை எத்தனை பேர் வந்திருந்தீர்கள்? நீங்கள் பாருங்கள், அதைக் குறித்து இப்பொழுது தான் நாம் பிரசங்கித்து முடித்தோம். ஷெகினா மகிமை அநத நட்சத்திரத்தில் பிரதிபலித்தது, நட்சத்திரம் அதைப் பிரதிபலிக்கிறது. இங்கே கர்த்தருடைய தூதன் இந்த மேடையின் மேல் நின்றுகொண்டு, ஷெகினா மகிமையிலிருந்து பிரதிபலித்துக்கொண்டிருந்தார். சரியாக அதே காரியம் தான். அது முற்றிலும் உண்மை. அந்த உண்மையானதை இங்கு பார்த்து, அதை அங்கு பார்க்கும்போது, அது பக்கத்தில் இப்படி பிரதிபலித்துக்கொண்டிருந்தது. பார்த்தீர்களா?
152402 இப்பொழுது இதைக் கவனியுங்கள், இப்பொழுது, அந்த நட்சத்திரம் கிழக்கில் எழும்பினது. அது சரியா? அது ஒரு பெரிய நட்சத்திரமாயிருந்து. சரி. இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்த நேரத்தில் பூமியில் நட்சத்திரமாக விளங்கினது யார்? ஏன், யோவான். அவன்தான் அவர்களை அந்த பரிபூரண ஒளிக்கு வழிநடத்தின ஒருவனாயிருந்தான். அது சரியா? இயேசுவின் முதலாம் பிரசன்னமாகுதலின்போது அது கிழக்கில் இருந்தது. மேலும், இப்பொழுது, இப்பொழுது அநேக சிறு நட்சத்திரங்கள் வானமண்டலத்தில் ஓடிச் சென்று, இறுதியாக சாயங்கால நட்சத்திரத்தில் முடிவடைகிறது. 403 சாயங்கால நட்சத்திரம் சாயங்காலத்தில் பிரகாசிக்கிறது. காலை நட்சத்திரம் காலையில் பிரகாசிக்கிறது. இவ்விரண்டும் ஒரே அளவுள்ளதாகவும், ஒரே விதமான நட்சத்திரங்களாகவும் இருக்கின்றன. இப்பொழுது இரண்டையும் இரண்டையும் ஒன்று சேருங்கள், அப்பொழுது அது என்னவென்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள், பாருங்கள். பாருங்கள், அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. எனவே அது இல்லாமல்…நட்சத்திரம் மேசியா அல்ல, அவர் மேசியாவைப் பிரதிபலிக்கிறார்.
153404 இப்பொழுது நட்சத்திரம் தன் சொந்த ஒளியைக் கொடுப்பதில்லை. அது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது. அது சரியா? [ஒரு சகோதரன், “இல்லை” என்கிறார்.—ஆசி.] ஹூ? [“ஒரு விதத்தில். சந்திரன் அவ்விதம் செய்கிறது; நட்சத்திரங்கள் தங்கள் சொந்த ஒளியைக் கொடுக்கின்றன.”] ஆம். ஆம், சந்திரன், ஆம், உண்மை-…சந்திரன் இந்த ஒளியைப் பிரதிபலிக்கிறது என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். ஆம், ஹு-ஹும். இப்பொழுது, ஒரு நட்சத்திரம் தன் ஒளியைப் பிரதிபலிக்குமானால், அப்படியானால் அதன் ஒளி…தேவனிடத்திலிருந்து வர வேண்டும், ஏனெனில் அது ஒருவிதமான ஒரு பனிக்கட்டி. இல்லையா? [அந்த சகோதரன், “சூரியன்” என்கிறார்.] ஹூ? அந்த சூரியனிலிருந்து தோன்றின, ஒரு சூரியன் தானே. [“அந்த சூரியன்கள் நமது சூரியனைவிட தூரத்தில் இருக்கின்றன.”] ஆம். மேலும் அவைகள்…அந்த சூரியன்கள் பெரிய சூரியனிலிருந்து தோன்றினதாக நமக்கு கூறப்பட்டுள்ளது. சூரியன் இந்த கணைகளை அதனிடத்திலிருந்து வெளியே எறிந்தது மற்றும் அவைகள் சூரியனைப் போல் எரிந்துகொண்டிருக்கும் சிறு கணைகள். எனவே அவைகள் நமக்கு சிறு சூரியன்கள். அது சரியா? சிறு ஒளிகள். [“சில…அவைகள் பெரும்பாலும் நமது சூரியனைக் காட்டிலும் பெரியவை.”] நான் நமக்கு , நமக்கு, பாருங்கள், என்றே பொருட்படுத்துகிறேன். நாம் நம்மைக் குறித்து இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். சரி.
154405 இப்பொழுது, அவைகள் நமக்கு சூரியன்களாக, அல்லது ஒளியைக் கொடுப்பவைகளாக இருந்தால், அவை முக்கியமான ஒளியைக் கொடுக்கும் சூரியனின் பாகங்கள். புரிகிறதா? பெரிய சூரியன் நமக்கு பெரிய ஒளியை கொடுக்கிறது, பரிபூரண ஒளியை. சிறிய சூரியன்கள், அல்லது சிறிய நட்சத்திரங்கள், நாம் குழுக்களாகக் காண முடியும், அவை பிரகாசிக்கும் சூரியனை விட—அதிக தூரத்தில் இருக்கலாம், ஆனால் அவை நமக்கு கொடுப்பவை சூரியனை விட குறைந்த ஒளியையே. ஆனால் அவை ஒளியைக் குறித்து மாத்திரமே சாட்சி கொடுக்கின்றன. அது சரியா? பெரிய சூரியன் உதயமாகும் போது, சிறிய சூரியன்கள் மறைந்துவிடுகின்றன. அது சரியா? அவை நமக்கு சூரியன்—அல்ல, அவை சூரியனைப் போல் ஒரு பிரதிபலிப்பாளர். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? 406 இப்பொழுது, அவைகளில் மிகப் பெரியது (காலையில்) சூரியன் வருகையை அறிவிக்கிறது, சூரியன் அஸ்தமிப்பதை மற்றும் சூரியோதயத்தை அறிவிப்பது விடிவெள்ளி நட்சத்திரமும் சாயங்கால நட்சத்திரமுமே. அது சரியா? இரண்டு மிகப் பெரிய நட்சத்திரங்கள், கிழக்கு நட்சத்திரமும் மேற்கு நட்சத்திரமும்.
155407 இப்பொழுது, இப்பொழுது அது எங்குள்ளதென்று நீங்கள் பார்த்தீர்களா? எலியா கிழக்கு நட்சத்திரம் வரப்போவதை அறிவிக்கும் செய்தியாளனாக இருந்தான், அவன் அந்த—அந்த மேற்கு நட்சத்திரத்தை அறிவிப்பவனாக இருப்பான் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த நாள் கடந்து சென்ற பிறகு மீண்டும் வரப்போகும் புதிய நாளை. அது என்னவென்று இப்பொழுது நீங்கள் கண்டு கொண்டீர்களா? 408 கிழக்கு, “வெளிச்சம் உண்டாகும்…” பாருங்கள், சூரியன் இப்பூமிக்கு வருவதற்கு சற்று முன்பு, “சூரியன் வரப்போகிறது” என்பதை விடிவெள்ளி நட்சத்திரம் சாட்சி கூறுகிறது. அது சரியா? பாருங்கள், அது விடிவெள்ளி நட்சத்திரத்தைத் தோன்றச் செய்தது. பாருங்கள், அப்படியானால் விடிவெள்ளி நட்சத்திரமும் சாயங்கால நட்சத்திரமும் ஒரேவிதமான நட்சத்திரங்களே, இதைத் தவிர சிறு நட்சத்திரங்கள் எங்கும் பரவியுள்ளன. நான் என்ன கூறுகிறேன் என்று உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? செய்தியாளர்கள்.
156409 பாருங்கள், அப்படியானால், அவர் அல்பாவும் ஒமெகாவுமாக, ஆதியும் அந்தமுமாக, வச்சிரக்கல்லும் பதுமராகமுமாக காணப்பட வேண்டியவராயிருக்கிறார். நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா? இப்பொழுது, கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபமாயிருப்பதால், இந்தக் கடைசி நாட்களில் எலியா பிரசங்கிக்க வேண்டிய செய்தியானது, சரித்திரம் மறுபடியும் நிகழ வேண்டுமானால்…விடி வெள்ளி நட்சத்திரம் அவருடைய வருகையை அங்கு அறிவித்தது போல, சாயங்கால நட்சத்திரம் வரப்போகும் ஒரு புதிய நாளை, வேறொரு நாளை அறிவிப்பதாய் உள்ளது. இது வரப்போகும் ஒரு சூரியனை—நாம் பெற்றிருந்த சூரியன்—போய்விட்டு, ஒரு புது சூரியன், பாருங்கள், ஒரு புதிய காலம், ஒரு புதிய நேரம் வரப்போகிறது என்பதை அறிவிக்கிறது. 410 இப்பொழுது கவனியுங்கள்: அதன் பின்னர், யோவான் தன் செய்தியை அளித்து கிறிஸ்துவின் முதலாம் வருகையை அறிவித்தான் என்றால், கடைசி நாட்களில் எலியா வருவான், தீர்க்கதரிசி உரைத்தது போல், “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்.” வேறு வார்த்தைகளில் கூறினால், சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்.
157411 சாயங்கால வெளிச்சம், நாம் பெற்றுள்ள மிகப் பெரிய சாயங்கால வெளிச்சம் சாயங்கால நட்சத்திரமே, நாம் பெற்றுள்ள மிகப் பெரிய வெளிச்சம். பாருங்கள், அப்படியானால், இந்த மற்ற நட்சத்திரத்தைப் போலவே இதுவும் அதே விதமான செய்தியைக் கொடுக்க வேண்டியதாயுள்ளது. அதாவது அது சூரியனைக் குறித்துப் பேசி, சூரியனை அறிவிக்கிறது. 412 பாருங்கள், இப்பொழுது நாம் சாயங்கால நேரத்திலே இருக்கிறோம், சாயங்கால வெளிச்சங்கள் இங்குள்ளன. இந்தக் காலம் மறைந்துபோகிறது. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிகிறதா? இந்தக் காலம் கடந்து போய், வேறொரு நாள் வருவதை அது அறிவிக்கிறதாயிருக்கும். 413 ஏனெனில், பாருங்கள், அது உண்மையில்…மேற்கிலுள்ள யாராகிலும் அந்த நட்சத்திரத்தைப் திரும்பிப் பார்த்தால், அது கிழக்கில் இருக்கும். அப்படியானால், நீங்கள் பாருங்கள், “நாங்கள் கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம்,” ஆனால் அவர்கள் உண்மையில்…அவர்கள்—அவர்கள் கிழக்கில் இருந்துகொண்டு அந்த நட்சத் திரத்தை மேற்கில் நோக்கிப் பார்த்தனர். அது சரியா? அந்த சாஸ்திரிகள் மேற்கில்…கிழக்கில் இருந்து கொண்டு அந்த மேற்கு நட்சத்திரத்தைக் கண்டனர். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? ஆனால் அது மேற்கே இருப்பவர்களுக்கு கிழக்கு நட்சத்திரமாக இருந்தது.
158414 பாருங்கள், நாம் கூறுவது போல…நான் எப்பொழுதுமே, “மேலே செல்ல வழி கீழே உள்ளது” என்று கூறுவதுண்டு. எது சரியென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? நாம் நித்தியத்தில் நின்றுகொண்டிருக்கிறோம், எனவே தென்துருவம் மேலே இருக்கலாம், வட துருவம் கீழே இருக்கலாம். நமக்குத் தெரியாது. பாருங்கள், மேலே போகும் வழி கீழேயுள்ளது. புரிகிறதா? நாம்…நாம் இதை விட்டுச் செல்வோம்; இதற்குப் பிறகு நாம் நித்தியத்திற்குள் பிரவேசிக்கிறோம். அது வரப்போகும் நித்தியத்தை, வேறொரு நாளை, வேறொரு காலத்தை, ஒட்டுமொத்தமாக வாழ்த்தி, அறிவிக்கிறதாயிருக்கிறது. 415 இப்பொழுது நாம் சாயங்கால நேரத்திலே இருக்கிறோம். நாம் அதை விசுவாசிக்கிறோம். கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்று நாம் விசுவாசிக்கிறோம். சரி. இப்பொழுது, அது அப்படியானால், சாயங்கால வெளிச்சம் ஒன்று இருக்க வேண்டும். அந்த சாயங்கால வெளிச்சம், மல்கியா 4-ன் படி, “பிள்ளைகளின் இருதயத்தை பிதாக்களிடத்தில் திருப்ப வேண்டும்” தொடக்கத்தில் இருந்த நிலைக்கே. 416 அவன் முதன் முறையாக வந்தபோது, பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்தில் திருப்பினான். அவனைச் சுற்றியிருந்தவர்கள் பிள்ளைகளாயிருந்தனர். அவன் பிள்ளைகளின்…பிதாக்களின் இருதயங்களை (அந்த பழைமையான, வைதீக பிதாக்களின் இருதயங்களை) அவன் அங்கு அறிவித்துக்கொண்டிருந்த அந்த வெளிச்சத்துக்குத் திருப்பினான்.
159417 ஆனால் அவன் மறுபடியும் வரும்போது, அவன் திசை திரும்பி, (நீங்கள் கவனித்தீர்களா, உலகம் அழிக்கப்படுவதற்கு முன்பு, “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன்பு”) “பிள்ளைகளின் இருதயத்தை பிதாக்களிடத்திற்குத் திருப்புவான்,” சாயங்கால—சாயங்கால நட்சத்திரம், அக்காலத்தில் அது விடிவெள்ளி நட்சத்திரமாய் இருந்தது. ஆமென். 418 அதை நான் சரியாக கூறினேன் என்று நான் நம்புகிறேன்—நான் நம்புகிறேன், பாருங்கள். விடிவெள்ளி நட்சத்திரம் இப்பொழுது சாயங்கால நட்சத்திரமாயுள்ளது, ஏனெனில் அது அதே நட்சத்திரம். நாம் மேற்கு திசையிலிருந்து கொண்டு கிழக்கே நோக்கிப் பார்க்கிறோம். அவர்கள் கிழக்கில் இருந்துகெண்டு, மேற்கே நோக்கிப் பார்த்தார்கள். அது சரியாக அதே நட்சத்திரம்தான். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது, பாருங்கள், அது கிழக்கு நட்சத்திரம் அல்லது மேற்கு நட்சத்திரமாக உள்ளது. நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? சரி.
160419 இப்பொழுது, அது கொண்டு வருகிறது…ஒருவன் பிதாக்களின் விசுவாசத்தை பிள்ளைகளிடத்தில் கொண்டு வருகிறான்; இந்த காலத்தில் “பிள்ளைகளின் விசுவாசம் பிதாக்களினிடத்தில் கொண்டு செல்லப்படுகிறது.” நீங்கள் சுற்றி வந்து, மறுபடியும் அங்கு அடைகிறீர்கள். நீங்கள் என்ன பொருட்படுத்துகிறீர்கள் என்று உங்களுக்குப் புரியவில்லையா? நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அது எக்காலத்தும் ஒரே நட்சத்திரம்தான். ஒரே காரியம், ஒரே செய்தி, ஒரே காரியம் மறுபடியும் வந்தடைகிறது. அது கடந்து சென்றுவிட்டது. 420 நீங்கள் எந்தப் பக்கம் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? உலகம் சுற்றிக் கொண்டிருக்கவில்லை என்று அவர்கள் உண்மையாகவே கண்டு பிடிக்கும் நேரம் ஒன்று வரும் என்று நான் நம்புகிறேன். அதை நான் என் முழு இருதயத்தோடு நம்புகிறேன். நான் நம்புகிறதில்லை…அவர்கள் எவ்வளவுதான் விஞ்ஞான ரீதியாக நிரூபித்தாலும், அல்லது வேறு எதையாவது செய்தாலும். அவர்கள் ஏராளமானவற்றை விஞ்ஞான ரீதியில் நிரூபித்து பிறகு அதை திரும்ப தவறென ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருந்தது. தேவன் உலகம்…சூரியன் நின்றது என்றும் கூறினார். நான் சூரியனை நிறுத்தினார் என்பதற்கு பதிலாக உலகத்தை நிறுத்தினார் என்று கூறிவிட்டேன். பாருங்கள், சூரியன். நான் உண்மையில் சூரியன் என்று…நம்பவில்லை, சூரியன் என்ன செய்வதாக அவர்கள் கூறுகிறார்களோ அது அதைச் செய்வதாக நான்—நான்—நான் நம்புவதில்லை. சந்திரன் சுற்றுகிறது என்று எனக்குத் தெரியும், அவ்வாறே சூரியனும் கூட சுற்றியோடுகிறது என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? 421 ஆனால் அவர்களில் சிலர், “அவர் யோசுவாவின் அறியாமையைக் கண்டு, பாருங்கள், மேலும்,” “அவர் அதை நிறுத்தினார்…அதைக் கூறினார்…” என்றனர். பாருங்கள், அவன், “அவர் உலகத்தை நிறுத்தினார்” என்றான். 422 நான், “அப்படியானால் நீங்கள் என்னிடத்தில், ‘பூமி எப்போதாவது சுற்றாமல் நிற்குமானால், அது ஒரு வால் நட்சத்திரம் போல் விண்வெளியில் ஓடிச் சென்று விடும் என்று நீங்கள் என்னிடம் கூறியிருக்கிறீர்களே.’ புரிகிறதா?” என்றேன். நான், “அப்படியானால், அப்பொழுது என்ன நடந்தது?” என்று கேட்டேன்.
161423 நான் இங்கு திரு. தியீஸ் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், அவர் உயர்நிலைப்பள்ளியில் வேதாகம ஆசிரியர்; அது யார் என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் அவர் அதைக் கூறினார். நான், “வேதம் அப்படித்தான் கூறுகிறது என்று நான் விசுவாசிக்கிறேன், அதாவது பூமி நின்றது…” என்றேன். நான், “நான் பொருட்படுத்திக் கூறுவது, ‘ சூரியன் நின்றது.’ யோசுவா சூரியனிடத்தில், ‘தரித்து நில்!’ என்றான், அப்பொழுது அது அங்கேயே தரித்து நின்றது.” 424 அவர், “பாருங்கள், அவர் பூமியை நிறுத்தினார், அவர் யோசுவாவின் அறியாமையைக் கண்டார்” என்றார். அப்பொழுது நான், “அப்படியானால், உங்கள் அறிவினால் நீங்கள் அதை செய்யுங்களேன்” என்றேன். புரிகிறதா? 425 [ஒரு சகோதரன், “சூரியன்—எவ்வளவு நேரம் நின்றது என்று அவர்களால் விஞ்ஞானப் பிரகாரமாக நிரூபிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்கிறார்—ஆசி.] ஆம், அங்கே அவர்கள்… நானும் கூட அதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆம், அவர்கள் உரிமை கோருகின்றனர்…சில நாட்களுக்கு முன்பு வானசாஸ்திர நிபுணர் ஒருவர் அதன் பேரில் பேசும்போது, அவர்களால் இதை நிரூபிக்க முடியும் என்று கூறினதை நான் கேட்டிருக்கிறேன். மேலும் அதே நேரத்தில் அவர்கள்…காணக்கூடிய ஏதோ ஒன்று வான மண்டலத்தில் நடந்ததென்றும் பரலோகத்தில் ஏதோ ஒன்று நடந்தது, அது சிவந்த சமுத்திரத்தை அந்த நேரத்தில் பிளந்தது என்றும் கூறுகின்றனர். அவர்கள் அதையெல்லாம் நிரூபித்துவிட்டனர். பாருங்கள், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அந்த நேரத்தில் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் அப்படி ஏதோ ஒன்றைச் அந்த விதமாக செய்துள்ளன. எப்படியாயினும், அது நமக்கு மிகவும் ஆழமானவை.
162426 எனவே, இப்பொழுது, இந்த செய்தியின் காரணம்…அது அப்படித் தான் என்பதை நிரூபிக்க, இந்த செய்தியை இந்த விதமாக காண வேண்டும். இப்பொழுது, சகோதரரே, மனிதன் தேவனாக இருக்க முடியாது என்பதை, நாம் அறிவோம். மனிதன், அதேசமயத்தில் அவன் ஒரு தேவனாயிருக்கிறான், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு தேவனாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு தேவனாக இருப்பதற்கென்று சிருஷ்டிக்கப்பட்டீர்கள், ஆனால் நீங்கள் இந்த வாழ்க்கையில் இருக்கும்போது அல்ல. புரிகிறதா? இயேசு நம்மைப் போல் ஒரு மனிதனாயிருந்தார், ஆனால் தேவன் அவருக்குள் இருந்தார். தேவனுடைய பரிபூரணம் அவருக்குள் வாசமாயிருந்தது; நாமோ ஆவியை ஒரு அளவாகப் பெற்றிருக்கிறோம். 427 ஆனால் இந்த வெளிச்சம் வந்துவிட்டப்படியினால், அது யோவான் ஸ்நானன் செய்தியை அறிவித்த அந்த உண்மையான ஒளியாய் இருக்குமானால், அவர் அந்த நதியில் செய்தாக கூறியதுபோல… பாருங்கள், அது எப்படி—அது வேறெதாக எப்படி இருக்க முடியும்? என்னைப் பாருங்கள், பாருங்கள், ஒரு ஆரம்பப் பள்ளி கல்வியும் கூட இல்லாதவன். அவர் நடக்கப் போகும் சம்பவங்களை என்னிடம் கூறினபோது, அவைகளில் ஒன்றுமே தவறிப்போகவில்லை. அவைகளில் ஒன்றுமே எப்போதுமே தவறிப்போகவில்லை. அவர் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள். பாருங்கள், அவர் பெற்றுள்ளதும் கூட… 428 பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் சகோதரரிடம் கூறினேன், நம்மில் வயதில் மிகவும் மூத்தவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்களிடம் நான் இந்தக் காரியங்களைக் குறித்தும், இந்த ஒளியைக் கண்டதைக் குறித்தும், அது என்ன நிறமாயிருந்தது என்றும் மற்றெல்லாமே கூறியிருக்கிறேன். இப்பொழுது அந்த புகைப்படம் அது உண்மையென்பதைக் காண்பிக்கிறது. இந்த வெவ்வேறு காரியங்கள் அனைத்தும் அது உண்மையென்பதை நிரூபிக்கிறது. அது சரியா? பாருங்கள், அப்படியானால், அது உண்மை யாயிருக்குமானால்…அது அந்த ஒளிதான்.
163429 இப்பொழுது, கிட்டத்தட்ட நான்காம்… [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] …அதற்கு மேல் அங்கே 35-வசனம், இல்லை நான் கூறுவது…சகோதரனே, நாம் கிட்டத்தட்ட 14-ம் வசனத்தில் தொடங்குவோம். யார் அதைத் திறந்திருப்பது? சரி. பரிசுத்த லூக்கா 3-ம் அதிகாரத்தில் 14-ம் வசனம் தொடங்கி வாசியுங்கள். [ஒரு சகோதரன் லூக்கா 3:14-16 வசனங்களை வாசிக்கிறார்—ஆசி.] [ போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ் சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான். ] [ யோவானைக் குறித்து: இவன் தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில், ] [ யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார். அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க் கிறதற்கும் நான் பாத்திரன அல்ல. அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார். ] 430 சரி. அது என்னவாயிருந்து? ஜனங்கள் மேசியாவின் வருகையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபடியால், இந்த மகத்தான அபிஷேகிக்கப்பட்ட ஊழியத்தை, ஒரு மனிதன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு வந்து தன் கூட்டத்தை நடத்தி விட்டு, மீண்டும் வனாந்திரத்துக்குச் செல்வதை அவர்கள் கண்டபோது, அவனைப் பின்பற்றின, அநேகர், “இவன் தான் மேசியா” என்றனர். அவர்கள் அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர், பாருங்கள். 431 யோவான் ஸ்நானனின் செய்தி இயேசுவின் வருகைக்கு முன்னோடியாக உண்மையான தேவனுடைய செய்தியாயிருக்குமானால், அதே விதமாக…எலியாவின் செய்தியும், அதே விதமாக இருக்கும், அதுவும் அதே விதமாகக் கருதப்படவேண்டும். புரிகிறதா? இது அந்த கேள்விக்கு, சரியாக பதில் அளிக்கிறது என்று, நான் நினைக்கிறேன் முற்றிலுமாக. புரிகிறதா? இதுவும் அதே விதமாக கருதப்பட வேண்டும். பார்த்தீர்களா?
164432 [ஒரு சகோதரன், “அந்த விதமான முரணான அபிப்பிராயம் கொண்டுள்ளவர் எவருக்காகிலும் உதவியாக ஏதாகிலும் ஒன்றைச் செய்வதற்கு நாங்கள் பொறுப்பாளிகளா? அல்லது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார்—ஆசி.] ஒன்றுமில்லை, உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. [“ஒரு கேடான சிந்தை…அது கேடான சிந்தையில் முடிவடைய வாய்ப்புண்டா?”] பாருங்கள், அது இந்த விதமாக தோன்றினால், அது ஒரு கேடான சிந்தையை வந்தடையும். அதாவது முன்னுரைக்கப்பட்ட இந்த மனிதன், தன்னை மேசியாவென்று அறிவித்தால், அப்பொழுது அவன் கள்ளக் கிறிஸ்துவென்று நாம் அறிகிறோம். புரிகிறதா? 433 பாருங்கள், இந்த மனிதன் தன்னுடைய ஸ்தானத்தில் நிலைத்திருக்கும் வரைக்கும், நீங்கள் பாருங்கள். அவர்கள் யோவானிடம் கூறினது போன்று, யோவான்…அவன் அவர்களைக் குறித்த எந்த காரியத்தையும் கூறினதாக அவனைப் பற்றி அங்கே அது கூறவில்லை. அவர்கள்—அவர்கள்—அந்த ஜனங்கள், அந்த—அந்த அருமையான கிறிஸ்தவர்கள்…இல்லை, யோவானை விசுவாசித்திருந்த விசுவாசிகள்.
165434 அவர்கள், “உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய தீர்க்கதரிசி, அதில் சந்தேகம் எதுவும் இல்லை” என்றனர். அவர்கள், “நீர்தான் அந்த தீர்க்கதரிசியா?” என்றும் கேட்டனர். அவன், “இல்லை” என்றான். 435 அவர்கள், “ஏன், நீர் மேசியாதானே?” என்றனர். பாருங்கள், அவர்கள்—அவர்கள் உண்மையில் அவ்வாறு எண்ணியிருந்தனர். பார்த்தீர்களா? அவன், “இல்லை” என்றான். புரிகிறதா? அவர்கள், “நீர் இல்லையா? அப்படியானால் நீர் யார்—யார்?” என்று கேட்டனர். அவன், “நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்” என்றான். 436 ஆகையால் வேதம், “ஜனங்கள் அவருடைய வருகையை ஆவலாய் எதிர்நோக்கியிருந்தனர்” என்று உரைத்துள்ளது. அந்த ஜனங்கள் யார்? அவனுடைய செய்தியைக் கேட்டவர்கள், அதற்கு செவிகொடுத்தவர்கள், அவனைப் பின்பற்றினவர்கள், அவனுடைய சகோதரர்கள. புரிகிறதா? இப்பொழுது, அவர்கள் அவனைப் புண்படுத்த விரும்பவில்லை, அவர்கள் அவனைப் புண்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை. ஆனால், பாருங்கள், அவன் மேசியாவென்று அவர்களுடைய இருதயங்களில் அவர்கள் உண்மையாகவே எண்ணியிருந்தனர். 437 பாருங்கள், இப்பொழுது, ஒவ்வொரு தருணத்திலும் சரித்திரம் மீண்டும் நிகழ வேண்டும். அதை நாம் அறிந்திருக்கிறோம். அது மீண்டும் நிகழ வேண்டும்.
166438 உதாரணமாக நீங்கள் அங்கே மத்தேயு 3-ம் அதிகாரத்தை எடுத்துக்கொள்வீர்களானால், அது, “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று “தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேம்படி இப்படி நடந்தது.” இப்பொழுது, அதுவாயிருக்கவில்லை…அது குமாரனாகிய, இயேசுவைக் குறித்தே பேசுகிறது; ஆனால் நீங்கள் ஒத்து வேதவாக்கியங்களைப் பார்த்துக்கொண்டே வருவீர்களானால்; அது குமாரனாகிய, யாக்கோபையுங் கூட குறிப்பிடும் ஒன்று. புரிகிறதா? பார்த்தீர்களா? அவை அனைத்திற்கும் ஒரு கூட்டு அர்த்தம் உள்ளது. 439 எனவே இப்பொழுது அது…அந்தக் காரியம் எழும்பவில்லையென்றால், அது வருங்காலத்தில் எழும்பும் என்று நான் இப்பொழுதும் கூறுகிறேன், ஏனெனில் இந்த செய்தி தேவனிடத்திலிருந்து வந்ததென்றும், அது கிறிஸ்துவுக்கு முன்னோடியாக உள்ளதென்றும், அது எலியாவின் ஆவியும் வல்லமையும் என்று நான் அறிந்திருக்கிறேன், ஏனெனில் அது பிள்ளைகளின் இருதயங்களைத் திருப்பும் ஒன்றாய் அமைந்துள்ளது. எல்லாமே அதை ரூபகாரப்படுத்துவதாய் உள்ளது, எனவே உண்மையான ஜனங்கள் அந்த விதமான கருத்தைக் கொண்டிருக்கும் ஒரு கட்டத்தில் அது முடிவடையத்தான் செய்கிறது, அதை—அதை முற்றிலுமாக விசுவாசிக்கிறவர்கள் உங்களுடைய சகோதரரும் நண்பர்களுமாவர்.
167440 இப்பொழுது, எனக்கு…இந்தப் பட்டணத்தில் இங்கே எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் இருக்கிறார். ஒரு மருத்துவரைப் குறித்து என்னால் உங்களிடம் கூற முடியும்…அவர் யார் என்று நான் உங்களுக்கு கூறப்போவதில்லை, அவர் என் நண்பர், அவர் என் தோளின் மேல் கையைப் போட்டு, “பில்லி, ‘நீர் கடைசி காலத்தின் தேவனுடைய மேசியா’ என்று உம்மிடம் எனக்கு கூறுவது எளிதாயிருக்கும்” என்றார். நான், “மருத்துவரே, நீங்கள் அப்படி கூறாதீர்கள்” என்றேன். 441 அவர், “சரி, இவ்வுலகில் வேறு எவருமே நீர் பெற்றுள்ள காரியங்களையும் நீர் சொல்லும் காரியங்களையும், நீர் செய்யும் காரியங்களையும் பெற்றுள்ளதாக நான் கண்டதில்லையே, பில்லி” என்றார். அது அவருக்கு அதிக உதவியாயிருந்தது, பாருங்கள். அவர், “நான் இந்த சபைகளுக்குச் செல்லுகிறேன், இந்த பிரசங்கிமார்களையும் மற்ற காரியங்களையும் காண்கிறேன்,” என்றார், மேலும் அவர், “ஆனால் நீர் அவர்களிலிருந்து வித்தியாசமாயிருக்கிறீர், உமக்கு படிப்பு இல்லை என்று எனக்குத் தெரியும்” என்றார். பார்த்தீர்களா? “மேலும் நீங்கள் ஒரு மனோத்தத்துவவாதி அல்ல என்பதும் எனக்குத் தெரியும், ஏனெனில் நீங்கள்…மனோத்தத்துவம் அந்த காரியங்களைச் செய்யாது” என்றார். பார்த்தீர்களா? அப்பொழுது நான், “அது உண்மை, மருத்துவரே” என்றேன். 442 அவரிடத்தில் பேசி பிரயோஜனமில்லை, ஏனெனில் அவருக்கு எதுவுமே தெரியாது, அவரிடம் அடிப்படையான விஷயத்தை எடுத்துக் கூறவும் உங்களால் முடியாது, பாருங்கள், ஏனெனில் அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் அதுதான் இது, நீங்கள் பாருங்கள்.
168443 எனக்கு பக்கத்து தெருவில் வசிக்கிற ஒரு கறுப்பு நிற ஸ்திரீயைத் தெரியும், அவள் எனக்கு தெரிந்த மற்றொரு மனிதனிடத்தில் அவள் வேலை செய்கிறாள், இந்த மனிதனின் மனைவி என்னைத் தொலைபேசியில் அழைத்து, “இந்த ஸ்திரீ உங்களை முற்றிலுமாக தேவன் போல் தொழுகிறாள், ஏனெனில் அவள் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தபோது, நீங்கள் அந்த ஸ்திரீயின் மேல் கரங்களை வைத்தபோது, அவள் குணமாகிவிட்டதாக…கூறினாள்” என்றாள். வேலை பார்க்கும் இந்த ஸ்தீரியும், அவளுடைய கணவனும் மற்றும் இந்த குறிப்பிட்ட ஒரு மருத்துவரும் (நான் சற்று முன்பு கூறின மருத்துவரல்ல, இவர் வேறொரு மருத்துவர்) ஒன்றாக குழிப்பந்தாட்டம் விளையாடுவார்கள், அந்த மருத்துவர் அவள் பிழைக்கமாட்டாள் என்று கைவிட்டுவிட்டார். அவள் அவருடைய நண்பரின் வீட்டில் வேலையை பார்க்கிறவள், மரிக்கும்படி கைவிடப்பட்டிருந்த, அவள் முழுவதுமாக குணமடைந்துவிட்டாள். மருத்துவரால் புற்றுநோயின், அதனுடைய ஒரு தடயத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், பாருங்கள், அவள் கூறுவாள்…
169444 இப்பொழுது, அவர்கள் அதைக் கூறுகிற அல்லது நாம் அதை எடுத்துக்கொள்கிற அர்த்தத்தில் அவர்கள் அதைக் கூறுகிறதில்லை என்று நான் நினைக்கிறேன். புரிகிறதா? அவர்கள் அதை பொருட்படுத்துவதோ அவர்கள்—அவர்கள்…தேவன் நம்மோடும், நமக்குள்ளும் இருந்துகொண்டு, நமது மூலமாய் கிரியை செய்கிறார் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர் என்றே அவர்கள் பொருட்படுத்திக் கூறுகின்றனர்; தனிப்பட்ட ஒரு நபர் தேவன் என்றல்ல, நீங்கள் பாருங்கள். இப்பொழுது, யோவான் ஒரு சாதாரண மனிதன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 445 அது போல் இயேசுவும் ஒரு மனிதனாயிருந்தார். இயேசு ஒரு மனிதனாக இருந்தார், அவர் ஒரு ஸ்திரீயின் மூலம் பிறந்திருந்து, மரிக்க வேண்டியவராயிருந்தார். அது சரியா? அவர் மனிதனாயிருந்து, புசிக்கவும், குடிக்கவும், பசியுற்றவராயும், அழுதவராயும், தாகமுற்றவராயும் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் உடையவராயிருக்க வேண்டியவராயிருந்தார், அவர் உங்களைப் போலவும் மானிடனாகவும், என்னைப் போலவும் ஒரு மானிடனாகவுமிருந்தார். ஆனால் தேவனுடைய ஆவி அவருக்குள் பரிபூரணமாக, அளவில்லாமல் வாசம் செய்தது. அவர் வல்லமையில் சர்வ வல்லமை யுள்ளவராயிருந்தார். 446 ஆனால், எலியாவோ அந்த ஆவியில் ஒரு பாகம் மாத்திரமே இருந்தான்; ஒரு வேளை அவன் தன் சகோதரரை விட சிறிது அதிகமாக அபிஷேகம் பெற்றிருந்திருக்கக் கூடும், ஆயினும் அவன் ஆவியின் ஒரு பாகத்தை உடையவனாயிருந்தான். ஆனால் ஜனங்கள் மேசியாவுக்காக எதிர்நோக்கியிருந்தனர். அவர்கள் தங்கள் சகோதரரை விட சிறிது அதிகமான இந்த பாகத்தைக் கண்டவுடன், அவர்கள், “ஓ, என்னே, இது அவராகத்தான் இருக்க வேண்டும்!” என்றனர். 447 ஆனால் இயேசு பிரகாசிக்கத் தொடங்கினவுடனே, யோவானின் சிறு வெளிச்சம் அணைந்துபோனது. பார்த்தீர்களா?
170448 அவர் வரும்போது, அந்த பரலோகத்தின் மகத்தான அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து கிழக்கிலிருந்து மேற்குக்கு வரும்போது, இந்த சிறு வெளிச்சங்கள் அணைந்து போகும். மேலும்…மற்றும்…புரிகிறதா? ஆனால் இப்பொழுது அவர் பூமிக்கு வரமாட்டார், ஆயிரம் வருட அரசாட்சி வரைக்கும் மேசியா பூமிக்கு வரமாட்டார். புரிகிறதா? பார்த்தீர்களா? ஏனெனில் சபையானது, “நாம் ஆகாயத்தில் எடுக்கப்பட்டு, கர்த்தரை அங்கு சந்திப்போம்.” அவர் பூமிக்கு ஒருபோதும் வருவதில்லை. அவர் தம்முடைய மணவாட்டியை ஆகாயத்தில் எடுத்துக் கொள்கிறார். 449 அவர் ஒரு ஏணியை எடுத்துக்கொள்கிறார், உங்களுக்குத் தெரியும், உதாரணமாக…அது என்ன நாடகம், லியோ, அதில் அந்த மனிதன் வீட்டின் பக்கத்தில் எங்கே ஏணியை வைக்கிறான்? ரோமியோ ஜூலியட். அது சரி, அவர் ஏணியை வைத்து, தன் மணவாட்டியைக் களவாடிச் சென்று விடுகிறார். 450 இப்பொழுது அவர் யாக்கோபின் ஏணியில் இறங்கி வந்து, “பார், இனிய இருதயதமே, இங்கே வா” என்று கூறுவார். பாருங்கள், அவரைச் சந்திக்க நாம் மேலே செல்கிறோம்.
171451 [ஒரு சகோதரன், “சகோதரன் பிரான்ஹாமே, அதனுடன் இது சரியாயிருக்குமா? இந்த ஜனங்கள் யோவான் ஸ்நானனிடம் வந்து, அவர்கள் அவனை மேசியா என்று அழைக்க விரும்பினர். யூதர்கள் மேசியாவை தேவன் என்று கருதுவதாக நீர் ஒரு சமயம் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்கிறார்.—ஆசி.] என்ன சொல்லுகிறீர்கள்? [“நான் என்ன சொல்லுகிறேன் என்றால், அந்த ஜனங்கள் யோவான் ஸ்நானனிடம் வந்து, அவனை மேசியாவாகிய, கிறிஸ்து என்று எண்ணினர். மேசியா யூதர்களுக்கு தேவனாயிருப்பார் என்று நீர் ஒரு சமயம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.”] ஆம், ஐயா. அது உண்மை, “ரபீ.” 452 [ஒரு சகோதரன், “பாருங்கள், யோவான் அவர்களைக் கடிந்துகொண்டு, அவன் ‘அல்ல’ என்றும், கிறிஸ்து வரப்போகிறார் என்றும் சொன்னான்” என்கிறார்.—ஆசி.] அது உண்மை. [“ஆனால் சீஷர்கள் இயேசுவை ‘ஆண்டவர்’ என்று அழைத்தது உண்மையல்லவா? இயேசுவும் அதை ஒப்புக்கொண்டு, ‘நீங்கள் என்னை “ஆண்டவர்” என்று சொல்லுகிறீர்கள், நான் அவர்தான்’” என்றார்.] ஆம். [“யோவான் 13-ல், அவர் …?… கழுவினபோது”] ஆம், அது சரியென்று அவர் ஒப்புக்கொண்டார். [“அவர் ஆண்டவராயிருந்தபடியால், ஆம், அவர் அது சரியென்று ஒப்புக்கொண்டார்.”] அவர் அதை ஒப்புக்கொண்டார். [“அவர் அதை ஏற்றுக்கொண்டார்.”] உ-ஊ. ஆனால், பாருங்கள், இயேசு ஆண்டவராயிருந்தபடியால், அவர் ஆண்டவர்தானா என்று கேட்கப்பட்டபோது, அவர், “ஆம், ஐயா. நான் உங்கள் ஆண்டவரும் போதகருமாயிருக்கிறேன். நீங்கள் அவ்விதம் என்னை அழைக்கிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான்” என்றார். ஆனால்… [“ஆனால் வேறெந்த மனிதனும் அவ்விதம்…”] அதைக் கூற முடியாது. முடியாது. 453 உதாரணமாக இது…யாராகிலும் நான் தேவன் என்று கூறுவாரானால், பாருங்கள், “அது தவறு!” என்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். புரிகிறதா? நான் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி, தேவனிடத்திலிருந்து வந்த ஒரு செய்தியைக் கொண்டிருக்கிறேன். புரிகிறதா? பார்த்தீர்களா?
172124. உள்ளூர் சபை ஒன்று மற்ற வெளிநாடுகளில் உள்ள தேவைகளை சந்திப்பதற்கு முன்பு, முதலில் தன்—தன் உள்ளூர் (சொந்த) பொறுப்புகளை ஏற்று முடிக்க வேண்டியது அவசியமா அல்லது அவசியமில்லையா? இருப்பினும், அதற்குப் பிறகு…தன்னுடைய…அது தன் தேவைகளைச் சந்தித்து முடித்த பிறகு, ஒரு உள்ளூர் சபை அதனால் முடிந்த வரையில் மிஷனரி ஊழியத்துக்கு உதவி செய்வது வேதப்பூர்வமானதா? 454 ஆம். உண்மை. தொண்டு முதலில் வீட்டில் தொடங்குகிறது, நீங்கள் பாருங்கள். இங்குள்ள நமது தேவைகளை நாம்—நாம்—நாம் முதலில் சந்திக்கிறோம், ஏனெனில் நாம்…இது தேவனுடைய சபை, அல்லது, உங்கள் சிறு சபையும், தேவனுடைய சபையே. இப்பொழுது, உங்களால் உங்கள் மேய்ப்பருக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் போனால், உங்களால் பாடல் புத்தகங்கள் இன்னும் மற்ற பொருட்களை வாங்க முடியாமல் போனால், நீங்கள் வேறு இடத்துக்கு பணத்தை அனுப்பக் கூடாது. புரிகிறதா? ஆனால் உங்கள் சபைக்கு வேண்டிய அனைத்துக்கும் நீங்கள் செலுத்திவிட்டு, உங்கள் கடன்களை செலுத்தி முடித்த பின்பு, வெளிநாட்டில் ஒரு சிறு உதவி தேவைபடுகிற அந்த மற்ற சகோதரனுக்கு உதவி செய்யுங்கள், உங்களுக்குப் புரிகிறதா. கொஞ்சம்… 455 நான் நினைப்பது என்னவெனில்,…உங்கள் சபைக்காக நீங்கள் பணம் செலுத்திக்கொண்டு இருக்கும்போதே, நான் ஒரு மிஷனரி காணிக்கைக்காக எங்காவது ஒரு சிறிய நிதியை ஒதுக்கி வைக்க விரும்புவேன், ஜனங்கள் மிஷனரி ஊழியத்துக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அப்படி செய்வேன். ஏனெனில் அநேக ஜனங்கள் தங்கள் உள்ளூர் சபைகளுக்கும் மற்ற காரியங்களுக்கும் கொடுக்காமல், அவர்கள் மிஷனரி ஊழியத்துக்கு கொடுக்க விரும்புவார்கள். அவர்கள் வெளி ஊழியங்களுக்கு அதை கொடுக்காவிட்டால், வேறெதற்காவது அதை செலவழித்துவிடுவார்கள். எனவே நான் சொல்வது என்னவெனில், வெளி ஊழியத்துக்கென்று ஒரு பெட்டியை வைத்து விடுங்கள், நான்…அப்படித்தான் நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம்.
173125. லூக்கா 1:17, யோவான் “எலியாவின் ஆவியை உடையவனாய்” வருவதைக் குறித்து தயவு செய்து விளக்குங்கள். 456 பாருங்கள், நாம் சற்று முன்பு தான் லூக்கா—லூக்கா 1:17-ஐ, உ-ஊ, “எலியாவின் ஆவியை” உடையவனாய் வருவதைக் குறித்துப் பார்த்தோம் என்று நான் நினைக்கிறேன். 457 [ஒரு சகோதரன், “இங்குதான் மறு ஜென்மம் எடுத்தல் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோர் தங்கள் உபதேசத்தைப் பெற்றுக்கொண்டனரா?” என்று கேட்கிறார்—ஆசி.] சரியாக புரியவில்லையே? [“மறு ஜென்மம் எடுத்தலில் நம்பிக்கை கொண்டுள்ள ஜனங்கள் இங்கு தான் தங்கள் கோட்பாட்டைத் தொடங்கினரா?”] அப்படித்தான் இருக்க வேண்டும். [“பாருங்கள், அவர் திரும்பி வருவதில்…அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்”] ஆம். [“அவர் வேறொரு சரீரத்தில் வருவதாக நம்புகின்றனர்…”] ஆம், பாருங்கள், ஆவி ஒருபோதும் மரிப்பதில்லை என்பது உண்மை. அது உண்மை. தேவன் தமது மனிதனை எடுத்துக்கொள்கிறார், ஆனால் அவருடைய ஆவியை அல்ல. [“அவர்கள், ‘நீங்கள் நல்லவர்களாக இருந்திருந்தால், ஒரு நல்ல மனிதனுக்குள் திரும்ப வருவீர்கள்’ என்று கூறுகின்றனர்.”] ஆம். ஆம். [‘“நீங்கள் கெட்டவர்களாய் இருந்திருந்தால், ஒரு நாய்க்குள் நீங்கள் திரும்ப வரலாம் என்கின்றனர்.’”] ஆம், அப்படித்தான் அவர்கள்…ஆம். 458 பாருங்கள், இப்பொழுது, இந்தியாவில் இப்படிப்பட்ட, ஒரு குழுவினரை நாங்கள் அங்கே சந்திக்க நேர்ந்தது, அவர்கள்—அவர்கள் தரையையும் கூட துடைக்க மாட்டார்கள்; ஒரு எறும்பையும் அல்லது வேறெதையும் கூட மிதிக்கமாட்டார்கள், அது ஒரு வேளை தங்கள் உறவினர்களில் ஒருவராக அல்லது வேறு யாராவது இருக்கலாம் என்பதற்காகவேயாகும். நீங்கள் பாருங்கள், அவர்கள் அதைச் செய்யமாட்டார்கள். ஆனால், நீங்கள் பாருங்கள், அது—அது அஞ்ஞானக் கோட்பாடு. பார்த்தீர்களா? அது அஞ்ஞானம் கோட்பாடு. அது உண்மை.
174126. பவுல் கூறினான்…பவுல், “முக்கியமான வரங்களை நாடுங்கள், இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்றான். அந்த “மேன்மையான வழி” என்னவென்று தயவுகூர்ந்து விளக்குங்கள். 459 அன்பு, முதலாம் கெரிந்தியர் 13, பாருங்கள். “நாடுங்கள்…” முதலில்…இப்பொழுது அங்கே முதலாம் கொரிந்தியர் 13-ல். முதலாம் கொரிந்தியர், 13-ம் அதிகாரம், இப்பொழுது இதில் கடைசி மூன்று அல்லது நான்கு வசனங்களை வாசியுங்கள். முதலாம் கொரிந்தியர் 13, கடைசி…கிட்டத்தட்ட அந்த அதிகா-…அந்த அதிகாரத்தின் கடைசி மூன்று வசனங்கள் [ஒரு சகோதரன் முதலாம் கொரிந்தியர் 13:11-13 வசனங்களைப் படிக்கிறார்—ஆசி.] [ நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன். குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். ] [ இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம். அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான்…அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்து கொள்ளுவேன். ] [ இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. ] உ-ஊ, அன்பு, புரிகிறதா?
175127. ஒரு சகோதரனுக்கு தான் கேட்டுக்கொள்ளப்படாமலேயே சபையில் ஒரு ஸ்தானத்தை வகிக்க வேண்டும் என்னும் பலவீனம் இருக்குமானால் அவரை எப்படி குற்றப்படுத்துவது? ஓ.என்னே! பாருங்கள், அவருடன் பொறுமையாயிருங்கள், அப்படித்தான் நான் நினைக்கிறேன். புரிகிறதா? ஒரு சகோதரனுக்கு தான் கேட்டுக் கொள்ளப்படாமலேயே… அவரைக் குற்றப்படுத்தக் கூடாது!… சபையில் ஒரு ஸ்தானத்தை வகிக்க வேண்டும் என்னும் பலவீனம் இருக்குமானால், அவரை—அவரை எப்படிக் குற்றப்படுத்துவது? 460 உதாரணமாக, அவர் உதவிக்காரராக இருக்க விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். புரிகிறதா? அவர் அவ்விதம் செய்யக்கூடாது என்று அவரிடம் சொன்ன பின்பும், அவர் எப்படியும் உதவிக்காரரின் ஸ்தானத்தை வகிக்க விரும்புகிறார், பாருங்கள். சரி, ஒரு நபர் அவ்விதமாக இருப்பாரானால், ஏதோ ஒரு பலவீனம், எங்கோ உண்டு என்பதை, நீங்கள் அறிந்துகொள்வீர்கள், எனவே நான் அவருடன் அன்போடு ஈடுபடுவேன். 461 மேலும், நிச்சயமாகவே, நீங்கள் உண்மையாகவே அறிந்திருந்தாலொழிய, நீங்கள் அதைப் போன்ற ஒரு காரியத்தை செய்ய ஒருபோதும் விரும்பமாட்டீர்கள். உங்களால் முடிந்த வரைக்கும் உங்களுடைய குழுவில், அந்த விதமான, சிறந்த மனிதர்களை நியமியுங்கள், உங்களுக்குப் புரிகிறதா. சகோதரனே, அங்கே அதில் ஒன்றையுமே ஒருபோதும் பெற்றுக்கொள்ளவதில்லை…அந்த மனிதனை முதலில் பரிசோதியுங்கள். ஒரு உதவிக்காரனுக்கு மேய்ப்பனைக் காட்டிலும் அதிகமான உத்தரவாதம் உள்ளது. ஒரு உதவிக்காரன், அவன் குற்றமற்றவனாய் இருக்க வேண்டும். புரிகிறதா?
176128. ஒரு இராப்போஜன ஆராதனையில், ஒரு மனிதன் ஜெபித்துக் கொள்ளப்படுவதற்காக பீடத்தண்டையில் வந்தார். இராப்போஜனம் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் சகோதரன் பிரானஹாம் இராபோஜன பொருட்களுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார், அவர் “பீடத்தண்டையில் உள்ள மனிதனுக்கு ஜெபிப்பதற்காக இராப்போஜன பொருட்களை விட்டுவிட்டு வர இயலாது” என்று அவர் கூறிவிட்டார். தயவு கூர்ந்து விளக்குங்கள். 462 என் உடன் போதகரான சகோதரன் நெவிலை ஜெபிப்பதற்காக அனுப்பினேன், நீங்கள் பாருங்கள். அது நடந்த இரவு எனக்கு ஞாபகம் உள்ளது. அந்த இராப்போஜன மேசையுடன் நான் நிற்க வேண்டியவனாயிருக்கிறேன், பாருங்கள்…இங்கு பாருங்கள். இப்பொழுது, இதற்குள் செல்ல எனக்கு நேரமில்லை. நிச்சயமாகவே, உட்கார்ந்திருக்கிற யாரோ ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். சகோதரனே, அது என்னவென்று கூறுகிறேன். நீங்கள் இராப்போஜனத்தை பெற்றுக்கொள்ளும்போது, அது இயேசு கிறிஸ்துவின் சரீரத்துக்கு ஒரு அடையாளமாயுள்ளது. அது…அது எல்லா நேரத்திலும் காவல் செய்யப்பட வேண்டும்.
177463 பாருங்கள், எலியா கேயாசியிடம், “என் கோலை எடுத்துக்கொண்டு போ” என்று சொன்னபோது (அவன் அந்த ஆசிர்வதிக்கப்பட்ட கோலை உடையவானாயிருந்தான்), அவன், “நீ பாதையில் போய்க் போய்க் கொண்டிரு. யாராகிலும் உன்னிடம் பேசினால், அவருக்கு மறு உத்தரவு அளிக்காதே. யாராகிலும் உனக்கு வாழ்த்துதல் கூறினால், அவருக்கு திரும்ப வாழ்த்துதல் கூறாதே. நேராகப் போய், குழந்தையின் மேல் இந்த கோலை வை” என்றான். அது சரியா? “அந்த கோலுடன் நிலைத்திரு!” புரிகிறதா? அதைத் தான் நான் செய்துகொண்டிருந்தேன். 464 இப்பொழுது, என் உடன் போதகர் இங்கு இல்லாமற்போயிருந்தால்…அங்கே நிற்காதிருந்திருந்தால், நான் பிரசங்கம் செய்து முடித்திருந்தேன். அது எப்பொழுது நடந்தது என்று எனக்கு ஞாபகம் உள்ளது. நான்…அவர்கள்…சகோதரன் நெவில் அங்கு நிற்கவில்லையென்றால், அல்லது பீடத்தண்டையில் இருந்த அந்த மனிதனுக்கு உதவி செய்ய வேறு யாராகிலும் இல்லாமல் போயிருந்தால்…அப்பொழுது நான் பிரசங்கம் செய்து முடித்திருந்தேன், எனவே நான் இராப்போஜன மேசையினருகில் நின்று கொண்டிருந்தேன். அவாகள் இராப்போஜனத்தைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமானபோது, நான் ஏற்கனவே இராப்போஜனத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். சகோதரன் நெவில் அங்கு நின்றுகொண்டிருந்தார், நான் இராப்போஜனம் பரிமாறிக் கொண்டிருந்தேன். இப்பொழுது, சகோதரன் நெவிலும் அங்கு நின்றுகொண்டிருந்தார்.
178465 அவர்கள் பீடத்தண்டையில் வந்தபோது, சகோதரன் நெவில் தன்னுடைய பிரசங்கத்தை பிரசங்கித்துக்கொண்டிருந்தார், அவர் பிரசங்கித்துக்கொண்டிருந்தால் என்னவாகும்? அவர் பிரசங்கம் செய்துகொண்டிருந்தபோது, இந்த மனிதன் கூட்டத்திலிருந்து எழுந்து பீடத்தண்டையில் சென்றிருப்பாரானால், அப்பொழுது நான் அந்த மனிதன் இருந்த பீடத்துக்கு, பீடத்தண்டை சென்றிருப்பேன். என் சகோதரனின் மேல்…ஆவியின் அபிஷேகத்தை அவர் உடையவராயிருந்ததை நான் கண்டேன். அவர் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். அவர் ஒரு ஊழியக்காரர்…அவர் கடமையின் பாதையில், கடமையின் பாதையில் இருந்த ஒரு ஊழியக்காரராயிருந்தார். 466 ஒரு போதகர் கடமையின் பாதையில் இருந்து கொண்டிருக்கும்போது, நீங்கள் அந்நிய பாஷையில் பேசவோ அல்லது வேறெந்த வகையிலும் தடங்கலாயிருக்கக் கூடாது. ஆம், பரிசுத்த ஆவியானவர் பிரசங்கத்தின் வாயிலாக யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் இரட்சிப்பைப் பெற யாராகிலும் பீடத்தண்டையில் ஒடிச் செல்வார்களானால், போதகர் தொடர்ந்து தன் கடமையின் பாதையில் இருக்கட்டும்; ஒரு போதகரோ அல்லது உதவிக்காரோ, உடன் போதகரோ, உடன் போதகரோ அல்லது வேறெந்த ஊழியக்காரரோ இருப்பாரானால், அவர் விரைவாக அந்த நபரிடம் செல்லட்டும். கடமையின் பாதையில் உள்ள ஊழியக்காரரை தொந்தரவு செய்யாதீர்கள். புரிகிறதா?
179467 நான் என் கடமையின் பாதையில் இராப்போஜன மேசையின் பின்னால் நின்று கொண்டு இராப்போஜனம் கொடுத்துக் கொண்டிருந்தேன். என் உடன் போதகர், சகோதரன் நெவில், என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். அந்த மனிதன் பீடத்துக்கு ஓடி வந்தபோது, நான், “சகோதரன் நெவில், போய், அவரிடம் சொல்லுங்கள்” என்று கூறினேன். சகோதரன் நெவில் அவரிடம் சென்றார். ஆகயைால் தான் நான் போகவில்லை. 468 இப்பொழுது, அந்த மனிதனிடம் செல்ல உடன் போதகரோ அல்லது வேறு யாராகிலும் இல்லாமற்போயிருந்தால், நான் இராப்போஜனத்தை நிறுத்திவிட்டு அவரிடம் சென்று அந்த ஆத்துமா இரட்சிப்படைவதைக் குறித்துக் கவனித்திருப்பேன். உங்களுக்குப் புரிகிறதா? ஆனால் அனுப்புவதற்கு ஒருவர் இருந்தார், நான் இராப்போஜனம் கொடுப்பதை நிறுத்திவிட்டுச் சென்றிருந்தால், நீங்கள் பாருங்கள், அது என்னை கடமையின் பாதையிலிருந்து விலகச் செய்திருக்கும்.
180129. ஒரு நபர் என்ன செய்ய முடியும்… ஒரு தனிப்பட்ட ஊழியக்காரன் என்னும் முறையில் பரிசுத்த ஆவியை நாடிக் கொண்டிருக்கிற ஒரு நபரிடம், எவ்வாறு வேதப்பூர்வமாக ஈடுபட முடியும்? 469 சரி. அவருக்கு வார்த்தையை எடுத்துக் கூறிக்கொண்டேயிருங்கள், அதுவே செய்யக்கூடிய சிறந்த காரியமாகும். வார்த்தை வெளிச்சத்தைக் கொண்டுள்ளது. “சகோதரனே, இயேசு அதை வாக்களித்துள்ளார். அது அவருடைய வாக்குத்தத்தம் என்பதை, நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறிக் கொண்டேயிருங்கள். 470 அவரைக் குலுக்கவோ, தள்ளவோ, அல்லது அவரைச் சுற்றிலும் அசைக்கவோ அல்லது வேறெதையோ செய்யாதீர்கள். முயற்சி செய்யாதிருங்கள்…இல்லை, நீங்கள் அவருக்கு அதைக் கொடுக்க முயற்சி செய்யாதிருங்கள், ஏனெனில் உங்களால் அதைச் செய்ய முடியாது. புரிகிறதா? புரிகிறதா? நீங்கள்…தேவன் அதை அவருக்குத் தந்தருளுவார். நீங்கள் வாக்குத்தத்தங்களை எடுத்துக் கூறிக் கொண்டேயிருங்கள். புரிகிறதா? அங்கு நின்றுகொண்டு. வாக்குத்தத்தத்தை மேற்கோள் காட்டிக் கொண்டேயிருங்கள். “பரலேகாத்தின தேவனே, என் சகோதரனுக்காக ஜெபிக்கிறேன். நீர் அவருக்கு பரிசுத்த ஆவியைத் தருவீர் என்பதே உமது வாக்குத்தத்தமாயுள்ளது.” 471 நீங்கள் அவரை உற்சாகப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தால்… அவர், “ஓ, சகோதரனே, மேய்ப்பனே, சகோதரனே,” அவருடைய பக்கத்தில் யார் இருக்கிறார்களோ அவரைப் பார்த்து, “நான் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும்” என்று கூறிக் கொண்டேயிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 472 “சகோதரனே, அது ஒரு வாக்குத்தத்தம். தேவன் அந்த வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவர் வாக்குத்த்தம் செய்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, அதை சந்தேகிக்காதீர்கள். நீங்கள் வாக்குத்தத்ததை விசுவாசிப்பீர்களானால், இப்பொழுது எந்த வினாடியிலும் பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் வருவார். அதை எதிர்பார்த்துக் கொண்டேயிருங்கள். உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் அவருக்கு ஒப்புவித்து, ‘கர்த்தாவே, உம்முடைய வாக்குத்தத்தத்தின் மேல் நான் நின்று கொண்டிருக்கிறேன்’” என்று சொல்லுங்கள். 473 இப்பொழுது, நீங்கள் மேற்கொள்காட்டிக் கொண்டேயிருங்கள். இப்பொழுது, உங்களுடைய—உங்களுடைய—உங்களுடைய—உங்களுடைய பொருள், பாருங்கள், அவரிடத்தில் தொடர்ந்து…மேற்கோள் காட்டிக்கொண்டேயிருங்கள். இப்பொழுது, “நீங்கள் தேவனிடத்தில் சொல்லுங்கள். இப்பொழுது, நீங்கள் மனந்திரும்பிவிட்டீர்களா?” என்று கேளுங்கள். அவர், “ஆம்” என்கிறார். 474 “அப்படியானால் இப்பொழுது, ‘கர்த்தாவே, நான் மனந்திரும்பினால், என்னை மன்னிப்பதற்கு நீர் நீதியுள்ளவராயிருப்பதாக உரைத்திருக்கிறீர். நான் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டால், நான் பரிசுத்த ஆவியை பெறுவேன் என்று நீர் கூறியிருக்கிறீர். இப்பொழுது, கர்த்தாவே, அதை நான் செய்து முடித்துவிட்டேன். நான் அதைச் செய்தேன், கர்த்தாவே. நான் செய்துவிட்டேன். கர்த்தாவே, இப்பொழுது நான் காத்திருக்கிறேன். அதை நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர்’” என்று சொல்லுங்கள். 475 பாருங்கள், அது தான் முறை, அவரை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருங்கள். அவரை வார்த்தையில் நிலைத்திருக்கச் செய்யுங்கள். அது அவர் மேல் வரவேண்டுமென்றிருந்தால் அப்பொழுது அது வரும்.
181130. நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி அல்லது ஒரு கிறிஸ்தவன் …இல்லை: நித்திய பாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி அல்லது ஒரு கிறிஸ்தவன் சரியாக இருக்கிறாரா? 476 இப்பொழுது, நாம் பார்ப்போம். நான் நினைக்கிறேன் “…இருக்கிறாரா…” நான் படித்த விதமாகவே நீங்களும் படிக்கிறீர்களா என்று பார்க்கலாம். இதை படியுங்கள். [ஒரு சகோதரன், “நித்திய பாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி அல்லது ஒரு கிறிஸ்தவன் சரியாக இருக்கிறாரா?”—ஆசி.] நான் சரியாகத்தான் அதைப் படித்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். இப்பொழுது, பாருங்கள், நான்… நித்திய பாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி சரியாக இருக்கிறாரா? 477 அந்த பிரசங்கியார் செய்துகொண்டிருந்ததாக…நான் நம்புகிறதென்னவெனில், அவர் நித்திய பாதுகாப்பைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லையென்றால். ஆனால் அவர் அதை அறிந்திருந்து, அது சத்தியம் என்பதை அறிந்திருந்து, அதை பிரசங்கிக்காமல் இருப்பாரானால், தன்னைக் குறித்து அவர் வெட்கப்பட வேண்டியவராயிருக்கிறார்; அது உண்மை, அல்லது அது எந்த கிறிஸ்தவனாயிருந்தாலும் சரி. இப்பொழுது, கிறிஸ்தவன், இப்பொழுது, இதை நன்றாக புரிந்துகொள்ள இயலாத கிறிஸ்தவனுக்கு நான் கூற விரும்புவது என்னவெனில்… 478 [ஒரு சகோதரன், “சகோதரன் பிரான்ஹாமே, இதை மற்ற ஜனங்களுக்கு பிரசங்கிப்பதற்கு இது ஒரு வெளிப்படையான உபதேசம் அல்லவா …?… ” என்று கேட்கிறார்.—ஆசி.] இல்லை, இல்லை, இல்லை. இப்பொழுது, அதைக் குறித்து தான் நான் விளக்கிக்கொண்டிருந்தேன். ஆம். பார்த்தீர்களா? புரிகிறதா? 479 இப்பொழுது, சென்ற ஞாயிறு நான் கூறினது உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? நீங்கள் ஒரு பிரசங்கியாக இருப்பீர்களானால், உங்களுக்கென்று ஒரு பிரசங்க பீடத்தை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பிரசங்கி அல்லவென்றால், உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள். பாருங்கள், அதுவே நீங்கள் செய்யத்தக்க மிகச் சிறந்த முறையாகும், உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள். நீங்கள் ஒரு பிரசங்கியாக இருப்பீர்களானால், ஒரு பிரசங்க பீடத்தை தெரிந்துகொண்டு, பாருங்கள், பிரசங்கம் செய்யுங்கள். நீங்கள் பிரசங்கி அல்லவென்றால், உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள், உங்கள் வாழ்க்கையே ஒரு பிரசங்க பீடமாக அமைந்திருக்கட்டும். புரிகிறதா? அது எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறது என்றே நான் நினைக்கிறேன், நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? புரிகிறதா? பார்த்தீர்களா? ஏனெனில் அநேக தருணங்களில் நாம் காண்கிறது என்னவெனில்…சகோதரர்களாகிய நீங்கள் அதை உங்கள் சபைகளில் செய்யுங்கள்.
182480 ஞாபகமிருக்கட்டும், உங்கள் சபையோர் சில நேரங்களில் காரியங்களை விளக்குவதிலும் காரியங்களைச் செய்வதிலும் ஈடுபடுகின்றனர், அவ்விதம் செய்யாதிருக்க அவர்களுக்கு அறிவுரை கூறுவது மிகச் சிறந்ததாகும். யாராகிலும் ஏதாவதொன்றை அறிந்துகொள்ள விரும்பினால்,…அவ்விதம் செய்ய நியமிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் வரட்டும். உங்களுக்குப் புரிகிறதா? 481 உதாரணமாக, பாருங்கள், இப்பொழுது, யாராவது இந்த விதமாக, “பாருங்கள், நான் சொல்கிறேன்…நீங்கள் உங்களுடைய சபையில் நித்திய பாதுகாப்பில் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்று அவர்கள் என்னிடம் சொல்லுகிறார்கள்” என்று கூறுவதாக வைத்துக்கொள்ளவோம். 482 இப்பொழுது, நீங்கள் கவனமாயிருப்பது நலம். ஒருவேளை நீங்கள் அதற்கு விளக்கம் தரத் தலைப்பட்டால், அவரை இன்னும் அதிகமான குழப்பத்தில் ஆழ்த்தி, அவர் முன்பிருந்ததை விட இன்னும் மோசமான நிலையில் அவரைக் கொண்டு செல்ல வாய்ப்புண்டு. எனவே அவரிடம், “நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நான் உங்களிடம் கூறுகிறேன், கவனியுங்கள், எங்கள் போதகரிடம் நீங்கள் வாருங்கள். நீங்கள்—நீங்கள் அவரிடம் இதைக் குறித்துப் பேசுங்கள், பாருங்கள். நாங்கள்…அது உண்மையே, எங்கள் போதகர் அதை விசுவாசிக்கிறார் என்று எனக்குத் தெரியும். நானும் கூட அதை விசுவாசிக்கிறேன், ஆனால் அதற்கு ஆதாரம் காட்ட எனக்குத் தெரியாது…நான் ஒரு பிரசங்கியல்ல. அதை நான் விசுவாசிக்கிறேன், அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அவர் வேதத்திலிருந்து அதை விளக்குவதை நான் கேட்டிருக்கிறபடியால், அதை நான் விசுவாசிக்கிறேன், அது எனக்கு எந்த சந்தேகத்தின் நிழலுக்கும் அப்பாற்பட்டதாயுள்ளது” என்று சொல்லுங்கள். புரிகிறதா? 483 சபையோர் அதை போதகரிடம் அறிவிப்பது நலம்—நலம். மேலும், போதகரும் கூட, அதற்கு எவ்விதம் விளக்கம் தரவேண்டுமென்று உறுதியாக அறிந்திருக்க வேண்டும். எனவே அதை நன்றாக படித்து அறிந்திருங்கள், ஏனெனில் அநேக சமயங்களில் அவர்கள் உங்களை மடக்கிவிடுவார்கள், நீங்கள் பாருங்கள். என்ன…
183484 [ஒரு சகோதரன், “சகோதரன் பிரான்ஹாமே?” என்று கூப்பிடுகிறார்—ஆசி.] என்னை மன்னியுங்கள். [“எனக்கும் ஒரு நம்பிக்கை உண்டு, ஆனால் எனக்கு அழைப்புள்ளதென்று நான்—நான் அறிந்திருக்கிறேன், என் தெரிந்துகொள்ளுதலையும் நான் உறுதியாக்கிக் கொண்டிருக்கிறேன்.”] உ-ஊ. [“நீங்கள், ‘நீங்கள் ஒரு பிரசங்கியாயிருந்தால். உங்களுக்கு ஒரு பிரசங்க பீடம் இருக்க வேண்டும்’ என்று சற்று முன்பு நீங்கள் கூறினீர்கள்.”] ஆம், ஐயா. அது உண்மை. [“நான் ஒரு பிரசங்கியல்ல. நான் ஒரு சுவிசேஷகன்.”] ஆம், ஐயா. [“ஆனால் ஒவ்வொருவருடைய பிரசங்க பீடமும் என்னுடையது.”] அது உண்மை. [“ஆனால் இப்பொழுது நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன், சரீர உழைப்பு. அது கடினமாக வேலையல்ல, ஆனால் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன், எனக்கு பிரசங்க பீடம் எதுவும் கிடையாது. மேலும் நான் இந்த பணிபுரியும் காலத்தில் இப்பொழுது வேலை செய்துகொண்டிருப்பது அவருடைய சித்தமாயுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் வார்த்தையின் மூலமாகவும் ஆவியின் சாட்சி மூலமாகவும் என்னிடம் அதைச் செய்யும்படி கூறினார். சற்று கழித்து, பிரசங்க பீடங்கள் எனக்குத் திறக்கப்படும் என்று நான் விசுவாசிக்கிறேன்.”] நிச்சயமாக, அது உண்மை. [“அது சரியா?”] சகோதரனே, அது சரி.
184485 சகோதரனே, இப்பொழுது, நீங்கள் இங்கே திரும்பிப் போய் அந்த பழைய சபை பதிவேடுகளைப் புரட்டிப் பார்ப்பீர்களானால், நான் பதினேழு ஆண்டுகளாக இந்த சபையின் மேய்ப்பனாக இருந்து, ஒவ்வொரு நாளும் பிரசங்கித்து, ஒவ்வொரு நாளும் பிரசங்கித்தும், வேலையும் செய்தும் வந்திருக்கிறேன். புரிகிறதா? [ஒரு சகோதரன், “நீங்கள் வேலை செய்தால், நீங்கள் அழைக்கப்பட்டதற்கு அது ஒரு நல்ல அடையாளம்” என்கிறார்.—ஆசி.] ஆம். பவுல் வேலை செய்தான், அவன் வேலை செய்தானல்லவா? பவுல் கூடாரங்கள் செய்தான். [“ஒவ்வொரு பிரசங்கியும் ஒரு பிரசங்க பீடத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நீங்கள் கூறினபோது, எனக்கு சோர்வு உண்டானது. எனக்கு…எனக்கு சோர்வு உண்டானது, ஆனால் தேவன் சிறிது காவத்திற்கு நான் வேலை செய்ய என்னை அழைத்திருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்.”] நிச்சயமாக. பவுல் சென்று கூடாரங்களை உண்டாக்கினான், அவன் உண்டாக்கினானல்லவா? அவன் மற்றவர்களின் பேரில் சார்ந்திருக்கக் கூடாதென்று எண்ணி தன் சொந்த கைகளினால் பிரயாசப்பட்டான்…அது முற்றிலும் உண்மை. நிச்சயமாக. [“ஆம், ஓ, பவுல் இருந்த, அந்த நிலையில் தான் நான் இருக்கிறேன்.”] ஹூம். அது உண்மை. புரிகிறதா? ஜான் வெஸ்லி, “உலகம் முழுவதுமே என் சபை” என்று கூறினார். எனவே, உங்கள் பீரசங்க பீடம் இன்னும் திறந்திருக்கிறது. சகோதரனே. சுவிசேஷகர்கள் உலகெங்கும் செல்கின்றனர். அது சரிதானே? “நீங்கள் உலகமெங்கும் போய்.” எனவே உங்கள் பிரசங்க பீடம் முழு உலகமே. ஆம், ஐயா.
185கேள்வி: 131. இது கட்டளையா, க-ட்-ட-ளை…ஒரு உதவிக்காரர் அல்லது ஒரு தர்மகர்த்தா அவர்களுடைய சபையின் உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்பது ஒரு கட்டளையா? ஆம். அது உண்மை. தங்களுடைய சொந்த கருத்து அல்லது வெளிப்பாட்டின் காரணமாக சபை உபதேசங்களுடன் கூட்டுவதோ அல்லது அவைகளிலிருந்து எடுத்துவிடுவதோ நியாயமா? இல்லை, ஐயா. இல்லை. 486 ஒரு உதவிக்காரர் அல்லது ஒரு தர்மகர்த்தா அவர்களுடைய சபையின் உபதேசங்களுடன் இசைவாய் இணைந்திருக்க வேண்டியது அவசியம். அவர்களுடைய சபையின் போதக வியாக்கியானங்களுடன் அவர்கள் பரிபூரணமாய் நிலைத்திருக்க வேண்டும், ஏனெனில், அவர்கள் அவ்விதம் செய்யாவிட்டால், அவர்கள் அதற்கு எதிராக போராடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள்—அவர்கள் தங்களையே உருவக் குத்திக் கொள்வார்கள். பார்த்தீர்களா? நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்… 487 வேறு விதமாகக் கூறினால், என் குடும்பத்தினரை நான் நேசிக்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களுக்கு விஷம் கொடுப்பதுபோல இது உள்ளது. பாருங்கள், அதே காரியம்தான். பாருங்கள், நீங்கள் அதைச் செய்ய முடியாது, நீங்கள்… 488 ஒரு—ஒரு தர்மகர்த்தா அல்லது ஒரு உதவிக்கார் அவர்களுடைய உத்தியோகத்தை வகிக்கும்போது, அல்லது ஒரு குறிப்பிட்ட சபையில் உத்தியோகம் வகிப்பவர் எவரானாலும், பாருங்கள், அவர்கள் ஒரு சபையின் பிரதிநிதிகள். 489 அதன் காரணமாகத் தான் நான் முதல் தடவை, பாப்டிஸ்டு சபையை விட்டு வெளிநடந்தேன், பாருங்கள். அங்கு நான் சிறிது காலம் இருந்தேன், அவர்கள்—அவர்கள் என்னிடம் சில பெண் பிரசங்கிகளை நியமணஞ் செய்யக் கூறினார்கள். பாருங்கள், அதன் விளைவாக அங்கு என்னால் தங்கியிருக்க முடியவில்லை. அப்பொழுது நானோ, “நான்—நான் அவ்விதம் செய்ய மறுக்கிறேன்” என்று கூறினேன். 490 மேய்ப்பர் என்னை அதட்டினார். “இது என்ன? நீர் மூப்பனாயிற்றே!” என்றார். 491 நான், “வேத பண்டிதர் டேவிஸ், நான் நியமிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு காரியத்திற்கும், இந்த பாப்டிஸ்டு சபையின் விசுவாசத்துக்கு முழு மரியாதையையும் அளித்து இதைக் கூற விரும்புகிறேன், பெண்களை பிரசங்கியாக நியமிப்பது பாப்டிஸ்டு சபையின் உபதேசமாயுள்ளது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அது அதிலிருந்து விடப்பட்டிருந்த ஒன்றாக இருந்தது” என்றேன். மேலும் அவர், “இது இந்த சபையின் உபதேசம்” என்றார். 492 நான், “ஐயா, இன்றிரவு நான் வராமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள் அல்லது நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளிப்பீரா?” என்று கேட்டேன். பார்த்தீர்களா? 493 அப்பொழுது அவர், “உன் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன்” என்றார். “ஆனால் இன்றிரவு அங்கு இருக்க வேண்டியது உன்னுடைய கடமையாகும்” என்றார். 494 அதற்கு நான், “அதுதான், ஐயா. அது உண்மைதான். இந்த சபை செய்கிற எந்த காரியத்திலும் நான் எதிர்நோக்குகிறவனாயிருக்க வேண்டும். உள்ளூர் மூப்பர்களில் ஒருவன் என்னும் முறையில் நான் கடமையின் பாதையில் இருக்க வேண்டும்” என்றேன். அவர் சொன்னார்…நான், “முதலாம் கொரிந்தியர் 14 இல்லை 15-ம் அதி காரத்தில், அங்கே பவுல், ‘சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள், பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை’ என்று ஏன் கூறினான் என்பதற்கு எனக்கு விளக்கம் தருவீர்களா?” என்று கேட்டேன்.
186495 அவர், “ஏன், நிச்சயமாக!” என்றார். அவர், “ஆயினும்…அதற்கு என்னால் விளக்கம் தரமுடியும்” என்றார். அவர், “நீங்கள் பாருங்கள், அது என்னவாயிருந்து என்றால்” என்று கூறி, “பவுல்…ஸ்தீரீகள் அனைவரும்—அனைவரும் பின்னால் மூலைகளில் உட்கார்ந்துகொண்டு, மற்ற நேரங்களில் பேசுவது போலவே அங்கும் பேசிக்கொண்டிருந்தனர். எனவே அவன், ‘அவர்கள் அப்படி செய்வதை அனுமதிக்காதீர்கள் என்றான்’ என்றே கூறினார். புரிகிறதா?” 496 அதற்கு நான், “அப்படியானால், அதே வேதபாரகனாகிய, பவுல் அங்கே இரண்டாம் தீமோத்தேயுவில், அதே அப்போஸ்தலன், ‘உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. என்னத்தினாலெனில் முதலாம் ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள், மேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டாள்’ என்று கூட கூறியுள்ளதற்கு விளக்கம் தாருங்கள். அவள் தான் வஞ்சிக்கப்பட்டாள். இப்பொழுது அவள் ஏதோ ஒன்றை தவறாகச் செய்ய வேண்டும் என்று கருதிச் செய்கிறாள் என்று நான் கூற வரவில்லை, அவள் உண்மையில் அதில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறாள். அவள் உபதேசம் பண்ணக் கூடாது” என்றேன். அதற்கு அவர், “அது உன்னுடைய சொந்தக் கருத்தா?” என்று கேட்டார். 497 நான், “நான் காண்கிறபடி, அது வேதத்தின் கருத்து. வேதம் அவ்விதம் தான் உரைத்துள்ளது” என்றேன். 498 அவர், “இளைஞனே, அதற்காக நீ பெற்றுள்ள உரிமத்தை உன்னிடமிருந்து பிடுங்கிக்கொள்ள முடியும்” என்றார். 499 அதற்கு நான், “அவர்களுக்கு அந்த தொல்லையை நான் கொடுக்கமாட்டேன். வேத பண்டிதர் டேவிஸ், நானே அதை கொடுத்து விடுவேன்” என்றேன். மேலும் நான், “உங்களை அவமதிப்பதற்காக அவ்விதம் செய்யவில்லை…” என்றேன். ஆயினும் அவர் உரிமத்தை வாங்கிக்கொள்ளவில்லை. அவர் விட்டுவிட்டார், அதை அப்படியே விட்டுவிட்டார். 500 அதன் பிறகு அவர் இவ்விஷயத்தில் என்னுடன் நேரடியாக விவாதம் ஒன்றை நடத்தப்போவதாகக் கூறினார். அதற்கு நான், “சரி, எந்த நேரத்திலும் சரி” என்றேன். ஆனால் அவர்—அவர் அதைச் செய்யவில்லை.
187501 எனவே சற்று கழித்து, அதன் பின்னர், கர்த்தர் என்னிம் பேசினபோது, கர்த்தருடைய தூதன் வந்தபோது, அப்பொழுது—அப்பொழுது அவர் அதைக் குறித்து கேலி செய்தார், நீங்கள் பாருங்கள். அப்பொழுது நான்—நான் அவரிடம், “பாருங்கள், வேத பண்டிதர் டேவிஸ், இப்பொழுதே என் உரிமத்தை துறந்துவிடுவது நலம், பாருங்கள்” என்றேன், நான், “ஏனெனில் அது எனக்கு ஒரு பாரமாக இருக்கப்போகிறது. நான் நியமனம் செய்யப்பட்டு, எப்படியோ, சிறிது காலம் இங்கிருந்தேன், இனிமேல் அது எனக்கு பாரமாக இருக்கும், எனவே அதை இப்பொழுதே துறந்துவிடுவது நலமாயிருக்கும்” என்றேன். 502 எனவே என்னால் பாப்டிஸ்ட் சபையில் தங்கியிருந்து பாப்டிஸ்டு உபதேசத்தைப் போதித்து, பாப்டிஸ்ட் விசுவாசத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது ஒரு சபை என்பதால், அவ்விதம் நான் செய்திருந்தால்—அவ்விதம் நான் செய்திருந்தால், நான் தவறு செய்தவனாயிருப்பேன், பாருங்கள், நான் ஏதோ ஒன்றை மறைக்கிறவனாயிருப்பேன். மேலும் நான்—நான் உண்மையுள்ளவனாயிருந்தால், நான் பாப்டிஸ்ட் ஜனங்களிடம் சென்று (என்னுடைய போதகரிடத்திலோ அல்லது எனக்கு விளக்கம் அளிக்கக் கூடியவர் எவரிடத்திலாகிலும்) அவர்களிடம் ஜீவ வார்த்தையைக் குறித்துக் கேட்பேன்; அவரால் வேத்திலிருந்து அதை சரியாக எனக்கு எடுத்துக் காண்பிக்க முடிந்து, என் உணர்வுகளை திருப்திபடுத்துவாரானால், அப்பொழுது அவர்கள் அதை உரைக்கும் விதமாகவே நானும் உரைப்பேன், பாருங்கள், நான் ஒரு பாப்டிஸ்டாக இருப்பேன்.
188503 ஆகையால் தான் நான் சுயாதீனமுள்ளவனாயிருக்கிறேன். ஆகையால் தான் நான் எந்த ஸ்தாபனத்திலும் சேர்ந்திருக்கவில்லை, ஏனெனில் நான் ஸ்தாபனங்களில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை. ஸ்தாபனங்கள் வேதத்திற்கு விரோதமானவை என்றே நான் நினைக்கிறேன். 504 எனவே தான், நான் எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்திருக்கவில்லை, அவ்விதம் சேர்ந்திராதது நியாயமானது என்று நான் உணருகிறேன். புரிகிறதா? ஆகையால், எனவே நான் ஜனங்களை சேர்த்துக் கொண்டு, அந்த விதமாக அவர்களை அங்கத்தினர்களாக்குவதில்லை, ஏனெனில் நாம் அங்கத்தினர்களாக பிறக்கிறோம், நாம் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்குள் பிறக்கிறோம் என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? 505 நாங்கள் ஜனங்களின் பெயர்களை புத்தகத்திலிருந்து எடுத்துப்போட்டு அவர்களை சபையிலிருந்து புறம்பாக்குவதில்லை, அதைப் போன்ற காரியங்களை செய்கிறதில்லை, ஏனெனில் அதைச் செய்வது நம்முடைய—நம்முடைய வேலையல்ல என்று நான் கருதுகிறேன். தேவனே சபையை விட்டுப் புறம்பாக்கும் பணியைச் செய்கிறார் என்றே நான் கருதுகிறேன். புரிகிறதா? ஆனால் சபையானது செய்ய வேண்டும் என்று நான் விசுவாசிப்பது என்னவெனில், ஒரு சகோதரன் ஏதாகிலும் தவறொன்றைச் செய்துகொண்டிருந்தால்…
189506 உதாரணமாக, சகோதரன் நெவில் அல்லது சகோதரன் ஜூனியர் அல்லது சகோதரன்…இங்குள்ள சகோதரர் ஒருவர், உதவிக்காரர்கள் அல்லது தர்மகர்த்தாக்கள் அல்லது மற்ற ஒருவர் தவறு செய்கிறார் என்பதை அவர்கள் கண்டுபிடிப்பார்களானால், சபை என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்கள் ஒன்று கூடி இந்த சகோதரனுக்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அவர் அப்பொழுதும் சரிபடுத்திக் கொள்ளவில்லையென்றால், அதன் பின்னர் இரண்டு பேர்கள் அவரோடு, அந்த சகோதரனை ஒப்புரவாக்கும்படி செல்லட்டும். அப்பொழுதும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அதன் பின்னர் அதை சபைக்கு முன்பாக அறிவியுங்கள். அப்பொழுதும் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், அப்பொழுது அது முழு சபையின் வேலையாயுள்ளது, பாருங்கள், மேய்ப்பர், மூப்பர்கள் மற்றெல்லாருமே சேர்ந்து அதை செய்ய வேண்டும். எந்த உதவிக்கார குழுவுக்கும் சபையிலிருந்து எவரையும் தூக்கியெறிய அதிகாரமில்லையென்றும் அல்லது தர்மகர்த்தா குழுவுக்கோ அல்லது மேய்ப்பருக்கோ அதை செய்ய அதிகாரமில்லை என்றே நான் நினைக்கிறேன். 507 யாரையாகிலும் ஒழுக்கக்கேடான வாழ்க்கையின் காரணமாக, அல்லது அதைப் போன்ற ஏதோவொன்றிற்காக, ஐக்கியத்திலிருந்து வெளியாக்க வேண்டுமென்றால், அவர் இங்கு வந்து நமது பெண்களை அசுசிப்படுத்தி அல்லது—அல்லது நமது ஸ்திரீகளை அவமதித்து, அது போன்ற காரியங்களைச் செய்து, அதே நேரத்தில் அவர் நம்மில் ஒருவர் என்று அழைத்துக் கொண்டால், அவர் இங்கிருப்பதற்கு தகுதியுள்ள மனிதன் அல்ல என்றே நான் நினைக்கிறேன். புரிகிறதா? இப்பொழுது, அவர் வெளியில் வேறங்காகிலும் இருந்து நமது மத்தியில் வந்திருப்பாரானால், ஏன், அதைக் குறித்து நாம் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும், ஆனால், அதைப் போன்ற ஒரு நபர் வரும்போது, ஒழுக்கங்கெட்ட ஒருவர் நமது மனைவிகளுடன் காதல் புரிய முயன்று அல்லது—அல்லது நம்முடைய குமாரத்திகளை அவமதித்து அல்லது, உங்களுக்குத் தெரியும், அவ்விதம் எதாகிலும் ஒன்றைச் செய்து, அல்லது அவளைச் சுற்றி ஒழுக்கக்கேடான ஒன்றை செய்து, அல்லது நமது பையன்களை கூட்டிச் சென்று அவர்களை தாறுமாறான வழியில் நடத்தி, அல்லது ஏதாவதொன்றைச் செய்தால். 508 அந்தக் காரியங்களை உடனே கவனித்து, அப்பொழுதே அந்த நபரை ஐக்கியத்தினின்று புறம்பாக்கி, அவர் இராப்போஜனத்தில் பங்கு கொள்ள அனுமதிக்கக் கூடாது, ஏனெனில் நாம் அதைச் செய்ய அனுமதிக்கக் கூடாது. நாம் அவ்வாறு அனுமதிக்கக் கூடாது. அந்த நபர், “அபாத்திரமாய் போஜனபானம் பண்ணுகிறவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.”
190509 ஆனால் ஒரு நபர் கூறினவிதமாக, “பாருங்கள், இப்பொழுது, அவர்—அவர் இது , அதுவாக இருக்கிறார்” என்று கூறுவீர்கள் என்று நான் நினைக்கிறேன். அவருக்காக ஜெபியுங்கள். சரி. 510 ஸ்வீடனிலுள்ள ஸ்டாக்ஹோமில் நடந்ததை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன், சகோதரன் லேவி பெத்ரூஸ், ஒரு மகத்தான தேவனுடைய மனிதன். நாங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால், மேசையினருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு மகத்தான கூட்டங்கள் அங்கு உண்டாயிருந்தன. மேலும் அவர் கூறினார், கார்டன் லிண்ட்ஸே, “இந்த பெரிய சபைக்கு மேற்பார்வையாளர் யார்?” என்று கேட்டார். நீங்கள் பாருங்கள், அந்த சபை அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையை மிஞ்சின மிகப் பெரிய சபை. அவர், “யார் இதற்கு மேற்பார்வையாளர்?” என்று கேட்டார். லூயி பெத்ரூஸ் பெருந்தன்மை வாய்ந்தவர், அதற்கு அவர் “இயேசு” என்றார். மேலும் அவர், “உங்களுடைய மூப்பர்கள் யார்?” என்றார். அதற்கும் அவர், “இயேசு” என்றார். 511 அவர், “அது சரியென்று எனக்குத் தெரியும்,” என்று கூறி, “நாங்களும் எங்கள் அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையில் அவ்விதமே விசுவாசிக்கிறோம்” என்றார். அவர், “அது உண்மை” என்றார். “ஆனால்,” “உதாரணமாக, ஒரு—ஒரு சகோதரன் வழி விலகுகிறார் என்று வைத்துக்கொள்வோம்,” என்று கூறி, “அவரை சபையிலிருந்து புறம்பாக்க அதிகாரமுடையவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவர், “நாங்கள் அவரை புறம்பாக்குதில்லை” என்றார். “பாருங்கள்,” மேலும், “அப்படியானால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். 512 அதற்கு, “நாங்கள் அவருக்காக ஜெபம் செய்வோம்” என்றார். அது மிகவும் இனிமையான செயல் என்று நான் எண்ணினேன்! “நாங்கள் அவருக்காக ஜெபம் செய்வோம்” என்பது எனக்கு கிறிஸ்தவத் தன்மையாக ஒலித்தது. யாருமே அவரைப் புறம்பாக்குவதில்லை, அவர்கள் அவருக்காக ஜெபிக்கின்றனர்.
191513 மேலும், “சரி, அப்படியானால், சில சகோதரர்கள் அவருடன் இணங்கி,” என்று கூறி, அவர், “அவர்களில் சிலர் அவருடன் ஐக்கியங்கொள்ள மறுத்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் பாருங்கள், உதாரணமாக ஒரு மேய்ப்பர், பெண்களின் மனதைக் கவருகிற மனிதனாகத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்… நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும், அது போன்ற காரியங்கள், சில மேய்ப்பர்கள் அவரைத் தங்கள் சபைகளுக்கு அழைக்க மறுக்கின்றனர். அப்பொழுது நீங்கள் எல்லோரும் என்ன செய்வீர்கள், அவரை உங்கள் ஸ்தாபனத்திலிருந்து நீக்கிவிடுவீர்களா?” என்று கேட்டார். 514 “இல்லை.” “நாங்கள் அவரை அப்படியே விட்டுவிட்டு, அவருக்காக ஜெபிப்போம்” என்றார். மேலும், “இதுவரைக்கும் நாங்கள் ஒருவரையும் இழக்கவில்லை. அவர்கள் எப்படியாயினும், திரும்ப வந்துவிடுகின்றனர்” என்றார். 515 அப்பொழுது அவர், “பாருங்கள்” என்று கூறி, “இப்பொழுது, என்ன…” என்றார். மேலும், “சிலருக்கு அவர் வேண்டுமென்றும் மற்றவர்களுக்கு அவர் வேண்டாமென்றும் இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். 516 “பாருங்கள், அவர் வேண்டுமென்பவர்கள் அவரை ஏற்றுக்கொள்கின்றனர்; அவரை வேண்டாதவர்கள், அவரை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.” 517 எனவே—எனவே அம்முறையை கடைபிடிப்பது ஒரு நல்ல முறை என்று நான் கருதுகிறேன், நீங்கள் அவ்வாறு கருதவில்லையா, சகோதரரே? அந்த விதமாகத் தான் நாங்கள் “சகோதரர்களாக” இருக்கிறோம்.
192518 இப்பொழுது, சகோதரரே, இந்த காரியங்கள் ஏதேனும் ஒரு பதிலையோ அல்லது ஏதோவொன்றையோ நோக்கிய ஏதோவொரு விதமான ஒரு சிறிய கலந்துரையாடலையே அளித்திருக்கும் என்றும், இன்றிரவு இங்கே நம்முடைய கூட்டம் நமக்கு ஏதோவொரு பிரயோஜனத்தை அளித்துள்ளது என்றும் நான் நம்புகிறேன். மேற்கில் நடைபெறவிருக்கும் கூட்டங்களுக்குச் செல்ல, நான் சிறிது காலம் வெளியே செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன். நான் தாழ்மையுடன் உங்கள் ஜெபங்களை விரும்புகிறேன். 519 இங்கு நான் அளித்த சில பதில்கள், அவைகளில் பெரும்பாலானவை, சரியானவைகளாக இருக்கலாம், அல்லது அவைகளில் ஒன்றுமே சரியானதாயில்லாமலும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் அதை விளக்கிக் கூறும்படி, நீங்கள் பாருங்கள், அது என் சொந்த சிந்தனைக்கேற்றபடி சேகரிக்கப்பட்டு அளித்த மிகச் சிறந்ததாயிருக்கும். இந்த கடைசி கேள்விகளுக்கு, குறிப்பாக, பதில்களை ஆராய்ந்து பார்க்க எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. மேலும் நான் அதைச் செய்யவில்லை, அவைகள் …நான் என்ன கூறுகிறேன் என்றால், அவைகள் சபையில் ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கின்ற வேதவசனங்கள். நாம் அந்த மகத்தான ஏதோ ஒன்றுக்குள்ளாக சென்று, ஆழ்ந்து விவரிக்கத் தொடங்கினால், அவை மிகவும் கடினமுள்ள செயலாயிருக்கும் என்று நான் எண்ணினேன், ஆனால் அவை பெரும்பாலும் சபையைக் குறித்த கேள்விகளே.
193520 நீங்கள் இவ்விதமாக தொடர்ந்து நிலைத்து வருகிறதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன், இங்கு எந்த விதமான ஒழுங்கின்மையோ, அதிருப்தியோ, குழப்பமோ காணப்படவில்லை. எந்த ஒரு கேள்வியும் விவாதிக்கப்பட்டு, “இது தவறு, இது தவறு, இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று கூறப்படவில்லை. கேள்வி கேட்டவர்கள் தங்கள் நிலையை பெலப்படுத்திக்கொள்வதற்கென ஒன்றை அறிந்துகொள்ள விரும்பின சகோதரர்களே, அவ்வளவு தான். அது…வலுப்படுத்திக்கொள்ள, தங்கள் போராயுதங்களை இன்னும் சற்று இறுகிக்—இறுக்கிக் கட்டிக்கொள்ள, இன்னும் நன்கு இழுத்து கட்டுவதற்கேயாகும். இவ்வாறு போராயுதங்களை இறுகக் கட்ட, இன்னும் அநேக முறை நாம் சந்திப்போம் என்று நான் நம்புகிறேன். 521 சகோதரரே, என் பேராயுதங்களும் இறுகக் கட்டப்பட வேண்டியது அவசியம் என்பதையும் கூட, நினைவில் கொள்ளுங்கள். எனவே என் போராயுதங்களை நான் இன்னும் சிறிது இறுகக் கட்ட தேவன் எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று எனக்காக நீங்கள் தேவனிடத்தில் ஜெபியுங்கள், அதாவது நான்…காரியங்களில் மிகவும் தளர்வாக இருக்க வேண்டாம். நான் வாழ்கின்ற வாழ்க்கையும், நான் செய்கின்ற செயல்களும், இன்னும் அதிகமான தாழ்மையின் ஆவியைக் கொண்டும், மிகுந்த ஆவலுடனும் நான் செய்வேனாக. தேவன் தாமே அதற்கென இதற்கு முன் எனக்கு இல்லாத அளவுக்கு ஒரு இருதயத்தைத் தருவாராக. அதே காரியத்திற்காகவே உங்கள் எல்லோருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக.
194522 உங்களை நான் நீண்ட நேரம் இங்கே பிடித்து வைத்துவிட்டேன், இப்பொழுது பதினொரு மணிக்கு ஐந்து நிமிடங்கள் உள்ளன. 523 இப்பொழுது, சகோதரன் நெவில், நான்—நான்…இப்பொழுது, நான் போக வேண்டிய இடம் ஏறக்குறைய தொளாயிரத்துக்கும் சற்று அதிகமான மைல்களே என்பதை நான் கண்டறிந்தேன், எனவே நான் திங்கள் காலை வரைக்கும் இவ்விடம் விட்டுச் செல்லப்போவதில்லை. ஆனால் ஞாயிறு பள்ளிக்காக ஞாயிறன்று இங்கு இருக்க நான் விரும்புகிறேன், நீங்கள் பிரசங்கிப்பதைக் கேட்க, ஞாயிறன்று உங்கள் விருந்தினராக இங்கு நான் வருவேன், நீங்கள் பாருங்கள். பார்த்தீர்களா? ஆனால்…சரி, சகோதரன், ஆம், சகோதரனே. சகோதரன் நெவில், சகோதரனே, இதுதான் காரணம். நான்…நான் உங்களை நேசிக்கிறேன் மற்றும் நீங்கள் எப்பொழுதுமே உமது பிரசங்க பீடத்தை அளிப்பதில் அன்பாதரவுடையவராயிருந்து… நான் உங்களுக்கு மூத்த மூப்பன், அல்லது அதைப் போல கருதுகிறீர்கள். ஆனால் சகோதரன் நெவில், நான் அவ்விதம் என்னைக் கருதிக்கொள்வதேயில்லை. நாம் சகோதரர்கள் என்று தான் நான் உணர்ந்து வந்திருக்கிறேன்.
195524 சகோதரன் ரட்டல், சகோதரன் ஜூனி, மற்றும், ஓ, அங்குள்ள சகோதரர் நீங்கள் அனைவருமே, நாம்—நாம் எல்லோரும் ஒன்றாக சகோதரர்களாயிருக்கிறோம், நீங்கள் பாருங்கள். 525 ஆனால் என்ன…அதற்குக் காரணம், எனது தொண்டை சிறிது கரகரப்பாய் உள்ளது, நீங்கள் பாருங்கள், எனக்கு தொடர்ச்சியாக ஆறு வாரங்களுக்கு யுத்தம் உள்ளது, நீங்கள் பாருங்கள். இன்றிரவு இந்த கூட்டத்துக்குப் பிறகு, என்னால் முடிந்தால் துவங்கலாம் என்று நான்—நான் விரும்புகிறேன், அங்கு கூட்டங்களை துவங்குவதற்கு முன்பு, எனக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஓய்வு கிடைக்கும். 526 சகோதரன் ஜூனி, நான் திரும்பி வந்தவுடனே, ஒருமுறை வந்து, நான் வந்து உங்களை மறுபடியும் பார்த்துவிட்டு, வெளியே வர வேண்டும் என்று விரும்புகிறேன். நேற்று அங்குள்ள உங்கள் சிறு சபையை நான் கடந்து சென்றேன் என்று, நான் நினைக்கிறேன். என் மனைவி, “நான் நினைக்கிறேன் அது…” என்று கூறினாள். அது கீளின்லென் பூங்காவுக்குப் பக்கத்தில் இரயில் பாதையின் அருகில் உள்ளதா? நான் அங்கு வந்து அந்த செல்லர்ஸ்பர்க் மக்களிடம் பேச விரும்புகிறேன். அது அருமையாயிருக்கும்.
196527 சகோதரன் ரடல், தேவன் உங்களுடைய இருதயத்தை ஆசிர்வதிப்பாராக. அங்கு நான் வர விரும்புகிறேன், நீங்கள் ஒரு அருமையான குழுவைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் இன்றிரவு அங்கே உட்கார்ந்து முதிய மூப்பர் கேட்பது போல் இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். 528 அங்குள்ள சகோதரன் பீலர் நமது சுவிசேஷக சகோதரர்களில் ஒருவராயிருக்கிறார். உங்கள் கூட்டங்களில் ஒன்றை நான் எங்காவது எப்பொழுதாவது சந்திப்பேன் என்று நான் நம்புகிறேன், சிறிது மதிப்பை உண்டுபண்ணுவதற்கென, உங்களை உயர்த்துவதற்கு ஏதாவதொன்றை எங்காவது கூறுவேன். உங்களுக்காகவும், வேறு எவருக்குமே, உங்களுக்கும் மற்றும் இங்குள்ள சகோதரன் ஸ்ட்ரிக்கருக்கும், சுவிசேஷகர்களுக்கும் நான் கூறுவதற்கு எப்பொழுதும் நல்வார்த்தையைக் கொண்டிருக்கிறேன். 529 இங்குள்ள சகோதரன் காலின்ஸ், என்றாவது ஒரு நாள் ஊழியத்தில் முழு நேர போதகராயிருப்பார் என்று நான் நம்புகிறேன். 530 தீரமுள்ள மனிதன், தீரமான மனிதன், உண்மையான விசுவாசமுள்ள மனிதன், தேவன் உங்கள் எல்லாரோடும், உதவிக்காரர்களாகிய உங்களோடும், தர்மகர்த்தாக்களாகிய உங்களோடும், சகோதரர்களாகிய உங்களோடும் இருப்பாராக.
197531 நான் நினைக்கிறேன் நீங்கள்…இங்குள்ள சகோதரன், அவருடைய பெயரை என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை. நீங்கள்… [சகோதரன் கால்ட்வெல், “சகோதரன் கால்ட்வெல்” என்கிறார்.—ஆசி.] கால்ட்வெல். நீங்கள் ஒரு…நீங்கள் மூப்பர்களில் ஒருவர் அல்லது அப்படி ஏதோ ஒன்று, நீங்கள் அப்படி இல்லையா, அல்லது வெறும் ஒரு… [“ஊழியக்காரர்.”] ஊழியக்காரர். [“நான் ஒரு ஊழியக்காரன். நான் சர்ச் ஆஃப் காட் சபையை சார்ந்திருந்தேன், அங்கு என்னால் அவர்களோடு தரித்திருந்து, முழு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடியவில்லை. என்னால் அவர்களோடு தரித்திருந்து, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைப் பிரசங்கிக்க முடியவில்லை. அவர்கள் எனக்கு மிகவும் உயர்ந்த ஊழிய உரிமத்தை அளித்திருந்தனர், ஆனால் நான் அவைகளை புறக்கணித்து விட்டேன். நீங்கள் பிரசங்கித்த அந்த மகத்தான செய்திகளைக் கேட்டது முதற்கொண்டு, நான் அவைகளைப் புறக்கணித்துவிட்டு, ஸ்தாபனத்தை விட்டு வெளியேறிவிட்டேன். இப்பொழுது நான் உங்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்.”] 532 சகோதரனே, உங்களுக்கு நன்றி. நாங்கள் எங்களுடைய ஐக்கியத்திற்கு உங்களை வரவேற்கிறோம். நம்முடைய—நம்முடைய நற்சாட்சிப் பத்திரங்கள் மேலேயிருந்து அளிக்கப்பட்டவை. நம்முடைய வாழ்க்கையே நம்முடைய நற்சாட்சிப் பத்திரங்களாக உருவாகின்றன, நீங்கள் பாருங்கள். அதுவே நமது நற்சாட்சிப் பத்திரங்கள். “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை.” புரிகிறதா? அது உண்மை. அதுவே நம்முடைய நற்சாட்சி பத்திரங்கள். மேலும் ஒரு முதிய…“நமக்கு அன்பைத் தவிர வேறு பிரமாணம் இல்லை, வேதாகமத்தைத் தவிர வேறு புத்தகம் இல்லை, மற்றும்—மற்றும் கிறிஸ்துவைத் தவிர வேறு கோட்பாடு இல்லை—இல்லை” என்று ஹாவர்ட் கேடல் கூறுவது வழக்கம். அது உண்மை. “அன்பைத் தவிர வேறு பிரமாணம் இல்லை, கிறிஸ்துவைத் தவிர வேறு கோட்பாடு இல்லை, வேதாகமத்தைத் தவிர வேறு புத்தகம் இல்லை.”
198533 மேலும் நாங்கள்—நாங்கள், சகோதரன் கால்ட்வெல், உங்களை நாங்கள் பெற்றிருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நீங்கள் ஒரு பெரிய ஸ்தாபனத்திலிருந்து வெளியே வந்திருக்கிறீர்கள். அது ஆண்டர்ஸன் சர்ச் ஆஃப் காட் என்று, நினைக்கிறேன். [சகோதரன் கால்ட்வெல், “க்ளீவ்லாண்ட்” என்கிறார்.—ஆசி.] இல்லை க்ளீவ்லண்டு சபை, பெந்தெகொஸ்தே சர்ச் ஆஃப் காட். [“மேலும் நான் முன்பு இங்கு …?… போதகராயிருந்திருக்கிறேன்.”] ஓ, ஆமாம். ஓ, ஆமாம், நான் அங்கே வந்திருக்கிறேன். நான் அங்கே சகோதரன் நெவில்…இல்லை சகோதரன் உட்டுடன், ஒரு முறை வந்திருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன், அங்கே உங்கள் சபைக்கு சென்ற ஒருவரிடமிருந்து எங்களுக்கு ஒரு நாய் இல்லை வேட்டை நாய் கிடைத்தது. நான் அங்கே படிக்கட்டுகளில் நின்றுகொண்டு, பேசிக்கொண்டிருந்தேன், அவர்கள் உங்களைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள். பாருங்கள், நான் நிச்சயமாக… [“என் சபையிலே.”] ஓ? [“பர்ன்ஸ்.”] அது சரி, சகோதரன் பர்ன்ஸ். அது சரி [சகோதரன் கால்ட்வெல் ஒரு சம்பவத்தைக் கூறுகிறார்.] ஓ? ஆம், ஓ, பெர்தா, அது சரி. ஓ, அது அற்பதமானது.
199534 அங்குள்ள சகோதரன் ரூக், அவர் இப்பொழுது ஒரு மேய்ப்பராகிவிட்டார் இல்லை சுவிசேஷகராகிவிட்டார் என்று, நான் நினைக்கிறேன். அது சரியா? அல்லது நீங்கள் மேய்ப்பராக இருக்கிறீர்களா? [சகோதரன் ரூக், “சுவிசேஷகனாக மட்டுமே” என்கிறார்.—ஆசி.] சுவிசேஷகர். சகோதரன் ரூக், நான் உங்களை பாராட்ட விரும்புகிறேன். கர்த்தருக்காக நீங்கள் செய்து கொண்டிருக்கும் சில மகத்தான ஊழியத்தைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள்…நீங்கள் இந்தியானாபோலீஸூக்கு சென்று இல்லை இந்தியானாபோலீஸில் ஆராதனைகளை நடத்தி கிறிஸ்துவுக்கு ஆத்துமாக்களை வென்றதாக கேள்விப்பட்டேன். சகோதரன் ரூக், தேவன் உங்களோடு இருப்பாராக. உங்களைக் கண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் இங்கே இந்த பழைய ட்ராக்டரை, இங்கே சுற்றி ஓட்டுவதையும், உங்கள் முற்றத்தில் உரமிடுவதையும் நான் கண்டிருக்கிறேன். பாருங்கள், நீங்கள் வெளியே கர்த்தருக்கென்று ஏதாவதொன்றைச் செய்ய முயல்வதைக் காண்கிறேன். உங்களை அவர் ஊழியத்துக்கு அழைத்ததற்கு மகிழ்ச்சி, சகோதரனே, அவரை எப்பொழுதும் உங்களுக்கு முன்பாக வைத்திருங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. எதன் பேரிலும் ஒப்புரவாகாதிருங்கள்; ஆனால் உங்களால் செய்யக்கூடிய இனிமையான ஆவியுடன் அதைச் செய்யுங்கள். உங்களுடைய—உங்களுடைய செய்தி எப்பொழுதும் பரிசுத்த ஆவியின் இனிமையினால் சாரமேறினதாக இருப்பதாக.
200535 சகோதரன் ஸ்ட்ரிக்கர்… [ஒரு சகோதரன், “உங்கள் அனைவருடைய ஜெபங்களையும் நாங்கள் வாஞ்சிக்கிறோம். நாங்கள்—நாங்கள் வடக்கு வெர்னனில் ஒரு சபையைத் துவங்க முயன்று கொண்டிருக்கிறோம்” என்கிறார்.—ஆசி.] ஓ, நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களுக்காக நாங்கள் ஜெபிப்போம். [“இது வரைக்கும், நன்றாக நடந்து வருகிறது.”] அது சரி. பில்லி, நீ எப்பொழுது மேய்ப்பனாக ஊழியம் செய்யப் போகிறாய்? 536 இங்குள்ள வேதபண்டிதர் கோட் மற்றும் வேதபண்டிதர் மெர்சியர், நான்—நான்—நான் நம்புகிறேன்…அவ்விதம் தான் நாம் ஒருவரையொருவர் அழைத்துக்கொள்கிறோம். சகோதரன் கோட் அந்த நிலையை அடைந்துவிட்டார், நான்…அவர் ஒரு பட்டம் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர், இப்பொழுது அவரால் தோட்டாக்களை நிறைக்க முடியும். ஆம். மேலும், சகோதரன் லியோ, அவர் உள்ள விதமாகவே நாம் விட்டுவிடலாமென்று நான் நினைக்கிறேன், மற்றும் அவரை அழையுங்கள்…அவர் “வேதபண்டிதர்” என்னும் தன்னுடைய பட்டத்தைக் கொண்டவராய் தொடர்ந்து இருக்கட்டும். 537 சரி, அங்கே பின்னால் உள்ள “வேத பண்டிதர்” பிரான்ஹாமே, உண்மையாகவே நல்ல “வேத பண்டிதராகவே” வைத்திருங்கள், உண்மையாகவே விளக்குகள் நல்லவிதமாக எரிந்துகொண்டிருக்கின்றன. மேலும்—மேலும் நான் உங்களுக்கு என்ன சொல்லுகிறேன் என்றால், நாம் எப்பொழுதாவது ஒரு விசேஷித்த கூட்டம் நடத்தும்போது, நான் நிர்வாகக் குழுவிடம் பேசி அதன் பேரில் உங்களுக்கு ஏதாகிலும் சற்று அதிகம் கொடுப்பார்களா என்று பார்க்கிறேன் [சகோதரன் பிரான்ஹாம் சிரிக்கிறார்—ஆசி.] , விசேஷித்த வேலையாக, நீ இந்த இடத்தைத் துடைத்து மற்ற வேலைகளைச் செய்வதனால், அது உன்னை சந்தோஷப்படுத்தும்.
201538 வேத பண்டிதர் உட். நான் அவரை “வேத பண்டிதர்” என்று அழைக்கிறேன், அதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் வியக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். அவரைத் தவறாக அவ்வாறு அழைக்கவில்லை, அவர் மரத்தை துண்டுகளாக வெட்டுகிறார் என்று, உங்களுக்குத் தெரியும். கர்த்தர் ஒரு அழகான மரத்தை வளரச் செய்தால், அவர் அதை வெட்டி, அதைக்கொண்டு ஒரு வீட்டை உண்டாக்குகிறார். அவ்விதமான சிறந்த பணியை நான் இதுவரை கண்டதில்லை, எனவே அவரை நான் “வேத பண்டிதர்” என்று அழைக்க வேண்டியவனாயிருக்கிறேன். 539 சகோதரன் டெய்லர், நீங்கள் இன்னும் கதவண்டை விசுவாசத்துடன் நின்றுகொண்டு, உள்ளே வரும் ஒருவருக்கு இருக்கையை அளிக்கிறீர்கள். உங்களைக் குறித்து நான் இவ்விதம் கருதுகிறேன் என்று நான் நினைக்கிறேன், “ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.” அது உண்மை, ஐயா. 540 சகோதரன் ஹிக்கர்ஸன், நீங்கள் கிறிஸ்தவ வழியில் பிரயாணம் செய்யத் தொடங்கி, முன்னேறி, வந்துகொண்டிருக்கிறீர்கள். நான் வாஞ்சித்த உங்களுடைய…நான்…நீங்கள் வழியில் பிரயாணம் செய்யத் தொடங்கி, வந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் உத்தமத்யுைம் மற்றும் நீங்கள் கர்த்தராகிய இயேசுவுக்கென்று செய்யும் எல்லாவற்றையும் நான் நிச்சயம் பாராட்டுகிறேன். தேவன் உங்களை என்றென்றும் ஆசீர்வதித்து, சகோதரனே, உங்களை ஒரு உண்மையான உதவிக்காரராக ஆக்குவராக, நீங்கள் அவ்விதமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன், உங்களுடைய வீடும் மற்றும் நீங்கள் இருந்து வந்திருக்கிற மற்றொல்லா காரியங்களும் கீழ்ப்படிதலுக்குள் வருவதாக.
202541 சகோதரன் ஃபிரட், நீங்கள் கனடாவிலிருந்து எங்களிடம் வந்து நீண்ட காலம் ஆகவில்லை. நீங்கள் கனடா தேசத்தைச் சேர்ந்த ஒருவரென்று நாங்கள் எண்ணுவதில்லை, நீர் ஒரு தர்மகர்த்தாவாக, எங்களுடைய சகோதரனாக, எங்களுடன் கூட சேர்ந்த அந்நியரும் பரதேசியுமாயிருக்கிறீர் என்று தான் நாங்கள் எண்ணுகிறோம். நீங்களும் மற்றும் சகோதரன் உட்டும், சகோதரன் ராபர்ஸனுடனும், மற்றவர்களுடனும் சேர்ந்து, உங்கள் உத்தியோகத்தை திறம்பட செய்கிறீர்கள்; சகோதரன் ஈகன், இன்றிரவு அவர் இங்கில்லை. 542 சகோதரன் ராபர்ஸன், நீங்கள் எனக்கு உண்மையாகவே உதவியாக இருந்து வந்திருக்கிறீர்கள், இப்பொழுது விசாரணை நடந்துகொண்டிருக்கும் இந்த வரி வழக்கில், சகோதரன் ராபர்ஸனும் மற்றவர்களும் உதவியாக இருக்கின்றனர்.