ஐக்கியத்தின் அஸ்திபாரம்

61-0214

சவவயககழம மல, பபரவர 14, 1961 லஙபசசன மதல அசமபள ஆஃப கட சப, லஙபச, கலபரனய, அமரகக

ஐக்கியத்தின் அஸ்திபாரம்

61-0214லாங் பீச் கலி841961-02-14

ஐக்கியத்தின் அஸ்திபாரம்

61-0214லாங் பீச் கலி841961-02-14

1செவ்வாய்க்கிழமை மாலை, பிப்ரவரி 14, 1961 லாங்பீச்சின் முதல் அசெம்பிளி ஆஃப் காட் சபை, லாங்பீச், கலிபோர்னியா, அமெரிக்கா

2நாம் சற்று நேரம் நின்றவண்ணமாயிருப்போம், நாம் நின்று கொண்டிருக்கையில் ஜெபம் செய்வோம். யாருக்காகிலும் விசேஷமான விண்ணப்பம் இருக்கு மானால், அப்படியே உங்கள் கரத்தை மேலே உயர்த்தி, கர்த்தாவே, இன்றிரவு என்னுடைய விண்ணப்பத்தை நினைத் தருளும்” என்று கூறுங்கள். இங்கே ஒரு சக்கரநாற்காலியில் அமர்ந்தவாறு, தன்னுடைய கரத்தை மேலே உயர்த்தியிருக்கிற இந்தப் பையனை கவனிக்கிறேன், தேவன் இன்றிரவு அவனைச் சுகப்படுத்த வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், இப்பொ ழுது ஜெபத்தில் இருந்து, ஒவ்வொருவரும் உங்கள் சொந்த வழியில் ஜெபம் செய்யுங்கள்.

3எங்கள் பரலோகப் பிதாவே, நீர் எங்களுக்காக செய்திருக்கிற எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி செலுத்தும் படியாக, கர்த்தராகிய இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத் தில் நாங்கள் உம்மிடம் வருகிறோம். கர்த்தாவே, இது நீர் கூடுதலாக எங்களுக்குக் கொடுத்திருக்கிற வேறொரு நாளாகவும், இன்னும் நித்தியத்தின் இப்பக்கத்திலுள்ள ஒரு நாளாகவும் இருக்கிறது. நாங்கள் அதற்காக உமக்கு நன்றி செலுத் துகிறோம். உமக்கு அதிருப்தியூட்டுகிற எதையாகிலும் நாங்கள் செய்திருந்தால், நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

4இப்பொழுது, நாங்கள் வார்த்தையை வாசித்து, வார்த்தையின் பேரில் பேசத் துவங்குகையில், நீர் இந்த ஆராதனையை உமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டு, எங்களோடு தொடர்ந்து இருக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், பிதாவே ஓ தேவனே, பரிசுத்த ஆவியானவர் தாமே வருவாராக. நாங்கள் வார்த்தையைச் சுற்றிலும் ஐக்கியம் கொள்வோமாக, கர்த்தாவே, நாங்கள் மகத்தானதும் மகிமை யானதுமான ஐக்கியத்தைக் கொண்டிருப்போமாக. இதை அருளும்.

5எங்களை ஒருமித்து ஆசீர்வதியும், ஒவ்வொரு விண்ணப்பங்களுக்கும் பதில் தாரும். நீர் அவர்களுடைய இருதயங்களை அறிந்திருக்கிறீர், மேலும் அவர்களுக்கு என்ன தேவை என்று உமக்குத் தெரியும். கர்த்தாவே, எனது கரமும் கூட உயர்த்தப்பட்டுள்ளது, நீர் எனது விண்ணப் பத்தை நினைத்தருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். வியாதியோடும் துன்பத்தோடும் தேவையோடும் இருக்கிறவர் களையும், கூப்பிட்டுக்கொண்டும், கதறி அழுதுகொண்டும், கெஞ்சிக் கேட்டுக்கொண்டும், தங்களுடைய அன்பார்ந்தவர்கள் மரித்துக் கொண்டும் இருக்கும் ஜனங்களையும் நினைத்தரு ளும் ஓ, இது வியாதிப்பட்டுள்ள ஒரு உலகமாக இருக்கிறது. கர்த்தாவே கர்த்தராகிய இயேசுவே, நீர் வந்து, அதை விட்டு எங்களை அந்த மகிமையான தேசத்திற்கு அழைத்துக் கொண்டு செல்லும், கர்த்தாவே, அங்கே எந்த வியாதியோ துக்கமோ இருக்காது.

6இன்றிரவு எங்களிடம் பேசும், எங்கள் மூலமாக பேசும் பேசுகிற உதடுகளையும் கேட்கிற காதுகளையும் விருத்தசேதனம் பண்ணும். உமது வார்த்தையை ஆசீர்வதியும், அது தாமே எங்கள் இருதயங்களில் விசுவாசத்தைக் கட்டியெழுப்புகிற ஒரு விதையாக இருப்பதாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்

7நீங்கள் இப்பொழுது உட்கார்ந்து கொண்டிருக்கை யில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

8இன்றிரவு மறுபடியுமாக இங்கே இருக்கும்படியாக நாம் எண்ணப்படும் இது உண்மையிலேயே ஒரு சிலாக்கியமா யுள்ளது. மேலும் இப்பொழுது, நாளை, கர்த்தருக்குச் சித்த மானால், நாளை பிற்பகல், 2.30 மணிக்கு, சகோதரன் ஸ்மித் அவர்களோடு பழைய பிஸ்கா காப்பகத்தில் (Old Pisgah Home) நாங்கள் இருக்க வேண்டியுள்ளது, அது நாளை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும். இப்பொழுது, அது நடைபெறும் இடத்திற்குப் போகும் வழியை அவர்கள் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கும். பழைய பிஸ்கா காப்பகம் எங்கேயிருக்கிறது என்று யாருக்காவது தெரியும் என்று நான் - நான் நினைக்கிறேன், நான் அவ்வாறு நினைக் கிறேன். அந்த பிஸ்கா சபை, அல்லது, பிஸ்கா காப்பகம், அதுதானா? ஆமாம், அது காப்பகம் என்றும் சபை என்றும் அழைக்கப்படுகிறது. நான்..

9சகோதரன் ஸ்மித் அவர்கள் எனக்கு மிகவும் விலையேறப்பெற்ற நண்பராக இருக்கிறார். நாங்கள் தீவுகளில் ஒன்றாக மிஷனரி பணி செய்திருக்கிறோம், அவர் மிக அருமையான ஒரு கிறிஸ்தவ பண்பாளர். அங்கே அந்த இடத்தைச் சுற்றிலும் அதற்கு அருகாமையில் வசிப்பவர்கள், அது எவ்வளவு தூரமாயிருக்கிறது என்று எனக்குத் தெரிய வில்லை, ஆனால் அது இங்கே கலிபோர்னியாவிலுள்ள ஏதோவொரு இடமாயுள்ளது. என்னவென்று எனக்குத் தெரிய வில்லை. நான் வெறுமனே... இங்கே சுற்றிலுமுள்ள என்னு டைய வழி எனக்குத் தெரியாது. எப்படியும், நான் இங்கே சுற்றிலும் இருக்கும் போது), அநேக தவறுகளைச் செய்கிறேன்.

10நான் இன்று ஏதோவொன்றைக் கொண்டிருந்தேன், நான் சகோதரன் ஆர்கன்பிரைட்டுடன் கொஞ்சம் ஐக்கியத்தை உடையவனாயிருந்தேன். அவர், அவர் சற்று முன்பு தான் பேசிக் கொண்டிருந்ததாக அவர்கள் கூறினார்கள். புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கும் தனது தகப்பனாரைக் காணச் செல்லும்படியாக, அங்கே கதவுக்கு வெளியே அழுது கொண்டிருந்த ஏதோவொரு சிறு பெண்மணியை நான் வெளியே உடையவனாயிருந்தேன். அங்கே அவர்களில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரி யாது, அப்படியே எல்லாவிடங்களிலும் அவர்கள் உள்ளனர். எனவே இந்தக் காலையில், சகோதரன் ஆர்கன் பிரைட் அவர்களோடு ஐக்கியத்தைக் கொண்டிருக்கும்படியாக நான் மேலே இருந்தேன்.

11நான் ஏறக்குறைய மிகவும் பயங்கரமான தவறு களில் ஒற்றைச் செய்தேன். ம்ம்! நான் அடுத்த சனிக்கிழமை காலையில், கிறிஸ்தவ வர்த்தக புருஷருக்காக பேசவிருக்கிற இடமாகிய கிளிஃப்டன்ஸ் உணவு விடுதியில் நான் நின்று கொண்டு, ஜனங்கள் உள்ளே வருவதை அங்கே நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஏதோவொரு வாலிப பெண் உள்ளே வருவதை நான் - நான் கண்டேன், நான் அவளுக்காக ஜெபிக்கும்படி அவள் விரும்புகிறாளா என்று நான் போய் அவளிடம் கேட்கப் போவதாயிருந்தேன். அங்கே அவளுடைய கண்களில் ஏதோ கோளாறு இருந்த தாக நான் - நான் நினைத்தேன். தொழு நோயையும், கண்களை முடிவில் குருடாக்கும் தன்மையுடைய கண்நோயையும் (glaucoma), கண் அழற்சி நோயையும் (ophthalmia) பார்த்திருக்கிறேன், நான் ஆனால் அதைப் போன்ற எந்தக் கண்களையும் நான் ஒருக்காலும் கண்டதில்லை. அது – அது அதுவல்ல என்று நான் கண்டுபிடிக்க நேர்ந்தது. ஏனென்றால் இங்கே இன்னும் கூடுதலாக சிலர் உள்ளே வந்திருக்கிறார்கள். அது அவளுடைய கண்களின் மேல் அவள் கொண்டிருந்த ஏதோவொரு விதமான காரியமாக இருந்தது. அது.... நான் அப்படியே.... நல்ல காரியமாக ஏதோவொன்று என்னை நிறுத்தினது, அல்லது அவள்... அவள் ஏதோவொரு விதமான பச்சை கலந்த மஞ்சள் நிறமாக தோற்றமளிக்கிற காரியத்தை இந்தவிதமாக கீழேயும், பிறகு அதற்குப் பின்புறத்தில் ஏதோ வொரு கருநீல நிறத்திலும் இருந்தது மேலும் அது... நல்லது. பரிதாபத்திற்குரிய அந்தப் பெண் மரிக்கும் தருவாயில் இருக் கிறாளோ என்று நினைத்துக் கொண்டேன், அவள் அவ்வாறு இருந்தாளா என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை, அவள் அங்கே உள்ளே வந்தாள், நான் நினைத்தேன் - நான், அதைப் போன்ற எதையும் நான் பார்ப்பது அதுவே - அதுவே முதல் தடவை” என்று நினைத்தேன்.

12அது ஏதோவொரு புதிய ஃபேஷனா அல்லது அவர்கள் செய்து கொண்டிருக்கிற ஏதோவொன்றா?

13நான் சுற்றும் முற்றும் பார்த்தேன், நான் அதைக் கண்டேன், நான் அங்கு போகத் துவங்கி... கூறினேன். ஓ, என்னே, அந்தப் பரிதாபமான சிறு பெண், அவளுடைய கண்களில் என்ன கோளாறு என்று அவளிடம் கேட்க விரும்பினேன். ஒருக்கால் அவள்... என்று நினைத்தேன், நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறவன் என்று அவளிடம் கூறி னேன், ஒருக்கால் அது அது... அது என்னவென்று கண்டு பிடிக்க விரும்பினேன். ஆப்பிரிக்க காடுகளில் நான் இருந்தி ருக்கிறேன், நான் - நான் - நான் -நான் - நான் அதைப் போன்ற எதையும் என்னுடைய முழு ஜீவியத்திலும் கண்டதேயில்லை. அது மேக்அப் தான் என்று அதைக் குறித்து நான் எண்ணிப் பார்க்கவேயில்லை. உங்களுக்குத் தெரியும் - மேக்அப் எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியும், அது காட்டிலிருந்து வருகிறது. அது சரியே அது ஒரு அஞ்ஞான பழக்கம். அது அது நாகரிகத்தைச் சேர்ந்ததல்ல. அது - அது அஞ்ஞானிகளுடையதாக உள்ளது ; ஆமாம், அவர்கள் தங்களைத் தாங்களே வர்ணம் தீட்டிக்கொள்கிறார்கள், மேலும் செய்கிறார்கள், சேற்றை எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் நான்... அது முற்றிலும் உண்மை , நிச்சயமாகவே அது உண்மை . அது அங்கிருந்து தான் தொடங்கினது; அது அந்த இடத்தைச் சேர்ந்தது தான். அது நாகரீகத்தைச் சேர்ந்ததல்ல. அது கிறிஸ்தவத்திலிருந்து வெகுதூரத்திலுள்ளது (long ways). எனவே பிறகு, அவர்கள்... நான் இருந்த ஆப்பிரிக்காவிலோ, ஐக்கிய நாடுகளிலோ, சுவிட்சர்லாந்திலோ, பிரான்ஸிலோ, ஜெர்மனியிலோ, அதைப் போன்ற எதையும் நான் ஒருபோதும் கண்டிருக்கவேயில்லை, நான் ஏறக்குறைய ஏழு முறை சுற்றியிருக்கிறேன், எனவே அதைப் போன்ற எதையும் நான் ஒருக்காலும் கண்டதில்லை நான் அதை கலிபோர் னியாவில் தான் காண நேர்ந்தது. நான் நடந்து செல்லாதது ஒரு நல்ல காரியமாக இருந்தது. அப்படி சென்றிருந்தால்) அவள் அநேகமாக என்னை அறைந்து விட்டிருப்பாள், அவள் அப்படி செய்திருக்க மாட்டாளா? நான் அவளுடைய கண்களுக்காக அவளுக்கு ஜெபிக்கலாமா என்று நான் அவளிடம் சொல்லியிருந்தால், உங்களுக்குத் தெரியும், மேலும்...

14ஒருமுறை இங்கே ஹாலந்திலிருந்து (நெதர்லாந்தின் மற்றொரு பெயர் - தமிழாக்கியோன்) வந்திருந்த ஒரு ஊழியக்கார நண்பரை நான் கொண்டிருந்தேன், அவரும் அவ்விதமான ஏதோவொரு தவற்றைச் செய்தார். அந்தச் சிறு பெண் அவரை அறையவில்லை, ஆனால் அவள் அவ்விதம் செய்யாதது வியப்பாயுள்ளது. அவர் ஒரு சிறிய நெதர் லாந்துக்காரராயிருந்தார் (Hollander), அவர் எனது வீட்டில் இருந்தார். அவர் நகர்ப்புறமாகச் (downtown) சென்றிருந்தார், அவர் ஒருவிதத்தில் நடுத்தர வயதுள்ள ஒரு மனிதராக இருந்தார். அங்கே அவர்களோடு ஒரு சிறு பெண் வெளியே நடந்து கொண்டிருந்தாள், அவளுக்கு கொஞ்சமான (ஆடை கள்), வெறுமனே கொஞ்சமான... அவள் போதுமான எந்த ஆடைகளையும் அணிந்திருக்கவேயில்லை அவர், "ஓ, சகோ தரியே, சகோதரியே என்று உரக்க சத்தமிட்டார்.

15அவள் சுற்றும் முற்றும் நோக்கிப்பார்த்து, "என்ன விஷயம்?" என்று கேட்டாள்.

16அவர், 'நீ உன்னுடைய பாவாடையை அணிய மறந்து விட்டாய்' என்றார். எனவே - மேலும் எனவே... உடனே அவள் அப்படியே தன்னுடைய தலையைத் திருப்பி விட்டு, ஒருவிதத்தில் தெருவில் நடந்து சென்று விட்டாள் அவள் அவரை அறையாமல் போனது வியப்பாயிருக்கிறது. ஆனால் பரிதாபமான மனிதர், அவர் அப்படியே, "ஓ, என்னே" என்று நினைத்தார்.

17குரங்குகளிலிருந்து நாம் வந்தவர்கள் என்று என்னால் நம்ப முடியாது, ஆனால் நாம் அந்த விதமான காரியத்திற்குத் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறது போல் நிச்சயமாகவே எனக்குத் தோன்றுகிறது.

18இந்த வாரத்தில் பிற்பாடு நடக்கும் சில கூட்டங் களில் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதைக் குறித்து சகோதரன் ஆர்கன் பிரைட் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். வியாதி யஸ்தருக்காக ஜெபிப்பது எனக்கு - எனக்குப் பிடிக்கும், அது தான் என்னுடைய ஊழியமாயிருக்கிறது. நான் ஒரு பிரசங்கி அல்ல. நான் என்னை ஒரு பிரசங்கி என்று அழைத்துக் கொள்ள போதிய கல்வி எனக்குக் கிடையாது. நான் எந்தப் பள்ளிகளிலிருந்தோ அல்லது எதிலிருந்தும் வந்தவனல்ல, எனவே எனக்குத் தெரிந்த வார்த்தையைக் குறித்துப் பேசுவது எனக்கு - எனக்குப் பிடிக்கும், ஏறக்குறைய என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் அவ்வளவு தான். வெறுமனே அனுபவத் தின் மூலமாகவும், நான் வாசித்தவைகளைக் கொண்டும் தான் என்னால் (கூற முடியும்).

19ஆனால் ஒரு ஜெப வரிசையை அமைத்து வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி ஜனங்கள் விரும்பிக் கொண்டிருந்தார்கள் என்று அவர் சொன்னார். இப்பொழுது, நான் அதைச் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்ன வென்றால், நான் வந்த போது, இங்கே இக்கூட்டத்தில் அவர்கள் என்னிடம் கூறினார்கள், அவை எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் சுமத்தி விடலாம் என்று கருதினார்கள். எனக்கு சுகமளிக்கிற ஆராதனைகள் இருந்து வருகின்றன. யாரும்... தரிசனங்கள் உங்களுக்கு என்ன செய்கிறது என்பதை நான் விளக்கிக் கூற முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை, என்னால் முடியாது. ஆனால் வேதாகமத்தை வாசிக்கிற எவரும் அது உங்களுக்கு என்ன செய்கிறது என்பதை அறிவர். எவரும்...

20கன்னியினிடத்தில் பிறந்த தேவ குமாரனாகிய, நமது கர்த்தர் ஒரு ஸ்திரீயினாலே தொடப்பட்ட போது, அந்த ஸ்திரீ அவரைத் தொட்டதிலிருந்து வந்த ஒரு தரிசனத்தால், "நான் பலவீனமானதை அறிகிறேன்" என்று அவர் கூறுவாரானால், கிருபையினாலே இரட்சிக்கப்பட்ட பாவியாகிய எனக்கு அது என்ன செய்யும் என்று நினைக்கிறீர்கள்? தீர்க்கதரிசியாகிய தானியேலிடமிருந்து வந்த ஒரு தரிசனம், அவன் என்ன சொல்லுகிறான் என்றோ, என்ன செய்கிறான் என்றோ அறி யாமல் இருந்தான், அத்தரிசனம் அவனைத் தொல்லைப் படுத்தி, அவன் எங்கேயிருக்கிறான் என்பதையே அறியாமல், அநேக நாட்களாக சுற்றிலும் நடந்து கொண்டிருந்தான்.

21அது உங்களுக்கு என்ன செய்கிறது என்பதை யாருமே உணர்ந்து கொள்வதில்லை. அது - அது.... நீங்கள் - நீங்கள் சந்திக்கிறீர்கள். நீங்கள் சற்று நேரம் அதில் தரித்து நிற்கிறீர்கள், நீங்கள் நீங்கள் யாரோ ஒருவரைச் சந்திக்கிறீர்கள், நீங்கள்... நீங்கள் உண்மையில், அது ஒரு தரிசனம் தானா அல்லது நான், நான் எங்கேயிருக்கிறேன்? புரிகிறதா? பாருங் கள், அது தேவன் உங்களைக் கட்டுக்குள் எடுத்துக்கொள் வதாகும்...

22இப்பொழுது, நான் அதைக் குறித்து சற்று பேசட்டும். வேதாகமத்தை வாசிக்கிற ஆவிக்குரிய ஜனங்கள் அதை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். நாம் சற்றே இவ் விதமாக, கவிஞர்களையும் தீர்க்கதரிசிகளையும் எடுத்துக் கொள்வோம். ஏவப்பட்டு (inspirational) இருக்கிறவைகளைக் குறித்து நாம் சற்று பேசுவோம். நான் முதலில் கவிஞர்களைக் குறித்து துவங்குகிறேன். கவிஞர்கள், ஒரு உண்மையான கவிஞன் ஏவுதலைக் கொண்டவனாகத் தான் இருக்கிறான்.

23நான் சிந்தித்துப் பார்க்கக்கூடிய ஒரு கவிஞனை சற்று எடுத்துக்கொள்வோம், நாம் ஸ்டீபன் ஃபோஸ்டரை (Stephen Foster) எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவில் நாம் கொண்டிருந்த மிகப்பெரிய கவிஞர்களில் அவரும் ஒருவர் என்று நான் நினைக்கிறேன், அவர் நம்முடைய நாட்டுப்புற பாடல்களையும் மற்றும் காரியங்களையும் நமக்குத் தந்திருக் கிறார். அவருடைய ஜீவியத்தைக் குறித்து நீங்கள் எப்பொ ழுதாவது வாசித்திருக்கிறீர்களா? இப்பொழுது, அந்தப் பழைய கென்டக்கி வீடு எனது வீட்டிலிருந்து ஆற்றின் குறுக்காக அமைந்துள்ளது. என்னுடைய வீட்டிலிருந்து 15 நிமிடங்களில் என்னால் அங்கு போக முடியும். அங்கே அந்த சாய்வு மேஜை (desk) உள்ளது, அநேக அநேக வருடங்களுக்கு முன்பே சர்வதேச கண்காட்சியில் (world's fair) அதனுடைய மதிப்பு ஏறக்குறைய 25,000 டாலர்கள் .... அங்கிருந்து தான் அவர், என்னுடைய பழைய கென்டக்கி வீடு என்ற பாடலை எழுதினார். அவர் அந்த இடங்களிலுள்ள தோட்டங்களிலும் மற்ற இடங்களிலும் சுற்றித்திரிந்தார்.

24நல்லது, ஸ்டீபன் ஃபோஸ்டருக்கு போதுமான ஏவுதல் எழும் ஒவ்வொரு முறையும், தன்னுடைய பேனாவை எடுத்து, ஒரு பாடலை எழுதுவார். அதன்பிறகு அந்த ஏவுதல் அவரை விட்டுப் போன பிறகு, குடித்து வெறிக்கத் தொடங் குவார். அது உங்களுக்குத் தெரியுமா? அவர் நிச்சயமாக அவ்வாறு செய்தார். இறுதியாக, அவர் ஒருமுறை அதன் கீழே இருந்து விட்டு அதிலிருந்து வெளிவந்த போது, அவர் எங்கேயிருக்கிறார் என்பதே அவருக்குத் தெரியாமல், அவர் ஒரு வேலைக்காரனை அழைத்து, ஒரு சவரக்கத்தியை (razor) எடுத்து, தன்னுடைய தொண்டையை அறுத்து, தற்கொலை செய்து கொண்டார். உங்களுக்கு எப்பொழுதாவது அது தெரியுமா? அதுதான் ஸ்டீபன் ஃபோஸ்டரின் வாழ்க்கை கதை

25நாம்.. ஐ எடுத்துக்கொள்வோம். நீங்கள், "நல்லது. அந்த மனிதன் உலகப்பிரகாரமான ஒரு மனிதன் என்று கூறலாம். நல்லது, நாம் வில்லியம் கூப்பர் (William Cowper) அவர்களை எடுத்துக்கொள்வோம். சமீபத்தில், இங்கிலாந்தி லுள்ள லண்டனில் அவருடைய கல்லறையருகில் நின்றிருந் தேன், அப்போது கதறி அழ வேண்டியிருந்தது. அவர் மனநிலை சரியில்லாதவர் என்று கருதப்பட்டார். ஆவிக்குள் ளாக ஜீவிக்கிற யாருமே உலகத்திற்கு பைத்தியத்திலிருந்து ஒரு சிறு அளவாகத்தான் இருக்கிறார்கள். விஞ்ஞானம் அவ் வாறு கூறுகிறது.

26வில்லியம் கூப்பர். அவர் அந்தப் பிரபலமான பாடலை எழுதின போது, நாங்கள் அநேக வருடங்களாக, என்னுடைய இடத்தில் அமைந்துள்ள என் பாப்டிஸ்டு கூடாரத்தில் அப்பாடலை எங்களுடைய. இராப்போஜனத்தில் (communion) உபயோகித்தோம் (பாடினோம். இம்மானுவே லின் இரத்த நாளங்களிலிருந்து பாயும் இரத்தத்தினால் நிறைந்த ஒரு ஊற்றுண்டே அங்கு பாவிகள் அந்த (இரத்த வெள்ளத்தில் மூழ்கி, தங்கள் பாவக் கறைகள் யாவற்றையும் போக்கிக் கொள்கின்றனர்." நீங்கள் அதைக் கேட்டிருக்கி றீர்கள், நீங்கள் கேட்டதில்லையா? அதைக் குறித்த வர லாற்றை நீங்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர் களா? ஏவுதல் அவரை விட்டுப் போன உடனே, அவர் அந்தப் பாடலை எழுதின இடத்திலேயே இருந்து, அவர் அவ்வளவு மேலான குறிப்பிடத்தக்க உச்ச உயர்வு நிலையில் இருந்த போது, ஜனங்களுக்கு அதைக் குறித்து எதுவுமே தெரியாது..... அப்படியே பாடுவதும் சத்தமிட்டுக் கூச்சலிடு வதும் நடனம் ஆடுவதுமாக இருக்கும், அது... க்குள் இல்லை அது ஆவிக்குள் சரிதான், ஆனால் சந்தோஷத்தினால் நிறைந்த ஆவியோ. புரிகிறதா? ஆனால் நீங்கள் உங்களுக்கே அதைக் குறித்து எதுவுமே தெரியாத அந்த மண்டலங் களுக்குள் உயர எழும்பும் போது. பாருங்கள், உங்களால் அதை விளக்கிக் கூற முடியாது. நீங்கள் அப்படியே.. அது அங்கே உள்ளதென்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும், அவ்வளவு தான். அவர் அதிலிருந்து வெளியே வந்த போது, தற்கொலை செய்வதற்காக ஆற்றைக் கண்டுபிடிக்க முயன்றா ராம். எத்தனை பேர் அந்தக் கதையை எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? நிச்சயமாக. பாருங்கள்? நிச்சய மாக. அவர் தற்கொலை செய்வதற்காக ஆற்றைக் கண்டு பிடிக்க முயன்றார். அப்போது அது மிகவும் பனிமூட்டமாக இருந்தது. ஓட்டுனரால் நதியைக் கண்டுபிடிக்கவே முடியவில் லையாம். அவர் அந்த ஆற்றில் மூழ்கப்போவதாக இருந்தார். அவர் அப்பொழுதும் அந்தப் பாடலிலேயே இருந்ததாக எண்ணிக்கொண்டார். இப்பொழுது அந்த ஆற்றில் மூழ்கி, தம்முடைய பாவக் கறைகள் எல்லாவற்றையும் போக்கிக் கொள்ளப் போவதாக இருந்தார். புரிகிறதா?

27இப்பொழுது, நீங்கள், பாடல்களை எழுதியவர் களைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறீர்" என்று கூறலாம். சரி, இப்பொழுது நாம் அதை நிறுத்தி விட்டு வேதாகமத்திற்குத் திரும்பி வருவோம். நாம் தீர்க்கதரிசிகளை எடுத்துக் கொள்வோம். நாம் தீர்க்கதரிசியாகிய யோனாவை எடுத்துக் கொள்வோம். அவன் நினிவேக்குப் போகும் தன்னுடைய பாதையில் இருக்கும் போது, அவன் தர்ஷிசுக்குப் போகும் பாதை வழியாகப் போய் விட்டான். கர்த்தரோ அவனை நினிவேக்கு கொண்டு சென்றார். அவர் அவனை ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் மூன்று நாள் பகலும் இரவும் உயிரோடே வைத்திருந்தார். அந்தக் கதை உண்மை என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் அவனை உடையவராய் இருந்தார் - அவர் அவனை அபிஷேகிக்கப்பட்டவனாய் வைத்திருந்தார். அவன் அதை விட்டு வெளியே வந்த போது, எனவே அவன் மூன்று நாட்கள் பகலும் இரவும் இந்தத் திமிங்கலத்தின் வயிற்றில் ஜெபித்துக் கொண்டிருந்தான். பிறகு அவன் நினிவேயின் கரையில் வெளியில் வந்த போது, அவர்கள் தங்களுடைய கால்நடைகளுக்கு கூட இரட்டு டுத்தும் அளவுக்கு அவன் அவ்வளவு தீவிரமாய் (force) பிரசங்கம் பண்ணினான். அவர்கள் அப்படிப்பட்ட ஒரு வழியில் மனந்திரும்பினார்கள். அது சரிதானா? அந்தப் பட்டணத்திற்கு மனந்திரும்புதல் உண்டாயிற்று....

28பிறகு அவன் மலையின் மேல் ஏறினான். அந்த ஆவியின் ஏவுதல் அவனை விட்டுப் போன போது, அவன் ஒரு மரத்தின் கீழே உட்கார்ந்து, அவனுடைய ஜீவனை எடுத்து விடுமாறு தேவனிடம் ஜெபித்தான் அது சரிதானா?), அது அந்த ஆவியின் ஏவுதல் அவனை விட்டுப் போன போது. பாருங்கள்? நீங்கள் இங்கே இருக்கையில், அவ்வாறு இல்லாமல், நீங்கள் ஒரு இராட்சதனைப் போன்று உணரலாம், ஆனால் நீங்கள் இங்கே இந்த இடத்தை விட்டுப் போன உடனே. அவைகளுக்கு என்ன கொடுக்க வேண்டியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. புரிகிறதா?

29ஐப் பாருங்கள். நாம் தீர்க்கதரிசியாகிய எலியாவை எடுத்துக்கொள்வோம். தேவன் அவனுக்கு ஆவியின் ஏவுதலைக் கொடுத்து, அவனுக்கு ஒரு தரிசனம் அருளி, அந்த மலைக்கு ஏறிச் சென்று, என்ன செய்ய வேண்டுமென்று அவனிடம் கூறினார். அப்படியே தேவன் அவனிடம் கூறியிருந்த அந்த விதமான ஒழுங்கில் அமைப்பில் அவன் அந்தக் காரியத்தை வைத்தான். மூன்றரை வருடங்களாக மழையே பெய்திருக்கவில்லை. அவன் வானங்களிலிருந்து (Heavens) அக்கினியை வரும்படி அழைத்தான். அதன்பிறகு உடனடியாக வானங்களிலிருந்து மழையையும் வரவழைத்து, தானாகவே 400 ஆசாரியர்களைப் பிடித்து கொன்று போட்டான், நானூறு ஆசாரியர்களை அவன் கொன்றான் (executed).

30அதன்பிறகு ஆவியின் ஏவுதல் (inspiration) அவனை விட்டுப் போன போது, ஒரு ஸ்திரீயினுடைய பயமுறுத்துதலின் காரணமாக தப்பி ஓடி விட்டான், அவன் வெளியே வனாந்தரத்தில் ஓடிச்சென்று, ஒரு சூரைச் செடியின் கீழ் உட்கார்ந்து, "தேவனே, என்னுடைய ஜீவனை எடுத்துக் கொள்ளும்” என்றான். மேலும் அவன் அங்கே அடுப்பாங் கரையில் இருந்த கொஞ்சம் சுடப்பட்ட அப்பங்களைக் கொண்டு தேவன் அவனைப் போஷித்தார். அதன்பிறகு அவனை மறுபடியுமாக போஷித்தார். பிறகு அவன் அந்த வனாந்தரத்தில் நாற்பது நாட்கள் அலைந்து திரிந்தான், திரும்பிச் சென்று எங்கோவுள்ள ஒரு குகையில் இருந்த அவனை தேவன் கண்டுபிடித்தார். அது சரிதானா?

31திடீரென்று பலமாக அடித்த காற்று கடந்து போயிற்று, தேவன் அந்தக் காற்றில் இருக்கவில்லை. இடி முழக்கம் கடந்து போயிற்று, அந்த இடிமுழக்கத்திலும் அவர் இருக்கவில்லை. சற்று நேரம் கழித்து, அமர்ந்த மெல்லிய சத்தம் அவனிடம் பேசி, அவன் ஏன் அந்தக் குகைக்குள் திரும்பி வந்தான் என்பதை அறிய விரும்பினது. பாருங்கள், அவனுக்குப் பக்கத்திலேயே, அந்த வனாந்தரத்தில் அவன் சுற்றி அலைந்து திரிந்து கொண்டிருந்து, இப்பொழுது, ஒரு குகைக்குள் திரும்பிப் போயிருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டான். இப்பொழுது, ஏதோவொரு கருத்து உங்களுக்கு உண்டு, தேவனுடைய குமாரன் எப்படிப்பட்டவர்?

32அதுதான் காரணம், நண்பர்களே, அது சற்றே ஏறக்குறைய... நீங்கள் அதைத் தெளிவாகப் புரிந்து கொள்வ தில்லை நான் அன்றொரு இரவு இங்கே நின்று கொண்டு, ஜனங்களாகிய உங்களுக்காக என்னால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு நேரம் நிற்க முயற்சித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் சுவிசேஷத்தைக் கொண்டு நான் அதைக் கடின மாக வெட்டி, ஸ்தாபனங்களினூடாகவும் மற்றும் எல்லாவற்றி னூடாகவும் கடுமையாக அதைக் கண்டித்தேன். அது உங்க ளுடைய ஸ்தாபனங்களை அல்ல, ஆனால் அவர்கள் மிகவும் தளர்ந்த நிலையில் கட்டற்று இருக்கிற விதத்தை தான் நான் கடுமையாகக் கண்டித்தேன். உங்களுக்குப் புரிகிறதா? அவர் கள்... அதனோடு கூட, நான், 'தேவனே, நான் அவர்களை நேசித்தும், நான் - நான் அவர்களைப் புண்படுத்தியிருக்கிறேன்; என்னால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு காலம் வரையில் நான் நிற்கட்டும் என்று நினைத்தேன். நான் இந்த மேடையை விட்டுப் போகத் தொடங்கின போது, நான் ஒரு ஊழியக் காரருடைய கரங்களுக்குள் இருப்பதைக் கண்டு கொண்டேன். அதோ அங்கிருக்கிற அந்த இடத்திற்குள் நான் போன போது, ஏதோவொரு ஸ்திரீயினுடைய அறைக்குள் ஓடிப் போய் விட்டேன், வெளியே அந்த அறையில், அங்கே வெளியே இன்னும் சில ஜனங்கள் நின்று கொண்டிருந்தனர். பாருங்கள்? நான் எங்கேயிருந்தேன் என்பதே எனக்கு - எனக்குத் தெரியவில்லை. அப்போது பில்லி என்னைக் கரத்தால் பிடித்து, வெளியே போகும்படி வழிநடத்தினான், நான் அறிந்த அடுத்த காரியம் என்னவென்றால், நான் தங்கியிருந்த இடத்தில் படிகளின் மேலே என்னை அவர்கள் அழைத்து வந்து கொண்டிருந்தனர். பாருங்கள், பாருங்கள் ? அதன்பிறகு முழு இரவும் நான் உறங்கவேயில்லை , நான் அதைக் குறித்து உங்களிடம் சொல்லவில்லை. பாருங்கள்?

33அடுத்த நாள் நான்.. நான்...ல் கண்ட எல்லாமே அது போன்று தோன்றினது. அறைகளை சுத்தம் செய்து ஒழுங்குப்படுத்தி வைக்க (make up), பணிப்பெண் உள்ளே வந்த போது, நான் அங்கே நின்று கொண்டிந்தேன், அவள் உள்ளே வந்த உடனே, அவளிடம் என்ன கோளாறு இருந்தது என்று நான் சரியாக அப்போதே அறிந்து கொண்டேன். நான் வெளியே வீதியில் போய், அந்தத் தெருவில் நடந்து சென் றேன், இதோ ஒரு மனிதன் தெருவில் வந்து கொண்டிருந் தான், சரியாக அங்கேயே, நான் அப்படியே, நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், அவன் செய்திருந்த ஏதோவொன்றைக் குறித்துப் பார்த்த போது, அங்கே நின்று கொண்டிருந்த நானே அதிர்ந்து போனேன், நான் சரியாக அங்கே அந்தத் தெருவிலேயே அவனிடம் அதைக் கூற முயற்சித்துக் கொண்டிருந்தேன். பாருங்கள்?

34நீங்கள் எதனூடாகப் போகிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வதில்லை. புரிகிறதா? உங்களுக்கு - உங்க ளுக்கு - உங்களுக்கு வெளிப்புறம் தான் தெரியும், உட்புறத்தில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. அது மேலே உயரும் விதமாக, பத்து இலட்சம் மைல்களுக்கு உயர இருக்கும் விதமாக இருப்பது போன்றிருக்கும், அங்கே உங்க ளுக்குள் இருக்கிற எல்லாமே அவ்விதமாக (உயரே) அடைந்து விட்டது போன்று நீங்கள் உணருகிறீர்கள், அதன் பிறகு திடீரென்று எங்கோ ஓரிடத்தில் நீங்கள் அப்படியே அதை விட்டு விழுகிறீர்கள், நீங்கள்.... அங்கே தான் காரியம். புரிகிறதா? ஆகையால் தான் நாங்கள் அதை மிக உன்னிப் பாக கவனிக்க வேண்டியிருக்கிறது.

35ஒருமுறை நான் கூட்டத்தில் மிக நீண்ட நேரம் இருந்தேன், நான் மறுபடியுமாக ஊழியக்களத்திற்குத் திரும்பி வருவதற்கு முன் ஏறக்குறைய ஒரு வருடம் ஆகும் அள வுக்கு, சகோதரர்கள் மிக நீண்ட நேரமாக என்னை மேடை யிலேயே தங்க வைத்திருந்தனர்.

36எனவே, அதுதான் அதைக் கடினமானதாகச் செய்கிறது. நான் மறுபக்க எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்று, ஜனங்களாகிய உங்களை மறுபடியும் முகமுகமாகச் சந்திக்கும் வரையில், நீங்கள்... அதை விளக்கிக் கூற முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வெறுமனே உங்கள் சகோதரனாக என்னை விசுவாசியுங்கள். நான் உங்க ளிடத்தில் அன்புகூரக்கூடிய எல்லாவற்றையும் செய்யவே நான் - நான் முயற்சிக்கிறேன். நான் அன்புள்ளவனாக இருந் திருக்க மாட்டேனா, இன்றிரவு, வியாதிப்பட்டுள்ள ஒவ்வொரு நபரையும் ஏற்றுக்கொண்டு, என்னால் உங்களைச் சுகப்படுத்த முடியும்" என்று கூற மாட்டேனா? ஓ, நான் நீங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ளும்படிக்கு , if I could take a quarter and put it on the street and push it across Hollywood, இங்கேயிருந்து ஹாலிவுட்டிற்கும், என்னால் கூடுமானால், நான் அதைச் செய்திருப்பேன், நான் நிச்சயமாகவே அதைச் செய்திருப்பேன்.

37ஆனால் நான் வேதாகமத்தை எடுத்து, நீங்கள் காணக்கூடிய மற்றும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய இரண்டு காரியங்களின் பேரில் அதைச் சுற்றிலும் போதுமான விசுவாசத்தை என்னால் கட்டியெழுப்பக் கூடுமானால் பாருங் கள், நாம் பூமிக்குரிய காரியங்களின் பேரில் மிகவுமாக கட்டப்பட்டிருக்கிறோம் (earthbound), நாம் எல்லாரும் (நானும் கூட அவ்வாறு இருக்கிறேன். பாருங்கள்?), இயேசு கிறிஸ்து அங்கே நின்று கொண்டிருக்கிறார் என்பதை நாம் உணராத அளவுக்கு பூமிக்குரியவைகளோடு மிகவுமாக கட்டப்பட்டிருக் கிறோம். பாருங்கள்?

38இப்பொழுது, அந்த அபிஷேகம் வரும்போது, இங்கே உள்ளேயிருக்கும் ஒவ்வொரு நபரையும் உங்களால் பற்றிப்பிடிக்க முடியும், சரியாக பயங்கள் எங்கே இருக் கின்றன என்பதையும், பதைபதைப்பான பேரச்சங்களும் எங்கே இருக்கிறது என்பதையும், அது எங்கே என்றும், அங்கே அது இருக்கிறது என்பதையும் உங்களிடம் வந்து கொண்டிருக்கும் ஒரு இதயத்துடிப்பு போன்று உங்களால் ஒவ்வொரு நபரையும் பிடித்துக்கொள்ளலாம். பாருங்கள்? அது நானல்ல; அது அப்படியே அபிஷேகம் உண்டாகுதல், அவ்வளவு தான். புரிகிறதா? அது நான் ஆவியானவருக்கு என்னைத்தானே விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் ஒரு - ஒரு வரமாக இருக்கிறது.

39நான் வழக்கமாக புசிக்கவோ, அல்லது எதையுமோ செய்யாமல், ஆவியானவருக்கு என்னைத்தானே தொடர்ந்து விட்டுக்கொடுத்த வண்ணம் ஒப்புவித்தவண்ணம் இருப்பேன் அவர்கள் இரவு நேரத்தில் என்னை இங்கே அழைத்து வரும்போது, யாருமே என்னிடம் பேச மாட்டார்கள். பாருங்கள், நான் சரியாக உள்ளே வந்து, சரியாக அதே விதமாகவே வெளியே போய் விடுகிறேன். அது பேசுவதை என்னால் கேட்க முடியும் வரையிலோ அல்லது நான் இருக் கும் அந்த அறையில் அந்த ஒளியானது அசைவாடுவதை என்னால் அறிந்து காண இயலும் வரையில் நான் அந்த அறையிலேயே தங்கியிருந்து ஜெபித்துக் கொண்டிருப்பேன். அதன்பிறகு நான் அப்படியே தொடர்ந்து, "உமக்கு நன்றி, கர்த்தாவே, நான் அங்கே ஒரு நோக்கத்துக்காகவே போகி றேன், அது உம்முடைய ஜனங்களுக்கு உதவி செய்வதற்காகத்தான். இப்பொழுது, எனக்கு உதவி செய்யும், கர்த்தாவே, அது என்னவாக இருந்தாலும், ஜனங்களுக்கு விசுவாசத்தைக் கொடுத்தருளும் என்பேன். அந்த அந்த விதமாகத்தான் நான் அதைச் செய்கிறேன். அது சரியே

40எனவே வியாதியஸ்தர்கள் மேல் கரங்களை வைப் பதன் மூலம் அவர்களுக்காக ஜெபிக்கும்படி வரும்போது, நான் நிச்சயமாக எல்லா நேரமும் அதைச் செய்கிறேன். அது சரியே. மேலும் இப்பொழுது, அது ஒரு வழியாக இருக்கிறது. அதைச் செய்யும்படியாக, அது - அது யூதர்களுடைய பழமை யான பாரம்பரியமான வழியாக இருக்கிறது. அது நல்லது அது ஓரல் ராபர்ட்ஸ் அவர்களுக்கும் டாமி ஆஸ்பார்ன் அவர்களுக்கும் நன்மையான விளைபலன்களை அளித் திருக்கிறது.

41டாமி ஆஸ்பார்ன், அவர் ஜனங்கள் மேல் கரங்களை வைக்கிறார் என்று நான் நினைக்கவில்லை, அவர் அப்படியே அவர்களுக்கு வார்த்தையை விளக்கிக் கூறி, பிசாசைப் பிடித்து விடுகிறார். வார்த்தையின் மூலமாக பிசாசை அவனுடைய இடத்திலேயே அவரால் அடைத்து வைக்க முடியும் அளவுக்கு, அவர் அப்படிப்பட்ட ஒரு பண்டிதரா யிருக்கிறார். அதன்பிறகு அவர்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கும்படி செய்து, அர்ப்பணிப்பான ஒரு ஜெபத்தை ஏறெடுத்து விட்டு, அவர்களை அங்கேயே மீண்டும் ஒன்றாக இருக்கும்படி செய்து, அவர்கள் மேலே வந்து, இரவு முழுவதும் சாட்சி கூறும்படி செய்கிறார். அவர் அவ்வாறு தான் சொன்னார். அது அவரை சிறிதளவும் தொல்லைப்படுத் துவதில்லை , அவர்... உம் - ஹூம். நான் சமீபத்தில் இங்கே அவரைச் சந்தித்தேன். டாமி மிகவும் அருமையான மனிதர் களில் ஒருவர். டாமி ஆஸ்பார்ன் உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவ பண்பாளர், சகோதரன் டாமி ஆஸ்பார்ன் மிகவும் இனிமையான மனிதர். அவர் அப்படியே - அவர் அப்படியே வயதான சகோதரன் பாஸ்வர்த் அவர்களிடமிருந்து வார்த்தையைப் பற்றிப்பிடித்துக்கொண்டார்.

42அவர் என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். அவர் இங்கே மேலே இருந்தார். அவருடைய ஊழியத்தை எது துவங்கினது, வெறிபிடித்த மனிதன் என்னைக் கொல்லும் பொருட்டு, அந்த மேடையில் ஓடி வந்த போது, அவர் அங்கே மேலே இருந்தார் நீங்கள் அதை அநேக நேரங் களில் வாசித்திருப்பீர்கள் ) அப்போது, அவன் தன்னுடைய தோள்கள் பின்னாலிருக்க அங்கே வெளியே நின்றுகொண்டு, என் முகத்தில் துப்பியும் மற்ற எல்லாவற்றையும் செய்தான். ஆறாயிரம் சொச்சம் பேருக்கு முன்பாக, "வஞ்சகனே, நீ இங்கே மேலே தேவனுடைய ஊழியக்காரனாக உன்னைத் தானே பெருமைப்படுத்திக் கொண்டாய், உன்னுடைய அந்தச் சிறிய சரீரத்தில் இருக்கும் ஒவ்வொரு எலும்பையும் முறித்துப் போடுவேன்" என்றான், அவன் மகத்தான பெரிய, 260 பவுண்டு (சுமார் 120 கிலோகிராம் - மொழிபெயர்ப்பாளர்) எடையுள்ளவன்.

43நல்லது, நீங்கள் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருப்பது நல்லது. நீங்கள் பேசாமலிருப்பதே நல்லது. அப்படியே தேவனே பேசட்டும் அவர் தான் என்னை அங்கே வழிநடத்தியிருந்தார் என்பதை நான் அறிந்திருந்தேன்.

44அந்த அரங்கத்தின் பின்பக்கத்திலிருந்த உடைமாற் றும் அறையில் வைத்து நான் கிறிஸ்துவிடம் வழிநடத்தின இரண்டு சிறிய போலீஸ்காரர்கள் அவனைப் பிடிக்கும்படி ஓடி வந்தனர். நான், "இது மாம்சத்தோடும் இரத்தத்தோடும் சம்பந் தப்பட்ட காரியமல்ல; இவனைத் தனியே விட்டு விடுங்கள் என்றேன். இப்படியாக அவன் அங்கே மேலே ஓடி வந்தான்.

45இப்பொழுது, நான் உங்களுக்கு இதைச் சொல்லு கிறேன், உங்களுக்கு எப்பொழுதாவது சிறிதளவு கோபம் இருந்தாலும், நீங்கள் மேடையை விட்டு வெளியே நடந்து போய் விடுவது நல்லது. எந்தப் பிசாசையோ அல்லது வேறு எதையுமோ ஜெயிக்கக்கூடிய ஒரே ஒரு காரியம் தான் உண்டு அதுதான் அன்பு. யாராவது ஒருவருக்கு என்னால் எப்பொ ழுதாவது உதவி செய்யக்கூடிய ஒரே வழி அதுதான், நான் அவர்களை நேசிக்கும் போதுதான் அப்போது என் பேரிலான அவர்களுடைய அன்பை என்னால் உணர முடியும்.

46இப்பொழுது, அங்கே அந்த மனிதன் இருந்தான், நான், பரிதாபமான மனிதன், அவன் என்னைக் கொல்ல வில்லை, பிசாசு தான் அதைச் செய்யும்படி அவனை ஆக்கிக் கொண்டிருக்கிறான். அவன் ஒருக்கால் விவாகமான மனித னாக இருக்கலாம், அவனுக்கு பிள்ளைகளும் இருக்கலாம். எனக்கு விரோதமாக அவனுக்கு இருப்பதுதான் என்ன? என்னை அவனுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதில் லையே என்று நினைத்தேன். அவன் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கான ஒரு மருத்துவமனையிலிருந்து (insane institution) வெளியே வந்து, வெளியே தெருவில் இருந்த ஒரு ஊழியக்காரரை அடித்து, அவருடைய தாடையை உடைத்து, அவருடைய கழுத்து எலும்பையும் முறித்துப் போட்டான் என்று நான் அறிய நேரிட்டது. அவன் அப்படியே பிரசங் கிமார்களைக் கொல்லும்படியான ஒரு வெறிபிடித்த மனித னாக இருந்தான்.

47அவன் அங்கே நடந்து வரத் தொடங்கினான், அப்போது ஏறக்குறைய 200 பிரசங்கிமார்கள், தாங்கள் அவனைக் கண்ட போது, வேகவேகமாக மேடையை விட்டு சிதறி ஓடினார்கள். இப்படியாக அவன் அங்கே நின்று கொண்டிருந்தான், அவன் அங்கே மேலே நின்று கொண்டி ருந்தான்; அவன், "இன்றிரவு நான் உன்னை அந்தக் கூட்டத்தின் மத்தியில் வைத்து மொத்தமாக அடித்து, உன்னு டைய சரீரத்திலிருக்கும் ஒவ்வொரு எலும்பையும் உடைக்கப் போகிறேன் என்றான். இப்பொழுது, அவன் அதைச் செய் யும்படி சரீரத்தில் மிகுந்த பலமுள்ளவனாயிருந்தான். அவனு டைய எடை ஏறக்குறைய 260 பவுண்டுகள், என்னுடைய எடையோ ஏறக்குறைய 118 பவுண்டுகள்.

48இப்படியாக அங்கே அவன் நின்று கொண்டிருக்க நான் சுற்றும் முற்றும் நோக்கி விட்டு, நான், 'நல்லது, பரிதாபமான மனிதன், இப்பொழுது பார், பிசாசு தான் இந்த மகத்தான பெரிய அருமையான மனித இனத்தைப் பிடித்து, அவ்விதமாக முழுவதும் கட்டி வைத்திருக்கிறான். அது பரிதாபமாக இருக்கிறது அல்லவா?" என்று நினைத்தேன்.

49நான் மறுபக்கம் திரும்பிப் பார்த்தேன். நான் -நான்நான் ஒரு காரியத்தையும் பேசவில்லை; அப்படியே அமை தியாக இருந்தேன். நானாகவே அவனிடம் சொல்லிக் கொண் டிருந்ததை நான் கேட்டேன் பாருங்கள்?), அது ஆவியா னவராக இருந்தது பாருங்கள்?), ஆவியானவர் அவனிடம் கூறினார். ஆப்பிரிக்க காடுகளிலும், அதைப் போன்ற இடங்களிலும் அது எவ்விதம் கிரியை செய்கிறது என்பதை நீங்கள் கண்டிருக்க வேண்டும். நீங்கள் அதை இங்கே அமெரிக்கர்கள் மத்தியில் காண்கிறீர்கள், ஆனால் அங்கே வெளியே மந்திரவாதிகளுக்கு (witch doctors) முன்பாக நீங்கள் வரும் இடத்தில் நீங்கள் அதைக் காண வேண்டும். அது, "நீ தேவனுடைய ஆவிக்கே சவால் விட்டபடியினால், இன்றிரவு நீ என்னுடைய காலடியில் விழுவாய்" என்றது.

50அவன், 'யாருடைய காலடியில் நான் விழுவது என்று நான் காண்பிக்கிறேன், வஞ்சகனே, நீ புல்லில் இருக்கும் பாம்பு, மாய்மாலக்காரனே" என்று கூறி விட்டு, மேலே நடந்து வந்து, துப்பும் போது ஏற்படும் சத்தத்தை சகோதரன் பிரன்ஹாம் ஏற்படுத்துகிறார் - ஆசிரியர்.) என்னுடைய முகத்தில் துப்பினான்.

51நான் ஒரு வார்த்தையும் பேசவேயில்லை; அப்படியே நின்று அவனை உற்றுப்பார்த்தேன். அவன் மேலே சரியாக எனக்கு அருகில் வந்து, அவனுடைய மகத்தான பெரிய கரத்தை அந்த விதமாக ஓங்கினான், அவனுடைய பற்கள் ஒன்றோடு ஒன்று திடமாக இருந்தன, அவனுடைய கண்களோ அப்படியே மின்னிக்கொண்டிருந் தன, அவன் என்னை அடிக்கும்படியாக மறுபடியும் எழுந் தான், நான், "சாத்தானே, இந்த மனிதனை விட்டு வெளியே வா” என்றேன்.

52உடனே அவன், ஊ ஊ ஊ" என்றபடி போய், மறுபக்கம் திரும்பி அந்த விதமாக சுற்றத் தொடங்கி, கீழே விழுந்து, அந்த விதமாக என்னுடைய பாதத்தைத் தரையோடு பிடித்துக்கொண்டான். அங்கே இரண்டு ஆவிகளும் ஒன் றோடு ஒன்று சவால் விட்டிருந்தன. உங்களுக்குப் புரிகிறதா? அவன் சவால் விட்டிருந்தான், தேவனுடைய ஆவியோ அதை ஏற்றுக்கொண்டார். பாருங்கள்? அங்கே, அவன் என்னுடைய காலடியில் விழுந்தான்.

53அந்தச் சிறு போலீஸ்காரர்கள் ஓடிவந்து, அவன் மரித்து விட்டானா?" என்று கேட்டனர்.

54நான், "இல்லை , ஐயா, அவன் சாகவில்லை " என்றேன்.

55"நல்லது, அவன் சுகமடைந்து விட்டானா?”

56நான், "இல்லை ஐயா, அவன் அந்த ஆவியைத் தான் தொழுது கொள்கிறான், அவன் - அவன் சுகமடைய வில்லை ஆனால் இவனை என்னுடைய பாதத்தை விட்டு இழுத்துச் செல்ல (roll off) விரும்புகிறேன்" என்றேன், ஏனென்றால் அவன் அப்படியே ஒருவிதமாக அங்கே என்னை கீழே தரையோடு) பற்றிப்பிடித்துக் கொண்டிருந்தான் (pinned down).

57இந்நிலையில், டாமி ஆஸ்பார்ன் அதைக் கண்டார். அல்லது, அவருடைய மனைவி அதைக் கண்டு, அடுத்த நாள் அவரை அழைத்துக்கொண்டு வந்தார்கள். பின்பு அவர் மூன்று நாட்களாக தம்மைத்தாமே ஒரு அறைக்குள் அடைத்துக்கொண்டார். அந்த பிரயாணத்தை விட்டு நான் வீட்டிற்கு போன போது, அவர், சிறு டாமி அவர்கள், அங்கு வெளியே முன்புறத்தில் இருந்தார். அவருடைய... அவரு டைய இரண்டு சிறு.... அவருடைய சிறு குழந்தையோடும், பிறகு அந்தச் சிறு - சிறு பையனோடும் அவர் இருந்தார். அவர் இரண்டு மூன்று தடவைகள் காரைச்சுற்றிலும் இருந்து, மிகவும் பதட்டமுடையவராய் காணப்பட்டார். உங்களுக்குத் தெரியும், அவர், "சகோதரன் பிரன்ஹாமே, சகோதரன் பிரன்ஹாமே, எனக்கு சுகமளிக்கும் வரம் உண்டு என்று நீர் நினைக்கிறீரா?" என்று கேட்டார்.

58நான், 'இதோ பாரும், டாமி அவர்களே, இந்த எழுப்புதலானது இவ்விதமாகத் துவங்கின பிறகு, தேசத்தில் அநேக தெய்வீக சுகமளிப்பவர்கள் இருப்பார்கள். அது பரிதாபகரமானதாக இருக்கும்; அவர்கள் தெய்வீக சுகமளித் தலைப் பெற்றிருக்காவிட்டால், ஜனங்கள் அவ்விதமான ஒரு கூட்டத்தையும் கூட கொண்டிருக்க மாட்டார்கள்" என்றேன். பாருங்கள், தெய்வீக சுகமளித்தல் என்பது சிறிய காரியமாகும், சிறிய காரியத்தைக் (minor) கொண்டு உங்களால் ஒருபோதும் பெரிய காரியத்தைப் (major) (பெற்றுக்கொள்ள முடியாது. புரிகிறதா? ஆத்தும் இரட்சிப்பு தான் பிரதான காரியமாகும். தெய்வீக சுகமளித்தல் என்பது வெறுமனே சிறிய காரிய மாகும். ஆனால் நான், "அது வந்து சம்பவிக்கும், ஏனென்றால் அந்த சம்பவங்கள் நடப்பிக்கப்பட்ட போது, எப்போதும் போலவே மோசேயின் நாட்களில் இருந்தது போலவே, அங்கே எப்போதுமே பலதரப்பட்ட கூட்டத்தார் (mixed multitude) இருக்கிறார்கள்” என்றேன்.

59லூத்தர், நான் இங்கே சமீபத்தில், லூத்தருடைய சரித்திரத்தை மறுபடியும் பேசிக் கொண்டிருந்தேன், அப் போது, நான், மார்ட்டின் லூத்தருக்கு சம்பவித்த காரியங் களில், அவரால் கத்தோலிக்க சபையை எதிர்த்து, அது இல்லாமலேயே அவரால் தொடர்ந்து ஜீவிக்க முடிந்தது காரியமல்ல, ஆனால் அவருடைய எழுப்புதலைத் தொடர்ந்து வந்த மதவெறித்தனம் எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய தலையை உயர்த்தி வைத்திருந்ததே காரியமாகும்" என்று சொன்னேன். எனவே அது சரியே. எனவே நான், "இங்கேயும் அதே காரியம் தான் பின் தொடர்ந்து வரும். உமக்குப் புரிகி றதா?" என்றேன்.

60எனவே நான், "டாமி அவர்களே, நீர் ஊழி யத்திற்காக அழைக்கப்பட்டுள்ளீர்; அது உமக்குத் தெரியும்" என்றேன்.

61அவர், ஆமாம், நான் ஊழியத்திற்கு அழைக்கப் பட்டுள்ளேன் என்றார். அவர் கர்த்தருக்காக வாக்குப்பண் ணப்பட்ட ஒரு வாலிபரைப் போன்று காணப்பட்டார்.

62நான், 'நல்லது. நான் உம்முடைய ஸ்தானத்தில் இருந்து, நீர் ஊழியத்திற்காக அழைக்கப்பட்டிருப்பீரானால், நீர் வியாதியஸ்தருக்காகவும் ஜெபிக்க அழைக்கப்பட்டிருக்கிறீர். அப்படியே... தெய்வீக சுகமளித்தலின் வரங்கள் மற்றும் காரி யத்தைக் குறித்து மறந்து விடுங்கள், வெறுமனே வியாதி யஸ்தருக்காக ஜெபம் செய்யுங்கள். நான் அங்கே மேலே யுள்ள அந்தப் பழைய ஓக் மரத்தின் (கருவாலி மரத்தின்) கீழே போன போது, தெய்வீக சுகமளித்தல் என்ற வார்த்தையைக் குறித்த ஏதோவொன்றை கற்றுக்கொண்டேன் என்றேன்.

63அவர், எந்த பழமையான ஓக் மரம்? என்று கேட்டார்.

64நான், அது எனக்கு முன்புற தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிற வழுக்கைத் தலையைக் கொண்ட Dr. F. F. பாஸ்வர்த் அவர்கள் தான். அவர் தெய்வீக சுகமளித்தலைப் பற்றிய தேவனுடைய வார்த்தையைக் குறித்து அறிந்திருப்பதைக் காட்டிலும் அதற்கும் அதிகமாக அதைக் குறித்து அறிந்திருப்பவர்கள் தேசத்தில் ஒரு மனிதருமே கிடையாது என்றேன்.

65நான் இங்கே கொஞ்ச... இங்கே ஒரு சில வருடங்களுக்கு முன்பு, ஆப்பிரிக்காவுக்குப் போய்க் கொண் டிருந்தேன், நான் மடிசன் சதுக்கத்தில் (Madison Square)... இருந்தேன். இல்லை, நீங்கள் அங்கே பார்க்க வந்தீர்களே, அது எந்த இடம், அது நியூயார்க்கிலா ? அது செயின்ட் நிக்கோலா அரங்கம் (St. Nicholas Arena). அவர் முழு தூரமும் விமானம் மூலம் பிரயாணம் செய்து திரும்பி வந்தார். அவர் அங்கே முழு தூரமும் மேலே விமானம் மூலம் பறந்து வந்தார். ஒரு இரவில் நான் மேடையில் நடந்து வந்தேன், அப்போது அவர் என்னைக் கண்டு, அந்த விதமாக அழத் தொடங்கினார். நான் திரைக்குப் பின்னால் ஓடிச் சென்று, அவரைக் கட்டி அணைத்துக் கொண்டு, நான், டாமி அவர்களே, நீர் இப்பொழுது தானே தீவுகளிலிருந்து வந்தீர்?" என்று கேட்டேன்

66அவர், "ஆமாம், சகோதரன் பிரன்ஹாம்" என்றார்.

67நான், "தேனே, நீர் மிகவும் களைப்பாயிருக்கிறீர் என்று நினைக்கிறேன், நீர் ஏன் இங்கே விமானத்தில் பிரயாணம் செய்து வந்திருக்கிறீர்?" என்றேன்.

68அவர், "நான் சிறிதளவும் களைப்பாக இல்லை . நான் தேனிலவில் இருக்கிறேன் என்றார்.

69நான், "தேனிலவா?" என்று கேட்டேன்.

70அவர், "ஆமாம், நானும் எனது மனைவியும் மகத்தான நேரத்தை கொண்டிருக்கிறோம். சகோதரன் பிரன் ஹாமே, பாரும், கர்த்தர் எனக்கு எந்த பகுத்தறிதலோ அல்லது எதையுமோ தராமல் இருந்ததற்காக நான் சந்தோ ஷமடைகிறேன். அந்தப் பழைய ஓக் மரத்தின் கீழே இருப் பதைக் குறித்து நீர் என்னிடம் கூறினது உமக்குத் தெரியுமா? என்றார்.

71நான், "ஆம்" என்றேன்.

72அந்த வழுக்கைத் தலையை உடையவரைக் குறித்து சொன்னீரே என்றார்.

73நான், "ஆம், ஐயா" என்றேன்.

74அவர், 'நானும் அங்கே ஏதோவொன்றைக் கற்றுக் கொண்டேன், நான் அப்படியே சென்று, ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் வார்த்தையை எடுத்துக்கொண்டு, சாத்தானால் அதை விட்டு வெளியே வர முடியாதபடி அப்படிப்பட்ட ஒரு முடிச்சைப் போட்டு அவனைக் கட்டி விட்டேன், பிறகு வெறுமனே ஜெபத்தை ஏறெடுத்து விட்டு, சுகமடைந்தவர்கள் எல்லாரும் மேலே வாருங்கள் என்கிறேன். முதலாவது நபர் எழுந்த போது, மற்றொருவருக்கு தைரியத்தைக் கொடுக்கிறார். மற்றவர் மற்றவருக்குத் தைரியத்தைக் கொடுக்கிறார். நானும் எனது மனைவியும் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டு, எங்கள் கரங்களைத் தட்டிக்கொண்டு, ஒரு பெரிய நேரத்தை உடையவர்களாய், ஏறக்குறைய 11 மணி வரைக்கும் சத்த மிட்டுக் கொண்டிருக்கிறோம், பிறகு மீதியான மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ளும்படி விடுகிறோம், பிறகு நாங்கள் வீட்டிற்குச் சென்று, நிலவு வெளிச்சத்தில் நடந்து கொண்டே ஒரு மகத்தான நேரத்தைக் கொண்டிருக்கிறோம்" என்று சொன்னார்.

75நான், "சரி, அந்த அதே பழைய ஓக் மரம் தான் இன்றிரவு இங்கே உட்கார்ந்து கொண்டு, என்னோடு கூட ஆப்பிரிக்காவுக்குப் போவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது என்றேன்.

76அவருடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அவர் இன்றிரவு மகிமையில் இருந்து கொண்டு, அந்த மறுபக்கத்தில் நித்திய ஜீவனின் சந்தோஷங்களை அனுபவித் துக் கொண்டிருக்கிறார். அதுதான் அது. ஓ, தேவனே, நாம் எல்லாரும் மறுபக்கத்தை அடையும் போது, நான் - நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன், உங்களுக்கு மகிழ்ச்சி இருக்காதா? அது முழுமையாக முடிவடைந்திருக்குமா?

77இப்பொழுது, நீங்கள் இன்றிரவு ஆபிரகாமின் சந்ததியாக இல்லாமலிருந்தால், நீங்கள் வந்து, இயேசு கிறிஸ்து மூலமாக ஆபிரகாமின் வித்தாக இருங்கள்.

78இப்பொழுது, நான் வெறுமனே ஒரு வேதவச் னத்தை வாசிக்க விரும்புகிறேன். நான் நம்புகிறேன் ? ஒவ் வொரு இரவும் யாராவது ஒருவர் எனக்காக வேதாகமத்தை வாசிக்கிறார். அல்லது, சகோதரன் ராய் வாசிக்கிறார். நான் சில... வாசிக்க விரும்புகிறேன். அப்படியே இன்னும் ஒன்று, ஏனென்றால் என்னுடைய வார்த்தைகள் தவறிப்போகுமானால், அவருடைய வார்த்தைகளோ தவறிப்போகாது. நான் இதை பரிசுத்த, அல்லது, 1 யோவான், முதலாம் அதிகாரம் 7வது வசனத்தை வாசிக்க விரும்புகிறேன். அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; தேவ னுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

79அது ஒரு பாடம் என்று அழைக்கப்படுமானால், நான் ஐக்கியத்தின் அஸ்திபாரம் என்ற ஒரு பாடத்தை எடுக்க விரும்புகிறேன், இப்பொழுது இந்தப் பாடத்தின் பேரில் இங்கே சற்று கொண்டு வர விரும்புகிறேன். அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; தேவ னுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

80இப்பொழுது, ஐக்கியத்தைப் பற்றிய நிபந்தனை களின் பேரில் பேச விரும்புகிறேன். இப்பொழுது, நாம் ஏன் இங்கே ஒன்றாக இருக்கிறோம்? நாம் அநேகமாக வித்தி யாசமான ஸ்தாபனங்களிலிருந்து இங்கே இருக்கிறோம், வெவ் வேறான ஸ்தாபனங்கள், அநேகமாக மெதொடிஸ்டு, பாப் டிஸ்டு, பெந்தெகோஸ்தே, ஒருத்துவம், இருத்துவம், திரித்து வம், நான் குத்துவம், ஒன்று சேர்ந்தவர்களாக இருக்கும் எல்லா ருமே இங்கே பிரதிநிதித்துவம் வகித்து, நாம் இங்கே உட் கார்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது, தேவன் ஏதோ வொரு நாளில் நம் எல்லாரையும் ஒன்றாக போக வைக்கப் போகிறார். பாருங்கள்?) அவர் செய்ய வேண்டியவராய் இருப்பார்.

81கொஞ்ச காலத்திற்கு முன்பு, சரியாக இங்கே டெக்ஸாஸில் உள்ள ஹூஸ்டனில், கர்த்தருடைய தூதனானவருடைய புகைப்படம் எடுக்கப்பட்ட போது, அந்த இரவில், பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்த டாக்டர். பெஸ்ட் அவர்கள் அங்கு ஒரு விவாதத்தை நடத்திக் கொண்டிருந்த போது. அந்த விவாதமானது எனது கூட்டத்திலேயே சகோதரன் பாஸ்வர்த் அவர்களுக்கும் அவருக்கும் இடையே நடக்கும் என்று அவர்கள் செய்தித்தாளில் வெளியிட்ட போது, கர்த்தர் என்னை அங்கே அனுப்பினார், ஏன், அங்கே வந்து.... செய்கிறார்களா என்று அதில் அவர்கள் எந்தக் கவனத்தையும் செலுத்தவில்லை. அங்கே ஒரு காரியம் பொதுவாக இருந்து, தெய்வீக சுகமளித்தலானது பங்காக இருந்ததால், எனவே அப்போது அவர்கள் ஒவ்வொருவரும் வந்து ஒன்றாக ஐக்கி யப்பட்டார்கள். எனவே அப்படியானால், சிலசமயங்களில் அது அந்த விதமாகவே இருக்கும். முடிவாக கம்யூனிஸம் தானே இங்கே சுற்றிலும் வேரூன்றும், அப்போது நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியாயிருப் போம், நாம் அவ்வாறு மகிழ்ச்சியாயிருக்க மாட்டோமா? விலையேறப்பெற்ற விசுவாசம் போன்ற அவ்வித விசுவா சத்தை உடைய அருமையான சகோதரர்கள். அவர்கள் ஒரு திமில் கொண்ட ஒட்டகத்தில் சவாரி செய்தாலோ அல்லது இரண்டு திமில் உடைய ஒட்டகத்தில் சவாரி செய்தாலும், அல்லது அங்கே என்னவாக இருந்தாலும், அவர்களோடு சவாரி செய்து போவதில் எப்படியும் நாம் மகிழ்ச்சியாயிருப் போம், போய், அவர்களுடைய ஐக்கியத்தை அனுபவித்துக் கொண்டிருப் போம். அதைக் காண நான் ஜீவிப்பேன் என்று நம்புகிறேன்.

82இப்பொழுது, ஐக்கியம் என்பது, நாம் ஒன்றாகக்கூடி வரக்கூடும் போது தான். இப்பொழுது, காகங்களையும் புறாக் களையும் போன்று இருந்தால், உங்களால் ஐக்கியம் கொள்ள முடியாது; அவைகள் ஒன்றோடொன்று ஐக்கியத்தைக் கொண் டிருக்க முடியாது. அவைகளுடைய ஆகாரம் வித்தியாச மானது, அவைகளுடைய - அவைகளுடைய பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை. நீங்கள் ஒரு உடன்பாடு கொண் டிருக்கும் காலம் வரையில் நீங்கள் ஐக்கியத்தைக் கொண் டிருக்க வேண்டும். இப்பொழுது, ஐக்கியத்தைக் கொண்டிருக் கும்படி மனிதனை ஏக்கம் கொள்ளச் செய்வது தான் என்ன? நாம் ஒன்றாக இணைந்து வந்து, ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்ள விரும்பும்படி நம்மை ஆக்குவது என்ன? அதற்குக் காரணம் என்னவென்றால், அதிலிருந்து ஏதோவொரு வித மான முழு ஈடுபாடு அங்கே இருக்க வேண்டியதாயுள்ளது.

83இப்பொழுது, கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் ஒரு மகத்தான அருங்காட்சியகத்தில் இருந்தேன், அங்கே ஆதாம் ஏவாளுடைய படத்தை ஒரு கிரேக்க ஓவியர் வரைந் திருந்தார். ஏவாளும் ஆதாமும் போன்றுள்ள அவ்வளவு பயங்கரமாக அருவருப்பாக தோற்றமளிக்கிற ஒரு காட்சியை, என்னுடைய ஜீவியத்திலேயே நான் ஒருபோதும் கண்ட தில்லை. நல்லது இப்பொழுது, ஏவாள் அவ்விதமாக காணப் பட்டிருந்தால், அவளுடைய தலைமயிர் இந்த விதமாக வெளியே நீட்டிக்கொண்டும், அவளுடைய தாடையானது பக்கவாட்டில் இருக்க, ஒரு கை இந்தவிதமாகவும், மறுகை அந்த விதமாகவும், ஒரு மூட்டு ஏறக்குறைய அந்த அளவு பெரிதாகவும், மற்ற மூட்டு அந்த விதமாகவும் இருந்தது. ஓ, அது பயங்கரமாகவும் மிருகத்தனமாகவும் தோற்றமளிக்கிற ஒரு காரியமாக இருந்தது. நல்லது. ஏவாள் அந்த விதமாக தோற்றமளித்திருப்பாளானால், ஆதாம் தூக்கத்தை விட்டு எழுந்து, அவளைக் கண்ட போது, அது ஒரு மனிதனுக்கு அவனுடைய மனைவியின் மேலுள்ள ஆசையாக இருந்ததே, இன்றும் அவ்விதமாக தோற்றமளிக்கும் போது அவ்வாறு இருக்கிறதே. அது முழுவதுமான ஈடுபாடாக இருந்தது. அது சரியே. இப்பொழுது, நமக்கு அதைக் காட்டிலும் அதிகம் தெரியும். இப்பொழுது, பரிபூரணமில்லாத எதையுமே தேவன் சிருஷ்டிப்பதில்லை, அது சரியாகவும், நன்றாகவும், விலை யேறப்பெற்றதாகவும், பரிபூரணமாகவும் இருக்கிறது.

84இப்பொழுது, நான் நம்புகிறேன், அப்படியே இன்றுள்ள மனிதனைப் போன்று... ஏன் மனிதன் அதைச் செய்வதில்லை - மனிதன் தான் ஒரு பாவி என்று கண்டு கொண்ட போது, அவன் வெளியே வந்து, "பிதாவே, நான் - நான் ஒரு பாவி ; நீர் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று ஏன் அவன் கூறுவதில்லை , அவன் ஏன் அவ்வாறு செய்வதில்லை. இல்லை, இல்லை அவன் அதைச் செய்வதில்லை, ஆதாம் செய்த அதே காரியத்தையே இவனும் செய்கிறான். அப்போது அவன் எங்கோவுள்ள புதர்களுக்குள் தன்னைத்தானே மறைத்துக் கொண்டான். உங்களுக்குப் புரிகிறதா? அவன் தன்னை தூரமாக வைத்துக்கொள்ள விரும்புகிறான். ஏன்? ஆதியிலும் அவன் அதைத் தான் செய்தான்.

85நான் என்ன நினைக்கிறேன் என்றால், ஏவாள் எப்பொழுதும் பூமியின் மேலிருந்த பெண்களிலேயே மிக அழகான பெண்ணாக இருந்தாள். அவளும் ஆதாமும் தேவனுடைய பரதீசுகளில் ஒன்றாக நடந்து வந்து கொண் டிருப்பதைக் காண நான் ஏங்குகிறேன், நம்முடைய பூமிக் குரிய தாய் எவ்வாறு தோற்றமளித்தாள் என்பதைக் காண. அவள் ஒரு அழகான பெண்ணாக இருந்தாள், அதில் சந்தே கமில்லை. ஒரு மனிதன் எப்படி காணப்படுவானோ ஆதாமும் அவ்விதமே ஒவ்வொரு விதத்திலும் இருந்தான், அவன் முற்றிலும் ஆண்பாலுக்குரிய எல்லாவற்றையும் பெற்றிருந் தான், ஏவாளும், முழுவதும் ஒரு பெண்ணாக இருந்தாள்.

86ஆனால் இப்பொழுது, ஐக்கியம் கொள்வதற்கு மனிதனை ஏக்கம் கொள்ளச் செய்வதற்கு காரணம் என்ன வென்றால், அவன் ஒரு காலத்தில் ஒரு ஐக்கியத்தைக் கொண் டிருந்தான் என்பது தான் அதற்குக் காரணம் என்பதைக் கண்டுகொள்கிறோம். அவனுடைய ஐக்கியம் தேவனோடு இருந்தது. இன்று ஒரு மனிதன் அவனால் கூடுமான மிகச்சிறந்த விதத்தில் அந்த ஐக்கியத்தைக் கொண்டிருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான், அவன் யாராயிருந்தாலும் காரியமில்லை, அவன் ஒரு இந்தியனாக இருந்தாலும் தன்னால் இயன்ற வரை சிறந்த முறையில் அதை முயற்சித்துக் கொண்டிருக் கிறான், நாம் இங்கே வந்த போது, இந்தியர்கள் சூரியனை ஆராதிப்பதையும், குலமரபுச் சின்னத்தை தொழுது கொள் வதையும் கண்டோம். நாம் ஆப்பிரிக்காவுக்குள் போவோ மானால், சிறிய விக்கிரகங்களின் கீழாகவும் மற்றும் காரியங் களின் கீழாகவும் நாம் அவர்களைக் கண்டுகொள்ளலாம். அவன் எங்கோ ஓரிடத்தில், தான் திரும்பி வருவதற்கான தன்னுடைய வழியைக் கண்டு பிடிக்க முயற்சித்துக் கொண் டிருக்கிறான், ஏனென்றால் அவனுடைய தொடக்கமானது தேவனோடுள்ள ஐக்கியத்தை உடையதாயிருந்தது. அது அங்கிருந்து தான் வந்தது. திரைக்குப் பின்னால் எங்கோ ஓரிடத்திருந்து, தான் வந்திருக்கிறான் என்பதை அவன் அறிந்திருக்கிறான், அவன் எங்கிருந்து வருகிறான் என்றும், திரும்பி வருவதற்கான தன்னுடைய பாதை எங்கேயிருக்கிறது என்றும் காண அவன் அங்கே பின்னோக்கி திரும்பிப் பார்க்க மட்டுமே முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஆகையால் தான் இயற்கைக்கு மேம்பட்ட காரியங்கள் ஜனங்களுடைய கவ னத்தை மிக அதிகமாகக் கவர்ந்து இழுக்கின்றன. அதற்குக் காரணம் என்னவென்றால், மனிதர்கள், அவர்கள் எங்கே யிருந்து வருகிறார்கள் என்றும், அவர்கள் எந்த வழியில் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றும் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் யாரென்றும், நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர் கள் என்றும், நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்றும் உங்களிடம் கூறக்கூடிய ஒரே ஒரு புத்தகம் தான் இந்த உலகத்தில் உண்டு, அதுதான் வேதாகமம். அது முற்றிலும் சரியே, நீங்கள் போய்ச் சேருமிடம் எதுவென்று அது உங்களுக்குக் கூறுகிறது. அது சரியாக இங்கே வேதாகமத்தில் உள்ளது. நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள் என்றும், நீங்கள் யாரென்றும் இந்த வேதாகமம் உங்களிடம் கூறும்.

87இப்பொழுது, மனிதன் தான் ஒரு பாவி என்று கண்டுகொண்ட உடனே, அவன் எப்போதுமே திரும்பி வருவதற்கான தன்னுடைய சொந்த வழியை உருவாக்க முயற்சித்தான். திரும்பி வருவதற்கான தன்னுடைய சொந்த வழியை கண்டுபிடிக்க முயற்சித்தும், அவன் முற்றிலும் இழக்கப்பட்டவனாகவே இருக்கிறான். இப்பொழுது, ஆகை யால் தான் கிறிஸ்து நம்மை ஆடுகளாக, தம்முடைய மேய்ச் சலின் ஆடுகளாகக் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.

88யாராவது எப்பொழுதாவது ஆடுகளை மேய்த்தி ருப்பார்களானால், ஒரு ஆடு வழிதவறிப்போகும் போது, அது முற்றிலும் இழக்கப்பட்டதாக இருக்கும். நான் அநேக நேரங் களில் அவைகளை மேய்த்திருக்கிறேன், அந்த ஆடுகள் அங்கே வெளியில் நிற்பதை நான் கண்டிருக்கிறேன், அந்த ஆடு மற்ற ஆடுகளிலிருந்து வழிதவறி விடும் போது, அது அப்படியே நின்று கொண்டு, ஓநாய் அதைப் பிடிக்கும் மட்டுமாக அல்லது ஏதோவொன்று சம்பவிக்கும் மட்டுமாக கத்திக் கொண்டேயிருக்கும். திரும்பி வருவதற்கான தன்னு டைய வழியை அதனால் கண்டுபிடிக்க முடியாது. அப்போது அது முற்றிலும் இழக்கப்பட்டதாக இருக்கிறது; அது தன்னு டைய மேய்ப்பனைக் கொண்டிருக்க வேண்டியதாயுள்ளது.

89மனித இனமும் அந்த விதமாகத்தான் இருக்கிறது. சிறுத்தையானது தன்னுடைய புள்ளிகளை அதை விட்டு நக்கித் துடைத்து அப்புறப்படுத்தி வைக்கக் கூடியதைக் காட்டிலும் மேலாக நம்மால் நம்மை நாமே இரட்சித்துக் கொள்ள முடியாது; அது நக்குகையில், அது அந்த இடத்தை பிரகாசமாக வைத்துக் கொள்கிறது. ஆகவே, ஆனால் அது அதனுடைய முழுமையான ஈடுபாட்டைக் காட்டுகிறது. அவன் திரும்பி வருவதற்கான தன்னுடைய பாதையைக் கண்டுபிடிக்க முயற்சித்தான். அவன் இன்னுமாக திரும்பி வருவதற்கான தன்னுடைய பாதையைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் அதே மனப்பான்மையை எடுத்துக்கொள்கிறான்.

90அவன் செய்ய முயற்சித்த முதலாவது காரியத்தை நாம் கண்டுபிடிப்போமானால், தனக்குத்தானே... உண்டுபண் ணிக்கொள்ளும்படி, அத்தி இலைகளினால் தன்னைத்தானே மூடிக்கொள்ள முயற்சிக்க வேண்டியிருந்தது. இப்பொழுது, மார்க்கம் (மதம் என்பது ஒரு மூடலாகவே உள்ளது. அது தான் அது என்று நமக்குத் தெரியும், அது ஒரு மூடலாக உள்ளது. அவன் செய்ய முயற்சித்த முதலாவது காரியம் என்னவென்றால், தன்னைத்தானே மூடிக்கொண்டு, அத்தி இலைகளைக் கொண்டு தனக்குத்தானே ஏதோவொரு மேல் வஸ்திரத்தை உண்டாக்கிக் கொண்டது தான். அவைகள் கிரியை செய்யாது என்பதை அவன் கண்டுகொண்டான். தேவனுடைய சந்நிதியில், தேவன் அவனுடைய கரத்தின் கிரியைகளை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். அவன் கிரியை செய்யவில்லை

91அவன் ஒரு கோபுரத்தை கட்டி, அதனால் ஜலப் பிரளயங்கள் மற்றும் அழிவுகள் எல்லாவற்றின் வழியிலி ருந்தும் விலகி வந்து விட அவனால் முடியும் என்று முயற் சித்தான், பாபேலில் இருந்த இந்தக் கோபுரத்தைக் கொண்டு தேவனிடம் திரும்பி வருவதற்கான தன்னுடைய வழியைக் கண்டுபிடித்து விடலாம் என்று அவன் முயன்றான். தேவனோ அதை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, அவர்களுடைய பாஷையைக் குழப்பினார். அந்தக் கோபுரம் விழுந்து விட்டது. மனிதன் தன்னுடைய சொந்த வழியை உண்டாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் அவன் - அவன் தோல்வி யடைந்து விடுகிறான்.

92அவன் தேவனோடுள்ள தன்னுடைய ஐக்கியத்தை இழந்து போன பிறகு, அவன் அலைந்து திரிகிறவனானான், அப்போது அவன் தனக்குத்தானே இடம்பெயர்ந்து போக வேண்டியிருந்தது. அதற்கு முன்பு, தேவன் அவனைப் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டார். ஆனால் இப்பொழு தோ அவன் தானாகவே இடம்பெயர வேண்டியதாயிற்று என்பதைக் கண்டுகொள்கிறான், அது மிகக் கடினமான ஒரு காரியமாகும். எனவே அவனைக் கவனித்துக் கொள்ளவும், அவனைப் பாதுகாக்கவும், அவனுக்கு வழிகாட்டவும், அவனை நடத்தவும், அவனைப் போஷிக்கவும், அவனை உடுத்தவும், அவன் இருந்தது போன்று அவன் மேல் அக்கறை கொள்ளவும் அவனுக்கு ஒரு அன்பான தகப்பன் கிடையாது. எனவே அவன் திரும்பி வருவதற்குப் பதிலாக, அவன் தன்னுடைய சொந்த வழியைக் கண்டு பிடிக்க முயற்சிக்கிறான். திரும்பி வரும்படியாக தன்னுடைய சொந்த வழியை உண்டாக்கிக்கொள்ள விரும்புகிறான். மனிதன் தன்னுடைய சொந்த வழியை உண்டாக்க விரும்புகிறான், அவன் எப்போதுமே அவ்வாறு தான் செய்தான். அவன் எப்போதுமே அவ்வாறு தான் செய்வான் என்று நினைக் கிறேன், அவன் தன்னுடைய சொந்த வழியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறான், அவன் தன்னுடைய சொந்த வழியை ஏற் படுத்தும் ஒவ்வொரு தடவையும், அவன் எப்போதுமே தவறாக ஆகி விடுகிறான்.

93இப்பொழுது, இக்காலத்திலும் நாம் இதைக் கண்டு கொள்கிறோம், அவன் இன்னும் திரும்பி வரும்படி முயற் சிக்கும் வழிகளில் சிலவற்றைக் குறித்து நாம் பேசலாம். அவன் இக்காலத்திலும் தன்னுடைய அறிவாற்றல்களின் மூல மாக தானாகவே தன்னைத் திரும்பக் கொண்டு வந்து விடலாம் என்று முயற்சிக்கிறான். அவன் திரும்பிவர தனக்குத் தானே கல்வி கற்றுக்கொள்ள முயற்சிக்கிறான். கொஞ்ச காலத் திற்கு முன்பு, "நம்மால் உலகத்திற்கு கல்வி புகட்ட முடியுமானால்" என்ற ஒரு திட்டத்தை இங்கே நாம் கொண்டிருந்தோம். இங்கே ஏறக்குறைய 75 வருடங்களுக்கு முன்பே, ஐக்கியத் திற்குள் திருப்பிக் கொண்டுவரும்படி, தானே கல்வி கற்றுக் கொள்ளும்படியாக, உலகமானது தனக்குத்தானே அதை எடுத்துக்கொண்டு, எல்லா தேசங்களையும் உருவாக்கினது. நாம் உலகத்தை நாகரீகமாக்கி, சுதந்திர ஏகாதிபத்தியத்தைக் கொண்டு வந்து, அஞ்ஞானிகளையும் மற்றும் ஒவ்வொன்றையும் நாகரீகமானதாக கொண்டு வந்த போது. நாம் நம்முடைய சபைகளிலும் வாசிக்கவும், எழுதவும் கற்றுக்கொடுக்கவும், கணிதத்தைக் கற்றுக்கொடுக்கவும் திட்டங்களை ஏற் படுத்தத் துவங்கினோம். அப்போது நாம் என்ன செய்தோம்? அவன் துவக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் அவனை இரட்டத்தனையாக நரகத்தின் மகனாக்கினோம்.

94நான் சமீபத்தில் தான் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தேன். ஆப்பிரிக்காவில் அவர்கள் எப்பொழுதாவது செய்த மிக மோசமான காரியம் என்னவென்றால், அஞ்ஞா னிகளுக்கு கல்வி புகட்டினது தான். அங்கே இடைப்படுவதற்கு மிகக் கடினமான அஞ்ஞானி யாரென்றால், கல்வி கற்ற அஞ்ஞானி தான். இப்பொழுது, ஒரு அஞ்ஞானி என்பவன் அவிசுவாசியாக இருக்கிறான். உங்களிடம் ஒரு - ஒரு கல்வி யறிவற்ற அஞ்ஞானி இருப்பானென்றால், சில நேரங்களில் உங்களால் அவனிடம் பேச முடியும். ஆனால் நீங்கள் அவனுக்குக் கல்வி கற்றுக்கொடுங்கள், அப்போது உங்க ளுக்குத் தெரிவதைக் காட்டிலும், அல்லது தேவனுக்குத் தெரிவதைக் காட்டிலும், அல்லது வேறு யாருக்குத் தெரி வதைக் காட்டிலும் அதைக் குறித்து அவனுக்கு அதிகமாகத் தெரியும்.

95எனவே, நாம் என்ன செய்கிறோம்? இப்பொழுது... ஆகையால் இங்கேயிருக்கும் என்னுடைய கறுப்பின நண்பர் கள் அதைப் புரிந்து கொள்வார்கள், நீங்கள் அந்த ஆப்பிரிக்க நீக்ரோவை எடுக்கும் போது, அவன் அங்கே வெளியேயுள்ள தன்னுடைய சிறு குடிசையில் இருக்கும் போது, அவன் சரியாகத்தான் இருக்கிறான். அவனுக்குத் தேவையான ஒரே ஒரு காரியம் கிறிஸ்து மட்டுமே. நீங்கள் அவனைப் பட்டணத் திற்குள் கொண்டு வந்து... செய்யும் போது.

96நான் உங்களிடம் கூறுகிறேன், அவர்கள் அங்கே ஜீவிக்கும் தங்களுடைய சொந்த ஜீவியத்தைக் கொண்டு, அவர்களால் இங்கேயுள்ள இந்த கிறிஸ்தவ உலகத்திற்கு ஒழுக்கங்களைப் போதிக்க முடியும், இவர்களுக்கு அதைக் குறித்து எதுவுமே தெரியாது. ஏன், அங்கே ஒரு பழங்குடி மக்கள் இருக்கிறார்கள், ஒரு சிறு பெண் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு வரை காத்துக்கொண்டிருந்து, அவள் விவாகம் பண்ணும் மட்டும், அவள் அந்நேரத்தில் யாரோ ஒருவரைக் கொண்டிராமலோ அல்லது யாரோ ஒருவரை விவாகம் பண்ணாமலோ இருப்பாளானால், நல்லது, அப்போது அவள் பழங்குடியினருக்கான வர்ணத்தை அவள் அவளை விட்டு எடுத்துப் போட்டு விட்டு, பட்டணத்திற்குள் சென்று, பட்டணத்தில் இருக்கும் அவர்களைப் போன்று ஒரு கூலியாளாக இருந்து, சுற்றியுள்ள மதில்களுக்குள் போக வேண்டும். அதற்கு மேலும் அவள் அந்த பழங்குடி சமுதாயத்தின் மத்தியில் தங்குவதற்கு ஏற்றவளல்ல.

97இப்பொழுது, அவள் விவாகம் பண்ணக்கூடும் முன்பே, அவள் விவாகம் பண்ணுவாளானால், அவளுடைய கன்னித்தன்மையானது (virgincy) பரிசோதித்துப் பார்க்கப்பட வேண்டும். அவள் குற்றமுள்ளவளாகக் கண்டுபிடிக்கப்பட் டால், அதைச் செய்த அந்த மனிதனை அவள் சொல்லியாக வேண்டும், அப்போது அவர்கள் இருவரும் ஒன்றாகக் கொல்லப்படுவார்கள். இன்றிரவு ஹாலிவுட்டிலோ அல்லது லாஸ் ஏஞ்சலிஸிலோ அல்லது ஐக்கிய நாடுகளிலோ இவர்கள் அவ்வாறு செய்திருந்தால், என்னவாகும்? அநேக கொலைகள் செய்யப்பட்டிருக்கும். ஆப்பிரிக்காவில் அதைப் போன்ற இரவு வாழ்க்கை கிடையாது. இல்லை, நாம் நம்மை நாமே கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கையில், அவர்கள் நம்மைக் காட்டிலும் உயர்ந்த நிலையிலும், சுத்தமானவர் களாகவும், நல்லொழுக்கம் உடையவர்களாகவும் ஜீவிக்கிறார் கள். ஆம், ஐயா. அந்தச் சிறு பெண் குற்றமுள்ளவளாக கண்டுபிடிக்கப்பட்டால், ஒரு பெண் தன்னுடைய புருஷனை விட்டு ஓடிப்போகும் குற்றமுள்ளவளாகவோ, அல்லது அவ ளது புருஷனைக் கனவீனப்படுத்தும் காரியத்தைச் செய்வ தாகவோ அவள் எப்பொழுதாவது கண்டுபிடிக்கப்படுவாளா னால், அவளோடு ஜீவிக்கிற அந்த மனிதனோடு கூட அவள் சரியாக அங்கேயே கொல்லப்படுவாள். ஆம், ஐயா, அவர்கள் மத்தியில் எந்த ஒழுக்கக் கேடும் கிடையாது.

98நான் பகுத்தறிந்த வியாதியஸ்தர்கள் எல்லாரிலும் அவர்கள் மத்தியில் ஒருவரிடமும் பால்வினை நோய் இருப்பதை ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை. அது சரியே, அவர்கள் எவரிடமும் அது கிடையாது. நான் காச நோயையும், மற்ற காரியங்களையும், தொழுநோயையும் கூட (பகுத்தறிந்து) கண்டுபிடித்தேன், ஆனால் ஒழுக்கக்கேடான, எந்த பால்வினை நோயையும் நான் கண்டு பிடிக்கவில்லை.

99இப்பொழுது, அதோ பாருங்கள், அவர்கள் - அவர்கள் அலைந்து திரிகிறவர்களாக இருக்கிறார்கள். நம்மு டைய கல்வி, அவைகளைக் கொண்டு நாம் என்ன செய் கிறோம்? நாம் அவர்களை அங்கே ஒரு சுற்றியுள்ள மதிற்சுவருக்குள் கொண்டு வந்து, நீங்கள் தகரத் துண்டின் மேல் எட்டி உதைக்கிறீர்கள், அங்கே அவர்கள்... தற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பழங்குடியினருக்கான வர்ணத்தை எடுத்துப் போட்டாக வேண்டும், அப்போது வெள்ளாடுகளும், பன்றிகளும், மற்ற ஒவ்வொன்றும் அங்கிருந்து வெளியே ஓடுவதை நீங்கள் காணலாம், அவர்கள் நான்கு ஐந்து பிள்ளைகளைக் கொண்டவர்களாகவும்), நான்கு ஐந்து மனிதர்களைக் கொண்டவர்களாகவும், நான்கு ஐந்து பெண்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்). நாகரீ கம் அதைத்தான் அவர்களுக்குச் செய்கிறது. வழக்கமாக இங்கேயுள்ள இந்தத் தேசம் அழகாக இருந்த போது, இந்தியன் தானே இங்கே வாழ்ந்து வந்தான், அப்போது அவனுக்கு மிகக் கொஞ்ச பாவங்கள் தான் இருந்தன, பழங்குடியினருக்கு இடையேயான சிறு யுத்தம் தான் இருந்தன. ஆனால் வெள்ளையன் வந்த போது, அவன் எதைக் கொண்டு வந்தான்? பெண்கள், விஸ்கி, கொலை செய் தல், கொலை போன்றவற்றையும் கொண்டு வந்து விட்டான் இப்பொழுது அது எங்கேயிருக்கிறது என்று பாருங்கள். புரிகிறதா? நாகரிகம் எப்போதுமே பாவத்தைத்தான் கொண்டு வருகிறது. மனுஷன் பூமியின் மேல் பெருகத் தொடங்கின போது, பூமி கொடுமையினால் நிறையத் தொடங்கினது, தேவன் உலகத்தை அழித்துப் போட்டார்.

100பாவம் நாகரீகம் மூலமாகவே வந்தது. எனவே உங்களுடைய அறிவுத்திறமைகள் ஒருபோதும் தேவனோ டுள்ள ஐக்கியத்துக்கு உங்களைத் திருப்பிக் கொண்டு வராது. அது கடினமாக வாக்குமூலம் தான், ஆனால் நான் இதை எல்லா சகிப்புத்தன்மையோடும் கூறட்டும், நான் என்னுடைய அறியாமையை ஆதரிக்க முயற்சி செய்யவில்லை, ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு எப்பொழுதும் இருந்த மிகமோசமான சத்துரு எதுவெனில் கல்வி தான் என்று நான் நினைக்கிறேன். உலகத்துக்குக் கல்வி புகட்டும் போது, நீங்கள் ஒரு கூட்ட கல்வி கற்ற அஞ்ஞானிகளைப் பெற்றுக்கொள்கிறீர்கள், உங்க ளால் அவர்களோடு எதையுமே செய்ய முடியாது.

101கொஞ்ச காலத்திற்கு முன்பு, துப்பறியும் நிறுவன மான FBIஐச் சேர்ந்த ஒரு மனிதரைக் கொண்டிருந்தேன், அவர் என்னுடைய கூட்டத்தில் மனமாற்றமடைந்தார். அவர் என்னை அந்த அறைக்குள் அழைத்துச் சென்று.... குற்றம் எப்படி, எங்கே துவங்குகிறது என்று எனக்குக் காண்பித்தார். நான் ஒருமுறை அந்த விதமான ஒரு வாக்குமூலத்தை ஒரு கூட்டத்தில் பேசினேன், அவர் ஒரு நில வரைபடத்தை (map) எனக்குக் காண்பித்தார், நீங்கள் ஒரு சிறு காரியத்தை எடுத்துக்கொண்டு, நில வரைபடத்தில் குறிப்பிட்ட இடங்களில் அதை வெளியே இழுப்பது போன்று, மிக அதிகம் படித்த ஜனங்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று அது காண்பித்தது. அங்கே தான் மிக அதிக குற்றங்களும் நடக்கின்றன. அது சரியே. அவர்கள் தங்களுடைய சாமர்த்தியத்தினால் சட்டத் தை மீறி விட்டு, அதைப் போன்ற காரியங்களைச் செய்யலாம் என்று எண்ணிக்கொள்கிறார்கள்.

102கல்வி என்பது மனிதனுடைய ஆத்தும் இரட்சிப் புக்கு கடன்பட்டிருக்கிறது. இப்பொழுது, கல்வியானது அது போகிற அளவிற்கு அருமையானது தான், ஆனால் அது இரட்சிப்பின் இடத்தை ஒருபோதும் எடுத்துக்கொள்ளாது. எனவே கிறிஸ்துவிடம் திரும்பி வரும்படிக்கு தனக்குத்தானே கல்விகற்றுக்கொள்ள முயற்சிக்கும் மனிதன் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுகிறவனாக (fighting) இருக்கிறான். அவன் ஒருபோதும் அதைச் செய்ய மாட்டான். அவனால் அதைச் செய்ய முடியாது.

103இப்பொழுது, அது தோல்வியடையும் போது, அவர்கள் ஜனங்களை ஒரு ஐக்கியத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அவர்கள்... என்று தாங்கள் எண்ணிக் கொண்ட பிறகு அவர்கள் உலகத்தை ஸ்தாபித்தார்கள். மெதோடிஸ்டுகள் தங்கள் ஸ்தாபனத்தைக் கொண்டிருக்கிறார் கள், பாப்டிஸ்டுகள் தங்களுடையதைக் கொண்டிருக்கிறார்கள், கத்தோலிக்கர்கள் தங்களுடையதைக் கொண்டிருக்கிறார்கள், பெந்தெகோஸ்தேகாரர்கள் தங்களுடையவைகளைக் கொண் டிருக்கிறார்கள், அது வேறொரு அபாயகரமான ஆபத்தான) தவறாக இருந்தது. உங்களால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது. நீங்கள் ஒருபோதும் அதைச் செய்யவே மாட்டீர் கள்; அவர்கள் கல்வித்திட்டத்தின் பேரில் எவ்வளவாக ஆகா யத்தில் சிலம்பம் பண்ணினார்களோ அவ்வளவாக நீங்கள் சிலம்பம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் ஒருபோ தும் அதைச் செய்ய முடியாது. அது ஆதியிலே தேவ னுடைய திட்டமாக இல்லை. நீங்கள், 'நல்லது, எங்களுக்கு ஒரு பெரிய திட்டம் உண்டு. நாங்கள் கொண்டிருக்கிறோம் .." என்று கூறலாம்.

104அது அவ்வாறு இருக்கலாம், ஆனால் சபையானது மரணத்திற்கேதுவாகத் திட்டமிட்டுள்ளது. அது சரியே. நமக்குத் திட்டங்கள் அவசியமில்லை , நமக்கு ஜெபக் கூட் டங்கள் தான் தேவையாயிருக்கிறது. அது சரியே. நமக்கு - நமக்கு கல்வி அவசியமில்லை . நமக்கு இரட்சிப்பு தான் அவசியமாயுள்ளது. அதுதான் நமக்குத் தேவை. கல்வியில் இரட்சிப்பு கிடையாது. ஸ்தாபனங்களில் இரட்சிப்பு கிடையாது.

105கல்வியானது அதனுடைய நோக்கத்தை நிறை வேற்றுகிறது. ஸ்தாபனம் அதனுடைய நோக்கத்தை நிறைவேற் றுகிறது. ஆனால் அது அது அடிப்படைக் காரணம் அல்ல. நாம் மறுபடியும் ஐக்கியத்திற்குள் திரும்பி வந்து விடுவதற் கான வழி அதுவல்ல.

106இப்பொழுது, இங்கே உட்கார்ந்து கொண்டிருக் கிறவர்களில், ஒரு பாப்டிஸ்டாக இருக்கிற ஒரு மனிதன் இதோ இருக்கிறான், இதோ இங்கே இருக்கிற ஒருவர் பெந்தெகோஸ்தேயினராக இருக்கிறார். அவர்கள் ஒருவர் மற்றவருடைய பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அதன்பிறகு பெந்தெகோஸ்தே ஒருத்துவக்காரர், பெந்தெகோஸ்தே திரித்து வக்காரர், பெந்தெகோஸ்தேயிலேயே எத்தனை பேர் இருக்கி றீர்கள், அது உங்களுக்குத் தெரியும், இந்த விதமாக எல்லா ருமே இருக்கிறீர்கள். மேலும் சர்ச் ஆஃப் காட், நான்கு சதுரக்காரர்கள், ஒவ்வொருவருமே (பாருங்கள்?), ஒருவர் மற்ற வரோடு பக்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்.

107அசெம்பிளிஸ்காரர்கள் என்னை ஒரு பட்டணத் திற்குள் அழைத்துக் கொண்டு வருவார்களானால், மற்றவர்கள் அதனோடு எந்த சம்பந்தமும் கொள்ளவில்லை. மற்றவர்கள் என்னை உள்ளே கொண்டு வருவார்களானால், மீதியான மற்றவர்கள் அதனோடு எந்த சம்பந்தமும் கொள்ளவில்லை. பாருங்கள்? அவ்விதமாகத்தான் அது காணப்படுகிறது.

108ஐக்கியம் கொள்வதற்காக, உங்களால் ஒருபோதும் ஜனங்களை ஸ்தாபித்துக் கொள்ள முடியாது. உங்களால் அதைச் செய்ய முடியாது. அது ஐக்கியத்தைக் கொண்டு வராது. அப்படியே, அது கிரியை செய்யாது; அது தேவ னுடைய திட்டமல்ல.

109இப்பொழுது, அவர்கள் தற்போது செய்து கொண் டிருக்கிற பெரிய காரியத்தைக் காண்கிறீர்களா? தேவன் ஒருக் காலும் எதையுமே அழித்துப் போடுவதில்லை, ஆனால் மனிதன் தன்னுடைய சொந்த ஞானத்தைக் கொண்டு தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். ஏதேன் தோட்டத் தில் இரண்டு விருட்சங்கள் இருந்தன. அவைகளில் ஒன்று ஜீவ விருட்சம், மற்றது அறிவின் விருட்சம். மனிதன் அறி வின் விருட்சத்திலிருந்து கடித்த முதல் தடவையே, அவன் தேவனிடமிருந்து தன்னுடைய ஐக்கியத்தை வேறுபிரித்துக் கொண்டான்.

110அவன் அதைக் கடிக்கிற ஒவ்வொரு தடவையும், அவன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். அவன் துப்பாக்கி வெடிமருந்தை கடித்து, தன்னுடைய தோழனையே கொல்லுகிறான். அவன் கடிக்கிற அடுத்த காரியமானது மோட்டார் வாகனங்கள், வெடிமருந்து கொல்லுவதைக் காட்டி லும் அது அதிகமானோரைக் கொல்லுகிறது. இப்பொழுது அவன் ஒரு அணுகுண்டை தன்னிடம் வைத்திருக்கிறான், அதைக்கொண்டு அவன் என்ன செய்யப்போகிறான்? பாருங் கள், அவனுடைய அறிவின் மூலமாக எல்லா நேரமும் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான், அவன் அதையே நிறைவேற்றியிருக்கிறான். அவன் ஏன் இங்கேயிருக்கும் இந்த எளிய விசுவாச விருட்சத்திற்குத் திரும்பி வந்து, விசுவா சிக்கக் கூடாது? பாருங்கள்? அவன் செய்ய வேண்டியிருந்தது எல்லாம் அவ்வளவு தான்.

111இப்பொழுது, என்ன சம்பவித்தது என்று கவனி யுங்கள். இப்பொழுது, மனிதன் அதை எடுத்து, ஒரு திட்டத்தை வைத்திருக்கிறான் என்பதை நாம் கண்டுகொள் கிறோம்; அவர்கள் அதை ரஷ்யாவில் வைத்திருக்கின்றனர்; அவர்கள் விஞ்ஞானத்தின் மூலமாக திரும்பி வரும் தங்களுடைய வழியைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள் எனும் அளவுக்கு அவர்கள் அதை ஐக்கிய நாடுகளில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது. கொஞ்ச காலத்திற்கு முன்பு, அவர்கள் ஒரு மனிதன் மேல் திரும்ப தசைகளை வைக்க முடியும் என்ற அளவுக்கு விஞ்ஞானமானது ஒரு பாட்டிலை ரஷ்யாவுக்கு எடுத்துச் சென்றது. அவனுடைய... குழந்தை பருவத்திற்குரிய முடக்குவாதத்தைக் கொண்டிருந் தான், அவனால் தசைகளை வளரச் செய்ய முடிந்தது. அவர்கள் ஒரு சிறு பாட்டிலை எடுத்து, அதைக் குலுக்கி, நாங்கள் இந்த பாட்டிலில் சுகமளித்தலை பெற்றிருக்கிறோம். நாங்கள் இதற்குள் சுகமளித்தலைப் பெற்றிருக்கிறோம். நாங் கள் பெற்றிருக்கிறோம்.. இதோ இந்த பாட்டிலினுள்ளே இரட்சிப்பு உள்ளது' என்றனர்).

112பாருங்கள், விஞ்ஞானம், அவர்களால் முடிகிறது. அவர்கள் சந்திரனுக்குப் போக முயற்சிக்கிறார்கள், அது வேறொரு பாபேல் கோபுரம். எனவே அவர்கள் அப்படியே... இந்த எல்லா வித்தியாசமான காரியங்களும், அவர்களை மேலே சந்திரனில் கொண்டு செல்வதற்காக போட்டி போட்டு ஸ்புட்னிக் செயற்கைக்கோள்களை வைத்திருக்கிறார்கள்).

113நல்லது சகோதரனே, நான் - நான் ஒரு போட்டியில் இல்லை, ஆனால் நான் ஒரு காரியத்தை உங்களிடம் கூறுகிறேன், எனக்கு இங்கே ஒரு திட்டம் உண்டு, அது நான் வைத்திருக்கும் திட்டமல்ல, ஆனால் அந்தத் திட்டத்தை தேவன் வைத்திருக்கிறார். நான் அதற்காக அவருடைய விற்பனையாளனாக இருக்கிறேன். இப்பொழுது நான் உங்களுக்கு இதைக் கூறுகிறேன்; இது சந்திரனுக்கும் அப்பால் நூற்றுக்கணக்கான பில்லியன், பில்லியன், மில்லியன் ஒளி வருடங்கள் தூரத்திற்கு (1 பில்லியன் = 1,000,000,000) (1 மில்லியன் = 1,000,000 - மொழிபெயர்ப்பாளர்) உங்களைக் கொண்டு செல்லும் ஒரு திட்டமாகும். அது சரியே

114நீங்கள் மேலே சந்திரனுக்குப் போவீர்களானால், உங்களால் உட்கார முடியாது, ஏனென்றால் உங்களை அங்கே பிடித்து வைக்க ஏதோவொரு காந்தத்தை நீங்கள் உடையவர்களாய் இருந்தாலொழிய நீங்கள் பின்னோக்கி குதித்துக் கொண்டேயிருப்பீர்கள் என்று கூறுகிறார்கள். ஒரே ஒரு இரவும் (கூப உங்களால் அங்கு தங்க முடியாது. நீங்கள் மரணமடையும் அளவுக்கு உறைந்து விடுவீர்கள். பகல் நேரத்தில், நீங்கள் சுட்டெரிக்கப்பட்டு விடுவீர்கள். நீங்கள் அங்கே போகும் போது, என்ன செய்யப் போகிறீர்கள்?

115அங்கு போக எனக்கு விருப்பமில்லை, என்னு டைய வீடு எங்கேயிருக்கிறதோ அங்கேயே நான் போக விரும்புகிறேன், அது மறுகரையில் உள்ளது. அது - அது சரியே கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து சென்று, ஆகா யத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, கர்த்தராகிய இயேசுவோடு இருக்கும்படி சென்று விடுவோம், அங்கு தான் நாம் என் றென்றுமாக ஜீவிப்போம். ஏதோவொன்றின் மேல் உங்களை நீங்களே ஒட்டிக்கொள்ள முயற்சிக்கும் ஏதோவொன்றல்ல, நீங்கள் என்றென்றுமாகத் தங்கியிருக்கும்படி, நீங்கள் ஏற் கனவே அங்கேயிருக்கும் ஏதோவொன்றாக அது உள்ளது. அது என்னவொரு மகிமையான காரியமாக உள்ளது.

116இப்பொழுது, இந்த எல்லா ஸ்தாபனங்களையும், பிரிவுகளையும், விஞ்ஞானிகளையும் மற்றும் அவர்களு டைய... எல்லாவற்றையும் நீங்கள் காண்கிறீர்கள். எல்லா கல்வி களையும், எல்லா ஸ்தாபனங்களையும், எல்லா பிரிவுகளையும், பாகுபாடுகளையும், மற்றும் எல்லாவற்றையும் நீங்கள் காண் கிறீர்கள், நாம் பிரதான கொள்கையை விட்டு விட்டோம், அது மாத்திரமே தேவன் மனிதனை ஐக்கியத்திற்குள் கொண்டு வரக் கூடிய ஒரே வழியாகும். இனங்கள் மூலமாகவோ, இன பிரிவுகளின் மூலமாகவோ நம்மால் அதைச் செய்ய முடியாது அந்த வழியில் நம்மால் அதைச் செய்ய முடியாது. தேசங்களின் மூலமாகவும் நம்மால் அதைச் செய்ய முடியாது. அவர்கள் ஒரே கொடியையும், ஒரே தேசத்தையும், ஒரே பாஷையையும் விரும்புகிறார்கள். நல்லது, சிலசமயங்களில் அது அந்தவிதமாகத்தான் இருக்கும். இப்பொழுது, மனிதன் அதை விரும்புகிறதற்கான ஒரே காரணம் என்னவென்றால்.... ஜெர்மனி அதை விரும்பினது. அவர்கள் எல்லாருமே ஜெர்மன் பாஷையைப் பேச வேண்டுமென்று அவன் விரும்பினான், எல்லா தேசமும் ஜெர்மன் பாஷையைப் பேச வேண்டும் என்று அவன் விரும்பினான். நீங்கள் ஜெர்மன் பாஷையைப் பேசாவிட்டால், அவர்கள் அதில் இல்லை.

117நான் ஆப்பிரிக்காவில் இருந்தேன், அந்த போயர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் எப்படியும் முறை கேடான பாஷையைப் பெற்றிருக்கிறார்கள், சிறிது... சிறிது பிரெஞ்சு மொழியும், சிறிது ஆங்கிலமும், சிறிது ஜெர்மன் மொழியும், அவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து விட்டு, அவர்கள், ஓ, ஆயிரவருட அரசாட்சி வரும் போது ஆயிரவருட அரசாட்சியில் அந்த மொழி தான் உபயோகிக்கப்பட வேண்டும்" என்கிறார்கள், கிறிஸ்தவர்கள் அவ்வாறு நினைக்கிறார்கள்.

118நல்லது, ஆங்கிலேயர்கள் நினைக்க விரும்புவது என்னவென்றால், மற்றும் உங்களுக்குத் தெரியும் பிரிட்டன், ஓ , என்னே , நிச்சயமாகவே, நாம் - ஆயிரவருட அரசாட்சி யில் ஆங்கில மொழி தான் இருக்கப் போகிறது" (என்கிறார்கள்)

119நல்லது, நாமோ, "நிச்சயமாக ஆயிரவருட அரசாட்சியில் அவர்கள் அமெரிக்க உச்சரிப்பைத் (brogue) தான் பேசுவார்கள்” என்கிறோம்.

120ஆனால் நான் உங்களுக்குக் கூறுகிறேன், நீங்கள் ஆச்சரியப்படப் போகிறீர்கள். அங்கே ஒரு பரலோகப் பாஷை இருக்கப் போகிறது, அதை நீங்கள் இதற்கு முன்பு ஒருபோதும் கேட்டிருக்கவே மாட்டீர்கள், நாம் அந்த பாஷையைத் தான் பேசப் போகிறோம்.

121அது ஐக்கிய நாடுகளின் தேசிய கீதமாக (Star Spangled Banner) இருக்கப் போவதில்லை, அது ஜெர்மானிய நாஜி கட்சியின் சின்னமாகவோ (Swastika) அல்லதுஅல்லது அரிவாள் சுத்தியல் கொண்ட அரைவட்டத்தின் hex Circle-ஆகவோ (hex circle of the half circle of sickle and hammer) இருக்கப் போவதில்லை . அது அந்தக் கொடிகளில் எதுவாகவும் இருக்கப் போவதில்லை , ஆனால் அது, மிகவும் தெய்வீகமான இரத்தக் கறைபடிந்த, வேதனைக்கும் அவமா னத்துக்கும் சின்னமாகிய அந்தப் பழைய கரடு முரடான சிலுவையாக இருக்கப் போகிறது. அதுதான் அந்தக் கொடி ஒரே கொடி, கிறிஸ்து இயேசுவாகிய ஒரே இராஜா, ஒரே தேசம், ஒரே ஜனங்கள், ஒரே பாஷை, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் எல்லாரும், அது அந்த நேரமாக தான் இருக்கப் போகிறது.

122இப்பொழுது, சரியாக ஏதேன் தோட்டத்தில் வைத்து தேவன் அந்தத் திட்டத்தை நிறுவி, துவக்க முதலே மனிதனுடைய கையின் கிரியையை கண்டித்தார். மனிதன் தன்னுடைய அத்தி இலை மார்க்கத்தின் மூலமாக மறுபடியும் திரும்பி வருவதற்கு தன்னுடைய திரும்பி வரும் வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்த தன்னுடைய முதலாம் தவற்றைச் செய்த உடனேயே, தேவன் அதை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். அவர் என்ன செய்தார்? அவர் சில மிருகங்களைக் கொன்று, கொஞ்சம் ஆட்டுத்தோல்களை எடுத்து, அதை அங்கே எறிந்தார். அப்படித்தான் நான் விசுவாசிக்கிறேன். எனவே அதன் வழியாக, எப்போதுமே இரத்தம் தான் தேவனுடைய திட்டமாக இருந்து வருகிறது என்றும், அதுதான் எப்போதுமே தேவனுடைய திட்டமாக இருக்கும் என்பதும், அதற்கு அதுதான் அவசியம் என்றும் அது காண்பித்தது. இரத்தத்தின் மூலமாகவே பாவ மன்னிப்பு உண்டு, இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பில்லை உங்களுக்கு விருப்பமான எந்த வழியிலும் நீங்கள் அதை எடுத்துக் கொள்ளலாம், மற்ற திட்டங்கள் எல்லாமே தோல்வி யடைந்து விடும், ஆனால் அதுவோ தோல்வியடையாது. இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பில்லை.

123அங்கே முற்காலத்தில், ஆதியிலே தேவன், அந்தத் திட்டத்தை நியமித்தார், தேவனோடுள்ள ஐக்கியத் திற்கும், ஒருவரோடு ஒருவருக்குள்ள ஐக்கியத்திற்கும் திரும்பி வருவதற்கான ஒரே வழி என்னவென்றால், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் மூலமா கத்தான். அவர் அவர் அந்த ஆட்டுக்குட்டி, அல்லது, அந்த ஆட்டைக் கொன்று, ஆட்டுத்தோலைக் கொண்டு வந்தார்; அவர்களை மூட ஏதோவொன்று மரித்தது.

124அது முற்றிலும் சரியே. உங்களால் அதை ஸ்தாபித்துக்கொள்ள முடியாது. உங்களால் அதற்கு கல்வி புகட்ட முடியாது. விஞ்ஞானப்பூர்வமாக உங்களால் இருக்க முடியாது, ஏதோவொன்று உங்களுக்காக மரித்திருக்கிறது என்ற விசுவாசத்தின் அடிப்படையில் நீங்கள் - நீங்கள் - நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் ஐக்கியத்தைக் கொண்டு வருகிறது.

125இப்பொழுது, யோபு அதை விசுவாசித்தான், வேதாகமத்திலேயே மிகப் பழமையான புஸ்தகம் யோபு தான், யோபு இரத்த பலியை ஏற்றுக்கொண்டான், அவன் சர்வாங்க தகன பலியை ஏற்றுக்கொண்டான், அது ஆட்டைக் கொல்லு வதாக இருந்தது. அவன் அதன்பேரில் திடமாக நின்றான் என்பது நினைவிருக்கட்டும். எல்லாமே அவனுக்கு வந்த போது, அவனுடைய சபை அங்கத்தினர்கள் கூட, "யோபுவே, நீ பாவம் செய்திருக்கிறாய், நீ தேவனுக்கு விரோதமாக குற்றம் செய்திருக்கிறாய்" என்று கூறினார்கள் ஒருகாலத்தில்...

126சற்று நேரம் நாம் யோபுவை எடுத்துக்கொள்வோம். அவன் அந்த பலியை செலுத்தியிருந்தான் என்பதை நாம் காண்கிறோம், அவன் தன்னுடைய பிள்ளைகளுக்காக ஒரு பாவ நிவாரண பலியை செலுத்தி, ஒருவேளை அவர்கள் பாவம் செய்திருப்பார்கள், அவர்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்திருக்கலாம். எனவே நான் அவர்களுக்காக ஒரு சர்வாங்க தகனபலியை செலுத்துவேன்" என்றான். அது அருமையாக இல்லையா?

127இன்றைக்கு நாம் ஜனங்களைக் கொண்டிருந்து, நம்முடைய தாய்மார்களும் தகப்பன்மார்களும் நம்முடைய பிள்ளைகளைக் குறித்து அக்கறை கொண்டிருந்திருப்பார்களா னால், அவர்கள் இங்கே தெருவில் ஏதோவொரு சிறிய சிகரெட்டு புகைக்கிறவனாகவும், வெளியே இந்த ராக் அன்ட் ரோல் பார்ட்டிகளுக்கும் மற்றும் அவர்கள் போகிற அந்த விதமான காரியங்களுக்கும் மாறுவதற்குப் பதிலாக அவர் களை நாம் வீட்டில் கொண்டிருந்து ஜெபக்கூட்டங்களில் புகட்ட முடியாது. விஞ்ஞானப்பூர்வமாக உங்களால் இருக்க முடியாது, ஏதோவொன்று உங்களுக்காக மரித்திருக்கிறது என்ற விசுவாசத்தின் அடிப்படையில் நீங்கள் - நீங்கள் - நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் ஐக்கியத்தைக் கொண்டு வருகிறது.

128இப்பொழுது, யோபு அதை விசுவாசித்தான், வேதாகமத்திலேயே மிகப் பழமையான புஸ்தகம் யோபு தான், யோபு இரத்த பலியை ஏற்றுக்கொண்டான், அவன் சர்வாங்க தகன பலியை ஏற்றுக்கொண்டான், அது ஆட்டைக் கொல்லு வதாக இருந்தது. அவன் அதன்பேரில் திடமாக நின்றான் என்பது நினைவிருக்கட்டும். எல்லாமே அவனுக்கு வந்த போது, அவனுடைய சபை அங்கத்தினர்கள் கூட, "யோபுவே, நீ பாவம் செய்திருக்கிறாய், நீ தேவனுக்கு விரோதமாக குற்றம் செய்திருக்கிறாய்" என்று கூறினார்கள் ஒருகாலத்தில்...

129சற்று நேரம் நாம் யோபுவை எடுத்துக்கொள்வோம். அவன் அந்த பலியை செலுத்தியிருந்தான் என்பதை நாம் காண்கிறோம், அவன் தன்னுடைய பிள்ளைகளுக்காக ஒரு பாவ நிவாரண பலியை செலுத்தி, ஒருவேளை அவர்கள் பாவம் செய்திருப்பார்கள், அவர்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்திருக்கலாம். எனவே நான் அவர்களுக்காக ஒரு சர்வாங்க தகனபலியை செலுத்துவேன்" என்றான். அது அருமையாக இல்லையா?

130இன்றைக்கு நாம் ஜனங்களைக் கொண்டிருந்து, நம்முடைய தாய்மார்களும் தகப்பன்மார்களும் நம்முடைய பிள்ளைகளைக் குறித்து அக்கறை கொண்டிருந்திருப்பார்களா னால், அவர்கள் இங்கே தெருவில் ஏதோவொரு சிறிய சிகரெட்டு புகைக்கிறவனாகவும், வெளியே இந்த ராக் அன்ட் ரோல் பார்ட்டிகளுக்கும் மற்றும் அவர்கள் போகிற அந்த விதமான காரியங்களுக்கும் மாறுவதற்குப் பதிலாக அவர் களை நாம் வீட்டில் கொண்டிருந்து ஜெபக்கூட்டங்களில் அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்திருப்போமானால் அது அதிக வித்தியாசமான உலகமாக இருந்திருக்கும். அது சரியே.

131யோபு, 'ஒருக்கால் என்னுடைய குமாரர்களும் குமாரத்திகளும் பாவம் செய்வதிலிருந்து காப்பாற்ற என்னால் முடியாது, ஆனால் அவர்கள் (பாவம்) செய்திருப்பார்களா னால், நான் ஒரு சர்வாங்க தகனபலியின் பேரில் நிற்பேன். நான் ஒரு சர்வாங்க தகன பலியைச் செலுத்துவேன் என்றான்.

132இப்பொழுது, பிரச்சனைகளும் சோதனைகளும் வந்த போது, யோபு தேவனுடைய அருளப்பட்ட வழியாகிய பலியை, இரத்தத்தை, சர்வாங்க தகன பலியை எடுத்துக் கொண்டான், அவன் அதன் பேரில் நின்றான், பிரச்சனைகளும் சோதனைகளும் வந்த போது, நல்லது, அது ஸ்தாபனத்தின் பேரில் இருந்திருக்கும் என்றால், அவன் நீண்ட காலத்திற்கு முன்பே விழுந்து போயிருப்பான். அவன் விஞ்ஞானிகளின் பேரில் நின்றிருந்தாலும், அவன் நீண்ட காலத்திற்கு முன்பே விழுந்திருப்பான். ஏனென்றால் அவன்... அவனிடம் இருந்த எல்லாமே அவனை விட்டு எடுக்கப்பட்டது. அவனுடைய பிள்ளைகள் கொல்லப்பட்டனர். அவனுடைய செல்வம் எடுக்கப்பட்டது. அவனுடைய ஆரோக்கியம் போயிற்று, அவன் மட்கலத்தின் ஒரு துண்டு அல்லது ஏதோவொன்றை வைத்துக் கொண்டு அவன் சாம்பல் குவியலின் மேல் உட்கார்ந்து, அவனுடைய மனைவி கூட, யோபே, நீர் ஏன் தேவனைச் சபித்து. ஜீவனை விடக் கூடாது' என்று கூறும் அளவுக்கு தன்னுடைய கொப்பளங்களைப் பிராண்டிக் கொண்டிருந்தான்.

133அவன், "நீ பயித்தியக்காரி பேசுவது போலப் பேசுகிறாய் என்றான். அவள் பயித்தியக்காரி என்று அவன் சொல்லவில்லை, ஆனால் பயித்தியக்காரியைப் போன்று பேசுவதாகக் கூறினான். "நீ பயித்தியக்காரி பேசுவது போல் பேசுகிறாய். கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார். கர்த்த ருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்' என்றான். அவர்கள், அவனுடைய தேற்றரவாளர்கள், அந்த சபை அங்கத்தினர்கள், வந்த போது, அவர்கள் வந்து, அவனைக் குற்றஞ்சாட்டி னார்கள். அவன் நீதிமானாயிருந்தான் என்று அவன் அறிந் திருந்தான், ஏனென்றால் அவன் தன்னுடைய சொந்த தகுதிகளில் நம்பிக்கை வைத்திருக்கவில்லை, ஆனால் அவன் தேவனுடைய தேவைகளைச் சந்தித்திருந்தான், ஏனென்றால் அவன் இரத்த பலியின் பேரில் நின்றான். ஆம், ஐயா அவன் நீதிமானாயிருந்தான் என்பதை அறிந்திருந்தான், ஏனென்றால் அவன் தேவனுடைய தேவைகளைச் சந்தித்துக் கொண் டிருந்தான்.

134அப்படியானால், கவனியுங்கள், நீங்கள் தொடர்ந்து பிடித்துக் கொண்டிருப்பீர்களானால், இரத்தத்தின் பேரில் நில்லுங்கள், வேறு எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுடைய ஸ்தாபனத்தை சேர்ந்து கொள்வது. அதெல்லாம் சரிதான். கல்வியைப் பெற்றுக்கொள்வது, அது அருமை யானது தான், விஞ்ஞானம், அதெல்லாம் சரிதான். ஆனால் முதலாவது, உங்களை நீங்களே இரத்தத்தில் வையுங்கள். ஐக்கியம் கொள்வதற்கான ஒரே இடம் இரத்தம் தான்.

135இப்பொழுது, யோபுவைக் கவனித்துப் பாருங்கள், என்ன போனாலும், எது போய் விட்டாலும், அவனுடைய சபையார் என்ன கூறினாலும், வேறு யாரும் என்ன கூறி னாலும் அது ஒரு பொருட்டல்ல, அவன் தேவனுடைய தேவைகளைக் சந்தித்திருந்தான் என்பதை அறிந்திருந்தான். அவன் இரத்தத்தின் பேரிலும், சர்வாங்க தகன பலியின் பேரிலும் நின்று கொண்டிருந்தான். மேலும், கவனியுங்கள், அவனுடைய சோதனையின் கடைசி மணி வேளை வந்த போது, அவன் தேவனை சபித்து விட்டு, ஜீவனை விடும்படியும், மற்ற காரியங்களையும் அவர்கள் அவனிடம் கூறினார்கள், அவன், "நீ பயித்தியக்காரி பேசுவது போல பேசுகிறாய்" என்றான்.

136அதன்பிறகு எலிகூ வந்தான். ஏலி, எல் என்பதற்கு "தேவனுடைய பலசாலி" என்று அர்த்தம். அவனுடைய பெயரைப் பிரித்துப் பாருங்கள், கிறிஸ்துவுக்குள் தேவன் பிரதிநிதியாக இருப்பதை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். அவன் வந்து, யோபு ஒரு பாவி என்று அவன் அவனைக் குற்றஞ்சாட்டவில்லை ஆனால் யோபு தேவன் இருக்கும் இடத்தையும், அவன் போய், அவருடைய வாசலை தட்டி எங்கே அவரிடம் பேசலாம் என்றும் அறிய விரும்பினான், அங்கே நீதி பரராகிய ஒருவர் இருக்கிறார். பிளவில் நின்று, பாவமுள்ள ஒரு மனுஷன் மேலும் பரிசுத்தமுள்ள ஒரு தேவன் மேலும் தம்முடைய கரத்தை வைத்து, பாவமுள்ள மனிதனுக்கும், ஒரு பரிசுத்த தேவனுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த அவரால் கூடும் என்று எலிகூ அவனிடம் கூறினான், மிகவும் உண்மையான இரத்த பலியானது ஏதோவொரு நாளில் வரும்.

137யோபு ஒரு தீர்க்கதரிசியாக இருந்து ஆவியானது அவன்மேல் வந்த போது, அவன் ஆவிக்குள்ளானான்; அப்போது இடிகள் முழங்கத் தொடங்கின, மின்னல் பளிச்சிட ஆரம்பித்தது; அவன் தன்னுடைய காலூன்றி எழுந்து நின்று, என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாட்களில் இந்த பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித் துப் போட்டாலும், என்னுடைய சரீரத்திலிருந்து நான் தேவ னைக் காண்பேன்” என்றான். அந்த உண்மையான ஒருவர் வரும் வரையில், இங்கே உள்ள இந்த இரத்த பலியை எடுத்துக்கொண்டான். அவன் இந்த ஒன்றை நோக்கிப் பார்த்து, வரப்போகிற ஒன்றின் நிழலாக அது இருந்தது என்பதைக் கண்டான், ஏனென்றால் முற்காலத்தில் ஏதேனில், தேவனுக்கு இது அவசியமாயிருந்தது. யோபு அந்த பலியின் பேரில் தரித்திருந்தான். ஆம், ஐயா. மனிதனை சந்திக்கும்படி தேவன் வாக்குத்தத்தம் பண்ணின ஒரே இடம் இரத்தத்தின் கீழாகத்தான் இருந்தது.

138பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேலர், எப்பொழுதுமே தேவன் இஸ்ரவேலரை சந்தித்த ஒரே இடம் யாதெனில் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழாகத்தான். ஆட்டுக்குட்டியானது கொல்லப்பட்ட இடத்திற்கு அவர்கள் தேசங்கள் முழுவதிலு மிருந்து வந்தார்கள், ஆனால் தேவன் சிந்தப்பட்ட இரத்தத் தின் கீழாக மட்டுமே சந்தித்தார்.

139ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தின் கீழாகத்தான் தேவன் சந்திக்கும் இடமிருக்கிறது. அங்கே தான் அவர் தம்முடைய ஜனங்களைச் சந்திக்கிறார். அங்கே தான் அவர் தம்முடைய சபையைச் சந்திக்கிறார். அங்கே தான் அவர் உங்களுடைய தேவைகளைச் சந்திக்கிறார். அது இரத்தத்தின் கீழே தான். இரத்தத்திற்கு வெளியே, மன்னிப்போ அல்லது செவிகொடுத்தலோ கிடையாது. இரத்தத்தின் வழியாக மட்டுமே

140இப்பொழுது, நாம் எண்ணாகமத்தை எடுத்துக் கொள்வோம், எண்ணாகமம் 19ம் அதிகாரம், அவர்கள் தங்களுடைய பிரயாணத்தில் இருந்த போது, அவர்கள் சென்று ஒரு சிவப்பு கிடாரியை எடுத்துக்கொள்ளும்படி தேவன் அவர்களிடம் கூறினார். இப்பொழுது, சற்று நேரம் இதை, இங்கேயுள்ள அடையாளத்தைக் கவனித்துப் பாருங் கள். இப்பொழுது, "போய், அதன் மேல் ஒருபோதும் நுகம் பூட்டப்பட்டிருக்காத ஒரு சிவப்பு கிடாரியை எடுத்துக் கொள் ளுங்கள்,” அது (She) நுகத்தில் பூட்டப்பட்டிருக்கவில்லை , அது ஒருபோதும் ஒரு நுகத்தடியின் கீழே இருந்திருக்க வில்லை . அது சிவப்பாக இருந்தது, அது முழுவதும் சிவப்பாக இருக்க வேண்டும். இப்பொழுது, சிவப்பு என்பது சிலருக்கு ஒரு மோசமான நிறமாக இருக்கிறது. சிவப்பு என்பது வாகனம் நிற்பதற்கான வெளிச்சத்திலும் மற்றவை களிலும் நிற்க வேண்டும் என்பது அதற்கு அர்த்தம், ஆனால் சிவப்பு என்பது பரிகாரத்திற்கான அடையாளமாகவும் கூட இருக்கிறது.

141இப்பொழுது, விஞ்ஞானப்பூர்வமாக, நீங்கள் எப்பொழுதாகிலும் சிவப்பை எடுத்துக்கொண்டு சிவப்பு வழியாக சிவப்பைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் சிவப்பை எடுத்து சிவப்பு வழியாக சிவப்பை பார்ப்பீர்களானால், சிவப்பு வெண்மையாக இருக்கும் தெரியும், சிவப்பு வழியாக சிவப்பை எடுத்துக் கொண்டால், அது வெண்மையாகத் தெரியும் எனவே தான் எவ்வளவு கருஞ்சிவப்பாக இருக்குமோ அவ்வளவு சிவப்பான நம்முடைய பாவங்கள் வழியாக தேவன் நோக்கிப் பார்க்கும் போது, அவைகள் அப்பொழுதும் பனியைப் போன்று வெண்மையாக இருக்கும். அவர் தம்முடைய சொந்த குமாரனின் இரத்தத்தின் வழியாக நோக்கி, நம்மைப் பார்க்கும் போது, அவர் நம்மை இரத்தாம்பர சிவப்பான பாவிகளாக காண முடியாது. நாம் இரத்தத்தின் கீழாக இருக்கும் போது, தம்முடைய சொந்த குமாரனின் இரத்தத்தினால் நம்மைக் கழுவி, வெண்பனியைப் போல நம்மைக் காண்கிறார். ஓ, வேதாகமம் எவ்வளவு அழகாயும், அதனுடைய விளக்கங்கள் எவ்வளவு அருமை யாகவும் உள்ளது. சிவப்பின் வழியாக சிவப்பு, வெண்மையாக காணப்படுகிறது. அது நமக்கு ஒரு மகத்தான அடையாளம் என்றும், சிவப்பு கிடாரி ஒரு பரிகாரத்தின் அடையாளம் என்றும் நான் அறிவேன்.

142இப்பொழுது, அது (அவள்) சாயங்காலத்தில் கொல்லப்பட வேண்டியிருந்தது. கிறிஸ்துவுக்கு முன்னடையாளம். இப்பொழுது, கிறிஸ்து வந்த போது, அவர் ஒருபோதும் பரிசேயர்களுடனோ அல்லது சதுசேயர்களுடனோ பிணைக் கப்பட்டிருக்கவில்லை ; அவர் ஒருவரோடு மட்டுமே நுகத் திலே பிணைக்கப்பட்டிருந்தார், அதுதான் பிதாவானவரோடு. அவரும் பிதாவும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்தனர், அவர்கள் ஒருவராய் இருந்தனர். அந்த விதமாகத்தான் கிறிஸ் தவன் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தெகோஸ்தேகாரராகவோ, அது எதுவாகவும் இருக்கலாம், நீங்கள் முதலில் இயேசு கிறிஸ்துவோடு நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், உங்கள் நுகத்தை என் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். ஆகை யால் நீங்கள் கிறிஸ்துவோடு ஒன்றாக நுகத்தில் பிணைக்கப் பட்டிருக்கும் காலம் வரையில், அது உங்களைத் திரும்பவும் தேவனோடுள்ள இணைப்பிலும், ஐக்கியத்திற்குள்ளும் கொண்டு வருகிறது.

143இப்பொழுது, அந்த அந்தக் கிடாரி சபையார் எல்லாருக்கும் முன்பாக சாயங்காலத்தில் கொல்லப்பட வேண்டியிருந்தது என்பதைக் கவனிக்கிறோம். அவ்விதமே கிறிஸ்துவும் சாயங்காலத்தில் கொல்லப்பட்டார். இப்பொழுது, அது அவள் கொல்லப்பட வேண்டியிருந்த போது, அதனு டைய அவளுடைய சரீரமானது குளம்புகளோடும் எல்லா வற்றோடும் சுட்டெரிக்கப்பட வேண்டியிருந்தது. அதைக் கொண்டு தீட்டுக்கழிக்கும் ஜலத்தை (water of separation) உண்டாக்க வேண்டியிருந்தது. இப்பொழுது, நாம் எபேசியர் புத்தகத்தில் நாம் அதைப் பெற்றுக்கொள்கிறோம், அங்கே நாம் வார்த்தையாகிய தண்ணீரினால் கழுவப்படுகிறோம். தீட்டுக்கழிக்கும் தண்ணீர் என்பது தேவனுடைய வார்த்தையாக உள்ளது.

144மேலும் அது ஒரு சுத்தமான இடத்தில் வைக்கப்பட வேண்டியதாயிருந்தது. அலைந்து கொண்டிருக் கும் எந்த மனிதனோ அல்லது எந்த பாவியோ கர்த்தருடைய சபையோருக்குள் பிரவேசிக்கும்படி வரும் இடமாக அது இருந்தது. இங்கேயுள்ள இது இந்த சுத்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு அவன் ஏழு இரத்த கோடு களை (stripes of blood) எடுத்து, பிரதான ஆசாரியனாகிய எலியேசரின் விரலைக் கொண்டு வாசல் கதவின் மேல் அதைப் பூச (stripe) வேண்டியதாயிருந்தது, அதாவது, அது சபைக்குள் பிரவேசிக்கிறது.

145இப்பொழுது, அது எவ்வளவு அழகாயுள்ளது என்று பாருங்கள். ஓ, நீங்கள் அதைத் தவற விட்டு விட வில்லை என்று நம்புகிறேன். கவனியுங்கள். முதலாவது காரியம் என்ன? இப்பொழுது, என்னுடைய பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு, பெந்தெகோஸ்தே சகோதரனே, ஒரு சில நிமிடங்களுக்கு உங்களுடைய மேல் சட்டைகளை எடுத்துப் போடுவீர்கள் என்று நம்புகிறேன், நான் விரும்புகிறேன் - நான் - வேறு எதுவும் இல்லை என்றால், நீங்கள் இதைக் காண வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

146இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் இதன்பேரில் ஒரு ஐக்கிய கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது, ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த பெரிய ரபீக்களில் ஒருவர் பின்புறத்தில் என்னைச் சந்தித்து, அங்கே பின்னால் வைத்து, "நான் அதை அவ்விதமாக ஒருபோதும் என்னுடைய ஜீவியத்தில் கேள்விப்பட்டதேயில்லை, ரபீயாக இருந்து, ரபிக்களின் தலைமுறையிலிருந்து வருதல், ரபிக்குப் பிறகு ரபி, அவருக்குப் பிறகு அடுத்த ரபி" என்றார். மேலும் இப்பொழுது அவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றிருக்கிற ஒரு பெந்தெகோஸ்தே ரபீயாக இருக்கிறார்.

147நான் ஷிரிவ்போர்ட்டில் அவரோடு பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், அந்த சீமாட்டி அவரிடம் கூறினாள், அவள், "ஐயா, ரபி அவர்களே, நான் உமது அறையில் ஒரு தொலைக்காட்சியை வைத்திருக்கிறேன்" என்றாள்.

148அவர் அதற்கு, அது டெலிவிஷன் அல்ல, ஹெலிவிஷன் (நரகக்காட்சி), அவைகளை அங்கிருந்து வெளியே எடுத்து விடுங்கள்” என்றார்.

149அவள், "நல்லது. நீர் ஒரு ரபி அல்லவா?" என்றாள்.

150அவரோ, 'நான் ஒரு பெந்தெகோஸ்தே ரபி; தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்றார். அவர் அவ்வாறு சொன்னார். நல்லது, ஆமாம்.

151இப்பொழுது, இங்கேயுள்ள இந்த அடையாளத் தைக் கவனியுங்கள். இப்பொழுது, அந்தக் கிடாரி சுட்டெ ரிக்கப்பட வேண்டியிருந்தது. அதோடு கூட, அந்த கிடாரி யோடு கூட ஈசோப்பு, கேதுருகட்டை, மற்றும் சிவப்பு நூல் இவைகளும் சுட்டெரிக்கப்பட வேண்டியிருந்தது. இப்பொழுது, கவனியுங்கள், கேதுரு கட்டை என்பது சிவப்பு நிறமுள்ள கட்டையாக இருக்கிறது, கறைபடிந்த கட்டையாகவும், வெண் மையும் சிவப்பும் ஒன்றாக சேர்ந்து, சிலுவையை அடையா ளப்படுத்திக் கொண்டிருக்கிறது. சிவப்பு நூல் என்பது செம்மறி ஆட்டு மயிரானது இரத்தத்தினால் பூசப்படுவதாகும். ஈசோப்பு என்பது களைச்செடி, அதைக்கொண்டு தான் அது பூசப் பட்டது. ஈசோப்பைக்கொண்டு தான் நீங்கள் இரத்தத்தைப் பூசுகிறீர்கள். அது சிவப்பு நூலின் மேலுள்ள இரத்தமாகவும், கேதுருக்கட்டையின் மேலுள்ள இரத்தமாகவும் இருந்தது. எதைச் செய்வதற்காக எல்லாமே ஒன்றாகச் சுட்டெரிக்கப் பட்டது? தீட்டுக்கழிக்கும் தண்ணீரை உண்டாக்குவதற்காக, தண்ணீரை உண்டாக்கி, வேறு பிரித்து, ஒரு சுத்தமான இடத்தில் வைக்கப்பட்டது.

152இப்பொழுது, பாவி வருகிறான்; அவன் தீட்டுள்ளவனாக இருக்கிறான். இப்பொழுது, கவனியுங்கள், தீட்டுக்கழிக்கும் தண்ணீர், அதில் சாம்பல் தண்ணீரோடு கலக்கப்பட்டது. ஜீவ ஆவியும் மற்றவைகளும் தான் அதன் அர்த்தம். ஆனால் அந்தத் தீட்டுக்கழிக்கும் தண்ணீரைக் கொண்டு அவனுடைய பாவங்களிலிருந்து அவன் தெளிக்கப் பட வேண்டியிருந்தது.

153இப்பொழுது, என்னுடைய பாப்டிஸ்டு சகோதரனே, நான் உன்னிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன், தேவ னுக்கு தேவையாயுள்ளது எல்லாம் நீதிமானாக்கப்படுதல் தான் என்றால், நான் உன்னிடம் இதைக் கேட்க விரும்புகிறேன் தீட்டுக்கழிக்கும் தண்ணீர்களினாலே மனிதன் வேறுபிரிக்கப் பட்டு, தெளிக்கப்பட்ட போது, பிறகும் அவன் இன்னுமாக கர்த்தருடைய மகிமையின் ஆராதனைக்குள் பிரவேசிக்க அவனால் முடியவில்லை . அவனால் அதைச் செய்ய முடிய வில்லை, ஏனென்றால் அவன் தன்னுடைய பாவங்களிலிருந்து மாத்திரமே தெளிக்கப்பட்டவனாயிருந்தான். அது அவனு டைய பாவங்களிலிருந்து அவனை வேறுபிரித்தது. ஆனால் அவனை ஐக்கியத்திற்குள் வைக்கவில்லை. அது சரியே அது அவனுடைய பாவங்களிலிருந்து மாத்திரமே அவனை வேறு பிரித்தது. இப்பொழுது, நாம் திருவசனமாகிய தண்ணீரினாலே கழுவப்பட்டிருக்கிறோம் என்று எபேசியர் கூறுகிறது.

154இப்பொழுது, வசனத்தைக் கேட்டு, நீங்கள் எவ்வளவு பக்தியுள்ளவர்களாய் இருக்க விரும்புகிறீர்களோ அவ்வளவு பக்தியுள்ளவர்களாக இருந்து, உங்களுடைய - உங்களுடைய மேய்ப்பர் ஒரு பண்டிதராகவும், நீங்கள் வேதசாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவராகவும், படித்த அறிவாளியாகவும் இருந்தும், அது இன்னும் நம்மை ஐக்கியத்திற்குள் வைப்பதில்லை. இல்லை, ஐயா, அது அதைச் செய்யாது, ஏனென்றால் அவர்கள் தங்களுடைய பாவங்களி லிருந்து மாத்திரமே வேறுபிரிக்கப்பட்டிருந்தார்கள். இப்பொ ழுது, அது ஒரு... நீதிமானாக்கப்படுதலானது மார்டின் லூத்த ருடைய உபதேசமாக இருந்தது. நமக்கு அது தெரியும். விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்பட்டிருந்தும், இன்னுமாக அது ஒரு ஐக்கியத்தைக் கொண்டு வரவில்லை.

155இப்பொழுது, விசுவாசி செய்ய வேண்டியிருந்த அடுத்த காரியத்தை நாம் அறிந்து கொள்கிறோம், அவன் தன்னுடைய பாவங்களிலிருந்து வேறுபிரிக்கப்பட்ட பிறகு, அவன் என்ன செய்தான்? நீங்கள் செய்கிற அடுத்த காரியமானது. அவன் பிரகாரத்தை நோக்கித் திரும்புகிறான். அவன் போகையில் ... கவனியுங்கள். ஓ, என்னே , நான் இதைக் குறித்து பேசும் போதே பக்தி பரவசப்படுகிறேன். பாருங்கள், அவன் பார்க்க வேண்டியிருந்த அடுத்த காரியமானது, அவன் இரத்தத்தினாலாகிய ஏழு கோடுகளைத் (stripes) தனக்கு முன்பாகக் கொண்டிருந்தான், ஏழு கோடுகள் (seven stripes) என்பது ஏழு சபைக்காலங்களையோ அல்லது 7000 வருடங் களையோ அர்த்தப்படுத்தினது என்பதைக் காண்பிக்கும் படியாக அவன் அதைக் கொண்டிருந்தான், ஒவ்வொரு காலத்திலும் இரத்தத்தின் மூலமாகவே பிரதிநிதித்துவப்படுத்தப் பட வேண்டியிருந்தது. வேறு எதைக் கொண்டும் அல்ல, வேறு எந்த வழியுமே கிடையாது. ஆதியாகமம் தொடங்கி, வெளிப்படுத்தின விசேஷம் முடிய, ஏதேன் தொடங்கி ஆயிரவருட அரசாட்சி வரை இரத்தமே இருக்கிறது, இரத்தத்தைத் தவிர வேறு எதுவுமில்லை.

156வேறொரு காரியம் என்னவென்றால், விசுவாசி இதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியிருந்தது, விசுவாசி... நோக்கி உள்ளே வந்து கொண்டிருக்கிறான். இப்பொழுது, அவன் இன்னும் ஐக்கியத்தில் இல்லை, அவன் தன்னுடைய பாவங்களிலிருந்து வேறுபிரிக்கப்பட்ட போதிலும், அவன் ஐக்கியத்திற்குள் இல்லை. இரத்தமானது அவனுக்கு முன்பாக போயிருந்தது என்பதை அவன் அடையாளம் கண்டுகொள்ள வேண்டியிருந்தது. அவனுக்கு முன்பாகப் போகும்படியாக ஏதோவொன்று மரித்திருந்தது. எபிரெயர் 13ம் அதிகாரம் 12 மற்றும் 13வது வசனங்களில், "இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட் டார்' என்று கூறப்பட்டுள்ளது. அது மொதோடிஸ்டுகளாகிய உங்களை உங்கள் பரிசுத்தமாக்கப்படுதலுக்காக மேலே கொண்டு வருகிறது. சரி, அப்பொழுதும் ஐக்கியத்திற்குள் இல்லை, அப்பொழுதும் அது அதைச் செய்யவில்லை. ஆனால் அவர்கள் போன போது... அவன் உள்ளே இருந் தான், கட்டிடத்திற்கு உள்ளே இருந்தான். ஆனால் உங்களால் ஒருவர் மற்றவரோடு ஐக்கியம் கொள்ள முடிந்தது. ஒருவர் மற்றவரை வாழ்த்தவும் முடிந்தது, ஆனால் நீங்கள் இன்னும் தேவனோடுள்ள ஐக்கியத்தில் இல்லை.

157இப்பொழுது, அதன்பிறகு, பிரதான ஆசாரியன் வருடத்திற்கு ஒருமுறை (ஓ, என்னே!) ஒரு குறிப்பிட்ட விதமாக வஸ்திரம் தரிக்க வேண்டியதாயிருந்தது. அவன் ஒரு குறிப்பிட்ட விதமான விதத்தில் அபிஷேகம் பண்ணப்பட வேண்டியதாயிருந்தது. அவன் ஷாரோனின் ரோஜாவினால் செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தைக் கொண்டு அபிஷே கம் பண்ணப்பட வேண்டியதாயிருந்தது. அவர்கள் அதை ஆரோனுடைய தாடியின் மேல் வைத்தார்கள், அது முழுவதும் வழிந்தோடி அவனுடைய வஸ்திரத்தின் ஓரங்கள் வரை வழிந்தது. அவன் குறிப்பிட்ட விதமாக செய்யப்பட்ட உடைகளை உடுத்த வேண்டியிருந்தது. வேறொரு காரியம் என்னவென்றால், அவன் குறிப்பிட்ட விதமாக நடக்கவும் வேண்டியிருந்தது. அவனுடைய வஸ்திரத்தின் ஓரத்தில் (கடைசியில், அவன் ஒரு மணியையும் ஒரு மாதுளம் பழத்தையும், ஒரு மணியையும் ஒரு மாதுளம் பழத்தையும் கொண்டிருந்தான். அது, பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்கு பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்கு பரிசுத்தம் என்று ஒலிக்கச் செய்யும்படியான ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவன் நடக்க வேண்டியிருந்தது. அவன் என்ன செய்து கொண் டிருக்கிறான்? அவன் ஷெக்கினா மகிமையை, உண்மையான ஐக்கியத்தை அணுகிக் கொண்டிருக்கிறான். அல்லேலூயா!

158இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அவன் ஐ உடையவனாயிருந்தான். அவன் ஒரு சத்தத்தை எழுப்ப வேண்டியிருந்தது. அவன் மரித்துப் போகவில்லை என்று சபையார் அவனிடம் கூறக் கூடியதாயிருந்த ஒரே வழி என்னவென்றால், அவர்கள் அந்த சத்தத்தைக் கேட்கக் கூடியதின் நிமித்தமாகத்தான். சபையானது அதனுடைய சத்தத்தை எழுப்பும் போது, உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, அங்கே ஏதோவொன்று சம்பவிக்கிறது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன், சரி, ஏனென்றால் அப்போது எல்லாவிடங்களிலும் ஷெக்கினா மகிமை உள்ளது. அங்கே ஒரு சத்தம் இருக்கிறது.

159அபிஷேகம் பண்ணப்பட்ட அந்த மனிதனைக் கவனியுங்கள், ஆரோன் தனக்கு முன்பாக இரத்தத்தைச் சுமந்து கொண்டே உள்ளே சென்றான், "பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்கு பரிசுத்தம். பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்கு பரிசுத்தம்” என்றபடியே உள்ளே போய்க் கொண்டிருக்கிறான், அந்த மணிகள் ஒலித்துக் கொண்டிருக்க, அவன் அபிஷேகம் பண்ணப்பட்டவனாய், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் போய்க் கொண்டிருக்கிறான். வழக்கமாக அந்த சபையார் எப்படியாக அம்மனிதனைப் புகழ்ந்திருப்பார்கள். எப்படியாக அவன் ஒருநாள் அங்கே உள்ளே போய் விட்டு, அவன் தன்னுடைய கரத்தில் வைத்திருந்த தனது பழைய கோலை விட்டு வந்துவிட்டான், அவன் மறுபடியும் திரும்பப் போன போது, மரித்துப் போயிருந்த அந்தக் கோலானது, அது ஒரு பழைய கம்பே தவிர வேறு எதுவுமில்லை, ஷெக்கினா மகிமையின் பிரசன்னத்தில் கிடந்த அது துளிர்த்து, பூ பூத்து, அதன்மேல் பூக்களைக் கொண்டிருந்தது ஆம், ஐயா) வியூ!

160உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அது அதைச் செய்யும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். ஒரு பழைய மரித்துப் போன சபையை எடுத்து, அது அந்த ஷெக்கினா மகிமைக்குள் வரும்போது, அது விசுவாசமுள்ள ஒரு சபைக்குள், அடையாளங்களும் அற்புதங்களும் உள்ள ஒரு சபைக்குள் அது அதைப் பூத்து மலரச் செய்யும். ஆம், ஐயா.

161என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். இதோ அவன் அபிஷேகிக்கப்பட்டவனாக இருந்து, அந்த இடத்திற்குப் பின்பாக உள்ளே சென்றான், அந்த மணிகள் ஒலிப்பதை அப்படியே அவர்களால் கேட்க முடிந்தது. ஆரோன் இரக்கத்தின் சிங்காசனத்தின் மூலமாக ஷெக்கினா மகிமைக்குள் நின்று கொண்டிருந்தான், அங்கே கேருபீன்கள் தங்கள் செட்டைகளை அதன்மேல் சாய்த்த வண்ணம் இரக்கத்தின் சிங்காசனத்தைக் காக்கிறவைகளாக இருந்தன. அங்கே உள்ளே அந்தச் சத்தத்தை அவர்களால் கேட்க முடிந்தது. ஓ, அங்கே உள்ளே போக அவர்களுடைய இருதயங்கள் எவ்வளவாய் ஏங்கினது; பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்குப் பரிசுத்தம் " அது ஆரோனுக்கு என்ன செய்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஓ, அவன் வருட வருடமாக உள்ளே போகும்படியாக ஜீவித்தான். எப்படியாக வழக்கமான சபையார் உள்ளே போக முடியாதிருந்தது. அப்படியிருந்தும் அவர்கள் அந்த இரத்தத்தின் கீழே ஜீவித்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்கள் இன்னும் ஷெக்கினா மகிமைக்குள் இல்லை.

162ஆனால் அந்த உண்மையான இரத்தமாகிய, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் வந்த போது, பிரிவினையாகிய நடுச்சுவரை அவர் தகர்த்துப் போட்டு, திரைச்சீலையை மேலிருந்து கீழாக கிழித்துப் போட்டார். இப்பொழுது, விசுவாசி, அவன் யாராக இருந்தாலும், அவன் அந்த ஷெக்கினா மகிமைக்குள் வரலாம். ஒரு மனிதன் நீதிமானாக்கப்படுதலினால், வார்த்தையை விசுவாசித்து, பரிசுத்தமாக்கப்படுதலினால் தன்னுடைய பாவங்களிலிருந்து அவனை சுத்திகரித்து, பின்பு அந்த பெந்தெகோஸ்தே ஷெக்கினாவுக்குள் பிரவேசிக்கும்படியான ஒரு பிரஜையாக இருக்கிறான்.

163தேவன் பெந்தெகோஸ்தே நாளிலும் அதே காரியத்தையே செய்தார். அவர் சபையை நீதிமானாக்கப்படு தலின் வழியாக இரட்சித்த போது, அது ரோமர் 51. பிறகு பரிசுத்தமாக்கப்படுதல், அவர், அது பரிசுத்த யோவான் 17:17 என்று நம்புகிறேன், அவர், பிதாவே, சத்தியத்தினாலே இவர்களைப் பரிசுத்தப்படுத்தும், உம்முடைய வசனமே சத்தியம்" என்றார். ஆனால் பெந்தெகோஸ்தே நாளில், பிரி வினையாயிருந்த நடுச்சுவர் கிழித்தெறியப்பட்டது. கல்வாரி யில் திரைச்சீலை மேலிருந்து கீழாக கிழிந்து, விசுவாசி அந்த ஷெக்கினா மகிமைக்குள் பிரவேசித்து, தேவனுடைய வல்லமை அவர்கள் மேல் விழுந்தது. அப்போது, "பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்று அறியப்படாத பாஷைகளில் துதிகளும் மகிமைகளும் புறப்பட்டன. அவர்கள் அங்கிருந்து சத்தமிட்டுக்கொண்டும் களிகூர்ந்து கொண்டும் வெளியே வந்தார்கள்.

164அதுதான் ஐக்கியம் கொள்வதற்கான ஒரே ஸ்தலம். சகோதரனே, அவர்கள் அந்த ஷெக்கினா மகிமைக்குள் பிரவேசிக்கும் போது, அதுதான் யூதர்களையும், கிரேக்கர்களையும், வெள்ளையர்களையும், கறுப்பர்களையும், மஞ்சள் நிறத்தவரையும், பழுப்பு நிறத்தவரையும், கிறிஸ்து இயேசு வுக்குள் உன்னதங்களில் ஒன்றாக உட்காரச் செய்யும் ஒரே ஸ்தலமாக உள்ளது. அங்கே உள்ளேயிருக்கும் அவர்களுக் குள் எந்த அவமானமும் விடப்படவில்லை சகோதரர்களே இன்று பெந்தெகோஸ்தே சபையோடுள்ள காரியமும் அது தான் என்று நினைக்கிறேன். ம்ம்! அந்த ஜனங்கள் மிகவும் வெட்கப்படுகிறார்கள் என்பதை நாம் கண்டு கொள்கிறோம். அவர்கள், "ஆமென்" என்று கூற வெட்கப்படுகிறார்கள். அவர்கள் அவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்துவதற்குக் கூட வெட்கப்படுகிறார்கள்.

165பிரசங்கிமார்களில் சிலர் எழுந்து நின்று, தசைப் பிடிப்பு அடைந்த ஒரு கன்றைப் போல், ஆமென் என்கிறார்கள். அவர்கள் அவ்விதமாக எழுந்து, போக முயற்சிக்கிறார்கள். அந்தக் காரியத்தை நான் வெறுக்கிறேன். நான் ஒரு ... ஐ விரும்புகிறேன். எழுந்து நின்று, மீதமுள்ள சபைகளைப் போல இசைக்கும்படி ஒரு மகத்தான பெரும் சோதனையைக் குறித்துள்ள சில மகத்தான பெரிய பாரம்பரிய பாடலைப் பாடுகிறீர்கள். அது ஐக்கியம் அல்ல. நான் வெறுக்கிற ஏதாவது உண்டென்றால் சில நிமிடங்களுக்கு முன்பு பேசிய அந்தப் பேச்சை மன்னித்துக் கொள்ளுங்கள், நான் அவ்விதமாக அதைக் கூறக் கருதவில்லை, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். ஆனால் நான் - நான் சபை பெற்றிருக்கிற விதத்தை நினைத்துப் பார்க்கும் போது, அது மிகவும் சடங்காசாரமாகவும் (சம்பிரதாயமாகவும், அலட்சியப் போக்கோடும் இருக்கிறது, ஓ, என்னே, என்ன தான் காரியம்? அவர்கள் அங்கே எழுந்து நின்று, பாட முயற்சிக்கிறதை நீங்கள் காண்கிறீர்கள்.

166நான் கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு ஹோலி னஸ் சபையில் நின்றிருந்தேன், அங்கே பாடகர் குழு பின்னால் நின்று கொண்டிருந்தது . ம்ம். மிகவும் மோசமான ஒரு காரியத்தை நான் கூற விரும்பினேன். மேய்ப்பருடைய வாசிப்பு அறையில் நான் உட்கார்ந்து கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியாது. இதோ அங்கு வெளியே அந்தப் பாடகர் குழு வருகிறது. அப்போது டேவிட் டுப்பிளஸிஸ் வெளிநாட்டு ஊழியங்களுக்காக காணிக்கை எடுத்துக் கொண் டிருந்தார். அந்தப் பையன்கள் மகத்தான பெரிய அங்கிகளை யும் காரியங்களையும் அணிந்து கொண்டு, அந்தச் சிறு பெண் பிள்ளைகளோடும் அங்கு வெளியே நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்படியே தொடர்ந்து செய்து கொண்டு, நகைச்சுவைகளைக் கூறிக் கொண்டிருந்தனர். ஒருவன் தொடங்கி, "இப்பொழுது, இதோ நான் குருடாயிருக்கிறேன், நான் ஒரு வெளிநாட்டு ஊழியத்தில் இருக்கிறேன். நான் இதை உங்களிடம் கூறட்டும், நீங்கள் எனக்காக எதையாவது உள்ளே போடுங்கள்" என்று கூறியபடியே அவ்விதமாக மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு வெளியே நடந்து வந்து, அதிகமாக பயிற்றுவிக்கப்பட்ட குரலில் அதை முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கீச்சொலியோடும் உரத்த சத்தத்தோடும் பாட முயற்சிப்பது போன்று முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷெக் கினா மகிமையில் பாடிக் கொண்டிருக்கவில்லை என்பதை உங்களால் கூற முடியும்.

167அதிகம் பயிற்றுவிக்கப்பட்ட குரலை நான் வெறுக் கிறேன். அங்கே எழுந்து நின்று, தங்களுடைய முகத்தில் நீல நிறம் வருவது போன்று, தங்களுடைய மூச்சைப் பிடித்து (பாடுவதை நான் வெறுக்கிறேன். அது பாடுவதல்ல. ஆனால் நான் எதையாகிலும் விரும்புகிறேன் என்றால், ஒரு நல்ல பழமையான, மறுபடியும் பிறந்த, இருதயத்தில் உண்மையுள்ள, சுயாதீன பெந்தெகோஸ்தேகாரன் ஆவிக்குள்ளாகப் பாடுவது தான். ம்ம். அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லை என்பதை தான் அது காட்டுகிறது. அவர்கள் அந்த ஷெக்கினா மகிமையை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றனர். மெதோடிஸ்டுகளையும், பாப்டிஸ்டுகளையும், பிரஸ்பிடேரியன் களையும், லூத்தரன்களையும், கத்தோலிக்கர்களையும், ஒருத் துவக்காரர்களையும், இருத்துவக்காரர்களையும், திரித்துவக் காரர்களையும் மற்றும் எல்லாரையும் நீங்கள் ஒன்றாக ஆக்கி, அந்த ஷெக்கினா மகிமைக்குள் வரச் செய்யக் கூடிய ஒரே இடம் அதுதான். உண்மையான ஐக்கியத்திற்கான ஒரே இடம் அதுதான். அங்கே பின்னால் எப்பொழுதாகிலும் நடந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனோ ஸ்திரியோ, அதன்பிறகு எந்த நபரிடத்திலும் வித்தியாசம் கிடையாது. அவர்கள் எல்லாரும் அங்கே உள்ளே சகோதரர்களாய் இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் - அவர்கள்.... அவர்களுக்கு ஒரு காரியம் மாத்திரமே தெரியும், அதுதான் இரத்தம், அவர்கள் சகோதரர்களாக இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆமென். வியூ! இப்பொழுது நான் என்னுடைய அளவைக் காட்டிலும் இரண்டு மடங்கானதாக விரும்புகிறேன், ஒருக்கால் நான் நல்லவிதமாக இரட்டத்தனையாக அனுப் விக்க முடிந்தது.

168ஆமாம், ஐக்கியம், இரத்தத்தின் கீழுள்ள ஐக்கியம், அதுதான் தேவனுடைய ஒரே பரிகாரம். ஸ்தாபனங்கள் நம்மை வேறுபிரித்து வைத்து விடும், கல்வி நம்மைப் பிரித்து விடும், விஞ்ஞானம் நம்மை பிரித்து விடும், ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தான் நம்மை பாவத்திலிருந்து சுத்திகரிக்கும். அவர் ஒளியில் இருக்கிறது போல, ஷெக்கினா மகிமையின் ஒளியில் இருக்கிறது போல, நாமும் ஒளியில் நடக்கும் போது, ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருக்கிறோம். ஆமென்.

169ஒரு மனிதன் விவாகம் பண்ணுவது போல், அவன் விவாகம் பண்ணும் போது... நீங்கள் மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கிறீர்கள். அது உங்களுக்குத் தெரியுமா?

170ஓ, நீங்கள், உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன், எனக்கு பத்து அறைகள் உள்ளன" என்று கூறலாம்.

171இல்லை, உங்களுக்கு கிடையாது. நீங்கள் மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டில் மட்டுமே வசிக்கிறீர்கள். அது உங்களுடைய... உங்களுக்கு மூன்று அல்லது நான்கு படுக்கை அறைகளோ, மூன்று அல்லது நான்கு சரக்கு அறைகளோ, அதைப்போன்ற காரியங்களோ இருக்கலாம், ஆனால் நீங்கள் உண்மையில் மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டில் தான் வசிக்கிறீர்கள். அவை சமையலறை, சம்பாஷிக்கும் அறை (living room), மற்றும் படுக்கை அறை ஆகியவையாகும். அது சரியே. நீங்கள் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கிறீர்கள். தேவனும் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் தான் வசித்தார். அவை பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியவை. நீங்களும் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கிறீர்கள். அவை ஆத்துமா, சரீரம், மற்றும் ஆவி ஆகியவையாகும்.

172இப்பொழுது, நீங்கள் சமையலறை, சம்பாஷிக்கும் அறை, மற்றும் ஒரு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டில் தான் வசிக்கிறீர்கள். உங்களுடைய சிறிய மனைவியிடம் நீங்கள் பேசும் போது, அந்த முதலாவது காரியம் என்ன? அதுதான் சமையலறை பாகம், ஐக்கியம் கொள்ளுதல் சபைக்குள் வருகிற மனிதனைப் போன்று, அவன் பின்னால் அமர்ந்திருக்கிறான், அவன் வார்த்தையைக் கேட்க உள்ளே வரும்போது, அவன் ஒருவரோடு ஒருவர் கொண்டிருக்கும் சிறு ஐக்கியத்தை உடையவனாயிருக்கிறான். விசுவாசம் கேள்வியினாலே வருகிறது." பிறகு அடுத்த காரியம் என்னவென்றால், மற்ற அறைக்குள் தான், அது சந்திக்கும் அறையாக இருக்கிறது. நல்லது, அநேக ஜனங்கள், தாங்கள் சமையலறைக்குள் இருக்கிற காலம் வரையில், அவர்கள் கொண்டிருக்க வேண்டியதெல்லாம் அவ்வளவு தான் என்று நினைக்கிறார்கள். இல்லை, அப்போது நீங்கள் போஷிக்கப் படுகிறீர்கள், பாருங்கள், நீங்கள் போஷிக்கப்பட்டுக் கொண் டிருக்கிறீர்கள்.

173அதன்பிறகு அடுத்த அறை யாதெனில், சந்திக்கும் அறையாகும், அங்கே வீட்டின் வரவேற்பறையில் நீங்கள் உங்கள் மனைவியிடம் அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் இப்பொழுது பொறுங்கள், சில ஜனங்கள் அவ்வளவு தூரம் தான் போகிறார்கள்.

174ஆனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள், அடுத்த அறைக்குள், அங்கு ஐக்கியம் மாத்திரமல்ல, ஆனால் உறவும் வருகிறது.

175இன்று சபையோடுள்ள காரியமும் அதுதான், அவர்கள் வெட்க முகத்தைப் பெற்றிருக்கிறார்கள், என்னு டைய உவமையை நீங்கள் புரிந்திருப்பீர்களானால், தேவ னோடுள்ள அந்த உறவை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் வெளியே சென்று, "அப்பா, பிதாவே" என்று கூப்பிடுகிற பிள்ளைகளைப் பிறப்பிக்கும்படியாக, உண்மை யில் தேவனோடுள்ள அந்த உறவில் இறங்கி வருவதைக் காட்டிலும், அதற்கு மாறாக ஏதோவொரு திருடப்பட்டதும், குளிர்ந்து போனதும், சடங்காசாரமானதும், சம்பிரதாயமான துமான ஸ்தாபனத்தைக் கெண்டிருந்து, "நான் பிரஸ்பிடேரி யன்," நான் மெதோடிஸ்டு, "நான் பாப்டிஸ்டு, "நான் பெந்தெ கோஸ்தேகாரன்," என்று கூறுகிறார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படுகிறார்கள். பவுல், "நான் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படேன், விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்பு உண்டா வதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது என்று கூறினான்.

176நாம் கல்வியினால் அவர்களை ஒருபோதும் உள்ளே கொண்டு வர மாட்டோம். நாம் ஸ்தாபனத்தைக் கொண்டு ஒருபோதும் அவர்களை உள்ளே கொண்டு வர மாட்டோம். நாம் விஞ்ஞானப்பூர்வமாகவும் அவர்களை ஒருபோதும் உள்ளே கொண்டு வர மாட்டோம். அவர்கள் உள்ளே வருவதற்கு பிறந்தாக வேண்டும். அது சரியே

177ஒரு குழந்தை பிறக்கும் போது, மூன்று மூலக்கூறுகள் அந்தக் குழந்தையின் ஜீவனுக்காக லிருந்து வருகிறது. முதலாவது காரியம் என்ன? சகோதரிகளே, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். வருகிற முதலாவது காரியம் என்ன? ஜலம், அது இல்லை என்றால், அது ஒரு உலர்ந்த பிறப்பாக இருக்கிறது; அப்போது அந்தக் குழந்தை இயல்பாக இல்லை . இரண்டாவது காரியம் என்ன? இரத்தம், அது சரிதானா? அடுத்த காரியம் என்ன? ஜீவன்.

178இயேசுவை விட்டு வந்தது என்ன? தண்ணீர் இரத்தம், மற்றும் ஜீவன், அவருடைய பக்கவாட்டை குத்தினார்கள். இயற்கையான பிறப்பு எதை உண்டாக்குகிறதோ அதையே ஆவிக்குரிய பிறப்பும் உண்டாக்குகிறது.

179ஒரு குழந்தை பிறந்து, அது இறந்து பிறந்த குழந்தையாக இருந்து, அது அழவில்லை என்றாலோ, அதற்கு எந்த உணர்ச்சியும் இல்லை என்றால், அதனோடுள்ள காரியம் என்ன? அது மரித்துப் பிறந்த குழந்தையாக இருக் கிறது. இன்றைக்கு சபைகளோடுள்ள காரியமும் அதுதான். நம்முடைய பெந்தெகோஸ்தேகாரர்களிடம் இருக்கும் தவறு என்ன? நாம் மிக அதிக இறந்து பிறந்த குழந்தைகளைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். அது முற்றிலும் சரியே ஆம், ஐயா, நாம் அவ்விதம் தான் இருக்கிறோம். அது முற்றிலும் சரி. அது அவ்விதமாக இறந்து பிறந்த குழந் தையாக இருக்குமானால், அந்தக் குழந்தையை நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் அதனுடைய குதிகால்களைப் பிடித்து தூக்கி, உங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பலமாக ஒரு சிறு posterior protoplasma எழுப்புதலை அதற்குக் கொடுக்கிறீர்கள், அது அதை ஜீவனோடு கொண்டு வந்து விடும். இன்றிரவு சபைக்கு ஏதாவது அவசியமாயிருக்கிறது என்றால், பரிசுத்த ஆவியின் வல்லமையைக் கொண்டுள்ள ஒரு நல்ல பழைமை நாகரீகமான சுவிசேஷ அடிதான்.

180(ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) அதைக் கொண்டு செய்ய வேண்டிய ஒரு காரியம் உண்டு, ஆகையினால் நம்மை நாமே பிரித்துக் கொள்வோம். முட்டாள்தனம்! அது நாம் இன்னும் அந்த ஷெக்கினா மகிமைக்குள் இல்லை என்பதைக் காண்பிக்கிறது. அது முற்றிலும் சரியே.

181நான் ஒரு சிறு பையனாக இருந்த போது, சகோதரனும் நானும், நாங்கள் வெளியே எங்களுக்குப் பின்பாக இருந்த வயல்வெளிக்குத் திரும்பிப் போனோம்; அப்போது நாங்கள் ஒரு வயதான, வயது சென்று ஆமையை சந்தித்தோம். அவைகள் இங்கே மேற்கு கடற்கரையில் இருக்கிறதா இல்லையா என்று உங்களுக்குத் தெரியுமா என்பதை நான் அறியேன். கடல் ஆமை அல்லது ஆமை என்றால் என்ன என்று எத்தனை பேர் அறிவீர்கள்? சரி. சிறு பிள்ளைகளாகிய நமக்கு அது வேடிக்கையாக தோற்றமளிக் கிற காரியங்களாக உள்ளது; அது மிகவும் பயங்கரமாகத் தோற்றமளித்தது. இதோ அந்தப் பெரிய வயதான கால்கள் இருக்கின்றன. உங்களுக்குத் தெரியும், அது அந்த விதமாக நீட்டிக் கொண்டிருந்தது. நான், "சகோதரனே, அது வேடிக்கை யாக தோற்றமளிக்கிற ஒரு காரியமாக இல்லையா?" என்றேன்.

182அவன், "ஆமாம், அது வேடிக்கையாகத்தான் காணப்படுகிறது" என்றான்.

183நான், "நாம் போய் அதைப் பார்ப்போம்” என்றேன்.

184நாங்கள் பார்க்கப் போன போது, இந்தக் கிறிஸ்தவர்களில் அநேகரைப் போல அது போனது. அது உங்களுக்குத் தெரியும், பெயர் கிறிஸ்தவர்கள் (கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்பவர்கள்) அது வியூவென்று போய், தன்னை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது. "ஓ, சகோதரன் பிரன்ஹாமே நீர் பரிசுத்த உருளையர்." மம். ஆ, நீர் -நீர் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கிற ஆளாயிற்றே, நீர் அந்த தெய்வீக சுகமளிப்பவர்." ஓ. நீங்கள் பழைய ஆமை தான் புரிகிறதா?

185எனவே பிறகு, நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், நான், "நல்லது, சகோதரனே, சற்று பொறு நான் அதை சரியாகப் போகச் செய்கிறேன்" என்றேன். அது நடந்து செல்வதைக் காண நாங்கள் விரும்பினோம், எங்களுக்காக அது நடக்கவில்லை. அது செத்துப்போனது போன்று அப்படியே அங்கே இருந்தது.

186சபை அதைத்தான் செய்துள்ளது. எல்லாமே உங்களுடைய பிரஸ்பிடேரியன் மேலோட்டிற்குள்ளும், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு மற்றும் பெந்தெகோஸ்தே மேலோட் டுக்குள்ளும் இழுத்துக்கொண்டு விட்டன (got up), அப்ப டியே திரும்ப உள்ளிழுத்துக் கொண்டு, நாங்கள் மீதியான மற்றவர்களோடு எந்தத் தொடர்பும் கொண்டிருக்க விரும்ப மாட்டோம். ஊ -உ" என்று கூறுகின்றனர்)

187நான் என்ன சொன்னேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான், "நான் ஒரு கம்பை எனக்கு எடுத்துக் கொள்கிறேன், நான் அதைக்கொண்டு அதை வெகுவேகமாக தள்ளி விடுகிறேன்" என்றேன். நான் போய், ஒரு மகத்தான பெரிய அலரிப் போன்ற ஒரு வகைச் செடியிலிருந்து ஒரு கம்பை எனக்கு எடுத்துக் கொண்டு, அதை மொத்தமாக தட்டி விட்டேன், அப்போது அது ஒன்றையும் செய்யவில்லை. உங்களால் அதை அவர்களுக்குள் அடித்து வேகமாக நகரச் செய்ய முடியாது. இல்லை.

188நான், 'நான் உனக்கு சொல்லுகிறேன்; நான் அதைச் சரியாகப் போகச் செய்கிறேன்" என்றேன். நான் அந்த சிற்றோடையில் அதை எடுத்துச் சென்று, அதை ஓட்டில் பிடித்து, நான் அதை தண்ணீரில் மூழ்கடிக்கிறேன் அல்லது அது நடந்து போய் விடும்" என்றேன். நான் அதை தண்ணீருக்கு அடியில் வைத்தேன், அப்போது ஒருசில குமிழிகள் மேலே வந்தன, அவ்வளவு தான், அது ஒரு காரியத்தையுமே செய்யவில்லை. சகோதரனே, நீங்கள் அவர்களை மூன்று முறை முன்னோக்கியும், மூன்று முறை பின்னோக்கியும் ஞானஸ்நானம் கொடுக்கலாம், அவர்கள் மேல் தண்ணீரை) ஊற்றலாம், உங்களுக்கு விருப்பமான எந்தவிதத்திலும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கலாம், அப்போது அவன் ஈரமில்லாத உலர்ந்த பாவியாக கீழே சென்று, ஈரமான நனைந்த பாவியாக மேலே வருவான்.

189ஆனால் நான் அதை எப்படி போகச் செய்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் கொஞ்சம் நெருப்பு பற்ற வைத்து, அதன்மேல் அந்த வயதான பையனை வைத்தேன். அவன் அப்போது நகர்ந்து போய் விட்டான், இன்றிரவு சபைக்கு என்ன தேவையாயிருக்கிறது என்றால், ஒரு அடி கொடுப்பதல்ல, ஆனால் ஒரு... ஒரு வேதசாஸ்திரம் அவசியமில்லை, ஆனால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நான மும் அக்கினியும் தான் அவசியமாயிருக்கிறது. ஆமென் அதுதான் சபையை அசையச் செய்யும். அதுதான் சுவிசே ஷத்தைக் கொண்டு சபையை பற்றி எரிய வைக்கிறது. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாக அவர்கள் மேல் தேவனுடைய அக்கினியைப் பற்ற வைத்தல், அதுதான் அவர்களை அசையச் செய்யும். தேவனுக்கு என்றென்றுமாக துதி உண்டாவதாக. சபையை அசையச் செய்யும்படிக்கு அதுதான் அவசியமாயிருக்கிறது.

190இரத்தத்தின கீழே, இரத்தம் தான் அக்கினியைக் கொண்டு வருகிறது. பலியானது அக்கினியைக் கொண்டு செலுத்தப்பட்டது. அக்கினியில் இரத்தம், புகையை உண் டாக்குகிறது. அது சுகந்த வாசனையாக இரட்சகரை நோக்கி மேலே எழும்புகிறது. சுகந்த வாசனை என்பது, அவன் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழாக ஜெபிக்கையில், மேலே எழும்பின இரத்தத்தின் வாசனையின் பேரில் ஜனங்கள் ஏறெடுக்கும் ஜெபங்களாக இருந்தது.

191இன்று பலியானது பரிசுத்த ஆவியின் மூலமாக சுட்டெரிக்கப்பட்டு, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக உங்களுடைய சொந்த பலியை எடுத்து, உங்களை நீங்களே பலிபீடத்தின் மேல் படைக்கும் போது, அது இரத்தத்தின் மூலம் மூடப்பட்டு, பரிசுத்த ஆவியானவர் அதைப் பிடித்து, ஷெக்கினா மகிமைக்குள் உங்களைக் கொண்டு வருகிற தேவனை நோக்கி சுகந்த வாசனையாக அனுப்புகிறார். அதுதான் ஐக்கியம் கொள்வதற்கான ஒரே ஸ்தலம். ஆமென்.

192ஐக்கியம், அதுதான் நமக்கு அவசியமாயுள்ளது, ஐக்கியம் கொள்வதற்கான தேவனுடைய வழி. அங்கே ஒரே ஒரு வழி தான் உண்டு. ஐக்கியம் கொள்வதற்கான வழியை தேவனே அருளியிருக்கிறார். கல்வி கற்பதன் மூலமாக நம்மை நாமே அதற்குள் கொண்டு வர முடியாது. உடையுடுத்துவதன் மூலமாக நம்மை நாமே அதற்குள் (கொண்டு வர முடியாது. ஸ்தாபனங்களை உண்டாக்குவதன் மூலமாக உங்களை நீங்களே அதற்குள் கொண்டு வர) முடியாது. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக அதற்குள் பிறந்திருக்க வேண்டும், அதுதான் உங்களை அந்த  தெய்வீக ஐக்கியத்திற்குள் கொண்டு செல்கிறது. அப்போது, அவர் ஒளியில் இருப்பது போல, நாமும் ஒளியில் நடந்தால், ஒருவருக்கொருவர் ஐக்கியப்பட்டிருக்கிறோம், தேவ குமாரனா கிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கிறது." ஆமென்

193நம்மால் எப்படி பாகுபாட்டை, இன பாகுபாட்டை கொண்டிருக்க முடியும்? ஸ்தாபன பாகுபாட்டை நாம் வைத்துக்கொண்டு, நாம் ஒளியில் நடந்து கொண்டிருக்கிறோம் என்று இன்னுமாக எப்படி நம்மால் கூற முடியும்? தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக நாம் பாரபட்சம் காட்டிக்கொண்டு, அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன” என்று நம்மால் எப்படி கூற முடியும்? அது தேவனுடைய சொந்த வார்த்தையாக இருக்கிறதே. ஏனென்றால் நாம் அந்தக் காரியத்தை முகமுகமாய்ச் சந்தித்து, 'நல்லது. அது நிறைவேறும்படிக்கு என்னால் செய்ய இயலாது. நான் அதை நம்ப மாட்டேன்" என்று கூற வேண்டியிருக்கிறது. அப்படி யானால் நீங்கள் ஒரு அவிசுவாசி என்று ஏன் சாட்சி கூறக் கூடாது?

194இயேசு, "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையா ளங்கள் பின்தொடரும்" என்று கூறினார். அதோடு அது முடிகிறது. அது விசுவாசிகளுக்குரியது.

195அந்தக் காரணத்தினால் தான் நான் பெந்தெ கோஸ்தேயினனாக இருக்கிறேன். ஆகையால் தான் நான் அதை விசுவாசிக்கிறேன், ஏனென்றால் நான் அவைகளைக் கண்டு கொண்டேன். நான் அநேக இடங்களுக்கு நடந்து சென்றிருக்கிறேன், மகத்தான இடங்களில் இருந்திருக்கிறேன். நான் இந்த பெந்தெகோஸ்தே ஜனங்களோடு அந்த இடங் களுக்குள் போயிருக்கிறேன், அங்கே துணை ஜனாதிபதி யாகிய நிக்ஸனும் அவர்கள் எல்லாருமே அங்கே இருந்த போது, வாஷிங்டன், டிசியில் அவர்கள் இருந்தனர். அது அவர்களை சற்றும் நிறுத்தவில்லை. தேவனுடைய வல்லமை யானது விழுந்த போது, அவர்கள் அதே விதமாக எந்த இடத்திலும் சத்தமிட்டு தேவனைத் துதித்தனர். அவர்கள் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படவில்லை, ஏனென்றால் அவர்கள் ஐக்கியத்திற்குள் இருக்கின்றனர். அல்லேலூயா! ஒரு மனிதன் தேவனுடைய ஆவியால் பிறக்கும் போது, அங்கே அவனுக்கு ஏதோவொன்று சம்பவிக்கிறது, அப்போது அவன் ஷெக்கினா மகிமைக்குள் கொண்டு வரப்படுகிறான், அவன் தேவனுடைய பிள்ளையாக இருக்கிறான். விசுவாசம் அவனுக் குள்ளே வாசம் செய்கிறது. அப்போது அவன் ஆபிரகா முடைய வித்தாயிருக்கிறான், அவன் கிறிஸ்துவுக்குள் மரித்து, ஆபிரகாமின் வித்தாக ஏற்றுக் கொள்ளப்படுகிறான். ஓ, உலகமே, அது என்னவென்று மாத்திரம் அவர்கள் அறிந் திருப்பார்களானால்.

196என்னவென்று நான் உங்களுக்குக் கூறுகிறேன், இப்பொழுது நாம் எங்கே தவறு செய்தோம், நான் முடிக்கையில், இதைக் கூறுவதற்காக நீங்கள் என்னை மன்னிப்பீர்களானால். நாம் எங்கு தவறு செய்திருக்கிறோம், நாம் நம்மை நாமே அதற்குள் ஸ்தாபனமாக்கிக் கொள்ள முயற்சித்திருக்கிறோம். "நாங்கள் அதைக் கொண்டிருக்கி றோம், மற்றவர்கள் அதைக் கொண்டிருக்கவில்லை. மெதோ டிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், அவைகள் பழைய குளிர்ந்து போன சம்பிரதாயமானவைகளாக இருக்குமானால், அவைகள் ஒன்றுமல்ல. நீங்கள் கவனிக்கவில்லை என்றால், நாமும் அந்தப் பழைய குளிர்ந்து போன, சம்பிரதாய மானவர்களாக இருக்கப் போகிறோம், அவர்களும் அதைப் பிடித்துக்கொண்டு, தொடர்ந்து போகத்தான் போகிறார்கள். அது முற்றிலும் சரியே. நாமும் கவனித்துப் பார்த்து, நம்மை நாமே அந்தவிதமாகக் கண்டு கொள்ளத்தான் போகிறோம். ஏனென்றால் அவர்கள் வலது பக்கத்திலிருந்தும் இடது பக்கத்திலிருந்தும் எல்லாவிடங்களிலுமிருந்தும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

197இப்பொழுது, எப்பிஸ்கோப்பியர்கள், "நாம் சுவிசேஷத்திற்குத் திரும்பிப் போயாக வேண்டும். நாம் நிச்சயமாக பெந்தெகோஸ்தேவுக்குத் திரும்பி வர வேண்டும். நாம் அந்நிய பாஷைகளில் பேசுகிறவர்களையும், பாஷைகளுக்கு அர்த்தம் உரைப்பவர்களையும், தெய்வீக சுகமளிக்கிறவர்களையும், நம்முடைய சபைகளில் எல்லாவற் றையும் கொண்டிருந்தாக வேண்டும் என்று கூறிக் கொண் டிருப்பதை நீங்கள் பாருங்கள்.

198ஓ, சகோதரனே, என்னவொரு காரியம். (நீங்கள் இந்த ஒலிநாடாவ விற்க வேண்டாம்)

199(அந்நிய பாஷைகளில் பேசப்பட்டு, அர்த்தம் உரைக்கப்படுகிறது - ஆசிரியர்.) ஆமென். நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு துதி உண்டாவதாக. ஆமென் ஆமென். நன்றி, இயேசுவே தேவனுக்கு துதி உண்டாவதாக. ஓ, அந்த ஷெக்கினா! தேவனுக்கு மகிமை! ஓ கர்த்தாவே, அதை எங்கள் மேல் அனுப்பும். பிதாவே, உமது ஆசீர் வாதங்களை எங்கள் மேல் அனுப்பும் பசியோடும், திறந்த இருதயங்களோடும் உமக்கு முன்பாக நாங்கள் காத்திருக் கிறோம். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே, நாங்கள் உமக்கு எவ்வளவாக நன்றி செலுத்துகிறோம். ஓ, ஆமென்.

200அது அற்புதமாக இல்லையா? ஏன், சகோதரனே, ஆவியைப் பகுத்தறிதலைக் குறித்தும், தரிசனங்களைக் குறித்தும் பேசுகிறீர்கள், அது அதேகாரியமாக இல்லையா? அந்நிய பாஷைகளுக்கு அர்த்தம் உரைத்தலும், தீர்க்கதரி சனமும் அதே காரியம் இல்லையா? பரிசுத்த ஆவியானவர் என்ன கூறியிருக்கிறார் என்று பாருங்கள். அநேகமாக அந்த இரண்டு மனிதர்களுக்கும் ஒருவரையொருவர் தெரியாது அல்லது ஒருபோதும் ஒருவரையொருவர் பார்த்ததில்லை, அவர்கள் எப்பொழுதாவது ஒருவரையொருவர் அறிவார்களா அல்லது ஒருவரையொருவர் பார்த்திருக்கிறார்களா என்பது மிகவும் சந்தேகம் தான். இதோ அவர்கள், ஒருவர் பேசிக் கொண்டும், மற்றவர் அதைக் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள், அது வார்த்தையோடு சரியாக வருகிறது. அவர் எவ்வளவு நேரம் பேசினார் என்பதைக் குறித்து கவனித்தீர்களா? அவர் தம்முடைய உரிச்சொற்களை எப்படி கொண்டு வந்தார் மற்றும் அவருடைய... அவருடைய வாக்கியங்கள் எவ்வாறு உள்ளே வருகிறது? அர்த்தம் எப்படி வருகிறது என்று கவனித்தீர்களா? அப்படியே அதே காரியம் தான், சரியாக திரும்பக் கூறப்பட்டது. அவர் அதைப் பேசின விதமாக, அதைப் போன்று வருகிறது. ஏன், அது நம் மத்தியிலுள்ள பரிசுத்த ஆவியாக உள்ளது. நாம் - நாம் காரியங்களைக் குறித்து உணர்வற்றவர்களாக இருக்கிறோம். சகோதரனே, நாம் அதை உணர்ந்து கொள்வதில்லை, இது எவ்வளவு மகத்தான காரியம். ஓ, தேவன் தம்முடைய சபையின் மேல் தமது ஆசீர்வாதங்களை ஊற்ற எவ்வளவாய் விரும்புகிறார். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? ஓ, என்னே .

201அற்புதம், சரியாக இப்பொழுதே பரிசுத்த ஆவியானவர் பேசியிருக்கையில், அந்த கடந்த சில கருத்துக்களிலிருந்து அவர் ஏன் என்னை நிறுத்தினார். அவர் ஏன் அவ்வாறு செய்தார் - நான் இரத்தத்தைக் குறித்து பேசப் போவதாக இருந்த எதையோ நான் கொண்டிருந்த போது, அவர் ஏன் அதைக் கீழே கொண்டு வந்தார்? அவர் ஏன் அதைச் செய்தார்? இந்த அர்த்தத்தை அவர் உரைத்த காரணத்தினால், எனவே அது அவர் பேசிக் கொண்டிருப்பதாயுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் சாட்சி கொடுத்து, களிமண்ணின் பேரில் எந்தக் கவனமும் செலுத்த வேண்டாம் என்றும், ஆனால் செய்தி உண்மையாக உள்ளது என்றும் கூறினார். அங்கே தான் அது இருக்கிறது. ஓ, அல்லேலூயா! தேவனுக்கு துதி உண்டாவதாக. எல்லா கட்டுகளையும் உதறித்தள்ளுங்கள், கட்டவிழ்க்கப்படுங்கள், அப்பொழுது தான் நீங்கள் உண்மையாகவே ஷெக்கினா மகிமைக்குள் பிரவேசிக்கிறீர்கள், அங்கே தான் ஷெக்கினா விழுகிறது. அதுதான் ஐக்கியம், இயேசு கிறிஸ்துவின் இரத்தம், அதுதான் மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரி யன்கள், லூத்தரன்களாகிய உங்கள் அனைவரையும், மற்றும் உங்கள் எல்லாரையும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாக ஆக்குகிறது. ஆமென். தேவனுக்கு நன்றி. ஓ, சகோதரனே. ம்ம்!

202நான் பித்து பிடித்தவன் என்று நீங்கள் நினைக்கி றீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் ஆனால் நான் - ஆனால் நான் அவ்வாறில்லை. நான் பித்து பிடித்தவனல்ல நான் எங்கேயிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இங்கே உள்ளேயுள்ள, அல்லது இந்தக் கடைசி நாட்களில் வார்த்தையின் கீழாக மேற்கு கடற்கரையின் மேலுள்ள தேவனுடைய ஆவியை உணருவது மகிமையா யுள்ளது. வார்த்தை, தேவன் வார்த்தையைத் தான் கனம் பண்ணுகிறார். அதுதான் வழி....

203கவனியுங்கள், அப்பொழுதுதான் பெந்தெ கோஸ்தே ஜனங்களாகிய நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பாருங்கள் ? அந்தத் தரிசனங்களைக் குறித்துள்ள வார்த் தையை தேவன் கனம் பண்ணுகிறார். ஏனென்றால் அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். நல்லது. அதை வாக்குத்தத்தம் பண்ணின அதே தேவன் அவருடைய ஜனங்களுக்கு ஷெக்கினா மகிமையையும் வாக்குப்பண்ணுகிறார். பாருங்கள், அது அதே தேவன் தான், அப்படியே வேறொரு ரூபத்தில் இருந்து, வேறொரு ஆசீர்வாதத்தை உங்களுக்குக் கொண்டு வருகிறார். வியூ. ஆமென்.

204ஓ, என்னால் அப்படியே... கூடுமானால் எல்லாரும் ஒரே இசைவோடு அதைப் பிடித்துக்கொள்ள முடியும், இது அற்புதமாக இல்லையா? ஓ , இது மகிமையாக இருக்கும். ஓ, வியாதியஸ்தர் சுகமடைவார்கள், முடவர்கள் நடப்பார்கள், அப்போது நீங்கள் ஆண்மானைப் போல துள்ளிக் குதிப்பீர்கள். பாவிகள் கல்வாரியை நோக்கிய தங்கள் வழியில் அழுதுகொண்டிருப்பார்கள், ஷெக்கினா சுற்றிலும் எல்லா விடங்களிலும் விழுந்து கொண்டிருக்கும். நாம் இன்றிரவு வீட்டிற்குக் கூட போக மாட்டோம், முழு இரவும், நாளை முழுவதும், அடுத்த நாள் முழுவதும் நாம் இங்கேயே தங்கி யிருப்போம். நம்மேலுள்ள ஒரு ஒளி போன்று வெடித்துக் கிளம்பும்படி விரும்புகிற தேவனுடைய வல்லமையோடு தெருக்களில் எல்லாவிடங்களிலும் குவிந்து கொண்டிருப் பார்கள்.

205ஓ, அல்லேலூயா! நான் அதற்காக அவரை எவ்வளவாக நேசிக்கிறேன். அவருடைய நன்மையும் இரக்க மும் என்றென்றுமாக நிலைத்திருக்கும். அவர் மெய்யாகவே, மெய்யாகவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாயிருக்கிறார். ஆமென். இயேசு கிறிஸ்து, அங்கே வேறு யாருமில்லை. அவரே ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான குமாரனா யிருக்கிறார். அவர் நம்முடைய இரட்சகரும், நம்முடைய சுகமளிப்பவரும், நம்முடைய இராஜாவும், நம்முடைய அதிபதியும், நம்முடைய -நம்முடைய ஜீவனும், நம்முடைய சந்தோஷமும், நம்முடைய ஆரோக்கிமுமாயிருக்கிறார்; அவரே நமக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார். எவ்வளவு அற்புதமாயுள்ளது. ஜனங்களுக்கு அவரை அறிமுகப்படுத்துவதற்கு நாம் எவ்வளவாக விருப்பமுள்ளவர்களாய் இருக்க வேண்டும், அவர் வெளியேயுள்ள யாரோ ஒருவரிடம் போகட்டும். எவ்வளவு அற்புதமாயுள்ளது. எவ்வளவு மகிமையாயுள்ளது. அவர் அது. ஆமாம்.

206(தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகிறது - ஆசிரியர்.) தேவனுக்கு துதி உண்டாவதாக. ஓ, அற்புதம். அதைக் கூறின அங்கேயுள்ள அந்த ஏழை சீமாட்டியைப் பாருங்கள், அன்பானவர்களாகத் தோற்றமளிக்கிற அந்த வயதில் மூத்த சீமாட்டி, அவர்களுடைய தலைமுடி நித்தியத்திற்காக உறைபனியினால் போர்த்தப்பட்டுள்ளது. அவர்கள் பூமியில் மிக அதிக காலம் இருக்க மாட்டார்கள் என்பது தெரியும், நாம் அதைப் போன்று அதிக வயதை அடையும் போது. அது ஏதோவொன்றாக இல்லாதிருக்குமானால், ஏன் அந்தப் பெண்மணி ஏதோவொன்றைக் கூறிக் கொண்டிருந்தாள், அவளால் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை, அது அப்படியே அவளிடமிருந்து வேகமாக வெளிவந்து கொண் டிருந்தது. அது பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வார்த்தையைப் பிறப்பிப்பதாகும். என்னுடைய ஊழியக்காரிகள் மேலும், என்னுடைய வேலைக்காரிகள் மேலும் என்னுடைய ஆவியை ஊற்றுவேன்" ஆமாம். நண்பனே, சரியாக அங்கே தேவனுடைய வாக்குத்தத்தம் உள்ளது. ஓ, என்னே, அல்லேலூயா! உங்களால் அதை அனுபவிக்க முடியும்படியாக அது என்னவென்று பார்க்க உங்களால் கூடுமானால் ஓ, என்னே .

207முதலில் பாவிகளை பீடத்தண்டையில் நாம் அழைக்க வேண்டும் என்று நம்புகிறேன், நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? சரி. யாராவது ஒருவர் வேகவேகமாக பியானோவிடம் செல்லுங்கள். பாவியான நண்பரே, நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், முதலாவது அவருடைய வார்த்தையின் அடிப்படையின் பேரிலும், அந்நிய பாஷைகளைப் பேசினதின் அடிப்படையின் பேரிலும், அதற்கு அர்த்தம் உரைப்பதன் அடிப்படையிலும், அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த வயதான இனிமையான தாயார் மேல் விழுந்து கொண்டிருந்த தீர்க்கதரிசனத்தின் பேரிலும் உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறேன், அவர்கள் அனைவரும் ஒரே காரியத்தையே பேசிக் கொண்டிருக்கிறார்கள், அழைப்பு, அழைப்பு, அழைத்தல்

208நாம் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். நாம் எழுந்து நிற்போம். சகோதரனே, உங்களுடைய பாடல் என்ன? என்ன சொல்லுகிறீர்கள்? நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கி றேன். சகோதரனே, இங்கே வாருங்கள், நான் அதைப் பாடுவதற்கு நீங்கள் எனக்கு உதவி செய்யும்படி விரும்பு கிறேன். .... எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், என் ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகரே, எல்லாவற்றையும் உமக்கே ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன்.

209அவர்கள் அதை ஒருவிசை இசைக்கும் போது, நீங்கள் உண்மையாகவே அதை உங்கள் முழு இருதயத் தோடும் கருதுகிறீர்களா? எல்லாவற்றையும் விட்டு விட ஆயத்தமாயிருக்கிறீர்களா? ஸ்திரீகளே கிறிஸ்துவுக்காக உங்கள் ஆடை அலங்கார ஃபேஷன்களை விட்டுவிட ஆயத்தமாயிருக்கிறீர்களா? இங்கேயுள்ள கௌரவமான பண் பாளர்களே, மனிதர்களே, நீங்கள் உங்களுடைய புகைப்பிடித் தல்களையும், உங்கள் மது அருந்துதல்களையும், உங்கள் சூதாட்டங்களையும், உங்களுடைய கோட்பாடுகளையும் விட்டு விட்டு, கிறிஸ்துவைக் கண்டுகொள்ள விருப்பமாயிருக்கிறீர்களா? சபை அங்கத்தினனே, கிறிஸ்துவுக்காக உன் னுடைய கோட்பாடுகளை ஒப்புவிக்க ஆயத்தமாயிருக்கி றாயா? உன்னுடைய கோட்பாடு அந்நாளில் ஆக்கினைத் தீர்ப்படையும். உன்னுடைய கிறிஸ்து பெற்றுக்கொள்ளப்படு வார். தம்முடைய சொந்த குமாரனுடைய இரத்தத்தைத் தவிர வேறு எதையுமே பார்க்காத ஒரு கோபமுள்ள தேவனாலே மாத்திரம் நீ நியாயம் தீர்க்கப்படப் போகிறாய். அந்த ஒரே காரியம் மாத்திரமே கடந்து செல்லும் நீ எவ்வளவு நல்ல வனாயிருந்திருக்கிறாய் என்பதோ, நீ எவ்வளவு விசுவாச முள்ளவனாய் (loyal) இருந்திருக்கிறாய் என்பதோ காரிய மில்லை, நீ அந்த இரத்தத்தினால் மூடப்பட்டு, ஷெக்கினா மகிமைக்குள் ஜீவித்துக் கொண்டிராவிட்டால், நீ அந்நாளில் இழக்கப்பட்டு போவாய். அதற்குள் ஜீவிப்பாயாக

210இப்பொழுது நீ எல்லாவற்றையும் ஒப்புவிப்பாயா? இங்கே மேலே வாருங்கள், நான் உங்கள் கரத்தைக் குலுக் கட்டும், இங்கே இந்தப் பீடத்தைச் சுற்றிலுமிருந்தபடி உங்க ளோடு ஜெபம் செய்யட்டும். வாருங்கள். சபை அங்கத் தினனே, நீ யாராக இருந்தாலும், வா. நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், எல்லாவற்றையும் என்னுடைய சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக ) ஸ்தோத்தரிக்கப்பட்ட..... நான் ..... (பாவியான நண்பனே, வா. வெதுவெதுப்பான சபை அங்கத்தினனே, வா. வந்து, ஷெக்கினா மகிமையின் கீழே அடைந்து விடு) நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், என் ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகரே, எல்லாம் உமக்கே, நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். நான் ஒப்புவிக்கிறேன்..... இப்பொழுது வாருங்கள். அது சரியே, சரியாக இப்பொழுதே வாருங்கள். இங்கே வாருங்கள். சபை அங்கத்தினனே, வா, வாருங்கள் ) நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன் , என் ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகரே.... உமக்கே, நான் ஒப்புவிக்... நான் ஒவ்வொரு கோட்பாட்டையும் ஒப்புவிக்கிறேன், மற்ற எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், கர்த்தாவே, நீர் எனக்கு வேண்டும். நீ வருவாயா? அது சரி, சிறு பெண் பிள்ளைகளே, வாருங்கள்) நான் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக் கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன் (இப்பொழுது நீங்கள் வரமாட்டீர்களா, பால்கனியில் உள்ளவர்களே, வாருங்கள்) என் ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகரே... உமக்கே, நான் எல்லாவற்றையும் ... கிறேன்.

211பரிசுத்த ஆவி எத்தனை பேருக்கு வேண்டும், இப்பொழுதே இவர்களோடு மேலே வாருங்கள். சுற்றிலுமுள்ள வர்களே வாருங்கள், இழக்கப்பட்டவர்களே வாருங்கள், எல்லாவற்றையும் ஒப்புவித்து விடுங்கள். உங்களுடைய விருப்பங்களை ஒப்புவித்து விடுங்கள், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள எல்லாவற்றையும் ஒப்புவித்து விடுங்கள். அங்கே மேலே பால்கனியிலிருந்து கீழே வாருங்கள். கிறிஸ்துவுக்கு வெளியே இருக்கிற நீங்கள் எல்லாரும் வாருங்கள். இந்த ஷெக்கினா மகிமை உண்மையானது. நான் அதை வார்த்தையைக் கொண்டும், தேவனைக் கொண்டும் சாட்சி பகர்ந்தேன். நண்பா, இது உண்யைானது, வருவதற்கு உனக்கு ஒரு தருணமுள்ள போதே வந்து விடு. சரி, நாம் இதைப் பாடுகையில் நான் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், என்னுடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகரே, எல்லாம் உமக்கே , நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன் , நான் ஒப்புவிக்கிறேன் , நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன் , (.......) என்னுடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகரே, எல்லாம் உமக்கே, நான் ....

212ஓ, அந்த தேவனுடைய ஆவி அப்படியே கட்டிடத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருப்பதை உங்களால் உணர முடியவில்லையா. இப்பொழுது ஜெபத்திற்காக ஊழியக்காரர்களும், எல்லாரும் சுற்றிலும் வந்து கொண்டிருக் கையில், வந்து சுற்றிலும் நில்லுங்கள். நான் ஒப்புவிக்கிறேன் , நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் ஒப்புவிக்கிறேன் , நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், என்னுடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகரே, எல்லாம் உமக்கே , நான் ...

213இப்பொழுது, எல்லாரும் உங்கள் கரங்களை மேலே உயர்த்தி, அப்படியே தேவனைத் துதிக்கத் தொடங் குங்கள். மகிமை! ... ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் ஒப்புவிக்கிறேன் , நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், என்னுடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகரே, எல்லாம் உமக்கே ,

214அப்படியே அவரைத் துதியுங்கள். அவருக்கு மகிமை செலுத்துங்கள். அவருக்கு மகிமை செலுத்துங்கள், ஒவ்வொருவரும் ? .... உமக்கே , என் ஸ்தோத்தரிக்கப்பட்ட....

215ஓ இயேசுவே தேவ குமாரனே, நீர் 2 செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்...? பிதாவாகிய தேவனே...? இதோ இவர்கள் ஒவ்வொருவரும் இருக்கி றார்கள், ஒவ்வொருவரையும் இரட்சித்தருளும், தேவனே... எங்கள் தேவனுடைய நாமத்தில், நான் ஜெபிக்கிறேன், இதை அருளும், இயேசுவே.....