கால திரைக்கு அப்பால்

61-0305

உஙகளடய ஜபஙகள பதலளககபபடடன எனபத இஙக நன அறவகக வரமபகறன, பல வரடஙகளகக மனப, நன மதன மதலல ஊழயம சயய ஆரமபததபத, எஙகளகக உணடயரநத கடடஙகளப பலவ. நன ஒரபதமஎஙகளல ஜனஙகள கட உடகர வகக மடயவலல. மதனஙகள மறறமளள ஒவவர கரயஙகளயம ஏறபட சயத, அநத இடம மனற மணககள நரமபவடம. அவரகள உளள வரதபடகக, கதவகள மட வணடம. நஙகள ஏழ மண வர அஙக வரமடடம. பரகறத?

கால திரைக்கு அப்பால்

61-0305ஜெபர்ஸன்வில் இந்தி501961-03-05

கால திரைக்கு அப்பால்

61-0305ஜெபர்ஸன்வில் இந்தி501961-03-05

1 உங்களுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்பட்டன என்பதை இங்கு நான் அறிவிக்க விரும்புகிறேன், பல வருடங்களுக்கு முன்பு, நான் முதன் முதலில் ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது, எங்களுக்கு உண்டாயிருந்த கூட்டங்களைப் போலவே. நான் ஒருபோதும்…எங்களால் ஜனங்களை கூட உட்கார வைக்க முடியவில்லை. மைதானங்கள் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியங்களையும் ஏற்பாடு செய்து, அந்த இடம் மூன்று மணிக்குள் நிரம்பிவிடும். அவர்கள் உள்ளே வராதபடிக்கு, கதவுகளை மூட வேண்டும். நாங்கள் ஏழு மணி வரை அங்கே வரமாட்டோம். புரிகிறதா? எங்குமிருந்து ஆயிரக்கணக்கானோர் குவிவார்கள். அப்படியே… 2 கடைசி கூட்டத்தில் நான் கடைசி ஐந்து இரவுகளை எடுத்துக்கொண்டேன், வார்த்தையைச் சுற்றியே கட்டியெழுப்பவும், வார்த்தை என்ன ஒரு வல்லமையை உடையதாய் இருந்தது என்பதை உணரத் தொடங்கவுமே. புரிகிறதா? ஏனென்றால், வார்த்தை தேவனாய் இருக்கிறது. பார்த்தீர்களா? “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்.”

23 இப்பொழுது, எபிரேயர் 4 அதைக் கூறியுள்ளது, அதாவது, “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயுள்ளது.” புரிகிறதா? “தேவனுடைய வார்த்தையானது எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” புரிகிறதா? அதுதான், தேவனுடைய வார்த்தை. 4 அப்படியானால் நாம் நம்மையே சற்று பதட்டமில்லாமலாக்கிக்கொள்ள ஒரு வரம் இருக்குமானால், வார்த்தை, தானே, கிறிஸ்துவாய் இருக்கிறது, அவரே வார்த்தையாய் இருக்கிறார், நமக்குள்ளாக வந்து, நீங்கள் அதை பார்த்திருக்கிறபடியே, மனதின் யோசனைகளை வகையறுக்கிறார். புரிகிறதா? எவ்வளவு அற்புதமானது. அப்படியானால், அவர் என்ன செய்தார் என்பதையும் அவர் நம்மை ஆசீர்வதித்த விதத்தையும் பார்ப்பதுமே! அதன்பின்னர்… 5 அதாவது, நான்கு இரவுகளாக அந்த வார்த்தையைச் சுற்றியே கட்டி எழுப்பினதை, நான் அதை உணர்கிறேன், ஜனங்கள் அமைதியாக இருக்கட்டும், அதன்பின்னர் அப்படியே பதட்டமின்றி இருக்கட்டும், பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை அழைத்து கூட்டத்திலே காரியங்களை செய்வார்.

36 அதன்பின்னர், கடைசி மாலை, கடைசி ஞாயிறு பிற்பகல், அமெரிக்காவில் நான் எப்போதும் கண்டதிலேயே மிகப்பெரிய சுகமளிக்கும் வரிசைகளில் ஒன்றை நான் கண்டேன். பார்த்தீர்களா? அவர்கள் இருந்தபோது…நான் பில்லியை நூறு ஜெப அட்டைகளோடும், மற்றும் ஜீனை நூறோடும், மற்றும் லியோவை நூறோடும், மற்றும் ராயை நூறோடும், சுமார் ஐநூறு அட்டைகளை, எல்லா அட்டைகளையுமே கொடுக்கும்படி கீழே அனுப்பினேன். அதன் பின்னர் வார்த்தையின் ஒரு பற்றிப் பிடித்தலையும், அது என்ன செய்யும் என்பதையும் அவர்கள் கண்ட பிறகு, அப்பொழுது அந்த வார்த்தையின் பேரிலேயே தரித்திருக்கச் செய்து, அவர்களை மேடைக்கு கொண்டு வருவேன். புருஷர்களும் ஸ்தீரிகளும் தங்களுடைய கக்கத்தண்டங்கள், போன்றவற்ற வீசி எறிந்துவிட்டு அவர்கள் மேடையண்டை, பார்ப்பதற்கு வருவதற்கு முன்னமே கூட சுகமடைந்ததை நான் கண்டேன். புரிகிறதா? தேவனுடைய வார்த்தை புறப்பட்டு சென்று, அங்கே அதனூடாக, அந்த ஐந்து செய்திகளில் இல்லை நான்கு செய்திகளில், அவர்களுடைய இருதயங்களில், அவர்கள் அதை தங்களுடைய முழு இதயத்தோடு விசுவாசிக்குமளவிற்கு தன்னைப் பதித்துக்கொண்டது. அப்பொழுது, அவர்கள் செய்ய வேண்டியிருந்த ஒரே காரியம், மற்ற ஏதோ ஒன்றைக், காண, ஒரு சிறு தொடர்புகொள்ள வேண்டியதாய் இருந்தது, அது மற்றொரு உண்மையாய் இருந்தது. அவர்கள் அந்த மேடையை வந்தடைந்தவுடனே, அவர்கள் மேடைக்கு வருவதற்கு முன்பே…அங்கே மேடையில் அவர்கள் சுகம்டைந்தனர்.

47 இங்குள்ள சகோதரர்களாகிய, நீங்கள் யாவரும் சகோதரன் எட், சகோதரன் எட் ஹூப்பரை அறிவீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அங்கு கீழே, ஆர்க்கன்சாஸிலிருந்து வருகின்றீர்களா? அவர் சந்தித்தார்…அவர் ஊழியத்தின் ஆரம்ப காலங்களில் என்னுடன் இருந்தார். அவர், “இது பண்டைய காலங்கள் போன்று தென்பட்டது” என்று கூறினார், அவர், “அநேக ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் உபயோகித்த முறை” என்றார். 8 கட்டிகளோடிருந்த— அதைப் போன்ற ஜனங்கள் வந்து, சுகம்டைந்தனர். குருடர், செவிடர், ஊமையர், எல்லா விதமான காரியங்களையும் நம்முடைய கர்த்தர் சுகப்படுத்தினார். ஜனங்களை தொடக்கூட வேண்டியதேயில்லை. வார்த்தை புறப்பட்டு சென்று அதைச் செய்கிறது. 9 ஆகையால் சபையில் நான் பேச விரும்புகிற ஒரு செய்தியை கர்த்தர் எனக்கு அளித்தார், எப்போதாவது நான் திரும்பி வரும்போது ஒரு வாய்ப்பு கிடைக்கும். நான் மிகவும் அலுவலாயிருக்கிறேன். இப்பொழுது நான் நாளை மீண்டும் புறப்பட வேண்டும், இந்த சிறு பெண் வருவதற்காக காத்திருக்கிறேன். வீட்டில் நான் சிறு கைப்பெட்டியை வைப்பதற்கு முன்பு கூட, அங்கு யாரோ ஒருவர் காத்திருப்பார். அது முதற்கொண்டு நான் கீழே அமரக் கூட இல்லை, அமரவேயில்லை. பார்த்தீர்களா? நான் உள்ளே வந்தது முதற்கொண்டு என்னுடைய குடும்பத்தாரிடம் கூட பேசவேயில்லை. பார்த்தீர்களா? இது—இது உண்மையாகவே ஒரு சிரமமாயுள்ளது. கர்த்தர் என்னை தாங்கிக்கொள்ளும்படி உதவி செய்ய, எனக்கான உங்களுடைய எல்லா ஜெபங்களையும், கூட, நான் வருந்தி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

510 இப்பொழுது… [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] இங்குள்ள நம்முடைய சகோதரனைப் பாருங்கள், உண்மையாகவே, உண்மையாகவே சுகவீனமாயிருந்து இந்த கட்டிலில் படுத்துக்கொண்டிருக்கிறார். மேலும் நாம்… 11 எங்களுக்காக, லூயிஸ்வில்லுக்குச் செல்ல, சற்று நேரத்தில், ஒருவர் வருகிறார். ஒரு அருமையான வாலிப பெண்மணிக்காகவும், கூட, நீங்கள் ஜெபத்தில் நினைவுகூர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதாவது, அவளுக்கு சுமார் பதினெட்டு வயது கூட இல்லை. அவள் இரட்டைப் பிறவிகளில் ஒருவள், மேலும் பள்ளியில் உள்ள ஒரு கிறிஸ்தவ பெண். மற்ற பெண் பிள்ளைகள் இவளை குறித்து பேசுவார்கள், உங்களுக்கு தெரியுமா, இந்த இரண்டு பெண் பிள்ளைகள், அவர்கள் எப்படி இருந்தனர் என்பதையும், அவர்கள் வாழ்க்கையில் எந்த பாகத்தை தவறவிட்டுக்கொண்டிருந்தனர் என்றும், அவர்கள் மற்ற பெண்களைப் போல எப்படி ஜீவிக்க வேண்டும் என்றும் அவர்களிடம் சொல்லுவார்கள். ஒரு பெண்ணால் அதை மீற முடிந்தது. இந்த மற்றொருவளுக்கோ ஒரு சிக்கல் இருந்தது, அவள் அதைக் குறித்து உண்மையாகவே மிக மோசமாக உணர்ந்தாள், மேலும் விலகிச் சென்று, பின்னோக்கிச் சென்று, அதைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள். முடிவிலே அவளுக்கு ஒரு மன உளைச்சல் ஏற்பட்டுவிட்டது. அவர்கள்…அவள் ஒரு பைத்தியக்கார விடுதியில் இருக்கிறாள். அவருடைய தாயாரும் தகப்பனும், இந்தியானாவில் உள்ள கிராண்டாலிலிருந்து, கூடிய சீக்கிரத்தில், வந்துவிடுவார்கள், அவர்கள் இந்த விடுதிக்குச் சென்று அவளை நாளை, மெய்ட்சனுக்கு அனுப்ப முயற்சிக்கப் போகிறார்கள்.

612 இப்பொழுது, அந்த—அந்தப் பெண், சரீரப்பிரகாரமான கோளாறு ஏதும் அந்த பெண்ணில் இல்லை. அவள்…சரீரப்பிரகாரமாக, ஒன்றுமேயில்லை. அவள் பரிபூரண ஆரோக்கியத்தோடு இருக்கிறாள். ஆனால் அதை விளக்கி கூறுவது மிகவும் கடினமாக உள்ளது. அது உண்மையாகவே விளக்கப்பட முடியாது. அது என்னவென்றால், அவளுடைய ஆவி அலைந்து திரிந்துள்ளது. புரிகிறதா? இப்பொழுது, நீங்கள்—நீங்கள் அவளுடைய ஆவியைப் பற்றிப் பிடித்து அதை அதனுடைய ஸ்தானத்திற்கு திரும்ப கொண்டு வர வேண்டும். புரிகிறதா? அங்கு தான்… 13 ஒரு சில வாரங்களுக்கு முன்பு, மனித அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதன் பெயரில் நாம் இங்கே பேசினது, போலவே. நீங்கள் சரீரத்திற்குள் நுழையும் ஐந்து புலன்கள் எப்படி உள்ளன என்றும், அதற்கு நாம் அதை ஐந்து வழிகள் என்று அழைக்கிறோம். ஐந்து வழிகள், மனசாட்சி, கற்பனை, போன்றவை, நாம் அதனால் ஆத்மாவுக்குள் நுழைகிறோம். அதன்பின்னர் நீங்கள் ஆவிக்குள் நுழையும்போது, ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு, அது சுய விருப்பத்தின் மூலமாகவே, அது மனிதன் சிருஷ்டிக்கப்ப்ட்டதைப் போன்றே அதை அடிப்படையாகக் கொண்டது.

714 உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் அல்லது உங்களால் அதை விட்டுவிட முடியும். உங்களால் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்ள முடியும் அல்லது அவரை விட்டுவிட முடியும். நீங்கள் இன்னமும் அந்த மரத்தின் அருகே இருக்கிறீர்கள், அதாவது ஒன்று ஜீவனாயும் மற்றொன்று மரணமாயுமுள்ளது. ஒவ்வொரு மானிடனுக்கு முன்பாகவும் அந்த மரம் வைக்கப்பட்டிருக்கிறது, இல்லையென்றால் சரியா அல்லது தவறா என்பதை தெரிந்துகொள்வதற்கு சமமான வாய்ப்பினை மற்றொருவருக்குத் தராமல், ஒன்றை அங்கே வைத்தால் தேவன் அநீதியுள்ளவராய் இருப்பார். நம் ஒவ்வொருவருக்கும் அந்த வாய்ப்பு உள்ளது. 15 மேலும், அந்த, ஆவியில், நாம் சுகமாக்கப்பட முடியும், அல்லது நாம் சுகமாக்கப்பட முடியாது. இப்பொழுது, அது நாம் தேவனுக்கேற்றபடி சுகமடைந்திருக்கவில்லை…என்பதல்ல. நாம் அப்படித்தான் அடைந்துள்ளோம். ஏனென்றால் உடன்படிக்கை நிபந்தனையற்றதாக உள்ளது. அவர் ஏற்கனவே நம்முடைய சுகமளித்தலை சம்பாதித்துள்ளார். ஆகையால், நம்முடைய சுகமளித்தல் நம்மிடத்தில் உள்ளது. அது நம்முடையது. இப்பொழுது அதை விசுவாசிக்கும்படி, நாம் இந்த வழியை ஏற்றுக் கொள்கிறோமா; அல்லது அதை விசுவாசிக்காதபடி, இந்த வழியை ஏற்றுக் கொள்கிறோமா என்பதாக உள்ளது. இப்பொழுது, தேவனுடைய பிரசன்னத்துக்குள்ளாக நாம் நடக்கக்கூடிய ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு.

816 இப்பொழுது, அழகான, இந்தக் குழந்தை, அவளுடைய தாய் ஒரு பெண் சிநேகிதி. நான், என்னுடைய…ஓ, என்னுடைய பெண் சிநேகிதிகளில் ஒருவராய் இருந்தவள். அவள் ஒரு அருமையான எளிய பெண்மணியாயிருந்தாள், ஒரு உண்மையான கண்டிப்பான நசரேய வீட்டிலிருந்து வெளியே வந்தவள், இனிமையான குட்டிப் பெண். அவளுக்கு ஒரு அருமையான கணவர் கிடைத்துள்ளார். அவளை திருமணம் செய்துள்ள அந்தப் பையனை, உண்மையாகவே நன்றாக, நானும் கூட, அறிந்திருக்கிறேன். அவள் வெறுமனே ஒரு சிறு…அவர்கள் கர்த்தரை சேவிக்கும்படிக்கு அந்த பிள்ளைகளை வளர்த்து, அவர்களை பள்ளியில் சேர்த்துள்ளனர். அவர்கள் உண்மையாகவே கிறிஸ்துவில் வேரூன்றப்பட்டிருந்தபடியால், தவறான காரியங்களைச் செய்கிறதில்லை. ஆனால் அதற்கோ அப்படியாகிவிட்டது. 17 ஒரு மனமுறிவில், நான் இருப்பது போலவே…ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே பார்த்தேன், ஒரு சிறு பையனிடத்திற்கு திரும்பி உற்றுப் பார்த்தேன், சரியாக, அதே காரியமாய் இருந்தது. மேலும்…நாங்கள் ஒரு இரவு சகோதரன் ரைட்ஸ் மற்றும் ஆர்வில் ஒரு முழுமையான இடைவெளியில் இருந்தபோது, அங்கே சென்றிருந்தோம். மேலும் அவன், உங்களுக்கு தெரியுமா, அவன் என்னை வீட்டை விட்டு வெளியே துரத்த முயற்சித்தான்; ஆர்விலும் நானும் நல்ல நண்பர்களாக இருக்கின்ற காரணத்தால், உண்மையாகவே நான் அவனுடைய தந்தையைப் போல் இருப்பேன். நான் அவனுடைய தகப்பனுக்கும் தாயுக்கும் ஒன்றாக, திருமணம் செய்து வைத்தேன். அவனோ குதித்தெழுந்து, “இங்கிருந்து வெளியே போ! இங்கிருந்து வெளியே போ! இங்கிருந்து வெளியே போ!” என்று கூச்சலிட்டான். பார்த்தீர்களா?

918 இப்பொழுது, நாங்கள் செய்ய வேண்டியிருந்தது என்னவென்றால் அந்த ஆவியின் வரிசைக்குள்ளாக சென்று அந்த பையனுடைய ஆவியை பிடிக்க வேண்டியதாயிருந்தது. புரிகிறதா? அவனுடைய சிறிய இருதயத்தில் ஏராளமான துயரம் உண்டாயிருந்தது. அவன் வாலிபனாக இருக்கிறான், அவன் ஏராளமானவற்றை பார்த்துவிட்டிருந்தான். அவன் இருக்க வேண்டிய ஸ்தானத்திற்கு அவனை திரும்பக் கொண்டு வந்தோம். உங்களுக்கு புரிகிறதா? ஒரு சில நாட்களில் அவன்—அவன் சரியாய் இருந்தான். 19 இப்பொழுது, இதன் பேரில் நீங்கள் செய்ய வேண்டியது அதே காரியமாய் இருக்கிறது. நான் அதை பார்த்திருக்கிறேன், அது உண்மை என்பதை நான் அறிவேன். ஆனால் இப்பொழுது…இந்த சிறு பெண்ணை கண்டறியும்படியாய் தேவன் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று—என்று, இப்பொழுது நீங்கள் யாவரும் ஜெபிக்கும்படி நான்—நான் வேண்டிக்கொள்கிறேன். அவள் எங்கே இருக்கிறாள் என்று அவள் அறிந்திராத ஒரு இடத்திற்கு வெளியே சென்று, அதன்பின்னர் அவளை அவரிடத்திற்கு திரும்பவும் அழைத்து வரவுமே. அந்த வழி விசுவாசத்தின் மூலமாகவே வருகிறது. பாருங்கள், அவள் தனக்கான விசுவாசத்தை உடையவளாயிருக்க முடியாது. அவள் எங்கே இருக்கிறாள், அல்லது எந்த காரியத்தையும் அவள் அறியாதிருக்கிறாள். புரிகிறதா? இங்கே அது—அது நம்முடைய விசுவாசத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

1020 இப்பொழுது, அதில், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமை, அவர் நமக்கு வாய்ப்பினை அளிக்கிறார். அங்கு தான், நீங்கள், ஒரு வழியில், தேவனுடைய வார்த்தை பாவியை ஊடுருவுகிறது. அது தேவனுடைய வார்த்தையின் பிரசங்கத்திற்கு அப்பால் ஊடுருவி செல்ல வேண்டியதாய் இருக்கிறது. அந்தக் காரணத்தினால் தான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு முன்பு இந்த காலை நான் சற்று பேச விரும்புகிறேன். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] 21 மறுபுறத்தை பார்ப்பது குறித்து, உங்களுக்குத் தெரியுமா, அண்மையில், கர்த்தர் எனக்கு கொடுத்த, தரிசனம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? மறுபுறத்தை பார்த்ததைக் குறித்து நான் சாட்சி பகிர்ந்துகொண்டிருந்த அந்த காலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? பாருங்கள், அது உண்மையாயிருந்தது. 22 முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களுடைய சத்தம் அந்த கட்டுரையை வெளியிட்டு, இங்கே அந்த பக்கத்தின் பின்னால் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. ஊழியத்தை குறித்து பேசுகையில், இங்கே கீழே, கீழே ஒரு சிறு பகுதியில் ஒரு சிறு காரியத்தை பிரசுரித்திள்ளது. இது, பல்வேறு மொழிகளில் அச்சடிக்கப்பட்டுள்ள சர்வதேச செய்தித்தாளாய் இது உள்ளது. அவர்கள் முன் பக்கத்தில், முதலாவது, அந்த தரிசனத்திற்காக அர்ப்பணித்துள்ளனர். புரிகிறதா?

1123 நான் அவைகளை இங்கே கொண்டு வந்துள்ளேன், நீங்கள் விரும்பினால் ஒன்றை எடுத்துக்கொண்டு, நீங்கள் அதை வாசித்துப் பார்க்கலாம். எழுந்திருங்கள்…இந்த காலையில், சகோதரர்கள், எத்தனை பேர் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் நீங்கள், அப்படியானால், நீங்கள் ஒன்றைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், பாருங்கள், அலுவலகத்திற்கு செல்லுங்கள். அவர்கள் அவைகளை அங்கே அலுவலகத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் எங்களை அவர்களுடைய ஒரு குழுவாக இருக்க அனுமதித்தார்கள், இது பற்றி: “தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருங்கள்.” புரிகிறதா? அவ்வளவுதான் என்னுடைய இருதயத்தில் உள்ளது. என்னால் கேட்க முடிந்ததெல்லாம், “தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருங்கள்” என்பதேயாகும். நதிக்கப்பால் ஒரு ஒரு மேலான தேசம் உண்டு. நாம் அந்த தேசத்தை சந்திக்கும் வரை தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்போமாக. 24 இப்பொழுது, அவர்கள் இங்கே ஒரு பிரதிஷ்டைக்காக சகோதரன் ஸ்டிக்கர் மற்றும் சகோதரி ஸ்டிக்கரினுடைய குழந்தையை வைத்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன். எனவே அதை… 25 சகோதரி ஸ்டிக்கருக்கு, அது இப்பொழுது எத்தனையாவது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? [சகோதரி ஸ்டிக்கர், “ஆறாவது” என்று கூறுகிறார்.—ஆசி.] ஆறு குட்டி நபர்கள். அது ஒரு அழகான சிறு குடும்பம்.

1226 எனவே அவர்கள்…ஆப்பிரிக்காவில் நம்முடைய மிஷனரிகளாய் இருந்து, அண்மையில், திரும்பி வந்துள்ளனர். அவர்களுடைய பிள்ளைகள் யாவரும் அழகிய குட்டி நபர்களாக இருக்கின்றனர். அவர்கள் அதை இந்தக் காலை ஒரு பிரதிஷ்டை ஆராதனைக்காக கொண்டு வருகையில், என்னால் இந்த ஒன்றையும், கூட, காண முடிகிறது. 27 டெடி எங்கே? டெடி, மகனே ஒரு நிமிடம், இங்கே இந்த இசை பேழையண்டை நீ வருவாயா? மேலும்—மேலும் நாம் நம்முடைய பாடலை, ஒரு சிறிய பாடலை, உங்களுக்குத் தெரியும், அந்த சிறிய பாடலை பாடுவோம், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் என்று, நாம் பாடுவோம் என்று, நான் நினைக்கிறேன். அது சரியா? “பாவக்களத்தில் இருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்.” 28 அதுதான், நாம் இதை இசைக்கக் காரணம், ஏனென்றால் பெற்றோர்களாகிய, நாம், நாம் நம்மால் முடிந்த எல்லாவற்றோடும், பிரதிஷ்டைக்காக அவர்களை கொண்டு வருகிறோம். நாம் அவர்களை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்ய அவர்களை உள்ளே கொண்டு வருகிறோம் அவர்கள் இன்னமும் குழந்தைகளாய் இருக்கையில், அதாவது அவர்கள் பாவ களங்களுக்குள் வழி தவறமாட்டார்கள். அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள். நாம் அப்படியே…டெடி, உங்களுக்கு அது தெரியுமா? நாம் இப்பொழுது அதனுடைய ஒரு சரணத்தைப் பாடுவோமாக. அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், பாவக்களங்களில் இருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்; அவர்களைக்…கொண்டு வாருங்கள் இன்னும் மற்றொன்று இருந்தால், ஏன், அதை இப்பொழுதே கொண்டு வாருங்கள். சிறுவர்களை இயேசுவண்டை கொண்டு வாருங்கள். அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், பாவக்களங்களில் இருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்; அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அலைந்து திரிகின்றவர்களை இயேசுவண்டை கொண்டு வாருங்கள்.

1329 சகோதரன் ஸ்டிரிக்கர் மற்றும் சகோதரி ஸ்டிரிக்கர், அந்தப் பாடல் என்ன பொருட்படுத்துகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் உணருகிறேன், இழந்தவர்களை இயேசுவண்டை கொண்டு வரும்படி முயற்சிக்க, உங்களுடைய இருதயத்தில் எரிந்துகொண்டிருக்கும் வாஞ்சையினால் “அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்.” உங்களுடைய சிறிய குழந்தை, அது பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்பு மரித்தால் அல்லது இன்னும் என்னவாக இருந்தாலும், எப்படியும், அது இரட்சிக்கப்பட்டிருக்கிறது, ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் கல்வாரியில் அதை செய்துவிட்டது. ஆனால் அவருடைய மகத்தான பூமிக்குரிய யாத்திரையின் நினைவாக, அவர் தன்னுடைய கரங்களை சிறுவர்கள் மீது வைத்தபோது, “அவர்கள் என்னிடத்தில் வருவதற்கு இடம் கொடுங்கள்,” என்று கூறினார், அதனால் தான் நீங்கள் இந்த காலை குழந்தையை கொண்டு வருகிறீர்கள். எங்களில் நம்பிக்கை வைத்து, அதாவது நாங்கள் ஒரு விசுவாசமுள்ள ஜெபத்தை ஜெபிக்கும்படி, சிறுவருக்காக, தேவனுக்கென்று அதனுடைய ஜீவியத்தின் பிரதிஷ்டைக்கு கொண்டு வருகிறீர்கள்.

1430 அதனுடைய பெயர் என்ன? [தகப்பனார், “மார்லின் மேட்ஜ் ஸ்டிரிக்கர்” என்று கூறுகிறார்—ஆசி.] மார்லின் மேட்ஜ், மார்லின் மேட்ஜ் ஸ்டிரிக்கர். அதற்கு எத்தனை வயதாகிறது? [தாயார், “பதிமூன்று மாதங்கள்” என்கிறார்.] பதிமூன்று மாதங்கள். ஆப்பிரிக்காவில் பிறந்தது, அது சரிதானே? [“ஆம்.”] பாருங்கள், நாளை என்று ஒன்று, இருக்குமானால், இந்த சிறு குழந்தை அங்கே ஒரு மிஷனரியாக, அவள் பிறந்த அந்த களத்திலேயே இருக்கலாம். ஒரு ஒரு அழகான சிறு குழந்தை. சகோதரன் நெவில், நீர் வருவீரா? 31 மேலும், மார்லின். ஓ, என்னே! நான் எப்பொழுதுமே இந்த சிறு குழந்தைகளை விரும்புகிறேன். இது அழகான குட்டி நபராயிருக்கவில்லையா? நீ எப்படி இருக்கிறாய்? நீ எப்படி இருக்கிறாய்? நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. நீங்கள் உங்களுடைய கரங்களை, அவள் மீது வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 32 எங்களுடைய பரலோக பிதாவே, குட்டி மார்லின் மேடஜ்ஜை நாங்கள் உம்மடத்திற்கு கொண்டு வருகிறோம், யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்தபோது, ஊழிய களத்திலே இந்த அழகான சிறு குழந்தை பிறந்தது. நீர் இந்த குழந்தையை ஆசீர்வதிக்குமாறு நான் ஜெபிக்கிறேன். வேதாகமத்தில், அவர்கள் இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளை உம்மிடத்தில் கொண்டு வந்தனர். நீர் உம்முடை கரங்களை மேலே வைத்து அவர்களை ஆசீர்வதித்து, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடம் கொடுங்கள், அவர்களை தடைபண்ணாதிருங்கள்; பரலோக இராஜ்ஜியம் அப்படிப்பட்டவரகளுடையது” என்று கூறினீர்.

1533 இன்றைக்கு, தாயும் தகப்பனும் அதை எங்களுடைய கரங்களில் வைக்கின்றனர். நாங்கள், விசுவாசத்தினால், அப்பாலுள்ள அந்த படிகளில் ஏறி, விசுவாசத்தினால், அதை உம்முடைய கரங்களில் வைக்கிறோம். இவளுடைய ஜீவியத்தை ஆசீர்வதியும். கர்த்தாவே, இவளுக்கு ஒரு நீண்ட ஆயுளைத் தாரும். இவள் ஒரு தேவனுடைய பிள்ளையாய் இருப்பாளாக. இவள் தன்னுடைய ஜீவியம் முழுவதும், அவளுடைய ஒவ்வொரு தசைநாருடனும், ஒரு கிறிஸ்துவின் ஊழியக்காரியாக, உமக்கு சேவை செய்வாளாக. பிதாவே, இதை அருளும். அவளுடைய தகப்பனையும் தாயும், அவளுடைய குட்டி சகோதரர்களையும் சகோதரிகளையும் ஆசீர்வதியும். அவர்களும், கூட, தேவனுடைய சேவைக்கென்று ஒரு மகிமையான குடும்பமாக இருக்கும்படி வளருவார்களாக. 34 பிதாவே, ஒரு சேவை ஜீவியத்திற்காக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நாங்கள் குட்டி மார்லின் மேட்ஜை உம்மிடத்தில் அளிக்கிறோம். அவளையும், அவளுடைய தகப்பனையும், அவளுடைய தாயையும், அவளுடைய அன்பார்ந்தவர்களையும் ஆசீர்வதியும். உம்முடைய சேவையில் அவர்கள் நீண்ட காலமாகவும், மகிழ்ச்சியான ஜீவியங்களாகவும் ஜீவிப்பார்களாக. இயேசுவின் நாமத்தில். ஆமென். 35 சகோதரன் ஸ்டிரிக்கர், தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஓர் அருமையான குட்டி பெண்மணியின் மீது ஆசிர்வாதங்கள் இருப்பதாக. மகனே, டெடி, உமக்கு நன்றி. 36 நான் சிறு பிள்ளைகளை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா?

1637 கர்த்தர் எனக்கு அளித்த தரிசனத்தை எத்தனை பேர் ஒருபோதும் கேட்காமல் இருக்கிறீர்கள்? அதை ஒருபோதும் கேட்காதவர்கள், உங்களுடைய கரங்களை உயர்த்துவதை நாங்கள் காண்போமாக. சகோதரன் நெவில், ஒருவேளை, நீர் அங்கே உங்களுடைய சிறு புத்தகத்தை வைத்திருக்கலாம், நீர் அதை இங்கே அவர்களுக்காக அப்படியே அடுத்த அல்லது இரண்டு நிமிடங்கள் அதை வாசிக்கலாம். நான் அதை விசுவாசிக்கிறேன்…நீங்கள் விரும்பினால், சரியாக இங்கே வாசிக்கலாம்.

1738 [ முழு சுவிசேஷ புருஷர்களுடைய சத்தம் 1961 பிப்ரவரி மாத இதழிலிருந்து சகோதரன் நெவில் வாசிக்கிறார்—ஆசி.] [அன்றொரு நாள் காலை நான் என்னுடைய படுக்கையின் மேல் படுத்திக்கொண்டிருந்தேன். நான் உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டேன், மேலும் நான் என்னுடைய கரங்களை என்னுடைய தலைக்கு பின்னால் வைத்து, தலையை தலையணை மேல் வைத்து ஓய்வாய் இருந்தேன். அப்பொழுது மறுபுறத்தில் இது எப்படி இருக்கும் என்று நான் யோசிக்க துவங்கினேன். நான் என்னுடைய பாதி வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன் என்பதையும் நான் தெளிவாக உணர்ந்தேன் நான் என்னுடைய ஜனங்களைப் போன்று வயோதிபனாக ஜீவித்தால், நான் இந்த ஜீவியத்தை விட்டு செல்வதற்கு முன்பு கர்த்தருக்காக நான் இன்னும் அதிகமாக ஊழியம் செய்ய விரும்பினேன்.]

18[ஒரு சத்தம், “நீ இப்போதுதான் தொடங்கி இருக்கிறாய்! யுத்தத்தில் முன்னேறு! தொடர்ந்து முன்னேறிக் கொண்டிரு!” என்று கூறுகிறதை நான் கேட்டேன். நான் அங்கே இந்த வார்த்தைகளை யோசித்துக் கொண்டிருந்தபோது, நான் ஒரு சத்தத்தை கேட்டேன் என்பதை நான் சற்று யூகித்துப் பார்த்தேன் என்பதை நான் எண்ணினேன். மீண்டும் அந்த சத்தம், “யுத்தத்தில் முன்னேறு! தொடர்ந்து போய்க்கொண்டேயிரு! தொடர்ந்து போய்க்கொண்டேயிரு!” என்று கூறினது. இன்னமும் நம்பாமல், நான் இந்த வார்த்தைகளை தானாகவே பேசிக் கொண்டேன் என்று எண்ணினேன். நான் என்னுடைய உதடுகளை என்னுடைய பற்களுக்கு இடையே வைத்துக்கொண்டும் மற்றும் என்னுடைய வாயின் மேல் என்னுடைய கரத்தை வைத்துக்கொண்டும் கேட்டேன். அந்த சத்தம் மீண்டும்: “தொடர்ந்து முன்னேறிக்கொண்டேயிரு! பாதையின் முடிவிலே என்ன இருக்கிறது என்பதை மாத்திரம் நீ அறிந்திருந்தால் நலமாயிருக்கும்!” என்று உரைத்தது. ஒரு பண்டைய, பழக்கமான பாடலின் வார்த்தைகளையும் இசையையும் நான் கேட்கத் தோன்றிற்று:] [நான் வீடு செல்ல வேண்டும் என்ற ஏக்கங்கள் உண்டு, நான் இயேசுவை காண விரும்புகிறேன்,] [நான் அந்த துறைமுக மணிகள் ஒலிப்பதைக் கேட்க விரும்புகிறேன்,] [அது என் பாதையை பிரகாசமாக்கி என்னுடைய எல்லா பயங்களையும் போக்கிவிடும்;] [கர்த்தாவே, காலத்தின் திரைக்கபால் நான் நோக்கிப் பார்க்கட்டும்.] [அப்பொழுது அந்த சத்தம்: “திரைக்கபால் நீ காண விரும்புகிறாயா?” என்று கேட்டது. நான்: “அது எனக்கு மிகவும் உதவியாக இருக்குமே!” என்று பதிலளித்தேன்.]

19[என்ன சம்பவித்தது என்பதை என்னால் கூற முடியாது. நான் சரீரத்திலிருந்தேனோ அல்லது இல்லையோ அல்லது நான் ஒரு மறுரூபப்படுத்தலில் இருந்தேனோ, எனக்குத் தெரியாது, ஆனால் நான் எப்போதும் கண்டிருந்த எந்த தரிசனமும் அதைப் போன்று இல்லாததாய் இருந்தது. நான் அழைத்துச் செல்லப்பட்ட இடத்தையும் என்னால் காண முடிந்தது மற்றும் அங்கே என் படுக்கையின் மேல் நானே படுத்து கிடந்ததையும் என்னால் பார்க்க முடிந்தது. நான்: “இது ஒரு வினோதமான காரியமாய் இருக்கிறதே!” என்றேன்.] [அங்கே திரளான எண்ணிக்கை கொண்ட ஜனங்கள் இருந்தனர் மற்றும் அவர்கள் என்னை வாழ்த்த ஓடிவந்து, “ஓ, எங்களுடைய விலையேறப்பெற்ற சகோதரனே!” என்று சத்தமிட்டனர். முதலாவது இளம் பெண்கள், தங்களுடைய கிட்டத்தட்ட இருபது வயதுகளில் இருந்தனர், அவர்கள் என்னை கட்டித் தழுவினபோது அவர்கள்: “எங்கள் விலையேறப்பெற்ற சகோதரனே!” என்றனர். வாலிபர்கள், தங்களுடைய இளமையின் பிரகாசத்தில், ஒரு இருண்ட இரவில் மின்னும் நட்சத்திரங்களை போன்ற கண்களோடும், முத்துக்களைப் போன்ற வெண்மையான பற்களோடு, என்னைக் கட்டித் தழுவி, “எங்களுடைய விலையேறப்பெற்ற சகோதரனே” என்று கூறினர்.]

20[அப்பொழுது நானும் கூட மீண்டும், வாலிபமாக இருந்தேன் என்பதை நான் கவனித்தேன். நான் அங்கு என்னையே பார்த்துவிட்டு திரும்பி படுக்கையின் மேல் என்னுடைய தலைக்கு பின்னால் என்னுடைய கைகளை வைத்திருப்பதோடு கிடந்த என்னுடைய பழைய சரீரத்தை நோக்கி பார்த்தேன். நானோ: “எனக்கு இது புரியவில்லையே!” என்றேன்.] [நான் இருந்த இடத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கத் துவங்கினபோது, அங்கே நேற்று என்பதும் இல்லை நாளை என்பதும் இல்லை என்பதை நான் தெளிவாக உணர்ந்துகொள்ளத் துவங்கினேன். யாருமே சோர்வடைவதாகத் தெரியவில்லை. நான் எப்போதும் கண்டிருந்ததிலேயே திரளான மிகவும் அழகான வாலிப ஸ்திரிகள் தங்களுடைய கரங்களை என்னை சுற்றிப் போட்டுக் கொண்டிருந்தனர், ஒரு மகத்தான அன்பினால் மாத்திரமே நான் மூழ்கடிக்கப்பட்டிருந்ததையும் மற்றும் மானிட நடத்தையில் எந்த ஒரு சரீரப்பிரகாரமான கவர்ச்சியும் இல்லாதிருந்ததையும் நான் கண்டுபிடித்தேன். இந்த வாலிப ஸ்திரீகள் யாவருக்கும் அவர்களுடைய முடி இடுப்பு வரை இருந்ததையும் அவர்களுடைய பாவாடைகள் அவர்களுடைய கால்களுக்கு கீழ் வரை இருந்ததையும் நான் கவனித்தேன்.]

21[இதற்குப் பிறகு, ஹோப், என்னுடைய முதல் மனைவி, என்னைக் கட்டித்தழுவி, “என்னுடைய விலையேறப்பெற்ற சகோதரனே!” என்று கூறினாள். அதன் பின்னர் மற்றொரு வாலிபப் ஸ்திரீ என்னைக் கட்டித் தழுவ ஹோப் திரும்பி அந்த வாலிப ஸ்திரீயைக் கட்டித் தழுவினாள். நான்: “எனக்கு இது புரியவில்லையே. இது நம்முடைய மானிட அன்பிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்ட ஒன்றாய் இருக்கிறதே. படுக்கையின் மேல் இருந்து அந்த பழைய சரீரத்திற்குள் நான் திரும்பிப் போக விரும்பவில்லை” என்றேன்.] [அப்பொழுது ஒரு சத்தம் என்னிடம்: “இதுதான் நீ பிரசங்கித்த பரிசுத்த ஆவியாக உள்ளது! இதுவே பரிபூரண அன்பு. அது இல்லாமல் இங்கே எதுவுமே பிரவேசிக்க முடியாதே!” என்று உரைத்தது.]

22[அடுத்தபடியாக நான் ஒரு உயரிய ஸ்தலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டேன். என்னைச் சுற்றிலும் பெரும் எண்ணிக்கை கொண்ட புருஷரும் ஸ்திரிகளும் மலர்ந்த இளமைப் பருவத்தில் இருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியினால்: “ஓ, எங்களுடைய விலையேறப்பெற்ற சகோதரனே, நாங்கள் உம்மை இங்கே காண்பதில் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறோம்!” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். நானோ: “நான் சொப்பனம் கண்டு கொண்டிருக்கவில்லை, ஏனென்றால் என்னால் இந்த ஜனங்களைக் காண முடிகிறது மற்றும் படுக்கையின் மேல் அங்கே என்னுடைய சரீரம் கிடைப்பதையும் என்னால் காண முடிகிறதே” என்று எண்ணினேன்.]

23[அப்பொழுது அந்த சத்தம் என்னிடத்தில்: “தீர்க்கதரிசிகள் தங்களுடைய ஜனங்களோடு சேர்க்கப்பட்டார்கள் என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதை நீர் அறிவீர்” என்று உரைத்தது. நான்: “ஆம் அது வேத வாக்கியங்களில் உள்ளது என்பது எனக்கு நினைவிருக்கிறது ஆனால் இத்தனை பிரான்ஹாம்கள் இல்லையே” என்றேன். அந்த சத்தமோ: “இவர்கள் பிரான்ஹாம்கள் அல்ல. இவர்கள் உன்னால் மனமாற்றமடைந்தவர்கள், இவர்களை நீர் கர்த்தரிடத்திற்கு வழிநடத்தியிருக்கிறீர்” என்று பதிலளித்தது. மிகவும் வாலிபமாகவும் அழகாகவும் இருக்கிறதாக நீ நினைக்கிற இந்த ஸ்திரீகளில் சிலரை நீ கர்த்தரிடத்தில் வழி நடத்தியபோது அவர்கள் தொண்ணூறு வயதிற்கும் மேம்பட்டவர்களாக இருந்தனர். அவர்கள், ‘என்னுடைய விலையேறெப்பெற்ற சகோதரனே!’” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்ததில் வியப்பொன்றுமில்லையே. அப்பொழுது திரளானவர்கள் ஒன்று சேர்ந்து: “நீர் சுவிசேஷத்தோடு புறப்பட்டு செல்லாதிருந்திருந்தால், நாங்கள் இங்கு இருக்க மாட்டோமே!” என்று சத்தமிட்டனர்.] [நான்: “ஓ, இயேசு எங்கே இருக்கிறார்? நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன்!” என்று கேட்டேன். அதற்கு ஜனங்களோ: “அவர் இன்னும் சற்று உயரத்தில் இருக்கிறார். என்றோ ஒருநாள் அவர் உம்மிடத்திற்கு வருவார். நீர் ஒரு தலைவனாக அனுப்பப்பட்டிருந்தீர், தேவன் வருகிறபோது, உம்முடைய போதகத்திற்கேற்றபடி உம்மை நியாயந்தீர்ப்பார்” என்று பதிலளித்தனர். நான்: “பவுலும் பேதுருவும் கூட இந்த நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கு பதிலோ: “ஆம்!” என்பதாயிருந்தது. நான், “அவர்கள் பிரசங்கித்ததையே நான் பிரசங்கித்துள்ளேன். நான் அதிலிருந்து ஒரு பக்கத்திற்கு அல்லது மறுபக்கத்திற்கு திசை திருப்பவில்லை. அவர்கள் எங்கே இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார்களோ, நானும் கூட கொடுத்தேன்; அவர்கள் எங்கே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை போதித்தார்களோ, அங்கே நானும் கூட போதித்தேன். அவர்கள் என்னவெல்லாம் போதித்தார்களோ, நானும் கூட போதித்தேன்” என்றேன்.]

24[ஜனங்களோ, “நாங்கள் அதை அறிவோம்” என்றும், “நாங்கள் எப்போதாவது உம்மோடு பூமிக்கு திரும்ப போகிறோம் என்பதை நாங்கள் அறிவோம். நீர் எங்களுக்குப் பிரசங்கித்த வார்த்தையின்படியே இயேசு வந்து உம்மை நியாயந்தீர்ப்பார். அப்பொழுது நீர் எங்களை அவருக்கு அளிப்பீர், நாம் யாவரும் ஒன்று சேர்ந்து என்றென்றைக்குமாய் ஜீவிக்கும்படி பூமிக்கு திரும்புவோம்” என்று சத்தமிட்டனர். நான்: “நான் இப்பொழுது பூமிக்கு திரும்பி செல்ல வேண்டுமா?” என்று கேட்டேன். அவர்களோ: “ஆம், ஆனால் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிரு!” என்று பதிலளித்தனர்.]

25[நான் அந்த அழகான, மகிழ்ச்சியான இடத்தை விட்டு நகரத் தொடங்கினேன், என் கண்களுக்கு எட்டிய தூரம் வரை பார்க்கையில், ஜனங்கள் என்னைக் கட்டித்தழுவும்படி என்னை நோக்கி ஓடி வந்து கொண்டும், “என்னுடைய விலையேறெப்பெற்ற சகோதரனே!” என்று கூக்குரலிட்டுக் கொண்டுமிருந்தனர்.] [திடீரென்று நான் மீண்டும் படுக்கையில் இருந்தேன். நான்: “ஓ, தேவனே, எனக்கு உதவி செய்யும்! நான் ஒருபோதும் வார்த்தையை விட்டுக் விலகாதிருப்பேனாக. நான் நேராக வார்த்தையிலே தரித்திருக்கட்டும். வேறு எவரும் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. கர்த்தாவே, நான் அந்த அழகான, சந்தோஷமான இடத்திற்கு நெருங்கி முன்செல்வனாக!”] [அந்த இடத்திற்குள் பிரவேசிப்பதற்கு பரிபூரண அன்பு தேவைப்படும் என்பதை நான் என் வாழ்க்கையில் முன்னெப்போதையும்விட உறுதி கொண்டிருக்கிறேன். பொறாமையோ, களைப்போ, சுகவீனமோ, முதிர்ந்த வயதோ, மரணமோ அங்கு இருக்கவில்லை. உன்னத அழகும் மகிழ்ச்சியும் மாத்திரமே இருந்தது!] [நீங்கள் எதை செய்தாலும், நீங்கள் பரிபூரண அன்பை பெறும் வரை மற்ற எல்லா காரியத்தையும் ஒதுக்கி வைத்துவிடுங்கள்! நீங்கள் எல்லோரையும், ஒவ்வொரு சத்துருவையும் கூட நேசிக்கக்கூடிய இடத்திற்குச் செல்லுங்கள். விமானம் ஆடிக்கொண்டிருந்தாலும், மின்னல் அடித்துக்கொண்டிருந்தாலும், அல்லது சத்துருவின் துப்பாக்கிகள் உங்கள் மேல் வந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, எந்த காரியங்களும் முக்கியமல்ல: பரிபூரண அன்பை பெற்றுக்கொள்ளுங்கள்!] [நீங்கள் இரட்சிக்கப்படவில்லையென்றால், இயேசு கிறிஸ்துவை இப்பொழுதே உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்! நீங்கள் தண்ணீரில் ஞானஸ்தானம் பண்ணப்படவில்லையென்றால், இப்பொழுதே ஞானஸ்நானம் பண்ணப்படுங்கள்! நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளவில்லையென்றால், அதை இப்பொழுதே பெற்றுக்கொள்ளுங்கள்! காலத்தின் திரைக்கப்பால் அந்த அழகான மகிழ்ச்சியான ஸ்தலத்திற்கு உங்களை கொண்டு செல்லும் அந்த பரிபூரண அன்பின் பேரில் நெருங்கி முன்னேறுங்கள்!]

2639 சகோதரனே, அதற்காக, உங்களுக்கு நன்றி. அது… உங்களில் சிலர் அதை, ஒருவேளை, படிப்பீர்கள் என்று நான் எண்ணினேன். நீங்கள் அந்த சிறு புத்தகத்தை பெற்றிருக்கவில்லையென்றால், ஏன், நீங்கள் அதை இப்பொழுதே பெற்றுக்கொள்ளலாம். 40 அதன்பின்னர், அங்கே அந்த பக்கத்தின் கீழே, அவர் அங்குள்ள ஊழியத்தைப் பற்றி இடையில் ஒரு சிறிய குறிப்பைச் சேர்த்துள்ளார். நீங்கள் அதைப் படித்த பிறகு, சரியாக கீழே, நீங்கள் அதை கவனித்தீர்களா இல்லையா என்று தெரியவில்லை. சரியாக கீழே, ஒரு சிறு குறிப்பைச் சேர்த்துள்ளார். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] 41 இப்பொழுது, அது கிட்டத்தட்ட வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு மொழியிலும் செல்கிறது, நீங்கள் பாருங்கள், உலகம் முழுவதும் படிக்கும்படியாகவே.

2742 இப்பொழுது, “என்ன—என்ன…” சரி, நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு முன்பு, நீர் என்ன சொல்லுவீர்?” என்று கேட்கிறீர்கள். 43 இதன் காரணமாகவே: நம்முடைய முயற்சிகள் வீணானதாய் இருக்கவில்லை என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். புரிகிறதா? அன்பு மற்றும் விசுவாசத்தின் வழியாகவே நாம் தேவனை அணுக வேண்டும். விசுவாசம் அந்த வழிக்கு நம்மை கொண்டு செல்கிறது. அன்பே நம்மை உள்ளே அழைத்துச் செல்லுகிறதாய் உள்ளது. (என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.) [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] 44 இப்பொழுது தேவன்…என்று நீங்கள் நினைக்கிறீர்களா. இப்பொழுது நாம்…இப்பொழுது, உங்களுடைய விசுவாசம் இப்பொழுது ஒரு இடத்திற்கு வந்தடைகிறது, நீங்கள் அதை நினைக்கிறீர்களா…? அந்த முயற்சிகள் அனைத்தையும் இப்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்… இந்த கூடாரமும் இங்குள்ள இந்த ஜனக் குழுக்களும், தேவனுடைய ராஜ்ஜியத்திற்காக அவைகளை முன்வைத்துள்ளதைக் குறித்து என்ன நினைப்பீர்கள்? உங்கள் பிள்ளைகளை, தேவனுடைய ராஜ்ஜியத்திற்காக, அனுமதிக்கும் பல இங்கே உள்ளன. தேவனுடைய ராஜ்ஜியத்திற்காக, ஆடைகளைப் பறிகொடுத்தவர்கள் அநேகர் இங்குள்ளனர். புயல்களினினூடாகவும், தங்களுடைய பாதங்களில் பாதரட்சைகள் இல்லாமலே, தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக, இங்கே கூடாரத்துக்கு வர நடந்தது வந்தவர்கள் அநேகர் இருக்கின்றனர், அது உண்மை.

2845 ஒரு ஓவியன் ஒரு மகத்தான படத்தை, அது மிகச் சிறப்பாகுமளவிற்கு அழகாக வர்ணந்தீட்டி, அதன்பின்னர் அதை கிழித்துவிடுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்பொழுது இந்த ஓவியனோடு ஏதோ காரியம் தவறாய் இருக்கும். ஒரு இசையமைப்பாளர் ஒரு பாடலை மிகச் சிறப்பாகுமளவிற்கு அதை எழுதி, அதன்பின்னர் தன்னுடைய—தன்னுடைய இசையைக் கிழித்துப் போடுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இசையமைப்பாளரிடம் ஏதோ தவறு இருக்கும். புரிகிறதா? தேவனோடு எந்த தவறும் இல்லை. தேவன் இதுபோன்ற ஒரு காரியத்தை உருவாக்கி, பின்னர் அதைக் கிழித்து அதை வீசியெறிவதில்லை. அது அவருடைய இராஜ்யத்திற்கானதாயுள்ளது. அது அவருடைய மகிமைக்கானதாயுள்ளது. 46 நாம் ஒவ்வொருவரும் இந்த படத்தில், இந்தப் பாடலில் ஒரு பங்கு வகிக்கிறோம். நாம் தேவனுடைய இராஜ்யத்தின் பாகங்களாக இருக்கிறோம். அதாவது, நாம் எந்நிலையில் இருக்கிறோம் என்பதை நான் தெளிவாக உணரும் வரையில் நம்மால் நம்முடைய பாகங்களை வகிக்க முடியும், இந்த இடத்திற்கு உரியவராயிருந்து, அதன்பின்னர் நாம் அங்கு அந்த இடத்திலேயே தரித்திருக்கிறோம். நமக்குத் தெரிந்த ஒரே இடம், அது அன்பில் உள்ளது, ஏனென்றால் அதுதான் காட்சியை உருவாக்குகிறது.

2947 இப்பொழுது, நீங்கள் அதைப் போன்ற தரிசனங்களையும் மற்ற காரியங்களையும் காணும்போது, மறுபுறத்தில் என்ன—என்ன உள்ளது என்பதை புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. நான் அறிந்திருக்க விரும்பினேன். பண்டைய தீர்க்கதரிசிகள், அவர்கள் எப்படி இந்த தரிசனங்களை கண்டார்கள் என்பதை கூறும்படி, அந்த மனிதன் இங்கே சிறு குறிப்பை சேர்த்துள்ளார், அது போன்றவற்றை, எப்படி அதை, இன்றைக்கு, அப்பாலும் கூட என்ன… நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடியாது, ஆனால் கர்த்தர் நம்மை அதற்குள்ளாக நெருக்கி அது என்னவாக உள்ளது என்பதை காணும்படி செய்துள்ளார். 48 இப்பொழுது, நண்பர்களே, நான் உறக்கத்தில் இருக்கவில்லை. நான், உங்களுக்கும் எனக்கும், மற்றும் இந்த சபைக்கு, நான் ஒரு தரிசனத்தில் இருக்கவில்லை. ஒரு தரிசனம் என்றால் என்ன என்பதை நான் அறிவேன். இங்கு சில, கடந்த வாரம், சில, ஒரு இரவு, முப்பது முறைகள் சம்பவித்திருந்தது, அது அவ்வாறு சம்பவிக்கும். உங்கள் மேல் உள்ள இந்த பாரத்தை உங்களால் யூகித்து பார்க்க முடியும். உண்மையாகவே, உங்களை பதட்டமடையச் செய்கிறது.

3049 வெறுமென பொறுப்பு, அதைப் போன்ற ஒரு கூட்டத்துக்கு நீங்கள் சென்றிருந்தால் என்ன செய்வது, கூட்டம் சரியாக நடந்தாலும் அல்லது இல்லையென்றாலும், உங்கள் மீது, வெறுமன—வெறுமனே அந்த பொறுப்பு இருக்குமல்லவா? நீங்கள் ஒவ்வொரு ஊழியக்காரருக்கும், ஒவ்வொரு கேள்விக்கும், ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டும். கூட்டம் சரியாக நடந்தாலும் அல்லது இல்லையென்றாலும், அது உங்கள் மீது, மாத்திரமே, அந்த பொறுப்பை சுமத்துகிறது. அது உங்களுக்கு என்ன செய்யும் என்பதைப் பாருங்கள். 50 என்னுடைய கூட்டாளிகளில் சிலர், வெறுமண புத்தகங்கள், போன்றவற்றை விற்கின்றவர்களாக உள்ளனர், மிகவும் பதட்டமாகி, அவர்கள் வீட்டிற்கு சென்று, பாருங்கள், படுத்துக்கொண்டு, அன்றிரவு சபைக்கு வரமாட்டார்கள். என்னே! ஓ, அது பயங்கரமானது. என்னுடைய மருமகளைப் போல, அருமையான வாலிப கிறிஸ்தவ பெண், லாய்ஸ். பொறுப்பேதுமின்றி வெறுமனே—வெறுமனே கூட்டத்திற்கு மட்டும் செல்வதனால், அவண்ணமாக…எட்டு வாரங்கள் அல்லது ஏழு வாரங்கள், அதைப் போன்று தொடர்ச்சியாக, பாருங்கள், ஒருநாள் அல்லது இரண்டு நாளாக படுக்கையில் படுத்திருக்க வேண்டியவளாய் இருக்கிறாள். புரிகிறதா? பில்லி, சில ஜெப அட்டைகளைக் கொடுக்க, மிகவும் களைத்துப் போய்விடுகிறான். 51 ஆனால், பாருங்கள், முழு பாரமும் என் மேல் இருக்கிறது. எனக்காக ஜெபிக்கும்படி உங்கள் பேரில் நான் சார்ந்திருக்க வேண்டும். புரிகிறதா? அதுமட்டுமின்றி, ஆவியின் ஏவுதலின் கீழான, அந்த—அந்த இருபது நிமிட பிரசங்கம், உங்களுடைய சரீரத்துக்கு எட்டு மணி நேர கடின உழைப்புடன் ஒப்பிடப்படுகின்றது என்று—என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஒரு இரவு பிரசங்கிக்கிறேன்; சில நேரங்களில் ஒரு நாளைக்கு மூன்று முறைகள். புரிகிறதா?

3152 அப்படியானால் ஒரு தரிசனத்தைக் குறித்து என்ன? ஒரு தரிசனம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவை பலவீனப்படுத்தினது. அது உண்மை. ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு, அவரை பலவீனப்படுத்தினதாக வேதம் உரைத்துள்ளது. பாருங்கள், ஒரு தரிசனம் அவரை, அவரையே, தேவகுமாரனையே பலவீனப்படுத்துமானால்; கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவியாகிய, என்னைக் குறித்து என்ன, ஒரு இரவில் அவைகளில் முப்பது என்ன செய்யும்? புரிகிறதா? அது…நாம் சற்று யோசித்துப் பார்த்தால், அது எந்த மானிடனுக்கும் அப்பாற்பட்டதாக உள்ளது. ஒரு மானிட சரீரம் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. நான் என்னுடைய தலையை சுவர்களுக்கு எதிராக மோதிக்கொண்டு, எங்காவது பைத்தியக்கார விடுதியில் இருப்பேன். புரிகிறதா? அது—அது உங்களால் முடியாத…அப்படிப்பட்ட ஒரு பலவீனமாக இருக்கிறது அது உட்புறத்தில் பலவீனமாயிருந்து, பாருங்கள், அது உங்களைக் கொல்லுகிறது. 53 இப்பொழுது, ஆனால் அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? நான் இதைக் கூறுவேனாக. நான் அங்கு, சகோதரன் மற்றும் சகோதரி காக்ஸையும், இங்கே, ராட்னி மற்றும் அவருடைய மனைவியையும், சகோதரியையும், அங்கே பின்னால் உள்ள, புதியதாக மனமாற்றமடைந்தவர்களையும் காண்கிறேன். எங்கோ அப்பால், ஒரு தேசம் உண்டு, அதாவது நீங்கள் உங்களுடைய மனதில் சற்று சிந்தித்துப் பார்க்க முடியுமானால் அதனுடைய ஒரு காட்சியை புரிந்துகொள்ள முடியும், அது மிகவும் மகிமையான காரியம். நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அதற்கு பாத்திரமானதாக உள்ளது. புரிகிறதா?

3254 இப்பொழுது, வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு முன்னர், நான் இதைக் கூறுவேனாக: 55 ஒரு சிறிய குழந்தை, அது பிறப்பதற்கு முன்னால், நாம் அதை எடுத்துக்கொள்வோமாக, இந்த ஒன்பது மாதங்களாக, தாயின் கருப்பையில் வாழும் ஒரு சிறு குழந்தை, அந்த சிறு குழந்தையால் என்ன சிந்திக்க முடியும்? அது, “என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் பிறப்பதற்கு ஆயத்தமாகக் கொண்டிருக்கிறேன் என்று அவர்கள் என்னிடத்தில் சொல்லுகிறார்கள். பாருங்கள், நான் அங்கு வெளியே என்ன செய்வேன்? நான் இங்கு வாழ்கிற இந்த இடத்தைத் தவிர எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் உள்ளிருந்தே என்னுடைய பெலனை பெற்றுக்கொள்கிறேன். நான் எப்படி அங்கு வெளியே ஜீவிப்பேன்? அங்கே பிரகாசிக்கின்ற ஒரு சூரியன் உண்டு என்று அவர்கள் எனக்கு சொல்கிறார்கள். அங்கே ஜனங்கள் சுற்றி நடப்பதாக அவர்கள் என்னிடம் சொல்லுகிறார்கள். நான் இங்குள்ள இந்த இடத்தைத் தவிர வேறொன்றுமே எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான், இங்கு உள்ள என்னுடைய தாயின் கருப்பையே. இங்குதான் நான் கொண்டுவரப்பட்டேன். நான் இங்கு அறிந்துள்ளதெல்லாம் இந்த கருப்பையில் இருப்பதையே. அங்கு பன்மடங்கு இடம் உண்டு என்று அவர்கள் எனக்கு சொல்லுகிறார்களே!” என்று கூறும். 56 பாருங்கள், அந்த சிறிய குழந்தை பிறப்பதற்கு, மரண பயம் ஏற்படும். அது உண்மைதானே? அதற்கு மரண பயம் ஏற்படும், ஏனென்றால் அது ஒன்றையுமே அறியாதிருக்கிற ஒரு இடத்திற்கு வந்துகொண்டிருக்கிறது, அது உயர்வானதாக இருக்கிறது, அது வாழ்ந்துகொண்டிருக்கிற இடத்தைக் காட்டிலும் லட்சக்கணக்கான மடங்கு உயர்ந்ததாய் இருக்கிறது. அது இதைக் குறித்தெல்லாம் என்ன என்பதை அறிந்துகொள்ளாது, அது, “எப்படி, நான் என்ன செய்யப் போகிறேன்?” என்று கூறும். அதற்குப் பிறப்பதற்கு மரண பயம் ஏற்படும், ஆனால் இங்கு ஜீவிக்கிற நாம், பாருங்கள், ஒரு முறை நாம் அங்கு இருந்தோம், எந்த வகையிலும் நாம் அங்கு திரும்பிச் செல்லமாட்டோம், நாம் மீண்டும் தாயின் கருப்பைக்குள் திரும்பிச் செல்ல விரும்பமாட்டோம். புரிகிறதா? இல்லை, நாம் அதைச் செய்ய விரும்பமாட்டோம்.

3357 நண்பனே, நாம் மரித்துக்கொண்டிருக்கும் போதும் அதே விதமாகத்தான் இது உள்ளது. ஓ, தேவனே! பார்த்தீர்களா? நீங்கள் ஒரு இடத்திற்குள்ளாக பிறந்திருக்கின்றீர்கள். நீங்கள் அங்கு ஒருபோதும் இருந்ததில்லை. அது எவ்வளவு மகத்தானதாக உள்ளது என்று, உங்களால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. “அது எப்படி—எப்படி அங்கு இருக்கப் போகிறது? நான்…” என்னை உணர வைக்கிற ஒரே காரியம், அல்லது உங்களை உணர வைக்கிறது, அந்த ஜீவனின் சிறு தொடுதலாயுள்ளது, தாயினுடைய கருப்பைக்குள் இருக்கிற குழந்தைக்குள் வருகிற ஆவியைப் போலவே. புரிகிறதா? அப்பால் உள்ள அந்த மகத்தான தேசம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளக் கூடிய ஒரே வழி அதுவேயாகும், சுகவீனமோ, துக்கமோ, மரணமோ, முதிர்ந்த வயதோ, வேறொன்றுமில்லாதிருக்கும்போது. ஒ, என்னே! 58 ஏன், ஒரு முறை நாம் அங்கு சென்றடையும் போது, இதைப் போன்ற ஒரு இடத்திற்கு நீங்கள் ஒருபோதும் திரும்பி வர விரும்பவேமாட்டீர்கள், ஒரு குழந்தை தன்னுடைய தாயினுடைய கருவறைக்கு திரும்பிச் செல்ல விரும்பாதது போலவே. புரிகிறதா? பாருங்கள், அங்கே வெளியே, மறுபுறம் அவ்வளவு மகத்தானதாக உள்ளது. நாம் அதை புரிந்துகொள்ள முடியாது, நிச்சயமாக முடியாது, நம்மால் முடியாது. ஏன், அந்த சிறு குழந்தை எப்படி எந்த சிந்தனைக்கும் அப்பாற்பட்டதாய் உள்ளதோ, அதே விதமாக நாமும் அங்கே அது என்னவாக இருக்கும் என்ற புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கிறோம், பாருங்கள், ஏனென்றால் நாம் பூமியின் கருவறையிலிருந்து, ஏதோ ஒரு நேரத்தில், ஒரு புதிய ராஜ்யத்திற்குள்ளாக, ஒரு புதிய உலகத்திற்குள்ளாக, பிறக்க ஆயத்தமாய் இருக்கிறோம்.

3459 அந்த விதமாகத்தான் நான் அந்த தரிசனங்களையும் அது போன்று மற்ற காரியங்களையும் உணர்கிறேன், அல்லது நான் அங்கே மறுபுறத்தில், அந்த நாளில் கடந்து சென்றபோது எனக்கு என்ன நேர்ந்ததோ, அது என்னவாயிருந்தது என்பதை கண்டுவிட்டு, அதன்பின்னர் நான் இதற்குள் திரும்பி வருகிறேன். 60 நீங்கள் ஒரு குழந்தையாயிருந்துகொண்டு, அது என்ன என்பதை குறித்ததான ஒரு—ஒரு அறிவைக் கொண்டிருந்து, சுற்றி நடப்பது எவ்வளவு மகிமையானதாய் இருந்தது என்பதை குறித்தும், மரங்கள் பூப்பதையும், பறவைகள் பாடுவதையும், சூரியன் பிரகாசிப்பதையும், மற்றும் இந்தவிதமான ஒரு ஜீவனையும் அறிந்து, அதன்பின்னர் ஒரு கருவறைக்குள் அடைப்பட்டிருக்க வேண்டும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஏன், நீங்கள் திரும்பிச் செல்ல ஒருகாலும், விரும்பவேமாட்டீர்கள். 61 பாருங்கள், அப்படியானால், நாம், நம்முடைய—நம்முடைய சிந்தனை இப்புறத்தில் மரித்திருக்க, அல்லது அங்கே அப்பால் என்ன உள்ளது என்பதைக் குறித்து சிந்திக்கவே முடியாது. எப்பொழுது, வேதமோ, “கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அல்லது தேவன் தம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு, ஆயத்தமாக்கினவைகள், மனுஷனுடைய இருதயத்திற்குள் பிரவேசிக்கவுமில்லை” என்று கூறுகிறது. புரிகிறதா? எனவே அது மறுபுறத்தில் மகிமையானதாய் உள்ளது என்பதை நாம் அறிவோம். என்றோ ஒருநாள், மரணம், நாம் அதை மரணம் என்று அழைக்கிறோம், அது நமக்கு புதிய பிறப்பை கொடுக்கும், அப்பொழுது நாம் மறுபுறத்தில் உள்ள, அந்த மற்றொரு உலகத்திற்குள் வருவோம்.

3562 சகோதரன் ஜார்ஜ், நீங்கள் வயதானவராயும், முடமானவராயும் அங்கே இருக்கமாட்டீர்கள். சகோதரன் மற்றும் சகோதரி ஸ்பென்சர், நம்மில் சிலரைப் போன்ற வயோதிகர்களான, சிலரைப் போன்றவர்கள், நாம் அங்கே என்றென்றும் வாலிபமாக இருப்போம். இந்த பழைய…இந்த மாம்ச வஸ்திரத்தை நான் கீழே போட்டுவிட்டு, எழும்பி நித்திய பரிசை ஆவலோடு பெற்றுகொள்வேன், ஆகாயத்தினூடாக கடந்து செல்கையில், “பிரியாவிடை, பிரியாவிடை, இனிமையான ஜெபவேளை என்று சத்தமிடுவேன்!” 63 அப்பொழுது, யாவும் முடிவுற்றிருக்கும். இனி நீண்ட நேர இரவு ஜெபங்களே, ஒருபோதும் இருக்காது. அந்த வாலிபமான, மகிழ்ச்சியான வயதிற்குள் அங்கு இருக்கும்படியாக பிரவேசித்து, வெறுமென ஒரு வருடத்திற்கோ, அல்லது ஐம்பது வருடங்களுக்கோ அல்லது பத்து லட்சம் வருடங்களுக்கோ அல்ல, ஆனால் அங்கு கோடாகோடி வருடங்களாக இருந்துகொண்டே இருப்போம், நமக்கு துவக்கம் என்பதும் கூட இருக்காது. அவ்வளவுதான். எனவே நாம் ஏன் இந்த காலை மகிழ்ச்சியாய் இருக்கக் கூடாது? நாம் ஏன் களிகூரக்கூடாது? தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஒவ்வொரு மகத்தான காரியத்தையும் நாம் ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது?

3664 இங்கே தெய்வீக சுகமளித்தல் உள்ளது. இயேசு ஏன் வாரினால் அடிக்கப்பட்டார்; “அதற்கு அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை” என்று கூறி, அந்த காட்சியை அழிக்கவா? அவர் அங்கே தம்முடைய சரீரத்தில் வாரினால் அடிக்கப்பட்டு, அதன் மூலமாக விலா எலும்புகள் காட்டப்பட்டன, அதாவது, “அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.” நாம் இந்த காலையில், அந்த காட்சியைக் கிழித்து போடாதிருப்போமாக. நாம் அதை தழுவிக் கொண்டு, அதை ஏற்றுக்கொள்வோமாக. 65 இப்பொழுது, சகோதரனே, நீங்கள் பீடத்தை சுற்றி நிற்பீர்களானால், நீங்கள் ஒவ்வொருவரும் ஜெபிக்கப்பட போகிறீர்கள். ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்நிய பாஷை மற்றும் வியாக்கியானத்தினூடாக செய்தி புறப்பட்டு சென்றபோது, நாம் வியாதியஸ்தர் மீது கரங்களை வைத்து தேவனுடைய வல்லமையான கிரியைகளைக் காண்போம். 66 இப்பொழுது, நம்முடைய சகோதரன், நீங்கள் எழுந்து நிற்க வேண்டியதில்லை, சகோதரனே, அங்கே ஒரு கட்டிலின் மேல் படுத்திருக்கிறவர். நாங்கள் உங்கள் இடத்திற்கு வருவோம். 67 பீடத்தை சுற்றி நிற்க விரும்பி, இங்கே ஜெபித்துக்கொள்ளப்பட மற்ற எவரேனும் இருந்தால், சகோதரனும் நானும் வியாதியஸ்தர் மேல் கரங்களை வைக்கையில், நீங்கள் இப்பொழுதே வாருங்கள். நினைவிருக்கட்டும், அந்த காட்சியை தழுவிக் கொள்ளுங்கள், “அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.” 68 “கர்த்தாவே, நான் அதை புரிந்து கொள்ளவில்லை.” நிச்சயமாக, நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. அப்படியானால் நீங்கள் இன்னமும் பூமியின் கருவறையில் தான் இருக்கிறீர்கள்.

3769 ஆனால் அவர் அந்த ஆயத்தங்களை செய்து விட்டார். அவர் எடுத்துக்கொள்ளமாட்டார்…அவர் ஏன் வாரினால் அடிக்கப்பட்டார்? அப்படியே அந்த காட்சியை கிழித்தெறிந்து, அல்லது அந்த பாடலை கிழித்தெறிந்து, அதை வீசியெறிவதா? இல்லை, ஐயா. நாம் குணமடையும்படியாக, அவர் அடிக்கப்பட்டு, காயப்பட்டு, இரத்தம் சிந்தினார். அதனால் நாம், நாம் ஒவ்வொருவரும், “அவருடைய தழும்புகளால் குணமடைந்தோம்.” இப்பொழுது, நீங்கள் வந்துகொண்டிருக்கையில், ஜெபத்திற்காக பீடத்தை சுற்றி ஒன்று கூடுங்கள். 70 இப்பொழுது, இங்கே இந்த ஏராளமான ஜொலிக்கின்ற அமெரிக்க சுவிசேஷத்தை உடையவர்களாக இருந்து, “நீங்கள் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும்” என்பதை குறித்து பேசுகிறார்கள்.

3871 என்னுடைய நண்பனே, ஒரு காரியத்தைப் பற்றி உங்களுடன் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். காரியமானது, தேவன் சுகமளிக்கிற விதமானது, அவருக்கு சேவை செய்வதின் அடிப்படையில் உள்ளது. புரிகிறதா? அது அவருக்கு சேவை செய்வதன் அடிப்படையில் உள்ளது. நாம் சுகமடைந்த பிறகு நாம் அவருக்கு சேவை செய்வோம் என்பதைக், குறித்த, அடிப்படையில் பேரிலேயே நம்முடைய சுகமளித்தலை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இப்பொழுது, வேதம், “உங்களுடைய குற்றங்களை, ஒருவருக்கொருவர் அறிக்கை செய்யுங்கள். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள்” என்று கூறியுள்ளது. புரிகிறதா? அது நீங்கள் தேவனுக்கு சேவை செய்யும், அடிப்படையில் உள்ளது. இங்குள்ள உங்களில் அநேகர், ஒருவேளை, மரிக்கும் நிலையில் இருந்துகொண்டிருக்கலாம், ஏதோ காரியம் சம்பவிக்கவில்லையென்றால் நீங்கள்—நீங்கள் மரிக்க வேண்டும். அப்படியானால் நீங்கள் உங்கள் இருதயத்தில்…இருக்க விரும்புகிறேன். 72 இப்பொழுது, நாங்கள் உங்களுக்கு எண்ணெய் பூசலாம், நாங்கள் உங்களுக்கு ஜெபிக்கலாம், போதகரும் நானும் விசுவாசமுள்ள ஒரு ஜெபத்தை ஜெபித்து, எங்களால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்யலாம், ஆனால் நீங்கள்தானே கிறிஸ்துவோடு ஐக்கியத்துக்குள்ளாக பிரவேசிக்கும் வரை அது உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது. புரிகிறதா? நீங்கள் அந்த ஐக்கியத்திற்குள்ளாக வரவேண்டும், அதாவது, “நான், கர்த்தாவே…” 73 ஒரு—ஒரு—ஒரு வாலிப பெண்மணி சற்று முன்பு அங்கே இப்பொழுது நடந்து வருவதை நான் காண்கிறேன். அவள் இங்கு, அண்மையில் வீட்டிற்கு, ஒரு கட்டி போன்ற ஏதோ ஒரு காரியத்தோடு, அல்லது நிணநீர் சுரப்பி புற்றுநோயோடு வந்தாள். அவள் விசுவாசத்தினால், ஒரு மெத்தோடிஸ்ட்டாக இருக்கிறாள். அது உண்மை என்று நான் நினைக்கிறேன், இல்லையா, சகோதரியே? மேலும் அவளுக்கு பக்கவாட்டில் ஒரு பெரிய கட்டி இருந்தது. இப்பொழுது அவள் சுகம்டைந்து, நிற்கிறாள்.

3974 நான் என்னுடைய வாழ்நாள் முழுவதும், நான் எப்போதும் கண்டதிலேயே, மிக மோசமான புற்றுநோய் நோயாளிகளில் ஒருவராய் இருந்த, சகோதரி வீவர் இங்கே நிற்கிறதை நான் காண்கிறேன். நான் அவரிடத்தில் கேட்ட முதலாவது காரியம், அவள், “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்தானம் பெற்று,” அவளுடைய பாவங்களை அறிக்கையிடுவாளா என்பதேயாகும். நான் அவளை இங்கே இந்த தண்ணீருக்குள் அழைத்துச் சென்றபோது, நான் அவளைப் பிடித்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது; ஏனென்றால் அவள் மிகவும் ஒல்லியாக இருந்தாள், அவளுடைய கரங்கள், மிகவும் மெலிந்திருந்தன. அவள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டாள். அது குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு முன்பானதாக இருந்தது, அப்படித்தானே சகோதரியே? [சகோதரி வீவர், “இல்லை. அது பதினாறு வருடங்களுக்கு முன்பு” என்கிறாள்.—ஆசி.] பதினாறு வருடங்களுக்கு முன்பு. பதினாறு வருடங்களாக ஜீவன் காப்பாற்றப்பட்டது, ஏனென்றால் அவள் கீழ்ப்படிதலுக்குள் வர மனதுள்ளவளாக இருந்தாள். மிகச் சிறந்த மருத்துவர்கள் இங்கே சுற்றிலும் இருந்தபோது… 75 ஏன், அவளுடைய சொந்த மருத்துவரே என்னிடத்தில் கூறினார். எப்பொழுது, நான் அவரிடத்தில் சொன்னபோது—அவரிடத்தில் சொன்னபோது, “அவள் குணமடைந்துவிட்டாள்” என்று கூறினார்.

4076 “ஓ, ஓ! அவள் இன்னும் ஒரு சில வாரங்களில் புற்று நோயினால் மரித்துவிடுவாள். அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். அவள் போய் விடுவாள். இன்னும் சில வாரங்களில், அவள் போய்விடுவாள்” என்றார். அவர் ஏற்கனவே அவளுக்கு வாழ்வதற்கு கிட்டத்தட்ட ஒரு நாளைத்தான் கொடுத்தார். இங்கோ அவள், இன்றைக்கு, பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும், பீடத்தண்டை நிற்கிறாள். நான் இன்னும் இதற்கு மேல் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் என்ன சொல்ல முடியும்! 77 இப்பொழுது, தேவன் தன்னுடைய பிள்ளைகளில் ஒருவருக்காக அதை செய்கிறதில்லை, மற்றும் அதை மற்றொரு பிள்ளைக்காகவும் செய்கிறதில்லை. அவர் தம்முடைய எல்லா பிள்ளைகளுக்காகவும் செய்கிறார். “யார் வேண்டுமானாலும் வரலாம்.” அது…நீங்கள் அவரிடத்தில் அழைக்கப்படுகிறீர்கள். இப்பொழுது, “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்.” வேதம் அதை உரைத்துள்ளது. 78 இப்பொழுது—இப்பொழுது, ஆயினும்…நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் விரும்புவது என்னவென்றால், உங்களுடைய தவறுகளை தேவனிடத்தில் அறிக்கை செய்யுங்கள் என்பதேயாகும், “கர்த்தாவே என்னை குணமாக்கும்” என்று கூறுங்கள். நீங்கள் ஒருபோதும் மனமாற்றமடையாதிருந்திருந்தால், உங்களுடைய இருதயங்களை கிறிஸ்துவுக்கு கொடுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தண்ணீரில், நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படாதிருந்தால், ஒரு தண்ணீர் தொட்டி ஆயத்தமாய் உள்ளது. புரிகிறதா?

4179 இந்தச் சிறிய பெண்மணி பக்கத்து தெருவிலிருந்த; அந்த நாத்திகன் அதனால் மனமாற்றம்டைந்தபோது. அவள் படுத்துக்கொண்டிருந்தபோது…அவர்கள் அவளை சில்வர்க்ரெஸ்டிலிருந்து வீட்டிற்கு மரித்துக்கொண்டிருந்த காசநோயோடு அனுப்பிவிட்டனர். நான் அங்கு சென்றபோது, கர்த்தர் ஒரு தரிசனத்தை அளித்து, “அவள் சுகமடையப் போகிறாள்” என்று கூறினார். 80 அவர் என்னை அங்கே சந்தித்தார், அடுத்த நாள் காலை, திரு. ஆண்ட்ரூஸ், என்னிடம் சத்தமாக திட்டிப் பேசினார். “அந்த ஸ்திரியின் மீது, அதைப் போன்ற ஒரு போலியான நம்பிக்கை!” என்றார். 81 அப்பொழுது நான், “திரு. ஆண்ட்ரூஸ், அது ஒரு போலியான நம்பிக்கை அல்ல. அந்த ஸ்திரீ ஒரு கிறிஸ்தவள். அவள் நலமடைந்தவுடன், அவள் ஞானஸ்தானம் பண்ணப்படுவதற்கு வரப்போகிறாள்” என்றேன். 82 மேலும் அவர், “அவள் மரித்துக்கொண்டிருக்கிறாள்” என்று கூறினார். “நான்…எப்படி அவள் சில்வர்க்ரெஸ்டிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட முடியும்?” என்றார். 83 நான், “ஐயா, நீர் பார்த்துக் கொண்டிருக்கிறீர், நீர்…நீர் எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர், மருத்துவர் என்ன கூறுகிறார் என்பதையே நீ நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறீர். தேவன் என்ன கூறினார் என்பதையே நான் நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றேன். புரிகிறதா? 84 இப்பொழுது, அது நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதில்தான், வித்தியாசமே உள்ளது. புரிகிறதா? மருத்துவர் என்ன கூறுகிறார் என்பதை நீங்கள் நோக்கிப் பார்க்கும்பொழுது, நீங்கள் நிச்சயமாக மரித்துப்போவீர்கள். ஆனால் நீங்கள் தேவன் என்ன கூறினார் என்பதை நோக்கி பார்க்க வேண்டும். யாருடைய வார்த்தையை நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள்?

4285 ஆபிரகாம் நூறு வயதும் அவனுடைய மனைவி, தொண்ணுறு வயதுமாயிருந்தபோது ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளப் போவதாக இருந்ததை குறித்த மருத்துவரின் கருத்தை அவன் ஏற்றுக்கொண்டிருந்தால் என்னவாயிருந்திருக்கும்? அப்பொழுது அவன் என்ன செய்திருப்பான்? புரிகிறதா? மருத்துவர், “அந்த மனிதர் பைத்தியக்காரன்” என்று கூறியிருப்பார். ஆனால் தேவன் அவனுக்கு அதை நீதியாக எண்ணினார், ஏனெனில் அவன் தேவனை விசுவாசித்தான். புரிகிறதா? இப்பொழுது, நீங்கள்… 86 அந்தப் பெண்மணி உயிர் பிழைத்தாள். அவள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஞானஸ்நானம் பண்ணப்படுவதைப் புறக்கணித்தாள், ஏனென்றால் அவள் ஒருவிதமான மெத்தோடிஸ்ட் அல்லது பிரஸ்பிடேரியன் என்று நான் நினைக்கிறேன். அவள் மேலும் மேலும் சுகவீனமாகத் தொடங்கினாள். அவள் வந்து கிரேஸ் வெப்பரை கூட்டிக்கொண்டு, அங்கு வசித்திருந்த …இல்லை இன்னமும் அங்கே வசிக்கிற, அவளுடைய மகளோடு வந்தாள். வஸ்திரத்தோடு இங்கு வந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டாள், காய்ச்சலுடன், அவளுடைய தோள்பட்டையின் மேலிருந்த வியாதிகளோடு கூடிய கட்டிப் பரவ, நூற்றி நான்கு பாகை, காய்ச்சலுடன் அதைச் செய்தாள். இங்கே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சரியாக ஞானஸ்தானம் பண்ணப்பட்டாள். அவள் இங்கு அப்பால் உள்ள தெருவில் வசிக்கிறாள். ஒருவேளை இப்பொழுது இங்கே உட்கார்ந்திருக்கலாம். ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, என்னால் அவளை பார்க்க முடிகிறதா என்று காணும்படி சுற்றிலும் நோக்கிப் பார்த்தேன். புரிகிறதா? கீழ்ப்படிதல், நீங்கள் பாருங்கள்.

4387 இது வெறும் என்னை சுற்றி செல்வது மட்டுமல்ல…நான் நம்முடைய சில சகோதரர்களோடு வித்தியாசப்படுகிறேன், இதன் மேல், அதன் மேல், மற்றதன் மேல், அதைப் போன்று கரங்களை வைத்து ஒரு விதமான மேன்மையான விசுவாசம் அதைச் செய்யும் என்று கூறுகிறார்கள். அதுவல்ல இது. நீங்கள் அசலான, உறுதியான, வேதாகம, பரிசுத்த ஆவியின் விசுவாசத்தை பெற்றிருக்க வேண்டும். புரிகிறதா? அவ்வாறில்லையென்றால் அது செய்கிறதில்லை, அது நீடிக்காது. அது நீடித்துக் கொண்டிருப்பதில்லை. 88 அந்தக் காரணத்தினால்தான் இதுவரை எனக்கு உதவி செய்துள்ள கர்த்தருக்கு என்னால் நன்றி கூற முடியும். சம்பவித்துள்ள சுகமளித்தல்கள் அசலானதாயிருந்து வந்துள்ளன, ஏனென்றால் அவைகள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன் பேரில் அசலாய் கட்டப்பட்டுள்ளன. புரிகிறதா? ஆகையால் அவைகள் நிலைத்து நிற்கும். 89 இப்பொழுது—இப்பொழுது, இது சிறு ஞாயிறு பள்ளியாக இருப்பதால், நாம் இப்பொழுது அமைதியாக நடத்தும்படியாக, அவர்கள் தங்களுடைய இடங்களை, சரியாக அமைக்கும் வரையில், நான் ஒரு நிமிடம் காத்துக் கொண்டு, உங்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். நமக்கு இன்னும் இரண்டு நிமிடங்களே உள்ளன, நாம் ஜெபிக்க தொடங்கி, ஜெபிப்போம்.

4490 இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய தவறுகளை தேவனிடத்தில் அறிக்கை செய்து, உங்களால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்து நீங்கள் அவரை சேவிப்பீர்கள் என்று தேவனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேய்ப்பரும் நானும் ஜெபிக்கும்படி, உங்கள் மீது வந்து கரங்களை வைக்கப் போகிறோம், நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால் நீங்கள் நிச்சயமாக சுகமடைவீர்கள். 91 எப்படி கக்கத்தண்டுகளோடும், செவிடாயும், ஊமையாயும், குருடாயும் இருந்த அந்த ஜனங்களால், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், மேடையின் மேல் நடந்து வந்து, தங்களுடைய கக்கத்தண்டங்களை வீசியெறிந்து; மேடையின் மீது நடந்து வர, கண்கள் திறக்கப்பட்டன, அதைப் போன்று, உங்களுக்கு தெரியுமா? அவர்களில் லட்சக்கணக்கானோர்! அவர்கள் என்னை அந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட தூக்கிச், செல்லுமளவிற்கு, நான் மிகவும் பலவீனமடைந்தேன், அப்படியே நின்றுகொண்டிருக்க, அவர்கள் கடந்து சென்றனர். பார்த்தீர்களா? இங்கிருந்து கிட்டத்தட்ட ஜெபர்சன்வில் உயர்நிலைப் பள்ளியை அடையும் வரை ஒரு வரிசை இருந்திருக்கும், அந்த வரிசையினூடாகவே வந்தனர். வரிசையினூடாக கடந்து சென்ற, அவர்கள் எல்லோருமே, எனக்குத் தெரிந்தவரை குணமாக்கப்பட்டனர். புரிகிறதா? ஏனென்றால் அவர்கள் உண்மையான, அசலான கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையின் பேரில் வந்து விசுவாசித்தனர். அவர்கள்…அது சம்பவிக்க வேண்டியதாயிருக்கிறது. இப்பொழுது உங்களுடைய தலைகளை தாழ்த்துங்கள், ஒவ்வொருவரும், அவர்களுக்காக ஜெபிக்க எனக்கு உதவி செய்யுங்கள்.

4592 கர்த்தராகிய இயேசுவே, இந்தக் காலையில், நாங்கள் உம்மிடத்திற்கு, இங்கு நின்றுகொண்டு, காத்துக்கொண்டும், சுகவீனமாயிருந்துகொண்டும், பாதிக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்ட பிள்ளைகளோடுமுள்ள இந்த கூட்டத்தாரைக் கொண்டு வருகிறோம். அவர்கள் எந்த நம்பிக்கைக்கும் அப்பால், அவர்களில் அநேகர், கர்த்தாவே, மருத்துவருடைய சுகமளித்தலுக்கு அப்பால், குறிப்பாக இந்த மனிதன் இங்கே இந்த கட்டிலில் படுத்திருக்கிறான். இதற்கு உம்முடைய கிருபை வேண்டும் இல்லையென்றால் அவன் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த உலகத்தை விட்டு போய்விடுவான். மேலும் எந்த சந்தேகமுமின்றி, இங்கே பீடத்தண்டையிலே சிலர் நின்றுகொண்டு, மாரடைப்புகளோடு அவர்கள் காத்துக்கொண்டும், வியாதிகளோடும், அவர்களை சின்னாபின்னமாக்கும் தொல்லைகளோடும் நின்றுகொண்டிருக்கலாம். 93 பிதாவே, அவர்களை இரட்சிக்கக் கூடிய, அதாவது, இங்குள்ள இந்த சரீரத்தின் ஐம்புலன்களுக்கு அப்பால் செல்கிற ஒரு காரியம் மாத்திரமே உண்டு, சந்தேகத்துக்கிடமின்றி, வியாதிகள், புற்றுநோய், காச நோய், இருதய கோளாறு; போன்றவற்றிலிருந்து அவர்களுடைய ஜீவனை காப்பாற்றுவதற்கு அங்கே மருத்துவர்கள் உண்மையாகவே முயற்சித்துள்ளனர். எல்லா இணைப்புகளோடும், குழாய்களோடும், மற்ற பொருட்களோடும் மற்றும்—மற்றும்—மற்றும் கிருமிகளை எதிர்க்கும் மருந்தோடும், அவர்களுடைய ஜீவனை எடுப்பதற்கு, சத்துருவினுடைய கூட்டங்கள் உள்ளே வருகின்றன. 94 மேலும் கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், உம்முடைய கருத்தை, அவர்களுக்கு, வெளிப்படுத்தியிருக்கிறேன். இந்தக் காலை அந்த மனிதன் அந்நிய பாஷையில் பேசுவதையும், அதற்கு வியாக்கியானம் அளிப்பதையும், இன்றைக்கு என்ன சம்பவிக்கும் என்று கூறுவதையும் நான் கேட்டிருக்கிறேன். நிச்சயமாகவே, கர்த்தாவே, அவர்களில் சிலர் இதை ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள். அது உண்மை. நான் அதை விசுவாசிக்கிறேன்.

4695 இப்பொழுது, வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளபடி, அதாவது தாவீது, ஆடு மேய்க்கும் சிறுவன், வனாந்தரத்தின் பின்புறத்தில், தன் தகப்பனுடைய ஆடுகளை கண்காணித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஒரு சிங்கம் உள்ளே வந்து அவனுடைய தகப்பனாரின் ஆடுகளில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு, அதனோடு ஓடிவிட்டது. அந்த ஆடு மேய்க்கும் சிறுவன், விசுவாசத்தோடு, இந்த சிங்கத்திற்கு எதிராக வருவதற்கு அவன் என்ன செய்ய வேண்டியதாயிருந்தது? ஒரு நவீன கை துப்பாக்கியோ அல்லது துப்பாக்கியோ இல்லை. ஆனால் அவன் ஒரு சிறு கவணையே உடையவனாய் இருந்தான், அவன் அந்த சிங்கத்தைப் பின் தொடர்ந்து சென்றான். அவன் அந்த சிங்கத்தைக் கொன்று, அந்த ஆட்டைத் திரும்பக் கொண்டு வந்தான். ஒரு கரடி உள்ளே வந்து ஒன்றை கொண்டு சென்று விட்டது; அந்த கரடி அவனை தரையோடு நசுக்கிப் போடக் கூடியதாயிருந்தாலும் அவன் அதைப் பின்தொடர்ந்திருந்தான். ஆனாலும் அந்த கரடியின் அளவைக் குறித்து, அல்லது சிங்கத்தின் வலிமையைக் குறித்து அல்லது அதனுடைய வேகத்தைக் குறித்து அல்லது கவணோடுள்ள அவனுடைய இயலாமையை குறித்து சிந்திக்கவில்லை. 96 ஆனால் அவன் சவுல் இராஜாவுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தபோது, அவன், “உம்முடைய அடியான் தன்னுடைய தகப்பனின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கையில், ஒரு சிங்கம் உள்ளே வந்து ஒன்றை பிடித்துக்கொண்டு, ஓடிவிட்டது. நான் அதனைப் பின் தொடர்ந்து போய் அந்த ஆட்டைத் திரும்பக் கொண்டு வந்தேன்” என்று கூறினான். அவன் தொடர்ந்து, “கரடியின் கரங்களில் இருந்தும் இல்லை பாதத்திலிருந்தும் அல்லது அந்த சிங்கத்தின் தாடையிலிருந்தும் என்னை காப்பாற்றின அதே தேவனால், இந்த விருத்தசேதனமற்ற பெலிஸ்தனையும் கூட எடுத்து அவனையும் என்னுடைய கரத்தில் கொடுக்க முடியும்” என்றான்.

4797 அவன் கொன்ற, அந்த சம்பவம் எப்படி என்பதை நாம் அறிவோம்; அவனைக் காட்டிலும் அநேக, அநேக மடங்கு பெரிதாயிருந்த ஒரு மனிதனை, ஒரு போர்வீரனைக் கொன்றுபோட்டான். அது சவுலை, அந்த மகத்தான இராஜாவை, பெரிய, வலிமையான மனிதனை தடுமாறச் செய்தது, எப்படி அந்த சிறு பையனால் ஒரு கவணில் அப்படிப்பட்ட விசுவாசத்தை கொண்டிருக்க முடிந்தது. இல்லை, ஒரு கவணில் இல்லை, ஆனால் தேவனில். 98 இப்பொழுது, கர்த்தாவே, இந்த பீடத்தை சுற்றி நிற்கிற, இந்த கட்டிலின் மேல் இங்கே படுத்திருக்கிற, தேவனுடைய ஆடுகளும், சிறு ஆட்டுக் குட்டிகளும், அவருக்கு, இருந்த விதமாகவே இருக்கின்றன. அவர்கள் புற்றுநோய் என்று அழைக்கப்படுகின்ற ஒரு சிங்கத்தினால், காசநோய் என்று அழைக்கப்படுகின்ற ஒரு கரடியினால் பிடிக்கப்பட்டுள்ளனர், மற்ற வியாதிகளும் அவர்களை பிடித்துள்ளன, அவர்களை பிடித்திழுத்து, அவர்களை துண்டு துண்டாக கிழிக்கின்றன. கர்த்தாவே, விசுவாச ஜெபம் என்று அழைக்கப்படுகின்ற ஒரு சிறு கவணைக்கொண்டு நான்—நான் அவர்களை பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். இது மிக அதிகமானது அல்ல, ஆனால் அது என்ன செய்துள்ளது என்பதை நான் அறிவேன். அது இன்னமும் அதே தேவனாய் இருக்கிறது என்பதையும் நான் அறிவேன். இந்தக் காலையில், கர்த்தாவே, நல்ல ஆரோக்கியமான நிழலான புல்வெளிகளுக்கு, அவர்களை திரும்ப கொண்டு வரும்படிக்கு, நான் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன், அவர்களுடைய கலக்கங்களிலிருந்து விலக்கி உம்மை விசுவாசிக்கும்படி சமாதானத்தின் அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டு வருகிறேன். 99 உள்ளே செல்லும்படி நீர் எனக்கு கொடுத்த கவசத்தோடு, நான் அவர்களை பின்தொடர்ந்து செல்கிறேன். “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், தேவன் அவர்களை எழுப்புவார். அவர்கள் ஏதாவது பாவம் செய்திருந்தாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.”

48100 மேலும், பிதாவே, நாங்கள் சத்துருவை சந்திக்கும்படி, சிங்கத்தை சந்திக்கும்படி, புற்றுநோய், காசநோய், நிண நீர் சுரப்பி புற்றுநோய், இருதயக் கோளாறு, மற்ற எந்த வியாதியின் வடிவத்திலும். பிசாசு இருக்கின்ற ஒவ்வொரு வடிவத்திலும் அவனை சந்திக்கும்படிக்கு இப்பொழுதே செல்லுகிறோம். நாங்கள் இந்த ஆட்டுக்குட்டியை கண்டறிந்து, அதை மீண்டும் தேவனுடைய வீட்டிற்கு திருப்பிக் கொண்டு வர வந்திருக்கிறோம். நீர் எங்களுக்கு அளித்துள்ள இந்த கவணை உபயோகிக்கும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் செல்கிறோம். பிதாவே, நாங்கள் இப்பொழுது பயபக்தியுடன் உம்மை இயேசுவின் நாமத்தில், அணுகுகையில், எங்களோடிரும். 101 நீங்கள் தொடர்ந்து உங்களுடைய தலைகளை தாழ்த்தியிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் எண்ணெய் பூசி, வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கும்படி வந்து கொண்டிருக்கிறோம், விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். இங்குள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும், உங்களுடைய விசுவாசத்தை இந்த ஜெப வரிசையில் வைக்கவும். [ஜெப வரிசை மூன்றரை நிமிடங்கள் நீடிக்கிறது, சகோதரன் பிரான்ஹாமினுடைய அநேக வார்த்தைகள் புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கின்றன—ஆசி.] இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! இயேசுவின் நாமத்தில்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! இயேசுவின் நாமத்தில்! பிதாவே, நான் பிசாசைக் கடிந்து கொள்கிறேன்! …?… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! …?… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! வந்து அதை விசுவாசியுங்கள் …?… அது செய்யப்படும்! …?… கர்த்தாவே, நீர் …?… தேவனே …?… 102 கர்த்தாவே, நீர்…நீர் வாய்ப்பினை எழுதினீர். நீர் இனத்தாரான, கிறிஸ்துவாய் இருக்கிறீர்! …?… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்!

49103 “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்.” நீர் இதை அவளுக்காக செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு ஆரோக்கியமான ஸ்திரீயாக அவளைத் திரும்பக் கொண்டு வாரும்! …?… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளை திரும்பக் கொண்டு வாரும்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை திரும்பக் கொண்டு வாரும்! …?… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என்னுடைய சகோதரியைத் திரும்பக் கொண்டு வருகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என்னுடைய சகோதரனைத் திரும்பக் கொண்டு வருகிறேன்! …?… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! …?… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! …?… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! …?… நீர் ஒருபோதும் செய்யவில்லை. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக! இந்தக் காலையில், நான் இதனைப் பின் தொடர்ந்து வருகிறேன்! …?… 104 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் உன்னை திரும்பக் கொண்டு வந்துகொண்டிருக்கிறேன், அடிமைத்தனத்திலிருந்து, ஒரு விசுவாசமுள்ள ஜெபத்தினாலே! …?… நாங்கள் இவற்றோடு எங்களுடைய விசுவாசத்தை சேர்க்கிறோ …?… விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள்; இப்பொழுது நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு. இப்பொழுது: விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், விசுவாசிக்கு மாத்திரம் செய்யுங்கள், …காரியங்கள் கைக்கூடும், விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். ஓ கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், ஓ கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன் யாவும் கை கூடும்… இப்பொழுது நாம் நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக. …கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்; ஓ கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்; கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், யாவும் கைக்கூடிடும், கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்.

50105 எங்களுடைய பரலோகப் பிதாவே, எழுந்திருந்து, அவர்கள் அதை ஏற்றுக்கொண்டனர் என்று, தங்களுடைய கரங்களை உயர்த்தினர். கட்டிலின் மேல் படுத்துக்கொண்டிருந்த இந்த சகோதரன், அவருடைய சுகம்ளித்தலை அவர் ஏற்றுக்கொண்டார் என்பதை காண்பிக்கும்படி, எழுந்துவிட்டார். கர்த்தாவே, அவர்கள் சமாதானமாக நிழலுள்ள புல்வெளிகளுக்கும், பக்கத்தில் உள்ள அமைதியான தண்ணீரண்டைக்கும், இயேசுவின் நாமத்தினூடாக, மீண்டும் சுகமாய் இருக்கும்படி, நடந்து வருகிறார்கள் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நாங்கள் அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென். 106 சரி, சகோதரன் நெவில், நான் இங்கு அமர்ந்து நீங்கள் இப்பொழுது பிரசங்கிப்பதைக் கேட்பேன். 107 [முன்னர் பிரசங்கத்தில் சகோதரன் பிரான்ஹாம் “சிறு இணைப்பைக்” குறித்து குறிப்பிட்டிருந்தார், அதாவது சகோதரன் தாமஸ் ஆர். நிக்கல், முழு சுவிசேஷ புருஷர்களுடைய சத்தத்தின் ஆசிரியர், கட்டுரையின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார், அது இவ்வாறு கூறுகிறது: “ முன் அட்டையில் உள்ள புகைப்படத்தை குறித்து: வேதாகம நாட்களில் தீர்க்கதரிசிகளாகவும் ஞான திருஷ்டிக்காரராகவும் இருந்த தேவனுடைய மனிதர்கள் இருந்தனர். ஆனால் அனைத்து புனிதமான பதிவேடுகளிலும், வில்லியம் பிரான்ஹாமின் ஊழியத்தை காட்டிலும் ஒரு மகத்தான ஊழியத்தை இவர்கள் எவருமே உடையவராய் இருந்ததில்லை, ஒரு தீர்க்கதரிசி மற்றும் தேவனுடைய ஞான திருஷ்டிக்காரரான, அவருடைய புகைப்படம் இந்த முழு சுவிசேஷ புருஷர்களுடைய சத்தத்தின் இதழின் முன்பக்கத்தில் காணப்படுகிறது. பிரான்ஹாம் இயேசுவின் நாமத்தில், மரித்தோரை உயிரோடெழுப்ப, தேவனால், பயன்படுத்தப்பட்டுள்ளார்!”—ஆசி.] 