1 ஆனால் அதை கிரியை செய்வதற்கு, நீங்கள் தேவன் பேரிலுள்ள விசுவாசத்தை உபயோகிக்க வேண்டும். புரிகிறதா? எனவே நீங்கள் உங்களுடைய சொந்த உயிர்த்தெழுதலை உங்களுக்குள்ளே பெற்றிருக்கிறீர்கள். உங்களுடைய உயிர்த்தெழுதல் உங்களுடைய உட்புறத்தில், உங்களுடைய ஆவியில் இருக்கிறது. 2 இப்பொழுது, உங்களுக்குத் தெரியும், இயேசுவானவர் சிலுவையில் மரித்தபோது, “அவருடைய ஆத்துமா பாதாளத்துக்குள் இறங்கி அங்கே நோவாவின் நீடிய பொறுமையான நாட்களில், மனந்திரும்பாத காவலில் உள்ள ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தது.” அவருடைய சரீரம் கல்லறைக்குள் சென்றது. ஆனால், அவர் மரிக்கும் முன், அவர் தம்முடைய ஆவியை தேவனுடைய கரங்களில் ஒப்புக்கொடுத்தார். கரத்தில்…“உம்முடைய கரங்களில் என்னுடைய ஆவியை ஒப்புவிக்கிறேன்.” ஆகையால், நீங்கள் பாருங்கள், அவருடைய ஆவி தேவனிடத்திற்குச் சென்றது, அவருடைய ஆத்துமா பாதாளத்திற்குச் சென்றது; அவருடைய சரீரம் கல்லறைக்குச் சென்றது. 3 இப்பொழுது, அவருக்குள் இருந்த அந்த ஆவியானது தேவனுடைய ஆவியாயிருந்தது. “ஜனங்களுக்கு செய்தியைக் கொண்டு வரும்படியாக, அந்த ஆவியானவர், பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும், வகைவகையாகவும்; இந்த கடைசி நாட்களில், கிறிஸ்துவின் மூலமாகவும்; இப்பொழுது, இங்கே இந்த நாட்களில் சுவிஷேசத்தின் மூலமாகவும், தீர்க்கதரிசிகளை அபிஷேகித்தார்.” இப்பொழுது, நாம் நமது இருதயத்திற்குள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, நமக்கு தேவையான அனைத்துமே அதில் உள்ளது. அதில் நித்திய ஜீவன் உள்ளது.
24 இப்பொழுது, கிறிஸ்து மூன்று நாட்கள் நிறைவடையுமட்டாக திரும்பி வர முடியவில்லை. ஏனென்றால், ஒரு இரும்பு சட்டம் போன்ற, இதைப் போல், ஒரு திரைக்கு பின் அவருடைய ஆவியிருந்தது, அவரால் அந்த இரும்பு சட்டத்தை தாண்டி வர இயலாது, ஏனெனில், “மூன்று பகலும், மூன்று இரவும் கல்லறையில் இருக்க வேண்டும்” என்பது தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையாய் இருந்தது. இப்பொழுது, மூன்று பகலும், மூன்று இரவும் முடியுமட்டாக அவரால் திரும்பி வர முடியவில்லை. அந்த மூன்று பகலும், மூன்று இரவும் முடிந்த பொழுது, அவருடைய ஆவி கட்டவிழ்க்கப்பட்டது. அது நேரடியாக அவருடைய ஆத்துமாவுக்குள் சென்று, அந்த ஆத்துமா திரும்ப வந்து அவருடைய சரீரத்தை எடுத்துகொண்டு, “என் ஜீவனைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. எனக்கு வல்லமை உண்டு,” என்று அவர் உரைத்த வார்த்தையை நிறைவேற்றினது.
35 இப்பொழுது, உங்கள் ஒவ்வொருவருக்கும், அந்த விதமாகவே வல்லமை உண்டு, ஏனென்றால் நீங்கள் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்கிறீர்கள். இந்தக் காலையில், உங்களில் இருக்கிற அதே ஆவியானவர், இந்தக் காலையில் உங்களில் இருக்கிற பரிசுத்த ஆவியானவர், அந்த அதே பரிசுத்த ஆவியானவர் உங்களை எழுப்புவார். ஆகையால், நீங்கள் உங்களையே மீண்டும் எழச்செய்யத்தக்கதான வல்லமையை உடையவர்களாய் இருக்கிறீர்கள். 6 நீங்கள் மரிக்கும்போது, உங்கள் ஆத்துமா அந்த—அந்த…தேவனுடைய பலிபீடத்தின் கீழ் செல்லும், சரியாக தேவனுடைய பிரசன்னத்திற்கு…அல்ல. இப்பொழுது, உங்களுடைய ஆவி தேவனிடத்திற்கு செல்லும், ஆனால் உங்களால் திரும்பி வர முடியாது. நினைவிருக்கட்டும், வேதாகமத்தில், அது ஆவி என்று கூறப்பட்டுள்ளது…“‘எவ்வளவு காலம், எவ்வளவு காலம் கர்த்தாவே?’ என்று பலிபீடத்தின் கீழ் உள்ள ஆத்துமாக்கள் கதறுகின்றன.” மேலும், வேதவாக்கியங்கள் நிறைவேறும் வரை கிறிஸ்து, திரும்பி வரமுடியாதிருந்தது போலவே, அவர்களும் வேதவாக்கியங்கள் நிறைவேறும் வரை திரும்பிவர முடியாது. அதன்பின்னர், செய்யப்பட்டிருந்த எல்லாவற்றிக்குப் பிறகு, எல்லா துன்பங்களும் முடிவுற்று, சகோதரர்கள் அதே காரியங்களை அனுபவித்துள்ளனர், அதாவது அவர்கள் பாடுபட்டது, போலவே, நாம் பாடுபட்டுள்ளோம்; அப்பொழுது, அந்த நாளிலேயே, நீங்கள் எங்கே புதைக்கப்பட்டீர்கள் என்பதை சரியாக அறிந்துகொள்வீர்கள், அப்பொழுது உங்களுடைய ஆவி தேவனிடத்திலிருந்து கட்டவிழ்க்கப்பட்டு, ஆத்துமாவினிடத்திற்கு வரும்.
47 இப்பொழுது, ஆத்துமா என்பது உங்களுடைய புத்திசாலித்தனத்தையும், புரிந்துகொள்ளுதலையும், நீங்கள் அறிந்திருக்கிற பாகமாக இருக்கிறது. அண்மையில் எனக்கு உண்டாயிருந்த தரிசனம், இல்லை சிறு எடுத்துக்கொள்ளப்படுதல், அந்த இடத்திற்கு சென்று, அந்த ஜனங்களைக் கண்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? [சபையார், “ஆமென்,” என்கின்றனர்.—ஆசி.] இப்பொழுது, உங்களுடைய ஆவி அந்த சரீரத்திற்க்கு திரும்பி வரும், அந்த—அந்த விதமான ஒரு சரீரத்துக்கு, ஆத்துமா, புசித்தல் மற்றவைகளைச் செய்ய அவசியமில்லாத ஒரு சரீரமாய் இருக்கிறது. “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்துபோனாலும், நமக்கென்று ஒன்று ஏற்கனவே காத்துக்கொண்டிருக்கிறது,” ஒரு வானத்துக்குரிய மேனி. அந்த ஆவியோடும், அந்த ஆத்மாவோடு மற்றும் வானத்திற்குரிய மேனியோடும், அந்த மகத்தான ஆயிர வருட அரசாட்சிக்காக நீங்கள் இந்த ஜென்ம சரீரத்தை எழுப்புவீர்கள். புரிகிறதா? இப்பொழுது, அதை செய்ய இப்பொழுது, உங்களுக்குள்ளே நீங்கள் வல்லமையை உடையவராய் இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் உங்களுக்குள் பெற்றிருக்கிற அந்த வல்லமையினால் இப்பொழுது ஒரு புதிய உலகத்தை உருவாக்க முடியும். தேவன் சிறிய, பலவீனமான பாகங்களையும், மற்றும் பெரிய, வல்லமையான பாகங்களையும் பெற்றிருக்கவில்லை, தேவனுடைய மிகச் சிறிய தொடுதல் சர்வ வல்லமையுள்ளதாய் உள்ளது, பாருங்கள், மிகச் சிறிய, சிறிய தேவனுடைய தொடுதல்.
58 ஆகையால், உங்களுக்குத் தெரியுமா, ஆகையால் நான் இப்பொழுது விசுவாசத்தில் உங்களை வைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன், கிறிஸ்தவன் என்ற முறையில், உங்களுக்கு ஏதோ ஒன்று சம்பவித்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குத் தெரியுமா? [சபையார், “ஆமென்,” என்று கூறுகின்றனர்.—ஆசி.] நீங்கள் இங்கே கீழே சகதியில், எல்லா சகதியிலும் மற்றும் பாவத்திலும், குடித்தலும், சூதாடுதல், மற்றும்—மற்றும் உலகத்தின் காரியங்களிலும் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். பாருங்கள், கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னிக்கிறார் என்று நீங்கள் விசுவாசித்தவுடனே நீங்கள் அந்த காரியத்திற்கு மேலாக உயர்ந்து விட்டீர்கள். இப்பொழுது நீங்கள் இங்கே , பாருங்கள், அவை எல்லாவற்றுக்கும் மேலாக ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏன்? ஏனென்றால் நீங்கள் ஒரு கிறிஸ்தவன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டபோது, பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வந்தார், அதன்பின்னர் நீங்கள் பரிசுத்த ஆவியில் விசுவாசமுடையவர்களாக இருக்கிறீர்கள், அதுவே நீங்கள் அந்த விதமான ஒரு பாவ ஜீவியத்திற்கு மேலாக ஜீவிக்க உங்களுக்கு வல்லமையை அளிக்கிறது. 9 பாருங்கள், இப்பொழுது, சுகமளித்தலுக்குள்ளாக உயர, நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம், அதிகமான விசுவாசத்தை பெற்றிருக்க வேண்டும், அப்படியே—அதை வெறுமனே தொடர்ந்து வெளியே தள்ளுங்கள். புரிகிறதா? அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. இப்பொழுது நீங்கள் சுகவீனமாய் இருந்து, நீங்கள் ஒரு கிறிஸ்தவராய் இல்லாமல் இருந்தால், இப்பொழுதே ஒரு கிறிஸ்தவராகுங்கள், எனவே ஒரு கிறிஸ்தவனாவதன் மூலம், அந்த சுகமளிக்கும் வல்லமை உங்களுக்குள்ளாக வரும். பாவத்திற்கு மேலாக ஜீவிக்கும்படி அது உங்களுக்கு விசுவாசத்தைத் தரும். அது உங்களுக்கு விசுவாசத்தைத் தரும். இந்தப் பயணத்தில், உங்களுக்குத் தேவையாயிருக்கிற ஒவ்வொரு காரியமும், இப்பொழுது உங்களுக்குள்ளாகவே இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் தேவனில் விசுவாசம் கொண்டிருப்பதேயாகும், அது பரிசுத்த ஆவினால், உங்களுக்குள் இருக்கிற, அது உங்களுக்கு இருக்கிற நல்ல காரியங்களை வெளியே கொண்டு வரும். இப்பொழுது உங்களுக்குத் தெளிவாக புரிகிறதா? நீங்கள் அதை புரிந்துகொண்டீர்களா?
610 பில்லி என்னிடத்தில் கூறினான் என்று நான் நினைக்கிறேன், கடந்த இரவு, என்னைக் கூப்பிட்டு, “இந்த காலையில், நாம் அந்த ஏழு முத்திரைகளின் பேரில், இந்த வாரம் ஆராதனைகளை வைத்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு, குறிப்பாக ஒரு நபர், உள்ளே வந்தார்” என்று கூறினான். மேலும் அவர்கள் ஒரு சுகவீனமான குழந்தையை கொண்டு வந்தார்கள் என்று, நான் நினைக்கிறேன். ஐயா, நீங்கள் இப்போது இங்கிருந்தால் ஞாபகம் கொள்ளுங்கள், உங்களால் முடியாது… அது—அது ஒரு சிறு, சிறு குழந்தையாய் இருந்தால், உங்களுடைய—உங்களுடைய விசுவாசம் அந்த குழந்தைக்காக செல்ல வேண்டும். 11 ஆனால் இப்பொழுது நான் வேறொரு வேதவசனத்தை எடுக்கட்டும், பரவாயில்லையென்றால், ஒரு நிமிடம். [சகோதரன் நெவில், “சகோதரனே படியுங்கள், ஆமென்” என்கிறார்.—ஆசி.] 12 இப்பொழுது நினைவிருக்கட்டும், இப்பொழுது, நாம் அப்போஸ்தலர் 16-ம் அதிகாரத்தில், வாசிக்கிறோம் என்று, நான் நினைக்கிறேன், அங்கே பவுலும் சீலாவும் ஒரு இரவு சிறைச்சாலையில் இருந்தார்கள். மேலும் குறிசொல்லுகிற ஒரு பெண்ணிடமிருந்த ஒரு அசுத்த ஆவியை விரட்டியடித்ததினிமித்தம் அவர்கள் அடிக்கப்பட்டிருந்தனர். மேலும் அது…மேலும், அவள், அவளுடைய எஜமான்களும் அதைக் குறித்து கோபமடைந்திருந்தனர். மேலும் அவர்களை அடித்து, உட்காவலறையில் அவர்களை வைத்தனர். அவர்கள் அதைச் செய்தபோது, பவுலும் சீலாவும் ஜெபித்துக்கொண்டிருக்கையில், தேவன் ஒரு பூமி அதிர்ச்சியை அனுப்பி அந்த சிறைச்சாலையைக் குலுங்கச் செய்தார்.
713 அந்த பிலிப்பிய சிறை அதிகாரி, ஒரு நூற்றுக்கதிபதியாய் இருந்தபடியால், அதாவது, தன்னுடைய சிறைவாசிகளை இழப்பது, தன்னுடைய சொந்த ஜீவனையே அந்த சிறைவாசிகளுக்காக கிரையமாக செலுத்த வேண்டியதாய் இருந்தது. அவன் தன்னுடைய பட்டயத்தை உருவி தற்கொலை செய்து கொள்ளப்போவதாயிருந்தான், அப்பொழுது பவுல் ஓடி, “உனக்கு கெடுதி ஒன்றும் செய்து கொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்கே இருக்கிறோம்” என்றான். 14 இந்த நூற்றுக்கு அதிபதி, கூறப்போனால், பவுல் மற்றும் அவர்களைக் குறித்து நல்ல அபிப்பிராயத்தை உடையவனாய் இருந்தான். அவர்கள் கீர்த்தனைகளைப் பாடியிருக்கலாம். அவர்கள் சாட்சி பகிர்ந்திருக்கலாம், அல்லது ஏதாவது காரியத்தை செய்திருக்கலாம். ஆனால், அது என்னவாயிருந்தாலும், அவர்கள் பரிசுத்த மனிதர்களாக இருந்தனர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அந்த மனிதர்களிடத்தில் ஏதோ வித்தியாசம் இருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர். காரணம், துரிதமாக, அவன், “இரட்சிக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும்? இரட்சிக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். 15 இப்பொழுது, பவுல், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றான்.
816 பாருங்கள், இப்பொழுது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்தால்… அவருடைய இரட்சிப்பு அந்த வீட்டாரை இரட்சிக்கும் என்பது அதனுடைய பொருள் அல்ல. ஆனால் அவன் தன்னுடைய சொந்த இரட்சிப்பிற்காக தேவனில் போதுமான விசுவாசம் கொண்டிருப்பானாயின், அவன் தன்னுடைய வீட்டாருக்காகவும் அதே விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியும். மேலும் அவனுடைய வீட்டாரும் உள்ளே வர வேண்டும், பாருங்கள், அதேக் காரியம். 17 யோபு செய்ததைப் போலவே, ஜார்ஜியாவில், ஒரு கூட்டத்தில், அன்றொரு இரவு நான் கூறியது போலவே. நான், “யோபு, அவன், ‘என் பிள்ளைகள் பாவம் செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது, ஆனால் அவர்கள் பாவம் செய்திருந்தால் என்னவாகும்?’ என்று கூறினான்” என்றேன். நீதிமானாயிருக்கும்படி, யோபு ஒரு காரியத்தை செய்ய வேண்டியதாக இருந்தது, அதாவது, ஒரு சர்வாங்க தகனபலியை செலுத்த வேண்டியதாய் இருந்தது. அவனுடைய பிள்ளைகள் பாவம் செய்திருந்தால், அவன் சர்வாங்க தகனபலியை செலுத்துவதாக கூறினான், அப்பொழுது அவர்களுடைய பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். அந்தத் தகப்பன் அதைச் செய்தது ஒரு நல்ல காரியமாக இருந்தது. அது ஒரு நல்ல யோசனையுள்ள தகப்பன். இன்றைக்கு நமக்கு அந்த விதமான தகப்பன்மார்களே அதிகம் தேவையாயிருக்கிறது. யோபு சர்வாங்க தகனபலியை செலுத்தினான். அது அவனுடைய சோதனை ஏற்படுவதற்கு முன்பாயிருந்தது. 18 ஆனால் அவனுடைய பிள்ளைகள் எல்லோரும் கொல்லப்பட்டு, அவனுடைய செம்மறி ஆடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, அவனுக்குண்டாயிருந்த யாவும் எடுக்கப்பட்டபோது, அவனுடைய வீட்டின் பின்புறத்தில் சாம்பல் குவியலின் மேல் உட்கார்ந்துகொண்டு, ஒரு ஓட்டுத் துண்டினால் தன்னை சுரண்டிக் கொண்டிருந்தான்.
919 அவனுடைய சோதனை நாட்களுக்குப் பிறகு, தேவன் அவனுக்கு மீண்டும் திரும்பளிக்கத் துவங்கினபோது, நீங்கள் கவனித்தீர்களா? அவனுக்கு பத்தாயிரம் ஆடு மாடுகள், முதலியன இருந்தன, அவர் இரட்டதத்தனையாக திரும்ப அளித்தார். மேலும் இரட்டத்தனையான செம்மறி ஆடுகளையும், சகலவற்றையும் இரட்டத்தனையாக்கினார். ஆனால் நீங்கள் கவனித்தீர்களா? மேலும் தேவன் யோபுவுக்கு அவனுடைய ஏழு பிள்ளைகளையும் கூட கொடுத்தார். அவர்கள் எங்கே இருந்தார்கள் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்தீர்களா? அந்த தகனபலி அவர்களுக்காக நின்றது. அவர்கள் இரட்சிக்கப்பட்டவர்களாய், மகிமையில், அவனுடைய வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தனர். இன்றைக்கு அவன் அவர்களோடு இருக்கிறான். “நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.” புரிகிறதா? இப்பொழுது, நீதிமானாய் இருக்க யோபு செய்ய வேண்டியிருந்த ஒரே காரியம், தகனபலியை செலுத்துவதாய் இருந்தது. 20 நீங்கள் நீதிமானாயிருக்க, செய்ய வேண்டிய ஒரு காரியம், அது, தேவனில் விசவாசம் கொள்வதேயாகும். ஏனென்றால், விசுவாசத்தினால் நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள், விசுவாசத்தினால் நீங்கள் சுகமடைந்திருக்கிறீர்கள், விசுவாசத்தினால் உங்களுக்கு வேண்டிய ஒவ்வொரு காரியத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்ளுகிறீர்கள். புரிகிறதா? விசுவாசத்தினால், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். இப்பொழுது, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.”
1021 இப்பொழுது, ஐயா, நீங்கள் ஜெபிக்கப்படுவதற்காக குழந்தையை இங்கே வைத்திருந்தால், நீங்கள்தானே, விசுவாசிக்க வேண்டும். நான் என்னுடைய விசுவாசத்தை உங்களுடையதோடு சேர்த்து வைக்க இங்கே இருக்கிறேன், அந்தக் குழந்தையை தேவன் சுகமாக்குவார் என்று, நாம் ஒருமித்து, விசுவாசிப்போம். 22 நீங்கள் பாருங்கள், அதை செய்வதற்கான வல்லமையை நமக்குள் பெற்றிருக்கிறோம். நீங்கள் அதைச் செய்யும்படியான வல்லமையை உங்களுக்குள் பெற்றிருக்கிறீர்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அதைச் செய்யும்படியான வல்லமையைப் பெற்றிருக்கிறான். ஆனால், இப்பொழுது நாம் மட்டும் அதை பெறமுடிந்தால்…அந்த வல்லமையானது ஒரு விதியினால் கட்டுப்படுத்தப்படுகிறது. 23 நான் அடிக்கடி கூறியுள்ளதுபோல, தண்ணீரை புவியீர்ப்பு விசை கட்டுப்படுத்துவது போல, ஏனெனில் அது ஒரு விதியாயிருக்கிறது. புவிஈர்ப்புவிசை தண்ணீரை கட்டுப்படுத்துகிறது. 24 சூரியன், பூமியினால் இல்லை…பூமியின், சுழற்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது. உங்களால் சூரியனை ஒரு காரியத்தைச் செய்ய வைக்க முடியாது, அப்படியானால், “நான் சிறிது நேரம் உறங்க விரும்புகிறேன். ஒரு மணி நேரம் தரித்திரு” என்று கூறுகிறீர்கள். அது அதைச் செய்யாது, பாருங்கள், ஏனெனில் அதற்கு ஒரு விதி இருக்கிறது. நீங்கள் அந்த விதியின்படி கிரியை செய்வீர்களானால், பாருங்கள், அப்பொழுது, சகலமும் சரியாக இருக்கும். நீங்கள் நேரத்தோடு படுக்கைக்கு சென்றால், நீங்கள் நேரத்தோடு எழுந்திருக்க முடியும். நீங்கள்…
1125 நமக்கு சுப்பீரியர் ஏரி, ஆண்டேரியோ ஏரி, ஹியூரான் ஏரி போன்ற அந்த மகத்தான பெரிய ஏரிகள் இங்கு உள்ளது போன்றே. நெவாடா, கலிபோர்னியா, அரிசோனா, மற்றும் நியூ மெக்சிகோவில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை நாம் பெற்றுள்ளோம், எதையும் விளைவிக்கக்கூடிய அந்த நிலம், தண்ணீருக்காக, காய்ந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இங்கு பெற்றுள்ள, இந்த தண்ணீரை மாத்திரம், அங்கே உடையவர்களாக இருந்தால், உங்களால் அங்கிருந்து, முழு உலகத்தையே போஷிக்க முடியும். இதனால் அது பாதிக்கப்படாது, ஏனெனில் அவைகள் ஊற்றுக்களினால் நிரப்பப்படுகின்றன. அது வடிந்தவுடன், அதே அளவுக்கு மீண்டும் வந்துவிடும், ஏனெனில் புவியீர்ப்பானது அங்கே அதை பற்றி நிறுத்துகிறது. பாருங்கள், இப்பொழுது, நீங்கள் மட்டும் புவியீர்ப்பு விதியின்படி வேலை செய்வீர்களானால், இந்த மகத்தான ஏரிகளின் தண்ணீரை முழு தேசத்திற்கும் கொண்டு சென்று முழு உலகத்தையும் அங்கிருந்தே போஷிக்கலாம், யாரும் பட்டினியாய் இருக்கமாட்டார்கள். ஆனால் நீங்கள் இங்கே இருந்துகொண்டு, “ஆம், நான் அதைக் காண்கிறேன். நிச்சயமாக” என்று கூறமுடியாது. நீங்கள் போய் அதைச் செய்ய வேண்டும்.
1226 பாருங்கள், தேவனுடைய பிரமாணத்தின் மூலமாக அது அந்த விதமாகவே உள்ளது. தேவனுடைய பிரமாணம் விசுவாசமாக உள்ளது. எந்தக் காரியத்தையும் செய்ய, எந்த சுகவீனத்தையும் குணப்படுத்த, இந்தக் காலையில், நாம் இங்கு விசுவாசத்தைப் பெற்றுள்ளோம். ஆனால் அது ஒரு பிரமாணத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது, அந்தப் பிரமாணம் விசுவாசமாக உள்ளது. தேவனுடைய பிரமாணம் விசுவாசமாக உள்ளது. இயேசு, “நீங்கள் வாஞ்சிக்கிற காரியங்கள் எதுவாயிருந்தாலும், நீங்கள் ஜெபிக்கும்போது, நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று விசுவாசிப்பீர்களானால், உங்களால் அதைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார். அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. எனவே, அதைக் கட்டுப்படுத்துகிறது விசுவாசமாக உள்ளது, நமக்கு விசுவாசம் தேவைப்படுகின்றபடியால் அது நமக்கு கொடுக்கப்படுகிறது. இப்பொழுது நாம் செய்யவேண்டியது…தேவன் விசுவாசத்தை நம்மில் சிலருக்கு ஓரளவும், மற்றவர்களுக்கு வேறொரு விதமாகவும் பகிர்ந்தளித்துள்ளார். அது நீங்கள் ஏதோ ஒரு மகத்தான இயற்கைக்குக் மேம்பட்ட வல்லமையை பெற்றிருக்கிறீர்கள் என்று அல்ல. ஏனென்றால், நீங்கள் கிறிஸ்தவனாகும்போது, நீங்கள்—நீங்கள் ஏற்கனவே அந்த வல்லமையை பெற்றுக்கொள்ளுகிறீர்கள், ஆனால் அந்த வல்லமையை செயல்படுத்துகிற விசுவாசத்தில் குறைவாய் இருக்கிறீர்கள்.
1327 ஆகையால் இப்பொழுது, இந்த காலையில், நீங்கள் ஜெபித்துக்கொள்ளப்படுவதற்காக வரும்போது, நினைவிருக்கட்டும், வேதம் இதை கூறியுள்ளது. இது உண்மையாய் உள்ளது. யாக்கோபு 5:14-ல், “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக. அவர்கள் இவர்களுக்கு எண்ணைப் பூசி அவர்களுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், தேவன் அவனை எழுப்புவார்” என்று உள்ளது. இது ஒரு வாக்குத்தத்தமாயுள்ளது, நீங்கள் அதை விசுவாசித்தால் நலமாயிருக்கும். ஆகையால், பாருங்கள், சுகமளித்தல் தனிப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. 28 அது நசரேயனாகிய இயேசுவின் நாட்களில் இருந்தது. அவரால் ஜனங்களுடைய—அவர்களுடைய சொந்த விசுவாசத்திற்கு எதிராக அவர்களை குணப்படுத்த முடியவில்லை. அவர், “நீங்கள் விசுவாசித்தால், என்னால் முடியும். நான் இதைச் செய்ய முடியும் என்று நீங்கள் விசுவாசித்தால், என்னால் அதைச் செய்ய முடியும்” என்றார். உங்களால் அதை விசுவாசிக்க முடிந்தால் நலமாயிருக்குமே! 29 ஆகையால், சிலர் சுகமளிக்கும் வல்லமை மற்றவர்களுக்கோ, சுவிசேஷகர்களுக்கோ உரியது—உரியது என்று எண்ணுகிறார்கள். அது அப்படியல்ல. சுகமளிக்கும் வல்லமை உங்களுக்குள் இருக்கிறது. அது உங்களுக்குள் இருக்கிறது. அவர்கள் வண்டியை அப்படியே குதிரையின் முன் வைக்கின்றனர். சுகமளிக்கும் வல்லமை சுவிசேஷகர்களிடத்தில் இல்லை. 30 பரிசுத்த ஆவி சுகமளிக்கும் வல்லமை உடையவராய் இருக்கிறார், நீங்கள் அந்த பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் அந்த சிறிய மரமாய் இருக்கிறீர்கள், உங்களுக்கு தேவையான எல்லாக் காரியங்களும் உங்களுக்குள் இருக்கிறது. எனவே, ஆகையால், நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்திலிருந்து பருகத் துவங்கி, “இது சத்தியமாய் உள்ளது. தேவன் என்னை குணமாக்குவார் என்று அவர் கூறினார். ‘அவருடைய தழும்புகளால் நான் குணமடைந்திருக்கிறேன்’” என்று கூறுங்கள். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சுகமளித்தலை வெளியே உந்தித்தள்ள ஆரம்பிக்கிறீர்கள், அவ்வளவுதான். புரிகிறதா? அப்படியானால், நீங்கள் பெற்றுள்ளதை மற்றவர்களால் காண முடியும்.
1431 இப்பொழுது அது என்னவென்றால், “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது.” 32 நான் அந்த சிறிய மரத்தை வெளியே வைத்திருக்கலாம். நான் அங்கே ஆப்பிள்களை பார்க்கவில்லை, ஆனால் அவை அங்கே இருக்கின்றன. அந்த சிறிய மரமானது அவை அங்கே இருக்கின்றன என்பதை அறிந்துள்ளன. ஆக அது பருக ஆரம்பித்து, உந்தித்தள்ளி, உந்தித்தள்ளுகிறது, ஏனெனில் அது அறிந்திருக்கிறது, “அது எனக்குள் இருக்கிறது. நான் அதை இங்கே இன்னும் கொஞ்ச காலத்தில் கொடுப்பேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். வெறுமனே என்னைக் கொஞ்ச காலம் வைத்திருங்கள்.” அது அவ்வாறு பருகிகொண்டே இருக்கிறதை நான் அறிவேன். “ஆம், ஆப்பிள்கள் எனக்குள்ளாக இருக்கின்றன என்பதை நான் அறிவேன். நான் இன்னும் கொஞ்ச காலத்தில், அவைகளை கொண்டு வருவேன்.” முதலாவது காரியம் உங்களுக்கு தெரியுமா, இதோ அவைகள் வருகின்றன. இதோ ஆப்பிள்கள் வருகின்றன, ஏனென்றால் அவைகள் தனக்குள் இருக்கின்றன என்று அது விசுவாசித்தது. 33 உன்னை சுகமாக்க பரிசுத்த ஆவியின் வல்லமை உனக்குள் இருக்கிறது என்று நீ விசுவாசித்தால், அங்கேதான் உங்கள் காரியமே உள்ளது. வெறுமனே உந்தி தள்ளிக்கொண்டேயிரு. புரிகிறதா? உங்களுக்கு விசுவாசம் உண்டு. நீங்கள் சரியாக இப்போதே அதன் பலனைக் காணமுடியாது. நீங்கள் அதைப் பார்க்கவில்லை.
1534 இப்பொழுது, பாருங்கள், யாக்கோபு ஆபிரகாமை அவனுடைய கிரியைகளினால் நீதிமானாகக் கண்டான். பவுல் ஆபிரகாமை அவன் விசுவாசித்தினால் நீதிமானாகக் கண்டான். அப்படியானால் அது இரண்டுக்கும் இடையே, நாம் என்ன சொல்லுகிறோம்? ஆபிரகாம் எதன் பேரில் பேசிக்கொண்டிருந்தான் என்றால்…நான் பொருட்படுத்திக் கூறுவது, தேவன் ஆபிரகாமில் என்ன கண்டார் என்பதன் பேரில் பவுல் பேசிக்கொண்டிருந்தான். ஜனங்கள் ஆபிரகாமில் என்னத்தைக் கண்டார்கள் என்பதன் பெயரில் யாக்கோபு பேசிக் கொண்டிருந்தான். புரிகிறதா? இப்பொழுது, பார்த்தீர்களா? 35 ஆகவே, குழந்தை பிறப்பதற்கு முன்னமே, ஆபிரகாம் விசுவாசத்தை உடையவனாய் இருந்தான் என்பதை, தேவன் அறிந்திருந்தார். மேலும் ஆபிரகாம் தான் மலடாய் இருக்கும்போதே, (அவனுக்கு) குழந்தை பிறக்கபோகிறது என்ற விதமாய் நடந்து கொண்டதின் மூலம், அவன் அதை தேவனுக்கு நிரூபித்தான். அவன் பிள்ளையில்லாதிருந்தான். அவனுடைய மனைவியின் கர்ப்பம் செத்ததாயிருந்தது, அவனும் மலடாய் இருந்தான். ஆனால், அதேசமயத்தில், “அதற்குள் எங்கோ குழந்தை இருந்தது என்று” அவன் அறிந்திருந்தான். நீங்கள் பாருங்கள், தேவனுடைய மகத்தான எல்ஷடாயின், மார்பின் மேல் சாய்ந்து, வாக்குதத்தங்களை அவன் குடித்துகொண்டே இருந்தான். அங்கே சாய்ந்து, தேவன் அதை அவனுக்கு கொடுப்பார் என்று அறிந்தவனாய், குடித்துக்கொண்டே இருந்தான்; அது ஒரு வாக்குத்தத்தமாக இருந்தது என்பதை அறிந்திருந்தான், மேலும் அவன் அதைச் செய்ய வேண்டியதாய் இருந்தது. 36 நாம் ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருக்கிறோம். ஆகவே நாம் அவருடைய வாக்குத்தத்திற்குள் சாய்ந்து, அங்கே பற்றிக்கொண்டு, தேவன் அதைச் செய்வார் என்று அறிந்திருப்போமாக. அவர் அவ்வண்ணமாய் கூறினார். நீங்கள் அதை இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] 37 அப்படியானால் ஜெபித்துக்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புகிற சுகவீனமானவர்கள், இந்த பக்கங்களில் ஒன்றில் அல்லது மற்ற பக்கத்தில் வரிசையாக நிற்கட்டும். நாம் இங்கு மூப்பரை வரவழைத்து அவர்களுக்கு எண்ணெய் பூசினால், நான் அவர்களுக்காக ஜெபிப்பேன், தேவன் அவர்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்குவார் என்று நாம் விசுவாசிப்போம். “நீ விசுவாசிக்க கூடுமானால்.” 38 டெடி, நீ எங்கே இருக்கிறாய்? இந்த வலப்பக்கமாக சுற்றி வாருங்கள். அது நல்லது. நீங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள் என்ற பாடலை இசைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 39 அவர்கள் வந்துகொண்டிருக்கையில், கூட்டத்தில் உள்ள மற்றவர்களாகிய நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக, வந்துகொண்டிருக்கிற இந்த ஜனங்களுக்காக நாம் ஜெபத்தில் இருப்போமாக.
1640 எங்கள் பரலோக பிதாவே, நாங்கள் இந்த காலையில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த பரிதாபமான, சுகவீனமான, இந்த பயங்கரமான பேரழிவின் நிலையில், அவதியுறுகின்ற மானிடரை உம்மண்டை கொண்டு வருகிறோம். கர்த்தாவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். உம்முடைய வார்த்தைகள் சத்தியமாய் இருக்கின்றன என்பதை நான்—நான் அறிவேன். அவைகள் மிகவும் உண்மையானவைகளாயிற்றே! அவைகள் தவறிப்போக முடியாது, ஏனென்றால் அவைகள் தேவனுடைய நித்தியமான என்றென்றும் நிலைத்திருக்கிற வார்த்தையாய் இருக்கின்றன. அவைகள் தேவனைப் போலவே முழுவதும் வல்லமையுள்ளதாய் இருக்கின்றன, ஏனென்றால் அவைகள் அவருடைய ஒரு பாகமாக இருக்கின்றன. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாய் இருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” இப்பொழுது, கர்த்தாவே, நாங்கள் எங்களுடைய முழு இருதயத்தோடும், எங்களுடைய முழு ஆத்துமாவோடும, எங்களுக்குள் உள்ள யாவற்றோடும் அதை விசுவாசிக்கிறோம். நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். 41 நான் ஒரு எளிய, குழந்தைத்தனமான முறையில், தேவனுடைய வல்லமை அவர்களுக்குள் இருக்கிறது என்பதை அறிந்து அவர்கள் புரிந்து கொள்ளும்படியாக, ஜனங்களுக்கு அதை அளிக்க முயற்சித்துள்ளேன். அவர்கள் தங்களுடைய விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய கட்டளைகளை பின்பற்ற கூடுமானால் நலமாயிருக்குமே! 42 அவ்விதமாகத்தான் அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். இந்த வேதாகமத்தில் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தின்படி, அவர்கள் வந்து தங்களுடைய பாவங்களுக்காக மனம்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். பிறகு பேதுரு, “நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள்,” என்று, கூறினான். இதோ அது சரியாக, வருகிறது, ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்பட்டதாய் இருக்கிறது. 43 சரி, இப்பொழுது, அதே விதமாக, பிதாவே, நாங்கள் பிணியாளிகளுக்கு எண்ணெயைப் பூசி, ஜெபிக்கும்போது, அது உண்மை என்று நாங்கள் அறிவோம். “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கும். தேவன் அவர்களை எழுப்புவார்.” தேவனே, இந்த பீடத்தைவிட்டு, இந்த காலையில் இந்த இடத்தைவிட்டு செல்கிற ஒவ்வொருவரும், தேவன் அவர்களை சுகப்படுத்தியுள்ளார் என்பதை அறிந்தவர்களாய், மிகவும் மகிழ்ச்சியாய் களிகூர்ந்துகொண்டே செல்வார்களாக. “போய் சுகமடைவார்களாக.” ஏனென்றால் நாங்கள் அவர்களை உம்மண்ட இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சமர்ப்பிக்கிறோம். 44 ஒவ்வொருவரும் சுகமடைந்து, அது என்ன பொருள்படுகிறது என்று, தரிசனத்தை புரிந்து கொள்வார்களாக, ஆபிரகாமைப்போல “இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைத்து” அதன் பலன் என்னவாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அதற்கும் விசுவாசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பலன்கள் ஒன்றுமில்லை. விசுவாசம் ஏற்கனவே பற்றி பிடித்திருக்கிறது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” தேவனே, அவர்களுக்கு நீர் தேவையா யிருக்கின்றபடியால், இது அவர்களுடைய இருதயங்களில் ஆழமாகப் பதிவதாக. 45 நான் உம்முடைய தாழ்மையுள்ள ஊழியக்காரனாக சென்று, மற்ற ஊழியக்காரரோடு இங்கே நின்று, தேவனே இந்த சுகவீனமான ஜனங்களுக்காக எங்களுடைய இருதயங்களில் ஜெபிக்கும்படி செய்யும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
1746 சகோதரன் எஸ்டில் பீலர் இந்த கட்டிடத்திற்குள் இருந்தார் என்று யாரோ கூறினார். இந்த காலையில், இங்கிருக்கிற வேறு ஒரு ஊழியக்காரர் ஜெபத்திலே நடத்தினார் என்று நான் நம்புகிறேன். இங்குள்ள எல்லா ஊழியக்காரர்களும், அவர்கள் யாராயிருந்தாலும், நீங்கள் மேலே வந்து இந்த பீடத்தை சுற்றி எங்களோடு, சகோதரர்களே, சற்று நேரம், கொஞ்சம், தயவு கூர்ந்து நிற்பீர்களா என்று நாங்கள் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம். மேலும் புருஷர்கள்…சகோதரன் பென், உமக்கு நன்றி. நாம் இந்த ஜனங்கள் மேல் கரங்களை வைத்து, அவர்களுக்காக ஜெபிக்கும்படியாக, மேலே வந்து இங்கே சுற்றிலும், இங்கே பீடத்தை சுற்றிலும் நில்லுங்கள். 47 இப்பொழுது, அவர்கள் பாடலை இசைக்கும்போது. ஊழியக்காரர்கள் தங்களுடைய இடத்தில் இங்கு நின்றுகொண்டிருக்கிறார்கள், ஆகவே நாம், ஒவ்வொருவரும், வியாதியஸ்தர் மேல் கரங்களை வைக்கலாம்.
1848 அப்பாலுள்ள மலையினூடாக இறங்கி வருவதை, நாம் பார்ப்போமாக. ஒரு மனிதன் வருகிறதை நான் காண்கிறேன், மற்ற மனிதனைக் காட்டிலும் எந்த விதத்திலும் வித்தியாசமில்லாத ஒரு மனிதன். அவர் ஒரு சாதாரண மனிதனாய், ஒருவிதமான சிறிய உருவம் கொண்ட சரீரத்தில், சரியாக கூறினால் பலவீனமாய் இருந்தார். நாம் அவரை நோக்கிப் பார்க்கும்போது, அவருடைய கண்கள் கீழே பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருந்த ஒரு—ஒரு காட்சியை கீழ் நோக்கி பார்த்தன. அது அவருடைய அப்போஸ்தலர்களாய் இருந்தது. அவர்கள் அங்கு ஒரு பையனை, வலிப்பு நோய் கொண்டவனை உடையவர்களாக இருந்தனர், அவர்களோ, “கர்த்தாவே, அவனைக் குணப்படுத்தும்! அவனைக் குணப்படுத்தும்!” என்று கூறிக்கொண்டிருந்தனர் என்பதில் சந்தேகமே இல்லை. 49 ஆனால், நீங்கள் பாருங்கள், வெறுமனே “கர்த்தாவே, அவனைக் குணப்படுத்தும், அவனைக் குணப்படுத்தும்,” என்று கூறிக்கொண்டிருப்பது, அதை செய்யாது. அது அதனைச் செய்யாது. “அவனை சுகப்படுத்தும், கர்த்தாவே, அவனை சுகப்படுத்தும்” என்பதற்குப் பின்னால் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். புரிகிறதா? நான் உங்களை இதை விசுவாசிக்கும்படி செய்ய முடிந்தால், உங்களுடைய முழு இருதயத்தோடு அதை விசுவாசித்தால், நான் அந்த தரிசனத்தை உண்மையாகவே நீங்கள் காணும்படி செய்தால், நீங்கள் சுகமடையப்போகின்றீர்கள். 50 இப்பொழுது பாருங்கள், அந்த சீஷர்கள் அங்கே நின்றுகொண்டு, அவனைக் குலுக்கியிருக்கலாம், கடினமாகத் தள்ளி, “இதை விசுவாசி, சகோதரனே! இதை விசுவாசி! அல்லேலூயா! இதை விசுவாசி! கர்த்தாவே அவனைக் குணமாக்கும்! அவனைக் குணமாக்கும்!” என்று கூறியிருக்கலாம். ஆனால் பிசாசு அங்கேயே தரித்திருந்தான், ஏனெனில் அவனைவிட்டுச் செல்வதற்கான போதுமான விசுவாசத்தை அவனால் அங்கே காண முடியவில்லை. 51 ஆனால் அந்த மலையினூடாக இதோ ஒருவர் கீழே இறங்கி வருகிறார். அவர் மற்ற மனுஷர்களை காட்டிலும் சற்றே வித்தியாசமானவர் என்று உடனடியாக அந்த பிசாசு அடையாளம் கண்டுகொண்டானே! பார்த்தீர்களா? 52 இப்பொழுது, நம்முடைய கர்த்தராகிய இயேசுவைப் போன்ற, அந்த விதமான மனிதர்கள் அங்கு இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆம். வெறுமனே ஒரு காட்சிக்காக வராமல், இதைச் செய்யும்படி செல்ல நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம் என்று அறிந்து, நம்முடைய தேவனை நேசித்து, வர வேண்டும். இதுவே நம்முடைய கட்டளையாக உள்ளது.
1953 அதன் பின்னர் அவர் அந்த தகப்பனிடத்தில் நடந்து சென்றபோது, இந்தப் பாடல் அங்கிருந்து தான் எழுதப்பட்டு, அந்த வார்த்தையிலிருந்து இசையமைக்கப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன், அவன், “கர்த்தாவே, என் மகன் மேல் இரக்கமாயிரும், ஏனெனில் அவன் ஒரு பிசாசினால் பலவிதமாய் அலைக்கழிக்கப்படுகிறான்” என்றான். “அது அவனை நெருப்பிலே தள்ளி, அவ்விதமாக, அலைக்கழிக்கிறது” என்றான். அவன், “நான் அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டு வந்தேன், ஆனால் அவர்களால் அவனை சுகப்படுத்த முடியாமற் போயிற்று. ஆனால் நான்—நான்—நான், நினைத்தேன்…” என்றான். 54 அவர், “நீ விசுவாசித்தால், என்னால் கூடும். இப்பொழுது, நான் எனக்குள் அந்த வல்லமையை உடையவனாய் இருக்கிறேன்” என்றார், அவர், “அதைச் செய்வதற்கு, உன்னால் அதை விசுவாசிக்க முடிந்தால்” என்றார். 55 இந்த காலையில் புற்று நோயினால் பீடிக்கப்பட்ட ஜனங்களையும், படுத்த படுக்கையில் இருக்கின்றவர்களையும், புற்று நோயினால் படுத்த படுக்கையில் இருக்கின்றவர்களையும், இரத்தப் புற்றுநோய், சுகவீனம், தொல்லையோடிருக்கிறவர்களை தேவன் இங்கு வர அனுமதித்து, தேவன் அவர்களை சுகப்படுத்திவிட்டு உங்களை சுகப்படுத்தாமல் கடந்து செல்வாரா? அவ்விதமாக அல்ல! இல்லை, புரிகிறதா? இப்பொழுது, அவர் தவறுகிறதில்லை. “நீங்கள் விசுவாசித்தால், என்னால் கூடும்.” அவர் என்ன கூறினார்? யாவும் கைகூடிடும்…மாத்திரம் இப்போது சகோதரன் டைலர், மேலே வாரும் …?… இப்பொழுது அப்படியே விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், 56 இப்பொழுது, நான் ஜெபிக்கும்போது, நீங்கள் ஜனங்கள் மீது கரங்களை வைக்கும்படி நான் விரும்புகிறேன். அவர்களுக்கு என்னவெல்லாம் தேவையாயிருந்து கொண்டிருக்கிறதோ …?… அந்த வரிசையண்டைக்குச் செல்லுங்கள். 57 சகோதரன் நெவில், நீங்கள் எண்ணையைப் பூசுங்கள், மேலும் சகோதரர்களே …?… 58 கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும், இப்பொழுது உங்களுடைய தலைகளை வணங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொருவரும் ஜெபத்தில் ஆழ்ந்திருங்கள். …மாத்திரம் 59 கர்த்தாவே, இரக்கமாயிரும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக, இந்த ஜனங்களை சுகப்படுத்தும் என்று, நான் ஜெபிக்கிறேன். ஆமென். நசரேயனாகிய இயேசுவின் நாமத்தில் …?… [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] 60 வரிசையினூடாக, அநேகரை, அவர்கள் எப்படி இருந்தனர் என்பதற்கான செய்கைக்கு அவர்களுடைய பதில் செய்கை எப்படி என்று பார்க்க, செய்கைக்கு அவர்களுடைய பதில் செய்கை எப்படி என்று பார்க்க, அவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறேன். புரிகிறதா? ஒரு செயல் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியம் உண்டு, அவர்கள் எழும்பி முன்னே வந்தனர். மற்றொரு காரியம் என்னவென்றால், அவர்கள் செய்துள்ள செய்கையின் பெயரில் அவர்கள் எப்படி பதில் செய்கை புரிகிறார்கள் என்பதாக உள்ளது. அவர்கள் விசுவாசிக்கிற நிலைக்கு வந்தப் பிறகு, அதாவது, அவர்களுக்காக ஜெபிக்கப்படும்போது, அவர்கள் சுகமடைவார்கள், அப்பொழுது அவர்களுடைய செய்கையின் மறுசெய்கையைக் கவனிக்கிறேன்.
2061 இப்பொழுது, இந்த காலையில், நம்முடைய மேய்ப்பர் நமக்காக ஒரு செய்தியை உடையவராய் இருக்கிறார் என்று, நான் நிச்சயமாய் நம்புகிறேன். 62 ஒரு நிமிடம் நான் ஒரு கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன், ஒரு கத்தோலிக்க பெண்மணி அங்கே பீடத்தன்டை நின்றுகொண்டு இருந்தாள். சில நாட்களுக்கு முன் அவள், அவளும் அவளுடைய கணவனும் என் வீட்டில் இருந்தார்கள். சில நாட்களாகவே அவளுடைய கணவரை எனக்குத் தெரியும். மேலும்—மேலும் நாங்கள் தனிப்பட்ட நேர்காணலுக்காக அமர்ந்திருந்தபோது அதைக் குறித்த ஏதோ ஒரு காரியம் இருந்தது. 63 அங்கேதான் எங்களுக்கு ஒரு தரிசனம் உண்டானது. அங்கேதான் நாங்கள்…வழக்கமாக எனக்கு இங்கே சபையில்தான் அது உண்டாகும், ஆனால் அன்று காலையிலே, அது போன்று உண்டானது. ஆகவே அது அங்கு இருந்தது. 64 அவள் ஒரு பெண்ணாய் இருந்தபடியால், நான் ஒருபோதும் ஒன்றையுமே கூறவில்லை, மற்றொரு காரியம், எப்பொழுதும் ஒரு கத்தோலிக்க சபையிலேயே, வளர்க்கப்படிருந்தாள். ஆனால் அவள் தன் தாயாருக்காக பேசச் சென்றாள். அந்த சமயத்தில், அவளுடைய தாயாரை குறித்த ஒரு தரிசனத்தை நான் கண்டேன். அவளுடைய தாயாருடைய பிரச்சினை என்னவென்றும், பார்ப்பதற்கு அவளுடைய தாயார் எப்படி இருப்பாள் என்பதையும் அவளிடத்தில் விவரித்துச் சொன்னேன். நிச்சயமாகவே, அது சரியா அல்லது இல்லையா என்பதைக் குறித்து அவள் நிதானித்துப் பார்த்தாள். என்னுடைய ஜீவியத்தில், அவளுடைய தாயாரை ஒருபோதும் நான் கண்டதில்லை. அதை அவள் அறிவாள். 65 அந்த பெண், இந்தக் காலை, பலிபீடத்தண்டைக்கு வந்து நின்று, ஒரு பாவ அறிக்கையை செய்து, கிறிஸ்துவை அவளுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டாள். இந்தக் காலையில், அவள் பீடத்தண்டையிலே அதைச் செய்தாள். 66 சகோதரன் நெவில், அதை அறியாமலே, அவளுக்கு எண்ணையைப் பூசினார், எப்படி—எப்படி தேவன் கிரியை செய்கிறார்! சுகவீனத்துக்காக, அவளுக்கு எண்ணையைப் பூசினார். ஆனால் பரிசுத்த ஆவியின் அசைவைக் கவனியுங்கள். இப்பொழுது, அவள் எண்ணெய் பூசப்பட்டவளாய், உண்மையாகவே வியாதியாய் இல்லாமல் இருந்தும், எண்ணெய் பூசப்பட்டாள். எப்படி ஒவ்வொரு காரியமும் சரியாகக் கிரியை செய்கிறது என்று பார்த்தீர்களா? ஒரு கிறிஸ்தவனாய் இருப்பதற்கு நாம் விசுவாசித்தபடியே, இப்பொழுது அவள் ஒரு கிறிஸ்தவளாய் நின்றாள். இப்பொழுது, அவள், “என் தாயாருக்காக நீங்கள் ஜெபிப்பீர்களா? அவள் சுகவீனமாய் இருக்கிறாள்” என்று கூறினாள். அதே விதமான ஒன்று. ஆகவே அபிஷேக எண்ணெய் முன்னதாக பூசப்பட்டது. 67 நான் நினைத்தேன், அது, எவ்வளவு பொருத்தமானது, பாருங்கள், யாரோ ஒருவர் சற்று முன்னர் இரட்சிக்கப்பட்டிருக்கிறார். கிறிஸ்து நம்மெல்லாருக்காகவும் நின்றார். அவர் எல்லாருக்காகவும் நிற்கிறார். உண்மையாக நாம் இரட்சிக்கப்படும்போது கிறிஸ்துவின் ஆவி நமக்குள் வருகிறது என்பதை காண்பிக்கத்தக்கதாக, இந்தப் பெண் ஒரு கிறிஸ்தவளானவுடனே, மற்றவர்களுக்காகவும் கூட, அவள் நிற்க விரும்புகிறாள். இப்பொழுது உண்மையாகவே அருமையாக உள்ளது. அந்த விசுவாசமுள்ள அருமையான கிறிஸ்தவளின் ஆவியை, நான்—நான் நிச்சயமாகவே அதைப் பாராட்டுகிறேன். இப்பொழுது, சற்று நினைவில் கொள்ளுங்கள்.
2168 இப்பொழுது, இந்த வாலிபப் பெண்மணிக்கு, அவள் இங்கு எங்கோ இருக்கிறாள், மேலும் அவளோடு மற்றொரு கத்தோலிக்க பெண்மணியும் வந்திருந்தாள். இந்த ஆராதனையை நம்முடைய மேய்ப்பரிடத்தில் ஒப்படைக்கும் முன் இந்த வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன், பாருங்கள், இதுதான்: 69 இப்பொழுது, கத்தோலிக்க சபையானது ஒரு காலத்தில், இந்த சபையைப் போன்று இருந்தது. நீங்கள் திரும்பி சென்று வேதத்தை வாசிப்பீர்களானால், நாம் அதை விசுவாசிக்கிறோம், கத்தோலிக்க சபைதான் முதல் சபையாக இருந்தது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அது உண்மை. ஆனால் அது போதனைகளிலிருந்து வழிவிலகிப் போய்விட்டது. இதுவே கத்தோலிக்க சபையின் போதனையாய் இருந்தது. ஆனால், நீங்கள் பாருங்கள், இந்த வேதாகமத்தை போலவே பரிசுத்தமாய் அவர்கள் கருதுகிற, போப்புகளும், மற்றவர்களும் எழுதியிருக்கிற அறநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களும் அவர்களுக்கு உண்டு.
2270 ஆகவே, பாருங்கள், இது என்ன, நீங்கள் மாறியிருக்கவில்லை. நீங்கள் என்ன செய்துள்ளீர்கள், நீங்கள் வெறுமனே மனமாற்றமடைந்துள்ளீர்கள். புரிகிறதா? இப்பொழுது நீங்கள் எடுத்துக்கொண்டால்…நிச்சயமாகவே, உங்களில் சிலர் கத்தோலிக்கராக இருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன், இந்தக் காலை, அவர்கள் இருவரும், ஸ்திரிகளாயிருந்தனர். சில கத்தோலிக்க புருஷர்களும் இங்கே இருக்கலாம். 71 நீங்கள் சபையின் சரித்திரத்திற்கு திரும்பிச் சென்றால், “இங்கே வேதாகமத்தில் இருக்கிற இந்த அப்போஸ்தலரின் நடபடிகள், அவ்விதமாக இருந்தார்களா…அவர்கள் தான் ஆதி கத்தோலிக்கர்களா?” என்று உங்கள் குருவானவரைக் கேட்டால். அவர், “ஆம்” என்று கூறுவார். அது உண்மை. அவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். இப்பொழுது, அவர்கள், எவ்விதமான மார்க்கத்தை பெற்றிருந்தார்கள் என்று பாருங்கள். அவர்கள் சிறிய, எளிமையான இடங்களில் கூடினார்கள். அவர்கள் ஒருபோதும் “மரியே வாழ்க” அல்லது “எங்கள் பிதாவினுடைய” என்று கூறினதில்லை. அது ஒரு சபையின் பாரம்பரியமாய் இருக்கிறது. அவர்கள் என்ன கூறினார்கள்? அவர்கள் தேவனை துதித்தார்கள். அவர்கள் கூச்சலிட்டார்கள். அவர்கள் அழுதார்கள்.
2372 இங்கே அப்போஸ்தலர் 2-ல் பாருங்கள், பரிசுத்த அப்போஸ்தலனாகிய பேதுருவும், யாக்கோபும், யோவானும், மற்றும் யாவரும் ஒன்று கூடியிருந்தபோதோ. அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினார்கள் என்று வேதாகமம் கூறியுள்ளது. அவர்கள் கூச்சலிட்டு, அவர்கள் குடிகாரர்களைப் போல நடந்துகொள்ளுமளவிற்கு ஆவியினால் அவ்வளவாக—அவ்வளவாக நிரப்பப்பட்டனர், மேலும் வெளி உலகமும் கூட “இவர்களெல்லாரும் மதுபானத்தினால் வெறிகொண்டவர்கள் அல்லவா?” என்று கேட்டனர். 73 அதன்பின்னர் பேதுரு, அந்த அப்போஸ்தலன், அந்த பரிசுத்தவானான பரிசுத்த பேதுரு, அவன் எழுந்து நின்று, அவன், “மனிதர்களே, சகோதரர்களே, இந்த மனிதர்கள் மதுபானத்தினால் வெறிகொண்டவர்கள் அல்ல, ஆனால் வேதம் அவர்களைக் குறித்து கூறியிருப்பது போலவே—அவர்கள் ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறினான். இப்பொழுது, அவர்களுடைய போதனைகளின்படி, அதுதான் ஆதிகத்தோலிக்க சபையாய் இருந்தது. 74 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், ஏறத்தாழ இருநூறு வருடங்களுக்கு பிறகு, பெரிய பிரமுகர்கள் சபைக்குள் நுழைய ஆரம்பித்தனர். அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் முதலாவது ஸ்தாபனத்தை கி.பி.606-ல் நிசாய ஆலோசனை சங்கத்தில் உண்டாக்கினார்கள். அவர்கள் உருவாக்கின தங்களுடைய…ரோமாபுரியிலுள்ள, நிசாயாவில் நடைபெற்ற நிசாயா ஆலோசனை சங்கத்தில் எல்லா பெரிய பிரமுகர்களையும் உள்ளே கொண்டு வந்து, வெறுமனே ஒரு சபையை உருவாக்கி , ஒரு சபையை ஏற்படுத்தினார்கள். 75 அதன்பின்னர், அது நான்கு அல்லது ஐந்து முறை உடைந்தது. அவர்கள் அதிலிருந்து சென்று—அவர்கள் சென்று, பேராயரையும்; பேராயரிலிருந்து ஒரு போப்பையும் ஏற்படுத்தினர். அவர்கள் அதை உடைத்துபோடுமளவிற்கு, அதிலிருந்து, கிரேக்க ஆச்சாரமான மற்றும் பல்வேறுபட்டவர்களானார்கள், அங்கே இன்றைக்கு நீங்கள் அதைக் காண்கிறீர்கள். இது எல்லா விதங்களிலும் பிளவுபட்டுள்ளது.
2476 ஆனால் நாம் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், என்னுடைய கத்தோலிக்க நண்பனே…பாருங்கள், நாமும் கூட கத்தோலிக்கர்கள்தான். நாம் ஆதி, துவக்க கத்தோலிக்கர்களாய் இருக்கிறோம். பெரும்பாலும், இப்பொழுது அவர்கள் நம்மை அழைக்கும் சபையானது, பெந்தேகோஸ்தே ஆசீர்வாதத்தில் நாம் விசுவாசங்கொண்டுள்ளபடியால், நாம் பெந்தேகோஸ்தேக்களாக குறிப்பிடப்படுகிறோம். 77 அங்கேதான் அந்த கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்பட்டது. நம்முடைய பெந்தேகோஸ்தே ஸ்தாபனங்களில், இன்றைக்கு, இந்த உலகம் இன்னும் ஐநூறு ஆண்டுகள் நிலைத்திருக்குமானால், இந்த பெந்தேகோஸ்தே ஸ்தாபனம் இன்றைக்கு இருக்கிற ரோமன் கத்தோலிக்க சபையைவிட அதிக சம்பிரதாய சபையாகிவிடும். அது அந்த விதமாகவே, தூரமாய் வழிவிலகி சென்றுகொண்டிருக்கிறது. அவர்கள் ஸ்தாபித்தபோது, அவர்கள் அதை ஒரு விடுதியாக்கிவிட்டார்கள். அதன்பின்னர் அவர்கள் விடுதியாகி, அங்கத்தினர்களாகி, மனமாற்றமடையாத ஆத்துமாக்களாகிவிட்டனர். 78 என்னுடைய விலையேறபெற்ற, என்னுடைய அருமையான சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும். ஒரு தேவனுடைய ஊழியக்காரன் என்ற முறையில், இந்த உலகத்தில், இந்த சபையில், நான் இதற்கு முன்பு இதை ஒருபோதும் கூறினதேயில்லை, நான் ஒருபோதும் கூறவேயில்லை. ஆனால் ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசியாக, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். “இதுவே வெளிச்சம். நீங்கள் இதில் நடவுங்கள்.”