1 நண்பர்களே, காலை வணக்கம். இந்த மழையும், பனியும், கலந்துள்ள காலையில், இந்தக் காலையில் மீண்டும் வெளியே இருப்பது அருமையானதாய் உள்ளது. உங்களில் அநேகர் சிரமத்திற்கு மத்தியில் வாகனத்தை, ஓட்டி வருவதை அறிந்திருக்கிறேன். நமக்கு…சிக்காகோ மற்றும் அலபாமாவிலிருந்தும் இந்த நாட்களில் ஜார்ஜியா, டென்னஸி, இல்லினாய்ஸ் மற்றும் சுற்றிலும் உள்ள எல்லா இடங்களிலுமிருந்து வந்துள்ள இந்த விலையேறப்பெற்ற நண்பர்கள் உள்ளனர், எனவே…நீங்கள் பயணம் செய்யும்போது தேவன் அவருடைய பாதுகாப்பை உங்களுக்கு அளிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் உங்களை சாலைகளில் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஜெபமாயுள்ளது, இந்த அபாயகரமான சாலைகளில் அவைகள் குளிர்காலத்தில் வழுவழுப்பாகிவிடுகின்றன. குளிர்காலத்தில் இது ஒரு மோசமான தேசமாக இருக்கிறது. இது வசந்த காலத்திலோ அல்லது இலையுதிர் காலத்திலோ உள்ள மிக அழகான தேசமாயுள்ளது, ஆனால் குளிர்காலத்திலும், கோடை காலத்திலும் இது மிகவும் மோசமாக இருக்கும்.
22 இப்பொழுது, அவர்கள் இன்னும் அங்கே ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியின் பேரில், இதைக் குறித்து நான் ஒரு அறிக்கையை கூற விரும்புகிறேன். நான்—நான் ஒலிநாடாவை முதலில் கேட்டுப் பார்க்க வேண்டியிருந்தபடியால், பாருங்கள், நான் அதை உடனடியாக விற்பனைக்கு, வெளியே அனுமதிக்காமல் இருந்ததற்கு காரணம் அதுவேயாகும். ஏனென்றால் அநேக சமயங்களில், அந்தவிதமாக, நான் இங்கே சபையில் கூறும் காரியங்களை நான் அந்தவிதமாக, மற்றவர்களுக்கு முன்பாக கூறமாட்டேன், ஏனென்றால் சில நேரங்களில் அது இடறல்களை உண்டுபண்ணுகிறது. சில சமயங்களில் அது இங்கே கூடாரத்தில் உள்ள நம்முடைய ஜனங்களுக்கு மத்தியில் கேள்விகளைக் கூட உண்டாக்குகிறது. அது…
33 நான் இதை…வித்தியாசமாக இருக்கும்படி இந்த காரியங்களை கூறுகிறதில்லை, ஆனால் சில சமயங்களில் அபிஷேகத்தின் கீழ் நீங்கள் அறிந்து கொள்ளாத காரியங்களை…நீங்கள் ஜனங்களிடத்தில் கூற தைரியமில்லாதிருப்பீர்கள். அப்பொழுது சில சமயங்களில் அபிஷேகத்தின் கீழ் ஏதோ ஒன்று நழுவிச் செல்லும், நீங்கள் பாருங்கள், நீங்கள் அதை கவனிக்கமாட்டீர்கள். நான் நம்புகிற காரியங்களில் ஒன்று (கடந்த ஞாயிற்றுக்கிழமை) சொல்லப்பட்டது அது யாரையாவது…ஏற்படுத்தலாம், நான் பீட அழைப்புகளில் ஒருபோதும் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை என்று நான் குறிப்பிட்டபோதே. பார்த்தீர்களா? 4 நீங்கள் புரிந்து கொள்ளும்படி நான் அதை தெளிவாக கூற விரும்புகிறேன். வேதாகமம் முழுவதிலும் பீட அழைப்பு என்றுமே கூறப்படவில்லை. வேதத்தில் அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர், மெதோடிஸ்டு சபைக்காலம் வரையிலும், காலங்கள் தோறும் அது உண்டாகவில்லை, பாருங்கள். 5 பீட அழைப்புகள் என்பது ஜனங்கள் மேலே வந்து, ஜனங்களை சம்மதிக்க வைத்து, “ஜான், வாருங்கள். உங்களுக்குத் தெரியும், அவர்கள்…உங்களுடைய தாயார் உங்களுக்காக ஜெபித்து மரித்துவிட்டார். வாருங்கள், ஜான்” என்று இழுக்க முயற்சிப்பதாகும். நண்பர்களே, அது நம்பிக்கையல்ல. இல்லை. அவர்கள்—அவர்கள் அன்பானவர்கள், நான்…அவர்கள் நீண்ட காலம் நிலைத்திருப்பதை குறித்து நீங்கள் கேள்விப்படுவது மிக அரிது. மேலும், அதில், நீங்கள் எல்லோரையும் வரவழைக்கிறீர்கள். அந்தக் காரணத்தினால்தான் சபையானது இன்றைக்கு இருக்கிறவிதமாக, எல்லாமே குழப்பமாக இருக்கிறது.
46 திடநம்பிக்கை, நீங்கள் ஒரு காரியத்தையும் கூற வேண்டியதில்லை, சகோதரனே, தேவன் அங்கிருக்கிறார், அந்த கிரியையை செய்து முடித்துவிட்டார். “பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையில், வசனத்தைக் கேட்டவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.” பார்த்தீர்களா? பார்த்தீர்களா? பார்த்தீர்களா? அங்கே பீட அழைப்பு இல்லை, பாருங்கள், அப்படிப்பட்ட ஒரு காரியம் இல்லை. 7 இப்பொழுது, சபைக்கு வரும் ஒவ்வொரு நபரும் முதலில் உள்ளே செல்ல வேண்டிய ஜெப ஸ்தலமே பீடமாய் உள்ளது, பீடத்தண்டை முழங்காற்படியிட்டு, மௌனமாக தேவனிடத்தில் ஜெபித்து, தங்களுடைய ஜெப விண்ணப்பத்தை மேலும்—மேலும் அவர்களுடைய அன்புக்குரியவர்களுக்காக ஏறெடுக்கின்றனர், அவர்கள் அவர்களுக்காக செய்திருக்கிறதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தி, அதன்பின்னர் தங்களுடைய இருக்கைகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். 8 அப்படியானால் சபையானது தேவனுடைய வார்த்தை… “நியாயந்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் துவங்குகிறது,” வார்த்தையின் நியாயத்தீர்ப்பு அங்கு செல்கிறது. அப்படியானால்…ஆனால் இன்றைக்கு, நாம்—நாம் அதை அதிகமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
59 இப்பொழுது, பீட அழைப்புகளை விடுக்கும் எவருக்கும் எதிராக எனக்கு ஒன்றுமில்லை, பாருங்கள். அது…மேலும் நானே அநேக பீட அழைப்புகளை கொடுத்திருக்கிறேன், நான் தொடர்ந்து சென்று கொண்டிருந்தால், அநேகமாக இன்னும் அநேக பீடஅழைப்புகளை நான் கொடுப்பேன். ஆனால் எனக்காகவே…பாருங்கள், நீங்கள்—நீங்கள்—நீங்கள் அதிகமாக சேகரிக்கிறீர்கள். அதற்கு எதிராக ஒன்றுமில்லை, அதில் எந்த தீங்கும் இல்லை. அது சரிதான். பார்த்தீர்களா? 10 காரணம், கவனியுங்கள், இயேசு, “என் பிதா முதலில் ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்றார். அது உண்மை. ஆகையால் அப்பொழுது, பாருங்கள், அவர்கள்…அது உங்களுடைய பீட அழைப்பை முற்றிலுமாக அகற்றிவிடும். பார்த்தீர்களா? அதைப் பார்த்தீர்களா? “பிதாவானவர்… யாவும் .” நீங்கள்… 11 நம்முடைய—நம்முடைய பொறுப்பு “வார்த்தையை பிரசங்கிப்பதாகும்.” வேதம், “விசுவாசித்தவர்கள் யாவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்” என்று உரைத்துள்ளது. “மனந்திரும்பி பாவமன்னிப்புக்காகவும், பாவங்களின் மன்னிப்பிற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளது. என்ன? “பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், பாருங்கள், அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.”
612 ஆனால் நீங்கள் வற்புறுத்தி, ஜனங்களை இழுத்து, பயமுறுத்தி, ஜனங்களிடம் பேசும்போது… ஜனங்கள் நல்லறிவோடும், தெளிவோடும், திடநம்பிக்கையோடும் வந்து, கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் தங்களுடைய இருக்கைகளில் அமர்ந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவுடன் அவர்கள் செய்யும் முதல் காரியம், அடுத்தபடியாக அந்தப் பாவங்களின் மன்னிப்பிற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் அவர்கள் தவறாயிருக்கிறார்கள் என்று அவர்கள் உறுதியாக நம்பியுள்ளனர். அந்தவிதமாகத்தான் அவர்கள் தங்களுடைய பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுகின்றனர், பாருங்கள். ஏனென்றால் அவர்கள் மனந்திரும்பியிருக்கின்றனர்; ஜனங்களுக்கு ஒரு ஞாபகர்த்தமாக ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு, “கிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன்”; என்றும், அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியை நாடுகின்ற ஒரு நபராக இருக்கிறீர்கள். 13 மேலும், இப்பொழுது, அநேக ஜனங்கள் தொடர்ந்து கட்டாயப்படுத்தி பீடத்தண்டையில், அதைப் போன்று கொண்டு வருகிறார்கள், அது சரிதான். நான் அதனோடு செல்வேன், என்னைப் பொறுத்தமட்டில், அதைச் செய்ய விரும்புகிற எவருக்குமே அது பரிபூரணமாக சரியாயிருக்கும். ஆனால், என்னைப் பொருத்தவரையில், அது வேதப்பிரகாரமானதல்ல, நீங்கள் பாருங்கள், எனவே நான்—நான் வேதத்தோடு நிலைத்திருக்க விரும்புகிறேன்.
714 எனவேதான் நான் ஒலிநாடாவை வெளியிடாமல் வைத்திருந்ததற்கான காரணம் நீங்கள் அதை வெளியிட்டிருந்தால் நாம் ஒரு வாரத்திற்கு ஐந்நூறு கடிதங்களுக்கு பதில் அளித்திருக்க வேண்டும். ஒவ்வொருவரும்…யாரோ ஒருவர் வைத்துள்ள ஒரு சிறு பாரம்பரியத்தின் பேரில் அடியெடுத்து வைத்தால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான், அப்பொழுது அவை யாவற்றையும் மீண்டும் பின்பற்றுவார்கள். 15 அதைப் போன்ற பல்வேறுபட்ட காரியங்களின் பேரில் நான் சற்று அதிகமாகவே குற்றஞ்சாட்டுகிறேன் என்று, நான் அநேக சமயங்களில், நினைக்கிறேன். நான் அந்தவிதமாக இருக்க வேண்டுமென்று கருதவில்லை, ஆனால் சில நேரங்களில் பணிக் கடமைகள் உங்களை அந்தவிதமாக இழுக்கின்றன, நீங்கள் பாருங்கள், அவர்கள்—அவர்கள் உங்களை அந்தவிதமாக சார்ந்திருக்கச் செய்கிறார்கள். எனவே ஜனங்கள் அதை புரிந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.
816 இப்பொழுது, நம்முடைய தவறுகளை எண்ணிப் பாராமலும் அவைகளை நம் மீது சுமத்தாமல் இருக்கிற ஒரு தயவுள்ள பரலோகப் பிதாவை நாம் இன்னமும் உடையவர்களாயிருப்பதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம் 17 நான் ரோமரின் புத்தகத்தில், 4-ம் அதிகாரத்தை வாசித்துக் கொண்டிருந்தேன், அங்கே பவுல் ஆபிரகாமின் ஜீவியத்தைக் குறித்த தெய்வீக விளக்கவுரையை எழுதினான். இப்பொழுது, நம்மைப் போன்றே ஆபிரகாம் அநேக சமயங்களில் ஒருவிதமாக குழப்பமடைந்தான் என்பதை நாம் அறிவோம். ஆனால்…அவனுடைய விளக்கவுரை எழுதப்பட்டபோது, அவனுடைய குழப்பங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை, நீங்கள் பாருங்கள், அவைகளை ஒருபோதும் குறிப்பிடவேயில்லை. இவ்வாறு கூறினான்: ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,…தேவனை துதித்து, வல்லவனானான். 18 பாருங்கள், அந்த விதமாகத்தான் என்னுடைய புத்தகமும் அங்கே எழுதப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன், என்னுடைய தவறுகளும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியமும் அல்ல, ஆனால் தேவனுடைய ஜனங்களுக்கு செய்ய வேண்டுமென்ற என்னுடைய இருதயத்தின் நோக்கத்தையே நான் செய்ய முயற்சிக்கிறேன்.
919 இப்பொழுது நாம் இந்தக் காலையில் இங்கே ஒரு சிறு செய்தியைக் கொண்டு வர முயற்சிக்க வந்துள்ளோம் அதை ஒருக்கால் ஜனங்களுக்கு அளிக்கும்படி கர்த்தர் நம்மேல் வைத்திருக்கலாம். அது உங்களுக்கு நன்மையையும், எனக்கு நன்மையையும் செய்யும் என்று நம்புகிறோம், ஏனென்றால் நாம் ஒன்றாக இருக்கிறோம், ஒரு பயங்கரமான காலத்தில், கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நாம் ஜெபம் செய்வதற்கு சற்று முன்பு, நான் வார்த்தையில் ஓரிரு இடங்களை வாசிக்க விரும்புகிறேன்; ஒன்று ஜெபத்திற்கு முன்பு, மற்றொன்று ஜெபத்திற்குப் பிறகு. முதலாவதாக, நம்முடைய ஆராதனையை துவக்க, அல்லது, அதனுடைய இந்த பாகத்தை, நான் எபிரெய புத்தகத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். எபிரெயர் 11-ம் அதிகாரம், முப்பது-…32-ம் வசனம், துவங்கி, விசுவாசத்தைக் குறித்துப் பேசுகிறது. இப்பொழுது பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங் குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்; வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; 20 இந்த அடைப்புக் குறிப்பைக் கவனியுங்கள்: உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
1021 அந்த தீரமான வீரர்களைப் பற்றிய அந்தக் சம்பவங்களை நான் வாசித்தபோது, அந்த நாளில் அந்த ஜனங்களோடு நம்முடைய சிறு சாட்சி எங்கே நிற்கும் என்று நான் வியப்புறுகிறேன். 22 ஜெபத்திற்கு முன்னர், எவரேனும் தேவனுக்கு நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள், நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில் உங்களுக்கு என்ன தேவையாயிருந்தாலும் அவர் அதை இப்பொழுது காணவும், கேட்கவும் உங்களுக்கு அருளுவார்.
1123 எங்களுடைய கிருபையுள்ள, அன்பின் பிதாவே, உம்முடைய குமாரனாகிய, இயேசுவின் நாமத்தில் இந்தக் காலையில் தாழ்மையாய் எங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் ஜெபத்தை ஏறெடுக்கும்படி உம்முடைய சிங்காசனத்தை அணுகுகிறோம். கர்த்தாவே, நீர் முதலாவது எங்களுடைய தப்பிதங்களையும், எங்களுடைய அக்கிரமங்களையும் எங்களுக்கு மன்னியும். அதுமட்டுமல்லாமல் கர்த்தாவே, மற்றவர்களும் கூட மன்னிக்கப்பட வேண்டும் என்று, நாங்கள் அவர்களுக்காகவும் கூட ஜெபிப்போம். 24 உம்முடைய சபையானது உம்மண்டை இன்னும் நெருக்கமாக இணைக்கப்படும். உண்மையாகவே, கர்த்தாவே, நீர் உம்முடைய சபையோடு ஒரு கிரியையைச் செய்ய ஆயத்தமாயிருக்கிறீர் என்றும், அதை உலகத்திலிருந்து எடுத்துப்போட்டு, தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளாக மறுரூபப்படுத்த ஆயத்தமாயிருக்கிறீர் என்றும், எங்கள் இருதயத்தில் நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆனால், கர்த்தாவே, அந்த வேளைக்காக எங்களை ஆயத்தப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும். கர்த்தாவே, இந்தக் காலை, எங்கள் யாவருக்கும், “பாரமான யாவற்றையும், எங்களைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, எங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடும்,” நேரமாக இது இருப்பதாக.
1225 பரலோகப் பிதாவே, வியாதியஸ்தர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும், இன்றைக்கு, நீர் சுகப்படுத்த வேண்டும் என்று, நான் ஜெபிக்கிறேன். தேசம் முழுவதிலும் கொள்ளை நோய்களினாலும், மருத்துவர்கள் அவைகளுக்கு “நோய்க்கிருமிகள்” என்று பெயர் சூட்ட, அநேகர் அவதியுற்றுக் கொண்டிருக்கின்றனர். கர்த்தாவே, உம்முடைய சுகமளிக்கும் வல்லமைகள், அந்த ஜனங்களுக்கு இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 26 அதன்பின்னர் இந்தக் காலையில் இங்கே எங்களுடைய சிறிய சபைக்கு வருகிறோம். அநேகர் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு நேற்றிரவு தொடங்கி இரவு வரையிலும், இன்று, காலை வரையிலும், கூடாரத்திற்கு வர தங்களுடைய வழியில் கடினமாக வாகனங்களை ஓட்டிச் வந்திருக்கின்றனர். சாலை நெடுகிலும் பனி பெய்து கொண்டிருக்கிறது. தேவனே, நீர் அவர்களை விசேஷமாக ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அநேகர் தங்களுடைய வரப்போகும் வார ஆகாரத்தில் பெரும்பகுதியை அல்லது அதற்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்க வேண்டியதாயிருந்தது என்பதில் சந்தேகமேயில்லை. அல்லது வரப்போகும், எரிபொருள் மற்றும் மற்ற காரியங்களுக்காக அவர்கள் தங்களுடைய பணத்தை செலவழித்திருக்கக் கூடும். 27 தேவனே, வெறுமையாய் உம்மண்டை வருகிறவன் பூரணமாய்ப் போவான். நீர் அதை வாக்குத்தத்தம் செய்தீர். நீர் அவர்களுடைய இருதயங்களையும், அவர்களுடைய கூடைகளையும் (அவர்களுடைய ஆத்துமாக்களில்) தேவனுடைய நல்ல காரியங்களால் மிகவும் நிறைந்து அவைகள் “சொல்லி முடியாததும், மகிமையால் நிறைந்ததுமான சந்தோஷத்தினால்” பொங்கி வழியும்படியாக நிரப்ப வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இந்த விலையேறப்பெற்ற ஜனங்களின் பாத்திரங்கள், தேவனிடத்திலிருந்து வரும் ஆவிக்குரிய மற்றும் நன்மையான காரியங்களினால் நிரம்பி வழிவதாக.
1328 ஒவ்வொரு கரத்தையும் ஆசீர்வதியும், கர்த்தாவே, அந்த கரத்தின் பின்னால் இருந்த தேவையை நீர் அறிந்திருக்கிறீர். நீர் அவர்களை விசேஷமாக ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். அவசர காலங்கள், வியாதிகள் மற்றும் தொல்லைகளின் நேரங்களில், நீர் எப்படி ஒரு சில நிமிடங்களில் மிகவும் அற்புதமாக ஜெபத்திற்கு பதிலளித்தீர் என்பதை நாங்கள் கண்டோம். நீர் தேவன், சர்வ வியாபி, அவருடைய ஊழியக்காரர்களோடு நிற்பீர். தேவனே, நீர் இந்தக் காலையில் இவர்களோடு நிற்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அவர்களுடைய இருதயத்தின், வாஞ்சையை அவர்களுக்கு அருளும். அது எந்த சுயநலத்திற்காகவும், அதற்குப் பின்னால் உள்ள எந்த—எந்த மோசமான நோக்கத்திற்காகவும் இருந்தது என்று நான் நம்பவில்லை. நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 29 இப்பொழுதும், பிதாவே, இன்றைக்கு என்னையும், எங்களையும் நினைவு கூருவீராக, அப்பொழுது நான் என்னை வழியிலிருந்து விலக்கிக் கொள்ளும்படியாக… நாங்கள் யாவரும், போதகர் தொடங்கி—பிள்ளைகள் வரை, நாங்கள் எங்களையே தேவனுடைய பலிபீடத்தின் மேல் கிடத்தி எங்களுடைய இருதயங்களைத் திறந்து, பரிசுத்த ஆவியானவர் எங்களிடத்தில் பேசும்போது, அவருக்கு செவிகொடுப்போமாக. சரியான பாதையில், உமது ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளும்படிக்கு, எங்களுடைய ஆசீர்வாத-…பாத்திரங்களை சரியாக நேராக்கும். அதன்பின்னர் அபிஷேக எண்ணெயின் வல்லமையை அவர்களுக்குள் ஊற்றும். கர்த்தாவே, வரப்போகும் நாட்களுக்காக, எங்களுக்கு தேவையான பெலனை எங்களுக்குத் தாரும். இந்த ஆசீர்வாதத்தை அருளும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
1430 (ஹூம், எனக்குத் தெரியாது. நீங்கள் அவருடைய தொலைபேசி எண்ணை மாத்திரம் பெற்றுக்கொண்டு, சபை முடிந்த பிறகு நான் அவரை திரும்ப அழைப்பேன் என்று அவரிடம் கூறுங்கள். எனக்குத் தெரியாது.) 31 எனக்காக ஜெபியுங்கள். நான்…சகோதரன் ஜேக் மூர் தொலைபேசியில், இன்னமும் இந்த வாரம் அங்கு இருக்கும்படி என்னை வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். பார்த்தீர்களா? நான் அதை…உணரவில்லை, நீங்கள் பாருங்கள், எனவே என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் சகோதரன் ஜேக்கை நேசிக்கிறேன். அந்த பெரிய தொடர் கூட்டம் அங்கு வரவிருந்தபோது, அவர் வரவிருந்த, அந்த மனிதர்களை, பூத்-கிளிபார்ன் போன்ற மற்றவர்களை மறுத்துவிட்டார். எனவே நான் வருவதைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, தன்னுடைய விளம்பரத்தைப் போன்ற மற்றெல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தார். எனவே நீங்கள் பாருங்கள், நான்—நான் உண்மையாகவே செல்ல வேண்டிய அழுத்தத்தை உணர விரும்புகிறேன். நான்…
1532 மேலும், இப்பொழுது, நாம் இப்பொழுது இரண்டாம் கொரிந்தியர் நிரூபத்திற்கு திரும்பும்போது, நாம் இரண்டாம் கொரிந்தியர் 12-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். தேவனுக்கு சித்தமானால், அந்த வேதவசனத்திலிருந்து ஒரு வசனத்தை வாசிப்போம். முதலாம் கொரிந்தியர்,…இல்லை இரண்டாம் கொரிந்தியர், சரியாகக் கூறினால், 12-ம் அதிகாரம் 9-ம் வசனம். நான் முதல் சொற்றொடரை…இல்லை 9-வது வசனத்தின் இரண்டாம் சொற்றொடரை, அதிலிருந்து ஒரு பகுதியை வாசிக்க விரும்புகிறேன்: அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்… 33 நீங்கள் நிச்சயமாக இந்த பாடப் பொருளைப் பெற்றுக்கொள்ளும்படியாக இப்பொழுது நான் அதை மீண்டும் வாசிக்கட்டும்: அதற்கு அவர்: (இது தேவன் பவுலிடத்தில் பேசுகிறதாயிருக்கிறது), என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்…
1634 ஆகையால் நான் இதை ஒரு பாடப் பொருளாக அழைக்க வேண்டுமானால், பெலன்… பரிபூரண பலவீனத்தினாலே பரிபூரண பலம் என்று நான் இதை உபயோகிக்க விரும்புகிறேன். நமக்கு பலவீனம் இருக்குமானால், நமக்கு பெலனும் உண்டு. பலவீனம் என்ற ஒரு பாடப் பொருளை எடுத்துக்…கூற, ஒரு பெந்தெகொஸ்தே சபைக் கூட்டத்தில்…இது அசாதாரண பாடப் பொருள், ஏனென்றால் நாம் எப்பொழுதுமே “நாம் மிகவும் பலமுள்ளவர்கள்” என்று சாட்சி பகருகிறோம். 35 நான் முன்பு கூறியிருக்கிறேன், சபையோருக்கு முன்பாக நான் கொண்டு வருவது எது நன்மையாயிருக்கும் என்று கண்டறிய, அதாவது, நான் வாரம் முழுவதும் ஜெபிக்க மாத்திரமே முயற்சிக்கிறேன். அதைக் கேட்பதற்காகவே இங்கு வந்திருந்தால், இந்தக் காலையில் வேறு எவரேனும் இங்கே நின்று பேசுவதைக் கேட்கவே நான் விரும்புவேன்.
1736 வெளிப்படையாகக் கூறினால், இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, நான் கென்டக்கியில் சகோதரன் கேப்ஹார்ட் அவர்களுடைய ஜனங்களோடு இருந்தேன். நான் அவர்களுடைய இடத்தை விட்டுச் சென்றபோது, இந்த விலையேறப்பெற்ற சகோதரனையும், மனைவியையும், குடும்பத்தினரையும், மற்றவர்களையும் குறித்த, இந்த எண்ணம் எனக்கு உதித்தது. 37 அதற்கு சற்று முன்னர் நான் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன். நான் வெளியே நின்றுகொண்டிருந்தபோது, அந்தப் பெண்மணி, “நான் அந்த ஊழியக்காரனிடம் பேச விரும்புகிறேன்” என்றாள். நான் அவர்களுடைய சிறிய வீட்டிற்குச் சென்றேன். அங்கே…அவள், “நீங்கள் சகோதரன் பிரான்ஹாமா?” என்று கேட்டாள். அதற்கு நான், “ஆம் அம்மா” என்றேன். 38 அவள், “என்னுடைய வீட்டின் தோற்றத்தினால்,” என்று கூறி, “நீங்கள் உள்ளே வரும்படி கேட்டுக் கொள்ள நான் மிகவும் வெட்கப்படுகிறேன்” என்றாள். அவள் அழத் துவங்கினாள். அவள், “ஆனால் எனக்கு—எனக்கு அப்பேர்ப்பட்ட ஒரு தேவை உண்டு, நான் உம்மில் உண்மையான நம்பிக்கை வைத்துள்ளேன்” என்றாள். 39 எங்கள் சிறிய சகோதரி காக்ஸ் மூலமாக அங்கு நாங்கள் சிலருடன் தங்கியிருந்த இடத்தை நான் கண்டுபிடித்தேன், ஒரு—ஒரு சிறிய பாட்டி ஒரு ஒலிப்பதிவு கருவியுடன் சுற்றுப்புறங்களினூடாக ஒலிநாடாக்களை போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தாள். அவ்வளவுதான்! அதுதான் உள்நோக்கம்! பார்த்தீர்களா?
1840 நான் இந்த வீட்டை சுற்றிப் பார்த்தேன், ஒரு சிறிய தாழ்மையான வீட்டில், ஏறக்குறைய நான் வளர்க்கப்பட்டதைப் போன்றே இருந்தது, ஆனால் சுவர் முழுவதும் கிறிஸ்துவின் புகைப்படங்கள். அங்கே மேஜையின் மேல் ஒரு வேதாகமம் வைக்கப்பட்டிருந்தது. மேலும் நான், “என் வாழ்க்கையில் இதுபோல் நான் ஒருபோதும் கனம் பெற்றதில்லை. இந்த விதமான வீட்டிற்குள் நான் நடந்து செல்ல விரும்புகிறேன்” என்றேன். அவள் யாரோ ஒருவருக்காக ஒரு வேண்டுகோள் விடுத்தாள். இந்த சிறிய பாட்டியும் நானும் ஒன்று சேர்ந்து ஜெபித்த, ஐந்து மணி நேரத்திலிருந்து, தேவன் பதிலளித்திருந்தார். 41 எனவே நாங்கள் மீண்டும் ஜெபித்தோம், தாய் காக்ஸ் அவர்களும் நானும் மற்றவர்களும் அன்று காலை மேஜையைச் சுற்றிலும், அவள் செய்திருந்த முயற்சிகளினூடாக ஏதோ ஒரு காரியத்தை செய்ய நமக்கு ஒரு வாய்ப்பினைத் தர வேண்டும் என்று தேவனிடம் கேட்டாள். மேலும், அதைக் கேட்பதின் மூலம் தேவன் ஒரு வழியைத் திறந்தார். நீங்கள் பார்த்தீர்களா? அவர் தேவன்!
1942 நாம் நம்முடைய பலவீனங்களை சாக்குபோக்குகளாகக் கூற முயற்சிக்கிறோம். நாம் எவ்வளவு பெரியவர்களாய் இருக்கிறோம் என்றும், நாம் எவ்வளவு மகத்தானவர்களாய் இருக்கிறோம் என்பதையும் நாம் கூற விரும்புகிறோம். அந்த காரியங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன்…தேவன் எனக்கு அந்த பாடப்பொருளைக் கொடுத்தார், அது நம்முடைய சிந்தையிலிருந்து அதை அகற்றிவிட வேண்டும் என்பதாகும். பார்த்தீர்களா? 43 நாம் செய்கிற சிறு காரியங்கள் உண்டு. நம்முடைய தவறுகள் எங்கே உள்ளன என்று கண்டறியவே, அதற்காகத்தான் நாம் சபைக்கு வருகிறோம், நாம் நம்மை மேன்மைப்படுத்திக்கொள்ளும்படியான காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறோம். இதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் நாம் சபைக்கு வருவருகிறோமென்றால், சபைக்கு வருவதனால் நாம் அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியாது என்று நான் எண்ணுகிறேன். நாம் நம்முடைய பலவீனங்களைக் கண்டறியவும், நம்முடைய மோசமான இடங்களைக் கண்டறியவும், நம்முடைய…எப்படி…நாம் எவ்வளவு சிறியவர்களாய் இருக்கிறோம் என்பதைக் கண்டறியவும், வலிமையான ஒருவர் மேல் நம்முடைய நம்பிக்கையை வைக்கவே நாம் வரவேண்டும். ஆனால் நமக்கு பலவீனங்கள் இருக்கும்போது…
2044 நம்மில் அநேகர் சாட்சி பகர விரும்புகிறோம் அல்லது நாம் போதாது என்று நினைக்க விரும்புகிறோம் எனவே, “எனக்கு கல்வியறிவு இல்லை, எனக்கு திறமை இல்லை, என்னால் இதைச் செய்ய முடியாது” என்று ஒரு சாக்குபோக்கு கூறுகிறோம். நீங்கள் அதை வைத்துக்கொண்டு, அந்தவிதமாக அதைச் செய்தால், அந்தவிதமாகவே தொடர்ந்து சென்று கொண்டிருந்தால், அப்பொழுது நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்துவிட முடியாது. ஆனால் நம்முடைய பெலவீனங்களினால், நாம் சாக்குபோக்குகளைக் கூறுகிற அதேக் காரியத்தை, தேவன் அந்த வேலையைச் சமாளிக்க அந்தக் காரியத்தைப் பயன்படுத்துகிறார். பார்த்தீர்களா? அவர் நம்மை உபயோகிக்கும்படியாக நாம் அந்த நிலையை அடைய அவர் காத்திருக்கிறார். நாம்—நாம் சாக்குபோக்குகளை எடுத்துக் கொண்டு, “என்னால்—என்னால்—என்னால்—என்னால்…இதைச் செய்ய முடியாது, நான் குறைவுள்ளவன். என்னால்—என்னால் அதைச் செய்ய முடியாது” என்கிறோம். தேவன் அந்த வேலையைச் செய்ய அந்தக் காரியத்தை எடுத்துக் கொள்கிறார். அது உண்மை. 45 அந்தக் காரணத்தினால்தான் அவர்—அவர் நம்மை தெரிந்துகொள்கிறார், ஏனென்றால் நாம் அந்த நிலையில் இருக்கிறோம். இப்பொழுது, அது விநோதமாகத் தென்படலாம், ஆனால் தேவனுக்கு சித்தமானால், ஒரு சில நிமிடங்களில், அதற்கான காரணத்தை நாம் அறிந்துகொள்வோம். 46 நாம்—நாம் வாசித்து வந்துள்ளபடி, பலவீனங்களையும், புறக்கணிப்புகளையும்…நாம்—நாம் கண்டறிவோம், வெளி உலகத்தால் நிராகரிக்கப்பட்ட பலவீனமான அந்த ஜனங்கள், தேவனுடைய வீரர்களாக, முன் வரிசையில் ஜெயங்கொள்ளுகிறவர்களாக, தங்களை தகுதியற்றவர்கள் என்று உணருகிறவர்களாக…ஏற்றுக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டிருக்கிறோம்.
2147 ஒரு மெத்தோடிஸ்டு சகோதரன் இருந்தார். அவர்களில் மூன்று பேர் ஓஹையோ இல்லை வடக்கு இந்தியானாவிலிருந்து இந்த சபைக்கு வருகிறார்கள். அண்மையில் அவர்கள் என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம்”, என்று கூறி, “நாங்கள் இப்பொழுதுதான் பரிசுத்த ஆவியைப் பெற்றோம், நாங்கள் இப்பொழுது எங்களுடைய ஊழியத்திற்கான வரங்களைத் தேடலாமா?” என்று கேட்டனர். நான், “அதைச் செய்யாதீர்! அதை விட்டுவிடுங்கள்” என்றேன். 48 அவர் திரும்பி என்னைப் பார்த்து, “நான் ஒரு குறிப்பிட்ட சகோதரரின் புத்தகத்தைப் படித்தேன் நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற பிறகு, இவர்கள் இந்த பரிசுத்த ஆவியை உபயோகிக்க, நாங்கள் ‘வரங்களைத் தேட வேண்டும்’ என்று எங்களிடம் சொன்னார்” என்றார். நான், “ஒரு பெருமையுள்ளவராகிவிட்டாரே!” என்றேன். பார்த்தீர்களா?
2249 நீங்கள் வேதாகமத்தில் கவனிப்பீர்களேயானால், எப்பொழுதுமே அதிலிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கிறவர்களைத்தான், தேவன் உபயோகிக்கிறார். ஒரு மனிதன்…ஏதாவதொன்றை செய்ய விரும்பி, தன்னிடம் போதுமான திறமை இருப்பதாகவும், அந்த வேலையை அவனால் செய்ய முடியும் என்று எண்ணுகிற வரை, தேவனால் அந்த மனிதனை ஒருபோதும் உபயோகிக்க முடியாது. மோசே, ஓடுவதைப் பாருங்கள்; பவுல், ஓடுவதைப் பாருங்கள்; மற்றவர்களும், அதிலிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கின்றனர். 50 நான், “எதையும் தேட வேண்டாம். தேவன் உங்களுக்காக எதையாவது வைத்திருந்தால், அவர் அதை உங்களுக்குத் தருவார்” என்றேன். பார்த்தீர்களா? “அவரே—அவரே அதைக் கவனித்துக் கொள்ளட்டும்.” மேலும் நான், “அப்படியானால் இன்றைக்கு நாங்கள் பெற்றுள்ளதை போன்று, அந்த சில நேரங்களை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள், ஒவ்வொருவரும் இதைச் செய்ய அதைச் செய்ய ஏதோ ஒரு மகத்தான நபராக வேண்டும் என்று விரும்புகின்றனர். நாம் அதனோடு என்ன செய்தோம் என்று பாருங்கள், நீங்கள் பாருங்கள்” என்றேன். 51 நாம் மகத்தானவர்களாயிருக்க முயற்சிப்பதற்குப் பதிலாக நாம் எவ்வளவு சிறிதளவாவது பெற்றுக்கொள்ள முடியும் என்பதைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்க வேண்டும். பார்த்தீர்களா? அப்பொழுது தேவன் நம்மை உபயோகிக்க முடியும். நான் இங்கே அநேக வேதவாக்கியங்களை எழுதி வைத்திருக்கிறேன், அதை நான் குறிப்பிட வேண்டும் என்று, நான் நினைக்கிறேன், ஆனால் நான்…நாம்…அதைச் செய்ய எனக்கு அநேகமாக நேரம் இருக்காது. ஆனால் நாம்…
2352 அதற்கு பலவீனமானவர்களும், புறக்கணிக்கப்பட்டவர்களும், நடைமுறையில் தேவனுக்கு அந்த மாதிரியான நபராய் முன் வரிசையில் இருந்த ஒவ்வொரு மாவீரனும் தேவைப்படுகின்றனர் என்பதைக் கவனியுங்கள். புறக்கணிக்கப்பட்ட ஒரு நபர், தான் போதாதவன் என்று நினைத்த ஒரு நபர், எந்தத் திறமையும் இல்லாத ஒரு நபர், அப்பொழுதே தேவன் அவரை உபயோகிக்கத் தொடங்கும்படியாக அந்த நபர் நல்ல நிலையில் இருக்கிறார். அது உண்மை. அது அவர்களால் முடியாது என்று அவர்கள் உணரும்போது, அவர்கள் ஒன்றுமே பெற்றிருக்கவில்லை, அப்பொழுது தேவன் அவர்களைப் பற்றிப் பிடித்து, அவர்களோடு ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய முடியும். பார்த்தீர்களா? எப்பொழுது…ஆனால் நம்மால் அதைச் செய்ய முடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில், அப்பொழுது தேவன் நம்மை உபயோகிக்க முடியாது, ஏனென்றால் நாமாகவே அதைச் செய்ய விரும்பிக்கொண்டிருக்கிறோம்.
2453 அதன்பின்னர், மறுபக்கம், நாம் இந்த உணர்வுகளைப் பெற்று, பின்னர் நாம் போதுமானதாக இல்லை என்று நினைக்கிறோம், நாம் அதைச் செய்ய விரும்புகிறதில்லை; ஆனால் அப்பொழுது நாம் தேவனுடைய அழைப்புக்கு செவி கொடுத்தால், அந்தவிதமான ஒரு வடிவத்தை நாம் பெற்றுக்கொள்ள, தேவன் விரும்புகிற அதேக் காரியத்தை, அவரால் செய்ய முடியும். 54 நாம் தாமே, குறைவுள்ளவர்களாயிருக்கும்போது, அப்பொழுது நாம் தேவனுடைய ஆவிக்கு ஒப்புக்கொடுக்கும்படியான பிரஜைகளாய் இருக்கிறோம். நம்மால் அதைச் செய்ய முடியும் என்று நாம் நினைக்கும் வரை, நம்மால் அதைச் செய்ய முடியாது. ஆனால் நம்மால் அதைச் செய்ய முடியாது என்பதை நாம் அறிந்துகொள்ளும் ஒரு நிலையை நாம் அடையும்போது, அப்பொழுது நாம் நம்மை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறோம், அவர் அதைச் செய்கிறார். ஆகையால் நாம் அதைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தால், நாம் தோல்வியடைவோம், ஆனால் நாம் நம்மை தேவனுக்கு ஒப்புக் கொடுப்போமானால், அப்பொழுது தேவனால் தவறிப்போக முடியாது. தேவனால் செய்ய முடியாத ஒரு காரியம் மாத்திரமே உண்டு, அது தோல்வியுறுவதாகும். அவரால் தோல்வியுறுவதைத் தவிர வேறெந்த காரியத்தையும் செய்ய முடியும். ஆனால் அவரால் தோல்வியுற முடியாது. 55 எனவே நாம் நமக்குள்ளே முயற்சித்துக் கொண்டு, நம்முடைய சொந்த திறமைகள், போன்றவற்றின் பேரில் சார்ந்திருக்கும் வரை, நாம் ஒன்றுமே செய்யமாட்டோம். ஆனால் நாம் ஒன்றுமில்லை என்பதை நாம் அறிந்துகொள்ளும் ஒரு நிலையை நாம் அடையும்போது, அப்பொழுது தேவன் நம்மை உபயோகிக்க முடியும்.
2556 முக்கியமான காரியம், நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான காரியங்களில் ஒன்று… இப்பொழுது இதை நினைவில் கொள்ளுங்கள், விசேஷமாக வாலிப பிரசங்கிமார்களாகிய நீங்கள், மற்றும் சாதாரண அங்கத்தினர்களைப் போன்றவர்கள். நம்முடைய ஜீவியத்தில் தேவனுடைய வாஞ்சையை நிறைவேற்ற நாம் எதிர்பார்த்தால், நாம் ஒரு காரியத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அதாவது, மானிட திறமையின் சிந்தனையில் நாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நம்முடைய சொந்த அறிவுத்திறனைக் கொண்டும், நம்முடைய சொந்த திறமைகளைக் கொண்டும் நம்மால் அதைச் செய்ய முடியும் என்று நாம் நினைக்கிற ஒரு இடத்திற்கு நாம் எப்போதாவது வந்தால், நாம் அந்தக் காரியத்திலிருந்து விடுபடும்படியான ஒரு வழியில் அதை நாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தேவன் நம்மை உபயோகிக்கும்படியாக அதை ஒருபுறம் தள்ளி வைக்க வேண்டும். அது உண்மை.
2657 ஒரு முழுமையான சரணடைதல்! நாம் ஒரு திறமையையும் உபயோகிக்க முடியாது. நமக்கு ஒரு முழுமையான சரணடைதல் வேண்டும்! மேலும், தேவனண்டை வர வேண்டுமானால், நீங்கள் அவரிடத்தில் ஆத்துமா, சரீரம், ஆவி ஆகிய இரண்டையும் ஒப்புக் கொடுக்க வேண்டும். தேவன் தம்முடைய சித்தத்தை உங்களுக்குள்ளும், என்னிலும் கிரியை செய்ய, நீங்கள் இருக்கின்ற ஒவ்வொரு காரியமும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும். 58 இப்பொழுது, அது கடினமானது, எனக்குத் தெரியும், ஏனென்றால் நாம் எப்பொழுதுமே நம்முடைய பாகத்தில், நாம் அறிந்த ஏதோ ஒரு காரியத்தை, நாம் அதைச் செய்ய விரும்புகிறோம் என்பதை நாம் அறிவோம். நாம், “பாருங்கள், அது இந்தவிதமாக செய்யப்பட வேண்டும் என்பதை நான்—நான் அறிவேன்” என்று கூறுகிறோம். ஆனால் நீங்கள் அதை அந்தவிதமாக செய்து கொண்டிருக்கும் வரையில் அது தவறாக இருக்கப் போகிறது, தேவன் அந்த முயற்சியை ஒருபோதும் உபயோகிக்கமாட்டார். ஒருக்கால், கர்த்தருடைய உதவியோடு, இன்னும் ஒரு சில நிமிடங்களில் நாம் அதற்குள்ளாகப் பார்த்து, தேவனால் உங்களுடைய திறமையை எப்படி உபயோகிக்க முடியாது என்பதை உங்களுக்கு காண்பிக்கப் போகிறோம்.
2759 இன்றைக்கு உலகத்தோடுள்ள காரியமும் அதுதான். அங்கே அதிகப்படியான வேதாகம கருத்தரங்கு அனுபவங்கள், கல்வியின் பேரில் மிக அதிகமாக வைக்கப்பட்டு, உறவின் பேரிலோ அல்லது ஸ்தாபனத்தில் ஐக்கியத்தின் பேரிலோ அதிகமாக வைக்கப்பட்டு, நாம் ஒருவர் மேல் ஒருவர் சார்ந்திருக்கிறோம், நாம் திறமையோடு கூடிய மனிதர்கள் மேல் சார்ந்திருக்கிறோம். 60 வேதம், “நீங்கள்—நீங்கள்…நீங்கள் எப்படி விசுவாசமுள்ளவர்களாய் இருக்க முடியும்” என்று கூறியுள்ளது. அது எப்படி வேத வாக்கியமாகும் என்பதை, நாம் பார்ப்போம். “நீங்கள் ஒருவருக்கொருவர் விருப்பங்கொண்டிருக்கையில், நீங்கள் எப்படி விசுவாசமுள்ளவர்களாய் இருக்க முடியும்?” 61 நாம், “இந்த நபர், அவர் ஒரு மகத்தான நபர். இது ஒரு மகத்தான நபர், நான் அவர் பேரில் தான் சார்ந்திருப்பேன்” என்று எதிர்பார்த்து, கூறும்போது, நீங்கள் அதைச் செய்யும்போது, அது தேவனுக்கு அதிருப்தியை உண்டாக்குகிறது. நாம் தேவன் மேல், தேவனை மாத்திரமே சார்ந்திருக்க வேண்டும்! நாம் நம்முடைய திறமையையோ அல்லது எந்த மனிதனின் திறமையையோ நம்பக்கூடாது. நாம் தேவனுக்கு முற்றிலுமாக அடிபணிய வேண்டும்.
2862 எந்த திறமையும் இல்லை, அது யாருடையதாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, தேவனுடைய பார்வையில் ஒருபோதும் உபயோகிக்கக் கூடியதாயிருக்காது. தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு நம்முடைய திறமைகள் எல்லாவற்றையும் நம்மிடத்திலிருந்து எடுத்துப்போட வேண்டும். நாம் செய்ய வேண்டிய ஏதோ ஒரு காரியத்தை அவர் உடையவராயிருந்தால், நாம் அதிலிருந்து ஒரு சரியான நல்ல வேலையை செய்து கொண்டிருக்கிறோம் என்று நாம் உணர்ந்து கொண்டிருந்தால், அப்பொழுது தேவனால் ஒருபோதும் நம்மை உபயோகிக்க முடியாது. 63 இப்பொழுது, நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீங்கள் ஒரு பயங்கரமான பரந்த அறிக்கையை கூறுகிறீர்கள்” என்று கூறலாம். அது—அது ஒரு பரந்த ஒன்றாகும், ஆனால் அது சரியா அல்லது இல்லையா என்று சுற்றும் முற்றும் பார்த்து கண்டறியலாம். 64 நாம் செய்துவிட்டதாக நாம் கருதும் நம்முடைய மகத்தான சாதனைகளை இன்றைக்கு சுற்றும் முற்றும் பாருங்கள், அமெரிக்காவில் கிறிஸ்தவம் எங்கே உள்ளது? நம்முடைய எல்லா சபைகளையும், ஸ்தாபனங்களையும், நம்முடைய சுவிசேஷகர்களையும், சுகமளிக்கும் தொடர் கூட்டங்களையும் பாருங்கள், நமக்கு உண்டாயிருந்த மற்ற ஒவ்வொரு காரியமும், அது என்ன? துவக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் மிகவும் மோசமானது! அது முன்பைக் காட்டிலும் இன்றைக்கு மோசமான நிலையில் உள்ளது, ஏனென்றால் நாம் அதை மானிட திறமையில் செய்ய முயற்சித்துள்ளோம். 65 அவர்கள் ஒன்று கூடி, நீண்ட ஜெபங்களைச் செய்து, இங்கே வெளியே செல்கிறார்கள். அன்றொரு நாள் அவர்களில் அநேகர், ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அல்லது அதைப் போன்றவர்கள், ஒன்று கூடி, பிராடெஸ்டெண்டுகளும், கத்தோலிக்கர்களும்; சில ஜெபங்களைச் கூற, சில ஜெபங்களை ஜெபிக்க, அதுபோன்ற, சில ஜெபங்களைச் செய்தனர். அதற்கு அவர்கள் கூடாமல் இருந்திருக்கலாம், தேவனுடைய பார்வையில் அது ஒன்றுமில்லை. 66 இப்பொழுது, நான் குறை கூறினால், என்னை மன்னியுங்கள். பார்த்தீர்களா? ஆனால் நான்—நான்…நீங்கள் அந்த காரியத்தை பதிய செய்ய வேண்டும். பார்த்தீர்களா? நீங்கள் அதை ஆழமாக பதியச் செய்ய வேண்டும்.
2967 அது என்ன நன்மையைச் செய்தது? ஒன்றுமில்லை. ஒரு கிறிஸ்தவன் என்று உரிமை கோரும் ஒவ்வொரு நபரும் தன்னுடைய திறமையை மறந்து, தன்னை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் வரை அது ஒருபோதும் சம்பவிக்காது. 68 அப்பொழுது தேவனால் தம்முடைய நோக்கத்தை அனுப்புவதன் மூலம் நிறைவேற்ற முடியும்…ஒரு எழுப்புதலை அல்ல, ஆனால், சகோதரனே, அவர் முதலில் செய்ய வேண்டியது என்னவெனில், ஒரு கொல்லுதலை அனுப்புவதேயாகும், அது உண்மை, எனவே நாம் உயிர்ப்பிக்க முடியும். நீங்கள் மறுபடியும் பிறப்பதற்கு முன்பு நீங்கள் மரிக்க வேண்டும், நீங்கள்…அவருக்கு நம்மையே கொல்லுகிற ஒன்றே தேவைப்படுகிறது. இந்த கூடாரத்திற்கு ஒரு கொல்லுதலே, எனக்கும் அதுவே தேவைப்படுகிறது. நாம் எல்லோருக்கும், ஒரு புதிய ஜீவியத்தில், ஒரு புதிய பிடியில், ஒரு புதிய நம்பிக்கையில், ஒரு புதிய அனுபவத்தில் நாம் உயிர்ப்பிக்க நமக்கு ஒரு—ஒரு கொல்லுதல் தேவையாயிருக்கிறது! நமக்கு முதலில் ஒரு துக்க நாள் தேவை.
3069 பள்ளிக்கல்வியின் பேரிலும், நம்முடைய திட்டங்களின் பேரிலும் அதிகமாக சார்ந்திருப்பதற்குப் பதிலாக, ஆவியானவருக்கு ஒப்புக்கொடுக்கும் ஒரு இடமே நமக்குத் தேவை, நாம்…நம்முடைய பிரசாரங்கள் மற்றும் நமக்குள்ள எல்லா காரியங்களையும் நாம் செய்கிறோம். நாம்—நாம்—நாம் ஒத்துழைக்க அநேக வித்தியாசமான ஊழியக்காரர்களோடு ஒத்துழைப்பையே சார்ந்திருக்கிறோம். நாம் அநேகரை அனுமதிக்கிறோம்…“நம்மால் அநேகரைப் பெற்றுக்கொள்ள முடியவில்லையென்றால், ஏன், நாம் அதைச் செய்யமாட்டோம். அது இல்லாமல் நாம் நகரங்களுக்கு செல்லமாட்டோம்.” அதன்பின்னர், நாம் அதைச் செய்யும்போது, நாம் அதை ஒரு பெரிய இயந்திரத்தில் தயாரிக்கிறோம், அதில் ஒரு உதறலையே பெற்றுக் கொண்டோம், பாருங்கள். 70 எனவே நாம் அதிலிருந்து, அந்த மானிட திறமையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும். நாம் நம்முடைய ஆத்துமாக்களையும், ஜீவியங்களையும், இல்லத்தரசி, விவசாயி, இயந்திர வேலை செய்பவர் அல்லது நாம் யாராயிருந்தாலும், நாம் தேவனிடத்தில் முற்றிலுமாக சரணடைந்து, “நாம் ஒன்றுமில்லை” என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அப்படியானால் தேவன் அங்கிருந்து துவங்கட்டும். அதன்பின்னர் அவர் அசைவாடி, கிரியை செய்யத் துவங்குகிறார். அது நம் எல்லோரையும், ஒவ்வொருவரையும் உள்ளடக்கியதாகும். அதுதான் நாம் செய்ய வேண்டிய காரியம்.
3171 வரலாறு நிரூபிக்கிறது, இப்பொழுது நிரூபிக்கிறது, தேவன் எப்பொழுதுமே தம்முடைய ஒரு சரீரமாகும்படிக்கு யாரையும் தெரிந்து கொள்ளவில்லை என்பதையே (சரித்திரம் நிரூபிக்கிறது) நிரூபிக்கிறது. தேவன் ஒன்றுமற்ற நபரை எடுத்துக் கொள்கிறார். 72 இன்றைக்கு, நீங்கள் ஒரு நல்ல இறையியல் பின்னணியைப் பெற்றிருந்தாலொழிய, நீங்கள் நகரத்தை நெருங்க முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது. ஒரு கூட்டத்தை அணுக முயற்சி செய்யாமலிருப்பது நல்லது. ஆனால் நீங்கள் மகத்தான பின்னணியைப் பெற்றிருந்தால், உங்களுக்குப் பின்னால் மகத்தான பயிற்சிகள் மற்றும் காரியங்கள் இருந்தால், நீங்கள் எந்த நகரத்திற்கும் சென்று, ஒரு மகத்தான கூட்டத்தை நடத்த, ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். பாருங்கள், அது ஒரு கூட்டம் அல்ல…மற்றவைகளைப் போலவே இதுவும் ஒரு கூட்டம், ஆனால் அது என்ன நன்மையைச் செய்கிறது? பாருங்கள், நீங்கள்—நீங்கள் இன்னமும்… இந்த சிறு பெண்களையும், பையன்களையும், மெல்லும் பசையை மென்று பீடத்தண்டை செல்வதை நீங்கள் பெறுவீர்கள், “பீடத்தண்டைக்குச் சென்றோம்” என்று கூறுவதற்காகவே ஸ்திரீகளும், புருஷர்களும் அங்கு செல்கின்றனர், அறைக்குள் சென்று அறிவுரைகளை கேட்டுவிட்டு, வெளியே வந்து தெளிக்கப்படுதல் அல்லது முழுக்கு ஞானஸ்நானம் பண்ணப்படுதல், அல்லது அவர்கள் என்னவாயிருந்தாலும், அங்கிருந்து ஒரு—மேலும் ஒரு வருடம்…
3273 நம்முடைய மகத்தான சுவிசேஷகர்களில் ஒருவர், ஒரு வருடத்திற்கு அவரால் மனமாற்றமடைந்தவர்களில் பத்து சதவிகிதத்தை பாதுகாக்க முடிந்தால், அவர் மகிழ்ச்சியாயிருப்பார் என்று கூறினார். அப்படியானால், அவர் ஆயிரம் மனமாற்றமடைந்தவர்களை உடையவராயிருந்தால், அடுத்த ஆண்டில் அவர்கள் பத்தாயிரம் பேராக இருக்க வேண்டும். பாருங்கள், நாம் இலக்கை இழந்து கொண்டிருக்கிறோம், நாம் நோக்கத்தை இழந்து கொண்டிருக்கிறோம். 74 நம்மில் சிலர் அதை அறிவார்ந்த கருத்தின் பேரில் உருவாக்கி, “ஓ,” அதாவது, “இந்த மனிதன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறான், இந்த மனிதன் ஒரு பயிற்றுவிக்கப்பட்ட மேதை. நாம் நம்முடைய ஜனங்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு பள்ளி பயிற்சி கொடுக்க வேண்டும்” என்கிறோம். 75 அடுத்தது ஏதோ ஒரு—இயக்கத்தின் உணர்ச்சியின் பேரில், குலுக்குதல், அழுதல், சத்தமிடுதல், ஆவியில் நடனம் ஆடுதல், அல்லது ஏதோ ஒரு காரியம், உணர்ச்சிவசப்படுகிற வெளிப்புற கிரியைகள். அது கல்வியைப் போன்றே மோசமானதாயிற்றே! பிசாசினால் உங்களை இந்தப் பக்கத்திற்கு கொண்டு வர முடியவில்லையென்றால், அவன் உங்களை அந்தப் பக்கத்திலிருந்து தள்ளிவிடுவான். 76 ஆனால் அதைக் குறித்த காரியம் என்னவெனில், நீங்கள் உங்களுடைய சுயத்தில் சார்ந்திருக்கக்கூடிய எந்தக் காரியத்தையும் அல்லது நீங்கள் செய்யக்கூடிய எந்தக் காரியத்தையும், தேவனிடத்தில் உங்களுடைய பலவீனங்களை ஒரு முழுமையாக, முற்றிலுமாக ஒப்புவித்து, “இதோ நான் இருக்கிறேன்” என்று கூறுங்கள். நீங்கள் நம்பிக்கைக் கொள்ளக் கூடிய எந்தத் திறனும், எந்தக் காரியமும் இல்லாதிருக்குமே!
3377 நான் இங்கு எழுதி வைத்துள்ள வேத வாக்கியங்களை நான் குறிப்பிட்டுக் கூறிக் கொண்டிருக்கிறபடியால், வேதாகமத்தினூடாக ஆராய்ந்து பார்த்து கண்டறியுங்கள். சிலர் வேதவாக்கியங்களினூடாக ஆராய்ந்துப் பார்க்கையில், தேவன் எப்பொழுதுமே தம்முடைய யாரோ ஒருவராக ஆவதற்கு தகுதியற்றவர்களை உபயோகித்தார் என்பதை, நாம் கண்டறிகிறோம். உலகம் புறக்கணித்திருந்தவர்களை, நவீன காலம் புறக்கணித்திருந்த அவர்களையே அவர் எப்பொழுதும் எடுத்துக் கொண்டார், அந்தவிதமானவர்களையே உபயோகிக்க அவர் தேர்ந்தெடுத்தார். 78 அப்போஸ்தலர்களைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். தன்னுடைய சொந்த பெயரை எழுத போதிய கல்வியறிவில்லாத, மீனவனாகிய, பேதுருவைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். யோவான், படிப்பறியாதவனும் பேதமையுள்ளவனுமாயிருந்தான். அந்த மனிதர்கள்! அவர் பிரபுக்களையும், படித்த குருவானவர்களையும், அந்நாட்களிலிருந்த பிரபலங்களையும் புறக்கணித்து, கல்விமான்கள், சபை அங்கத்தினர்கள், தங்களை யாரோ ஒருவர் என்று எண்ணியிருந்த ஜனங்களை, யாருமல்லாதவர்களான அவர்களையே எடுத்து உபயோகப்படுத்தினார்.
3479 இப்பொழுது, யாராகிலும் ஒருவர் அவருடைய ஜனங்களில் ஒருவராக முடியும், அவர்கள் யாரோ ஒருவர் என்பதை மறந்துவிட ஆயத்தமாயிருந்தால், தேவன் அவர்களை உபயோகிக்க முடியும். நீங்கள் யாரோ ஒருவர் என்பதை மறந்து, யாருமற்றவராக ஆக நீங்கள் ஆயத்தமாயிருந்தால், அப்பொழுது தேவன் உங்களை உபயோகித்து, உங்களிலிருந்து யாரோ ஒருவரை உருவாக்க முடியும். பார்த்தீர்களா? ஆனால் நீங்கள் மிகவும் முக்கியமானவர் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டும். 80 நம்மில் அநேகர் உண்டு, நம்மில் அநேகர் அதை நம்முடைய ஜீவியங்களில் செய்கிறோம். சில ஜனங்கள் கிறிஸ்தவர்களாக ஆனவுடனே, அவர்கள் அகந்தையுள்ளவர்களாக, அக்கறையற்றவர்களாகி, அது உண்மை, அவர்கள் நேர்மாறான பாதையில் செல்லுகிறார்கள். அவர்கள் முன்னோக்கி செல்வதற்கு பதிலாக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது…நீங்கள் உங்களுடைய சுயத்தை வெளியேற்றும்போது, பரிசுத்த ஆவியானவர் உள்ளே வர உங்களுக்கு அதிக இடம் கிடைத்துள்ளது. 81 எலிசா யோசபாத்திடமும் மற்றவர்களிடமும் கூறினது போல, “இந்த இடத்தில் எங்கும் வாய்க்கால்களைத் தோண்டுங்கள். நீங்கள் ஆழமாய்த் தோண்டும்போது, நீங்கள் தண்ணீருக்காக அதிக இடத்தைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்” என்றான். நம்முடைய அதிகமான சுயத்தை, நம்முடைய சொந்த திறமைகளான குப்பைகளை நாம் நம்மிடத்திலிருந்து வெளியே எறிந்துவிட்டால், நம்மால் அதைச் செய்ய முடிந்த வரையிலும்; தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட அதிக இடம் இருக்கும்.
3582 நாம் இங்கே கொரிந்தியரில், இரண்டாம் கொரிந்தியரில் சற்று முன் பவுலை, அந்த ஒருவரைக் குறித்து படித்தோம், இந்த மனிதன் ஒரு மகத்தான மனிதனாயிருந்தான் என்பதை நாம் கண்டறிகிறோம். அவர் ஒரு மேதை, ஒரு மகத்தான மனிதன். ஆனால் கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்காக, அவன் எப்போதும் அறிந்திருந்த எல்லாவற்றையும் மறக்க வேண்டியதாயிருந்தது. 83 நீங்கள்—நீங்கள் என்னோடு சேர்ந்து அதை வாசிக்கும்படியாக, நான் இங்கே இந்த வேத வாக்கியங்களில் ஒன்றை வாசிக்க…அனுமதிக்கப் போகிறேன். நாம் முதலாம் கொரிந்தியர், 2-ம் அதிகாரம் 1-ம் வசனத்திற்கு ஒரு நிமிடம் திருப்புவோம். நாம் இங்கே ஒரு நிமிடம் பவுல் என்ன கூறினான் என்பதை வாசிப்போமாக, இந்த மகத்தான கல்விமான், அவன் தன்னைக் குறித்து என்ன கூறினானோ, அவன் என்ன செய்ய வேண்டியதாயிருந்தது. முதலாம் கொரிந்தியர், முதலாம் கொரிந்தியர்—2-ம் அதிகாரம், 1-ம் வசனம் தொடங்கி. இந்த வேதபண்டிதர் சொல்வதைக் கேளுங்கள்.
3684 இந்த மனிதன் பயிற்றுவிக்கப்பட்டிருந்தான். உலகத்தில் இருந்த கிட்டத்தட்ட எல்லாம் பாஷையையும் அவனால் பேச முடிந்தது. அவன் அதைக் குறித்து பெருமையாகப் பேச வேண்டியதாயிருந்தது. அவன் கண்டிப்பான பரிசேயர்களின் பிரிவின் கீழ் வளர்க்கப்பட்டான், அவனுடைய தகப்பனோ ஒரு பரிசேயனாயிருந்தான். பின்னர் அவன் “பரிசேயரில் ஒரு பரிசேயனாயிருந்தான்,” அதாவது அவன்—அவன் முற்றிலும் பரிசேயர்களில் மிகவும் கண்டிப்பானவன் என்பதையே அது பொருட்படுத்துகிறது. அவன் ஒரு மகத்தான நபராயிருந்தான். அவனுக்கு அதிகாரம் இருந்தது, அவன் புத்திசாலியாயிருந்தான். 85 அவனுடைய தகப்பனார் அவனுக்கு தேசம் முழுவதிலும் இருந்த மிகச் சிறந்த போதகரின் கீழ் கல்வி கற்பித்திருந்தார், கமாலியேல், அந்த நேரத்தில் எந்த பள்ளியிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஆசிரியராக இருந்தார். பவுல் அந்த மாதிரியான ஒரு மனிதனானான். அவன் ஒவ்வொரு பாஷையையும் கற்றுக் கொண்டான். அவன் உளவியலையும் கற்றான். அவன் கற்க வேண்டிய…எல்லா வித்தியாசமான காரியங்களையும் அந்தவிதமாகவே கற்றுக் கொண்டான். அவன் ஆசாரியர்களுடைய கூடாரத்திலும், அந்த மகத்தான மனிதனுடைய கூடாரத்திலும் உறுதியாக சார்ந்திருந்தான். அவன் சபையை கிட்டத்தட்ட நாசமாக்கிக் கொண்டிருந்தான்.
3786 கிறிஸ்துவைப் பெற்றுக் கொண்ட பிறகு, இந்த எல்லா கல்வியினாலும், அதே மனிதன் சொல்வதைக் கேளுங்கள். அவன் என்ன கூறினான் என்பதைக் கவனியுங்கள். அவன் எவ்வளவு வல்லமையும், மகத்தானவனுமாயிருந்தான், அவன் அதை மறக்க வேண்டியதாயிருந்தது. அவன் தன்னையே சார்ந்திருக்க முடியாது என்பதை அவன் உணர வேண்டியதாயிருந்தது. அவனுடைய கல்வியறிவு ஒன்றுமில்லை என்பதை அவன் உணர வேண்டியதாயிருந்தது. அவன் எப்போதும் பெற்றிருந்த எல்லா பயிற்சியையும், அவன் உணர்ந்திருக்க வேண்டும், அவன் பயிற்றுவிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு காரியத்தையும் மறக்க வேண்டியதாயிருக்கும். இப்பொழுது அவனுக்கு செவிகொடுங்கள். சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது, பாருங்கள், ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. “நான் உங்களிடம் சொல்ல வரவே இல்லை, ‘இப்பொழுது, நான் உங்களிடம் இன்றைக்கு இன்னார்-இன்னாரின் பள்ளியைச் சேர்ந்த பண்டிதர் சவுல், நான்…இந்த ஸ்தாபனத்தின் பெரிய பிரிவிலிருந்து வந்தவன்.’ நான் அந்தவிதமாக உங்களிடம் ஒருபோதும் வரவில்லை” என்றான். இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். 87 அங்கே, அதைப் போன்ற ஒரு மனிதனின் சாட்சியைக் கவனியுங்கள். “உங்களுடைய திறமைகளைக் குறித்து ஒன்றுமே அறியாதிருக்க நான் தீர்மானித்திருக்கிறேன். உங்களுக்குள் ஒன்றுமே இல்லை என்பதை நான் அறிவேன் மற்றும் உங்களில் நான் காண்கிற ஒரு காரியத்தை மாத்திரம் அறிந்துகொள்ள நான் தீர்மானமாயிருக்கிறேன், அதுதான் இயேசு கிறிஸ்துவும், சிலுவையில் அறையப்பட்ட அவரும். உங்கள் மத்தியில் சிலுவையில் அறையப்பட்ட இரட்சகரை மாத்திரம் நான் அடையாளம் கண்டு கொள்ளப் போகிறேன்” என்றான்.
3888 அவனுக்குச் செவிகொடுங்கள். அல்லாமலும் நான்… (மகத்துவத்தில்? எதில்?)… பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். 89 ஒரு மனிதனை, பரிசேயரில் ஒரு பரிசேயன், ஒரு போதகர்களின் போதகர், (ஊழியத்திற்காக) சிறுவயது முதற்கொண்டே பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மனிதன் ஒரு பேச்சாற்றலும், புத்திசாலியும், கொரிந்தியர்களைப் போன்ற ஒரு வகுப்பினருக்கு முன்பாக வந்து, “நான் உங்களுடனே பெலவீனத்தோடும், பயத்தோடும், மிகுந்த நடுக்கத்தோடும் இருந்தேன்” என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? உலகத்தையே புரட்டிப் போட்ட ஒரு மனிதன், எப்போதும் அறியப்பட்டவர்களிலேயே மிகப் பெரிய மிஷனரி, தான் “பெலவீனத்தில் வந்ததாக” அறிக்கை செய்து, ஒரு பயிற்றுவிக்கப்பட்ட மேதையாக அல்ல, ஆனால் அவன் எங்கோ பாதையை விட்டு விலகிவிடுவானோ என்று, “பலவீனத்தில், பயத்தில்” இருந்தான். “மிகுந்த நடுக்கத்தில்,” ஏனெனில் அவனால் தன்னுடைய சொந்த திறமையில் நம்பிக்கை வைக்க முடியவில்லை.
3990 அவன் “பயங்கொண்டிருந்ததற்கு” காரணம், அவன் எதற்கும் பயந்திருந்தான் என்பதனால் அல்ல, ஆனால் அவன் அதில் தன்னுடைய சொந்த திறமையை கலந்து, அவன் ஏதோ ஒரு விதத்தில் தேவனுக்கு அதிருப்தியை உண்டாக்கிவிடுவானோ என்று அவன் பயந்திருந்தான்; அவன் கற்றுக்கொண்டிருந்த, ஏதோ ஒரு காரியத்தை…அவன் அவர்களிடம் கூறிக்கொண்டிருந்தான் “நான் உங்களிடத்தில் இந்த மேன்மையான பேச்சுத்திறனோடு வரவில்லை (நான் அந்த வழியாக வருவேன் என்று நான் பயந்தே உங்களிடம் வந்தேன்), ஆனால் நான் கிறிஸ்துவையும், சிலுவையில் அறையப்பட்ட அவரையும் தவிர வேறொன்றையும் அறியாதவராய் உங்களிடத்தில் வருகிறேன்” என்றான். அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது. 91 ஒரு போர் வீரனாயிருந்த இந்த மனிதன் தன்னுடைய ஆடைகளை களைந்திருந்ததைக் கவனியுங்கள். ஆமென்! இன்றைக்கு நம்முடைய பள்ளிகளுக்கு ஏதாவது தேவையாயிருந்தால், அது இன்றைக்கு நம்முடைய சபைகளுக்கு ஏதாவது தேவையாயிருந்தால், அது உங்களுடைய சொந்த சிந்தனைகளையும், உங்களுடைய சொந்த திறமைகளையும் களைந்துபோடுவதேயாகும். நீங்கள் தேவனுக்கு முன்பாக உங்களை களைந்து போடவில்லையென்றால், நீங்கள் உங்களுக்குள்ளே ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய முயற்சிப்பீர்கள்.
4092 இங்குள்ளவர்களுக்கும் ஒலி நாடா உலகில் இதை கேட்கிறவர்களுக்கும், கூட, இது நமக்கு ஆழமாக பதிகிறது என்றும்… அதாவது நீங்கள் ஒன்றுமற்றவர்களாக ஆக வேண்டும் என்பதை நீங்கள் உணருகிறீர்கள் என்றும் நான் நம்புகிறேன். எல்லாவற்றையும் அறிந்தவனல்ல, ஒரு பெரிய யாரோ ஒருவன் அல்ல, ஆனால் யாருமேயில்லாதவன். நீங்கள்…தூசியாக வேண்டும். நீங்கள் ஒன்றுமில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும் ஒரு இடத்திற்கு நீங்கள் வர வேண்டும். அதற்கு மேலே ஒருபோதும் உயர வேண்டாம், ஏனென்றால் நீங்கள் அதற்கு மேலே உயர்ந்தவுடனே, நீங்கள் தேவனுக்கு மேலாக உயர்த்திக்கொள்ளுகிறீர்கள். நீங்கள் தமஸ்குவிற்கு செல்லும் பாதையிலும், தூசியிலும் உங்களை காத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுடைய இறுமாப்பு சிந்தைகளி லிருந்து உங்களை விலக்கிக் கொள்ள வேண்டும். அது எல்லா இடங்களிலும், இங்கும் மற்றும் ஒலி நாடா உலகில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.
4193 மேலும் அவன், “என்னுடைய பேச்சு,”…மனிதனின் ஞானத்தின் கவர்ச்சியான வார்த்தைகளில்…இல்லை, வல்லமையின் ஆவியின் நிரூபணத்தினாலே” என்றான். 94 இப்பொழுது கவனியுங்கள்! “எதற்காக, பவுலுக்கா? நீ ஏன் இதைச் செய்தாய்?” அதிகாரம்! உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு. 95 ஓ, என்ன ஒரு பிரசங்கியார்! இந்த மகத்தான மனிதன்…அவன் தேவனைத் தேடினான், அவன், “தேவனே, நான் பெலவீனமாயிருக்கிறேன், என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத்—எனக்குத் தெரியவில்லை. தேவனே, நான் பெலனுள்ளவனாயிருக்கும்படியாக, என்னை பெலப்படுத்தி, என்னுடைய பெலவீனங்களை என்னிடத்திலிருந்து அகற்றி, இந்த காரியங்களை அகற்றும்படி, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன்” என்றான். 96 தேவன் அவனிடத்தில் திரும்பிப் பேசி, “பவுலே, உன்னுடைய பெலவீனத்திலே என் பெலன் பரிபூரணமாயிற்று” என்றார். 97 அப்பொழுது பவுல், “நான் பெலவீனமாயிருக்கும்போது பெலனுள்ளவனாயிருக்கிறேன். ஆம்!” என்றான். அவன், “அப்பொழுது…நான் என்னுடைய பலவீனங்களைக் குறித்து மேன்மைபாராட்டுவேன். நான் எல்லாவற்றையும் என்னிடத்திலிருந்து வெளியே எடுத்துப்போட்டதற்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். நான் என்னிடத்திலிருந்து எல்லாவற்றையும் வெளியே எடுத்துப்போடும்போது, அப்பொழுது தேவனால் உள்ளே வர முடியும். ஆனால் நான் இன்னும் என்னுடைய சுயத்தை அங்கே வைத்திருக்கும் வரை, அப்பொழுது தேவனால் உள்ளே பிரவேசிக்க முடியாது” என்றான். 98 அங்குதான், அதுதான், நாம்—நாம் அவரை ஒடுக்கிவிடுகிறோம். நாம் நம்முடைய… நம்மில் மிகவும் ஏழ்மையானவர் முதல் நம்மில் மிகப் பெரிய பணக்காரர் வரை, சிறியவர் முதல் பெரியவர் வரை, நாம் நம்முடைய ஜீவியங்களிலிருந்து தேவனை விலக்கி வைக்கிறோம்.
4299 நான் அடிக்கடி, “எனக்கு இருக்கிற மிகப்பெரிய சத்துரு வில்லியம் பிரான்ஹாம்” என்று கூறியிருக்கிறேன். அவன்தான் தேவனுடைய வழியில் குறுக்கிடுகிறான். அவன் தான் சோம்பேறியாகிறான். அவன்தான் சில சமயங்களில் அதைக் குறித்து ஏதோ ஒன்றைச் செய்ய முடியும் என்று நினைக்கிற ஒரு நிலையை அடைந்து, அவன் அவ்வாறு செய்யும்போது, அது தேவனை காட்சியிலிருந்து வெளியே தள்ளிவிடுகிறது. ஆனால் நான் அந்த நபரை அகற்றும்போது, அவன் வழியை விட்டு விலகியிருக்கிற ஒரு இடத்தை நான் அடையும்போது, அப்பொழுது தேவன் வந்து வில்லியம் பிரான்ஹாம் ஒன்றுமே அறியாத காரியங்களை செய்ய முடியும். 100 அப்பொழுதுதான் தேவன் உங்களை உபயோகிக்க முடியும். அப்பொழுதுதான் அவர் உங்களில் எவரையும் உபயோகிக்க முடியும். நாம் வழியை விட்டு விலகும்போது, அவர் எவரையும் உபயோகிக்க முடியும். ஆனால் நாம் நம்மை பாதையில் வைத்திருக்கும் வரை, நம்மால் முடியாது. சரி.
43101 இப்பொழுது இந்த மகத்தான நபர், பவுல், அவன்—அவன் பிரசங்கிமார்களுக்கு மத்தியில் ஒரு இளவரசன் என்று நாம் கண்டறிகிறோம். அவன் ஒவ்வொரு ஸ்தாபனத்தினாலும் மதிக்கப்பட்டான். அந்த மனிதன் ஒரு நகரத்திற்குச் சென்று, எங்காவது ஒரு கூட்டத்தை நடத்தியிருக்க முடியும். காரணம் ஏன்? அவன் நற்சான்றிதழ்களை உடையவனாயிருந்தான். ஏன், அவன் மிகவும் மகத்தானவனாய், பெலவீனமாயிருந்த எல்லா ஜனங்களையும் அடித்து நொறுக்கி, அவன் பிரதான ஆசாரியனிடமிருந்து, மிக உயரிய அதிகாரத்திலிருந்த அதிகாரத்தைப் பெற்று, அவர்கள் ஒவ்வொரு கிறிஸ்தவரையும் கைது பண்ணும் வரையிலும். அவர்கள் எல்லோரையும் கட்டிப் போட, அவனுடைய சபையிலிருந்து அரசியல் வல்லமையை பெற்றிருந்தானே! ஓ, அவன் பலமுள்ளவனாயிருந்தான்! அவனால் கிறிஸ்தவர்களைக் கட்டி சிறையில் அடைக்க முடிந்தது ஏனென்றால் அவர்கள் அவனுடைய வேத சாஸ்திர உபதேசங்களில் அவனோடு இணங்கவில்லை, பரிசேயர் மற்றும் சதுசேயர்களின் போதகங்களின் பேரில். அவன் கிறிஸ்தவர்களைக் கட்டிக்கொண்டிருந்தான். 102 ஆனால், கவனியுங்கள், அவன் தன்னுடைய பெலனையும், அதிகாரத்தையும் இழக்கும்படிக்கு, அவன் தன்னையே, கட்ட வேண்டியதாயிருந்தது. அவன் கட்டுவதற்கு தனக்கு இருந்த வல்லமையை இழக்கும்படி, அவன் தாமே கட்டப்பட்டான். அவன் கட்டப்படும்படியாக, அவன் என்னவாயிருந்தான் என்பதை இழக்க வேண்டியதாயிருந்தது.
44103 தேவன் பிரபுக்களைக் கடந்து செல்கிறார்! அவர் ஆசாரியர்களைக் கடந்து சென்றார். அவர் அகந்தையுள்ளவர்களைக் கடந்து சென்றார். அவர் பவுலை, இந்த மகத்தான மனிதனைத் தெரிந்துகொண்டு, அவனை பூமியின் தூளில் விழச் செய்தார் அவன் செய்யும் காரியங்களை…மற்றவர்களை செய்து கொண்டிருந்ததைப் போன்றே. அவர் அவர்களைச் செயல்படச் செய்த…அவன் கைது செய்து கொண்டிருந்தவர்கள் செய்து கொண்டிருந்த விதமாகவே அவனை செய்ய வைத்தார். பவுல் கிறிஸ்தவர்களைக் கட்ட வேண்டியிருந்த அந்த வல்லமையிலிருந்து அவனை விடுவிப்பதற்காக அவர் தேவனுடைய ஆவியினால் அவனைக் கட்டினார். தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரியாது என்று என்னிடம் சொல்லுகிறீர்களா? அவன் தன்னுடைய—தன்னுடைய பிடியை இழக்கும்படியாக தன்னுடைய பெலனை அவர் எடுத்துப் போட்டார்.
45104 இந்தக் காலையில் தேவனால் எத்தனை ஊழியக்காரர்களை உபயோகிக்க முடியும் அவர்கள் மாத்திரம் தேவன் அவர்களை அவருடைய வார்த்தையினாலும், அவருடைய வல்லமையினாலும் கட்ட அனுமதிப்பார்களேயானால், அவர்களுடைய ஸ்தாபனங்கள் மற்றும் ஸ்தாபனங்களின் பலத்திலிருந்து அவர்களை விடுவிக்கவே! இந்தக் காலையில் இந்த நகரத்தில் உள்ள எத்தனை உத்தமமான ஜனங்கள், இந்த பெரிய ஸ்தாபன சபைகளுக்கு சென்றுகொண்டிருக்கிறவர்கள், எத்தனை பேர்களை அவரால் பரிசுத்த ஆவியினால் நிரப்பி, இந்த தேசத்தை சுவிசேஷத்தினாலும், வல்லமையினாலும் அக்கினிமயப்படுத்த முடியும், அவர்கள் மாத்திரம் தாங்கள் பெற்றுள்ள வல்லமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, அவருடைய ஆவியால் கட்டப்பட்டிருந்தால், பவுல் இருந்தது போல, தேவனுக்கு ஒரு அன்பின் அடிமையாயிருக்க வேண்டும்! 105 தேவன் பவுலை எடுத்து, அவனிலிருந்து ஒரு அடிமையை உருவாக்கி, அவனைத் தமக்கு கட்டப்பட்டவனாக்கி, அவன் வெறுக்கிற புறஜாதிகளிடத்திற்கு அவனை அனுப்பினார். ஆனால், நீங்கள் பாருங்கள், அவன் தேவனுடைய வல்லமைக்கு கட்டப்பட்டிருக்க, தன்னுடைய மதசம்பந்தமான அதிகாரத்திலிருந்து கட்டவிழ்க்கப்பட வேண்டியதாயிருந்தது. அவன் தேவனுடைய பெலத்தைப் பெற்றுக்கொள்ள, அவன் தன்னுடைய பெலத்தை இழந்து, பெலவீனமாகி, ஒன்றுமில்லாதவனாக ஆக வேண்டியதாயிருந்தது, தேவனுக்குக் கட்டுப்பட்டிருக்க, தேவன் அவனிடம் என்ன செய்யும்படி கூறுகிறாரோ அதைச் செய்ய வேண்டும். 106 அதைத்தான் நாம் இன்றைக்கு செய்ய வேண்டும். அதுதான் எனக்குத் தேவை. அதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை, அது தன்னைப் பற்றிய ஒரு இழப்பே, அவனுடைய திறமையின் இழப்பே, அவன் என்னவாயிருக்கிறான் என்ற இழப்பே, அதாவது அவன் பரிசுத்த ஆவிக்கு ஒரு முழுமையான கீழ்ப்படிதலைப் பெற்றுக்கொள்ளும்படியாகவே. இல்லத்தரசிக்கு அது தேவை. பள்ளி மாணவனுக்கு அது தேவை. நாம்…நம்முடைய சிறு பிள்ளைகளையும் கூட எடுத்துக் கொள்கிறோம்.
46107 நான் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட சிறு பையன், நேற்று மதியம் அல்லது நேற்று முன் தினம், அல்லது ஏதோ ஒரு நாள், அவன் உள்ளே சென்று தன்னுடைய மூத்த சகோதரியை தன்னுடைய பாடத்தை உடனே எழுதும்படிச் செய்து, வெளியே வந்து சிறு பையன்களிடம், “வ்வூயு! அந்தக் கணக்குகள் சுலபமாயிருந்தன” என்றான். பாருங்கள், அவர்கள் ஏறக்குறைய, ஏமாற்றும்படி, கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். 108 எவ்வளவு மேலானதாக இருக்கும்…அந்த ஜனங்கள் ஒரு சபையில் தூண்களாயிருக்கிறார்கள். ஒரு காலை சிற்றுண்டி நேரத்தில் அப்பாவுக்கு, அது எவ்வளவு நன்றாக இருக்கும், “ஜான் இன்றைக்கு அவனுடைய பரீட்சையை எழுதப்போகிறான். ஓ தேவனே, ஜானோடு இரும்! ஜானுக்கு உதவி செய்யும்! இன்று காலை படுக்கையறையில் அவன் என்னிடம் கேட்டான், அவன், ‘அப்பா, இன்றைக்கு எனக்காக ஜெபியுங்கள், நான் என்னுடைய பரீட்சையை எழுத வேண்டும். எனக்காக ஜெபியுங்கள்’ என்றான்” என்று கூறுகிறார். 109 என்னுடைய பையன் ஏமாற்றி தேர்வில் மதிப்பெண் அட்டையில் நேரடியான முதல் தரம் எடுப்பதை காட்டிலும் அவன் தேர்ச்சி பெறாமலிருப்பதையே நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஆம், ஐயா! நமக்குத் தேவை என்னவென்றால், நம்மையே இழந்து, தேவனுடைய வல்லமையை முழுவதுமாக சார்ந்திருக்க வேண்டும்.
47110 இப்பொழுது, “கட்டப்பட்டவர்.” தேவன் பிரபுக்களைக் கடந்து சென்று, பெலவீனர்களைப் பெற்றுக் கொள்கிறார். தேவன் தாங்கள் ஏதோ ஒரு காரியமாய் இருப்பதாக நினைக்கிறவர்களை கடந்து செல்கிறார், ஒன்றுமே அறியாத யாரோ ஒருவரை அவர்களுடைய வாழ்க்கையில் அவருடைய நோக்கத்தை கிரியை செய்யும்படி ஒழுங்குபடுத்தும்படி எடுத்துக் கொள்ள வேண்டும். அதைத்தான் நாம் பெற்றுக் கொள்கிறோம். 111 தேவன் பவுலிடம், “என்னுடைய பெலன் உன்னுடைய பலவீனத்தில் பரிபூரணமாயிருக்கிறது. நீங்கள் அதிகமாய் பெலவீனமாகும்போது என்னுடைய—என்னுடைய பெலனும் பரிபூரணமடைகிறது. நான் உங்களை அதிகமாக உபயோகிக்க முடிந்தளவு நீங்கள் என்னிடத்தில் அதிகமாக ஒப்புக்கொடுக்க முடியும். நீங்கள் உங்களுடைய கல்வியைக் குறித்து எவ்வளவாய் மறக்க முடியுமோ, அவ்வளவாய் நீங்கள் உங்களுடைய ஸ்தாபனத்தைக் குறித்தும் மறக்கமுடியும், நீங்கள் எவ்வளவாய் உங்களுடைய பொருட்களைக் குறித்து மறந்து உங்களை என்னிடத்தில் ஒப்புக்கொடுக்க முடியுமோ, அவ்வளவு அதிகமாக நான் உங்களை உபயோகிக்க முடியும். நீங்கள் பலவீனமடைவதால், நான்—நான் என்னுடைய சொந்த தீர்மானத்தை பலப்படுத்துவேன்” என்று கூறினார். 112 தேவனால் பெலவீனத்திலிருந்து பெலனை உண்டாக்க முடியும்! அந்தக் காரணத்தினால்தான் அவர் எப்பொழுதுமே அதைச் செய்கிறார். அவர் தம்முடைய சீஷர்களைத் தெரிந்துகொண்டபோது, அவர்கள் நினைப்பார்கள்…
48113 தம்முடைய சொந்த குமாரன் தாழ்மையாக, அவர் ஒரு முன்னணையில், ஒரு தொழுவத்தில், மாட்டுத் தொழுவத்தில் பிறந்தபோது, துணியில் சுற்றப்பட்டிருந்தார்! பாருங்கள், அவர் ஒரு அரண்மனையினூடாக வந்திருக்க முடியும். அவனால் பரலோகத்தின் தாழ்வாரங்களில், மற்றும்…ஒரு தூதனின் முழுமையான வாழ்த்தோடு இறங்கி வந்திருக்க முடியும். ஆனால் அவர் நமக்காக, கிறிஸ்துவை நமக்கு மாதிரியாக்கும்படி தெரிந்து கொண்டார், அவர் அவரை தாழ்மையில் கொண்டு வந்தார். 114 அவர் இந்த உலகத்தின் பள்ளிகளில் அவரை ஒருபோதும் பயிற்றுவிக்கவில்லை, ஆனால் அவர் தம்முடைய சொந்த வல்லமையினால் அவரைப் பயிற்றுவித்தார், …அதனால் மனிதனின் எண்ணங்களுக்கோ அல்லது உலகின் பலத்திற்கோ அல்ல, தன்னையே முழுவதுமாக விட்டுக்கொடுக்க அவரால் முடிந்தது, ஆனால் தேவனுடைய வல்லமைக்கு தம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
49115 இன்றைக்கு நாம் என்னவாயிருக்கிறோம், நாம் இன்றைக்கு நம்முடைய பெரிய ஸ்தாபனங்களிலும், மண்டலங்களிலும் நம்மையே ஒப்புக்கொடுக்கிறோம். நாம் நம்மை ஸ்தாபனத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம், அது என்ன கூற வேண்டும், அவர்கள் அதைக் குறித்து என்ன கூறுகிறார்கள். ஆனால் அது தேவனுடைய சித்தத்திற்கு முரணாயுள்ளது. நாம் தேவனுடைய ஆவிக்கு நம்மை ஒப்புக் கொடுத்து, ஆவியானவர் எங்கே போ என்று கூறுகிறாரோ அங்கு செல்ல வேண்டும். அது உண்மை. 116 தேவனுடைய எபிரெயர்களாகிய நாம், இல்லை, தேவனுடைய வீரர்கள், சரியாகக் கூறினால், “வீரர்கள்”. நாம் எபிரெயர் புத்தகம், 11-ம் அதிகாரம் 34-ம் வசனத்தில் வாசித்தோம். …பலவீனத்தில் பலன்கொண்டார்கள்,… 117 அவர்கள் பலமடைவதற்கு முன்னர் அவர்கள் பலவீனமடைய வேண்டியதாயிருந்தது. அவர்களுடைய பலவீனங்களிலிருந்து அவர்கள் பலப்படுத்தப்பட்டனர். எபிரெயர் 11:34-ஐ நீங்கள் வேதவாக்கியங்களை குறித்துக் கொள்கிறீர்கள். சரி.
50118 இங்கே நமக்கு ஆறுதல் அளிக்க ஒரு காரியம் உள்ளது. இங்கே ஒரு காரியம் ஊக்குவிக்கிறது. பலவீனத்திலிருந்தும், தாழ்மையிலிருந்தும் தேவன் தம்முடைய இராஜ்ஜியத்தை உருவாக்க ஜனங்களை தெரிந்து கொள்கிறார். நாம் எப்போதாவது பரலோகத்திற்கு செல்வோமேயானால், நாம் எப்போதாவது தேவனுடைய பிரசன்னத்தில் அவருடைய சபையோடு நின்று, நாம் பலவீனமாயும், புறக்கணிக்கப்பட்டும், உலகத்தால் புறம்பே தள்ளப்பட்டும், ஒன்றுமே அறியாத ஒரு கூட்ட ஜனங்களுக்குள் நிற்போம். 119 தேவன் நம்மை செம்மறியாடுகளுக்கு ஒப்பிட்டது விநோதமாயிருக்கவில்லையா? ஒரு செம்மறியாடு மிகவும் உதவியற்ற காரியமாயுள்ளது. பாதுகாப்பில் செம்மறியாட்டைக் காட்டிலும் போதுமானதாயில்லாத ஒன்றும் இல்லை. ஒரு முயலினால் ஓட முடியும்; ஒரு அணிலினால் ஒரு மரத்தில் ஏற முடியும்; ஒரு நாயினால் கடிக்க முடியும்; ஒரு சிங்கத்தினால் கிழிக்க முடியும்; ஒரு குதிரையால் உதைக்க முடியும்; ஒரு பறவையினால் பறக்க முடியும்; ஆனால் ஒரு ஆடு உதவியற்ற நிலையில் நிற்கிறது. 120 அந்தவிதமாகவே தேவன் நம்மை விரும்புகிறார். நாம் முற்றிலும் குறைவுள்ளவர்களாயிருக்கிறோம் என்பதை உணருங்கள், அப்பொழுது தேவன் அந்த நபரை எடுத்து, அந்த நபருக்குள்ளாக தம்மை உருவாக்கத் துவங்குகிறார்; தேவனுடைய கரங்கள் செய்ய வேண்டியதை அவனுடைய கரங்களைச் செய்யும்படி செய்கிறார், தேவனுடைய உதடுகள் எதைப் பேசுமோ, அதையே அவனுடைய உதடுகளும் பேசும்படி செய்கிறார்; ஏனென்றால் அவைகள் அவனுடையதல்ல, அவைகள் தேவனுடையவைகள். அவர் ஒரு குணாதிசயத்தை உருவாக்கத் துவங்கி, இந்த பெலவீனத்தை ஏற்றுக்கொண்டு, தம்மை தாமே உருவாக்கிக் கொள்ளத் துவங்குகிறார்.
51121 அவர் நம்மை இங்கே பூமியின் மேல் கொண்டு வருகிறார், ஏனென்றால்…நாம் கல்வியறிவு பெற்றவர்கள், நாம் புத்திசாலிகள். நீங்கள் எப்போதாவது வம்சங்களை, வம்ச வழிகளை கவனித்திருக்கிறீர்களா? உதாரணமாக, நாம் ஆபேலினூடாக எடுத்துக் கொண்டால், ஆபேலிலிருந்து சேத் தோன்றினான்; நோவாவின் காலம் வரைக்கும் வந்த, சேத்தின் வம்சத்தில் வந்தவர்கள், அவர்கள் எல்லோருமே எளிமையான விவசாயிகளாயிருந்தனர். ஆனால் காயீனின் பிள்ளைகளோ புத்திசாலிகளாக, புத்திசாலிகளாக, கல்வியறிவு பெற்றவர்களாக, பெரிய மனிதர்களாக, கட்டிடம் கட்டுபவர்களாக, தொழில் ரீதியான மனிதர்களாக மாறினர். 122 ஆனால் தேவனுடைய பக்கமோ பலவீனமாகவும், தாழ்மையாகவும் இருந்தது. அந்தவிதமாகத்தான் தேவன் அவர்களை உபயோகித்தார். அது தேவனுடைய வாய்ப்பு. நாம் பெலவீனமாயிருக்கும்போது, நம்மை அணுகுவதற்கான தேவனுடைய வழி அதுவேயாகும். அப்பொழுது நாம் அவரிடத்தில் ஏதோ பெற்றுக்கொள்கிறோம். இது நிச்சயமாகவே உற்சாகப்படுத்துகிறது, ஏனென்றால் தேவனுடைய முழு இராஜ்ஜியமும் இந்தவிதமான ஜனங்களால் கட்டப்பட்டுள்ளது. அப்படியானால் நீங்கள் அந்த விதமான ஒரு வழியை அடையும்போது, அப்பொழுது உங்களால்—உங்களால்…நீங்கள் அவருடைய இராஜ்ஜியத்தில் இருக்கிறீர்கள். 123 நம்மைப் பொறுத்த மட்டில், அது…நாம் மிகவும் பெலவீனமாயிருக்கிறோம் என்பதல்ல, நாம் மிகவும் பெலனுள்ளவர்கள் என்பதாயுள்ளது. நாம்—நாம்—நாம் மிகவும் பலமுள்ளவர்களாயிருக்கிறோம். அவ்வளவுதான். அதைக் குறித்த காரியம் என்னவெனில் நாம் மிகவும் சிந்தையில் பலமுள்ளவர்களாயிருக்கிறோம். அது உண்மை, நாம் நம்முடைய சிந்தையில் மிகவும் பலமுள்ளவர்களாயிருக்கிறோம். நாம் மிக அதிகமாக அறிந்திருக்கிறோம். தேவன் அதை நம்மிடத்திலிருந்து எடுத்துப்போட விரும்புகிறார். அது உண்மை. நாம் மிகவும் பலமுள்ளவர்களாயிருக்கிறோம், நாம் அவருக்கு அடிபணிய முடியாத அளவுக்கு பெலனுள்ளவர்களாயிருக்கிறோம். நாம்…நாம்—நாம் நமக்கே ஒப்புவிக்கிறோம். நாம், “பாருங்கள், இப்பொழுது, இங்கே, நான்—நான் அறிந்துகொள்ள போதிய புத்தியைப் பெற்றுள்ளேன்!” என்று நினைக்க வேண்டும்.
52124 ஒரு சில இரவுகளுக்கு முன்னர் அம்மா சுகவீனமாயிருந்தபோது, மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். நான் சென்றேன்…அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி இருந்தாள்…அந்த சிறிய பெண்மணி இங்கிருந்தால், சகோதரியே, நீங்கள் என்னை மன்னித்துவிடுங்கள். அவள் அங்கே கீழிருந்து வந்த ஒரு சிறிய கென்டக்கி பெண், நாங்கள்…அது அவளுடைய மாமியார். அன்றிரவு நானும் என் மனைவியும், அங்கே கிட்டத்தட்ட நள்ளிரவு ஒரு மணியளவில் அவளிடம் பேசிக்கொண்டிருந்தோம். அவளுடைய கணவன் தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்; அவள், “இங்கிருந்து போ! நீ எப்படியும், உன்னுடைய தாயாருக்குப் பிரயோஜனமானவன் அல்ல” என்றாள். அவளுடைய கணவனை அறையை விட்டு வெளியே துரத்திவிட்டாள், ஏனென்றால் அவன் கதவுக்கு நேராக படுத்திருந்தான் அங்கே செவிலியர்கள், யாரும் உள்ளே நுழைய முடியாதபடி, அப்படியே தரையில் குறட்டைவிட்டான். எனவே அவள் அவனை எழுப்பி வெளியே துரத்தினாள்.
53125 அவள் அங்கே பேச ஆரம்பித்தாள். நான் அவளிடத்தில் கர்த்தரைக் குறித்து, பேச வேண்டியதாயிருந்தது. மேலும் அவள், “பாருங்கள்,” என்று கூறிவிட்டு, அவள், “புகையிலை திட்டில் உள்ள ஒரு வளைந்த மண்வெட்டி மாத்திரமே எனக்குத் தெரியும், விடியற்காலையில், களைகளையும், புகையிலையை உறிஞ்சும் பொருட்களையும், மற்றும் அதைப் போன்றவைகளையும் வெட்டிப் போடுகிறேன்” என்றாள். மேலும், “ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,” என்று கூறி, “அப்பா எங்கள் ஒவ்வொருவரையும் பள்ளிக்கு அனுப்பினார்” என்றாள். மேலும், “எங்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை” என்று கூறினாள். நான், “பாருங்கள், ஒரு வேளை அதுதான் காரணமாயிருக்கலாம்” என்று எண்ணினேன். 126 பாருங்கள், நீங்கள்—நீங்கள் உலகத்தின் காரியங்களை உங்களிடத்திலிருந்து அகற்ற வேண்டும். இப்பொழுது, நான் அறியாமையை ஆதரிக்கவில்லை, இல்லை—அதை அல்ல, ஆனால் நீங்கள்—நீங்கள் எவருமே அதைக் குறித்து ஒன்றுமே அறியாத அளவிற்கு அதிகம் அறிந்திருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கும் ஒரு இடத்திற்கு நீங்கள் வரும்போது என்ன ஆகும் என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய அறிவு தேவனுடைய வாக்குத்தத்தங்களோடு குறுக்கிடாதவரை—அது வரைக்கும் சரியாகவே இருக்கும்.
54127 நாம் ஐம்புலன்களினால் கட்டுப்படுத்தப்படுகிறோம், அந்த ஐந்து புலன்கள் (பார்த்தல், ருசித்தல், உணருதல், முகருதல், கேட்டல்) விசுவாச புலனை குறுக்கிடாத வரையிலும் அவைகள் மிகவும் அருமையாயிருக்கின்றன. அப்பொழுது அவர்கள் விசுவாசத்திற்கு விரோதமாக வரும்போது…எது சரியென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ஏனென்றால் விசுவாசம் எப்பொழுதுமே வார்த்தையோடு இணங்கும். அப்படியானால் உங்களுடைய விசுவாசம் வார்த்தைக்கு முரணாயிருந்தால், அல்லது நீங்கள் அவ்வாறு கருதினால், அப்பொழுது நீங்கள் விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லை. நீங்கள் ஒரு பாவனை விசுவாசத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் உங்களுடைய புலன்களில், நீங்கள் கற்றுக்கொண்ட சில புலமையைக் குறித்து அல்லது ஏதோ ஒன்றைக் குறித்து பெருமையடித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அதிலிருந்து விலகி, விசுவாசத்தின் பேரில் முழுமையாக சார்ந்திருக்கும்போது, விசுவாசமானது தேவனுடைய வார்த்தையின் மேல் மாத்திரமே கட்டியெழுப்பப்பட முடியும் (சரியான விசுவாசம்).
55128 ஒரு மருத்துவர் என்னிடம் ஒருமுறை கூறினார், “நான் நினைக்கிறேன், பில்லி, அந்த ஜனங்கள்…நீங்கள் அவர்களை அங்கே போய், அந்த மரக் கம்பத்தைத் தொடச் சொன்னால், அவர்கள் சுகமடைவார்கள் என்று அவர்கள் நம்பினர், அவர்கள் அதேவிதமாகவே சுகமடைவார்கள்” என்று கூறினார். 129 நான், “இல்லை ஐயா. மருத்துவரே, இந்த ஒரு காரியத்தின் காரணமாக அது முடியாது, பாருங்கள், அது வெரும் ஒரு கம்பம் என்பதை அந்த ஜனங்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த கம்பத்தில் எந்த வல்லமையும் இல்லை, பெலமும் இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள்” என்றேன். 130 ஆனால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை அறிந்துகொள்ளும்படியாக மற்றும் அதன் பேரில் என்னுடைய விசுவாசத்தை அடித்தளமாக்கிக் கொள்ள, மனநிலை சீரான எந்த மனிதனும், அது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையாயுள்ளது என்பதை அறிந்துகொள்வானே! அதற்கு முரணாக ஏதாகிலும் இருக்குமானால், அப்பொழுது நான் என்னுடைய புலன்களை விசுவாசிப்பதில்லை. இல்லை, ஐயா, அதை அப்படியே விட்டுவிடுங்கள். உங்களுடைய மற்றொரு புலன், விசுவாச புலன் மூலம் செல்லுங்கள்.
56131 சரி, தேவன் அந்த ஜனங்களை அவ்வாறு செய்ய எடுத்துக்கொள்கிறார்…அவர்கள் யாருமற்றவர்களாய் இருக்கும்போது, அவர்கள் அவருக்கு அடிபணிவார்கள். 132 சிக்காகோவைச் சேர்ந்த டி.எல் மூடி, அவர் பாஸ்டனைச் சேர்ந்தவர், அவர் ஒரு செருப்புத் தைப்பவர்; ஒரு சிறிய, சிறிய நபர், போதுமானதாயில்லாதவர், தன்னையே சார்ந்திருக்கவில்லை. இப்பொழுது, அவர்கள் வைத்துள்ள இந்த மகத்தான பள்ளிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், அங்குள்ள மூடி பள்ளி, டுவைட் மூடி மீண்டும் எழுந்து அந்தப் பள்ளியைக் காண முடிந்தால், டுவைட் மூடி செய்யும் முதல் காரியம் அந்தப் பள்ளியை அகற்றுவதேயாகும். 133 மார்டின் லூத்தர் எழும்ப முடிந்தால், அவர் செய்ய வேண்டிய முதல் காரியம் லூத்தரன் ஸ்தாபனத்தை ஒழிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். ஜான் வெஸ்லியும் அதையே செய்வார். அந்த மனிதர்கள் அந்த ஸ்தாபனங்களை ஒருபோதும் ஸ்தாபிக்கவில்லை, அவர்களைப் பின்பற்றின மனிதர்களே அதைச் செய்தனர்.
57134 பவுல் எந்த சபையையும் ஸ்தாபிக்கவில்லை, ஏனென்றால் அவன் தானே, “நான் மரித்த பிறகு, உங்கள் ஜன கூட்டத்தார் உங்களுக்குள்ளே எழும்பி, தாறுமாறாக்கப்பட்ட காரியங்களைப் பேசுவார்கள்” என்றான். அது பவுலின் மரணத்திற்குப் பிறகு, அதற்குப் பிறகு நூறு (அல்லது இரண்டு) ஆண்டுகள் கழித்து, அவர்கள் கத்தோலிக்க சபையை, முதல் ஸ்தாபனத்தை உருவாக்கினர். 135 மனிதர் எழும்பினர்! மூடியின் மரணத்திற்குப் பிறகுதான் அவர்கள் மூடி பள்ளியை உடையவர்களாயிருந்தனர். வெஸ்லியின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் வெஸ்லி சபையை உருவாக்கினர்; லூத்தரின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் லூத்தர் சபையை உருவாக்கினர். தேவன் மாவீரர்களை அனுப்புகிறார்; அவர்கள் கட்டுகிறார்கள்… 136 “நீங்கள்—நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்களே!” என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை. அவர், “நீங்கள்—நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளை அலங்கரிக்கிறீர்கள், நீங்கள்தான் அவர்களை அங்கே கொன்று புதைத்துள்ளீர்கள்!” என்றார். அது உண்மை. 137 இந்த மகத்தான மனிதர் எழும்புகிறார்கள்; அதன்பின்னர் அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்டுகிறார்கள். தாவீதைப் போலவே, “தன்னுடைய சொந்த சந்ததியிலும் தேவனை நன்றாய் சேவித்தான்” என்று நான் நினைக்கிறேன். எனவே அந்த விதமாகத்தான் அதைச் செய்ய வேண்டும். ஸ்தாபனங்களும் மற்ற காரியங்களும் உங்களிடத்திலிருந்து விலகியிருக்கட்டும்.
58138 மூடி, சிறு உருவம் படைத்த செருப்பு தைக்கும் வயோதிகர், அவர் பலவீனமாக இருந்தார். அவர் பலவீனத்திற்கு ஒரு உதாரணமாக இருந்தார். முதலாவதாக மூடி செய்ததாக கூறினது என்னவெனில்…அவர் கல்வியறிவே இல்லாதவராயிருந்தார், அவருடைய இலக்கணமும் மிகவும் மோசமாக இருந்தது. ஒரு மனிதன் ஒரு முறை அவரிடத்தில் வந்து, “திரு. மூடி, என் வாழ்க்கையில் நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் மோசமான இலக்கணம் உங்களுடைய இலக்கணமாயுள்ளது” என்றான். 139 அவர், “என்னுடைய அறியாமையைக் கொண்டு நான் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொண்டிருக்கிறேன், நீங்கள் உங்களுடைய கல்வியைக் கொண்டு என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அது ஒரு நல்ல பதில் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக அவ்வாறு இருந்தது! 140 இப்பொழுது, நீங்கள் அந்தப் பள்ளியின் அங்கத்தினராகிவிட்டால், நீங்கள் நிச்சயமாகவே ஒரு மெருகேற்றப்பட்ட மேதையாக இருப்பீர்கள். அது உண்மை. [ஒரு சகோதரன், “அதை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டனர்!” என்கிறார்—ஆசி.] இப்பொழுது, ஆம், அவர்கள் “அதைத் தலைகீழாக மாற்றினர்” என்பது உண்மை, வேறு வழியில் திரும்பிச் செல்லுங்கள்.
59141 அதைத்தான் ஜனங்கள் செய்கிறார்கள். என்னுடைய செய்தியின் துவக்கத்தில் நான் கூறியபோது… கிறிஸ்தவர்கள் தங்களைத் தாழ்த்தி, தங்களை வெறுமையாக்கிக் கொண்டு, தேவனுக்கு அதிகமான இடத்தை கண்டறிவதற்கு பதிலாக, அவர்கள் தங்களை ஒரு சுயமாக உண்டாக்கிக் கொண்ட அறிவினாலும், அல்லது ஏதோ ஒரு தொழில் நுட்பப் பள்ளி அறிவினாலும், அல்லது ஏதோ காரியத்தினாலும் உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள், அது அவர்கள் துவங்கினபோது இருந்ததைக் காட்டிலும் அவர்களை தேவனிடத்திலிருந்து தூரமாய் தள்ளிவிடுகிறது. 142 அப்படித்தான் நான் இந்த செயற்கையான பீட அழைப்புகளைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அவனை உள்ளே கொண்டு வாருங்கள், அடுத்த முறை அவனை மீண்டும் கொண்டு வருவது அதைவிட பத்து மடங்கு கடினமாயுள்ளது. தேவன் அவனுக்காக ஏதோ ஒரு காரியத்தை செய்யும் வரை அவன் உட்கார்ந்து கேட்கட்டும்! அதன்பின்னர் அவன் வந்து அதை அறிக்கை செய்து, எழும்பி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளட்டும். அது உண்மை.
60143 கவனியுங்கள் மூடி, கல்வியில் பெலவீனமானவராய், பேச்சில் பலவீனமாயிருந்தார், அவர் தன்னுடைய மூக்கின் வழியாக சிணுங்கிப் பேசுவார். நான் அன்றொரு நாள் அவருடைய சரித்திரத்தைப் படித்துக் கொண்டிருந்தேன், “அவருடைய மூக்கின் வழியாக சிணுங்கியது, நாசியின் நிலைமையாய் இருந்தது.” சரீரப்பிரகாரமாக சிறிய உருவமாய், வழுக்கைத் தலையுடையவராய், அவனுடைய மீசை நீளமாய் தொங்கிக் கொண்டிருக்க …?… ; ஒரு சிறிய, சிறிய, குட்டையான நபராயிருந்தார். சரீரப்பிரகாரமாக, அவர் ஒரு சரீரப்பிரகாரமாக நொறுங்கிப்போயிருந்தார். எனவே அவரிடம் தொடர்ந்து காணப்பட்டது பலவீனமேயன்றி வேறொன்றுமில்லை. ஆனால் அவருடைய நாளில் உலகத்தை அசைக்க தேவன் அவரை உபயோகித்தார்! 144 ஒரு சமயம் அவருடைய கூட்டத்திற்கு ஒரு செய்தியாளர், (நான் வாசித்துக் கொண்டிருந்தேன்), இந்த (ஒரு பெரிய மனிதன், ஒரு மகத்தான நபர்) எப்படிப்பட்ட ஒரு மனிதன் என்பதன் பேரில் ஒரு அறிக்கையை உண்டாக்க, நிருபர்கள் சென்றிருந்தனர். 145 நீங்கள் ஒலிநாடாக்களை அணைக்கும் அந்த சிறிய திருப்பான் எங்கே உள்ளது? இதுவா? நான் அதை அங்கே நிறுத்த வேண்டும்.
61146 மூடி ஒரு—ஒரு மகத்தான, மனிதனாயிருந்தார். அவர் ஒரு அருமையான மனிதனாயிருந்தார். எனவே அவரால் ஜனங்களின் கவனத்தை கவர்ந்து, அவர்கள் மனதை கவர்ந்திழுக்க முடிந்தது. எனவே அங்குள்ள ஒரு நிருபர் திரு. மூடி அவர்களிடம் சென்று கூறினார்…எந்தவிதமான பெரிய ஸ்தாபனம் என்பதன் பேரில் ஒரு அறிக்கையை அளிக்க கூட்டத்திற்கு சென்றிருந்தார்… 147 அண்மையில், அந்த நிருபர் சென்று மற்றொரு மகத்தான சுவிசேஷகரைக் குறித்து அறிக்கை செய்து, “அந்த மனிதன் பேச்சாற்றல் வாய்ந்தவர். அவர் ஒரு தெய்வீக வேத பண்டிதர். நான் கேள்விப்பட்டதிலேயே மிகச் சிறந்த இலக்கணத்தை அவர் உபயோகிக்கிறார். அவர் ஜனங்களை தன்னுடைய உளவியலில் வைத்திருக்கிறார். அவரால் ஜனங்களின் மனதை கவர்ந்திழுக்க முடிகிறது” என்றார்.
62148 “டுவைட் மூடியிடம்” அந்த நிருபர் சென்றபோது, “யாரையும் கவர்ந்திழுக்கும் அவருக்குள் என்ன இருக்கிறது என்பதை நான் காணவில்லை” என்றார். மேலும், “முதலாவது காரியம், அவர் எவ்வளவு அசிங்கமாக இருக்க முடியுமோ அவ்வளவு அசிங்கமாக இருக்கிறார். அடுத்தக் காரியம், அவர் சரீரப்பிரகாரமாக ஒரு சீர்குலைந்தவர். அடுத்த காரியம்” என்று கூறி, “அவர் கல்வியறிவு இல்லாதவர். அவருடைய இலக்கணம் நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் தரம் குறைந்ததாய் இருக்கிறது!” என்று கூறினார். மேலும், “அவர் பிரசங்கிக்கையில் அவருக்கு ஒரு புலம்பலும், மூச்சுத் திணறலும் உண்டாகிறது” என்றார். மேலும், “டுவைட் மூடியில் எந்தக் காரியமும் எவருடைய கவனத்தையும் கவர்ந்திழுப்பதாக நான் காணவில்லை” என்றார். 149 திரு. மூடியிடம் அந்த கட்டுரை கொண்டுவரப்பட்டது. அவர் அதை வாசித்து, தனக்குள்ளே ஒருவிதமாக சிரித்து, “நிச்சயமாகவே இல்லை; அது தேவனாயிருக்கிறது. நிச்சயமாக! ஜனங்கள் டுவைட் மூடியைக் காண வரவில்லை, அவர்கள் தேவனைக் காண வருகின்றனர்” என்று கூறினார். 150 நீங்கள் எவ்வளவாக சாட்சி பகர்ந்தாலும் ஜனங்கள் கவலைப்படுகிறதில்லை, தேவன் உங்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை நிரூபிக்கிற சில உண்மைகள் உங்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நீங்கள் மெதோடிஸ்டாகவோ, பாப்டிஸ்டாகவோ, பெந்தேகோஸ்தேயினராகவோ இருக்கட்டும், நீங்கள் என்னவாயிருந்தாலும், அவர்கள் தேவனைக் காண விரும்புகிறார்கள். அது உண்மை. மகத்தான மனிதர்களின்…மனிதர்கள், பெலவீனமாயிருக்கிற மனிதர்கள் தங்களுடைய பெலவீனத்தை உணர்ந்தவர்கள்.
63151 மோசேயைப் பாருங்கள், அந்த வாலிப அறிவாற்றல் படைத்த மனிதன். ஓ, அவன் ஒரு மேதையாயிருந்தான். அவனால் எபிரெயர்களுக்கு போதிக்க முடிந்தளவு அவன் எகிப்தியருடைய எல்லா ஞானத்திலும் பயிற்றுவிக்கப்பட்டிருந்தான். அவனால் எகிப்தியர்களுக்கு போதிக்க முடிந்தது. அவனால் எவருக்கும் போதிக்க முடியும், ஏனென்றால் மோசே ஒரு மகத்தான மனிதன், சாமார்த்தியமுள்ள நபராயிருந்தான். ஓ, அவன் வல்லமையுள்ள மனிதனாயிருந்தான். 152 சிசில் டிமில் அதைக் குறித்த கருத்துருவில், அவர் பத்து கட்டளைகள் என்ற படத்தை திரையிட்டபோது, அவர் இந்த மனிதனை உருவகப்படுத்தியிருந்தார்… அங்கே மோசேயின் பாகத்தில் நடித்திருந்த, ஒரு நடிகரின் பெயரை, நான் மறந்துவிட்டேன், ஆனால் மகத்தான கரங்களையும், வலிமையையும் கொண்ட ஒரு மகத்தான பெரிய மனிதன். மோசே ஒருக்கால் அந்த விதமான ஒரு மனிதனாக இருந்திருக்கலாம்.
64153 அவன் பலமுள்ளவனும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவனுமாயிருந்தான் என்பதை நாம் அறிவோம், எனவே அவன் அந்நாளின் தேவையைக் கண்டான். (ஓ, தேவன் இதை ஆழமாக பதியச் செய்வாராக!) மோசே தன்னுடைய அறிவாற்றலின் வல்லமையினாலும், அதைச் செய்ய வேண்டியவனாயிருந்த அவனுடைய திறமையினாலும் அந்த நாளின் தேவையைக் கண்டு… அவன் ஒரு புத்திசாலியான மனிதனாயிருந்தான். அவன் வரப்போகும் பார்வோனாயிருந்தான். அவன் உளவியலை கற்றிருந்தான். அவன்—அவன் வல்லமையை உடையவனாயிருந்தான். அவனுக்கு சரீர பலம் இருந்தது. அவன்—அவன் எல்லாவற்றையும் உடையவனாயிருந்தான். எனவே அவன், “நான் நன்கு ஆயத்தமாயிருக்கிறேன். நான் அதைக் குறித்து எல்லாவற்றையும் அறிவேன். அதைச் செய்யக் கூடிய ஒரு மனிதன் தேசத்தில் இருப்பாரானால், நானே அதைச் செய்ய முடியும். எனவே, நான் இந்த காரியத்தில் இறங்கும்படியாக நான் இந்த நேரத்திற்கான மனிதனாயிருக்கிறேன்,” என்றான். அவன் சரியான மற்றும் தேவனுடைய சித்தத்தில் இருந்த ஒரு வேலையை நிறைவேற்ற புறப்பட்டுச் சென்று, அவன் தன்னுடைய இயற்கையான திறமைகளை அளித்தான். தேவன் அதை மறுத்துவிட்டார்! மோசே கொண்டிருந்த எந்த ஒரு காரியத்தையும் அவனால் உபயோகிக்க முடியவில்லை. 154 அப்பொழுது அவரால் அதை உபயோகிக்க முடியவில்லை, அவரால்…அதை இப்பொழுதும் அவரால் உபயோகிக்க முடியாது. தேவனால் நம்முடைய இயற்கையான திறமைகளை உபயோகிக்க முடியாது. நாம் நம்மையும், நம்முடைய திறமைகளையும் வழியிலிருந்து விலக்கி, தேவனுடைய சித்தத்திற்கும், வல்லமைக்கும் சரணடைய வேண்டும்.
65155 “சரி, சகோதரனே, என்னால் பிரசங்கிக்க முடியும்” என்று கூறலாம். உங்களால் பிரசங்கிக்க முடியும் என்கிற வரையில் அவர் அதை உபயோகிக்க முடியாது. “அதெல்லாம் பரவாயில்லை, என்னால் இதைச் செய்ய முடியும், என்னால் அதைச் செய்ய முடியும்.” உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. பாருங்கள், அப்படியானால் தேவனால் அதை உபயோகிக்க முடியாது. ஆனால் நீங்கள் உங்களை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து, அவர் அதைச் செய்ய விட்டுவிட்டால் நலமாயிருக்குமே! 156 நீங்கள், “சரி, சகோதரன் பிரான்ஹாம், எனக்குத் தெரியும். நான் ஒரு ஆசிரியர்” என்று கூறலாம். சரி, ஏன், நீங்கள் போதகராக இருக்கும் வரைக்கும், அவர் அதிக தூரம் செல்லமாட்டார். ஆனால் பரிசுத்த ஆவியானவரே நம்முடைய போதகர். நிச்சயமாக, அது தான்! தேவன் பரிசுத்த ஆவியை சபைக்கு போதகராக அனுப்பினார். 157 சில ஜனங்கள் பல வருடங்களாக பள்ளிக்குச் செல்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்? மேலறையிலிருந்து வரும் கட்டுரைகள், போன்றவற்றைப் படியுங்கள், (ஓ, அது நல்லது) நீங்கள் தேசிய ஞாயிறு பள்ளி பாடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு அதற்கு எதிராக ஒன்றுமில்லை. அது தேவனுடைய வார்த்தைகள், மற்ற காரியங்கள், ஆனால் அது அறிவாற்றல் கொண்டவர்களோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது! அது கிறிஸ்துவின் வல்லமையினாலும், உயிர்த்தெழுதலினாலும் வரவேண்டும். நீங்கள் உங்களுடைய இயற்கையான திறமைகளின் பேரில் சார்ந்திருக்க முடியாது.
66158 எனவே, மோசே, இந்த வாலிப, அருமையான வலிமையான பெரிய, அறிவாற்றல் கொண்ட மனிதன், அவன் ஒரு நல்ல பணியை செய்ய புறப்பட்டான்; ஆனால் தேவனால் அதை முற்றிலும் உபயோகிக்க முடியவில்லை. அவனுடைய இயற்கையான திறமைகளை அவரால் உபயோகிக்க முடியவில்லை. 159 நம்மால் முடியாது…அது இன்றைக்கு அல்ல, நம்மால் முடியாது…தேவன் நம்முடைய இயற்கையான திறமைகளை உபயோகிக்க முடியாது. 160 ஆனால் மோசே கொண்டிருந்த ஒரு காரியத்தை நான் பாராட்டுகிறேன், அவன் தோற்கடிக்கப்பட்டான் என்பதை அறிந்துகொள்ள அவன் போதிய புத்தியைக் கொண்டிருந்தான். நாம் பெற்றிருக்கவில்லை. அவ்வளவுதான். “நாம் ஒரு புதிய ஸ்தாபனத்தை உருவாக்குவோம். நாம் வேறு யாரையாவது ஒரு சுகமளிக்கும் வரத்தோடு அல்லது ஏதோ ஒன்றையோ பெற்றுக் கொள்வோம்,” பெந்தேகோஸ்தேயினர், நீங்கள் பாருங்கள். பார்த்தீர்களா? நாம்—நாம் தோல்வியடைகிறோம் என்பதை உணரும்படியான போதிய அறிவை நாம் அறியவில்லை. பெந்தேகோஸ்தே சபை, தேவனுடைய சபைகளின் சபை, ஐக்கியம், மற்ற சபை, தாங்கள் தோல்வியடைகின்றனர் என்பதை அறிந்துகொள்ளும் திறமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை என்பது போன்று தென்படுகிறது. அல்லேலூயா! ஓ, என்னால் இதை பதிய செய்ய வைக்க முடியுமானால் நலமாய் இருக்கும். அவர்கள் தோற்கடிக்கப்படுகின்றனர். சபை ஸ்தாபனம் தோற்கடிக்கப்படுகிறதே! அதேவிதமாகவே இந்த அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டு, நடுங்கி, பயமடைந்து, அவர்களுக்காக அப்பால் குண்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன, அவர்கள் நடனமாடி, தங்களுடைய ஜீவியத்தை நரகத்திற்குள் அடைத்துக் கொண்டனர் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் தோற்கடிக்கப்படுகின்றனர், ஆவியானவர் அவர்களிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். நீங்கள் வாலிபர்களை இராணுவத்தில் சேர்க்க அலசி தேடிக் கொண்டிருக்க வேண்டும்; மற்ற ஒன்றில் என்ன நடந்தது என்பதை அவர்கள் கண்டனர். நாம் தோற்கடிக்கப்படுகிறோம்! சபை தோற்கடிக்கப்படுகிறது. அவர்கள் அதை அறிவார்கள்.
67161 மோசே அதை உணர்ந்தான், அப்பொழுது அவன் போதுமான அளவு அறிந்திருந்தான்… தேவன் அவனை பின்னால், வனாந்திரத்தில், சில மானிட பலவீனங்களைக் கற்றுக்கொள்வதற்காக அழைத்துச் சென்றார். அதைக் குறித்த எல்லாவற்றையும் அவனிடம் அறிந்துகொள்ள அவர் அவனைத் திரும்ப அழைத்துச் சென்றார். அவன் மிகவும் நன்றாகக் கற்றுக் கொண்டானே! ஓ, என்னே, அவன் எப்போதாவது ஒரு பாடத்தைப் பெற்றுள்ளானா! தேவன் அவனோடு ஒரு சமயம் இருந்திருக்க வேண்டும்! மோசே கோபத்தை உடையவனாக இருந்தான் என்பதை, நீங்கள் அறிவீர்கள். தேவன் சிப்போராள் என்னும் பெயர் கொண்ட மனைவியை அவனுக்கு அளித்தார், அவளும் கூட, அதே விதமாக இருந்தாள். எனவே பாலைவனத்தின் பின்பக்கத்தில் இருந்த சிறிது நேரத்தில் எல்லாமே மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்று நான் யூகிக்கிறேன், இருவருடைய கோபங்களும் ஒரே நேரத்தில் கட்டுப்பாட்டை மீறிவிட்டன. 162 உளவியல் எவ்வாறு ஒரு நபரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவனுடைய அறிவார்ந்த கருத்து அதிக நன்மையை செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் அவன் எகிப்திற்கு செல்லும் தன்னுடைய பாதையில் இருந்தபோது, சிப்போராளுக்கு அப்பொழுதும் ஒரு கோபம் இருந்ததை நான் காண்கிறேன். அவள் தன்னுடைய மகனின் நுனித்தோலை வெட்டி, அதை மோசேக்கு முன்பாக எறிந்துவிட்டு, “நீர் எனக்கு ஒரு இரத்த சம்பந்தமான புருஷன்” என்றாள். 163 தேவன் அவன் மேல் மிகவும் கோபங்கொண்டு…அவனை வழிப்போக்கர் தங்கல் மனைகளில் தேடினார், அவர் அவனைக் கண்டுபிடித்திருந்தால், அவர் அவனைக் கொன்று போட்டிருப்பார். அவன் ஒரு மானிடனாய் இருந்தான் என்பதற்கு, பாருங்கள், தேவன் அங்கே அவனுக்கு ஒரு சிறு காரியங்களைக் கற்பிக்க வேண்டியதாயிருந்தது என்று நான் யூகிக்கிறேன். அவனுடைய எகிப்தின் ஞானம் மற்றும் அவனுடைய எல்லா அறிவுத்திறன்களின் வல்லமைகள், அவைகளில் ஒன்றையுமே தேவனால் உபயோகிக்க முடியவில்லை.
68164 நீங்கள் வந்து, “இப்பொழுது, கர்த்தாவே, நான் இப்பொழுது நாற்பது வருடங்களாக கல்வி கற்று வருகிறேன், நான்—நான் ஒரு அறிவாற்றல் கொண்ட மாணவன். என்னுடைய கண்களை மூடிய நிலையில் என்னால் அந்த வேதாகமத்தை மேற்கோள் காட்ட முடியும்” என்று கூறலாம். தேவனால் அதில் ஒரு சிறிதளவும் உபயோகிக்க முடியாது. பார்த்தீர்களா? இல்லை. 165 “ஓ, நான் நாட்டிலேயே மிகப் பெரிய சபையைச் சேர்ந்தவன். நான்—நான்…கர்த்தாவே, நான் இது . ஓ, நான் ஒரு பெந்தேகோஸ்தேகாரன். நான்…தேவனுக்கு மகிமை! அன்றொரு இரவு நான் பரிசுத்த ஆவியைப் பெற்றேன். அல்லேலூயா! நீர் என்னை இன்ன-இன்னதைச் செய் வைக்கப் போகிறீர்.” தேவனால் அதில் ஒரு சிறிதளவும் உபயோகிக்க முடியாது. இல்லை! 166 நீங்கள் தோற்கடிக்கப்படும்போதெல்லாம், நீங்கள் தோற்கடிக்கப்படுகின்றீர்கள் என்பதை உணர்ந்து, அதன்பின்னர் திரும்பி வந்து உங்களைத் தாழ்த்துங்கள். பலவீனமடைந்து, நீங்கள் ஒரு மானிடன் என்பதை கண்டறியலாம். உங்களுடைய அறிவாற்றல் எதையுமே செய்ய முடியாது… மானிட பலவீனங்கள் தேவனால் ஒருபோதும் உபயோகிக்கப்படாது; மானிட பலவீனங்களின் மூலம் தேவன் தம்மை உங்களுக்குள்ளாக ஊற்றுகிறார், அப்பொழுது அவர் தம்மை உபயோகிக்கிறார். நீங்கள் ஒரு கருவியாகிவிட்டீர்கள். நிச்சயமாக! நீங்கள் உங்களை வழியிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்.
69167 மோசே, ஓ, அவன் கற்றுக்கொண்டான், அவன் மானிட பலவீனங்களை உண்மையாகவே நன்றாகக் கற்றுக்கொண்டான். அவன் அதை நன்றாக கற்றுக் கொண்டான், தேவன் அவனை அழைத்தபோது, அவன் தேவனுடைய அழைப்புக்கு எதிராக வாதிடக் கூடிய ஏழு பலவீனங்களை அவன் உடையவனாயிருந்தான். நீங்கள் யாத்திராகமத்தின் முதல் பாகத்தில், ஏழு பலவீனங்களைக் குறித்து எப்போதாவது படித்திருக்கிறீர்களா? நான்—நான் அவைகளை இங்கே எழுதி வைத்திருக்கிறேன். நீங்கள் அவைகளைக் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவனுக்கு இருந்த முதல் பலவீனம் ஒரு செய்தி இல்லாமையேயாகும். அவனுக்கு இருந்த இரண்டாவது பலவீனம் ஒரு அதிகாரப் பற்றாக்குறையாயிருந்தது. அவனுக்கிருந்த மூன்றாவது பலவீனம் பேச்சாற்றலின் குறைபாடாயிருந்தது. நான்காவது இணைவாக்கம். ஐந்தாவது வெற்றி. ஆறாவது ஒன்று ஏற்றுக்கொள்ளுதல்.
70168 இப்பொழுது, நீங்கள் உங்களுடையதை அவனோடு ஒப்பிட்டுப் பார்த்து, உங்களால் அதைக் கொண்டு வரமுடியுமா என்று பாருங்கள், அவன் இருந்ததைப் போன்று நீங்கள் பலவீனமடைந்துவிட முடியுமா என்று பாருங்கள். “கர்த்தாவே, நான்—நான் நல்லவன் அல்ல. என்னால் பேச முடியாது. நான்—நான்—நான் ஒரு எகிப்தியனைக் கொன்றேன். என்னால் திரும்பிச் செல்ல முடியாது. ஓ, எல்லாமே! அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனக்கு எந்த செய்தியும் இல்லை. என்னால்…என்னால் பேச முடியாது. நான்—நான் பேசுவதில் மெல்ல பேசுபவன்.” அவன் எப்படி இருந்தான் என்று பார்த்தீர்களா? அவன் ஒன்றுமில்லை! சகோதரனே, அவன் சுகமாக்கப்பட்டிருந்தான். ஆம், அவன் சுகமடைந்த பிறகு தேவனால் அவனை உபயோகிக்க முடிந்தது. பார்த்தீர்களா? ஆம். 169 அது…நாம் குணமடைந்த பிறகு, அதைக் கண்டுபிடிக்க அவர் நம்மைப் பயன்படுத்தலாம் “என்னுடைய பிஎச்.டி. மற்றும் எல்.எல்.டி. மற்றும் இரட்டை எல்.டி.,” அல்லது என்னவாயிருந்தாலும், “என்னுடைய எல்லாப் பட்டங்களும் ஒன்றுமேயில்லை.” தேவன் அவைகளை உபயோகிக்க முடியாது!
71170 “பாருங்கள், நான் தேவனுடைய சபை. நான் ஒருத்துவக்காரன். நான் ஒரு பாப்டிஸ்டு. நான் ஒரு பிரஸ்பிடேரியன்.” தேவன் அதில் ஒரு சிறிதளவும் உபயோகிக்க முடியாது! நீங்கள் எவ்வளவு விரைவாக அதிலிருந்து விலகிச் செல்கிறீர்களோ, அவ்வளவு நல்லது—நீங்கள்—நீங்கள் உங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுப்பீர்கள். 171 தீர்க்கதரிசி, “நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்தமான ஜனங்களுக்கு மத்தியில்” என்று கூறினது போல. அப்பொழுது தூதனானவர் சென்று ஒரு—ஒரு குறட்டை எடுத்துக்கொண்டு, பீடத்தண்டை சென்று, ஒரு அக்கினித் தழலை எடுத்து, அவனுடைய உதடுகளைத் தொட்டார். அப்பொழுது அவன், “ஆண்டவரே, இதோ நான் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்றான். ஆம், அவன் உணர்ந்த பிறகு…அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தும், அவன் அசுத்த உதடுகளை உடையவனாயிருந்தான். 172 நாம்—நாம் ஒன்றுமில்லையென்றும், நீங்கள் ஒன்றுமில்லையென்றும், நீங்கள் பூமியின் மண்ணாயிருக்கிறீர்கள் என்றும் நாம் உணர்ந்தவுடனே… தேவன் உங்களை உபயோகிக்க முடியாது…ஆம், உங்களுடைய அனுபவ…உங்களுடைய பெலவீனங்கள் யாவும் மோசேக்கு பொருந்தாது. அவனுக்கு இங்கே ஆறு வித்தியாசமான பலவீனங்கள் இருந்தன, அவன் மானிட பலவீனங்களைக் கற்றுக்கொண்டிருந்தான்.
72173 இப்பொழுது மோசே தேவனை சந்தித்ததற்கும், மோசே இன்றைக்கு …?… நோக்கிப் பார்ப்பதற்கும் இடையேயுள்ள அந்த வித்தியாசத்தைப் பாருங்கள். மேலும், “நமக்கு இன்னார்-இன்னார் தேவை! நமக்கு தேசத்தில் ஒரு எழுப்புதல் தேவை. நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுவேன், நான் என்னுடைய இளங்கலை பட்டத்தைப் பெறும் வரையில் நான் திரும்பிச் சென்று படிக்கிறேன். ஹு-ஹூ! நான் எல்.எல்.டி. பட்டத்தை பெறும் வரையில் நான் திரும்பிச் சென்று படிக்கப் போகிறேன். நான் இலக்கியம் படிக்கப் போகிறேன். நான் இதையெல்லாம் செய்யப் போகிறேன், அதன்பின்னர் நான் வெளியே சென்று, நான் அந்த வேளைக்கான மனிதனாயிருப்பேன். இங்கிருந்து துவங்கின இந்த பையன்கள் எல்லோரையும் நான் ஒடுக்கிவிடுவேன்” என்றான். (ஓ, சகோதரனே!) “நான் எனக்கு மூன்று மில்லியன் டாலர்கள் செலவில் ஒரு கட்டிடத்தை பெற்றுக் கொள்வேன். நான் ஒரு டஜன் காடிலாக் கார்களை எனக்கு பெற்றுக் கொள்வேன். மேலும்…” ஓ, சகோதரனே! நீங்கள்—நீங்கள் துவங்காமலிருக்கலாம், ஏனென்றால் நீங்கள் துவக்கத்திலேயே தோற்கடிக்கப்படுகிறீர்கள், நீங்கள் பாருங்கள். ஆனால் அதனுடைய தொல்லை என்னவெனில், அவர்கள் அதை அறியாததேயாகும்!
73174 நீங்கள் சுருள் முடியை உடையவர்களாயிருக்க வேண்டும் என்றும், டாக்ஸிடோ சூட் அணிய வேண்டும் என்றும், “ஆ-மேன்” என்றும், இதைப் போன்ற எல்லாவற்றையும் செய்து, ஒரு இளவரசனாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது ஒரு பெண்ணின் கைப்பாவை! தேவன் மனிதர்களை, தேவபக்தியுள்ள மனிதர்களை, அசைக்கக் கூடிய மனிதர்களை விரும்புகிறார்! 175 ஆனால் இன்றைக்கு நாம் ஹாலிவுட்டை விரும்புகிறோம். கண்களுக்கு விரும்பத்தக்கதாக—அந்த ஏதோ ஒரு காரியம் நமக்கு வேண்டும். ஞாயிறு காலையில் அவர்…அவர் நம்மை ஐந்து நிமிடங்கள் உறங்கச் செய்யக்கூடிய அளவுக்கு அறிவுப்பூர்வமாக பேசக்கூடிய ஒன்று நமக்கு வேண்டும். 176 மின்னல் போன்ற அக்கினி ஜூவாலையை அனுப்பி பாவத்தை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தி, (அது உண்மை) அதை தோண்டி எடுத்து, பிரிப்பவர்களையே தேவன் விரும்புகிறார். 177 ஆனால் நாம்…நமக்கு நம்முடைய அறிவாற்றல் கொண்ட போதகர்கள் தேவை. பெரும்பாலான ஜனங்கள் மெல்ல மெல்ல பேசுகிற ஒரு போதகரையே விரும்புகின்றனர், யாரோ ஒருவர், “ஆம், அன்பே” என்று கூறுகிறவர். தேவன் இடிமுழக்கங்களையே விரும்புகிறார்! ஆம், ஐயா. 178 அவர்களுடைய முதுகில் தட்டிக் கொடுத்து, அவர்கள் குட்டையான சிகை அலங்காரம் செய்து கொண்டு, மற்றெல்லாவற்றையும் செய்து, அவர்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து, அதைப் போன்ற எல்லாவற்றையும் செய்தும், அதைக் குறித்து ஒரு வார்த்தையும் கூறுகிறதில்லை. 179 மகத்தான மனிதர் என்னை இங்கே அவருடைய அலுவலகத்திற்கு, (அவருடைய அலுவலகத்திற்கு அல்ல) அவருடைய ஊழிய அலுவலகத்திற்கு, இங்கே சற்று முன்னர் அழைத்து, “நீங்கள் அதை நிறுத்தும்படிக்கு நான் உங்கள் மேல் கரங்களை வைக்க விரும்புகிறேன்” என்றார். நான், “நீங்கள் அதைச் செய்யாதீர்கள். நீங்கள் அதைச் செய்யாதீர்கள். இல்லை ஐயா” என்றேன். 180 நீங்கள் அதை நிறுத்தும்போது, நீங்கள் செய்தியை நிறுத்துகிறீர்கள். நீங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள் தேவனை நிறுத்துகிறீர்கள். ஆம், ஐயா. நமக்கு அவைகளில் ஒன்றும் வேண்டாம்.
74181 தேவன் மோசேயின் எல்லா பெலவீனங்களுக்காகவும், “பரிதாபமான எளிய மோசே, ஏதோ—ஏதோ ஒரு காரியம் நிச்சயமாக உனக்கு சம்பவித்துள்ளது, நீ உன்னுடைய நிலையிலிருந்து விழுந்துவிட்டாய். ஓ, என்னே! இங்கே, ஆம், நீ ஒரு மகத்தான மனிதனாய், ஒரு அறிவாற்றல் படைத்தவனாய் இருந்தாய், எந்தக் காரியமும் உன்னைத் தடுத்து நிறுத்தப்போவதில்லை. சகோதரனே, நீ உன்னுடைய பிஎச்.டி மற்றும் எல்.எல்.டி., மற்றும் மற்ற அனைத்தும், இப்பொழுது நீ இங்கே வந்து நீ ஒன்றுமற்றவன் என்றும், உன்னால் ஒரு காரியத்தையும் செய்ய முடியாது என்றும் அறிக்கையிடுகிறாய். நீ—நீ மிகவும் பெலவீனமானவனாயிருக்கிறாய்” என்று கூறி தேவன் அவனுக்காக வருத்தப்பட்டாரா? இல்லை! தேவன் அவனுக்காக வருத்தப்படவில்லை. தேவன் அவன் மேல் ஒருபோதும் இரக்கம் கொள்ளவில்லை. அப்பொழுது தேவன் அவனை அந்த எல்லா காரியங்களிலிருந்தும் சுகமாக்கினார். அவர் அவனுக்காக வருத்தப்படவில்லை. 182 ஆனால் நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால், யாத்திராகமம் 4:14-ல், “தேவனுடைய கோபம் அவன் மேல் மூண்டது” என்று நாம் கண்டறிகிறோம். அவன் பலவீனமாயிருந்தபடியால், தேவன் அவனுக்காக வருத்தப்படவில்லை.
75183 நீங்கள், “ஓ, கர்த்தாவே, நான் மிகவும் மோசமாக உணருகிறேன், என்னால் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை” என்று கூறலாம். தேவன் உங்களுக்காக வருத்தப்படுகிறதில்லை; உங்களை சுற்றி சற்று உதைப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பார்த்தீர்களா? பார்த்தீர்களா? நிச்சயமாக. தேவன் உங்களுக்காக வருத்தப்படுகிறதில்லை; அவர்—அவர் உங்கள் மேல் கோபங்கொள்கிறார். அப்பொழுது அவர் உங்களை உபயோகிக்கக் கூடிய நிலைமைக்கு நீங்கள் வந்து கொண்டிருக்கிறீர்கள். ஆம். 184 மோசே சுகமாக்கப்பட்டபோது, தேவன் அவனை உபயோகிக்க முடிந்தது. அவன் சுகமளித்தலை உடையவனாயிருந்தான், அப்பொழுது அவன் மானிடத் திறமைகளிலிருந்து விலகியிருந்தான். அப்பொழுது அவன்—அவன் பணிக்கு ஆயத்தமாயிருந்தபடியினால், அவன்—அவன் அப்பொழுது நம்பியிருக்கக் கூடியது எதுவுமே இல்லை.
76185 தேவன், “இங்கு நாற்பது வருடங்களாக நீயும் சிப்போராளும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும்படி நான் வைத்திருந்தேன், இங்கே இந்த வனாந்திரத்தில் மானிட பலவீனம் இருப்பதை உன்னால் கண்டறிய முடிந்தாலும் அல்லது இல்லையென்றாலும், அங்கே நீ ஒரு பெரிய இளவரசனாக நின்று கொண்டிருக்கிறாய், ‘வணக்கம், மருத்துவர் மோசே. காலை வணக்கம், ஐயா, சங்கை. ஆம், ஐயா. மோசே, நீ வரப்போகும் இளவரசன். எல்லா…நாங்கள் யாவரும் உன்னைக் குறித்து நினைக்கிறோம். இப்பொழுது நீ இங்கே பாலைவனத்தில் ஒரு கூட்ட செம்மறியாடுகளோடும், கடுமையான கோபக்காரியான மனைவியோடும் இருக்கிறாய்” என்றார். பார்த்தீர்களா? அது அவனை நிலை நிறுத்தியது. ஆம், ஐயா. மோசே ஒரு மோசமான நிலையில் இருந்தான். ஆனால் அவர், “இப்பொழுது நீ ஒன்றுமில்லை என்று உணரும்போது, நான் உன்னை உபயோகிக்க முடியும். இப்பொழுது இந்த எரிகிற முட்செடியினருகில் இங்கே வா, நான் உன்னை அக்கரைக்கு அனுப்ப விரும்புகிறேன்” என்றார். ஓ, என்னே! 186 தேவனே, அந்தவிதமான இன்னும் சிலரை எங்களுக்குத் தாரும், இன்னும் சில பலவீனங்களை எங்களுக்குத் தாரும். அதுதான் நமக்குத் தேவை, சில பெலவீனமானவர்கள். நிச்சயமாக!
77187 அது யாக்கோபு என்பதை, நீங்கள் அறிவீர்கள். யாக்கோபு ஒரு காலத்தில் அவன் ஒரு மகத்தான நபராய் இருந்தான் என்று நினைத்திருந்தான், உங்களுக்குத் தெரியுமா, அவன் ஏமாற்றி எந்தக் காரியத்தையும் செய்ய முடிந்தது. அவன் தன்னுடைய மாமனாருடைய ஆடு மாடு சினையாயிருந்தபொழுது, அங்கே சில மரக் கன்றுகளை வைத்தான், புள்ளியுள்ள ஆடுககள், அவைகள் தண்ணீர் குடிக்கச் சென்றபோது, இந்தவிதமாக அவைகளை பொலிந்தன. முதலாவதாக உங்களுக்குத் தெரியுமா, யாக்கோபு ஒரு மகத்தான மனிதனானான். நிச்சயமாக. அவன் ஒரு…“அவன் உண்மையாகவே யாக்கோபு என்று அழைக்கப்பட்டான், தவறில்லை,” என்று கூறி, “அவன் எத்தனாயிருந்தான்” என்றான். எனவே அவன் ஒரு ஏமாற்றுக்காரனாயிருந்தான். அவன் அருமையாக சம்பாதித்து, மகத்தான மந்தைகளையும், மனைவிகளையும், ஆடுமாடுகளையும், காளைகளையும் உடையவனாயிருந்தான், அவன் ஒவ்வொரு காரியத்தையும் உடையவனாயிருந்தான்.
78188 ஆனால் ஒரு இரவு (ஓ, என்னே!) அவன் ஒரு சமயம் ஒரு சிறு ஓடைக்குச் சென்றபோது, அதைக் கடக்கப் போவதாயிருந்தான், ஒரு தேவதூதன் அவனைப் பற்றிக் கொள்ளும்படியான ஒரு இடத்திற்கு அவன் வந்தான். சகோதரன், யாக்கோபு முழு இரவும் காத்துக்கொண்டிருந்தான். அவன் நிச்சயமாகவே நீண்ட நேரம் பற்றிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் தன்னையே ஒப்புக்கொடுத்தபோது, அவன் பெலவீனமானபோது, இனிமேல் நிலைத்திருக்க முடியவில்லை… 189 ஓ, தேவனே, சபை அந்தவிதமாக இருக்கட்டும்… சபையானது அதனுடைய மாம்சப்பிரகாரமான திறமைகளை இனிமேல் பற்றிக்கொண்டிருக்க முடியாது, ஆனால் தேவனுக்கு ஒப்புவிக்க வேண்டியதாயுள்ளது. மெத்தோடிஸ்டுகள் தாங்கள் மெத்தோடிஸ்டுகள் என்பதைக் குறித்து அவர்கள் வெட்கப்படட்டும். பாப்டிஸ்டுகளும், பெந்தேகோஸ்தேக்களும் தங்களைக் குறித்து வெட்கப்பட்டு, பற்றிக் கொள்வதை நிறுத்திவிட்டு, ஆவிக்கு கீழ்ப்படியட்டும். 190 அப்பொழுது யாக்கோபு “தேவனுடைய இளவரசன்” ஆனான். அவன் ஒரு இளவரசனானான் என்றும், அவனுடைய பெயர் மாற்றப்பட்டது என்றும் வேதம் கூறியுள்ளது. பார்த்தீர்களா? மேலும்—மேலும், நினைவிருக்கட்டும், அவன் இந்தப் பக்கத்தில் ஒரு பெரிய பலமுள்ள மனிதனாயிருந்தான், அறிவாற்றலில் வல்லமையுள்ளவனாயிருந்தான்; ஆனால் மறுபுறத்தில் அவன் ஒரு நொண்டுகிற இளவரசனாக, பலவீனமாகவும், தேய்ந்துபோனவனாகவும், ஆனால் தேவனுக்கு முன்பாக வல்லமையுள்ளவனாகவும் இருந்தான்.
79191 ஆம், நீங்கள்…உங்களுடைய ஸ்தாபனம் சின்னாபின்னமாகலாம். அக்கம்பக்கத்தில் உள்ள உங்களுடைய கௌரவம், நீங்கள் அக்கம்பக்கத்தில் “ஒரு பண்டைய நாகரீகமுடையவர்” ஆகலாம். அது சரியாக இருக்கலாம். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுவேன், நீங்கள் தேவனோடு வல்லமையுள்ளவர்களாயிருப்பீர்கள். நான் அவ்விதமாக இருப்பேன். நான் எந்த நேரத்திலும் அந்த விதமாகவே செல்வேன். 192 சீஷர்கள் திரும்பி வந்து, தாங்கள் மகிழ்ச்சியாயிருந்த காரணத்தால் களிகூர்ந்தனர் இயேசுவானவரைக் குறித்த நிந்தையைச் சுமக்க பாத்திரவான்களாக எண்ணப்பட்டனர். நிச்சயமாக! அவர்கள் உன்னை “பரிசுத்த உருளை” என்று அழைப்பார்கள்.
80193 ஒரு முறை அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள், அது உடைந்து போகட்டும். உங்களுடைய, “பாருங்கள், நான் ஒரு மெத்தோடிஸ்டு” அல்லது “பிரஸ்பிடேரியன்” அல்லது “நான் அசெம்பளீஸ்” என்று கூறுவதை விட்டுவிடுங்கள். “நான் ஒருத்துவக்காரன், நான் உங்களைப் போன்றே நல்லவன்.” சரி. அதிலிருந்து ஒரு முறை வெளியே வந்து விடுங்கள். எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளுங்கள்… 194 செய்தியின் சத்தியத்தை உங்களுக்குக் கொண்டு வரும் கர்த்தருடைய தூதனாகிய தூதன், ஒரு முறை உங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்ளட்டும். ஒரு முறை அவர் உங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்ளட்டும், அப்பொழுது நீங்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறும்படி தாழ்மையாய் இருப்பீர்கள், நீங்கள் அதைக் குறித்த மற்ற எல்லாவற்றையுமே தாழ்மையாகக் காண்பீர்கள். ஆம், நீங்கள் செய்வீர்கள், நீங்கள் அதை நிச்சயமாகவே செய்வீர்கள். ஆம், நீங்கள்—நீங்கள் இந்த அறிவாற்றல் கொண்ட அனைவரையும் மறந்துவிடுவீர்கள்.
81195 ஒரு சில நாட்களுக்கு முன்பு, எனக்கு கிடைத்த இனிமையான நண்பர்களில் ஒருவர், ஒரு அருமையான நபர், நான் ஒரு நேர்காணலில் இருந்த பிறகு, அறையை விட்டு வெளியே வந்து என்னிடத்தில் கூறினார், அறையை விட்டு வெளியே வந்து, “சகோதரன் பிரான்ஹாம்…” என்றார். இந்த நபர் அங்கு நடைபெறும் கூட்டத்தில் என்னுடைய நிதி உதவியாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நான் தேவனை நம்பி, அந்த காரியத்தை எப்படி செய்யப் போகிறேன் என்பதை அறியாத ஒரு நிலைக்கு வந்தேன்; இந்த நபர் அதை எழுதிவிடுவார். ஆம், ஒரு அருமையான நபர்! இந்த நபர் ஒரு சில இரவுகளுக்கு முன்னர், இங்கே ஒரு பெரிய நகரத்திலிருந்து ஒரு பயணம் மேற்கொண்டு, அறையில் நின்று என்னிடம் கூறினார், ஒரு மாலை நேரத்தில், “சகோதரன் பிரான்ஹாம்”, “நான் ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன்” என்றார். மேலும், “எனக்குத் தெரிந்தவரையில் உங்களை நேசிக்கிற ஒரு நபரும் இல்லை” என்றார். அதற்கு நான், “நான் அதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்றேன். 196 “சகோதரன் பிரான்ஹாம், ஒரே ஒரு காரியம், ஒரு காரியம் தவறாயுள்ளது” என்றார். நான், “சகோதரியே, அது என்ன?” என்று கேட்டேன். 197 “பாருங்கள், இந்த ஒரு காரியம், சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் பெற்றுள்ள அந்த உபதேசத்தைக் குறித்து சிறிது விட்டுக் கொடுத்து விட்டுச் சென்றால் நலமாயிருக்கும்” என்றும், “ஒவ்வொரு ஸ்தாபனமும் உங்களை ஏற்றுக்கொள்ளும்” என்றும் கூறினாள். 198 அப்பொழுது நான் பார்த்தேன், நான் நினைத்தேன்…நான், “சகோதரியே, என்ன உபதேசம்?” என்று கேட்டேன். மேலும், “ஓ, அது இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம்” என்றாள். 199 “ஓ!” நான், “ஆனால், சகோதரியே, நான் தேவனுடைய வார்த்தையின் பேரில் ஒப்புரவாகி இன்னமும் ஒரு தேவனுடைய ஊழியக்காரனாக இருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது” என்றேன்.
82200 மேலும், “பாருங்கள், இங்கே, நான் இந்த பெரிய நகரத்திலிருந்து பிரதிநிதித்துவப்படுத்த இங்கே ஒரு கூட்ட ஊழியக்காரர்கள் உள்ளனர்” என்றார். “இந்த தரிசனங்களை உங்களுக்கு அளிக்கிற கர்த்தருடைய தூதன் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடு என்று கூறினார் என்று நீ அவர்களிடம் கூறினால், அப்பொழுது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மனப்பூர்வமாய் இருப்பார்கள்” என்றாள். 201 “பாருங்கள்,” நான், “அவர்களுடைய அனுபவம் உபயோகமற்ற பலவீனமாயிருக்கிறதே!” என்றேன். நான், “எந்த தூதன் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை, அது வார்த்தையின்படியாக இல்லாவிடில் நான் அதை விசுவாசிக்கமாட்டேன்” என்றேன். நான், “அந்த தூதன் அதிலிருந்து வித்தியாசமான ஏதோ ஒரு காரியத்தை என்னிடம் கூறினால், நான் அந்த தூதனை விசுவாசிக்கமாட்டேன்” என்றேன். சரியே! தேவனுடைய வார்த்தையே முதன்மையானது, எல்லா தூதர்களுக்கும் மற்றுமுள்ள எல்லாவற்றிற்கும் மேலாக! ஒரு உண்மையான தூதன்…நான், “அவன் அதை என்னிடம் கூறவில்லையென்றால், நான் அவனுக்கு செவிகொடுக்கமாட்டேன்” என்றேன். ஆம். 202 அந்தப் பெண்மணிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள், “நான் அப்படிப்பட்டதைக் குறித்து கேள்விப்பட்டதேயில்லை. நான் அதைக் குறித்து ஒருபோதும் அறிந்திருக்கவில்லை” என்றாள். பாருங்கள், அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. எனவே நான் அந்த சிறு பெண்மணிக்கு சில வேதவாக்கியங்களை அளித்தேன். மேலும் அவள், “நான் நேராக வீடு திரும்பி, புதிய ஏற்பாட்டைப் படிக்கப் போகிறேன். நான் அதை ஒருபோதும் படித்ததேயில்லை” என்றாள். பாருங்கள், அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. ஓ, என்னே! ஓ, என்னே! அங்குதான் நீங்கள் பெறுகிறீர்கள். ஓ, என்னே! 203 சொந்தமாக முயற்சிப்பதை விட்டுவிடுங்கள். தளர்ந்து போங்கள்! அதைத்தான் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள்: கட்டவிழ்த்துவிடுங்கள். யாக்கோபு, அவன் கட்டவிழ்க்கப்பட்டபோது, அவன் சரியாயிருந்தான், அவன் ஒரு இளவரசனானான், தேவனோடு வல்லமையைப் பெற்றிருந்தான்.
83204 அந்த குட்டி தாவீது தன்னுடைய சவுலின் மதசம்பந்தமான சட்டையை அணிந்துகொண்டு, கோலியாத்தோடு சண்டையிட புறப்பட்டுச் சென்றான். தாவீது இந்த பெரிய சர்வாயுதவர்க்கத்துடன் இருந்த கோலியாத்தோடு சண்டையிடத் துவங்கினபோது, அவன் சுற்றும் முற்றும் பார்த்தான், அவன் திரும்பிப் பார்த்தான், அவன் மற்றவர்களைப் போலவே காணப்பட்டான், எனவே அவன், “இங்கே ஏதோக் காரியம் தவறாய் உள்ளது” என்றான். 205 நீங்கள் உலகத்தைப் போன்று இருந்து, உலகத்தோடு சமரசம் செய்து கொள்ளும் வரை, உலகத்தில் உள்ள அதேக் காரியத்தையே செய்து கொண்டிருப்பதால், ஏதோ தவறு உள்ளது. 206 தாவீது, “இது மிகவும் அரணாகக் காணப்படுகிறது. நான் ஒரு முனைவர் பட்டம் பெற்றுள்ளேன், நான் ஒரு பிஎச்.டி. பட்டத்தையும் பெற்றுள்ளேன். பாருங்கள், நான் ஒரு பெரிய ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன், என்னால் எப்படி இந்த எல்லா காரியங்களுடனும் சண்டையிட முடியும்? எனக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. எனக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது!” என்றான். தாவீது, “என்னிடத்திலிருந்த பொருட்களை எடுத்துப் போடுங்கள்” என்றான். அது உண்மை. “நான் தேவனுக்காக சண்டையிடப் போகிறேனானால், இங்கே நின்று கொண்டு எல்லா ஆயுதங்களையும் அணிந்து குத்திக்கொண்டிருக்கும் கோழைகள் போல், நான் காணப்பட விரும்பவில்லை. என்னால் ஒரு கூட்டத்தை நடத்த முடியாது…”
84207 அநேக கூட்டங்கள், அநேக மனிதர்கள், அநேக ஊழியக்காரர்கள் என்னிடத்தில் வருகிறார்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவது சரியென்று அவர்கள் விசுவாசிப்பதாக அறிக்கையிட்டுவிட்டு, ஆனால், “எங்களுடைய ஸ்தாபனம் எங்களை வெளியே தள்ளிவிடும்” என்று கூறுகின்றனர். நீங்கள் பரிதாபமான சாக்குப் போக்குக்காரர்கள்! சவுலின் ஆயுதங்களைக் கழற்றிப் போடுங்கள்! 208 பரிசுத்த ஆவியின் வல்லமையையும், பெலத்தையும் எனக்குத் தாரும்! தேவனே, அது என்னவாயிருந்தாலும் (எவ்வளவு சிறியதாயிருந்தாலும்) கவலைப்படாமல், சத்துருவை முறியடிக்கும் ஒரு கவணோடு என்னை அனுப்பும். அது உண்மை. என்னை அனுப்புங்கள், ஆனால் நான் எல்.எல்., பி.எச்.டி., வேத பண்டிதர்கள், அந்த விதமான காரியங்களை உடைய மற்றவர்களைப் போல உடை உடுத்த வேண்டாம்.
85209 தாவீது, “இந்தக் காரியம் சரியாகக் காணப்படவில்லை” என்றான். அதற்கு அவன், “எனக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது” என்றான். அவன், “நான் அறிந்திருக்கிற ஒரே காரியம் என்னவெனில், நான்… நான் வனாந்திரத்தின் பின்பக்கத்தில் என் தகப்பனாருடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன்” என்றேன். மேலும், “ஒரு சிங்கம் உள்ளே வந்து அந்த ஆட்டுக்குட்டியைப் பற்றிக் கொண்டு வெளியே ஓடியது. அது என்னுடைய தகப்பனுடைய ஆட்டுக்குட்டி என்பதை நான் அறிந்து கொண்டேன், ஓ, நான்—நான்—நான்…நான் ஆயுதம் தரிப்பிக்கப்படாமல் இருந்தேன், ஆனால் நான் என்னுடைய கவணை எடுத்துக்கொண்டு, அதன் பின்னே சென்றேன்” என்றான். “நான் அதைக் கொன்று, ஆட்டுக்குட்டியைத் திரும்பக் கொண்டு வந்தேன்” என்றான். ஓ, என்னே! அங்கே நின்றுகொண்டு, தங்களுடைய கரத்தில் ஒரு ஈட்டியை வைத்திருந்தவர்கள், அதை செய்திருக்க முடியாது. 210 அதுதான் இன்றைக்கு காரியமாயுள்ளது. வழிதவறிப் போய்விட்ட ஏராளமான ஆடுகளை தேவன் வைத்திருக்கிறார், ஸ்தாபனங்களும் மற்ற காரியங்களும் அவர்களை களவாடி வெளியே கொண்டு வந்து, அவர்களை உளவியலில் கொண்டு வந்துள்ளன. நாங்கள் இந்த அறிவாற்றல் கொண்ட இராட்சதர்களை சந்திக்கச் செல்லும்போது, (சரிதான்!) எல்லா பிஎச்., எல்.எல்.டி., கியூ. யூ. எஸ். டி. படிப்புகள், அல்லது அது என்னவாயிருந்தாலும், அதற்கு வழி நடத்த தேவனுடைய வார்த்தையோடும், தேவனுடைய வல்லமையோடும் கூடிய,தேவனே தாவீதுகளை எங்களுக்குத் தாரும், தேவனுடைய வார்த்தையையும், பரிசுத்த ஆவியின் வல்லமையையும் எனக்குத் தாரும், நான் உங்களுக்குச் சொல்லுவேன், நாம் களத்தில் உள்ள ஒவ்வொரு ராட்சதனையும் கொன்று போட முடியும். சரியே! அவ்வாறு செய்யக்கூடிய மனிதரே…நமக்குத் தேவை.
86211 ஏன், அந்த இராட்சதனை சண்டையிடச் செல்லும்படிக்கு, தாவீது களத்தில் இருந்த அந்த பரிதாபமான சாக்குபோக்காக இருந்தான். அவன், ஏன், அவன்—அவன் ஒரு பையனேயன்றி வேறொன்றுமில்லை. அவன் “சிவந்த நிறமுள்ளவன்” என்று வேதம் கூறியுள்ளது. அவன் ஒரு சிறிய மெலிந்த தோற்றம் கொண்ட நபராய், அநேகமாக குனிந்த தோள்களையுடையவனாய், ஒரு துண்டு ஆட்டுத்தோலால் அவனைச் சுற்றியிருந்தான். அவன் இந்த பெரிய அறிவாற்றல் கொண்ட பட்டங்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்றிருக்கவில்லை. அவனுக்கு ஒரு பட்டயத்தைக் குறித்து ஒன்றுமே தெரியாது. சவுல் அளித்த இந்த எல்லா பயிற்சியையும் குறித்து அவனுக்கு ஒன்றுமே தெரியாது… 212 பேராயர் சவுல், சவுலே அவர்கள் பெற்றிருக்க முடிந்த மிகச் சிறந்தவன். நிச்சயமாகவே அவன் மற்ற இராணுவத்தினரை விட மேம்பட்டவனாயிருந்தான். ஏன், அவன்—அவன் தான் போய் அவனோடு சண்டையிட வேண்டியவனாயிருந்தான், ஆனால் அவன் பயமடைந்திருந்தான்.
87213 இன்றைக்கு நமக்கு ஒரு எழுப்புதல் தேவை என்பதை நாம் அறிவோம். ஜனங்கள் மத்தியில் நமக்கு ஒரு கிளர்ச்சி தேவை என்பதை நாம் அறிவோம். அதற்கு தெய்வீக வேத பண்டிதர் பட்டம் தேவையில்லை. அதற்கு ஒரு பெலவீனமானவனே தேவை (அல்லேலூயா) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையில் தேவனுடைய வார்த்தையை எடுத்து, அவன் இந்தக் காரியத்தைக் கொன்று போடுவான். அது கிறிஸ்துவை தேசத்திற்கு கொண்டு வரும்…அவர் இன்னமும் குருடரின் கண்களைத் திறக்க முடியும் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும், வியாதியஸ்தரை சுகப்படுத்தி, மரித்தோரை எழுப்ப, அவரே தேவன், ஜெயவீரர்! ஆமென். நமக்கு ஒரு தாவீது தேவை, வேத சாஸ்திர பள்ளிகளில் பயிற்சி பெற்றிராத ஒரு மனிதன், அதைக் குறித்து ஒன்றுமே அறியாத ஒரு மனிதன் நமக்குத் தேவை, யாரோ ஒரு சிறு உழவன் அல்லது ஏதோ ஒரு சிறு பையன், தன்னுடைய குனிந்த தோள்பட்டைகளையுடைய ஒரு சிறு பையன், பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை, தேவனுடைய வல்லமையோடு சாலையில் நடந்து வருவான்.
88214 தாய் மரித்துக் கொண்டிருந்தாள், அவள், “பில்லி, நான் உன்னை நம்பியிருக்கிறேன், விசுவாசித்திருக்கிறேன். நீயே என்னுடைய ஆவிக்குரிய பெலனாயிருந்து வந்திருக்கிறாய், நீ என்னை தேவனண்டை வழி நடத்தி வந்திருக்கிறாய்,” என்றாள். 215 நான், “அம்மா, நான் ஒரு பையனாய் இருந்தபோது…எங்களுடைய பின்னணி, நிச்சயமாக, அயர்லாந்து, நாங்கள் சற்று கத்தோலிக்க கொள்கையோடு சார்ந்திருப்போம்” என்றேன். மேலும் நான், “சபையானது அவர்கள்—அவர்கள் ஒரு ஜன சரீரமாயிருந்தனர் என்றும், அவர்கள் எல்லாவற்றையும் உடையவர்களாயிருந்தனர் என்றும், அவர்கள் செய்த ஒவ்வொரு காரியமும் சரியாயிருந்தது. என்னால் அதை நம்பமுடியவில்லை, ஏனென்றால் லூத்தரன்கள், ‘நாங்கள் ஒரு கூட்ட ஜனங்கள், நாங்கள் அவை யாவையும் பெற்றுள்ளோம்’ என்று கூறினர். பாப்டிஸ்டுகள், ‘நாங்கள் சரீரம், நாங்கள் அவை எல்லாவற்றையும் பெற்றுள்ளோம்’ என்று கூறினரே” என்றேன். அநேகர் உள்ளனர், ஏறக்குறைய தொள்ளாயிரம் வித்தியாசமான ஸ்தாபனங்கள் உள்ளன” என்றேன். அதற்கு நான், “அம்மா, என்னால் அதில் எந்த நம்பிக்கையும் வைக்க முடியவில்லையே, அவைகளில் எது சரியானது?” என்று கேட்டேன்.
89216 நான் இதை தாழ்மையாகவும், இனிமையாகவும் கூறுகிறேன் என்று, கண்டறியலாம். ஆனால் அவைகளில் எதுவுமே சரியானதல்ல என்று நான் நம்புகிறேன். அது உண்மை. நான் தேவனுடைய வார்த்தைக்கு திரும்பிச் செல்கிறேன், அது முன்பு என்ன செய்யப்பட்டது என்பதை நான் கண்டேன். (அப்பொழுது, தேவனே, நாங்கள் யாவரும் அங்கே திரும்பிச் செல்வோமாக.) ஸ்தாபனத்தின் ஆதரவில்லாமல், பலவீனத்தோடு, ஸ்தாபனங்களின் ஆதரவு இல்லை, மதசம்பந்தமான அமைப்பின் ஆதரவு இல்லை, ஆனால் எளிமையிலும் பெந்தெகொஸ்தேயின் மேல் விழுந்த பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு கூறின அதே செய்தியோடு, “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்.” 217 இந்த வேத சாஸ்திரிகளைக் கொண்ட ஒரு கூட்டத்தைப் போல உங்களுடைய கழுத்துப்பட்டையை திருப்பிக் கொண்டு, இளங்கலை பட்டங்களை நீங்கள் அணிந்து கொள்ள மாட்டீர்கள். ஆனால், சகோதரனே, நீங்கள் உங்களுடைய கரத்தில் ஏதோ ஒரு காரியத்தை உடையவர்களாயிருப்பீர்கள், தேவனுடைய ஆவியானவர் அந்த வார்த்தைக்குள் பிரவேசிக்கும் வரையிலும், அது வழிதவறிப் போய்விட்ட காணாமற்போன ஆடுகளை ஜெயங்கொண்டு திரும்பக் கொண்டு வரும். ஆமென்! நம்முடைய பலவீனங்களை அறிக்கையிடுவோம்! உங்களுடைய தெய்வீக உபதேசத்தை தூக்கியெறிந்துவிடுங்கள்! உங்களுடைய எல்லா அறிவையும், உங்களுடைய அங்கத்தின ஸ்தானத்தையும் தூக்கியெறிந்துவிடுங்கள்! ஆவிக்குரிய பிரகாரமாகப் பேசினால், தேவனுக்கு முன்பாக உங்களை ஒன்றுமில்லாமலாக்கி, உங்களை “தகுதியற்றவர்” என்று அழைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தேவன் உங்களை உபயோகிக்கச் செல்ல முடியும். அதை உங்களுடைய வாயிலிருந்து கூறாமல், அதை உங்களுடைய இருதயத்திலிருந்து கொண்டு வாருங்கள்.
90218 யாக்கோபு, தாவீது, அவர்கள் தங்களை களைய வேண்டியதாயிருந்தது. அவன் முழு கூட்டத்திலும் மிகவும் பலவீனமானவனாக இருந்தான். 219 மலையின் மேலிருந்த பத்தாயிரம் அல்லது இலட்சம் வீரர்களைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் யாவரும் பயிற்றுவிக்கப்பட்டனர், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் ஈட்டிகளை ஏந்தி போர்வீரர்களாயிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் இராணுவ உத்தியோகஸ்தர் இன்னார்-மற்றும்-இன்னார், தனிப்பட்ட இன்னார்-இன்னார்-இன்னார் (தனிப்பட்டவர்களும் கூட), படைப் பெருந்தலைவர் இன்னார்-மற்றும்-இன்னார், ராணுவ தலைவனுக்கு கீழான உத்தியோகஸ்தரான இன்னார்-மற்றும்-இன்னார் என்பதாக இருந்தனர். “பெரிய நான்கு நட்சத்திர படைப் பெருந்தலைவர் சவுல், பேராயர், ஆம், ஐயா, உமது கௌரவம்!” அங்கே நின்றுகொண்டிருந்த அவர்கள் ஒவ்வொருவரும், பயிற்சி பெற்ற மனிதர்கள். 220 மலையின் மேல் நின்று கொண்டிருந்த சத்துருவோ, “நீங்கள் கோழைகள்” என்றான். ஓ!
91221 (ஓ, தேவனே!), தோள்பட்டை தொங்கினவனாய் முகாமிற்கு வந்தான், (ஓ, தேவனே!) அந்த சிறு சிவப்பான தோற்றமுடைய நபர், தன்னுடைய முதுகில் ஒரு சிறு கவண் தொங்கியிருக்க, தன்னுடைய சகோதரனுக்காக தன்னுடைய கரத்தில் திராட்சை பழத்தை உடையவனாய் இருந்தான். அந்த இராட்சதன் வெளியே வந்து அடிக்கடி கூக்குரலிட்டான். மேலும், “நீங்கள் இங்கே பயிற்றுவிக்கப்பட்ட ஒரு கூட்ட அறிஞர்கள் என்று என்னிடம் கூறுகிறீர்கள் அந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியன் ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை மறுதலிக்க அனுமதிக்கலாமா?” என்று கேட்டான். ஆமென்! “நீங்கள் அவனைக் குறித்து பயப்படுகிறீர்களா?” என்று கேட்டான். 222 சவுல், “நீ போக விரும்பினால், இங்கே வா. நான்—நான்—நான் இப்பொழுது உன்னை இருபது வருடங்களாக பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி, நான் உனக்கு ஒரு பிஎச்.டி. பட்டத்தைப் பெற்றுத் தருவேன். நான் என்ன செய்வேன் என்பதை நான் உனக்கு கூறுவேன், நான் என்னுடைய பட்டத்தை உனக்கு தருவேன்” என்றான். 223 அவன், “அந்தப் பொருளை எடுத்துப் போடுங்கள்” என்றான். ஓ, என்னே! “நான் அதனோடு எந்த தொடர்பும் கொள்ள விரும்பவில்லை.” அவன் தேவனில் நம்பிக்கை வைக்க விரும்பினான். அவன், “தேவன் இதைக் கொண்டு எனக்காக என்ன செய்தார் என்பதை நான் அறிவேன். இதனோடு எந்தக் காரியத்தை எதிர்கொண்டாலும் நான் தேவனை நம்ப ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான். ஆமென்! அதுவே கிறிஸ்தவனுடைய அனுபவமாய் உள்ளது.
92224 சவுலும் கூட, அவன் தன்னுடைய சர்வாயுதவர்க்கத்தை களைய வேண்டியதாயிருந்தபோது, அவன் மதசம்பந்தமான சர்வாயுதவர்க்கத்தை கழற்றிவிட்டான், அவன் தாவீது செய்தது போலவே செய்தான். ஆனால் சவுல் பாதையின் முடிவிற்கு வந்தபோது, அவன், “நான் ஒரு நல்ல போராட்டத்தை போராடியிருக்கிறேன்” என்றான். அதுவே ஜெயங்கொள்ள முடிந்த கடைசி சத்துருவாய் இருந்தது. “நான் ஒரு நல்ல போராட்டத்தைப் போராடினேன், நான் என்னுடைய ஓட்டத்தை முடித்துவிட்டேன், நான் விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல் நீதியுள்ள நியாயாதிபதியாகிய, கர்த்தர் அந்நாளிலே எனக்குத் தந்தருளும் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது” என்றான். “எனக்கு மாத்திரமல்ல, அவருடைய பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும்” என்றான். 225 பண்டைய மரணம், “ஆனால் நான் இன்னும் ஒரு சில நிமிடங்களில் உன்னைப் பிடித்துவிடுவேன்” என்று கூறினது. கல்லறையோ, “நான் அப்பாலே உன்னை வடிவமைப்பேன்” என்றது. 226 அவன், “ஓ மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? நான் இங்கே இந்த ரோம நிலவறையில், என்னுடைய மணிக்கட்டுகளும், கரங்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டு, என்னுடைய முதுகில் முப்பத்தி ஒன்பது சவுக்கடிககளை நான் பெற்றுக் கொண்டேன். என்னால் இனிமேல் எதையும் காணமுடியாத அளவிற்கு என் கண்களில் கண்ணீரோடு நான் இங்கிருக்கிறேன். என்னுடைய இயற்கையான கண்ணினால் என்னால் காண முடியவில்லை, ஆனால் அக்கரையிலே நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருப்பதை என்னால் காண முடிகிறது. என்னுடைய கணுக்கால்கள் தேய்ந்து போய்விட்டன. அவர்கள் இங்கே வீசியெறிந்த அந்த பழைய பூசனமாய்ப்போன அப்பத்தினால் நான் மிகவும் பெலனிழந்துவிட்டேன், நான் பலவீனமடையுமட்டும் எலிகளும், சிலந்திப் பூச்சிகளும், மற்றக் காரியங்களும் என் மேல் பாய்ந்தன” என்றான். ஆனால் அவன் மரணத்தை நோக்கிப் பார்த்து, “உன் கூர் எங்கே? கல்லறையே, உன் ஜெயம் எங்கே?” என்றும், தன்னுடைய கரங்களில் குலுக்கிக் கொண்டிருக்கும் சங்கிலிகளோடு. அல்லேலூயா! என்றும் கூற முடிந்தது. (அதுதான் நமக்குத் தேவை.) “பாதாளமே, உன் ஜெயம் எங்கே?” பாதாளமோ, “பவுலே, நான் உன்னை அழுகச் செய்வேன்” என்று கூறினது. 227 அவன், “தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நான் ஏற்கனவே ஜெயத்தைப் பெற்றிருக்கிறேன்” என்றான்.
93228 அவன் பலவீனமாயிருந்தபோது, அவனுடைய—அவனுடைய மதசம்பந்தமான, அவனுடைய…அவனுடைய சடங்காச்சாரங்கள் யாவும் அவனை விட்டு அழிந்து போயிருந்தன. அவனுடைய நியமன பத்திரங்கள் யாவும் அவனிடத்திலிருந்து பறிக்கப்பட்டிருந்தன. அவன் இனிமேல் சபைகளை அல்லது…அவைகளில் எதையும் சேர்ந்தவனாய் இருக்கவில்லை. பாருங்கள், அவன் இனிமேல் அவைகளை சேர்ந்தவனாய் இருக்கவில்லை. அவன் பேராயர்களுக்கு விரோதமாக அதிகம் பேசி… “அங்கே இருபது வருடங்களாக ரோம சிறையில் வாடும் ஒரு மனிதனாகிய நீ எங்களுடைய பெண்களை பிரசங்கிக்க அனுமதிக்கக் கூடாது என்று நீ என்னிடம் சொல்லுகிறாயா? ஹூ! அதை எங்களிடம் சொல்லாதே,” என்று கூறி, “நாங்கள் அதை நன்கு அறிவோம். எங்களை இதை, அதை அல்லது மற்றதை செய்யும்படி கூறும் அந்த நபர் யார்?” என்றனர். மேலும், “நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்” என்றனர். 229 “ஆம்,” பவுல், “உங்களுக்கு மத்தியில் எழும்புகிற மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை விரைவில் துவங்குவார்கள், எழும்பி அந்தவிதமான விசுவாசத்தை விட்டு விலகுவார்கள், தேவனுடைய ஆவியைப் பெறாமலிருப்பார்கள்” என்றான். மேலும், “அவர்கள் ஏற்கனவே நமக்கு மத்தியிலிருந்து புறப்பட்டுப்போய்விட்டார்கள், ஏனென்றால் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை” என்றான்.
94230 மேலும், என்ன, அது சம்பவித்ததா? கத்தோலிக்க சபைக்குள்ளாக வாருங்கள்; கத்தோலிக்கரிடமிருந்து லூத்தரன்களுக்கு; கடைசி வரையிலும், அசெம்பளீஸ் ஆஃப் காட், அதேக் காரியம், அதேக் காரியத்தையே செய்துகொண்டிருக்கிறது. எல்லா நேரத்திலும், அதே காரியம்தான்! 231 ஆனால், ஓ, போதிய பெலவீனமுள்ள ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ, உங்களுடைய பெலவீனத்தை உணர்ந்து, தேவன் உங்களை உபயோகிக்க அனுமதிக்கலாமே! நான் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கிறேன், நான் நீண்ட நேரம் பேசுகிறேன் என்று நான் யூகிக்கிறேன்.
95232 இப்பொழுது, அது என்னவாயிருந்தது? இப்பொழுது, அவன்…இந்தக் கூட்டத்தில் தாவீது மிகவும் படிப்பில்லாதவன். அவன் சண்டையிடும் பயிற்சி முறையை உடையவனாயிருக்கவில்லை, அவன் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. எனவே அவனுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த இந்த யுத்தம் எதிலுமே அவன் பயிற்சி முறையைப் பெற்றிருக்கவில்லை, ஆனால் தேவன் ஒருவர் உண்டு என்பதை அவன் அடையாளங் கண்டு கொண்டான். அவன் பெலவீனமான ஒன்றை எடுத்தான்; அவர்கள் ஈட்டிகளையும், ஆயுதங்களையும், வில்களையும், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் உடையவர்களாயிருந்தனர், தாவீது ஒரு சிறு கவணையும் அதில் ஒரு கல்லையும் வைத்திருந்தான். ஆனால், பாருங்கள், அவன் எதில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தான். அவன் தன்னுடைய பலவீனத்தை அறிக்கை செய்தான், ஆனால் தேவனில் உள்ள அவனுடைய விசுவாசத்தை அவன் அறிக்கை செய்தான். 233 அவன், “எந்தக் காரியத்தையும் இடித்துத் தள்ளும்படி என்மேல் எந்த கேடயமும் எனக்கு வேண்டாம். நான் அங்கு வர விரும்பவில்லை, ‘இப்பொழுது, சகோதரர்களாகிய நீங்கள் என்னோடு ஒத்துழைப்பீர்களா? நான் அசெம்பிளீஸ் சபையைச் சேர்ந்தவன், நான் பிரஸ்பிடேரியனைச் சேர்ந்தவன், நான் ஒரு மெத்தோடிஸ்டு, நான் ஒரு பாப்டிஸ்டு, சகோதரரே நீங்கள் என்னோடு ஒத்துழைப்பீர்களா?’ நான் அந்த காரியம் எதையும் அறிய விரும்பவில்லை. ‘இதோ, நான் என்னுடைய சட்டைப்பையில் உள்ளதை உங்களுக்குக் காண்பிப்பேன், நான் என்னுடைய பட்டத்தை பெற்றுவிட்டேன். நான் என்னுடைய இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். நான் இன்னார்-இன்னார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவன், நான்—நான் அங்கே பள்ளிப்படிப்பு படித்தவன். நான் அவ்வாறு பெற்றுக்கொண்டேன். ஓ, என்னால் பேச முடியும்! நான் இது, அது அல்லது மற்றது ’” என்று கூறினான். அவனுக்கு அந்த காரியம் ஒன்றுமே தேவைப்படவில்லையே! 234 அவன் விரும்பியதெல்லாம், அவன், “நான் தேவன் பேரில் என்னுடைய நம்பிக்கையைப் பெற்றுள்ளேன், நான் இதோ போகிறேன்” என்றான். அதுதான். அப்பொழுது அந்த ராட்சதன் கீழே விழுந்தான். அது உண்மை. 235 சகோதரனே, அதுதான் இன்றைக்கு நமக்குத் தேவை. இன்றைக்கு நமக்குத் தேவை தாவீதைப் போன்ற மனிதர்களே, பல்கலைக்கழக அனுபவங்களல்ல.
96236 அது எளிமையான மிகாயா, எளிமையான மிகாயா, இம்லாவின் குமாரன், ஏழ்மையாயும், புறக்கணிக்கப்பட்டும், தேவனுக்கான உண்மையான நிலைப்பாட்டின் நிமித்தமாக எல்லா ஸ்தாபனங்களிலிருந்தும் புறம்பே தள்ளப்பட்டான். ஆனால் ஒரு சமயம் யோசபாத் என்னும் பெயர்கொண்ட, தேவனுடைய மனிதன் ஒருவன் வந்து, “நான் தேவனுடைய உண்மையான வார்த்தையை அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று அங்கே கூறினான். 237 சவுல், “நீங்கள் அறிந்திராத மிகச் சிறந்த நானூறு பேர் என்னிடத்தில் இருக்கிறார்கள்” என்றான். மேலும், “அவர்கள் யாவரும் தங்களுடைய பட்டங்களை பெற்றுள்ளனர், அவர்கள் யாவரும் இங்கே பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்” என்றான். மேலும், “ஏன், நீங்கள் கேள்விப்பட்ட பிரசங்கிமார்களிலேயே மிகச் சிறந்த பிரசங்கிமார்களாக அவர்கள் இருக்கிறார்கள்” என்றான். மேலும், “நான் அவர்களை வெளியே கொண்டு வந்து, நாங்கள் உங்களுக்காக கர்த்தரிடத்தில் கலந்தாலோசிப்போம்” என்றான். 238 ஆனால் அதன்பின்னர் அவன் வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தான், யோசபாத், “ஆம், இந்த ஒருவர் அதைக் கூறுவதை நான் கேட்கிறேன், அந்த ஒருவர் இதைக் கூறுவதை நான் கேட்கிறேன், ஆனால்,” என்று கூறிவிட்டு, “உங்களிடம் வேறொருவர் இருக்கிறாரா? நீங்கள் வேறொருவரை வைத்திருக்கவில்லையா?” என்று கேட்டான்.
97239 இந்த உண்மையான இருதயத்திற்கு தேவன் ஒரு செய்தியைப் பெற்றுக்கொள்ளப் போவதாயிருந்தார். அவர்களில் ஒருவன் மாத்திரமே அங்கே நின்று கொண்டிருந்தான். ஆனால் தேவன் அந்த ஒரு மனிதனுக்காக ஒரு மனிதனை வைத்திருக்கிறார். ஆமென். ஒரே ஒரு உண்மையான இருதயம் மாத்திரமே இருக்குமானால், தேவன் அவனுக்காக ஒரு மனிதனை எங்காவது வைத்திருக்கிறார். யோசபாத் ஒரு உண்மையான மனிதனாயிருந்தான், தேவபக்தியுள்ள இராஜாவாக இருந்தான், அவர்களுடைய செய்திகள் தவறாயிருந்தன என்பதை அறிந்துகொள்ள அவன் போதிய புத்தியுடையவனாயிருந்தான். அது வார்த்தைக்கு முரணானது என்பதை அவன் அறிந்திருந்தான், ஆமென் (ஓ, சகோதரன் நெவில்!), யோசபாத் அதை அறிந்திருந்தான். 240 மேலும் அவன், “பாருங்கள், நான்—நான் இந்த வேதபாட கருத்தரங்கில் உள்ள முழுப் பதிவேடுகளையும், நான் அவர்கள் ஒவ்வொருவரையும் இங்கே வெளியே வைத்திருக்கிறேன்” என்றான். “பாருங்கள், இங்கே பாருங்கள், இவர் பெற்றுள்ள…பாருங்கள், அவர் பெற்றுள்ள பட்டங்களைப் பாருங்கள். இங்கே இந்த ஒருவனைப் பாருங்கள்” என்று கூறி, “இவன் பெற்றுள்ள பட்டங்களைப் பாருங்கள்—பாருங்கள். இங்கே சிதேக்கியாவைப் பாருங்கள், அவன் எல்லாவற்றிற்கும் தலைவன். ஏன், அவன் ஒரு பேராயராயிருக்கிறான், அவன் நம் எல்லோருக்கும் மேலானவன். நிச்சயமாகவே நீங்கள் அவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வீர்கள்!” என்றான். யோசபாத், “ஆம்” என்றான், “நான்—நான்—நான்…” என்றான்.
98241 “பாருங்கள், பாருங்கள், பாருங்கள், மற்றவர்கள் எல்லோரும் அவனோடு ஒத்துப்போகிறார்கள். அவை யாவும் ஒரு பெரிய அமைப்பாகும்! அவர்கள் எபிரெயர்கள் அல்ல என்று நீங்கள் கூற முடியாது. அவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல என்று உங்களால் கூற முடியாது, இதோ அவர்கள் தீர்க்கதரிசிகள் என்று பட்டம் நிரூபிக்கிறது.” 242 யோசபாத், “ஆம், எனக்குத்—நான்—எனக்குத் தெரியும், ஆகாப்” என்றான். “அது—அது பரவாயில்லை, ஆனால்…” என்றான். 243 மேலும், “நீ என்னிடத்தில்…நீ என்னிடத்தில் இதற்குமேல் எப்படி கேட்கப் போகிறாய்? என்னுடைய முழு பள்ளியும் அங்குதான் உள்ளது. அங்கே ஒவ்வொரு ஸ்தாபனமும் ஒன்று சேர்ந்துள்ளது” என்றான். 244 “ஆனால் அந்தக் குழுவைச் சேராத ஒருவனை நீங்கள் உடையவனாயிருக்கவில்லையா? எங்கோ ஒருவர் இருக்கவில்லையா?” 245 “பாருங்கள், அவன் என்னவாயிருப்பான்? அவன் ஒரு கல்வியறிவற்ற படிப்பறியாதவனாக இருப்பான்! அப்படிப்பட்ட ஒரு நபரை நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?” 246 “ஆனால்—ஆனால் நான் உங்களைக் கேட்கிறேன், நீங்கள் வேறெங்காவது, ஒருவனை உடையவனாய் இருக்கவில்லையா?”
99247 “ஓ,” அவன், “ஆம், அப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறான்” என்றான். (அங்கே, ஓ, அதற்காக தேவனுக்கு நன்றி!) “அப்படிப்பட்ட ஒருவன் உண்டு, ஆனால்,” என்று கூறி, “நான் அவனை வெறுக்கிறேன். மற்ற யாவரும் கூட, அவனை வெறுக்கிறார்கள்” என்றான். மேலும், “நாங்கள் உதைத்துத் தள்ளினோம், அவர்கள் அவனை அந்த ஸ்தாபனத்திலிருந்து, அவர்கள் ஒவ்வொருவரையும் வெளியேற்றிவிட்டனர்” என்றான். மேலும், “அவன் ஒரு கூட்டம் நடத்த இங்கே வந்தான், நாங்கள் அவனை நகரத்தை விட்டு விரட்டியடித்தோம். ஆம், ஐயா. அவனோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டோம். பாருங்கள்,” என்று கூறி, “அவன் ஒரு பலவீனமானவன், அவன் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன். அவனுடைய இலக்கணம் மிகவும் மோசமாக உள்ளது” என்று கூறினான். (ஹூ-ஹூ, மூடியைப் போன்றே, உங்களுக்குத் தெரியும்.) “ஆம், அவனுடைய இலக்கணமோ பயங்கரமானது.” மேலும், “உண்மையாகவே, ஒரு வேத பண்டிதன், நான் கேள்விப்பட்டதிலேயே அவன் மிகவும் ஏழ்மையானவன். நான் அவனைப் போன்று எவரையும் கேள்விப்பட்டதேயில்லை. ஓ, அவன் வெறுமனே அவர்களுடைய சடங்காச்சாரத்தை இடித்துப் போடுகிறான். ஏன், அவர்களுடைய அப்போஸ்தலருடைய பிரமாணம் அவனால் துண்டு துண்டாக கிழிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு காரியத்தைக் குறித்து நான் கேள்விப்பட்டதேயில்லை! ஓ, அவன் அதை கிழித்தெறிந்தான், அவர்கள் அவனை வெறுக்கிறார்கள், நான் அவனை வெறுக்கிறேன், எல்லோரும் அவனை வெறுக்கிறார்கள்” என்று கூறினான். 248 “ஓ,” யோசபாத், ”ராஜா அவ்வாறு கூற அனுமதிக்க வேண்டாம், ஆனால் நான் அவன் கூறுவதைக் கேட்க விரும்புகிறேன்“ என்றான். எலிசா என்ன கூறுவான் என்பதை அவன் அறிந்திருக்கிறான்! அவன் என்னவென்று அறிந்திருந்தான்.
100249 தேவன் எல்லா மகத்தான, பலமுள்ள, அறிவாற்றலுள்ள பிரசங்கிமார்களையும், புறக்கணித்து, தனக்கு ஒன்றுமே தெரியாது என்று உரிமை கோரும் ஒரு சிறு மனிதனுக்குள் அவருடைய செய்தியை அளித்தார். ஆனால் அவன் என்ன செய்தான்? 250 அவர்கள் அவனுக்கு ஒரு சோதனையைக் கொடுத்து, “இப்பொழுது, அவர்கள் கூறின அதே காரியத்தை நீயும் கூறு” என்றனர். அதற்கு அவன், “தேவன் என் வாயில் என்ன கூறுகிறாரோ அதையே நான் கூறுவேன், அவ்வளவுதான்” என்றான். 251 அவன், “இப்பொழுது நீ பலமுள்ளவனாயிருக்க விரும்பினால், நினைவிருக்கட்டும் நீ…மகனே, நீ—நீ இங்கே ஒருவிதமான ஒழுங்கின்மையில் இருக்கிறாய். நீ அந்த ஸ்தாபனத்திலிருந்து உதைத்துத் தள்ளப்பட்டிருக்கிறாய் என்பதை நினைவில் கொள். இந்தவிதமான நெருக்கடியான நேரத்தில் நீ அவர்களோடு இணங்கினால், அவர்கள் உன்னுடைய ஐக்கியத்தைக் குறித்து மறுபரிசீலனை செய்யலாம். நாங்கள் யாவரும் ஒரு பெரிய தொடர் கூட்டத்தை நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்,” என்று கூறி, “நீ என்னோடு இணங்கினால் நலமாயிருக்கும்” என்றான். 252 “தேவன் கூறியுள்ளதைத் தவிர வேறொன்றையும் நான் கூறமாட்டேன்!” என்றான். ஒப்புரவாகுதல், ஒரு தேவனுடைய மனிதன் தேவனுடைய வார்த்தையின் பேரில் ஒப்புரவாக வேண்டும் என்று உங்களால் எதிர்பார்க்க முடியுமா? இல்லை, ஐயா, அவனுக்குள் இருக்காதே. 253 “ஆனால் நீ பலவீனமாயிருக்கிறாய். நீ ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன். ஏன், உனக்குத் தெரியும், அவர்கள்…” “அவர்கள் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை.” 254 “பாருங்கள், அவர்கள் உங்களை ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கு ஒரு ஆகாய விமானத்தில் கொண்டு செல்லக்கூடும். அவர்கள் எந்தக் காரியத்தையும் செய்வார்கள், பாருங்கள், நீ—நீ இருந்தால்…”
101255 “இல்லை, இல்லை. தேவன் என் வாயில் என்ன கூறுகிறாரோ அதை மாத்திரமே நான் கூறுவேன்.” தேவன் அந்தக் கூட்டத்தார் அனைவரையும் புறக்கணித்து, (ஆம், ஐயா, அவருடைய உண்மையான நிலைப்பாடு அதைச் செய்தது) அந்த நானூறு பேரையும் புறக்கணித்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை அவனுக்குக் கொடுத்தாரே! 256 அப்படியானால் அவர்கள் அதை விசுவாசித்தார்களா? இல்லை, ஐயா! அவர்கள், “அது கர்த்தர் உரைக்கிறதாவது அல்ல, எங்களுடைய வேதபாட பள்ளி அதைப் போன்ற காரியங்களைப் போதிப்பதில்லை. பாருங்கள், இதோ நம்முடைய பேராயர், வார்த்தையைக் கூறிவிட்டார், அவரே சடங்கு முறையை எழுதினார். நாம் யாவரும் ஒன்று சேர்ந்து, நாம் நம்முடைய பள்ளிகளை உருவாக்கினோம். தேவன் நம்மோடு இருக்கிறாரே! தேவன் உங்களிடத்திற்கு சென்றபோது, நம்மைவிட்டு எந்த வழியாக சென்றார்?” என்று கேட்டனர். அவன், “நீங்கள் சில சமயங்களில் பார்க்கலாம்” என்றான். ஹு-ஹூ, அது உண்மை. 257 அவன் என்னவாயிருந்தான்? அவன் பெலவீனனாயிருந்தான், ஆனால் அவன் அவர்களுக்கு மத்தியில் மிகவும் பலமுள்ள ஒருவனாயிருந்தான். ஏன்? ஏனென்றால் அவன் கர்த்தருடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். ஓ, சகோதரனே, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் பெற்றிருக்கும் வரையில்…அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது?
102258 “சகோதரன் பிரான்ஹாம், ஞானஸ்நானத்திற்காக இயேசுவின் நாமத்தில் நீங்கள் ஒப்புரவாகினால், சரி, நாம் சிக்காகோவிலோ அல்லது இதைப் போன்ற இந்த இடங்களில் ஒரு பெரிய கூட்டத்தை நடத்துவோம் என்று கூறுகிறீர்கள்.” ஹூ! நீங்கள் அதைச் செய்ய நினைக்கிறீர்களா? நீங்கள் எங்கே ஒன்று கூடினாலும், நீங்கள் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை, சகோதரனே, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு தரித்திருங்கள். 259 அவர்களில் சிலர் வந்து அது எங்கே தவறாயுள்ளது என்பதை என்னிடம் கூறும்படி நான் விரும்புகிறேன். அது எங்கே தவறாயுள்ளது என்பதை தேவனுடைய வார்த்தையில் எனக்குக் காண்பியுங்கள். ஆம். அவர்கள் அதை எதிர்கொள்ளமாட்டார்கள். இல்லை ஐயா. ஆனால் அது கர்த்தர் உரைக்கிறதாவது! அவர்கள் ஒவ்வொருவரும் உங்களை உதைத்தாலும், அதனோடு தரித்திருங்கள். நீங்கள் எவ்வளவு பெலவீனமானாலும் எனக்குக் கவலையில்லை, “அப்பொழுது நான் பெலன் அடைகிறேன்.” அவர்கள் என்னை வெளியே உதைத்துத் தள்ளும்போது, தேவன் என்னை உள்ளே கொண்டு செல்வார். ஹு-ஹூ, ஆம். தேவன்…அவர்கள் உங்களை வெளியே உதைத்துத் தள்ளும்போது, தேவன் உங்களை உள்ளே கொண்டு செல்வார். 260 நினைவிருக்கட்டும், தேவன் எப்பொழுதுமே தள்ளப்பட்ட, ஒன்றுமில்லாதவர்களை தெரிந்து கொள்கிறார். அதன்பின்னர் அவர் அவர்களை தமக்காக முக்கியமானவர்களாக உருவாக்குகிறார். இந்த ஜீவியத்தில் அதை அறியாமலிருக்கலாம், ஆனால் வரப்போகும் ஜீவியத்தில் அது இருக்கும்; பாருங்கள், அது ஒன்றுதான்.
103261 கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை அவனுக்கு அளித்தார், ஏன்? அவன் வார்த்தையோடு தரித்திருந்தான். அவன் சரியான செய்தியை உடையவனாயிருந்தான். தேவன் அவனுக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்தார். மற்றவர்களுக்கு தரிசனம் இல்லாதிருந்தது. பார்த்தீர்களா? அவனுக்கு ஒரு தரிசனம் இருந்தது. ஏன்? ஏனென்றால் அவன் வார்த்தையோடு தரித்திருந்தான். அங்குதான் நாம் அற்புதங்களையும் அடையாளங்களையும் கண்டோம். ஏனென்றால்…மற்றவர்களும் அதைப் போன்றே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவன் வார்த்தையோடு தரித்திருந்தான். இப்பொழுது நாம் துரிதமாகப் பார்ப்போம்.
104262 எலியா, அவனுடைய சபை அவனை விட்டு விலகி நவீன உலகத்திற்காக அவனை விட்டுவிட்டிருந்தது. எலியா உண்மையாகவே அவர்களை கடுமையாக கடிந்து கொண்டிருந்தான் என்று நான் யூகிக்கிறேன். நீங்கள் அவ்வாறு கற்பனை செய்து பார்க்கவில்லையா? எலியா என்னவாயிருந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் யூகிக்கிறேன், அவனுடைய ஆரம்பகால ஊழியத்தில், அவன் அங்கே எழும்பி நின்று, “ஏன், ஸ்திரீகளாகிய நீங்கள், முதல் பெண்மணியைப் போல் இருக்க முயற்ச்சிக்கின்றீர்கள்,” அந்த பொன்னாடைகள், உங்களுக்குத் தெரியும், “திருமதி யேசபேல்! நவீன ஸ்திரீகளாகிய நீங்கள், தேசத்தின் முதல் பெண்மணியைப் போல், அவளைப் போல் உடை உடுத்திக் கொண்டு, அவளைப் போல் நடந்து கொள்கிறீர்கள். பிரசங்கிமார்களாகிய நீங்களே!” என்றான். ஓ, என்னே, அவன் அவைகளை எவ்வளவாய் கடிந்து கொண்டானே! யாருமே இல்லாமற்போகுமளவிற்கு அவன் தொடர்ந்து கூக்குரலிட்டுக் கொண்டே இருந்தான்.
105263 அப்பொழுது அவன் தன்னுடைய பாதையின் முடிவை அடைய வேண்டியதாயிருந்தது. யாருமே அவனோடு ஒத்துழைக்கமாட்டார்கள். எந்த சபையும் அவனோடு ஒத்துழைக்கவில்லை. அவனுடைய சபை யாவும் அவனை விட்டு, உலகத்திற்கு திரும்பிச் சென்றன, (இப்பொழுதும் அதேவிதமாகவே), அது உண்மை, உலகத்திற்கு திரும்பிச் சென்றன. அவனைக் காண நீங்கள் செல்ல வேண்டியதாயிருந்த தேசத்தினூடாக வந்தபோது, இங்கே ஒருவர் மற்றும் அங்கே ஒருவர் என்று, மிகச் சிலரே பற்றிக் கொண்டிருந்தனர். அவன் மிகவும் மோசமான நிலையில் இருந்தான், அவன் தன்னுடைய அறிவின் முடிவிற்கு வந்திருந்தான். 264 அவன், “கர்த்தாவே, நான் உம்முடைய வார்த்தையில் நின்றேன், நான் சத்தியத்தைக் கூறினேன். அவர்கள் யாவரும் போய்விட்டார்கள், இங்கு எவருமே விடப்பட்டிருக்கவில்லை. நான் எவருக்குமே பிரசங்கிக்கக் கூட வேண்டியதில்லை” என்றான். ஆமென். “ஆம், கர்த்தாவே, நான் உம்முடைய வார்த்தையில் நின்றேன், இப்பொழுது நான் எங்கே இருக்கிறேன் என்பதை நோக்கிப் பாருங்கள், அவர்களில் ஒருவரும் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நான் நகரத்திற்குள்ளாகச் செல்லும்போது, அவர்கள், ‘இதோ அந்த வயோதிக பைத்தியக்காரன் வருகிறான். ஆம், ஆம், இங்கே அந்த வயோதிக பைத்தியக்காரன் நகரத்திற்கு வருகிறான், இப்பொழுது அவன் இங்கே இந்த நவீன வாழ்க்கை முறை மற்றும் மற்ற காரியங்களை குறித்து தொடர்ந்து கூக்குரலிடத் துவங்கிவிடுவான்’” என்றான். 265 “அவனை ஏற்றுக்கொள்ள வேண்டாம்! போதகரே, நீங்கள் அந்த நபரோடு ஒத்துழைக்காதீர்கள்! இல்லை ஐயா!” 266 போதகர், “இப்பொழுது அந்த பழைய மதவெறியன் மீண்டும் நகரத்தில் இருக்கிறான். பாருங்கள், அங்கே அந்த எலியா, வழுக்கைத் தலையையுடைய நபர். அந்த வயதான நபருக்கு நீங்கள் எந்தக் கவனத்தையும் செலுத்த வேண்டாம். அவனைப் பாருங்கள், அவன் என்னைப் போன்று குருவானவர்களின் ஆசாரிய அங்கிகளைக் கூட அணிந்திருக்கவில்லை (அவனுடைய தொப்பியை, உங்களுக்குத் தெரியும்; முன்னால் நின்று, கழுத்துப்பட்டையை சுற்றி அணிந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்)” என்றார். மேலும், “அவன்…அவன்—அவன்…அவர்கள்…அவன் ஒரு வித்தியாசமான…அவன்—அவன் ஒரு வினோதமான நபர்” என்றனர். 267 பெரிய மனிதர்களில் சிலர், “என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவன்—அவன் ஒரு நரம்பு தளர்ச்சி கொண்டவன். ஹு-ஹூ, ஆம், அவன்—அவன் ஒரு நரம்புத் தளர்ச்சி கொண்டவன், அங்கே வனாந்திரத்தில் வசிக்கிறான், அவன் அதிக நேரம் காடுகளுக்குள்ளேயே தங்கி, ஒரு துண்டு செம்மறியாட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தான். ஓ, என்னே! அதன்பின்னர் பெண்களை கண்டனம் செய்தல்! நான் அப்படிப்பட்ட ஒரு காரியத்தை ஒருபோதும் கண்டதில்லை. நீங்கள்…அவனோடு உங்களுக்கு எந்த சம்மந்தமும் இருக்க வேண்டாம். ஒத்துழைக்காதீர்கள்!” என்று கூறினதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.
106268 பாருங்கள், ஊழியக்காரர்கள் சங்கம் ஒன்று கூடிவிட்டது, உங்களுக்குத் தெரியும், ““வேண்டாம்—உங்கள் அனைவருக்கும் எதுவும் இல்லை…அவனை கட்டவிழ்த்துவிடுங்கள், அவன் இறுதியாக…அவன் தனது புத்திசாலித்தனத்தின் முடிவுக்கு வருவான். அவன்—அவன் தன்னுடைய சொந்த மூளையை குழப்பிக் கொண்டு உளறட்டும். அவ்வளவுதான், அவனை விட்டுவிடுங்கள்” என்றனர். 269 ஆனால் வயோதிக எலியாவோ தேவனோடு உண்மையாய் நடந்து, (என்னே, என்னே) வார்த்தையோடு சரியாக தரித்திருந்தான். அவர்கள் அங்கே கீழே ஒரு சிறு கூட்டம் நடத்துவார்கள், அப்பொழுது அவன் கூட்டத்தினரை நோக்கிப் பார்த்து, “யேசபேல்களே, நீங்கள் எல்லோரும்!” என்று கூறுவர். 270 “ஓ, அந்தத் துணிச்சல்! நான் மீண்டும் அந்த மனிதனுக்கு செவி கொடுக்கப் போகமாட்டேன்! இல்லை, ஐயா, நான் ஒன்றுமே செய்யமாட்டேன்!” 271 அது அவனைத் தடுக்கவில்லை, அவன் அப்படியே அங்கேயே தரித்திருந்தான். அவன் தன்னுடைய சபையை இழந்தபோது, அவன் தன்னுடைய…எல்லா ஸ்தாபனங்களும் அவனுக்கு எதிராக திரும்பியபோது, அப்பொழுது (அவன் பலவீனமடைந்தபோது) அவன், “நான் ஒருவன் மாத்திரமே மீதியாயிருக்கிறேன், அவர்கள் என்னைக் கொல்லத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இங்கிருந்தால், அவர்கள் என்னை சுட்டுவிடுவார்கள்” என்றான். ஹூ-ஹூ. பார்த்தீர்களா? “ஆனால் நான்…அவர்கள் என் ஜீவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நான் மாத்திரம் மீதியாயிருக்கிறேன், கர்த்தாவே, நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான். 272 அப்பொழுது, அவன் பெலவீனமானான் (இன்னும் உண்மையாக நின்று, தன்னுடைய பலவீனத்தையும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் அறிக்கை செய்து), அதாவது தேவன், “மலையின் மேல் ஏறிவா, நான் உனக்கு ஒரு புதிய செய்தியைக் கொடுக்கப் போகிறேன். இப்பொழுது நான் உங்களுக்கு ஒரு புதிய செய்தியை அனுப்பப் போகிறேன். நான் ஏற்கனவே உன்னிடம், ‘போய் இவைகளைக் கடிந்துகொள்’ என்று கூறியிருக்கிறேன், இப்பொழுது அது சரியென்று நிரூபிக்கும்படியான ஏதோ ஒன்றைக் கொண்டு நான் உன்னை திருப்பி அனுப்பப் போகிறேன்” என்றார். “எலியா, நீர் ஒரு நல்ல வேலையைச் செய்திருக்கிறீர். நீர் அவர்களுக்கு முதல் பெண்மணியைக் குறித்தும், அவை யாவற்றையும், அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்பதைக் குறித்தும் கூறினீர். நீங்கள் ஆகாபையும் மற்றும் அவனுடைய எல்லா நவீன காரியங்களையும், எல்லா நவீன சபைகளையும் கண்டனம் செய்தீர்கள், அவைகள் எங்கிருந்து வந்தன என்பதை நாங்கள் பிரசங்கிமார்களிடம் கூறினோம். நீங்கள் ஒரு உதாரணமாக இருந்தீர்கள். நீங்கள் எந்த உதவியுமின்றி, எந்த ஸ்தாபனமுமின்றி, உங்களுக்குப் பின்னே எதுவுமின்றி அங்கே நின்றீர்கள், ஆனால் நீங்கள் என்னுடைய வார்த்தையோடு தரித்திருந்தீர்கள். இப்பொழுது நான் உங்களுக்கு ஒன்றைக் கொடுக்கப் போகிறேன். அங்கே போய் அந்த மாய்மாலக்காரனிடம், ‘கர்த்தர் உரைக்கிறதாவது! நான் கட்டளையிடும் வரைக்கும் வானத்திலிருந்து ஒரு பனியும் கூட பெய்யாது” என்றான். என்னே! என்னே! அவனுக்கு ஏதோ ஒரு காரியத்தைக் காண்பிக்கும்படி அவனை மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றாரே!
107273 ஓ, அந்தக் காலையில் அவன் அந்த சமாரியப் பாதையில் நடந்து வருவதை என்னால் காண முடிகிறது. அவன் பார்ப்பதற்கு மிகப்பெரியவனாய் இருக்கவில்லை, நிச்சயமாகவே, அந்த வழுக்கைத் தலை சூரிய ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது, ஆட்டுத் தோல் தூண்டினால் சுற்றப்பட்டு, நரைத்த முடிகளும், மீசையும் அவனுடைய முகத்தை சுற்றி தொங்கிக் கொண்டிருந்தன. அவன் “உரோமமுடையவனாயிருந்தான்” என்று வேதம் கூறியுள்ளது, அவன் முழுவதும் உரோமத்துடன் இருந்தான், அவன் பார்ப்பதற்கு ஒரு அலங்கோலமானவனாக இருந்தான் என்று நான் யூகிக்கிறேன்; அந்த சிறிய கோலை தன்னுடைய கரத்தில் வைத்துக் கொண்டு, அந்த சிறிய கண்கள் ஆகாயத்தை நோக்கியவாறு, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். நீங்கள்…அவன்…அவன் ஏறக்குறைய எண்பது வயதாயிருந்தபோது, அவன் பதினாறு வயது நிரம்பியவனைப் போன்று நடந்து கொண்டான் என்று நான் யூகிக்கிறேன். இதோ அவன் நேராக சமாரியாவிற்கு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தான். சகோதரனே, அப்பொழுது அவன் தன்னுடைய பெலவீனத்தில் பலங்கொண்டு, “என்னுடைய பெலன் போதுமானதாயிருக்கிறது. எலியாவே, ஸ்தாபனங்களைக் குறித்து கவலைப்பட வேண்டாம். அவர்களைக் குறித்து கவலைப்படாதே, என்னுடைய பெலன் உனக்குத் தேவை.”
108274 ஒரு சமயம் நான் ஒரு பெரிய ஆலயத்தின் அருகே நின்று கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அப்பொழுது நான், “கர்த்தாவே, அவர்கள் என்னுடைய—என் அலுவலகத்திற்கு வருவதை நான் வெறுக்கிறேன்” என்று கூறியிருந்தேன். அதற்கு அவர், “நான் உன்னுடைய பங்காயிருக்கிறேன்” என்றார். பார்த்தீர்களா? “நான் உன்னுடைய பங்காயிருக்கிறேன்.” 275 “பலவீனத்தில் நான்—நான்…என் பெலன் பெலனுள்ளதாயிருக்கிறது. நீங்கள் வழியை விட்டு விலகும்போது, என்னுடைய பரிபூரண சித்தமானது (பவுல், அல்லது எலியா, நீங்கள் யாராயிருந்தாலும்) செய்யப்படும்.” பார்த்தீர்களா? “உங்களுடைய பெலவீனத்திலே நான் பெலனுள்ளவனாயிருக்கிறேன். நான்தான் அந்த ஒருவர்! நான் உள்ளே வந்து நிரப்புகிற பெலனாயிருக்கிறேன்.”
109276 அவர் அந்த சமாரியப் பாதையில் நடந்து செல்வதை என்னால் காண முடிகிறது, அந்த சிறிய வயோதிக கண்கள் இந்தவிதமாக காணப்படுகின்றன, மகனே, அவனுடைய முகத்தில் ஒருவிதமான அரைகுறைப் புன்னகையோடிருந்தான். சகோதரனே, அவன் நேராக ஆகாபின் முன்னிலையில் நடந்து சென்றான். அவன் ஒருபோதும் தடுமாறிப் பேசவில்லை, அவன் ஒருபோதும் திக்கிப் பேசவில்லை. இல்லை, இல்லை! அந்த சிறிய வயோதிக மெலிந்த மார்பின் கீழ் பரிசுத்த ஆவியானவர் ஜீவிக்கிற ஒரு இருதயம் துடித்துக் கொண்டிருந்தது. ஆம், உண்மையாகவே! அந்த வீதியில் நடந்து வந்து, ஆகாபின் முன்னால் நடந்து வந்து, “நான் அழைக்கும் வரையில் பனியும் கூட பெய்யாது” என்றான். 277 அவன் தன்னுடைய கால்களால் மிதித்துவிட்டு, திரும்பி, வனாந்தரத்திற்குச் சென்றான். “எலியா, அது ஒரு நல்ல வேலையாயிருந்தது. இங்கே மேலே வா, நான் எல்லா காகங்களையும் இப்பொழுது உன்னைப் போஷிக்கும்படி கட்டளையிட்டிருக்கிறேன், மேலும்…இங்கே சற்று நேரம் உட்காரும்” என்றார். ஓ, என்னே! 278 அவன் பெலவீனமாயிருந்தபோது, அப்பொழுது அவன் பலமடைந்தான். ஆம், ஐயா. மழை பெய்யாதபடிக்கு அவன் வானத்தை அடைத்தான். அப்பொழுதுதான் அவன் பலமுள்ளவனானான், அவன் தன்னுடைய சபையை இழந்தபோது, தான் வைத்திருந்த எல்லாவற்றையும், மற்ற எல்லாவற்றையும் இழந்தான். ஆனால் அவன் தேவனுடைய வார்த்தையோடு தரித்திருந்தான், அப்பொழுது அவன் வானங்களை அடைக்கும் வல்லமையைப் பெற்றிருந்தான்.
110279 யாக்கோபு தன்னுடைய முழு பெலத்தையும் இழந்தபோது, அப்பொழுது தேவன் ஒரு இளவரசனாகும்படிக்கு அவனுக்கு வல்லமையை அளித்தார். பார்த்தீர்களா? 280 பவுல் தன்னுடைய கல்வியையும், தன்னுடைய எல்லா வேத சாஸ்திரத்தையும் இழந்தபோது, தேவன் அவனை புறஜாதிகளுக்கு ஒரு மிஷனரியாக நியமித்தார். 281 மோசே தன்னுடைய முழு திறமையையும் இழந்து பலவீனமடைந்தபோது, தேவன் அவனை வல்லமையுள்ளவனாக்கி, எண்பது வயதானபோது, ஆவியின் வல்லமையோடு எகிப்துக்கு அனுப்பினார்; மீசை தொங்கிக் கொண்டிருக்க, அவனுடைய மனைவி ஒரு கோவேறு கழுதையின் மேல் அவளுடைய இடுப்பில் பிள்ளையோடு அமர்ந்திருக்க, அவனுடைய கையில் ஒரு தடியோடு, புறப்பட்டுச் சென்று எகிப்தை ஜெயங்கொண்டான். ஆம். பார்த்தீர்களா? அவன் செல்ல விரும்பியது போன்று, அவனுக்குப் பின்னால் ஒரு சேனையினால் அல்ல, ஆனால் ஆவியின் வல்லமையினால். ஆமென்! நீங்கள் பெலவீனமாயிருக்கும்போது, அப்பொழுது நீங்கள் பெலனுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
111282 அந்த சாலையில் நடந்து செல்லும்போது, அவன் திக்கிப் பேசவில்லை, அவன் தடுமாறவில்லை, அவன் ஒன்றுமே செய்யவில்லை, நேராக ஆகாபின் முன்னிலையில் நடந்து சென்று, “நான் கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றுள்ளேன்” என்றான். அவன், “இஸ்ரவேலைத் கலங்கப்பண்ணுகிறவன் நீர்தான்” என்றான். 283 அவன், “நீர்தான் இஸ்ரவேலரை கலங்கப்பண்ணுகிறவன்” என்றான். ஆம், ஐயா. ஓ, சகோதரனே! ஆம், ஐயா. “நீர் இங்கே இருக்கிற அறிவாற்றலுள்ள ஆசாரியர்களை வெளியே கொண்டு வாருங்கள், நாம் யார் தேவன் என்று பார்ப்போமாக” என்றான். அங்குதான் காரியம். “கர்மேல் மலையின் மேல் ஏறிச் செல்லுங்கள், பெந்தெகொஸ்தேயில் உத்தரவு அருளின தேவன் மீண்டும் பதிலளிக்கட்டும். தேவன் இன்னமும் மாறாத தேவனாயிருக்கிறாரா என்றும், இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறாரா என்றும் பார்ப்போம்” என்று கூறினான். அவன் மலையிலிருந்து இறங்கி வந்தான், அவனுக்கு ஒரு செய்தி இருந்தது. ஆம். அவன் உண்மையாகவே பலவீனமடைந்துவிட்டான், இருப்பினும் அவன் அதைச் செய்வதற்கு முன்பு எல்லாவற்றையும் இழந்துவிட்டான். அவன் பலமடைவதற்கு முன்பு பலவீனமடைய வேண்டியதாயிருந்தது.
112284 சுவிசேஷத்தின் எளிமையே ஜனங்களை தடுமாறச் செய்கிறது. அது எளிமையாயிருக்கும்போது, அவர்கள் அதை வேறொரு மகத்தான அறிவாற்றல் கொண்டதாக மாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் தேவன் தம்முடைய கிரியைகளை கிரியை செய்ய, தாழ்மை, பலவீனம், எளிமை என்னும் கருவியையே எடுத்துக் கொள்கிறார். அது தேவனுடைய கரத்தில் உள்ள ஒரு கருவி மாத்திரமேயாகும். 285 யோவான் ஸ்நானன், அவனுடைய செய்தி, கிறிஸ்துவின் முன்னோடி, மிகவும் எளிமையாக அது ஜனங்களின் தலைகளுக்கு மேலே சென்றது. ஒரு நிமிடம் கவனியுங்கள். (நான் உங்களை நீண்ட நேரம் பிடித்துக் கொண்டிருக்கவில்லை என்று நான் நம்புகிறேன், நீங்கள் சுவர்களைச் சுற்றி நிற்கிறீர்கள், பாருங்கள்.) பாருங்கள்! யோவான்…எல்லா தீர்க்கதரிசிகளும் மேசியாவின் வருகையைக் குறித்து சாட்சி கொடுத்தனர். அவர்களில் ஒருவன், “மலைகள் சிறிய ஆட்டுக்கடாக்களைப் போல துள்ளும்” என்று கூறினான். மற்றவர்கள், “இலைகள் தங்களுடைய கரங்களைத் தட்டும்” என்றனர். ஒருவன், “எல்லா பள்ளங்களும் உயர்த்தப்படும், மேடான இடங்கள் தாழ்த்தப்படும்” என்றான். ஓ, என்னே! என்னே ஒரு நாள்!
113286 தீர்க்கதரிசிகளின் வேதபள்ளியையும், அதைக் குறித்த அறிவாற்றல் கொண்ட கருத்தையும் நீங்கள் கற்பனை செய்து பார்த்தீர்களா? ஓ, என்னே, அவர்கள் எல்லாவற்றையும் மிகவும் உன்னதமான முறையில் உடையவர்களாயிருந்தனர். ஆனால் அது சம்பவித்தபோது, தன்னுடைய ஜீவியத்தில் ஒரு நாள் கூட பள்ளிப் படிப்பே இல்லாத ஒரு வயோதிக பிரசங்கி வனாந்திரத்திலிருந்து வெளியே வந்தான், அநேகமாக அவனுடைய இலக்கணம் மிகவும் மோசமாக இருந்திருக்கலாம். அவனுடைய தகப்பனார் ஒரு ஆசாரியனாயிருந்தார், ஆனால் தேவன் அவனை அதிலிருந்து விலக்கிவிட்டார். (நாம் அதை கடந்த ஞாயிறு பாடத்தில் பார்த்தோம்.) அவன் அந்த ஸ்தாபனங்களோடு கலக்கப்பட அனுமதிக்காமல், அவனைப் பயிற்றுவிப்பதற்காக அவனை வனாந்திரத்திற்கு கொண்டு சென்றார். அந்தவிதமான—அந்தவிதமானவர்கள் தேவனுடைய வார்த்தையோடு நிலைத்திருப்பார்கள்.
114287 வனாந்திரத்திலிருந்து வெளியே வந்து, சுமார் முப்பது வயதானவனாயிருக்க; ஒரு கறுப்பு தாடி அவருடைய முகத்தை சுற்றி தொங்கிக் கொண்டிருப்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன்; பெரிய ஆட்டுத்தோல் துண்டினால் அவனைச் சுற்றியிருந்தான்; அவனுடைய முழங்கால்கள் வரை, சேற்றில் நின்று; “ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டவன் நான்தான்” என்று கூறினான். சில ஸ்தாபனங்கள் வெளியே வருகின்றன; அவன், “நமக்கு இது உண்டு, அது உண்டு என்று,’ என்று உங்களுக்குள்ளே சொல்ல நினைக்காதீர்கள், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்” என்றான். ஓ, என்னே! ஏன்? அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாயிருந்தான்! அவன் செய்தியை உடையவனாயிருந்தான். அவன் வரப்போவதை தேவன் முன்னறிவித்தார். காரணம்…அது மிகவும் எளிமையில் வந்தது, அது அவர்களுடைய தலைகளுக்கு மேல் சென்றது.
115288 இயேசு வந்தபோது, அவர், “நீங்கள் எதைப் பார்க்கச் சென்றீர்கள், மெத்தோடிஸ்டுகளிலிருந்து ஒரு பாப்டிஸ்டாகவும், ஒரு பாப்டிஸ்ட்டிலிருந்து ஒரு பிரஸ்பிடேரியனாகவும், ஒரு பிரஸ்பிடேரியனிலிருந்து ஒரு பெந்தெகொஸ்தேயாக, ஒரு பெந்தெகொஸ்தேகாரனிலிருந்து வேறு ஏதோ ஒன்றுக்கு மாற்றப்படக்கூடிய ஒரு அறிவாற்றல் கொண்ட பேச்சாளரையா? காற்றினால் அசையும் ஒரு நாணலைக் காண நீங்கள் புறப்பட்டுச் சென்றீர்களா? யோவான் அப்படிப்பட்டவன் அல்ல!” “அப்படியானால் மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிற ஒரு மனிதனைக் காண நீங்கள் புறப்பட்டு சென்றீர்களா?” என்று கேட்டார். அவர், “அவர்கள் ராஜாவின் அரண்மனைகளில், அந்த விதமான ஊழியக்காரர் இருக்கிறார்கள்” என்றார். அவர், “நீங்கள் எதைப் பார்க்கப் போனீர்கள், ஒரு தீர்க்கதரிசியையா?” என்று கேட்டார். அவர், “ஒரு தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன்” என்றார்.
116289 யோவான் ஒரு தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேலானவனாயிருந்தான். மேலும், பாருங்கள், அவன் எல்லோரிலும் மிகவும் தாழ்மையானவனாக வந்தான். ஆனால் அவன் ஒரு தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேலானவனாயிருந்தான். யோவான் யாராயிருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் உடன்படிக்கையின் தூதனாக இருந்தான். நிச்சயமாக, அவன் அப்படித்தான் இருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசிக்கு மேலாக இருந்தான். ஒரு தீர்க்கதரிசியோ காரியங்களைக் காண்கிற ஒரு ஞானதிருஷ்டிக்காரனாயிருக்கிறான். யோவானும் கூட அவ்வாறு செய்தான், ஆனால் அவன் அதற்கு அப்பாற்பட்டவனாயிருந்தான். அவன் உடன்படிக்கையின் தூதனாக இருந்தான். அதற்கு அவர், “ஆம், உமக்கு முன்பாக என் தூதனை அனுப்புவேன் என்று கூறப்பட்டவன் இவன்தான்’” என்றார். அவன் ஒரு உடன்படிக்கையின் தூதனாக இருந்தான். நிச்சயமாக. அவனுடைய எளிமையான வருகையின் காரணமாக, அது அறிவாளிகளை குருடாக்கிவிட்டது.
117290 இப்பொழுது ஏறக்குறைய இன்னும் சில நிமிடங்களில், நாம் மிக விரைவில் முடிக்க வேண்டும், நான் இங்கே ஒரு சில காரியங்களைக் கூற விரும்புகிறேன், சில வேதவாக்கியங்களையும், சில குறிப்புகளையும் கூற விரும்புகிறேன். 291 ஒரு கைப்பிடியளவு ஆகாரத்தோடிருந்த விதவையைக் குறித்து என்ன? அவள் தன்னுடைய பலவீனத்தை அடைந்துவிட்டாள், அவள் அநேகமாக பட்டினியால் மரித்துப் போவதாயிருந்தாள். அவளுக்கு ஆகாரம் இல்லை. அவளால் வேறு எங்கும் சென்று எந்த உணவையும் கடனாக வாங்க முடியவில்லை, வேறு யாரிடமும் எந்த உணவையும் வாங்கவில்லை. ஆனால் அவள் ஒரு ஸ்தானத்திற்கு வந்தாள், ஒரு மகத்தான விசுவாசி, அவளுடைய கணவன் ஒரு மகத்தான தேவனுடைய மனிதனாயிருந்தான். அவள் ஒரு பிள்ளையோடு, ஒரு விதவையாயிருந்தாள். அவள் ஒரு கைப்பிடி அளவு ஆகாரத்தை மாத்திரமே உண்டாள், ஆனால் அது போதுமானதாயிருந்தது, அது மாத்திரமே அவளுக்குத் தேவைப்பட்டது. தேவனுடைய கரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவள் மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் ஒரு கைப்பிடி ஆகாரத்தினால் ஜீவித்தாள். அவள் பலவீனமடைந்தாள்.
118292 அவள் அன்று காலை இரண்டு விறகுகளை எடுத்து, அவைகளை உடைத்து ஒன்று சேர்த்து வைத்தாள். பாருங்கள், இரண்டு விறகுகள் சிலுவையாகும். பார்த்தீர்களா? உடைக்க…அவள், “நான் இரண்டு விறகுகளை பொறுக்கப் போகிறேன்” என்றாள். அவள் ஒருபோதும், “நான் ஒரு கைப்பிடி நிறையப் பொறுக்கப்போகிறேன்” என்று கூறவேயில்லை, இப்பொழுது, இரண்டு விறகுகளை மாத்திரமே பொறுக்கிக் கொண்டிருக்கிறேன். அதுதான். அடையாளத்தைப் பார்த்தீர்களா? 293 ஆம், பண்டைய பழமையான முறை… இப்பொழுது நெருப்பைக் கொளுத்துவதற்கான வழி, மரக்கட்டைகளை எடுத்து, அவைகளை நடுவில் வைத்து எரிப்பதாகும். நான் முகாமிடச் செல்லும்போது, நான்…இரவு நேரத்தில் மலைகளில் உறைபனி படாதபடிக்கு காக்க, நான் ஒரு மரக்கட்டையை இந்த பக்கமும், ஒரு மரக்கட்டையை இந்த பக்கமும் வைக்கிறேன். இரவு நேரத்தில் முனைகளை மேலே தள்ளிக் கொண்டேயிருப்பேன், நீங்கள் மேலே வரும்போது, அது அந்தவிதமாக எரிகிறது, பாருங்கள், சிலுவையினூடாக.
119294 “என்னிடத்தில் இரண்டு விறகுகள் உள்ளன. இந்த மாவினைப் பிசைந்து, இந்த கைப்பிடியளவு மாவில், நான் அப்பம் செய்யப் போகிறேன், எனக்காகவும், என் மகனுக்காகவும் ஒரு அடையை செய்யப் போகிறேன். நாங்கள் அதைப் புசித்து மரிக்கப் போகிறோம்.” அவள் உண்மையாகவே பலவீனத்தில் இருந்தாள், அவள் அப்படித்தானே? அவள் கூறினாள்…அவள் திரும்பி நடக்கத் துவங்கினாள். ஓ, அந்த உஷ்ணமான காலை! ஓ, அது ஒன்றுமேயில்லாமல் இவ்வளவு காலமாக இருந்தது. எல்லாமே…தண்ணீர் இல்லை, ஜனங்கள் கூச்சலிடுகிறார்கள், ஜனங்கள் மரித்துக் கொண்டிருக்கிறார்கள், எங்கும், எந்த இடத்திலும் கடன் வாங்க முடியாது. அவள் பாதையின் முடிவில் இருந்தாள். அவள் தன்னுடைய பலவீனத்தில் இருந்தாள். அவள், “அதை எனக்காகவும், என் மகனுக்காகவும் நான் சுடப் போகிறேன், அதன்பின்னர் நாங்கள் புசித்து மரித்துப்போவோம்” என்றாள். எனவே அவள் திரும்பி, அவள் கூறினாள்… 295 “ஒரு நிமிடம்!” அவள் திரும்பிப் பார்த்தாள். அந்த வயோதிக சுருங்கின முகம் அங்கே வாசலில் சாய்ந்து கொண்டு, “முதலில் போய் எனக்காக ஒரு சிறு அடையை உண்டாக்கி, அதை என்னிடத்தில் கொண்டு வா” என்றான். ஓ! “உம்முடைய கரத்தில் கொஞ்சம் தண்ணீரையும், ஒரு துண்டு அப்பத்தையும் கொண்டு வா, ஏனென்றால் கர்த்தர் உரைக்கிறதாவது!” என்றான். ஓ, என்னே, அதுவே அவளை செய்ய வைத்தது. ஓ, என்னே! அவள் வைத்திருந்த அந்த சிறிதளவை, பாருங்கள், அவள் அதை தேவனுக்கென்று அர்ப்பணித்தாள். அது எஞ்சியுள்ள நேரத்தில் அவளுக்கு உணவளிக்க போதுமானதாக இருந்தது. ஆம். பாருங்கள், அவள் பலவீனமாயிருந்தபோது, அப்பொழுது அவள் பலமுள்ளவளாயிருந்தாள்.
120296 ஒருவள் ஒரு பாத்திரத்தை சிறிது எண்ணெயோடு வைத்திருந்தாள். அவளிடத்தில் ஒன்றுமே இல்லாதிருந்தது, அவளுடைய இரண்டு குமாரர்களும் அடிமைகளுக்காக விற்கப்படப்போகிறார்கள். இந்தச் சிறிய எண்ணெய்ப் பாத்திரத்தோடு அவளால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. அது மிக அதிகமாக இல்லை, அவள் முடிவில் இருந்தாள். எலியா அவளிடம், “உன் வீட்டில் உனக்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டான். “ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய்” என்றாள். மேலும், “உன்னுடைய அண்டை வீட்டாரிடம் போய், அவைகளை ஏராளமாக கடன் வாங்கு” என்றான். 297 பாருங்கள், அது சம்பவிப்பதற்கு முன்பே ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். ஊம்? ஆயத்தமாகுங்கள்! தாவீது அந்த முசுக்கட்டை செடியில் அந்த சத்தத்தைக் கேட்டான். எலியா உள்ளங்கை அளவுள்ள ஒரு மேகத்தை கண்டு, “நான் பெருமழையின் இரைச்சலைக் கேட்கிறேன்” என்றான். தேவனால் சில வெற்றுப் பாத்திரங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியுமானால் நலமாயிருக்குமே! அது உண்மை. அவன், “அவைகளை வீடு முழுவதும் நிரப்புங்கள்” என்றான். ஆமென்! 298 தேவன் என்ன விரும்புகிறார் என்று பார்த்தீர்களா? தேவனுக்கு வெறுமையான பாத்திரங்கள் இருக்க வேண்டும். கவனியுங்கள்! நாம் பீப்பாய் முடிவில் இருக்குமளவிற்கு நாம் அதிகமான உபதேசங்களையும், அதிக மதசம்பந்தமான அர்த்தமற்றதையும் உடையவர்களாயிருந்து வந்தோம். ஒரே ஒரு காரியம் மாத்திரமே விடப்பட்டிருக்கிறது, தேவனிடத்திற்கும் அவருடைய வார்த்தைக்கும் திரும்புதல். நீங்கள் அதைச் செய்தால், வெறுமையான சில பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களிடத்திலிருந்து எல்லா மெத்தோடிஸ்டுகளையும், அவர்களிடத்திலிருந்து எல்லா பெந்தெகொஸ்தேயினரையும், அவர்களிடத்திலிருந்து எல்லா பாப்டிஸ்டுகளையும் வெளியே எடுத்துப்போட்டு, அவைகளை பாத்திரங்களாக, வீட்டில் வைக்கவும். அதன்பின்னர் இந்தப் பாத்திரத்திலிருந்து எடுத்து ஊற்றத் துவங்குங்கள், ஆமென், ஊற்றத் துவங்குங்கள். 299 அவள் தன்னையும், தன்னுடைய பிள்ளைகளையும், மற்றெல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளவும், எல்லா கடன்களையும் செலுத்தவும் போதுமானதாயிருந்தது. ஏன்? ஏன்? அவளிடம் இருந்த சிறிதளவை, தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்து, இந்த தீர்க்கதரிசியின் வார்த்தையை பின்பற்ற, அவள் சரியாக வெளியே வந்தாள்.
121300 தேவனே, தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொள்ளும், அதாவது வேறெதையோ எடுத்துக் கொள்ளாமல், வெறுமையான பாத்திரங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ளும் ஒரு தீர்க்கதரிசியை எங்களுக்கு அனுப்பும். தேவனால் வெறுமையான பாத்திரங்களை எடுத்து, அதன்பின்னர் தேவனுடைய வார்த்தையை எடுத்து, அதை அந்த நபருக்குள் ஊற்றினால் நலமாயிருக்கும். 301 சிலர், “ஓ, நான் அதைப் பெற்றுக்கொண்டபோது, நான் குலுக்கினேன். நான் அதைப் பெற்றுக்கொண்டபோது, நான் அந்நிய பாஷையில் பேசினேன். நான் ஆவியில் நடனமாடினேன்” என்று கூறுவது அல்ல. அதை மறந்துவிடுங்கள், பாருங்கள், அதை மறந்துவிடுங்கள்! 302 அது வரும் வரையில் அங்கேயே இருங்கள், அவ்வளவுதான், பாத்திரம் நிரம்பும் வரை. அதுதான். அந்தவிதமாகவே நீங்கள் அதைச் செய்ய வேண்டும். ஆம், ஐயா, அதன் எளிமை! “பாத்திரங்கள் நிரப்பப்பட்டன,” நாம் எப்படி அதன்பேரில் தரித்திருக்க முடியும்!
122303 அது சீஷர்கள், ஒரு நாள் குழப்பமடைந்து, இயேசு அவர்களிடத்தில் கூறினார், “இங்கே ஐயாயிரம் பேர் இருக்கிறார்கள்” என்றார். மேலும், “அவர்கள் மயக்கமடைந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பட்டினியாயிருக்கிறார்கள்” என்றார். ஓ, நான் அதன் பேரில் மற்றொரு மணி நேரம் தரித்திருக்க முடியும். “ஐயாயிரம் பேர், பட்டினி கிடக்கிறார்கள்,” கோடிக்கணக்கானோர் பட்டினி கிடக்கிறார்கள்! “அவர்களை அனுப்பிவிடுங்கள்” என்றார். “அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்றார். அதற்கு, “நீங்கள்தான் அவர்களை போஷிக்க வேண்டும்” என்றார். 304 ஓ, என்னே! அவர்கள் கண்டுபிடிக்க முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் சேகரிப்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது, அவர்கள் எல்லாவற்றையும் (எல்லாவற்றையும்) ஒன்று திரட்டியதும் உங்களுக்குத் தெரியும்… “திரட்டப்பட்டது” என்று சொல்வதற்காக மன்னிக்கவும். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் பெற்றிருந்தனர், அவர்கள், “இப்பொழுது, இங்கே, நாங்கள் முழு முகாமினூடாகவும் சென்றுள்ளோம். எங்களிடம் ஒரு பைசா கூட இல்லை, எனவே எங்களால் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது” என்றனர். நீங்கள் பார்த்தீர்களா? “எனவே நாம் இங்கே எல்லாவற்றையும் வைத்துள்ளோம், ஆனால் வெறும் ஐந்து சிறு அப்பங்களும் மிகச் சிறிய இரண்டு மீன்களுமே இந்த குட்டிப் பையனிடத்திலிருந்து எங்களால் கண்டுபிடிக்க முடிந்த ஒரே காரியமாயிருந்தது” தாவீதைப் போல, வனாந்தரத்திலிருந்து வெளியே வந்தான். “எங்களிடம் உள்ளதெல்லாம் அவ்வளவுதான். அதைத்தான் எங்களால் பெற்றுக்கொள்ள முடியும். நாம் நம்முடைய அறிவின் முடிவில் இருக்கிறோம். யோவானே, நம்மால் வேறொன்றும் செய்ய முடியாது.” பேதுரு, “அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும். அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும். நாம் முடிந்தவரை நம்முடைய அறிவுத்திறனுக்கு ஏற்றவாறு செய்துவிட்டோம். அந்த ஆகாரத்தை மாத்திரமே நாம் பெற்றுள்ளோம்” என்றான்.
123305 சரி, என்னால் ஒரு சிறு வேத வாக்கியத்தை எடுத்துக்கொள்ள முடியும், அப்போஸ்தலர் 2:38, அதுதான் நமக்குத் தேவை, அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இதை, அதை, மற்றதைக் குறித்து, வேதபாட கருத்தரங்குகளில் கற்க வேண்டியதில்லை, அதையே எடுத்துக் கொள்ளுங்கள். ஆம், அதை எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்குத் தேவை அவ்வளவுதான், “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது நீங்கள் எண்ணெயினால் நிரப்பப்படுவீர்கள்” என்றார். பார்த்தீர்களா? காலியாகி, அந்த ஒன்றிற்காக ஆயத்தமாகுங்கள், அவ்வளவுதான் உங்களுக்கு தேவை. அதில் ஒரு துளியை வைத்தால், அது நிரம்புவதைக் கவனியுங்கள்.
124306 உங்களுக்குத் தெரியும், ஒவ்வொரு பாத்திரத்திலும் ஒரு துளியை வைக்க அந்த பாத்திரத்தில் போதிய அளவு இல்லை. ஒருக்கால் அவனுடைய விரலை இந்தவிதமாக எடுத்து, அதை இந்தவிதமாக ஒவ்வொன்றாக விட்டுவிட்டு; திரும்பிப் பார்த்தபோது, அது நிறைந்திருந்தது. அதை கீழே போட்டுவிட்டு, பாருங்கள், அதுதான் அவனுக்கு தேவையாயிருந்தது, ஏனென்றால் அது ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெயாயிருந்தது. 307 சில வேதபாட கருத்தரங்கு அனுபவத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். தேவனுடைய வார்த்தையை எடுத்து, அதை அங்கே போடுங்கள், அது எப்படி நிரப்பப்படும் என்று பாருங்கள். 308 அவர், “சரி, நாம் எந்தவிதமான ஒரு துளியை உண்டாக்க வேண்டும்? நாம் ஒரு வேளை சங்கீதங்களிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.
125309 நான் உங்களுக்கு சொன்னதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், “நீங்கள் மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது அந்தத் துளியிலிருந்து நீங்கள் நிரப்பப்படுவீர்கள்.” அதை அங்கே இடுங்கள், அப்பொழுது அந்த துளியிலிருந்து நீங்கள் நிரப்பப்படுவீர்கள். அதுவே பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு உபயோகித்த துளி. அந்த துளியைத்தான் பவுல் உபயோகித்தான். அந்த துளியைத்தான் எல்லா சீஷர்களும் உபயோகித்தனர். அதில் மீதமுள்ளவை சேர்க்கப்படும், நீங்கள் அந்த துளியை எடுத்து, அதை தொடர்ந்து பின்பற்றினால், அதன் மீதியானது சரியாகிவிடும். 310 பலவீனமடையுங்கள்! வெறுமையாக்குங்கள்! எல்லாவற்றையுமே வெறுமையாக்குங்கள், அது முதற்கொண்டு அது தொடர்ந்து சொட்டிக் கொண்டேயிருக்கும், எஞ்சியுள்ள சொட்டை தேவன் செய்வார். நீங்கள் அதைச் செய்யுங்கள். நீங்கள் உங்களுடைய முழங்காற்படியிட்டு, உங்களுடைய முழு இருதயத்தோடு அதை ஏற்றுக்கொள்கிறீர்கள். இப்பொழுதே உங்களுடைய இருதயத்தில் சொட்டிவிட்டு, “தேவனே, நான் அதை என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். தேவன் மீதியுள்ள சொட்டுகளை கவனித்துக்கொள்வார், அது நிரப்பப்படும், “நீங்கள் பரிசுத்த ஆவியினால்…நிரப்பப்படுவீர்கள்.”
126311 இப்பொழுது அவர்களிடம் ஐந்து சிறு அப்பங்களும், இரண்டு மீன்களும் இருந்தன. எனவே அவர்கள் என்ன செய்யப் போவதாயிருந்தனர்? எனவே அவர்கள் வந்து, “இவ்வளவுதான் நாம் ஒன்று சேர்க்க முடியும். நாம் முடிந்தவரை நம்முடைய அறிவுத்திறனுக்கு ஏற்றவாறு செய்துவிட்டோம். நாம் வேறொரு அப்பத் துண்டை எங்குமே காணமுடியாது, அங்கே யாருமே இல்லை. இந்த சிறு பையன், அநேகமாக சித்தரித்துக் கொண்டிருக்கிறான்…சோம்பேறித்தனமாக விளையாடிக் கொண்டு, இன்று காலை பள்ளிக்குச் செல்ல புறப்பட்டுவிட்டு, பள்ளிக்குச் செல்லாமல் இங்கு மீன்பிடிக்கச் சென்றான். நாங்கள் அவனை இங்கே சிற்றோடையில் கண்டுபிடித்தோம், அவன் பேசுவதைக் கேட்க வந்திருந்தான். மேலும், அங்கே, அவன் ஐந்து அப்பங்களை வைத்திருந்தான்” என்றனர். அந்த சிறு பையனுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்! ஆம், ஐயா. மேலும், “நாம்…ஜீவனின் வரிசையில் நாம் பெற்றுள்ள ஒரே காரியம் இங்கே இந்த சிறு துளிதான்” என்றனர். கூறிதோ… 312 இயேசு, “அது போதும். அவைகளை இங்கே கொண்டு வாருங்கள்” என்றார். பார்த்தீர்களா? “அதை இங்கே கொண்டு வாருங்கள், நான் அதை பெற்றுக்கொள்ளட்டும். அந்த சிறு துளியை நான் விட்டுவிடட்டும், மீதியை நான் பார்த்துக் கொள்வேன். இப்பொழுது, இந்த துளியிலிருந்து நான் உனக்கு அளிக்கும்போது, நீ தொடர்ந்து விடுதலையாக்கி கொண்டேயிருப்பாய்.”
127313 நீங்கள் ஒவ்வொருவரும் இக்காலையில் அப்போஸ்தலர் 2:38-ன் துளியை, உங்கள் இருதயத்தில் எடுத்துப் பாருங்கள், அங்கிருந்து எடுத்து, அவர் உங்களுக்கு ஜீவ அப்பத்தைப் பிட்கத் துவங்குவதைக் கவனியுங்கள். நீங்கள் மனந்திரும்பி, உங்களுடைய பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அதன்பின்னர் பரிசுத்த ஆவியானவர் உள்ளே நுழையவில்லையா என்று பார்த்து, இதன் மேல் தொடர்ந்து சொட்டிக் கொண்டு, அதன் மேல் சொட்டிக் கொண்டு, இங்கே விழுந்து, அங்கே விழுந்து, அங்கே விழுந்து, அங்கே பரிசுத்த ஆவியின் நிரப்புதல் இருக்கும்! சரியே! 314 நீங்கள் வேதபாட கருத்தரங்குகளுக்கு செல்ல வேண்டியதில்லை. நீங்கள் புத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அடையாளம் கண்டுகொள்வதேயாகும். தேவன் உங்களைப் பற்றிப்பிடித்துக் கொள்ளட்டும், அவர் மற்ற காரியங்களை கவனித்துக்கொள்வார். 315 சரி, அப்பொழுது அந்த சத்தம், “அவர்களை இங்கே கொண்டு வாருங்கள்” என்றது. அதைத்தான் தேவன் இந்தக் காலையில் ஒரு கூட்ட வெறுமையான பாத்திரங்களை அவரிடத்தில் கொண்டுவர விரும்புகிறார். மீதியை அவர் பார்த்துக் கொள்வார். ஆம், ஐயா.
128316 குருடான பர்திமேயு வாசலருகே அமர்ந்து, கந்தையுடுத்தினவனாய், குளிரில், ஓ, அவனுடைய பலவீனமான நேரத்தில், அவன் ஒரு சத்தத்தைக் கேட்டபோது, “அவனை இங்கே கொண்டு வாருங்கள்” என்றார். அது உண்மை, அது, சில நேரங்களில், அது உங்களுடைய பலவீனமான நேரமாய் இருக்கும். 317 அங்கே மரியாள் கல்லறையண்டை, இருதயம் நொறுங்குண்டவளாய் இருந்தாள், அவளுடைய குழந்தை, அவளுடைய மகன் கொல்லப்பட்டிருந்தார், எல்லாமே, எல்லா நம்பிக்கைகளும் அற்றுப் போயிருந்தன. அவள் அவருக்கு தைலமிடச் சென்றாள், அவருடைய சரீரமும் கூட அங்கே இல்லை. அப்பொழுது அவள், “ஸ்திரீயே ஏன் அழுகிறாய்?” என்று ஒரு சத்தத்தைக் கேட்டாள். 318 அவள், “அவர்கள் என் ஆண்டவரைக் கொண்டு சென்றுவிட்டனர். நான்…” என்றாள். பரிதாபமானவளான, அவளுடைய பிள்ளை அவமானப்படுத்தப்பட்டிருந்தார்; அவரை நிர்வாணமாக்கி, அங்கே அவரை ஒரு சிலுவையில் தொங்கவிட்டு, அவரை சிலுவையில் அறைந்து, அங்கே அவரை ஆணியடித்தனர், பரிசுத்த ஆவியானவர் தன் மேல் நிழலிட்டு இந்த பிள்ளையை கொண்டு வந்தார் என்பதை அவள் அறிந்தபடியே, அவர் தன்னை மேசியா என்று உரிமை கோரினார். அது தேவனுடைய பிள்ளையாயிருந்தது. அவள் அவருடைய கிரியைகளையும், எல்லாவற்றையும் கண்டிருந்தாள், பலவீனமான தருணத்தில் சரியாகப் பார்த்தாள்…
129319 அங்கே இயேசுவானவர் தீமைக்கு எதிராக நின்றார், அந்த ஸ்தாபனங்களுக்கு எதிராக நின்று, அந்த பரிசேயர்களுக்கு எதிராக நின்றார்; பலவீனமடைந்து, தம்மை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவங்களை சுமந்து சிலுவையின் மேல் ஒரு பாவியைப் போல மரித்தார். சங்கீதங்கள், அவர்கள் விசுவாசித்த அதே தீர்க்கதரிசிகள், (நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்) மேற்கோள் காட்டியுள்ளனர் அவர் கல்வாரியில் கூறின அதே வார்த்தைகள், அவர்கள் அதைக் காணத் தவறினர். அவர்களுடைய மகத்தான சபை… 320 “என் தேவனே,” தாவீது, “என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்றான். சங்கீதம் 22, “என்னுடைய எலும்புகளையெல்லாம், அவர்கள் என்னை நோக்கி பார்க்கிறார்கள், அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. அவர்கள் தங்களுடைய தலையை அசைத்து, ‘அவர் மற்றவர்களை நம்பியிருந்தார்…அவர்—அவர் மற்றவர்களை இரட்சித்தார், அவரால் தம்மை இரட்சித்துக் கொள்ள முடியவில்லை’” என்கின்றனர். தீர்க்கதரிசிகள் கூறியிருந்த எல்லாக் காரியங்களும் அங்கே இருந்தன! இயேசுவானவர் மரித்து, அந்த வார்த்தையைப் பற்றிக் கொண்டு, தம்மையே ஒப்புக்கொடுத்தார். தேவன், இம்மானுவேல் மிகவும் பெலவீனமானவராகி, அவர் தம்மை மரணத்திற்கும், கல்லறைக்கும், அவருடைய ஆத்துமாவை பாதாளத்திற்கும் ஒப்புக்கொடுத்தார். பலவீனம்! ஆனால் அதிலிருந்து முழுமையான சரணாகதி…அந்த ஈஸ்டர் காலையில், மிகத் தாழ்விலிருந்து இருந்து மேலே எழும்பி வந்தார். 321 அவர் உன்னதமானவராயிருந்து, தாழ்ந்தவரானார். அவன் மிகவும் கீழ்த்தரமான ஜனங்களிடத்திற்கு வந்தார், மிகவும் கீழ்த்தரமான நகரத்திற்குச் சென்றார். நகரத்திலேயே மிக குள்ளமான மனிதன் அவரை குனிந்து பார்க்க வேண்டியதாயிருந்தது. அங்கிருந்து மரணத்துக்கும், மரணத்திலிருந்து கல்லறைக்கும், கல்லறையிலிருந்து பாதாளத்துக்கும்; மிகத் தாழ்வான நிலைக்கு, நினைத்துப் பார்க்கக் கூடிய மிக இழிவான நரகத்திற்கு, அவர் அதற்குச் சென்றார். 322 ஆனால் அதன்பின்னர், அங்கிருந்து, தேவன் அவரை எழுப்பத் துவங்கினார். பரதீசினூடாக, அங்கிருந்து கல்லறைக்கு, கல்லறையிலிருந்து மகிமைக்கு, எனவே அவர் பரலோகத்தைக் காணும்படி கீழ் நோக்கிப் பார்க்க வேண்டும். பரலோகத்தில் தம்முடைய சிங்காசனங்களை உயர்த்தினார்!
130323 இருதயம் நொறுங்குண்ட அந்தத் தாய், இதை அறியாமல், அங்கே நின்று கொண்டு, “அவர்கள் என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், எங்கே என்று எனக்குத் தெரியாது” என்றாள். அவள்…அவளுக்கு எப்போதும் இருந்ததிலேயே மிகவும் பலவீனமான நேரம். அவளுடைய—அவளுடைய கர்த்தர் போய்விட்டார். அவர்கள் அவரை சிலுவையில் அறைந்திருந்தனர், அதே சமயத்தில் அவர் இந்த…அங்கே அந்த ஜனங்களுக்கு முன்பாக அவரை நிர்வாணமாக தூக்கிலிட்டதன் அவமானத்தில் அவரை சிலுவையில் அறைந்து; அவரைப் பக்கவாட்டில் ஈட்டியிட்டு, இரத்தம் வடிய, அவர் சிலுவையின் மேல் கூப்பிடுவதைக் கேட்டு, பூமி அசைவதைக் கண்டு, முழு பரலோகமும் அவர் மரித்ததை அடையாளங் கண்டுகொண்டது. அவரை கீழே விரைத்துப்போய், குளிர்ந்துபோய், கல்லறையில் கிடத்தினார். அவள், “என்னுடைய அருமைப் பிள்ளைக்கு நான் செய்யக் கூடிய கடைசி மரியாதை என்னவெனில், வந்து அவருக்கு தைலமிடுதல், இப்பொழுது அவர்கள் அவரைக் கொண்டு சென்றுவிட்டனர்” என்று எண்ணினாள். அவள் அங்கே நின்றுகொண்டு அழுதுகொண்டிருந்தாள், அந்த சிறிய தாய் அங்கே நின்றுகொண்டு அழுதுகொண்டிருந்தாள். ஓ, மிகவும் பலவீனமான தருணம்!
131அவளுக்குப் பின்னால் இருந்த சத்தமோ, “ஸ்திரீயே, நீ ஏன் அழுகிறாய்?” என்பதாயிருந்தது. 324 அது கல்லறையின் பாதுகாவலர் என்று அவள் எண்ணி, “ஓ, அவர்கள் கொண்டு சென்றுவிட்டனர்…” என்றாள். அவளால் திரும்பவும் கூட முடியவில்லை, அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள். அவள், “நான் இப்பொழுது இந்த மூன்று பகலும் இரவும் விழித்திருந்து வருகிறேன். நான் நின்று சிலுவையில் அறையப்படுதலைக் கவனித்தேன், தேவ குமாரன் என்று நான் அறிந்துள்ள என்னுடைய சொந்த அன்பானவரை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் இருந்தார் என்பதை நான் அறிவேன்! அதே சமயத்தில் அவர்கள்…” என்றாள். (வேறு பக்கமாக நோக்கிப் பார்க்கையில், அவரும் பின்னால் இருக்கிறார்.) “அவர்கள் அவரைக் கொண்டுபோய் சிலுவையில் அறைந்தனர். அவர் மரித்தோரை கல்லறையிலிருந்து உயிரோடெழுப்பியதை நான் கண்டேன். அவர் அற்புதங்களுக்குப் பின் அற்புதங்களைச் செய்வதை நான் கண்டேன். நான் பரிசுத்த ஆவியை அறிந்திருக்கிறேன்… தேவன் என் இருதயத்தை அறிந்திருக்கிறார். நான் குற்றமற்றவனாயிருந்தேன். புருஷனையும் அறியாமல் பரிசுத்த ஆவியானவர் எனக்கு அந்தக் குழந்தையைத் தந்தார். அது உண்மை என்பதை நான் எப்படி அறிவேன்! மேலும் நான் அவரை அவமானப்படுத்தியதைக் கண்டேன்…அவருடைய ஆடைகளை அவரிடமிருந்து உரித்து, அங்கே அவரைத் தொங்கவிட்டு, அவரைக் வாரினால் அடித்தனர். அவர் மிகவும் பயங்கரமான மரணம் அடைந்தார். நான் அவரை நேசிக்கிறேன், அவருக்கு என்ன செய்திருந்தாலும் என்னால் நேசிக்காமல் இருக்க முடியாது. நான் இன்னமும் அவரை அடக்கம் செய்ய விரும்புகிறேன், நான்—நான் அவருக்கு சரியான அடக்கத்தை கொடுக்க விரும்புகிறேன், அவர்கள் அவரைக் கொண்டு சென்றுவிட்டனர். நான் பல நாட்களாக இருந்து வருகிறேன், என் இருதயம் நொறுங்கிப் போய்விட்டது. நான் இந்த நிலையில் தான் நின்று கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னுடைய கர்த்தரோடு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நான் அறியேன்.” 325 அவர், “மரியாளே” என்றார். அப்பொழுது அவள் பலமுள்ளவளாயிருந்தாள். ஆமென்! “நான் அவர்களை கலிலேயாவில் சந்திப்பேன் என்று போய் என் சீஷர்களிடத்தில் சொல்லுங்கள்” என்றார். ஓ, என்னே! 326 அப்பொழுது பெலவீனத்தில் நாம் பெலனடைகிறோம். நீங்கள் பெலவீனமாயிருக்கும்போது, அப்பொழுதுதான் நீங்கள் பெலனடைவீர்கள்.
132327 பேதுரு அங்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த பிறகு, அவன்…அவனுடைய தொழில் மீன் பிடிப்பதாக இருந்தது. நான் அவனுடைய தொழிலை ஒருவிதமாக விரும்புகிறேன். எனவே அவன் அங்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தான், அவன் மிகவும் சோர்வடைந்து, அவன் கிறிஸ்துவை மறுதலித்திருந்தான் என்பதை அறிந்திருந்தான். ஓ, என்னே! தீர்க்கதரிசி அங்கு நின்று, “பேதுருவே, நீ என்னை நேசிக்கிறாய் என்று நீ கூறுகிறாயா?” என்று அவனிடம் கூறுவதைக் கேட்டேன். 328 அவன், “ஓ, கர்த்தாவே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்” என்றான். அவன், “நான் உம்மை நேசிக்கிறேன். நான் உமக்காக மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான். 329 அவர், “பேதுருவே, நீ அதை பொருட்படுத்திக் கூறுகிறாய் என்று நீ நினைக்கிறாய், ஆனால் நீயோ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய்… சேவல் மூன்றாம் முறை கூவுவதற்கு முன்னே நீ என்னை மறுதலிப்பாய். பாருங்கள், சேவல் கூவுவதற்கு முன்னமே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய்” என்றார். 330 அப்பொழுது அது நிறைவேறுவதைக் காணும்போது, அவன் அங்கே நின்று, “எனக்கு அவரைத் தெரியாது. இல்லை, அங்குள்ள பெந்தேகோஸ்தேக்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது” என்றான்.
133331 பிரசங்கிப்பதை விட்டுவிட இது நேரமல்ல, என் கைக்கடிகாரம் ஏதோ செய்கிறது. [சகோதரன் பிரான்ஹாம் அவர்களுடைய கடிகாரத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது—ஆசி.] பாருங்கள்? “எனக்கு—எனக்குத் தெரியும்…” என்றார். நான்—நான் இப்பொழுது நிறுத்த வேண்டும், ஆனால் என்னால்—என்னால் இந்த நேரத்தில் நிறுத்த முடியாது, பாருங்கள், எனவே நான் இதை ஒரு நிமிடத்தில் முடிக்க வேண்டும். 332 மேலும், “நான்—நான்—நான்—நான் அவரை மறுதலிப்பதை நான் அறிவேன். பிலாத்துவின் முன்னிலையில் நான் அவரை மறுதலித்தேன். அந்த சிறிய ஸ்திரீ என்னிடத்தில் வந்து, ‘நீர் அவர்களில் ஒருவராயிருக்கவில்லையா?’ என்று கேட்டபோது, நான் அவரை மறுதலித்தேன். ‘இல்லை!’ சபிக்கவும் கூட செய்துவிட்டேனே!” ஓ, அவன் ஒரு பயங்கரமான நிலையில் இருந்தான். “நான்—நான்—நான்…” என்று கூறினாள்…அவள் மறுதலித்தாள்…அவன் அவரை மறுதலித்தான். இயேசு நின்று நோக்கி பார்ப்பதை அவன் கண்டிருந்தான், அப்பொழுது சேவல் கூவியபோது, பேதுருவை நோக்கிப் பார்த்தார். அவன் வெளியே சென்றான். ஓ, அவன்தானே திடனற்றுப்போய், “நான் ஏன் இனிமேல் உயிரோடிருக்க வேண்டும்?” என்று கேட்டான். 333 அதன்பின்னர், அதுமட்டுமின்றி, அவன், “நான் திரும்பிச் சென்று மீண்டும் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று நான் நினைக்கிறேன். என்னால் இனி பிரசங்கிக்க முடியாது, எனவே நான் திரும்பிச் சென்று மீன் பிடிக்கத் துவங்குவேன்” என்று கூறினான். அவன் இரவு முழுவதும் தன்னுடைய வலைகளை வீசியெறிந்தும், மீன் கிடைக்கவில்லை. அவன் ஒரு பலவீனமான நிலையில் இருந்தான், அவனிடம் ஒன்றுமே இல்லாதிருந்தது, தான் திடனற்றுப் போய், தன்னுடைய திறமைகளின் முடிவை அடைந்தான்.
134334 பாருங்கள், அவன் தன்னை ஒரு மகத்தான மனிதன் என்று எண்ணி, பிரதான ஆசாரியனுடைய மகனின் காதுகளை இந்த விதமாக வெட்டிவிட்டான். பாருங்கள், அவன் ஒரு மகத்தான நபர் என்று அவன் நினைத்தான். அவன் ஏதோ ஒன்றைக் கற்றுக் கொண்டான் என்பதை, நீங்கள் அறிவீர்கள். ஆனால் அவனுக்கு ஒன்றுமே தெரியாது! அவன் அதைக் குறித்த எல்லாவற்றையும் மறக்க வேண்டியதாயிருந்தது. 335 அவன் அங்கே வெளியே இருந்தான், “சரி, எனக்கு ஒரு காரியம் தெரியும், நான் ஒரு மீன் பிடிப்பவன். என்னால் மீன் பிடிப்பதனால், இன்னமும் ஜீவனம் செய்ய முடியும்” என்றான். அவன் இரவு முழுவதும் வலையை எறிந்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஓ, என்னே ஒரு சோர்வு! ஒவ்வொரு முறையும் அவன் வலையை இழுக்கும்போது, ஒரு வெறுமையான வலையே இருந்தது. அவன் மிகவும் சோர்வுற்றிருந்தான்! அவன் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தான், “நான் இந்தப் படகில் இருந்து குதிக்க வேண்டும் என்று உணர்கிறேன். எப்படியாயினும், நான் ஒன்றுக்கும் பயனில்லை” என்றான். அதற்கு அவர், “பிள்ளைகளே, உங்களிடம் மீன் உண்டா?” என்று கேட்டார். 336 கரையை நோக்கிப் பார்த்தபோது, அங்கே ஒரு மனிதன் நின்றார். அப்பொழுது அவன், “இல்லை, நாங்கள் இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை. நான் ஒரு மீனவன் என்றே எண்ணியிருந்தேன்” என்றான். “சீமோனே, அது நீதானே?” 337 “ஆம். பாருங்கள், நான் இரவு முழுவதும் பிரயாசப்பட்டு ஒன்றுமே அகப்படவில்லை. ஓ, நான்—நான்…இங்கே எங்களிடம் மீன்கள் இல்லை” என்றனர். அதற்கு அவர், “சரி, உன் வலையை மறுபுறத்தில் போடு” என்றார். 338 “நாம் செய்துவிட்டோம்…என்ன?” அப்பொழுது அவன்…“அப்புறத்திலா? நாங்கள் அதை செய்து கொண்டிருக்கிறோம்!” “அதை மறுபுறத்தில் போடுங்கள்.” 339 அவன் தன்னுடைய வலைகளை வீசி, அவன் இழுத்தான். அவர் கூறினார்…அப்பொழுது அவன் பலமுள்ளவனானான். ஓ, என்னே! அவன் தன்னுடைய பழைய மீன் அங்கியை எடுத்து, அதை அவனைச் சுற்றிப் போட்டுக் கொண்டு, “சகோதரர்களே, அது யார்!” என்றான். அவர்கள் தங்களால் இயன்றவரை வேகமாக படகுகளை ஓட்டிச் செல்லும் முன்னரே, அவன் மற்றவர்களை கடந்து கரையில் சேர்ந்துவிட்டான், அவன் ஒரு மீன் அங்கியுடன், அவர்களைக் கடந்து, கரையை அடைந்தான். ஏன்? அவன் பலமுள்ளவனாயிருந்தபோது. அவன் பலமுள்ளவனாயிருந்தபோது, அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, ஆனால் அவன் பலவீனமடைந்தபோது, அப்பொழுது அவன் பலமடைந்தான். ஆம், ஐயா.
135340 ஓ, வெறுமையான மானிட பாத்திரங்களை எடுத்து, அவைகளைக் கொண்டு உலகத்தை அசைப்பதே தேவனுடைய தலைமைத்திறம். (இப்பொழுது, நாம் சிறிது நேரம் சென்று பார்ப்போம்.) பெந்தெகொஸ்தே, பெந்தெகொஸ்தே போல, அவர் என்ன செய்தார்? அவர்கள் அனைத்தையும் வெறுமையாக்கிட பத்து நாட்கள் பிடித்தன. ஆனால் அவர்கள் யாவரும் தங்களுடைய பாத்திரங்கள் மேலே திருப்பியிருந்த நிலையில் அங்கே நின்று கொண்டிருந்தபோது, தேவன் தாமே எடுத்து அவர்களை நிரப்பினார். அவ்வளவுதான்! அவர்கள் உலகத்தை அசைத்தனர்; தம்மை அவர்களுக்குள் ஊற்றினார். 341 அதுவே இன்றைய தேவையாயுள்ளது. இன்றைக்கு அதுதான் நமக்குத் தேவை, வெற்றுப் பாத்திரங்கள், ஆம் ஐயா, அப்பொழுது தேவனால் அவைகளை நிரப்ப முடியும். நீங்கள் அவைகளை எடுத்துக் கொள்ள முடியாது…நான் இங்கே நிறைய விட்டுவிட வேண்டும். அவைகள் ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும் வரையில் தேவனால் அவைகளை உபயோகிக்க முடியாது. நீங்கள் இறையியல் பயிற்சியினால் நிறைந்திருந்தால், தேவனால் உங்களை உபயோகிக்க முடியாது. தேவன் வெறுமையான பாத்திரங்களை உடையவராயிருக்க வேண்டும். எனவே அவர் அவைகளை நிரப்ப முடியும்.
136342 இப்பொழுது, எலியா, “போய் சில பாத்திரங்களை வாங்கி, ஏராளமான எண்ணெய்யை கடன் வாங்கி, அதன் பேரில் ஒரு நல்ல விற்பனை விலையை நம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லையா என்று நாம் பார்ப்போம், நீங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பெற்றுக் கொண்டால், நீங்கள் அண்டை வீட்டாருக்கு அதைப் போன்று திருப்பிக் கொடுக்கலாம்” என்று கூறவில்லை. அவன், “ வெறுமையான பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அது மாத்திரமே உங்களுக்குத் தேவை” என்றான். 343 அதுதான் பெந்தெகொஸ்தே நாளில் இருந்தது, தேவன் அவர்களை நிரப்பும்படியாக அவர்கள் வெறுமையான பாத்திரங்களை உடையவர்களாயிருந்தனர். சகோதரனே, இந்த நாள் அதைக் கோருகிறது. இந்த நாள்; அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் அதைப் பெற்றுக்கொள்வோம் அல்லது அழிந்து போவோம். நான் இப்பொழுது முடிக்கப் போகிறேன், கவனியுங்கள். நாம் அதை பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அழிந்து போக வேண்டும். ஆம், ஐயா.
137344 நாம் பெற்றுள்ள பெரிய மதசம்பந்தமான இயந்திரங்கள், பெரிய சபை இயந்திரங்கள் கரிமில வாயு படிந்துவிட்டன, அது அவர்களுக்குள் ஒரு ஆவிக்குரிய தடங்கலைப் பெற்றுள்ளது. சகோதரன் காலின்ஸ் மற்றும் சகோதரன் ஹிக்கர்ஸன் இங்கே எங்கோ இருக்கிறார்கள். இயந்திரக் கைப்பிடித்தண்டு மோசமாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஏதோ தவறு நடந்துள்ளது. அவர்கள் தவறான விதமான எரிபொருளை உபயோகிக்கிறார்கள், அது முழுவதும் கரிமிலவாயுத்தூளினால் நிரப்பப்பட்டிருக்கிறது. அவர்கள் பரிசுத்த ஆவியானவருக்குப் பதிலாக வேதபாட கருத்தரங்கு அனுபவத்தைப் பயன்படுத்துகின்றனர். 345 தேசத்தின் நம்முடைய மகத்தான எழுப்புதல்கள், நம்முடைய மகத்தான மனிதர், நம்முடைய சுகமளிக்கும் கூட்டங்கள் யாவும் தோல்வியடைந்துள்ளன. அது தோல்வியடைந்துள்ளன என்பதை நாம் அறிவோம். நம்முடைய உன்னதமான சுவிசேஷகரான பில்லி கிரஹாம், தேசத்தை முன்னும் பின்னும், முன்னும் பின்னும், முன்னும் பின்னுமாக கடந்து வந்ததைப் பாருங்கள். அதனால் என்ன பயன்? ஓரல் ராபர்ட்ஸ், சுகமளிக்கும் கூட்டங்கள் எங்கும் நடைபெற்று வருகின்றன. அது எல்லா நேரத்திலும் மோசமானதாகிக்கொண்டே வருகிறது. 346 ஏனென்றால் அவை யாவும் பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், தேவனுடைய சபை கூட்டங்கள், இந்த வித்தியாசமான ஸ்தாபனங்கள் யாவும் ஒன்று சேர்ந்துள்ளது, அது என்ன? ஒரு மகத்தான பெரிய மதசம்பந்தமான இயந்திரம், தேவன் அதை உங்களுக்காக முழுவதும் கரிமிலவாயுத்தூளினால் நிரப்பியிருக்கிறார். இப்பொழுது அவள், “சக்”, பம்ப், பம்ப், பம்ப், “சக்,” பம்ப், பம்ப், பம்ப் என்று இங்கும் அங்கும் சிறிது சிறிதாக சப்தமிட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் முடிந்துவிட்டாள்! அவள் முடிந்துவிட்டாள்! எரிபொருள் தீர்ந்துவிட்டது. நீங்கள் அதில் தண்ணீரை ஊற்றினீர்கள். எல்லாமே அற்றுப் போய்விட்டன (ஆம், ஐயா), இருபுறமும் டயர்கள் பள்ளமாகிவிட்டன. நாம் ஒரு பயங்கரமான நிலையில் இருக்கிறோம். மதசம்பந்தமான இயந்திரம் நின்றுவிட்டது.
138347 மேலும், சகோதரனே, நரகத்தின் மூடி திறக்கப்பட்டுவிட்டது. அது உண்மை. எல்லாவிடங்களிலிருந்தும் பிசாசுகளின் சக்திகள் கொட்டப்படுகின்றன. அது தேசங்களை ஜெயங்கொண்டுவிட்டது. அது ஆழமாக அழுகிப்போகுமளவிற்கு அது அரசியலை ஜெயங்கொண்டுவிட்டது. அவர்கள் ஸ்தாபனத்தைத் தவிர வேறொன்றையும் அறியாத வரைக்கும் அது சபைகளை ஜெயங்கொண்டுள்ளது. நீங்களோ, “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?” என்று கேட்கலாம். “நான் ஒரு மெத்தோடிஸ்டு.” “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?” “நான்—நான் பெந்தெகொஸ்தேகாரன்.” 348 அது ஒரு பன்றியாகவோ, ஒரு பன்றியாகவோ, குதிரையாகவோ அல்லது ஏதோவொன்றாகவோ இருப்பதைக் காட்டிலும், நான் அன்றொரு நாள் கூறினது போல, இதற்கு மேல் அர்த்தம் இல்லை. அதற்கு இதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. நீங்கள் மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள், அதுவரை இல்லை, நீங்கள் முழுமையாக ஆவியானவருக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறீர்கள். நீங்கள் ஆவிக்கு ஒப்புக்கொடுக்கப்படவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் மறுபடியும் பிறக்கவில்லை, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை. நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசலாம், நடுங்கலாம், குதித்து ஓடலாம், எல்லாவிதமான…
139349 பவுல், “என்னால் விசுவாசத்தினால் மலைகளைப் பெயர்க்க முடியும், என்னால் வியாதியஸ்தரை சுகப்படுத்த முடியும், என்னால் வேதாகமத்தை அறிந்திருக்க முடியும், நான் ஒரு வேதாகம கருத்தரங்கிற்குச் சென்று, இந்த காரியங்கள் எல்லாவற்றையும், ஒவ்வொரு காரியத்தையும் கற்றுக் கொள்ள முடியும்” என்று கூறி, “நான் இன்னும் ஒன்றுமில்லையே!” என்றான். அல்லேலூயா! 350 ஓ, என்னே, கெட்டியின் மூடி திறப்பது போலவே! பிசாசுகள் சுற்றித்திரிகின்றன, பிசாசின் வல்லமைகள், கிறிஸ்தவ மார்க்கம் என்ற பெயரோடு, வேதாகமத்தை மாத்திரம் விட்டுவிட்டு, வேத சாஸ்திர உபதேசங்களை, “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதிக்கிறவர்களாயிருக்கிறார்கள். 351 அல்லேலூயா! யார் வல்லமையுள்ளவர், யார் போதிய பலமுள்ளவர், யார் போதிய ஞானமுள்ளவர்? பிரசங்கிமார்கள், மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், இன்னும் பெந்தேகோஸ்தேக்களின் நாமத்தினாலுங் கூட நம்முடைய ஸ்திரீகளின் ஆடைகளை களைந்து வரும் இந்த லேகியோனை அடக்கும் வல்லமை படைத்தவர் யார்?? தங்களுடைய முகங்களை யேசபேலைப் போல வர்ணம் பூசிக்கொண்டு, தங்களுடைய தலைமுடியை குட்டையாக வெட்டிக் கொண்டு, ஆண்களைப் போலவே கால்சட்டையை அணிகின்றனர். நம்முடைய பிரசங்கிமார்கள், அதைக் குறித்து அவர்களிடம் கூறுவதற்கு போதுமான அளவு தைரியமிருப்பதில்லை. பிசாசினால் பீடிக்கப்பட்டவர்கள்! அது அவனுடைய ஆடைகளை அவனிடத்திலிருந்து கிழித்த லேகியோனாயிருந்தது. இந்த கெர்ச்சிக்கிற பிசாசு யார்?
140352 யார் போதிய பலமுள்ளவர்? “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன, நமக்கு பரிசுத்த ஆவி தேவையில்லை” என்று கதறுகிறதை, எந்த விதமான ஒரு—ஒரு ஸ்தாபனம் இந்த ஸ்தாபனங்களின் கல்லறைக் கற்களினூடாக மேலும் கீழும் நடக்கிற அவனை ஜெயங்கொள்ள முடியும்? 353 அந்த பிசாசை யார் அடக்க முடியும்? தேவனே! நாம் அதை ஸ்தாபனத்தினால் செய்ய முடியாது. மதசம்பந்தமான சக்திகளால் நாம் அதைச் செய்ய முடியாது. ஆனால் ஒரு முறை அதைச் செய்த ஒரு சத்தம் இருந்தது, ஆமென், அது அந்த பிசாசுகளை அடக்கி, அவர்களை தங்களுடைய சரியான சிந்தையில் வைத்து, அவர்களுக்கு ஆடைகளை உடுத்திக் கொள்ளச் செய்தது. அதே சத்தம், “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” என்ற ஒரு வாக்குத்தத்தத்தை நமக்கு அளிக்கிறது. நீங்கள் அதை ஒருபோதும் மதசம்பந்தமான எரிபொருளின் கீழ் ஒரு கரிமிலவாய்வினால் பழுதடைந்ததினால் செய்யவேமாட்டீர்கள். நீங்கள் அதை ஒரு ஸ்தாபனத்தில் ஒருபோதும் செய்யவேமாட்டீர்கள். நீங்கள் வெறுமையாகி, பலவீனமாகும்போது, உங்களுடையதையெல்லாம் வெளியே ஊற்றுங்கள், பரிசுத்த ஆவியானவர் உள்ளே வரட்டும், உங்கள் ஒவ்வொரு பாகத்தையும் படபடக்கட்டும், உங்கள் உடலின் ஒவ்வொரு மூடியும் நிரம்பி வழியும்போது நீங்கள் அதைச் செய்வீர்கள். அது மாத்திரமே…அதைச் செய்யுங்கள். நமக்கு ஒரு புதிய ஸ்தாபனம் தேவையில்லை.
141354 ஓ, தேவனே, எங்களுக்கு என்ன தேவையோ, அது இப்பொழுது இங்கே முழுவதும் ஊற்றிக் கொண்டிருக்கிறதை நான் உணருகிறேன். நமக்குத் தேவை என்னவெனில், தேவனுடைய இடிமுழக்கத்தோடு எழும்பும்படியான ஒரு தேவனுடைய தீர்க்கதரிசியே, இந்த உலகத்தை அவமானத்தில் அசைக்கும் ஆவிக்குரிய மின்னல்! அல்லேலூயா! அவருக்குத் தேவை வெற்றுப் பாத்திரம், அது உண்மை, வெளியே அழைக்கப்பட்ட ஒரு சபை, தேவனுடைய வல்லமையையும், ஆசீர்வாதங்களையும், அவருடைய செய்தியையும் பெற்றுக்கொள்ளும் ஒரு சிறுபான்மையினர். அல்லேலூயா! அதுதான் நமக்குத் தேவை. 355 நீங்கள் பெலனடையும்படி பலவீனமடையுங்கள். அது ஒவ்வொரு பிசாசையும் ஜெயிக்கும். அது கற்றறிந்தவர்களை வெட்கப்படச் செய்யும். அது தேவன் அழைத்திருக்கிற புருஷர்களையும், ஸ்திரீகளையும், அதை மாத்திரமே கொண்டு வரும்.
142356 நினைவிருக்கட்டும், “நோவாவின் நாட்களில் நடந்தது போல, எட்டு ஆத்துமாக்கள் காப்பாற்றப்பட்டது போல, மனுஷகுமாரன் வருகையிலும் இருக்கும்.” எலியாவின் நாட்களில் ஏழாயிரம் பேர் மாத்திரமே அதைப் பெற்றிருந்தனர். ஓ, நாம் இப்பொழுது எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். யோவான் காட்சியில் வந்தபோது, அந்த சிறு சபை நிச்சயமாகவே சிறுபான்மையினராக இருந்தது, ஆனால் எண்ணெயை ஊற்றுவதற்கு காலியான பாத்திரங்கள் இருந்தன. அல்லேலூயா! தேவனே, நாங்கள் எங்களை வெறுமையாக்கக்கடவோம். 357 நண்பர்களே, வெறுமையாகுங்கள். பலவீனமடையுங்கள்! உங்களுடைய சொந்த திறமையை மறுதலியுங்கள்! நீங்கள் வெளியே வானொலியில்…வானொலியில் அல்ல, ஆனால் வெளியே…இந்த ஒலிநாடாக்களை கேட்கிறீர்களே, அவைகள் எங்கெல்லாம் வந்தாலும், உங்களை வெறுமையாக்குங்கள். தேவனுடைய பலிபீடத்தின் மேல் உங்களை ஒரு பலியாக ஊற்றுங்கள். தூதன் ஒரு அக்கினித் தழலோடு வந்து, அந்தப் பாண்டத்தை சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமையினால் நிரப்பட்டும். பெற்றுக் கொள்ளுங்கள்…அப்பொழுது அவர் உங்களை பலப்படுத்தி, நீங்கள் நிலைநிற்க அவர் கிருபை அளிப்பார்.
143நாம் ஒரு நிமிடம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 358 ஓ, கர்த்தாவே, மற்றொரு ஞாயிறு காலை கடந்துவிட்டது, நாங்கள் இந்த பயபக்திக்குரிய சபையில் அமர்ந்திருக்கிறோம், அங்கே உம்மை அறிந்திருக்கிற புருஷர்களும், ஸ்திரீகளும், உம்முடைய ஆவியானவர் அவர்களுடைய இருதயங்களுக்குள்ளாக வாசம் செய்கிறார், அவர்கள் உம்மை விசுவாசித்து, நீர்—நீர் எங்களுக்கு கட்டளையிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையின்படியும் செயல்பட்டுள்ளனர். இந்த ஜனங்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். 359 இந்த ஒலிநாடாக்கள் செல்லும் தேசத்தில் மற்றவர்கள் இருக்கலாம், தாழ்மையான ஸ்திரீகளும், புருஷர்களும் அவைகளை வீடுகளுக்குள்ளும், பழங்குடியினருக்குள்ளும், மற்ற தேசங்களுக்குள்ளும் கொண்டு செல்வார்கள். கர்த்தாவே, அவர்கள் கேட்டு புரிந்துகொண்டு, பரிசுத்த ஆவியானவர் அவர்களை நிரப்பும்படியாக தங்களை வெறுமையாக்குவார்களாக. 360 இந்தக் காலையில் கூட இங்கே சிலர் இருக்கலாம், கர்த்தாவே, அது…நாங்கள் பேசத் துவங்கினது முதற்கொண்டு தங்களை வெறுமையாக்கியிருக்கின்றனர், அவர்கள் தங்களுடைய சொந்த சிந்தனைகளில், தங்களுடைய சொந்த, அவர்கள்…சொந்த திறமையின் பேரில், அவர்கள் அதிகமாக நம்பிக்கைக் கொண்டுள்ளனர் என்பதை உணர்ந்துள்ளனர், தங்களுடைய எளிய மானிட சிந்தையின் புத்தியை—அது தேவனுக்கு முன்பாக அசுத்தத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஓ, தேவனே, அவர்கள் இப்பொழுதே தங்களை வெறுமையாக்குவார்களாக, தாழ்மையாய் தங்களை ஒப்புக்கொடுத்து, ஆவியின் நிரப்புதலுக்காக வாருங்கள். கர்த்தாவே. அதை அருளும்.
144அது வேதத்தில், “விசுவாசித்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. 361 இந்தக் காலையில் இங்கே இந்தக் கட்டிடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கையில், பிதாவே, ஒரு சிறிய ஸ்திரீ, இங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டு, திருமதி ஹிக்ஸ் ஒரு இரவு என்னைப் பின்தொடர்ந்து வந்தது எனக்கு நினைவிருக்கிறது, அவளுக்கு எலும்புகளைத் தவிர வேறு எதுவுமே விடப்பட்டிருக்கவில்லை, அந்த நரம்பு, சிறிய நரம்புத் தோல் அவளை முழுவதும் மூடியிருந்தது, புற்றுநோய் அவளைத் தின்றுவிட்டிருந்தது; அவளுடைய கணவன் இன்னும் கிறிஸ்தவனாகவில்லை. அன்றிரவு நான் ஜெபித்த ஜெபம் எனக்கு நினைவிருக்கிறது: “தேவனே, நீர் சிறிய தாவீதை ஒரு எளிய சிறு கவண் கொண்டு சிங்கத்தின் பின்னே அனுப்பினீர், அவன் ஆட்டுக்குட்டியைத் திரும்பக் கொண்டு வந்தான்.” நான், “இந்தப் புற்று நோய் என் சகோதரியைப் பிடித்துவிட்டது; அது ஒரு பிசாசு. நீர் தேவனாயிருக்கிறீர் என்பதை நான் அறிவேன். கர்த்தாவே, நான் உம்மைக் கண்டிருக்கிறேன், நான் அறிவேன். நான் உம்மோடு பேசியிருக்கிறேன், நீர் திரும்பப் பேசியிருக்கிறீர்” என்று கூறினேன். “நான் தேவனுடைய ஆடுகளைப் பின் தொடர்ந்து வருகிறேன்; புற்று நோயே, நீ அவளை அவிழ்த்து விடு!” அதன்பின்னர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், “வீட்டிற்குச் செல்லுங்கள்” என்று அவளுக்கு கட்டளையிட்டேன். அதுவரைக்கும் இணங்காதிருந்த அவளுடைய கணவன், அவன் வார்த்தையை விசுவாசித்து, தன்னுடைய மனைவியை வீட்டிற்கு அழைத்துக் கொண்டான். இதோ அவள் இந்தக் காலையில், ஒரு மகத்தான வலிமையான ஆரோக்கியமான பெண்மணியாய் இருக்கிறாள், புற்று நோய் போய்விட்டது, அவள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற இன்று காலை வரவிருக்கிறாள். ஓ தேவனே, நிரப்பப்பட ஆயத்தமாயிருக்கிற அந்த காலியான பாண்டத்திற்காக உமக்கு நன்றி. தேவனே, நீர் அந்த ஆத்துமாவை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 362 கர்த்தாவே, அது மற்ற அநேகருக்கு ஒரு மாதிரியாயிருக்கிறது. தேவனே, பயபக்தியோடு, இந்தக் கூட்டத்தின் மேல் உம்முடைய ஆசீர்வாதங்கள் தங்கியிருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். என்றால்…
145363 ஒரு காரியம் மாத்திரமே விடப்பட்டுள்ளது, பிதாவே, அதை என்னால் காண முடிகிறது, அதாவது, ஒன்று நீர் வெறுமையான பாத்திரங்களோடு எங்காவது எழும்பி இந்த உலகத்தையே வெட்கப்படச் செய்ய வேண்டும் அல்லது இயேசுவை உடனடியாக அனுப்ப வேண்டும். கர்த்தாவே, இங்கே முடிவு வந்துவிட்டது, செய்யப்பட வேண்டிய இரண்டு காரியங்கள் மாத்திரமே உள்ளன (நாங்கள் அதை உடனே காண வேண்டும்) ஏனென்றால் அது முடிவிலே உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்; ஒன்று வல்லமையான ஏதோ ஒன்று உடனே எழும்புவதை நாங்கள் காண்போம் அல்லது கர்த்தருடைய வருகையை நாங்கள் காண்போம். 364 தீர்க்கதரிசனம் யாவும் நிறைவேறிற்று. கடைசியாக சபையானது உயிர்த்தெழுப்பப்படுவதற்கு முன்னர், வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தில் அவள் எடுக்கப்படுவதற்கு முன்பு, லவோதிக்கேயா சபைக் காலத்திற்குரிய ஒரு செய்தியாளன் தோன்றி, அது “ஜனங்களின் இருதயங்களை ஆதி பிதாக்களிடத்திற்குத் திருப்பும்,” வழக்கமான பெந்தெகொஸ்தேயினருக்கு, அவர்கள் உரிமை கோருவதையே திரும்பக் கொண்டு வர வேண்டும். கர்த்தாவே, நோவாவின் காலத்தில் இருந்ததுபோல, ஆயிரக்கணக்கானோர் இழக்கப்படுவார்கள். அவர்களில் அநேகர் இழக்கப்படுவார்கள். பிதாவே, அது ஏற்கனவே நிறைவேறியிருப்பதை நாங்கள் காண்கிறோம்.
146365 கர்த்தராகிய இயேசுவே, வாரும், உம்முடைய சபையை எடுத்துக் கொள்ளும். கர்த்தாவே, அது உம்முடைய சித்தமாயிருந்தால், சபை எடுத்துக் கொள்ளப்படுவதற்கு சற்று முன்னர், வல்லமை எழும்புவதாக. ஓ தேவனே, இந்தப் பாத்திரங்களை நிரப்பும். கர்த்தாவே, அவர்களை எழுப்பும்! இந்த உலகத்தை இன்னும் ஒரு விசை அசையும்! காலம் கடந்து போகும் என்றும், அப்பொழுது மனந்திரும்புதல் இருக்காது என்றும், அப்பொழுது அது அவர்களுக்கு மிகவும் தூரமாயிருக்கும் என்றும் நாங்கள் அறிவோம். ஆனால் கர்த்தாவே, உம்முடைய வல்லமையைக் காண்பித்து, இந்த பாத்திரங்களை நிரப்பி, இதற்கு முன்பு ஒருபோதும் அசைக்கப்படாதது போன்று இந்த உலகத்தை அசைத்தருளும்! அப்படியானால் உம்முடைய சபையை எடுத்துக் கொள்ளும். அவளுடைய குழப்பத்தில் உலகத்தை விட்டுவிடும், ஓ தேவனே, அவர்கள் போராடுகிறார்கள். 366 அப்பொழுது மகத்தான பரிசுத்த ஆவியானவர் யூதர்களிடம் வருவார் என்பதை நாங்கள் அறிவோம். சீனாய் மலையின் மேல் ஆட்டுக்குட்டியானவரோடு நின்று கொண்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை நாங்கள் கண்டபோது, ஆனால் மணவாட்டியோ ஏற்கனவே பரலோகத்தில் இருந்தாள். அவள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தாள், ஆட்டுக்குட்டியானவர் தம்மை தம்முடைய ஜனங்களுக்கு தெரியப்படுத்த (யோசேப்பு) திரும்பி வந்திருந்தார். அவர் அங்கே நிற்பதைக் காணும்போது, அவர்கள் மத்தியில் பிளவு உண்டாகும் என்று வேதம் கூறியுள்ளது. அவர் தம்மை வெளிப்படுத்தும்போது, அவர்கள், “அந்த வடுக்கள் உமக்கு எங்கே உண்டானது?” என்று கேட்பார்கள். அவர், “என் சிநேகிதரின் வீட்டில்” என்றார். அப்பொழுது அவர்கள், “நாங்கள் சிலுவையில் அறைந்தது அவரைத்தான்” என்று கூறுவார்கள். 367 யோசேப்பு செய்ததுபோல அவரும், “கவலைப்படாதீர்கள், ஏனென்றால் தேவன் புறஜாதியாரின் ஜீவனை இரட்சிக்கவே இதைச் செய்தார். அது உங்களுடைய தவறல்ல” என்று கூறுவார். அப்பொழுது அவர்கள் ஒரு குடும்பத்திலிருந்து மற்றொரு குடும்பத்தைப் பிரித்து, ஒரே மகன் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதைப் போல அவர்கள் துக்கங்கொண்டிருப்பார்கள்.
147368 ஓ, பிதாவே, அந்த நாள் சமீபமாயுள்ளது, அதுதான் அந்த எழுபது வாரங்களின் முடிவு. கர்த்தாவே, அந்த நேரம் சமீபமாயிருக்கிறது. 369 ஓ, தேவனே, இந்த நாளின் நவீன பெண்மணிக்கு எதிராக உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசிகளின் சத்தம்—அதாவது இந்த நவீன சபை, இந்த நவீன சபையின் வேத சாஸ்திரம். 370 சத்தியத்தைக் கூற பயப்படும் இந்த பிரசங்கிமார்களை அசைக்க வேண்டும். ஓ தேவனே, இந்த மனிதர்களை எடுத்து, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அவர்களைக் குலுக்கி, அவர்கள் தங்களைக் குறித்து வெட்கப்படச் செய்யும். 371 ஆனால் நாம் இந்த ஒரு காரியத்தை அறிந்திருக்கிறோம், மேலும் முழு நம்பிக்கையோடு இளைப்பாற முடியும், “பிதாவானவர் ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் வரமாட்டான். பிதாவானவர் கொடுத்திருக்கிற யாவும் வரும்.” நீர் அதை அடைய உத்தேசித்துள்ளவரை அவர்கள் சென்றடைவார்கள். ஆனால் நீரோ, “பயப்படாதே, சிறு மந்தையே, உங்களுக்கு இராஜ்ஜியத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” என்றீர். அது உண்மை என்பதை நாங்கள் அறிவோம். அந்த நேரம் வரும்போது மிக, மிகக் குறைவானவர்கள் மட்டுமே ஆயத்தமாயிருப்பார்கள் என்று நீர் எங்களை எச்சரித்தீர். அதன்பின்னர் ஒரு மகத்தான உயிர்த்தெழுதல் உண்டாயிருக்கும், காலங்களினூடாக மீட்கப்பட்ட அனைவரும் உயிர்த்தெழுவார்கள். ஆனால் இந்த கடைசி நாளில், கடைசி காலத்தில், அங்கே சபையானது நிச்சயமாகவே சிறுபான்மையாக இருக்கும். 372 எனவே பிதாவே, நாங்கள் அதைக் காண்கிறோம், நாங்கள் இந்நாளின் செய்தியைக் காண்கிறோம். அதைப் புறக்கணிப்பதை நாங்கள் காண்கிறோம், நாங்கள் விலகல்களைக் காண்கிறோம், நாங்கள் இந்த எல்லாக் காரியங்களையும் காண்கிறோம். 373 உம்முடைய ஜனங்கள் தாங்கள் இல்லை…அவர்கள் “ஒன்றுமில்லை” என்று அறிக்கை செய்வதை நாங்கள் கண்டறிகிறோம். கர்த்தாவே, அவர்கள் உம்மால் நிரப்பப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இப்பொழுது, கர்த்தருடைய வருகைக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர், நீர் உலகத்தை அவர்களோடு அசைக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
148374 இப்பொழுது எங்கள் மத்தியில் சுகவீனம் உள்ளது, சரீரப்பிரகாரமான சுகமளித்தல் தேவைப்படுகிற ஜனங்கள் உள்ளனர். கர்த்தாவே, நாங்கள் அவர்களை விட்டுவிடமாட்டோம், ஏனென்றால், “உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிற, அவருடைய உபகாரங்களையெல்லாம் மறவாதே; அவர் நம்முடைய நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்” என்று கூறப்பட்டுள்ளது. அவருடைய மகத்தான சுகமளிக்கும் வல்லமை இங்குள்ள ஒவ்வொருவர் மேலும் இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். நீர் அங்கே ஒரு ஆத்துமாவை எந்த அசைவும் செய்யாமல் இரட்சித்து, அவனுடைய இருதயம் உம்மை மாத்திரமே நோக்கியிருக்கச் செய்யக் கூடுமானால், நீர் ஒரு சரீரத்தை சுகப்படுத்துவது எவ்வளவு அதிகம்! 375 இதோ உறுமால்கள் இங்கே கிடக்கின்றன. மகத்தான அப்போஸ்தலனாகிய பவுல் செய்ததுபோல, நான் அவைகளை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறேன். இந்த உறுமால்களை அணிந்துகொள்கிற எவரும் குணமடைவார்களாக. உடைந்த வீடுகள் மீண்டும் இணைக்கப்படட்டும். சிறு பிள்ளைகள், ஒரு தகப்பன் இல்லாத, ஒரு தாய் இல்லாத, மற்றும் அவர்கள் பிரிந்திருக்கும், அந்த வீடு மீண்டும் இணைக்கப்படுவதாக. கர்த்தாவே, அதை அருளும். எல்லா வியாதியஸ்தரையும், துன்பப்படுகிறவர்களையும் இப்பொழுதே குணமாக்கும், உமக்கே மகிமையை எடுத்துக் கொள்ளும்.
149376 கர்த்தாவே, எங்களுடைய கண்கள் மேலே உயர்த்தப்பட்டு, உம்மை நோக்கியவாறு எங்கள் இருதயங்களை உயர்த்த முயற்சித்துக் கொண்டிருக்கிற நாங்கள், நாங்கள் இவ்வுலகில் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் கூட மறுதலிக்கிறோம். வேதம், “ஆபிரகாம் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தில் பரதேசிகளாய் சஞ்சரிக்கும்படிக்கு, தன்னுடைய வீட்டைவிட்டுப் புறப்பட்டு, தான் ‘இவ்வுலகத்திற்குரியவன் அல்ல’ என்றும், ஆனால் அவன் ‘ஒரு பரதேசி என்றும், ஒரு அந்நியன்’ என்றும் அறிக்கை செய்தான்” என்று கூறியுள்ளது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, அவர்கள் எல்லோரும் “இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல” என்ற இந்த சாட்சியை உடையவர்கள், தேவன் தாமே கட்டி உண்டாக்கின ஒரு நகரமுண்டு என்றும், அவர்கள் அந்த வழியாய் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் எளிமையாக அறிவிக்கிறார்கள்.
150377 பிதாவே, நான் ஜெபித்துக் கொண்டிருக்கையில் இருதயங்கள் இப்பொழுதே மாற்றப்பட்டு, மனப்பான்மை எடுத்துப் போடப்படுவதாக. ஞானஸ்நான ஆராதனைகள் வரும்போது, ஜனங்கள் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு பரபரப்பு உண்டாவதாக இதுவரை இதைப் பற்றி நினைக்காதவர்கள் இருக்கலாம், அது வெளிப்படுவதாக. நீர் அழைத்திருந்த யாவரையும், நீர்—நீர் அனுப்புவதாக கூறினீர். 378 இப்பொழுது, கர்த்தாவே, நான் அவை எல்லாவற்றையும், கர்த்தாவே, ஒன்றுமேயில்லாத ஒரு ஏழ்மையான பாத்திரத்திலிருந்து இந்த சிறிய நொறுக்கப்பட்ட செய்தியோடு உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். நீர் மாத்திரம் அந்த வார்த்தைகளை எடுத்து, அவைகளை ஜனங்களின் இருதயங்களில் உருக்கி, அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் விலகிச் செல்ல முடியாதபடி செய்வீராக. கர்த்தாவே, அதை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை இப்பொழுது உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். ஆமென்.
151[ஒரு சகோதரன் ஒரு செய்தியைக் கொடுக்கிறார்—ஆசி.] 379 நீங்கள் உங்களுடைய தீர்மானத்தைச் செய்யும்போது, நீங்கள் முடிவு செய்யுங்கள். “நீங்கள் ஏன் இரண்டு கருத்துக்களுக்குள்ளே தரித்திருக்கிறீர்கள்?” அவர் என்ன கூறினார் என்பதை நீங்கள் கேட்டீர்கள். தேவன் தேவனாயிருந்தால், அவரை சேவியுங்கள்; உலகமானது தேவனாயிருந்தால், அப்படியே தொடர்ந்து செல்லுங்கள். பார்த்தீர்களா? ஸ்தாபன வழி சரியானதாயிருந்தால், அதனோடு செல்லுங்கள்; ஆனால் வேதாகமம் சரியாயிருந்தால், அப்பொழுது அதற்கு வாருங்கள். பார்த்தீர்களா? இந்த வேளையிலே நீங்கள் யாரை சேவிப்பீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
152380 இப்பொழுது நாம் அப்படியே, ஆவியில் ஒரு பாடலைப் பாடுவோம். வேதம், “அவர்கள் ஒரு பாடலைப் பாடிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்” என்று கூறியுள்ளது. நான் அவரை நேசிக்கிறேன் என்ற இந்த புகழ்பெற்ற பழைய பாடலை, நம்முடைய தலையும், இருதயங்களும் அவரண்டை வணங்கியிருப்பதோடு நாம் பாடுவோமாக. நான் அவரை நேசிக்கிறேன், இப்பொழுது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள். நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரி மரத்தின் மேல். 381 [சகோதரன் பிரான்ஹாம் நான் அவரை நேசிக்கிறேன் என்பதை மெளனமாக பாடுகிறார்—ஆசி.] கிறிஸ்துவுக்காக உங்களுடைய தீர்மானத்தை உங்களால் செய்ய முடியுமா? ஒரு தீர்மானம் அல்ல, சரியாக, உங்களை வெறுமையாக்கிக் கொள்ளுங்கள், “கர்த்தாவே, நான் நல்லவன் அல்ல. எனக்குள் எந்த நன்மையும் இல்லை. எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் நான் மறக்கட்டும். இப்பொழுது வாரும், கர்த்தராகிய இயேசுவே, இது என் தலைக்கு மேல் செல்ல அனுமதிக்காதேயும். கர்த்தாவே, நான் அதை ஏற்றுக்கொண்டு, உம்முடைய ஆவியினால் நிரப்பப்படட்டும். இந்நாள் முதற்கொண்டு நான் முழுவதும் உம்முடையவனாயிருப்பேனாக.” இப்பொழுது அப்படியே ஜெபியுங்கள், தேவனிடத்தில் ஒரு சிறு ஜெபம்; இந்த எளிய ஜெபம், பிள்ளைகள், யாவருமே. கல்வாரியின் ஆட்டுக்குட்டியானவரே, தெய்வீக இரட்சகரே; அப்படியே உங்கள் இருதயத்தில் மனந்திரும்புங்கள். …நான் ஜெபிக்கையில் எனக்கு செவிகொடும், என்னுடைய எல்லா பாவங்களையும் போக்கிவிடும், ஓ இந்நாள் முதற்கொண்டு என்னை முழுவதுமாக உம்முடையவனாய் இருக்கச் செய்யும்! வாழ்க்கையின் இருண்ட சிக்கலில் நான் மிதிக்கும்போது, துயரங்கள் என்னைச் சுற்றிலும் பரவுகையில், நீரே என்னுடைய வழிகாட்டியாயிரும்; இருளை பகலாக மாற்ற கட்டளையிடும், துக்கத்தை துடைத்து, பயத்தை போக்கி, நான் ஒருபோதும் உம்மிடத்திலிருந்து புறம்பே வழிதவறிச் செல்ல அனுமதியாதேயும்.
153382 [ என் விசுவாசம் உம்மை நோக்கிப் பார்க்கிறது என்ற பாடலை சகோதரன் பிரான்ஹாம் பாடுகிறார்—ஆசி.] விசுவாசித்திருக்கிற இவர்கள், தேவனுக்கு முன்பாக உங்களை வெறுமையாக்கி, இனி எந்தக் காரியமும் உங்களைத் தடை செய்யாது என்றும், நீங்கள் எந்த திறமையையும் ஒருபோதும் அறிக்கை செய்யமாட்டீர்கள் என்றும், நீங்கள் அதை தேவனோடு ஒரு தெளிவான, சுத்தமான உண்மையானதாக்க விரும்பினால், அந்த தொட்டியில் தண்ணீர், ஞானஸ்நானத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. ஸ்திரீகள் என்னுடைய வலப்பக்கமாகவும், புருஷர்கள் என்னுடைய இடது பக்கமாகவும் செல்லட்டும். ஞானஸ்நான ஆராதனை இன்னும் சிறிது நேரத்தில் இருக்கும். வெறுமையாக்கப்பட்டவர்கள், நீங்கள் போதகர்கள் கூறுவதையும், மத போதகர்கள் கூறுவதையும் நம்ப ஆயத்தமாயிராதவர்கள், ஸ்தாபனங்கள் என்ன கூறினாலும், ஆனால் கர்த்தருடைய வழியை எடுத்துக்கொண்டு, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை விசுவாசிப்பவர்களே, இப்பொழுதே வாருங்கள். வாழ்க்கையின் இருண்ட சிக்கலில் நான் மிதிக்கும்போது, அது இங்குள்ள பெண்களாகவும், இங்குள்ள புருஷர்களாகவும் இருக்கும். அதுவே உங்களுடைய பீட அழைப்பு, “விசுவாசித்தவர்கள் வந்து ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்” என்பதாகும். …என்னுடைய வழிகாட்டி; இருளை பகலாக மாற்ற கட்டளையிடும், துயரத்தின் கண்ணீரைத் துடைத்து, நான் ஒருபோதும் உம்மிடத்திலிருந்து புறம்பே வழிதவறிச் செல்ல அனுமதியாதேயும்.
154383 இந்தக் காலையில் இங்கே எத்தனை ஸ்திரீகள்…நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இதைக் கூறுகிறேன்! உங்களில் எத்தனை பேர் நீங்கள் வைத்துள்ள அந்த குட்டையான தலைமுடியைக் குறித்து வெட்கப்படுகிறீர்கள், தேவன் தம்முடைய கிருபையினால் அதை உங்களுக்காக வளரவிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 384 உங்கள் மனைவி சிகரெட் பிடிக்க நீங்கள் அனுமதித்து, உங்களுக்கு சொந்தமான கால்சட்டைகளை அணிய நீங்கள் அனுமதிப்பதைக் குறித்து எத்தனை புருஷர்கள் வெட்கப்படுகிறீர்கள்? 385 வேதமோ, “அது தேவனுடைய பார்வையில் அருவருப்பானது” என்று கூறியுள்ளது. தேவனால் மாற முடியாது என்பஅவர் தை நீங்கள் அறிவீர்களா? அவர் மாற முடியாது. ஒரே சுபாவத்தை உடையவராயிருக்கிறார், அது பரிசுத்தமாயுள்ளது. அவர் மாற முடியாது. நீங்கள் அவரைப் போல் ஆகவில்லையென்றால், நீங்கள் அவரைக் காணமாட்டீர்கள், “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லை.” தளர்காற்சட்டைகளை அணிந்து கொண்டிருந்தால்…தேவனுக்கு அவருடைய வயிற்றை சுகவீனப்படுத்தி வாந்தியெடுக்கச் செய்தால், அவர் சுகவீனமாயிருக்கிறார், அருவருப்பு, “அசுத்தம்,” நீங்கள் எப்படி…அந்தவிதமான ஒரு ஆவியை உங்களுக்குள் பெற்றுக்கொண்டு, பரலோகத்தை அடையப்போகிறீர்கள்? தேவன், “ஒரு ஸ்திரீ தன்னுடைய தலைமுடியை வெட்டுவது ஒரு அவமானமாயிருக்கும்” என்று கூறினபோது, நீங்கள் எப்படி குட்டை முடியுடன் பரலோகத்திற்கு செல்வீர்கள்? அவள் ஒரு—ஒரு மனைவியாய் இருப்பதற்கான கொள்கைகளையே மறுக்கிறாள். தேவன் மாறுகிறதில்லை. அது அவருடைய வார்த்தையாயிருக்கிறது, நண்பனே, நீ செவிகொடுப்பது நலம். 386 அதைச் செய்ய உங்கள் மனைவிகளை அனுமதிக்கும் புருஷர்களே, நீங்கள் உங்களைக் குறித்து வெட்கப்படவில்லையா? நீங்கள் வெட்கப்படவில்லையா?
155387 தேசத்தின் முதல் பெண்மணியைப் போல நீங்கள் இருக்க வேண்டாம். தேவனைப் போல இருங்கள்! பார்த்தீர்களா? இந்த நவீன உலகப் போக்கிலிருந்து உங்களை வெறுமையாக்குங்கள், அப்பொழுது கிறிஸ்து தம்மை உங்களுக்குள் ஊற்றி, நீங்கள் உண்மையாகவே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட முடியும். 388 அவரால் அதைச் செய்ய முடியாது, அவரால் அதைச் செய்ய முடியாது, அது—அது அவருடைய கொள்கைகளுக்கு எதிரானது; அவர் தம்முடைய வார்த்தைக்கு விரோதமாக செல்ல வேண்டும், அவர் அதை செய்யமாட்டார்; நீங்கள் அவருடைய வார்த்தையோடு ஒத்துப் போகாத வரையில் அவர் அதைச் செய்யமாட்டார். நீங்கள் வரவேண்டும்…மற்ற எந்தக் காரியமும் செய்யப்படுவதற்கு முன்பு நாம் இதற்கு வரவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அதைக் குறித்து அறிந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நிச்சயமாக, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், இப்பொழுது நாம் அதைக் குறித்து ஏதோ ஒரு காரியத்தைச் செய்வோமாக.
156389 தேவனே, எங்களிடத்தில் இரக்கமாயிரும்! அவர் நமக்கு எவ்வளவு தேவையாயிருக்கிறார்! இதோ நாம், இப்பொழுது நாம் யாவரும் ஒன்று சேர்ந்திருக்கிறோம். இப்பொழுது நினைவிருக்கட்டும், நியாயத்தீர்ப்பில், நான்…நான் நிற்க வேண்டியதாயிருக்கும், (அது இரவிற்கு முன்னர் இருக்கலாம்) நான் கூறியிருக்கிற ஒவ்வொரு வார்த்தையையும் எதிர்கொள்ள வேண்டும். பாருங்கள், நான் அதை சந்திக்க வேண்டும். இப்பொழுது, அக்கிரமம் என்னுடைய கரங்களிலிருந்து விலகியிருக்கிறது, அது என்னுடைய மனசாட்சியிலிருந்து விலகியிருக்கிறது, அது என்னுடைய ஆத்துமாவிலிருந்து விலகியிருக்கிறது, அது தேவனிடத்திலிருந்து விலகியிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 390 நீங்கள்…அந்த நிலைமைகளில் நீங்கள் நின்று கொண்டிருக்கையில், நீங்கள் இன்னமும் ஆக்கினிக்குள்ளாக்கப்படுவதை உணரவில்லையென்றால் (வ்வூயூ!), நீங்கள் என்ன—என்ன—என்ன செய்யப் போகிறீர்கள்? அப்படியானால் தேவன் உங்களோடு இடைபடுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் அதைக் கடந்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பார்த்தீர்களா? நீங்கள் அதைக் கடந்துவிட்டீர்கள். நீங்கள் எப்பொழுதுமே மிகவும் பக்தியுள்ளவர்களாய் இருக்கலாம், நீங்கள் சபைகளை மற்றும் பலவற்றைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அதைக் கடந்திருக்கிறீர்கள். தேவனுடைய வார்த்தை உள்ளே சென்று ஒரு நபரை வெளியே கொண்டு வருகிறது. அதுவே அவர்களை திரும்பக் கொண்டு வருகிறது. பார்த்தீர்களா? எனவே அதுதான் வார்த்தை. எந்த ஊழியக்காரரையும், எந்த நபரையும், எந்த இடத்திலும், தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக அதை மறுதலிக்க முடியுமா நான் கேட்கிறேன். அது உண்மை. அது அப்படியல்ல, பாருங்கள்.
157391 எனவே நாம் உண்மையான கிறிஸ்தவர்களாயிருப்போமாக. முயற்சிக்கிற நாமும் கூட, முயற்சிக்கிறவர்கள் கூட, நாம் வெட்டப்பட்டு, கொதித்து விடப்பட வேண்டும். ஆம் ஐயா, நம் எல்லோருக்கும் அது தேவை. 392 தேவனே, என் மேல் இரக்கமாயிரும். தேவனே, என்னை எடுத்து, என்னை வார்ப்பியும். இந்த வாரத்திற்குப் பிறகு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டறிய தேவனுக்கு முன்பாக செல்ல வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாயுள்ளது. தேவனே, என்னை ஏற்றுக்கொள்ளும். என்ன… எல்லாமே—எல்லாமே என்னைக் குறித்ததாயுள்ளது, அதில் அதிகமானவைகள் உள்ளன, அதில் எந்த நன்மையும் இல்லை, தேவனே, அதைத் துண்டித்துவிடும் என்பதே இந்தக் காலையில் என்னுடைய ஜெபமாயுள்ளது. என் இருதயத்தை, காதுகளை, என் சரீரத்தை விருத்தசேதனம் செய்யும். கர்த்தாவே, நான் என்னவாயிருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ, அந்த…ஏதோ ஒன்றாக என்னை உருவாக்கும். அதுவே என்னுடைய ஜெபமாயுள்ளது. 393 கர்த்தாவே, நான் என்னவாயிருக்க வேண்டுமோ, அறுப்புண்டு போகச் செய்து, என்னை வெட்டிப்போடும். வார்த்தையில் எனக்குக் காண்பியும், எனக்குச் சொல்லும், நான் போய் அதைச் செய்வேன். கர்த்தர் அதைக் கூறட்டும், நான்…அதனோடு அங்கே ஒன்றிப்போக நான் ஆயத்தமாயிருக்கிறேன். தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறதோ, அப்படித்தான் நான் இருக்க விரும்புகிறேன். நான் தேவனுடைய வார்த்தையில் ஒரு—ஒரு கிறிஸ்தவனாயிருக்க விரும்புகிறேன், “எந்த மனிதனுடைய வார்த்தையும் பொய்யாயும், தேவனுடைய வார்த்தையே மெய்யாய் இருப்பதாக.” அதுவே காலத்தின் போக்காக இருக்க வேண்டுமல்லவா, அது அவ்வாறு இருக்க வேண்டுமல்லவா? அந்த விதமாக நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?
158394 மகனே, ஞானஸ்நானத்திற்கான இடத்தைத் தேடுகிறீர்களா? ஆம், இங்கே பின்னால் உள்ள சகோதரனே, காத்திருக்க வேண்டாம். சரி, இந்த வழியாக செல்லுங்கள். 395 உங்களில் அநேகர் வந்து, விசுவாசிகளான புருஷர்களும், ஸ்திரீகளும்…தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும். ( இந்த வழியில், சகோதரனே.) “அவர்களுடைய பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவார்கள்.”
159396 இப்பொழுது, இங்குள்ள கத்தோலிக்க ஜனங்களாகிய உங்களுக்கு அதுதான் பாவ மன்னிப்பு. சபைக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என்று கூறுகிற நீங்கள், சபை எப்படி பாவங்களை மன்னித்தது? தேவன்…இயேசு சபைக்கு, “எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் எவர்களுக்கு மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்” என்றார். ஆதி சபையில் இருந்த பாவங்களை அவர்கள் எப்படி மன்னித்தனர்? அவர்கள் அவர்களை மனந்திரும்புதலுக்கு அழைத்தனர், அவர்கள் அவர்களுடைய பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தனர். ஒரு அறிக்கை செய்யும் கூடத்தின் கீழ் அல்ல; இல்லை, உண்மையாகவே. ஆனால் அவர்கள் அங்கே நின்று கொண்டிருந்தபோது, அவர்கள் தங்கள் இருதயங்களில் தேவனுக்கு முன்பாக மனந்திரும்பி, அவர்கள் விசுவாசித்தனர். “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்-…ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்று விசுவாசிக்கப்பட்டவர்கள் அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர்.” ஆமென். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? இப்பொழுது நாம் எழுந்து நிற்போம்.
160397 இப்பொழுது, அநேகர் ஞானஸ்நான ஆராதனைக்காக காத்திருக்க விரும்புவார்கள். இன்னும் வேறு யார் வர விரும்புகிறீர்கள், இன்னும் யார் விசுவாசித்திருக்கிறீர்கள்? இருபுறமும், வாருங்கள்; புருஷர் இடப்புறம்; வலப்பக்கமாக, ஸ்திரீகள். கர்த்தராகிய இயேசுவை உங்களுடைய முழு இருதயத்தோடும், உங்களுக்குள்ள எல்லாவற்றோடும் விசுவாசியுங்கள். 398 இப்பொழுது நாம் ஒன்று சேர்ந்து நம்முடைய தலைகளை வணங்குவோம், நாம் இந்த மாதிரி ஜெபத்தை திரும்ப திரும்பச் செய்யும் போது, நான் இப்பொழுது இதை செய்ய மிகவும் விநோதமாக தூண்டப்படுவதை உணருகிறேன். நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், நீங்கள் என்னோடு ஜெபியுங்கள்: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு விரோதமாக தப்பிதங்களை செய்கிறவர்களை நாங்கள் மன்னிக்கிறது போல, எங்களுடைய தப்பிதங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென், என்பதே.
161399 இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருப்போமாக. நான் சகோதரன் நெவில் அவர்களை வந்து ஆசீர்வாதத்தைக் கூறும்படியும், அவருடைய இருதயத்தில் என்ன இருக்கிறதென்றும் கூறும்படி கேட்டுக் கொள்ளப் போகிறேன், இப்பொழுது ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற ஞானஸ்நான ஆராதனையைக் குறித்து அறிவிப்பேன். 400 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக என்பதே என்னுடைய ஜெபமாகும். நான் உங்களுக்காக ஜெபிப்பேன், நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். எனக்கு உண்மையாகவே உங்களுடைய ஜெபங்கள் தேவை.