நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும்

61-1231M

கரததரடய ஆரதனயல பதய வரடததன மன கலயல சகதரன நவல அவரகளம நனம ஒனற சரநத நம எனன சயயலம எனபதன பரல நஙகள பசக கணடரநதம. உஙகள யவரகககவம இநதக கல நன இஙக அவர அழதத வநத, எழபப பரசஙகககமபடச சயய மயறசததக கணடரநதன. இனறரவ நன அதச சயயடடம, எனவ அநத சயத வரனறமபடகக நன இககலயம, இரவம அதச சயய உளளன. எனவ அவர ஒர நலல வறபனயளரயரககறர. ஆகயல நமபடதத

நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும்

61-1231Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி1771961-12-31

நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும்

61-1231Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி1771961-12-31

1 கர்த்தருடைய ஆராதனையில் புதிய வருடத்தின் முன் காலையில் …சகோதரன் நெவில் அவர்களும் நானும் ஒன்று சேர்ந்து நாம் என்ன செய்யலாம் என்பதன் பேரில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். உங்கள் யாவருக்காகவும் இந்தக் காலை நான் இங்கு அவரை அழைத்து வந்து, எழுப்பி பிரசங்கிக்கும்படிச் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தேன். இன்றிரவு நான் அதைச் செய்யட்டும், எனவே அந்த செய்தி வேரூன்றும்படிக்கு நான் இக்காலையும், இரவும் அதைச் செய்ய உள்ளேன். எனவே அவர் ஒரு நல்ல விற்பனையாளராயிருக்கிறார். ஆகையால் நாம்…பாடத்தை துவங்கும் முன்பு, நமக்கு ஒரு வேதபாட வகுப்பு இருக்கும் என்று நான் அவரிடம் கூறினேன், இந்தக் காலையில் இங்கே நம்மில் அநேகர் இல்லாததுபோல் உள்ளது, ஆயினும் ஒரு வேதபாட வகுப்பை நடத்த வேண்டும். நான் இதைச் செய்வதற்கு முன்னால், நான் ஒரு சிறு அறிவிப்பை செய்யவிரும்புகிறேன். நான்…

22 நம்மோடு சில காலம் தங்கியிருக்கும்படி நியூயார்க்கிலிருந்து இங்கே வந்துள்ள சில ஜனங்களை நாம் உடையவர்களாயிருக்கிறோம். நான் அந்த ஜனங்களை ஒருபோதும் சந்தித்ததில்லை என்று நான் நினைக்கிறேன். சகோதரன் நெவில் அதைக் குறித்து தான் சற்று முன் பேசினதாகக் கூறினார். கடந்த இரவு அவர்கள் வைத்திருந்த…அவர்களுடைய பின் இணைப்பு வாகனம் தீப்பிடித்துக் கொண்டதாகவும், அவர்களுடைய பின் இணைப்பு வாகனத்தையே அழித்துவிட்டதாகவும் நான் கேள்விப்பட்டேன். நான் அந்த ஜனங்களைக் காண புறப்பட்டுச் சென்றேன், அவர்கள் அழகான, அருமையான கிறிஸ்த ஜனங்களைப் போல தோற்றமுடையவர்களாயிருந்தனர். அவர்கள் நம்மனைவரையும் போல ஒருவிதமான ஏழை ஜனங்கள், எனவே சகோதரன் உட் அவர்களும், நம்மில் இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்றாக சேர்ந்து, நம்மால் அவர்களுக்கு மற்றொரு இணைப்பு வாகனத்தை வாங்கித்தர முடியுமா என்று பார்க்கச் செல்லப்போவதாயிருந்தனர். அவர்கள் மிகவும் இனிமையானவர்களாயிருந்தனர், மேலும் அவர்கள்…அந்த வாகனத்தின் பேரிலான காப்பீட்டு பத்திரத்தை கூடவே கொண்டு வந்திருந்தனர், ஆனால் அவர்கள் பண நெருக்கடியின் காரணமாக அந்த காப்பீட்டுத் தவணைத் தொகையை செலுத்த தவறிவிட்டனர். ஆனால் எப்படியாயினும் அந்த முகவர் அந்த காப்பீட்டு ஆவணத் தொகையை செலுத்திவிட்டிருந்தார், இல்லை, அவர்கள் தங்களுடைய இணைப்பு வாகனத்திற்காக தங்களுடைய காப்பீட்டு ஆவணத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர், அது அநேகமாக அந்த இணைப்பு வாகனத்திற்கு பதிலாக மீண்டும் புதிதாக ஒன்றை பெற்றுக் கொள்ளக் கூடியதாயிருக்கும். அவர்கள் அதை அறிவார்கள், அது திங்கட்கிழமை, அல்லது செவ்வாய் கிழமை அல்லது அதைப்போன்ற ஒரு நாளில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது அவ்வாறுதான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எனவே நாம் ஒருவருக்காக ஒருவர் இரக்க உணர்வுள்ள சகோதர சகோதரிகளாக கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக இருக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படியாகவும், நம்மால் அவர்களுக்கு உதவி செய்ய முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்படிக்கு அவர்களுடைய துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்த நேரத்தில் ஒரு சிறு உதவியை அவர்களுக்குச் செய்யும்படிக்கு அந்தவிதமான உணர்வையே ஒவ்வொருவரும் உடையவராயிருப்போம் என்றே நான் நினைக்கிறேன். இது சற்று வழக்கத்திற்கு புறம்பானதாக உள்ளது என்றே நான் கருதுகிறேன். நான் என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் காணிக்கை எடுத்தேயில்லை, ஆனால் சகோதரன் நெவில் அதை எடுக்கும்படி நான் செய்யப் போகிறேன். அது மற்றொருவரிடம் செய்யத் தள்ளிவிடுவது போன்றதாகும், அது அவ்வாறிருக்காதா? அது சரி. சகோதரன் பென் உங்களுக்கு நன்றி. அப்படியே யாரோ ஒருவர், என்ன, நீங்கள் வைத்துள்ள ஏதோ கொஞ்சத்தை அவர்களுக்கு போடக் கூடும், அது பாராட்டப்படும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். சகோதரன் நெவில் இங்கே வாருங்கள், எப்படி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே செய்யுங்கள். [சகோதரன் நெவில் கூறுகிறார், “சகோதரன் பிரான்ஹாம் உங்களுக்கு நன்றி. இந்தவிதமாக ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் இது இன்னும் அதிகமாக கிறிஸ்துவைப் போன்றும் மற்றும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் நமக்கு உதவி செய்கிறதாய் உள்ளது. சில நேரங்களில் ஜனங்கள், ‘நான் ஒரு மேலான கிறிஸ்தவனாயிருக்க நீர் எனக்காக ஜெபிக்க வேண்டும்’ என்று கூறுகின்றனர். பாருங்கள், அப்பொழுது நான்…நான் ஏற்கெனவே உங்களுக்காக ஜெபித்துள்ளேன் என்று கூறுவேன். இப்பொழுது அது எப்படிப்பட்ட ஒன்றாய் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு காண்பிக்கப் போகிறேன். ஆமென். அந்தவிதமாகவே அதைச் செய்ய உங்களுடைய இரக்கமான உள்ளங்களைத் திறவுங்கள். நானும் கூட அதை அறிவேன், சகோதரன் இலியட், அதைக் குறித்த இரக்கத்திற்காக அவர் கேட்கவில்லை, ஆனால் அவர் ஒரு முடமான மனிதனாயிருக்கிறார், எனவே…மேலும் அவர் வேலையில்லாமலிருந்து வருகிறார். எனவே நாம் சற்று இந்த காலையில் இந்த ஜனங்களுக்கு உதவும்படி நம்முடைய இருதயங்களைத் திறபோமாக.” (இதோ காணிக்கைத் தட்டுகள் இங்கே உள்ளன என்று நான் நினைக்கிறேன். ஆம்.)—ஆசி.] [“பரலோகப் பிதாவே, இந்தக் காலையில், நாங்கள் இதை பெற்றுக் கொள்கையில், நீர் எங்கள் எல்லோரையும் எப்படி ஆசீர்வதித்திருக்கிறீர் என்றும், எங்களுடைய நன்மைக்கும், நல்வாழ்விற்கும் தேவைப்படுகின்ற இந்த பொருட்களையும் எப்படி வழங்கியிருக்கிறீர் என்று எங்களையே பரிசீலித்துப் பார்த்து நாங்கள் உம்மை நோக்கிப் பார்க்கிறோம். இந்தக் காலையில் நாங்கள் உம்மண்டை எங்களுடைய இரக்கத்தின் ஒரு சிறு பாகமாக நாங்கள் இதை நீட்டி ஏறெடுக்கிறோம். உம்முடைய இரக்கம் மகத்தானது!”] ஆம். [“ஆனால், கர்த்தாவே, நீர் எங்களுக்காக மிகுந்த இரக்கம் கொண்டுள்ளபடியால் எங்களுக்கு கொஞ்சம் இரக்கமாவது உண்டாயிருக்குமா என்று நாங்கள் உணர விரும்புகிறோம். இதோ எங்களுக்கு மத்தியில் இங்கிருக்கிற இந்த அன்பார்ந்தவர்களை, தேவனே, நாங்கள் எங்கள் இருதயங்களைத் திறக்கையில், நீர் எங்களை இந்தக் காலையில் எங்களை இப்பொழுது ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். நீர் அவர்களை ஏற்றுக்கொண்டு உம்முடைய ஆவியினால் நீர் மிகச் சிறந்ததாய் காண்கிறதைச் செய்யும். அவர் நிமித்தமாக இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.”] ஆமென். [இசைப்பேழையை இசைப்பவர் பல துதி பாடல்களை இசைக்கையில், இலியாட் குடும்பத்தினருக்காக சகோதரர்கள் சுமார் நான்கு நிமிடங்களாக காணிக்கைத் தட்டுகளைக் கொண்டு சென்று சபையோரினுடைய காணிக்கையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.]

33 அவர்கள் காணிக்கை எடுத்துக் கொண்டிருக்கையில், நான் இக்காலையில் சில பழைய செய்திப் பாடங்களிலிருந்து சிலவற்றையும், நான் ஒரு காகிதத் துண்டின்மேல் எழுதி வைத்துள்ள காரியங்களிலிருந்தும் சில காரியங்களை பேசும் ஒரு சிறு வாய்ப்பு ஒருக்கால் எனக்கு கிடைக்கும் என்று நான் எண்ணினேன். எல்லாப் பிரசங்கிமார்களும் அதையே செய்கிறார்கள் என்றே நான் யூகிக்கிறேன். இப்பொழுது, அந்த எரிந்துபோய்விட்ட இணைப்பு வாகனத்தினையுடைய ஜனங்களின் பெயர் என்ன? [சகோதரன் நெவில், “எலியாட்” என்று கூறுகிறார்.—ஆசி.] எலியாட். இந்தக் காலை இந்தக் கட்டிடத்தில் சகோதரன் மற்றும் சகோதரி எலியாட்டும் மற்றும் அவர்களுடைய மகனும் இருக்கிறார்களா? அவர்கள் இங்கிருந்தால், நீங்கள் எழும்பி நின்று, கூற முடிந்தளவு “நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம்…” என ஜனங்களிடத்தில் கூறுங்கள். சரி. சகோதரன் எலியாட் அல்லது சகோதரி எலியாட் ஜனங்களுக்கு நீங்கள் கூற விரும்புகிற வார்த்தை ஏதாகிலும் உண்டா? சகோதரன் எலியாட் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அது மிகவும் அருமையாய் உள்ளது. உங்களுக்கு நன்றி. உங்களோடும், சகோதரி எலியாட் மற்றும் உங்கள் மகனோடும் தேவன் இருப்பாராக.

44 அந்த ஜனங்கள் நியூயார்க்கிலிருந்து வந்துள்ளனர். அவர்கள் இங்கே இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. நான் எப்பொழுதோ அவர்களை ஒரு பேட்டியிலோ அல்லது அவர்களுக்கு ஜெபித்திருந்தேனோ அல்லது ஏதோ ஒரு காரியம் என்று அவர்கள் கூறினர். நான் நேற்று அவர்களை சந்திக்கும் வரையில் நான் அவர்களை அறியாமலிருந்தேன், ஆனால் அவர்கள் இனிமையான கிறிஸ்தவர்கள் என்றும், மிக அருமையான ஜனங்கள் என்றும் நேற்று கண்டறிந்தேன். அவர்கள் நியூயார்க்கில், அங்கு எங்கோ உள்ள ஹட்சன் நதி பள்ளத்தாக்கில் வசித்திருந்தனர், அவர்கள் ஒருகால் ஒரு ஒலிநாடா செய்தியின் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ செய்தியை கேட்டு விசுவாசித்து, எல்லாவற்றையும் விற்று இங்கு இடம் பெயர்ந்து வந்து, தங்களுடைய ஜீவியங்களையும், நேரங்களையும் கிறிஸ்துவுக்குள் அளிக்கின்றனர். இது எங்களுடைய சிறு உணர்ச்சி வெளிப்பாடு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம், சகோதரன் மற்றும் சகோதரி எலியாட் அவர்களே நாம் கூட பரதேசிகளாய் இருக்கிறோம். “நாம் இந்த உலகத்தில் யாத்திரீகர்களும், அந்நியர்களுமாய் இருக்கிறோம். தேவன்தாமே கட்டி உண்டாக்கின ஒரு நகரத்தையே நாம் நாடித் தேடிக்கொண்டிருக்கிறோம்.” இந்தக் காரியங்களின் பேரில் உங்களுக்கு இன்னல் உண்டாக்கவே பிசாசு உங்களுடைய வாகனத்தை எரித்து உங்களுக்கு பயத்தை உண்டுபண்ண முயற்சித்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் மீண்டும் உங்களுடைய சொந்த ஆதரவில் நிற்கும்படி எங்களால் முடிந்த ஒவ்வொரு காரியத்திலும் உங்களுக்கு உதவி செய்து உங்களுக்கு ஆதரவளிக்கும்படி நாங்கள் நூறு சதவீதம் உங்களோடு நிற்போம். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் எழும்பி தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள். மனமுடைந்து போய்விடாதீர்கள், வேண்டாம். “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிடுப்பார்.” எனவே நாம்—இந்தக் காரியங்கள் சம்பவிக்கும்படி நாம் எதிர் நோக்குகிறோம் என்பதை நாம் அறிவோம், ஆனாலும் நாம் முற்றிலும் ஜெயங்கொண்டுள்ள நம்முடைய இரட்சகரையே எதிர்நோக்கியிருக்கிறோம் என்றும், நாம் நம்மை மீட்டிருக்கிற அவருக்குள் இருக்கிறோம் என்றும் நாம் அறிந்திருக்கிறோம்.

55 இப்பொழுது இன்றைக்கு ஒரு விதமாக முழு நாளுமே, அதாவது நான் இந்தக் காலை அங்கே சிந்தித்துக் கொண்டிருந்தேன், நான் சிறிது நேரம் ஒரு ஞாயிறு வேதபாட வகுப்பில் போதிக்கலாம் என்று எண்ணினேன். இந்தக் காலை அதை ஞாயிறு வேதபாட வகுப்பிலிருந்தே பிரசங்கிப்பதுபோல எண்ணினேன். கடந்த ஞாயிறு இல்லை ஞாயிறு இரவு நான் என்னுடைய கிறிஸ்துமஸ் செய்தியை கொண்டுவந்ததுபோல, இன்றிரவு ஏழு—முப்பது மணிக்கு தேவனுக்கு சித்தமானால் என்னுடைய—என்னுடைய புத்தாண்டினுடைய செய்தியை கொண்டு வர விரும்புகிறேன். இன்றிரவு ஏழு—முப்பது மணிக்கு கர்த்தருக்கு சித்தமானால், நான் என்னுடைய புத்தாண்டினுடைய செய்தியை கொண்டு வருவேன். சகோதரன் நெவில் தன்னுடைய புத்தாண்டினுடைய செய்தியை அளிப்பார். நான் இங்கே சகோதரன் ஸ்டிரிக்கர் மற்றும் சகோதரன் காலின்ஸ், ஓ, இன்னும் சுற்றிலும் மற்ற ஊழியக்காரர்களையும், ஜியார்ஜியாவிலிருந்து இங்கு வந்து நம்மோடு உள்ள சகோதரன் பாமர் அவர்களையும், இன்னும் சுற்றிலும் வெவ்வேறு பேர்களையும் காண்கிறேன். இவர்கள் ஊழியர்கள், இன்றிரவு நீங்கள் அவர்கள் பேசுவதையும் கேட்பீர்கள்.

66 அதன்பின்னர் என் இருதயத்தில் தென்பட்ட ஏதோ ஒன்றின் பேரில் நான் சகோதரன் நெவில் அவர்களை தொலை பேசியில் அழைத்து மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை செய்வது போன்று, ஒரு பெருங்கூட்டமாக ஒன்று கூடி உலகத்திலுள்ள மற்றவர்களைப் போல சத்தமிடுவதற்கு பதிலாக, நாம் ஏன் இன்று நள்ளிரவு இராபோஜனம் எடுக்கக் கூடாது என்று கூறினேன். புரிகிறதா? பாருங்கள், கர்த்தரை சேவிப்போம். அது மிகவும் உரியதாக இருக்கும் என்று சகோதரன் நெவில் நினைத்து அதை ஒப்புக் கொண்டார். இன்றிரவு கர்த்தருக்குச் சித்தமானால், நான் இன்றிரவு பன்னிரெண்டு மணிக்கு இராபோஜனம் வழங்குவேன். நாம் புத்தாண்டை சத்தமிடுகின்ற மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற மற்ற காரியங்களினால் துவங்காமல், மற்றவர்கள் அதைச் செய்ய விரும்பினால் பரவாயில்லை செய்து கொள்ளட்டும், ஆனால் நாமோ அதை அதிக புனிதத்தோடும், உத்தமத்தோடும் துவங்குவோமாக. நாம் இந்த வருடத்தை கிறிஸ்துவுக்கென உத்தமமான வழியில், நாம் பெற்றுள்ள நம்முடைய எல்லாவற்றையும் அளித்து, நம்முடைய வாக்குறுதியோடு அணுகுவோமாக. ஒரு புது வாழ்கையை துவங்குவது அல்லது அதைப்போன்ற ஒன்றாய் ஒரு புத்தாண்டைத் துவங்குவதல்ல, நாம் அப்படிப்பட்ட காரியங்களில் நம்பிக்கைக் கொள்வதில்லை. நீங்கள் அடுத்த நாள் பழைய நிலைக்கு திரும்பும்படியாக ஒரு புது வாழ்க்கையை துவங்குகிறீர்கள், எனவே நாம் நம்முடைய ஜீவியங்களை அவருக்கு அளித்து, இன்றிரவு நள்ளிரவில் இராபோஜனம் எடுப்போமாக. நான் ஒரு ஊழியக்காரானாயிருந்து வருகிறது முதற்கொண்டே, நான் அதை முதல் முறை செய்ததை எப்போதும் நினைவு கூருகிறேன் என்றே நான் நினைக்கிறேன். சகோதரன் நெவில் உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? ஆனால் இப்பொழுது நமக்கு புதிய ஒரு காரியமாய் உள்ளது. இந்த விதமாய் புத்தாண்டு வருவது மிகவும் அபூர்வமானதாய் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள், எனவே அது எனக்கு தென்பட்டது, மிகவும் உணரத்தக்கதாயிருக்கும் என்று நான் எண்ணினேன்.

77 கர்த்தருடைய ஊழியத்தின் பேரில் ஊழியக்களத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்னும், புத்தாண்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்பு நான் உங்களோடு கொஞ்ச நேரம் இப்பொழுது பேசக்கூடியது கிட்டத்தட்ட இந்த வருடத்தில் கடைசியானதாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். நான் கிட்டத்தட்ட அடுத்த வாரம் அல்லது அதைத் தொடர்ந்து வருகின்ற வாரத்தில் பீனிக்ஸ்ஸிக்கிற்கு சுமார் பதினைந்து, பதினாறு தொடர் கூட்டத்திற்கு பள்ளத்தாக்குகளினூடாகவும், சன்னி ஸ்லோப்ஸ் மற்றும் ஸ்காட்டேல், அங்கே பள்ளத்தாக்குகளினூடாக முழுவதும் சுற்றி, செல்ல உள்ளேன். அதன்பின்னர் எங்களுக்கு கிறிஸ்தவ வர்த்தகருடைய தொடர் கூட்டங்கள் அங்கே உண்டு, அது இந்தக் கூட்டங்களின் முடிவில் ஐந்து நாள் தொடர் கூட்டமாகும். நான் எல்லா ஸ்தாபனத்தாரிடமும், பீனிக்ஸ்ஸில் உள்ள மாரிப்கோபா பள்ளத்தாக்கு பகுதியான பெரு நகரப் பகுதியினூடாக உள்ள அவர்களுடைய ஒவ்வொரு சபையினிடத்திலும் பேசும்படிக்கு அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த கூட்டங்கள் பதினைந்தாம் தேதியின் பேரில் துவங்கும். எனவே நான் முறைப்படி இங்கிருந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் முன்னதாகவே புறப்பட்டு செல்லவுள்ளேன்…நான் அநேகமாக என்னுடைய நல்ல நண்பர் சகோதரன் மூர் மற்றும் அங்கு போகிற அவர்களில் பலரைக் காண இடையில் நிற்பேன், அப்பொழுது அது பனிகட்டி கணவாய்களின் வழியாக போகிற நேரமாய் இருக்கும். அதன்பின்னர் நான்…உங்களில் அநேகர் ஊழியக்காரர்களாயிருக்கிறீர்கள்.

88 சகோதரன் ராய் பாடர்ஸ், அவர் இந்தக் காலை இங்கிருந்தால் நலமாயிருக்கும், அவர்கள் கூட்டங்களுக்காக அழைக்கும்போது, அவர் வழக்கமாக கூட்டங்களை வரிசைப் படுத்தி வைத்து கொள்வார். இந்த கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில், பாருங்கள், நான் வழக்கமாக அடுத்த ஆண்டுக்கான பிரயாணத்திட்டத்தை தயாரிப்பது வழக்கம், ஆனால் இந்த வருடம் எப்படியோ அதைச் செய்யும்படி நான் உள்ளத்தில் உணரவில்லை. நான் போய் ஒரு கூட்டம் நடத்த, அதன்பின்னர் அடுத்த கூட்டத்திற்கு அவர் எங்கே நடத்துகிறாரோ அங்கிருந்து நான் செல்லலாம் என்று எண்ணுகிறேன். அதன்பின்னர் அங்கிருந்து அடுத்த கூட்டத்திற்கு அவர் என்னை வழி நடத்துகிறவிதமாக அது எங்கிருந்தாலும் செல்வேன்.

99 இந்த வருடம் ஏதோ ஒரு காரியம் சம்பவிப்பதற்காக இப்பொழுது எதிர்நோக்கியிருக்கிறோம். சமீபத்தில் அநேக தரிசனங்கள் எனக்கு உண்டாயிருந்தது. மற்றொரு நாள் காலையில் மீண்டும் ஒரு மகத்தான தரிசனம் உண்டானது, எல்லாமே ஏதோ ஒரு மகத்தான காரியம் சம்பவிக்கப்போகிறதற்கு தொடர்பாய்க் காணப்படுகிறதுபோல் உள்ளன. எனவே நான் தொடர்ந்து அவரையே நம்பிக்கொண்டிருக்கிறேன். அவைகளில் சிலவற்றை என்னால் புரிந்து கொள்ளக் கூட முடியவில்லை. நாம் தரிசனங்களை புரிந்து கொள்ள முடியாது, அவைகள் அதிகமாக அடையாளங்களைக் கொண்டதாகவே உள்ளன, சில நேரங்கள் நாம் அவைகளை சரியாக புரிந்து கொள்ளுகிறதில்லை, ஆனால் எப்படியும் அவைகள் உண்மையானவை என்பதை நாம் அறிவோம். எனவே அவைகள் நிறைவேறும். நான் அவைகளை எழுதி வைத்துக் கொள்கிறேன்.

1010 இதுவும் கூட அறிவிக்கப்படுள்ளது. இல்லை அறிவிக்கப்பட வேண்டியதாயுள்ளது என்று நான் நம்புகிறேன், அதாவது நாளை இரவு ஏழு மணிக்கு தர்மகர்த்தாக்களின் குழுவும், உதவிக்காரர்களின் குழுவும் ஒரு ஐக்கியத்தில் கூட்டு கூட்டத்தில் இங்கே கூடாரத்தில் சந்திக்கவுள்ளனர். இப்பொழுது நான் அதை மீண்டும் அறிவிக்கட்டும், அதாவது உதவிக்க்காரர்கள், அவர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் இந்த சிறு ஒலிப்பெருக்கியின் வாயிலாக கூறுவதை அவர்கள் மற்றொரு அறையில் கேட்டாலும், அதாவது நாளை இரவு ஏழு மணிக்கு மேய்ப்பர்—மேய்ப்பர், உதவிக்காரரின் குழு மற்றும் தருமகர்த்தாக்களும் சேர்ந்து, ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் எனக்குக் கூறப்பட்டுள்ளபடி அவர்கள் நாளை இரவு சந்திக்கும்படியாகவுங் கூடவுள்ளனர். சகோதரன் நெவில் அவர்கள் தன்னுடைய உதவிக்காரர் குழுவை சந்தித்து அவர்களிடம் பேச விரும்புகிறார். தர்மக்கர்த்தாக்கள் தங்களுடைய வழக்கமான கூட்ட நேரத்தில் கூடுவர், எனவே அவர்கள் நாளை இரவு ஒன்று கூடி சந்திப்பர்.

1111 இப்பொழுது, இந்தக் காலையில் நாம் வார்த்தையை அணுகும் முன்பு, இப்பொழுது, ஓ, நாம் எந்தக் காரியத்தைக் குறித்தும் மிக விரைவாக முடிக்க வேண்டும் என்று படபடப்பு கொள்ளாதிருப்போமாக. காரணம் உங்களுக்கு இன்றைய பகல் முழுவதும், நாளை இரவு மற்றும் நாளைய மறுநாளும் உள்ளது, எனவே நாம் நம்முடைய நேரத்தை எடுத்துக்கொண்டு, இந்த காரியங்களினூடாக அவசரப்படாமலிருப்போமாக. நிச்சயமாகவே ஜனங்கள் சோர்வடைந்து அல்லது களைப்புற்று அல்லது வீட்டிற்கு செல்ல விரும்புகிறார்கள் என்பதை நான் அறிவேன் என்பதும் உங்களுக்குத் தெரியும், ஏனென்றால் அவர்களுடைய… அவர்களுடைய இரவு போஜனத்திற்காகவே செல்ல துரிதப்படுகின்றனர், அதற்காக அவர்களுடைய கணவன்மார்கள் காத்திருப்பார்கள். அதனால் பரவாயில்லை, எனவே மெல்ல நழுவி சென்றுவிடுங்கள், உங்களில் ஏனையோர் தரித்திருக்க விரும்புகிறீர்கள், சரி. நாம்…நீங்கள் நாளை வேலை செய்ய வேண்டியதில்லை, எனவே நாம் நம்முடைய நேரத்தை எடுத்துக் கொள்வோமாக. அந்தக் காரணத்தினால் கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் பிரசங்கிப்பதற்குப் பதிலாக நான் ஒரு போதிப்பதின் பேரில் எட்டு அல்லது பத்து மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று நான் எண்ணினேன்.

1212 ஜியார்ஜியா மற்றும் அலபாமாவிலிருந்து வந்துள்ள ஜனங்கள் யாவருமே அன்றோரு இரவு என்னை மிகவும் உயர்வாக உணரச் செய்தனர். நான் அலுவலகத்திற்கு வெளியில் இருந்தபோது, பில்லியைத் தவிர எல்லோருமே போய்விட்டிருந்தனர் என்றே நான் நினைக்கிறேன், பில்லியோ… சகோதரன் வெஸ்ட் அவர்களும் மற்றவர்களும், அவர்கள் மிகவும் இனிமையான உண்மையான நண்பர்களாயிருக்கிறார்கள் என்று கூறினான். நான் அவர்களை இங்கே காணவில்லை, ஆனால் அவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் தொலைபேசி மூலம், “பாருங்கள், சகோதரன் பிரான்ஹாம் ஞாயிறு காலை ஞாயிறு வேதபாடப் பள்ளி நடத்தப் போகிறாரா?” என்று கேட்டுள்ளனர். லூயிவில்லில் மிகவும் குளிராயிருக்கிறது, சாலைகள் மற்றும் உள்ள இடங்களிலும் வாகனங்கள் செல்லாதபடிக்கு தடுத்துக்கொண்டிருப்பதாக செய்திகள் கூறப்பட்டுள்ளன. 13 பில்லியோ, “பாருங்கள், ஆனால் பயணிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அப்படியிருந்தால் அவர் அங்கு போய்விடுவார்” என்றும் கூறினான். “ஒருகால் சகோதரன் நெவிலே அல்லது அவளோ, யாரோ ஒருவர் போகலாம்” என்று கூறினான். 14 மேலும் அவன், “பாருங்கள், இதோ நாம் பயணமாகி வருவதற்கு போதுமான நல்ல சாலையாக உள்ளது!” என்றும் கூறினான். அலபாமாவிலிருந்து வழி நெடுக வழவழப்பான சாலைகள் தான். அந்தவிதமான நண்பர்களை உடையவனாயிருப்பதற்கு நான் தகுதியுள்ளவன் அல்ல. இப்பொழுது அது உண்மையே. அதைப்போன்ற நண்பர்களைப் பெற்றிருப்பதற்கு நான்—நான் பாத்திரனல்ல. அதைக் குறித்த ஏதோ ஒரு காரியம் உண்டு. எனவே இதுபோன்ற சமயங்களில் நடைபெற உள்ள கூட்டத்தை அறிவிக்க நான் விரும்புவதில்லை, ஏனென்றால் செய்தியை விசுவாசிக்கிற ஜனங்கள் எனக்கு உண்டு, அவர்கள் என்னை நேசிக்கிறபடியால் வருகிறார்கள் என்பதையும் அறிவேன்.

1315 நான்—நான் எப்பொழுதுமே நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்பியதுண்டு. நான் ஒரு சிறு பையனாய் இருந்தபோது, நான் எவராலும் நேசிக்கப்படாமலிருந்தேன். எனக்காக எவருமே உதவியாக இருந்ததில்லை. நான் இங்கே இந்தியானாவிலுள்ள கென்டக்கியில் பிறந்தேன், எனவே இங்குள்ள இந்த பிள்ளைகளுக்கு ஒரு புதுமையான பறவையைப் போல் இருந்தேன். குடும்பத்தில் கிட்டத்தட்ட என்னைத் தவிர எல்லாப் பையன்களுமே புகைபிடித்து, மது அருந்தி மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் செய்தனர். நான்—நான் குடும்பத்தில் ஒதுக்கித் தள்ளப்பட்டவனாயிருந்தேன், பள்ளியிலும் ஒதுக்கித் தள்ளப்பட்டவனாயிருந்தேன், நான் சென்ற இடமெங்கும் ஒதுக்கித் தள்ளப்பட்டவனாயிருந்தேன். அதன்பின்னர் முடிவாக என்னை உண்மையாகவே நேசித்த ஒருவரான இயேசுவை நான் கண்டபோது, அவர், “நான் உனக்கு தகப்பன்மார்களையும், தாய்மார்களையும், சகோதரர்களையும், சகோதரிகளையும் மற்றும் நண்பர்களையும் தருவேன்” என்று கூறினார்.

1416 அவருடைய மகத்தான ஞானத்தின் முன்னறிவுத்திட்டம் அவருக்குள்ளான மற்றும் வெளியே காரியங்களை எப்படி கிரியை செய்கிறார் என்பது விநோதமான காரியமாய் உள்ளது. அந்த அன்பு அதற்கு ஒரு விந்தையான உணர்வாய் இருப்பது போன்று தென்படுகிறது; ஒரு உணர்வாயல்லாமல் ஒரு—ஒரு எதிர்விளைவாய் உள்ளது. அவர் என்னை அவருடைய ஊழியக்காரனாயிருக்கும்படி அழைத்துள்ளபடியால், நான் ஜனங்கள் மத்தியில் நோக்கிப் பார்க்கிறேன், நான் ஜனங்கள் மத்தியில் நோக்கிப் பார்க்கையில், பாவமானது உள்ளே ஊர்ந்து வருவதைக் காண்கிறேன். அப்பொழுது நான் எனக்குள்ள யாவற்றோடும் அதைக் கிழித்தெரிய, நீங்கள் பாருங்கள், கிழித்தெறிய வேண்டியவனாயிருக்கிறேன். அந்த காரியங்களைக் கூறுவதற்கும், அதை என்னுடைய வழியில் நோக்கிப் பார்ப்பதற்கும்…அதுவோ காண்பதற்கே கடினமாயுள்ளது. ஆனால் அதே சமயத்தில் இருதயத்தின் ஆழத்தில் உண்மையான அன்பு அதைப் போன்று வழிந்தோடுகிறது. பாருங்கள், உண்மையான அன்பு.

1517 இப்பொழுது உங்களுடைய குட்டிப் பையனோ அல்லது குட்டிப் பெண்ணோ கார்கள் ஓடிக்கொண்டிருக்கிற வீதியில் விளையாடிக் கொண்டிருக்க, துரிதமாகவோ அல்லது சற்று கழித்தோ அவர்கள் காயமடையப் போகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், அப்பொழுது அந்தக் குட்டிப் பையன், “ஏன், அப்பா, நான் இங்கிருக்கத்தான் விரும்புகிறேன்” என்று கூறினால், அப்பொழுது நீங்கள், “குட்டிப் பையனே, உன்னுடைய சிறு இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக, நீ போய் வீதியிலேயே விளையாடு” என்று கூற விரும்புவீர்களா? அப்படியானால் அது ஒரு உண்மையான தந்தையல்ல. நீங்கள் அந்த குட்டிப் பையனை இழுத்து, அவனுக்கு ஒரு அடி கொடுத்து, அவனை திட்டி, வீதியிலிருந்து அவன் கொல்லப்படாதபடி தடுக்க அவனைக் கட்டிப் போட்டு வேறெதையாவது செய்வீர்கள். அது சரிதானே? பாருங்கள், அந்தவிதமாகவே நீங்கள் சுவிசேஷத்தோடும் செய்ய வேண்டும். நீங்கள் அசைத்து, தள்ளி, ஒழுங்குப்படுத்திக் காக்க உங்களால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முயற்சிக்க வேண்டும். இப்பொழுது ஒவ்வொருவரும் அந்தவிதமாக புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இதற்கு பின்னர் என்றோ ஒரு நாள் இவையாவும் முடிவுற்று, நம்முடைய முகத்திற்கு முன்பிருந்து திரைகள் எடுக்கப்படுகின்றபோது, நாம் அப்பொழுது புரிந்து கொள்வோம் என்று நான்—நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.

1618 சகோதரன் வே அவர்களே, நான்…நீங்களும் சகோதரி வே அவர்களும் ஒரு கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக அருமையான வேதாகமத்தை அளித்துள்ளீர்கள். நான் என்னுடைய குறிப்புகளை வெளியில் கொடுத்து தட்டச்சு செய்யும்போது, இதைப் போன்ற ஒரு புத்தகத்தில் வைத்துக் கொள்வதற்குப் பதிலாக அதில் வைத்துக் கொள்வதோ ஒரு நல்ல காரியமாயிருக்கப்போகிறது. எழுத வேண்டியதில்லை, ஏனென்றால் என்னுடைய சொந்தக் கையெழுத்தை என்னாலேயே படிக்க முடியாது, அப்படியிருக்க எப்படி மற்றவர் அதைப் படிக்க கூடியதாயிருக்கும்? என்னுடைய சொந்த குறிப்புகள் யாவற்றையுமே நான் ஒரு சுருக்கெழுத்து வடிவில் எழுதி வைத்துள்ளேன் என்றே நான் அவர்களிடம் கூறினேன். நான் என்ன கூறியுள்ளேன் என்பதைப் புரிந்து கொள்ள நானேதான் அதைப் படிக்க வேண்டும். என்றாவது ஒரு நாள் நான்—நான் அவைகளை வெளியே தட்டச்சு செய்வேன். அது ஒரு பிரித்தெடுக்கக் கூடிய தாள்கொண்ட வேதமாயுள்ளது, நீங்கள் இந்தவிதமாக அதை தனியே எடுக்க முடியும். நான் இந்தக் காலையில் இங்கே இரண்டு பாடப் பகுதிகளை வைத்துள்ளபடியால், இரு இடங்களிலிருந்து நான் வாசிக்க விரும்புகிறேன். அவர் எனக்கு அளித்த இந்த வேதாகமத்தில் நீங்கள் இந்தவிதமாக அதை வெளியே எடுத்துவிடலாம், அதாவது ஆதியாகமத்திலிருந்து ஒரு தாளையும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்தும், எங்கிருந்தும் எடுத்து, அவைகளை ஒன்றாக சேர்த்து, அப்படியே அவைகளை வாசிக்க முடியும், பாருங்கள். அதன்பின்னர் பின்னால் உள்ள இந்த காலியான பக்கத்தில் உள்ள சிறு பகுதியில் உங்களால் அந்த செய்தியின் பேரில் எழுதி வைத்துள்ள எல்லா வேதவாக்கியங்களையும் மற்றக் காரியங்களையும் பின்னால் அதில் எழுதி வைத்துக் கொள்ள முடியும். அது அற்புதமாயுள்ளது. எனவே நான் இதனைக் கொண்டு அநேக ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்கு ஆதாயம் செய்ய உதவுவேன் என்று நான் நம்புகிறேன்.

1719 உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. ஒவ்வொருவரும் எனக்கு அளித்துள்ள அருமையான கிறிஸ்துமஸ் வெகுமதிகளுக்காக நான் மீண்டும் கூற விரும்புகிறேன். சபையானது எனக்கு ஒரு புதிய சூட் துணியை அளித்துள்ளது, ஓ, நான் அதை எவ்வளவாய் பாராட்டுகிறேன்! கிறிஸ்துமஸ்ஸிற்காக நான் இரண்டு புதிய சூட் துணிகளைப் பெற்றுக்கொண்டேன். என்னுடைய சகோதரன், ஜியார்ஜியாவில் உள்ள மேகான் என்ற இடத்தில் உள்ள சிறு சபையில் உள்ள சகோதரன் பாமர் எனக்கு ஒரு புதிய சூட் துணியினை அனுப்பியுள்ளார். இந்த கூடாரம் எனக்கு ஒரு புதிய சூட் துணியினை வழங்கியுள்ளது, இன்னும் அநேக அருமையான காரியங்கள் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளன, பணமாகவும் கிறிஸ்துமஸ் வெகுமதிகள் வந்துள்ளன. வருமான வரித்துறைப் பிரிவினரோ என்னிடத்தில், அது ஒரு கிறிஸ்துமஸ் அன்பளிப்பாய் இருந்தால், அதில் “கிறிஸ்துமஸ் அன்பளிப்பு” அல்லது ஒரு “பிறந்த நாள் அன்பளிப்பு” என்று ஏதாவது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்பொழுது நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம், மற்றப்படி நான்…அப்பொழுதுதான் அது ஊழியத்திற்கு பயன்படுத்தப்படும், அதுவே சரியானது. நான் நிச்சயமாகவே ஒவ்வொருவருக்கும், உங்கள் ஒவ்வொருவருக்கும் மனைவியும் நானும் மற்றும் பிள்ளைகளுமாக எங்கள் எல்லோருடைய நன்றியையும், ஒவ்வொருவருக்கும், உங்கள் ஒவ்வொருவருக்கும் வெளிப்படுத்திக் கூறிக்கொள்கிறோம். மிகவும் அருமை. ஆனால் நாங்கள் திரும்பிப்போய், உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அன்பளிப்பை திரும்ப அளிப்பதென்பதைச் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியும், நீங்கள் அப்படியே…என்னே, என்னால்—என்னால் அதைச் செய்ய முடியாது. நான் அவ்வாறு செய்ய விரும்புகிறேன், ஆனால் என்னால்—என்னால் செய்ய முடியாது, நான் கூறுவதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். இங்கு அமர்ந்து கொண்டிருக்கிற என்னுடைய விலையேறப் பெற்ற சகோதரனின் உணர்வும் கூட அந்தவிதமாகவே உள்ளது என்றே நான் அறிவேன். அந்தவிதமாக ஜனங்கள் நம்மை நேசிப்பதை நாம் உணருகிறோம், நாம் அவர்களை பாராட்டுகிறோம்.

1820 இப்பொழுது இந்தக் காலையில் செய்தியை துவங்குவதற்காக ஆயத்தமாகையில் ஜெபத்திற்காக இப்பொழுது நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. ஜீவனுள்ள தேவனின் பிரசன்னத்திற்குள்ளாக, நாங்கள் இப்பொழுது தெளிந்த புத்தியோடும், அவரைக் குறித்த பயத்தோடும் வருகையில், நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வருகிறோம், ஏனென்றால் நாங்கள், “இப்பொழுது பிதாவே, இதோ வில்லியம் பிரான்ஹாம் அல்லது ஆர்மன் நெவில்” இருக்கிறேன் என்றோ அல்லது நாங்கள் என்னவாயிருந்தாலும், உடனே நாங்கள் புறக்கணிக்கப்படுவோம் என்பதை அறிந்துள்ளோம். ஆனால் அவரோ, “நீங்கள் பிதாவினிடத்தில் என் நாமத்தில் எந்தக் காரியத்தைக் கேட்டாலும், அது அருளப்படும்” என்று கூறியுள்ள உறுதியை நாங்கள் உடையவர்களாயிருக்கிறோம். எனவே என்னுடைய பெயரை உபயோகித்து, அவரிடத்திலிருந்து எந்தக் காரியத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று நான் யூகித்துப் பார்க்கிறதில்லை. ஆனால் நான் அவருடைய குமாரனுடைய நாமத்தை உபயோகிக்கும்போது, நான் என் விண்ணப்பத்திற்கு பதிலைப் பெற்றுக்கொள்கிறேன் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் அது நான் அவரில் கொண்டுள்ள நம்பிக்கையாயுள்ளது. அவருக்குள் நாங்கள் ஜீவிக்கிறோம், அவருக்குள் எங்களுடைய மெய்மையைப் பெற்றுள்ளோம். அவர் எங்களுக்கு பொருட்படுத்துகிற எல்லாவற்றிற்காகவும், நாங்கள் இந்தக் காலையில் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், அதுவே எங்களுடைய முழுமையான ஜீவியமும் மெய்மையுமாயுள்ளது.

1921 நான் இந்த சிறிய சபைக்காகவும், இதனுடைய மேய்ப்பருக்காகவும், தரும கர்த்தாக்களுக்காகவும், உதவிக்காரர்களுக்காகவும், எல்லா அங்கத்தினர்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். அவர்களை கண்காணிக்கிற பரிசுத்த ஆவியானவருக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர்தாமே அவர்களை தொடர்ந்து வழி நடத்தி, அவர் அவர்களை கொண்டு செல்ல வேண்டிய பாதைகளுக்குள் அவர்களை வழி நடத்துவாராக. பழைய, புதிய ஏற்பாடுகளிலும் மற்றும் நிசாயா காலம் என்ற புத்தகத்தில் வாசிக்கையிலும் எப்படி பரிசுத்தவான்களுக்கு மத்தியில் சுகவீனம் தாக்கியபோது, முழு சபையும் ஒன்று சேர்ந்து ஏகமனதோடு தேவனை நோக்கி அவர்கள் கூப்பிட்டபோது, அவர்களுடைய விண்ணப்பத்திற்கு பதிலளிக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீர அங்கத்தினர்களாக இருந்தபடியால், உபவாசித்து ஜெபித்தபோது, தேவன் செவி கொடுத்து ஜெபத்திற்கு பதிலளித்தார். பிதாவே, இந்த சிறு சபையானது அவர்களில் ஒருவரைப் போலாகும்படியாகவும், இந்த வருகிற வருடத்தில் எங்கள் மத்தியில் எந்த பிளவும் இல்லாதபடி பரிசுத்த ஆவியினால் ஒருவருக்கொருவர் அன்பின் கட்டுகளில் அவ்வளவாய் கட்டப்பட்டிருப்பார்களாக. அநேக சோர்வுற்ற யாத்திரீகர்கள் பாதையில் வந்து இரட்சிக்கப்படும்படிக்கு அப்படிப்பட்ட தெய்வீக அன்பிலும், கிறிஸ்துவின் வழியிலும் ஒவ்வொருவரும் நடப்பார்களாக. நீங்கள் அந்த சிறு கட்டிடத்தின் வாசல்களில் பிரவேசிக்கும் போதே ஒரு இனிமையான வரவேற்போடு தேவனுடைய பிரசன்னம் உங்களை சந்திக்கிறதே என்று கூறப்படுவதாக. கர்த்தாவே, எங்கள் மத்தியிலிருக்கிற சுகவீனத்தை எடுத்துப் போடும்.

2022 உம்முடைய வார்த்தையைக் கேட்க நாங்கள் பசியுள்ள இருதயங்களை நாங்கள் பெற்றுள்ளதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். கர்த்தாவே, தொடர்ந்து உமக்காக எங்களுடைய இருதயங்களை பசி கொள்ளச் செய்யும். பண்டைய தாவீது கூறியது போல, “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல், என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.” அந்த சிறு மானைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறோம், இன்றைக்கும் அந்த மானை நாங்கள் நினைக்கும்போது, அந்த மான் காட்டு நாய்களால் கிழிக்கப்பட்டு, அதற்கு இரத்தம் வடிந்து கொண்டிருக்க, அது தன்னுடைய ஜீவனை இழந்து கொண்டிருக்கையில், அது உயிர் வாழ எதிர்பார்க்குமானால், அப்பொழுது அதுவோ தண்ணீரைக் கண்டடைய வேண்டுமே. அது ஒரு முறை தண்ணீரைக் கண்டடைந்துவிட்டால், அப்பொழுது அதனுடைய ஜீவன் புதுப்பிக்கப்படுகிறது. கர்த்தாவே, நாங்கள் உயிர் வாழ வேண்டுமானால் நாங்கள் கிறிஸ்துவை உடையவர்களாயிருக்க வேண்டும் என்றும், நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிற சபையாக மாற வேண்டுமானால் நாங்கள் கிறிஸ்துவை உடையவர்களாயிருக்க வேண்டும் என்ற அந்த தாகத்தை நாங்கள் உடையவர்களாயிருப்போமாக. நாங்கள் ஜீவிக்கும்படி விரும்பிக் கொண்டிருக்கிற ஜீவியங்களை நாங்கள் ஜீவிக்க வேண்டுமானால், நாங்கள் கிறிஸ்துவை உடையவர்களாயிருக்க வேண்டும் அல்லது நாங்கள் மரித்துப் போவோம். 23 இப்பொழுது இந்தக் காலையில் உம்முடைய வார்த்தையை நாங்கள் திறக்கையில், உம்மண்டை எங்களை நெருக்கமாகக் கொண்டுவரும்படியான படிகற்களையும், ஆறுதலையும் கண்டடைவோமாக. பிதாவே, பரிசுத்த ஆவியானவர்தாமே வார்த்தையை எங்களுக்கு திறந்து கொடுக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, நாங்கள் உம்முடைய ஊழியக்காரர்களாய் இருக்கிறபடியால், புதிய வருடத்தை சந்திக்க இன்னும் நன்கு ஆயுதம் தரிப்பிக்கப்படுவோமாக. நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

2124 இப்பொழுது, இந்தக் காலை புத்தாண்டின் அடிப்படையின் பேரில் சிந்திக்கையில், இன்றிரவு வரை என்னுடைய புத்தாண்டினுடைய செய்தியை நான் ஒரு புறம் தள்ளி வைத்து விடுவதே நல்லதாயிருக்கும் என்றும், இங்கே சில ஞாயிறு வேதபாட பள்ளி வேதவாக்கியங்களுக்குத் திரும்பிச் சென்று சற்று நேரம் வேதாகமத்தில் நான் அறிந்துள்ள மிக முக்கியமான பாடங்களில் ஒன்றின் பேரிலான ஒரு பாடப் பொருளை பேச எடுத்துக்கொள்ளலாம் என்றும் நான் எண்ணினேன். இது நம்முடைய கர்த்தர் முதலில் பிரசங்கித்த ஒரு கோட்பாடாகும், இயேசு பிரசங்கித்த முதல் கோட்பாடு, இதை நம்முடைய வருடத்தினுடைய முதலாவது போதனையாக போதிப்பது நன்மையாயிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

2225 இப்பொழுது, உங்களில் எவருக்கேனும் இது குளிராக இருந்தால், சற்று குளிராயிருந்தால் உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? இங்கே மேலே அவ்வாறு இருப்பதை நான் உணர்ந்ததை எண்ணிப்பார்த்தேன். டாக் அவர்களே, நீங்கள் எங்கேயிருந்தாலும், சற்று உஷ்ணப்படுத்தும் கருவியை இயக்குங்கள், ஏனென்றால் இங்கே சுற்றிலும் குளிராயிருப்பதை நான் உணருகிறேன். சில ஜனங்களுக்காக, விசேஷமாக சிறு பிள்ளைகளோடுள்ளவருக்காக நீர் அங்கு அதைச் செய்ய வேண்டும் என்பதை நான் அறிவேன்.

2326 இப்பொழுது நாம் இந்தக் காலையில் நம்முடைய வேதாகமங்களில் எபேசியருக்கு, எபேசியர் 4-ம் அதிகாரத்திற்கு திருப்புவோமாக. நாம் எபேசியர் 4-ம் அதிகாரத்தில் 11-ம், 11-ம் வசனத்திலிருந்து வாசிப்போமாக. அதன் பின்னர் நாம் அங்கிருந்து, அங்கிருந்து யோவான் 3:1 முதல் 12 வரையுள்ள பகுதிக்கு திருப்பி, வேதத்தில் இரண்டு இடங்களை வாசிக்கப் போகிறோம். எபேசியர் 4-ம் அதிகாரத்திலிருந்து, 11-ம் வசனத்திலிருந்து துவங்கி வாசிக்கப் போகிறோம்: மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார். நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயமும் தன்தன் அளவுக்குத் தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது.

2427 இப்பொழுது, நீங்கள் வீட்டிற்கு சென்ற பிறகு ஆய்ந்து படிக்கும்படியான ஏதோ ஒன்றை இது உங்களுக்கு அளிக்கும்படிக்கே நான் அதை வாசிக்கிறேன். இப்பொழுது நான் என்னுடைய பாடப் பகுதியை யோவான் 3-லிருந்து வாசிக்கவுள்ளேன், மிகவும் பழக்கப்பட்ட ஒரு வேதப் பகுதி: யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு எனப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்பட வேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன். நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?

2528 இப்பொழுது, தேவன் தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிப்பாராக. இயேசுவானவருடைய முதல் கோட்பாட்டைக் குறித்தே இந்தக் காலையில் நான் பாடப் பொருளாக எடுக்க விரும்புகிறேன். இயேசுவின் முதல் கோட்பாடாயிருந்தது: நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதேயாகும். அதுவே அவருடைய முதல் கோட்பாடாயிருந்தது. இப்பொழுது ஞாயிறு வேதபாட பள்ளி என்ற முறையில், அதாவது என்னுடைய தொண்டை சுரசுரப்பாகியுள்ளதால், இன்றிரவு நான் பிரசங்கிமாட்டேன். எனவே ஜனங்களுக்கு புதிராக தென்படுகிற ஒரு காரியம் உண்டு என்பதைக் குறித்து நான் என் இருதயத்தில் எண்ணியுள்ளேன், நாமோ அதைக் குறித்து எல்லா நேரத்திலுமே அதிகமாகக் கேட்கிறோம். எனவே நாம் இந்தப் பாடப் பொருளினூடாக ஆராய்ந்து, இதை தெளிவுபடுத்தினால் இந்தக் காலை இது நன்மையாய் இருக்கும் என்று நான் எண்ணினேன். அதுவே முதல் துவக்கம்: நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் . இது மிகவும் ஆழமான ஒன்றாக உள்ளது.

2629 ஜனங்களோ இதற்கு பல வித்தியாசமான அர்த்தங்களை அளித்துள்ளனர் என்பதை நாம்—நாம் கண்டறிகிறோம். கிட்டத்தட்ட எல்லா சபைகளுமே நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் ஒவ்வொருவரும் மீண்டும் பிறக்க வேண்டும் என்பது என்ன பொருட்படுத்துகிறது என்பதற்கு தங்களுடைய வித்தியாசமான வியாக்கியானங்களையே அதற்கு உடையவர்களாயிருக்கின்றனர், இந்தக் காலையில் நான் மெத்தோடிஸ்டு சபைக்குச் சென்றால், அவர்களோ, “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று கூறுவார்கள். நீங்கள் அதை எப்படி வியாக்கியானிக்கிறீர்கள்? நான் பாப்டிஸ்டு சபைக்கு சென்றால், “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்பார்கள். நீங்கள் எப்படி அதை வியாக்கியானிக்கிறீர்கள்? நான் ஒவ்வொரு சபைக்கும் சென்றால், நாம் தொள்ளாயிரம் வித்தியாசமான ஸ்தாபன சபைகளுக்குச் சென்றாலும், தொள்ளாயிரம் வித்தியாசமான வியாக்கியானங்கள் இருக்கும் என்பதை நாம் கண்டறிவோம். எனவே அநேக வித்தியாசமான வியாக்கியானங்கள் இருப்பதை பார்க்கிறோம், அதே சமயத்தில் ஒரு வேதாகம கோட்பாடு, எங்கோ சத்தியமாவது இருக்க வேண்டும்.

2730 எனவே வேதம், “நீங்கள் மீண்டும் பிறக்கலாம் ” என்று கூறவில்லை, ஆனால் “நீங்கள் பிறக்க வேண்டும்” என்றே கூறியுள்ளது என்பது இப்பொழுது ஞாபகமிருக்கட்டும். இப்பொழுது, ஆங்கிலம் பேசுகிற ஜனங்களாகிய நாம், வேண்டும் என்ற வார்த்தை என்ன பொருட்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்கிறோம், அதாவது, “அது முற்றிலுமானதாய் உள்ளது, நீங்கள் அதை செய்யத்தான் வேண்டும்.” பாருங்கள், அது ஒரு கட்டாயமாய் உள்ளது. “நீங்கள் செய்யலாம், நீங்கள் செய்திருந்தாலும் சற்று நல்லது தான்” என்றில்லாமல் “நீங்கள் மறுபடியும் பிறக்கத்தான் வேண்டும் ” என்பதாயுள்ளதே! ஓ, நாம் இந்தக் காலையில் அந்த வார்த்தையை எடுத்துக் கொண்டு, அதை ஆராய்ந்து, அது என்ன பொருள்படுகிறது என்று பார்க்க முடிந்தால் நலமாயிருக்கும், அது எப்படி முற்றிலும் கூடாத…அது இன்றியமையாதததாய், அது மகத்தானதாய் இருக்குமானால், அது இல்லாமல் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது முற்றிலும் கூடாத காரியமாகும், அல்லது நீங்கள் மீண்டும் பிறக்கும் வரை அதைப் புரிந்து கொள்வது என்பதும் கூட முற்றிலும் கூடாத காரியமேயாகும். மறுபடியும் பிறக்க வேண்டும் என்ற அந்த வார்த்தைக்குரிய பல்வேறுபட்ட வியாக்கியானங்கள் இருந்தாலும், அது என்ன பொருட்படுத்துகிறது என்பதைக் கண்டறிய நம்முடைய முழு இருதயத்தோடு நாம் அதை நாடித் தேட வேண்டும்.

2831 வேதனைப்பட செல்ல விரும்புகிற ஒரு நபரும் இங்கே இல்லை, எவருமேயில்லை. நீங்கள் ஐநூறு மைல்கள் கரோட்டி, பனிகட்டி சாலைகள் வழியாக உங்களுடைய ஜீவிய கால நேரத்தையும், உங்களுடைய பணத்தையும் செலவழித்துக் கொண்டு இங்கு சபைக்கு வந்து ஜனங்களோடு கரங்களைக் குலுக்குகிறீர்கள். (நீங்கள் அதைச் செய்ய விரும்பினாலும்), மேய்ப்பரும், நானும் இன்னும் மற்ற ஊழியக்காரர்களும் வார்த்தையைப் பேசுவதை கேட்பதற்கு (அதாவது நீங்கள், மேய்ப்பர்கள், ஊழியக்காரர்கள், எங்களைப் போன்ற கிறிஸ்துவின் ஊழியக்காரர்களை எங்கும் உடையவர்களாயிருந்தாலும்) இங்கு உங்களை, இந்த குறிப்பிட்ட இடத்திற்கு இழுக்கிற ஒரு காரியம் உண்டு. ஆகையால் இந்த மந்தை போஷிக்கப்படுகிறதை, சரியாக போஷிக்கப்படுகிறதைக் காண்பது மேய்ப்பர்களாகிய எங்களுடைய கடமையாயுள்ளது, ஏனென்றால் சர்வ வல்லமையுள்ள தேவன் எங்களுடைய கரங்களில் உங்களுடைய இரத்தப் பழியைக் கேட்பார். நியாயத்தீர்ப்பின் நாளிலே நாங்கள் உங்களுக்காக பதில் கூறுவோம். ஆகையால் எங்கள் மேல் வைக்கப்பட்டுள்ள இந்த பெரிய பயங்கரமான பொறுப்பினை கண்டு, எங்களை நேசிக்கிற ஜனங்களை தேவன் எங்களுக்கு அளித்துள்ளபடியால், நாங்கள் பேசுவதைக் கேட்க வருகிறார்கள், ஆகையால் நாங்கள் எங்களுடைய நேரத்தை தொடர்ந்து உங்கள் ஆத்துமாக்களை கண்காணிப்பதில் செலவிட வேண்டும். முதலில் சரியில்லாத சிறு காரியம் எழும்புவதை நாங்கள் காண்கையில், அந்த நபரண்டை வருவது எங்களுடைய கடமையாயுள்ளது, ஏனென்றால் நாங்கள் ஆடுகளை கவனித்துக் கொண்டிருக்கிற மேய்ப்பர்களாயிருக்கிறோம். ஆடு தன்னைக் கொல்லும் ஒரு களைச் செடியை சாப்பிடுவதை நான் கண்டால், நான் அதை அந்த களைச் செடியைவிட்டு விரட்டுவதே சிறந்தது; அது களைச் செடியை புசிக்க முடியாதபடி அதனிடத்திலிருந்து அதை பிடுங்கி இழுக்க வேண்டும், ஏனென்றால் அது ஆட்டைக் கொன்றுவிடும்.

2932 மேற்கத்திய நாடுகளில் அறியப்படுகிற ஒரு களைச் செடி, ஒரு விலங்கு புசிக்கக் கூடிய அந்த களைச் செடி, “லாகா பூண்டு” என்று அழைக்கப்படுகிறது. ஒரு லாகா பூண்டு என்ற செடியைப் பற்றி எவரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆம். ஒரு குதிரை அதை சாப்பிட்டு விட முடியும், அதன் பிறகு உங்களால் அதற்கு ஒன்றுமே செய்ய முடியாது. அதன்பின்னர் அது அடங்காததாகிவிடுகிறது. உங்களால் அதன் மீது ஒரு சேனம் பூட்ட முடியாது. நீங்கள் அதனோடு ஒன்றுமே செய்ய முடியாது. அது, “லாகா பூண்டு” எனப்படுகிறது. நீங்கள் அந்தக் களைச் செடியிலிருந்து உங்களுடைய—உங்களுடைய மந்தையை விலக்கி வைக்க வேண்டும். ஒரு குதிரை அவ்விதமான ஒன்றை சாப்பிடுமானால், இந்த நிலைமைக்குள்ளாக்கும், இந்த நரம்புப் பிடிப்பிற்குள்ளாக்கும் ஒன்றை அது சாப்பிடுமானால், ஏன்? அப்பொழுது நீங்கள் ஒரு களையை லாகா பூண்டை சாப்பிட உங்களுடைய குதிரையை அனுமதித்த மிகவும் பரிதாபமான ஒரு கால்நடை மேய்ப்பனாயிருப்பீர்கள். எனவே நீங்கள் பொறுப்பாக கவனிக்கவில்லை என்பதையே அது காண்பிக்கிறது. 33 ஒரு ஆட்டைத் துரத்திவிடப் போகிற ஏதோ ஒன்றை அது சாப்பிட அல்லது தேவனுக்கு முன்பாக அதைப் புறம்பாக்க, அவருடைய வார்த்தையை பின் தொடராத ஒன்றை, அவருடைய கட்டளையை பின்பற்றாத ஒன்றைக் காணும்படியான ஒரு உண்மையான மேய்ப்பன், ஒரு உண்மையான கிறிஸ்துவின் ஊழியக்காரன் கிறிஸ்துவின் ஒரு பரிதாபமான மாதிரியாயிருப்பான். நீங்கள் அதைச் செய்யக் கூடாது. நீங்கள் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

3034 ஆகையால் வேதாகமத்தில் நமக்கு முன்பாக இங்கு எழுதப்பட்டுள்ள இந்த மகத்தான இயேசுவின் கோட்பாடு, “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்பதாகும். நான் முன்னமே கூறியுள்ளது போல, அதைக் குறித்து அநேக வித்தியாசமான வியாக்கியானங்கள் உள்ளன. அநேகர் அது என்ன பொருட்படுத்துகிறது என்றும், அவர்கள் எப்படி ஒரு உண்மையான கிறிஸ்தவராக முடியும் என்று என்னிடத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறதின் நிமித்தமாக நான் இதை இந்தக் காலையில் நினைத்தேன். அதன்பின்னர் நாம் இந்தப் பாடப் பொருளை அணுகி, நான் அதை உங்களுக்கு எப்படி கூறலாம் என்று நான் தெளிவாக அறிந்தமட்டில் எடுத்துக் கூறலாம் என்று எண்ணினேன். ஜனங்கள் செய்தியை புரிந்துகொள்ளும்படியாக அதை ஒரு பிரசங்க முறையில் இல்லாமல், ஞாயிறு வேதபாட போதனை முறையில் போதிக்க உள்ளேன். இப்பொழுது, “மறுபடியும் பிறத்தலைக்” குறித்து அநேக வியாக்கியானங்கள் உள்ளன.

3135 இப்பொழுது நான் இதைக் கூறிக் கொண்டிருக்கிறேன், இதுவோ ஒலி நாடாவில் பதிவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன், ஒருவேளை இந்த ஒலி நாடாவை பெற்றுக் கொள்ளப்போகும் மேய்ப்பர்களுக்கு நான் இதைக் கூற விரும்புகிறேன். வழக்கமாக சபையானது இதைப் போதிக்கிறதிலிருந்து சற்று வித்தியாசமானதாக இது இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். நான் போதிக்கிறேன் மற்றும் விசுவாசிக்கிறேன், நீங்கள் ஆவியினால் பிறந்து, அதன் பின்னர் பரிசுத்த ஆவியினால் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்படுகிறீர்கள் என்பதை வேதாகமத்தின் மூலம் போதுமானபடி நிரூபிக்க முடியும் என்று நம்புகிறேன். 36 இப்பொழுது, ஒரு—ஒரு பாவியாயிருக்கிறபடியால், நீங்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்பினால் சபையோருக்கு முன்பாக மேலே வந்து அடையாளங்கண்டு கொள்ளப்படுங்கள், அதுவே புதிய பிறப்பாயுள்ளது என்று அவர்களில் அநேகர் போதிக்கிறார்கள். தண்ணீர் ஞானஸ்நானமே புதிய பிறப்பாயுள்ளது என்று அநேகர் விசுவாசிக்கிறார்கள். நீங்கள் தண்ணீரில் ஞானஸ்நானம்பண்ணப்படும்போது நீங்கள்—நீங்கள் ஜலத்தினால் பிறக்கிறீர்கள் என்று அவர்களில் சிலர் விசுவாசிக்கிறார்கள். அதைக் குறித்து மிக அநேக வித்தியாசமான விளக்கங்கள் உள்ளன. அவர்களில் அநேகர், ஒரு கோட்பாட்டை மனப்பாடமாக ஒப்பிப்பதும், ஒரு சபையின் கோட்பாட்டை விசுவாசிப்பதுமே தான் என்று அநேகர் விசுவாசிக்கின்றனர், “பரிசுத்த சபையின் இன்னார்—இன்னாரில் நான் விசுவாசங்கொண்டுள்ளேன்” என்று கூறி ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் தேவனை மனிதனுடைய இரட்சகராக விசுவாசிக்கிறேன். இந்த நாள் முதற்கொண்டு நான்—நான் இந்த சபையின் ஒரு அங்கத்தினனாகிவிட்டேன், கிறிஸ்தவர்களோடு ஐக்கியங்கொள்கிறேன்” என்று கூறுகின்றனர். அதுவே, “மறுபடியும் பிறத்தல்” என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர்.

3237 அவர்கள் கோட்பாட்டை மனப்பாடமாகக் கூறினாலும், நாம் அதை விமர்சனம் செய்ய முடியாது என்றே நான் நினைக்கிறேன், அவர்களில் சிலர் சுத்தமும், பரிசுத்தமும், இன்னும் அவர்களில் சிலர் உண்மையாகவே வேதப்பிரகாரமாக இருக்கிறார்கள். ஆனால் வேதவாக்கியம் சரியான இடத்தில் உபயோகிக்கப்படவில்லை. வேதவாக்கியத்தை உபயோகித்தலிலும் கூட, புதிய பிறப்பானது அதற்கும் அப்பால் உள்ள ஒரு காரியமாயுள்ளது என்றே நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் எவ்வளவு நன்றாக அதைப் பொருட்படுத்திக் கூறினாலும் கூட, புதிய பிறப்போ உங்களுடைய நல்ல நோக்கங்கள், உங்களுடைய சிந்தனைகள், எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு காரியம் என்றே நான் விசுவாசிக்கிறேன், அது அதற்கும் அப்பாற்பட்டது.

3338 நான் இதை அவமதிப்பதற்காக கூற விரும்பவில்லை, நான் எந்த ஸ்தாபன சபையின் பேரிலும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால் அதைக் குறித்து அதிகமாக எனக்கு நினைவிற்கு வருவதோ ஒரு—ஒரு—ஒரு யூதனைக் குறித்தேயாகும், ஒரு சிறிய…இது ஒரு கேலிப் பேச்சல்ல. கேலியானப் பேச்சுகள் பிரசங்க பீடத்தில் கூறப்படக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இது ஒரு கேலி பேசுவதற்கான இடமே இல்லை. ஆகையால் என்னுடைய சிந்தையில் நான் கொண்டிருந்த இந்த கூற்றை ஒரு கேலிப்பேச்சிற்காக அல்லாமல், நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை வெளிப்படுத்திக் காண்பிக்கவே இதைக் கூறுகிறேன். ஒரு கத்தோலிக்க சபையில் புதியதாக மனமாற்றமடைந்திருந்த ஒருவருடைய வீட்டிற்கு வெள்ளிக்கிழமையன்று ஒரு கத்தோலிக்க குருவானவர் சென்றார். அந்த புதியதாக மனமாற்றமடைந்திருந்த அந்த நபர் பன்றி இறைச்சியைப் பொறித்து வைத்திருந்தாராம். அவர், “பிதாவே, நான் வருந்துகிறேன், எனக்கு என்னுடைய ஞாபகம் வந்தபிறகு, அதாவது இதுவோ வெள்ளிக் கிழமையாயுள்ளது. ஆனால் நம்முடைய மகத்தான சபையின் கோட்பாட்டின்படி ஒரு சமயம் நான் ஒரு யூதனாயிருந்தேன், நீரோ என் மீது பரிசுத்த தண்ணீரைத் தெளித்து ஒரு யூதனிலிருந்து ஒரு கத்தோலிக்கனாக மாற்றிவிட்டீர் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது நான் கொஞ்சம் பரிசுத்த தண்ணீரை இந்த பன்றி இறைச்சியின் மீது தெளித்து, அதிலிருந்து ஒரு மீனை உண்டு பண்ணுவேன்” என்று கூறினான். இப்பொழுது அந்தவிதமாக செய்ய கூறுவது அதை ஒரு மீனாக்கிவிடாது. அது எவ்வளவு பரிசுத்தமான தண்ணீர் என்று பாசாங்கு செய்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது அப்படியே பன்றி இறைச்சியாகவே இருக்கும்.

3439 நாம் ஒரு கோட்பாட்டை கூறுவதில் அல்லது ஒரு சபையை சேர்ந்து கொள்ளுதலில் சரியாக இருக்கிறோம் என்று நாம் எவ்வளவுதான் எண்ணிக்கொள்ள முயற்சித்தாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் உண்மையாகவே தேவனுடைய ஆவியினால் பிறக்கும் வரை நீங்கள் இருந்துவந்த விதமாகவே தான் இருக்கிறீர்கள். அது உங்களை மாற்றுகிறதில்லை. உங்களுடைய கோட்பாடு, சபையை சேர்ந்து கொள்ளுதல், அல்லது உங்களுடைய எண்ணங்களை மாற்றிக் கொள்ளுதல் அல்லது உங்களுடைய நல்ல நோக்கங்களை மாற்றிக்கொள்ளுதல், அவையெல்லாம் நல்லதாக தென்பட்டிருந்தாலும் கூட அது இன்னும் சரியானதல்ல. ஏதோ ஒன்று சம்பவிக்க வேண்டும், புதிய பிறப்பு ஒரு அனுபவமாயுள்ளது. அது ஏதோ ஒன்று சம்பவிக்கிறதாயுள்ளது. எனவே அது புதிய பிறப்பை கொண்டு வருகிறதில்லை. இப்பொழுது, வித்தியாசமான சபைகள், அவைகள், “பாருங்கள், நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது அதை விசுவாசியுங்கள், அவ்வளவுதான்” என்று கூறும். ஆனால் அதுவல்ல.

3540 இப்பொழுது முன்னர் துவக்கத்தில் கூறின அடிப்படையான, நாம் மறுபடியும் பிறக்க வேண்டு என்பதன் காரணம், நாம், “யாவரும் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களாய் இந்த உலகத்திற்கு வந்தோம்” என்று வேதம் நமக்கு போதிக்கிறதினாலேயாம். ஆகையால் நம்முடைய சுபாவம் துவக்கத்திலேயே பாவமுள்ளதாய் துவங்கினதாயுள்ளது என்பதையே அது நமக்குக் காண்பிக்கிறது. நாம் துவக்கத்திலேயே நல்லவர்கள் அல்ல. எனவே நாம் நம்முடைய புத்திக் கூர்மையினாலோ, நம்முடைய உத்தமத்தினாலோ, அல்லது நாம் எவ்வளவு பெரியவர்கள் என்பதினாலோ அல்லது நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதினாலோ அல்லது இன்னும் என்னவாகவோ நாம் இருப்பதினாலோ எந்தக் காரியத்தையும் உரிமை கோர முடியாது, நாம் துவக்கத்திலிருந்தே முற்றிலும் தவறாயிருக்கிறோம். அதைக் குறித்து நாம் செய்யக் கூடியது ஒன்றுமே கிடையாது. உங்களால் முடியாதே…இயேசு, “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” என்று கேட்டார். நீங்கள் முழு ஆலோசனையோடு, அதைக் குறித்து எல்லாக் கனவும் கண்டு, அதைப் படித்து, அதை ஆராய்ந்து, அதை பரிசோதித்து இன்னும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் செய்தாலும் உங்களுடைய எண்ணத்திற்கு சிறிதளவும் நீங்கள் உதவி செய்து கொள்ள முடியாது. எனவே நம்முடைய சிந்தனை எல்லாவற்றையும் அழித்துப்போடுகிறது. அது அவ்வாறு செய்கிறதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் அது ஏதோ ஒரு காரியத்தை அறிந்து கொள்ளுகிற ஒரு சிந்தையில், புத்திக் கூர்மையில் வைக்கப்பட்டிருந்தால், நாம் மற்றொரு தருணத்தை உடையவர்களாயிராமல் நாம் படிப்பறிவில்லாத கல்வி அறிவு அற்ற ஜனங்களாய் விடப்பட்டிருப்போம். ஆனால் தேவனோ அதை மாற்றிவிட்டார், இல்லையென்றால் துவக்கத்தில் அந்தவிதமாக அதை ஒருபோதும் வைத்திருந்திருக்கமாட்டார். சபைகள் அதை எப்பொழுதுமே சிக்கலாக்கிவிடுகின்றன. தேவனோ அதை எளிமையாக்குகிறார். எனவே நாம் யாவரும் புரிந்து கொள்ளும்படியான ஒரு இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, நாம் யாவரும் அதை உடையவர்களாக இருக்க முடிகிறது. அது விருப்பமான யாவருக்கும் உரியதாய் உள்ளது.

3641 இப்பொழுது, இப்பொழுது, எந்த ஒரு மனிதனும் மற்றவரை இரட்சிக்க முடியாது. இப்பொழுது, யாரேனும் ஒருவர் எதைக் கூற முயற்சித்தாலும் அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை, எந்த மனிதனுமே மற்றவரை இரட்சிக்க முடியாது. எவ்வளவு புத்தி கூர்மையுள்ளவராயினும், அவருடைய பதவி என்னவாயிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, அவர் ஒரு மேய்பராய், குருவானவராய், பேராயராய், போப்பாண்டவருக்கு அடுத்த ஸ்தானத்திலிருப்பவராய் அல்லது போப்பாயிருக்கட்டும், அவர் எந்த ஒரு மனிதனுடைய ஜீவியத்தின் இரட்சிப்போடு எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது, ஏனென்றால் அவர் தாமே ஒரு பாவியாயிருக்கிறார், பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்களைப் பேசுகிறவராய் உலகத்திற்கு வருகிறார். அவர் துவக்கத்திலிருந்தே ஒரு பொய்யனாயிருக்கிறார். அவர் கூறும் எந்த வார்த்தையும் தேவனுடைய வார்த்தைக்கும், தேவனுடைய திட்டத்திற்கும் முரணாயிருந்தால் அது பொய்யாகும்.

3742 ஆனால் தேவன் மனிதன் இரட்சிக்கப்படும்படியாக ஒரு திட்டத்தை உண்டாக்கினார். எனவே மனிதனால் அந்தத் திட்டத்தோடு எந்தக் காரியத்தையும் கூட்ட முடியாது. அது தேவனுடைய திட்டமாய் உள்ளது. அந்தத் திட்டத்தைத் தான் இந்தக் காலையில் நாம் ஆய்ந்து படிக்க விரும்புகிறோம். தேவனுடைய திட்டம் என்றால் என்ன? அவர், “ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் ஒரு பொய், என்னுடையதே சத்தியம்” என்றார். ஆகையால் நாம் ஒரு வாக்கியத்தையும் மாற்ற, அதை வேறொன்றாய் மாற்ற துணிச்சல் கொள்ளக் கூடாது. நம்முடைய சபை சடங்காச்சரங்களை எவ்வளவாக வாசித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நாம் அதை மறக்க வேண்டும். இது தேவனுடைய வார்த்தையாய் உள்ளது. வேறெந்த வழியிலும் செய்யப்பட முடியாது. தேவன் ஒரு திட்டத்தை உடையவராயிருக்கிறார், அவரே ஒரு திட்டத்தை உண்டுபண்ணினார்.

3843 நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரை நீங்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளமாட்டீர்கள் என்பது முதலில் நினைவிருக்கட்டும். அவர் அதை இருமுறை பேசினார். “ஒரு மனிதன் மறுபடியும் பிறந்தாலொழிய அவன் தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்கமாட்டான்.” “ஒரு மனிதன் மறுபடியும் பிறந்தாலொழிய அவன் தேவனுடைய ராஜ்ஜியத்தையுங்கூட காணமாட்டான்.” இப்பொழுது அது வலியுறுத்தப்பட்டுள்ளதாயுங்கூட உள்ளது. வார்த்தை, அந்த எல்லா வார்த்தைகளிலும், அவர்கள் அதை எழுத வேண்டியிருந்தது என்று அவர்கள் என்னிடத்தில் கூறினர், அதாவது அவர்கள், “மெய்யாகவே, மெய்யாகவே” அது ஒரு நிறுத்தற்குறி என்று கூறுகின்றனர், ஆங்கிலத்தில் உள்ள ஒரு—ஒரு பெரிய எழுத்துபோலாகும். “மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்!” ஒரு இடத்தில் உள்ள வார்த்தையில், இல்லை பல இடங்களில், அது “முற்றிலுமானது” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “முற்றிலுமாக, முற்றிலுமாக, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்!” யார் அதைக் கூறினது, போப்பாண்டவருக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள ஒருவரா, குருவானவரா, மேய்ப்பரா, சுவிசேஷகரா, போப்பா? தேவன் தாமே! இப்பொழுது எவ்வித சாக்குபோக்குகளும் கிடையாது. அவர் எவ்வளவு பெரியவராயிருந்தாலும், அவருடைய பெயர் என்னவாயிருந்தாலும், அவர் எவ்வளவு பெரியவராயிருந்தாலும், அல்லது அவர் எவ்வளவு புகழ்வாய்ந்தவராயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர் மறுபடியும் பிறக்கும் வரை தேவனுடைய ராஜ்ஜியத்தை புரிந்துக்கொள்ளக் கூட முடியாது, அவர் பிரவேசிக்கமாட்டார், பிரவேசிக்கவேமாட்டார், வேறெந்த வழியிலும் உள்ளே பிரவேசிக்கவே முடியாது. இது ஒரு பெரிய பாடமாய் உள்ளது. “மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்!” கவனியுங்கள். போய் கிரேக்க மொழி பெயர்ப்பை எடுத்துப் பார்த்தால் உங்களுடைய “கண்களினால்” காண்பது அல்ல என்பதும், உங்களுடைய “இருதயத்தால்” நீங்கள் புரிந்துகொள்வது என்பதையும் நீங்கள் கண்டறிவீர்கள். பாருங்கள், நீங்கள் உங்களுடைய கண்களினால் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காண முடியாது, ஏனென்றால் அது ஒரு ஆவிக்குரிய இராஜ்யமாகும். புரிகிறதா? வேறு வார்த்தைகளில் கூறினால், “நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரையில் நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை ஒரு போதும் புரிந்து கொள்ளவே மாட்டீர்கள்” என்பதாகும். அது முழுவது சிக்கலகற்றப்படுகின்ற இரகசியமாகும். நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது, இராஜ்ஜியத்தின் திட்டங்கள், இராஜ்ஜியமே உங்களுக்கு உண்மையாகிறது.

3944 ஒரு ஒப்பந்தக்காரர் ஒரு கட்டிடத்தைக் கட்டுவது போல, அதாவது அவர் ஒரு கட்டிட அமைப்பின் வரைப்படத்தை புரிந்து கொள்ள முடிந்தாலொழிய ஒரு கட்டிடத்தை கட்டும்படியான முயற்சியில் அவர் ஈடுபட தேவைப்படமாட்டார், அவர் கட்டிட அமைப்பின் வரைபடத்தை புரிந்து கொள்ளவில்லையென்றால் பயனில்லை. புரிந்து கொள்ளும்போது, அந்த கட்டிடத்தை எப்படி கட்ட வேண்டும் என்பதை அவர் அறிந்து கொள்கிறார். அந்த விதமாகத்தான் இதுவும் உள்ளது. தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்டுவதைக் குறித்தும் அது தான் சம்பவிக்கிறது. நீங்கள் கட்டிட அமைப்பின் வரைபடத்தை புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரையில் நீங்கள் கட்டிட அமைப்பின் வரைபடத்தை அறிந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது, அப்பொழுது கட்டிட அமைப்பின் வரைபடத்தை மறுதலித்தால், என்ன சம்பவிக்கும்?

4045 அண்மையில் ஒரு அழகான இளம் பெண்…நான் அவளுடைய தாயாரோடு வாலிபமாயிருந்தபோது உடன் செல்வது வழக்கம். அவளும் ஒரு அருமையான, அழகான ஸ்திரீயாயிருந்தாள். அவளுடைய பெயர் இப்பொழுது ஹவ் (Huff) என்பதாகும், அவள் திருமணம் செய்து கொள்ளும் முன்பு அவளுடைய பெயர் லீ என்பதாயிருந்தது. நான் மில்டவுன் பாப்டிஸ்டு சபையில் போதகராயிருந்தபோது, அவர்கள் ஐக்கிய சகோதர சபையை சார்ந்திருந்தனர். ஆனால், ஓ, அவர்களுக்கு உண்மையாகவே என்னை நன்கு பிடித்திருந்தது. அவள்…நான் வழக்கமாக முன்பெல்லாம் அவளோடு செல்வதுண்டு. அவர்கள் இங்கு உள்ள சகோதரன் ரைட் அவர்களுடைய வீட்டிற்கு பின்னே தூரமாய் வசித்து வந்தனர்… நான் முன்னர் அவர்களுடைய வீட்டிற்கு செல்வதுண்டு, அந்த இளம் பெண் ஒரு மிக இனிமையான இளம் பெண்ணாயிருந்தாள். அவள் எனக்கு கொஞ்ச காலம் ஒரு பெண் சிநேகிதியாய் இருந்தாள். சகோதரன் லீ அவர்களோ ஒரு அருமையான் மனிதன், சபைக்கு விசுவாசமுள்ளவர், ஐக்கிய சகோதர சபையின் கருத்தினை உடையவராயிருந்தார். ஒரு இரவு அவர் தன்னோடு வீட்டிற்கு வந்து முழு இரவும் தங்கும்படிக்கு என்னை அழைத்திருந்தார். அப்பொழுது நானோ, “சகோதரன் மரியன் அவர்களே, நான்—நான் அதைச் செய்ய மகிழ்ச்சியடைவேன்” என்றேன். எனவே ஆராதனை முடிவுற்றப் பிறகு, பாருங்கள், அந்தப் பெண்ணும் நானும் காரில் ஏறி, அங்கு சென்றோம். நான் ஒரு டஜன் கதவுகளை திறக்க வேண்டியதாயிருந்தது, ஒரு மிகப் பெரிய மரத்தூண்களினாலான வீட்டை அடைய நாங்கள் மலையைச் சுற்றிக் கொண்டு சென்றோம் என்று நான் நினைக்கிறேன். பாருங்கள், நாங்கள் முற்றித்தில் அமர்ந்து அவளுடைய தாயும், தகப்பனாரும் மற்றும் அவளுடைய இளைய சகோதரியும் மேலே வர காத்திருந்தோம். அவர்கள் மேலே வந்தபோது, நாங்கள் யாவரும் உள்ளே சென்று ஒரு சிறு இரவு ஆகாரத்தை அந்த இரவு புசித்தோம். தாயார் ஆகாரத்தை எடுத்து வெளியே கொடுத்துவிட்டார். நாங்கள் புசித்தபின், தகப்பனாரும் நானும் ஒன்றாக கீழ்தளத்தில் இருந்த ஒரு மிகப் பெரிய சிறகுகளைக் கொண்ட மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்தோம், அதாவது அதற்கு கீழே வைக்கோல்கள் போடப்பட்டிருக்க, உங்களுக்குத் தெரியும், உண்மையாகவே நல்ல உறக்கம் தான். அது நீங்கள் வைத்துள்ள அழகான இளைப்பாறும் முரட்டு மெத்தைகளைப் பார்க்கிலும் சிறந்ததாயிருந்தது என்றே நான் அதை உங்களுக்குச் சொல்லுவேன். எனவே நாங்கள்…தாயாரும் அந்த இரண்டு பெண்பிள்ளைகளும் மேல்மாடிக்கு சென்றுவிட்டனர்

4146 அந்த இரவு நாங்கள் அங்கு படுத்துக் கொண்டிருக்கையில், சகோதரன் லீ அவர்கள் ஒரு சொப்பனம் கண்டார். அவர் எப்பொழுதுமே என்னோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்து வாதம் செய்து வந்தார். அவர் அதை விசுவாசிக்கவில்லை. அவர் ஒரு கட்டிட ஒப்பந்தக்காரராய் இருந்தார். எனவே அவர், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே நான் ஒரு சொப்பனங் கண்டேன்” என்று கூறினார். அவர் தொடர்ந்து, “நான் நியூ ஆல்பனிக்கு சென்றதாக சொப்பங்கண்டேன்.” அங்கு நான் ஒரு மனிதனுடைய வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தேன். அவர் எனக்கு அந்த வீட்டின் கட்டிட அமைப்பு வரைபடத்தைக் கொடுத்திருந்தார். ஆனால் அவர் தன்னுடைய ஜன்னல்களை துண்டித்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொருத்துகிற ஒரு குறிப்பிட்ட விதத்தை நான் கண்டபோது, ‘அது சரியல்ல. அது அந்தவிதமாக சரியாக இருக்க முடியாது. அது முரண்பாடாய் உள்ளது. அது, அது சரியல்ல’ என்று நான் கூறினேன். எனவே நான் அதை சரியென்று நினைத்தவிதமாக அதைக் கட்டிவிட்டேன். அவர் தன்னுடைய விடுமுறையில் பிளாரிடாவிலிருந்து திரும்பி வந்தபோது, நான் அவருடைய வீட்டை கிட்டத்தட்ட கட்டி முடித்துவிட்டிருந்தேன். 47 “அவரோ வீட்டைப் பார்த்துவிட்டு, அவர் போய், அந்த கட்டிட அமைப்பு வரைபடத்தை கொண்டுவந்து, அதை நோக்கிப் பார்த்துவிட்டு, ‘நீர் என்னுடைய வீட்டைத் தவறாக கட்டியிருக்கிறீர் ’ என்று கூறிவிட்டார்.” “அப்பொழுது நான் அவரிடத்தில், ‘இல்லையே, நான் உங்களுடைய வீட்டைத் தவறாக கட்டியிருக்கவில்லையே’ என்றேன்.” அதற்கு அவர், “இந்த இன்ன—இன்ன ஒரு இடத்தைக் குறித்து என்ன?’ என்று கேட்டார்.” “‘பாருங்கள்’, அவர் மேலும், ‘அது உண்மையாகவே அங்கே கட்டி இருக்கக் கூடாது”’ என்று கூறினார். 48 “மேலும் அவர், ‘அதை இடித்துப் போடுங்கள். நான் உங்களுக்கு பணம் செலுத்தும்படி எதிர்பார்த்தால், நீங்கள் கட்டிட அமைப்பு வரைபடத்தில் கூறப்பட்டுள்ள விதமாக கட்டுங்கள்’ என்று கூறிவிட்டார்.” 49 அப்பொழுது இவர், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். 50 அதற்கு நானோ, “இங்கே வீட்டிற்கு கீழே ஒரு நீரோடை ஓடிக்கொண்டிருக்கிறது” என்றேன். நாங்கள் அதண்டைச் சென்றோம். அப்பொழுது அவர், “நான் அந்த நாளில் எதையும் இடித்துத் தள்ள விரும்பவில்லை” என்றார். 51 அதற்கு நான், “இப்பொழுதே அதை சரி செய்து கொள்ளுங்கள். கட்டிட அமைப்பின் திட்ட வரைப் படத்தின் படி அதை கட்டிவிடுங்களே!” என்று கூறினேன்.

4252 அது எப்படி செலுத்தப்பட்டது, அண்மையில் அவருடைய ஒரு…அதன்பின்னர் அவருடைய பெண் ஒரு அருமையான பையனை, அருமையான மனிதனை விவாகம் செய்தாள். அவன் இங்கே படகு வேலையில் இயந்திர இயக்க வல்லுநராக இருந்தான். அந்தப் பையனுடைய விரல்கள் இந்த விதமாக துண்டிக்கப்படிருந்தன. ஒரு அருமையான மனிதன். அவர்கள் ஒரு அழகான குடும்பமாய் உள்ளனர், மூன்று இனம் பெண்கள், அவர்களில் ஒருவள்…எல்லோருமே கிறிஸ்தவர்கள். அவர்கள் மூவர் சேர்ந்து பாடும் பாட்டைப் பாடுகின்றனர். நமக்கு இங்கே எப்போதாவது ஒரு கூட்டம் இருக்குமானால் அவர்கள் நமக்காக பாட வருகிறார்கள். அந்த இளம் பெண்களில் ஒருவள் இசைப் பேழையை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவள், மேலும் அவள் ஒரு குழந்தையாய், பதினைந்து, பதினாறு வயதாயிருக்கும்போது ஒரு பாரம்பரிய இசை ஆசிரியையாயிருந்தாள். பள்ளியிலே சிறுமிகள் அவளைக் குறித்த வித்தியாசமான காரியங்கள் மற்றும் ஒரு கிறிஸ்தவளாயிருப்பதனால் கேலி செய்தனர். அது அவளுடைய நரம்புகளைப் பாதித்து அவளுக்கு ஒரு நிலைகுலவைக் கொடுத்தப்படியால் அவள் பைத்தியமாகிவிட்டாள். அவர்கள் அவளை லூயிவில்லில் வைத்திருந்து, வருகிற திங்கட்கிழமை மனநோயாளர் காப்பு இல்லத்திற்கு அவளைக் கொண்டு போகப் போவதாயிருந்தனர். அவர்கள் அங்கு செல்ல மனதில்லாதிருந்தனர், மருத்துவர்கள் நான் அவளைப் பார்க்க அனுமதிக்க மனதில்லாதிருந்தனர். நான் ஒரு பார்வையாளரைப் போல அங்கு சென்று, தகப்பனோடும் தாயோடும் படுக்கையின் பக்கத்தில் அமர்ந்தேன். நான் அங்கு அமர்ந்து கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் உள்ளே அசைவாடினார், லூயிவில்லில் உள்ள இந்த நம்முடைய சமாதானப் பெண்மணி உடல் நலமற்றவரை தேற்றும் மருத்துவ இல்லத்தில் அவர்கள் நரம்புதளர்வுற்ற நோயாளிகளை எடுத்து அவர்களுக்கு ஒரு மறுவாழ்வு நம்பிக்கையை அளிக்கிறார்கள். அவர்களால் இவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையென்றால், அப்பொழுது அவர்கள் இந்தியானாவில் உள்ள மெயிட்ஸன் என்ற இடத்திற்கு இவர்களை அனுப்பிவிடுகின்றனர். இந்த பெண் அந்த வாரம் மெயிட்ஸனுக்கு போவதாயிருந்தாள். அவர்கள்…அவளுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் இருந்தாள். அங்கே அமர்ந்திருக்கையில் எங்களுக்கு முன்பாக ஒரு தரிசனம் உண்டாகி கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அந்தப் பெண்ணிடம் உரைக்கப்பட்டது. அந்தத் தாய் முட்டியினால் என்னைப் பற்றிப் பிடித்து, கரம் நீட்டி தன்னுடைய கரத்தால் அவளுடைய கணவனைப் பற்றிப் பிடித்து, “அது ஒரு போதும் தவறாயிருக்காதே!” என்றாள். 53 அப்பொழுது நான், “கவலைப்படாதீர்கள். அவள் சரியாகி விடுவாள்” என்றேன். பின்னர் நான் உடனடியாக கட்டிடத்தை விட்டுப் புறப்பட்டேன்.

4354 அந்த இரவு ஒன்பது மணிக்கு தொலைபேசி மணி ஒலித்தது, இல்லை அது ஒன்பதிற்கு சற்று முன்னராயிருந்தது, நான் அன்றிரவு சபைக்கு வருவதற்கு முன்னர் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு ஞாயிற்றுக் கிழமையாயிருந்தது. தகப்பனாரோ அவருடைய இருதயத்தில் மிகவும் சிலிர்ப்படைந்து, “சகோதரன் பிரான்ஹாம் இந்த நற்செய்தியை அப்படியே அடக்கிக் கொண்டு என்னால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை” என்று கூறினார். மேலும் அவர், “மருத்துவர் உள்ளே வந்து என்னுடைய மகளை பரிசோதித்தார். இவரோ, ‘அவளுக்கு என்ன சம்பவித்தது? என்று கேட்க, அவள் நாளை வீட்டிற்குப் போகலாம்’” என்று கூறிவிட்டாராம். ஒரு சில வாரங்களுக்கு முன்னர் தாயானவள் ஒரு பிணமாக படுத்துக் கொண்டிருந்தபோது, அங்கே அந்த மூவர் சேர்ந்து பாடும் பாடற் குழுவில் இருந்த, அந்த இளம் பெண் அவ்வளவு அருமையாய், அவளும் அவளுடைய காதலனும் இனிமையாயிருந்தனர். ஓ நான் உங்களுக்கு கட்டிட அமைப்புத் திட்ட வரைப்படத்தையேக் கூறுகிறேன்! நாம் எப்படி மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதைக் குறித்த திட்டத்தை விளக்குகிற ஒன்று தேவனுடைய வார்த்தையாயுள்ளது.

4455 முதலாவது நாம் நம்மை பாவிகளாகவும், ஆக்கினித்தீர்ப்புக்கு பாத்திரராகவும் எண்ணிக்கொள்கிறோம். நாம் யாவரும் பாவத்தி பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, எந்த நல்லக் காரியமும் நம்மில் இல்லாதவர்களாயிருக்கிறோம். நம்முடைய சிந்தைகள் கெட்டதாகவே உள்ளன, நம்முடைய ஆத்துமா அழிவுறக் கூடியதாயுள்ளது, நம்முடைய தொடர் சிந்தனை பொல்லாததாயுள்ளது, ஒரு பாவியினுடைய சிந்தையின் ஒவ்வொரு கற்பனையும் பொல்லாததாய் உள்ளது, நம்முடைய சரீரமும் கூட பலவீனமாயுள்ளது, நம்முடைய ஆவியோ நல்லதல்லாததாயுள்ளது, நாம் முழுவதும் சீர்கேடாயுள்ளோம். எனவே எப்படி ஒரு அழிவுறக் கூடிய காரியம் மற்றொரு நல்லக் காரியத்தை ஒரு அழிவுறக் கூடிய காரியத்திலிருந்து பிறப்பிக்க முடியும்? நான் இதைக் கூறுவேனாக, அதாவது யோபு 14-வது அதிகாரத்தில், அவன், “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அதே சமயத்தில் அவன் பூவைப் போல பூத்து மங்கிப்போகிறான்” என்றான். தொடர்ந்து அந்த தீர்க்கதரிசி பேசிக்கொண்டேப் போகையில், அவன், “அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லையே!” என்றான். நீங்கள் உங்களுடைய வாளியை கிணற்றுக்குள் விட்டு, ஒரு வாளித் தண்ணீரை வெளியே இழுத்துப் பாருங்கள், அது தேங்கின தண்ணீராய் இருக்கிறபடியால், அது நாற்றமடிக்கும்; நீங்கள் அதற்குள் பார்த்தால், அது சேறாயும், அந்த தண்ணீரில் சிறு புழுக்களும் உள்ளே இருக்கும். எனவே நீங்கள் உங்களுடைய வாளியை திரும்பவும் உள்ளே விட்டு ஒரு தெளிவான தண்ணீரை மீண்டும் எடுப்பதற்கோ எந்த வழியுமே இல்லை. முழு கிணறுமே அசுத்தமாக்கப்பட்டுள்ளது. மனிதனின் முழு ஆத்துமாவும், சிந்தையும், சரீரமும் பாவத்தால் கறைபடுத்தப்பட்டுள்ளது. அவன் பாவத்தில் பிறந்து, சரீரப் பிரகாரமாக அக்கிரமத்தில் உருவாகி, பொய்களைப் பேசுகிறவனாய் உலகத்திற்கு வந்துள்ளபடியால் அவனுடைய சொந்த ஆத்துமா கறைபடுத்தப்பட்டுள்ளது. எந்த நல்ல காரியமும் இல்லையே! ஒருவர் மற்றவரை மீட்க முடியாது, ஏனென்றால் யாவருமே தவறாயுள்ளனர். நீங்கள் இங்கே அசுசிபடுத்தப்பட்டுள்ள தண்ணீரை ஒரு வாளி நிறைய எடுக்க முடியாது மற்றும் அசுத்தமாக்கப்பட்டுள்ள மற்றொரு வாளிநிறையத் தண்ணீரை ஒன்று சேர்ந்து கலந்தால், நீங்கள் இன்னும் அதிகமான தூய்மைக் கேட்டையே பெற்றுக் கொள்வீர்கள். அதற்கு எந்த சுத்திகரிப்புமே இல்லை.

4556 ஆனால் தேவன் மனிதனை இரட்சிக்க தீர்மானித்தார். “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.” பாவத்தின் தண்டை, பாவத்தின் தண்டனையில் நீங்கள் பிறக்கும்போதே மரணம் உள்ளது. பாவமே மரணமாயுள்ளது. நம்மில் எவருமே ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளமுடியாதபடிக்கு தண்டனையோ மிகப் பெரியதாயிருந்தது, ஆகையால் இந்த தண்டனையோ மிகப் பெரியதாயிருந்தது, ஆகையால் இந்த தண்டனையை செலுத்த முடிந்த ஒருவர் இருக்க வேண்டியதாயிருந்தது. 57 இந்தக் காலையில் இந்த அறையை விட்டுச் செல்ல கோடிக்கணக்கான டாலர்கள் தண்டையாக செலுத்த வேண்டியிருந்தால் என்னவாகும்? நம்மில் எவருமே செல்ல முடியாது, ஏனென்றால் நம்மில் எவருமே அதற்கு தகுதியானவர்கள் அல்ல. ஆனால் நம்மெல்லாருக்காகவும் அதை செலுத்த போதுமான தகுதியாயிருந்த ஒருவர் வந்தார். 58 அதற்கு ஒருவர் தேவைப்படுகிறார். நாம் அதைச் செய்ய முடியாது. அதற்கு பாத்திரமாயிருந்த ஒருவர் தேவைப்பட்டது. ஓ, எப்படியாய் நான் இங்கு சற்று நேரம் நிறுத்தி, ரூத் மற்றும் நகோமிக்கு திரும்பிச் சென்று, எப்படி இனத்தான் மீட்பர் இழந்துபோன சொத்தை மீட்க முதலில் தகுதியான ஒரு இனத்தானாய் இருக்க வேண்டியதாயிருந்தது என்பதைக் காண்பிக்க விரும்புகிறேன். ஆகையால் தேவன், ஆவியானவர், யேகோவா ஒரு மாம்ச ரூபத்தை எடுப்பதன் மூலம் நமக்கு இனத்தாரானார். அவர் இனத்தாரானார். அந்தவிதமாக வேண்டியதாயிருந்தது. அப்பொழுது அவர் அதற்கு பாத்திரமாயிருக்க வேண்டியதாயிற்று. அவரே இம்மானுவேலினுடைய இரத்த நரம்புக் குழாய்களிலிருந்து இரத்தத்தால் நிறைந்த ஊற்றை உண்டுபண்ணின ஒருவராய் இருக்கிறார். அவர் நம்முடைய அக்கிரமங்களை சுமந்தவராய் இருந்தார்.

4659 எண்ணாகமத்தில் நான் இங்கே ஒரு அழகான மாதிரியை வைத்துள்ளேன். நான் இங்கே என்னுடைய வேதவாக்கியங்களை எழுதி வைத்துள்ளேன். எண்ணாகமத்தில், அங்கே அதைக் குறித்த அந்த அழகான மாதிரி உள்ளது, அது, ஓ, உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தால், அது முழுவதும் அழகாய் உள்ளது, அது வனாந்திரத்தில் உயத்தப்பட்ட வெண்கல சர்ப்பமாய் உள்ளது. எப்படி அந்த இஸ்ரவேலருக்கு, அந்த சர்ப்பம் அவர்களுக்கு ஒரு மரணகடியாயிருந்தது, அதற்கு பரிகாரமே இல்லாதிருந்தது. அதற்கு பரிகாரத்தையோ அல்லது குணமாக்குவதையோ கொண்டிருந்த ஒரு வைத்தியன் அவர்களுக்கு மத்தியில் இல்லாதிருந்தது. அவர்கள் தங்களுக்கு மத்தியில் வைத்தியர்களை உடையவர்களாயிருந்தனர், ஆனால் அந்த கடிக்கு அல்ல. நான் சற்றுமுன் கூறியுள்ளது போல, பாவத்தை குணப்படுத்தக் கூடிய வைத்தியர்கள் நமக்கு மத்தியில் இல்லை. அது ஒரு மரண கடியாய் உள்ளது. நாம் யாவரும் குற்றவாளிகளாய் இருக்கிறோம், எல்லோருமே அக்கிரமத்தில் உருவாக்கப்பட்டோம். நாம் யாவரும் குற்றவாளிகளாயிருக்கிறோம். ஆனால் தேவன் என்ன செய்தார்? அவர்கள் அப்பொழுது குற்றவாளியாயிருந்தனர், அப்பொழுது மரணத்திற்கு, மரணத்திற்குரிய தண்டனை செலுத்தப்பட வேண்டியதாயிருந்தது. ஆனால் தேவன் ஒரு வெண்கல சர்ப்பத்தை மோசேயைக் கொண்டு உண்டாக்கி, அதை ஒரு கோலின் மேல் மாட்டி, அதை ஜனங்கள் எந்தக் காரியத்தையும் செய்யாமல், எந்த பணத்தையும் அவர்கள் செலுத்த வேண்டியதாயிராமல், ஒன்றுமேயில்லாமல், எந்தப் பிரமாணங்களையும் மனப்பாடமாகக் கூற வேண்டியிராமல், எந்த சபைகளையுமே அவர்கள் சேர வேண்டியதாயிராமல், அப்படியே, “அதை நோக்கிப் பார்த்துப் பிழைக்கும்படிக்குச்” செய்தார். எவ்வளவு எளிமையாயுள்ளது என்பதைப் பார்த்தீர்களா? நோக்கிப் பார்த்து பிழைத்தல்! ஒரு சபையை சேர்ந்து கொள்ள வேண்டாம், எந்த உணர்ச்சிவசப்படுதலும் அல்ல, நீங்கள் ஒரு விநோதமான உணர்வினை உணர வேண்டியதில்லை. அப்படியே நோக்கிப் பார்த்து பிழைத்தல்! அவ்வளவுதான். மிகவும் எளிமை. “நீங்கள் அந்த பத்து கட்டளைகள் முழுவதையும் ஞாபகப்படுத்திக்கொள்ள முடிந்தால், நீங்கள் பிழைப்பீர்கள்” என்றல்ல. “நீங்கள் எல்லா நியமங்களையும் அறிந்திருந்தால்” என்றல்ல. வெறுமென, “நோக்கிப் பார்த்து பிழையுங்கள்.” நீங்கள் செய்ய வேண்டியதாயிருந்தது அவ்வளவுதான். அவரை நோக்கிப் பார்த்த ஒவ்வொரு மனிதனும் பிழைத்தான்.

4760 இயேசு, அவர் பூமியின் மேலிருந்தபோது, அவர் இங்கே நிக்கொதேமுவினிடத்தில் பேசும்போது கூறினார், அவர், “சர்ப்பமானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷ குமாரனும் உயர்த்தப்பட வேண்டும்” என்றார். உயர்த்தப்பட வேண்டுமே! ஏன்? அதே முறையில், அதே காரியத்திற்காக, அதே நோக்கத்திற்காக, அதேக் கிரியை செய்யவேயாகும். ஜனங்கள் சர்ப்பம் இயேசுவைச் சுட்டிக்காட்டுவதை காணும்போது, அநேக சமயங்களில் இது அவர்களை திகைப்படச் செய்கிறது. சர்ப்பம் இயேசுவை சுட்டிக்காட்டினது, சர்ப்பம் மரித்துப் போய்விட்டதை நீங்கள் கவனித்தீர்களா? அதற்குள் ஜீவன் இல்லாதிருந்தது. இயேசு மரித்தார். காயீனைப் போல, அவன் ஆபேலைக் கொன்றபோது, ஆபேல் தன்னுடைய பலியோடு பலிபீடத்தின் மேல் மரித்தான்; ஆபேல் தன்னுடைய பலியை அளித்தப் பிறகு, தன்னுடைய பலியை தன்னுடைய பாவத்திற்காக கொன்றான். அதன்பிறகு அவன் தன்னுடைய பலியோடு அதே பலிபீடத்தின்மேல் மரித்தான். முறைப்படி மறுபடியும் பிறக்க வேண்டுமென்றால், நீங்கள் உங்களுடைய பலியோடு பலிபீடத்தின்மேல் அவர் மரித்ததுபோல மரிக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். சர்ப்பமானது அதனுள் எந்த ஜீவனையும் உடையதாயிருக்கவில்லை.

4861 நீங்களோ, “அது ஏன் வெண்கலமாயிருந்தது?” என்று கேட்கலாம். வெண்கலம் நியாயத்தீர்ப்பை, தெய்வீக நியாயத்தீர்ப்பைச் சுட்டிக் காட்டுகிறது. வேதத்தில் பழைய ஏற்பாட்டில் பலிபீடமானது வெண்கலத்தால் உண்டாக்கப்பட்டு, அங்குதான் பலியானது எரிக்கப்பட்டது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? வெண்கலம் நியாயத்தீர்ப்பைக் குறித்தே பேசுகிறது. எலியா அவனுடைய நாட்களில் கூறினதுபோல, அவனுடைய ஜெபத்திற்குப் பிறகு ஏதேனும் மழை வருகிறதா என்று பார்க்க, போய் ஆகாயத்தை நோக்கிப் பார்த்தான், அப்பொழுது அவன், “ஆகாயம் வெண்கலம் போலக் காணப்படுகிறது” என்றான். அது என்னவாயிருந்தது? அவிசுவாசமுள்ள ஜனங்களின் மேல், தேவனை மறந்துவிட்டிருந்த அவிசுவாசமுள்ள தேசத்தின்மேல் தெய்வீக நியாத்தீர்ப்பு. அது தெய்வீக நியாயத்தீர்ப்பாய், வெண்கலம் போன்றதாயிருந்ததே! சர்ப்பமானது தானே, அதனுடைய பாவம் ஏற்கனவே நியாயத்தீர்க்கப்பட்டுவிட்டதை சுட்டிக்காட்டினது, ஏனென்றால் அது ஏதேன் தோட்டத்தில் நியாயத்தீர்க்கப்பட்டது. அவன் நியாயத்தீர்க்கப்பட்ட சர்ப்பமாய் இருந்தான்.

4962 நாம் கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கும்போது, நீங்கள் தண்டனையைக் காண்கிறீர்கள். அந்த ஒருவரே, தேவன் தாமே மாம்சமானார். தேவன் பூமிக்கு வந்து நம்மெல்லோருடைய பாவத்தையும் தம்மேல் ஏற்றுக்கொண்டு, தம்முடைய சரீரத்தின் மேல் நியாயத்தீர்ப்பையும், சர்வ வல்லமையுள்ள தேவனின் கோபத்தையும் ஊற்றினார், அது சிலுவையிலே கிழித்தெறியப்பட்டது. அதுவே உண்மையான நியாயத்தீர்ப்பாயுள்ளது. அவர் ஒருவராய் தேவனுடைய கோபத்தின் ஆலையை மிதித்தார். அவர் அந்தப் பாதையில் தனிமையாய் நடந்தார். அவர் ஒரு தூதனிடத்திலிருந்ததோ, ஒரு மனிதனிடத்திலிருந்தோ, அவருடைய சபையினத்திலிருந்தோ, அவருடைய தாயாரிடத்திலிருந்தோ, அவருடைய சகோதரர்களிடத்திலிருந்தோ, அவருடைய பிதாவினிடத்திலிருந்தோ, எந்த உதவியும் கிடைக்காமல் தேவனாலும், மனிதனாலும், இயற்கையாலும் கைவிடப்பட்டு மரித்தார். மரண வேளையில் இயற்கை கூட நமக்கு உதவி செய்ய முடியாது என்பதை நமக்கு காண்பிக்கும்படியாக அவர் தனிமையாய் மரித்தார். எந்த நண்பரும் இல்லை, எந்த குருவானவரும் இல்லை, எந்த போப்பாண்டவர் இல்லை, எந்த மேய்ப்பரும் இல்லை. அது மரணமாயிருக்கிறது. ஆனால் நமக்காக அதை ஒருவர் ஏற்றுக்கொண்டவராயிருந்தார்.

5063 சர்ப்பத்திற்குள் ஜீவனே இல்லை. அது முற்றிலும் படிகமாக்கப்பட்டிருந்தது. அதுவே தண்டனையாய் இருந்தது. பூமிதானே வெட்கப்படும்படியாய் அவர் மரித்தார். அவர் நட்சத்திரங்கள் வெட்கப்படும்படியாய் மரித்தார். சூரியன் பிரகாசிக்க மறுக்குமளவிற்கு அவர் வேதனைப்பட்டார். சந்திரனும் தன்னுடைய ஒளியை கொடுக்க மறுக்குமளவிற்கு அவர் வேதனையுற்றார். பூமியின் மூலக்கூறுகள் மிகவும் கறுத்து, நள்ளிரவைப் போலாகி இருண்டு, நீங்கள் அந்த அந்தகாரத்தை உணரும்படி அவர் வேதனைப்பட்டார். ஒன்றுமே செய்லபடாதிருந்தது. அந்தவிதமாக எப்போதுமே எந்த ஒருவரும் பாடுபட்டதில்லை, அல்லது அந்தவிதமாகப் பாடுபட முடியாது. எந்த மானிடனும் அதனூடாகச் செல்லவே முடியாது. ஆனால் அவர் அதற்காக பாடுபட்டார். தேவன் நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் வைத்து, அவருடைய நியாயத்தீர்ப்புகளை அவர் மீது நிறைவேற்றினார். எனவே அவர் எந்த உதவியுமில்லாமல் தனிமையாய் தேவனுடைய கோபத்தின் ஆலையை மிதித்தார். அவருக்கு உதவி செய்ய ஒன்றுமேயில்லாதிருந்தது. தேவன் தண்டனையை சுமத்தினார். அந்த தண்டனையின் கீழ் ஒவ்வொரு காரியமும் இருந்தது, அவருக்கு எதுவுமே உதவிசெய்ய முடியாதிருந்தது, ஏனென்றால் நாம் யாவரும் குற்றவாளிகளாயிருக்கிறோம். எந்த பிரதான ஆசாரியனும் வந்து அவருக்கு உதவி செய்திருந்திருக்க முடியாது. எந்த போப்பாண்டவரும், எந்த தூதனும் அவருக்கு உதவி செய்ய முடியாதிருந்தது. ஒவ்வொரு காரியமும் பின்னால் நின்றே அதைக் கவனித்தன. அது உலகத்தின் சரித்திரத்தில் எப்போதும் இருந்ததிலிலேயே மகத்தான தருணங்களாயிருந்தன. அவருக்குள் ஒரு துளி ஜீவனும் இல்லாத அளவிற்கு அவர் மரித்து, சிலுவையின் மேல் அந்த வெண்கல சர்ப்பத்தைபோலாகி, அப்படியே ஒரு படிகமாக்கப்பட்ட ஆபரணமாய்த் தொங்கினார்.

5164 இப்பொழுது, இந்த பிறப்பிற்கு அணுக, அதற்கு அணுகு முறை உண்டு. இந்தப் பிறப்பை அணுக வேண்டுமானால், நீங்கள் ஒரு செயல்முறையினூடாகச் செல்ல வேண்டும். ஜீவிக்கிற எந்தக் காரியத்தையும் போல, மீண்டும் ஜீவிக்கிற எந்தக் காரியமும் முதலில் மரிக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய அதே ஆவியில் நிலைத்திருக்க முடியாது. நீங்கள் உங்களுடைய அதே பழக்க வழக்கங்களில் நிலைத்திருக்க முடியாது. நீங்கள் உங்களுடைய அதே சிந்தனைகளில் நிலைத்திருக்க முடியாது. நீங்கள் மரிக்க வேண்டும். அவர் மரித்ததுபோல நீங்கள் மரிக்க வேண்டுமே! ஆபேல் தன்னுடைய ஆட்டுக் குட்டியோடு மரித்ததுபோல நீங்கள் அவருடைய பலிபீடத்தின்மேல் மரிக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய ஆட்டுக் குட்டியோடு மரிக்க வேண்டும். நீங்கள் மரிக்க வேண்டும். அவருடைய சிந்தனைகளுக்கு பிறக்கும்படி, உங்களுடைய சொந்த சிந்தனைக்கு மரியுங்கள். கிறிஸ்துவில் இருந்த சிந்தையே உங்களில் இருக்கக்கடவது. நீங்கள் அவருடைய சிந்தைகளை சிந்திக்க வேண்டும். இப்பொழுது சகோதரனே, சகோதரியே, அதை எப்படி கூற வேண்டும் என்று நான் அறிந்துள்ள புத்திக் கூர்மையோடு நான் இதைக் கூறட்டும். நீங்கள் அவருடைய வார்த்தையை மறுதலித்துவிட்டு, அதே சமயத்தில் நீங்கள் மறுபடியும் பிறந்துள்ளதாக உரிமைகோரி, அவருடைய சிந்தனைகளை எப்படி சிந்திக்க முடியும்? அந்தக் கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் அதை எப்படி செய்ய முடியும்? உங்களால் முடியாது. நீங்கள் மறுபடியும் பிறந்திருந்தால், நீங்கள் அவருடைய சிந்தனைகளை பெற்றிருப்பீர்கள். கிறிஸ்துவின் சிந்தை உங்களுக்குள் இருந்தால், அப்பொழுது நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாய் இருக்கிறீர்கள். வேதம் அதைப் போதிக்கிறது. அவ்வாறிருக்க விரும்புகிற எந்த சகோதரனும், பாருங்கள், நீங்கள் அந்த சிருஷ்டியைக் கண்டறியலாம், சிருஷ்டி என்ற அந்த வார்த்தையை அகராதியில் தேடிப் பார்த்தால், அந்த வார்த்தை சிருஷ்டி என்று வியாக்கியானிக்கப்பட்டு அல்லது “ஒரு புதிய சிருஷ்டி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை நீங்கள் கண்டறியலாம், ஏனென்றால் நீங்கள் ஒரு சிருஷ்டியாய் இருக்கிறீர்கள், இங்கே பூமியின் மேல் ஒரு பாலீடுபாட்டின் வாஞ்சையில் ஒரு மானிடனாய் பிறந்துள்ளீர்கள், இப்பொழுது நீங்கள் ஆவியினால் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள். உங்களுடைய சொந்த சிந்தனைகள் மரித்துவிட்டிருக்கின்றன. அவைகள் வெண்கல சர்ப்பத்தைப் போல படிகமாயிருக்குமளவிற்கு அவ்வளவாய் மரித்துவிட்டிருக்கின்றன அல்லது அவர் மரித்துவிட்டார் என்று வானங்களும் பூமியும் மற்றமுள்ள ஒவ்வொரு காரியமும் சாட்சி பகருமளவிற்கு அவர் மரித்தார்.

5265 அவருடைய சரீரத்தில் அவருடைய இரத்தமும் தண்ணீரும் பிரிக்கப்படுமளவிற்கு அவர் அவ்வளவாய் மரித்துப் போனார். நான் கூறுவதென்னவெனில் உலகமானது ஒரு பதட்டமான நிலைகுலைவுக்குள்ளாகுமளவிற்கு அவருடைய மரணம் மிகவும் பயங்கரமாயிருந்தது. உலகம் அசைந்து, மலைகளிலிருந்து கற்பாறைகள் விழுமளவிற்கு அது நடுக்கமுற்றது. அந்தவிதமாக யார் மரிக்க முடியும்? அதைச் செய்ய எந்த போப்பாண்டவரும் மரிக்க முடியாது, அதைச் செய்ய எந்த மேய்பரும் மரிக்க முடியாது. ஆனால் தேவன் மாம்சத்தில் சிலுவையின் மேல் மரித்த போது பூமியானது ஒரு பதட்டமான நிலைகுலைவினைக் கொண்டிருந்தது, பூமியில் இருந்த கற்பாறைகள், மாசு, செடி, கொடிகள் மற்றும் மரங்களும் அது அதே தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை என்பதை அறிந்துகொண்டன. நட்சத்திரங்களும், சந்திரனும், அவருடைய அதே உரைக்கப்பட்ட வார்த்தையானது தங்களுடைய சிருஷ்டிகர் மாம்சமாகி, பாவம் அவர் மேல் ஊற்றப்பட்டதைக் கண்டன. சந்திரன் அதனுடைய ஒளியைக் கொடாதிருக்குமளவிற்கு, சூரியன் தன்னுடைய ஒளியைக் கொடாதிருக்குமளவிற்கு பூமியானது ஒரு பதட்டமான நடுக்கத்தை, நிலைகுலைவைக் கொண்டிருந்தது. அது நமக்கான ஒரு எதிர்காலமாய் இல்லாதிருந்திருந்தால், அப்பொழுதே சுக்கு நூறாக ஒவ்வொரு காரியமும் வெடித்திருந்திருக்கும்.

5366 அவருடைய பூமியின் மூலக் கூறுகள் என்ன சம்பவித்தது என்று கண்டு நோக்கிப் பார்க்கும்போது, அந்த நிலைமைக்கு அவைகள் ஆட்டங்கண்டிருந்தால், உங்களுக்கும் எனக்கும் அந்தக் காட்சி என்ன செய்ய வேண்டும்? தேவன் நமக்காக என்ன செய்தார் என்பதை நாம் கண்டு நோக்கிப் பார்க்கும்போது அது நம்முடைய ஆத்துமாக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? அவை யாவுமே உங்களுக்காகவும் எனக்காகவுமாயிருந்தது. அது நமக்கு என்ன செய்ய வேண்டும்? பாவத்தில் நிலைத்திருக்க வேண்டுமா? கூடாதே. ஆனால் பாவங்களிலிருந்து விலகி பாவத்திற்கு மரிக்க வேண்டும். பாவம் அவருக்கு என்ன செய்தது என்பதை நீங்கள் காண்கிறீர்களல்லவா? பாவம் அவரைக் கொன்றது. அவர் உங்களுக்கும் எனக்கும் தேவனுடைய நீதியைக் கொண்டு வரும்படிக்கு பாவத்தின் தண்டனையை ஏற்றுக் கொண்டார். ஆகையால் தேவனுடைய நீதியானது நமக்கு வரும்போது, பாவம் நம்முடைய மானிட சரீரங்களில் மரித்ததாயுள்ளது. ஓ, நீங்கள் இதை புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

5467 ஆம், நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமானால், நீங்கள் ஒவ்வொரு காரியத்தையும் செய்கிற ஒரு மரண செய்முறையினூடாக செல்ல வேண்டும், நீங்கள் ஒரு தானிய மணியை எடுத்துக்கொண்டால், அந்த தானியம் மறுபடியும் ஜீவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால்! அது முதலில் மரிக்க வேண்டும். ஒரு கோதுமை மணி மறுபடியும் ஜீவிக்கும்படி எதிர்பார்த்தால், அவ்வாறு இருப்பது முற்றிலும் கூடாத காரியம்… ஏனென்றால் அந்த தானியம், அந்த கோதுமை, அந்த மலர், அந்த மரம், அந்தப் புல், அந்த காய்கறிகளோ, மறுபடியும் ஜீவிக்க எதிர்பார்க்கிற ஒவ்வொரு காரியமும் முதலில் மரிக்க வேண்டும். அப்படியானால் நீங்கள் எப்படி அதற்கு தப்பித்துக் கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் முதலில் மரிக்க வேண்டும். நீங்கள் மரிக்க வேண்டும். எப்படி மரிப்பது? நீங்களாகவே, நீங்கள் மறுபடியும் பிறக்கும்படியாக ஒவ்வொரு காரியத்திற்கும் மரிக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்ய வேண்டும். நீங்கள் மரிக்கவில்லையென்றால், நீங்கள் மறுபடியும் ஒருபோதும் ஜீவிக்க முடியாது.

5568 கவனித்துப் பாருங்கள், நீங்கள் ஜீவிக்கும்படியாக அனுதினமும் ஒரு காரியம் மரிக்க வேண்டியதாயிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இப்பொழுது நமக்கு மத்தியில் உள்ள ஏழாம் நாள் ஆசாரிப்புக்காரரே உங்களுக்குத்தான், அநேக ஜனங்கள், “சகோதரன் பிரான்ஹாம், நான் ஒரு அணிலையும் சுடமாட்டேன். நான் ஒரு மானை அல்லது ஒரு முயலை, மீனைக் கொல்லமாட்டேன், ஏனென்றால் நாங்கள் அவைகளைக் கொல்லக் கூடாது என்று எண்ணுகிறோம்” என்று கூறுகின்றனர். என் சகோதரனே, நீங்கள் புசிக்கிற காய்கறிகளும் கூட உயிருள்ளவைகளாக உள்ளன என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? நீங்கள் அவைகளைக் கொல்ல வேண்டும். இந்த ஜிவியத்தில் நீங்கள் ஜீவித்திருக்ககூடிய ஒரே வழி மரித்துப்போன ஜீவனின் மூலம் நீங்கள் ஜீவிக்கும்படி ஏதோ ஒன்று மரிக்க வேண்டும். இப்பொழுது, இங்கே பூமியின் மேல் மரிக்கக் கூடிய ஜீவியத்தில் நீங்கள் ஜீவிக்கும்படிக்கே ஏதோ ஒன்று மரிக்க வேண்டுமானால், நீங்கள் நித்தியமாய் ஜீவிக்கக் கூடியதற்கு ஏதோ ஒன்று மரித்திருக்க வேண்டுமல்லவா? அந்தக் கேள்வியை உங்களையேக் கேட்டுக்கொள்ளுங்கள். அந்த ஒருவர் தான் கிறிஸ்துவாயிருந்தார், ஏனென்றால் மற்ற எவருமே அழியாமையுள்ளவரல்ல. குமாரன் மாத்திரமே சாவாமையுள்ளவராயிருக்கிறார். அவரை ஏற்று கொள்வதன் மூலம் அவர் உங்களுக்கு தம்மையே அளிக்கிறார். இப்பொழுது அது மரிக்க வேண்டும்.

5669 இப்பொழுது அது இந்த புத்தாண்டில் இப்பொழுது ஒரு புது வாழ்க்கையைத் துவங்குவது என்று பொருள்படுகிறதில்லை. நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், நான் நீண்ட காலமாக இங்கு வந்து கொண்டிருக்கிறேன். நான் சபையில் ஒரு அங்கத்தினராக இருந்து வருகிறேன். இந்த புத்தாண்டில் நான் ஒரு புதுவாழ்க்கையை புதியதாக துவங்கப் போகிறேன்” என்று கூறலாம். அது அதனைப் பொருட்படுத்தவில்லை. “ஓரு புது வாழ்க்கை வாழ்வது” அல்ல, ஆனால் உண்மையாகவே மரித்து மறுபடியும் பிறத்தலாகும். புரிகிறதா? நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் நிற்கும்போது, நீங்கள் மெத்தோடிஸ்டு வழியில் போனாலும் அல்லது பாப்டிஸ்டு வழியில் அல்லது நீங்கள் எந்த வழியில் போனாலும் நீங்கள் அவ்வளவு குற்றமுள்ளவர்களாயிருப்பதை உணர வேண்டும். நீங்கள் அவ்வளவு குற்றவாளியாயிருப்பதை,…அது உங்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அவ்வளவு குற்றமுள்ளவர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். அது உண்மையே. அது—அது உங்களை கொன்றுவிடும். அப்பொழுது உங்களுடைய உலகப்பிரகாரமான ஜீவியம் அங்கேயே மரித்துவிடும். உங்களுடைய உலகப்பிரகாரமான ஜீவியம் அங்கேயே மரிக்குமளவிற்கு தேவனுடைய பிரசன்னத்தில் நீங்கள் உங்களை அவ்வளவு குற்றமுள்ளவர்களாக எண்ண வேண்டும். நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் நின்று கொண்டிருக்கும்போது, உங்களுக்கான பாவக் கேள்வியே முற்று பெற்றுவிடுகிறது. நீங்கள் அந்தவிதமாக நோக்கிப் பார்க்கும்போது, நீங்கள் ஜீவிக்க நிச்சயமுடையவர்களாயிருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் மரிக்கிறீர்கள். நீங்கள் மறுபடியும் ஜீவிக்கக் கூடிய ஒரே வழி…நீங்கள் மறுபடியும் ஜீவிக்கும்படி மரிப்பதேயாகும். 70 இப்பொழுது நான் எதற்கு வந்து கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? உ—ஊ. பிறப்பு என்பது புதிய பிறப்பாய் உள்ளது. முறைப்படி மறுபடியும் பிறக்க வேண்டுமானால் முதலில் மரிக்க வேண்டும். நீங்கள் இன்னமும் உலகத்தின் காரியங்களை உங்களுக்குள் கொண்டிருந்தால், நீங்கள் மறுபடியும் பிறக்கவேயில்லை. உலகத்தின் காரியங்கள் இன்னமும் உங்கள் மேல் தொங்கிக் கொண்டிருக்க நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று எப்படி உரிமை கோரப் போகிறீர்கள்? புரிகிறதா? உங்களால் அதை எப்படிச் செய்ய முடியும்?

5771 அன்றொரு நாள் வாலிப கிறிஸ்தவன், ஒரு கூட்ட மக்கள்…, அவர்கள் அல்ல என்று நான் கூறவில்லை. ஆனால் நான் சில புகைப்படங்களில், கிறிஸ்தவ ஸ்திரீகளும், கிறிஸ்தவ புருஷர்களும் எல்லோரும் விரும்பத்தக்க நீச்சல் உடையில் ஒருவரைச் சுற்றி ஒருவர் நீந்திக்கொண்டிருந்ததைக் கண்டேன். பார்த்தீர்களா? அது அப்படியே…அவர்கள், “அதுவே உண்மையான அன்பு” என்று கூறினர். அதுவே உண்மையான அசுத்தமாயிற்றே! அது அன்பல்ல. அன்பானது அதிலிருந்து வித்தியாசமாய் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

5872 நம்முடைய ஆத்துமாக்கள் விசுவாசத்தினாலே தேவனுடைய நியாயத்தீர்ப்பான அவருடைய வெண்கல பலிபீடத்தின்மேல் வைக்கப்பட்டு, நம்முடைய பலியானது பட்சிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது எலியா, அந்த வெண்கலம் போல் காணப்பட்ட அந்த ஆகாயத்திற்குக் கீழே பலிபீடத்தின் மேல் தேவனுடைய பலியை வைத்தபோது, அந்த பலியானது பட்சிக்கப்பட்டது என்பது நினைவிருக்கட்டும். பாகால் தன்னுடைய பலியை பட்சிக்க முடியாமற்போயிற்று. நான் இதைக் கூற விரும்பவில்லை, ஆனால் நான் இதைக் கூற வேண்டும். நீங்கள் ஒரு சபைக்குப் போகும்போது, அவர்களுடைய கோட்பாடுகளையும், அவர்களுடைய ஞானஸ்நான முறைமைகளையும், அங்கே உங்களையே பலியாக கிடத்துவது, நீங்கள் நடுக்கத்தோடு எழுந்திருப்பதையும், அந்நிய பாஷைகளில் பேசுவதையும், தரை மீது ஓடுவதை அல்லது நீங்கள் அழுகையோடு எழுந்திருப்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் அந்தப் பலியானது தேவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அது பட்சிக்கப்பட்டிருந்தால், அப்பொழுது உலகம் உங்களுக்கு மரித்ததாய் உள்ளது. நீங்கள் மரித்துவிட்டீர்கள், ஏனென்றால் நாம் நம்மை மரித்து அடக்கம்பண்ணப்பட்டவர்களாக எண்ணிக் கொள்கிறோம். நாம் மரித்திருக்கிறோம்…நாம் கிறிஸ்துவுக்குள் மறைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவுக்குள் மறைக்கப்படுதல்! அது மட்டுமன்றி நாம் மரித்து அடக்கப்பண்ணப்பட்டு, கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கிறோம், அப்படியானால் நாம் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டிருக்கிறோம்.

5973 இப்பொழுது நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் மரித்துவிட்டீர்கள். நம்முடைய ஆத்துமாக்கள் அவருடைய தெய்வீக நியாயத்தீர்ப்பின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அது வெண்கலமாயுள்ளது. நம்முடைய ஆத்துமாக்கள் தெய்வீக நியாயத்தீர்ப்பின் பலி பீடத்தின் மேல் வைக்கப்படும்போது, அதன் தண்டனை என்னவாயிருந்தது? மரணம். தேவனுடைய பலிபீடத்தின் மேல் நீங்கள் உங்களையே வைக்கும்போது, அதில் பாவியின் மீது மரணம் தீர்ப்பளிக்கப்பட்டிருக்க, தேவன் அந்த பலியை ஏற்றுக்கொண்டால், எப்படி அங்கிருங்து நீங்கள் பாவத்தில் உயிரோடு எழும்ப முடியும்? இப்பொழுது அது தெளிவாகிறதா? நீங்கள் மரிக்கிறீர்களே! நீங்கள் உண்மையாகவே பட்சிக்கப்படுகின்றீர்கள், நீங்கள் கல்போன்று கடினப்பட்டுவிட்டீர்கள். நீங்கள் உள்ளே நின்று கொண்டிருக்கிற இந்த ரூபத்தைத் தவிர உங்களுக்கு இனி ஒன்றுமே விடப்பட்டிருக்கவில்லை. வெண்கல சர்ப்பத்தைப் போல, அவர்கள் கிறிஸ்துவைச் சிலுவையிலிருந்து மரித்து விரைத்து போனவராய் எடுத்ததுபோல, நீங்கள் மரித்துள்ளீர்களே! காரணம் ஏன்? நீங்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பீடத்தின் மேல் இருக்கிறீர்கள். அவருடைய தீர்ப்பு கூறப்படும்போது, அவருடைய தீர்ப்பின் தண்டனை என்னவாயுள்ளது? மரணம். நீங்கள் உங்களுடைய ஆத்துமாவை அவருடைய நியாயத்தீர்ப்பின் பீடத்தின் மேல் வைக்கும்போது, அது உங்களுக்கு மரணமாய் உள்ளது. இப்பொழுது இது உங்களுக்குப் புரிகிறதா?

6074 ஓ, நீங்கள் அங்கிருந்து எழுந்து எந்தக் காரியத்தையும் செய்யலாம், நீங்கள் ஆவியில் நடனமாடலாம், நீங்கள் யாரேனும் அழுவதுபோல அழலாம், நீங்கள் தரையில் மேலும் கீழும் ஓடலாம், நீங்கள் ஒவ்வொரு சபையிலும் சேர்ந்துகொள்ளலாம், நீங்கள் விரும்புகிற எந்த்க் காரியத்தையும் நீங்கள் செய்யலாம், (நான் இப்பொழுது பெந்தேகோஸ்தேக்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன்), நீங்கள் திரும்பிப் போய் ஒரு மனிதனுடைய மனைவியை தீட்டுப்படுத்தலாம், ஒரு மனிதனுடைய வீட்டை கலைத்துவிடலாம், ஸ்திரீகளாகிய உங்களில் சிலரும் அப்படி செய்யலாம். எவ்வளவுதான் வார்த்தை சரியான காரியங்களைச் செய்யும்படி உங்களிடம் வந்தாலும் கவலைபடாமல் நீங்கள் திரும்பிப் போய் விடுவீர்கள், நீங்கள் அதை அடையாளங் கண்டு கொள்ளமாட்டீர்கள். ஸ்திரீகளே நீங்கள் உங்களுடைய தலைமுடியை ஒருபோதும் வளரவிடமாட்டீர்கள். நீங்கள் ஒரு போதும் சரியாக உடை உடுத்தமாட்டீர்கள். நீங்கள் சரியாக அப்படியே உலகத்தாரைப் போல இருப்பீர்கள், ஏனென்றால் நீங்கள் இன்னும் உலகத்திற்கு மரிக்கவில்லை, நீங்கள் உலகத்தோடு உயிரோடிக்கிறீர்கள். 75 உங்களில் சிலர் ஒருபோதும் குடிப்பதை, புகைப்பிடிப்பதை விட்டுவிடவே மாட்டீர்கள். ஆபாசமான ஸ்திரீகள் ஒழுக்கக்கேடாக ஆடையணிந்துகொண்டு வீதியில் செல்வதை நீங்கள் காணும் போது நீங்கள் திரும்பிக் கொண்டு நடந்து செல்வதற்குப் பதிலாக, அவர்களை இச்சையோடு பார்ப்பதை நீங்கள் ஒருபோதும் விடமாட்டீர்கள். நீங்கள் இன்னமும் அதேவிதமாக இச்சையோடுதான் பார்ப்பீர்கள். காரணம் ஏன்? நீங்கள் இன்னமும் உலகத்தோடு உயிரோடிருக்கிறீர்கள். ஆனால் அந்தப் பலியானது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்போது, நீங்கள் மரித்துவிட்டிருக்கிறீர்கள். அது உண்மையே. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் செவி கொடுத்து கேட்கிறீர்களா? நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?

6176 இப்பொழுது, உங்களுடைய ஆத்துமா தேவனுடைய வெண்கல நியாயத்தீர்ப்பின் பலிபீடத்தின்மேல் வைக்கப்பட்டுள்ளது, அதன்பின்னர் தேவன் அந்த பலியை…ஏற்றுக்கொள்கிறார். இப்பொழுது, நீங்கள் இன்னும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே அது காண்பிக்கிறது, அது…நீங்கள் இன்னமும் உலகத்திற்கு மரிக்காமல் உயிருள்ளவர்களாயிருப்பதால், தேவன் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவேயில்லை. இப்பொழுது, ஜனங்களாகிய நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதைக் குறித்தும், நீங்கள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்றும் பேசுகிறீர்கள், இங்குதான் உங்கள் காரியம் உள்ளது. தேவன் அந்த பலியை ஏற்றுக்கொள்ளும் வரையில், அது அவருடைய நியாயத்தீர்ப்புகளின்பேரில் அங்கே வைக்கப்பட்டிருக்கும் வரையில், அவருடைய நியாயத்தீர்ப்பு உங்களுடைய புலன்களை உண்மையாகவே கொல்லுகின்றவரையிலுமே! நீங்களோ, “பாருங்கள், நான் ஒரு புதிய வாழ்க்கை வாழப்போகிறேன்” என்று கூறலாம். அதுவல்ல இது. “பாருங்கள், நான் முன்பெல்லாம் புகைப்பிடித்து வந்தேன் என்பதை நான் அறிவேன், நான் புகைப்பிடிப்பதை விட்டுவிடப் போகிறேன்.” இன்னமும் அதுவல்ல இது. தேவன் அந்த பலியை அவருடைய வெண்கல பலிபீடத்தின் மேல், ஏற்றுக்கொள்கிற வரையிலுமே, அவருடைய பலிபீடம் நியாயத்தீர்ப்பாயுள்ளது. அவருடைய நியாயத்தீர்ப்பு என்றால் என்ன? மரணம். அதுவே தண்டனையாயுள்ளது. 77 “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்,” அது அதில் நிலைத்திருக்கிறது. நீங்கள் என்ன செய்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை. 78 இயேசு, “அநேகர் அந்த நாளில் என்னிடத்தில் வந்து, ‘கர்த்தாவே, நான் இதை செய்திருக்கவில்லையா? அதை செய்திருக்கவில்லையா?’ என்று கூற, அப்பொழுது அவரோ, ‘அக்கிரம செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள்’ என்று கூறுவார்” என்றே கூறியுள்ளாரே. புரிகிறதா?

6279 அந்தப் பலியானது அக்கினியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றபோது, அது அந்தவிதமாக மேலே செல்கிறது, புகையானது மேலே எழும்புகிறது, நீங்கள் உங்களுடைய பலியோடு உன்னத்திற்கு எழும்புகிறீர்கள், அப்பொழுது நீங்கள் உலகத்தின் காரியங்களிலிருந்து முத்திரையிடப்படுகின்றீர்கள். நம்முடைய ஆத்துமா அவருடைய பலிபீடத்தின் மேல் உள்ளது. 80 நீங்கள் மரித்தப் பிறகு, நீங்கள் என்ன செய்தீர்கள்? அதன்பின்னர் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதன் பின்னர் நீங்கள் புதியதாக கர்பந்தரிக்கப்படுகின்றீர்கள். நீங்கள் புதியதாக கருத்தரிக்கப்படுகிறீர்கள். நீங்கள் முதலில் அக்கிரமத்தில் கருத்தரிக்கப்பட்டிருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் புதிய ஒரு காரியத்தில் கருத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள். அது என்னவாயுள்ளது? ஜீவனுள்ள வார்த்தை. ஆமென். ஓ, அது இப்பொழுது இதை மாற்றுகிறது, அது மாற்றுகிறதல்லவா? நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைக் கண்ட பிறகு நீங்கள் போராடத்தினூடாக இருக்கிறீர்கள். இப்பொழுது என்ன சம்பவிக்கிறது? நீங்கள் ஜீவனுள்ள வார்த்தையில் புதியதாக கர்பந்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள். அது என்னவாயுள்ளது? வார்த்தை உங்களுக்குள் உயிருள்ளதாகிறது. நீங்கள் வித்தியாசமான காரியங்களை காணத் துவங்குகிறீர்கள். நீங்கள் ஒருகாலத்தில் காண முடியாதிருந்ததை இப்பொழுது நீங்கள் காண்கிறீர்கள். அது இப்பொழுது சற்று வித்தியாசமாய் உள்ளது. அது எல்லா வேதவாக்கியங்களையும் ஒன்று சேர்க்கிறது. அது ஒவ்வொரு காரியத்தையும் சரியாக ஒன்றாக இணைக்கிறது. ஆகையால், இப்பொழுது—இப்பொழுது ஏதோக் காரியம் சம்பவிக்கத் துவங்குகிறது. இப்பொழுது நீங்கள் உங்களுடைய சொந்த சிந்தனைக்கு மரிக்க வேண்டும், இப்பொழுது நீங்கள் கர்பந்தரிக்கப்படுகிறீர்கள், ஏனென்றால் நாம் வார்த்தையின் தண்ணீரால் கழுவப்படுகின்றோம். அது சரிதானே?

6381 ஒரு குழந்தை பிறந்தவுடனே நீங்கள் அதற்கு என்ன என்ன செய்கிறீர்கள்? அந்தக் குழந்தையைக் கழுவுகிறீர்கள். அது சரிதானே? ஒரு மனிதன் தனக்கு மரிக்கும்போதே தேவனால் பிறக்கிறான், அவன் வார்த்தையின் தண்ணீரால் கழுவப்படுகிறான். ஆமென். வார்த்தை, “இயேசுவின் நாமம்” என்று கூறினால், நீங்களும் “இயேசுவின் நாமம்” என்று கூறுகிறீர்கள்; வார்த்தை “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்று கூறினால், நீங்களும் அதேக் காரியத்தைக் கூறுகிறீர்கள். தேவன் எப்போதும் என்ன கூறுகிறபோதும், நீங்கள் அந்த வார்த்தையின் தண்ணீரால் கழுவப்படுகிறீர்கள். ஆமென். 82 இப்பொழுது, நீங்கள் ஜீவனுக்காக இப்பொழுது ஆயத்தமாயிருக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது துவங்க…ஆயத்தமாயிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் புதியதாக பிறந்துள்ளீர்கள், ஒரு புதிய பெற்றோரோடு தேவனுடைய குடும்பத்தில் பிறந்துள்ளீர்கள். ஆம் ஐயா. உங்களுடைய பயிற்ச்சி ஆசிரியர்கள்…இப்பொழுது நீங்கள் தற்பொழுது உள்ள பயிற்சி ஆசான்களைப் பெற்றுள்ளீர்கள், நீங்கள் ஒரு புதிய பெற்றோராகிய அவரையே பெற்றுள்ளீர்கள். நீங்கள் பெற்றோரில்லாமல் பிறக்க முடியாது. ஆகையால் நீங்கள் ஒரு சகோதரத்துவ சபையில் பிறந்திருந்தால், அதைத்தான் நீங்கள் பெற்றிருப்பீர்கள். நீங்கள் ஒரு ஸ்தாபன கோட்பாட்டு சபையில் பிறந்திருந்தால், அங்குதான் உங்கள் காரியத்தை உடையவராயிருப்பீர்கள். ஆனால் நீங்கள் தேவனுக்குள் பிறந்திருந்தால், அவருடைய வார்த்தையில் கர்பந்தரிக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஒரு புதிய பெற்றோரைப் பெற்றிருப்பீர்கள், அது தேவன் அவருடைய வார்த்தையை உங்களோடு அறியச் செய்து, உங்கள் மூலமாக அதைப் பேச ஆயத்தமாயிருக்கிறார். ஓ, ஒரு புதிய பெற்றோர், அந்தப் பெற்றோர் தேவனாய் உள்ளது. அவர் ஏற்கெனவே உரைத்த வார்த்தையை, தம்முடைய வார்த்தையை இப்பொழுது ஏற்றுக்கொண்டு, அதை உங்களுக்குள்ளாக வைத்து, அதை ஜீவிக்கச் செய்ய ஆயத்தமாயிருக்கிறார். புரிகிறதா? இப்பொழுது நீங்கள் உங்களுடைய பயிற்சியைப் பெறப்போகிறீர்கள், நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்கள், நீங்கள் இப்பொழுது பயிற்சிக்குள்ளாக செல்ல ஆயத்தமாயிருக்கிறீர்கள், குழந்தைப்—பயிற்சி. அது கடினமாக பாகமாயுள்ளது, நீங்கள் இதைச் செய்யவேண்டும் என்று நினைக்கும்போது, வார்த்தை உங்களை சுற்றிலும் வெட்டி வேறொரு காரியத்தை உங்களுக்குக் காட்டுகிறது. “காரணம், அவர்கள் அதை விசுவாசித்து…” அவர்கள் என்ன விசுவாசிக்கிறார்கள் என்பதற்கு எந்த வித்தியாசத்தையும் அது உண்டாக்குகிறதில்லை. இதைத்தான் தேவன் கூறினார். நீங்கள் பிதாவுக்கடுத்தவைகளைப் பற்றிய காரியங்களில் இருக்க வேண்டும். இப்பொழுது மறுபடியும் பிறக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் சரியாக்கிக்கொண்டும், சரிப்படுத்திக் கொண்டுமிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு புதிய பெற்றோரை பெற்றுள்ளீர்கள்.

6483 ஆகையால் முறைப்படி நீங்கள் மறுபடியும் பிறந்து, ஒரு புதிய பெற்றோரை பெற்றிருந்தால், அப்பொழுது நீங்கள் ஒரு புதிய சுபாவத்தைப் பெற்றுள்ளீர்கள். பழைய சுபாவமானது மரித்துப்போய், நீங்கள் ஒரு புதிய சுபாவத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் ஒரு காலத்தில் ஒரு வழியில் சென்று கொண்டிருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் மற்றொரு வழியில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒருகாலத்தில் இந்த வழியில், கீழ்நோக்கி போய்க்கொண்டிருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் இந்த வழியில், மேல் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய நேசங்கள் பரத்தில் உள்ள காரியங்கள் மேல் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு புதிய நேசம்! நீங்கள் இனிமேல் உலகத்தின் காரியங்களின்மேல் அன்பு கூருகிறதில்லை, உங்களுடைய நேசம் தேவனுடையதாயுள்ளது. மனிதன் என்னக் கூறுகிறான் என்றும், எப்படி அவர்கள் உங்களைப் பார்த்து சிரிக்கிறீர்கள் என்றும், நீங்கள் “பண்டைய மாதிரியாயிருக்கிறீர்கள்” என்றும் அல்லது அந்தவிதமாக என்னக் கூறினாலும் நீங்கள் கவலைப்படுகிறதில்லை. நீங்கள் கவலையேப் படுகிறதில்லை, ஏனென்றால் நீங்கள் பரத்திலிருந்து பிறந்துள்ளபடியால், உங்களுடைய நேசங்கள் மேலான காரியங்களின் மேல் வைக்கப்பட்டுள்ளன. தேவன் உங்களைக் குறித்து வெட்கப்படுகிறதில்லை, நீங்களும் அவரைக் குறித்து வெட்கப்படுகிறதில்லை. அது உண்மை. ஆகையால் நீங்கள்…இங்கு எபிரெயர் 11-ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். நான் அதை எழுதி வைத்துள்ளேன். காரணம், எப்படி அவர்கள் செம்மறியாட்டுத்தோல்களைப் போர்த்திக்கொண்டு வனாந்திரங்களில் அலைந்து திரிந்து குறைவையும் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் அனுபவித்தார்கள், உலகம் அவர்களுக்கும் பாத்திரமாயிருக்கவில்லை. பார்த்தீர்களா? அதை வாசித்துப் பாருங்கள், அது உங்களுக்கு நன்மையாயிருக்கும். ஜனங்களுடைய சுபாவம் மாற்றப்படுகின்றபோது அவர்கள் என்னவாயிருக்கிறார்கள், என்ன சம்பவிக்கிறது என்பதை உங்களால் அங்கே காண முடியும்.

6584 இப்பொழுது, “சகோதரன் பிரான்ஹாம் அப்படியானால் நீங்கள் என்னவிதமான ஒரு சுபாவத்தைப் பெற்றுள்ளீர்கள்?” அவருடைய சுபாவத்தை. நான் என் தகப்பனாருடைய சுபாவத்தை உடையவனாயிருந்திருந்தால், அப்பொழுது நான் என்னுடைய தகப்பனார் செய்த காரியங்களை செய்வேன். ஆனால் நான் இப்பொழுது மறுபடியும் பிறந்துள்ளேன், அது என்னுடைய தகப்பனார் யாராயிருந்தார் என்பதைப் பொறுத்ததாய் உள்ளது. நீங்கள் சபையில் பிறந்திருந்தால், நீங்கள் ஒரு சபைத் தகப்பனையே உடையவராயிருப்பீர்கள். நீங்கள் அதையே, நீங்கள் வேண்டுமானல், “பிதா” என்று சபையை அழைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சபையை என்னவேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் சபை உங்களுடைய பிதாவாயிருக்கிறது. ஆனால் உங்களுடைய பிதா தேவனாயிருந்தால், நீங்கள் தேவனுடைய குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள், எனவே நீங்கள் தேவனுக்கு சம்மந்தப்பட்ட அந்தக் காரியங்களையே நாடித் தேடுகிறீர்கள். அது உண்மையே. அப்படியானால் நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருக்கிறீர்கள். உங்களுடைய சுபாவம் தேவனுடைய சுபாவமாயிருக்கிறது. அப்படியானால் ஓ, அவர்களில் சிலர் கூறுவதை கேட்டிருப்பீர்கள், சிலர், “ஓ, அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று எங்களுடைய சபை விசுவாசிக்கிறது” என்று கூறுகின்றனர். தேவனுடைய சுபாவமே உங்களுக்குள் இருக்கும்போது, அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று எப்படி உங்களால் நம்ப முடியும்? அவர் அற்புதமாய் ஒன்றியிருக்கும்போது எவ்வாறு இப்படி கூற முடியும்? அவருடைய சுபாவமே அற்புதமாய் உள்ளது, அவருடைய பழக்கமே அற்புதமாயுள்ளது, அவருடைய முழு உருவமும் அற்புதமாயுள்ளது. அற்புதத்தைத் தவிர நீங்கள் எப்படி வேறெதையாவது எதிர்பார்க்க முடியும்? உங்களுடைய புதிய பிறப்பு அற்புதமாயுள்ளது. உங்களுடைய புதிய ஜீவன் அற்புதமாயுள்ளது. உங்களுடைய சுபாவமும் கூட ஒரு அற்புதமாய் உள்ளது. எப்படி நீங்கள் பின்னோக்கிப் பார்த்து, “அந்தக் காரியங்கள் மரித்துவிட்டன. இது உண்மை” என்று கூற முடியும்? புரிகிறதா? நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாய், புதிய சிருஷ்டிப்பாய் இருக்கிறீர்கள். நிச்சயமாக.

6685 [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] குஞ்சுகள் பொறிக்கப்பட்டபோது, ஒன்றைத் தவிர மற்றவையெல்லாம் கோழிக்குஞ்சுகளாய் இருந்தன. அந்த ஒன்று கழுகாயிருந்தது. அது ஒரு விநோதமான சிறு குஞ்சாய் இருந்தது. அது முற்றிலும் வித்தியாசமாயிருந்தது, ஆனால் நீங்கள் பாருங்கள், அது மற்றொரு வகையினத்தில் பிறந்திருந்தது. ஆண் கருவுயிர் நீர்மமும் மற்றும் முட்டையும் வித்தியாசமாயிருந்தது, அதுவே அதை ஒரு வித்தியாசமான பறவையாக்கினது. நிச்சயமாகவே அது விந்தையாகக் காணப்பட்டது, அது மற்ற குஞ்சுகளிடம் விநோதமாகச் செயல்பட்டது, ஆனால் அது—அது மாத்திரம் இயற்கையாகவே வித்தியாசமான நடவடிக்கையையுடையதாயிருந்தது, ஏனென்றால் அதனால் அதைத் தவிர வேறெதையும் செய்ய முடியவில்லை, ஏனென்றால அது—அது ஒரு கழுகாயிருந்தது. அதனுடைய—அதனுடைய சுபாவம் கழுகினுடையதாயிருந்தது, எனவே தான் அதனால் ஒரு கழுகாயிருக்க முடிந்தது. ஆனால் ஏராளமானோர் இந்த ஸ்தாபனங்களில் உள்ளனர், அவர்கள் உண்மையாகவே கழுகுகளாயுள்ளனர், ஆனால் அவர்கள் சேற்றிலும், உலகத்தின் காரியங்களிலும் சோம்பிச் சாய்ந்து கிடப்பது பார்ப்பதற்கோ நன்றாய்க் காணப்படவில்லை பாருங்கள், அது அவர்களுடைய காரியமாயுள்ளது, போய் அவர்களை அழைத்து வாருங்கள்.

6786 ஒரு நாள் அந்த வயோதிக தாய்க் கழுகு மேலே பறந்து வந்தது, அந்தப் பெட்டைக் கோழி எப்போதும் அந்தக் கழுகுக் குஞ்சை தரையிலேயே வைத்திருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அந்தப் பெட்டைக் கோழியின் கொக்கரிப்பு எவ்வளவுதான் சத்தமாயிருந்தாலும், பொருட்படுத்தவில்லை, ஆயினும் அந்த பெட்டைக் கோழி, “தேனே, இங்கு வா. நான் இங்கு ஒரு காரியத்தை கண்டுபிடித்தேன் வா” என்றது. ஓ என்னே! அந்தக் கழுகுக் குஞ்சுயின் நேசங்கள் மேலே உள்ள காரியங்களின் மேல் இருந்தன, எனவே அது அந்தத் தாயை சந்திக்கச் சென்றது. அதற்கு இனி ஸ்தாபனங்களே வேண்டாம். தாயினிடத்திலிருந்து அதை தூர அழைத்து செல்லமுடியாதல்லவா? 87 தேவனால் பிறந்துள்ள ஒரு மனிதனை, நீங்கள் இனி ஒரு போதும் அந்த அழுகிப்போன அந்த தூய்மையற்ற பாவத்திற்குள் உங்களால் திரும்ப அழைத்துச் செல்ல முடியாது. அவன் மரித்துவிட்டான், அவன் மறுபடியும் பிறந்துள்ளான். அவன் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறான். அவன் கழுகினுடைய சுபாவத்தை பெற்றுள்ளான். அவன் ஆகாயத்தில் உயரப் பறப்பதற்கு எழும்ப வேண்டியவனாயிருக்கிறான். தன்னுடைய தாய், தன்னுடைய பெற்றோர் உள்ள இடத்திற்கு எழும்பி பறந்து செல்ல வேண்டியவனாயிருக்கிறான். 88 அந்தவிதமாகத்தான் நீங்கள்…விசுவாசிக்கிற ஒரு மனிதன், “ஓ, எங்களுடைய சபையில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். இப்பொழுது, அது மதவெறித்தனமாய் உள்ளது. அந்த நாள்…” என்று சோதிக்கப்படுகிறான்.

6889 இப்பொழுது, அந்தக் கழுகுக் குஞ்சு அங்கே வெளியே நின்றுகொண்டு, அந்த தாய்க் கழுகின் கூக்குரலைக் கேட்கலாம், அது சுற்றும் முற்றும் பார்த்து, “அது எங்கே உள்ளது?” என்று கேட்கலாம். இதோ அந்தத் தாய்க் கழுகு ஒருக்கால் அந்தக் கழுகுக் குஞ்சினிடம், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று இந்தவிதமாய்ச் சத்தமிடலாம். 90 பெட்டைக் கோழியோ, “அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன, கிளக், கிளக், கிளக், கிளக் என்று கொக்கரிக்கலாம். அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை! அது மதவெறித்தனம்” என்று கூறலாம். ஓ, என்னே! 91 ஏன்? நீ அதனை இனிமேல் பிடித்து வைத்திருக்க முடியாது. நான் “அம்மா, நான் எப்படி மேலே எழும்ப முடியும்?” என்று கழுகுக் குஞ்சு கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 92 அதற்கு தாய்க் கழுகு, “தேனே, உன்னுடய செட்டைகளை அப்படியே மேலே உயர்த்தி அடி, நீ செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான். நீ ஒரு கழுகாயிருக்கிறாய். விசுவாசத்தினால் நட” என்று கூறினது. அந்தக் கழுகுக் குஞ்சு, “அம்மா, அது எப்படி சம்பவிக்கப் போகிறது?” என்று கேட்கிறது. 93 அதற்கு தாய்க் கழுகு, “எனக்குத் தெரியாது. அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டேயிரு” என்றது. இதோ அது வருகிறது. அதனுடைய செட்டைகளை ஒரு சில அடிகள் மேலே உயர்த்தி அடித்து, அது ஒரு வேலிக் கம்பத்தின் மீது போய் அமர்ந்தது. அது எப்படியோ அந்த அளவு உயரமாய் பறந்து சென்றுவிட்டது. அப்பொழுது தாய்க் கழுகோ, “அப்படியே மேலே வா, நான் உன்னை பிடித்துக் கொள்வேன்” என்றது. அதுதான் இது.

6994 ஒரு புதிய சுபாவம், ஒரு புதிய உள்ளம், ஒரு புதிய சிருஷ்டி, உங்களுடைய பிதாவின் சுபாவம். நீங்கள் அவர் கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நேசித்து விசுவாசிக்கிறீர்கள். இந்த வார்த்தைக்கு முரணாயுள்ள ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் பொய்யாயுள்ளது. இதுவே தேவனுடைய வார்த்தையாயுள்ளது. புரிகிறதா? வேதமே சரியானதாய் உள்ளது. சபையானது என்னக் கூறுகிறது என்பதற்கு நான் கவலைப்படுகிறதில்லை, உங்களுக்கு வேதமே அப்படியே மாறாமல் சரியானதாயுள்ளது. ஏனென்றால் உங்களுடைய சுபாவம் மாற்றப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் ஒரு சபைப் பிதாவைப் பெற்றிருந்தால், நீங்கள் அந்த சபைப் பிதாவில்தான் விசுவாசங்கொள்வீர்கள். ஆனால் நீங்கள் தேவனை பிதாவாகக் கொண்டிருந்தால், நீங்கள் தேவனுடைய வார்த்தையில் விசுவாசமாயிருப்பீர்கள். நீங்கள் சபையில் ஒரு பிதாவைக் கொண்டிருந்தால், அது உங்களுடைய பிதாவாயிருந்து, நீங்கள் அவருடைய சுபாவமாய் இருக்கின்றபடியால், நீங்கள் அதையே விசுவாசிப்பீர்கள். ஆனால் உங்களுடைய பிதா தேவனாயிருந்தால், அப்பொழுது நீங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பீர்கள். நீங்கள் ஒரு ஸ்தாபன சபையாயிருந்தால், நீங்கள்—நீங்கள் சபை ஸ்தானத்தினுடைய வார்த்தையையே விசுவாசிப்பீர்கள். நீங்கள் சபையின் வார்த்தையையே விசுவாசிப்பீர்கள். சபை என்ன கூறுகிறதோ அதையே நீங்கள் விசுவாசிப்பீர்கள். ஆனால் நீங்கள் மறுபடியும் பிறந்திருந்தால், அப்பொழுது தேவன் என்ன கூறுகிறாரோ அதையே நீங்கள் விசுவாசிப்பீர்கள், ஏனென்றால் தேவன் உங்களுடைய பிதாவாயிருக்கிறார், உலகமல்ல, அல்லது சபைக் கோட்பாடுகளுமல்ல.

7095 அது எனக்கு ஒரு காரியத்தை நினைப்பூட்டுகிறது. ஒரு நாள் ஒரு—ஒரு முற்றத்தில் ஒரு வாத்துக் குஞ்சு சில கோழிக் குஞ்சுகளின் பின்னே சுற்றிக்கொண்டிருந்ததாக அவர்கள் கூறினர். அந்த வாத்துக் குஞ்சு கோழிக் குஞ்சுகளுக்கு ஒரு சிறிய விநோதமான நபராய் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குத் தெரியும், அதாவது அது ஒருவிதமாக பெரிய தலைப்பகுதியையும், பெரிய அலகையும் கொண்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அது பெரிய தலைப்பகுதியைக் கொண்டிருந்தபடியால், அது—அது ஒரு நோக்கத்திற்காகவே அங்கே அந்த அலகைக் கொண்டிருந்தது. அந்தவிதமாகவே கிறிஸ்தவனும் சற்று விநோதமாக இருப்பது போன்று தென்படுகிறான் என்றே நான் சில சமயங்களில் யூகிக்கிறேன், ஆனால்—ஆனால் அதில் அங்கே ஒரு நோக்கம் உண்டு. புரிகிறதா? எனவே அவன், அந்த வாத்துக் குஞ்சு கோழிக் குஞ்சுகளோடு சுற்றிலும் ஓடிக் கொண்டிருக்கிற வரையிலும் விநோதமாகக் காணப்பட்டது. அது… வான்கோழிகள் மற்றும் உள்ளவைகளுக்கோ, அவைகள்—அவைகள்—அவைகள் ஒருவிதமான சிறிய அலகினையே உடையதாயிருந்தன. அவைகள் மற்றக் காரியங்களை செய்துக்கொண்டிருக்கையில், அவைகள் அந்த வாத்தைப் போல் உண்டாக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு நாள் அந்த தாய்க்கோழி அந்த வாத்துக் குஞ்சினை மற்ற கோழிக் குஞ்சுகளோடு பின் முற்றத்திற்கு வழி நடத்திச் சென்றது. அந்த வாத்துக் குஞ்சு எப்பொழுதுமே ஒரு விதமாக பின்னால் இருந்து வந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா? அந்த வாத்துக் குஞ்சு அந்தக் கோழிக் குஞ்சுகளோடு பேசக் கூட முடியவில்லை. அதனுடைய மொழியோ வித்தியாசமாயிருந்தது. அவைகளால் ஒன்றையொன்று புரிந்து கொள்ள முடியாதிருந்தது.

7196 பாருங்கள், ஒரு கிறிஸ்தவன் மறுபடியும் பிறக்கும்போது அவனோடுள்ள காரியமும் அந்தவிதமாகவே உள்ளது. அவன் ஒரு வித்தியாசமான முட்டையிலிருந்து வெளியே வந்துள்ளான், அவ்வளவுதான். புரிகிறதா? ஒருகால் அவன் பெற்றுள்ள…இங்குள்ளவர்களில் அநேகர் அந்த ஸ்தாபன சபைகளிலிருந்து வந்தவர்கள் என்றே நான் நம்புகிறேன். அவைகள் கலப்பினமில்லா வாத்துக்கள், ஆனால் அவைகள் ஒரு பெட்டைக் கோழியை தலைவனாக கொண்டிருந்தன. அது உண்மையே. எனவே அவைகள் அதைப் புரிந்து கொள்ள முடியாது. அது மரியாதையற்றத்தனமாகத் தென்படலாம். அந்தவிதமாக அதைக் கருதிக்கொள்ளாதீர்கள், ஆனால் நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக்காட்டவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 97 ஒரு நாள் அந்த தாய்க்கோழி அந்த வாத்தினை சற்று தூரமான பின்னால் இருந்த தானியக் களஞ்சியத்திற்கு வழி நடத்திச் சென்றது. அந்த தானியக் களஞ்சியத்திற்குப் பின்னே கொஞ்சம் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆம். ஒரு நீரூற்று, சிற்றோடை வெளியே ஓடிக்கொண்டிருந்தது. உங்களுக்குத் தெரியுமா? அந்த வாத்து இவை எல்லாவற்றையுங் குறித்து வியப்புற்றுக்கொண்டு அங்கே அந்த பெட்டைக் கோழியோடு சென்றுகொண்டிருந்தது. காரணம், அந்தக் கோழிக் குஞ்சுகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆகாரத்தை இந்த வாத்து விரும்பக்கூட இல்லை. அதற்கு அது சரியானதாகத் தென்படவில்லை. அவைகள் செய்கிற இந்த பழையக் காரியங்கள் அந்த வாத்திற்கு சரியானதாய்த் தென்படவில்லை. எனவே கொஞ்ச நேரங் கழித்து அந்த வாத்து ஒரு வாசனையை முகர நேர்ந்தது. “அது சரியானதை முகர்ந்தது. அந்த வாசனை எங்கிருந்து வந்தது?” ஓ, அது பரலோகத்தின் சிறு சுவாசமாய் இருந்தது, ஹம்ம்ம்ம்! புத்துணர்ச்சியளிக்கிற ஒரு சிறிய சுவாசத்தை அது பிடித்துக்கொண்டது, உங்களை கவர்ந்திருழுக்கும்படிக்குச் செய்கிற ஒரு பிரசங்கத்தைப் போல, அது உங்களுக்குள் பதிந்து, வார்த்தைதாமே நங்கூரமிடுவதை நீங்கள் உணர்வது போலாகும். ஹம்ம்ம், பரலோக சூரிய ஒளி! அந்த வாத்து, “ஓ, எப்படியோ மற்றொன்று உண்டு, நான் சுவாசித்த அந்த சுவாசம் என் சுபாவத்திறு பொருந்துகிறது” என்று எண்ணினது. அது மீண்டும் சுவாசித்தது. “அது எங்கோ உள்ளது. இப்பொழுது, அப்படியில்லையென்று உங்களால் அதை என்னிடம் கூற முடியாது; அது எங்கோ உள்ளது. அது எங்கோ எனக்குரியதாய் உள்ள ஒன்று” என்பதையும், இந்த கோட்பாடு எனக்குரியதல்ல என்பதையும் நான் அறிவேன். புரிகிறதா? நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? அது தண்ணீரை முகர்ந்தது, அதனுடைய சுபாவமே ஒரு வாத்தாய் இருந்தது, எனவே ஒரு வாத்தும் தண்ணீரும் ஒன்று சேர்ந்து செல்கின்றன. அந்தவிதமாகவே ஒரு விசுவாசியும் தேவனும் ஒன்று சேர்ந்து செல்கின்றனர். அவன் நேரடியாக மற்றொரு பெரிய மெல்ல இழுத்து சுவாசிக்கும் காற்றினை சுவாசித்து இன்னும் அதிக பலமாகிவிடுகிறான். சற்றுக் கழித்து அந்தக் காற்று வீசத் துவங்குகிறது. பலத்த காற்றடிக்கிற முழக்கம் போல என்பதை நீங்கள் அறிவீர்கள். அது தண்ணீரிலிருந்து தென்றல் காற்றாய் அவனுக்கு வீசத் துவங்குகிறது. எனவே அதனால் அப்படியே இனிமேல் நிற்க முடியாது. அது மலைக்குக் கீழே தத்தி, தத்தி, தத்தி, தத்தி, தத்தி, “ஹாங்—ஹாங்க், ஹாங்க்—ஹாங்க், ஹாங்க்—ஹாங்க்” என்று கத்திக்கொண்டே அது சென்றுவிடுகிறது. அது அந்த சிறிய அலகினை ஆகாயத்தை நோக்கியவாறு உயர்த்திக்கொள்கிறது. அது தண்ணீரை முகர்ந்துவிட்டதே! 98 அந்த வயோதிக பெட்டைக் கோழி, “நீ மதவெறியனாயிருக்கிறாய், இங்கே திரும்பி வா!” என்றது. அந்த சத்தம் எந்த நன்மையும் செய்யவில்லை; அதுவோ தண்ணீரை முகர்ந்துவிட்டது. அது தண்ணீருக்கு செல்லும் தன்னுடைய பாதையில் இருந்தது!

7299 “இம்மானுவேலின் இரத்தக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தால் நிறைந்த ஊற்று உண்டு, அங்கே பாவிகள் அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கி தங்களுடைய எல்லாப் பாவக் கறையையும் போக்குகின்றனர்.” ஒரு உண்மையான கிறிஸ்தவன் உலகத்தோடு எந்தக் காரியத்தையும் செய்ய விரும்புகிறதில்லை. அவர்கள் இங்கே ஏனோதானோவென்று வாழும்படி சுற்றிக்கொண்டு, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று வியப்புற்று, இன்றைக்கு அவர்கள் மெத்தோடிஸ்டுகளாய், நாளை அவர்கள் பாப்டிஸ்டுகளாய், பிரஸ்பிடேரியன்களாய், பெந்தேகோஸ்தேக்கள் போன்றவர்களாய் இருக்க விரும்புவதில்லை. ஓ, சகோதரனே, அது பரிதாபகரமானதாயுள்ளது. ஒரு உண்மையான கிறிஸ்தவன் ஆவியின் புத்துணர்ச்சியை, தன்னுடைய ஜீவியத்தில் தேவனுடைய புத்துணர்ச்சியை, அவனை ஒரு புதிய சிருஷ்டியாக்குகிற ஒரு காரியத்தையே பெற்றுக்கொள்ள விரும்புகிறான். அந்த வெளிச் செல்லும் வழியை அவன் அடைந்தவுடன், அவன் பனிப்பொழிவுள்ள நிலத்தித்திற்கு அல்லது அதைப் பெற்றுக்கொள்ள எங்காவது சென்றுவிடுவான். அவன் தூரமாய் சென்று விடுவான், ஏனென்றால் அவன் துவக்கத்திலேயே ஒரு வாத்தாய் இருக்கிறான். ஆம். ஒரு பிரமாணமாயல்ல, இல்லை, இல்லை, இல்லை, இல்லை.

73100 நீங்கள் இன்னமும் உலகத்தின் காரியங்களில் அன்பு கூர்ந்தால், நீங்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களுடைய பலியானது இன்னமும் ஏற்றுக்கொள்ளப் படாமலிருக்கிறது, உங்களுடைய சுபாவம் மாற்றப்பட்டிருக்கவில்லை. இப்பொழுது மறுபடியும் பிறக்க வேண்டும் என்பது எதைப் பொருட்படுத்துகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? பாருங்கள், உங்களுடைய சுபாவம் மாற்றப்பட்டிருக்கிறது, நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாகிவிடுகிறீர்கள். நீங்கள் முதலில் மரித்து, அதன்பின்னரே மறுபடியும் பிறக்க வேண்டும். இது முடிப்பதற்கான என்னுடைய நேரம் என்பதை நான் அறிவேன். ஆனாலும் எனக்கு இன்னும் சில நிமிடங்களைத் தாருங்கள், நான் இந்தப் பாடப்பொருளின் மேல் உண்மையாகவே மிகத் துரிதமாக பேசி முடித்துவிடுவேன், பாருங்கள், பாருங்கள். நீங்கள் இன்னமும் உலகத்தில் அன்பு கூர்ந்து, அதே சமயத்தில் நீங்கள் மறுபடியும் பிறந்துள்ளதாக உரிமை கோரினால், நீங்கள் என்ன செய்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல …நீங்கள் கதறியிருக்கலாம், உங்களுடைய சரீரம் முழுவதும் சிலிர்ப்படைந்திருக்கலாம். அவைகளெல்லாம் சரிதான், நான் அதற்கு விரோதமாக ஒன்றையும் கூறவில்லை. கிறிஸ்தவர்கள் அழுது, அவர்களுடைய சரீரம் முழுவதும் சிலிர்த்திருக்கலாம். நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் அந்நிய பாஷைகளில் பேசினேன்…” என்று கூறலாம். அது அருமையாயிருக்கலாம், அது எப்போதும் நன்றாயிருந்திருக்கலாம்.

74101 அண்மையில் ஒரு இளம் பெண் தான் கண்ட ஒரு தரிசனத்தோடு இல்லை ஒரு சொப்பனத்தோடு என்னிடம் வந்த அப்பெண்ணை நான் எதிர்பார்த்துத் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் அதற்கான வியாக்கியானத்தை பெற்றுள்ளேன். பரிசுத்த ஆவியைப் பெற்றிராத அந்த இளம் பெந்தேகோஸ்தே பிரசங்கியாருடைய மனைவியினிடத்தில் அதைப் போய்க் கூற இன்னமும் ஒரு விதமாக கடினமாய் உள்ளது. உ—ஊ, ஆனால் அவள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் அதன்பின்னர் அவள் அதை பெற்றுக் கொண்டாள், பாருங்கள். 102 ஆம், அது வித்தியாசமாயுள்ளது, பாருங்கள். ஆம், அது அந்நிய பாஷையில் பேசுவதல்ல, அது ஆவியில் நடனமாடுவதல்ல. அது நீங்கள் சார்ந்திருக்கக்கூடிய அந்த எந்தக் காரியங்களிலும் இல்லை. அது ஒரு மரணமாய், ஒரு பிறப்பாய், ஒரு மாற்றப்பட்ட சுபாவமாய், ஒரு மாற்றப்பட்ட மனநிலையாய் உள்ளது. பழைய காரியங்கள் மரித்துப்போய், புதிய காரியங்கள் புதியதாய் உள்ளன; உலகம் மரித்துள்ளது, தேவன் புதியதாய் உள்ளார். தேவனே உங்களுடைய ஜீவியமாயும், உலகமோ உங்களுக்கு மரித்ததாயும் உள்ளது. இப்பொழுது நீங்கள் அதைப் புரிந்து கொள்ளுகிறீர்களா? சரி.

75103 இப்பொழுது கவனியுங்கள். உங்களுக்குத் தெரியுமா? நான் இங்கே இதை சற்று துண்டித்து வழியிலிருந்து முட்செடிகளை அகற்றிவிடப் போகிறேன். தேவனுடைய வார்த்தையையும், அவருடைய உபதேசத்தையும் பின்பற்றாத ஸ்திரீகளும், புருஷர்களும் தாங்கள் மறுபடியும் பிறந்துள்ளதாக உரிமை கோரினால் ஏதோக் காரியம் தவறாயுள்ளது. நான் ஒரு நிமிடம் ஸ்திரீகளோடு பேசப்போகிறேன். தேவனுடைய வார்த்தையானது குட்டையாக தலைமுடியை வெட்டிக் கொள்ளுதலையும், குட்டைக் கால் சட்டைகளை அணிவதையும், தளர் காற்சட்டைகளை அணிவதையும், ஒழுக்கக்கேடாக உடை உடுத்துவதையும் கண்டனம் செய்கிறது என்று ஒரு ஸ்திரீ அறிந்திருந்தும், தன்னுடைய தலைமுடியை வளரவிட போதிய பண்பு நலமின்றி, ஒரு கிறிஸ்தவளைப் போல காணப்படுகிற ஆடைகளை அணியாமலுமிருந்தால் அவள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறாள். நீங்கள் எந்தவிதமான காரியத்தினூடாக இருந்துவந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஒரு உலர்ந்துபோன பசுவின் தோலின் மீது பட்டாணிகளைக் கொட்டுவதுபோல நீங்கள் அந்நிய பாஷையில் பேசியிருக்கலாம். நீங்கள் முழு கட்டிடத்தையே அசைக்குமளவிற்கு ஆவியில் நடனமாடியிருக்கலாம், நீங்கள் அவ்வாறு செய்திருக்கலாம். அதற்கு இதனோடு எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. அது உலகத்தின் அன்பு இன்னமும் உங்களில் இருக்கிறது என்பதையேக் காட்டுகிறது. தேவன் அதை கண்டனம் செய்யும்போது, அவர், “அது…ஒரு ஸ்திரீ தன்னுடைய தலைமுடியை நீளமாய் வைத்திருக்க வேண்டும். புருஷனோ குட்டையான தலைமுடியை வைத்திருக்க வேண்டும் என்று சுபாவமே உங்களுக்கு போதிக்கிறதே. தேவன் மனிதனுக்கு தலையாயிருக்கிறார் என்றும், புருஷன் ஸ்திரீக்கு தலையாயிருக்கிறான்” என்றும் கூறினார். ஒரு ஸ்திரீ தன்னுடைய தலைமுடியை கத்தரித்துக்கொண்டால், அவள் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள். அவளுடைய தலை அவளுடைய கணவனாகும். ஒரு மனிதன் தன்னுடைய தலைமுடியை நீளமாக வளரவிட்டால், அப்பொழுது அவன் தலையாயிருக்கிற கிறிஸ்துவை கனவீனப்படுத்துகிறான். புரிகிறதா? “உங்களுடைய ஸ்திரீகள் தகுதியான வஸ்திரத்தினால் தங்களை அலங்கரிக்கக்கடவர்கள்” சுத்தமாக, பெண்மணியைப் போல. புரிகிறதா?

76104 அதை செய்ய பொதுவான ஒழுக்க முறையில்லாமல், நாம், “தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! நான் அந்நிய பாஷைகளில் பேசினேன். அல்லேலூயா! தேவனுக்கு மகிமை” என்று கூறுகிறோம். அங்குள்ள அந்த ஆவி தவறாயுள்ளதையே அது காண்பிக்கிறது. அது வார்த்தையின் சுபாவமாயிருந்தால், அது ஒவ்வொரு முறையும் வார்த்தையை ஏற்றுக்கொள்ளும். வார்த்தை மாம்சமாயுள்ளது, வார்த்தை தேவனாயிருந்தது, வார்த்தை தேவனாய் உள்ளது; அந்த வார்த்தைகள் உங்களுக்குள்ளிருந்து உங்களை ஒரு தேவனுடைய குமாரனாகவும் அல்லது ஒரு குமாரத்தியாகவும் மாற்றி, அவருடைய பிள்ளைகளாக்கி, அவருடைய வார்த்தையை விசுவாசிக்கச் செய்கிறது. 105 “அந்த பண்டைய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படுவதில் நான் விசுவாசங் கொள்வதில்லை. அல்லேலூயா! நீங்கள் அதை விளக்கிக் கூற எவ்வளவு தான் முயற்சித்தாலும் நான் கவலைப்படமாட்டேன், என்னுடைய மேய்ப்பனையே நம்புவேன்.” தொடர்ந்து அப்படியே செல்லுங்கள், அப்படியானால் அது தான் உங்களுடைய பிதாவாயுள்ளது. ஆனால் தேவன் உங்களுடைய பிதாவாயிருந்தால், நீங்கள் தேவனுடைய வார்த்தையோடு சரி செய்து கொள்வீர்கள். 106 பிரசங்கியார்; “அந்நாளில் அநேகர் என்னிடத்தில் வந்து, ‘கர்த்தாவே, நான் உம்முடைய நாமத்தில் பிசாசுகளைத் துரத்தியிருக்கவில்லையா?’ பிரசங்கிமார்கள். ‘நான் அநேக வல்லமையான கிரியைகளை செய்திருக்கவில்லையா?’ ஊழியக்களத்தில் உள்ள சுவிசேஷகர்கள். ‘அக்கிரம செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள்’” முறை தவறிப் பிறந்த பிள்ளைகள். அது உண்மையே.

77107 நீங்கள் தேவனால் பிறந்திருந்தால், நீங்கள் திருவசனத்தைக் கொண்டு தண்ணீரில் கழுவப்பட்டு, உலகத்தின் காரியங்களிலிருந்து வேறு பிரிக்கப்பட்டு தேவனை விசுவாசிப்பீர்கள். நீங்கள் மரித்துவிட்டீர்கள். நீங்கள் உங்களுடைய சொந்த சிந்தனைக்கு மரித்துவிட்டீர்கள், உங்களுடைய சொந்த கருத்துக்களுக்கு மரித்துவிட்டீர்கள், தேவனுடைய வார்த்தையைத் தவிர மற்ற ஒவ்வொரு காரியத்திற்கும் மரித்துவிட்டீர்கள்; அது உங்களுக்குள் ஜீவிக்கிறது, உங்கள் மூலமாக திரும்ப கிரியை செய்து, அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது என்று நிரூபிக்கிறது. நீங்களோ, “நான் உலகத்…மரித்துவிட்டேன். சகோதரன் பிரான்ஹாம் நான் உலகத்திற்கு மரித்து விட்டேன்” என்று கூறலாம். அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பீர்களா? 108 இயேசு, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன” என்றார். இப்பொழுது “மறுபடியும் பிறத்தல்” என்ன பொருட்படுத்துகிறது என்பதையே நாம் பார்க்கப்போகிறோம். புரிகிறதா?

78109 இன்னும் கோபங்களோடு, இன்னும் இழிவாக, கர்வமுள்ளவர்களாக இருத்தல், யாரவது உங்களைப் பற்றி ஏதாவது ஒரு காரியத்தைக் கூறினால், நீங்கள் சண்டையிட ஆயத்தமாயிருக்கிறீர்கள். அப்படியானால் தேவனுடைய ஆவியினால் பிறந்துள்ளீர்களா? இல்லை. தேவனுடைய ஆவி அதைப் போன்று செய்கிறதில்லை. இல்லை. தேவனுடைய ஆவி தாழ்மையாயும், சாந்தமாயும், இனிமையாயும், நீடிய பொறுமையாயுமுள்ளது. அது தேவனாயுள்ளது, அன்பாய், தயவாய், மன்னிப்பாய் உள்ளது, அதுவே தேவனுடைய ஆவியாயுள்ளது. ஓ, ஆம். 110 ஆனாலும், அவர்கள் அந்த ஸ்தாபனத்தை பிடித்துக்கொண்டு, அந்நிய பாஷைகளில் பேசி, தீர்க்கதரிசனமுரைத்து, எல்லா விதமான கிரியைகளையும் செய்வார்கள். அவர்கள் அதைச் செய்வார்கள் என்று இயேசு கூறினார். “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்தல்.” ஸ்தாபனத்தையே பற்றிக்கொள்வார்கள், ஏனென்றால் அதுவே அவர்களுடைய பிதாவாய் உள்ளது. அவர்கள் அந்த ஸ்தாபன பிதாவுக்குப் பிறந்தவர்கள். ஆனால் நீங்கள் தேவனால் பிறந்திருந்தால், இதுவே உங்களுடைய பிதாவாயுள்ளது, அவரே வார்த்தையாய், வார்த்தையாயிருக்கிறார். எத்தனை உணர்ச்சிவசப்படுதல்களை நீங்கள் உடையவர்களாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் உலகத்திற்கு மரித்து, கிறிஸ்துவுக்குள் உயிரோடிருக்கும் வரையில் இன்னமும் ஒரு சாத்தானின் பிள்ளையாகவே இருக்கிறீர்கள். கவனியுங்கள், இப்பொழுது துரிதமாகப் பார்ப்போம்.

79111 ஒரு ஆத்துமா, நல்லதோ அல்லது கெட்டதோ, மரணம் அதை மாற்றுகிறதில்லை. “ஒரு ஆத்துமா என்றால் என்ன?” என்ற இந்த ஒன்றின் பேரில் நான் விளக்கமளிக்க வேண்டும் என்பதற்காக நான் இங்கே ஏராளமான வேதவாக்கியங்களை எழுதிவைத்துள்ளேன். ஒரு ஆத்துமா என்றால் என்ன? அது நீங்களாகும். நீங்கள் ஒரு ஆத்துமாவாயிருக்கிறீர்கள். அது உங்களுடைய உட்புறத்தில் உள்ள பாகம். நீங்கள் மரிக்கும்போது, என்ன நிலைமையில் அந்த ஆத்துமா உள்ளே இருக்கிறதோ, அந்த விதமாகவே அது செல்லுகிறது. அது அதனுடைய சேருமிடத்திற்குச் செல்கிறது. நீங்கள் அதற்காக எவ்வளவுதான் அப்பொழுது செய்ய முயற்சித்தாலும் அது ஒரு பொருட்டல்ல, உங்களால் அதை வெளியே இழக்க முடியாது, அந்த ஆத்துமா இங்கே மாற்றப்பட வேண்டியதாய், மறுபடியும் பிறக்க வேண்டியதாயுள்ளது. நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, பரிசுத்த ஆவியைக் குறித்து என்ன?” என்று கேட்கலாம். 112 பரிசுத்த ஆவியானது உங்களை அந்த சரீரத்திற்குள்ளாக சேவைக்காக அபிஷேகிக்கிறது. ஆனால் நீங்கள் நித்திய ஜீவனுக்கேதுவாக விசுவாசிக்கிறீர்கள். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. ” புரிகிறதா? அதன்பின்னர் நீங்கள் பரிசுத்த ஆவியினால் அந்த சரீரத்திற்குள்ளாக வரங்களின் வெளிப்படுத்துதல்கள் போன்றவற்றிற்காக அபிஷேகிக்கப்படுகின்றீர்கள், ஆனால் நீங்கள் நித்திய ஜீவனுக்கென்று விசுவாசிக்கிறீர்கள். விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நீங்கள் மரித்து, பிறந்து, புதுப்பிறப்பூட்டப்பட்டு, ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கும்போதே நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். சரி.

80113 இப்பொழுது நினைவிருக்கட்டும், ஆத்துமா நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருந்தாலும் மரணத்திற்கு அதனோடு எந்த சம்மந்தமுமில்லை. மரணம் அதை அதனுடைய சேரும் இடத்திற்கே கொண்டு செல்கிறது. நீங்கள் இதைக் கேட்கிறீர்களா? நீங்கள் இன்னமும் உலகத்தையும், அதில் உள்ள உலகத்தின் அன்பையும் கொண்டிருந்தால், அது உங்களோடு மரிக்க வேண்டும், ஏனென்றால் உலகமானது மரிக்க வேண்டும். தேவன் உலகத்தை ஆக்கினைக்குட்படுத்தியிருக்கிறார், அதுவே உலக நிலைமையாயுள்ளது. தேவன் அதை ஆக்கினைக்குட்படுத்தியிருகிறார், அது மரிக்க வேண்டும். அந்த உலகம் உங்களுக்குள்ளாக இருந்தால், நீங்கள் அந்த உலகத்தோடு மரிப்பீர்கள். என்னே, இதைவிட இன்னும் எவ்வளவு தெளிவாகக் கூறக் கூடும் என்று எனக்குப் புரியவில்லை. புரிகிறதா? அது நல்லதாயிருந்தால், தேவனால் பிறந்திருந்தால், அது தேவனண்டை செல்ல வேண்டும். அது உலகத்திற்குரியதாயிருந்தால் அது உலகத்தோடு அழியும்படி தங்கியிருக்கும். அது தேவனுடையதாயிருந்தால், படித்திருந்தாலும் அல்லது படித்திருக்காவிட்டாலும், அது தேவனோடு ஜீவிக்கும். கல்வி கற்றிருந்தாலும் அல்லது கல்வி கற்காதவராயிருந்தாலும், இன்னமும் உலகம் அங்கு இருக்குமானால், அது மரிக்க வேண்டும். உங்களுடைய ஆத்துமாவில் உலகம் இருக்குமானால், உங்களுடைய வாஞ்சை உலகத்தின் காரியங்களாயிருந்தால், நீங்கள் உலகத்தோடு அழிவீர்கள். அது தெளிவாயுள்ளது! இல்லையா? அப்படித்தான் அழிந்துபோக வேண்டும். நீங்கள் ஒரு மரித்த உலகத்தின் பாகமாயிருக்கிறீர்கள். உலகம் மரித்துள்ளதுபோல, நீங்களும் உலகத்தோடு மரித்துவிட்டீர்கள்.

81114 ஆனால் நீங்கள் மறுபடியும் பிறந்திருந்தால், நீங்கள் கிறிஸ்துவோடு உயிரோடிருக்கிறீர்கள், உங்களுடைய நேசங்கள் பரத்திலுள்ள காரியங்களின்மேல் இருக்குமேயன்றி உலகத்தின் காரியங்கள் மேல் இருக்காது. ஆனால் நீங்கள் தேவனுடைய ஆவியில் மீண்டும் பிறந்திருந்தால், நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாகி, அவரோடு நித்தியமாயிருக்கிறீர்கள். அதன்பின்னர், நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது, மரணம் உங்களைத் தொட முடியாது. நீங்கள் நித்தியமாயிருக்கிறீர்கள். நீங்கள் காலம் என்ற ஒரு சிருஷ்டியிலிருந்து ஒரு நித்திய சிருஷ்டியாக மாறியிருக்கிறீர்கள். நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்கு மாறியிருக்கிறீர்கள். நான் “நித்தியத்தைக்” குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். என்றென்றுமான மரணத்திலிருந்து நித்திய ஜீவனுக்கு. நீங்கள் உலகத்தாராயிருந்தால், நீங்கள் இங்கே இதனோடு மரிக்கிறீர்கள். நீங்கள் அன்பு…வேதம் யோவான் புஸ்தகத்தில், “நீங்கள் உலகத்திலும் அல்லது உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூர்ந்தால், தேவனுடைய அன்பு உங்களுக்குள்ளாக இல்லாததே அதற்கு காரணமாயுள்ளது” என்று கூறியுள்ளது. உங்களால் உலகத்தை நேசிக்க முடியாது. இயேசு, “நீங்கள் தேவனையும், உலகப்பொருளையும் நேசிக்க முடியாது” என்றார். உலகப்பொருள் என்பதே “உலகமாயுள்ளது.” உங்களால் உலகத்தையும், தேவனையும் ஒரே நேரத்தில் நேசிக்க முடியாது. “ஒருவன் என்னை நேசிப்பதாக கூறி, என்னுடைய கற்பனைகளை கைக்கொள்ளவில்லையென்றால், அவன் ஒரு பொய்யானாயிருக்கிறான் என்றும், அவனுக்குள் சத்தியம் இல்லை” என்றும் வேதம் கூறியுள்ளது. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது.

82115 ஓ, பிரான்ஹாம் கூடாரமே, நல்ல ஜனங்களாகிய நீங்கள் எல்லோருமே, நாம் பட்டியலிட்டுப்பார்போமாக! இது புதிய வருடமாயுள்ளது. நாம் துவங்குவோம், நம்மிடத்திலிருந்து உலகத்தின் காரியங்களை வெளியேற்ற நாம் ஏதோ ஒன்றைச் செய்வோமாக. அது இன்னமும் அங்கு இருக்குமானால், நாம் அதை வெளியேற்றுவோமாக. ஆம் ஐயா. சரி, இன்றைய ஜனங்களே…நான் துரிதமாக முடிக்க வேண்டும்.

83116 இன்றைய ஜனங்கள் எல்லாவிதமான ஆவிகளையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் போய் ஒரு சபை ஆவியை ஏற்றுக் கொள்கிறார்கள், அவர்கள், “மறுபடியும் பிறந்த தேவனுடைய ஆவிகள்” என்று தங்களை அழைத்துக்கொள்கிற ஆவிகளையுங்கூட ஏற்றுக் கொண்டு, உண்மையாயிருக்கிற தேவனுடைய வார்த்தையை மறுதலிக்கிறார்கள். தேவனுடைய ஆவி அவருடைய சொந்த வார்த்தையை மறுதலிக்கும் என்பதை உங்களால் யூகித்துப் பார்க்க முடிகிறதா? கத்தோலிக்க ஜனங்களாகிய உங்களுக்கு, ரோமன் கத்தோலிக்கருக்கு நான் பொருட்படுத்திக் கூறுவதோ, வேதத்திற்கு முரணாயிருக்கிற அந்த கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு, தேவனுடைய வார்த்தையை மறுதலித்துவிட்டு, தேவனுடைய ஆவி உங்களுக்குள் இருக்கிறது என்றும், நீங்கள் தேவனுடைய ஆவியில் பிறந்துள்ளீர்கள் என்றும் உங்களால் உண்மையாகவே கூற முடியுமா? இந்த வேதாகமத்தை எழுதின ஆவியானவர் இதை மறுதலிப்பாரா? நான் ஏதோ ஒரு காரியத்தைக் கூறி, பின்னர் எழும்பி நின்று, அதற்கு எதிராகப் பொய்யுரைக்கக் கூடும். தேவன் ஒரு காரியத்தைக் கூறி, அதன்பின்னர் திரும்பி அதைக் குறித்து பொய்யுரைப்பாரா? வேதம், “எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் என்று கூறியுள்ளது, ஏனென்றால் அவர் சகல சத்தியத்திற்கும் ஊற்றாயிருக்கிறார்.”

84117 “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” பட்டப்பெயர்களில் ஞானஸ்நானம் பண்ணப்படுகிற மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் இப்பொழுது வித்தியாசத்தை அறிந்து கொண்டீர்களா? நீங்கள் உங்களுடைய வேதாகமத்தை வைத்துள்ளீர்கள். நீங்கள் ஒரு சபையை சேர்ந்து கொள்ளுதலையும், ஒரு கரங்குலுக்குவதன் மூலமும் ஏற்றுக்கொள்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய கடிதத்தை ஒருவரிடத்திலிருந்து ஒருவர் ஏற்றுக்கொண்டு, நீங்கள் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்துள்ளீர்கள் என்று உரிமை கோருகிறீர்களா? நீங்கள் அதைச் செய்துவிட்டு, அதன்பின்னர் தேவனுடைய வார்த்தையில் நோக்கிப் பார்த்து, மறுபடியும் பிறந்த ஒரு கிறிஸ்தவன் என்று உங்களை அழைத்துக்கொள்ள முடியுமா? நீங்கள் சபைக்கு மரிக்கும்போது, நீங்கள் கோட்பாடுகளுக்கு மரிக்கும்போது, நீங்கள் உலகத்துக்கு மரிக்கும்போது, நீங்கள் தேவனைத்தவிர மற்ற ஒவ்வொரு காரியத்திற்கும் மரித்துவிடுகிறீர்கள். தேவன் வார்த்தையாயிருக்கிறாரே! அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. நாம் பார்ப்போம். அவர்கள் ஒவ்வொரு விதமான ஆவியையும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஓ, அவர்கள் சபை ஆவிகளைப் பெற்றுள்ளனர், அவர்கள் எல்லாவிதமான ஆவிகளையும் பெற்றுள்ளனர். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்.

85118 தீர்க்கதரிசிகள்! தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு வருகிறது. வேதம் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளது. இப்பொழுது முடிக்கையில், நான் இன்னும் இரண்டிற்கும் மேற்பட்ட கருத்துகளை கூறும்படி வைத்துள்ளேன், நான் அதைக் கூற வேண்டும், அதன் பின்னர் நான் நிறுத்திவிடப் போகிறேன். கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்திற்கு வருகிறது. தீர்க்கதரிசிகளிடத்திற்கு என்ன வருகிறது? சபையினுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்திற்கு வருகிறதா? [சபையார், “இல்லை” என்கின்றனர்—ஆசி.] கோட்பாட்டின் வார்த்தை தீர்க்கதரிசியினிடத்திற்கு வந்ததா? [“இல்லை”] கர்த்தருடைய வார்த்தையே! அது என்னவாயிருந்தது? தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்தினார். புரிகிறதா? அது தீர்க்கதரிசிகள், உண்மையான தீர்க்கதரிசிகள் ஆகும். இப்பொழுது நாம் கள்ளத் தீர்க்கதரிசிகளை உடையவர்களாயிருக்கிறோம், நாம் இன்னும் ஒரு நிமிடத்தில் அவர்களைப் பார்க்கப் போகிறோம். ஆனால் உண்மையான தீர்க்கதரிசி, அந்த உண்மையான வார்த்தை உண்மையான தீர்க்கதரியண்டை வந்தது. அது மற்ற வேறெதுவுமாய் இருக்க முடியாது. இப்பொழுது, ஒரு கோட்பாடு அந்த தீர்க்கதரிசியண்டை வரவில்லை, ஒரு ஸ்தாபனம் அந்த தீர்க்கதரிசியண்டை வரவில்லை. இல்லை. ஆனால் கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசியண்டை வந்தது, அவன் அதை ஜனங்களுக்கு வெளிப்படுத்தினான். உண்மையான தீர்க்கதரிசி உண்மையான வார்த்தையை உடையவனாயிருந்தான்.

86119 ஒரு உண்மையான தீர்க்கதரிசியை நீங்கள் எப்படி சோதித்தறிகிறீர்கள்? அவன் தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டுள்ள போதுதான். அப்பொழுது அது ஒரு உண்மையான வார்த்தையாயில்லையென்றால், அது கள்ள ஒன்றாக இருக்க வேண்டும். இந்த வார்த்தையிலிருந்து வித்தியாசமான ஒரு காரியத்தை அது கூறுமானால், இந்த வார்த்தையே தேவனுடைய வார்த்தையாயுள்ளது, ஒவ்வொரு தீர்க்கதரிசியின் வார்த்தையும் ஒரு பொய்யாயும், தேவனுடைய வார்த்தையே சத்தியமாயிருப்பதாக. தீர்க்கதரிசியினிடத்திலிருந்து வருகின்ற அந்த வார்த்தை தேவனுடைய வார்த்தையாயிருந்தால், அப்பொழுது அவன் ஒரு உண்மையான தீர்க்கதரிசியாயிருக்கிறான், ஏனென்றால் வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்திற்கு, உண்மையான தீர்க்கதரிசிகளிடத்திற்கு வருகிறது. நாம் எப்பொழுதுமே கள்ளத் தீர்க்கதரிசிகளை உடையவர்களாயிருந்து வருகிறோம். உண்மையான் தீர்க்கதரிசிகள், உண்மையான வார்த்தை, கள்ளத் தீர்க்கதரிசிகள், கள்ள வார்த்தை, “நம்முடைய கோட்பாடுகள், நம்முடைய ஸ்தாபனங்கள், இதை சேர்ந்துகொள்ளுதல், இதைக் கூறுவது, இதை விசுவாசிப்பது, இதைச் செய்வது” என்பதாகும்.

87120 ஆனால் உண்மையான வார்த்தை உண்மையான தீர்க்கதரிசியண்டை வருகிறது, அப்பொழுது அவன் உங்களுக்கு உண்மையான வார்த்தையைக் கூறுகிறான், நீங்கள் அந்த உண்மையான வார்த்தையை பின்பற்றும்போது, நீங்கள் ஒரு உண்மையான வார்த்தையின் அனுபவத்தை பெற்றுக்கொள்கிறீர்கள், ஏனென்றால் வார்த்தை உங்களில் மாம்சமாக்கப்படுகிறது, அப்பொழுது நீங்கள் தேவனுடைய குமாரனாகிறீர்கள். தேவனுடைய வார்த்தை தேவனிடத்திலிருந்து சுழன்று கொண்டு உங்களுக்காக வருகிறது, நீங்கள் அவருடைய சுபாவமாய் இருக்கிறீர்கள், அவருடைய ஆவி உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் தேவனுடைய கிரியைகளைச் செய்வீர்கள். அல்லேலூயா! வேதம் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளதே. ஓ, என்னே!

88121 கள்ளத் தீர்க்கதரிசிகள் கள்ள வார்த்தைகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்? தவறான உணர்ச்சிகளை உடையவர்களாயிருக்கின்றனர். கள்ளத் தீர்க்கதரிசிகள் கள்ளத்தனமாயிருக்கும்படி சில உண்மையான வார்த்தையை கைக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து அதைச் செய்கிறதில்லை. ஆனால் வேதம் கூறியுள்ளது…நீங்கள் அதன் பேரிலான வேதவாக்கியத்தை குறித்துக் கொள்ள வேண்டுமானல், தீமோத்தேயு இரண்டாம் நிரூபம் 3-ம் அதிகாரத்தில் பார்க்கலாம். கள்ளத் தீர்க்கதரிசிகள் உண்மையான வார்த்தையை கள்ளத்தனமாக்கும்படி போதுமானவற்றை உடையவர்களாயுள்ளனர், ஏனென்றால் வேதம், அவர்கள் “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்திருப்பார்கள்” என்று கூறியுள்ளது. முறைப்படி தேவபக்தியின் வேஷத்தைத் தரிக்க அவர்கள் சத்தியத்தைப் போன்ற சிலவற்றை பெற்றிருக்க வேண்டும். “ஒரு தேவபக்தியின் வேஷம், ஆனால் அதன் பெலனை மறுதலிப்பது” எதைக் குறித்த வல்லமை? உங்களை சரிப்படுத்துவதற்கு, ஒரு வித்தியாசமாயிருப்பதற்கு, தேவனை சேவிக்க, நடனங்களுக்கும், உலகத்தின் காரியங்களுக்கும் செல்லாதிருத்தல். வேதம் உங்களுடைய தலைமுடியை வெட்டக் கூடாது என்று கண்டிக்கிறது. “அது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை” என்று கள்ளத் தீர்க்கதரிகள் கூறுகின்றனர்.

89122 அண்மையில் ஒருவர் கூறினார், (நான் அதை இங்கு இதற்கு முன்பு மேற்கோள் காட்டினேன் என்று நான் நினைக்கிறேன், எனக்குத் தெரியவில்லை) அவர், “நீர் ஏன் ஸ்திரீகளையும் புருஷர்களையும் கண்டனம் செய்வதை விட்டுவிடக் கூடாது. காரணம் ஜனங்களோ உம்மை ஒரு தீர்க்கதரிசியாக கருதுகிறார்களே” என்று என்னிடம் கூறினார். அதற்கு நான், “நான் அவ்வாறு கூறவில்லை” என்றேன். 123 அப்பொழுது அவரோ, “ஆனால் ஜனங்கள் உம்மை அவ்வாறு கருதுகிறார்கள். எனவே தரிசனங்களை பெற்றுக்கொள்வது எப்படி என்றும், அந்த விதமாக தேவனுடைய கிரியைகளை எப்படி செய்ய வேண்டும் என்றும் நீர் ஏன் போதிக்கக் கூடாது?” என்று கேட்டார். 124 அதற்கு நான், “அவர்கள் தங்களுடைய மொழியின் முதல் எழுத்துக்களையே அறியாதிருக்கும்போது, நான் எப்படி அவர்களுக்கு இயற்கணிதத்தைக் கற்பிக்க முடியும்?” என்று கேட்டேன். பார்த்தீர்களா? புரிகிறதா? எப்படி ஒரு குழந்தையை நீங்கள் மழலையர் பள்ளியிலிருந்து எடுத்து, இன்றைக்கே அதற்கு ஒரு கல்லூரிப் படிப்பை அளித்து, வர்க்க மூலத்தை அதற்கு கற்றுத்தர முடியும்? அவனுக்கு ஆங்கில மொழியின் முதல் மூன்று எழுத்துக்களான ABC என்பதே என்ன பொருள்படுகிறது என்று அறியாதிருக்கும்போது, நீங்கள் அதை எப்படிச் செய்ய முடியும்? ஆங்கில மொழியின் முதல் மூன்று எழுத்துக்களான ABC என்ன பொருள்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? “எப்பொழுதுமே கிறிஸ்துவை விசுவாசிப்பது” என்பதாகும். அது உண்மை. சபையை விசுவாசிக்காதீர்கள், கோட்பாட்டை விசுவாசிக்காதீர்கள், அவர்களுடைய உபதேசங்களை விசுவாசிக்காதீர்கள். கிறிஸ்துவை விசுவாசியுங்கள்! ஏன்? “அவரை அறிவது, அவரை அறிந்து கொள்வது ஜீவனாயிருக்கிறது.” அது சரிதானே? அவருடைய கோட்பாட்டை அறிவதல்ல, இல்லை…அவர் எந்த கோட்பாடுகளையும் உடையவராயிருக்கவில்லை. அவருடைய வார்த்தையை அறிவதும் கூட இல்லை. அவருடைய வார்த்தையை அறிவது அல்ல; நீங்கள் அவரை அறிந்து கொள்ள வேண்டும், புதியப் பிறப்பில் உங்களுடைய இரட்சகராக அவரை அறிந்து கொள்ள வேண்டும். இயேசு நிக்கொதேமுவினிடத்தில், “பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்றார். அவர்கள் பூமிக்குரிய காரியங்களையே விசுவாசிக்காமலிருக்கும்போது, தரிசனங்களைக் கண்டும், அதைப் போன்ற காரியங்களை அறிந்து, அதைப் போன்ற ஒரு ஒழுங்கு முறையான பள்ளியை அமைப்பதற்கும், ஆவிக்குள்ளாக பிரவேசிக்கும்படியான ஆவிக்குரிய காரியங்களை நீங்கள் எப்படி விசுவாசிக்கப் போகிறீர்கள்? ஆடைகளை சரியாக உடுத்துக்கொள்வதைக் கூட விசுவாசிக்க முடியவில்லையே. அவர்களுடைய புகைப் பிடித்தலை விட்டுவிடுவதற்கும், அவர்களுடைய பொய்யுரைத்தலை விட்டுவிடுவதற்கும், அவர்களுடைய கோபத்தை ஒரு புறம் தள்ளிவைப்பதற்கும், அந்த எல்லா காரியங்களையும், இந்த எல்லாக் காரியங்களைச் செய்யவும், அல்லது இச்சிப்பதை விட்டுவிடவுங் கூட நம்பமுடியவில்லையே. அவர்கள் பெற்றுள்ள இந்த எல்லாக் காரியங்களும் அவர்கள் மேல் இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கும்போது, ஆவிக்குள்ளாக பிரவேசிக்கும்படி உங்களால் எப்படி ஜனங்களுக்குப் போதிக்க முடியும்? ஆம், ஓ, என்னே.

90125 கள்ளத் தீர்க்கத்தரிசிகள் கள்ள வார்த்தைகளையும், கோட்பாடுகளையும், ஸ்தாபனங்களையும், உணர்ச்சிகளையும் உடையவர்களாயிருக்கின்றனர். “ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம், நீங்கள் செய்ய வேண்டிய காரியம் அது மாத்திரம் தானே. நீங்கள் எலியாவினுடைய வஸ்திரத்தை உடுத்திக் கொள்ள விரும்புகிறீர்களா? தேவனுக்கு மகிமை! நீங்கள் செய்ய வேண்டிய ஒரேக் காரியம் உங்களுடைய சிந்தையை வெறுமையாய் வைத்திருப்பதேயாகும், எந்த ஒரு காரியத்தையும் சிந்திக்காமல், ‘ஓ, என்னை நிரப்பும், என்னை நிரப்பும், என்னை நிரப்பும்’” என்கின்றனர். பிசாசு நிச்சயமாகவே அதைச் செய்வான். அப்படியானால் நீங்கள் அதன் பேரில் சார்ந்துள்ளீர்களா? “ஓ ஓ ஓ ஓ ஓ, சகோதரன் பிரான்ஹாம், அவர்களே, அது என் மீது நிரம்பி வழிந்தது. நான் அதை உணர்ந்தேன். ஓ ஓ ஓ ஓ, தேவனுக்கு மகிமை. அல்லேலூயா!” அந்தவிதமாக மேலும் கீழும் குதித்தல். “ஓ, நான் அதைப் பெற்றுக்கொண்டேன்.” நீங்கள் ஜீவிப்பது போன்றே ஜீவிக்கிறீர்களா? 126 “அவர்களுடைய கனிகளினால் நீங்கள் அவர்களை அறிவீர்கள்.” புரிகிறதா? பாருங்கள், உணர்ச்சிவதபடுதல் அல்ல. 127 “ஓ, சகோதரனே, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமானால், பீடத்தண்டை முழங்காற்படியிட்டு, நீங்கள் அந்நிய பாஷையில் பேசும் வரையில் ‘மகிமை, மகிமை, மகிமை, மகிமை, மகிமை’ என்று கூறுங்கள்.” உ—ஊ, பின்னர் திரும்பிப்போய் பொய்யுரைத்து, திருடுகிற எந்தவிதமான ஒரு வாழ்க்கையையும் வாழ்வதா? அவர்கள் உங்களிடத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படுவதைக் குறித்துக் கூறும்போது “அது மதவெறித்தனம், என்னுடைய சபை வித்தியாசமாகப் போதிக்கிறதே!” என்கிறீர்கள். நீங்கள் மறுபடியும் பிறந்து, திருவசனமாகிய தண்ணீரினால் கழுவப்பட்டிருக்கிறீர்கள் என்று கூறுவதா? எங்கோ ஏதோக் காரியம் தவறாயுள்ளது. புரிகிறதா?

91128 நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் அது இங்கு எழுதப்பட்டிருக்கிற விதமாகவே விசுவாசியுங்கள். நமக்குத் தேவையில்லை…நாம்…வேதம், “அது எந்த சுயதோற்றமான பொருளையுடையதாயிராது” என்று கூறியுள்ளது. தேவன் அதை வியாக்கியானித்தார், அது இந்தவிதமாகவே உள்ளது. அவர்…வார்த்தை, அவருடைய வார்த்தை இங்குள்ளது. வேதம் இரண்டாம் நிரூபத்தில் கூறவில்லையா…நான் அது பேதுரு இரண்டாம் நிரூபத்தில், “வேதம் எந்த சுயதோற்றமான பொருளையுமுடையதாயிருக்கவில்லை” என்று உள்ளது என்று நினைக்கிறேன். நிச்சயமாக. இல்லை, எந்த சுயதோற்றமான பொருளையுமுடையதாயிருக்கவில்லை. அது எழுதப்பட்ட விதமாகவே அதை சரியாக அந்தவிதமாகவே பொருள்படுத்துகிறது, எனவே அது இங்கே எழுதப்பட்டுள்ள விதமாகவே அதை அப்படியே விசுவாசியுங்கள், அப்பொழுது அது அதே பலன்களைக் கொண்டு வரும்.

92129 இப்பொழுது, கள்ள போதகர்கள் கள்ள பிறப்புக்களைக் கொண்டு வருவர். உண்மையான தீர்க்கதரிசிகள் வார்த்தையை வார்த்தையின் பிறப்பை, கிறிஸ்துவை கொண்டு வருவார்கள். கள்ளத் தீர்க்கதரிசிகள் கள்ளப் பிறப்பை, சபைகளின் பிறப்பை, கோட்பாடுகளின் பிறப்பை, ஸ்தாபனங்களின் பிறப்பைக் கொண்டுவருவார். பெந்தேகோஸ்தே சகோதரனே, இங்கு தான் உங்கள் காரியமே உள்ளது, கள்ள உணர்வு…இல்லை உணர்ச்சிவசப்படுவதல்கள், ஒரு மனிதன் அந்நிய பாஷகளைப் பேசுகின்றபடியால், அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டான் என்று அவனிடம் கூறுகிறீர்கள். நான் பிசாசுகள் அந்நிய பாஷைகளில் பேசுவதையும், பென்சில்கள் கீழே வைக்கப்பட்டு அந்நிய பாஷகளில் எழுதுகிறதையும் கண்டிருக்கிறேன். அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. பாருங்கள், அதற்கு ஒரு ஜீவன் இருக்க வேண்டும், அவர்களுடைய கனியினால் நீங்கள் அவர்களை அறிவீர்கள். “சகோதரன் பிரான்ஹாம் நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதில் விசுவாசங்கொண்டிருக்கிறீர்களா?” ஆம், ஐயா. “நீங்கள் சத்தமிடுதலில் விசுவாசங்கொண்டிருக்கிறீர்களா?” ஆம் ஐயா. ஒரு கிறிஸ்தவனாயிருப்பதற்கு, நான் அதை விசுவாசிக்கிறேன். நான் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன். ஆனால் அதை ஆதரிக்கும்படியான ஜீவியம் அங்கில்லையென்றால்!

93130 “தேவனுக்கு மகிமை. அல்லேலூயா!” என்று திணித்துக் கூறப்பட்டுள்ள பெருமையானவற்றிலிருந்து வெளியேறுங்கள். அதன்பின்னர் அது கிறிஸ்துவா என்று எனக்குச் சொல்லுங்கள்? கிறிஸ்து தாழ்மையாய், சாந்தமாய், கனிவாயிருந்தார். ஒரு பட்டிணத்திற்குள் செல்லும்போது, என்னே, நீங்கள் உயரிய நாகரீக பாணியில் நயமாய் செல்ல வேண்டும், உங்களுக்குத் தெரியும், ஒவ்வொரு காரியமும் சரியாயிருக்க வேண்டும், உங்களுடைய சூட் துணியில் ஒரு சுருக்கமும் இருக்கக் கூடாது, நீங்கள் மிகச் சிறந்ததை பெற்றிருக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் வரக்கூடமாட்டீர்கள், அதிக பணம் அளிக்க உத்தரவாதமளித்திருக்க வேண்டும்; இல்லையென்றால் நீங்கள் ஒரு கூட்டமும் நடத்த மாட்டீர்கள். ஓ, ஓ, ஓ, ஓ, ஓ என்னே! எல்லா ஸ்தாபனங்களும், அவர்கள் உங்களை முதுகில் தட்டிக் கொடுக்க வேண்டும். ஆனால் அவரையோ அந்த ஸ்தாபனங்களில் ஒன்று கூட தட்டிக்கொடுக்கவில்லை, ஏனென்றால் அவர் வார்த்தையாயிருந்தார். அது உண்மை.

94131 கள்ளத்தனமானவர்களோ ஒரு தேவ பக்தியின் வேஷத்தை தரிக்க போதுமான உண்மையை கைக்கொள்கின்றனர்.கவனியுங்கள், இப்பொழுது நான் இங்கே ஒரு காரியத்தைக் கூறிக்கொண்டிருக்கிறேன், நீங்கள் இதை கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்தவிதமான தவறான கருத்துக்கள், ஒரு தவறான கருத்து என்னவாயுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா, அது ஒரு தவறான பிறப்பிற்கு கோடிக்கணக்கானவர்களை வழி நடத்துகிறதாயுள்ளது. கள்ள போதகர்கள் ஜனங்களை ஒரு உணர்ச்சிவதப்படுதலில் விசுவாசங்கொள்ளும்படி வழி நடத்துகின்றனர், “நீங்கள் முழுவதும் ஆடி குலுங்கிவிட்டபடியால் நீங்கள் அதை பெற்றுவிட்டீர்கள். ஓ, ஏனென்றால் நீங்கள் உங்கள் மீது உண்மையாகவே ஒரு விநோதமான உணர்வு உண்டானதை உணர்ந்தீர்கள், நீங்கள்—நீங்கள் உங்களுக்கு முன்பாக வெளிச்சங்களைக் கண்டீர்கள், அப்போது குருடாகி தடுமாறினீர்கள், அதுவே உங்கள் மீது விழுந்த எலியாவினுடைய சால்வை. அது உண்மை. நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள். ஓ, நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒரு வெளிப்படுத்தப்பட்ட தேவ குமாரனாயிருக்கிறீர்கள்.” நீங்கள் உங்களைத்தானே எங்கே கண்டறிகிறீர்கள்? தோற்கடிக்கப்பட்டவர்களாகவே. அது உண்மை. “தேவனுக்கு மகிமை, நான் ஒரு இரவு சென்றேன், நான் ஒரு சொப்பனம் கண்டேன்!” ஓ, ஆம், உ—ஊ. புரிகிறதா? “ஓ, நான் இதை, அதைக் கண்டேன்.” ஆம், உ—ஊ. “நீங்கள், நீங்கள் சொப்பனங்களை விசுவாசிக்கிறதில்லையா?” ஆம் ஐயா, நான் நிச்சயமாக விசுவாசிக்கிறேன். ஆனால் அந்த சொப்பனம் தேவனுடைய வார்த்தையை ஆதரிக்கவில்லையென்றால், அப்பொழுது அது தவறாயுள்ளது. இதுவே இங்கு சத்தியமாயுள்ளது, இதிலே தரித்திருங்கள். ஆம், ஐயா. இலட்சக்கணக்கானோரை தவறான பிறப்பிற்கு வழி நடத்துதல், அதை சற்று சிந்தித்துப் பாருங்கள்!

95132 நான் என்னோடு கொண்டுவரப் போவதாயிருந்த ஒரு செய்தித்தாள் துண்டினை வைத்துள்ளேன். அதில் எல்லா கிரேக்க வைதீக உலக ஆலோசனை சபை சங்கப் பிதாவும் மற்றும் வைதீக சபைகளும் 22-ம் போப் ஜான் அவர்களோடு பேசியிருப்பது உள்ளது. அதில் அவர், “நாங்கள் எங்கள் தலைமுறையில் இதைக் காணாதிருக்கலாம், ஆனால் பிராட்டெஸ்டெண்ட், மற்றும் கத்தோலிக்கரும் மகத்தான சகோதரத்துவத்தில் வெளிப்படத்தோன்ற ஒன்று சேர்ந்து கொண்டிருக்கின்றனர்” என்று கூறியுள்ளார். 133 நான், “தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்றேன். யாரோ ஒருவர் அதை ஒரு செய்தித்தாளிலிருந்து துண்டித்தெடுத்து, இந்த விதமாக அதில் எழுதி அனுப்பினார். அது சகோதரன் நார்மன் அல்லது யாரோ ஒருவர் என்று நான் நினைக்கிறேன், அதில் அவர், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, அது நாம் நினைப்பதைக் காட்டிலும் தாமதமாயுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். இன்றைக்கு ஊழியரின் சண்டையைப் பாருங்கள், ஓ, அநேக பல வித்தியாசமான உத்தியோகங்கள், ஜனாதிபதி, இந்த தேசம் முழுவதுமே கத்தோலிக்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. கவனியுங்கள்!

96134 நீங்களோ, “பாருங்கள், அவர்கள் கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள்” என்று கூறலாம். கிறிஸ்தவனாயிருப்பதற்கு கிறிஸ்துவைப்போல் இருக்க வேண்டும், அவருடைய ஆவியை உடையவர்களாயிருக்க வேண்டும். அது சரிதானே? இதோ இது ஒரு நாகரீமற்ற கரடுமுரடான, கரடுமுரடான ஒரு காரியமாயிருந்தாலும் நான் இதைக் கூற விரும்புகிறேன். நீங்கள் ஒரு பன்றியை ஒரு செம்மறியாடு என்று அழைத்துவிட்டால், அது அந்தப் பன்றியை ஒரு செம்மறி ஆடாக்கிடுமா? ஏன்? நீங்கள், “பன்றிக் குட்டியே, நீ ஒரு பன்றிக் குட்டியாயிருக்கிறபடியால் நான் களைப்புற்றுவிட்டேன். எனக்கு ஒரு ஆட்டுக் குட்டித் தேவை, எனவே நான் உன்னை இங்கிருந்து கொன்டு சென்று, நான் உன்னை முழுவதுமாக தேய்த்துக் கழுவப் போகிறேன், நான் உன்னுடைய பற்களை கழுவப் போகிறேன், நான் உன்னுடைய முடிகளை வாரி சீவப் போகிறேன், நான்—நான் உன்னை ஒரு ஆட்டுக்குட்டியாக்கப் போகிறேன். நான் உன்னுடைய கழுத்தில் ஒரு சிறு இளஞ்சிவப்பு நிற கழுத்துப்பட்டையை கட்டப்போகிறேன். நீ ஒரு பன்றிக் குட்டிக்குப்பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியாக இருக்கப் போகிறாய்” என்று கூறினதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் திரும்ப வந்து, “ஆட்டுக் குட்டியே, ஆட்டுக் குட்டியே, ஆட்டுக் குட்டியே” என்று கூறினாலும், அதுவோ அப்பொழுதும் “ஓய்ங், ஓய்ங்” என்று கூறிவிட்டே போய்விடும். அதை ஒரு பன்றிப்பட்டியலில் அவிழ்த்துவிட்டால், அது தன்னால் தின்ன முடிந்த எல்லா அசுத்தங்களையும் உண்ணும், உண்மையே! அது அவனைத் தெளிப்பதல்ல, அது அவனை தண்ணீரில் முழுக்குவதல்ல; அது ஒரு மரணமாயும், ஒரு பிறப்புமாயும் உள்ளது! ஆம் ஐயா. “நான் உன்னை உயர்ரக மணப் புல் வகையைத் தவிர மற்ற எதினாலும் போஷிக்கமாட்டேன், நான் உனக்கு ஆட்டின் ஆகாரத்தையே போஷிக்கப் போகிறேன்” என்று கூறலாம். அதனை உயர் ரக மணப் புல் வகையினால் போஷித்தாலும், அது இன்னமும் ஒரு பன்றியாகவே உள்ளது. அவ்வளவுதான். அது சரிதானே? நிச்சயமாக அதுதான் உண்மை. காரணம், நிச்சயமாகவே, அது ஒரு பன்றியாயுள்ளது, ஏனென்றால் அதனுடைய சுபாவம் ஒரு பன்றியாயுள்ளது.

97135 நீங்கள் உலகத்திலும், உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூர்ந்தால், நீங்கள் இன்னமும் ஒரு பன்றியாகவே இருக்கிறீர்கள். அது உண்மையே. உங்களுடைய ஆத்துமாவை மறுரூபப்படுத்த தேவனுடைய வல்லமைத் தேவைப்படுகிறது. ஒரு பன்றியாய் மரித்து, உங்களுடைய பன்றிப் பழக்க வழக்கங்களை பீடத்தின் மேல் வைத்துவிட்டு, அங்கே நீங்கள் தரித்திருங்கள், தேவனுடைய பலியானது… இல்லை நியாயத்தீர்ப்பின் அக்கினி இறங்கி வந்து ஒரு பன்றியான உங்களை பட்சிக்கட்டும், பின்னர் நீங்கள் ஒரு ஆட்டுக்குட்டியாக மறுபிறப்படையுங்கள். அதன்பின்னர் நீங்கள் எந்த அசுத்தத்தையும் புசிக்கமாட்டீர்க்கள், உங்களால் புசிக்க முடியாது, உங்களுடைய சுவையுணவை அது செரிமானம் செய்யாது. நீங்கள் சரியாயில்லை. அது நிச்சயமாகவே அவன் கூறுவதனால் அதை ஒரு—ஒரு பன்றியாக்காது…இல்லை அவன் ஒரு ஆட்டுக்குட்டி என்று கூறுவதனால் அவனை ஒரு ஆட்டுக்குட்டியாக்கிவிடாது.

98136 எனவே ஒரு நபர் சில கோட்பாடுகளினால் அல்லது சில உணர்ச்சிவசப்படுதல்களினால் ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொண்டாலும் அப்படித்தான் இருக்கும். நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், தேவனுக்கு மகிமை, நான் இந்த இரவு முழுவதும் ஆவியில் நடனமாடினேன். நான் அந்நிய பாஷைகளில் பேசினேன், ஓ, என்னே, சகோதரன் பிரான்ஹாம்!” என்று கூறலாம். நான் இப்பொழுது பெந்தேகோஸ்தேக்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். “நான்—நான்—நான் ஆவியில் நடனமாடினேன். ஓ, நான் உணர்ச்சிவசப்படுதல்களையும், அதைப் போன்ற ஒவ்வொரு காரியத்தையும் உடையவனாயிருந்தேன். ஆனால் நான் இப்பொழுது உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் அங்கே அந்த இயேசுவின் நாமம் என்ற காரியத்தைக் குறித்து என்னிடத்தில் பேச வர வேண்டாம்.” தொடர்ந்து ஒரு பன்றிக் குட்டியாகவே இருங்கள். நீங்கள் இன்னமும் ஒரு பன்றியே, அவ்வளவுதான். 137 “என் ஆடுகள் என் வார்த்தையைக் கேட்குமே!” நானோ, “ஆனால் சகோதரனே, பாருங்கள், வேதத்தில்,” ஒரு இடத்திலாவது அவர்கள் எப்போதாவது ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்’ ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்களா? என்பதைக் எனக்காக கண்டறியுங்கள்” என்றே கூறுகிறேன். 138 “அது என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை, அல்லேலூயா, எனக்கு அந்த பண்டைய இயேசு மாத்திரமே என்ற விஷயம் எதுவுமே தேவையில்லை.” இயேசு மாத்திரமே என்பதைக் குறித்த எந்தக் காரியத்தையும் யார் கூறினது? நான் வேதாகமத்தைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். இயேசு மாத்திரமே என்பது ஒரு கோட்பாடுகளின் குழு மற்றும் ஸ்தாபனங்களின் ஒரு குழுவாயுள்ளது. ஒருவர் மற்றொருவரை மற்ற ஏதோ ஒன்று என்று அழைக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் இருவரும் அதற்குள் இருக்கிறார்கள். 139 ஆனால் நான் பூரணமான, நூறு சதவிகிதம் போலியில்லாத அசலான, தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்து, தங்களுடைய ஜீவியத்தில் பரலோகப் பனித்துளிகளைப் பெற்றுள்ள கிறிஸ்தவர்களைக் குறித்தேப் பேசிக் கொண்டிருக்கிறேன். அதைக் குறித்துதான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டாயிருந்து அதை பெற்றிருந்தால், ஆமென்! நீங்கள் செய்ய வேண்டிய ஒரேக் காரியம் வார்த்தையண்டை சுட்டிக்காட்டப்படுவதேயாகும், வாத்து தண்ணீரண்டை செல்வதுபோல நீங்கள் அதைப் பின் தொடருங்கள். புரிகிறதா? சரியா. அதுவே உண்மை.

99140 ஜனங்களுக்கோ இன்றைக்கு குறுக்கு வழிகள் தேவைப்படுகிறது. அவர்களுக்குத் தேவையில்லை…அவர்களோ—அவர்கள், “தேவனுக்கு மகிமை” என்று கூறி ஒரு நிமிடத்தில் நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது என்னவாயுள்ளது? அவர்கள் செய்கிற அது என்னவாயுள்ளது.? இன்றிரவு அவர்கள் ஒரு—அவர்கள்: அப்பால் உள்ள …இந்த சில நபர்களைப் போன்றே அவர்கள் கொண்டுள்ள சில குறிப்பிட்ட ஜனங்களை என்னால் பெயரிட்டுக் கூற முடியும், ஆனாலும் நான் அதைச் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால் இது ஒலிநாடாவில் பதிவாகிறது, ஆனால் அவர்கள் ஒரு இரவு நேர கேளிக்கை விடுதியில் ஒரு வீணைபோன்ற நரம்பிசைக் கருவியை வைத்து, அதை இசைத்துக்கொண்டு, அடுத்த நாள் காலையில் அவர்கள் எங்காவது ஒரு சபையில் நின்று கொண்டு அதே சிறு வீணை போன்ற நரம்பிசைக் கருவியை வைத்துக்கொண்டு இசைக்கின்றனர். அசுத்தமாயிற்றே! வேதம் ஏசாயா 28-ம் அதிகாரத்தில், “போஜனபீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது. நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்பது போலாயிற்று” என்று கூறப்பட்டுள்ளது. ஏன்? அவர்கள் இன்னமும் நாய்களாகவும், பன்றிகளாகவும் இருக்கிறார்களே! அதுவே அவர்களை சேற்றில் புரளச் செய்யவும், கக்கினதைத் தின்னவும் திரும்பும்படிக்குச் செய்கிறது. நீங்கள் இன்னமும்…அவர்கள் மறுபடியும் பிறக்கவேயில்லை. அவர்கள் மறுபடியும் பிறந்திருந்தால், அவர்கள் புதிய சிருஷ்டிகளாயிருப்பார்கள்.

100141 என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒரு காகத்தை வைத்திருந்தால், அதை மாற்றமுடியாது…நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும், உங்களால் அந்த காகத்திற்கு ஒரு புறாவைப் போல பொன் பழுப்பு நிற வண்ணந்தீட்டினாலும், ஒரு புறாவைப் போல சாம்பல் நிற வண்ணந்தீட்டினாலும், அதற்கு முழுவதும் வெள்ளை நிற வண்ணந்தீட்டினாலும், அது அப்பொழுதும் உட்புறத்தில் ஒரு காகமாகவே உள்ளது. புரிகிறதா? அது இன்னமும் துர்நாற்றம் கொண்டதாயும், பருந்தைப் போல மாறாததாய், பூலோகத் தோட்டியாய், பூமிக்குரிய மரித்த காரியங்களையே தின்னுகிறதாயுள்ளது. அது உண்மையே. ஆனால் உங்களுக்குத் தெரியுமா? ஒரு புறா குளிக்க வேண்டிய அவசியம் கூட கிடையாது. ஓ, அல்லேலூயா! ஒரு புறாவினுடைய சரீரம், ஏனென்றால் அது ஒரு புறவாய் உள்ளது. அது தன்னுடைய சிறகுகளினூடாக சுரக்கிற எண்ணெய்யை உடையதாயிருக்கிறது, அது அதனை எல்லா நேரத்திலும் சுத்தமாக வைத்துக்கொள்கிறது, ஏனென்றால் அது அதனுடைய உட்புறத்திலிருந்து வருகிறது. ஓ, ஏன்? பருந்தும், “எனக்கும் கூட! நான் கொஞ்சம் புனிதத் தண்ணீரை மேலே ஊற்றட்டும், சகோதரனே, அது அதை சரி செய்துவிட்டது” என்று கூறலாம். இல்லை, அது சரி செய்யவில்லை. ஏனென்றால் அது உட்புறத்திலிருந்து வருகிறது, வெளிப்புறத்திலிருந்து உள்ளே அல்ல. அது ஒரு பிறப்பாய் உள்ளது. “தேவனுக்கு ஸ்தோத்திரம், நீங்கள் போகிற விதமாகவே நானும் சபைக்குச் செல்கிறேன். அல்லேலூயா, என்னுடைய சபை உங்களுடைய சபையைப் போன்றே நல்லதாயிருக்கிறது. அல்லேலூயா, நாங்கள்…” எனலாம். சரி, நீங்கள் பருந்தாயிருக்கிறீர்கள். பாருங்கள், அது உண்மை. புரிகிறதா? ஆனால் ஒரு புறா உட்புறத்திலிருந்து வரும் எண்ணெய்யால் எண்ணெயிடப்படுகிறது. ஒரு புறாவிற்குள் ஒரு—ஒரு குறிப்பிட்ட சுரப்பி உள்ளது, அதைப் போன்று மற்றெந்த பறவைகளுக்கும் இல்லை, புறாவிற்கு மட்டுமே அவ்வாறு உள்ளது. அது தன்னை எண்ணையிடச் செய்வது…வெளிப்புறத்திலிருந்தல்ல, அது தன்னை எல்லா நேரத்திலுமே சுத்தமாக வைத்துக் கொள்கிறது. அது தன்னை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதில்லை, அதற்குள்ளாக இருக்கிற ஏதோ ஒன்று அதை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. ஓ, சகோதரி வே அவர்களே. அல்லேலூயா! அதற்குள்ளாக இருக்கிற ஏதோ ஒன்று அதை சுத்தமாக வைத்துக் கொள்கிறது.

101142 நீயோ, “எனக்குத் தெரியும், நான் கடந்த வாரம் சபையில் சேர்ந்தேன். நான்—நான்—நான் நிச்சயமாக உன்னோடு மது அருந்த விரும்புவேன், ஆனால், ஊ! உம்ம், அந்த சுருட்டு மிக நல்ல நறுமணமாயுள்ளதே! சகோதரியே, ஓ, நான் ஒரு பண்டைய மாதிரியாயுள்ளேன் என்பதை நான் அறிவேன், நான் இப்பொழுது என்னுடைய தலை முடியை வளரவிட வேண்டும். அது மிக மோசமாயிருக்கவில்லையா? நான் வழக்கமாக முன்பு அணியும் குட்டையான ஆடைகளோ அழகானவை என்பதை அறிவாய், போகிற ஒவ்வொருவரும், ‘வ்வூயு—வ்வூயு’ என்பர். நான் அதை இப்பொழுது கழற்றியாக வேண்டும். நான் கடந்த வாரம் சபையில் சேர்ந்தேன் என்பதை நீங்கள் அறிவாய்” என்று கூறுகிறாய். நீ பரிதபிக்கப்படத்தக்க நிர்பாக்கியமுள்ளவள்! உலகத்திலுள்ள எல்லா புனிதத் தண்ணீருமே உங்களை சுத்தப்படுத்த முடியாது. 143 ஆனால், சகோதரனே, நீங்கள் உங்களுடைய உட்புறத்தில் ஏதோ ஒன்றைப் பெற்றுக் கொள்ளும்போது, அதுவே எல்லா நேரத்திலும் அதைக் கழுவுகிறது. நீங்கள் அப்படியே நிற்கிறீர்கள், அதுவே கழுவுகிறது.

102144 நீங்கள் ஒரு ஆட்டினிடம், “நீ உற்பத்தி செய்ய வேண்டும்” என்று கூற வேண்டியதில்லை. அது தான் இன்றைக்கு பெந்தேகோஸ்தே ஜனங்களிடையே உள்ள காரியமாயுள்ளது. அது தான் முழு கிறிஸ்தவ உலகத்தோடும் உள்ள காரியமாயுள்ளது, அது ஏதோ ஒரு காரியத்தை உற்பத்தி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஒரு செம்மறியாடு உரோமத்தை உற்பத்தி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறதில்லை; அது உரோமத்தை கொடுக்கிறது. நீங்கள் ஆவியின் கனிகளை கொடுக்கிறீர்கள். நீங்களோ, “தேவனுக்கு மகிமை, நான் முகபாவனை மாற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும், நான் இதைச் செய்ய வேண்டும், நான் உணர்ச்சிவசப்படுதலை உடையவனாயிருக்க வேண்டும், நான் ஆவியில் நடனமாட வேண்டும், நான் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூற வேண்டியதில்லை. இல்லை, இல்லை, உ—ஊ. மறுபடியும் பிறக்க வேண்டும், அப்பொழுது அது உண்மையாகவே அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறது. நீங்கள், “நான் முழு இரவும் ஆய்ந்து படிக்கலாமா? நான் இதைச் செய்யலாமா? நான் அதைச் செய்யலாமா? நான் இதில் சேரலாமா? நான் இந்த கோட்பாட்டைக் கூறலாமா? நான் இந்த நோன்புகளைச் செய்யலாமா?” என்று கூற வேண்டியதில்லை. இல்லை, இல்லை. அப்படியே மரியுங்கள், அவ்வளவு தான். புரிகிறதா? மறுபடியும் பிறக்க வேண்டும், அப்பொழுது அது உட்புறத்திலிருந்து வந்து வெளிப்புறத்தைக் கவனித்துக்கொள்கிறது. புரிகிறதா? கொஞ்சம் தண்ணீர் தெளித்து, அவைகளைக் கழுவி, ஒரு பன்றியிலிருந்து ஒரு ஆட்டுக்குட்டியாக மாற்றுவதை உங்களால் செய்ய முடியாது. ஆனால் அவன் உட்புறத்தில் ஒரு ஆட்டுக்குட்டியாயிருந்தால், அப்பொழுது அவன் ஒரு போதும் ஒரு பன்றியாக இருக்க மாட்டான். புரிகிறதா? அது மூர்க்கத்தனமான கருத்துக்கள், ஆனால் நான் கல்வியறிவற்றவன், எனவே நான் அதை அப்படித்தான் கூறியாக வேண்டும்.

103145 நீங்கள் அதை அறிவீர்கள், அன்றொரு நாள் நான் யோவான் ஸ்நானனுடைய வாழ்க்கையை படித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவன் என்னக் கூறினான், அவன் அவர்களை என்னவென்று அழைத்தானென்றால், “விரியன் பாம்புக் குட்டிகளே” என்றான். ஏன்? அவன் வனாந்திரத்தில் வளக்கப்பட்டான். பாருங்கள், அவர்கள் யாராயிருந்தார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். உங்களுடைய காலை உதைத்தால், அவைகள் மறைந்துகொள்ளும். “நீங்கள் விரியன் பாம்பின் குட்டிகள்.” “கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது” என்றும் கூட கூறினான். மரங்கள், விரியன்பாம்புகள், கோடாரிகள், அவன் தெரிந்திருந்ததைக் கொண்டே பேசினான். அந்த விதமாகவே நீங்கள் தேவனைக் கற்றுக்கொள்கிறீர்கள், நீங்கள் எதை அறிந்துள்ளீர்களோ அதன் மூலமே. நீங்கள் ஒரு பன்றியை, ஒரு ஆட்டுக்குட்டியை காண்கிறீர்கள், அதில் ஒன்றுமே ஒரே மாதிரியாயிருப்பதில்லை. உங்களால் அதை…மாற்ற முடியாது…நீங்கள் அந்த குட்டிப் பன்றியை கழுவி, நீங்கள் விரும்புகிற ஒவ்வொரு காரியத்தையும் செய்யலாம், அது இன்னமும் ஒரு பன்றியாக உள்ளது. அது ஒரு ஆட்டுக்குட்டியாக இருக்க வேண்டுமானால், அது மறுபடியும் பிறக்க வேண்டும்.

104146 குறுக்கு வழிகள்! இன்றிரவு, அவர்கள் இங்கே இன்றைக்கு இருக்கிறார்கள், அவர்கள் தொடர்ந்து அவ்வாறே போய்க் கொண்டிருக்கிறார்கள், ஓ, என்னே, நாளை அவர்கள் பிரசங்கிக்க விரும்புகிறார்கள். பெந்தேகோஸ்தே ஜனங்கள் கூட அவர்களை அதைச் செய்ய விடுகிறார்கள். ஆம். அவர்கள் பரலோகத்திற்கு செல்ல ஒரு குறுக்கு வழியை விரும்புகின்றனர், அதாவது, “அல்லேலூயா, நான் செய்ய வேண்டியதெல்லாம் இங்கே முழங்காற்படியிட்டு, ஒன்றுமே சிந்திக்காமலேயிருந்து, ‘அல்லேலூயா, அல்லேலூயா, நான் எலியாவின் அங்கியைப் பெற்றுக் கொண்டேன். நான் நாளை வெளியே போய் பிசாசுகளை துரத்தப் போகிறேன்—அல்லேலூயா, அல்லேலூயா, நான் அதைப் பெற்றுவிட்டேனே! தேவனுக்கு ஸ்தோத்திரம்! இதோ நான் போகிறேன்!” என்று கூறுகின்றனர். அவர்கள் பரலோகத்திற்கு செல்ல குறுக்கு வழியை விரும்புகிறார்கள், அவர்களால் முடிந்தளவு அவ்வளவு உலகத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள். நீங்கள் அதைக் குறித்த எதையும் எடுத்துக் கொள்ள முடியாது. குறுக்கு வழிகளேக் கிடையாது. நீங்கள் கல்வாரியின் வழியில் வருகிறீர்கள். நீங்கள் வெண்கல பலிபீடத்தின் வழியில் வருகிறீர்கள். நீங்கள் வெண்கல சர்பத்தின் வழியில் வருகிறீர்கள். நீங்கள் மரிக்கிறீர்களே! நீங்கள் உண்மையாகவே மரிக்கிறீர்கள். ஓ தேவனே, நான் ஏன் அதைச் சரியாகக் கூற முடியாதா? நீங்கள் மரிக்கிறீர்கள்! வார்த்தையின் பிரகாரம் உங்களுக்கே மரிக்கிறீர்கள். நீங்கள் உலகத்தின் காரியங்களுக்கு மரிக்கிறீர்கள், புதியதாக பிறக்கின்றீர்கள். ஆமென். உலகமே இல்லை, அதாவது உலகத்தின் காரியங்கள் மரித்துவிட்டிருக்கின்றன. குறுக்கு வழிகளே இல்லை. புரிகிறதா? அவர்கள் துரிதமாக வர விரும்புகிறார்கள், அவர்கள் வளர விரும்புகிறதில்லை. நாம் கர்த்தருக்குள் வளருகிறோம். அதற்கு வளர்ச்சியும், அனுபவமும் தேவைப்படுகிறது.

105147 இப்பொழுது மேற்குக் கரையில் உள்ள ஜனங்களிடத்தில், “ஓ, நாங்கள் அழிவில்லாத ஞானஸ்நானத்தை பெற்றுவிட்டோம். நாங்கள் உங்களுக்கு தண்ணீரில் ஞானஸ்நானங் கொடுக்கிறோம், அப்பொழுது நீங்கள் திரும்பவும் ஒரு வாலிப மனிதனாக, ஒரு வாலிப ஸ்திரீயாக மாறிவிடுகிறீர்கள். ஆம் ஐயா. நீங்கள் அவ்வாறே இருந்து கொண்டிருப்பீர்கள்” என்று கூறப்படுகிறது. அவர்கள் எலியாவினுடைய வஸ்திரங்களை வைத்துள்ளார்களாம், அவர்கள் வெளிப்படுத்தப்பட்ட தேவ புத்திரர்களாகிவிட்டார்களாம். “சகோதரனே, தேவன் இப்பொழுதே வெளிப்படுத்தப்பட்ட குமாரர்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆம் ஐயா, வெளிப்படுத்துதல், இதைக் குறித்த எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல்லுங்கள்.” அவர்களோ, “இன்றிரவு நீங்கள் ஒரு பாவியாயிருக்கிறீர்கள், நாளை நீங்கள் வெளிப்படுத்தப்பட்ட தேவ புத்திரராயிருக்கிறீர்கள்” என்கின்றனர். அர்த்தமற்றது! அதை நீங்கள் வார்த்தையில் எங்கேப் பெற்றுக்கொண்டீர்கள்? குழந்தைகள் புருஷர்களாக பிறக்கிறதில்லை, அவர்கள் குழந்தைகளாகப் பிறந்து, புருஷர்களாக வளருகிறார்கள்.

106148 இங்கே கவனியுங்கள், இன்னும் ஒரு நிமிடத்தில் நான் அதை அப்படியே மேற்கோள் காட்டி, எபேசியரில் உங்களுக்கு ஒரு காரியத்தை வாசிக்கட்டும், 11-வது வசனம், 12-வது, கிட்டத்தட்ட 15-வது, அதுதான் என்று நான் நினைக்கிறேன், இங்கு எங்கோ ஒரு இடத்தில் உள்ளது. நாம் 12-வது வசனத்திலிருந்து வாசிக்கத் துவங்குவோமாக: மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய, (கவனியுங்கள், என்ன போதகம்?) பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு ,…(காத்திருந்து, என்ன?) …அன்புடன் (அவரே சத்தியமாயிருக்கிறார்) சத்தியத்தை கைக்கொண்டு,… கவனியுங்கள்! நீங்கள் கவனமாய் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] என்ன? …கிறிஸ்துவுக்குள் வளருகிறவர்களாயிருக்கும்படியாக… என்ன; நாளையா? இல்லை. “கிறிஸ்துவுக்குள் வளருகிறவர்களாயிருக்கும்படியாக” தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படி செய்தார், அவருக்குள் வளருகிறவர்களாயிருக்கிறோம்! ஓ, அங்கே…

107149 நான் பிரசங்கித்த முதல் பிரசங்கம் எனக்கு நினைவிற்கு வருகிறது. நான் அங்கே எழும்பி நின்று, நான்—நான் உண்மையாகவே நன்கு பிரசங்கித்ததாக எண்ணிக்கொண்டேன், எல்லா வயோதிக பெண்மணிகளும் சுற்றி அமர்ந்திருந்தனர், அவர்கள் சற்று அழுதனர், உங்களுக்குத் தெரியுமா? அவர்கள், “ஓ, என்னே ஒரு அற்புதமான பையன்” என்றனர். 150 என்னுடைய பழைய மேய்ப்பர் வேதபண்டிதர் டேவிஸ் அவர்கள் ஒரு வழக்கறிஞராய் இருந்தவர். நான் அவரண்டை சென்றபோது, அவரோ, “நான் உன்னை வீட்டிலே பார்க்க விரும்புகிறேன்” என்றார். 151 அப்பொழுது நான், “சரி” என்றேன். உங்களுக்குத் தெரியுமா? அடுத்த நாள் நான் மிகப் பெருமையோடு நடந்து உள்ளே சென்றேன். பின்னர் நான், “வேத பண்டிதர் டேவிஸ் அவர்களே, நான் எப்படிப் பிரசங்கித்தேன்?” என்று கேட்டேன். அதற்கு அவரோ, “நான் கேட்டுள்ள பிரசங்கத்திலே மிக மோசமானதாய் இருந்தது” என்றார். நான் அதற்கு, “என்ன?” என்றேன். அவரோ, “நான் கேட்டுள்ள பிரசங்கத்திலேயே மிகமோசமானதாய் உள்ளதே” என்றார். “ஓ,” அப்பொழுது நான், “சகோதரன் டேவிஸ், ஒவ்வொருவரும் அழுது கொண்டிருந்தார்களே” என்றேன். 152 அதற்கு அவர், “ஆம், அவர்கள் சவ அடக்கங்களில் அழுகிறார்கள், பிரசவங்களிலும், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியங்களிலும் அழுகிறார்கள்,” என்றார். மேலும் அவர், “பில்லி அது என்னவென்றால், நீ ஒரு சிறு தேவனுடைய வார்த்தையைக் கூட மேற்கோள்காட்டவில்லையே. ஏதோ ஒரு தாய் மரித்துவிட்ட அல்லது இதைப் போன்ற ஒரு காரியத்தைக் குறித்து நீ பேசி ஒவ்வொருவரையும் அழச் செய்துவிட்டாய்,” என்றார். தொடர்ந்து “பில்லி! நீ இந்த பூமிக்குரிய காரியங்கள் மற்றும் உணர்ச்சிவசப்படுதல்களின் பேரில் மறுபடியும் பிறந்திருக்கவில்லை, நீ வார்தையினால் பிறந்திருக்கிறாயே!” என்றார். 153 ஓ, அவர் என்னிலிருந்த பெருமையை துண்டித்துவிட்டார். அவர் அதை செய்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். புரிகிறதா? மேலும் கீழுமாய் குதிப்பதல்ல, அதுவல்ல இது. வார்த்தையே உயிர்பெறச் செய்கிறது. வார்த்தையே உயிர்ப்பித்திருக்கிறது. அனுபவங்கள் அல்ல; வார்த்தையே!

108154 அவர், “பில்லி, நான் வழக்காட முயற்சித்த முதல் வழக்கை நினைவுகூருகிறேன்,” என்றார். மேலும் அவர், “நான் மேஜையின் விளிம்பைத் தட்டி, இந்த ஏழைப் பெண்மணியைப் பாருங்கள்” என்றேன். ஓ, அவர், “அவள் எப்படிக் காணப்படுகிறாள் என்றும், அவளுடைய கணவன் அவளை எப்படி கொடுமைப்படுத்தியுள்ளார் என்றும் பாருங்கள்” என்றாராம். அவர் தொடர்ந்து “நான் சற்று அழுதுவிட்டு, என்னுடைய கைக்குட்டையை எடுத்துக்கொண்டு, நான் மற்ற வழக்கறிஞர்கள் போல நடித்தேன்” என்றும், “நான் அதே உணர்ச்சிவசப்படுதலினூடாக சென்றுவிட்டதாகவே எண்ணிக்கொண்டேன்” என்றார். மேலும், “கனம் நீதிபதி அவர்களே, நீங்கள் ஏன் அவளுக்கு ஒரு விவாகரத்து வழங்கக் கூடாது? அங்கே பாருங்களே! அவளுடைய கணவர் அவளை முழு முதுகிலும் அடித்திருப்பதை அவள் கூறுகிறாளே” என்றார். அவளுடைய அடிப்பாகம் வரை அடித்திருப்பதை அவரால் பார்க்கக் கூட முடியவில்லை. “அவன் அவளுடைய முதுகு முழுவதும் அடித்துவிட்டான்.” எனவே நான், “நீர் ஏன் அவளுக்கு விவாகரத்துக் கொடுக்கக்கூடாது” என்றேன். அந்த வயோதிக நீதிபதியோ அப்படியே அங்கே அமர்ந்து உற்று நோக்கினார். 155 மற்றொரு பக்கத்தில் நேர் எதிராக அமர்ந்திருந்த அந்த வயோதிக வழக்கறிஞர் எழுந்திருந்து, அவர், “கனம் நீதிபதி அவர்களே, உங்களுடைய நீதிமன்றம் எவ்வளவு அதிகமான இந்த அர்த்தமற்றக் காரியத்தை சகிக்க வேண்டியதாய் உள்ளதே?” என்று கூறினார். ஒரே நாடக மையமாக உள்ளதே. 156 அந்தவிதமாகவே அநேக ஜனங்கள் செய்கிறார்கள். அதை ஆதரிக்க போதுமான வார்த்தை அதற்கு பின்னே இல்லாமலேயே தொடர்ந்து மிக அதிகமாக நடத்திக்கொண்டே போகிறார்கள். வளர்ச்சியடையுங்கள்! “ஓ, அவன் கடந்த இரவு ஆவியில் நடனமாடினான், சகோதரன் பிரான்ஹாம், அவன் சரியாயிருக்கிறான்” இல்லை, அது அவனை என்னைப் பொருத்தவரையில் சரியாக்கவில்லை. இல்லை ஐயா. வளர வேண்டும், நிரூபிக்கப்பட வேண்டும், சோதிக்கப்பட வேண்டும், அவரண்டை வளருதல், சாரமேற்றப்பட வேண்டும்.

109157 நான் அண்மையில் சரித்திரங்களில் வாசித்துக்கொண்டிருந்தேன். நான் அதிகப்படியான நேரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறேனா? நான் சபையின் சரித்திரத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். அங்கே பின்னால் உள்ள சகோதரி ஆர்னால்ட் அவர்கள் சபையின் சரித்திரத்தைக் குறித்த ஏதோ ஒரு காரியத்தை என்னிடம் கொடுத்தார் என்று நான் நினைக்கிறேன், அது அவர்கள் வாசித்துக் கொண்டிருந்தது. பரிசுத்த மார்டினின் நாட்களில் ஒரு இரவு அங்கே ஒரு மடத்தில் ஒரு பையன் இருந்தான் என்றும், அவன், “பழைய ஏற்பாட்டிலிருந்த பண்டைய தீர்க்கதரிசிகளைப் போல கர்த்தர் என்னை ஆக்கிவிட்டார். பார்த்தீர்களா? நான் பண்டைய தீர்க்கதரிசிகளை போன்ற ஒருவனாயிருக்கிறேன்” என்று கூறினதையும் நான் அந்த புத்தகத்தில் கண்டேன். பாருங்கள், என்னால் அங்குள்ள அந்த பேராயருடைய பெயரை கூற முடியவில்லை, இங்குள்ள இந்த குழுவினரைப் போன்ற சிறு பள்ளி அங்கிருந்தது. இந்த நேரத்தில் அவருடைய பெயரை கூற முடியாது, ஆனால் அவர் மார்டினின் கீழே பயிற்றுவிக்கப்பட்டவராயிருந்தார். அந்த பையன் கூறினது சரியாக தென்படவில்லை, எனவே மற்ற சகோதரர்களும் அவனை அப்படியே விட்டுவிட்டனர். நேரடியாகவே அவன் தீர்க்கதரிசனமுரைத்தான், அவன், “இன்றிரவு தேவன் இறங்கி வந்து உங்கள் மத்தியில் அமர்ந்திருக்கும்போது, எனக்கு ஒரு வெண்ணங்கியை அளிக்கப் போகிறார், அப்பொழுது நான் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் போன்ற ஒருவன் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்று கூறினான். எனவே அந்த இரவு பன்னிரெண்டு மணிக்கு உண்மையாகவே அது நடந்தது. சத்தம் கேட்கப்பட்டது, ஜனங்கள் சுற்றிலும் நடமாடிக்கொண்டிருக்க, அந்தப் பையனோ. ஒரு அங்கியை பெற்றுக்கொண்டான், அது அவ்வளவு வெண்மையாக இருந்ததாக அவர்கள் கூறினர். அவன் வெளியே வந்து, “நான் உங்களுக்கு கூறியிருக்கவில்லையா?” என்று கேட்டான். மேலும் அவன், “இப்பொழுது நீங்கள் எல்லோரும் என்னிடத்திலிருந்து கட்டளைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியைப் போன்றவன்” என்றான்.

110158 ஆனால் அந்த வயோதிகப் பேராயர் அது சரியென்று நம்பவில்லை. அது வார்த்தையின்படியாயிருக்கவில்லை. தீர்க்கதரிசிகள் உருவாக்கப்படுகிறதில்லை, அவர்கள் முன் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு தீர்க்கதரிசி துவக்கத்தில் அந்தவிதமாக செயல்படமாட்டான். அதனுடைய கனி அதுவாயிருக்கவில்லையென்பதை நிரூபித்துவிட்டது. புரிகிறதா? அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருக்கவில்லையென்பதை அந்தக் கனிகள் நிரூப்பித்தன, பாருங்கள். எனவே அவர், “நாம் உபவாசிப்பதிலும், ஜெபிப்பதிலும், கீர்த்தனைகளைப் பாடுவதிலும் மீதமுள்ள இரவைச் செலவிடுவோம்” என்று கூறினார். ஒரு நாள் இல்லை சில நாட்கள் கடந்தன. கொஞ்சங் கழித்து, அந்த வயோதிக பேராயர், “கர்த்தாவே அந்தப் பையனா!” என்று கூறி ஜெபித்தார். அந்த வஸ்திரம், அவர்கள் அதை உற்று நோக்கினர், பார்…அவர்கள் எந்தக் காரியத்தையும் அறிந்திருக்கவில்லை, அதைப்போன்ற எந்தக் காரியத்தையும் கண்டதேயில்லை. எழுத்தாளர்களும் வந்து உற்று நோக்கினர், அவர்களும் அதைப் போன்ற எந்தக் காரியத்தையும் கண்டதேயில்லை. அங்குதான் காரியமே இருந்தது. முடிவிலே ஒரு தீர்க்கத்தரிசியாயிருந்த ஒரு மனிதனை அவர்கள் அறிந்திருந்தனர், அது மார்டினாயிருந்தது. அப்பொழுது அவர்கள், “சரி, நீர் எங்களுக்கு நிரூபிக்கும்படியாக ஒரு காரியம் இப்பொழுது செய்ய வேண்டும். வேதப்பிரகாரமாக நீ தவறாயிருக்கிறாய். நீ எப்படி மார்டினண்டை சென்று, அவருக்கு முன்பாக நின்று, அதைக் குறித்து அவரிடம் கூறப் போகிறாய்?” என்றனர். புரிகிறதா? அவனோ, “ஓ, நான் மார்டின் முன்பாக நிற்க தடை செய்யப்பட்டிருக்கிறேன்” என்றான்.

111159 நல்ல தங்கம் வைத்துள்ளவன் சோதனை இயந்திரத்தண்டை செல்லப் பயப்படப்போகிறதில்லை. உ—ஊ, அது உண்மை, அவன் சத்தியத்தை உடையவனாயிருக்கிறான். அந்தக் காரணத்தினால் தான் நான் ஒரு சவாலை விடுக்கிறேன்; எந்த மனிதனாவது வந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உள்ள ஞானஸ்நானம் தவறானது என்று எனக்கு காண்பியுங்கள். மரிக்கும்படியாக நீங்கள் பெற்றுள்ள இந்தப் பிறப்பை எனக்குக் காண்பியுங்கள். நீங்கள் உங்களுக்குள்ளாக இன்னமும் உலகத்தைப் பெற்றிருந்தால், நீங்கள் இன்னமு உலகத்திற்குரியவர்களாயிருக்கிறீர்கள். இந்தக் காரியங்களை எனக்குக் காண்பியுங்கள். அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம், அதை சோதனை இயந்திரத்தண்டைக் கொண்டு செல்லுங்கள். இதோ சோதனை இயந்திரம் உள்ளது. புரிகிறதா? பார்த்தீர்களா? அது தான் உண்மை. 160 ஆகையால் அவர்கள், “நீ எப்படியாவது போக வேண்டும்” என்றனர். ஒரு கூட்ட சகோதரர்கள் அவனை அழைத்துக் கொண்டு சென்றபோது, அந்த அங்கி மறைந்து போய்விட்டது. பார்த்தீர்களா? இன்றைக்கு பெந்தேகோஸ்தே ஜனங்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அல்லவா? ஓ, என்னே! அது உண்மையான காரியம் போல் காணப்பட்டது, ஆனால் அது வார்த்தையின்படியாய் இருக்கவில்லை.

112161 மார்டின் ஒரு முறை சாத்தான் அவரிடத்தில் தோன்றினதைக் கூறினார், சாத்தான் பெரிய பொற்கீடமணிந்து, அதில் மூன்று அல்லது நான்கு அடுக்குகள் நட்சத்திரங்கள் பதிந்திருக்க, ஜொலிப்பாய் அழகாக, மிகப் பெரிய நபராய், அருமையாக, அழகிய வடிவத்தில், சரியாக தலைமுடியை சீவி வாரிக்கொண்டு, பெரிய அழகான அங்கியை உடுத்திக்கொண்டு தன்னுடைய கால்களில் பொன்னாலான பாதரட்சைகளை அணிந்தவனாய் நடந்து வந்து, “மார்டின், என்னை உனக்குத் தெரிகிறதா?” என்று கேட்டான். 162 இப்பொழுது தரிசனங்களை காணாத ஜனங்கள். இது—இது…நீங்கள் இதைப் புரிந்து கொள்ளாமலிருக்கலாம், பாருங்கள், ஆனால் எப்படி வித்தியாசமான ஆவிகளில் காரியங்கள் உங்களண்டை வந்து, அவர்களை எப்படியாய் வஞ்சிக்கின்றன. கூடுமானால் அவைகள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று வேதம் கூறியுள்ளது, பாருங்கள். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், அவர்கள் அந்த நோக்கத்திற்காகவே முன் குறிக்கப்பட்டு பிறந்தவர்கள். புரிகிறதா? பார்த்தீர்களா?

113163 எனவே சாத்தான் இந்த தெரிந்து கொள்ளப்பட்டவரிடம் வந்து, அவன், “மார்டின், என்னை உனக்குத் தெரியுமா? நான் கிறிஸ்து” என்றானாம். மேலும் அவன், “நீ என்னை அடையாளங்கண்டு கொள்வாயா?” என்றும் கேட்டானாம். மார்டினோ தயங்கினாராம். அவருக்கோ விநோதமாகத் தென்பட்டது. அவர் ஒரு நிமிடம் காத்திருந்தாராம், சாத்தான் மீண்டும் அதையே கூறி, அவன், “நீ என்னை பார்க்கவில்லையா? நான் தான் கிறிஸ்து. நீ என்னை அடையாளங் கண்டு கொள்கிறாயா?” என்று கேட்டானாம். அவன் அதை மூன்று அல்லது நான்கு முறைகள் அவரிடத்தில் கூறினானாம். 164 கிறிஸ்து கூறினாராம் இல்லை மார்டின், “சாத்தானே, நான் உன்னை அறிவேன். என் கர்த்தருக்கு இன்னும் முடிசூட்டப்படவில்லை, ஆனால் அவருடைய பரிசுத்தவான்கள் அவருக்கு முடிசூட்டுவார்கள்” என்றாராம். அங்கேதான் ஆதாரமான வார்த்தை உள்ளது. 165 அங்குதான் ரோம சபை அதிகமான சபைக் கோட்பாட்டைப் பெற்றுக் கொண்டது, வார்த்தைக்கு முரணான பொல்லாத ஆவிகள் உள்ளே வருகின்றன. அவர்கள் தங்களுடைய சபைக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு வார்த்தையை மறுதலித்துவிட்டு, வேதாகமத்திலிருந்தே விலகிச் செல்ல வேண்டியதாயிருந்தது. வார்த்தையோடு தரித்திருங்கள்! அதுவே இன்றைக்கு ஜீவ கயிறாய் உள்ளது. இன்னும் கொஞ்சங் காலம் கழித்து கிட்டத்தட்ட ஒவ்வொரு காரியத்தையும் வஞ்சிக்கும் ஆவிகள் எழும்பும். வேதம் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளது. “யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல இவர்களும் சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிற துர்புத்தியுள்ள மனுஷர்கள்,” அற்புதங்களை நிகழ்த்தி, எல்லாவிதமான அடையாளங்களையும் செய்வார்கள். ஆனால் அந்த வார்த்தையோடு தரித்திருங்கள். கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரியண்டை வந்தது, அவர்கள் அதைக் கொண்டு வந்தனர், நாம் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறோம். 166 கவனியுங்கள், ஆம், மார்டினோ, “சாத்தானே, நான் உன்னை அறிவேன், என்னுடைய கர்த்தர் இந்தவிதமான ஒரு பெரிய உருவங்கொண்ட மனிதராய் இருக்கவில்லை. என்னுடைய கர்த்தர் ஒரு பழைய கரடு முரடான ஆடையோடும், தம்முடைய கையில் ஆணிகள் கடாவின வடுக்களோடும், கீரிடம் சூட்டப்படாமல், இரத்தம் தோய்ந்த தலை முடியோடு சென்றாரே! அவர் திரும்பி வருகிறபோது, அவர் அந்தவிதமாகவே வருவார், ஏனென்றால் அவர் சென்றவிதத்திலேயே திரும்பி வருவார் என்று வேதம் உரைத்துள்ளது” என்று கூறினாராம். அப்பொழுது அந்தப் பிசாசு அவரைவிட்டு மறைந்து போய்விட்டானாம். ஓ, என்னே!

114167 அவன் எப்படி உள்ளே வந்து, “ஓ, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினார்கள். அவர்கள்—அவர்கள்—நீங்கள் எப்போதும் கண்டதிலேயே அவர்கள் மிகவும் சிறந்த ஜனங்களாய் இருக்கிறார்கள்” என்று அதை அப்படியே மிகவும் அழகாக்குகிறான். நீங்கள் அதை நம்பாதீர்கள். ஜாக்கிரைதையாயிருங்கள். 168 வார்த்தை உங்களை உற்சாகமில்லாமல் மந்தமாக்கிக்கொண்டிருக்கவில்லை என்று நான் நம்புகிறேன். மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள், அவர்கள் உயிரோடிருக்கிறபடியால் கிறிஸ்துவின் வளர்ச்சியில் வளருகிறார்கள். அவர்கள் மறுபடியும் பிறந்திருக்கிறார்கள், அவர்களுடைய ஜீவியங்கள் ஒரு குழந்தையைப் போல உருவாகத் துவங்குகின்றன. அது உருவமாகி வளரத் துவங்குகிறது. முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா? இதோ அவர்கள் முழு வளர்ச்சியில் இருக்கிறார்கள். ஆமென். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. நாளுக்கு நாள், வருடா வருடம் அவர்கள் அதேவிதமாகத் தரித்திருக்கிறார்கள். இப்பொழுது வார்த்தைக்குத் திரும்பி வாருங்கள், “நீங்கள் என்னில் நிலைத்திருந்தால்!”

115169 அவர்கள், “நான் மறுபடியும் பிறந்துவிட்டேன், அல்லேலூயா, நான் அவர்களை சேர்ந்துவிட்டேன். நான் இதை சேர்ந்துவிட்டேன். நான் சேர்ந்துவிட்டேன். எனக்குத் தெரியாது, கடந்த வருடம் நான் இயேசுவின் நாமத்தில் விசுவாசித்தேன், இப்பொழுது, நான்—நான் இப்பொழுது அதிலிருந்து வெளியேறிவிட்டேன். நான்—நான் இதை விசுவாசிக்கிறேன். நான் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன், ஆனால் நான்—நான்…ஏதோ ஒன்றை இன்னார்—இன்னார் கூறுகிறார்கள்…” என்று கூறுகிறார்கள். தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிப்பட்டு அலைகிறார்களாய் இருக்கிறார்கள். புரிகிறதா? அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 170 ஆனால் ஆவியானால் பிறந்து, கிறிஸ்துவின் வளர்ச்சிக்குள்ளாக வளருங்கள்! சகோதரன் டெள அவர்களே, உங்களுக்கு இது புரிகிறதா? கிறிஸ்துவின் வளர்ச்சிக்குள்ளாக வளருதல்! உங்களுடைய ஜீவியம் முழுவதுமே நிரூபிக்கிறது. நீங்கள் ஒரு தீர்க்கதரிசியாகப் பிறந்திருந்தால், நீங்கள் அதில் தரித்திருப்பீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக பிறந்திருந்தால், நீங்கள் அதில் தரித்திருப்பீர்கள். “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்!” இதுவே உங்களை கிறிஸ்துவின் வளர்ச்சிக்குள்ளாக வளர்க்கிறது. ஏதோ ஒரு வாலிப வழிக்கறிஞர் மேஜையை அடித்து, கூச்சலிட்டு, கதறி உங்களுக்கு இதை, அதை, மற்றத்தைக் கூறி அதிக உணர்ச்சிவசப்படுத்தல்களை உண்டாக்குவதல்ல; ஆனால் கிறிஸ்துவின் வளர்ச்சிக்குள்ளாக வளர்ந்துள்ள யாரோ ஒருவர், அநேக வருடங்களினூடாக பக்குவப்பட்ட அனுபவங்கொண்டு, நிரூபிக்கப்பட்டுள்ளவரின் தலைமையில் நிற்பதாகும். மற்ற ஏதும் அல்ல! “கிறிஸ்து என்னும் திடமான கன்மலையின் மேல் நாம் நிற்கிறோம், மற்றெல்லா நிலங்களும் அமிழ்ந்துகொண்டிருக்கும் மணலே. ஸ்தாபனங்கள் மற்றும் கோட்பாடுகள் வரட்டும் போகட்டும், ஸ்தாபன கொள்கைகள் இருக்கட்டும்; கர்த்தாவே என்னை தாழ்மையாய் வைத்துக்கொள்ளும், வார்த்தையோடு சரியாக தரித்திருந்து, அந்த நீரோடையினூடாகவே செல்வேனாக. அந்த நிரோடையே எங்களை அந்த கடற்கரைக்கு வழிநடத்தும்.” முழுவளர்ச்சி.

116171 இப்பொழுது பாருங்கள், அது இங்கே எப்படி மாறுகிறது என்பதை நாம் காண்போமானால், மரணத்திற்கு பிறகு உங்களால் மாற்ற முடியாது. இப்பொழுது உள்ளே வருகிற இந்த ஜனங்களை கவனித்துப் பாருங்கள், எல்லா உணர்ச்சிவசப்படுதல்களையும் மற்றுமுள்ள காரியங்களையும் பெற்றுக்கொள்கிறார்கள், பிறகு வெளியே ஓடிப்போய், நாளை அவர்கள் இந்த விதமாக இருக்கிறார்கள். நீங்கள் அதை பார்த்திருக்கிறீர்களா? அவர்களில் இலட்சக்கணக்கானோர். புரிகிறதா? நீங்கள் பாருங்கள், என்ன சம்பவிக்கிறது என்று நீங்கள்—நீங்கள் பாருங்கள். இப்பொழுது அந்த ஜனங்கள் அந்த நிலைமையிலேயே மரித்துவிட்டால் என்னவாகும்? மரணம் அதை மாற்றுகிறதில்லை. 172 எனவே, ஓ, கிறிஸ்தவர்களே, இந்த வார்த்தைகளோடு முடிக்கையில், நான் இதைக் கூறுவோனாக. நாம் கிறிஸ்தவர்களைப்போல, அவருடைய ஆவியில் மறுபடியும் பிறக்கும்படியாக முழு உத்தமத்தோடு தாழ்மையாய் வந்து அவரிடத்திலும், அவருடைய வார்த்தையிடத்திலும் திரும்புவோமாக. நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது, நீங்கள் கொடுக்கிற கனிகளினால் நீங்கள் ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட கிறிஸ்தவராயிருக்கிறீர்கள். சகோதரி பெக்கன்பா உங்களுக்கு அது புரிகிறதா? நீங்கள் கொடுக்கிற உங்களுடைய கனிகளினால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள். “அவர்களுடைய கனிகளினால் நீங்கள் அவர்களை அறிவீர்கள்.” அதுவே ஒரு ரூபகாரப்படுத்துதல். நீங்கள் உங்களுடைய மொழியின் முதல் எழுத்துகளை அறியாதிருக்கலாம், ஆனால் அதே சமயத்தில் நீங்கள் ஒரு பெண்மணியாய், ஒரு கிறிஸ்தவனாய் இருக்க முடியும். நீங்கள் உலகத்தால் வெறுக்கப்படலாம், (நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை செய்துள்ள காரணத்தால் நீங்கள் அதைச் செய்தால், உலகத்தால் நீங்கள் வெறுக்கப்படத்தான் வேண்டும்), ஆனால் நீங்கள் அவர் நிமித்தமாக வெறுக்கப்பட்டால், அது வித்தியாசமானது.

117173 நீங்கள்—நீங்கள் ஒரு வேதபண்டிதனாயில்லாமலிருக்கலாம். குருடாய் பிறந்திருந்த அந்த குருட்டு மனிதனைப் பாருங்கள். இயேசு அவனை குணமாக்கினார். அவன் பிறவியிலிருந்தே குருடனாயிருந்து வந்தான், அவனுக்கு கருவிழிகள் கூட இல்லாதிருந்தது. இயேசு அவனை குணப்படுத்தி, அவனை சொந்தமாக்கினார். அந்த மனிதன் பார்வையடைந்தபோது, பரிசேயர்கள் அவனிடத்தில், “அவர் யார்?” என்று கேள்வி கேட்டனர். ஏதோ ஒரு காரியம் செய்யப்பட்டிருந்தது என்பதை அவர்களால் மறுதலிக்க முடியவில்லை. இப்பொழுது, அந்த மனிதன் ஒரு வேதபண்டிதனாயிருக்கவில்லை. பிரசங்கிமார்கள் சிறு நுட்பமான காரியங்கள் பேரில் வாதிடுவது போல அவனால் வாதிட முடியவில்லை. அவன் பழைய ஏற்பாட்டை அறிந்திருக்கவில்லை. மேசியா எப்படி பிறப்பார் என்பதையும், அவர் செய்யவிருந்த கிரியைகளையும் அவன் அறிந்திருக்கவில்லை. அந்த மனிதன் அதை அறிந்திருக்கவில்லை. அவன் ஒரு வேத பண்டிதனாயிருக்கவில்லை. ஆனால் அவன் என்ன செய்தான்? அவர்கள், “தேவனுக்கு துதி செலுத்து. நாங்கள் வேதபண்டிதர்களாயிருக்கிறோம். அவன் ஒரு பாவியாயிருக்கிறான் என்பதை நாங்கள் அறிவோம்,” என்று கூறினார்கள்.

118174 இப்பொழுது அந்த மனிதனால் அவர்களுடைய வார்த்தையை மறுதலிக்க முடியவில்லை, ஆனால் அவன் இந்தவிதமாகத்தான் கூறினான், அதை வேறு வார்த்தைகளில் கூறினால், “அவர் ஒரு பாவியாயிருந்து இதைச் செய்வாரானால், அப்பொழுது உங்களோடுள்ள காரியம் என்ன? உங்கள் யாவரோடுமுள்ள காரியம் என்ன?” என்று கேட்டான். புரிகிறதா? மேலும் அவன், “அவர் ஒரு பாவியோ அல்லது இல்லையோ, எனக்குத் தெரியாது, என்னால் அதைக் கூற முடியாது. ஆனால் இந்த ஒரு காரியத்தை நான் அறிவேன், நான் ஒரு காலத்தில் குருடனாயிருந்தேன், இப்பொழுது நான் காண்கிறேன்” என்றான். அவன் என்ன செய்து கொண்டிருந்தான்? அவர் ரூபகாரப்படுத்தப்பட்டிருந்தார். அது உண்மை. அவர் ரூபகாரப்படுத்தப்பட்டுகொண்டிருந்தார். அவனுக்கு ஏதோ ஒரு காரியம் சம்பவித்திருந்தது. அவனுடைய இயல்பு அந்தகாரத்திலிருந்து ஒளிக்கு, குருட்டுத்தனத்திலிருந்து பார்வைக்கு மாற்றப்பட்டிருந்தது. 175 தேவனுடைய ஆவியினால் பிறந்துள்ள ஒரு மனிதன், ஒரு முறை தேவ பக்தியின் வேஷம் தரித்திருந்து, அதன் வார்த்தையை மறுதலித்திருந்து, அதனுடைய வல்லமையை மறுதலித்து, “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன” என்று கூறியிருக்க, ஆனால் அவன் மறுபடியும் பிறக்கும்போது, அவன் ஒரு வேத பண்டிதனாய் இல்லாமலிருக்கலாம், அவனால் அதை விளக்கிக் கூற முடியாமலிருக்கலாம், ஆனால் அவன் அதை விசுவாசிக்கிறான். இதைப் போல…

119176 என்னுடைய கருப்பு நிற சகோதர சகோதரிகள் இங்கிருப்பார்களாயின் இதைக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும், தெற்குப் பகுதியில் ஒரு நல்ல வயோதிக கருப்பு நிற சகோதரன் இருந்தார். அவரைக் குறித்த ஒரு சிறு கதையை அவர்கள் கூறினார்கள். அவர் ஒரு வேதத்தை எடுத்துக்கொண்டே சென்றுகொண்டிருப்பார் என்றும், அவரால் அவருடைய பெயரைக் கூட வாசிக்க முடியாது என்றும் கூறினர். அப்பொழுது அவர்கள், “மோஸ், நீ ஏன் அந்த வேதாகமத்தை சுமக்கிறாய்?” என்று கேட்டார்களாம். அதற்கு இவரோ, “அது தேவனுடைய வார்த்தை” என்று பதிலளித்தாராம். அப்பொழுது அவர்கள், நல்லது, “நீ அதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார்களாம். 177 அதற்கு அவர், “ஆம் ஐயா, நான் அதை நிச்சயமாக விசுவாசிக்கிறேன்” என்றாராம். மேலும், “நான் அதை மேல் அட்டையிலிருந்து அதன் கீழ்பாக அட்டை வரை விசுவாசிக்கிறேன், அந்த மேல் ‘அட்டையைக்’ கூட விசுவாசிக்கிறேன், ஏனென்றால் அதின் மேல் ‘பரிசுத்த வேதாகமம்’ என்று எழுதப்பட்டுள்ளது” என்றாராம். 178 அவர்களோ, “அது பரிசுத்த வேதாகமம் என்று எப்படி நீ அறிவாய்? அது அவ்வாறு உள்ளது என்பதை எப்படி நீ அறியாய்?” என்று கேட்டார்களாம். 179 அதற்கு அவரோ, “நான் அதை அப்படியே விசுவாசிக்கிறேன். அவ்வளவுதான்” என்றாராம். அவர் செய்ய வேண்டியிருந்ததெல்லாம் அவ்வளவு தான். அவர் அதை அப்படியே விசுவாசித்தார். ஏன் என்று அவருக்குத் தெரியாது, ஆனால் அவர் அதை விசுவாசித்தார். 180 அவர்கள் அவரிடத்தில், “மோஸ், வேதாகமம் செய்யும்படி கூறியுள்ள எந்தக் காரியத்தையும் நீர் செய்வீரா?” என்று கேட்டார்களாம். அதற்கு அவர், “ஆம் ஐயா. வேதம் கூறியிருந்தால், நான் அதைச் செய்வேன்” என்றாராம். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 181 அதற்கு அவர்களோ, “சரி. மோஸ்” என்று கூறி, “இப்பொழுது அங்கே அந்த கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தடுப்பு வேலி இருந்தால், அப்பொழுது கர்த்தர் அந்த தடுப்பு வேலியினூடாக உன்னைக் குதிக்கும்படிக் கூறினால், நீ அந்த தடுப்பு வேலியினூடாக குதிப்பாயா?” என்று கேட்டார்களாம். 182 அதற்கு அவர், “மோஸ் அந்த தடுப்பு வேலியினூடாக குதிக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறதா?” என்று கேட்டாராம். புரிகிறதா? 183 அதற்கு அவர்கள், “தேவன் உன்னிடத்தில் பேசி, அந்த தடுப்பு வேலியினூடாக குதிக்கும்படிக் கூறினால் என்ன செய்வாய்?” என்று கேட்டார்களாம். அதற்கு அவரோ, “அது தேவனாயிருந்தால், அவர் என்னை குதிக்கும்படிக் கூறினால், நான் குதிப்பேன்” என்றாராம். 184 அப்பொழுது அவர்களோ, “அந்த தடுப்பு வேலியினூடாக ஒரு துவாரமும் இல்லாமல் அதனூடாக எப்படி குதிப்பாய்?” என்று கேட்டார்களாம். 185 அதற்கு அவர், “தேவன் அதைக் கூறியிருந்தால், மோஸ் அங்கே குதிக்கும்போது, அங்கே அவர் அந்த துவாரத்தை உண்டுபண்ணுவார்” என்றாராம். அது உண்மை. சரியே!

120186 நீங்கள் தைரியமாக தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அங்கேயே நின்று, அது அவ்வண்ணமாயுள்ளதே என்று கூறுங்கள். இந்த பரிதாபமான நரம்புதளர்வுற்ற ஸ்திரீ இங்கு இருக்கட்டும். அவள் மரிக்கப் போவதாக நினைக்கிறாள், எல்லாமே அவளுக்கு கோளாறாக உள்ளது, பாருங்கள். நீங்கள் மரித்துக்கொண்டிருக்கவில்லையே! “சகோதரன் பிரான்ஹாம், நாம் அதை எப்படி செய்ய முடியும்?” என்று கேட்கலாம். அவருடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதன் மீது ஒரு முறை அடியெடுத்து வையுங்கள், பாருங்கள். அந்த வார்த்தையின் பேரில் நின்று, என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள். பிசாசு ஒரு பொய்யன் என்று அவனிடத்தில் சொல்லுங்கள். இத்தனை வருடங்களாக உனக்கு மாதவிடாய் இருந்து வந்துள்ளது, உனக்கு கிட்டத்தட்ட ஐம்பத்தேழு வயது. அந்தக் காரியத்திலிருந்து வெளியேறு, அது பிசாசாயுள்ளதே! தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, “அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்” என்று கூறு, அப்பொழுது என்ன சம்பவிக்கிறது, என்று கவனித்துப் பார். அதன்பின்னர் உனக்கு மாரடைப்பு மற்றும் மற்ற காரியங்கள் ஏற்படும் என்ற சிந்தனையை நீ விட்டுவிடுவாய். உனக்கு எந்த மாரடைப்பு மற்றும் அந்தவிதமான எதுவும் ஏற்படாது. அது ஒரு பொய். உனக்கு அது உண்டாகாது. அப்படியே தேவனுடைய வார்த்தையை விசுவாசி. அதுவே உண்மை.

121187 நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது, தேவன் உங்களை ரூபகாரப்படுத்துகிறார். அந்த விதமாகத் தான் தேவன் தம்முடைய எல்லா இயற்கையையும் ரூபகாரப்படுத்துகிறார். என்ன? அவைகளினுடைய கனிகளினாலே. அந்த விதமாக அவர் தம்முடைய ஊழியத்தை ரூபகாரப்படுத்துகிறார். அது உண்மை. அவர் இயற்கையை ரூபகாரப்படுத்துகிறவிதமாகவே அவருடைய ஊழியக்காரர்கள் யாவரும் ரூபகாரப்படுத்தப்படுகின்றனர். அது ஒரு குழிப்பேரி மரம் என்று நீ எப்படி அறிவாய்? அது குழிப்பேரி பழங்களை கொடுக்கிற காரணத்தினாலேயாகும். அது ஒரு ஆப்பிள் மரம் என்று நீ எப்படி அறிவாய்? அது ஆப்பிள்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவன் ஒரு கிறிஸ்தவன் என்பதை நீ எப்படி அறிவாய்? அவனிடத்திலிருந்து கிறிஸ்தவனின் அடையாளங்கள் வெளி வருகின்றன, அவனிடத்திலிருந்து கிறிஸ்தவனின் ஜீவியம் வெளியேத் தோன்றுகிறது. அவர் ஒரு போதகர் என்று எப்படி நீ அறிவாய்? வார்த்தை அவரிடத்திலிருந்து வருகிறது. அவர் ஒரு தீர்க்கதரிசி என்று எப்படி நீ அறிவாய்? வார்த்தை அவரிடத்திலிருந்து வந்து, சாட்சி பகர்ந்து, ரூபகாரப்படுத்துதல். அதுவே அதனை நிரூபிக்கிறது. அது எப்படி அவ்வாறு மாறுகிறது? அது மரிக்கும்போது, அந்த ஒன்றாக மாறுகிறது. அது உண்மை. நாம் மரிக்கும்போது, கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாகிறோம், அது நம்முடைய அழைப்போடு நம்மை சேர்க்கிறது, நாம் நம்முடைய அழைப்போடு தரித்திருக்கிறோம். நாம் அவருடைய ஊழியக்காரர்களாயிருக்கும்போது, ஆவியின் கனிகள் நம்மைப் பின் தொடருகின்றன. நாம் மறுபடியும் பிறக்கும்போது, கிறிஸ்துவினுடைய ஜீவனின் கனிகள் நம்மைப் பின் தொடருகின்றன. அது உண்மை. இது ஒரு குழிப்பேரி மரம் என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? அது குழிப்பேரிப் பழங்களை உடையதாயிருக்கிறது. அவன் ஒரு கிறிஸ்தவன் என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? அவன் கிறிஸ்துவைப் போல செயல்படுகிறான், அவன் கிறிஸ்துவைப்போல நடக்கிறான், அவன் கிறிஸ்துவைப் போல பேசுகிறான், அவன் கிறிஸ்துவைப் போல பாவத்திற்கு மேலாக, வெற்றிகரமாக ஜீவிக்கிறான். அவன் என்ன செய்கிறான், “நான் என்ன செய்தேன் என்று பார்த்தீர்களா?” என்று கூறுகிறானா? கிறிஸ்து அதைச் செய்யவில்லை. அவர் எல்லா துதியையும் பிதாவுக்கே செலுத்தினார். அது உண்மையே. அந்தவிதமாகத்தான் நீங்கள் அதை அறிந்துகொள்கிறீர்கள். அவர்களுடைய கனிகளினால் நீங்கள் அவர்களை அறிவீர்கள். நாம்… 188 “ஒரு மனிதன் மறுபடியும் பிறவாவிட்டால், அவனால் தேவனுடைய இராஜ்ஜியத்தை கூட புரிந்து கொள்ள முடியாது என்று மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

122189 எனவே இங்கே இப்பொழுது பன்னிரெண்டு முப்பது இல்லை ஒரு மணிக்கு இருபது நிமிடங்கள் உள்ள இவ்வேளையில் என்னுடைய புதிய வருட செய்தியாக இதைக் கூறவில்லை, ஆனால் இது உங்களுக்கு, தேவனை நேசிக்கிற கிறிஸ்தவரான உங்களுக்கு என்னுடைய ஆலோசனையாக உள்ளது. நீங்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வெண்கல பலிபீடத்தண்டை வரும்போது, நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும் என்று உங்களையே அங்கே அதன் மேல் அப்படியே வையுங்கள். மறுபடியும் பழைய ஜீவியத்தின்படி துவங்க எதிர்பார்க்காதீர்கள், நீங்கள் மரிக்கப் போகிறீர்கள். அதுவே உங்களுடைய முடிவாயுள்ளது. அவ்வளவுதான். நீங்கள் அதைச் செய்யவில்லையென்றால், உங்களால் அதைச் செய்ய முடியும் என்பதுபோல நீங்கள் உணரவில்லையென்றால், அதைச் செய்யாதீர்கள், அதைச் செய்ய முயற்சிக்காதீர்கள், அது கிரியை செய்யாது; ஆழ்ந்த உத்தமத்தோடு செய்யுங்கள். இங்கே இந்த பாடத்திற்கு இன்னும் கிட்டத்தட்ட பத்துப் பக்கங்களுக்கு இல்லை அதற்கும் அதிகமாக உள்ள குறிப்புகளையும், வேதவாக்கியங்களையும் நான் விட்டுவிடுகிறேன். ஆனால் உங்களையே தேவனுடைய நியாயத்தீர்ப்பின் தேவனுடைய வெண்கல பலிபீடத்தின் மேல் வைத்து, உலகத்திற்கு கிறிஸ்துவைப் போல மரித்தவராகுங்கள். புரிகிறதா? ஏதேன் தோட்டத்திலிருந்த நியாயந்தீர்க்கப்பட்ட மரித்த சர்ப்பத்தைப் போல வாருங்கள், அது ஒரு வெண்கல சர்ப்ப ரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது, அதற்குள் ஜீவனே இல்லாதிருந்தது. அதனுடைய ஜீவன் முழுவதுமே போய்விட்டிருந்தது. கிறிஸ்து ஜீவனற்றவராயிருந்தார், அவர்கள் அவரை சிலுவையிலிருந்து இறக்கி, கல்லறையில் அவரை அடக்கம்பண்ணினார்கள். அவர்—அவர் மரித்துவிட்டார். அதன் பின்னர் அவர் நாம் நீதிமானாக்களாக்கப்படுவதற்காக உயிரோடெழுந்தார். நாம் நம்முடைய ஆட்டுக்குட்டியோடு பீடத்தின் மேல் மரித்து…அவருடைய நீதிமானாகுதலில் மீண்டும் உயிரோடெழுப்பட்டிருக்கிறோம். நாம் எப்படி அதை அறிவோம்? ஏனென்றால் அந்த மரித்த நிலைமையிலிருந்து அவரை உயிரெடெழுப்பின அவருடைய ஜீவன், அதே ஜீவன் நம்முடைய மரித்த உலகத்தின் நிலையிலிருந்து நம்மை கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக உயிரோடெழுப்புகிறது, அதன் பின்னர் நாம் நம்முடைய மீட்பின் நாள் வரையில் பரிசுத்த ஆவியினால் நாம் தேவனுடைய இரஜ்ஜியத்திற்குள் முத்திரையிடப்பட்டிருக்கிறோம்.

123190 “ஒரு மனிதன் மறுபடியும் பிறந்தாலொழிய அவனால் தேவனுடைய இராஜ்ஜியத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள். நீங்கள் அதை ஒருபோதும் புரிந்து கொள்ளவேமாட்டீர்கள். உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்று இயேசு கூறினார். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், அவருடைய வார்த்தையின் அடிப்படையின் மேல் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். 191 இப்பொழுது குருட்டுத்தனத்தில் நடந்து, “ஓ, கர்த்தாவே, எனக்கு ஒரு உணர்ச்சிவசப்படுதலைத் தாரும்” என்று கூறாதீர்கள். அப்படியே, “கர்த்தாவே, நான் உமக்குச் சொல்லுகிறேன்” என்று கூறாதீர்கள். வேண்டாம். “கர்த்தாவே, என்னை கொன்று, உலகத்தை என்னிலிருந்து எடுத்துப் போடும். நான்—நான்—நான் இன்னமும் உலகத்தின் காரியங்களில் அன்பு கூருகிறேன்” என்று கூறுங்கள். நான் சிருஷ்டிப்பை, சூரிய அஸ்தமனத்தை, அழகை, அதுபோன்ற காரியத்தை பொருட்படுத்திக் கூறவில்லை. நான் அதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கவில்லை. நான் இச்சையைக் குறித்தும், அசுத்தத்தைக் குறித்தும், உலக ஒழுங்கைக் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இந்த காரியங்கள் யாவும் உலகத்தினுடையவை. அப்படியே, அவை அப்படியே மரித்துப் போகட்டும், அப்படியே தானாகவே மரித்துப் போகட்டும், நீங்கள் இனிமேல்…அவைகள் இனிமேல் உங்களை ஒருபோதும் பற்றிகொள்ளாது. அவைகள் உங்களுக்கு, “ஊ, எப்படித்தான் ஜனங்கள் அவைகளில் ஜீவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை” என்ற துர்நாற்றமாகட்டும். நீங்கள் கதறுங்கள். அதைக் குறித்து நீங்கள் அதிகம் காண்கிறீர்கள், நீங்கள் மோசமானதையே பெற்றுக்கொள்கிறீர்களே! ஆம் ஐயா. உங்களால் அதனோடு சமரசமாக முடியாது. சமரசத்திற்கு இடமே கிடையாது. உலகம் அங்கே இருக்கும் போது, அங்கே உங்களைத்தாமே வைக்க இடமே கிடையாது. நீங்கள் அந்த காரியங்களுக்கு மரித்தவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு முறை உலகத்திற்கு மரித்துவிட்ட பிறகு பின்னர் எப்படி உங்களால் அதனுடைய காரியங்களில் மறுபடியும் தொடர்புகொள்ள முடியும்? அதைச் செய்ய முடியாதே. எனவே அதைச் செய்யாதீர்கள். உலகத்தின் காரியங்களுக்கு மரியுங்கள்.

124192 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. மறுபடியும் பிறந்த கிறிஸ்தவராயிருங்கள். மறுபடியும் பிறந்தாக வேண்டும், அப்பொழுது நீங்கள், “அது கடினமான காரியம்” என்று கூற வேண்டியிருக்காது, ஸ்திரீகளாகிய நீங்கள், “என்னுடைய தலைமுடியை நான் வளரவிடட்டும்” என்று கூற வேண்டியிருக்காது. “என்னுடைய கோபத்தைப் போக்குவது எனக்கு கடினமான காரியமாய் உள்ளது” என்று புருஷராகிய நீங்கள் கூற வேண்டியிருக்காது. நான் என்னுடைய மனைவியினிடத்தில் கூறியாக வேண்டும். நான் அவளை பிடித்து, நான் அவளைக் குலுக்கி, நான், ‘நான் ஒரு கிறிஸ்தவன் என்று எனக்குத் தெரியும், இதைத் செய்யக்கூடாது, நீ வாயை மூடு, நீ உட்காரு” என்று கூற வேண்டியிருக்காது. ஊ—உ, அதைச் செய்யாதீர்கள். புரிகிறதா? 193 நீ உன்னுடைய கரத்தை அவள் மீது போட்டு, “இனிய இருதயமே, அது ஒரு கிறிஸ்தவனாக மாறுவதற்கானதல்ல” என்று கூறும் ஒரு நேரத்தை நீ காண விரும்புவாய். அந்தவிதமாகத்தான் நீ இருக்க வேண்டும், அப்படித்தானே? நீ அந்தவிதமாக இருக்க முடியும். புரிகிறதா? ஒரு மனிதன் உன்னை ஒரு கன்னத்தில் அறையும்போது, நீ அவனை ஒரு பேனாக் கத்தியினால் அவனை வெட்ட வேண்டியதில்லை. புரிகிறதா? ஒரு மனிதன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அப்பொழுது நீ, “சகோதரனே, நீ எந்தக் காரணத்திற்காக அதைச் செய்தாய்?” என்று கூறுவாய். புரிகிறதா? அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அதுவே கிறிஸ்தவ மார்க்கமாயுள்ளது. யாரோ ஒருவர் உன்னைக் குறித்து ஏதோ ஒரு காரியத்தை பொல்லாங்காய் கூறும்போது, அதைக் குறித்து ஒரு பெரிய தற்பகட்டு நடவடிக்கை காட்சியாக்க முயற்சிப்பதற்குப் பதிலாக எங்காவது நழுவிச் சென்று, “பரலோகப் பிதாவே, அந்த மனிதன் மரணத்திற்குரிய ஒருவனாயுள்ளான். நீர் அந்த ஆவியை அவனிடத்திலிருந்து எடுத்துப்போடும் என்று நான் ஜெபிக்கிறேன். அவன் அதைச் செய்ய அனுமதியாதேயும். நீர் அவனுடைய ஜீவனை இரட்சிக்க ஜெபிக்கிறேன்” என்று கூறுவீர்கள்.

125194 “கர்த்தாவே, நான் அதைக் கூற மாட்டேன்” என்று அதற்கு கூறாதீர்கள். பாருங்கள், நீங்கள் அதை உங்களுடைய உதடுகளில் கூறாமல், அதை உங்களுடைய இருதயத்தில் பொருட்படுத்திக் கூறுங்கள். புரிகிறதா? உங்களுடைய இருதயத்தில் உள்ளதே கணக்கிடப்படுகிறது, பாருங்கள். நீங்கள் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறக்கும்போது, நீங்கள் உண்மையாகவே ஒவ்வொருவரையும் நேசிப்பீர்கள். இப்பொழுது நீங்கள் அவர்களுடைய வழிகளையும், அதைப்போன்ற காரியங்களையும் விரும்பாதீர்கள், அதற்கு பங்காளியாக விரும்பாதீர்கள். வேண்டாம் ஐயா, உலகத்தின் காரியங்களிலிருந்து விலகியிருங்கள், ஆனால் நீங்கள் உங்களை மாசற்றவர்களாகக் காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அதைச் செய்யும்படியான ஒரே வழி, புறா தன்னுடைய சிறகுகளை சுத்தம் பண்ணுகிறதுபோல, அது உட்புறத்திலிருந்து வரும்போதேயாகும். நீங்கள் பாருங்கள். புறா சிறகுகளை சுத்தம்பண்ணும்படி ஆயத்தம் செய்து, “இப்பொழுது, இன்றைக்கு நான் இவை எல்லாவற்றையும் துடைக்க வேண்டும்” என்று கூறி, அதன்பின்னர் அதைப் போன்று செய்ய வேண்டியதில்லை. இல்லை, அது ஒரு புறாவாக இருக்கிறபடியால், அது அதனுடைய உட்புறத்தில் எண்ணெய்யைப் பெற்றுள்ளது, அது அதனை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. புரிகிறதா? அது உண்மையே.

126195 நீங்கள் அதைச் செய்யமாட்டீர்களா? நீங்கள் அந்தவிதமாக அவரை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா? இந்த புதிய வருடத்திற்கு முந்தின மாலையில் அதுவே உங்களுக்கு என்னுடைய போதனையாகும். நான் இதை இந்த சிறிய கூடாரத்திற்கு அறிவுரையாகக் கூறுகிறேன். நான் எப்படியாய் உங்களை நேசிக்கிறேன், நான் இந்த சிறு கூட்ட ஜனங்களை எப்படியாய் நேசிக்கிறேன்! நான் எப்படியாய் எப்பொழுதாவது வந்து, இந்தக் கட்டிடத்தினூடாக நடந்து வந்து அப்படியே நோக்கிப் பார்க்க விரும்புகிறேன். நான் எப்பொழுதுமே எதைக் காண வாஞ்சித்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு சபை, அதைச் சுற்றி பாவமானது கூட இருக்க முடியாது. ஒரு அங்கத்தினர் ஏதோ ஒரு தவறை செய்தவுடனே, ஆவியானவர் அதை கூறிவிடுவார். எனவே அந்த நபர் அதை அறிக்கை செய்து அதை சரிபடுத்திக்கொள்ளும் முன்பு கிறிஸ்தவர்களோடு தன்னை இணைத்துக் கொள்ளவே பயப்படுவான், ஏனென்றால் நீங்கள் ஒன்றாக கூடும்போது, அவன் கூட்டத்தில் அழைக்கப்பட்டுவிடுவான். நீங்கள் அங்கே அதைக் காண்கிறீர்கள், அது அழகாயிருக்கவில்லையா? அப்பொழுது அசுத்தமானவன் உள்ளே வந்து, உங்களுக்கு மத்தியில் அமர்ந்தால், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா? பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகிற அத்தகைய ஒரு வழியில் பேசி, அவைகளைச் சொல்லி விடுகிறார், பாருங்கள். இப்பொழுது அது ஒருவர் பேரில் கிரியை செய்தால், அது மற்றவர் பேரிலும் கிரியை செய்யும். உங்களுக்குப் புரிகிறதா? பார்த்தீர்களா? ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள், நீங்கள் எல்லோரும் ஒரேப் பிரிவாய், ஒரே நபராய், அப்படியே ஒரே நபராய் இருக்கிறபடியால், நாம் யாவரும் இந்த சரீரத்தின் அங்கத்தினர் போல தொடர்ந்து செயல்பட்டு, யாவரும் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களாய், அதே ஆவியினால் நிரப்பப்பட்டு, அதே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்படுகிறோம். அது அற்புதமாயில்லையா? இப்பொழுது நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியும், தேவன் அதை நமக்கு வாக்களித்தார். ஆனால் முதலாவது, மரணம், அடக்கம், மற்றும் அவரோடு உயிர்த்தெழுதல்.

127196 நாம் இப்பொழுது ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. இங்கே சில உருமால்களும் கூட வைக்கப்பட்டுள்ளன. 197 பரிசுத்த தேவனே, கர்த்தாவே, இந்த இடத்தில் நிற்பத்தற்குரிய புனிதத் தன்மையை…நாங்கள் தெளிவாக உணருகிறோம். நாங்கள் தேவனுடைய வீட்டில் இருக்கிறோம் என்பதை நாங்கள் தெளிவாக உணருகிறோம். நாங்கள் தேவனுடைய வீட்டிலிருக்கிற கிறிஸ்துவின் சரீரத்தோடு தொடர்புகொண்டுள்ளோம். சரீரத்தின் அங்கத்தினர்களாக ஒன்று கூட்டப்பட்டிருக்கிறோம். ஒருவர் ஒரு இடத்திலிருந்தும், ஒருவர் மற்றொரு இடத்திலிருந்து வந்து ஒன்று கூடியுள்ளோம். இன்றைக்கு இந்த ஞாயிறு வேதபாட பள்ளியின் பேரில், இது நீண்டதாக இழுத்துக்கொண்டே போய்விட்டது. ஆனால் பிதாவே, இது உம்மால் நியமிக்கப்பட்டுள்ளது என்றும், அதாவது பிறப்பும் உயிர்த்தெழுதலும் என்ன பொருட்படுத்துகிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்ளும்படியாக அது இந்தவிதமாகவே இருக்க வேண்டும் என்றும் நான் விசுவாசிக்கிறேன். அது என்ன பொருட்படுத்துகிறதென்றால் மறுபடியும் பிறந்தாக வேண்டும் என்பதேயாகும். நாங்கள் முதலாவது செய்ய வேண்டிய முதலாவது காரியம், நாங்கள் முறைப்படி மறுபடியும் பிறக்க மரிக்க வேண்டும். நீர் உம்முடைய பிரமாணங்களை ஒருபோதும் மாற்றுகிறதில்லை. இயற்கையின் பிரமாணம் இன்னமும் வழங்குகிறது. எந்த வித்தும் முறைப்படி மறுபடியும் பிறக்க மரிக்க வேண்டும் என்பதே இயற்கையின் பிரமாணமாகும். நாங்களும் கூட முறைப்படி மறுபடியும் பிறக்க மரிக்க வேண்டும் என்பதை நாங்கள் தெளிவாக உணருகிறோம். நீர் எங்களை மன்னியும் என்றே நான் ஜெபிக்கிறேன், இன்றைக்கும் அநேகர், கர்த்தாவே, அநேகர் தாங்கள் கொண்டிருந்த குறிப்பிட்ட அனுபவங்களின் பேரில் சார்ந்துள்ளனர், ஆயினும் அவர்கள் மறுபடியும் பிறந்துள்ளதாக உரிமை கோருகிறார்கள். ஆனால் அவர்களுடைய ஜீவியத்தின் கனிகள்…அவர்கள் தவறான மரத்திலிருந்து கொண்டுவரப்பட்டிருந்தனர் என்பதைக் காண்பிக்கிறது.

128198 அதுவே என்னுடைய காரணமாயிருந்தது, பிதாவே, இந்தக் காலையில் சகோதரன் நெவில் அவர்கள் என்னிடத்தில் பேசி ஒரு செய்தியைப் பிரசங்கிக்கும்படி கேட்டால், நான் அப்படியே ஞாயிறு வேதபாட பள்ளி போதகத்தையே போதிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். பிதாவே, ஆகையால் நான் இதை அன்போடும், என் முழு இருதயத்தோடும் செய்துள்ளேன் என்பதை ஜனங்கள் அறிந்து, அவர்கள் கொண்டிருந்த சில சிறிய அனுபத்தின் மேல் சார்ந்திராமல், தங்களுடைய அன்றாட ஜீவியத்தின் பேரில் முறைப்படி சார்ந்திருப்பார்களாக; அவர்கள் சபையில் இருக்கும்போது, எப்படி அவர்கள் அந்த நேரங்களில் ஜீவிப்பார்கள், வெளிப்புறத்திலிருந்து அந்த பெரிய கடும் நெருக்கடி வரும்போது அவர்கள் எப்படி ஜீவிப்பார்கள். தொல்லை எழும்பும்போது அவர்கள் உதவிக்காக சிலுவையண்டை ஓடுகிறார்களா அல்லது தங்களுடைய சொந்த ஆவியிலும், சொந்த சிந்தனைகளிலும் அவர்கள் நடக்கிறார்களா? அவர்கள் கண்டனம் செய்யப்படும்போது அவர்கள் திருப்பி கண்டனம் செய்கிறார்களா? பிதாவே, அதுவே இந்தக் கேள்வியாய் உள்ளது. எங்களில் எவருமே மற்றவரை இரட்சிப்பது முற்றிலும் கூடாத காரியம் என்பதை நாங்கள் காணும்போது, தேவன் அதற்கு ஒரு உரிய வழியை, ஒரு எல்லாவற்றிற்கும் போதுமான ஒரு பலியை உண்டுபண்ணியிருக்கிறார், நாங்கள் வரக்கூடிய ஒரே வழி அதுவேயாகும். எந்த சபையின் மூலமாகவும், எந்த கோட்பாட்டின் மூலமாகவும், எந்த ஸ்தாபனத்தின் மூல்மாகவும், எந்த உணர்ச்சிவசப்படுதலின் மூலமாயுமல்லாமல் கிறிஸ்துவின் வழியினாலேயே வர முடியும். முதல் மனிதன், அந்த நீதிமான் மரித்ததுபோல, அவன் தன்னுடைய ஆட்டுக்குட்டியோடு பலிபீடத்தின் மேல் மரித்தான். இந்த வேளையில் மற்ற ஒவ்வொரு நீதிமானும் தேவனுடைய வெண்கல பலிபீடத்தின் மேல் தன்னுடைய ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து இயேசுவோடு மரிக்க வேண்டும். அதன் பின்னர் நாங்கள் அவரோடு மரித்து, ஒரு புதிய ஜீவனில் புதியதாக எழுப்பப்படுகின்றோம். கர்த்தாவே, அது இங்குள்ள எந்த இருதயத்திலும் தவறாதிருக்கும்படி அதை அருளும்.

129199 கர்த்தாவே, நாங்கள் இந்தப் பிற்பகல் திரும்பி, மீண்டும் இன்றிரவு ஏழு—முப்பதுக்கு தொடர் கூட்டப் பிரசங்கள் இங்கேத் துவங்க உள்ளபடியால், நாங்கள் இதை இன்றைக்கு சிந்தித்துப் பார்ப்போமாக. கர்த்தாவே, இன்றிரவு வல்லமையான செய்திகளோடு உள்ள உம்முடைய ஊழியக்காரர்கள் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதியும் என்றே நான் ஜெபிக்கிறேன். இதை அருளும். எங்களுடைய ஆத்துமாக்கள் நிரப்படுவதாக. இந்த ஜனங்கள் மிகத் தொலைவிலிருந்து காரோட்டி இங்கு வருகின்றனர், அவர்கள் இந்த புதிய வருடத்தினுடைய மாலை வேளையில் தேவ பெலனாகிய சுவிசேஷத்தினால் நிரப்பப்பட்டு இங்கிருந்து மகிழ்ச்சியோடும், களி கூருதலோடும் புறப்பட்டுச் செல்வார்களாக. கர்த்தாவே இதை அருளும், வருகின்ற வருடதிற்கான ஆவிக்குரிய ஆகாரத்தை அவர்களுக்குத் தாரும். இதை அருளும். 200 எங்களுக்கு விரோதமாக குற்றஞ்செய்தவர்களை நாங்கள் மன்னிக்கிறது போல எங்களுடைய தப்பிதங்களை எங்களுக்கு மன்னியும். நீர், “நீங்கள் உங்கள் இருதயத்திலிருந்து ஒவ்வொரு மனிதனுடைய தப்பிதங்களையும் மன்னியாதிருப்பீர்களேயானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார்” என்றீர். எனவே கர்த்தாவே, நாங்கள் ஒவ்வொருவரையும் மன்னிக்கிறோம். கர்த்தாவே, நாங்கள் விசுவாசத்தினாலே இந்தக் காலையில் எங்களுடைய ஆத்துமாக்களை பீடத்தின் மேல் வைக்கையில், எங்களிடத்திலிருந்து உலக ஜீவியத்தின் ஒவ்வொரு துணுக்கையும் சுட்டெரித்துப்போடும். எங்களுடைய பலியிலிருந்து புகையானது எழும்பி, கர்த்தாவே அது உம்முடைய நாசிகளில் சுகந்த வாசனையாயிருப்பதாக. அதை அருளும், கர்த்தாவே, நாங்கள் ஒரு சுட்டெரிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக வைக்காமல் அங்கே பாவிகளாக, சுட்டெரிக்கப்படும்படியான பாவிகளாக எங்களையே அங்கே வைக்கிறபடியால் ஒரு புதிய பிறப்பின் ஆட்டுக்குட்டிகளுக்குள்ளாக மாற்றப்படுவோமாக. கர்த்தாவே இதை அருளும்.

130201 அதன்பின்னர் எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று, சுகவீனத்தின் தீமையினின்று, மனச் சோர்வின் தீமையினின்று, எங்களை இரட்சித்துக்கொள்ளும். இந்தக் காலையில் கட்டிடத்தில் உள்ள ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும். கர்த்தாவே, இன்றைக்கு சுகவீனமான ஒவ்வொரு நபரும் சுகமடைவார்களாக. ஜனங்களுக்கு முன் வைக்கப்படுகிற மலைகள், அவைகள் இன்றைக்கே பெயர்ந்து போவதாக என்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நான் இந்த வார்த்தைகளை உரைக்கிறேன். அது சுகவீனமாயிருந்தாலும், அது இச்சையாயிருந்தாலும், அது உணர்ச்சிகளாயிருந்தாலும், அது உலகத்தின் எந்தக் காரியமாயிருந்தாலும், அது வழியிலிருந்து அகன்று போய், தேவனுடைய வார்த்தையானது உள்ளே வந்து, அவர்களுடைய ஜீவியத்தில் வெளிப்படுத்தப்படுவதாக. தீமையின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்; கர்த்தாவே, ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனெனில் அவர் என்னை முதலில் நேசித்தார் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. இப்பொழுது ஒருவர் மற்றொருவருடைய கரங்களைக் குலுக்குங்கள். நான் அவரை நேசிக்கிறேன், நான்… அப்படியே சுற்றித் திரும்பி, “வாழ்த்துங்கள், என் சகோதரனே, வாழ்த்துங்கள்!” என்று கூறுங்கள். ஏனெனில் அவர் என்னை முதலில் நேசித்தார் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. தொடர்ந்து இசைத்துக் கொண்டேயிருங்கள்.

131202 இந்த வருடத்தில் உங்களுடைய எல்லா தயவிற்காகவும் நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால் நான் என்னுடைய செய்தியை அநேகமாக ஏழு—முப்பது மணிக்கு அளிப்பேன். நான் சார்லி, நெல்லி, ராட்னி மற்றும் அவருடைய மனைவிக்கும், அவர்களுடைய தயவிற்காகவும் நன்றி கூற விரும்புகிறேன், வேட்டையாடும் பருவகாலத்தில் நான் அங்கிருந்தபோது, அவர்கள் என்னை அவர்களுடைய தகப்பனைப்போலவும், அவர்களுடைய தாயைப்போலவும் நடத்தினார்கள். ஜனங்களாகிய நீங்கள் எல்லோருமே என்னிடத்தில் மிகவும் தயவாய் இருந்து வந்துள்ளீர்கள், உங்களுக்கு நன்றி, சகோதரன் மற்றும் சகோதரி டெள, சகோதரன் ரைட், சகோதரன் பென் அவர்களும் கூட, அநேகர், ஜனங்களாகிய நீங்கள் எல்லோருமே—எல்லோருமே, சகோதரன் பாமர் மற்றும் உங்களுக்குத் தெரியும், ஜியார்ஜியாவிலிருந்து வந்துள்ள நீங்கள் யாவரும், சுற்றிலும் எங்குமுள்ள உங்கள் எல்லோருக்கும் நன்றி. 203 அடுத்தபடியாக மார்ஜியினுடைய தகப்பனார், அவர்கள் நேற்று அழைத்து, அவர் சுகவீனமாயிருந்தாகக் கூறினர். மார்ஜி மற்றும் ராட்னி இங்கிருக்கிறார்களா? அவர்கள் இல்லையா? அந்த வயோதிகர் எப்படியிருக்கிறார்? [சபையில் உள்ள ஒரு சகோதரன், “அவர் சற்று சுகமடைந்திருக்கலாம்” என்கிறார்—ஆசி.] நாம் அப்படியே மெதுவாக, ஜெபம் செய்வோமாக.

132204 பரலோகப் பிதாவே, ஒரு சில வாரங்களுக்கு முன்பு, நான் கென்டக்கியில் உள்ள சாலையின் தூரமாக உள்ள அந்த சிறு நாட்டுப்புற தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது ஒரு வயதான தந்தை தன்னுடைய சாதாரண தளர்த்தியான பணிசெய்யும் ஆடையோடு அங்கே அமர்ந்து, அவருடைய மங்கிப்போன நீல நிற சட்டையோடு நடுங்கிக்கொண்டிருந்தார். அவருடைய கரத்தைப் பற்றிப் பிடித்தபோது, அவர் முடிவை நெருங்கிக் கொண்டிருந்தார் என்பதைக் கண்டேன். ஒரு எளிய வயோதிக தாயார் சில ரொட்டிகளை குழம்போடு புசிக்க என்னை அழைத்தார். கர்த்தாவே அவர்கள் உம்முடைய வார்த்தைக்கு மாத்திரமே மரியாதையை செலுத்திக்கொண்டிருக்கின்றனர். இப்பொழுது அவர் இங்கே உயிர்பிரியும் நேரத்தில் இங்கிருக்கிறார், அவர் எங்களை விட்டு சென்று கொண்டிருக்கிறார். கர்த்தாவே, அவரை ஒரு பாவியாக மரிக்கவிடாதேயும். கர்த்தாவே, இது ஒருகால் எங்களுடைய…உம்முடைய ஊழியக்காரர்களுடைய பிழையாயிருக்கலாம். அந்த ஏழை வயோதிக மனிதன் தன்னுடைய பிள்ளைகளுக்காக சம்பாதிக்க தானிய அரிக்கட்டை அடிப்பதைத் தவிர வேறெதையும் அறிந்திருக்கவில்லை, ஆனால் நான் அவருக்குள் ஒரு நல்ல பெருந்தன்மையான ஆவி உள்ளதைக் கண்டேன். அவரை ஒரு பாவியாக மரிக்கவிடாதேயும். கர்த்தாவே, அவருடைய குமாரத்தி எங்களில் ஒருவராக இருக்கிறாள். எப்படியாய் அந்த எளிய வயோதிக மார்ஜி, அவர்களுடைய தோள்பட்டைகளின் வலியோடு, எப்படியாய் அவள் எனக்கு உதவி செய்து, அங்கு படுத்துறங்க எனக்கு ஒரு படுக்கையை ஆயத்தம் செய்ய முயற்சித்து, மேஜையிலே காலை உணவளித்து, அவளும், நெல்லியும், சார்லியும் மற்றும் அவர்கள் எல்லோரும், தாய் காக்ஸ் அவர்களும் கவனித்துக் கொண்டனர். “அவளோ அழுது கொண்டிருந்தாள்,” அவர்களோ, “தொலைபேசியில் அழைத்து, அவருடைய தந்தையார் மரிக்கப்போகிறார்” என்று கூறினர். அது அவளுடைய தந்தையாயுள்ளது.

133205 கர்த்தாவே, இப்பொழுதே அந்த பிராணவாயு கூடாரத்தண்டை வந்து, அந்த கூடாரத்தை தட்டாமல், அவருடைய அந்த இருதய கூடாரத்தின் வாசலைத் தட்டும். கர்த்தாவே, எங்களில் சிலர் அவரண்டை செல்வதற்கான எங்களுடைய கடமையை நிறைவேற்றாமலிருந்திருக்கலாம். உம்முடைய மற்ற ஊழியக்காரர்களில் சிலர், ஒருகால் அவருடைய வாலிப நாட்களில் அவருடைய சிந்தை விழிப்பாயிருந்தபோது, நாங்கள் அவரை சம்மதிக்கச் செய்யவில்லை என்பது கர்த்தாவே அது எங்களுடைய பிழையாய் இருக்கலாம். ஆகையால் கர்த்தாவே எங்களை மன்னித்து, அவரை உம்முடைய இராஜ்ஜியத்திற்குள் ஏற்றுக்கொள்ளும். பிதாவே இதை அருளும். நாங்கள் இப்பொழுது அவரை உம்மண்டை ஒப்புவிக்கிறோம். கூடுமானால் அல்லது உம்முடைய மகத்தான திட்டமாயிருக்குமானால், நீர் அவரை எழுப்புவீரானால், எங்களில் சிலர் இன்னும் அவரிடத்தில் பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். எப்படியாகிலும், கர்த்தாவே, எங்களுடைய வேண்டுகோள் அவருடைய ஆத்துமாவுக்காய் உள்ளது, ஏனென்றால் அது சீக்கிரத்தில் அதனுடைய பயணத்தை மேற்கொள்ளப்போகிறது, அதோ அங்கிருக்கிற முன்தெரிந்திரா இடத்திற்கு ஓ, மாலுமியில்லாமல், அதோ அங்கிருக்கிற அந்த மூடுபனி மற்றும் பனிசார்ந்த இருளான இடத்தினூடாக அவருக்கு வழிகாட்ட ஒருவருமில்லாமல் பயணிப்பதுபோல அது தென்படுகிறது. கர்த்தாவே, அவர் தன்னுடைய வழியை இழந்துவிடுவார். அந்த வழியை அறிந்துள்ள மாலுமி இந்தக் காலை அவரண்டை வந்து அந்த பண்டைய சீயோனின் கப்பலுக்கு எதிரே இந்த அவருடைய சிறு கப்பலை நங்கூரமிடச் செய்வாராக. அவர் தன்னுடைய பயணத்தை மேற்கொள்ளும்போது, அவர் நிச்சயமாக பாதுகாப்பில் உள்ள தேசத்தண்டை வந்து சேருவாராக. பிதாவே இதை அருளும். நாங்கள் அவரை இப்பொழுது உம்மண்டை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சமர்ப்பிக்கிறோம். ஆமென்.

134நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன். நாம் நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக. ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. 206 நான் இந்தக் காலை பிரசங்கித்ததுபோல, இன்றிரவு நான் சற்று விரைவாகவே செய்தியை பிரசங்கிக்க முயற்சிப்பேன். இப்பொழுது மெதுவாக செல்லவுள்ளேன். உங்கள் எல்லோரையுமே என்னோடு வீட்டிற்கு அழைத்துச் சென்று, உங்கள் எல்லோருக்குமே ஒரு நல்ல இரவு உணவினைத் தர நான் விரும்புகிறேன், என்னால் முடிந்தால் நான் நிச்சயம் அதைச் செய்வேன். ஆனால் கர்த்தர் உங்களுக்கு ஒரு—ஒரு உண்மையான ஆகாரத்தை, ஆவிக்குரியபிரகாரமாக பேசுகிறேன், தம்முடைய நன்மையிலும், இரக்கத்திலும் அளிக்கிறார் என்றும், நீங்கள் அதைப் புரிந்துகொண்டு, நீங்கள் நேசிக்கிற உங்களுடைய இரட்சகரான இயேசு கிறிஸ்துவாகிய அவருடைய முழு வளர்ச்சிக்குள்ளாக வளருவீர்கள் என்றும் நான் நம்புகிறேன். இப்பொழுது நாம் கட்டிடத்தை விட்டு செல்ல, கலைந்து செல்ல ஜெபத்திற்காக நிற்கும்போது, நாம் நம்முடைய பாடலைப் பாட விரும்புகிறோம், நீங்கள் அதற்குக் கீழ்படிய நிச்சயமுடையவர்களாயிருங்கள், இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல் . [சகோதரன் நெவில், “நான் கூற வேண்டிய ஒரு அறிவிப்பு என்னிடத்தில் உண்டு” என்று கூறுகிறார்.—ஆசி.] (என்ன? நீங்கள் போய் கூட்டத்தாரை கலைந்து செல்லும்படிக் கூறுங்கள்.) இப்பொழுது, நாம் இன்னும் ஒரு நிமிடத்தில் ஒரு அறிவிப்பைச் செய்யப் போகிறோம், நாம் நம்முடைய பாடலை பாடுகையில் சீக்கிரத்தில் அந்த அறிவிப்பைப் பெறுவோம். சரி. இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், துயரமும் துக்கமுமான பிள்ளையே; அது உனக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் அளிக்கும், நீ எங்கு சென்றாலும் அதைக் கொண்டு செல். விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும்…சந்தோஷமுமாமே கர்த்தராகிய இயேசுவே இந்த ஜனங்களை சுகப்படுத்தும் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். பூமியின் நம்பிக்கையும்,…சந்தோஷமுமாமே. இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், அது ஒவ்வொரு கன்னிக்கும் ஒரு கேடயமாமே; இப்பொழுது கவனியுங்கள், என்ன. சோதனைகள் உன்னை சுற்றி சூழும்போது, (நீ என்ன செய்வாய்?) அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி விலையேற்றப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே; விலையேறப் பெற்ற நாமம் (விலையேறப் பெற்ற நாமம்), ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமுமாமே.

135207 இப்பொழுது நினைவிருக்கட்டும், “ஒரு மனிதன் ஜலத்தினால் பிறந்தாலொழிய” (அது வார்த்தை, திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால்) “ஆவியினால்” (ஆது பரிசுத்த ஆவியாயுள்ளது, பரிசுத்த ஆவியானவர் வார்த்தையை உறுதிபடுத்துகிறார்), “அவன் பரலோகராஜ்யத்தைக் காண முடியாது” என்ற தம்முடைய முதல் உபதேசமாக இதை ஒவ்வொரு மானிடனுக்கும் இயேசுகிறிஸ்து கூறுகிறார் என்றே நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? புரிகிறதா? “திருவசனத்தைக் கொண்டு,” திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால், வார்த்தையும் சத்தியமும், அவரே சத்தியமாயிருக்கிறார். “தண்ணீரும் ஆவியும்,” ஆவியானது வார்த்தையை உறுதிபடுத்தி எனக்குள் தேவனை ஜிவிக்கச் செய்ய வார்த்தையோடு வருகிறது. புரிகிறதா? அது சம்பவிக்கும் வரை நாம் பரலோக ராஜ்ஜியத்தைப் புரிந்துகொள்ளவே முடியாது. அதன் பின்னர் அது சம்பவிகத் துவங்கும்போது, நாம் வார்த்தை நமக்குள் இருப்பதையும், வார்த்தையினாலும், ஆவியினாலும் பிறந்திருப்பதையும், அது தன்னை வெளிப்படுத்துவதையும், வார்த்தையிலிருந்து விலகாமல் வழி நடத்துவதையும் காண்கிறோம்; ஆவியே என்னை வார்த்தைக்கு வழிநடத்தி, வார்த்தை எனக்குள் ஜீவிக்கச் செய்கிறது, உங்களுடைய ஜீவியத்தில் தேவனை வெளிப்படச் செய்கிறதே!… இல்லையென்றால் நீங்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தை ஒருபோதும் புரிந்து கொள்ளவேமாட்டீர்கள், அதற்குள் ஒருபோதும் பிரவேசிக்கவே முடியாது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் நெவில். 