1 சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. காலை, காலை வணக்கம். சகோதரரே… 2 நண்பர்களே, காலை வணக்கம். கர்த்தருடைய வீட்டிற்கு வந்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி! 3 சற்று முன்னர், ஒரு வயதான போதகருக்கு ஜெபம் ஏறெடுக்க, நான் அழைக்கப்பட்டேன். அவருக்கு மயக்கம் போன்றதான, ஒன்று ஏற்பட்டுவிட்டது. அவருடைய உடல்நிலையில் எந்த ஒரு கோளாறும் இல்லை. அவர் கர்த்தருடைய வயோதிக பரிசுத்தவான் ஆவார். நான் இங்கே வீதியில் வந்துக்கொண்டிருந்தபோது, சாத்தான் என்னை வாந்தி எடுக்க வைத்து, வியாதிக்குள்ளாகத் தள்ள முயற்சித்தான். அப்பொழுது நான், “நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்” என்றேன். அது உண்மை. ஆம். ஆகையால், அவர்தான் சகோதரன் காகின்ஸ். இங்கே கூடாரத்தில், நாம் அவரை நன்றாக அறிவோம். அவர் கரோலினாவிலிருந்து வருகின்றார். அவர் மிக, மிக நோய்வாய்ப்பட்டு, சற்றுமுன்—சற்றுமுன் எழுந்து நின்று சுய நினைவு இழந்து விழுந்துவிட்டார். ஆனால் சரீரப்பிரகாரமாக எந்த ஒரு கோளாறும் அவருக்கு இருப்பதுபோன்று தென்படவில்லை. ஆகவே, அது பிசாசானவன் அவரை சோதிக்க முயற்சித்துக் கொண்டிருத்தல் ஆகும். ஆகவே, அவன் ஒரு பெரிய சோதனைக்காரன், அவன் அதில் மிகச்சிறந்தவனும், கூட. 4 சபைக்குச் சென்று கொண்டிருந்த அந்த வயதான சகோதரியைக் குறித்த கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள், அச்சகோதரி யாரைக் குறித்தும் கெட்டதாகக் கூறவேமாட்டார்கள். “பிசாசைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” என்று கேட்டபொழுது, “பாருங்கள், அவன் அருமையான ஒரு எதிராளியானவன்” என்று கூறினாளாம். அவன்—அவன் அந்த விதமாகத்தான் இருக்கிறான்.
25 இந்த வாரத்தில், இக்காலையில், மறுபடியுமாக நாம் கர்த்தருடைய வீட்டில் இருந்து, கர்த்தராகிய இயேசுவின் வருகைக்காக காத்திருப்பதில் நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோம். 6 மேலும் இப்பொழுது, இக்காலையில், “இரத்தத்தினால் பாதுகாக்கப்படுதல்” என்ற பொருளின் பேரில் பேசப்போவதாயிருந்தேன், ஆனால் பரிசுத்த ஆவியானவர் அப்பொருளிலிருந்து என் மனதை மாற்றினது போல காணப்பட்டது. ஆகவே போதிக்கப்படத்தக்கதாக, வேறொரு பொருளை நான் கொண்டிருக்கிறேன், ஏனென்றால், அதன்பின்னர், பிறகு, கடந்த இரவில், நான், “‘இரத்தத்தினால் பாதுகாக்கப்படுதல்’ என்பதான ஒரு தலைப்பிலிருந்து வேறொன்றுக்கு ஏன் அவர் என் மனதை மாற்றினார்?” என்றேன். அந்தப் பொருள் எங்கிருக்கும் என்பதை நீங்கள் புரிந்துக்கொண்டிருப்பீர்கள், “இஸ்ரவேல் இரத்தத்தின் கீழாக இருந்து வாக்குத்தத்தத்திற்கு அணிவகுத்து செல்லுதல்,” நீங்கள் பாருங்கள். வேறொரு சமயம், அதைப் பேசலாம்.
37 அண்மையில், இங்கே நான் கண்ட ஒரு சொப்பனத்தை, அப்போது நான் நினைவுகூர்ந்தேன். நான், இந்தச் சொப்பனத்தில், நான் கூடாரத்தில் ஆகாரத்தைச் சேமித்து வைத்துக் கொண்டிருப்பதாக அமைந்திருந்தது, நீங்கள் பாருங்கள், இங்கே இந்த சொப்பனத்தில்தான். ஒரு சில வாரங்களுக்கு முன்பு, அந்தச் சொப்பனம் எனக்கு வந்ததை, எத்தனைபேர் நினைவில் கொண்டுள்ளீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அதனுடைய வியாக்கியானத்தை உங்களுக்கு நான் அளிக்க முடியாதிருந்தது. இப்பொழுது அதைக் கேட்க உங்களுக்கு விருப்பமானால், அதற்கு எனக்கு நீண்ட நேரமாகாமலிருந்தால், அதை நான் உங்களுக்குக் கூறுவேன். [“ஆமென்.”] சரி.
48 அர்த்தமுள்ள ஒரு சொப்பனத்தை அடிக்கடியில்லாமல் நான் எப்பொழுதாவது காண்பதுண்டு, வழக்கமாக, நான் படுக்கைக்கு நேரம் கடந்துதான் செல்வேன், சிறிது நேரம் கழித்து விழித்துக்கொள்வேன். நரம்பு தளர்ச்சியுற்றோ அல்லது சோர்ந்துபோயோ இருப்பேன், நீங்களும் சொப்பனம் கண்டு, பிறகு உறங்கி சொப்பனம் கண்டு, பிறகு விழித்துக்கொள்வீர்கள். அது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும், என்னைப் போன்று நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் அதை அறிவர். 9 நான் சகோதரன் உட் மற்றும் சகோதரன் சாத்மனுடன் வெளியே சென்றிருந்தேன், அப்பொழுது கர்த்தர் மக்களுக்கு அளித்துக்கொண்டிருந்தார்…வந்துகொண்டிருந்த…கீழே…இது அரிசோனாவிலுள்ள, டூசானில் சம்பவித்தது. ஒவ்வொரு நபருடைய காரியங்களிலும், கர்த்தர் பரிபூரணமாக, சொப்பனங்களுக்கு வியாக்கியானங்களை அளித்துக்கொண்டிருந்தார்.
510 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், யாராவது ஒருவர், ஒரு சொப்பனத்தைக் குறித்து என்னிடம் கூறும்போது, அதன் வியாக்கியானத்தை நான் அளிக்க எனக்கு இருக்கும் ஒரே வழி, நான் அந்த சொப்பனத்தை அப்படியே தரிசனத்தில் பார்ப்பதேயாகும். இங்கே இருக்கின்ற உங்களில் அநேகர் இதை அறிவீர்கள், உங்களில் சிலர் சொப்பனங்களை என்னிடம் கூறுகையில், அந்த சொப்பனத்தில், காணப்பட்ட எல்லாவற்றையும் முழுவதுமாக என்னிடம் கூறுவதில்லை. ஆனால் நான் அச்சொப்பனத்தை, மறுபடியுமாக தரிசனத்தில் காண்கையில், நீங்கள் என்னிடத்தில் கூறாமல் விட்டுவிட்ட காரியங்களை நான் உங்களுக்குக் கூறுவேன். புரிகிறதா? அதை நீங்கள் மறுபடியுமாக காண வேண்டியதாயிருக்கும், பிறகு அவர் அதை உங்களுக்குக் கூறுகிறார். ஆகையால், சில சமயங்களில் அது உங்களை புண்படுத்துவதாக இருக்கும். சில சமயங்களில் அது கடினமானதாக இருக்கும், அவர் கொண்டிருக்கின்ற கருத்துக்கு முரண்பாடானதாக இருக்கும், ஆனால் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும், ஏனெனில் அது கர்த்தருடைய வார்த்தையாகும். புரிகிறதா? ஏனெனில், அவர்கள் அதைத்தான் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஒருபோதும்…அது எப்பொழுதும் சரியானதாகவே இருக்கும்படி, கர்த்தர் என்னிடம் நல்லவராகவே இருக்கின்றார்.
611 ஆகவே அன்றைய இரவு நான்—நான் உறங்கச் சென்றேன், அப்பொழுது நான்தானே, சொப்பனங்கண்டேன். அப்பொழுது நான் நினைத்தேன்…அநேக வருடங்களுக்கு முன்னர், நான் ஒரு நபருடன் குத்துச் சண்டையிடுவதுண்டு. அநேக, உங்களில் பழங்காலத்தவர்கள்… 12 அங்கே கதவண்டையில் நின்று கொண்டிருக்கின்ற சகோதரன் ராய் ஸ்லாட்டரைக் குறித்து, இப்பொழுதுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் நம்மோடே இருப்பது, இங்கே சபையில் இருக்கின்ற, மூத்த அங்கத்தினர்களில் அவரும் ஒருவர் என்று நான் யூகிக்கின்றேன். சகோதரன் ஸ்லாட்டர், சபையின் வயது மூத்த அங்கத்தினர்களில் சரியாக அவரும் ஒருவராவார் என்று யூகிக்கின்றேன். மேலும் நான்—நான்… 13 நான் அவரைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், ராய் ஸ்லாட்டரைக் குறித்து மக்கள் அறியாதிருக்கின்ற அநேக நல்ல காரியங்கள் உண்டு. அது சரியே. அவர் என்னுடைய சகோதரன், அவர் மரித்த பின்பு, அவருக்கு ஒரு முழு மலர் வளையம் வைப்பதைக் காட்டிலும், இப்பொழுதே அவருக்கு ஒரு சிறு பூச்செண்டு, அல்லது ஒரு மலர் மொட்டை நான் கொடுப்பேன். அது சரி. அவரைக் குறித்து அநேக அருமையான காரியங்கள் உண்டு. சகோதரன் ராய் உண்மையாகவே எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு சகோதரனாக இருந்து வருகின்றார், அவரும் அவருடைய குடும்பத்தாரும், அவர்கள் அங்கே வசிக்கின்றனர், அவர் அந்தச் சிறு குடும்பத்திற்காக கடுமையாக உழைத்தார், அவருடைய பிள்ளைகளை அருமையாக வளர்ந்தார். அவருடைய மகன்கள், மகள்கள் எல்லாரையும் எனக்குத் தெரியும், அவருடைய சிறு பையன் மரித்தபோது அந்தப் பையனுடைய அடக்க ஆராதனையில் நான் பிரசங்கித்தேன்.
714 ஒரு காலத்தில் இங்கே, சபையில் ஒரு நபர் வேலை செய்துக் கொண்டிருந்ததை, நான் நினைவுகூருகிறேன். மேலும்…அவன் அந்த வேலையைச் செய்ய வேண்டியவனாக இருந்தான், அவன் ஒரு தச்சனாயிருந்தான். எங்களிடம் அவ்வளவாகப் பணம் இல்லை. அவன் இங்கே உள் வேலையைச் செய்ய வேண்டியவனாக இருந்தான். யாரோ ஒருவன் வேலை செய்ய விருப்பங்கொண்டு வேலைக்கு வந்தான், ஆனால் அவன் வேலை செய்யவில்லை. அவன் வந்து அரைமணி அல்லது சற்று கூடுதலான நேரம் வேலை செய்தான் என்றும், வேலை செய்யும்போது, தன் கால் காயமுற்றது என்றும் கூறினான். அதன்பின்னர் அவன், அந்த காயத்திற்கு எங்களிடம் பத்தாயிரம் டாலர்கள் நஷ்டஈடு கோரினான், சபைக்கு எதிராக அவன் நஷ்டஈடு வழக்கைத் தொடுத்தான். பாருங்கள், அப்போதோ எங்களிடம் ஒன்றுமே இல்லை. அவர்கள் அந்த வழக்கிற்கான தீர்ப்பைப் பெறும் வரைக்கும் அதைக்குறித்து எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. நீங்கள் பாருங்கள், அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த—அந்த மனிதன், அவனுக்கு காப்பீடு இல்லாதிருந்தது, ஆகவே அக்காரியமானது எங்கள் மீது விழுந்தது. நாங்கள் பணம் செலுத்த வேண்டிய, அவசியமே இல்லை.
815 அந்த இரவை நான் மறக்கவேமாட்டேன், அங்கே பின்புறத்தில், நாங்கள் உட்கார்ந்திருந்தோம், ராய் தன்னுடைய பாக்கெட்டிற்குள்ளாக கையை வைத்துப் பார்த்தார். ஒரு பழைய…சகோதரன் ராய், என்னை மன்னிக்கவும். பழைய, கிழிந்த நிலையில் இருந்த சிறு குறிப்புப் புத்தகத்தை எடுத்து, அதில் தான் செய்த துணி சரக்குகள் ஏற்றிச் செல்லும் வேலை, இன்னும் அதுபோன்ற மற்ற வேலைகளைச் செய்து, அதினால் கிடைத்த சில காசோலைகளை எடுத்தார். “பாருங்கள், சகோதரன் பில், நான் அதன் பேரில் இதை அளிக்கவுள்ளேன்” என்றார். 16 அவருடைய சகோதரியான, வயது சென்ற ஈவ்லினா, இப்பொழுது அவள் இங்கே எங்கோ, உட்கார்ந்து கொண்டு இருக்கலாம். அவர்கள், “சகோதரன் பிரான்ஹாம், என்னுடைய சிறு பழைய வீடு, முன்னூறு டாலர்கள் மதிப்பு மாத்திரம் கொண்டது, ஆனாலும் நாங்கள் அதை விற்று ஏதாவது செய்யலாம்” என்று கூறினார்கள். பார்த்தீர்களா? நீங்கள் என்னைக் கேட்டால், அது உத்தமமான, உண்மையான பொருளதவியாகும். அது உண்மையாகவே, என்னுடைய குறிப்பு புத்தகத்தில் குறித்து வைக்கப்பட்டுள்ளது. 17 பிறகு நான் நினைவுகூருகிறேன், அதிலிருந்து சிறிது காலம் கழித்து, நான் வெளியே என் முதல் கூட்டத்தை நடத்தினேன். நான் செயிண்ட் லூயிசில், என்னுடைய முதல் பெரிய கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தேன். ஒரு தந்திச் செய்தி வந்தது, அதில், “என் சிறிய மகள் மரணத்தருவாயில் படுத்துக்கிடக்கின்றாள். சகோதரன் ஸ்லாட்டர், உடனடியாக வரவும்” என்றிருந்தது. நான் உடனடியாக நடந்து சென்று, என் துணிகளை கைப் பெட்டியில் வைக்கத் துவங்கினேன். அவ்வளவுதான் நான் செய்ய வேண்டியிருந்தது. அவருடைய கோரிக்கையை என்னால் தள்ளிப்போடவே முடியவில்லை, நாங்கள் உடனடியாகப் புறப்பட்டு வந்தோம். நான் வீட்டுக்கு வந்து, அறைக்குள்ளாக நடந்து சென்றேன். நியூ ஆல்பனியில் உள்ள கத்தோலிக்க மருத்துவமனையில், அங்கே அந்த மருத்துவமனையில், அதிலிருந்த செவிலியர்கள், அவருடைய சிறு பெண் பிழைக்காது என்று கைவிட்டுவிட்டனர். ஆகவே நாங்கள் அறைக்குள்ளே நடந்து சென்றோம், கர்த்தராகிய இயேசு அவளைச் சுகப்படுத்தினார். அங்கே அவள் இருந்தாள், நீங்கள் பாருங்கள். பார்த்தீர்களா? 18 தண்ணீரின் மேல் ஆகாரத்தைப் போடுவது போல, அது என்றாவது ஒரு நாளிலே உன்னிடமாகத் திரும்பி வரும். என்னுடைய பொருளை விட்டுவிட்டு அப்பால் சென்றுவிட்டேன்; ஆனால் திரும்பவுமாக துவக்கத்திலிருந்து பார்ப்போம்.
919 நான் குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம். இங்கே இப்பட்டிணத்தில் ஒரு நபர் இருந்தார். அந்த நபர் பரிதாபமாக இப்பொழுது மிக மோசமான குடிப்பழக்கத்தில் இருக்கிறார். அவருடைய மகன்களில் ஒருவன் காவல் துறையில் இருக்கின்றான். ஸ்மித், ஜார்ஜ் ஸ்மித், அவரை “ஆறு வினாடி ஸ்மித்” என்று அவர்கள் அழைக்கின்றனர். அவர் எனக்கும் குத்துச்சண்டை பயிற்சி அளித்தார், நாம்…பொன் குத்துச்சண்டை கையுறை போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதற்கு முன்பாகவே நடந்த ஒன்று. நாங்கள் இங்கே அரசாங்க அரங்கத்தில் இருந்தோம். அதில், ஏன், நான் பார்த்ததிலேயே மிகவும் கரடுமுரடான கடினமான நபராவார். அவர் எனக்கு ஒரு அடி மாத்திரமே கொடுப்பார், நான் அப்படியே அந்தரத்தில் சுழன்றுவிடுவேன். நான் எழுந்து நிற்பேன். பின்னர் நான், “நீங்கள் என்னை இவ்வளவு கடினமாக அடிக்கக்கூடாது. புரிகிறதா?” என்பேன். நான், “நீர் என் மூச்சு நின்றுவிடுமளவிற்கு அடித்துக் கீழே தள்ளிவிடுகிறீரே” என்பேன். 20 அதற்கு அவர், “பில்லி, நான் உங்களுக்கு கூறுகிறேன்,” என்று கூறி, “நீங்கள் எவ்வளவாகப் பயிற்சிப் பெற்றவராக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, எவ்வளவாக உடற்பயிற்சி விளையாட்டுகளில் வல்லவராக இருந்தாலும் சரி, உங்கள் உடல் அளவிற்க்கேற்றாற்போல, எவ்வளவு வலிமையுள்ளவராக நீங்கள் இருந்தாலும் சரி,” என்று கூறி, “ அந்தவிதமாகக் குத்தப்படும் ஒரு குத்து இரத்தத்தையே நிறுத்திவிடும்” என்றார். [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை தட்டுகிறார்—ஆசி.] மேலும் அவர், “இப்பொழுது நீ என்னை வெறுக்கலாம், ஆனால் நீ அந்தக் குத்துச்சண்டை வட்டரங்குகளில் நிற்கும்போது, நீயே,” என்று கூறி, “நீ அந்தப் பயிற்சியை மெச்சுவாய்” என்றார். “பயிற்சியில் உங்கள் உடம்பு உடனடியாக அடியை எதிர்க்க, வலிமையைப் பெறும். நீங்கள் கையால் குத்தப்படும்போது, உடனடியாக நீங்கள் தரையில் விழுந்து விடுவீர்கள், நீங்கள் அங்கே விழுந்து கிடக்கும்போது எண்கள் கூறப்படும். ஆனால் உங்கள் உடம்பு பயிற்சியினால் உறுதியாக்கப்பட்டால் அந்த குத்துகளை உங்களால் தாங்க இயலும்,” என்றும், “ஒரு பலமான குத்து உங்களுக்கு விடப்படும்போது நீங்கள் உடனடியாக திருப்பித் தாக்க தயாராகிவிடுவீர்கள்,” “அப்பொழுது நீங்கள்…நீங்கள் திரும்ப துரிதமாக,” என்று கூறி, “அதாவது உடனடியாக எழுந்து மறுபடியுமாக நிற்பீர்கள். குத்துச்சண்டை வளையத்திற்கு வெளியேயும் கூட நீங்கள் குத்தித் தள்ளப்படும்போது, உடனடியாக உள்ளே குதித்து வருவீர்கள்” என்றார். அப்பொழுதுதான் அவர் என்னை பலமாகக் குத்தி வளையத்தை விட்டே வெளியே போட்டார். எனவே அவர், “நீங்கள் அந்தப் பயிற்ச்சியைப் பெற்றுத்தானாக வேண்டும். புரிகிறதா?” என்றார். அவர் என்னைக் கொன்றுபோடும் அளவிற்கு அடிக்க விரும்பினார். அவர் என்னைவிட முப்பது அல்லது நாற்பது பவுண்டுகள் எடை அதிகமாக இருந்தார், அவராலே…அவர் ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்தார், நான் ஒரு மாணவனாக மாத்திரமே இருந்தேன், ஆகவே அவர் என்னை ஏறக்குறைய கொன்று போடும் அளவிற்கு அடித்துக் கொண்டே இருந்தார். அவர், “ஆனால் நீங்கள் குத்துச்சண்டை வட்டரங்கில் நிற்கும்போது இப்பயிற்சியை மெச்சுவீர்கள்” என்றார். அது உண்மையென்பதை நான் கண்டேன்.
1021 அதன்பின்னர், இராணுவத்தில் உள்ள இராணுவ உயர் அதிகாரி வீரர்களுக்கு கடுமையான பயிற்சி அளிப்பதைக் குறித்து நான் கேட்டிருக்கின்றேன். அவர்கள் அந்த உயர் அதிகாரிகளை வெறுப்பார்கள். ஆனால் யுத்தம் வரும்போது, அவனை அவர்கள் நேசிப்பார்கள், ஏனென்றால் அந்த அதிகாரி அளித்த கடுமையான பயிற்சி அப்பொழுது உதவுகின்றது. 22 அந்தவிதமாகத்தான் நானும் கிறிஸ்தவர்களுக்கு பயிற்சி அளிக்க முயன்றேன். “உங்கள் தலைமுடியை குட்டையாக வெட்டிக் கொள்ளாதீர்கள். முகத்திற்கு ஒப்பனை போட்டுக் கொள்ளாதீர்கள். இதைச் செய்யாதீர்கள்.” கடின பயிற்சியை மேற்கொள்ளுங்கள். நான் பாதையின் முடிவில்—உங்களை நான் கொண்டு வரும்போது அதை நீங்கள் மெச்சுவீர்கள். புரிகிறதா? பயிற்சியை, பாருங்கள், அந்தப் பயிற்சியைச் சரியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நாம்—நாம் சரியாக வார்த்தையோடு தரித்திருப்போமாக. அது கடுமையான ஒன்றாக இருக்கலாம், ஸ்தாபன பேதங்கள் துண்டு துண்டாக வெட்டும், ஆனால் நீங்கள் பாதையின் முடிவில் வரும்போது இப்பயிற்சியை நீங்கள் மெச்சுவீர்கள். புரிகிறதா? நீங்கள் அந்த புஸ்தகத்துடனே தரித்து நின்றீர்கள். ஆகவே, என் மனைவி, அவளுடையக் கரத்தைக் கொண்டு என்னை தாங்கிப் பிடித்தாள், நாங்கள் மேலே நடந்தோம்.
1123 மேலும் ஜார்ஜ் ஸ்மித் இப்பொழுது, அவர், தலை நரைத்துப் போயிருக்கின்ற ஒரு மனிதனாக உள்ளார் என்று நான் யூகிக்கின்றேன். அவர் என்னைவிட ஏழு அல்லது எட்டு, பத்து வருடங்கள் வயதில் மூத்தவர் என்று நான் யூகிக்கின்றேன். அவர் குத்துச்சண்டை வளையத்தில் திரும்பவும் வந்து, அவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அங்கே வந்த இந்த வாலிபர்கள், பரந்த தோள்களையுடைய அந்தப் பையன்கள், அவருக்கு ஈடாகக் குத்துச்சண்டை போட அந்தப் பையன்களால் முடியவேயில்லை. அவர்கள்…அவர் அந்தப் பையன்களை ஒரு நிமிடத்தில் அடித்து வீழ்த்திவிடுவார். ஒரு வாலிபப் பையன், “அந்த வயதான மனிதனை அடித்து வீழ்த்திவிட என்னால் முடியும். என்னால் முடியும் என்று நானறிவேன்” என்று கூறினான். ஆகவே அந்தப் பெரிய உறுதியான உடலைக் கொண்டிருந்த அவன் குத்துச்சண்டை வளையத்திற்குள் குதித்தான். அரைநிமிடம் கூட அவனால் நின்று சண்டையிட முடியவில்லை. அவன் வளையத்தை விட்டு வெளியே வந்து, “அந்த பலம் வாய்ந்த குத்து எங்கிருந்து வருகிறது என்று கூட எனக்குத் தெரியவில்லை, நிச்சயமாகவே அவர் ஒரு வீரம் மிக்கவர்” என்று கூறினான்.
1224 அப்பொழுது, சொப்பனத்தில், நான் என் மனைவியை நோக்கிப் பார்த்தேன், நான், “மனைவியே, அந்த நபர்தான் என்னுடைய முதல் பயிற்சியை அளித்தவர் என்பதை நீ அறிவாயா” என்று கூறினேன். 25 ஆகையால், சொப்பனங்கள் விசித்திரமானவை என்று நீங்கள் அறிவீர்கள். நான் ஒரு—ஒரு பெரிய கடல் அருகே வந்தேன், அது மிகவும் அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அந்த படகோட்டி…இப்பொழுது, என் மனைவி, மேடா அப்பொழுது என்னுடன் இருக்கவில்லை. அப்பொழுது, இந்த, அந்த படகோட்டி அங்கே வந்தார், சுமார் இரண்டரை, மூன்று அடி நீளமுள்ள கைத்துடுப்பால் இயக்கப்பெறும் ஒரு சிறு படகை என்னிடமாக அளித்தார். அப்பொழுது அவர் கூறினார்…அப்படகு உண்மையாகவே வெண்மையாய் இருந்தது, பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டு, வெள்ளையாய் இருந்தது. அப்பொழுது அவர், “இதோ உன்னுடைய படகு” என்றார். “ஓ”, நான், “என்னால் இதைக் கொண்டு, அதில், கடக்க முடியாதே” என்றேன். 26 அதற்கு அப்படகோட்டி, “பாருங்கள், இந்த வழியாக மேலும்- கீழுமாக மணிக்கு ஐம்பது மைல் வேகத்தில் இது ஓடும்” என்றார். 27 அதற்கு நான், “இது ஒருக்கால் கடற்கரையருகில் மேலும்-கீழுமாகச் செல்லலாம், ஆனால் அங்கே அது செல்லாதே” என்றேன். புரிகிறதா? நானே கூறினேன். 28 அதற்கு அவர், “சரி, அவர்களோடு செல்” என்றார். நான் பார்த்தபோது, இங்கு அமர்ந்துள்ள சகோதரன் உட், மற்றும் சகோதரன் ஃபிரட், இவ்விரு சகோதரர்களும் நான் சொப்பனத்தைக் கண்ட அந்த இரவு என்னோடு இருந்தனர். அவர்கள் ஒரு சிறு பச்சை நிறப் படகில் நிறைய கயிறுகள், கூட்டம் நடத்தப் பயன்படும் கூடாரக் கயிறுகள், கூடாரங்கள், போன்றவற்றை நிரப்பி அதில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். அந்த படகோட்டி, “அவர்களோடு செல்” என்றார். 29 நானோ, “அவர்கள் படகோட்டிகள் அல்லவே” என்றேன். மேலும் நான் “அது எனக்குத் தெரியும்” என்றேன். நான், “நான் ஒரு படகோட்டி. இந்த சிறு படகைக் குறித்தும், அதை எப்படிக் கையாளுவது என்றும்கூட எனக்குத்—எனக்குத் தெரியும். ஆனால்,” என்று கூறி, நான், “அவர்களாலே, அவர்களாலே அதில் செல்லவே முடியாதே. எப்படியாயினும் அந்த விதமாக செல்லமாட்டேன்” என்றேன். 30 “சரி,” அவர், “அவர்கள் உன்னை நேசிக்கின்றனர்” என்றார். “நீ இங்கே திரும்பிச் சென்று சேமித்து வைக்கலாம் அல்லவா?” என்றார்.
1331 ஆகவே, நான் திரும்பிச் சென்றேன். நாங்கள் ஏற்கனவே சென்றிருந்த அந்த சிறு இடம், கிளாண்டிகே என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு இடம், நாகரீக மக்கள் நடமாட்டத்திற்கு சுமார் நாற்பது மைல்களுக்கு அப்பால் இருந்தது, பண்ணையில் பணிபுரிபவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஒரு சிறு பண்டகசாலை இருந்தது. அந்த இடம் கிளாண்டிகே போன்று இருந்தது, ஆனால் அதைப் பார்த்தபோது இந்தக் கூடாரமாக இருந்தது. நான் சரியாக அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தேன். நான் இதுவரைக் கண்டதிலேயே மிக அழகிய ஆகாரத்தால் நிறைந்த பெரிய பீப்பாய்களை கொண்டு வந்து வைக்கும்படிக்கு, கூப்பிட்டுக் கொண்டிருந்தேன். முள்ளங்கிகள், மூன்று அடி நீளத்திற்கு, காணப்பட்டது; கிழங்குகள், கீரைகள், உருளைக்கிழங்குகள், மற்றும் எல்லாமே இருந்தன. 32 அவர், “அவைகளை அதிகளவில் சேமித்து வை,” என்றார். பார்த்தீர்களா? ஆகவே நான் அங்கே நின்றுகொண்டு, அவைகளைச் சேமித்துக் கொண்டிருந்தேன். 33 அப்பொழுது நான் விழித்துக் கொண்டேன். என்னால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அது ஒரு சாதாரண சொப்பனம் என்று நினைத்து, அப்படியே விட்டுவிட்டேன். சகோதரன் உட் மற்றும் அநேகரிடத்தில் இதைக் கூறினேன். ஆகவே, இதோ அதன் வியாக்கியானம். உங்களிடம் அநேக முறை நான் கூறியுள்ளவாறு, நானும் அதற்காக காத்திருக்க வேண்டியிருந்தது. காரியம் சரியாக அமைவதற்கு முன்னர்; சில குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்தாக வேண்டும். இதோ அதன் வியாக்கியானம். அவர்கள்…
1434 நாங்கள் வெளிநாட்டு ஊழிய அழைப்பிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். என்னுடைய நெருங்கிய நண்பரான, சகோதரன் மைனர் ஆர்கன்பிரைட், பாலஸ்தீன பிரயாணத்திற்குத் தேவையான என்னுடைய மற்றும் என் மனைவியினுடைய பிரயாண செலவுகளை அளிக்கவிருந்தார். ஜூன் மாதத்தில் ஊழியத்திற்காக, ஆப்பிரிக்கா செல்லும் வழியில், நாங்கள் ஸ்விட்சர்லாந்துக்கு செல்ல எத்தனித்திருந்தோம். என் மனைவியும், ரெபேக்காவும், மற்றவர்களும், தாங்கள் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் வழியாக பாலஸ்தீனாவிற்கு செல்லப் போகிறோம் என்று அறிந்து, மிகவும் மகிழ்ச்சிப் பூரிப்பு அடைந்தனர். நான் ஆப்பிரிக்க ஊழியத்தை முடித்து திரும்பி வந்து, அவர்களையும் பிரயாணத்தில் சேர்த்துக்கொள்ளும் வரைக்கும் அவர்கள் அங்கே காத்திருக்கும்படிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆகவே அவர்கள் எல்லோரும் மிகுந்த பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருந்தனர். “கர்த்தருக்கு சித்தமானால்,” எப்பொழுதுமே என்று நான் கூறினதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். “கர்த்தருக்குச் சித்தமானால், நான் வெளிநாட்டு ஊழியத்திற்குச் செல்ல வேண்டுமென்று முயற்சி செய்கின்றேன். ஆனால் இன்னும் சரியாக அதை அறிந்து கொள்ளாமல் இருக்கின்றேன்.” ஆகவே நான் அதன் பேரில் காத்துக்கொண்டிருந்தேன். 35 ஆனால் இதோ அந்த சொப்பனத்தின் அர்த்தம். இந்த திரு ஸ்மித், ஜார்ஜ் ஸ்மித் அங்கே குத்துச்சண்டை வளையத்தில் அவர்தான் என்னுடைய முதல் பயிற்சியாளர், அவருடைய சண்டைக்கு, இந்த தேசத்தில் இன்றைக்கு காணப்படுகின்ற வாலிப ஜனங்கள் யாருமே நிகராகமாட்டார்கள். ஜெப வரிசைக்கும், அவர் தான் என் முதல் பயிற்சியாளர் ஆவார். பார்த்தீர்களா?
1536 அநேக முறை, நான் ஜனங்களை மேலே கொண்டு வரும்போது, தரிசனங்கள் உண்டாகும். பொறுங்கள், ஆம், இந்த ஒன்று, தரிசனம். அந்த ஒன்று தரிசனம். அது நன்றாக ஒருபோதும் கிரியையை உண்டாக்கவில்லை. இப்பொழுது, நான் முதலில் ஆம்பித்தபோது, ஜெப வரிசையில் ஏதோ ஒன்று, சரியாக இல்லை என்று நான் கண்டுபிடிக்கும் வரையில், எந்த ஒரு நபரையும் நான் அனுமதித்ததேயில்லை…அவர் தாமே, என்னை நிறுத்தும்படிச் செய்துவிடுவார், பாருங்கள், அதைக் குறித்து என்னிடம் கூறுவார், பிறகு நான் ஜெப வரிசையில் மக்களுக்காக ஜெபிப்பேன். மேலும், என்னே, அந்த—அந்த ஜெபத்தின் பலன்கள் நூற்றுக்கணக்கான முறை அதிகமாக இருக்கும், ஏனெனில் நான்…ஒரே இரவில் நான் நானூறு அல்லது ஐந்நூறு பேர்களுக்கு ஜெபிப்பேன். இந்த விதமாக, ஒருக்கால் இருபத்தைந்து அல்லது முப்பது, ஒருவேளை அதற்கதிகமாக தரிசனங்கள் இருக்காது. ஒருக்கால் பத்து அல்லது பதினைந்து தரிசனங்கள் உண்டாகும், அப்பொழுது என்னை…நீங்கள் ஏறக்குறைய, அப்படியே வெளியே தூக்கிச் செல்ல வேண்டியதாயிருக்கும். 37 ஆயினும் மறுபடியும் அதே ஜெபவரிசைக்கு ஜெபிக்க வந்துவிடுகிறேன், பாருங்கள், மறுபடியும் என் முதல் பயிற்சிக்கு திரும்பி வருதல். மொத்தத்தில், ஊழியக்களத்தில் எதுவுமே அதேபோல, அல்லது அதனுடனே தரித்திருக்க முடியாது, பாருங்கள், ஏனெனில் அது வார்த்தையாகும். அது ஏதோ ஒரு ஸ்தாபனம் அல்ல. அது வார்த்தையாகும். புரிகிறதா?
1638 அதன்பிறகு, அங்கே, அதனுடைய அடுத்தப் பகுதியை நீங்கள் கவனியுங்கள், அதன் பிறகு மேடா சொப்பனத்திலிருந்து சென்றுவிட்டாள். நான் கடலுக்கு வந்தபோது, அதுவோ: நான் வெளிநாடு செல்வதாகும். 39 இப்பொழுது, அன்றொரு இரவு, சகோதரன் ஆர்கன்பிரைட் என்னை தொலைப்பேசியில் அழைத்தார், முழு உடலும் சிலிர்க்க, “சகோதரன் பிரான்ஹாம், இப்பிராயணம் ஒரு பெரிய விடுமுறையப் பிரயாணமாக இருக்கும். சகோதரன் ஷகரியானுக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது, ஆகவே வெளிநாட்டு ஊழியக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன” என்றார். மேலும் அவர்கள்…ஸ்விட்சர்லாந்து கூட்டம், அங்கே ஒரு இரவு கூட்டத்துக்கு நான் செல்ல வேண்டுமென்று அவர் விரும்பினார். அங்கே ஒரு இரவு கூட்டம் மாத்திரமே நடைபெறுவதாக இருந்தது. பிறகு பிரயாணம் முழுவதும் ஒரு விடுமுறைப் பயணமாகக் கழிக்க வேண்டுமென்றிருந்தது, அந்நாட்டைச் சுற்றிலும் அப்படியே திரிந்து கொண்டிருப்பதுபோல அமைந்திருந்தது. ஓ, அது, இப்பொழுது, அது மிக அருமையான ஒன்றாக இருக்கிறது; சகோதரன் ஆர்கன்பிரைட் கிறிஸ்தவர்களில், உயர்ந்த ஒருவர், மற்றும் எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் மிக நெருங்கிய ஒரு நண்பர் ஆவார்.
1740 மேலும், ஆனால், நீங்கள் பாருங்கள், அந்த சிறிய, வெள்ளை பிளாஸ்டிக் படகில் நான் செல்ல வேண்டும் என்று அவர் விரும்பியது, தேவனுடைய வார்த்தையாகும். என்னை வெளிநாட்டுக்கு அழைக்கத்தக்கதாக, அதில் தேவையான பிரசங்கம் அதில் இல்லை. நான், “ஹூ-ஹூ, அது அல்ல. அதற்காக மாத்திரமா? ஹூ-ஹூ” என்றேன். அவர், “அப்படியானால் செல், அவர்கள் செல்வதுபோல, அவர்களுடன் செல்,” என்றார். 41 நான், “அவர்கள் படகோட்டிகள் அல்ல, பிரசங்கிகள். நான் ஒரு போதகன். அவர்கள் தங்கள் கூடாரக் கயிறுகளுடன், புறப்பட்டார்களானால், அது அவர்கள் ஒரு முழு விடுமுறை பிரயாணம் செல்வதாகும்” என்றேன். ஆனால் நான் அதைச் செய்யமாட்டேன். நான் அதைப் புறக்கணித்தேன். ஆகவே சொப்பனத்தின்—வியாக்கியானம் இதுவேயாகும். புரிகிறதா? 42 அதற்குப்பிறகு, சில இரவுகளுக்கு முன்பு, சகோதரன் ஆர்கன்பிரைட் என்னைத் தொலைப்பேசியில் அழைத்து அதை—அதை அந்த—அந்த என்னிடமாக…கூறினார். நிச்சயமாகவே, சகோதரன் ஹகரியானின் உடல்நிலை காரணமாக, வெளிநாட்டு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன என்று நாம் கேள்விப்பட்டோம். அதனபிறகு அங்கே இல்லை…அங்கே, ஸ்விட்சர்லாந்தில் ஒரே, ஒரே இரவு கூட்டம் தான் எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான்… 43 மேடா தான் பிரயாணத்திற்கு வர முடியாது என்று, முதலில், கூற வேண்டியிருந்தது. எனவே அன்றொரு இரவு, நான் பிளாரிடா, அல்லது ஜார்ஜ்ஜியாவிலிருந்து, நான் மேடாவிற்கு தொலைபேசி அழைப்பு செய்தேன். நான் “சகோதரன் ஆர்கன்பிரைட் என்னை அழைத்து நாம் மே மாதம் இருபதாம் தேதி புறப்படவேண்டும் என்று கூறியுள்ளார்” என்றேன். 44 அதற்கு அவள், “இல்லை முடியாது. முடியவே முடியாது” எனறாள். பார்த்தீர்களா? “பிள்ளைகளுக்கு அப்பொழுது தேர்வு நடந்துகொண்டிருக்கும். எனவே செல்ல முடியாது.” பாருங்கள், அவள் தானே, அழைப்பை ஏற்க மறுக்க வேண்டியதாயிருந்தது, ஏனெனில் அவளும் பிரயாணத்தில் சேர்க்கப்பட்டிருந்தாள். அது அவளுக்கும் ஒரு விடுமுறை பிரயாணமாகும். அதன் அர்த்தம் அதுவாகத்தான் இருந்தது. 45 சொப்பனங்களும் கூட, ஒவ்வொரு காரியமும் ஒரு அர்த்தத்திற்காகவே இருக்கின்றது. ஒவ்வொரு காரியமும் எங்கோ ஏதோ ஒன்றைக் கொண்டதாக இருக்கிறது. ஆகவே, சொப்பனங்கள் வியாக்கியானங்களைக் கொண்டிருக்கின்றன.
1846 இப்பொழுது, திரும்பி வருகையில்…நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக இதை நான் கூறுவேனாக, இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. வீட்டிற்கு வரும், வழியில்… 47 நான் அங்கே செல்வதற்கு சற்று முன்னர், இங்கே நான் மறுபடியும் மறுபடியுமாக கூறினது, ஒரு தரிசனத்திற்குப் பிறகு காலையில் அறையில், ஒரு சத்தம் எனக்கு உண்டானது, ஒரு சர்ப்பத்தைக் குறித்தும், அது கட்டப்பட்டுவிட்டது என்றும், ஆகவே எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதைக் குறித்தும் கூறினது எத்தனை பேருக்கு நினைவிருக்கின்றது? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி] அவர், “பயப்படாதே,” என்றார். “நீ எங்கெல்லாம் போகின்றாயோ அங்கெல்லாம் நான் உன்னோடே இருக்கின்றேன் என்று நான் நிரூபித்திருக்கிறேன் அல்லவா?” என்றார். “உன்னுடைய வேட்டைப் பயணங்களின்போதும் நான் உன்னோடு இருக்கிறேன் என்று நான் நிரூபித்திருக்கிறேன் அல்லவா?” என்றார். நீ புறப்படுவதற்கு முன்பாகவே, நான் உனக்கு என்ன கொடுப்பேன் என்றும் மற்றவைகளையும் நான் உனக்குக் கூறினது நினைவிருக்கிறதா? [“ஆமென்.”] பார்த்தீர்களா? “நான் உன்னோடே இருக்கின்றேன் என்று நான் நிரூபித்துள்ளேன் அல்லவா?” என்று கூறினார். அப்பொழுது உண்மையாகவே ஒரு இனிமையான சத்தம் உண்டாகி, “என்றென்றும் மாறாத இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் நீ போகுமிடமெல்லாம் உன்னோடு இருக்கின்றது” என்றது. அதன் மூலம் நான் அறிந்திருப்பது, நாம் ஏதோ ஒன்றை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம், அது என்னவென்று எனக்குத் தெரியாது. என்னால் கூற முடியவில்லை.
1948 அன்றொரு இரவு, இல்லை அன்றொரு நாள், வீட்டிற்கு வருகையில், இல்லை வீட்டிற்கு வருவதற்கு முன்னர், நான் ஒரு தரிசனத்திற்குள்ளானேன். சில சிறு பையன்களை நான் கண்டேன், மிக ஒல்லியாக இருந்தனர், வாலிபப் பையன்களைப் போலக் காணப்பட்டனர், அல்லது ஏதோ ஒன்றைத், தொப்பிகளை அணிந்திருந்தனர். நாங்கள் நின்று, வேட்டையாடிக் கொண்டிருந்தோம். நான் ஒரு மிகப் பெரிய, பழுப்பு நிறம் போன்று காணப்பட்ட கரடியைச் சுட்டேன். அப்பொழுது அவர்கள் திரும்பி என்னிடமாக, “ஆனால் கூட்டத்தைக் குறித்து சில குழப்பங்கள் உள்ளன” என்று கூறினார்கள். 49 அதற்கு நான், “அது எந்த விதமான ஒரு குழப்பமாக இருந்தாலும் பரவாயில்லை, நான் போக வேண்டும் என்றிருந்தால், அது எங்கே இருந்தாலும் சரி, எப்படியாயினும் நான் செல்வேன், பாருங்கள். அது என்னவாயிருந்தாலும் பரவாயில்லை” என்று கூறினேன். அப்பொழுது அந்தத் தரிசனம் முடிந்தது. அத்தரிசனம் எந்த இடத்தைக் குறிக்கின்றது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது சம்பவிக்கத்தான் போகின்றது. புரிகிறதா? நினைவில்கொள்ளுங்கள், அது சம்பவிக்கத்தான் போகின்றது. அது ஒரு தரிசனமாகும்.
2050 ஆகவே, இப்பொழுது, அடுத்த ஞாயிறு, கர்த்தருக்குச் சித்தமானால், நான் டென்னஸ்ஸியில் இருக்கப்போகின்றேன், அடுத்த சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை, சகோதரன் எம். இ. லிட்டில்ஃபீல்ட் அவர்களோடு, ஓ, அங்கே டென்னஸியிலுள்ள, கிளீவ்லேண்டில் உள்ள சர்ச் ஆஃப் காட் தலைமையகத்தில் இருக்கப் போகிறேன். சகோதரன் எம், இ, லிட்டில்ஃபீல்டின், அவருடைய சபையில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் அவருக்கு பிரதிஷ்டை செய்து வைத்த சபை, டென்னிஸ்ஸியிலுள்ள, கிளீவ்லேண்டில், அடுத்த சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு காலையில் அங்கு இருப்பேன். ஞாயிறு, காலை ஆராதனை மட்டுமே இருக்கும். நானும் என் குடும்பத்தோடு சென்று, திரும்பி வர, அது எனக்கு தருணத்தை அளிக்கும். நான் அவருடைய சபையில் திரும்பவும் வந்து பிரசங்கிப்பேன் என்று, நான் அவருக்கு வாக்குறுதியளித்தேன். அது அடுத்த ஞாயிறாகும். 51 பிறகு, அடுத்து வருகின்ற ஞாயிறன்று, மூன்று அல்லது நான்கு ஜனாதிபதிகளுக்குக் கீழாக பணியாற்றின, வாஷிங்டன் நகர ராஜதந்திரியான சகோதரன் ரோவ்வுடன் சகோதரன் ஆர்கன்பிரைட் இங்கே இருக்கப் போகின்றார். ஒரு புதிய படத்துடன், அந்த ஞாயிறன்று அவர்கள் இங்கே இருக்கப் போகின்றனர். அப்பொழுது கூடுமானால், எல்லோரும் இங்கேயிருக்க முயற்சிக்கும்படிக்கு நான் விரும்புகிறேன். நானும் கூட இங்கே இருக்க விரும்புகிறேன்.
2152 அடுத்து வருகின்ற ஞாயிறு ஈஸ்டர் ஆகும். ஈஸ்டரன்று, இங்கே ஒரு மகத்தான கூட்டம் நடைபெறுமென்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். கர்த்தருக்குச் சித்தமானால், நான் இங்கே ஈஸ்டர் ஞாயிறன்று இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஏனெனில்…வழக்கம்போல, நாம் சூரியோதய ஆராதனையை நடத்தலாம். ஞானஸ்நானம், நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளப் போகின்றவர்கள் எல்லோரும், ஞாயிறன்று இங்கே இருங்கள். நாம் உட்காரும்படிக்கு போதுமான இடம் இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது, அல்லது சிறிது காலமாக, பேசப்படுகின்றது, ஆகவே நாம் பையன்களின் சங்கம் என்ற இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம், எழுநூறு அல்லது எண்ணூறு பேர், உட்காரும் வசதி கொண்ட இடம், இங்கேயிருந்து சற்று தொலைவில் இருக்கின்றது, இங்கே மூலையில் அமைந்திருக்கின்ற ஒரு புதிய சங்கக் கட்டிடம், பிறகு ஞானஸ்நான ஆராதனைக்காக இங்கே திரும்பி வரலாம். பிறகு ஈஸ்டர் காலையன்று நாமெல்லாரும் வசதியாக அமரும்படிக்கு ஏதுவாக, மீண்டும் அங்கே திரும்பி சென்றுவிடலாம். இந்த வாரத்தில், சென்று அதைக் குறித்து நாங்கள் பார்க்கலாமென்றிருக்கிறோம்.
2253 பிறகு அடுத்து வருகின்ற ஆராதனை, அப்பொழுதிலிருந்து துவங்க… இங்கிருந்து நான் இம்மாதம் இருபது-…இருபத்தைந்து அல்லது இருபத்தாறாம் தேதி புறப்படுகிறேன். பிறகு ஏழு…ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் தேதி, நான் இன்னுமாக மேலே சென்று நான்…வான்-…அல்லது விக்டோரியா தீவிற்குச் சென்று, அங்கு சில இந்தியர்களின் மத்தியில் இருப்பேன், அவர்களிடம் செல்ல, ஒரு படகில் செல்ல வேண்டியிருக்கின்றது. 54 என்னுடைய மிஷெனரி நண்பராகிய ஒருவர், சகோதரன், கடந்த இலையுதிர் காலத்தில் ஒரு வேட்டைப் பயணத்தில் அவருடன் இருந்தேன். ஒரு அருமையான வீட்டில், அவருடனும் மற்றும் அவருடைய மனைவியுடனும் இருந்தேன். அவருடைய ஆயுதங்கள், எல்லாமே புதிதாக, வித்தியாசமான இடங்களில் இருக்கின்றன. பாருங்கள், அப்படியாகத்தான் இருக்கிறது. அது தெள்ளுப்பூச்சிகள், மூட்டுப்பூச்சிகள், பாருங்கள், மற்ற காரியங்களுடன் அவர்கள் வாழ்கின்றனர், இவர்களும் இவைகளின் மத்தியில், அந்த இந்தியர்களுடன் வசிக்கின்றனர். அவர் அவர்களெல்லாரையும் கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தார், அவர்களுடைய தலைவர், அவர்கள் எல்லோரும் ஏறக்குறைய கத்தோலிக்கர்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவர்கள் நடுவில் சென்று அந்தத் தலைவனையும், அவருடன் கூட இருந்த எல்லோரையும் சந்தித்து, கூட்டத்திலேயே அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தினார். அவர்கள் தங்கள் படகுகளில், மேலே கீழே சென்று, அந்த கடற்கரையைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தனர். அவர்கள் அந்தக் கடற்கரை முழுவதுமாக, மீன்பிடித்து வியாபாரம் செய்பவர்களாக இருந்தனர். ஆகவே சகோதரன் எடி என்னை அழைத்துக் கொண்டிருக்கிறார், அங்கே செல்ல வேண்டுமென்று, பாருங்கள், எனக்கு ஒரு சிறு உணர்வு உண்டு. 55 பிறகு நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு, ஒரு நாள் பிரயாணம் செய்து, இரண்டு அல்லது மூன்று இரவு கூட்டங்கள் ஃபோர்ட் செயிண்ட் ஜானில் நடத்துகின்றோம். அது அலாஸ்கோ நெடுஞ்சாலையில் உள்ளது. அங்கே இரண்டு இரவுகள்.
2356 பிறகு, வீட்டிற்கு வருகிறோம், மேலும் அந்த…அது ஜூன் மாதம் ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்து தேதி என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, நீங்கள் எல்லோரும் செல்லத்தக்கதான ஒரு இடமாகும், இக்கூட்டங்கள் இங்கே, சதர்ன் பைன்ஸில் நடைபெறவிருக்கின்றது. சற்று முன்னர், இங்கு அருமையான ஒரு கட்டுரைத் தொகுப்பை அளித்த அந்த சகோதரனை நீங்கள் அறிவீர்கள். வழியிலே, அவர் எனக்கு இன்னும் சில பத்திரிக்கைகளை அனுப்பி வைத்தார். நான் அவைகளைக் கொண்டு வந்திருக்க வேண்டும். கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிறு அவைகளை இங்கே நான் வைத்திருப்பேன். அது சதர்ன்பைன்ஸில் நடைபெறும், ஓ, அது இங்கிருந்து சுமார், ஆறு அல்லது எட்டுமணி நேர கார் பிரயாண தூரமாகும், வடக்கு கரோலினாவிலுள்ள, சதர்ன்பைன்ஸ். அல்லது, அது தெற்கு கரோலினாவா? வடக்கு கரோலினா. ஆமாம். அது சரி. அதன்பின்னர், சரியாக, நாங்கள் பத்தாம் தேதி அங்கிருந்து புறப்படலாம்.
2457 பிறகு பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் தேதி, தெற்கு கரோலினாவிலுள்ள, கொலம்பியாவின் சகோதரன் பிக்பையுடன் இருப்போம். அந்த கட்டுரையை எழுதின பிரஸ்பிடேரியனான, அந்த மனிதன் அவர்தான். என்னைக் குறித்து அவர்கள் எழுதப்பட்ட கட்டுரைகளிலே, என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை இதுதான். அவர் ஒரு பிரிஸ்பிடேரியனாயிருந்தார், தெய்வீக பாண்டித்தியப் பட்டம் பெற்றவர், அவர் சிக்காகோவிற்கு வந்து ஒரு கட்டுரையை எழுதினார். அது எதைக் குறித்த கட்டுரை என்று இப்பொழுது நான் மறந்துவிட்டேன். அது மிக அருமையாக இருந்தது. எங்கிருந்தோ அதை தான் கண்டெடுத்தேன், அது ஒரு பத்திரிக்கையில் இருந்தது. “ஒரு பிரஸ்பிடேரியன், ஒரு பெந்தெகொஸ்தே நபரை சந்திப்பதைக்,” குறித்து ஏதோ ஒன்று அல்லது அதைப் போன்ற ஒன்று, “பெந்தெகொஸ்தே தீர்க்கதரிசி ஒரு பிரஸ்பிரியனை சந்திப்பது” என்பது போன்று. ஆகவே நான் அவருடன் இருப்பேன். 58 அதன்பிறகு, கடந்த இரவு, நாங்கள் சகோதரன் ராய் பார்டர்ஸ், அவர்களுடன் தொலைபேசியில் பேசினோம், அவர் முன்னதாகவே மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருக்கின்றார், கூட்டங்களில் ஒத்துழைக்கத்தக்கதாக சுமார் முப்பத்தைந்து மற்றும் நாற்பது சபைகளை அழைத்திருக்கின்ற சில மக்கள் அங்கே இருக்கின்றனர்; கலிபோர்னியாவிலுள்ள, சேடாலியா; மற்றும் கிராஸ் சிட்டி, மற்றும் அங்கிருந்து…அல்லது சரியாகக் கூறினால், கிராஸ் பள்ளத்தாக்கு. பிறகு அங்கிருந்து, ஓரிகான்; அதற்குப்பால்—வாஷிங்டனுக்குள்.
2559 பிறகு சகோதரன் ஆர்கன்பிரைட், வருகின்றார், ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில், நாங்கள் செல்கிறோம், கிறிஸ்தவ வர்த்தகர் குழுவிற்காக ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்வதற்காக அலாஸ்காவிலுள்ள, ஆங்கரேஜ் இடத்திற்கு செல்ல, இப்பொழுது திட்டம் வகுத்துக் கொண்டிருக்கின்றோம், தொடர்ந்து கடினமான, கரடுமுரடான அலாஸ்காவில், ஆறு அல்லது எட்டுநாள் எழுப்புதல் கூட்டம் நடத்த நான் எதிர்பார்க்கின்றேன். அலாஸ்கா எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும், அங்கு நில மற்றும் சுரங்க வேலைக்காரர் இருக்கின்ற இடமாகும்; ஒரு தட்டு பன்றித் தொடைக்கறி மற்றும் முட்டைகளின் விலை சுமார் மூன்று டாலர்கள் ஐம்பது செண்டுகள். அது—அது மிகவும் கரடுமுரடான ஒரு இடமாகும், ஆனால் அவர்களுக்கு சுவிசேஷம் தேவைப்படுகின்றது. 60 இப்பொழுது, நான் பிரயாசிப்பது என்னவெனில், இங்கே நான் போதிக்கின்ற இக்காரியங்களை, இந்த ஆகாரத்தை சேமித்து வைத்து அதைச் சரியாக வைப்பதே ஆகும், இப்பொழுது நான் செல்ல விரும்புகிறேன். எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்குரிய வழிநடத்துதல் இன்னுமாக என்னிடம் இல்லை, ஆனால் ஏதோ ஓரிடத்திற்கு, நான் விதை விதைத்துக் கொண்டே செல்கின்றேன், அதைத் துவங்கிவிட்டேன்.
2661 என் மனைவி, அவள் இங்கு எங்கோ இருக்கின்றாள். அன்றொரு நாள் இல்லினாயிலிருந்து ஒரு பெண் என் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அது என் இருதயத்திற்குள் இருக்கின்ற ஆத்துமாவுக்குள்ளாக என்னை பாதித்தது. அப்பெண்மணி, “சகோதரி பிரான்ஹாம்,” என்று கூறி, “உங்களுக்குத் திருமணமானது முதற்கொண்டு, நீங்கள் மிகவுமாகப் பாடுகள்பட வேண்டியிருப்பதைக் குறித்து எந்தவித சந்தேகமும் கிடையாது, சகோதரன் பிரான்ஹாம் ஊழியத்திற்குச் சென்றுவிட்டிருப்பார், அப்பொழுது பிள்ளைகளை வைத்துக் கொண்டிருப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாகும்” என்று கூறியிருந்தாள். மேலும், “பிள்ளைகள், உண்மையாகவே, தங்கள் அப்பாவிற்காகவும் இன்னும் மற்ற காரியங்களுக்காகவும் அழும் நிலைமை” என்றும் கூறியிருந்தாள். தொடர்ந்து அது, “எவ்விதமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும், ஏனெனில் எனக்கும் ஒரு அருமையான கணவர் இருக்கின்றார்” என்றாள். அவள், “ஆனால் என்னுடைய நிலைமையை உங்களுக்குக் கூறுகின்றேன்” என்றாள். 62 அவள், “கடந்த நான்கு ஆண்டுகளில், எனக்கு—எனக்கு நான்கு பெரிய அறுவைச் சிகிச்சைகள் நடந்தன” என்றாள். அவள், “ஒரு நாளில் பதினைந்து அல்லது பதினாறு மயக்க மருந்து ஊசிகள், எனக்குப் போடுகின்றார்கள்” என்றாள். அவள், “ஒரு வாரத்திற்கு, மூன்று வித்தியாசமான லெக்ஸ்ட்ரான் ஊசிகள் போடுகிறார்கள்” என்றாள். மேலும், “நான் நிறைய தூக்க மாத்திரைகள் உட்கொள்கிறேன், சமீபத்தில், இன்னும் நரம்புகளை அமைதிப்படுத்தவும் உட்கொள்கிறேன். மேலும் அந்த ஊசிகளையும், இரண்டு மடங்களவிற்கு, இரவிலே இரண்டு தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறேன், ஆனாலும் என்னால் உறங்க முடியவில்லை” என்றாள். மேலும் அவள், “என் மருத்துவரோ நிலைமை மோசமாவதற்கு முன்னர் ஒரு மனநலக் காப்பகத்திற்கு செல்லுங்கள் என்று என்னிடம் கூறியுள்ளார். என் மனநிலையைச் சீராக்க ஒருக்கால் அது உதவியாயிருக்கும்” என்றாள். மேலும், “இந்நிலைமையில் எனக்கு உதவ மருத்துவ ஆராய்ச்சியின்படி மருத்துவ புத்தகத்தில் ஒரு வரிக்கூட இல்லை என்று மருத்துவர் கூறுகிறார்” என்றாள். 63 மேலும் அவள், “நான் தற்கொலை செய்துகொள்ள எதிர்நோக்கிக்கொண்டிருந்து, என் அருமையான கணவரையும் என் சிறு பெண்ணையும் விட்டு கடந்து சென்று விடலாம் என்று, திட்டமிட்டுக் கொண்டிருந்தேன்” என்றாள். அவள், “நாங்கள் கான்சாஸில் குடியிருக்கின்றோம். அதை நான் விரும்புகிறேன், ஏனென்றால் கோதுமை முதிர்வடைவதை நாங்கள் காண்கிறோம், அறுவடைக் குறித்து நாங்கள் சிந்திக்கின்றோம்” என்று எழுதியிருந்தாள்.
2764 அவள் ஒரு மெத்தோடிஸ்ட் என்று நான் நினைக்கின்றேன். மேலும் அங்கே…அப்பொழுது, பதினோறு மாதங்களுக்கு முன்பாக இல்லினாயிலுள்ள, புளூமிங்டனில் இருக்கின்ற, மெத்தோடிஸ்ட் கல்லூரியில் நான் அங்கே வர இருப்பதாக அறிவித்த, ஒரு தாளை அவர்கள் எடுத்தனர். அந்த புளூமிங்டன் கூட்டங்கள் பற்றி உங்கள் அநேகருக்கு நினைவிருக்கும். நீங்கள் அங்கே இருந்தீர்கள். 65 மேலும் அவள், “என் கணவர் என்னையும் சில நண்பர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்” என்று குறிப்பிட்டிருந்தாள். மேலும், “இன்னும் ஒரு நாள் கூட என்னால் தாங்க முடியாது என்பதைக் கர்த்தர் அறிவார்” என்றும் குறிப்பிட்டிருந்தாள். அவள் மிக மோசமான நிலையை அடைந்திருந்தாள். மேலும், “நான்தான் முதல் நபராக இருந்தேன். அப்பொழுது உங்கள் மகன், பில்லிபால், எனக்கு ஒரு ஜெப அட்டையைக் கொடுத்ததார். அன்றிரவு, உங்கள்—உங்கள் கணவர் ஜெபஅட்டை எண்களை அழைத்தபோது, வரிசையில் ஜெபிக்கப்பட முதல் நபராக நானிருந்தேன்” என்றாள். மேலும், “நான் பிரசங்க மேடைக்கு வந்த உடனே,” என்று கூறி, “அவர் என் வாழ்க்கையைக் குறித்தும் நான் என்ன செய்திருந்தேன் என்பதையும், அதைக் குறித்த எல்லாவற்றையும் என்னிடம் கூறி, ‘ கர்த்தர் உரைக்கிறதாவது , அது முடிவு பெற்றுவிட்டது’” என்று கூறினார். “அந்த நிமிடத்திலிருந்தே, எனக்கு மற்றெந்த வலியும் ஏற்படவேயில்லை” என்றாள். “அப்பொழுது எனக்கு எழுபது பவுண்ட் எடை இருந்தது. இப்பொழுது என் எடை நூற்று அறுபது பவுண்டாக உயர்ந்துவிட்டது” என்றாள். மேலும், “சகோதரி பிரான்ஹாம், நீங்கள் தனிமையில் இருக்கும்போது” என்று கூறி, “உங்கள் கணவரை உலகத்தோடும், அதைப்போன்ற காரியங்களோடும் நீங்கள் பகிர்ந்து கொள்ளும்போது, தனிமையில் எவ்விதமாக நீங்கள் உணர்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால்,” என்று கூறி, “அவர் கர்த்தருடைய காரியத்தைச் செய்ய மனதாயிருந்ததால்தான், ஒரு சிறு கான்சாஸ் குடும்பத் தலைவி இன்றைக்கு விடுவிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை, நினைவில் கொள்ளுங்கள்” என்று எழுதியிருந்தாள். 66 இதை நான் பில்லியிடம் காண்பித்தேன். நான், “பில்லி, இக்கடிதத்தை அந்த மெத்தோடிஸ்ட் கல்லூரிக்கு அனுப்பு” என்று கூறினேன். அவன் ஒரு கடிதக் குவியலைக் கொண்டு வந்து, “இவைகளில் சிலவற்றை வாசித்துப் பாருங்கள்” என்றான். 67 அதற்கு நான், “எனக்குத் தெரியும். அக்கடிதங்கள் அற்புதமானவை என்பது எனக்குத் தெரியும், ஆனால் இக்கடிதம் ஒன்று போதும். இது அந்த இடத்திற்குப் போதுமானது” என்றேன்.
2868 நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? “‘அசுத்தம்! அசுத்தம்!’ அந்த தீய ஆவிகள் அவனை வெளியே விரட்டியிருந்தன,” பாருங்கள், அவனுடைய நிலையைப் பாதித்து, “கல்லறைகளுக்குள்ளாக அவனை விரட்டிவிட்டன. இயேசு வந்தபோது, அந்த கட்டுண்டு கிடந்தவனை விடுதலையாக்கினார்.” இயேசுதான் வார்த்தை. ஆகவே, வார்த்தையை எற்றுக்கொள்ளுங்கள், அது கட்டுண்டு கிடப்பவர்களை விடுதலையாக்கும். 69 இதோ நான் பேசிக்கொண்டே இருக்கின்றேன், என்னுடைய நேரத்தையும் எடுத்துக் கொள்கிறேன், உங்களுடைய நேரத்தையும் எடுத்துக் கொள்கிறேன், கூற வேண்டியது மிக அதிகம் இருக்கின்றது. நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
2970 கர்த்தாவே, அழிவுள்ள மானிடர்களாக, பேசுவதற்கு அதிக நேரம் எங்களுக்குக் கிடையாது என்பதை நாங்கள் அறிவோம். நான் இந்த சிறு கூட்டத்தினரைக் காண்கையில், இருதயத்தில் பசி கொண்டவர்களாய் இந்த யாத்திரீக கூட்டத்தார் வயலிலிருந்து, விவசாய வேலையிலிருந்து வந்துள்ளனர், இவர்களில் சிலர் பொதுப்பணியிலிருந்தும், வேலையிலிருந்தும் இங்கு வந்துள்ளனர், சிலர் மலைகள், பாலைவனங்கள், நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களினூடாக கடந்து காரோட்டி வந்த பிறகும், இங்கே கூடி வந்து, நிற்க வேண்டியதாயுள்ளது. ஆனால் இவர்கள் யாத்ரீகர்களாவர். இவர்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்கள் இங்கே ஒரு சாட்சிகளாக மாத்திரமே, ஒரு மலையின் மேல் வைக்கப்பட்ட விளக்குகளாக, தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமுதாயத்தினருக்கு மத்தியில் வெளிச்சத்தைப் பிரகாசிக்கின்றவர்களாக இருக்கின்றனர். ஆகையால் வார்தையினாலே சக்தியூட்டப்பட்டு, மறு பிரதிஷ்டைக்காக, இவர்கள் ஒன்று கூடுகையில், அவர்கள் நிற்கின்றனர், தங்கள் கால்களில் தசைப்பிடிப்பு உண்டாகும் அளவிற்கு நிற்கின்றனர், மேலும்—வாலிபர் மற்றும் வயோதிபர் ஒன்று சேர நிற்கின்றனர்.
3071 கர்த்தாவே, அவர்கள் உம்மை நேசிக்கின்றனர். அதன் காரணமாகத்தான் அவர்கள் இங்கே இருக்கின்றனர். மற்றவர்களுக்கு காணப்படும்படிக்கு, ஒரு நபர் அநேக மைல்களாக காரோட்டி வந்து, சுவர்களில் சார்ந்துக் கொண்டு, கால்களின் தசைபிடிப்பு உண்டாகும் அளவிற்கு நின்று கொண்டிருக்கமாட்டார் என்பதை எவரும் அறிவர். இந்தக் குழுவோடும், கர்த்தாவே, நாங்கள்—நாங்கள் ஏழை ஜனங்கள். நாங்கள் அழகான உடையணிந்து வரவில்லை. உம்மை ஆராதிக்கவே நாங்கள் இங்கே வந்துள்ளோம். எங்கள் இருதயத்தில் ஒரே ஒரு நோக்கம், ஒரேயொரு காரணம், ஒரேயொரு கருத்துதான் உள்ளது, கர்த்தாவே, அது நீர்தான். 72 தேவனே, நீர்தாமே இவர்களுக்கு அதிகமான பலனை அளிக்கும்படியாக, நான் ஜெபிக்கிறேன். ஒரு நபர் கூட இன்று நித்திய ஜீவனைக் கொண்டிராமல், இன்றிரவு, இந்த வாசல்களினூடாக கடந்து செல்லலாதிருப்பார்களாக. “பாதையின் முடிவை நாங்கள் சென்றடையும்போது, பாதையின் பாடுகள், கஷ்டங்கள் ஒரு பொருட்டாக ஒன்றுமே இல்லாத ஒன்றாக காணப்படும்.” கர்த்தாவே, இவர்கள் வியாதிப்பட்டிருந்தால், இவர்களைச் சுகமாக்கும். 73 இப்பொழுது மற்ற கூட்டங்களைக் குறித்துப் பேசினோம், நிச்சயமாக செல்லப்போகின்றேனா என்பதை அறியாதவனாக இருக்கிறேன், அது உம்முடைய சித்தமாயிருக்குமானால், விதைகளை மாத்திரம் தூவிவிட்டு வருகிறேன். அவை சரியான நிலத்தில் விழுமானால், அவை முளைத்தெழுப்பும். ஆதலால் நீர் தாமே அவ்விதைகள் சரியான நிலத்தில் விழச் செய்யும்படிக்கு வழி நடத்த வேண்டுமென்று, கர்த்தாவே, நான் ஜெபிக்கின்றேன்.
3174 இங்கே பிரசங்க மேடையில், அல்லது பிரசங்க பீடத்தில், இங்கே இக்காலையில் இருக்கின்ற இந்த கைக்குட்டைகள், சிறு துணி பொட்டலங்கள் இருக்கின்றன. அது சுகவீனமாயுள்ளோரையும், தேவையுள்ளோரையுமே பொருட்படுத்துகிறது. கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி இக்கடைசி நாளில் பரிசுத்த ஆவியின் ரூபத்திலே, அவரை எங்களுக்கு அளித்துள்ள, ஓ பரலோகத்தின் தேவனே, கீழே நோக்கிக் கொண்டிருக்கும் சர்வவியாபியானவரே; சர்வ ஞானியே, எல்லாவற்றயுமே அறிந்தவரே; சர்வ வல்லமையுள்ளவரே, எல்லா வல்லமையுமுள்ளவரே. இந்த சிறிய பொட்டலங்களைக் கண்ணோக்கிப் பாரும். இவை தாமே, வியாதியஸ்தரையும், அவதியுறுவோரையும் தொடுகையில், பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய காதுகளுக்கான இந்த ஜெபத்தை உயிர்ப்பியும், அப்பொழுது அவர்கள் உடனடியாக சுகமடைவார்களாக. 75 கர்த்தாவே, அந்த எளிய ஏழைப் பெண்ணைக் குறித்து நினைக்கின்றோம். நான், “இன்றைக்கு அங்கே கான்சாஸில் வசிக்கின்ற அவள், மகிழ்ச்சியோடு, ஒரு வலி கூட இல்லாமலிருக்கிறாள். அவளிடம் எந்த ஒரு கோளாறு இருப்பதாக எந்த மருத்துவராலும் கண்டறிய முடியவில்லை. வலிகளே இல்லை, மயக்க மருந்துகள் இனித் தேவையில்லை, தூக்க மாத்திரைகள் இனித்தேவையில்லை; அருமையான ஆழந்த உறக்கம் அவளுக்கு வருகிறது, எல்லாமே சரியாக இருக்கின்றது” என்ற அவளுடைய சாட்சியை வாசித்தேன். ஓ, கர்த்தாவே, உண்மையாகவே, நீ வரும்போது, அப்பொழுது எல்லாமே சரியாகி இருக்கின்றது, அதற்காக உமக்கு நாங்கள் நன்றியை ஏறெடுக்கிறோம். 76 இப்பொழுது, பிதாவே, நாங்கள் வார்த்தைக்கு திரும்பும்போது, உம்முடைய வார்த்தையை ஆசீர்வதியும். அதுதாமே உம்மிடமாக வெறுமையாக திரும்பாதிருப்பதாக, ஆனால் எந்த நோக்கத்திற்காக அது வைக்கப்பட்டிருக்கிறதோ மற்றும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தாமே நிறைவேற்றுவதாக. இயேசுவின் நாமத்தில் நாங்கள் அதைக் கேட்கின்றோம். ஆமென்.
3277 இப்பொழுது, எல்லோருக்கும், ஒவ்வொருவருக்கும் தெளிவாகக் கேட்கின்றதா? அங்கே பின்புறத்தில் உள்ளவர்களுக்கு, சரியாகக் கேட்கின்றதா? எந்த விதத்தில் சரியாக கேட்கின்றது, இந்த விதமாக பேசும்போது, அல்லது இந்தப் விதமாக பேசும்போதா? இங்கே, இந்த பக்கம் நின்று பேசும்போது நன்றாக கேட்கிறதா? பின்னால் உள்ள உங்கள் எல்லாருக்கும் நன்கு கேட்கிறதா? சரி, அப்படியானால் இதை இன்னும் இங்கே, அருகாமையில் இழுத்துக் கொள்கிறேன். 78 கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரு வாரத்திற்கு முன்னர், சிறிது தாமதமாக நான்—நான் முடித்தேன், சற்று நீண்ட ஒரு ஆராதனையாக இருந்தது. அந்தவிதமாகச் செய்ய நான் விரும்புவதில்லை. இப்பொழுது, எப்பொழுதாவது ஒரு முறை, அது என்னைச் சிறிது கூட தொல்லைப்படுத்துவதில்லை, யாராவது உட்கார்ந்துக் கொண்டிருக்கையில், நின்று கொண்டிருப்பவர்களைக் காண்கையில், அவர்களுக்கு தங்கள் இடத்தை அளித்து, சிறிது, அவர்களுக்கு ஓய்வளிக்கிறார்கள். அது ஒரு அருமையான கிறிஸ்தவ செயலாகும். இப்பொழுது, இப்பொழுது, இந்த வருகின்ற ஈஸ்டரன்று அந்த முக்கிய ஆராதனையை வேறொரு இடத்தில் நாம் நடத்தலாம்.
3379 இப்பொழுது இக்காலை, நாம் வேதத்தைத் திருப்ப விரும்புகிறோம். போர் வீரர்களாகிய நீங்களெல்லாரும் உங்களுடைய—உங்களுடைய பட்டயத்தை இப்பொழுது எடுத்துக்கொள்ளுங்கள், நாம் சத்துருவின் மீது போர் பிரகடனஞ் செய்யப் போகிறோம். வழக்கமாக பாடும் ஒரு சிறு பாடல் உங்களுக்குத் தெரியும்: ஓ கிறிஸ்தவ போர்வீரனே, யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது, வரிசையில் கடுமையான முகத்தைக்கொண்டு முகமுகமாக. அந்தப் பாடலை நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள். மிணுக்கின்ற போர்க்கவசங்கள், காற்றில் அசைவாடும் வண்ணங்கள், சரியானதும் தவறும் ஒன்றுக்கொன்று இன்று எதிரெதிர்க் கொண்டுள்ளது. புரிகிறதா? அது சரி. யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் சோர்ந்து போகாதே, பலங்கொண்டிருந்து அவருடைய சத்துவத்தில் அப்படித் தரித்து நில்லு; தேவன் நமக்காக நிற்பாரானால், அவருடைய கொடி நம்மீது பறக்கும், முடிவில் நாம் வெற்றியின் கீதத்தைப் பாடுவோம்.
3480 அது உண்மை. முதலில், பரிசுத்த யோவான் 10-ல் உள்ள வேதவசனங்களைக் கண்டறிந்து வாசிக்கும்படியாக, இப்பொழுது நாம் திருப்பி, முதல் ஐந்து வசனங்களை வாசிக்க விரும்புகிறோம். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆட்டு தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறு வழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர் சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டு போகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்து போகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின் செல்லாமல் அவனை விட்டோடிப்போம் என்றார்.
3581 இப்பொழுது, இக்காலை நான் சிறிது நேரம் போதிக்கத்தக்கதாக நான் தேர்ந்தெடுத்துள்ள, பொருள்: விசுவாசமும் அதற்கெதிரான அறிவுக்கூர்மையும். விசுவாசமும் அதற்கெதிரான அறிவுக்கூர்மையும். 82 இப்பொழுது, இரண்டு மூல ஆதாரங்கள் அல்லது இந்த இரண்டு மூல ஆதாரங்களைக் கொண்டு, நாம் வாழ வேண்டியவர்களாக இருக்கின்றோம். உங்களுக்கு அது தெரியுமா? இப்பொழுது நாம்… 83 நான் இங்கே அநேக வேத வசனங்களை எழுதி வைத்திருக்கின்றேன். ஆகவே நான் விரும்புவது…நாம் தொடர்ந்து செய்தியினூடாக, அவைகளை மேற்கோள்களாக எடுத்துக் கொள்ளலாம். மேலும்—மேலும் நான் கூடியவரையில் சீக்கிரமாக முடிக்க முயல்வேன். முயற்சிக்காமல்…அதிலிருந்து நீங்கள் காரியங்களை எடுத்துக்கொள்ளும்படி, அதை அப்படியே முன் வைத்துவிடுகிறேன். புரிகிறதா? 84 ஆனால் நாம் நம்முடைய ஜீவியத்தை அமைக்கத்தக்கதாக இரண்டு மூல ஆதாரங்கள் மாத்திரமே இருக்கின்றன. அவைகளில் ஒன்று அறிவுக்கூர்மை, மற்றொன்று விசுவாசம் ஆகும். அறிவுக்கூர்மை எதைப் பிறப்பிக்கின்றது என்றும், அதன்பின்னர் விசுவாசம் எதைப் பிறப்பிக்கிறது என்றும் நாம் நினைக்கையில்! ஆனால் அந்த இரண்டு மூல ஆதாரங்களை, நாம் இக்காலையில் திரும்பிப் பார்த்து ஞாயிறு ஆராதனைப் பாடமாக அதை எடுத்துக்கொண்டு, அவைகளை வேதாகமத்திலிருந்து எடுத்து; அவை என்னவென்றும், அவை என்ன செய்யப் போகின்றது என்றும், மற்றும் அவை என்ன செய்திருக்கின்றது என்றும், கர்த்தருடைய உதவியைக் கொண்டு பார்ப்போம்.
3685 இப்பொழுது, விசுவாசம் மற்றும் அறிவுக்கூர்மை. இப்பொழுது, துவங்குகையில், அதை, ஆதியாகமம் 1-ம் அதிகாரத்தில், நாம் கவனிப்போம். விசுவாசம் காட்சியில் கொண்டுவரப்படுகின்றது என்பதையும், அறிவுக்கூர்மை காட்சியில் கொண்டுவரப்படுகிறது என்பதையும்—என்பதையும் நாம் கண்டறியலாம். இன்றைக்கும், அந்த இரண்டு மூல ஆதாரங்களும் இன்னுமாக மனித இனத்திற்கு காட்சியில் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்கள் விசுவாசித்து அவருடைய வார்த்தையை நம்பத்தக்கதாக, விசுவாசிக்கத்தக்கதாக, விசுவாசத்தின் ஆக்கியோன் தேவன், என்பதை, நாம் கண்டறிகிறோம். அறிவுக்கூர்மையின் ஆக்கியோன் சாத்தான், மக்கள் தன்னுடைய மதிநுட்பத்தை ஏற்றுக் கொள்ளவும், தேவனுடைய வார்த்தையில் உள்ள விசுவாசத்திலிருந்து அவர்களை அப்புறமாக இழுத்துக்கொள்ளவும் அவன் முயற்சித்துக் கொண்டிருக்கிறான். இந்த இரண்டு மூல ஆதாரங்கள்.
3786 இந்த மூலமுதல் அதிகாரமாகிய, இந்த ஆதியாகமம், அந்த விதமாகத் துவங்குவது, மிக விநோதமான ஒன்றாக உள்ளதை நாம் காண்கிறோம். இன்றைக்கு, நாம் கொண்டிருக்கின்ற இந்த எல்லா காரியங்களையும் நாம் காண்கையில், முதலாவதாக ஆதியாகமத்தில்தான் அவை துவங்கின, ஏனெனில் ஆதியாகமம் என்கின்ற வார்த்தைக்கு “துவக்கம்” என்று அர்த்தமாகிறது. இன்றைக்கு, இருக்கின்ற இந்த காரியங்களை, இவை இருக்கின்ற விதத்தை நாம் காண்போமேயானால், அவைகளுக்கு எங்கேயோ ஒரு துவக்கமானது இருந்தாக வேண்டும். ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு துவக்கம் இருப்பதை நீங்கள் பின்தொடர்ந்து சென்று பார்க்க வேண்டும்.
3887 இங்கே உங்களுக்கு ஒரு சிந்தனைக்கான ஒரு சிறு கருத்து, துவக்கத்தைக் கொண்டிருக்கின்ற ஒவ்வொன்றுக்கும், ஒரு முடிவு இருக்கின்றது. ஆனால் துவக்கம் இல்லாத காரியங்களுக்கு, முடிவென்பதே கிடையாது, நித்தியமான காரியங்களுக்கு மட்டுமே. 88 ஆகவே, நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். “தேவனைக் குறித்த நித்திய குமாரத்துவம்” என்கின்ற வார்த்தைக்கு ஒரு சிறு அர்த்தத்தை நம்மாலே கண்டெடுக்க முடியுமா? அவர் ஒரு குமாரனானால், அவருக்கு ஒரு துவக்கம் இருந்தது. அவர் நித்திய குமாரன் என்றால், அவர் எப்படி ஒரு குமாரனாக இருந்து மேலும் நித்தியமானவராக இருக்க முடியும்? ஏனென்றால், குமாரன் என்பது ஏதோ ஒன்றினால் பிறப்பிக்கப்பட்ட—ஒன்று. ஆனால், அவர்—அவர், ஒரு நித்திய குமாரனாக இருக்கவே முடியாது. தேவனுடைய “நித்திய குமாரன்” என்கின்ற ஒன்று கிடையவே கிடையாது. ஏனென்றால், அவருக்கு—அவருக்கு துவக்கம் என்கின்ற ஒன்று இல்லாதிருக்கும் பட்சத்தில், நித்தியமானவராக இருப்பதை தவிர வேறொன்றுமாக அவரால் இருக்கமுடியாது. ஆனால், அவர் ஒரு குமாரனானால், அவர் ஒரு துவக்கத்தையுடையவராக இருப்பார், ஆதலால் நித்திய குமாரனாக அவரால் இருக்க முடியாது. 89 அது நித்திய தேவன் ஒரு குமாரனுக்குள் வெளிப்பட்டதாகும். ஹூ-ஹூ. புரிகிறதா? நித்திய தேவன், ஏனெனில் தேவன் மாத்திரமே நித்தியமானவராயிருக்கிறார்.
3990 நாம் நித்திய ஜீவனைக் கொண்டிருப்பதால் மாத்திரமே நம்மால் என்றென்றுமாய் ஜீவிக்க முடியும். இந்தச் சரீரம் மரித்துப் போகின்றது, நம்முடைய எல்லா பாகங்களும் மரிக்கின்றன. ஆனால் நித்தியமாக இருக்கின்ற பாகமானது தேவனாகும், அதினால் மரிக்கவே முடியாது. இப்பொழுது, இப்பொழுது, அந்த வார்த்தை, வேதாகமம், நித்தியமானதாகும், ஏனெனில் அது வார்த்தையின் ரூபத்தில் உள்ள தேவன் ஆகும். ஆகவே தேவனுக்குள்ளாக இருந்தது என்னவென்றால், அவருடைய சிந்தைகளுக்குள்ளாக, உரைக்கப்பட்ட வார்த்தை என்பது இருப்பதற்கு முன்பாக இருந்தது என்னவென்றால், அது தேவனாகும். உங்களால் அதைக் காணமுடிகின்றதா? அது தேவனாகும். ஆதலால், முன் குறிக்கப்பட்டவர்களாக, நாம் இருக்கிறபடியால்; “நாம்,” நம்புகிறோம் என்று நானும் கூட முன்குறிக்கப்பட்ட உங்களுடன் சேர்ந்து கூறுகிறேன்; அந்தக்—அந்தக் காரியங்கள் நித்தியத்தில் தேவனுடன் இருந்தன. 91 ஆகவே, நீங்கள் மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளையானால், நீங்கள், உங்களில் பரிசுத்த ஆவியைக் கொண்டிருப்பீர்களானால், ஒரு வார்த்தை இருப்பதற்கு முன்பே நீங்கள் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் வெளிப்படுத்தல்களாயிருக்கிறீர்கள். அது ஒரு வார்த்தையாக இருப்பதற்கு முன்னர் ஒரு எண்ணமாக அது இருந்தாக வேண்டும். ஒரு வார்த்தை என்பது உரைக்கப்பட்ட எண்ணமாகும். ஆகவே அந்த எண்ணங்கள் தேவனுக்குள் இருந்தன, ஆகவே நாம் நித்தியத்தில் தேவனுக்குள்ளாக இருந்தோம், நாம் வார்த்தையாலே உரைக்கப்பட்டு காட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளோம். ஓ, என்ன ஒரு…எந்த வார்த்தையைக் கொண்டு? இந்த வார்த்தை, தேவனுடைய வார்த்தை.
4092 இப்பொழுது, தேவன் விசுவாசத்தின் ஆக்கியோன் ஆவார். சாத்தான் அறிவுக்கூர்மைக்கு ஆக்கியோன் ஆவான். ஏனெனில், தேவன் தம்முடைய முதல் பிள்ளைகளுக்கு தம்முடைய வார்த்தையை அளித்து, அவர்கள் இதை விசுவாசிக்க வேண்டுமென்று அவர்களிடம் கூறினார்; அவர்கள் அதை விசுவாசிக்கத் தவறுவார்களேயானால், ஒரு மரணத்தைப், பிரிவினையாக, தண்டனையாக அவர்களுக்கு வைத்தார். 93 பின்னர் சாத்தான் அங்கே வந்து ஏவாளுக்கு, அறிவுக்கூர்மையை அளிக்க முயல்கின்றான், “நீ தேவனைப்போல, சரியானதற்கும் தவறானதற்குமுள்ள வித்தியாசத்தை அறிந்து, அறிவுக்கூர்மையுள்ளவளாக இருப்பாய்” என்றான். இப்பொழுது, பாருங்கள், முதலாவதாக, அறிவுக்கூர்மை பிசாசினிடத்திலிருந்து வருகிறதென்பதை நீங்கள் துரிதமாகக் புரிந்துகொள்ளலாம். இக்கூற்று விசித்திரமாக, இருக்கின்றதல்லவா? ஆனால் இது உண்மையாகும். அறிவுக்கூர்மை பிசாசினிடமிருந்து வருகின்றது, அவன் அறிவுக்கூர்மையின் ஆக்கியோன் ஆவான். 94 இப்பொழுது, உண்மையாகவே, பிசாசு கொண்டிருக்கின்ற எந்த ஒரு காரியமும், மூலமுதலானதின் தாறுமாறான ஒன்றாகும். பாவம் என்பது ஒரு தாறுமாறாய், நீதியின் தாறுமாறாயுள்ளது. விபச்சாரம் என்பது சரியான ஒரு செயலின்—ஒரு தாறுமாறாயுள்ளது. ஒரு பொய் என்பது உண்மை தாறுமாறாயுள்ளது.
4195 ஆகவே—நாம் துவங்குவதற்கு முன்னர், இந்த அறிவுக் கூர்மையைக் குறித்து நான் உங்களுக்கு தெளிவாக்கிட விரும்புகிறேன். தேவனுடைய ஞானம் ஒன்று உண்டு, அவருடைய வார்த்தையில் தரித்திருப்பது, தேவனுடைய ஞானம் ஆகும். ஆனால் சாத்தானோ, தன்னுடைய அறிவுக்கூர்மையைக்கொண்டு, வார்த்தையை திரித்துக்கூற முயன்றான், ஆகவே இந்த அறிவுக்கூர்மையைக் குறித்துத்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். 96 சாத்தானோடே கூட ஒரு குறிப்பிட்ட அளவு விசுவாசமும் பொருந்திச் செல்கின்றது. சாத்தானை ஏற்றுக் கொள்ள—வேண்டுமானால், நீங்கள் சாத்தானை விசுவாசித்தாக வேண்டும், ஆகவே தாறுமாறாக்கப்பட்ட ஒரு காரியத்திற்கு தாறுமாறாக்கப்பட்ட ஒரு விசுவாசம் இருக்கின்றது. தேவனுடைய வார்த்தையைத் திரித்து, அது கூறாத ஒன்றை கூறினதாக கூற முயற்சிக்கும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும், தேவனுடைய ஞானத்திற்கெதிராக, அறிவுக்கூர்மையை அளிப்பதென்பதாக இருந்தாலும், பாருங்கள், அது தவறான ஆவியாகும். ஆகவே, அதை நாம் சாத்தானின் விசுவாசம் என்று குறிப்பிடாமல், அறிவுக்கூர்மை என்று நாம் குறிப்பிடப் போகிறோம். 97 அதை விசுவாசிக்கின்ற அநேக மக்கள், மிகவும் உத்தமமானவர்களாக, தாங்கள் செய்வது சரியானதுதான் என்று தாங்கள் கொண்டிருக்கின்ற, முழு நம்பிக்கையைக் கொண்டு, விசுவாசிக்கின்றனர். பார்ததீர்களா? நீங்கள் சற்று கவனிக்க வேண்டும். இப்பொழுது காரியமானது இரண்டு வழிகளைக் கொண்டதாக இருக்கின்றது. ஆனால், அவன், அவர்கள்…ஆனால் காரியத்தைச் சரியானதாக நிச்சயித்துக் கொள்ள இருக்கின்ற ஒரே வழி, மூல வார்த்தைக்குத் திரும்ப வருதலேயாகும். வார்த்தையின் மேல்தான், எல்லா காரியமும் ஆதாரமாகக் கொள்ளப்பட்டு நிறுவப்பட்டிருக்கிறது.
4298 இப்பொழுது, இந்த இரண்டு அணிகள் அல்லது மூல ஆதாரங்கள், என்ன என்று நாம் காண்போமானால்: ஒன்று, அறிவுக்கூர்மை; மற்றொன்று விசுவாசம் ஆகும். ஏதேன் தோட்டத்தில், சிருஷ்டித்தல் ஆரம்பித்ததிலிருந்து இவை ஒன்றுக்கொன்று எதிராய் இருந்துக் கொண்டே வருகின்றது. இப்பொழுது, அந்த இரண்டு பிரிவுகளிலும் பிள்ளைகள் இருக்கின்றனர். 99 இப்பொழுது, நாம் பேசிக்கொண்டிருக்கும் அந்த—அந்த அறிவுக்கூர்மை என்பது என்ன? இந்த வார்த்தை முழுவதும் சத்தியம் என்று ஒத்துக்கொள்ளாத ஒன்றுதான் அது. அது சத்தியத்திலிருந்து எடுத்துப் போட்டுவிட்டு, ஒரு மேம்பட்ட அறிவு தனக்கே உரிதானதொன்று என்று தன்னையே திட்டவட்டமாக முன் நிலை நிறுத்தும் ஒன்றாக இருக்கின்றதே, அதிக அறிவுக்கூர்மையாகும். ஆகவே அந்த விதமான அறிவுக்கூர்மை சாத்தானிடமிருந்து வருகிறதென்றால், அவனுடைய பிள்ளைகளும் அந்த அறிவுக் கூர்மையால்தான் ஜீவிக்கின்றனர். 100 தேவனுடைய விசுவாசம் தேவன் மூலமாக வருமானால், தேவன் வார்த்தையாக இருக்கின்றார், தேவனுடைய பிள்ளைகள் விசுவாசத்தினாலே ஜீவிக்கின்றனர். வேதாகமம், “அறிவுக்கூர்மையாலே நீதிமான் பிழைப்பான்,” என்று கூறியுள்ளதா? [சபையார், “இல்லை” என்கின்றனர்.—ஆசி.] விசுவாசத்தினால்! “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” அவன் கற்றுக் கொள்ளப்போவதினால் அல்ல, ஆனால் அவன் எதை விசுவாசிக்க முடிகின்றதோ அதன் பேரில். சரி.
43101 இப்பொழுது, இப்பொழுது, நாம் கண்டறிவோம். முதலாவதாக, அறிவுக்கூர்மையை நாம் எடுத்துக் கொள்வோமாக. அறிவுக்கூர்மை தர்க்க அறிவைக் கொண்டதாகும். விசுவாசத்திற்கு தர்க்க அறிவைப் பயன்படுத்துதல் என்பது கிடையாது. ஆனால் அறிவுக்கூர்மையோ தர்க்க அறிவுகளைக் கொண்டதாயுள்ளது. நாம் இப்பொழுது வேதாகமத்தை திருப்புவோமாக, நாம் இப்பொழுது ஆதியாகமம், ஆதியாகமம், 3-ம் அதிகாரத்திற்கு திருப்பி, இதைப் போதிப்போமாக. 102 இப்பொழுது நாங்கள் இக்காலையில், என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்? “ஆகாரத்தை எடுத்து வை” என்று கர்த்தர் கூறினதை அப்படியே பின்பற்றுவோமாக. இந்நாட்களில் ஒன்றில், அது உங்களுக்குத் தேவையாயிருக்கப்போகிறது. “ஆகாரத்தை எடுத்து வை.” 103 இப்பொழுது, ஆதியாகமம் 3:1, இப்பொழுது நாம் அதை வாசிப்போமாக, அறிவுக்கூர்மை எவ்வாறு யோசனைகளை உடையதாக இருக்கிறது என்பதைக் காண்போம். தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி, நீங்கள் தோட்டத்திலுள்ள சகல (விசுவாசிக்கின்ற, வார்த்தையைக் கூறுகின்றது), விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது? ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனியைப் புசிக்கலாம்: ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்… தேவன், (வார்த்தையை மேற்கோள் காட்டுகின்றாள்), நீங்கள் சாகாதபடிக்கு அதைப்புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். 104 இப்பொழுது, விசுவாசமானது அதை அப்படியே பிடித்து தரித்திருத்திருக்கிறது. புரிகிறதா? இப்பொழுது கவனியுங்கள். … சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை:
44105 தர்க்க அறிவு, யோசனைகள், “தேவன் மிகவும் நல்லவர். தேவன் மிகவும் இரக்கமுள்ளவர். அவர் உங்களை அதிகமாக நேசிக்கின்றார்.” அந்த அதே பழைய பிசாசு இன்றைக்கு இவ்விதமாகக் கூறுவதை நீங்கள் கேட்கலாம். “தேவன் இதைச் செய்ய மிகவும் நல்லவர். தேவன் இதைச் செய்யமாட்டார். தேவன் தண்டிக்கமாட்டார்.” அவர் செய்யப்போவதாக அவருடைய வார்த்தை என்ன கூறியிருக்கின்றதோ அதை அவர் சரியாக அப்படியே செய்வார். புரிகிறதா? 106 “நீங்கள் சாகவே சாவதில்லை.” புரிகிறதா? அவன் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான்? அவன் அவளை தன்னுடன் கலந்தாலோசிக்கச் செய்ய விழைகிறான். தேவனுடைய வார்த்தையின் பேரில் ஒரு நிமிடம் நீங்கள் சுய புத்தியைக் கொண்டு யோசனை செய்தாலும் கூட, நீங்கள் விசுவாசத்தை இழந்து கொண்டுதான் இருக்கிறீர்கள். புரிகிறதா? “ஆமாம், இல்லை, ஒருக்கால் இருக்கலாம்,” என்பவைகளைக் கொண்டிருக்கவே வேண்டாம். வார்த்தையுடன் அப்படியே தரித்து நில்லுங்கள். புரிகிறதா? ஏவாள் சரியான அணுகுமுறையைக் கொண்டவளாக இருந்தாள், ஆனால் அவள் சாத்தானுடைய ஆலோசனைக்குச் செவி கொடுத்தாள்.
45107 இன்றைக்கு அநேக மக்கள் சரியானதொரு ஞானத்தைக் கொண்டிருந்தும், இந்த வார்த்தையானது தேவனுடைய வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும் என்றும், இது தேவனுடைய வார்த்தைதான் என்றும் அறிந்திருந்தும், யாரோ ஒரு வேதாகமக் கல்லூரி மாணவன் அவர்களை வேதாகமத்திற்கப்பாற்பட்டு ஆலோசித்து யோசிக்கச் செய்து, பரிசுத்த ஆவியானவரிடமிருந்தும், தேவனுடைய காரியங்களிலிருந்தும் தூர விலகச் செய்ய தங்களை விட்டுக் கொடுத்துவிடுகின்றனர். “சொந்த யோசனைகளை, நாம் அப்பாலே துரத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.” 108 இப்பொழுது, 4-வது வசனம். ஏனெனில்… சாத்தான் ஏன் இதைக் கூறினான் என்று நான் உங்களுக்கு கூறப்போகிறேன். முதலாவதாக, நான் 4-வது வசனத்தை வாசிப்பேன், பிறகு 5-வது வசனத்தை வாசிப்பேன். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே—சாகவே சாவதில்லை: நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
46109 பாருங்கள், சாத்தான் ஏவாளுக்கு, தன் சொந்த கருத்தை அளிக்கின்றான், “தேவனுக்கு சமமாக இருக்க நீ விரும்புவாயல்லவா? எடுத்து…” வேறு விதமாகக் கூறினால், “நீ உண்மையாகவே தேவனுடன் சரியாக இருக்க விரும்புகிறாயா? என்னுடைய அறிவுரையைக் கேள். எனக்கு செவிகொடு. அவர் அவ்விதமான அர்த்தத்தில் உங்களிடம் கூறவில்லை. அவர் அவ்வாறு கூறவில்லை.” 110 அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் கேட்பீர்களானால், அதிலிருந்து தூர சென்றுவிடுங்கள். அது சரி. அது சர்ப்பத்தினுடைய உஸ்ஸ் என்கிற சத்தமாகும். அது செயல்முறைக்கு ஒத்த ஒன்றாக காணப்படும். ஆகவே அதைப்பற்றி யோசிக்கவே வேண்டாம், தேவன் கூறியுள்ளதை, அப்படியே விசுவாசியுங்கள். இப்பொழுது, அந்த… அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும்,… 111 அது என்னவாயிருந்தது என்று பார்த்தீர்களா? சர்ப்பத்தினுடைய யோசனைகள் சரி என்று அவள் கண்டுகொள்ளும்படிக்கு அவளைக் கொண்டுவந்துவிட்டது, அது உண்மை. அது பார்வைக்கு இன்பமும், இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது… 112 “நம்பிக்கைக் கொள்ளும்படியாக செய்கிறதா?” [சபையோர், “இல்லை” என்கின்றனர்.—ஆசி.] ஒருவன் அறிவைக் கொள்ளும்படிக்குச் செய்கிறதாக…ஒருவன் புத்தியைத் தெளிவிக்கிற ஒன்றாக அது இருந்தது,… 113 அது என்னவாயிருந்தது என்று பாருங்கள்? சாத்தான் அறிவை அளிக்கின்றான், வார்த்தைக்கு முரணாயிருந்த அறிவு, “ஒருவன் புத்தியை தெளிவிக்கின்ற ஒன்றாக” அது இருந்தது. … அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
47114 இப்பொழுது, அதை துவங்கியது எது? தர்க்க அறிவுதான். புரிகிறதா? விசுவாசத்திற்கு தர்க்க அறிவு என்பதேக் கிடையாது. நீங்கள் யோசனை செய்யவேக் கூடாது. நீங்கள் விசுவாசியுங்கள். உங்களுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டு, சுகமளித்தலுக்கான தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டிருப்பீர்களானால், உங்களுடைய உணர்ச்சிகளோடு கூட யோசனை செய்யாதீர்கள். எந்தக் காரியத்திற்கும் தர்க்க அறிவைப் பயன்படுத்தாதீர்கள். அதற்கு யோசனை என்பதே கிடையாது. தேவன் அவ்விதமாகக் கூறியுள்ளார், அது காரியத்தைத் தீர்த்துவைக்கிறது. 115 ஓ, இதன் பேரில் சில நிமிடங்கள் நான் பேசுவேனாக, இதிலிருந்து ஒரு பொருளை நான் எடுப்பேனாக. ஆனால் இங்கே நாற்பது அல்லது ஐம்பது வசனங்களை நான் எழுதி வைத்துள்ளதால், இதைக்குறித்து என்னால் இப்பொழுது பிரசங்கிக்க முடியாது. ஆனால் தர்க்க அறிவு என்பதோ…
48116 கர்த்தர் ஒரு தரிசனத்தை அளிக்கும் போது…நான் கடைப்பிடிக்கின்ற என் சிறிய சொந்த வழியை, இப்பொழுது கூறுவேன். நடக்கப் போகின்ற ஒன்றைக் குறித்த ஒரு தரிசனத்தை கர்த்தர் அளிக்கின்றார், ஏன், அத்தரிசனத்தைக் குறித்து முரண்பாடாக எது இருந்தாலும் அதைக்குறித்து நான் கவலை கொள்வதில்லை. 117 நினைவில் கொள்ளுங்கள், முரண்பாடாக, அளிக்க முடிகின்ற எல்லாவற்றையுமே, சாத்தான் அளிப்பான். “உன்னால் அதைச் செய்ய முடியாது” என்று, அவன் யோசிக்கும்படி செய்ய முயற்ச்சிப்பான். 118 உதாரணத்திற்கு, சற்று முன்னர், நான் செல்லவிருப்பதாக மேற்கோள் காட்டின ஒன்றானது… இப்பொழுது, இது வழக்கமாக செய்யப்படுவதற்கு புறம்பாக இருந்த ஒன்றாகும். என் தாயார் கடந்து செல்வதற்கு சற்று முன்னர். வேட்டைக்குப் போவதைக் குறித்தும், அச்சகோதரருடன் செல்லத்தக்கதாக நான் திட்டமிருந்த அந்த பிரயாணத்தில் நான் செல்ல முடியாது என்பதை கர்த்தர் அறிந்திருந்தார். ஆகவே அவர் ஒரு தரிசனத்தை எனக்களித்து, நேராக பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு என்னை அனுப்பினார். 119 நாங்கள் அங்கு சென்றடைந்தபோது, வழிகாட்டி, “நான் என் வாழ்க்கை முழுவதும் இங்கு தான் கழித்திருக்கிறேன், ஒரு வெள்ளி நிற ரோம கரடியை நான் இங்கே கண்டதேயில்லை. மேலும், நாம் குதிரையின் மேல், இந்த ஆடுகள் நிறைந்த கிராமங்களுக்கு செல்லப் போகின்றோம். ஒரு வெள்ளி நிற ரோமம் கொண்ட கரடி கிடையவே கிடையாது, அங்கே இல்லை…அவ்விதக் கரடியை நீங்கள் அங்கே மேலே பெறவே முடியாது” என்றார். பார்த்தீர்களா? புரிகிறதா? யோசனையின் மூலம், பாருங்கள், திசை திருப்ப முயற்சித்தல்; தர்க்க அறிவு. 120 சாத்தான் என்னிடம், “அது அங்கே இருக்கும் என்று, நீ—நீ தரிசனத்தைத் தவறாகப் புரிந்துக் கொண்டுவிட்டாய்” என்று கூறினான். 121 “ஆனால் அதற்கு நான் செவி சாய்க்கவில்லை. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கப் போகின்றது.” அப்பொழுது அந்த வட அமெரிக்க கலைமான் வந்தபோது, அதை நாங்கள் சுட்டோம், அக்காரியம் தரிசனத்தில் இருந்தது, அதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
49122 அப்பொழுது அந்த வழிகாட்டி, அவன் என்னிடம் கூறினான்; மிக அருமையான ஒரு சகோதரன், சில வாரங்கள் அவருடன் இருந்த காரியமானது அருமையானது, வாலிப கிறிஸ்தவன். அவன், “சகோதரன் பிரான்ஹாம், என் சகோதரனுக்கு காக்கை வலிப்பு நோய் வந்தது. அன்று நீங்கள் அந்தக் குதிரையின் மீது வந்து, நான் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்தால், என் ‘சகோதரனுடைய காக்கை வலிப்பு நின்று போய்விடும்’” என்று கூறினீர். அவன், “நான் என்ன செய்ய வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் உரைத்து என்னிடமாக கூறச்சொன்ன அந்த காரியத்தை சரியாக நான் செய்த போது,” என்று கூறி, “அந்த நாளிலிருந்து, காக்காய் வலிப்பே அவனுக்கு வரவில்லை” என்று கூறினான். 123 அவன், “இப்பொழுது, இங்கே இந்த மலை உச்சியில், நாம் இருக்கின்றோம். சரியாக இங்கே கீழே மூன்று மைல் அளவிற்கு, ஒரு நான்கு அங்குல உயர புதர் கூட இல்லை. மான் காளான்களும், சில அவரிநெல்லிச் செடிகளும் தான் உள்ளன, அவை இரண்டு அல்லது மூன்று அங்குலம் உயரம் தான் வளரும்” என்றான். அவன், “மலையடிவாரத்திலுள்ள மரவரிசை வரை வெறும் மான் காளான்களும் அவரிநெல்லிச் செடிகள் மாத்திரமே இருக்கின்றன, நம்முடைய குதிரைகள் அங்கே மரவரிசையில் இணைத்து கட்டப்பட்டுள்ளன. இப்பொழுது, நாம் இங்கே வரும் முன்னர் நீங்கள் என்னிடம் கூறின பிரகாரம், இங்கே எங்கோ ஓரிடத்தில், கட்டம் போட்ட சட்டை அணிந்திருக்கும், அந்த பையன் நிற்குமிடத்திற்கும் இந்த இடத்திற்கும் இடையில், ஒரு ஒன்பது அடி உயர வெள்ளி நிற ரோமம் கொண்ட கரடியை சுடப்போவதாக என்னிடம் கூறியிருக்கின்றீர்கள்” என்று கூறினான். நான், “அது கர்த்தர் உரைக்கிறதாவது ” என்று கூறினேன். பார்த்தீர்களா? அது என்னவாயிருந்தது? நான் அதை அவிசுவாசிக்கும்படிக்கு சாத்தான் முயற்சி செய்வதாகும்.
50124 நாங்கள் மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தோம். நாங்கள் கீழே மலை அடிவாரத்தை நெருங்குகையில், அவன், “சகோதரன் பிரான்ஹாம், இங்கிருந்து இன்னும் ஒரு மைல் தூரம் தான் இருக்கின்றது” என்று கூறிக்கொண்டேயிருந்தான். நான், “பட், நீ சந்தேகித்துக்கொண்டிருக்கிறாயா?” என்றேன். “இல்லவே இல்லை” என்றான். 125 நாங்கள் அரை மைல் தூர அருகாமைக்குச் சென்றோம். அவன், “இன்னும் அரை மைல் தூரத்தில் நாம் கீழே சென்று விடலாம்” என்றான். 126 நான், “அது சரியே” என்றேன். “சற்று யோசித்துப் பாருங்கள், இன்னும் அரை மைல் தூரத்தில்!” என்றான். தர்க்க அறிவை நிர்மூலமாக்குதல். 127 அவன், “பாருங்கள், கீழே உள்ள எல்லாவற்றையும் இப்பொழுது நம்மால் காண முடிகின்றது. அங்கே ஒன்றுமே வரவில்லையே” என்றான். 128 “ஆனால்,” அப்பொழுது நான், “வார்த்தையை எனக்களித்த தேவன் தாமே ஒன்றை அங்கே சிருஷ்டிக்க வல்லவர். சொந்த புத்தியைக் கொண்டு யோசிக்காதே, அதை அப்படியே விசுவாசி. சொந்த கருத்துகளுக்கு எந்த ஒரு கவனத்தையும் செலுத்தாதே. அதற்கும் யோசனைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அவர் கூறியுள்ளதை அப்படியே விசுவாசி, அவ்வளவுதான்” என்றேன். 129 நான் அங்கே நின்று கொண்டிருந்தேன், மலையில் எல்லா இடங்களையும் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன், மஞ்சள் நிற காளான் செடிகள் மாத்திரம் இருந்தன; சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது; மலைகள், அழகாயிருந்தன. சரியாக எனக்குமேல், மலையின்மேல் மூன்று மைல்களுக்கு, நீங்கள் எந்த ஒரு சிறு இடத்தையும் கூட நீங்கள் பார்க்கலாம். நான் திரும்பிப் பார்த்தபோது, சுமார் எனக்கு முன்னால் இரண்டு மைல்கள், அல்லது ஒன்றரை மைல்கள், அல்லது இரண்டு மைல்கள் தூரத்தில், ஒன்பது அடி உயரமான வெள்ளி நிற ரோம கரடி ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. எப்படி அது அங்கே வந்தது, எனக்குத் தெரியாது. ஆனால் அக்கரடி அங்கிருந்தது. பார்த்தீர்களா?
51130 சொந்த புத்தியில் சிந்திக்காதீர்கள். விசுவாசியுங்கள். சூழ்நிலைகள் என்னவாயிருந்தாலும் பரவாயில்லை, சூழ்நிலைகளுக்கு உங்கள் கவனத்தை செலுத்தாதீர்கள். விசுவாசியுங்கள். இப்பொழுது, தேவன், “நீங்கள் இதைப் புசிக்கும் அந்த—அந்த நாளிலே, நீங்கள் மரித்துப் போவீர்கள்” என்றார். 131 சாத்தான், “உன்னிடம், ஒன்றை நான் கூறட்டும், பாருங்கள். இப்பொழுது, அது, அது… ஓ, ஆமாம், தேவன் உண்மையுள்ளவர் என்று நாம் கூறுகிறோம், நிச்சயமாக. அது சரி. அந்த வார்த்தையை நாம் விசுவாசிக்கின்றோம். ஓ,” மேலும் சாத்தான், “அது உண்மையென்று, நிச்சயமாக நான் விசுவாசிக்கிறேன். ஆனால், கவனி, உன்னிடம் ஒன்றை நான் கூறட்டும், அவர் அந்தவிதமான அர்த்தத்தில் கூறவில்லை” என்றான். அவர் அதைத்தான் பொருட்படுத்திக் கூறினார். அவர் அதைத்தான் அப்படியே பொருட்படுத்திக் கூறினார். 132 சாத்தான், “இப்பொழுது, கவனி, அவர் ஏன் அவ்வாறு கூறினார் என்று நான் உனக்கு சொல்லுவேன். அவர் உண்மையாகவே…நீங்கள் பாருங்கள், நீ—நீ—நீ இன்னுமாக, சரியாகப் புத்தியைப் பெறவில்லை. நீ அறிவுக்கூர்மையைப் பெற்றிருக்கவில்லை. புரிகிறதா? நீ வழி நடத்தப்படக்கூடிய, ஒரு செம்மறியாட்டைப் போன்று இருக்கின்றாய். நீ உனக்கு சொந்தமல்ல” என்றான். அவ்விதமாகத்தான் தேவன் உன்னை விரும்புகின்றார். “நீ ஒருபோதும்…நீ இன்னும் பி.எச்.டி., டாக்டர் பட்டம் பெறவில்லை. உனக்கு—உனக்கு—உனக்கு போதுமான கல்வியறிவு இல்லை. புரிகிறதா? ஆனால் எனக்கு அறிவுக்கூர்மை உள்ளது, நான் அதை உனக்கு நிரூபிப்பேன். இப்பொழுது, பார், உனக்கு சரியானது தவறானது எது என்று கூடத் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒரு காரியம் இருக்கிறது என்று உனக்குத் தெரியும், ஆனால் அது என்ன என்று உனக்குத் தெரியாது. அது எப்படி செய்யப்பட்டது என்று நான் உனக்குக் காண்பிப்பேனாக” என்றான். இதைத்தான் அந்த ஸ்திரீயிடம் கூற வேண்டுமென்று அவன் விரும்பினான். இதைத்தான் அவன் செய்ய வேண்டுமென்று விரும்பினான். “அது எப்படி செய்யப்பட்டது என்று நான் உனக்குக் காண்பிப்பேனாக.” அவள், “ஆனால் நாங்கள் மரித்துப்போவோமே” என்றாள். 133 அதற்கு அவன், “நிச்சயமாக தேவன் அவ்விதமாக செய்ய மாட்டார். ஆனால் நீங்களும் கூட அறிவாளியாகிவிடுவீர்கள் என்பதை அவர் அறிந்திருக்கின்றார்” என்று கூறினான். புரிகிறதா? 134 தேவனுடைய வார்த்தைக்கு எதிராக தன்னுடைய அறிவுக்கூர்மையை வைத்தல். இந்த அறிவுக் கூர்மையைக் குறித்துதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். புரிகிறதா? விசுவாசத்திற்கு எதிரான அறிவுக்கூர்மை, விசுவாசத்திற்கு எதிரானது. அதுவே முதல் யுத்தமாக உள்ளது. அப்பொழுது தேவனுடைய வார்த்தை உண்மையாக இருந்து அப்படியே அசையாமல் தரித்து நின்றது. தடைசெய்யப்பட்டதில் அவர்கள் பங்குகொண்டபோது, அவர்கள் மரித்தனர்; அதிலிருந்தே, மரித்துள்ளனர். புரிகிறதா? அங்கே தான், ஒரு சிறு சந்தேகத்திற்கும் இடமில்லாமல், சரியாக அங்கே நிரூபிக்கப்பட்டது.
52135 இப்பொழுது, அதைக்குறித்துச் சற்று நேரம் நாம் பேசலாம். இப்பொழுது, நான் ஆதியாகமம் 3:1,17, மேலும் இப்பொழுது…இல்லை 1முதல் 7 வரை, சரியாகக் கூறினால், மேலும் இப்பொழுது, இப்பொழுது, அறிவுக்கூர்மை எங்கே யோசனைகளைக் கொண்டதாயுள்ளது என்று எழுதிவைத்திருந்தேன். இப்பொழுது எத்தனைப் பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? “ஆமென்” என்று கூறுங்கள். [சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] புரிகிறதா? இப்பொழுது நீங்கள் கூறுவதோ… 136 மருத்துவர்கள், “பாருங்கள், நான் உங்களுக்கு சொல்வேன்” என்று கூறுவார்கள். இப்பொழுது பாருங்கள், சாட்சியாக நான் கூறின இந்த சிறு பெண்ணை எடுத்துக்கொள்வோம். மருத்துவர், “உங்களால் எதுவுமே செய்ய முடியாது. நீ ஏறக்குறைய மரித்துவிட்டாய். உனக்கான எந்த நம்பிக்கைகளுமே இல்லை. அங்கே இருக்கின்ற அந்த மனநலக் காப்பகத்திற்குச் சென்றுவிடு. இவளை அங்கே கொண்டு சென்று விடுங்கள்” என்கிறார். 137 அதற்கு அந்தப் பெண், “அந்த மனநலக் காப்பகத்தின் சிறு அறைகளுக்குள்ளே நான் செல்வதற்கு முன்னதாகவே, நான் தற்கொலை செய்துக்கொள்வேன்” என்றாள். 138 அப்பொழுது நடந்ததென்ன? தேவன் காட்சியில் வந்தார். அவள் விளம்பரத்தினூடாக, எங்கோ கான்சாஸில், புளூமிங்டன், இல்லினாயிஸ்ஸில் உள்ள ஒரு செய்தித்தாளில் அவள் கேட்டாள். “விசுவாசம் கேள்வியினாலே வரும்.” பார்த்தீர்களா? பாருங்கள், அவளுடைய கணவன் அவளைப் பார்த்துக் கொண்டார். அவர்கள் உண்மையாகவே இனிய இருதயங்களாய், ஒருவருக்கொருவர் நேசித்தனர். 139 சிந்தித்துப் பாருங்கள். நான்கு ஆண்டுகளில், நான்கு பெரிய அறுவைச் சிசிச்சைகள்; பதினைந்து, பதினாறு மயக்க மருந்து ஊசிகள். ஒரு மானிடனைக் கொல்வதற்கு அது போதும். பார்த்தீர்களா? இந்த எல்லா மயக்க ஊசிகளும், ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செலுத்தப்படும். அவைகளின் ஒன்று லெக்ஸ்ரான் என்ற ஊசி மருந்து என்பதை நான் அறிவேன், மற்றொரு மருந்தின் பெயரை நான் மறந்துவிட்டேன். அது மனநிலைக்கான ஏதோ ஒரு காரியமாயிருந்தது. இந்த ஊசிகளை அவள் போட்டுக்கொண்டிருந்தாள், அதுமட்டுமின்றி, இரண்டு தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டாள். அதனாலும் அவளால் தூங்க முடியவில்லை. கடுந்துயரம், நாள் முழுவதும், இரவு முழுவதும், வருடத் துவக்கத்திலும் வருட முடிவிலும் முழுவதுமாக வியாதியான நிலையிலேயே இருத்தல். ஒன்றுமே செய்யப்பட முடியவில்லை. ஆனால், “விசுவாசம் கேள்வியினாலே வரும்.” புரிகிறதா?
53140 இப்பொழுது, அவள் அந்த இடத்தைச் சென்றடைந்தபோது, தேவன் அவளை முதல் நபராக, பிரசங்க மேடையின் மீது நிற்க வைத்தார். பார்த்தீர்களா? என்ன…ஏன், என்ன? நான் அவளை நோக்கி நடந்து சென்று, நான், “சகோதரியே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்றேன். “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” அவள் இதைக் குறித்து ஒன்றுமே கேள்விப்பட்டதேக் கிடையாது. இதைக் குறித்து அவளுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், “நீங்கள் திருமதி இன்னார்-மற்றும்-இன்னார். நீங்கள் கான்சாஸிலிருந்து வருகிறீர்கள்” என்று கூறினேன். 141 இப்பொழுது, உடனடியாக, இக்காரியமானது அவளை இவ்விதமாக சிந்திக்கச்—செய்கின்றது. “ஒரு நிமிடம் பொறும். ‘கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், என்று, இப்பொழுதுதான் அவர் கூறினதை நான் கேட்டேன். கடைசி நாட்களிலே கிறிஸ்து தம்முடைய சபையில் தோன்றுவார் என்று வாக்குத்தத்தம் செய்துள்ளளார் என்பதை, இன்றிரவு, இங்கே நாம் வேதாகமத்தில் நிரூபித்துக் காண்பித்தோம், அவர் பிரசங்கிக்கையில், அன்று அவர்கள் சோதோமில் செய்த காரியங்கள் போன்றவற்றைக்’ கூறினார்.” அது என்னுடைய ஆரம்ப பிரசங்கமாக இருக்கிறது. “ஏனென்றால், இப்பொழுது, அது சரியாக இங்கே நடப்பிக்கப்படுவதை, இதோ நான் காண்கின்றேனே.” பார்த்தீர்களா? “இப்பொழுதே, ஆம்.”
54142 “இப்பொழுது, நீங்கள் அநேக மருத்துவர்களிடம் சென்றிருந்தீர்கள். உங்களுக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.” 143 “இவ்விவரங்களை எங்கிருந்து அவர் அறிந்து கொண்டார்? எங்கிருந்து இவ்விவரங்கள் இவருக்கு வந்தன? அந்தச் சிறு, வழுக்கைத்தலை மனிதனுக்கு அவைகளைக் குறித்து ஒன்றுமே தெரியாதே. எங்கிருந்து இக்காரியங்கள் அவருக்கு அறிவிக்கப்பட்டன?” “நீ இங்கே வந்து கொண்டிருக்கையில், குறிப்பிட்ட-மற்றும்-குறிப்பிட்ட ஒரு காரியம் இருந்தது.” 144 “சொல்லுங்களே!” புரிகிறதா? “இப்பொழுது, சரியாக இதைக் குறித்துத் தானே அவர் பிரசங்கித்து முடித்தார். அது தான் வார்த்தை.” 145 ஆனால், உங்களுக்குத் தெரியுமா, சாத்தான், “உனக்குத் தெரியும், நீ அதை ஏற்றுக்கொள்வாயானால், உன்னுடைய மேய்ப்பர்…” என்றிருப்பான். அதற்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. புரிகிறதா? சுயயோசனையை அப்பாலே போட்டுவிடுங்கள். புரிகிறதா? “ஆனால் உன்னுடைய மருத்துவர் நீ மனநலக் காப்பகத்திற்கு செல்லத்தான் வேண்டும் என்று கூறியிருக்கின்றாரே.” சுயபுத்தியைக் கொண்டு யோசித்தலை அப்பாலே போட்டுவிடுங்கள். 146 “இதைக்குறித்து தேவன் என்ன கூறப்போகிறார் என்பதைக் காண நான் காத்துக்கொண்டிருக்கின்றேன்.” புரிகிறதா? அப்பொழுது தேவன்…என்னக் கூற வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதை எடுத்து வெளியரங்கமாக அதை அறிவித்தார். 147 அவள் அதை விசுவாசித்தாள். அவள் சொந்த புத்தியைக் கொண்டு யோசித்துப் பார்க்கவில்லை, “ஒரு ஆண்டிற்குப் பிறகு, அடுத்த ஆண்டு, அதற்குப்பிறகு அடுத்த வருடம் இப்படியாக தொடர்ந்து நரம்புத் தளர்ச்சி, மன அழுத்தம், அறுவைச் சிகிச்சைகள் மற்றும் எல்லாச் சிகிச்சைகளும்; ஏன், இங்கே ஒரே நொடிப்பொழுதில், நான் சுகமாக்கப்படுவேனோ என்று யோசிப்பது, காரணமற்ற ஒன்றாகும்” என்று எண்ணினாள். ஆனால் அவள் சொந்த புத்தியினால் யோசித்தலைக் குறித்து நினைக்கவில்லை. அவள் அப்படியே விசுவாசித்தாள். விசுவாசம் அதைச் செய்தது, அவள் உடனடியாக, சுகமாக்கப்பட்டாள். 148 நீங்கள் அவளுக்கு கடிதம் எழுத வேண்டுமென்றால், ஏன், பில்லி அவளுடைய வீட்டு முகவரியை உங்களுக்கு அளிப்பான். சரி, இப்பொழுது. இப்பொழுது, பிதா-…
55149 அறிவுக்கூர்மை யோசிக்கும். இப்பொழுது…ஆனால் விசுவாசத்திற்கு யோசித்தல் என்பதேக் கிடையாது. வார்த்தையைப் பற்றிக்கொள்வதைத் தவிர வேறொன்றையும் அது செய்யாது. அது வாக்குத்தத்தத்தைக் கொண்டிருக்கின்றது. 150 இப்பொழுது நாம் சிறிது வாசிப்போம். நாம் ரோமர் 4-வது அதிகாரத்துக்குத் திருப்பி, நாம் சிறிது வாசிப்போம். நாம் பொருளிற்கு ஆழமாகக் கடந்து போகும் சமயம் வரைக்கும், இவ்வேத வசனங்களை நாம் வாசிப்போமாக, ரோமர், 4-வது அதிகாரம். ஏனெனில், எனக்கு வார்த்தையை வாசிப்பது மிகவும் விருப்பம். அதை வாசிப்பது—உங்களுக்கு நன்மையைத் தருவிக்கிறது. ரோமர், 4-வது அதிகாரம், 17-வது வசனத்திலிருந்து நாம் ஆரம்பிப்போமாக. கவனியுங்கள்.
56151 ஆபிரகாமின் வாழ்க்கையைக் குறித்து, பவுல் விளக்கி எழுதுவதை, நீங்கள் அறிவீர்கள், ஆபிரகாம் கேராருக்கு சென்றிருந்ததைப் பற்றி எதுவுமே கூறப்படவில்லை, விளக்கவுரையிலும் ஒன்றுமே இல்லை என்பது, உங்களுக்குத் தெரியும். அதில், “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்” என்று மாத்திரமே உள்ளது, அந்த மகத்தான அப்போஸ்தலனாகிய, பவுல், ஆபிரகாமைப் பற்றிய ஒரு விளக்கவுரையை எழுதுகின்றான். 152 17-வது வசனம், “எழுதியிருக்கிறபடி…” இது எனக்கு மிகவும் பிடிக்கும்: பவுல் வார்த்தையோடு தரித்திருக்கிறான். (அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று, எழுதியிருக்கிறபடி,)… 153 “ஏற்படுத்தினேன்.” ஆபிரகாமிற்கு எழுபத்தைந்து வயதாயிருந்தது. அவனும் தன்னுடைய மனைவியுடன்…இருவரும் வாலிப வயதாயிருந்த முதற்கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவள் அவனுக்கு ஒன்றுவிட்ட சகோதரியாக இருந்தாள். ஆனால் பிள்ளைகள் பிறக்கவில்லை; அவனும் அவளும் மலடான நிலையில் இருந்தனர். ஆனால் தேவன் அவனைச் சந்தித்து, “ஏற்படுத்தினேன்,” கடந்த காலம், உலகத் தோற்றத்துக்கு முன்னர், உண்மையாகவே, “அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்.” அநேக பிள்ளைகளுக்கு அல்ல, ஆனால் அநேக ஜாதிகளுக்கு. இதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். …அவன் தான் விசுவாசித்தவருமாய்… தேவன், தேவனுக்கு முன்பாக, மரித்தோரை உயிர்ப்பித்து இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவருமாயிருக்கிற
57154 ஆகவே சுய புத்தியைக் கொண்டு ஆலோசிக்கவே, வேண்டாம். கவனியுங்கள். …இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல், நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும்… 155 என்னே! “நம்பிக்கைக் கூட இல்லை.” அவன் யோசனைபண்ணியிருந்தால் என்னவாயிருந்திருக்கும்? “நம்பிக்கைக் கூட இல்லை.” தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புவதற்கு ஏதுவில்லாதிருந்தும் அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்; உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று, சொல்லப்பட்டபடியே, 156 வேறெந்தக் காரியம் கூறப்பட்டிருந்தாலும் கவலையில்லை. “தேவன் அவ்விதமாகக் கூறியுள்ளார், அது அதனை தீர்த்து வைக்கிறது.” ஓ, ஏவாள் மாத்திரம் அதனோடு அப்படியே தரித்திருந்திருப்பாளானால்! புரிகிறதா? ஆனால் அவள் சிறிது அறிவுக்கூர்மையைப் பெற்றுக் கொள்ள, சிறிது யோசித்து ஆலோசனைப்பண்ண நின்றுவிட்டாள். ஆபிரகாம் அறிவுக்கூர்மையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை; அவன் வார்த்தையை விரும்பினான். “தேவன் அவ்விதம் கூறியுள்ளார், அதுவே அதனை முடித்து வைக்கிறது.” 157 அநேக முறை, நான் அதன் பேரில் பிரசங்கித்திருப்பது, உங்களுக்குத் தெரியும். அவன் சென்று குழந்தைக்குத் தேவையான கைத்துண்டுகள், ஊசிகள், மற்றும் எல்லாவற்றையும் வாங்கி, குழந்தைக்காக தயாரானான், சாராள் காலணிகளைச் செய்தாள். வருடத்திற்குப் பிறகு வருடம் கடந்து சென்றது. “தேவனுக்கு ஸ்தோத்திரம், எப்படியாயினும், நாம் அதைப் பெற்றுக் கொள்ளத்தான் போகிறோம். அது சரியே.” 158 “ஏன், அவள்,” அந்த மருத்துவர், “பாருங்கள், அவளாலும் குழந்தை பெற்றெடுக்க முடியாது, உன்னாலும் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியிருப்பார். “அப்பொழுது அவன் என்னிடம் அவ்வாறு கூறாதீர்கள். எப்படியும், நாங்கள் அதை பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்றான். அதுதான் காரியம்.”
58159 “நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், இன்னுமாக நம்பிக்கையோடே விசுவாசித்தான்.” நம்பிக்கைகள் முற்றுமாக அற்றுப்போயிருந்தன, அதேசமயத்தில் அவனுக்கு, நம்பிக்கையானது முற்றிலுமாக அற்றுப்போயிருந்ததும் அவன் அதில் விசுவாசம் கொண்டிருந்தான். ஒவ்வொரு விஞ்ஞான ஆராய்ச்சியின்படியும், ஒவ்வொரு அறிவுப்பூர்வமான காரியத்தின்படியும் நம்பிக்கை என்பது முற்றுமாக இல்லாமல் போயிருந்தது. ஆனாலும் இன்னுமாக அதில் விசுவாசம் கொண்டிருந்தான். அது என்னவாயிருந்தது? அக்காரியத்தில் விசுவாசம் கொண்டிருத்தல்; நம்பிக்கை கொள்வதற்கு அங்கே ஏதுவில்லாதிருந்தும், நம்பிக்கையோடே விசுவாசிப்பது. ஹும்! சிறிது நேரம் அதின் பேரில் சற்று பேச எனக்கு விருப்பம். அக்காரியத்தில் நம்பிக்கை என்கின்ற ஒன்று இல்லாதிருக்கையில், அந்த நம்பிக்கையில் விசுவாசம் கொண்டிருத்தல், ஆனாலும் இன்னுமாக அவன் அந்த நம்பிக்கையில் விசுவாசம் கொண்டிருந்தான். பார்த்தீர்களா? ஏனெனில், ‘“உன் வித்துக்கள் இவ்வளவாயிருக்கும்’ என்று அவர் என்னிடம் கூறியுள்ளார்” என்று அவன் கூறினான். 160 இப்பொழுது, 19-வது வசனம். “அவன் ‘அறிவுக்கூர்மையில், அறிவில், தன்னுடைய பட்டத்திலே பலவீனமாயிருக்கவில்லையா’”? [சபையோர், “இல்லை” என்கின்றனர்.—ஆசி.] இல்லை. அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை, (ஹா, அங்குதான் காரியம்.), தன் சரீரம் செத்துப்போனதையும், எண்ணாதிருந்தான்,… 161 நம்பிக்கை அற்றுப்போயிருந்தது. அவனுடைய சரீரமும் செத்துப்போயிருந்தது. கவனியுங்கள், அடுத்த வசனம்: அவள் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது…சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். 162 நம்பிக்கை அற்றுப்போயிற்று. அவனுடைய சரீரம் செத்துப்போயிருந்தது. சாராளினுடைய கர்ப்பம் செத்துப்போயிருந்தது. அவன் என்ன செய்தான்? அடுத்த வசனம், “அவன் சந்தேகப்படாமல்.” ஓ, என்னே! தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய், (அறிவுக்கூர்மையாய்) சந்தேகப்படாமல்; தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனான். 163 ஓ, என்னே! என்ன? தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி,
59164 ஹும்! எப்படியிருந்தாலும் சரி, அக்காரியத்தைக் குறித்து யோசிப்பதென்பது, கூடவேக் கூடாது. அது வார்த்தையை மாத்திரம் எடுத்து—அதன் பேரில் அதை அப்படியே பற்றிக்கொண்டிருத்தலாகும். இப்பொழுது, இது தேவனுடைய வார்த்தை என்றால், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் அதின் எந்த ஒரு வார்த்தையையும், அதின் எந்த ஒரு வாக்குத்தத்தத்தையும் ஏன் சந்தேகிக்க வேண்டும்? இந்த பாகம், இந்த பாகம், சரியில்லை; இதுவே அது, உங்களுக்கு வேண்டியதை மாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று எப்படி உங்களால் கூற முடியும்? அவ்விதமாக நீங்கள் செய்ய முடியாது. ஒன்று அது முழுவதுமாக எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் அல்லது அதில் ஒன்று கூட நல்லதாக இருக்கக்கூடாது. சரி. அது சத்தியம் என்று நீங்கள் எவ்வளவு சீக்கிரமாகக் காண்கிறீர்களோ, உடனடியாக அதை அப்படியே பிடித்துக் கொள்ளுங்கள். “ஏன், உன்னால் முடியாது” என்று கூறினாலும், சூழ்நிலைகள் எவ்விதமாக இருந்தாலும் சரி, அதைக்குறித்து சுய யோசனைகளை அவர்கள் கூறினாலும் சரி, வார்த்தையிலிருந்து பிடியைத் தளர்த்திவிடாதீர்கள். செய்யாதீர்கள், அவ்விதமாகச் செய்யவே, செய்யாதீர்கள். சரியாக வார்த்தையோடு தரித்திருங்கள். தேவன் அதை வாக்குத்தத்தம் செய்தார்.
60165 இப்பொழுது நான் கிறிஸ்துவிற்கான என்னுடைய நிலையை எடுத்து, அவர் பரிசுத்த ஆவியை எனக்கு அளித்திருப்பாரென்றால், அவருடைய ஆவி அவருடைய ஜீவனைக் குறித்து எனக்குள்ளாக சாட்சி கொடுக்கின்றது. பிறகு நான் மரிக்க வேண்டிய சமயம் வரும்போது, சாத்தான், “இப்பொழுது, நீ பார், நீ ஒரு ஸ்தாபனத்தைச் சார்ந்திருக்கவில்லை” என்று கூற முயற்சிக்கிறான். வார்த்தையுடன் தரித்து நில்லுங்கள். “நீ இதைச் செய்யவில்லை; நீ அதைச் செய்யவில்லை.” என்னயிருந்தாலும் பரவாயில்லை, அதாவது, அதைக் குறித்து சாத்தானுடைய சுய யோசனைகள் கிடையவே கிடையாது. அது தேவனுடைய வார்த்தை. வார்த்தையோடு தரித்து நில்லுங்கள். புரிகிறதா? அது எல்லா சொந்த யோசனைகளையும் புறம்பே தள்ளிப் போடுகின்றது. புரிகிறதா? நீங்கள் எந்த சுய யோசனைகளையும் கொண்டிராதீர்கள்; வார்த்தையை அப்படியே பற்றிக்கொண்டிருங்கள். புரிகிறதா?
61166 இப்பொழுது, விசுவாசம் அவருடைய வார்த்தையில் மாத்திரமே அப்படியே நம்பிக்கைக் கொள்கின்றது. புரிகிறதா? அவர்கள் அதைத்தான் செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினார். அது—அது, இப்பொழுது, நீங்கள் இதன் பின்னணியைப் புரிந்து கொள்கிறீர்கள். சரியாக அதை மானிட வர்க்கம் செய்ய வேண்டுமென்று தேவன் விரும்பினார்: அவர் கூறின ஒவ்வொரு வார்த்தையிலும் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பதே. 167 ஏவாள் அதனுடைய முழு வார்த்தையும் நம்பினாள். ஆனால் அவள் ஒரு சிறு காரியத்தை ஏற்றுக் கொண்டாள், “பாருங்கள், நான் முழுவதுமாக அறிவுக்கூர்மையால் நிரப்பப்பட வேண்டுமென்றால், ஒருக்கால்—ஒருக்கால் அந்த விதமாகத்தான் இருக்க வேண்டும். ஒருக்கால் இந்த விதமாகவும் இருக்க வேண்டுமென்றால் அதை செய்ய வேண்டும்” என்றாள். பார்த்தீர்களா? சரியாக அங்கேதான் அவள் தான் பற்றிக்கொண்டிருந்த பிடிப்பை இழந்து போனாள். சரியாக அங்கேதான், அவள் அமிழ்ந்து போக ஆரம்பித்தாள். அங்கிருந்துதான், முழு மானிடவர்க்கமும் நேராக கல்லறைக்குள் செல்லத் துவங்கியது, ஏனென்றால் அவள் ஒரு வார்த்தையை மாத்திரம் சந்தேகித்ததாள்.
62168 அவர்களில் சிலர், “பாருங்கள், இது உண்மையென்று நான் விசுவாசிக்கின்றேன். அது உண்மையென்று நான் விசுவாசிக்கின்றேன். தேவனால் இரட்சிக்க முடியும் என்று நான் விசுவாசிக்கின்றேன், ஆனால் அவரால் சுகமளிக்க முடியும் என்று நான் விசுவாசிப்பதில்லை. பெந்தெகோஸ்தே நாளிலே, நிச்சயமாக, பரிசுத்த ஆவி இறங்கினதென்று நான் விசுவாசிக்கிறேன், ஆனால் பெந்தெகோஸ்தேவிற்குப் பிறகு, பரிசுத்த ஆவி இறங்கினதென்று எந்த இடத்திலும் கூறப்படவில்லையே” என்கின்றனர். 169 ஓ, சசோதரனே! அந்த விதமாகத்தான் அவர்கள் அதைக் காண்கின்றனர்; தங்களைக் கிறிஸ்துவின் சபைகள் என்று அழைத்துக் கொள்கின்றனர். புரிகின்றதா? “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அந்த வார்த்தையை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” ஹூ! ஹூ-ஹூ! அதுதான் இது. புரிகின்றதா? 170 நீங்கள் விசுவாசிக்கத்தான் வேண்டும். யோசனை செய்யாதீர்கள். விசுவாசியுங்கள். அறிவுக்கூர்மையை கொண்டிருக்க முயற்சி செய்யாதீர்கள். வார்த்தையை அப்படியே விசுவாசியுங்கள். 171 அறிவுக்கூர்மை சுய புத்தியைக் கொண்டு யோசித்து இன்னுமொரு சிறந்த வழியை உனக்கு முன்பாக வைக்க முயற்சிக்கிறது. இப்பொழுது, அதைத்தான் சரியாக சாத்தான் ஏவாளிடம் கூறினான். “இப்பொழுது, நீங்கள் சாகவே சாவதில்லை. நிச்சயமாக நீங்கள் சாகமாட்டீர்கள், ஏனென்றால் தேவன் மிகவும் நல்ல தேவன்,” என்றான்.
63172 அவர் நல்ல தேவன்தான். அவர் தம்முடைய வார்த்தையோடே அப்படியே தரித்து நிற்பார் என்பதே, அவர் நல்ல தேவன் என்று நான் நம்பிக்கை கொள்ளத்தக்கதாகவுள்ள ஒரே வழி. 173 நான் உண்மையுள்ளவனாக இல்லாதிருக்கும்போது நான் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டுமென்று எப்படி நீங்கள் எதிர்பார்க்கலாம்? நான் ஒரு காரியத்தைக் கூறி, வேறொன்றைச் செய்வேனானால், என் வார்த்தை ஏறத்தாழ ஆட்டம் கண்டுள்ளதாக இருக்கும். புரிகிறதா? 174 அவரை ஒரு நல்ல தேவனாக ஆக்குவது என்னவென்றால், அவர் அந்த வார்த்தையை உரைத்திருக்கின்றார், நாம் அந்த வார்த்தையின்படியே வாழ வேண்டும் “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” அப்படியானால், அந்த வார்த்தையோடே தேவன் அப்படியே தரித்திருக்க வேண்டியவராக இருக்கிறார். அது தான் அவரை ஒரு நல்ல தேவனாக ஆக்குகின்றது.
64175 இப்பொழுது, அவர், “பாருங்கள், இவர்கள் சற்று இதைச் செய்யும்படிக்கு நான் விட்டு விடுகிறேன். நான், அவர்கள் அதைச் செய்யும்படிக்கு நான் அனுமதித்து விடுவேனாக. பாருங்கள், அதனால் பரவாயில்லை . ஓ, நான்—நான் இந்த இடத்திற்கு வந்து விடுவேன்” என்று கூறுவாரானால், ஏன், அவர் ஒரு காரியத்தை செய்யலாமா, வேண்டாமா என்று உறுதியற்ற வகையிலான ஒருவராகவே இருக்கிறார், பாருங்கள்; அவர் தேவனாக இல்லை; அவர்—அவர் ஒரு சாதாரண மனிதனே. புரிகின்றதா? ஆனால், அவர் ஒரு நல்ல தேவனாக இருக்க வேண்டுமென்றால், அவர் தம்முடைய வார்த்தையுடன் தரித்திருக்க வேண்டும். அது ஒவ்வொரு பிள்ளையையும்… அவர் இந்த ஒருவரை விபச்சாரம் செய்யும்படிக்கும், இந்த மற்றொருவரை சிறிது மது அருந்தும்படிக்கும், மற்றும்—மற்றும் இந்த வேறொருவரை ஒரு சிறு பொய்யை கூறும்படிக்கும், இந்த இன்னுமொருவரை சிறிது திருடும்படிக்கும், இவர் அதை இதைச் செய்யலாம்—செய்யலாம் என்று விட்டுவிடுவாரானால்; அப்படியானால் அது என்னையும், ஏதாவது செய்யும்படிச் செய்யுமல்லவா?
65176 அவர் ஒரேயொரு வழியைத்தான் கொண்டிருக்கிறார், எல்லாம் அந்த வாசலிற்குள்ளாகத்தான் செல்கின்றன. “ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கின்றது. தீட்டுள்ள எதுவும் அதில் பிரவேசிக்காது.” இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில், “சூனியக்காரரும், விபச்சாரக்காரரும், நாய்கள், அதைப்போன்றோர் யாவரும் புறம்பே இருப்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. “ஜீவவிருட்சத்தின் மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், அவருடைய எல்லா கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.” அது உண்மை. ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது, அது தேவனாகும்.
66177 வேறொரு வழியில் செல்லலாம் என்று, சொந்தமாக யோசித்து செயல்படாதீர்கள். பாருங்கள், ரோமன் கத்தோலிக்க சபை, “நாங்கள்தான் சபை. அந்த—அந்த வேதாகமானது ஒன்றும் உதவாதது…ஏன், ஏன், அதை, உங்களால்…” என்று கூறுகின்றது. பேராயர் ஷீன், “அதனுடன் வாழ முயற்சிப்பது சேரான தண்ணீர்களினூடாக நடந்து செல்வது போன்றதாகும்,” என்று கூறினார். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? எப்படி நீங்கள் அதைச் செய்யப் போகின்றீர்கள்? புரிகிறதா? அப்படியானால், அவர் கூறுவது சரியென்றால், வேதம் தவறாகும். வேதம் சரியென்றால்; அவர் தவறாயிருக்கிறார். இப்பொழுது நீங்கள் என்ன கூறப்போகின்றீர்கள்? தேவனுடைய வார்த்தை சரியாக இருக்குமென்றால், ஒன்று பேராயர் ஷீன் அல்லது—அல்லது வேதாகமம் சரியாக இருக்க வேண்டும். பேராயர் ஹீன் மாத்திரமல்ல, ஆனால் சங்கை. இன்னார்-மற்றும்-இன்னார், மற்றும் வேதபண்டிதர். இன்னார்-மற்றும்-இன்னார், மற்றும் இன்னார்-மற்றும்-இன்னார் கூட. வானொலியில் அந்த மனிதன் இவ்விதமாகக் கூறிடாவிடில், அவருடைய பெயரை நான் கூறியிருக்கமாட்டேன். ஆகவே, அவர் அதை வானொலியில் கூறினதினாலே, அவருடைய பெயரை நான் கூறலாம் என்று நான் நினைக்கிறேன். வேதபண்டிதர். இன்னார்-மற்றும்-இன்னார் மற்றும் இன்னார்-மற்றும்-இன்னார், இன்னார்-மற்றும்-இன்னார் மற்றும் இன்னார்-மற்றும்-இன்னார் கூறினார். இப்பொழுது யாரை நீங்கள் விசுவாசிக்கப் போகின்றீர்கள், தேவனையா அல்லது அவர்களையா?
67178 “சரி,” “உண்மையாகவே அதன் அர்த்தம் இந்த விதமாக அல்ல” என்று கூறலாம். அது எழுதப்பட்டவிதமாகத்தான் அதன் அர்த்தமும் கூட உள்ளது. 179 பாருங்கள், அதுதான் பிசாசின் முதல் பொய்யாகும். அவன் ஏவாளிடம், “உண்மையாகவே, அதன் அர்த்தம் அதுவல்ல. நிச்சயமாக தேவன் அதைச் செய்ய மிகவும் நல்லவராயிருக்கிறார். நீ சாகவேமாட்டாய்,” என்று கூறினான். ஆனால் அவர்கள் செய்தனர். ஒவ்வொருமுறையும், அவர்கள் அவ்விதமே செய்வார்கள். நீ வார்த்தையைச் சந்தித்தாக வேண்டும்! 180 அறிவுக்கூர்மை ஒரு—ஒரு மேலான வழியை எடுக்க முயற்சிக்கிறது, அதிநவீன விதத்தில், புகழின் விதத்தில், அந்த…சுலபமான வழியில் செய்ய முயற்சிக்கும், தனக்குத்தானே அதை கண்டறியும்.
68181 இப்பொழுது, இங்கே ஒரு நபரை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், ஒருக்கால் தேவன் அவனுடன் ஈடுபடச் செல்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது, அவன் எல்லாவற்றையும் விட வேண்டும் என்று அவன் நினைக்கிறான். அவன் தன்னுடைய மனைவியை சரியான வழிக்குக் கொண்டு வரவேண்டும். அவன் தன்னுடைய சீட்டு விளையாட்டு விருந்துகளுக்கு போவதை விட்டுவிட வேண்டும். அவன் நடனங்களுக்குச் சென்று ஆடுவதை விட்டுவிட வேண்டும். தன் மனைவி அவளுடைய முடியை நீளமாக வளரவிடும்படிக்குச் செய்ய வேண்டும். அவள் அழகொப்பனை பொருள்கள் உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். அவன் புகைப்பிடிப்பதையும், மது குடிப்பதையும் நிறுத்தியாக வேண்டும். அவன் இருக்கின்ற தன்னுடைய பெரிய அந்தஸ்து வாய்ந்த சமுதாயத்தை விட்டு வெளியே வந்தாக வேண்டும். பீடத்தண்டை போய்த் தன்னைத் தானே தாழ்த்த வேண்டும். அவன் ஒரு அதிதீவிர மூடபக்திவைராக்கியம் கொண்டவன் என்றும், ஒரு பரிசுத்த உருளையன் என்றும், பெயல்செபூல், மற்றும் எந்தப் பெயரைக் கொண்டும் அழைக்கப்பட்டாலும் அவன் அப்படியே தரித்து நிற்க வேண்டும். “நான் பக்தியாக இருப்பேன், ஆனால் நான் இங்கே சென்று, இங்கே இருக்கின்ற இந்த சபையில் நான் சேர்ந்து விடுவேன். நீங்கள் மிகவும் குறுகின மனப்பான்மை கொண்டிருக்கிறீர்கள்.” அங்குதான் காரியம். புரிகிறதா? யோசித்தல், சொந்தமாக யோசித்தல் என்று ஒன்று உண்டு. 182 இப்பொழுது அதன் பேரில், இன்னும் சில நிமிடங்களில், ஒரு பெரிய முக்கிய காரியத்தை நாம் பார்க்கப்போகிறோம். புரிகிறதா? அப்படியானால், எப்படி நீங்கள் சரி எது, தவறு எது என்று அறிந்துக்கொள்ளப்போகின்றீர்கள்? புரிகிறதா?
69183 இப்பொழுது, வார்த்தை எதையோ ஒன்றைக் கூறுகின்றது என்று காண்பிக்க, அறிவுக்கூர்மையானது முயல்கின்றது, அப்படியே செய்துவிடுகின்றது. அறிவு, அறிவுக்கூர்மை, சுயபுத்தியைக் கொண்டு—யோசிக்க முயற்சி செய்கின்றது. அறிவுக்கூர்மை காரியத்தை சற்று மேலாகச் செய்யும் வழியைக் கண்டுபிடிக்கிறது. ஆனால் தேவனுடைய வழியைத் தவிர வேறுவிதமான ஒரு வழி என்பது கிடையவே கிடையாது. அறிவுக்கூர்மை, “ஓ, சரிதான், இப்பொழுது, அந்தவிதமான ஒன்றை இந்த காலத்தில் நம்மால் செய்ய முடியாது என்பது, உனக்குத் தெரியுமா” என்று சுட்டிக்காட்டிக், கூற முயற்சிக்கிறது. எப்படியாயினும், அதை நாம் செய்தாக வேண்டும். புரிகிறதா? சுலபமான ஒரு வழியைக் கண்டு பிடிக்க முயற்சி செய்கின்றது. வேதாகமம் கூறியிராத காரியங்களை கூறியுள்ளதாகக் காண்பிக்க அது முயற்சி செய்கின்றது. இப்பொழுது நீங்கள், “ஓ, சகோதரன் பிரான்ஹாம், இப்பொழுது நீங்கள்…” எனலாம்.
70184 சற்று பொறுங்கள். நாம் மறுபடியுமாக மூலவித்துக்கு திரும்பிச் செல்வோம். அறிவுக்கூர்மையைக் கொண்டு பிசாசு என்ன செய்ய முயன்றது? தேவனுடைய வார்த்தை கூறியிராத ஒன்றை அவ்வாறு கூறியிருக்கின்றது என்று காண்பிக்க முயற்சி செய்வதேயாகும். அது உண்மை. தேவனுடைய வார்த்தை கூறியிராத ஒன்றை அது அவ்வாறே தான் கூறியுள்ளது என்று காண்பிக்க அவன் முயற்சித்தான். ஆகவே இன்றைக்கும் அவ்விதமாகத் தான் அது வருகின்றது, தேவனுடைய வார்த்தை கூறியிராத ஒன்றை அது கூறியுள்ளது என்று அவர்கள் காண்பிக்க முயற்சிக்கின்றனர். 185 ஆம், அவர்கள், “இதோ, நான் உங்களுக்கு கூறுவது, சகோதரன் பிரான்ஹாம், அதற்குச் சரியான வியாக்கியானம் உங்களிடத்தில் இல்லை” என்கின்றனர். 186 வேதாகமம், அதாவது, “தீர்க்கதரிசனமானது சுய தோற்றமான பொருளையுடையதாயிராது” என்று கூறியிருக்கின்றது. ஏன்? ஏன் அது ஒரு தனிப்பட்ட வியாக்கியானத்திற்குரியதல்லவா? ஏன்? “கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளினிடத்திற்குத்தான் வந்தது.” அது ஒரு தீர்க்கதரிசியினால்தான் வியாக்கியானப்படுத்தப்படுகிறது. அது தனிப்பட்ட, வியாக்கியானத்திற்குரியதாக இருக்க முடியாது. தீர்க்கதரிசிகள் ஏற்கனவே அதை உங்களுக்கு வியாக்கியானப்படுத்தியிருக்கிறார்கள். இதோ அது, அங்கே எழுதப்பட்டிருக்கின்றது. அந்தவிதமாகத்தான் அது இருந்தாக வேண்டும்.
71187 எல்லா மக்களுக்கும் நியாயத்தீர்ப்பு செய்யப்படும்படிக்காக அடிப்படையான ஒரு காரியமாகிய ஒன்றை தேவன் கொண்டிருக்கத்தான் வேண்டும். 188 ஒரு சபையைக் கொண்டு நியாயத்தீர்ப்பு செய்தால், எந்த ஒன்று சரியானது? ஏறக்குறைய தொள்ளாயிரம் சபைகள் இருக்கின்றதே, தொள்ளாயிரம் வித்தியாசப்பட்ட ஸ்தாபனங்கள் இருக்கின்றதே. [சகோதரன் பிரான்ஹாம் இருமுகிறார்.—ஆசி.] (என்னை மன்னிக்கவும்.) அவைகளில் எந்த ஒன்று சரியானது? நீங்கள் உள்ளே போகப்போகிறீர்களென்று எப்படி அறிவீர்கள்? நீங்கள் ஒரு மெதோடிஸ்டாக இருக்கையில், பாப்டிஸ்டுகள் சரியானவர்களாக இருந்தால் எப்படியிருக்கும்? நீங்கள் ஒரு பெந்தெகோஸ்தேகாரராக இருக்கையில், பிரஸ்பிடேரியன்கள் சரியானவர்களாக இருந்தால் எப்படியிருக்கும்? நீங்கள் ஒரு கத்தோலிக்கனாக இருக்கையில், லுத்தரன்கள் சரியானவர்களாக இருந்தால் எப்படியிருக்கும்? நீங்கள் ஒரு லுத்தரனாக இருக்கையில், கத்தோலிக்கர்கள் சரியானவர்களாக இருப்பார்களானால் எப்படியிருக்கும்? புரிகிறதா? 189 ஆகவே ஏதோ ஒரு அடிப்படை எங்கோ ஓரிடத்தில் இருக்கத்தான் வேண்டும். ஆகவே வார்த்தையானது…
72190 “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” புரிகிறதா? அந்த வார்த்தை தேவனுக்குள் இருந்தது. அது தேவனாயிருந்தது. அவருடைய நினைவுகள் எப்பொழுதுமே, அங்கே அவருடன் இருந்து கொண்டிருக்கின்றது. தேவன் நித்தியமானவராக இருக்கின்றதுபோன்றே தேவனுடைய நினைவுகளும் நித்தியமானவைகளே. ஆமென். சகோதரனே, இது மேலோட்டமாக செல்லுகின்ற ஒரு காரியம் அல்ல. புரிகிறதா? இதோ அது வருகிறது. “தேவனுடைய நினைவுகள்தான் அவருடைய வார்த்தையாகும், ஆதியிலே,” அது, “நித்தியத்தில்,” இப்பொழுது, காலமானது, “துவக்கமானது” முதல் முதலாக ஆரம்பித்த பொழுது. “ஆதியிலே வார்த்தை இருந்தது, தேவனுடைய நினைவுகள், அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” புரிகிறதா? அவர் என்னவாக இருந்தாரோ அவ்விதமே அவருடைய நினைவுகளும் இருந்தன. 191 நீங்களும் கூட, அவ்விதமே இருக்கின்றீர்கள். உங்கள் நினைவுகள் எவ்விதமோ அவ்விதமாகத்தான் நீங்களும் இருக்கின்றீர்கள். நீங்கள் எதைக்கொண்டு, வாழ முயற்சித்தாலும் பரவாயில்லை, உங்கள் நினைவுகள் எவ்விதமோ அவ்விதமாகத்தான் நீங்களும் இருக்கின்றீர்கள். நீங்கள் சென்று, ஒரு அருமையான நபரைப் போன்று நடிக்கலாம், ஆனால் உங்கள் இருதயத்திலோ நீங்கள் ஒரு விபச்சாரியாக இருக்கிறீர்கள், ஆகவே அது என்னவாயிருந்தாலும் சரி. உங்கள் நினைவுகள் என்னவோ, அந்தப்படியேதான் நீங்களும் இருக்கிறீர்கள். 192 ஆகவே தேவனுடைய நினைவுகள்தான் அவருடன் இருந்த மற்றும் அவருக்குள் இருந்த அவருடைய வார்த்தையாகும், அது தேவனாயிருந்தது. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமானது.” தேவனுடைய நினைவுகள் ஒரு மாம்ச சரீரத்திற்குள்ளாக வெளிப்படுத்தப்பட்டு, “மாம்சமாகி நம் மத்தியில் வாசம்பண்ணினார்.” அங்குதான் காரியமே உள்ளது.
73193 இப்பொழுது, இன்று நீங்கள் நித்திய ஜீவனை கொண்டிருக்கிறீர்களென்றால், நீங்கள் தேவனுக்குள் இருக்கின்றீர்கள். ஆகவே தேவன் உங்களுக்குள் இருப்பதனால், நீங்கள் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட நினைவாக இருக்கின்றீர்கள். வ்வுயூ! அப்படியானால், உங்கள் கிரீடம் உங்களிடத்திலிருந்து எடுக்கப்பட்டு, வேறொருவருக்குக் கொடுக்கப்படாதபடிக்கு, எந்த தர்க்க அறிவுகளுக்கும் செவி கொடுக்காதீர்கள். எந்த தர்க்க அறிவுகளையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். தேவன் கூறியுள்ளதைச் சத்தியம் என்று விசுவாசிக்க மாத்திரம் செய்து, அதனுடன் அப்படியே தரித்து நில்லுங்கள். 194 அறிவுக்கூர்மையின் மூலமாக வரும், சொந்த யோசனைகள், வார்த்தை கூறியிராத ஒன்றை, அது அவ்வாறேதான் கூறியுள்ளது என்று கூற முயற்சிக்கிறது. இப்பொழுது, “சகோதரன் பிரான்ஹாம், அது உண்மைதானா?” என்று கேட்கலாம். 195 பாருங்கள், நாம் ஆதியாகமத்திற்குச் சென்று அதைப் பார்க்கலாம். நாம் ஆதியாகமம் 3-வது அதிகாரத்திற்குத் திருப்புவோம், நாம் அந்த—அந்த—அந்த 4-வது வசனத்தை வாசிக்கப் போகின்றோம். அறிவுக்கூர்மையானது வார்த்தை கூறியிராத ஒன்றை, அப்படியாகக் கூறியிருக்கின்றது என்னும் விதத்தில் காண்பிக்க முயற்சிப்பதை—பாருங்கள். ஆதியாகமம் 3-ம் அதிகாரம், 4-வது வசனம். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; 196 அது எதை அளிக்க முயற்சிக்கின்றது என்று பார்த்தீர்களா? அது என்ன? வார்த்தை கூறியிராத ஒன்றை, அப்படியாகக் கூறியிருக்கின்றது என்று காண்பிக்க முயற்சித்தல். பார்த்தீர்களா? தேவனோ “நீ சாகவே சாவாய்” என்று கூறியிருந்தார்
74197 அவளுக்கு சாத்தான் அளித்துக்கொண்டிருந்த, அந்த அறிவுக்கூர்மை “நீங்கள் சாகவே சாவதில்லை” என்றான். புரிகிறதா? “வார்த்தையில் அவ்வாறில்லாததை,” உள்ளது என்று வார்த்தையே கூறும்படிக்கு செய்ய அறிவுக்கூர்மை முயற்சிக்கின்றது. 198 அந்த விதமாகவே இன்றைக்கும் அறிவுக்கூர்மை உள்ளது. ஓ, சகோதரனே, அதன் பேரில் எப்படி நம்மால் தரித்திருக்க முடியும்! வேததாகம கருத்தரங்குகள், வேத சாஸ்திரப் பள்ளிகள், அதுதான் அவர்களுடைய கூடாக இருக்கிறது. அதுதான் அவர்களுடைய அடிப்படையான காரியமாக இருக்கிறது, அவைகள் தேவனுடைய வார்த்தை கூறியிராத ஒன்றை, அவ்வாறே கூறியிருக்கிறது என்கின்ற விதமாகக் காண்பிக்க முயற்சிக்கிறது. 199 யாராவது ஒருவர் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம் என்கிற ஒன்றை வேதாகமத்திலிருந்து எனக்கு எடுத்து காண்பிக்க நான் சவாலிடுகிறேன். வேதாகமத்திலிருந்து “பரிசுத்தவான்களின் மத்தியஸ்தம்” என்கின்ற ஒன்றை எனக்கு யாராவது காண்பிக்க நான் சவாலிடுகிறேன். பிராடெஸ்டெண்டுகள், கத்தோலிக்கர்கள் இருவருமே அதை விசுவாசிக்கின்றனர். அக்காரியங்களில் ஏதாவதொன்றை வேதாகமத்திலிருந்து எனக்கு எடுத்துக்காட்ட, நான் உங்களுக்கு சவாலிடுகிறேன். புரிகிறதா? அது அறிவுக்கூர்மையின் அடித்தளமாக தர்க்கஅறிவைக்கொண்டு யோசிக்க முயற்சித்தல் ஆகும்.
75200 “நம்முடைய யுத்தமானது மாம்சப் பிரகாரமானது அல்ல, ஆனால் மகத்தானது, எல்லா தர்க்க அறிவுகளையும் புறம்பே தள்ளுவதாகும், பாருங்கள், சாத்தானின் கோட்டைகளை இடித்துத் தள்ளுவதேயாகும்.” அந்த பெரிய, மிகவும் சொல் நயமிக்க, அழகான சிருஷ்டி! சாத்தான் வழவழப்பான மிடுக்கான தந்திரசாலிதான்; இல்லை, இல்லை. உட்பிரகாரமாக அவன் அப்படி இருக்கின்றான். ஆனால், வெளிப்பிரகாரமாக, பாவமானது இரு மடங்கு மிகவும் அழகு வாய்ந்ததாகும். பாவம் அழகான ஒன்று என்பது, உங்களுக்குத் தெரியும். 201 ஐம்பது வயது கடந்த ஆண் மற்றும் பெண், இங்கு எத்தனை பேர் இருக்கின்றீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நான்…பெண்களைக் கேட்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நான்…நாமெல்லாரும் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உலக முழுவதுமாக இன்று பார்ப்பீர்களானால், சராசரியாக, அன்று இருந்த பெண்களை விட, இன்றைய பெண்கள், இருமடங்கு மிக அழகு வாய்ந்தவர்களாக உள்ளதை உங்களால் காண முடிகிறதல்லவா? அப்படித்தான் என்றால், உங்கள் கரங்களை மேலே உயர்த்துங்கள். நிச்சயமாக. அவர்கள் அன்று இருந்ததை விட இரு மடங்கு அழகாக உள்ளனர்.
76202 பழைய புகைப்படங்களை சற்று எடுத்துப் பாருங்கள். நம்முடைய பாட்டி; நீண்ட பாவாடையுடன், பின்னப்பட்ட தலைமுடி நீளமாக பின்புறத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். அவள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கவில்லை. 203 இன்றைக்கு உள்ள நவீன பெண்ணைப் பாருங்கள். தோலோடு ஒட்டியுள்ள ஒரு சிறிய ஆடை, அதாவது, ஒவ்வொரு அங்க வடிவும், அவள் அசைந்து நடக்கும்போது பாவம் செய்யாமல் அவளால் இருக்க முடியாது. நடக்கையில், மேக்ஸ் ஃபாக்டர் ஒப்பனை தொழிற்சாலை தயாரிக்கின்ற ஏறக்குறைய ஒவ்வொரு அலங்கார ஒப்பனை பொருட்களைக் கொண்டு சாயம் தீட்டிக்கொண்டு, வீதிகளில் ஒய்யாரமாக நடக்கின்றாள். ஒரு சிறுமியைப் போன்று தன் தலை முடியை அமைத்துக்கொள்கிறாள். தன் முழங்காலிற்கு மேலே, அங்கே ஒரு துணி என்பது இருக்கிறதுபோல் காணப்படாதிருக்கிற, ஒரு சிறிய குட்டைப் பாவாடையை அணிந்திருக்கின்றாள். ஆனால், அவளை நீங்கள் நோக்கிப்பார்க்கையில், அவள் அழகுள்ளவளாயிருக்கிறாள். அதை எவ்விதம் செய்ய வேண்டுமென்று சாத்தான் அறிந்திருக்கிறான். அவன் அழகின் ஆக்கியோன், அவ்விதமான அழகின் விளைவு பாவமாகும்.
77204 இப்பூமியே, ஒரு கர்ப்பப்பையாகும். தேவன் தம்முடைய வித்துக்களை எங்கே வைத்தார்? வித்துக்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கின்றன? ஒரு கர்ப்பப்பையில். தேவன் வித்துக்களை வைக்கின்றார். மனிதன் என்ன செய்கின்றான்? ஒரு கர்ப்பப்பையில், பிசாசுகள் போல, அவனால் முடிந்த வரை ஒரு குழந்தையை உருக்குலைக்கின்றான். அதைத்தான் பிசாசுகள் பூமியின் மீது செய்துள்ளன, கலப்பினமாக்குதல், வழக்கமாக இல்லாதிருக்கிற, சிருஷ்டிகளை உருவாக்குதல். இந்த காரியத்தை நான் தொடர்ந்து பேசாமல் விட்டுவிடுவது நலம்; இல்லையென்றால் நான் இங்கு எழுதிவைத்துள்ள மற்றவற்றை, என்னால் எடுத்துப்பேச இயலாது. நான் என்ன பொருட்படுத்திக் கூறகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன் காரணமாகத்தான் ஒரு உருக்குலைந்த சிருஷ்டி போடப்படவிருந்தது. தேவன் அனோடு முடித்துவிட்டார். உலகம் ஒழுங்கிலிருந்து வழிவிலகிப் போயிருக்கின்றது. எல்லாமே தவறாக உள்ளது. நீரோடைகள் மாசுபடிந்துள்ளன. காற்று மாசுபடிந்துள்ளது. அசுத்தம்! நாற்றம்! 205 சிறிது காலத்திற்கு முன்னர், ஒரு வயதான இந்தியன் ஒருவன், “வெள்ளை மனிதனே, இன்னுமாக உயிர் வாழ எனக்கு விருப்பம் இல்லை. நான் சண்டையிட்டுவிட்டேன்” என்றான். “எங்கே என்னுடைய குழந்தைகள்? அவர்கள் பட்டினிக் கிடந்து மடிந்து போனார்களே? என்னுடைய மனைவி எங்கே?” என்றான். “நீ உன்னுடைய பெண்கள், மதுபானம் மற்றும் பாவத்துடனே இங்கே நீ வரும்முன், நாங்கள் சமாதானத்தோடு அமைதியாக வாழ்ந்து வந்தோம். இது எங்களுடைய நிலங்கள். தேவன் இதை எங்களுக்குக் கொடுத்தார், ஆனால் நீயோ அதை எங்களிடத்திலிருந்து எடுத்துக் கொள்கின்றாய். இதற்காக ஒரு நாளிலே, நீ துன்பத்தை அனுபவிப்பாய்” என்று கூறினான்.
78206 இன்றைக்கு, அதைப் பாருங்கள், அந்தப் பெரிய, பாலைவனங்கள் மலைகள் மதுபான புட்டிகளாலும், மதுமான பீப்பாய்களாலும், நாற்றத்தாலும், பாவத்தாலும் நிறைந்து, சிதறி நாற்றமாயுள்ளன. ஒவ்வொரு இடமும் மதுபானக் கடைகளாலும், முட்டாள்தனமான அசுத்தத்தாலும் முழுவதுமாக நிறைந்திருக்கின்றன. நெவடாவிலுள்ள, ரெனோ, இந்த பெரிய பாலைவனத்தில் விபச்சாரத்தைத் தவிர வேறெதுவுமே நடப்பதில்லை. அந்த பெரிய நகரங்களில், அவற்றில் காற்று மற்றும் சுற்றுச் சூழலும் கூட மாசுபடிந்துள்ளது. ஒரு காலத்தில் அழகான மலைகளால் நிறைந்திருந்தது, இப்பொழுதுதோ எல்லா விதமான காரியங்களைக் கொண்டு அவை வெட்டப்பட்டுள்ளன. எங்கே மரங்கள் வளர்ந்துள்ளதோ, அங்கே அவைகள் வெட்டப்படுகின்றன. பாலைவனங்கள், தண்ணீர்கள் தாராளமாக புரண்டோடின, இப்பொழுதோ அவை மாசுபடிந்துள்ளன. முழு உலகமே முற்றிலுமாக புறம்பே—வீசியெறியப்படப் போகின்றது. அந்த வித்திலிருந்து பூமியானது தன்னுடைய குழந்தையைப் பெற்றெடுக்கப் போகின்றது. அது பிசாசுகளால் பிய்த்தெறியப்பட்டு கிழிக்கப்பட்டு, தாறுமாறாக்கப்பட்டுள்ளது, நிச்சயமாக, அவ்வாறே இருக்கின்றது—அது தாறுமாறாக்கப்பட்ட சிருஷ்டிப்பாகும். தேவன் அதை முற்றிலுமாக புறம்பே வீசியெறிந்துவிட்டு மறுபடியுமாக புதியதை உருவாக்குவார். அது உண்மை.
79207 இக்காரியமெல்லாம் எங்கிருந்து வந்தன? ஒரு நபர் ஒரு சிறு காரியத்தை விசுவாசித்து…தேவனுடைய வார்த்தையின் ஒரு சிறு கட்டத்தை அவிசுவாசித்ததன் காரணத்தாலேயே. 208 அதனால் முழு உலகமே வேதனையால் முனகிக்கொண்டிருக்கின்றது. வேதம், “இயற்கையும் கூட இந்த துன்பத்தின் முடிவின் நாளுக்காக வேதனைப்பட்டு தவித்துக்கொண்டிருக்கின்றது என்றும், தேவனுடய புத்திரர் வெளிப்படுவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றது” என்றும் கூறுகின்றது. மரங்களெல்லாம் பயனற்ற விதத்தில், பிரயாசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மலர்களெல்லாம் நமக்குப் பாதையை பிரகாசமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன… ஆனால், அவை ஏதோக் காரியம் தவறாயுள்ளது என்று அறிந்து, வேதனைப்பட்டு தவித்துக்கொண்டிருக்கின்றது. தாறுமாறாக்கப்பட்டுள்ளது! கர்ப்பமானது அந்த பரிபூரணமான ஒன்றைப் பிறப்பிக்க முடியாது, ஏனென்றால் அவள் தாறுமாறாக்கப்பட்டிருக்கின்றாள். நிலமானது நாற்றமெடுக்கின்றது. அது குற்றமற்றவர்களுடைய ரத்தத்தினாலே மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றது. அது…அது ஒரு மாதிரியான…
80209 நான் ஒரு காரியத்தைக் கூறமுடியும், அது மிக அழகின்மையாக காணப்படுகின்றது. அது—அது—அது நாற்றமெடுத்துக் கொண்டிருக்கின்றது. தேவன், தமக்கு முன்பாக “இது நாற்றமெடுத்துக் கொண்டிருக்கிறது,” மிக அசுத்தமாயிருக்கிறது என்று கூறியுள்ளார். நீங்கள் சிறுநீர் கழிக்கும் அறை, ஒரு கழிவறைக்குள் செல்வீர்களானால், அங்கே மிகவும் நாற்றமெடுக்கும், மிகவும் அசுத்தமாயிருக்கும். அதே விதமாகத்தான் உலகமும் கூட தேவனுக்கு நாற்றமெடுத்துக் கொண்டிருக்கிறது. அசுத்தம், அந்த முழு காரியமும் அசுத்தமாகவுள்ளது. 210 தேவன் உலகை சுக்குநூறாக வெடித்து சிதறச் செய்வார். “நான் புதிய வானங்களையும் புதிய பூமியையும் சிருஷ்ப்பேன்,” என்று அவர் கூறியிருக்கிறார். ஆம் ஐயா. 211 அது என்ன? பூமியினுடைய கர்ப்பம் ஒரு ஆயிரவருட அரசாட்சியை இன்னுமாக பிறப்பிக்கவில்லை. அது தாறுமாறாக்கப்பட்ட ஒன்றை பிறப்பித்திருக்கின்றது. ஏன்? அறிவுக்கூர்மையுடன் இருக்க முயற்சிக்கிற காரணத்தினாலேயாகும். 212 ஃபிளாரிடா மாநிலத்திற்கு எதிராக எந்த ஒரு காரியமும் கிடையாது. ஃப்ளாரிடாவிலிருந்து வந்துள்ள மக்களாகிய உங்களுக்கு எதிராக இதை நான் பொருட்படுத்திக் கூறவில்லை. ஆனால் நான் எல்லையைத் தாண்டி முதல் முறையாக ஃபிளாரிடாவிற்குச் சென்று, அங்கே ஜார்ஜியாவின் எல்லைக் கோட்டிற்கு நான் திரும்பி வந்து, சரியாக நான் அங்கே நின்று, நான், “ஒரு அமெரிக்க குடிமகனாக, இதின் என்னுடைய ஒரு பாகத்தை நான் இதின் பூர்வ இனத்தாராகிய செமினோல்கள் என்ற இனத்திற்கே திருப்பித் தருகிறேன்” என்று கூறினேன். ஏன், நான் என் தலைமுடிக்கு செய்வதை விட அவர்கள் தங்களுடைய முற்றங்களை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர், ஒவ்வொரு காரியத்தையும் மிக துல்லியமாகச் செய்கின்றனர். அங்கே இருக்கின்ற பனை மரங்கள் எல்லாவற்றிலும் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பெரிய பகட்டான உல்லாசப் படகுகள் மற்றும் காரியங்கள், மனந்திரும்பாமலே ஒரு ஆயிரவருட அரசாட்சியை அவர்கள் கொண்டுவர முயற்சிக்கின்றனர். என்னைப் பொருத்தவரையில், அது ஒரு அர்த்தமற்ற காரியமாகும். 213 நான் பிரிட்டிஷ் கொலம்பியாவில், ஒரு மலையின் உச்சிக்குச் சென்று, இலட்சக்கணக்கான முறைகள், தேவன் சிருஷ்டித்த மலைகளை, மனிதனின் கைகள் பட்டிராத, அக்காரியங்களை, உற்று பார்த்துக் கொண்டிருப்பேன். நிச்சயமாக.
81214 இந்த நகரங்களுக்குள்ளாக செல்கையில், அந்த பெரிய வீடுகளைக் காண்கையில், அது, அது என் கவனத்தை ஈர்ப்பதேயில்லை. அந்த விதமான காரியத்தை நான் வெறுக்கிறேன். புரிகிறதா? 215 ஆனால் ஒரு நாளிலே, ஒரு நாளில், அவை மாற்றப்படும் என்பதை நான் அறிவேன். அவள் தன்னுடைய பாதிக்கப்பட்ட குழந்தையை புறம்பே தூக்கி எறிவாள். ஒரு நாளிலே, பூமியானது, அது மாற்றப்படும். சரியே. 216 அவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று விசுவாசமானது நம்புகின்றது, “வார்த்தை எந்த ஒரு பிழையும் கொண்டிராத ஒன்றாகும்” என்றும் கூறுகின்றது. 217 போதகர்கள், “பாருங்கள், நான் உங்களுக்கு கூறுகிறேன், அந்த—அந்த ஜேம்ஸ் அரசனின் வேதாகம பதிப்பானது, அல்லது இந்த திருத்தப்பட்ட பதிப்பு, அல்லது இது இங்கே, இது—இது சற்று வித்தியாசமானது. உண்மையாகவே, அது அவ்விதமான அர்த்தமுடையதல்ல” என்று கூறுவதை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? அவ்விதமாக அவர்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? [சபையோர், “ஆம்” என்கின்றனர்.—ஆசி.] ஓ, என்னே! உலகம் முழுவதும் அந்தப் பாதிப்பினால் மாசுப்படுத்தப்பட்டுள்ளது. புரிகிறதா? ஆனால் விசுவாசம் அதை விசுவாசிப்பதில்லை.
82218 என்னை உண்டாக்கின அந்த தேவன்தாமே, நான் அந்த வேதாகமத்தின்படியே வாழத்தக்கதாக அந்த புஸ்தகத்தை அதே ஒழுங்கிலேயே அப்படியே காத்து வைப்பார் என்று, விசுவாசமானது நம்புகின்றது. என்னை உண்டாக்கின தேவன் என்னை நியாயந்தீர்க்க வேண்டியிருக்க, தம்முடைய புஸ்தகத்தை ஒழுங்காக வைத்திருக்க முடியாமற்போனால், அப்படியானால் அவர் ஒரு திறமையில்லாத தேவனாக இருப்பார். அங்குதான் காரியம். அதினுடைய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று நான் விசுவாசிக்கின்றேன். ஆம், ஐயா. அதை விசுவாசிக்க, இது நமக்கு என்ன செய்கின்றது? அது விசுவாசத்திற்கு, வேதாகமத்திற்குள்ளாக ஒரு பரிபூரண இளைப்பாறுதலை அளிக்கின்றது. புரிகிறதா? வார்த்தை, ஏதோ ஒரு வழியில், குழப்பப்பட்டுள்ளது என்று, நீ அதை அவிசுவாசிக்க முடியாது. வார்த்தை எவ்விதமாக இருக்கின்றதோ அவ்விதமாகவே அதை நீங்கள் அப்படியே விசுவாசிக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். 219 நீங்கள் அறிவுக் கூர்மையை உபயோகப்படுத்த முயற்சித்தால், “இப்பொழுது, இங்கே பாருங்கள். இதைப் போன்ற ஒன்றை அது செய்யும் என்று தேவன் கூறியுள்ளார் என்பது செய்முறைக்கு ஒத்ததாக இல்லை.” ஆனால் தேவன் அதைச் செய்யவே செய்தார். புரிகிறதா? அது சரி. இப்பொழுது, நீங்கள் “பாருங்கள், இப்பொழுது, தேவன் இதைச் செய்துள்ளாரென்றால், அவன் லேவியனல்லாததிருந்தும், அவர் ஒரு மனினுடைய ஜீவனை எடுத்திருப்பாரென்றால், உடன்படிக்கை பெட்டி கிட்டத்தட்ட விழவிருந்தபோது தன் கையை நீட்டி அதைப் பிடித்தான்” எனலாம். அதைச் செய்ததற்காக அவர் அவனுடைய ஜீவனை எடுத்த போது, அவன் என்னவாக இருந்தான் என்பது பொருட்டல்ல.
83220 தேவன், “லேவியர், மாத்திரமே, அதைத் தொடலாம்” என்று கூறியிருந்தார். ஆகவே அவர் அவனுடைய ஜீவனை எடுத்தார். அதுதான் தாவீதுக்கு கிளர்ச்சியையுண்டுபண்ணினது என்று, உங்களுக்குத் தெரியுமா. புரிகிறதா? ஒரு லேவியனை, ஒரு லேவியனைத் தவிர யாருமே அந்த உடன்படிக்கைப் பெட்டியைக் கையாளக்கூடாது. இங்கே ஒரு எழுப்புதலுக்காக, தேவனுடைய பெட்டி அங்கே திரும்பவுமாக வந்து கொண்டிருந்தது, அப்பொழுது அதற்குப் புறம்பான ஒருவன் அந்த வார்த்தையைக் கையாள முயற்சித்தான். 221 தேவனால் அபிஷேகிக்கப்பட்டவர்கள் மாத்திரமே அந்த வார்த்தையைத் தொட வேண்டும் என்பதையே அது காண்பிக்கிறது. இந்த ஸ்தாபன உபதேசங்களுக்கும் மற்றும் ஸ்தாபனங்களுக்கும் அந்த வார்த்தையை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் கிடையாது. அந்த வார்த்தையோடு இடைபடுவதற்கு பரிசுத்த ஆவிக்கு மாத்திரமே அதிகாரமுண்டு, அதைத் தொடுகின்ற மற்றவர்களுக்கு மரணம் தான் கிட்டும். அல்லது, அந்த வார்த்தையின் எந்த ஒரு பாகத்தை அவிசுவாசித்தாலோ, அல்லது அதை உபதேசித்தாலோ, “ஜீவபுஸ்தகத்திலிருந்து, அவனுடைய பங்கு எடுத்துப்போடப்படும்.” அதன் மீது உங்கள் கையைப் போடாதீர்கள். அதிலிருந்து சற்று விலகியிருங்கள். கவனியுங்கள், அது என்ன கூறியுள்ளதோ அதை அப்படியே விசுவாசியுங்கள். வேறு யாரோ ஒருவருடைய வார்த்தையை எடுத்துக்கொள்ளாதீர்கள். வேதாகமம் என்ன கூறுகின்றதோ அதை மாத்திரமே எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு வேறேதாவது ஒன்றைச் செய்தால் மரணம் நிச்சயம். இப்பொழுது, ஏனென்றால் அது… 222 விசுவாசம் என்ன செய்கின்றது? வார்த்தை இருக்கின்ற வண்ணமாகவே அதை அப்படியே விசுவாசிக்கிறது. காலாகாலமாக அது தேவனாலே காக்கப்பட்டு மாறாமல் அப்படியே இருந்து வருகின்றது, இதோ இங்கே அது இருக்கிறது. எனக்கு, அது தேவனுடைய வார்த்தையாகும். அதை தேவன் கனம் பண்ணுகின்றார். அது அதனுடைய உண்மையில் ஒரு பரிபூரண விசுவாசத்தை அளிக்கின்றது.
84223 ஒரு வாலிபப் பெண் ஓடிப்போயிருந்து எல்லா காரியத்தையும் செய்து, விபச்சாரம் மற்றும் எல்லாவிதமான கெட்ட காரியங்களிலும் ஈடுபட்டிருந்தால், உன்னால் அப்படிப்பட்ட ஒரு பெண்ணை எப்படி விவாகம் செய்துகொள்ள முடியும்? மேலும்—மேலும், அதே சமயத்தில், நீ போய் அவளை ஒரு விபச்சார வீட்டிலிருந்து அழைத்து வந்துள்ளாய். அவளோ வெளியே வந்து…அவள், “சரி, ஒரு—ஒரு நல்ல பெண்ணாக இருக்க நான்—நான் முயற்சிப்பேன்” என்று கூறுகிறாள். அந்த பெண்ணிடத்தில் உன்னால் நம்பிக்கை கொள்ள முடியாது. புரிகிறதா? உங்களால் அதைச் செய்ய முடியாது. அவ்வாறே ஒரு மனிதனும் அதே விதமான ஒரு காரியத்தில் இருப்பானென்றால் எப்படி ஒரு பெண்ணால் அந்த மனிதனில் நம்பிக்கை கொள்ள முடியும்? அந்தவிதமான ஒரு காரியத்தில் உங்களால் நம்பிக்கையைக் கட்டி எழுப்ப முடியாது. அங்கே கட்டுவதற்கு ஒன்றுமே இல்லை. புரிகிறதா? உங்களால் அதைச் செய்ய முடியாது.
85224 நீங்கள் இங்கிருந்து வெளியே போய், “இதோ நிறைய ஓட்டைகள் இருக்கின்ற ஒரு படகில், நான் அதில் புற்களால் நிறைக்கப்பட்ட சாக்குப் பைகள் சிலவற்றை வைப்பேன். ஒருக்கால், அதை—அதை வைத்து அலைகளைத் தடுத்து ஆற்றைக் கடந்துவிடலாமே,” என்று உங்களால் எப்படிக் கூற முடியும்? ஏற்கனவே ஒரு நல்ல படகு அங்கே இருக்கையில், ஓட்டைகள் நிறைந்த இப்படகைக் கொண்டு செல்ல எந்த ஒரு முயற்சியும் நான் எடுக்கமாட்டேன். நிச்சயமாக. 225 நாம் ஏன் முழுவதும் ஓட்டைகளால் நிறைந்துள்ள, மனிதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏதோ ஒரு வேத சாஸ்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்? அது தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதே. புரிகிறதா? கடுமையான சூறாவளி மற்றும் புயலின் அலைகளை அடக்கின, அந்த உண்மையான தேவனுடைய வார்த்தையானது, இங்கே உள்ளதே. அவள் தன்னால் முடிந்த வரையில் உண்மையாக அதைப் பற்றிக்கொண்டிருந்தாள். அது எப்பொழுதுமே அப்டியே இருக்கும். சரி. 226 “வானமும் பூமியும் ஒழிந்துபோம்,” என்றும், “என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” என்றும் இயேசு கூறினார். ஏன்? அவை நித்தியமானவைகள். ஆதியிலேயே அவை இருந்தன. தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்த மாத்திரமே அவர் இங்கே வந்தார். அவர் தேவனுடைய வெளிப்பாடாக இருந்தார். தேவன் தம்முடைய குமாரன் மூலமாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
86227 இவையாவும் மூல அதிகாரமாகிய, ஆதியாகமத்தில் துவங்கி, அது முதற்கொண்டு இருந்து வருகிறது. அது காட்சியில் வந்தது முதற்கொண்டு, அந்தவிதமாகத்தான் இருந்துக்கொண்டு வருகின்றது, அறிவுக் கூர்மைக்கும் விசுவாசத்திற்கும் இடையே நடக்கின்ற போராட்டம், எப்பொழுதுமே போராட்டம்தான். ஆகவே, அறிவுக்கூர்மையானது பிசாசினால், அவனுடைய பிள்ளைகளுக்காக உண்டானதாகும். 228 நீங்கள் இதை எப்பொழுதாவது கவனித்ததுண்டா? நீங்கள் எல்லாரும் செம்மறியாட்டைப் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் வெள்ளாடுகளைப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால், உங்களுக்குத் தெரியுமா, அவையிரண்டின் சத்தமானது ஒரேவிதமாயிருப்பது போன்று மிக நெருக்கமாக இருக்கும், ஆனால் அதன் வித்தியாசத்தை அறிந்து கொள்ள ஒரு உண்மையான மேய்ப்பன் தேவைப்படுகிறது. நீங்கள் ஒரு வயதான வெள்ளாட்டை அங்கே நிறுத்தி, அதனை சத்தமிடச், சத்தமிடச் செய்யுங்கள். பிறகு நீங்கள் சென்று ஒரு செம்மறியாட்டை இங்கே கொண்டு வந்து, அதனைச் சத்தமிடச் செய்யுங்கள். அதைக் கேளுங்கள். அவைகளின் சத்தம் ஒரே விதமாகவே இருக்கும். ஆனால் ஒரு உண்மையான மேய்ப்பன் அந்தச் சத்தத்தை கண்டறிய முடியும். 229 இயேசு, “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன” என்று கூறினார். புரிகிறாதா? அது ஒரு வெள்ளாடா என்று அவர்களால் கூறமுடியும். பாருங்கள், அவர்தாமே, ஒரு செம்மறியாடாக இருக்கிறார். ஹு-ஹூ. அவர்…“என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன. அவைகள் அந்நியனுக்குப் பின் செல்லாது.” அவருடைய சத்தம் என்றால் என்ன? இதோ அதுதான், இந்த வார்த்தை. புரிகிறதா? “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன.” புரிகிறதா? 230 அவை யாரோ ஒருவர் “ஓ, இப்பொழுது இங்கே நானும் கூட, தேவனுடைய சத்தத்தைக் குறித்துத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். இது அங்கே இந்த விதமாகக் கூறுகிறது” என்று கூறும்படிக்கு விடவே விடாது. ஆனால் அது, பாருங்கள், சாத்தானாகும். நாம் அதை சற்று பார்த்து, அதை உங்களுக்கு தெளிவாக்குவோம். புரிகிறதா?
87231 இப்பொழுது, வார்த்தை விதையானது, அறிவு என்னும் சூழலில், வளரவே முடியாது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். அது சரிதானே? புரிகிறதா? அறிவானது விசுவாசத்துடன் கலந்தவுடனே, அது சரியாக அங்கேயே மரித்துவிடுகிறது. 232 ஏவாள் வந்து, “‘எந்த நாளிலே அதை நாங்கள் புசிக்கின்றோமோ அதைப்புசிக்கும் நாளிலே சாகவே சாவோம்’ என்று தேவனாகிய கர்த்தர் கூறினார்” என்று கூறினாள். அதன்பின்னர் சாத்தான் என்னதான் கூறுவான் என்று பார்க்க அவள் சற்று நின்றாள். 233 அப்பொழுது அவன், “ஆனால், கவனி, என் அன்பே, நீ அருமையான சிறு பெண், பார்த்தாயா? நிச்சயமாக உன்னை ஒரு நோக்கத்திற்காகவே தேவன் உண்டாக்கியிருக்கிறார். அது உண்மை என்று உனக்குத் தெரியுமா. பார், நீ ஒரு ஸ்திரீ, நீ இந்த நோக்கத்திற்காகவே உண்டாக்கப்பட்டாய். அதுதான் காரியமாகும். இப்பொழுது அது என்ன என்று உனக்குத் தெரியாது, ஆனால் நீ இந்த நோக்கத்திற்காகத்தான் உண்டாக்கப்பட்டாய். ஓ, அன்பே, நீ ஒரு அருமையான சிறு பெண்ணாவாய். ஹு-ஹூ. உன்னுடைய அழகான சிறு கைகளைப் பார். புரிகிறதா? ஏன், நிச்சயமாக நீ சாகமாட்டாய். நிச்சயமாக” என்றான். “ஆனால் அவர், அவ்வாறு நாங்கள்—நாங்கள் செய்தால், நாங்கள் ‘சாவோம்’” என்று கூறினார். 234 அதற்கு அவன், “ஆனால், ஓ, ஒரு நல்ல, அன்பான தகப்பனாகிய, தேவன், அவ்விதமான ஒரு காரியத்தை செய்வார் என்று நீ நினைக்கிறாயா?” என்று கூறினான். ஆகவே அவள் என்ன செய்தாள்? அவள் தர்க்கஅறிவிற்கு செவிகொடுத்துவிட்டு, அவனுடைய அறிவுக்கூர்மையை எடுத்துக்கொண்டாள். “அது பெருமகிழ்ச்சி தருகின்ற, ஒரு மரமாயிருக்கிறதே. ஒருவர் அதைக் குறித்து விருப்பப்பட முடியும்” என்றாள். அதற்காக அவள் விழுந்து போனாள். அது முற்றிலுமாக சரி. அவள் அந்த விதமாகச் செய்தபோது, என்ன சம்பவித்தது? எந்த ஒரு பெண்ணிற்கும் அது அந்தவிதமாகவே நடக்கும். நீ அந்த காரியத்திற்காக விழுகின்ற மாத்திரத்தில், சரியாக எல்லாமே அங்கேயே முடிந்துவிடுகிறது. அது உண்மை. 235 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அவள் தன்னிடமாக கொண்டிருந்த அந்த வித்தைக் கொண்டு, தேவனுடைய சித்தத்தினாலே, ஒரு உரைக்கப்பட்ட வார்த்தையின் மூலமாக, முடிவில் அவள் ஒரு தாயாகியிருப்பாள். அவள் கடைசியாக தாயாகியிருப்பாள். ஆனால், அவளால் காத்திருக்க முடியவில்லை, அதற்குள்ளாக பிரவேசித்துவிட்டாள்.
88236 இப்பொழுது, பாருங்கள், அப்பொழுது, அவள் அதை செய்தவுடனே, வார்த்தையுடன் அறிவுக்கூர்மையையும் ஏற்றுக்கொண்டவுடனே, அறிவுக்கூர்மை வார்த்தைக்கு முரண்பாடாக இருந்தது… நீங்கள் புரிந்து கொண்டீர்களென்றால் “ஆமென்” என்று கூறுங்கள். [சபையார் “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] புரிகிறதா? அறிவுக் கூர்மையானது வார்த்தையுடன் இருந்து, அது வார்த்தையுடன்தான் இருக்கின்றது என்று நிரூபிக்குமானால், அப்பொழுது வார்த்தையானது அதே அறிவுக் கூர்மையைக் கொண்டு தம்மையே பிறப்பித்துக் கொள்ளும், அப்பொழுது அது வார்த்தையாக இருக்கும். ஆனால் வார்த்தையானது அறிவுக்கூர்மைக்கு எதிராக இருந்து, வார்த்தையுடன் இல்லாதிருந்து, அதனோடு ஒன்றைக் கூட்ட அல்லது அதிலிருந்து ஒன்றை எடுத்துப்போட கண்டறிய முயற்சிக்குமானால், அப்பொழுது அது பிசாசினால் உண்டானதாயிருக்கிறது. [“ஆமென்.”] 237 ஆகவே வேதாகமத்தினுடைய பரிசுத்த ஆவியின் வித்துக்கள் அறிவுக்கூர்மையின் சூழலில் வளரவே முடியாது. அது தேசத்திலுள்ள ஒவ்வொரு வேதாகம கல்லூரியையும் கொன்று போடுகின்றது. அது ஒவ்வொன்றிற்குள்ளும் ஒரு பெரிய துளையை போட்டு, அந்த—அந்த நியாயத்தீர்ப்பு உள்ளே வரும் வரைக்கும், அதைப் பாழாக்குகிறது. அது உண்மையே. அது நிச்சயமாக செய்கிறது, பாருங்கள், ஏனென்றால் வார்த்தை அறிவுக்கூர்மையோடு, உலகப்பிரகாரமான ஞானத்தைக் கொண்டு, வளரவே முடியாது. அது வளராது.
89238 ஏவாள் தன்னிடமாக வார்த்தை கொடுக்கப்பட்ட விதமாகவே அவ்வார்த்தையை அவள் விசுவாசிக்கவேண்டியவளாக இருந்தாள். அது சரிதானே? யாராவது ஒருவர் வார்த்தையைக் குறித்து ஏதாவதொன்றைக் கூறும் போது அதற்கு அவள் செவி கொடுத்திருக்கக்கூடாது; அவளுக்கு வார்த்தை அளிக்கப்பட்ட விதமாகவே, அந்த விதமாகத்தான் அவள் அதை விசுவாசித்தாக வேண்டியவளாக இருந்தாள். அவள் அதை அப்படியே விசுவாசித்திருந்தால், மரணமென்பது இருந்திருக்காது. அது உண்மை. 239 ஒரு மனிதனோ அல்லது ஒரு பெண்ணோ தேவனுடைய வார்த்தையை, நமக்கு அளிக்கப்பட்ட விதமாக ஏற்றுக்கொண்டு, தேவன் அதைக் கூறின விதமாகவே அதைப் பற்றிக்கொண்டால், அது ஜீவனாகும். ஆனால் வார்தையோடு ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் அறிவுக்கூர்மையைக் கலந்து விடுவீர்களேயானால், சரியாக அங்கேயே நீங்கள் மரித்துவிடுவீர்கள், அந்தவிதமாகத்தான் முதலில் நடந்தது. அதுதான் வித்து. அது அவ்விதமே, முதல் முறையாக அந்தவிதமாகத்தான் அது நடந்தது, ஒவ்வொரு முறையும் அந்த விதமாகத்தான் அது செயல்படும். அது எப்பொழுதுமே அந்த விதமாகத்தான் இருந்து வருகின்றது. தேவன் அனுமதிப்பாரானால், இக்காலை, அதை வேதாகமத்தின் மூலமாக நாம் நிரூபிப்போம். அது வளருவதற்கான ஒரே வழி, எல்லா தர்க்கஅறிவுகளிலிருந்தும், அல்லது மற்றெந்த காரியங்களிலிருந்து வேறு பிரிந்து, வார்த்தையை விசுவாசிப்பதன் மூலமேயாகும். தேவன் அதை நமக்கு அளித்த விதமாகவே அப்படியே ஏவாள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியவளாக இருந்தாள்.
90240 தேவன் இந்த வேதாகமத்தை பேணிக்காத்து வைத்துள்ளார் என்று நான் விசுவாசிக்கிறேன் என்று நான் உங்களிம் வெளிப்படுத்திக் கூறினேன், அந்த விதமாகவேதான் தேவன் என்னிடம் அதை இங்கே அளித்துள்ளார். எனவே எனக்கு வேறெந்த அறிவுக் கூர்மையும் வேண்டாம். தேவன் அதை இங்கே கூறினவிதமாக அது எனக்கு வேண்டும். 241 இப்பொழுது, நான் உங்களை புண்படுத்தவில்லை என்று நான் நம்புகிறேன். ஆனால் நான் “மனந்திரும்ப” வேண்டும் என்று வேதாகமம் கூறியிருக்குமானால், மனந்திரும்பு என்பதுதான் அதன் அர்த்தம்; சரீரத்தை ஒடுக்கி தவமிருத்தல் அல்ல, ஆனால் மனந்திரும்பு என்பதே.
91242 நான் “இயேசு கிறிஸ்துவின்” நாமத்தில், ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று வேதாகமம் எனக்குக் கூறியிருக்கிறது, அது வேறெதையோ ஒன்றை பொருட்படுத்திக் கூறவில்லை. “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்று பொருட்படுத்திக் கூறவில்லை. அது அதையேக் கூறியுள்ளது. 243 “பாருங்கள்,” நீங்கள், “மத்தேயு 28:19 ‘பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்று கூறுகிறதே’” எனலாம். சரியாக அதே காரியமாகத்தான் அது இருந்தது. 244 இப்பொழுது, அது சரியில்லையெனில், அவர்கள் சரியான காரியத்தை பெற்றிருக்கவில்லையெனில், பேதுருவும், வேதாகமத்தில் இருந்த மற்ற ஏனையோரும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தாக வேண்டும் என்கின்ற விசுவாசமானது எப்படியிருக்குமென்றால், தேவன் ஆசீர்வதித்திருந்த ஒரு—ஒரு பொய்யான வெளிப்பாட்டை அவர்கள் பெற்றிருந்தார்கள் என்பதாக இருக்கும். அப்படியானால் அது தேவனை திரும்ப கொண்டு வருகிறதாயிருக்கும்; அப்படியானால், ஆதியிலே அவர் ஏவாளை ஆசீர்வதித்திருக்க வேண்டும்.
92245 “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமம், அவை மூன்று பட்டப் பெயர்களாகும். ஒரே ஒரு நாமம்தான் உண்டு. “இயேசு கிறிஸ்துவின்” நாமத்தினால் நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படும் வரைக்கும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட முடியாது, ஏனெனில் அதுவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் ஆகும். முழு வேதாகமத்திலும் அந்த விதமாகத்தான் எழுதப்பட்டுள்ளது. வேதாகமத்தில், ஞானஸ்நானம் பண்ணப்பட்ட ஒவ்வொருவரும், “இயேசுகிறிஸ்துவின்” நாமத்தில்தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். பட்டப் பெயர்களான “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்,” வேதத்தில் எந்த ஒரு நபரும் ஞானஸ்நானம் பண்ணப்படவேயில்லை. ஒவ்வொருவரும் “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில்” ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். அதுவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதாயிருந்தது. 246 “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி,” என்னும் பட்டப்பெயர்களில் ஞானஸ்நானம்பண்ணப்பட்ட ஒவ்வொருவரும், ஒரு பெயரே இல்லாத ஒரு ஞானஸ்நானத்தைத் தான் பெற்றுள்ளனர்; அது போதகர், சங்கை, டாக்டர், என்னவெல்லாமோ போன்ற ஒரு பட்டப் பெயரே; தந்தை, மகன், மற்றும் மானிடன், மனைவி. அவைப்போல பட்டப்பெயர்களே! “அது எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லையே,” என்றனர். 247 அப்படியானால் உங்களுடைய காசோலையில் உங்கள் பெயருக்கு பதிலாக, உங்கள் பட்டப்பெயரை கையெழுத்திடுங்கள். பிறகு அது எங்கே செல்கிறதென்று பாருங்கள். ஹு-ஹூ. “நான் இந்த காசோலையில் இல்லத்தரசி என்று கையெழுத்திடுகிறேன்” என்று கூறிப் பாருங்கள். பாருங்கள், இங்கே வெளிப்பாடானது சரியாக உங்களுக்கு முன்பாகவே இருக்கையில், தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிப்பதும் கூட அர்த்தமுள்ள ஒன்றாக அது செய்துவிடும். நிச்சயமாக அவ்விதம் செய்யும். புரிகிறதா? நிச்சயமாக. அது சரி.
93248 தேவன் கூறியுள்ள விதமாகத்தான் வார்த்தையை விசுவாசிக்க வேண்டும். அது தன்னைத் தானே முரண்படுத்திக் கொள்ளுகிறதில்லை. அது முரண்படுமானால், நீங்கள் அதை எனக்கு காண்பிக்கலாம். ஹு-ஹூ. அது தன்னைத் தானே முரண்படுத்திக் கொள்ளுகிறதில்லை, ஒரு போதும் அவ்வாறு செய்யாது. ஒருக்கால் சாத்தான் அதை உங்களுக்கு முரண்படுத்திக் காண்பிப்பான், ஆனால் வார்த்தையை அவனால் முரணாக்க முடியாது. முடியாது. எனவே, வார்த்தை அதை பொறுத்துக் கொள்ளாது. இல்லை, ஐயா. அது வெகு காலமாக, அவ்விதமாக அவ்வாறு யோசிக்கப்பட்டு வருகின்றது, ஆனால் இன்னுமாக அது ஒருபோதும் நிரூபிக்கப்படாதிருக்கிறது. 249 இப்பொழுது இந்த இரு மூல ஆதாரங்களை நாம் தொடர்ந்து பார்ப்போமாக, அல்லது நீங்கள் அதை சூழ்நிலைக்குரியவைகள் என்று அழைக்கலாம், அவை எதை உருவாக்குகின்றன என்று நாம் பார்ப்போமாக. ஒரு சில நிமிடங்களுக்கு நாம் அவைகளை கவனித்துப் பார்க்கலாம். சூழ்நிலைகளுக்குரியவைகள்; இந்த மூல ஆதாரங்கள் ஒரு சூழ்நிலையை உருவாக்கும்.
94250 நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் ஒரு சபைக்குச் சென்றிருக்கின்றீர்களா…நான்—நான் இப்பொழுது இதை பயபக்தியுடன் கூறுகிறேன், மற்றும்…ஒரு காரியத்தை குறிப்பிடவே; அது கூடாது. மிகவும் விரைப்பான நிலையிலுள்ள போதகரைக் கொண்டிருக்கின்ற ஒரு சபைக்கு நீங்கள் எப்பொழுதாவது சென்றிருக்கிறீர்களா? அந்த சபையாரும் அவ்விதமாகவே இருப்பார்கள். அது சரியே. பார்த்தீர்களா? அது என்னவாயிருக்கிறது? அந்த சூழ்நிலைதான் அதை பிறப்பித்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு இடத்திற்குச் சென்று, “இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள், அந்த விதமான அர்த்தமற்ற ஒரு காரியமே இல்லை. தெய்வீக சுகமளித்தல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் குறித்த, அப்படிப்பட்ட காரியத்தை நான் விசுவாசிப்பதில்லை” என்று போதகர் கூறுகிறதைப் பாருங்கள். உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் அந்தவிதமாகவே, சபையார் ஒவ்வொருவரையும் காண்பீர்கள். அவர்கள்… 251 அக்கூட்டத்தில் எங்கோ ஓரிடத்தில் ஒரு கழுகு இருக்குமானால், அந்த கோழிகளின் கூட்டத்தின் மத்தியிலிருந்து, அக்கழுகு வெளியே வந்துவிடும். ஹு-ஹூ. நிச்சயமாக அது வெளியே வந்துவிடும். அது முற்றிலும் உண்மையே. அவன் அதை விட்டு வெளியேறுவான். ஆம். ஆம். நிச்சயமாக அவன் வெளியேறுவான். அவனால் அதைப் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அவன் ஒரு கழுகாகும். அவன் ஆகாயத்தில் இருப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒன்றேயல்லாமல், ஒரு பண்ணை முற்றத்தில் இருப்பதற்கல்ல. ஆம், ஐயா. இப்பொழுது, இதோ அவன் இருக்கிறான்.
95252 அதாவது, அந்த சூழ்நிலைகளை, இப்பொழுது நாம் கண்டறிவோம். நீங்கள் எங்கு சென்றாலும்…அந்தக் காரியங்கள், எங்கே விசுவாசம் ஒரு சபையில் போதிக்கப்படுகின்றதோ, அந்த ஒரு சபை அந்த சூழலிலே இருப்பதை நீங்கள் காண்டறிவீர்கள். 253 ஓ, தேவனே! நீங்கள் அதைப் புரிந்துகொள்ளுவீர்களானால், உங்களிடத்தில், எனவே, உங்களிடம், நான் இதைக் கூறட்டும்—கூறட்டும். புரிகிறதா? சென்று…ஜெபிக்கின்ற பரிசுத்தவான்கள், விசுவாசிகள் மத்தியில் மக்கள் வருவதற்கான காரணம் அதுதான். தீமோத்தேயு மாத்திரம்தான், விலையேறப்பெற்ற விசுவாசத்தையுடையவனாக இருந்தான், உங்களுக்குத் தெரியுமா, அவனைத் தவிர வேறு யாரையுமே பட்டணத்தில் தான் காணவில்லை என்று பவுல் கூறினான். மற்றவர் யாவரும் ஸ்தாபனத்தாராயிருக்கிறார்கள். புரிகிறதா? ஆனால் அவன் அந்த சூழ்நிலைகளுக்குள்ளே சென்றபோது, பாருங்கள், அவன், நீங்கள் அந்த சூழ்நிலை உருவாக்கியுள்ள அந்த சூழலில் காரியங்கள் சம்பவிக்கிறதை காண்பீர்கள். “என்னே, ஏன், வேதாகமம் உண்மையானது, தேவன் சுகமளிக்கிறார்” என்று கூறப்படுகின்ற ஒரு இடத்திற்கு நீங்கள் செல்லும்போது, விசுவாசத்தினாலே மக்கள் பிழைப்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அவர்களுடைய சபையோரிடம் நடந்து செல்லும்போது, நீங்கள், “ஏன், நான் புற்று நோயால் மரித்துக் கொண்டிருந்தேன். நான் சுகமாக்கப்பட்டேன்” என்று கூறுவதைக் காணலாம். “ஒரு காலத்தில் நான் குருடாயிருந்தேன். நான் காண்கிறேன்.”
96254 அப்பொழுது வெளியாட்கள் வந்து, “வியூ! என்னே! என்ன, நீ என்ன பொருட்படுத்துகிறாய்…? உன்னோடுள்ள காரியம் என்ன?” என்பார்கள். 255 “நான் என்னுடைய சான்றிதழை உங்களுக்குக் காண்பிப்பேன். என்னோடு வீட்டிற்கு வாருங்கள். வந்து, இரவு ஆகாரத்தை என்னுடன் புசியுங்கள். அப்பொழுது நான் உங்களுக்கு ஒன்றைக் காண்பிப்பேன். நான் ஒரு சான்றிதழை அங்கே வைத்துள்ளேன். என் அண்டை வீட்டார் நான் இந்நிலையில் இருந்தேன் என்பதை அறிவார்கள். நான் அநேக வருடங்களாக பக்கவாதத்தால் முடங்கிப்போயிருந்தேன். எனக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது.” பார்த்தீர்களா? அது என்ன? அந்த சபையிலிருந்த அந்த—அந்த வார்த்தை, அந்த விசுவாசிகளின் குழு, அந்த சூழலை உருவாக்கியிருந்தனர்.
97256 இப்பொழுது, “அவ்விதம் இருக்க முடியாது” என்று கூறி, அறிவுக் கூர்மையானது அதை முற்றிலுமாக நிழலிட்டிருக்கின்ற ஒரு சூழலில், வார்த்தையானது தன்னுடைய எளிமையிலும் மற்றும் தன்னுடைய முழுமையிலும் எப்படி வளரப் போகின்றது? புரிகிறதா? அதனால் முடியாது. ஆகவே, ஒரு வேதாகமக் கல்லூரியிலிருந்து வருகின்ற ஒரு அறிவுக் கூர்மையானது பிரசங்கிக்கப்படும்போது, பிள்ளைகள் மரித்துப் போகின்றனர். 257 வார்த்தையிலிருந்து வருகின்ற விசுவாசமானது பிரசங்கிக்கப்படும்போது, பிள்ளைகள் ஜீவிக்கின்றனர். ஆமென். அதுதான் வித்தியாசம், ஜீவனும் மரணமும். 258 அதேக் காரியம்தான் ஏதேன் தோட்டத்தில் சம்பவித்தது. சரியாக அங்கே இருந்த அந்த இரண்டு சூழ்நிலைகளுக்கும்; அதுதான் சம்பவித்தது. ஏவாள் சரியான ஒன்றை விட்டு விட்டு, தவறான ஒன்றிற்கு சென்ற போது, அவள் மரித்து போனாள். பார்த்தீர்களா? ஒவ்வொரு முறையும், அது அதைச் செய்யும். 259 ஆகவே, அவர்களால் தரித்திருக்க முடியவில்லை. உங்கள் சபையானது அவ்விதமான ஒரு சூழலை பெற்றிருக்குமானால், ஓ, பிள்ளையே, நீ ஜீவிக்க விரும்பினால், நீ வார்த்தையை விசுவாசி.
98260 இப்பொழுது, இங்கே நான் கூறுவது சற்று கடுமையானதாகக் காணப்படும். இதைக் கடுமையாக கூற வேண்டும் என்று நான் பொருட்படுத்தவில்லை. நான்…இது ஒரு போதித்தல். நீங்கள் இதை, இக்காரியங்களைப் பற்றிப் பார்க்கையில், சற்று, கடுமையாகவும் பொசுக்கும் விதத்திலும் பேசியாக வேண்டும், நீங்கள் பாருங்கள். 261 இப்பொழுது சற்று பொறுமையாக கேளுங்கள். இது ஒரு கன்று குட்டிக்கு சூட்டுக்குறி இடுவது போன்றதாகும். ஒரு கன்று குட்டிக்கு அவ்விதமாக நான் செய்யும்போது அக்காரியத்தை நான் வெறுப்பதுண்டு; பரிதாபத்துக்குரிய அந்த கன்றுகுட்டி. நாங்கள் அங்கே ஓடிப் பார்போம். மேலும்—மேலும்—மேலும் நீங்கள் ஒரு கன்றுகுட்டியைக் கயிற்றைக் கொண்டு கட்டியுள்ளீர்களா, அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஒரு பன்றியைக் கட்டுவது போல அதைக் கட்டுவீர்கள், பாருங்கள், நீங்கள்…பரிதாபத்திற்குரிய அந்த சிறு கன்றுகுட்டி! நீங்கள் அதை அங்கே ஓட்டிச் சென்று, அந்த மிகச் சூடாக உள்ள அந்த சூட்டுக் குறியிடும் இரும்பை எடுத்து, அக்கன்றின் மீது குறியிடுவீர்கள். ஓ, சகோதரனே, பார்ப்பதற்கு அது மிக பயங்கரமாக இருக்கும். அக்கன்று எழுந்து நின்று, மிக வேகமாக ஓடத் துவங்கும். அது தன் கால்களை உதைத்துக் கொண்டு, கதறிச் சத்தமிட்டு, ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால், நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அப்பொழுதிலிருந்து, அது யாரைச் சார்ந்தது என்று அவர்கள் அறிந்து கொள்வர். அது உண்மை. அக்கன்று எந்தப்—எந்தப் புல்வெளியைச் சார்ந்தது என்று தெளிவாக அறிந்து கொள்ளப்படும். அதன்பின்னர் அதைக் குறித்து எந்த ஒரு வேடிக்கைப் பேச்சும் இருக்காது. ஆகவே, நாம் குறியிடுவோமாக. நாம் குறியிடுவோமாக. ஆம் ஐயா. 262 அவர்கள் கூறினபோது, உங்களுக்குத் தெரியும், அந்த…உங்களில், உங்களில் அநேகர், அந்த மாடு மேய்ப்பவனுடையப் பாடலைப் பாடியிருப்பீர்கள் அல்லது—அல்லது படித்திருப்பீர்கள், நீங்கள் பாருங்கள். மாடுகள் வளைத்துக் கொள்ளப்பட்டு ஒன்றாக கட்டப்படும்போது, ஒரு வழி தவறின கன்றுக் குட்டியொன்று கண்டுபிடிக்கப்படுமானால்; அது எடுக்கப்பட்டு சூப் தயார் செய்வதற்கு கொண்டு போகப்படும், ஏனெனில் அதன் மேல் அடையாள சூட்டுக்குறியானது இல்லை. குறியிடப்பட்ட மற்ற கன்றுகள் தங்களுடைய சொந்த புல்வெளிக்குச் செல்கின்றன. மாடுகள் வளைத்துக் கொள்ளுதலின்போது முதலாளிக்கு தன்னுடைய மாடுகள் எது என்று நன்றாகத் தெரியும், எனவே நீங்கள்…சூட்டுக் குறியிடுதல் நோவூட்டத்தான் செய்யும்.
99263 இப்பொழுது கவனியுங்கள். சாத்தானால் தன்னுடைய அறிவுக்கூர்மையைக் கொண்டு, விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியும்… சில நிமிடங்களுக்கு, இப்பொழுது ஒரு மருத்துவரைப் போல இங்கே நான் நடித்துக்காட்டப் போகிறேன். சாத்தான் அளித்திருக்கும் விளைநிலத்தில், மானிட வர்க்கம் வளரத்தக்கதாக, ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்று அவனால் தன்னுடைய அறிவுக்கூர்மையைக்கொண்டு, விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியும். அவன் நிச்சயமாகவே வைத்திருக்கின்றான். அவனால் அதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியும். அவர்கள் விரும்புகின்ற எந்த ஒரு காரியத்தையும், கிட்டத்தட்ட, விஞ்ஞானப் பூர்வமாக அவர்களால் நிரூபிக்க முடியும். புரிகிறதா? நிச்சயமாக.
100264 அது வைட்டமின் பி -யைக் கொண்டிருக்கின்றது, அதாவது “இன்பம், புகழ்,” என்பதாகும். அதுதான் அதில் உள்ளது. அதுவே அவனுடைய அறிவுக்கூர்மை விளைநிலத்தில் இருக்கின்றது. நிச்சயமாக, நிச்சயமாக. எல்லாவிதமான உலக இன்பங்கள், எல்லாவிதமான திரைப்படக் காட்சிகள், எல்லாவிதமான நடனங்கள், எல்லா காரியங்கள், எந்தக்காரியத்தையும், “தொடர்ந்து செய், அதனால் ஒன்றும் பரவாயில்லை, அது உனக்கு எந்தவிதத் தீங்கும் விளைவிக்காது. நிச்சயமாக.” புரிகிறதா? புகழ், “ஓ, நீ செல்கின்றது நகரத்தில் இருக்கின்ற மிகப் பெரிய சபையாகும்.” அது சரி. 265 அந்த அறிவுக்கூர்மையின் விளைநிலத்தில் வைட்டமின் சி உள்ளது, அதை “நல்லறிவு” என்றே அவன் குறிப்பிட்டான். அப்படியென்றால் “சொந்த புத்தியைக் கொண்டு யோசி, நீங்கள் பாருங்கள்.” ஆம். 266 அதில் வைட்டமின் ஆர் இருந்தது, அது “சொந்த புத்தியைக் கொண்டு யோசித்தல்” என்பதேயாகும். ஆமாம், அவனால் சொந்த புத்தியைக் கொண்டு யோசிக்க முடியும். ஆனால், நீங்கள் பாருங்கள், அது கிரியைச் செய்யாது. 267 அதில் வைட்டமின் பி , இருந்தது. அது, “அழகு” என்பதாகும். சாத்தான் அழகானவன். பாவம் அழகு வாய்ந்ததாகும். பாவம் மேலும் மேலும் அதிகரிக்கும்போது, அதன் அழகு கூடிக்கொண்டே போகும். 268 கட்டைகளால் கட்டப்பட்ட ஒரு குடிலைக் காட்டிலும் இன்னுமாகச் சிறந்த ஒரு வீடு நம்மிடையே இருக்கின்றதா? அதை விட எவ்வளவு அழகாக அது இருக்கிறது? பெண்கள் அன்று இருந்ததை விட இன்று எவ்வளவு அழகாக இருக்கின்றனர்? பார்த்தீர்களா? ஃப்ளாரிடா மாநிலமானது, தேவன் எவ்விதமாகச் சிருஷ்டித்திருந்தாரோ, அதை விட இன்றைக்கு எவ்வளவு அழகாக இருக்கின்றது? பார்த்தீர்களா?
101269 பாவம் அழகைக் கொண்டிருக்கின்றது. சாத்தான் அழகான ஒருவன் என்று எத்தனைப் பேர் அறிவீர்கள்? அவன் அழகை விரும்பினான், மேலும் மிக அழகான ஒரு இராஜ்ஜியத்தை அவன் உண்டாக்க முயன்றான். நிச்சயமாக. நாம் அதை அறிவோம். சாத்தான் அழகில் இருக்கின்றான். இப்பொழுது கவனியுங்கள். அவன் கொண்டிருக்கின்ற வைட்டமினான ஆர் , “தர்க்க அறிவைக் கொண்டு யோசித்தல்.” வைட்டமின் பி , அது “அழகு” என்பதாகும். 270 வைட்டமின் எம் , அது “நவீனம்” என்பதாகும். “ஓ, நீ நவீன மனிதனாக இருக்க விரும்புகின்றாய்.” அவனுடைய அறிவுக்கூர்மையை எடுத்து நீங்கள் அந்தக் காரியத்தை விசுவாசிப்பதில்லையா என்று நீங்கள் கண்டறியுங்கள். அது சரியாக உங்களுக்குள்ளாகவே அது வளரும். நீங்கள் உட்கார்ந்திருக்கின்ற இடத்திற்கே அந்த வைட்டமினானது வந்தடையும். 271 யாரோ ஒரு நபர் எழுந்து நின்று, அவனுடய அறிவாற்றலின் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்வான், “நண்பர்களே, இதோ பாருங்கள். இங்கே இந்த பெரிய, அழகான தேவாலயத்தில் மிக அதிகமாகக் கூச்சலிட்டு, அழுது, அந்நிய பாஷையில் பேசி, மேலும் கீழுமாக தரையில் புரண்டோடி, வெறி பிடித்த நாய்களைப் போல வாயில் நுரை தள்ளிக் கொண்டிருந்தால் காண்பதற்கு எப்படி இருக்கும்? மேலும்—மேலும் நகரத்தில் மேயர் இதைப் பார்த்து என்ன கூறுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், உதவிக்காரர்கள் குழு, இப்படிப்பட்ட காரியத்தையுடைய இதை நாம் உள்ளே அனுமதித்தால் என்னவாகும்?” என்பார்கள். ஓ, நிச்சயமாக, அது நவீன காரியமாகும். 272 “நம்முடைய மக்கள் அங்கே தெருவில், கஞ்சீரா இசைக்கருவியை தங்களுடைய கரங்களில் வைத்துக்கொண்டு நிற்பார்களென்று நீங்கள் நினைக்கின்றீர்களா? நம்முடைய சகோதரிகள் தங்களுடைய பெரிய நீண்ட தலைமுடியானது கீழே தொங்கிக் கொண்டிருக்கும்படியாக செய்து அங்கே நின்று கொண்டிருக்கும்போது எப்படியிருக்கும்? நகரத்தின் ஏனைய சபைப் பெண்கள் அங்கே சென்றுக்கொண்டிருக்கையில், ‘அங்கே பார், அங்கே பார்.’ என்பர். ஏன், அந்த சபையின் தலைவர், அல்லது என்னவாயிருந்தாலும், உங்களுக்குத் தெரியும், ‘சரி, பாருங்கள், அங்கே பாருங்கள். அவள் ஒரு பழங்கால பெண்ணைப் போல இருக்கிறாள், அவள் அப்படியில்லையா? பின்புறத்தில் காற்று வெளியேறி தட்டையாக இருக்கின்ற அவளுடைய உதிரி டயரைப் போல இருக்கின்றதல்லவா.’” பார்த்தீர்களா? அதைப் போன்று கூறுவார்கள் என்பது, உங்களுக்குத் தெரியும்.
102273 “நீங்கள் நவீனமாக இருக்க விரும்புகிறீர்கள்.” புரிகிறதா? அது பிசாசின் ஞானமாகும். அதுதான் அங்கே வளருகின்றது. விளைநிலத்திலிருக்கின்ற அந்த வைட்டமினானது, உற்பத்தி செய்கின்ற அந்தப் பொருளாக அது வெளி வருகிறது. நவீன யேசபேலே நீ, இன்னும் தொடர்ந்து செய்து கொண்டேயிரு. சரி. நவீனம், இன்றைக்கு இருக்கின்ற பெண்களைப் போலவே. நிச்சயமாக. ஓ, நவீனமானது. “பாருங்கள், நகரத்தின் மக்களிலே மிக நவீனமானவர்கள் சபைக்கு வருவார்கள்.” நிச்சயமாக. அது…ஏன்? அவர்கள் நவீன வைட்டமினில் வளருகின்றனர். 274 சுய புத்தியைக் கொண்டு யோசிக்கும் அந்த நவீன வைட்டமின், சரி, அவர்கள் அதில் வளருகின்றனர். புரிகின்றதா? அது தான் காரியம், சுயபுத்தியைக் கொண்டு யோசித்தல். ஆனால் நீங்கள் அந்த வைட்டமினைக் கொண்டு வளர ஆரம்பித்த உடனே, நீங்கள் வார்த்தைக்கு மரித்து விடுகிறீர்கள். நீங்கள் அந்த வைட்டமினைக் கொண்டு வளரத்துவங்கும் முன் நீங்கள் வார்த்தையை மறுதலிக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். புரிகிறதா? 275 நீங்கள் பாவியாக இருப்பதற்கு இருக்கின்ற ஒரே வழி தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பதேயாகும். பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். எதில் அவிசுவாசம்? தேவனுடைய வார்த்தையில். புரிகிறதா? முதலாவதாக, நீங்கள் தேவனுடைய வார்த்தையை மறுதலிக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். இப்பொழுது, ஓ, நான் இங்கே இன்னும் பத்து வைட்டமின்களை குறிப்பெழுதி வைத்துள்ளேன்.
103276 ஆனால் அவன் அவர்களிடம் இங்கே கூறியிராத ஒரு வைட்டமின் இருக்கிறது. அவன் அங்கே அதில் வைட்டமின் டி -யையும் வைத்திருக்கின்றான். அதில் இருக்கின்ற வைட்டமின்களிலே மிகப் பெரிய வைட்டமின் அதுவாகும், அதன் விளைவு, “மரணம்.” புரிகிறதா? 277 அது மிக அழகாக உடுத்தியிருக்கின்ற மக்கள் கூட்டம், இருப்பதிலேயே மிக நவீனமான ஒன்று, மிக அழகான சபை, மிகப் பெரிய ஸ்தாபனமாகும், பாருங்கள், இருப்பதிலேயே மிக நவீனமான ஒன்று, இதுவரை இருந்ததைக் காட்டிலும் மிக அழகான ஒன்று, மிக விவேகமான மதிநுட்பமான காரியங்கள் அங்கே கூறப்படுகின்றன. “ஏன்…” 278 “தேவன் நம்மை தம்முடைய சிருஷ்டியாக உண்டாக்கியிருப்பாரானால், பெண்கள் குட்டை தலைமுடியைக் கொண்டு சிறந்த விதத்தில் காணப்படும்போது, ஏன் அவர் அதைக் கடிந்து கொள்கிறார்? சிறிது அழகொப்பனை செய்து கொண்டால் ஏன் அவர் கடிந்து கொள்கின்றார்?” 279 சரி, அவ்விதமாக அழகொப்பனை செய்த ஒருவளை அவர் வேதாகமத்தில் வைத்திருக்கின்றார், அவர் அவளை நாய்களுக்கு உணவாக அளித்தார். ஆகவே நீங்கள் அதைப் பற்றிச் சற்று நினைத்துப் பாருங்கள், நீங்கள் பாருங்கள். அது முற்றிலும் சரி.
104280 “ஏன்—ஏன் தேவன் அதை எதிர்பார்ப்பாரா? ஏன், என்னே, நாம் அந்த வேதாகமத்தின்படியே தான் வாழ வேண்டும் என்று தேவன் எதிர்ப்பார்ப்பதில்லையே.” நிச்சயமாக அவர் எதிர்ப்பார்த்தார். ஏவாள் அதன்படி வாழ வேண்டும் என்று அவர் கூறினார்…இல்லை, அவர் கூறினார்… 281 இயேசு, “மனுஷன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கின்றான்” என்று, கூறினார். அதைக் கூறினது யார்? இயேசு. அது சரிதானே? அவர், “வேறு ஒரு மனிதன் வந்து வித்தியாசமான காரியத்தைக் கூறுவானானால், அவன் பொய்யனாக இருக்கக்கடவன்; அவருடைய வார்த்தை மாத்திரமே உண்மையானதாக இருப்பதாக” என்றார். “வானங்களும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தையோ ஒழிந்து போவதில்லை.” அங்குதான் காரியம். ஆகவே வைட்டமின் டி -யில் தான் அவன் தன்னுடைய சூத்திரத்தை வைத்துள்ளான், நவீனம். அது சரி.
105282 இப்பொழுது, ஆனால், வேதாகமத்தின் வார்த்தை வித்தினால் அப்படிப்பட்ட ஒரு விளைநிலத்தில் வளரவே முடியாது. எப்படி ஒரு நபர் அப்படிப்பட்ட நவீன சபைகளில் ஒன்றிற்குச் செல்ல முடியும்? தேவனுடைய ஆவியானது அதன் மீது வரும்போது, அவர்கள்—அவர்கள் “தேவனுக்கு மகிமை! அல்லேலூயா!” என்று கூக்குரலிட விரும்புகின்றனர். 283 அப்படி செய்தால் என்னவாகும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏன், நீங்கள் அந்த பிரசங்கி தன் பிரசங்கத்தை விழுங்கச் செய்ய வைக்க வேண்டியதாக இருக்கும். ஏன், நான் உங்களுக்கு கூறுகிறேன், அவன், “ஹும்” என்று கூறுவதை என்னால்—என்னால் காணமுடிகிறது. 284 அங்கே உட்கார்ந்திருக்கின்ற எல்லாரும் நாரைக்கொக்குகள், கழுத்தை திருப்புவதுபோல, உங்களுக்குத் தெரியும், “சரி, அப்படி சொன்னது யாராயிருக்கும்?” என்று பாரக்கும்படி, திருப்புகிறார்கள். 285 பின்னர், சில நிமிடங்களில், அந்தப் பிரசங்கி, “தேவனுடைய குமாரனாகிய, இயேசுகிறிஸ்து” என்று கூறுவார். “தேவனுக்கு மகிமை! அது உண்மை.”
106286 “ஹும்,” உதவிக்காரர்களே. ஹூ! நீங்கள், அடுத்த சில நிமிடங்களில், நீங்கள் கதவண்டையில் இருப்பீர்கள். அவர்கள் உன்னை வெளியே வீசி எறிவார்கள். புரிகிறதா? 287 வார்த்தையினால் அங்கே வளரவே முடியாது, அது வளரவே முடியாது. முடியாது, அதனால் வளர முடியாது. புரிகிறதா? வார்த்தை அங்கே வளரமுடியாது. புரிகிறதா? 288 அதன் பிறகு அவன் வந்து, அதற்கு மேலாக தன்னுடைய விஷத்தைத் தெளித்து, உனக்குள் இருக்கும் ஜீவ விதையை கொல்ல முயற்சிப்பான். “தேவன் சுகமளிக்கின்றார் என்று விசுவாசிக்கும், ஒரு மக்கள் குழுவினர் இப்பொழுது தேசத்தில் இருக்கின்றனர். ஏன், உண்மையாகவே, நடைமுறைக்கு ஒத்ததாக யோசிப்போமானால் நமக்கு சுகத்தை அளிக்க மருத்துவர்களைத் தான் தேவன் நமக்கு கொடுத்திருக்கின்றார் என்பதை, நாம் அறிவோம்.” 289 இப்பொழுது, நீங்கள் நல்லறிவுள்ள நேர்மையான ஒரு மருத்துவரை அணுகி, சுகமளிப்பது நீங்கள்தானா என்று கேட்டுப்பாருங்கள். அதற்கு அவர், “இல்லை ஐயா. என்னால் ஒரு பல்லைத்தான் வெளியே எடுக்க முடியும், ஆனால் நான் வெளியே எடுத்த பிறகு அந்த பல் இருந்த பற்குழியை என்னால் சுகப்படுத்த முடியாது” என்று உங்களிடம் கூறுவார். அது உண்மையே. “என்னால் முறிந்த ஒரு கையை இணைக்க முடியும், ஆனால் அதை என்னால் சுகப்படுத்த முடியாது.” நிச்சயமாக உண்மையே. “தேவன் சுகமளிப்பவராய் இருக்கிறார்.” புரிகிறதா? 290 இப்பொழுது, ஆகவே அப்படிப்பட்ட காரியங்களில் ஏதாவதொன்று வளருமா? அப்படிப்பட்ட ஒரு காரியத்தில் வார்த்தை விதையானது எப்படி வளரமுடியும்? அது வளரவே வளராது. அந்த விதமான ஒரு சூழலில் அதனால் வளரமுடியாது. நிச்சயமாக அது வளருகிறதில்லை.
107291 ஆனால் விசுவாசம் ஒரேயொரு வைட்டமினில்தான் வளர்கின்றது. அதற்கு ஒரே ஒரு வைட்டமின்தான் இருக்கின்றது. எந்த ஒரு கலவையையும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் அதற்குக் கிடையாது. விசுவாசம் ஒரு வைட்டமினில்தான் வளருகின்றது, அது வார்த்தை ஆகும். அந்த ஒன்றில் தான் விசுவாசத்தினால் வளரமுடியும், அது வார்த்தையாகும். வார்த்தையை விசுவாசிப்பதே அது வளரத்தக்கதாக இருக்கின்ற ஒரே வழியாகும், அது முழு வார்த்தையும் எடுத்து அதுதான் சத்தியம் என்று விசுவாசிக்க வேண்டும். ஆகவே அந்த விசுவாச வைட்டமின் ஆங்கிலத்தில் நான்கு எழுத்துக்களை கொண்டிருக்கின்ற ஒரு சிறு வார்த்தையான, ஜீ-வ-ன், “ஜீவன்” என்பதாகும். விசுவாசம், அது வைட்டமின் எல் -ஐ கொண்டிருக்கின்றது. விசுவாசம் எல் வைட்டமினை உடையதாயிருக்கிறது.
108292 அறிவுக்கூர்மை வைட்டமின் பி ; வைட்டமின் ஆர் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது; இன்பம்; மற்றும் வைட்டமின் சுயபுத்தியைக் கொண்டு யோசித்தல்; வைட்டமின், மற்ற எல்லா வைட்டமின்களும். அவரகள், விசு-…மறு-…அறிவு அவை எல்லாவற்றையும் கொண்டிருக்கின்றது. புரிகிறதா? அறிவுக்கூர்மை அவை எல்லாவற்றையும் கொண்டிருக்கின்றது, அவைகளை சுயபுத்தியைக் கொண்டு யோசிக்கின்றது. 293 ஆனால் விசுவாசம் ஒரேயொரு காரியத்தை மாத்திரம் கொண்டிருக்கின்றது: ஜீவன். அதில் மாத்திரமே அது தரித்திருக்கும். “உம்முடைய வார்த்தை ஜீவனாகும். உம்முடைய வார்த்தை சத்தியமாகும். அவர் தான் அந்த வார்த்தை, அந்த வழி, சத்தியம், வெளிச்சம்.” விசுவாசம் சரியாக அங்கேயே தரித்திருக்கிறது. அவ்வளவுதான். அது அதை எடுக்காது. பரிசுத்த ஆவியின் ஜீவன், நித்திய ஜீவன், அதில்தான் விசுவாசமானது வளருகின்றது: சோயி , தேவனுடைய சொந்த ஜீவன். விசுவாசமானது வார்த்தையைக் கேட்டு அது தேவனுடைய வார்த்தை என்று விசுவாசிக்கையில், அந்த ஒரு இடத்தில் மாத்திரமே விசுவாசத்தினால் கிரியை செய்ய முடியும். அப்பொழுது, அதில் சோயி, அது வளர்ந்து வார்த்தை என்ன கூறியிருக்கின்றதோ அதைப் பிறப்பிக்கின்றது.
109294 தேவன், அவர் உலகத்தை எப்படி உண்டாக்கினார்? உலகமானது தேவனுடைய சிந்தையில் இருந்ததென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக, அது இருந்தது; அவ்வாறுதான் இருக்க வேண்டும். எப்படி அவர் அதை உண்டாக்கினார்? அவர் உரைத்தார். 295 “பொருட்களையெல்லாம் அவர் எங்கிருந்து எடுக்கப்போகின்றார்?” எப்படி உங்களால் சுயபுத்தியைக் கொண்டு, “தேவனே, கற்பாறைகளை உண்டாக்க அதற்கு வேண்டிய பொருட்களை எங்கிருந்து எடுத்தீர் என்று தேவனைக் கேட்க முடியுமா? எங்கிருந்து நீர் எடுத்தீர்?” அவை வாயுப் பொருட்களிலிருந்து வந்தன. “கர்த்தாவே, வாயுப்பொருளை எங்கிருந்து எடுத்தீர்?” புரிகிறதா? “தண்ணீரை எப்படி நீர் உண்டாக்கினீர்? அதற்கான சூத்திரம் என்ன? H 2 O. அப்படியானால் எங்கிருந்து நீர் நீர்வாயு, பிராணவாயு ஆகியவற்றை எடுத்தீர்?” புரிகிறதா? அதுதான். புரிகிறதா? அப்படி கேட்பது அர்த்தமற்ற ஒன்றாகிவிடுகின்றது. 296 தேவன் என்ன கூறினார்? அது அவருடைய சிந்தையில் இருந்தது. வர்த்தையாக வெளிப்படுவதற்கு முன், அவருடைய சிந்தைகள்தான் அவருடைய வார்த்தையாகும், அப்பொழுது அவருடைய சிந்தை “உண்டாகக்கடவது” என்று கூறினபோது, அது அங்கே வந்து நிகழ்ந்தது. அதுதான். அங்கேதான் விசுவாசம் தரித்திருக்கிறது.
110297 “மூலமாக…அந்த…” எபிரெயர் 11, “விசுவாசத்தினாலே உலகம் உண்டாக்கப்பட்டது” என்று கூறியுள்ளது. உலகமானது விசுவாசத்தினாலே உண்டாக்கப்பட்டது. “தோன்றப்படாதிருக்கின்ற காரியங்களைக் கொண்டு தேவன் உலகத்தை உண்டாக்கினார்.” விசுவாசத்தினாலே தேவன் உலகத்தைப் பேசிச் சிருஷ்டித்தார், ஏனென்றால் அது—அது முன்னரே திட்டமிட்டுச் செய்யப்பெற்ற வார்த்தையாயிருந்தது. ஆகவே அவர் அதை உரைத்தவுடனே, அது ஜீவனானது. 298 இப்பொழுது நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், அதை நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறலாம். நீங்கள் அதை உங்கள் இருதயத்தில் விசுவாசிக்க முடியும். அப்படியானால், “அதை நான் விசுவாசிக்கிறேன்” என்று அதை வெளிப்படுத்த முடியும். அந்தக் கருத்தை விட்டு, மாறவே மாறாதீர்கள். அதனோடு அப்படியே தரித்திருங்கள். அதிலிருந்து என்ன வளர்ந்து வெளிவருகின்றது என்று கவனித்துப் பாருங்கள். அது வார்த்தையைப் பிறப்பிக்கும், ஏனெனில், அது விசுவாசமாகும். புரிகிறதா? அறிவுக்கூர்மை உங்களை வார்த்தையினின்று அகற்றிவிடும். விசுவாசமோ உங்களை வார்த்தையினிடத்திற்கு கொண்டு வரும். அது புரிகிறதா?
111299 அது மனிதனால் உண்டாக்கப்பட்ட போதகம் ஒவ்வொன்றையும் வெட்டியெடுக்கிறது, கற்ப்பிக்கும் ஒவ்வொரு பள்ளியையும், மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதசாஸ்திரம் ஒவ்வொன்றையும், வெட்டியெடுக்கிறது, அவைகளை அடித்து கீழே விரைத்துப்போகச் செய்கின்றன. அங்கே அவர்கள், அவரகளுடைய பேராசிரியர் டி.டி., பிஎச்.டி., எல்.எல்., கி.யூ.டி., பெற்றவர், இவர்களெல்லாம் வேத பள்ளிகளுக்குச் சென்று உளவியல், மற்றும் மற்ற எல்லாக் காரியங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். அவன் ஒரு காரியத்தை மாத்திரம் கற்றுக்கொண்டு வெளியே வருகின்றான். அவன் உளவியல் பிரகாரமாக எப்படி தன்னைக் காண்பித்துக் கொள்ள வேண்டும் என்றும், எந்தவிதமான உடைகளை உடுத்த வேண்டுமென்றும், “ஆமென்” என்பதை எப்படி கூற வேண்டும் என்றும் கற்றுக்கொள்கிறான், மேலும், ஓ, அர்த்தமற்றது! அது… 300 பரிசுத்த ஆவியால் நடத்தப்படுவார்கள். தேவனுடைய குமாரர் பரிசுத்த ஆவியாலே நடத்தப்படுவார்கள், வேதாகமக் கருத்தரங்கின் அறிவுக்கூர்மையினால் அல்ல. ஆனால் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்கள். நிச்சயமாக. அது உண்மையே, ஆமென்.
112301 இப்பொழுது, அது ஒவ்வொரு கோட்பாட்டையும், ஒவ்வொரு வேதசாஸ்திர பள்ளியையும், மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு வேதசாஸ்திரத்தையும் வெளியே அனுப்புகிறது. அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை என்பதில் வியப்பொன்றுமில்லை; அவர்கள் வளரத்தக்கதாக ஒரு காரியமும் அங்கே இல்லை. புரிகிறதா? அவர்கள் ஆர் என்ற வைட்டமினை, சுயபுத்தியைக் கொண்டு யோசித்தலை, பெற்றுள்ளனர், அதாவது அவர்கள் அதை வெளியே தூக்கியெறிய வேண்டியதாயிருக்கிறது. வைட்டமின் புகழ், வைட்டமின் இன்பம், “சிறிது வேடிக்கையாக கேலி செய்வோம்.” எந்தவிதமான கேலி? “ஓ, வெளியே சென்று எப்பொழுதாவது ஒருமுறை, சிறிது மது அருந்தினால் கூட, உங்களுக்குத் தெரியும். அது ஒரு சிறு வேடிக்கையாயிருக்கும்; அது எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்காது.” 302 அங்கே அதைப் போன்று சிறு காரியங்களை, நீங்கள் அறிவீர்கள், அவையெல்லாம், எல்லாம் அந்த வைட்டமின்களே. புரிகின்றதா? அப்படியானால் அந்தவிதமான வைட்டமின் உண்மையல்ல என்று அறிவிக்கும் வார்த்தையை அந்த வைட்டமின் வளரவிடுமா? எப்படி அது வளரவிடப்போகிறது? புரிகிறதா? வார்த்தை அதை மறுதலிக்கிறது. “நீங்கள் உலகத்தையும், உலகத்தின் காரியங்களையும் அன்புகூர்ந்தால் உங்களிடத்தில் தேவனின் அன்பு இல்லை,” என்று வேதாகமம் கூறியுள்ளது. புரிகிறதா? ஆகவே அப்படிப்பட்ட வைட்டமின்களின் கீழ் எப்படி—எப்படி தேவனுடைய…எப்படி தேவனுடைய வார்த்தையானது வளருப்போகிறது?
113303 நிலத்தில் இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட வைட்டமினால்தான் தானியங்களை வளரச் செய்ய முடியும். அது சரியான ஒரு விளைநிலமாக இருக்க வேண்டும். நாம் அதை இன்னும் சிறிது, ஆழமாகப் பார்ப்போமாக. புரிகிறதா? அது ஒரு சரியான ஒரு விதமான விளைநிலமாக அது இருக்க வேண்டும், இல்லையென்றால் அது தானியத்தை வளரச்செய்யாது. நீங்கள் குறிப்பிட்ட விளைநிலங்களை எடுத்துக் கொள்வீர்களானால், அது இதை வளரச் செய்யாது, வேறு சில தானியங்கள் வளரச் செய்யும். மணற்பாங்கான நிலம், வேறுவிதமான வைட்டமின், போன்றது, குறிப்பிட்ட காரியங்களைத்தான் வளரச் செய்கிறது. அது வளரச் செய்யவில்லையெனில், ஏன், அதினிடம் வளரச் செய்வதற்கு ஒன்றுமேயில்லை, ஆகவே அது ஒரு தானியத்தை வளரச் செய்யாது. அவ்வளவு தான். 304 இப்பொழுது, களைகள் எந்தவிதமான தானியத்திற்கருகிலும் வளரும், எந்தவிதமான நிலத்திலும் வளரும். அது சரிதானே? பழைய ஸ்தாபன களைகள் எந்த இடத்திலும் வளரும். 305 ஆனால், சகோதரனே, நான் உனக்கு சொல்லுகிறேன், நீ ஜீவ கனிகளை உற்பத்தி செய்ய விரும்புவாயானால், அது வார்த்தையிலிருந்து தான் வெளி வர வேண்டும். அது சரி. அது சரியே. நிச்சயமாக. சரி. 306 இக்காலையில் நான் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருக்கவில்லை என்று நான் நம்புகிறேன். [சபையோர், “இல்லை” என்கின்றனர்.—ஆசி.] பார்த்தீர்களா? இப்பொழுது, வேண்டா…பார்த்தீர்களா? சரி.
114307 அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை என்பதும்; ஜீவிப்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை என்பதிலும் வியப்பொன்றுமில்லை. மத்தேயு 13-ம் அதிகாரம் 1-ம் வசனத்தில் அவர்களைக் குறித்து இயேசு கூறியுள்ளார். நாம் இங்கே அதற்குத் திருப்பி, நாம் பேசிக் கொண்டிருக்கிற இந்தக் காரியங்களைக் குறித்து, இயேசு அதைக் குறித்து எப்படி கூறினார் என்று பார்ப்போம். மத்தேயு 13-ம் அதிகாரம், 1-ம் வசனம், இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்தில் உட்கார்ந்தார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் … வந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள். அவர் அவர்களிடத்தில் விசேஷங்களை, அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது: சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினால் அது சீக்கிரமாய் முளைத்தது; வெயில் ஏறினபோதோ அவை தீய்ந்துபோய், மேலும் முளைத்து… வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. …மற்ற விதையோ நல்ல நிலத்தில் விழுந்து சில , கனிக் கொண்டு வந்தது, சிலது நூறாகவும்,…அறுபதா -… சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார் . 308 அறிவுக்கூர்மையல்ல, “காதுகள்,” பாருங்கள், அது சரியே, “கேட்டல்.” சரி.
115309 கவனியுங்கள். விதைக்கப் புறப்பட்டார்கள் என்று அவர் கூறினார், விதையானது புறப்பட்டுச் செல்கையில், வார்த்தையைப் பிரசங்கித்தது. 310 சில விதைகள் வழியருகே விழுந்தது; ஒரு வாத்தின் முதுகில் தண்ணீர் ஊற்றப்படுகையில், அது எப்படி வழிந்தோடிவிடுகிறதோ அது போல. 311 சில விதைகள் கல் நிறைந்த, கற்பாறை நிலத்தில் விழுந்தது, அந்நிலத்தில் காற்றினால் கொண்டுவரப்பட்ட சிறிது தூசி மாத்திரம் இருந்தது. அது முளைத்தெழும்பினது, ஆனால் அதற்கு வேரில்லாமல், வேர்விட அதற்கு இடமே இல்லாதிருந்தது. இப்பொழுது இங்கு நான் சில உதாரணங்களைக் கூறப்போகிறேன், யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்தமாட்டேன் என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? 312 அது கத்தோலிக்க சபையாயிருந்தது. அவர்கள்தான் தாங்கள் கற்பாறையின் மேல் கட்டப்பட்டுள்ளதாகக் கூறினர். நான் அவர்களோடு ஒவ்விப்போவேன். நிச்சயமாக அவர்கள் கூறுவதை நான் ஆமோதிப்பேன். அது சரி. அது சரி. அவர்களுக்குக் கீழ் மண் இல்லாதிருந்தது, வளர்வதற்கு மண் இல்லவே இல்லை. ஏன்? அவர்களால் பலன் கொடுக்கவே முடியவில்லை…ஒரு வேதாகம வைட்டமினை அவர்களால் வளரச்செய்ய முடியவில்லை, ஏனெனில் அவர்கள் அதில் நம்பிக்கை கூட வைப்பதில்லை. அவர்களுடைய கோட்பாடுகள்தான் உபதேசங்கள் ஆகும், அது சரி, ரோம உபதேசங்கள், அதில் வார்த்தையே, கிடையாது. புரிகிறதா? கற்பாறைகளின் மேல் விழுந்தது; அது ஒரு மேம்பட்ட அறிவுக்கூர்மையாயிருந்தது. ஓ, சகோதரனே, நான் உங்களுக்குக் கூறுகிறேன், அவர்கள் அதை ஒரு மேம்பட்ட விதத்தில் கொண்டிருந்தனர். அவர்கள் அதை மன உளவியல் பூர்வமாகவும், பெரிய மகத்தான கட்டிடங்கள், மிக அழகாக அங்கி உடுத்தி பரிசுத்த தேவர்கள் போல காணப்பட்ட குருமார்கள், மற்றும் எல்லா காரியங்களின் வழியாக அதை மக்கள் முன்னிலையில் வைக்கின்றனர்.
116313 சபையை விட்டு இப்பொழுது வெளியே வந்த அந்தக் கத்தோலிக்க கன்னியாஸ்திரீயின் சாட்சியை எத்தனைப்பேர் கேட்டீர்கள்? நீங்கள் அதை இங்கே வைத்துள்ளீர்களா? இங்கே சபையில் என்றாவது ஒரு புதன் இரவு அந்த ஒலிநாடாவை நான் உங்களுக்கு போட்டுக் காண்பிக்க விரும்புகிறேன். இங்கே இருக்கின்ற ஒவ்வொரு நபரும் அந்தச் சாட்சியை கேட்க வேண்டும். அவர்களில் ஒருவர் நீண்ட காலமாக என்னைப் பின்பற்றினார். எப்படி அவர்கள்…
117314 நானே அங்கே மெக்சிகோவிற்குச் சென்று, அந்த சுண்ணாம்புக் குழிகளை கண்டேன், அதில் கத்தோலிக்க கன்னியா ஸ்திரீகளின் குழந்தைகளைக் கண்டேன். கத்தோலிக்க குருமார்கள் அக்குழந்தைகளை கன்னியாஸ்திரீகள் மூலமாக பெற்றெடுத்து; அக்குழந்தைகள் சுண்ணாம்புக்குழிகள் மற்றும் அதைப் போன்றவைகளில் போடப்பட்டு எரிக்கப்பட்டன. அதன் காரணமாகத்தான் மெக்சிக்கோவில் கம்யூனிசம் தோன்றி வளர்ந்தது. அது அந்த அர்த்தமற்ற மூடத்தனத்தை உடைத்துப் போட்டது. அக்காரியம்தான் கம்யூனிசம் எழும்பி வளரக் காரணமாயிருந்தது. 315 நீங்கள் ஒரு போதும் கம்யூனிசத்தின் மீது பயங்கொள்ள வேண்டாம். தேவன் கம்யூனிசத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார். நான் அதில் நம்பிக்கை வைப்பதில்லை. அது பிசாசினால் உண்டானது. ஆனால் நேபுகாத்நேச்சார் ராஜா வந்து, இஸ்ரவேலை பிடிக்கும்படிக்குத் தேவன் அவனை உபயோகித்தது போல, பிசாசையும் அவர் எடுத்து அதேவிதமாக மறுபடியுமாகக் கிரியை செய்கின்றார். புரிகின்றதா? ஆம். வேதாகமம் அதை நிரூபிக்கிறதா என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள். இந்நாட்களில் ஒன்றில் நாம் அதைப் பார்ப்போம். தேவனுடைய பிள்ளைகளைக் கொன்ற, அந்த பழைய மகாவேசியைப் பழி வாங்குவதற்கென, தேவன் கம்யூனிசத்தை எழுப்பினார். அதைத்தான் வேதாகமமும் சரியாகக் கூறியுள்ளது. ஆம். “அவர்கள் அவளை அக்கினியால் சுட்டெரிப்பார்கள் என்றும், அவளின் முடிவாகிய அழிவுக்கு அவள் தள்ளப்படுவாள்” என்றும் கூறியுள்ளது. அவளுக்கும் கூட, அதுதான் சரியாக நடக்கப் போகின்றது. இதோ அவள். 316 கற்பாறைகளின் மேல் விழுந்த விதை அவள்தான், மிகக் குறைந்த மண் இருந்ததால் அந்த விதையால் வளரவே முடியவில்லை; அது மரித்துப் போனது. ஆகவே, அது மிக நேர்த்தியான அறிவுக்கூர்மையாயிருந்தது.
118317 பின்னர் சில விதைகள் பெந்தேகோஸ்தே நிலத்தில் விழுந்தன, ஆனால், அதற்குச் சிறிது காலத்திற்கு பிறகு, பெரிய ஸ்தாபனங்களின் மகத்தான அறிவுக்கூர்மை அந்த விதையை நெருக்கிப்போட்டது, பரிசுத்த ஆவியை நெருக்கி வெளியே போட்டுவிட்டது. “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டது. டாக்டர் இன்னார்-மற்றும்-இன்னார், இன்னார்-மற்றும்-இன்னார் கூறினார். பார்த்தீர்களா? அப்படிப்பட்ட ஒன்று கிடையாது.” எல்லாம் துல்லியமாக கிரியைச் செய்தது, எல்லாவற்றையும் நெருக்கிப்போட்டது. எதை எல்லாம் நெருக்கிப்போட்டது? அறிவுக்கூர்மைக்காக, பரிசுத்த ஆவியை நெருக்கிப்போட்டது. புரிகிறதா? 318 மார்டின் லூத்தரின் நாட்களில் பரிசுத்த ஆவி விழுந்தது. ஜான் வெஸ்லியின் நாட்களில் பரிசுத்த ஆவி விழுந்தது. ஆதி பெந்தேகொஸ்தே சபையின் நாட்களில் பரிசுத்த ஆவி விழுந்தது. ஆனால் ஸ்தாபனங்கள் என்ன செய்தன? தங்களுடைய அறிவுக்கூர்மையினால், பரிசுத்த ஆவியை நெருக்கிப்போட்டது. எதை நெருக்கிப் போட்டது? அந்த விதையை. அந்த விதை என்ன? வார்த்தை. “அதன் அர்த்தம் அதுவல்ல, அது அங்கே, இதைத்தான் குறிக்கின்றது,” புரிகிறதா? அவர்கள் அதைப் புரிந்துக் கொள்ள…
119319 இப்பொழுது, அந்த மனிதர்களில் அநேகர் உத்தம இருதயம் கொண்ட ஊழியர்கள், அவர்களை நான் சந்தித்திருக்கிறேன், அவர்களோடு உட்கார்ந்து பேசியிருக்கின்றேன், ஞானஸ்நானம் மற்றும் அநேகக் காரியங்களைக் குறித்தும் கூட நான் பேசியிருக்கின்றேன். அதைக்குறித்து விவாதிக்கும்படி, எவரும் வரும்படி நான் கேட்டிருக்கின்றேன். அதற்கு அவர்கள் “சகோதரன் பிரான்ஹாம், அதை நாங்கள் செய்வோமானால், எங்கள் சபை எங்களை வெளியே தள்ளிவிடும்” என்று கூறினர். 320 அதற்கு நான், “எது? எது உங்களுக்கு பெரியது, உங்கள் சபையா அல்லது தேவனுடய வார்த்தையா?” என்று கேட்டேன். ஸ்தாபனம் என்னும் தூசியில், நீங்கள் ஒருபோதும் தொடர்ந்து வளரவே மாட்டீர்கள். புரிகிறதா? பார்த்தீர்களா? சரி. அது வார்த்தையை மறுதலிக்குமானால், அது தவறாயிருக்கிறது. புரிகிறதா? அது மனிதனால் உண்டான அறிவுக்கூர்மையே என்பதை காண்பிக்கிறது.
120321 இப்பொழுது, பிராடெஸ்டென்டுகளும் நெருக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் வார்த்தையில் விசுவாசம் கொள்வதற்கு பதிலாக அறிவுக்கூர்மையை எடுக்க ஆரம்பிக்கையில், அது அவர்களிடமிருந்து பரிசுத்த ஆவியை நெருக்கிப்போட்டது; ஸ்தாபனத்தில் இருக்கும் அறிவுக்கூர்மையை, வார்த்தையில் இருக்கும் விசுவாசத்திற்குப் பதிலாக ஸ்தாபன ஞானத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தபோதே. இதைப் புரிந்துகொண்ட எல்லோரும் “ஆமென்” என்று கூறுங்கள். [சபையார், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] புரிகிறதா? மனிக் குழுவினர் என்ன—என்ன கூறுகிறார்களோ அதில் விசுவாசம் வைத்தல், மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே, சுவிசேஷக்குழுவினர் மற்றும் யாவும் ஒன்றுசேர்ந்தே. வெகு விரைவில் அவர்கள் எல்லோரும் ஒன்றாகி, “மிருகத்திற்கு சொரூபமாக” இருக்கப்போகிற சபைகளின் ஒரு ஐக்கிய சங்கத்தை வெகு விரைவில் உருவாக்கப் போகிறார்கள். அங்கே அவர்கள் கொண்டிருந்த அதிகாரத்தைப் போலவே, வெளிப்படுத்தின விசேஷம் 13:11, இந்நாட்டிலும் அவன் அதே அதிகாரத்தைக் கொண்டிருப்பான்; ஆதியிலே ரோமன் கத்தோலிக்க சபையில் அவர்கள் செய்ததுபோல, இங்கே அவன் பரிசுத்தவான்களின் மீதான துன்புறுத்தலைக் கொண்டு வருவான். புரிகிறதா? சரியாக அதை நோக்கித்தான் காரியங்கள் சென்று கொண்டிருக்கின்றன. 322 மேலும் அதனால்தான் வார்த்தையானது சரியாக இப்பொழுதே எல்லா இடங்களிலும், விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது, “அதிலிருந்து அப்பால் நில்லுங்கள். அதிலிருந்து வெளியே வாருங்கள்.” புரிகிறதா?
121323 இப்பொழுது, அறிவுக்கூர்மை அதை நெருக்கிப்போட்டு வெளியேற்றியது. அவர்களுடைய சொந்த அறிவுக்கூர்மையானது பரிசுத்த ஆவியை நெரித்து அவர்களிடமிருந்து அப்பாலே சென்றுவிடும்படிக்குச் செய்துவிட்டது. அதை நான் உங்களுக்கு வேதாகமத்தில் வெளிப்படுத்தல் 3-வது அதிகாரத்திலிருந்து எடுத்து, நிரூபித்துக் காண்பிப்பேனாக, இந்த அதிகாரத்திலிருந்து சபையின் காலங்களைக் குறித்து சற்று முன்னர் நாம் தியானித்தோம். இயேசு தம்முடைய சபையிலிருந்து குரல்வளை நெரித்து திக்குமுக்காடச் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்; சபையின் வெளியே அவர் நின்று திரும்ப உள்ளே வர வாசற்படியில் நின்று கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றார். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகின்றார்—ஆசி.] ஹு-ஹூ. சரியாக அதைத்தான் அது கூறியுள்ளது. “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன். ஒருவன் தாகமாயிருந்தால், என்னை உள்ளே அனுமதித்தால், அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்.” ஆனால் யாருமே கதவைத் திறக்கவில்லை. பார்த்தீர்களா? அவரை அவர்கள் வெளியே தள்ளிவிட்டனர். அது என்ன? அவர்கள்…அந்த விதை அவர்களின் மேல் விழுந்தது. பார்த்தீர்களா? புரிகின்றதா?
122324 ஆனால் சில விதைகள் துன்பம் என்னும் பள்ளத்தாக்கில் விழுந்தன. சில விதைகள் துன்பம் என்னும் பள்ளத்தாக்கிற்குள் சென்றன. இப்பொழுது, பள்ளத்தாக்கில் தான் தண்ணீர், மற்றும் சிறந்த வளமிக்க நிலத்தை நீங்கள் காண வகையுண்டு. நன்றாக காரியங்கள் அடித்து வெளியேற்றப்பட்ட ஒருவனை, அவனிலிருந்து எல்லா வேதசாஸ்திர அறிவும் அடித்து வெளியேற்றப்பட்டு, அவன் சிரிக்கப்பட்டு, அவன் பரியாசம்பண்ணப்பட்டு, மற்றும் புண்படுத்தலினூடாக அவன் கடந்து வந்து அவனிலிருந்து எல்லா காரியங்களும் எடுத்துப் போடப்பட்டு, கிரியை செய்வதற்காக ஆயத்த நிலையில் இருக்கின்ற ஒருவனை நீங்கள் எடுப்பீர்களானால், அவனில் சிறிது ஈரமிருப்பதை நீங்கள் காணலாம். அது உண்மை. பள்ளத்தாக்கிற்குள்ளாக, அந்த நபர் தன்னுடைய ஸ்தாபனத்திலிருந்து எட்டி உதைத்துத் தள்ளப்பட்டு, வெளியே தள்ளப்பட்டு நேரடியாக பள்ளத்தாக்கில் விழுகின்றான். அவன் “மிகவும் பள்ளமான இடங்களில் தள்ளப்பட்டான்,” அவர்கள் அதை அவ்விதம் அழைக்கின்றனர். புரிகிறதா? பள்ளமான இடமல்ல, ஆனால் “அந்தப் பள்ளத்தாக்கில்,” என்றே நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம். பள்ளத்தாக்கில், அங்கே தான் லீலி புஷ்பமும் கூட வளருகிறது என்பதை, நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குத் தெரியும். ஹு-ஹூ. ஹு-ஹூ. அது சரி, பாருங்கள், “பள்ளத்தாக்கில்.” சரி. சில விதைகள் கடின சோதனையான, உபவத்திரவங்களின் பள்ளத்தாக்கில் விழுந்தன. சில விதைகள் அங்கே, உபவத்திரத்தின் பள்ளத்தாக்கில் விழுந்தன, அது கடும் சோதனை, எல்லாவிதமான பெயர்களைக் கொண்டும் அழைக்கப்படுதல் போன்றவை, “பெயல்செபூல்” என்று லீலி புஷ்பம் அழைக்கப்பட்டு பரியாசம் செய்யப்பட்டதுபோல.
123325 ஆனால் இந்த பள்ளத்தாக்கில் தான் நீர்க்கால்கள் இருக்கின்றன. சங்கீதம் 1, “மனுஷன் பாக்கியவான்” என்று கூறியுள்ளது. சற்று நான் அதை வாசிப்பேனாக. இந்த பள்ளத்தாக்கில் என்ன உள்ளது என்று நான் உங்களுக்குக் காண்பிப்பேனாக. என்ன, சங்கீதம்…எனக்கு நேரம் இருக்காது என்று நான் நினைத்தேன், ஆனால் அதற்கு நேரத்தை நாம் எடுத்துக்கொள்வோம், பாருங்கள், இதை வாசித்துப், பாருங்கள், இதை இங்கே வாசிக்க வேண்டும். நாம் இதை வாசித்து, இந்த மனிதன் இங்கே நடப்பட்டிருக்கின்றான் என்றும், அவன் எங்கே நடப்பட்டிருக்கின்றான் என்றும் நாம் பார்க்கப்போகிறோம். அவன் நிலமே இல்லாத…தூசி நிறைந்த ஒரு பாலைவன கற்பாறையில், நடப்பட்டிருக்கின்றானா, அல்லது அவன் பள்ளத்தாக்கில் நடப்பட்டிருக்கின்றானா? சரி. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், அந்த அறிவுக்கூர்மை… ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,… கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து… அந்த வார்த்தை; இரவும் பகலும் அவருடைய வேதத்தில…வார்த்தை…தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் . அவன் நீர்க்கால்களின் நதிகள் ஓரமாய் நடப்பட்டு,…
124326 “நதிகள்.” அது என்ன? ஒன்பது ஆவிக்குரிய வரங்கள். ஒரே நதியிலிருந்து புறப்பட்டு வருகின்ற “நீர்க்கால்கள்,” ஒரே ஆவி. ஒரே தண்ணீர், ஆனால் ஒன்பது பலவிதமான வழித்துறைகள், நீர்க்கால்கள். புரிகிறதா? நீர்க்கால்கள்…தன் காலத்தில் அவருடைய கனியைத், ஆவிக்குரிய கனியைத் …தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்கிறதெல்லாம் வாய்க்கும்.
125327 பாருங்கள், சில விதைகள் அங்கே இந்த நீர்க்கால்கள், நதிகள் ஓடின பள்ளத்தாக்கில் விழுந்தன. பிறப்பித்ததை…நீங்கள் கவனித்தீர்களா? நான் உங்களுக்கு வேறொன்றைக் காண்பிக்க விரும்புகின்றேன். என்ன செய்யப்பட்டிருந்தது? அது நதியில் விழுந்தது… 328 அது மாற்றப்படவில்லை. அவன் “ இதிலிருந்து அதற்கு மாற்றப்பட்ட, ஒரு மரத்தைப் போலிருப்பான்” என்றாயிருக்கிறது? அவன் “நடப்பட்டிருந்தான்.” என்ன? முன்குறிக்கப்பட்டிருந்தான். உலகத்தோற்றத்திற்கு முன்பே, அந்த தேவனுடைய சிந்தை, அவனை அந்த இடத்தில் வைத்தது. புரிகிறதா? ஏதோ தற்செயலாக, அங்கே அது மாட்டிக்கொள்ளவில்லை; ஆனால் அங்கே அது முன்குறிக்கப்பட்டு “நடப்பட்டிருந்தது,” (எங்கே?) அந்த நதியின் நீர்க்கால்களின் ஓரமாக. ஓ! 329 “அவனுடைய வேர் உதிர்ந்து போகாது.” ஓ, அல்லேலூயா! “அவன் மரித்துப் போனாலும், கடைசி நாளில் அவனை நான் எழுப்புவேன்.” அது சரி.
126330 தற்செயலாக அல்ல, அவன் அங்கே இருக்கும்படியாக முன்குறிக்கப்பட்டிருக்கின்றான். அவன் நடப்பட்டபோது அந்த வார்த்தையை பிடித்துக் கொள்ளும்படியாக அவன் முன் குறிக்கப்பட்டிருந்தான். அவள் சரியாக அங்கே இருப்பாள். அது நடப்படுகிறபோது, அவள் அங்கே இருக்கிறாள். அவன் நடப்பட்டிருக்கின்றான், தற்செயலாக சிக்கிக்கொள்ளவில்லை. அவன் உண்மையாகவே நடப்பட்டிருக்கின்றான். அது உண்மை. ஒரு மரக்குச்சி நிலத்தில் சிக்கிக் கொள்வதற்கும், மற்றும் நடப்படுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கின்றது. அது வித்தியாசமாயுள்ளது. அந்த விதை விதைக்கப்பட்டிருந்தது; அது தன்னுடைய சொந்த வேரை ஊன்றத்தக்கதாக சென்றது. தண்ணீர் உள்ளே வந்து, அதனுடைய ஜீவனை, ஆவியை வெளிக்கொணர்ந்தபோது, அது கூற ஆரம்பித்தது… நீங்கள் “ஒன்பது ஆவிக்குரிய வரங்கள் உள்ளன” என்று கூற, அவன், “ஆமென்” என்று கூறினான். “இயேசு, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.” “ஆமென்.” “அவர் எப்பொழுதும் செய்தவிதமாக அவர் இன்னமும் சுகப்படுத்துகிறார்.” “ஆமென். ஆமென். ஆமென்.” பாருங்கள்? 331 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டிருக்கின்றான், நீர்க்கால்கள், நீர்க்கால்கள் எல்லாப் பக்கங்களிலுமிருந்து வந்து பாய்ந்துக் கொண்டிருக்கின்றன. அவன் பட்டுப்போகாதிருப்பதில் வியப்பொன்றுமில்லை. வியப்பொன்றும் இல்லை, ஏனெனில் அவன் நடப்பட்டிருக்கின்றான். சில விதைகள் அங்கே விழுந்தன. அவனால் மரிக்க முடியாது. அது சரியாக ஜீவ நீரோடையில் உள்ளது. அது ஜீவனை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கின்றது. அது உண்மை. புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடுகளாகிய “நீர்க்கால்கள்,” அது அந்த நீர்கால்களிலிருந்து அதற்குரிய ஜீவனை எடுத்துக்கொண்டிருக்கிறது. ஆமென். அது அதனூடாக சரியாக போஷிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது! ஓ, சகோதரனே! நீங்கள் அவரை நேசிக்கப்போகிறீர்களா? ஆமென்! நீங்கள் அவரை ஸ்தோத்தரிக்கப்போகிறீர்களா? ஆமென்! நீங்கள் அவரைத் தொழுது கொள்ளப்போகிறீர்களா? ஆமென்! ஆமென்! ஆமென்!
127332 ஆம், ஐயா. ஆம், ஐயா. ஓ, அதை நான் நேசிக்கின்றேன், நீங்கள் நேசிக்கவில்லையா? ஆம். …அவருடையதைத் தருவான், தன் காலத்தில் அவருடைய கனிகளைத் தருவான்; … 333 ஆதியாகமம் 1: 11 “அவருடைய கனிகளைத் தருவான்.” எந்தக் கனிகள்? எதனுடைய கனிகள்? அவருடைய கனிகள். எந்தக் கனிகள்? அவருடைய சொந்தக் கனிகள். அது என்ன கனி? வேதாகமம். புரிகிறதா? அவையாவும் இதில் இங்கே இருக்கின்றது. அந்தக் கனி, அன்பு, அது இங்கே வேதாகமத்தில் இருக்கின்றது. சந்தோஷம், அது இங்கே வேதாகமத்தில் உள்ளது. வல்லமை, பரிசுத்த ஆவி, எல்லா காரியங்களும் இங்கே உள்ளது, தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வாக்குத்தத்தம், அதுவே கனிகள். இங்கே அது உள்ளது. ஆகவே அவன் இதில் நடப்பட்டிருப்பானானால், அந்த—அந்த சரியான நிலத்தில், விசுவாசத்தில் நடப்பட்டுள்ளது. விசுவாசம் என்ன செய்கின்றது? விசுவாசம் அதை வளரத் துவக்குகிறது. ஆமென்! மேலே வளரத் துவக்குகிறது. புரிகிறதா? அதுதான்; வளரும்படிக்குச் செய்கின்றது. நிச்சயமாக. “அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு; தன் காலத்தில் அவருடைய கனியைத் தருவான்.” 334 இப்பொழுது, எந்த விதமான கனியை அது தரும்? யோவான் 14:11, யோவான் 14:11, அவர் கூறினார், இயேசு கூறினார், “அவர்,” அது 14:12 என்று நான் நினைக்கின்றேன், “அவர்,” இயேசு, “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்றார். ஏன்? அந்த அதே வார்த்தை அவனுக்குள்ளாக இருக்கின்றது. அவர்தான் அந்த வார்த்தையானவர். அது சரி தானே? “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ.”
128335 அண்மையில், அங்கே பின்னாக நான் சகோதரன் ஈவான்ஸுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் இங்கே வருகின்றார். அவர் இவ்வளவு தூரம் காரோட்டிக் கொண்டு வருகின்றாரே! அவருடைய கார் தொலைந்து போனது. அங்கே மில்லர் கடையின் அருகில் சாவியுடனே காரை நிறுத்திச் சென்றுவிட்டார், யாரோ ஒருவன் வந்து அதைத் திருடிச் சென்றுவிட்டான். அவர் எல்லா பொருளையும் காருக்குள்ளாக வைத்திருந்தார். அவர் வந்தார். அவர், அவர் மற்றும் சகோதரன் ஃபிரட், மற்றும் சகோதரன் டாம், இன்னும் சிலரோடு என் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் வந்து கூறினார்… பாருங்கள், ஒரு சிறு பிள்ளை தன்னுடைய மிட்டாயை யாரோ ஒருவர் பிடுங்கிவிடும்போது எப்படி காணப்படுகின்றதோ அது போல அவர் காணப்பட்டார்; மிகவும் நொந்துபோன நிலையில் அவர் இருந்தார், உங்களுக்குத் தெரியுமா. அவர் “என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லையே” என்றார். நான் “பாருங்கள்…” என்றேன். 336 இப்பொழுது, அது என்னவாயிருந்தது? இப்பொழுது, அவர்கள் வருகின்றனர், முதலாவதாக காரியம் என்ன? வார்த்தையிடம் செல்வது; பிதாவிடம் கேட்பது. “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ.” என்ன? வார்த்தையுடன் தரித்து நில்லுங்கள், சரியாக வார்த்தையுடன் அப்படியே தரித்து நில்லுங்கள்.
129337 நான், “நாம் ஜெபம் செய்வோம்” என்று கூறினேன். நாங்கள் தரையில் முழங்கால்படியிட்டு, ஜெபிக்க ஆரம்பித்தோம். 338 அப்போது அங்கே, நாங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கையில், நான், “பிதாவே, நான் உம்மிடத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வருகிறேன். இவர் ஒரு வாரத்தில், சில நாட்களே வேலை செய்கின்ற ஒரு சகோதரன், இதோ இருக்கின்றார். அந்த பழைய நொறுங்கின நிலையில் உள்ள கார்களை சரி செய்து பொருத்தும் வேலையைத் தொடர்ந்து செய்து, அவருடைய கைகளெல்லாம், மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளன, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரத்து ஐநூறு மைல் தூரத்திலிருந்து, கூட்டத்திற்கு வருவதற்கான பயண பணத்துக்காகக் கடுமையாக உழைக்கிறார். போஷிக்கப்படத்தக்கதாக அவருக்கு சிறு பிள்ளைகளும் உள்ளன. ஒரு வாரத்திற்கு சபைக்கு வருவதற்கான, பயண செலவுக்கு மட்டும் சுமார் ஐம்பது அல்லது எழுபத்தைந்து டாலர்கள் அவருக்குச் செலவாகும். பார்த்தீரா? சரி. நாங்கள் வார்த்தைக்காக தைரியமாகப் போராட பிரயத்தனம் செய்ய முயற்சிக்கையில், அந்த வார்த்தையைக் கேட்பதற்காக அவர் இங்கே வருகின்றார்” என்று ஜெபித்தேன். மேலும் நான், “இப்பொழுது, யாரோ ஒரு தீய நபர் இவருடைய காரை திருடிச் சென்றுவிட்டான்” என ஜெபித்தேன். அது என்னவாயிருந்தது? நான், “இப்பொழுது, கர்த்தாவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவருடைய காரை இவரிடம் திரும்பத் தருமாறு, நான் உம்மிடம் ஜெபத்தை ஏறெடுக்கிறேன்” என்று ஜெபித்தேன்.
130339 நான் என்ன செய்தேன்? நான் வார்த்தையை, அந்த வாக்குத்தத்தத்தை, தேவனுக்கு முன்பாக வைத்து, இயேசுவின் நாமத்தில் அதை முத்திரையிட்டு, அந்த வார்த்தையை நான் அனுப்பினேன். அது நேராக சாலையில் சென்று, சரியாக எந்த இடத்திலிருந்து திருடுபோனதோ அங்கிருந்து ஆரம்பித்துச் சென்றது; ஒரு வேட்டை நாய் முயலின் தடம் பற்றிச் சென்று வேட்டையாடுவது போல. பார்த்தீர்களா? இதோ அவர், கூக்குரலிட்டுக் கொண்டே, சாலையில் சென்றார். கென்டக்கியிலுள்ள, பௌலிங் கிரீனிற்கு அரை மைல் தூரத்திற்கு, சென்றடைந்தார். என்ன சம்பவித்தது? வார்த்தை அவனைக் கண்டுபிடித்தது.
131340 அப்பொழுதே ஒரு தரிசனம் என்னிடம் வந்தது. ஒரு மனிதனை நான் கண்டேன், மஞ்சள் நிறம் போல் காணப்பட்ட சட்டையை அணிந்தவனாக, அந்தக் காரை ஓட்டிக் கொண்டிருந்தான், அவன் ஒரு வாலிப நபர், ஒரு காலத்தில் அவன் ஒரு கிறிஸ்தவனாக இருந்தவன். அந்த வார்த்தை அவனை அடித்தது. “நீ தவறு செய்துகொண்டிருக்கின்றாய்” என்றது. வார்த்தை அவனைப் பிடித்தது. அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பினார். பாருங்கள், பாருங்கள், அவனைப் பிடித்தார். “நீ ஒரு நாளிலே, இக்காரியத்திற்காக பிடிபடப் போகின்றாய், இந்த காரியத்தை செய்ததற்காக சட்டம் உன்னைப் பிடிக்கப் போகின்றது. திரும்பு, இந்தக் காரை அங்கே எடுத்துச் செல்.” வார்த்தை அவனைப் பிடித்தது. ஒரு காலத்தில் அவன் ஒரு கிறிஸ்தவனாக இருந்தான். அவன் அந்தக் காரை அந்த இடத்திற்கு கொண்டு வந்து, வீதி ஓரமாக அவன் நிறுத்துவதை நான் கண்டேன். 341 மேலும் நான், “இப்பொழுது, சகோதரரே, நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் இங்கே செல்லுங்கள், உங்கள் காரை கண்டடைவீர்கள். அவன் அந்த இடத்திற்கு வரும் வரைக்கும், இங்கே காத்திருங்கள். இப்பொழுது நீங்கள் காரில் எரிபொருளை முழுவதுமாக நிறைத்திருந்தீர்களா?” என்றேன். அதற்கு அவர், “ஆம்,” என்றார். 342 நான், “எந்தப் பொருளும் எடுக்கப்பட்டிராது. ஆனால் பாதி எரிபொருள் மட்டுமே இருக்கும், ஏனெனில் பௌலிங் கிரீன் இடத்திற்கு செல்ல, அதில் பாதி செலவாகியிருக்கும். அவர் பௌலிங் கிரீனுக்கு சுமார் பாதி வழியில் இருந்தார், சுமார்—சுமார் நூறு மைல் தூரம் செல்வதற்கு பாதி எரிபொருள் செலவாகும்” என்று கூறினேன். 343 அவர் சென்று அதைப் பார்த்தபோது, அந்தவிதமாகவே அது இருந்தது, அது முற்றிலும் சரியே. அது என்னவாயிருந்தது? வார்த்தை சென்று அவனைப் பிடித்தது.
132344 திரும்ப வந்து கூறினார், அண்மையில், ஒரு மனிதன் அவரிடத்திலிருந்து காரை வாங்கினான். அவன் அதற்கான பணத்தைக் கொடுக்காமல் காரை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். பார்த்தீர்களா? “சகோதரன் பிரான்ஹாம்…” என்றார். 345 நான், “பாவம் இந்த மனிதன்!” என்று நினைத்தேன். இவருக்கு அவன் நானூறு டாலர்கள் கடன் கொடுக்க வேண்டியவனாக இருந்தான். அதற்கு நான் “நான் ஜெபிக்கிறன்” என்றேன். நான் வார்த்தையை அனுப்பினேன். அந்த வார்த்தை சென்று, அவன் சென்ற பாதையில், அவனைக் கண்டுபிடித்தது. 346 நாங்கள் அந்த மனிதனைக் காணச் சென்றபோது, அவன் ஒரு கிறிஸ்தவன் அல்ல என்று நாங்கள் அறிந்துக் கொண்டோம். பாருங்கள், அவன் செய்தது—அவன் செய்தது…அவன் சிரித்தான். ஒரு சமயம், சபைக்குச் செல்லும்படிக்கு, அவர்கள் அவனைக் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவன், “பாருங்கள், அந்தப் பிரசங்கி பிரசங்கம் செய்கையில், நான் அழகான பொன் மேனியுடைய இளம் பெண்கள் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருப்பேன்” என்றான். ஆகவே, நீங்கள் பாருங்கள், உங்களால் அதை கண்டறிய முடியாது…ஆமாம். அது—அது—அது பிசாசாகும், அது…பாருங்கள். ஆகவே வார்த்தையினால் அவனிடம் நேரடியாகத் தொடர்பை வைக்க முடியவில்லை.
133347 ஆனால் வார்த்தை என்ன செய்தது? அது அவனை கண்காணித்துக்கொண்டேயிருந்தது. புரிகிறதா? வேண்டாம்… சகோதரன் வெல்ச் நம்பிக்கையை உறுதியாகப் பற்றியிருந்தார், “எல்லாம் சரியாகி விடும். எல்லாம் சரியாகிவிடும்” என்றார். அந்த வார்த்தை அவனைத் தொடர்ந்து சென்று கொண்டேயிருந்தது. புரிகிறதா? “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ.” புரிகிறதா? வார்த்தை அவனைப் பின்தொடர்ந்து சென்றது. 348 முதலாவதாக காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அவருடைய பையன்களில் ஒருவன், இங்கே சாலையில், காரோட்டிக் கொண்டிருந்தான், அப்பொழுது அது அங்கே இருந்தது. அந்தக் காரில் ஒரு மனிதன் இருப்பதைக் கண்டு, அவனுடைய எண்ணைக் குறித்துக் கொண்டு, சகோதரன் உட்டிடம் வந்து அதைத் தெரிவித்தான். அது எங்கே இருக்கிறதென்று கண்டுபிடிக்க, அவர்கள் தொலைபேசியில் அழைத்தனர். அவன் பௌலிங் கிரீனில் இருந்தான். 349 பரலோகத்தின் தேவன் அதை அறிவார், அதைக் குறித்து ஒரு வார்த்தை கூட நான் கேள்விப்படவில்லை, அதைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாதிருந்தது.
134350 கடந்த ஞாயிறு, மதியவேளையில், ஒரு வாரத்திற்கு முன்னர், நாங்கள் இங்கே பிரசங்கத்தை முடித்தபோது, அங்கே சென்று என்னுடைய உடைகளை மாற்றிக்கொண்டு, ஃபிளாரிடாவிற்கு புறப்பட ஆயத்தமாகி, அடுத்த நாள் இரவு கூட்டத்திற்காக…இல்லை கீழே…சகோதரன் வெல்ச்சின் இடத்திற்குப் பறப்பட்டேன். நான் காருக்குள்ளாக சென்றவுடனே, அந்த மனிதனை நான் பார்த்தேன். அப்பொழுது நான், “சகோதரன் வெல்ச்…” கூறினேன். இப்பொழுது, என்னால் அதை அவரிடம் கூற முடியாதிருந்தது. அவர், தாமே, காரியத்தைப் பேசவேண்டியவராயிருந்தார், பாருங்கள், அங்கே மேடா தன்னுடைய தீர்மானத்தை செய்ய வேண்டியிருந்ததுபோல. புரிகிறதா? நான், “நாம் பௌலிங்க் கிரீன் வழியாக செல்லப் போகிறோம்” என்று கூறினேன். அவர், “அது வழியிலிருந்து சுமார் முப்பது மைல் தூரமிருக்கும்” என்றார். 351 சாலையில் சென்றுக்கொண்டிருந்தோம். அப்பொழுது நான், “ஓ, இவர்—இவர், இவர்—இவர் இதைப் புரிந்து கொள்வார். புரிகிறதா? இவர் அறிந்து கொள்வார். புரிகிறதா? இவர் கண்டிப்பாக அதை அறிந்து கொள்ளத்தான் வேண்டும்” என்று நினைத்தேன். 352 பிரயாணித்தோம். சகோதரி ஈவான்ஸ் மற்றும் நானும்… சிறிது நேரம் கழித்து, அவர், “உங்களுக்குத் தெரியுமா, சகோதரன் பிரான்ஹாம்,” என்று கூறி, அவர், “எனக்கு ஒன்றுமே புரிந்துகொள்ள முடியாது என்று எண்ணுகிறீரா?” என்று கேட்டார். “சற்று முன்னர், நீர் பௌலிங்க் கிரீன் என்று கூறினீரே” என்றார். “ஆம்” என்றேன். 353 மேலும் அவர், “என்னுடைய பணத்தை எடுத்துக்கொண்டு, ஓடிப்போன அந்த மனிதனைத் தெரியுமா?” என்றார். “தெரியும்” என்றேன். 354 “அந்த மனிதன் பௌங்க் கிரீனில்தான் இருக்கின்றான். அதைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். வெறும்… எனக்கு இங்கே ஒரு காரியம் உண்டு. நான் அந்த இடத்திற்குள் போய், அவன் எங்கே இருக்கின்றான் என்று கண்டுபிடிக்கப் போகிறேன். ஆகவே நான் போய்த் திரும்பப்போகிறேன்…” நான் கூறினேன்… 355 அதற்கு நான், “நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அங்கே சென்று, உங்கள் பணத்தை அவனிடமிருந்து வாங்கப் போகிறீர்களா?” என்றேன். 356 இப்பொழுது, பாருங்கள், நான் அவரிடம் அதை கூறுவேனானால் அப்பொழுது…பாருங்கள், அவர் தாமாகவே, ஒன்றைச் செய்ய வேண்டியவராக இருந்தார். புரிகிறதா? அவர் ஒன்றைச் செய்ய வேண்டியவராக இருந்தார். என்னால் அவரிடம் சொல்லமுடியாதிருந்தது. நான் அதைக்கூறினால், அது அங்கே சரியாக தரிசனத்தை நிறைவேறாமலாக்கிவிடும். புரிகிறதா? ஆகவே நான் அப்படியே விட்டுவிட வேண்டியிருந்தது…புரிகிறதா? அதைப்போல…
135357 ஏன் இயேசு அங்கே நின்று கொண்டு, மரியாள் மற்றும் மார்த்தாளிடம், “கல்லை எடுத்துப் போடுங்கள்” என்று கூறினார். ஏன்? அவர் தேவன். அவர், “கல்லே, இல்லாமல் போ” என்று கூறியிருக்க முடிந்திருக்கும், அப்பொழுதே அது அங்கே இல்லாமல் போயிருக்கும். ஆனால் அவள் செய்ய வேண்டியது ஒன்று இருந்தது. 358 அவர் ஏன் அங்கே நின்று கொண்டு, அறுவடையைப் பார்த்தார்? அவர் அறுப்புக்கு எஜமானாயிருந்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி, “அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி, நீங்கள் அவரை வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கூறினார். வேறு விதமாகக் கூறுவோமானால், “நான் என்ன செய்யப் போகின்றேனோ அதை நான் செய்யும்படிக்கு நீங்கள் என்னைக் கேளுங்கள்” என்பதேயாகும். புரிகிறதா?
136359 நாங்கள் நண்பர்கள். நாங்கள்—நாங்கள்…அது ஒரு சபையாகும். நாங்களாகவே, செய்ய வேண்டிய காரியங்கள் தனித்தனியே எங்களுக்கு உண்டு. நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களும் உங்களுக்கு உண்டு. இதோ சுவிசேஷம் இருக்கிறது, அதை நான் அறிவேன், ஆனால் நீங்கள் இங்கே அப்படியே உட்கார்ந்திருந்துவிட்டு சுவிசேஷத்தை பிரசங்கிக்கவில்லையென்றால், அது எந்தவித நன்மையை உங்களுக்கு பிறப்பிக்குப்போகிறது? புரிகிறதா? நீங்கள் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும். நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள் பெற்றுக்கொண்ட…நீங்கள், “பாருங்கள், தேவனால் சுகமாக்க முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன், ஆனால் எனக்கு தெரியவில்லை” எனலாம். எழுந்து நில்லுங்கள், அந்த வார்த்தை உங்களுடைய வார்த்தையாக மாறட்டும். அதை விசுவாசியுங்கள். அதை சுயபுத்தியைக்கொண்டு யோசிக்காதீர்கள்; அதை அப்படியே விசுவாசியுங்கள். 360 நான், “பாருங்கள்…” என்றேன். அவர் போகவில்லையெனில், அவர் பணத்தைப் பெற்றுக்கொள்ளாமல் இழக்கப் போகின்றார் என்பது, எனக்குத் தெரியும். நான், “அது நானாக இருந்திருந்தால், அது நானாக இருந்திருந்தால், சரியாக இப்பொழுதே நான் சென்று என்னுடைய பணத்தைத் திரும்பப் பெறுவேன்” என்று கூறினேன். ஆகவே அவர் சென்றார். அவர் சென்று படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த அந்த மனிதனை எழுப்பும்போது, அவன் சிறிது பணத்தை வைத்திருந்தான். பிறகு அவன் பக்கத்து வீட்டு நபரை அழைத்து, மீதமுள்ள தொகையைப் பெற்று, அதைத் திரும்பக் கொடுத்தான்.
137361 அது என்ன? அதுதான் வார்த்தையாகும். பாருங்கள், அது ஒரு இடத்தைக் கண்டுபிடிக்குமானால், அது சூழ்நிலையையே திருப்ப முடியும். இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும் அதேக் காரியம்தான். 362 இப்பொழுது, சகோதரன் வெல்ச், “பாருங்கள், என்னால் அங்கே செல்ல முடியாது என்று நினைக்கின்றேன்; வேறு வழியாக நான் சென்றுவிடலாம் என்று நான் நினைக்கின்றேன்” என்று கூறியிருப்பாரானால் என்னவாயிருக்கும். அந்த நபரும், “பாருங்கள், அந்தக் கார் அங்கே இல்லாதபடியால் நானும் அங்கே போகப் போவதில்லை” என்று, கூறியிருந்திருப்பாரானால் என்னவாயிருக்கும்? புரிகிறதா? அது சம்பவித்திருக்காது. 363 ஆனால் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அதை விசுவாசித்தாக வேண்டும். மேலும் அது…அப்பொழுது அது விசுவாசம் என்னும் ஒரு சூழ்நிலைக்குள் விழுகின்றது, அப்பொழுது அது காரியத்தைப் பிறப்பிக்கத்தான் வேண்டியதாயிருக்கிறது. அது காரியத்தைப் பிறப்பிக்கத்தான் வேண்டும். ஓ, அது…
138364 மரித்துப் போயிருக்கின்ற ஒருவர் உயிரோடெழுப்பப்படும்போது, என்ன சம்பவிக்கின்றது என்பதைக் குறித்து நீங்கள் எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? ஃபின்லாந்து தேசத்தில் அங்கே, மரித்துப் போயிருந்த அந்த சிறு பையன் உயிரோடெழுப்பப்பட்டதைக் குறித்து, நீங்கள் எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அவனுடைய ஆவி அவனை விட்டுப் போயிருந்தது. இப்பொழுது, வார்த்தையானது விண்வெளிக்கு அப்பால் சென்று, அந்த சிறு ஆத்துமாவை எடுத்து, அதை நேராக அந்த இடத்திற்கு திரும்பிக் கொண்டு வர வேண்டியதாக இருந்தது. எப்படி அதனால் அதைச் செய்ய முடியும்? அது வார்த்தையாகும், “வியாதியஸ்தரை சுகப்படுத்துகின்றது. மரித்தோரை உயிரோடெழுப்புகின்றது.” புரிகிறதா? அவர் எப்படி அதைச் செய்யப் போகிறார்? அது தண்ணீர் பாய்ச்சப்பட்ட வார்த்தையினாலே மாத்திரம் வரவேண்டியதாயிருக்கின்றது. அவர் தரிசனத்தை காண்பித்திருந்தார், ஆகவே அது நடந்தேயாக வேண்டும். அந்தப் பையன் அங்கே கிடந்தான். இரண்டு வருடங்களுக்கு முன்னர், அவர் கூறியிருந்தபடியே எல்லா காரியமும் அப்படியே அங்கே அமைந்திருந்தது. அங்கே அது இருந்தது. அந்தக் காரணத்தினால்தான் மலையிலிருந்து இறங்கி வந்த கரடியைக் குறித்தும், அது என்னவாயிருந்தாலும் நான் கூறுவதுண்டு: அது நடந்தேயாக வேண்டும், அந்த விதமாகவே அது இருந்தேயாக வேண்டும். புரிகிறதா? அது என்ன செய்யும்? வார்த்தையாயிற்றே!
139365 நான், “பரலோகப் பிதாவே, என்னுடைய தேசத்தில் இருக்கும் போது, இந்த சிறு பையன் மரித்த நிலையிலிருந்து உயிரோடெழுந்திருப்பான் என்று, இரண்டு வருடங்களுக்கு முன்னரே நீர் என்னிடம் கூறினீர். ஆதலால், உம்முடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, உம்முடைய வாக்குத்தத்தம். முதலாவதாக, ‘விசுவாசிக்கிறவர்களை அந்த அடையாளங்கள் பின் தொடரும்’ என்று வார்த்தை கூறியுள்ளது. நீர் உம்முடைய சீஷர்களை முன்பாக அனுப்பி, ‘வியாதியஸ்தர்களை சுகமாக்கவும், மரித்தோரை உயிரோடெழுப்பவும், பிசாசுகளைத் துரத்தவும்’ அவர்களுக்குக் கூறினீர். பிறகு, நான் என்னுடைய தேசத்தில் இருக்கும் போது இந்தச் சிறிய பையன்…திரும்பவுமாக உயிர் பெற்று ஜீவிக்கப் போகிறான் என்று எனக்கு காண்பித்தீர்” 366 “ஆகவே, மரணமே, நீ இன்னுமாக இவனை பிடித்து வைத்திருக்க முடியாது. நான் கர்த்தருடைய வார்த்தையைக் பெற்றுக்கொண்டேன்” என்று கூறினேன்.
140367 நானல்ல; நான் அந்த வார்த்தையல்ல. அவர்தான் அந்த வார்த்தை. புரிகிறதா? நான் வார்த்தையாக இருந்திருந்தால்…வார்த்தையாக இருக்கக்கூடிய நபர் ஒருவர் தான் உண்டு, அவர் இயேசுவே. ஒரு கன்னிப் பிறப்பின் மூலமாக, அவர் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையாயிருந்தார். நான் ஒரு தாறுமாறாக்கப்பட்டவன், பாருங்கள், என் தந்தை தாயின் ஐக்கியத்தின் ஒரு விளைவாகவே நான்—நான் இருக்கிறேன். இது மரிக்க வேண்டும்; அது நான், பாருங்கள், சரீரம் மரிக்கத்தான் வேண்டும். 368 ஆனால் இயேசுவைப் பொறுத்த வரையில், அப்படிக் கிடையாது. அவர் வார்த்தையாக இருந்தார். ஒரு கன்னிப் பிறப்பில், அவர் பிறந்தார். சகோதரனே, எந்த ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் அல்லது வேறெந்த ஒன்றுக்கும், அவருடைய பிறப்பினோடு எந்த விதமான ஒரு தொடர்பும் கிடையாது. அந்தப் பெண் ஒரு ஈனும் கருவியாக மாத்திரமே இருந்தாள், அவர் அவளுடைய மார்பில் பால் அருந்தினார். அதைக் குறித்ததெல்லாம் உண்மையானதுதான். ஆனால், நான் ஒன்றை உங்களுக்குக் கூறட்டும், அவர் தேவனாயிருந்தார். அவர் அதே தேவனாயிருந்தார். அந்த பிறப்பில் பாலுணர்வுக்கான எதுவுமே இல்லை. அந்த இரத்தத்தின் மூலமாக ஜீவனைக் கொண்டு வர வேண்டியிருந்ததால், அவர் பாலுணர்வுக்கு அப்பாற்பட்டதாக அவருடைய பிறப்பு இருக்க வேண்டியதாயிற்று; இன்னும் சில நிமிடங்களில், அதை நாம் பார்ப்போம். மேலும் ஆகையால், பாருங்கள், அவர் வார்த்தையாயிருந்தார்.
141369 “ஆனால் கர்த்தருடைய வார்த்தையானது…” தீர்க்கதரிசிகள் அந்த வார்த்தையாயிருக்கவில்லை. “ஆனால் கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளு க்கு வந்தது.” இல்லை…அவர்கள் அந்த வார்த்தை அல்ல. வார்த்தை அவர்களு க்கு வந்தது. 370 இன்றைக்கும் அந்த விதமாகத்தான் அது நமக்கு நடக்கின்றது. அந்தச் சிறு பையனுக்காக வார்த்தை வந்தபோது, அது என்னவாயிருந்தது? ஒரு தரிசனம். அது கரடியைக் குறித்தென்னவாயிருந்தது? அது இந்த மற்ற காரியங்களுக்கு என்னவாயிருந்தது? எல்லாமே, ஒரு தரிசனம். அது கர்த்தருடைய வார்த்தையாய், அதற்கு உண்டானது. அதன் பின்னர் அது என்ன செய்கிறது? அது அங்கே பற்றிப் பிடித்துக்கொள்கிறது. 371 இப்பொழுது, முதலாவதாக, அது பேசப்பட வேண்டும். “மரணமே, அவனை திரும்பக் கொடு. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் அந்த வார்த்தையை அனுப்புகிறேன்.” திருடப்பட்ட அந்தக்க் காருடன், பெளலிங்க் கிரீனில் சென்று கொண்டிருந்த அந்த பையனை அது பிடித்தது போல, பிடித்துக்கொள்கிறது. இதோ அது இங்கே சென்று அதை மறுபடியுமாக பிடித்துக் கொள்கின்றது. அது என்ன செய்கின்றது? அது அந்த—அந்த சிறு ஆவியை பிடித்து, அதைத் திரும்பி நேராக இங்கே கொண்டு வந்து, அதை சரீரத்திற்கு அளிக்கின்றது, வார்த்தை செய்யும் என்று சொன்னது போலவே. அதுதான் காரியம். அது என்ன செய்கின்றது? விசுவாசம், அறிவு அல்ல.
142372 நீங்களோ, “இப்பொழுது நாம் பார்ப்போம். அந்த காற்று மண்டலம் இன்ன-மற்றும்-இன்னதைக் கொண்டு உருவாகியுள்ளது. அதில் நிறைய அமிலங்களும் உள்ளன. வாயுக்களும் உள்ளன. அதில் மிக அதிக அளவில் இயலுலக ஒளி உள்ளது. அதை என்னால் விளக்கிக் காட்ட முடியும். ஒருக்கால் என்னால்…” என்று கூறலாம். ஓ, நீங்கள்—நீங்கள்…உங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். 373 அறிவுக்கூர்மையல்ல; விசுவாசம்! அறிவுக்கூர்மையல்ல; அது செய்யப்பட முடியாது என்று உங்களிடம் கூறும். அது செய்யப்பட்டாயிற்று என்று விசுவாசம் நிரூபிக்கின்றது, பாருங்கள், அது சரி, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று காண்பிக்கின்றது. அது சரி. நாம் இப்பொழுது துரிதமாகப் பார்ப்போம். நாம் சீக்கிரம் முடிக்க வேண்டும்.
143374 “தங்கள் தங்கள் ஜாதிகளின்படியே கொடுக்கும்.” யோவான் 14, அதைக் கூறுகின்றது “என்…செய்கிறவனே, என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை, அடையாளங்களை…” இப்பொழுது, நீங்களோ, “அவர் செய்கின்ற அடையாளங்கள் அதுவா?” என்று கேட்கலாம். 375 ஒரு ஊழியக்காரனின் ஒரே மகளான ஒரு சிறுமி மரித்து, கிடத்தப்பட்டுக் கிடந்த, ஒரு வீட்டிற்குள் அவர் சென்றார்; மரித்து, குளிர்ந்து, வெளிரிப்போய், கிடத்தப்பட்டிருந்தாள். அவர் அங்கே செல்வதற்கு, இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே, அவள் அநேகமாக மரித்துப்போயிருந்திருக்கலாம். அவளுடைய சரீரத்தை எடுத்து, அதற்கு தைலமிடுவதற்காக, அவர்கள் அவளை ஒரு கட்டிலில் கிடத்தியிருந்தார்கள். அவள் கிடத்தப்பட்டிருந்த அறைக்குள்ளாக இயேசு, அந்தவிதமாக நேராக நடந்துச் சென்றார். அவர்கள் அங்கு அந்தவிதமாக அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். அவர் அவர்களெல்லாரையும் வெளியே அனுப்பி, “இங்கிருந்து வெளியேறுங்கள். வெளியே போங்கள்” என்றார். பிறகு அவர், “பேதுரு, யாக்கோபு, யோவான், இங்கே வாருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்” என்றார். அப்பொழுது அவர் அந்தத் தகப்பனிடம், “நீ விசுவாசிக்கிறாய், இல்லையென்றால் நீ என் பின்னே வந்திருக்கமாட்டாய்” என்று கூறினார். அப்பொழுது அந்தத் தாய், “கர்த்தாவே, நானும் விசுவாசிக்கிறேன்” என்று கூறினாள். பார்த்தீர்களா? அவர், “இங்கே வந்து நில்” என்றார். 376 அவர் நோக்கிப் பார்த்தார். அந்தச் சிறுமி—சிறுமியினருகே நின்றார். அவர், “தலித்தா” என்றார், அதற்கு “சிறு பெண்ணே” என்று அர்த்தமாம். அல்லேலூயா! அவர் ஜெபிக்க வேண்டிய அவசியமேயில்லை. அவர் வார்த்தையாயிருந்தார். ஹு-ஹூ. 377 என்னால் தரிசனத்தைப் பார்க்க முடிகிறதென்றால், நான் ஜெபிக்க வேண்டிய அவசியமேயில்லை, ஏனெனில் வார்த்தை ஏற்கனவே தயார் படுத்தப்பட்டுள்ளது. அந்த வார்த்தையைப் பெறுவதற்கு, தேவன் என்ன கூறுகிறார் என்பதை பெறுவதற்கு, நான் ஜெபிக்க வேண்டும். அவர் என்ன கூறினார் என்பதை நான் பெற்றப் பிறகே, என்னால் பேச முடியும். 378 ஆனால் அவரோ வார்த்தையாக இருந்தார். ஆமென். “சிறுபெண்ணே, நான் உனக்கு சொல்லுகிறதாவது, எழுந்திரு.” அவளுடைய கையைப் பிடித்து, எழுப்பினார். அதுதான் காரியம். பார்த்தீர்களா? ஓ, என்னே! 379 அதுதான் வெளிப்படுத்துதலாகும். “அதனுடையதை அது பிறப்பிக்கின்றது.” இயேசு, “என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கின்ற கிரியைகளைத் தானும் செய்வான்” என்றார்.
144380 ஆகையால், இவை, பாருங்கள், இந்த எல்லா ஸ்தாபனங்களின் காரியங்களும் மற்ற காரியங்களும், பூமியின் கருப்பை சிருஷ்டியைக் கொண்டிருப்பது போலவே, அவர்கள் அப்பேர்ப்பட்ட அழுக்கும் பாவமும் ஒன்றாகத் திரண்ட அப்படிப்பட்ட காரியங்களையே பெற்றுள்ளனர். அது சரியே. ஓ, என்னே! எப்படி அது நடைபெற முடியும்? இந்தக் குட்டையாக தலைமுடியை வெட்டிக் கொண்டிருப்போர், குட்டைக்கால் சட்டை அணிந்திருப்போர், சிகரெட் பிடித்துக் கொண்டிருப்போர், பந்து விளையாட்டில் ஆர்வமுள்ளோர், சபையைச் சேர்ந்துகொள்பவர் பேரில் உண்மையான தேவனுடைய வார்த்தை எப்படி வளர முடியும்? சுகப்போகப் பிரியர், அப்படிப்பட்ட மக்கள் கூட்டங்களை தேடிச்சென்று, அந்த இடங்களில் நேரத்தைக் கழித்து, அதைப்போன்ற காரியங்களை விரும்பி, உலகத்தின் காரியங்களை அன்பு கூருகையில், அது எப்படி வளர முடியும்? எப்படி தேவனுடைய அன்பு உள்ளே வரும்? அதைப் போன்ற ஒரு நிலத்தில் தேவனுடைய விதை எப்படி வளர முடியும்? அவ்விதமான நிலத்தில் வேர் பிடிக்காது. எந்தவித ஒரு ஜீவனும் அதில் வளராது. அது அந்த பழைய தூசி படிந்த ஸ்தாபன கற்பாறைகளில் விழுந்து அழுகிப் போகும், ஆனால் அதில் ஒருபோதும் ஜீவன் உருவாகாது. ஆம், ஐயா. ஆம், ஐயா. 381 சுகப்போகத்தை நாடித் தேடுபவர்கள், “தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்.” பயங்கரமானவர்கள்! அதே சமயத்தில், அவர்கள் அறிவுத்திறம் வாய்ந்தவர்கள். அவர்கள் மற்ற சாராரைக் காட்டிலும்—இருமடங்கு சாமார்த்தியமுள்ளவர்கள் ஆவர். நிச்சயமாக. அறிவுத்திறம் வாய்ந்தவர்கள், கல்வியறிவு பெற்றவர்கள், ஏவாள் இருந்ததைப் போன்று அறிவுக்கூர்மையை நாடித் தேடுபவர்கள், அவள் கொண்டிருந்த அதே அறிவைப் போன்றே, இவர்களும் கொண்டிருக்கின்றார்கள். அது உண்மையே.
145382 ஒரு லீலிப்புஷ்பம் எவ்விதமாக ஜீவிக்கின்றது, எவ்விதமாக ஒரு லீலிப்புஷ்ப விதை வளர்ந்து ஜீவிக்கின்றது, தண்ணீர்களின் மேல் அது எப்படி செழித்தோங்குகிறது, அந்தத் தூசி படிந்த ஸ்தாபனங்களில் ஒன்றில் எவ்விதமாக அது வளருகின்றது? அது தண்ணீர்களின் மேல் செழிக்கும்போது, அதனால் எப்படி இப்படி வளர முடிகிறது. தண்ணீர் பரிசுத்த ஆவியாகும். “அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பலனை மறுதலிக்கிறவர்கள்.” புரிகிறதா? வார்த்தை அவர்கள் மீது விழுந்தபோதிலும், அதனால் வளர முடிகிறதில்லை. அதனால் வளர முடியாது. எப்படி ஏவாளின் மீது வார்த்தை விழுந்து, வளர முடியாமல் போனதோ அதே போன்றுதான். ஏன்? ஏனெனில் ஏவாள் அறிவுக்கூர்மையை, சாத்தானின் அறிவுக்கூர்மையை ஏற்றுக்கொண்டாள். அந்த வார்த்தை அவர்களிடம் வருகின்றது. அந்த வார்த்தை அவர்களின் மீது விழுகின்றது. நிச்சயமாக, அது விழுகின்றது. ஆம் ஐயா. வளர்கிறது…அது, அது அவர்களின் மீது விழும். வார்த்தை பிரசங்கிக்கப்படுவதை அவர்களால் கேட்க முடிகிறது.
146383 சபையில் அம்மக்கள் உட்கார்ந்திருப்பதை நீங்கள் எப்போதாவது கண்டிருக்கிறீர்களா, அவர்கள் ஒருபோதும் ஒரு அசைவையாவது செய்வார்களா? குட்டை முடியைப் பற்றி பெண்களிடம் பிரசங்கிக்கப்படுகிறது; வருடங்கள், கடந்து கொண்டேயிருக்கின்றது, அவர்கள் இன்னுமாக குட்டை முடியுடனே தான் இருக்கின்றார்கள். மனிதனிடம் புகைப் பிடிப்பதைக் குறித்து பேசப்படுகின்றது, மது குடிப்பதைக் குறித்து பெண்களிடம் பேசப்படுகின்றது; ஆனால் அவர்கள் சரியாக அப்படியே, குடித்துக்கொண்டேதான் இருக்கின்றார்கள். ஒரு வாத்தின் முதுகின் மீது தண்ணீரை ஊற்றுவது போல. வார்த்தை வளருவதற்கான இடமே அங்கே இல்லை. புரிகிறதா? சுகபோகத்தை, புகழை நாடித் தேடுகின்ற அந்த பழைய பழக்கம், “பாருங்கள், மற்றைப் பெண்கள் முதலாவதாக அவ்விதம் செய்யட்டும், பிறகு நான் அதைச் செய்வேன்.” அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்குக் கவலையில்லை. தேவனுடைய வார்த்தையைப் பின்பற்ற வேண்டியது உங்களுடைய கடமையாகும். அது உண்மை. புரிகிறதா?
147384 வார்த்தையானது அவர்கள் மீது விழுகின்றபோதிலும், அதினால் வளரமுடிவதில்லை. அது சாத்தானின் அறிவுக் கூர்மையாகும், பாருங்கள், ஆகவே அது வெறும் ஸ்தாபன தூசியாக ஆகிவிடுகின்றது. அவர்களால் எபிரெயர் 13:8-ல் விசுவாசம் கொள்ள முடிவதில்லை, முற்றிலும் அறிவுக் கூர்மையால் இறுமாப்படைகின்றனர், வார்த்தை வளருவதற்கென ஒன்றுமே அங்கு இல்லை. புரிகின்றதா? எப்படி அவர்களால், “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கின்றார்” என்கின்ற எபிரெயர் 13:8-ஐ விசுவாசிக்க முடியும்? அவர்களால் அதைச் செய்ய முடியாது. புரிகிறதா? 385 ஓ, அவர்கள் அதை விசுவாசிப்பதாக கூறுகின்றனர். ஓ, நீங்கள் அதை அவர்களிடம் கூறும்போது, அதற்கு அவர்கள், “நிச்சயமாக, நாங்கள் அதை விசுவாசிக்கின்றோம்” என்கிறார்கள். அப்படியானால் அதின் கனிகளை எனக்குக் காண்பியுங்கள். பார்க்கலாம். அதை நான் காணட்டும். அது செய்யப்படுவதை நான் காணட்டும். நீங்கள் பிரசங்கிக்கின்ற சபையானது, வார்த்தையை விசுவாசித்த, முதல் அப்போஸ்தல சபையில் அவர்கள் செய்ததையே, செய்கின்றதா என்பதை நான் காணட்டும். 386 நீங்கள் உங்களுடைய ஞானஸ்நானங்களை திரித்துள்ளீர்கள். உங்கள் அத்தாட்சிகளை திரித்துள்ளீர்கள். வார்த்தையை எடுத்து, அந்த வார்த்தை தன்னுடைய சொந்த கனியைத் தரவிடுவதற்கு பதிலாக; அதை ஏதோ ஒருவிதமான பிரமாணத்திற்குள் பொருத்தி விடுகின்றீர்கள். வார்த்தைக்கான அத்தாட்சியை கொண்டு வரத்தக்கதாக, நீங்கள் செய்ய வேண்டிய ஏதோ ஒருவிதமான காரியத்தை நீங்கள் செய்கின்றீர்கள். நீங்கள் கொண்டு வர முயற்சிக்கின்ற அந்த ஒவ்வொரு அத்தாட்சிக்கும் சாத்தானால் ஒரு வியாக்கியானத்தை அளிக்க முடியும். நிச்சயமாக, அவனால் முடியும், நிச்சயமாக அவனால் முடியும், ஆனால் அவனால் வார்த்தையை உற்பத்தி செய்ய முடியாது. அது மாத்திரம் தான் அவனை சுட்டெரிக்கின்ற ஒன்றாயிருக்கின்றது. அவனால் அதைச் செய்யவே முடியாது. ஆம், ஐயா. ஓ, ஆம்.
148387 இப்பொழுது காயீனையும் ஆபேலையும் கவனியுங்கள். அவர்கள் இருவருமே உத்தமமாயிருந்தார்கள். காயீன், தன்னுடைய தாய்ச் சபையாகிய, ஏவாளைப் போன்றே, தன்னுடைய அறிவுக்கூர்மையினால் ஏற்றுக்கொண்டான். அதுவே அவனுடைய தாயாயிருந்தது. காயீனுடைய தாய் ஏவாள் என்பதை எத்தனைப் பேர் அறிவீர்கள்? நிச்சயமாக. சரி. தன்னுடைய தாயைப் போலவே, அவன் தர்க்க அறிவைக் கொண்டு யோசனை செய்துப் பார்த்தான், பாருங்கள், தன்னுடைய சொந்த அறிவுக்கூர்மை. ஒரு அழகான பலி; அவன் மலர்களை உடையவனாயிருந்தான். அவன் நிலத்தின் கனியை உடையவனாயிருந்தான். “சரி, இப்பொழுது, நிச்சயமாக, பாருங்கள்” என்றான், அவன், “தேவன்…” என்றான். சாத்தான் ஏவாளிடம் “நிச்சயமாக, நிச்சயமாக” என்று கூறினது போலவேயிருந்தது. “நிச்சயமாக தேவன் என்னுடைய பலியை ஏற்றுக்கொள்வார். ஒரு அழகான பீடத்தை நான் கட்டினேன். அதை மிக அழகாக அமைத்துள்ளேன். அது மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.” 388 இந்த ஈஸ்டர் பண்டிகையைப் போன்றேயிருந்திருக்கும், பீடங்கள் மேல் ஈஸ்டர் மலர்களை வைக்கத்தக்கதாக, நாடு முழுவதும், லட்சக்கணக்கான டாலர்களை அவர்கள் செலவு செய்வார்கள். பலிப்பீடமானது மலர்களுக்காக உண்டாக்கப்படவில்லை: அது ஒரு பலிக்காகத்தான் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. புரிகிறதா? அந்தப் பழைய காயீனின் ஆவியைத்தான் அதே விதத்தில் அது காண்பிக்கிறது, பாருங்கள், ஏதேனிலிருந்த அந்த அதே பழைய—பழைய பிசாசு. புரிகின்றதா?
149389 என்ன—என்ன சம்பவித்தது? காயீன், “நிச்சயமாக…” என்று நினைத்தான், அந்த மனிதன் உத்தமமாக அதைச் செய்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா, ஏனெனில் அது அவனுக்கு, ஜீவன் அல்லது மரணம் என்பதை பொருட்படுத்தினது. 390 மேலும், அந்த மக்கள், அவர்கள் மாய்மாலக்காரர்கள் என்று நீங்கள் நினைக்காதீர்கள். அவர்கள் உத்தமமாயிருக்கிறார்கள். நீங்கள், “அப்படியானால், அவர்கள் உத்தமமாயிருந்தும் தவறாயிருக்க முடியுமா?” என்று கேட்கலாம். நிச்சயமாக. ஒரு மனிதன் தான் குடிப்பது ஆமணக்கெண்ணை என்று உத்தமமாய் நினைத்து, அரிதார நஞ்ஞை அல்லது வேறெதோ வொன்றை, மற்ற வேறெதோவொன்றைக் குடிக்கலாம். புரிகிறதா? உத்தமம்; அதைச் செய்யாதே. இது சத்தியம், உத்தமம் அல்ல. சத்தியம்!
150391 ஆப்பிரிக்காவிலுள்ள பெண்கள், தங்கள் சிறு குழந்தைகளைத் தங்கள் தெய்வங்களான, முதலைகளுக்குப் பலியாக அளிக்கிறார்கள். அந்த உத்தமம் உங்களுக்கு இருக்கின்றதா? கிடையாதே. அவர்களில் எத்தனைப் பேர் நின்று, சீனர்கள், சமையலறைக் கடவுள்களுக்கென தங்களுடைய எலும்புகளை உடைத்துக்கொள்கின்றனரே! அங்கிருக்கின்ற முகமதியர்களைக் குறித்தும், அவர்கள் நெருப்பில் நடப்பதைக் குறித்தும் என்ன? மேலும் இந்தக் காரியங்களை வைத்து, ஓ, கொக்கிகளை சரீரத்தில் குத்திக்கொண்டு, தங்கள் வாயில், தங்கள் வாயைத் தைத்துக் கொள்வார்கள். 392 அவர்களில் சிலர் ஒரு குச்சியை எடுத்து… நான் அங்கே ஒரு உருவச்சிலையை வைத்திருக்கிறேன், ஒரு மனிதன், தான் பரலோகத்திற்கு செல்ல வேண்டுமென்று, தன்னுடைய தேவனுக்குப் பலி செலுத்துகிற முறையை, அந்தச் சிறு சிலை சித்தரிக்கின்றது. ஒரு மதக்குருவானவன் அந்த மனிதனின் வாயில் ஒரு குச்சியை வைத்து, ஒரு சங்கிலியால், அவனுடைய தலையில் கட்டி சுற்றி; கீழே இழுத்து, அவனுடைய கைகளைப் அவனுக்கு பின்புறமாக வைத்து, அவனுடைய கால்களையும் கட்டி விடுகின்றான். அந்த மனிதன் மரிக்கும் வரைக்கும் அவன் குடிக்கவோ, பேசவோ, சாப்பிடவோ, அல்லது எந்த ஒன்றையுமே செய்ய முடியாது. 393 ஒரு கிறிஸ்தவன் அந்த விதமான ஒரு பலி செலுத்துவதை நீங்கள் கண்டதுண்டா? சத்தியத்தை, வார்த்தையைக் கூட நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள். பார்த்தீர்களா?
151394 இப்பொழுது, “அழகு,” அவன், “நிச்சயமாகவே தேவன் ஏற்றுக்கொள்வார். என் பலிப்பீடம் எவ்வளவு அழகாக இருக்கின்றது பார்” என்றான். 395 இன்றைக்கு அதே ஆவி, அறிவுகூர்மை இருக்கின்றதைப் பார்த்தீர்களா? “பாருங்கள், நாம் இந்தப் பெரிய ஸ்தாபனத்தைக் கட்டுவோமானால், நிச்சயமாக தேவன் நம்மை ஏற்றுக்கொள்வார்.” தேவனோ தம்முடைய வார்த்தையைத் தவிர மற்ற வேறொன்றையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஏற்றுக்கொள்ளவேமாட்டார். புரிகிறதா? 396 “பாருங்கள்,” அவர்கள், “இப்பொழுது, பாருங்கள், சகோதரன் பிரான்ஹாமே, நாம்—நாம் மிக அதிகமான ஊழியர்களை ஒவ்வொரு வருடமும் அனுப்புவோமானால் நலமாயிருக்கும். கடந்த ஆண்டு, எங்களுடைய மிஷனரிகளை அனுப்பும் திட்டத்தில், ஒரு இலட்சம் டாலர் செலவிட நேரிட்டது” என்கின்றனர். அது எப்போதும் மிக நல்லதாகவே இருக்கலாம், சகோதரனே, ஆனால் நீ அந்த வார்த்தையை உண்மையென்று ஏற்றுக்கொண்டு அதனிடம் வரும் வரைக்கும் நீ மரித்த நிலையில் இருக்கிறாய். அது முற்றிலும் சரியே.
152397 “ஏன், சகோதரன் பிரான்ஹாமே, எங்கள் சபை! அங்கே இருக்கின்ற நீங்கள் உங்களை என்னவென்று, வெறும் ஒரு சிறு நிலக்கடலை மூளையையுடையவர் என்றே நினைத்துக் கொள்கின்றீர்களா?” 398 அது உண்மையே. இப்பொழுது, அது முற்றிலும் சரியே. அது உண்மை. ஆனால், நான் என்னவாக இருந்தாலும், நான் அந்த வார்த்தையோடே அப்படியே தரித்து நிற்பேனாக. அது என்றோ ஒரு நாள், ஒரு காரியத்திற்குள்ளாக வளரும். புரிகின்றதா? அது என்னவாயிருந்தாலும் கவலைப்படாமல், வார்த்தையோடு தரித்து நில்லுங்கள். இங்கே இருக்கின்ற இந்த சிறிய கூடாரத்தைத் தவிர வேறொன்றும் நம்மிடம் கிடையாது. நமக்குத் தேவையான அளவு, இந்த நேரத்தில், கூடுவதற்கு போதுமான ஒரு இடம் அமைக்க வேண்டும், ஏனெனில் இயேசு வருவதற்காக நாம் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 399 ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான டாலர்கள் செலவழிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றதைப் போன்ற மிகப் பெரிய ஸ்தாபன கட்டிடங்கள் நமக்கு வேண்டாம்; மக்கள் வார்த்தையைப் பிரசங்கிக்க முயற்சி செய்து, சாப்பிட ஒன்றுமில்லாமல், அங்கே அவதிப்படுகின்ற, அதைப்போன்ற காரியங்களும் உள்ளன. ஜனங்களோடு உள்ள காரியம் என்ன? அது அல்லாமல்…ஓ, ஜனங்கள் எழும்புக் கூடும் என்பது போல் காணப்படுகிறது.
153400 ஆனால், யார் வேண்டுமானாலும் கத்தோலிக்கத்தை ஏற்றுக் கொள்ளலாம், எந்த ஒன்றையும் ஏற்றுக்கொள்வதற்கு குருடாகவும் இருக்கலாம். நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறுவேன். தங்கள் கழுத்தை அங்கே நீட்டுகின்ற எவரும், முடியும்—முடியும்… “ஒரு அறிவாளி,” வேதம், “அவளோடே பூமியின் ராஜாக்களும் வேசித்தனம்பண்ணினார்கள்” என்று கூறினதில், வியப்பொன்றுமில்லை. ஆகவே அறிவாளிகள், அறிவு, பாருங்கள், அவர்கள் அதைச் செய்கின்றனர், அந்த குருவானவர்கள், சாமர்த்தியசாலிகள். ஓ, மனிதனே, கல்வியறிவு பெற்றவர்களைக் குறித்து நீ பேசுகின்றாயா? பையனே, அவர்கள் வருடங்களாக, அநேக வருடங்களாக, அநேக வருடங்களாக, அநேக வருடங்களாக பயிற்சி பெற வேண்டும்.
154401 அவர்கள் அந்தக் கன்னியாஸ்திரீகளோடு வாழ்வதில்லை என்று கூறுகின்றனர். அப்படியானால் நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகின்றேன். அப்படியானால் ஏன் அவர்கள் மலடாக ஆகவில்லை? ஹூ-ஹூ. ஹூ-ஹூ. ஹூ-ஹூ. “அங்குள்ள அவர்கள், மணப்பெண்கள். அந்த கன்னியாஸ்திரீகள். மணப்பெண்கள். உண்மையாகவே, நீங்கள் பாருங்கள், மற்றவர் மணமகன்.” அது சரியே. கன்னியாஸ்திரீகளின் மடத்தலைவர் கன்னியாஸ்திரீகள் பெற்றெடுக்கும் குழந்தைகளை மூச்சு திணர வைத்து சாகடித்து சுண்ணாம்புப் பள்ளங்களில் போட்டுவிடுகிறார்கள். நீங்கள் அதை நம்பவில்லையா? அந்த இடத்திலிருந்து, அதைக் குறித்து சாட்சியிடுகிறவர்கள் கூறுவதைக் கேளுங்கள். “இப்பொழுது வாருங்கள், சட்டம் என்னைக் கைது செய்யட்டும் பார்க்கலாம்” என்று கூறுகின்றனர். 402 “அவர்கள் ரஷியாவில் செய்ததை, மெக்சிகோவில் செய்யப்பட்ட அதேக் காரியத்தை அதையே நாமும் செய்வோம். அந்த காரியம் அரசாங்கத்தை எட்டும் வரையில் அதை வெட்ட வெளியாக்கி அம்பலப்படுத்துவோம்” என்று கூறுகின்றனர். 403 ஆனால் அதன் தலைமையே இப்பொழுது அரசாங்கத்தில் இருக்கும்படிக்கு நாம் செய்திருக்கையில் எப்படி அதை நீங்கள் செய்யப் போகின்றீர்கள்? பாருங்கள்? பாருங்கள்? அந்த வார்த்தை நிறைவேறவேண்டியதாக இருக்கின்றது, “அங்கே அமைந்துள்ள அந்த மிருகத்திற்கு, அவர்கள் ஒரு சொரூபத்தை ஒருங்கிணைந்து உண்டாக்கினார்கள். அவர்கள் இருவரும் ஐக்கியங்கொண்டு அந்த மிருகம் பேசத்தக்கதாக அதற்கு அதிகாரம் கொடுத்தார்கள்.” ஓ, சகோதரனே, அந்த வார்த்தை சரியாக அங்கே நிற்கப் போகின்றது, கம்யூனிசம் எல்லாவற்றையும் ஆதிக்கம் செய்யப் போவதில்லை. ஆனால் ரோமன் கத்தோலிக்கமே ஆதிக்கம் செலுத்தப்போகின்றது. ஹூ-ஹூ.
155404 இப்பொழுது இங்கே இதைக் கவனியுங்கள். காயீன், “நிச்சயமாக அவர் என்னுடைய பலியை ஏற்றுக்கொள்வார்” என்றான். ஆனால் எந்தவிதமானதை? அவன், “ஒரு பலியை நான் உண்டாக்கினேன்,” என்றான். ஆனால் அது எந்தவிதமான ஒரு பலியாக இருந்தது? தாவரவியல் வாழ்க்கை; செடிகள், மலர்கள், காய்கறிகள். தாவரவியல் வாழ்க்கை, (என்ன?) அதற்கு கஷ்டப்படுதல் என்பதே இல்லை, தண்டனை என்பதே இல்லை. 405 ஜனங்கள் கஷ்டப்பட விரும்புவதில்லை. அதுதான் இன்றைக்கு இருக்கின்ற காரியமாகும். அவர்கள் தங்கள் சபையிலிருந்து வெளியே வரத் தேவையில்லையென்றால், அவர்கள் நேராக இப்பொழுதே வந்து, இந்த வார்த்தையை விசுவாசிப்பார்கள், அவர்கள் நகைக்கப்படாமலும், பரிகசிக்கப்படாமலும் இருந்தால், அவர்கள் வருவார்கள். இல்லை. அவர்கள் தாவரவியல் வாழ்க்கையை, ஏதோ ஒரு விதமான அறிவுக்கூர்மையை விரும்புகின்றனர். “பாருங்கள், இந்த வாழ்க்கையே மிக நன்றாக இருக்கின்றது.” அப்படிப்பட்ட நிலை கிடையாது. கர்த்தருக்குச் சித்தமானால், அது எங்கிருந்து வருகிறதென்று இன்னும் ஒரு நிமிடத்தில், நான் உங்களுக்குக் காண்பிப்பேன். ஆனால், “ஆபேல், விசுவாசத்தினாலே.” மகிமை!
156406 காயீன், அறிவுக்கூர்மையைக் கொண்டு, “நிச்சயமாக தேவன் இதை ஏற்றுக்கொள்வார். இதோ ஒரு பலிபீடம் இருக்கின்றது, எனக்கு ஒரு சபையும் இருக்கின்றது,” என்று கூறினான். அப்படித்தான் சபை இருக்கின்றது, ஒரு பீடம், ஆராதனையின் இடம். சரி. “எனக்கு ஒரு பீடம் இருக்கின்றது. என் சகோதரனைப் போலவே நானும் உத்தமமாக ஆராதிப்பேன். மேலும் இங்கே ஆராதிப்பதற்கென்று அழகான ஒரு காரியத்தையும் வைத்திருக்கின்றேன். நிச்சயமாக தேவன் அதை ஏற்றுக்கொள்வார்” என்றான். தன்னுடைய தாயிடம் பிசாசு அதே காரியத்தைக் கூறினான்; அதே பொய், அறிவுக்கூர்மை. 407 இப்பொழுது, ஆபேல். எபிரெயர் 11கூறியுள்ளது: விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்,…அவன் மரித்தும் இன்னும் பேசினான்.
157408 புரிகிறதா? “ஆபேல்…” எதைக்கொண்டு? அறிவுக் கூர்மையைக் கொண்டா? வேத சாஸ்திரத்தைக்கொண்டா? “விசுவாசத்தினாலே மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்.” எதில் விசுவாசம் வைத்திருந்தான்? எதில் விசுவாசம் வைத்திருந்தான்? மூலமாக…அவன் தன்னுடைய விசுவாசத்தை எங்கே கொண்டிருந்தான்? 409 அங்கே, அவனுக்கு இருந்ததெல்லாம் தன்னுடைய தகப்பன், தாய் மற்றும் அவனுடைய ஒன்றுவிட்ட உடன் பிறந்த சகோதரன் மட்டுமே, அப்படியானால் எப்படி அவன் விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டான்? எங்கிருந்து—எங்கிருந்துஅவன் அதைப் பெற்றான்? எதில் அவன் விசுவாசம் கொண்டிருந்தான்? தாவரவியலில் விசுவாசத்தை, இதிலே விசுவாசம் வைத்திருந்தானா? இல்லை, ஐயா. அவன் வார்த்தையில் விசுவாசம் கொண்டிருந்தான். ஏனெனில், அவன் ஏன் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றான் என்பதை அறிந்துகொள்ள அவன் விரும்பினான். “ஏன் நாங்கள் வெளியே துரத்தப்பட்டோம்?” 410 “ஏனெனில் நான் பிசாசின் பொய் ஒன்றைக் கேட்டதினால். இந்தப் பையன் இன்ன-இன்ன விதமாகப் பிறந்த காரணத்தினால், அதனாலேயே தேவன் எங்களை தோட்டத்தை விட்டு வெளியே துரத்தினார்,” என்று தாய் கூறியிருந்திருக்க வேண்டும். 411 “பாருங்கள்,” அவன், “தோட்டத்தின் வாயில் அருகே கூட என்னால் செல்ல முடியவில்லையே. அங்கே ஒரு கேரூபீன், ஜீவ விருட்சத்தை, ஒரு பட்டயத்தோடு, காவல் காத்துக்கொண்டிருக்கின்றதே” என்றான். ஆகவே, விசுவாசத்தினாலே!
158412 பாருங்கள், அறிவுக்கூர்மையினாலே, காயீன் பலி செலுத்தினான். உங்களுக்குத் தெரியுமா, வார்த்தையை அறியாமல், ஆனால் சொந்த சிந்தனையினால், அறிவுக்கூர்மையைக் கொண்டு. அவன் ஒரு அருமையான இடத்தை உண்டாக்கி, அதை மெருகேற்றி அழகுப்படுத்தினான். 413 ஆனால், “ஆபேலோ,” அவனுக்கு யாருமே எதையுமே கூறவில்லை, இப்பொழுது, அவன் வெறுமென ஒரு பையன், “அது தாவரவியல் ஜீவனினால் அல்ல; அது இரத்தத்தின் மூலமான, ஒரு பாலியல் செய்கையாயிருந்தது, என்பதை விசுவாசத்தினாலே அறிந்து கொண்டான்.” சகோதரனே, அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. ஒரு முறை, அப்புறமாக வந்து அதைப் புரிந்துக் கொள்ளுங்கள். 414 அவருடைய பிள்ளைகள் விசுவாசத்தினாலே இன்னும் அதைக் காண்கின்றார்கள். அவர் சிறிது அறிவுக்கூர்மையைக் கொண்டு அதை இப்பொழுது போதிக்கவில்லை. அது அறிவுக்கூர்மையினால் உண்டாகிறதில்லை. அது விசுவாசத்தினால் வருகிறது. வேதம், “ஆபேல், விசுவாசத்தினாலே” என்று கூறுயுள்ளது. அவன் பலியாக எதைச் செலுத்தினான்? ஜீவிக்கின்ற, மிருக ஜீவனிலிருந்து, வந்த இரத்தத்தையே. 415 நாம் தாமே, மிருகமாயிருக்கிறோம். நாம் சூடான இரத்தம் கொண்ட மிருகமாயிருக்கிறோம். அது முற்றிலும் உண்மையே. மேம்பட்ட மிருக சிருஷ்டியில், மேம்பட்ட இனமாவோம், ஆனால் உள்ளே இருக்கின்ற ஆத்துமா. அது தான் ஜீவன் ஆகும்.
159416 இப்பொழுது கவனியுங்கள். விசுவாசத்தினாலே ஆபேல் அந்த வெளிப்பாட்டை, அந்த தரிசனத்தை, உயிரோடிருந்து ஓடிக் கொண்டிருந்த, இரத்தத்தை அவன் கொண்டு வந்தான், ஏனென்றால் இரத்தத்தில் தான் ஜீவன் இருந்தது. 417 அந்த—அந்த மலரின் தண்டில்தான் ஜீவன் இருக்கின்றது. ஆகவே ஒரு தாவர ஜீவன், உணர்ச்சியே இல்லாததாயுள்ளது. அது உங்களுக்கு பதியும் என்று நான் நம்புகிறேன். 418 “விசுவாசத்தினாலே, ஆபேல்” வார்த்தையோடு தரித்திருந்தான். விசுவாசத்தினாலே, அறிவுக்கூர்மையினால் அல்ல. “விசுவாசத்தினாலே அது இரத்தம், உடலுறவு என்று அவன் கண்டிருந்தான்.” இரத்த அணு ஆணிடமிருந்து தான் வருகின்றது. ஒரு மனிதனின் விந்தில்தான் இரத்த அணு இருக்கின்றது. செந்நிற இரத்த அணுவான இரத்தம், ஆணின் மூலமாகத்தான் வருகின்றது. ஆகவே ஆப்பிள் பழங்களோ, பீச் பழங்களோ, உருளைக்கிழங்குகளோ, அல்லது வேறெந்த ஒன்றோ, அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே கொண்டு வரக் காரணமாக அமைந்திருக்கவில்லை என ஆதாம் அறிந்திருந்தான், அது பாவத்தைப் பிறப்பித்து. உடலுறவு இரத்தம், ஆகவே அவன் இரத்தத்தைத் திரும்பவுமாக பலியாகச் செலுத்தினான். விசுவாசத்தினாலே அவன் அதைச் செய்தான், அறிவுக்கூர்மையினால் அல்ல. 419 முழு வேதாகமம் மற்றும் தேவனுடைய முழு சபையும் விசுவாசத்தினாலான தெய்வீக வெளிப்பாட்டின் மேலாகக் கட்டப்பட்டிருக்கையில், எவ்வாறு ஒரு மனிதன், அறிவுக் கூர்மையைக் கொண்டு இதைப் புரிந்துக்கொள்ளப்போகிறான்? “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்.” புரிகிறதா?
160420 ஹூ! “ஓ,” அவர்கள், “நிச்சயமாக, அதை நாங்கள் விசுவாசிக்கின்றோம்” என்கின்றனர். அப்படியானால் இந்த முறைமைகளில் கிறிஸ்துவின் ஜீவன் எங்கே உள்ளது? கிறிஸ்துவின் ஜீவன் எங்கே? இரண்டாவதாக…இந்த வேத வசனங்களில் சிலவற்றை நீங்கள் குறித்துக்கொள்ள விரும்புகிறீர்கள். புரிகிறதா? ஜீவன் எங்கே? ஆயினும்…அவர்கள், “பாருங்கள், நாங்கள் விசுவாசிக்கின்றோம். நாங்கள் விசுவாசிக்கின்றோம். நாங்கள் விசுவாசிக்கின்றோம்” என்று கூறுகிறார்கள். நீங்கள் விசுவாசித்தால், அப்படியானால்… 421 இயேசு, “விசுவாசிக்கிறவர்களை,” அவர்களைப் பின் தொடரலாம் என்றல்ல, “இந்த அடையாளங்கள் பின்தொடரும்,” என்று கூறியுள்ளாரே. இயேசு, “என்னை விசுவாசிக்கிற ஒரு மனிதன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் கூட செய்வான். என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளையே அவனும் கூட செய்வான்” என்று கூறியுள்ளார். 422 அவர் விளையாட்டிற்குச் சொல்லியிருக்கமாட்டார். அதை அவர் செய்வார். அது எப்படி சம்பவிக்க முடியும்? ஏனென்றால், கிறிஸ்துவுக்குள் இருந்த அந்த அதே ஜீவனானது, உங்களுக்குள்ளாக இருக்கின்றது. அது அறிவுக்கூர்மையை பிறப்பிக்காது; அறிவுக்கூர்மையில் அது வளராது. விசுவாசத்தை எடுக்க வேண்டுமென்றால், அது அறிவுக்கூர்மையை நிராகரிக்க வேண்டும். வார்த்தையில் விசுவாசம், வார்த்தையில் அறிவுக்கூர்மை கொண்டிருப்பதல்ல. வார்த்தையில் விசுவாசம்!
161423 எல்லா பிரசங்கிமார்களும், மத குருக்களும் மற்ற எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அவர்கள் வார்த்தையைக் குறித்துக் கொண்டிருக்கிற அறிவைக் காட்டிலும், சாத்தான் வார்த்தையைக் குறித்து இன்னும் அதிக அறிவுக்கூர்மையைக் கொண்டிருக்கிறான். 424 அவன் அதிக அறிவுக்கூர்மையை பெற்றிருக்கிறான், ஆனால் அவனால் விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியாது. விசுவாசம் அதை ஜீவிக்கச் செய்யும். விசுவாசம் அவனை மனந்திரும்பச் செய்து, அவனைத் தன்னுடைய ஸ்தாபனத்திலிருந்து வெளியே வரும்படிக்குச் செய்யும். ஹும்! அவன் அறிவுக் கூர்மையைக் கொண்டிருக்கின்றான், அதனால் அவன் அதனோடே தரித்திருக்கிறான். சரி. 425 “ஆனால் ஆபேல் விசுவாசத்தினாலே அது உடலுறவினால் வந்த ஒரு காரியமாகும் என்பதைக் கண்டு, அவன் இரத்தத்தை, இரத்தத்தின் ஜீவனை செலுத்தினான், அப்பொழுது தேவன் அதை ஏற்றுக்கொண்டார்.”
162426 இப்பொழுது, இரண்டாம் தீமோத்தேயு 2, 3, அது கூறுகின்ற…வார்த்தை இப்பொழுதும் அவர்களிடம் வருகின்றது. அது கெட்ட நிலத்தில் விழுந்தாலும். உங்களுக்குப் புரிகிறதா? “அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருக்கின்றனர்,” ஆவியானவரின் வல்லமையை. நீங்கள் அதைக் குறித்துக் கொள்கிறீர்கள் என்றால், இரண்டாம் தீமோத்தேயு 3. சரி. “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொள்ளுதல்.” 427 நித்திய ஜீவனைக் குறித்த பரிசுத்த ஆவியின் அடையாளங்களை, அவர்கள் அதை மறுதலிக்கின்றனர். “ஜனங்கள் அந்நிய பாஷையில் பேசத் தேவையில்லை. இல்லை. தெய்வீக சுகமளித்தல் என்பதும், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற அப்படிப்பட்ட காரியமே கிடையாது. அந்தக் காரியங்கள் அப்போஸ்தலர்களுக்குத்தான்.” ஒரு வேஷத்தை தரித்துக்கொள்ளுதல்! 428 அதைத் தீர்க்கதரிசனமாக, பவுல் உரைக்கின்றான். “கடைசி நாட்களில், கடைசிக் காலங்களில், இந்த காரியங்கள் சம்பவிக்கும்.” அவர்களுடைய நாட்களில் அல்ல. “ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி: பிற்காலங்களிலே, பின்வரும் நாட்களில், சிலர் விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்,” மற்றும் இந்த எல்லாக் காரியங்களையுமே. புரிகிறதா? இதோ அது, “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்திருத்தல்.”
163429 இப்பொழுது, பரிசுத்த ஆவியின் நித்திய ஜீவனுக்குரிய அடையாளங்கள், ஆவியின் தண்ணீரே இல்லாதிருக்கின்ற, இப்படிப்பட்ட மதச்சம்பந்தமான தூசியில், எப்படி வளரும்? புரிகிறதா? ஸ்தாபன கேளிக்கை, கும்மாளம் மற்றும் அறிவுகூர்மையின் நிலங்களில் அது வளரவே முடியாது. ஒரு—ஒரு பெண்மணியைப் போல நடந்து கொள்ளாத அளவிற்கு பொதுவான பண்பு நலத்தைக் கூட கொண்டிராத ஒரு பெண்ணிடம் ஜீவனுள்ள தேவனுடைய அடையாளங்களும் அற்புதங்களும் எப்படி வளரும்? இதை உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். ஒரு அற்பமான உணவுச் சீட்டிற்காகவும், அல்லது ஏதோ ஒரு ஸ்தாபன தயவிற்காகவும் பிரசங்க பீடத்தில் நின்று, தேவனுடைய சத்தியத்தை அப்பாலே தள்ளுகின்ற ஒரு மனிதனுக்குள் அது எப்படி வளரும்? எப்படி ஆவிக்குரிய அடையாளங்கள் அதைப் பின் தொடரும்? அவ்விதமாக பின் தொடரவே முடியாது.
164430 தன்னுடைய ஸ்தாபன சபையை அழைத்துக் கொண்டு, அங்கிருக்கின்ற நதிக்கரையோரத்திலே சென்று, அவர்களுடைய ஆடைகளைக் களையச் செய்யும், ஒரு பிரசங்கிக்குள்ளாக அது எப்படி—எப்படி வளர முடியும்? இங்கே அன்றொரு இரவு, ஒரு குறிப்பிட்ட இடத்தை நான் கடந்து செல்கையில், அங்கே ஒரு குறிப்பிட்ட சபையில், எல்லோரும் மிகப் பெரிய நடன விருந்தில் கூச்சலிட்டு, நடனமாடிக்கொண்டிருந்தனர், அந்தவிதமான இடத்தில் எப்படி ஆவியின் கனிகள் வளர முடியும்? அது மத சம்பந்தமான கற்பாறையில் விதையாய் விழுந்துள்ளது, அது சரி, அது பரியாசம் செய்யப்பட்டு ஏளனம் செய்யப்படும்படியான துன்பப்படுதல் என்னும் பள்ளத்தாக்கில் அது விழவில்லை.
165431 லீலிப்புஷ்பம் கடினமாக பிரயாசப்படுகின்றது. திரு. லீலியைக் குறித்து, சிறிது காலம் முன்னர், சில வருடங்களுக்கு முன்னர், நான் பிரசங்கித்த என்னுடைய செய்தி உங்களுக்கு நினைவில் இருக்கும். அது உழைக்கிறது. அங்கே, இயேசு, “எப்படி அது…உழைக்கிறது, அது நூற்கிறதுமில்லை, என்றாலும், சாலமோன் முதலாய்த், தன் சர்வ மகிமையிலும் அதைப் போன்றதாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்கு நான் சொல்லுகிறேன்” என்றார். அந்த லீலிப்புஷ்பம், தன்னை அழகாக்கிக்கொள்ள, எப்படி அது வளர்ந்து வெளிவருகின்றது, (எதற்காக?) அது வெளியே காண்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே. கடந்து செல்லுகையில், நறுமணத்தை, வாசனையை முகரச் செய்கிறது. தேனீக்கள் நேராகப் பறந்து அதனுடைய இருதயத்திற்குள் வந்து அதற்குள் இருக்கும் தேனை எடுத்துச் செல்கின்றன. லீலிப்புஷ்பமும் அதை இலவசமாகத் தருகின்றது. அதைச் செய்ய, பாடுபடுகின்றது. 432 அல்லேலூயா! அப்படித்தான் ஒரு உண்மையான தேவனுடைய மனிதனும் இருப்பான், போதகர் லீலி, சங்கை. திரு. லீலி, ஆம், ஐயா, வார்த்தையில் கடுமையாக உழைத்து, அவன் முகங்குப்புற விழுந்து தேவனை நோக்கி, “தேவனே, இந்த வசனம் இங்கே, இங்கே எங்கே பொருந்தும் என்பதை என்னால் காண முடியவில்லையே. அது தேவனுடைய வார்த்தையின் மூலமாக வர வேண்டும்” என்று கதறுகிறான். நீங்கள் அதைக் கண்டு, தேவன் அதை உங்களுக்கு அளிக்கையில், பின்னர் சுயாதீனமாகச் செல்லுங்கள். ஏதோ ஒரு பெரிய கூட்டத்தை நடத்த, “எனக்கு இவ்வளவு ஆயிரம் டாலர்கள் தருவீர்களென்று உறுதியளித்தால்தான், நான் வருவேன்” என்றல்ல. ஆனால், இலவசமாக, “அது டிம்புக்ட்டூ என்ற பாலைவன இடமானாலும் அல்லது எங்கிருந்தாலும் சரி, தேவனே, எங்கெல்லாம் நான் விதையை விதைக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ, அங்கெல்லாம் நான் சென்று இலவசமாக இதை அளிப்பேன்.” அல்லேலூயா!
166433 இயேசு, “சாலோமோன் முதலாய்த், தன் சர்வ மகிமையிலும் அதைப் போன்றாகிலும் உடுத்தியிருந்ததில்லை” என்று கூறினார். “லீலிப்புஷ்பத்தைப் பாருங்கள்” என்று கூறினார். 434 அந்த பரிதாபத்திற்குரிய நபர், தான் பெறவிருக்கின்ற, ஒவ்வொன்றிற்காகவும் பாடுபட வேண்டியவனாயிருக்கின்றான், பரியாசம் செய்யப்படுகிறான், ஏளனமாக சிரிக்கப்படுகின்றான். மேலும் எல்லா மதசம்பந்தமானவைகளாலும் எட்டி உதைத்துத் தள்ளப்படுகின்றான், எல்லா விதமான அவப்பெயர்களினாலும் அழைக்கப்படுகின்றான். ஆனாலும் அவன் தேவனுடைய வார்த்தையோடு தரித்து நிற்கின்றான், இரவும் பகலும், பாடுபட்டு உழைத்து, பள்ளத்தாக்கில் கிடக்கின்றான். எதற்காக? அவன் “நீர்க்கால்களில்” ஓரத்திலிருந்து தண்ணீரை எடுக்கின்ற ஒரு இடத்தில் அவன்—அவன் இருக்கின்றான். (எதற்காக?) அது பாடுபடுகின்றது, மற்றவர்களுக்கு அளிக்கும்படியாகத்தான். “நீங்கள் இலவசமாய்ப் பெற்றீர்கள். இலவசமாய்க் கொடுங்கள்,” ஆம், ஐயா, ஓ, என்னே! எப்படி அது மதசம்பந்தமான கற்பாறையில் இருக்கின்ற அந்த தூசியில் வளர முடியும்?
167435 காயீனின் பிள்ளைகள் அறிவுக்கூர்மை கொண்டவர்களாயும், விஞ்ஞானப்பூர்வமாகவும் இருந்தனர். காயீனிற்கு பிறகு வந்த அவனுடைய பிள்ளைகளைக் கவனியுங்கள். அவர்களை ஒரு நிமிடத்திற்குப் பார்ப்போமாக. காயீனின் பிள்ளைகள், எப்படிப்பட்டவர்களாக இருந்தனர்? கட்டடம் கட்டுபவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், விஞ்ஞானப்பூர்வமாக மகத்தான மனிதர்கள். அவர்கள் அறிவுக்கூர்மையைக் கொண்டிருந்தார்கள். புரிகிறதா? அவர்கள்—அவர்கள்—அவர்கள் பெரிய கட்டிடங்களைக் கூட கட்டினார்கள், இரும்புகளை உருவாக்கினார்கள், எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து பொருட்களை உருவாக்கினார்கள். அவர்கள் விஞ்ஞானிகளாக, சாமர்த்தியசாலிகளாக, கல்வியறிவு கொண்டவர்களாக, பக்தியுள்ளவர்களாக இருந்தார்கள். 436 ஆனால் அந்த அறிவுக்கூர்மை எதைப் பிறப்பித்தது? தேவனுடைய நியாயத்தீர்ப்பு விழுந்தபோது, அந்த முழு மானிடவர்க்கத்திற்கும், மரணத்தைக் கொண்டு வந்தது. அது சரிதானே? அந்த அறிவாளிகளின் குழு என்ன செய்தது—என்ன செய்தது? மரணத்தைப் பிறப்பித்தது. அவர்களுடைய எல்லா அறிவுக்கூர்மையினாலும் சாதுரியத்தாலும், என்ன சம்பவித்தது? அவர்கள் மரித்துப்போயினர். அவர்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் அழிந்து போயினர். அது உண்மைதானே? தேவன் அவ்விதமாகக் கூறியுள்ளார். அவர்கள் மிகவும் சாதுரியமுள்ளவர்களாக, அதிகக் கல்வியறிவு உடையவர்களாக, மெருகேற்றப்பட்டவர்களாக, பக்தியுள்ளவர்களாக, மிக அருமையானவர்களாக இருந்தனர். சாமார்த்தியசாலிகளாக, கல்வியறிவு பெற்றவர்களாக, தங்களுடைய அறிவுக்கூர்மையில் சார்ந்துக்கொண்டு, முழு மானிடவர்க்கத்தையுமே கொன்று போட்டார்கள்.
168437 இப்பொழுதும் அதே காரியத்தைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள், தங்களுடைய அணு குண்டுகளையும் மற்ற காரியங்களையும் கொண்டு, இந்த அறிவாளிகளான விஞ்ஞானிகள் செய்யப்போவதெல்லாம் என்னவென்றால்—இந்த முழு மானிட இனத்தையே அழியச் செய்வதுதான். அந்த குண்டுகளை இப்பொழுதே அவர்கள் போட்டுள்ளார்கள். அது—அது…உங்கள் கண்கள் எரிந்துப் போகும்படிக்குச் செய்து, உங்களுக்கு புற்று நோயை, மற்றுமுள்ள எல்லாவற்றையும் அளிக்கும். போதுமான அளவிற்கு அவர்கள் சமுத்திரத்தில், அவைகளைக் கொட்டியுள்ளார்கள், அதை அவர்களால் திரும்பவும் கண்டெடுக்க முடியவில்லை. “அக்குண்டுகள் வெடிக்கும்போது முழு உலகத்தையுமே அது அழித்திவிடுமென்று” அவர்கள் கூறுகின்றனர். “மக்களுடைய மாம்சங்கள், அப்படியே எரிந்து விடும்.” 438 வேதம், “வானத்தின் மத்தியில் பறக்கின்ற சகல பறவைகளும் சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும்’ மற்றும்; விழும், அழுகின மாம்சங்கள், எல்லாவற்றையும் பட்சிக்கும்,” என்று கூறியுள்ளதில் வியப்பொன்றுமில்லை. 439 அவர்கள் தங்களுடைய அறிவுக்கூர்மையைக் கொண்டு, தாங்களே, காரியங்களைச் செய்துக்கொள்கிறார்கள். அறிவுக்கூர்மை, புத்தி சாதுரியத்தால்தான்: மரணமானது வரும்படியாகச் செய்திருக்கின்றது. எளிமையாயிருங்கள், தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து. பிழையுங்கள். உங்கள் அறிவுக்கூர்மையை எடுத்துக்கொள்வீர்களானால், மரிப்பீர்கள். அது உண்மை. முடிவு சமயத்தில், அறுவடையில், அவர்கள் அழிந்து போவார்கள்.
169440 பாருங்கள், ஆபேலில் பிள்ளைகள் எளிமையானவர்களாய், விவசாயிகளாக, ஆட்டிடையர்களாக இருந்தனர்; மேய்ப்பர்களாக இருந்தனர், அதை நீங்கள் அறிவீர்கள். ஆட்டிடையர்களாக, விவசாயிகளாக, எளிமையானவர்களாக இருந்து, கூரறிவுத் திறம் வாய்ந்தவர்கள் என்று அவர்கள் உரிமை கோரவில்லை, ஆனால் அவர்கள் வார்தையோடு அப்படியே தரித்திருந்தார்கள். கடைசிக் காலத்தில் அவர்கள் பிறப்பித்தது என்ன? ஒரு தீர்க்கதரிசியை. அதைத்தான் பிறப்பித்துள்ளனர். ஒரு தீர்க்தரிசியை, எதற்காக? கடைசி கால அடையாளங்களாக. 441 நோவா அந்த வாசலில் நிற்கையில், பேழையைச் செய்து கொண்டு, அவன், “மழை, பெய்யப்போகின்றது” என்று கூறினான். அவன் அதிதீவிர மத பக்தி வைராக்கியம் கொண்டவன் என்றழைக்கப்பட்டான், ஆனாலும் அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். ஆமென். அவன் என்ன செய்தான்? விசுவாசித்தவர்களுக்கும், தப்பிக்க விரும்பியவர்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டு வந்தான். விசுவாசத்தில் நம்பிக்கை கொண்டிருந்தவர்களைத்தான், அந்த எளிய, படிப்பறிவு இல்லாத இனமானது பிறப்பித்தது. மற்றவர்கள் அறிவில் நம்பிக்கை வைத்து, அவர்கள் முழு மானிட வர்க்கத்திற்கு, மரணத்தைக் கொண்டு வந்தனர். எளியவர்கள் விசுவாசத்தைக் கொண்டு என்ன செய்தார்கள்—என்ன செய்தார்கள்? முடிவின் சமயமானது சமீபித்திருக்கிறது என்றதான அடையாளத்தை அவர்களுக்கு அளித்த ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசியை, இரட்சிப்பை பிறப்பித்தனர். 442 கல்வியறிவு பெற்றவர்கள் அதை விசுவாசிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தங்கள் மூக்கை இழுத்து உறுமலொளி எழுப்பி, “எங்கிருந்து மழை வரும்? அங்கே மேலே தண்ணீர் ஏதாவது உள்ளதா என்று விஞ்ஞானப்பூர்வமாக எனக்கு நிரூபியுங்கள் பார்க்கலாம்,” என்று கூறி, அப்பாலே நடந்து சென்று விடுவார்கள். அந்த விஞ்ஞானிகள், கூரறிவுத்திறம் வாய்ந்த கூட்டத்தினர், தேவன் இல்லையென்று விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முயற்சி செய்கின்றனர். முயற்ச்சிக்கிறார்களே!
170443 அந்தப் புகைப்படமானது எடுக்கப்பட்டபொழுது, அது அவர்கள் உட்கார்ந்து கொண்டடிருந்த அவர்களுடைய முக்காலியிலிருந்து அவர்களை தடுமாறச் செய்தது. அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. “புகைப்படக் கருவியின் கண்ணாடியில் பட்டிருக்கின்ற ஏதோ ஒரு வெளிச்சம்” என்றனர். அவர்களுடைய சொந்த விஞ்ஞானக் கருவியான, நிழற்படக்கருவிதான், அந்த புகைப்படத்தை எடுத்தது. ஜார்ஜ் லேசி இவ்விதமாகக் கூறினார், அவர், “ஐயா,” என்று கூறி, “இந்த புகைப்படக் கருவி உளவியலைப் புகைப்படமாக எடுக்காது. அந்த ஒளி கண்ணாடியில் பதிந்தது. அது அங்கு இருந்தது” கூறினார். “அது என்னவென்று, என்னால் உங்களுக்குக் கூற முடியாது, ஆனால் அது அங்கு இருந்தது” என்றார். மேலும், “நான் இதற்கு என் பெயரை எழுதி கையொப்பமிடுகிறேன்” என்றார். அவர் கையொப்பமிட்டார். அதன் பிரதியை, நீங்களே வைத்திருக்கிறீர்கள். ஆம், ஐயா. அது எப்பிஐ என்ற பிரிவினரோடு இருந்தது. பார்த்தீர்களா?
171444 இந்தக் கடைசி நாளில், நம்முடைய தேவன், எல்லா காரியங்களைக் கொண்டும் தம்மை வெளிப்படுத்திக் காண்பிக்கிறார், ஆனால் அவர் காண்பித்துக்கொண்டிருக்கிறதை இந்த உலகத்தினால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. அறிவுக்கூர்மையும் ஞானமும் வளர்ந்து கொண்டே போகின்றது, பறவைகளைப் போல, மற்றும்—மற்றும் ஜெட் விமானங்களைப் போல், மேலே சீறிக்கொண்டே செல்கின்றது, தண்ணீருக்குள்ளும் சண்டையிடுகிறது. மேலும் எல்லா விதமான அழிவு, மற்றும் பாவத்தில் வாழ்ந்து கொண்டு, தங்களை காத்துக் கொள்ள ஏதோ ஒன்றைக் கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
172445 ஒரே ஒரு காரியம் மாத்திரமே இருக்கின்றது: தேவனுடைய நீதியானது பேழையின் கதவண்டை நின்றுக்கொண்டிருக்கின்றது. வாசல் யார்? கிறிஸ்து, “நானே ஆட்டுத் தொழுவத்துக்கு வாசல்” என்று கூறியுள்ளார். நான் என் பாடப் பொருளில் வாசித்தேன். “என் ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கும். ஒரு அந்நியனை அவை பின் தொடராது.” நீங்கள் அங்கே இருக்கின்ற அந்த ஸ்தாபனங்களில் ஒருபோதும் நெளிந்து கொண்டிருக்கமாட்டீர்கள். உலகம் எவ்வளவு நிச்சயமாக இருக்கின்றதோ அவ்வளவு நிச்சயமாக, அவன் அதிலிருந்து வெளியே வருவான். “தொழுவத்துக்குள்ளிலிருந்து அவர்களை நான் எடுத்து, அவர்களை நான் வழிநடத்துவேன். நான் அவர்களுக்கு முன் செல்வேன்.” ஆமென். அவர், “அது நான் என்று அவர்கள் அறிந்துகொள்ளுவார்கள். என்னைப்போல நடந்து, வேறே யாரும் நான் செய்கிற காரியங்களை செய்ய முடியாது,” என்று கூறுவார். ஆமென். 446 “ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடன் தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்.” புரிகிறதா? அது உண்மை. அது நிக்கொதேமுவின் அறிக்கையாகும். அதுதான் இது.
173447 அந்த எளிய சிறிய சந்ததியானது ஒரு தீர்க்கதரிசியைப் பிறப்பித்தது. அந்தத் தீர்க்கதரிசி, ஆபேலுடைய பிள்ளைகளின் கடைசி நாட்களிலே, கடைசி நாளின் அடையாளங்களைக் காண்பித்து எச்சரிக்கையும் விடுத்த ஒரு தீர்க்கதரிசியை பிறப்பித்தார். 448 இன்றைக்கும் அதே விதமாகத்தான் உள்ளதென்று, நான் நினைக்கின்றேன். “ஆவியானவர் எங்களுக்குச் சொல்லுகிறதைக், காதுள்ளவன் கேட்கக்கடவன்.” 449 ஆகவே, பாருங்கள், அறிவுக்கூர்மையின் சூழலிலே ஜீவ வார்த்தை விதையானது வளர முடியாது. அதனால் அதை வளரச் செய்ய முடியாது.
174450 மோசேயும் யோசுவாவும் வார்த்தையில் விசுவாசம் கொண்டிருந்தனர். மற்றவர்களோ நடனமாடவும், பெண்களின் ஆடைகளை களையவும் விருப்பங்கொண்டனர்; கோராகு, (ஏன்?) அதைச் செய்தான், தன்னுடைய எகிப்திய அறிவுக்கூர்மையால் அதைச் செய்தான். மோசேக்கு அது தேவையில்லாதிருந்தது. 451 இன்றைக்கு உள்ள கோராகுகளை பாருங்கள், சுலபமான வழிகளைத் தெரிந்து கொள்கிறார்கள், நடனமாடுகிறார்கள், முழு இரவு கேளிக்கை விருந்துகளுக்குச் செல்கிறார்கள்; பெண்கள்: தங்கள் தலைமுடிகளைக் கத்தரித்துக் கொள்கிறார்கள், குட்டையான உடைகளை அணிகிறார்கள், எந்தவிதமான காரியத்தையும் செய்கிறார்கள். “அதற்கும் இதற்கும் எந்த ஒரு வித்தியாசமுமில்லை. அவ்விதம் செய்வது சரிதான்” என்கிறார்கள். அது சரி அல்ல.அது சரி அல்ல என்று வார்த்தைக் கூறுகிறது. அது சரியே. அதே காரியம்தான். புரிகிறதா?
175452 அவர்களெல்லோரும் ஒவ்வொருவரும், ஞானஸ்நான பெற்றிருந்தாலும், கோராகும் மற்ற எல்லோரும் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும், அது திருச்சபையின் மாதிரியாகவே மீண்டும் உள்ளது என்பதையே அது காண்பிக்கிறது. நீங்கள், “அவர்கள் ஞானஸ்நானம் எடுத்தவர்களா?” என்று கேட்கலாம். 453 முதலாம் கொரிந்தியர் 10:1 முதல் 2. நாம் அதை சற்று வாசிப்போம். நாம்…நேரம் கடந்து கொண்டிருக்கின்றது என்பதை நான் அறிவேன், ஆனால் இரவு ஆகாரம் சூடாக இருக்காது. கர்த்தர் நம்மை போஷித்துக் கொண்டிருப்பாரானால், இந்த இரவு ஆகாரம் இன்னும் சற்று நீண்டு வரும். புரிகிறதா? முதலாம் கொரிந்தியர் 10. இப்பொழுது இங்கே கவனியுங்கள். முதலாம் கொரிந்தியர் 10:1 முதல் 2 வரை, நான் அதை எடுத்துவிட்டேன். இப்பொழுது, நான் இரண்டாம் கொரிந்தியரை எடுத்துவிட்டேன். முதலாம் கொரிந்தியர் 10:1 முதல் 2. இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறிய வேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய …நம்முடைய பிதாக்களெல்லோரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லோரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்து வந்தார்கள்; எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்.
176454 கோராகு மற்றவர்கள் பெற்றிருந்த ஞானஸ்நானத்தைத்தான் அவனும் பெற்றிருந்தான். ஆனால் அவன் செய்ய விரும்பினது என்ன? பெண்களை நடனமாட வைத்து, அவர்களுக்கு சிறிது மதுவை அளித்து சிறிது நேரம் களிகூரச்செய்து, ஆடைகளைக் களையச்செய்து விபச்சாரம், அதைச் செய்ய வைத்தான். அவர்கள் அவ்விதம் செய்தனர் என்று வேதாகமம் கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அந்தப் பெண்களை எடுத்து அவர்களுடைய ஆடைகளை அவிழ்த்துப் போட்டு, அவர்களை நடனமாட, அதைப் போன்ற காரியங்களைச் செய்ய வைத்தனர். அப்பொழுது மோசே அவர்கள் மேல் கோபங்கொண்டான். அந்த சமயம் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? ஏன்? அவர்கள் அறிவுக்கூர்மைக் கொண்டிருந்த, பண்டிதர். கோராகைத் உடையவர்களாயிருந்தார்கள். அவன், “நான் உங்களை எகிப்துக்குத் திரும்பக் கொண்டு செல்வேன்” என்று கூறினான். அவர்களும் கூட, அங்கேதான் சென்றிருப்பார்கள். 455 ஆனால், சகோதரன் மோசே, அவன் கீழே வந்தபோது, அது வித்தியாசமாக இருந்தது. அவனும் யோசுவாவும் அந்த வார்த்தையோடே தரித்திருந்தனர். தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை அளித்திருந்தார்; அவர்கள் அதனோடே தரித்திருந்தார்கள். அதுசரி. 456 கோராகுவின் அறிவுக் கூர்மையினால், மற்றவர்கள் நடனமாடவும், தங்களுடைய ஆடைகளைக் களையவும் விரும்பினார்கள். அவர்கள் எல்லோரும் ஒரே, ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
177457 இஸ்ரவேலும் மோவாபும். ஓ, நான்…நீங்கள்…ஒரு முறை, அதைக் குறித்து பேசியுள்ளேன். நாம் அதைக் குறித்து பேசவில்லை. நான் துரிதமாக முடிக்க வேண்டும். சரி. இஸ்ரவேல் மற்றும் மோவாப், அது அங்கே எப்படி இருந்ததென்று உங்களுக்குத் தெரியும். ஒன்று, ஒன்று அறிவுக்கூர்மையுடனும், மகத்தான பெரிய ஸ்தாபனங்களையும் உடையதாக, அருமையாக இருந்தது. மற்ற ஒன்றோ, சிறிய பொது சபையாக இருந்தது.
178458 பிறகு, ஒரு நாள்; நாம் முடிக்கும் முன்பாக இப்பொழுது எங்கே உள்ளது என்று நான் கூறுவேன். ஒரு நாள், இந்த இரு மகத்தான மூலாதாரங்கள், அல்லது வல்லமைகள், தேவனுடைய வார்த்தையின் பேரில் ஒரு பலப்பரீட்சையில் சந்தித்தன. 459 இப்பொழுது நாம் அதன் உச்சக்கட்டத்திற்கு வரப் போகிறோம். நாம் சற்று பின்னால் செல்வோம். என்னால் ஒரு டஜன் உதாரணங்களை எடுக்க முடியும். என்னால் இங்கே ஒரு வாரத்திற்கு நின்றுகொண்டு, அதன் பேரில் அதன் முதல் கட்ட நிலையை பேசிக்கொண்டேயிருக்க முடியும், நான் எதைக்குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் சரியாக நிரூபிக்கவும் முடியும். ஆனால் இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? 460 ஒரு நாளில், அது ஒரு பலப்பரீட்சைக்கு வந்தது. அறிவுக்கூர்மையும் விசுவாசமும் ஒரு பலப்பரீட்சைக்கு வந்தது. இயேசுவும் சாத்தானும் சந்தித்தனர். அது உண்மை. இயேசுவும் சாத்தானும் சந்தித்தனர். அந்த இரண்டு பெரிய சக்திகளான, அறிவுக்கூர்மையும் மற்றும் அறிவும், ஒரு பலப்பரீட்சைக்கு வந்தன. புரிகிறதா? 461 இப்பொழுது, அவர்கள் இருவரும் வார்த்தையை உபயோகித்தனர். அது சரிதானே? ஓ, சகோதரனே, இது என்னை மிகவுமாக உற்சாகப்படுத்துகின்றது. புரிகிறதா? இதை இப்பொழுது தவறவிட வேண்டாம். ஓ! “தேவனே, என் இருதயத்தை திறந்தருளும்” என்று கூறுங்கள். [சபையோர், “தேவனே, என் இருதயத்தை திறந்தருளும்.” என்கின்றனர்.—ஆசி.] 462 அவர்கள் இருவருமே தேவனுடைய வார்த்தையை, இதே வேதாகமத்தை உபயோகித்தனர். ஆனால் அது மனமாற்றப்படாத வாய்க்காலிலே கிரியை செய்யாது. அது நிச்சயமாகச் செய்யாது. அது நிச்சயமாகச் செய்யாது. அவர்கள் இருவரும் தேவனுடைய வார்த்தையை உபயோகித்தனர். ஆனால் சாத்தான் ஒரு தலையில் உள்ள அறிவைக்கொண்டு, பாருங்கள், ஒரு தலையில் உள்ள அறிவைக்கொண்டு, அதை உபயோகித்தான், அப்பொழுது அது கிரியை செய்யவில்லை.
179463 இங்கே நான் ஒரு வேத வாக்கியத்தை வைத்திருக்கிறேன். நான் அதை வாசிக்க உங்களுக்கு ஆட்சேபனையா? [சபையோர், “இல்லை” என்கின்றனர்.—ஆசி.] எபிரெயர், 4-வது அதிகாரத்தை, சீக்கிரமாக, ஒரு நிமிடத்திற்கு மாத்திரம் எடுப்போமாக. இதை நான் வாசிக்க விரும்புகிறேன். இது இங்கே சரியாக, இந்த நேரத்திற்கு எனக்கு சரியான வசனமாகத் தோன்றுகிறது, எபிரெயர் 4. நாம் எபிரெயர் 4-ம் அதிகாரத்திற்கு திருப்பி, 1-லிருந்து 2 வரை பார்ப்போம். ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கான… வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம். ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போல நமக்கும் அறிவிக்கப்பட்டது;அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. விசுவாசமில்லாமல் (அறிவு, ஞானமா?) விசுவாசமில்லாமல்… (எதினால்?) கேட்டபடியினால்.
180464 முழு வார்த்தையும் நீங்கள் கொண்டிருக்கலாம், மொழியின் முதல் எழுத்திலிருந்து முடிவு வரையிலும் நீங்கள் வார்த்தையை முழுவதுமாக அறிந்திருக்கலாம், ஆனாலும் அது உங்களுக்குக் கிரியை நடப்பிக்காது. மனிதர் அந்த வார்த்தையை எடுத்து, “சகோதரனே, தேவனுக்கு மகிமை” என்று கூறி, அதைக் கிரியை செய்ய வைப்பதை நீங்கள் எப்பொழுதாவது கண்டிருக்கிறீர்களா? அது கிரியைச் செய்யாது. நீங்கள் வார்த்தையோடு கோமாளித்தனமாக விளையாடிக் கொண்டிருக்க முடியாது. முடியாது. முடியாது. முடியாது. இல்லை. நீ என்னதான் உறுதியாகக் கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, வார்த்தை தனக்குத்தானே சாட்சி கொடுக்கிறது. நீ என்ன உரிமை கோரினாலும் அது ஒரு பொருட்டல்ல, வார்த்தை சாட்சி கொடுக்கின்றது. அது உண்மை. 465 இப்பொழுது, சாத்தான் வார்த்தையை அறிந்திருந்தான். அவன் அதை துவக்கம் முதல் முடிவு வரை அறிந்திருந்தான். பாருங்கள், என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவன் ஒரு பட்டத்தைக் பெற்றுள்ளானெனில், அவன் பெற்றிருக்கும் பட்டங்கள் எழுதப்படுவதற்கு நான்கு முதல் ஐந்து பக்கங்கள் வரை தேவைப்படும், என்று நான் யூகிக்கிறேன், “ முனைவர்., சங்கை, மூப்பர், பிஎச்., எல்.எல்., கியூ.டி.,” ஒவ்வொரு விதத்திலும் எல்லா எழுத்துக்களிலும் பெற்றிருப்பான். வேதாகமத்தின் பேரில் அவனுடைய பட்டப்படிப்புகள் இருக்கும். வார்த்தையிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் அவனுக்குத் தெரியும். நிச்சயமாக அவனுக்குத் தெரியும். பார்த்தீர்களா? ஆகவே, சாத்தான், “இப்பொழுது, எனக்கு வார்த்தைத் தெரியும்” என்று கூறினான். அவன் ஏவாளிடம் வந்தபோது வார்த்தையை அறிந்திருந்தான் என்பதை நான் அறிவேன். ஆகவே, அவன் அதை தலையிலுள்ள சுய அறிவினாலே அறிந்திருந்தான், ஆனால் அது கிரியை செய்யாது.
181466 இயேசுவோ தம்முடைய சொந்த முன் குறிக்கப்பட்ட ஜீவனுக்குள்ளாக உள்ள தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டினால், அதை விசுவாசத்தினால் அறிந்திருந்தார். மகிமை! இது உங்கள் இருதயத்திற்குள்ளாக செல்கின்றது என்று நான் நம்புகிறேன். தாம் யாராயிருக்கிறோம் என்று இயேசு அறிந்திருந்தார். சாத்தானோ ஆச்சரியமுற்றுக் கொண்டிருந்தான். தேவன் தாமே அவருக்குள்ளாக வெளிப்பட்ட, ஒரு முன் குறிக்கப்பட்ட தேவனுடைய சிருஷ்டியாக அவர் இருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். கிரியைகளைச் செய்தது அவரல்ல. அது அவருக்குள் வாசம் செய்த பிதாவானவராயிருந்தது. ஆமென்.
182467 பிசாசு தன்னுடைய எல்லா வேதசாஸ்திர அறிவுடனே பறக்கட்டும். இயேசு; சாத்தான் அதை அறிந்திருந்தான். அவன் வார்த்தையை அறிந்திருந்தான். இப்பொழுது, அவனால் அந்த வேத வசனத்தை மேற்கோள் காட்ட முடிந்தது, ஒரு நடமாடும் வேதத்தைப் போன்றிருந்தான். எனவே அவனால் அதை அந்த விதமாக மேற்கோள் காட்ட முடிந்தது. [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய விரலை துரிதமாக அநேக முறை சொடுக்குகிறார்—ஆசி.] புரிகிறதா? 468 ஆனால் இயேசு அப்படியே தரித்திருந்தார், ஏனென்றால் தாம் எந்த ஸ்தானத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருந்தார். தாம் முன்குறிக்கப்பட்டவரென்றும், “உலகத்தோற்றத்துக்கு முன்னர் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர்” என்பதையும் அவர் அறிந்திருந்தார். தாம் தான் அந்த நபர் என்பதை அவர் அறிந்திருந்தார். ஓ! ஓ, சகோதரனே! “காதுள்ளவன் கேட்கக்கடவன்.” அவர் அதற்காக முன்குறிக்கப்பட்டிருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார், அந்தவிதமாக அவர் வார்த்தையை அறிந்திருந்தார். புரிகிறதா? அது கிரியைச் செய்தது. நிச்சயமாக. 469 சாத்தான் அறிவுக்கூர்மையைக் கொண்டு வார்த்தையை அறிந்திருந்தான். அது தோற்றுப் போனது. இயேசு மேற்கோள் காட்டின அதே வார்த்தையை, அதே வேதாகமத்தை அவனும் மேற்கோளாகக் காட்டினான். அவன் சங்கீதத்திலிருந்து மேற்கோள் காட்டினான். சாத்தான், “அவர் அளிப்பார்…என்று எழுதியிருக்கிறதே,” “உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மை ஏந்திக்கெண்டு போவார்கள்” என்று கூறினான். அதற்கு அவர், “இதுவும் கூட எழுதியிருக்கிறதே…” என்றார். ஓ! புரிகிறதா? சாத்தான் அதை அறிவினால் அறிந்திருந்தான்.
183470 இயேசு அதை அனுபவத்தின் மூலமாக அறிந்திருந்தார். அவர் அதை வெளிப்பாட்டின் மூலமாக அறிந்திருந்தார். உலகத்திற்குள் வரவிருந்த தேவனுடைய குமாரன் தாம் தான் என்பதை அவர் அறிந்திருந்தார். தம்முடைய ஸ்தானத்தை அவர் அறிந்திருந்தார். அந்த நோக்கத்திற்காகத்தான் அவர் இந்த உலகத்தில் பிறந்துள்ளார் என்பதை அவர் அறிந்திருந்தார். தாம் யாராக இருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தபடியால், அந்தக் காரணத்தால்தான், தேவனுடைய வார்த்தை தம் மூலமாக கிரியை செய்ய முடிந்தது என்பதையும் அறிந்திருந்தார். மகிமை! அதே சமயத்தில் இதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்களா? தாம் யார் என்பதை அவர் அறிந்திருந்தார். 471 அதன் பின்பாக இருந்த, சாத்தானும், தான் யார் என்பதை அறிந்திருந்தான். வார்த்தை தேவனாயிருந்தபடியால், அறிவுக்கூர்மையினால், வார்த்தையை அவன் அறிந்திருந்தாலும், வார்த்தையுடன் அவனுக்கு எந்த அலுவலும் கிடையாது என்பதையும் அறிந்திருந்தான். நீங்கள் அதை புரிந்துகொள்கிறீர்களா?
184472 இப்பொழுது, இயேசு தாம் யார் என்பதை அறிந்திருந்தாலும்… அந்த சமயத்தின் ஒரு முன்குறிக்கப்பட்ட சிருஷ்டியாக அவர் இருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரீரமாகிய, இயேசு, தாம் தான் முன்குறிக்கப்பட்ட வார்த்தை என்றும், பாவத்திற்கான பலி, அந்நாளிலே நிற்கும்படியான தேவனுடைய நபர் தாம் என்றும் அவர் அறிந்திருந்தார். அவர் தம்முடைய சத்துருவையும் அறிந்திருந்தார். (இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்பு, நான் பிரசங்கித்ததுபோல.) தம்முடைய சத்துருவை அவர் அறிந்திருந்தார்; தாம் யார் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆகவே, இந்த இரண்டு சக்திகளான அறிவுக்கூர்மையும் விசுவாசமும் நேருக்கு நேர் நின்றன. இயேசு தாம் யாராக இருக்கிறோம் என்பதை அறிந்திருந்தார். 473 இயேசு அறிந்திருந்த விதமாக சாத்தானும் வேதாகமத்தை அறிந்திருந்தான், ஆனால் அது சாத்தானுக்கு கிரியை செய்யாது. புரிகிறதா? 474 நீ எவ்வளவுதான் அறிவைக் கொண்டிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது கிரியை செய்யாது. இப்பொழுது, இதை இங்கேயிருக்கின்ற பெரிய ஸ்தாபனங்கள் சிலவற்றுடன் பாருங்கள். ஒரு நிமிடம், அதைக் குறித்து சிந்தியுங்கள். அவர்கள், “பாருங்கள், நாங்கள் வார்த்தையைக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகின்றனர். அது கிரியை செய்கிறதை நான் காணட்டும். கத்தோலிக்கராகிய நீங்களோ, நீங்கள் தான் ஆதியிலிருந்த முதன்மையானவர்கள் என்று கூறுகிறீர்கள். நாங்கள் அதைக் காணட்டும். உங்களுடைய கிரியைகளை எனக்குக் காண்பியுங்கள் உங்களுடைய… இல்லையென்றால், உங்களுடைய விசுவாசமில்லாமல், இல்லையென்றால், உங்களுடைய கிரியைகளை எனக்குக் காண்பியுங்கள், என்னுடைய விசுவாசத்தைக் கொண்டு, நான் என்னுடைய கிரியைகளை நான் காண்பிப்பேன். புரிகிறதா? வார்த்தை என்ன கூறியுள்ளது என்று பாருங்கள்.
185475 ஒரு விதை தன்னுடைய வகை எது என்று வெளிப்படுத்தாவிடில், அது வளரும்படி, அவ்விதமான ஒரு விதையை உங்களால் விதைக்கக் கூடுமா? தானியத்தைப் பிறப்பிக்காமல் வளருகின்ற, ஒரு தானிய விதையையை நீங்கள் நட முடியுமா? உருளைக்கிழங்கை பிறப்பித்தாலொழிய ஒரு உருளைக்கிழங்குச் செடியை நீங்கள் நட முடியுமா? ஒரு குறிப்பிட்ட விதமான மலர் செடியாக ஒரு செடி இல்லாவிடில் அந்தச் செடியை நீங்கள் நட முடியுமா? புரிகிறதா? 476 அப்படியானால், உங்களுடைய இருதயத்திலே தேவனுடைய விதையை, நீங்கள் விதைத்திருப்பீர்களென்றால், அது தேவனுடையதைத்தான் பிறப்பிக்க வேண்டும். இயேசு, “என்னை விசுவாசிக்கிறவன் என்னுடைய கிரியைகளைச் செய்வான்” என்று கூறினார். அவன் வார்த்தையை விசுவாசிக்கின்றான் என்று கூறி, இவைகள் அவனைப் பின் தொடரவில்லையென்றால், அவன் ஒரு பொய்யன். “நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்; இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வான்.” ஏன், அது மிக பலமுள்ளதாக இருக்கின்தே! அந்த விதைகள் வழுக்குகின்ற ஒரு இடத்தின் மேல் விழுந்து, எங்கோ ஒரு பாறையின் மேல் விழுந்து நிற்காதே! காற்று அவைகளை அடித்துச் சென்றுவிடாதபடிக்கு. பறவைகள் அதைத் தின்றுவிடாதபடிக்கு, அது நேராக ஒரு பள்ளத்தாக்கில் விழும், அது வளரும்.
186477 அதை உங்கள் இருதயத்தில் மறைத்து வையுங்கள். தாவீது, “உமது நியாயப்பிரமாணத்தை நான் என் இருதயத்திற்குள் மறைத்து வைத்துள்ளேன்,” ஆதலால் எந்த ஒரு ஸ்தாபனமும் அதை எடுத்துப் போட முடியாது, பறவைகளால் அதை எடுக்க முடியாது. “நான் அதை இங்கே மறைத்து வைத்துள்ளேன். இரவும் பகலும், நான் அதில் தியானிக்கிறேன். என் கட்டில்கள் மேல் அவை எழுதப்பட்டுள்ளன மற்றும் எங்குமுள்ளன. நான் அவைகளை உடையவனாயிருக்கிறேன், அதை நான் என் விரல்களில் கட்ட்டியுள்ளேன். அவைகள்…” என்று கூறினான். 478 இயேசு, “உங்கள் பெயர்களை என் உள்ளங்கையில் வைத்துள்ளேன்” என்று கூறினார். ஆகவே, எப்படி, எப்படி அது மறந்து போகப்படும்? மறக்கப்பட முடியாது. இப்பொழுது, சரி.
187479 ஆகையால், தாம் யார் என்றும், தாம் முன்குறிக்கப்பட்ட ஒரு சிருஷ்டி என்பதை அறிந்து, அதன் பேரில் உள்ள விசுவாசத்தைக் கொண்டு இயேசு சாத்தானைத் தோற்கடித்தாரென்றால். நீங்கள் ஆயத்தமா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் முன்குறிக்கப்பட்ட மணவாட்டியைக் குறித்தென்ன? மணவாட்டி முன்குறிக்கப்பட்டிருக்கின்றாள் என்பதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? இப்இப்பொழுது முன் குறிக்கப்பட்ட கிறிஸ்துவின் மணவாட்டியை, சபையை, வார்த்தை வித்தை, ஒவ்வொரு காரியத்துடனும், சரியாக இப்பொழுது சபையை அதற்குள் வைப்பாரென்றும் தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளார். அது இப்பொழுது அதற்குள் இருக்கின்றது. ஒவ்வொரு காரியமும் ஒழுங்கிற்குள் உள்ளது. பரிசுத்த ஆவி அளிக்கப்பட்டுள்ளது. விதை விதைக்கப்பட்டுள்ளது. சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. இயேசு வாக்களித்திருந்த, சோதோமின் அடையாளம், மற்றும் மல்கியா 4, ஒரு முன்குறிக்கப்பட்ட சபை! இங்கே இருக்கின்றது. ஓ, பிசாசே!
188480 ஜீவனுள்ள தேவனுடைய சபையே, இங்கும் மற்றும் ஒலி நாடாக்களில் கேட்பவர்களே, நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிகின்றதா? நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டவர்கள் என்றும், பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயங்களில் அரசாளுகிறார் என்றும், தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்கு உண்மையான ஒன்று என்றும் உங்களுக்குத் தெரியுமா? ஓ, சகோதரனே! எப்படி சாத்தான் அதற்கு எதிராக நிற்கப்போகிறான்? அது வளர்வதை எப்படி அவன் தடுத்து நிறுத்தப்போகிறான்? அடையாளங்கள் அவர்களைப் பின் தொடருவதை எப்படி அவன் தடுத்து நிறுத்தப்போகிறான்? ஏன், அவர்களை நீங்கள் சிறையில் போடலாம். அவர்கள், உங்களால் முடிந்த, நீங்கள் அவர்களுக்கு என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை, அவர்கள் அதைச் செய்ய முயன்று பார்த்துவிட்டனர். அவர்கள் சிறையில் வாடினார்கள். அவர்கள் சிங்கங்களுக்கு இரையாக கொடுக்கப்பட்டார்கள். அவர்கள் வாளால் அறுப்புண்டார்கள். அவர்கள் துண்டு துண்டாக வெட்டியெறியப்பட்டார்கள். முன்குறிக்கப்பட்டிருக்கின்ற ஒரு சபையை, உண்மையாகவே, உங்களால் கொல்லவே முடியாது. “எவர்களை அவர் முன்னறிந்தாரோ,” இயேசுவை அவர் அறிந்ததுபோல, “அவர்களை அழைத்துமிருக்கிறார், எவர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார், முன்குறித்திருக்கிறார்.” 481 மேலும் இப்பொழுது, இந்தக் கடைசி நாட்களில், ஒவ்வொரு விதையும் விதைக்கப்பட்டிருக்கையில்; ஒவ்வொன்றும் ஒழுங்கில் இருக்கையில், உலகம் அதன் ஒழுங்கில் உள்ளது, நேரம் அமைக்கப்பட்டிருக்கிறது, சபை அதன் ஒழுங்கில் உள்ளது, வித்து, சாயங்கால வெளிச்சங்கள், அவர் கூறின அடையாளங்களைப்போல, “சோதோமின் நாட்களில் நடந்தது போல.” தேவனுடைய தூதன், பரிசுத்த ஆவியானவர், கீழே வந்து, அசைவாடி, அப்பொழுது அவர் செய்த அதே அடையாளங்களையே செய்கின்றார். கடைசி நாளில், அவர் என்ன வாக்களித்ததார், அவர் அனுப்புவதாக வாக்களித்திருந்த மல்கியா 4. அவை யாவும் சரியாக இங்கே இருப்பதை நாம் காண்கிறோமல்லவா, எங்கே? எங்கே? ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! நீங்கள் அவரை நேசிக்கின்றீர்களா? ஆமென்! 482 நிச்சயமாக, சரியாக இங்கே கடைசி நாட்களில், ஒரு முன் குறிக்கப்பட்ட சபை, அவர்கள் எங்கே நிற்கிறார்களென்றும், விதையினால் விதைக்கப்பட்டோம் என்றும், சபையில் பரிசுத்த ஆவி உள்ளது என்றும் அறிந்திருக்கிறோம். சாத்தானே, ஜாக்கிரதையாயிரு.
189483 என்ன சம்பவித்தது? இப்பொழுது ஒரு நிமிடம். அதற்கென வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கின்ற ஒவ்வொன்றோடும், மல்கியா 4-ன் வாக்குத்தத்தங்களோடும் கூட என்ன சம்பவித்தது? 484 சாத்தான் இயேசுவை சந்தித்தபோது என்ன—என்ன செய்தான்? அவரை நோக்கி நேராகப் பறந்தான். அவன், “எனக்கும் வார்த்தை, கூட நன்றாகத் தெரியும்” என்று தான் கொண்டிருந்த எல்லா மதசம்பந்தமான சக்தியோடும், அவரை நோக்கி நேராகப் பறந்தான். அவன் கொண்டிருந்த ஸ்தாபன தூசியுடன் பாய்ந்தான்! அந்தத் தூசியைத்தான் நாம் அவன் மேலேயே வீசியெறிந்தோம்; ஆனால் அதில் எந்த ஒரு ஜீவனும் கிடையாது. அவன் பறந்து மோதினான்! எந்த வேகத்தில் பாய்ந்தானோ அதைவிட அதிகமான வேகத்தில் அவன் திரும்பி வந்து விழுந்தான். ஏன்? அவன் கோடிக்கணக்கான மின் சக்தி வல்லமை பாய்ந்து கொண்டிருந்த அந்த மின் கம்பியின் மீது மோதினான். அவன் தன்னுடைய இறகுகளையெல்லாம் பொசுக்கிக் கொண்டான். அவரை விட்டு அப்பாலே வந்து விழுந்தான். அவரை விட்டு வெளியே வந்தான், ஏனெனில் அந்த மின்கம்பியில் மின்சாரசக்தி பாய்ந்துக் கொண்டிருந்தது.
190485 சாத்தானும் கூட, ஒரு மின்சாரக் கம்பியைக் கொண்டிருந்தான் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். ஆனால், அந்த அந்த செம்புக் கம்பிகள் எவ்வளவு அருமையாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது அதில் ஜீவனை உடையதாயிருக்கவில்லை, அது மரித்திருக்கிறது. அந்த மின்சாரக் கம்பி வேலை செய்யாது. அதே மின்சாரக் கம்பி. 486 ஒரு கம்பி மின்சார சக்தியில் இணைக்கப்பட்டு வல்லமையுடையதாக இருக்கிறது, மற்றொரு கம்பியோ மின்சார இணைப்பே இல்லாமல் இருக்கின்றது. அது உண்மை. அதன் காரணமாகத்தான் அது ஒரு முன்குறிக்கப்பட்ட பாத்திரத்தில் அது கிரியை செய்யும். அதன் காரணமாகத்தான் வார்த்தை எங்கே இணைக்கப்பட்டிருக்கின்றதோ அங்கே கிரியை செய்யும். எங்கே அது இணைக்கப்பட்டிருக்கின்றது, ஸ்தாபனத்தினோடா? இல்லை ஐயா. அது மரித்துப்போயிருக்கின்ற மின் பொத்தானாகும், “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கின்ற ஒன்றாகும்.” ஆனால் வார்த்தையோடு இணைக்கப்பட்டிருக்குமானால், அது ஒருபோதும் ஒழிந்து போகாது. எந்த நேரத்திலும் அதே அளவிலான மின்சாரத்தையே அது பிறப்பித்துக் கொண்டிருக்கும். அங்கே தான் அது இருக்கின்றது. மகிமை! ஆமென்! ஆமென்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நீங்கள் அவருக்குச் சேவை செய்வீர்களா? [“ஆமென்.”] ஆமென். நிச்சயமாக. 487 ஏதோ ஒரு ஸ்தாபனத்துக்குள்ளாக இணைக்கப்பட்டிருப்பதல்ல, ஆனால் இங்கே உள்ள அந்த மின் ஆக்கப் பொறியில் இணைக்கப்பட்டிருங்கள். சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அது அங்கே கிரியை செய்கிறது, ஏனென்றால் அது அந்த அதே வார்த்தையில் இணைக்கப்பட்டிருக்கிறது.
191488 மோவாபியரும் கூட, இணைக்கப்பட்டிருந்தனர்; இஸ்ரவேலும், கூட. மோவாபியர், ஒரு மரித்துப்போன கோட்பாடுகளையும் ஒரு கள்ள தீர்க்கத்தரசியை மாத்திரமே கொண்டிருந்தனர். 489 ஆனால் இஸ்ரவேலரோ அடிக்கப்பட்ட ஒரு கன்மலை, ஒரு வெண்கல சர்ப்பம், ஒரு அக்கினி ஸ்தம்பம், அல்லேலூயா, மற்றும் ஜீவனுள்ள தேவனுடைய அடையாளங்களை உடையவர்களாயிருந்தனர். ஆமென். அது முற்றிலும் சரி. அது கிரியை செய்தது. ஏன்? அது விசுவாசத்தின் பேரில் இருந்தது. ஆம், ஐயா. அறிவுக்கூர்மையின் பேரிலோ, ஏதோ ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளின் பேரிலோ அல்ல; ஆனால் வார்த்தையில் கொண்டிருக்கும் விசுவாசத்தினாலேயே, வார்த்தை தாமே. வார்த்தையிலிருந்து தான் ஜீவன் வருகின்றது. “என் வார்த்தை ஜீவனாயிருக்கிறது.” அந்த மின்சாரம் வார்த்தையின் மூலமாக வருகின்றது. 490 சாத்தான் மிக வேகமாக, அதிலிருந்து திரும்பி விழுந்தான். அவனுடைய வேதசாஸ்திர தூசியினால் மிக நன்றாக அங்கே செல்லமுடியவில்லை. சாத்தானுடைய மின்சாரக் கம்பியில் மின்சாரம் இல்லாதிருந்தது. அது மரித்துப் போன கோட்பாடுகளாயிருந்தது. அதில் மின்சாரம் கிடையாது. அதில் மின்சார சக்தி கிடையாது 491 இப்பொழுது, பாருங்கள், அது அதே மின்கம்பியாகும். இயேசு பிதாவின் வார்த்தையை உபயோகித்தார்; சாத்தானும் பிதாவின் வார்த்தையை உபயோகித்தான். சாத்தான் சாத்தானாக இருந்தான். இயேசு தேவனாக இருந்தார், அது தான் வித்தியாசமாகும், அதுதான் உண்மையாகும். ஒன்று ஒரு கோட்பாடாக இருக்கிறது, மற்றொன்றோ வார்த்தையாக இருக்கிறது. ஒன்று உண்மையானதாக இருக்கிறது, மற்றொன்று பொய்யானதாக இருக்கிறது. ஒன்று அதைப் பிறப்பிக்கும்; மற்றொன்று அதைப் பிறப்பிக்க முடியாது. உங்களால் புரிந்துகொள்ள முடிகின்றதா? அதே விதமான மின்கம்பிகள், இப்பொழுது, அது முற்றிலும் சரியாகும், அதே மின்கம்பிகள். எபிரேயர் 2, நாம் பெற்றுள்ள, அல்லது, எபிரேயர் 4:2, நாம் அதைப் பார்த்தோம். புரிகிறதா? அறிவுக்கூர்மையினாலே, ஸ்தாபனங்கள் இவ்விதமாக கூறுகிறதுபோல. புரிகிறதா? ஸ்தாபனங்கள், “மின்சாரத்தின் நாட்கள் கடந்துவிட்டன,” என்று அறிவுக்கூர்மையைக் கொண்டு, இதைக் கூறுகின்றன. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! நீங்கள் அவருக்குச் சேவை செய்வீர்களா? ஆமென்! நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? ஆமென்! ஆமென்! ஆமென்! நான் அவரை விசுவாசிக்கின்றேன். ஆம், ஐயா. ஆமென் என்றால் “அப்படியே ஆகக்கடவது” என்று பொருள்.
192492 கர்த்தாவே, இக்காலை, என்னுடைய ஜெபம் என்னவென்றால், இங்கிருக்கின்ற விசுவாசிகள் ஒவ்வொருவரையும் எடுத்து அவர்களை மின்சாரத்திற்குள்ளாக இழுத்துக்கொள்ளும் என்பதேயாகும். ஓ! அவனுக்குள்ளாக ஜீவனை வைத்தருளும், அவன் தானே தேவனுடைய மகிமையை மெல்லப் பரவவிட்டு பிரகாசிப்பிக்கச் செய்வானாக. ஆம், ஐயா. மின்சாரத்தை இயக்குவானாக.
193493 நான் என்ன விசுவாசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மகத்தான சபைக்காக, விதையானது விதைக்கப்பட்டாயிற்று (அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?) எப்படி ஒரு கட்டிடம் முழுவதுமாக மின் கம்பிகள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு மின்சார இயக்கிகளும் வார்த்தையினால் சோதிக்கப்பட்டு, ஓ, என்னே, ஒவ்வொரு மின்சார இணைப்பும் வார்த்தையினால் சோதிக்கப்படுவது போலவே. “உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெறிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாதீர்கள். அது உங்களுக்கு சோதனையாயுள்ளது.” 494 மின்சார இணைப்பில் ஒரு மின்வலிக்குறுக்கு வெட்டுப் பாய்வு வருமானால் அது முழு இடத்தையுமே, முழு இயக்கும் கருவியையுமே வெடிக்கும்படிக்குச் செய்யும். தேவன் அவைகளை தம்முடைய சபையில் வைத்திருக்க விரும்புவதில்லை. இந்தக் கடைசி நாட்களில் மின்காப்பு எரியிழை எரிந்துப் போய் செயலிழந்து மின் இயக்கங்கள் வெடிக்கும் ஒரு காரியமானது இருக்கவே இருக்காது. இல்லை, ஐயா. 495 அவர் வந்து அவளை அங்கே சரியான இடத்தில் பற்றவைத்து பொருத்துகிறார். ஆம், ஐயா. சரி. ஒவ்வொரு விளக்கும் தன்னுடைய இடத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. ஒரே காரியத்திற்காக, எஜமான் வந்து வார்த்தையில் அந்த திருப்பானை இயக்குவதற்கே காத்துக்கொண்டிருக்கின்றது. அது உண்மை. ஆம், ஐயா. வார்த்தையில்! நிச்சயமாக. சகோதரனே, அது சரியாக இப்பொழுது கூட இருக்கலாம். உனக்கு சுகம் தேவையானால், அந்த திருப்பானைை மாத்திரம் தொடு. உன்னிடம் உண்மையான மின் கம்பியிருந்தால், நீ செய்ய வேண்டியதெல்லாம் அதுவேதான். உன்னுடைய நிலத்தில்…“உன்னுடைய இணைப்பு புதைக்கப்பட்டு, இயேசுவிலிருந்து வரும் இணைப்பானது இல்லாமலிருக்குமானால், நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்.” ஆமென். அது சரி.
194496 இப்பொழுது, “அற்புதங்களின் நாட்களானது கடந்துவிட்டது” என்று ஸ்தாபன அறிவுக்கூர்மையானது கூறுகின்றது. மின் கம்பிகளில் மின்சாரம் இல்லை. 497 ஆனால் விசுவாசம் மேலான காரியத்தை அறிந்திருக்கின்றது. அவர்கள் அதை உணர்கின்றனர். அது கிரியை செய்வதைக் காண்கின்றனர். அது ஒளியேற்றுகிறது என்று அவர்கள் அறிந்திருக்கின்றனர். அது என்ன செய்கிறதென்று அவர்கள் அறிந்திருக்கின்றனர். விசுவாசம்தான் மின்சாரமாகும், மின்சாரம், ஆவியானவராகும். அறிவுக்கூர்மையானது ஸ்தாபனங்களின் வடிவுகளில் இருக்கின்றது. 498 பிதாவின் வார்த்தையிலான விசுவாசத்தில்தான், இயேசுவை சாத்தான் சோதிக்க முற்பாட்டான். அவன் என்ன செய்தான் என்பது இதோ உள்ளது. அவன் பூமியிலுள்ள தன்னுடைய பெரிய, மதசம்பந்தமான ஸ்தாபனங்களை அவருக்குக் காண்பிக்க முற்பட்டான். ஆனால் அவனால் அவரை நயங்காட்டி சோதிக்க முடியவில்லை. “இங்கே வந்து என்னுடைய ஸ்தாபனத்தில் சேர்ந்துக் கொள்ளுங்கள். நான் இந்த ஸ்தாபனங்களுக்கெல்லாம் உங்களை தலைமை பேராயராக உயர்த்துவேன்” என்றான்.
195499 இயேசு, “எழுதியிருக்கிறதே…” என்று கூறினார். ஆம், ஐயா. சாத்தானால் அவரைச் சோதிக்க முடியவில்லை. முடியாது, ஐயா. அவர் இந்த காரியத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவராவார். ஆனால், இயேசு வார்த்தையாயிருந்தார். அவர் வார்த்தையாயிருந்தார் என்று, தம்மைக்குறித்து தம்முடைய விசுவாசத்தில் அறிந்திருந்தார். 500 மோசேயைப் போல, ஏன், தான் யார் என்பதை மோசே அறிந்திருந்தான். தான் தேவனுடைய ஊழியக்காரனென்று மோசே அறிந்திருந்தான், தான் தேவனால் அழைக்கப்பட்டவன் என்பதையும் அறிந்திருந்தான். அவன் தான் என்ன செய்யப் போவதாயிருந்தான் என்பதையும் அறிந்திருந்தான். அதன் காரணமாகத்தான் சாத்தான் என்ன கூறினாலும் அதற்கு அவன் பயப்படவேயில்லை. சாத்தான் அவனைச் சோதிக்க முயன்றான், அதிலிருந்து அவனை பயமுறுத்த முயன்றான். ஆனால், இல்லை. மோசே எங்கே நின்று கொண்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான். அது சரியே. இப்பொழுது, நான் சற்று வேகமாக முடிக்க வேண்டும். நான் அநேக பக்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக படிக்கமுடியாமல், இங்கே திருப்பிக்கொண்டே இருக்கின்றேன்.
196501 பவுல். இங்கே நான் முடிக்கும் முன்பாக, ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். பவுல் தன்னுடைய கால மணவாட்டியின் பாகத்தினருக்கு இதைத் தெளிவாகக் கூறினான். பவுல் மணவாட்டியின் பாகத்தினரை அளிப்பான். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கடைசி நாட்களில் இயேசு கிறிஸ்துவுக்கு பவுல் அளிக்கவிருக்கின்ற தன்னுடைய மணவாட்டியின் பாகத்தினருக்கு, அறிவுக்கூர்மையை இல்லை விசுவாசத்தைக் குறித்து அவன் தெளிவுபடுத்தினான். 502 அதை நாம் சற்று வாசிப்போமாக. நீங்கள் முதலாம் கொரிந்தியர், 4-வது அதிகாரத்திற்குத் திருப்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன். முதலாம் கொரிந்தியர், 4-ம் அதிகாரத்தை, நாம் வாசிப்போம். கர்த்தருக்குச் சித்தமானால், நாம் அதை வாசித்து இன்னும் ஒரு—ஒரு சில நிமிடங்களில் நாம் முடிக்கப்போகிறோம். முதலாம் கொரிந்தியர், 4-வது அதிகாரம், 18-லிருந்து 20-வரை நான் வாசிக்க விரும்புகிறேன். சரி. இதோ நாம் வாசிப்போமாக. நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச்—என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள். ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன். 503 உங்களுக்குத் தெரியுமா, அது…இப்பொழுது, ரோம சபையானது உள்ளே வர ஆரம்பித்தது, அங்கே சரியாக உள்ளே, வர ஆரம்பித்தது. புரிகிறதா? அவர் அறிந்திருந்தார்…“அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஏனென்றால் அவர்கள் நம்முடையவர் களாயிருக்கவில்லை” என்று வேதம் கூறியிருப்பது, உங்களுக்குத் தெரியும், நீங்கள் பாருங்கள். அது உண்மை. தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.
197504 பாருங்கள், “பேச்சிலே அல்ல.” “பாருங்கள், நான், நான் கல்வியறிவு பெற்றவன், சகோதரனே. நீ கொண்டிருப்பதைக் காட்டிலும் நான் அதிகக் கல்வியறிவு கொண்டிருக்கிறேன். நான்—நான் ஒரு சபைக் குரு. நான்…” என்பார்கள். அதற்கும் வார்த்தைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. நீ ஒரு “பன்றி” அல்லது மற்றோதோ ஒன்று என்பதையே அது பொருட்படுத்துகிறது; பாருங்கள், பாருங்கள், அதனுடன் எந்த ஒரு தொடர்பும் கொள்ளாதீர்கள். புரிகிறதா? பிசாசும் கூட, அதிகமான அறிவைக் கொண்டிருந்தான். புரிகிறதா? சரி. புரிகிறதா? தேவனுடைய இராஜ்யம் பேச்சி…அல்ல, பெலத்…உண்டாயிருக்கிறது. புரிகிறதா? அப்படியானால் உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வர வேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ ?
198505 இப்பொழுது, 2-ம் அதிகாரம். ஆகையால், நாம் முடிக்கும் முன்னர், ஒரு நிமிடத்தில், நான் இதை முடிக்க விரும்புகிறேன். 2-ம் அதிகாரம்; அந்த பக்கத்திற்கு திருப்புங்கள். இங்கே 1-லிருந்து நாம் துவங்குவோம். இப்பொழுது, பவுல், இப்பொழுது மணவாட்டிக்கு என்ன கூறிக்கொண்டிருக்கின்றான் என்பதைப் பாருங்கள். மணவாட்டியின் இந்த பகுதியினரை கிறிஸ்துவிடம் அவன் அளிக்கப் போகின்றான், அவர்கள் இதை அறிந்துகொள்ள வேண்டுமென்று அவன் விரும்புகிறான். இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், பவுல் ஒருவிதமான அறிவை கொண்டிருந்திருப்பான். அவன் அறிவாளி, அவன் கொண்டிருந்ததை, ஆனால் அவன் “அதை மறக்க வேண்டியவனாக” இருந்தான் என்று அவன் கூறினான். அவன் எல்லாவிதமான பட்டங்களையும் கல்வியறிவையும் கொண்டிருந்தான், ஆனால் இப்பொழுது, கவனியுங்கள், கிறிஸ்துவை அறிந்துகொள்ள, அவன் அதை மறக்க வேண்டியதாயிருந்தது. சகோதரரே நான் உங்களிடத்தில் வருகிறபோது, வந்தபோது, சிறந்த வசனிப்போடாவது…ஞானத்தோடாவது வருகிறதில்லை. புரிகிறதா? நான் அறிவுக் கூர்மையோடு, தேவனைப்பற்றிய சாட்சியை அறிவிக்கிறவனாக வரவில்லை.
199506 “நான் முனைவர். இன்னார்-மற்றும்-இன்னார் ஆவேன். எனக்கு எல்லாம் உண்டு, நான்… இன்ன-மற்றும்-இன்னது, எங்களுக்கு வேதாகம கருத்தரங்குகளில் கற்பிக்கப்பட்டுள்ளதே”? இல்லை, இல்லை. பவுல், “நான் அதைப் போன்ற, அறிவுக்கூர்மையோடு, உங்களிடத்தில் வரவில்லை” என்று கூறினான். இப்பொழுது, என்ன… என்னுடைய பாடப் பொருள் என்ன? விசுவாசமும் அதற்கெதிரான அறிவுக்கூர்மையும். புரிகிறதா? 507 பவுல், “நான் ஞானத்தோடு உங்களிடம் நான் வரவில்லை,” என்றும், “தேவனைப் பற்றிய ஒரு சாட்சியை ஞானத்தோடு உங்களிடத்தில் அறிவிக்கிறவனாக வரவில்லை, ‘இப்பொழுது இங்கே பார். நான் உங்களுக்குக் கூறுவேன். அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது என்று வேதாகம கருத்தரங்கில் நாங்கள் கற்றுள்ளோம். இந்தக் காரியங்களின் அர்த்தம் உண்மையாகவே இதைப் பொருட்படுத்தவில்லை என்று வேதாகம கருத்தரங்கில் நாங்கள் படிக்கிறோம்’” என்று கூறுகிறார்கள். அவன், “சகோதரரே, அவ்விதமாக நான் வரவில்லை” என்றான். இப்பொழுது அவன் என்ன கூறினான்? இயேசு…சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். (ஆயின்) அல்லாமலும் நான் பலவீனத்தோடும், பயத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன், மிகுந்த உபவத்திரவத்தோடும் நான் உங்களோடு இருந்தேன். என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல்,… 508 ஹு? பூத் க்ளிப்பார்ன், “ஹலோ?” என்று கூறினதுதுபோல. அப்பொழுது யார் தட்டினார்கள்? நான் வேதாகமக் கல்லூரி அறிவைக்கொண்டு நான் உங்களிடத்தில் வரவில்லை, ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருந்தது. உங்களுடைய (வி-சு-வா-ச-ம்) விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல. தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு. 509 [சகோதரன் பிரான்ஹாம் விசில் போன்று ஊதுகிறார்—ஆசி.] ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? உங்கள் விசுவாசம் ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் ஞானத்திலே நிற்காமல், தேவனுடைய பெலத்திலே நிற்கும்படிக்கு. 510 தேவனுடைய பெலத்திலுள்ள விசுவாசமே! உங்களுடைய நம்பிக்கைகள் வேறெதன் மேலும் இல்லாமல்…
200511 ஏதேன் முதற்கொண்டு இந்த இரண்டு மூலாதார சக்திகளும் யுத்தம் செய்து வந்தன; தேவனுடைய விசுவாசமும் அதற்கெதிரான அறிவுக்கூர்மையும். அது ஒன்றுகலவாதென்று, எல்லாக் காலங்களிலும், தேவன் நிரூபித்துள்ளார். அது வளரத்தக்கதாக, வேறு பிரிக்கப்பட வேண்டும். 512 இப்பொழுது, ஒவ்வொன்றைக் குறித்தும், நான் இங்கே எழுதி வைத்திருக்கின்ற—ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை, ஒரு சில காரியங்களை, சீக்கிரமாக, நான் கூறட்டும். 513 ஏசாவும் யாக்கோபும் ஒரு பரிபூரண மாதிரியாயிருந்தனர்: அவரகள் இருவரும், பக்தியானவர்கள்; அவரகள் இருவரும், இரட்டைப்பிறவிகள். 514 ஏசா மதசம்பந்தமான ஒன்றுக்கு அடையாளமாக இருந்தான். அவன் சாமர்த்தியசாலியான ஒரு மனிதனாய் இருந்தான். அவன் நல்லொழுக்கம் மற்றும் அதைப் போன்ற காரியங்களை உடைய—உடையவனாயிருந்தான், ஆனால் அந்த சேஷ்டபுத்திரபாகத்திற்கு அவனுடைய காரியமானது எந்தவிதத்திலும் உதவவில்லை. 515 யாக்கோபு என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதில் அவன் அக்கறைகொள்ளவில்லை, எனவே அவன் சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற்றுக்கொண்டான். அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தவரையிலும், அவர்களால் ஒன்றும் பிறப்பிக்க முடியவில்லை. அது உண்மைதானே? ஒருவன் மற்றொருவனுக்கு எதிராக இருந்தான். 516 நீங்கள் இதைக் கிரகித்துக்கொண்டீர்களா? ஆமென். “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப், பிரிந்து போங்கள்,” என்று தேவன் சொல்லுகிறார். “அவர்களுடைய அசுத்தமானதைத் தொடாதிருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.” புரிகிறதா? 517 தேவன் யாக்கோபை ஆசீர்வதிக்கும் முன்னர், அவன் தன்னுடைய ஸ்தாபன சகோதரனிடமிருந்து பிரிந்து வர வேண்டியவனாக இருந்தான். தேவன் ஆபிரகாமிடமும் அதேக் காரியத்தையேக் கூறினார். இஸ்ரவேல்; மற்றும் மோவாப். 518 நானூறு இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் மிகாயாவிற்கு முன்னர் நின்றனர். மிகாயாவும் அவர்களிடமிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு சென்று, கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டு, அதனோடே திரும்பி வந்தான். 519 மோசே, மற்றும் கோராகு, அதேக் காரியம், இருவரும் கலக்கவில்லை. அவர்கள் பிரிய வேண்டியதாயிற்று. அது உண்மை தானே?
201520 ஆபிரகாம்; மற்றும் லோத்து. லோத்து ஒரு பக்திவாய்ந்த மனிதனாயிருந்தான், சம்பிரதாயமான சபைக்கு அடையாளமாக இருந்தான். ஆனால் லோத்து ஆபிரகாமோடு இருந்த வரையிலும், அவனுடன் அநேக வருடங்கள் பிரயாணம் செய்தான். ஆனால் அவரால்…அவன் தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து ஸ்தாபன சபையாகிய, லோத்தினினிடமிருந்து தன்னை பிரித்துக்கொள்ளும் வரையிலும் அவரால் அவனை ஆசீர்வதிக்க முடியவில்லை. அதன்பின்னர், ஆபிரகாம் தன்னைப் பிரித்துக்கொண்டு வெளியே வந்து, தனியாக நடந்தவுடனே, தேவன், “இப்பொழுது, ஆபிரகாமே, எழுந்து நில், கிழக்கேயும், மேற்கேயும், வடக்கேயும், தெற்கேயும் நோக்கிப்பார்.” என்றார். “அவையாவும் உன்னுடையதாகும்” என்று கூறினார். ஆனால் அவன் தன்னை முற்றிலும் பிரித்துக்கொள்ளும் வரைக்கும் அவர் அதைச் செய்யவில்லை. அது முற்றிலும் சரியே.
202521 சேத்தை காயீனிடத்திலிருந்து தேவன் வேறுபிரிக்கும் வரையிலும் அவரால் சேத்தை ஆசீர்வதிக்க முடியவில்லை. அவர் காயீன்மேல் அடையாளத்தைப் போட்டு அவனை நோத் தேசத்திற்கு அனுப்பினார். காயீனிலிருந்து, அவனுடைய சாமர்த்திய அறிவுக்கூர்மையினால், விஞ்ஞானிகளும் இன்னும் மற்றவர்களுமாகி, அந்தவிதமான விளைச்சலில் வளர்ந்தனர். சேத், தன்னுடைய நீதியிலும், அன்பிலும், தேவனுடைய வார்த்தையிலும் உள்ள விசுவாசத்திலும், கடைசி நாட்களில் எச்சரிக்கையை அளித்த ஒரு தீர்க்கதரிசியை பிறப்பித்த ஒரு பயிராக அவன் வளர்ந்தான். அது உண்மை, அது ஒவ்வொரு விசுவாசியையும் காத்தது. அறிவுக்கூர்மையோ அவர்களில் ஒவ்வொருவரையும் அழித்துப் போட்டது. அவர்கள், ஒவ்வொருவரும், மரித்தனர். ஒவ்வொருவரும், உளவியலில் எத்தனைப் பட்டங்களை அவர்கள் வைத்திருந்தாலும், மற்றெந்தக் காரியமும், அது ஒன்றுக்கும் உதவவில்லை, அவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளில் மாண்டு போயினர்.
203522 தேவனுடைய ஆவியினாலே மறுபடியும் பிறந்து, அதின் ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசித்து அதன் பேரில் நிற்கின்றதைத் தவிர, உண்மைக்குப் புறம்பாக இருக்கும் ஒவ்வொன்றும், தேவனுடைய நியாயத்தீர்ப்புகளில் மாண்டு போகும். வீதியில் உடலை நெளித்துக்கொண்டும், மற்ற எல்லாவற்றையும் செய்து கொண்டும், அந்தவிதமாக செல்கின்ற இவர்களை நீங்கள் காணும்போது, இவர்கள் ஒன்றுமல்லவென்றும் இவர்கள் நியாயத்தீர்ப்பில் எரிக்கப்படுவதற்கென தேவைப்படுகின்ற பொருட்களே என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அது அழுகிப்போகும். அது அழுகிப்போக வேண்டும். அது கட்டப்படும். பெண்களே, விழித்தெழும்புங்கள்.
204523 என்னிடத்தில் ஒரு சிறு சாட்சி உண்டு, ஆனால் அதைச் சொல்வதற்கு நேரமில்லை, இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்னர், கலிபோர்னியாவில் உள்ள, ஒரு சிறிய பெண்மணியைக் குறித்த ஒன்று. கூடாரத்துக்குள்ளாக அழைக்கப்படும்படிக்கு எதிர்பார்த்து, நான் சாலையில் காரோட்டிக் கொண்டிருந்தேன், அங்கே, ஒரு சிறு பெண்…சென்று கொண்டிருந்தாள். அது—அது அவமானகரமாக இருந்தது. ஒரு அழகான குட்டிப் பெண் என்பதில், சந்தேகமே இல்லை. அவள் தன்னுடைய உடலை நெளித்து குலுக்கிக்கொண்டு, கால்நடைகளை மேய்ப்பவனின் ஒரு சிறு தொப்பியை அணிந்து, காலணிகளை அணிந்து, பட்டுக் குஞ்சங்கள்போல தொங்கிக் கொண்டிருக்க, சாலையில் நெளித்து குலுக்கி நடந்துக் கொண்டிருந்தாள். அவளைக் கடந்து சென்ற ஒவ்வொரு மனிதனும் அவளை நோக்கி வண்டியின் ஒலியை எழுப்பி, கையை அசைத்துச் சென்றான். 524 அப்பொழுது, “நான் காரை நிறுத்தி, நான் ஒரு பிரசங்கியாயில்லாமலிருந்தால், மேடா அப்பொழுது என்னோடு இருந்தாள், நான் இவ்வாறு கூறலாம்” என்று நான் நினைத்தேன். ‘சகோதரியே, இங்கே பார். நான் உனக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீ அழகாக இருக்கலாம். நீ இதை நிரூபிக்க முடியும். புரிகிறதா? உன்னால் கார்களில் வேகமாக வருபவர்கள் வேகத்தை குறைத்து வழுக்கிச் செல்லவும், இங்குமங்கும் திரும்பும்படிக்குச் செய்ய முடியும், பையன்கள் நரிகளைப் போல விசில் அடிக்க வைக்கவும், மற்றவைகளையும் நீ செய்யலாம். ஆனால் இந்நாட்களில் ஒன்றிலே, அந்த சிறு உடலிலே, அதற்குள்ளே வண்டுகளும் புழுக்களும் ஊர்ந்து சென்று அதை அரித்துவிடும். ஒருக்கால் இப்பொழுதிலிருந்து ஆறு வாரங்களில் அந்த உன் சரீரம் அந்த நிலையில், அழுகிக், கல்லறைக்குள்ளாக இருக்கும். ஆனால் உனக்குள் இருந்து, அந்த இச்சையின் பேரில் போஷித்துக்கொண்டிருக்கிற, உன்னுடைய ஆத்துமாவானது—வருகின்ற காலங்கள் முழுவதுமாக பிசாசின் நரகத்திலே இருக்கும்’” என்று கூறவிருந்தேன்.
205525 மோசே; மற்றும் கோராகு. லோத்து; ஆபிரகாம். யோவான் ஸ்நானன்; மற்றும் ஆயக்காரரும். இயேசுவும்; தம்முடைய நாட்களின் ஸ்தாபன சபைகளும். புரிகிறதா? விசுவாசம்; அறிவுக்கூர்மை. சரி, அந்த ஆசாரியர்கள் எழுந்து நின்று, “நாங்கள்…” என்பார்கள். அவர், “ஆம்” என்பார். “நாங்கள் இதை செய்தோம். ஓ, எங்கள் பிதாவிற்கு, நாங்கள் இன்ன-மற்றும்-இன்னதைச் செய்தோம்.” 526 “ஆம். நீங்கள், உங்கள் பாரம்பரியங்களினாலே, தேவனுடைய பிரமாணங்களை அவமாக்கி வருகிறீர்களே, மனிதரின் பிரமாணங்களை போதகமாக போதித்து வருகிறீர்களே” என்றார். 527 அதற்கு அவர்கள், “பார், எங்களுக்குப் போதனை செய்ய நீ யார்? எந்த பள்ளிக்கூடத்திலிருந்து நீ வருகிறாய்?” என்றனர். 528 அவர், “நான் செய்கிற கிரியைகள், என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கின்றன. நான் மேசியாவின் கிரியைகளைச் செய்யாதிருந்தால், என்னை விசுவாசிக்க வேண்டாம். மேலும் நான் மேசியாவின் கிரியைகளைச் செய்வேனானால், அப்பொழுது நீங்கள் அறிவீர்கள், நீங்கள் அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்.” “அவைகள் என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கின்றன. நான் அந்தக் கிரியைகளைச் செய்யாவிடில், அதை நீங்கள் விசுவாசிக்க வேண்டாம்” என்றார். 529 அங்கே அவர் இருந்தபோது, அந்த ஸ்தாபனங்கள் தங்களுடைய அறிவுக்கூர்மையினால் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. இயேசுவோ விசுவாசத்தைக் கொண்டிருந்தார். எதில் விசுவாசம்? அவர் என்னவாயிருந்தார்: தேவனுடய குமாரன். புரிகிறதா? சரி.
206530 பரிசுத்த மார்ட்டீன்; சீர்திருத்தத்தின் நாட்களில், ரோம சபையினரோடு இருந்தார். ஆனால் நான் பொருட்படுத்திக் கூறுவது என்னவென்றால், அவர்கள், அவர்கள் அஞ்ஞான காரியத்துக்குள்ளாக செல்வதற்கு முன்னர், ரோமாபுரியர் ரோமன் சபைக்கு வரத் துவங்கினர். மார்ட்டீன் அங்கே வெளியே நின்று அந்த கத்தோலிக்க சபையின் கோட்பாட்டிற்கு விரோதமாகப் போராடினார்; அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்தார். மேலும்—மேலும் அவருடைய சபைகள், அவர்கள் எல்லோரும், அந்நிய பாஷைகளில் பேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, மகத்தான காரியங்களைச் செய்தனர். தேவனுடைய வல்லமை அவருடன் இருந்தது. அவர் மரித்தோரை எழுப்பி வியாதியஸ்தரை சுகப்படுத்தி, மற்ற காரியங்களையும் செய்தார். அப்பொழுது அங்கே இருந்த அந்த கத்தோலிக்க சபையானது, அவரை எதிர்த்து, அவருக்கு எல்லாவற்றையும் செய்து, அவரை சுட்டெரிக்க முயற்சித்தது. அது என்னவாயிருந்தது? அறிவுக்கூர்மை; விசுவாசம். இப்பொழுதும் அதேதான்.
207531 அதைக் குறித்த எல்லாவற்றைக்காட்டிலும் மேலான ஒன்றை நாம் கேட்போமாக. சகரியா 4:6-ல் இங்கே, நான் முடிக்கப்போகின்றேன். வேதம், “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று, கர்த்தர் சொல்லுகிறார். அறிவுக் கூர்மையினாலும் அல்ல, அறிவினால் அல்ல, ஸ்தாபனத்தால் அல்ல, ஆனால் என்னுடைய ஆவியைக் கொண்டு நான் (என்ன?) என்னுடைய வார்த்தையை நான் ஊக்கமூட்டுவேன்” என்று கூறியுள்ளது. சீஷர்கள் அதை தங்களுக்குள்ளாக விதைத்துக் கொண்டனர், அப்பொழுது பரிசுத்த ஆவி வார்த்தையை ஊக்கப்படுத்த வந்தது. புரிகிறதா? “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, அறிவுக்கூர்மையினால் அல்ல, புரிந்து கொள்ளுதலினால் அல்ல, இதனால் அல்ல, அதனால் அல்ல, ஆனால் என்னுடைய ஆவியினால் என்னுடைய வார்த்தையை ஊக்கமூட்டுவேன். என்னுடைய ஆவியினால்தான் என்று, கர்த்தர் சொல்லுகிறார்.” விசுவாச வார்த்தையின் தண்ணீர்தான் தேவனுடைய வார்த்தையை ஊக்கமூட்டி அதை கிரியை செய்யும்படிக்குச் செய்யும்.
208532 எது ஜெயிக்கும்? இப்பொழுது, உண்மையாகவே, அறிவுக்கூர்மைதான் கிரியைச் செய்யப்போகிறது, போலத் தோன்றும். ஆனால், அது கிரியைச் செய்யாது. அது கிரியைச் செய்யாது. 533 தேவனுடைய வார்த்தையை முழுவதுமாக விசுவாசிக்கின்ற அந்தச் சிறு சபையானது, சரியாக இப்பொழுது, நிச்சயமாக சிறுபான்மையானதாக, அது போலவே—இருக்கின்றது. ஆனால் அதைக்குறித்து கவலைக் கொள்ளாதீர்கள். வேதம், “பயப்படாதே, சிறுமந்தையே. உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா சித்தமுள்ளவராயிருக்கிறார்” என்று கூறியுள்ளது. ஹு-ஹூ. அது சரி. புரிகிறதா? பயப்படாதீர்கள். விசுவாசத்தில் அப்படியே நிலைத்திருங்கள். வார்த்தையோடு அப்படியே சரியாக தரித்து நில்லுங்கள். வார்த்தையை விட்டுவிடாதீர்கள். வார்த்தையோடு தரித்து நில்லுங்கள். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! நீங்கள் அவருக்குச் சேவை செய்வீர்களா? ஆமென்! நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? ஆமென்! ஆமென்! ஆமென்! நாம் இதைப் பாடுவோமாக. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்!” என்று பாடுகின்றனர்.—ஆசி.] நீங்கள் அவருக்குச் சேவை செய்வீர்களா? ஆமென்! நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? ஆமென்! ஆமென்! ஆமென்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! அவருக்குச் சேவை செய்வீர்களா? ஆமென்! நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? ஆமென்! ஆமென்! ஆமென்! 534 ஓ, நான் அவரை நேசிக்கின்றேன்! நீங்கள் நேசிக்கவில்லையா? அது என்ன? விசுவாசத்தினாலே, அறிவுக்கூர்மையினால் அல்ல! “விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுகிறோம்.” அது சரிதானே? “அறிவுக்கூர்மையினால் அல்ல, அறிவினால் அல்ல; என்னுடைய ஆவியினால் ஆகும் என்று, கர்த்தர் சொல்லுகிறார்.”
209535 இப்பொழுது இவைகளை சபைக்குள்ளாக ஆழமாக வைப்போமாக. மின்சாரத்தைச் சீராக எடுத்துச் செல்லும் அந்த மின்ஊடு கடத்தியாகிய, செம்புக் கம்பியை. இப்பொழுது, அலுமினியக் கம்பியானது மின்சாரத்தைக் கொண்டு செல்கின்ற ஒரு சரியான கருவியல்ல. புரிகிறதா? அது அல்ல. இல்லை. ஒரு ரப்பர் குழாய் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் ஒன்றல்ல; அது மின்சார கம்பியைச் சுற்றி சுற்றப்படுகின்ற ஒன்றாகும். மரக்கட்டையும் மின்சாரத்தைச் சுற்றி பாதுகாக்க வைக்கப்படுகின்றதாகும். நமக்கு அப்படிப்பட்ட சுற்றி ஒட்ட வைக்கப்படுகின்ற கருவிகள் வேண்டாம். அது இப்பொழுது தேவைக்கு அதிகமாக நம்மிடையே உள்ளன, அது சக்தியை தனிமைப்படுத்திவிடுகின்றது. ஆகவே நமக்கு—நமக்கு தேவை…நமக்கு தேவையானதெல்லாம் மின் ஊடு கடத்திகள், தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும் மறுபடியும் பிறந்த ஆண்களும் பெண்களும் மாத்திரமே.
210536 இப்பொழுது, மின் ஆக்கப் பொறியானது கூறியுள்ளது என்ன? “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவை எதைக் கேட்பீர்களோ, நான் அதைச் செய்வன்” என்பதே. இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இணைக்கப்படுவதேயாகும். ஆமென்! 537 அது சரிதானே? இணைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அதுவே, சொருகப்பட்ட பிறகு மின்சாரம் சரியாக கம்பியினூடாக பாய்ந்து வர ஆரம்பிக்கும். 538 என்ன சம்பவிக்கிறது? வார்த்தை வளர ஆரம்பிக்கின்றது. “அவன் நீர்கால்களண்டையில் நடப்பட்ட மரத்தைப் போலிருப்பான்; அவனுடைய இலைகள் உதிராது; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். துன்மார்க்கனோ அப்படியிருப்பதில்லை.” 539 “துன்மார்க்கனோ அப்படியிருப்பதில்லை.” இப்பொழுது, இப்பொழுது, “பாவி,” என்று கூறாதீர்கள். “துன்மார்க்கன்” பாருங்கள், தான் தேவபக்தியுள்ளவன் என்று கூறிக்கொண்டு, துன்மார்க்கனாக இருக்கின்ற ஒருவனாக அது உள்ளது, நீங்கள் பாருங்கள். அது சரி. “துன்மார்க்கன் அவ்வாறு இருக்கமாட்டான். அவர்கள் நீதிமான்களோடே நியாயத்தீர்ப்பில் நிற்க முடியாது.” இல்லை ஐயா. அவர்கள் நிச்சயமாக நிற்க முடியாது.
211540 ஆகவே, வேளையானது வந்திருக்கின்றது. விதையானது விதைக்கப்பட்டாயிற்று, முன்குறிக்கப்பட்டவர்கள். “முன்குறிக்கப்பட்டவர்கள்” மாத்திரமே அங்கே இருப்பர். நான் இப்பொழுது, வெளிப்படுத்தல் 12, மற்றும் 13-ஐ எடுத்து நிரூபிக்க முடியும். வேதம், “பூமியின் மேல் வருகின்ற இந்த அந்திக்கிறிஸ்து எல்லாரையும் வஞ்சிப்பான்,” (எல்லோரையும்), “இந்த ஸ்தாபனங்கள் மற்றும் அவன் கோட்பாடுகளில் இருக்கின்ற பூமியின் குடிகள் எல்லோரையும் அவன் மோசம் போக்குவான். பூமியின்மேல் இருக்கின்ற எல்லோரையும், அவர்கள் ஒவ்வொருவரையும், மோசம் போக்குவான், உலகத் தோற்றத்திற்கு முன் முன்குறிக்கப்பட்டவர்களைத் தவிர.” ஆகவே, சகோதரனே, அதைக் குறித்து உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது. “ஆமென்” என்று மாத்திரமே கூச்சலிடு. ஓ, என்னே! நான் அதை நேசிக்கின்றேன். ஆம், ஐயா. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! நீங்கள் அவருக்குச் சேவை செய்வீர்களா? ஆமென்! நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? ஆமென்! ஆமென்! ஆமென்! 541 நீங்கள் எல்லோரும், இப்பாடலைப் பாடி சற்று பயிற்சி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு அந்த பாடல் மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்குமல்லவா? எங்களுடைய ஃபீனிக்ஸ் கூட்டங்களில் பாடப்பட்ட பாடலாகும். ஓ! நான் அதை நேசிக்கின்றேன். நான் அதை நேசிக்கின்றேன். அதை நாம் மறுபடியும் பாடுவோமாக. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! நீங்கள் அவருக்குச் சேவை செய்வீர்களா? ஆமென்! நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? ஆமென்! ஆமென்! ஆமென்!
212542 பாருங்கள், நீங்கள் தொடர்ந்து பாடிக்கொண்டேயிருக்கலாம், உங்களுக்குத் தெரியும். “நீங்கள் அவரை ஆராதிப்பீர்களா?” அவர்கள் எல்லோரும் தொடர்ந்து, பாடிக்கொண்டே இருக்கட்டும். என்னே! அங்கே ஃபீனிக்ஸில் நாங்கள் பாட ஆரம்பித்தோம்; நாங்கள் அந்த இடத்தையே அதிர வைத்துவிட்டோம். ஆம், ஐயா, “ஆமென்! ஆமென்! ஆமென்!” இந்தக் காலை நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்களா? ஆமென்! திருப்பானை இயக்குங்கள். ஆமென்! நீங்கள் மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டீர்கள். ஆமென்! ஆமென்! ஆமென்! அது இப்பொழுது வளரும். ஆமென்! கனி கொடுக்கும். ஆமென்! நீங்கள் அதைக் காட்டுவீர்கள். ஆமென்! ஆமென! ஆமென்! 543 ஓ, இது அற்புதமானதல்லவா? ஆமென். இது மிகவும் அற்புதமானது. இவ்வளவு நேரமாக, உங்கள் எல்லோரையும் இங்கே இருக்க வைத்ததற்கு மன்னிக்கவும், ஆனால் நான் ஒரு குதூகல கொண்டாட்டமான, ஒரு அற்புதமான தருணத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். சரி. அடுத்த ஞாயிறு, இப்பொழுது, சுற்றுமுற்றுமுள்ள ஒவ்வொருவரும்…
213544 இப்பொழுது, இப்பொழுது நான் சகோதரன் லிட்டல் பீல்டின் இடத்திற்கு, சிறு வார்த்தையை பரப்புவதற்கு செல்கின்றேன், அநேகமாக இங்கே நாம் பார்த்த வார்த்தையின் சிலவற்றை எடுத்து, அந்த தேவனுடைய சபையாகிய, அவர்களிடம் தூவுவேன். அநேகமாக இங்கே நான் பேசின காரியத்தின் பேரில் சிலவற்றை அங்கே நான் பகிர்ந்து கொள்வேன். நிச்சயமாகவே, நீங்களும் அங்கே வரவேற்கப்படுகிறீர்கள். ஆனால் ஆயிரத்து ஐநூறு பேர் உட்காரக்கூடிய, ஒரு சிறிய சபையை அவர்கள் உடையவர்களாயிருக்கின்றனர். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், நான் அச்சபையைப் பிரதிஷ்டை செய்தேன். ஆகவே அங்கு இடமானது நெருக்கடியாகிவிடப்போகிறது. ஆனால் நான் வருவதாக சகோதரன் லிட்டில் பீல்டுக்கு வாக்கு கொடுத்திருந்தேன். அவர் ஒரு விலையேறப் பெற்ற சகோதரன். தன்னால் முடிந்த வரைக்கும் ஒரு மனிதன் தன்னுடைய வாக்குறுதியை காத்துக்கொள்கிறான். கர்த்தருக்குச் சித்தமானால், நான் அங்கு செல்வேன். 545 இங்கே கூடாரத்தில் சபை ஆராதனை இருக்கும். இங்கே கூடாரத்தில் இருக்கும் மக்களாகிய நீங்களும், மற்றும் முடிந்தளவு, சுற்றிலுமுள்ளவர்களும் வரலாம். முன்னதாகவே வரலாம். 546 பிறகு, வருகின்ற அடுத்த ஞாயிறன்று, சகோதரன் ரோவுடன் சகோதரன் ஆர்கன்பிரைட்டும் இங்கே இருப்பார் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். நிச்சயமாக சகோதரன் ரோவ் பேசுவதை நீங்கள் கேட்டு மகிழ்வீர்கள். [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] சரி. 547 இப்பொழுது நாம் ஆராதனையை சகோதரன் நெவிலிடம் ஒப்படைத்து, அவர் நமக்கு இப்பொழுது என்ன கூறப்போகின்றார் என்று பார்ப்போமாக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.