யேகோவாயீரே 1

62-0705

நம சறற நரம நனற வணணமக ஜபததககக நமமடய தலகள வணஙகவமக. நம நமமடய தலகள வணஙகயரககயல, இனறரவ எததன பர ஜபததல நனவ கரபபட வரமபகறரகள எனறம, தவன உஙகளககக சயய வணடமனற உஙகள இரதயததல ஏதவதனற நஙகள வததரபபரகளனல உஙகள கரஙகள உயரததவரகள எனறம நன எதரபரககறன. நமத தலகளயம நமத இரதயஙகளயம அவரகக மனனல நம வணஙகயரககயல இபபழத கரததர இநத வணணபபஙகள அரளவ

யேகோவாயீரே 1

62-0705கிராஸ் வேலி கலி1041962-07-05

யேகோவாயீரே 1

62-0705கிராஸ் வேலி கலி1041962-07-05

1 நாம் சற்று நேரம் நின்ற வண்ணமாக ஜெபத்துக்காக நம்முடைய தலைகளை வணங்குவோமாக. நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், இன்றிரவு எத்தனை பேர் ஜெபத்தில் நினைவு கூரப்பட விரும்புகிறீர்கள் என்றும், தேவன் உங்களுக்காக செய்ய வேண்டுமென்று உங்கள் இருதயத்தில் ஏதாவதொன்றை நீங்கள் வைத்திருப்பீர்களானால் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா என்றும் நான் எதிர்பார்க்கிறேன். நமது தலைகளையும் நமது இருதயங்களையும் அவருக்கு முன்னால் நாம் வணங்கியிருக்கையில் இப்பொழுது கர்த்தர் இந்த விண்ணப்பங்களை அருளுவாராக.

22 எங்கள் பரலோகப் பிதாவே, மறுபடியுமாக நாங்கள் மகத்தான தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் உமது கிருபாசனத்தை அணுகிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் கேட்பதற்கு நீர் செவி கொடுத்து உத்தரவு அருளுவீர் என்னும் உறுதியுடன் வரக்கூடிய தருணத்துக்காக நாங்கள உமக்கு நன்றி செலுத்துகிறோம். பிதாவே, எங்கள் பாவங்களை, அதாவது, எங்கள் அவிசுவாசத்தை, நீர் மன்னிக்குமாறு நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே, இன்றிரவு எங்களுக்கு விசுவாசத்தை, அபரிமிதமான விசுவாசத்தை தந்தருள வேண்டுமேன்று நாங்கள் ஜெபிக்கிறோம். அங்கே உயரத்தப்பட்ட ஒவ்வொரு கரத்துக்கும் பின்னால், இருதயத்தில் என்ன இருந்தது என்பதை நீர் அறிவீர். கர்த்தாவே, அவர்களுக்கு ஏதோ ஒன்று தேவையாயுள்ளது. அவர்கள் உம்மிடத்திலிருந்து ஒன்றை எதிர்பார்த்து, தங்கள் கரங்களை பயபக்தியோடு உயர்த்தினர். பரலோகப் பிதாவே, அது என்ன வாயிருப்பினும், அது ஜனங்களுக்கு அருளப்படவேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். 3 நேற்றும் மாலை எங்களை நீர் சந்தித்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றிரவு நீர் அளவில்லாத வல்லமையுடனும் கிருபையுடனும் எங்களிடம் திரும்பவந்து, எங்கள் இருதயத்தின் வாஞ்சையை எங்களுக்கு அருளவேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், ஏனென்றால் உண்மையில் உமது சித்தத்தை செய்வதும், உமது சித்தம் செய்யப்படுவதைவதைக் காண்பதுமே எங்கள் வாஞ்சையாயுள்ளது. வியாதியஸ்தர்களைக் குறித்தும் உமது சித்தம் என்னவென்பதை நாங்கள் அறிவோம், எங்களுடைய சுகமளித்தலுக்காத உமது முதுகில் தழும்புகளைப் பெற்றறீர், “அவருடைய தழும்புகளால் நாங்கள் குணமானோம்.” பிதாவே, உமது மகத்தான சித்தம் இன்றிரவே செய்யப்பட வேண்டும் என்றும்—என்றும், அதை விசுவாசிக்க அபரிமிதமான விசுவாசத்தை எங்களுக்களித்து, வியாதியாயுள்ள ஒவ்வொரு நபரும் சுகமடையவும், இழக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் அவர் நமது மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார் என்பதை நினைவுகூர வேண்டுமென்றும் நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, இதை அருள்வீராக. 4 அவர்களுக்காக இரத்தம் தோய்ந்த ஒரு—ஒரு பலி அங்குள்ள வரைக்கும், அவர்களுடைய பாவங்களை தேவனால் காணமுடியாது என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்களாக. ஆனால் அவர்கள் அதை பகிரங்கமாக அறிக்கையிடாமல், அதை ஏற்றுக்கொள்ளாமல், மறுபிறப்படையாமல் மரித்தால், தேவனுடைய இராஜியத்தில் பிரவேசிக்க அவர்களுக்கு ஒரு வழியும் இல்லை. ஒவ்வொரு நபரும் இரத்தத்தின் கீழ் வரக்கூடிய இரவாக இன்றிரவு அமைந்திருப்பதாக, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில். நாங்கள் உமக்குத் துதியை ஏறெடுப்போம். ஆமென்.

35 மீண்டுமாக இன்றிரவு இங்கு வந்து பேசும்படியாயிருப்பது மிகுந்த சிலாக்கியமாய் உள்ளது. கர்த்தருடைய சந்திப்பினால், நேற்று மாலை நமக்கு மகத்தான தருணம் உண்டாயிருந்தது. ஆனால் நான் உங்களை நீண்ட நேரம் பிடித்து வைத்துவிட்டேன். எப்படியும், என்னால் நேரத்தில் முடிக்க முடியவில்லை. 6 இன்று சிறிது அதிகமாகவே சூரிய வெப்பம் உள்ளது. நான்…என் சிறிய மகன் ஜோசப், நீச்சலுக்கு செல்ல உத்தரவு பெற என் பின்னால் வந்து கொண்டேயிருந்தான். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பின் பாகத்தில் ஒரு சிறு குளம் உள்ளது, அது அங்கே வேலியடைக்கப்பட்டுள்ளது, அவன், “அப்பா, வந்து பாருங்கள், என்னால் நீந்த முடியும்” என்றான். நான், “சரி” என்றேன். 7 இன்று காலை சில குறிப்புகள்…எழுதுவதற்கென, என் வேதாகமத்தை எடுத்துக்கொண்டு அங்கு சென்றேன். நான் படித்துக்கொண்டிருந்தபோது, அவன்…அவன் நீச்சல் கால்சட்டையை அணிந்து அங்கு வந்து, “அப்பா, என்னைப் பாருங்கள், என்னால் நீரில் குதித்து மூழ்க முடியுமே!” என்றான். பாருங்கள், ஒரு தவளை தண்ணிரில் குதிப்பதை நான் எப்போதாவது கண்டிருந்தால் எப்படியிருந்திருக்குமோ அப்படியிருந்ததே! அவன் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, அவனுடைய மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் தண்ணீர் வெளியே வந்தது. அவன், “நான் எப்படி நீந்தினேன்?” என்றான். நான், “நீ அருமையாக நீந்தினாய்” என்றேன்.

48 ஒரு முறை இதே போன்று என் தந்தையிடம் நான கூறினது என் நினைவுக்கு வந்தது. நாங்கள் ஆற்றிற்கு சென்று குளிக்கும் நாட்களுக்கு முன்பு, ஒரு சிறிய குளத்திற்கு, நாங்கள் அங்கிருந்த ஒரு குளத்திற்கு செல்வது வழக்கம், அதில் மிதந்துகொண்டிருந்த பச்சை நிற பாசியை நாங்கள் கிட்டத்தட்ட தள்ளிவிட வேண்டியதாயிருந்தது, நாங்கள்…அந்த குளத்தில் தண்ணீர் ஆறு அங்குல ஆழத்துக்கு மேல் கிடையாது. நான் என் தந்தையிடம், “என்னால் நீந்த முடியும்” என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். 9 எனவே அவர் ஒரு ஞாயிறு பிற்பகல் அங்கே வந்தார். அவர்கள் அங்கு ஒரு தற்காலிக மேடையை அமைத்திருந்தனர். நான் புதர்களுக்குப் பின்னால் சென்று என் உடைகளை அவிழ்த்தேன், அங்கு அவிழ்ப்பதற்கு என்ன இருந்தது; உடையிலுள்ள ஆணி போன்ற ஒன்றை இழுத்து விட வேண்டியதுதான், உங்களுக்குத் தெரியுமா. எத்தனை பேர் அப்படிப்பட்ட உடைகளை கண்டிருக்கிறீர்கள்? பரவாயில்லையே. அது ஒரு மேலாடை, அதற்கு நெகிழுந்தன்மையுள்ள நாடாக்கள் எதுவும் கிடையாது; ஒரு—ஒரு நூலும், ஒரு ஆணியும் மாத்திரமே இருக்கும், அந்த ஆணியை இழுத்து விட வேண்டியதுதான், அதன் பிறகு நீங்கள் அதை மாட்டிக்கொள்ளலாம். எனவே நான் இந்தப் பெட்டியின் மேலேறி, உங்களுக்குத் தெரியுமா, என் மூக்கைப் பிடித்துக் கொண்டு தண்ணீருக்குள் குதித்தேன், குளத்திலிருந்த சேறு கிட்டத்தட்ட இவ்வளவு உயரத்திற்குச் சிதறினது. என் தந்தை அங்கு உட்கார்ந்து கொண்டு என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நான், “எப்படி நான் நீந்துகிறேன்?” என்றேன். 10 அவர், “இங்கிருந்து போய், நீ குளி!” என்றார். அது நடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனே!

511 உங்களுக்குத் தெரியுமா, காலம் வேகமாக நம்மை விட்டு கடந்து செல்கிறது, அது செல்கிறதில்லையா? வேலைகளை செய்வதற்கு, நமக்கு இனி நேரமில்லை என்பதுபோல் தோன்றுகிறது. நேரம் யாருக்காகவும் காத்துக்கொண்டிருப்பதில்லை. எனவே நம்மால் முடியும்போதே நாம் வேலை செய்யவேண்டும், ஏனெனில் இந்த சந்ததி கடந்து போய், மற்றொரு சந்ததி தோன்றும் நேரம் வரவிருக்கிறது. மற்றோரு சந்ததி இருக்குமானால், உண்மையாகவே, என் இதயப் பூர்வமாக நான் இதைக் கூறுகிறேன், (அவர் எப்பொழுது வருவாரென்று எனக்குத் தெரியாது; நமக்கு யாருக்குமே அது தெரியாது), ஆனால், உண்மையாகவே, மற்றொரு சந்ததி இருக்காது என்று நான் நம்புகிறேன். கிறிஸ்து இந்த சந்ததியில் வருவாரென்று நான் விசுவாசிக்கிறேன். எந்த நேரத்தில் என்று எனக்குத் தெரியாது, இப்பொழுதோ, ஒருக்கால் இன்றிரவு வரலாம், அல்லது பத்து ஆண்டுகள் கழித்து வரலாம், அல்லது இருபது ஆண்டுகள் கழித்து வரலாம். ஆனால் இந்த சந்ததியில் வருவாரென்று நான் விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசித்துக்கொண்டிருக்கிறேன். அப்படி அவர் வராமற்போனால், எப்படியாவது, அவரைபோல நான் வாழ விரும்புகிறேன், ஏனெனில் இதுவே என் கடைசி நாளாக இருக்கக் கூடும், அல்லது உங்கள் கடைசி நாளாக இருக்கக்கூடும்.

612 அப்படியானால், ஞாபகம் கொள்ளுங்கள், அவர் வருவதற்கு முன்பு நாம் மரித்துப்போனால், மற்றவர்கள் மறுரூபப்படுவதற்கு முன்பு நாம் உயிரோடெழுந்து, இல்லை அவருடைய பிரசன்னத்தில் இருப்போம். “கர்த்தருடைய எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாகி, அவர்களோட கூட ஆகாயத்தில் எடுக்கப்பட்டு கர்த்தரை சந்திப்போம்.” உயிர்தெழுதலின் வரிசைக்கிரமத்தைப் பாருங்கள். பாருங்கள், நமக்கு அருமையானவர்களை நாம் காண ஆவல் கொண்டுள்ளோம் என்பதை தேவன் அறிவார். அவரைச் சந்திக்க நாம் முதலில் அங்கு செல்வோமானால், தாய் அல்லது தந்தை அல்லது மற்ற வர்கள் அங்குள்ளனரா என்று நாம் சுற்று முற்றும் தேடிப் பார்ப்போம். ஆனால் பரிசுத்த ஆவியான அவருடைய ஞானம், எப்படியென்று பார்த்தீர்களா? நாம் முதலில் ஒருவரையொருவர் சந்திக்கிறோம், அதன் பிறகு நாம் அங்கு சென்று ஆச்சரியமான கிருபை என்று பாடுகிறோம், அப்பொழுதே ஆராதனைக்கான ஒரு நேரம் வரும்போகிறது. நான் கேலித்தனமாக இப்பொழுது நடந்துகொள்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், என்னை அங்கு கவனியுங்கள்! நாம் அங்கு அடையும்போது, எனக்கும் நம் அனைவருக்கும் அது ஒரு அற்புதமான நேரமாயிருக்கப்போகிறது.

713 இப்பொழுது இன்றிரவு இங்கே நாம் ஆசீர்வதிக்கப்பட்ட பண்டைய வேதாகமத்திலிருந்து ஒரு பாகத்தைப் வாசிப்போமாக. நாம் ரோமர் 4-ம் அதிகாரத்துக்கு திருப்பி, ரோமர் புத்தகத்திலிருந்து ஒரு பாகத்தை வாசிப்போமாக. இன்றிரவு இரண்டு இடங்களை வாசிக்க விரும்புகிறேன், ஆதியாகமத்திலிருந்தும் ரோமர் நிருபத்திலிருந்துமே. இப்பொழுது ரோமர் 4-ம் அதிகாரம், 17-ம் வசனம். (அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி,) அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பிக்கிற , இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான். உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று எழுதப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். அவன் விசுவாசித்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப் போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத் துப்போனதை…எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவ னுக்காக மாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். அவர் நம்முடைய குற்றங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

814 ஓ, அது எனக்கு எவ்வளவு பிரியம்! இது வேதாகமத்திலே எனக்கு மிகவும் பிடித்தமான பாகங்களில் ஒன்று, ஏனெனில் தேவன் யாரென்றும், அவர் என்ன செய்வதாக வாக்களித்து ஆணையிட்டுள்ளார் என்பதைக் குறித்தும் இது உறுதியாக உரைக்கிறது. இப்பொழுது இந்த பொருளை நான் தெரிந்துகொண்ட காரணம் என்னவெனில், நேற்றிரவு ஜனங்கள் விசுவாசங்கொண்டிருந்து, பலவீனமுள்ள ஒருவரும் நமது மத்தியில் இராதபடி சுகமடைந்த கூட்டத்தைப்போல் வேறொரு கூட்டம் இல்லையென்று நான் கருதுகிறேன். தேவனுடைய வல்லமை இறங்கிவர, அவர் அதைச் செய்தாரே! அப்பொழுது நான், “நாம் மாத்திரம் உறுதியான ஒன்றை ஆதாரமாகக் கொண்டு கட்டி, ஒரு—ஒரு நோக்கத்தை நாம் சாதிக்க முடியுமானால், அந்த மகத்தான இரவை, அல்லது உச்சநிலையடையும் அந்த நேரத்தை நாம் அடையும்போது, அது எவ்வளவு அற்புதமாயிருக்கும்” என்று எண்ணினேன்.

915 விசுவாசமில்லாமல் எதையுமே செய்ய முடியாது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும், முதலாவதாக அது அறிக்கை செய்யப்பட வேண்டும். அவரே—அவரே விசுவாசத்தை துவக்குபவர், அதை நாம் அறிவோம், விசுவாசமில்லாமல் எதுவுமே செய்யப்பட முடியாது. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். 16 இப்பொழுது நாம் அறிக்கைப்பண்ணுகிற பிரதான ஆசாரியராய் அவர் இருக்கிறார். இப்பொழுது இங்கே அந்த—அந்த ஜேம்ஸ் அரசனின் வேத மொழிபெயர்ப்பில், எபிரேய புத்தகத்தில், அது, “வெளிப்படையாகக் கூறுதல்” இப் என்று எழுதப்பட்டுள்ளது. வெளிப்படையாகக் கூறுதல் மற்றும் அறிக்கைப்பண்ணுதல் என்பதும் ஒரேக் காரியமே, வெளிப்படையாகக் கூறுதல் மற்றும் அறிக்கைபண்ணுதல். அறிக்கைப்பண்ணுதல் என்றால், “அதையே திரும்பக் கூறுதல்” என்றே பொருள்படுகிறது: “அவருடைய தழும்புகளால் நான் குணமாகிறேன்,” பாருங்கள், “இப்பொழுது அவருடைய ஜீவனால் நான் இரட்சிக்கப்பட்டேன்.” அப்படியானால் இப்பொழுது, முதலாவதாக, நாம் அதை அறிக்கைப்பண்ணவேண்டும்; அவர் ஒரு மத்தியஸ்தராய் உட்கார்ந்துகொண்டிருக்கிறார், தேவனுக்கும் மனிதனுக்குமிடையே மத்தியஸ்தர் ஒருவரே, அவர் செய்துள்ளதை நாம் அறிக்கைப்பண்ணும்போது, அதன் பேரில் பரிந்து பேசுவதற்காக அவர் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அது என்னே ஒரு—என்னே ஒரு உறுதியான, திடமான காரியமாயுள்ளதே!

1017 இப்பொழுது நான் வேறொரு வேதபாகத்தை வாசிக்க விரும்புகிறேன், அது ஆதியாகம புத்தகத்தில் உள்ள—உள்ள, 22-ம் அதிகாரத்தில் காணப்படுகிறது, நாம் இங்கே 7-ம் வசனத்திலிருந்து வாசிக்கத் துவங்குவோமாக. அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய், தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் மேலே அடுக்கிய கட்டைகளின்மேல் —மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாரா…எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ—நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்…இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

1118 இதிலிருந்து நான் தெரிந்துகொள்ள விரும்பும் பொருள் என்னவெனில், அதை பொருள் என்று அழைக்கப்பட வேண்டுமானால், யேகோவா-யீரே , இந்த சொல்லுக்கு, “கர்த்தர் தமக்கென்று ஒரு பலியைத் தந்தருளுவார்” என்று அர்த்தம். அவருக்கு பலி செலுத்த ஒன்று இல்லாமற்போனால், அவர் ஒன்றைத் தந்தருளுவார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இப்பொழுது இது மகத்தான பொருளாயிற்றே! இப்பொழுது அங்கே, “ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்; தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” என்று வாசிக்கிறோம். 19 இப்பொழுது, தேவன் ஆபிரகாமிடம் உடன்படிக்கை செய்துகொண்டு, அவனுக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார்; அது ஆபிரகாமுக்கு மாத்திரமல்ல, அவனுக்குப் பின்வருகிற சந்ததிக்கும், “ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும்.” இதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். நாம் கிறிஸ்துவுக்குள் மரித்தால், நாம் மறுபடியும் பிறந்தால், நாம் ஆபிரகாமின் சந்ததியாராயிருக்கின்றோம். இப்பொழுது, இந்த பாடத்தை நாம் படிக்கும்போது இப்பொழுது இதைக் குறித்து அறிந்துகொள்ள நாம் கவனமாயிருப்போமாக. இப்பொழுது நீங்கள் கூர்ந்து கவனித்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். அந்த நம்பிக்கையை நீங்கள் பற்றிக்கொள்வீர்கள், அப்பொழுது அது இந்த நகரத்தையும், உங்களைச் சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும், பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் என்ன கூற முயல்கிறார் என்பதைக் குறித்த கருத்தை நாம் மாத்திரம் நமது நேரத்தை எடுத்துக்கொண்டு கிரகித்துக்கொள்வோமானால் நலமாயிருக்கும். இப்பொழுது, ஆபிரகாம் அழைக்கப்பட்டு, அவனுக்கு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது, அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும்.

1220 இப்பொழுது நண்பர்களே, கிறிஸ்தவமார்க்கம் அல்லாத எத்தனையோ இன்று கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. 21 இப்பொழுது, இதைக் கூற நான் வெறுக்கிறேன். ஆனால் நான் ஜனங்களிடையே இங்கே புகழ் வாய்ந்தவனாக இருந்து, மேலும்—மேலும் எல்லோரும் என் முதுகில் தட்டிக் கொடுத்து, என்னை பாராட்டும் நிலையில் இருக்கக் கூடும். ஆனால் அந்த குழுவை நான் நியாயத்தீர்ப்பின்போது சந்தித்து, அதற்கு கணக்கொப்புவிக்க வேண்டும். எனவே நான்—நான் உத்தமமாக இருக்க வேண்டும். 22 இப்பொழுது இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் உலகம் முழுவதிலுமுள்ள சபைகளை நாம் பார்ப்போமானால், அவை கிறிஸ்தவ மார்க்கத்திலிருந்து லட்சக்கணக்கான மைல்கள் விலகி யுள்ளதை நாம் காணலாம். அது அவ்விதமாக இருக்குமென்று வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அநேகர் கிறிஸ்துவை, “பாருங்கள், நான் அவரை விசுவாசிக்கிறேன்” என்று கூறி ஏற்றுக்கொள்கின்றனர். ஏன், பிசாசும் கூட அப்படித்தான் விசுவாசிக்கின்றான். பார்த்தீர்களா? அநேகர் உணர்ச்சி வசப்படுதலினால் அவரை ஏற்றுக்கொள்ள முயற்சித்து, “பாருங்கள், நான் அந்நிய பாஷைகள் பேசினேன், நான் ஆவியில் நடனமாடினேன்” என்கின்றனர். ஆப்பிரிக்காவிலுள்ள மந்திரவாதிகளும், பிசாசின் முன்னிலையில் நடன மாடுகிறவர்களும் அதையே செய்வதை நான் கண்டிருக்கிறேன்; நிச்சயமாகவே, அவர்கள் ஒரு மண்டை ஓட்டிலுள்ள இரத்தத்தை குடித்து, அந்நிய பாஷைகள் பேசி, பிசாசைக் கூப்பிடுகின்றனர். என் தாயார் இந்தியர், பாதி இந்தியர், மற்றும்—மற்றும் அவளுடைய ஜனங்களுமே. அவர்கள் ஒரு பென்சிலை எடுத்து, அதை இப்படி கீழே வைக்க, அந்த பென்சில் தானாகவே அந்நிய பாஷைகளில் எழுதி, அவர்கள் அங்கு நின்றுகொண்டு அதற்கு அர்ததம் உரைத்து, பிசாசைக் கூப்பிடுவதை நான் கண்டிருக்கிறேன். நிச்சயமாகவே. பாருங்கள், நீங்கள் எந்தவிதமான ஒரு உணர்ச்சிவசப்படுதலினாலும் செல்ல முடியாது. பாருங்கள், நீங்கள் வாழும் வாழ்க்கையே நீங்கள் யாரென்று சாட்சி பகருகின்றது. பார்த்தீர்களா? அது எத்தகைய உணர்ச்சியாயிருந்தாலும் கவலையில்லை. நீங்கள் கிறிஸ்தவ மார்க்கத்தை உணர்ச்சியின் மேல் ஆதாரப்படுத்த முடியாது.

1323 அது ஒரு ஜீவனாயுள்ளதே! இயேசு, “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று கூறியுள்ளார். அவர்களுடைய வெளிப்படையான அறிக்கையினாலல்ல, அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதனாலல்ல. இயேசுவும் கூட, “நீங்கள் என்னிடத்தில் சேர்ந்து உங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறீர்கள், ஆனால் உங்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது” என்றார். அதுதான், அதுதான் அவர்கள் வாயினால் செய்யும் அறிக்கை. பாருங்கள், உங்கள் வாழ்க்கை நீங்கள் யாரென்பதைக் கூறுகிறது. ஒரு மனிதன் நான் தேவனை விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, இந்த வேதாகமத்திலுள்ள ஒரு வார்த்தையை மறுதலித்தால், அல்லது அதை வேறெந்த வழியிலாவது மாற்றினால், அது தவறாக இருக்க வேண்டும்.

1424 நீங்கள், “இந்த சிறு காரியங்கள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறதில்லை” எனலாம். ஆனால் அது நிச்சயமாக ஏற்படுத்துகிறது. 25 ஒரு சிறு வார்த்தைதான் நம்மை இத்தனை தொல்லைக்குள் ஆழ்த்தியது; அதை அவிசுவாசிக்க வேண்டும் என்பதல்ல, ஆனால் அதை தவறான இடத்தில் பொருத்தினால் போதும். ஏவாள் அதை இழக்கும்படி சாத்தான் செய்து, அவளுக்கு யோசனையை அருளினான். சாண்டா மரியாவிலுள்ள சகோதரன் வில்லியம்ஸின் இடத்தில், இதைக் குறித்து நான் பேசினேன். அந்தக் காரியம்தான் ஏதேன் தோட்டத்திலிருந்து நம்மை வெளியேக் கொண்டுவந்து, ஒவ்வொரு குழந்தையையும் வியாதிப்படும்படி செய்தது. அங்கு படுத்திருந்த மூளை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, நான் சற்று முன்பு உள்ளே வந்தபோது ஜெபித்தேன். அதற்கு காரணம் என்ன? காரணம் ஏவாள் அதை ஒருபோதும் அவிசுவாசிக்கவில்லை, ஆனால் அவள் யோசிக்கத் தொடங்கி, இதுதான் நியாயமானது என்று அதை ஏற்றுக் கொண்டாள். அதன் காரணமாக ஒவ்வொரு மரணமும், ஒவ்வொரு வியாதியும், ஒவ்வொரு துன்பமும், ஒவ்வொரு மனவேதனையும் உண்டாயின. நாம் எப்படி பழைய நிலைக்கு உள்ளே செல்ல முடியும்? அதன் காரணமாக—அதன் காரணமாகவே ஆறாயிரம் ஆண்டு காலமாக இவைகளை நாம் பெற்றிருப்போமானால், ஒவ்வொரு வார்த்தையையும் அது எழுதப்பட்டுள்ளவிதமாக நாம் பரிபூரணமாக விசுவாசிக்காமல், நாம் எப்படி பழைய நிலைக்கு செல்லப் போகிறோம்?

1526 மானிட வர்க்கத்துக்கு யோசிக்கும் தன்மையை அளித்து பிசாசு மானிடவர்க்கத்தின்மேல் வெற்றிச் சிறந்தான். “ஏன், இது நியாயமானதாயிருக்குமே? அது நியாயமானதாயுள்ளது” என்று அப்படியே யோசித்தல். நீங்கள் நியாயமானதென்று யோசிப்பது தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், உங்கள் யோசனை தவறாயிற்றே! வார்த்தை, அது எழுதப்பட்டவிதமாக சரியாயுள்ளதே! உங்கள் சொந்த வியாக்கியானத்தை அதற்கு அளிக்காதீர்கள். அது எழுதப்பட்டுள்ளவிதமாக அதைக் கூறி, அதேவிதமாக அதை விசுவாசியுங்கள். பார்த்தீர்களா? தேவன் அதை கவனித்துக்கொள்ள வேண்டும். அது எவ்வாறு இருக்க வேண்டுமோ, அவ்வாறே அது எழுதப்பட்டுள்ளது, எனவே அதை அதேவிதமாக நாம் விசுவாசிப்போமாக. 27 இப்பொழுது, அது வார்த்தை, ஒவ்வொரு வார்த்தை! ஒவ்வொரு…பரிசுத்த ஆவி ஒரு மனிதனுக்குள் இருக்குமானால்; உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியத்தையும் “ஆமென்” என்று கூறி உறுதிப்படுத்தும், ஏனெனில் பரிசுத்த ஆவிதான் வேதாகமத்தை எழுதினது. அவர் உங்களுக்குள் இருப் பாரானால், அவர் எப்படி, “பாருங்கள், அது வேறொரு காலத்திற்கானதாயிருந்தது, அது இதற்கானதாயிருந்து, அல்லது அது அதற்கானதாயிருந்து” என்று சொல்ல முடியும்? அவர் அவ்விதம் கூறி உங்களுக்குள் பரிசுத்த ஆவியாய் எப்படி இருக்க முடியும்? அவர் அவ்வாறு செய்ய முடியாது. அவர் அதற்கு “ஆமென்” என்றுரைக்க வேண்டுமே!

1628 இப்பொழுது, நான் அன்றொரு நாள் கூறினதுபோன்று, தேவன் தமது ஜனங்களுக்கு முதலாவதாக அளித்த காரியம், அவர்களுக்கு அரணாக அளித்தது வார்த்தையாயிருந்தது. அவர் மாறவேயில்லை. அவர் மாற முடியாது. இப்பொழுது, கோட்பாடுகள் ஒன்றும் கிரியை செய்யாது, ஸ்தாபனங்கள் ஒன்றும் கிரியை செய்யாது, கல்வி ஒன்றும் கிரியை செய்யாது, இவையனைத்தும் கிரியை செய்யவே செய்யாது, இவை ஒவ்வொன்றும் முழுவதுமாக தோல்வியடைந்துவிட்டன, இனி மேலும் தோல்வியடையும். ஒரே ஒரு காரியம் மாத்திரமே கிரியை செய்யப்படும், அது தான் வார்த்தை. 29 நாம் வார்த்தைக்கு வரக்கூடிய ஒரே வழி இரத்தத்தின் மூலம் மாத்திரமே. ஒரே ஸ்தலத்தில் தேவனை ஆராதித்த எவரும் அந்த இரத்தத்தின் கீழ் வரவேண்டியவராயிருந்தனர். வேறு எந்த ஆயத்தமும் கிடையாது. நீங்கள் மெதோடிஸ்டு நாமத்தின் கீழ் வர முடியாது, நீங்கள் பெந்தெகொஸ்தே நாமத்தின் கீழ் வரமுடியாது, நீங்கள் கத்தோலிக்க நாமத்தின் கீழ் வரமுடியாது. கத்தோலிக்க சபைகள் டஜன் கணக்கில் உள்ளன, அவை வேறுபட்டுள்ளன, ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுபட்டுள்ளது, வைதீக, கிரேக்க, ரோம சபை போன்றவை, அவை பிராடெஸ்டெண்டுகள் போல் பிளவுபட்டுள்ளன. பிராடெஸ்டெண்டுகள், மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், லூத்தரன்கள், கத்தோலிக்கர்கள், ஓ, அவை வெவ்வேறு விதமானவைகள். அதோ அவைகள் உள்ளன, பாருங்கள். ஆனால் ஐக்கியப்படுவதற்கு ஒரு ஆதாரம் மாத்திரமேயுள்ளது, அதுதான் இரத்தத்தின் கீழே! இரத்தம் என்பது ஜீவன், அது எப்பொழுதும் வார்த்தையுடன், எப்பொழுதுமே வார்த்தையுடன் இணங்கும்.

1730 இப்பொழுது, ஜீவன் ஆண் இனத்தில் உள்ளது என்று நாமறிவோம், அது இரத்தத்தில் உள்ளது, செந்நிற இரத்த அணு. பெட்டைகோழி முட்டையிடக் கூடும், ஆனால் அது சேவலுடன் சேராமல் இருந்தால், அந்த முட்டை பொறிக்காது. நிச்சயமாக, அதில் கரு கிடையாது. இப்படித்தான் நான் அநேக வெறுப்பூட்டும் சொற்களை கூறியிருக்கிறேன், அதாவது ஒரு பெட்டைக் கோழி கூடு நிறைய முட்டைகள் இடக்கூடுமென்றும், அதனால் முட்டைகளிடம் எவ்வளவு உத்தமமாக இருக்கக் கூடுமோ, அவ்வளவு உத்தமமாக அது இருக்கலாமென்றும், அது தன் செட்டைகளின் கீழ் முட்டைகளை அடைகாத்து, அவை பொறிக்க வேண்டும் என்பதற்காக சில நிமிடங்களுக்கு ஒரு முறை அவைகளைத் திருப்பலாம். மேலும்—மேலும் அந்த முட்டைகளிடம் உத்தமமாயிருக்க வேண்டும் என்பதற்காக அது கூட்டில் இருக்கும்போது உபவாசித்து, அதற்கு பசியெடுத்து, அதனால் கூட்டிலிருந்து பறக்க முடியாத அளவுக்கு பலவீனமடையலாம். ஆனால் அது ஆண் பறவையுடன் சேராத வரைக்கும், அந்த முட்டை களில் கரு இல்லாதவரைக்கும், அது தன் ஆண் துணையோடு சேராதிருந்திருந்தால், அவை கூடுகளில் கிடந்து அழுகிப் போகும். அது முற்றிலும் உண்மை. 31 நமது சபைகளும் அந்நிலையையடைந்துள்ளன, அவை குளிர்ந்துபோன சடங்காச்சாரங்களை ஏற்றுக் கொண்டு, ஏதோ ஒருவிதமான நடனத்தை அல்லது உணர்ச்சியைக் கொண்டுள்ளன. அவை என்ன செய்கின்றன? வார்த்தையை அவிசுவாசிக்கின்றன, அதன் விளைவாக நாம் ஒரு கூடு நிறைய அழுகின முட்டைகளைப் பெற்றுள்ளோம். கூட்டை சுத்தம் செய்து மறுபடியும் துவங்குவதற்கு நேரம் வந்துவிட்டது. அவர்கள் ஆணாகிய கிறிஸ்து இயேசுவுடன் தொடர்புகொண்டு, வார்த்தையினால் மறுபடியும் பிறந்தாலொழிய அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி செய்தால் அப்பொழுது அவர்கள் பிறக்க வேண்டும், ஏனெனில் அது ஜீவன்.

1832 சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு—ஒரு வயோதிப மெதோடிஸ்டு போதகருடன் பகல் உணவு அருந்திக்கொண்டிருந்தேன், அப்பொழுது லூயிவில்லிலிருந்து—அங்கிருந்து ஒலிபரப்பான விவசாய நேரம் என்ற வானொலி ஒலி பரப்பைக் கேட்டேன், அப்பொழுது 4-H என்ற சங்கம் பேசிக்கொண்டிருந்தது, அது, “வயலில் விளைவது போன்ற தானியத்தை உற்பத்தி செய்ய அவர்களிடம் ஒரு இயந்திரம் உள்ளதாகக்” கூறியது. மேலும் அது, “இந்த தானியத்திலிருந்து அதே விதமான தானியச் சீவல், ரொட்டி போன்றவைகளைச் செய்யலாமென்றும் கூறினது, அதுவும் அதே தானியமாயிருந்தது. அதை இவ்விதமாக வெட்டி, வெளிச்சத்தின் கீழ் வைத்து, ஆய்வுக் கூடத்துக்கு எடுத்துச்சென்று அதை ஆராய்து பார்த்தால்; அதன் மையம் சரியான இடத்தில் அமைந்துள்ளது, அது இயற்கை தானியத்தில் உள்ளது போல் அதே அளவு ஈரப்பசை, சுண்ணாம்புச் சத்து, பொட்டாஷஷ் ஆகியவை களைக் கொண்டுள்ளது, இயற்கை தானியத்தில் என்னென்ன உள்ளதோ, அது அனைத்தும் இதில் உள்ளது.” அது தொடர்ந்து, “நீங்கள் வயலில் விளைந்த தானியத்தை சாக்கிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து, இயந்திரத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட தானியத்தையும் சாக்கிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து, இவ்விரண்டையும் கலந்துவிட்டால், உங்கள் இயற்கை கண்களினால் ஒரு வித்தியாசத்தையும் உங்களால் ஒருபோதும் சொல்ல முடியாது, அல்லது அதை வெட்டிப் பார்த்தாலும், அல்லது எந்த விஞ்ஞானமும் கூட ஒரு வித்தியாசத்தையும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் உங்களால் வித்தியாசத்தைக் கண்டு கொள்ளக் கூடிய ஒரே வழி, அவைகளை நிலத்தில் புதைப்பதன் மூலமே” என்றது. அது வித்தியாசத்தைக் வெளிப்படுத்திவிடுகிறது.

1933 ஒரு மனிதன் காண்பதற்கு ஒரு கிறிஸ்தவனைப்போல இருக்கலாம், அவன் ஒரு கிறிஸ்தவனைப்போல நடிக்கலாம், அவன் ஒரு கிறிஸ்தவனைப்போல பாவனை செய்யலாம். ஆனால் அவன் ஜீவ அணுவைப் பெற்றிராமற்போனால், அவனால் உயிரோடெழ முடியாது; அவன் ஜீவ அணுவைப் பெற்றிருக்கவேண்டும், நித்திய ஜீவனை பெற்றிருக்க வேண்டும். 34 கிரேக்க மொழி படித்துள்ள எவரும், “நித்தியம்” என்னும் சொல் “சோயி” என்னும் சொல்லிலிருந்து வருகிறது என்பதை அறிவர், அதன் அர்த்தம் “தேவனுடைய சொந்த ஜீவன்,” அது அவருடைய ஒரு பாகமாகிறது; நீங்கள் உங்களுடைய தகப்பனின் ஒரு பாகமாக இருப்பதுபோல். நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாகி விடுகின்றீர்கள். தேவனுடைய சொந்த ஜீவன் பகிர்ந்தளிக்கப்பட்டு உங்களுக்குள் வைக்கப்படுகின்றது, அது மரிக்க முடியாது, ஏனெனில் அது நித்தியமானது. துவக்கமுள்ள எதற்கும் முடிவுண்டு; ஆனால் அவரோ துவங்கவில்லை, எனவே அவருக்கு முடிவும் இருக்க முடியாது. அவர் நித்தியமானவர், நீங்கள் அவருடன் நித்தியமாயிருக்கிறீர்கள். அவர் எப்படி மரிக்க முடியாதோ, அப்படியே நீங்களும் மரிக்க முடியாது, ஏனெனில் நீங்கள் அவருடைய ஒரு பாகமாகிவிடுகின்றீர்கள். நீங்கள் அவரால் பிறக்கின்றீர்கள். ஆமென். அதைக் குறித்து நான் பேசிக்கொண்டேயிருந்தால், நான் இந்த பாடத்துக்கு ஒருபோதும் செல்லவேமாடேன். 35 ஓ, நான் ஒரு கிறிஸ்தவனாயிருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேனே! நான்—நான்—நான்—நான் உலகத்தில் யாரோடும் என் இடத்தை மாற்றிக் கொள்ளவேமாட்டேன், அது ஜனாதிபதிகளாயிருந்தாலும், ராஜாக்களாயிருந்தாலும் சரி. அவர்கள் எனக்கு உலகம் முழுவதையும் அளித்தாலும், நான் பத்து லட்சம் ஆண்டுகள் வாழ முடியும் என்று கூறினாலும், பத்து லட்சம் ஆண்டுகளுக்கு பின்பு, நான் மரிப்பேன். ஆனால் இப்பொழுது, பத்து லட்சம் ஆண்டுகள், ஏன், அது இப்பொழுது ஒன்றுமேயில்லை, நாம் வாழ்ந்து கொண்டேயிருக்கிறோம், மரணமே கிடையாது. எனவே ஒரு கிறிஸ்தவனாயிருப்பதென்பது மிகப் பெரிய சிலாக்கியமே!

2036 நாம் ஆபிரகாமைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோமே! அதற்கு மீண்டும் செல்வோமாக. இப்பொழுது நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால், ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம். நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருந்தால், ஆபிரகாமுக்கு இருந்த அதே விசுவாசம் உங்களுக்கும் இருக்கும், ஏனென்றால் அவனுடைய விசுவாசத்தைக் குறித்துதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். முக்கியமாக இப்பொழுது சபையில் உள்ளது, அது ஆபிரகாமின் ராஜரீக சந்ததியாயுள்ளது. ஆபிரகாமுக்கு இரண்டு சந்ததிகள் உள்ளன. ஒன்று மாம்சப்பிரகாரமான சந்ததி, ஈசாக்கு; மற்றொன்று கிறிஸ்துவாயிருந்தது, வாக்குத்தத்தம். எனவே ஈசாக்கின் மூலம், இஸ்ரவேலர் ஆசிர்வதிக்கப்பட்டனர்; கிறிஸ்துவின் மூலம், ஆபிரகாம் அநேக ஜாதிகளுக்கு தகப்பனானான். பார்த்தீர்களா? எனவே ஆபிரகாமின் ராஜரீக சந்ததி, அவனுடைய மாம்சப்பிரகாரமான சந்ததியைக் காட்டிலும் எவ்வளவு மகத்தானது. எனவே நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், ஆபிரகாம் இருந்ததற்கும் ஒரு மேம்பட்ட, நீங்கள் ஒரு மேம்பட்ட சந்ததியாயிருக்கிறீர்கள், ஏனெனில் நீங்கள் ராஜரீக சந்ததியாகிய கிறிஸ்துவின் மூலம் வருகிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள் மரித் திருந்தால், அப்பொழுது நீங்கள் ஆபிரகாமின் புத்திரர், நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாய் ஆபிரகாமின் விசுவாசித்தைப் பெற்றிருக்கிறீர்கள். என்ன நடந்தபோதிலும், ஆபிரகாமின் விசுவாசம் தேவனுடைய வார்த்தையில் இருந்தது. அவன் இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல் அழைத்தான், ஏனெனில் தேவன் அவ்வாறு கூறினார். என்ன ஒரு வாக்குத்தத்தம்!

2137 இப்பொழுது நாம் சிறிது பின் சென்று, நமது கருத்துக்களை அதன்மேல் ஆதாரமாகக்கொள்வோமாக. நாம் யேகோவா-யீரே என்னும் பொருளை அணுகும் முன்பு, சற்று பின் சென்று ஆபிரகாமை நோக்குவோமாக. வேதபாகத்தில், நாம் சிறிது பின் செல்வோமாக. நாம் இப்பொழுது 12-ம் அதிகாரத்துக்கு செல்வோமாக. நாம் இங்கு 22-ம் அதிகாரத்தை படித்தோம். நாம் 12-ம் அதிகாரத்துக்கு திரும்பிச் சென்று, ஆபிரகாமுடன் செய்யப்பட்ட உடன்படிக்கையைக் காண்போம். இப்பொழுது, உடன்படிக்கை, மூன்று…இரண்டு உடன்படிக்கைகள் உண்டாயிருந்தன. 38 இப்பொழுது, தேவன் மூன்று என்னும் எண்ணிக்கையில் பரிபூரணப்படுகிறார். தேவனுடைய இலக்கங்களை நாமறிவோம். மூன்று, பரிபூரணம்; ஆராதனை, எழு; பன்னிரண்டுகள்; நாற்பது, சோதனையாயுள்ளது; ஐம்பது, யூபிலியாயுள்ளது; இது போன்றே, தேவனுடைய தம்முடைய—தம்முடைய இலக்கங்களில் உள்ளார். இப்பொழுது, தேவன் மூன்றில் பரி பூரணப்படுகிறார்; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம்; போன்றே.

2239 இப்பொழுது, இரண்டு உடன்படிக்கைகள் உண்டாயிருந்தன. அவைகளில் ஒன்று ஆதாமுடன் செய்துகொண்ட உடன்படிக்கையாயிருந்தது. தேவன் மனிதனுடன், “நீ செய்தால், நான் செய்வேன்” என்னும் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டார். அவனோ அதை முறித்து போட்டான். பின்பு தேவன் நோவாவுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்; அது நோவாவின் உடன்படிக்கையாயிருந்தது, அதுவும் முறித்துப்போடப்பட்டது. 40 இப்பொழுது அவர் ஆபிரகாமுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்கிறார். ஆபிரகாமின் உடன்படிக்கை, ஆதியாகமம் 12-ம் அதிகாரத்தின்படி, அது எவ்வித நிபந்தனையுமின்றி அளிக்கப்பட்டது. அது நிபந்தனையின்றி அளிக்கப்பட்ட காரணத்தால், அது நித்தியமாயுள்ளது. அது, “நீ செய்தால், நான் செய்வேன்” என்றல்ல. அவர், “நான் செய்துவிட்டேனே! நான் ஏற்கனவே அதை செய்துவிட்டேன்” என்றார். “நான் அதை செய்வேன் ” என்றல்ல, “நான் அதை செய்துவிட்டேனே!” அதுவே, ஓ, அது, அதுவே விசுவாசத்தை ஆதாரப்படுத்துகிறது. பாருங்கள், இல்லை…தேவன் மனிதனை இரட்சிக்க தீர்மானித்துள்ளார். அவர், “நீ செய்தால், நான் செய்வேன்” என்னும் ஒரு உடன்படிக்கையைச் செய்கிறார், அவன் அதை முறித்துப்போடுவான். மற்றொன்றும், “நீ செய்தால், நான் செய்வேன்” என்றிருந்தது, அதையும் அவன் முறித்துப்போட்டான். மனிதனால் அவனுடைய உடன்படிக்கையை காத்துக்கொள்ள முடியாது, எனவே தேவன் மனிதனை அவருடைய கிருபையினால், நிபந்தனையற்ற ஒரு உடன்படிக்கையின் கீழ், நிபந்தனையற்ற உடன்படிக்கையில் இரட்சிக்கிறார். ஓ, என்னே! அதற்கு முடிவில்லை, அதைக் குறித்திருந்ததெல்லாம் அவ்வளவுதான்; மூன்று, பரிபூரணம். நோவா, ஆபிரகாம், நான் பொருட்படுத்திக் கூறுவது…இல்லை. ஆதாம், நோவா, மற்றும் ஆபிரகாம். இப்பொழுது, அதன் காரணமாகத்தான் நாம் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருக்கிறோம், அந்த உடன்படிக்கை முடிவடைய முடியாது, ஒருபோதும் முடிவடையாது, ஏனெனில் அது நிபந்தனையற்றது. அது அல்ல…அது நீங்கள் ஒன்றைச் செய்ததனால் அல்ல; அது தேவன் ஒன்றைச் செய்ததனாலே! இப்பொழுது நீங்கள் தேவனைத் தெரிந்துகொண்டதனால் அல்ல; தேவன் உங்களைத் தெரிந்து கொண்டாரே! நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்!” என்கின்றனர்—ஆசி.]

2341 ஜனங்கள், “ஓ, சகோதரன் பிரான்ஹாமே, நான் தேவனைத் தேடினேன், தேவனைத் தேடினேனே!” என்கின்றனர். நீங்கள் அவரைத் தேடவில்லையே! அதை உங்களிடம் கூற எனக்கு விருப்பமில்லை, ஆனால் நீங்கள் தேடவில்லை. தேவன் உங்களைத் தேடினார். அது தேவன் உங்களைத் தேடினதாயிருந்து. 42 இயேசு, “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை; நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான், பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்” என்றார். இப்பொழுது, பாருங்கள், அது இருந்ததாயல்ல. எந்த ஒரு மனிதனும் எதிலும் மேன்மைப்பாராட்ட முடியாது. அது தேவனே! ஓ, தேவனுடைய அந்த—அந்த உண்மையான கிருபையைக் காண்பதென்பது எவ்வளவு அற் புதமானதானது, அது எப்பேர்ப்பட்டதாயுள்ளதே! 43 ஜனங்கள் கிருபையின் செய்தியை எடுத்துக்கொண்டு, அதை ஒரு அவமதிப்பாக்கியுள்ளனரே! விலையேறப்பெற்ற என் சபையும், விலையேறப்பெற்ற பாப்டிஸ்டு மக்களாகிய உங்களையும்போலவே, நீங்கள் கிருபையை அவ்வாறு குழப்பும்போது, நீங்கள் உண் மையில் ஒரு குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றீர்கள்.

2444 அண்மையில் ஒருவர் என்னிடம் கூறினார், அவர், “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் ஒரு நல்ல பாப்டிஸ்டாக இருந்தீர்கள் என்று இப்பொழுது அறிந்து கொண்டீர்கள்” என்றார். அதற்கு நான், “நான் அதை இன்னும் உணருகிறேன், ஆனால் அதைக்காட்டிலும் நான் சற்று உயர்த்தப்பட்டிருக்கிறேன்” என்றேன். 45 அவர், “பாருங்கள், இப்பொழுது கவனியுங்கள்,” என்று கூறிவிட்டு, “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. விசுவாசிப்பதைக் காட்டிலும் ஆபிரகாம் வேறென்ன அதிகம் செய்ய முடியும்?” என்றும் கேட்டார். மேலும் அவர், “நாம் தேவனை விசுவாசிக்கும்போது, நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறோம்” என்றார். 46 நான், “அது பரிசுத்த பவுல் கூறினதைக் காட்டிலும் எவ்வளவோ வித்தியாசமாயுள்ளதே! அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில், பரிசுத்த பவுல், ‘நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?’ என்று கேட்டான். நீங்கள் விசுவாசிகளான போது என்றல்ல; நீங்கள் விசுவாசிகளான ‘பிறகு’ என்றே!” 47 அவர், “பாருங்கள், ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அவ் வளவுதான் அவனால் செய்ய முடிந்தது” என்றார். 48 நான், “உண்மைதான். ஆனால் அப்பொழுது அவனுடைய விசுவாசத்தை தேவன் ஏற்றுக்கொண்டார் என்ற ஒரு உறுதிபடுத்துதலாக, தேவன் விருத்தசேதனம் என்னும் ஒழுங்கை அவனுக்குக் கொடுத்தாரே” என்றேன்.

2549 அவர் உங்களை இதுவரைக்கும் பரிசுத்த ஆவியினால் விருத்தசேதனம் செய்யாமலிருந்தால், அவர் உங்கள் விசுவாசத்தை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அது உண்மை. அதுதான் இருதயம் மற்றும் ஆவியின் விருத்தசேதனமாயுள்ளது. தேவன் உங்கள் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் என்ற ஒரு உறுதிப்படுத்துதலாக தேவன் பரிசுத்த ஆவியை அருளுகிறார். நீங்கள் விசுவாசிப்பதை நிறுத்திவிட்டு, குழம்பிக் கொண்டிருந்தால்; தேவனை விசுவாசியுங்கள், அப்பொழுது தேவன் அந்த இருதயத்தை விருத்தசேதனம் செய்வார். அது எல்லா அவிசுவாசத்தையும் போக்கிவிடும், அது உலகத்தையும், எல்லா அவிசுவாசத்தையும் விருத்தசேதனம் செய்து உங்களிலிருந்து அகற்றிவிடும்; அப்பொழுது நீங்கள் வார்த்தையில் தனிமையில் நிற்கிறீர்கள். இயேசு, “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்றார்.

2650 இன்றைய சபையிலுள்ள காரியமும் அதுவேதான். அது உணர்ச்சியின் கீழ் உள்ளது, கல்வியின் கீழ் உள்ளது, கோட்பாட்டின் கீழ் உள்ளது. அது மூச்சுத் திணறிக்கொண்டிருப்பதில் வியப்பொன்றுமில்லையே! பார்த்தீர்களா? எனவே முழு காரியத்தையும் வெட்டிப் புறம்பாக்க நமக்கு ஒரு விருத்தசேதனம் அவசியமாயுள்ளது. தேவனிடத்திலும் அவருடைய வார்த்தையினிடத்திலும் திரும்புங்கள், அங்கு அது எழுதப்பட்டுள்ள விதமாகவே வார்த்தையை விசுவாசியுங்கள், அதனுடன் விவாதம் செய்யாதீர்கள். அதனோடு நிலைத்திருங்கள். தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை செய்தால், தேவன் அவருடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்கிறார். அவருடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொண்டு, தேவனாய் நிலைத்திருப்பதைத் தவிர, அவரால் வேறொன்றையும் செய்யமுடியாது.

2751 இப்பொழுது இது நிபந்தனையற்ற உடன்படிக்கை. “நீ செய்தால், நான் செய்வேன், ஆனால் பின்னால் செய்வேன்” அல்லது அதைப்போன்ற ஒன்றல்ல. “நான் உனக்கும், உனக்குப் பின்வரும் சந்ததிக்கும் இந்த தேசத்தை ஏற்கனவே கொடுத்துவிட்டேனே!” ஆமென். பாருங்கள், ஏற்கனவே அதை செய்துவிட்டாரே! அது ஒரு முடிவுபெற்ற ஒரு கிரியை. 52 நீங்கள், “ஆபிரகாமுக்கு அவர் அதைச் செய்தார்” என்றீர்கள். ஆம், ஆபிரகாமுக்கு மாத்திரமல்ல, ஆனால் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும். 53 நாம் ஆபிரகாமின் சந்ததியாயிருந்தால், அது ஒரு முடிவுபெற்ற கிரியை. “தேவன் எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” நீங்கள் எதைக் குறித்து பயப்படுகிறீர்கள்? அது உண்மை. வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின்படி, “அந்திகிறிஸ்து கடைசி நாட்களில்,” “உலகத்தோற்ற முதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்படாத பூமியின் குடிகள் அனைவரையும் வஞ்சித்துப்போட்டான்” (கடைசி எழுப்புதல் நடந்தது முதற்கொண்டா? இல்லை) “உலகத்தோற்றத்திற்கு முன்பு.” அப்பொழுதுதான் உங்கள் பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்த கத்தில் எழுதப்பட்டது, அப்பொழுதுதான் ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டார். தேவன் வார்த்தையை உரைத்தார்; அது அவருடைய சிந்தையில், அவருடைய எண்ணத்தில் இருந்தது, அவர் வார்த்தையை உரைத்தார், எல்லாமே அந்தந்த நேரத்தில் தோன்றினது. இது தேவனுடைய வித்து தோன்றுவதாகும், அவ்வளவுதான், அவருடைய வார்த்தைகள் இறங்கி வருதல். இப்பொழுது, தேவனுடைய வெளிச்சம் அதன்மேல் படும்போது, அந்த வித்து விரைவில் அதை அடையாளம் கண்டுகொள்கிறது, ஏனெனில் அது தேவனால் பிறந்தது. அது ஆபிரகாமின் சந்ததி. அது தேவனால் முன்னறியப்பட்டது. அந்த வித்தை பிடிப்பதற்காகவே வெளிச்சம் பிரகாசிக்கின்றது. அது…

2854 நமக்கு ஒரு எழுப்புதல் உண்டாயிருந்தது. யோவேல் கூறினான். நாம் பின்மாரியைக் குறித்து வீண் சந்தடி செய்கிறோம், “பின்மாரி,” இயக்கங்கள் என்றழைக்கப்பட்டிருந்தன, பின்மாரி, முன்மாரி, இடைமாரி, வெளிமாரி என்றழைக்கப்பட்டன. நான் அன்றொரு நாள் படித்துக்கொண்டிருந்தேன். முன்மாரி என்பதற்கு எபிரேய மொழியில் என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? அது இப்பொழுது என் ஞாபகத்துக்கு வரவில்லை; நான் அதை எழுதி வைக்கவில்லை, அது எனக்கு மறந்துவிட்டது. ஆனால் முன்மாரி , முதலாம் மழை, அது “ஒரு போதனையின் மழை” என்றே பொருள்படுகிறது. இரண்டாம் மழை என்பது ஏற்கனவே போதிக்கப்பட்டதன் மேல் வரும் ஆவி, அது பயிரை முளைப்பிக்கிறது. நமக்கு ஏன் இப்படிப்பட்ட எழுப்புதல் உண்டாயிருந்தது? பெந்தெகொஸ்தே, பாப்டிஸ்டு, இன்னும் மற்றெல்லா மரங்களும் துளிர்விட்டன, அவை துளிர் விடுமென்று இயேசு கூறினார். நமக்கு என்ன கிடைத்தது? பாப் டிஸ்டுகள் தங்களுக்கு “’44-ல் பத்து லட்சம் பேர் அதிகம் கிடைத்ததாகக்” கூறினர். கத்தோலிக்கர், அவர்கள் எவ்வாறு அதிகரித்தனர் என்பதைப் பாருங்கள். எல்லா ஸ்தாபனங்களையும் பாருங்கள். பெந்தெகொஸ்தேயினரைப் பாருங்கள். நாம் என்ன செய்தோம்? நாம் ஸ்தாபன வித்துக்களை விதைத்தோம், நாம் ஸ்தாபன அறுவடையை அறுத்தோம். ஏன், தேவனுடைய வித்து மாத்திரம் முன்பு விதைக்கப்பட்டிருந்தால், சபையானது இப்பொழுது தேவனுக்காக அனல் மூண்டு, அடையாளங்களும், அற்புதங்களும் நிகழ்ந்து, சபை ஒரே மனதாயும் ஒரே சிந்தையாயும் ஒன்றுபட்டு, எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக, சீயோனை நோக்கி அணி வகுத்து சென்று கொண்டிருக்கும். அது உண்மை. ஆனால் நாம் என்ன செய்தோம்? தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக நாம் அறிவுத்திறன் கொண்ட பேச்சுகளை ஏற்றுக்கொண்டோம். வார்த்தைக்கு எதிராக நாம் யோசனையை ஏற்றுக்கொண்டோம், மற்றெல்லாவற்றையும் செய்தோம்.

2955 நாம் தேவனுடைய வார்ததைக்குத் திரும்ப வேண்டும். திரும்பி…நாம் அதை செய்வோமே! தேவன், “நான் முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்கு திரும்ப அளிப்பேன்” என்று கூறியுள்ளார். அது சாயங்கால நேரத்தில் விளையப்போகின்றது. ஒருவர் ஒரு செய்தியுடன் வருவார், அவர் இருதயங்களை, இல்லை பிள்ளைகளுடைய விசுவாசத்தை பிதாக்களின் விசுவாசத்துக்கு திருப்புவார். அவர் அவ்வாறு செய்வதாக மல்கியா 4-ல், அவைகளைத் திருப்புவதாக வாக்களித்துள்ளார். 56 இப்பொழுது, அது வேதத்தில் கூறப்பட்ட எலியாவாகிய யோவான் ஸ்நானன் அல்ல; இயேசு மத்தேயு 11-ல், “நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியாவான யோவான் ஸ்நானன் இவன்தான்” என்று மல்கியா 3-க் குறித்துக் கூறினார். மல்கியா 3-ல், “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன்” என்றுள்ளதை நீங்கள் காணலாம்.

3057 ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், மல்கியா 4-ன், செய்தி வருகிறது, “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வந்து பூமியைச் சுட்டெரிக்கும், நீதிமான்கள் துன்மார்க்கருடைய சாம்பலை மிதிப்பார்கள்.” அது யோவான் ஸ்நானனுக்குப் பின்பு உடனடியாக நிகழவில்லை. இல்லை, அப்படி நிகழ்ந்திருந்தால், வேதம் தனது பிழையற்றத் தன்மையை இழந்திருக்கும், நடக்காத ஒன்றை அது கூறினதாக ஆகிவிடும். அது முதற்கொண்டு நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் சென்றுவிட்டன, ஆனால் உலகம் இன்னும் சுட்டெரிக்கப்படவில்லை, இல்லவே இல்லை. நீதிமான்களும் துன்மார்க்கரின் சாம்பலின்மேல் நடக்கவில்லை. ஆனால் நாம் ஏதோ ஒன்று விசுவாசத்தை எடுத்து, பிள்ளைகளுடைய விசுவாசத்தை, முசுக்கட்டைப் பூச்சி தின்று போட்டதை அந்த மூல பெந்தெகொஸ்தே மரத்துக்கு திருப்பளிக்கப்போகிறதற்கு காத்துக்கொண்டிருக்கிறோம், ரோமப் முசுக்கட்டைப் பூச்சி, பட்டைப் புழு தின்றுபோட்டதையே. அவர்களுடைய எல்லா ஸ்தாபனங்களும் கோட்பாடுகளும் அந்த மரத்தைத் தின்றுப்போட்டன. தேவன், “கடைசி நாட்களில் அதை திரும்ப அளிப்பேன்” என்றார். அது திரும்ப அளிக்கப்படுமே! நடப் பட்ட வார்த்தையின் மேல், அப்பேர்ப்பட்ட ஒரு வழியில் தேவன் தமது பரிசுத்த ஆவியை அனுப் புவார், அது அதை திரும்ப அளிக்கும். தேவனுடைய வார்த்தையானது விதைக்கிறவன் ஒருவன் புறப்பட்டு சென்று விதைக்கும் விதைக்கு ஒப்பாயிருக்கிறது.

3158 இப்பொழுது, உடன்படிக்கை நிபந்தனையன்றி அளிக்கப்பட்டதே! இப்பொழுது, மாம்சப்பிரகாரமான சந்ததியாரான, இஸ்ரவேலர் யாத்திரகாமம் 19-ல் அதை வேறொன்றுக்கு மாற்றிக்கொண்டு, கிருபையை நீக்கி, அதன் இடத்தில் நியாயப்பிரமாணத்தை அளிக்கும் அவசரமான செயலைப் புரிந்து அவர்கள் அதை இழந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே அவசரப்பட்டு என்னே ஒரு தவறைச் செய்துவிட்டனரே! 59 கவனியுங்கள்! தேவன், ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்துகொண்ட பிறகு, கிருபையானது, அவர்களை எகிப்திலிருந்து மீட்டெடுத்து, ஆபிரகாமின் வார்த்தையை நிறைவேற்ற ஏற்கனவே ஒரு தீர்க்கதரிசியைத் தந்தருளினது. எரிகிற முட்செடியின் கீழிருந்த, மோசேயை நினைவில் கொள்ளுங்கள், தேவன், “என் ஜனங்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், என் வாக்குத்தத்தத்தை நினைவு கூருகிறேன்” என்றார். நியாயப்பிரமாணம் இருந்ததற்கு முன்பே, கிருபை அதை அளித்தது. கிருபை அவர்களுடைய குற்றத்துக்காக, ஒரு ஆட்டுக்குட்டியை அளித்தது. கிருபை ஒரு உடன்டிக்கையை, விருத்தசேதனத்தை அருளியிருந்தது, நியாயப்பிரமாணத்துக்கு முன்பே, ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தது. அவர்களை வழி நடத்த கிருபை அவர்களுக்கு ஒரு அக்கினி ஸ்தம்பத்தை அளித்திருந்தது, அவர்கள் ஒரு தீர்க்கதரிசியைப் பின்தொடர, தீர்க்கதரிசி அவர்களுக்கு உண்மை யைக் கூறினான் என்பதும், அவன் தேவனுடைய வார்த்தையைக் குறித்து எடுத்துரைத்துக்கொண்டிருந்தான் என்பது ஒரு உறுதியாயிருந்தது. தேவன் அதை வாக்குத்தத்தம் செய் துள்ளார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அதை உறுதிப்படுத்த அக்கினி ஸ்தம்பம் அங்கிருந்தது. என்னே ஒரு இரட்டிப்பான உறுதி! ஆமென். கிருபை அதை செய்திருந்ததே! 60 ஆனால் அவர்களோ தாங்கள் செய்வதற்கு தங்களுக்கென ஒன்றை விரும்பினர், அவர்கள் தங்கள் சொந்த கோட்பாடுகளையும் ஸ்தாபனங்களையும், இன்னும் அதிகமானவற்றை உடையவர்களாய், பரிசேயர்களையும் சதுசேயர்களையும் ஏற்படுத்திக்கொண்டு, தாங்கள் செய்வதற்கு தங்களுக்கென ஒன்றை விரும்பினர். 61 மனிதன் எப்பொழுதுமே தன்னை இரட்சித்துக்கொள்ள முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறான். நீங்கள் அதை செய்ய முடியாதே! தேவன் அதை ஏற்கனவே செய்துவிட்டார். நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசிக்க வேண்டும்.

3262 அவர்களை வழிநடத்த, அவர்களுக்கு வழிகாட்ட, அவர்களை ஒரு பாதையில் வழிநடத்த அக்கினி ஸ்தம்பம் இருந்தது. ஒரு வல்லமையை, அவர்களுடைய சத்துருக்களை ஆக்கினைக்குட்படுத்தி, இவர்களை விடுதலையாக்குவதற்கென கிருபையானது ஒரு வல்லமையை அளித்திருந்தது. வல்லமையானது ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தனர். அவர்கள் பார்வோனை நிர்மூலமாக்கினர். கிருபையைக் கொண்டே அவர்கள் இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்தனர். அதன்பிறகு அவர்கள் கிருபைக்கு பதிலாக ஒரு நியாயப்பிரமாணத்தை மாற்றிக்கொண்டனர், ஆனால் இதற்கும் ஆபிரகாமின் ராஜரீக சந்ததிக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. 63 ராஜரீக சந்ததியும் இதேக் காரியத்தை செய்ய முயன்று, கிருபையையும் வார்த்தையையும் ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பதற்கு பதிலாக, ஒருவிதமான கோட்பாட்டின் கீழ் சென்றது. அவர்கள் அவ்வாறு சென்றனர். ஆனால் அவர்கள் ராஜரீக சந்ததியாக வெளிவருவார்கள்; சிறிது கழித்து, இன்னும் சற்று கூடுதலாக நாம் பார்ப்போம்.

3364 இப்பொழுது நாம் ஆதியாகமம் 12-ம் அதிகாரத்துக்கு திரும்பிச் செல்வோம். தேவன் ஆபிரகாமை கிருபையினால் அழைத்தார். அவன் வித்தியாசமான ஒரு நபராய் இருந்தான் என்பதனால் அல்ல; அவன் வெறும் ஆபிரகாமாக, ஒரு சாதாரண மனிதனாக இருந்தான். அவன் ஒரு ஆசாரியன் அல்லது கீர்த்தி வாய்ந்தவனாயிருந்தான் என்பதனால் அல்ல; அவன் ஒரு விவசாயியாயிருந்தான். அவன் தன் தகப்பனுடன் பாபிலோன் கோபுரம் இருந்த—இருந்த நகரத்தை விட்டுப் புறப்பட்டு, கல்தேயருடைய பட்டினமாகிய ஊர் என்னுமிடத்துக்குச் சென்றான். மேலும், அவன் ஒரு விவசாயியாயிருந்தான், ஒருக்கால் அவன் தன்னுடைய ஆகாரத்திற்காக பகல் நேரத்தில் விவசாயம் செய்து பயிரிட்டிருப்பான். அவன் தனக்கு ஒன்றுவிட்ட சகோதரியாகிய சாராளை விவாகம்பண்ணினான். அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்து, தேவன் ஆபிரகாமை அழைத்தபோது, அவனுக்கு எழுபத்தைந்து வயது, சாராளுக்கோ அறுபத்தைந்து வயதாயிருந்தது. 65 தேவன் ஆபிரகாமை அழைத்தபோது, அவனிடத்தில் கூறினார், அவர், “உன்னை ஜாதி களுக்குத் தகப்பனாக்கப்போகிறேன்” என்றும், சாராளின் மூலம் அவனுக்கு ஒரு பிள்ளையைக் கொடுக்கப்போவதாகவும் கூறினார். இப்பொழுது, அவன் மலட்டுத்தன்மையுடையவனாயிருந்தான். பாருங்கள், அவளுக்கு அறுபத்தைந்து வயதாயிருந்து, ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு அவளுக்கு நின்றுபோய் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. அவன் தன் ஒன்றுவிட்ட சகோதரியான அவளுடன், அவளுக்கு ஏறக்குறைய பதினாறு அல்லது பதினெட்டு வயதானதுமுதற்கொண்டே வாழ்ந்து வந்தான். இத்தனை ஆண்டு காலமாக, அவனுக்கு எழுபத்தைந்து வயதாகும் வரைக்கும், அவளுக்கு அறுபத்தைந்து வயதாகும் வரைக்கும், அவன் அவளுக்கு ஒரு கணவனாக வாழ்க்கை நடத்தி வந்தான். அதன்பிறகு தேவன் இறங்கி வந்து, “அவள் மூலமாய், நான் உனக்கு ஒரு பிள்ளையைத் தரப்போகிறேன்” என்கிறார். அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், அதை முழு நிச்சயமாக நம்பினானே!

3466 எழுபத்தைந்து வயது நிரம்பிய ஒரு வயோதிகனும், அறுபத்தைந்து வயதான ஒரு ஸ்திரீயும் மருத்துவரிடம் சென்று, நடுங்கிக் கொண்டேச் சென்று, “மருத்துவரே, மருத்துவமனையை நீங்கள் இப்பொழுது ஆயத்தமாக வைக்கவேண்டும். நாங்கள் எந்த இரவு நேரத்திலும் உம்மை அழைக்கக்கூடும், ஏனெனில், எங்களுக்கு ஒரு பிள்ளை பிறக்ப்போகின்றது என்று உமக்குத் தெரியுமா” என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? 67 அதற்கு மருத்துவர், “ஆம், சரி, ஐயா, நீங்கள்…ஹு, ஹு, ஹூ!” என்று கூறியிருப்பார். ஆனால் அதற்குப் பிறகு உடனே தொலைபேசியில் யாரையாவது கூப்பிட்டு, “அவர்களைப் போய் பார்த்துவிட்டு வாருங்கள், அவர்களுக்கு ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது’” என்று கூறியிருப்பார். 68 தேவனை அவருடைய வாக்குத்தத்தத்தின்படி ஏற்றுக்கொண்டு விசுவாசிக்கும் எவனையும், உலகமானது “பைத்தியக்காரன்” என்று கருதுகிறது. பவுல், “இவர்கள் ‘மதபேதம்’ என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்கிறேன்” என்றான். மதபேதம் என்பது “பைத்தியக்காரத்தனம்” என்று நாமறிவோம். அது மாமிச சிந்தைக்கு முட்டாள்தனமாக உள்ளது. விசுவாசம், அதைக் கொண்டிருப்பவனையும் தேவனையுந்தவிர மற்றெல்லாருக்கும் பைத்தியக்காரத்தனமாகக் காணப்படுகிறது. அது உண்மை.

3569 ஆனால் தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்தார், ஆபிரகாம் அதை விசுவாசித்தான். அவன், “தேவனே, அது எப்படியிருக்க முடியும்?” என்று கேட்கவில்லை. அவன், “சரி, தேவனே, அதை நான் விசுவாசிக்கிறேன்” என்றான். அவன் வீட்டுக்குச் சென்று, “சாராளே, நாம் கடைக்கு சென்று பல கெஜம் கம்பளி நூலையும், அதை பின்னுவதற்கு ஊசிகளையும், காலுறைகளையும் வாங்கி வருவோம். நமக்கு குழந்தை பிறக்கப் போகின்றது” என்று கூறுவதை என்னால் காணமுடிகிறது. ஓ, என்னே! 70 முதல் முப்பது நாட்கள் கடந்துவிட்டன, இல்லை இருபத் தெட்டு நாட்கள். “அன்பே, நீ எப்படி உணருகிறாய்?” “ஒரு வித்தியாசமும் இல்லை.” “தேவனுக்கு ஸ்தோத்திரம், நாம் எப்படியும் அதை பெறப் போகின்றோமே!” “உங்களுக்கு எப்படித் தெரியும்?” “தேவன் அவ்வாறு கூறினாரே!” 71 நம்மில் சிலருக்கு ஒரு இரவு ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது, கூட்டத்தில் அமர்ந்துள்ளபோது பரிசுத்த ஆவி விழுகிறது; ஆனால் அடுத்தநாள் காலை நமக்கு உடல்நிலை சரியில்லையென்றால், “எனக்கு—எனக்கு இன்னும் வயிற்றில் சிறிது கோளாறு உள்ளது. என்னால் கைகளை அசைக்கவே முடியவில்லை” என்றெல்லாம் கூறுகிறோம். ஆபிரகாமின் சந்ததியாகிய, நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமலிருக்கமாட்டீர்களா?

3672 சபையில் ஏதாவதொன்று தோன்றி, பிசாசு அருமையான ஒரு—ஒரு கூட்ட மக்களிடையே, புகுந்து அங்கே அந்த சபையோரை துன்புறுத்தக்கூடும், முதலாவதாக நடப்பது என்ன தெரியுமா, அவர்களில் சிலர், “ஹு, நான் இந்த பழையக் காரியத்தை விட்டு விலகப்போகின்றேன், துவக்கத்திலிருந்தே அதில் ஒன்றுமில்லை” என்கின்றனர். ஆபிரகாமின் சந்ததியா? என்னே, என்னே! பிசாசு முதன்முறையாக ஒரு சிறு குறையை உங்களுக்கு காண்பிக்க நேரிட்டால், நீங்கள் விலகிவிடுகிறீர்கள். நீங்கள் துவக்கத்திலேயே அதை விசுவாசிக்கவில்லை என்பதையே அது காண்பித்துவிட்டது. 73 இயேசு, “பரலோக ராஜஜ்யம், ஒரு மனிதன் வலையை எடுத்துக் கொண்டு கடலுக்குச் சென்று, அதை கடலில் போட்டதற்கு ஒப்பாயிருக்கிறது. அவன் வலையை இழுத்தபோது, எல்லாவற்றையும் வாரிக்கொண்டான்” என்றார். அது உண்மை. 74 ஒரு எழுப்புதல் அதைத்தான்—அதைத்தான் செய்கிறது. வலையில் என்ன இருக்கிறது? நீங்கள் வலையில் தவளைகள், சிலந்திகள், ஆமைகள், நன்னீர் நண்டு வகை, பாம்புகள், மீன்களைப் பெற்றுக்கொள்கிறீர்கள். சில நாட்கள் கழித்து ஆமை, “பாருங்கள், இது எனக்கான இடமல்ல” என்று சொல்லிவிட்டு சேற்றுக்குள் சென்றுவிடுகிறது. தண்ணீர் சிலந்தியும் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, “ஹு! எனக்கு இங்கு ஒரு சீட்டு விளையாட்டு இல்லை” என்று கூறி திரும்பிவிடுகிறது. எனவே ஒரு பன்றி சேற்றிலே புரள தான் முன்பிருந்த சேற்றுக்கு திரும்புவதைப் போலவும், ஒரு நாய் தான் கக்கினதைத் தின்பது போலவும் என்பதாயுள்ளது. அது உண்மை. அப்படிப்பட்டவர்கள் ஆபிரகாமின் சந்ததியா? ஓ, என்னே! அப்பேர்ப்பட்ட ஒரு அவமானமாயிற்றே! ஆபிரகாமின் சந்ததி தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்குமே!

3775 அங்கு பின்னால் உட்கார்ந்து கொண்டு, “ஆம், தேவனுக்குக்கு ஸ்தோத்திரம், நான் பெந்தெகொஸ்தேயினனாயிற்றே!” என்று கூறுவது. யாராகிலும் ஒருவர் தேவனுடைய வார்த்தையின் பேரில், அங்கு எழுதப்பட்டுள்ளவிதமாகவே, தெளிவாக பிரசங்கம் செய்தால், “அல்லேலுயா, நான் அதை விசுவாசிக்கிறதில்லை. இல்லை, ஐயா.” அப்படியானால் அது ஆபிரகாமின் சந்ததியா? ஹு! 76 இப்பொழுது, அது ஏதாவது அர்த்தமற்ற ஒன்றாயிருக்குமானால், உண்மையாகவே, நீங்கள் அதை விசுவாசிக்கக்கூடாது. ஆனால் அது வார்த்தையாயிருக்குமானால், அது சத்தியமாயுள்ளதே! அது உண்மை. ஆபிராகாமின் சந்ததி அந்த வார்த்தையை இறுகப் பற்றிக்கொள்ளுமேயன்றி வேறொன்றையும் அல்ல.

3877 இன்னுமொரு மாதம் கடந்து சென்றது. “சாராளே, இனிய இருதயமே, இப்பொழுது நீ எப்படி உணருகிறாய்? உனக்குக் தெரியும், இன்னுமொரு இருபத்தெட்டு நாட்கள் கடந்துவிட்டன, நீ எப்படி உணருகிறாய்?” “அன்பே, ஒரு வித்தியாசமுமில்லை.” 78 “தேவனுக்கு மகிமையுண்டவாதாக! அது கடந்து மாதத்தைக் காட்டிலும் இப்பொழுது நடக்குமானால், அது இரண்டு மாதங்களில் உண்டாகும் இன்னும் பெரிய அற்புதம்.” ஒரு ஆண்டு கடந்துவிட்டது. “நான் சிறு காலுறைகளை எறிந்து விடட்டுமா?” 79 “வேண்டாம், ஐயா, நீர் அவைகளை அங்கேயே வைத்திரும். நாம் அந்த குழந்தையைப் பெறப் போகின்றோம்!” “நீ அதைப் பெறப்போகிறாய் என்று உனக்கு எப்படித் தெரியும்?” “தேவன் அவ்வண்ணமாய்க் கூறினாரே! அதுவே அதற்கு தீர்வாகிறது.” இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தன. “சாராளே, நீ எப்படி உணருகிறாய்?” “ஒரு வித்தியாசமும் இல்லை.” 80 “தேவனுக்கு மகிமை! இப்பொழுது இது இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து நடக்கப்போகும் அற்புதமாயிற்றே!” அவன் தேவனுடைய வாக்குத் தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவனுடைய வார்த்தையை இறுகப்பற்றிக்கொண்டு விசுவாசத்தில் வல்லவனாகி; இல்லாதவைகளை இருக்கிறவைகள்போல் அழைத்தான். ஏன்? தேவன் அவ்வண்ணமாய்க் கூறினாரே! ஓ, என்னே!

3981 இன்றைய ஆபிராகாமின் சந்ததி, ஏன், ஆபிரகாமின் சந்ததியென்று தங்களை அழைப்பவர், தீனி உண்ணாமல் பலவீனமடைந் துள்ள கோழியிலிருந்து உண்டாக்கப்பட்ட குழம்பைக் காட்டிலும் பலவீனமுள்ளவராயிருக்கின்றனர். ஆம், ஐயா. 82 மரித்தாலும் பிழைத்தாலும், தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளும் கரடுமுரடான கிறிஸ்தவர்களே தேவனுக்கு வேண்டும். அது அதேக் காரியமாயுள்ளது. ஆமென். “தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்” என்பதாயுள்ளதே! அதுதான் ஆவியினாலும் தேவனுடைய வார்த்தையினாலும் பிறந்த ஆபிரகாமின் சந்ததி. அதுதான் நிலைநிற்கும், 83 “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.” அதுதான். தேவன் வாக்குதத்தத்தம்பண்ணினதை, தேவன் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். தேவன் தவறுவதில்லை. அவரால் தவற முடியாது. தேவனால் ஒரு காரியத்தை செய்ய முடியாது. அது தவறுவது. அவரால் தவறவே முடியாது, அந்த ஒரு காரியத்தை மாத்திரமே அவரால் செய்ய முடியாது. ஆனால் அவரால் தவற முடியாது. தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருந்தால், அது சத்தியம். அது என்றென்றைக்கும் நிலைநிற்கும். அது என்றென் றைக்கும் முற்றிலுமாய் தீர்த்துவைக்கப்பட்டதாயுள்ளது. தேவன் ஒரு வார்த்தையை பேசுவாரானால், அது ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டது.

4084 தேவனுடைய வார்த்தையினால் மாத்திரமே இவ்வுலகம் சிருஷஷ்டிக்கப்பட்டது. அவர், “உண்டாகக்கடவது” என்றார், அது உண்டானது. ஆமென். இன்றிரவு நீங்கள் எந்த தூசியின்மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களோ, எந்த மரக்கட்டையின்மேல் உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்களோ, இவையனைத்தையும் தேவனுடைய வார்த்தையே வெளிப்படுத்தின. அல்லேலுயா! 85 நான் ஆபிரகாமைக் குறித்து சிந்திக்கும்போது, நான் பக்தி பரவசமடைகிறேன், நாம் ஆபிரகாமின் சந்ததியாய் இந்த வாக்குதத்தங்கள் அனைத்துக்குமான அவருடைய சந்ததியாகிவிடுறோம் என்று அறிந்துகொள்கிறோம். இந்த வாக்குத்தத்தங்களை உறுதியாக்க மாத்திரமல்ல, தேவனே தமது கரங்களையுயர்த்தி, அவரே அதை செய்வதாக தம்மில் தாமே ஆணையிட்டார். எந்த ஒரு உடன்படிக்கையும், எப்பொழுதும், ஒரு ஆணையினால் உறுதிப்பட வேண்டும், ஆணையிடுவதற்கு தம்மைவிட உயர்ந்தவர் யாரும் இல்லாதபடியினால், தேவன் தம்மில்தாமே, அவர் அதைச் செய்வதாக, தேவன் தம்மில்தாமே ஆணையிட்டுக் கொடுத்தார். 86 இப்பொழுது உலகத்தில் என்ன, எப்படி, நம்மோடுள்ள காரியம் என்ன—என்ன? அப்படிப்பட்ட ஒரு வாக்குத்தத்தத்தை நாம் பெற்றுள்ளோமே! அப்படிப்பட்ட ஒன்றை ஆதாரமாகக் கொண்டு கட்டப்படும் ஒரு விசுவாசம், அப்படி கட்டப்பட்ட ஒரு விசுவாசமாயிற்றே! கடைசி நாட்களில் இந்தக் காரியங்கள் சம்பவிக்கும் என்று தேவனுடைய வார்த்தை வாக்களித்தது, அவைகள் நமது முன்னிலையில் சம்பவிக்கிறதை நாம் இங்கே காண்கிறோம், கண்டப் பிறகும் இன்னமும் குன்றிப்போயிருக்கிறோம். இதுவா ஆபிரகாமின் சந்ததி? ஓ, என்னே! நீங்கள், “ஆபிரகாமின் சந்ததி” என்பதை இறுகப் பற்றிக் கொள்ள விரும்புகிறேன்.

4187 ஆதியாகமம் 12, தேவன் ஆபிரகாமிடம் கேட்டதோ ஒரு முழு வேறுபிரிதலாயிருந்தது. 88 இப்பொழுது, இன்றைக்கு, அவர்கள் மற்றவரிடம் கலந்திருப்பவர்களையே விரும்புகின்றனர். “ஓ, நாங்கள் ஒரு போதகரைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர் சுருண்ட தலைமுடியுள்ளவராக இருக்க வேண்டும், அவர் ஹாலிவுட் முறையை அனுசரிப்பவராய், உங்களுக்குத் தெரியுமா, இனிமையான முறையில் ‘ஆ-மென்’ என்று சொல்லவேண்டும், அவர் மிகவும் சிறந்த உடைகளை உடுத்தி, ஒரு விலையுயர்ந்த காடிலாக் காரை ஓட்டுபவராக இருக்க வேண்டும், மேலும்—மேலும் அந்தவிதமாக இருந்து, அவர் எல்லோரிடமும் நன்கு கலந்தவராயிருக்க வேண்டும். அவர் இதைச் செய்ய வேண்டும். அவர் எங்களுடன் இணங்கிப் பழகுகிறார் என்பதைக் காண்பிக்க எப்பொழுதாவது ஒருமுறை சிறிது மது அருந்தவேண்டும். அவர் பெண்களின் சீட்டு விளையாட்டுக் குழுவிற்கு வரவேண்டும், அவர்கள் தைத்துக்கொண்டே, தைத்துக்கொண்டே, குமாரி இன்னார்-மற்றும்-இன்னாரைப் பற்றிப் பேசுவதை ஆதரிக்க வேண்டும், அவர் அதைப்போன்ற அப்படிப்பட்டவராயிருக்க வேண்டும், உங்களுக்குத் தெரியுமா, அந்தவிதமாக எல்லோரோடும் பழகுகிற ஒருவராய்—ஒருவராய் இருக்க வேண்டும்.”

4289 தேவனோ, “பவுலையும் பர்னபாவையும் எனக்காக பிரித்து விடுங்கள்” என்றாரே! ஆமென். வேறுபிரிதல்! “அவர்களை விட்டுப் பிரிந்துபோய் அவர்களுடைய அசுத்தமானதைத் தொடாதிருங்கள்!” தேவன் வேறுபிரிதலை விரும்பு கிறார், பாவத்திலிருந்து முழுவதுமாக நீக்கப்படுதல். வேறுபிரிதல்! அதுதான் இன்றைய தொல்லை, நாம் ஆபிரகாமின் சந்ததியாய் இருக்கமுடியாததன் காரணமே அதுதான். கிறிஸ்தவமார்க்கம் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் கொள்கைகளினின்றும் கோட்பாடுகளினின்று நம்மை பிரித்துக்கொண்டு ஜீவனுள்ள வார்த்தைக்கு நம்மால் வரமுடியவில்லை. உங்கள் அவிசுவாசத்தினின்று உங் களை பிரித்துக்கொண்டு, தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள். தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்தித் தருவார். உண்மை. 90 ஆதியாகமம் 12-ல் தேவன் ஆபிரகாமிடம், “நீ உன் இனத்தார் அனைவரையும் உன்னைச் சுற்றிலுமுள்ள மற்றெல்லாவற்றை யும் விட்டுப் பிரிந்து வா” என்றார். ஓ, என்னே! நம்மால் சீட்டு விளையாட்டைவிட்டுப் பிரிந்து வரமுடியவில்லையே! ஹு!

4391 இன்று நான் ஒரு உணவு விடுதிக்கு சென்றிருந்தேன், அங்கு அந்த சகோதரனும் வந்திருந்தார். அங்கு வந்த ஒழுங்கீனமான ஒரு வாலிபனைக் கவனித்தேன். நானும் மனைவியும் உணவு உண்டு கொண்டிருந்தோம், அப்பொழுது நான், “தேவனுக்கு ஸ்தோத்திரம்! தேனே, யாராகிலும் இங்கு வருவதற்கு முன்பு நாம் விரைந்து வெளியே சென்று விடுவோம்” என்றேன். அப்பொழுது இந்த வாலிபன் ஆடிக்கொண்டே வந்தான். நான் அப்படிப்பட்ட பையனை இருட்டில் சந்திக்கப் பயப்படுவேன். அவன் பழைய பூகி-வூகி இசை பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு இசைத்தட்டை இயங்க வைப்பதற்கான ஒரு—ஒரு இசைத்தட்டுக் கருவியின் முள்ளைப் பொருத்தி, அங்கே நின்றுகொண்டு, இப்படி ஆடி, உங்களுக்குத் தெரியுமா, இப்படி தன்னையே அடித்துக் கொண்டான். நான், “பரிதாபமாயுள்ளதே, இரக்கம்!” என்றேன். 92 மேடா, “உணவுக்கான பணம் செலுத்த நீங்கள் என்னை விட்டு செல்ல வேண்டாம்—வேண்டாம். நீங்கள் இங்கேயே காத்திருங்கள், நானும் உங்களுடன் வருகிறேன்” என்றாள். அவள் பயந்துபோனாள்.

4493 இன்று நாம் பெற்றுள்ள இத்தகைய காரியங்களை, ஒரு கிறிஸ்தவ தேசத்தில் பெற்றுள்ளோம், ஓ, என்ன ஒரு காரியம்! வேறுபிரிதல்! அவர்களில் தொண்ணூறு சதவிகிதம் சபை பாடல் குழுக்களில் பாடுகின்றனர், எல்விஸ் பிரஸ்லி, பாட் பூன், மற்ற யாவரும், பீபாடி எர்னி, அவர்கள் ஏதோ அப்படி ஒரு பெயரால் அழைக்கின்றனர். ஏன், அது யூதாஸ்காரியோத்தைக் காட்டிலும் மோசமானது! யூதாஸ்காரியோத் விற்று, முப்பது வெள்ளிக் காசுகளைப் பெற்றான்; ஆனால் எல்விஸோ அவனை மிஞ்சிவிட்டான், இவன் பல காடிலாக் கார்களையும் அதிக புகழையும் சம்பாதித்துவிட்டான். காரணம் இந்த சிறுவர்கள் அவன் செய்வதைக் கண்டு, “அவன் மிகுந்த பக்தியுள்ளவன்” என்கின்றனர். அது பிசாசாயிற்றே! முற்றிலுமாக! அப்படிப்பட்ட காரியங்களை தேவன் பொறுத்துக் கொள்வதில்லை. கடைசி நாட்களில் இங்கே அது ஒரு குருட்டுத்தனமாயுள்ளது. 94 வார்த்தைக்குத் திரும்புங்கள். “நீங்கள் தேவபக்தியற்ற காரியங்களிலிருந்து உங்களைப் வேறுபிரித்துக்கொண்டு, அவர்களுடைய அசுத்தமான காரியத்தைத் தொடாதிருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.”

4595 சுவிசேஷத்தை, நாம் வெறும் கையுடன் கையாள வேண்டுமே! மதசம்பந்தமான கையுறைகளை போட்டுக்கொண்டு, யாராகிலும் ஒருவரை முதுகில் தட்டிக் கொடுக்கக் கூடாது, அது கூட்டில் அழுகின முட்டைகளை நிறைத்துவிடும், நீங்கள் யாரையாகிலும் மாகாண பிரதிநிதியாகவும், அல்லது ஒரு குருவானவராகவும், ஒரு பேராயராகவும், அல்லது வேறெதாவதாகவும் செய்து விடுகிறீர்கள். அது என்ன…நீங்கள் மதிப்பை பெறும்போது, நீங்கள் ஒருவரிடத்திலிருந்து மற்றவர் கனத்தைப் பெறும்போது, உங்களுக்கு எப்படி விசுவாசம் இருக்கும்? நாம் தேவனை, அவரை மாத்திரமே நோக்கிப் பார்க்க வேண்டுமே! தேவனிடத்திலிருந்தே கனம் உண்டாகிறது. அவர் ஒருவரே கனத்திற்குரியவர். நாம் அவருடைய வார்த்தையை தீபமாக பிடித்து, தேவனுக்கு முன்பாக ஒரு மனிதனாக அல்லது ஒரு ஸ்திரீயாக நடப்பதன் மூலம் அவரை நாம் கனப்படுத்துகிறோம். நிச்சயமாக. முற்றிலுமான வேறுபிரிதலாயிற்றே! ஆதியாகமம் 13, லோத்து பின்வாங்கிப் போனான். நினைவிருக்கட்டும். அவர்கள் ஒரு சிறு… 96 அவர்கள் தங்களை பிரித்துக்கொண்டப் பிறகு, ஆற்றைக் கடந்து தேசத்திற்குள் சென்றபோது, தேவன், “ஆபிரகாம், இவையெல்லாவற்றையும் உனக்கு இப்பொழுது தருவேன், ஆனால் நீ இன்னும் முழுவதுமாக எனக்குக் கீழ்ப்படியவில்லை” என்றார்.

4697 முதலாவதாக நடந்தது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அங்கு அவர்களுடைய மந்தை மேய்ப்பவர்களிடையே சிறு வாக்குவாதம் உண்டானது, ஆதியாகமம் 13-ல் (என்ன நடந்தது?), லோத்துடைய மந்தை மேய்ப்பருக்கும் ஆபிரகாமுடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. ஆபிரகாமின் சகோதர செயலை கவனியுங்கள். அவன், “நமக்குள்ளே வாக்குவாதம் வேண்டாம். நாம் சகோதரர்” என்றான். லோத்து வெதுவெதுப்பான சபைக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறான். ஆபிரகாம் லோத்தை நோக்கி, “உன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். உனக்கு எது வேண்டுமோ, நீ போய் அதை எடுத்துக்கொள். நீ கிழக்கே சென்றால், நான் மேற்கே செல்கிறேன், அல்லது, நீ மேற்கே சென்றால், நான் கிழக்கே செல்கிறேன். நீ வடக்கே சென்றால், நான் தெற்கே செல்கிறேன், உனக்கு வேண்டியதை நீ தெரிந்துகொள்” என்றான். லோத்து ஏற்கனவே எகிப்தில் இருந்தவன், அவனுடைய பார்வை சிறிது கீர்த்தியின் மேல் இருந்தது, அவனுடைய சட்டைப் பையில் சிறிது பணம் இருந்தது.

4798 அங்குதான் சபை அதனுடைய தவறைச் செய்தது. சகோதரரே, இதை நான் பயபக்தியுடன் கூறுகிறேன். பெந்தேகொஸ்தே சபையானது இந்த பெரிய ஆலயங்களிலும் சவக்கிடங்குகளிலும் இன்று உபயோகமற்றதை பெற்றுக் கொண்டு வாழ்வதைக் காட்டிலும், தெரு மூலைகளில் பழமை நாகரீகங்கொண்ட பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு ஆண்களும் பெண்களும், கையில் கஞ்சிராவை வைத்துக்கொண்டு நிற்பது அவர்களுக்கு நலமாயிருக்கும். அது உண்மை. அவர்கள் மற்றவர்களைப் போலவே நடந்து கொள்ள விரும்புகின்றனர். அங்குதான் அதை நாம் பெற்றுக் கொண்டோம். நீங்கள் முன்பிருந்த விதமாகவே, தேவன் உங்களை துவக்கினவிதமாகவே, நீங்கள் ஏன் இருக்கவில்லை? நீங்கள் எதைக் குறித்து வாக்குவாதம் செய்தீர்களோ, அதற்கே திரும்பிச் சென்று அதேக் காரியத்தையே செய்துவிட்டீர்கள். 99 லோத்தும் அதையே செய்தான், அவன் எகிப்துக்குச் சென்றான், முதலாவது உங்களுக்குத் தெரியுமா, அவன் தன் பார்வையை எகிப்தின்மேல் வைத்தான். அதன்பிறகு அவன் கண்களை ஏறெடுத்து சோதோமைப் பார்த்தான், சுகபோகம், எல்லாவற்றையும் சுலபமாக எடுத்துக்கொள்ளுதல். அவன் கிழக்கு நோக்கிச் சென்றான்…ஞாபகம் கொள்ளுங்கள், அவன் ஆபிரகாமுடன் மேற்கே செல்வதற்கு பதிலாக கிழக்கே சென்றான். அவன் கிழக்கே சென்ற காரணம் என்னவெனில், அது சுகபோக வழியாயிருந்தது. அவன் கிழக்கு நோக்கிச் சென்றான்.

48100 இன்றைக்கு சபையும் அவ்வாறே செய்துள்ளது, பாருங்கள், அவர்கள் பின்நோக்கிச் சென்றனர. நான் நேற்றிரவு கூறினது போன்று, சூரியன் கிழக்கில் உதித்து மேற்கே செல்கின்றது, தேவனுடைய குமாரன் முதலில் கிழக்கில் விஜயம் செய்து, மேற்கு நோக்கி சென்றார். இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர்கள் அதை மங்கச் செய்துவிட்டனர். “ஆனால் சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” என்று இந்த தீர்க்கதரிசி கூறியுள்ளான். அவர்கள் குமாரன் செல்லும் திசையை நோக்கி செல்வதற்குப் பதிலாக குமாரன் முன்பிருந்த இடத்துக்கு செல்கின்றனர். இன்றைக்கு நீங்கள் தெய்வீக சுகமளித்தல், தீர்க்கதரிசனம், ஆவிக்குரிய ஒன்பது வரங்கள், அல்லது அதுபோன்ற ஒரு காரியத்தைக் குறித்து பேச நேர்ந்தால்; அவர்கள், “நாம் பின்சென்று மூடி என்ன சொன்னார், சாங்கி என்ன சொன்னார், நாக்ஸ் என்ன சொன்னார், கால்வின் என்ன சொன்னார் என்று பார்ப்போம்” என்கின்றனர். இவர்களெல்லாரும் அங்கு குமாரன் பிரகாசித்துக்கொண்டிருந்தபோது வாழ்ந்தனர்; நாமோ பரிபூரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்! ஆமென்!

49101 முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி, கோளத்தைச் சுற்றி ஒரு பந்தை உருட்டி, “யாராகிலும் மணிக்கு முப்பது மேல் வேகத்தில் செல்வார்களானால், புவி ஈர்ப்பு சக்தி அவர்களை பூமியிலிருந்து மேலே கொண்டு சென்றுவிடும்” என்றார். அதை அவர் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்தார். இக்காலத்தில் விஞ்ஞானம் அதைக் குறிப்பிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை, ஐயா! இப்பொழுது அவர்கள் மணிக்கு இரண்டாயிரம் மைல் வேகம் செல்கின்றனர், அதைக் காட்டிலும் அவர்கள் வேகமாக செல்ல முயன்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் பின்நோக்கிப் பார்ப்பதில்லை. 102 ஆனால் போதர்களோ, “நாம் பின்நோக்கிப் பார்த்து மூடி என்ன சொன்னார், சாங்கி என்ன சொன்னார் என்று பார்ப்போம்” என்கின்றனர். அங்குதான் குமாரன் முன்பு இருந்தார் . இன்று அது இங்குள்ளதே! அது சாயங்கால நேரத்தில் மேற்கு கடற்கரையில் இருந்துகொண்டு, அல்லேலுயா, சாயங்கால வெளிச்சங்களை தந்து கொண்டிருக்கிறதே! லூத்தரின் நீதிமானாக்கப்படுதலுக்கோ அல்லது வெஸ்லியின் பரிசுத்தமாக்கப்படுதலுக்கோ திரும்பிச் செல்வதில்லை; ஆனால் நாம் சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக்கொண்டிருக்கும் கடைசி நாளில் இருக்கிறோம், ஆமென். குமாரனைப் பின்தொடர்ந்து செல்லுங்கள். 103 ஆனால் லோத்து பின்நோக்கிச் சென்றான், ஏனெனில் அது சுலபமான, சுகபோகமான ஒன்றாயிருந்தது. திருமதி லோத்தை, அவள் அங்கு சென்றபோது கவனியுங்கள். ஏன், அவள் நகரத்திலிருந்த சங்கங்களுக்கெல்லாம் ராணியாக இருந்திருக்க வேண்டும். லோத்து நகராண்மைத் தலைவ ரானான். ஓ, சகோதரனே, ஏன், நான் பொருட்படுத்திக் கூறுவது, அவர்கள் அதை உண்டாக்கினரே! 104 அப்படித்தான் ஜனங்கள் இன்று திருமதி லோத்தை பெற்றுள்ளனர். இன்று நமது ஜனங்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பாருங்கள். சபைகளிலுள்ள நமது ஜனங்களைப் பாருங்கள், அதைப் பாருங்கள். நமது பெண்களைப் பாருங்கள், இன்றைக்கு அவர்களைப் பாருங்கள்.

50105 அணன்மையில் நான்—நான் ஹாலிவுட்டில்…இல்லை லாஸ் ஏஞ்சலிஸ் இருந்தேன். அங்கு சகோதரன் ஆர்கன்பிரைட் வருதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு பெண் வந்தாள். நான் அவளைக் கண்டபோது, நான் தள்ளாடி விழப்போனேன். நான் அவளை உற்றுப்பார்த்தேன். “நான் ஒரு மிஷனரி. நான் பிளேக் என்ற கொள்ளை நோயைக் கண்டிருக்கிறேன், நான் தொழுநோயைக் கண்டிருக்கிறேன், ஆனால் இப்படிப்பட்ட ஒன்றை நான் கண்டதில்லை” என்று நான் எண்ணினேன். அவள் தலையுச்சியில் மாத்திரம் அதிக முடியோடு இருப்பதான சிகை அலங்காரத்தைக் கொண்டிருந்தாள். உங்களுக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியுமல்லவா, நீங்கள் ஒரு நீர்கோவையுள்ள தலை என்பது போல் அழைக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியும், அந்த—அந்த முதல் சீமாட்டி, ஆம், யேசபலைப் போன்று, அதேபோல். அவள் ஊதா, பச்சை வர்ணம் தீட்டியிருந்தாள்; அவள் ஒருவேளை காண்பதற்கு அழகான பெண்ணாக இருந்திருப்பாள்; ஆனால் அவள் தீட்டியிருந்த வர்ணம், அவளை ஆப்பிரிக்கப் பழங்குடி பெண் போல் தோற்றமளிக்கச் செய்தது. நான் அவளிடம் நடந்து சென்று, அவளுக்காக ஜெபம் செய்யப்போவதாயிருந்தேன். நான், “பெண்ணே, உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால்; நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறேன். இப்படிப்பட்ட ஒன்றை நான் இதுவரை கண்டதில்லை. அது என்னவென்று என்னிடம் சொல்” என்று அவளைக் கேட்கலாமென்று எண்ணினேன். ஆனால் அந்த சமயத்தில் வேறொருவள் அளிடம் வந்து பேசினாள், அவளும் அதேவிதமாக காணப்பட்டாள். ஓ, என்னே! ஓ, நீங்கள், “அது பிரஸ்பிடேரியன்” என்கிறீர்கள், பெந்தெகோஸ் தேயினரருமாயிற்றே! நிச்சயமாக.

51106 வேதம், “ஒரு ஸ்திரீ தன் தலைமுடியைக் கத்தரித்துக்கொள்வது கனவீ னமான செயல்” என்று கூறுகிறது. அவள் அப்படி செய்தால், அவள் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள். அவள் தூதனை, ஒளியின் தூதனை கனவீனப்படுத்துகிறாள். ஏழு சபை காலங்களின் தூதர்கள், வெளிச்சத்தைக் கொண்டு வருபவர் வார்த்தையில் நிலைநிற்பர். கனவீனமான செயலாயிற்றே! அவள் தன்னுடைய தலையில் முடியை உடையவளாயிருக்க வேண்டும். என்னே, அப்படிப்பட்ட செயல்! அவர்கள் தலைமுடியைக் கத்தரிப்பது தவறென்று முன்பு கருதப்பட்டது. முதலாம் பெந்தெகோஸ்தேயின் காலத்தில் அப்படி செய்தால் அது தவறாகும். என்ன நடந்தது? நீங்கள் நன்றாக ஓடினீர்களே, என்ன நடந்தது? 107 சில பெந்தெகொஸ்தே பெண்கள் உடுத்தும் உடைகள் மிகவும் இறுக்கமாக, உள்ளேயுள்ளதை மறைக்க மேலேயுள்ள தோலைப் போன்றுள்ளது, அவர்கள் இப்படி வெளியே சென்று…அது உண்மை! நான் இதை நகைச்சுவைக்காக கூறவில்லை. இங்கு நகைச்சுவைக்கு இடமில்லை. இது பிரசங்க பீடம். 108 சில பெண்கள் ஒரு இரவு என்னிடம் கூறினர். நான் அவர்கள் எப்படி உடுத்திக்கொண்டிருந்தனர் என்று அவர்களிடம் கூறினேன். அப்பொழுது ஒரு பெண், “நான் குட்டை கால் சட்டைகளை அணிவதில்லை, நான்—நான்—நான் நீளமான தளர் கால் சட்டைகளைதத்தான் உடுத்து கிறேன்” என்றாள். 109 நான், “அது அதைவிட மோசமானது. தேவன், ‘புருஷரின் உடைகளைத் தரிக்கும் ஸ்திரீ தேவனுடைய பார்வைக்கு அருவருப்பானவள் என்று கூறியுள்ளார்’” என்றேன். உண்மையே! 110 அவ்வாறு உடுத்திக்கொண்டு, வெளியே செல்லும் வாலிப ஸ்திரீயே, உன்னிடம் ஒன்றை நான் கூறட்டும், நியாயத்தீர்ப்பின் நாளில் விபச்சாரம் செய்த குற்றத்துக்காக நீ பதில் சொல்லியாக வேண்டும். நீ, “நான் ஒரு லிலீப் புஷஷ்பத்தைப்போல் தூய்மையானவள்” எனலாம்.

52111 ஆம், ஆனால் இயேசு, “ஒரு ஸ்திரீயை இச்சையோடே பார்க்கிற எவனும், தன் இருதயத்தில் அவளோடு விபச்சாரஞ் செய்தாயிற்று” என்று கூறியுள்ளார். நீ அந்த செயலில் ஈடுபடாமல் இருந்திருக்கலாம். “தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் அவனை ஏற்கனவே கொலை செய்துவிட்டான்.” பாருங்கள், அதை நீங்கள் செய்தாலே போதும். பாவி ஒருவன் நீங்கள் உடுத்தியுள்ள விதத்தையும், நீங்கள் பின்னால் தள்ளிக்கொண்டும், முன்னால் தள்ளிக்கொண்டும், உள்ளே இழுத்துக்கொண்டும், அப்படிப்பட்ட உடைகளை உடுத்திக்கொண்டு, நீங்கள் வெளியே செல்வதைப் பார்த்தால் என்னவாகும். இப்பொழுது கவனியுங்கள், இவை வேடிக்கைப் பேச்சுக்களல்ல! இது சுவிசேஷம்! நீங்கள் அப்படி செய்யும்போது, யாராகிலும் ஒரு பாவி உங்களைக் கண்டு இச்சிக்கிறான். நியாயத்தீர்ப்பு நாளில், விபச்சாரம் செய்த குற்றத்துக்காக அவன் பதில் கூறும்போது, அதற்கு காரணமாயிருந்தது யார்? நீங்கள்தான் அதைச் செய்தீர்கள். அந்தவிதமாக உங்களைக் காண்பித்த காரணத்தால் நீங்கள் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

53112 ஏன், நீங்கள், “அவர்கள்—அவர்கள் வேறுவிதமான உடைகளைத் தயாரிப்பதில்லை” எனலாம். ஆனால் அவர்கள் தையல் இயந்திரங்களை தயாரிக்கின்றனர், இப்பொழுதும் துணிகளை விற்கின்றனர். எனவே சாக்குபோக்குக்கு இடமேயில்லையே! நீங்கள் தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகிவிட் டதால் அப்படி செய்கிறீர்களே! இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிற உபதேசமல்ல. இது கடினமானது. 113 புகழ் வாய்ந்த போதகர் ஒருவர் அன்றொரு நாள் என்னிடம் வந்து, அவர் கைகளை என் மேல் வைத்து, “என் கைகளை உம்மேல் வைத்து பொல்லாத ஆவியைத் துரத்தப்போகின்றேன்” என்றார். நான், “என்ன?” என்றேன். 114 அவர், “நீங்கள் பெண்களைக் குறித்து இழிவாக பேசுகிறீர்களே?” என்றும், “ஜனங்கள் உங்களை தீர்க்கதரிசி என்று கருதுகின்றனரே என்றும்,” கூறினார். அதற்கு, “நான் தீர்க்கதரிசியல்ல” என்றே நான் பதிலளித்தேன். 115 அவர், “சகோதரன் பிரான்ஹாமே, அவர்கள் அப்படி கருதுகின்றனர்” என்றார். மேலும் அவர், “மகத்தான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அந்த ஜனங்கள், அந்த ஸ்திரீகள் பெறுவது எப்படியென்று நீங்கள் பெண்களுக்கு கற்பித்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் தலை முடியைக் கத்தரித்துக்கொள்வதைக் குறித்தும், இன்னும் அதுபோன்ற மற்றவைகளைக் குறித்தும் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறீரே. அவர்கள் அதற்கு செவி கொடுக்க மாட்டார்கள்” என்றார். அதற்கு நான், “எனக்குத் அது தெரியும்” என்றேன். அவர், “நீர் ஏன் அவர்களுக்கு மகத்தான காரியங்களை போதிக்கக் கூடாது?” என்றார். 116 நான், “அவர்கள் தங்களுடைய மொழியின் முதலெழுத்துக்களையே அறியாதிருக்கும்போது, சாதாரண ஒழுக்க முறையையேக் கூட அறியாமலிருக்கும்போது, அவர்களுக்கு இயற்கணிதத்தை எப்படி என்னால் கற்பிக்கமுடியும்?” என்று கேட்டேன்.

54117 உங்கள் ஸ்திரீகள் அப்படி நடந்துகொள்ள அனுமதிக்கும் மனிதரே, நீங்கள் ஒரு கிறிஸ்தவ மனிதர், ஆபிரகாமின் சந்ததி என்பதைக் குறித்து எனக்கு மதிப்பு இல்லை. ஆமென்! இதை இத்துடன் விட்டுவிடுவது நல்லது. இல்லையென்றால் நீங்கள் எல்லொரும் எழுந்து வீட்டுக்குச் செல்லும்படி நான் செய்து விடுவேன். சரி. இந்நாட்களில் ஒன்றில் நீங்கள் மேலே ஒன்றைக் காணத் தவறிவிட போகின்றீர்கள். 118 “அதனால் ஒரு வித்தியாசமுமில்லை” என்று நீங்கள் கூறலாம். ஆனால் பவுலுக்கு அது வித்தியாசத்தை உண்டு பண்ணினது. ஏதேன் தோட்டத்தில் அது தேவனுக்கு வித்தியாசத்தை உண்டுபண்ணினது. பெண்களுக்கு நீண்ட தலைமுடி இருக்கவேண்டுமென்றும் வேதம் கூறுகிறதே! அது இல்லாமல், நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள்? பாருங்கள், “அதனால் ஒரு வித்தியாசமுமில்லை” என்று நீங்கள் கூறலாம். ஆனால் வித்தியாசம் உண்டு என்று வேதம் கூறுகிறதே! பிசாசு உங்களிடம் விவாதித்து, “அது நவீனமானது, அதனால் பாதகமில்லை” என்று கூற அனுமதியாதேயுங்கள். அது சரியல்லவே! நீங்கள் “இதை நான் முன்பு அறிந்திருக்கவில்லை” எனலாம். இப்பொழுது அதை அறிந்து கொண்டீர்கள். பார்த்தீர்களா? நீங்கள் ஆராய்ந்து பார்த்து அது சரியா யென்று அறிந்துகொள்ளுங்கள். இதை இத்துடன் விட்டுவிடுகிறேன், பாருங்கள். சரி.

55119 ஆதியாகமம் 13, நவீனம், ஹு—ஹூ; குமாரன் முன்பிருந்த இடத்துக்கு செல்லுதல், குமாரன் இப்பொழுதுள்ள இடத்துக்கு அல்ல; குமாரன் முன்பிருந்த இடத்துக்கே. லோத்தின் மனைவி, மனைவி, எவ்வாறு சமுதாயத்தில் நுழைந்தாள் என்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேனே! 120 நாமும் கூட அப்படித்தான் சமுதாயத்தில் நுழைந்துவிட்டோம். பெந்தெகொஸ்தேயினராகிய நாம் அப்படித்தான் நுழைந்துவிட்டோம். நாம் இங்கு ஒரு சிறு ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டு, இந்த சிறிய ஒன்றுக்கு விரோதமாய் மற்றொன்று செயல்பட்டு, இதற்கு எதிராக செயல்பட்டு, அவர்கள்…நீங்கள் எதையும் ஏற்றுக்கொண்டீர்கள். அது முற்றிலும் உண்மை.

56121 இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று—வேண்டுமென்று கேட்டுக்கொண்டபோது, சவுலைத் தங்கள் மேல் ஒரு ராஜாவாக்க நியமிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டபோது, சாமுவேல் என்ன கூறினான்? சாமுவேல் அவர்களிடம் வந்து, “நான் எப்பொழுதாகிலும் என் ஜீவனத்துக்காக உங்கள் பணத்தை எடுத்துக்கொண்டேனா? கர்த்தருடைய நாமத்தில் நான் கூறின ஏதாகிலும் இதுவரை நிறை வேறாமல் போனதுண்டா?” என்று கேட்டான். 122 அவர்கள், ஓ, “நிச்சயமாகவே, நீர் தேவனுடைய தீர்க்கதரிசி. நீர் எங்களுக்கு உண்மையைக் கூறி வந்தீர். நீர் கூறின யாவும் நிறைவேறினது, ஆனாலும், எப்படியும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும்” என்றனர். 123 நீங்கள் தளர்வுகள் ஏற்பட அனுமதிக்கத் துவங்கினபோதே, இதை , அதை உள்ளே வர அனுமதித்து, அந்தவிதமான ஒவ்வொரு காரியமும் உள்ளே நுழைந்தபோது, நீங்கள் நவீனமாகிவிட்டீர்கள். இன்று சபையானது மற்றவர்களைப்போலவே உள்ளது. நமக்கு ஒரு பெந்தெகொஸ்தே வீட்டு சுத்திகரிப்பு தேவையாயிருக்கிறதே! அது முற்றிலும் உண்மை. ஆமென். ஒரு பாப்டிஸ்டு இதை உங்களிடம் கூற வேண்டியுள்ளது ஒரு அவமானமே, இல்லையா? ஆனால் அது சத்தியம். சரி! நான் வேதத்தை விசுவாசிக்கிறேன், தேவனுடைய வார்த்தை உண்மையென்று நான் விசுவாசிக்கிறேன். சரி.

57124 ஆபிரகாம், பிறகு ஆபிரகாம்…13-ம் அதிகாரம் 14-ம் வசனத்தில், லோத்து அவனை விட்டுப்பிரிந்து சென்ற பிறகு, ஆபிரகாம் தேவனுக்கு முற்றிலுமாக கீழ்படிந்தான், அதன்பின்னர் தேவன் அவனிடம் வந்தார். இப்பொழுது தேவன் அவனை ஆசீர்வதிக்க ஆயத்தமாயுள்ளார். 125 அவ்வாறே பெந்தெகொஸ்தே சபை தனது கோட்பாடுகள், கொள்கைள் அனைத்தையும், உலகத்தைப்போல் நடந்துகொண்டு, காண்பதற்கு உலகத்தைப்போல் உள்ளதையும், உலகத்தைப்போல் பேசுவதையும், புதன் இரவு ஜெபகூட்டத்துக்கு வருவதற்கு பதிலாக வீட்டில் தங்கி நாங்கள் சூசியை நேசிக்கிறோம் என்னும் தொலைகாட்சி நிகழ்ச்சியைக் காண்பதையும், ஒரு வானொலி நிகழ்ச்சியில் நீங்கள் உண்மையானதற்காக நிற்கும் அதேக் காரியத்தைக் குறித்து ஏளனம் செய்யும் யாரோ ஒரு போதகருக்கு உங்கள் தசமபாகத்தை அனுப்புவதும், பெந்தெகொஸ்தே என்னும் பெயரால் செய்யப்படும் இவையனைத்தையும் விட்டு விலகும் வரையில், இது அவமானமாயிற்றே!

58126 நான் சர்வதேச கிறிஸ்தவ வர்த்தகர் குழுக்களில் பேசுகிறேன். அவர்களில் அநேகர் இப்பொழுது இங்கு அமர்ந்துள்ளனர். இங்கு மற்றொரு இரவு, இங்கு கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்பு, நான் ஜமாய்க்காவுக்கு சென்றிருந்தேன். ஒரு இரவு அந்த தீவிலுள்ள பெரிய மனிதர் அனைவரும் அங்கு வந்தி ருந்தனர், அப்பொழுது இந்த மனிதர் எழுந்து நின்று, “தேவனுக்கு மகிமை! நான் மூலையில் ஒரு சிறு வர்த்தகனாக இருந்தேன். அல்லேலுயா, இப்பொழுது நான் நான்கு காடிலாக் கார்களை வைத்திருக்கிறேன், தேவனுக்கு மகிமை!” என்று சாட்சிப் பகர்ந்தனர். 127 அன்றிரவு நான் ஃபிளமிங்கோ விடுதிக்கு மீண்டும் சென்றேன். அங்கு நான் நின்றுகொண்டு, “உங்களைக் குறித்து நான் வெட்கப் படுகிறேன்” என்றேனே! மேலும் நான், “கிறிஸ்துவின் பிரதிநிதிகளாகிய நீங்கள் ஒரு வர்த்தகரிடம், உங்களிடம் எவ்வளவு உள்ளதென்று கூற முயல்கின்றீர்கள், உங்களிடம் உள்ளதைக் காட்டிலும் அல்லது இனி இருக்கப்போவதைக் காட்டிலும் அவரிடம் அதிகம் உள்ளது” என்றேன். ஆதி பெந்தேகோஸ்தேயினரிடமிருந்து இது முற்றிலும் வேறுபட்டதாயுள்ளது. ஆதி பெந்தெகொஸ்தேயினர் தங்களுக்கிருந்த எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, பின்னர் சென்று சுவிஷேத்தைப் பிரசங்கித்தனர். உண்மையே!

59128 சிக்காகோவிலுள்ள ஒரு ஸ்வீடன் நாட்டு பாடகர், அவருடைய பெயரை நான் கூறப்போவதில்லை. அவர் என் விலையேறப் பெற்ற சகோதரன். அவர் எழுந்து நின்று, “சகோதரன் பிரான்ஹாமே, நீர்…நீர் ஒரு தீர்க்கதரியாயிருக்க வேண்டும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், ஆனால் இப்பொழுது, ‘நீர் தவறாயிருக்கிறீர்’ என்று நான் கூறப்போகின்றேன்” என்றார். நான், “சகோதரனே, எங்கு தவறென்று என்னிடம் கூறும்” என்றேன். 129 அவர், “பாருங்கள், அந்த மக்கள் தங்களுக்குண்டான எல்லா வற்றையும் விற்று அப்போஸ்தலருடைய பாதங்களில் வைத்து, அதைப் பகிர்ந்து கொடுத்தனர்” என்றார். மேலும் அவர், “அதுவே அவர்கள் செய்த மிக மோசமான செயல்” என்றார். 130 நான், “பரிசுத்த ஆவியானவர் ஒரு தவறான செயலைப் புரிகிறார் என்றா நீங்கள் என்னிடம் பொருட்படுத்திக் கூறுகின்றீர்கள்?” என்றேன். அதற்கு அவர், “அது தவறு. அதை உங்களுக்கு நான் நிரூபிப்பேன்” என்றார். அப்பொழுது நான், “ஏன்?” என்றேன். 131 அதற்கு அவர், “அப்பொழுது துன்புறுத்தல் அதிகமானபோது, அவர்கள் போக இடமில்லாதிருந்தனர். அவர்கள் கிட்டத்தட்ட எல்லாவிடங்களிலும் அலைந்து திரிந்தனர்” என்றார். 132 நான், “அது முற்றிலுமாக தேவனுடைய சித்தத்தில் அமைந்திருந்தது. அவர்கள் சென்றவிடமெல்லாம் சுவிஷேத்தைப் பிரசங்கித்தனர். அவர்கள் திரும்பி வர இடமில்லாதிருந்தனர்” என்றேன். தேவன் தவறுகள் செய்கிறதில்லை. உண்மையே! ஓ, அது என்னே ஒரு வித்தியாசமாயுள்ளது; அதுதான் பெந்தெகோஸ்தேவாக இருந்தது, அதுவே இப்பொழுதும் பெந்தெகொஸ்தேவாக உள்ளது. ஆம், அதுதான் அது.

60133 ஆபிரகாம் தன்னை லோத்தை விட்டுப் பிரிந்துகொண்டப் பிறகு, அதைத்தான் தேவன் அவனிடம் செய்யக் கூறினார். “நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கி பாவத்திலிருந்து பிரிந்து, எல்லாவற்றையும் எடுத்துப் போதல்!” அங்கே, அப்பொழுது தேவன், “ஆபிரகாமே, இப்பொழுது நீ எல்லாவற்றிற்கும் சுதந்தரவாளி. கிழக்கே பார், மேற்கே பார், வடக்கே பார், தெற்கே பார், தேசத்தின் வழியாக நடந்துபோ, அதெல்லாம் உன்னுடையதே!” என்றார். ஆமென். 134 நீங்கள் உங்களுடைய காரியத்தை, பாவத்தினின்றும், அவிசுவாசத்தினின்றும் பிரித்துக் கொள்ளுங்கள். ஓரே ஒரு பாவம் தான் உண்டு, அதுதான் அவிசுவாசம். விபச்சாரம் செய்வது ஒரு பாவமல்ல, மது அருந்துவது ஒரு பாவமல்ல, பொய்களைச் சொல்வது ஒரு பாவமல்ல; இவை யாவும் அவிசுவாசத்தின் தன்மைகள். நீங்கள் விசுவாசித்திருந்தால், நீங்கள் இவைகளைச் செய்திருக்க மாட்டீர்கள். நிச்சயமாக. இயேசு, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்று யோவான் 5:24-ல் கூறியுள்ளார், அந்த சோயி , பரிசுத்த ஆவி, ஏனெனில் அவன் விசுவாசித்தான். சரியாக. இப்பொழுது, நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளும் வரைக்கும், நீங்கள் பாவனை விசுவாசியே, நீங்கள் அந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் உண்மையாக விசுவாசித்து, தங்களை பிரித்துக் கொள்ளும்போது, அப்பொழுது நீங்கள் உங்களுடைய எல்லா அவிசுவாசத்தினின்றும் உங்களை பிரித்துக்கொண்டு, தேவனை விசுவாசித்து, நேர்மையாக நடந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, சரியான எல்லாவற்றையும் செய்து வருவீர்களானால், அப்பொழுது தேவன், “வேத புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுடையதே” என்பார். ஆமென். “அவையனைத்தும் உங்களுடையதே! நீங்கள் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் முடிய வேத புத்தகத்தைத் திருப்புங்கள், அவையனைத்தும் உங்களுடையதே!” ஆமென். “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ, அது உங்களுக்குச் செய்யப்படும்.” என்ன? நீங்கள் முதலாவதாக உங்களை உங்கள் அவிசுவாசத்தினின்று பிரித்துக் கொள்ளவேண்டும். நீங்கள், “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அதை மிகவும் நெருக்கமாக்குகின்றீர்கள்” எனலாம்.

61135 இயேசு, “நோவாவின் நாட்களில் எட்டு பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷ குமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” என்றார். 136 “அப்படியானால் எத்தனை பேர், சகோதரன் பிரான்ஹாமே?” அது எட்டாயிரமாக இருக்கலாம், எண்பது லட்சமாக இருக்கலாம், அது என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் அது சிறுபான்மையோராக இருக்கப்போகிறது. லட்சத்தில் ஒருவர் என்பது போன்று, அல்லது அதைப் போன்றே என்று நான் கூற முடியும். சரி.

62137 ஒரு மறுபிறப்பின் அனுபவம் பெறாமல், மனோத்தத்துவ விசு வாசம், சிந்தையிலெழுந்த விசுவாசம், உணர்ச்சிவசப்படுத்துதல், மதசம் பந்தமான கோட்பாடுகள்! உண்மையான பரிசுத்த ஆவி அங்கு இருக்குமானால், அது வார்த்தையை ஆமோதிக்கும்; அந்த வார்த்தையும், அது எப்படி ஜீவிக்கும் என்று கூறப்பட்டுள்ளதோ, அவ்வாறே ஜீவிக்கும், ஏனெனில் அதை உரைத்த அதே ஆவி, இப்பொழுது உங்கள் மூலமாக உரைக்கிறார். எனவே அது ஜீவிக்க வேண்டும். நிச்சயமாக, அது ஜீவிக்க வேண்டும். பேசுகிறது நீங்கள் அல்ல, உங்களில் வாசமாயிருக்கிற பிதாவானவரே பேசுகின்றார். சரி. ஆபிரகாம், சர்வத்துக்கும் சுதந்தரவாளி.

63138 நான், ஜனங்களாகிய உங்களைப் போல் நான் பரிசுத்த ஆவியில் நிரப்பப்பட்டபோது, நான் ஆய்ந்து பார்க்க ஆவல் கொண்டேன், உதாரணமாக, ஒரு பெரிய கடையிலுள்ள எல்லாமே எனக்கு சொந்தமானது. அதிலுள்ள அனைத்துக்கும் நான் சுதந்தரவாளி. நான் ஒரு கடைக்கு சுதந்திரவாளியாகும்போது, எனக்கு—எனக்கு என்ன உள்ளது என்று அறிய ஆவல்கொள்வேன். அது போன்று நான் கிறிஸ்தவனான போது, எனக்கு என்னவெல்லாம் சொந்தமாயிற்று என்று நான் அறிய விரும்பினேன். எனவே கடைக்கே நான் சொந்தமாகும்போது, நான் அங்கு சென்று, எல்லாவற்றையும் திறந்து பார்த்து, இங்கு என்ன உள்ளது என்று காண்பேன், நான் இங்கு பார்ப்பேன், அங்கு என்ன உள்ளது என்று பார்ப்பேன்; ஏதோ ஒன்று உயர இருப்பதுபோல தென்பட்டால், நான் ஏணியைப் போட்டு அதன் மேலேறி, அது என்னவென்று காண்பேன். ஏதாவதொன்று இங்கிருந்து எனக்கு எட்டாத உயரத்தில் இருக்குமானால், நான அதற்கு எழும்பும் வரைக்கும் முழங்காலிட்டு ஜெபம் செய்வேன். அது எனக்கு சொந்தம்! தேவன் அதை வாக்குதத்தம் செய்துள்ளளார். தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமை, இந்த அற்புதங்கள், அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள் அனைத்தையும் அவர் வாக்களித்துள்ளார். 139 “சகோதரன் பிரான்ஹாமே, இந்த காரியங்கள் எப்படி கிரியை செய்கின்றன?” என்று கேட்கலாம். தேவனுடைய வாக்குத்தத்தினாலே. ஆமென். 140 ஆபிரகாமின் சந்ததி! மகிமை! எனக்கு நல்லுணர்வு தோன்றுகின்றது. நான் பைத்தியக்காரனைப்போல் காணப்படலாம், பைத்தியக்காரனைப் போல் நடந்து கொள்ளலாம், ஆனால் என்னை தனியே விட்டுவிடுங்கள். மற்ற வழியைக்காட்டிலும் இந்த ஒரு வழியையே நான் மேலாக உணருகிறேன். பார்த்தீர்களா?

64141 14-ம் அதிகாரம், நாம் ஆபிரகாமுக்கு செல்கின்றோம், இப்பொழுது 14-ம் அதிகாரத்தில் என்ன நடந்ததென்று நாம் காண்கிறோம். ராஜாக்கள் தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்து, சோதோமின் ராஜாவின் மேல் படையெடுத்து, சோதோமைக் கைப்பற்றி, லோத்தைக் கொண்டு சென்றனர்; கர்த்தருக்குள் ஆபிரகாமின் சகோதரன், அவனைக் கொண்டு சென்று விட்டனர், அவனுடைய வெது வெதுப்பான ஸ்தாபன சகோதரன், கொண்டு செல்லப்பட்டான். இப்பொழுது, தேவன் அப்பொழுது தான் ஆபிகாமிடம், தேசத்திலுள்ள அனைத்தும் அவனுடையது என்று கூறியிருந்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 142 “சாந்த குணமுள்ளவர்கள் பூமியைக் சுதந்தரித்துக்கொள் வார்கள்.” நாம் பைத்தியம் என்று கூறுகிறீர்களா? பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறார்கள், பூமியில் உள்ளதையே! நிச்சயமாக, நாம் அதை சுதந்தரிக்கப்போகின்றோம். 143 சாத்தானைப் பாருங்கள், அவன் இயேசுவிடம், “நீர் என்னைத் தாழ விழுந்து பணிந்துகொண்டால், இந்த உலகத்தை உமக்குத் தருவேன்” என்றான். ராஜ்யங்கள் அனைத்துமே பிசாசினால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன, அவை ஒவ்வொன்றுமே. அவ்வாறு இயேசு கூறினார். வேதம் அதை உரைக்கிறது. ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு ராஜஜ்யமும் பிசாசினால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. சாத்தான், “இவையனைத்தும் எனக்குச் சொந்தம். இவைகள் யாவும் என்னுடையது. நீர் என்னைப் பணிந்துகொண்டால், நான் இவைகளை உமக்குத் தருவேன்” என்றான். 144 ஆயிரம் வருட அரசாட்சியில் இவையனைத்துக்கும் தாம் சுதந்தரவாளியாவார் என்று இயேசு அறிந்திருந்தார், எனவே அவர், “அப்பாலே போ, சாத்தானே” என்றார். அவர் அதற்கு சுதந்தரவாளி என்பதை அறிந்திருந்தார்.

65145 இன்றைக்கு பைத்தியக்கார ஜனங்கள் கர்த்தரை வழிபடு கின்றனர் என்று அவர்கள் கூறி, மறுபிறப்பு அடைவதைக் குறித்து இழிவாக பேசுகின்றனர். “மறுபடியும் பிறத்தல்” என்பதைக் குறித்து அவர்கள் பயப்படுகின்றனர். அந்த கருத்தே அவர்களுக்குப் பிடிக்கவில்லை, அதற்குப் பதிலாக அவர்கள் வேறெதையெல்லாமோ ஏற்றுக்கொண்டுள்ளனர். அவைகளில் ஒன்று கைகுலுக்குதல், மற்றொன்று சிறிது தண்ணீர் தெளித்தல், மற்றொன்று நாவை வெளியே நீட்டி ரொட்டித் துண்டைப் பெற்றுக்கொள்ளுதல், மற்றொன்று தரையில் சுற்றி நடனமாடுதல், அது ஒரு பிறப்பாம்! நான் அன்றிரவு கூறினது போன்று, “பிறப்பு என்பது அலங்கோல நிலையே. அது எங்கு நடந்தாலும், எனக்குக் கவலையில்லை. அது பன்றித் தொழுவத்திலோ அல்லது மருத்துவமனை அறையிலோ, எங்கு நடந்தாலும், அது பிறப்புதான், அது ஒரு அலங்கோலமே.” புது பிறப்பும் அவ்வாறேயுள்ளது, அது உங்களை கிழித்துப் போடுகின்றது, ஆனால் அந்த அலங்கோலத்திலிருந்து புது ஜீவன் தோன்றுகிறது. ஆமென். ஆம்.

66146 ஆபிரகாம் எல்லாமே தனக்கு சொந்தம் என்பதை அறிந்திருந்தான், எனவே லோத்து கொண்டு செல்லப்பட்டபோது, அவன், “இப்பொழுது ஒரு நிமிடம்” என்றான். லோத்து சத்துருவின் கொடூரமான கரங்களால் சிறைபிடித்து கொண்டு செல்லப்பட்டான். அப்பொழுது ஆபிரகாம், “அது என் சகோதரன், அவனைப் பின் தொடர்வேன்” என்றான். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அங்கு ஏழு அல்லது எட்டு ராஜாக்கள் ஒன்று சேர்ந்து, அங்கு வந்து, எல்லாவற்றையும் துடைத்தெடுத்துக்கொண்டு சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகு, ஆபிரகாம் தன் வேலையாட்களை கூட்டிக்கொண்டு, இழந்துபோன தன் சகோதரனை மீட்டுக்கொண்டு வர, அவனைப் பின்தொடர்ந்தான். அதுவே உண்மையான கிறிஸ்தவன், இழந்துபோன தன் சகோதரனின் பின்னால் சென்றானே! அவனைக் கண்டுபிடித்தபோது அவன் என்ன செய்தான்? அவன் ராஜாக்களை சங்கரித்து; யுத்தத்துக்குப் பிறகு, தன் சகோதரனை கூட்டிக்கொண்டு திரும்பி வந்தான்.

67147 கவனியுங்கள், அவன் திரும்பி வரும்போது, அவனைச் சந்திக்க ஒரு ராஜா புறப்பட்டு வந்தான், மெல்கிசேதேக்கு. மெல்கிசேதேக்கு, அவர் யாராயிருந்தார்? அவனுக்கு தகப்பன் இல்லாதிருந்தது, அவனுக்கு தாயும் இல்லாதிருந்து, அவன் பிறக்க வேயில்லை, அவன் ஒருபோதும் மரிப்பதுமில்லை. இவன் தகப்பனும் தாயுமில்லாதவன், இவன் நாட்களில் துவக்கமும் ஜீவனின் முடிவுமில்லாதவன். (அது தேவனுடைய குமாரனாயிருக்கவில்லை; ஏனெனில் அவருக்குத் தகப்பனும் தாயும் இருந்தனர். அவர் பிறந்து, மரித்து, பின்பு உயிரோடெழுந்தார்.) ஆனால் இந்த மனிதனுக்கோ தகப்பனும் தாயும் இல்லை, அவர் தேவனே! நிச்சயமாக, அது நித்தியமான ஒரே காரியமாய் மாத்திரமே உள்ளது. 148 யுத்தம் முடிந்தபிறகு அவர் ஆபிரகாமைச் சந்தித்தார். அது ஆபிரகாமின் சந்ததிக்கு எதைக் காண்பிக்கிறதென்றால்; நாமும் விழுந்துபோன நமது சகோதரனின் பின்னால் செல்வோம், யுத்தம் முடிவுற்றுவிடும். மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு கொடுத்தது என்ன? திராட்சரசமும், அப்பமும், இராப்போஜனம். ஆமென். யுத்தம் முடிந்தவுடனே, சகோதரனே! அவன் இழந்துபோன சகோதரனைக் கூட்டிக்கொண்டு திரும்பி வருகிறான், அவனை மீண்டும் அந்த இடத்திற்கு திரும்பக் கொண்டு வருகிறான். யுத்தம் முடிந்தவுடனே, மெல்கிசேதேக்கு ஆபிரகாமைச் சந்தித்து இராப்போஜனம் கொடுத்தார். இயேசு, “இதுமுதல் இந்த திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லை, புசிப்பதுமில்லை” என்று கூறினார். ஆம், ஐயா. இப்பொழுது யுத்தம் முடிந்துவிட்டது, ஆபிரகாம் திரும்பி வந்துவிட்டான், 14-ம் அதிகாரம்; அவன் ஜெயத்தோடு வந்து கொண்டிருந்தபோது, ஜெயவீரர் அவனை சந்தித்தார்.

68149 இப்பொழுது ஆதியாகமம் 15, நாம் முடிப்பதற்குக்கு முன்பாக, ஏனென்றால் இது இப்பொழுது முடிக்கின்ற நேரம். நாம் போவதற்கு முன்பு இன்னும் ஒரு காரியத்தைக் கவனியுங்கள். 150 இதை நான் மறுபடியும் நாளை இரவு எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் நான் இன்னும் யேகோவா-யீரே என்னும் என் பொருளுக்கே வரவில்லை, கர்த்தருக்கு சித்தமானால், அதைக் குறித்து நான் பேச விரும்புகிறேன். 151 இப்பொழுது 15-ம் அதிகாரத்தில், ஆபிரகாமுக்கு ஒரு உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட்டதாக இங்கு நான் எழுதி வைத்துள்ளேன், உடன்படிக்கை உறுதிப்படுதல். வேறுவிதமாகக் கூறினால், தேவன் ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்ததை உறுதிப்படுத்துகிறார். 15-ம் அதிகாரத்தில் தேவன் கொடுத்த அந்த ஆணை உறுதிப்படுவதை நாம் காண்கிறோம். 152 ஆபிரகாம் தேவனிடம், “தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் இப்பொழுதும் என் வீட்டின் சுதந்தரவாளியாய் இருக்கிறான்” என்றான். 153 தேவன் ஆபிரகாமை நோக்கி, “இவன் உனக்குச் சுதந்திரவா ளியல்ல, உன் கர்ப்பப் பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்திரவாளியாவான்” என்றார். அவர் அவனுக்கு வாக்களித்திருந்தார். “இதை நான் எப்படி அறிவேன்?” என்று கேட்டான்.

69154 ஓ, இப்பொழுது, சகோதரரே, உங்களை விழித்தெழச் செய்ய இதோ ஒன்று! அவரைக் கவனியுங்கள். அவர், “மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும் என்னிடத்தில் கொண்டு வா” என்றார். இரண்டு காட்டுப்புறா…ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், ஆபிரகாம் அவைகளைக் கொண்டு வந்தான். 155 இப்பொழுது, காட்டுப் புறாவும் புறாக்குஞ்சும் எடுத்துக் காட்டாய் உள்ளன; இந்த மூன்று வயதுடைய மிருகங்கள், அவைகள் மூன்றும் இருந்தன. இப்பொழுது அவர் உடன்படிக்கையை, உடன்படிக்கையை உறுதிப்படுத்தப்போகின்றார். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், இதைக் காணத்தவற வேண்டாம். கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு அவர் அவனை இங்கு சந்திக்கிறதை மறுபடியும் எடுத்துக்கொண்டு பேசுவோம். கவனியுங்கள். 156 இப்பொழுது அவர், “மூன்று வயதான ஒரு—ஒரு கிடாரியையும், மூன்று வயதான ஒரு வெள்ளாட்டையும், மூன்று வயதான ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும் என்னிடத்தில் கொண்டு வா” என்றார். 157 ஆபிரகாம் சென்று அந்த மிருங்களைக் கொண்டுவந்து, அவைகளை நடுவாகக் துண்டித்து, துண்டங்களை ஒவ்வொன்றாகக் கிடத்தினான்; ஆனால் காட்டுப்புறாவையும், புறாக்குஞ்சையும் அவன் துண்டிக் கவில்லை, காட்டுப்புறாவும் புறாக்குஞ்சுவும் ஓரே இனத்தைச் சேர்ந்தவை. எனவே அது தெய்வீக சுகமளித்தலுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது. இரண்டு உடன்படிக்கைகளிலும் விசுவாசத்தின் மூலமே அவர்கள் சுகம் பெறுகின்றனர்; ஒன்றிலிருந்து மற்றொன்று. பழைய உடன்படிக்கையிலேயே தெய்வீக சுகமளித்தல் அடங்கியிருக்குமானால், இந்த ஒன்று அதைக் காட்டிலும் எவ்வளவு அதிகமாக அதைப் பெற்றிருக்க வேண்டும்! பாருங்கள், பழைய பலியிலேயே சுகமளித்தல் இருக்குமானால், அதைவிட மேலான இந்த ஒன்றைக் குறித்தென்ன! புரிகிறதா?

70158 இப்பொழுது, அவன் இங்கு என்ன செய்தான் என்பதைக் கவனியுங்கள். அவன் இந்த மூன்று மிருகங்களையும் எடுத்து அவைகளைத் துண்டுகளாக்கி, ஒவ்வொரு துண்டாகக் கிடத்தினான். அதன்பிறகு ஆபிரகாம் சென்றுவிட்டான். இப்பொழுது, அது பலியாயிருந்தது. சூரியன் அஸ்தமிக்கும் வரைக்கும் அவன் கவனித்துக்கொண்டிருந்தான். ஆபிரகாம் படைத்த பலியின் மேல் ஆகாயத்து பறவைகள், பருந்துகள் இறங்கின. அவைகளை ஆபிரகாம் துரத்தினான், அவைகளை ஷு என்று துரத்தினான். 159 இது எதற்கு முன்னடையாளமாயுள்ளது? கடைசி நாளில் ஆபிரகாமின் சந்ததி, பலியிலிருந்து பிசாசுகளை துரத்துவதற்கு, பலியிலிருந்து துரத்துவதற்கு முன்னடையாளமாயுள்ளது. பலியை, நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற கிறிஸ்துவை, தேவன் நமக்கு வாக்குத்தத்தம் செய்தார், அவிசுவாச ஆவிகள் அனைத்தும் அதை விழுங்க முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறன. தேவனுடைய மனிதன், ஆபிரகாமின் சந்ததி, அங்கு நின்று கொண்டு, பிசாசுகளை அதை விட்டு துரத்திக்கொண்டிருக்கிறானே! இப்பொழுது உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, ஆபிரகாமின் சந்ததிக்கு காண்பித்தல்…நான் விசுவாசமுள்ள ராஜரீக சந்ததியைக் குறிப்பிடுகின்றேன். ஞாபகம் கொள்ளுங்கள், மாமிசப் பிரகாரமான சந்ததி தோல்வியடைந்துவிட்டது, ஏனென்றால் அது கிருபையின் வார்த்தைக்குப் பதிலாக நியாயப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டது. எனவே அதுபோன்றே, இந்தக் கடைசி நாளிலும் புறஜாதியார் இதில் கிட்டத்தட்ட “தோல்வியடைந்துள்ளனர்.” ஆனால் வார்த்தையை ஏற்றுக் கொண்டு, அதற்கு உண்மையாயிருந்து, பிசாசுகளைத் துரத்தி, மகத்தான அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்து, வார்த்தையிலிருந்து எல்லா அவிசுவாசத்தையும் அகற்றி, பலியைச் சுத்தமாக வைத்து, வார்த்தையைப் பரிசுத்தமாக வைத்து, அதை பயபக்தியோடு கைக்கொண்டு; அதனுடன் எதையும் சேர்க்காமல், எதையும் கூட்டாமல்; அப்படிப்பட்டவைகளை அப்புறப்படுத்தி, எதுவும் அதை தொடாமல் காவல் காக்கும் ராஜரீக சந்ததி ஒன்றுன்டு.

71160 இப்பொழுது கவனியுங்கள், ஆபிரகாமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது, மரணம். அந்த அயர்ந்த நித்திரைக்கு பிறகு, அவன் ஒரு அக்கினிச் சூளையைக் கண்டான், அது நரகம், அது புகைந்து கொண்டிருக்கிறது, ஒவ்வொரு பாவியும் அங்கு செல்ல வேண்டியவனாயிருக்கிறான். ஆனால் அதற்கு முன்னால் ஒரு சிறு வெள்ளை ஒளி சென்றது. அந்த வெள்ளை ஒளியைக் கவனியுங்கள். அது பலியாக வைக்கப்பட்டுள்ள துண்டங்களின் நடுவே கடந்து சென்றது. ஆபிரகாமின் சந்ததி மூலம் தேவன் என்ன செய்யப் போகின்றார் என்பதை உறுதிப்படுத்துகின்றார். 161 தேவன் ஒருவரே என்று யூதர்கள் எக்காலத்தும் விசுவாசித்து வந்தனர். தேவன் ஒருவரே. ஆனால் தேவன் இந்த மூன்று சுத்தமான பலிகளின் மூலம், தேவனுடைய திரித்துவம் தேவத்துவத்தின் பரிபூரணமாக சரீரப்பிரகாரமாக ஒருவரில் காணப்படும் என்பதை இங்கே காண்பித்துக்கொண்டிருக்கிறார்.

72162 இப்பொழுது கவனியுங்கள் பண்டைய—பண்டைய காலத்தில், கிழக்கத்திய நாடுகளில் ஒரு உடன்படிக்கை செய்யும்போது, அவர்கள் இப்படித்தான் செய்வது வழக்கம். உதாரணமாக, நாம் வந்து ஒரு மிருகத்தைக் கொன்று, நாம் அதை இரண்டாக துண்டித்து, உடன்படிக்கை செய்துகொள்ளும் நாம் துண்டங்களின் நடுவே நின்று, நாம் உடன்படிக்கையை எழுதினோம். இப்பொழுது சீனாவில்… 163 ஜப்பானில், அவர்கள் உடன்படிக்கை செய்துகொள்ளும்போது எப்படியென்றால், அவர்கள் உப்பை கையிலெடுத்துக்கொண்டு நின்று ஆணையிட்டு, அதை ஒருவர் மேல் ஒருவர் எறிவார்கள். உப்பை எறிந்துதான் அவர்கள் ஜப்பானில் உடன்படிக்கை செய்து கொள்வது வழக்கம். உப்பு சாரமேற்றும் பொருள், நீங்கள் பாருங்கள், அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் உப்பை எறிவார்கள், அதுவே ஒரு—அதுவே ஒரு—ஒரு உடன்படிக்கையாயுள்ளது. 164 இப்பொழுது அமெரிக்காவில், நாம் ஒரு உடன்படிக்கை செய்யும் முறை எப்படியெனில், நாம் வெளியே உணவு விடுதிக்குச் சென்று, உணவு அருந்திவிட்டு, கரங்களை குலுக்கி, “திருவாளரே, உன் கரத்தைக் கொடு. அது ஒத்துக் கொள்ளப்பட்டுவிட்டதா?” என்று கேட்க, மற்றவர், “அது ஒத்துக் கொள்ளப்பட்டுவிட்டது!” என்கிறார். அது ஒரு உடன்படிக்கை.

73165 ஆனால் பண்டைய காலங்களில், ஆபிரகாமின் காலத்தில், அவர்கள் உடன்படிக்கை செய்துகொள்ளும் முறை என்னவெனில், அவர்கள் ஒரு பலியைக் கொன்று, அதன் நடுவே நிற்பார்கள்; பிறகு, அவர்கள் அதைச் செய்யும்போது, அந்த உடன்படிக்கையை அவர்கள் ஆட்டுக் குட்டியின் தோலில் எழுதி, அதன்பின்னர் அவர்கள் அதைக் கிழிப்பார்கள். [சகோதரன் பிரான்ஹாம் உதாரணப்படுத்த ஒரு துண்டு காகிதத்தைக் கிழிக்கிறார்—ஆசி.] ஒருவர் ஒரு துண்டையும், மற்றவர் மற்ற துண்டையும் எடுத்துச் செல்வார். இந்த உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட்டு, இவ்விருதுண்டுகளும் ஒன்றாக இணைக்கப்படும்போது, யாரும் அதை பாவனை செய்ய முடியாது. பாருங்கள், அவையிரண்டும் அது எழுதப்பட்டவிதமாகவே, எழுத்துக்கு எழுத்து இணைய வேண்டும். இந்த துண்டின் நியாயமான உரிமையாளருக்கு ஒரு பாகம் உண்டென்றும், அது அதே உடன்படிக்கையென்றும், இவையிரண்டும் அதேவிதமாக ஒன்றாக இணைய வேண்டுமென்றும் அது காண்பிக்கிறது.

74166 அங்கு தேவன் ஆபிரகாமுக்கு, அவனுடைய சந்ததியில், தேவனே மாமிசத்தில் வெளிப்பட்டு கல்வாரியில் துண்டிக்கப்படுவார் என்பதைக் காண்பித்துக்கொண்டிருந்தார்; கிறிஸ்து, பூமியில் தேவனாயிருந்து, அவர் பிரிக்கப்பட்டார். தேவன் ஆபிரகாமின் ராஜரீக சந்ததியாகிய அவரை இரண்டாக கிழித்து, அவருடைய ஜீவனை அவரிலிருந்து எடுத்துக்கொண்டார்; பிறகு அவர் அந்த சரீரத்தை உயிரோடெழுப்பி, பரலோகத்தில் சிங்காசனத்தில் உட்காரவைத்து; அவருடைய ஆவியை சபைக்குத் திரும்பவும் அனுப்பி, சபை கிறிஸ்துவிலிருந்த அதே—அதே ஆவியை பெற்றுக்கொண்டு, ஒன்றாக இணையும்படிச் செய்து, கிறிஸ்துவை நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகச் செய்கிறாரே! உடன்படிக்கையை உறுதிப் படுத்துதல், தேவன் உடன்படிக்கையை உறுதிப்படுத்துதல். தேவன் தம்முடைய குமாரானாகிய கிறிஸ்துவிலிருந்து ஜீவனை கிழித்தெடுத்து, அவரிலிருந்து ஆவியை எடுத்துக் கொண்டார்; அவர் மிருகங்களை இரண்டாக துண்டித்து அவைகளின் நடுவில் நிற்பதுபோன்றே. ஒளியாய், தேவன் தாமே அவைகளின் நடுவே சென்று, அவர் சரீரத்தைப் பிரித்தெடுத்தார் என்பதைக் காண்பித்தார்; அந்த சந்ததியை, ராஜரீக சந்ததியை; அவர் ஆவியை எடுத்து சபையின் மேல் மறுபடியும் அனுப்பினார். கிறிஸ்துவை சந்திப்பதற்காக செல்லப்போகும் இன்றைய சபை அவர் பெற்றிருந்த அதே ஆவியை உடையதாயிருக்கவேண்டும், ஏனெனில் அது எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தையாய் இருக்கவேண்டும். அவரே வார்த்தை! இயேசு, “அவர்” (தனிப்பட்ட பிரதிப் பெயர்) “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளைத் தானும் செய்வான்” என்றார். கிறிஸ்துவுக்குள் இருந்த ஜீவன் சபைக்குள், ஆபிரகாமின் ராஜரீக சந்ததிக்குள் இருக்குமென்று உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார்.

75167 சகோதரரே, பெந்தெகொஸ்தேவைக் குறித்து ஒரு நிமிடம், அவர்கள் மேலறையில் கூடியிருக்கையில்…நீங்கள் எப்பொழுதாகிலும் அங்கு சென்றிருந்து அதன் வரைப்படத்தை, அது வரையப்பட்டுள்ள விதத்தைக் கண்டிருந்தால், அவர்கள் வெளிப்புறத்திலுள்ள படிகளின் வழியாக மேலறையை அடைந்தனர். ஒலிவ எண்ணெயினால் எரிந்து கொண்டிருக்கும் சிறு விளக்குகள் அங்கிருந்தன. அவர்கள் எல்லாக் கதவுகளும் மூடியிருப்பதோடு, இரவும் பகலும் பத்து நாட்கள் மேலறையில் இருந்தனர். “அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருநத்த வீடு முழவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் வீட்டை நிரப்பி, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, வெளிப்பிரகாரத்துக்கு ஓடி வந்து, வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்.” 168 கவனியுங்கள், இந்த பிரிந்திருக்கும் அக்கினி என்னவாயிருந்தது? அது அக்கினிஸ்தம்பமாயிருந்தது, பரிசுத்த ஆவி, தேவன், அவர்களை வனாந்திரத்தின் வழியாக வழி நடத்தின தூதன், அவர்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்டவர். தேவன் தம்மைப் பிரித்துக்கொண்டார், தம்மை ஜனங்களின் மத்தியில் பிரித்துக்கொண்டார், பரிசுத்த ஆவியினால், நாம் ஒருமித்து ஜீவனுள்ள தேவனுடைய சபையாயிருக்கிறோம். ஒரு உடன்படிக்கை! “ஆபிரகாமுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும், ராஜரீக சந்ததிக்கும்.” கிறிஸ்துவுக்குள் இருந்த அந்த ஜீவன் சபையில் வாசம் செய்து, கிறிஸ்து செய்த அதே கிரியைகளை செய்து வருகிறது. ஆமென். நண்பர்களே, எவ்வளவு அற்புதமான காரியம்!

76169 நேரமாகிவிட்டது. நான் இதை முடிக்கவேண்டும். ஆம், நான் அதிக தாமதமாக்கிவிடுவேன். நான்…நாளை இரவு இன்று விட்டதிலிருந்து தொடர்ந்தால் சரியாயிருக்குமா? நான் யேகோவா-யீரே என்பதற்கு உடனே வரவேண்டுமென்று மிகவும் விரும்புகிறேன். ஆனால் சகோதரரே, இது என்னவென்று நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அதாவது ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்பவன், சபையானது அந்நிலைக்கு வருவதற்கு நேரமாகிவிட்டது…தேவன் இந்த வாக்குதத்தங்களை செய்திருப்பாரானால், அவை உண்மையாயுள்ளன. அவை நிறைவேற வேண்டும். 170 நம்முடைய தலைகளை சற்று நேரம் நாம் வணங்குவோமாக. இது கரடுமுரடும், கடினமுமானது. இது வெட்டுகின்றது. அப்படியே செய்ய எனக்குப் பிரியமில்லை. இந்த போதகர் என்னிடம் கூறினார், அவர், “சகோதரன் பிரான்ஹாமே, ஏன் இன்ன-இன்னதை , அதை நீங்கள் செய்கிறீர்களே?” என்றார். 171 நான், “எனக்கு தொலைகாட்சி நிகழ்ச்சிகளோ, வானொலி நிகழ்ச்சிகளோ ஒழுங்கு செய்து தரப்படவில்லை. நான் இவ்வாறு சென்றுகொண்டிருக்கிறேன், நான் எங்கெல்லாம் செல்லக் கூடுமோ அங்கு செல்கிறேன்.” மேலும் நான், “அவர்களுக்கு யார் இதை சொல்லப்போகிறது? அதை கூறுவதற்கு எங்காவது ஒரு சத்தம் இருக்கவேண்டும்” என்றேன்.

77172 நண்பர்களே, இப்பொழுது தேவன் இங்கிருக்கிறார். நீங்கள் உங்களை ஆபிரகாமின் சந்ததி என்று அழைத்துக்கொண்டு, அவ்வாறு நீங்கள் கருதினால்…இப்பொழுது…கவனியுங்கள், நண்பனே, இது உங்கள் ஆத்துமா. இது உங்கள் ஆத்துமா. எனவே இந்த தருணத்தை இழக்க வேண்டாம், ஒருக்கால் இன்றிரவு உங்களுக்குக் கிடைக்கப்பெறும் ஒரு கடைசித் தருணமாக இருக்கக்கூடும். நீங்கள் தேவனுடைய பிள்ளை என்று உங்களை அழைத்துக்கொண்டு, நீங்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கையைக் குறித்து அவமானங்கொண்டு, தேவனுடைய வார்த்தை உண்மையென்று நீங்கள் விசுவாசித்து, நீங்கள் தவறென்று அறிந்திருந்தால், நீங்கள் சற்று நேரம் ஜெபித்து, உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க தேவனிடம் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். [சகோதரன் பிரான்ஹாம் அமைதியாயிருக்கிறார்—ஆசி.] ஜெபியுங்கள்.

78173 பரலோக பிதாவே, எங்களில் பலருக்கு இது கடைசி இரவாக இருக்ககூடும். சில இரவுகளுக்கு முன்பு லாஸ் ஏஞ்சலிஸில் நடந்ததை நாங்கள் நினைத்துப் பார்க்கிறோம், அங்கு எழுபது வயதுடைய வயோதிப ஸ்திரீ உட்கார்ந்துகொண்டிருந்தாள், அவள் பீடத்துக்கு நடந்து வந்து அவளுடைய வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தாள். அன்றிரவே படுக்கையில் மரித்துபோனாள். கடைசி மணி நேரத்தில், தேவனுடைய கிருபை. அவரை அறியாமலே அத்தனை ஆண்டு காலம் வாழ்ந்த பிறகு, கடைசி மணி நேரத்தில் அவளை அழைத்தார். திகைப்பூட்டும் கிருபை. 174 பிதாவாகிய தேவனே, இன்றிரவு இங்குள்ள இருதயங்களோடு பேசும். இதன் நோக்கம் என்னவென்று நீர் அறிவீர். பிதாவே, உமக்குத் தெரியும், அது—அது ஏதோவொன்று செய்யப்பட வேண்டிய ஒரு நேரம் வரவேண்டியதாயுள்ளது. நாங்கள்—நாங்கள் அந்த நிலைமையைக் காண்கிறோம், அது எல்லா நேரத்திலும் மோசமாகிக்கொண்டே வருகிறது. இந்தப் பெந்தெகொஸ்தே சபையின் காலத்தில், கடைசி நாட்களில், லவோதிக்கேயா சபையின் காலத்தில், இந்த ஒன்றில் மாத்திரம் தான் கிறிஸ்து சபைக்கு வெளியே தள்ளப்பட்டு, வெளியே நின்று கொண்டு, கதவைத் தட்டி உள்ளே வர முயன்று கொண்டிருக்கிறார் என்பதை நாங்கள் உணருகிறோம். ஓ தேவனே, இரக்கமாயிரும்.

79175 கர்த்தாவே, இன்றிரவு நான் எங்கள் சகோதரிகளைக் கடிந்து கொண்டேன், ஆதியிலே ஏவாள்தான் அதை தொடங்கினாள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்களாக. அது மறுபடியும் இங்குள்ளது. சுவிஷேம் வார்த்தையின் மூலம் வந்தது, அவள் எப்படியாய் புத்தியைக் கொண்டு யோசித்து (இன்றைக்கு பாருங்கள்) என்ன செய்தாள்; அவள் தாயைப் பாருங்கள், அவள் நினைத்தது வித்தியாசமாயிருந்தது, அதே வேதாகமம். 176 தேவனே, எங்கள் சகோதரரிடம் நான் கடுமையாக பேச வேண்டியிருந்தாயிற்று, கர்த்தாவே. நான் அவர்களுக்காக பக்தி வைராக்கியம் கொண்டிருக்கிறேன், அவர்களை நான்—நான்—நான் நேசிக்கிறேன். கர்த்தாவே, நான் நேசிக்கிறேன் என்பதை நீர் அறிந்திருக்கிறீர். அவர்களுக்காக நான்—நான்—நான் முப்பத்தொரு ஆண்டுகள் கழித்திருக்கிறேன், உம்முடைய வார்த்தையையும் மற்றெல்லாவற்றையும் நீர் உறுதிபடுத்தி வந்திருக்கிறீர், கர்த்தாவே, வேறென்ன செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் நேசிக்கும் சபையை நான் பார்க்கும்போது, எனக்குத் துணை நின்று என்னை ஆதரித்த பெந்தெகொஸ்தே சபையை; தேவனே, கிறிஸ்தவ அன்பு மாத்திரமே, நீர் பொல்லாங்கை களைந்துபோடும்படிச் செய்கிறது. பிதாவே, அதை உம்மைச் செய்ய வைக்கிறது அன்பாயுள்ளது. அதுதான் என்று நீர் அறிவீர். நான் ஜனங்களிடம், “அங்கு செல்ல முயற்சிக்காதீர்கள், இந்தக் காரியங்களை செய்யாதீர்கள்” என்று கூற முயன்றுகொண்டிருக்கிறேன். அந்த—அந்த தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு, நாங்களும் சபையில் கொண்டு வரப்பட்ட வெவ்வேறு கோட்பாடுகளின் மூலம் குஞ்சு பொரித்து, அற்புதங்களின் நாட்களினின்று, தெய்வீக சுகமளித்தலினின்றும், சரியான முறையில் நடந்து உடுத்திக்கொள்ளும் விதத்தில்— இருந்து விலகிவிட்டோம்.

80177 மேலும் நீர் ஆதாமுடன் ஒரு உடன்படிக்கையையும், ஏவாளுடன் ஒரு உடன்படிக்கையையும்; இவ்வாறு வித்தியாசப்பட்ட உடன்படிக்கையைச் செய்து, வித்தியாசமாக ஒன்றுசேர்த்து, மனிதனைப் போல் ஸ்திரீ நடந்து கொள்ளுதல் தவறென்று கூறினீர். அவள் பெண்மைத்தன்மை கொண்டவளாக இருக்க வேண்டும். அவள் பெண்மைத்தன்மை கொண்டவளாக இருக்க வேண்டுமயன்றி ஆண்மைத்தனம் கொண்டவளாக அல்ல. ஆனால் இன்றைக்கோ அவள் ஆண்மைத்தன்மை கொண்டவளாயிருக்க முயற்சிக்கிறாள்; மனிதனோ பெண்மைத்தன்மை கொண்டவானாக இருக்க முயற்சிக்கிறான். 178 கர்த்தாவே, மேலும்—மேலும் இங்கே சரியாக இந்த கடைசி நாட்களில், இங்கே சரியாக மேற்கு கரையில், இந்த இடத்தில் நாகரீகத்தின் முடிவில், ஸ்திரீகள் ஆதியில் செய்த அதே தவறை செய்கின்றனர் என்பதை நாங்கள் கண்டறிகிறோம். இங்கே, அது எங்களுடைய சகோதரிகளிடையே புகுந்து விட்டது. ஓ தேவனே, அது என் இருதயத்தைப் பிளக்கிறது, கர்த்தாவே. (ஒரு பாவியாகிய) எனக்கே அது அத்தகைய உணர்ச்சியை ஏற்படுத்துமானால், அது ஒரு தேவதையாகியுள்ளதைக் காண உமக்கு அது என்ன செய்யும் என்பதை நான் அறிவேன். நம்பமுடியாத இந்த ஹாலிவுட்டின் பகட்டான பாவம்! முன்பெல்லாம் அவர்கள் திரைப்படக் காட்சிகளுக்குப் போவது தவறென்று கருதப்பட்டது, ஆனால் இப்பொழுதோ பிசாசு அதை அவர்களுடைய வீட்டிலேயே கொண்டு வந்துவிட்டான். மேலும்—மேலும் தணிக்கை செய்யப்படாத நிகழ்ச்சிகள், தெருக்களின் காணும் மோசமான காட்சிகள். 179 ஓ தேவனே, இது ஒரு—இது—ஒரு பிடித்துப்பிடித்தக் காலம். இது ஒரு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டுள்ள காலம். இது—இது மனிதன் நின்று செவிகொடுத்து, தன்னை ஆராய்ந்து பார்க்காத ஒரு காலம். அவர்கள் உணர்ச்சிகளுக்கு கீழ்பட்டு, தாங்கள் ஆபிரகாமின் சந்ததியென்று இன்னும் உரிமை கோருகின்றனர். தேவனே, கடைசி நாட்களில் ஆவிகள் ஒன்றுக்கொன்று எப்படி அருகாமையில் இருந்து, ஆள் மாறாட்டங்கள் நடந்து, கூடுமானால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று நீர் கூறினீர். இதோ அது உள்ளது, தேவனே, இந்த ஜனங்கள் வஞ்சிக்கப்படஅனுமதியாதேயும், அவர்கள் ஒருவாராவது வஞ்சிக்கப்பட அனுமதியாதேயும். தயவுசெய்து, பிதாவே. இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், இதை அருளும்.

81180 இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை இந்நேரத்தில் வணங்கியிருக்கையில். நான் எதை வேண்டுமானாலும் உங்களுக்காகச் செய்வேன். நான் இழிவாகக் கருதி ஜனங்களை நோக்கி உரக்க சத்தமிட்டால், தேவன் என்னோடு கூட இருக்கவேமாட்டார்; அப்படியானால் நான் இங்கிருக்க தகுதியில்லை, நான் எங்காவது மரம் வெட்டிக்கொண்டிருக்கவோ, அல்லது வெறேதாவதொன்றைச் செய்துகொண்டிருக்க மாத்திரமே தகுதியுள்ளவனாயிருப்பேன். ஆனால், நண்பர்களே, அது—அது உண்மையாயுள்ளது, அதை ஆராய்ந்து பார்த்து, அது வேதத்தில் உள்ளதா என்பதைக் கண்டு கொள்ளுங்கள். இது கடைசி நாட்களில் வெளிப்பட வேண்டியதாயுள்ளது. 181 இப்பொழுது உங்களிடம் போதுமான உத்தமமுள்ளதா? உங்கள் வெளிப்புறத்தில் மட்டுமின்றி, உட்புறத்தின் ஆழத்திலும், உங்களைக் குறித்த உண்மையான அசலான ஒன்று வாசம் செய்ய, நீங்கள் உண்மையாகவே, நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்று ஒத்துக்கொள்ள விருப்பமுள்ளவர்களாயிருக்கிறீர்களா? ஒவ்வொரு தலையும், ஒவ்வொரு இருதயமும், பயபக்தியான அர்ப்பணிப்போடு வணங்கியிருக்கும் இந்நேரத்தில், உங்கள் கரங்களை உயர்த்தி, “சகோதரன் பிரன்ஹாமே எனக்காக ஜெபியுங்கள். நான் தவறாயிருந்து வந்துள்ளேன். தேவனுடைய கிருபையால் அதை சரிப்படுத்திக்கொள்ளப் போகின்றேன்” என்று கூறுவீர்களா? தேவன் உன்னை, உன்னை, உன்னை, உன்னை ஆசிர்வதிப்பராக. அது உண்மை, உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அவர் அதைக் காண்கிறார். மாடியின் முன்பக்கத்தில் உள்ளவர்களே, தேவன் உங்களைக் காண்கிறார். உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நீங்கள்—நீங்கள்…அதுதான் இது.

82182 இப்பொழுது இங்கு ஸ்திரீகளாகிய உங்களில் சிலர் குட்டை தலைமுடியுடன் உட்கார்ந்துகொண்டு, உங்கள் கரத்தை உயர்த்தாமலிருக்கிறீர்கள். உங்களோடுள்ள காரியம் என்ன? நீங்கள் தவறாயிருக்கின்றீர்களே! இந்நிலையில் நீங்கள் தேவனைச் சந்திக்க முயலவேண்டாம். இந்த பிரசங்க பீடத்தில் நான் நின்றுகொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக நீங்கள் ஆக்கினைக்குட்படுத்தப்படுவீர்கள். பெந்தெகொஸ்தே சபை அப்படிப்பட்ட ஒரு நிலையை அடைந்து, அதனுடைய தவறை ஒத்துக்கொள்ள அது வெட்கமடைந்து, அது—அது—அது அவ்வளவு இருதயக் கடினமடைந்துள்ளது என்று நீங்கள் பொருட்படுத்திக் கூறுகிறீர்களா? நீங்கள் அப்படி செய்யாதீர்கள். தேவன் உங்களிடம் இரக்கமாயிருப்பாராக. 183 நான் விசுவாசிக்கிறேன். விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். நான் மறுபடியும் காத்திருக்கட்டும். தேனே, அங்குள்ள உங்களை தேவன் ஆசிர்வதிப்பராக. சகோதரியே, தேவன் உன்னை ஆசிர்வதிப்பராக. அது நல்லது. உயர்த்துங்கள்…அது…தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. அது உண்மை. இப்பொழுதே நீங்கள் தவறை ஒத்துக்கொள்ளுதல் நல்லது; நாளை காலை ஒருக்கால் அதிக தாமதமாகியிருக்கக்கூடும், இப்பொழுதிலிருந்து ஒரு மணி நேரம் கழித்து ஒருக்கால் அதிக தாமதமாகியிருக்ககூடும். தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. அது உத்தமம். தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. “நான் தவறாயிருக்கிறேன்” என்று கூறுங்கள். அவர்கள் தவறாயிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ள ஒரு உண்மையான நபர் தேவை. அது அசலான ஒன்று. ஸ்திரீயே, தேவன் உன்னை ஆசிர்வதிப்பராக. பெண்மணியே, தேவன் உன்னை ஆசிர்வதிப்பராக. தேவன் உன்னை ஆசிர்வதிப்பராக. அது உண்மை. ஆம், ஜெபித்துக்கொண்டிருங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. நான் உங்கள் கரத்தைக் காணத் தவறலாம், ஆனால் அவர் காணத் தவறுகிறதில்லை. உங்கள் மனதிலுள்ள ஒவ்வொரு எண்ணத்தையும் அவர் அறிந்திருக்கிறார். அது முற்றிலும் உண்மை. தேவன் உன்னை ஆசிர்வதிப்பராக, நான் உன் கரத்தைக் காண்கிறேன். அது நல்லது. வாலிப பெண்ணே, தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. அது நல்லது. 184 அங்குள்ள வாலிப் பெண்ணே, தேவன் உன்னை ஆசிர்வதிப்பராக. ஆம், வாழ்க்கையின் பாதைகளின் திருப்பம். முன்பு பழைய காரியங்கள் உன் இளம் இருதயத்தை கடினப்படுத்தியிருந்தன, தேனே, இப்பொழுது தேவனிடத்திற்கு திரும்பு. அது உண்மை, நீ அதைச் செய். சுமார் உன் வயதுள்ள ஒரு மகள் எனக்கு இருக்கிறாள். தேனே, தேவன் உன்னை ஆசிர்வதிப்பராக. தேவன் உன்னை ஆசிர்வதிப்பராக. ஆம், சகோதரியே தேவன் உன்னை ஆசிர்வதிப்பராக.

83185 சகோதரனே, உன்னைக் குறித்தென்ன? உன் மனைவி அவ்வாறு நடந்துகொள்ளவும், குட்டை காலட்சட்டை அணியவும், அப்படி உடுத்திக்கொண்டு தெருவில் செல்ல அனுமதிப்பதும் உனக்கு அவமானம். உன்னைத் தேவனுடைய குமாரன் என்று அழைத்துக்கொள்கிறாயா? நீ உன்னைக் குறித்தே வெட்கமடையவில்லையா? தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. அது உண்மை, உன் தவறை ஒப்புக்கொள். ஆம். நீ… 186 “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. வேறு யாராகிலும் உண்டா? மாடியின் முன்பாகத்தில் பின்னால் உள்ளவர்கள், மாடியின் முன்பக்கத் தில் உள்ளவர்கள். மேலே உள்ள உங்களை அவர் காண்கிறார். உங்கள் இருதயத்திலுள்ள ஒவ்வொரு சிந்தையும் அவர் அறிந்திருக்கிறார். இப்பொழுது உங்கள் தலைகளை ஒரு நிமிடம் உயர்த்துங்கள். 187 இந்த அறையிலுள்ளவர்களில் ஏறக்குறைய ஐம்பது அல்லது அறுபது பேர்கள், வாலிபரும் வயோதிபரும் தங்கள் கரங்களை யுயர்த்தினர் என்று நான் கூறுகிறேன். உங்களுக்கு நன்றி. அது உண்மையிலே சீமாட்டித் தன்மையும் பெரிய மனிதத்தன்மையும் உள்ளவர்கள். உங்களை நான் மெச்சுகிறேன். நீங்கள் தவறாயிருப்பதை ஒப்புக்கொள்ள நீங்கள் விரும்பும்போது, உங்களுக்கான நம்பிக்கைகள் உண்டு—உண்டு.

84188 நான் பீட அழைப்புக்கு கொடுப்பதற்கு முன்பாக இந்த உறுமால்களுக்காக ஜெபிக்கப் போகின்றேன். 189 பரலோகப் பிதாவே, இந்த உறுமால்கள் வியாதியஸ்தருக்கும், காத்துக்கொண்டிருக்கும் தாய்மார்களுக்கும் தகப்பன்மார்களுக்கும், பிள்ளைகளுக்கும் எடுத்துக்காட்டாய் உள்ளன. ஒரு முறை, அவர்கள் பரிசுத்த பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் எடுத்து வியாதியஸ்தர் மேல் போட்டதாக, நாங்கள் வேதாகமத்தில் போதிக்கப்பட்டுள்ளோம். ஜனங்கள் அவனைக் கண்டு, அவன் மேல் தேவனுடைய ஆவி தங்கியிருந்ததை அறிந்துகொண்டனர். எலிசா சூனேமியாளிடம் கூறினதை, கேயாசியிடம், “இந்த தடியைக் கொண்டு போய் பிள்ளையின்மேல் வை” என்று சொன்னதை பவுல் நினைவு கூர்ந்தான். அவன் தொட்டதெதுவோ அது ஆசிர்வதிக்கப்பட்டது என்று அவன் அறிந்திருந்தான். பவுல், அவர்கள் அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து வியாதிக்காரர்மேல் போட, வியாதிகள் அவர்களை விட்டு நீங்கிப் போயின, அசுத்த ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. இப்பொழுதும், கர்த்தாவே, நாங்கள் பரிசுத்த பவுல் அல்ல, ஆனால் நீர் இன்னும் தேவனாயிருக்கிறீர், அதே தேவனாயிருக்கிறீர். 190 ஒரு நாள் இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் கடமையின் பாதையில் வாக்குதத்தம்பண்ணப்பட்ட தேசத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லாதபடிக்கு, சிவந்த சமுத்திரம் என்ற ஒன்று தடை செய்தது. ஒரு எழுத்தாளர், “தேவன் அக்கினி ஸ்தம்பத்தின் வழியாக கோபங்கொண்ட கண்களுடன் கீழே நோக்கிப் பார்த்தார், அப்பொழுது அந்த சமுத்திரம் பயந்துபோய், தன்னுடைய மதில்களை சுருட்டிக்கொண்டு, இஸ்ரவேல் ஜனங்கள் கடந்து வாக்குதத்தம்பண்ணப்பட்ட தேசத்தை அடைவதற்கென உலர்ந்த பாதையை திறந்து கொடுத்தது” என்று எழுதியுள்ளார். 191 தேவனே, இந்த உறுமால்கள் வியாதியஸ்தரிடமும் துன்பப்படு கிறவர்களிடமும் கொண்டு செல்லப்படும்போது, பரலோகத்தின் தேவன் தாமே தமது சொந்த குமாரனின் இரத்தத்தின் வழியாக கீழே நோக்கிப் பார்ப்பாராக, வியாதிப்பட்ட இந்த ஜனங்களை பீடித்திருக்கும் பிசாசு, இன்றிரவு இந்தக் கூட்டத்தின் அடையாளங்களாக அளிக்கப்பட்ட இந்த உறுமால்கள் போடப்படும்போது, பயந்து போய் விலகிச் செல்வானாக; வார்த்தையும் சத்தியமும் நிறைவேற்றப்பட்டுள்ளன; வியாதியஸ்தரும் துன்பப்படுகிற வர்களும் சுகமடைவார்களாக; இருதயங்கள் நொறுங்கிப்போய், ஒரு சில நிமிடங்களில் குயவனின் வீட்டுக்குப் போக வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு; பிசாசு இவர்களை விட்டு நீங்க, ஜனங்கள் தேவன் அவர்களுக்கு வாக்களித்துள்ள நல்ல ஆரோக்கியம் என்னும் அந்த தேசத்துக்கு கடந்து செல்வார்களாக. நான் இந்த உறுமால்களை அந்த நோக்கத்திற்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அனுப்புகிறேன். ஆமென்.

85192 தேவன் உங்கள் இருதயத்தை அறிவார். அவர் உங்கள் நிலைமையை அறிவார். சரியாகக் காண்பிக்க; உங்களிடம் இதை கூறட்டும், இங்குள்ள அநேகர் கரங்களை உயர்த்தவில்லை, ஆனால் அவர்கள் கரங்களை உயர்த்தியிருக்க வேண்டும். உங்களை இந்த மேடையிலிருந்து நான் கூப்பிட்டு, நீங்கள் யாரென்று கூறினால், அது உங்களுடைய மனதைப் புண்படுத்திவிடும். இப்பொழுது, அவ்வாறு நான் செய்வதை நீங்கள் அநேக முறை கண்டிருக்கிறீர்கள். இயேசு, “களைகளையும் கோதுமையையும் ஒன்றாக வளரவிடுங்கள். முதலில், தூதர்கள் வந்து களைகளைக் கட்டி அதை நெருப்பிலே போடுவார்கள்” என்று கூறினாரென்று நான் கண்டு கொண்டேன். 193 இப்பொழுது களைகளைக் கட்டும் நேரம். அவர்கள் ஒவ் வொருவருமே, ஸ்தாபனங்கள் அனைத்தும் சபைகளின் சங்கத்துக்குள் சென்று கொண்டிருக்கின்றன. அது உண்மை. அது உண்மை. ஒவ்வொரு ஸ்தாபனமும் உலக சபைகளின் ஆலேசனை சங்கத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது, அந்த பெரிய காரியம் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. அங்கு வாக்களிக்கப்பட்டுள்ள விதமாகவே அவர்கள் எல்லோருமே ரோமாபுரிக்கு திரும்பச் சென்று, “மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குகின்றனர்,” ஒரு வல்லமை, சபைகளின் சங்கம், தேவன் நிறைவேறும் என்று கூறினதே நிறைவேறுகிறது. நீங்கள் போக அவர்கள் அனுமதித்து, இப்படி செய்வது சரியென்று உங்களிடம் கூறி, அதைக் குறித்து எதையும் கூறப் பயப்படுகின்றனர், அது எங்காவது ஒரு ஆகாரச் சீட்டைப் போக்கிவிடுமே என்று பயப்படுகின்றனர்.

86194 என் சகோதரனே, சகோதரியே, உங்களிடம் நான் ஒன்றைக் கூறட்டும், நான் உங்களை நேசிக்கிறேன் என்று தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தி தருவாராக. நான் வித்தியாசமாயிருக்க வேண்டும் என்பதினால் அல்ல; உத்தமமாயிருக்கவேண்டும் என்பதற்காகவேயாகும். நீங்கள் ஒரு தருணத்தை இழக்க வேண்டாம். உங்கள் சரீரத்தை அழித்துக்கொள்ளக்கூடாது என்பதனால், நீங்கள் சிகப்பு வெளிச்சத்தைக் கண்டு கடக்கமாட்டீர்கள். அப்படியானால் உங்கள் ஆத்துமாவைக் குறித்தென்ன? நீங்கள் தேவனுடைய சிகப்பு வெளிச்சங்களில் ஒன்றையும் கண்டு கடக்காதீர்கள். 195 உங்களில் சிலர் வியாதியிருக்கிறீர்கள். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். யாராவது ஏதாவதொன்றைக் குறித்து பதறியிருந்தாலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். அவர் உண்மையாக, அது உண்மையா இல்லையாவென்று நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன். ஆபிரகாம், அந்த தூதன் அவனிடம் வந்து, அவர் என்ன செய்தாரென்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதே காரியம் சம்பவிக்கிறதா என்று பாருங்கள்.

87196 இதோ ஒரு ஸ்திரீ சரியாக இங்கே, சரியாக இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், அவளுக்கு புற்று நோய் உள்ளது. அவளுக்கு சிறு நீர் கட்டி உள்ளது, அவளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளாள், அவள் இப்பொழுது என்னையே நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள், அவளுடைய கழுத்தில் சிகப்பு மணிகளை அணிந்துள்ளாள். நீ போர்ட்லாந்திலிருந்து வருகிறாய். ஆனால் நீ…அது உண்மையானால், உன் கரத்தை உயர்த்து. அது உண்மை. பார்த்தீர்களா? உன்னை எனக்குத் தெரியாது, நாம் அந்நியர்கள், ஆனால் அது உண்மை. இப்பொழுது கிறிஸ்துவின் வஸ்திரத்தைத் தொடுவதற்கு போதிய விசுவாசத்தோடு அங்கு நீ உட்கார்ந்திருக்க முடிந்ததால், தேவனுடைய கிருபையால் அந்த ஒளியின் தூதன் உன் மேல் வந்தாரல்லவா? பெண்மணியே, அதை ஏற்றுக்கொள். அதை விசுவாசி. அதை மாத்திரமல்ல, முழு சுவிசேஷத்தையும் விசுவாசி. 197 இதோ ஒரு ஸ்திரீ இங்கே பின்னால் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள். பெண்மணியே, இங்கு பார். நீ பெருங்குடல் கோளாறினால் அவதியுறுகிறாய். உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. ஆம், நீ எனக்கு ஒரு அந்நியராயிருக்கிறாய். உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, சுகமடைவாயாக.

88198 உனக்குப் பக்கத்தில் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அதிக நேரம் அவரால் இருக்க முடியாது. அவருக்கு காதுகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவர் ஒரு கோளாறோடு…அவருக்கு ஜலதோஷம் பிடித்திருந்து, அது இருமலை உண்டாக்கினது. அவரால் அதிலிருந்து குணமடைய முடியவில்லை, அது—அது ஒரு—ஒரு விதமாக உடலில் நிறைய சிக்கல்களை ஏற்படுத்திவிட்டது. அது உண்மையா, ஐயா. நீர் ஏவுகணை போன்றதை அல்லது அதைப்போன்றதை உண்டாக்கும் ஒருவிதமான தொழிற்சாலையில் பணிபுரிகிறீர். நீர் இப்பொழுது வேலைக்கு செல்லவேண்டும். நான் உமக்கு ஒரு அந்நியர். இந்த காரியங்கள் உண்மையானால், உன்னுடைய கரத்தை உயர்த்து. சரி. கர்த்தராகிய இயேசுவைத் தொடுவதற்கு உமக்கு போதிய விசுவாசம் இருக்கும்போது, நீர் ஏன் உண்மையுள்ள மனிதனாயிருந்து, உமது முழு இருதயத்தோடு அதை விசுவாசிக்ககூடாது? 199 ஒரு ஸ்திரீ பின்னால் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள். அவளுக்கு கைகளின் மேல் ஒருவிதமான தோல் வியாதி உள்ளது. அது என்னவென்று அவளுக்கே கூடத் தெரியவில்லை. அது என்னவென்று மருத்துவருக்கும் கூடத் தெரியவில்லை. அவளுக்கு அநேக ஆண்டுகளாக அது உள்ளது. ஓ, உலகம் உள்ளது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக, அவள் அதை இழக்கப்போகிறாள். டானியேல்ஸ், மக்டானியல். அதுதான். ஐடா மக்டேனியல்ஸ், உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. எனக்கு அந்த ஸ்திரீயைத் தெரியாது, நான் அவளை ஒருபோதும் கண்டதில்லை. ஆனால் அந்த ஒளி அவள்மேல் உள்ளது.

89200 அது என்ன? அவர் உங்களை அறிந்திருக்கிறாரே! நீங்கள் தவறாயிருக்கின்றீர்கள் என்றும் அவருக்குத் தெரியுமே! இந்தவிதமாக என் மூலம் பேசிக் கொண்டிருக்கும் அதே தேவன், வார்த்தையின் மூலம் என்னூடாகப் பேசுகிறார். 201 இப்பொழுது, தேவனுடைய சமுகத்தை அடையாளம் கண்டு கொண்டு, நீங்கள் தவறாயிருந்து வருகிறீர்கள் என்பதை அறிந்த இங்குள்ள ஒவ்வொருவரும், நாம் பீடத்தண்டை இப்பொழுதே வருவோமாக. ஒரு நிமிடம் இங்கு வாருங்கள், உங்களுக்காக நான் ஜெபிக்கட்டும். நீங்கள் தவறாயிருந்து வருகிறீர்கள் என்று அறிந்திருந்தால், நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிக்கை செய்ய வேண்டுமானால். இப்பொழுது முதல் நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவராயிருக்க விரும்பினால், இங்கு வந்து பீடத்தை சுற்றிலும் நில்லுங்கள். உங்கள் பெயரை நான் அழைக்க விரும்பவில்லை, அது—அது கிறிஸ்தவத்தன்மையாயிருக்காது. மாடியின் முன்பக்கத்தில் இருப்பவர்களே, கீழே இறங்கி வாருங்கள், இதுவே உங்கள் தருணம். இப்பொழுதே இறங்கி வாருங்கள்! பீடத்தண்டை வந்து, “கரத்தாவே, நான் வருகிறேன்” என்று சொல்லுங்கள். பாவியே, பீடத்தண்டை வா, இதுவே உன் கடைசி தருணமாக இருக்கக்கூடும். நீங்கள் வரமாட்டீர்களா, இப்பொழுது நாம்…இசைப்பேழை ஆழகாக இசைத்துக்கொண்டிருக்கையில், “நான் வந்துகொண்டிருக்கிறேன், கர்த்தாவே, இப்பொழுது உம்மண்டை வருகிறேன்.” சரி, இப்பொழுது நாமெல்லாரும் சேர்ந்து பாடுவோம். நான் வந்துகொண்டிருக்கிறேன், கர்த்தாவே! இப்பொழுதே உம்மண்டை வருகிறேன்!

90202 நீங்கள் வரமாட்டீர்களா? மாடியின் முன்பக்கத்திலிருந்து, கீழே இறங்கி வாருங்கள். எழுந்து வாருங்கள். கிறிஸ்தவர்களென்றும், ஆபிரகாமின் சந்ததியென்றும், அழைத்துக்கொள்ளும் ஜனங்களாகிய உங்களைத்தான், உங்களைக் குறித்தென்ன? ஸ்திரீகளே, தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. என் சகோதரிகளே, தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. ஆம். தேவன் அதை நிச்சயமாகக் கனப்படுத்துவார். நீங்கள் உண்மையுள்ளவர்கள். உங்கள் போதகர் உங்களுக்கு அதைக் கூறத் தவறியிருப்பார். வீட்டிற்குச் சென்று உங்கள் வேதாகமத்தை எடுத்து, அது சரியா, அல்லது இல்லையாவென்று கண்டுபிடியுங்கள். நான் எந்தக் காரியத்தையும் கூறுவதற்கு முன்னமே, அது சரியென்று நீங்கள் அறிவீர்கள். பெந்தகோஸ்தே ஸ்திரீகளாகிய நீங்கள், எக்காரணத்தைக் கொண்டும் அழகுபடுத்தும் பொருட்களை உபயோகிக்க விரும்பினதேயில்லை. வேதாகமத்தில் அழகுபடுத்தும் பொருட்களைக் குறித்து ஒன்றும் கூறப்படவில்லை; யேசபேல் மாத்திரமே, அவளே தன் முகத்தை வர்ணத்தினாலும் மற்ற பொருட்களினாலும் அழகுப்படுத்திக்கொண்டாள். ஆனால் நீங்கள் நீண்ட தலைமுடியை வைத்துக்கொள்ள வேண்டுமென்பது வேதாகமத்தில் உள்ளது, “ஒரு ஸ்திரீ தன் தலைமுடியைக் கத்தரித்துக்கொண்டு ஜெபம் செய்வது வழக்கத்திற்கு மாறான செயலாகும்.” …உம்மண்டை! 203 தேவனுடைய சமுகம் இங்குள்ளபோதே, நீங்கள் தேவனிடம் சரியாக வேண்டுமென்று விரும்புகிறீர்களா? வாருங்கள்! எழுந்து நில்லுங்கள், அவருக்காக ஒரு தீர்மானமெடுங்கள்! நீ எழுந்து இங்கு வந்து, “நான் வருகிறேன். நான்—நான் வெளிப்படையாய் காண்பிக்கப்போகிறேன். நான் தவறென்று முழு உலகமும் அறிய விரும்புகிறேன். நான் தேவனுக்கு முன்பாக சரியாக வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று கூறுங்கள். இப்பொழுதே வாருங்கள்! நான் வந்துகொண்டிருக்கிறேன், கர்த்தாவே! இப்பொழுதே உம்மண்டை வருகிறேன்! என்னைக் கழுவி, இரத்தத்தில் சுத்தமாக்கியருளும் கல்வாரியிலிருந்து பாய்ந்த அந்த இரத்தத்தாலே. மறுபடியும் எல்லோரும் சேர்ந்து! நான் வருகிறேன்… வாருங்கள். நினைவிருக்கட்டும், அங்கு இன்னும் அதிகம் பேர் இருக்கின்றனர். ஆம், அது உண்மை. …என்னை, உம்முடைய இரத்தத்தில் சுத்தமாக்கியருளும் கல்வாரியிலிருந்து பாய்ந்த அந்த இரத்தத்தாலே.

91204 ஜனங்கள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றனர், தொடர்ந்து ஜெபித்துக்கொண்டேயிருங்கள். இப்பொழுது, நண்பர்களே, இதைச் செய்யும்படி அதிமாக என்னால் சம்மதிக்கச் செய்ய முடியாது. இங்கிருந்து வார்த்தை புறப்பட்டு செல்லும்போது, அது தன் கிரியையை செய்கிறதென்று நான் விசுவாசிக்கிறேன். பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள். இதுவே உங்களுக்குக் கிடைக்கப் பெறும் கடைசி தருணமாய் இருக்கக்கூடும். அது அப்படி இல்லையென்று நான் நம்புகிறேன். நீங்கள் தவறென்று ஒப்புக் கொள்ளும்போது அது என்ன செய்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்? அங்கு உண்மையான ஒன்று உள்ளதென்றும், நீங்கள் உண்மையில் சரியானதையே செய்ய விரும்புகிறீர்கள் என்றும் அது என்னிடம் கூறுகிறது. உங்களுக்கு விருப்பமானால், நான் பேசிக்கொண்டிருக்கையில், இப்பொழுது இசைப்பேழையடன் சேர்ந்து மெல்லப் பாடுங்கள். வாருங்கள், ஜனங்களே, வாருங்கள். நீங்கள் வந்துகொண்டிருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த ஜனங்கள் என்ன செய்துள்ளனர் என்று உங்களுக்குத் தெரியுமா? இவர்களில் பலர் தங்களுக்கென ஏற்படுத்திக்கொண்ட சபையின் அங்கத்தினர்கள், நான் உண்மையைக் கூறினேன் என்று அவர்கள் அறிவார்கள். 205 நான் அல்ல. மோசே கீழே சென்று ஜனங்களிடம் கர்த்தரைக் குறித்துக் கூறினபோது; கர்த்தர் அக்கினி ஸ்தம்பத்திலிருந்துகொண்டு வார்த்தையை உறுதிப்படுத்தி, அது உண்மையென்று காண்பித்தது போலவே. அதே அக்கினி ஸ்தம்பம் இங்கு நம்முடன் இருக்கிறது. அதே கிறிஸ்து புறஜாதியாரின் காலத்தில், அவர் செய்யும்படி வாக்களித்தப் பிரகாரம், அதே காரியத்தை செய்துகொண்டிருக்கிறார்.

92206 எது என்னை விசுவாசிக்கச் செய்கிறது? அதுவே நீங்கள் உங்களுடைய இருதயத்தில் உத்தமாயிருக்கிறீர்கள் என்கிறது. உங்களை எழும்பி நிற்கச் செய்தது எது? உங்களைச் சுற்றிலும் ஏதோ ஒன்று இருந்துகொண்டு, “நீங்கள் தவறாயிருக்கிறீர்கள்” என்று கூறினது. இப்பொழுது அது தேவனாயிருந்தது, ஏனென்றால் நீங்கள் அறிக்கைசெய்த பிறகு, ஜனங்களின் முன்னால் நிற்க உங்களில் சிலர் சங்கடப்படுவதை உணருகிறீர்கள். ஆனால் இந்த அசலான ஒன்று, “நீங்கள் தவறாயிருக்கிறீர்கள்” என்று காண்பித்தது. அது சிந்தனைகளைப் பகுத்தறிதலின் மூலம், வார்த்தையுடன் கூட வருகிறது. இதனூடாக… 207 இந்த வரங்கள் எதற்காக சபைக்கு அனுப்பப்பட்டன? முதலாம் வரம் எது? முதலாவது காரியம் எது? அப்போஸ்தலர் (அது மிஷ னரிமார்கள்), தீர்க்கதரிசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள், சுவிசேஷகர்கள். சபை சீர்பொருந்தும்பொருட்டு அவர்கள் ஒருமித்து ஊழியம் செய்கின்றனர்.

93208 கர்த்தருடைய வார்த்தை எங்கு, யாரிடம் வருகிறது? அது எப்பொழுதுமே தீர்க்கதரிசியிடம் வருகின்றது, கேள்விக்கு இடமேயில்லை. அது தீர்க்கதரிசியின் வரம் அல்ல; தீர்க்கதரிசன வரம் என்பது ஒருவர் மேல் இருக்கிறது, பின்பு வேறொருவர் மேல் வருகிறது. ஆனால் தீர்க்கதரிசியோ தேவனால் முன்குறிக்கப்பட்டு தீர்க்கதரியாகவே பிறக்கிறான். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாய், முன்குறிக்கப்பட தேவ குமாரனாயிருந்தார். ஏசாயா யோவான் ஸ்நானனைக் குறித்து, அவன் பிறப்பதற்கு ஏழுநூற்று பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்னரே, “அவன் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்” என்ற முன்னுரைத்தான். தேவன் ஏரேமியாவிடம், “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கும் முன்னே, உன்னை அறிந்து, உன்னைப் பரிசுத்தம் பண்ணி, உன்னை ஜாதிகளுக்கு ஒரு தீர்க்கதரியாகக் கட்டளையிட்டேன்” என்றார். தீர்க்கதரிசிகள் தோன்றுவதை நீங்கள் காணும்போது, நியாயத்தீர்ப்பு சமீபமாயுள்ளது.

94209 இப்பொழுது, “நியாயந்தீர்ப்பு தேவனுடைய வீட்டில், தேவனுடைய ஜனங்களிடத்தில் துவங்குகிறது.” இப்பொழுது நாம் தவறாயிருக்கிறோமே! நாம் தவறு செய்திருக்கிறோம். இன்றிரவு இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறவர்களில் ஆபிரகாமின் சந்ததியார் மீது, உண்மையாகவே முன்குறிக்கப்பட்டுள்ளவர் மீது தேவனுடைய வெளிச்சம் பிரகாசிக்க வேண்டுமென்று நான் விசுவாசிக்கிறேன்; வெளிச்சம் அவர்கள் மேல் படும்போது, அவர்கள் எழுந்து நிற்கின்றனர். ஏதாவதொன்று நிகழவேண்டும், அதன் விளைவாக நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்களே! இப்பொழுது நீங்கள் இங்கிருக் கின்றீர்கள், நாம் நம்முடைய தலைகளை வணங்கி நமது தவறுகளை அறிக்கை செய்வோமாக. 210 பாவியாகிய நண்பனே, இந்தக் கூட்டத்தில் நீ நின்றுகொண் டிருப்பாயானால், அப்படியும் சிலர் இருக்கிறீர்கள், உங்களுக்கு அவமானம்; ஆனால் நீ அதை ஏற்றுக்கொண்டு, உன் முழு இருதயத்தோடு விசுவாசித்தபடியால், உனக்கு இப்பொழுது ஆசிர்வாதங்களே. 211 கிறிஸ்தவர்களே நீங்கள், நீங்கள் நல்ல பெண்கள் என்று நான் நம்புகிறேன் என்று ஸ்திரீகளாகிய நீங்கள் அறிவீர்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. அதை நான் விசுவாசிக்கிறேன். என் இருதயத்தின் உணர்வை தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தித் தர முடியும். சகோதரியே, உன்னிடம் நான் இழிவாக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை; எனக்கு ஒரு மனைவியும், இரண்டு—இரண்டு வாலிப பெண்பிள்ளைகளும் கூட உள்ளனர். உன்னை நான் என் சகோதரியாக நேசிக்கிறேன். 212 சகோதரனே, உன்னுடைய உணர்வுகளைப் புன்படுத்த நான் விரும்பவில்லை, ஆனால் சில நேரங்களில் வார்த்தையைக் கொண்ட ஒரு சிறிது குலுக்குதல் உனக்கு உதவி செய்கிறது.

95213 இப்பொழுது, நாம் தவறாயிருப்போனால், நாம் தவறாயிருக்கிறோம் என்று நாம் கூறுவோமாக. இன்றிரவு நமக்காக கிருபை அபரிமிதமாய் உள்ளது—உள்ளது. “தன் தவறுகளை அறிக்கை செய்கிறவனுக்கு இரக்கம் காத்திருக்கிறது. ஆனால் தன் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்.” உன் பாவம் என்ன? உன் அவிசுவாசம். நீங்கள் அதை மறைத்து, “பாருங்கள், மற்றவர்களைப் போல் நானும் நல்லவன்” என்று கூறவாயானால். நீ தவறாயிருக்கிறாய். நீ இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் சற்றேனும் ஒருக்காலும் முன்னேறவேமாட்டாய். நீ இப்படியே இருப்பாய், அந்த வேலியைக் கடந்து அதை சரிபடுத்தாமற்போனால், நீ முன்னேறவே முடியாது. நீங்கள் அப்படி செய்ய முடியாது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்; நீங்கள் தேவனுடைய வார்த்தையின்படியே நடக்க வேண்டும். 214 நீ உயிரோடிருக்கும் வரை, நீ இதை எப்பொழுதும் ஞாபகம்கொள். நீ நீண்ட காலம் வாழ நேரிட்டால், நீ இன்றிரவை ஞாபகம் வைத்துக்கொள். நினைவிருக்கட்டும், நான் உங்களிடம் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கூறிக்கொண்டிருக்கிறேனே! இன்று பிற்பகல் நான் காட்டில் உட்கார்ந்துகொண்டு ஜெபம் செய்துகொண்டிருந்தேன். அவர் இங்குள்ளவைகளைக் குறித்து என்னிடம் பேசி, “அதைக் கூறி, அழைப்பு கொடு, நான் உங்களுக்காக ஒன்றைச் செய்வேன்” என்றார். இதோ அது உள்ளது. இப்பொழுது நாம் ஜெபம் செய்வோமாக.

96215 பரலோகப் பிதாவே, இந்த கூட்டத்தில் இப்பொழுது பாவிகள் பயபக்தியாயும் உத்தமாயும் நிற்கின்றனர். அவர்கள் ஒரு அறிக்கை செய்வதற்கென தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து இங்கு நடந்து வந்துள்ளனர். கிறிஸ்தவர்களும் தங்கள் அறிக்கையை செய்ய வந்துள்ளனர். 216 வெளிச்சம் தங்கள் மேல் பிரகாசித்த விலையேறப்பெற்ற சகோதரிகளும் இங்குள்ளனர், அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் அவர்கள் தவறாயிருந்தனர் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர், வேதம் அந்த காரியங்களை போதிக்கிறதென்றும் அவர்கள் அறிந்துள்ளனர். இவையனைத்தும் விட்டுவிட அவர்கள் ஆயத்தமாயுள்ளனர். 217 இங்கு சகோதர்கள் நின்று கொண்டிருக்கின்றனர், விலையே றப்பெற்ற சகோதரர்கள், ஜீவனுள்ள தேவனுடைய குமாரர்கள், இவர்கள் கோட்பாடுகளின் காரணமாகவும், வெதுவெதுப்பான நிலையின் காரணமாகவும், இவ்வுலகில் அலைந்து திரிந்தனர். பிதாவே, இன்றிரவு அவர்கள் திரும்பி வருகின்றனர், அவர்கள் திரும்பி வருகின்றனர், அவர்கள், இதோ அவர்கள் இருக்கிறார்கள்.

97218 இப்பொழுது, பிதாவே, அவர்கள் தங்களுடைய காலூன்றி எழுந்து நின்றபோது, அவர்கள் எல்லா விஞ்ஞானிகளின் கருத்துக்களையும் முறித்துப்போட் டனர்; நீங்கள் மேலே நகர முடியாதபடி, நீங்கள் கீழே இழுக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தி இந்த வழியாக நடந்து வந்தபோது, ஒரு தீர்மானம் செய்ய அவர்களுக்குள் ஒரு ஆவி இருந்தது என்பதை அவர்கள் நிரூபித்தனர். அவர்கள் கிறிஸ்துவுக்காக அதைச் செய்துள்ளனர். 219 இயேசுவே, இதோ உம்முடைய சொந்த வார்த்தைகள், நான் அவைகளை உமக்கு மேற்கோள் காட்டப்போகின்றேன். 220 இன்றிரவு, உம்முடைய ஊழியக்காரன் என்னும் முறையில், நான் இந்த ஜனங்களை உமக்களிக்கிறேன். இன்று காட்டில் நீர் என்னிடம் செய்யும்படிக் கூறினவிதமாகவே நான் செய்துள்ளேன், என்ன நடக்கும் என்று நீர் கூறினீரோ அது அப்படியே இங்கு நடந்தது. அவைகளுக்கு சாட்சிகள் இங்கு நின்றுகொண்டிருக்கின்றனர். உமது—உமது பிரசன்னத்தை நிரூபிக்க, நீர் கூட்டத்தில் சென்று, ஜனங்களிடம் அவர்கள் யாரென்றும், எங்கே…அவர்கள் என்ன செய்துள்ளனர் என்றும், அவர்கள் பெயர்களையும், அவர்கள் யாராயிருந்தனர் என்பதையும், அவர்கள் செய்துள்ளதையும், அவர்களுக்கு என்ன கோளாறு என்பதையும் ஜனங்கள் அறிந்து கொள்ளச் செய்தீர்.

98221 இப்பொழுது நீர் உம்முடைய வார்த்தையில், “மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக் கிற என் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்களின் முன்பாகவும் அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னைக் குறித்து எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக் குறித்து நானும் என் பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் வெட்கப்படுவேன்” என்று கூறினீர். இப்பொழுது இந்த சகோதரிகளும் சகோதரர்களும் இன்றிரவு அவர்களுடைய அங்கத்தினர்கள், அவர்களுடைய போதகர்கள், அவர்களுடைய அன்பார்ந்தவர்கள் ஆகியோருக்கு முன்பாக, அவர்கள் உம்மைக் குறித்து வெட்கப்படவில்லை என்று—என்று கூறவே நின்றுள்ளனர், ஆனால் அவர்கள் நடந்துகொண்ட விதத்தைக் குறித்து வெட்கப்படுகின்றனர். இப்பொழுதும் கர்த்தாவே, நீர் அவர்களை மன்னிப்பீர் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அதை நீர் வாக்கருளியிருக்கிறீர். நீர், “தன் பாவங்களை அறிக்கை செய்கிறவன் இரக்கம் பெறுவான்” என்று கூறினீர். அவர்கள் அதை அறிக்கை செய்துகொண்டிருக்கின்றனர், அவர்கள் இரக்கம் பெறுவார்கள். வியாதியஸ்தரை சுகப்படுத்தக் கூடிய நீர், “‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ,’ ‘உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ,’ எது எளிது?” என்று கேட்டிருக்கிறீர்.

99222 இவர்களை நான் உரிமை கோருகிறேன். கர்த்தாவே, இவர்கள் ஒவ்வொருவரையும் நான்—நான் உரிமை கோருகிறேன். இத்தனை ஆண்டு காலமாக நான் உமக்காகவும் உமது வார்த்தைக்காகவும் நிற்க முயன்று வந்திருக்கிறேன். இன்றிரவு அவர்கள் உமக்காக நின்றிருக்கின்றனர், அவர்களை நான் உரிமை கோருகிறேன். கர்த்தராகிய இயேசுவே, இவர்களை உலகத்தின் வாயிலிருந்து விடுவித்து, நான் அவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இன்றிரவின் செய்தியின், தேவனுடைய வார்த்தையின் வெற்றிச் சின்னங்களாயுள்ளனர். சர்வவல்லமையுள்ள தேவனே, உமது பரிசுத்த வல்லமையினால் அவர்களைக் காத்துக்கொள்ளும். அவர்கள் வளருவார்களாக, தேவனுடைய வெளிச்சம் அவர்களுடைய ஜீவியங்களில் பிரகாசிப்பதாக. கர்த்தாவே, இந்த மனிதரும் ஸ்திரீகளும் பரிசுத்த ஆவியின் வல்லமையிலும் பெலனிலும் வளரத் தொடங்குவார்களாக. அவர்களுடைய சபைகள் அனைத்தையும், மற்றும்—மற்றும் அவர்கள் வாழ்ந்து வரும் சுற்றுப்புறம் அனைத்தையும் மாற்ற ஏதாவதொன்று நடக்கட்டும். கர்த்தாவே, இதை அருள்வீராக. நான் இவர்களை உமக்குத் தருகிறேன், இவர்கள் உம்முடையவர்கள். இன்றிரவு நடந்த கூட்டத்தில் பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையின் வெற்றிச் சின்னங்களாக இவர்கள்—இவர்கள் விளங்குகின்றனர். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர்களுடைய ஜீவியத்தை நான் உரிமை கோருகிறேன். அவர்களை நான் மறுபுறம் சந்திக்க விரும்புகிறேன், அப்பொழுது அவர்கள் என்றும் அழியாத வர்களாய், வாலிப மனிதராகவும் ஸ்திரீகளாகவும் மீண்டும் மாறி, என்றென்றைக்கும் இளமையாகவும் அழகாகவும் இருப்பார்கள். பிதாவே, இவர்கள் உம்முடையவர்கள். இவர்கள் தேவனுடைய பிரசன்னத்தின் வல்லமையினாலும், தேவனுடைய வார்த்தையினாலும் தேவன் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுக்கு அளித்துள்ள வெற்றிச் சின்னங்களாயிருக்கிறார்கள். பிதாவே, இவர்கள் உம்முடையவர்கள். நான் இவர்களை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்களித்து; ஒவ்வொரு ஜீவியத்தையும், இங்கு நின்று கொண்டிருக்கும் ஒவ்வொருவருடைய ஜீவியத்தையும் நான் உரிமை கோருகிறேன். ஒவ்வொரு அறிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு பாவமும் மன்னிக்கப்பட்டது.

100223 இங்கு நின்றுகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், பரிசுத்த ஆவியின் பெலனை அவர்களுக்குள் தந்து, அவர்கள் சரியானதை செய்வதற்கும், இந்த பகட்டான உலகத்தில், இந்த அந்தகார நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்யுமாறு நான்—நான்—நான் ஜெபிக்கிறேன். ஓ தேவனே, நாளை இரவு இதை சுத்தமாகவும் தெளிவாகவும் அவர்களுக்களிக்க, எனக்கு உதவி புரியும், கர்த்தாவே; கிறிஸ்துவின் வருகையின் நேரத்தின்போது அவரைச் சந்திக்க இவர்கள் ஆயத்தமாயிருக்கும்படி, இந்த உலகத்தின் பகட்டினின்று அவர்களை வெட்டியெடும். பிதாவே, இதை அருள்வீராக. இப்பொழுது நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம். நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில்.

101224 நின்று கொண்டிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும், என்ன நடக்கிறதென்று அறிந்து கொள்ளும் ஆசையோடு மாத்திரம் இங்கு வரவில்லையென்று நான் நம்புகிறேன், ஏனெனில் நீங்கள் கரடு முரடான கடினமான, வெட்டும் சுவிசேஷப் பிரசங்கத்தின் விளைவாக இங்க வந்திருக்கிறீர்கள். ஆனால் இயேசு, “என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வர மாட்டான், பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்று கூறியுள்ளதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். இப்பொழுது அது ஒரு உறுதிபடுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாய் உள்ளது. அவர் ஆபிரகாமுக்கு வாக்களித்து, அதை ஒரு ஆணையினாலே உறுதிப்படுத்தினார், இன்றிரவு அதன் அடிப்படையில் தோன்றின தேவனுடைய சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள். நீங்கள் மன்னிக்கப்பட வேண்டுமே! நீங்கள் யாவரும் அதை ஏற்றுக்கொண்டு, தேவன் உங்கள் தவறுகளை உங்களுக்கு மன்னிக்கிறார் என்பதை விசுவாசித்து, இன்றிரவு முதற்கொண்டு, தேவனுடைய கிருபையினால் நீங்கள் எஞ்சியுள்ள உங்கள் வாழ்க்கை முழுவதும், அவருக்காகவே வாழ்வீர்கள் என்றும், நீங்கள் செய்யவேண்டுமென்று வேதம் போதிக்கும் அனைத்தையும் நீங்கள் செய்வீர்கள் என்றும், தேவன் முன்காலத்தில் நீங்கள் செய்ததை மன்னித்து, அதை செய்ய கிருபையளிக்கிறார் என்றும் விசுவாசிப்பவர்; உங்கள் கரங்களையுயர்த்தி, “நான் அதை என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன்” என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக.

102225 இவர்களுக்காக பெருமிதம் கொள்ளும் அங்குள்ள கிறிஸ்த வர்களாகிய நீங்கள் அனைவரும், “இவர்களுக்காக தேவனைத் துதிக்கிறோம்!” என்று கூறுங்கள். [சபையோர், “இவர்களுக்காக தேவனைத் துதிக்கிறோம்!” என்கின்றனர்—ஆசி.] நாம் மறுபடியும் அதை கூறுவோமாக. இவர்களுக்காக தேவனைத் துதிக்கிறோம்! [“இவர்களுக்காக தேவனுக்கும் ஸ்தோத்திரம்!”] இப்பொழுது நாம் எல்லோரும் எழுந்து நிற்போம். எனக்கு ஒரு சுருதியைக் கொடுங்கள்: நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 226 இப்பொழுது நாமெல்லாரும் ஒன்று சேர்ந்து, நம்முடைய கரங்களை உயர்த்தி இதைப் பாடுவோமாக. சரி. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே.

103227 நீங்கள் உண்மையாகவே தேய்த்துத் தூய்மைபடுத்தப்பட்ட உணர்வைப் பெற்றுள்ளீர்களல்லவா? வார்த்தையானது உங்களைத் தேய்த்துக் கழுவி உங்களுக்கு மேலான உணர்வை கொடுத்துள்ளதல்லவா? அது கொடுத்துள்ளதல்லவா? 228 நீங்கள் என்னை ஒரு—ஒரு—ஒரு போலியென்று கருதவில்லை, அவ்வாறு கருதுகிறீர்களா? நான் கூறியது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்!” என்கின்றனர்—ஆசி.] 229 நான் இப்பொழுது அந்த கர்த்தருடைய தூதனை கவனித்துக் கொண்டிருக்கிறேன், நான் ஜனங்களின் மேல், அது இங்கு நின்றுகொண்டிருக்கும் கூட்டதின் மேல் சிலுவை வடிவில் வட்டமிட்டுள்ளதைக் காண்கிறேன். பரலோகத்திலுள்ள தேவன்! நீங்கள் அதே படத்தில் …அந்த படத்தில் நீங்கள் காணும் அதே தூதன் இப்பொழுது இந்த கூட்ட ஜனங்களின் மேல் சுற்றிலும் அசைந்துக் கொண்டிருக்கிறார், அது இடம் விட்டு இடம் செல்வதை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். அந்தக் கூட்டத்தில் அங்கு நின்று கொண்டிருப்பவர்களின் வியாதி அனைத்தும் போய்விட்டதென்றும் நான் விசுவாசிக்கிறேன். எல்லா பாவமும் மன்னிக்கப்பட்டுவிட்டதென்றும் என் முழு இருதயத்தோடு நான்—நான் விசுவாசிக்கிறேன்.

104230 நாம்—நாம் “நான் அவரை நேசிக்கிறேன்” என்னும் பாடலை பாடும்போது, ஒருவரோடொருவர் கரங்குலுக்குவோமாக. “நான்…” “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லுங்கள். [சபையோர், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லுகின்றனர்—ஆசி.] …அவரை நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 231 இப்பொழுது நாம் அவரை ஸ்தோத்தரிப்போமாக, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இயேசுவே, உமக்கு நன்றி” என்று சொல்லுங்கள். கர்த்தாவே, ஜனங்களைக் கொண்டு வந்ததற்காகவும், உமது வார்த் தைக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அது இருபுறம் கருக்குள்ள பட்டயத்தைப் போல் கருக்கானதாய், இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறது. அது நிச்சயப்படுத்துகிறது. அது ஜனங்களை உலகத்தினின்றும், மாம்சத்தினின்றும், உலக காரியங்களினின்றும் விருத்தசேதனம் செய்து, அவைகளை அப்புறப்படுத்தி, அவர் களை கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாக்குகிறது. பிதாவே, உமக்கு நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! உம்மை நாங்கள் முழு இருதயத்தோடு துதிக்கிறோம். கர்த்தாவே, இவர்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்கள் ஆவியினால் நிரப்பப்படுவார்களாக! பரிசுத்த ஆவி தாமே அவர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சபைகளின் மத்தியில் பண்டைய-நாகரீகங்கொண்ட எழுப்புதல் உண்டாகி, கர்த்தாவே, அது எல்லா சமுதாயங்களினூடாகவும் வேகமாகப் பரவி, எல்லாவிடங்களிலும் தேவனுடைய வல்லமையினால் அனல் மூளுவதாக. கர்த்தாவே, எங்களுக்கு உண்மையான பெந்தெகொஸ் தேவை, உண்மையான தேவனுடைய வல்லமையை ஜனங்களின் ஜீவியங்களில் திரும்பவும் அனுப்பும். பிதாவே, இதை அருளும். 232 இவர்கள் உம்முடையவர்கள். தேவனுடைய கிருபையினால், இவர்கள் உம்முடையவர்கள். இவர்கள் வாக்குத்தத்தத்தின்படி, ஆபிரகாமின் சந்ததியாயுள்ளனர். கர்த்தாவே, இதை அருளும். இவர்கள் உம்முடைய வார்த்தையை விசுவாசிக்கின்றனர்; அதற்கு முரணான எதையும் அது இல்லாததுபோல் பாவிக்கின்றனர். அவர்கள் ஆபிரகாமின் சந்ததியா யிருக்கிறபடியால், வார்த்தையை அவர்கள் விசுவாசிக்கின்றனர். பிதாவே, இவர்கள் உம்முடையவர்கள், கடைசி நாளில் பிரகாசிக்கும்படி முன்குறிக்கப்பட்ட சபை. பிதாவே, இவர்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அவரை நேசிக்கிறேன்… அவருக்கு துதி செலுத்த இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்துங்கள். “நான்…” மாடியின் முன்பக்கத்தில் உள்ளவர்களும்! அது சரி. முந்தி அவர் என்னை நேசித்ததால்… 