யேகோவாயீரே 2

62-0706

சகதரன ரய, உஙகளகக நனற. நம ஜபககமபத சறற நரம நனறவணணமக இரபபமக. நஙகள வரமபனல, நம நமமடய தலகள வணஙகவம. இபபழத நம சறற சநததத, இனறரவ தவன உஙகளகக பதலரகக வணடமனற நஙகள வஞசககம ஏதவதனற உஙகள இரதயததல இரககமனல, ஏதவதர வணணபபமரககமனல, உஙகள கரஙகளயயரதத, தவனகக மனனல எனகக ஒர வணணபபம உணட. எனற கற, அத தரயபபடததபபடடடம. நம ஜபம சயயமபத, இபபழத

யேகோவாயீரே 2

62-0706கிராஸ் வேலி கலி1071962-07-06

யேகோவாயீரே 2

62-0706கிராஸ் வேலி கலி1071962-07-06

1 சகோதரன் ராய், உங்களுக்கு நன்றி. நாம் ஜெபிக்கும்போது சற்று நேரம் நின்றவண்ணமாக இருப்போமாக. நீங்கள் விரும்பினால், நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். இப்பொழுது நாம் சற்று சிந்தித்து, இன்றிரவு தேவன் உங்களுக்கு பதிலுரைக்க வேண்டுமென்று நீங்கள் வாஞ்சிக்கும் ஏதாவதொன்று உங்கள் இருதயத்தில் இருக்குமானால், ஏதாவதொரு விண்ணப்பமிருக்குமானால், உங்கள் கரங்களையுயர்த்தி, “தேவனுக்கு முன்னால் எனக்கு ஒரு விண்ணப்பம் உண்டு.” என்று கூறி, அதை தெரியப்படுத்தப்படட்டும். நாம் ஜெபம் செய்யும்போது, இப்பொழுது நம்முடைய தலைகளை நாம் வணங்குவோமாக.

22 எங்கள் பரலோக பிதாவே, உம்மிடம் வருவதை நாங்கள் ஒரு மகத்தான சிலாக்கியமாகக் கருதுகிறேம்; நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வரும்போது, நாங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அதை பெற்றுக்கொள்வோம் என்று எங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளதை அறிந்திருக்கிறோம். நாங்கள் இப்பொழுது நியாசனத்துக்கு முன்பாக வரவில்லை. அங்கு வருவதற்கு, நீதியின் சிங்காசனத்தன்டை வருவதற்கு நாங்கள் நிச்சயம் விரும்பமாட்டோம். ஆனால் நாங்கள்…கிருபாசனத் துக்கு முன்பாக வருகிறேம், அங்கு எங்கள் வேண்டுகோள்கள் அருளப்படும் என்பதை நாங்கள் நிச்சயமாக அறிந்திருக்கிறோம். ஏனெனில், எங்களால் உம்முடைய நியாயத்தீர்ப்புக்கு முன்னால் நிற்க முடியாது, உமது நீதியினாலும் நாங்கள் வாழமுடியாது, ஆனால் உமது இரக்கத்திற்காகவே நாங்கள் மன்றாடுகிறோம். கர்த்தாவே, எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னித்தருளும். நீர் அதை அருளவேண்டும் என்றும், இன்றிரவு நீர் எங்களோடிருந்து, கரங்கள் உயர்த்தப்பட்டு, தெரியப்படுத்தப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் உத்தரவு அருள வேண்டுமென நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அந்த கரத்தின் கீழுள்ள இருதயத்தில் என்ன உள்ளதென்று நீர் அறிவீர். தேவனே, அது வியாதிக்காகவோ, இரட்சிப்புக்காகவோ, அல்லது அன்பார்ந்தவர்களுக்கோ இருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. பிதாவே, இன்றிரவு அவர்களுடைய விண்ணப்பங்களுக்கு நீர் பதில் அருள வேண்டுமென்று அவர்களுக்காக விசேஷமாக நாங்கள் ஜெபிக்கிறோம்.

33 இப்பொழுது உமது விசுவாசமுள்ள ஊழியக்காரனாகிய ஆபிரகாமைக் குறித்து நாங்கள் பேசிக்கொண்டு வருகிறோம், இன்றிரவும் அவனுடைய பயணத்தில் அவனுடன் கூட தொடரப்போகின்றோம். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாதையில் உமது வார்த்தையை நம்பின உமது விசுவாசமுள்ள ஒரு ஊழியக்காரனுடன் நாங்கள் செல்லும்போது, நீர் எங்களை ஆசீர்வதித்தருள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். பவுல் எபிரேயருக்கு எழுதின நிருபத்தில், ஆபிரகாம் ஒரு உதாரணமாகத் திகழ்ந்தான் என்று கூறினதுபோன்று, அது எங்களுக்கு உதாரணமாய் இருப்பதாக. அவனுக்கிருந்த விசுவாசம் இன்றிரவு எங்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம்; நாங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கவும், அதில் ஒரு வார்த்தையையும் கூட சந்தேகிக்காமலிருக்கவும், அது அனைத்தையும் விசுவாசிக்கவும், அவர் கூறின எல்லாவற்ற்றையும் நாங்கள் விசுவாசிக்கவும் அருள்புரியும். அவர் எங்களுக்கு அளித்துள்ள வாக்குத்தத்தங்களை நாங்கள் இறுகப் பற்றிக்கொண்டு, நாங்கள் கிறிஸ்துவுக்குள் இருப்பதன் மூலம் ஆபிரகாமின் பிள்ளைகளாகும்படி அருள் செய்யும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். அமரலாம்.

44 சகோதரன் பார்டர்ஸ் என்னைவிட சற்று உயரமானவர், எனவே நான் ஒலிபெருக்கியை சிறிது கீழே வைக்கவேண்டியதாயுள்ளது. மறுபடியுமாக இன்றிரவு இக்கூட்டத்துக்கு வந்து, வியாதியஸ்தருக்கு ஜெபிக்கவும், பரிசுத்த ஆவி நமக்கு செய்யக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்வதும் ஒரு சிலாக்கியமாயுள்ளது. இதை நான் பாராட்டுதலாகக் கூற விரும்புகிறேன். நான் அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா நாடுகளில் மேற்கொண்ட பயணங்களில், நேற்றிரவு நான் கண்ட ஒன்று மெய்சிலிர்க்க வைத்தது, சக்கர நாற்காலிகள் காலியாதல், கக்கதண்டங்களை கீழே வைத்தல், குருடர் பார்வையடைதல், செவிடர் கேட்டல், ஊமையர் பேசுதல் என்பதைக் காட்டிலும் மரித்தோர் உயிரோடெழுதல், “இந்த நபர் மரித்துவிட்டார், இப்பொழுது உயிரோடெழுந்துவிட்டார்” என்று மருத்துவர் வாக்குமூலத்தில் கையொப்பமிடுதல். இவையனைத்துமே என்னை மெய்சிலிர்க்க வைப்பவையாயுள்ளன ஆனால் நேற்றிரவு சபையின் அங்கத்தினர்களாகிய இவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, மற்ற ஜனங்களின் மத்தியில் நின்று, தாங்கள் தவறென்று அறிக்கை செய்து, சரியானதை செய்ய விருப்பம் தெரிவித்தபோது, எனக்குத் தெரிந்த வரையிலும் அதுவே மிகச் சிறந்தது.

55 சபை, ஒருக்கால் மணவாட்டி தெரிந்துகொள்ளப்பட்டுவிட்டாள். அது, இப்பொழுது அவள் தன்னை ஆயத்தப்படுத்தினாள். அவளை… 6 எழுப்புதல் முடிந்துவிட்டது. அதை நாமறிவோம். எழுப்புதல் ஆவி இனிமேல் இருக்காது. ஆராதனை இரண்டு மணி நேரம் நீடித்தால், எல்லோரும் குறை கூறுகின்றனர். எழுப்புதல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் நடந்து கொண்டிருக்கும் ஒன்று, அது முடிந்துபோவதில்லை. இப்பொழுதோ எழுப்புதல் முடிந்துவிட்டது. எனவே இப்பொழுது நாம் சேகரித்துக்கொண்டிருக்கிறோம். 7 ஆபிரகாம் குணசாலியான ஸ்திரீயை கண்டுபிடிக்குமளவும் அரும்பாடுபட வேண்டியதாயிருந்தது. அவன் குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடித்தவுடனே, அடுத்த காரியமாக மணவாளனை சந்திக்கவே அதன்பின்னர் அவளை ஆயத்தப்படுத்தினான். அதுதான் அடுத்ததாக காரியமாயிருந்தது. அவன் எப்பொழுது அவளைக் கண்டு பிடித்தான் என்று உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? சாயங்கால வேளையில், சாயங்கால வெளிச்சத்தில். 8 நேற்றிரவு ஸ்திரீகள் மனிதர்கள் இருவரையும் தாக்கினபோது; அவர்கள் வார்த்த்தைக்கு மதிப்பு கொடுத்து, எழுந்து நின்று, தாங்கள் தவறென்று ஒப்புக்கொண்டு, தேவனுடைய மன்னிப்பை வேண்டி, முன் செல்ல விரும்பினர். ஒரு எழுப்புதல் உண்டாவதற்கு இதுவே இடம். எனக்கு தெரிந்தவரைக்கும் எழுப்புதல் எங்காவது உண்டானால், அது உத்தம இருதயங்கள் உள்ள இந்த இடத்தில்தான் உண்டாகும். ஏன்? கிரியை செய்ய ஏதோ ஒன்றை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள், பாருங்கள். ஏதாவதொன்று…அவர்களில் பெரும்பாலோர் கர்வம்கொண் டவர்களாகிவிடுவார்கள், அதைக் குறித்து நீங்கள் கூறுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்; ஞாபகங்கொள்ளுங்கள், அந்த மாதிரியான வித்து ஒரு ஸ்தாபன வித்து, அது ஒரு ஆபிரகாமின் வித்தல்ல. ஒரு ஆபிரகாமின் வித்து வார்த்தையை கண்டு, அதை துரிதமாக விசுவாசிக்கிறது.

69 அன்றிரவு நாம் கண்ட கிணற்றடியில் இருந்த வேசி, கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீ… இயேசு தமது மேசியாவின அடையாளத்தைக் காண்பித்துக் கொண்டிருந்ததை, ஆசாரியர்களும் ரபீக்களும் சூழ நின்று பார்த்துக்கொண்டிருந்தனர், அது வேதப்பிரகாரமான ஒரு அடையாளம், ஆனால் அவர்களோ, “இவன் பெயல்செபூல், ஒரு பிசாசு, குறி சொல்லுகிற ஒருவன்” என்றனர். 10 ஆனால் அந்த ஸ்திரீ என்ன செய்திருந்தாளென்று இயேசு அவளிடம் கூறினபோது, அந்த வெளிச்சம் அவள்மேல் பட்டவுடனே, அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியா வருகிறார் என்று நாங்கள் அறிவோம். அவர் வரும்போது, அந்த காரியங்களை நமக்கு அறிவிப்பார்” என்றாள். பாருங்கள், முன்குறிக்கப்பட்ட அந்த வித்து விரைவில் அதை கிரகித்துக்கொண்டது, ஏனெனில் உண்மையாகவே அது ஒரு ஆபிரகாமின் வித்தாயிருந்தது. அவள் அந்த வெளிச்சத்தைக் கண்டாள். அது வார்த்தையாயிருந்து. மேசியா வரும்போது, இவைகளைச் செய்வாரென்று வார்த்தை வாக்களித்திருந்தது, அவள் அதை அடையாளம் கண்டுகொண்டாள். இயேசு, “உன்னுடன் பேசுகிற நானே அவர்” என்றார். 11 அவள் ஊருக்குள் போய் மற்றவர்களை நம்பச்செய்ய முயன்றாள். அவள், “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார், அவரை வந்து பாருங்கள். இவர் மேசியா அல்லவா?” என்றாள். பாருங்கள்?

712 இப்பொழுது நமது சகோதரிகளுக்கு ஒரு வார்த்தை. நான் ஸ்திரீகளை வெறுப்பவன் என்று எப்பொழுதுமே கருதப்பட்டு வருகிறேன், ஆனால் நான் அப்படிப்பட்டவனல்ல. பார்த்தீர்களா? நான் சிறுபையனாயிருந்தபோது, எனக்கு ஒரு கசப்பான அனுபவம் உண்டாயிருந்தது; ஆனால் நான் எப்பொழுதுமே ஒரு ஸ்திரீ ஒரு ஸ்தீரிக்குரிய ஸ்தானத்தில், ஒரு பெண்மணியாயிருக்கும்போது, நான் அதிகம் மதிப்பு கொடுப்பவன். ஆனால் அவ்வாறில்லாமல் பாவனை செய்யும் யாரையும் நான் மதிப்பதில்லை. ஒரு பெண்மணியைக் காண்பது, ஒரு உண்மையான அசலான பெண்மணியைக் காண்பது எனக்குப் பிரியம். அவள் ஒரு முத்து. 13 இந்நாளில் ஸ்திரீகள் தாறுமாறாக்கப்பட்டுள்ளனர், இந்த கடைசி நாட்களில் மிகவும் தாறுமாறாக்கப்பட்டுள்ளனர். வேதம் அவ்வாறு கூறுகிறது. ஏன்? காலம் முடிவடையப் போகின்றது. முதலாவதாக யார் தாறுமாயிருந்தது என்பது உங்களுக்கு ஞாபகமுள்ள்ளதா? ஒரு ஸ்திரீ. அது உண்மை. கடைசி நாட்களிலேதானே! இதற்கு முன்னர் நாம் இப்படி இருந்ததில்லை; ஆறாயிரம் ஆண்டுகளாக பெண்மணிகள் பெண்மணிகளாகவே தரித்திருக்க முயன்று வந்த நிலையை நாம் உடையவர்களாயிருந்து வந்தோம். இப்பொழுதோ அவர்கள் ஆண்களைப்போல நடக்க முயன்று, ஆண்களின் உடைகளை அணிந்து, ஆண்களைப்போல் தங்கள் தலைமுடியைக் கத்தரித்துக் கொள்கின்றனர். வெறெந்த காலத்திலும் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. கடைசி நாட்களில் இவர்கள் இப்படி செய்வார்கள் என்று வேதம் முன்னுரைக்கிறது. அதை இப்பொழுது நீங்கள் காண்கிறீர்கள், ஸ்திரீகளின் தாறுமாறான நிலைமை. வேதம் கூறியுள்ளதில் வியப்பொன்றுமில்லை, அதாவது “அந்த நாளிலே, சீயோனில் மீதியாயிருந்து—மீதியாயிருந்து—மீதியாயிருந்து தப்பினவர்கள் கர்த்தருடைய பார்வையில் மகிமையாயிருப்பார்கள்” என்றுரைத்துள்ளது. பாருங்கள், அவர்கள் எப்படி தப்பு வார்களென்றுமுள்ளதே!

814 நீங்கள், “அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குகிறதில்லை” எனலாம். அது ஒரு வித்தியாசத்தை உண்டாக்குகிறது. அண்மையில் ஒருவர் என்னிடம், “சகோதரன் பிரான்ஹாமே, அந்த சிறு காரியம் ஒரு வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை” என்றார். 15 நான், “பவுலுக்கு அது வித்தியாசத்தை உண்டுபண்ணினது. பவுல், ‘பரலோகத்திலிருந்து வருகிற தூதன் வேறெதையாவது கற்பித்தால், அவன் சபிக்கப்பட்டவன்’ என்று கூறியுள்ளான். அவர்கள் போதகராயிருந்தாலும், அல்லது தூதனாயிருந்தாலும், பேராயராயிருந்தாலும், போப்பாண்டவராயிருந்தாலும், அல்லது யாராயிருந்தாலும், இதற்கு முரணான ஒன்றை போதித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கடவன்” என்றேன். பாருங்கள், அது முற்றிலும் உண்மை. நீங்கள் அதைப் படிக்க விரும்பினால், அது கலாத்தியர் 1:8-ல் உள்ளது. 16 அதற்கு அவர், “நான் நினைக்கவில்லை…” என்றும், மேலும், “குட்டை தலைமுடி உள்ள பெண்கள் சாந்த குணமும், இனிய குணமும் உள்ளவர்களாக நான் கண்டிருக்கிறேன்” என்றார். 17 நான், “அது முற்றிலும் உண்மை, நானும் கூட கண்டிருக்கிறேன். ஆனால் அதுவல்ல. பாருங்கள், வேதம் என்னக் கூறியுள்ளதோ அதை நீங்கள் பின்பற்ற வேண்டுமே!” என்றேன். 18 தேவன் மோசேயிடம், “உன் பாதரட்சைகளை கழற்றிப் போடு” என்று கூறினபோது, அவன், “கர்த்தாவே, அதற்கு பதிலாக என் தொப்பியை நான் கழற்றிவிடுகிறேன்” என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும்? புரிகிறதா? என்ன செய்யவேண்ண்டுமென்றும் தேவன் கூறுகிறாரோ, அதை நீங்கள் செய்ய வேண்டுமே! ஆனால் அதைக் குறித்த தொல்லை என்னவென்று நான் நினைப்பது, அதைக் குறித்து என்னை மிகவும் வருத்தமடையச் செய்வது என்னவெனில், ஊழியக்காரர்கள் அப்படிப்பட்ட ஒன்றை பொறுத்துக்கொள்கின்றனரே! அது என்ன? ஒரு நவீன ஆதாம் தன் மனைவியுடன் சென்றதையே அது காண்பிக்கிறது. புரிகிறதா? தேவனுக்கு வார்த்தையோடு, அவருக்காக மாத்திரம், வார்த்தையில் மாத்திரம் நிற்கிற மற்றொரு ஆதாமே தேவைப்படுகிறது. என்னவானாலும், வார்த்தை சரியானதாயிற்றே! வேறெந்த வழியிலும் செல்லாதீர்கள்.

919 இந்த ஆறாயிரம் ஆண்டுகளில், வேறெந்த காலத்திலும் பெண்கள் தங்கள் தலைமுடியைக் கத்தரித்துக் கொள்ளவும், ஆண்களைப்போல் உடுத்திக்கொள்ளவும், தாறுமாறாக்கப்பட்டவர்களாயி ருக்கவும் விரும்பினதில்லை. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். தீர்க்கதரிசனம் அறிந்தவர் எவருமே ஒரு ஸ்திரீ அமெரிக்காவுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறாள் என்பதை அறிவர். இது “ஸ்திரீகளினுடைய சுதந்தரம்” என்றழைக்கப்படுகிறது. என்னத்திற்கான சுதந்தரம்? அவள் விருப்பம்போல் பாவம் செய்யவே. 20 ஒரு ஸ்திரீ தான் விரும்பினதை அவளால் செய்ய முடியாது. வேதம் செய்ய முடியாது என்றே கூறுகின்றது. ஒரு ஸ்திரீ மனிதனின் ஒரு உபசிருஷ்டியாயிருக்கிறாள். அவள் மூல சிருஷ்டிப்பிலும் கூட இல்லை. அது முற்றிலும் உண்மை. அவள் ஒரு மனிதனிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாள். துவக்கத்தில் மனிதன் ஆணும் பெண்ணுமாக இருந்தான்; அவர் பெண்ணின் ஆவியை எடுத்து அவனுடைய விலா எலும்பில் வைத்தார். கவனியுங்கள்! ரெபேக்காள் ஈசாக்கை சந்திக்கச் சென்றபோது, அவனைக் கண்ட மாத்திரத்தில் ஒட்டகத்திலிருந்து கீழே குதித்து தன் முகத்தை முக்காடிட்டுக் கொண்டாள் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? ஏன்? அவள் தன் தலையிடம் வந்து கொண்டிருந்தாள். 21 அவர்கள் அதை அறியாதி ருக்கிறார்கள். அவர்கள் எப்படியும் அதை செய்ய வேண்டும். ஒரு ஸ்திரீ விவாகம் செய்து கொள்ளும்போது, தன்னுடைய முகத்தின்மேல் ஒரு முக்காடிட்டுக்கொள்கிறாள் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? ஏன்? அவள் தன் தலையினிடத்திற்கு வந்து கொண்டிருக்கிறாள். சபை, சபை, மணவாட்டியாயிருக்கிறவள், தன்னை எந்தக் கோட்பாட்டிற்கும் மூடிக்கொள்ள வேண்டும். அவள் தன்னுடைய வார்த்தையாகிய தலையினிடத்திற்கு வந்து கொண்டிருக்கிறாள். கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார், அவரே தலையாயிருக்கிறார்.

1022 இப்பொழுது, நண்பர்களே, அதன் பேரில் இதை தொடர்ந்து பேச எனக்கு விருப்பமில்லை. நான்—நான்—நான் இன்று வேதத்தின் ஆழமான போதகங்களையொட்டிய ஐந்நூறுக்கும் அதிகமான வேதவாக்கியங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்தக் கூட்டத்தில் எப்படியாயினும் ஆபிரகாமில் மாத்திரம் நிலைகொள்ள விரும்புகிறேன். 23 நீங்கள் பாருங்கள், சகோதரருக்கு ஆட்சேபனையில்லையென்றால், கர்த்தர் அதை வாய்க்கச் செய்வாரென நான் நம்புகிறேன், எல்லோரும் விரும்பினால், நான் இங்கு திரும்ப வந்து, உங்களோடு கொஞ்ச காலம் தரித்திருந்து ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்த எனக்குப் பிரியம், பாருங்கள், அப்பொழுது நாம் சற்று நேரம் ஆழ்ந்த கருத்துக்குச் சென்று அவைகளைப் பார்க்கலாம். [சபையோர் கரங்கொட்டுகின்றனர்—ஆசி.] உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. இங்கு மீன்கள் உள்ளன என்று நானறிவேன், எனக்கு—எனக்கு—எனக்கு அது தெரியும். மீன் பிடிக்க எனக்குப் பிரியம். இங்கு உத்தமமான ஒருவருடன் பணிபுரிய போதியப் பொருட்கள் உள்ளன. எவருமே தவறாயிருக்க வாய்ப்புண்டு. உங்களுக்குத் தெரியாது; நான் அனுதினமும் என் தவறுகளின்று மரித்து, கிறிஸ்துவுக்கு முன்பாக வாழ முயன்று வருகிறேன். தேவனுடைய ஆவியை போதிய அளவில் கொண்டிருந்து, நடந்து வந்து, தாங்கள் தவறென்று ஒப்புக்கொண்டு, “நான் சரியான காரியத்தையே விரும்புகிறேன்” என்று கூறும் அளவிற்கு எவராகிலும் பெரியவர்களாக இருப்பார்களானால், அங்கேயே எனக்கு அதிகம் நம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது, ஏனெனில் அதுவே உண்மையான ஆபிரகாமின் சந்ததி. அவர்கள் அதை அறிந்துகொள்ள விரும்புகின்றனர். அவர்கள் அதை கேட்டாலொழிய அவர்கள் அதை அறிந்துகொள்கிறதில்லை. ஆனால் அவர்கள் அதை முதலில் கேட்க வேண்டும். “நாம் எப்படி…ஒரு போதகரில்லாமல்? தேவன் பிரசங்கியாரை அனுப்பினாலொழிய அவரால் எப்படி பிரசங்கிக்க முடியும்?” அது முற்றிலும் உண்மை. இப்பொழுது கவனியுங்கள்.

1124 இப்பொழுது நாம் ஆபிரகாமுக்கு திரும்பிச் செல்கிறோம். நாம் அவனிடம் திரும்பிச் சென்று, அவனைக் குறித்து பேசுவது நலம். நான் பேசுவது அங்கே மாடியின் முன்பாகத்தில் உள்ள வர்களுக்கெல்லாம் தெளிவாக கேட்கிறதா? நாங்கள்…இன்றிரவு இப்படிப்பட்ட ஒரு அருமையான ஜனக்கூட்டத்தைக் காண்பது அருமையாயுள்ளது. இங்குள்ள நீங்கள் மிகவும் அருமையானவர்கள். நான் நிச்சயம்… 25 இன்று கனடாவிலிருந்து வந்துள்ள ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். கர்த்தர் என்னை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு நடத்திச் சென்றார், அங்கு ஒன்று நடைபெற நான் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. அப்பொழுது அங்கு நின்று கொண்டு…இந்த நண்பரை, நான் அவரை சந்தித்தேன், அவர் அமெரிக்க மக்கள் எவ்வளவு நட்புத்தன்மை கொண்டுள்ளனர் என்பதைக் குறித்து என்னிடம் கூறிக்கொண்டிருந்தார். நான், “ஆம், மிகவும் பொல்லாங்கான இந்த இடத்திலும், அதை சுற்றிலும் சில முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வித்துக்கள் உள்ளன” என்றேன். இங்குள்ள உங்கள் நகரத்தை மாத்திரம் நான் குறிப்பிடவில்லை. என்னுடைய நகரமும் உங்கள் நகரத்துக்கு இணையாக பொல்லாங்காயுள்ளது. ஆனால் முழு உலகமும் பொல்லாங்கால் நிறைந்துள்ளது. ஆனால் குப்பை அனைத்தும் மிதந்து மேற்கே வந்துவிட்டது. நாம் அதை அறிவோம். நாகரிகமும் அதனுடன் பயணம் செய்துள்ளது. நாகரிகம் எங்குள்ளதோ, அங்கு பாவம் உள்ளது. அது உண்மை. இங்கு மேலேயும் கீழேயும் பாருங்கள். இது ஒரு பிரசங்கியின் கல்லறைத் தோட்டம். அது உண்மை. லாஸ் ஏஞ்சலிஸைப் பாருங்கள், எல்லாமே, எல்லா கொள்கைகளுமே இங்கு தான் வந்து அடைகின்றன. ஒவ்வொருவரும் ஒரு கோட்பாட்டை, ஒரு உபதேசத்தைப் பெற்றுள்ளனர். அங்கு வார்த்தையைக் கொண்டு செல்ல உங்களால் முடியாது. அது மிகவும் மாசுபட்டுள்ளதே! அது உண்மை. பிசாசுகள், அது சாத்தானின் இருப்பிடமாயிற்றே! ஆனால் அதேசமயத்தில் அவைகளின் மத்தியில், அங்கு சில வித்துக்களும் கூட உள்ளன. நீங்கள் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று வெளிச்சத்தை சிதறச் செய்வதே. அந்த வெளிச்சத்தில் ஏதாவதொரு…அங்கு வித்து இருக்குமானால், அந்த வெளிச்சம் பட்டவுடனே அது உயிர் பெறும். நீங்கள் வெளிச்சத்தை விதைக்கவேண்டும், அவ்வளவுதான். அவரே சாயங்கால வெளிச்சமாயிருக்கிறார், அதை, அவருடைய வார்த்தையை நாமறிவோம்.

1226 இப்பொழுது, நேற்றிரவு நாம் ஆபிரகாமை இங்கு விட்டுவிட்டோம். நான் 22-ம் அதிகாரத்தின் பேரில்—பேரில் துவங்கினேன், ஆனால் அதனூடாக சென்று முடிக்கவில்லை, ஏனெனில் ஆபிரகாம் துவக்கத்தில் எப்படியிருந்தான் என்று ஆதாரப்படுத்திக் காண்பித்தேன். நேற்றிரவு நாம் தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கையை உறுதிப்படுத்தும் இடம் வரைக்கும் வந்து அவனை அங்கு விட்டுச் சென்றுவிட்டோம். ஓ, அது எனக்கு மிகவும் பிரியம். பலியைக் கிழித்து, ஆபிரகாமுடன் ஒரு—ஒரு உடன்படிக்கைபண்ணுதல். அவர் ஆபிரகாமைக் கூப்பிட்டு அவனுடன் உடன்படிக்கையை உறுதிப்படுத்தப்போவதை…நாம் எப்படியாய் பார்த்தோம். அவர் அவனிடம் மூன்று வயதுள்ள மிருகங்கள் மூன்றினைக் கொண்டு வந்து, அவைகளை நடுவே துண்டிக் கும்படி கூறினார். நமக்கு மூன்று என்னும் எண்ணிக்கை கிடைத்தது. அதற்குள்ளாக செல்ல இப்பொழுது நமக்கு நேரமில்லை. என்னே, அந்த ஒரு பொருளின் பேரில் நாளை காலை வரைக்கும் நாம் நிலைத்திருந்தாலும், அதை முழுவதும் விவரித்து முடித்திருக்க மாட்டோம். ஆனால் அதன் முக்கியமான அம்சங்களை நாம் பார்த்தோம், மற்றவைகளை பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த நேரத்தில் உங்களுக்கு வெளிப்படுத்தி தருவாரென்று எதிர்பார்க்கிறேன்.

1327 இப்பொழுது, எப்படி அந்த பரிபூரணம், அந்த பரிபூரண பலி, பரிபூரணம், தேவன் என்ன செய்யப்போகின்றார் என்பதை மானிட ஜீவியத்தில் பரிபூரணப்படுத்தினார். நாம் அறிந்து பெற்றுள்ள…நமக்கு பிதாவாகிய தேவன் இருந்தார், அவர் தாம் சர்வவல்ல்லமையுள்ள யேகோவாவாயிருந்தார். அப்பொழுது அவர் ஒளியின் ஸ்தம்பத்தில் இருந்துகொண்டு, இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார். அதே யேகோவா மாமிசமாகி, அவருடைய ஒரே பேறான குமாரன் என்னும் உருவில், நமது மத்தியில் வாசம்பண்ணினார். அவர் வாசம்பண்ணுவதற்கென தமக்கென்று ஒரு கூடாரத்தை சிருஷ்டித்துக்கொண்டு, தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டார். தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது, பரிபூரணமாக வெளிப்படுதல். அதன் பிறகு (உடன்படிக்கையின் மூலம்) அவருடைய மானிட சரீரம் எடுக்கப்பட்டு, அவருடைய சரீரத்தை, (இந்த உடன்படிக்கையின்) காரணமாக மரிக்கும்படி தேவன் துண்டித்தார், நம்முடைய பாவங்கள் போக்கப்பட வேண்டும் என்பதற்காக அவருடைய இரத்தம் சிந்தப்பட்டது, அந்த சரீரத்தை தேவன் எழுப்பி அவருடைய வலது பாரிசத்தில் அதை வீற்றிருக்கச் செய்து, ஆவியை பெந்தேகொஸ்தே நாளன்று மறுபடியும் அனுப்பினார். கிறிஸ்து இயேசுவுக்குள் வாசம் செய்த அதே ஜீவன் இப்பொழுது உடன்படிக்கையின் ஜனங்களுக்குள் வாசம் செய்து, அதே கிரியைகளை நடப்பிக்க வேண்டும். இயேசு, “என்னை விசுவாசிக்கிற வன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று யோவான் 14:12-ல் கூறினார். இப்பொழுது, அது உண்மையாயிருக்க வேண்டும் அல்லது தவறாயிருக்க வேண்டும். அது உண்மையாகத்தான் இருக்கவேண்டுமே! என்னைப் பொறுத்தவரையில், அதன் ஒவ்வொரு வார்த்தையும் உண் மையே. ஒவ்வொரு வார்த்தையும் பிழையற்றது. தேவன் எவ்வளவு மகிமையாக கிரியை செய்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

1428 அதன் பிறகு பிதாவைச் சேர்ந்தவர்கள்… மத்தேயு, “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து” என்று கூறினதை எழுதியுள்ளான். பார்த்தீர்களா? இப்பொழுது, பிதா…நமக்கு மூன்று கடவுள்கள் உண்டு என்று அர்த்தமல்ல. நமக்கு மூன்று உத்தியோகங்களை வகிக்கும் ஒரே தேவன் இருக்கிறார் (பிதாத்துவம், குமாரத்துவம், பரிசுத்த ஆவி), நேற்றும் இன்றும் என்றும் மாறாத அதே தேவன். அது முற்றிலும் உண்மை. 29 இப்பொழுது அது எவ்வளவு மகிமையாக ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தப்பட்டதென்று கவனியுங்கள். அந்த தேவன் இந்த அக்கினி ஜுவாலையில் எப்படி அந்த துண்டங்களின் நடுவே கடந்து போனார். அந்தவிதமாக…அவர்கள் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும்போது, அதை எப்படி எழுதி, இரண்டாகக் கிழிப்பார்களென்றும், அந்த இரண்டு துண்டுகளும் ஒன்றாக இணையவேண்டுமென்றும் நாம் நேற்றிரவு பார்த்தோம். அந்த ஒப்பந்தம் ஒன்றாக இணைய வேண்டும்.

1530 இப்பொழுது நீங்கள்பாருங்கள், நண்பர்களே, இதைத்தான் நான் கூற முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறேன். நமது பெந்தெகொஸ்தே ஜனங்களிடையேயும் கூட இந்த மானிட ஞானம் என்னும் பிசாசு காணப்பட்டு ஜனங்களை… எனக்கு தேவனுடைய வரங்கள் அனைத்த்திலும் விசுவாசம் உண்டு. எனக்கு கூச்சலிடுதலில் நம்பிக்கையுண்டு, எனக்கு அந்நிய பாஷைகள் பேசுவதில் நம்பிக்கையுண்டு. தேவன் கூறியுள்ள எல்லாவற்றையும் நான் விசு வாசிக்கிறேன். ஆனால் அதேசமயத்தில் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதன் அத்தாட்சியாக இவைகளின் பேரில் நீங்கள் சார்ந்திருக்க முடியாது. பாருங்கள், உங்கள் வாழ்க்கை அதனுடன் ஒத்துப்போக வேண்டும். புரிகிறதா? உங்களுடைய…“உங்களுடைய கனிகளினால் நீங்கள் அறியப்படுகின்றீர்கள்.” பார்த்தீர்களா? இன்றைக்கு இந்தக் காரியங்கள் தான் என்னை கவலைக்கிடமாக்குகின்றது, ஏனெனில் என் சொந்த சபை, பெந்தெகொஸ்தே சபை “தேவபக்தியின் வேஷத்தை தரித்துக்கொண்டு,” சத்தியத்தை விட்டு விலகுகிறதை நான் காண்கிறேன். அவர்களிடம் வார்த்தையின் சத்தியத்தை நாம் கொண்டு வந்தாலும், அவர்கள் புறமுதுகு காண்பித்து சென்றுவிடுகின்றனர். அவர்களிடம், “என்னுடன் வந்து உட்காருங்கள்” என்று கூறினாலும், அவர்கள் செய்வதில்லை. பாருங்கள், ஏதோ தவறுள்ளது என்பதை அது காண்பிக்கின்றது. அதுதான் என்னை கவலையில் ஆழ்த்துகிறது. இப்பொழுது, என் சபைக்கு விரோதமாய் நான் இருக்கிறேன் என்றல்ல. நான்…

1631 நான் கிறிஸ்துவில் அன்பு கூர்ந்தால், அவரைக் குறித்து பெருமையாகப் பேசுவதைக் காட்டிலும் அவருடைய சபையைக் குறித்து பெருமையாய் பேசுவது சிறந்ததாயிருக்கும். ஏனெனில் என்னைக் குறித்து நீங்கள் பெருமையாகப் பேசுவதை காட்டிலும் என் பிள்ளைகளைக் குறித்து நீங்கள் பெருமையாகப் பேசுவதையே நான் விரும்புவேன். ஞாபகங்கொள்ளுங்கள், நான் அடிக்கடி நினைத்திருக்கிறேன், என்னிடம் இயேசுவின் இரத்தம் இரு துளிகள் ஒரு குப்பியில் இருக்குமானால், அதை கீழே சிந்தாதபடிக்கு, எப்படி நான் அதை பிடித்துக்கொள்வேன். அப்பொழுது நான் உண்மையாகவே கவனமாய் நடப்பேன். ஆனால் இன்றிரவு, அவருடைய பார்வையில் அதைக் காட்டிலும் பெரிதான ஒன்று என்னிடம் உள்ளது, அவருடைய இரத்தத்தினால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டதை நான் பெற்றுள்ளேன். பாருங்கள், அவர் உங்களுக்காக தமது இரத்தத்தை சிந்தினார். இதோ நான் இங்கு இன்றிரவு ஒரு போதராக நின்றுகொண்டு, அதைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, இல்லை நீங்கள் செல்ல வேண்டிய நித்திய இடத்தை உங்களுக்கு சுட்டிக் காண்பித்துக்கொண்டிருக்கிறேன். எனவே நான் எந்த கோட்பாட்டையோ அல்லது எந்த கொள்கையையோ குறிப்பிடப்போவதில்லை; அது வார்த்தையாயிருக்கவேண்டும், ஏனென்றால் அது மாத்திரமே நிலைத்திருக்கப்போகிறது. என் விசுவாசம் வார்த்தையின் மேல் கட்டப்பட்டுள்ளது, கிறிஸ்துவே வார்த்தையாயிருக்கிறார். கிறிஸ்து வார்த்தையாயிருந்தால், அப்பொழுது வார்த்தையானது நமது மத்தியில் வெளிப்படுத்தப்படுகிறது. பாருங்கள், அது அப்படித்தான் இருக்கவேண்டுமே!

1732 இப்பொழுது, எனவே, பழைய ஏற்பாட்டின் தேவன், அவருக்கிருந்த அனைத்தையும் தமது குமாரானாகிய இயேசுவுக்குள் ஊற்றினார் என்று நான் விசு வாசிக்கிறேன். புதிய ஏற்பாட்டின் இயேசு தமது அனைத்தையும், தமது சொந்த இரத்தத்தினால் கிரயத்துக்கு கொள்ளப்பட்ட சபைக்குள் ஊற்றினார். பாருங்கள்? “இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம்” காஸ்மாஸ் , அங்கே, அதாவது உலக ஒழுங்கு, “என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள்,” நீங்கள் , சபை, “ஏனெனில் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும், உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன்.” அப்பொழுது அந்த ஜீவன், அந்த ஒப்பந்தம், கல்வாரியில் கிறிஸ்துவிலிருந்து எடுக்கப்பட்ட அந்த ஆவி, ஜனங்களின்மேல், தேவன் வாக்களித்துள்ள ஆபிரகாமின் சந்ததியின்மேல் ஊற்ற்றப்படுகிறது. ஞாபகங்கொள்ளுங்கள், அது அவனுடைய எல்லா சந்ததிகளுக்கும் அல்ல, ஆனால் “அந்த சந்ததிக்கே.”

1833 முன்குறிக்கப்படுதலைக் குறித்த ஒரு உபதேசம் இப்பொழுது நிலவி வருகின்றது, அது அர்த்தமற்ற, அழுகிப்போன ஒன்று. ஆனால் உண்மையான முன்குறிக்கப்படுதல் என்ற ஒன்று உண்மையாகவே உண்டு. தேவன் முன்னறிவுடையவராயிருக்கிறபடியால், அவரால் முன்னறிவினால் முன்குறிக்க முடிந்தது. ஒருவரும் கெட்டுப்போகாமலிருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், ஆனால், தேவன் முடிவற்றவராயிருக்கிறபடியால், யார் அழிந்து போவார்கள் என்றும், யார் அழிந்து போகமாட்டார்கள் என்றும் அறிந்திருந்தார். 34 அதனால்தான், ஈசாக்கிற்கு முன்பே இல்லை—இல்லை…யாக்கோபும் ஏசாவும் பிறப்பதற்கு முன்பே, அவர் ஏசாவை வெறுத்து, யாக்கோபை நேசித்தேன் என்று அவர் கூறினார். ஏசா பின்வாங்குபவன் என்பதை அவருடைய முன்னறிவு அவரை அறியச் செய்தது, யாக்கோபு சேஷஷ்ட புத்திர பாகத்தை மதிக்கிறவன் என்றும் அவருடைய முன்னறிவு அவரை அறியச் செய்தது; யாக்கோபு சேஷஷ்டபுத்திர பாகத்தை எப்படிப் பெற்றுக்கொ ண்டாலும் கவலையில்லை, அது அவனுக்கு வேண்டுமென்றும் விரும்பினான். இப்பொழுது, இரு பையன்களும், இரட்டைப் பிறவிகள், ஒரே பரிசுத்த மான தாய், தகப்பனுக்குப் பிறந்தவர்கள், ஆனால் ஒருவன் துரோகியாயிருந்தான், மற்றவன் ஒரு—ஒரு விசுவாசியாயிருந்தான். இப்பொழுது தேவன், தமது முன்னறிவினால், இதை அறிந்திருந்தார்.

1935 இப்பொழுது, தேவன், தமது முன்னறிவினால், அவர்—அவர் தமது பணியை அவ்வாறு செய்கிறதில்லை… உங்கள் பணியை நீங்கள் அந்த விதமாக பொறுப்பற்ற முறையில் செய்யமாட்டீர்கள். தேவன் முன்னறிவினால், யார் இரட்சிக்கப்படுவார்களென்று அறிந் திருந்தார், எனவே அவர் யார் முன்னறிவினால் இரட்சிக்கப்படுவார்கள் என்று முன்னறிந்தவர்களை பிடிக்கவே இயேசுவை அனுப்பினார். எபேசியர், முதலாம் அதிகாரத்தில், நீங்கள் அதைப் பார்க்கலாம். புரிகிறதா? இப்பொழுது, அங்கே. 36 ஆகையால் அவர் தமது சுவிஷேத்தை அனுப்பி அதை விதைக்கிறார், அவர் உயிர்பெறச் செய்ய அவர் தமது ஆவியை அனுப்புகிறார். இப்பொழுது, இரண்டுமே ஒரே வயலில் விளையும், எபிரேயர் 6-ம் அதிகாரம், “அந்த மழையானது அடிக்கடி பெய்கிறது” என்பதை நமக்குப் போதிக்கிறது, இயேசுவும், “பூமியின் மேல் பெய்கிறதைக்” கூறினார். “அது நிலத்திலுள்ளவைகளை விளையச் செய்கிறது; ஆனால் முள்செடிகளும் முள் பூண்டுகளும் தகாததாயும் புறக்கணிக்கப்படுகிற தற்கேற்றதாயுமிருக்கின்றன, சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு” என்று அங்குள்ளதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதைக் கண்டீர்களா? இப்பொழுது நினைவிருக்கட்டும்.

2037 ஒரு கோதுமை வயலை நாம் எடுத்துக்கொள்வோம். இங்குள்ள ஜங்களாகிய நீங்கள் கோதுமை பயிரிடுகின்றீர்கள். இங்கு ஒரு—ஒரு வறட்சி உண்டாகிறது. இங்கு நீங்கள் படரும் கொடிகளை இல்லை களைகளை பெற்றுள்ளீர்கள், நீங்கள் அறிந்த சில களைகள் வயலில் விளைந்துள்ளன; படரும் கொடிகள் வயலில், வட்ட வடிவிலுள்ள பால்வீச்சுகள்…வயலில், நெருஞ்சில்கள் வயலில் விளைந்துள்ளன. வயலில் கோதுமையும் விளைந்துள்ளது. அவைகள் இரண்டுமே தாகமாயுள்ளன. மழை களைகளுக்காகப் பெய்யவில்லை, ஆனால் கோதுமைக்காகப் பெய்கிறது, ஆனால் மழை பெய்யும்போது, கோதுமை எவ்வளவாக களிகூருமோ, அவ்வளவாக அந்த களையும் களிகூரும். 38 ஆனால் அவர்களுடைய கனிகளினால் நீங்கள் அறிவீர்கள். அதே ஆவி ஒரு மாய்மாலக்காரனின் மேல் விழுகின்றது, அவன் மற்றவர்களைப் போலவே கூச்சலிட்டு, உணர்ச்சி வசப்படுகிறான், ஆனால் அவனுடைய வாழ்க்கை அவன் யாரென்பதை நிரூபிக்கிறது. பாருங்கள்? நாம் உணர்ச்சியின் மேல் அதிகமாக சார்ந்துகொண்டிருக்கிறோம். இன்று நிலமானது எல்லா வகையான உணர்ச்சிவசப்படுதல்களினாலும், வேத ஆதாரமற்ற உணர்ச்சிவசப்படுதலினாலும் மற்றவைகளினாலும் நிறைந்துள்ளன. நிச்சயமாக. ஆனால் நாமோ வார்த் தைக்கு, வார்த்தையின் சத்தியத்துக்கு திரும்பி வர வேண்டும். வார்த்தை, அது என்ன கூறியுள்ளதோ அதற்கே!

2139 இப்பொழுது, தேவன் ஆபிரகாமிடம், அவன் மூலமாய், மூன்றாம் உடன்படிக்கையை, ஒரே உடன்படிக்கையைக் கூறினார். இயேசு மாத்திரேமே தேவன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையின் ஒரு உறுதிப்படுத்தலாயிருந்தார், ராஜரீக சந்ததி, ஆவியின் சந்ந்ததி. 40 என்னுடைய விலையேறப்பெற்ற கத்தோலிக்க நண்பர்களாகிய உங்களுக்கு இதைக் கூறுகிறேன், நீங்கள், “தேவனுடைய தாயாகிய மரியாளே வாழ்க” என்று கூறும்போது, நீங்கள் வெட்கமடையவில்லையா? மரியாள் எப்படி தேவனுடைய ஒரு தாயாக இருக்கமுடியும்? அவள் இருக்க முடியாது. நீங்கள் கூறலாம், பாருங்கள்… 41 நான் அன்றொரு நாள் ஒருவருடன் பேசிக்கொண்டிருந் தேன், அவர்கள் கருத்து வேற்றுமை கொண்டவர்கள். இயேசு மரியாளின் வித்தாயிருந்தார் என்று—என்று அவர்கள் கூறினர். அவர் மரியாளின் வித்தாயிருந்தாரானால்; அந்த குழாயின் வழியாய் வித்து வருவதற்கு முன்பு, அதை தோன்றச் செய்ய உணர்ச்சிவசப்படுதல் உண்டாயிருக்கவேண்டும். அப்படியானால் நீங்கள் யேகோவாவை…நீங்கள் அவரை என்னவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குப் புரிகிறதா? 42 தேவன், சிருஷ்டிகர், தேவன் முட்டை, இரத்த அணு இவ் விரண்டையும் சிருஷஷ்டித்து, ஒரு கூடாரத்தை தோன்றச் செய்தார். அதில் மனிதனுக்கு எவ்வித தொடர்பும் கிடையாதே! அது தேவனாய் மாத்திரமேயிருந்தது! அது உண்மை. 43 மரியாள் ஒரு நல்ல ஸ்திரீ யாயிருந்தாள், நிச்சயமாக. இன்றிரவு அநேக நல்லவர்கள் இங்கு அமர்ந்துள்ளனர். தேவன் ஏதாவதொன்றை உபயோகித்து முடித்துவிட்டால், அது காட்சியை விட்டு விலகிவிடுகின்றது. அவள் ஒரு மத்தியஸ்தரல்ல. அவள் தேவனுடைய தாய் அல்ல. அவள் நல்லவள், பரிசுத்தமாக்கப்பட்ட ஸ்திரீயாய் மகிமையில் உள்ளாள், ஏனெனில் அவள் தேவனுடைய நோக்கத்திற்கு சேவைபுரிந்தாள். இங்குள்ள ஒவ்வொரு ஸ்திரீக்கும் தேவனை சேவிக்க அதுபோன்ற ஒரு தருணம் உள்ளது, அதே விதமாக இல்லாமலிருக்கலாம். பாருங்கள்? தேவன் உங்களை உபயோகிப்பார்.

2244 அவர் அவளை ஒரு இன்குபேட்டர் கருவியாக மாத்திரம் உபயோகித்தார், ஆனால் அந்த பிள்ளை தேவனுக்கே சொந்தமானது. ஆம், அவர் முட்டை, செந்நிற இரத்த அணுக்கள் இவ்விரண்டையும் சிருஷ்டித்தார். செந்நிற இரத்த அணுக்கள், நிச்சயமாகவே, ஆண் இனத்திலிருந்து மாத்திரமே வர முடியும்; அவர் அதனுடைய சிருஷ்டிகராயிருந்தார். மரியாள் எவ்வித உணர்ச்சி யுமின்றி இந்த குழந்தையை பிறப்பித்தாள், பரிசுத்த ஆவி அவளை நிழலிட்டு அவளுடைய கர்ப்பத்தில் இந்த இரத்த அணுவையும் முட்டையையும் சிருஷஷ்டித்து, அது கிறிஸ்து இயேசு எனனும் மனிதனை தோன்றச் செய்ததேயன்றி வேறெல்ல. 45 தேவன் எழுதிக்கொண்டிருந்த உடன்படிக்கை அதுவேயாகும், அதாவது தேவன் நமது மத்தியில் மனிதனாக்கப்பட்டபோது, அப் பொழுது அவர் துண்டிக்கப்பட்டார். பாருங்கள், அப்பொழுது மூன்று வயதுள்ள, அவைகள் மூன்று துண்டிக்கப்பட்டன. தேவன் அதனுடைய ஒரு பாகத்தை தம்முடன் வீட்டுக்கு கொண்டு சென்று, மற்ற பாகத்தை இங்கு கீழ் அனுப்பினார். இப்பொழுது சரீரம் அதை மீண்டும் சந்திக்கும்போது, அந்த சரீரத்தை எந்த ஜீவன் ஆட்கொண்டதோ, அதே ஜீவன் இந்த சரீரத்தை ஆட்கொள்ளவேண்டும். அவர் வார்த்தையாயிருந்தார். அவர் வார்த்தையாயிருக்கிறாரே! பாருங்கள்? அன்று வார்த்தை செய்த அதே கிரியைகளை இன்றும் செய்து வருகிறது. அவர் வார்த்தையாயிருக்கிறார், நித்திய வார்த்தையாயிருக்கிறார். தேவனுடைய வார்த்தை நித்தியமாயுள்ளது. சரி.

2346 இப்பொழுது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? ஓரு வழியை உண்டாக்கிக்கொண்டிருந்தார் என்பதையே காண்பிக்கிறது, அவருடைய மாமிசப்பிரகாரமான சந்ததியாகிய இஸ்ரவேலர் அவரை புறக்கணிப்பார்கள் என்று அறிந்திருந்தார்; ஆனால் ராஜரீக சந்ததியோ, அது சாராளுடன் இனச்சேர்க்கையின் மூலம் தோன்றின சந்ததியல்ல. ஆனால் ஆபிரகாம் கொண்டிருந்த விசுவாசம் கிறிஸ்துவை தோன்றச் செய்தது. அதுவே சகல ஜாதிகளின் ராஜரீக சந்ததி, சகல ஜாதிகளிலிருந்தும் மணவாட்டி வந்து ஒன்று சேருவாள். ஆபிரகாம் சகல ஜாதிகளுக்கும் ஒரு தகப்பன், அவன் தன் மனைவியாகிய சாராளுடன் வாழ்ந்து…மகனைத் தோன்றச் செய்ததினால் அல்ல, ஆனால் அவன் வார்த்தையை விசுவாசித்த காரணத்தால்தான். ஆமென். அதுதான் இது.

2447 இதற்குப் பிறகு, இந்த மகத்தான அனுபவத்துக்குப் பிறகு, இப்பொழுது நாம் கண்டறிகிறோம். இப்பொழுது நாம் 17-ம் அதிகாரத்துக்கு வந்துகொண்டிருக்கிறோம். கூடுமானால், நாம் 22-ம் அதிகாரத்துக்கும் செல்ல முயற்ச்சிக்கப்போகிறோம். 17-ம் அதிகாரம். ஆபிரகாமுடன் செய்து கொண்டிருக்கும் பயணம் உங்களுக்கு பிரியமா? அதை கூர்ந்து கவனிக்க எனக்கு பிரியம். ஏன் தெரியுமா? அவன் செய்த ஒவ்வொன்றும் சபைக்கு பரிபூரண முன்னடையாளமாயிருந்தது. அதை நீங்கள் நம்புகிறீர்களா? கவனியுங்கள், வேதவாக்கியங்கள் அனைத்துமே அதற்கு முன்னடையாளமாயுள்ளன. 48 யோவேலைப் பாருங்கள், அவன், “கடைசி நாட்களில் தேவன் தமது ஆவியை ஊற்றுவார்” என்றான். எப்படி ஒரு பச்சைப் புழு தோன்றி அவருடைய சபையை தின்றுபோடும் என்றானே! “பச்சைப் புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதை முசுக்கட்டைப் பூச்சு தின்றது.” அது அதே பூச்சி, நான்கு வெவ்வேறு கட்டங்களில் வளரும் ஒரே புழுதான். ஒவ்வொன்றும் ஒரு பாகத்தை தின்றுவிட்டது. இதோ பச்சைப் புழு வந்து பட்டையை தின்றுபோட்டது, மற்றது வந்து கனியைத் தின்று போட்டது, பின்பு மற்றவை தோன்றி மரத்திலுள்ள சத்தை உறிஞ்சிவிட்டன. அது எப்பொழுதென்றால்…

2549 கிறிஸ்துவே, ஏதேன் தோட்டத்திலிருந்த அந்த மரமாயிருந்தாரே! ஏதேன் தோட்டத்தில் இரண்டு மரங்கள் இருந்தன. இவ்விரு மரங்களும் ஒரு பிறப்பின் நோக்கத்துக்காக அங்கு வைக்கப்பட்டிருந்தன. அப்பொழுது…ஏவாள், அவள் தொடப்பட்டால் அவள் மரணத்தின் விருட்சமாயிருந்தாள், கிறிஸ்து ஜீவ விருட்சமாயிருந்தார். இப்பொழுது ஸ்திரீயின் மூலம் மரணம் தோன்றினது; இந்த மனிதனின் மூலம் ஜீவன் உண்டாகிறது. 50 இப்பொழுது அவர் அங்கு நின்று யூதர்களுடன் பேசினபோது, அவர், “நான்…உங்களுடைய…” என்றார். 51 அவர்கள், “எங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவை நாற்பது ஆண்டுகளாக புசித்தார்கள்” என்றனர். 52 அவர், “ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்களே! ஆனால் நானே வானத்திலிருந்து தேவனினிடமிருந்து இறங்கின ஜீவ அப்பம், ஜீவ விருட்சம், இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் மரியாமல் இருப்பான்” என்றார்.

2653 அந்த விருட்சத்தை யாரும் தொடாதபடிக்கு, தேவன் சேராபீன்களை அங்கு வைத்து, அதைக் காவல் காத்தார். இப்பொழுதோ அவர் சேராபீன்களை வெளியே நிறுத்தி, அவர்களை விருட்சத்தினிடம் ஓட்டிக்கொண்டிருக்கிறார். அவர்களுடைய நாட்களில், அவர்கள் தரிசனம் கண்டனர், பாவநிவிர்த்தி செலுத்தப்படாமலே அவர்கள் ஜீவ விருட்சத்தை அடைய முயன்றனர். ஆனால் இப்பொழுது பாவநிவிர்த்தி செலுத்தப்பட்டுவிட்டப் பிறகு, பிசாசு அவர்களுடைய கண்களைக் குருடாக்கி, அவர்கள் ஜீவ விருட்சத்தை அடையாதபடிக்கு மறுபக்கம் விரட்டியடிக்கிறான். கவனியுங்கள். 54 கிறிஸ்து பூமிக்கு வந்தபோது, அவர் தேவனுடைய பரிபூரண மரமாயிருந்தார். தாவீது அவரைக் கண்டு, “அவர் நீர்கால், நீர்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம்” என்று முதலாம் சங்கீதத்தில் கூறினான். அநேக ஆறுகள், ஒரு தண்ணீர்; அநேக வரங்கள், ஒரே ஆவி. “அவருடைய இலைகள் உதிர்வதில்லை.” 55 அவர் பூமிக்கு வந்தபோது, என்ன நடந்தது? ரோம ஆதிக்கம் அந்த மரத்தை வெட்டி, அவரை மனிதனால் உண்டாக்கப்பட்ட மரத்தில் தூக்கிப்போட்டது. பிறகு தேவன் அந்த மரத்தை எழுப்பி, வலது பாரிசத்தில் உட்காரும்படி செய்து, அவருக்காக ஒரு மணவாட்டியை உண்டாக்க்க, ஆவியைத் திரும்ப அனுப்பினார், ஆதாம் அப்படிப்பட்ட ஒருவளை ஏதேன் தோட்டத்தில் பெற்றிருக்கவேண்டும். அந்த மரம் துவக்கத்தில் பெந்தெகொஸ்தே மரமாயிருந்தது.

2756 போப்பாண்டவர், “சபைகளே எல்லாரும், தாய் சபைக்கு திரும்ப வாருங்கள், துவக்கத்துக்கு வாருங்கள். ரோமாபுரிக்கு திரும்ப வாருங்களே!” என்று கூறுவதை நாம் கேட்கிறோம். 57 யாராகிலும் ஒரு சரித்திரக்காரர், ஒரு போதகர், அல்லது வேறெவராகிலும் எழுந்து நின்று, என் முகத்திற்கு நேராக நோக்கி, சபை ரோமபுரியில் துவங்கினது என்று எனக்குக் காண்பிக்கட்டும். சபை பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் துவங்கினதே! அங்கேதான். முன்னூறு ஆண்டுகளுக்கு சற்று கழித்து ஸ்தாபனம் ரோமாபுரியிலும் துவங்கினது. ஆனால் சபையோ பெந்தெகொஸ்தே நாளில் துவங்கினது; தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவியைக் கொண்டு கிறிஸ்துவுக்கு மணவாட்டி மரம் ஒன்றை எழுப்பினார். என்ன நடந்தது? அது வளரத் தொடங்கினபோது ரோம பூச்சி அதிலேறி அதை அரித்துபோட ஆரம்பித்தது. பச்சைப்புழு விட்டதை முசுக்கட்டை பூச்சி தின்று, முடிவில் அடிமரம் மாத்திரம் விடப்பட்டது. 58 ஆனால் தேவன், “நான் திரும்ப அளிப்பேன்” என்றுரைத்தார். அந்த மரம் திரும்ப வளரப்போகிறது, ஏனெனில் மணவாளன் மரம் மணவாட்டியைத் தேடி வரப்போகின்றது. லூத்தர் தோன்றினார், அவர் என்ன செய்தார்? அவர் நீதிமானாக் கப்படுதலை பின்பற்றினார்.

2859 அதே விதமாகத்தான் சபை தோன்றினது, யோவான் ஸ்நானன் நீதிமானாக்கப்படுதலை பிரசங்கித்தான். கிறிஸ்து வந்து பரிசுத்தமாக்கப்படுதலை பிரசங்கித்தார். எபிரெயர்…நான் பரிசுத்த யோவான் 17:17-ஐ குறிப்பிடுகிறேன், “பிதாவே, உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம்.” அவர் வார்த்தையாயிருந்தார். அது உண்மை. அவரே பலியாயிருந்தார். பிறகு பெந்தெகொஸ்தே நாளன்று, பரிசுத்த ஆவியாக வந்தார். நீதிமானாக்கப்படுதல்; பரிசுத்தமாக்கப்படுதல்; அந்த மரம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றபோது, அது ஒரு முழு மணவாட்டி மரமாயிருந்ததே! 60 ரோமர்கள் அதை தின்று போட்டனர். அது எவ்விதமாக அரிக்கப்பட்டதோ, அதே விதமாக அது வளருமே! அது லூத்தரின் மூலம் மேலே வளரத் தொடங்கினது. என்ன நடந்தது? லூத்தரின் மரணத்துக்குப் பின்பு, அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். கணவர் என்ன செய்தார்? பழைய செத்துப்போன கிளைகள் அனைத்தையும் மரத்திலிருந்து வெட்டியெடுத்து சுத்தப்படுத்தினார். 61 அந்த மரம் வளர, மரத்தின் மையப்பகுதியும் தொடர்ந்து வளர்ந்தது. அது ஒரு முன்குறிக்கப்பட்ட மரமாயிற்றே! அந்த வித்து அங்கு கிடந்திருந்தது, அது வளர்ந்து வரவேண்டுமே! அது மறுபடியும் வளர்ந்தது, வெஸ்லி தொடங்கினார். அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலின் கீழ் ஒரு மகத்தான எழுப்புதலை பெற்றிருந்தனர். என்ன நடந்தது? அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டபோது, அவர் மறுபடியும் கிளைகளை நறுக்கி சுத்தம் செய்தார். ஸ்தாபனம் எக்காலத்தும் வளர்ந்ததில்லை. விழுந்துபோன ஒரு ஸ்தாபனம் மறுபடியும் தழைத்தோங்கினதில்லை.

2962 பின்பு பெந்தெகொஸ்தேயினர் வரங்கள் புதுப்பிக்கப்படுதலுடன் தோன்றினர். அது என்ன செய்தது? ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டதே! தேவன் என்ன செய்தார்? கிளைகளை நறுக்கி சுத்தம் செய்தாரே! 63 ஆனால் அவர் என்ன கூறினார்? “நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.” அந்த கதம்பக்கூளத்திலிருந்து, அவர் இரத்தத்தால் கழுவப்பட்டு, வேதத்தால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டு, வார்த்தையில் திடமாய் நிற்கும் ஒரு சபையை, ஒரு மணவாட்டியை வெளியேக் கொண்டு வருவார்! சயங்கால வெளிச்சம் வந்துகொண்டிருக்கிறது. கனிகள் எங்கு பழுக்கின்றன? மரத்தின் உச்சியில். இதோ நான் மறுபடியும் அங்கே போகிறேன்! 64 ஆபிரகாமிடத்திற்கு திரும்பி வருகிறோம், நாம் திரும்ப ஆபிரகாமுக்கு வருவோம். இதோ அவர் வருகிறார், சாயங்கால வேளையின் ராஜரீக சந்ததி வருகிறார். ஜாதிகள்… 17-ம் அதிகாரத்துக்குப் பிறகு இப்பொழுது கவனியுங்கள், நாம் இங்கே 17-ம் அதிகாரத்தில், தேவன் ஆபிரகாமுக்கு சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் தரிசனமானார் என்று காண்கிறோம்.

3065 ஆபிரகாமுக்கு அப்பொழுது தொண்ணூற்றொன்பது வயது, அத்தனை காலமும் அவன் தடுமாறாமல், தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து; இல்லாதவைகளை இருக்கிறவைகள்போல் அழைத்தான், ஏனெனில் தேவன் அவ்வாறு கூறியிருந்தார், குழந்தை பிறக்குமென்று அவன் இன்னமும் உறுதியாக விசுவாசம் கொண்டவனாய், வாக்குத்தத்தத்தை இறுகப் பற்றிக்கொண்டிருந்தான். என்னே ஒரு மனிதன்! என்னே ஒரு சகோதரன்! “ஆபிரகாம் நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும்…” சாராளின் கர்ப்பம் செத்துப்போயிருந்தது. அவன் மலட்டுத்தன்மை கொண்ட வனாயிருந்தான். அவனுடைய சரீரம் செத்திருந்தது. வேதம் அவ்வாறு இருந்தாக கூறியுள்ளது, அவனுடைய சரீரம் செத்து போனதற்கு சமமாயிருந்தது. சாராளின் கர்ப்பம் செத்துபோயிருந்தது. ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோய் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழிந்துபோயிருந்தும், அவள் குழந்தைப் பெறுவாள் என்று ஆபிரகாம் இன்னமும் விசுவாசித்தான், ஏனெனில் தேவன் அவ்வாறு வாக்களித்திருந்தார். அங்குதான் காரியமே. தேவன் அவ்வண்ணமாய் வாக்களித்ததனால் வார்த்தையை இறுகப் பற்றிக்கொண்டிருந்தானே! அதை கோட்பாடுகள் எவ்வளவுதான் மூடினாலும் கவலையில்லை, வார்த்தை இன்னமும் அங்கு புதைந்திருந்ததே! அது உயிர் பெற வேண்டியதாயிருந்தது. அந்த வார்த்தை ஆபிரகாமினுடைய இருதயத்தில் புதைந்திருந்தது! 66 எத்தனை பேர், “ இதன் நாட்கள் முடிவு பெற்றுவிட்டன, அது அங்கேயே முடிவு பெற்றுவிட்டது” என்று கூறினாலும் கவலையில்லை. வார்த்தை அங்கு புதைந்திருக்கும் வரைக்கும் அது தோற்றுவிக்கும், ஏனெனில் அது ஒரு உயிர்ப்பிக்கப்பட்ட வார்த்தை. தேவன் வார்த்தையாயிருக்கிறார், தேவனுடைய ஜீவன் வார்த்தையில் உள்ளது. இப்பொழுது கவனியுங்கள், அந்த வார்த்தை தேவனுடைய ஜீவனில் விழும்போது, ஏதோ ஒன்று சம்பவிக்கிறது, அது நிறைவேறுகிறது. இப்பொழுது கவனியுங்கள்.

3167 அவர் ஆபிரகாமுக்கு சர்வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் தரிசனமானார். இப்பொழுது, தேவனுக்கு கூட்டுப் பொருளுடைய ஏழு மீட்பின் நாமங்கள் உள்ளன. இங்கு அவர் அவனுக்கு சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் ரூபத்தில் தரிசனமானார், அப்படியென்றால் “எல் ஷடாய்” என்று அர்த்தமாகிறது. எபிரெய மொழியில்…“ஷடாய்.” எல் என்றால் “பலசாலி” என்று பொருள்படுகிறது. ஷாட் என்றால் “மார்பகம்” என்று பொருள், ஸ்திரீக்குள்ள மார்பகம் போல். இப்பொழுது “ஷாட்” என்னும் சொல்லிற்குப் பதிலாக, அது ஒருமை; “ஷடாய்,” என்னும் சொல் பன்மை. இப்பொழுது தேவனுடைய வார்த்தையை தன் இருதயத்தில் கொண்டிருந்த நூறு வயது கிழவனுக்கு, இது என்னே ஒரு இனிய ஆறுதலாயிருந்திருக்கும், இதோ தேவனுடைய சத்தம் அவனுக்குண்டாகி, “நான் எல்ஷடாய். நான் மார்பகங்கொண்ட-தேவன்” என்றுரைத்தது. 68 ஓ, நமக்கு என்னே ஆறுதலாயுள்ளதே! இப்பொழுது, இல்லை, ஞாபகஙகொள்ளுங்கள், வெறும் “மார்பகம்” அல்ல, ஆனால் “மார்பகங்கொண்டவர்”! “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயம்பட்டார்; அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்.”

3269 இப்பொழுது, ஒரு தாய் தன்னுடைய குழந்தை வியாதிப்பட்டு நச்சரித்தழும்போது, அவள் என்ன செய்கிறாள்? அவள் அந்த சிறுவனைக் கையிலெடுத்துக்கொள்கிறாள். அவள் அதை தன் மார்பகத்தினிடம் கொண்டு வருகிறாள், அவள்…அவனும் தாயின் பெலனை மார் பகத்தின் மூலம் தன் சரீரத்தில் உட்கொள்கிறான். அவன் திருப்தியடைவது மாத்திரமல்ல அல்லது அவன்…அவன் அமைதியாகிவிடுகிறான். அவன் தன்னுடைய உச்சக் குரலில் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறான், அவன் முழுவதும் அமைதி குலைந்தவனாயிருக்கிறான்; ஆனால் தாய் அவனைக் கையிலெடுத்து, அவள்…அவனை தன் மார்பகத்திற்கு கொண்டு சென்று, அவனுக்காக மௌனமாக இசைப்பாடத் துவங்கும்போது, அவனை இப்படியும் அப்படியும் ஆட்டும்போது, அவன் தன் தாயை உணருகிறான், அவனுடைய தலை அவளுடைய மார்பகத்தில் உள்ளது, அவன் பாலுண்ணத் தொடங்கி, தன் தாயிலிருந்து பெலனை தன் சரீரத்துக்குள் இழுத்துக்கொள்கிறான். அவன் இப்படியாக தன் வலிமையை மீண்டும் பெற்றுப் புத்துணர்ச்சி அடைகிறான்; அவன் திருப்தியுமடைகிறான். அவன் நாளுக்கு நாள் வலிமையடைகிறான்.

3370 ஆபிரகாமின் சந்ததிக்கு இது என்னே ஒரு அனுபவமாயிற்றே! அவர் இன்னும் சர்வவல்லமையுள்ள தேவனாக, எல் ஷடாயாக இருக்கிறாரே! அவர் வேதத்தில் கூறியுள்ள எந்த ஒரு வாக்குத்தத்ததையும் நாம் பற்றிக்கொள்ள முடியும். அவருடைய சந்ததியே, அவருடைய பிள்ளைகளே, நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்னும் தேவனுடைய வார்த்தை உரைத்துள்ள வாக்குத்தத்தத்தின் மார்பகத்தை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். அது திருப்தியளிக்கிறதே! நாம் நம்முடைய பெலத்தை பெலசாலியிடமிருந்து, எல் என்னும் பெலசாலியிடமிருந்து, நித்தியமானவரிடத்திலிருந்து எப்பொழுதும் கிரகித்து கொண்டேயிருக்கிறோம், அவருடைய வாக்குத்தத்தத்தின் மூலம், அவருடைய ஜீவனை அவரிலிருந்து கிரகித்துக் கொண்டிருக்கிறோம். 71 எல் ஷடாயின் மார்பகத்தில் சாய்ந்துகொண்டு, கிறிஸ்துவின் வல்லமையை அவருடைய வாக்குத்தத்தத்தின் மூலம், நமக்குள் கிரகித்துக்கொண்டிருக்கிறோம் என்று விசுவாசித்து அறிந்துள்ள ஒரு நபருக்கு அது என்னே ஒரு உணர்வை அளிக்கிறதாயுள்ளதே! 72 எல் ஷடாய் ஆபிரகாமை தம் மார்பகத்தில் இருபதைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிடத்தினபோது; அப்பொழுது அவன் எழுபத்தைந்து வயதுடைய வயோதிகன், அவனுடைய மனைவிக்கு அறுபத்தைந்து வயது; அன்று முதல் அவன் அவருடைய மார்பகத்தை விடவேயில்லை. அவன் ஒரு அந்நிய தேசத்தில், தேவனை அறியாத அந்நிய ஜனங்களிடையே நடந்து சென்றான். ஆனால் அவன் எப்பொழுதும் சாட்சி கொடுத்து, விசுவாசத்தில் வல்லவனாகி, தேவனை மகிமைப்படுத்தினான், ஏனெனில் அவன் அந்த வாக்குத்தத்தத்திலிருந்து கிரகித்துக்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்திருந்தான்.

3473 அந்தகாரமும், மூடநம்பிக்கையும், உணர்ச்சியும், அறிவும் நிறைந்துள்ள இந்த வேளையில், இது சபைக்கு இன்றிரவு என்னே ஒரு நம்பிக்கையாய் விளங்குகிறது. பரிசுத்த ஆவியானவர், “கடைசி நாட்களில் மானிட அறிவு கொண்ட ஒரு சபை தோன்றும். ஆவியானவர் வெளிப்படையாய் சொல்லுகிறபடி,” என்று கூறியுள்ளார். 1 தீமோத்தேயு 3-ல், “பிற்காலங்களிலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்” என்றும், நிச்சயமாக, “தேவபக்தியின் வேஷத்தை தரித்துக்கொண்டு.” அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? “துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்களாயிருப்பார்கள்” என்று உரைத்துள்ளது. டாக்டர் பிஎச்.டி., எல் எல்.டி., க்யூ எஸ் டி, போன்ற இந்த எல்லா பட்டங்களுமே. “ஏன், டாக்டர் இன்னார்-இன்னார் , ஒரு நேரத்தில் இன்னார்-இன்னார் எங்கள் போதகர்.” 74 அவரைக் கொட்டைக்கும் காப்பிக்கொட்டைக்கும் வித்தியாசம் தெரியாத பேதமை கொண்ட என் குடும்பத்திலுள்ள ஒருவன் அல்லது என் பிள்ளை கிறிஸ்துவை அறிந்திருப்பதை நான் நலமென்று கருதுவேனே! அது உண்மை. அவனை எங்காவது ஒரு அடிமரத்திடம் கொண்டு சென்று அவனை முழங்கால்படியிடச் செய்து, பரிசுத்த ஆவி அவனுக்குள் வருமளவும் அவனோடு சேர்ந்து ஜெபிப்பேன். அப்படிப்பட்ட ஒருவனை நான் கொண்டிருப்பேனேயின்றி, ஒரு டாக்டர் பட்டத்தின் மூலம் அவனுக்குள் மனோத்தத்துவம் அனைத்தும் ஊற்றுவதை நான் விரும்பமாட்டேன். அவனுக்கு தேவனுடைய வார்த்தையை நான் எடுத்துக் கூறுவேனே! ஆம்.

3575 “துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள், இணங்காதவர்கள், அவதூறு செய்கிறவர்கள், இச்சையைடக்கமில்லாதவர்கள், நல்லேரைப் பகைகிறவர்கள்.” 76 ஓ, “அது கம்யூனிஸ்டுகள்” என்று நீங்கள் கூறலாம். இல்லை, இல்லை! அது கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள். 77 “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்க ளாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.” அது உண்மை. அதுதான் அது. அந்த நாளை நாம் காண்கிறோம்.

3678 விசுவாசி ஒருவன் தன்னை எல்லா அவிசுவாசத்தினின்றும், தேவபக்தியற்ற அவர்களுடைய எல்லா கோட்பாடுகளின்றும், தேவபக்தியற்ற அவர்களுடைய எல்லா உபதேசங்களின்றும் தன்னைப் பிரித்துக்கொண்டு, கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து, வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அதை இறுகப் பற்றிக்கொண்டு அது நிறைவேறுவதை காண்பதென்பது அவனுக்கு என்னே ஒரு ஆறுதலை அளிக்கிறது. நீங்கள் எவ்வளவு காலம் காத்திருக்க நேர்ந்தாலும் கவலைப்படாமல், அங்கேயே நிலைத்திருங்கள்! தேவன் அதை வாக்களித்துள்ளார். அவர் உங்களை அதற்கு வழிநடத் தினார், அதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்! அங்கேயே நிலைத்திருங்கள். அதிலிருந்து பின்வாங்கிப் போகாதீர்கள். அதிலேயே நிலைத்திருங்கள். அதைக் குறித்து நீங்கள் நிச்சயமுடையவர்களாயிருந்தால், அங்கே நிலைத்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் தள்ளாடிக்கொண்டிருந்தால், ஒரு சிறு காரியத்திலும் பின்வாங்கிப் போவீர்கள். ஒரு குரங்கு பிரகாசமான பொருட்களை பாய்ந்து பிடித் துக்கொள்கிறது, ஆனால் கரடியோ தன் பிடியை இறுகப் பிடித்திருக்கிறது. எனவே, நீங்கள் நிலைத்திருங்கள்! ஆம், பிடித்துக்கொள்ளுங்கள், நன்றாக இறுகப் பிடித்துக்கொள்ளுங்கள்!

3779 எல் ஷடாய்! அவர், “ஆபிரகாமே, நான் எல்ஷடாய். நான் பெலசாலி. நீயோ வயோதிகன். உனக்கு இப்பொழுது நூறு வயது, உன் பெலன் அனைத்தும் போய்விட்டது. ஆனால் நானே உன் பெலன்! உன் நம்பிக்கை அனைத்தும் போய்விட்டது; ஆனால் நானே உன் நம்பிக்கை!” என்றார். 80 ஓ, இப்பொழுது இன்றிரவு புற்றுநோய் போன்ற வியாதியால் அவதியுறுபவர்களே, உங்கள் பெலன் எங்கிருந்து வருகிறதென்று உங்களால் காணமுடியவில்லையா? அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் கத்தியிலிருந்தல்ல, ஆனால் தேவனுடைய வார்த்தையிலிருந்தே! “நானே உன் பங்கு! நானே உன் பெலன்! உன் பெலனை என்னிடமிருந்து இழுத்துக்கொள்!” 81 இப்பொழுது அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரை நான் அலட்சியம் செய்வதில்லை; அவருக்கு அளிக்கப்பட்டப் பங்கை அவர் செய்கிறார். ஆனால் தேவனே சுகமளிப்பவர். எந்த அறுவை சிகிச்சை மருத்துவரும், எந்த மருத்துவரும், எந்த மருந்தும் சுகமளிப்பதில்லை. இல்லை, ஐயா, சுகப்படுத்தக்கூடிய ஒரு மருந்தையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. இப்பொழுது, எந்த ஒரு மருத்துவரும் அதை உங்களிடம் கூறுவார். அவர்கள் அதற்கு உதவி செய்யக் கூடிய பொருட்களை வைத்துள்ளனர். ஆனால் தேவனே சுகமளிப்பவர். அவர்கள் உங்கள் கையில் கத்தியால் ஆழமாக வெட்டலாம், ஆனால் தேவனே அதை சுகப்படுத்த வேண்டும். உடலின் ஆக்க மூலப் பொருளான திசுவை அவர்களால் உற்பத்தி செய்ய முடியாது; அப்படி அவர்களால் செய்ய முடிந்திருந்தால், ஒரு மனிதனையே அவர்கள் உண்டாக்கியிருப்பார்கள். எனவே நீங்கள் பாருங்கள், தேவனே சுகமளிப்பவர். உடைந்த எலும்பை நீங்கள் ஒன்றாக சேர்க்கலாம், ஆனால் தேவனே அதை சுகப்படுத்தவேண்டும். தேவனே சுகமளிப்பவர். “உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே.” தேவனுடைய வார்த்தையை நீங்கள் பொய்யுரைக்கச் செய்ய முடியாது; அது ஒவ்வொரு முறையும் உண்மைக்கே திரும்ப வரும், அதற்கே நேரடியாக திரும்பி வரும். உங்களால் அதைப் பொய்யுரைக்கச் செய்ய முடியாது.

3882 இப்பொழுது வேதாகமத்தில் வேதவாக்கியங்கள் முரணாயுள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். வேதாகமத்திலுள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று முரணாயுள்ளன என்று ஒரு வார்த்தையை எனக்குக் காண்பித்தால், எனக்கு ஊதியத்தில் கிடைக்க பெறும் ஒரு ஆண்டு ஊதியத்தை கொடுத்துவிடுகிறேன் என்று நான் ஜனங்களிடம் கூறியுள்ளேன். அது உண்மை. அதில் முரணான எதுவும் கிடையாது. உங்கள் மாமிச சிந்தை அதை அந்த விதமாக பார்ப்பதனால் அப்படி தோன்றுகிறது. பரிசுத்த ஆவியே வார்த்தைக்கு அர்த்தம் உரைப்பவர். வார்த்தை உண்மையாயுள்ளது, அவை இணைக்கப்பட்டுள்ளன. அது முழுவதும் அங்கே ஒரு திருகு வெட்டு புதிரைப் போன்ற விளையாட்டாயுள்ளது. அவைகளை சரியான இடங்களில் பொருத்தி, தேவனுடைய மீட்பு மற்றும் அவருடைய ஜனங்களுக்கு அவருடைய ஆசிர்வாதங்கள் என்னும் படத்தை அமைக்க பரிசுத்த ஆவியால் மாத்திரமே முடியும். ஆமென். அவை ஒன்றுக்கொன்று முரணாயில்லையே! வேதத்தில் எந்த ஒரு வேதவாக்கியமும், மற்றொரு வேதவாக்கியத்துக்கு முரணாக அமைந்திருக்கவில்லை. அப்படியிருக்குமானால், அது எழுதப்பட்டிருக்கும் காகிதத்தின் விலை மதிப்பையுங்கூட பெற்றிருக்காது. அப்படியானால் அது வஞ்சித்துக்கொண்டிருக்கிறதாயுள்ளது. தேவன் வஞ்சிக்கிறதில்லை. தேவன் உண்மையுள்ளவர், நீதியுள்ளவர், பரிசுத்தமுள்ளவர், உத்தமமானவர். அவர் தேவன்.

3983 இப்பொழுது, ஆபிரகாமுக்கு தேவனிடமிருந்து, “நான் எல் ஷடாய், நான் உன்னுடைய பெலனளிப்பவராயிற்றே! உன் மனைவியின் கர்ப்பம் உலர்ந்துவிட்டது. ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு அவளுக்கு நின்றுபோய் நாற்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன, உன் சரீரம் செத்துப்போனதற்கு சமம்; ஆனால் நான் எல் ஷடாய்” என்னும் இந்த வார்த்தை உண்டானது. அவன் இஸ்மவேலைப் பெற்றான், உங்களுக்குத் தெரியுமே; ஆனால் அவர், “அது அவனல்ல. இல்லை, இவன் ஒரு பெரிய மனிதனாயிருப்பான். இவன் அநேக பிரபுக்களைப் பெறப்போகிறான். ஆனால் நான் செய்த வாக்குத்தத்தம், உனக்கும் சாராளுக்குமிடையேயுள்ள ஒன்றாகும்” என்றார். அதுதான்! ஆமென். ஆபிரகாமுக்கு நல்லுணர்வு தோன்றினது. 84 அவர், “ஆபிரகாமே, உன்னிடம் ஒன்றை இப்பொழுது கூற விரும்புகிறேன். உன் பெயரை நான் மாற்றப்போகின்றேன்” என்றார். அவர், “இனி நீ ஆபிராம் என்றழைக்கப்படாமல், ஆபிரகாம் என்றழைக்கப்படுவாய்” என்றார். ஆபிராம் என்றால் “உயர்ந்த—உயர்ந்த தகப்பன்” என்று பொருள். ஆனால் ஆபிரகாம் என்பதற்கு “ஜாதிகளுக்குத் தகப்பன்” என்று பொருள். அவளும் சா-ரா-ய் என்று இனி ஒருபோதும் அழைக்கப்படுவதில்லை; அவள் சா-ரா-ள் என்று அழைக்கப்படுவாள். சாராள் என்றால், “ராஜகுமாரத்தி.” அவர்களுடைய பெயரை மாற்றினாரே! என்னே ஒரு—ஒரு மாற்றப்பட்ட பெயர்! ஏதோ ஒன்று சம்பவித்த காரணத்தால் அவர்கள்…பாருங்கள், காரியங்கள் நிகழும் முன்பு ஒரு மாறுதல் இருக்க வேண்டும். அவர்களுக்கு அந்தப் பெயர் இருக்கும் வரைக்கும் அவரால் அவர்களுக்கு அந்த பிள்ளையைக் கொடுக்க முடியவில்லை.

4085 உங்கள் பெயர் பரலோகத்தின் புத்தகத்தில் இல்லாத வரைக்கும் உங்களால் மறுபடியும் பிறக்க முடியாது. நீங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் போன்ற ஒவ்வொரு சபையிலும் உங்கள் பெயரை எழுதிக்கொண்டு, ஓரிடத்திலிருந்து வெறொரு இடத்துக்கு மாறி, அவர்கள் அனைவருடனும் வீண் சந்தடி செய்யலாம்; ஆனால் ஏதாவது ஒன்று நிகழ்வதற்கு முன்பு, உங்கள் பெயர் பரலோகத்தின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும், அப்பொழுது புது சிருஷ்டி உண்டாக முடியும். புது ஜீவன் வருவதற்கு முன்பு, அவர்களுடைய பெயர்கள் மாற்றப்பட்ட வேண்டியதாயிருந்தது. நீங்களும் கூட உங்கள் பெயரை மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இந்த புத்தகங்களிலிருந்து பரலோகத்தின் புத்தகங்களுக்கு மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். 86 “அங்கே, உன் பெயர் இனி ஒரு போதும் ஆபிராம் ‘உயர்ந்த தகப்பன்’ என்றிராமல்; ஆனால் அது ஆபிரகாம் , ‘ஜாதிகளுக்குத் தகப்பன்’ என்றிருக்கும். இனி ஒருபோதும் (சாராள்) அல்ல, சாராய் , ஆனால் சாராள், ‘ராஜகுமாரத்தி’” என்பதாகும்.

4187 ஓ, இப்பொழுது இங்கே நாம் 18-ம் அதிகாரத்துக்கு வருவோம். 17-லிருந்து நாம் நேரடியாக 18-க்கு செல்வோம், ஏனெனில் அது… இன்றிரவு அதைக் காட்டிலும் அதிக தூரம் சென்று, உங்களை இங்கு பிடித்து வைக்க விரும்பவில்லை, ஏனெனில் நாளை இரவு நீங்கள் திரும்பி வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது கவனியுங்கள். நம்மால் இயன்றவரை, நாம் விரைவாக 22-ம் அதிகாரத்துக்கு செல்வோம். இப்பொழுது கவனியுங்கள். ஒரு நாள், ஒருக்கால் இரண்டு மூன்று நாட்களுக்கு பின்பு, ஆபிரகாம் சாராள், அவர்களுடைய கூடாரங்கள் போடப்பட்டன. 88 ஆனால் தூரத்திலுள்ள அந்த பட்டிணத்தில், திருமதி. லோத்து அவர்கள் அங்கு வைத்திருந்த புதுவிதமான உடைகள் அனைத்தையும் உடுத்தியிருப்பாள் என்று நான் எண்ணுகிறேன். அவர்கள் வைத்திருந்த எல்லா விதமான தலைமுடி அலங்காரத்தையும் அவள் செய்து கொண்டிருந்தாள். அவள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து, அவளுடைய குமாரத்திகளையும் அதேவிதமாக வளர்த்தாள். இன்று தாய் வேசி செய்துள்ளதை, அவளுடைய குமாரத்தி சபைகளும் அதேக் காரியத்தை செய்ய வைத்துள்ளது போன்றேயாகும். 89 இப்பொழுது, ஆனால் சாராளோ, எல்லா தேசங்களிலுமுள்ள பெண்களைக் காட்டிலும் மிகவும் அழகில் சிறந்து விளங்கினாள், அவள் தரிசு நிலத்தில் வாழ்ந்தாள், ஏனெனில் அவள் வாக்குத்தத்தத்தைப் பெற்றவனைப் பற்றிக்கொண்டிருந்தாள். இப்பொழுது நான் இத்துடன் இதை இங்கு விட்டுவிடுகிறேன், ஏனெனில் நான் தொடர்ந்து செல்ல வேண்டும், நான்…இல்லையென்றால் நான் உங்களை நள்ளிரவு வரை இங்கு வைத்திருக்க வேண்டியிருக்கும். சாராள் ஆபிரகாமைப் பற்றிக் கொண்டிருந்தாள். அது உண்மை. அவன் வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்தான். 90 நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கொள்ளுங்கள். வாக்குத்தத்ததைப் பெற்றுள்ளவர் அவரே! அவரே வாக்குத்தத்தம். அவரே வாக்குத் தத்தம்! கவனியுங்கள்.

4291 ஒருநாள் காலையில் சூரியன் உண்மையாகவே மிகவும் உஷ்ணமாயிருந்தது, ஆபிரகாம் கருவாலி மரத்தின் அருகே அங்கிருந்த தன் கூடராவாசலின் நிழலில் உட்கார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தான். அவன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான், அப்பொழுது சுமார் பதினொரு மணியாய் இருந்திருக்க வேண்டும். மூன்று புருஷர் தங்கள் உடையில் தூசிபடிந்தவர்களாய் தன்னை நோக்கி நடந்து வருகிறதை ஆபிரகாம் கண்டான். ஆபிரகாம் அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடினான். அவனுடைய இருதயத்திலிருந்த ஏதோ ஒன்று அவனுக்கு நல்லுணர்வைக் கொடுத்தது, அவன் ஓடிப்போய், அவர்களுடைய பாதங்களில் விழுந்தான். கவனியுங்கள், அவன், “என் ஆண்டவரே!” என்றழைத்தான். அது வினோதமாயிருக்கவில்லையா? அவர்கள் மூன்றுபேர்; ஆனால் “என் ஆண்டவரே”! என்றான். 92 லோத்தைப் பாருங்கள். அவர்களில் இருவர் அங்கே சென்றபோது, அவர்கள் இருவரையே, அவன், “என் ஆண்டவன்மார்களே” என்றழைத்தான். லோத்து அவர்களை “ஆண்டவன்மார்களே” என்றழைத்தான். ஆபிரகாம்…லோத்து இருவரையே, “ஆண்டவன்மார்களே” என்றழைத்தான். 93 ஆபிரகாம், மூன்று பேர்களிலும், “ஆண்டவரே! என் ஆண்டவரே!” என்றழைத்தான். ஆமென்! ஓ, காலம் சமீபமாயிருக்கிறதே! கவனியுங்கள், அவன், “என் ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், இந்த கர்வாலி மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறும். நான் கால்களைக் கழுவ கொஞ்சம் தண்ணீரும், உண்ண கொஞ்ச அப்பமும் கொண்டு வருகிறேன், ஏனென்றால் என்னைப் பார்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே இங்கு வந்தி ருக்கிறீர்” என்றான். அவர்கள் நடந்து மரத்தடியில் சென்றனர்.

4394 ஆபிரகாம் புறப்பட்டுப் போய், கூடாரத்தின் பின்புறம் சென்று, “சாராளே சீக்கிரமாய் மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அடுப்பிலே சில அப்பங்களைச் சுடு” என்று சொல்லிவிட்டு, மாட்டுமந்தைக்கு ஓடி ஒரு இளங் கன்றைப் பிடித்து, அடித்துத் துண்டங்களாக்கி, அதைச் சமைத்து, அதனுடன் சிறிது வெண்ணெயும் பாலும் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக வைத்தான், அவர்கள் புசித்தார்கள். 95 அவர்களில் ஒருவர் தேவனே! அப்படித்தான் வேதாகமம் கூறியுள்ளது. நீங்கள் இதைக்குறித்து விவாதிக்க விரும்பினால், தாராளமாய் செய்யுங்கள். அவன் அவரை, “ஏலோகிம், தேவன்” என்றழைத்தான். அவன் அவரை அறிந்திருக்க வேண்டும்; அவன் அவரிடம் பேசிக்கொண்டிருந்தான். கவனியுங்கள், “தேவனாகிய கர்த்தரே!” இப்பொழுது, அவர்களில் ஒருவர் தேவனாயிருந்தார். அவன் அவரைப் பார்த்தான். ஆபிரகாம் அவரை அடையாளங் கண்டுகொண்டான். இப்பொழுது அங்கு பாருங்கள்.

4496 ஒரு முறை ஒரு போதகர் என்னிடம், “சகோதரன் பிரான்ஹாமே, அந்த மனிதன் தேவனாயிருந்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று நீங்கள் என்னிடம் பொருட்படுத்துகிறீரல்லவா?” என்று கேட்டார். 97 நான், “அவர் தேவனென்றே ஆபிரகாம் கூறினான். எல்லா மொழி பெயர்ப்பாளர்களும் அவ்வாறே அதை கர்த்தர் என்று மொழிபெயர்த்துள்ளனர், க-ர்-த்-த-ர் என்பது [L-o-r-d, ஆங்கில வார்த்தையில் முதல் எழுத்து—மொழிபெயர்ப்பாளர்] பெரிய எழுத்தில் உள்ளது. வேதத்தைப் படிக்கும் எவரும் க-ர்-த்-த-ர் என்பது பெரிய எழுத்தில் உள்ளது ஏலோகிமைக் குறிக்கிறது என்பதை அறிவர். அது ஏலோகிம் என்னும் சொல்லிருந்து வந்த அதே வார்த்தையாயிற்றே! ‘ஆதியிலே தேவன், ஆதியிலே, தேவன் சிருஷ்டித்தார்’ ஏலோகிம், சர்வவல்லமையுள்ள தேவன், தம்மில் தாமே ஜீவிக்கிறவர், ‘வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.’ இதோ அவர் மறுபடியும் அவனுக்கு முன்பாக நின்றுகொண்டிருக்கிறார்” என்றேன். அவர், “பாருங்கள், உங்களுக்குத் தெரியுமா,” என்று கூறி, “அது—அது ஒரு சாதாரண மனிதனாயிருந்தது” என்றார். 98 நான், “நிச்சயமாக, அவர் மாமிசம் புசித்தார், அவர் சாப்பிட்டு, பாலைக் குடித்தார், அவர்—அவர்—அவர் அப்பம் புசித்தார்” என்றேன். நான், “நிச்சயமாக அவர் தேவனாயிருந்தார்” என்றேன். அவர், “அது எப்படி முடியும்?” என்றார். நான், “திருவாளரே, நீங்கள்—நீங்கள்…” என்றேன். 99 அவர்கள் உங்களுடைய உணர்வுகளை புண்படுத்தவில்லையென்று நான்—நான் நம்புகிறேன்; அவர்கள் யேகோவா சாட்சிகாரராயிருந்தனர். அவர் என்னிடம் கூறினார், அப்பொழுது அவர், “பாருங்கள், திரு. பிரான்ஹாமே, இங்கு பாருங்கள். நான் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். தேவன் அதைச் செய்ய முடியாது” என்றார். 100 நான், “என் தேவனை உங்களுக்குத் தெரியாது, அவ்வளவு தான்” என்றேன். நான் தொடர்ந்து, “மானிட சரீரம் என்னென்ன பொருட்களைக் கொண்டு உண்டானது? பெட்ரோலியம், பொட்டாஷஷ், விண்வெளி வெளிச்சம் போன்ற பதினாறு மூலப் பொருட்கள் சேர்ந்து உண்டானது. சோதோமை பார்த்தறிவதற்கென கீழே இறங்கி வர அவர் செய்ய வேண்டியிருந்த ஒரே செயல், அவர்…கையை நீட்டி, ஒரு கை நிறைய விண்வெளி வெளிச்சம், பெட்ரோலியம் போன்றவைளை எடுத்து ‘வ்யூ!’ என்று ஊதினாரே! அதன்பின்னர், ‘காபிரியிலே, இங்கு வா, இதற்குள் அடியெடுத்து வை’ என்றார். அது சரி. அவர் மறுபடியும் கையை நீட்டி கை நிறைய தூசியை எடுத்து, ‘மிகாவேலே, இங்கே வா, இதற்குள் அடியெடுத்து வை’ என்றார். அது போன்று தமக்காகவும் ஒரு சரீரத்தை உண்டுபண்ணினார்.” அவர் கடைசி நாட்களில் இருக்கப்போகிற ஒன்றுக்கு எடுத்துகாட்டாக இருக்க வேண்டியதாயிருந்தது, எனவே அவர் இறங்கி வந்து மாமிச சரீரத்தில் பேசுகிறார். முற்றிலும் உண்மை. ஓ, அவர் அவ்விதமாக இருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!

45101 என்றாவது ஒரு நாளில் என்னில் ஒன்றும் விடப்பட்டிருக்காது. நானும் கூட அந்த பதினாறு மூலபொருட்களைக் கொண்டு உண்டாக்கப்பட்டவன். அன்றொரு நாள் எனக்குள்ள இரண்டு மூன்று தலைமுடியை நான் வாரிக்கொண்டிருந்தேன். அப்பொழுது என் மனைவி என்னை நோக்கிப் பார்த்தாள், அவள் என்னிடம், “பில்லி, உமக்கு வழுக்கை விழுகிறது” என்றாள். நான், “தேனே, அவைகளின் ஒன்றையும் நான் இழந்து போக வில்லை” என்றேன். அதற்கு அவள், “உமக்கு முன்பு சுருண்ட தலைமுடியிருந்தது” என்றாள். நான், “ஆம், ஆனால் அவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகவில்லை” என்றேன். அவள், “அவை எங்கேயுள்ளன என்று என்னிடம் கூற வேண்டுகிறேன்” என்றாள். 102 அப்பொழுது நான், “அப்படியானால் தேனே, அவைகளை நான் பெறுவதற்கு முன்பு, அவை எங்கிருந்து என்னிடம் வந்தன என்று நீ என்னிடம் கூறு. நான் பெறுவதற்கு முன்பு அவை எங்கிருந்தனவோ, நான் அங்கு செல்வதற்காக அவை காத்துக் கொண்டிருக்கின்றன” என்றேன்.

46103 ஆமென்! மகிமை! வேதம், “உங்கள் தலையிலுள்ள முடி ஒன்றாகிலும் அழிந்துபோவதில்லை” என்று கூறியுள்ளது. அல்லேலுயா! அது முற்றிலும் உண்மை. அது இல்லாதிருந்தது, அதேசமயத்தில் அது இருக்கிறது; இன்னும் அது இல்லாமற்போனாலும், பிறகு இருக்கிறது. நிச்சயமாக. முற்றிலுமாக! பெட்ரோலியம், விண்வெளி வெளிச்சம், கால்சியம், பொட்டாஷ் போன்றவை. தேவன்…நான் ஒன்றுமில்லாமல், நீங்கள் காண்பதற்கு நான் ஒன்றுமில்லாமல் வெறும் சாம்பலாய் மாத்திரம் இருக்கும்போது, அவர் அந்த பொட்டாஷையும் பெட்ரோலியத்தையும் ஒன்றாக எறிந்து பேசுவார். அல்லேலூயா! நான் மறுபடியும் அவருடைய சமுகத்தில் ஜீவிப்பேன். அல்லேலுயா! அவர் நமக்கு நித்திய ஜீவனைத் தருகிறார். ஆமென். “என் பிதா எனக்குத் தந்தவைகளில் ஒன்றாகிலும் நான் இழந்துபோகவில்லை, நான் அவனைக் கடைசி நாளில் எழுப்பு வேன்.” அதை நான் விசுவாசிக்கிறேன்! ஆபிரகாமின் சந்ததி என்னும் முறையில், அந்த நாளை நான் எதிர்நோக்கியிருக்கிறேன்! தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திரபாரங்களுள்ள நகரத்துக்கு நான் காத்திருக்கிறேன். ஆமென். நிச்சயமாக. இது எவ்வளவுதான் சுருக்கமாக விழுந்து, தலைமுடி கொட்டிப்போனாலும், என்ன நடந்தாலும் கவலையில்லை. தேவன் கடைசி நாளில் எல்லா இளமையின் சிறப்போடும் அதை மறுபடியும் எழுப்புவார். அவர் அவ்வாறு செய்வதாக வாக்களித்துள்ளார். நான் அந்த நகரத்துக்கு காத்திருக்கிறேன்! ஆமென். ஓ என்னே! அந்த ஆசிர்வதிக்கப்பட்ட நம்பிக்கை எனக்காக அங்கு காத்திருக்கிறது என்பதை அறிந்தவனாய் நான் இப்பொழுது மிகவும் பக்தி பரவசப்படுகிறேன். அந்த நகரத்துக்கு நான் காத்திருக்கிறேன். என் இருதயம் அதை நோக்கி துடித்துக்கொண்டிருக்கிறது. ஓ, நான் வேறெந்த வழியிலும் திரும்பமாட்டேன். நான் நேராக அந்த இடத்தையே நோக்கிப் பார்ப்பேன். தேவனே, அங்கேயே நான் உண்மையும் விசுவாசமுள்ளவனாய் நிலைநின்று, ஒரு ஜீவக் கயிற்றை எறிந்து, எங்கும், களைப்படைந்த ஒவ்வொரு யாத்திரீகரையும் என்னால் இயன்ற வரை அவ்வழியில் கொண்டு வர உதவி புரியும். 104 ஆம், அண்மையில் அதைக் குறித்த ஒரு தரிசனம் தோன்ற, அதைக் கண்டேன். என் அன்பார்ந்தவர்களை அங்கு நான் இளமையாகக் கண்டேன். அது அங்குள்ளது. அது அங்குள்ளது. அது அங்குள்ளதென்றும் நானறிவேனே! ஆம், ஐயா! இப்பொழுது, ஒருக்கால் நீங்கள் அதை கிறிஸ்தவ வர்த்தகரின் சத்தம் என்னும் பத்திரிகையிலும், இன்னும் அதை வெளியிட்ட மற்ற பத்திரிக்கைகளிலும் படித்திருப்பீர்கள். நண்பர்களே, அது ஒரு தரிசனம் அல்ல. நான் தரிசனங்களைக் கண்டிருக்கிறேன், எனவே அவை என்னவென்று நான் அறிந்திருக்க வேண்டும். அவர் எனக்கருளின பல்லாயிரக்கணக்கான தரிசனங் களை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இது தரிசனம் அல்ல. நான் அங்கு நின்றுகொண்டு திரும்பிப் பார்த்துக்கொண்ருடிந்தேன். அது அங்குள்ளதென்று நானறிவேன். நண்பர்களே, அது அங்குள்ளது, அது அங்குள்ளதே! அது அங்குள்ள தென்று நானறிவேனே! ஆம் ஐயா! நான் இங்கு நின்றுகொண்டுள்ளது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, தேவன் எனக்குதவி செய்வராக, நான் புத்தி சுயாதீனத்துடன் இந்த பிரசங்க பீடத்தில் நின்றுகொண்டி ருப்பேனானால், அது அங்குள்ளது! தேவன் தமது வாக்குத்தத்தத்தை அளித்துள்ளார், அது உண்மையானது, அது உண்மை! ஆம், ஐயா. அது அங்குள்ளது. கவனியுங்கள்.

47105 இப்பொழுது இந்த மனிதர் அங்கு உட்கார்ந்து புசித்தனரென்று நாம் காண்கிறோம். அவர்களில் இருவர் எழுந்து சோதோமுக்குச் சென்றனர். ஒருவர் ஆபிரகாமுடனே தங்கிவிட்டார். அவர்களுடைய உரையாடலை நாம் கவனிப்போம். அவர்கள் சோதோமையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதைக் குறித்து சற்று விசித்திரமான ஏதோ ஒன்றுண்டு என்று ஆபிரகாம் அறிந்திருந்தான். எனவே அவர் கூறினார், அப்பொழுது அவர் எழுந்து புறப்பட ஆயத்தமானபோது, அவர், “நான் செய்யப்போகிறதை ஆபிர காமுக்கு மறைப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்; அவன் பெரிய பலத்த ஜாதியாவதனால், அவன் தன் பிள்ளைகளை எப்படி வளர்ப்பான் எனபதை நான் அறிவேன்; நான் செய்யப்போகிறதை காரியத்தை மறைப்பேனோ?” என்றார். மேலும் அவர், “சோதோமின் பாவம் மிகவும் கொடியதாயிருப்பதனால், அதின் கூக்குரல் என் செவிகளில் வந்து எட்டினது” என்றார். அது சரியா என்று பார்த்து அறிய அவர் இறங்கி வந்தார்.

48106 இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அன்றிரவு நான் கூறினது போன்று, அந்த தூதர்களில் இருவர் சோதோமுக்கு சென்று அந்த சோதோமியருக்குப் பிரசங்கித்தனர். அவர்கள் அந்த சோதோமியருக்குப் பிரசங்கித்தனர்; அவர்கள் அன்றிரவு அவர்களை வார்த்தையில் குருடாக்கினர். ஆனால், அங்கு ஒருவர் இருந்தார் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள்; அவர்கள், அவர்கள் தங்களுடைய அடையாளத்தை உடையவர்களாயிருந்தனர், அவர்கள் மத்தியில் ஒரு அந்நியர் இருந்தார். 107 லோத்தைப் பாருங்கள். லோத்து வாசலில் உட்கார்ந்துகொண்டு, “என் ஆண்டவன்மார்களே” என்றான். அவன் அந்தவிதமாக வாழ்ந்து வந்தான்! அவன், “என் வீட்டுக்கு வாருங்கள்” என்று கூறினான். அவர்களோ, “நாங்கள் வீதியிலே உறங்குவோம்” என்றனர். என்னே ஒரு வீடு! 108 ஆனால் அவர்கள் ஆபிராகாமிடம் வந்தவுடன்; அவர்கள், “இந்த நோக்கத்துக்காகவே நாங்கள் வந்துள்ளோம். உன் பக்கத்தில் நாங்கள் அமருகிறோம்” என்றனர்.

49109 அந்த விதமாகவே உள்ளது. அந்த விதமாக வாழுங்கள், தேவன் உங்களை உபயோகிக்க விரும்புவரானால், எங்கு வந்து உங்களைக் கண்டுப்பிடிக்கவேண்டும் என்பதை அவர் அறிந்துள்ளார். நீங்கள் ஒரு ஸ்தானத்திலிருந்து, தேவனுக்கு முன்பாக சுத்தமான ஒரு வாழ்க்கையை நடத்தினால், உங்கள் வார்த்தைகள் உத்தமாயிருக்கும், உங்கள் வாழ்க்கை உண்மையுள்ளதாய் இருக்கும். அந்த மாதிரியான இடத்துக்குத்தான் தூதர்கள் வருகின்றனர். எலிசபெத்தையும் சகரியாவையும் பாருங்கள், பாருங்கள், அவன் உத்தமமாயும் நேர்மையாயும் கர்த்தருடைய கற்பனைகள் அனைத்தின்படியும் நடந்து வந்தான். அப்படித்தான் நாம் வாழ விரும்புகிறோம். எனவே தேவன் நம்மை உபயோகிக்க ஆயத்தமாயிருக்கும்போது, அவர், “இவர்கள் என் ஜனங்கள். இந்த சபைக்கு என் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் என்னை விசுவாசிக்கின்றனர். அவர்கள் என் வார்த்தையில் நிற்கின்றனர்” என்பார். பாருங்கள், அந்தவிதமாகத்தான் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள், அந்த வாழ்க்கையை வாழுங்கள்.

50110 இப்பொழுது இந்த தூதனை நாம் கண்டறிகிறோம். அவர், “நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைக்கமாட்டேன். ஆனால் ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்” என்று கூறினதாக நாம் காண்கிறோம். கவனியுங்கள், அவர் அவனை ஆபிராம் என்றழைக்கவில்லை, அவர் அவனை “ஆபிரகாம்” என்றழைத்தார். அவனுடைய பெயர் மாற்றப்பட்டிருந்ததை அவர் எப்படி அறிந்திருந்தார்? அவர்தான் அவனுடைய பெயரை மாற்றியது. நிச்சயமாக. கவனியுங்கள், அவர் சாராய், சா-ரா-ய் என்று ஒருபோதும் அழைக்கவில்லையென்று உங்களுக்குத் தெரியும், சா-ரா-ள், “உன் மனைவி சாராள் எங்கே?” அவன் விவாகமானவன் என்று எப்படி அவருக்குத் தெரியும்? அவனுக்கு சாராள் என்னும் பெயர் கொண்ட மனைவியிருக்கிறாள் என்றும் அவருக்கு எப்படித் தெரியும்? ஆபிரகாம், “உமக்குப் பின்புறமாய் உள்ள கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். என்ன ஒரு உண்மையான பெண்மணி!

51111 இன்றைக்கு பெண்கள் அதிகமாக பேசுகின்றனரே! ஒவ்வொருவரும்…அவர்களுடைய கணவரைப் பேசவிடுவதில்லை. அவர்கள் கையில் ஒரு சிகரெட்டை வைத்துக்கொண்டு, குட்டை கால் சட்டை அணிந்து, அங்கு வந்து அவர்களே எல்லாவற்றையும் பேசி முடித்துவிடுகின்றனர். எப்படிப்பட்ட ஒரு தாறுமாறாக்கப்பட்ட ஜனங்கள், அவள் தலைமை சமையற்காரி யாகவும், குப்பி கழுவுபவளாகவும், ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வேண்டியவள்! அவள் சமையலைறையை விடும்போது, ஒரு தாய் என்னும் முறையில், சரியாக அவள் தன்னுடைய கடமையின் ஸதானத்தை விட்டுவிடுகிறாள். 112 இப்பொழுது, பின்னால் இருந்துகொண்டு உத்தமமாக நடந்துகொண்ட ஸ்திரீகள், பெண்மணிகளைப் போன்று நடந்துகொண்டவர்களின் விஷயத்தில், அவர்களுடைய தலைவன்தான் தீர்மானங்களையும் மற்றக் காரியங்களையும் செய்தவன் என்று நாம் காண்கிறோம். 113 யாராகிலும் ஒரு மனிதன் இதை தன் மனைவியிடம் எடுத்துக் கூறும்போது; அவள், “இப்பொழுதே நீ புரிந்துகொள்ளும்படிச் செய்கிறேனே!” என்று சொல்லி, ப்யூ! ப்யூ! சிகரெட்டு புகையை அவள் வாயிலிருந்து ஊதுகிறாள், அப்படிப்பட்ட பார்வை, எப்படிப்பட்ட பயங்கரமான பார்வை, அப்படிப்பட்டதை நான் ஒருபோதும் கண்டதில்லையே! மேலும் அங்கு நின்று கொண்டு, அந்த நபரைக் கவனித்து, அங்கிருக்கும் ஆவியையும் மற்ற காரியங்களையும் நீங்கள் பகுத்தறிந்து, உங்களால் அங்கேயே யூகித்துப் பார்க்க முடியும்; அவள் ஒருக்கால் ஏதோ ஒரு சபையின் பாடற் குழுவில் பாடுகிறவளாயிருப்பாள். ஓ, அப்படிப்பட்ட ஒருநாளில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோமே! நாம் அந்த நாளை அடைந்துள்ளோம் என்பதில் வியப்பொன்றுமில்லையே! நான் என்ன பொருட்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் கிரகித்துக்கொள்ள முடியும் என்று நான்—நான் நம்புகிறேன்.

52114 கவனியுங்கள், அது அங்கிருந்தது. சாராள் கூடாரத்தில் இருந்தாள், அவள் அங்கே தங்கியிருந்து நல்லொழுக்கத்துடன் நடந்துகொண்டாள். ஆபிரகாம் இந்த தூதர்களை உபசரித்துக்கொண்டிருந்தான். இப்பொழுது, அவர், “நான் உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்” என்றார். 115 சாராள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் தன் உள்ளத்திலே நகைத்தாள், அப்பொழுது அவள், “நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எங்களுக்கு கணவன் மனைவியுமாக இன்பம் உண்டா யிருக்குமோ?” என்று சொன்னாள். ஆகையால் அவளோ நகைத்தாள். 116 அந்த தூதன் தன் முதுகு கூடாரத்தின் பக்கம் திரும்பிய வண்ணம் நின்றுகொண்டு, “சாராள் ஏன் நகைத்தாள்?” என்று கேட்டார். 117 ஞாபகம் கொள்ளுங்கள், அதுவே சந்ததிக்கு…இல்லை ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட கடைசி அடையாளமாயிருந்தது, அது சபைக்கு முன்னடையாளமாக இருக்கிறது. அதுவே அவன் பெற்றுக்கொண்ட கடைசி அடையாளமாயிருந்து. அவன் பெற்றுக்கொண்ட அடையாளங்கள் அனைத்திலும், சோதோம் அழிக்கப்படுவதற்கு முன்னதாக அவன் பெற்றுக்கொண்ட கடைசி அடையாளமாய் அது இருந்தது. அது சரியா? கடைசி அடையாளமே!

53118 இஸ்ரவேலர், ஆபிரகாமுக்குப் பின்வந்த சந்ததி. சமாரியர், இரண்டு ஜாதிகள் கலந்து தோன்றிய சந்ததி. அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர், அவர்கள் அவரை எதிர்நோக்கியிருந்தனர், இருந்தபோதிலும்; அவர்கள், “எங்கள்—எங்கள் பிதாவாகிய யாக்கோபு இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்தார்” என்றனர், அப்படித்தான் சீகார் ஊரிலிருந்த ஸ்திரீ கூறினாள். பாருங்கள்? “நம்முடைய பிதாவாகிய யாக்கோபு தமது குமாரனாகிய யோசேப்புக்கு அவர்—அவர் இந்தக் கிணற்றைத் தந்தார், அதிலுள்ள தண்ணீரை நாங்கள் குடித்துக்கொண்டு வருகிறோம், அவர் தமது ஒட்டங்களுக்கு இந்த கிணற்றிலிருந்து மொண்டு தண்ணீர் வார்த்தார். உம்மிடம் அது போன்ற தண்ணீர் இருக்கிறது என்று நீர் கூறுகின்றீரா?” என்றாள். பாருங்கள்? மாமிசப்பிரகாரமான இஸ்ரவேல் சந்ததியாரும் பெற்றுக்கொண்ட கடைசி அடையாளமும் அதுபோன்ற ஒரு அடையாளமே! வ்யூ! உங்களால் அதைக் காணமுடியவில்லையா? ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்களே! 119 உடன்படிக்கையோடிருந்த ஆபிரகாம் பெற்றுக்கொண்ட கடைசி அடையாளம், வெதுவெதுப்பான சபை புறக்கணிக்கப்பட்டு, அவள் நிர்மூலமாக்கப்படுவதற்கு முன்பிருந்த கடைசி அடையாளம், இருதயங்களிலும் சிந்தையிலும் இருந்த நினைவுகளை அறிந்து கொள்ளுகிற அடையாளமாயிருந்தது, தேவன் ஒரு மானிட சரீரத்தில் வெளிப்பட்டார். 120 இஸ்ரவேலர் அறுப்புண்டு போவதற்கு முன்பு, கண்ட கடைசி அடையாளமும் அதேக் காரியமாயிருந்தது. அவர்கள், “அது பெயல்செபூல்; ஒரு குறிசொலபவன்” என்றனர்.

54121 இப்பொழுது அதே வேளையாயிற்றே! தேவனே, இதை மனதில் பதியச் செய்யும்! இப்பொழுதே ஆபிரகாமின் ராஜரீக சந்ததி பெற வேண்டிய அந்த வேளையாயிற்றே! அது உங்களுக்குப் புரிகின்றதா? தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டு, வெதுவெதுப்பான சபையின் அழிவுக்கு முன்பு, ராஜரீக சந்ததிக்கு அவர் முன்பு செய்தவாறே அவர்களுக்கு அவர்களுடைய கடைசி அடையாளத்தை அளிக்கிறார். கடைசியாயிற்றே! லோத்து பின்வாங்கிப்போதலின் கடைசிப் பிரகாசம்! அது ஒரு நிமிடம் ஆழமாகப் பதியட்டும். 122 ஆபிரகாம், ஒன்று; ஆபிரகாமின் மாமிசப்பிரகாரமான சந்ததி, இரண்டு; ஆபிரகாமின் ராஜரீக சந்ததி, மூன்று. 123 கவனியுங்கள், இந்த செய்தி அங்குள்ள வெதுவெதுப்பான சபையோரினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதில்லை. முதலில் அவர்களிடம் அது எப்பொழுது சென்றது? அது பெந்தெகொஸ்தேயினருக்கு, தெரிந்துகொள்ளப்பட்டவருக்கு, வெளியே இழுக்கப்படுகிறவர்களுக்கு அனுப்பப்பட்டது. 124 இஸ்ரவேலர் அன்று செய்தது போல், தொண்ணூறுக்கும்-…எத்தனை, எத்தனை இஸ்ரவேலர் அதை ஏற்றக்கொண்டனர் என்று பாருங்கள். அவர்கள் மேலறைக்கு செல்ல சமயம் வந்தபோது, நாற்பது லட்சம் பேர்களில் நூற்றிருபது பேர் மாத்திரமே சென்றனர்.

55125 இப்பொழுது ராஜரீக சந்ததியைக் கவனியுங்கள், பாருங்கள், நீங்கள் அதை எங்கு எடுத்துப் பார்த்தாலும், பாருங்கள், அது மூன்று முறை வர வேண்டும். காம், சேம், யாப்பேத்தினுடைய ஜனங்கள். ஆபிரகாமின் ராஜரீக சந்ததி! அங்கு ஆபிரகாம்; மாமிசப் பிரகாரமான சந்ததி; ராஜரீக சந்ததி. ஒவ்வொன்றுமே! ராஜரீக சந்ததி கிறிஸ்துவின் மூலம் வருகிறது… தேவன் ராஜரீக வித்தாகிய கிறிஸ்துவின் மூலமாக ஆபிரகாமுக்கு அளித்த அவனுடைய வாக்குத்தத்தத்துக்கு நாம் வருகிறோம். இந்த கடைசி நாட்களில் அவர் திரும்பளித்துக்கொண்டிருக்கிற கர்த்தராகிய இயேசுவின் இந்த சபையே இந்த ராஜரீக சந்ததி. ராஜரீக சந்ததியாயிற்றே! கவனியுங்கள், அவன் அந்த அடையாளத்தைப் பெற்றுக்கொண்டானே! அவர் இங்கிருந்தபோது, ராஜரீக வித்தாகிய அவர்தாமே, “லோத்தின் நாட்களில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” என்றார். ராஜரீக சந்ததி, ஆபிரகாமின் சந்ததி, வெளியே அழைக்கப்படுதல்; அவனுடைய சகோதரனாகிய லோத்து, சோதோமில் ஒரு வெதுவெதுப்பானவன்; அப்பொழுது சோதோமியரோ, உலகப் பிரகாரமானவர்கள். இன்றைக்கு, உலகம்; சபை உலகம்; ராஜரீக சந்ததி. சரியாக ஒழுங்கின்படியே, அதே விதமாக தங்கள் ஸ்தாபனங்களில் பொருத்தப்பட்டுள்ளனர். தேவன், தமது வாக்குத்தத்தத்துடன் இறங்கி வந்து, அதே காரியத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆமென். இது பரிபூரமாணமாய் இல்லாமற்போனால், பரிபூரணம் என்பதற்கு அர்த்தம் என்னவென்று எனக்கத் தெரியாது. இது வேதவாக்கியமாயிற்றே!

56126 நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசி, ஆவியில் நடனமாடினதை உடையவர்களாயிருந்தீர்கள். நீங்கள் இந்த எல்லா உணர்ச்சி வசப்படுதல்களையும் உடையவர்களாயிருந்தீர்கள், நீங்கள் சுகமளிக்கும் அற்புதங்களை, சக்கர நாற்காலிகளிருந்து ஜனங்கள் எழுந்து நடத்தல் போன்றவற்றை கண்டிருக்கிறீர்கள். இவையனைத்தும் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இங்கே, இதோ இந்த கடைசி அடையாளம் இப்பொழுது வந்துள்ளது. ஆபிராகாம் தன் வாழ்க்கையில் தேவன் அவனுக்குச் செய்த எல்லாவிதமான காரியங்களையும் கண்டான், நிச்சயமாக, ஆனால் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு சற்று முன்பு, இதோ கடைசி அடையாளம் வருகிறது. இப்பொழுது ராஜரீக சந்ததி ஒரு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரனை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. அல்லேலூயா! நாம், நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர்நோக்கியிருக்கிறோமா? தேவனுடைய குமாரன் திரும்ப வருவாரே! அல்லேலுயா! ஓ, அது எனக்கு கூச்சலிட வேண்டுமெனும் உணர்வைத் தருகின்றது. கவனியுங்கள்! ராஜரீக சந்ததி ஒரு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரனை எதிர்நோக்கியுள்ளது. ஆபிரகாம் அநேக ஆண்டுகளாக காத்திருந்து, வார்த்தையை இறுகப் பற்றிக்கொண்டிருந்தது போன்று, ராஜரீக சந்ததியும் அவ்வாறே பற்றிக்கொண்டுள்ளது. அது இந்த குமாரனின் வருகைக்காக, கர்த்தருடைய வருகைக்காக, முதலாம் ஜாமம், இரண்டாம் ஜாமம், மூன்றாம் ஜாமம், இப்படியாக ஏழாம் ஜாமம் வரையிலும் காத்திருந்தது. இதோ நாம் இன்னும் அந்த ராஜரீக சந்ததியின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறோம். கர்த்தருடைய வருகைக்கு சற்று முன்பு நாம் எதைக் காண்கிறோம்? என்ன நடக்கிறது? தேவன் நமது மத்தியில் இறங்கி வந்து, ஆபிரகாமின் சந்ததிக்கு காண்பித்த வண்ணமாக இப்பொழுதுள்ள ராஜரீக சந்ததிக்கு காண்பிக்கிறார்; ஆபிரகாமுக்கும், ஆபிரகாமின் சந்ததிக்கும், இதோ அது ராஜாரீக சந்ததியோடு உள்ளது. தேவன் நமது மத்தியில் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் வாசம்செய்து, முன் காலத்தில் அவர் புரிந்த அதே செயல்களைப் புரிந்து, அது மாறாதது என்று காண்பிக்கிறார். அந்த புகைப்படத்தின் பேரில் நடத்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச் சியின் விளைவாக, உலகம் அறிந்துள்ளது, விஞ்ஞான உலகம் அது உண்மையென்று அறிந்துள்ளது. உலகம் முழுவதும், சபையும் அது உண்மையென்று அறிந்துள்ளது.

57127 முன்குறிக்கப்பட்ட வித்தான ஒவ்வொருவரும் உள்ளே நுழைந்து கொண்டிருக்கின்றனர் என்றும், கதவு விரைவில் அடைக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பு தாக்குவதற்காக காத்திருக்கிறதென்றும் நான் நம்பு கிறேன். அது உண்மை. தேவன் எப்பொழுதும் மனிதனுடன் போராடுவதில்லை, அவரால் முடிந்த அனைத்தும் அவர் செய்வார். ஆனால் நண்பர்களே, அந்த நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கவனியுங்கள். 128 இப்பொழுது உங்களுக்கு உதவி செய்ய நான் ஒன்றை உங்களுக்கு அளிக்கப்போகின்றேன். அடுத்தபடியாக நடந்தது என்ன என்பது இப்பொழுது ஞாபகமுள்ளதா? அவர்கள் ராஜாரீக சந்ததியை பெறுவதற்கு முன்னதாக, ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் சரீரபிரகாரமாக ஒரு அற்புதம் நடக்கவேண்டியதாயிருந்தது, ஒரு ராஜரீக சந்ததியைப் பெறுவதற்கு முன்பு…இல்லை அந்த வித்து பிறப்பதற்கு முன்பு. “இப்பொழுது, ஆபிரகாமின் சரீரம் செத்துப்போயிருந்தது” என்று வேதம் உரைக்கிறது. அது உரைக்கவில்லையா? “சாராளின் கர்ப்பமும் செத்துப் போயிருந்தது,” என்றே வேதம் உரைத்துள்ளது. ராஜரீக சந்ததி…வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் தோன்றுவதற்கு முன்பு சரீரத்தில் ஏதோ ஒரு மாறுதல் நிகழவேண்டியிருந்தது. வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரன் தோன்றுவதற்கு முன்பு, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரன் தோன்றுவதற்கு முன்பு, அவர்களுடைய சரீரங்களில், சரீரப்பிரகாரமாக ஒரு காரியம் நடக்க வேண்டியதாயிருந்தது. அவர் என்ன செய்தாரென்று கவனியுங்கள். நான் ஒரு சிறியக் காரியத்தை உங்களுக்கு அளிக்கப்போகின்றேன்.

58129 இப்பொழுது, நாம் வேதாகமத்தைப் படிப்போமானால், அது தேவன் தமது சபைக்கு எழுதின ஒரு காதல் கதையாயுள்ளது. அது தேவன். தேவன் அன்பாயிருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] கல்வியறிவுகொண்டவர்களும் புத்தி கூர்மையுள்ளவர்களும் தங்கள் மனித ஞானத்தினால் அதை புரிந்து கொள்ளமுடியாதபடிக்கு வேதாகமம் எழுதிவைக்கப்பட்டுள்ளது. அதைப் புரிந்துகொள்ள நீங்கள் தேவனிடம் அன்பு கொண்ட வர்களாயிருக்க வேண்டும். தேவனை நீங்கள் உங்களுக்குள் பெற்றிருக்க வேண்டும். அவர் அப்பொழுது தம்மையே உங்களுக்கு வியாக்கியானப்படுத்துகிறார். 130 இப்பொழுது, அது எனக்கு ஒரு மனைவியுள்ளது போன்றாகும். ஓ, நான் எவ்வளவாக அவளை நேசிக்கிறேன்! என் முழு இருதயத்தோடும் நான் அவளை நேசிக்கிறேன். நான் வெளிநாடு எங்காகிலும் சென்றிருந்தால், அவள்…குழந்தைகளை உறங்க வைத்துவிட்டு, பின்பு அவள் எனக்கு ஒரு கடிதம் எழுதுவாள், அதில், “அன்புள்ள பில்லி, இன்றிரவு இங்கு உட்கார்ந்துகொண்டு, நான் உம்மைப் பற்றி யோசித்துக்கொண்டேயிருந்து, இந்த கடிதத்தை உமக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்” என்கிறாள். பாருங்கள், அவள் காகிதத்தில் என்ன எழுதியிருக்கிறாள் என்பதை நான் அறிந்துகொள்வேன். ஆனால் எனக்கு அவளை நன்றாகத் தெரியும். அவளை நான் அதிகமாக நேசிப்பதால், அவளுடைய சுபாவத்தை நான் அறிந்திருக்கிறேன், அவள் என்ன பொருட்படுத்துகிறாள் என்பதை நான் அறிவேன், எனவே என்னால் அதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும். புரிகிறதா? 131 தேவன் தமது சபையானது வேதாகமத்தில் அடங்கியுள்ள மறைப்பொருளை அறிந்துகொள்ளவேண்டுமென்று விரும்புகிறார். அதில் இல்லாத ஏதொன்றை இப்பொழுது படிக்க வேண்டுமென்றல்ல! நீங்கள் அதில் அடங்கியுள்ள மறைபொருளைப் படித்து, அது என்ன பொருட்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது நீங்கள் கவனமாக படித்து, அதில் மறைபொருள் அடங்கியுள்ளதா என்று அறிந்துகொள்ளுங்கள். 132 இப்பொழுது, தேவன் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் அதைச் செய்தபோது, அது தமது சபைக்கு உதாரணமாய் அமைந்துள்ளது என்பதையே அவர்களுக்குக் காண்பித்துக்கொண்டிருந்தார். அவர் அவர்களுக்காக அதைச் செய்தார், அவர்கள் இருவரையும் வாலிப ஆணாகவும் பெண்ணாகவும் மாற்றினார். நிச்சயமாக, அவர் அப்படி செய்தார். அவர்களை மீண்டும் இளமை பருவத்துக்கு மாற்றினார், அவர் ஆபிரகாமின் சந்ததியிலுள்ள ஒவ்வொருவருக்கும் செய்யப்போவது போன்றே. நீங்கள் எவ்வளவு வயோதிபமாகவும், தளர்ந்துபோன நிலையை அடைந்திருந்தாலும் கவலைப்பட வேண்டியதேயில்லை, நீங்கள் மறுபடியும் வாலிபமாகவும் அழகாகவும் மாறப்போகும் நாள் ஒன்று வரப்போகின்றது, அது உண்மை, வாழ்க்கையின் பிரகாசம்.

59133 நான் அண்மையில் மருத்துவர் ஒருவரிடம், “ஐயா, நான் ஆகாரம் உண்ணும் ஒவ்வொரு முறையும் என் ஜீவனை புதுப்பித்துக் கொள்கிறேனா என்று என்னிடம் கூறுங்கள்” என்றேன். அதற்கு அவர், “ஆம், ஐயா, அது சரிதான்” என்றார். 134 அப்பொழுது நான், “இப்பொழுது, நாம் ‘பூமியின் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டோமென்று’ தேவன் கூறியுள்ளாரே” என்றேன். 135 அதற்கு அவர், “அது உண்மை. நாம் உண்ணும் காய்கறிகளும் மாமிசமும் மண்ணில் தோன்றியவையே. அதில்தான் பொட்டாஷும், கால்சியமும் உங்களுடைய ஊட்டச்சத்துக்களில் அடங்கியுள்ளன, நீங்கள் அதை பூமியின் மண்ணிலிருந்து உற்பத்தி செய்கிறீர்கள். நீங்கள் பூமியின் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டிருக்கின்றீர்கள்” என்றார். அப்பொழுது நான், “ஹும். இப்பொழுது, தேவன் அதை துவக்கத்திலேயே அப்படித்தான் சிருஷ்டித்தார்” என்றேன். 136 அதற்கு அவர், “அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது, ஆனால்” என்று கூறி, “நீங்கள் இப்பொழுது உண்ணும் உணவு, அதுவே உங்கள் உடலை வளரச் செய்கிறது என்று நான் அறிவேன்” என்றார். 137 அப்பொழுது நான், “உங்களை நான் கேட்கிறேன்” என்றேன். மேலும் நான், “அப்படியானால் நீங்கள் கன்னிகை பிறப்பைக் குறித்து என்னிடம் சந்தேகிக்கின்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம், ஐயா, நான் சந்தேகிக்கிறேன்” என்றார். 138 அப்பொழுது நான், “மருத்துவரே, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அதை எனக்கு விளக்கிக் கூறுங்கள்” என்றேன். 139 அதற்கு அவர், “பாருங்கள், விஞ்ஞான ஆதாரம் கொண்டு நிரூபிக்கப்பட முடியாத எதுவும் சரியானதல்ல” என்றார். 140 அப்பொழுது நான், “விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட முடியாத எதுவும் சரியல்ல என்று இப்பொழுது நீங்கள் கூறின கருத்துக்கு எதிராக வாதாட விரும்புகிறேன்” என்றேன். மேலும் நான், “வாழ்க்கையில் காணப்படும் உண்மையான காரியங்கள் அனைத்துமே விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட முடியாதவைகளே: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் போன்றவை. இவைகளை விஞ்ஞானப்பூர்வமாக எனக்கு நிரூபிப்பீர்களா? இருப்பினும் இவை யாவும் தத்ரூபமானவைகளாயிற்றே! தேவன், பரிசுத்த ஆவி, தூதர்கள் என்பதுமே!” என்றேன். ஆமென்! நான் தொடர்ந்து, “விசுவாசமே அந்தக் காரியங்களைச் செய்கின்றது. நீங்கள் காணும் ஒவ்வொன்றும் பூமியிலிருந்து, அன்னை பூமியிலி ருந்து தோன்றினவையே, அவை பூமிக்கு மறுபடியும் செல்கின்றன” என்றேன். மேலும் நான், “உங்களை ஒன்று நான் கேட்க விரும்புகிறேன். நான் பதினாறு வயதுள்ளவனாயிருந்த போது, இப்பொழுது உண்ணும் உணவையே அப்பொழுதும் உண்டு வந்தேன். நான் பீன்ஸ், உருளைக்கிழங்கு, ரொட்டி, இறைச்சி ஆகியவைகளை உண்டு வந்தேன். நான் உண்ட ஒவ்வொரு முறையும் பெரியவனாகவும் பெலசாலியாகவும் வளர்ந்தேன்” என்றேன். அதற்கு அவர், “நிச்சயமாக, நீங்கள் உங்கள் ஜீவனை புதுப்பித்துக் கொண்டிருந்தீர்கள்” என்றார்.

60141 நான், “ஏன், அப்படியானால், எனக்கு ஏறக்குறைய இருபத்திரண்டு வயதான பிறகு, அந்த வயதைக் கடந்து எவருமே, எவ்வளவுதான் உணவு உண்டாலும் பலவீனமடைந்து வயதாகிக் கொண்டே செல்கின்றனரே? அதைக் குறித்து யோசித்து பாருங்கள்” என்றேன். நான் தொடர்ந்து, “நான் இங்கு ஒரு ஜாடியில் தண்ணீர் வைத்துள்ளேன். என்னிடம் ஒரு கண்ணாடி குடுவை உள்ளது; தண்ணீர் நிறைந்துள்ள இந்த ஜாடியிலிருந்து நான் கண்ணாடிக் குடுவையில், அது பாதி நிறையும் வரைக்கும், தண்ணீர் ஊற்றிக்கொண்டே வருகிறேன்; அதன்பிறகு கண்டாடிக் குடுவை யின் அடியில் ஒன்றும் இல்லாமற்போனால், நான் எவ்வளவுதான் தண்ணீர் ஊற்றிக்கொண்டேயிருந்தாலும், அது கீழே இறங்கிக்கொண்டேபோகிறது. அது போன்று நான் எவ்வளவு நன்றாக உணவு உண்டாலும் அது ஒரு பொருட்டல்ல; நான் முன்னைக் காட்டிலும் இப்பொழுது நூறு மடங்கு நன்றாக உண்கிறேன்” என்றேன். 142 இரவு முழுவதும் மாமிசத் தோலை மென்று, காலை உண விற்கு சோள ரொட்டியும் சிறிது சர்க்கரையும், அதையே மறுபடியும் பகல் உணவாகவும் இரவு உணவாகவும் உண்பது எப்படியிருந்ததென்று எனக்குத் தெரியும். வறுமை வாழ்க்கை என்னவென்று எனக்குத் தெரியும், ஆனால் இப்பொழுது நான் நன்றாக உண்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆனால் நான் எவ்வளவுதான் உணவு உண்டாலும் அது ஒரு பொருட்டல்ல, நான் இன்னும் பலவீனமடைந்து வயதாகிக்கொண்டே செல்கிறேன். முடிவில் நான் தளர்ந்து, மரித்து போவேன். ஏன்? ஏன்? அது தேவன் வைத்துள்ள நியமனம். அது உண்மை. ஆம், ஐயா.

61143 கவனியுங்கள் ஆபிரகாமும் சாராளும், அவர்கள் இருபத்திரண்டு அல்லது இருபத்தைந்து வயதுடைய இளமை பருவத்தை அடைந்தனர். 144 ஓ, நீங்கள், “சகோதரன் பிரான்ஹாமே, இது அர்த்தமற்றதாயிற்றே!” எனலாம். சரி, இப்பொழுது ஒரு நிமிடம் அமைதியாய் உட்காருங்கள், நாம் மறுபடியும் வரிகளுக்கிடையே அடங்கியுள்ள மறைபொருளைக் காண்போம். 145 அந்த தூதர்கள் புறப்பட்டு சென்று, சோதோம் எரிந்து போனவுடனே, ஆபிரகாமும் சாராளும் கேராருக்கு நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டனர். அது வயோதிப தம்பதிகளுக்கு ஒரு மிகவும் நீண்ட பயணமே. உங்கள் வரைப்படத்தில் தூரத்தை அளந்து நோக்குங்கள். அவர்கள் கேராருக்கு சென்றனர். இதோ இப்பொழுது தொண்ணூறு வயது கொண்ட கிழவி சாராள், சிறு வெயில்-தொப்பி ஒன்றை அணிந்து, தள்ளாடிக்கொண்டிருக்கிறாள். ஆபிரகாமும் தன் நீண்ட தாடி தொங்கினவனாய் அங்கிருக்கிறான். வேதம், “அவர்கள் இருவரும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்” என்று உரைத்துள்ளது. அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள் என்று கூற முயல வேண்டாம். வேதம், “அவர்களுடைய சரீரங்கள் செத்துபோய், இருவரும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்” என்று உரைத்துள்ளது. இதோ அவர்கள் கேராருக்கு செல்கின்றனர். அங்கு அபிமெலேக்கு என்னும் வாலிப ராஜா ஒருவன் இருக்கிறான், அவன் தன் இருதயத்துக்கு இனியவள் ஒருத்தியை தேடிக்கொண்டிருந்தான், அவன் சாராளைக் கண்டபோது, அவள் மேல் காதல் கொண்டான். அது சரியா? பாட்டியிடமா?

62146 ஆபிரகாம் சாராளை நோக்கி, “ஏன், நீ மிகவும் அழகாயிருக்கிறாயே!” என்றும், “நீ காண்பதற்கு அழகாயிருக்கிறாய்” என்றும் கூறினான். ஆமென். “நீ என்—என் சகோதரி என்று அவனிடம் சொல்லி விடு என்று நான் உன்னை வேண்டிக்கொள்கிறேன்” என்றான். அல்லேலுயா! ஆபிரகாமின் சந்ததியார் எல்லாருக்கும் அவர் என்ன செய்யப்போவதாயிருந்தார் என்பதை அங்கு காண்பித்துக்கொண்டிருந்தார். சாராள் அழகாயிருந்தாள். ஆபிரகாம் இளைஞனாயிருந்தான். ஆபிரகாம், “சாராளே, அன்பே, உனக்கு என்னவென்று தெரியுமா, உன் தலையிலுள்ள நரைமுடி மறைந்துகொண்டிருக்கிறது” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 147 சாராளும், “ஆபிரகாமே, உம்முடைய முதுகிலுள்ள கூன் மறைந்துகொண்டிருக்கிறது. நீர் நிமிர்ந்துகொண்டு வருகிறீர்” என்றாள். அவர்கள் வாலிப ஆணாகவும் வாலிப பெண்ணாகவும் மாறினார்கள். தேவன், காண்பிக்கிறாரே! ஓ, என்னே!

63148 அபிமலேக்கு அவள் மேல் காதல் கொண்டு, அங்கு சென்று, அவளை அழைத்து வந்தான், அவன் அவளை மணம் புரிந்திருப்பான். அவன் குளித்துவிட்டு வந்து, தன்னுடைய இரவு ஆடையை அணிந்துகொண்டு படுத்து, தன் ஜெபத்தை ஏறெடுத்தப் பிறகு, தன் கால்விரல்களை மேலே உயர்த்துவதை என்னால் காண முடிகிறது, அப்பொழுது அவன், “நாளை நான் இந்த அழகான நூறு வயது கிழவியை மணந்து கொள்வேன்” என்று கூறியிருப்பான் என்று நினைக்கிறீர்களா? கேலிக்கூத்தாயிருந்திருக்குமே! “அந்த அழகான எபிரேய பெண்ணை! ஓ, அவளுடைய சகோதரன், அந்த வாலிபன்! இவள் எவ்வளவு அழகாயிருக்கிறாள்!” என்றே கூறியிருப்பானே. 149 ஆனால் தேவன் சொப்பனத்திலே அபிமெலேக்குக்குத் தோன்றி, “நீ செத்தாய்” என்றார். அவன், “கர்த்தாவே, அது ஏன்?” என்றான். அப்பொழுது அவர், “அவள் ஒரு மனிதனுடைய மனைவியாயிருக்கிறாள்” என்றார். 150 அதற்கு அவன், “கர்த்தாவே, என் இருதயத்தின் உத்தமத்தை நீர் அறிந்திருக்கிறீர். அவள், ‘அது என் சகோதரன்’ என்று சொன்னாள். அவனும், ‘இது என் சகோதரி’ என்று சொன்னானே” என்றான். 151 அவர், “ஆம், உன் இருதயத்தின் உத்தமத்தை நான் அறிந்திருக்கிறேன், ஆகையால் தான் எனக்கு விரோதமாய் பாவஞ் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்” என்றார். ஆனால் கவனியுங்கள்! “ஆனால் நீ செத்தாய், உன் தேசம் முழுவதும் போய்விட்டது. அவளுடைய கணவன் என் தீர்க்கதரிசி. நீ எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும், நீ எவ்வளவுதான் ஜெபித்தாலும் எனக்கு கவலையில்லை. நான் உன் ஜெபங்களுக்கு செவி கொடுக்கமாட்டேன். அவளுடைய கணவன் ஒரு தீர்க்கதரிசி! அவனுடைய மனைவியை கொண்டுபோய் விட்டுவிடு. அவன் உனக்காக வேண்டுதல் செய்வான். நீ அப்படி செய்யாவிட்டால், சாகவே சாவாய்” என்றார். அல்லேலுயா!

64152 அது என்னவாயிருந்தது? வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரனைப் பெற்று கொள்வதற்கென தேவன் சாராளையும் ஆபிரகாமையும் ஆயத்தப்படுத்துகிறார். இந்த தேவனுடைய தூதன் வெளிப்பட்ட பிறகு அடுத்த காரியமாக காணப்படுவது, பரிசுத்த ஆவி தமது கடைசி அடையாளத்தை காண்பித்தப் பிறகு, அடுத்தப்படியாக நிகழவேண்டியது, இந்த அழிவுள்ளது அழியாமையைத் தரித்துக்கொண்டு, நாம் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரனை, ஆபிரகாமின் ராஜரீக சந்ததியை, சந்திப்பதற்கென ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! “நாம் ஒரு நொடிப் பொழுதிலே, ஒரு இமைப் பொழுதிலே மறுரூபமாக்கப்பட்டு, அவருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள் மேல் அவர்களோடு கூட எடுத்துக் கொள்ளப்படுவோம். இவ்விதமாய் எப்போழுதும் வாக்குத் தத்தம்பண்ணப்பட்ட குமாரனோடே கூட இருப்போம்.” அல்லேலுயா!

65153 ஓ, நான் அதற்கு வர முடியாது…நான்…நாளை இரவு நான் 22-ம் அதிகாரத்துக்கு வருவேன், பாருங்கள். 154 ஓ, அதை நான் நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா? இந்த எல்லா காரியங்களைக் குறித்தும் நான் மிகவும் மகிழச்சியடைகிறேனே! வேதாகமம் இந்த கிருபையுள்ள பொற்கட்டிகளால் நிறைந்துள்ளது. நீங்கள் குனிந்து அவைகளைக் கையிலெடுத்து, அவைகளின் மேலுள்ள தூசியைத் தட்டிவிட்டு, அவைகளைப் பாருங்கள். ஒவ்வொரு மனிதனும், அவை ஒவ்வொன்றும் இயேசு கிறிஸ்துவுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளன, ஏனென்றால் தேவத்துவத்தின் பரிபூரணம் அவருக்குள் வாசமாயிருந்தது. எல்லாமே அவரையே சுட்டிக்காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டிலுள்ள அனைத்தும் சிலுவையைச் சுட்டிக் காண்பித்தன; இப்பொழுது புதிய ஏற்பாட்டிலுள்ளவைகளும் பின் நோக்கி சிலுவையையே சுட்டிக் காண்பிக்கின்றன. அது உண்மை. அது அனைத்தும் அங்குள்ளது. ஓ! நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பில் பிணைக்கும் கட்டு ஆசிர்வதிக்கப்படுவதாக; ஒரே மனதுள்ளவர்களின் ஐக்கியம் மேற்கூறியவாறே இருக்கும். 155 நான் எவ்வளவாக அவரை நேசிக்கிறேன்! நான் எவ்வளவாக அவரைக் காண விரும்புகிறேன்! இக்காலை நேரங்களில் ஒன்றில், அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, இருதயம் நொறுங்குண்டு, கிழிக்கப் பட்ட சரீரம் மறுரூபப்படுவதற்காக நான் எவ்வளவு ஆவலோடு காத் திருக்கிறேன்! எக்காளம் தொனிக்கும் அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழுந்திருப்பார்கள். நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்.

66156 ரெபேக்காள் குளிர்ச்சியான சாயங்கால வேளையில் எப்படியாய் ஒட்டகத்துக்கு தண்ணீர் குடிக்கக் கொடுத்தாள். எலியேசர் அவளைக் காலை வேலையில் காணவில்லை. அவளை அவன் பிற்பகல் வேளையில் காணவில்லை; அவன் சாயங்கால வெளிச்சத்தில் அவளைக் கண்டான். “சாயங்காலத் திலே வெளிச்சமுண்டாகும்!” உண்மையே! அப்பொழுதுதான் அவன் அவளைக் கண்டான். அவள் முகத்தை முக்காடிட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தலையில்லை. அவள் தன் தலையிடம் சென்று கொண்டிருந்தாள். ஆமென். ஒரு ஸ்திரீ, ஒரு ஸ்திரீ தன்னை ஒரு மனிதனிடம் ஒப்படைப்பதே, அதுவே அவளுடைய சுபாவம். அதுபோன்று சபையின் சுபாவமும் தன்னை கிறிஸ்துவிடம், அவருடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுப்பதேயாகும். ஒப்புக்கொடுங்கள்! அவளுக்கு சொந்த கருத்து எதுவுமில்லை. அவள் அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்கிறாள், வேறொருவருடைய வார்த்தையை அல்ல. ஏவாள் மாத்திரம் அவ்வாறு செய்திருந்தால், நாம் மரிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது; ஆனால் அவளோ யோசனைக்கு செவிகொடுத்தாள். ஆனால் கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டி வார்த்தையாகிய கிறிஸ்துவின் தலைமையை ஏற்றுக்கொண்டு தேவனுடைய வார்த்தையை மாத்திரமே விசுவாசிக்கிறாள். அவள்தான் உண்மையான திரும்பளிக்கப்பட்ட மணவாட்டி. அல்லேலுயா! நண்பர்களே, நேரம் சமீபமாகிவிட்டது. நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது. நாம் சாயங்கால வேளையில் இருக்கிறோம். பரிசுத்த ஆவி இன்றிரவு இங்கிருக்கிறார். இது ஒரு மிகச் சிறிய கூட்டம் என்று நானறிவேன்.

67157 நீங்களோ, “ஓ, அப்படிப்பட்ட ஒன்று நிகழுமானால், தேவன் அதை ரோமாபுரியிலுள்ள போப்பாண்டவருக்கும், பேராயர்களுக்கும் வெளிப்ப டுத்துவார். அவர் மெதோடிஸ்டு பேராயரிடம் செல்வார். அவர் பாப்டிஸ்டு வேதாகமம் பள்ளிக்கு வருவார். அவர்…” என்று எண்ணக்கூடும். ஆம், அப்படித்தான் நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அவர் ஒருக்காலும் அப்படி செய்ததில்லை. 158 அவரை எதிர்நோக்கியிருக்கும் தாழ்மை இருதயம் கொண்டவர்களிடம் அவர் வருகிறார். இன்றிரவு அவர் இங்கிருக்கிறார், பரிசுத்த ஆவி, தேவன், அதே தூதன்; விஞ்ஞானிகளின் முன்னிலையில் தம்மை நிரூபித்தவர், எடுக்கப்பட்ட அவருடைய புகைப்படம் அதோ உள்ளது. கைரேகை தஸ்தாவேஜுகளை ஆராயும் புலனாய்வுத்துறை தலைவர் ஜார்ஜ் ஜே. லேஸி என்பவர், “ஒளி புகைப்படக் கருவியின் கண்ணாடி வில்லையின் மேல் பட்டது” என்றார். அவர், “திரு.பிரான்ஹாமே, நீர் மனோத்தத்துவத்தினால் ஜனங்களின் மனதிலுள்ளதை அறிந்து கொண்டிருக்கிறீர் என்று நானே பலமுறை கூறியுள்ளேன். ஆனால்” என்று கூறி, “புகைப்படக் கருவியின் இயந்திரக் கண் மனோத்தத்துவத்தை புகைப்படம் எடுக்காது. ஒளி கண்ணாடி வில்லையின்மேல் பட்டது. அது அங்கிருந்தே!” என்றார். அந்த படம் அங்குள்ளது, அவைகளில் ஒன்று வாஷிங்டன் டி.சி.யில் வைக்கப்பட்டுள்ளது. அது பதிப்புரிமை செய்யப்பட்டு, “இயற்கைக்கு மேம்பட்ட இந்த ஒன்று மாத்திரமே விஞ்ஞானப் பூர்வமாக புகைப்படம் எடுக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.”

68159 ஏன்? இன்றிரவு நான் மரிக்க நேரிட்டு, நாளை இரவு இந்த பிரசங்க பீடத்தில் பிரவேசிக்க முடியாவிட்டாலும், நான் கூறின வார்த்தைகள் சத்தியமே. ஏனெனில் அவை என் வார்த்தைகள் அல்ல, அவை அவருடையவை. நான் அவை “என்னுடையவை” என்று நான் எப்பொழுதுமே கூறினதில்லை. அது என்னுடையதல்ல. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் உங்களைப்போல ஒரு மனிதன், கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி. ஆனால் தேவன், இந்தக் கடைசி நாட்களுக்கென இவைகளை வாக்குத்தத்தம் செய்தார், இதோ அவை இங்குள்ளன! அது வார்த்தை. அது ஒரு கட்டுக்கதையாக இருந்தால், ஒருக்கால் வேறுவிதமாக இருக்கும். ஆனால் அது வார்த்தையென்று வார்த்தையைக் கொண்டு நிரூபிக் கப்பட்டு, வேதாகமம் முழுவதும் அதை உறுதிப்படுத்துகிறது. விஞ் ஞானிகளால் அது உறுதிப்பட்டுள்ளதே! ஆவியினால் அது உறுதிப் பட்டுள்ளதே! சபையினால் அது உறுதிப்பட்டுள்ளதே! தேவன் நமது மத்தியில் இருக்கிறாரே! அல்லேலுயா! அதைக் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நேற்றிரவு, நீங்கள் எழுந்து நின்று, அந்த உறுதிநிலையை எடுத்தைக் குறித்து உங்களுக்கு சந்தோஷம்தானே? அது உங்களுக்கு வித்தியாசமான உணர்வை அளித்ததா? நீங்கள் தேவனுடைய வார்த்தைக்காக உறுதியாய் நிற்கும்போது, அது எப்பொழுதுமே அப்படிதான் உண்டாகின்றது. கிறிஸ்துவுக்காக நில்லுங்கள்! அதைக் குறித்து வெட்கப்படாதீர்கள். நாம் ஜெபம் செய்வோமாக.

69160 இன்றிரவு இங்குள்ள யாராகிலும் சிறிது நேரம் இப்பொழுது கையுயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாமே, என்னை உங்கள் ஜெபத்தில் நினைவுகூருங்கள். நான், நான் ஆபிரகாமின் சந்ததியாரில் ஒருவனாக இருக்க மிகவும் ஆவல் கொள்கிறேன். நான்—நான் பரலோகத்தை இழக்க விரும்பவில்லை. சகோதரன் பிரான்ஹாமே, ஜெபியுங்கள். என் இருதயத்தின் ஆழத்தில் எப் பொழுதுமே நான் அடைய வேண்டுமென்றிருந்த ஒன்று இருந்ததைப்போன்று உணர்ந்தேன். ஆனால் நான் அதை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாதிருந்தது. சகோதரன் பிரான்ஹாமே, தேவன் அதை எனக்குக் கொடுக்கவேண்டுமென்று எனக்காக ஜெபியுங்கள்” என்று கூற விரும்புகிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கரங்களைப் பாருங்கள், எல்லாவிடங்களிலும் உயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 161 மாடியின் முன்பாகத்தில் உள்ளவர்களைக் குறித்தென்ன? இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள். தேவன் கீழே எவ்வளவு பெரியவரோ, அவ்வளவு மாடியின் முன் பாகத்திலும் பெரியவர். 162 நீங்கள் உண்மையாகவே உத்தமமாயிருந்து, அதை பொருள் உணர்ந்து கூறுகிறீர்களா? அப்படியானால் உங்கள் கரத்தையுயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நான் சிறிது நேரம் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஜெபித்துக் கொண்டேயிருங்கள். உங்கள் தலைகள் வணங்கியிருக்கட்டும். 163 இன்றிரவு இங்குள்ள பாவிகள் யாராகிலும் தங்கள் கரங்களையுயர்த்தி, “கர்த்தாவே, என்னை நினைவுகூரும். நான் அந்தப் போதகரிடத்தில் என் கரத்தை உயர்த்தவில்லை; நான் உம்மிடம் என் கரத்தை உயர்த்துகிறேன். நீர் இன்றைக்கும் உயிரோடிக்கிருக்கிறீர் என்றும், நீர் ஒருபோதும் மரிக்கவில்லை என்றும்; சரியாகக் கூறினால் நீர் மரித்து உயிரோடெழுந்தீர் என்றும் நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். நீர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறீர், நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர். நீர் இங்கிருக்கிறீர் என்று நான் விசுவாசிப்பதினால், நான் என்னுடைய கரத்தை உம்மிடம் உயர்த்துகிறேன்” என்று கூற விரும்புகிறீர்களா? உங்களுடைய கரத்தை உயர்த்தி, “என்னை நினைவுகூரும், கர்த்தாவே” என்று சொல்லுங்கள். தொடர்ந்து ஜெபித்துக்கொண்டேயிருங்கள். தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர் களாயிருங்கள். அடுத்து, பின்வாங்கிப்போன ஒருவரா? தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. அவர் உங்கள் கரங்களைக் காண்கிறார்.

70164 எங்கள் பரலோகப் பிதாவே, இந்தக் கரங்களை நீர் காண்கிறீர். அவைகளுக்குப் பின்னால் என்ன உள்ளதென்றும் நீர் அறிந்திருக்கிறீர். நீர், “விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். சில விதைகள் வழியருகே விழுந்தன, அதனால் எவ்வித உபயோகமும் உண்டாக்கவில்லை. சில விதைகள் கற்பாறையில் விழுந்தன; சில விதைகள் முட்களில் விழுந்தன; சில விதைகள் நூறத்தனையாக பலன் கொடுத்தன” என்றும் கூறியுள்ளீர். விதைகளை விதைக்கும் பொறுப்பு மாத்திரமே விதைக்கிறவனுக்கு உரியது. பரிசுத்த ஆவியானவர் தாமே இப்பொழுதே அந்த விதையைப் பிடித்துக்கொள்ளட்டும். கர்த்தாவே, நாங்கள்…நான்—நான் விசுவாசிக்கிறேன், கர்த்தாவே, நாங்கள்… 165 நீர் எப்பொழுது வரப்போகிறீர் என்று எந்த மனிதனுமே அறியான். நாங்கள் அதை அறியோம். நீர், “அதை தேவதூதர்களும் அறியார்கள்; பிதா ஒருவர் மாத்திரமே அதை அறிவார்” என்று கூறியுள்ளீர். இயேசுவும், அது அவருக்கும் கூட தெரியாது என்று கூறியுள்ளார். “பிதா ஒருவருக்கு மாத்திரமே அது தெரியும்.” 166 இப்பொழுதும், பிதாவே, இங்கு தங்களுடைய கரங்களை உயர்த்தினவர்கள், உண்மையாகவே உணர்ந்து உயர்த்தினர் என்று நான் நம்பி ஜெபிக்கிறேன். ஏதோ ஒன்று, அதாவது, ஒரு ஆவி அவர்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு, அவர்களை கரங்களை உயர்த்தும்படி சொன்னது. அவர்கள் அதைச் செய்தனர். அவர்கள் உத்தமமாய் இருக்கிறார்கள். ஒருக்கால் நீர் அவர்களிடம் பேசினது இதுவே முதன் முறையாயிருக்கலாம், ஒருக்கால் இதுவே கடைசி முறையாக இருக்கலாம். மற்ற சமயங்களில் ஒருக்கால் நீர் பேசியிருக்கலாம். ஒருக்கால் நீர் மறுபடியும் அவர்களிடம் பேசாமல் இருந்துவிடலாம். எனக்குத் தெரியாது. ஆனால் பரலோகப் பிதாவே, விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நீர் இரட்சிப்பை அருள வேண்டுமாய் நான் ஜெபிக்கிறேன்.

71167 உம்முடைய பரிசுத்த நாமம் ஜனங்களின் முன்னால் பய பக்தியாய் கொண்டு வரப்படட்டும். பரிசுத்த ஆவியினால் உம்முடைய அன்பு ஒவ்வொரு இருதயத்திலும் ஊற்றப்படுவதாக. கர்த்தாவே, இந்த போதகர் சகோதரரை ஆசிர்வதியும். இங்குள்ள இந்த விலையுயர்ந்த மனிதர் போராட்டத்தின் மத்தியில் எனக்கு எப்படியோ அழைப்பு விடுத்தனர். கூட்டத்துக்கு வந்துள்ள ஜனங்களை ஆசிர்வதிப்பராக, 168 கர்த்தாவே, நான் கர்வம் பிடித்தவனாயிருக்க வேண்டுமென்றோ, அல்லது வித்தியாசமாயிருக்க வேண்டுமெனும் எண்ணமோ எனக்கில்லை; உண்மையுள்ளவனாகவே இருக்க விரும்புகிறேன். ஒரு மனிதனுக்குள் இருக்கும் சத்தியத்தை மாத்திரமே நீர் அடையாளம் கண்டு கொள்கிறவராயிருக்கிறீர், ஏனெனில் நீரே சத்தியம். பிதாவே, இப்பொழுதே நான் ஜெபிக்கிறதற்கு செவிகொடும். இன்றிரவு அநேகர் ஒருக்கால் தங்களுடைய கரங்களை இங்கே உயர்த்தாமல் இருந்திருக்கலாம், அவர்களும் எப்படியாவது இரட்சிக்கப்படும்படி அவர்களுக்கு அருள்புரிவீராக. இயேசுவின் நாமத்தில், இதை அருளும். ஆமென்.

72169 இப்பொழுது நாம் சிறிது நேரம் பயபக்தியாய் உடகார்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஜெபவரிசையை அமைக்க சற்று தாமதமாகிவிட்டதென்று நான் நினைக்கிறேன், ஆனால் அதை நாம் அமைப்போம். ஒவ்வொரு நபரும், உங்கள்…உங்களிடம், உங்களிடம் ஒரு ஜெப அட்டை இருந்தால், அதை உங்கள் கையில் பிடித்துக்கொள்ளுங்கள். உங்களிடம் ஜெப அட்டை இல்லாமற்போனால், நீங்கள் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். நாம்…நாம் கூடுதலாக இங்கு ஐந்து நாட்கள் தங்க வேண்டுமெனும் நிலை ஏற்பட்டாலும், நாங்கள் தங்கியிருந்து அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபம் செய்யப் போகின்றோம். அது உண்மை. 170 நான் ஜனங்களிடம் ஒரு செய்தியை அளிக்க முயன்று கொண்டிருக்கிறேன். உங்களை முக்கியமான அம்சத்தை புரிந்துகொள்ளச் செய்ய வேண்டுமென்று நான் முயன்றுகொண்டிருக்கிறேன்…நீங்கள் சுகமடைந்து; ஒருவேளை நீண்ட காலம் வாழ நேரிட்டால், நீங்கள் மீண்டும் ஏதோ ஒரு நேரத்தில் சுகவீனமடைவீர்கள். ஆனால் எப்பொழுதாகிலும் நீங்கள் இரட்சிக்கப்பட்டால், நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். புரிகிறதா? நீங்கள் சுகமடைந்து, உங்களுடைய வழியில் சென்று, உங்களுடைய இரட்சிப்பை இழக்கக் கூடும்…இல்லை, நீங்கள் உங்களுடைய உயிரை இழக்கக்கூடும்; ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படும்போது, அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுகொள்கின்றீர்கள், அங்கு நீங்கள் ஒருபோதும் வியாதிப்படுவதில்லை.

73171 இன்றிரவு நான் பேசிக் கொண்டிருந்ததைக் குறித்து நீங்கள் புரிந்துகொண்டீர்களா என்று நான் ஆர்வமாயுள்ளேன், அதாவது தேவன் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் அங்கே தரிசனமாகி, அழிவு வருகிறதற்கு முன்பும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரன் கொடுக்கப்படுவதற்கு முன்பும் அந்த கடைசி அடையாளத்தைக் அவர்களுக்குக் கொடுத்தார். சபைக்கு, அது, வரப்போகும் குமரானுக்கானதாய் அந்த அடையாளம் இருந்தது. உலகிற்கோ, அது அழிவாயிருந்து. இப்பொழுது, அவர் ஆபிரகாமுக்கும் மற்றவர்களுக்கும் செய்தது உதாரணங்களாயிருந்தன. 172 ஆபிரகாமின் ராஜரீக சந்ததியாகிய இயேசு பூமிக்கு வந்து, அதே அடையாளத்தைச் செய்தார். எத்தனை பேர் அது அவ்வண்ணமாய் இருக்கும் என்பதற்கு, “ஆமென்.” என்று கூற அறிந்துள்ளீர்கள்? [சபையோர் “ஆமென்!” என்கின்றனர்.—ஆசி.] நிச்சயமாக. அவர்கள் அதை புறக்கணித்தனர். அது சரியா? 173 இப்பொழுது, இயேசு அதை புறஜாதிகளின் மத்தியில் செய்யவில்லை, ஏனெனில் ராஜரீக சந்ததி தோன்றவில்லை, சபை இன்னமும் பிறக்கவில்லை. ஆனால் சபை பிறந்து இப்பொழுது இரண்டாயிரம் ஆண்டுக ளாகிவிட்டன, அப்படியே… ஞாபகம் கொள்ளுங்கள், அது ஆபிரகாம் காத்திருந்ததன் முடிவிலாயிருந்து. அது மாமிசப்பிரகாரமான சந்ததி மேசியாவுக்காக காத்திருந்ததன் முடிவிலாயிருந்தது, ஏனெனில் மேசியா அங்கிருந்தார்.

74174 இது ராஜரீக சந்ததி காத்திருத்தலின் முடிவாகும். அவர் இங்குள்ளார், கிறிஸ்து பிரசன்னமாகுதல். இவ்விரண்டையும் நீங்கள் எப்போதாவது வித்தியாசப்படுத்தினதுண்டா…வேதாகமத்தில் ஒரு இடம் உண்டு, உங்களுக்குத் தெரியுமா, அதைப் பார்க்க எனக்கு இப்பொழுது நேர மில்லை. அது “கிறிஸ்துவின் பிரசன்னமாகுதல்” என்றும், அதன்பின்னர் “கிறிஸ்துவின் வருகை” என்றும் கூறுகிறது. “பிரசன்னமாதல்” மற்றும் “வருகை” மொத்தத்தில் அது இரண்டு வெவ்வேறு காரியங்கள். அவர் இப்பொழுது பிரசன்னமாகி, பரிசுத்த ஆவியின் ரூபத்தில் நமது மத்தியில் கிரியை செய்து கொண்டு சபையை பரிபூரணப்படுத்திக்கொண்டிருக்கிறார். அது அப்படிதான் இருக்கவேண்டும். 175 உங்களுடைய சட்டைப் பையில் ஒரு டாலர் நோட்டு இருக்குமானால், அதை வெளியே எடுத்துப் பாருங்கள். அதன் ஒரு பாகத்தில் அமெரிக்க முத்திரை உள்ளது; மறுபகத்கத்தில் எகிப்திய முத்திரை, அதாவது கூர்நுனிக் கோபுரம் அதன் தலைக்கல் அதற்கு மிகவும் உயரத்தில், ஒரு கண் அதைப் பார்ப்பதுபோல் உள்ளது. அதற்கு கீழ், “மகத்தான முத்திரை” என்று ஏன் அமெரிக்கா டாலரில் எழுதியிருக்கவேண்டும்? அமெரிக்க முத்திரைதான் இங்கே மகத்தானதாய் இருக்கும் என்பது போல் காணப்படுகிறது. ஆனால் அமெரிக்க அரசாங்கமோ, அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அதை மகத்தான முத்திரையாக அங்கீகரித்துள்ளனர். 176 அந்த கூர்நுனிக் கோபுரம் குறுக்கிக்கொண்டே செல்வதைக் கவனியுங்கள், சபை. நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அதன்பிறகு அது கூராக்கப்பட வேண்டும்… தலைக்கல் கூர்நுனிக் கோபுரத்துக்கு வரவேயில்லை, அது புறக்கணிக்கப்பட்டது, மூலைக்கல்லைப் போன்றே. இப்பொழுது, ஆனால் தலைக்கல் வரும்போது… நான் கூர்நுனிக் கோபுரத்தை சென்று பார்த்திருக்கிறேன்; அது பரிபூரணமாய் பொருந்தி, அதற்கிடையில் ஒரு சவரக்கத்தியும் கூட உங்களால் நுழைக்க முடியாது, அங்குதான் காரை உள்ளது. சபை வரும்போது, அது…கிறிஸ்து தம்முடைய சபையைப் பெற்றுக்கொள்ள வரும்போது, அதே போன்ற ஒரு ஊழியத்தை அது பெற்று, அந்த கிருபையின் மூலம் எல்லாவற்றையும் எழுப்பி, பிறகு சென்றுவிடும். தலைக்கல் வருதல்; “கர்த்தருக்கு கிருபையுண்டாவதாக!” என்று ஆர்ப்பரித்தல்.

75177 என் மனதில் ஒன்றுள்ளது. அல்லேலுயா! நமது தேவன் இன்னமும் தேவனாயிருக்கிறார். அவருடைய இரகசியங்களை அவர் தமது ஊழியக்காரருக்கு வெளிப்படுத்துகிறார். தம் முதுகை கூடராத்துப் பக்கம் திருப்பினவராய், கூடாரத்திலுள்ள சாராள் தன் உள்ளத்தில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்று அறிவித்த தூதனைக் குறித்து உங்களிடம் கூறினேன். அந்த தூதன் இப்பொழுது இங்கிருக்கிறார், பரிசுத்த ஆவி, அதே அக்கினி ஸ்தம்பம், கிறிஸ்துவுக்குள்ளிருந்த அவரே என்று நான் உரைக்கிறேன். அக்கினி ஸ்தம்பம் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தினது. அந்த அக்கினி ஸ்தம்பம் மாம்சமாகி நமது மத்தியில் வாசம்பண்ணினார். அவர், “நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் தேவனிடத்துக்குப் போகிறேன்” என்றார். 178 அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதலுக்குப் பிறகு, அவர் சவுலை தமஸ்குவுக்குப் போகும் வழியில் சந்தித்தார். ஒரு ஒளி அவனைத் தாக்கி கீழே விழத்தள்ளியது. அவன், “ஆண்டவரே, ஆண்டவரே!” என்றான். 179 அவர் முதலில், “சவுலே, சவுலே” என்றார். “யார்…என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்றார். அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். அவர், “இயேசு நானே” என்றார். அவர் திரும்பப் போய்விட்டாரே!

76180 இதோ இன்றிரவு அவர் இங்குள்ளார், அவர் தமது சபையினாலும், விஞ்ஞானப்பிரகாரமாகவும் மற்றெல்லாவிதமாகவும் நிரூபிக்கப்பட்டுவிட்டாரே! ஓ, நண்பர்களே, நாம் ஏன் இவ்வளவு மந்தமாக இருக்கிறோம்? நாம் ஏன் மிகவும் தளர்வுற்று உட்கார்ந்திருக்கிறோம்? வார்த்தையை உரைத்த தேவன், அதே தேவன்… எலிசா எலியாவின் ஆவியை இரட்டிப்பாக பெற்றவனாய் திரும்பி வந்து, சால்வையை மடக்கி, “எலியாவின் தேவன் எங்கே?” என்று கூறினதுபோன்றே. வார்த்தையை எழுதின தேவன் அதை உறுதிப்படுத்தித் தரட்டுமே! இது அவருடைய வார்த்தையாயிருக்குமானால், அவர் அதை ஆதரிக்கட்டுமே! அதை செய்வதாக அவர் வாக்களித்துள்ளார். நாம் அதை விசுவாசித்தால், அவர் அதைச் செய்வார். 181 இப்பொழுது இதை நான் தெளிவுபடுத்தட்டும். நான் அந்த நபர் அல்ல. நான் அந்த நபருக்கு ஒரு ஊழியக்காரன். நீங்களும் கூட, நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாராக இருந்தால் அவ்வாறாகும்.

77182 ஆனால், ஒவ்வொரு ஸ்தாபனமும் என்னைப் புறக்கணித்திருக்கிறபோதிலும் இந்நாளிலும் நான் உறுதியாக நின்று வார்த்தையைப் பிரசங்கிக்கிறேன், ஸ்தாபனங்கள் என்னை உதைத்து இடம் விட்டு இடம் உதைத்துத் தள்ளுகின்றன. வெளிச்சத்தைக் காணும் அந்த ஸ்தாபனங்களிலுள்ள விலையேறப் பெற்ற சகோதரர்கள், அவர்களுடைய தலைமை அலுவலகம் என்ன கூறினபோதிலும், அதில் உறுதியாய் நிற்பார்கள். அப்படிப்பட்ட மனிதரை தேவன் ஆசிர்வதிப்பாராக. நேற்றிரவு எழுந்து நின்ற மனிதரையும் ஸ்திரீகளையும் தேவன் ஆசிர்வதிப்பாராக. நான் உங்களுக்காக என்ன செய்ய முடியும்? ஏதாவதொன்றை என்னிடம் கேளுங்கள். நான் என்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் கூறுங்கள், என்னால் முடிந்த எதையும் நான் உங்களுக்குச் செய்வேன். நீங்கள் தேவனுடைய ஜனங்கள். போராட்டத்தின் மத்தியில் அவ்வாறு நின்ற எந்த மனிதனின் அல்லது ஸ்திரீயின் பேரிலும் எனக்கு மதிப்புண்டு.

78183 இப்பொழுது அந்த தூதன்…சோதோமில் நிகழ்ந்த அதே காரியம் மனுஷகுமாரனின் வருகைக்கு முன்னதாக, சபையில் நடக்கும் என்று இயேசுகிறிஸ்துவின் வார்த்தை முன்னுரைத்திருக்குமானால், அவர் காட்சியில் வரட்டும். 184 நான் என் முதுகை திருப்பிக் கொள்கிறேன். நீங்கள் உங்களுடைய தலையை வணங்கி ஜெபியுங்கள். நான் இதைச் செய்யும்படி ஏவப்படாதிருந்தால், எவ்வகையிலும் இதை நான் கூற மாட்டேன். அப்படிப்பட்ட ஒன்றைக் கூறுவதற்கு நான் மூடனாயிருப்பேன். ஆனால், தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவில் விசுவாசங்கொண்டு, அவரே வார்த்தை என்று நான் விசுவாசிக்கிறேனே! நாம் வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்போது, அது நமது மாமிசத்தில் தத்ரூபமாகிவிடுகிறது, ஏனெனில், “உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுக்குள்ளே இருப்பேன், நான் செய்யும் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” என்பது அவருடைய வாக்குத்தத்தமாயுள்ளது.

79185 பரலோகப் பிதாவே, இந்த செய்தியை நான் பிரசங்கித்த கூட்டத்தினருக்கு என் முதுகை திருப்பிக்கொண்டேன். தேவனே, நீர் இன்னும் தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவாய் இருக்கிறீர் என்றும், நீர் இன்னும் யேகோவா தேவனாயிருக்கிறீர் என்றும் இன்றிரவு அறியப்படட்டும் என்று நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன். நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறீர். அன்று கூடாரத்தினருகே ஆபிரகாமுடன் பேசி கொண்டிருந்தவர் நீரே. கூடாரத்தில் அந்த ஸ்திரீ தன் உள்ளத்தில் என்ன நினைத்துக் கொண்டிருந்தாள் என்று பகுத்தறிந்து அவளிடம் கூறினது நீரே. அவள் அதை மறுதலித்தபோது, நீர் அவளுடைய உயிரை எடுத்திருக்கலாம். ஆனால் அவள் ஆபிரகாமின் பாகமாக, அவனுடைய மணவாட்டியாக இருந்தாள். கர்த்தாவே, எங்கள் அவிசுவாசத்துக்காக நீர் எங்களுடைய உயிரையும் எடுத்தி ருக்கலாம், ஆனால் நாங்கள் கிறிஸ்துவின் பாகமாயிருக்கிறோம். ஆபிரகாமை புண்படுத்தாமல் நீர் சாராளின் உயிரை எடுத்திருக்க முடியாது. அவ்வாறே கிறிஸ்துவை புண்படுத்தாமல் நீர் சபையின் உயிரை எடுக்க முடியாது. கர்த்தாவே, எனக்குதவி செய்யும். எனக்கு கல்வியறிவுக் கிடையாது. நான் வெறும்…கர்த்தாவே, எனக்கு ஒன்றுமில்லை, நான் உம்மை விசு வாசிக்க மாத்திரம் செய்கிறேன். நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, இதற்கு உதவி செய்யும்.

80186 [ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறாள். வேறொரு ஸ்திரீ அதற்கு அர்த்தம் உரைக்கிறாள்—ஆசி.] ஆமென். ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. இப்பொழுது, அவர் பிரசன்னமாயிருக்கிறார். பயபக்தியாயிருங்கள், மரியாதை கொடுங்கள். 187 நீங்கள் வாஞ்சித்தால், நீங்கள் உங்கள் தலையை உயர்த்தலாம். இப்பொழுது அது மாத்திரமல்ல… பாருங்கள், அந்நிய பாஷைகளில் பேசுதல் அர்த்தம் உரைக்கப்படாலொழிய, அது உங்களுக்கு பக்திவிருத்தியை உண்டாக்குகிறதில்லை என்று வேதம் உரைக்கிறது. அதற்கு அர்த்தம் உரைக்கப்பட்டால், அது சபைக்கு தீர்க்கதரிசனமாக அமைகிறது. அர்த்தம் உரைக்கப்பட்டதை நான் எப்படியும் புரிந்துகொண்டேனென்றால், அப்பொழுது, “வார்த்தையை அனுப்பியிருக்கிறவர் கர்த்தர் என்று அவரை விசுவாசியுங்கள்” என்பதாகும். நான் என் சுய நாமத்தில் வரவில்லை, நான் அவருடைய நாமத்தில் வருகிறேன். அப்படியானால் அவருடைய வார்த்தையை என் மூலம் பிரசங்கித்து, அந்த வார்த்தையை உறுதிப்படுத்தி, என் மூலம் தமது கிரியைகளைச் செய்வார். நிச்சயமாக. நான் அதை விசுவாசிக்கிறேன். நீங்களும் அவ்வாறே விசுவாசிக்கின்றீர்களா? [சபையோர், “ஆமென்!” என்கின்றனர்.—ஆசி.] எத்தனை பேர் அதை இப்பொழுது விசுவாசிக்கின்றீர்கள், அவர் முன்பு…? தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. இப்பொழுது, அந்த விதமாகத்தான், அந்த விதமாகத்தான் உள்ளது. உங்கள் விசுவாசத்தை அதே மட்டத்தில் வைத்திருக்கும்போது ஏதாவொன்று நிகழுவதை நீங்கள் காண்பீர்கள்.

81188 நான் என் முதுகை கூட்டத்தினரிடம் திருப்பிக்கொள்ளப்போகின்றேன், ஏனெனில் அது பரிசுத்த ஆவியானவர் அதற்கு சாட்சி பகர்ந்துகொண்டிருந்ததாயிருந்தது. பார்த்தீர்களா? நீங்கள் பெலன் கொண்டு என்ன செய்ய வேண்டுமென்பதை அறிந்திருங்கள். இப்பொழுது அங்கே கூட்டத்திலுள்ள யாரேனும், நீங்கள் விசுவாசியுங்கள். என்னால் ஒருவரையும் காண முடியவில்லை…அங்குள்ள உங்களில் எத்தனை பேர் வியாதிப்பட்டும் அவதியுற்றும் இருக்கின்றீர்கள், அல்லது அவதியுற்றவர்களை கொண்டு வந்திருக்கிறீர்கள், அல்லது யாருக்காகிலும் ஜெபம் செய்துகொண்டிருக்கிறீர்களா? எனக்கு அதை குறித்து ஒன்றுமே தெரியாதென்று நீங்கள் அறிவீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். பாருங்கள், எங்கும் கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளதென்று நான் எண்ணுகிறேன். பாருங்கள், இப்பொழுது நாம் விசுவாசிப்போமாக. யாரும் எழுந்து போகவேண்டாம், போக வேண்டாம், எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள்…இப்போது—இப்போது பத்து மணிக்கு பன்னிரண்டு நிமிடங்கள் உள்ளன. எனக்கு பன்னிரண்டு நிமிடங்கள் அவகாசம் கொடுங்கள். நீங்கள் கொடுப்பீர்களா? யாரும் நகர வேண்டாம். யாருமே எழுந்து போக வேண்டாம், இப்பொழுது மிகவும் அமைதியாக உட்கார்ந்துகொண்டிருங்கள். ஒரே ஒருமுறை, உங்கள் இருதயத்தை திறந்து கொடுங்கள்.

82189 [ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகின்றார். வேறொரு சகோதரன் அதற்கு அர்த்தம் உரைக்கிறார்—ஆசி.] ஆமென். உமக்கு நன்றி, கர்த்தாவே, உமக்கு நன்றி. நாம் நம்முடைய முழு இருதயத்தோடும் அதற்கு மதிப்பு கொடுக்கிறோம். அது சபையிலுள்ள ஒரு வரம். பயபக்தியாய் ஜெபத்தில் தரித்திருங்கள். 190 நினைவிருக்கட்டும், அவர்கள் ஒருமுறை யுத்தத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, இந்த பெரிய யுத்தத்தை எவ்விதம் சந்திக்கப் போகின்றனர் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தாவீது அங்கு நின்றுகொண்டிருந்தான், அவன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இறைச்சித்துண்டையும் மற்றும் ஒருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான். ஆனால் அப்பொழுது ஒரு மனிதனின்மேல் ஆவி இறங்கினது, அவன் சத்துருவை எங்கு சந்திக்க வேண்டுமென்று தீர்க்கதரிசனம் உரைத்தான். அது அப்படியேயாயிற்று. 191 சகோதரனே, நாமும் ஒரு பெரிய யுத்தத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் பெரிய யுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறோம், ஆவி ஒருவர்மேல் இறங்கி, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று, அதாவது நீங்கள் “விசுவாசிக்க” வேண்டுமென்று உங்களிடம் உரைத்தது. அது நான் என்னும் உங்கள் எண்ணத்தை அகற்ற அவர் முயன்றுகொண்டிருக்கிறார். புரிகிறதா? உங்களில் சிலர், அது சகோதரன் பிரான்ஹாம் ஏதோ ஒன்றைச் செய்ய முயன்று கொண்டிருக்கிறார் என்று எண்ணியிருக்க வேண்டும். அது நானல்ல; அது அவர். நான் வெறும்…ஒரு வரம் என்பது உங்களைப் பரிபூரணமாய் அர்ப்பணித்தலாம், வாகனப் பல் சக்கரத்தை மாற்ற உதவும் துணைக் கருவிபோல். அது இந்த ஒலிபெருக்கியைப் போன்றது, அதை நீங்கள் இயக்கும் போது, அதன் வழியாக யாராகிலும் பேச வேண்டும். அது நான் மாற்றும் ஒரு சிறு பல் சக்கரத்தைப் போன்ற, ஒரு சிறு காரியமாயுள்ளது. பரிசுத்த ஆவி! நான் அதை மாற்றுவதில்லை; அவரே அதை மாற்றுகிறார். அதன் பின்பு அவர் பேசுகிறார்; அது நானல்ல. இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் பயபக்தியாயிருந்து விசுவாசியுங்கள், ஜெபியுங்கள்.

83192 இப்பொழுது, ஒவ்வொருவரும் வேதாகமம், “இயேசு கிறிஸ்து நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராயிருக்கிறார்” என்று கூறியுள்ளதென்றும் அறிவர். அது உண்மையானால், சபையோர் “ஆமென்” என்று கூறட்டும். [சபையோர் “ஆமென்!” என்கின்றனர்.—ஆசி.] அவர் அதே பிரதான ஆசாரியரா? “ஆமென்” என்று சொல்லுங்கள். [“ஆமென்!”] அவர் அதே பிரதான ஆசாரியராயிருந்தால், அவர் அதே விதமாக நடந்துகொள்வார். அது சரியா? [“ஆமென்!”] ஆமென். இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? 193 இப்பொழுது, என்னைத் தொடுவது, எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்காது; நான் ஒரு மனிதன். ஆனால் அவரைத் தொடுவது, அப்பொழுது இங்கு உள்ள பரிசுத்த ஆவியாகிய அவர் கிரியை செய்து மனித உதடுகளை உபயோகிக்கிறார். ஏனெனில் அவர் திராட்சை செடி, நாம் கொடிகள்; அவர் கனி கொடுக்கிறதில்லை, அவர் கொடிக்கு சத்தை மாத்திரமே அளிக்கிறார். 194 அதாவது, அப்படியே என் முதுகை நான் திருப்பிக் கொள்கிறேன், அதனால் நான் கூறியிருக்கிறக் காரியங்களை உங்களால் காணமுடியும்.

84195 இப்பொழுது, மேடையின் மேலுள்ள இந்த போதகர்கள், அவர்கள் ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர். நீங்கள் விரும்பினால், என்னை நீங்கள் பார்க்கலாம். அதனால் பரவாயில்லை. நீங்கள் காண்பதற்காக, அதாவது அவர்கள் நீங்கள் அறிந்துகொள்வதற்காக… ஏனெனில் நீங்கள்தான் மேய்ப்பர், நீங்கள்தான் இந்த ஆடுகளுக்குப் போதகராயிருக்கின்றீர்கள். எனவே நீங்கள் அறிந்து கொள்ளலாம். சகோதரரே, நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஏனெனில் நான் என்னப் பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? நீங்கள் சேவித்துக்கொண்டிருக்கிற அதே கிறிஸ்துவின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். நான் உங்கள் சகோதரனாயும், ராஜ்யத்தின் சக பிரஜையாயும், உங்களுடன் சகோதரனாயுமிருக்கிறேன். நான் இங்கு… 196 பாருங்கள், இப்பொழுது, நான் பிரசங்கித்த வார்த்தை, பாருங்கள், அது போராட்டக் குறியிலக்கில் உள்ளது. அது இப்பொழுது தோல்வியடைவதைக் காண வேண்டுமென்று சாத்தான் விரும்புவான். அதைதான் அவன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். ஆனால் தேவனோ தோல்வியடைபவர் அல்ல. பயபக்தியாயிருங்கள்.

85197 இப்பொழுது என் முதுகை திருப்பியிருப்பதோடு, நான் யாரா கிலும் ஒருவர்…நான் அதை, அதை முழுவதுமாக திருப்பிக்கொள்ளட்டும். முதலில் இந்த பாகத்துக்கு நான் திரும்பட்டும், பிறகு மற்ற பாகத்திற்கு நான் திரும்புவேன். இப்பொழுது இந்த பாகத்தில் பின்னாலுள்ள யாரோ ஒருவர்; அநேகர் ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். பின்னால் இந்த பாகத்திலும், தேவனை விசுவாசிக்க விரும்புகிற யாரோ, இப்பொழுது இங்கே பின்னால் ஜெபிக்கிறார்கள். இங்கே எங்கோ பின்பக்கத்திலுள்ளவர்கள், உங்கள் முழு இருதயத்தோடும் அப்படியே விசுவாசியுங்கள். 198 இப்பொழுதும், பரலோகப் பிதாவே, உம்முடைய எல்லா செய்திகளிலும், நீர் செய்த எல்லாவற்றிற்காகவும், உம்மை நான்—நான் மெச்சுகிறேன். கர்த்தாவே, இப்பொழுது எனக்குதவி செய்யும். நான்—நான்…விசுவாசத்தினால், உம்மையும், உம்முடைய வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன். இதைச் செய்ய உம்முடைய ஆவியானவர் என்னை அழைத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் சத்தியத்தை உரைத்திருக்கிறேன் என்று இப்பொழுது அறியப்படட்டும். உம்மைக் குறித்து நான் சாட்சி கொடுத்துள்ளேன், கர்த்தாவே நான் உண்மையைக் கூறினேன் என்று நீர் இப்பொழுது சாட்சி பகரும். நான் இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறேன். ஆமென். [ஒரு சகோதரி வேறொரு பாஷையில் பேசுகிறாள்—ஆசி.]

86199 பிதாவாகிய தேவனே, இதன் வியாக்கினாத்துக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். நீர் வேதாகமத்தில், “மூன்று சாட்சிகளாய்” இருக்கும் என்று கூறி யிருக்கிறீர், அது மூன்றாம் முறை. இங்குள்ள அர்த்தம் உரைக்கும் வரங்களைக் கொண்டயாருக்காவது இதன் அர்த்தத்தை தெரியப்படுத்த வேண்டும் என்று—என்று இப்பொழுது நாங்கள்—நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். நான் இதை உம்மிடம் கிறிஸ்துவின் நாமத்தில் விட்டுவிடுகிறேன். [ஒரு சகோதரன் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்—ஆசி.] கர்த்தாவே, உமக்கு நன்றி. 200 இப்பொழுது, அது ஒரு தீர்க்கதரிசனமாயிருந்தது, அர்த்தம் உரைக்கப்பட்டதல்ல. பாருங்கள், ஸ்திரீயைக் காட்டிலும் இவர் அதிகமாக தீர்க்கதரிசனம் உரைத்தார். அதற்கு அர்த்தம் உரைத்தல் வரப்போகின்றது. பாருங்கள், அந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார். 201 [ஒரு சகோதரன் அர்த்தம் உரைக்கிறார்—ஆசி.] ஆமென். கர்த்தாவே, உமக்கு நன்றி. எனக்கு நேராக பின்னால்… 202 [சபையிலுள்ள ஒரு சகோதரி ஜெபிக்கத் துவங்குகிறாள்—ஆசி.] தேவனே, அவள் கூக்குரலிட்ட காரியத்துக்கு அவளுக்கு ஆசிர்வாதங்களை அருள்வீராக. அப்படியே… 203 இப்பொழுது நீங்கள் உண்மையாகவே இப்பொழுது பயபக்தியாயிருந்து, அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இப்பொழுது, பரிசுத்த ஆவியின் மூலமாய், நான் பிரசங்கித்திருக்கிற வார்த்தையைக் கொண்டுவர நான் முயன்றுகொண்டிருக்கிறேன், அது நிறைவேறும் என்று அவர் சாட்சிப் பகர்ந்துள்ளார். இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள்.

87204 எனக்கு முன்னால் யாரோ ஒருவர் பின்னால் நின்று கொண்டிருக்கிறார், அவர் எனக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கிறார். அது ஒரு ஸ்திரீயாயுள்ளது. அவள் ஒரு இருதயக் கோளாறினால் அவதியுற்றுக்கொண்டிருக்கிறாள். அவளை தொல்லைப்படுத்திக்கொண்டிருக்கின்ற ஒவ்வாமைகளும் அவளுக்கு உண்டு. அவள் எனக்குப் பின்னால் இருக்கிறாள். அவள் இன்னும் எழுந்து நிற்காமல் இருந்தால்…கூட்டத்திலுள்ளோர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்; நான் என் கண்களை மூடியிருக்கிறேன். அவளுக்கு அன்பார்ந்த ஒருவர் பேரிலும் கூட அவள் அக்கறைக்கொண்டிருக்கிறாள், அது, அவளுக்கு சற்று அப்பால் உட்கார்ந்துகொண்டிருக்கும் அவளுடைய கணவர்; அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார், கையில் ஒரு பிரம்பு வைத்துள்ளார். அந்த ஸ்திரீயின் பெயர் திருமதி. பிரம்லி. உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. எழுந்து நின்று, நீ எதற்காக ஜெபித்துள்ளாயோ அதைப் பெற்றுக்கொள், நீ கேட்டுக் கொண்டதை பெற்றுக்கொள்வாய். எழுந்து நில். அவள் எழுந்து நிற்கிறாளா? [சபையோர், “ஆம்” என்கின்றனர்.—ஆசி.] 205 தேவன் உன்னை ஆசிர்வதிப்பராக. அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது, என் வாழ்க்கையில் நான் அவளை ஒருபோதும் கண்டதேயில்லை. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்தானே? அங்கு… [அந்த ஸ்திரீ “ஆம்” என்கிறாள்.—ஆசி.] இப்பொழுது அவர்களைக் கேட்டுப் பாருங்கள், அது உண்மையாவென்று அவர்களிடம் சென்று கேட்டுப் பாருங்கள். இப்பொழுது அது சோதோம் அழிவதற்கு முன்பு அங்கிருந்த அதே தேவனாயில்லையென்றால், அது என்னவென்று எனக்குத் தெரியாது.

88206 இந்த பாகத்திலுள்ள வேறு யாரோ ஒருவர் உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்கள். கர்த்தராகிய இயேசு. ஒரு ஸ்திரீ நேராக என் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு ஆழ்ந்த வாஞ்சை உள்ளது. அவளுக்கு ஒன்றைக் கொடுக்கவேண்டுமென்று அவள் தேவனிடத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கிருக்கிறாள். அவள் ஜெபித்துக்கொண்டிருப்பது, ஒரு குழந்தைக்காகவே. அவள் எனக்கு நேராக பின்னால் இருக்கிறாள். திருமதி. ஹோம், நீ எழுந்து நின்று தேவனாகிய கர்த்தரை விசுவாசி. உன் முழு இருதயத்தோடும் நீ விசுவாசித்தால், நீ ஜெபித்துக் கொண்டிருக்கும் குழந்தையை உன்னால் பெற்றுக்கொள்ள முடியும். 207 ஒரு ஸ்திரீ உள்ளே வருகிறாள், அவள் ஊனமுற்றிருக்கிறாள். அவள் ஒரு சக்கர நாற்காலியில் உட்காரந்துகொண்டிருக்கிறாள். அவள் எனக்குப் பின்னால் இருக்கிறாள். அவள் நாட்டின் இந்த பாகத்தை சேர்ந்தவள் அல்ல. அவள்—அவள் சாக்கிரமென்டோவிலிருந்து, வடக்கு சாக்கிரமென்டோவிலிருந்து வருகிறாள். அவள் மிகவும் வியாதியாயிருந்து வருகிறாள். மருத்துவர்கள் அவளுக்கு உதவி செய்ய முடியவில்லை. அவள் ஒரு மருத்துவ மனையில் இருந்துகொண்டிருக்கிறாள். அவளுக்கு பல அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. அவளுக்கு சிறுநீரகக் கோளாறு உள்ளது, அவளுடைய எலும்புகளிலும் கோளாறு உள்ளது. அவள் பதட்டமாக இருப்பதால், அது பல சிக்கல்களை விளைவித்துள்ளது. அவள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாள். அங்குள்ள திருமதி. பீலர், உன் கரத்தை உயர்த்தி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து…சுகம் பெறுவாயாக…தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக.

89208 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் இன்னமும் ஜீவிக்கிறார், அரசாளுகிறார். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் நலமாயிருக்குமே! 209 இங்கு ஒரு சிறிய ஸ்திரீ இருக்கிறாள். அவள் இங்கு உட்கார்ந்திருப்பதைக் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவள் பெருங்குடல் கோளாறினால் அவதியுற்றுக்கொண்டிருக்கிறாள். அவளுடைய பெயர், அவளை எனக்குத் தெரியாது. ஆனால் பெண்மணியே, நீ யாரென்று தேவனால் என்னிடம் கூற முடியுமென்று நீ விசுவாசிக்கிறாயா? திருமதி. பெர்க்லண்ட். உன் முழு இருதயத்தோடும் நீ விசுவாசித்தால், நீ சுகமடைய முடியும். நீ விசுவாசி. 210 இதோ இங்கு ஒரு ஸ்திரீ உட்கார்ந்துகொண்டு, விபத்துக்குள்ளான ஒரு நண்பருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். உன் முழு இருதயத்தோடும் நீ விசுவாசித்தால், நீ கேட்டுக்கொண்டுள்ளதை உன்னால் பெற்றுக்கொள்ள முடியும். 211 தலைவலியால் அவதியுற்றுக்கொண்டிருக்கிற ஒரு ஸ்திரீ அங்கு உட்கார்ந்துகொண்டிருக்கிறாள். உன்னுடைய முழு இருதயத்தோடும் நீ விசுவாசிக்கிறாயா? அப்படியானால் நீ சுகமடைய முடியும். சந்தேகப்படாதே. அப்படியே விசுவாசி. அவர் அதே தேவனாய் இராமற்போனால், அவர் யாரென்றும் எனக்குத் தெரியாது. நீ அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசிப்பாயானால், உனக்கு சுகமளிக்க இங்கே—அவர் இருக்கிறார்.

90212 [ஒரு சகோதரி வேறொரு பாஷையில் பேசுகிறாள். அதற்கு ஒரு சகோதரன் அர்த்தம் உரைக்கிறார்—ஆசி.] ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 213 நீங்கள் கர்த்தருடைய சமுகத்தில் இருக்கின்றீர்கள் என்று உணர முடியவில்லையா? நீங்கள் அதைச் செய்யுங்கள். இப்பொழுது நாம் உடனடியாக என்ன செய்ய வேண்டுமென்று நான் நினைக்கிறேனென்றால், ஆவியானவர், “என் ஜனங்களே, என்னிடத்தில் வாருங்கள், என்னை விசுவாசியுங்கள்” என்று பேசிக்கொண்டு வந்த பிறகு, நாம் பீட அழைப்புக்காக இப்பொழுதே எழுந்து நின்று, கிறிஸ்துவை அறியாதவர்கள் இங்கே முன்வந்து பீடத்தை சுற்றி நின்று, அவரை உங்களுடைய இரட்சகர்ராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் நினைக்கிறேன். நீங்கள் இதுவரை பரிசுத்த ஆவியைப் பெறாமலிருந்தால், நீங்களும் கூட பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வாருங்கள், ஏனெனில் அதுதான் சம்பவிக்க போகின்றது. பாடலுக்காக ஒரு சுருதியை நாம் பெறப்போகும் இந்நேரத்தில் நீங்கள் முன்னால் வரமாட்டீர்களா; யாராகிலும் ஒருவர் பாடலை முன்நின்று நடத்தப்போகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் பேசிக்கொண்டிருக்கிறார். சகோதரியே, தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. அது உண்மை. வேறு யாராகிலும் எழுந்து வந்து இந்த பெண்மணியுடன் இங்கே நில்லுங்கள். நீங்கள்…முன்னால் வாருங்கள், சகோதரியே, தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. அவருடைய சமுகத்தில், வேதாகமம், வார்த்தை, உறுதிப்படுத்தல், வரங்கள், இவையனைத்துமே கிரியை செய்து கொண்டிருக்கும்போது, இது இப்பொழுது மிகவும் அற்புதமாய் உள்ளதல்லவா? நேராக பீடத்தண்டை வாருங்கள். மாடியின் முன்பாகங்களிலிருந்து கீழே இறங்கி வாருங்கள். தேவனற்றவர்களாய், பரிசுத்த ஆவியினால் நிறையப்படாமல் இருப்பவர்களே, நாம் பாடும்போது இப்பொழுது வாருங்கள். இயேசு இந்த வழியாய்க் கடந்து போய்க்கொண்டிருக்கிறார், இந்த வழியாய், இன்று, இயேசு இந்த வழியாய்க் கடந்து போய்க்கொண்டிருக்கிறார், இன்று இந்த வழியாய்க் கடந்து போய்க்கொண்டிருக்கிறார். இயேசு இந்த வழியாய்க் கடந்து போய்க்கொண்டிருக்கிறார், அவர் கடந்து போய்க்கொண்டிருக்கையில், அவருடைய ஆவி அசைவாடி, “வா” என்று கூறும்போது இப்பொழுதே நீ வரமாட்டாயா? …இன்று, இயேசு இந்த வழியாய்க் கடந்து போய்க்கொண்டிருக்கிறார், அவர் இந்த வழியாய் இன்று கடந்து போய்க்கொண்டிருக்கிறார்.

91214 அவர் கடந்து போகும்போது நீ வரமாட்டாயா? அவர் உங்கள் மத்தியில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைப் பாருங்கள், அவர் மாறாதவர் என்பதைக் காண்பித்துக்கொண்டிருக்கிறார். அவரை அறியாத ஒவ்வொரு ஆத்துமாவும், மறுபடியும் பிறவாத அனைவரும் எழுந்து வாருங்கள். அவரைத் தேட இப்பொழுது நீங்கள் வரமாட்டீர்களா? அதே பரிசுத்த ஆவியானவர் உங்களை அறிந்திருக்கிறார் என்பது நினைவிருக்கட்டும். …வழியாய் இன்றைக்கு, இயேசு இந்த வழியாய்க் கடந்து போய்க்கொண்டிருக்கிறார், இந்த வழியாய், இன்றைக்கு, ஓ, இயேசு இந்த வழியாய்க் கடந்து போய்க்கொண்டிருக்கிறார், அவர் இந்த வழியாய் இன்று கடந்து போய்க்கொண்டிருக்கிறார். 215 இப்பொழுது தேவனை அறியாத ஒவ்வொரு ஆத்துமாவும் இப்பொழுது, உங்கள் நிலைமையைக் குறித்து நிச்சயமாய் அறிந்திராத ஒவ்வொருவரும் இப்பொழுது வரக்கடவர்கள். இறங்கி வாருங்கள். வேண்டாம்—வேண்டாம்…சகோதரனே, சகோதரியே, அதைக் குறித்த அறிவினால் விளைந்த கருத்தைக் கொண்டிருக்க வேண்டாம். அப்படி செய்ய வேண்டாம். நீங்கள் எந்தவிதமான ஒரு உணர்ச்சியையும் கொண்டிருந்திருக்கலாம். உங்கள் கரங்களிலும், உங்களுடைய முகத்திலும் உங்களுக்கு இரத்தம் தோன்றியிருக்கக்கூடும், உங்களுக்கு நடுக்கம் போன்றவை உண்டாகியிருக்கக் கூடும். இப்பொழுது, அதற்கு எதிராக ஒன்றுமில்லை, அதெல்லாம் சரிதான். நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசியிருக்கலாம், ஆவியில் நடனமாடியிருக்கலாம், இருப்பினும் இழந்துபோன நிலையிலிருக்கக்கூடும். அது உண்மை. அது உங்களுக்குள்ளே பிறந்துள்ள ஒரு ஜீவனாயிருக்க வேண்டும், அதுவே இந்த வார்த்தையை எடுத்து அதை மறுபடியும் புதியதாக ஜீவிக்கச் செய்கிறது. பாருங்கள், கிறிஸ்துவே வார்த்தை. நீங்கள் அந்த வார்த்தைக்குள் நகர்ந்து செல்வதற்கு மற்றும் அதை விசுவாசிப்பதற்கு இன்னும் விசுவாசத்தை பெற்றிருக்கவில்லையென்றால், நீங்கள் இப்பொழுதே வரமாட்டீர்களா?

92216 தேவனுடைய சபைக்கு, சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசிக்கத் தொடங்கி— மரத்திலுள்ள பழங்கள் பழுத்துக்கொண்டிருக்கும்போது; தேவன் அந்த மரத்தை திரும்ப அளிப்பதாகக் கூறினார், அதே பெந்தெகொஸ்தே மரம், அதே விதமான விசுவாசம், அவர்கள் பெற்றிருந்த எல்லாமே, அந்த மரம் திரும்ப அளிக்கப்படும்; அது ஸ்தாபனமின்றி, வேறெதுவுமின்றி இருக்கும், அது எளிமையான பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் வந்து, அது முன்பு செய்தவிதமாகவே வேதாகமத்தைப் போதிக்கும். கடைசி நாட்களில் ஒருவர் வந்து அந்த விசுவாசத்தை திரும்ப அளிப்பார் என்று நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இன்றிரவு பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இங்கே இருக்கிறாரென்று நான் விசுவாசிக்கிறேன். நாம் மறுபடியும் பாடும்போது, இப்பொழுது வாருங்கள், அப்பொழுது நாம் அதை அடைந்துள்ளோம் என்னும் நிச்சயத்தை உடையவர்களாயிருப்போம்.

93217 இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இந்த ஆவி…பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசுதல், அவைகளுக்கு அர்த்தம் உரைத்தல் ஆகிய உங்களுடைய வரங்களில் நிச்சயமாகவே நம்பிக்கைக்கொண்டிருக்கிறீர்களே! அவர் இங்கு செய்துள்ளதை உங்களால் விசுவாசிக்க முடியாமற்போனால், உங்களை பீடத்தண்டை அழைத்த அந்நிய பாஷைகளையும் அவைகளுக்கு உரைக்கப்பட்ட அர்த்தத்தையாகிலும் நம்புங்கள். ஒவ்வொருவரும் வரட்டும். நீங்கள் அது கிரியை செய்வதை, இது கிரியை செய்வதைக் கண்டால், அது தேவன் கிரியை செய்வதாகும், ஏன், அது தேவனே! எவ்வளவு அதிகமாய், இதோ வார்த்தை அதை இங்கே உறுதிப்படுத்தி, அது சத்தியம் என்று உரைக்கிறது. வாருங்கள். இன்னும் ஒரு முறை இப்பொழுது பாடுவோம், இப்பொழுதே நீங்கள் வாருங்கள். இயேசு இந்த வழியாய்க் கடந்து போய்க்கொண்டிருக்கிறார், இன்று, இன்றைக்கே, இயேசு இந்த வழியாய்க் கடந்து போய்க்கொண்டிருக்கிறார், அவர் இன்று இந்த வழியாய்க் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்.

94218 இப்பொழுது தேவனில் விசுவாசங்கொண்டுள்ளோர், உண்மையான பரிசுத்தவான்களான போதகர்கள் மற்றும்—மற்றும் கிறிஸ்துவின் ஊழியக்காரர் அனைவரும், நாம் மறுபடியுமாக இப்பொழுது இந்தப் பாடலைப் பாடும்போது எழுந்து வரட்டும். நீங்கள் பீடத்தனருகில் வந்து, இங்குள்ளவர்களை சூழ்ந்து நில் லுங்கள். நாம் அவர்களுடன் ஒருமித்து ஜெபம் செய்வோமாக. வாருங்கள். நீங்கள் இங்கு வரமாட்டீர்களா? அவர்கள் ஒவ்வொருவரையும் என் கரங்களை நீட்டித் தொட முடியவில்லை. நீங்கள் வரவேண்டுமென்று விரும் புகிறேன். ஊழியக்கார சகோதரராகிய உங்களில் சிலர் அவர்கள் மத்தியில் செல்லுங்கள், அதனால் நீங்கள் அவர்களைத் தொட்டு, அவர்கள் மேல் உங்களுடைய கரங்களை வைக்க முடியும். சரி. தேவனை அறிந்துள்ள நீங்கள், இங்கு வந்து சூழ்ந்து நில்லுங்கள், ஸ்திரீகளில் சிலராகிய நீங்கள் இந்த ஸ்திரீகளுடனும், மனிதராகிய நீங்கள் இந்த மனிதர்களோடும் நில்லுங்கள். இப்பொழுது இங்கு நகர்ந்து வாருங்கள். அது ஒரு—ஒரு தேவனுடைய ஓழுங்காயுள்ளது. ஜனங்களே நீங்கள், இப்பொழுது நகர்ந்து வாருங்கள். அது, அதுதான் இது, அதுதான் நேரம். உங்களில் தேவபக்தியுள்ள தாய்மார்கள் சிலரும், தேவபக்தியுள்ள சகோதரர்கள் சிலரும் இங்கு வந்து இப்பொழுது சூழ்ந்து நில்லுங்கள், எனவே நீங்கள் உங்களுடைய கரங்களை அவர்கள் மேல் வைக்க முடியும், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வார்கள் என்ற உறுதிபடுத்துதலாக உங்களுடைய கரங்களை அவர்கள் மேல் வையுங்கள். சரி. இப்பொழுது, அதுதான் இது. அதுதான் இது.

95219 இப்பொழுது, நீங்கள் ஏன் வந்தீர்கள்? நீங்கள் விசுவாசிப் பதினால். தேவன் நமது மத்தியில் இருக்கிறாரென்று நீங்கள் உறுதி கொண்டிருக்கிறீர்கள். அவர் இன்றிரவு இங்கிருக்கிறார். அவர் இங்கிருந்துகொண்டு மகத்தான அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து கொண்டிருக்கிறார். 220 ஒவ்வொருவரும் நெருங்கி வாருங்கள். ஜனங்களுக்கு அதிக இடம் இருக்கும்படியாக நெருங்கி வாருங்கள். நெருங்கி வாருங்கள். உட்பாதைகளின் வழியாக இன்னும் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர், நீங்கள் பாருங்கள். அப்படியே நெருங்கி வாருங்கள். 221 தங்கள் ஆத்தும இரட்சிப்புக்காக இப்பொழுது இங்கு நின்றுகொண்டிருக்கும் ஜனங்களின்மேல் கூட்டத்திலுள்ள எத்தனை பேர் அக்கறைக்கொண்டிருக்கிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரி. நாமெல்லாரும் இப்பொழுது ஒன்றுசேர்ந்து, நம்முடைய கரங்களை தேவனன்டை உயர்த்தி, ஜெபத்தில் இதைக் கேட்போமாக.

96222 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இந்தக் கூட்டத்தாரை இன்றிரவு உம்மிடம் கொண்டு வருகிறோம், பரிசுத்த ஆவியானவர் எங்கள் மத்தியில், பிரசன்னமாயிருந்து, தமது வார்த்தையை புதிதாக மீண்டும் ஜீவிக்கச் செய்கிறார். கர்த்தாவே, ஒவ்வொரு இருதயத்தையும் நிரப்பும். ஆவியின் வல்லமையோடு வாரும். கர்த்தாவே, இதை அருளும். ஒவ்வொரு பயத்தையும், ஒவ்வொரு பிசாசையும் துரத்தும். தேவனு டைய வல்லமையினால் அசைவாடி, இந்த ஆத்துமாக்களை ஆட்கொள் வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இவர்களை உமது மகிமைக்காக உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். 