யேகோவாயீரே 3

62-0707

சகதரன பரடரஸ, உஙகளகக நனற. நஙகள உடகரலம. கடடததன தலவரன சகதரன ஹரல எனபவரடன சறத நரம பசக கணடரநதன, அவர ஒர மஷனர எனற நன அறநதபத, எஙகளககடய பதவன கரயஙகள உணடயரநதன. அவர இபபழத ஆபபரககவலளள கலட கஸட எனனமடததறக சலலவரககறர. நனம இநத ஆணட அஙக சலல வணடமனம நகக மடயவனயரககறன. எனவ தன ஆபபரககவலரநத நன கலட கஸடகக வஜயம சயவதக கறதத, இரவரம ஒனற

யேகோவாயீரே 3

62-0707கிராஸ் வேலி கலி1071962-07-07

யேகோவாயீரே 3

62-0707கிராஸ் வேலி கலி1071962-07-07

1 சகோதரன் பார்டர்ஸ், உங்களுக்கு நன்றி. நீங்கள் உட்காரலாம். கூட்டத்தின் தலைவரான சகோதரன் ஹாரல் என்பவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன், அவர் ஒரு மிஷனரி என்று நான் அறிந்தபோது, எங்களுக்கிடையே பொதுவான காரியங்கள் உண்டாயிருந்தன. அவர் இப்பொழுது ஆப்பிரிக்காவிலுள்ள கோல்டு கோஸ்ட் என்னுமிடத்திற்கு செல்லவிருக்கிறார். நானும் இந்த ஆண்டு அங்கு செல்ல வேண்டுமெனும் நோக்க முடையவனாயிருக்கிறேன். எனவே தென் ஆப்பிரிக்காவிலிருந்து நான் கோல்டு கோஸ்டுக்கு விஜயம் செய்வதைக் குறித்து, இருவருமே ஒன்றாக சிலவற்றை செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தோம். 2 என் நாளில் நடந்த மகத்தான கூட்டங்களில் ஒன்று தென் ஆப்பிரிக்காவில் நடந்தது என்று நான் எண்ணுகிறேன். அப்பொழுது ஒரே நேரத்தில் முப்பதாயிரம் பூர்வீக சுதேசிகள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். ஆமென். அவர்கள் உண்மையாகவே அப்படி செய்தனரா என்று அறிய, அவர்கள் தங்களுடைய விக்கிரகங்களை தரையில் போட்டு உடைக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர். அவர்களும் அவைகளை உடைத்தனர். அதன் விளைவாக தூசி புயல் போன்று மேலே எழும்பினது. அவர்கள் கிறிஸ்துவை அந்த ஒரே கூட்டத்தில் தங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு நல்ல பின்-தொடருதல் அங்கே இருந்தது, எனவே அவர்கள்—அவர்கள் அவர்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் நிலைக்கும்படி செய்தனர்.

23 ஆனால் கர்த்தர் எங்களுக்களித்த மிகப்பெரிய பீட அழைப்பு…இந்தியாவில் என்பதை என்னால் நினைவுகூர முடிகிறது. அங்கு ஒரே கூட்டத்தில் ஏறக்குறைய ஐந்து லட்சம் பேர் குழுமியிருந்தனர். எங்களால்—எங்களால் சரியாக கணக்கிட முடியவில்லை; கண்கள் காணக் கூடிய தொலைவில் அவர்கள் எல்லாவிடங்களிலும் இருந்தனர். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டனர், ஆனால் பின்தொடர அங்கு ஒன்றுமேயில்லை. எனவே, உண்மையாகவே ஷியாக்கள் தங்களை சேர்ந்தவர்களையும், ஜைனர்கள் தங்களை சேர்ந்தவர்களையும் மீண்டும் எடுத்துக்கொண்டனர். கர்த்தர் அங்கு செய்த அற்புங்களைக் கண்ட பிறகும், பெரும்பாலோர் தங்கள் மார்க்கத்துக்கே திரும்பி சென்று விட்டனர் என்று நான் நினைக்கிறேன். 4 கர்த்தர் எனக்கு கொடுத்துள்ள ஊழியம் அமெரிக்காவில் பெந்தெகொஸ்தே மக்களைத் தவிர, அவ்வளவு பலனளிக்கவில்லை. பெரும்பாலான அமெரிக்க சபைகள் மிகவும் அறிவு படைத்தவை. அவர்கள் ஒரு கோட்பாட்டை நம்புகின்றனர். அவர்கள் அங்கேயே நிலைத்திருக்கின்றனர். அவர்களை அதிலிருந்து உங்களால் அசைக்க முடியாது. 5 ஆனால் ஒரு சுதேசியிடம் நீங்கள் ஒரு கோட்பாட்டைக் குறித்த ஏதோ ஒரு காரியத்தை கூற முயற்ச்சிக்கும்போது, அவன் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாதவன். அப்படியிருக்க அவனுக்கு ஒரு சுவிசேஷ கைப்பிரதியைக் கொடுப்பதனால் என்ன பயன்? அவன் ஏதாவதொன்றைக் காண வேண்டும். அவன் அதை காணும்போது, அப்பொழுது அவன் உறுதிகொள்கிறான். அவனுடைய மந்திரவாதி எழுந்து நின்று அதற்கு சவால்விடுகின்றான், ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவனை அங்கேயே மடங்கடிப்பதை அந்த சுதேசி காண்கிறான். ஆம். அப்பொழுது அது—அது யார் தேவன் என்பதைக் காண்பிக்கிறது, அப்பொழுது அது அதனைத் தீர்த்துவைக்கிறது. எனவே சகோதரன் ஹாரலை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி! நான்…நாங்கள் ஆப்பிரிக்க சுதேசிகளைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அவர் சகோதரன் டி.எல். ஆஸ்பார்ன் குழுவிலுள்ள ஒருவரை தமது செலவில் அங்கு அனுப்பினதைக் குறித்து சொல்லிக்கொண்டிருந்தார்.

36 உங்களில் அநேகருக்கு சகோதரன் ஆஸ்பார்னை தெரியும் என்று நான் யூகிக்கிறேன். ஓ, அவர் விலையேறப்பெற்ற கிறிஸ்துவின் ஊழியக்காரன். அவர் என் ஆத்ம நண்பர்களில் ஒருவர். என் இருதயத்தில் நிச்சயமாக சகோதரன் ஆஸ்பார்னைக் குறித்து ஆழ்ந்த ஒரு மதிப்பு எனக்கு உள்ளது. அவர் மிகப் பெரிய ஒரு மிஷனரி. அதற்கு… நான் சகோதரன் ஆஸ்பார்னைக் குறித்து அறிந்தமட்டில், இவ்வுலகில் மற்றெல்லாரைக் காட்டிலும் அவர் இன்று வெளிநாடுகளில் சுவிசேஷத்துக்காக அதிகம் பணியாற்றியுள்ளார் என்றே நான் கருதுகிறேன். மிகவும் இனியவர், அருமையான பையன், நான் நிச்சயம் சகோதரன் மற்றும் சகோதரி ஆஸ்பார்னையும் நேகிக்கிறேன்.

47 இன்றிரவு மாமா ஆர்கன்பிரைட் கூட்டத்துக்கு வந்துள்ளதாக அவர்கள் என்னிடம் கூறினர். மாமா ஆர்கன்பிரைட், நீங்கள் என்னிடத்திலிருந்து ஒளிந்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் மிகுதியான பெலனை நான் நிச்சயம் மெச்சுகிறேன். அவள் ஒரு அருமையான பெண்மணி என்பதில் வியப்பொன்றுமில்லை, அவர்கள் இங்கே நாட்டின் இந்த பாகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் எப்பொழுதுமே கிராஸ் பள்ளத்தாக்கை குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள். கிராஸ் பள்ளத்தாக்கை சேர்ந்த திரு. மற்றும் திருமதி. ஆர்கன்பிரைட்டை எத்தனை பேருக்கு தெரியும்? பாருங்கள், அது அருமையானது. மாமா ஆர்கன்பிரைட்டே, நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள்? உங்களை நீண்ட நாட்களாக நான் காணவில்லை, நீங்கள் மெல்ல நழுவிவிட்டீர்கள்…அதோ அவள் இருக்கிறாள். ஆம். அவர்களுடைய இருதயம் ஆசிர்வதிக்கப்படுவதாக. அவளுடைய வீடு எனக்கு இரண்டாவது வீடு, இங்கே இந்த கிராஸ் பள்ளத்தாக்கை சேர்ந்த அற்புதமான பெண்மணி. அவள் இந்த ஜனங்களுக்காக எப்பொழுதுமே ஒரு பாரம் உடையவளாயிருந்து வருகிறாள். தாய் ஆர்கன்பிரைட், நீங்கள் இங்கு வந்திருப்பது முதல் இரவாயிருக்குமானால், நீங்கள் என் மனைவியையும் மற்றவர்களையும் இன்று சந்தித்தபோது, நான் ஜெபம் செய்ய காட்டுக்கு சென்றிருந்தேன். உங்களையும், உங்கள் நண்பரையும் சந்திக்க இயலாமையைக் குறித்து நான் வருந்துகிறேன்.

58 ஆனால் வேறெந்த அமெரிக்க பட்டினத்திலும் நான் கண்டிராத ஒன்று இங்குள்ள உங்கள் ஜனங்களின் மத்தியில் நடப்பதை நான் கண்டிருக்கிறேன் என்று நான் கூறுவேன். கிறிஸ்தவர்கள் தாங்கள் தேவனுடைய வார்த்தைக்கு தவறாயுள்ளதை அறிந்துகொண்டு, எழுந்து நின்று இரக்கத்துக்காக மன்றாடுவதை நான் கண்டிருக்கிறேன். ஆம், ஒரு எழுப்புதல் இங்கு உண்டாகக் கூடும் என்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. அப்படி நிகழ்ந்தால், அது அற்புதமாயிருக்கும். நான் உலகம் முழுவதிலும், முக்கியமாக அமெரிக்காவிலும் பிரசங்கித்து வந்திருக்கிறேன். ஆனால் வார்த்தை அவர்களிடம் கொண்டுவரப்பட்டு, அது என்னவென்று காண் பிக்கப்பட்டபோது, இங்குள்ள கிறிஸ்தவர்கள் கூட்டம் கூட்டமாக எழுந்து நின்று அவர்கள் தவறென்று (சாட்சியிட்டது) போல், நான் முன்பு ஒருபோதும் கண்டதில்லை. அது மாத்திரமல்ல, அவர்களுடன் சேர்ந்து போதகர்களும் கூட. இப்பொழுது, அதுதான் உத்தமம் என்பதாகும். அது எனக்குப் பிரியம்.

69 சகோதரி ஆர்கன்பிரைட், அவர்கள் உங்களை நிற்க வைத்துவிட்டார்கள். என் மனைவியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தப்போகின்றேன். அவள் உலகிலேயே மிகுந்த பயந்த சுபாவமுள்ளவள். ஆனால் அவள் இன்றிரவு இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். தேனே, இதற்கு நீ என்னுடன் சம்ம திப்பாய் என்று நான் எண்ணுகிறேன். என் மனைவியை எழுந்து நிற்கும்படி நான் கேட்டுக்கொள்ளப்போகிறேன். உலகிலேயே அவள் எனக்கு மிகவும் இனிய பெண்மணி. [சபையோர் கரங்களைத் தட்டுகின்றனர்—ஆசி.] 10 என் பெண்பிள்ளை, என் மகள், மூத்த மகள் ரெபேக்காள். இப்பொழுது, தேனே, உன் தோல் வெயிலினால் கறுத்துள்ளதை நான் அறிவேன், ஆனாலும் நீ எழுந்து நிற்க வேண்டுமேன்று நான் விரும்புகிறேன். சரி, ரெபேக்காள். அது என் மகள் ரெபேக்காள். [சபையோர் கரங்களைத் தட்டுகின்றனர்—ஆசி.] உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. 11 எத்தனை பேருக்கு சகோதரன் ஜூவல் ரோஸைத் தெரியும்? ஒரு இரவு கூட்டம் தொடங்கின பிறகு, அவர் என் மனைவியை நான் இருந்த மேடைக்கு அழைத்தார். அவள் மயக்கமுற்று விழுந்து விடுவாள் போலிருந்தது, அவள் அவரை எங்கு கண்டாலும் பதுங்கி சென்று விடுவாள். அவர் இருக்கும் இடத்துக்கே வரமாட்டாள். அவர் எங்கே அவளை மீண்டும் மேடைக்கு அழைக்கப்போகிறாரோ என்று அவளுக்குப் பயம். 12 நான் அவளிடம், “என்றாகிலும் ஒரு இரவு நீ எழுந்து நின்று எங்களுக்கு சில வார்த்தைகள் உரைக்கும்படி கூறப்போகிறேன்” என்று கூறினேன். 13 அதற்கு அவள், “ஒரு வாளி தண்ணீரை ஆயத்தமாக வைத்திருங்கள், ஏனெனில் நான் மூர்ச்சையடைந்து விடுவேன்” என்றாள். 14 என் மனைவி, அவள் மிக அருமையான ஒரு நபர். பிரான்ஹாம் குடும்பத்துக்கு ஏதாகிலும் நன்மதிப்பு கொடுக்கப்பட வேண்டுமானால், அது அவளுக்கே சேர வேண்டும். அவள்தான் எனக்கும் பொது ஜனத்துக்கும் இடையே இருந்தவள். நன்மையாக செய்யப்பட்ட அனைத்தும், அவளே செய்ததாக கருதப்படவேண்டும்.

715 இங்குள்ள ஒவ்வொரு இளைஞனும் மணம்புரியும்போது, நானும் என் மனைவியும் ஒருமித்து கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக மகிழ்ச்சியான மணவாழ்க்கையை நடத்தி வருவதுபோன்று, அவனுக் கும் ஒரு நல்ல மனைவி கிடைத்து இருவரும் சந்தோஷமாயிருப்பார் களென்று நான் நம்புகிறேன். 16 “மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்.” சாலொமோன், “குணசாலியான ஸ்திரி தன் புருஷனுக்கு கிரீடமாயிருக்கிறாள். அநீதியுள்ளவளோ அவனுடைய இரத்தத்தில் தண்ணீராக இருக்கிறாள்” என்று கூறியுள்ளான். அவனுடைய இரத்த ஓட்டமே அவனுடைய ஜீவன். எனவே அநீதியுள்ளவள் அவன் பெற்றுக் கொள்ளக் கூடிய மோசமான ஒன்றாயுள்ளது. ஆனால் நீதியுள்ளவனோ இரட்சிப்புக்கு அடுத்தபடியாக அவன் பெறக்கூடிய மிகச் சிறந்த ஒன்றாயுள்ளது. தேவன் மனிதனுக்கு மனைவியைவிட நன்மையான ஒன்றைக் கொடுக்க முடிந்திருந்தால், அவர் கொடுத்திருப்பார், ஏனெனில் தேவன் தமது பிளளைகளுக்கு நன்மையானவைகளையே அருளுகிறர். அவர் அவனுக்கு மனைவியைத் தந்திருக்கிறார். அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 17 பெண்களை இப்படி காணும் போது, அன்றிரவு அவர்களைக் கடிந்துகொள்ள நேர்ந்தது, இந்த பெந்தெகொஸ்தே பெண்கள் உடுத்தும் விதத்தைக் குறித்தும், தலைமுடியை அலங்காரம் செய்து கொள்வதைக் குறித்தும் வேத வசனம் உண்டு. நீங்களோ, “அதனால் ஒரு வித்தியாசமுமில்லை” என்கிறீர்கள். அது நிச்சயமாக வித்தியாசப் படுத்துகிறதே!

818 நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இங்கு சகோதரன் ஹாரல் இருக்கிறார், அவர் ஒரு மிஷனரி. 19 தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனில் பெண்கள், அவர்கள் உலகிற்கு வந்தவண்ணமாக, நிர்வாணிகளாக அமர்ந்திருந்திருந்தனர்; தைக்கப்பட்ட ஒரு ஆடையும் கிடையாது, ஒரு சிறிய, சுமார் நான்கு-, ஆறு-அங்குலமுள்ள துணி மாத்திரமே அவர்களுக்கு முன்னால் இருந்தது. நிர்வாணமான அந்த நிலையில் அவர்கள் அங்கே நின்றுகொண்டிருந்தனர். இந்த மகத்தான அற்புதங்கள் மேடையில் நிகழ்ந்த பிறகு அவர்கள் எழுந்து நின்றனர். அந்த கூட்டத்தில் (ஒரே நேரத்தில்) கிட்டத்தட்ட பத்தாயிரம் முகம்மதியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். அப்பொழுது அங்கே…இந்த பெண்களும் ஆண்களுடன் எழுந்து நின்று கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். 20 சகோதரன் பாஸ்வர்த் என்னிடம், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் மறுபடியும் அந்த அழைப்பைக் கொடுக்கவேண்டுமென்று நான் நினைக்கிறேன். ‘சரீர’ சுகமளித்தல் பெற்றதன் அடையாளமாக அவர்கள் எழுந்து நிற்கின்றனர் போலும்” என்றார்.

921 நான், உண்மையாகவே பதினைந்து வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டவனாய் இதைக் கூறினேன். அது எவ்வளவு நேரம் எடுக்கு மென்று உங்ளுக்குத் தெரியும்…நீங்கள் சொன்னது என்னவென்று குறித்து வைத்துக் கொள்ளவேண்டும், அந்த நேரத்தில் அவர்கள்… நீங்கள், “பாவிகளை இரட்சிக்க தேவனுடைய குமாரன், இயேசு கிறிஸ்து வந்தார்” என்று கூறுவதாக வைத்துக்கொள்வோம். ஒரு மொழிபெயர்ப்பாளர், “ப்ளூ, ப்ளூ, ப்ளூ, ப்ளூ” என்பார். மற்றொருவர் “நிக், நிக், நிக், நிக், என்பார்.” அதற்கு “தேவகுமாரன் இயேசுகிறிஸ்து” என்று அர்த்தம். 22 உங்களுக்கு தெரியும், ஜனங்கள் அந்நிய பாஷைகளில் பேசினதை நான்—நான் கேட்டதுண்டு. அப்பொழுதெல்லாம், “அது சரியாயிருக்க முடியாது” என்று நினைத்ததுண்டு. ஆனால் வேதமோ, “அர்த்தமில்லாமல் ஒரு சத்தமும் கிடையாது” என்று கூறியுள்ளது. அப்படி ஒரு சத்தமும் இல்லை. அவர்களில் சிலர் பறவைகளைப்போல் க்ளக் என்றும், சிலர் பூச்சிகளைப் போல் கீச் என்றும் சத்தமிடுவதை நான் கேட்டேன். ஆனால் ஒவ்வொரு சத்தத்துக்கும் அர்த்தம் இருக்குமானால், அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தமுண்டு.

1023 மறுபடியுமாக நான் பேசி, மற்றவர்கள் மொழிபெயர்க்க வேண்டிய தருணம் வந்துபோது, நான், “பாருங்கள், அது ‘சரீர’ சுகமளித்தல் அல்ல என்று உண்மையாகவே இப்பொழுது அறிந்துள்ளவர்கள், கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு, செல்வதற்கு பரலோகம் ஒன்றுண்டு என்றும், நீங்கள் தேவனுடைய குமாரனில் விசுவாசங்கொண்டு, அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் உங்கள் விக்கிரகங்களை தரையில் போட்டு உடையுங்கள்!” என்று கூறினேன். அவர்கள் கீழே போட்டு உடைத்தனர். நான், “நீங்கள் இருக்கும் இடத்திலேயே அந்த தேவனிடம் உங்கள் கைகளையுயர்த்தி அவருக்கு துதியை செலுத்துங்கள், அவர் உங்களுக்கு பரிசுத்த ஆவியைத் தந்தருளுவார்!” என்றேன். 24 அவர்கள் தரையில் நின்று கொண்டிருத்தபோது, பெண்கள் நிர்வாணமாய் இருப்பதை நான் கண்டேன்; கிறிஸ்து அவர்களைத் தொட்ட மாத்திரத்தில், அவர்கள் கைகளை மடக்கி மூடிக்கொண்டு அங்கிருத்து நடந்து சென்றுவிட்டனர். அடுத்த முறை அவர்களைக் கண்டபோது, அவர்கள் உடை உடுத்தியிருந்தனர். 25 இப்பொழுது, கிறிஸ்து ஒரு அஞ்ஞானிக்கு, அவள் (நிர்வாணமாயுள்ளது) தவறென்று உணர்த்த முடியுமானால், தங்களைக் கிறிஸ்தவர்களென்று அழைத்துகொள்ளும் ஸ்திரீகள் ஆண்டுதோறும் அதிகமாக உடைகளைக் களைவதென்பது, என்னால் அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. எங்கோ ஏதோ தவறுள்ளது. 26 அங்கு முழுக்க முழுக்க ஒரு அஞ்ஞானி, தான் பிறந்த ரூபத்தில் நின்றுகொண்டு, அவள் நிர்வாணமாயிருப்பதை அறியாமலே இருக்கிறாள். ஆனால் கிறிஸ்து அவளுக்கு முன்னால் வரட்டும். அவள் நிர்வாணியாயிருப்பதை உணர்ந்து, அவளால் கூடுமானவரையில் தன்னை தன் கரங்களால் மூடிக்கொள்ள முயன்று, அவ்விடம் விட்டு நடந்து சென்றுவிடுகிறாள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அவளைக் காணும்போது, அவள் உடுத்திக்கொண்டிருக்கிறாள். 27 இப்பொழுது எங்கோ ஏதோ தவறுள்ளது, அந்த தவறு கிறிஸ்துவினிடமல்ல என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஓ, வார்த்தை பரிபூரணமானது என்று நான் எண்ணுகிறேன்!

1128 எனக்கு ஆபிரகாமினுடைய பயணம் மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடித்திருக்கும் அல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அதில் நீண்ட நேரம் நான் நிலைத்திருக்கிறேன். இன்றிரவு யேகோவா-யீரே என்னும் பொருளுக்கு வருவேன் என்று நான் எதிர்பார்க்கிறேன். இந்த பொருளை நான் மூன்று அல்லது நான்கு இரவுகளுக்கு முன்பே எடுத்தேன். ஆனால் இன்று வரை அதற்கு வர முடியவில்லை. 29 என் கூடாரத்தில் யோபுவைக் குறித்து பிரசங்கித்தபோது, அந்த ஒரே பொருளில் ஒரு ஆண்டு காலம் நிலைத்திருத்தேன். ஏறக்குறைய ஒரு ஆண்டு காலமாக ஒவ்வொறு ஞாயிறன்றும், புதனன்றும் நான் யோபின் புத்தகத்தில் நிலைத்திருத்தேன். அவனை சாம்பல் குவியலின் மேல் மூன்று நான்கு வாரங்கள் உட்கார வைத்தேன். ஒரு—ஒரு விலையேறப்பெற்ற சகோதரி, அவள், “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் எப்பொழுது யோபுவை சாம்பல் குவியலிலிருந்து தூக்கி விடப்போகின்றீர்கள்?” என்று எனக்கு எழுத போதிய தைரியம் பெற்றிருத்தாள். 30 பாருங்கள், நான் எப்பொழுது யேகோவா-யீரேவைக் காண்பதற்கு ஆபிரகாமைக் கொண்டு செல்லப்போகின்றேன் என்று நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

1231 ஆனால் எனக்கு ஒரு முக்கியமான விஷயம் இருந்தது. ஆபிரகாம்…இல்லை, யோபு அங்கு சாம்பல் குவியலில் உடகார்ந்து கொண்டிருக்க, எலிகூ பேசுகிறான்: தேவன் ஒரு பரிசுத்தவானை சோதிக்கிறார். அவனுக்கிருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டார், நான் இந்த இடம் வரைக்கும் வந்து, பிறகு முக்கியமான பொருளைக் கூற எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தினேன். அப்பொழுது கர்த்தர் சுழல்காற்றில் இறங்கிவந்தார், மின்னல்கள் மின்னத் தொடங்கின, இடிகள் முழங்கின. தேவனுடைய ஆவி தீர்க்கதரிசியின் மேல் இறங்கினது, அவன் எழுந்து நின்று, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன்” என்றான். “மீட்பர்” என்பதைக் கவனியுங்கள். “அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்பப்பேன்; அவரை நானே பார்ப்பேன், அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்.” ஓ, அது அங்கே எத்தகைய பாடமாக உள்ளது! அதை ஆணித்தரமாக பதிக்க வேண்டுமென்றால், அதிக நேரம் அவசியமாயுள்ளது, ஜனங்களை அந்த சூழ்நிலைக்கு கொண்டு வந்து, ஆவியானவர் சரியான விதத்தில் இருக்கும்போது, அதை பதியச் செய்ய வேண்டும். அப்படி செய்த பிறகு, பீடம் வரிசையிலுள்ள ஜனங்களால் நிறைந்து, அவர்கள் மனந்திரும்பினர்.

1332 நீங்கள் ஆவியானவரால் நடத்தப்பட்டால், குறி இலக்கை நோக்கி சரியாக அமையும் வரைக்கும் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அப்படி செய்யாமல் போனால், நீங்கள் அதிக உயரமாகவோ அல்லது அதிக அகலமாகவோ சுட்டுவிடுவீர்கள். நாம் வேதாகமத்தை நோக்கி குறியை சரியாக வைப்போம்! நாம் சரியாக குறிவைக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களுடன் சரியாக குறிவைத்தார்; இல்லை, சரியாகக் கூறினால் அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியை சரியாக குறிவைத்தனர். நாமும் அதே வார்த்தையைக் கொண்டு அதையே செய்ய முடியுமென்று நான் நம்புகிறேன். அது இலக்கை தவறாமல் சுடுமே! அது ஒருமுறை இலக்கின் நடுமையத்தில் சுட்டால், அது மறுபடியும் அங்கேயே சுடுமே! ஆனால் நீங்கள் சரியாக குறி வைக்கவேண்டும். நீங்கள் சுடும்போது உங்கள் மூச்சு விடுதல், இழுத்தல் எல்லாம் சரியாயுள்ளதா என்று உறுதி கொள்ளுங்கள். நானும் இலக்குகளை சுடுகிறவன். போட்டியில் சரியாக குறிவைக்கக் கூடிய துப்பாக்கியின் முக்கியத்துவம் எனக்குத் தெரியும்.

1433 ஒருமுறை எழுபத்தைந்து மாதிரி துப்பாக்கியை நான் ஒருநாள் வின்செஸ்டர் நிறுவனத்துக்கு அனுப்பினேன். என்னால் அந்த துப்பாக்கியைக் கொண்டு மூன்று…இல்லை ஐம்பது கெஜம் தூரத்தில் கால் அங்குலம் அகலமுள்ள இலக்கை சுட முடியவில்லை. வின்செஸ்டர் நிறுவனம் துப்பாக்கியை என்னிடம் திருப்பி அனுப்பி, “சங்கை பிரான்ஹாமே, இந்த துப்பாக்கி இருபத்தைந்து கெஜம் தூரத்தில் அரை அங்குலம் அகலமுள்ள இலக்கை மாத்திரமே சுடும்” என்று சொல்லிவிட்டார்கள். அந்த நிறுவனம்தான் அந்த துப்பாக்கியை செய்தார்கள். நான் வேறுவிதமாக நினைத்துக்கொண்டி ருந்தேன். நான் ஜம்பது கெஜ தூரத்தில், நேர்க்கோட்டில் ஒன்பது முளைகளை அடிந்திருத்தேன். எனவே அது சரியாக குறி வைக்கப்பட்டிருந்தது என்பதை நான் அறிந்திருந்தேன். எனவே நான் அதை சரியாக சுடும் வரையில் தொடர்ந்து முயற்ச்சித்துக் கொண்டிருந்தேன். 34 இப்பொழுது, தேவனுடைய வார்த்தையும் அவ்வாறேயுள்ளது. அப்போஸ்தலர் செய்த அந்த காரியங்கள், கிறிஸ்து வாக்களித்த அந்த காரியங்கள், இவைகளை வார்த்தையோடு ஆவியுடன் நேர்க்கோட்டில் வைத்து சுட வேண்டும். அது ஒருமுறை இலக்கை குறி தவறாமல் சுட்டால், அது மறுபடியும் அப்படி செய்ய வேண்டும், ஏனெனில் அது தேவன்! தேவன் வார்த்தையாயிருக்கிறார். அவர் தவறவே முடியாது.

1535 துப்பாக்கி இந்த விதமாக முன்னங்கையில் அதிகமாக தளர்ந்தோ அல்லது அதிக இறுக்கமாகவோ இருந்தால், உங்கள் விரலின் கனத்தை துப்பாக்கியின் மேல் போட்டு, எவ்வளவு (பிழையின்றி சுட்டாலும்) உங்கள் விரலின் கனம் அதைக் குறி தவறச் செய்துவிடும். எனவே எல்லாமே பிழையின்றி இருக்க வேண்டும். 36 நீங்கள் கிறிஸ்தவ மார்க்கத்திலும், வார்த்தை தன்னை வெளிப்படுத்தி சரியானபடி கிரியை செய்ய, அப்படித்தான் உங்களை வார்த்தையுடனும், தேவனுடனும் நேர்க்கோட்டில் சமப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது அது பிழையின்றி குறிதவறாமல் இருக்கும். அது அப்படித்தான் இருக்க வேண்டுமே! எனவே பிரசங்கிக்கும்போது சரியான விதத்தில் ஆவியை உணர்ந்து, பிறகு குறி வைக்கவேண்டும். அப்பொழுது அது நேராக இலக்கை நோக்கி சென்று அதைச் சுடும்.

1637 அநேகமுறை ஜனங்கள், “சகோதரன் பிரான்ஹாமே, உங்கள் கூட்டங்களைக் குறித்து நான் கேள்விப்படுவதில்லையே” என்கின்றனர். 38 மற்ற சகோதரர்களுக்கு உள்ளது போல் எனக்கு அதற்கு வழிகளேயில்லை. அவர்களுக்கு பத்திரிக்கைகள், அவர்களுக்கு—அவர்களுக்கு வானொலி, தொலைகாட்சி போன்றவை உள்ளன. நான் இப்படியே சென்றுகொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாய் இருக்க முயன்று வருகிறேன். ஜனங்கள் அதை காண்கின்றனர், அதை விசுவாசிக்கின்றனர், அவர்கள் சுகமடைகின்றனர். தேவன் அதை அறிந்திருக்கிறார், அது மாத்திரமே அவசியம். பாருங்கள்? நாங்கள், நாங்கள் அப்படி இல்லை…வேறு சரித்திரம் எதுவும் எழுதப்படப்போவதில்லை. அதைக் குறித்து கவலை கொள்ளாதீர்கள், சரித்திரம் எழுத நேரம் எதுவும் இருக்காது. இயேசு வருகிறாரென்று நான் விசுவாசிக்கிறேன். அதாவது, நான் அதை விசுவாசிக்கிறேன். இன்று அல்லது நாளை வருவார் என்பதுபோல இன்று நான் வாழ விரும்புகிறேன். பெரிய பள்ளிக்கூடங்கள் போன்றவைகளை அமைக்கப் போவதில்லை. அவைகளையெல்லாம் நாம் செய்து விட்டு, இயேசு வருகிறார் என்று பிரசங்கிப்பதனால் என்ன பயன்? ஏன், நம்முடைய கிரியைகளே நமக்கு விரோதமாக சாட்சியிடும். அது உண்மை. இயேசு வருகிறார், அதற்காக நாம் சபையை ஆயத்தப்படுத்துவோம்! நாம் ஆயத்தப்படுவோமாக. ஓ, அவரை நான் எவ்வளவாக நேசிக்கிறேன்!

1739 இப்பொழுது நாம் ஜெபத்துக்காக இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்குவோமாக. ஓ, ஜனங்கள் பயபக்தியாய் தலைவணங்குவதைக் காண எனக்கு எவ்வளவு பிரியம். நாம் சிறிது நேரம் அமைதியா உட்கார்ந்து ஆய்ந்து படிப்போம். இப்பொழுது நாம் நமது நேரத்தை எடுத்துக்கொள்வோம். நாளை ஞாயிற்றுக்கிழமை, ஒய்வு நாள், கிறிஸ்தவ ஒய்வு நாள். நாளை ஞாயிறு பள்ளிக்கு தாமதமாக வர விரும்பவில்லை. அதே சமயத்தில் இவைகளை துரிதமாக நோக்கவும் நாம் விரும்பவில்லை. 40 இப்பொழுது, “இன்றிரவு என் இருதயத்திலுள்ள வாஞ்சை உமது சித்தத்தின்படி உள்ளதா?” என்று ஆலோசியுங்கள். அப்படி இருக்குமானால், அதைக் குறித்த சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வாஞ்சையைக் குறித்து நீங்கள் சிந்தனை செய்து, அதை தேவனுடைய திட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அது தேவனுடைய திட்டத்தில் சரிவர அமைந்திருந்தால், அப்பொழுது உங்கள் கரங்களை தேவனிடம் உயர்த்தி, “தேவனே, என்னை நினைவுகூரும். இதுதான் என்னுடைய தேவை” என்று கூறுங்கள். ஆழ்ந்து சிந்தியுங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நல்லது. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. அது நல்லது. உங்கள் கரத்தை உயர்த்திக் கொண்டேயிருங்கள். அவர் எல்லாவற்றையும் காண்கிறார். அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அது நல்லது. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென். கர்த்தர் ஆசிர்வதிப்பாராக. அது நல்லது. அப்படியே சிந்தனை செய்து, உங்கள் கரங்களையுயர்த்துங்கள். இப்பொழுது ஒவ்வொரு கரமும் மேலே உயர்த்தப்படும்போது, நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். சரி. அது அருமையானது.

1841 பரலோகப் பிதாவே, நாங்கள் மறுபடியும் எல்லாவற்றிற்கும் போதுமான அந்த கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கிருபாசனத்தை அணுகுகிறோம். அந்த கவிஞன் கூறினது போன்று, “கிருபாசனத்தண்டையில் எனக்கு இனிமையான விடுதலை கிடைப்பதாக.” தேவனே, அவர்களுடைய இருதயங்கள் ஏதோ ஒன்றுக்காக பாரமடைந்துள்ளது. இப்பொழுது கிருபாசனத்தண்டையில் மகத்தான வைத்தியராகிய தேவன் அவர்களுக்குத் தரவிருக்கும் விடுதலையையும், அவர்களுக்கு என்ன தேவையோ, அதற்கான விசுவாசத்தையும் பெற்றுக் கொள்வார்களாக. 42 தேவனே என்னுடைய இரு கரங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. எனக்கும் தேவைகள் உள்ளன. கர்த்தாவே, என்னை நினைவுகூரும். 43 இந்த உறுமால்களுக்கு இங்கே அடையாளமாயுள்ள இந்த ஜனங்கள் எல்லோரையும் நினைவுகூரும். ஓ, இவைகளின் காரணமாக எத்தனை சாட்சிகள் வந்துள்ளன. பயபக்தி. இந்த மண் குன்றுகளுக்கு அப்பால் எங்கோ வியாதிப்பட்டுள்ள தாய்மார்களும், தகப்பன்மார்களும், சிறு குழந்தைகளும், மருத்துவமனையில் உள்ள ஜனங்கள், கண் பார்வையற்ற வயோதிப தந்தை கையில் வெள்ளை தடியைப் பிடித்து ஒரு சிறு அறையில் உட்கார்ந்து கொண்டு, இந்த உறுமால்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தேவனே, இரக்கமாயிரும். இந்த உறுமால்கள் அவர்கள் மேல் வைக்கப்படும்போது, சத்துரு தன் வல்லமையும் பெலத்தையும் இழந்துபோகவும், இவர்கள் சுகமடையவும் அருள்புரிவீராக. இங்கு ஒன்றில் “புற்றுநோய்” என்று எழுதப்பட்டுள்ளது. கர்த்தாவே, பிசாசு இந்த சரீரங்களைவிட்டு ஓடட்டும். பரிசுத்த ஆவியானவர்தாமே, தேவன், இந்த நோக்கத்துக்காக மரித்த தமது சொந்த குமாரனின் இரத்தத்தின் வழியாக கீழே நோக்கும்போது, அந்த மகத்தான பலி இன்றிரவு போதுமானதாயிருந்து, விசுவாசம் அவர்கள் மேல் அபரிமிதமாக பொழிந்து, …அதாவது அபரிமிதமாக அவர்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்ளச் செய்வாராக. கர்த்தாவே, இதை அருளும்.

1944 இப்பொழுது உமது வார்த்தையை ஆசிர்வதியும். உமது ஊழியக்காரனுக்கு உதவி செய்யும், ஆராதனைக்காக எங்களை அபிஷேகியும். கேட்கும் ஒவ்வொரு இருதயத்தையும் அபிஷேகியும். பிதாவே, இப்பொழுது நாங்கள் பேசப்போகின்றோம். நாங்கள் என்ன பேச வேண்டுமென்றும், என்ன செய்ய வேண்டுமென்றும் நீர் எங்களிடம் கூறுவீராக. கூட்டத்தில் நீர் எங்களோடு கூட இருப்பீரென்று நாங்கள் உம்மை எதிர்பார்த்துகொண்டிருக்கிறோம். 45 இன்றிரவு பாடப்பட்ட அந்த அருமையான பாடல்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இங்கு பின்னால் உள்ள இந்த வாலிபன், சகோதரன் ஹெய்மர், கலிலேயன் என்னும் அருமையான பாடலை இப்பொழுது பாடினார். அந்த கலிலேய அந்நியர்தாமே இன்றிரவு இப்பொழுது உள்ளே நடந்து வருவாராக. கலக்கமடைந்துள்ள ஒவ்வொரு சிந்தைக்கும், அவர் கொந்தளித்துக் கொண்டிருந்த கடலை நோக்கி, “அமைதியாயிரு” என்று கூறினது போன்று கூறும் அவருடைய சத்தத்தை நாங்கள் கேட்ப்போமாக. கலக்கமடைந்துள்ள ஒவ்வொரு இருதயமும் சுகமடைவதாக. நாங்கள் இயேசுவின் நாமத்தில் இதை வேண்டிக்கொள்கிறோம். ஆமென். அவன் அந்த இடத்துக்கு யேகோவா-யீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் எழுதப்பட்டுள்ளது.

2046 இப்பொழுது இந்த மகத்தான மனிதனுடைய குணாதிசயத்தைக் குறித்துப் பேச விரும்புகிறோம். நாளை…இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவு ஆபிரகாமைக் குறித்துப் பேசி முடித்துவிட முயற்ச்சிக்கப்போகிறோம். நாளை, தெய்வீக சுகமளித்தலைக் குறித்த ஒரு பொருளின் பேரில் பேசலாம். 47 கர்த்தர் இங்கு நமக்கு நல்லவராக இருந்து வந்துள்ளார். நாம் இங்கு நடந்தவைகளைக் குறித்து கூறப்பட்ட சாட்சிகளைக் கேட்டோம். மிக்க மகிழ்ச்சி! ஒரு இரவு, நாங்கள் ஒரு நீளமான ஜெபவரிசையை அழைத்தோம். அன்று இந்த கட்டிடத்தில் பெலவீனமுள்ள ஒருவரும் இருக்கவில்லை, சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்களும் கூட எழுந்து சுற்றி நடக்க ஆரம்பித்தனர். 48 இப்பொழுது ஒவ்வொரு இரவும் பரிசுத்த ஆவியானவர் தமது கம்பீரமான பிரசன்னத்துடன் உள்ளே வந்து கூட்டத்தினரின் வழியாக கடந்து சென்று, அவர் இங்குள்ளதை வெளிப்படுத்திக் காண்பித்தார். அப்படியானால், அவரை நாம் விசுவாசிக்க கடமைப்பட்டிருக்கிறோம். பாருங்கள், நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். நீங்கள் தேவனுக்கு செலுத்தக் கூடிய மிகவும் உயர்ந்த கனம், அவரை விசுவாசிப்பதேயாகும். நீங்கள் விசுவாசிக்க வேண்டும். “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்று விசுவாசிக்க வேண்டும்.” இப்பொழுது அவரை விசுவாசியுங்கள்!

2149 நான் ஆபிரகாமுடன் உங்களை பயணத்தில் கொண்டு செல்லும் காரணம், விசுவாசத்தை ஒரு மகத்தான உச்சக்கட்டத்துக்கு வளரச் செய்து, ஜனங்கள் தாங்கள் யாரென்று கண்டறியவேயாகும். 50 அதுதான் தொல்லை. நான் பிரயாணப்பட்டு செல்லும்போது, நான் இரு சாராரைக் காண்கிறேன். அவர்களில் ஒருவர் பெந்தெகொஸ்தேயினர், மற்றவர் அடிப்படைக் கொள்கையினர். இப்பொழுது, அடிப்படைக் கொள்கையினர் அவர்கள் ஸ்தானத்தில் எங்குள்ளனர் என்றும், என்னவாயுள்ளனர் என்றும் அறிந்துள்ளனர். ஆனால் அதனுடன் அவர்கள் விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லை. பெந்தெகொஸ்யிேனருக்கு விசுவாசம் உண்டு, ஆனால் அவர்கள் யாரென்று அறியாமலிருக்கின்றனர். இப்பொழுது, இது வங்கியில் பணம் வைத்து, ஒரு காசோலையை எப்படி எழுதுவதென்று அறிந்திராத ஒரு மனிதனைப் போன்றது. மற்றவனுக்கு ஒரு காசோலையை எப்படி எழுதுவதென்று தெரியும், ஆனால் வங்கியில் பணமில்லை. இவ்விருரையும் நீங்கள் ஒன்றாக இணைத்தால், ஏதாவதொன்று நிகழும். நீங்கள் பெந்தெகொஸ்தேயினரின் விசுவாசத்தையும், அடிப்படை கொள்கையினரின் உபதேசத் தையும், நீங்கள் எப்போதாவது… பெந்தெகொஸ்தேயினரின் விசுவாசத்தையும், அடிப்படை கொள்கையினரின் உபதேசத் தையும் ஒன்றாக பெற்றிருந்தால்…ஏதாவொன்று கண்டிப்பாக நிகழப்போகிறது. அது உண்மை.

2251 இப்பொழுது, நான் இங்கு எப்படியாய் ஒரு சாட்சியைக் கூற விரும்புகிறேன். ஒரு லூத்தரன் வேதாகம பள்ளியில், அவர்களிடம் பரிசுத்த ஆவியைக் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, நானூறு பேர் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறுவதைக் கண்டேன். ஓ, என்னே, அவர்கள் அதை அறியும்படி செய்தது, ஒரு மகத்தான காட்சியாயிருந்தது. அவர்கள் லூத்தரன்கள் என்னும் காரணத்தால் கைவிடப்படவில்லை. 52 லூத்தரன்கள், பாப்டிஸ்டுகள், மெதோடிஸ்டுகள், கத்தோலிக்கர்கள், நீங்கள் யாராயிருந்தாலும், அவர்களுக்கு விரோதமாக ஒன்றும் கிடையாது. இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. நான் அந்த ஜனங்களுக்கு விரோதமாக இல்லை. அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கும் அந்த முறைமைகளுக்கு விரோதமாகவே நான் பேசுகிறேன். தனிப்பட்ட நபருக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. அந்த மானிடர் அனைவருக்காகவும் கிறிஸ்து மரித்தார்; அது கத்தோலிக்கர், யூதர், அவர் யாராயிருந்தாலும் சரி. அது முறைமையாயுள்ளது. முகம்மதியர்கள், ஷியாக்கள், ஜைனர்கள் போலவே, அது எதுவாயிருந்தாலும், அது முறைமையேயாகும். புத்த மதம் ஒரு முறைமையாயுள்ளது, பாருங்கள். புத்தரை வழிபடும் ஜனங்கள் அல்ல; அந்த முறைமையே அவர்களை சத்தியத்தினின்று விலக்குகின்றது. 53 அதேக் காரியம்தான். இயேசு ஜனங்களுக்கு விரோதமாயிருக்கவில்லை. அவர் அவர்களுக்காக மரித்தார். ஆனால் அந்த முறைமைகள்தான் அவரை தூரமாய் விலக்கி வைத்துக்கொண்டிருந்தன. முறைமைகளே அவர்கள் அவரிடம் வராதபடி விலக்கி வைத்திருந்தன. அதுதான் இப்பொழுதும் நடந்து வருகிறது.

2354 இப்பொழுது ஆபிரகாமுக்கும், அவனுக்குப் பின்வரும் ஆபிரகாமினுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டிருந்தது என்பதை அறிந்தவனாய், ஆபிரகாமைக் குறித்து பேசலாமென்று நான் எண்ணினேன். இப்பொழுது நாம் இந்த பயணத்தில் சற்று பின்சென்று, ஒரு பிண்ணணிக் காட்சியைப் பெற்று, இன்றிரவு நேரடியாக பொருளுக்குச் சென்று சிறிது நேரம் அதைக் குறித்துப் பேசுவோம். 55 ஜெபம் செய்யப்பட விரும்பும் எவருக்கும் ஜெப அட்டைகள் விநியோகிக்கப்படும். நாங்கள், நீங்கள் அனைவருமே இன்றிரவு ஜெப அட்டை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், நாளை இரவு நாங்கள் அவைகளைப் பெற்றுக்கொள்ளச் செய்வோம். ஜெபம் செய்யப்பட விரும்புகிறவர் எவருமே ஜெப அட்டை பெற்றிருக்க வேண்டும். உங்கள் ஜெப அட்டையை பெற்றுக் கொள்ள நாளை ஒன்று-முப்பது மணிக்கே இங்கு வந்துவிடுங்கள், ஏனெனில் நாங்கள் அப்பொழுதே கூட்டத்தைத் துவங்க விரும்புகிறோம். பிறகு ஜெப அட்டை வைத்துள்ள ஒவ்வொருவருக்காவும் நாங்கள் நாளை ஜெபம் செய்வோம். கடந்த இரவுகளில், ஜெப அட்டைகளை வைத்திராதவர்களை நாங்கள் அணுக முயன்று வந்துள்ளோம். ஜெப அட்டைகள் வைத் திருப்பவர்களுக்கு ஜெப வரிசையில் வரும் சிலாக்கியம் உண்டாயிருக்கும். ஜெப அட்டைகள் இல்லாதவர்கள் கூட்டத்திலிருந்து அழைக்கப்படுகின்றனர். எனவே இரு சாராரும் கவனித்துக் கொள்ளப்படுகின்றனர். ஜெப அட்டையினால் ஒன்றுமில்லை. ஆனால் ஒரு நபருக்கு ஜெப அட்டையைக் கொடுக்கும்போது, நாற்பது சதவிகிதம் பேர் அப் பொழுதே சுகமடைந்துவிடுகின்றனர், நீங்கள் ஏதாவதொன்றைக் காணவோ, அல்லது ஏதாவதொன்றை பற்றிக் கொள்ளவோ ஜெபவரிசையில் வர எண்ணுகிறீர்கள். பையன் நாளை ஒன்று-முப்பது மணிக்கு ஜெப அட்டைகளை விநியோகிப்பான். மற்ற காரியங்களை கவனிக்க அவர்கள் இரண்டு மணிக்கு சென்று விட அது ஏதுவாயிருக்கும்.

2456 உங்களுக்கு படங்கள், புத்தகங்கள், ஒலி நாடாக்கள் தேவைபட்டால், அவைகளை இன்றிரவே வாங்கிக்கொள்ளவேண்டும். ஞாயிறன்று விற்பனை கிடையாது; அன்று விற்பனை செய்ய நாங்கள் அனுமதிப்பதில்லை, நாங்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு மதிப்பு கொடுப்பதனால், அன்று விற்பனை செய்வதில்லை. அந்த புத்தங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அவை என் ஊழியத்தைக் குறித்து மற்றவர்கள் எழுதியிருக்கிற புத்தங்கள். அமெரிக்க புகைப்பட சங்கத்தினரால் எடுக்கப்பட்ட புகைப்படமே அது. அது டக்ளஸ் ஸ்டுடியோ நிர்வாகத்தினரால் பதிப்புரிமை செய்யப்பட்டு அவர்களுக்குச் சொந்தமானது. புத்தங்கள் சகோதரன் கார்டன் லின்ஸ்டேவுக்கும், சகோதரன் இராணுவப் போதகர் ஜுலியஸ் ஸ்டாட்ஸ்கிலெவுக்கும் சொந்தமானவை. அவைகளை நாங்கள் வாங்கி கூட்டங்களுக்கு கொண்டு வந்து, ஏறக்குறைய வாங்கின விலைக்கே விற்று, அவைகளில் நஷ்டமாகிறோம். இதை நாங்கள் எப்பொழுதுமே கூறி வந்துள்ளோம், ஏதாவது…புத்தங்கள் விற்பனை செய்பவர்களிடம், “ஒரு ஏழை மனிதனோ அல்லது ஸ்திரீயோ அங்கு வந்து, அவர்களிடம் புத்தகம் வாங்கப் பணமில்லாமல் போனால், அவர்களுக்கு இலவசமாய் கொடுத்துவிடுங்கள். நாங்கள்…அதற்கானதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று நான் கூறியிருக்கிறேன். நீங்கள் புத்தகத்தை வாங்கிச் சென்று, அது உபயோகமில்லை என்ற நினைக்க நேர்ந்தால், அதை திருப்பிக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் செலுத்தின உங்கள் கிரயத்தை திருப்பிக் கொடுக்காமல், புத்தகத்தை உங்களிடமிருந்து திரும்ப பெற்றுக்கொள்ளமாட்டோம். இது உங்கள் விசுவாசத்துக்கு உதவி செய்யவேயாகும். அதைதான் நாங்கள் செய்ய முயன்று வருகிறேம், இல்லையென்றால் இப்புத்தகங்களை நாங்கள் அதை இங்கு விற்பனை செய்ய அனுமதித்திருக்கமாட்டோம். அது முற்றிலும் உண்மை. எனவே இன்றிரவு அவை விற்பனை நிலையத்தில் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என் அருமை நண்பர் ஒருவர் திரு. மற்றும் திருமதி. உட். அவர்களுடைய மகன் இளம்பிள்ளை வாதத்திலிருந்து எப்படி குணமடைந்தான் என்று அவர்களுடைய சாட்சியைக் கூற நேரமிருந்தால் நலமாயிருக்கும். இங்கே இன்னும் இந்த கூட்டத்தில் வந்திருந்தவர்களுக்கு அநேக காரியங்கள் நிகழ்ந்துள்ளன.

2557 இப்பொழுது நாம் ஆபிரகாமின் பிண்ணணிக் காட்சியைக் காண்போமாக. முதலாவதாக, தேவன் ஆபிரகாமை சந்தித்து, நிபந்தனையின்றி அவனுடன் உடன்படிக்கை செய்துகொண்டார். வேறெந்த காரியமும் இல்லை; ஆபிரகாம் தேவனை விசு வாசிப்பதை தவிர வேறொன்றுமே செய்ய வேண்டியதாயிருக்கவில்லை. உடன்படிக்கை முழுவதுமாக கிருபையினால் எவ்வித நிபந்தனைமின்றி அளிக்கப்பட்டது. “நீ செய்வாயானால்” என்றல்ல. தேவன், “நான் செய்துவிட்டேன்!” என்றார். இப்பொழுது ஒவ்வொரு மனிதனும்… 58 தேவனிடம் சேரும் ஆபிரகாமின் சந்ததியிலுள்ள அனைவரும் அதே வழியில் வரவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்யக் கூடியது ஒன்றுமேயில்லை! காலணிப் பட்டைகளை அணிந்து நீங்கள் எப்படி சந்திரனுக்குள் குதிக்க முடியதோ, அவ்வாறே உங்களை நீங்கள் இரட்சித்துக்கொள்ள முடியாது. உங்களை நீங்கள் இரட்சித்துக்கொள்ள முடியாது. எந்த மனிதனுமே எப்போதுமே தேவனைத் தேடினதில்லை; அது தேவன் தான் மனிதனைத் தேடுகிறதாயுள்ளது. “நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை,” என்றும் “நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்” என்றும் இயேசு கூறினார்.

2659 இப்பொழுது, முதலாவது, நீங்கள் பன்றியிடம் சென்று அது அழுக்கைத் தின்பது தவறென்று கூறமுடியுமா? உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டுபோகும்படி அது கூறிவிடும். ஆனால் அதன் சுபாவத்தை மாற்றி, அது தவறென்று உணரச் செய்ய ஏதோ ஒன்று அவசியம். அந்த பன்றிக்கு முதலாவதாக ஏதோவதொன்று சம்பவிக்க வேண்டும். 60 அதன் காரணமாகத்தான் கிறிஸ்தவர்களென்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் பல முறை சேற்றில் விழுந்து புரண்டு, பாவத்துக்கு திரும்பிச் செல்கின்றனர், ஏனெனில்… ஒரு பன்றியை நீங்கள் கழுவி, அதனுடைய நகங்களுக்கு வர்ணம் பூசி, உதட்டுச் சாயத்தையும் பூசலாம். அது என்னவாயிருந்தாலும், அது, அது தவறு. உதட்டு சாயம் தேய்ப்பது, அப்படித்தானா, அல்லது வேறெதாவதொன்றா? நான் அதை, அந்தப் பொருட்களின் பெயர்களை குழப்பிக்கொள்கிறேன். அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு வயதான பன்றிக்கு உதட்டுச் சாயம் தேய்த்து, மற்ற—மற்ற அழகூட்டும் பொருட்களை உபயோகித்து அதை அழகுபடுத்தினாலும், அது நேராக சேற்றுக்கே, மீண்டும் சேற்றுக்கே திரும்பச் செல்லும். ஏன்? அது துவக்கத்திலேயே பன்றியாக உள்ளது. அதை நீங்கள் வித்தியாசமாக்கக் கூடிய ஒரே வழி, அதன் சுபாவத்தை மாற்றுவதேயாகும். 61 அந்த ஒரு வழியில் மாத்திரமே ஒரு மனிதனோ அல்லது ஸ்தீரியோ தேவனுடன் இணைய முடியும். அவர்களுடைய சுபாவம் மாற வேண்டும். அவர்கள் கழுவப்பட்டு, பழைய மனிதனின் பாவத்துக்கு மரித்து, தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறக்க வேண்டும். கிறிஸ்துவே தேவனுடைய ஆவி, கிறிஸ்துவே வார்த்தை. அப்பொழுது அது வார்த்தையோடு சாட்சியிடுகிறது. அந்த ஒரே வழியில் மாத்திரமே நாம் அதை எப்போதும் செய்ய முடியும்.

2762 இப்பொழுது, ஆபிரகாம் தேவன் தாமே கட்டி உண்டாக்கின நகரத்துக்கு காத்திருந்தான். இன்றைக்கு நாமும் அந்நியரும், பரதேசிகளுமாய் இருந்து, தேவன் தாமே கட்டி உண்டாக்கின நகரத்துக்கு காத்திருக்கிறோம். கவனியுங்கள்! ஆபிரகாம், அவன் எதையும் அறிவதற்கு முன்னமே, அவனுக்குள் ஏதோ ஒருவகையான உள்ளுணர்வு போன்ற ஒன்று இருந்து, அந்த நகரத்துக்கு காத்திருந்தான். 63 இன்றைக்கு, நான் மனைவியுடன் வந்துகொண்டிருந்த போது, “இந்த மலையின் மேல் உள்ள இடம் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால்; அழகான காடுகளாலும் உயர்ந்த மரங்களாலும் நிறைந் திருந்த ஒரு அழகான சிறிய இடமாயிருந்திருக்கும். ஆனால் மனிதன் வந்து, அவைகளை வெட்டிப்போட்டு, ஆறுகளை மாசுபடுத்திவிட்டான். இது இங்கே வசிப்பதற்கு ஒரு அழகான ஸ்தலமாக இருந்திருக்கும்” என்றேன். ஆம், ஆனால் நீங்கள் பாருங்கள், அவன் வீடுகளைக் கட்டினான். அவர்கள் பலுகிப் பெருகத் தொடங்கினார்கள். பாவமும் வன்மையும் உள்ளே நுழையத் துவங்கியது. திரைப்படங்களின் மூலம் ஹாலிவுட் அவனுக்கு அருகாமையிலும் வந்தது, தொலைகாட்சியும் கூட சேர்ந்தது. அதனால்…இப்பொழுது ஒவ்வொரு நகரமும் மாசுபட்டு, பாவம் நிறைந்ததாயுள்ளதே! 64 நிச்சயமாக ஜனங்கள் அண்டை வீட்டாருடன் சமாதான முள்ளவர்களாயும், நீதியுள்ளவர்களாயும் வாழவேண்டுமெனும் உள்ளுணர்வு அவர்களுக்கு உள்ளதுபோல். நிச்சயமாக ஒரு நகரம் எங்கோ உள்ளது! ஆழம் ஆழத்தை நோக்கிக் கூப்பிடுகிறதே!

2865 ஆபிரகாம் தன் நாளிலிருந்த கல்தேயரின் ஊர் போன்ற நக ரங்களைக் கண்டான். அவன் தனக்குள்ளிருந்த ஏதோ ஒன்று, தேவன் தாமே கட்டி உண்டாக்கின வித்தியாசமான ஒரு நகரத்தை அழைக்கிறது என்பதை அறிந்திருந்தான். தேவன் ஆபிரகாமில் அதைக் கண்டு, “உன்னைத்தானே இப்பொழுது பிரித்துக்கொண்டு, வெளியே வா” என்றார். 66 இப்பொழுது, நீங்கள் ஆபிரகாமைக் குறித்து ஒன்றைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அவன் ஒரு எழுத்தும் பிசகாமல் தேவனுடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்தான். 67 இப்பொழுது அதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! அதுதான் என் செய்தி. நீங்கள் வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும். அதற்கு ஏதாகிலும் ஒன்று முரணாயுள்ளது என்று நீங்கள் அறிந்திருந்தால், அதை தனியே விட்டுவிடுங்கள். அது ஒருக்கால் காண்பதற்கு நன்றாயிருக்கலாம், ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் யோசனை செய்யாதீர்கள். 68 சாத்தான் செய்த முதலாவது காரியம் அதுவே. அவன் ஏவாளிடம் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான யோசனை செய்து காண்பித்தான். சாத்தான் கூறினதை ஏவாள் சிறிதேனும் சந்தேகப்படவில்லை. அவளும் யோசனை செய்தாள். சாத்தான் அதை யோசனை செய்தான். 69 இன்றைக்கு அவர்கள் அந்த விதமாகவே செய்கின்றனர். “நாம் இதைச் செய்ய வேண்டும் என்பது நியாயமானதல்லவா? அது நியாயமானதாயிருக்கவில்லையா?” அது தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக இருந்தால், அதை தனியே விட்டுவிடுங்கள்! அது சாத்தானின் சத்தம்.

2970 வார்த்தை, உங்களுக்குள் வார்த்தை இருக்குமானால்…“நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வது தெதுவோ.” பரிசுத்த ஆவி! “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்,” அதாவது வார்த்தை மாமிசமாதல், “நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ, அது உங்களுக்குச் செய்யப்படும்,” அதுதான் வழி. எல்லா கோட்பாடுகளையும், எல்லா வற்றையும் அகற்றிவிட்டு, வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள், ஏனெனில் அது கிறிஸ்து. கவனியுங்கள், அப்பொழுது அது தன்னை வெளிப்படுத்தும். 71 யாரோ ஒருவர், “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் எப்படி அதை அறிந்துகொள்கிறீர்கள்? எப்படி?” என்று கேட்டார். 72 நீங்கள் இந்த கூட்டத்தில் இங்கே காண்பவை சிறிய விஷயங்களே. இந்த கூட்டங்களுக்கு பிராயணப்பட்டு வந்துள்ள எவரும் இதை அறிவர். அநேக வாரங்களுக்கும் மாதங்களுக்கும் பிறகு நடக்க விருப்பவைகளை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தித் தருகிறார். “அது ஒரு முறையாகிலும் தவறினதா?” என்று யாரையாகிலும் கேட்டுப் பாருங்கள். அது தவற முடியாது, பாருங்கள். “அது உங்களுக்கு எப்படித் தெரியும்?” ஏனெனில் அது ஒரு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட வார்த்தையாயுள்ளது, இந்த வேளை இப்பொழுது இங்குள்ளது. அது நிறைவேறவேண்டும். இப்பொழுது, எனக்குத் தெரியாது. ஒரு சிலரே, சிறுபான்மையோர் மாத்திரமே இதை விசுவாசிப்பார்கள், ஆனாலும் அது அதேவிதமாக நடந்துகொண்டேயிருக்கும். நீங்கள் இதை கவனித்ததுண்டா? ஜனங்கள் அதை அடையாளம் கண்டு கொள்வதற்கு முன்பே, அது ஜனங்களின் தலைக்கு மேலே கடந்து சென்று, அது நிகழ்ந்து விடுகிறது. அது எப்பொழுது அவ்விதமாகவே உள்ளது.

3073 கத்தோலிக்க ஜனங்களாகிய நீங்கள், உங்கள் சபை என்ன செய்ததென்று உங்களுக்குத் தெரியுமா? ஜோன் ஆஃப் ஆர்க் ஒரு—ஒரு தேவனுடைய உண்மையான பரிசுத்தவாட்டி, அவள் தேவனுடைய அற்புதங்களைச் செய்து, தேவனைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தாள். ஆனால் நீங்கள் அவளை ஒரு மந்திரவாதியென்று அழைத்து, அவள் இரக்கத்துக்காக கூக்குரலிட்டபோது, அவளை ஒரு கழுமரத்தில் கட்டி எரித்து விட்டீர்கள். நூற்றாண்டுகள் கழிந்த பின்பு, உங்கள் தவறை உணர்ந்து, அவளை பரிசுத்தவாட்டியாக்கினீர்கள். அவள் உங்களைக் கடந்து சென்றாள், நீங்களோ அவளை அறியவில்லை. எலியா கடந்து சென்றான், அவர்கள் அவனை அறிந்துகொள்ளாமல், “ஒரு கிழப் போலி!” என்றழைத்தனர். 74 கிறிஸ்து அவர்கள் மத்தியில் கடந்து சென்றார், அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் வரைக்கும் அவரை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. தேவன் அப்படித்தான் அதை அமைக்கிறார். அது அவிசுவாசியின் கண்களை முற்றிலுமாக மறைத்துவிடுகிறது. காண்பித்த…அவர், “இதை நான் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, இதைக் கற்றுக்கொள்ளும் பாலகருக்கு வெளிப்படுத்துவேன்” என்றுரைத்தார். அப்படி செய்ததற்காக கிறிஸ்து தேவனை ஸ்தோத்தரித்தார். பாருங்கள்? உங்களைத் தாழ்த்துங்கள். இதை விசிவாசியுங்கள். வார்த்தையைப் பரிசோதித்துப் பாருங்கள். 75 இயேசு, “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. நீங்கள் இந்த வேளையை அறிந்திருக்கவேண்டும்.” என்றார். அவர் பரிசேயரை நோக்கி, “மாயக்காரரே, வானத்தின் தோற் றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? நீங்கள் என்னை அறிந்திருந்தால், என் நாளையும் அறிந்திருப்பீர்கள்” என்றார். அவர் அவர்களைக் கடந்து சென்றார். அது கடந்து செல்லும் வரைக்கும் அவர்கள் அறியவில்லை. வார்த்தை மிகவும் முக்கியமானது என்பதை இப்பொழுது கவனியுங்கள்!

3176 இதை நாம் சிந்திக்கும்போது, வேறொன்றைக் கவனியுங்கள், லோத்து. இயேசு, “லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றார். வார்த்தை அவ்வளவு முக்கியமாக இராமல், மனித யோசனையே சரியாக இருக்குமானால்; தூதன் லோத்தினிடமும் அவனுடைய குடும்பத்தினரிடமும், “சோவாருக்கு போங்கள், பின்னிட்டு பாராதேயுங்கள்!” என்று கூறினபோது, லோத்தின் மனைவி திரும்பிப் பார்க்கும் ஒரு சிறிய செயலைப் புரிந்தாள், ஆனால் அது வார்த்தைக்கு முரணாயிருந்த காரணத்தால், அவள் உப்புத் தூணாக மாறினாள். 77 அப்படியிருக்க நீங்கள், “நீங்கள் பெண்கள் தலைமுடியைக் கத்தரித்துக் கொள்வதைக் குறித்தும், இப்படிப்பட்ட ஆடைகள் அணிவதைக் குறித்தும் குறைகூறுகின்றீர்களே…?” என்கின்றீர்கள். அப்படி செய்யவேண்டாமென்று தேவன் கூறியுள்ளாரே! நீங்கள் வார்த்தையைப் பின்பற்றுங்கள். லோத்துக்கு ஒரு அருமையான மனைவி இருந்தாள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவள் வார்த்தை கட்டளையிட்டதை பின் பற்றவில்லை. லோத்து! ஏவாள் ஒரு நல்ல ஸ்திரீ யாயிருந்தாள், ஆனால் அவள் வார்த்தையின் கட்டளையைப் பின்பற்றவில்லை; அவள் அதை சற்று சிந்தித்துப் பார்த்தாள்.

3278 “சகோதரன் பிரான்ஹாமே, இதை நாம் செய்ய வேண்டும் என்பது நியாயமல்லவா? நான் ஒரு அமெரிக்க குடிமகள். எனக்கு விருப்பமானதை செய்ய எனக்கு—எனக்கு உரிமை உண்டு. அது என்னுடைய அமெரிக்க சிலாக்கியம்.” அது உன்னுடைய அமெரிக்க சிலாக்கியமாயிருக்கலாம், ஆனால் அது உன்னுடைய கிறிஸ்தவ சிலாக்கியமல்ல. கிறிஸ்தவளாயிருப்பதனால், நீ ஒரு செம்மறியாடாக இருக்கிறாய்; ஒரு செம்மறியாடு தன் உரிமையை பறி கொடுத்துவிடுகிறது. அது அமைதியாக படுத்திருந்து, அதற்குள்ள உரிமையை நீங்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் ஒரு வெள்ளாடோ அதைக் குறித்து சச்சரவு உண்டாக்கும். அது உண்மை. ஆனால் ஒரு செம்மறியாடு தன் உரிமையை பறிகொடுத்துவிடுகிறது. ஒரு கிறிஸ்தவனும் தன்னுடைய தேசிய உரிமைகள் அவனுடைய கிறிஸ்தவ உரிமைகளுக்கு முரணா யிருக்குமானால் அதை பறிகொடுத்துவிடுகிறான். 79 லோத்தினுடைய மனைவி சும்மா திரும்பிப் பார்த்தாள், [சகோதரன் பிரான்ஹாம் விரல்களைச் சொடுக்குகிறார்—ஆசி.] அது அவ்வளவுதான்! இப்பொழுது அது என்ன செய்தது? ஆபிரகாமும் லோத்தும் செய்தவை இங்கு நமக்கு எடுத்துக் கூறப்பட்டு, அவை திருஷஷ்டாந்தங்களாக அமைந்துள்ளன. அதனின்று நாம் தப்ப முடியாது. 80 எபிரேயர் 11-ம் அதிகாரம், “இந்த காரியங்கள் திருஷடாந்தங்களாக உள்ளன. ஆகையால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்க, நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தை நாம் தள்ளிவிட வேண்டும்” என்று உரைத்துள்ளது. பாவம் என்பது என்ன? அவிசுவாசம்! “நம்மை சுற்றி நெருங்கி நிற்கிற ஒவ்வொரு பாவத்தையும், தேவனைக் குறித்த எல்லா அவிசுவாசத்தையும்.”

3381 நமது கருத்துக்கு விரோதமான ஒன்றை நாம் கேட்க நேரிட்டால், “பாருங்கள், அவர்கள் அதை பிரசங்கிக்கின்றனர், அது அதுவாக இருந்தது…” என்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்யாதீர்கள்! தேவன் எதை செய்யக் கூறியுள்ளாரோ அதை செய்யுங்கள். அதன் ஒவ்வொரு எழுத்திலும் நிலைத்திருங்கள்! “அதனால் ஒரு வித்தியாசமுமில்லை” என்கிறீர்கள். 82 சரி, நான் சொல்லக்கூடிய ஒன்றே ஒன்று வார்த்தை கூறுவதையேயாகும். இயேசு மிகவும் கண்டிப்பாக, “லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.” என்றார். அவள் சும்மா தோளை அசைத்து திரும்பிப் பார்த்தாள். ஏவாள் வெறுமனமே ஒரு வினாடி நின்றாள். அவ்வளவுதான் அவள் செய்தாள். லோத்தின் மனைவி திரும்பி பார்க்க மாத்திரமே செய்தாள். ஒருவேளை…தேவன் அந்த நீதிமானாகிய லோத்தின் மனைவியை, அவளுடைய சிறு செயலின் காரணமாக, உப்புத்தூணாக மாற்றினார். அவள் அவருடைய கட்டளைக்கு கீழ்படியாமல், அது என்ன நெருப்பு என்று காண திரும்பி நோக்கினாள். அதன் விளைவாக அவள் உப்புத்தூணாக மாறினாள், தேவன் அதன் உண்மையான அர்த்தத்தில் கூறினார் என்பதற்கு அது இன்றுவரையிலும் நமக்கு மாதிரியாக நிற்கிறது. 83 ஓ, உண்மையான விசுவாசம் மாத்திரம் ஜனங்களுக்குள் நங்கூரமிடபட்டால் நலமாயிருக்குமே! “விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினால் வரும்.”

3484 ஏவாள் ஒரு வினாடி நின்றாள். அவ்வளவுதான் அவள் செய்தாள். சாத்தான் அவளை பிடித்து, அவளுடன் அதை சிந்திக்கத் தலைப்பட்டான். “அது நியாமானதல்லவா? சகோதரி இன்னார்-இன்னார் அதைச் செய்ய முடியுமென்றால், நீங்களும் கூட அதைச் செய்ய முடியுமல்லவா? அவள் போதகரின் மனைவி.” அவள் யாராயிருந்தாலும் அல்லது அவன் யாராயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாக அமைந்திருந்தால், நீங்கள் அதற்கு செவிகொடாதிருங்கள். நீங்கள் நேராக சென்று கொண்டிருங்கள்! திருஷ்டாந்தங்கள்! 85 ஆபிரகாம் அந்தவிதமாகத்தான் செய்தான். அக்காலத்து மருத்துவ விஞ்ஞானம் அவன் குழந்தை பெற முடியாதென்று அவனுடைய சிந்தனையை எவ்வளவாக தூண்டியிருக்கும்? அதுவும் அவனுக்கு எழுபத்தைந்து வயதானபோது அதைக் குறித்து என்ன? அப்பொழுது அவனுக்கு நூறு வயதானபோதும், அவன் முன்பைக் காட்டிலும் அதை அதிகமாக விசுவாசித்தான் என்று நாம் காண்கிறோம். இருபதைந்து ஆண்டுகளாக அவனுடைய விசுவாசம் வளர்ந்து கொண்டே வந்தது. அது எனக்கு பிரியம். ஆம், ஐயா.

3586 நாம் எழுந்து செல்வதற்கு முன்பு, வேறொரு விஷயத்தை நான் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நீங்கள் கவனித்தீர் களா? நீங்கள் புரிந்து கொண்டீர்களென்று நான்—நான் நம்புகிறேன். அந்த உடன்படிக்கை உறுதிப்படுத்தபடும்போது, அதை எழுதி இரண்டாக கிழித்தல், உங்களுக்கு அது புரிந்ததா? அது என்ன பொருட்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் பரிந்துகொண்டிருந்தால், நீங்கள் பரிந்துகொண்டிருந்தால், உங்கள் கரங்களையுயர்த்துங்கள். உடன்படிக்கை எழதப்பட்டு, கிழிக்கப்படுதல். தேவன் திரித்துவத்தின் வெளிப்படுத்துதலை எடுத்து, ஒருவருக்குள்ளாக வெளிப்படுத்துதல்; அதை கிழித்து, சரீரத்தை உன்னதத்துக்கு எடுத்துக்கொண்டு, சபையில் ஜீவிப்பதற்கென பரிசுத்த ஆவியை திரும்ப அனுப்பி, அந்த சரீரம் செய்ததையே, மனைவி, மணவாட்டி என்னும் முறையில் செய்தல்; அதே ஆவி, அதே கிரியை, அதே உபதேசம், ஒவ்வொரு காரியமும் சரியாக அவர் செய்திருந்தவிதமாக, அதே அடையாளம். “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” கவனியுங்கள்! ஒருக்கால் ஒரு யூதன் இங்கு உட்கார்ந்திருக்க வகையுண்டு. 87 பாருங்கள், தேவன் இந்த காரியங்களைச் செய்கிறார், அது ஜனங்களில் மத்தியில் நடக்கிறது. அதேசமயத்தில் அவர்கள் அதை புரிந்துகொள்வதில்லை. 88 பெண்கள் தங்கள் விவாகத்தின்போது ஏன் முகத்தை முக்காடிட்டுக் கொள்கிறார்கள் என்பதற்கு நான் விளக்கம் கூறினது போல். ஏன்? அவர்களுக்கு ஒரு வேளை அது புரியாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்களென்றால், அவர்கள் சரீரம் என்றும், புருஷனே அவர்களுக்குத் தலையென்றும் அதன் மூலம் அறிந்துகொள்கின்றனர். ஆகையால்தான் ரெபேக்காள் தன்னை முக்காடிட்டிருந்தாள். ஆகையால்தான் சபையும் தன்னை முக்காடிட்டுக்கொண்டு கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்க வேண்டும், ஏனெனில் அவர் தலையாயிருக்கிறார், அவர் வார்த்தையாயிருக்கிறார்,

3689 இப்பொழுது, யூதன், யாம் கிப்பூர், அவர்கள் இராப்போஜனத்தை, இல்லை பஸ்காவை ஆசரிக்கும்போது, அது ஒரு யூதனென்று எவருக்கும் தெரியும், மூடியின் கீழ் பிட்கப்பட்ட கோஷர் [அப்பத்துண்டு—மொழிபெயர்ப்பாளர்] என்று எவருக்கும் தெரியும். எனக்குத் தெரிந்த எந்த யூதனும், நான் அவனிடம் பேசினபோது, பிட்கப்பட்ட அப்பம் ஏன் அங்குள்ளது என்று விளக்கம் தரமுடியவில்லை. ஏன்? அது உடன்படிக்கை உறுதிப்படுதலாக, கிறிஸ்துவின் நொறுக்கப்பட்ட சரீரத்துக்கு எடுத்துகாட்டாய் உள்ளது, அவர் மனிதனிலிருந்து தேவனை பிரித்த போது; அவர் ஒருங்கே தேவனும் மனிதனுமாய் இருந்தார். அவர் ஆவியை மேலே எடுத்தபோது…கவனியுங்கள், இயேசு, “நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்றார். அது தேவன் அவருடைய ஜனங்களுக்குள் இருப்பது! அதே தேவன்! 90 அவர் அங்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார், அதைக் குறித்து நேற்றிரவு நாம் பேசினோம். தேவன் இறங்கி வந்தார், க-ர்-த்-த-ர் [ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில் L-o-r-d—மொழிபெயர்ப்பாளர்] என்று உள்ளது. யேகோவா-யீரே, யேகோவா-ராஃபா, யேகோவா-மனாசே, ஏலோகிம், எல்லாவற்றிற்கும் போதுமானவர், பெலமுள்ளவர், மார்பகமுள்ளவர், அவருடைய பட்டப்பெயர்கள் அனைத்தும் கொண்டவராய், மனித சரீரத்தில் வெளிப்பட்டு, மனித உணவை உண்டு, அவர்களுடைய கண்களுக்கு மறைந்துபோனார். தேவன்!

3791 இயேசு, அவர் இவ்வுலகில் வந்தபோது, “அந்த நாளில் நடந்தது போல் நடக்கும்” என்றார். தேவன்! 92 அதுவே மூடியின் கீழுள்ள பிட்கப்பட்ட அப்பம்; அவர்கள் சாப்பிடும் ஒன்றல்ல. ஆனால் பிட்கப்பட்ட ஒன்று. அவர்கள் ஏன் அதை புரிந்துகொள்ளுவதில்லை? 93 இயேசு தோல் சுருளை கையிலெடுத்து படித்தபோதும் அதேவிதமாகத்தான் இருந்தது. அவர் வசனத்தின் ஒரு பாகத்தை மாத்திரம் வாசித்துவிட்டு நிறுத்திக்கொண்டார், மற்ற பாகத்தை அவர் வாசிக்கவில்லை, ஏனெனில் அது அந்த நாளுக்கான அவரைக் குறித்த ஒன்றாயிருந்தது. அது அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்த பாகம். 94 அதன் காரணமாகத்தான் யூதர்கள் அதை புரிந்துகொள்ள முடியவில்லை, ஏனெனில் அவர்கள் குருடாக்கப்பட வேண்டியதாயிருந்தது. அவர்களுடைய மேசியா அங்கிருந்தபோதும், அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் அவர்கள் தங்களுடைய—தங்களுடைய பஸ்காவை ஆசரிக்கும்போது, பிட்கப்பட்ட அப்பம் அங்குள்ளது, அவர்களோ அதை அறிவதில்லை. ஒருமுறை நான் ஒரு ரபியைக் கேட்டேன். அவர், “அப்படி செய்வதற்கு நாங்கள் போதிக்கப்பட்டிருக்கிறோம்” என்றார். நான், “ஏன் அப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர், “எனக்கு தெரியாது, யாருக்குமே தெரியாது.” என்றார். 95 பாருங்கள், ஒரு ஸ்திரீ தன் முகத்தை முக்காடிட்டு மூடிக் கொள்கிறாள், அதேசமயத்தில் அது எதற்காக என்று அவளுக்குத் தெரிவதில்லை. அவள் தன் கணவனை தலையாக இருக்க அனுமதிப்பதற்கு பதிலாக, அவள் கணவனுக்குத் தலையாயிருக்கிறாள். அது தாறுமாறாக்கப்பட்ட ஒன்று. இப்பொழுது அதுவே அமெரிக்கா மனப்பான்மையாயுள்ளது. 96 ஆனால் பிட்கப்பட்ட அப்பத்தின் விஷயத்திலும் உள்ளது, அதுவேயாகும். அதன்பின்னர் நாம் மீண்டும் கவனிக்கிறோம், இதை நீங்கள் இங்கே மீண்டும் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது இந்தப் பிண்ணனியில் உள்ளதை இன்றிரவு நாம் பேசவிருக்கும் உண்மையான பாகத்திற்கு நாம் செல்வதற்கு முன்பு இதைக் கூற விரும்புகிறேன்.

3897 ஆபிரகாமுடனும் அவனுக்குப் பின்வரும் சந்ததியுடனும் செய்யப்பட்ட உடன்படிக்கையைக் குறித்து நேற்றிரவு பேசினது உங்க ளுக்கு ஞாபகமிருக்கும். இப்பொழுது, அது ஆபிரகாமின் மாமிசபிரகாரமான சந்ததி, விசுவாசம் செயல்பட்டதன் மூலம் அது உண்டானது; ஆனால் ஆபிரகாமின் உண்மையான சந்ததி கிறிஸ்துவே, வேதாகமம்…அவரே ஆபிரகாமின் ராஜரீக சந்ததி. இப்பொழுது கவனியுங்கள். 98 ஆபிரகாம், அவனுடைய நாளிலே சோதோம் அக்கினியால் அழிக்கப்படுவதற்கு முன்பு ஆபிரகாமுக்கும், தெரிந்து கொள்ளப்பட்ட அவனுடைய குழுவுக்கும் அடையாளம் செய்து காண்பிக்கப்பட்டது. அதாவது, தேவன் ஒரு மனித ரூபத்தில் இறங்கி வந்து, தமது முதுகை சாராள் இருந்த கூடராத்தின் பக்கம் திருப்பி, சாராள் கூடாரத்தில் என்ன கூறிக்கொண்டிருந்தாள் என்பதை உரைத்தார். இயேசு இவ்வுலகிற்கு வந்தபோது காலத்தின் முடிவில் அதே காரியம் சம்பவிக்கும் என்றார். இப்பொழுது, அதுவே ஆபிரகாமுக்கு சம்பவித்திருந்தது. 99 மேசியா வந்தபோது, அப்பொழுது அது ஆபிரகாமுடைய மாமிசப்பிரகாரமான சந்ததியாயிருந்தது. சீமோன் இயேசுவிடம் வந்தான். அவர் அவனுடைய பெயர் சீமோன் என்று அவனிடத்தில் கூறி, அவன் யோனாவின் குமாரன் என்றும் கூறி, அவனுடைய இருத யத்திலுள்ள இரகசியத்தை அறிந்து எடுத்துரைத்தார். பிலிப்புவிடம் கூறினதோ…இல்லை பிலிப்பு அழைத்து வந்த நாத்தான்வேலிடம், “நீ மரத்தின் கீழிருந்தபோது உன்னைக் கண்டேன்.” என்றார். கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயிடம், “உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்” என்றார். அதற்கு அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன்” என்றாள். பாருங்கள், ஆபிரகாமின் மாமிசப் பிரகாரமான சந்ததி முடிவிலே அந்த அடையாளத்தைப் பெற்றது. 100 ராஜரீக சந்ததியாகிய கிறிஸ்துவினால், அந்த ராஜரீக சந்ததி, தங்களுடைய முடிவின் நாட்களில், அதேக் காரியத்தை பெற்றுக்கொள்ளும் என்று முன்னுரைக்கப்பட்டது. இப்பொழுது நீங்கள் அதை புரிந்துகொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

39101 அவனை மாற்றினார். கவனியுங்கள், தேவன் ஆபிரகாமினுடைய பெயரை மாற்றினார். நான் அதை இங்கு விட்டுவிடுவது நலம். நான் நீண்ட எழுப்புதல் ஒன்றுக்கு திரும்பி வரும்போது, நாம் அதைக் குறித்துப் பார்க்கலாம். பூமிக்குரிய அவனுடைய பெயரை தேவனால் அளிக்கப்பட்ட ஒரு பெயருக்கு அவர் மாற்ற வேண்டியதாயிருந்தது. 102 நீங்கள், “மனிதனுடைய பெயர் நமக்கு எவ்வகையில் முக்கியம் வாய்ந்தது, ஏதாகிலும் அப்படி உண்டா?” என்கிறீர்கள். ஓ, சகோதரனே, நீங்கள் மாத்திரம் அறிந்திருந்தால் நலமாயிருக்குமே! ஏன், நாம் பெற்றுள்ள இந்த சில நவீன பெயர்கள்! அவைகளைக் கூற எனக்கு விருப்பமில்லை, ஏனெனில் அது உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும். ஆனால் தேவன் அர்த்தமுள்ள பெயர்களை வைத்திருக்கிறார், அது பாதை முழுவதையுமே மாற்றிவிடுகிறது. ஓ, நீங்கள், “மூடத்தனமாயுள்ளதே!” எனலாம். 103 யாக்கோபைக் குறித்து என்ன—என்ன? அவன் தேவனுக்கு முன்னால் ஒரு பிரபுவாக ஆவதற்கு முன்பு, அவனுடைய பெயர் யாக்கோபு என்பதிலிருந்து இஸ்ரவேல் என்று மாற்றப்பட வேண்டியதாயிருந்தது. அது சரியா? நிச்சயமாக. பவுலும் அப்படித்தான்; அவனுடைய பெயர் சவுல் என்பதிலிருந்து பவுல் என்று மாற வேண்டியதாயிருந்தது. ஓ, தேவன் அவர்களுடையப் பெயர்களை மாற்றின எத்தனையோ பேர்களை நாம் கூறிக்கொண்டே செல்லலாமே! ஆபிராம் என்பதிலிருந்து ஆபிரகாம், சாராய் என்பதிலிருந்து சாராள் என்று அவர்களுடைய பெயர்கள் மாறுகின்றன, ஓ, என்னே! ஒரு சிறு சபையிலுள்ள தெரிந்துகொள்ளப்பட்ட குழுவிடம் இதை போதித்து, தேவன் செய்வதை நீங்கள் காணும்போது, உங்கள் இருதயங்களில் எழும் அல்லேலூயாக்களைக் காண்பது எவ்வளவு ஆசிர்வாதமாயுள்ளது.

40104 இப்பொழுது, நேற்றிரவு நான் “வரிகளுக்கிடையே அடங்கியுள்ள மறைபொருள்” மற்றும் “அதை உறுதிப்படுத்துதல்” ஆகியவைகளுக்கு விளக்கம் அளித்தேன். என் பொருளுக்கு நான் செல்வதற்கு முன்பாக அதை மறுபடியும் நான் கூற விரும்புகிறேன். அதாவது, தேவன் ஆபிரகாமையும் சாராளையும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை அவர்கள் பெறுவதற்கு முன்னர், வயோதிப, சுருக்கம் விழுந்த நிலையிலிருந்து இளம் தம்பதிகளாக மாற்றினார். அவர்கள் பெற்ற கடைசி அடையாளம், தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டு, அவருக்குப் பின்னால் கூடாரத்திலிருந்த ஒரு ஸ்திரீயின் இருதயத்திலுள்ள இரகசியத்தை அறிந்துகொண்டதேயாகும். அடுத்ததாக நிகழ்ந்தது, அவர்களுடைய சரீரங்கள் மாற்றப்பட்டன. இப்பொழுது, நேற்றிரவு அதிக தாமதாகிக்கொண்டே சென்றது, சிலர் அதைக் குறித்து யோசித்ததை என்னால் உணர முடிந்தது. எனவே இதை இன்னும் சிறிது விளக்க விரும்புகிறேன். 105 இப்பொழுது, அதற்கான நிரூபணம் என்னவெனில், அவர்கள் முற்றிலும் மாற்றப்பட்டிருந்தபடியால், இருவரும் நீண்ட பிரயாணம் செய்தனர். வேதாகமம், “அவர்கள் இருவரும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள். ஆபிரகாமின் சரீரம் செத்துப் போயிருந்தது, சாராளின் கர்ப்பமும் செத்துப்போயிருந்தது” என்றுரைத்துள்ளது. அது சரியா? அவர்கள் செத்துப் போயிருந்தனர் என்று நாமறிவோம், ஆனால் தேவன் அவர்களை மாற்றினார். அப்படி அவர் செய்தார் என்பதை உங்களுக்கு இப்பொழுது நிரூபிக்கிறேன். முதலாவதாக, ஏன் அந்த பெலிஸ்தியன் (இல்லை இல்லை ஒரு…), ஆம், அது ஒரு பெலிஸ்திய ராஜாவாயிருந்தது என்று நான் நினைக்கிறேன். வயோதிக பெண்மணியாகிய சாராள் மேல் காதல் கொள்ள வேண்டும்? அவள் காண்பதற்கு அழகாயிருந்தாள்.

41106 வேறொரு காரியம். ஈசாக்கு பிறந்த பிறகு, ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்து மரிக்க வேண்டிய தருவாயில் இருந்தனர். ஆனால் அவர்கள் அதற்குப் பின்பும் அநேக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தனர், ஈசாக்கு தன் நாற்பதாம் வயதிலே விவாகம் செய்துகொண்டான்; சாராள் மரித்தாள். ஆபிரகாம் கேத்தூராள் என்னும் ஒரு பெண்ணை விவாகம் செய்து, அதற்குப் பிறகு அவள் மூலம் குமாரத்திகளைத் தவிர ஐந்து, ஆறு குமாரர்களைப் பெற்றான்; ஆனால் இங்கு அதற்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அவன் செத்ததற்கு சமமாயிருந்தானே! கே-த்-தூ-ரா-ள், கேத்தூராள். அதன் பிறகு ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் கழித்து அவன் கேத்தூராளை மணந்து, தனக்கு குமாரத்திகளைத் தவிர ஆறு குமாரர்களையும் பெற்றான்; ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அவன் செத்தவனைப் போலிருந்தான். அல்லேலூயா! அங்குதான் உங்கள் காரியம் உள்ளதே! தேவனுடைய வாக்குத்தத்தம் நிச்சயமானது. ஆமென். ஓ, அது எனக்குப் பிரியம்! 107 நீங்கள் தனியே சென்று அதை படியுங்கள்! இன்று காட்டில் வேதத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது, எனக்கு ஒரு சிறு வெளிப்பாடு கிடைத்தது, நான் அதை விவரிக்க விரும்புகிறேன்.

42108 இஸ்ரவேலர். தேவனுடைய ஜனங்கள் ஒரு சமயம் எகிப்தில் அடிமைகளாக விற்கப்பட்டிருந்தனர், அவர்கள் அங்கிருந்ததை தவிர்க்க முடியவில்லை. தேவனுடைய மகத்தான முன்குறிப்பின் திட்டம் அவர்களை அங்கு அனுப்பினது. அவர்கள் ஒரு அந்நிய தேசத்தில் நானூறு ஆண்டுகள் பரதேசிகளாய் சஞ்சரிப்பார்கள் என்று அவர் ஆபிரகாமிடம் கூறியிருந்தார். அவர்கள் அங்கு மற்ற உலக ஜனங்களைப் போலானார்கள், அவர்கள் அடிமைகளாக அங்கிருந்தனர். ஒரு எகிப்தியன் எபிரேயப் பெண்களை கற்பழிக்க நினைத்தால் அவனை யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. எபிரேய வாலிபர்களை அவர்கள் கொல்ல நினைத்து, அவர்களைக் கொன்றால், யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. அவர்கள் அங்கு அடிமைகளாயிருந்தனர். அவர்கள் பூசணமான ரொட்டியை அவர்களிடம் எறிவார்கள், விருப்பமானால் அவர்கள் புசிக்கலாம், இல்லையென்றால் புசிக்காமல் இருந்துவிடலாம்; அவர்கள் குறை கூறினால் கொல்லப்படுவார்களே! தேவனுடைய ஜனங்களுக்கு என்னே ஒரு இடம்!

43109 ஆனால் ஒருநாள், அல்லேலூயா, தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த தம்முடைய வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்தார். மகிமை! இப்பொழுது நான் மறுபடியும் பக்தி பரவசப்படுகிறேன். கவனியுங்கள், தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த தம்முடைய வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்தார். அவர் ஒரு தீர்க்கதரிசியின் மேல் அக்கினி ஸ்தம்பத்தை வைத்து, அவனை அபிஷேகம் செய்தார். அவன் தேசத்துக்குள் வந்து, தவற முடியாத தேவனுடைய வாக்குத்தத் தத்தை அவர்களுக்கு நினைவுபடுத்தத் துவங்கினான். தேவன் தமது வார்த்தையை ரூபகாரப்படுத்த அங்கிருந்தார். உண்மை. தேவன் அவர்களுக்கு அளித்திருந்த பாலும் தேனும் ஒடுகிற தேசத்தைக் குறித்து அவன் அவர்களிடம் கூறினான். அக்கினி ஸ்தம்பத்தை தன் தலைக்குமேல் கொண்டிருந்த அந்த தீர்க்கதரிசியினுடைய சாட்சியின் ஆதாரத்தின் பேரில் அவர்கள் எகிப்திதை விட்டு வெளிநடந்தனர், ஏனெனில் அவன் தேவனால் அனுபபப்பட்டவன். தேவன் அவனோடு கூட இருந்தார் என்பதை நிரூபித்திருந்தார்.

44110 இப்பொழுது அவர்கள் காதேஸ்பர்னெயா என்று அழைக்கப்பட்ட ஒரு இடத்துக்கு வந்தனர். காதேஸ்பர்னெயா, ஒரு சமயம் அது உலகின் நியாயாசனமாக விளங்கினது. அவர்களுக்கு மத்தியில் யோசுவா என்னும் பெயர்கொண்ட ஒரு போர்வீரன் இருந்தான். எபிரேய மொழியில் யோசுவா என்னும் சொல்லுக்கு “யேகோவா-இரட்சகர்” என்று பொருள். யோசுவா, ஒரு சிறந்த போர்வீரன்…இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள், இவர்கள் அந்த தேசத்தைக் கண்டதில்லை, இவர்கள் அதைக் குறித்து மாத்திரம் கேள்விப்பட்டிருந்தனர். இப்பொழுது உங்களுக்கு அந்த உதாரணம் புரிகின்றதா? அவர்கள் அந்த தேசத்தைக் குறித்து மாத்திரம் கேள்விப்பட்டிருந்தனர். இந்த தேசத்துக்கு செல்வதற்கென அவர்கள் எல்லாவற்றையும் விட்டனர், ஏனெனில் கர்த்தருடைய வார்த்தை அவர்களிடம் கொண்டு வரப்பட்டு, அவர்கள் அந்த தேசத்துக்கு செல்லும் தங்களுடைய பாதையில் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தினது. தங்களுடைய பாதையில் சென்று கொண்டிருக்கும் சபைக்கு இது என்ன ஒரு மாதிரியாயுள்ளது, அதைக் குறித்து ஒன்றுமே அறியாமலிருக்கிறது, அவர்களில் யாருமே அங்கு சென்றிருந்திருக்கவில்லை. ஆனால் யோசுவா, அவர்கள் காதேஸில் எல்லைக்கு அருகாமையில் வந்தபோது, அந்த தேசத்துக்கு சென்று திரும்பி வந்த ஒருவனின் காரணமாக நியாயந்தீர்ப்பு இஸ்ரவேலரின் மேல் விழுந்து. அந்த இடம் நியாயசனமாக விளங்கினது. யோசுவா யோர்தனைக் கடந்து வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்துக்குள் சென்று, தேவன் கூறினவாறே அது சரியாக அமைந்திருந்தது என்பதற்கு அத்தாட்சியைக் கொண்டு வந்தான். அந்த பேரின்ப தேசத்தில் விளைந்த திராட்சை பழங்களை அவர்களால் ருசிபார்க்க முடிந்தது.

45111 இப்பொழுது, அவர்களுக்கு அங்கு ஒரு வீடு இருக்குமென்றும், அவர்கள் சுயதீனமாயிருந்து, தங்கள் பிள்ளைகளை பண்போடும், தேவபக்தியிலும் வளர்க்கலாமென்றும், அவர்களுக்கு ஒரு சபை, இன்னும் மற்றவை இருக்குமென்றும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது. அவர்கள் அடிமைகளாயிருப்பதிலிருந்து விடுதலையாகி, அந்த தேசத்திற்குள் கடந்து சென்று வீடுகளைப் பெற்றுக்கொள்ள அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி கொண்டிருந்தனர். கவனியுங்கள். ஆனால் அவர்கள் கடந்து சென்று, தங்கள் வாழ்க்கையை நடத்தியிருந்தால், அது ஒரு மகத்தான காரியமாயிருந்திருக்கும். ஆனால் முடிவில் மலைபாகங்கள் கல்லறைகளினால் மூடப்பட்டு நிறைந்தன. அவர்கள் வயது சென்று மரித்தனர், வயதாகி மரித்தனர். தேவனுடைய ஜனங்கள். 112 அதன்பின்னர் ஒருநாள் அவர்களெல்லாரைக் காட்டிலும் மிகப்பெரிய மற்றொரு வீரர் தோன்றினார், யேகோவா-இரட்சகர், இயேசு , அவர் இங்கு வந்து, “மரணத்துக்கு அப்பால் ஒரு வாழ்க்கை உண்டே! என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்கு சொல்லியிருப்பேன். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன், நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்வேன்.” என்றார். இந்த மகத்தான வீரர் அவருடைய காதேஸ்பர்னெயாவுக்கு, நம்மெல்லாருக்கும் நியாயாசனமாக விளங்கும் கல்வாரிக்கு வந்தாரே! அங்கு நம்முடைய அக்கிரமங்கள் எல்லாவற்றையும் அவர் மேல் சுமந்துகொண்டார். நாம் மரணம் என்றழைக்கும் அந்த யோர்தான் நதியை அவர் கடந்து சென்றார். யோசுவா மறுபடியும் நதியைக் கடந்து திரும்பி வந்தது போன்று, அவர் மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து, “மரித்துப்போன ஒரு மனிதன் மறுபடியுமாக உயிர் பெறமுடியும்” என்னும் அத்தாட்சியைக் கொண்டு வந்தார்.

46113 அவர் இன்னும் அதை உங்களுக்கு…ஊர்ஜிதப்படுத்த, “நீங்கள் எருசலேம் நகரத்துக்குப் போய் அங்கு காத்திருங்கள். அதற்கு அத்தாட்சியாக உங்களுக்கு முன் தொகையை கொடுக்க போகிறேன்” என்றார். அவர்கள் எருசலேம் நகரத்துக்குச் சென்று, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல நித்திய ஜீவன் வரும் வரைக்கும் காத்திருந்தனர். 114 அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இன்றைக்கு, நாம் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறோம் என்னும் அந்த அத்தாட்சியைப் பெற்றிருக்கிறோம். நமது யோசுவா அந்த அத்தாட்சியைக் கொண்டு வந்தார். நமக்கு அவர் கொண்டு வந்த தேவனுடைய பரம ஈவை நாம் ருசி பார்த்தவர்களாய், வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இதை கவனியுங்கள், எவ்வளவு அற்புதமானது! நீங்கள் ஒரு காலத்தில் எங்கிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள். குடிக்காரர்கள்…

47115 இன்றைக்கு ஒரு சகோதரனை சந்தித்தேன்; ஒரு குறிப்பிட்ட தெரு வழியாக செல்ல வேண்டுமென்று எனக்கு ஒரு வினோதமான உணர்ச்சி தோன்றினது. அந்த மனிதனின் பெயர் என்ன என்பது எனக்கு மறந்துவிட்டது. ஒருக்கால் அவர் இந்த கூட்டத்தில் இருக்கலாம். அதேசமயத்தில் அப்படி அவர் இல்லையென்றால், ஏன், தேவன் அவருக்கு நல்லவராயிருந்தாரே. அவர் ஒரு இந்தியன், பாதி இந்தியன். அவர் வெர்ஜினியாவைச் சேர்ந்தவர். பரிசுத்த ஆவியானவர் அதைக் குறித்து என்னிடம் ஒன்றும் கூறவில்லை. நான் என்னுடைய மனைவியை வெளியே அனுப்பிவிட்டிருந்தேன். “ இந்த வழியாக போ, இந்த மூலையில் திரும்பு.” என்றார். நான் அங்கு சென்றேன், ஓ, அநேக முறை அது நிகழ்கிறது. அவர், “ இங்கு காத்திரு.” என்றார். அதன்பின்னர் அங்கு சில நிமிடங்கள் காத்திருந்தேன். அப்பொழுது அவர், “நீ திரும்பி இந்த வழியாகப் போ.” என்றார். நான் அவ்வாறு சென்றபோது, நான் இவரைச் சந்தித்தேன். 116 அவர், “சகோதரன் பிரான்ஹாமே, உங்களை எனக்குத் தெரியும்,” என்றும், “ஒருமுறை உங்களைக் காண நான் ஜெபர்ஸன்வில்லுக்கு வந்திருந்தேன்” என்றும் கூறினார். நான்…அவர், “நீங்கள் வெளிநாடு சென்றிருந்தீர்கள்” என்றார். ஆனால் அவர் தமது வாழ்க்கையில் குடிகாரனாயிருந்தார். நான் அவருடைய கையைப் பிடித்தேன், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை அவர் அறியாமலிருந்தார். அவருடைய ஈரலானது ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது. நான் அவர் கையைப் பிடித்து அங்கு நின்றுகொண்டிருந்தபோது, அந்த அதிர்வு என்னைவிட்டு அகன்றது. என்ன? அவர் சுகமடைந்தார். உங்களுடைய நகரத்தில் அந்த தெரு மூலையிலேயே, அவர்கள் அதை கேட்டறிகிறார்கள்.

48117 அந்த மனிதன் யாரென்று எனக்குத் தெரியாது…அவர் இங்குள்ளாரா? எனக்குத் தெரியவில்லை. அவர் இங்கிருப்பாரானால், அவர்…எனக்குத்—எனக்குத் தெரியவில்லை. அவர்—அவர் வீடு திரும்ப வேண்டுமென்றிருந்தார் என்று அவர் கூறியிருந்தார். அவர் போக வேண்டியதாயிருந்தது என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு—ஒரு இந்தியர், அவர் ஒரு—ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை மணம் புரிந்துள்ளார். அவர் வெர்ஜினியாவைச் சேர்ந்தவர். அவருடைய பெயர் என்னவென்று எனக்கு மறந்துவிட்டது. அவர் இங்கு லோகார் என்னுமிடத்தில் அல்லது அப்படி ஏதோ ஓரிடத்தில் வசிக்கிறார். அவர் அவ்வளவு தூரம் பயணம் செய்து ஜெபர்ஸன்வில்லுக்கு வந்தார். ஆனால் அவருக்கு அந்த தெரு மூலைக்கு நடக்க வேண்டுமென்ற உணர்வு தோன்றினது; பரிசுத்த ஆவியானவரோ என்னிடம், “ இந்த வழியாகப் போ” என்றார். ஓ, தேவனே, இரக்கமாயிருமே! அங்குதான் காரியமே உள்ளது. 118 அப்படிப்பட்ட காரியங்கள் நிகழ்வதை நான் கண்டதையும் அங்கு செய்யப்பட்டவைகளையும் நான் உங்களிடம் மணிக்கணக் காக எடுத்துரைக்க முடியும். ஏன்? நமது மகத்தான வீரராகிய இயேசு கடந்து சென்று, தேசத்தை வென்று, மரணத்தை வென்று, பாதாளத்தை வென்று, கல்லறையை வென்று, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து, “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடைய வராயிருக்கிறேன்” என்றார். அதோ திரைச்சீலையை இரண்டாக கிழித்து வெற்றி சிறந்தவர். அதோ அவர் நிற்கிறாரே!

49119 கறுப்பு நிறமுள்ள வயோதிப ஸ்திரீ ஒருத்தியைப் போன்று. இங் குள்ள கறுப்பு நிறமுள்ள என் சகோதரர்களே, என்னை மன்னியுங்கள். அவள் ஒரு கூட்டத்தில் சாட்சி சொல்லிக்கொண்டிருந்தாள். அவளு டைய பேச்சு தென்பாகத்துப் பேச்சு போல் இருந்தது. அவள், “பாருங்கள், இன்றிரவு உங்கள் எல்லாரிடமும் ஒன்றை நான் கூற விரும்புகிறேன்” என்றாள். பின்னர் அவள், “நான் இருக்க வேண்டியவிதமாக நிச்சயமாக இல்லை” என்றாள். மேலும் அவள், “நான் எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறேனோ, நிச்சயமாக அப்படியும் இல்லை. ஆனால் ஒன்று மாத்திரம் நான் அறிவேன், நான் முன்பிருந்த விதமாக இப்பொழுது இல்லை” என்றாள். எனவே அவள் எங்கோ ஓரிடத்திலிருந்து வந்திருந்தாள்! 120 அதைத்தான் இன்றிரவு நான் கூறுகிறேன்! ஒரு சமயம் நாம் பாவத்தின் காரணமாக இழக்கப்பட்ட நிலையில் இருந்தோம். இன்றைக்கோ, அந்த அத்தாட்சியை, திரும்பி வந்த அந்த வாக்குத்தத்ததை ஏற்றுக்கொண்டதன் மூலமாய் (நமது நித்திய இரட்சிப்புக்கென அளிக்கப்பட்ட முன்தொகை), நாம் மரணத்திலிருந்து ஜீவனுக்கு எழுப்பப்பட்டு, அதை விட உயர்வான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படியிருக்க முழு தொகை நமக்கு செலுத்தப்பட்டு, நாம்தாமே நதியைக் கடந்து, அந்த மகிமையான தேசத்துக்குள் பிரவேசித்தால் எப்படியிருக்கும்?

50121 பெரிய சோதனையாயிற்றே! இப்பொழுது ஆபிரகாம், இந்த அற்புதமான காரியங்கள் எல்லாவற்றிற்கும் பின்னரே, அவன் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்ட பின்னரே, அவன் சோதிக்கப்பட்டான். ஆபிரகாம் சோதிக்கப்பட்டான். 122 இப்பொழுது அங்குதான் ஜனங்கள் தவறிவிடுகின்றனர். இப்பொழுது, இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இதை இழந்து போகாதீர்கள். வேதம், “தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு குமாரனும் சிட்சிக்கப்பட்டு, கடிந்துகொள்ளப்பட்டு, சாட்டையால் அடிக்கப்பட வேண்டும். நாம் சிட்சையை சகிக்காமற்போனால், தேவனுடைய புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்போம்.” என்று உரைத்துள்ளது. சிட்சையை சகிக்காமற்போனால், நாம் பெற்றுள்ளதாக கூறிக்கொண்ட விசுவாசம், அது இருக்க வேண்டிய விதமாக இருக்கவில்லையென்பதை அது நிரூபிக்கிறது. நாம் இப்பொழுது உண்மையான நல்ல ஒரு கால்வீனியக் கொள்கையை அடைந்துகொண்டிருக்கிறோம், எனவே அதை நாம் கவனிக்க வேண்டும். இப்பொழுது கவனியுங்கள். “தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு குமாரனும் சிட்சிக்கப்பட்டு கடிந்து கொள்ளப்படவேண்டும்,” அவன் சாட்டையால் அடிக்கப்பட வேண்டும் என்னும் வார்த்தை, அவன் துண்டிக்கப்பட்டு, அவனில் காணப்படும் எல்லா கோட்பாடுகளும் அகற்றப்பட வேண்டும் என்னும் பொருளைத் தருகிறது; பாருங்கள், அவன் தேவனுடைய புத்திரனா என்று பார்க்க சோதிக்கப்பட வேண்டும். 123 இப்பொழுது ஆபிரகாம், அவன் ஆசீர்வாதங்கள் அனைத்தும் பெற்ற பின்பு சோதிக்கப்பட்டான்.

51124 நேரம் இன்றிரவு எங்கு சென்றுவிட்டது? நான் இன்னும் என் பொருளுக்கே வரவில்லை. அதற்குள்ளாக முடிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. இன்னும் பதினைந்து நிமிடங்கள் நீங்கள் என்னோடு பொருத்துக்கொள்வீர்களா? [சபையோர் “ஆமென்.” என்கின்றனர்.—ஆசி.] உங்களுக்கு நன்றி. பயபக்தியாயிருங்கள். (ஆபிரகாம். நோவாவைப் பாருங்கள்.) அதை நாம் சிறிது நேரம் எடுத்துக் கொள்வோமாக. நாம் வேகமாக செல்லமுடியாது; அவ்வாறு செல்லவேண்டிய அவசியமில்லை. என்னே, நாம் எதற்காக வேகமாக சென்றுகொண்டிருக்கிறோம்? நான் மெல்லப் பேசுகிறேன். இந்த நபர்களில் சிலரைப் போன்று நின்று வேகமாக என்னால்—என்னால் பேச முடியாது. எனவே நான்—நான்—நான் மெல்ல பேசுகிறேன், அவர் அதை எனக்களிக்கும் வரைக்கும் நான் காத்திருக்க வேண்டும். 125 நோவாவைப் பாருங்கள், நாம் இன்று பெற்றுள்ள விஞ்ஞான உலகத்தைக் காட்டிலும் சிறந்த விஞ்ஞான உலகத்தின் மத்தியில் அவன் நூற்றிருபது ஆண்டுகள் பிரசங்கிக்கும்படி தேவன் செய்தார். ஓ, நிச்சயமாக, அவர்கள் கூர்நுனிக் கோபுரங்களைக் கட்டினார்கள். நம்மால் அவைகளை கட்ட முடியவில்லை. அவர்கள் சிங்க்ஸ் [உருவச்சிலை—மொழிபெயர்ப்பாளர்] கட்டினார்கள். நம்மால் அதைச் செய்ய முடியவில்லை. இன்று வரைக்கும் சவங்கள் இயற்கையாக காண வேண்டுமென்பதற்காக அவர்கள் அவைகளை பதப்படுத்தினர். நம்மால் அதையும் செய்ய முடியவில்லை. அவர்கள் தீட்டின சாயம் நாலாயிரம் ஆண்டுகள் கழிந்தும் மங்கிப்போகவில்லை. நாம் அப்படிப்பட்ட சாயங்களைப் பெற்றிருக்கவில்லை. [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] அத்தகைய நாகரீகம் அக்காலத்தில் உண்டாயிருந்தது என்பதை அது காண்பிக்கிறது. இயேசு, “நோவாவின் காலத்தில் நடந்தது போல.” என்றார். நோவா அத்தகைய விஞ்ஞான உலகில், “மழை வானத்திலிருந்து பெய்யப்போகிறது, ஏனெனில் தேவனுடைய வார்த்தை அவ்வண்ணமாய் உரைக்கிறதே!” என்று பிரசங்கித்தான். நோவா ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான்.

52126 தீர்க்கதரிசிகள் எழும்புவதை நீங்கள் காணும்போது, நீங்கள் கவனிப்பது நலம், ஏனெனில் நியாயத்தீர்ப்பு வந்து கொண்டிருக்கிறது. 127 எனவே நோவா பிரசங்கித்துக் கொண்டு வந்தான், ஜனங்கள் அதை புறக்கணித்து அவனைக் கேலி செய்தனர். அவர்களில் சிலர், “அது நம்முடைய விஞ்ஞானப்பூர்வமான அங்கீகாரம் பெறாது.” என்று கூறுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ஹு! 128 இன்றைக்கும் அதே காரியம் போன்றுள்ளதென்றே நான் யூகிக்கிறேன். அவர்கள், “சத்தமிட்டு தேவனைத் துதித்தல், அழுதல், இங்கே இந்த ‘உருளும்-பரிசுத்தர்’ என்றழைக்கப்படுகின்றவர்களின் ஜீவியத்தில் அதுபோன்றவைகளைச் செய்கின்றனர். இவையாவும் உணர்ச்சிவசப்படுவதனால் உண்டானவையே” என்கின்றனர். அது அவர்களுடைய விஞ்ஞானப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெறாது. ஆனால் தேவனுடைய வேதாகமத்தின் அங்கீகாரத்தை அது பெற்றுள்ளது. அதுதான் முக்கியம் வாய்ந்தது. கவனியுங்கள். 129 விஞ்ஞானமானது, “இங்கே கவனியுங்கள். பாருங்கள், உங்களுக்கு—உங்களுக்கு ஒரு விதமான மூளை கோளாறு ஏற்பட்டுள்ளது. இங்கு பாருங்கள். நான், நாங்கள் தொலைநிலை இயக்கமானியை வைத்துள்ளோம். எங்களால் விண்வெளிக்கோளை சந்திரனுக்கு அனுப்ப முடியும். இங்கும் அங்குமிடையே ஒரு துளி தண்ணீர் கூட கிடையாது. அப்படியிருக்க, அது எங்கிருந்து வரும்?” என்று கூறுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. 130 நோவா, “தேவன் அவ்வாறு கூறினாரே! தேவன் அவ்வண்ணமாய்க் கூறியிருப்பாரானால், அவர் யோகோவா-யீரே, அவரால் தண்ணீரை அங்கு அளிக்க முடியும். தேவன் அவ்வண்ணமாய்க் கூறினாரே! எனவே என்னவாயினும், அது சம்பவிக்கும் போகிறதே!” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. யாரோ ஒருவர் கூறினார்…

53131 புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள, அவர் வெறும் எலும்புக்கூடாக இங்கே இருக்கிறார்; ஆனால் அடுத்த ஆண்டு அவர் நல்ல ஆரோக்கியமுள்ள மனிதனாயி ருக்கிறார். அது எப்படி நடந்தது? அவர் கிடத்தப்பட்டிருந்தார்…என்னிடம் அப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான சாட்சிகள் உள்ளன. ஒரு மனிதனுக்கு உயிர் போய்விட்டது, ஒரு மருத்துவர், “அவர் மரித்து பல மணி நேரம் ஆகிவிட்டது.” என்னும் ஒரு வாக்குமூலத்தில் கையொப்பமிட்டார். தேவன் ஒரு தரிசனம் அருளினார், அவர் இப்பொழுது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எப்படி? என்னைக் கேட்காதீர்கள். எனக்குத் தெரியாது. தேவன், “பிணியாளிகளை சொஸ்தமாக்குங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்.” என்று கட்டளையிட்டுள்ளார். அது உண்மை. 132 நீங்கள் வியாதிப்பட்டு தேவன் உங்களுக்கு சுகமளிக்கும்போது, உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள், நீங்கள் சுகமடைந்துவிட்டதாக அவர் கூறட்டும். அவர் உங்களுக்குத் தருவார்…அது அவருக்கு ஒரு சாட்சியாக அமையும். அவர், “பாருங்கள், அது போய்விட்டது” என்று கூறும்போது; “தேவனுக்கு ஸ்தோத்திரம்! மருத்துவரே, உங்களுடைய சேவைகளுக்காக நன்றி,” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து செல்லுங்கள். பாருங்கள்? அது உண்மை. கவனியுங்கள்.

54133 இப்பொழுது நோவா, “உலகம் முழுவதும் மழை பெய்யப்போகிறது, பொல்லாத ஜனங்களாகிய உங்களை வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விடும்.” என்றான். 134 “ஆ, மூடத்தனம்! எங்களுக்கு எங்கள் சபைகள் உள்ளன. எங்கள் போதகர் அப்படியொன்றும் கூறவில்லையே. கிழவனுக்கு மூளை கோளாறு ஏற்பட்டுவிட்டது, ஆகையால்தான் அவன் அங்கு பேழையை செய்து கொண்டிருக்கிறான். இதை யாராகிலும் விசுவாசிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” 135 ஒருநாள், தேவன், “அவர்கள் பரியாசம் செய்வதை நான் போதிய அளவுக்கு கேட்டுவிட்டேன். இப்பொழுது நான் ஆயத்தமாயிருக்கிறேன். உள்ளே போ!” என்றார். இதோ மிருகங்கள் ஜோடி ஜோடியாக வருகின்றன, கிளி ஆணும் பெண்ணுமாக, சிட்டுக் குருவி ஆணும் பெண்ணுமாக, வெள்ளாடு ஆணும் பெண்ணுமாக, செம்மறியாடு ஆணும் பெண்ணுமாக, பிறகு சிங்கம், புலி, மற்றும் உலகில் சுவாசமுள்ள அனைத்துமே ஜோடி ஜோடியாக பேழைக்குள் பிரவேசித்தன. நோவா, “இதுவே உங்கள் கடைசி அடையாளம்!” என்றான். 136 அவர்கள் அதை விசுவாசிக்க மனமில்லாதிருந்தனர். “உள்ளே போய், நாற்றமெடுக்கும் மிருகங்களுடன் கூட தங்கியிரு” என்றனர். 137 அதோ நோவா தேவனுக்குக் கீழ்ப்படிகிறான். உலகம் என்ன கூறினபோதிலும் கவலைப்படாமல், அவன் தேவனுக்கு செவி கொடுத்தான்; அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் பேழைக்குள் பிரவேசித்தான், அவனுக்குப் பின்னே தேவன் பேழையின் கதவை அடைத்தார்.

55138 இப்பொழுது என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, நோவாவின் செய்தியை அங்கு உட்கார்ந்துகொண்டு கேட்டு, பேழையில் ஒரு மரத்துண்டை இணைத்த எல்லைக்கோடு விசுவாசிகளில் சிலர், உங்களுக்குத் தெரியுமா? அவர்கள், “உங்களுக்கு என்ன என்று தெரியுமா? ஒருக்கால் அந்த கிழவன் கூறினது உண்மையாயிருக்க வகையுண்டு. நாம் அங்கு சென்று பேழையைச் சுற்றி நிற்போம். அவன், ‘பேழையின் கதவு அடைபடும்போது, மழை பெய்யப்போகிறது’ என்று கூறினானே. தேவன் அவனிடம், பேழையின் கதவை அவர் அடைப்பார், அப்பொழுது மழை பெய்யப்போகிறது என்று கூறினதாகவும் நம்மிடம் கூறினான் அல்லவா? நாம் அங்கு சென்று அதை சுற்றி நிற்போம். மழை பெய்யத் தொடங்கினால், நாம் கதவைத் தட்டுவோம். ஏனென்றால் அவன் இளகிய மனதுள்ள வயோதிக மனிதன், எனவே அவன் கதவை திறந்துவிடுவான்” என்றனர். 139 நீங்கள் பாருங்கள், சில சமயங்களில் நீங்கள் செய்தியை நோக்குவதற்கு பதிலாக, செய்தியாளனை நோக்குகின்றீர்கள். தேவன் கதவை அடைத்தார். நோவா எவ்வளவு இளகிய மனம் படைத்தவனாயிருந்தான் என்பது ஒரு பொருட்டல்ல, அடைக்கிறவரும் திறக்கிறவரும் தேவனே, அவர் விருப்பப்படி செய்கிறார்.

56140 “சகோதரன் பிரான்ஹாமே, ஒரு மனிதன் இங்கு மூலையில் உட் கார்ந்துகொண்டிருக்கிறார். அங்கு சென்று அவரைச் சுகப்படுத்தும். அப்பொழுது நாங்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொள்வோம்.” அது பிசாசு. 141 அவர்கள் அவர் முகத்தை சுற்றி ஒரு கந்தை துணியினால் கட்டி, அவரைத் தலையின்மேல் அடித்து, வழக்கு விசாரணையில், “நீ ஒரு தீர்க்கதரிசியானால், இப்பொழுது உன்னை அடித்தது யாரென்று எங்களுக்கு சொல், நாங்கள் அதை விசுவாசிப்போம்” என்று சொன்னதும் அவனேதான். அவர் யாருக்கும் வேடிக்கை காண்பிக்கமாட்டார். “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கற்களை அப்பங்களாக மாற்றும். நீர் அவராயிருந்தால்!” அவரால் அப்படி செய்திருக்க முடியும். ஆனால் அவர் யாருக்கும் வேடிக்கை காண்பிப்பதில்லை. “நீ தேவனுடைய குமாரனேயானால், சிலுவையிலிருந்து இறங்கி வா.” குருவானவர்கள் அதைக் கூறிக்கொண்டிருந்தார்கள், பாருங்கள். ஆனால் அவர் யாருக்கும் வேடிக்கை காண்பிக்கவில்லை. 142 பிதாவானவர் அவருக்கு காண்பித்ததை மாத்திரமே அவர் செய்தார், அவர் வேறொன்றையும் செய்யவில்லை. அப்படித்தான் அவர் கூறினார், பரிசுத்த யோவான் 5:19, “பிதாவனாவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்.” அங்குதான் காரியமே உள்ளது. கவனியுங்கள. “மழை பெய்யத் துவங்கினால்…நாம் சென்று பேழையைச் சுற்றி நின்றுகொள்வோம்.”

57143 நோவா இவ்வாறு கூறியிருப்பான் என்று நான் யூகிக்கிறேன்…அவன் முதல் தட்டில் பிரவேசித்து, அங்கிருந்து (பறவைகளிருந்த) அடுத்த தட்டிற்கு ஏறினான். ஊரும் பிராணிகளிலிருந்து அடுத்த பணியிடத்துக்கு. நீதிமானாக்கப்படுதலிலிருந்து பரிசுத்தமாக்கப்படுதல் (பறவைகள்), அதன்பின்னர் அங்கிருந்து அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்கு சென்றான். அங்குதான் பேழையின் ஜன்னலிருந்தது, அதன் வழியாக வெளிச்சம் உள்ளே பிரவேசிக்க முடிந்தது. “நான் உன்னதங்களுக்கு ஏறி, அங்கு உட்கார்ந்துகொண்டிருக்கிறேன்.” “சரி, குடும்பத்தினரே, காலையில் என்னுடன் கூட இங்கே பேழைக்குள் பிரவேசித்தவர்களே…இப்பொழுது பிற்பகலாகி தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது தேவன் பேழையின் கதவை அங்கே அடைத்துவிட்டார். காலையில் பூமி முழுவதும் அந்தகாரமாயிருக்கும். காலையில் மழை பெய்யப்போகிறது, பேழை மிதக்கத் தொடங்கும். தேவன் செய்தியை அவிசுவாசித்த அந்த கொடூரப் பாவிகள் ஒவ்வொரு வரையும் நிர்மூலமாக்குவார்.” என்று நோவா கூறியிருப்பான். அவர்கள் எல்லோரும் மழைக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

58144 அடுத்த நாள் காலை அவன் எழுந்து வெளியே எட்டிப் பார்த்த போது, அது அழகும் பிரகாசமுமான நாளாயிருந்தது. அவன் பேழைக்குள் பிரவேசித்தது, அவன் உள்ளே பிரவேசித்தது எந்த நாள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? மே மாதம் 17-ம் தேதி, அப்பொழுது நோவாவுக்கு அறுநூறு வயது. மே மாதம் 17-ம் தேதி, அப்படித்தான் வேதம் கூறியுள்ளது. அவன் பேழைக்குள் பிரவேசித்தான், 17-ம் தேதி கடந்தது, சூரியன் எப்பொழுதும்போல் வெப்பமாக பிரகாசித்தது. 145 அப்பொழுது எல்லைக்கோடு விசுவாசிகள், “ஆ! நான் சொன்னேன் அல்லவா, அதெல்லாம் ஒன்றுமில்லை! நீங்கள் எல்லோரும் ஏன் அங்கு இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? அப்படிப்பட்ட ஒரு போலியை விட்டு வாருங்கள்!” என்று அவர்கள் கூறுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. “பாருங்கள், அவர் கூறினது சரியென்று நான் நம்புகிறேன்.” 146 ஆனால், நீங்கள் பாருங்கள், விசுவாசத்துக்கும் அவிசுவாசத்துக்குமிடையே ஒரு பிரிவினைக்கோடு வரையப்பட்டுள்ளது. ஒன்று நீங்கள் ஒரு பக்கத்துக்கு வரவேண்டும், அல்லது மறுபாகத்துக்கு செல்லவேண்டும். நீங்கள் உங்களுடைய கடைசி அழைப்பை பெறும் ஒரு நேரம் உண்டாயிருக்கும். 147 எனவே, இரண்டாம் நாள், தேவன் உலகத்தை அழிக்கப் போகிறார் என்று அவர் அவர்களிடம் கூறினது, நோவாவுக்கும் அவனுடைய சபையோருக்கும் என்னே ஒரு ஏமாற்றமாய் இருந்தது. ஆனால் அவன் பேழையினுள் எவ்வளவு காலம் உட்கார்ந்து கொண்டு காலம் கழித்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏழு நாட்கள், ஒன்றும் நடக்கவில்லை. சோதிக்கப்படுதல்!

59148 பின்பு எட்டாம் நாளில், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது, பெரிய துளிகள் வானத்திலிருந்து விழத் தொடங்கின, மழை அதிகமாக பெய்து வெள்ளம் புரண்டது, ஊற்றுகள் திறந்தன, தெருக்கள் தண்ணீரினால் நிறைந்தன. ஜனங்கள் பேழையின் கதவைத் தட்டினர், ஆனால் நோவாவினால் அந்த சத்தத்தைக் கேட்கவும் கூட முடியவில்லை. பேழை மிகவும் உயரமாக மலைக்கும் மேலே மிதந்து, பேழைக்குள் இல்லாத அனைவரும் அழிந்தனர். 149 நோவா பேழையின் ஜன்னல் வழியாய், அல்லது ஏதோ ஒரு வழியாய் வெளியே வர முயற்ச்சிப்பானோ என்று தேவன் அவனை சோதித்துப் பார்த்தார். அவர் அந்த வாக்குத்தத்தத்தை ஏற்கனவே செய்த பிறகு, நோவா பேழைக்குள் உட்கார்ந்திருந்தானே! 150 அதுதான் அது! நீங்கள் ஒரு வாக்குத்தத்தத்தைப் பெற்று, அது ஒரு வாக்குத்தத்தம் என்று நீங்கள் அறிந்திருக்கும்போது, அதனோடு தரித்திருங்கள்! ஆபிரகாம் சோதிக்கப்பட வேண்டியதாயிருந்தது. வாக்குத்தத்தத்தோடு தரித்திருங்கள்! 151 இப்பொழுது, அவர்கள் தங்களுடைய கடைசி அடையாளத்தைப் பெற்றுக் கொண்டனர். அதன்பிறகு அவர்கள் சரீரங்கள் மாற்றப்பட்டன. உடனே குட்டி ஈசாக்கு காட்சியில் தோன்றினான், அழகான குட்டி யூத பையன். எட்டாம் நாளில் அவன் விருத்தசேதனம்பண்ணப்பட்டப் பிறகு நான் யூகித்துப் பார்க்கிறேன். எப்படி அந்த இளம் தாய், நூறு வயதான… எப்படியாய் நூறு வயதான ஆபிரகாமும்; அவளுக்கு தொண்ணூறு வயதும், அவனுக்கோ நூறு வயது; இருவரும் கிட்டத்தட்ட தங்களுடைய இருபது வயதில் எவ்வாறு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். இந்த இளம் குட்டி நபர், அவன் எவ்வளவு இனிமையாயிருந்தான்!

60152 உங்களுக்கு தெரியுமா? தேவன், “இப்பொழுது வரப்போகும் நாட்களிலுள்ள ஜனங்கள் (ஆபிரகாமின் சந்ததியார்) உன் சந்ததியார், என் வார்த்தையில் நிலைத்திருக்கும் எந்த மனிதனுக்கும் என் வாக்குத்தத்தை நான் காத்துக்கொள்வேன். ஆனால் நான் அவனுக்கு ஒரு சோதனையைக் கொடுக்கப்போகிறேன் என்று அறியக்கடவர்கள்.” என்றார். 153 அந்த சிறுவனுக்கு கிட்டத்தட்ட பதினான்கு வயதானபோது, அவனுக்கு அடர்த்தியான தலைமுடியும் அழகிய சிறு கண்களும் இருந்திருக்கும் என்று நான் யூகிக்கிறேன். ஓ, அவனுடைய தந்தைக்கும் தாய்க்கும் எவ்வளவு மகிழ்ச்சியாயி ருந்திருக்கும்! பெற்றோராகிய நீங்கள் உங்களுடையப் பிள்ளையோடு, ஒரே பிள்ளையோடு எப்படியிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்பு தேவன் ஆபிரகாமிடம் கூறினார்…இப்பொழுது, அவன் அதை சாராளிடம் சொல்லவில்லை, ஏனெனில் சாராள் பலவீனமான பாண்டமாயிருந்தாள். எனவே அவர், “ஆபிரகாமே, நான் உனக்களித்திருக்கிற அந்த சிறுவனை, அவன் மூலம் உன்னை அநேக ஜாதிகளுக்கு தகப்பனாக்குவேன் என்று நான் உன்னிடம் கூறின அவனை, இன்றிரவு நான் உனக்கு ஒரு தரிசனத்தில் காண்பிக்கப்போகும் ஒரு மலைக்கு அவனைக் கொண்டு சென்று, அங்கு அவனைக் கொல்ல வேண்டும்” என்றார். அவன் அநேக ஜாதிகளுக்கு தகப்பனாவான் என்பதற்கான, தேவன் அவருடைய வார்த்தையை காத்துக்கொள்வார் என்பற்கான அந்த ஒரே நம்பிக்கையும் அவன் அழித்துப்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டது; தேவன், “நான் உன்னை அநேக ஜாதிகளுக்கு தகப்பனாக்குவேன்” என்று கூறியிருந்தார். அதற்காக அவன் இத்தனை ஆண்டு களாக காத்திருந்தான். அவனுக்கு நூறு வயதாகும் வரைக்கும், நூற்று பதினான்கு வயதாகும் வரைக்கும். “இதோ அந்த சிறுவன் இப்பொழுது இருக்கிறான், நீ பெற்றுள்ள ஒரே அத்தாட்சி, நான் என் வார்த்தையை நிறைவேற்றுவேன் என்பதேயாகும். நீ மலையின் மேல் கொண்டு சென்று, அழித்துப் போடு. அப்பொழுது இந்த பிள்ளையின் மூலம் நான் உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன்.”

61154 “அபிரகாம்,” அதாவது, “அவன் தேவனுடைய வாக்குத்தத்ததைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான் என்பதையும் அவன் அறிந்திருந்தான். தேவன் அவ்வாறு வாக்களித்திருந்தால், அவனை மாரித்தோலிருந்து எழுப்ப அவர் வல்லவராயிருக்கிறாரென்று அறிந்திருந்தான்.” 155 அப்படியானால் நாம் ஆபிரகாமின் சந்ததியரா? ஒரு சிறு இறையியலில் பிழை தோன்றும்போது, மற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் மத்தியில் பிரபலமாயிருக்கக் கருதி, வார்த்தையில் நிலைநிற்பதற்குப் பதிலாக நீங்கள் அதன் பின்னே சென்றுவிடுகிறீர்கள். உங்களுக்கு அவமானமாயிற்றே! ஒரு பெரிய ஸ்தாபனம், அது தேவனுக்கு என்னவென்று பொருள்படுகிறது? அவர் அதை அந்த விதமாக அழித்துவிடுவாரே! [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய விரலைச் சொடுக்குகிறார்—ஆசி.] அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கினது முதற்கொண்டே, அவர் ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றின்றும் விலகியிருக்கிறார். அந்த ஸ்தாபனங்களிலுள்ள தனிப்பட்ட நபர்களிடமிருந்து அல்ல, அந்த ஸ்தாபன முறைமையிலிருந்து, அது தேவனுக்கு விரோதமாயுள்ளது. ஸ்தாபனமாயுள்ள ஒவ்வொரு சபையும் தாயாய்…இல்லை கத்தோலிக்க ஸ்தாபனத்திற்கு ஒரு குமாரத்தியாய் உள்ளது. வேதம் அவ்வண்ணமாய் உரைத்துள்ளதை, வெளிப்படுத்தல் 17, “வேசியும், அவளுடைய வேசி குமாரத்திகளும்.” முற்றிலும் உண்மை.

62156 இப்பொழுது அவள் நமது தேசத்தின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அருமையான ஜனநாயகக் கட்சிக்காரராகிய உங்கள் பிறப்புரிமையை விற்றுப்போட்ட உங்களுக்கு அவ மானமாயிற்றே! சரி, நாம் அதை விட்டுவிட்டு, இதற்கு மீண்டும் வருவோம். கவனியுங்கள். எனக்கு நேரம் கடந்து சென்று கொண்டேயிருக்கிறது. உங்கள் அரசியலைக் காட்டிலும் உங்கள் கிறிஸ்து உங்களுக்கு முக்கியம் வாய்ந்தவரல்லவா? ஆபிரகாம் லிங்கன் கூறினதை நீங்கள் செய்ய வேண்டும். சரி, கவனியுங்கள். நாம் தொடர்ந்து செல்வோம். 157 இப்பொழுது தேவன், “இந்த பிள்ளையாண்டானை, அவனை அங்கே மலையின் மேல் கொண்டு போ” என்று கூறினார். 158 இப்பொழுது ஆபிரகாம் ஒரு வாலிபனா அல்லது இல்லையா என்று நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? அவன் பிள்ளையாண்டானைக் கூட்டிக்கொண்டு, விறகு கட்டைகளுடனும் வேலையாட்களுடனும் கழுதையின் மேல் மூன்று நாட்கள் பிரயாணம் சென்றான். எந்த ஒரு மனிதனும், சாதாரண மனிதனும்… நான் காட்டு அதிகாரியாக இருந்தபோது, மின்சாரக் கம்பிகளைக் கண்காணிக்க ரோந்து வருவது வழக்கம்; எளிதாக நான் ஒருநாளில் முப்பது மைல்கள் நடப்பேன். நாம் வாகன வசதியைப் பெற்று, அதை நாம் பெட்ரோல் பாதம் [இன்றைய காலத்தில் வாகன வசதியைப் பெற்றிருப்பதால்—மொழிபெயர்ப்பாளர்] என்று அழைக்கிறோம். ஆனால் அவர்களோ நடந்து அல்லது கழுதையின் மேல் சவாரி செய்து பயணம் செய்ய வேண்டும். இங்கே அவர்கள் மெல்ல போகக் கூடிய சிறு கழுதையின் மேல் அங்கு பயணம் செய்தனர். நாம் அதைவிட வேகமாக நடந்துவிடுவோம். இதோ அவன் அவ்வாறு மூன்று நாட்கள் பயணம் செய்து, தன் கண்களை ஏறெடுத்து தூரத்திலுள்ள மலையைக் கண்டான். அப்பொழுதும் அவன் வனாந்திரத் தில், ஜனசஞ்சாரமுள்ள இடத்திலிருந்து நூறு மைல் தொலைவில் இருந்திருப்பான். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்.

63159 அப்பொழுது அவன் விறகு கட்டைகளை ஈசாக்கின் முதுகிலே ஏற்றினான்; அநேக அண்டுகளுக்குப் பின்பு தேவனுடைய குமரான் சிலுவையை சுமந்ததற்கு அது முன்னடையாளமாயிருந்தது. ஈசாக்கு எதன்மேல் பலியாக கிடத்தப்படப்போகின்றானோ, அதே கட்டையை அவன் சுமந்து மலையின் மேலேறினான். முன்னடையாளமாயிற்றே! 160 தேவன் ஒரு சிறு மாற்றமுமின்றி அதை அப்படியே முன்னடையாளமாகத் தருவாரனால்; லோத்தின் மனைவியே, உலகத்தின் காரியங்களை நீ பின்னிட்டுப் பாராதே. இந்த முன்னடையாளங்கள், நிழல்கள் அனைத்தும் பிழையின்றி அமைந்துள்ளன. பாருங்கள்? ஏவாளை நினைத்துப் பாருங்கள். லோத்தின் மனைவியை நினைத்துப்பாருங்கள். லோத்தையே நினைத்துப்பாருங்கள், மனிதர்களே உங்களைத்தான். ஆதாம் தன் மனைவிக்கு விட்டு கொடுப்பதை நினைத்துப் பாருங்கள்; லோத்தும் அவ்வாறே இருந்தான். ஜாக்கிரதையாயிருங்கள். ஒரு சகோதரன் என்னும் முறையில் நான் உங்களிடம் கூறுகிறேன். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது. 161 குட்டி ஈசாக்கு மலையின் மேலேறிச் செல்வதை கவனியுங்கள். அவனுக்கு சந்தேகம் தோன்றினது. அவன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, “என் தகப்பனே?” என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம், “என் மகனே, இதோ நான் இருக்கிறேன்” என்றான். 162 ஈசாக்கு, “இதோ கட்டை இருக்கிறது. இங்கு எல்லாம், நெருப்பும் கூட இருக்கிறது. ஆனால் தகனபலிக்கான ஆட்டுக் குட்டி எங்கே?” என்று கேட்டான். 163 அந்த வயோதிக தகப்பனுக்கு, குரலில் எவ்வித நடுக்கமும் ஏற்படாமல், அவன், “என் மகனே, தேவன் தமக்கு பலிக்கான ஆட்டுக் குட்டியைப் பார்த்துக்கொள்வார்” என்று சொல்லுவதைக் கேளுங்கள். அவனுடைய ஒரே மகன் கொல்லப்படுவதற்காக கொண்டு செல்லப்படுகிறான், ஆயினும் அந்த விசுவாசமுள்ள வயோதிக இருதயம் தேவனால் பொய்யுரைக்க முடியாது என்பதை அறிந்திருந்தது. 164 அப்படித்தான் இன்றைய ஆபிரகாமின் சந்ததியாரும் செய் வார்கள்! “சகோதரன் பிரான்ஹாமே, அது எப்படி முடியும்?” தேவன் தமக்காகப் பார்த்துக்கொள்வார்! “அவர் எப்படி அதை செய்யப்போகிறார்?” எனக்குத் தெரியாது. ஆனால் அவர் யேகோவா-யீரே!

64165 அவன் மலையின் உச்சிக்கு சென்று கல்லை உருட்டினான். அந்தக் கல்லின்மேல் கட்டைகளை அடுக்கி நெருப்பு மூட்டினான். அவன், “என் மகனே, ஈசாக்கே, இப்படி திரும்பு” என்றான். அவனுடைய இடுப்பிலிருந்த கயிற்றை அவிழ்த்து ஈசாக்கின் கைகளையும் கால்களையும் கட்டினான். ஈசாக்கு கிறிஸ்துவைப் போல் கீழ்படிந்து தன்னை மரணத்துக்கு ஓப்புக்கொடுத்தான். அவனை ஆபிரகாம் கட்டைகளின் மேல் கிடத்தினான். அவன் தன் உறையிலிருந்து பெரிய கத்தியை உருவி, வானத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டே, அதை சிலமுறைத் தீட்டினான். 166 “அவன் தேவனுடைய வாக்குத்தத்ததைக் குறித்து அவிசு வாசமாய்ச் சந்தேகப்படாமல், விசுவாசத்தில் வல்லவனாகி, மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான் என்று அறிந்தவனாய்; அவன் அப்படி செய்ய வேண்டுமென்று தேவன் கூறினாரானால், அவனை மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்று முழுநிச்சயமாய் நம்பினான்.” அது ஆபிரகாம், அது அவனுக்குப் பின்வரும் சந்ததி. மாமிசப்பிரகாரமான சந்ததியே இப்படியிருந்ததென்றால், ராஜரீக சந்ததி எப்படியிருக்க வேண்டும்? சந்தேகத்தினால் தடுமாறுவதல்ல! தேவன் என்னக் கூறுகிறாரோ, அதை தேவனே செய்வார். தேவன் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்ற வல்லராயிருக்கிறார் என்பதை அவன் அறிந்தவனாய், அதை முழு நிச்சயமாக நம்பினான்.

65167 அவன் கத்தியைத் தீட்டினான்; குட்டி ஈசாக்கின் கருமை நிறக் கண்கள், அந்த பெரிய கூர்மையான கத்தி கல்லின் மேல் தீட்டப்படும்போது இங்கும் அங்கும் செல்வதை கவனித்துக்கொண்டிருந்தன. அவன் பின்னால் தள்ளிக்கொண்டான்; அவன் முகத்தின் மேல் விழுந்திருந்த சுருண்ட தலைமுடியை பின்னால் தள்ளிக்கொண்டான், தன் சிறு தாடையை பின்னால் இழுத்துக்கொண்டான். ஆபிரகாம் எழுந்து நின்றான்; ஈசாக்கின் கன்னங்களில் கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. ஆபிரகாம் நன்கு அறிந்தவனாய், தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசு வாசமாய் சந்தேகப்படாமல் அதை முழுநிச்சயத்தோடு நம்பினான்! அவன் தன் சொந்த மகனுடைய தொண்டையில் கத்தியைப் பாய்ச்சுவதற்காக கையைத் தூக்கினான். 168 அவன் அப்படி செய்தபோது, தேவனுடைய சத்தம் அவனைக் கூப்பிட்டு, அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு, அவர், “ஆபிரகாமே, ஆபிரகாமே, உன் கையைப் போடாதே! நீ என்னை நேசிக்கிறாய் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்” என்றார். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? ஆபிரகாமின் பின்வரும் சந்ததிக்கு ஒரு சாட்சி கொடுத்துக்கொண்டிருந்தார். “உன் கையைப் போடாதே, பிள்ளையாண்டானுக்கு ஒரு கெடுதியும் செய்யாதே! நீ என்னை நேசிக்கிறாய் என்று நான் அறிந்திருக்கிறேன்.”

66169 கிட்டத்தட்ட அதே நேரத்தில், ஆபிரகாம் தனக்குப் பின்னால் ஏதோ ஒன்று சத்தமிடுவதைக் கேட்டான். அவன் பார்த்தபோது, அங்கு புதரில் தன் கொம்புகள் சிக்கிக் கொண்டிருக்கிற ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டான் (அது ஒரு ஆண் ஆடு). ஆபிரகாம் சென்று அதைப் பிடித்துக்கொண்டு வந்து, அவனுடைய மகனுக்குப் பதிலாக அதைப் பலியிட்டான். 170 அந்த ஆட்டுக்கடா எங்கிருந்துவந்தது? ஜனசஞ்சாரத்தி லிருந்து ஆபிரகாம் நூறு மைல் தொலைவில் இருந்தான். ஏன், அது முன்னமே அங்கிருந்திருந்தால், காட்டு மிருகங்கள் அதை கொன்று போட்டிருக்கும். நிச்சயமாகவே, அது ஒரு—அது ஒரு வீட்டு மிருகம். அது எங்கிருந்து வந்தது? மேலும் அது மலையின் உச்சியில் இருந்தது, அங்கு புல்லோ அல்லது தண்ணீரோ கிடையாது. ஆட்டுக்கடா காணப்பட்ட இடத்துக்கு சுற்றிலுமிருந்த இடங்களில்தான் ஆபிரகாம் கற்களைப் பொறுக்கி பலிபீடத்தை உண்டாக்கினான். அப்படியானால் அது எங்கிருந்து வந்தது? அது ஒரு தரிசனமாயிருக்கவில்லை; அதிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. ஒரு தரிசனத்தில் உண்மையான இரத்தம் வடியாது. அல்லேலூயா! யோகோவா-யீரே தமக்காக ஒரு பலியை அருளியிருந்தாரே!

67171 தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றும்போது, அவர் தேவைகள் என்னவாயிருந்தாலும் அதை அனைத்தையும் அருளிச் செய்ய வல்லவராயிருக்கிறார். தேவன், யோகோவா-யீரே, இன்றிரவும் யோகோவா-யீரேவாக இருக்கிறார். அவர் ஏற்கனவே ஒரு பலியை அருளியிருக்கிறார். அவர் ஒரு சபையை அருளியிருக்கிறார். அவர் ஒரு செய்தியாளனை அருளியிருக்கிறார், பரிசுத்த ஆவி. அவர் இப்பொழுது இங்கிருக்கிறார், யேகோவா-யீரே. கர்த்தர் தம்மை குறித்து ஒரு வேதத்தை, ஒரு ஆவியை, ஒரு சபையை, ஒரு செய்தியை, ஒரு செய்தியாளனை அருளியிருக்கிறார். சபையானது எடுத்துக்கொள்ளப்பட்டு வீடு செல்வதற்கான நேரம் இப்பொழுது இங்குள்ளது. யேகோவா-யீரே இந்த சபையை இவ்வுலகினின்று எடுத்து, நமது பலவீனமான சரீரங்களை மறுரூபப்படுத்தி, அவைகளை மகிமைக்கு கொண்டு செல்ல அவசியமாயுள்ள எல்லாவற்றையும் தந்தருளுவார். யேகோவா-யீரே! நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில், இந்த காரியங்கள் எவ்வாறு சம்பவிக்கும்?

68172 அண்மையில் நானும் என் மகன் பில்லியும் இந்தியாவுக்குச் சென்றிருந்தோம். நான் ஒரு செய்தித்தாளை கையிலெடுத்தேன்…நான் கப்பலை விட்டு இறங்கினபோது, அங்கு ஆயிரக்கணக்கானோர் மாலைகளோடு கூட்டமாய் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் தாஜ் உணவக விடுதிக்குச் சென்றோம். அங்கு ஆங்கில செய்தித்தாள் ஒன்றை வைத்திருந்தனர். அதில் ஒரு பெரிய செய்தி அச்சடிக்கப்பட்டிருந்ததை நான் கண்டேன். அது, “பூமியதிர்ச்சி ஓய்ந்துவிட்டது என்பதற்கு அது அடையாள மாயிருக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. காரியம் என்னவாயிருந்தது? பாருங்கள், கிட்டத்தட்ட அது உண்டாவதற்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பே, நீங்கள் அதை செய்தித்தாளில் வாசித்தபடியே, கற்பாறைகளில் தங்கியிருந்த சிறு பறவைகள் அனைத்தும்… 173 அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் உள்ளதுபோல் இந்தியாவில் அவர்களுக்கு சுவர்கள் கிடையாது. அவர்கள் கற்பாறைகளைப் பொறுக்கி அவைகளைக் கொண்டு சுவர்கள் அமைத்துக்கொள்கின்றனர். சிறு பறவைகள் இந்த கற்பாறைகளில் தங்களுடைய கூடுகளைக் கட்டி வாழ்கின்றன. அவர்கள் கட்டியுள்ள உயரமான கோபுரங்களில் அவை தங்களுடைய கூடுகளை கட்டி வாழ்கின்றன. பூமியதிர்ச்சி உண்டாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்த சிறு பறவைகள் அந்த கற்சுவர்களிலிருந்து பறந்து சென்றுவிட்டன. மாலை நேரத்தில் இல்லை…நடுப்பகலில் வெப்பம் அதிகமாகும்போது, தங்களை வெயிலிலிருந்து காத்துக்கொள்ள ஆடு மாடுகள் இந்த சுவர்களின், கோபுரங்களின் நிழலில் வந்து நிற்பது வழக்கம். 174 ஆனால் இரண்டு நாட்களாக ஆடுமாடுகள் சுவர்களண்டை வரவேயில்லை. அவை வயலின் நடுவில் நின்று, சௌகரியத்திற்காக ஒன்றன்மேல் ஒன்று சாய்ந்துகொண்டிருந்தன. பிறகு பூமியதிர்ச்சி உண்டாகி, அந்த சுவர்களைக் கீழே அசைத்துத் தள்ளிவிட்டது. அதன்பின்னர் பூமியதிர்ச்சி ஓய்ந்த வுடன், பறவைகள் திரும்பி வந்தன. ஆடுமாடுகள் வயலிலிருந்து திரும்பி வரத் துவங்கின. அது என்னவாயிருந்தது? ஆடுகளையும் மாடுகளையும், பறவைகளையும் பேழைக்குள் அழைத்த தேவன், இன்றும் மாறாதவராக இருந்து, தமது மிருகங்களை ஆபத்திலிருந்து தப்ப வெளியே அழைக்கக் கூடிய அதே தேவனாயிருக்கிறார் என்பதையே அது காண்பித்தது.

69175 அவர் உள்ளுணர்வின் மூலம் ஒரு மிருகத்தை வழி நடத்த முடியுமானால், தேவனுடைய சபையானது மனிதனால் உண்டாக்கப்பட்ட ஸ்தாபன சபை உபதேசங்கள் என்னும் சுவர்களிலிருந்து எவ்வளவு அதிகம் அகன்று செல்ல வேண்டியதாயுள்ளது? இந்நாட்களில் ஒன்றில் பாபிலோன் விழப்போகின்றது. யேகோவா-யீரே தமக்காக உங்களுக்கு ஒரு இளைப்பாறும் இடத்தை அருளியிருக்கிறார். உலகம் என்னும் கோபுரத்திலிருந்து பறந்து செல்லுங்கள்! 176 ஹாலிவுட்டின் வசீகரிக்கும் அழகிலிருந்து பறந்து செல்லுங்கள்! சபைகள் அதை பரியாசம் செய்ய முயற்சித்துக்கொண்டு பளபளக்கின்றன. சுவிசேஷம் பளபளப்பதில்லை; ஹாலிவுட் பளபளக்கிறது; சுவிசேஷம் கொழுந்துவிட்டெரிகிறது. ஆனால் ஹாலிவுட்டோ வசீகரிக்கும் அழகினால் பளபளக்கிறது. பெரிய சபை கல்வியினால் பளபளக்கிறது. ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபையோ தாழ்மை, இனிமை, பரிசுத்த ஆவி ஆகியவைகளினால் கொழுந்துவிட்டெரிகிறது. பளபளத்தல், கொழுந்து விட்டெரித்தல் இவையிரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

70177 அவர் இப்பொழுது இங்கிருக்கிறார். யேகோவா-யீரே தமக்காக அருளியிருக்கிறார். “தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்.” ஸ்தாபனங்கள் இதை ஏற்றுக்கொள்ளாமல்போனால், தேவன் தம்முடைய பிள்ளைகளை தெருக்களிலிருந்தும், வேசி மடத்திலிருந்து வேசிகளையும் கொண்டு வர முடியும். அவர் விரும்புகிற எந்தக் காரியத்தையும் அவரால் உண்டுபண்ண முடியும். ஆனால் தேவன் ஒரு செய்தியை அளித்திருப்பாரானால், அதை ஏற்றுக்கொள்ள யாராகிலும் எங்காகிலும் இருப்பார்கள். யேகோவா-யீரே! தேவன் தமக்காக ஒரு செய்தியை அருளுவார். தேவன் தமக்காக ஒரு செய்தியாளனை அருளுவார். தேவன் தமக்காக, தமது சொந்த வழியில், சபைக்கு அடையாளங்களை அருளுவார்; அதில் சேருவதல்ல, உங்கள் பெயர்களை புத்தகத்தில் பதிவு செய்துகொள்வதல்ல. 178 இன்றைக்கு தீர்மானங்கள் செய்யப்படுவதைக் குறித்து நாம் அதிகம் கேள்விப்படுகிறோம், அநேகத் தீர்மானங்கள். கற்பாறைகளை வெட்டி அவைகளை தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக உருவாக்க உங்களுக்கு கல்தச்சர் இல்லாமற்போனால், கற்பாறைகளை குவியலாகக் குவிப்பதனால் என்ன பயன்? ஜனங்களை தேவனுடைய இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தினால் வெட்டி அவர்களை உண்மையுள்ள தேவனுடைய பிள்ளைகளாக உருவாக்க ஒருவர் இல்லாமல், அவர்களை ஆயிரக்கணக்கில் பெரிய ஸ்தாபனங்களில் குவிப்பதனால் என்ன பயன்? அவர்கள் எங்கேயிருக்கிறார்களோ, அங்கேயே அவர்களை விட்டுவிடு வது நலம். ஆமென். தேவன் (மெதோடிஸ்டு அல்ல, பாப்டிஸ்டை, கத்தோலிக்கரைப் போன்றல்ல), தேவனுடைய பிள்ளைகளை, தேவனுடைய புத்திரரை உருவாக்கு வதற்கென தமக்காக ஒரு கத்தியை அருளியிருக்கிறார். ஆமென். யேகோவா-யீரே, “கர்த்தர் தமக்காக பார்த்துக்கொள்வார்.” அவர் அப்படி செய்திருக்கிறாரே! அவரை விசுவாசித்து வாழுங்கள். நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.

71179 கிருபையுள்ள தேவனே, என்றென்றைக்கும் ஜீவிக்கிற தேவனே, எங்கள்மேல் இப்பொழுது இரக்கம் பாராட்டி, உமது கிருபையை எங்களுக்கு அருளும். பிதாவே, நீர் எங்களுக்காக செய்யும் எந்தக் காரியத்திற்கும் நாங்கள் அபாத்திரராயிருக்கிறோம். ஆனால் நாங்கள் தகுதியுள்ளவர்கள் என்று அறிக்கை செய்யவில்லை, நாங்கள் தேவனிடத்திலிருந்து வந்த அழைப்புக்கு செவி கொடுக்க மாத்திரம் செய்கிறேம். பிதாவே, கர்த்தராகிய இயேசு தமது ஆலயத்துக்கு வரவிருக்கும் மகத்தான வருகையின்போது, நாங்கள் தேவனுடைய ஆலயத்தில் இசைவாக பொருத்தப்பட்டிருக்க, எங்களை இன்றிரவு அதற்கேற்ற கற்களாக வெட்டி உருவாக்குமாறு நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே, இதை அருளும். பாவிகளாகிய எங்களுடைய குறைகளை மன்னியும். உமது வார்த்தையை எங்களுக்கு வெளிப்படுத்தித் தாரும். நாங்கள் நடக்கவேண்டிய வழியை எங்களுக்குக் காண்பியும். ஓ பிதாவாகிய தேவனே, எங்களுக்குப் போதியும். நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோமாக. அது வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், அது தவறான போதகர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். பரிசுத்த ஆவியே எங்கள் போதகராயிருக்கிறார். அவரே வார்த்தையை எழுதியவர், அவர் வார்த்தையை தவிர வேறொன்றையும் போதிக்கமாட்டார். அதை அவர் இன்றிரவு எங்களுக்கு எங்கள் இருதயத்தில் வெளிப்படுத்தித் தர வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். தேவனே, இதை அருளும்.

72180 இப்பொழுது நமது தலைகள் வணங்கியிருப்பதோடு, நம்முடைய கண்களும் மூடியிருக்கட்டும். தேவனுடைய கிருபை எங்கள்மேல் தங்கியிருப்பதாக என்பதே என் தாழ்மையும் உத்தமமுள்ள விண்ணப்பமாயுள்ளது. இப்பொழுது விசுவாசியுங்கள். சந்தேகப்படாதீர்கள். 181 இந்த கட்டிடத்தில் யாராகிலும் ஆண்களும் பெண்களும் அவரை அறியாமல், அவர் அருளியுள்ள பலியாகிய கர்த்தராகிய இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்களா? அப்படிப்பட்டவர்கள் இக்கட்டிடத்தில் இருக்கிறார்களென்று நானறிவேன். அவரை அறியாமலிருக்கிறீர்களா? அவரை அறிந்துள்ளதாக உங்கள் அறிவுத்திறன் கொண்டு எண்ணக்கூடும். ஆனால் ஒரு மனிதன் மறுபடியும் பிறக்கும் வரை தேவனைக் காணமுடியாது. நீங்கள் உங்கள் கண்களினால் காண்கிறதில்லை…என்பதை பார்த்தல் பொருட்படுத்துகிறதில்லை; நீங்கள் உங்கள் கண்களினால் காண்கிறீர்கள். பார்த்தல் என்றால் “புரிந்துகொள்ளுதல்” என்பதாகும். நீங்கள் நேராக அதைக் கண்டு, “என்னால் அதைக் காணமுடியவில்லையே” என்கிறீர்கள். அதாவது “நீங்கள் அதை புரிந்துகொள்ளவில்லை” என்னும் அர்த்தத்தில் நீங்கள் கூறுகின்றீர்கள். நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரை, நாங்கள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்று உங்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் அந்த அனுபவத்தை ஒருபோதும் பெற்றிருந்திருக்கவில்லையா? இப்பொழுது உங்கள் தலைகள் வணங்கி, கண்கள் மூடியிருப்பதோடு, உங்கள் கரங்களை நீங்கள் உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாமே, இன்றிரவு ஜெபத்தில் என்னை நினைவுகூருங்கள். எங்களுடைய கடைசி செய்தியை நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நாட்கள் வேகமாக கடந்து செல்கின்றன. வேதத்தில் நீர் கூறியுள்ளது உண்மையென்று நான் காண்கிறேன், ஏனென்றால் நான் வேதத்தை வாசித்திருக்கிறேன். நாங்கள் வரவேண்டிய நேரம் இப்பொழுதே என்று நான் விசுவாசிக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், நான் கிறிஸ்துவுக்காக இப்பொழுது என் உறுதியை தெரிவிக்கிறேன்” என்று கூறுவீர்களா?

73182 தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. தேவன் உங்களை, உங்களையும் ஆசிர்வதிப்பாராக. நல்லது. மாடியின் முன்பக்கத்தில், கரங்கள்! உங்கள் கையையுயர்த்தி, “யோசுவா கூறினவண்ணமாக, ‘நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்’” என்று கூறுங்கள். சரி, வேறு யாராகிலும் உண்டா? நான் காத்துக்கொண்டிருக்கிறேன். பின்னால் உள்ள உங்களைத் தேவன் ஆசிர்வதிப்பராக. உங்கள் கரத்தை நான் காண்கிறேன். மேலே உள்ள உங்களைத் தேவன் ஆசிர்வதிப்பராக. தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. அவர் உங்களைக் காண்கிறார். மேலேமாடியின் முன்பக்கத்திலுள்ள உங்களை தேவன் ஆசிர்வதிப்பராக, ஐயா; இது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் புரிந்துள்ள மகத்தான காரியமாகும். மேலேமாடியிலுள்ள உட்பாதையின் நடுவிலுள்ள, யாராகிலும் உங்களுடைய கரத்தை அங்கே உயர்த்தலாம். அங்கு உயர்த்தப்பட்ட கரம் ஒன்றையுமே நான் காணாதிருக்கலாம். அது ஒருக்கால்…மேல்மாடியின் உட்பாதையின் நடுவில் யாராகிலும் உள்ளீர்களா? உங்கள் கரங்களையுயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாமே, எனக்காக, நான்…நான் அவரை சேவிக்க விரும்புகிறேன். நான்—நான் உத்தமமாய் கூறுகிறேன்” என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. அந்த சிறிய மனிதனை தேவன் ஆசிர்வதிப்பராக. மாடியின் வலது பாகத்தில், யாராகிலும் உங்களுடைய கரத்தை அங்கே உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாமே, எனக்கு, எனக்காக, அது உண்மையென்று நான் அறிவேன். நான்…நான் தேவனை அறியாதவன், ஆனால் நான் அவரை அறிந்துகொள்ள விரும்புகிறேன். நான் நிச்சயமாக அவரை அறிய விரும்புகிறேன். நான் ஒரு வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஒருக்கால் நான் திரும்பி வராமலிருக்ககூடும்” என்று சொல்லுங்கள்.

74183 “மரம் எந்தப் பக்கம் சாய்கிறதோ அந்த பக்கமே விழும்” என்று வேதவசனம் உரைக்கிறது. தவறான வழியுள்ள திசையில் விழுந்துவிடாதீர்கள். இன்றிரவு அதை நீங்கள் சரிபடுத்திக்கொள்ள முடியும். நித்தியம் என்று ஒன்றுண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது ஒருபோதும் துவங்கவும் இல்லை, ஒருபோதும் முடியப்போவதுமில்லை. ஆனால் நீங்கள் அதன் ஒரு பாக மாகலாம், ஒன்று நீங்கள் அவதியுறலாம், அல்லது நீங்கள் சந்தோஷமாக வாழலாம். நீங்கள் வீடு செல்லும் வரைக்கும், நீங்கள் உயிர் வாழப்போகிறீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்களோ, “நான் மிகவும் இளமையாக இருக்கிறேன்” என்று கூறலாம். 184 சற்று முன்பு எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. என் பகுதியில் வாழும் இளம் பெண் ஒருத்தி தவறான பாதைக்கு திரும்பி, புகைப் பிடிக்கத் தொடங்கினாள். தேவனைத் குறித்து அவளுக்கு கூறப்பட்டிருந்து, ஆனால் அவளோ செவிகொடுக்க மனமில்லாதிருந்தாள். அவளுக்கு பதினாறு வயது, அவள் தன்னுடைய…இல்லை, பதினெட்டு வயது, மேல்நிலைப் பள்ளிப் படிப்பை மாத்திரமே முடித்தவள். அவளுக்கு கூறப்பட்டபடி, அவள் சரியானதைச் செய்ய முற்சித்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் தவறான கூட்டத்துடன் செல்லத் துவஙகினாள், மின்னல் தாக்கி அவளை உடனடியாக கொன்றுபோட்டது.

75185 அண்மையில் ஷ்ரீவ்போர்ட்டிலுள்ள ஒரு கறுப்பு நிறமுள்ள ஒரு மனிதன் எழுந்து நின்று, “தேவன் என்ற ஒன்றும் கிடையாது” என்றுக் கூறினான். அப்படி தேவதூஷணம் உரைத்து, “இவர்கள் உருளும் பரிசுத்தர் கூட்டமேயன்றி வேறொன்றுமல்ல.” என்றான். அவனை மின்னல் தாக்கி கொன்றுபோட்டது. அவனுடைய உடலை கல்லறைக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் அந்த மனிதனை சவ அடக்கம் செய்துகொண்டிருக்கும் வேளையில், ஒரு சிறு மேகம் தோன்றி, மின்னல் சவப்பெட்டியைத் தாக்கி, அதிலுள்ள அவனுடைய உடலை சவப்பெட்டியைவிட்டு வெளியே வீசியெறிந்துவிட்டது. 186 யேகோவா தேவன் கோபம் கொள்கிறார். அவர் நல்ல தேவன் என்று நானறிவேன். ஆனால் அவர் நியாயத்தீர்ப்பின் தேவனாயும் கூட இருக்கிறார். அவர் இப்பொழுது கவனித்துக்கொண்டிருக்கிறார், அவருக்குத் தெரியும். 187 நீங்கள் தேவனற்றவர்களாக இருந்தால், உங்கள் கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் ஜெபம் செய்யுபோது, என்னை நினைவுகூருங்கள்” என்று சொல்லுங்கள். பெண்மணியே, தேவன் உன்னை ஆசிர்வதிப்பராக. மகனே, தேவன் உன்னை ஆசிர்வதிப்பராக. அப்படித்தான், முன்னே வாருங்கள். தேவன் உன்னை ஆசிர்வதிப்பராக. அப்படித்தான், வாலிபனே. பின்னால் உள்ள உன்னைத் தேவன் அசிர்வதிப்பராக. நாம் ஜெபிக்கும் போது, நீங்கள் சர்வவல்லமையுள்ள தேவனைக் கேளுங்கள்.

76188 எங்கள் பரலோகப் பிதாவே, இவர்களை இப்பொழுது நீர் கண்டீர். உம்மை அவர்களுடைய இரட்கராக ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்பி, இருபது அல்லது முப்பது கரங்கள் உயர்த்தப்பட்டனவென்பதை நீர் அறிவீர். தேவனே, இப்பொழுது இதை அருள்வீராக. இந்த வார்த்தையை இவர்களுக்கு நான் அளித்தேன். நீரே, “என் வசனத்தைக் கேட்கிற வனுக்கு” என்றீர். கர்தாவே, என்னால் இயன்ற மட்டும் அந்த வார்த்தையை அவர்களுக்கு அளித்தேன். “என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறன்.” அதை யோசித்து பார்க்கும்போது, அது என்னே ஒரு அற்புதமான காரியம்! அந்த கரங்களுக்குப் பின்னால் உள்ள உத்தமமான இருதயங்கள், அதை உண்மையாகவே செய்திருந்தால், ஏதோ ஒன்று நிச்சயமாக சம்பவித்துவிட்டது. இப்பொழுது நீர், “மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் அறிக்கை பண்ணுவேன்” என்று கூறினீர். கர்த்தாவே, நீர் இங்கிருக்கிறீர் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அதை நீர் அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். எங்களுக்கு செவிகொடும். கர்த் தாவே, நாங்கள் உமது ஊழியக்காரர்கள். இயேசுவின் நாமத்தில்.

77189 சரி, உங்கள் தலையை உயர்த்துங்கள். அவர் யேகோவா-யீரே என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர் “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] லோத்தின் நாட்களில் இருந்தது போன்ற நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் விசுவாசிக்கறீர்களா? [“ஆமென்.”] நோவாவின் நாட்களிலா? [“ஆமென்.”] கடைசி செய்தி ஞாபகத்தில் உள்ளதா? 190 இங்கு முதன் முறையாக வந்திருப்பவர் யாராகிலும் உண்டா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அநேகர்! சகோதரன் பார்டர்ஸ் உங்களுக்கு விளக்கியிருக்கிறார் என்று நான் யூகிக்கிறேன். என்ன நடக்கிறதென்று, கூட்டத்தை குறித்து முன்னதாகவே நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் கேள்விப்பட்டிருந்தால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்; நீங்கள் அதை முன்பு கண்டிராமல், அதை குறித்து கேட்டிருந்தால் மற்றும். சரி. இப்பொழுது நான் இங்குள்ள ஜனங்களுக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன்.

78191 உங்களில் சிலர் தொல்லையோடிருக்கலாம், நீங்கள் தேவனிடம் ஜெபத்தை ஏறெடுத்து, “தேவனே, என்மேல் இரக்கமாயிரும், நான் வியாதியாயிருக்கிறேன். சகோதரன் பிரான்ஹாமுக்கு என்னைத் தெரியாது. ஆனால் நீர் எங்கள் பலவீனங்களைக் குறித்து தொடப்படக் கூடிய பிரதான ஆசாரியர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொல்லுங்கள். எத்தனை பேருக்கு அது தெரியும்? [சபையோர் “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” அது உங்களுக்குத் தெரியுமா? [“ஆமென்.”] அவர் அதே பிராதான ஆசாரியராயிருப்பாரானால், நீங்கள் அவரைத் தொடும்போது, அவர் எப்படி நடந்துகொள்வார்? பெரும்பாடுள்ள ஸ்திரீ அவரைத் தொட்டப்போது அவர் அந்தவிதமாகவே நடந்துகொண்டார். அவர் திரும்பிப் பார்த்து, அவளுக்கு பெரும்பாடு உள்ளதென்றும், அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்ததென்றும் கூறினார். அது சரியா? இன்றிரவும் அவர் மாறாதவராயிருக்கிறார். அவர் அன்றிருந்தது போலவே அதேவிதமாக இருக்கிறார் என்று அவரை நீங்கள் விசுவாசிக்கக் கூடுமனால் நலமாயிருக்குமே. அந்தவிதமாக நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? 192 இப்பொழுது நீங்கள் இந்த பக்கம் என்னை நோக்கிப் பாருங்கள். அலங்கார வாசலண்டையில் பேதுருவும் யோவானும், “எங்களை நோக்கிப் பார்” என்று கூறினது போலவேயாகும். அது “அவர்களை நோக்கிப் பார்க்க வேண்டும்” என்பதாயிருக்கவில்லை, ஆனால் “அவர்கள் என்ன கூறிக்கொண்டிருந்தனர் என்பதையே நோக்கிப் பார்க்கவேண்டும்” என்பதேயாகும்.

79193 நாம் இங்கு எங்காகிலுமிருந்து தொடங்குவோமாக. இந்த பக்கமாக நோக்கிப் பார்த்து, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். “கர்த்தராகிய இயேசுவே, உம்மை நான் விசுவாசிக்கிறேன். உமது வஸ்திரத்தைத் தொட நான் விரும்புகிறேன். நீர் சகோதரன் பிரான்ஹாமிடம் பேசி, எனக்குள்ள தொல்லை என்னவென்று அவர் அறிந்துகொள்ளும்படிச் செய்யும். அப்படி நீர் செய்வீரானால், உம்மை நான் விசுவாசிப்பேன்” என்று கூறுங்கள். நீங்கள் அப்படி செய்வீர்களா? 194 இப்பொழுது இங்கே ஒரு தைரியமான காரியம் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்ய நான் துணிச்சல் கொள்வேனா? அப்படிப்பட்ட ஒரு சவால் விடுவதற்கு என்னிடம் ஏதோ தவறு இருக்கவேண்டும். இந்த சாவலை நான் ஓரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் முன்னிலையில் விடுத்திருகிறேன், அவர்களுடைய மொழியும் கூட எனக்குத் தெரியாது. ஆனால் அவர் என்னைக் கைவிட்டதேயில்லை. ஏன்? அவர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளாரே! இது கடைசி நாட்களாயுள்ளது, அவர் இதை வாக்களித்துள்ளார். எனவே அது இங்குள்ளது.

80195 நண்பர்களே, உங்களைப் புண்படுத்த உங்களுக்கு அநேக காரியங்கள் உண்டாயிருந்தன என்று நான் அறிவேன். நீங்கள் நிறைய மாமிசப்பிரகாரமான போலிகளைப் பெற்றுள்ளீர்கள். அனால் ஒரு காரியத்தை நான் உங்களிடம் கூறட்டும், என் நன்மைக்காக அல்ல, ஆனால் உங்கள் நன்மைக்காகவேயாகும். அவர்கள் எக்காலத்தும் அதைப் பெற்றிருந்தனர். தேவன் ஒரே நேரத்தில் இரண்டு பேர்களை இவ்வுலகில் ஒருபோதும் வைத்ததேக் கிடையாது, ஒருபோதும் வைத்ததேயில்லை. ஆனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள், நிறைய போலிகள் உள்ளன, ஆனால் ஒரு உண்மையான தேவன் இருக்கிறார். ஒரு உண்மையான பரிசுத்த ஆவி உண்டு. ஒரு உண்மையான தேவனுடைய செய்தி உண்டு, அது இயேசுகிறிஸ்து பாவிகளுக்காக மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, பரிசுத்த ஆவி என்னும் நபராக திரும்பவும் வந்து, இவ்வுலகில் அவர் இருந்தபோது செய்த அதே கிரியைகளை இப்பொழுது சபையில் செய்துகொண்டிருக்கிறார் என்பதேயாகும்.

81196 இப்பொழுது, தேவனுடைய வார்த்தை இதை உரைக்கவில்லையா? அது எபிரேயரில் உள்ளது, அது 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது, வேதம், “தேவனுடைய வார்த்தை யானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்,” அது வருவதையும் போவதையும் வெட்டிக்கொண்டிருக்கிறது, “ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்றுரைத்துள்ளது. அது சரியா? 197 ஆகையால்தான் இயேசு கூட்டத்திலுள்ளவர்களுக்கு முன் னால் நின்று, அவர்களிடம் கூற முடிந்தது. அந்த பரிசேயர், “அவரை பெயல்செபூல்” என்றழைத்தனர். இயேசு திரும்பிப் பார்த்தார். அவர்கள் அதை உரத்த சத்தமாய் கூறவில்லை. ஆனால் அவர் அதை அவர்களிடம் கூறினார். அந்தக் காரணத்தினால்தான் பெரும்பாடுள்ள ஸ்திரீயிடம் அவளுடைய நிலைமையைக் குறித்து அவரால் கூற முடிந்தது. சமாரிய ஸ்திரியிடம், அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்களென்றும்; அவள் என்ன செய்திருந்தாள் என்றும், அப்பொழுது அவர் கூறினார். “ஏன், அது மேசியாவின் அடையாளமாகும்.” 198 இப்பொழுது நீங்கள் மேசியா திரும்பவும் வந்து தமது ஜனங்களின் மத்தியில் பிரசன்னமாயிருப்பதைக் காண்கிறீர்கள். அது பரிசுத்த ஆவி சபையை ஆயத்தப்படுத்திக் கொண்டிருத்தலாகும்.

82199 உங்கள் தலையை நீங்கள் திருப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த வாலிப ஸ்திரீ நிமிர்ந்தவாறு அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறீர்களா? அந்த ஒளி அவள் மேல் உள்ளதை காண்கிறீர்களா? அவள் உயர் இரத்த அழுத்தத்தால் அவதியுற்றுக்கொண்டிருக்கிறாள். அது உண்மை. அவள் ஊதா நிறமுள்ள உடை உடுத்தியிருக்கிறாள், மூக்கு கண்ணாடி அணிந்திருக்கிறாள். கடந்த ஓரிரண்டு வினாடிகளாக, அவள் தன்னைச் சுற்றிலும் ஒரு விசித்திரமான உணர்வு உள்ளதை உணர்ந்திருக்கிறாள். அது உண்மை. இப்பொழுது உன்னை மிக மோசமாக தொல்லைப்படுத்திக்கொண்டிருந்த உயர் இரத்த அழுத்தம் உன்னை விட்டுப் போய்விட்டது. நீ அதை ஏற்றுக்கொள்கிறாயா? நீ ஏற்றுக்கொள்வாயானால் உன்னுடைய கரத்தை உயர்த்து. 200 அவள் எதைத் தொட்டாள்? பிரதான ஆசாரியரை. இப்பொழுது நீங்கள் சென்று, அந்த ஸ்திரீயைக் கேட்டுப் பாருங்கள். அவளை என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் கண்டதேயில்லை. அந்த ஸ்திரீயைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது; ஆனால், அது உண்மை. அந்த ஒளி இந்தக் கூட்டத்தினிரிடையே நகர்ந்து சென்றுகொண்டிருந்தபோது, நான் அதை கவனித்துக் கொண்டிருந்தேன், அது நேராக அவள்மேல் சென்று தங்கி, திரும்பி வந்தது, அது ஒரு கொழுந்துவிட்டு எரியும் ஒளி.

83201 நீ விசுவாசிக்கிறாயா? மூட்டு வீக்கம், சிறுநீர்ப்பைத் தொல்லை, சிக்கல்கள், நரம்புத் தளர்ச்சி, பெலவீனம். அது உண்மை நீ இந்த இடத்தை சேர்ந்தவளல்ல. நீ வெஸ்ட் பாய்ண்ட் என்றழைக்கப்படும் இடத்திலிருந்து வருகிறாய். அது உண்மை. நீ யாரென்று தேவனால் என்னிடம் கூற முடியுமென்று நீ விசுவாசிக்கிறாயா? குமாரி. ஹார்ட்விக். அது உண்மை. அது உண்மையானால், எழுந்து நில். அது உன்னை விட்டுப் போய் விட்டது. இயேசுகிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார். 202 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆம்” என்கின்றனர்.—ஆசி.] ஜனங்கள் உன்னைப் பார்க்க பின்னால் திரும்பிக்கொண் டிருக்கிறார்கள். ஆனால் அந்த பெண்மணி இங்கே அமரந்திருக்கிறாள். பாருங்கள், அந்த ஒளி இன்னும் அவள்மேல் தங்கியுள்ளது. நீங்கள் அதைக் காணவில்லையா? இதோ அது உள்ளது. கவனியுங்கள். 203 அங்கு உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் மனிதனோடு அது உள்ளது. மூட்டு வீக்கம். அவர் தன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறார், ஐயா, தேவன் உங்களையும் கூட சுகமாக்குவார். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர், ஆனால் தேவனுக்கல்ல.

84204 அங்கு பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஸ்திரீ தலைவலியால் அவதிப்படுகிறாள், தேவனே, அவள் அதை இழந்து போக வேண்டாம். ஓ, தேவனே, தயவுகாட்டும். குமாரி மார்டன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அவர் தலைவலியிலிருந்து உன்னை சுகமாக்கினார். பாருங்கள், அவளிடமிருந்து அந்த ஒளி கடந்து போக அவர் விடவில்லை. நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். நேற்றிரவு இக்கட்டிடத்திலுள்ள ஒருவரிடம் அவர்களுடைய தலைவலியைக் குறித்து நான் கூறினபோது, உனக்கு ஒரு வினோதமான உணர்வு உண்டாயிருந்தது. அது ஒருக்கால் நீயாயிருக்குமா அல்லது இல்லையா என்று நீ யோசித்துக்கொண்டிருந்தாய். அது சரியா? உன் கரத்தை உயர்த்து. நான் மனோதத்துவத்தினால் உன் மனதிலுள்ளவைகளை படித்துக்கொண்டிருக்கவில்லை, நீ என்ன நினைத்துக்கொண்டிருந்தாய் என்று நான் உன்னிடம் கூறிக்கொண்டிருக்கிறேன். அது உண்மை. அது இன்று நீயாயிருக்க வேண்டு மென்று அவர் உறுதிகொள்ள விரும்பினார். அந்த ஒளி உன்னை விட்டு இப்பொழுது சென்றுவிடும், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. அல்லேலுயா.

85205 கட்டம் போட்ட உடை உடுத்தி இங்கு உட்கார்ந்துகொண்டுள்ள அந்த ஸ்திரீயைப் பாருங்கள். பெண்மணியே, உன்னிடம் ஜெப அட்டை உள்ளதா? உன்னுடையதைப் பார். அந்த பிளவு உன்னை விட்டு நீங்குமென்றும், நீ சுகமடைவாய் என்றும் நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாயா? அதுதான் உன்னோடுள்ள கோளாறு என்றால் உன் கரத்தை உயர்த்து. சரி. உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்து சுகமடைவாயாக. எனக்கு என்ன உள்ளதென்று பார்த்தாயா? 206 அவளுக்கு பின்னால் உள்ள அந்த பெண்மணி, தன்னுடைய கரத்தை உயர்த்தினாள், ஒரு சிறிய…இல்லை, அங்கே இரண்டாம் வரிசையில் உள்ளவர்கள் பச்சையாகக் காணப்படுகிற உடையை உடுத்தியிருப்பவள், இருதயக் கோளாறினால் அவதியுற்றுக்கொண்டிருக்கிறாள். ஆம். தேவன் உன்னை சுகமாக்குவாரென்று நீ விசுவாசிக்கிறாயா? அது அருமையானது, அழகானது. நீ அதை விசுவாசித்தால், அவர் உன்னைச் சுகமாக்குவார். 207 ஒரு பெண்மணி, உனக்கு இரண்டவதாக அமர்ந்திருப்பவள், அங்குள்ள திருமதி. டில்மன். உன் வயிற்று கோளாறை தேவன் சுகமாக்குவாரென்று நீ விசுவாசிப்பாயானால் நலமாயிருக்கும். திருமதி. டில்மன், விசுவாசி, அப்பொழுது உன் வயிறு சுகமடையும். அது நரம்புடன் சம்பந்தப்பட்ட வயிற்றுக் கோளாறு. அது நீண்ட நாட்களாக உனக்கு இருந்து வருகிறது, முக்கியமாக ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு உனக்கு நின்றது முதற்கொண்டே அது உனக்கு இருந்து வருகிறது. உன்னை அதிகமாய் தொல்லைப்படுத்த அநேக காரியங்கள் உனக்கிருந்தன, ஆனால் அவையெல்லாம் இப் பொழுது முடிந்துவிட்டன. இந்த காரியங்கள் யாவும் உண்மையானால், ஜனங்கள் காணும்படியாக உன் கையை அவர்களுக்கு அசைத்துக் காட்டு. நான் உனக்கு ஒரு அந்நியனானால், உன் கரத்தை தொடர்ந்து ஆட்டிக்கொண்டேயிரு. இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார்.

86208 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர் “ஆமென்.” என்கின்றனர்—ஆசி.] அது என்ன? யேகோவா-யீரே, தேவன் தமக்காக ஒரு பலியை அருளுதல்! இப்பொழுது கூட்டத்திலுள்ள அனைவரும் எனக்கு மங்கலாக காணப்படுகின்றனர். யேகோவா-யீரே உங்கள் ஒவ்வொரு வருக்காகவும் பலியை அருளியிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 209 இப்பொழுது இங்கு உங்களுடைய கரத்தை உயர்த்தின நீங்கள், இங்கு வந்து ஒரு நிமிடம் நில்லுங்கள். நீங்கள் அப்படி செய்வீர்களா? யோகோவா-யீரே ஒரு பலியை அருளியிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசித்தீர்கள் என்றே நீங்கள் உங்களுடைய கரத்தை அறிகுறியாக உயர்த்தினீர்கள். இங்கு நடந்ததை நீங்கள் கண்டு, அதை அறிந்திருக்கிறீர்கள். கூடாத காரியம்…அது முக்கியமான ஒன்று! அந்த ஜனங்களைப் பாருங்கள். எத்தனை பேர் பெயர் சொல்லி அழைக்கப்பட்டனர். இப்பொழுது எனக்குத் தெரியவில்லை. அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் ஒருக்கால் ஏழு, எட்டு அல்லது பத்து பேராயிருக்கலாம். அது தொடர்ந்து கொண்டே இருக்கமுடியும். ஆனால் எனக்கு பெலம் உள்ளபோதே, நீங்கள் வந்து கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “நான் வருகிறேன், கர்த்தாவே, இப்பொழுது உம்மண்டை வருகிறேன்” என்று நாம் பாடும்போது, இப்பொழுது நீங்கள் எழுந்து வருவீர்களா? சற்று முன்பு உங்களுடைய கரத்தை உயர்த்தின நீங்கள் இப்பொழுது எழுந்து இங்கு வருவீர்களா? நீங்கள் இங்கே பீடத்தை சுற்றி நின்று, நீங்கள் கிறிஸ்துவைக் குறித்து வெட்கப்படவில்லை என்பதைக் காண்பியுங்கள். நீங்கள் அவருடைய சமுகத்தில் இருக்கிறீர்கள். இப்பொழுது வந்து, நீங்கள் உண்மையாகவே அதைச் செய்தீர்கள் என்பதை ஜனங்களுக்கு நிரூபியுங்கள், நீங்கள் தேவனால் நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள் என்றும், நீங்கள் அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்றும் காண்பியுங்கள். நாம் எழுந்து நின்று பாடும்போது, இப்பொழுது முன்னே வாருங்கள். நான் வந்துகொண்டிருக்கிறேன், கர்த்தாவே! இப்பொழுது உம்மண்டை வருகிறேன்! என்னைக் கழுவி, இரத்தத்தில் சுத்திகரியும் கல்வாரியில் பாய்ந்த அந்த இரத்தத்திலே! 210 இப்பொழுது வாருங்கள், இங்கே வந்து நில்லுங்கள். நாங்கள் இப்பொழுது ஜெபிக்கப் போகின்றேம். நீங்கள் இவ்விடம் விட்டுச் செல்லும்போது, இதைக் காட்டிலும் அவருக்கு அருகாமையில் இருக்கமாட்டீர்கள. இப்பொழுது உம்மண்டை வருகிறேன்! என்னைக் கழுவி, என்னை சுத்திகரித்தருளுமே!

87211 மாடியின் முன்பக்கத்திலிருந்து கீழே இறங்கி வாருங்கள். சரி. கீழே இறங்கி வந்து இங்கே நில்லுங்கள். ஒரு… இப்பொழுது, அவர், “மனுஷர் முன் பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் என் பிதாவுக்கு முன்பாக அறிக்கைப்பண்ணுவேன். ஆனால் நீங்கள் என்னைக் குறித்து வெட்கப்பட்டால், நானும் உங்களைக்குறித்து வெட்கப்படுவேன்” என்று கூறினார். ஆதியாகமத்திலிருந்து வெளிப் படுத்தின விசேஷம் முடியவுள்ள வேதாகமத்தை நினைவுகூருங்கள். வாலிபரே, வயோதிபரே, இப்பொழுது வாருங்கள். நீங்கள் வருவீர்களா? சபை அங்கத்தினரானாலும், அல்லது இல்லாவிட்டாலும், இப்பொழுது வாருங்கள். நீங்கள் வருவீர்களா? கிறிஸ்துவின் சமுகத்தில் நீங்கள் உள்ளபோதே, அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் வந்துகொண்டிருக்கிறேன், கர்த்தாவே! இப்பொழுது உம்மண்டை வருகிறேன்! என்னைக் கழுவி, இரத்தத்தில் என்னை சுத்திகரியும் கல்வாரியிலிருந்து பாய்ந்த அந்த இரத்தத்தால்! 212 அப்படியே தொடர்ந்து பாடுவோம். [சகோதரன் பிரான்ஹாம் “நான் வந்துகொண்டிருக்கிறேன், கர்த்தாவே.” என்னும் பாடலை மௌனமாகப் பாடத் துவங்குகிறார்—ஆசி.]

88213 கவனியுங்கள். நான் அவருடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இதை நான் இதற்கு முன்பு அறிக்கை செய்திருக்கவில்லை. நான் உங்களை புரிந்துகொள்ளும்படி செய்யவே முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து, புரிந்துகொள்ளுகிற ஜனங்களோடு நான் நிற்கிறேன் என்றே நான் நம்புகிறேன். கிறிஸ்துவ மார்க்கத்தை பற்றிக்கொண்டிருக்கிற ஜனங்கள் இங்கு உள்ளனர், இங்கு இருக்க வேண்டும். நீங்கள் வரமாட்டீர்களா? நான் உங்களை கேட்கட்டும், நீங்கள் எப்படி பெற்றுக்கொள்ள போகிறீர்கள்? நீங்கள் ஒருபோதும் வேறொரு அடையாளத்தை பெறமாட்டீர்கள். அதுதான் இது. கர்த்தர் உரைக்கிறதாவது . அது உண்மையாயிராமற்போனால், தேவனுடைய தீர்க்கரிசி அப்படிப்பட்ட ஒரு வாக்குமூலத்தை அளிப்பாரா? கிறிஸ்துவின் பிரசன்னமாகுதலுக்கு முன்னதாக நீங்கள் உங்களுடைய மிகப் பெரிய அடையாளத்தையும், கடைசி அடையாளத்தையும் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். வாருங்கள்! இந்த காரியங்களை நான் கூறிக்கொண்டிருப்பதற்கான காரணம், இதை நான் வேறெந்த கூட்டத்திலும் கூறினதேயில்லை, இங்கு ஏதோ ஒன்று நிகழ்வதற்கு தருணம் உள்ளது என்று நான் உணருகிறேன். அதனால்தான் நான் இப்படியெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் புரிந்துகொள்வீர்களென்று நான் நம்புகிறேன். நீங்கள் சென்று ஒருவிதமான கொள்கையை உண்டாக்கிக் கொண்டு, “சகோதரன் பிரான்ஹாம் தேவன்” என்றோ, அல்லது அப்படிப்பட்ட ஏதாவதொன்றையோ கூற வேண்டாம். நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது வாருங்கள். வாருங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை நான் தூண்டட்டும். வாருங்கள்!

89214 நீங்கள் எந்நிலையில் இருக்கின்றீர்கள் என்று அறிந்திராதவர்கள், அதைக் குறித்து நிச்சயமில்லாதவர்கள், அறிவாளியாக மாத்திரம் அல்லது ஒருவிதமாக உணர்ச்சிவசப்பட்டுள்ளவர்கள்; நீங்கள் அழுதிருக்கிறீர்கள், நீங்கள் கதறியழுதிருக்கிறீர்கள், அல்லது நீங்கள்—நீங்கள் ஒருவிதமான ஒரு உணர்ச்சிவசப்படுதலை உடையவர்களாயிருநதீர்கள். அதன்பேரில் அங்கு சென்றடைய நீங்கள் முயற்சிக்க வேண்டாம். நீங்கள் இழக்கப்பட்டு, பரிதபிக்கப்படத்தக்கதாய் இழக்கப்பட்டு, அதை அறியாதிருப்பீர்கள் என்று கர்த்தருடைய நாமத்தில் நான் உங்களுக்கு சொல்லுகிறதை நினைவில் கொள்ளுங்கள். நண்பனே, வேறொரு தருணத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் விதையை மாத்திரமே விதைத்துக்கொண்டிருக்கிறேன், வலையை இழுக்கிறேன். விளையச் செய்கிறவர் தேவனே. எனக்குத் தெரியாது. 215 நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக, அவர் என்னிடம் சொல்லமாட்டாரா என்று பார்போம். [ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறாள், அதன்பின்னர் அர்த்தம் உரைக்கிறாள்—ஆசி.] நீங்கள் அதைக் கேட்டீர்கள். இப்பொழுது உம்மண்டை வருகிறேன்! (உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள்) என்னைக் கழுவி, என்னை சுத்தமாக்கியருளும்…

90216 சபை அங்கத்தினனே. எனக்கு சபையை சேர்ந்துள்ள அனுபவம் மாத்திரம் இருந்து, இங்கு நின்று கொண்டிருந்தால் …?… நான் முடிந்தளவு துரிதமாக இங்கு வந்து என்னுடைய வழியைத் தெரியப்படுத்துவேன். 217 ஞாபகம் கொள்ளுங்கள், நாம் முடிவிலே இருக்கிறோம் என்று ஆவியானவர் சாட்சி பகருகின்றார். விஞ்ஞானமும், “நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் உள்ளன.” என்று கூறிவிட்டது. செய்தியும் வேதாகமும், “இதோ அது இங்குள்ளது, இதுவே கடைசி காரியம்!” என்கின்றன. எழுப்புதல் முடிவடைந்துகொண்டிருக்கிறது. கதவு அடைபட்டுக்கொண்டிருகிறது. நீங்கள் வெளியே இருந்து தட்டிக் கொண்டிருப்பீர்கள். உங்களால் உள்ளே வர முடியாது. வாருங்கள்! வாலிபப்பெண்ணே, தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. இப்பொழுது, நீ அதைக் கண்டாயா? நான் வந்துகொண்டிருக்கிறேன், கர்த்தாவே! இப்பொழுது வருகிறேன்… 218 தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. அது உண்மை, ஐயா. அந்தவிதமாகவே, மாடியின் முன்பக்கத்திலிருந்து கீழே இறங்கி வாருங்கள். வரிசை வரிசையாக வருகின்றனர்.

91219 இங்கு வார்த்தை உள்ளது, இங்கு அத்தாட்சி உள்ளது. அங்கு ஆவி உள்ளது, அங்கு சாட்சி உள்ளது. நாம் இங்கே முடிவு காலத்தில் இருக்கிறோம் என்பதைக் காண்பிக்க இங்கு ஜனங்கள் வந்துகொண்டிருக்கின்றனர். நான் வந்துகொண்டிருக்கிறேன், கர்த்தாவே! இப்பொழுது உம்மண்டை வருகிறேன்! என்னைக் கழுவி, இரத்தத்தில் என்னை சுத்தமாக்கியருளும் கல்வாரியில் பாய்ந்த அந்த இரத்தத்தால்! நான் வந்துகொண்டிருக்கிறேன், கர்த்தாவே! 220 காத்திருக்கிறேன், அவர் அழைக்கிறார். “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி,” “என்னிடத்தில் வாருங்கள்.” என்று கூறினார். 221 ஒருக்கால் உங்களுடைய மனதில் ஒரு சந்தேகம் இருந்திருந்தால். நண்பர்களே, நீங்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்கவேண்டும். விசுவாசம் பரிபூரணமுள்ளது. …கல்வாரியிலிருந்து! …கர்த்தாவே! இப்பொழுது வருகிறேன்… 222 சிலரே, ஐம்பதிலிருந்து எழுபத்தைந்து ஜனங்கள் ஒன்று கூடியுள்ளனர். இப்பொழுது வாருங்கள். மற்றவர்களும் வரட்டும். இப்பொழுது இன்னும் சிறிது நேரம் தாமதிக்கிறேன். ஏனெனில் நாளை தெய்வீக சுகமளிக்கும் ஆராதனை இருக்கப்போகிறது. சற்று முன்பு பரிசுத்த ஆவி என்னிடம் பேசி, “ஜெபவரிசையை அழைக்காதே, பீட அழைப்பு கொடு.” என்றார். அவருக்கு நான் கீழ்ப்படிந்து அவர் எனக்கு சொல்கிறபடியே செய்கிறேன். அதைக் காட்டிலும் வேறெதையும் செய்யாமலிருப்பது மேலானது என்பதை நான் அறிவேன். இப்பொழுது உம்மண்டை வருகிறேன்! என்னைக் கழுவி, இரத்தத்தில் என்னை சுத்திகரியும் கல்வாரியில் பாய்ந்த அந்த இரத்தத்தில். நம்முடைய தலைகள் இப்பொழுது வணங்கியிருப்பதோடு, நாம் காத்துக்கொண்டிருக்கையில்.

92223 ஓ தேவனே, பரிசுத்த ஆவியானவர் இவர்கள் மேல் அசைவாடட்டும். பீடத்துக்கு முன்னால் வர விரும்பும் இவர்களை, இப்பொழுது ஆசிர்வாதத்துக்கு இந்த ஜனங்களை வழிநடத்துவீராக. தேவனாகிய கர்த்தாவே இதை அருள்வீராக. தேவனுடைய ஆவியானவர் பேசுகிறார். 224 நெருங்கி வாருங்கள், நெருங்கி வாருங்கள். இப்பொழுது அருகாமையில் வாருங்கள், ஒவ்வொருவரும். “பாவத்தினால் ஒடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் கர்த்தரிடத்தில் இரக்கம் உண்டு.” இப்பொழுது வாருங்கள். “சுத்திகரிக்கும் இரத்த வெள்ளத்தின் கீழ்வந்து, அவர் களுடைய குற்றமுள்ள கறைகள் அனைத்தையும் போக்கிக் கொள்கின்றனர். இம்மானுவேலின் இரத்தக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தினால் நிறைந்த ஊற்று ஒன்றுண்டு.” பயபக்தியாயிருங்கள்.

93225 கூட்டத்தின் மேலுள்ள சமாதானத்தை இப்பொழுது உணரு கிறீர்களா? அது என்ன? அது மரணம், பாவிகளுக்கு மரணம். தனிப்பட்ட ஊழியக்காரர்கள் இவர்களோடு கூட இப்பொழுது சுற்றிலும் செல்லுங்கள். அது மரணம், இந்த ஜனங்கள் மரித்துக்கொண்டிருக்கின்றனர். வேதாகமங்கள் வெளியே எடுக்கப் பட்டு, அவர்கள் விவரித்துக்கொண்டிருக்கின்றனர். பீடத்தைச் சுற்றிலும் மரணம் சென்றுகொண்டிருக்கிறது, மரணத்துக்குப் பிறகு புது ஜீவன் வரும். இரத்தத்தால் நிறைந்த ஒரு ஊற்று உண்டு, எடுக்கப்பட்ட… ஓ, அதை ஒருநாளில் கேட்க நீ எவ்வளவாக விரும்புவாய், உன் இருதயத் துடிப்பு நிற்கும் அந்த நாளிலே! அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கும் பாவிகள், தங்கள் பாவக் கறைகள் அனைத்தையும் போக்கிக்கொள்கின்றனர். தங்கள் பாவக்கறைகள் அனைத்தையும் போக்கிக் கொள்கின்றனர், வாலிப நபரே, அதுதான் இது. உன்னுடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக. அதற்காகத்தான் அவர் காத்துக் கொண்டிருந்தார். பாவிகள் அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கி, தங்களுடைய பாவக் கறைகளைப் போக்குகின்றனர்.

94226 இப்பொழுது போதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், நாம் அடுத்த சரணத்தைப் பாடும்போது முன்னால் வரட்டும். “மரித்துக் கொண்டிருந்த கள்ளன் அந்த ஊற்றை அவன் நாளில் கண்டு களிகூர்ந்தான்; அங்கு நான் அவனைப்போல் இழிவானவனாயிருந்தபோதிலும், என் பாவங்கள் அனைத்தையும் கழுவிக்கொள்வேனாக.” “போதித்துக்கொண்டிருக்கும் ஜனங்கள் அருகாமையில் வரட்டும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றிராதவர், இப்பொழுது முன்னால் வாருங்கள். இப்பொழுது ஒரு நிமிடத்தில் தேவன் என்ன செய்யப்போகிறாரென்று நீங்கள் அறியமாட்டீர்கள். அடுத்த சரணத்தை இப்பொழுது நாம் பாடும்போது, இப்பொழுது முன்னால் வாருங்கள். மரித்துக்கொண்டிருந்த கள்ளன்…(வார்த்தை வெளிப்பட்டதை) அந்த ஊற்றை அவன் நாளில் கண்டு களிகூர்ந்தான்; ஓ, அது அருமையானது, முன்னால் இப்பொழுது வாருங்கள். தண்ணீர் கலக்கப்படுகையில் வாருங்கள். …நான், அவனைப்போல் இழிவானவனாயிருந்தபோதிலும், என் பாவங்கள் அனைத்தையும் கழுவிக்கொள்வேனாக. என் பாவங்கள் அனைத்தையும் கழுவிக்கொள்வேனாக, என் பாவங்கள் அனைத்தையும் கழுவிக்கொள்வேனாக; 227 ஊழியக்காரரே, அதுதான் இது. உள்ளே வாருங்கள். முன்னோக்கி வந்த நீங்கள் யாவரும் தண்ணீர் கலக்கப்படுவதற்காக காத்திருங்கள். முன்னால் வாருங்கள். …அவனைப்போல் இழிவானவனாய் என் பாவங்கள் அனைத்தையும் கழுவிக்கொள்வேனாக.

95228 இப்பொழுது ஜெபம் செய்ய விரும்புகிற நீங்கள், இப்பொழுது அருகில் வந்து ஆயத்தமாயிருங்கள். தேவன் இதை அங்கீகரிக்கப் போகிறாரென்று நாம் விசுவாசிக்கப்போகின்றோம். அவர் அப்படி செய்யத்தான் வேண்டுமே! இருதயத்தின் சிந்தனைகளை பகுத்தறிய முடிந்த அதே தேவன்! இயேசு ஒரு பட்டினத்தில் அதை ஒருமுறை மாத்திரமே செய்தார் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். ஆனால் அவர், “இதைப் பார்க்கிலும் அதிகமாக நீங்கள் செய்வீர்கள்” என்று கூறினார். பாருங்கள், அவரு டைய வேதவாக்கியம் சரியென்று நிரூபித்தாரே! இப்பொழுது நெருங்கி வாருங்கள். இங்கு வந்துள்ள இந்த ஜனங்களுக்காக நாம் அனைவரும் இப்பொழுதே ஜெபிப்போமாக. எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை அறிந்துள்ள ஒவ்வொருவரும். மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் இந்த கட்டிடத்தில் உள்ளீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது நாமனைவரும் நமது கரங்களை உயர்த்தி, இந்த ஜனங்களுக்காக நன்றி செலுத்துவோமாக.

96229 எங்கள் பரலோகப் பிதாவே, இந்த ஜனங்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இவர்கள் உம்முடையவர்கள். அறிக்கையிடுவதற்கு இவர்கள் வந்துள்ளனர். தங்கள் சுயத்துக்கும், பாவத்துக்கும் மரிப்பதற்காக அவர்கள் வந்துள்ளனர். அவர்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷஷ்டிகளாக திரும்பிச் செல்லப்போகிறார்கள். 230 சாத்தானே, நீ யுத்தத்தில் தோற்றுவிட்டாயே! தேவன் யேகோவா-யீரேவாயிருக்கிறாரே! கர்த்தர் ஒரு பலியை அருளியிருக்கிறார், ஒரு ஜனத்தை அருளியிருக்கிறார், பீட அழைப்பை அருளியிருக்கிறார், செய்தியை அருளியிருக்கிறார், கிருபையை அருளியிருக்கிறார். சாத்தான் யுத்தத்தில் தோற்றுப் போய்விட்டான், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவன் யுத்தத்தில் தோற்றுப்போய்விட்டானே! 