வாசலின் திறவுகோல்

62-1007

கடரததல இரபபத ஒர சலககயமக இரககறத! இத எனகக சறற எதரபரககபபடததயஙகட இரநதத. இனறரவ இரபஜன ஆரதன இரவ எனற எனககத தரயம. நன எஙககலம அரகமயல இரநதல, இரபஜனததறக வர எனகக எபபழதம வரபபம. ஏனனறல அதகறஸதவரகள எலலரம இரபஜனம எடததலல பஙககளள வணடம எனற நன நனககறன, ஏனனறல இயச, நஙகள இதப பசககவடடல எனனடததல உஙகளகக பஙகலல எனற கறயரககறர. ஆகயல, அத ஒர

வாசலின் திறவுகோல்

62-1007ஜெபர்ஸன்வில் இந்தி911962-10-07

வாசலின் திறவுகோல்

62-1007ஜெபர்ஸன்வில் இந்தி911962-10-07

1 கூடாரத்தில் இருப்பது ஒரு சிலாக்கியமாக இருக்கிறதே! இது எனக்கு சற்று எதிர்பார்க்கப்படாததாயுங்கூட இருந்தது. இன்றிரவு இராபோஜன ஆராதனை இரவு என்று எனக்குத் தெரியும். நான் எங்காகிலும் அருகாமையில் இருந்தால், இராபோஜனத்திற்கு வர எனக்கு எப்பொழுதுமே விருப்பம். ஏனென்றால் அது…கிறிஸ்தவர்கள் எல்லோருமே இராபோஜனம் எடுத்தலில் பங்குகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் இயேசு, “நீங்கள் இதைப் புசிக்காவிட்டால் என்னிடத்தில் உங்களுக்கு பங்கில்லை” என்று கூறியிருக்கிறார். ஆகையால், அது ஒரு…கூடாரத்துக்கு வருவதென்பது எப்பொழுதுமே ஒரு பெரிய சிலாக்கியமாக இருந்து வருகிறது. சகோதரர் நெவில் என்னிடம் இன்றிரவு அவருக்கு தொண்டை சற்று கரகரப்பாக உள்ளதாகவும், நம்முடைய சபையோரிடம் எனக்கு பேச விருப்பமுண்டா என்றும் கேட்டார். அப்படி செய்ய எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று நான் பதிலளித்தேன். இதையும் கூட நான் உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்…

22 நாளை இரவு புருஷருடைய கூட்டம், தர்மகர்த்தாக்களின் கூட்டம் நடைபெறும், நாளை இரவு இங்கு சபையிலுள்ள வர்த்தகர்களுக்கு வழக்கம்போல் திங்கள் இரவு அவர்களுடைய கூட்டம் இருக்கும்…நாங்கள் ஒப்பந்தகாரரிடம் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். நம்முடைய—நம்முடைய—நம்முடைய கட்டிட சம்பந்தமான பத்திரங்கள் அனுமதி பெற்று விட்டதா என்பதை நீங்கள் எல்லோருமே அறிந்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். எனவே நாம் கட்டப்போகிற சபைக் கட்டிடத்தை கட்ட முடியும். எனவே கட்டிடப் பணியை அனேகமாக இந்த வாரத்தில் துவங்கிவிடலாம். எனக்கு தெரிந்த மட்டில் இந்த வாரத்தில் சபையைக் கட்டத் துவங்கலாம். இங்கே அந்த பத்திரங்களின் பெயரில் ஜெபர்ஸன்வில்லில் நமக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். ஆனால் நாங்கள் இந்தியானாபோலீசுஸுக்கு சென்றபோது, அந்த மாநிலத்தில், அவர்கள் எங்களுக்கு அனுமதிக் கொடுத்தனர். எனவே நாங்கள் அதைக் கட்டப்போகிறோம். ஆகையால் அதை ஒருகால் இந்த வாரமே தொடங்கலாம். நாளை இரவு கூட்டத்திற்கு பிறகு அது தெரிவிக்கப்படும். அதன்பின்னர் நாளை இரவு கூட்டத்திற்கு பிறகு, அவர்கள் இந்த வாரம் துவங்கவில்லையென்றால், ஏதோக் காரியம் சம்பவித்திருந்தால், ஒப்பந்தக்காரரால் இந்த வாரம் துவங்க முடியாவிட்டால், அவர் அடுத்த வாரம் துவங்கப் போகிறார்.

33 இந்த வரப்போகிற வார முடிவில், சனிக்கிழமை இரவு, அடுத்த வாரம் ஞாயிறு காலையிலும், ஞாயிறு மாலையிலும், அதாவது வரப்போகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில், கர்த்தருக்கு சித்தமானால், நாம் சில வாரங்களுக்கு முன்பு நடத்தியது போன்று மூவரும் சேர்ந்து ஒரு—ஒரு—ஒரு கூட்டத்தை மறுபடியும் நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதன் பின்னர் நாம்…அது சனிக்கிழமை இரவு, பிறகு ஞாயிறு காலை, பின்னர் ஞாயிறு இரவு நடைபெறும். அதாவது இம்மாதம் பதிமூன்றாம் பதினான்காம் தேதிகளில் இருக்கும். 4 அதன் பின்னர் நானும் இங்குள்ள சகோதரரில் சிலரும் வேட்டை பயணத்தை மேற்கொண்டு கொலராடோவுக்கு செல்லவிருக்கிறோம். அதை முடித்துக் கொண்ட நாங்கள் திரும்பி வருவோம். இக்கூடாரம் கட்டி முடிந்தவுடன், கர்த்தருக்கு சித்தமானால், முழுமையாக ஒரு வாரத்தை எடுத்துக்கொண்டு, நான் இந்தக் கூட்டங்களிலிருந்து செல்லும் முன்பு வெளிப்படுத்தின விசேஷத்தில் அடங்கியுள்ள ஏழு முத்திரைகளின் பேரில் பிரசங்கம் செய்ய விரும்புகிறேன். சற்று முன்பு… ஏழு சபைக் காலங்களை குறித்து நான் பிரசங்கம் செய்தது போல அதைத் தொடர்ந்து இப்போது ஏழு முத்திரைகள் . 5 அனேகமாக கிட்டத்தட்ட இன்னும் இரண்டு மூன்று வாரங்களில், இப்பணிக்கென்று நியமிக்கப்பட்ட மனிதர்களோடு அவர்கள், இக்கூடாரத்தை கட்டி முடித்து விடுவர் என்றும், அவர்களால் அவ்வாறு செய்ய முடியும் என்றும், கிட்டத்தட்ட பத்து அல்லது பதினைந்து நாட்களுக்குள் எங்களால் கூடாரத்தை கட்டிவிட முடியும் என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள். அப்பொழுது நாம் இப்போதுள்ளதைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று பங்கு, ஒருகால் இன்னும் அதிகமான பேர்கள் அமர்வதற்கான போதிய ஸ்தலத்தை பெற்றுக்கொள்ளப்போகிறோம். அந்த நேரம் வரும் வரை நான் அந்த விதமாக காத்துக்கொண்டிருந்தேன்.

46 காரணம், கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அந்தக் காட்சி பயங்கரமாயிருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். கூடாரம் திறப்பதற்கு முன்பே, இடம் பிடிப்பதற்காக ஜனங்கள் பிற்பகல் இரண்டு மணிக்கே வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்தனராம். அடுத்த நாள் காலையில் என் வீட்டின் அருகில் வசிக்கும் மருத்துவச்சி அம்மாள் ஒருவர், அங்கிருந்து வந்தபோது, “காலை ஐந்து மணிக்கே ஜனங்கள் திரளாக கூடாரத்தைச் சுற்றிலும் இருந்தனர்” என்று என்னிடம் கூறினார். எனவே ஜனங்களுக்கு, அவர்கள் உள்ளே நுழையும்போது, ஆசனங்கள் இல்லாமல் போய்விடுகிறது. எனவே அவர்கள் ஏமாற்றமடைந்து சென்று விடுகின்றனர். நின்றுகொண்டிருப்பவர்கள் பிரசங்க பீடத்திற்கு செல்லும் வழியிலும், மற்றெல்லாவிடங்களிலும், திணிக்கப்பட்டதுபோல் உணர்ந்து, அவ்வளவு நெருக்கமாக நின்று கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு தெரியும், ஸ்தீரிகள் வியர்வை சிந்த நின்று கொண்டிருப்பதை நான் காண்கிறேன். சில ஆண்கள் எழுந்து நின்று சில பெண்களுக்கு தங்களுடைய இருக்கைகளை அளிக்கின்றனர். அவர்களுடைய கால்கள் வலிக்கும் வரை அவர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். அதன் பின்னர் வேறு ஒருவர் எழுந்து நின்று அவர்களுக்கு இருக்கையைத் தருவார். இப்படியாக அந்த காட்சியை காண்பது மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். தாய்மார்கள் சுகவீனமான சிறு பிள்ளைகளோடு நின்றுகொண்டிருப்பது மிகவும் மோசமாக உள்ளது.

57 எனவே ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டி இப்பொழுது இதை தவிர்க்கவே நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அப்பொழுது நாம் ஒரு அருமையான ஸ்தலத்தை உடையவர்களாயிருப்போம். சில நேரங்களில்…குழந்தைகள் அழுது தடங்கல் செய்வதுண்டு. பாருங்கள், நாம் அதற்காகவே ஒரு இடத்தை அமைக்கப் போகிறோம். எனவே தாய்மார்கள் ஆராதனை நேரத்தில் அங்கு சென்று, அதே சமயத்தில் ஆராதனை நடை பெறுவதையும் கண்டு, ஒலிபெருக்கியின் வழியாக பிரசங்கத்தையும் அந்த அறையில் இருந்துகொண்டே கேட்கலாம். ஞாயிறு பள்ளிக்கான அறைகள் போன்றவை முறையாக கட்டப்படும். கர்த்தருக்குச் சித்தமானால், வரப்போகும் வாரத்தில் கட்டிடப் பணி தொடங்கும்.

68 நீங்கள் அனைவரும் அதன் பேரில் நூறு சதவீதம் வாக்களித்தீர்கள், எனவே நாங்கள் இதை கட்ட தீர்மானம் செய்தோம், பாருங்கள். சபையானது சுயாதிபத்தியம் பொருந்தியது. சபை என்னக் கூறுகிறதோ, அதுதான் முடிவு. தர்மகர்த்தாக்கள் அல்லது வேறு யாரும் கூறுவதல்ல…தர்மகர்த்தாக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு மாத்திரமே உண்டு. மேய்ப்பருக்கும் அவ்வாறே ஒரு வாக்கு மாத்திரமே உண்டு. அது சபையின், அதாவது அது—அது சபையின் ஜனநாயகமாய், சபையின் அதிகாரத்துவ உரிமையாயுள்ளது. முழு சபையுமே தனது கருத்தைத் தெரிவிக்கிறது. அவ்வளவுதான். நாம் அதை விரும்புகிறோம், ஏனென்றால் நாம் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் அல்லது மற்றதைச் செய்ய வேண்டும் என்று சொல்லுவதற்கு நமக்கு பேராயரோ அல்லது பரம்பரை அதிகாரங்களோ அல்லது கண்காணிப்பாளர்களோ கிடையாது. அது சபையில் உள்ள பரிசுத்த ஆவியானவர் பேசுகிறதாயுள்ளது. நான் அந்த விதிமுறை ஒழுங்கை விரும்புகிறேன். அது மிகவும் அருமையாக இருக்கிறது.

79 நான், “இந்த கூடாரத்தை விட்டு சென்று, ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டுவதற்கு போதிய அளவு பணம் கிடைக்கும் வரைக்கும் நீங்கள் காத்திருக்க விரும்புகிறீர்களா?” என்று தர்மகர்த்தாக்களின் குழுவினைக் கேட்டேன். தர்மகர்த்தாக் குழுவினரால் எவ்வித தீர்மானத்திற்கும் வர முடியவில்லை. எனவே பொது மேற்பார்வையாளர் என்னும் ரீதியில் நான் சபையிடம் இதைக் கேட்க வேண்டும் என்று அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர். எனவே நான், “இச்சபையை விரிவுபடுத்தி, எல்லாவற்றையும் வித்தியாசமாக அமைக்க, நம்மிடம் போதிய பணம் உள்ளது” என்றேன். மேலும் நான், “நாம் இப்பொழுதே உடனடியாக அதைச் செய்யலாம், இல்லாவிட்டால் வேறு ஒரு ஸ்தலத்தில், புதியதாய், முழுமையாக சபையைக் கட்டுவதற்கென போதிய பணம் கிடைக்கும் வரை, இந்த பணத்தை நாம் சேமித்து வைக்கலாம்” என்று கூறினேன். 10 நாங்கள் அதற்காக ஒரு ஓட்டுப் பதிவினை சபையில் நடத்தினோம். “இந்த சபையை உடனடியாக, பெரிய ஒரு சபையாக கட்டி விரிவுபடுத்த வேண்டும்” என்றே அவர்கள் ஒருமனதாக வாக்களித்தனர். நாங்கள் அதனோடு நிலைத்திருக்கிறோம்.

811 இங்கே ஜெபர்ஸன்வில்லிலுள்ள குழு, நாங்கள் அதைச் செய்ய முடியாது என்று கூறி எங்களை புறக்கணித்துவிடடனர். நாங்கள் இந்தியானாபோலீஸுக்குச் சென்று, அந்த மாநிலக் குழுவிடம் எங்கள் மனுவை சமர்ப்பித்தோம். அவர்கள், “அதை விரிவுபடுத்த அனுமதியளித்து” எங்களை திரும்ப அனுப்பினர். அதை விரிவுபடுத்திக் கட்ட எங்களுக்கு உரிமை உண்டு. எனவே இப்பொழுது இந்த பட்டணமான ஜெபர்ஸன்வில்லுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. இந்தியானாபோலீஸ் என்ற அந்த மாநிலம் அதைச் செய்ய அனுமதியளித்துவிட்டது. எனவே நாங்கள் அனுமதி பெற்றுவிட்டோம். ஒப்பந்தக்காரரும் இப்பொழுது தன்னுடைய கரத்தில் அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொண்டார். எந்த நேரத்திலும் அவர்கள் பணியைத் தொடங்க ஆயத்தமாயுள்ளனர் என்றே நான் நினைக்கிறேன். 12 நாளை இரவு, அடுத்த வாரம் பணியைத் தொடங்க விரும்புவதாக ஒப்பந்தக்காரர் கூறினால், அப்பொழுது நான் ஏழு முத்திரைகளைக் குறித்த கூட்டத்திற்கு நாம் வரும் வரை, கூட்டங்களை ரத்து செய்து விடுவேன். ஆனால் அடுத்தவாரம் ஒப்பந்தக்காரரால் பணியினை தொடங்க முடியாமற்போனால், அப்பொழுது நான் புறப்பட்டுச் செல்லும் முன்பு, வருகிற சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் நான் கூட்டங்களை நடத்துவேன். 13 இந்த ஞாயிறன்று கூட்டங்களை வைக்கலாமென்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் அன்றிரவு இராப்போஜன ஆராதனை உள்ளது என்பதை நான் கண்டறிந்தபடியால், எனவே அன்று கூட்டம் வேண்டாம் என்று தவிர்த்துவிட்டேன். காரணம் ஜனக்கூட்டம் அதிகமி ருந்தால் இராப்போஜனத்தை சௌகரியமாக ஆசரிக்க முடியாது. நமக்கு பெரிய கூடாரம் அமையும் போது அவ்வாறு வைத்துக்கொள்ளலாம்.

914 இப்பொழுது நாம் ஒரு வருங்கால ஜனாதிபதியைப் பெற்றுள்ளோம். ஓ,…நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த குழந்தை அண்மையில் ஹிக்கர்ஸன் குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டது. கூடுமானால் பியானோ வாசிக்கும் நம்முடைய சகோதரி வந்து, “அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்” என்னும் பாட்டிற்கோ, அல்லது அதுபோன்ற வெறெதாவதொரு சிறு பாட்டிற்கோ சுருதி கொடுப்பார்களானால், அனேக காலமாக ஹிக்கர்ஸ்ன் குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்த இச்சிறு அருமையான மேன்மகன் கடைசியில் வந்துவிட்டான். மிகவும் அருமையான ஒரு சிறு நபர். நிச்சயமாக அவன் ஹிக்கர்ஸன் குடும்பத்தினருக்கு ஒரு ஆபரணமாகத் திகழ்கிறான். அவர்கள் அனைவருமே நமக்கு ஆபரணங்களாயிருக்கின்றனர். அவர்களை நாம் நேசிக்கிறோம். உண்மையிலே அவர்கள் நம்முடைய சகோதரனும் சகோதரியுமாயிருக்கின்றனர். அவர்களுடைய குடும்பத்தில் இந்த சிறு குழந்தை பிறந்ததற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அந்த குடும்பத்தை அது முற்றிலுமாக பரட்சிகரமாக்கிவிட்டது. இப்பொழுது பிரதிஷ்டைக்காக இந்த குட்டி நபரை அவர்கள், தந்தையும், தாயும் முன்னால் கொண்டு வரட்டும். இப்பொழுது, “சிறு பிள்ளைகள் மேல் அவர் தம்முடைய கரத்தை வைத்து, அவர்களை ஆசீர்வதிக்கும்படிக்கு, அவர்களை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்” என்று வேதம் கூறுகின்றது.

1015 இப்பொழுது, “குழந்தை ஞானஸ்நானம்” என்று அவர்கள் அழைப்பதில் நம்பிக்கையுள்ள ஜனங்கள் இவ்வுலகில் உள்ளனர். அதென்னவென்றால், அவர்கள் இச்சிறுவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதில்லை; தண்ணீரை மாத்திரம் அவர்கள் மேல் தெளிக்கின்றனர். இப்பொழுது, அவ்விதம் எப்போதாவது தெளித்தாக குழந்தைகளுக்கு மாத்திரமல்ல, பெரியவர்களுக்கும் கூட அவ்வாறு செய்ததாக நாம் வேதத்தில் எங்குமே கண்டறிவதில்லை. 16 எனவே ஞானஸ்நானம் என்பது, கிருபை உள்ளில் கிரியை செய்ததுள்ளது என்பதை அறிக்கையிடுதலாகும். குழந்தைகளுக்கு பாவத்தைக் குறித்த அறிவே கிடையாது. ஆகையால் உலகத்தின் பாவத்தைப் போக்க இயேசு சிலுவையில் மரித்தார். குழந்தை மானிடப் பிறவியாக இவ்வுலகில் பிறக்கும்போது, அதற்குத்தானாகவே பாவம் கிடையாது. எனவே மனந்திரும்ப வேண்டிய அவசியம் அதற்கில்லை. ஆனால் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் அந்தப் பாவத்தைப் போக்குகின்றது. உண்மையாகவே குழந்தை பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, இவவுலகில் வந்து பொய்களைப் பேசுகிறதாய் தோன்றுகிறது. அவர்கள் சுபாவப்படி பாவிகளாயிருக்கிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அதற்கானப் பரிகாரம் செய்கிறது. ஆனால் இந்த குழந்தை கணக்கொப்புவிக்கும் வயது வரை வளர்ந்து நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் அறியும்போது, அப்பொழுது அது செய்துள்ளவைகளுக்காக மனந்திரும்ப வேண்டியதாயிருக்கிறது. இப்பொழுதுள்ள பாவம், அது பாவத்தில் பிறந்ததினால் உண்டாயிருக்கும் பாவமே. ஆதாமும் ஏவாளும் செய்த பாவத்தின் காரணமாய் மானிட வர்க்கம் அனைத்திற்கும் ஏற்பட்ட பாவமாகும். இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் அந்த பாவம் தேவனால் போக்கப்பட்டது. இப்பொழுது, அந்த குழந்தை இனிமேல் பாவம் செய்யும் வரைக்கும், மனந்திரும்புவதற்கு அதனிடம் பாவம் ஒன்றுமில்லை. புரிகிறதா? அது மனந்திரும்பும்போது, அதுவே ஞானஸ்நானம் பெறுவதற்கு ஏற்ற தருணம், அப்பொழுது அவன் தண்ணீர் முழுக்கினால் ஞானஸ்நானம் பெறுகிறான்.

1117 அந்த நேரம் வரைக்கும், நாம் வேதத்தின் வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம். “அதாவது இயேசுவானவர் தம்முடைய கரங்களை பிள்ளைகள் மேல் வைத்து, அவர்களை ஆசீர்வதிக்கும்படிக்கு, சிறு பிள்ளைகளை அவரிடத்துக்கு அவர்கள் கொண்டு வந்தார்கள்.” இந்த அருமையான பெற்றோர் இந்த சிறு குழந்தையை இன்றிரவு பிரதிஷ்டைக்காக போதகரிடமும், என்னிடமும் கொண்டு வருகின்றனர். கிறிஸ்துவின் பிரதிநிதிகளின் கரங்களில் குழந்தையைத் தருவது என்பது, கிறிஸ்துவின் கரங்களிலேயே அதைத் தருவதாகும் என்றே அவர்கள் உணருகின்றனர். ஆகையால் விசுவாசத்தினால் நாம் இக்குழந்தையைக் தேவனிடம் கொண்டு சென்று, இங்கு அதைத் தந்ததற்காக அவருக்கு நன்றி செலுத்தி, அதை ஆசீர்வதிக்கும்படியாக தேவனிடத்தில் கேட்கப்போகிறோம். இதையே நாம் “குழந்தைகளின் பிரதிஷ்டை” என்றழைக்கிறோம்.

1218 இப்பொழுது, என்னுடைய சொந்த பிள்ளைகளைக் குறித்து நான் எப்படி இருப்பேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னுடைய சிறு பெண் ஒருவள் இன்றிரவு மகிமையில் இருக்கிறாள். இங்கே இந்த பீடத்தில்தான் அவளும் கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டாள். இன்றிரவு, பின்னால் அமர்ந்து கொண்டிருக்கும் என் சிறு பையனும் பெண்ணும் இன்னும் ஞானஸ் நானம்பண்ணப்படவில்லை. பெண்ணுக்கு பதினொரு வயதாகிவிட்டது. இன்று என் பெண் சாராளுடன் நான் ஞானஸ்நானத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். ஜோசப்புக்கு ஏழு வயது தான் ஆகின்றது. ஞானஸ்நானம் பெறுவதற்கு அவன் இன்னமும் இளைஞனாகவே இருக்கிறான்…ஆனால் அவன் அதில் விருப்பங்கொண்டு, தேவன் அவன் இருதயத்தில் அந்த எண்ணத்தையருளினார் என்று கூறினால், அப்பொழுது அவனுக்கு நான் ஞானஸ்நானம் கொடுப்பேன். ஆனால் குழந்தைகளை நான் கர்த்தருக்கென்று பிரதிஷ்டை மாத்திரமே செய்கிறேன், ஏனெனில் அது வேதப்பிரகாரமான போதனையாயிருக்கிறது.

1319 சகோதரன் நெவில், நீங்கள் என்னுடன் கூட இந்த அருமையான பையனிடம் நடந்து வருவீர்களானால் நலமாயிருக்கும். [சகோதரன் பிரான்ஹாம் சகோதரன் மற்றும் சகோதரி ஹிக்கர்ஸனை அணுகுகிறார்—ஆசி.] நான் பயப்பட்டேன்…அவன் பெயர் ஹாலின் என்பதா? ஹாலின் என்பதா? ஆம், ஹாலின், ஜுனியர். ஸ்டீபன் ஹாலின். பாருங்கள், அது அருமையாயுள்ளது. ஓ, அவன் உறங்கிக்கொண்டிருந்தான் என்று நான் நினைத்தேன். எது நடந்தாலும் அவ்வாறிருப்தே, ஹிக்கர்ஸன் குடும்பத்தினரின் சுபாவமாகும், அன்றொரு நாள் நான் இச்சிறுவனைக் கண்டபோது, நான் அவனை “ஜனாதிபதி” என்று அழைத்தேன் அவனை ஒரு “ஜனாதிபதியாகப்” பேசுவது, பாருங்கள், உண்மையாகவே அது அவனுக்குச் சிறிய பதவியாகும். நீ எப்படியிருக்கிறாய்? பாருங்கள், தேவபக்தியுள்ள எந்த ஒரு தாயாருக்கும் இது ஒரு பொக்கிஷமாயிருக்க வேண்டும் என்பதை நானறிவேன். நீங்கள் அவ்வண்ணமாய் நினைக்கவில்லையா? மிகவும் இனிமையாயுள்ளது. இப்பொழுது, சகோதரன் ஹிக்கர்ஸன் மற்றும் சகோதரி ஹக்கர்ஸன் அவர்களே, கிறிஸ்துவின் ஒரு ஊழியனும், உங்களுடைய போதகர் என்னும் முறையில் விசுவாசத்தினால் இக்குழந்தையை நான் எடுத்து இயேசு கிறிஸ்துவின் கரங்களுக்குக் கொண்டு செல்கிறேன். அவருடைய கரங்களில் இக்குழந்தையை வைப்பதற்கு நீங்கள் விரும்புவீர்கள்.

1420 போதகரும் நானும் இங்கே எங்களுடைய கரங்களை இந்த குழந்தையின் மேல் வைத்தி ருக்கையில், நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 21 எங்கள் பரலோகப் பிதாவே, நீர் உம்முடைய கரங்களை சிறு பிள்ளைகள் மேல் வைத்து, அவர்களை ஆசீர்வதிக்கும்படிக்கே அவர்கள் அந்த சிறு பிள்ளைகளை உம்மிடத்தில் கொண்டு வந்தார்கள் என்றே வேதாகமத்தில் உள்ளது. உண்மையாகவே, கர்த்தாவே, அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தனர். இப்பொழுது உம்முடைய மாதிரியையும், நீர் செய்த காரியங்களையும் பின்பற்ற, நீர் செய்த மாதிரியை அப்படியே பின்பற்ற, கர்த்தாவே, வேதாகமத்தை வாசித்து, நாங்கள் அதை மிக கவனமாக செய்ய முயற்சித்துள்ளோம். இந்த தகப்பனும் தாயும், சகோதரன் மற்றும் சகோதரி ஹிக்கர்ஸன் அவர்களும், இங்கே கூடாரத்தில் உள்ள எங்களுடைய அன்பார்ந்த சீஷர்களும், அவருடைய பாதுகாப்பில் நீர் வைத்திருக்கும் இந்த சிறு மகிழ்ச்சியை, அவர்கள் எங்களிடம் கொண்டு வந்துள்ளனர். கர்த்தாவே, அது உம்மிடத்திலிருந்து வந்துள்ளது. நீர் அவர்களுக்கு இந்தக் குழந்தையைத் தந்தீர். உமக்கு ஒரு சேவை செய்யும்படியாய், இந்த சிறு ஜீவனை இப்பொழுது அவர்கள் உமக்கு அளிக்க வாஞ்சிக்கிறார்கள். நீர் இந்தக் குழந்தையை ஆசீர்வதித்து, நீர் அதற்கு நீண்ட ஆயுளைத் தர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கூடுமானால், கர்த்தருடைய வருகையைக் காண அது உயிரோடிருப்பதாக. அது எங்கேயிருந்தாலும், நீர் அதை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்துள்ளது போலவே, அது ஒரு கிறிஸ்தவ குடும்பத்திலேயே வளர்க்கப்படுவதாக. அது இந்த குடும்பத்திலேயே தொடர்ந்து இருப்பதாக. கூடுமானால், இக்குழந்தை வளர்ந்து சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி பிரசங்க பீடத்தில் நிற்பதைக் காண தகப்பனும் தாயும் உயிரோடிருப்பார்களாக. பிதாவே, வெள்ளை மாளிகையிலே அவனை சிங்காசனத்தில் காண்பதற்கு பதிலாக அல்லது மற்ற வேறெங்காவது அவனைக் காண்பதற்கு பதிலாக, இந்த விதமாக அவனைக் காண்பதற்கே அவர்கள் விரும்புவார்கள், ஏனென்றால் அவர்கள் உம்முடைய ஊழியக்காரராயிருக்கிறபடியால், இந்தக் குழந்தையினுடைய ஜீவியம் தேவனுடைய ஊழியத்திற்கு ஒரு அர்ப்பணிப்பாகவும், ஒரு ஆசிர்வாதமாகவும் இருக்கவே வாஞ்சிக்கிறார்கள். 22 பிதாவே, நீர் இந்தக் குழந்தையை ஆசீர்வதியும் என்றே இப்பொழுது நான் ஜெபிக்கிறேன். தேவனுடைய கிருபையானது அதன்மேல் வந்து, அது ஆரோக்கியமாயும், அதனுடைய ஜீவியம் முழுவதும் மகிழ்ச்சியாயுமிருப்பதாக. அவன் வளர்ந்து பெரியவனாவதைக் காண தகப்பனும் தாயும் உயிரோடு இருப்பார்களாக என்றே நாங்கள் மீண்டும் வேண்டிக்கொள்கிறோம். உம்முடைய நாமத்தில் நாங்கள் ஆசீர்வதிக்கிற இவனை ஆசீர்வதியும்.

1523 இப்பொழுது, குட்டி ஸ்டீபன் ஆலன் ஹிக்கர்ஸன், நாங்கள் கேட்டுக்கொண்டுள்ள ஆசீர்வாதங்கள் உன் மீது வர, நான் உன்னை இயேசு கிறிஸ்துவினிடத்தில் அளிக்கிறேன். என்னுடைய குட்டி சகோதரனே, ஆரோக்கியமாயும், பலமாயுமிருந்து, தேவனுடைய மகிமைக்காக நீ ஜீவிப்பாயாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் இதை வேண்டிக் கொள்கிறோம். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக. மிக இனிமையான குழந்தை. நாம் அங்கே ஒருபோதும் வயோதிகராவதில்லை, ஒருபோதும் வயோதிகராவதில்லை, அந்த தேசத்தில் அங்கே நாம் ஒருபோதும் வயோதிகராவதில்லை; ஒருபோதும் வயோதிகராவதில்லை, ஒருபோதும் வயோதிகராவதில்லை. அந்த தேசத்தில் அங்கே நாம் ஒருபோதும் வயோதிகராவதில்லை. 24 அது அற்புதமாயிருக்குமல்லவா? சிறுவர் வயது வந்தவர்களாகவும், வயோதிகர் வாலிபராயுமிருப்பர். இப்பொழுது, அது அற்புதமானதாயிருக்கவில்லையா? நாம் அங்கே ஒருபோதும் வியாதியாயிருப்பதுமில்லை அல்லது துக்கமாயிருப்பதுமில்லை அல்லது மரிப்பதுமில்லை.

1625 இப்பொழுது, ஆராதனைகளைக் குறித்து சகோதரன் நெவில் அறிவித்திருக்கிறார். இப்பொழுது நானும் கூட அந்த கூட்டத்தை குறித்து, அவர் கூறியிருக்கிற கூட்டங்களைக் குறித்தே அறிவிக்க விரும்புகிறேன். அதை மறந்துவிடாதீர்கள். திருமதி ஃபோர்ட் அம்மாள் என்ற ஒருவர் கூட நம்முடைய சபைக்கு அநேக ஆண்டுகளுக்குமுன் வருவது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு நான் அவளை அவளுடைய மகளிடத்தில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தேன். அவள் எண்பது வயதுடையவளாக இருந்தாள். கடந்த இரவு எட்டு மணிக்கு கர்த்தரை சந்திக்கச் சென்றுவிட்டாள் என்று நான் நினைக்கிறேன். அவளுடைய அடக்க ஆராதனை முறைகளை போதகரும் நானும் கூட்ஸினுடைய ஜெப ஆராதனை அறையில், புதன்கிழமை, இந்த வருகின்ற புதன்கிழமை பத்து—பத்து முப்பது மணிக்கு நடத்துவோம். திருமதி ஃபோர்ட், திருமதி…அவருடைய முழுபெயர் என்னவென்பதை நான் மறந்துவிட்டேன் என்று நான் நினைக்கிறேன்…லேவி, திருமதி. லேவி ஃபோர்ட். நம்முடைய…அது—அது என்னுடைய புத்தகத்தில் நீங்கள் காண்கிற லாயிட் ஃபோர்ட்ஸினுடைய தாயாராகும். அந்த சிறுவர் சாரணரின் உடையை ஒருவர் எனக்காக பத்திரப்படுத்தினாரென்றும், அதை நான் பெற்றுக்கொண்டபோது, கால்சட்டையில் ஒரு கால் மாத்திரமே இருந்தது என்றும் எழுதி உள்ளேனே, இப்பொழுது அந்தப்—அந்தப் பையனுடைய தாயார்தான் இவர்கள். நான் அன்றொரு நாள் அந்த பரிதாபமான வயோதிகத் தாயாரைக் கொண்டு சென்று, ஜெபம் செய்து, அவளோடு விட்டுவிட்டு வந்தேன். அவள் கர்த்தராகிய இயேசுவை சந்திக்கச் சென்றுவிட்டாள்.

1726 இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், ஆராதனைகளை குறித்து அறிவிக்கும்படியாக நான் இங்கு ஒரு காரியத்தை எழுதி வைத்திருந்தேன். இந்த அடுத்த வாரம் அவர்கள் வருவார்களேயானால், வருகின்ற வார ஆராதனையில் நான் பேசப் போவதாக இருந்ததைக் குறித்து நான் எழுதி வைத்திருந்தேன், இல்லை அவ்வாறு நான் எண்ணிக்கொண்டேன். நான்—நான் நினைக்கிறேன்…நான் இந்த புத்தகத்தில் வைத்திருந்தேன் என்று நான் நினைத்தேன். ஆனால் நான் அதை வைத்திருந்தேனா அல்லது இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. ஆம், இங்கே அது உள்ளது. கர்த்தருக்குச் சித்தமானால், சனிக்கிழமை இரவு, “ஒரு மனிதனுடைய செல்வாக்குகள் ஏன் மற்ற மனிதனுடைய ஜீவியத்தைப் பாதிக்கிறது?” என்ற பொருளின் பெயரில் நான் பேச விரும்புகிறேன். ஞாயிற்றுக்கிழமை காலை “கூர்நுனிக் கோபுரம் தலைக்கல்லால் பொருத்தப்படுதல்” என்பதன் பேரில் நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். ஞாயிற்றுக்கிழமை இரவு, வருகின்ற இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, என்னுடைய வழிகாட்டி, என்னுடைய வழிகாட்டி என்ற பொருளின் பேரில் நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். இப்பொழுது கர்த்தர் அந்தக் காரியங்களை ஆசீர்வதித்து, நான் வெளியே சென்றிருந்த காரணத்தால், எனக்கு உதவி செய்து இவைகளை பொருத்துவதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தை அளிப்பாராக.

1827 இப்பொழுது இன்றிரவு, நாம் ஒரு சில காரியங்களை துரிதமாகப் பார்க்க விரும்புகிறோம். எனக்கு தபாலில் வந்த கடிதம் ஒன்றை வரும் வழியில் பில்லி சற்றுமுன் என் கையில் கொடுத்தான். சில சகோதரர்கள் மிஷிகனில் இருக்கின்றனர். அங்குள்ள போதகர் சங்கத்திடமிருந்து இது வந்துள்ளது. அவர்கள் அனேக காரியங்களைக் கொண்டுள்ளனர். நீங்கள் பாருங்கள், அப்படித்தான் காரியங்கள் குழப்பப்படுகின்றன. நான் அங்கு சிலரை அனுப்பியுள்ளதாகவும், அங்குள்ள சில சகோதரர்கள், அவர்கள் தங்கள் மனைவிகளை விட்டுவிட்டு, தங்கள் ஆவிக்குரிய துணையை தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்றும், நான் பிழையற்ற பரிபூரணமானவன் என்றும்—என்றும் அவர்கள் பிரசங்கித்துக்கொண்டிருப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அப்படிப்பட்ட எந்த காரியமும் இல்லை…ஓ, இதுவரை நீங்கள் கேள்விப்பட்ட காரியங்களில் இது மிகவும் பயங்கரமானது. போதகர் சங்கம் அதை குறிப்பிட்டுக் கூறி, நான்தான் அவர்களை அங்கு அனுப்பினேன் என்றும், இந்த ஏராளமான குழப்பத்திற்கு காரணம் என்றும் அவர்கள் அதைக் குறித்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஒரு மனிதன் தன்னுடைய மனைவியை விட்டுவிட்டு, வேறொரு பெண்ணை விவாகம் செய்துகொள்ள வேண்டும் என்று தீர்க்கதரிசனம் உரைத்துக்கொண்டிருக்கிறார்களாம். இப்பொழுது அதைப்போன்ற அப்படிப்பட்ட மூடத்தனமான காரியங்களை நாம் ஆதரிப்பதில்லை என்பதை இந்த சபை அறிந்துள்ளது. 28 நாம் வேதாகமத்தில் விசுவாசங்கொண்டிருக்கிறோம். ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்ளும்போது, மரணம் மாத்திரமே அவர்களை பிரிக்க முடியும் என்பதை நாம் விசுவாசிக்கிறோம். அது மாத்திரமே பிரிக்க முடியும். அதுபோன்ற காரியத்தை நாம் நம்புகிறதில்லை. நாம் சுயாதீன அன்பிலும் நம்பிக்கை கொள்வதில்லை. நாம் அதுபோன்ற காரியத்தில் நம்பிக்கைக்கொள்வதில்லை. நாம் வேதாகமத்தை, அதை மாத்திரமே முற்றிலுமாக விசுவாசிக்கிறோம். எனவே நான் அதனுடைய ஒரு பிரதியை எடுத்து, இந்த கடிதத்தின் பிரதியை எடுத்து, இதற்கான எனது பதிலை அதனோடு அளித்து, அதைப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்போகிறேன். அப்பொழுது அது—அது சரியான பதிலாக அமையும், அது எப்படியாயினும் அவர்களுக்கு பதிலளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

1929 இப்பொழுது இன்றிரவு, நாம் வேதாகமத்தை திறப்பதற்கு முன்பு, நாம் நம்முடைய கர்த்தரிடத்தில் பேசுவோமாக. 30 எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய இரக்கத்தின் சிங்காசனத்தை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அணுகிக்கொண்டிருக்கிறோம். தேவனுடைய பொக்கிஷங்களின் ஐஸ்வரியங்களை எங்களுக்குத் திறந்து காண்பிக்க மகிமையிலிருந்து அந்த மகத்தான ஒருவர் இறங்கி வந்தார். தேவனுடைய வெளிப்படுத்தலாயிருந்த இந்த மகத்தான இயேசு எங்களுக்கு மாம்சத்தில் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தித்தந்ததற்காக நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவர் மூலமாக எங்கள் பாவங்களுக்கு மீட்பு உண்டு. நாங்கள் இப்போது மரணத்திலிருந்து ஜீவனுக்கு பிரவேசித்துவிட்டோம், ஏனெனில் நாங்கள் அவரை விசுவாசிக்கிறோம். அவர் “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்று கூறினார் என்று அவரைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.

2031 கர்த்தாவே, இன்றிரவு உம்முடைய வார்த்தைகளை ஆசீர்வதியும். இன்னும் சிறிது நேரத்தில் நாங்கள் இங்கே இராபோஜனத்தில் பங்குகொள்ளப் போகிறோம். கிறிஸ்தவர்கள், இராஜ்யத்தின் உடன் பிரஜைகள் பீடத்தை சுற்றிலும் ஒன்றுகூடி, “இராப்போஜனம்” என்று அழைக்கப்படுவதில், அதாவது நீர் எங்கள் பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து, என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிப்பதைக் காண்பிக்கும்படியாக, நீர் எங்களுக்கு விட்டுச் சென்றுள்ள அந்த சிறு பாகமான இராபோஜனத்தில், நீர் திரும்பி வரும்வரையில் இதை செய்ய வேதவாக்கியங்களின்படி எங்களுக்கு கட்டளையிட்டுள்ளபடியே அவர்கள் அதில் பங்குகொள்ளப்போகின்றனர். உம்முடைய மகத்தான சித்தத்திற்கு முரணாக நாங்கள் செய்துள்ள யாவற்றையும், எங்களுடைய இதயங்களில் உள்ள பொல்லாத சிந்தனைகளையும் அகற்றிப் பரிசுத்தப்படுத்தும். பிதாவே, எங்களை மன்னியும், உம்முடைய கிருபையை இன்றிரவு எங்களுக்குத் தாரும். நாங்கள் வார்த்தையை வாசித்து, அதன்பேரில் பேசுகையில் வார்த்தையிலிருந்து இப்பொழுது ஜீவ அப்பத்தை எங்களுக்குப் பிட்டுத் தாரும். நாங்கள் இதை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

2132 இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில், ஒரே ஒரு வசனத்தை மாத்திரமே துவங்கி, நான் 20-ம் வசனத்தை, இல்லை, 20-ம் அதிகாரத்தின் முதல் வசனத்தை வாசிக்க விரும்புகிறேன். ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன். 33 இந்தப் பாடப்பொருளிலிருந்து ஒரு பொருளைத் தெரிந்துகொண்டு அல்லது இந்தப் பாடப்பொருளிலிருந்து ஒரு பொருளை அழைக்க வேண்டுமானால், அடுத்த இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்கள் இப்பொழுது நான் பேச விரும்புகிறபடியால், நான் அதை வாசலுக்குத் திறவுகோல் என்று அழைக்க விரும்புகிறேன். இப்பொழுது, நான் அதை “திறவுகோல்கள்” என்று அழைக்க விரும்பவில்லை, ஏனென்றால் “இராஜ்ஜியத்திற்கான திறவுகோல்கள்” பேதுருவினிடத்தில் கொடுக்கப்பட்டன. ஆனால் நான் இதை: வாசலுக்கு திறவுகோல் என்று அழைக்க விரும்புகிறேன். அதன்பின்னர் இதைப் பற்றி பேசி முடித்தவுடனே, நாம் இன்றிரவு இராபோஜனம் எடுப்பதற்கு முன்பு, அந்த இராபோஜனத்தின் பேரில் நான் ஒரு சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன்.

2234 இப்பொழுது, ஒரு திறவுகோல். இந்த தூதன் தன்னுடைய கையில் அந்த திறவுகோலைப் பிடித்துக்கொண்டு, வானத்திலிருந்து இறங்கி வந்தான் என்று நாம் வாசித்தபோது, நான் இங்கே கவனித்தேன். அது வெளிப்படுத்தின விசேஷம் 13 இல்லை 19-ல் உள்ளது என்று நான் நினைக்கிறேன். அங்கு வேறொரு தூதன் ஒரு திறவுகோலுடன் வருவதை நாம் மீண்டும் காண்கிறோம். ஒன்றைத் திறந்து விடுவதே ஒரு திறவுகோலின் நோக்கம், பூடப்பட்டுள்ள ஏதோ ஒன்றை திறந்து விடுகிறதற்கே ஒரு திறவுகோல் உள்ளது. அல்லது பூட்டப்பட வேண்டிய ஒன்றை அது பூட்டுகின்றது. ஆனால் அந்த நோக்கத்திற்காகவே ஒரு திறவுகோல் கொடுக்கப்படுகின்றது. 35 இப்பொழுது அனேக விதமான திறவுகோல்கள் உள்ளன, ஏனென்றால் நமக்கு அனேக திறவுகோல்களின் உபயோகங்கள் உள்ளன. பண்டகசாலைகளுக்கு திறவுகோல்கள் உள்ளன. உங்களுடைய சொந்த வீட்டிற்கு திறவுகோல் உண்டு. உங்களுடைய மோட்டார் வாகனத்திற்கு திறவுகோல் உண்டு. நாம் அவைகளை திறவுகோல்கள் என்று அழைக்கிறோம். அவைகள் திறவுகோல்களாயிருக்கின்றன. அனேக சமயங்களில் அவைகள் நிகர் ஒத்த திறவுகோல்களாக்கப்படுகின்றன. அல்லது வீட்டிற்கு, சில சமயங்களில் மாற்றுத் திறவுகோல் என்று நாம் அழைக்கிறவிதமாக அவை அதே வடிவில் மற்றொன்றாக உருவாக்கப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால், நெம்புகோலைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற ஒருவிதமான திறவுகோலாய், அசலானதன் பேரில் செயல்பட, அது—அது ஒரு குறிப்பிட்ட வழியில் சுழன்று எந்த விதத்திலாவது கிட்டத்தட்ட கதவைத் திறக்க முடிந்த “நிகர் ஒத்த திறவுகோல்” என்று அழைக்கப்படுகிறது. அது அனேக திறவுகோல்களின் இன்னொரு நிகர் ஒத்த திறவுகோலின் பறவடிவத்தில் உள்ளது. அது அந்தவிதமாக நம்முடைய வீடுகளையும் அல்லது நம்முடைய மோட்டார் வாகனங்களையும் திறக்கக்கூடிய மற்றொரு மாதிரி திறவுகோலாக்கப்பட முடியும். அதன் பின்னர் அங்குள்ள…

2336 ஒரு கரத்தைப் பயன்படுத்தாமல் எந்த ஒரு திறவுகோலாலும் எந்த வாசலையும் திறக்க முடியாது. திறவுகோலை உபயோகிக்க ஏதோ ஒரு காரியம் இருக்கத்தான் வேண்டும். திறவுகோல் தானாகவே தன்னைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. அந்த திறவுகோலைச் செயல்பட வைக்க ஒரு காரியம் இருக்க வேண்டியதாக உள்ளது. 37 அது இந்த ஒலிப்பெருக்கி கருவி போன்றே உள்ளது, அதாவது நான்—அதாவது நான் இதன் மூலமாக பேசிக்கொண்டிருக்கிறேன். அந்த ஒலிப்பெருக்கி கருவி ஒரு ஓசையற்ற கருவியாயுள்ளது. அதன் மூலமாக யாராவது பேசினாலொழிய, அது தானாகவே பேச முடியாது. அதன் மூலமாகப் பேசுவதற்கு ஏதோ ஒரு காரியம் இருக்க வேண்டும். ஆகையால் இது ஒலிபெருக்கி கருவியல்ல, இது (அதற்குப் பின்னால் உள்ள) சத்தம் அல்லது இரைச்சலை அந்த ஒலிபெருக்கி காற்றின் அலைகளினூடாக உங்களுடைய செவிக்கு அதைக் கொண்டு வருகிறது. 38 இப்பொழுது, அந்தவிதமாகவே சுவிசேஷத்தைப் பிரசங்கித்தலிலும் உள்ளது. அது ஊழியக்காரர்களாகிய நாம் அல்ல, நாம் சுவிசேஷமாயிருக்கவில்லை. ஆனால் நாம் நம்முடைய செயலாண்மையின் மூலமாக தேவனுடைய சத்தத்தை கேட்பவர்களுக்கு அனுப்பும் கருவிகளாய் மாத்திரமே இருக்கிறோம்.

2439 ஒரு தரிசனமும் அதேவிதமாகவே உள்ளது. ஒரு தரிசனத்தை குறித்து இந்த நேரத்தில் சபைக்கு கூறுவதற்கு ஒன்றுமில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒரு தரிசனத்தை எனக்கு முதலில் காண்பிப்பாரானால், அப்பொழுது அது யாருக்கு காண்பிக்கப்பட்டதோ அவருக்கு அந்த தரிசனத்தை நான் அப்படியே எடுத்துரைப்பேன். எனவே அது என்னுடையதாய், நானாயிருக்கவில்லை, அந்த தரிசனம் நானாயிருக்கவில்லை. அது தேவன் அளித்த தரிசனமாயிருந்து, அந்த தரிசனத்தின் செய்தியை அதற்குரிய ஜனங்களுக்கு கொண்டு வரும்படியாக நான் செயல்படுகிறேன். 40 இப்பொழுது, ஒரு திறவுகோல் என்பது அதேக் காரியமாக உள்ளது. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். திறவுகோல் என்பது வாசலை திறக்க வேண்டிய ஒரு கரத்தில் மாத்திரம் பிடித்திருக்க வேண்டிய ஒன்றாயுள்ளது. பாருங்கள், அது கரத்திலிருக்க வேண்டும். இப்பொழுது, இன்றிரவு நான் பேசப் போகிற இந்த திறவுகோல், இந்த திறவுகோலை ஒரே ஒரு கரம் மாத்திரமே பிடித்திருக்க வேண்டியதாயுள்ளது, அது விசுவாச கரமேயாகும். இந்த திறவுகோலை அந்த ஒரு காரியம் மாத்திரமே பிடித்திருக்க முடியும். மற்ற கரங்கள் மற்ற திறவுகோல்களை பிடித்திருக்கலாம், ஆனால் அதற்கு ஒரு விசுவாசக் கரமேத் தேவைப்படுகிறது.

2541 இப்பொழுது, அறிவுக்கென உள்ள திறவுகோலை நாம் எடுத்துக் கொள்வோம். இப்பொழுது, ஒரு மனிதன், அவன் அறிவைத் திரட்டிக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தால், பாருங்கள், இப்பொழுது அதற்கு ஒரு திறவுகோல் உண்டு. இந்த மனிதன் திறக்க வேண்டிய ஒரு வழி உண்டு. அவன்…புத்தகங்களை படித்து, தன்னுடைய அறிவை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அவனால் முடியாது…யாரும் அவனுக்கு கற்பிக்க முடியாது. அவர்கள் அவனுக்குப் போதிக்கலாம், ஆனால் அவன் கற்றுக்கொள்ள வேண்டும். அது செய்யப்படக் கூடிய ஒரே வழி அவன் அந்த திறவுகோலைப் பற்றிக்கொள்ள வேண்டும். அப்பொழுது அங்கு உள்ள ஏதோ ஒரு காரியம் வெளிப்படுகிறது இல்லை வெளி…அவன் தேடிக் கொண்டிருக்கிற அறிவு அவனுக்கு வெளிப்படுகிறது. 42 ஒரு இசைப் பேழையை வாசிக்க முயற்சிக்க விரும்பும் அநேக ஜனங்கள் உண்டு, அவர்கள்…இல்லை இசையை. அதை எப்படி வாசிப்பது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கற்றுக்கொள்ளும்படி ஆசிரியர் பாடங்களுக்கு மேல் பாடங்களை எடுத்தாலும், அவர்கள் அதை ஒருபோதும் கற்க மாட்டார்கள். அந்த இரகசியத்தை வெளிப்படுத்தும் திறவுகோலை, அதாவது தாளம் எப்படி அமைகிறது என்றும், ராகம் எப்படி தொனிக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியாது. அதற்கு ஒரு திறவுகோல் தேவைப்படுகிறது.

2643 கணிதம், கணிதத்திற்கு ஒரு திறவுகோல் உண்டு. அதாவது நீங்கள் அதனுடைய முறையைப் புரிந்துகொள்ள வேண்டும். சில மனிதர்கள் நான்கு வரிசைகளில் உள்ள எண்களை, தங்களுடைய விரல்களிலேயே எண்ணி, ஒவ்வொரு வரிசையிலும் உள்ள எண்களை தங்களுடைய ஒவ்வொரு விரல்களிலுமே எண்ணி, அந்த விதமாகவே கணக்கிட்டு வந்து ஐந்து அல்லது ஆறு இலக்கங்களைக் கொண்ட எண்களை சரியாக கீழே விடை கூறி விடுகின்றனர். ஒன்றிலிருந்து ஒன்பது வரை எங்கிருந்தாலும், ஒரே நேரத்தில் நான்கு வரிகளில் உள்ள எண்களை கணக்கிட்டு விடுகின்றனர். பாருங்கள், ஒரு வரி கணக்கிடுவதே எனக்குக் கடினம். எனக்கு விரல்களும், கட்டை விரல்களும் இருந்தாலொழிய, ஒரு வரிசையில் உள்ளதையே என்னால் கணக்கிட முடியாது. என்னால் அந்த திறவுகோலை ஒருபோதும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால், நீங்கள் பாருங்கள், சிலர் அதற்கான திறவுகோல்களை உடையவர்களாயிருக்கிறார்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். 44 அறிவைத் தேடிச் செல்லும் ஒரு மனிதனுக்கு, அறிவுக்கான ஒரு திறவுகோல் உண்டு. விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கான, விஞ்ஞானத்திற்கு ஒரு திறவுகோல் உண்டு. இப்பொழுது, அது ஒரு மகத்தான திறவுகோலாய் உள்ளது. ஜனங்கள் அந்த திறவுகோலுக்காக எதிர்நோக்கியிருக்கின்றனர்.

2745 இங்கே சில காலத்திற்கு முன்னர் அணுக்கள் இருக்கிறது என்று அவர்கள் கண்டுபிடித்தனர், அணுக்கள் இருந்தன என்றும், அதன்பின்னர் அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளாகின்றன என்றும் அறிந்துகொண்டனர். இப்பொழுது, அவர்கள் தொடர்ந்து நடத்திய ஆராய்ச்சியின் பயனாக இந்த அணுக்களில் சக்தி அடங்கியுள்ளது என்றும், அவைகளை சுற்ற வைத்து உடைத்தால், அதனுள் இருக்கும் சக்தியை அவிழ்த்துவிடலாம் என்றும் அவர்கள் கண்டுபிடித்தனர். எல்லாமே அணுக்கள் ஒன்று சேர்வதால் உண்டானவை என்று நீங்கள் அறிவீர்கள். அங்குள்ள கம்பம் அணுக்களால் உண்டானது. நீங்களும் அணுக்கள் ஒன்று சேர்வதால் உண்டானவர்கள். புல், மரம் எல்லாமே அணுக்களைக் கொண்டவை. அந்த அணுக்களை ஒரு பக்கமாக சுற்ற வைத்து அதை உடைத்தால் அது நிர்மூலமாக்கும் சக்தியைப் பெற்றுவிடுகிறது. இப்பொழுது, மகத்தான விஞ்ஞானிகள் அதைச் செய்ய முடியும் என்று எண்ணி, அவர்கள் பணியாற்றினர், அவர்கள் உழைத்தனர். அவர்கள் மணிக்கணக்காக, வாரக் கணக்காக, வருடக்கணக்காக அமர்ந்து உழைத்து, அதில் வெற்றி கண்டனர்.

2846 தாமஸ் எடிசன் என்ற விஞ்ஞானி என்று நான் நினைக்கிறேன், அதாவது விளக்கினை எரிய வைப்பதன் பேரில், மின்சாரத்தின் மூலம் விளக்குகளை எரிய வைக்கும் அறிவை அவர் கொண்டிருந்தார் என்று ஜனங்கள் கூறுகின்றனர். அவர்தான் மின்சார விளக்கை கண்டுபிடித்தவர். அவர் இரவில் படுக்கைக்குக் கூட செல்லமாட்டாராம். அவர் தன்னுடைய கையில் ஒரு இறைச்சிக் கலந்த ரொட்டியை எடுத்துக்கொண்டு, அதைத் தன்னுடைய ஆகாரமாக சாப்பிட்டுவிட்டு, அங்கேயே அமர்ந்து அரும்பாடுபடுவாராம். அவருடைய சிந்தையில் ஏதோவொன்று, அவரால் இதை செய்ய முடியும் என்று கூறிக் கொண்டேயிருந்தது. அது என்ன? அதுதான் இந்த வழியைத் திறக்கும் திறவுகோல்.

2947 சில ஆண்டுகளுக்கு முன்பு, சிறுவர்களுக்கு நகைச்சுவைப் புத்தகங்கள் எழுதும் திறமை தமக்குள்ளதாக ஒரு மனிதன் எண்ணினார். அவர் தன்னுடைய கரத்தில் அந்த திறவுகோலை வைத்திருந்ததாக நினைத்துக்கொண்டார். அவர் விரும்பினார்…அவர் புறப்பட்டு சென்றார்…அவர் கான்சாஸ் பட்டினத்தில் வசித்தார். எனவே அவர் கான்சாஸ் பட்டினத்தில் உள்ள பெரிய செய்தித்தாளின் பதிப்பாசிரியரிடம், தாம் எழுதியுள்ளவைகளில் சிலவற்றை எடுத்துச் சென்றார். அப்பொழுது அந்த பதிப்பாசிரியரோ, “ஐயா நீர் அந்தத் திறமையை பெற்றிருக்கவில்லை. நீர் அதை குறித்து முயற்சி செய்ய வேண்டியதில்லை. உம்மால் அதைச் செய்ய முடியாது” என்றும் கூறிவிட்டார். ஆனால் அது அவரை திருப்திப்படுத்தவில்லை. அவர் அதற்கான திறமையை உடையவராக இருந்தார் என்பதை அறிந்திருந்தார். அவர் திரும்பத் திரும்ப முயற்சித்து சென்றார். ஆனால் அவர் (பதிப்பாசிரியர்) அவரை புறக்கணித்துவிட்டார். முடிவாக அவர் மற்ற இடங்களுக்கும் சென்றார். அவர்களும் அவரை புறக்கணித்து, “திருவாளரே, நீர் அதற்கான திறமையைப் பெற்றிருக்கவில்லை. உம்மால் அதைச் செய்ய முடியாது” என்று கூறிவிட்டனர். ஆனால் அதே சமயத்தில் அவரால் அதை எழுத முடியும் என்று அவர் நம்பினார். அந்தவிதமாகவே அவர் தம்முடைய கரத்தில் ஏதோ ஒரு காரியத்தையும் உடையவராயிருந்தாரே! முடிவிலே அவர் ஒரு சிறுகதையை எழுதும் பணியினைப் பெற்று, இதழாசிரியருக்குரிய அல்லது ஒரு சபைக்காக ஏதோ ஒரு காரியத்தை, சபைக்கான ஒரு சிறு நகைச்சுவை கதையை எழுதினார். எலிகள் நிறைந்த மோட்டார் வண்டி நிறுத்தும் ஒரு கொட்டகையை அவர் வாடகைக்கு எடுத்தார். அங்கே எலிகள் அங்குமிங்கும் ஓடின வண்ணமாக இருக்கும். அவர் எழுதின காகிதங்களின் மேலும் ஓடின. ஒரு நாள் ஒரு சுண்டெலியின் விசித்திரமான தன்மை அவரைக் கவர்ந்தது. அங்கேதான் சுட்டி சுண்டெலியின் கதைப் பிறந்தது. இப்பொழுது அவர்தான் கோடீஸ்வரரான வால்ட் டிஸ்னி என்பவராவார். ஏன்? அவர் ஏதோ ஒரு காரியத்தை தம்முடைய கரத்தில் உடையவராயிருந்தார். அவர் அதைப் பற்றிக்கொண்டிருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவரால் அதை எழுத முடியும் என்று அவர் அறிந்திருந்தார். அந்தவிதமாக ஒவ்வொரு மகத்தான சாதனையையும் உருவாக்கப்படுகிறது. ஆண்களும் பெண்களும் தங்களுடைய கரத்தில் ஏதோ ஒரு காரியத்தை உடையவர்களாயிருக்கும்பொழுது, அவர்களால் அதை செய்ய முடியும் என்று அவர்கள் அறிந்திருக்கின்றனர்.

3048 நமது தேசத்தை இளம்பிள்ளை வாதம் தாக்கியபோது, அதை ஒழிக்க நாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடப்பட்டோம். இளம்பிள்ளை வாதம் தாக்கியபோது…நான் வீதியில் கார் ஓட்டி சென்றுகொண்டிருந்தபோது, நேற்றைய தினத்தில் லூயிவில்லிலுள்ள யாரோ ஒரு மருத்துவர் பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர், “ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த பெரிய வாதை லூயிவில்லைத் தாக்கியபோது, நான் நின்ற இடத்திலே புருஷராகிய நீங்கள் நின்றிருந்தால், ஒரே நேரத்தில் ஐம்பத்தேழு சுவாசக் கருவிகள் இயங்கினதைக் கண்டிருப்பீர்கள். புருஷர்கள், ஸ்தீரிகள், பையன்கள், பெண்கள் ‘இளம்பிள்ளைவாதம்’ என்றழைக்கப்பட்ட வியாதியினால் பக்கவாதமடைந்தனர். அது குறித்து ஒன்றுமே செய்யமுடியாததா கிவிட்டது” என்று கூறினார். மேலும் தொடர்ந்து, “நான் அது போன்ற ஒரு காரியத்தை மீண்டும் காண ஒருபோதும் விரும்பவில்லை” என்றார். 49 ஆனால் விஞ்ஞானமோ, “இளம்பிள்ளைவாதம் எனும் பொல்லாத நோய் ஒன்றிருக்குமானால், அதைத் தடுக்க நிச்சயமாக ஏதோ ஒரு காரியம் இருக்க வேண்டும்” என்று எண்ணியது. அவர்கள் போராடினர், அவர்கள் தங்களுடைய முழுகாலணிகளோடு வீதிகளில் நின்று, அந்த தீயணைப்பு வீரர்கள், தங்கள் தொப்பிகளைக் கழற்றி, அவர்கள் பிச்சை எடுத்தனர். அவர்கள் விடுதலையின் வாசலை திறப்பதற்கான திறவுகோலை கண்டறிய முயற்சித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்து அங்கு சுற்றித் திரிந்தனர். முடிவிலே ஒரு கிறிஸ்தவ பெருந்தன்மையாளர் சால்க் என்னும் பெயர் கொண்ட ஒருவர் அதற்கான தடுப்பு மருந்தினைக் கண்டுபிடித்தார். ஏன்? அது மரணத்துக்குரிய பொல்லாங்காயிருந்தது. அது மரணத்திற்கேதுவான ஒரு கொலையாளியாயிருந்தது; மனிதனுக்கு மீண்டும் விடுதலையைத் திறக்கும்படியான அந்தத் திறவுகோல் எங்கோ இருந்தது. அதற்கு சால்க் தடுப்புமருந்து மகத்தான சிகிச்சையாயிருந்தது. ஓ, அந்த திறவுகோலால் என்னவெல்லாம் செய்ய முடிந்தது! அந்த தடுப்பு மருந்து கொண்டு வரப்பட்டு, இப்பொழுது இந்த தடுப்பு மருந்தினால் இளம்பிள்ளை வாதத்தை அடியோடு ஒழித்துக்கொண்டிருக்கின்றனர், ஏனென்றால் அது “ஒருபோதும் களைப்புறாமல், ஒருபோதும் கைவிடப்படாமல் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது,” அந்த திறவுகோல் எங்கோ வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து நிவர்த்தியாக அந்த தடுப்பூசியில் ஏதோ ஒரு காரியம் இருந்தது, அவர்கள் அதைக் கண்டுபிடிக்க தீர்மானங்கொண்டனர்.

3150 இளம்பிள்ளை வாதம், தொண்டை அழற்சி நோய், பெரியம்மை, கொசுவினால் பரவும் விஷக்காய்ச்சல், தசைகளை கடினமாக இறுகச் செய்யும் நோய், தாடைகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளும் நோய் போன்ற பொல்லாத நோய்களுக்கு, பொல்லாங்காய், ஒரு கொலையாளியாயுள்ள இந்தப் பொல்லாத நோய்களோடு விஞ்ஞானம் இரவும் பகலும் போராடி, அதிலிருந்து விடுபட தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்குமானால், பாவ வீட்டின் சிறையில் உள்ள ஒரு மனிதனுக்காக இரட்சிப்பின் ஒரு திறவுகோல் உள்ளது அதிக நிச்சயமல்லவா? அதிலிருந்து மனிதர்களை விடுதலையாக்க அந்த வாசலுக்கு ஒரு திறவுகோல் உண்டு. 51 வழக்கமாக ஒரு திறவுகோல், அது பூட்டைத் திறக்கும்பொழுது, நீங்கள் ஒரு திறவுகோலை கண்டறியும்போது, அதனுள் ஏதோ ஒரு பொக்கிஷத்தை அது உடையதாயிருக்கவேண்டும், அது பயனுள்ள ஏதோ ஒன்றை உடையதாயிருக்கவேண்டும் இல்லையென்றால் நீங்கள் அதை பூட்டக்கூட மாட்டீர்கள். பூட்டுவதற்கான பயனுள்ளது இல்லையென்றால், அதை அப்படியே விட்டுவிடலாம். ஆனால் அதில் பயனுள்ளதிருக்கும்போது, அது பூட்டப்படுமே! எனவே ஒரு திறவுகோல் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட ஏதோ ஒரு காரியத்திற்குள் அல்லது உபயோகமான ஏதோ ஒன்றிற்குள் நுழைவதற்கான வழியாய் உள்ளது. அதற்காகத்தான் திறவுகோல் உள்ளது. இப்பொழுது அது உபயோகமான ஏதோ ஒரு காரியத்தை திறக்கும்.

3252 இப்பொழுது நாம் பரிசுத்த யோவான் 10-ம் அதிகாரத்தில், இயேசு, “நானே ஆட்டுத் தொழுவத்தின் வாசல். நானே வாசல்” என்று கூறியுள்ளதை நாம் வாசிக்கிறோம். ஒரு வாசல் என்றல்ல, “ அந்த வாசல், ஒரே வாசலாகும். நானே வழியும், ஒரே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். நானே ஆட்டுத் தொழுவத்தின் வாசல். எனக்கு முன்னே வந்தவர்கள் எல்லோரும் சத்துருக்களும், திருடர்களும், கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்.” அவரே ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல். அவரே இரட்சிப்பிற்கு வாசலாயிருக்கிறார். 53 “நீங்கள் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் இயேசு கிறிஸ்துவின் நாமமேயல்லாமல், வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை.” எந்த சபையோ, எந்த ஸ்தாபனமோ, எந்த பிரமாணமோ, எந்த காரியத்தின் உபதேசங்களுமோக் கிடையாது; இயேசுவின் நாமத்தின் மூலமாக மாத்திரமே இரட்சிப்புண்டு. அதுவே—அதுவே திறவுகோலாயுள்ளது. பெந்தேகோஸ்தே நாளில் அந்த திறவுகோல்களில் ஒன்றை பேதுரு உபயோகித்ததில் வியப்பொன்றுமில்லையே! அந்த வாசலுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்பதை அவர்கள் அறிய விரும்பினர். அவன் அந்த திறவுகோலை உபயோகித்தான். ஒரே ஒரு திறவுகோல் மாத்திரமே உண்டு, ஏனென்றால் அங்கே ஒரு வாசல் மாத்திரமே உள்ளது. “நானே அந்த வாசல்.” பேதுரு அதற்கு திறவுகோலை உடையவனாயிருந்தான். அவன், “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் தேவனுடைய பொக்கிஷங்களைப் பெற்றுக் கொள்வீர்கள்” என்றான். அது வாசலுக்கு திறவுகோலாயுள்ளது. இயேசுவே வாசலாய் இருக்கிறார். சுகமளித்தலுக்கு ஒரே ஒரு வாசல் மாத்திரமே உண்டு. இயேசுவே அந்த வாசல்.

3354 சமாதானத்திற்கு ஒரே ஒரு வாசல் மாத்திரமே உண்டு. ஆம். “என்னுடைய சமாதானத்தை நான் உங்களுக்கு தருகிறேன்.” உண்மையான சமாதானத்திற்கு அவர் ஒருவர் மாத்திரமே வாசலாயிருக்கிறார். நீங்கள் சமாதானம் பெற்றுக்கொண்டதாக எண்ணிக்கொள்ளலாம். நீங்கள் போதிய பணத்தை சேர்த்து உங்களுடைய வீட்டை வாங்கலாம். நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு ஆடைகளை வாங்க, சாப்பிடுவதற்கு ஆகாரத்தை வாங்க போதிய பணத்தை சேர்த்து வைக்கலாம். ஆனால் நீங்கள் ஜனங்களுக்கு மத்தியிலே புகழ்வாய்ந்தவராயிருக்க, போதிய புகழை சேமித்து வைக்கலாம். ஆனால் நீங்கள் இரவிலே உங்கள் பாதரட்சைகளை கழற்றி விட்டுவிட்டு, படுக்க ஆயத்தமாகும் போது, ஒரே ஒரு காரியம் மாத்திரமே உங்களுக்கு சமாதானத்தைக் கொடுக்க முடியும். அதாவது, அன்றிரவு நீங்கள் மரித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருந்தால், ஒரே ஒரு சமாதானம் மாத்திரமே உண்டு, அது இயேசுவே அந்த சமாதானமாயிருக்கிறார். அவரே நம்முடைய சமாதானமாயிருக்கிறார். 55 அவரே நம்முடைய சுகமளித்தலாயிருக்கிறார். “உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்குகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.” 56 அவரே பரலோகத்துக்கு வாசலாயிருக்கிறார். அதற்கு இயேசு கிறிஸ்து மூலமேயல்லாமல், மற்ற எந்த வழியோ அல்லது மற்ற எந்த வாசலோ கிடையாது. அவரே பரலோகத்துக்கு வாசலாயிருக்கிறார். 57 இப்பொழுது இந்த எல்லா காரியங்களுக்கும் இயேசுவே வாசலாயிருக்கிறார். விசுவாசமே அந்த வாசலை திறக்கிற திறவுகோலாயிருக்கிறது. இப்பொழுது தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றிற்க்கும் இயேசு வாசலாயிருப்பாரென்றால், அவருடைய முடிவு பெற்ற கிரியையில் உள்ள விசுவாசமானது தேவனுடைய இராஜ்யத்தின் உட்புறத்தில் உள்ள ஒவ்வொரு பொக்கிஷத்திற்குமான ஒவ்வொரு வாசலையும் திறக்கிறது. இதைப் புரிந்துகொள்கிறீர்களா? திறவுகோல்…அவர் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் திறக்கும் திறவுகோல் விசுவாசமேயாகும். அவருடைய முடிவு பெற்ற கிரியையில் உள்ள விசுவாசம், விசுவாசத்தின் திறவுகோலே அதைச் செய்கிறது. இந்த திறவுகோல்களின் பேரிலேயே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

3458 இப்பொழுது எபிரேயர் 11-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இந்த விசுவாச வீரர்களைக் குறித்து வரிசையாக எழுதி வைத்திருக்கிறேன். அது வாசலுக்கான திறவுகோலாயிருந்து, சிங்கங்களின் வாய்களை அடைத்தது. அது விசுவாச திறவுகோலாயிருந்து சிறைச்சாலைகளின் வாசலைத் திறந்தது. அது விசுவாசமாய், விசுவாசத் திறவுகோலாயிருந்து அந்த அக்கினியின் உக்கிரத்தை அவித்தது, பட்டயக்கருக்குக்குத் தப்பச் செய்தது, மரித்தோரை உயிரோடெழச் செய்தது. அது விசுவாசமாய், ஜீவனுள்ள தேவனில் உள்ள விசுவாச திறவுகோலாயிருந்தது. விசுவாச திறவுகோலை தங்கள் கரங்களில் எடுக்க முடிந்த மனிதனும் ஸ்திரீயும் தேவன் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் திறக்க முடியும். ஆனால் நீ அந்த திறவுகோலை பெற்றிருக்கவில்லையென்றால், நீ தடவிக்கொண்டேயிருப்பாய். நீ அதை ஒருபோதும் திறக்கவேமாட்டாய். நீ அந்த கதவை அடிக்கலாம், ஏனென்றால் இந்த திறவுகோல்… 59 பூட்டிலுள்ள நெம்புகோலின் அமைப்பை அனுசரித்து திறவுகோலின் உருவம் அமைந்துள்ளது, சரியான ஒரு திறவுகோல் அந்த நெம்புகோலைத் திறக்கும். ஆனால் பூட்டிலுள்ள அனேக நெம்புகோல்களில் ஒரு நெம்புகோல் திறவாமற்போனாலும், முழுக் காரியமும் குழப்பமாகிவிடும்.

3560 ஆகையால் நான் முழு சுவிசேஷத்திலும், தேவனுடைய வல்லமையை அளிக்கிற, ஜனங்களுக்கு அவருடைய ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிற ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையிலும் நான் விசுவாசங் கொண்டிருக்கிறேன். அதுவே வாசலைத் திறக்கிற, அதற்கான திறவுகோலாயுள்ளது. ஓ, அந்த மகத்தான வீரர்கள், அந்த தீர்க்கதரிசிகள் மற்றும் வேதாகமத்தின் மகத்தான மனிதர்கள் அந்த திறவுகோலை உடையவர்களாயிருந்தனரே! அந்தக் காரணத்தினால்தான் அவர்கள் சிங்கங்களின் வாய்களை அடைக்க முடிந்தது, அக்கினியின் உக்கிரத்தை அவிக்க முடிந்தது, பட்டையகருக்கிற்கு தப்ப முடிந்தது, மரித்தோரை உயிரோடு எழுப்ப முடிந்தது, எல்லாவிதமான அற்புதங்களையும் செய்ய முடிந்தது, ஏனென்றால் அவர்கள் அந்த திறவுகோலை வைத்திருந்தனர், அது கிரியை செய்திருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர், ஏனென்றால் அது வேதவாக்கியத்தின்படி-பிறந்த ஒரு திறவுகோலாயிருந்தது. 61 இப்பொழுது, நான் ஒரு கோட்பாட்டுத் திறவுகோலைக் கொண்டு தடவிக்கொண்டிருந்தால், அது என்ன செய்யப்போகிறது என்றே எனக்குத் தெரியாது. அவர்கள், “என் சபை இதைப் போதிக்கிறது” என்று கூறுவார்களானால், அதைக் குறித்து எனக்குத் தெரியாது.

3662 ஆனால் வேதம் அதை போதிக்கும்போது, நான் அந்த விசுவாசத் திறவுகோலை என் கரத்தில் அல்லது என் இதயத்தில் பற்றிக்கொண்டிருக்க, அதுவோ, “அது தேவனுடைய வார்த்தை” என்று கூறுகிறபோது, அது அக்னியின் உக்கிரத்தை அவிக்கும், அது சுகவீனமானவர்களுக்கு சுகத்தை திறந்தளிக்கும், அது இழக்கப்பட்டவர்களுக்கு இரட்சிப்பை திறந்தளிக்கும். நான் அந்த வாசலண்டை வந்திருக்கிறேன், ஒவ்வொரு காரியமும் அவருடைய நாமத்தில் உள்ளது. “வார்த்தையினாலாவது, கிரியையினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும் அவையெல்லாவற்றையும் அவருடைய நாமத்தில் செய்யுங்கள்.” நீங்கள் பெற்றுள்ள திறவுகோல் விசுவாசமாயிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள், ஏனென்றால் அது வேத வாக்கியத்தினால் உண்டாக்கப்பட்ட ஒரு திறவுகோலாயிருக்கிறது. இப்பொழுது, அது ஒரு கோட்பாட்டுத் திறவுகோலாய், ஸ்தாபன திறவுகோலாயிருக்குமானால், அது என்ன செய்யும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது ஒரு வேதப்பிரகாரமான திறவுகோலாயிருக்குமானால், அது திறக்கும், ஏனென்றால் தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார். இப்பொழுது, ஓ, அவர்களால் அக்கினியின் உக்கிரம் போன்றவற்றை நிறுத்த முடிந்ததில் வியப்பொன்றுமில்லையே, ஏனென்றால் அவர்கள் அந்த திறவுகோலை உடையவர்களாயிருந்தனர்.

3763 தேவன் அந்த தீர்க்கதரிசிகளில் ஒருவனுக்கு தலையசைத்துவிட்டால், எதுவுமே அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அவர் என்னிடமோ அல்லது ஒருவேளை உங்களிடமோ (அப்படி இருக்காது என்று நான் நினைக்கிறேன்) சிலமுறை அவர் செய்வதுபோல அதை திரும்ப திரும்ப கூற வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஆனால் என்னிடம் தொடர்ந்து, “போய் இதைச் செய்,” அதன்பின்னர் நீ இடறிவிழுவாய். “அதன்பின்னர் போய் இதைச் செய்,” “திரும்பிப் போய், அதை மீண்டும் செய், நீ அதை சரியாக செய்யவில்லை” என்று கூறிக்கொண்டேயிருப்பார். அந்தத் தீர்க்கதரிசிகளிடம் ஒரு சிறு தலையசைத்தலை மாத்திரம் செய்தாரே! அப்படியே, “இது செய்ய வேண்டிய காரியமாக உள்ளது” என்று அவர்களிடத்தில் ஆவியானவர் கூறுவதை அவர்களால் அப்படியே உணரமுடிந்து. எதுவுமே அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாததாயிருந்தது. சகோதரனே அவர்கள்—அவர்கள்—அவர்கள் சிங்கங்களின் வாய்களை அடைத்தனர். அவர்கள் பட்டயக்கருக்கிற்கு தப்பினர். அவர்கள் அக்கினியின் உக்கிரத்தை அவித்தனர். அவர்கள் ஒவ்வொரு காரியத்தையும் செய்தனர். தேவனிடமிருந்து வந்த ஒரு சிறு தலையசைத்தல் போதுமானதாய் இருந்தது, ஏனென்றால் அவர்கள் தங்களுடைய கரங்களில் அந்த திறவுகோலை, அந்த மகத்தான விசுவாசத்தை உடையவர்களாய் இருந்தனரே! அவர்கள் தேவனுக்காக அந்த காரியங்களைச் செய்தனர், ஏனென்றால் எதுவுமே அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஓ, எவ்வளவு மகிமையானது!

3864 ஒருமுறை ஒரு வாலிபன் தேவ பக்தியுள்ள ஒரு வயோதிபர் சகோதரனிடம் வந்தான், அந்த வயோதிபர் தேவனுடைய தீர்க்கதரிசி. அந்த மனிதன் தொடர்ந்து தேவனுடைய நன்மையைக் குறித்தும், தேவன் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பது குறித்தும், கிறிஸ்து என்னவாயிருந்தார் என்பதைக் குறித்தும், தொடர்ந்து கூறி, சாட்சி கொடுத்துக்கொண்டேயிருப்பதை இந்த வாலிபன் கேட்டான். முடிவாக, இந்த வாலிப மனிதன் ஊழியத்திற்கென்று நியமனஞ்செய்யப்பட வேண்டியவனாயிருந்தான். எனவே அவன் இந்த குறிப்பிட்ட வயோதிக பரிசுத்தவானிடத்திற்கு வந்தான். அப்பொழுது அவன் அவரிடத்தில், “ஐயா, நான் உம்மிடத்தில் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றான். அதற்கு அவரோ, “வாலிபனே கேள்” என்றார். 65 அப்பொழுது அவன், “நீர் கூறுமளவிற்கு இயேசு உண்மையிலேயே உங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவரா?” என்று கேட்டான். 66 அதற்கு அவரோ, “என்னால் கூற முடிந்ததைக் காட்டிலும் அதிகமாக அவர் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவரே!” என்று பதிலளித்தார். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அது என்னவாயிருந்தது? அவர் திறவுகோலைக் கண்டுபிடித்துவிட்டிருந்தார். 67 அப்பொழுது அந்த வாலிபன் அதன்பேரில், “நீர் உரிமை கோரும் இந்த காரியங்கள், நீர் என்னிடத்தில் கூறுகிற அந்த காரியங்கள் உமக்கு உண்மையாயிருக்குமானால், அப்பொழுது அதே மாறாத உண்மையில் உள்ள அந்த மாறாத இயேசுவை நானும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று கூறினான். அது என்னவாயிருந்தது? அந்த வயோதிகர் ஒரு திறவுகோலை வைத்திருந்தார் என்றும், அவரால் அதைக் கொண்டு திறக்கவும், பூட்டவும் முடியும் என்பதையும் அவன் அறிந்திருந்தான்.

3968 ஒரு திறவுகோல் பூட்டுகிறது, திறக்கிறது என்பதையும் கூட நீங்கள் அறிவீர்கள். புரிகிறதா? உங்களால் கட்டவிழ்க்க முடியும் அல்லது கட்ட முடியும். அது உண்மை. பூட்டுகிற அதே திறவுகோல் திறக்கிறது. திறக்கிற அதே திறவு கோலால் பூட்ட முடியும். அது முற்றிலும் உண்மை. பாருங்கள், ஏனென்றால் அது இரு வழிகளிலும் கிரியை செய்கிறது. அதைக் குறித்த தரிசனத்தை சபையானது எப்போதுமே இழந்துவிட்டிருப்பது எவ்வளவு பரிதாபகரமாயுள்ளது! சபையானது தன்னை ஸ்தாபன பிரமாணங்களுக்கு விற்றுப் போட்டது என்ன ஒரு வருத்தமான காரியமாயுள்ளது. இன்றைக்கு நாமும் அதையே செய்துள்ளோம். இப்பொழுது இணையும்படியான அழைப்பு வருகிறது. 69 அந்த மகத்தான ரோமன் கத்தோலிக்க குருக்கள் ஆட்சியும் மற்றவர்களும் இப்பொழுது சந்திக்கப்போகின்றார்கள் என்பதையும், அவர்கள் சில நிகழ்ச்சிகளை மாற்றப் போகிறார்கள் என்பதையும் நாம் கண்டுள்ளோம். அவர்கள் மாற்றவில்லை என்று நான் நினைத்தேன்; ஆனால் அவர்களை எப்படியும் அதைச் செய்யப் போகிறார்கள். ஒரு போப்பாண்டவரின் அதிகாரத்தை ஒவ்வொரு குருமாருக்கும் அளிக்கப் போகிறார்கள், அவர் எங்கே இருந்தாலும் சரி. சபையானது தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக தன்னை ஸ்தாபன கோட்பாடுகளுக்கு விற்றுப்போட்டது எவ்வளவு பரிதாபமாக உள்ளது. புரிகிறதா? அங்கேதான் அவர்கள் தங்கள் திறவுகோலை விட்டுவிட்டனர். அந்தக் காரணத்தினால்தான் வழக்கமாக செய்யப்பட்டு வந்த மகத்தான அற்புதங்களும் அடையாளங்களும் இன்றைக்கு ஜனங்கள் மத்தியில் செய்யப்படுகிறதில்லை. அவர்கள் அந்த திறவுகோலை தொலைத்துவிட்டனரே! ஆம், அவர்கள் அந்த வாசலை அறிந்திருக்கிறார்கள், அங்கே வாசல் உள்ளது என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் அடுத்தக் காரியம் வாசலை திறப்பதற்கான திறவுகோலாயுள்ளது. பொக்கிஷங்கள் வாசலுக்கு பின்னே உள்ளன. அவிசுவாசியின் கண்களுக்கு அவைகள் பூட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் விசுவாசமுள்ள விசுவாசியோ அந்த விசுவாச திறவுகோலை எடுத்து, இந்த வாசல்களைத் திறக்க முடியும். ஆம், ஐயா.

4070 சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே ஒரு சமயம் ஒரு மிஷினரி சகோதரன் இருந்தார். அவர் ஆபிரிக்காவுக்கு செல்ல அவருக்கு ஒரு அழைப்பு இருந்ததாகக் எண்ணினார். அவர் ஒரு வாலிப நபராயிருந்தார்; ஒரு மனைவியும் இரண்டு பிள்ளைகளும், ஏறக்குறைய ஏழு அல்லது எட்டு வயது கொண்ட இரண்டு அழகான வாலிப பெண் பிள்ளைகள் இருந்தனர். இந்த வாலிப நபரால் அவர்களை விட்டுவிட்டு செல்ல முடியாமல் இருந்தது. அவன் ஒரு—ஒரு ஊழியக்காரனாயிருந்தான். அவனுக்கு அந்த தேசத்திலே ஒரு அருமையான சபை இருந்தது. ஆனால் அவன், “ஆபிரிக்காவுக்கு செல்ல வேண்டும்” என்ற அந்த அழைப்பிலிருந்தும் அவன் விலக முடியாதவனாயுமிருந்தான். எனவே அவன் இரவும் பகலும் ஜெபித்தான். அவன் போக விரும்பவில்லை. ஆனால் தேவனோ, “நீ போக வேண்டும்!” என்று அவனிடத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். முடிவிலே அவன்—அவன் அங்கே போகத்தான் வேண்டும் என்ற ஒரு பலப்பரிட்சையான ஒரு நிலைக்கு அவன் வந்துவிட்டான்!

4171 எனவே அவன் தன்னுடைய சபையின் மிஷனரிகளை அனுப்பும் குழுவினிடத்திற்குச் சென்று, அவன், “ரொடீஷியாவின் காடுகளிலுள்ள தூரமான இடங்களில் ஊழியம் செய்ய தேவன் என்னை அழைத்திருக்கிறார்” என்று கூறினான். இந்தக் காட்டில் மலைக் குளிர் காய்ச்சல் பரவியிருப்பதோடு, அதிக வெப்பமும், கொள்ளைநோயும், தொழுநோயும், மற்றும் எல்லாவிதமான வியாதிகளும் இந்தக் காட்டில் இருந்தன. அங்கே தன்னுடைய எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதையும் அவன் செலவழிக்கப்போவதாயிருந்தான். அவன் தன்னுடைய வீட்டையும், தனக்கிருந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டான். எனவே அந்த மிஷனரிகளை அனுப்பும் குழுவானது அவனை பரிசோதிக்க விரும்பி, அவர்கள், “இப்பொழுது நீ அங்கு செல்ல நிச்சயமுள்ளவனாய் இருக்கிறாயா?” என்று கேட்டனர். அதற்கு அவனோ, “நான் நிச்சயமுள்ளவனாய் இருக்கிறேன்” என்றான். 72 அப்பொழுது அவர்கள் அவனிடம், “ஐயா, உமக்கு இரண்டு அழகான பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதையும், உமக்கு ஒரு அருமையான வாலிப மனைவி இருக்கிறாள் என்பதன் பேரிலும் நீர் நினைத்துப் பார்த்ததுண்டா? எனவே நீர்…நீர் ஏன் அங்கு சென்று அந்த இடம் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு திரும்பி வரக்கூடாது?” என்று கேட்டனர். 73 அதற்கு அவன், “இல்லை, கர்த்தர் என்னிடம் கூறினார். ஓ, அது மிகவும் உண்மையாக இருக்கிறதே!” என்று கூறினான். மேலும் அவன், “கர்த்தர் என்னை அழைத்தார். நான்—நான் என்னுடைய வீட்டை விட்டுச் செல்ல விரும்பவில்லை, நான் என்னுடைய சபையையும், என்னுடைய ஜனங்களையும் விட்டு செல்ல விரும்பவில்லை, ஆனால் கர்த்தர் என்னை அந்தக் காட்டிற்கு செல்ல அழைத்திருக்கிறாரே” என்று கூறினான்.

4274 அப்பொழுது அவர்கள், “ஐயா, உங்களுடைய சிறு பெண் பிள்ளைகள் விஷக்கிருமி காய்ச்சலால் அல்லது வாந்தியோடும் இரத்தம் கலந்த சிறுநீரோடு கூடிய காய்ச்சலால் பிடிக்கப்பட்டு ஒரே இரவில் மரிக்கக் கூடும் என்பதை அறிந்துள்ளீரா?” என்றும் கேட்டனர். மேலும் அவர் தங்களுடைய பிள்ளைகளை இழந்த பல்வேறுபட்ட நபர்களையும், அவர்கள் தங்களுடைய சிறு பிள்ளைகளை அங்கு கொண்டு சென்று, அவர்களுக்கிருந்த வியாதிகளுக்கு தடுப்பூசியேயில்லாமலிருந்ததையும் குறிப்பிட்டுக் கூறினார். அவர் தொடர்ந்து, “தொழுநோயைக் குறித்தும், உங்களுடைய அழகான மனைவி மற்றும் உங்களுடைய இரண்டு சிறு பெண் பிள்ளைகளும் தொழுநோயினால் பாதிக்கப் படுவதைக் குறித்து யோசித்து பாருங்கள் என்றும், அந்த அதிகமான வெப்பத்தையும் மற்றுமுள்ள காரியங்களையும் நீங்கள் சகித்துக்கொள்ள வேண்டும்” என்றும் கூறி, “அப்படிப்பட்ட ஒரு அபாயகரமான இடத்திற்கு உங்களுடைய மனைவியையும் பிள்ளைகளையும் கொண்டு செல்வதைக் குறித்து நீர் பயப்படவில்லையா?” என்று கேட்டனர். 75 அங்கு நின்றுகொண்டிருந்த வாலிப மிஷனெரியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடத் துவங்கியது. அவர் திரும்பிப் பார்த்து, “என் சகோதரரே! அது தேவனுடைய அழைப்பான என்னுடைய தரிசனமாயுள்ளது,” என்றும், “தேவன் என்னை ஆப்பிரிக்காவிற்கு செல்ல அழைத்திருப்பாரென்றால், உலகத்தில் உள்ள எந்த இடத்தைப் பார்க்கையிலும் ஆப்பிரிக்காவிலேயே என்னுடைய பிள்ளைகளும் குடும்பமும் அதிக பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று கூறினான். ஆமென். அது என்னவாயிருந்தது? அவன் தன்னுடைய அழைப்புக்கான திறவுகோலை உடையவனாயிருந்தான். அவன் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறான் என்பதில் அவன் விசுவாசமுடையவனாயிருந்தான். ஓ, என்னே ஒரு தீரமான விளக்கக் கூறு என்று நான் எண்ணிக் கொண்டேனே! நான் முதலில் அதைக் கேட்டபோது, என்னுடைய இருதயம் மகிழ்ச்சியால் பொங்கிற்று. பாருங்கள், “தேவன் என்னை ஆபிரிக்காவுக்கு செல்ல அழைத்திருப்பாரென்றால், பூமியில் உள்ள எந்த இடத்தைப் பார்க்கையிலும், தொழுநோயும், கொள்ளைநோயும் மற்றும் உள்ள ஒவ்வொரு காரியமுமுள்ள அந்த இடமே என்னுடைய பிள்ளைகளுக்கு, அவர்களுக்கு அதிக பாதுகாப்பாக இருக்கும்.” அவன் திறவுகோலை உடையவனாயிருந்தான். அதுதான் அதற்கு தேவைப்படுகிறது.

4376 நீங்கள் அந்த திறவுகோலைப் பெற்றிருக்கும்போது, அங்கு பயமே இருக்காது. அங்கு சந்தேகமே இருக்காது. அங்கு எந்த கேள்வியுமே இருக்காது. நீங்கள் அதைக் குறித்து யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் அதை சரியாக அறிந்திருப்பீர்கள். நீங்கள் அதை உங்களுடைய கரங்களில் பெற்றுள்ளீர்கள், என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆமென். நீங்கள் வெற்றியின் மதிப்பெண் என்னவென்பதை அறிவீர்கள். வாசலானது திறக்கப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் நெம்புகோல்களை பரிசோதித்துவிட்டு, அது சரியாக உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கையில், நீங்கள் அதற்குள் திறவுகோலை நுழைக்கும்போது, வாசலானது உடனடியாக திறக்கப்போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். 77 ஓ, சபையானது அந்த திறவுகோல்களை மாத்திரம் உடையதாயிருந்தால் நலமாயிருக்குமே! சபையானது விசுவாசத் திறவுகோலை மாத்திரம் உடையதாயிருந்தால் நலமாயிருக்குமே. அப்பொழுது நாம் எந்த வாசலையும், எந்த வியாதியையும், எந்த தொற்றுநோயையும், அங்குள்ள எந்த காரியத்தையும் திறக்க முடியும். நாம் இந்தத் திறவுகோலை மாத்திரம் உடையதாயிருக்கக் கூடுமானால் அப்பொழுது அது நமக்கு திறக்கப்படக் கூடும். இந்த மனிதன் தன்னுடைய அழைப்பிற்கான திறவுகோலை உடையவனாயிருந்தான்.

4478 என்னுடைய தனிப்பட்ட ஒரு சாட்சியை கூறுவதனால் நீங்கள் மன்னிப்பீர்களானால் நலமாயிருக்கும். இப்பொழுது கிட்டத்தட்ட பதினைந்து, பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தர் ஆற்றண்டையிலே என்னிடத்தில் கூறியதை நான் நினைவுகூருகிறேன். அவர் அந்த அக்கினி ஸ்தம்பத்தில் இறங்கி வந்தபோது, அவருடைய புகைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவர் என்னிடத்தில் பேசினார், அவர், “நீ உலகம் முழுவதும் இந்த செய்தியை எடுத்துச் செல்லவேண்டும்” என்றார். கிரீன்ஸ் மில் என்னும் இடத்திலே அவர் என்னிடத்தில் பேசியதையும் நான் நினைவுகூருகிறேன். 79 நான் சென்று அதை என் போதகரிடத்தில் கூறினேன், அப்பொழுது அவர் என்னிடத்தில் கூறினதோ, “பில்லி, நீ அந்த இரவு என்ன உணவு புசித்தாய்? நீ ஒரு தீயக் கனவு கண்டிருக்கிறாய்” என்றே கூறினார். மேலும் அவர், “நீ உன்னுடைய வேலைக்கு திரும்பிச் செல் என்றும், நீ பொதுசேவை நிர்வாகத்தில் ஒரு நல்ல வேலையைப் பெற்று பணி புரிந்துகொண்டிருக்கிறாய். எனவே திரும்பிச் சென்று உன்னுடைய—உன்னுடைய வேலையை கவனமாக பார்த்துக்கொள், மகனே” என்றார். அவர் தொடர்ந்து, “நீ ஒரு தீயக் கனவு கண்டிருக்கிறாய். ஏதோ ஒன்றைப் புசித்துவிட்டாய்” என்றும் கூறிவிட்டார். அது என்னை சிறிதளவும் அசைக்கவில்லையே! 80 நான் சுகமளிக்கும் ஆராதனைகளைத் துவங்கினபோது, இங்குள்ள உங்களில் அநேகருக்கு அன்று காலை நான் அளித்த என்னுடைய செய்தி ஞாபகமிருக்கும். தாவீது கோலியாத்தை சந்திக்கச் சென்றபோது என்பதன் பேரில் நான் பிரசங்கித்தேன்.

4581 அவர்கள் என்னிடம் கூறினர், அவர், “இந்த நவீன விஞ்ஞான காலத்தில், நாம் எல்லாவிதமான மருத்துவ ஆராய்ச்சிகளையும் பெற்றுள்ளோம். நான் மிகச் சிறந்த வைத்தியர்களை பெற்றிருக்கும்போது, சபையானது தெய்வீக சுகமளித்தலை நீண்ட காலமாக, அனேக, அனேக ஆண்டுகளுக்கு முன்பே மறந்துவிட்டிருக்கும்போது, அதைப் போன்ற ஒரு பெரிய இராட்சதனுக்கு முன்னால் நீங்கள் எப்படி நிற்கப்போகிறீர்கள்? என்று கேட்டார். மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் மற்றும் பெந்தேகோஸ்தேயினரும் கூட நீண்ட காலத்திற்கு முன்பே அதை மறந்துவிட்டு, அவர்களுடைய கோட்பாடுகளுக்குள் சென்றுவிட்டிருக்க, நீங்கள் எப்படி அவர்களை முகமுகமாய் சந்திக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார். “எந்த ஸ்தாபனமும் அல்லது மற்ற எதுவுமே உங்களை ஆதரிக்காமலிருக்கும்போது நீங்கள் எப்படி அதை சந்திக்கப் போகிறீர்கள்? பில் அவர்களே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” எப்படியாயினும் இது என்னை சிறிதும் கலங்கச் செய்யவில்லை, ஏனென்றால் நான் ஒரு திறவுகோலை என் கையில் பிடித்திருந்தேனே! நான் கூறினேன்…அவர்கள், “யாருமே உம்மை விசுவாசிக்கமாட்டார்கள். உம்மால் அதைச் செய்ய முடியாது. யாருமே உம்மை விசுவாசிக்கமாட்டார்கள்” என்று கூறினர். 82 அப்பொழுது நான், “எனக்குக் கவலையில்லை. ஒரு காரியம் மாத்திரம் உறுதியாயுள்ளது; தேவன் என்னை அழைத்தார், நான் போகவேண்டும், ஏனென்றால் தேவன் என்னை அழைத்தார்” என்று கூறினேன். நான் அந்தத் திறவுகோலைப் பிடித்திருந்தேன். அவர் என்னை அழைத்திருந்தார், அவர் எனக்கு காண்பித்திருந்தார். அவர் எனக்கு கூறியிருந்தார், அவர் எனக்கு கட்டளையிட்டபோது, நான் அவருடைய பிரசன்னத்தைக் கண்டேன், அந்தத் திறவுகோல் அங்கு இருந்ததே! 83 போதகரோ, “ஒரு ஏழாம் வகுப்பு கல்வியோடு, நீ போய் பிரசங்கித்து, இராஜாக்களுக்கும், சக்கரவர்த்திகளுக்கும் முன்பாக ஜெபிக்கப்போகிறாயே!” என்று கூறினார். அதற்கு நான், “அது அவருடைய வார்த்தையின்படி உள்ளதே!” என்றேன்.

4684 கடந்த வருடம் கிட்டத்தட்ட இந்த நேரத்தில், ஓரிரண்டு வாரங்களுக்கு முன்பு, நான் சபைக்கு இங்கே வந்திருந்தபோது, ஒரு வேட்டைப் பயணத்தை…மேற்கொள்வதைக் குறித்தும், ஒரு—ஒரு குறிப்பிட்ட மிருகத்தை நான் கண்டறிய போவதாயிருக்கிறேன் என்றும், அந்த மிருகம் நாற்பத்திரண்டு அங்குலம் நீளமுள்ள கொம்புகளை உடையதாயிருக்கப்போகிறது என்ற ஒரு தரிசனத்தை தேவனாகிய கர்த்தர் எனக்கு அருளியிருந்தார் என்று உங்களிடம் கூறியிருந்தேன். நான் அந்த வழியிலிருந்து திரும்பும்போது இந்த மிருகம், (அது எங்கே படுத்திருக்கும் என்றும், அது எந்த நிலையில் இருக்கும் என்றும்), நான் திரும்பி வரும் வழியில் ஒரு வெள்ளி—முனை நிற உரோமமுள்ள கரடியை கொல்லப்போவதாக இருக்கிறேன் என்றும் கூறினார். அப்பொழுது நான் இந்த குறிப்பிட்ட பகுதிக்கு சென்று, நான் அங்கிருந்த மனிதனிடத்தில் பேசினேன். அப்பொழுது அவன், “அந்தவிதமாக காணப்படுகிற எந்த மிருகத்தை குறித்தும் எனக்குத் தெரியாது. எனக்கு தெரிந்தவரை அப்படிப்பட்ட ஒரு உரோமமுள்ள கரடியை நான் இதுவரைக் கண்டதேயில்லை” என்று கூறிவிட்டான். அதற்கு நான், “ஆனால் அது இங்கெங்கோ இருக்க வேண்டும்” என்றேன். 85 எனவே அவன், “நாம் கரடிகள் உள்ள தேசத்திற்குள் செல்லப் போவது கூட இல்லை. நாம் மரங்கள் அடுக்கியிருக்கும் ஸ்தலத்தைக் கடந்து மேல்நோக்கி ஆடுகளுக்காக சென்றுகொண்டி ருக்கிறோம்” என்றான். பாருங்கள், நான் அவனோடு சென்றேன்.

4786 இரண்டாம் நாள் சரியாக கர்த்தர் கூறியிருந்த அதே இடத்தில் அந்த மிருகம் படுத்திருந்தது. எனவே நான் சென்று, அந்த மிருகத்தைச் சுட்டேன். நாங்கள் அதன் தோலை உரித்து, அதன் கொம்புகளைப் எடுத்துக் கொண்டிருந்தபோது, அவனோ, “நான் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். மூன்று நாட்களுக்கு முன்பு, நாம் அந்த—அந்த வேட்டை முகாமைவிட்டு புறப்பட்டபோது, நீர் இந்த குறிப்பிட்ட மிருகத்தை சுட்டுவிட்டப் பிறகு, வழியில் திரும்பி வந்துகொண்டிருக்கும்போது, நீர், ‘வெள்ளி-முனை உரோமமுள்ள ஒரு கரடியை கொல்லப்போவதாக’ என்னிடம் கூறினீரே” என்று சொன்னான். அதற்கு நான், “அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயுள்ளது!” என்றேன். 87 அப்பொழுது அவன், “நான் அதை சந்தேகிக்கவில்லை” என்றும், அவன், “என்னுடைய சகோதரனுக்கு காக்காய் வலிப்பு இருந்தது, நீர் இங்கே மேலே ஒருமுறை இருந்தபோது, நீர் அவனை உம்முடைய ஜிவியத்தில் ஒரு முறை கூட கண்டதேயில்லை, ஆனால் நான் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்யும்போது, அந்த பையன் சுகமடையப்போகிறான் என்று நீர் என்னிடத்தில் கூறினீர். அவ்வாறே அவனும் சுகம் அடைந்தானே” என்றான். மேலும் அவன், “இப்பொழுது, ஆனால், சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்” என்று கூறி, அவன் தொடர்ந்து, “மலையின் கீழ் உள்ள மரங்கள் இருக்கும் ஸ்தலம் வரையிலும், குதிரைகள் அங்கே நின்றுகொண்டிருப்பதையும் என்னால் இங்கிருந்து முழுவதுமாய் காணமுடிகிறது. அங்கு வேறொன்றுமே காணப்படவில்லை. ஒரு புல்லும் அங்கில்லை, ஒரு கல்லும் அங்கில்லை, வேறெதுவும் அங்கில்லையே” என்று கூறினான். டிம்பர்லைன் [மரங்கள் அடுக்கியிருக்கும் ஸ்தலத்திற்கு—மொழிபெயர்ப்பாளர்] ஒரு மைல் உயரத்தில், சுமார் இரண்டு அங்குல கனத்துக்கு பாசி மாத்திரம் படர்ந்துள்ளது. எனவே அவன், “அந்தக் கரடி எங்கே இருக்கப்போகிறது?” என்றான். 88 அப்பொழுது நான், “தேவன் யேகோவாயீரேவாக இருக்கிறார். அங்கே ஒரு கரடி இருக்கும் என்று அவர் என் இடத்தில் கூறினாரென்றால், அங்கே ஒன்று இருக்கும்” என்று கூறினேன்.

4889 நாங்கள் மலையின் கீழே இறங்கி வரும்போது, கிட்டத்தட்ட ஒவ்வொரு அரை மைல் தொலைவிலும், அவன், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, கரடி தோன்றும் நேரம் வந்துவிட்டதா?” என்றே கேட்பான். அப்பொழுது நானோ, “கவலைப்படாதே, அது இங்கே இருக்கும்” என்று கூறினேன். 90 குதிரைகள் இருக்கும் இடத்திற்கு கிட்டத்தட்ட ஐநூறு கெஜ தூரத்திற்கு நாங்கள் வந்தபோது, அந்தக் கொம்புகள் பளுவாகவும், எங்கள் முதுகில் பாரமுமிருந்தபடியினால் நாங்கள் மீண்டும் இளைப்பாற வேண்டியதாயிருந்தது. அவன் மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் என்னை உற்று நோக்கியபோது, நானும் அவன் முகத்தைப் பார்த்தேன். அவனுடைய இருதயத்தில் அவன் சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. பாருங்கள், அது அங்கேயிருக்கும் என்று அவன் நம்பியிருந்தான் . ஆனால் அந்த திறவுகோலை அவன் பெற்றிருக்கவில்லை. 91 ஆனால் எவ்வாறாயினும், தேவனுடைய கிருபையினால், அவர் என்னிடம் தவறாகக் கூறினதேயில்லை. வெள்ளி-முனை உரோமம் கொண்ட கரடி அங்கிருக்கும் என்று அவர் என்னிடம் கூறினபோது, நான் திறவுகோலை உடையவனாக இருந்தேன். நான் அதை ஒரு இம்மியும், சிறிதேனும் சந்தேகிக்கவில்லை. நான் பட் என்பவர் பக்கமாய்த் திரும்பி, “பட், அது அங்கே இருக்கும்” என்று நான் கூறினேன். நான் கூறி விட்டுத் திரும்பியபோது, அந்த கரடி அங்கே [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] எங்களுக்கு மேலாக கிட்டத்தட்ட அரை மைல் தூரமுள்ள உயரத்தில் நின்றுகொண்டிருந்தது. 92 அவர் தூரதரிசினி கண்ணாடியின் மூலம் அதைப் பார்த்துவிட்டு, “பில்லி, எனக்கு உதவிசெய்யும், அது ஒரு பெரிய வெள்ளி-முனை உரோமம் கொண்ட கரடியாயுள்ளதே!” என்று அவர் கூறினார். 93 பாருங்கள், திறவுகோல், ஒரு தரிசனம், கர்த்தருடைய வார்த்தை, எந்த காரியமும் அதை மாற்றவோ அல்லது அதைத் தடுக்கவோ முடியவில்லை. சபைக்கு இன்றிரவு தேவைப்படுகிறது கல்வியல்ல. சபைக்கு இன்றிரவு தேவைப்படுகிறது ஒரு ஸ்தாபனமல்ல. சபைக்கு இன்றிரவு தேவைப்படுகிறது கோட்பாடல்ல. சபைக்கு இன்றிரவு தேவைப்படுகிறது வாசலாகிய வேதவாக்கியங்களுக்கான திறவுகோலயாகும். கிறிஸ்துவே வாசலாயிருக்கிறார், அவரே வார்த்தையாயிருக்கிறார். ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையில் உள்ள விசுவாசமே ஒவ்வொரு வாசலையும் திறக்கிறது. தேவனே அந்த திறவுகோலை எங்களுக்குத் தாரும். அந்த திறவுகோலை எங்களுக்குத் தாரும்.

4994 எபிரெயர் 12-ம் அதிகாரம், “ஆகையால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்திருக்க, பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு” என்று கூறுகிறது. அது, “பாவம்” என்று கூறுகிறது, பாவம் “அவிசுவாசமாயிருக்கிறது.” புரிகிறதா? ஒரே ஒரு பாவம் தான் உண்டு, அது அவிசுவாசமாயுள்ளது. 95 பாவம் என்பது “குறி தவறுதல்” என்றே பொருள்படுத்துகிறது. நீங்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கும்போது, நீங்கள் சுடுவது குறி தவறிவிட்டால், அப்பொழுது துப்பாக்கியை சரி செய்துகொள்வது மேலாகும். பாருங்கள், ஏனென்றால் ஏதோக் காரியம் தவறாயுள்ளது. எனவே நீங்கள் குறி தவறிவிட்டீர்கள். பாருங்கள், திரும்பி வந்து மீண்டும் முயற்சி செய்யுங்கள். புரிகிறதா? நீங்கள் குறி தவறியிருக்கிறபடியால், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதையே பொருட்படுத்துகிறது. நீங்கள் ஒரு கிறிஸ்தவனாயிருக்க விரும்பும்போது, நீங்கள் ஒரு ஸ்தாபன சபையைச் சேர்ந்து கொண்டால், நீங்கள் குறி தவறிவிட்டீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவனாயிருக்க விரும்பும்போது, நீங்கள், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் தெளிப்பு ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கும்போது, நீங்கள் குறி தவறிவிட்டீர்கள். திரும்பி வருவது மேலானதாகும். ஏனென்றால் நீங்கள் குறியை தவறவிட்டுவிட்டீர்கள். நீங்கள் நிச்சயம் குறி இலக்கை தவறவிட்டுவிடுவீர்கள். பரிபூரண வரிசையில் உங்களை பிடித்து வைக்கக் கூடியது ஒரே காரியம் மாத்திரமே உண்டு, அது வேதவாக்கியம், வேதம், வார்த்தையாயுள்ளது. வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்துப்போகாது. 96 எனவே வார்த்தையில் உள்ள விசுவாசம் என்னும் திறவுகோலை பிடித்துக்கொள்ளுங்கள்! நீங்கள் விசுவாசிக்கும் விசுவாசத்தில் எள்ளளவு கூட சந்தேகிக்க வேண்டாம், உங்களுக்கும், தேவன் உங்களுக்காக வைத்திருக்கிற ஆசீர்வாதத்திற்கும் இடையே நிற்கிற ஒவ்வொரு வாசலையும் உங்களால் திறக்க முடியும். அந்த திறவுகோல்களை பெற்றுக்கொள்ள தேவன் நமக்கு உதவி செய்வாராக என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது. நாம் நம்முடைய தலைகளை இப்பொழுது ஜெப வார்த்தைக்காக வணங்குவோமாக.

5097 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கென எங்களிடம் ஒரு திறவுகோலை நீர் தந்துள்ளதற்காக இன்றிரவு நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, நாங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளதற்காகவும், இதுவரையிலும் அந்த திறவுகோலை எங்களால் உபயோகிக்க முடிந்தமைக்காகவும் நான்—நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் தேவனே, உம்முடைய புஸ்தகத்தில் எழுதபட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒரு சிறு நெம்புகோல் என்றும், இது இயேசு என்று அழைக்கப்படுகின்ற திறவுகோல் என்றும்…இந்த வாசல் இயேசு என்று அழைக்கப்படுவதையே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன்; விசுவாசம் என்று அழைக்கப்படுகின்ற இந்த திறவுகோல் ஒவ்வொரு வார்த்தையைத் தொடும்போதும் அது இதனைத் திறக்கிறது என்னும் விசுவாசத்தை எங்களுக்குத் தாரும். அது அந்த சிறு நெம்புகோலை கீழே தள்ளுகிறது, எனவே எங்களால் அந்த ஆசிர்வாதத்திற்குள் உள்ளே பிரவேசிக்க முடிகிறது. பரலோகப் பிதாவே, தேவனுடைய வாக்குத்தத்தங்களில் நாங்கள் விசுவாசமுள்ளவர்களாயிருக்கும்படி, எங்களுடைய விசுவாசம் தவறிப் போகாதபடிக்கு நாங்கள் உமக்கும், நாங்கள் இணைந்துள்ளவர்களுக்கும் ஊழியம்செய்யும்படிக்கு அந்த திறவுகோல்களை எங்களுக்குத் தாரும். 98 கர்த்தாவே, எங்களுடைய அவிசுவாசத்தின் ஒவ்வொரு பாவத்தையும் மன்னியும், உம்முடையவர்களாயிருக்க எங்களுக்கு உதவி புரியும். நாங்கள் இப்பொழுது இராபோஜன மேசையண்டை வந்து கொண்டிருக்கிறோம். பரலோகப் பிதாவே, நாங்கள் தேவனுடைய பந்தியைச் சுற்றிலுமுள்ள ஐக்கியத்தின் சந்தோஷத்துக்குள்ளாக பிரவேசிக்கும்படியாக எங்களுடைய எல்லா தப்பிதங்களையும் நீர் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

5199 என் சகோதரனே, சகோதரியே, நீங்கள் இராஜ்ஜியத்திற்கான திறவுகோலை, வாசலுக்கான திறவுகோலை, இரட்சிப்பின் திறவுகோலைப் பெற்றிருந்தால் அந்த வாசல்களை நீங்கள் திறக்கும்படி உதவி செய்ய, இயேசுவானவர் உள்ளே வருவராக. நீங்கள் அதிகமாக—அதிகமாக வாஞ்சிக்கிற காரியங்களை அவர் உங்களுக்குத் தருவாராக. 100 இப்பொழுது, இராபோஜனத்தின் பேரிலான வேத பாகத்தை நாம் வாசிப்பதற்கு முன்பு ஒரு நிமிடம் நான் ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன், ஏனென்றால் இது இராப்போஜனமாயுள்ளது. நாம் இந்தப் பீடத்தன்டை வர, ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. நாம் விசுவாசத் திறவுகோலை நம்முடைய கரங்களில் பிடித்திருப்போமேயானால், அது நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அறிந்துகொள்ளும்படிச் செய்கிறது. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன என்ற அந்த வாசலைத் திறப்பதற்கான திறவுகோலை நாம் பெற்றிருக்கவில்லையென்றால், நமக்கு கர்த்தருடையப் பந்தியில் இடமே கிடையாது. என்னத்தினாலெனில், அபாத்திரமாய் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜன பானம்பண்ணுகிறான். இப்பொழுது, அது உண்மை.

52101 இன்று தேசிய இராபோஜன தினம் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என்று நான் யூகிக்கிறேன். இந்த நாள் எல்லா சபைகளும் இராபோஜனத்தில் பங்கு கொள்ளும் நாளாகும். இது தேசம் முழுவதும் ஆசரிக்கும் தேசிய இராபோஜன தினமாகும். மேய்ப்பர், அவர் கர்த்தருடைய பந்தியின் ஒழுங்குமுறைக்கான வேதம் பகுதிகளை வாசிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில், நாம் இராபோஜனம் எடுப்பதற்கு முன்பு, இராபோஜனத்தின் பேரில், அதற்குப் பொருத்தமாக ஓரிரண்டு வார்த்தைகள் பேசலாம் என்று நான் எண்ணினேன். இப்பொழுது, இது இராபோஜனம்…இப்பொழுது, நான் கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளமாட்டேன்.

53102 நாம் பங்குகொள்ள ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் இந்த இராபோஜனம், வேதத்திலுள்ள போதகங்கள் அனைத்திலும் மிகப்பெரிய தர்க்கமுள்ள போதகமாக அமைந்துள்ளது. அது அவர்களுடைய…ஆதி சபையிலும் கூட ஏற்பட்ட அவர்களுடைய தர்க்கங்களில் இது ஒன்றாகும். இன்று பிராடெஸ்டெண்டுகளும், எபிஸ்கோபலியன்கள், மெதொடிஸ்ட்டுகள், அனேக பிராடடெஸ்டென்டு சபைகள் கத்தோலிக்கத்தை, ரோமன் கத்தோலிக்க உபதேசத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் இராபோஜனத்தைக் குறித்தமட்டில் அவர்களிடையே சிறு வேறுபாடு காணப்படுகிறது. ஆனால் குருமார்கள் விவாகம் செய்துகொள்ளலாம் என்று கத்தோலிக்க சபை அனேக சமயங்களில், அவர்களுடைய கூட்டங்களிலும், மாநாடுகளிலும் சம்மதம் தெரிவித்தது. அவர்கள் அதன் பேரில் ஒப்புக்கொண்டனர். கத்தோலிக்கர் ஏறெடுக்கும் வெவ்வேறு ஜெபங்களையும், பிராட்டெஸ்டெண்டு சபை ஒருகால் ஏற்றுக்கொள்ளும். கத்தோலிக்க போதனை, இங்கே, அங்கே சிறு பீடம் அமைத்தல் போன்றவற்றில் கத்தோலிக்க சபையோ அதை செய்ய ஆர்வமுள்ளதாயிருந்து கொண்டிருக்கிறது. இராபோஜனம் என்று வரும்போது, அவர்கள் வேறுபாடு கொள்கின்றனர். சரித்திரத்தை வாசிக்கிற எவரும் அதை அறிந்துள்ளனர். ஆனால், உண்மையிலேயே, என்னுடைய சிந்தனையின் அடிப்படையில் நான்—நான் அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, நீங்கள் பாருங்கள், அவர்கள் ஏராளமான காரியங்களை விட்டு விட வேண்டும், ஏனென்றால் அது வேதாகமத்தில் இல்லை.

54103 ஆனால் கத்தோலிக்க சபைக்கு நான் ஒரு காரியத்தை கூற விரும்புகிறேன். ஆதியிலே கத்தோலிக்க சபை தான் அப்போஸ்தல பெந்தேகோஸ்தே சபையாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? நிச்சயமாகவே, அவ்வாறு இருந்ததே! அதுதான் சபையின் தொடக்கமாக இருந்தது. அவர்கள்—அவர்கள் எந்நிலையை அடைந்துவிட்டனர் என்பதை நீங்கள் காண்கிறீர்கள், அவர்கள் வார்த்தையை விட்டு தொடர்ந்து விலகிச் சென்று, ஒரு கோட்பாட்டை புகுத்திக்கொள்கின்றனர். 104 பெந்தேகோஸ்தே சபையானது மற்றொரு நூறு ஆண்டுகள் நீடிக்குமானால், கத்தோலிக்க சபையானது இன்றுள்ள நிலையைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் வேதாகமத்தினின்று விலகிச் சென்றுவிடுவார்கள். 105 தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகிச் செல்ல கத்தோலிக்க சபைக்கோ அனேக நூற்றாண்டுகள் பிடித்தது. ஆதி சபையின் காலம் தொடங்கி ரோமன் கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்பட்ட வரை முந்நூறு ஆண்டுகள் கழிந்தன. அவர்கள் மிகப் பெரிய அளவில் கௌரவம் உள்ளவர்களை உள்ளே கொண்டுவந்து, அவர்கள் இந்த போதகத்தை அகற்றி, இந்த போதகத்தை உள்ளே நுழைத்து, இன்னும் மற்ற காரியங்களையும், இதை எ டுத்துப் போட்டு, அதை நுழைத்து, அஞ்ஞான விக்கிரங்களை எடுத்துப்போட்டு, கிறிஸ்தவ சிலைகளை வைத்தனர். இப்பொழுது ரோமன் கத்தோலிக்க சபையானது அதன் பேரிலான காரியங்களோடு ஒப்புரவாகி படிப்படியாக தற்போதுள்ள நிலையை அடைந்துவிட்டனர். 106 பிராட்டெஸ்டென்ட் பெந்தேகோஸ்தே சபை ஐம்பது ஆண்டு காலமாகவே இருந்து வருகிறது. அது தொடங்கினது முதற்கொண்டு தற்பொழுது அது விழுந்துள்ள நிலைமையைப் பார்க்கும்பொழுது, இப்பொழுதிலிருந்து இன்னும் நூறு ஆண்டு காலத்தில் அது கத்தோலிக்க சபையைக் காட்டிலும் மோசமான நிலையை அடைந்திருக்கும். அது உண்மை. நான் கூறுவது பெருங்குற்றமாகத் தென்படலாம். ஆனால் அவர்கள் எந்நிலையிலிருந்து விழுந்திருக்கின்றனர் என்பதைப் பாருங்கள். அவர்கள் தங்களை ஸ்தாபன மாக்கிக்கொண்டு இதனோடும் , அதனோடும் மற்ற எல்லாவற்றோடும் ஒப்பரவாக்கிக் கொண்டார்கள். பாருங்கள், அவர்கள் பின்வாங்கிப் போனார்கள்.

55107 ஆனால் இராபோஜனம் என்பது, “கர்த்தருடைய இராபோஜனம்” என்று அழைக்கப்படுகின்றது. இப்பொழுது, அநேக ஜனங்கள், அவர்கள் அதை காலையில் ஆசரிக்க விரும்புகின்றனர். அது அவருடைய காலைபோஜனம் என்று வேதத்தில் கூறப்படவில்லை. இந்த ஜனங்கள் இன்றைக்கு எவ்வாறு, அவர்கள் எவ்வாறு அதை இன்னும் “கர்த்தருடைய இராபோஜனம்” என்று அழைக்க முடியும், அவர்கள் அவ்வாறு அழைப்பதுமில்லை. இராப்போஜனம் என்று அழைப்பதை அவர்கள் விட்டுவிட்டு, “திருவிருந்து” என்று அழைக்கின்றனர், அர்த்தமற்ற காரியம். இரவு ஆகாரமாயிற்றே! 108 இப்பொழுது, வேதாகம காலங்களில் அது எப்பொழுதுமே ஒரு சர்ச்சையாக இருந்தது, அப்பொழுது அது ஒரு சர்ச்சையாகவே இருந்தது. ஜனங்கள் கர்த்தருடைய இராபோஜனத்தை தவறாகப் புரிந்துகொண்டனர். அவர்கள் கர்த்தருடைய பந்திக்கு வரும்போது, பவுல் அந்த கொரிந்தியர்களிடம் கூறினான், அவர்கள் குடித்து வெறித்தவர்களாய் மேஜையண்டைக்கு வந்து கொண்டிருந்தனர். பாருங்கள், அது அப்பொழுது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. எனவே அவன், “நீங்கள் சாப்பிட வேண்டுமானால், வீட்டிலேயே சாப்பிடுங்கள்” என்றான்.

56109 மற்றொரு காரியம், அது என்னவாக இருந்தது என்பது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. பாவிகள், பாவத்தில் வாழும் மனிதர், வந்து இராபோஜனத்தில் பங்குகொண்டனர். அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. மாற்றாந் தாயுடன் மோசமான வாழ்க்கை நடத்திய மனிதன் ஒருவனிடம், சபையானது அதைக்குறித்து அவனிடத்தில் உணர்த்தியிருந்த பின்பும், அவன் கர்த்தருடைய மேஜைக்கு வந்து இராப்போஜனம் எடுத்துக் கொண்டான். 110 அவர்களிடையே பிரிவினை உண்டாயிருந்தது. ஆனாலும் அவர்கள் அப்பொழுதும் இராபோஜனத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்தனர். பவுல், “நீங்கள் புறஜாதியாரான மற்றவரைப் போல் நடந்து கொள்கிறீர்கள் என்று நான் கேள்விப்படுகிறேன். உங்களுக்குள்ளே பிரிவினை காணப்படுகிறது. விசேஷமாக கேபாவின் வீட்டில் உள்ளது போல இருக்கிறது” என்று கூறினான். அவன் தொடர்ந்து, “நீங்கள் மற்ற புறஜாதியாரைப் போலவே நடக்கிறீர்கள்” என்றும் கூறினான். பாருங்கள், அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.

57111 இராபோஜனம் எப்பொழுதுமே தவறாக புரிந்துகொள்ளப்பட்டு வந்துள்ளது. இப்பொழுது நான் அதன் பேரில் மணிக்கணக்கில் பேசக் கூடும், ஆனால் நாம் இந்த இராபோஜனத்திற்கும் மற்றும் பாதம் கழுவுதலுக்கும் வரவேண்டியவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, அவர்கள் பாதங்களைக்-கழுவுதலை அறவே புறக்கணித்துவிட்டனர். ஆனால் ஒரு சில ஸ்தாபனங்கள் அதை கடைபிடிக்கின்றனர். ஏராளமான பெந்தேகோஸ்தேக் காரர்கள் அதைக் கடைப்பிடிக்காமல் முழுமையாக விட்டுவிட்டனர். புரிகிறதா? ஆனால் அது வேதாகமத்தில் எழுதப்பட்டவிதமாகவே இன்னமும் உள்ளதே. புரிகிறதா? 112 இப்பொழுது, ரோமன் கத்தோலிக்க சபை, இதை “இராபோஜனம்” என்று அழைக்கவில்லை. அவர்கள் அதை “பூசை, அது ஒரு பரிசுத்த நன்மை பூசை” என்றே அழைக்கின்றனர். அவர்கள் இராப்போஜனம் எடுப்பதில்லை, அவர்கள் ஒரு நன்மை பூசையில் பங்கெடுக்கிறார்கள். அது ஒரு பூசை, ஒரு பூசை என்பது உண்மையாகவே இராப்போஜனம் என்பதன் உண்மையான அர்த்தத்தை எடுத்துப் போட்டு விடுகிறது. ஒரு பூசை என்பது “நம்பிக்கை” என்பதையே பொருப்படுத்துகிறது. அவர்கள் ஒரு பூசையில் பங்கெடுக்கையில், (அதாவது இந்த பூசையில் இதை செய்வதில்) தேவன் அவர்களுக்கு அவர்களுடைய பாவங்களை மன்னிப்பார் என்று நம்புகிறார்கள், “இந்த அப்பத்தையும் திராட்சை ரசமான கிறிஸ்துவின் ரத்தத்தையும் உண்மையான கிறிஸ்துவின் சரீரமாக” குருவானவர் மாற்றுகிறார் என்றே அதில் பங்கு பெறுகிறார்கள், இவ்வாறு அதில் பங்கெடுப்பதன் மூலம் தேவன் அவர்களுடைய பாவங்களை எடுத்துப்போடுவார் என்று நம்புகிறார்கள். அது ஒரு பூசையாக உள்ளது.

58113 பிராட்டஸ்டெண்டுகள் அதை “இராப்போஜனம்” என்று அழைக்கிறார்கள். இராப்போஜனம் என்பதன் பொருள் “நன்றி தெரிவித்தல்” என்பதாகும். அந்த பிராட்டஸ்டென்ட்…கத்தோலிக்கர் ஒரு பூசையில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள், அதாவது தங்களுடைய பொல்லாத காரியத்தை அவர்களுக்கு தேவன் மன்னிக்கிறார் என்று அந்தப் பூசையில் நம்புகின்றனர். ஆனால் பிராட்டஸ்டென்டுகளோ தாங்கள் ஏற்கனவே தேவனோடு கொண்டுள்ள ஐக்கியத்திற்காக நன்றி தெரிவிக்கின்றனர்; அவர்கள் ஏற்கனவே அவரோடு ஐக்கியங்கொண்டுள்ளனர். கத்தோலிக்கர் அது செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக நம்புகின்றனர்; ஆனால் பிராட்டஸ்டெண்டுகளோ அது ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது என்று கூறுகிறனர். கத்தோலிக்கன் தன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளதா என்று சந்தேகித்துக் கொண்டிருக்கிறான்; பிராட்டெஸ்டெண்டுகளோ, அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலையாயிருக்கிறார்கள் என்று அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இராப் போஜனம் என்பது தேவனோடு ஐக்கியங்கொள்வதாயுள்ளது. நாம் உட்கொள்ளும் இப்பொருட்கள், நமது பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிப்பதற்காக அல்ல, ஆனால் நமது பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டுவிட்டது என்பதாய் உள்ளன . காரணம் அது…ஒன்று நம்பிக்கையாயுள்ளது; மற்றொன்றோ விசுவாசமாய் உள்ளது. ஒருவன் அது சரி என்று நம்பிக் கொண்டிருக்கிறான், மற்றொருவன் அது சரி என்று அறிந்திருக்கிறான். புரிகிறதா? மற்றொருவன், ஒருவன் நம்பிக் கொண்டிருக்கிறான், ஏனென்றால் அவன் எந்நிலையில் இருக்கிறான் என்பதை அறிந்திருக்கவில்லை; இன்னொருவன் அவன் சரியாயிருக்கிறான் என்பதை அறிந்திருக்கிறான், ஏனென்றால் தேவன் என்ன கூறினார் என்பதை அவன் அறிந்திருக்கிறான். அதுதான் அது. அதுதான் வித்தியாசமே. ஆகையால் நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும்போது, ஜாக்கிரதையாயிருங்கள்; நீங்கள் திட்டவட்டமாக அறிந்திருக்கும் பொழுது, அப்பொழுது தொடர்ந்து முன்னேறுங்கள். பாருங்கள், அப்பொழுது நீங்கள் தேவனுடைய ஐக்கியத்தில் இருக்கிறீர்கள். பிராட்டஸ்டெண்டோ, தான் மன்னிக்கப்பட்டிருப்பதாக அவன் கூறுகிறான், அவன் அதை அறிந்திருக்கிறான்; கத்தோலிக்கனோ, தான் மன்னிக்கப்படுவான் என்று நம்புகிற பூசையில் பங்கு பெறுகிறான். அது இந்தவிதமாக உள்ளது; ஒருவன் ஒவ்வொரு காரியமும் சரியாயிருக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிற ஒரு பிச்சைக்காரனாயிருக்கிறான். சரி, பாருங்கள்; மற்றொருவனோ ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதற்காக நன்றி கூறுகிற ஒரு பிச்சைக்காரனாயிருக்கிறான். அவர்கள் இருவரும் பிச்சைக்காரர்களாயிருக்கிறார்கள். ஆனால் ஒருவன் அது கிடைக்கும் என்று நம்பி பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறான்; மற்றொரு பிச்சைக்காரன் தனக்கு அது கிடைத்துவிட்டது என்று அறிந்து அவனுக்கு அதை தந்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறான். இப்பொழுது அது தான் வித்தியாசமாயுள்ளது. அதுவே இராப்போஜனமாயுள்ளது. ஆம், ஐயா. ஒருவன் மன்னிக்கப்படுகிறான் என்று நம்பிக்கொண்டிருக்கிறான்; மற்றொருவன் தான் ஏற்கனவே மன்னிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அறிந்து, அதற்காக நன்றி செலுத்துகிறான்.

59114 ஆகையால் இராபோஜனம் என்பது தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களுக்கே உரியதாகும். மறுபடியும் பிறத்தல் என்பது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று இப்பொழுது அர்த்தப்படுத்துகிறதில்லை. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது அநேகர் அதைப் போதிக்கிறார்கள். வயோதிக சகோதரன் ஆர்கன் பி ரைட் அந்த இரவு இங்கே பிரசங்க பீடத்திலிருந்து கூறியதுபோல, “அந்தவிதமாக இதை போதிக்கிற எந்த ஒரு நபரையும் நான் அறியேன்,” பாருங்கள். ஆனால் புதிய பிறப்பு என்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அல்ல. வேதவாக்கியம் அதை ஆதரிக்கிறதில்லை. பாருங்கள், அதைக் குறித்த என்னுடைய புரிந்துகொள்ளுதலை பொறுத்தவரையில் அவ்விதம் இல்லையென்றே நான் கருதுகிறேன். புரிகிறதா? நீங்கள் மீண்டும் பிறக்க வேண்டும் என்று நான் நினைப்பது…

60115 அந்தக் காரணத்தினால்தான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் என்னும் வார்த்தையை மாத்திரம் நான் ஞானஸ்நானத்தின்போது கூறுகின்றேனேயன்றி, மறு ஜென்மத்திற்காக நான் ஞானஸ்நானம் கொடுப்பதில்லை. இப்பொழுது, பெந்தேகோஸ்தேகள், ஐக்கிய பெந்தேகோஸ்தே சபை மறுஜென்மத்திற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறது. நான் அதை விசுவாசிக்கிறதில்லை. அவர்கள் வேண்டுமானால் அதை செய்யட்டும். ஆனால் பேதுரு முதலாவது, “மனந்திரும்புங்கள்” என்று கூறினதையே நான் விசுவாசிக்கிறேன். தண்ணீர் பாவங்களை மன்னிக்கிறதில்லை. கிறிஸ்துவின் சபை அதை அந்தவிதமாக பிரசங்கிக்கிறது. ஆனால் நான் அந்த மனந்திரும்புதலை, தேவனுக்கேற்ற துக்கத்தை விசுவாசிக்கிறேன்; மனந்திரும்புதல் என்பது “முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் செல்” என்றே பொருள்படுகிறது. நீ குறி தவறிவிட்டாய். எனவே “எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து மறுபடியும் செய்.” அதை முதலில் செய்! உங்களுடைய உட்புறத்தில் செய்யப்பட்டுள்ள ஏதோ ஒரு காரியத்தை, அதாவது நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக் கொண்டீர்கள் என்பதை வெளிப்படையாய் அறிவிப்பது மாத்திரமே உங்களுடைய தண்ணீர் ஞானஸ்நானமாகும்.

61116 எனக்குத் தெரிந்த மட்டில் இன்று இரவு இங்கு கூடியிருப்போர் நமது சபையோர் மாத்திரமே என்று நான் நினைக்கிறேன். யார் வருகிறார்கள் அல்லது யார் வருவதில்லை என்பதை அறிந்து கொள்ள நான் இங்கு போதிய சமயம் இருப்பதில்லை. அண்மையில் ஒரு வயோதிப நபருக்கு, இங்கே ஞானஸ்நான தொட்டியில் ஒரு மனிதனுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததற்காக நான் ஒரு சிறு விமர்சனத்தைப் பெற்றுக்கொண்டேன். நான் அவரிடம் சென்றிருந்தேன். அவர் ஒரு நற்குணம் படைத்த வயோதிக மனிதராயிருந்தார். அவருடைய குடும்பத்தினர் யாவரையும் கிறிஸ்துவினிடத்திற்கு வழிநடத்தும் சிலாக்கியத்தை நான் பெற்றிருந்தேன், அவர்கள் யாவரும் கிறிஸ்தவர்களாயிருந்தனர். இந்த வயோதிக மனிதன் ஒரு அருமையான வயோதிக மனிதனாய் இருந்தார். எனக்கு அவரைப் பிடித்திருந்தது. எனவே நான் அவரிடத்திற்குச் சென்றேன். அப்பொழுது நான் அவரிடம், “அப்பா, நீங்கள் ஏன் ஒரு கிறிஸ்தவராகக் கூடாது?” என்று கேட்டேன். அவர் என்னை நேசிக்கிறார். 117 அதற்கு அவரோ, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் போதிய அளவு நல்லவனானப் பிறகு, நான் ஒரு கிறிஸ்தவனாவேன்” என்று கூறினார். 118 அப்பொழுது நான், “அப்பா நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, எந்த ஸ்தலத்தில் நீங்கள் நல்லவராக முடியும் என்று எனக்குக் சொல்லுங்கள். நானும் கூட அங்கு செல்ல விரும்புகிறேன்” என்று கூறினேன். மேலும் நான், “கிறிஸ்து நல்ல மனிதனை இரட்சிக்க ஒருபோதும் வரவில்லை. அவர் மோசமான மனிதனை இரட்சிக்கவே வந்தார்” என்றும் கூறினேன். நீங்கள் நல்லவராக இருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கும்போது, அப்பொழுது அவர் உங்களை இரட்சிக்க வரவில்லை. அவர்கள் மோசமாக இருக்கிறார்கள் என்று அறிந்தவர்களையே அவர் இரட்சிக்க வந்தார். புரிகிறதா? பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து மரித்தார். புரிகிறதா? நான், “அப்பா, அங்கே ஞானஸ்நானத்திற்காக ஒரு வரிசையிருக்கிறது” என்று கூறினேன். அதற்கு அவர், “பாருங்கள், நான் புகைப் பிடிக்கிறேனே” என்றார். அப்பொழுது நான், “நான் அதைக் குறித்து பேசவும் கூடப் போவதில்லை” என்றேன். அதற்கு அவர், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் அவைகளை விட்டுவிட முயற்சித்துள்ளேன்” என்று கூறினார். அப்பொழுது நான், “சரி நாம் சிகரெட்டுகளைக் குறித்து பேசப்போவதில்லை” என்று கூறினேன். அவரோ, “பாருங்கள் என்னால் விட முடியும் போது…” என்றே கூறினார். 119 மேலும் நான், “அவைகளைக் குறித்து ஒன்றுமே பேச வேண்டாம், வேண்டாம், அது அப்படியே இருக்கட்டும். நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்று கூறினேன். அப்பொழுது அவர், “சரி, அது என்ன?” என்று கேட்டார். அதற்கு நான், “தேவன் ஒருவர் உண்டு என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். 120 அப்பொழுது அவரோ, “நிச்சயமாகவே, நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறினார். அவர் தொடர்ந்து, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீங்கள் எவ்வளவு உறுதியாக விசுவாசிக்கிறீர்களோ அவ்வளவு உறுதியாக நானும் விசுவாசிக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்று கூறினார். 121 அப்பொழுது நான், “அதே தேவன் தம்முடைய சாயலை விட்டுவிட்டு, மனிதனை இரட்சிப்பதற்கென மாம்சமாகி, இயேசு கிறிஸ்து என்னும் நபரில் நமக்கு மத்தியில் வாசம் செய்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம், நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறினார். மேலும் நான், “உம்மையும் என்னையும் போன்ற பாவிகளை இரட்சிக்க அவர் மரித்தார்தானே?” என்று கேட்டேன். பார்த்தீர்களா? அதற்கு அவர், “ஆம் நான் விசுவாசிக்கிறேன்” என்றார். 122 அப்பொழுது நான், “இப்பொழுது, அது இந்தவிதமாக உள்ளது. நாம் எல்லோரும் ஒரு பெரிய கட்டிடத்தில் இங்கே இருக்கிறோம். நாம் சிறைச்சாலையில் இருக்கிறோம். என்னால் இந்த மூலையில் நின்று கொண்டு, ‘ இது சிறைச்சாலையிலிருந்து வெளியேற எனக்கு உதவி செய்யும்’ என்று கூற முடியாது. நான் அந்த மூலையில் நின்று, ‘சிறைச்சாலையிலிருந்து வெளியேற இது எனக்கு உதவி செய்யும்’ என்று கூற முடியாது. நாம் எல்லோரும் ஒரே நிலையில் இருக்கிறோம். உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்களைப் பேசுகிறவனாய் இவ்வுலகத்தில் தோன்றுகிறான். அவன் தொடக்கத்திலிருந்தே ஒரு துரோகியாயிருக்கிறான்.”

62123 அன்றொரு நாள் யாரோ ஒருவர் கேட்டார், அவர், “சகோதரன் பிரான்ஹாமே,…இன்றுள்ள ஆதாம், ஏவாள் சந்ததியார் அவர்களைப் போலவே நிர்வாணமாக நடந்தால்… ஏதாவது வித்தியாசம் காணப்படுமா? இவர்களுடைய சரீரங்கள் அவர்களுடைய சரீரங்களைப் போலவே இருக்குமா?” என்று கேட்டார். 124 அதற்கு நான், “இல்லை ஐயா” என்று கூறினேன். அப்பொழுது சகோதரன் ஃபிரெட்டும், நானும் வேறு சிலரும் அணில் வேட்டையாடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது நான், “இல்லை, அவைகள் ஒரேவிதமாக இருக்காது” என்றேன். 125 அப்பொழுது அவர், “ஏவாள் தன் குமாரத்திகளை போன்று ஸ்திரீயாக இருக்கமாட்டாள் என்றும், ஆதாம் தன் குமாரரைப் போன்ற ஒரு மனிதனாக இருக்கமாட்டான் என்றும் கூறுகின்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு நான், “அநேகவிதங்களில் அவர்கள் ஒரே மாதிரியாகவே இருப்பார்கள். ஆனால் சரீர அமைப்பு எல்லாவற்றிலும் அப்படி இருக்க மாட்டார்கள்” என்றேன். அப்பொழுது அவர், “என்ன வித்தியாசமாயிருக்கும்?” என்று கேட்டார். 126 அதற்கு நான், “அவர்களுக்கு தொப்புள் இருக்காது. அவர்களோ சிருஷ்டிக்கப்பட்டனர். உண்மை. அவர்கள் எதனோடும் இணைக்கப்பட்டிருக்கவில்லை” என்று கூறினேன். 127 தொப்புளுடன் இவ்வுலகத்தில் பிறந்திருக்கின்ற ஒவ்வொன்றும் துவக்கத்திலிருந்தே அது ஒரு பாவக் கொடூரமுள்ளதாயுள்ளது என்பதையே காண்பிக்கிறது. அது உண்மை. மேலும் நான், “நிச்சயமாகவே, ஒரு வித்தியாசம் உண்டு. அவர்களுக்கு தொப்புள் இருந்திருக்கவில்லை. அவர்கள் இங்கு வருவதற்கு எந்த ஸ்தீரியுடனும் இணைக்கப்பட்டிருக்கவில்லை” என்றேன். பாருங்கள், தேவன் அவர்களை சிருஷ்டித்தார்.

63128 இப்பொழுது, நான், “நான் ஒரு காரியத்தை கூற விரும்புகிறேன். இந்த சிறை வீட்டிலுள்ள மனிதரில், யார் பரிசுத்தமானவர்? இனச்சேர்க்கையில்லாமல் பிறந்த ஒருவர் யார்? அவர் யாராயிருந்தாலும் பரவாயில்லை. மற்றவர்க்கு உதவி செய்யக் கூடிய ஒருவர் யார்? நாம் எல்லோருமே இந்த ஒரே சிறைச்சாலையில் இருக்கிறோம். ஆனால் தேவன்தாமே அவருடைய சிருஷ்டிகளில் ஒருவராகத் தம்மை ஆக்கிக்கொண்டு, இனச்சேர்க்கைக்கப்பாற்பட்டவராய் வந்து, தமக்கென பரிசுத்த இரத்தத்தை அவர் சிருஷ்டித்துக்கொண்டு, அந்த இரத்தத்தின் மூலம் அவர் நம்மை மீட்டுக்கொண்டார்” என்று கூறினேன். மேலும் நான், “அப்பா நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் அதை விசுவாசிக்கிறேன்” என்றார். 129 நான் தொடர்ந்து, “கிறிஸ்து உம்மைப் போன்ற மோசமான மனிதனுக்காகவே மரித்தார். இப்பொழுது செய்ய வேண்டிய ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. உங்களால் வேறொன்றையும் செய்ய முடியாது. அவர் அதை உமக்கு அளிக்கிறார். நீங்கள் அதை எந்த தகுதியினாலும் பெற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள ஒன்றுமே செய்ய முடியாது. அவர் அதை உங்களுக்கு அளிக்கிறார். நரகத்திலிருந்து உங்களைக் காத்துக்கொள்ள, உங்களுக்காக அவர் செய்ததை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டேன். 130 அப்போது அவர், “நான் அதை செய்வேன்” என்றார். மேலும் அவர், “ஆனால் புகைப்பிடிப்பதை மாத்திரம் என்னால் விட்டுவிட முடிந்தால் நலமாயிருக்கும்” என்று கூறினார். 131 அதற்கு நான், “சிகரெட்டுகள் அவைகளாகவே போய்விடும். நீர் வெறுமனே…நான் உம்மிடத்தில் அதைக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. நான் பிரமாணத்தை கடைபிடிக்கும் ஒருவன் அல்ல. நான் கிருபையில் விசுவாசங்கொண்டிருக்கிறேன். ‘பிதாவானவர் எனக்கு கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்’” என்று கூறினேன். மேலும் நான், “நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு அதை விசுவாசிப்பீர்களேயானால் நலமாயிருக்குமே!” என்று கூறினேன். அதற்கு அவர், “என் முழு இதயத்தோடு நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறினார். 132 “அப்படியானால் அதைக் குறித்து நீங்கள் அபாத்திரராயிருக்கிறீர்கள் என்று அந்த அடிப்படையின் பேரில் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவர் ஒருவரே பாத்திரராயிருக்கிறார். உங்களை நோக்கிப் பார்க்காதீர்கள்; அவரை நோக்கிப் பாருங்கள், நீங்களாகவே எதையும் செய்துகொள்ள முடியாது. உங்களுக்காக ஏதோ ஒரு காரியத்தை செய்த ஒருவரை நோக்கிப் பாருங்கள். அவரைக் குறித்து என்ன?” “ஓ,” அவரோ, “அவர் பாத்திரராயிருக்கிறார்” என்று கூறினார். அப்பொழுது நான், “அதுதான் இது, அப்படியானால் அவர் உங்களுக்கு என்னத் தருகிறாரோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினேன். அதற்கு அவர், “நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார். 133 நான் அவருக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். அவர் இங்கிருந்து வெளியே போய் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார்.

64134 ஒரு சில வாரங்களுக்கு முன்பு நான் அவருடைய வீட்டில் இருந்தேன். ஓரிரவு நான் ஒரு தரிசனம் கண்டேன். அது ஒரு பச்சை மரம் வெட்டப்பட்டு, தலைகீழாக திருப்பப்பட்டிருந்தது. அந்த மரத்தின் மீது இருந்த பலகைகளில் ஆணியடிக்கப்பட்டிருந்தது. கடைசி பலகைக்கு முன்பிருந்த பலகை குறிப்பிடத்தக்கதாயிருந்தது. அந்தப் பலகைக்கு கீழே, சரியாக கீழ் நோக்கியவாறு, அதன் கீழே மரம் இவ்விதம் இரண்டாகப் பிளந்திருந்தது. அப்போது ஒரு சத்தம், “அது நீயாக இருக்க வேண்டும்,” அல்லது “அது நீயாகத்தான் இருந்திருப்பாய்” என்று கூறினது. காக்ஸ் தகப்பனார் கீழே விழுந்து, அவருடைய முதுகு இங்கே நொருங்கியிருந்தது. அடுத்த நாள் காலை அவர் படுக்கையிலிருந்தபோது, அவர்கள் அவருக்கு சிகரெட்டுகளைக் கொண்டு வந்தனர், ஆனால் அந்த வாஞ்சை அவரை விட்டுப் போய்விட்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்பே! அதன்பின்னர் அவர் ஒரு சிகரெட்டைக் கூட புகைக்கவே யில்லை. அவருக்கு ஒன்று கூட இல்லை எதுவுமே தேவைப்படவில்லை. புரிகிறதா? சற்று முன்னர் நான் அவரைக் கண்டேன். ஒரு சில வாரத்திற்கு முன்பு சிகரெட்டுகளைப் புகைத்ததினால் அவருடைய கரங்கள் முழுவதும் பழுப்பு நிறமாயிருந்தன. இப்பொழுது அவரை சுற்றிலும் ஒரே ஒரு சிகரெட் இருப்பதைக் கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முதல் காரியங்களை முதலாவது செய்யுங்களேன்! நல்லவராயிருக்க முயற்சி செய்யாதீர்கள்; நீங்கள் துவக்கத்திலேயே மோசமானவராக இருக்கிறீர்கள், எனவே உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. பிரிவினையின் கோடு ஒன்று உள்ளது. மானிட வர்க்கம் அனைத்தும் அந்தப் பக்கத்தில்தான் உள்ளது.

65135 இப்பொழுது, என்னுடைய தகப்பனாருக்கும், தயாருக்குமிடையே ஏற்பட்ட பரிசுத்த விவாகத்தின் மூலம் நான் இவ்வுலகில் பிறந்தேன். அவளுடைய கர்ப்பத்தில் ஒரு முட்டை இருந்தது. என் தகப்பனாரின் சுரப்பிகளில் ஒரு இரத்த அணு இருந்தது. என்னுடைய ஜீவன் அந்த இரத்த அணுவில் அமைந்திருந்தது, (என் தாயாருடைய முட்டையிலிருந்தல்ல), என் தகப்பனாரின் இரத்த அணுவிலிருந்து தோன்றியது. அந்த இரத்த அணு அந்த முட்டையைச் சந்திக்க குறித்த இடத்திற்குச் சென்றபோது, அது சந்தித்தபோது, எனக்கு ஒரு சரீரத்தை அளிக்க வேண்டுமென்று இயற்கைக்கு தேவனால் கட்டளையிடப்பட்டிருந்தது. அப்பொழுது நான் மானிட வர்க்கத்திற்குள்ளாகப் பிறந்தேன். மானிட வர்க்கங்களைப்போல நான் ஒரு அறிவாற்றலுள்ள நபராகும் படியான தருணம் அளிக்கப்பட்டிருந்தது. அதனால் என்னால் மோட்டார் வாகனத்தை ஓட்ட முடியும் அல்லது மானிட வர்க்கங்கள் செய்கின்றது போன்று நடக்க, பேச, மோட்டார் வாகனத்தை ஓட்ட, அது போன்ற காரியங்களை என்னாலும் செய்ய முடியும். நான் மனித குடும்பத்திற்குள் பிறந்த காரணத்தால் அது எனக்குக் கொடுக்கப்பட்டது, ஒரு மனிதனுக்குள் இருக்கும் அறிவாற்றலின் சக்தி எனக்கும் அளிக்கப்பட்டது.

66136 இப்பொழுது, நான் தேவனுடைய குடும்பத்திற்குள் பிறந்தபோது, நான் இரத்தத்தின் மூலம் வந்தேன், இரத்தமே எனக்கு ஜீவனை அளித்தது. அதன் பின்னர் நான் கிறிஸ்துவுக்குள் பிழைத்த பிறகு, ஒரு தேவகுமாரனாயிருக்கும்படிக்கு அவர் பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினால் என்னை அபிஷேகத்தார். இப்பொழுது, மானிடரைப் போல என்னால் நடக்க முடியும், பேச முடியும், என்னால் மோட்டார் வாகனத்தை ஓட்ட முடியும். இப்பொழுது நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போது, பிசாசுகளைத் துரத்தும்படியான, அந்நிய பாஷைகளைப் பேசும் படியாக, சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படியான, வியாதியஸ்தரை சுகமாக்கும்படியான வல்லமையைப் பெற்றுக்கொள்கிறேன். நான் அபிஷேகிக்கப்பட்டேனே! பிறக்கவில்லை; ஆனால் அபிஷேகிக்கப்பட்டேனே! அவர்கள் மேலறையில் கூடியிருந்து, யாவரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டபோது, ஊழியத்திற்கான வல்லமை வந்தது.

67137 ஆமென். நீங்கள் நித்திய ஜீவனுக்கென்று விசுவாசித்து, உங்களுடைய விசுவாசத்தினால் நீங்கள் மீண்டும் பிறந்திருக்கிறீர்கள். இயேசு பரிசுத்த யோவான் 5:24-ல், “என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு” என்று கூறினார். பரிசுத்த ஆவியல்ல. நித்தியஜீவன் உண்டு. அவன் தேவனுடைய குடும்பத்திற்குள் பிறந்திருக்கிறான். அதன்பின்னர் பரிசுத்த ஆவிக்குள்ளாக அபிஷேகிக்கப்பட்டு, விசுவாசத்தின் அறிவாற்றலின் வல்லமையைக் கொண்டு, சுவிசேஷத்தை விசுவாசிக்கவும், அதை கிரியைக்குட்படுத்தவும், அதை சரிவர செயல்படுத்தவும் முடிகிறது. ஆமென். அப்பொழுதுது அவன் ஒரு தேவகுமாரனைப்போல செயல்படுகிறான். அப்பொழுது அவனால் பிசாசுகளைத் துரத்த முடிகிறது. இயேசு, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன!” என்று கூறினார். புரிகிறதா? “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது.” பாருங்கள், இந்தக் காரியங்களை செய்வதற்கு அவன் பரிசுத்த ஆவியினாலே வல்லமையைப் பெற்றுக்கொள்கிறான்.

68138 இப்பொழுது, அவர் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது, அவர், “நான் போகிறது உங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும். நான் போகாதிருந்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வரார்” என்று கூறினார். பார்த்தீர்களா? அதன்பின்னர் அவர் வருகிறபோது, அவர் உலகத்தின் பாவத்தைக் குறித்து கண்டித்துணர்த்தி, நீதியைக் குறித்து உபதேசித்து, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு காண்பிப்பார் (அது தரிசனங்கள்). “நான் உங்களுக்கு போதித்திருக்கிறவைகளிலிருந்து அவர் எடுத்து, அவைகள உங்களுக்கு வெளிப்படுத்துவார்.” அவர் கூறப்போகும் வார்த்தைகளை…பரிசுத்த ஆவியின் அபிஷேகமில்லாமல் அந்த வார்த்தையை எந்த ஒரு மனிதனும் புரிந்துகொள்ள முடியாது. ஒரு மனிதன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்டதாக அவன் கூறி, அதேசமயத்தில் தேவனுடைய வார்த்தை சரியல்ல என்று அவன் விவாதித்தால் எங்கோ தவறு உள்ளது.

69139 பவுல் புதிய ஏற்பாட்டின் குற்றம் கண்டுபிடிப்போனாயிருந்தான். அப்பொழுது புதிய ஏற்பாடு எழுதப்படவில்லை. பவுல் சவுலாயிருந்தபோது, கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறை கூறும் ஒருவனாயிருந்தான். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டபோது, அவன் ஆசியாவிற்கு சென்று மூன்று ஆண்டுகளாக வேதவாக்கியங்களை ஆராய்ந்து படித்தான், ஏனென்றால் அவன் ஒரு மகத்தான ஆசிரியரான கமாலியேலின் கீழ் போதிக்கப்பட்டிருந்தான். அதன்பின்னர் அவன் திரும்பி வந்தபோது, பதினான்கு ஆண்டுகள் கழித்து, அவன் எருசலேமிலே பேதுருவை சந்திக்கச் சென்றான். அவன் வார்த்தைக்கு வார்த்தை அதே சுவிசேஷம் அவர்களிடத்தில் இருப்பதைக் கண்டான். பெந்தேகோஸ்தே நாளன்று அவர்கள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பேதுரு பிரசங்கித்திருந்த அதே தேவன், அதே பரிசுத்த ஆவியினால் அதைப் பவுலுக்கு வெளிப்படுத்தினபடியால், யோவானால் ஒருமுறை ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தவர்களை, அதற்குப் பிறகு அப்போஸ்தலர் 19—ம் அதிகாரத்தில் பவுல் அவர்களிடம், “நீங்கள் மீண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும்” என்று கூறினான். புரிகிறதா?

70140 பாருங்கள், பரிசுத்தாவியானவர் வேதவாக்கியங்களோடு சரியாக நேராக தரித்திருக்கிறார். அதிலுள்ள அதனுடைய விசுவாசமே ஒவ்வொரு இரகசியத்தையும் திறக்கிறது. ஆமென். வேதம் முதலாம் யோவான் 5:7-ல், “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர்; பிதா, வார்த்தை (கிறிஸ்துவாயிருந்தது), பரிசுத்த ஆவி என்பவர்களே. இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளது. “பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே. இம்மூன்றும் ஒன்றல்ல, ஆனால் ஒருமைப்பட்டிருக்கிறது.” இப்பொழுது, உங்களுக்கு குமாரனில்லாமல், பிதா இருக்க முடியாது. அவ்வாறே பரிசுத்த ஆவியில்லாமல், உங்களுக்கு குமாரன் இருக்க முடியாது; அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் பரிசுத்தமாக்கப்படாமல் நீதிமான்களாக்கப்பட முடியும். நீங்கள் பரிசுத்த ஆவியின்றி பரிசுத்தமாக்கப்பட முடியும். பரிசுத்தமாகுதல் இரத்தத்தினால் உண்டாகிறது. இரத்தத்தின் மூலமாகவே ஜீவன் வருகிறது. புரிகிறதா? பரிசுத்த ஆவி தேவனுடைய வல்லமையாய், பாருங்கள், சபைக்குக் கொடுக்கப்பட்ட வல்லமையாயிருக்கிறது.

71141 “நீங்கள்” (என்ன?) “பெலனடைவீர்கள்,” அப்போஸ்தலர் 1:8, “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போதே. நீங்கள் பெலனடைவீர்களே!” (“நீங்கள் மறுபடியும் பிறப்பீர்கள்” என்றல்ல.) “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைவீர்கள். அப்பொழுது நீங்கள் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்.” புரிகிறதா? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டப் பிறகே, நீங்கள் பெலனடைகிறீர்கள். ஆனால் முதலாவது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும், பாருங்கள், அதுவே கிரியை செய்து, வெளிப்படுத்தும்படியான தேவனுடைய வல்லமையையாயிருக்கிறது. நீங்கள்—நீங்கள்…நீங்கள் ஒரு மனிதனாயிருந்தபோது, பேச, நடக்க, ஒரு மனிதன் செய்கிற காரியங்களை செய்யக் கற்றுக் கொண்டீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுகிறபோது, நீங்கள் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் நடந்து கொள்ளும்படியான வல்லமை கொடுக்கப்படுகிறது. ஜனங்கள் செயல்படுவதைக் குறித்தும், அவர்கள் இன்றைக்கு செய்கிறவிதமாகவே செய்கிறதைக் குறித்தும் வியப்பொன்றுமில்லையே, ஏனென்றால் அவர்கள் ஒருபோதும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கவில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தால், அவர்கள் வித்தியாசமாக செயல்படுவார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாக உரிமை கோருகிறார்கள், ஆனால் இயேசு, “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று கூறினார். எனவே உங்களால் எப்படி அதைச் செய்ய முடியும்? நீங்கள் பாருங்கள், அவை யாவும் குழப்பமடைந்துள்ளன. புரிகிறதா? ஆனால் உண்மைகளுக்குத் திரும்பி வாருங்கள்!

72142 இப்பொழுது நீங்கள் உத்தமமாய் நடந்து ஒரு கிறிஸ்தவராயிருப்பதாக உங்களை உரிமை கோரினால், கர்த்தருடைய பந்திக்கு வர இன்றிரவு நாங்கள் உங்களை அழைக்கிறோம். இன்றைக்கு தேசம் முழுவதும் இராப்போஜன ஆராதனை நடத்தப்பட்டு வருகிறதில் சந்தேகமேயில்லை, அதை சிலர் ஒருவிதமாகவும், வேறு சிலர் மற்றொருவிதமாகவும் ஆசிரிக்கின்றனர். ஆனால் அதை செய்வதற்கான சிறந்த வழி வேதவாக்கியங்களை பின்பற்றி, அவர்கள் அதை வேதாகமத்தில் செய்தவிதமாகவே செய்ய வேண்டும் என்றே நான் கருதுகிறேன். அதுவே போதுமானதாயிருக்கும் என்று நான் நினைக்கிறேன். 143 சகோதரன் நெவில், நீங்கள் உங்களுடைய வேதாகமத்தை வைத்திருக்கிறீர்களா? சகோதரன் நெவில் இப்பொழுது வேதவாக்கியங்களை வாசிப்பார். [சகோதரனே நெவில், “கொரிந்தியர் முதலாம் நிருபத்தில் உள்ள 11-ம் அதிகாரத்தில், 23-ம் வசனத்திலிருந்து துவங்கி” என்று கூறி, பின்வரும் வேத வாக்கியங்களை வாசிக்கிறார்—ஆசி.] [ நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன். என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ] [ ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ] [ போஐனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ] [ ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். ] [ இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். ] [ எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். ] [ என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஐனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஐனபானம்பண்ணுகிறான். ] [ இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள். அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். ] [ நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். ] [ நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். ] [சகோதரன் நெவில், “அவருடைய வார்த்தையின் வாசிப்பை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக” என்று கூறுகிறார்.]

73144 இது எப்பொழுதுமே அப்பேர்ப்பட்ட ஒரு பரிசுத்த காரியமாய், அப்பேர்ப்பட்ட ஒரு புனிதமான காரியமாய் இருந்து வருகிறது. நாம் இப்பொழுது நம்முடைய தலைகளை மௌன ஜெபத்திற்காக வணங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். நான் உங்களுக்காக ஜெபிப்பேன். நம்முடைய கர்த்தரின் மரணத்தின் நினைவுகூருதலில் பங்கெடுக்கும் இந்த மகத்தான இராபோஜன ஆராதனையில் அபாத்திரமான சிருஷ்டிகளாகிய நம்மிடத்தில் தேவன் இரக்கமாயி ருக்கும்படி நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்வோமாக. 145 [சகோதரன் பிரான்ஹாம் மௌன ஜெபத்திற்காக அமைதியாக இருக்கிறார். ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] எங்கள் பிதாவே, இந்தப் பாவ அறிக்கையின் ஜெபத்தை நாங்கள் எங்கள் பலியுடன் உம்முடைய பொன்னான பலிபீடத்தின் மேல் கர்த்தராகிய இயேசுவே, உம்மண்டை ஏறெடுக்கிறோம். நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

74146 இப்பொழுது மூப்பர்கள் தங்களுடைய இடத்தில் நிற்பார்கள் என்று நான் நினைக்கிறேன், அவர்கள்…சபையில், ஜனங்கள் வரிசை வரிசையாக வரும்போது, மூப்பர்கள் அவர்களுக்காக இராபோஜனத்தை கொண்டு வருவார்கள். எப்பொழுதுமே அந்தப் பாடலைக் குறித்து நினைப்பதுண்டு: அருமையான மரிக்கும் ஆட்டுக்குட்டியே, உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தம் ஒருபோதும் அதனுடைய வல்லமையை இழந்து போகாது, கிரயத்துக் கொள்ளப்பட்டு தேவனுடைய சபை இரட்சிக்கப்பட்டு, இனி ஒருபோதும் பாவம் செய்யாது. நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 147 கிருபையுள்ள பரிசுத்த பிதாவே, யகோவாவே, மகத்தான சர்வ வல்லவரே, நாங்கள் காத்திருக்கையில், உம்முடைய ஆசீர்வாதங்களை உம்முடைய ஜனங்கள் மேல் அனுப்பும். எங்களுடைய பாவங்களை மன்னியும். இப்பொழுது நாங்கள் இந்த இராபோஜனத்தை உம்மிடத்தில் சமர்ப்பிக்கின்றோம். இந்த திராட்சை பழங்கள் வளர்ந்து, ஊழியக்காரின் கரங்களால் இவைகள் ஒன்றுசேர்த்து பிழியப்பட்டு திராட்சரசமாக்கப்பட்டுள்ளது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே, இந்த திராட்சரசம் உண்டாக்கப்பட்டது, நாங்கள் இதை இப்பொழுது உம்மிடத்திற்கு கொண்டு வருகிறோம். பிதாவே, அந்த நோக்கத்திற்காகவே இந்த திராட்சரசத்தை பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று நான் உம்மிடத்தில் ஜெபிக்கிறேன். எங்களுடைய ஒவ்வொரு பாவத்தையும் மன்னியும். இந்த திராட்சை ரசத்தை தங்களுடைய சரீரத்திற்காக ஏற்றுக்கொள்கிற ஒவ்வொரு நபரும் ஆரோக்கியத்தையும், பெலனையும் இரட்சிப்பையும் உம்மிடத்திலிருந்து பெற்றுக்கொள்வார்களாக. கர்த்தாவே, இதை அருளும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

75148 அவர் அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி அதைப்பிட்டு, “நீங்கள் வாங்கிப் புசியுங்கள். இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்” என்று வேதம் கூறியுள்ளது. புளிப்பில்லாமல் செய்யப்பட்டிருக்கிற இந்த கோஷர் அப்பத்தை, இந்தப் பிட்கப்பட்ட சிறு அப்பத் துண்டுகளை நாம் உட்கொள்கிறோம். இது கிறிஸ்தவர்களால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. இது—இது கிறிஸ்துவின் சரீரத்திற்கு அடையாளமாகவே உண்டாக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் சீஷர்களுடைய நாளில் அல்லது சபையின் நாளில், கிறிஸ்துவினுடைய கடைசி இராப்போஜனத்தில், கடைசி இராப்போஜனத்தில் இவைகள் ஆயத்தமாகப்பட்டு ஆசரிக்கப்பட்டன என்று நாம் அறிந்துகொள்கிறோம். அன்று முதல் வேதாகமத்தின் காலம் முழுவதிலும் சீஷர்களால் இவைகள் ஜனங்களுக்கு வழங்கப்பட்டுவந்தது. இன்றைக்கு நம்முடைய நவீன- நாளின் சீஷர்கள், இங்குள்ள நம்முடைய சபையின் சகோதரர்கள், இந்த காரணத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஊழியக்காரர்கள், ஜனங்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் இந்த பிட்க்கப்பட்ட அப்பத் துண்டுகளையும், திராட்சை ரசத்தையும் எடுத்து ஜனங்களுக்குக் கொடுப்பார்கள்.

76149 இப்பொழுது நீங்கள் இந்த அப்பத்தை பெற்றுக்கொள்ளும்போது, அது ஆட்டுக்குட்டியானவருக்கு அடையாளமாயிருக்கிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள். அனேக ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேல் ஜனங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆட்டுக்குட்டி, நெருப்பினால் பொறிக்கப்பட்டு கசப்பான கீரையுடன் புசிக்கப்பட்டது, அப்பொழுது ஜனங்களுக்கோ பெலன் உண்டாயிருந்தது; அவர்கள் தங்களுடைய வாக்குதத்தம்பண்ணப்பட்ட தேசத்தை அடையும்வரை, அவர்களுடைய பிரயாணம் முழுவதிலும், அவர்களுடைய பாதரட்சைகள் ஒரு போதும் தேய்ந்து போகவில்லை, அவர்களுடைய ஆடைகள் ஒருபோதும் கிழிந்து போகவுமில்லை. அவர் நமக்களித்துள்ள வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தை நாம் சென்றடையும் வரை ஆரோக்கியமாயும், மகிழ்ச்சியாயும், அவரை சேவிக்க தேவன் நம்மை காத்துக்கொள்வாராக. நாம் ஜெபம் செய்வோமாக.

77150 கிருபையுள்ள பரலோகப் பிதாவே, நான் இன்றிரவு பரிசுத்தமாக்கப்பட்ட, அந்த பரிசுத்தமான எங்களுடைய கர்த்தரின் சரீரத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். அவருக்குள் தேவத்துவத்தின் பரிபூரணம் வாசமாயிருந்தது. அந்த சரீரம் மடியப்பட்டு—நொறுக்கப்பட்டு, இரத்தம் பீறிட்டு வெளியே வர, அவர் முதுகில் பெற்ற சவுக்கடியின் விளைவால் அவர் முதுகிலும் விலாவெலும்புகளும் ரத்தம் தோய்ந்து காணப்படுவதை நான் நினைக்கும்போது, இந்த சுருங்கின பிசைந்து அடித்து உருவாக்கப்பட்ட அப்பம் அதற்கு அடையாளமாயுள்ளதை நான் நினைக்கும்போது, எங்கள் இதயங்களில் அது புதுப்பித்தலை உண்டாக்குகிறது. கர்த்தாவே, நாங்கள் எங்களுடைய இருதயங்களை இன்றிரவு உம்முடைய பீடத்தின் மேல் வைக்கிறோம். ஓ தேவனே, எங்களை மன்னியும். இந்தப் பிட்கப்பட்ட அப்பம் இவர்களின் வாய்களுக்குள்ளாகச் செல்லும்போது, உம்முடைய ஊழியக்காரர்கள், அது உம்முடைய விலையேறப் பெற்ற சரீரம் அடிக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டதென்றும், அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்று அவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாக. கர்த்தாவே, இதை அருளும். இந்தக் கோஷர் அப்பத்தை அதனுடைய நோக்கத்திற்காக பரிசுத்தப்படுத்தும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். அப்படியே ஒரு நிமிடம் பொறுங்கள். 151 இது ஒரு சிலருக்கு மாத்திரமுள்ள இராபோஜனம் அல்ல. எங்களோடு இந்த ஐக்கியத்தில் பங்குபெறும்படியாக, ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும் கர்த்தருடைய பந்திக்கு வரவேற்கப்படுகிறீர்கள் …?… 