திரும்ப வேண்டிய பாதை

62-1123

நஙகள உடகரலம. ஒர தரககதரசனம உரககபபடகறத. ஒலநடவல கலயடம ஆச. ஆவயனடய கரயயன எளமயயம, அதக கவனதத, அத வசவசதத, அதக கததககளளததகக பதமன தழமயளள ஜனஙகளயம கணபதறக அறபதமயளளத. நம கததரகக வணடம எனகற தவனடய ஆலசனககக எபபட நம நனற சலலப பகறம. அவர நம மததயல ஒர கரயயச சயவர, நம அவரகக நனற சலததவம.

திரும்ப வேண்டிய பாதை

62-1123ஷ்ரெவ் போர்ட் லூசியானா1441962-11-23

திரும்ப வேண்டிய பாதை

62-1123ஷ்ரெவ் போர்ட் லூசியானா1441962-11-23

1நீங்கள் உட்காரலாம். [ஒரு தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகிறது. ஒலிநாடாவில் காலியிடம் ஆசி.) ஆவியினுடைய கிரியையின் எளிமையையும், அதைக் கவனித்து, அதை விசுவாசித்து, அதைக் காத்துக்கொள்ளத்தக்க போதுமான தாழ்மையுள்ள ஜனங்களையும் காண்பதற்கு அற்புதமாயுள்ளது. நாம் காத்திருக்க வேண்டும் என்கிற தேவனுடைய ஆலோசனைக்காக எப்படி நாம் நன்றி சொல்லப் போகிறோம். அவர் நம் மத்தியில் ஒரு கிரியையைச் செய்வார், நாம் அவருக்கு நன்றி செலுத்துவோம்.

2இப்பொழுது, கடந்த இரவு நான் அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். சில நிமிடங்களுக்கு முன்புதான், நான் உள்ளே பிரவேசித்தேன், இதுபோன்று நிற்க வைத்ததற்காக வருந்துகிறேன், எனவே இன்றிரவு என்னால் கூடுமானவரை துரிதப்படுத்த முயற்சிக்கிறேன், மற்றும் நாளைக் காலையில், வாஷிங்டன்-யூரியில் (Washington-Youree) வியாபார புருஷர்களின் காலை ஆகாரக் கூடுகைக்கான போதுமான இடத்தைப் பெறுவதற்குத் தேவையான டிக்கெட்டுகளை இன்றிரவே வாங்கிக்கொள்ளும்படி, டிக்கெட்டுகளை வைத்திருக்கும் ஒரு சகோதரனால் சொல்லப்பட்டது. காலை வேளைக்குண்டான அறைகள் போதுமான அளவிற்கு விற்கப்பட்டதை அவர்கள் காணும்போதுதான், அதற்கேற்ற அளவில் காரியங்களைத் தயார் நிலையில் வைக்க முடியும். எனவே, டிக்கெட்டுகளைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி அவர் கூறினார். இன்றிரவு அவர்கள் அங்கே அந்த அறைக்கு முன்பு இருப்பார்கள் என நினைக்கிறேன்.

3மேலும், நாளை இரவு கர்த்தருக்குச் சித்தமானால், எனக்குத் தெரியவில்லை, இருப்பினும் கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு ஒரு விசேஷித்த பொருளின் பேரில், கிறிஸ்துவுக்குள் நாம் சகலத்தையும் உடையவர்களாய் இருக்கிறோம் என்ற பொருளின் பேரில் பேச எண்ணங்கொள்கிறேன். இப்பொழுது, அது நமக்கு சற்று பரிச்சயமான பாடமாக இருக்கிறது, இருப்பினும் இன்றையதினம், அதைக் குறித்ததான காரியம் என்னிடம் வந்தது, எனவே, கர்த்தருக்குச் சித்தமானால் நாளை இரவு அதன் பேரில் பேச எத்தனிக்கிறேன்.

4அதன் பிறகு ஞாயிறு காலையும், பிறகு ஞாயிறு இரவும் நமக்கு இருக்கிறது என நினைக்கிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், இறங்கு வரிசையில் எண்ணுதல் என்ற பொருளின் பேரில் பிரசங்கிக்க விரும்புகிறேன். சபையானது அசைந்து செல்வதற்கு ஆயத்தமாகுங்கள். பாருங்கள்? இறங்கு வரிசையில் எண்ணுதல். பாருங்கள்? இறங்கு வரிசையில் எண்ணுதல் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். மேலும், நாம் சரியாக இப்பொழுது இறங்கு வரிசையில் எண்ணக்கூடிய நேரத்தில் இருக்கிறோம் என்பதை வேதவாக்கியங்களைக் கொண்டு நிரூபிக்க முடியும் என நம்புகிறேன். எனவே, இப்பொழுது எங்களுக்காக ஜெபியுங்கள். உங்களுக்கு ஞாயிறு காலை ஆராதனைக்குச் செல்ல சபை இல்லாதிருக்கும் பட்சத்தில், நீங்கள் இங்கே இருப்பதைக் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைவோம், ஞாயிறு இரவும் கூட. உங்களுக்கு ஒரு சொந்த சபை இருக்கும் பட்சத்தில், நீங்கள் அதிலே பங்கு பெற வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம், அதுவே கடமையின் முதல் பணியாகும். அவ்வாறு இல்லாதிருக்கும் பட்சத்தில், நீங்கள் இங்கே இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

5மேலும், இன்றிரவு, நாம் கூடுமானவரை சீக்கிரமாக முடிக்கக் கூடுமானால், ஒரு ஒரு சிறிய ஜெப வரிசையைப் பெறப்போகிறோம் என புரிந்து கொண்டேன். பில்லி சிலர் ஜெப அட்டைகளைக் கொடுப்பதாகக் கூறினான், அது மிகவும் சரியானது என நினைக்கிறேன், ஆம், நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்படி ஒரு ஜெப வரிசையைப் பெறப்போகிறோம்.

6மேலும், சில நேரங்களில்... யாரோ ஒருவர்... பெரும்பாலான நேரங்களில் அநேகர் இவ்விதம் சொல்வதுண்டு: "நீங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், இந்த மற்றொன்றை நீங்கள் நிச்சயம் செய்யக் கூடாது.

7சில நாட்களுக்கு முன்பு, யாரோ ஒருவர் என்னை அழைத்து, "எதற்காக நீங்கள் எப்பொழுதும் பெண்களைக் கடிந்து கொள்கிறீர்கள்?" என்று கேட்டார். நல்லது, நான் அவர்களைக் கடிந்து கொள்வதில்லை. மேலும் அவர், "நல்லது, ஏன் நீங்கள் அந்த ஸ்திரீகளை அப்படியே விட்டுவிடக் கூடாது? அனைத்து மனிதர்களையும், அவர்களது ஸ்தாபனங்களைப் பற்றியும் மற்றும் இன்ன பிற காரியங்களையும் கூட..." என்றார். அவர் மிகவும் ஒரு முக்கியமான சகோதரன். அதற்கு நான், "அவர்கள் அவ்விதம் செய்வது வேதப்பூர்வமானது என்று நீர் விசுவாசிக்கிறதில்லை, நீர் விசுவாசிக்கின்றீரா?" என்று கேட்டேன். அவர், "இல்லை" என்றார். ஆனால் அவர், "கர்த்தர் உம்மை வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்படி அழைக்கவில்லையா?" என்றார். நான், "அழைத்தார்" என்றேன். அதற்கு அவர், "நல்லது, நீர் ஏன் அதனோடு மாத்திரம் தரித்திருக்கக் கூடாது?" என்று கேட்டார். நான், "அவ்விதம் தான் செய்கிறேன்" என்றேன். அதற்கு அவர், "அவர் உம்மை வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதற்கு அழைத்திருப்பாரென்றால், அவ்விதம் இருக்கட்டும். அந்த மற்றொன்றைக் குறித்து பிரசங்கிமார்கள் பார்த்துக் கொள்ளட்டும்" என்றார். அதற்கு நான், "ஆனால், அவர்கள் அவ்விதம் செய்வதில்லையே" என்றேன். [சபையார் சிரிக்கின்றனர் -மொழிபெயர்ப்பாளர்]. அவர், "ஏன்..." என்றார். நான், "நான் -- நான் அதைச் செய்ய வேண்டியவனாக..." என்றேன். அவர், "எனக்குத் தெரியும், ஜனங்களில் அநேகர்... லட்சக்கணக்கான மக்கள் உம்மைத் தீர்க்கதரிசியாகக் கருதுகின்றனர் என யூகிக்கிறேன்" என்றார். "நான் தீர்க்கதரிசி இல்லை" என்று நான் சொன்னேன். அவர், "ஆனால், ஜனங்கள் உம்மை அந்தவிதமாகத்தான் நினைக்கிறார்கள்" என்றார். மேலும் அவர், "உண்மையில், நானும் கூட அவ்விதமே கருதுகிறேன்" என்றார்.

8அதற்கு நான், "நன்றி" என்றேன். மேலும், "சில சமயங்களில் நிகழவிருக்கும் காரியங்களை அவர் எனக்குக் காண்பிப்பார், பொய்யான எதையும் அவர் எனக்கு இதுவரை சொன்னதில்லை, அவர் செய்யவுமாட்டார், ஏனென்றால், அவர் தேவனாயிருக்கிறார். அவரால் முடியாது" என்றேன்.

9அவர், "நல்லது, அது போன்ற தேவனுடைய ஊழியக்காரனாக நீர் இருப்பீரானால், முடி வெட்டுதல், குட்டைக்கால் சட்டையை அணிதல், முகஒப்பனை (make-up) செய்தல், அதுபோன்ற முக்கியமற்ற காரியங்களைக் குறித்து தொடர்ந்து பேசுவதைக் (keep fussing) காட்டிலும், ஆவிக்குரிய மேன்மையான வரங்களை எப்படி பெற்றுக் கொள்வது என்பதைக் குறித்து அவர்களுக்கு நீர் ஏன் போதிக்கக் கூடாது?" என்று கேட்டார். மேலும் அவர், "மகத்தான வரங்களை எப்படி அவர்கள் பெற்றுக் கொள்வது, (தேவனுக்காக) ஏதோவொன்றைச் செய்வது, அதுபோன்ற மகத்தான காரியங்களை மட்டுமே நீர் போதிக்க வேண்டும்" என்றார்.

10அதற்கு நான், "அவர்கள் தங்களுடைய அடிப்படைக் காரியங்களையே (ABC's) கவனிக்காதபோது, இயற்கணிதத்தை (கடினமான காரியத்தை மொழிபெயர்ப்பாளர், algebra] எப்படி அவர்களுக்கு போதிக்கப் போகிறீர்கள்? அடிப்படையைக் கற்றுக் கொள்ளுங்கள், பிறகு நாம் மற்றதைத் துவங்குவோம்" என்றேன். [சபையார் சிரிக்கின்றனர் - மொழிபெயர்ப்பாளர்].

11புனிதத்தன்மையைக் குறைக்கும் விதத்தில் இதைக் கூறவில்லை. (sounds rather sacrilegious), ஒரு வயதான ஊழியர் (நன்றி), ஒரு வயதான ஊழியர் ஒரு முறை ஒரு ஒரு கூட்டத்தை நடத்தும்படிச் சென்று, அவர் முதல் நாள் இரவு மனந்திரும்புதலைக் குறித்துப் பிரசங்கித்தார், இரண்டாவது இரவும் மனந்திரும்புதலைக் குறித்துப் பிரசங்கித்தார், மூன்றாவது இரவு, நான்காவது இரவு, ஐந்தாவது இரவும் கூட அதைக் குறித்தே பிரசங்கித்தார். டீக்கன்மார்கள் பின்னாக அங்கே அவரை சந்தித்து, "சகோதரனே, மனந்திரும்புதல் பேரிலான அந்தச் செய்தியில் களிகூர்ந்தோம். ஆனால், வேறு எதன்பேரிலாவது பேச நீர் எதையும் கொண்டிருக்கவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஓ, நிச்சயமாக. ஆனால், முதலாவது அவர்கள் மனந்திரும்பும் வரை காத்திருங்கள், பிறகு நாம் வேறு ஏதாவதைக் குறித்துப் பேச ஆரம்பிக்கலாம்" என்றார். (சபையார் சிரிக்கின்றனர் -- மொழிபெயர்ப்பாளர்).

12எனவே, நான் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, சகலமும் சரியான விதத்தில் நன்றாக இருப்பதைக் காணட்டும், பிறகு நாம் மற்றதின் பேரில் ஆரம்பிக்கலாம். நீங்கள் பாருங்கள்? எனவே -- எனவே நாங்கள்... நான் உங்கள் ஜெபங்களை வாஞ்சிக்கிறேன், மோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் அவைகளைக் கூறுவதில்லை, நான் நான் பக்திவைராக்கியம் கொண்டவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தேவனுடைய குமாரத்திகள், நீங்கள் தேவனுடைய குமாரர்கள், ஆகவே, நாம் அந்த விதமாக நடந்து கொள்ள வேண்டும். நாம் அந்த விதமாக நடந்து, அதனோடு முன்னேறிச் செல்ல முயற்சி செய்ய வேண்டும். நான் குறைவுள்ளவனாயிருக்கிறேன், எனக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன்.

13எனவே, நாம் ஒருவருக்காக ஒருவர் ஒன்றுசேர்ந்து ஜெபிப்போம். ஒருவேளை தேவன் ஒருநாள் நம்மெல்லாரையும் ஒன்றுசேர்த்து, எப்படியாயினும் இந்த பெருங்குழப்பத்திலிருந்து நம்மை வெளியே எடுத்து, நம்மை மேலே எடுத்துக் கொள்ளக்கூடியதான அந்த மகத்தான ஒன்றிற்குள்ளாக கூட்டிச் சேர்ப்பார். வியாதி நிறைந்த இந்த வீடு எனக்கு ஒருவகை சோர்வை உண்டுபண்ணுகிறது, உங்களுக்கு அவ்விதம் இல்லையா? இந்த காலைவேளைகளில் ஒன்றில், அவர் வரும்போது, தனிமையில் பறப்பதை நான் விரும்புகிறேன்.

14இப்பொழுது, கடந்த இரவு, யூபிலியைப் பற்றியும், மூல பெந்தெகொஸ்தேவிற்கும், செய்திக்கும் திரும்பும்படியான அழைப்பைப் பற்றிப் பேசின பிறகு, இன்றிரவு எப்படி திரும்பிப் போவது என்பதைக் குறித்து சிறிது பேச முயற்சிப்பேன் என்பதாகக் கூறியிருந்தேன். ஒருவருக்கு நீங்கள் ஒன்றை எப்படிச் செய்ய வேண்டும் என்று கூறாதிருக்கும் வரை, அவர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று கூறவேண்டிய அவசியம் இருக்காது. அதுதான் காரியம்.

15இப்பொழுது, நான் வாசிக்க வேண்டிய ஒரு பாடப்பொருள் இருக்கிறது. நான் நான் ஏற்கனவே இந்தப் பாடப்பொருளை உபயோகித்திருக்கிறேன், ஒருவேளை இந்த விதமாக அந்த பொருளின் கீழ் பேசாமலிருந்திருக்கலாம். ஆனால், அதை சரியான விதத்தில் பொருத்தி, இந்த வழியாகக் கொண்டுவர வேண்டும். ஆகவே, எப்படி திரும்பிச் செல்வது என்பதன் பேரில் அதைக் கொண்டுவர நினைக்கிறேன். அங்கே அநேக பாதைகள் உண்டு, ஆனால், ஒரே ஒரு பாதைதான் திரும்புவதற்கேற்ற பாதையாகும்.

16ஒரு முறை மலைகளிலே ஒரு மனிதன் இவ்விதம் கூறினான்... நானும் மற்றொருவரும் அங்கே மேலே இருந்தோம், கொலராடோ-வில் (Colorado) ஒரு உரிமம் பெற்ற வழிகாட்டியாயிருந்தோம். அந்த மனிதன் தோற்றத்தில் சிறு பையனாயிருந்தான், அங்கே மறுபக்கத்தில் ஒரு கூட்ட ஜனத்தை உடையவனாயிருந்தான். அவர்கள் சிலரை அங்கே அழைத்து வந்திருந்த நிலையில், அந்த வழிகாட்டியே தொலைந்து போய்விட்டான். அவன் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தான். நாங்கள் இருந்த அந்த இடத்திற்கு அவன் குதிரையில் மேல் ஏறி வந்தான். அவன், "ஹேய்...' என அழைத்தான். இங்கே என்னோடு இருந்த நபர் திரு. ஜெவெரெஸ் (Mr. Jeverez), அவர் சட்டென்று பேசக்கூடிய ஒரு நபர். அவன், "ஹேய், நீ எப்படி இங்கிருந்து வெளியேறினாய்?" என்று கேட்டான். அதற்கு இவர், "நீ எப்படி அதற்குள் சென்றாய்?" என்று கேட்டார். அவன், "அந்த வழியாக" என்றான். அதற்கு இவர், "நல்லது, அப்படியானால், அதுதான் வெளியேறுவதற்கான வழி" என்றார். (சகோதரன் பிரன்ஹாம் மற்றும் சபையார் சிரிக்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்). எனவே, மீண்டும் திரும்புவதற்கான பாதை, ஆகவே, அதுதான் அது, அதுவே அது.

17இப்பொழுது, நாம் 2-இராஜாக்கள் புஸ்தகத்தில் வாசிப்போம். 2-இராஜாக்கள் 1-ம் அதிகாரத்திலிருந்து இரண்டு அல்லது மூன்று வசனங்கள். பிறகு நாம் திரும்ப வேண்டிய பாதை என்ற ஒரு பொருளுக்காக ஒரு பகுதியை எடுப்போம். ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள். அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான். கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப் போகிறீர்கள்?

18பின்னர், சில கணங்களுக்கு முன்பாக, தொலைபேசி வாயிலாக சகோதரர் மூர் (Brother Moore) பேசுவதைக் கேட்டேன். நான் 'ஒரு பிசின் தைலம்' என்ற பொருளின் பேரில் பேசுவதற்காக இதை வாசிக்கப் போகிறேன் என்று அவர் அறியாதிருந்தார். எரேமியா 8:22-ஐ வாசிக்க விரும்புகிறேன். கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையா மற்போனாள்?

19ஒரு கேள்வி: "ஏன்? ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?" 20. இப்பொழுது, இந்த மகத்தான ஐக்கியத்தின் நேரத்தை களிகூருவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம் என்பதைக் கூற விரும்புகிறேன், மேலும் கர்த்தர், இங்கு வருகிற ஒருவர் கூட இரட்சிக்கப்படாத நிலைமையில் விடமாட்டார் என்றும், பரிசுத்த ஆவியைப் பெறாத ஒருவர் கூட இல்லாமல், ஒவ்வொருவரையும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களாக்குவார் என்றும் ஒவ்வொரு வியாதியஸ்தர் களையும் சுகமாக்குவார் என்றும் நான் நம்புகிறேன். நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், நாம் அதை விசுவாசிக்கிறோம்.

20இப்பொழுது, நம்முடைய பாடமானது, நேற்று இரவைப் போல (நேற்று இரவு நாம் தியானித்ததைப் போல -- மொழிபெயர்ப்பாளர்), தேவனை விட்டு வழிவிலகின ஜனங்களை வைத்து துவங்குகிறது. என்னால் சிந்திக்கக் கூடிய மிகவும் பரிதாபமான ஒரு காரியம் என்னவெனில், யாராவது ஒருவர், அல்லது ஒரு விசுவாசி, தேவனை விட்டு விலகி இருக்கிற காரியமே. இங்கே நாம் காண்கிறதென்னவெனில், இந்த சமாரியாவின் ராஜாவாகிய அகசியா தேவனை விட்டு விலகியிருப்பதற்கான காரணமானது, அவனது தவறான பயிற்சியும், தவறான வளர்ப்புமே ஆகும். அவனது தாய் ஒரு அஞ்ஞானியும், அவனது தகப்பனாகிய ஆகாப் பின்வாங்கிப்போன இஸ்ரவேலனுமாயிருந்தான். அதன் மூலமாக, கர்த்தருடைய வழியில் அவன் சரியாக வளர்க்கப்படாதிருந்தவனாக இருந்தான். ஜனங்களால்...

21தேவன் ஒருபோதும் தனக்கென ஒரு சாட்சியை வைக்காமல் விட்டுவிடுவதில்லை. மேலும், அந்த நாட்களில் தேவன் ஒரு சாட்சியைக் கொண்டிருந்தார், தீர்க்கதரிசியாகிய அவனுடைய பெயர் எலியா. அந்த சாட்சியை அவனுடைய தகப்பன் வெறுத்தான், அந்த சாட்சியை அவனுடைய தாயார் வெறுத்தாள், இருந்தபோதிலும் அது தேவனுடைய சாட்சியாக இருந்தது, தேவனுடைய சாட்சியாகவே தரித்து நின்றது.

22தேவன் எப்பொழுதுமே, "அதுதான் இது" என்று அதைச் சுட்டிக்காட்டி சொல்லத்தக்கதான ஒரு ஜனத்தை எங்கேயாவது வைத்திருக்கிறார். ஓ! நானும் அவர்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். நாம் எல்லோருமே அங்கே இருக்க விரும்புகிறோம் என்பதில் நான் நிச்சமுள்ளவனாயிருக்கிறேன், ஒவ்வொரு இருதயத்தினுடைய வாஞ்சையும் அதுவே. "அவர்களே என் ஜனங்கள். அவர்களை நோக்கிப் பாருங்கள். நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு அவர்களே ஒரு உதாரணம். என் ஜீவனை அவர்கள் தங்களுக்குள்ளாக பிரதிபலிக்கிறார்கள், அவர்கள் தங்கள் ஜீவியத்தை அர்ப்பணித்திருக்கிறார்கள். நான் என்னை, (என்) ஜீவனை அவர்கள் மூலமாக பிரதிபலிக்கிறேன்" என்று தேவனால் சொல்ல முடிவதற்கேற்ற விதமாய் நாமும் அந்த எண்ணிக்கையில் (ஜனங்களில்) இருக்க விரும்புகிறோம். என்னே ஒரு அழகான காரியம்! என்னே ஒரு... தேவன் யாரோ ஒருவரை உடையவராயிருக்கிறார் என்றும், அவனில் அவர் நம்பிக்கை வைக்க முடியும் என்றும் அறிந்துகொள்வது, தேவனுக்கு எவ்வளவு ஒரு அருமையான உணர்வை நிச்சயமாக உண்டுபண்ணும்! மேலும், அவர் ஒரு மனிதனை உடையவராயிருந்தார், அவன் பெயர் எலியா.

23மேலும், இப்பொழுது, தேவன் ஆசீர்வதித்திருந்த இந்த மனிதன்... எப்பொழுதுமே லௌகீக ஆசீர்வாதமானது, நீங்கள் தேவனோடு சரியாக இருக்கிறீர்கள் என்பதைக் குறிக்காது, ஏனெனில், அவர் துன்மார்க்கனையும் கூட செழிக்கும்படிச் செய்தார். ஆனால், இந்த மனிதன், தன் தகப்பனுக்குப் பிறகு, தன் தகப்பனின் மரணத்திற்குப் பிறகு வந்தவனாயிருந்தான். அகசியா அவனுக்கு முன்பிருந்து, தேவனுக்குமுன் தவறானதை நடப்பித்த அவனது தகப்பனும் தாயும் சென்றுகொண்டிருந்த அதே வழியில் சென்றுகொண்டிருந்தான்.

24அவன் தன் வீட்டிலிருந்த கிராதியின் வழியாக கீழே விழுந்து வியாதிப்பட்டான். ஒருவேளை, அவன் விழுந்ததில் உட்புறமாக அடிபட்டு, உட்புற இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கலாம், அல்லது கீழே விழுந்ததில், தொற்று ஏற்பட்டு (infection) நோய்வாய்ப்பட்டிருக்கலாம், அல்லது அவனது விலா எலும்புகள் உடைந்து, நுரையீரல் தாக்கப்பட்டு, அல்லது அதுபோன்று ஏதோ நடந்து மிகவும் வியாதிப்பட்டிருந்தான். தான் பிழைப்பானோ இல்லையோ என்ற மோசமான உணர்வடைந்தவனாய், தான் செய்யவேண்டியதைச் செய்யாமல், அல்லது செல்லாமல், ஆட்களை அனுப்பி, நம்பிக்கையான அரண்மனைக் காவல்காப்போர் போன்றோரை, எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்திற்கு அனுப்பினான். ஒரு பிசாசாகவும், அங்கே ஒரு குறிசொல்பவனாகவும் இருந்த அவனிடத்திற்கு ஆட்களை அனுப்பினான்.

25இப்பொழுது, தேவனை விசுவாசித்த ஜனங்களுக்கு, ஆவிக்குரிய ஜனங்களுக்கு இராஜாவாயிருந்த, அல்லது இருக்க வேண்டிய மனிதனுக்கு அது எவ்வளவு ஒரு வெட்கக்கேடானதாயிருக்கும்! இருப்பினும், அவர்களது சொந்தத் தலைவன், தான் ஆலோசித்திருக்க வேண்டியவரிடத்தில் ஆலோசிக்காமல், வேறு எங்கேயோ விசாரித்தான். பாருங்கள்? அவன் அறிந்திருக்க வேண்டியது... அவன் நியாயப்பிரமாணத்தை அறிந்திருந்தான், அங்கே தேசத்தில் ஆசாரியர்கள் இருந்தார்கள், அங்கே சபைகள் மற்றும் அதைப் போன்றவைகள் இருந்தன. மேலும், அங்கே கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றிருந்த ஒரு தீர்க்கதரிசியும் இருந்தான். அவன் அதைச் செய்வதற்குப் பதிலாக, பிரபலமான பாதையையே அவன் எடுத்துக் கொள்ள விரும்பினான்.

26இன்றைக்கும் காரியம் அவ்விதமாகத்தான் உள்ளது என நான் நினைக்கிறேன். நாம் அந்த அந்த பிரபலமான பாதையையே விரும்புகிறோம். தேவன் ஒரு பாதையை உண்டுபண்ணும் போது, ஜனங்கள் அவரை விட்டு வழிவிலகுகிற நிலையில், நேற்று இரவில் நான் பேசிக் கொண்டிருந்ததைப் போல, தேவன் தம்முடைய ஜனங்களுக்கு, அவரிடம் திரும்புவதற்கான ஒரு பாதையை உண்டுபண்ணுகிறார். ஜனங்கள் அதைச் செய்ய மறுக்கும்போது, "ஏன்?" என்று தேவன் கேட்கிறார். "நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?" என்று எப்பொழுதுமே அவர் கேட்கிறார்.

27எனவே, அவர் ஒரு வழியை உண்டுபண்ணி, நாம் அதைச் செய்ய மறுத்தால், அப்பொழுது - அப்பொழுது, நாம் ஏன் அதைச் செய்யவில்லை என அவர் கேட்கிறார். நியாயத்தீர்ப்பு நாளில், நான் ஏன் அதைச் செய்யவில்லை என அவர் என்னிடம் கேட்கும்வரை காத்திருப்பதை விட, இங்கேயே அதைச் சரிசெய்ய விரும்புகிறேன். நான்... சிலருடைய பாவங்கள் அவர்களை முந்திக்கொள்ளும், சிலருடையது பின்தொடரும். என்னுடைய (பாவங்கள்) அறிக்கையிடப்பட்டு, எனக்கு முன்செல்ல விரும்புகிறேன். பிறகு, அந்த நேரம் வரும்போது, நான் - நான் சரியானவனாக இருக்க விரும்புகிறேன்.

28அந்த வயதான கறுப்பின சகோதரன், "சில நாட்களுக்கு முன்பு: நான் கர்த்தரிடம் பேசினேன், நான் அவரிடம்: என் வழிகளை செவ்வைப்படுத்த விரும்புகிறேன், நான் அந்த ஆற்றண்டைக்கு வரும்போது, ஒரு தொல்லையையும் பெற்றிருக்க விரும்பவில்லை' என்று சொன்னதைப் போல, ஆகவே, நாமெல்லாருமே அந்த வழியாகவே உணருகிறோம் என நினைக்கிறேன், அதை வெளிப்படுத்துகிற விதமானது, அதாவது, ஆற்றண்டையிலே நான் ஒரு தொல்லையையும் பெற்றிருக்க விரும்பாததே. ஏனெனில், அந்த நேரத்தில், அது ஒரு பயங்கரமான தள்ளுகிற, உந்தித் தள்ளுகிற நேரமாக இருக்கப் போகின்றது. எனவே, நாம் சரியாயிருக்கிறோம் என்பதில் நிச்சயமுள்ளவர்களாயிருக்க வேண்டும்.

29இப்பொழுது இந்த இராஜா, (காரியங்களை) அறிந்துகொள்வதற்கான ஒரு பாதை கர்த்தரிடத்திலிருந்து அங்கே அவனுக்காக அருளப்பட்டிருந்தது, ஆனால், அதைச் செய்ய அவன் மறுத்துவிட்டான். பின்னர், தேவன் அவருடைய அருளப்பட்ட பாதையாகிய, அதாவது, அவருடைய தீர்க்கதரிசியை உபயோகித்தார். மேலும், ஜனங்களிடம் நல்ல அபிப்ராயம் பெற்றிராத அந்த வழுக்கைத் தலையைக் கொண்ட, கன்னமீசையை வைத்திருந்த அவரை இராஜா பொருட்படுத்தவேயில்லை. அவனுடைய செய்தியானது எப்பொழுதும் கடிந்து கொள்ளுதலும் (condemning), காயப்படுத்துதலும் (biting), அழுத்தித் தள்ளக்கூடியதாகவும் (shoving) இருந்தது. மேலும், சுற்றிலும் இருந்த ஜனங்கள்... அவனால் தானாக எதுவும் செய்ய முடியாது. அவன் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தான். கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது, அந்தத் தீர்க்கதரிசி அந்த வார்த்தையின் மீது தரித்துநிற்க வேண்டும். மேலும், அந்த வார்த்தைக்கு (ஜனங்கள்) கீழ்ப்படியாமல் போகும் பட்சத்தில், கடிந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை, அவ்வளவே. ஆகவே, இந்த நபர் (எலியா), மோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால், அவன் அதைச் செய்ய வேண்டியவனாயிருந்தான், ஏனென்றால், அவன் தன் சுயசிந்தையால் ஆளப்படவில்லை. அவன் தேவனுடைய ஆவியினால் ஆளப்படுகிறான்.

30நாமெல்லாரும் இருக்கவேண்டியது அந்த வழியில்தான், தேவனுடைய ஆவியினால் ஆளப்படுகிற அந்த வழியில்தான். நாம் அவ்வாறு இருக்கையில், பின்னர் நாம் பாவத்தைக் காணும்போது, அது நமக்கு சுகவீனத்தை உண்டுபண்ணுகிறது. அதைக் குறித்து ஏதோவொன்று உள்ளது. அது ஒருமுறை, மனிதனை உண்டாக்கினதற்கான தேவனுடைய இருதயத்தையே விசனப்பட வைத்தது.

31இப்பொழுது, அவன் கேட்டான்... அதை அறிந்து கொள்வதற்கு தேவன் ஒரு வழியை உடையவராயிருந்தார், ஆனால், அவனோ அந்த வழியை எடுத்துக் கொள்ளவில்லை. அங்கே ஜனங்கள் மத்தியில் பிரபலமாயிருந்த வழியையே அவன் தெரிந்து கொண்டான். மேலும், நான் -- நான் இவ்விதம் கூறுவதை வெறுக்கிறேன், அதாவது, "அமெரிக்கா தேவனிடம் திரும்புகிறது" மற்றும் "தேவனுடைய நேரத்திற்கு திரும்புதல்" அல்லது அதைப் போன்ற மேற்கோளுரைகளை (slogans) நாம் எப்பொழுதுமே காண்கிறோம். ஆனால், அதனுடைய காரியம் என்னவெனில், திரும்புவதற்காக மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அந்த வழியாகவே அவர்கள் திரும்ப விரும்புகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த சிந்தனைகளின் வழியாக மற்றும் தங்கள் சொந்த நடக்கையின் வழியாக திரும்ப விரும்புகின்றனர். ஆனால், அது எப்பொழுதும் திரும்புவதற்கான தேவனுடைய பாதைக்கு முரண்பாடாக இருக்கிறது. பின்னர், அவர்கள் திரும்புவதற்கேற்ற தேவனுடைய பாதையை அவர்கள் புறக்கணிக்கும் போது... அப்பொழுது தேவன், "ஏன்? ஏன் அவ்வாறு செய்தீர்கள்?" என்று கேட்கிறார்.

32இப்பொழுது, ஒரு-ஒரு நேரத்திற்கு அழைப்பு விடுப்பது போல... அதிபர்கள், "ஒரு - ஒரு பதினைந்து நிமிட ஜெபத்திற்கான அழைப்பை விடுப்போம்" என்று கூறுவார்கள், அப்பொழுது அனைத்து இயந்திரங்களும் நிறுத்தப்படும். அது ஒருபோதும் கிரியை செய்யாது. ஆனால், அது ஒரு உலுக்குதலைக் கொண்டுவர வேண்டும், அது ஒரு மரணத்தைக் கொண்டுவர வேண்டும், அது ஒரு மறுபிறப்பைக் கொண்டுவர வேண்டும். ஒரு மணிநேர ஜெபம் என்பதை அது எடுத்துக் கொள்வதில்லை, மாறாக நீங்கள் திரும்பி வருமட்டுமாக அது எடுத்துக் கொள்கிறது. அதுவே ஒரு திரும்பக் கொண்டு வருதலாயிருக்கிறது: விசுவாசத்தின் உண்மைகளுக்கு திரும்பக் கொண்டுவருதல். பாரம்பரியங்களின் பிரகடனத்திற்கோ அல்லது அல்லது ஏதோ மனித கருவியின் மூலமாகவோ அல்ல, ஆனால், கிறிஸ்துவை அறிந்துகொள்வதன் மூலமாகவே. அவரை அறிந்து கொள்ளுங்கள், வார்த்தையை மட்டும் அல்ல... அவர்... நீங்கள் அவரை அறிந்திருந்தால், வார்த்தையையும் அறிந்திருப்பீர்கள், ஏனெனில், அவரே வார்த்தையாயிருக்கிறார். ஆகவே, நீங்கள் அந்த நிஜத்திற்கு திரும்ப வேண்டியவர்களாயிருக்கிறீர்கள்.

33தேவன் அவருடைய ஜனங்களின் மூலமாக தன்னை ரூபகாரப்படுத்த விரும்புகிறார். சபையோ, அதிக எண்ணிக்கை, பெரிய ஜனக்கூட்டம், செல்வந்தர்கள், அருமையான உடைகளை உடுத்தியவர்கள் மற்றும் அதுபோன்ற காரியங்களில் தன்னை ஜனங்களிடம் வெளிப்படுத்த விரும்புகிறது. அதுவே நம்மை நாமிருக்கும் இந்த பெருங்குழப்பத்திற்குள்ளாக கொண்டு வந்திருக்கிறது. நாமனைவரும் சாக்குத் துணிகளை உடுத்தியிருந்தால், நாம் நன்றாக இருந்திருப்போம், நமக்கு வேலையில்லாதிருந்து, ஒருவர் மற்றொருவருடைய வீட்டிற்குச் செல்கிறவர்களாக, மற்றும் மற்றும் உண்ண ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்பவர்களாக இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். சபையானது நன்கு மெருகேற்றப்பட்டதாகவும், கவரத்தக்க வகையில் (well Polished and dressed), பெரிய காரியங்களைக் கொண்டதாகவும், அதே சமயம் ஆவியில் மரித்த நிலையில் இருப்பதைக் காண்பதை விட, சபையானது அப்படிப்பட்ட நிலையில் இருந்து, ஆவியில் நிரப்பப்பட்டதாய் இருப்பதைக் காண்பதையே நான் விரும்புவேன்.

34தேவன் ஒரு வழியை உண்டுபண்ணுகிறார், நாம் அதை புறக்கணிக்கிறோம், நாம் திரும்புவதற்காக அவர் நமக்குத் தந்தருளுகிற வழியில் நாம் திரும்புவதில்லை. மேலும், எசேக்கியா (அகசியா மொழிபெயர்ப்பாளர்) அதையே செய்தான். இன்றைக்கு நம்மில் அநேகரைப் போல அவனும் இருந்தான், அவன் மிகவும் முரட்டாட்டமுள்ளவனாய் இருந்தான், அவன் இராஜாவாயி ருந்தபடியால், (வனாந்திரத்தில் எலியா என்பவன் இருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான், பரலோகத்தில் ஒரு தேவன் இருந்தார் என்பதையும் அறிந்திருந்தான், இருப்பினும், அவன் மிகப் பிரபலமான ஒரு பாதையையே தெரிந்துக்கொள்ள விரும்பினான். அனைத்து ஜனங்களும் செல்ல விரும்பின இடத்திற்கு, அங்கே அவர்கள் பெற்றிருந்த தீர்க்கதரிசியினி (prophetess) மூலமாக, ஆகாபின் மனைவியான புறஜாதியான யேசபேல் மூலமாக, அவர்கள் எக்ரோனுக்கு சென்று அவன் பிழைப்பானா என்பதை அந்த விக்கிரகங்களிடம் விசாரிக்க விரும்பினார்கள்) அவன் கீழே இறங்கிவர விருப்பமில்லாதவனாயும், ஜனங்களிடம் பிரபலமில்லாத ஒன்றோடு தன்னை இணைத்துக்கொள்ள விருப்பமில்லாதவனாகவும் இருந்தான். அது தான் தொல்லையாயிருக்கிறது.

35அது தான் தொல்லையாயிருக்கிறது, இன்றைக்கு நம்முடைய பெண்கள் செய்கிற காரியங்கள் தொல்லையாயிருக்கிறது. அது தான் புருஷர்களின் தொல்லைக்கு காரணமாயிருக்கிறது. அவர்களிடம் கிறிஸ்துவத்தைப் பற்றி பேசும்போது, அவர்கள், "நான் அதை அல்லது இதைச் சார்ந்தவன்" என்று கூறுகின்றனர். அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. "நான் -- நான் இன்ன ஸ்தாபனத்தைச் சார்ந்தவன்" நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்ற அர்த்தத்தை அது கொடுக்கவில்லை. கிறிஸ்தவம் என்பது நீங்கள் ஏதோவொன்றில் சேர்ந்துகொள்வதல்ல, கிறிஸ்தவம் என்பது ஒரு குடும்பத்தை, குடும்பத்தில் ஒரு பிறப்பை உள்ளடக்கியது. ஒரு பிறப்பின் மூலமாகவே நீங்கள் ஒரு கிறிஸ்தவனாயிருக்கிறீர்கள்.

36ஆனால், "நான் ஒரு மெத்தடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தேயினன் அல்லது ஏதோவொன்று -- அதைச் சார்ந்தவன்" என்று சொல்லிக்கொள்வது மிகப் பிரபலமாக இருக்கிறது.

37"நான்... நான் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தவனாயிருக்கிறேன், பரிசுத்த ஆவியானவர் என்மேல் இறங்கியிருக்கிறார், நான் கிறிஸ்துவில் புது சிருஷ்டியாயி ருக்கிறேன்" என்று கூறுவதில்தான்... அதுதான் அதுதான் பாதையாயிருக்கிறது.

38ஆனால், அந்த இராஜா பிரபலமாயிருக்க விரும்பினான், அந்தவிதமாகவே ஜனங்கள் இன்றைக்கு இருக்கின்றனர். அவர்கள் தேசங்கள்தோறும் எழுப்புதல்களை ஏற்படுத்தக் கூடும். "குறிப்பிட்ட ஆண்டு காலத்தில் பத்து லட்சத்திற்கும் மேலாக' எனும் கவர்ச்சிகரமான முழக்கத்தைப் பெறக்கூடும் அல்லது அவர்களுடைய அங்கத்தினர்களின் எண்ணிக்கை மற்றும் அறிவுப்புலமையை (scholarship) அதிகரிக்கச் செய்யக்கூடும், இன்னும் அதிகமானதையும் செய்யக்கூடும், ஆனால், அது ஒருபோதும், ஒருபோதும்... நீங்கள் எல்லா நேரங்களிலும் வெகுதூரம் விலகிச் செல்கின்றீர்கள். திரும்ப வேண்டிய பாதை, திரும்ப வேண்டிய பாதையை தேவன் உடையவராயிருக்கிறார். அந்த திரும்ப வேண்டிய பாதையைக் குறித்து நான் உங்களிடம் பேச விரும்புகிறேன். நீங்கள் திரும்புவதற்காக தேவன் தந்தருளின பாதையில் மாத்திரமே நீங்கள் திரும்ப வேண்டும்.

39நாம் இப்பொழுது, இதைக் குறித்து... இந்த இராஜாவைக் குறித்து சற்று நேரம் பேசுவோம். அவன் அதைச் செய்ய விரும்பாததன் காரணம், அவன் முரட்டாட்டமுள்ளவனாய் இருந்தான். மற்ற ஜனங்களைப் போலவே அவனும் விரும்பினான். அவன் தனக்கென்று சொந்த வழிகளை உடையவனாயிருந்தான், அந்த வழியாகவே அவன்... அவன் பிரபலமான வழியில் திரும்ப விரும்பினான். மேலும், தேவன் அவனுக்காகக் கொடுத்த பாதையை அவன் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவன் தீர்க்கதரிசியை புறக்கணித்தான். மேலும், தீர்க்கதரிசி என்ன கூறுவான்?, சந்தேகமில்லாமல், தீர்க்கதரிசி சரியாக அவனிடம், "மனந்திரும்பு, தேவனோடு ஒப்புரவாகு, நீ ஒரு இராஜாவாக இருப்பதற்கு தகுதியற்றவன்" என்று கூறியிருப்பார். மேலும், ஓ! அது எவ்வளவாக ஜனங்கள் முன்னிலையில் அவனை தளர்வடையச் செய்திருக்கும் (droop his feathers down). பாருங்கள், ஒரு இராஜாவாக, ஓ, என்னே! அவனால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

40எனவே, அங்கேயுள்ள பிசாசு மற்றும் மற்றும் விக்கிரகமானது, "ஓ, மகாராஜாவே, டாக்டர் இன்னார் இன்னார் அவர்களே, நீ வெறுமனே..." என்று கூறியிருக்கும். அவன் ஜனங்கள் மத்தியில் பிரபலமானவனாக இருந்து, ஒரு மகத்தான புகழ்வாய்ந்த பெயரைப் பெற்றிருக்கக் கூடும். ஓ, ஜனங்கள் எவ்வளவாக காரியங்களைப் பற்றியதான புகழ்ச்சியை நேசிக்கிறார்கள். எனவே, அவன் அதைப் பெற்றுக்கொண்டால், ஜனங்கள் முன்னிலையில் உயர்த்தப்பட்டு, ஜனங்கள் முன்னிலையில் ஒரு மெருகேற்றப்பட்டவனாக இருக்க முடியும் என நினைத்தான். மேலும், நான் என்ன கூற விழைகிறேன் என்பதை நீங்கள் வரிகளுக்கிடையே வாசிக்கின்றீர்கள் என்று நம்புகிறேன். ஆகவே, பின்னர் அவன் ஒரு மகத்தான மனிதனாக இருக்க முடியும் என்பதாக நினைத்தான். ஆனால், அவனிடம் உண்மையை எடுத்துக்கூற முடிகிற ஒரு மனிதனிடம் அவன் இறங்கிவரவில்லை, உண்மையிலே தான் அவனை ஏமாற்றுகிறதாக நினைத்துக் கொண்டான். எனவே, அவன் வேலைக்காரர்களை அனுப்பி, "நீங்கள் போய் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில், நான் இந்த வியாதி நீங்கி பிழைப்பேனா என்று விசாரியுங்கள்" என்றார்.

41ஆனால் கர்த்தர் ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்தையும் அறிந்திருக்கிறார், அதன் உள்நோக்கத்தையும் அறிந்திருக்கிறார். மேலும் அவர்... நீங்கள் தேவனிடத்திலிருந்து எதையும் மறைக்க முடியாது. இல்லை ஐயா. அவர், "நீ அவர்களுக்கு எதிர்ப்படப்போய்: ஏன் இவ்விதம் செய்கிறாய்? இஸ்ரவேலில் ஒரு தேவன் இல்லையென்றா நீ இவ்விதம் செய்கிறாய்? ஒரு தீர்க்கதரிசி இல்லையென்றா நீ இவ்விதம் செய்கிறாய்? இப்படிப்பட்ட காரியங்கள் எல்லாம் இல்லையென்றா இவ்விதம் செய்கிறாய்? அப்படியானால், அவன் அங்கே சென்று, ஒரு இஸ்ரவேலனாய் இருந்து கொண்டு இவ்விதம் செய்வதற்கான காரணம் என்ன? என்று கேள்" என்றார்.

42ஜனங்களை மூல அஸ்திபாரத்திற்குத் திரும்பக் கொண்டுவருவதற்குப் பதிலாக, ஏன் அந்த மனிதர்களும் ஸ்திரீகளும் ஜனங்களை ஒரு ஸ்தாபனத்தினுடைய ஐக்கியத்திற்குள் அவர்களை ஸ்தாபிக்கிறார்கள் என்று வியப்புறுகிறேன். அதைக் குறித்து தேவன் அறிவார், ஆனால், அது தான் மிகவும் பிரபலமான பாதையாயிருக்கிறது. "நான் இதை -- இதைச் சார்ந்தவன். நான் டாக்டர் இன்னார் இன்னார், இன்னின்ன அமைப்பிலிருந்து வந்திருக்கிறேன். நான் முதல்தர பல்கலைக்கழக அமைப்பிலிருந்து (Purdue) வந்திருக்கிறேன். நான் நான் இன்னின்னதில் பட்டம் பெற்றிருக்கிறேன். நான் எனது முனைவர் பட்டம், சாமானிய டீக்கன் உரிமம் (பி.எச்.டி. மற்றும் எல்.எல்.டி Ph.D. and L.L.D. Licensed Lay Deacons) ஆகியவற்றையும் பெற்றிருக்கிறேன்." அது தேவனுக்கு எந்த ஒரு காரியத்தையும் பொருட்படுத்தாது.

43எலியா ஒரு எல்.எல்.டி. அல்லது ஒரு முனைவர் பட்டத்தைப் பெற்றவனாய் இருந்திருக்கமாட்டான். உண்மையில், அவனைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. அவன் எவ்வழியாக காட்சியில் வந்தானோ, அவ்விதமாகவே காட்சியைவிட்டு போய்விட்டான். அவனுடைய தாய் தகப்பன் யார் என்பதை நாம் அறியோம், அவனைப் பற்றி வேறெதுவும் நமக்குத் தெரியாது, ஆனால், தேவன் அவனைப் பற்றி அறிந்திருந்தார். அவர் உபயோகிக்க முடிந்த ஒரு மனிதனை அவர் கண்டறிந்தார், பயப்படாத ஒரு மனிதனை அவர் கண்டறிந்தார். முழு தேசமே அவனுக்கு எதிராக இருந்தாலும், அது அவனுக்கு ஒன்றுமில்லை, வெள்ளையை "வெள்ளை" என்றும், கருப்பை "கருப்பு" என்றும் அழைப்பான்.

44தேவனே, மற்றுமொருவரை அனுப்பும், அது சரியே. எதற்கும் பயப்படாத ஒருவரை அனுப்பும், மனிதர்களுடைய கனத்தையும் புகழ்ச்சியையும் பெறவேண்டிய அவசியமில்லாத ஒருவரை, தேவனை மாத்திரம் நோக்கிப் பார்க்கக் கூடிய, தேவனை விசுவாசிக்கிற, சத்தியத்தை மாத்திரம் பேசக்கூடிய ஒருவரை அனுப்பும். அந்த நபர் அதைச் செய்வார், சத்தியம் சத்தியமாயிருக்கும்படியாக தேவன் அதை உறுதிப்படுத்துவார்.

45எந்த மனிதனால் தன்னுடைய ஜெபத்தின் நாட்களில் வானத்தை அடைக்க முடியும் என்று எனக்குச் சொல்லுங்கள்? எக்ரோன்... எக்ரோனின் தேவனால் அதைச் செய்ய முடியுமா? எலியா செய்தது போல எக்ரோனின் தேவனால் செய்திருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஜீவிக்கிற தேவன் ஒருவர் எலியாவோடு இருந்தார் என்பதை அது காண்பித்தது. ஆனால், இந்த மனிதனோ மிகவும் அகந்தையுள்ளவனும், ஆடம்பரமுள்ளவனுமாயிருந்தான், அப்படிப்பட்ட காரியத்தைச் செய்வதற்கு, தான் இறங்கி வராதவனுமாயிருந்தான்.

46ஆனால், எலியாவோ தன்னை இடைக்கட்டிக் கொண்டு, அங்கே சென்று, பாதையில் நின்றான். இந்த வயதான, மயிர் உடையத் தரித்த நபர், அங்கே நின்று கொண்டிருந்தான். குருமார்களின் அங்கி மற்றும் அது போன்ற காரியங்கள் அவனிடம் இல்லாதிருந்தது, மாறாக உரோமம் நிறைந்த முகத்துடன், ஒருவேளை அவனது வழுக்கைத் தலை சூரிய வெப்பத்தால் சிவந்தும் (sunburned), அவனுடைய மயிர்கள் வெளியே ஒட்டிக்கொண்டும் இருந்திருக்கும், அப்படிப்பட்ட நிலையில் கதவருகே அவன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தால், அவனைக் கண்ட மாத்திரத்தில் நீங்கள் அவனைத் துரத்தி விடுவீர்கள். அந்த நிலையில் தான் அவன் அங்கே வந்து, பாதையில் நின்று கொண்டிருந்தான். முழுவதும் உரோமம் உள்ளவனாயிருந்ததாக வேதம் கூறுகிறது, ஒரு வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான், அது குருமார்களின் மேலாடைக்குச் சற்றும் பொருந்தாத வகையில் காணப்பட்டது. அவன் எந்த ஐக்கியத்திலிருந்து வந்திருக்கிறான் என்பதற்கான எந்த சான்றையும் அவனால் காண்பிக்க முடியவில்லை. ஆனால், சகோதரனே, தன்னுடைய இருதயத்தின் ஆழத்தில் அதைக் கொண்டிருந்து, அவன் தேவனோடு ஐக்கியத்தில் இருந்தான், ஏனென்றால், அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாயிருந்தான். அதுதான் திரும்ப வேண்டிய பாதையாகும். அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாயிருந்தான். அவனுடைய சிறிய வயோதிப மெலிந்த சரீரமானது கவரத்தக்க வகையில் இல்லாதிருந்தது, இருப்பினும் தேவன் வாசம் செய்ததான ஒரு இருதயம் அதனுள்ளே துடித்துக் கொண்டிருந்தது.

47அவன் சரியாக, பாதையில் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, அவர்கள் வருவதை கவனிக்கும்படி நின்று கொண்டிருந்தான். சரியாக அவர்கள் வரும் பாதையில் நின்று கொண்டிருந்தான். அவர்கள் அங்கே சேர்ந்தவுடன், அவன் ஒருவேளை பாதையின் குறுக்காக சென்று அங்கே நின்றிருப்பான். அவன், "திரும்புங்கள், திரும்பிச் சென்று அவனிடம்: 'ஏன் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறாய்? இஸ்ரவேலில் தேவன் இல்லையென்றா இப்படிச் செய்கிறாய்? விசாரிக்கும்படி அவனுக்கு தீர்க்கதரிசி இல்லையா?' என்று கேளுங்கள். அவன் இதைச் செய்தபடியால் அவனிடம்: 'கர்த்தர் உரைக்கிறதாவது: அவன் தன் கட்டிலிலிருந்து இறங்குவதில்லை' என்று சொல்லுங்கள்" என்றான்.

48ஓ, என்னே! யார் அதைக் குறித்து என்ன செய்தாலும், தேவன் அவருடைய வழியிலே கிரியை செய்வார். தேவன் அதைச் செய்யத்தான் போகிறார், அவர் அதை அவருடைய சொந்த வழியிலேயே செய்யப் போகிறார். நாம் அதை நிறுத்த முடியாது. நம்மால் அதை தடுக்கவும் முடியாது, அவ்வளவுதான். எப்படியாயினும், அவர் அதைச் செய்யத்தான் போகிறார். தேவன் ஒரு சபையைப் பெற்றுக்கொள்ளப் போகிறார், அவர் பெற்றுக் கொள்ளமாட்டார் என யார் கூறினாலும், எத்தனை அவிசுவாசிகள் எழும்பினாலும் அதைக் குறித்து எனக்கு கவலையில்லை, கரைதிரையற்ற ஒரு சபையை தேவன் பெறத்தான் போகிறார், அது அங்கே இருக்கத்தான் போகிறது. அவர் அதைச் சொல்லி முடித்தார் (He has done said He was). ஆ! நாம் அதன் பாகமாக இருக்கப் பாடுபடுவோம், அவ்வளவே. அவர், தேசங்களுக்கிடையே பிரசங்கிமார்களை பிரசங்கிக்கும்படி அனுப்பலாம், மேலும், எல்லாரும் அவர்களைப் புறக்கணித்து, அவர்களைச் சிறைச்சாலையில் அடைத்து, பட்டணத்திலிருந்து வெளியேற்றலாம். (இருப்பினும்) அவர் சபையை பெற்றுக் கொள்ளத்தான் போகிறார். வயோதிப யோவான் சொன்னது போல, "தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்." தேவன் இன்னும் தேவனாகவே இருக்கிறார். அவரால்...

49சபையானது, மத்தியாவைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தவறிழைத்த போது, அவர் அந்த வயதான, வளைந்த மூக்கு கொண்ட, கோபக்கார யூதனாகிய பவுலை எடுத்து, "நான் அவனைக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் என்பதை உங்களுக்கு காண்பிக்கப் போகிறேன்" என்றார். அவர்கள் எல்லோரைக் காட்டிலும், ஒரு மகத்தான அப்போஸ்தலனாக அவர் அவனை ஏற்படுத்தினார், ஏனென்றால், அது ஏதோவொன்றை நடப்பித்த தேவனுடைய ஒரு கிரியையாய் இருக்கிறது.

50இப்பொழுது, இந்த தீர்க்கதரிசி கர்த்தருடைய நாமத்தினால் பேசி, அவனைத் திரும்ப அனுப்புகிறதை நாம் காண்கிறோம். அந்த இராஜா, "எப்படிப்பட்ட மனுஷன் உங்களைத் தடுத்து நிறுத்தினான்?" என்று கேட்டான். "வேடிக்கையான தோற்றம் கொண்டு, முழுவதும் உரோமம் நிறைந்தவனாய் (தமிழ் வேதாகமத்தில், 'மயிர் உடையைத் தரித்து' என்று உள்ளது மொழிபெயர்ப்பாளர்), வார்க்கச்சையை தன் அரையிலே கட்டிக் கொண்டிருந்தான்" என்றார்கள்.

51அப்பொழுது அவன், 'அது திஸ்பியனாகிய எலியாதான்" என்றான். ஏதோ காரியம் தவறாயிருக்கிறது என்பதை அவன் அறிந்து கொண்டான். அவன் மரணத்தருவாயில் இருப்பதை அறிந்து கொண்டான். எலியா திரும்பி வந்து, "கர்த்தர் உரைக்கிறதாவது: அவன் கட்டிலில் இருந்து இறங்குவதில்லை என்று சொல்லுங்கள்" என்று சொன்னபோது, ஓ, என்னே! அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது.

52ஜனங்கள் இன்று கேள்வி எழுப்புகின்றனர். அதாவது, அது ஒரு -- ஒரு நோயாளி மருத்துவரிடம் வந்து, அந்த மருத்துவர் நோயாளியினுடைய நோய்க்கு மருந்தைப் பெற்றிருந்து, அந்த நோய்த்தடுப்புக்கான மருந்தை, அந்த நோயாளி எடுக்க மறுப்பதைப் போல் இருக்கிறது. மேலும், மருத்துவரின் பரிந்துரையுடன் அவன் ஒன்றிப்போகாதவரை, அவன் நிவாரணத்திற்கு மிக அருகில் வந்திருந்தும்கூட மரித்துப் போகலாம், ஏனென்றால், அவன் அந்த நிவாரணத்தை மறுத்துவிட்டான்.

53மேலும், சபையிலும் அதேக் காரியம்தான் இருக்கிறது. இப்பொழுது, அவர்கள் பீடத்தண்டை வந்தும் பாவியாக மரிக்கின்றனர், அவிசுவாசிகளாக மரிக்கின்றனர். அங்கே நிவாரணம் இல்லை என்பதினால் அல்ல. அல்ல. அங்கே கீலேயாத்திலே ஒரு பிசின் தைலம் உண்டு, ஆனால், அதுவோ ஜனங்களின் சொந்த பிடிவாதமான சித்தமாயிருக்கிறது. அங்கே பரிசுத்த ஆவி நிறைந்து காணப்படுகிறார், ஆனால், அதை வேண்டாம் என்று சொல்வது ஜனங்களே.

54பிணியாளிகளுக்கே வைத்தியன் தேவை என்று இயேசு சொன்னார், ஆனால், வைத்தியன் வந்தும், பிணியாளி அந்த வைத்தியனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது என்னவாயிருக்கும்? அப்பொழுது வைத்தியனால் என்ன நன்மையைச் செய்யக்கூடும்? நமக்கு ஒரு வைத்தியன் தேவை, மேலும், பிணியாளி அவருடைய மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால், இது ஒரு நோய்வாய்ப்பட்ட உலகமாய் இருக்கிறது, ஒரு நோய்வாய்ப்பட்ட காலத்தில், ஒரு நோய்வாய்ப்பட்ட சபை, சரி.

55எனவே, ஒரு பிணியாளி வைத்தியனின் அருகில் இருந்து மரித்துப் போவானேயாகில், அந்த மருத்துவர் நிவாரணத்திற்கான மருந்தைப் பெற்றிருந்தார் என்றும், அவனுடைய - அவனுடைய சுகமளித்தலுக்கான மருந்தைப் பெற்றிருக்கிறார் என்பதை அந்த மருத்துவர் நிரூபித்தால், நீங்கள் அவரைக் குற்றப்படுத்த முடியாது. இப்பொழுது அந்த பிணியாளி, வாசற்படி வரை வந்து உட்கார்ந்து, "இப்பொழுது, நான் உள்ளே செல்லப் போவதில்லை" என்கிறான். ஆனால், நிவாரணமோ உள்ளே தான் இருக்கிறது!

56நல்லது, இப்பொழுது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட வியாதியைப் பெற்றிருக்கிறீர்கள். அந்த வியாதியை அழிக்கக்கூடிய விஷத்தை (poison மருந்தை) அவன் அறை முழுதும் பெற்றிருக்கிறான். அது அந்த வியாதியை விரட்டும் ஒரு விஷமுறிவாயிருக்கிறது. இங்கே மற்றவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் சுகமடைந்து விட்டார்கள், அவர்களை நோக்கிப் பாருங்கள். அவர்கள் அந்த வியாதியைப் பெற்றிருந்தார்கள், இனி அவர்களுக்கு அந்த வியாதி இருப்பதில்லை. மேலும், மருத்துவர் எண்ணற்ற மருந்துகளைப் பெற்றிருக்கிறார், நீங்கள் வாசற்படியில் அமர்ந்து, "இவ்வளவு தூரம் நான் வந்திருக்கிறேன், நான் சுகமாக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினால், அவர் வெளியே வந்து வைத்தியம் பார்க்கட்டும்" என்கிறீர்கள். ஓ, இல்லை, இல்லை, இல்லை. அப்படியல்ல. இல்லை, நீங்கள் வாசற்படியிலேயே மரித்துவிடுவீர்கள், அது மருத்துவரின் தவறல்ல, அது மருந்தின் குறைபாடுமல்ல. அது அந்த மருந்தை எடுக்கக்கூடாது என்கிற அந்த ஜனங்களின் பிடிவாதமான சுயசித்தமேயாகும்.

57மேலும், சபையும் அவ்விதமேயுள்ளது. நாம் அநேக வேதவாக்கியங்களைப் பெற்றிருக்கிறோம், சபையை நேராக்குகிற காரியத்தை நாம் பெற்றிருக்கிறோம், ஐம்பது வருடங்களுக்கு முன்பதாக இருந்த நிலைக்கு உங்களைக் கொண்டு செல்லத்தக்கதான காரியத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம், இந்த வியாதிகளிலிருந்து ஒரு விடுதலை, இந்த ஆவிக்குரிய பிணிகளிலிருந்து நீங்கள் சுகமடைய வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள், கட்டாயம் அதைப் பெற வேண்டும்.

58இப்பொழுது, இது மிகவும் பயங்கரமான காரியம், தற்பொழுது, நாம், தேசத்தில் கொண்டிருந்த அந்த சால்க் தடுப்பூசியை (Salk vaccine), ஒவ்வொருவரும், இளவயது முதல் முதியோர்வரை அனைவரும், அந்த கொடிதான போலியோவிலிருந்து தப்பித்துக் கொள்ள தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் அதை செலுத்திக் கொண்டனர். அவர்கள் எப்படி அதை அவர்கள் எப்படி அதைச் செய்தனர்?

59நீங்கள் பாருங்கள், மருத்துவரின் மருந்தானது சில மக்களுக்கு அது கிரியை செய்யும், ஆனால், வேறு சிலருக்கு அது கிரியை செய்யாது என்பதை நீங்கள் கண்டறிகிறீர்கள். ஏனென்றால், எல்லாரும் ஒன்றுபோலவே உண்டாக்கப் படவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது, நாம் பெனிசிலின் மருந்தைப் பெற்றிருக்கிறோம். நான் என்னுடைய சட்டைப் பையில் ஒரு அட்டையைக் கொண்டு செல்வேன், எனவே, எனக்கு ஏதாகிலும் விபத்து நேரிட்டால், நிச்சயமாக மருத்துவர் எனக்கு பெனிசிலின் மருந்தை கொடுக்க மாட்டார், அது என்னை கொன்றுவிடும். எனவே, அது சில மக்களை கொன்று போடும், சிலருக்கு உதவி செய்யும், ஏனென்றால், இந்த மருந்து வகையானது (serum) அனைத்து மக்களிடமும் ஒரே விதமாக செயல்படாது.

60ஒரு மருந்தை அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்று எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அவர்கள் புத்தகங்களை வாசித்து, வேதியியலாளர்கள் சென்று சில நுண்ணுயிர்களை எடுத்து, வேறுபட்ட விஷங்களை அவர்கள் கலந்து, நோயாளியை கொல்லாத வகையில், அதேச் சமயம் நோயின் கிருமியை கொல்லத்தக்கதான ஒரு மருந்தின் சூத்திரம் வரும் வரைக்குமாக அதைச் செய்கின்றனர். பின்னர், அவர்கள் அதை ஒன்றுச் சேர்த்து, அவர்கள் சென்று ஒரு கினிப் பன்றியை (guinea pig: சோதனைப்பன்றி -- மொழிபெயர்ப்பாளர்) கொண்டு வந்து ஒரு நீளமான ஊசியை எடுத்து, கினிப் பன்றியின் உள்ளே செலுத்தி, முழுமருந்தையும் உள்ளே செலுத்துவார்கள். பின்னர், இந்த சோதனைப் பன்றி அதற்குப் பிழைக்கும் என்றால், பின்னர் அவர்கள் அதை உங்களுக்குள் செலுத்தி, நீங்கள் அதற்கு பிழைக்கின்றீர்களா என்று சோதிப்பார்கள். நல்லது, இப்பொழுது, அது சரிதான். அவ்விதம் செய்வதில், அவர்கள் மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறார்கள், பாருங்கள், ஆனால், ஜனங்களிடம் அதைப் பயன்படுத்த அந்த வழியையே அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

61இப்பொழுது, எல்லாரும் கினிப் பன்றியைப் போலவே உண்டாக்கப்படவில்லை என்று நீங்கள் காண்கிறீர்கள். ஆகவே, அது அது அனைத்து நபர்களுக்கும் கிரியை செய்யாது. ஆனால், நான் ஒன்றை உங்களுக்குக் கூற விரும்புகிறேன்: தேவனுடைய தடுப்பூசியானது அனைவரிடமும் கிரியை செய்யும். அது ஒவ்வொருவரிடமும் கிரியை செய்யும், அதை எடுத்துக்கொள்கிற ஒவ்வொருவருக்கும் அது அது உதவி செய்யும்.

62"கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி, வியாதி மற்றும் பெலவீனத்திலிருந்து சொஸ்தமடையாமற்போனாள்?" என்ற கேள்வியை தேவன் கேட்கிறார். அது சபையைப் பற்றியதாக இருக்கலாம். 'என் ஜனமாகிய குமாரத்தி' அது பழமைவாத சபையாயிருக்கிறது (Orthodox Church), அவர் நம்மிடம் நேரடியாக பேசிக்கொண்டிருந்தார். "என் ஜனமாகிய குமாரத்தி வியாதியிலிருந்து சொஸ்தமடையாமற்போனாள். நம்மிடம் இரணவைத்தியன் இல்லை என்ற காரணத்தினாலா? அல்லது நம்மிடம்... அவரிடம் தேவையான மருந்துகள் இல்லை என்ற காரணத்தினாலா? பிசின் தைலம் இல்லையா, இரணவைத்தியன் இல்லையா?"

63இப்பொழுது, இன்றைய மருத்துவ அறிவியலானது, நாம் அந்தக் காரியங்களுக்கு உயரிய மரியாதையைச் செலுத்துகிறோம். நாம் பெற்றிருக்கிற வேறுபட்ட குறைபாடுகளுக்கு, தக்க தடுப்பூசியை எடுத்துக் கொள்ளத் தவறும் பட்சத்தில், அது ஒரு அபாயகரமான காரியம். நீங்கள் அதை எடுத்துக் கொள்ளத் தவறினால், நீங்கள் ஒருவேளை மரித்துப் போகலாம் என்பதாக மருத்துவ அறிவியலால் நமக்கு கூறப்பட்டுள்ளது.

64நாம், பாவம் மற்றும் வியாதியின் நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் எப்பொழுதும் பெற்றிருந்ததைவிட அதிகமான வியாதிகளைப் பெற்றிருக்கிறோம், ஏனெனில், அங்கே அதிகமான பாவம் மற்றும் -- மற்றும் நாம் எப்பொழுதும் பெற்றிருந்ததைவிட அதிகமான காரியங்களைப் பெற்றிருக்கிறோம், அங்கிருந்துதான் வியாதி வருகிறது, பாவத்தின் விளைவுகள் வியாதியாயிருக்கிறது. நாம் எந்த வியாதியையும் பெறுவதற்கு முன்பாக, நம்மிடையே பாவம் இல்லாதிருந்தது. வியாதியைத் தொடர்ந்து பாவம் வந்தது, பாருங்கள், அதாவது, என்னை மன்னிக்கவும், வியாதி பாவத்தை பின்தொடர்ந்தது. அவர்கள் முதலாவது பாவத்தைப் பெற்றுக் கொண்டனர், பாவத்தின் பலனானது வியாதியைக் கொண்டு வந்தது. ஆகவே, இப்பொழுது, பாவம் அதிகரிக்க அதிகரிக்க, வியாதியானது பெருகுகிறது. எப்பொழுதும் இருந்ததைவிட சிறந்த மருத்துவர்களை நாம் பெற்றிருக்கிறோம், எப்பொழுதும் இருந்ததைவிட சிறந்த மருந்துகளை நாம் பெற்றிருக்கிறோம், எப்பொழுதும் இருந்ததைவிட அதிக மருத்துவமனைகளை நாம் பெற்றிருக்கிறோம், எப்பொழுதும் இருந்ததைவிட சிறந்த பயிற்சி பெற்ற நபர்களை நாம் பெற்றிருக்கிறோம், மேலும், எப்பொழுதும் இருந்ததைவிட அதிக வியாதிகளையும் நாம் பெற்றிருக்கிறோம். ஏன்? எப்பொழுதும் இருந்ததைவிட அதிக பாவத்தை நாம் பெற்றிருக்கிறோம். நாம் அதிகளவு ஜனத்தொகையை பெற்றிருக்கிறோம், மேலும், ஜனங்கள் பலுகிப் பெருகும்போது, பாவமும் வன்முறையும் (கூடவே) அமைகிறது.

65இந்த பெரிய நகரங்களை நீங்கள் எடுத்துக் கொண்டால், இந்த மதில்சூழப்பட்ட பட்டணங்களை நீங்கள் எடுத்துக் கொண்டால், நேற்று இரவு நாம் மதில்சூழப்பட்ட பட்டணங்களைக் குறித்துப் பேசினது போல, நீங்கள் அங்கே எப்பொழுதும் பாவத்தை பெற்றுக்கொள்கிறீர்கள். மேலும், மற்றொரு வகையான ஆவிக்குரிய மதில்சூழப்பட்ட பட்டணங்களுக்குள் நாம் செல்லும் போது, நீங்கள் எப்பொழுதும் அதனோடு எல்லாவற்றையும் கலந்து பாவத்தையும் சேர்த்துவிடுகிறீர்கள்.

66இப்பொழுது, மனிதனை கொல்லக்கூடிய முதல் காரியம் (no.1 killer) இருதயக் கோளாறு என்று மருத்துவர்கள் நம்மிடம் கூறுகிறார்கள் என்று நாம் காண்கிறோம். நல்லது, நான் மருத்துவரோடு உடன்படாமல் இல்லை, ஏனென்றால், நான் ஒரு மருத்துவர் கிடையாது, ஆனால், நான் ஒன்றைக் கூறுகிறேன், இருதயக் கோளாறு முதல் கொலையாளி இல்லை, பாவக் கோளாறே முதல் கொலையாளியாய் இருக்கிறது. பாவமே முதல் கொலையாளி, இருதயக் கோளாறு அல்ல. அநேகர் இன்றைக்கு, "சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் -- நீங்கள் -- நீங்கள் இந்தக் காரியங்களை மிகவும் கடினமாக கூறுகிறீர்கள், ஒவ்வொரு நாளும் நாங்கள் ஒரு சிறிதளவு பாவத்தைச் செய்ய வேண்டும், நாங்கள் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம்" என்கிறார்கள்.

67யாரோ ஒருவர், "சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் புகைப்பிடிப்பதைக் கடிந்து கொள்கிறீர்கள் என்று நான் கேள்விப்படுகிறேன்" என்கிறார். மனிதர்கள் நிச்சயமாக புகைப்பிடிக்கக் கூடாது என்று நான் நம்புகிறேன். ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதுமாக சுத்தமாயிருப்பதில், பரிசுத்தமாயிருப்பதில் நான் விசுவாசம் கொள்கிறேன். மேலும், அவர், "நாங்கள்... நான் புகைப்பிடித்தாக வேண்டும். நான் நான் சிறிதளவு புகைப்பிடிக்க வேண்டும், நான் அதைச் செய்ய வேண்டியவனாயிருக்கிறேன்" என்றார். மேலும் அநேகர், "நான் என்னுடைய வேலையில் தொடர்ந்து நீடிப்பதற்கு சிறிதளவு மதுபானம் அருந்தவேண்டியவனாய் இருக்கிறேன்" என்று கூறுவதை நாம் கேட்கிறோம்.

68ஸ்திரீகள், "என்னுடைய சபையில் என்னுடைய சமூக அந்தஸ்தை நான் நிலைநாட்டிக் கொள்வதற்கு இன்றைய போக்கிற்கான உடைகளை நான் அணிய வேண்டும், என்னுடைய மயிரை கத்தரித்துக் கொள்ள வேண்டியவளாய் இருக்கிறேன், நான் அவ்வாறு செய்யாவிட்டால், ஸ்திரீகள் என்னை மிகவும் வயதானவளைப் போல இருக்கிறாய் என்று கூறுவார்கள்" என்று கூறுவதை நாம் கேட்கிறோம்.

69என்னை மன்னியுங்கள், ஆனால் நான் ஒன்றைக் கூறப் போகிறேன்: அது பெந்தெகொஸ்தே விபச்சாரமாயிருக்கிறது, அது சரியே. அவர்கள் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள முயற்சி செய்யாததன் நிமித்தமாகவே அவர்கள் அதைச் செய்கின்றனர். பாவம் மற்றும் அதைப் போன்ற காரியங்களுக்கான தேவனுடைய மருந்தை (serum) அவர்கள் இன்னும் உபயோகப்படுத்திப் பார்க்கவில்லை, அது சரி.

70இப்பொழுது, திரும்ப வேண்டிய பாதையை நான் உங்களிடம் உங்களிடம் கூறப் போகிறேன். நீங்கள் திரும்பி வர விரும்புகிறீர்களா? நீங்கள் நிச்சயம் தடுப்பூசியைப் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவனுடைய பிசின் தைலத்தை, தேவனுடைய மருந்தை நீங்கள் நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் அதை வைத்திருக்கிறார், அது பாவத்திற்கான இரட்டிப்பு நிவாரணியாய் இருக்கிறது. அது இயேசுகிறிஸ்துவின் இரத்தமே. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால், தேவனுடைய சொந்தக் குமாரன் உங்களை பாவத்திலிருந்து கழுவி, சேவை செய்வதற்காக உங்களை நிரப்புகிறார். இந்தக் காரியங்கள் மூலமாக வருவதே நாம் திரும்ப வேண்டிய பாதையாயிருக்கிறது. நீங்கள் அந்தக் காரியங்களைச் செய்ய வேண்டியதில்லை, நீங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் அதைச் செய்வதற்கான காரணம்...

71யாரோ ஒரு ஊழியக்காரர் கொஞ்ச காலத்திற்கு முன்பு என்னிடம், "சகோதரர் பிரன்ஹாமே, நீங்கள் சொல்லும் இந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமானது சத்தியம் என்று நான் உண்மையாக விசுவாசிக்கிறேன்" என்றார். மேலும் அவர், 'எனது சபையானது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்து போதிக்கிறது, ஆனால், நாங்கள் நம்புவது என்னவென்றால், விசுவாசிக்கும் போதே, நாங்கள் விசுவாசிக்கும் அத்தருணத்திலேயே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதே. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு... அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது" என்றார்.

72அதற்கு நான், "அது உண்மைதான். ஆனால் தேவன், விருத்தசேதனத்தின் முத்திரையை அவனுடைய விசுவாசத்தின் உறுதிப்படுத்துதலாக அவனுக்குக் கொடுத்தார். நீங்கள் இதுவரை பரிசுத்த ஆவியைப் பெறாத பட்சத்தில், தேவன் உங்கள் விசுவாசத்தை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை" என்றேன். அது சரியானதே. நாம் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருக்கிறோம். அவர், "நான் அதைச் செய்தால், சகோதரர் பிரன்ஹாம்... நான் அதைச் செய்தால், நான் என் சபையிலிருந்து வெளியேற்றப்படுவேன்" என்றார். அதற்கு நான், "அதனால் என்ன? நானும் வெளியேற்றப்பட்டேன்" என்றேன். பின்னர் அவர், "நல்லது, நான்... என்னால் அதைச் செய்ய முடியாது" என்றார். நான், "ஏன் உங்களால் அதைச் செய்ய முடியாது? உங்களால் ஏன் செய்ய முடியாது என்று சொல்லுங்கள்" என்றேன். அதற்கு அவர், "(பிரசங்கிக்க) வேறு எங்கும் நான் கூட்டங்களைப் பெற்றுக் கொள்ள முடியாது" என்றார்.

73நான், "முட்டாள்தனம் (non-sense). தேவன் உங்களை சுவிசேஷத்திற்கு அழைத்தால், நீங்கள் பிரசிங்கிக்க அவர் ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறார், உங்களுக்குச் செவிசாய்க்கும் சிலரை அவர் பெற்றிருக்கிறார். நிச்சயமாக, கேட்பதற்கு யாராவது இருப்பார்கள்; தெரு முனையில் நில்லுங்கள்" என்றேன். "என்னைச் சிறையில் தள்ளுவார்கள்" என்றார். "அப்படியானால், சிறைக்காவலரிடம் பிரசங்கம் செய்யுங்கள்" என்றேன். அது சரியே. "யாருக்காவது." பவுல் அவ்விதமே செய்தான். அவர்கள் அனைவரும் இரட்சிக்கப்பட்டனர். ஆம் ஐயா!

74நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்கிறீர்கள், இல்லை, நீங்கள் செய்ய வேண்டாம். அவர்கள் அதைச் செய்வதற்குக் காரணம், அந்தத் தடுப்பூசியை அவர்கள் சோதிக்காததே ஆகும். அதற்கான தடுப்பு மருந்தை அவர்கள் இன்னும் எடுத்துக் கொள்ளவில்லை. அதைக் குணப்படுத்தும் ஒன்று உள்ளது, அது உங்களுக்கு ஏற்பட்ட பயத்தை குணப்படுத்தும். ஒரு ஸ்திரீயைப் போல உடை உடுத்தி, ஸ்திரீயைப் போல செயல்பட வைக்கும் ஒன்று இருக்கிறது. உங்களை ஒரு கிறிஸ்தவராக ஜீவிக்கச் செய்கின்ற ஒன்று இருக்கிறது, நீங்கள் நின்று ஒரு சாட்சியைக் கொடுக்கும்போது, வீட்டின் மேற்கூரைகள் தளர ஒரு அசைவை ஏற்படுத்தும் வகையில் உங்களை முற்றிலும் தேவனால் நிரப்பக்கூடிய ஒன்று இருக்கிறது. நீங்கள் மாத்திரம் அந்தத் தடுப்பூசியை எடுத்துக் கொள்வீர்களானால், ஆனால், நீங்கள் அந்த தடுப்பூசிக்குப் பயன்படும் மருந்தை எடுக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள்.

75உங்களுக்கு வியாதி வந்துவிட்டது, எனவே செய்யத்தக்கதான காரியம் ஒன்றே ஒன்று தான் உள்ளது, அதிலிருந்து விடுபட அதற்கான மருந்தை எடுத்துக் கொள்வதே. இயல்பான கிறிஸ்தவனின் ஆரோக்கியத்திற்குத் திரும்புவதற்கான வழி இதுதான். சபை நோய்வாய்ப்பட்டது, அது பெலவீனமாயுள்ளது, இரத்த சோகையைப் பெற்றுள்ளது, அது வீரியம் மிக்கது, இதற்கு பூமிக்குரிய எந்த சிகிச்சையும் இல்லை; கல்வி அதைச் செய்யாது. நாங்கள் அதை முயற்சித்திருக்கிறோம். ஸ்தாபனம் அதைச் செய்யாது. நாங்கள் அதை முயற்சித்திருக்கிறோம். நீங்கள் அதை இன்னும் மோசமாக்கிவிடுவீர்கள். திரும்புவதற்கான பாதை ஒன்றே ஒன்றுதான் உள்ளது, அது இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமே, தடுப்ப மருந்து, கிறிஸ்துவிடம் திரும்பி வாருங்கள். பரிசுத்த ஆவியிடம் திரும்பி வாருங்கள். நித்திய ஜீவனிடம் திரும்பி வாருங்கள். அதுவே நாம் திரும்பி வரும் பாதையாயிருக்கிறது.

76மக்கள், "ஜனங்களிடம் எனது தரத்தை நிலைநாட்டிக் கொள்ள நான் இதைச் செய்ய வேண்டும்" என்கின்றனர். நீங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை. அது ஒரு ஆழமற்ற தன்மையைக் காட்டுகிறது. அது ஒரு கோழைத்தனத்தைக் காட்டுகிறது. ஒரு போதகர், பிரசங்க மேடையில் நின்று, கிறிஸ்துவின் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்கிறார், ஏனென்றால், சில பிஷப்புகள் அவர்மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், மேலும், "நீங்கள் இதைச் செய்ய வேண்டும், இல்லையெனில் ஐக்கியத்தை விட்டு நாங்கள் உங்களை வெளியே தள்ளுவோம்" என்கிறார்கள். நீங்கள் ஒரு கோழையாயிருக்கிறீர்கள். அங்கே நின்று, விளைபயன் என்னவாக இருந்தாலும், சத்தியத்தைக் கூறுங்கள்.

77அன்று காலை சனகிரீப் சங்கத்திற்கு முன்பாக நின்ற, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட நமது சிறிய சிறிய சகோதரன் ஸ்தேவானை நோக்கிப் பாருங்கள். அப்போஸ்தலர் நடபடிகளின் 7-வது அதிகாரத்தில், "இஸ்ரவேலின் மக்களே, யூதேயாவில் வசிப்பவர்களே" என்று கூறி, "எப்படி நம்முடைய பிதாக்கள் மெசொப்பொத்தாமியா நாட்டிலிருந்து வெளியே வந்தார்கள்" என்று அவர்களிடம் பேசத் தொடங்கினான். அவன் கட்டப்பட்டிருந்தவனாக பேசத் தொடங்கினான். பரிசுத்த ஆவியானவர் அவன் மேல் இறங்கினார். அவன்... அவன் பிரகாசித்தான், அவன் முகம் தேவதூதன் முகம் போல பிரகாசித்தது. அவன், "வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்" என்றான். வியூ! தான் எங்கே நிற்கிறான் என்பதை அவன் அறிந்தவனாயிருந்தான், தனது ஸ்தானத்தை அறிந்திருந்தான். அவனது முகம் ஒருவேளை இங்கே இருக்கிற ஒரு விளக்கைப் போல பிரகாசிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் ஒரு தூதனானவன், தான் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை அறிவான். ஒரு தேவதூதன் என்பவன் தேவனிடமிருந்து கட்டளை பெற்ற ஒரு செய்தியாளன். அவன் தலைகுனிய வேண்டியதில்லை, அவன் மிகச் சரியாக காரியங்களை அறிந்திருக்கிறான். ஐந்து லட்சம் மதகுருக்களாகிய ஊளையிடும் ஓநாய்கள் அந்த மனிதனை, அவன் செய்யும் விதத்திற்காகவும், அவன் பிரசங்கித்த செய்திகளுக்காகவும் கண்டனம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஸ்தேவான் அங்கே நின்று, "இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்" என்று கூறினான். செங்கடலைத் திறந்த தேவனிடம் திரும்பக் கூடிய பாதையை அவன் அவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தான்; எகிப்தில் வாதைகளை பொழிந்தருளின தேவனிடம் திரும்ப வேண்டிய பாதையை அவன் அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.

78ஆனால், அவர்களோ திரும்ப வேண்டிய பாதையை உபயோகிக்க விருப்பங்கொள்ளவில்லை, ஆகவே, அவர்கள் அந்த செய்தியாளனை கல்லெறிந்தனர். அந்த வழியில் நீங்கள் தப்பிக்க முடியாது, அது இன்னும் தொடர்கிறது. சாட்சி பகர்ந்த ஒருவனாகிய பவுல் மிக விரைவில் அவர்களில் ஒருவராக மாற இருக்கிறான். அது சரி. ஆம். அவர்கள் இன்னும் அந்த மருந்தை முயற்சித்துப் பார்க்கவில்லை.

79அவர்கள் அதைச் செய்யக் காரணம் என்ன தெரியுமா? அந்தப் புதிய பிறப்பைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள். உண்மையான புதிய பிறப்பை நான் குறிப்பிடுகிறேன். ஓ, எல்லோரும், "நிச்சயமாக, நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதை நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா!" என்று சொல்கிறார்கள். ஆம்! ஆனால், உண்மையான பிறப்பு என்று வரும்போது, கைகுலுக்குவதையோ, பாரம்பரியமான கோட்பாடுகளைச் சொல்வதையோ அல்லது வேறு ஏதாவதையோ புதிய பிறப்பு என்று விசுவாசிக்கிறார்கள். அதைத்தான் புதிய பிறப்பு என்று அழைக்கிறார்கள். அது புதிய பிறப்பு அல்ல. அவர்கள் புதிய பிறப்பைக் கண்டு பயப்படுகிறார்கள்.

80கவனியுங்கள். எந்த ஒரு பிறப்பும் அலங்கோலமே. அது ஒரு பன்றிக்குடிலில் நிகழ்ந்தாலும், அல்லது எங்கிருந்தாலும், எந்த ஒரு பிறப்பும் ஒரு அலங்கோலமே, புதிய பிறப்பும் அப்படித்தான். நீங்கள் எப்பொழுதும் செய்ய நினைக்காத விஷயங்களை அது உங்களைச் செய்ய வைக்கும், ஆனால், அது ஜீவனைக் கொண்டுவருகிறது. நீங்கள் ஜீவனைப் பெறுவதற்கு முன்பு, நீங்கள் மரணத்தைப் பெற வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். ஒரு விதையானது தன்னைப் பிரதியுற்பத்தி செய்வதற்கு முன், அது மரிக்க வேண்டும், மரிப்பது மட்டுமல்ல, அழுகவும் வேண்டும், அதிலிருந்து புதிய ஜீவன் முளைத்தெழும்ப, அது மரிக்க வேண்டும், மேலும், அது அழுகிப் போக வேண்டும். ஒவ்வொரு பாவியும் அப்படித்தான். மேலும், ஒவ்வொரு மனிதனும், அவன் எவ்வளவு உயர்வாகப் படித்திருந்தாலும், எவ்வளவு மெருக்கூட்டப்பட்டிருந்தாலும், சபையில் எத்தனைப் பட்டங்கள், இன்ன பிறவற்றை பெற்றவனாயிருந்தாலும், எத்தனை எத்தனைப் பட்டங்கள் பெற்றிருந்தாலும், எத்தனை எத்தனைக் கல்லூரிகளில் படித்திருந்தாலும், அவன் தன்னுடைய சொந்த கோட்பாட்டிற்கு மரிக்க வேண்டும், அவன் தனக்குத் தானே மரித்தவனாயிருக்க வேண்டும், பரிசுத்த ஆவியால் மறுபடியும் பிறந்தவனாயிருப்பதற்காக அவன் ஒவ்வொன்றிற்கும் மரித்தவனாயிருக்க வேண்டும். அது அவனை அழச் செய்யும், சத்தமிட்டு அழச் செய்யும் (boo-hoo), அந்நிய பாஷையில் பேச வைக்கும், மேலும் கீழும் குதிக்கச் செய்யும், ஒரு பித்து பிடித்தவனைப் போல நடக்கச் செய்யும், ஆனால், அவனோ ஒரு புதிய ஜீவனைப் பெற்றுள்ளான். அவர்களோ, புதிய பிறப்பைக் கண்டு பயப்படுகிறார்கள். புதிய பிறப்பு என்பது ஒரு அலங்கோலமே.

81இப்போது அவர்கள் புதிய பிறப்பு மற்றும், ஓ, மற்ற எல்லாவற்றையும் குறித்து, 'ஓ! நிச்சயமாக, நான் மறுபடியும் பிறத்தலில் விசுவாசம் கொண்டுள்ளேன்" என்கிறார்கள். மேலும், அவர்கள் மறுபடியும் பிறந்திருப்பதாகக் கூறி, வார்த்தையை மறுதலிக்கிறார்கள். அது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது" என்று அவர் சொல்லியிருக்கும் போது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாகக் கூறிக்கொண்டு, அது எப்படியிருக்கும் என்று வேதத்தில் தெளிவாக போதிக்கிற வேதவசனங்களை எடுத்துக் கொண்டு, அவர்கள், 'ஓ, அது வேறொரு காலத்திற்கானது" என்று கூறுகிறார்கள். உங்களில் இருக்கிற பரிசுத்த ஆவியானவர் அது மற்றொரு காலத்திற்கானது என்று கூறுவாரா? அவர் பொய்யுரைக்க முடியாது. மேலும், உங்களுக்குள் இருக்கும் ஆவியானது அது சத்தியமென்று ஏற்க மறுக்கமானால், அது பரிசுத்த ஆவி இல்லை, ஏனென்றால் வார்த்தையை எழுதியது பரிசுத்த ஆவியே, ஆமென். அதை எப்படி பொருத்துவது என்று எனக்குத் தெரிந்தமட்டில் அது அவ்வளவு உறுதியாயிருக்கிறது.

82அது ஜீவனைக் கொண்டுவர மரணத்தை எடுத்துக் கொள்கிறது. உங்கள் சுயசிந்தைக்கு நீங்கள் மரிக்க வேண்டும், உங்கள் வேத சாஸ்திரங்களுக்கு நீங்கள் மரிக்க வேண்டும், உங்கள் சொந்த மனுஷீக பாதைகளுக்கும், உங்கள் சுயத்துக்கும் நீங்கள் மரிக்க வேண்டும்; நீங்கள் ஒரு புதிய படைப்பாக, ஒரு புது சிருஷ்டியாக, மறுபடியும் உண்டாக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் அவ்விதம் ஆவதற்கு முன்பாக, நீங்கள் ஒன்றிற்கு மரித்து, மற்றொன்றில் பிறக்க வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு பகுதிகளிலும் இருக்க முடியாது. அது ஒரு அலங்கோலத்தை கொண்டு வருகிறது. மேலும், அது அலங்கோலத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், நீங்கள்... நீங்கள் புதிய ஜீவனை பெற்றிருக்கிறீர்கள். அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ண போகிறது? ஆனால், நீங்கள் அதைச் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள்.

83குடற்காய்ச்சலுக்கு (typhoid) நம்மால் தடுப்பூசி கூட போட முடியாத காலம் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் இதைப் பேசிக்கொண்டிருக்கும்போது இங்கே அமர்ந்திருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் என் தோழியான ஒரு செவிலியரைப் பார்க்கிறேன். ஆனால், அது சரிதான், அது சகோதரி டௌ (Sister Dauch), டைபாய்டு காய்ச்சலுக்கு தடுப்பூசி கிடைக்காத காலம் இருந்தது. ஆயிரக்கணக்கானோர் அதனால் மரித்தனர். போலியோவுக்கு தடுப்பூசி கிடைக்காத காலம் இருந்தது. பல்லாயிரக்கணக்கான சிறு குழந்தைகள் மரித்துப்போயின. ஆனால், இப்போது அது போன்ற மரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில், நம்மிடம் தடுப்பூசி இருக்கிறது. அது சரியே, நல்லது.

84இப்போது, தேவனுடைய மருந்து என்று அழைக்கப்படுகின்ற இந்த மருந்தை (toxin) அல்லது அந்த பிசின் தைலத்தைப் பெற்றிருந்த ஒரு காலம் இருந்தது. அது பரிபூரணமானதாக இல்லாதிருந்தது, ஏனெனில், இது இவ்வாறு அழைக்கப்படுகிறது... இது வெள்ளாடு, செம்மறி, கால்நடை மற்றும் அதைப் போன்றவற்றின் இரத்தமாக இருந்தது. அது பாவத்தை நீக்கவில்லை; அது வெறுமனே பாவத்தை மூடினது. மனிதன் வருடா வருடம் சென்று தனது பாவ அறிக்கையைச் செய்ய வேண்டியவனாயிருந்தான். அப்படிப்பட்டதான ஒரு காலம் இருந்தது, சரியாக. ஆனால் இப்போது, ஆராதனை செய்கிறவன் ஒருமுறை சுத்தமாக்கப்பட்டபின் பாவமுண்டென்று உணர்த்தும் மனசாட்சி அவனிடம் இருக்காது. மேலும், பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். எதில் அவிசுவாசம்? வார்த்தையில். நிச்சயமாக. நீங்கள் தேவனை விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவருடைய வார்த்தையை மறுதலித்தால், ஏன், நீங்கள் அவரை விசுவாசிக்கவில்லை என்றே அர்த்தம். "சகோதரர் பிரன்ஹாமை நான் நம்புகிறேன்" என்று நீங்கள் கூறி, "ஆனால், அவர் தவறாயிருக்கிறார். அவர்..." என்பதாகக் கூறுவீர்களானால் அது எப்படியாயிருக்கும்? நல்லது, நீங்கள் எப்படி அதைச் செய்ய முடியும்? உங்களால் அவ்விதம் செய்ய முடியாது. நீங்கள் என்னை நம்பாத காரணத்தால், நீங்கள் தவறாயிருந்தீர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் தேவனை விசுவாசிப்பதாகக் கூறிக் கொண்டு, அவருடைய வார்த்தையை மறுதலித்தால், நல்லது அப்பொழுது நீங்கள் தேவனை விசுவாசிக்கவில்லை என்பதே ஆகும். ஏனென்றால், தேவன் அவருடைய வார்த்தையாயிருக்கிறார். நீங்கள் அவ்விதம் செய்ய முடியாது. நீங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். அதுவே திரும்பிச் செல்ல வேண்டிய பாதையாயிருக்கிறது, வார்த்தை -பாதையில் திரும்புதல், வார்த்தையே தேவன்.

85இப்போது, நாம் அதைக் கண்டடைகிறோம். ஒரு முறை அந்த தடுப்ப மருந்தானது மிகவும் சரியானதான ஒன்றாக இல்லாதிருந்தது என்பதை நாம் காண்கிறோம். பாவமுண்டென்று உணர்த்தும் மனசாட்சி எப்பொழுதும் இருந்தது, அவன் வருடா வருடம் வந்து தன்னுடைய பலியைச் செலுத்த வேண்டியதாயிருந்தது. ஆனால், இப்போது எபிரெயரில், ஆராதனை செய்கிறவன் ஒருமுறை சுத்தமாக்கப்பட்டபின் பாவமுண்டென்று உணர்த்தும் மனசாட்சி அவனிடம் இருக்காது என்று நம்மிடம் கூறுகிறது, அல்லது வேறுவிதமாகக் கூறினால், பாவம் செய்யவேண்டுமென்கிற வாஞ்சை இனி அவனுக்கு இருக்காது, முழுக் காரியமும் அவனை விட்டு நீங்கிப் போய்விட்டது. இனிமேல் இருக்காது... தினமும் பாவம் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் இவற்றையெல்லாம் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் மனப்பூர்வமாய் விரும்புவதால் அதைச் செய்கிறீர்கள். நீங்கள் மனப்பூர்வமாய் விரும்புவதற்குக் காரணம், நீங்கள் இன்னும் மரிக்கவில்லை. ஓ! சகோதரனே, அது எரிச்சலூட்டுகிறதாயிருக்கிறது என்று நான் அறிவேன், ஆனால், அது அருமையானது. நீங்கள் எப்பொழுது உங்களுக்கு மரிக்கின்றீர்களோ, அப்பொழுதே நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாக மாறுகிறீர்கள். பின்னர் இந்த காரியங்களெல்லாம் போய்விட்டிருக்கும்.

86நீங்கள் அதைப் பெறுவதற்கு முன்னமே, அவைகளைப் பெற்றுக் கொண்டதைப் போல நடக்க முயற்சித்தால், அன்றொருநாள் நான் சொன்னதைப் போல, ஒரு காகம் தன் சிறகுகளில் மயில் இறகுகளை சொருகிக் கொண்டு, "பார்த்தீர்களா, நான் ஒரு -- ஒரு மயில்" என்று கூறினதைப் போல இருக்கிறது. அது மயிலல்ல. அது அதற்கு உட்புறமாக இருந்துகொண்டு, உள்ளிருந்து வெளியே வளர வேண்டிய ஒன்றாயிருக்கிறது.

87அதே விதமாகத்தான் பரிசுத்த ஆவியானவரும் இருக்கிறார். அது நீங்கள் இகழ்வதற்கோ அல்லது அதைப் போன்ற ஒன்றை செய்வதற்கானதோ அல்ல. அது ஒரு புதிய பிறப்பாயிருக்கிறது. நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியின் இந்த நற்பண்புகளானது உள்ளிருந்து வெளியே வர வேண்டியதாயிருக்கிறது. உலகமும் பாவமும், மயிரைக் கத்தரிப்பதும், வர்ணம் தீட்டுவதுமாகிய வார்த்தைக்கு முரணான காரியங்கள் வெளிவரும்போது, அங்கே பரிசுத்த ஆவியானவர் இல்லை என்பதையே அது காட்டுகிறது, மேலும், அது ஒரு நேரடி ஆதாரமாயிருக்கிறது. எனவே, நீங்கள் அதை என்னவென்று அழைப்பீர்கள்? பெந்தெகொஸ்தே விபச்சாரம், அது மிகவும் சரியே, பரலோகத்தின் தேவனுக்கு ஆவிக்குரிய வேசித்தனம் செய்தல். என்னே ஒரு அவமானம்! இது ஒரு வெட்கக்கேடான செயல். ஓ, அது கொடுமை! ஆம் ஐயா.

88ஒரு மனிதன் அல்லது ஒரு மருத்துவர் தனது நோயாளியை அவனது வியாதியிலிருந்து காப்பாற்றும்படியான நோய்க்காப்பானை கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது, அதை முதலில் ஒரு கினிப் பன்றியில் செலுத்தி, அது வேலை செய்யுமா என்று பார்க்கிறான் என்று காண்கிறோம். ஆனால், தேவன் அவ்விதம் செய்யவில்லை. அவர் ஒரு கினிப் பன்றியை சோதனைக்குட்படுத்தவில்லை; அவர் அதை தனக்குத்தானே பயன்படுத்தினார். ஒரு நோய்த்தடுப்பு மருந்தை பரிசோதனை செய்ய விரும்புகிற ஒரு நல்ல மருத்தவர், அது கொல்லுமா அல்லது குணப்படுத்துமா என்று அவருக்குத் தெரியாவிட்டால், அதை வேறு யாருக்காவது போடுவதற்கு முன்பு அவர் அதைத் தனக்குத் தானே முதலில் பரிசோதிக்க வேண்டும்.

89மேலும் தேவன், அந்த நோய்த்தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் வண்ணமாக, ஒரு இனத்தான் மீட்பராக, மாம்சமாகி நம்மிடையே வாசம் செய்ய வேண்டியவராயிருந்தார். ஆமென். தேவன் மனிதனாக மாறவேண்டியவராயிருந்தார், அதினிமித்தம் அவர் நோய்த்தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள முடியும். யோர்தானில் அவர் தன்னுடைய தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் (ஆமென்), அவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்று ஆற்றை விட்டு கரையேறின போது, அந்த தடுப்பு மருந்து கீழே வந்தது. ஒரு புறாவைப் போல, அந்த மருந்தானது பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, "இவர் என் நேச குமாரன், இவரில் வாசமாயிருக்கப் பிரியமாயிருக்கிறேன்" என்றது. அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

90தடுப்பூசி செலுத்தப்பட்ட உடனேயே, சோதனை வந்தது. ஒவ்வொரு மனிதனும், அவன் பரிசுத்த ஆவியைப் பெற்று, தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட உடனேயே, நரகத்திலுள்ள ஒவ்வொரு பிசாசும் அவனுக்கு எதிராக எழும்புவான். உங்களது சொந்தக் குடும்பம் கூட, உங்களைக் கீழே தள்ளி விடலாம்; உங்கள் கணவர், உங்கள் மனைவி, உங்களது போதகர் கூட; உங்களை ஏளனம் செய்து, நகைத்து, உங்களை சபைக்குப் புறம்பாக்கி விடுவார்கள்; அது ஒரு சோதனை, ஆமென்.

91தேவன் மாம்சமானார், தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும் பொருட்டு நம்மில் ஒருவரானார், பாவத்திற்கு உட்பட்டவராக மாறினார் (become subject to sin). அவர் ஒரு ஸ்திரீயின் பிறப்பாயிருந்தபடியால், நம்மைப் போலவே அவரும் எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டார். அவர் ஆவியின் ரூபத்தில் இருக்கும் வரை சோதிக்கப்பட முடியாது. சோதிக்கப்படும் பொருட்டு, தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் பொருட்டு, தடுப்பு மருந்துக்குப் பயன்படும் மூலப்பொருளை (toxin மருந்துக்கு பயன்படும் விஷம்) எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர் மாம்சமானவராக ஆக வேண்டியிருந்தது. அவருடைய மருந்தானது சரியானதாக இருந்தது என்பதை நிரூபிக்க விரும்பினார். ஆமென். ஆகவே, யோவான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்த அந்நாளிலே, அந்த மருந்து பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, அவரை நிரப்பின போது, அவர் அதை எடுத்துக் கொண்டார்.

92பின்னர், சோதனை வந்தது. பரிகசிப்பதற்கான ஒவ்வொரு சோதனையிலும் அது (தடுப்பு மருந்து) தாங்கி நின்றது, உலகத்தின் ராஜ்யங்களையும், உலகத்தையும் அதின் சகல ராஜ்யங்களையும் அவருக்குக் கொடுப்பதாக பிசாசு சொன்னபோது, அந்த தடுப்பு மருந்து தாங்கி நின்றது, அது உட்செலுத்தின பிரகாரம் தரித்து நின்றது (it stayed put). உலகம் அவரை உற்று நோக்கினது, சபை அவரை உற்று நோக்கினது, குறை கூறுபவர்கள் அவரை உற்று நோக்கினார்கள், பிசாசு அவனால் முடிந்தவரை அவர் மீது சோதனையை வைத்தான், இருப்பினும் அது தாங்கி நின்றது. ஆமென்.

93கல்விமான்களாகிய அந்த பரிசேயக் கூட்டத்திற்கு முன்பாக அவர் நின்றபோது, அவர், "என்னிலே பாவம் உண்டென்று உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக் கூடும்?" என்றார். ஆமென். அந்த தடுப்பு மருந்து அங்கே தாங்கி நின்றது. மேலும், "என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை, என் பிதாவின் கிரியைகளை செய்தேனேயாகில், அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்" என்றார். அவர்களோ, ''நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவனாக ஆக்கிக்கொள்கிறாய்" என்றார்கள்.

94அவரோ, "என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டியதில்லை" என்றார். மேலும், "என்னைக் குறித்து சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே, அவைகள் என்னைக் குறித்துப் பேசுகிறது, என் வாய் பேசுவதைக் காட்டிலும் என் கிரியைகள் அதிகமாய் பேசுகிறது" என்றார்.

95அது மிகச் சரியானதே. நீங்கள் எப்படி ஜீவிக்கின்றீர்களோ அதில்தான் நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள். நீங்கள் பேசும் விதத்திலோ, நீங்கள் டுத்தும் விதத்திலோ அல்லது நீங்கள் வெளிக்காட்டும் விதத்திலோ நீங்கள் நீங்களாக இருப்பதில்லை, நீங்கள் என்னவாயிருக்கிறீர்களோ அவ்விதமாக உங்களை ஆக்குவது நீங்கள் ஜீவிக்கிற விதமே. உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே வெளியே வெளிப்படுகிறது. ஒன்றுமற்ற, ஆழமற்ற, தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளுகிற இந்த சந்ததியே, உங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளுகிற சீட்டு விளையாடுகிறவர்களே, புகைபிடிக்கிறவர்களே, குட்டைத் தலைமயிர் கொண்ட ஸ்திரீகளே, நடனமாடுகிறவர்களே, தொலைக்காட்சி பிரியர்களே, ஆபாச நகைக்சுவை பேசுபவர்களே, உங்களுக்கு தடுப்பூசி தேவையாயிருக்கிறது. மீண்டும் பெந்தெகொஸ்தேவிற்கு திரும்புங்கள்! அது சரியே. நாம் ஒரு மிகப் பெரிய தேவையில் இருக்கிறோம் (சபையார் ஆரவாரம் செய்கின்றனர் - மொழிபெயர்ப்பாளர்).

96எந்த ஒரு மனிதனுக்கும் வைக்கப்படும் ஒவ்வொரு சோதனையினாலும் இயேசு சோதிக்கப்படும் போதும், அது தாங்கி நின்றது, ஒரு மனிதன் மீது விழும் அனைத்து சோதனைகளும் அவர் மீதும் விழுந்தது, ஆனால், அந்த தடுப்பு மருந்து தாங்கி நின்றது. அது நிலைநிற்குமா நிற்காதா என்பதையும், அது சரியானதா அல்லது தவறானதா என்பதையும் நீ அறிய விரும்பினால், அவரை நோக்கிப் பார். அவர் தானே உனக்கு எடுத்துக்காட்டாய் இருந்தார். அது அவருடன் தரித்திருந்தது, ஒவ்வொரு சோதனையிலும் தாங்கி நின்றது; அவர் அங்கே நின்று ஜனங்களின் நினைவுகளை பகுத்தறிந்த நிலையில், அவர்கள் அவரை ஒரு பெயெல்செபூல் என்று அழைத்தபோது, அது அவரை நிறுத்தவில்லை, அவர் அதிலேயே தொடர்ந்து தரித்திருந்தார்.

97அவர்களுடைய இருதயத்தின் நினைவுகளை அவர் அறிந்தபோது, கிணற்றண்டை இருந்த அந்த ஸ்திரீயைப் பார்த்து அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்ததாக கூறினபோது, பேதுருவிடம் அவனுடைய பெயர் என்ன என்பதைக் குறிப்பிட்ட போது, மற்றும் அது போன்ற காரியங்களை அவர் செய்த போது, அவர்கள், "இந்த மனிதன் ஒரு குறிசொல்பவன்" என்றார்கள். இப்பொழுது, "நல்லது, நான் ஒருவேளை தவறாக இருக்கலாம். ஒருவேளை..." என்று அவர் கூறவேயில்லை. அது தாங்கி நின்றது! ஏன்? தான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதை அவர் அறிந்திருந்தார்.

98அன்றொரு நாள் இரவிலே, பரிசுத்த யோவான் 3-ம் அதிகாரத்தில், இயேசு அங்கே நின்றுகொண்டு, "பரலோகத்திலிருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை" என்று கூறினதைப் பற்றி நான் பேசிக்கொண்டிருந்த போது, "இந்த இடத்தில் நான் நிறுத்திக்கொள்கிறேன், அடுத்த கூட்டத்தில் நாம் இதைக் குறித்து தொடர்ந்து பார்ப்போம்" என்று சொல்லியிருந்தேன். அங்கே தான் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. "பரலோகத்திலிருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல், பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை." அவர் இங்கே நின்று கொண்டு நிக்கொதேமுடன் பேசிக் கொண்டிருந்தார். சபையார் குழப்பமடைந்து, சில மணி நேரங்களுக்கு அதைப் புறக்கணித்து, நேராக அவர்கள் வெளியேறுகிறார்கள். நான், "அவர் தேவனாயிருந்தார் என்பதை அது நிரூபிக்கிறது. அவர் சர்வ வியாபியாயிருக்கிறார்" என்றேன். அது மிகவும் சரியானதாயிருக்கிறது, நிச்சயமாக. அவருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. "இந்தக் கிரியைகளைச் செய்வது நான் அல்ல, என்னுடைய தடுப்பு மருந்தே அதைச் செய்கிறது. என்னில் வாசமாயிருக்கிற என்னுடைய பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார்." பரிசுத்த யோவான் 12:14... "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்...'

99சபைகளைக் குறித்ததான காரியம் என்ன? இன்றைக்கு என்ன காரியம்? அவர்கள் அதைக் கடிந்து கொண்டு, அது பிசாசினுடையது என்று சொல்கிறார்களா? அவர்கள் இன்னும் தடுப்பூசியை (inoculation) எடுத்துக் கொள்ளவில்லை. தடுப்ப மருந்துக்கான மூலப்பொருள் (serum) எது என்பதை அவர்கள் அறியார்கள். அதுவே காரணம், அது அவிசுவாசமாயிருக்கிறது, அவிசுவாசம் என்பது பாவம். "விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று." அவிசுவாசமே அதைச் செய்கிறது.

100அது தாங்கி நின்றது. அவர்கள் சென்று, அவருடைய முகத்தை துணியால் கட்டினார்கள். இப்பொழுது இவைகளைச் செய்ய வல்லமை பெற்றிருந்த ஒரு மனிதன்... அது தான் பெந்தெகொஸ்தே அசைவில் உள்ள தொல்லையாகும். என்னை கவனியுங்கள், நான் ஒன்றை கூறப் போகிறேன், புண்படுத்தும்படி அல்ல, ஆனால் குணமாக்கும்படியாக கூறுகிறேன். உங்களது அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்கூற முடிகிற ஒரு ஈர்க்கும் உத்தி (gimmick) கொண்ட ஒரு மனிதன் உங்களிடம் வரும்போது, அதை மறந்து விடுங்கள், ஒவ்வொருவரும், ஒவ்வொரு சொப்பனத்திற்குமான அர்த்தத்தை அவர்களால் கூறமுடியும், ஒவ்வொரு வியாதிகளையும் குணப்படுத்த முடியும், இவைகள் அனைத்தையும் செய்ய முடியும், ஓ! என்னே, எல்லாக் காரியங்களையும் செய்யக்கூடிய ஒரு மனிதனாக அவன் இருக்கிறான், (ஆனால்) வார்த்தைக்கு முரணாக அது இருக்கிறது. ஒவ்வொன்றிற்கும் பதிலைக் கொண்டிருக்கிறான், (ஆனால்) அது வார்த்தைக்கு முரணாக இருக்கிறது. நீங்கள் அதைக் கவனித்துப் பாருங்கள்.

101அது தான் இன்றைய தினமாக இருக்கிறது. மாம்சப் பிரகாரமான உணர்ச்சிகளின் பின்சென்று, வியாக்கியானம் அல்லாததை வியாக்கியானம் என்று கூறுகிற உணர்ச்சிப் பூர்வமான மனிதர்களாய் அவர்கள் அனைவரும் இருக்கிறார்கள். தேசங்களைக் கடந்து, இப்படிப்பட்ட காரியங்களைக் கேட்டு நான் அலுத்துப் போனவனாய் இருக்கிறேன். நான் -- நான் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை, ஆனால், இன்றிரவு, திரும்ப வேண்டிய பாதையை, சொஸ்தமாகுதலுக்கு எப்படித் திரும்ப வேண்டும் என்று நான் இன்றிரவு கூறிக் கொண்டிருக்கிறேன். அது மிகவும் சரியே. "ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்து, அவர் சொல்லும் காரியம் நிறைவேறாமல் போனால், அவனை நம்ப வேண்டாம். அது சரியே. "ஆனால், அது நிறைவேறினால், அவனை விசுவாசியுங்கள், ஏனெனில், அதை சொன்னது நானே." அதைச் சொன்னது கர்த்தரே.

102இயேசு இங்கே நின்று கொண்டிருந்தார், என்னே ஒரு அற்புதமான உதாரணமாக அவர் திகழ்ந்தார்! பவுல் எப்பேர்ப்பட்ட ஒரு உதாரணமாக திகழ்ந்தான்! அவனுக்கு ஒரு மனிதனை குருட்டாட்டம் பிடிக்கச் செய்யவும், வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கவும், முடவர்களை மீண்டும் சுகமானவர்களாகக் கோரவும், மற்றும் இவையனைத்தையும் செய்ய அவனுக்கு வல்லமை இருந்தும், அவன் தன்னுடைய ஊழியத்தை கடைசிப் பகுதியில் நிற்கையில், கன்னானால் (coppersmith செம்புத் தொழிலாளி) அவனுடைய கூட்டங்கள் நிறுத்தப்பட்டு தேசத்தை விட்டு வெளியேற்றப்பட்டதைக் குறித்து உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? குருட்டாட்டம் பிடிக்கச் செய்யும் வல்லமையை அவன் இழந்து விட்டான் என சில குறைகூறுபவர்கள் சொல்வதை என்னால் யூகிக்க முடிகிறது. இல்லை, இல்லை, அவன் பகட்டானதைப் பெற்றிருக்கவில்லை. அவன் பரிசுத்த ஆவியை பெற்றிருந்தான், அவன் தேவனை மாத்திரமே சிந்தையில் கொண்டிருந்தான். துரோப்பீமுவை, அவனுடைய நண்பனை வியாதிப்பட்டவனாக அங்கே விட்டுவிட்டு வந்தான் என யூகிக்கிறேன். அவன் தன்னுடைய குணமாக்கும் வல்லமையை இழந்து விட்டான் என யூகிக்கிறேன். மேலும், அவன் தன்னோடு ஒரு மருத்துவரை, ஒரு தெய்வீக சுகமளிப்பவரை, லூக்காவாகிய மருத்துவரை தன்னுடன் அழைத்து வந்துவிட்டான். தேவன் அவனுடைய ஊழியத்திற்கு மகுடம் சூட்ட ஆயத்தம் பண்ணிக்கொண்டிருந்தார், ஏனெனில் பவுல், தான் ஸ்தேவானுக்கு செய்த காரியத்தினிமித்தம் அவன் அவன் எப்பொழுதும் துன்பத்தை அனுபவிக்க விரும்பினான். அதுவே அவனுடைய வாஞ்சையாய் இருந்தது. எப்படியாக பரிசுத்த ஆவியானவர் அவனுடன் பேசி, எருசலேமுக்கு போக வேண்டாம் என்று கூறினதை நீங்கள் அறியீர்களா? தான் இயேசுவுக்காக மரிக்க அங்கே போகிறதை அவன் அறிந்திருந்தான்; அதுவே அவனுடைய இதயத்தின் வாஞ்சையாயிருந்தது, அவருக்காக மரிப்பது.

103வியாதியஸ்தரை குணப்படுத்தி, மரித்தோரை உயிர்த்தெழச் செய்து, இவையெல்லாவற்றையும் செய்ய முடிந்த, மற்றும் காரியங்களை முன்னுரைத்து, இருதயத்தின் நினைவுகளை அறிந்து, அதை ஜனங்களிடம் கூற முடிந்த இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் பிலாத்துவின் வழக்கு மன்றத்தில் நிற்க வைக்கப்பட்டவராய், இந்த விதமாக அவருடைய கண்களை கட்டி, மதுபோதையில் நிறைந்த ஒரு கூட்ட ரோமப் போர்ச் சேவகர்கள், அவருடைய முகத்தில் துப்பி, அவருடைய முகத்திலிருந்து தாடியைப் பிடுங்கி, அவருடைய சிரசை ஒரு கோலால் அடித்து, அந்தக் கோலை ஒருவருக்கொருவர் இடமாற்றிக் கொண்டு, கட்டை அவிழ்த்து, "நீ ஒரு தீர்க்கதரிசி தானே, உன்னை அடித்தது யார் என்று எங்களுக்கு கூறு, அப்பொழுது உன்னை விசுவாசிப்போம்" என்றார்கள். அவர் தமது வாயை திறக்கவில்லை, நிச்சயமாக. அவர் எந்த ஒரு வித்தையையும் கொண்டிருக்கவில்லை, அது தேவனாயிருந்தது.

104"சிலுவையிலிருந்து உன்னுடைய கரங்களை விடுவித்து இறங்கி வா, அப்பொழுது நாங்கள் உம்மை உத்தமமாக விசுவாசிப்போம், நாங்கள் ஆசாரியர்களாயிருக்கிறோம், நாங்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாயிருக்கிறோம், நீ மாத்திரம் சிலுவையை விட்டு இறங்கி, அதை நிரூபிப்பாயானால், நீ தேவனுடைய குமாரன் என்று நாங்கள் - நாங்கள் அறிந்துகொள்வோம். நீர் தான் எங்கள் இராஜா, சிலுவையிலிருந்து இறங்கி வா, அப்பொழுது நாங்கள் உம்மை விசுவாசிப்போம்." அவரோ ஒரு வார்த்தையும் சொல்லவில்லை, அவருடைய வாயை திறக்கவேயில்லை.

105ஏன்? தாவீதுக்குள்ளே இருந்த அதே ஆவியானது முன்பு அங்கே சங்கீதம் 22-ல், "என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்? அவர்கள் என் கைகளையும் என் கால்களையும் உருவக்குத்தினார்கள்" என்று பாடின அதேப் பாடலை அந்த மாய்மாலக்காரக் கூட்டமானது கீழே பாடிக்கொண்டிருந்தது. "என் வஸ்திரத்திற்காக சூதாடி, சீட்டுப் போட்டார்கள்," மற்றும் அது போன்ற பாடலை, தாவீது பரிசுத்த ஆவியின் மூலமாக எண்ணூறு வருடங்களுக்கு முன்பு கூறினதை அவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். அதேக் காரியத்தைக் கூறி, அதையே அவர் முனங்கி கூறுவதைக் கேட்டும், அதை அறியாதிருந்தார்கள்.

106மேலும், இன்றைக்கு வேதபண்டிதர்கள் (theologians) என்று அழைக்கப்படுகிற இவர்களும், ஸ்தாபனங்களும், முன்பு பெந்தெகொஸ்தேவின் இந்தக் காரியங்களை அவர்கள் படித்திருந்தும், அதேக் காரியங்கள் (இன்று) செயல்பாட்டில் இருப்பதை அவர்கள் காணும் போது, அதை அவர்கள், "பரிசுத்த உருளைகள்" என்று அழைக்கிறார்கள். என்னே, ஒரு அவமானம்! இருப்பினும் நாம் நம்மை மகத்தான கிறிஸ்தவ சபையென்றும், பெந்தெகொஸ்தே ஜனங்கள் என்றும் அழைத்துக் கொள்கிறோம். நான் ஐயுறுகிறேன். கவனியுங்கள், ஒரு அமைப்பு என்ற ரீதியில் நாம் பெந்தெகொஸ்தேவாக இருக்க முடியாது, தனிநபர் என்ற ரீதியில் தான் நாம் பெந்தெகொஸ்தேவாக இருக்க முடியும். நம்மால் இருக்க முடிந்த வழி அது ஒன்று மாத்திரமே, ஏனென்றால், அது ஒரு அனுபவமாயிருக்கிறது.

107இப்பொழுது, அவர்கள் அவரை அவர்களிடம் ஏதாவது ஒன்றைக் கூற வைக்கும்படி முயற்சி செய்த போது, சாத்தான், "நீர் தேவனுடைய குமாரனேயானால், இப்பொழுது இந்த கல்லுகளை அப்பமாக்கி, உமக்கு உதவத்தக்க வல்லமை உம்மிடம் உண்டு என்று நீர் அறிவீர், நாற்பது நாட்கள் நீர் புசியாமல் இருக்கிறீர், (நீர் அவ்விதம் செய்தால்) நான் உம்மை விசுவாசித்து மனந்திரும்புவேன்" என்று கூற முயற்சி செய்த போது, அவர் பிசாசை அறிந்தவராய் இருந்திருப்பார் (he would, been minding satan). அந்த தடுப்பு மருந்து கிரியை செய்தது. எப்பொழுது பேச வேண்டும் என்றும், எப்பொழுது பேசக் கூடாது என்பதையும் அவர் அறிந்திருந்தார். அது தான் இன்றைக்கு நம்மிடையேயுள்ள தொல்லையாயிருக்கிறது. சில சமயங்களில் நாம் அதிகப்படியாக பேசி விடுகிறோம். எப்பொழுது பேச வேண்டும், எதைப் பேச வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேவன் அவ்விடம் கூறும் வரை எதையும் பேசாதிருங்கள். நீங்கள் எப்படி அதைச் செய்ய முடியும்? நீங்கள் அவ்விதம் செய்யாவிட்டால், தேவன் தனிப்பட்ட முறையில் உங்களிடம் கூறாதிருந்து, நீங்கள் தவறான ஒன்றை செய்வீர்களானால், நீங்கள் அதைச் செய்யும் பொழுது நீங்கள் தூஷிக்கிறீர்கள். அது தேவன் என்று நிச்சயமுடையவர்களாயிருங்கள். தேவன் நேரடியாக உங்களிடம் பேசட்டும், பின்னர் கர்த்தர் உரைக்கிறதாவது என்று கூறுங்கள்.

108நான் சென்று, "ஜாக் மூர் (Jack Moore) என்னிடம் இன்னின்னதைக் கூறினார்" என்று கூறும் போது, அவரோ அதைக் கூறாதிருக்கும் நிலையில், நான் பொய்யுரைப்பவனாயிருப்பேன். ஓ, என்னே! நமக்குத் தேவையானது, அந்த தடுப்பு மருந்துக்கு திரும்புவதே! பெந்தெகொஸ்தே வல்லமைக்கு திரும்புவதே! பரிசுத்த ஆவிக்குத் திரும்புவதே! ஆம் ஐயா! எப்பொழுதுமே நாம் அதை விட்டு வெகு தூரம் விலகியே இருக்கிறோம். நம்முடைய கோட்பாடுகள், சபைகள் மற்றும் ஸ்தாபனங்கள் ஜனங்களைப் பிரித்து, எப்பொழுதுமே அவர்களை வெகு தொலைவிற்கு விலகும்படியாக நடத்திச் செல்கின்றன.

109தடுப்பு மருந்தானது இயேசுவின் மீது தரித்திருந்தது, சிலுவையில் தரித்திருந்தது, அவரால் சிலுவையிலிருந்து இறங்கி வர முடியும் என்ற நிலையிலும் அது தாங்கி நின்றது. பில்லி ஸண்டே (Billy Sunday) இவ்விதம் கூறினான்: "ஒவ்வொரு மரமும் முழுமையாய் தேவதூதர்களால் நிறையப்பட்ட நிலையில், "நீங்கள் சிலுவையில் இருந்து இறங்கிவர வேண்டிய அவசியமில்லை, வெறுமனே உமது விரலை மாத்திரம் அசையுங்கள், நாங்கள் சூழ்நிலையையே மாற்றிப் போடுகிறோம்" என்று தேவதூதர்கள் கூறினார்கள்."

110ஆனால் அவரோ, "நான் எப்பொழுதும் என் பிதாவிற்கு பிரியமானதையே செய்கிறேன்" என்றார். அது என்ன? தடுப்பு மருந்து தாங்கி நின்றது. வார்த்தையும், தேவனுடைய சித்தமும் அவரிலே தரித்திருந்தது. முதுகிலே தட்டிக் கொடுத்து, கலிலேயாவின் இளம் ரபீ என்று அவரைக் கூறினாலும் அல்லது பெயெல்செபூல், பிசாசு பிடித்தவன், குறிசொல்லுபவன் என்று அழைத்தாலும், அல்லது அது என்னவாயிருந்தாலும், அது பொருட்டல்ல, அவரைக் குறித்து எப்பேர்ப்பட்ட தூஷணம் உரைக்கப்பட்டாலும், தடுப்பு மருந்து தாங்கி நின்றது. பின்னர் அவர்கள் அவர் எப்படி இருந்தார் என்று கவனித்தார்கள்... அவர் சிலுவையில் சத்தமிட்டு, எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக் கொண்டிருந்தால், ஆனால் அதுவோ (தடுப்பு மருந்து) தாங்கி நின்றது. ஆமென். எல்லாமே அவரைக் கைவிட்டன: அவருடைய சபை, அவருடைய ஜனங்கள், தேவன் கூட அவரைக் கைவிட்டார், அனைத்தும் அவரைக் கைவிட்டன, ஆனால் தடுப்பு மருந்து தாங்கி நின்றது. வானங்கள் இருளடைய அதிருகின்ற பாறைகள் நடுவிலே என் இரட்சகர் தலை தொங்க மரித்தார்; பரலோகத்தின் சந்தோஷத்திற்கும், முடிவில்லா நாளுக்கும் திறக்கின்ற திரைச்சீலை, வழியை வெளிப்படுத்தினது!

111அது தான் பாதை, அந்தப் பாதையிலே திரும்புங்கள். எது வந்தாலும் போனாலும் அது பொருட்டல்ல. தடுப்பு மருந்து தாங்கி நின்றது, அது மாறாமல் தரித்து நின்றது. தடுப்பு மருந்து தாங்கி நின்றது. ஒரு கோழையைப் போல அல்லாமல், ஒரு இராஜ குமாரனாக அவர் மரித்ததை அவர்கள் கவனித்தனர். அவர் பதட்டம் அடையவேயில்லை. ஒரு இராஜ குமாரனைப் போல அதை எதிர்கொண்டார். பரிசுத்த ஆவியினால் அவர் தடுப்பூசி போடப்பட்டிருந்தபடியால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

112பின்னர் ஈஸ்டர் காலையன்று, அது என்னவாய் இருந்தது என்பதை அது நிரூபித்தது. தடுப்பு மருந்து தாங்கி நின்றது. எனவே, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர், "நீங்கள் இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்றாம் நாளில் நான் அதை எழுப்புவேன்" என்றார். அல்லேலூயா! அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இந்த பூமியில் அவருடைய பிதாவாகிய தாவீதின் மூலம், தேவன் பேசின தேவனுடைய வார்த்தையை மீண்டும் அவர் மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தார். மேலும், "என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்" என்றார். உடல் சிதைவு ஏற்படுவதற்கு எழுபத்திரண்டு மணி நேரம் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் அறிந்திருந்தார், எனவே தான் அவர், "இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், நான் அதை மீண்டும் எழுப்புவேன்" என்றார். ஏன்? அவர் அதைச் செய்வார் என்று தேவனுடைய வார்த்தை கூறியிருக்கிறது. "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்" என்பதை அதே பரிசுத்த ஆவியானவர் கூறவில்லையா? இவ்வுலகத்தில் நாம் எப்படி அதை விட்டு விலகி இருக்கப் போகிறோம்? அதை... உங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தால், நீங்கள் அதைப் பெற்றிருக்கிறீர்கள்.

113அவர் அந்த ஸ்திரீயிடம், "நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கக் கூடுமா? நான் பெற்றிருக்கின்றதான தடுப்பு மருந்தை நீங்களும் எடுத்துக் கொள்ளக் கூடுமா? உனது குமாரர்களுக்கு வலது பாரிசத்தையும் இடது பாரிசத்தையும் அருளுவது என் காரியமல்ல, ஆனால், நீங்கள் இந்தப் பாத்திரத்தில் குடித்து, இதைச் செய்வீர்களென்றால், அதுவே காரியம்" என்றார். நிச்சயமாக. அதை அருளுவது நான் அல்ல, ஆனால், நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடித்து, நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கின்றதான அதே ஆவியினால் நீங்களும் தடுப்பூசி போடப்பட்டிருப்பீர்களென்றால், அனைத்துக் காரியங்களும் சரியாகிவிடும்."

114ஈஸ்டர் தினத்தன்று சீஷர்கள் நின்று, ஸ்திரீகள் கொஞ்சம் பேர் கல்லறையினிடத்தில் வந்த போது, அவர்கள் கண்டது... மரியாள் கண்ணீரோடும், துக்கத்தோடும் காணப்பட்டு அங்கிருந்து புறப்பட்ட போது, யாரோ அவளை பெயர் சொல்லிக் கூப்பிடுவதைக் கேட்டு, சுற்றுமுற்றும் பார்த்தாள். அது அவர்தான் என்பதைக் கண்டுகொண்டாள். அவர் மரித்தவராயில்லை, அவர் உயிர்த்தெழுந்திருந்தார்.

115"நீங்கள் போய், என்னுடைய சீஷர்களிடம், நான் அவர்களை கலிலேயாவிலே சந்திப்பதாகக் கூறுங்கள், நான் சொன்னபடியே உயிர்த்தெழுந்தேன். தடுப்புமருந்து தாங்கி நின்றது. நான் எப்படி மரிப்பேன் என்று வேதம் உரைத்ததோ, அவ்விதமே நான் மரித்தேன், வேதம் உரைத்தபடியே என்னுடைய ஆத்துமா பாதாளத்திற்கு இறங்கினது, மேலும், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். நான் உயிர்த்தெழுந்தேன், நான் என்றென்றைக்கும் ஜீவிக்கிறவராயிருக்கிறேன்" என்றார். சாட்சி, தடுப்பு மருந்து கிரியை செய்ததன் நிரூபணம். ஆமென். ஓ, என்னே! அந்த சிஷர்கள் அதைக் கண்டபோது, "எங்களுக்கும் அந்த தடுப்பு மருந்து வேண்டும், அது எங்களுக்கும் தேவையாயுள்ளது" என்றனர்.

116அவர், "நீங்கள் எருசலேமிற்குச் சென்று, அந்த மருந்தை நான் அனுப்பும்வரை அங்கே காத்திருங்கள். உங்களுக்கு நித்திய ஜீவன் வேண்டுமென்றால், நான் பெற்றிருக்கிறதை, உயிர்த்தெழுவதற்காக நான் பெற்றிருக்கும் காரியத்தை நீங்களும் பெற விரும்பினால், என்னை வைத்திருந்த அதே பாதையில் உங்களையும் வைக்கக்கூடிய காரியம் உங்களுக்குத் தேவையென்றால், நான் மரித்தது போலவே உங்களையும் மரிக்கும்படிச் செய்யத்தக்க காரியம் உங்களுக்குத் தேவையென்றால், கல்லறையிலிருந்து உங்களை உயிர்த்தெழும்படி செய்யத்தக்க காரியம் உங்களுக்குத் தேவையென்றால், நான் அதைத் திரும்ப உங்களிடம் அனுப்பப்போகிறேன், நீங்கள் அங்கே சென்று காத்திருங்கள்" என்றார்.

117அவர் ஒருபோதும், "நீங்கள் சென்று உங்கள் இறையியல் பட்டப்படிப்பை..." என்று கூறவில்லை, அல்லது "நீங்கள் சென்று அடிப்படைக் கல்வியை கற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறவில்லை. ஆனால் அவர், "நீங்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளும்வரை காத்திருங்கள், உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் காத்திருங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது வருவார், அதன் பின்னர் நீங்கள் என்னுடைய மருத்துவர்களாய் விளங்குவீர்கள்" என்றார். ஆமென். ஆமென். "காத்திருங்கள், அங்கே சென்று காத்திருங்கள்." "நான்கு வருட படிப்பையும், அது போன்ற காரியங்கள், இந்த அனைத்து பட்டப்படிப்புகளையும் கற்கச் செல்லுங்கள், மரித்த சடலத்தைப் பதப்படுத்தும் திரவத்தை உங்களுக்குள்ளே செலுத்தப் பெறுங்கள் என்பதாக அல்ல. நீங்கள் ஒரு சோதனைப் பன்றி கிடையாது, நீங்கள் ஒரு குமாரனாக இருக்கிறீர்கள். "உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் காத்திருங்கள், நித்திய ஜீவனாகிய தடுப்பூசி உங்கள் மீது வரும்வரை காத்திருங்கள். நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

118பையனே, சரியாக அவர் சில தகுதியான நபர்களைக் (candidates) கொண்டிருந்தார். நானும் அதில் ஒருவன் என்று முதலில் நான் கேள்விப்பட்டபோது, அவர்கள் என்ன கூறினார்கள் என்பதை நான் பொருட்படுத்தவில்லை, ஆனால் எனக்கு தேவையானது அதுவே. நான் எப்பொழுதும், "இது அதுவல்ல என்றால், அது வரும்வரை நான் இதை வைத்திருக்க வேண்டும்" என்று சொல்வேன். ஆம்! அது தான் எனக்குத் தேவையாயிருந்தது, அந்த தடுப்பு மருந்து.

119அவர்கள் அங்கே சென்று பத்து நாட்கள் காத்திருந்தனர். ஓ, என்னே! ஓ, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடுதியாய் அந்த தடுப்பு மருந்து இறங்கி வந்து, அவர்கள் ஒவ்வொருவரையும் நிரப்பினபோது, அந்த நூற்றிருபது பேருக்கும் அது தடுப்பூசியை செலுத்தினது. ஓ, அது எப்பேர்ப்பட்ட ஒரு தருணமாயிருந்தது! அதுதான் திரும்ப வேண்டிய பாதையாயிருக்கிறது. ஓ, என்னே! அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். வெவ்வேறு பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். அக்கினியின் நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்தது, இஸ்ரவேலின் பிள்ளைகளைப் பின்தொடர்ந்த மகத்தான அக்கினி ஸ்தம்பமாகிய தேவனே.

120தேவன், மூன்று தேவர்கள் அல்ல, ஒரே தேவன், ஒரே தேவன். மூன்று தேவர்கள் அல்ல, ஆனால், ஒரே தேவனின் மூன்று அலுவல்கள்: பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவி என்று அழைக்கப்பட்ட மூன்று அலுவல்கள். அக்கினி ஸ்தம்பத்தில் பிதாவாகிய தேவன், அவருடைய சொந்தக் குமாரனில் குமாரனாகிய தேவன், உங்களுக்குள் பரிசுத்த ஆவியாகிய தேவன், அனைத்து வழியிலும் தன்னைத் தாழ்த்தி கீழிறங்கி மனிதனுடைய இருதயங்களுக்குள் செல்லத்தக்கதான தன்னுடைய வழியை ஏற்படுத்திக்கொண்டிருந்த அதே தேவன். ஆம் ஐயா!

121இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தத்தினுடைய அத்தாட்சியை அவர்கள் அங்கே கண்டனர். வனாந்தரங்களினூடாக இஸ்ரவேல் ஜனங்களுடன் வந்த அதே அக்கினி ஸ்தம்பமானது, இங்கே அக்கினி ஸ்தம்பமாக அவர்கள் மேல் விழுந்து, அக்கினி மயமான, பிரிந்திருக்கும் அக்கினி நாவுகளாக அவர்கள் மேல் வந்தமர்ந்ததை அவர்கள் கண்டனர்.

122அங்கே தேவன் தம்முடைய சபையின் மத்தியில் தன்னையே பகுத்துக் கொண்டிருந்தார். ஒரு மனிதனும் அவனுடைய மனைவியும் ஒன்றாயிருப்பது போல, தேவனும் அவருடைய சபையும் ஒன்றே, அங்கே ஒன்று தான் உள்ளது. "நான் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருப்பதை அந்நாளில் அறிந்து கொள்வீர்கள்." அது தான் அந்த தடுப்பூசி, அது தான் அவர் கொண்டிருந்த அந்த தடுப்பு மருந்து, அது தான் அவர் பெற்றுக்கொண்ட அந்த தடுப்பு மருந்து. "கிரியை செய்வது நானல்ல, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார். இந்த தரிசனங்களைக் காண்பது நானல்ல, அது என்னுடைய பிதாவாயிருக்கிறார், என்னால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. பிதாவானவர் செய்ய, குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார்."

123அதுதான் அவிசுவாசத்திற்கான தடுப்பு மருந்தாகும். அது உங்களை கிறிஸ்துவினுடைய உறுதியான விசுவாசத்தில் நங்கூரமிடச் செய்கிறது, அது உங்களை நங்கூரமிடுகிறது. அங்கே தான் நீங்கள் மரணத்தினின்று நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள் என்று கண்டுக் கொள்கிறீர்கள். எந்தவொரு மனிதனாலும் அதற்கெதிராக உங்களிடம் பேச முடியாது, உங்களுக்கு புறம்பானதொன்றாக அதை ஒருவராலும் விளக்க முடியாது. நீங்கள் தேவனோடு தனியாக அவருடைய அடிச்சுவடுகளில் இருந்தீர்கள். மேலும், நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள் என்றும், உங்களுடைய முழுமையான ஜீவியமும் மாற்றப்பட்டதாய் இருக்கிறது என்றும், நீங்கள் ஒரு புது சிருஷ்டியாய் இருக்கிறீர்கள் என்றும், அதை உங்களிடம் இருந்து எடுத்துப் போட பாதாளத்தில் போதுமான பிசாசுகள் இல்லை என்றும் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒரு புது சிருஷ்டியாய் இருக்கிறீர்கள், ஒரு புது சிருஷ்டிப்பாய் இருக்கின்றீர்கள். தேவனுடைய வல்லமையினால் உங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. தேவனுடைய பரிசுத்த ஆவி என்னும் மருந்து உங்களை இழுத்துக் கொண்டது (wooed you), ஆமென்.

124அவரே பள்ளத்தாக்கின் லீலியாய் இருக்கிறார். ஓபியம் (opium போதைப் பொருள்) லீலியிலிருந்து வருகிறது என்பது நாம் அறிந்ததே. அந்த சுருட்டு பிடிப்பவர்கள் ஓபியம் (opium) உபயோகித்து புகை பிடிக்கும் போது, ஓ, அது என்னவாக இருக்கிறது, அதை வேறொரு காரியமாக அவர்கள் நினைக்கிறார்கள். ஓ, அவர்கள் இந்த (தேவனுடைய) தடுப்பு மருந்தை நிச்சயமாக ஒரு முறை போட்டுக் கொள்ள வேண்டும். அனைத்து காலங்களுக்கும் ஒரே ஒரு முறை தடுப்பூசி. இது ஒரு குழாய் சுருட்டு (pipe dream) அல்ல, ஆனால், இது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் உங்களது ஆத்துமாவில் நங்கூரம் போடப்பட்ட பரலோகத்தின் ஒரு மெய்யான காரியமாயிருக்கிறது. அது உங்களை நித்திரையடையச் செய்கிறது, உறக்கமல்ல, ஆனால், உலகத்தின் காரியங்களுக்கு மரித்தவர்களாக ஆக்கி, கிறிஸ்துவில் ஜீவிக்கிறவர்களாக ஆக்குகிறது. அவரே என்றென்றைக்கும் ஜீவிக்கிற கிறிஸ்துவாயிருக்கிறார். உங்களைத் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாத ஏதோவொன்றை அது உங்களுக்குச் செய்கிறது. அந்த மருந்தைப் பெற்றுக் கொண்ட அந்த ஒருவர் நீங்கள் தான். தடுப்பூசி செலுத்திக் கொண்ட அந்த ஒருவர் நீங்கள் தான். அவைகள் எல்லாவற்றையும் குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஏன்? நீங்கள் அதை உணர்ந்தீர்கள், அதை அறிந்தீர்கள், அது உங்களுக்கு ஏதோவொன்றை செய்தது என்றும், என்ன செய்தது என்பதையும் கண்டு கொண்டீர்கள். நீங்கள் தரத்திற்கான அடையாளமிடப்பட்டீர்கள். நீங்கள் எந்த இடத்தை சார்ந்தவர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள். ஆமென்.

125கன்றுக்குட்டிகளுக்கு நாம் அடையாளக் குறியிடுவது வழக்கம். அங்கே ஒருமுறை ஒரு குதிரையின் மீது ஒரு பெண்மணி வந்து, "இதைச் செய்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஒன்றுமறியாத கன்றுக்குட்டியின் மீது குறியீடு போடுகிறீர்களே" என்றாள். அதற்கு நான், "அது சற்று நேரம் வேதனையை அளிக்கக்கூடிய ஒன்றுதான், ஆனால், அது எந்த இடத்தைச் சார்ந்திருக்கிறது என்பதை அறிந்திருக்கிறது" என்றேன். ஆமென். அதுதான் அந்த வழியாய் இருக்கிறது.

126தேவன் உங்களை ஒரு சிறிதளவு துன்பப்படும்படிச் செய்கிறார், ஆனால், அதற்குப் பின்பு நீங்கள் எவ்விடத்தைச் சார்ந்தவர்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். அவர் பரிசுத்த ஆவி என்னும் முத்திரை இரும்பாகிய (branding iron) தடுப்பூசியை ஒரு மனிதன் அல்லது ஒரு ஸ்திரீயின் மீது ஊற்றும் போது, அவன் என்னவாய் இருந்தானோ அதிலிருந்து அவன் இருக்க வேண்டிய நிலைக்கு அவனை அவர் மாற்றுகிறார். அவன் எந்த மேய்ச்சல் நிலத்தை சார்ந்தவன் என்பதை அறிந்திருக்கிறான், பிரமாணத்திற்கு விரோதமான எந்தவொன்றும் அவனை வழி நடத்தும்படி அவன் அனுமதிக்க மாட்டான். அவன் ஒரு வீட்டை உடையவனாயிருக்கிறான், அவன் ஒரு மேய்ச்சல் நிலத்தை உடையவனாயிருக்கிறான், தான் சார்ந்திருக்கத் தக்கதான ஒரு இடத்தை அவன் உடையவனாயிருக்கிறான். பரிசுத்த ஆவியானவரே அவனுடைய வழிகாட்டியாயிருக்கிறார். அவரே அமர்ந்த தண்ணீர்களண்டையில் அவனை நடத்தி, நித்திய ஜீவனை அவனுக்கு அருளுகிறார்.

127இந்த ஜனங்கள் தங்களுடைய எல்லா பெருமைகளும் நீங்கிப் போனதை அவர்கள் கண்டபோது, அவர்கள் ஆவியில் நடனமாடினார்கள், அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினார்கள், அக்கினியின் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களிலிருந்து பறந்து வந்தது, அங்கே அவர்கள் எல்லாரும் வந்து, ஒரு கூட்ட கலிலேயர்கள் வானத்தின் கீழுள்ள அனைத்து பாஷைகளையும் பேசினார்கள். அது என்ன என்பதைக் கூட அவர்கள் அறியாதிருந்தார்கள். தெய்வீகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டார்கள், என்ன நடந்துள்ளது என்பதை அறியாதிருந்தார்கள், ஆனால், அவர்களுக்கோ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இவைகள் என்ன என்பதைக் குறித்து அவர்கள் கேட்க வேண்டியவர்களாயிருந்தார்கள். கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ?, அங்கே இரணவைத்தியன் இல்லையோ? என்ற கேள்வி எழுந்த போது, அங்கே ஒரு இரணவைத்தியனை அவர்கள் கொண்டிருந்தனர், ஒரு சிறந்த இரணவைத்தியனை அவர்கள் கொண்டிருந்தனர், ஒரு பூலோக இரணவைத்தியனை அவர்கள் கொண்டிருந்தனர், அவனுடைய பெயர் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? மருத்துவர் சீமோன் பேதுரு. அவன் ஒரு சிறிய பிரசங்கமேடையை (soapbox) கொண்டவனாய், அதன் மேல் நின்று, ஒரு விரிவுரையை நிகழ்த்தினான். அவர்கள், "நாங்கள் அதற்கான தகுதியுள்ள நபர்களாய் இருக்கிறோம், இரட்சிக்கப்பட நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள். "சகோதரர்களே, இது உங்களுக்கும் வேண்டுமா?" "ஆம்."

128"ஏன், இது எங்கிருந்து வருகிறது என்று நான் உங்களுக்கு வேதவசனங்களிலிருந்து எடுத்துரைக்கப் போகிறேன். ஒரு நல்ல மருத்துவர் எப்பொழுதும் தன்னுடைய சூத்திரத்திற்கு திரும்பிச் செல்லுவார். ஆ, ஓ, ஓ, ஓ! திரும்பிச் செல்லுங்கள்! "கடைசிநாட்களில் இது நடந்தேறும் என்று யோவேல் தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட காரியம் இது தான். மாம்சமான யாவர் மீதும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் உரைத்திருக்கிறார். அவர்கள், "பேதுருவே, டாக்டர் சீமோன் பேதுருவே, இரட்சிக்கப்பட நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.

129அதற்கு அவன், "நான் ஒரு மருந்துக் குறிப்பை எழுதித் தருகிறேன், அது மாறக்கூடிய ஒரு மருந்துக் குறிப்பாக இருக்கப் போவதில்லை, அது ஒரு நித்திய மருந்துக் குறிப்பு" என்றான். அவன், "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். இந்த மருந்துக் குறிப்பானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது" என்றான். அதுதான் அந்த மருந்துக் குறிப்பு. ஓ, சகோதரனே! அதைச் செயல்படுத்துங்கள். கீலேயாத்திலே அதிகமான பிசின் தைலம் இருக்கிறது, மேலும், அநேக இரணவைத்தியர்களை நாம் இங்கே கொண்டிருக்கிறோம், அது சரியே.

130உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஒரு மருத்துவர் மருந்துக்கான சூத்திரத்தை எழுதிக் கொடுக்கும் போது, அதை ஒரு போலி மருத்துவர் பெற்றுக் கொண்டு, அதற்கு இணையான மருந்தை மிக அதிகப்படியாகவோ அல்லது பற்றாக்குறையாகவோ கொடுத்தால், அவர் அந்த நோயாளியைக் கொன்றுவிடுவார். அது தான் இன்றைக்கு காரியமாயிருக்கிறது. பெந்தெகொஸ்தே நாளன்று மருந்துக் குறிப்பானது, அந்த நித்திய மருந்துக் குறிப்பானது எழுதப்பட்டுவிட்டது. அநேக போலி மருத்துவர்கள், தங்களை மருத்துவர்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள், அதனுள் வேறு காரியங்களை உட்புகுத்தி, சபையைக் கொன்றுவிட்டனர். ஒரு கூட்ட குட்டைத் தலைமயிர் கொண்ட ஸ்திரீகள், குட்டை உடை அணிபவர்கள்... அதுதான் காரியமாயிருக்கிறது. நமது ஸ்திரீகள் அவர்களது மயிரை வெட்டிக் கொள்வதற்கும், நமது புருஷர்கள் பிரிவினை மற்றும் அது போன்றவற்றை செய்து, நிற்பதற்கு தைரியம் அற்றவர்களாக இருப்பதற்கு அதுவே காரணமாகும். அவர்கள் அந்த மருந்துக் குறிப்பின் ஒவ்வொரு எழுத்தையும் சரிவர செயல்படுத்தவில்லை.

131திரும்ப வேண்டிய பாதையை நீங்கள் அறியவேண்டுமா? அதுதான் இது. அதைத் தான் பேதுரு, மருத்துவர் பேதுரு தடுப்பு மருந்தைக் கொடுக்கிற பேதுரு கூறினான். கிறிஸ்து தனக்குத் தானே அதை முயற்சித்தார், அது கிரியை செய்தது. பேதுரு அதைப் பெற்றுக்கொண்டான், அது கிரியை செய்தது. நான் அதைப் பெற்றுக்கொண்டேன், மெய்யாகவே அது நல்லதே செய்கிறது. அது தான் அந்த மருந்துக் குறிப்பு, அதை சீர்குலைக்க முயற்சிக்காதே, அதனோடு எதையும் சேர்க்க முயற்சிக்காதே. (மருந்துக்கு பயன்படும்) நச்சை (poison) நீங்கள் அதிகப்படியாக செலுத்தினால், நீங்கள் உங்கள் -- உங்கள் நோயாளியைக் கொன்றுவிடுவீர்கள், நிச்சயமாகவே உலகப் பிரகாரமாக எப்படி அந்த மருந்துக் குறிப்பை சமநிலைப்படுத்துவது என்பது மருத்துவருக்குத் தெரியும். அது சரியே.

132எனவே, மருந்துக் குறிப்பானது எப்படி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், இங்கே அப்போஸ்தலர் நடபடிகளில் அவர் அதை எழுதி வைத்திருக்கிறார். அந்த விதமாகத்தான் அதைச் செய்ய வேண்டும், சரியாக. "போய் பிரசங்கிமாருடன் கைக்குலுக்குங்கள், உங்கள் மேல் சில தண்ணீர் துளிகளால் தெளிக்கப் பெறுங்கள்' என்பதாக அல்ல, அல்லது வேறேதோவொன்றும் அல்ல. அவர் சரியாக இங்கே அந்த மருந்துக் குறிப்பைக் கொடுக்கிறார். நீங்கள் அதன் ஒவ்வொரு எழுத்தையும் சரியாக பின்பற்றினால், அதே பலன்களை கிடைக்கப் பெறுவீர்கள், அது மிகவும் சரியானது, ஏனெனில், அவர் ஒருபோதும் அதை ஒரு சோதனைப் பன்றியின் மீது முயற்சிக்கவில்லை, தன் மீதே அதை உபயோகப்படுத்தினார். தேவன் மாம்சமாகி நம்மோடு வாசம் செய்தார். தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கிற ஒவ்வொரு தேவகுமாரனும், "இது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் இந்த மருந்துக் குறிப்பு கிரியை செய்யும்" என்பார்கள். ஆமென்! நான் ஒரு பைத்தியக்காரன் அல்ல, ஆனால், நான் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவன், ஆமென். இங்கே ஏதோவொன்று அசைந்து கொண்டிருக்கிறது. அது சரியானதே என்று நான் அறிவேன். நான் அதை முயற்சித்திருக்கிறேன், அது சத்தியமென்று நான் அறிவேன்.

133அவர்கள் பெற்றிருந்ததான அதே விளைபயன்களை, அதாவது: "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். மகிமையின் நம்பிக்கையாக கிறிஸ்து உங்களில் இருக்கிறார். கிறிஸ்துவில் இருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது,' அங்கேயிருந்த அதே சிந்தை அங்கேயிருந்த அதே வல்லமையோடு இருக்குமானால், அவர் செய்த அதே கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.

134அதிலிருந்த எல்லா விஷத்தன்மையையும் எல்லா வேதனையையும் எடுத்துப் போடுவீர்களானால்... யாரோ ஒருவர், "நான் இதைக் கூற பயப்படுகிறேன்... நான் அதைக் கூற விரும்பவில்லை...' என்று கூறுகிறார். நீங்கள் பெண்தன்மை வாய்ந்தவர்கள். தேவனுக்கு தேவை புருஷர்களே. ஓ, ஏதாவதைப் பெற்றுக்கொள்ள வேண்டும், என்னவென்று எனக்குத் தெரியாது. அவர்களுக்கு தடுப்பு மருந்து தேவை. ஆம், ஐயா. நமக்கு தேவையானது தடுப்பு மருந்தே. ஆம், ஐயா. "இது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தூரத்திலுள்ள யாவருக்கும்.'

135இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களென்றால், அதிகப்படியான (மருந்துக்கு பயன்படும்) விஷத்தை (poison) நீங்கள் சேர்ப்பீர்களென்றால், அது நோயாளியைக் கொன்றுவிடும், அது சரியே. நீங்கள் கண்டறிந்த சத்தியத்தோடு ஒழுங்கற்ற முறையிலோ, அல்லது முரட்டுத்தனமாகவோ (crude and rude), அச்சுறுத்தி அடக்கமுயல்பவராகவோ (bulldozing), அதிகப்படியான ஆளுமை (over-driving) செய்கிறவர்களாய் இருக்க வேண்டாம். பாருங்கள், அதில் தான் ஒருத்துவ சகோதரர்களாகிய நீங்கள் தவறு செய்தீர்கள். இப்பொழுது, நாம் மீண்டும் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம், சொஸ்தமாகுதலுக்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கிறோம். மேலும், உங்களை வேறுபிரித்துக் கொண்ட அசெம்பிளி சகோதரர்களாகிய நீங்கள், நீங்கள் ஒவ்வொருவரும், அங்கே தான் உங்களுடைய தவறைச் செய்தீர்கள். ஒரு சத்தியமானது கூட்டப்படும் போது, அது தொடர்ந்து செல்லும்படி அதை அப்படியே விட்டுவிடுங்கள், தேவன் அதைப் பார்த்துக் கொள்வார். அவர் ஒருவனை அழைத்தாலொழிய ஒருவனும் அவரிடத்தில் வரான். சரி.

136திரும்பிப் போகும் பாதையானது, சகோதரனே, அது மற்ற சகோதரர்களுடன் வைக்கக்கூடிய ஐக்கியமாகும். அது சரியே. பகையிலிருந்து தடுக்கப்பட்டு, தீமையிலிருந்து தடுக்கப்பட்டு, பின்னர் உலகக் கொள்கையிலிருந்து தடுக்கப்பட்டு, பெந்தெகொஸ்தே நாளில் சபையை நெருப்பாக வைத்து, இயேசு கிறிஸ்துவை கல்லறையிலிருந்து எழுப்பின வல்லமைக்கு, பரிசுத்த ஆவியாகிய தடுப்பு மருந்துக்குத் திரும்புவதே (அந்த பாதையாகும்). அந்த தடுப்பு மருந்துக்குத் திரும்புங்கள்.

137இதோ, இங்கே அந்த மருந்துக் குறிப்பு: "தண்ணீர் இருக்கிறதே, உன்னை தடை செய்கிறது என்ன?" இங்கே சபை முழுவதும் ஆவியானவர் இருக்கிறார்; வேறென்ன காரியம்? தேவன் ஒரு நாள், "ஏன்?" என்று கேட்பார், நிச்சயமாக. நீ அனைத்து மருந்துக் குறிப்புகளையும் எடுத்து, அதில் எதையாகிலும் உன் சபையில் சொல்ல பயப்பட்டு, உன்னுடைய ஸ்தாபனம் உன்னை வெளியே துரத்திவிடும் என்று பயப்படுவாயானால், உன்னைக் குறித்து என்ன? எந்த ஒரு மருத்துவ குணமும் இல்லாத தண்ணீரை அவர்களுக்கு குடிக்கக் கொடுப்பதையே நீ செய்கிறாய். அவர்கள் செய்கிற அந்த வழியிலேயே அதை அவர்கள் செய்வதற்கு அது தான் காரணம். அது சரியே. உங்களுக்கு மருந்துக் குறிப்பு அவசியம், அதுதான் திரும்பிப் போகும் பாதையாய் இருக்கிறது, அந்தப் பாதையில் தான் அது துவங்கினது, அந்தப் பாதையில் தான் தேவன் தமது சபையை துவக்கினார். நீ அந்தப் பாதையை விட்டு விலகும் போது, நீ வழிவிலகி போகிறாய். நாம் நம்மை ஸ்தாபனமாக்கிக் கொண்டு, கரங்களைக் குலுக்கி, தெளிப்பு ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவிக்காக கரங்களைக் குலுக்கும் முறையை எடுத்துக்கொண்டு, அல்லது பரிசுத்த ஆவிக்காக மெல்லிய அப்பத்துண்டை வாயில் எடுத்துக் கொள்வது போன்றவற்றைச் செய்யும் பொழுது, நீங்கள் பாதையினின்று விலகி விட்டீர்கள்.

138ஒருமுறை, ஒரு மனிதன் இயந்திர துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்தபொழுது, ஒரு மதகுரு அவரிடம், "தளபதியே, உனக்கு தேவனைத் தெரியுமா?" என்று கேட்டார். அதற்கு அவன், "முன்பு நான் ஒருமுறை அவரை அறிந்திருந்தேன்" என்றான். "எப்பொழுது -- எப்பொழுது நீர் அவரை அறிந்திருந்தீர்?" என்று கேட்டார். அதற்கு அவன், "என்னால் நினைவுபடுத்த முடியவில்லை" என்றான். "நீர் அவரை எங்கே தவற விட்டீர்? நீர் அவரைக் கண்டடைய, அவரை எங்கே விட்டீரோ, அங்கே தான் திரும்பிச் செல்ல வேண்டும்," என்றார். அதற்கு அவன், "எனக்குத் தெரியாது" என்றான். "ஐயா, உம்முடைய நுரையீரல் இரத்தத்தால் நிறைந்து கொண்டிருக்கிறது. நீர் அமைதியாகவும் துரிதமாகவும் சிந்திப்பது உமக்கு நலமாக இருக்கும்" என்றார். எனவே, சிறிது நேரம் அவன் அங்கேயே கிடத்தப்பட்டிருந்தான். அவனது முகத்தில் ஒரு மகத்தான சமாதானம் வந்த நிலையில், "எனக்கு ஞாபகம் வந்துவிட்டது, அவரை எங்கே தொலைத்தேன் என்று எனக்கு ஞாபகம் வந்துவிட்டது" என்றான். "எங்கே அவரை விட்டீர்? சரியாக அங்கே துவங்குங்கள்" என்றார். அவன்: நான் இப்பொழுது என்னை நித்திரையில் கிடத்துகிறேன், என் ஆத்துமாவை காத்துக்கொள்ளும் என்று கர்த்தரை வேண்டுகிறேன்; நான் எழுமுன் மரிப்பேனானால், என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் என்று கர்த்தரை வேண்டுகிறேன். அவன் இரத்தம் கொப்பளிக்க, அவனுடைய நுரையீரல் இரத்தத்தால் நிறைந்த நிலையில், அவன் தன்னுடைய கடைசி மூச்சை விட்டு மரித்தான். அவன் என்ன செய்தான்? இயேசுவை எங்கே தொலைத்தானோ, சரியாக அங்கே அவரை கண்டடைந்தான்.

139அங்கே தான் சபையானது அவரை கண்டடைய முடியும். ஒரு ஸ்தாபனத்தில் அவரை ஒருபோதும் நீங்கள் கண்டடைய முடியாது; அவர் அங்கே இல்லை. ஒரு கல்வி சம்பந்தமான நிகழ்ச்சியில் நீங்கள் அவரை ஒருபோதும் கண்டடைய முடியாது; அவர் அங்கே இல்லை. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தில் தான் நீங்கள் அவரைக் கண்டடைய முடியும். நீங்கள் அவரை கண்டடையத்தக்க இடம் அது ஒன்று மாத்திரமே, ஆமென்.

140சகோதரனே, அது சத்தியமாயிருக்கிறது. திரும்புங்கள், இது தான் திரும்ப வேண்டிய பாதையாயிருக்கிறது. மருந்துக் குறிப்பில் தலையிட்டு சீர்குலைக்காதே, அதை எடுத்து, அதை விசுவாசி, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவனாயிரு, அது ஒவ்வொரு தலைமுறைக்குமானது. கவனியுங்கள், "வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது." இந்த மருந்துக் குறிப்பானது ஒவ்வொரு நபருக்குமானது, கை குலுக்குவது அல்லது அதைப் போன்று ஏதோவொன்றுக்கானது அல்ல, ஆனால் அந்த மருந்துக் குறிப்பானது, சரியாக இங்கே பேதுரு அதை உரைத்து, எழுதிவைத்து, பரிசுத்த ஆவியானவர் மூலமாக, தேவன் அப். 2:38-ல் எழுதிவைத்த அதே பிரகாரமாகவே, நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்ப வேண்டியதற்கானது. வெறுமனே, "நல்லது, மனந்திரும்ப வேண்டுமா? நல்லது, இப்பொழுதே நான் போய் ஒரு சபையில் சேர்ந்து கொள்கிறேன்" என்று சொல்வதல்ல. அது அந்த பொருள்படாது. "நல்லது, நான் இப்பொழுதே போய் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறேன், அது அதைச் செய்யும். இல்லை ஐயா, தண்ணீர் உங்களை இரட்சிக்க முடியாது. மனந்திரும்புங்கள் அல்லது அழிந்து போங்கள். மறுபிறவிக்கான ஞானஸ்நானம் அல்ல, உங்களில் சிலர் இதை நம்புகிறீர்கள் என்று நான் அறிவேன், ஆனால், நீங்கள் எப்படி அவ்விதம் எடுக்க முடியும்? இல்லை ஐயா! மனந்திரும்புங்கள்! முதலாவது வருவது மனந்திரும்புதல் என்று மருந்துக் குறிப்பு கூறுகிறது, பின்னர், உங்கள் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மனந்திரும்பின பின்பே, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கேற்ற ஒரு தகுதியான நபராக இருக்கிறீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.

141ஓ, மெத்தடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரெஸ்பிடேரியன்கள், நசரீன்கள், யாத்திரீக பரிசுத்தர்கள், கத்தோலிக்கர்கள், மற்றும் பெந்தெகொஸ்தேயினர்களே, உங்களைக் குறித்து என்ன? என்ன காரியம்? தேவன் அவருடைய மகிமை மற்றும் வல்லமையிலே இறங்கி பேசும் போது, இவையெல்லாவற்றையும் குறித்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதன் காரணமாகவே பாரம்பரியங்கள் போன்றவைகளை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள், வழிவிலகிப் போகத்தக்க அளவிற்கு கோட்பாடுகள் போன்றவற்றை உள்ளே செலுத்தியிருக்கிறீர்கள். பிள்ளைகளே, திரும்பி வாருங்கள், மருந்துக் குறிப்பை எடுத்துக் கொள்ளுங்கள், அதுதான் திரும்ப வேண்டிய பாதையாயிருக்கிறது. இந்த பாவ வியாதியாகிய இந்த அவிசுவாசத்தை விட்டு விலகியிருங்கள், தேவனிடம் திரும்பி வாருங்கள், உங்கள் முழு இருதயத்துடனும் இதை விசுவாசியுங்கள். நாம் ஜெபம் செய்வோம்.

142கர்த்தாவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன், இன்றிரவு இந்த சபையோடு உம்மிடம் வருகிறேன், நான் சந்தித்ததிலேயே உத்தம இருதயம் கொண்ட ஜனங்களோடு உம்மிடம் வருகிறேன், கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, இந்தக் காரியங்களை நாங்கள் எங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறோம் என்று அவர்கள் நினைக்காமல், இது ஒரு பாரம் என்றும், இந்தக் காரியங்களைக் கூறுவது இருதயவலி என்றும் அவர்கள் கண்டுக்கொள்ள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இருப்பினும், ஒரு உண்மையான மருத்துவர் அவர் கொடுத்த மருந்துக் குறிப்பிற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். கர்த்தாவே, ஒவ்வொருவருடைய இருதயத்திலும் அது நிறைந்திருப்பதாக.

143இங்கேயுள்ள ஜனங்கள், பவுல் அவர்களைக் கண்டது போல, யோவானால் கொடுத்த ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றவர்களாய் இருப்பார்களானால், வேறொரு ஞானஸ்நானம் இருக்கிறதென்றும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்ற ஒன்று இருக்கிறதென்றும் அவர்கள் உணர்ந்து கொள்வார்களாக. ஊழியக்காரரின் கரங்களைக் குலுக்குவது, அல்லது ஒரு கோட்பாட்டை சேர்ந்து கொள்வது என்பதை மாத்திரம் அறிந்தவர்களாயிருப்பார்களானால், உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படட்டும், இதை அருளும் கர்த்தாவே. அவர்கள் தாழ்மையுடன் வந்து, இந்த சிலாக்கியத்தைப் பெற்றவர்களாய், அசூசா வீதிக்கு திரும்பி வருவார்களாக. தேவனுடைய மகிமைக்கும், ராஜ்யத்திற்கும், மீண்டும் பெந்தெகொஸ்தேவின் அனைத்து வழிகளினூடாகவும் திரும்ப வாருங்கள். இயேசு கிறிஸ்துவாகிய எங்களுடைய பலி கிடத்தப்பட்டிருக்கிற உம்முடைய பொற்பலிபீடத்தில் உம்மிடம் அவர்களை சமர்ப்பிக்கிறேன். பிதாவே, எங்களை ஏற்றுக்கொள்ளும்.

144நீர் தேவனாயிருக்கிறீர், நீர் எப்பொழுதும் தேவனாகவேயிருந்தீர், நீர் எப்பொழுதும் தேவனாகவேயிருப்பீர், உம்முடைய வார்த்தைகள் ஒருபோதும் தோற்றுப் போகாது. நீர் வாசம் செய்ய நீர் உண்டாக்கின கூடாரமாயிருந்த உம்முடைய சொந்தக் குமாரனில், நீர் மனுவுருவைத் தரித்து, பூமியின் மேல் நின்று கொண்டிருந்த போது, அது எவ்வளவாய் அந்த ஜனங்களைக் குருடாக்கியது! நல்லது, ஒரு தச்சன் தான் குடியிருக்க ஒரு வீட்டைக் கட்டுவதில்லையா? மகத்தான கட்டுபவராகிய தேவன், தான் வாசமாயிருக்க, தனக்கென்று ஒரு வீட்டைக் கட்டாதிருப்பாரோ?

145ஓ, தேவனே! வாசஸ்தலத்தை அல்ல, அதற்குள் வாசமாயிருப்பவரையே அவர்கள் காணட்டும், அந்த வாசஸ்தலத்தைக் கட்டினவர் அவரே. கிருபையினால், பாவிகளாகிய எங்களுடைய இருதயங்களில் தேவன் வாசம் செய்யும்படி, தேவன் வாசம் செய்த அந்த வாசஸ்தலத்தின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலமாக, அவருடைய சொந்த சிருஷ்டிப்பாகிய அந்த கலப்பில்லாத இரத்தத்தின் மூலமாக வழியை சுத்தம் செய்தது இந்த பரிசுத்த ஆவியே என்பதை அவர்கள் உணரட்டும்.

146இப்பொழுது, நீர் உமது சபையின் மூலமாக, ஒரு மனிதனை உபகரணமாகக் கொள்வதன் மூலம், உமது கிரியைகளை தொடர்ந்து நடப்பியும், அதுதான் நீர் எப்பொழுதும் செய்கிற உமது வழியாயிருக்கிறது. தேவனே, இன்றிரவு இங்குள்ள புருஷர்களும், ஸ்திரீகளும், தங்களுடைய இருதயங்களின் ஆழத்தில் பசி தாகம் கொண்டிருக்கட்டும். நாங்கள் இப்பொழுது யூபிலி நேரத்தில் இருக்கிறோம். கர்த்தாவே, ஐம்பது வருடங்களுக்கு முன்பு உம்முடைய சபையில் நீர் பொழிந்தருளின உம்முடைய மகத்தான கிருபை மற்றும் பரிசுத்தத்தின் இந்த யூபிலி வாரத்தை, இங்கே இந்த மாகாணத்தில் நாங்கள் கொண்டாடுகிறோம்.

147பிதாவாகிய தேவனே, இது யூபிலி நேரமாய் இருக்கிறது, அவர்கள் முதன்முறை ஆரம்பித்த அந்த பாதையே, ஜனங்கள் திரும்ப வேண்டிய பாதையாயிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். பரிசுத்த ஆவிக்கு திரும்பி வாருங்கள், ஸ்தாபனம் நுழைத்த இந்த பாரம்பரியங்களைப் புறக்கணிப்பதற்குத் திரும்பி வாருங்கள், திரும்பி வந்து, தேவனுடைய வல்லமையினால் சுகம் பெற்றவர்களாகுங்கள். பிதாவே, இதை அருளும்.

148இப்பொழுது, நாங்கள் கடந்து இரவு தியானித்தது போல, இந்த காரியங்கள் எல்லாம் உமது வாக்குத்தத்தத்தின்படி நன்மைக்காக நடப்பிக்கப்பட்டுள்ளது, ஏனெனில், இஸ்ரவேலில் நீர் இதை ஒரு முன்னடையாளமாக கொடுத்தீர். இயேசுகிறிஸ்துவின் தேவனும் இம்மானுவேலனுமாய் இருந்த அவர் இந்த பூமியின் மேல் நின்று, "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்" என்று கூறினது, கர்த்தாவே, இப்பொழுது அது நிறைவேறட்டும். இந்த ஆராதனையையும் வார்த்தைகளையும் ஒப்புவிக்கிறோம், கர்த்தாவே, அவர்களுடைய முறிந்து போன பாதையை அவர்களுக்கு மன்னியும். ஆனால், இதை நீர் ஒவ்வொருவருடைய இருதயத்திற்குள்ளும் மூழ்கச் செய்யும்படி ஜெபிக்கிறேன். அது ஆவியினால் ஆவியினால் நிரப்பப்பட்ட பரிசுத்த சபையை எழும்பச் செய்யும், அது மீண்டும் பெந்தெகொஸ்தே நாளுக்குத் திரும்பச் செய்யும். இயேசுவின் நாமத்தில், இதை உம்மிடம் ஒப்படைக்கிறேன். ஆமென்.

149நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒரு சில கணங்களுக்கு உங்களது சிதறாத கவனத்தை எனக்குக் கொடுங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். விசுவாசிக்கிறவர்கள் அனைவரும் இரட்சிக்கப்பட்டார்கள் என்று வேதம் கூறுகிறது, தேவனாகிய கர்த்தரும் நமக்கு அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இப்பொழுது இது மிகவும் எளிமையாக காணப்படுகிறது, ஆனால் நீங்கள் பாருங்கள், நீங்கள் உண்மையாகவே விசுவாசித்தால், அவ்வளவு தான் நீங்கள் செய்யக் கூடியது, மற்றதை தேவன் செய்ய வேண்டியவராய் இருக்கிறார், நீங்கள் உண்மையாகவே அதை விசுவாசிக்கும் பொழுது, தேவன் பரிசுத்த ஆவியை உங்கள் மீது பொழிந்தருளுகிறார். பின்னர் தேவன் அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்துகிறார். இப்பொழுது, வேதம் கூறுகிறது...

150ஒரு நிமிடம் பொறுங்கள், நான் இதைச் செய்வதற்கு முன்பு, ஒரு ஜெப வரிசை இருக்க போகிறது என்று நம்புகிறேன், அது சரியா? இருக்கட்டும். எத்தனை பேர் பெந்தெகொஸ்தேவிற்கு திரும்ப விரும்புகிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். எத்தனை பேர், இன்னும் இந்த மருந்துக் குறிப்பு நன்மை பயக்கிறது என்று விசுவாசிக்கிறீர்கள்? ஆமென். நிச்சயமாகவே அது நன்மை பயக்கிறது. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், ஒரு கல்வியல்ல அல்லது போய் உங்களது முனைவர் பட்டத்தை (Ph.D.) பெற்றுக் கொள்ளுங்கள் என்பதல்ல...

151நிக்கொதேமு கர்த்தராகிய இயேசுவிடம் இயேசுவிடம் வந்தபொழுது, "நித்திய ஜீவனை சுதந்தரிப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான், வாழ்நாளெல்லாம் ஆசாரியனாயிருந்து, எண்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதன் இயேசுவிடம் வந்து, "நித்திய ஜீவனை சுதந்தரிப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.

152அதற்கு இயேசு, "போய், உன்னுடைய அறிவுப் புலமையை (scholarship) மெருகேற்றிக்கொள்" என்று கூறவில்லை, இல்லை, அல்லது, "போய், உன்னுடைய அமைப்பிலுள்ள ஒரு உயர் பதவியை நீ நாடிக்கொள்" என்று அவர் கூறவில்லை. இல்லை. அவர் திட்டவட்டமாக அவனிடம் கூறினார், அவர் அவர் அவர் அவனை முற்றிலுமாக கடிந்து கொண்டார். அவன் ஒரு திறமை வாய்ந்த மனிதனாக இருந்த போதிலும், மறுபடியும் பிறக்க வேண்டும் என்ற காரியங்களை அறியாதபடியினால் அவனை கடிந்து கொண்டார், நிச்சயமாக.

153இன்றிரவிலும் காரியங்கள் அதே விதமாக இருக்கிறது. பாருங்கள், நாம் அதை மிகவும் இலகுவாக எடுத்துக்கொள்கிறோம். நாம் ஏதோ சில உணர்ச்சி வசப்படுதலை எடுத்துக்கொண்டு, "நான் மறுபடியும் பிறந்து விட்டேன்" என்று சொல்லி தொடர்ந்து செல்கிறோம். உங்களுடைய வாழ்க்கை அதைப் பெற்றிருக்கவில்லை என்று நிரூபிக்கிறதா? அப்படியானால், அங்கே ஏதோ தவறு இருக்கிறது. ஆம் ஐயா. ஓ, நீங்கள், "ஆனால், அந்த மனிதன் நல்லவராயிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்" என்று கூறுகிறீர்கள். அவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் அது பொருட்டல்ல. அதற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

154நீங்கள், இனிமையான மற்றும் அது போன்ற எல்லாவற்றையும் பெற்றிருக்கிற முகமதியர்களைக் காட்டிலும் வேறே அருமையான மக்களை நீங்கள் சந்திக்க மாட்டீர்கள். நிச்சயமாக சந்தித்திருக்க மாட்டீர்கள். ஓ, இல்லை. சில நேரங்களில் அஞ்ஞானிகளும், விக்கிரகாராதனைக்காரர்களும் தங்களால் இயன்றவரை இனிமையாகவும், தாழ்மையாகவும் இருப்பார்கள், அதில் எந்த அர்த்தமும் இல்லை, இல்லை ஐயா.

155"விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்." இதைத் தான் மருத்துவர் கூறினார். இது தான் தடுப்பு மருந்தின் விளைபயனாயிருக்கிறது. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். ஆம், ஐயா! அது தான் காரியமாயிருக்கிறது. மருத்துவர், "என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்' என்று கூறினார். அவர் அதைக் கூறினாரல்லவா? அதுவே விசுவாசியினுடைய அடையாளமாயிருக்கிறது. சபைக்குச் சென்று, தசமபாகத்தைச் செலுத்தி, ஒரு நல்ல மனிதனாக இருப்பதற்கு, நாம் அடையாளத்தை எடுத்துக்கொள்கிறோம், அது நல்லது தான், அது அருமையானது தான், ஆனால் இயேசு கூறினது அதுவல்ல. அவர், "இந்த அடையாளங்கள் அவர்களை பின்தொடரும், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்" என்று கூறினார். ஒரு குழிப்பேரி மரத்திலிருக்கின்ற (பீச் மரம் peach tree) அந்த ஜீவனை, பீச் மரத்திலிருந்து வெளியே எடுத்து, அதை ஒரு ஆப்பிள் மரத்திற்குள் செலுத்தினால், அது ஒருபோதும் ஆப்பிள் பழங்களைக் கொடுக்காது, ஆனால் பீச் பழங்களைக் கொடுக்கும், ஏனென்றால், ஆப்பிள் மரத்தில், பீச் மரத்தின் ஜீவனிலுள்ள உயிரணுவே இருக்கிறது, எனவே, அது பீச் பழங்களையே கொண்டு வர வேண்டும். அது மிகவும் சரியாயிருக்கிறது.

156இங்கே எனக்கு முன்பாக சகோதரன் வில்லியம்ஸ் (Brother Williams) உட்கார்ந்து கொண்டிருக்கிறார். என்னுடைய தனிப்பட்ட இனிமையான நண்பர். அவர் இன்றுக் காலையில் சகோதரன் ஷாரிட்டை (Brother Sharrit) அழைத்தார். நான் தொலைப்பேசியில் அவருக்காக ஜெபித்தேன். நான் ஒருமுறை சகோதரன் ஷாரிட்டுடன் சிட்ரஸ் தோப்பில் (புளிப்பு வகை மரம் -- மொழிபெயர்ப்பாளர்) நின்று கொண்டிருந்தேன். அங்கே ஒரு மரமானது இருந்தது. அந்த மரமானது ஒரு ஆரஞ்சு மரமாயிருந்தது என்று நான் நம்புகிறேன். அது நான்கு அல்லது ஐந்து வித்தியாசப்பட்ட பழவகைகளை அது கொண்டதாயிருந்தது. நான் "சகோதரன் ஜான், இது என்ன வகையான மரமாயிருக்கிறது?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இது -- இது ஒரு ஆரஞ்சு மரம்" என்றார். "நல்லது, நான் திராட்சைப் பழங்களையும், கிச்சிலிப் பழங்களையும், ஆரஞ்சு - திராட்சை கலப்பு பழங்களையும், எலுமிச்சைப் பழங்களையும், இந்த அனைத்து வித்தியாசமான பழங்களையும் பார்க்கிறேன்" என்றேன். அதற்கு அவர், "ஓ, ஆம்!" என்றார். நான், "எப்படி?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அவைகள் ஒட்டு போடப்பட்டிருக்கிறது" என்றார். நான், "நல்லது, இப்பொழுது அது அருமையாயிருக்கிறது, இல்லையா?" என்றேன். அதற்கு அவர், "புளிப்பு வகையைச் சார்ந்த எந்தவொரு ஜீவனும் இதனோடு ஒட்டுப்போடப்பட்டால் அது வளரும்" என்றார். நான், 'அது மிகவும் நல்லது" என்று சொல்லி நின்று விட்டேன், ஏதோவொன்று என்னை நிறுத்தினது. நான் மீண்டும் அதைப் பார்த்தேன்.

157பின்லாந்தில் அந்தச் சிறிய பையன் மரித்துக் கிடந்த அந்த நாளைப் போல, நான், "சகோதரன் மூர், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு சிறிய பையன் மரித்து உயிரோடு எழும்புவான் என்று சரியாக ஷ்ரீவ்போர்டில் அந்தச் சிறிய பையனைக் குறித்து நான் உங்களிடம் சொன்னேனே, அது இவன் தான். அவன் திரும்ப எழும்ப வேண்டும். மரணமானது அவனைப் பிடித்து வைக்க முடியாது என்று தேவன் உரைத்திருக்கிறார்" என்று அவரிடம் கூறினேன். பின்னர் நான், "மரணமே, உன்னுடைய பிடியைத் தளரவிடு" என்று கூறினேன். இங்கே தான் அவன் இருந்தான், ஆமென். தேவனால் பொய் சொல்ல முடியாது, இல்லை, இல்லை, பாருங்கள்?

158நான், "சகோதரன் ஜான், நான் ஏதோவொன்றை காண்கிறேன்" என்றேன். நீங்கள் பாருங்கள்! மேலும் நான், "இப்பொழுது, சகோதரன் ஜான், நான் உம்மிடம் சிலவற்றைக் கேட்க விரும்புகிறேன், ஏனெனில், அதிலிருந்து ஒரு செய்தியை எடுக்க விரும்புகிறேன்" என்றேன். மேலும், "இப்பொழுது, அடுத்த வருடம் இந்த அனைத்து புளிப்புவகை பழங்களாகிய, எலுமிச்சைப் பழங்களும், கிச்சிலிப் பழங்களும், திராட்சைப் பழங்களும், இவையனைத்தும் விழுந்து, இது ஆரஞ்சுப் பழங்களைக் கொடுக்குமா?" என்று கேட்டேன்.

159அதற்கு அவர், "ஓ! இல்லை, இல்லை, இல்லை, இல்லை" என்றார். அவர், "அது அதனுடைய வகையைக் கொண்டு வரும்" என்றார். அவர், "எலுமிச்சை கிளையைப் பெற்றிருக்கிற ஒன்று எலுமிச்சைப் பழத்தையே கொண்டு வரும், ஒரு -- ஒரு -- ஒரு கிச்சிலி மரக்கிளையைப் பெற்றிருக்கிற ஒன்று, கிச்சிலிப் பழத்தையே கொண்டு வரும்" என்றார். நான், "ஏன்? நீர் அதை ஒரு ஆரஞ்சுமரம் என்று தான் கூறினீர் என்று நான் நினைக்கிறேன்" என்றேன். அதற்கு அவர், "ஆம்" என்றார். நான், "அது ஆரஞ்சுப் பழங்களைக் கொடுப்பதை நிறுத்தி விட்டதா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இல்லை, அந்த மூல மரமானது அதனுடைய மூல கிளையைக் கொண்டு வரும் பொழுது, அது ஆரஞ்சுப் பழத்தைக் கொடுக்கும்" என்றார்.

160அதுதான், அதுதான். இந்த ஸ்தாபனங்கள் இதில் ஒட்டுப் போடப்பட்டுள்ளன. அவைகள் இன்னும் ஸ்தாபன கனிகளையே கொடுத்துக் கொண்டிருக்கிறது. அங்கத்தினர்களைச் சேர்த்தல் போன்றவை. ஆனால், அந்த மரமானது மூலக் கிளையை மீண்டும் முளைப்பிக்கும் போது, அங்கே அதற்கு பின்பாக ஒரு எழுதப்பட்ட நடபடிகள் புஸ்தகமே இருக்கும்.

161'நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகளாயிருக்கிறீர்கள்." ஏன்? அந்த மூல திராட்சைச் செடியிலிருந்து செலுத்தப்படுகிற ஜீவனானது ஒரு கிளையைத் தோன்றச் செய்கிறது. அது ஒரு பெந்தெகொஸ்தே பலன்களுடன் கூடிய பெந்தெகொஸ்தே கிளையாயிருக்கிறது. ஏனெனில், கிறிஸ்துவின் ஜீவன் அந்தக் கிளையில் இருந்து அவருடைய கிரியைகளைச் செய்கிறது. -- ஹூம்!

162நான் -- நான் அந்நிய பாஷைகளைப் பேசும் வரத்தைப் பெற்றிருக்கவில்லை, ஆனால், நான் பேச வேண்டுமென்று நிச்சயமாக உணர்கிறேன். ஓ, எப்படியாக, ஆவியானது என்னுடைய ஆத்துமாவில் சாட்சி பகருகிறது! அது இந்தக் காரியங்கள் சத்தியமென்று வார்த்தையோடு சாட்சி பகருகிறது.

163நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்கே உங்களில் எத்தனை பேர் ஜெப அட்டையைப் பெற்றிருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது, உங்கள் கரங்களை கீழே இறக்குங்கள். இங்கே எத்தனை பேர் ஜெப அட்டை இல்லாமல் இருந்து, அதேநேரம் வியாதிப்பட்டவர்களாய் கர்த்தரிடத்திலிருந்து ஏதோவொன்றைப் பெற விரும்புகிறவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள், நல்லது, நீங்கள் விசுவாசியுங்கள்.

164எங்கள் பரலோகப் பிதாவே, ஜனங்களுக்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கிறேன், அவர்களில் சிலர் புதியவர்களாய் இருந்து, இப்பொழுது உம்முடைய ஆவியானது தங்குவதை உணருகிறார்கள். நான் உம்முடைய வார்த்தையை உரைத்து, உம்முடைய மருந்துக் குறிப்பை வாசித்திருக்கிறேன். அது தான் திரும்ப வேண்டிய பாதை என்று இந்த ஜனங்களிடம் சொல்லியிருக்கிறேன்.

165இப்பொழுது, நிக்கொதேமு மற்றும் சனகெரிப் சங்கமும், நீர் மாம்சமானதை அவர்கள் பார்த்த பொழுது, அவர்கள் உம்மை அடையாளம் கண்டுக் கொண்டார்கள். அவர்கள், "ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில், ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யமாட்டான்" என்றார்கள். ஆனால், அதேக் குழுவானது, அவர் செய்ததாக அவர் சொன்ன கிரியைகளை அவர்கள் அறிந்திருந்தும், அதேக் கிரியைகளை அவரை விசுவாசிக்கிறவர்களும் செய்வார்கள் என்று அவர் வாக்குத்தத்தம் செய்தபோது, அவரை பெயெல்செபூல் என்றும், அவருடைய உபதேசம் ஜனங்களை வஞ்சிக்கிறது என்றும் சொன்னார்கள்.

166பிதாவே, காலமானது மாறவில்லை. நாங்கள் வேறொரு விளைச்சலின் நேரத்தில் இருக்கிறோம், ஆனால், நீரோ நிலைத்திருக்கிறீர், அவிசுவாசம் உம்மைத் தடை செய்யவில்லை. பிதா என்ன செய்ய சொன்னாரோ, அதையே செய்பவராக, நீர் கடந்து சென்றீர். அப்பொழுது, "நான் ஒன்றையும் செய்வதில்லை, பிதாவானவர் செய்ய குமாரன் காண்கிறதெதுவோ அதையேயன்றி குமாரன் தாமாய் ஒன்றும் செய்யமாட்டார்" என்கிற தெளிவான அறிக்கையைத் தந்தீர்.

167நாத்தான்வேல் பிலிப்புவை கண்டபொழுது, அவன் அந்த மரத்தின் கீழாக இருந்தான் என்று அவனுக்கு உம்மால் சொல்ல முடிந்தது; அவன் யோனாவின் குமாரனாயிருந்தான் என்று சீமோனிடம் உம்மால் சொல்ல முடிந்தது, அவனுடைய பெயரையும் அவன் தகப்பனுடைய பெயரையும் சொல்ல முடிந்தது; கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயிடம் கூற முடிந்தது; குருடாயிருந்த ஒரு மனிதனுடைய விசுவாசம் உம்மை நிறுத்தியது; உதிரப்போக்குடன் வந்த ஒரு இளம் ஸ்திரீ உம்முடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டதை, உடல் ரீதியாக உணர்ந்து கொள்வது சாத்தியமற்றது, ஆனால், நீர் நின்று, அவளுக்கு உண்டான பிரச்சனைகளைக் கூறி, அவைகள் நின்றுபோனதாக அவளிடம் கூறினீர்.

168கர்த்தாவே, நீர் இன்னும் தேவனாயிருக்கிறீர் என்று இவர்கள் அறிந்து கொள்ளத்தக்கதாக, கிறிஸ்து இயேசுவிலிருந்த அந்த ஜீவனானது, ஒரு சில கணங்களுக்கு இந்த குழுவிற்குள் பிரவேசிக்கட்டும். கர்த்தாவே, நான் அவர்களிடம் உம்முடைய வார்த்தையைக் கூறி கொண்டிருந்தேன். மனிதர்கள் சுற்றிலும் வந்து இதையும் அதையும் கூறி, மற்றும் ஒவ்வொரு சிறிய ஈர்ப்பு உத்திகளையும் செய்கிறார்கள். ஆனால் கர்த்தாவே, அது எதைக் குறித்து சாட்சி கொடுக்கிறது? எங்கேயோ உண்மையான ஒன்று இருக்கிறது என்று சாட்சி கொடுக்கிறது. கர்த்தராகிய தேவனே, இன்றிரவு அது வெளிவரட்டும். மனிதனல்ல, பரிசுத்த ஆவியானவரே பேசுவாராக.

169கர்த்தாவே, இந்தச் சபைக்கு விசுவாசத்தைத் தந்தருளும். நீர் எங்களில் ஒருவரை மாத்திரம் அபிஷேகிக்க முடியாது என்றும், எங்களில் அநேகரை நீர் அபிஷேகிக்க வேண்டியவராய் இருக்கிறீர் என்றும் நான் உணர்கிறேன். கர்த்தாவே, உம்முடைய சபையாக எங்களை ஒன்றுசேர அபிஷேகியும். நீர் தேவனாயிருக்கிறீர் என்றும், நான் சத்தியத்தை கூறியிருக்கிறேன் என்றும் அறியப்படட்டும். எதிர்ப்புகளினூடாக நான் உம்முடைய வார்த்தையில் நின்று கொண்டிருக்கிறேன், ஆனால், நான் உண்மையாயிருக்க முயற்சித்திருக்கிறேன்; இதை என்னிமித்தமாக சொல்லாமல், கர்த்தாவே, எனக்குச் செவி கொடுக்கிற இந்த ஜனங்கள் நிமித்தமாகவும் சொல்லாமல், ஆனால் முடிவு சமீபமாயிருக்கிறபடியால், நான் விண்னப்பம் செய்கிறேன். கர்த்தாவே, இன்றிரவு உம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்த வேண்டுமென்றும், அது சத்தியமாயிருக்கிறது என்பதையும், கிறிஸ்துவிலிருந்த அந்த ஜீவனானது இப்பொழுது அவருடைய சபையிலும், அவருடைய விசுவாசிக்களுக்குள்ளும் ஜீவிக்கிறது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டுமென்று நான் விண்ணப்பம் செய்கிறேன். பிதாவே, இதை அருளும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

170உங்களால் முடிந்தவரை ஒவ்வொருவரும் பயபக்தியுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இங்கு எத்தனைபேர் எனக்கு அந்நியர்களாயிருக்கின்றீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் இதற்கு முன்பாக இந்த கூட்டங்களில் இருந்ததில்லை என்று என்னால் உணர முடிகிறது.

171இப்பொழுது, இயேசு கிறிஸ்து தம்முடைய வார்த்தையில், பரிசுத்த யோவான் 14:12-ல், "என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்" என்று கூறினார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? வேதாகமமானது, "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று கூறுகிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? எபிரேயர் 13:8. அது சரி. நல்லது.

172இப்பொழுது அவர் கிறிஸ்துவா? இல்லையா? என்பதை கண்டறியக் கூடிய ஒரே வழி: ஒரு உடையினால் அல்ல, ஏனென்றால், அவர் ஒரு சாதாரண மனிதனைப் போலவே உடை உடுத்தியிருந்தார். இன்றிரவு அவர் இங்கே இருந்திருந்தால், நாம் அணிந்திருப்பது போன்றதான ஆடைகளையே அவரும் அணிந்திருப்பார், எனவே, அது அவருடைய உடையினால் அல்ல. அவர் தாடி வைத்திருந்தாரோ அல்லது தாடி வைக்காமல் இருந்தாரோ என்பதினாலும் அல்ல. ஆனால் அது, அவர் என்னவாயிருந்தார் என்பதை நிரூபித்த அவரிலிருந்த ஜீவனே ஆகும். அந்த நாளில் அவரைப் போல அநேகர் உடை அணிந்திருந்தனர், ஆனாலும் அது அவரல்ல. அது சரியே. இன்றைக்கும் அநேக மக்கள் அதேக் காரியங்களைச் செய்கிறார்கள், ஆனாலும் சிறிதும் மாற்றமின்றி (அவரை கண்டறியக் கூடிய ஒரே வழி) ஜீவனேயாகும். இப்பொழுது, கிறிஸ்து என்னவாயிருப்பார் என்று கூறின வேதவாக்கியத்தின் வழியாக அவர்கள் செல்ல வேண்டியதாயிருந்தது, ஏனென்றால், அந்த வழியாகத் தான் அவர்கள், அவர் கிறிஸ்துவாயிருந்தார் என்று கண்டு கொண்டார்கள். அது சரியா?

173இப்பொழுது, கிறிஸ்து என்னவாயிருப்பார் என்பதைப் பற்றி மோசே அவர்களிடம் என்ன கூறினான்? அவர் அவனைப் போல ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார். அது சரியா? "உங்களில் ஒருவன் ஆவிக்குரியவனாகவோ அல்லது தீர்க்கதரிசியாகவோ இருந்தால், கர்த்தராகிய நான் அவனோடே பேசுவேன், அது நிறைவேறினால் அது சத்தியமாயிருக்கும். அது நிறைவேறவில்லையென்றால் அவனுக்கு செவிகொடுக்க வேண்டாம்,' (அது மாத்திரமே அர்த்தமுள்ளது) என்று கர்த்தர் அவர்களோடே சொல்லியிருந்த காரணத்தால் அவர்கள் அனைவரும் அதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

174இப்பொழுது, இயேசுவானவர் வளர்ந்து, அவருடைய ஊழியத்தை அவர் தொடங்கின பொழுது, சீமோன் பேதுரு அங்கே வந்தான். அவர் அவனிடம், அவனுடைய பெயர் சீமோன் என்று கூறினார். மேலும் அவனுடைய தகப்பனுடைய பெயர் யோனா என்றும், அவனுடைய பெயர் சீமோன் என்றும் கூறினார். அது உண்மைதானே? அது அவனிலிருந்து ஒரு விசுவாசியை உண்டாக்கியது.

175பிலிப்பு சென்று (நாத்தான்வேலை) கண்டான்... அல்லது நாத்தான்வேல் சென்று பிலிப்புவை ஒரு மரத்தடியில் கண்டு, "நாங்கள் கண்டவரை (நீ) வந்து பார்" என்றான். மேலும் நடந்த காரியங்களைப் பற்றி அவன் அவனிடம் கூறினபொழுது, அது அவனுக்கு எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும், அவன் அங்கே வந்த பொழுது, இயேசு நேராக அவனைப் பார்த்து, "இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்றார். இப்பொழுது, அவன் ஒரு அவன் ஒரு போதகனாயிருந்தான், அவன் அதை அறிந்தவனாய் இருந்தான். அவன், "ரபீ! நீர் என்னை எப்படி அறிவீர்?" என்று கேட்டான். அவர், "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும் போதே உன்னைக் கண்டேன்" என்றார். அவன், "ரபீ! நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் இராஜா" என்றான். அது தீர்த்து வைத்தது. பாருங்கள்?

176கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீடம் அவர் பேசும் பொழுது, அநேகர் அவர் வரும் போது, அவர் தேவனும் தீர்க்கதரிசியுமாயிருப்பார் என்று வேதவசனங்களின் மூலம் அறிந்திருந்தார்கள். அது தான் அவருடைய அடையாளமாயிருந்தது, அது எப்போதும் இருந்து வருகிறது மற்றும் இன்னும் இருக்கிறது. பிறகு நீங்கள் கவனியுங்கள், அந்தப் பெண் வந்த போது, அவர் "ஸ்திரீயே, குடிக்கத் தண்ணீர் கொடு" என்று கேட்டதினால், அவளுடன் அவர் தன்னுடைய உரையாடலைத் தொடர விரும்பினார் என்று நாம் காண்கிறோம். அவள், "சமாரியா ஸ்திரீயாகிய என்னிடம் இவ்விதம் கேட்பது யூதர்களுடைய வழக்கமல்ல, நாம் ஒருவரோடு ஒருவர் சம்பந்தங்கலவாதவர்கள்" என்றாள். அவர் "உன்னிடத்தில் பேசிக்கொண்டிருப்பவர் இன்னார் என்று நீ அறிந்திருந்தாயானால், நீயே என்னிடத்தில் குடிக்க தண்ணீர் கேட்டிருப்பாய்" என்றார். அவள், "மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே" என்று இது போன்று கூறினாள். அவர், "போய், உன் புருஷனை அழைத்துக் கொண்டுவா" என்றார். அவள், "எனக்குப் புருஷன் இல்லை" என்றாள். அவர், 'அது சரிதான், உனக்கு ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு புருஷன் அல்ல, இதை உள்ளபடி சொன்னாய்" என்றார். அவள், "ஐயா..." என்றாள். இப்பொழுது, அதை அவர் சொன்னதைப் பரிசேயர் கண்ட பொழுது, அவர்கள், "அவன் ஒரு குறிசொல்லுகிறவன், பெயெல்செபூல்" என்றார்கள். பாருங்கள்.

177ஆனால், வேசியாகிய அவளோ, "ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்பொழுது இந்தக் காரியங்களையெல்லாம் நமக்கு அறிவிப்பார். அது மேசியாவின் அடையாளமாயிருக்கும் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர் வரும்பொழுது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்" என்றாள். அப்பொழுது அவர், "உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்றார்.

178உடனே அவள் பட்டணத்திற்குள் ஓடி, "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் மேசியா தானோ?" என்றாள். அந்த பட்டணத்து மனிதர்கள் அந்த ஸ்திரீயை விசுவாசித்தார்கள், மேலும், கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தார்கள். அது சரியா? "என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டாம்" என்று அவர் சொன்னதில் வியப்பொன்றுமில்லை.

179இப்பொழுது, நாம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டியதில்லை, நாம் கல்வி கற்றவர்களாய் இருக்க வேண்டியதில்லை, நாம் விசுவாசிக்க வேண்டும். தேவன் நம் மூலம் ரூபகாரப்படுவதற்கு, நம்மை நாம் வெறுமையாக்கி, தாழ்த்தவேண்டும். உங்களை வெறுமையாக்கிக் கொள்ளுங்கள். உங்களை வழியிலிருந்து விலக்குங்கள். உங்களுக்கிருக்கும் பெரிய எதிரி நீங்களே, இப்பொழுது நீங்கள் தேவனை விசுவாசியுங்கள். நீங்கள் அதைச் செய்கிறீர்களா?

180இப்பொழுது, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவானவர் பரிசுத்த ஆவியாயிருக்கிறார், (ஏனெனில்) "அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது" என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அந்த பரிசுத்த ஆவி உனக்குள்ளும் எனக்குள்ளும் வர முடிந்து, கிறிஸ்து வாழ்ந்த அதே ஜீவியத்தை ஜீவிக்க முடிந்தால், உங்கள் சந்தேகத்திற்குரிய இடம் எங்கே? நான் திரும்புதலையும், திரும்பி போகுதலையும் குறித்ததான சத்தியத்தை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் அதைச் செய்வாரென்றால், அவர் செய்வார் என்று நான் கூறவில்லை. இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள், அந்த நாட்கள் கடந்து விட்டதென்று ஜனங்கள் நம்புகிறார்கள். ஆனால் கடைசி நாட்களில் அவர் அதை வாக்களித்துள்ளார்.

181நாம் ஒவ்வொருவருக்கும் உத்தியோகம் உள்ளது. இந்த உத்தியோகத்திற்கு நாம் விசுவாசமாக இருக்க வேண்டும். இது தேவனாயிருக்கிறது, இது வார்த்தையாயிருக்கிறது, வார்த்தையானது மாம்சமாகி நம் மத்தியில் வாசம் செய்தது. இன்றிரவு அந்த வார்த்தையானது, அவர் நமக்குள் இருக்கும் தேவன் என்பதை உறுதிப்படுத்தும்படி, தன்னை ரூபகாரப்படுத்த, நம்முடைய மாம்சத்திற்குள் இருக்கிறது, அது அவருடைய கனிகளை கொண்டுவருகிறது, நிச்சயமாக.

182டிலிங்கர் (Dillinger, டிலிங்கர் ஒரு அமெரிக்க கொள்ளையன் மொழிபெயர்ப்பாளர்) ஆவி என்னில் இருக்கிறது என்று சொன்னால், நான் துப்பாக்கி வைத்திருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்; ஓவியனுடைய ஆவி என்னில் இருக்கிறது என்று நான் சொன்னால், ஒரு படத்தை வரைவேன் என்று எதிர்பார்ப்பீர்கள்; கிறிஸ்துவின் ஆவி என்னில் இருக்கிறது என்று நான் சொன்னால், கிறிஸ்துவின் கிரியைகளை நான் செய்ய வேண்டும். இதைத் தான் அவர் சொன்னார், நீங்கள் விசுவாசிப்பதற்கு இது உதவி செய்கிறதா?

183நான் ஒரு சிறிய காரியத்தை உங்களுக்கு சொல்லட்டும். அன்றொரு நாளில், கிவானிஸ் வர்த்தக கூட்டத்திற்கு முன்பாக, சில மருத்துவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். நான் வெளிநாடு போவதால், நான் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டியவனாயிருந்தேன், ஒரு பிரபல மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்திருந்தேன், ஒரு காரணத்திற்காக அதைச் செய்தேன். அவர் என்னை பரிசோதனைக்கு உட்படுத்தினார். இரத்தப் பரிசோதனை, இருதயப் பரிசோதனை மற்றும் எல்லாவற்றையும் செய்தார். தேவனுக்கு நன்றி, நல்லவேளையாக, அப்பொழுது வெறும் வயிறாயிருந்தது. (சகோ. பிரன்ஹாம் சிரிக்கிறார் மொழிபெயர்ப்பாளர்). பின்னர், அவர் எனக்கு உணவுப் பாதை இரைப்பை குடல் சோதனைக்கு (gastrointestinal) அதைக் குடிக்கக் கொடுத்தார்.

184ஆகவே, நான் பேரியம் கஞ்சியை (barium meal -- வயிற்றுப் பகுதி எக்ஸ்ரே-வில் தெளிவாகத் தெரிவதற்காக பேரியம் கஞ்சியை குடிக்கக் கொடுப்பார்கள் -- மொழிபெயர்ப்பாளர்) குடித்தபோது, நான் மிகவும் பதட்டத்திற்குள்ளானேன். அவர் என்னுடைய வயிற்றுப் பகுதியை அழுத்தி சோதித்தார், பின்னர் எக்ஸ்ரே மூலம் பார்த்து, "சகோதரன் பிரன்ஹாம்?" என்றார். நான், "சொல்லுங்கள் ஐயா!" என்றேன். அவர், "உங்கள் வயிறு சரியாகத்தான் இருக்கிறது. ஆனால், எதுவும் வெளியேறவில்லை" என்றார். நான், "வெளியேறவில்லையா?" என்றேன், மேலும், "அது வெளியேற்றப்பட வேண்டுமல்லவா?" என்றேன். அவர், "ஆம் ஐயா" என்றார். மேலும் அவர், எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்றார். நான், "நான் ஏதாவது செய்ய வேண்டுமா?" என்று கேட்டேன். அவர், "சாப்பிடுவதற்கு பிடித்ததை நினைத்துப் பாருங்கள்" என்றார். நான், "எப்படிப்பட்டதை நான் நினைக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீர்?" என்று கேட்டேன். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்குத் தெரியும். அவர், "ஒரு நல்ல, பெரிய, பொரித்த இறைச்சித்துண்டு" என்றார். நான், "ஒரு தட்டு பொரித்த அணிலும், ராஜ்மா பீன்ஸ்ம் (pinto beans) இருந்தால் எனக்கு நன்றாக இருக்கும்" என்றேன். (சபையோர் சிரிக்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்) அப்பொழுது அவர், "சரி, துவக்குங்கள்" என்றார். நான் சிந்திக்கத் துவங்கினேன், இப்பொழுது மாற்றம் ஏற்பட்டது. அவர், "அது வெளியேறுகிறது" என்றார். நான், "டாக்டர், அதைச் செய்தது எது?" என்று கேட்டேன். அவர், "ஒரு சிறிய மின்சார கம்பியானது உம்முடைய மூளையிலிருந்து உம்முடைய வயிற்றுக்குத் தகவலை அனுப்பியது" என்றார். நான், "அது சரியா?" என்று கேட்டேன். மேலும் நான் தொடர்ந்து, "அந்தச் சிறிய கம்பியை நினைவிருக்கிறதா?" என்று கேட்டேன். மேலும், "டாக்டர், உங்களை சொப்பனம் காண வைப்பது எது? நீங்கள் சொப்பனம் காண்பதுண்டா? என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆம்" என்றார். நான், "அது என்ன? உங்களில் ஒரு பாகம் தான் சொப்பனம் காண்கிறதா?" என்றேன். அவர், "உங்களுடைய துணை நினைவுப்பகுதி (subconscious -- சுய நினைவு மட்டத்திற்கு அப்பால் மன செயல்பாடு -- மொழிபெயர்ப்பாளர்)" என்றார். பின்னர் நான், "இங்கே ஒரு சுயநினைவுப் பகுதி (conscious) இருக்கிறது, மற்றும் இங்கே இன்னொரு நினைவுப்பகுதி (subconscious) இருக்கிறது. ஒரு சாதாரண மனிதன், அந்த இன்னொரு நினைவுப்பகுதிக்குச் (subconscious) செல்ல, அவன் உறக்கத்திற்குள் செல்ல வேண்டும்" என்றேன்.

185அவர், "நான் ஏதோவொன்றைக் கண்டறிந்தேன், சகோதரன் பிரன்ஹாமே, என்னால் அதை விளக்க முடியவில்லை" என்றார். மேலும், "அது உங்களுடைய நரம்புகள் அல்ல, அது உங்கள் நரம்புகளுக்குள் இருக்கின்ற ஏதோ ஒன்று" என்றார். நான், "என்னுடைய ஆத்துமாவா?" என்றேன். அவர், "ஆம்" என்றார். மேலும், "அதுதான் நீர் என்னவாயிருக்கிறீரோ அவ்விதமாக உம்மை ஆக்குகிறது" என்றார்.

186மேலும் நான் கூறினேன்... நான் தரிசனங்களைக் குறித்து அவரிடம் கேட்டேன், அதைக் குறித்து அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆகவே நான், "இங்கே ஒரு சுயநினைவுப் பகுதி (conscious) இருக்கிறது, மற்றொன்று (subconscious) இங்கே இருக்கிறது. இந்த சுயநினைவுப் பகுதியானது (conscious) செயலற்ற நிலையை அடையும் அளவிற்கு நீங்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும், அப்பொழுது தான் நீங்கள் இதற்குள் (subconscious) பிரவேசிக்க முடியும். உங்களில் ஒரு பகுதி (கனவில்) எங்கோ சென்றது. ஏனென்றால், பல வருடங்கள் கழித்தும்கூட, உங்கள் கனவையும், உங்கள் கனவில் நீங்கள் இருந்த இடங்களையும் நினைவுகூற முடியும்" என்று அவரிடம் கூறினேன். அவர், "அது சரிதான்" என்றார்.

187நான், "நீங்கள் பாருங்கள், அது சாதாரணமான காரியம். ஆனால், தேவன் எங்களில் சிலருக்கு இவ்விதமாக அமைத்திருக்கிறார்: அதாவது, எங்களுடைய சுயநினைவுப் பகுதியும் (conscious), துணை நினைவுப் பகுதியும் (subconscious) ஒரே நேரத்தில் இருக்கும்படி அமைத்திருக்கிறார். நாங்கள் உறக்க நிலைக்கு செல்ல வேண்டியதில்லை. தேவன், நடந்த காரியங்களையும், நடக்கிற காரியங்களையும், வரப்போகிற காரியங்களையும் காண அதை உபயோகிக்கிறார், அதுதான் தீர்க்கதரிசனமாயிருக்கிறது" என்றேன்.

188அவர், "திரு. பிரன்ஹாம், நான் சுகமளித்தலைக் குறித்ததான உமது புத்தகங்களை வாசித்திருக்கிறேன், நான் நிச்சயமாக உம்மோடு இணங்குகிறேன். நான் ஒன்றை கூறப் போகிறேன். நாங்கள் மரணத்தருவாயில் இருக்கிற நோயாளிகளை இங்கே பெற்றிருக்கிறோம், அதை நான் நிரூபிக்க முடியும்... அறிவியல் ரீதியாக..." என்றார். அருகில் ஒரு மருத்துவர் இருந்தால் அதை அவரால் உங்களுக்கு சொல்ல முடியும். மேலும் அவர், "ஒரு நபருக்கு மிக வேகமாக வளரும் புற்றுநோய், காசநோய், அல்லது மோசமான புண், அல்லது அதைப் போன்ற ஏதாவதொன்றாக இருக்கட்டும், அது அவனைக் கொல்லப்போகிறது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் அதை அவனிடம் சொல்லுவோம். அப்பொழுது அந்த நபர் மனசோர்வுற்று, விரக்தியடைந்து, கோபமடைந்து, வருத்தப்பட்டு, இவ்விதம் அவர் நடந்து கொண்டால், இந்த நோயாளி உடனே மரித்து விடுவார். ஆனால், அந்த வியாதியஸ்தர் பொதுவாக கிறிஸ்தவராக இருந்தால் அல்லது அதைப் போன்றவராக இருந்தால், அவர் மரிப்பதைக் குறித்து பொருட்படுத்தாமல், இறப்பு என்பது வாழ்வின் ஒரு பகுதி, இது நாம் செய்ய வேண்டிய காரியங்களில் ஒன்று என்பதாக அதை எடுத்துக்கொண்டு, என் நேரம் முடியும்வரை நான் உயிர் வாழ்வேன் என்று முன்சென்று அதை எதிர்கொள்கிறார். அந்த விதமான அணுகுமுறை கிட்டத்தட்ட அந்தப் பிரச்சனையை முடிக்கிறது. உடனடியாக மரிப்பதிலிருந்து அவர் தாமதித்துக் கொண்டே, தாமதித்துக் கொண்டே, தாமதித்துக் கொண்டே செல்கிறார்.

189நான், "சரி மருத்துவரே, என்னுடைய கதையை நான் முடிக்கட்டும்" என்றேன். நான், "ஒரு பொய் கண்டறியும் கருவியை (lie detector) உங்கள் கரங்களின் மேல் பொருத்துங்கள், நீங்கள் நின்று, உங்களால் இயன்றவரை சிறந்த முறையில் உண்மையைப் போலவே ஒரு பொய்யைக் கூற முயற்சி செய்யுங்கள். அப்பொழுது, அந்தக் கருவியின் முள் எதிர்மறையாக விலகுவதை கவனியுங்கள். ஏன்? அது உங்கள் நரம்புகளில் உள்ள அதிர்வு. நீங்கள் பொய்சொல்லும்படி உண்டாக்கப்படவில்லை, நீங்கள் உண்மையைக் கூறும்படிக்கே உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரு பொய்யானது உங்கள் நரம்புகளைத் தொல்லைக்குள்ளாக்குகிற ஒரு பயங்கரமான காரியமாயிருக்கிறது. கோபமாயிருக்கும்படி நீங்கள் உண்டாக்கப்படவில்லை, நீங்கள் தேவனுடன், ஒரு குழந்தையைப் போல, சமாதானமாக இருக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். பாருங்கள்? நீங்கள் விரக்தியடைந்தவர்களாய் இருக்கக்கூடாது, நீங்கள் தேவனுடன் நடந்து, விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டும். பாருங்கள்? மேலும் நான், "அவ்வளவுதான்" என்றேன்.

190நான், "இப்பொழுது, டாக்டர், இந்த முதல் நினைவுப் பகுதியில் (first conscious) வாழ்கிற இந்த மனிதன், நான் மரித்தாலும் பிழைப்பேன், அது (மரணம்) எனக்கு என்ன மாற்றத்தை உண்டுபண்ணப் போகிறது? என்ற அவனது மனோபாவமே அந்தப் பிரச்சனைக்கு நீண்ட நாள் தீர்வை அளிக்குமானால், அது அந்த முதல் நினைவுப் பகுதியை விட்டு விட்டு வெளியேறி, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்கிற இரண்டாம் பகுதிக்கு செல்லுமென்றால், அது எப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்யும்? முற்றிலுமாக அந்தப் பிரச்சனையை நீங்கச் செய்துவிடும். அந்த மருத்துவர் எழுந்து நின்று, கன்னங்களில் கண்ணீர் வழிய, "அற்புதமானது" என்றார். நான், "டாக்டர், காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நம்முடைய சபைகள் இதைப் போதிப்பதில்லை" என்றேன். அவர், "சகோதரன் பிரன்ஹாமே, அது உண்மைதான்" என்றார். நான், "நாம் பெந்தெகொஸ்தேவிற்கு திரும்ப வேண்டியது அவசியமாயிருக்கிறது" என்றேன். அவர், "நான் ஒரு பிரெஸ்பிடேரியன், என்னுடைய மனைவியும் பிரெஸ்பிடேரியன்" என்றார். அதற்கு நான், "நீங்கள் ஒரு பிரெஸ்பிடேரியன் விடுதியில் இணைந்து கொண்டீர்கள்" என்றேன். அவர், "அதைப் பற்றிய காரியம் அது தான்" என்றார். நான், "டாக்டர், ஒரு கிறிஸ்தவன் என்பவன் மறுபடியும் பிறந்தவனாயிருக்கிறான். நீங்கள் போய் சேர்ந்துக் கொள்வதல்ல, நீங்கள் பிறக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள்" என்றேன். அவர், "திரு. பிரன்ஹாம், அது சத்தியமாயிருக்கிறது" என்றார். மேலும், அவருடைய கன்னங்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. நான் அவருக்கு சீக்கிரத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப் போகிறேன். ம்-ஹும்! ம்ஹும்!

191(அது) என்ன? உங்களுடைய பதற்றங்கள் அங்கே பிடித்து வைக்கப்பட்டு, உங்களுடைய ஒரு நினைவுப்பகுதி அதை விடுவித்து, உங்களுடைய சரீரத்தை அது சரியாக இயங்க வைக்கக் கூடுமானால், பரிசுத்த ஆவியை நீங்கள் உள்ளே வர அனுமதிக்கும் போது அது எப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்யும்? அது கிறிஸ்து வாக்களித்த எல்லாவற்றையும் நிறைவேற்றும், நீங்கள் பரிசுத்த ஆவியினுடைய கருவியாக மாறுவீர்கள்.

192நான் பிறந்த பொழுது, அங்கே ஒரு ஒளியானது தொங்கிக் கொண்டிருந்தது. நீங்கள் இங்கே எங்கேயோ அந்தப் படத்தை வைத்திருக்கிறீர்கள். அது சத்தியமாயிருக்கிறது. நான் இந்த மேடையின் மேல் மரித்தாலும், அது சத்தியம் என்று விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. இப்பொழுது, நான் ஒரு மனிதன், நான் ஒன்றுமில்லை, நான் வெறுமனே உங்கள் சகோதரன், எனக்கு ஒன்றுமில்லை. ஆனால், பரிசுத்த ஆவியானவர், முன்குறித்தலினால், வரங்களை முன்நியமனம் செய்தார். தேவன் அதை சபையில் வைத்திருக்கிறார், சில மூப்பர்கள் வந்து கரங்களை வைப்பது போன்றதல்ல, ஆனால், தேவன் சபையில் முதலாவது அப்போஸ்தலர்களையும், பின்பு தீர்க்கதரிசிகளையும், மற்றவர்களையும் வைத்திருக்கிறார். தேவன் அங்கே அவைகளை வைத்திருக்கிறார். அவைகள் தேவனால் முன் தீர்மானிக்கப்பட்ட, தெய்வீக வரங்களாயிருக்கிறது. தீர்க்கதரிசியாகிய எரேமியா பிறப்பதற்கு முன்பாகவே தேவன், "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே, உன்னை ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்" என்றார். அது சரியா? அதனோடு செய்வதற்கு அவனுக்கு ஒன்றுமில்லை, தேவனே அதைச் செய்கிறார், அவர் இன்னும் தேவனாயிருக்கிறார்.

193இப்பொழுது, உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள். வியாதியாயுள்ளவர்கள், தேவனுடைய தேவையைப் பெற விரும்புகிறவர்கள், "தேவனாகிய கர்த்தாவே, நான் இந்த செய்தியைக் கேட்டேன், அது என்னை வியக்க வைக்கிறது, நீர் தேவனாயிருக்கிறீர் என்றும், நீர் ஜனங்களின் மத்தியில் சரியாக இங்கே இருக்கிறீர் என்றும், இந்த மனிதன் கோருவதை நான் கேட்டேன் " என்று கூறுங்கள். அவர் இங்கே இல்லையென்றால், அவர் தவறான ஏதோவொன்றை கூறியிருக்கிறார், "இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன்." ஏன்? எப்படியோ அவர் உங்களுக்குள்ளே இருக்கிறார். உங்கள் நடுவில் அவர் தன்னை பகிர்ந்தளிக்கிறபோது, அது மீண்டும் ஒரு ஒன்றுசேர்ந்த பகுதிக்கு (unit) திரும்ப வருகிறது. இப்பொழுது, அந்த ஒன்றுசேர்ந்த பகுதியின் (unit) இந்த பாகமானது (part) செயல்பட முடியும் என்று விசுவாசிப்பதற்கு, ஒன்றுசேர்ந்த பகுதியின் பாகமாக நீங்கள் இருக்க வேண்டும்.

194அவர் எனக்கு ஒரு ஊழியத்தைப் கொடுப்பார் என்றால், அதை விசுவாசிக்கும்படியான யாரோ ஒருவரை அவர் கொண்டிருக்கிறார், இல்லையென்றால், அங்கே எனக்கு ஊழியத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது, அது சரியே. உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்து, தேவன் காரியங்களைச் செய்யவில்லையா என்று பாருங்கள்.

195இப்பொழுது, ஜெப அட்டையைப் பெற்றிருக்கிறவர்கள் அல்ல, ஜெப அட்டையைப் பெற்றிராத ஜனங்களே எனக்கு வேண்டும். ஏனெனில், ஜெப அட்டையை வைத்திருக்கிறவர்களை நான் ஜெபவரிசையில் அழைத்து விடுவேன். நீங்கள் இதை உங்கள் சிந்தையில் வைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இப்பொழுது பயபக்தியாயிருங்கள்.

196கிறிஸ்து, இப்பொழுது கிறிஸ்து சுகமாக்க முடியும், ஏனெனில், பிதாவானவர் தரிசனத்தின் மூலம் அவருக்கு சொன்ன போது அவர் சுகமாக்கினார். அது சரியே. அவர் ஒரு தரிசனத்தை காணும் வரை, ஒருவரையும் அவர் சுகமாக்கவில்லை, அல்லது ஒரு அற்புதத்தையும் அவர் நிகழ்த்தவில்லை. எத்தனை பேர் அதை அறிந்திருக்கிறீர்கள்? பரிசுத்த யோவான் 5:19ல், அவர் தாமே அதைக் கூறினார், அவர் தேவனாயிருக்கிறார், அவர் பொய் சொல்ல முடியாது.

197ஆனால், நீங்கள் பாருங்கள், சுகமளித்தலானது ஏற்கனவே சம்பாதிக்கப்பட்டிருக்கிறது, இப்பொழுது, பலியானது செலுத்தப்பட்டிருக்கிறது. அவர் இன்னும் அற்புதங்களைக் காண்பித்து, தீர்க்கதரிசனங்களின் மூலமாக தன்னை வெளிப்படுத்த முடியும், ஆனால், சுகமளித்தலுக்கோ, நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டும். அவர், இன்றிரவு இங்கே நின்று கொண்டிருந்தால், நீங்கள் அவரிடம், "கர்த்தாவே, என்னை குணமாக்குவீரா?" என்று கேட்கும்போது, அவர், "நான் ஏற்கனவே அதைச் செய்துவிட்டேன்; நீ அதை விசுவாசிக்கவில்லையா?' என்று கேட்பார். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம். நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது நீங்கள் அதை அதை விசுவாசித்து, அவர் இன்னும் ஜீவிக்கிறாரா என்று பாருங்கள்.

198என்னே, ஒரு சவால்! நான் இந்தியாவிலுள்ள பம்பாயில் எனக்கு எதிரே நின்று கொண்டிருந்த ஐந்து லட்சம் ஜனங்களுக்கு முன்பாக சவாலிட்டேன். தென் ஆப்பிரிக்கா, டர்பனின் (Durban, South Africa) இருபத்து ஐயாயிரம் ஜனங்கள் முன்பாக நான் சவாலிட்டேன், தேவன் காட்சியில் வந்ததை அவர்கள் கண்டார்கள். முப்பதாயிரம் ஆதிவாசிகள் (blanket natives), தங்களுடைய விக்கிரகங்களை எறிந்துவிட்டு, அந்த நிமிடத்திலேயே கிறிஸ்தவர்களாக மாறினார்கள். முழுநிர்வாணமாக இருந்த பெண்கள், கிறிஸ்து அவர்கள் மேல் வந்தவுடன் கரங்களை மடித்துக் கொண்டு வெளியேறினார்கள். இன்றைக்கு பெந்தெகொஸ்தே சபையில் இருக்கின்ற பெண்கள் தங்கள் ஆடைகளைக் குறைத்து, இவ்விதமாக நடந்து கொண்டு, இன்னும் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாகக் கூறுகிறீர்கள். அங்கே சிலர் இருக்கிறீர்கள்... நான்... நான் உங்களை நேசிக்கிறேன், நீங்கள் அதை அறிவீர்கள். அங்கே வெளியே தேவனுடைய குமாரத்தியை, என்னுடைய சகோதரியை நான் காணும் பொழுது, என்னுடைய சகோதரி தேவனுடைய பரிசுத்தவாட்டியாய் இருப்பதற்குப் பதிலாக வீதிகளில் திரிகிற பெண்களைப் போல இருப்பதைக் காணும் போது, தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கத் தவறி, இவ்விதமான பிரசங்க பீடத்திற்கு பின்னால் நிற்கின்ற கோழையான என்னுடைய சகோதரனைக் காணும் போது, நான் வைராக்கியங்கொள்கிறேன். சில மனிதர்கள் அவனுடைய ஸ்தாபனம் அவனை உதைத்து வெளியே தள்ளிவிடும் என்று பயந்து சத்தியத்தை அறிவிக்க, அதற்காக நிற்க பயப்படுகிறார்கள். ஒரு தேவ குமாரன்... அந்த இரத்தம் சரியாக ஓடவில்லை. அசலான கலப்படமில்லாத கிறிஸ்தவமானது, வார்த்தையை விசுவாசிக்கிறது, அதைப் பிடித்துக் கொள்கிறது, அந்த வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொள்கிறது.

199இப்பொழுது, நீங்கள் அந்நியர்களாயிருக்கிறீர்கள். நான் சுற்றிலும் பார்க்கிறேன். நான் இங்கே சகோதரன் வில்லியம்ஸ் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறேன். சகோதரி மூர் அவர்களைப் பார்க்கிறேன். அவருக்குப் பக்கத்தில் அது சகோதரி பௌட்லிர் (Sister Boutliere) என்று நினைக்கிறேன். நேற்று இரவு அவளை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. வேறு யாராகிலும் எனக்கு அறிமுகமானவர்கள் இருக்கிறார்களா என்பதைக் காண முயற்சிக்கிறேன். இந்த சகோதரன் இங்கே... அவருடைய பெயரை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை. அவர் [யாரோ ஒருவர், "சகோதரன் ஹாரிஸ்" என்று கூறுகிறார் ஆசி] (என்ன) ["சகோதரன் ஹாரிஸ்"] சகோதரன் ஹாரிஸ் (Brother Harris), அவரை நான் அறிந்திருக்கிறேன். ஓஹையோவிலுள்ள, டொலெடுவிலிருந்து (Toledo, Ohio) சகோதரன் மற்றும் சகோதரி டௌ (Brother and Sister Dauch) இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள். அவ்வளவுதான் என்று நினைக்கிறேன். நான் சகோதரன் காலின்ஸை (Brother Collins) பார்க்கிறேன் என்று நம்புகிறேன். அவர் சகோதரன் காலின்ஸ், அது சரியா? பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு நல்ல மெத்தடிஸ்ட் பையனாயிருக்கிறார்; இப்பொழுது சபையில் என்னுடைய -- டீக்கன்மார்களில் ஒருவராக இருக்கிறார், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரன் காலின்ஸ், சகோதரி காலின்ஸ்.

200பரிசுத்த ஆவி இப்பொழுது உள்ளே வந்து கொண்டிருக்கிறார், அது ஒரு கண்மூடித்தனமானதாகத் தோன்றும், நான் அதை விளக்க விரும்புகிறேன். நீங்கள் தேவனை விளக்க முடியாது, நீங்கள் தேவனை விசுவாசிக்க வேண்டும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசியுங்கள், சந்தேகப்படாதீர், வெறுமனே விசுவாசியுங்கள். நீ அதை விசுவாசித்தால் நீ இரட்சிக்கப்படுவாய் என்பதாக வேதம் கூறுகிறது.

201நீங்கள், "கர்த்தாவே, எஜமானரின் வஸ்திரங்களைத் தொட்ட அந்த ஸ்திரீயைப் போல நான் இருக்கிறேன், நான் அந்தப் பிரசிங்கியாரைத் தொட முயற்சிக்கவில்லை, அவர் ஒரு மனிதனாயிருக்கிறார், எங்களுடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கிற பிரதான ஆசாரியராக நீர் இருக்கிறீர் என்று வேதம் கூறுகிறது" என்று கூறுங்கள். அவர் அதைக் கூறினாரல்லவா? அது தான் புதிய ஏற்பாடு. நல்லது, நீங்கள் பிரதான ஆசாரியரைத் தொடும்போது, அவர் நேற்றைக்கு என்ன செய்தாரோ அதேக் காரியத்தை இன்றைக்கும் செய்யாவிட்டால், நீங்கள் அவரைத் தொட்டீர்கள் என்பதை எதினால் அறிந்துக் கொள்வீர்கள்? அவர் மாறாதவரென்றால், அவர் அதேக் காரியத்தைச் செய்வார். அது சரிதானே? அது சரியா? நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கிற பிரதான ஆசாரியராக அவர் இருக்கிறார். அந்த ஸ்திரீ அவரைக் தொட்டபோது, அல்லது அங்கு சென்று, உங்களைப் போல அவள் செய்தபோது அல்லது அவள் ஏதோவொன்றைச் செய்தபோது என்ன சம்பவித்தது? இயேசு சுற்றிலும் பார்த்து, "யாரோ என்னைத் தொட்டார்கள்" என்றார். பேதுரு, "ஏன்" திரளான ஜனங்கள் உம்மைத் தொட்டுக்கொண்டிருக்க, ஏன் இதுபோன்ற ஒன்றைக் கூறுகிறீர்?" என்றான்.

202அவர், 'ஆனால், என்னிலிருந்து வல்லமை புறப்பட்டது, நான் பெலவீனமடைந்ததை உணர்ந்தேன்" என்றார். அந்த ஸ்திரீயைக் கண்டுபிடிக்கும்வரை அவர் சுற்றும் முற்றும் நோக்கினார், அவளது உதிரப்போக்கை குறித்து, "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்றார்.

203இன்றைக்கு அவர் அதே தேவனாயிருக்கிறார், அவர் அதே பிரதான ஆசாரியராயிருக்கிறார், இப்பொழுது நீங்கள் விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசியுங்கள், என்னை அறியாதிருக்கிறவர்கள் மற்றும் ஜெப அட்டையை பெறாதவர்கள் தேவனிடம் மன்றாடி, அதைக் குறித்து தாழ்மையாயிருங்கள். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், உங்கள் விசுவாசம் அவரை தொடப் போகிறது, உங்களுக்காக நான் அவரை தொட முடியாது. நீங்கள் தான் அவரைத் தொட வேண்டும், அது உங்களுடைய சொந்த விசுவாசமாயிருக்கிறது, ஆனால் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? "நான் விசுவாசிக்கிறேன், ...நீங்களும் விசுவாசிக்க முடியும்..." என்று கூறுங்கள். நாம் அதை ஒவ்வொரு வரிசையாக ஆரம்பிப்போம். அது வந்திருக்கிறது.

204இப்பொழுது, நீங்கள் உண்மையாகவே... எழுந்து, இங்கும் அங்கும் போகாதிருங்கள், மெய்யாகவே அப்படியே தரித்திருங்கள். தேவனாகிய கர்த்தர் அவருடைய சபைக்கு உறுதிப்படுத்துதலை அளிப்பாராக. தேவனே, நான் சத்தியத்தை உரைத்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தமட்டில் சரியானதையே கூறியிருக்கிறேன். பரம பிதாவானவர் தாமே அதைத் தமது ஜனங்களுக்கு உதவும்படி அதைச் செய்வாராக, நாம் அவர் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, உமது ஜனங்களுக்கு உதவி செய்யும். கடினமாக பிரசங்கித்து நீங்கள்... இது ஒரு மாற்றம். மற்றொரு அபிஷேகம், அதே ஆவிதான், ஆனால் வேறொரு உத்தியோகத்தில் இருக்கிறது.

205இங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கிற சீமாட்டி, இந்த வரிசையின் இறுதியில் சரியாக உட்கார்ந்துக் கொண்டு என்னை பார்த்துக் கொண்டிருக்கிற சீமாட்டியே, உன் மேலுள்ள அந்த வெள்ளையான காரியம். நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாயா? என்னை அவருடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா? உனக்கு அவர் தேவையாய் இருக்கிறார், இல்லையா? அது உன்னுடைய தொண்டையாயிருக்கிறது. அது உண்மையா என்று அவளிடம் கேட்டுப் பாருங்கள். திருமதி ஸ்பாக்ஸ் (Mrs. Sparks), நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? அங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கிற அந்த குழந்தை, உனக்கும் ஜெபம் தேவையாயிருக்கிறதா? ஆம் ஐயா. அவனுக்கு இரத்தச் சோகை உள்ளது. நரம்புத் தளர்ச்சி இருக்கிறது. அது உண்மை. அப்படித்தானே? அந்தப் பெண்மணியை எனக்குத் தெரியாது. நான் அவளை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அந்த குழந்தையின் மீது உன் கரங்களை வை. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினலே அந்த பெண்மணிக்கு செய்யத்தக்க போதுமான விசுவாசம் இருந்தால், அது அறியப்படட்டும் கர்த்தாவே. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அது நீங்கிப் போவதாக, ஆமென். சந்தேகப்படாதீர்கள். இப்பொழுது, அவர் இங்கே இருக்கிறார். பாருங்கள்? அவர் வரும்வரை நாம் அவரை ஸ்தோத்தரித்துக் கொண்டிருந்தோம், இப்பொழுது அவர் இங்கே இருக்கிறார்.

206இங்கே ஒரு சிறிய பெண்மணி பின்னால் அமர்ந்திருக்கிறாள், சரியாக அந்தப் பெண்மணிக்கு பின்னாக. அவள் தனது கரங்களை உயர்த்தியிருக்கிறாள். தனது கையில் கைக்குட்டையை வைத்திருக்கிறாள், அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள், அவள் கடைசியில் அமர்ந்திருக்கிறாள். அந்தப் பெண்மணி வயிற்றுத் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள். சகோதரியே, அது முற்றுப் பெற்றது. நீங்கள் ஜெப அட்டையைப் பெற்றிருக்கிறீர்களா? உங்களிடம் இல்லையா? உங்களுக்கு அது தேவையில்லை. உங்களிடம் அது இல்லை, நீங்கள் வீட்டுக்குச் சென்று உங்கள் இரவு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தொல்லை நீங்கிப் போயிற்று.

207"உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்..." நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? இந்த ஜனங்களைக் கேட்டுப் பாருங்கள், நான் அறிந்திருக்கிறவரை என் வாழ்நாளில் அவர்களை நான் கண்டதில்லை என்பதை பரலோகத்திலிருக்கும் தேவன் அறிவார். அதே கிறிஸ்துவாக இது இல்லாதிருந்தால்...

208இங்கே, சரியாக இங்கே ஒரு இளம்பெண் அமர்ந்திருக்கிறாள், அவள் ஒரு சிகப்பு மேலாடையை அணிந்திருக்கிறாள். சீமாட்டியே, உன்னிடம் ஜெப அட்டை இருக்கிறதா? உன்னிடம் இல்லையா? அது உனக்குத் தேவை இல்லை. நீ வியாதிப்பட்டிருக்கவில்லை, ஆனால் உனது சிந்தையில் ஒரு கேள்வி இருக்கிறது, அதைக் குறித்து என்னிடம் பேச விரும்புகிறாய், அந்தக் கேள்வி ஒரு ஆவிக்குரிய ஒன்று. அது என்னவெனில், நீ செய்கிற வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக கர்த்தருக்கென்று வேலை செய்யலாமா என்பதை அறிய விரும்புகிறாய். நீ இங்கிருந்து வரவில்லை, ஆனால் டெக்ஸாஸ்-ல் உள்ள ஹவுஸ்டனில் (Texas, Houston) இருந்து வருகிறாய். தரித்திரு, அவர் உனக்காக ஆயத்தமாகும் பொழுது அவர் உன்னை அழைப்பார். என் வாழ்நாளில் நான் இவளைக் கண்டதில்லை. நீ அதை விசுவாசிக்கும்படி நான் உனக்கு தீர்க்கமாகக் கூறுகிறேன்.

209அது என்ன? திரும்ப வேண்டிய பாதை. இங்கே, சரியாக இங்கே பின்னால் அமர்ந்திருக்கும் மனிதன், நல்ல ஆவிக்குரிய நடத்தையுள்ள ஒரு மனிதன் இருக்கிறார். வெள்ளை நிற சட்டை அணிந்துள்ளார், வழுக்கைத் தலை, அர்கன்சாஸ் (Arkansas) என்ற இடத்திலிருந்து வந்துள்ளார். உம்மிடம் ஜெப அட்டை உள்ளதா? நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீர் விசுவாசிக்கிறீரா? உன்னுடைய வயிற்றுத் தொல்லை உன்னை விட்டு நீங்கிப் போயிற்று, நீங்கள் அர்கன்சாஸ்-கு மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்லலாம். (சபையார் ஆரவாரம் செய்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்) என் வாழ்நாளில் நான் இவரைக் கண்டதில்லை.

210இங்கே ஒரு மனிதன் காசநோயுடன் இருக்கிறார், ஒரு குடலிறக்கம். அவர் டெக்ஸாஸ்-லிருந்து வந்திருக்கிறார். திரு. காப் (Mr. Cobb), அது சரியானது. நான் மக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன். நீர் விசுவாசிக்கின்றீரா? நீங்கள் டெக்ஸாஸ்- கு சென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் சுகமாக இருங்கள். அவர் தேவனாயிருக்கின்றார். நீர் விசுவாசிக்கின்றீரா?

211இங்கே, இங்கே சற்று பருமனான ஒரு பெண் இருக்கிறாள். தேனே, உன்னிடம் ஜெப அட்டை இருக்கிறதா? நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிக்கிறாயா? ஒரு தேவ ஊழியனாக, சற்று முன்பாக நான் செய்தியில் கூறினவைகள் சத்தியம் என்று நீ விசுவாசிக்கிறாயா? உன்னுடைய சிறுநீரகத் தொல்லை நீங்கிப் போய்விடும், வீட்டிற்குச் செல், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே சுகமாடைவாயாக. (அந்த ஸ்திரீ சத்தமிடுகிறாள் - மொழி.) நீங்கள் அதை விசுவாசியுங்கள்.

212ஒரு பெண்மணி, இங்கே, காது தொற்றுடன் வரிசையின் இறுதியில் அமர்ந்திருக்கிறாள். தேவன் உனக்கு சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? வீட்டிற்குச் செல், விசுவாசி, சுகமாயிரு.

213அங்கே ஒரு ஸ்திரீ, இருதயக் கோளாறுடன் அமர்ந்திருக்கிறாள், ஒரு ஊதா நிற தொப்பியை அணிந்திருக்கின்றாள், அவளது பெயர் திருமதி. லாம்பர்ட் (Mrs. Lambert). உன்னுடைய முழு இருதயத்தோடும் நீ விசுவாசிக்கின்றாயா? உனது இருதயக் கோளாறு நீங்கி விடும், நீ வீட்டிற்குச் சென்று சுகமாயிரு.

214நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? நீங்கள் விசுவாசிக்கும்படி உங்களுக்கு சவாலிடுகிறேன். உங்கள் கரங்களை உயர்த்துங்கள். (சபையார் ஆமென்' என்று சொல்லி ஆரவாரம் செய்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்)

215கர்த்தராகிய இயேசுவே, தேவனுடய குமாரனே, இந்தக் காரியங்கள் முடிவுறாதிருக்கட்டும், கர்த்தாவே, நீர் இந்தக் காரியங்களை வீணிலே செய்வதில்லை. நீர் தேவனாயிருக்கிறீர், நித்திய தேவன், நீர் என்றென்றும் ஜீவிக்கிறவராயிருக்கிறீர். நீரே இதனுடைய ஆக்கியோனாய் இருக்கிறீர் என்று இன்றிரவிலே அறியப்படுவதாக, உமது தடுப்பு மருந்து சரியானதாயிருக்கிறது. நீர் எங்கள் மத்தியில் இருக்கிறீர், நீர் தேவனாயிருக்கிறீர். இப்பொழுது, ஜனங்கள் உம்மீது விசுவாசம் கொள்ளட்டும், அவர்கள் சுகமடையட்டும், அனைத்துக் காரியங்களிலிருந்தும், அனைத்து அவிசுவாசத்திலிருந்தும், இரட்டிப்பு விடுதலையைப் பெற்றுக் கொள்ளட்டும். எங்கள் விலையேறப்பெற்ற தேவனே, எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரத்தைச் செலுத்துகிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, நாங்கள் இவர்களை உம்மிடம் ஒப்படைக்கிறோம்.

216உங்களது முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? இந்த ஜனங்களில் சிலரோடு பேசுவீராக, நான் இவர்களை என் வாழ்நாளில் கண்டதில்லை. இப்பொழுது, இவர்களிடம் என்ன தவறு உள்ளது என்பதை நான் அறியேன். நான் உங்களிடம் சத்தியத்தைக் கூறியிருக்கிறேன் என்பதற்கு பரிசுத்த ஆவியானது ஒரு நிரூபணமாயிருக்கிறது. நான் உங்களிடம் என்ன கூறினேனோ, அதுவே திரும்ப வேண்டிய பாதையாயிருக்கிறது. சபையானது வனாந்தரத்திலே தொலைந்துப் போய், எங்கும் அலைந்துக் கொண்டிருக்கிறது. தேவனே, எங்கள் பிதாவே, இயேசு கிறிஸ்துவாகிய அவருடைய குமாரனுக்குள் அவர் இருந்த அதேவிதமாகவும், அவருக்குள் அளவில்லாததாக இருந்த அவர், எங்களுக்குள் அளவிடத்தக்கதாகவும், ஆனால் அதே ஆவியாக, எங்களோடும் எங்களுக்குள்ளும் இருக்கிறீர். உங்களால் இதைக் காண முடியவில்லையா? நீங்கள் இதை அறியாமலிருக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசியுங்கள்.

217நாம் எங்கே இருக்கிறோம்? தேவனில் விசுவாசமுள்ள வர்களாயிருங்கள். இயேசு கூறின இந்தக் காரியங்களை விசுவாசியுங்கள். அவர் தேவனுடைய குமாரனாக இருந்துக் கொண்டு எப்படிப் பொய்யுரைக்க முடியும்? எப்படி அவர் ஒரு வாக்குத்தத்தத்தை ஏற்படுத்தி, அது பொய்யாய் இருக்க முடியும்? அது ஏனெனில், நாம் இன்னும் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை, பிசின் தைலத்துக்கு திரும்பி வாருங்கள், திரும்பி வாருங்கள். உணர்ச்சி வசப்படுதலோ, பரவசப்படுவதோ அல்ல, அல்லது அது பரவசப்படுதலாகவோ, உணர்ச்சி வசப்படுதலாகவோ இருந்தாலும், அசலான பரிசுத்த ஆவியானது உள்ளே வந்து தன்னை உறுதிப்படுத்தட்டும். அவர் எப்பொழுதும் செய்த கிரியைகளை அது செய்யும் என்பதை சாத்தியப்படுத்துங்கள். "என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்." இப்பொழுது நீங்கள் இதை விசுவாசிக்கின்றீர்களா?

218எத்தனைப் பேர் ஜெப அட்டைகளை வைத்திருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். கிறிஸ்துவின் ஒரு ஊழியக்காரனென்றும் நீங்கள் என்னை விசுவாசித்தால்... சபைக்கு கடைசி கட்டளையாக இயேசு, "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்; வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்தால் அவர்கள் சொஸ்தமடைவார்கள்" என்றார். நான் வழிநடத்தப்பட்டதை உணர்ந்தேன். நான் வெளியே நடந்துச் செல்ல எத்தனித்தேன். ஆனால், ஏதோவொன்று என்னிடம், "அதைச் செய்யாதே, அந்த ஜனங்கள் உன் கரங்களை அவர்கள் மீது வைக்க விரும்புகிறார்கள்" என்று கூறினது. தேவன் நல்லவர், என்னுடைய சுய எண்ணங்களிலிருந்து தேவன் என்னை தடுத்து விட்டார். அதைத் தடுத்தது எது? 1? நீங்கள் தான், உங்கள் வாஞ்சையே அதைத் தடுத்தது. உங்கள் இருதயத்தின் வாஞ்சையை தேவன் தந்தருளுவார். ஜெப அட்டையை வைத்திருக்கிறவர்கள் வரிசையில் நில்லுங்கள். இந்த வழியாக வந்து அவர்களை வரிசைப்படுத்துங்கள். அவர் நல்லவராயிருக்கிறார்.

219வானத்திலிருந்து ஆகாயவிமானத்தை அவர் கீழே இறக்குவதைக் கண்டேன், மரித்துக் கொண்டிருந்த தனது மகனுக்காக அந்த கறுப்பின ஸ்திரீயின் விசுவாசத்தினிமித்தம், முழு இரவும், அடுத்த நாள் முழு பகலும் என்னை அவர் அங்கே இருக்க வைத்தார். நிச்சயமாக. நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? நீங்கள் செய்தியை விசுவாசிக்கின்றீர்களா? உங்களால் செய்தியை விசுவாசிக்க முடியவில்லையெனில், நல்லது, நீங்கள் செய்தியாளனை ஒருபோதும் விசுவாசிக்க மாட்டீர்கள். நிச்சயமாக விசுவாசிக்க மாட்டீர்கள். ஆனால், அது செய்தியாயிருக்கும் பட்சத்தில், தேவன் அதை உறுதிப்படுத்துவார்.

220இப்பொழுது, தரிசனங்கள் என்ன செய்கிறது என்பதை நீங்கள் காண்பீர்களானால்... தரிசனங்கள் தேவனிடத்திலிருந்து வருகிற ஒன்றாயிருக்கிறது. தரிசனங்கள் தேவனை பிரகடனப்படுத்துகிறது. வேதாகமம், "உங்களுக்குள் ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் அவனோடு பேசுவேன்" என்கிறது. அவர் எப்படி பேசுவார்? அவர் செய்தது போலவே, எப்பொழுதும் பேசினது போலவே. "அவன் கூறுவது சத்தியமாயிருக்கும், அது சத்தியமாயிருக்கிறது என்பதை நான் நிரூபிப்பேன்." அப்பொழுது அந்த மருந்துக் குறிப்பை எடுத்துக்கொண்டு பின்செல்லுங்கள், பெந்தெகொஸ்தே விசுவாசத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். ஒருத்துவக்காரர் திருத்துவக்காரருக்கும், திருத்துவக்காரர் ஒருத்துவக்காரருக்கும் சகோதரனாயிருங்கள். சர்ச் ஆப் காட் நசரீனருக்கும், நசரீனர் சர்ச் ஆப் காட்-க்கும் சகோதரனாயிருங்கள். சகோதரனாயிருங்கள், சகோதரியாயிருங்கள், ஸ்தாபனங்கள் உங்களை பிரித்திட அனுமதியாதேயுங்கள். தேவன் அவருடைய சபையை முன்குறித்திருக்கிறார். அவர்கள் எங்கேயோ ஒரு குளத்தில் இருக்கிறார்கள். நாம் வெளியே சென்று அவர்களை பிடிக்க வேண்டும். ஒவ்வொரு இருதயத்தையும் தேடிக்கொண்டு பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். பரலோகத்தின் தேவன் தாமே...

221இப்பொழுது, ஜனங்களாகிய நீங்கள் வருகையில், என்னால் சுகமாக்க முடியுமானால், நான் அதைச் செய்வேன். உங்களை என்னால் சுகப்படுத்தக் கூடும் என்று கூறியிருந்தால், நான் பொய்யுரைக்கிறேன். நீங்கள் ஏற்கனவே சுகப்படுத்தப்பட்டு விட்டீர்கள், இயேசு கல்வாரியில் மரித்த போதே உங்களை சுகப்படுத்திவிட்டார். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் குணமானோம்." இது சத்தியம் என்று எத்தனை பேர் விசுவாசிக்கின்றீர்கள்? ஆமென்' என்று கூறுங்கள். (சபையார் 'ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்). என்னால் முடிந்ததெல்லாம் உங்கள் மீது கரங்களை வைத்து ஒரு ஆசீர்வாதத்தைக் கூறுவது மாத்திரமே. தேவனே, இந்த ஆசீர்வாதத்தை அருள்புரியும். அது உங்களுக்கு உதவி செய்யும் என்று நிச்சயமாகக் கூறுகிறேன். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களென்றால், ஒருமுறை ஓரல் ராபர்ட்ஸ் (Oral Roberts) கூறினது போன்று அது (கைகளை வைக்குதல் மொழிபெயர்ப்பாளர்) ஒரு தொடர்பு முனையாயிருக்கின்றது (point of contact).

222நாம் தலைவணங்கி ஜெபிக்கையில், இங்கிருக்கும் ஒவ்வொரு நபரும் விசுவாசிக்க வேண்டுகிறேன். இந்த ஜனங்கள் இங்கே வலதுபுறம் ஒருவர் பின் ஒருவராக வர விரும்புகிறேன். அவர்கள் வரும்போது, உங்கள் மீது கரங்களை வைத்து இப்பொழுது ஜெபிக்க போகிறேன். காலதாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பத்து மணியாகிவிட்டது. நான் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். சரியாக இப்பொழுதே நான் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். நான் உங்கள் மீது கரங்களை வைக்கப் போகிறேன்.

223நான் மட்டும் இங்கில்லை என்பதை நீங்கள் காணும்படியாக, ஊழியக்கார சகோதரர்களை அழைக்கப் போகிறேன். நான் ஒருவன் மாத்திரம் அல்ல, எந்த ஒரு ஊழியக்காரருக்கும் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதற்கு உரிமையுண்டு. தேவபக்தியுள்ள, தேவன் அனுப்பின, தேவனில் விசுவாசம் கொண்டுள்ள எந்த ஊழியனாய் இருந்தாலும், யாருக்கும் செய்வது போல, தேவன் அவருடைய ஜெபங்களையும் கேட்பார். அவர்கள் பகுத்தறியவோ, அல்லது அது போன்ற காரியங்களை செய்ய முடியாமல் இருக்கலாம், அவர்கள் செய்வதுமில்லை, அவைகள் அடிக்கடி நிகழ்வதுமில்லை. அது சரியே. ஆனால், அதைச் செய்கிற மனிதனை மற்ற யாரைக் காட்டிலும் அது மேலானதாக ஆக்குவதில்லை.

224பிரசங்கிமார்கள் பிரசங்கிப்பதைப் போல நான் பிரசங்கிக்க முடியாது, ஒரு உபாத்தியாயர் செய்வதைப் போல, நான் போதிக்க முடியாது. அந்நிய பாஷை வரத்தைப் போல நான் அந்நிய பாஷையில் பேச முடியாது, வியாக்கியானம் செய்வதை நான் பெற்றிருக்கவில்லை. ஓரிரண்டு முறை அது என்னிடம் வந்திருக்கிறது, என் ஜீவியத்தின் நான்கு அல்லது ஐந்து முறை நான் அந்நிய பாஷையில் பேசியிருக்கிறேன். நான் அதை செய்திருக்கிறேன். ஆனால் நான் ஒருபோதும்... நான் -- நான் -- நான் அநேக முறை அவ்விதம் உணர்ந்திருக்கிறேன், ஆனால் அது வெளிவந்ததில்லை. அநேக தடவைகள் அது நடந்துள்ளது. ஒரு முறை... ஒரு முறை, கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக அந்நிய பாஷையில் பேசினேன். ஒரு முறை அந்நிய பாஷையில் பேசிக் கொண்டிருந்தேன், நான் பேசிக் கொண்டிருந்ததையே அறியாதவனாயிருந்தேன். யார் பேசிக் கொண்டிருந்தார் என்பதைக் காண சுற்றும் முற்றும் நோக்கினேன். "எங்கே அந்த ஜெர்மனியன், அது யாராக இருக்கும்?" என்று எண்ணினேன். சுற்றும் முற்றும் பார்த்தேன், ஆனால் நான் தான் பேசிக் கொண்டிருந்தேன், நிஜமாகவே அவ்விதம் இருந்தேன். அதே நேரத்தில், பத்து மைல்களுக்கு அப்பால், மரணம் அடையத்தக்கதாக இரத்தம் சிந்திய நிலையில், ஒரு ஸ்திரீ சபைக்கு வரும்படி எத்தனித்துக் கொண்டிருந்தாள். அவள் உடனடியாக சுகத்தைப் பெற்றுக் கொண்டதாக, சபைக்கு வந்து சாட்சி பகர்ந்தாள். அது, பரிந்து பேசுகிற பரிசுத்த ஆவியாயிருந்த்து, நிச்சயமாக.

225இப்பொழுது, நண்பர்களே, அந்த காரியங்கள் எல்லாம் புனைகதை அல்ல. அவைகள் சத்தியமாயிருக்கிறது. அது உண்மை என்பதை பரலோகத்தின் தேவன் அறிவார். அதுபோன்று ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான காரியங்கள் இருக்கின்றன. எனவே, இது தேவனாயிருக்கிறது, நண்பர்களே, இது தேவனாயிருக்கிறது. இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள்.

226சகோதரன் மூர், சகோதரர்களில் சிலர், சகோதரன் ட்ரேசி (Brother Tracy), யாராவது ஊழியக்காரக் சகோதரர்கள், நான் கரங்களை வைக்கையில், இங்கே என்னோடு கூட நிற்க விரும்புகிறவர்கள், சகோதரன் டான் (Brother Don) அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யலாம். சகோதரன் பிரௌன் (Brother Brown), யாராகிலும், கிறிஸ்தவர்களாயிருக்கிற, விசுவாசிக்கிற, இங்கே வந்து ஜெபிக்க விரும்புகிற சகோதரர்கள் யாராவது. இப்பொழுது, நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம்.

227கிருபையுள்ள பிதாவே, உதவி செய்யும்படியாக நாங்கள் இங்கே இருக்கிறோம். நீர் உதவிடும்படி நான் ஜெபிக்கிறேன், கர்த்தாவே, நீர் இங்கே இருக்கிறீர் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நீர் இங்கே இருக்கிறீர் என்று ஆவியின் கனியினால் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நீர் இங்கே இருக்கிறீர் என்பதை பரிசுத்த ஆவியின் கிரியைகளினால் அவர்கள் காண்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் வெறுமனே மனிதர்களாயிருக்கிறோம். "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும், வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்கிற வேலையை செய்யும் படியாக நாங்கள் இங்கே நின்று கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, இங்கே கடந்து போகிற ஒவ்வொருவர் மேலும் உள்ள எங்கள் பரிவின் நினைவுகூறுதல் (commemoration of our sympathy) மற்றும் தேவனிலுள்ள எங்களின் விசுவாசத்தினால் எங்களுடைய கரங்களை அவர்கள் மேல் வைக்கும் போது, அவர்கள் ஒவ்வொருவரும் சொஸ்தமடைவார்களாக.

228ஆரம்பமாக, நான் இந்த குழந்தையின் மீது கைகளை வைத்து, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த மூளை வீக்கத்தை கடிந்து கொள்கிறேன். வீக்கம் குறைவதாக. இந்த பெண்மணி திரும்ப வந்து, எவ்வளவாய் இந்த குழந்தையின் தலையின் வீக்கம் வற்றியிருப்பதை காண்பிக்கட்டும். தேவனுடைய இராஜ்யத்திற்கென்று இது ஜீவிக்கட்டும், ஆமென். என்னுடைய கரம் சகோதரன் மேல் இருக்கிறது, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இவர் சுகமடையட்டும். என்னுடைய கரம் சகோதரன் மேல் இருக்கிறது, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இவர் தன்னுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, என்னுடைய சகோதரன் சுகமடையட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்த குழந்தை சுகமடையட்டும். தேவனே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, நம்முடைய சகோதரி சுகமடையட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, நம்முடைய சகோதரி சுகமடைவாளாக. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, நம்முடைய சகோதரன் சுகமடையட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, நம்முடைய சகோதரன் சுகமடையட்டும். எல்லா கிறிஸ்தவர்களும் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள், இப்பொழுது ஒவ்வொருவரும் ஜெபிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, நம்முடைய...?... சகோதரர்களே, கரங்களை மேலே வையுங்கள். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, நம்முடைய சகோதரி...?...

229ஜூன் (June), நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறதை விசுவாசிக்கவில்லையா? ஜூன், நீங்கள் நலமாகிவிடுவீர்கள். ஒரு தாயார், ஆனால் கடந்த இரவு எனக்கு கூறப்பட்ட போது, உங்களுக்கு இது சம்பவித்தது, இன்றைக்கு நான் ஜெபத்தில் இருந்தேன். திருமதி மூர் போன்று நீங்களும் ஒரு இக்கட்டின் வழியாக செல்லுகிறீர்கள், அல்லது அது போன்ற எண்ணத்தின்மேல், ஆனால் நீங்கள் நலமாகிவிடுவீர்கள்...?... இந்த இளம்பெண்ணின் மேல் பரலோகத்தின் தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை தங்கப் பண்ணுவாராக. அவளது தங்கமான குரல்வளமானது, அந்த வரமானது தேவனுடைய இராஜ்யத்திற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட அந்த இடத்திற்கு, அவள் விரைவாய் மீண்டுவந்து, நாம் மீண்டும் அந்தக் குரலை தேசமெங்கிலும் எதிரொலிக்கக் கேட்கும்படி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஒவ்வொரு நரம்பும் இலகுவாக்கப்படுவதாக. அவளது கண்களைக் குருடாக்கும்படி முயற்சி செய்து, இந்தக் காரியங்களுக்கு அவளுடைய சிந்தையை விஷமமாக மாற்ற முயற்சி செய்கிற பிசாசை நான் கடிந்து கொள்கிறேன், ஆனால் பரலோகத்தின் தேவன் தாமே கிறிஸ்துவாகிய பகல் வெளிச்சத்தின் ஒளியினாலே அதை முறியடிக்கட்டும். இந்தப் பெண்ணை நான் உமக்கென்று உரிமை கோருகிறேன். "நீங்கள், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும், நீ சொன்னதைப் பெற்றுக்கொள்வாய்" என்று நீர் கூறினீர். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த பெண் சுகமாக்கப்பட வேண்டுமென்று நான் உச்சரிக்கிறேன். இது சொல்லப்பட்டுவிட்டது, இப்பொழுது அது நடந்தேறட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, நம்முடைய சகோதரனுக்கு இது நடந்தேறட்டும்.

230சகோதரி ஷிரேடர் (Sister Schrader), உன்னுடைய குறிப்பை நான் பெற்றுக்கொண்டேன், எனக்கு சகோதரி ஷிரேடரைத் தெரியும், அந்த ஒலிநாடாவைக் குறித்து என்னிடம் கேட்டீர்கள். அதைக் கேட்பதற்கு நான் இன்னும் என் வீட்டிற்கு செல்லவில்லை. நான் வீட்டிற்கு செல்லும் போது, அதைப் பெற்றுக்கொள்வேன்.

231சகோதரி ஷிரேடர் நீங்கள் ஒரு நல்ல பெண்மணி, என் சகோதரியே நான் உங்களை நேசிக்கிறேன். ஆரம்பத்தில் நான் ஒரு சிறிய பாப்டிஸ்ட் பிரசங்கியாக இருந்த நாட்களில், அந்த வெளிச்சமானது அங்கே என் மீது இறங்கி வந்தபோது, அந்த வெளிச்சம் நடப்பித்ததை சரியாக நான் அங்கே உள்ளே நடந்து வரும்போது யாரோ ஒருவர் அந்நிய பாஷையில் பேசினார், நீங்கள் அதற்கு வியாக்கியானத்தை கொடுத்துக் கொண்டிருந்தீர்கள் (அன்றைக்கு அந்த வெளிச்சம் நடப்பித்த அதேக் காரியத்தை), அந்த சமயத்தில் நான் உங்களை அறியாதவனாக இருந்தேன். "யோவான் ஸ்நானன் கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டது போல உன்னுடைய செய்தியும் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக இருக்கும்" என்று கூறப்பட்டது. நான் ஊழியனாக நியமிக்கப்பட்ட இடத்தில் இருந்த அந்த பாப்டிஸ்ட் ஊழியக்காரர் அதைக் கேட்ட பொழுது, அவர், "ஏழாம் வகுப்பு கல்வி மட்டுமே பெற்றுள்ள ஒருவர் ஆட்சியாளர்களுக்கு (potentates) பிரசங்கிக்கப் போகிறாரா?" என்றார். அதற்கு நான், "அதைத் தான் அவர் கூறினார்" என்றேன்.

232ஊழியர் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறதான விநோதமான வெளிச்சம் என்ற கட்டுரை, செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்டது. பதினொறு வருடங்களுக்கு பின்பு அதைப் பற்றி ஒன்றுமே அறியாத நிலையில், யாரோ ஒருவர் அந்நிய பாஷையை பேச, நீங்கள் அதேக் காரியத்தை வியாக்கியானம் செய்தீர்கள், நான் அங்கே நின்று கொண்டிருந்தேன். சகோதரி ஷிரேடர், நான் உன்னுடைய சகோதரன், தேவன் உம்மோடு இருக்கிறார், பிசாசு உனக்கு எதிராக செயல்படுகிறான். ஓ, கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, தனது விலையேறப்பெற்ற அன்பான ஒருவரை இழந்த நிலையில் இருக்கும் இந்த பெலவீனமான சிறிய பெண்மணி மீது, ஓ, கர்த்தாவே, எங்களது இரட்சகரை கல்லறையிலிருந்து எழுப்பின அதே வல்லமையானது உம்முடைய நாமத்திலே உமது மகிமைக்கு புகழ்ச்சியாக தீர்க்கதரிசனம் உரைத்த இந்த பெலவீனமான சிறிய பெண்மணி மீது அவர் வருவாராக. நொறுங்கிப் போன இந்த வரமானது மீண்டும் திரும்ப வந்து, கர்த்தாவே, அவள் மீண்டும் வரட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, நான் இதை அவள் மீது உச்சரிக்கிறேன். இப்பொழுது, கர்த்தாவே, இது உரைக்கப்பட்டிருக்கிறது, உமது மகிமைக்காக அது அவ்விதமே நடந்தேறட்டும். சகோதரியே, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. உன்னுடைய ஆத்துமா...?... எங்கள் பரலோக பிதாவே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த இளம் சகோதரியை நீர் ஆசீர்வதியும், அவள் கேட்பது எதுவோ அதைத் தந்தருளும். இயேசுவின் நாமத்தில். தேவனே, எங்கள் சகோதரனை ஆசீர்வதியும், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இவருடைய சுகமளித்தலை இவருக்கு தந்தருளும். தேவனே, எங்கள் சகோதரியை ஆசீர்வதியும், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இவளுடைய சுகமளித்தலை இவளுக்கு தந்தருளும். தேவனே, எங்கள் சகோதரனை ஆசீர்வதியும், கர்த்தாவே அவருடைய சுகத்தை அவருக்கு தந்தருளும்.

233கர்த்தாவே, இங்கே கடந்து போகிற ஜனங்கள் வெறுமனே நடந்து போகமல், ஆனால் விசுவாசிப்பதே அதைப் பெற்றுக்கொள்வதற்கான வழி என்ற ஒரு விசுவாசத்தோடு வந்து உணர்வடையட்டும். அதை அருளும் கர்த்தாவே, அவர்கள் வெறுமனே நடந்து போவதை மாத்திரம் செய்வதற்கு வராமல், தாங்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களின் கீழாக வருகிறோம் என்றும், இன்றிரவு சபையில் அது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும், உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் நிரூபிக்கப்பட்ட தம்முடைய வார்த்தையோடு கூட அவர் இங்கே இருக்கிறார் என்றும் அவர்கள் உணரட்டும். கர்த்தாவே, எங்களிடத்தில் எந்தவொரு சுகமாக்கும் வல்லமையும் இல்லை. நாங்கள் அதை செய்ய முடியாது. நாங்கள் கட்டளையை பின்பற்றுவதை மாத்திரம் செய்கிறோம். போய் ஞானஸ்நானம் கொடுங்கள் என்ற கட்டளையை எங்களுக்கு கொடுக்கப்பட்டதைப் போல, அவர் பரிசுத்த ஆவி தருவதாக வாக்களித்தார். நம்மால் செய்யக் கூடியதெல்லாம் ஞானஸ்நானம் கொடுப்பதும், வார்த்தையை பிரசங்கித்து, ஞானஸ்நானம் கொடுப்பது மாத்திரமே. அப்பொழுது நான் வார்த்தையை பிரசங்கிக்க, நீர் அதை உறுதிப்படுத்தினீர். மேலும் நான் இந்த ஜனங்கள் மீது கைகளை வைக்கிறேன். தேவனே அவர்களை... ?... இயேசுவின் நாமத்தில்...?... தேவனே, அதைப் போல இந்த சகோதரனுக்கும் இயேசுவின் நாமத்தில் அதைப் போல ஆசீர்வாதத்தைத் தந்தருளும். பரலோக பிதாவே, இயேசுவின் நாமத்தில், எங்களது சகோதரியை சுகப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தின், எங்களது இந்த சகோதரியை சுகமாக்கும், இன்று இரவோடு அது நின்றுபோவதாக. கர்த்தாவே, உம்முடைய மகத்தான சபையானது இங்கே ஜெபித்துக் கொண்டிருக்கிறது. பிதாவே, இந்த ஜனங்கள் சுகமாக்கப் பட்டவர்களாக ஆகக்கடவர்கள்.

234இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், இது சுகமாக்கப்படுவதாக. இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், எங்களது சகோதரனைச் சுகப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், இது நடந்தேறட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், இது நடந்தேறட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், இது எங்கள் சகோதரிக்கு நடந்தேறட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், இப்பொழுது எங்களுடைய இந்த சகோதரிக்கு, இங்கே எங்கும் பிரசன்னமாயுள்ள தேவ குமாரனின் பிரசன்னத்தில் அவள் இருக்கிறாள் என்கிற இந்த ஜெயமுள்ள விசுவாசத்தை இப்பொழுதே இவளுக்குத் தந்தருளும். அவர் உனக்கு தந்தருளுவார்...?... அதுபோன்றே எங்கள் சகோதரனுக்கும், அவர் கடந்து போகையில் அவர் அதை விசுவாசிக்கட்டும்.

235விசவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கும்போது, அவர்கள் சொஸ்தமடைவார்கள் என்று நீர் கூறினீர். கர்த்தாவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே வியாதியுள்ள ஜனங்கள் மேல் என் கைகளை வைக்கிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, எனது சகோதரன் மீது என் கரங்களை வைக்கிறேன். உனது தகப்பனார், அவர் பெற்றிருந்த ஆசீர்வாதங்களோடு தேவன் மேலும் கூட்டி...?... தேவனே, இயேசுவின் நாமத்திலே எங்கள் சகோதரி சுகமடையட்டும். இயேசுவின் நாமத்திலே இந்த சகோதரனின் சுகத்தைத் தந்தருளும். எங்கள் சகோதரனின் வாஞ்சையை தந்தருளும்படி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். பரலோகப் பிதாவே, இயேசுவின் நாமத்தில், எங்கள் சகோதரியின் வாஞ்சையை தந்தருளும்படி ஜெபிக்கிறோம். பரலோகப் பிதாவே, இயேசுவின் நாமத்தில், எங்கள் சகோதரிக்கு...?... இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, எங்கள் சகோதரியின் சுகத்தைத் தந்தருளும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே இவளுடைய சுகத்தைத் தந்தருளும், பிதாவே. இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, எங்கள் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, கர்த்தாவே, எங்கள் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே...?... இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே எங்கள் சகோதரனின் சுகத்தைத் தந்தருளும். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே எங்கள் சகோதரனின் சுகத்தைத் தந்தருளும். பிதாவாகிய தேவனே, எங்கள் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, எங்கள் சகோதரியை சுகப்படுத்தும், பிதாவே. இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, எங்கள் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்திலே, எங்கள் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, எங்கள் சகோதரியை சுகப்படுத்தும். தேவனே, இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே எங்கள் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே இந்த சகோதரியையும், இந்த குழந்தையையும் உமது மகிமைக்கென்று சுகப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, இந்த எங்கள் சகோதரியை சுகப்படுத்தும். இயேசகிறிஸ்துவின் நாமத்திலே, இந்த எங்கள் சகோதரியை சுகப்படுத்தும்படி வேண்டிக்கொள்கிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, தேவனுடைய ஆசீர்வாதமானது...?... இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, இந்த எங்கள் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, எங்கள் சகோதரனை சுகப்படுத்தும்.

236நீங்கள் கடந்து போகையில், விசுவாசியுங்கள் விசுவாசியுங்கள். அவர் இங்கே இல்லாதிருக்கும் பட்சத்தில், எப்படி அவரால் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய முடியும்? அவர் மகத்தான... எப்பொழுதும் போல அதே மகத்தான அபிஷேகம் இங்கே இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, இந்த எங்கள் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, கர்த்தாவே, எங்கள் சகோதரியின் மேல் என் கரங்களை வைக்கிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே அதை விசுவாசியுங்கள். ஆமென். இப்பொழுது விசுவாசிக்கிறாயா...?... சகோதரி. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே எனது கரங்களை...?... இயேசுவின் நாமத்தில். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே...?... இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே...?... இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, எங்கள் சகோதரி...?... இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, எங்கள் சகோதரி...?... இயேசுவின் நாமத்திலே...?... இயேசுவின் நாமத்திலே, எங்கள் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, எங்கள் சகோதரி சுகமடையட்டும். கர்த்தாவே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, எங்கள் சகோதரியை சுகப்படுத்தும். பிதாவே, இயேசுவின் நாமத்திலே, எங்கள் சகோதரியை சுகப்படுத்தும்படி வேண்டிக் கொள்கிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரனை சுகப்படுத்தி...?...

237இந்த... (அங்கே அந்த சுவிட்சை அணைக்க முடியுமா?) இங்கே இது பார்ப்பதற்கு மிகவும் விநோதமாயுள்ளது, ஆனாலும் இது தேவனுடைய கட்டளையின் கீழ்ப்படிதல் மாத்திரமே. நீங்கள் மனந்திரும்பினீர்கள், ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள் என்று விசுவாசிப்பீர்களானால், பரிசுத்த ஆவிக்கு தகுதியான நபராய் இருக்கிறீர்கள். பாருங்கள்? எதன் மூலமாக? ஒரு ஊழியக்காரன் மூலமாக, சத்தியத்தை உங்களுக்கு கொண்டு வந்திருக்கிற கிறிஸ்துவின் ஒரு ஊழியக்காரன். தேவனுடைய வார்த்தையை உங்களுக்கு தருகிற ஊழியக்காரர்கள். தேவன் அவருடைய வார்த்தையில் வரும்போது, அவர்கள் அந்த வார்த்தையை பிரசிங்கிப்பார்கள். பின்னர், பரிசுத்த ஆவி இறங்கி வந்து, அது சத்தியம் என்று நிரூபிக்கிறது.

238பாருங்கள் நண்பர்களே, சற்று நேரத்திற்கு முன் என்ன நடந்தது? எனக்கு எனக்குத் தெரியாது. பரலோகத்திலிருக்கிற தேவனே அறிவார், நான் அறியேன். பாருங்கள்? அது என்னவாயிருந்தாலும், அது மகிமைக்காக மாத்திரமே இருக்கிறது, ஏனென்றால் என்னுடைய இருதயமானது சந்தோஷத்தினால் விரைவாய் துடிக்கிறது. அது ஏதோவொரு காரியமாயிருந்தது.

239இப்பொழுது, பார்ப்பதற்கு, ஒரு மறுபடியும் பிறந்த சபையானது மறுபிறப்பை உரிமை கோருவது போல எனக்குத் தோன்றுகிறது. கிறிஸ்துவின் வருகை மிக சமீபமாயிருக்கிறது, ஒரு அத்தாட்சியுடன், ஒரு நேர்மறை அத்தாட்சியுடன்...

240இங்கே ஒரு மனிதன் நீண்ட அங்கியுடன், கைகளில் தழும்புகளுடன், முகத்தில் இரத்தம் வடிய நின்று கொண்டிருந்தும் அது கிறிஸ்துவாக இல்லாதிருக்கும் பட்சத்தில், எந்தவொரு வஞ்சகனாலும் கூட அவ்விதம் செய்ய முடியும், ஆனால் கிறிஸ்துவுக்குள் இருந்த ஜீவனானது மறுஉற்பத்தி செய்யப்படுமானால், அப்பொழுது அது கிறிஸ்து என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

241நம்பமுடியாது ஆனாலும் உண்மை என்ற பொருளின் பேரில் வருகிற ஏதாவது ஒரு இரவில் பிரசங்கிப்பேன். அது நீங்கள் பார்த்த, ஒரு விநோதமான மற்றும் விளக்கப்பட முடியாத ஒன்றாய் இருக்கிறது, பாருங்கள்? எவ்வாறு பரலோகத்தின் தேவன் அது போன்ற காரியத்தை நடப்பிக்கிறார், அது ஒரு அற்புதமாயிருக்கிறது. இப்பொழுது, "உம்மால் சுகப்படுத்த முடியுமா, சகோதரன் பிரன்ஹாமே?" என்று நீங்கள் கேட்கலாம். அது முடியாது, நீங்கள் ஏற்கனவே சுகமாக்கப்பட்டு விட்டீர்கள்.

242அவர் எனக்குக் கொடுக்கிற என்னுடைய உடையை அணிந்தவராய் அவர் இங்கே நின்று கொண்டிருப்பாரானால், அவர் கிறிஸ்து என்பதையும், அவர் இங்கே இருக்கிறார் என்பதையும் நிரூபிப்பதைத் தவிர வேறு ஒன்றும் அவர் செய்ய மாட்டார், நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டும். "நீங்கள் விசுவாசித்தால் என்னால் முடியும்." இப்பொழுது, சரியாக அதேக் காரியம் தான் இங்கே, நீங்கள் விசுவாசித்தால், அங்கே செய்யப்படக் கூடியது அது ஒன்று மாத்திரமே. அது அதிர்வுக்கு உள்ளாக்க வேண்டும், அது ஜனங்களை மனந்திரும்புதலுக்கு கொண்டு செல்ல வேண்டும், அது ஜனங்களை பரிசுத்த ஆவியை நாடுவதற்கு கொண்டு செல்ல வேண்டும், அது செய்வதைக் காட்டிலும் இன்னும் சற்று அதிகமானதை செய்ய வேண்டும் என்பதாக எனக்குத் தோன்றுகிறது.

243வார்த்தையாகிய விதையானது கற்பாறையின் மீது விழுகிறதா? ஸ்திரீகளே, இதற்கு என்ன பதில்? சகோதரனே, சபையே, இதற்கு என்ன பதில்? இதைக் காட்டிலும் தேவன் வேறு என்ன செய்ய முடியும்? அவர் வேறொரு காரியத்தை வாக்குத்தத்தம் செய்யவில்லை. இயேசுகிறிஸ்துவின் சபையில் அவருடைய கிரியைகளையும், அவர் செய்வதாக வாக்குரைத்த காரியங்களை அவர் செய்கிறதையும் தவிர வேறு எதையும் நீங்கள் காண முடியாது.

244ஆனால், உங்களுக்குத் தெரியுமா, சபைக்கு ஏதோவொன்று நடந்திருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒன்று நடந்தேறியிருக்கிறதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? பாருங்கள், அது அதை விட அதிக வல்லமையாக இப்பொழுது சபையை கடினமாக உலுக்க வேண்டியதாயிருக்கிறது. "வெள்ளம் போல சத்துரு வரும்போது, தேவனுடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாக கொடியேற்றுவார்." இந்த நாட்களிலொன்றில், அவர் சபையை, மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் என்ற அதன் ஸ்தானத்திற்கு முற்றிலும் (plumb out) உயர்த்துவார். "ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டு பேரில் ஒருவனை ஏற்றுக் கொள்வேன், ஒருவனைக் கைவிடுவேன், வயலிலிருக்கிற இரண்டு பேரில் ஒருவனை ஏற்றுக் கொள்வேன், ஒருவனைக் கைவிடுவேன்." அது சபையை என்றென்றும் ஜீவிக்கும்படி கிறிஸ்துவின் பிரசன்னத்திற்குள்ளாக உயர்த்தும். கடினமாக இருக்கும்படி நான் இதைக் கூறவில்லை, ஆனால் தெய்வபயத்தோடு, சகோதரத்துவத்தோடு, உத்தமமாக, தேவ சபையானது, ஜனங்களாகிய சரீரமாக, ஒரு தேவனுடைய சபையாகவே இருப்பதைக் காண வேண்டும் என்று என் இருதயத்திலிருக்கிற ஒரு ஒரு பசியோடுகூடிய அன்பினாலேயே இவ்வாறு கூறுகிறேன்.

245கைகளை மேலே வைக்கும்படி, நீங்கள் இந்த வரிசையில் கடந்து செல்லும்போது, புருஷர்களால் உங்களுக்கு எதையும் செய்ய முடியாது. நீங்கள் அதிகப்படியான வித்தைகளைக் கேட்டிருக்கிறீர்கள். (சகோதரன் பிரன்ஹாம் முகர்ந்து பார்க்கிறார் ஆசி]. "நான் ஒரு வாசனையை உணர்கிறேன்..." என்பது போன்ற அனைத்து வகையான வேதப்பூர்வமற்ற காரியங்களைக் கேட்டிருக்கிறீர்கள், அவைகள் உங்கள் சிந்தைகளை கிட்டத்தட்ட முடமாக்கி விட்டது. பாருங்கள், சத்தியத்திலிருந்து உங்களை உலுக்கி வெளியேற்ற பிசாசு அதைச் செய்தான். வார்த்தையே சத்தியமாயிருக்கிறது, வார்த்தை மாம்சமானது. உங்களுக்கு புரிகிறதா? தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை நேசிக்கிறேன். இங்கே கைக்குட்டைகள் இருக்கின்றன. [ஒரு சகோதரி சாட்சி சொல்கிறார் -- ஆசி]. ஆமென். தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

246கர்த்தராகிய இயேசுவே, சாரோனின் ரோஜாவே, பள்ளத்தாக்கின் லீலியே, விடியற்காலத்து நட்சத்திரமே, தாவீதின் வேரும், சந்ததியுமானவரே, அல்பாவும், ஒமேகாவும், ஆதியும் அந்தமுமானவரே, இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவரே, உம்முடைய ஆசீர்வாதங்களை, கர்த்தாவே, இந்த ஜனங்கள் மீது அனுப்பியருளும். ஒரு பண்டைய பாணியிலான எழுப்புதலோடு, கர்த்தாவே, அவர்களை ஆசீர்வதியும், பல வருடங்களுக்கு முன்பு அவர்கள் தகப்பன்மார்களும், தாய்மார்களும் பெற்றிருந்ததும், இந்த கூட்டங்களில் நாங்கள் கொண்டாடுகிறதுமான அந்த அனுபவத்திற்கு, கர்த்தாவே, அவர்களை திரும்ப அனுப்பும்.

247இங்கே கைக்குட்டைகள் இருக்கின்றன. ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்த ஆசீர்வதிக்கப்பட்ட பண்டைய பரிசுத்தவான்களின் சரீரத்திலிருந்து அவர்கள் இவைகளை எடுத்தார்கள், வியாதியஸ்தர்கள் சொஸ்தமாக்கப்பட்டார்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதேக் காரியத்தை அவர்கள் செய்தார்கள், அவர்கள் சொஸ்தமாக்கப்பட்டார்கள். நீர் இன்றிரவும் அதே தேவனாயிருக்கிறீர், சபையை அதனுடைய உறக்கத்தினின்று (slumber) தட்டியெழுப்ப, சபைக்கு புதுப்பிக்கப்பட்டதாயிருக்கிற வல்லமைகளோடு மகத்தான எண்ணிக்கைகளில் வருகின்ற அதே பரிசுத்த ஆவியாயிருக்கிறீர். இந்தக் கைக்குட்டைகளை யாரெல்லாம் அணிகிறார்களோ, கர்த்தாவே, தேவனுடைய வல்லமையானது அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்துவதாக, சுகமாக்குதலுக்காக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் இவைகளை அனுப்புகிறேன்.

248இப்பொழுது நான் ஜனங்களை உம்மிடம் ஒப்படைக்கிறேன், கர்த்தாவே, இவர்களை ஆசீர்வதியும். வார்த்தையானது பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது. நீர் உம்மை மாம்சத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர். நீர் இங்கே இருக்கிறீர் என்று நீர் நிரூபித்திருக்கிறீர், நீர் மரித்தவராயில்லை, மரித்தோரிலிருந்து நீர் எழுப்பப்பட்டீர் என்று நிரூபிக்கப்பட்டீர், நீர் என்றென்றும் ஜீவிக்கிறவராயிருக்கிறீர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருந்து உம்முடைய கட்டளைகளையும், உம்முடைய வார்த்தையையும், உம்முடைய வாக்குத்தத்தங்களையும், உம்முடைய நாமத்தின்மேல் விசுவாசம் வைக்கிற தலைமுறை தலைமுறைகள் தோறும் காத்துக்கொள்கிறீர்.

249மகத்தான பரிசுத்த ஆவியானவர், எங்கோ ஓரிடத்தில் ஒரு மனிதனை கண்டுபிடிக்க தேடிக்கொண்டிருக்கிறார். ஓ, தேவனே, ஒரு நாள் அவர் ஒரு இரினேயஸை (Irenaeus) கண்டுபிடித்தார், ஒரு நாள் ஒரு பாலிகார்ப்பை (Polycarp) கண்டுபிடித்தார், ஒரு நாள் அவர் ஒரு பவுலை கண்டுபிடித்தார், ஒரு நாள் ஒரு மார்ட்டினை கண்டுபிடித்தார், ஒரு நாள் ஒரு லூத்தரை அவர் கண்டுபிடித்தார், ஒரு நாள் ஒரு வெஸ்லியை அவர் கண்டுபிடித்தார், ஒரு நாள் ஒரு ஜார்ஜ் ஒயிட்ஃபீல்டை (George Whitefield) அவர் கண்டுபிடித்தார், ஒரு பில்லி ஸண்டே-வை (Billy Sunday) அவர் கண்டுபிடித்தார், ஓ, தேவனே, அவர் இன்றிரவு எங்களை கண்டுபிடிப்பாராக, ஓ, தேவனே, ஒரு சார்ல்ஸ் ஃபின்னியை (Charles Finney) போன்று அல்லது சபையை அதனுடைய இடத்திற்கு மீண்டும் கொண்டு வருகிற யாரோ ஒருவரை, சபையை அசைக்கக் கூடிய அளவிற்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்கக் கூடிய இந்த மணி நேரத்திற்குரிய யாரோ ஒருவரை கண்டுபிடிப்பாராக. மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே, இன்றிரவு அவர் நடப்பித்ததைப் போல, ஒரு மனிதனை அல்ல, தம்முடைய ஒரு கிரியையாக, தன்னையே பிரகடனப்படுத்துகையில், கர்த்தாவே, நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். எங்களுடைய நன்றிகளை ஏற்றுக்கொள்ளும், உம்முடைய ஆசீர்வாதங்களை எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் இதை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். நேசிக்கிறேன், நேசிக்கிறேன், முந்தி அவர் நேசித்ததால்.

250இப்பொழுது நாம் நம்முடைய கண்களை மூடி, நம்முடைய கரங்களை உயர்த்தி, அவருக்கு துதிகளைச் செலுத்துவோம். அவர் இங்கே இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எத்தனை பேர் கிறிஸ்து இங்கே இருக்கிறார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றீர்கள்? "ஆமென்" என்று கூறுங்கள். இப்பொழுது, நாம் அவருக்கென்று பாடுவோம். நமக்குள்ளாக இருக்கிற உங்கள் முழு இருதயத்தோடும், எப்படி துதிக்க வேண்டுமென்று நமக்குத் தெரிந்த வகையில் எல்லாத் துதிகளையும் அவருக்குச் செலுத்துவோம். நான் அவரை... இப்பொழுது நீங்கள் கண்களை மூடி ஆவியில் பாடுங்கள். ...நேசிக்கிறேன்... முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில்.

251ஓ, அற்புதம். [ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசி அதை வியாக்கியானிக்கிறார் ஆசி.) ஆமென். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது என்னவாயிருக்கிறது? அந்நிய பாஷையில் பேசுதல் மற்றும் வியாக்கியானம் செய்தல் என்றால் என்ன? நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறியாத நிலையில், அது உங்களுக்குள்ளாக இருந்து பேசுகிற பரிசுத்த ஆவியின் துடிப்பே ஆகும். பாருங்கள்? 252. திரும்ப வேண்டிய பாதையை நான் உங்களுக்குக் கூறியிருக்கிறேன். நான் உங்களுக்கு அழைப்பைக் கொடுக்கிறேன். எத்தனை பேர் அந்தப் பாதையை எடுத்துக் கொண்டு, அந்த மருந்துக் குறிப்பை பின்பற்ற விரும்புகிறீர்கள்? இங்கே இருக்கிற உங்களில் அநேகர் இன்னும் ஞானஸ்நானம் பண்ணப்படாமல் இருக்கிறீர்கள். ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்புகிறவர்கள் உங்கள் கரங்களை உயர்த்தி, "நான் விசுவாசிக்கிறேன், நான் ஆயத்தமாயிருக்கிறேன், ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வேன், நான் மீண்டும் திரும்ப வருவேன், கிறிஸ்துவுக்குள்ளாக வருவேன்" என்று கூறுங்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நாளை இரவு ஞானஸ்நான ஆராதனை நடைபெற உள்ளது.

252ஒரு பாப்டிஸ்ட் ஊழியக்காரர், "நான் ஆயத்தமாயிருக்கிறேன்" என்ற குறிப்பை அனுப்பியிருக்கிறார். நல்லது, சகோதரனே, நானும் உன்னுடைய சபையிலிருந்துதான் வந்திருக்கிறேன், அந்த மருந்துக் குறிப்பை அவர்கள் எனக்கு தவறாக படித்துக் காண்பித்தார்கள். ஆனால், நானே அதை படித்தேன், அவர் செய்யச் சொன்ன வழியில் அதை மாற்றி, அதைப் படித்து, அவ்விதம் செய்தபொழுது, எனக்கு ஏதோவொன்று சம்பவித்ததைக் கண்டுகொண்டேன். ஓ, தேவனே, அந்த ஒளியை அனுப்பும். அவர் அழைப்பதை நோக்கி பாருங்கள். நாம் ஏன் -- நாம் ஏன் அதைக் செய்கிறோம் என்று வியப்புறுகிறேன்.

253நீங்கள் தரித்திருந்து, ஒருவருக்காக ஒருவர் காத்திருக்கும் உங்கள் பொறுமையை நான் நான் மெச்சிக்கொள்ளுகிறேன், ஏனெனில் அது, உங்களுக்குள்ளாக ஏதோவொன்றைக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிற பரிசுத்த ஆவியாய் இருக்கிறது, நீங்கள் பாருங்கள், அவர் உங்களுக்குள்ளாக ஏதோவொன்றை உட்செலுத்த (inject) முயற்சித்துக் கொண்டிருக்கிறார். உங்களது பொறுமை அருமையானதாக இருக்கிறது, அதுவே நன்மையானதை நடப்பிக்கிறது. நீங்கள், "ஓ, எனக்குப் புரியவில்லை, ஆனால், நான் தரித்திருந்து அதைப் பார்க்கப் போகிறேன். நான் அதை கவனிக்க வேண்டியவனாயிருக்கிறேன்" என்று சொல்வீர்களானால், உண்மையிலேயே பெற்றுக் கொள்ள விரும்புகிற பசியுள்ள ஒவ்வொரு இருதயத்தையும் தேவன் நிரப்புவார். நீங்கள் அதைக் காணும் போது, ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் சென்று, சரியாக அங்கே அதைப் பெற்றுக்கொள்ளுங்கள், அது கடந்து சென்று கொண்டிருக்கிறது, அவர் மீண்டும் அந்த வழியாக கடக்காமல் போகலாம், அது சரியே. ஆமென்! ஆமென்! [சகோதரன் பிரன்ஹாம் 'ஆமென்' என்ற கவியை பாடுகிறார் -- மொழி].

254ஷ்ஷ்... ஷ்ஷ்... [ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறார் மற்றும் ஒரு சகோதரன் வியாக்கியானம் செய்கிறார் -- ஆசி.) ஆமென். கர்த்தருக்கு நன்றி. நீங்கள் கவனித்தீர்களா? உங்களுடைய துதிகளை ஏற்றுக்கொள்வதற்கு அவர் இங்கிருந்ததாகக் கூறினார். சகோதரன் செப் (Brother Zepp) பாடுகிற 'ஆமென்' என்ற பல்லவியை உங்களுக்குத் தெரியுமா? ஆமென்? நீங்கள் பாடுவீர்களா? நல்லது, சகோதரன் டான், சரி.

255எர்னி (Ernie), வரவும். 'ஆமென்' என்ற பல்லவியைப் பாடி நாம் அவருக்கு துதி செலுத்தப் போகிறோம். உங்களில் எத்தனை பேர் அந்த பல்லவியை அறிவீர்கள்? ஓ, நாம் எல்லாருமே அதை அறிந்திருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். என்னுடைய முழு சபையும் அதை அறிந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். நான் நினைத்தேன்... என்ன சொல்வது? ஓ, சகோதரனே, என்னால் வழிநடத்த முடியவில்லை, என்னால் என்னால் பாட முடியவில்லை. ஓ, ஆனால், அவர் சொன்ன ஒவ்வொன்றிற்கும் சரியாக இப்பொழுது 'ஆமென்' சொல்வது அழகானதாய் இருக்குமென்று நான் நினைக்கிறேன். ஓ, என்னே! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! எல்லாரும் அதைப் பாடுங்கள் ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென்!

256நம்முடைய கரங்களை உயர்த்தி அவருக்கு...?... என்னை காத்துக்கொள்கிற, என்னை ஆசீர்வதிக்கிற கர்த்தாவே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். கர்த்தாவே, பரிசுத்த ஆவியை அனுப்பும். இன்றிரவு வந்து...?... நாங்கள் துதிக்கும் வேளையில் ஒவ்வொரு இருதயமும்...?...