1 சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி. [சகோதரன் நெவில், “ஆமென்” என்கிறார்.—ஆசி.] நான் சகோதரன் நெவிலிடம், ‘சிறிது அபிஷேகம் கூட இன்று காலை உங்கள் மேல் இல்லையென்று நீர் நிச்சயமாக அறிந்திருக்கிறீரா?” என்று கேட்டேன். 2 நான் வியாதியஸ்தர்களுக்கு ஜெபிப்பதற்காக வந்தேன். ஞாயிறு விடியற்காலையிலேயே நாம்…சில ஜனங்கள் கூடத் தொடங்கினர். நான் அங்கே கிரகித்துக் கொண்டது என்னவெனில், அவர்களை இங்கு சபைக்கு வரச் சொல்ல வேண்டும் என்பதேயாகும். வியாதியஸ்தர்களுக்கு சபையில் ஜெபிப்பது நல்லது என்று நான்—நான் எப்பொழுதும் நினைக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. எனக்கு சபையென்றால் பிடிக்கும், சபையோரும் ஜனங்களும் ஜெபித்துக் கொண்டிருக்கும் இந்த இடத்திற்கு வருவது எனக்குப் பிரியம். 3 ஒரு சிறுமி அங்கே பின்னால் இருந்தாள், மிகவும் அழகான சிறு பெண். ஏன்? அவளுடைய ஜனங்கள் வீட்டிற்குப் போகவில்லையென்றால், அவள் இப்பொழுது இங்கு எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். ஓ, நான் இப்பொழுது அவளைப் பார்க்கிறேன். அந்த அழகான சிறு பெண்தான். அவள் மிகவும் சுகவீனமாயிருக்கிறாள். நாங்கள் அந்நிய பாஷை பேசுதலையும், அர்த்தம் உரைக்கப்படுதலையும் கேட்டுக் கொண்டிருந்தோம். நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தபோது, அப்பொழுது ஒரு சிறுமியைக் குறித்து ஏதோ கூறப்படுகிறதென்று நாங்கள் புரிந்துக் கொண்டோம். அங்கு என்ன சொல்ல வேண்டுமென்று கர்த்தர் ஒரு செய்தியை அளிப்பாரா என்று காண நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். ஆனால் அந்த சிறுமி இப்பொழுது நன்றாயிருக்கிறாள் என்றும், அவன் குணமடையப்போகிறாள் என்றும் நான் நினைக்கிறேன். எனவே…
24 தன்னுடைய பார்வையை இழந்த ஒரு ஸ்திரீயும் கூட அங்கே இருந்தாள். அவளுக்காக நாங்கள் ஜெபித்துக்க்கொண்டிருந்தோம். அங்கே நோயாளி வாகனத்தில் ஒரு மனிதன் இருந்தார். அவர் ஒரு ஊழியக்காரர் அவருடைய எடை முப்பத்தைந்து அல்லது நாற்பது பவுண்டு கூட இருக்காது என்று நான் யூகிக்கிறேன். அவர் மிக மிக…எனவே இவர்களுக்காக நான் ஜெபிக்க வந்தேன். 5 நான் அதிகமாக தயங்கின காரணம் என்னவெனில், என் ஓட்டைப் பல்லை நிரப்பின பொருள் விழுந்து விட்டது. எனவே இன்று காலையிலிருந்து அந்த ஓட்டைப் பல்லின் வழியாக காற்று வெளியே செல்ல, நான் ஊதல் சத்தத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது அதை சுரண்டி விட்டு அதன் மேல் மூடிகளைப் போட வேண்டுமென்று அவர்கள் என்னிடத்தில் கூறுகின்றனர். எனவே எனக்கு வயதாகின்றது. அது ஒன்றுதான் எனக்குத் தெரியும். அது பாதி நிறைக்கப்பட்டிருந்தது. நான் பேசத் துவங்கும்போது, காற்று அதன் வழியாக வெளியே தள்ளி வருகின்றது. அதை என்னால் உணர முடிகின்றது. நான் என்ன சொல்லுகிறேன் என்று உங்களுக்குத்—உங்களுக்குத் தெரியும். நான் பேசுவது உங்களுக்கு மழலைச் சொற்கள் போன்றுள்ளது.
36 இன்று காலை உயிரோடிருந்து சபைக்கு வர முடிந்ததனால் நாம் உண்மையில் சிலாக்கியமுள்ள ஜனங்களே. கிறிஸ்மஸ் பண்டிகையின் முந்தின மாலையாகிய இன்று அவர்கள் கொண்டாட்டத்துக்காக காத்திருக்கின்றனர். நான்—நான் நம்புகிறேன் நான்… இன்று காலை நிறையப் பிள்ளைகள் இங்குள்ளனர். எனவே நான் அமைதியாயிருப்பது நலம். வயது வந்தவர்களாகிய நாம் சில சமயங்களில் பேசுவை இந்த சிறு பிள்ளைகள் கேட்கக் கூடாது என்பதை நீங்கள் அறிவீர்கள். 7 ஆனால் சிறிது கழித்து சிறு பிள்ளைகளுக்கு கொடுக்க சபை சிறு வெகுமதிகளை வைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன். அங்கே பின்னால் உள்ள அவைகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஓ, நீங்கள் தரித்திருக்க வேண்டும். ஞாயிறு பள்ளிக்குப் பிறகு நீங்கள் சிறிது நேரம் தங்கியிருங்கள். பாருங்கள், ஏனென்றால் சிறுவர்களுக்கு இன்று காலை கொடுப்பதற்கென அவர்கள் சில வெகுமதிகளை அங்கே பின்னால் வைத்திருக்கின்றனர் என்று நான்—நான் நினைக்கிறேன். நான்…சிறுவர்களே நீங்கள் ஞாபகம் கொள்ளுங்கள், இதை நாம் செய்யும் போது, நான் இதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன், அது ஒரு கட்டுக்கதை என்றும், அதற்கு இதனோடு எந்த சம்மந்தமும் இல்லையென்றும், அது பரிசு வழங்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் கட்டுக் கதை அல்ல என்றும் ஒரு நாள் நீங்கள் கற்றறிந்து கொள்வீர்கள். ஆனால் அது எல்லா சத்தியத்துக்கும் சத்தியமாகிய தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினிடமிருந்து வந்ததென்றும் ஒரு நாள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் பாருங்கள். இந்தக் காலை இந்த சிறு வெகுமதியை நாங்கள் கொடுக்கிறோம் என்றால், ஒரு காலத்தில் தேவன் மானிடருக்கு மிகப் பெரிய வெகுமதியாகிய தமது குமாரனைக் கொடுத்தார் என்பதை இது நீங்கள் அறிந்து கொள்ளச் செய்கிறது. அதை நாம் ஒரு எளிய வழியில் வெளிப்படுத்துகிறோம். நாம் எந்த ஒன்றையும் அதற்கு ஈடாக அளிக்க முடியாது. ஆனால் மரிக்க வேண்டிய மானிடராகிய நாம் இதை ஒருவருக்கொருவர் அளித்துக் கொள்கிறோம்.
48 இப்பொழுது, நான் கூற நினைத்ததைக் கூற அடுத்த ஞாயிறுவரை காத்திருக்கப் போகிறேன். நான் எப்படியும் அநேகமாக, நான் கூற விரும்புகிற ஒரு காரியத்தின் பேரில் காத்திருப்பேன். எங்களுக்கு தரிசனத்தின் மூலம் வீட்டில் ஒன்று வெளிப்படுத்தப்பட்டது. அதை நான் பின்பற்றியாக வேண்டும். அது ஒரு விதமாக…அது ஒரு வகையில் கரடுமுரடாக தோன்றக் கூடும், ஆனால் தேவன் கூறுவது கடினமான ஒன்று நாங்கள் ஒருபோதும் நினைக்க விரும்பவில்லை. அவருடைய—அவருடைய சுமைகள் இலகுவானதாயுள்ளன. 9 அடுத்த ஞாயிறு, தேவனுக்கு சித்தமானால், நாங்கள் இங்கு ஆராதனை நடத்தப் போகிறோம், அது புத்தாண்டிற்கு முந்தின மாலைக்கு சற்று முன்பு இந்த ஆராதனையை நாங்கள் நடத்துவதில் கர்த்தர் பிரியப்பட்டால் நலமாயிருக்கும். நாங்கள் ஒரு காலை ஆராதனை நடத்த விரும்புகிறோம். நாங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம். ஒருக்கால் ஞானஸ்நான ஆராதனையும் இருக்கும். பிறகு நான் நினைத்தேன், நம்முடைய நண்பர்களுக்கும் இதைக் குறித்து அறிவித்தால் அவர்களும் வரக்கூடும். அப்படியானால் நான் ஞாயிறு காலை, ஞாயிறு மாலை ஆராதனைகளை வைப்போம். அதன் பிறகு புத்தாண்டு ஆராதனைக்கு இங்கு தங்க விரும்புகிறவர்களுக்கு அப்பொழுது நாம்… இந்த முறை ஒரு இரவு விழிப்பு ஆராதனையை நடத்தப் போகிறோமா? [சகோதரன் நெவில், “ஆம்” என்கிறார்.—ஆசி.]
510 அப்பொழுது அநேக ஊழியர்கள் இங்கு வந்து, புத்தாண்டு தொடங்கும் நள்ளிரவு வரைக்கும் பேசுவார்கள். அந்த போதகர்களை நாங்கள் இங்கு வந்து பேசும்படி அழைக்கப் போகிறோம். கர்த்தருக்கு சித்தமானால், புத்தாண்டு தொடங்கும் இரவன்று, நானும் பேசுவர்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். 11 அதன்பிறகு அடுத்த ஞாயிற்றுக் கிழமையன்று இந்த சபையில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் காரியங்களையும், ஏற்கனவே நடந்த காரியங்களையும் வரிசைப்படுத்தி, தேவன் எவ்வாறு தம் ஜனங்களுடன் ஈடுபடுகிறார் என்பதைக் காண்பித்து, அதை உச்சக் கட்டத்துக்கு கொண்டு வந்து கூறலாம் என்று நான் எண்ணியுள்ளேன். 12 எங்களுக்கு நேர்ந்த இந்த வருமானவரி விஷயத்தைக் குறித்து என்ன நடந்ததென்று உங்களில் பலர் வியப்படைந்து கொண்டிருக்கலாம். அது முடிந்துவிட்டது. எனவே அது எப்படி நடந்து முடிவுற்றது என்பதைக் குறித்தும் கூட உங்களிடம் கூற விரும்புகிறேன். நான் நினைக்கிறேன். அது…அடுத்த ஞாயிறன்று அதை நான் மறுபடியும் கூற வேண்டும். எனவே நான் அடுத்த ஞாயிறு வரைக்கும் காத்திருப்பேன். இக்காலையில் வார்த்தையிலிருந்து சிறிது உங்களிடம் பேச முயல்வேன். புரிகிறதா? அடுத்த ஞாயிறன்று, தேவனுக்கு சித்தமானால், அது எப்படி தொடங்கினது என்று உங்களுக்கு எடுத்துக் கூறி, கர்த்தர் சொன்ன ஒவ்வொரு காரியங்களையும் உங்களிடம் கொண்டு வந்து, அவைகள் சரியான இடத்தில் பொருந்துவதை நீங்கள் காணும்படி செய்ய நான் முயற்சிப்பேன். புரிகிறதா? அவர் எதையும் தவறாக கூறுகிறதில்லை.
613 ஆனால், இப்பொழுது, இன்று காலை உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இதை நான் ஒருக்கால் அடுத்த ஞாயிறு கூறமாட்டேன். அது நேற்று சம்பவித்ததைக் குறித்த ஒரு விஷயம். இன்று காலை இங்கு வர எனக்கு சற்று தயக்கம் ஏற்பட்டது, ஏனென்றால் நான் அதிக களைப்புற்றிருந்தபடியால், இங்கு வர வேண்டும் என்ற அப்படிப்பட்ட உணர்வு எனக்கு—எனக்கு உண்டாகவில்லை. ஆனால் நான் இங்கிருப்பதனால், என்னால் முடிந்தவரை வர முயற்சிப்பேன்.
714 சென்ற இரவுக்கு முந்தின இரவு சகோதரன் மற்றும் சகோதரி சாத்மன் என்னுடன் இருந்தனர். சகோதரன் சாத்மன் இந்த சபையின் தர்மகர்த்தாக்களில் ஒருவர் என்று இங்குள்ள நாம் அனைவரும் அறிவோம். அவரும் அவருடைய மனைவியும், அவர்கள் என்னையும் என் மனைவியையும் காண வந்திருந்தனர். கர்த்தருக்குச் சித்தமானால், பீனிக்ஸிலும் மற்றும் சுற்றுப் புறங்களிலும் நடைபெறவுள்ள கூட்டங்களைக் குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் இரவு பத்து முப்பது வரைக்கும் பேசினோம் என்று நான் நினைக்கிறேன். நான் பதினோரு மணியளவில் படுக்கைக்குச் சென்றேன். 15 நான் இரவில் ஒரு சொப்பனம் கண்டேன். இந்த சொப்பனத்தில் திடகாத்திரமுள்ள, பெரிய உருவம் படைத்த ஒரு மனிதனைக் கண்டேன். ஒரு அடையாளமாகப் பேசினால், அவர் சொப்பனத்தில் என் தகப்பனைப் போன்று கருதப்பட்டதாகக் காணப்பட்டதை நான் கண்டேன். நான் ஒரு ஸ்திரீயைக் கண்டேன். காண்பதற்கு என் தாயைப் போல் இல்லை. ஆனால் இருப்பினும் அவள் சொப்பனத்தில் என் தாயாக எண்ணப்பட்டாள். இந்த மனிதன் (என் தகப்பனாக கருதப்பட்ட இந்த ஸ்திரீயின் கணவன்) அவனைக் கொடுமையான முறையில் தவறாக தீங்கிழைத்துக் கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு பெரிய மரக்கட்டை இருந்தது. அவளை அவன் இப்படி பிடித்துக் கொண்டு அந்த மரக்கட்டையால் அவளை அடிப்பான். அவள் கீழே விழுந்து விடுவாள். சிறிது கழித்து எழுந்திருப்பாள். சற்றுமுற்றும் நடந்து கொண்டிருக்கும் அவனுக்கு அவளை மறுபடியும் அடிக்க வேண்டுமெனும் எண்ணம் உண்டாகும். அவன் மறுபடியும் அவளை அடிப்பான். நான் சொப்பனத்தில் தூர நின்று இதை கவனித்துக் கொண்டிருந்தேன்.
816 முடிவில் எனக்கு அலுத்துப் போய்விட்டது. என் தகப்பனாக கருதப்பட்ட இந்த மனிதனைக் காட்டிலும் நான் உருவில் மிகச் சிறியவனாயிருந்தேன். எனவே நான் அவனிடம் நடந்து சென்று, என் விரலை அவன் முகத்தின் மேல் வைத்து, “அவளை மறுபடியும் அடிக்காதே” என்றேன். பார்த்தீர்களா? அப்படி நான் சொன்னபோது, எனக்கு ஒன்று சம்பவிக்க தொடங்கினது. என் கரங்கள் வரைத் தொடங்கி, பலமுள்ள தசைகள் உண்டாயின. அப்படிப்பட்ட தசைகளை நான் ஒரு போதும் கண்டதேயில்லை. அந்த மனிதனின் கழுத்துப்பட்டையை நான் பிடித்து, “அவளை மறுபடியும் அடிக்காதே! நீ அப்படி செய்தால், நீ அவளை மீண்டும் அடித்தால், என்னிடம் நீ சண்டையிட வேண்டியதாகும்” என்றேன். அப்பொழுது அந்த மனிதன் என்னைக் குறித்து பயமடைந்து அவளை அப்படியே தனியே விட்டுவிட்டான். நான் விழித்துக் கொண்டேன். 17 நான் படுக்கையில் படுத்து சிந்தித்துக் கொண்டிருந்த போது, உண்மையிலேயே ஒரு நிமிடத்தில் அதன் அர்த்தம் தெளிவானது. அதை அர்த்தப்படி கூறினால், அந்த ஸ்திரீ சபைக்கு உதாரணமாயிருந்தாள். எனவே அவள் ஒரு வகையில் தாயாக இருந்தாள். தகப்பன் தான் அவள் மேல் ஆதிக்கம் கொண்டிருந்த ஸ்தாபனம். கணவன் மனைவியின் மேல் ஆதிக்கம் செலுத்துவது போல, ஸ்தாபனமும் சபையின் மேல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஸ்தாபனங்கள் சபையை அடித்து கீழே தள்ளி, அவள் எழுந்து நிற்கவும் கூட சம்மதிப்பதில்லை. அவள் எழுந்து நிற்க முயலும் ஒவ்வொரு முறையும் அதிலுள்ள ஜனங்கள், அந்த ஸ்தாபனம் அவளை அடித்து கீழே வீழ்த்துகிறது. எனக்கு விசுவாசத் தசைகள் உண்டாகி, என் விரலை சுட்டிக்காட்டி, “நீ என்னிடம் சண்டைக்கு வா” என்று என்னால் கூற முடிந்தது. புரிகிறதா? ஏனெனில் தேவனுக்கு சொந்தமான சிலர் இன்னும் அதற்குள் இருக்கின்றனர். அதுவே சரியான அர்த்தமாயிருந்தது. ஏறக்குறைய…
918 நாங்கள் ஏறக்குறைய இரண்டு அல்லது மூன்று மணி நேரமாக உறங்கவேயில்லை என்று நான் நினைக்கிறேன். என் மகள் ரெபேக்காள் லூயி வில்லிலுள்ள மெதோடிஸ்டு மருத்துவமனையில் வேலை செய்கிறாள். அவள் ஆரம்ப மருத்துவச்சி பணிக்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறாள். அவர்களை அவர்கள், “வாலிபப்பருவத்தில் தன்னார்வமாக மருத்துவமனையில் பணிபுரிபவர்” அல்லது அதைப் போன்று ஏதோ ஒரு பெயரால் அழைக்கின்றனர். அவள்…அன்று காலை வரும்படி அவர்கள் அவளிடம் தொலைபேசியில் கூறினர். அது தான் என்னை உறக்கத்தினின்று எழுப்பினது. அது விடியற்காலையில், அவளையும் அவளுடன் படித்த மாணவிகளையும் அவர்கள்—அவர்கள் எல்லோரும் ஒன்றாக மருத்துவ மனையில் வேலை செய்கின்றனர். அவர்கள் லூயிவில்லுக்கு இவர்களை கொண்டு செல்ல உத்தேசித்திருந்தனர். அவர்கள் பத்து மணிக்கு அங்கு இருக்க வேண்டும். அவளால் ஏன் படுக்கை அறைக்குள் செல்ல முடியவில்லை என்று என் மனைவி வியந்தாள். அதை நான் பூட்டியிருந்தேன்.
1019 என் வாழ்க்கையில் அநேக காரியங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இது போன்ற ஒன்று நிகழ்ந்ததில்லை. நான் ஞானதிருஷ்டியடைந்தேன். அதன் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒன்று என் வாழ்க்கையில் நடந்தேயில்லை. ஆனால் எனக்கு முன்பாக அது ஒரு தரிசனம் போல் காணப்பட்டதை நான் தெளிவாக உணர்ந்தேன். அந்த தரிசனத்தில் நான் இருந்தேன். ஆனால் நான் என் மகன் ஜோசப்புடன் பேசிக் கொண்டிருந்தேன். அதே சமயத்தில் அவன் அந்த அறையில் அப்பொழுது இருக்கவில்லை. ஆனால் எப்படியோ, எனக்கு அந்த தரிசனம் உண்டானபோது, நான் ஜோசப்பினிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். 20 நான்—நான் மேலே பார்த்தபோது, கூர் நுனிக்கோபுர வடிவில் அரை அங்குலம் நீளமுள்ள சிறு பறவைகள் எனக்கு முன் இருக்க கண்டேன். அவை மேலே உள்ள மரக்கிளைகளில் உட்கார்ந்து கொண்டிருந்தன. மேல் கிளையில் மூன்று அல்லது நான்கு பறவைகள் இருந்தன. அடுத்த கிளையில் எட்டு அல்லது பத்து பறவைகள் இருந்தன. கீழ் கிளையில் பதினைந்து அல்லது இருபது பறவைகள் இருந்தன.
1121 அவை சிறு போர் வீரர்கள் போன்றிருந்தன, ஏனெனில் அவைகளின் சிறகுகள் உதிர்ந்திருந்தன. அவைகள் என்னிடம் ஏதோ கூற முயன்றது போல தோன்றினது. நான் அந்த தரிசனத்தில் மேற்கில் இருந்தேன். அது அரிசோனாவில் உள்ள டூசானைப் போலக் காணப்பட்டது. பறவைகள் கிழக்கு திசையை நோக்கிக் கொண்டிருந்தன. நான் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தேன். அவைகள் என்னிடம் ஏதோ கூற முயன்றது போல தோன்றினது. அவைகளின் சிறகுகள் உதிர்ந்திருந்தன. அவை யுத்தத்தில் காயப்பட்டிருந்தன. திடீரென்று ஒரு பறவை இப்படி குதித்து மற்றொரு பறவையின் இடத்தை எடுத்துக் கொள்ளத் தொடங்கினது. அப்பொழுது அவை வேகமாக அவ்விடத்தை விட்டு கிழக்கு நோக்கி பறந்தன. 22 அவை அப்படி செய்தபோது அவைகளிலிருந்து புறாக்களைப் போன்ற பெரிய பறவைகள் கூர்மையான சிறகுகள் உடையவைகளாய் தோன்றின. அவை கூட்டமாக வந்து, அந்த சிறு பறவைகளைக் காட்டிலும் மிக வேகமாக கிழக்கு நோக்கி பறந்தன.
1223 நான் அப்பொழுதும் என்னுடைய…என்னுடைய இரு உள்ளுணர்வுகளும் ஒன்றாகவே பணிபுரிந்தன. நான் அங்கு நின்று கொண்டிருப்பதை அறிந்தேன். அதே சமயத்தில் நான் வேறெங்கோ உள்ளதாக அறிந்தேன். புரிகிறதா? “இப்பொழுது, இது ஒரு தரிசனம். இதன் அர்த்தம் என்னவென்று நான் அறிய வேண்டும் என்று நான் எண்ணினேன். 24 இரண்டாவது கூட்டம் பறவைகள் தோன்றினவுடனே, நான் மேற்கு திசையை நோக்கினேன். அப்பொழுது என் வாழ்க்கையிலேயே நான் கண்டிராத மிக வல்லமையுள்ள ஐந்து தூதர்கள் கூர் நுனிக்கோபுர வடிவில் ஒவ்வொரு பக்கம் இரண்டு பேரும், ஒருவர் மேலுமாக பறந்து வந்தனர். அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான வேகத்தை நான் கண்டதேயில்லை. அவர்கள் தலைகளை பின்பக்கம் சாய்ந்தவர்களாய், கூர்மையான சிறகுகளுடன் வேகமாய் பறந்து வந்தனர். அப்பொழுது சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமை என் மேல் விழுந்து என்னைத் தரையிலிருந்து மேலே தூக்கினது, தரையிலிருந்து வெகுதூரம் மேலே தூக்கினது. அப்பொழுதும் ஜோசப் பேசுவதை என்னால் கேட்க முடிந்தது. 25 அப்பொழுது ஒலித் தடையையும் மீறினது போன்ற அவ்வளவு பெரிய சத்தம் புறப்பட்டு தெற்கு நோக்கி வெகு தூரம் சென்றது. நான் தூக்கப்பட்டபோது…தூதர்கள் பயங்கர வேகத்தில் வந்து கொண்டிருந்தனர் …அவர்களை இப்பொழுதும் கூட என்னால்—என்னால் காண முடிகிறது. பாருங்கள். அவர்கள் இப்படி கூர் நுனிக் கோபுர வடிவில் வேகமாக வந்து என்னைச் சூழ்ந்து கொண்டனர். 26 நான் கனவு காணவில்லை. இல்லை. நான் இப்பொழுது உள்ளதுபோல நன்றாக கண் விழித்துக் கொண்டிருந்தேன். புரிகிறதா?
1327 ஆனால் இங்கு அது உண்டானது. அவர்கள் பயங்கர வேகத்தின் வந்து கொண்டிருந்து, நான் மேலே தூக்கப்பட்ட போது…நான் எண்ணினேன். நான் வெடி சத்தம் போன்ற சத்தத்தைக் கேட்டேன். அது ஒலித்தடையையும் மீறினது போன்ற சத்தம். நான் அதைக் கேட்டபோது, “இது ஒருக்கால் ஒரு விதமான வெடி விபத்தில் நான் கொல்லப்பட நேரிடும் என்பதைக் குறிக்கலாம்” என்று எண்ணினேன். பாருங்கள். ஆனால் உடனே, “அப்படி இருக்காது. ஏனெனில் அது வெடி விபத்தாயிருந்தால் ஜோசப்பும் அதில் அகப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நான் அங்கிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு, அவன் இன்னமும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அவன் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது, எனவே அதுவாயிருக்காது” என்று நான் எண்ணினேன். ஆனால் உடனே, “அப்படி இருக்காது ஏனெனில் அது வெடி விபத்தாயிருந்தால் ஜோசப்பும் அதில் அகப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நான் அங்கிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அவன் இன்னமும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அவன் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது, எனவே அதுவாயிருக்காது” என்று நான் எண்ணினேன். 28 இதெல்லாம் தரிசனத்தில் தோன்றின சம்பவம். அது…பார்த்தீர்களா? இது தரிசனத்தில் உண்டானது. 29 பிறகு திடீரென்று…அவர்கள் என்னைச் சூழ இருப்பதை உணர்ந்தேன். அவர்களை என்னால் காணமுடியவில்லை. ஆனால் அவர்களுடைய கூர்நுனிக் கோபுர கூட்டத்திற்குள், அதாவது இந்த ஐந்து தூதர்களின் கூட்டத்திற்குள் நான் கொண்டுவரப்பட்டேன். அப்பொழுது நான், “இப்பொழுது மரணத் தூதன் ஒருவனே. ஆனால் ஐந்து என்பது கிருபையைக் குறிக்கிறது” என்று எண்ணினேன். அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிரகு நான், “ஓ! இது—இது என் செய்தியோடு வந்து கொண்டிருக்கிறது. இது என் இரண்டாம் உச்ச கட்டம். அவர்கள் கர்த்தரிடத்திலிருந்து செய்தியை என்னிடம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்” என்று எண்ணினேன். என்னால் முடிந்தவரை “ஓ, இயேசுவே! நான் என்ன செய்ய நீர் சித்தமாயிருக்கிறீர்?” என்று உரக்கச் சத்தமிட்டேன். அப்படி நான் செய்த போது, அது என்னை விட்டுப் போய்விட்டது.
1430 அப்பொழுது முதல் என்—என்—என் மனநிலை சரியில்லை. புரிகிறதா? நான் நேற்று பூராவும் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. என் மனதை தெளிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. கர்த்தருடைய மகிமையும் வல்லமையும்! அது என்னை விட்டுச் சென்றபோது, என் உடல் முழுவதும் மரத்துப் போயிருந்தது. என் கைகளை நான் தேய்த்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மேலும் நான் “என்னால் மூச்சு விட முடியவில்லையே” என்று எண்ணினேன். எனவே நான் இங்கும் அங்கும் முன்னும் பின்னுமாக தரையில் நடந்தேன். மேலும் நான், “இதன் அர்த்தம் என்ன கர்த்தாவே? இதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டுக் கொண்டேன். பிறகு நான் நடப்பதை நிறுத்திக் கொண்டு, “தேவனாகிய கர்த்தாவே, உமது ஊழியக்காரனுக்கு…என்னால்—என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே. ஏன்? இது ஏன் நடந்தது? கர்த்தாவே, இதை எனக்குத் தெரியப்படுத்தும்” என்றேன். நல்லது, அப்பொழுது…
1531 நான் தேவனுடைய வல்லமையைக் குறித்து உங்களிடம் கூறும்போது, அதை என்னால் விவரிக்க இயலாது. அதை விவரிக்க ஒரு வழியும் இல்லை. கூட்டங்களில் நீங்கள் பெறும் ஆசீர்வாதங்கள் போன்றதல்ல அது. அது கர்த்தருடைய ஆசீர்வாதம். ஆனால் இது ஒரு புனிதமானது …ஓ, என்னே! அதை மனிதனால் கற்பனை செய்து கூட பார்க்கவே முடியாது. புரிகிறதா? அது என்னை மிகவும் உண்மையாகவே தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தது. அது…அது ஆசீர்வாதமல்ல, அது பாதிப்பு. நீங்கள் கலக்கமுற்றுவிடுவீர்கள். புரிகிறதா? அதுதான் இது. நீங்கள் மாத்திரம்… 32 நான் மாத்திரம் அது என்னவென்றும் அல்லது அதனால் ஏற்பட்ட உணர்ச்சி என்னவென்றும் ஜனங்களிடம் ஏதாவதொரு வழியில் விவரிக்க என்னால் முடிந்தால் நலமாயிருக்குமே! இங்கு உட்கார்ந்து கொண்டு களிகூர விரும்புவது போன்றதல்ல அது. அது—அது உங்களுக்கு உள்ள ஒவ்வொரு நரம்பையும்…அது பயத்துக்கு அப்பாற்பட்டது. அது அச்சுறுத்தலுக்கு அப்பாற்பட்டது. அது ஒருவகை பரிசுத்தமான பயபக்தி. அதைக் குறித்து…என்னால்…அதை விவரித்துக் கூற வழியே இல்லை. என் முதுகு முழுவதும், என் முதுகெலும்பின் மேலிருந்து கீழ்வரைக்கும், என் விரல்கள் அனைத்தும், என் பாதங்கள், என் கால் விரல்கள், என் உடல் முழுவதுமே மரத்துப் போயிருந்தது, பாருங்கள். நீங்கள் இவ்வுலகத்தை விட்டு வேறெங்கோ இருந்தது போல இருந்தது. அந்த உணர்ச்சி என்னைப் படிப்படியாக விட்டு சென்றது. அப்பொழுது நான் கர்த்தரிடம், “ஓ தேவனே, எனக்குத் தெரிவிக்க மாட்டீரோ?” என்று கேட்டேன். 33 அந்த வல்லமைக்கு மிகவும் அருகாமையில் உள்ள மற்றொரு சம்பவம் நான் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள சூரிக் நகரத்தில் இருந்தபோது நடந்தது என்று நான் நினைக்கிறேன். அந்த சமயம் அவர் ஒரு ஆங்கிலேயன் குதிரை மீது சவாரி செய்து ஆப்பிரிக்கா வழியாக வருவதை ஒரு ஜெர்மானிய கழுகு கவனித்து கொண்டிருப்பதை எனக்குக் காண்பித்தார். அப்பொழுது அவர், “எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள்” என்று கூறினார்.
1634 எனக்கு உதவி செய்யும்படி நான் கர்த்தரிடம் கதறிக் கொண்டிருந்தேன். அதன் அர்த்தத்தை எனக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அவரிடம் வேண்டினேன். ஏனெனில் அதன் அர்த்தம் நான் இவ்வுலகைவிட்டுப் போய்விடப் போகிறேன்,…நான் கொல்லப்படப் போகிறேன் என்பது அதன் அர்த்தமானால், அதை என் குடும்பத்தினரிடம் ஒன்றும் கூறமாட்டேன். நான் பரம வீடு செல்ல நேரமாகிவிட்டால், நான் வீடு செல்வேன். அவ்வளவுதான். ஆனால் அதுதான் அதன் அர்த்தமானால் அதை என் குடும்பத்தினரிடம் கூற நான் விரும்பவில்லை. அதைக்—அதைக் குறித்து அவர்கள் எதையும் அறிய நான் விரும்பவில்லை. அது நடக்கட்டும். அதைக் குறித்தயாவும் அப்படியே இருக்கட்டும். 35 நான், “கர்த்தாவே, எனக்கு உதவி செய்யும். நான் வீட்டுக்கு வர அது எனக்கு அழைப்பாயிருக்குமானால், என் குடும்பத்தினரிடம் அதைக் கூற நான் விரும்பவில்லை” என்றேன். நீங்கள் பாருங்கள், நான் சொன்னேன்…உங்களுக்குத் தெரியும், நீங்கள் … 36 நீங்கள், “நீர் தரிசனத்தில் என்ன கூறினீர்? தரிசனம் என்னதான் உரைத்தது என்பதைக் குறித்து நீர் ஏன் சிந்திக்கவில்லை?” என்று கேட்கலாம்.
1737 ஆனால் அப்பொழுது அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து என்னால் சிந்திக்க முடியவில்லை. என்னால் முடியவேயில்லை. நான் நினைத்தேன்…நான் கலங்கினேன். குழப்பமுற்றேன். அப்பொழுது எப்படி சிந்திப்பதென்று உங்களுக்கு தெரியாது. உங்களால் சிந்திக்கவே முடியாது. 38 அப்பொழுது நான், “பரலோகப் பிதாவே, அந்த—அந்த வெடித்தல் என்னை எடுத்துக்கொள்ளப் போவதாயிருந்தால், இப்பொழுது நான் அதை அறியட்டும், எனவே அதைக் குறித்து நான் யாரிடமும் கூறமாட்டேன். அதற்கு அறிகுறியாக உம்முடைய மகிமையும் வல்லமையும் மறுபடியும் இறங்கி, என்னை மேலே தூக்கட்டும், அல்லது உம்முடைய மகிமை என்மேல் இறங்கட்டும். அப்பொழுது அது தான் அதன் அர்த்தம்—அர்த்தம் என்று நான்—நான் அறிந்து அதை எனக்குள்ளே இரகசியமாக வைத்துக் கொள்வேன்” என்றேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. 39 அப்பொழுது நான், “அப்படியானால், ஆண்டவரே, என்னுடைய ஊழியத்துக்கென்று உம்முடைய தூதர்களை நீர் அனுப்பப்போவதற்கு அது அடையாளம் என்றால், உம்முடைய வல்லமை என் மேல் விழட்டும்” என்றேன். அப்பொழுது என்னை அறையிலிருந்து தூக்கிச் செல்லும் அளவுக்கு வல்லமை என் மேல் விழுந்தது. 40 எனவே நான் வேதாகமத்தைக் கையில் கொண்டவனாய் இதைக் கூறுகிறேன். நான்—நான் சுய நினைவடையும்படி எனக்குதவி செய்ய தேவனிடம் வேண்டினேன். அப்படி நான் செய்தபோது, இதனுடன் சம்பந்தப்பட்ட சிலவற்றை அவர்—அவர் வேதாகமத்திலிருந்து எனக்கு காண்பித்தார். அதே இடத்தில், நான், “உண்மையில் அது தான் அதுவா? நான் எப்படி அதைச் செய்தேன்?” என்று எண்ணினேன். ஓ, சபையோரே, இந்தக் காரியங்களை என்னால் விவரிக்க முடியாது. எனக்குத் தெரிந்த எதற்கும் இது அப்பாற்பட்டதாயுள்ளது. புரிகிறதா?
1841 என் மனைவி மிகவும் வினோதமான ஒரு ஸ்திரீ. உலகில் மிகச் சிறந்தவர்களில் ஒருவள். ஆனால் சில நாட்கள் நான் ஒன்றுமே அவளிடம் கூறவில்லை. என் வேலையைச் செய்து கொண்டிருந்தேன். ஏதோ ஒன்று நடந்தது என்பதை அவள் அறிந்து கொண்டாள். எனவே அவளிடம் நான் அதைப் பற்றி கூறினபோது, அவள், “உங்களுக்குத் தெரியுமா பில், அந்த காரியங்கள் பெரும்பாலானவைகளில் உங்களை நான் காண்கிறேன். நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன்” என்றாள். மேலும் அவள், “நான் என் முழு இருதயத்தோடு உங்களை நம்புகிறேன் என்பதை நீர் அறிவீர்” என்றாள். அவள் தொடர்ந்து, “ஆனால் அதில் உண்மையில் ஏதோ ஒன்றுள்ளது” என்றாள். 42 அது என்னை அசைத்தது போல தென்பட்டது. அந்த வெடி சப்தம் அந்த தூதர்கள் அப்படி வேகமாக வருதல். அவர்கள் ஐந்து பேர் ஒன்று சேர்ந்து ஒரு—ஒரு கூட்டமாக வருதல். நான் இங்கு வரைந்தது போன்ற கூர்நுனிக்கோபுர வடிவில் அவர்கள் வந்தனர். அது எப்படி காணப்பட்டதென்றால்…முதலில் அது ஒரு விதமான, முதலில் அது தூரத்தில் புறாக்களின் நிறத்தைப் போல் காணப்பட்டது. அவர்கள் இந்த பக்கமாக வந்தனர். அவர்கள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு பேர், பிறகு ஒரு தூதன் மேலேயிருந்தார், பாருங்கள், ஆக மொத்தம் ஐந்து பேர். அவர்கள் அதிவேகமாக வந்தனர். அந்த வேகத்துடன் ஜெட் விமானத்தின் வேகத்தையோ, வேறெதையுமே ஒப்பிடமுடியாது.
1943 அவர்களை என்னால் காணமுடிந்தது. அவர்கள் தலைகள் ஒரு விதம் பக்கவாட்டில் திருப்பப்பட்டிருந்தன. அந்த சிறகுகள் பின்பக்கம் நோக்கியிருந்தன. போருக்கு ஆயத்தமானவர்களாய் அப்படி இங்கு “வ்யூ” என்ற விதமான சத்தத்தோடு வந்தனர். அவர்கள் கீழே இறங்கிவந்து, அவர்களுடைய அந்த கூர்நுனிக் கோபுரக் கூட்டத்துக்குள் என்னை உள்ளே எடுத்துக் கொண்டனர். நான் தரைக்கு மேல் தூக்கப்பட்டதைக் கண்டேன். நான் நினைத்தேன், ஒருக்கால்…தூரத்தில் நான் “வூம்” என்னும் முழக்கத்தைக் கேட்டேன். ஒலித்தடையை மீறின வேகத்துடன் செல்லும் ஒரு—ஒரு—ஒரு ஆகாய விமானம் இடும் முழக்கம் போல இருந்தது. நீங்கள் அப்படிப்பட்ட சத்தத்தைக் கேட்டிருப்பீர்கள். ஒரு விதமான தூரத்து முழக்கம். 44 நான், “இந்த தரிசனம் என்னை விட்டுப்போன பிறகு நான் ஒரு வெடி விபத்தில் கொல்லப்படுவேன் என்பதற்கு இது அடையாளமாயிருக்கலாம்” என்று எண்ணினேன். நான், “இதோ நான் இருக்கிறேன். நான் மேலே மேலே தூக்கப்பட்டேன். நான்…அவர்கள், இதோ அவர்கள் இங்கு எங்கோ உள்ளனர். நான்—நான் இந்த கூர்நுனி கோபுர வடிவில் உள்ள தூதர்களின் மத்தியில் இருக்கிறேன். ஆனால் எனக்குத்—எனக்குத் தெரியவில்லை. ஒருகால் என்னை வீடு கொண்டு செல்ல கர்த்தர் வந்திருக்கக் கூடும்” என்றே எண்ணிக் கொண்டேன். பிறகு ஜோசப் கீழேயிலிருந்து “அப்பா” என்று கூப்பிடுவதைக் கேட்டேன். “அது அப்படியிருக்குமானால், அது அவனையும் கூட கொண்டு செல்ல வேண்டுமோ” என்று நினைத்தேன். 45 அப்பொழுது ஏதோ ஒன்று, “நீ…” என்றது. ஞாபகம் கொள்ளுங்கள். நான் எப்பொழுதுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு செய்திக்காக விழிப்புடன் காத்திருக்கிறேன்.
2046 அன்றொரு நாள், அண்மையில் இங்கு எனக்குக் கிடைக்கப் பெற்ற தரிசனத்தில், என்ன நடக்கப் போகிறதென்று என்னிடம் கூறப்பட்டது. நான் சூரியனில் நின்று கொண்டு இந்த இடத்துக்கு பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர், “இரண்டாம் உச்சக்கட்டம் இனிமேல் தான் வர வேண்டியதாயுள்ளது என்பதை நினைவில் கொள்” என்றார். அப்பொழுது நான், “ஒரு செய்தி இனிமேல் இருக்கும்” என்று எண்ணினேன். 47 இங்கு நான் அளித்த என்னுடைய செய்தி ஞாபகமுள்ளதா? ஏழு சத்தங்கள் முழங்கினவைகளும், முத்திரைகளும் தேவனுடைய வார்த்தையில் எழுதியும் கூட வைக்கப்படவில்லை, அந்த “தலைக்கல்” திறக்கப்படுதல் ஞாபகமுள்ளதா? அது என்னை அந்த கூர்நுனிக் கோபுரத்துக்குள் கொண்டு சென்றது. 48 ஜீனியர் ஜாக்சன், நீங்கள் இங்கு இருக்க நேர்ந்தால், அண்மையில் நீங்கள் எனக்கு எழுதிக் கொடுத்த அந்த சொப்பனம் அதை இன்று காலை நான் கூறப் போவதில்லை. நீங்கள் மிகவும்…தேவன் மிகவும் பரிபூரணமாக அதைக் கொடுத்திருந்தார். நான் அதன் அர்த்தத்தை உங்களுக்கு அளிக்காததால் என்னை மன்னிக்கவும், ஏனென்றால் நான் ஏதோ ஒன்று அசைவதைக் கண்டேன். ஜே.டி அவர்களுக்கும் அதுவே தான், பாருங்கள். அதை நான்—நான்—நான் அறிந்தேன். சகோதரி காலின்ஸ் அவர்களுக்கும் சரியாக அதுவேதான். புரிகிறதா? அந்த ஆறு சொப்பனங்களும் ஒரே காரியத்திற்கு நேராக வழி நடத்தின. 49 அதன் பிறகு அநேக ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் அனைவரிடமும் நான் கூறின தரிசனம், அது அன்றொரு நாள் நிறைவேறினது. புரிகிறதா? அது நிறைவேறும். 50 இதோ அது இங்குள்ளது, எல்லாமே அங்குள்ளது. ஏதோ ஒன்று அசைந்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. தேவன் எனக்குதவி செய்வாராக என்பதே என் ஜெபம். நாம் ஜெபம் செய்வோமாக.
2151 பரலோகப் பிதாவே, நாங்கள்—நாங்கள் அழிந்து போகக்கூடிய மானிடரே. இந்த காலை வேளையில் இங்கு நாங்கள் நிற்கிறோம். கர்த்தாவே, நான்…இந்த சிறு மந்தையையும் சபையையும் நடத்த என்னை நீர் அனுப்பினீர். நான் என் முடிவுக்கு வந்திருக்கிறேன். வழி எதுவென்றும், என்ன, எது வருகிறதென்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த ஒன்றை மாத்திரம் நான் அறிந்திருக்கிறேன், “உம்முடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் உம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலுமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று” நீர் உரைத்திருக்கிறீர். தேவனே, உம்முடைய மகத்தான இரக்கதின் கரம் எங்கள் மேல் இருக்க வேண்டுமென்று உம்மை நோக்கி நான் ஜெபிக்கிறேன். 52 நீரே தேவன் என்று நாங்கள் உண்மையாக அறிந்திருக்கிறோம். நீர் பூர்வ காலத்தில் மாத்திரம் வாழ்ந்த தேவன் அல்ல, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் எப்பொழுதும் தேவனாயிருந்து வந்திருக்கிறீர். நீர் இனிமேலும் தேவனாயிருப்பீர். காலம் என்று ஒன்று இருப்பதற்கு முன்பே, நீர் தேவனாயிருக்கிறீர். காலம் முடிந்த பிறகும் நீர் தேவனாயிருப்பீர். 53 கர்த்தாவே, நாங்கள் உம்முடைய கரங்களில் இருக்கிறோம். நாங்கள் வெறும் களிமண். நீர் எங்களை வனையும் குயவன். கர்த்தாவே, உம்மை கனப்படுத்தும்படியாக நாங்கள் சிறந்த ஊழியத்தை செய்வதற்கான விதத்தில் எங்கள் ஜீவியங்களை வடிவமையும். பிதாவே, இதை அருளும். நாங்கள் உம்முடைய கரங்களில் இருக்கிறோம்.
2254 எங்களை நாங்கள் இங்கு கொண்டு வர எந்த வழியும் இல்லை. இங்கிருந்து நாங்கள் எப்படி வெளியே செல்வதென்றும் எங்களுக்கு தெரியாது. ஆனால் கர்த்தாவே, எங்களுக்கு நீர் ஜீவனை அளித்திருக்கிறீர். நீர் …எங்கள் வாழ்க்கையை நாங்கள் உமக்கு அர்ப்பணித்தபோது எங்களுக்கு நீர் அதற்கு பதிலாக நித்திய ஜீவனை அளித்திருக்கிறீர். எங்கள் விசுவாசம் அதை எங்கள் சரீரத்துக்குள் கொண்டு வந்தது. அதற்காக உம்மை நாங்கள் நேசிக்கிறோம். ஏனெனில் என்றாவது ஒரு நாள் உம்மை காண்போம் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் உமது மகிமையில் இருப்பீர். அவரை நாங்கள் காண்போம். “நல்லது, உத்தமும் உண்மையுள்ள ஊழியக்காரனே, உலகம் உண்டாவதற்கு முன்பே உனக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற சந்தோஷத்திக்குள் பிரவேசி” என்னும் வார்த்தைகளைக் கேட்க நாங்கள் ஆவலுள்ளவர்களாயிருக்கிறோம். ஓ, தேவனே, நாங்கள் எல்லோரும் சந்திக்கும் அந்த நேரம்வரை, எங்களை வழிநடத்தும். நாங்கள் உம்முடைய ஊழியக்காரர்களாயிருக்கிறோம். எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். 55 கர்த்தாவே, இந்த மகத்தான தரிசனங்கள் உமது அடியேனுக்கு மிக அதிகமானவை. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. அவை எனக்கு கிடைக்கின்றன என்று மாத்திரம் நான்—நான் அறிவேன். நான் அதில் கண்டதும், அதில் கூறப்பட்டவைகளையும் மாத்திரமே என்னால் எடுத்துரைக்க முடியும். கர்த்தாவே, சில நேரங்களில் அது எனக்கு பயத்தை விளைவிக்கிறது. என்ன செய்வதென்று நான்—நான் வியக்கிறேன். 56 அப்பொழுது நான் வேதாகமத்தை எடுத்துப் படித்து, ஏசாயா தேவாலாயத்தில் தங்கள் பாதங்களின் மேல் செட்டைகளையுடைய தேவ தூதர்களைக் கண்டபோது அவனுக்கு எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். அப்பொழுது அவர், “ஐயோ! அதமானேன். கர்த்தருடைய மகிமையை என் கண்கள் கண்டதே” என்று சத்தமிட்டதில் வியப்பொன்றுமில்லையே. 57 தீர்க்கதரிசி, அப்பொழுது சத்தமிட்டான் அவன் ஒரு அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள மனுஷன் என்றும், அவன் அசுத்தமுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன் என்று சப்தமிட்டான். இருப்பினும் அவன் ஒரு தீர்க்கதரிசியே. அப்பொழுது தேவதூதன் குறட்டை கையிலெடுத்து ஒரு நெருப்புத்தழலை எடுத்து அவன் வாயைத் தொட்டான், தேவாலயத்தில் அவன் சுத்திகரிக்கப்பட்டான். தேவதூதன் குறட்டை கையிலெடுத்து, ஒரு நெருப்புத்தழலை அவன் உதடுகளில் வைத்து, அவனை சுத்திகரித்து, “இப்பொழுது போய், தீர்க்கதரிசினம் உரைப்பாயாக” என்று சொன்னான். கர்த்தராகிய தேவனே, ஏசாயா, “இதோ அடியேன் இருக்கிறேன். ஆண்டவரே என்னை அனுப்பும்” என்று சத்தமிட்டான்.
2358 அப்பொழுது அவன், “யார் நம்முடைய காரியமாய் போவான்?” என்று கேட்டான், ஏனென்றால் அது பொல்லாத விபச்சார சந்ததியாயிற்றே! 59 ஓ தேவனே, அது மீண்டும் நிகழட்டும். ஓ கர்த்தாவே, அது அது மறுபடியும் வரட்டும்! பரிசுத்த ஆவியை சுத்திகரிக்கும் அக்கினியுடன் அனுப்புவீராக. நான் அசுத்த உதடுகளுக்குள்ளவன். இவ்வுலகில் அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறேன் என்று நான் அறிக்கை செய்கிறேன். ஆண்டவரே, நாங்கள் உம்முடைய பார்வையில் அசுத்தமுள்ளவர்கள். ஆனாலும், ஓ, சுத்திகரிக்கும் வல்லமையை, பரிசுத்த ஆவியை அனுப்புவீராக! ஓ, கர்த்தாவே, எங்களை சுத்திகரியும். ஆண்டவரே, உம்முடைய ஊழியக்காரனாகிய என்னை சுத்திகரியும். 60 அதன் பிறகு பேசும் ஆண்டவரே. உம்முடைய ஊழியக்காரனாகிய நான் செவிகொடுத்து கேட்கிறேன். அந்த சத்தத்தைக் கேட்க நான் வாஞ்சித்துக்கொண்டிருக்கிறேன். நான் உம்முடையவன் நான் என்னை பலிபீடத்தின் மேல் கிடத்துகையில், கர்த்தாவே, நீர் பொறுத்தமாய் காண்கிறபடி என்னை உபயோகியும். யாராவது போக வேண்டுவென்று நீர் நினைத்தால், இதுவே அந்த நேரமானால், கர்த்தாவே பரிசுத்த ஆவியானவர் தாமே என்னைச் சுத்திகரித்து, அபிஷேகித்து, அனுப்புவாராக! 61 கர்த்தாவே, எனக்குத்—எனக்குத் தெரியவில்லை. நான்—நான் தேவதூதர்களை கண்டேன் என்று மாத்திரம் நான் அறிவேன். இவையனைத்தும் முற்றிலும் உண்மையென்று நீர் அறிந்திருக்கிறீர். நான், “ஐயோ, அதமானேன். எனக்குதவி செய்யும்” என்று, கர்த்தாவே, ஜெபிக்கிறேன்.
2462 இப்பொழுது இந்த ஜனங்களை ஆசீர்வதிப்பீராக. கர்த்தருடைய பிறப்பைக் கொண்டாடும் நாளுக்கு முந்தின நாளில் நாங்கள் இங்கு கூடி வந்திருக்கிறோம். நீர் எங்களுக்குதவி செய்ய வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். 63 உமது ஊழியக்காரனும், எங்களுடைய சகோதரனுமாகிய நெவிலுக்கு இன்று காலை சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டுமென்றும், நான் பேச வேண்டுமென்றும் தோன்றினது. இப்பொழுது நீர் எனக்குதவி செய்ய வேண்டுமென்று நான்—நான் வேண்டுகிறேன். 64 கர்த்தாவே இங்குள்ளவர்கள், எங்கள் எல்லோருக்கும் நீர் தேவையாயிருக்கிறீர். எனவே நாங்கள் உம்முடைய வார்த்தையை படித்து சிறிது நேரம் தியானிக்கும் இந்நேரத்தில் நீர் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் இப்பொழுது வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே, உம்முடைய ஆவி எங்கள் மேல் இறங்குவதாக! எங்களை பரிசுத்த ஆவியினால் அனல் மூட்டி சுத்திகரித்து, பலி பீடத்திலிருந்து புதிதாக புறப்பட்டு வருகிற தேவனுடைய செய்தியால், மரித்துக் கொண்டிருக்கிற இந்த உலகத்தை, நாங்கள் மகத்தான நித்திய தேவனை சந்திப்பதற்கு முன்பு, அசைக்கும்படி செய்யும். இதை அவருடைய அருமையான குமாரனும், எங்கள் இரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
2565 இப்பொழுது நான் எழுதி வைத்துள்ள சில வேத வசனங்களுக்கும், சில குறிப்புகளுக்கும் உங்கள் கவனத்தைக் கவர விரும்புகிறேன். 66 டாக் அல்லது பில்லி, அவர்களில் ஒருவர், பிள்ளைகளின் காரணமாக சிறிது நேரத்தோடு விட்டுவிட வேண்டுமென்று என்னிடம் கூறினார் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பிள்ளைகளுக்காக சில வெகுமதிகளை வைத்துள்ளனர். 67 உங்கள் ஞாயிறு பள்ளியை முடிந்து வெளி வந்த சிறுவர்களே சிறிது நேரம் இங்கிருங்கள். இங்கிருந்து நாங்கள் கூறுவது உங்களுக்கு சிறிது ஆழமாக இருக்கக்கூடும். ஆனால் நீங்கள்—ஆனால் நீங்கள் தாயுடனும் தந்தையுடனும் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருங்கள். அவர்களிடம் நான் பேச விரும்புகிறேன்.
2668 இப்பொழுது 89-ம் சங்கீதத்திலிருந்து, நான் ஓரிரண்டு வசனங்களை, 89-வது சங்கீதத்திலிருந்து படிக்க விரும்புகிறேன். நான், 50, 51, 52-ம் வசனங்களை 89-ம் சங்கீதத்திலிருந்து படிக்க முயற்சிக்கப் போகிறேன். 69 இப்பொழுது பின்னாலுள்ளவர்கள் எல்லோரும் நான் பேசுவதை உங்களால் சரியாகக் கேட்க முடிகிறதா? உங்களால் முடிந்தால், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். எனவே நான்…இது…இந்த எல்லா ஒலிபெருக்கிகளும் இயங்குகின்றனவா? [யாரோ ஒருவர், “எனக்குத் தெரியவில்லை” என்கிறார்.—ஆசி] இந்த ஒன்றா அல்லது இந்த ஒன்று நன்றாக உள்ளதா? இந்த ஒன்றா? இந்த ஒன்றா? [“இந்த பக்கத்தில் உள்ள இரண்டுமே செயல்படுகின்றன.”] இங்கே பக்கத்தில் உள்ள இந்த இரண்டுமா? [“ இந்த ஒன்று, இந்த ஒன்று, இந்த ஒன்று.”] சரி. 70 இதை அவர்கள் ஒலிப்பதிவு செய்யப் போகிறார்களா அல்லது இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. இது இக்காலை வேளையில் ஒரு விதமான எதிர்பாராத ஒரு சம்பவம். 71 ஆனால் இதை இப்பொழுது மறந்து விடாதீர்கள். உங்கள் நண்பர் அனைவரையும் அழைத்து வாருங்கள். அடுத்த ஞாயிறு கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ள நிச்சயம் வர வேண்டும் என்று நான்—நான் விரும்புகிறேன். 72 இந்த சபை கட்டிடத்தை விரைவில் கட்டி முடித்து விடுவார்களென்று நான் நினைக்கிறேன். அப்பொழுது நான்—நான் திரும்ப வந்து…தேவனுக்கு சித்தமானால், வேதாகமத்திலிருந்து அந்த முத்திரைகளைக் குறித்து பிரசங்கம் செய்வேன்.
2773 சங்கீதங்களின் புத்தகத்தில் 89-ம் சங்கீதம், 50-ம் வசனம் முதல் படிக்கப் போகும் தேவனுடைய வசனத்தை இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால், கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும். கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென். 74 நான் சில நிமிடங்கள் பேச விரும்பும் பொருள் என்னவெனில்… இந்த வசனங்களை நீங்கள் குறித்துக் கொண்டு, அதை மறுபடியும் நன்றாகப் படிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஒருக்கால் திரும்பவும் அதைப் படிப்பதற்காக பொறுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். பார்த்தீர்களா? ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம் பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால், கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும். கர்த்தருக்கு என்றைன்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென்.
2875 தாவீது இதைக் கூறினபடியால், இதை ஆராய்ந்து படியுங்கள். நான் பொருளாக உபயோகிக்க நினைப்பது என்னவெனில்… இது ஒரு விநோதமான பாடப்பொருள், மீண்டும் கிறிஸ்துமஸுக்கான ஒரு பாடப் பொருளை எடுத்தால்; ஆனால் கடந்த வாரம் கூட நான் விசித்திரமான ஒரு பொருளின் மேல் பிரசங்கித்தேன். அது என்னவென்று இப்பொழுது மறந்து விட்டது. அது…சரியாக கேட்கவில்லை, என்ன? [ஒரு சகோதரன், “உலகம் விழுந்து போதல்” என்கிறார்—ஆசி.] [“ உலகம் விழுந்து போதல் ”—ஆசி.] உலகம் விழுந்து போதல் விழுந்து போதல் . 76 இப்பொழுது இந்த ஞாயிறு நான் வார்த்தையின் நிமித்தமாக வரும் நிந்தை என்னும் ஒரு பாடப் பொருளை உபயோகித்து பேசப் போகிறேன். நான் மறுபடியும் அதை கூற விரும்புகிறேன், உண்மையாகவே நல்ல ஒன்று. வார்த்தையின் நிமித்தமாக வரும் நிந்தை.
2977 தேவன் தமது வார்த்தைகள் அனைத்தையும் நிறைவேற்ற ஒரு நேரத்தையும், அந்த நேரத்துக்கான காரணத்தையும் வைத்திருக்கிறார். தேவன், தாம் என்ன செய்யப் போகிறார் என்பதை முற்றிலுமாக அறிந்திருக்கிறார். நமக்கோ அது தெரியாது. அவர் அதை நமக்களிக்கும்போது, நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவருக்கு தெரியும். அவர்—அவர் செய்யத் திட்டமிட்டுள்ளது ஒன்றும் தவறாகப் போய் விடாது. அது எல்லாம் நிறைவேறியே ஆக வேண்டும். ஒரு பொருளின் உண்மையான இயல்பை வெளியே கொண்டுவர சில சமயங்களில் கரடுமுரடான, கடினமான காரியங்கள் தேவையாயுள்ளன. 78 மழையானது கரடுமுரடான, மின்னலடிக்கும், இடி முழங்கும் வானத்தில் பிறக்கிறதென்று உங்களுக்குத் தெரியும். நமக்கு மழையில்லாமல் போனால், நம்மால் உயிர் வாழ முடியாது. ஆனால் மழையை பிறப்பிக்க எது அவசியமென்று பார்த்தீர்களா? இடி, மின்னல் பிரகாசம், கோபம். அதிலிருந்து மழை உண்டாகின்றது. 79 ஒரு வித்து புது ஜீவனைக் கொண்டு வருவதற்கென நிலத்தின் புழுதிக்குள் சென்று, அங்கு செத்து, அழுகி, துர் நாற்றமெடுக்க வேண்டியதாயுள்ளது. 80 தங்கத்தை சுத்தப்படுத்தி, அதை திருப்பிப் போட்டு, உலோக அழுக்கு அனைத்தும் போக்கும் வரைக்கும் நன்றாக அடிக்க வேண்டியதாயுள்ளது. அது பளப்பளப்பதனால் அல்ல. ஏனெனில் நிமிளை என்னும் இரும்பு பைரைட் (Iron Pyrite) என்ற கனிமப் பொருளும் கூட, அது முட்டாளின் தங்கம் எனப்படுகிறது, அது உண்மையான தங்கத்தைப் போல பளபளக்கிறது. ஆனால் அவையிரண்டையும் ஒன்றாக வைத்து நோக்கினால், அவைகளைத் தனித்தனியாக பார்த்தால், எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவையிரண்டையும் ஒன்றாக வைத்து நோக்கினால், நீங்கள் எது எதுவென்று சொல்லி விடலாம். தங்கத்தை அடிப்பவன் அவனுடைய உருவம் தங்கத்தில் பிரதிபலிப்பதை அவன்—அவன் காணும் வரைக்கும் அதை அடித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
3081 தேவன் ஒரு நேரத்தை நியமிக்கிறார். அவர் செய்யும் ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கமுண்டு. கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு எதுவுமே ஏதேச்சையாக நடப்பதில்லை. புரிகிறதா? நாம் முன் குறிக்கப்பட்டிருக்கிறோம். சகலமும் அதற்கென்று சரியாக நடக்கிறது. அவர் பொய்யுரைக்க முடியாது. ஒவ்வொன்றுக்கும் அதனதன் நேரம், காலம், வழிகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு அசைவுக்கும் பின்னால் தேவன் இருக்கிறார். எல்லாமே தவறாக சென்று கொண்டிருக்கிறதென்று நீங்கள் சில நேரத்தில் நினைக்கக் கூடும். அது நம்மைப் பொருத்ததாயுள்ளது. அவை சோதனைக் கென்றும், ஏன் இப்படி நடக்கிறதென்று நாம் வியக்கவுமே நம்மேல் சுமத்தப்படுகின்றன. அந்த சோதனைகளை நாம் எப்படி ஏற்றுச் செயல்படுகிறோம் என்று காணவே அவை அளிக்கப்படுகின்றன.
3182 சில நாட்களுக்கு முன்பு நானும் சகோதரன் ஃபிரட்டும் சாம்ப்ளேயின் ஏரியை கடந்து நியூயார்க் பக்கமுள்ள கரையை அடைந்தோம். நாங்கள் நியூயார்க் பக்கம் சென்றிருந்தோம். அங்கு நான் ஒரு மலையின் மேல், ஹரிகேன் மலையின் மேல் ஏறினேன். அங்கு நான் வேடையாடுவது வழக்கம். அங்கு நான் எப்படி காணமற் போனேன் என்றும், தேவன் என்னை எப்படித் திரும்பக் கொண்டு வந்தாரென்றும் எனக்கு ஞாபகம் வருகிறது. பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே அந்த புயலின் வழியாக என்னை பத்திரமாக கொண்டு சேர்த்தார். நான் மரித்து, அழிந்து போயிருப்பேன். அவ்வாறே அநேக மைல் தூரத்தில் முகாமிலிருந்த என் மனைவியும் பில்லியும் இறந்து போயிருப்பார்கள். நான் திரும்பக் கொண்டு வரப்பட்டேன். 83 வசந்த காலத் தொடக்கத்தில் இருந்த சிறு பனியின் மேல் நாங்கள் பயணம் செய்து முகாமை அடைந்தோம். நான் அங்கு நின்று கொண்டு சகோதரர் ஃபிரட்டுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னிடம் “நீ வெளியே தனியாக வா” என்றார். அப்பொழுது நான் சற்று தூரமான இடத்தில் இருந்த புதரினை அடைந்தேன். அவர் என்னிடம், “உனக்கு ஒரு கண்ணி வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது ஜாக்கிரதையாயிரு” என்றார். ஆனால் அது என்னவென்றும், எப்படி வைக்கப்பட்டதென்றும் அவர் என்னிடம் கூறவில்லை. பின்னர் நான் திரும்பி வந்து சகோதரன் பிஃரட் அவர்களிடம் கூறினேன்.
3284 அன்றிரவு நான் அரங்கத்திலிருந்து சபைக்கு சென்று அங்கிருந்த ஜனங்களிடம் இதை கூறினேன். அடுத்த நாள் இரவு அது நடந்தது. அதன்பிறகு ஒரு நாள் நான் நின்று கொண்டிருந்த போது, அந்த பரியாசக்காரரைக் குறித்து அவர் என்னிடம், “அவர்கள் என் கைகளில் இருக்கிறார்கள். உன் விருப்பப்படி அவர்களுக்குச் செய். நீ என்ன உரைத்தாலும் அது உடனே நடக்கும்” என்றார். 85 அங்குதான் காரியம். அங்கு அவபக்தியுள்ள தேவபக்தியற்ற யாரோ ஒருவன் நின்று கொண்டு கூட்டங்களைப் பார்த்து கேலி செய்து கொண்டிருந்தான்…ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண்ணும், நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் போது, அவன் கட்டிடத்தில் மோசமான விதத்தில் அவளுடன் காதல் விளையாட்டு விளையாடி எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்து கொண்டிருந்தான். அவளுடைய தலையை இழுத்து, அவள் மடியின்மேல் உட்கார்ந்து, அவள் தலையை இழுத்து அவளை முத்தமிட முயன்று, இவ்வாறு கூட்டங்களில் விளையாடிக் கொண்டு, மற்றவரின் கவனத்தைக் கவர்ந்தனர். 86 அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், “இப்பொழுது அவன்…அவர்கள் உன் கைகளில் இருக்கிறார்கள். நீ அவர்களை என்னை செய்யப் போகிறாய்?” என்று கேட்டார். 87 அப்பொழுது ஒரு பரிசுத்த அமைதல் உண்டானது. எல்லோரும் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். அப்பொழுது நான், “ஓ, தேவனே, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று என்னினேன். 88 இரண்டு நாட்களுக்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் என்னை எச்சரித்திருந்தாரல்லவா, அதை நான் அப்பொழுது நினைவு கூர்ந்தேன். எனவே நான், “உங்களை மன்னிக்கிறேன்” என்றேன். இப்பொழுது அதைதான் நான் கூற வேண்டுமென்று அவர் விரும்பினார் பாருங்கள்? 89 ஏனெனில் மொத்தத்தில் நானும்—நானும் ஒரு காலத்தில் அந்த விதமாயில்லாமலிருந்திருக்கலாம், ஆனால் குற்றமுள்ளவனாயிருந்தேன்… “கொஞ்சத்திலே குற்றமுள்ளவன் அநேகத்தில் குற்றமுள்ளவனாயிருக்கிறான்.” 90 எனவே நான், “உங்களை நான் மன்னிக்கிறேன்” என்றேன். அப்பொழுது அங்கிருந்தவர் இப்பொழுது இங்கே சாட்சியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
3391 இப்பொழுது நீங்கள் பாருங்கள், இவையனைத்துக்கும் ஒரு அர்த்தம் இருந்தது என்று நான் நம்புகிறேன். வல்லமையைக் கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒன்று நடக்கும் போது அதை எவ்விதமாக பாவித்து நடந்து கொள்வீர்கள்? நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒருக்கால் இவையனைத்தும் கிரியை செய்து தற்போது நாம் உள்ள நிலைக்கு வந்திருக்கக் கூடும். எனக்குத் தெரியாது. என்னால்—என்னால் சொல்ல முடியாது. ஆனால் எப்பொழுதுமே ஏதாவதொரு வழி இருந்து வந்துள்ளது… 92 ஞாபகம் கொள்ளுங்கள். வார்த்தைக்கு வரும் நிந்தை…வார்த்தை எப்பொழுதுமே நிந்தையைச் சுமந்துள்ளது. காலங்கள் தோறும் அபிஷேகிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை எப்பொழுதுமே நிந்திக்கப்பட்டு வந்துள்ளது. அந்தக்காரணத்தினால்தான் இதை புரிந்து கொள்ள முடியாத ஜனங்களுக்கு நிந்தையை எப்படி ஏற்றுக் கொள்வது என்பது கடினமாயுள்ளது.
3493 சீஷர்கள் திரும்பிவந்து, அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் நிந்திக்கப்படுவதற்கு பாத்திரராக எண்ணப்பட்டபடியினால் சந்தோஷமடைந்தனர் என்பதை உங்களால் நினைவு கூர முடிகிறதா? அவர், “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்று கூறியுள்ளார். வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தை. 94 நீங்கள் சோதிக்கபடுவதற்காக எப்பொழுதுமே இந்த நிந்தையை சகிக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். கிறிஸ்துவினிடத்தில் வரும் ஒவ்வொரு மனிதனும், தேவன் அவனை நியமித்திருக்கிற நோக்கத்திற்கென முதலில் பிள்ளையைப் போல பயிற்சி பெற வேண்டும். நினைவிருக்கட்டும், நீங்கள் மாத்திரம் அமைதியாயிருப்பீர்களானால் நலமாயிருக்கும். நினைவிருக்கட்டும், அவர் உங்களை இதற்கென அழைத்திருந்தால், அது நிறைவேறுவதை எதுவுமே தடை செய்ய முடியாது. தேவனுடைய வார்த்தை வெளிப்படாமலிருக்கச் செய்ய நரகத்தில் போதுமான பிசாசுகள் கிடையாது. நீங்கள் ஒரு நோக்கத்துக்காக பிறந்திருக்கிறீர்கள். உங்கள் இடத்தை வேறு யாருமே எடுத்துக் கொள்ள முடியாது. ஒருக்கால் உங்களைப் போல் பாவனை செய்யும் போலியாட்கள் இருக்கக்கூடும். ஆனால் அவர்கள் உங்கள் இடத்தை ஒருபோதும் எடுத்துக் கொள்ள முடியாது. உண்மை. தேவனுடைய வார்த்தை வெற்றி பெறும். அது தவறமுடியாது. அதில் தான் ஒவ்வொரு கிறிஸ்தவனும் நிலைத்திருக்க வேண்டும் என்பதை—என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். சோதனைகள் எல்லா பக்கங்களிலிருந்தும் உங்களிடத்திற்கு வரும். ஆனால் தேவனுக்கு ஒரு நோக்கமுண்டு என்பதை ஞாபகம் கொள். அவையாவும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்.
3595 தேவனுடைய வார்த்தை நிறைவேற்றின ஒரு—ஒரு சில சம்பவங்களையும், அவர்களுடைய காலத்தில் தேவனுடைய வார்த்தையைச் சுமந்தவர்களையும் இப்பொழுது நாம் நினைவுபடுத்திப் பார்ப்போம். 96 அண்மையில் யாரோ, ஒருவர், என்னை குற்றப்படுத்திக் கொண்டிருப்பதாக நான்—நான் ஆவியில் உணர்ந்தேன். ஒருக்கால் அவர் ஒலி நாடாவைக் கேட்பவராக இருக்கக் கூடும். நான் வேதத்தில் உள்ள மனிதர்களைக் குறித்து எப்பொழுதும் பேசுகிறேன் என்று குற்றப்படுத்தினார். அதை நான் ஒரு நோக்கத்திற்காக செய்கிறேன். நாம் காணத்தக்கதாக இவை எழுதப்பட்டுள்ளதாக வேதம் கூறியுள்ளது. அந்த ஒரு வழியில் மாத்திரமே, எனக்கு கல்வியறிவு இல்லாததனால், எனக்குள்ள ஒரே வழி வேதத்திலுள்ளவைகளை சுட்டிக்காட்டி, “ இது எங்குள்ளதென்றும், இதனால் என்ன நடந்ததென்றும், இது எங்கு நடந்ததென்றும் கண்டீர்களா?” என்று கூறுகிறேன். புரிகிறதா? அப்பொழுது நீங்கள் உங்களை அங்கு பொருத்திக் கொள்கிறீர்கள்.
3697 அண்மையில் கப்பலில் இருந்த ஒரு சிறுவனைக் குறித்து நான் பிரசங்கித்தது போல, உங்களுக்குத் தெரியும், வயோதிகக் கப்பல் தலைவன் மரித்துக் கொண்டிருந்தான். அவன் வியாதியாயிருந்தான். கப்பலில் வேதாகமம் உள்ளதா என்று அவன் கேட்டான். அப்பொழுது இந்த சிறுவன் வேதாகமத்தை வைத்துள்ளதாக அவர்கள் அறிந்திருந்தனர். அவன் வந்து ஏசாயா 53:5 ஐ கப்பல் தலைவனுக்கு படித்தான். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.” அவன், “கப்பல் தலைவனே, என் தாயார் அதை வழக்கமாக எப்படி படிப்பார்கள் என்று நான் கூறட்டும்” என்று கூறி, “இதோ இந்த விதமாக அவள் அதைப் படிப்பாள். அதாவது, ‘வில்லி ப்ரூயிட்டின் மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, வில்லி ப்ரூயிட்டின் அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். இதை எல்லாம் அவர் வில்லி ப்ரூட்டுக்காக செய்தார்’ என்றே படிப்பாள்” என்று கூறினாள். அது அவனுடைய பெயர். அப்பொழுது வயோதிக கப்பல் தலைவன், “அது எனக்குப் பிடிக்கிறது. என் பெயரை அதில் பொருத்தி படிப்பாயா?” என்று கேட்டான். 98 சிறுவன், “நான் முயற்சி செய்கிறேன்” என்று கூறினான். அதன் பின்னர் அவன், “ஜான் க்வார்ட்ஸின் மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். ஜான் க்வார்ட்ஸின் அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். அவருடைய தழும்புகளால் ஜான் க்வார்ட்ஸ் குணமானான்” என்று படித்தான். அவன், “அதை நான் காண்கிறேன்” என்றான். கர்த்தர் அவனை குணமாக்கினார். பார்த்தீர்களா? 99 உங்கள் பெயரை அதில் பொருத்தி படியுங்கள். வில்லியம் பிரான்ஹாமின் அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். அவர் எனக்காக அதை செய்தார். அவர் உனக்காக அதை செய்தார். உங்கள் பெயரை அதில் பொருத்தி படியுங்கள்.
37100 அப்படித்தான் வேதவாக்கியங்களை என்—என் ஜனங்களிடம் நான் கொண்டு வர விரும்புகிறேன். அவர் தமக்கு கீழ்படிந்த மற்றவர்களுக்கு என்ன செய்தார் என்றும், உண்மையாயிருந்த காரணத்தால் மற்றவர்களுக்கு அவர் என்ன செய்தார் என்றும், உண்மையில்லாத மற்றவர்களுக்கு அவர் என்ன செய்தார் என்றும் கண்டு கொண்டு, உங்கள் பெயரை அதில் பொருத்திப் படியுங்கள். நீங்கள் அங்கிருக்க நேர்ந்தால், எந்த நிலையை கடைபிடித்திருப்பீர்கள்? ஞாபகம் கொள்ளுங்கள். அதே நிலையை இன்றைக்கும் கடைபிடிக்க நீங்கள் சிலாக்கியம் பெற்றிருக்கிறீர்கள்.
38101 நோவாவுக்கு தேவன் அவனிடம் உரைத்த வார்த்தையினிமித்தம் நிந்தை உண்டானது. நோவாவுக்கு ஒரு நிந்தை இருந்தது. நோவா விஞ்ஞானம் வளர்ந்திருந்த காலத்தில் வாழ்ந்தான். அவர்கள் விஞ்ஞானத்தில் பல சாதனைகள் புரிந்து, இன்றைக்கு நாம் உருவாக்கியுள்ளவைகளைக் காட்டிலும் மிகச் சிறந்தவைகளை அவர்கள் உருவாக்கியிருந்தனர். அவர்கள் அதிக திறமை சாலிகளாய், அதிக அறிவு படைத்தவர்களாயுமிருந்தனர். அவர்களுடைய விஞ்ஞானம் நம்முடைய விஞ்ஞானத்தைக் காட்டிலும் மேம்பட்டதாயிருந்தது. அவன் நூற்றிருபது ஆண்டுகளாக பரியாசக்காரர் மத்தியில் பிரசங்கித்து, வார்த்தையின் நிமித்தம் உண்டான நிந்தையை சகிக்க வேண்டியதாயிருந்தது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர்களுடைய மகத்தான விஞ்ஞான முறைகள், வானத்தில் மழை இல்லை என்பதை நிரூபித்தன. இருப்பினும் மழை பெய்யும் என்றுரைத்த கர்த்தருடைய வார்த்தையை நோவா கேட்டிருந்தான். அது அவர்கள் கொண்டிருந்த கருத்துக்கு முரணாக அமைந்திருந்தது. எனவே அவனுடைய ஜீவன் காக்கப்படுவதற்கு முன்பு அவன் உறுதியாய் நிலைநின்று பரியாசக்காரர் அவனை நிந்நித்த நிந்தையை சகிக்க வேண்டியதாயிருந்தது.
39102 ஓ, அவர்கள் அந்த வயோதிப பிரசங்கிக்காக பரிதாபப்பட்டிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் அவனை மனநிலை மருத்துவ மனையில் அல்லது வேறேங்கிலும் சேர்க்கவில்லை. ஒருக்கால் அப்படிப்பட்ட மருத்துவமனைகள் அக்காலத்தில் இருந்திருக்காது. அவன் யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை. எனவே, அவர்கள் அவனை சும்மா விட்டு விட்டனர். “தண்ணீரில்லாத போது மலைச் சரிவில் பேழையை உண்டாக்கிக் கொண்டிருக்கும் மதவெறிகொண்ட கிழவனே, நீ அதை செய்து கொண்டேயிரு. ஓ, பாவம் அந்த கிழவன்” என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் அவர்கள், “நோவாவே, பேழையை மிதக்க விட உனக்கு தண்ணீர் எங்கே கிடைக்கப் போகிறது?” என்றார்கள். “அது வானத்திலிருந்து வரும்.” 103 “அர்த்தமற்றதனம். நாங்கள் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் தொலை நிலை இயக்கமானியை அனுப்பிப் பார்த்தோம்.” அந்த காலத்தில் என்ன இருந்ததோ அதைப் பயன்படுத்தினர். “அங்கு தண்ணீர் இல்லவே இல்லை” ஆனால் அவனோ, “தேவன் அங்கு தண்ணீரை வைக்கப் போவதாக கூறினார்” என்றான். “அவரால் எப்படி அதை செய்ய முடியும்?” 104 “அது அவருடைய வேலை. நான் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, இங்கிருந்து போய்விட உங்களை எச்சரிப்பதே.” 105 இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. “அக்கினி எங்கிருந்து வரப் போகிறது?” சகோதரனே நோவாவின் காலத்தில் இருந்ததைவிட இன்றைக்கு அது சற்று அதிகம் வெளிப்படையாயுள்ளது. அது எங்குள்ளதென்று நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். அது தாக்க ஆயத்தமாயுள்ளது, அவ்வளவுதான். விஞ்ஞானம் ஏற்கனவே…இந்த முறை சாக்குபோக்குக்கு இடமேயில்லை. ஏனெனில் விஞ்ஞானம் அதை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. ஆம், ஐயா.
40106 எனவே அது கடினமானது என்று நாம் காண்கிறோம். எனவே அவர்கள் அந்தக் கிழப்பிரசங்கிக்காக பரிதாபப்பட்டு, அவனை போக விட்டனர். அந்த மனிதனின் செயல்கள் அந்த ஜனங்களுக்கு விநோதமாகக் காணப்பட்டிருக்கக் கூடும், அறிவாளியாய் கருதப்பட்ட ஒரு மனிதனுக்கு, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவன் அவர்களுடைய கருத்துக்கு முரணான ஒன்றை கூறுவார் அல்லது செய்வார் என்பது அவர்களுக்கு வினோதமாக தென்பட்டது. அவர்களிடமிருந்த …நீங்கள் புரிந்து கொள்ளாமலிருக்கலாம், கவனியுங்கள். இயற்கையிலுள்ள ஒவ்வொன்றையும் தங்கள் விஞ்ஞானத்தின் மூலம் நிரூபிக்க முடியும் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமும் அதே மனப்பான்மையைக் கொண்டுள்ளது அல்லவா? கல்வி அறிவு படைத்த முழு விஞ்ஞான உலகம். அவர்களால் ஒன்றை தவறென்று நிரூபிக்க முடிந்தால்… “தேவன் உரைத்த ஏதாவதொன்றை, அது அங்கில்லை என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியும் என்று அவர்கள் எண்ணியிருந்தனர்.”
41107 இன்றைக்கும் அவர்கள் அதே கருதத்தைக் கொண்டுள்ளனர். உங்களுக்கு புற்று நோய் உள்ளதென்றும் நீங்கள் இறந்து விடுவீர்கள் என்றும் மருத்துவர் உங்களிடம் கூறினால், உங்களுக்குள்ள புற்று நோய் அதிகப்படியாக வளர்ந்த கட்டத்தை அடைந்து விட்டது என்றும் விஞ்ஞானம் நிரூபிக்குமானால், அதைக் காட்டிலும் வித்தியாசமாக நினைப்பது புத்திக்கெட்டத் தனம். ஏனெனில் நீங்கள் இறந்தே ஆக வேண்டும். அவ்வளவுதான் என்று கருதுகின்றனர். நீங்கள் இறக்க வேண்டும் என்று விஞ்ஞானம் கூறுகிறது. அவர்கள் உங்களை பரிசோதித்து பார்த்துவிட்டு தீர்மானம் செய்துவிட்டனர். அவ்வளவு தான். நீங்கள் இறக்கப்போகிறீர்கள். தேவன் அதை குணமாக்குவதாக வாக்களித்துள்ளார் என்று நீங்கள் கூற முற்பட்டால், உங்களைப் பைத்தியக்காரர் என்று அவர்கள் கருதுகின்றனர். பாருங்கள், முன் காலத்தவரைப் போலவே, நீங்களும் நிந்தையை சகிக்க வேண்டும். 108 மருத்துவர் உங்களை பரிசோதித்து விட்டு, “நாங்கள் உள்ளே பார்த்தோம். புற்றுநோய் அதிகம் வளர்ந்து விட்டது. நாங்கள் அறுத்து பார்த்தோம். புற்று நோய் உங்கள் உடல் பூராவும் பரவி, உங்கள் இருதயம், நுரையீரல், ஈரல், மற்றும் எல்லா உறுப்புகளையும் பாதித்து விட்டது. இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாது” என்கிறார். ஆகையால், நீங்கள் பாருங்கள், “அவர் எப்படியானாலும் உயிர் வாழ்வார்” என்று நீங்கள் கூறினால், அவர்கள் “பரிதாபமான மனிதன், அவரை சும்மா விட்டு விடுங்கள்” என்கின்றனர்.
42109 அன்றொரு இரவு, மில்டவுன் சபையைச் சார்ந்த சகோதரன் ஹால், பில் ஹாலுக்கு நேர்ந்தது என் நினைவுக்கு வருகிறது. உங்களில் அநேகருக்கு அது ஞாபகமிருக்கும். அவர்கள் என்னை அழைத்தபோது நானும், என் மனைவியும், மாமியாரும் அங்கு சென்றோம். அவர் இங்கு நகரத் தலைவரோ அல்லது நீதிபதியாகவோ உள்ள ஜார்ஜ் காப் என்பவரின் சகோதரியை மணந்தவர். எனவே அவர் அவருக்கு மைத்துனர். அவர் மரித்துவிடுவாரென்று நினைத்து அவரை இங்கு கொண்டு வந்தனர். மில்டவுனிலுள்ள மருத்துவர், நியூ ஆல்பனியிலுள்ள மருத்துவர் அவரைப் பரிசோதித்து, அது ஈரல் புற்று நோய் என்று கண்டு பிடித்தனர். எனவே நான் திருமதி ஹாலைக் காணச் சென்றேன். அவருக்கு மஞ்சள் காமாலை கண்டு, உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக இருந்தது. நான், “அவர் மரிக்கப் போகிறார் என்று நான் நினைக்கிறேன்” என்றேன். 110 அவள், “சகோதரன் பில், அவரைக் காப்பாற்ற வழி ஏதாகிலும் உண்டா…தேவன் உங்களிடம் பேசுவாரா?” என்றாள். நான், “சகோதரி ஹால், எனக்குத்—எனக்குத் தெரியவில்லை. என்னால் ஜெபிக்க முடியும்” என்றேன். 111 நான் ஜெபித்து விட்டு வீடு திரும்பினேன். கர்த்தர் என்னிடம் ஒன்றுமே கூறவில்லை. அடுத்த நாள் நான் மறுபடியும் அங்கு சென்று மறுபடியும் ஜெபித்தேன். அவள், “உங்களுக்கு நல்ல மருத்துவர் யாராகிலும் தெரியுமா?” என்று கேட்டாள். 112 நான், “மருத்துவர் சாம் அடேயர் என்னும் எங்கள் குடும்ப மருத்துவர் ஜெபர்ஸன்வில்லில் குடியிருக்கிறார். அவருடைய தந்தை எங்கள் குடும்ப மருத்துவர். அவருடைய மகன் சாம் எனக்கு நெருங்கிய நண்பர். நாங்கள் ஒன்றாக பள்ளிக்கு சென்று ஒன்றாக வளர்ந்தோம். எங்களுக்கு உடல்நிலை சரியில்லையென்றால், அவரிடம் தான் போவோம்” என்றேன். அவள், “அவர் வந்து பில் ஹாலைப் பார்ப்பாரா?” என்று எதிபார்கிறேன் என்று கேட்டாள், அவளுடைய கணவரைப் பார்ப்பாரா என்றாள், அப்பொழுது நான், “நான் அவரைக் கேட்டுப் பார்கிறேன்” என்றேன்.
43113 சாம் என்னிடம், “பில்லி, அவருக்கு புற்று நோய் உள்ளதாக மருத்துவர் கூறியிருந்தால், நான் செய்யக் கூடிய ஒன்றே ஒன்று. நான் அவரை என்னைக் காட்டிலும் அதிகம் அறிந்த சிறந்த மருத்துவ நிபுணரிடம் அவரை அனுப்புவேன். நாம் சில ஊடுகதிர் நிழற்படங்களை எடுத்துப் பார்ப்போம். நாம் அவரை அதிக தொல்லைக்குட்படுத்த வேண்டாம்” என்றார். 114 நாங்கள் அவரை நியூ ஆல்பனிக்கு அனுப்பி, அங்கே மருத்துவரிடமிருந்து எடுக்கப்பட்ட ஊடுகதிர் நிழற்படங்களை பெற்றுக் கொண்டோம். அவரை மருத்துவப் பரிசோதனைக்காக லூயிவில்லுக்கு கொண்டு சென்றோம். அவரை நோயாளி ஊர்தியில் கொண்டு சென்று திரும்பக் கொண்டு வந்தோம். 115 உண்மையாகவே, சாம் அவர்கள் திருமதி ஹாலிடம் அவருடைய தொல்லையைப் பற்றிக் கூறவில்லை. அவர் என்னை அழைத்து, “அவர், உங்களுடைய போதக நண்பர் மரிக்கப் போகிறார். லூயிவில்லுள்ள மருத்துவ நிபுணர். என்னை இப்பொழுதுதான் தொலைபேசியில் கூப்பிட்டு, மில்டவுன் மருத்துவர்களின் நோய் ஆய்வுறுதியும், நியூ ஆல்பனி மருத்துவரின் நோய் ஆய்வுறுதியும் சரியே” என்றார். மேலும் அவர், “அது ஈரல் புற்று நோய் தான். அது அதிகப்படியாக வளர்ந்து விட்டது. பில்லி, அந்த மனிதனுடைய ஈரலை நாம் அறுத்து எடுத்துவிட்டால், அவர் உயிர்வாழ முடியாது” என்றும் கூறினார். எனவே, “அவர் மரிக்கப் போகிறார். அவர் ஒரு பிரசங்கியானால், அவர் மரிக்க ஆயத்தமாயிருக்க வேண்டும்” என்று கூறிவிட்டார்.
44116 அப்பொழுது நான் அவரிடம், “அதுவல்ல கேள்வி. ஆனால் அவருக்கு ஏறக்குறைய ஐம்பத்தைந்து வயது தான் ஆகிறது. எனவே பிரசங்கிக்க அவருக்கு ஆயுசு நாட்கள் இன்னும் அதிகம் உள்ளனவே” என்றேன். மேலும், நான், “சரி, அவர் மரிக்கப் போகிறாரென்றால், என்றால், அத்துடன் அது முடிவு பெறுகிறது. உங்களுக்கு நன்றி, மருத்துவர் சாம்” என்று கூறி விடை பெற்றேன். 117 நான் சென்று திருமதி ஹாலை வெளியே அழைத்து, நான் இவ்வாறு கூறினேன். அப்பொழுது நான், “திருமதி ஹால், லூயிவில்லில் அவர்கள் கண்டுபிடித்தத்தும், நியூ ஆல்பனியிலும் மில்டவுனிலும் அவர்கள் கண்டுபிடித்ததும் ஒன்றே தான் என்று சாம் கூறினார். இந்த மனிதன் மரித்துக் கொண்டிருக்கிறார். சகோதரன் ஹால் மரிக்கப் போகிறார். அவருக்கு ஈரலில் புற்று நோய் உள்ளது. அது முதிர்ந்து விட்டது” என்றேன். 118 ஆகவே அவள் அழ ஆரம்பித்தாள். நான் திரும்பி அவருக்காக ஜெபம் செய்தேன். நான் அறையில் இருந்தது கூட அறியக்கூடாத அளவுக்கு அவர் அவ்வளவு மோசமான நிலையில் இருந்தார். 119 எனவே, நான் திரும்பி வந்து விட்டேன். அந்நாட்களில் அநேகர் என் வீட்டுக்கு வருவது வழக்கம். வேறு யாரும் ஊழியத்தில் இல்லை. அது அவ்வளவாக கறைப்பட்டிருக்கவில்லை. ஜனங்கள் எல்லாவிடங்களிலிருந்தும் வந்து கொண்டிருப்பார்கள்.
45120 நான் சிறிது இளைப்பாற வேண்டுமென்றிருந்தேன். எனவே நான் மெல்ல நழுவிச் சென்று விடியற்காலை இரண்டு முப்பது அல்லது மூன்று மணிக்கு எழுந்து விட்டேன். சகோதரன் உட் அப்பொழுது அந்த சந்துக்கு குடி வரவில்லை. நான் நெடுஞ்சாலையை நோக்கினபோது, யாரும் அங்கில்லை. எனவே நான் என் பழைய தொப்பியை எடுத்துக் கொண்டு, வேட்டைப் பொருட்களை வைத்திருந்த அறைக்குள் சென்று எண்.22 என்ற துப்பாக்கியை கையிலெடுத்து அணில் வேட்டைக்குச் செல்லாமென்றிருந்தேன். எட்டு மணி வரைக்கும் வேட்டையாடிவிட்டு ஏதாவதொரு மரத்தின் நிழலில் படுத்து சிறிது உறங்கலாமென்று எண்ணினேன். என்னால் வீட்டில் நிம்மதியாய் தூங்க முடியாது. 121 நான் என்னுடைய தொப்பியை எடுத்துக் கொண்டு வேட்டைப் பொருள்களிருந்த அறையை நோக்கிப் புறப்பட்டபோது, சுவற்றில் ஒரு ஆப்பிள் பழம் தொங்கி கொண்டிருந்தது. அது முழுவதும் அழுகிப்போய் புழுவால் அரிக்கப்பட்டு, முடிச்சு முடிச்சாய் இருந்தது. மேலெல்லாம் சுருக்கம் விழுந்திருந்தது. அப்பொழுது நான், “மேடா, ஏன் அதை சுவற்றில் தொங்கவிட்டாள்?” என்று நினைத்தேன். 122 நான் மறுபடியும் கவனித்தபோது, அது சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. அது ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. என் பழைய தொப்பியைக் கழற்றி, மூலையில் சென்று துப்பாக்கியை வைத்துவிட்டு முழங்கால்படியிட்டு, “கர்த்தாவே, உமது தாசன் என்ன அறிந்து கொள்ள வேண்டுமென்று சித்தங்கொள்கிறீர் என்று நான் கேட்டேன்.
46123 வேறொரு ஆப்பிள் பழம் கிழே இறங்கினது, வேறொரு ஆப்பிள் பழம் கீழே இறங்கினது. இப்படியாக நான்கு, ஐந்து ஆப்பிள் பழங்கள் தொங்கின (எத்தனை என்று இப்பொழுது ஞாபகமில்லை) பிறகு ஒரு அழகான கோடுகள் உள்ள ஆப்பிள் கீழே இறங்கி வந்து அழுகிப் போனதாய் காணப்பட்ட ஆப்பிள் பழங்கள் அனைத்தையும் விழுங்கினது. அவர், “எழுந்து காலூன்றி நில்” என்றும், “நீ போய் பில் ஹாலிடம், அவர் மரிக்கப் போவதில்லை. அவர் உயிரோடிருக்க போகிறார் என்று சொல்” என்றார். 124 ஓ, என்னால் முடிந்தவரை நான் வேகமாக ஓடிச் சென்று “திருமதி ஹால், எனக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பது கிடைத்து விட்டது. அவர் உயிர் வாழப் போகின்றார்” என்றேன். பில் ஹால் அதைக் கேட்டு அழத் தொடங்கினார். அவரால் பேச முடியவில்லை. 125 நான் திரும்பி வந்து சாமை தொலைபேசியில் கூப்பிட்டு, “சாம், நம்முடைய—நம்முடைய சகோதரன் வாழ்ப் போகிறார்” என்றேன். அவர் “அது எப்படி அவரால் உயிர் வாழ முடியும்?” என்று கேட்டார். 126 நான், “அதை கணக்கிட வேண்டியது என் பொறுப்பல்ல. தேவன் அவ்வாறு உரைத்தார். அது அதை முடிவுபடுத்துகிறது” என்றேன். 127 இன்றைக்கும் அவர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அது ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தாயுள்ளது. இப்பொழுது அவர் பெலமுள்ளவராகவும் ஆரோக்கியமுள்ளவராகவும் இருக்கிறார். அப்பொழுது இருந்த அவருடைய மனைவி மரித்துப் போனாள். அவர் மறுமணம் புரிந்து கொண்டார். 128 அது எப்படி ஜார்ஜ் ரைட்டுக்கும் இன்னும் நாம் அழைக்கும் மற்றவர்களுக்கும் நடக்கப்போகிறது? அது என்ன? அது நிந்தையைச் சகிப்பதாயுள்ளது. அவர்கள் நகைத்து கேலி செய்கின்றனர்.
47129 1937-ம் ஆண்டின் வெள்ளத்துக்கு முன்பு நான் ஃபால்ஸ் நகர டிரான்ஸ்பர் நிறுவனத்தண்டை நின்று அதைக் குறித்து கூறிக் கொண்டிருந்தேன். அது ஸ்பிரிங் தெரு என்று நான் நினைக்கிறேன், அங்கு முப்பத்திரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்கும் என்று உரைத்தது என் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது அவர்களோ என்னைப் பார்த்து சிரித்தனர். அப்பொழுது அவர்களோ, “பாவம் பில்லி, நான் நினைக்கிறேன். அவன்…அந்த பையன்…” என்றனர். அப்பொழுது நான் ஒரு இளைஞன். அவர், “பில்லி ஒரு நல்ல பையன் தான். ஆனால் அவன் குழப்பமடைந்துள்ளது அவமானமே” என்றார். நான் குழப்பமடையவில்லை. நான் குழப்பமடையாமல் அவருக்குள்ளே ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தேன், நான் “உள்ளே” இருந்தேன். அது அந்த விதமாகவே நடைந்தேறியது. 130 நான் பேசத் தொடங்கின முதல், சகோதரி ஹாட்டிரைட்டை நான் கவனித்தேன், அவர்கள் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். பில்லி ஹாலைக் குறித்த விஷயம் அவர்களுக்குத் தெரியும், அநேகருக்குத் தெரியும். அந்த விஷயம் இன்று காலை இங்குள்ள எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த காரியம் நினைவிருக்கிறதா? ஓ, என்னே! நிச்சயமாக உங்களில் பலருக்கு தெரிந்திருக்கிறது.
48131 இப்பொழுது, அவர்கள் நமக்காக பரிதபிக்கின்றனர். பரியாசக்காரர் தங்கள் நாட்களில் வார்த்தையில் நிலை நிற்க முனையும் எவருக்காகவும் பரிதபிக்கின்றனர். ஆனால் ஞாபங்கொள்ளுங்கள். நிந்தை வர வேண்டும். அது எப்பொழுதும் அந்த விதமாகவே இருந்து வந்துள்ளது. அப்பொழுது அவர்கள் நினைத்தது போல, இவர்களும் எந்த காரியமும் விஞ்ஞான ரீதியால் நிரூபிக்கப்பட்ட பிறகு, தேவன் விஞ்ஞானத்துக்கு விரோதமாய் பேசமாட்டார் என்று எண்ணியிருக்க வேண்டும். ஆனால் அது தான் அவரை தேவனாக்குகிறது. அவர் விஞ்ஞானத்தின்படியே, சென்றிருந்தால், அது மனிதன் சாதிக்க முடிந்ததைக் காட்டிலும் வித்தியாசமாக இராது. ஆனால் அவர் தேவன்! அவர்—அவர் விஞ்ஞானத்தை சிருஷ்டித்தவர். அவருடைய விருப்பப்படி அவரால் செய்யக் கூடும். 132 அவர்கள் “பரிதாபமான வயோதிக நோவா! அந்த கிழவனை தனியே விட்டு விடுங்கள். இந்நாட்களில் நமக்குக் கிடைக்கப் பெறும் எல்லாவிதமான குதூகலத்தையும் அவர் இழக்கின்றார். அவரைத் தனியே விட்டு விடுங்கள்” என்று சொல்லியிருப்பார்கள். அது இப்பொழுதும் அவ்வாறே உள்ளது.
49133 ஆனால் இப்பொழுது, நான் இங்கே மற்றொரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். நாம் முன்னால் நடந்தவைகளை நோக்கி அவனுடைய விசுவாசத்தை பாராட்டுகிறோம். அந்த காலத்தில் நாம் வாழ்ந்திருந்தோமானால், நோவா கொண்டிருந்த நிலையையே நாமும் கொண்டிருப்போமா என்று நான் வியப்புறுகிறேன். அதை சகித்திருப்போமோ? சத்தியத்தோடு சென்ற நிந்தைக்கு மனப்பூர்வமாய் நின்றிருப்போமா? அக்காலத்தில் உலகில் இருந்த லட்சக்கணக்கானவரில், நோவாவும் அவனுடைய குடும்பத்தினரும் மாத்திரமே அந்த சத்தியத்திற்காக நின்றனர். நீங்கள் அதைக் குறித்து நினைத்துப் பார்த்தீர்களா? அந்த மனிதனும், அவனுடைய மூன்று குமாரர்களும், அவனுடைய மருமகள்களும், அவனுடைய மனைவியும் மாத்திரமே அந்த சத்தியத்திற்காக நின்றனர். ஆனால் அவர்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டிருந்தனர். நாம் பின் நோக்கிப் பார்த்து, அவனைப் பாராட்டுகிறோம். நாம் இதை மீண்டும் சிந்தித்துப் பார்க்கக் கூடுமா? இந்த பிளைகளுக்கு வெகுமதிகள் அளிக்கவிருப்பதனால் நான் வேகமாக முடிக்க வேண்டும். 134 ஆபிரகாம், ஆபிரகாம் என்னும் சொல் “அநேகருக்கு தகப்பன்” என்று பொருள்படும். அவன் “அநேக ஜாதிகளுக்கு தகப்பனானான்.” 135 ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்டான். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் தேவனுடைய வார்த்தையைக் கேட்டான். அவன் தேவனுடைய வார்த்தையை இறுகப் பற்றிக் கொண்டதற்காக அவனை நாம் பாராட்டுகிறோம். அவன் எப்படியாய் தன்னுடைய ஜனங்களிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டான். அது ஆபிரகாமுக்கு எவ்வளவு கடினமாய் இருந்திருக்கும்! அவன் அங்கு வளர்க்கப்பட்டான். அவன் பாபேலிருந்து புறப்பட்டு வந்து சிநெயார் தேசத்தில் குடிபுகுந்தான். அவன் ஊர் என்னும் கல்தேயருடைய பட்டிணத்திலிருந்து வந்தான். அங்கு அவனுடைய கூட்டாளிகளும், அவனுடைய ஜனத்தாரும், அவனுடன் சபைக்குச் சென்றவர்களும் இருந்தனர். ஆனால் தேவன் “உன்னை வேறு பிரித்துக் கொள்” என்றார். ஓ, என்னே! அவன் பற்றியிருந்த அருமையாயிருந்தவர்களையும் அவனுக்கு உண்மையாயிருந்தவர்களையும், அவன் கொண்டிருந்த அருமையானவர்களையும் விட்டு பிரிந்து வருவது என்ன ஒரு பயங்கரமான காரியமாயிருந்திருக்கும்! தேவன் அவனிடம், “உன்னை வேறுபிரித்துக் கொள்” என்றார்.
50136 அவர் விநோதமான ஒன்றை அவனிடம் கூறினார். அதாவது, “நீ உன்னுடைய மனைவி மூலம் ஒரு குழந்தையைப் பெறப் போகிறாய்” என்று கூறினார். அவனுக்கு எழுபத்தைந்து வயதும் அவளுக்கு அறுபத்தைந்து வயதுமாயிருந்தது. அவளுக்கு அநேக ஆண்டுகளாக பிள்ளை பேற்றிற்குரிய முறையான ஸ்திரீகளுக்குள்ள வழி பாடு நின்று போயிருந்தது. அவள் சிறுமியாயிருந்த முதற்கொண்டு அவன் அவளுடன் வாழ்க்கைப்பட்டிருந்தான், ஏனெனில் அவள் அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரி, அப்படியிருக்க அவன் மூலமாய் அவளுக்கு எப்படி பிள்ளை உண்டாகும்? ஆபிரகாம் தன் கூட்டாளிகளிடம் சென்று, “சாராளுக்கும் எனக்கும், அதாவது எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது” என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? 137 ஏன்? ஜனங்களோ, “பரிதாபமான கிழவன். அவனோடு ஏதோ ஒரு காரியம் தவறாயுள்ளது” என்று சொல்லியிருப்பார்கள். 138 அது ஒரு நிந்தை. ஆனால் ஆபிரகாமோ அதைப் பற்றிக் கொண்டிருந்தான். அவன் நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து ஒருபோதும் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல் முழு நிச்சயமாய் நம்பினான். அவன் அப்பொழுதும் அதில் நிலை நின்று நிந்தையைத் தாங்கினான்.
51139 அங்கு வித்தியாசத்தை நீங்கள் கவனித்தீர்களா? சாராள் ஆபிரகாமுக்கு, இல்லை சரியாகக் கூறினால், தேவனுக்கு அவள் மூலமாக சிறு உதவி செய்ய எண்ணினாள். அவள் மனதில் என்ன நினைத்தாள் என்று உங்களுக்குத் தெரியும்…தேவனுடைய வாக்குத்தத்தத்துக்கு மாறாக அவள் செயல்பட எண்ணினாள். அவள், “இப்பொழுது நான் கிழவியாகிவிட்டேன் உங்களுக்குத் தெரியுமே, ஆனால் இங்குள்ள ஆகார் அழகுள்ள பெண். அவளை மணந்து கொள்ள ஆபிரகாமும் கூட மறுக்கமாட்டார். எனவே, உங்களுக்குத் தெரியுமா? அது தேவனுக்கு உதவியாயிருக்கும். அது தேவனுக்கு உதவியாயிருக்கும். ஏனென்றால் இங்கே ஆகார், அவளுக்கு அநேகமாக இருபது வயதே ஆகிறது. அவள் என் அடிமைப் பெண். நான் என்ன செய்யப் போகிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? என் கணவருக்கு அவளை மனைவியாக நான் கொடுப்பேன்.” ஏனென்றால் பல பெண்களை மணத்தல் அக்காலத்தில் சட்ட பூர்வமானது. எனவே அவன் கூறினான்… “நான் அவளைக் கொடுப்பேன். அவளுக்கு என் கணவர் மூலம் ஒரு குழந்தை பிறக்கும். அப்பொழுது அந்த குழந்தையை நான் எடுத்து வளர்ப்பேன். அந்த ஒன்றையே தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையாக கருதுவேன்” என்று எண்ணினாள். 140 நீங்கள் பாருங்கள், நாம் எப்பொழுதுமே ஏதோ ஒன்றை செய்ய முயல்கிறோம். அவருக்காக நம்மால் காத்திருக்க முடியவில்லை. நாமே ஏதாவதொன்றை செய்ய வேண்டும். அது ஒருக்கால் சரியாயிருக்கலாம். அவள் அழகுள்ள பெண்ணாய் இருந்திருக்கலாம். அது நல்லதாக தென்பட்டிருக்கக்கூடும். ஆனால் அது தேவனுடைய வார்த்தையின்படி அமையவில்லை. தேவனோ, “சாராளின் மூலம் குழந்தை பிறக்கும்” என்று தான் ஆபிரகாமிடம் கூறினார். 141 அவர் சிறு மந்தையைக் குறித்து என்ன கூறினாரென்பது நினைவிருக்கிறதா? “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்.” “நோவாவின் காலத்தில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். அக்காலத்தில் சில பேர், எட்டுபேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டார்கள்.” இந்த வார்த்தைகள் தவறிப்போக முடியாது. எனவே நாம் கூர்ந்து விழித்திருந்து வார்த்தையோடு நிலைநிற்போம். சரி புரிகிறதா?
52142 தேவனுடைய சிருஷ்டிப்பின் சித்தத்தின் இடத்தை எடுத்துக் கொள்ள, ஜனங்கள் எப்பொழுதுமே ஏதாவதொன்றை உற்பத்தி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் பாருங்கள், நான் அடிக்கடி கூறுவது போன்று, இதை இந்த சபையில் இதற்கு முன்பே கூறியிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் செம்மறியாட்டிடம் “எனக்கு சிறிது கம்பளி உரோமம் உற்பத்தி செய்து தருகிறாயா?” என்று கேடக முடியாது. இல்லை, அது அதை உற்பத்தி செய்ய வேண்டியதில்லை, அதற்கு உரோமம் தானாகவே வளருகிறது. வெள்ளாடு கம்பளி உரோமத்தை தன்னில் உற்பத்தி செய்ய முடியாது. ஏனெனில் அதனுடைய சுபாவம் அதை அனுமதிக்காது. நீங்கள் எவ்வளவு தான் செம்மறியாட்டு கம்பளி உரோமத்தை ஒரு வெள்ளாட்டில் கட்ட முயன்றாலும் அது கிரியை செய்யாது. வெள்ளாடு கம்பளி உரோமத்தை உற்பத்தி செய்ய முடியாது. செம்மறியாடு சாதாரண முடியை உற்பத்தி செய்ய முடியாது. ஆனால் அது ஒரு செம்மறியாடாக இருப்பதால் அது கம்பளி உரோமத்தை பெற்றுள்ளது. அதுவே அதை செம்மறியாடக்குகிறது. அது உற்பத்தி செய்வதில்லை. 143 நாமும் கூட ஆவியின் கனிகளை உற்பத்தி செய்வதில்லை. நாம் ஆவியின் கனிகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆப்பிள் மரம் ஆப்பிள் பழங்களை உற்பத்தி செய்வதில்லை. அது ஒரு ஆப்பிள் மரமாயிருப்பதால், ஆப்பிள் பழங்களைக் கொடுக்கிறது. 144 நாமும் ஏதாவதொன்றை உற்பத்தி செய்ய முனைந்து, “அது அந்த நோக்கத்துக்கு உதவியாயிருக்கும். நான் வேதாகமப் பள்ளியில் பத்து ஆண்டுகள் படிக்கப் போகின்றேன். நான், இதை அதை, மற்றதை படித்து என்னுடைய இளங்களைப் பட்டத்தையும், என் வேத சாஸ்திரத்தில் என் பாண்டித்திய பட்டமும் பெறுவேன். நான் கர்த்தருக்கு மாத்திரம் உதவி செய்வேன்” என்கிறோம். அது கிரியை செய்யாது.
53145 தேவன், முன் குறித்தலின் மூலம், தமக்கு சித்தமானவர்களை அழைக்கிறார். அவர் யாருக்கு தமது ராஜ்யத்தை அளிக்க விரும்புகிறாரோ, அவருக்கு அதை அளிக்கிறார். அதை நாம் நெபுகாத்நேச்சார் மூலம் சுற்றறிந்து கொண்டோம். 146 அதை நாம் எரேமியாவின் மூலம் கற்ற அறிந்து கொண்டோம். தேவன் அவனிடத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோனுக்கு சிறைபிடித்துக் கொண்டு போகப்பட்டு அங்கு எழுபது ஆண்டுகள் தங்க வேண்டிய காலம் வரும் என்று கர்த்தருடைய வார்த்தையினால் உரைத்திருந்திருந்தார். வேறொரு தீர்க்கதரிசி அங்கு வருகிறான். அவர் ஏற்கனவே எரேமியாவிடம், “உங்களுக்குள்ளே தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள், உங்கள் மத்தியில் தீர்க்கதரிசிகள் பாபிலோனில் எழும்புவார்கள். இதற்கு முரணாக தீர்க்கதரிசனம் உரைக்கும் தீர்க்கதரிசிகளும் சொப்பனக்காரர்களும் எழும்புவார்கள். ஆனால் அந்த ஜனங்களுக்கு செவி கொடுக்க வேண்டாம் என்று ஜனங்களிடம் சொல்” என்று கூறினார். 147 எரேமியா நுகத்தை தன் கழுத்தின் மேல் போட்டுக் கொண்டு அங்கு நின்று கொண்டிருந்த போது, அனனியா என்னும் பெயர் கொண்ட ஒருவன், தீர்க்கதரிசிகளில் ஒருவன் அங்கு வருகிறான். அவன், “ கர்த்தர் உரைக்கிறதாவது ; இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் கர்த்தருடைய பாத்திரங்கள்…” அடிப்படையில் அது மிகவும் நல்லதாக தோன்றினது. “தேவன் தமது ஜனங்களை ஆசீர்வதிக்கப் போகிறார். அவர்களை சரியாக இன்னும் இரண்டே ஆண்டுகளில் திரும்பக் கொண்டு வந்து விடுவார்” என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். 148 எரேமியாவும் கூட அதற்கு “ஆமென், ஆமென் என்று உரைத்ததாக வேதம் உரைத்துள்ளது. அனனியா, கர்த்தர் உன் வார்த்தைகளை நிறைவேறப் பண்ணுவாராக. ஆனால் நாம் வேறொன்றை நினைத்துப் பார்ப்போம். அனனியா. நமக்கு முன்பு தீர்க்கதரிசிகள் தோன்றி பெரிய ராஜ்யங்களின் யுத்தத்திற்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைத்தனர். ஆனால் ஒருவனுடைய தீர்க்கதரிசனம் நிறைவேறுவதன் மூலமே அவன் தீர்க்கதரிசியென்று அறியப்படுகிறான்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். புரிகிறதா?
54149 பிறகு அனனியா அங்கு வந்து, சபையிலிருந்த, ஒருக்கால் சபையோர் பதினைந்து லட்சம் பேர் இருந்திருக்கக் கூடும், எல்லா ஆசாரியங்களுக்கு முன்பாக, தேவன் எரேமியாவின் கழுத்தில் ஒரு அடையாளத்துக்காக போட்டிருந்த நுகத்தை எடுத்து உடைத்து அவன் கால்கலின் கீழ் எறிந்து, வெறும் உற்சாகம் மேலிட்டவனாய், “ கர்த்தர் உரைக்கிறதாவது , இரண்டு ஆண்டுகளில் அவர்கள் திரும்பி வந்து விடுவார்கள்” என்றான். 150 எரேமியா அவனை உற்று நோக்கினான். அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருந்தபடியால், அவன் அங்கிருந்து நடந்து சென்று விட்டான். தேவன் அவனிடம், “நீ திரும்பிப் போய் நான் அவனிடம் ஒரு போதும் பேசவேயில்லை என்று சொல்” என்றார். 151 அவனுக்கு வெறும் உற்சாகம் தோன்றியனது. அவன் தன்னுடைய சொந்த கருத்தை எடுத்துக் கொண்டான். பாருங்கள்? அது அவனல்ல, அது தேவன் உரைக்கிறதாவது என்று உறுதி கொள்ளும் வரைக்கும் அவன் காத்திருக்கவில்லை. அவன் உற்சாகம் மேலிட்டவனாய் திரும்பிச் சென்றான்.
55152 அதே நிலையே இன்று நாட்டில் உள்ளதை நாம் காண்கிறோம். அண்மையில் ஒரு வீட்டில் நமது ஒலி நாடா ஒன்றை போட்டு கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் கூடியிருந்த போதகர்கள் அதை கேட்டு உறுதி கொண்டவர்களாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து கொண்டிருந்த போது, அறையிலிருந்த ஒரு மனிதன் எழுந்து அந்நிய பாஷை பேசி “ கர்த்தர் உரைக்கிறதாவது , உங்களுக்குள்ளதை பற்றிக் கொண்டு சென்று கொண்டேயிருங்கள். உங்களை நான் ஆசீர்வதிப்பேன்” என்றாராம். 153 அவர்கள், ‘கர்த்தர் அதை உரைத்து விட்டதால், அது அவ்வளவு தான் என்று நினைக்கிறோம்” என்று கூறிவிட்டார்களாம். நீங்கள் பாருங்கள். அது தேவனுடைய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படவில்லை. நீங்கள் வார்த்தையை தான் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அங்குதான் காரியம். அது வார்த்தைக்கு முரணாக அமைந்திருந்தது. 154 அந்த அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசி எரேமியா இதோ வருகிறான். தேவன் அவனிடம் “உன் கழுத்தில் நான் போட்ட மரநுகத்தை அனனியா உடைத்தெறிந்தான். இப்பொழுது நான் இரும்பினால் ஒரு நுகத்தை செய்ய போகிறேன்” என்றார். மேலும் அவர், “என் தாசனாகிய நெபுகாத்நேச்சாரை சேவிக்க அங்கு சென்றுள்ள ஜாதிகள் அனைத்தையும்…” என்று கூறினார். நெபுகாத்நேச்சார் ஒரு அஞ்ஞானி, பார்த்தீர்களா? இஸ்ரவேல் ஜனங்கள் தொடர்ந்து எல்லா பலிகளையும் செலுத்தினர். இருப்பினும் அவர்கள்…பாருங்கள்? 155 தேவன் ஆசீர்வதிப்பதாக ஒரு வாக்குத்தத்தம் செய்திருந்தார். ஆனால் அந்த ஆசீவாதங்கள் நிபந்தனைகளுக்குக் கீழ்பட்டிருந்தன. எனவே நீங்கள் அந்த ஆசீர்வாதம் கிரியை செய்ய வேண்டுமானால், அப்பொழுது நீங்கள் அந்த நிபந்தனைகளைக் கைக்கொள்ள வேண்டும்.
56156 சற்று முன்பு இனிமையான ஒரு சிறு பெண்ணுடன் இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன். முதலில் ஏதாவது தவறுள்ளதா என்று அறிய அந்த குடும்பத்தின் காரியங்களை அலசிப் பார்த்தேன். தேவன் சுகமளிப்பார். ஆனால் அது நிபந்தனையோடு கூடியது. புரிகிறதா? நான் கண்டு பிடித்த ஒரே காரியம் என்னவெனில், மருந்து உட்கொள்வது தவறென்று அந்த பெண்ணின் தாய் பயமடைந்திருந்தாள். அப்பொழுது நான், “சகோதரியே, அப்படி நினைக்க வேண்டாம். அந்த எண்ணத்தை உன்னுடைய சிந்தனையிலிருந்து அகற்று. பெண்ணுக்கு மருந்து கொடு, அந்த மருந்தினைக் கொடு. தேவன் அதை தெரியப் பண்ணுவார்” என்றேன். புரிகிறதா? 157 இப்பொழுது, ஆனால் அந்தக் காரியம், கண்டறியப்பட்டு தெரியவருகிறது. அப்பொழுது அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாய் இருந்தால், சரியே.
57158 இப்பொழுது, ஆகார், சாராள் இருவரும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உண்மையாக்க தேவனுக்கு உதவி செய்ய எண்ணி ஏதோ ஒன்றை இவர்கள் உற்பத்தி செய்ய முயன்று கொண்டிருந்தனர் என்பதை நாம் இங்கே இப்பொழுது கண்டறிகிறோம். நீங்கள் அதை செய்யவே முடியாது. அப்படி செய்வது முறையல்ல. அது—அது எல்லாவற்றிற்கும் விரோதமானது. எப்படியும் தேவனுடைய வார்த்தை நிறைவேறத்தான் போகிறது. நீங்கள் வார்த்தையில் உறுதியாய் நின்று “ அது இப்படித்தான் ” என்று சொல்லி, அதை கைக்கொள்ள வேண்டும். இப்பொழுது கவனியுங்கள். அவருடைய வார்த்தையின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள அவர்கள் ஒன்றை உற்பத்தி செய்தனர். 159 நாம் கவனிப்போமேயானால், ஆபிரகாமின் நண்பர்களும் கூட ஒருக்கால் அவனிடம் வந்து, “ஜாதிகளின் தகப்பனே, உனக்கு இப்பொழுது எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்?” அவன் நூறு வயதாயிருக்கும் போது, “ஜாதிகளின் தகப்பனே, எங்களுக்கு சொல்லும்” என்று கேட்டிருந்திருக்கலாம். அவர்கள், “ஜாதிகளின் தகப்பனே, அநேகருக்கு தகப்பனே, எத்தனைப் பிள்ளைகள் இப்பொழுது உனக்கு இருக்கிறார்கள்” என்று கேட்டிருக்கலாம். “பரியாசக்காரர்கள்?”
58160 அந்த காலத்தை நீங்கள் காண்கிறீர்களா? சில நேரங்களில் நாம் ஜெபித்து ஒன்றும் நடக்காத போது, அதை தாம் கண்டிருக்கிறோம் அல்லவா? 161 இங்கு ஒரு வயோதிபர் உட்கார்ந்து கொண்டிருந்தால், அவர்கள் “அவர் குருடர், அவர் செவிடர், அவர் ஊமை, அவர் வியாதியாயிருக்கிறார். அவர் இதை செய்திருக்கிறார். எனவே தெய்வீக சுகமளிப்பவர்களே. அங்கு சென்று அவரை சுகப்படுத்துங்கள். அப்பொழுது நாங்கள் விசுவாசிப்போம்” என்கின்றனர். 162 “சிலுவையிலிருந்து இறங்கி வா, அப்பொழுது நாங்கள் விசுவாசிப்போம். என்றும், இந்த கற்களை அப்பங்களாக்கும், அப்பொழுது நாங்கள் அதை விசுவாசிப்போம்” என்றும் சொன்ன அதேப் பிசாசுதான் இது என்று அவர்கள் உணருகிறார்களா? புரிகிறதா? நம்முடைய கர்த்தரின் கண்களில் துணியைக் கட்டி மறைத்து, தலையைக் கோலால் அடித்து, “நீர் ஒரு தீர்க்கதரிசியானால், உம்மை அடித்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும். அப்பொழுது நாங்கள் உம்மை விசுவாசிப்போம்” என்று கூறினதும் அதே பிசாசுதான். 163 அவரை அடித்தது யாரென்று அவருக்குத் தெரியுமென்று உங்களுக்குத் தெரியும், அவரால் கற்களை அப்பங்களாக்கியிருக்க முடியும் அல்லது சிலுவையிலிருந்து இறங்கி வந்திருக்க முடியும். அவர் அப்படி செய்திருந்தால், இன்று நாம் என்னவாயிருப்போம்? புரிகிறதா? அவர்கள் தேவனுடைய திட்டத்தை அறியவில்லை. தேவன் எதை வாக்களித்துள்ளார் என்பதை நீங்கள் கண்டு கொள்ள வேண்டும். நான் வேகமாக முடிக்க வேண்டும்.
59164 ஒருக்கால் அவர்கள் “ஜாதிகளின் தகப்பனே, சாராளின் மூலம் உமக்கு ஒரு குழந்தை பிறக்குமென்றும் அவனிடத்திலிருந்து அநேக ஜாதிகள் தோன்றுவார்கள் என்றும் நீர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கூறக் கேட்டோம். ஜாதிகளின் தகப்பனே, இப்பொழுது உமக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்?” என்று கேட்டிருப்பார்கள். ஊ! பார்த்தீர்களா? அதே பழைய குற்றம் கண்டுபிடிக்கும் ஆவிதான் இன்றைக்கும் குற்றம் கண்டுபிடிக்கும். 165 ஆபிரகாம் என்ன செய்தான்? “அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து சந்தேகப்படாமல் அதை முழு நிச்சயமாய் நம்பினான்” என்று கூறப்பட்டுள்ளது. “ஏன்? நீர் இன்—இன்னாருக்கு இங்கே ஜெபித்தீர். அவர் சுகமடையவில்லையே” 166 அதனால் பரவாயில்லை. இன்றிரவு நான் பத்தாயிரம் பேர்களுக்கு ஜெபித்து, நாளை காலை அந்த பத்தாயிரம் பேர் இறந்து போனாலும், நாளை இரவு நான் வியாதியஸ்தர்களுக்கு எண்ணெய் பூசி ஜெபம் செய்துகொண்டிருப்பேன். தேவன் அவ்வாறு உரைத்தார். அதை எதுவும் சிறிதளவும் நிறுத்த முடியாது. தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அதை நான் விசுவாசிக்கிறேன். நிச்சயமாக. அவர்கள் என்ன சொன்னாலும் அது எந்த வித்தாயசத்தையும் ஏற்படுத்துகிறதில்லை. ஆனால் அவர்கள் பரியாசம் செய்வார்கள். அது வார்த்தையின் நிமித்தமான நிந்தையாயுள்ளது. 167 ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நின்றான். முடிவிலே அது நிறைவேற்றப்பட்டது. ஓ, என்னே!
60168 மலடைக் குறித்த பரியாசத்தை கவனியுங்கள். சாராள் மலடியாயிருந்தாள். பரியாசம் செய்யப்பட்டாள். அவள் அத்தனை ஆண்டுகளாக மலடியாயிருந்த தன் நிமித்தம் நிந்தையை சகிக்க வேண்டியதாயிருந்தது. அவளுக்கு ஏறக்குறைய நூறு வயது; அவளுக்கு தொண்ணூறு வயது; ஆனால் தேவனுடைய வார்த்தை, அவள் ராஜகுமாரத்தியாக , இந்த பிள்ளைகளின் ஒரு தாயாக இருப்பாள் என்றுரைத்தது. அவளுடைய கர்ப்பமும் ஆபிரகாமின் சரீரமும் செத்திருந்தது. இருப்பினும் அவர்கள் தேவனுடைய வார்த்தையை சிறிதளவும் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவர்கள் முதலில் அதற்கு நிற்க வேண்டியதாயிருந்தது. அதன் பிறகு, அல்லேலூயா! தேவன் தமது வார்த்தையை அந்த இருள் சூழ்ந்த நேரத்தில் நிறைவேற்றினார். ஈசாக்கு பிறந்தான். “ஆபிரகாமின் சந்ததி கடலின் மணலைப் போலவும் வானத்து நட்சத்திரங்களைப் போலவும் பலுகினது” பாருங்கள்? தேவன் எப்பொழுதும் தமது வார்த்தைக்கு உத்தரவு அளிக்கிறார். ஆம். முதலில் மலடு, பிறகு ஈசாக்கு.
61169 அது போன்று சகரியாகவும் எலிசபெத்தும், அந்த வயோதிபனும் மூதாட்டியும் இன்னமும் இறுகப் பற்றிக் கொண்டிருந்தனர். சகரியா அங்கு வந்து தன்னுடைய பலகையில் எழுதினான். அவன், “ஒரு தேவதூதன் என்னை சந்தித்து எனக்கு வயது சென்ற என் மனைவி எலிசபெத்தின் மூலம் ஒரு குழந்தை பிறக்கும் என்றும், என்னால் இனி பேச முடியாது, நான் ஊனமாகிவிட்டேன். அதாவது அந்த குழந்தை பிறக்கும் வரைக்கும் நான் பேச முடியாமல் ஊமையாயிருப்பேன் என்றும் கூறினான். ஆனால் ஒரு குழந்தை பிறக்கப் போகிறது, அவன் உன்னதமானவருடைய தீர்க்கதரிசியயிருக்கப் போகிறான். அவன் விடிவெள்ளி நட்சத்திரத்தை அறிமுகம் செய்வான். அவன் மேசியாவின் முன்னோடியாயிருப்பான்” என்றான். அது எப்படி முடியும்? 170 சிலர், “பரிதாபமான கிழவன், ஓ, அவனுக்கு மூளை கோளாறு ஏற்பட்டுவிட்டதென்று நான்—நான் நினைக்கிறேன், உங்களுக்குத் தெரியுமா, சிறிது ஏதோ கோளாறு உள்ளது. ஆனால் வயோதிக எலிசபெத்தைப் பாருங்கள், அவளுக்கு ஏறக்குறைய எண்பது வயதாகிறது. சகரியாவைப் பாருங்கள்—பாருங்கள், பாருங்கள். தள்ளாடும் கிழவன் அவன் அதைப் போன்ற ஒரு காரியத்தைக் கூறுவதைப் பாருங்கள். பாவம், கிழவன்” என்று கூறியிருப்பார்கள். 171 ஆனால் அவனோ கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டிருந்தான். அவளுக்கு வந்த நிந்தையின் நிமித்தம் அவன் தன்னை அநேக நாட்கள் மறைத்துக் கொண்டாள். ஆனால் அவன் தேவனுடைய வார்த்தையின் உறுதியாய் நின்றான். ஓ, என்னே!
62172 அவர்கள் புகழை மறுத்து, அக்காலத்தில் பொதுவாக நிலவின கருத்தையும் மறுத்தனர், அந்நாளின் பளப்பளப்பான காரியத்தை மறுத்தனர். அவர்கள் அவிசுவாசிகளுடன் கூட நடக்க அவர்கள் மறுத்தனர். தேவனுடைய வார்த்தையில் நிற்க அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டியதாயிருந்தது. அவர்கள் அதைச் செய்யவேண்டியதாயிருந்தது. 173 இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. உங்களுக்கும் தேவனுக்குமுள்ள தொடர்பை தவிர மற்றெல்லாவற்றையும் விட்டு வேறுபிரித்துக் கொள்ளுங்கள். சபை என்ன செய்கிறது என்றல்ல. நீங்கள் தேவனுடன் என்ன செய்கிறீர்கள் என்பதே. புரிகிறதா? அது தனிப்பட்ட நபராகிய உங்களைப் பொறுத்ததாயுள்ளது. ஆம்.
63174 ஆனால் தேவன் அவனுக்கு என்ன அருளினார் என்பதை பாருங்கள். இயேசு வந்த போது, சகரியா மரித்து போய்விட்டான். எலிசபெத்தும் கூட. ஆனால் அவர்களுடைய குமாரன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் வனாந்தரத்துக்குள் வந்த போது, இயேசு, “ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனை பார்க்கிலும் பெரியவன் எவனுமில்லை” என்றார். ஆமென்! என்ன? மலடு என்னும் நிந்தைச் சொல்லினால் அவள் அவதியுற்றாள். அவள் வார்த்தையில் நின்று அப்படிப்பட்ட ஒரு குமாரனை பெற்றெடுத்தாள். 175 பழைய ஏற்பாட்டின் காலத்து சாரளைப் போல, ஆபிரகாமைப் போல அந்த வயோதிப தம்பதிகள் வாக்குத்தத்தத்தை இறுகப் பற்றிக் கொண்டனர். இவ்வுலகிலுள்ள வேறெந்த ஜாதியுமே யூதர்களைப் போல கடலின் மணலத்தனையாகவும், வானத்து நட்சத்திரங்களைப் போலவும் இல்லை. என்ன நடந்தது? அது சிறுபான்மையில் தொடங்கினது. 176 ஒரே பிள்ளை இப்பொழுது நான் எங்கு செல்கின்றேன் என்பதை உங்களால் காண்கிறீர்களா? ஒரே பிள்ளை! அவ்வளவுதான் தேவையாயிருந்தது. ஜாதிகளை அசைத்து மேசியாவைச் சுட்டிக்காட்ட ஒரே ஒரு பிள்ளை போதுமானதாயிருந்தது. கீழ்படிதலுள்ள ஒரே பிள்ளை. அது உண்மை. தேவனுக்கு ஒரு மனிதன் மாத்திரமே அவசியம். அவ்வளவுதான். அவருக்குத் தேவை எங்காகிலும் அவர் ஒரு சத்தத்தை பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான் அவருக்குத் தேவை. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் ஒரே ஒரு மனிதன். ஓ, ஒரு மனிதனைப் பெற அவர் எவ்வளவு ஆவல் கொண்டவனாயிருக்கிறார்!
64177 அவர் ஒரு காலத்தில் நோவா என்னும் ஒருவனைத் தெரிந்து கொண்டார். அவர்—அவர் ஒரு காலத்தில் மோசே என்னும் ஒருவனைத் தெரிந்து கொண்டார். அவர் எரேமியா என்னும் ஒருவனைத்-ஒருவனைத் தெரிந்துக் கொண்டார். அவர் எலியா என்னும் ஒருவனைத்-ஒருவனைத் தெரிந்துக் கொண்டார். அவர் எலிசா என்னும் ஒருவனைத் தெரிந்துக் கொண்டார். அவர் யோவான் என்னும் ஒருவனைத் தெரிந்துக் கொண்டார். அவர்—அவர்…அவர் சிம்சோன் என்னும் ஒருவனைத் தெரிந்துக் கொண்டார். அவர் சிம்சோன் என்னும் ஒருவனைத் தெரிந்துக் கொண்டார். அவர் ஒரு மனிதனை தம்முடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும்போது, அவன் அவருடைய சத்தமாகிவிடுகிறான். அவரால் அவனூடாக பேச முடியும். அவரால் உலகத்தை ஆக்கினைக்குட்படுத்த முடியும். ஓ, என்னே! 178 அவர் எவ்வளவாக ஒரு மனிதனை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர பசியுள்ளவராயும் ஆவல் கொண்டவராயும் இருக்கிறார்! “அவன் மூலமாய் நான் பேசி என் சத்தத்தை அறிய பண்ண வேண்டும். அவனுக்கு நிந்தை உண்டானாலும், என் சத்தத்தை அறிய பண்ணுவேன்.” பார்த்தீர்களா? ஓ, ஆம். 179 முதலில் மலடு மலடியாயிருக்க வேண்டும், மலடி என்னும் நிந்தையை சகிக்க வேண்டும். சாராள் அதை சகிக்க வேண்டியவளாயிருந்தாள். அவ்வாறே சகரியாவும் எலிசபெத்தும் அதை சகிக்க வேண்டியவர்களாயிருந்தனர்.
65180 இன்று பாருங்கள். இப்பொழுது நான் ஒன்றைக் கூறப் போகிறேன். இன்று வேசியின் பிள்ளைகளைப் பாருங்கள். வேசியும், அவளுடைய பிள்ளைகளும் எல்லா தேசங்களையும் ஸ்தாபனங்களின் அரசியல் ஆளுகைகளுக்குள் கொண்டு வந்து விட்டனர். எப்படிப்பட்ட ஸ்தாபானங்களின் சந்ததி எழும்பியுள்ளது என்றும், நீதிமான்கள் எவ்வளவு சொற்ப பேராய் உள்ளனர் என்பதையும் பாருங்கள். கவலைப்படாதீர்கள்! வார்த்தையில் நில்லுங்கள். அதுவே சரியானது 181 நீங்கள் பரியாசம் பண்ணப்பட்டு, உருளும் பரிசுத்த என்று அழைக்கப்படுவீர்கள். அதனால் பரவாயில்லை. நீங்கள் எந்த மோசமான பெயராலும் அழைக்கப்படலாம். இருப்பினும் அதில் நில்லுங்கள். அது வார்த்தை, அவர்கள் உங்களைக் குறித்து சொல்பவை வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தையாகும்.
66182 இளைஞன் ஒருவன், ஒருக்கால் அவன் இன்று காலை இங்கிருக்கக் கூடும். அவன் என் நண்பன் ஜிம் பூல், இளம் ஜிம். அவனுடைய—அவனுடைய உறவினர். அன்றொரு நாள் அவனை அவர்கள் கேட்டனர். அவன் இங்கு ஞானஸ்நானம் பெற்றான். யாரோ ஒருவர் அவனிடம், “உனக்கு சபையில் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று இருந்தால், நீ ஏன் ஒரு பெரிய சபையை தெரிந்திருக்கக் கூடாதா?” என்றார். பாருங்கள்! ஆனால் அவன் வெளிச்சத்தைக் கண்டான். அவ்வளவுதான். புரிகிறதா? 183 “நீதிமான்களைக் காட்டிலும் அநீதியுள்ளவர்கள் அநேகர்.” ஆம். சரி, நீதியுள்ளவர்கள் எவ்வளவு சொற்பபேர்! நோவாவின் காலத்திலிருந்த நீதிமான்கள் எவ்வளவு சொற்பபேர் என்பதைப் பாருங்கள். புரிகிறதா? சோதோமின் நாட்களில் எப்படியிருந்ததென்று பாருங்கள். புரிகிறதா? அக்காலத்தில் நீதிமான்கள் எவ்வளவு சொற்பபேராயிருந்தனர். 184 ஆனால் எவ்வளவு பிள்ளைகள் வேசிக்கு இருக்கிறார்கள்! அவள் பிள்ளைகளை எந்த முறையிலும் பெறுகிறாள். அவர்கள் அனைவரும் வேசியின் புத்திரரே. வேசி வேசியைப் பெறுகிறாள். நாய் நாயை ஈனுகிறது. 185 கிறிஸ்து அபிஷேகம் பண்ணினவனைப் பெறுகிறார்! வேதாகமம் நீதிமான்களை பிறக்கிறது. எனவே நாம் சிறு கூட்டம் என்பதில் திருப்தி கொள்ள வேண்டும். அது எவ்வளவு கிருபையுள்ள காரியம்!
67186 அந்த பெரிய எபேசு சபையைப் பாருங்கள். அதில் பன்னிரண்டு பேர் மாத்திரமே இருந்தனர். ஆம். இன்று நமக்குள்ள ஒரு கூட்டத்தைப் பாருங்கள். ஆம். நோவாவின் காலத்தில் எட்டு பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். 187 லோத்தின் காலத்தில் ஐந்து பேர், இல்லை. நான்கு பேர் மாத்திரமே; லோத்து, அவன் மனைவி, இரண்டு குமாரத்திகள். லோத்தின் மனைவி வெளியே வந்த பிறகு திரும்பிப் பார்த்து உப்புத் தூணானாள். அக்காலத்தில் உண்மையாகவே மூன்று பேர் மாத்திரமே வெளிவந்தனர். 188 இயேசு, “அந்நாட்களில் நடந்தது போல” என்றார். எனவே விழிப்புள்ளவர்களாய் கவனமாயிருப்பது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. நீதிமான்கள் எவ்வளவு சொற்பபேர்! ஆனால் எப்பொழுதும் போல பரியாசக்காரர் நிந்திக்க வேண்டும். மலடி…மலடின் நிமித்தம் வரும் நிந்தையை முதலில் சகிக்க வேண்டும். என்னே! 189 நான் வேகமாக முடிக்க வேண்டும். நான்…சிறு பிள்ளைகளை பிடித்து வைக்க நான் பிரியப்படவில்லை. என்னுடன் சிறிது நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். புரிகிறதா?
68190 மனிதர் என்றென்றைக்கும் ஒரே விதமாகவே இருக்கின்றனர். நான் மறுபடியும் ஒன்றை உங்களிடம் கூறப் போகிறேன். நீங்கள் அதை…இது ஒலிப்பதிவு செய்யப் படுகின்றதா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது ஒலிப்பதிவு செய்யப்பட்டால், இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்களே, நாம் சொல்வதை நீங்கள் கவனமாய் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் இதை காணத்தவறாதீர்கள். ஆனால் இதை ஆராய்ந்து படியுங்கள். மனிதன் எப்பொழுதும் இருந்தது போலவே இப்பொழுதும் இருக்கிறான். தேவன் ஏற்கனவே செய்ததற்காக அவன் அவரை ஸ்தோத்தரித்து, அவர் வருங்காலத்தில் என்ன செய்ய போகிறார் என்பதை அவன் எதிர்நோக்கியிருக்கிறான். ஆனால் அவர் தற்பொழுது செய்து வருகிறதை அவன் அசட்டை செய்கிறான். தேவன் என்ன செய்துள்ளார் என்பதைக் குறித்து அவன் அவரை துதிக்கிறான். அவர் என்ன செய்வார் என்பதையும் அவன் எதிர்நோக்கியிருக்கிறான். ஆனால் தேவன் தற்பொழுது செய்துகொண்டிருப்பதை அவன் அசட்டை செய்து அவன் முழு காரியத்தையும் இழந்து விடுகிறான். அவர்கள் இதைப் புரிந்து கொள்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? அவர் செய்து கொண்டிருப்பதை அசட்டை செய்கிறானே! அவர் என்ன செய்துள்ளார் என்பதையும், அவர் என்ன செய்யப் போகிறார் என்று வாக்களித்துள்ளதை அவன் அறிந்திருக்கிறான். ஆனால் அவர் இக்காலத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார் எனபதையோ அவன் காணத் தவறுகிறான். 191 ஓ, பெந்தேகோஸ்தேயினரே, நீங்களல்லவா அதற்கு உதாரணம்! நீங்கள் ஏதோ ஒன்று நடக்க எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது ஏற்கனவே உங்கள் முன்னால் நடந்துவிட்டது. நீங்களோ அதை அறியாமலிருக்கிறீர்கள். கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக எத்தனை தரமோ அவர் உங்களைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தார். உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. நீங்கள் அவருடைய வார்த்தையையும், அவருடைய ஆவியையுங்காட்டிலும் உங்கள் பாரம்பரியங்களுக்கும் ஸ்தாபனங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தீர்கள்.
69192 மரியாளுக்கு அது எப்படிப்பட்ட நிந்தையாயிருந்தது. (நாம் முடிக்கப் போகிறோம்.) அவருடைய வார்த்தையின் நிமித்தம் மரியாளுக்கும் யோசேப்புக்கும் எப்படிப்பட்ட நிந்தை உண்டானது! இது கிறிஸ்துமஸ் நேரம். நான் இதை குறித்து சிறிது பேசலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் நீங்கள் வானொலியின் வாயிலாகவும், உங்கள் போதகர்கள் மூலமாகவும் இதைக் குறித்து அதிகம் கேட்பீர்கள். தேவனுடைய வாக்குத்தத்தத்தை பற்றிக் கொண்டதால் மரியாளுக்கும் யோசேப்புக்கும் எப்படிப்பட்ட நிந்தை உண்டானது! இப்பொழுது நினைவிருக்கட்டும். மரியாள் நடந்து சென்றபோது, அவர்கள் புருவத்தை உயர்த்தி அவளை இகழ்ந்தனர். அவர்கள் யோசேப்பை நோக்கி “நீ ஒரு வேசியையா மணக்கப் போகிறாய்?” என்றனர். பார்த்தீர்களா? சகோதரனே, அந்நாட்களில் விபச்சாரம் செய்தவர் கொல்லப்பட வேண்டும் என்பதை ஞாபகம் கொள். “அவள் கொல்லப்படக் கூடாதென்று எண்ணி உன் மூலம் அவள் தாயாகப் போகிறாள் என்று கூறுகிறாய்.” ஆனால் தேவனோ எல்லா நேரத்திலும் அவர்களுடம் ஈடுபட்டுக் கொண்டே வந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது வார்த்தையின்படியாயிருந்தது, அவர்களோ அதை அறியவில்லை. பார்த்தீர்களா? 193 “ஒரு கன்னிகை ஒரு குமாரனைப் பெறுவாள்.” யோசேப்பு அதை அறிந்திருந்தான். மரியாளும் அதை அறிந்திருந்தாள். ஏனெனில் இந்த வார்த்தை எழுதப்பட்ட பின்பு, தேவதூதன் அவர்களுக்குத் தோன்றி, எழுதப்பட்ட அந்த வார்த்தையை ரூபகாரபடுத்தி, அல்லது எழுதப்பட்டிருந்த அதே வார்த்தையை வெளிப்படுத்தி, அது நிறைவேறப்போகிறது என்று கூறினான். இப்பொழுது கனவு காணாதீர்கள். யோசித்துப் பாருங்கள். பரிசுத்த ஆவி பூமிக்கு இறங்கி வந்தார். அவர் சபையோர் அனைவரிடம் பேசவில்லை. அவர்களிடம் மாத்திரம் பேசினார்.
70194 யோசேப்பு நோக்கிப் பார்த்தான். தேவதூதன் யோசேப்பை சந்திப்பதற்கு முன்பு அவன் “நான் மரியாளை நேசிக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் நான் நீதிமான். அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீயை என்னால் மணக்க முடியாது” என்றான். 195 கர்த்தருடைய தூதன் ஒரு சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு, “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது” என்றான். ஓ, என்னே! என்னே ஒரு ஆறுதல்! பார்த்தீர்களா? 196 மரியாள் கிணற்றுக்குப் போகும் வழியில் இருந்தாள். ஏறக்குறைய, பதினேழு அல்லது பதினெட்டு வயதுடைய சிறு கன்னிகை. முன்பு மணம் புரிந்து நான்கு பிள்ளைகள் இருந்த ஒரு மனிதனை, வயதில் அதிகம் மூத்தவனை விவாகம் செய்கிறாள். அவள்…அவள் அவனை நேசித்தாள், ஏனென்று அவனுக்கு தெரியவில்லை. இதோ அவர்கள் இருந்தனர். அவள் தண்ணீர்மொள்ள கிணற்றுக்குச் செல்லும் வழியில் அவள் வேத வாக்கியங்களை மனதில் சிந்தனை செய்து கொண்டு சென்றாள் என்பதில் ஐயமில்லை. அப்பொழுது அவளுக்கு முன்பாக ஒரு ஒளி பிரகாசித்தது. அந்த ஒளி பிரகாசித்தபோது, அங்கே தேவதூதன் ஒருவன் அவளுக்கு முன்பாக நின்றான்.
71197 மரியாள், தான் எவ்வளவு சிறியவள் என்று உணர்த்திருப்பாள் என்பதில் வியப்பில்லையே? அதைக் குறித்து நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? நேற்று நான் பயப்பட்டது போல அவளும் பயப்பட்டிருப்பாளோ என்று நான் வியக்கிறேன். 198 “மரியாளே வாழ்க” வாழ்க என்றால் “நில்.” “நான் இப்பொழுது சொல்லப் போவதற்கு உன் கவனத்தை செலுத்து. ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். நீ மனிதனை அறியாதிருந்தும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய். உன் இனத்தாளாகிய எலிசபெத்தும் தன் முதிர் வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பத்தரித்திருக்கிறாள். இந்த அடையாளங்கள் நிச்சயம் நிறைவேறும்” என்றான். அவள், “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே” என்றாள். 199 அவன் “பரிசுத்த ஆவி உன் மேல் நிழலிடும். உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்” என்றான். 200 பரியாசக்காரர் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். அவள் அதை அறிந்திருந்தாள். அது நிறைவேறும் என்பதை அவன் அறிந்து கொண்டான். ஏனெனில் தேவன் அவ்வாறு உரைத்தார்.
72201 பிரதிஷ்டையின் நாளின் போது, அல்லது குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய நாள் வந்த போது, அவள் குழந்தையை இப்படி கையிலேந்தி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவள் எப்படி உணர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது மற்ற ஸ்திரீகள் அவளிடமிருந்து விலகி தூரம் சென்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பிரதிஷ்டை செய்து விருத்த சேதனம் செய்வதற்கென அழகிய சித்திர தையலாடைகளால் குழந்தைகளை உடுத்தியிருந்தனர். அவர்கள் எல்லாருமே சுத்திகரிப்புக்காக ஆட்டுக்குட்டிகளை கொண்டு வந்திருந்தனர். இவளோ தன் சுத்திகரிப்புக்காக இரண்டு காட்டுப்புறாக்களை கொண்டு வந்தாள். அவள் தன் குழந்தையை காளையின் கழுத்திலிருந்த நுகத்தடியில் சுற்றப்பட்டிருந்த துணியை எடுத்து அதைக் கொண்டு சுற்றினாள். குழந்தை தொழுவத்திலிருந்த அந்த துணியால் தான் சுற்றப்பட்டது. அவர்கள் மிகவும் தரித்திரராயிருந்தனர். எனவே அவருக்கு ஒன்றுமே இருக்கவில்லை. அதோ அவள் நின்றாள்
73202 மற்ற ஸ்திரீகள் அனைவரும் இந்த சிறு கன்னிகையை விட்டு விலகி தூரம் போய் நின்றனர் என்பதில் ஐயமில்லை. அவர்கள், “பாருங்கள். அவள் முறை தவறிப் பிறந்த குழந்தையை வைத்திருக்கிறாள்” என்றனர். தேவன் எவ்வாறு காரியங்களை தீவிரமுள்ளதாக காணப்பண்ணுகிறார் என்று பாருங்கள். ஓ, என்னே! அவர் சாத்தானின் கண்களை முற்றிலுமாக மறைத்து விடுகிறார். “எவ்வளவு அசுத்தமானது! எவ்வளவு அழுக்கானது! விபச்சாரம்! அப்படித்தான் அவள் இருக்கிறாள், அவள் ஒரு விபச்சாரி” என்று கூறும்படி செய்கிறார். ஆனால் அது மரியாளின் இருதயத்தில் எந்த ஒரு துடிப்பையும் நிறுத்தவில்லை. அவர்கள் அவரிடமிருந்து தூரம் விலகியிருந்தனர். 203 இன்றைக்கும் அவர்கள் அதையே செய்கின்றனர், அது “பரிசுத்த உருளை அல்லது மதவெறியன் அல்லது ஏதோ ஒன்று என்று இப்பொழுது அவரை அழைக்கின்றனர். ஆனால் அது யாருடைய குழந்தை என்று மரியாள் அறிந்திருந்தாள். அவள் கவலைப்படாமல் சென்று கொண்டிருந்தாள்.
74204 ஆனால், ஓ, அறையில் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த சிமியோனை அவர்கள் கவனித்திருக்க வேண்டும் அல்லவா? அவனுக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டிருந்தது. அவன், “கர்த்தர் எனக்குப் பிரத்தியட்சமானார்” என்றான். மேலும் அவன், “நான் மரணமடைய…மாட்டேன்” என்றான். அப்பொழுது அவனுக்கு எண்பது வயது. அவருடைய இரட்சண்யத்தை என் கண்கள் காணுமட்டும் நான் மரணமடையமாட்டேன் என்றுரைத்தார் என்று தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டேயிருந்தான். 205 “ஓ சிமியோனே, உனக்கு வயதாகி விட்டது. உங்களுடைய—உங்களுடைய அந்த கிழவனுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டு விட்டது என்பது உங்களுக்குத் தெரியும், அவன் ஒரு சிறிய… அவனை தனியே விட்டு விடுங்கள். அவன் ஊறுவிளைக்காதவன். அவன் யாருக்கும் தீங்கு விளைவிக்கமாட்டான்” என்றனர். 206 ஆனால் சிமியோனுக்கோ கர்த்தருடைய வார்த்தை உண்டானது. அவன், “தேவனுடைய ஆவி என்மேல் இறங்கினதை நான் கண்டேன். நான் நின்று கொண்டு அவரைப் பார்த்தேன். அவர் என்னிடம், ‘சிமியோனே, நீ இதுவரைக்கும் நீதிமானாய் இருந்து வந்திருக்கிறாய். நீ அதுவரைக்கும் மரிப்பதில்லை. உன்னை நான் அங்கே சாட்சியாக்கப் போகிறேன்’ என்றார்” என்றான். உ—ஊ. அவ்வளவுதான். “கர்த்தாவே, அதற்காக நீர் என்ன செய்யப் போகிறீர்?” “அது என் வேலை.” 207 அந்நாளிலே அவன் அவர்கள் மேல் அக்கினித்தழலைக் குவிக்க முடியும் என்பதே என் கருத்து. “உங்களுக்கு ஒரு சாட்சி இருந்ததே! அதற்கு ஏன் செவி கொடுக்கவில்லை” என்று அவன் கேட்பார்.
75208 பிறகு பார்வை இழந்த அன்னாள் தேவாலயத்தில் உட்கார்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தாள். கர்த்தர் அவளுக்கு “சிமியோன் கூறுவது உண்மை” என்று வெளிப்படுத்தியிருந்தார். ஆமென்! அவளுக்கு பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இருப்பினும் இன்று பார்வை நன்றாக உள்ளவர்கள் காண்பதை விட அவளால் வெகு தூரத்தில் காண முடிந்தது. மேசியாவின் வருகை சமீபமாயுள்ளது என்பதை அவள் ஆவியில் கண்டாள். ஆவியானவர் அவளுடைய இருதயத்தில் அசைந்தார். 209 அது எவ்வளவு சிறிய சபையாயிருந்தது என்று பார்த்தீர்களா? சகரியா, எலிசபெத், மரியாள், யோவான், அன்னாள், சிமியோன். இலட்சக்கணக்கானவர்களில் ஆறுபேர் மாத்திரமே! நோவாவின் காலத்தில் இருந்தது போல இவர்கள் சொற்ப பேர், ஆறுபேர் மாத்திரம். தேவன் அவர்கள் ஒவ்வொருவருடனும் தொடர்பு கொண்டார். அவர்கள் இசைவாயிருந்தனர். அவர்கள் ஒன்று சேர்ந்திருந்தனர். ஆமென்.
76210 இதோ முதிர் வயதுள்ள சிமியோன். இதோ குழந்தை கொண்டு வரப்படுகிறது. குழந்தை தேவாலயத்துக்கு கொண்டு வரப்படுகிறது என்று அவன் ஒரு போதும் கேள்விப்படவேயில்லை. இதோ அந்தக் குழந்தை அங்குள்ளது. சிமியோன் தன்னுடைய அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ஆவியானவர் அவன் மேல் இறங்கி, “சிமியோனே, வெளியே போ” என்கிறார். 211 அவன் எங்கு சென்று கொண்டிருக்கிறான் என்பதை அறியாமலேயே அவன் நடந்து சென்றான். ஆபிரகாமைப் போல், அவன் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருந்தான். அது எங்குள்ளது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆயினும் அவன் நடந்து கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் நின்றான். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவனிடம், “அதோ அவர்” என்று கூறியிருக்க வேண்டும். 212 அவன் மரியாளின் கரங்களிலிருந்த குழந்தையை தன் கையிலெடுத்து அண்ணாந்து பார்த்து, “கர்த்தாவே, உமது அடியேனை இப்பொழுது சமானத்தோடே போகவிடும். உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறது” என்றான். எல்லோரும் ஏளனம் செய்து கொண்டிருந்ததை, ஸ்திரீகள் உதறித் தள்ளிக்கொண்டிருந்ததை, சிமியோன், “கர்த்தாவே, அது உம்முடைய இரசண்யம்” என்றான். 213 ஏறக்குறைய அதே நேரத்தில் பார்வை இழந்த ஒரு வயோதிக ஸ்திரீ கூட்டத்தினரின் மத்தியில் தள்ளாடிக் கொண்டு சுற்றி இங்கு வருகிறாள், அவளும் கூட அவரிடத்தில் வந்து தீர்க்கதரிசனம் உரைத்தாள். ஏனென்றால் அவள் அவருக்காக காத்துக்கொண்டிருந்தாள். அவன் மரியாளிடம், “உன் ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவிப் போகும். ஆனால் அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படும்” என்றாள். புரிகிறதா? அது என்னவாயிருந்தது?
77214 இப்பொழுது, அங்கிருந்த சில பெண்கள், “இப்பொழுது அதைப் பார்! அது என்ன விதமான தரம் என்று நீ பார்த்தாயா? அங்குதான் காரியம். பார்த்தீர்களா? அது தான் இது. அது எங்கே உள்ளது என்று பார்? அந்த கிழவனுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. அவன் அந்த வேசிப்பெண்ணுக்கு முன்பாக நின்று கொண்டு என்ன வெல்லாமோ கூற முயற்சிக்கிறானே! அங்குதான் காரியம். பார்த்தீர்களா? அது முறை தவறிப் பிறந்த குழந்தை! அந்த கிழவி அன்னாள் அங்கு உட்கார்ந்து கொண்டு பட்டினி கிடந்து தன்னை அந்தவிதமாக சாகடித்துக் கொள்கிறாள். அவளுக்கு நம்மைப்போல எந்த பொழுது போக்கும் கிடையாது. ஆனால் அங்குதான் காரியம். பாருங்கள். அவள் தேசத்திலுள்ள எல்லா சங்கங்களிலும் உறுப்பினராயிருக்கலாம். அவள் ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள், பாருங்கள், அவள் அங்கே அதைச் சார்ந்திருக்கக் கூடும். ஆனால் அவள் இங்கே இருக்கிறாள். அந்தக் கூட்டம் எப்படி ஒன்றாக சேர்ந்து கொள்கிறதென்று பார்த்தீர்களா? ஓ, ஆம். ஆமென்! 215 இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. “நாம் பரிசுத்த ஆவியால் உயர்த்தப்பட்டு கிறிஸ்து இயேசுவுடன் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.” நிச்சயமாக. ஆம். ஐயா. 216 ஓ, நமக்கு இன்னும் சிறிது நேரம் கிடைக்குமா? நான் ஒரு காரியத்தைக் கூற வேண்டும். [சபையார், “சரி” என்கின்றனர்.—ஆசி.] 217 நான் இன்னும் வேறொரு வேத கதாபாத்திரத்தை இங்கு எழுதி, வைத்திருக்கிறேன். நான் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், அந்த வார்த்தை மாமிசத்தில் வெளிப்பட்ட அந்த நேரத்தில் இருந்த வான சாஸ்திரிகள். 218 ஃபிரட் அதைப் படிக்க உங்களுக்கு நான் நேரத்தை அளித்தால் நலமாயிருக்கும். நீர் அதை உம்முடைய சட்டைப்பையில் வைத்திருக்கிறீரா? [சகோதரன் பிரட் சாத்மன், “ஆம்” என்று கூறுகிறார்.—ஆசி.] உங்களில் அநேகர் அதைப் பத்திரிக்கையில் படித்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். 219 முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் நதியண்டை பேசின அதே காரியம் டிசம்பர் 9-ம் தேதி அவர்கள் அதை தோண்டியெடுத்தனர். வான சாஸ்திரம் அதை நிரூபித்தது…எப்படி ஜூபிடரும் மற்ற நட்சத்திரங்களும் அவைகளுடைய ‘நட்சத்திரக்கூட்டத்தில்.’
78220 அவர்களுக்கு ஒரு பழைய வான சாஸ்திர நாட்காட்டி உள்ளது…அதில் குறிக்கப்பட்டதை தான் அவர்கள் தோண்டியெடுத்தனர். சரியாக அந்த நேரத்தில் இந்த நட்சத்திரங்கள் ஒன்றாக கூடி, அந்த நட்சத்திரங்களின் கூட்டம் பாபிலோனை நோக்கி காணப்பட்டு, அது சாஸ்திரிகளின் கவனத்தைக் கவர்ந்தது. நினைவிருக்கிறதா? கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்த அலை தங்கள் சுழற்பாதைகளை கடந்து ஒன்று கூடினதை பாபிலோனிலிருந்த அந்த யூத சாஸ்திரிகள் கண்டனர். மூன்று நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே விடிவெள்ளி நட்சத்திரமானது. அந்த நட்சத்திரங்கள் ஒன்று சேரும்போது அந்த நேரத்தில் மேசியா பூமியின் மேலிருப்பார் என்பதை அவர்கள் தேவனுடைய வார்த்தையினால் அறிந்திருந்தனர். 221 ஆகையால் தான் அவர்கள் புறப்பட்டு வந்து, “யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? அவர் எங்கே? அவர் எங்கோ இருக்க வேண்டும்! ஏனென்றால் அந்த நட்சத்திரங்கள் ஒன்றாக…அந்த மூன்று விண்வெளி நட்சத்திரங்கள் ஒரு பெரிய விண்வெளி நட்சத்திரமாக ஆகும்போது, அந்த மூன்றும் ஒன்றாக சேரும்போது, அந்த நேரத்தின் மேசியா பூமியில் இருக்க வேண்டுமென்று அந்த மனிதர் அறிந்திருந்தனர்.
79222 அவர்கள் தங்களுடைய படிப்பில் நிபுணர்களாயிருந்தனர். அவர்கள் பெரிய மேதைகளாயிருந்தனர். அவர்கள் தங்களுடைய மதசம்பந்தமான விஞ்ஞானத்தில் நிபுணர்களாயிருந்தனர். அவர்கள் மதசம்பந்தமான பாகத்தை ஆராய்ந்து படித்து அதை கவனித்து வந்தனர். அந்த கிரகங்கள், வியாழனும், சாடர்னும் ஒரே வரிசையில் வருவதைக் கண்ட போது, “மேசியா பூமியில் எங்கோ இருக்கிறார். என்பதை நாம் அறிவோம். எனவே அவர் எருசலேமில் இருக்க வேண்டும், ஏனெனில் அதுதான் உலகிலுள்ள மதங்களுக்கு, மேசியாவின் மதத்துக்கு தலைமை அலுவலகம். அதுவே அவர்களுடைய தலைமை அலுவலகம். அதுவே ஸ்தாபனங்களின் தலைமை அலுவலகம். அங்குதான் அந்த பெரிய மதசம்பந்தமான குழுக்கள் கூடுகின்றன” என்றனர். 223 அவர்கள் இரண்டு ஆண்டுகளாக ஒட்டகங்களின் மேல் பயணம் செய்து டைக்கரிஸ் நதியைக் கடந்து சேற்றின் வழியாகவும் காடுகளின் வழியாகவும் தங்கள் இருதயங்களில் மகிழ்ச்சி பொங்கினவர்களாய் பயணம் செய்தனர். 224 அந்த நட்சத்திரங்கள் அங்கு தொங்கிக் கொண்டிருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர். இந்த இன்றைய வானசாஸ்திரிகள் கூட, “அந்த நட்சத்திரங்கள் ஒரே வரிசையில் மறுபடியும் வருமானால், அந்த சாஸ்திரிகள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அதை காணும்போது, அது ஒரு நட்சத்திரமாக தென்படும்” என்று கூறுகின்றனர். ஆனால் அதை அதே இடத்திலிருந்து நின்று கொண்டு பார்க்க வேண்டும். ஆமென். ஆமென். 225 நீங்கள் எங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அது பொருத்தது. நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்பதையே அது பொறுத்தது. ஊ—ஊ. ஆம்.
80226 எனவே அவர்கள் அதைக் கண்டு, அதை பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் அதனுடன் ஒரே வரிசையில் இருந்தனர். அவர்கள் எங்கு சென்ற போதிலும், அவர்களுடன் அது ஒரே வரிசையில் காணப்பட்டது. அது அவர்களை வழி நடத்தினது. பாருங்கள்? 227 அந்தவிதமாகவே நீங்களும் கூட எல்லா வேதவாக்கியங்களையும் வரிசைப்படுத்திக் கொண்டு, அந்த வரிசையில் நீங்களும் தங்கியிருக்க வேண்டும். அதுதான் ஒரே வழி. அது உங்களை நேராக அவரிடம் வழி நடத்திச் செல்லும். நிச்சயமாக செய்யும். 228 இப்பொழுது கவனியுங்கள். இதோ அவர்கள், “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று சத்தமிட்டுக் கொண்டே எருசலேமுக்குள் நுழைந்தனர். நட்சத்திரம் அவர்களை அங்கே எருசலேமுக்குள்ளாக வழி நடத்திச் சென்றது, ஸ்தாபனங்களின் தலைமை அலுவலகத்திற்கு, ஆனால் அவர்கள் அதிலிருந்து வழி விலகின போது, நட்சத்திரம் அவர்களை விட்டுச் சென்றது. அவர்கள் பட்டினத்துக்குள் நுழைந்து, வீதியின் மேலும் கீழும் நடந்தனர். பட்டினம் தேவனுடைய சந்தோஷத்தினால் நிறைந்திருக்கும் என்று அவர்கள் எண்ணினர். அவர்கள் மகிழ்ச்சி பொங்கினவர்களாய் வீதியின் மேலும் கீழும் நடந்து, “யூதருக்கு ராஜாவா பிறந்திருக்கிறவர் எங்கே? நாங்கள் கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம்” என்று கூச்சலிட்டனர். 229 நினைவிருக்கட்டும், அந்த நட்சத்திரம், அவர்கள் மேற்கே சென்றனர். அவர்கள் கிழக்கில் இருந்தனர். “மேற்கு நோக்கி வழி நடத்தி, இன்னும் சென்று கொண்டேயிருக்கிறது. எங்களை அந்த…” புரிகிறதா? அவர்கள்…முற்றிலுமாக…அவர்கள்…நல்லது, பாபிலோனும் இந்தியாவும் பாலஸ்தீனாவுக்கு கிழக்கில் அமைந்துள்ளன. ஒரு விதம் தென் கிழக்கில் அவர்கள் மேற்கு திசையில் சென்றனர். “மேற்கு நோக்கி வழி நடத்தி,” அந்த பாடல் உங்களுக்குத் தெரியும். “இன்னும் சென்று கொண்டேயிருக்கிறது. அந்த பரிபூரண ஒளிக்கு எங்களை நடத்தும்.” புரிகிறதா? சாஸ்திரிகள் மேற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கிழக்கை விட்டு மேற்கு நோக்கி பயணம் செய்தனர். அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டிருந்தனர். அவர்கள் மேற்கிலிருந்து பின்னோக்கியிருந்தால், அவர்கள் அதைக் கண்டிருக்கமாட்டார்கள். புரிகிறதா?
81230 அவர்கள் அங்கு அடைந்தபோது, அதுவரைக்கும் நட்சத்திரம் அவர்களை வழி நடத்திச் சென்றது. அது அவர்களை விட்டுச் சென்றது. அவர்கள், “நட்சத்திரம் நம்மை விட்டு சென்று விட்டது. இங்கு தான் அவர் இருக்க வேண்டும்” என்று எண்ணினர். அவர்கள் பட்டிணத்தில் இருந்தனர். எனவே, “ஓ என்னே!” அவர்களோ, “எல்லோரும் பாடிக் கொண்டு மகிழ்ச்சியாயுள்ளனர். தேவனுடைய மகிமை எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்கிறது. எனவே இங்கு நாம் வந்து விட்டோம். நம்முடைய—நம்முடைய சாதனையை நாம் அறிந்துள்ளோம்—அறிந்துள்ளோம். அவர்கள் அந்த நட்சத்திரம் சேர்க்கையை கவனித்த போது, யாருமே எந்த நிபுணனுமே அந்த நட்சத்திரங்களை இழுத்து ஒன்று சேர்க்க முடியாது. அந்த நட்சத்திரம் வானத்தில் தோன்றும் போது, மேசியா பூமியில் இருக்க வேண்டிய நேரம் அதுவே என்று நாம் அறிந்திருக்கிறோம். மேசியா பூமியில் இருக்கிறார்” என்றனர். 231 சில நூற்றாண்டுகளுக்கு பிறகு அந்த நட்சத்திரங்களின் சேர்க்கை மறுபடியும் உண்டாகி பூமிக்கு மறுபடியும் ஒரு ஈவு அளிக்கப்படுகிறது. நீங்கள் பாருங்கள். கவனியுங்கள்.
82232 “அந்த நட்சத்திரங்களின் சேர்க்கை உண்டாகும்போது, மேசியா பூமியில் இருக்கிறார்.” அவர் பூமியில் இருக்கிறார் என்று சாஸ்திரிகள் அறிந்து கொண்டனர். எனவே அவர்கள் மதத்தின் தலைமை அலுவலகத்திலற்குச் சென்று, அவர்கள் வீதியின் மேலும் கீழும் அந்த ஒட்டகங்களின் மேல் சென்று, “அவர் எங்கே? அவர் எங்கே? யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? நாங்கள் கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம். அவர் இங்கு எங்கோ இருக்கிறார். அவர் எங்கே? அவர் எங்கே? அவர் எங்கே?” என்றனர். ஹூ! என்னே ஒரு நிந்தை! 233 அவர்கள் பிரதான ஆசாரியனிடம் சென்றனர். அவன், “உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன்? நீங்கள் மூடமதாபிமானிகள்” என்று கூறியிருப்பான். பாருங்கள்? அவர்களுடைய விஞ்ஞான சாதனையின்பேரில் என்னே ஒரு நிந்தை! தேவனுடைய வல்லமையினால் அவர்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டனர். அவர்கள் சாஸ்திரிகள், ஞானமுள்ளவர்கள், அவர்கள் மதசம்மந்தமான விஞ்ஞானத்தைப் படித்து வந்தனர். அந்த நட்சத்திரங்களின் சேர்க்கை உண்டாகும்போது, மேசியா பூமியில் எங்காவது இருக்கவேண்டுமென்று அறிந்திருந்தனர். அதை அறிந்திருக்க வேண்டிய இடம், அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை.
83234 தெருவில் நின்று கொண்டிருந்த சிறுவர்கள், “ஹா! அதை பாருங்கள். ஹா! மூட மதாபிமானிகளின் கூட்டம். ‘யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?’ என்று அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். ஏரோது இங்கு ராஜா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு பேராயர் இன்னாரென்று தெரியவில்லை” என்று கூறியிருப்பார்கள். ஓ, என்னே! 235 “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? நாங்கள் கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம்.” 236 அவர்கள், “ஞானிகளே, சுற்றிலுமுள்ளவர்களே இங்கு வாருங்கள்” என்று கூறி, ஊ—ஊ. “இங்கே வாருங்கள். நீங்கள் ஏதாவது நட்சத்திரத்தை எங்காவது காண்கிறீர்களா?” என்று கேட்டனர். “ஓ, நான் அதைப் போன்ற எதையும் ஒருபோதும் கண்டதேயில்லை” 237 “வான சாஸ்திரிகளே இங்கே வாருங்கள். நீங்கள் ஏதாவது நட்சத்திரத்தை எங்காவது பார்க்கிறீர்களா?” “இல்லை. இல்லை” “ஒருவிதமான மர்மமான அடையாளத்தைப் போன்ற ஏதாவது ஒன்றை நீங்கள் பார்த்தீர்களா?” “இல்லையே. நாங்கள் அதைப்போன்ற ஒன்றையும் காண்கிறதில்லை. இல்லை.” 238 இன்றைக்கும் அவர்களுக்கு தென்படுவதில்லை. அதேக்காரியம்தான். அவர்களால் ஒன்றும் காணமுடியவில்லை. அவர்களால் அதைக் காணமுடியாது. “ஊ, நாம் போதகர்களை வரவழைப்போம். நீங்கள் எல்லோரும் அதைக் கண்டீர்களா?” “இல்லை. நாங்கள் எந்த நட்சத்திரத்தையும் கண்டதேயில்லை.” 239 “இங்கே சுவற்றின் மேல் நின்று நேரத்தைக் கணிப்பவர்களே உங்களைக் குறித்து என்ன? நட்சத்திரத்தைக் கொண்டு ஜாமங்காக்கிறவர்களே. உங்களுக்குத் தெரியும்… வானத்தில் ‘நட்சத்திரங்களின் சேர்க்கை’ ஒவ்வொன்றும் உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு நட்சத்திரத்தையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஏதாவது கண்டீர்களா?” “இல்லை. நாங்கள் ஒன்றையும் காணவில்லை.” ஆனால் அதுவோ அங்கிருந்தது.
84240 தேவனுக்கு மகிமை! ஓ, என்னே! உங்களால் அதைக் காணமுடியவில்லையா? அது அங்குள்ளது, அவர்களல் அதைக் காணமுடியவில்லையா? அவர்களால் அதைக் காணமுடியவில்லை. அது அவர்களைச் சுற்றி சென்று கொண்டிருக்கிறது, அவர்களால் அதை காண முடியாது. 241 “இல்லை. நாங்கள் எதையும் காணவில்லை. ஓ, நான் அங்கு சென்றிருந்தேன். நான் எதையும் காணவில்லை.” நிச்சயமாக, நீங்கள் காண்பதில்லை. நீ மிகவும் குருடனாயிருக்கிறாய். அது நீ காண்பதற்காக அல்ல. புரிகிறதா? நீ அவ்வளவு குருடாயிருந்தால், ஏன்? நிச்சயமாக, நீ அதைக் காணாமாட்டாய். 242 தேவன் அதை யாருக்கு வெளிப்படுத்துகிறாரோ, அவர்களுக்கு மாத்திரமே. அவர்கள் மாத்திரமே அதை காண்கிறார்கள். அது எப்பொழுதுமே அந்தவிதமாகவே இருந்து வருகிறது. நிச்சயமாக.
85243 வானத்தில் மழை இருந்ததை நோவா மாத்திரமே காண முடிந்தது. மற்றவர்கள் அதை காண முடியவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் மேலே மழை இருந்ததை காணவில்லை. ஆனால் நோவா கண்டான். 244 சாராள் குழந்தையைக் கையில் பிடித்துள்ளதை ஆபிரகாம் மாத்திரமே கண்டான். அது உண்மை. “ஜாதிகளுக்குத் தகப்பனே, உனக்கு இப்பொழுது எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்?” என்று கேலி செய்த பரியாசக்காரர்கள் அல்ல. 245 நாம் இப்படியாக வேதத்திலுள்ள பரிசுத்தவான்களையும், தீர்க்கதரிசிகளையும் குறித்து பார்த்துக் கொண்டே போகலாமே! “விசுவாசம் என்பது காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” வார்த்தை உரைக்கப்பட்டு விட்டது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இதோ அது உள்ளது. இதோ அதனைக் குறித்த நிச்சயம். அவர்கள் அதை காண்கின்றனர். இப்பொழுது கவனியுங்கள். ஓ, என்னே! “எங்களுடைய வானசாஸ்திரிகள் அந்த நட்சத்திரத்தைக் காணவில்லை. அங்கே ஒன்றுமேயில்லை.”
86246 ஏன்? அவர்கள் அதைச் தேடிச் சென்று, அப்படிப்பட்ட கூட்டத்தினரிடையே சென்ற போது, நட்சத்திரம் ஒளி கொடுக்காமல் மறைந்துவிட்டது. 247 இன்றைக்கு அதேக் காரியம்தான். அதுதான் அநேக ஒளியை அணைத்துவிட்டது, அது உண்மை. அதாவது அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தினருடன் இணையும் காரணத்தால் அவர்கள் முதலிடம் அதை விசுவாசிப்பதில்லை. அப்படியிருக்க நாம் எப்படி ஒரு—ஒரு சபைகளின் ஐக்கியத்தை உண்டாக முடியும்? “நாம் ஒரு மனப்பட்டிருந்தாலொழிய, எப்படி ஒருமித்து நடந்து போக முடியும்?” நாம் இலட்சக்கணக்கான மைல்கள் தூரம் இருக்கும்போது, உலகம் முழுவதிலும் சபை இணைக்கப்பட்டு, நாம் எப்படி உலக ஐக்கிய சபைகளாக ஐக்கியப்பட்டிருக்க முடியும்? நாம் எப்படி அதைச் செய்யப் போகிறோம்? சுவிசேஷர்களாகிய நம்முடன் இது, அது, அது எல்லாமே ஒன்றாக இணைக்கப்படுதல். அதே சமயத்தில் அது அழுகிப் போன ஒரு கூட்டத்தோடு சேர்ந்து இணைக்கப்படுதல். 248 தேவன் தூய்மையான, பரிசுத்தமான, கலப்படமற்ற, தமது வார்த்தையோடு தரித்திருக்கிற ஒரு மனைவியை பெற்றுக் கொள்கிறார். சரி
87249 வார்த்தையின் நிமித்தம் இயேசுவுக்கு வந்த நிந்தை. (ஆகையால் நாம் ஒரு நிமிடத்தில் முடித்துக் கொள்வோம்.) வார்த்தையின் நிமித்தம் இயேசு நிந்திக்கப்பட்டார். இங்கு பாருங்கள். அவர் தெய்வீகமான, மாமிசத்தில் வெளிப்பட்ட தேவனாயிருக்க, அவர் ஏன் நிந்தையை சகிக்க வேண்டும்? அவர் மாமிசத்தில் வெளிப்பட்ட தேவனாயிருந்தார்? 250 வேதம் அவ்வாறு உரைக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். “எங்கள் கைகளினாலே அவரைத் தொட்டோம். தேவதூதர்கள் அவரைக் கண்டனர்.” அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். தீமோத்தேயு அதைப் போன்று உரைக்கிறான் என்று நான் நினைக்கிறேன். பார்த்தீர்களா? “அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். தேவதூதர்களால் காணப்பட்டார்.” 251 அவருடைய பிறப்பின்போது தேவதூதர்கள் இருந்தனர். தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டு முன்னனையில் கிடத்தப்பட்டிருந்ததை கண்டபோது, தூதர்கள் எவ்வளவாக உற்றுப் பார்த்து களிகூர்ந்திருக்க வேண்டும்! ஆமென். “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்று அவர்கள் ஆர்ப்பரித்ததில் வியப்பொன்றுமில்லை. தேவதூதர்கள் களிகூர்ந்து தங்கள் பெரிய செட்டைகளை அடித்து யூதேயாவின் மலைகளின் மேல் பறந்து சென்று, “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி தேவனைத் துதித்துப் பாடினார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கண்டனர். அதாவது அவர்கள் அது வெளிப்படுவதைக் காண வாஞ்சையாயிருந்தனர். அங்குதான் காரியமே இருந்தது.
88252 ஆனால் சாத்தான் இதை நம்பவில்லை. அவன், “நீர் தேவனுடைய குமாரனேயானால்…” என்றான். தேவதூதன், “அவர் தேவனுடைய குமாரனே” என்றான். அதுதான் வித்தியாசம். “நீர் தேவனுடைய இன்னாராக இருந்தால், நீர் அதைச் செய்வதை நாங்கள் காணட்டும்.” ஆனால் தேவதூதனோ “அவர் அங்கிருக்கிறார்” என்றான். 253 மதசம்பந்தமான விஞ்ஞானத்தைப் படித்த சாஸ்திரிகளும், “அவர் அங்கிருக்கிறார்” என்றனர். ஆமென். 254 அந்தக் காரணத்தினால்தான் புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு நிறைவேறினவைகளை உறுதிபடுத்த இன்று இந்தக் காரியங்கள் ஒவ்வொன்றையும் தோண்டிக் கொண்டிருக்கின்றனர். இதோ அவர்கள் தோண்டியெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒருபோதும்…
89255 பொந்தியு பிலாத்து இவ்வுலகில் இருந்ததாக சரித்திரம் எப்போதும் எதையும் கூறவில்லை, உங்களுக்கு அது தெரியுமா? இங்குள்ள பள்ளிச் சிறுவர்களில் யாராகிலும் என்னிடம் கூறுங்கள். பொந்தியுபிலாத்து இருந்ததாக சரித்திரத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது? அவிசுவாசிகள் அதைக் கண்டு பரியாசம் செய்து, “அந்த பெயர் கொண்ட ஒரு—ஒரு ரோமச் சக்கிரவர்த்தி…பொந்தியுபிலாத்து என்னும் பெயர் கொண்ட ஒரு—ஒரு ரோமதேசாதிபதி யாருமே இல்லை” என்றனர். ஆனால் ஆறு வாரங்களுக்கு முன்பு, அவர்கள், “பொந்திபிலாத்து, தேசாதிபதி என்று பொறிக்கப்பட்ட ஒரு மூலக்கல்லை தோண்டியெடுத்தனர்: ஓ, என்னே! அப்படிப்பட்ட அர்த்தமற்றக் காரியங்கள்! 256 அவர்கள், “ரமேசஸ் என்னும் பெயர் கொண்ட பார்வோன் எகிப்தின் சரித்திரத்திலேயே இல்லை” என்றனர். ஆனால் புதைப்பொருள் ஆய்வாளர்கள் அன்று இரண்டாம் ரமேசஸ் என்று பொறிக்கப்பட்ட கல்லைத் தோண்டியெடுத்தனர். கவனியுங்கள். 257 எரிகோவின் மதில்கள் விழவேயில்லை என்று அவர்கள் கூறினர். புதைப் பொருள் ஆய்வாளர்கள் அன்று தோண்டிக் கொண்டிருந்தபோது, உங்களுக்குத் தெரியுமா, முதலாவது காரியம், ஆழத்தில் அவர்கள் விழுந்துபோன எரிகோவின் மதில் சுவர்களைக் கண்டுபிடித்தனர். உங்களுக்குத் தெரியும், எக்காளம் ஊதப்பட்ட போதும் அவர்கள், “அது வெறுமென ஒரு கட்டுக்கதை, அது முன் காலத்தில் யாரோ ஒருவர் பாடினப் பாட்டு” என்றனர். ஆம், பரியாசக்கரர்கள் அதைக் கூறுகின்றனர். “அது வெறுமென ஒரு கட்டுக்கதை என்றும், சுவர்கள் இடிந்து விழுந்தன என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே நடக்கவில்லை, யோசுவா ஒரு எக்காளத்தை ஊதினபோது, அவர்கள் அந்த மதில் மீது ஏறி ஓடி அவர்கள் உள்ளே சென்றனர். ஆனால் இடிந்து விழுந்தது என்ற ஒரு காரியமே ஒருபோதும் சம்பவிக்கவில்லை” என்றனர். ஆனால் சிறந்த கிறிஸ்தவ புதைப்பொருள் ஆய்வாளர் ஒருவர் தோண்டிக் கொண்டேயிருந்தார். ஏனெனில் அது உண்மையில் நடந்திருக்க வேண்டுமென்று அவர் உறுதியாக அறிந்திருந்தார். அவர் முப்பது அடி ஆழத்தில் தோண்டினபோது அங்கே அவைகள் இருந்தன. தேவனுடைய வார்த்தை உரைத்தபடியே, மதில்சுவர்கள் ஒன்றின்மேல் ஒன்று விழுந்திருக்கக் கண்டார்.
90258 அவர்கள், “தாவீது பத்து நரம்பு வீணையை வாசித்துக் கொண்டிருந்தார் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை. ஏனெனில் பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்கும் நரம்பு வாத்தியங்கள் கண்டு பிடிக்கப்படவில்லை. அப்படியொன்றுமே கிடையாது” என்றனர். எகிப்தில் கிறிஸ்தவ புதைப்பொருள் ஆய்வாளர்கள் தோண்டினபோது, நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நரம்புவாத்தியங்கள் இருந்ததாக அவர்கள் கண்டுபிடித்தனர். ஆமென். ஓ, என்னே! 259 எபிரேய பிள்ளைகள் வைக்கோலினால் செங்கல்லை உண்டாக்கினதை குறித்து, அவர்கள், “அப்படியொன்றும் கிடையாது” என்றனர். புதைப்பொருள் ஆய்வாளர்கள் அங்கே தோண்டச் சென்றபோது, அவர்கள் கண்டது என்ன? அது விஞ்ஞானம். அவர்கள் என்னக் கண்டனர்? எபிரேயர்கள் கட்டின பட்டிணத்து மதில் சுவர்களில், முதலாம் அடுக்கு கற்கள் நீண்ட வைக்கோலைக் கொண்டதாகவும், இரண்டாவது அடுக்கு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வைக்கோல் கட்டைக் கொண்டிருந்ததாகவும், மூன்றாம் அடுக்கில் வைக்கோலே இல்லையென்றும் அவர்கள் கண்டுபிடித்தனர். ஓ, என்னே! நாடுகள் உடைகின்றன. இஸ்ரவேல் விழித்தெழுகின்றாள், இவை தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்களாம்
91260 ஆம், ஐயா, சகோதரனே, சகோதரியே இவையனைத்தும் நகர்ந்து நம்மிடம் வந்துள்ளது. அது ஏன்? கடந்த சில ஆண்டுகளாக திரையுலகம் சாதித்து வருவதை இதற்கு முன்பு சாதித்ததேயில்லை. சிசில் டி மிலி தயாரித்த பத்து கட்டளைகள் என்னும் திரைப்படம் வந்துவிட்டது. அவ்வாறே பென்ஹர் என்னும் திரைப்படத்தின் மூலம் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை சரித்திரம் திரைக்கு வந்துவிட்டது. பேதுருவின் மனமாற்றத்தை சித்தரிக்கும் பெரிய செம்படவன் என்னும் திரைப்படம் வந்துவிட்டது, இவ்வளவு காலமாக திரையுலகம் நிராகரித்து, அசுசிப்படுத்தி, கிழித்தெறிந்த இந்த மதசம்பந்தமான வரலாறுகளை தேவன் தமது பலத்த வல்லமையினால் திரைக்கு வந்து முழக்கமிடச் செய்தார்.
92261 இப்பொழுது, சில ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட காரியங்கள் ஒரு ஏழ்மையான, சிறிய தாழ்மையான தேவனுடைய ஊழியக்காரனாகிய நான், “ஒரு ஒளி தோன்றி என்னுடன் பேசி, நான் செய்ய வேண்டியவைகளை எனக்கு அறிவித்தது” என்று கூறினபோது, ஜனங்கள் நகைத்து, கேலி செய்து, “அவருக்குச் சற்று பைத்தியம் ஏற்பட்டுவிட்டது” என்றனர். ஆனால் அதனைக் குறித்த ஒரு புகைப்படம் உள்ளது. விஞ்ஞானம் அதை எடுத்தது. அது அங்கே உள்ளது. அது சத்தியமாயுள்ளது. நான், “அந்த ஸ்திரீ மரணத்கேதுவாக நிழலிடப்பட்டிருக்கிறாள்” என்றேன். 262 அவர்கள், “நிழலிடப்படுவதா? அது அர்த்தமற்றது. அவர் தன்னுடைய சிந்தையில் அவ்வாறு கற்பனை செய்கிறார்” என்றனர். 263 அதனைக் குறித்த புகைப்படம் உள்ளது. தேவன் கற்கள் கூப்பிடும்படி செய்வார். அவர் விரும்புவதை அவரால் செய்ய முடியும்.
93264 இயேசு, தெய்வீக தேவனுடைய குமாரன், இம்மானுவேல், அங்கு நின்று கொண்டு, வார்த்தையின் நிமித்தம் நிந்தை அனுபவித்தார். என்னே ஒரு நிந்தை! அவிசுவாசியாகிய பாவி அவரைக் கட்டவும், முகத்தில் துப்பவும், கைநிறைய தாடிமுடியை பிய்க்கவும், எதை வேண்டுமானாலும் செய்ய துணிச்சல் கொள்ளவும் அவனை அனுமதித்தார். வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தை ஊ—ஊ. எதற்காக? பிதாவினுடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்கேயாகும். ஓ, ஆனால், ஞாபகம் கொள்ளுங்கள். அவர் மரணத்தின் நிந்தையை சகிக்க வேண்டியவராயிருந்தார். அவர் மரிக்கக் முடியாத தேவன், ஆனால் பாவியை இரட்சிக்க அவர் ஒருவர் மாத்திரமே மரிக்க வேண்டும். இரண்டாம் ஆள், மூன்றாம் ஆள் அதை செய்ய முடியாது. தேவன் ஒருவர் மாத்திரமே அதை செய்ய முடியும். இதோ அவர் செய்தார். 265 அவர் “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை” என்றார். ஆமென். 266 அவர்கள், “எங்கள் பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைப் புசித்தார்கள்” என்றனர். அவரோ, “அவர்கள் மரித்தார்கள்” என்றார். “உம்மை ஜீவ அப்பம் என்று நீர் அழைத்துக் கொள்கிறீரே” என்றார்கள். 267 அவர், “ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன். நானே ஜீவ அப்பம். நான் இருக்கிறவராக இருக்கிறேன்” என்றான் 268 அவர்கள், “உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ” என்றார்கள். 269 அவர், “ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்று சொன்ன பிறகு பாவிகள், ஸ்தாபன சபைகள் அவரைக் கட்டும்படி அனுமதித்தார்.
94270 கடைசி நாட்களில் இந்த ஐஸ்வரியமுள்ள லவோதிக்கேயா சபை, அவர்கள் அவரை சபையை விட்டுப் புறம்பாக்கினர் என்பதை நீங்கள் ஞாபகம் கொள்ளுங்கள். இப்பொழுது அது எங்குள்ளதென்று நீங்கள் காண்கிறீர்களா? நான் ஏன் அந்த ஸ்தாபன முறைமைக்கு விரோதமாய் கூக்குரலிடுகிறேன் என்பதை உங்களால் காணமுடிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 271 பாவிகள் அவரைக் கட்ட இயேசு ஏன் அனுமதித்தார்? வார்த்தையை நிறைவேற்றுவதற்கென மரணம் என்னும் நிந்தை தேவன் மேல் வருவதற்காகவேயாகும். தேவன் மரிக்கும்படி மாம்சமாக வேண்டியதாயிருந்தது. இயேசு அதை அறிந்திருந்தார். அதைக் குறித்து அவர் அவர்களிடம் கூறினார். அவர், “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள். மீண்டும் இதை நான் எழுப்புவேன்” என்றார். வேறு யாரும் அதை எழுப்புதவதல்ல. “இதை நான் எழுப்புவேன்.” “மூன்று நாளைக்குள்ளே அதை மீண்டும் கொண்டுவருவேன். நீங்கள் இதை இடித்துப் போடுங்கள். அதை நான் எழுப்புவேன்.” அவர், “யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் பூமியின் இருதயத்தில் இருப்பார்” என்றார். அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. பாருங்கள்? வார்த்தையின் நிமித்தம் வரும் ஒரு நிந்தை அவருக்கு இருந்தது.
95272 அவர் மரணத்துக்கென்று நிந்திக்கப்பட்டு, நித்திய ஜீவனுக்கென்று எழுப்பப்பட்டார். முதலாவதாக அவர் மரணத்துக்கு ஒப்புக் கொடுக்கப்பட வேண்டியதாயிருந்தது. அதன் மூலம் அவர் நித்திய ஜீவனுக்கு எழுப்பப்பட்டு, (அது அவருடைய ரூபத்தில் இருந்தது) அதை ஏற்று கொள்ளும் ஒவ்வொரு மனிதனுக்கும் நித்திய ஜீவனை அளித்தார். பாருங்கள் அவர் மனிதனாக, ஒரு இனத்தான் மீட்பராக வெளிப்பட்டு, அவருக்கு முன்பாக தோன்றின அவருடைய எல்லா ஊழியக்காரர்களும் சகித்த நிந்தையை, பரியாசத்தை இவரும் சகிக்க வேண்டியதாயிருந்தது. மோசேயைப் போல, நோவாவைப் போல, மற்ற யாவரும் சகித்த அந்த பரியாசத்தைப் போல, இவரும் அந்த பரியாசத்தை சகிக்க வேண்டியதாயிருந்தது. ஏன்? அவர் வார்த்தையைக் கொண்டிருந்தார். அவரே வார்த்தையாயிருந்தார். ஆகையால்தான் அவர்கள் மற்றெல்லாரைக் காட்டிலும் இவரை அதிகமாக நிந்தித்தனர். அவர் தெய்வீகமானவராயும், வார்த்தையாயும் இருந்தார். அல்லேலூயா! அதுதான் அவரை அவ்வாறு ஆக்கினது.
96273 இயேசு, “மாயக்காரரே, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். நீங்கள் தான் அவர்களை அங்கு வைத்தீர்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையுடன் வந்தனர். நீங்களோ அவர்களை விசுவாசிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவருடைய இரத்தபழிக்கும் நீங்கள் குற்றவாளிகள்” என்றார். 274 தேவனுக்கு சித்தமானால், பீனிக்ஸில், மற்றொரு நாள் நான் முக்கியமான ஒன்றைக் குறித்துப் பேசுவேன். இந்த சந்ததி இயேசு கிறிஸ்துவைக் கொன்றதாக அவர்கள் மேல் குற்றச்சாட்டைக் கொண்டுவரப் போகிறேன். அவரை மறுபடியும் சிலுவையில் அறைந்ததற்காக. தேவனுக்கு சித்தமானால், போதகர் சங்கத்தில் இந்த குற்றச்சாட்டைக் கொண்டு வரப்போகின்றேன். இயேசு கிறிஸ்துவை அவர்கள் மறுபடியும் சிலுவையில் அறைந்து அவருடைய இரத்தபழிக்கு குற்றவாளிகளாயிருக்கிறார்கள். ஆம் ஐயா. அனைவரையுமே குற்றம் சாட்டுகிறேன். 275 பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு, “நீங்கள் அக்கிரமக்காரருடைய கைகளினால் அந்த ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள். இவரைத் தேவன் எழுப்பினார். இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்” என்று சொல்லி அவர்கள் மேல் குற்றஞ்சாட்டினான். அவன் குற்றச்சாட்டைக் கொண்டு வந்தான். 276 நான் தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு, பூமியிலுள்ள ஒவ்வொரு ஸ்தாபனத்தையும் அதிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்துக்கு குற்றவாளிகளாயுள்ளதாக அவர்கள் மேல் குற்றஞ்சாட்டப்போகின்றேன். அந்த நாளில் நான் தேவனுடைய வழக்கறிஞராயிருக்க தேவன் உதவிபுரிவாராக. ஆமென்! ஆம்.
97277 ஓ பரியாசக்காரர் அவரைப் பரியாசம் பண்ணினார்கள். அவரை அவர்கள் நிந்தித்தனர். அவரோ அதில் உறுதியாய் நின்றார். ஆமென். ஓ, அவர் என்ன செய்தாரென்று கவனியுங்கள். அவர் தேவனுடைய குமாரனாயிருந்து, அவர் பாவத்தை மரணத்துக்குட்படுத்த பாடுபட்டு மரித்தார். அவர் அப்படி செய்ய வேண்டியதாயிருந்தது. அந்த ஒரு வழியில் மாத்திரமே அவரால் பாவத்தை மரணத்துக்குட்படுத்த முடியும். அவர் அதை செய்து அதை சகித்தார், ஏனென்றால் மற்றவர்களும் அதைச் செய்திருந்தனர். 278 அவருக்கு முன்னால் இருந்த மற்றவர் அனைவரும் தேவனுடைய வார்த்தையின் ஒரு சிறு பாகத்தை மாத்திரமே உடையவர்களாயிருந்தனர். காரணம் தீர்க்கதரிசிகளுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது என்று இயேசு கூறினார். மேலும் அவர், “அவர்களில் யாரை உங்கள் பிதாக்கள், ஸ்தாபன மார்க்கங்கள் கல்லெறிந்து கொல்லாமல் இருந்தார்கள்? அவர்களில் யார் தீர்க்கதரிசிகளை ஏற்றுக் கொண்டார்கள்? அவர்களை கல்லெறிந்து கொன்ற பிறகு, நீங்கள் அவர்களுக்கு கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். அவர்களைக் கல்லறைகளில் வைத்தத்தற்கு நீங்கள் குற்றவாளிகளாயிருக்கிறீர்கள்” என்றார். 279 அதன் பிறகு அவர் திராட்சை தோட்டத்து உவமையை அவர்களிடம் கூறினார். ஊழியக்காரர் அனுப்பட்டபோது, அவர்கள் ஊழியக்காரரை துன்புறுத்தினார்கள். முடிவில் அவர்கள் “நாம் குமாரனைக் கொன்று போடுவோம். அவன் சுதந்தரவாளி” என்றனர். புரிகிறதா? ஓ, அவர்கள் குமாரனைக் கண்டபோது கோபமுற்றார்கள். பார்த்தீர்களா?
98280 ஆனால் அவர் நிந்தையைச் சகிக்க வேண்டியதாயிருந்தது. அவர் கட்டப்பட்டு, மரணத்துக்கு நடத்தப்பட்டு, நித்திய ஜீவனை அளிப்பதற்கென அங்கே மரணத்துக்கு ஒப்புவிக்கப்பட்டார். தேவனுக்கு மகிமை! ஓ, அவரை நான் எவ்வளவாக நேசிக்கிறேன். காலங்கள்தோறும் வார்த்தையில் நின்று நிந்தையைச் சகித்தவர்களை மறுபடியும் எழுப்பி, அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்கென தேவனுடைய குமாரன் மரணம் எய்தினார். அது உண்மை. 281 அவர் வந்திராவிட்டால், நோவா உயிரோடெழுந்திருக்க முடிந்திருக்காது. அவர் வந்திராவிட்டால், எலியா உயிரோடு எழுந்துவந்திருக்க முடியாது. அவர் வந்திராவிட்டால் நோவா ஒரு போதும் எழுந்திருந்திருக்கமாட்டான். அவர்…அவர் வந்திராவிட்டால், காரணம் முன்குறிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராக இவ்வுலகில் வந்து, தம்மேல் நிந்தையைச் சுமந்து, உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றுக்கும் உறுதியாய் நின்ற அந்த நீதிமான்களுக்காக மரணம் எய்தினார். அவர் அப்படித்தான் இருக்க வேண்டியதாயிருந்தது. வேறு யாரும் அதைச் செய்ய முடியாது. தேவன் தாமே, அவர் இங்கு வந்து, அதே வார்த்தையில் உறுதியாய் நின்று நிந்தையை அனுபவித்த ஒவ்வொரு தேவபுத்திரனையும் மீட்டு அவனுக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்கென அந்த ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். காலங்கள்தோறும் நிந்தையை அனுபவித்த ஒவ்வொரு தேவனுடைய குமாரனையும், அவனை மீட்க யாருமே இருக்கவில்லை. ஆனால் அவன் விசுவாசத்தினால் மீட்பர் வருகிறதைக் கண்டான்.
99282 யோபு அவரைக் கண்டான். யோபுவை அவர்கள், “ஓ, நீ ஒரு இரகசிய பாவி. ஆகையால் தான் தேவன் உன்னை கஷ்டப்படுத்துகிறார், ஏனென்றால் நீ ஒரு இரகசிய பாவி” என்றனர். 283 அவன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்” என்றான். 284 அவனுடைய மனைவி, “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும். உம்மைப் பார்த்தால் பரிதாபமாயுள்ளது” என்றாள். 285 அவனோ, “நீ பயித்தியக்காரி பேசுகிறது போலப் பேசுகிறாய்” என்றான். ஆமென். அவன் அந்நிலையில் அங்கிருந்தான். “அவர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார்.”
100286 இயேசு வந்திராவிட்டால் யோபு மீட்கப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் அவர் உலகத்தோற்றத்துக்கு முன்பே அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவராக இருந்தார். அவருடைய இடத்தை அவர் அறிந்திருந்தார். அவருடைய ஸ்தானத்தை அவர் அறிந்திருந்தார். 287 அந்தக் காரணத்தினால்தான், அன்று மரியாள் வீட்டைவிட்டு வெளியே வந்து இயேசுவைச் சந்தித்து, “நீர் இங்கே இருந்திருப்பீரேயானால், என் சகோதரன் மரித்திருந்திருக்க மாட்டான்” என்று கூறினபோது, அவள் அந்த ஸ்தானத்தை அடையாளம் கண்டு கொண்டாள். அவர் “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்றார். அவள், “ஆம் ஆண்டவரே, உயிர்த்தெழுதலின் போது எழுந்திருப்பான். அவன் ஒரு நல்ல பையனாயிருந்தான்” என்றாள். இயேசு, “நானே உயிர்த்தெழுதல், இதை விசுவாசிக்கிறாயா?” என்றார். 288 அவள், “ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவ குமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றாள். அவர், “அவனை எங்கே வைத்தீர்களா?” என்று கேட்டார். ஓ! அங்குதான் காரியம். உம்-உம்.
101289 அவள் அதை அடையாளங்கண்டு கொண்டாள். அந்த ஸ்திரீ அதைக் கூறிக்கொண்டிருக்கவில்லை. அவளிடமிருந்து பிசாசுகள் துரத்தப்பட்டதை அவள் கண்டிருக்கிறாள். அவள் தேவனுடைய வல்லமையை அறிந்திருந்தாள். அது அவளிலிருந்த பெருமை, அழுத்தம் மற்ற ஒவ்வொன்றையும், அந்த உயர்நிலைப் பள்ளி பருவ சுயநல ஆவி போன்றவைகளை எடுத்துப் போட்டு, அவளை புது சிருஷ்டியாக மாற்றினது. அவர் அவளுக்குள் இருந்த ஏழு பிசாசுகளைத் துரத்தினார். அவர் யாரென்பதை அந்த ஸ்திரீகள் அறிந்து அவரை ஏற்றுக் கொண்டனர். 290 அவர் தங்களுக்காக என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். இன்றைக்கு கூட அவர்கள் அப்படியே அதை ஏற்றுக் கொள்கின்றனர். அது தான் அடுத்தக் காரியம். 291 அங்கே அவர் இருக்கிறார். அவள் அதைக் கூறினாள். அவர்…என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியும். ஓ! 292 அதே வார்த்தைக்காக பாடுபடும் அனைவருக்காகவும், அந்த நோக்கத்துக்காகவே அவர் மரித்தார். அவர் ஒருவர் மாத்திரமே மரித்து அதை செய்ய முடியும். ஏனெனில் அவர் வார்த்தையாயிருந்தார். அவர் வார்த்தையிலிருந்து மாமிசத்தில் வெளிப்பட்டார். மற்றவர் அனைவரும் வார்த்தையின் ஒரு பாகத்தைப் பெற்றிருந்தனர். ஆனால் இங்கோ தேவனின் பரிபூரணம் அவருக்குள் இருந்தது. அவர் இன்றும் மாறாதவராயிருக்கிறார். எபி.13:8, “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” கவனியுங்கள். 293 நான் உண்மையாகவே முடிக்கப் போகிறேன். நான் முடிக்கப் போகிறேன், நான் முடிக்க வேண்டும். எனக்கு அளிக்கப்பட்ட நேரம் கடந்து விட்டது.
102294 அவர் ஒரு வார்த்தையும் கூட எழுதவில்லை. அவர் எழுதினாரா? [சபையோர், “இல்லை” என்கின்றனர்.—ஆசி.] அவர் ஒரு வார்த்தையும் கூட எழுதவில்லை. ஏன்? அவரே வார்த்தையாயிருந்தார். அவர் என்னவாயிருந்தார்? எழுதப்பட்டிருந்த வார்த்தைகளாயிருந்த அவர் வெளிப்பட்ட வார்த்தையாயிருந்தார். மகிமை! வ்வூயு! எனக்கு இப்பொழுது நல்லுணர்வு தோன்றுகிறது. அவரே வார்த்தை. அவரைக் குறித்து அவர் எதையும் எழுத வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவரே வார்த்தையாயிருந்தார், இந்த எழுதப்பட்ட வார்த்தை வெளிப்படுத்தப்பட்டது. தேவனுக்கு மகிமை! அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் வார்த்தையாயும், வெளிப்பட்ட வார்த்தையாயுமிருக்கிறார். நீங்கள் “சகோதரன் பிரான்ஹாமே, அது சரிதானா?” எனலாம். 295 யேகோவா அங்கு நின்று கொண்டு காற்றை அந்த அலைகளின் மேல் ஊதி, இஸ்ரவேல் ஜனங்கள் அதன் வழியாக நடந்து செல்ல ஒரு பாதையை உண்டாக்கினதை கவனியுங்கள். 296 யேகோவா முன்னால் நின்று கடலை நோக்கி, “இரையாதே, அமைதலாயிரு” என்று அதட்டினதை கவனியுங்கள். காற்று பலமாக அடித்து அலைகள் உயர எழும்பி, பிசாசு மும்முரமாக செயல்பட்ட போது, அவர், “இரையாதே, அமைதலாயிரு” என்றார். காற்றும் கடலும் அவருக்கு கீழ்ப்படிந்தது. அவர் யேகோவா. ஆமென்.
103297 யேகோவா அங்கு நின்று கொண்டு சில பனித்துளிகளைத் தூவி, அது பூமியை அடைந்து ஜனங்களை போஷிக்கும் அப்பமாக ஆனது. 298 அவர் நின்று ஐந்து மீன்களை எடுத்து இல்லை ஐந்து அப்பங்களையும் இரண்டு மீங்களையும் எடுத்து ஐயாயிரம் பேர்களைப் போஷித்தார். 299 அவர் வார்த்தையாயிருந்தார். ஆமென். ஆமென். அவர் வார்த்தையாயிருக்கிறார். அவர் என்றென்றும் வார்த்தையாயிருப்பார். நானும் என் வீட்டாருமோவென்றால், நாங்கள் வார்த்தையையே சேவிப்போம். ஓ, அவரைக் காண விரும்புகிறேன். அவருடைய முகத்தை நோக்கிப் பார்க்க விரும்புகிறேன், அங்கு என்றென்றும் அவருடைய இரட்சிப்பின் கிருபையைப் பாட; மகிமையின் வீதிகளில் என் சத்தத்தை நான் உயர்த்தட்டும்; கவலைகள் எல்லாம் கடந்த பிறகு, முடிவில் வீட்டுக்கு சென்று எப்பொழுதும் களிகூருவோம். 300 ஓ என்னே! ஆம். வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தையைச் சகிப்போம். வார்த்தையோடு செல்லுகிற ஒரு நிந்தை உண்டு. வார்த்தையோடு தரித்து நின்று நிந்தையைச் சகிப்போம். நாம் ஜெபம் செய்வோமாக.
104301 இயேசுவே, அன்றொரு இரவு, கர்த்தாவே, நான், “ஓ இயேசுவே, நான் என்ன செய்யவேண்டுமென்று நீர் சித்தம் கொண்டிருக்கிறீர்? கர்த்தாவே, நான் என்ன செய்ய முடியும்? இவைகளைக் கண்டு, நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தை அறிந்திருக்கிறபடியால், நான் என்ன செய்ய முடியும்? நான் என்ன செய்ய முடியும்?” என்று கதறினேன். 302 கர்த்தாவே, இங்குள்ள என் சிறு சபைக்காக நான் ஜெபிக்கிறேன். தரிசனத்தில் நான் கண்ட சிறு பறவைகளைக் குறித்து நான் நினைத்துப் பார்க்கிறேன். அவைகளைக் காட்டிலும் பெரிய பறவைகள் காணப்பட்டன. கர்த்தாவே, ஆனால் அவை மூன்று அடுக்குகளில் இருந்தன. ஆனால் அந்த தேவ தூதர்கள் தோன்றினபோது, பறவைகள் எதுவும் இருக்கவில்லை. கர்த்தாவே, அவர்கள் அருமையான தூதர்கள். ஆனால் ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறதென்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, அது நடக்கட்டும். எங்களை உமது சித்தப்படி உருவாக்கி வனையும். நாங்கள்—நாங்கள் களிமண், நீர் குயவன்.
105303 கர்த்தாவே, கிறிஸ்துமஸூக்கு முந்தின இந்த மாலை வேளையில், தேவனுடைய வெகுமதிக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், ஏனென்றால் தேவன் அதை எங்களுக்கு அருளினார். இது ஒரு அஞ்ஞான மூட நம்பிக்கையாயிருந்தபோதிலும் நாங்கள் எங்கள் இருதயங்களில் அந்த ஈவை விசுவாசிக்கிறோம், இந்த நாளையோ அவர்கள் ஒரு—ஒரு பூசையைப் போன்று, கிறிஸ்துவுக்கு பூசை என்ற நாளாக்கிவிட்டனர். நாங்கள் குழந்தைகளுக்கு இரவில் பரிசு வழங்கும் நட்பு தெய்வம் என்ற சாந்தா கிளாஸ் கட்டுக்கதை, கிறிஸ்மஸ் மரம், அதன் அலங்காரம் ஆகிய முறைகளைக் கொண்டு உம்மிடம் வராமல், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வந்து, பரலோகத்தின் தேவன்தாமே மானிடனாகி, எங்களைப் போன்ற மாம்சமாகி, எங்களை மீட்க, எங்கள் நடுவில் வாசம் செய்து, உலகப் பிரகாரமான ஸ்தாபனம் அந்த இம்மானுவேலை மரணத்துக்குள்ளாக்கி, அந்த நாமத்தின் நிந்தைக்கு பாடுபட்டு, சிலுவையின் நிந்தைக்கு பாடுபட்டு, அவர் மேல் சுமத்தி, அதன் மூலம் எங்களுக்கு நித்திய ஜீவனை சம்பாதித்து தந்த அந்த தேவனை வழிபட வந்திருக்கிறோம். 304 கர்த்தாவே, நாங்கள் யார்? எந்த நிந்தையையும் உதறித் தள்ளுவதற்கு நாங்கள் யார்? தேவனே, எங்களைத் தீரமுள்ள வீரர்களாக்கும். பிதாவே, இந்த வார்த்தைகளை நான் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். நான் சோர்வுற்று களைப்படைந்திருந்த காரணத்தால், இவை ஒருக்கால் தொடர்ச்சியாக இராமலிருக்க வகையுண்டு. ஆனால் பிதாவே, இவ்வவு நேரம் அவர்கள் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்ததற்காக அவர்களுக்கு பலனை அளிப்பீராக. இந்தக் கடைசி நாட்களில் எங்கள் கர்த்தரை எங்களுக்கு இரட்சகராக கொண்டுவந்து சமர்ப்பித்த அந்த வல்லமை இங்குள்ள ஒவ்வொரு ஆவியையும் உயிர்ப்பித்து, கர்த்தராகிய இயேசுவின் வருகை அருகாமையிலுள்ளதை உணர்த்துவதாக. பிதாவே, அது அப்படியே ஆகட்டும்.
106305 எங்கள் மத்தியிலுள்ள வியாதியஸ்தரையும், அவதியுறுவோரையும் சுகப்படுத்தும் நொறுக்குண்ட இருதயங்களைக் கட்டுவீராக. கர்த்தாவே, நாங்கள்…நாங்கள் அதிக துன்பம் அனுபவித்துள்ளோம். கர்த்தாவே, கடுமையான யுத்தங்களின் விளைவாக என் இருதயத்தில் அநேக தழும்புகள் ஏற்பட்டுள்ளன. நான் ஒரு பண்டைய அனுபவம் வாய்ந்த போர்வீரன். கர்த்தாவே எனக்கு உதவி செய்யும். உம்முடைய உதவி எனக்குத் தேவை. இந்த எல்லாப் பயிற்சியும் ஒரு நோக்கத்திற்கானதாய் எங்களுக்கு இருந்திருக்கலாம். கர்த்தாவே, அது அப்படித்தான் இருந்திருக்குமென்று நான் நம்புகிறேன். ஓ, தேவனே, எனக்குதவி செய்யும். இந்த சபைக்கும் உதவி செய்யும். எங்களை ஒருமித்து ஆசீர்வதிப்பீராக. 306 சிறு பிள்ளைகளை ஆசீர்வதியும். வெகுமதியாக எந்த ஒன்றையுமே பெற வாய்ப்பில்லாத அநேக ஏழை பிள்ளைகளைக் குறித்து இன்றைக்கு நான் நினைவு கூறுகிறேன். நீர் அவர்களோடு கூட இருந்து அவர்களுக்குதவி செய்யவேண்டும் என்று நான்—நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பீராக. அந்த மகத்தான…எங்களுக்குத் தேவையான கிறிஸ்துமஸ் வெகுமதி அதுவே. இயேசு கிறிஸ்துவின் ஜீவன் என் இருதயத்தில் ஆளுகை செய்யட்டும். கர்த்தாவே, அதுதான் எனக்குத் தேவை. 307 இப்பொழுது எங்களை ஒருமித்து ஆசீர்வதியும். நாங்கள் இந்த வார்த்தைகளை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். கர்த்தாவே, எங்கெல்லாம் அவைகள் விழச் சித்தமாயிருக்கிறதோ அங்கெல்லாம் விழட்டும். இருதயம் எங்கெங்கு திறக்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் அவைகள் ஒரு மகத்தான இரட்சிப்பின் நேரத்தைக் கொண்டுவருவதாக, இயேசுவின் நாமத்தில். ஆமென்.
107308 எப்போதாவது யார்…எத்தனை பேர் அவரை நேசிக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நாம் எதற்காக இவ்வளவு அவசரப்பட வேண்டும்? ஓ, அவரை நான் நேசிக்கிறேன்? அவரை நான் நேசிக்கிறேன்! “கர்த்தாவே, நான் என்ன செய்ய நீர் சித்தமாயிருக்கிறீர்?” 309 இன்றிரவு ஆராதனைகளை மறந்துவிடாதீர்கள். கிறிஸ்துமஸ் என்பதன் அர்த்தம் என்னவென்று இப்பொழுது நீங்கள் அறிந்து கொண்டீர்களா? ஓ, இது என் கிறிஸ்துமஸ் வெகுமதி, இது அந்த வார்த்தை. கர்த்தாவே, நான் மாத்திரம் என்னையே விலக்கிவிட்டு, நான் மாத்திரம் வழியை விட்டு விலகி நின்று, உமது வார்த்தை தம்மை பரிபூரணமாக இங்கு வெளிப்படுத்துமானால், அதுவே—அதுவே நான் அறிந்துள்ள எல்லாவற்றிலும் மகத்தான காரியமாகும். 310 பிள்ளைகளுக்கு அளிக்க அவர்கள் ஏதோ பொருட்களை வைத்திருக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது நான் ஆராதனையை சகோதரர் நெவிலிடம் மீண்டும் ஒப்படைக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் நெவில்.