சாயங்கால தூதன்

63-0116

உஙகளகக மகக நனற. கரததர உஙகள ஆசரவதபபரக. நஙகள உடகரலம. 2 மல இரநத எனனடய மகன இனற, அபப, நம நமமடய சபக கடடடதத கடடத தவஙகம மனப நம இநத ஆலயதத பரததரகக வணடம எனற நன ஆவலறகறன, இத அபபரபபடட ஒர அழகன ஸதலமய உளளத எனற அவன கறனன. அவனஇதக கறததப பச, மலம, நன இதவர இநத சபப பதகர சநததததலல. ஆனல அவரடய மனவயப பலவ அவரம நலல ஒர நபரக இரபபர.

சாயங்கால தூதன்

63-0116மேசா அரி1341963-01-16

சாயங்கால தூதன்

63-0116மேசா அரி1341963-01-16

1 உங்களுக்கு மிக்க நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் உட்காரலாம். 2 மேலே இருந்த என்னுடைய மகன் இன்று, “அப்பா, நாம் நம்முடைய சபைக் கட்டிடத்தை கட்டத் துவங்கும் முன்பு நாம் இந்த ஆலயத்தை பார்த்திருக்க வேண்டும் என்றே நான் ஆவலுறுகிறேன், இது அப்பேர்ப்பட்ட ஒரு அழகான ஸ்தலமாய் உள்ளது” என்று அவன் கூறினான். அவன்…இதைக் குறித்துப் பேசி, மேலும், “நான் இதுவரை இந்த சபைப் போதகரை சந்தித்ததில்லை. ஆனால் அவருடைய மனைவியைப் போலவே அவரும் நல்ல ஒரு நபராக இருப்பார். நிச்சயமாகவே அவர் ஒரு நல்ல நபர்” என்று சொன்னான். ஆகவே இங்கு வந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். 3 ஆகவே இன்றிரவு நடக்க இருக்கும் கூட்டத்தில், தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை நம்மேல் பொழிந்து நமக்கு உதவுவார் என்று நான்—நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

24 இப்பொழுது நாம்…நான் உள்ளே வந்தபோது சகோதரன் வில்லியம்ஸ் பேசுவதைக் கேட்டேன். அவர் ரமாதாவில் நடைபெறப்போகும் கூட்டத்தைப் பற்றி அறிவித்துக்கொண்டிருந்தார் என்று நான் நம்புகிறேன். அதைக் குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்று நான் யூகிக்கிறேன். வழக்கமாக இவ்வித அறிவிப்புகளை நான் வருவதற்கு முன்பே அறிவித்துவிடுவார்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு மகத்தான வேளையை நாங்கள் நிச்சயமாகவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் என்னுடைய பாகம் என்னவென்றால், நான் பல இடங்களுக்குச் சென்று சகோதரர்களை சந்தித்தும், ஜனங்களோடு ஐக்கியம் கொண்டும் தேவன் நமக்கு ஒரு—ஒருவிதமான சரியான எழுச்சியை தரும்படி ஜெபிப்பதுமேயாகும். பின்பு நாம் ரமாதாவில் அந்த பெரிய கூட்டத்திற்கு நேராக செல்லலாம். அந்த நேரம் வரையில் கூடுமானவரையிலும் எல்லா சபைகளையும் நாம் சந்திப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். நாம் ஒரு மகத்தான நேரத்தை உடையவர்களாயிருக்கிறோம். நாம் நிச்சயமாகவே நம்முடைய சகோதரர்களுக்கு மத்தியில் ஐக்கியம் கொண்டுள்ள ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாயிருந்து கொண்டிருக்கிறோம்.

35 வழக்கமான நான்…நான் பெரிய போதகனல்ல என்றும், நான் ஒரு விதமான ஒரு உதிரி சக்கரம் போலிருக்கிறேன் என்பதையும் எவரும் அறிவர். ஆனால் நான்—நான்…நோயுற்றோருக்காக ஜெபிப்பதே என்னுனுடைய ஊழியம். ஆகவே நான்…இரவு வேளைகளில் மக்கள் கூட்டம் எங்களை சூழ்ந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு அவர்களை அமர்த்த போதிய இடவசதியில்லை. நாங்கள் தகுந்த இடத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். அது கிடைத்த பிறகு அட்டைகள் கொடுத்து மக்களை வரிசையில் அழைத்து ஜெபிக்கலாமென்றிருக்கிறோம். ஆனால் ஒரு இரவு கூட்டத்தில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் அடுத்த நாள் இரவு வேறொரு இடத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கு கொள்ளலாம். நான் ஒவ்வொரு இரவிலும் மக்களுக்காக ஜெபிக்கிறேன். நாம் நேசித்து, அன்பு கூர்ந்து, நாம் ஒன்று சேர்ந்து ஐக்கியம் கொள்கிற இயேசு கிறிஸ்துவின் கனத்திற்கும் மகிமைக்கும் என்னால் இயன்றவரை நான் இதைச் செய்கிறேன்.

46 சிறிது நேரத்திற்கு முன்பு, அந்த மூலையில் நடந்த விபத்தைக் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நான் யூகிக்கிறேன். அந்த மனிதன், அல்லது யாராவது ஒருவர் கொல்லப்பட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை. அந்த கார் வந்தது.நாங்கள் நின்று ஒரு சிறிய ஜெபத்தைச் செய்தோம். அது சிறிது நேரத்திற்கு முன்பு நடந்தது. இங்கிருந்து சுமார் இரண்டு வட்டார தெருவிற்கு தள்ளி யாரோ ஒருவர் மீது வாகனம் மோதி தெருவில் உள்ள நடைபாதையில் தள்ளி விட்டது. ஒரு பெரிய நபர் துணியால் மூடப்பட்டு கிடந்தார். அங்கே காவல் துறையினரும் இருந்தனர். ஆனால் மருத்துவ விரைவு ஊர்த்தியோ அங்கு வரவில்லை என்றே நான் நினைக்கிறேன். அவர்கள்…கொல்லப்படவில்லையெனில், அது நிச்சயமாக … இந்த பக்கத்தில் இடித்து அடுத்த கதவின் புறமாக வந்து நின்றது. ஆகவே அது பயங்கரமாக மோதியிருக்கலாம். உங்களுக்கு தெரியுமா? அது வெறும்…

57 நாம் ஒவ்வொரு நிமிடமும் தேவனை சேவிக்க வேண்டும். இவ்விதமான காரியங்கள் எந்த நேரத்தில்—எந்த நேரத்தில் சம்பவிக்கும் என்று நமக்கு தெரியாது—நமக்குத் தெரியாது. அந்த விபத்து நமக்கு நேரிடவில்லை என்று ஒரு வேளை நாம் நினைக்கலாம். ஆனால் அது நேரிட முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆகவே இயேசு, “ஆயத்தமாயிருங்கள், எந்த நிமிடம் அல்லது எந்த மணி நேரம் நாம் அழைக்கப்படுவோம் என்று நமக்கு தெரியாது” என்று கூறினார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவ்விதம் அழைக்கப்படும்போது விபத்துக்களும், தொல்லைகளும் இல்லாத ஒரு இடத்திற்கு நாம் செல்வோம். நமக்கு அப்படிப்பட்ட இடம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும்போது நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். 8 உங்களுக்குத் தெரியுமா, அதைப் போன்ற ஒரு இடத்திற்காக அதைக் காணத்தக்கதாக நாம் ஏங்குகிறோம். அதற்குரிய சிந்தனையே அதைப் போன்ற ஒரு இடம் இருக்கின்றது என்று காண்பிக்கின்றது. புரிகிறதா? எல்லா நிழற்படப் படிவங்களும், எல்லா நிழல்களும், ஒரு நிழலை உருவாக்க ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று நாம் அறிவோம். நிழல் ஒரு பிரதிபலிப்பாகும். ஆகவே இதைப் போன்ற ஒரு ஜீவியம் இருக்குமேயானால், இது ஒரு நிழல் என்று இது நிரூபிக்கிறது, அப்படியானால் ஒரு உண்மையான ஜீவியம் எங்கே உண்டு என்பதையே இது பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. புரிகிறதா?. ஒரு மரத்தை நீங்கள் கவனித்துப் பாருங்கள். அது எவ்வளவு அழகாயிருக்கிறது. அது என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? அது பரலோகத்தில் இருக்கும் ஜீவ விருட்சத்தின் நிழற்பட மாதிரி நிழலாயுள்ளது.

69 இப்பொழுது உங்களுக்குத் தெரியுமா, தேவன் பூமிக்கு வந்த போது, அவர் ஆதியிலே பூமியின் மீது அணைத்து நின்றிருந்தபோது, விஞ்ஞானிகள் வலியுறுத்த நினைக்கின்றது போல, முதலாவதாக ஒருவேளை ஒரு—ஒரு தலைப்பிரட்டை வந்திருக்கக் கூடும். அடுத்ததாக காரியமாக வேறெதாவதொன்று …நான் உண்மையான கிறிஸ்தவ பரிணாம வளர்ச்சியில் விசுவாசங் கொண்டிருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் ஒரே உயிர் அணுவிலிருந்து வந்தவை என்று நான் விசுவாசிப்பதில்லை. நான் அதை அப்படியே நம்புகிறேன்…தேவன் ஒரு தலைப்பிரட்டையை உண்டாக்கினார். அதன் பிறகு அவர் ஒரு மீனை உண்டாக்கினார். பிறகு அவர் ஒரு வேறெதையோ உண்டாக்கினார். அப்படியே…ஒரே அணுவிலிருந்து எல்லாம் தோன்றாமல், ஒவ்வொன்றும் தனித்தனியே, தனி சிருஷ்டிகளாகவே வந்தன என்று நான் விசுவாசிக்கிறேன். 10 ஆகவே, அப்படியாக ஒவ்வொரு உயர்ந்த வகைகளாக வந்து கொண்டேயிருந்தனர். பிறகு கடைசியாக வந்த ஒன்று பூமியை அனைத்து நின்று கொண்டிருந்த ஒன்றை பிரதிபலித்தது, அது தேவன் ஆகும். இப்பொழுது இது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் தேவன் மாம்சமானபோது இயேசு கிறிஸ்துவாக, ஒரு மனிதனாக இருந்தார். புரிகிறதா? ஆகவே ஒரு தூதனால் அல்ல, ஒரு மனிதனாயிருந்தார். எனவே அது அவரையே பிரதிபலித்தது என்பதையே அது காண்பிக்கிறது.

711 ஆகவே, ஓ, இந்த பழமையான வேதாகமம் முழுவதுமாய் கனிவார்ந்த, சீர் செய்யப்படாத, பழைய தங்கக் கட்டிகளால் நிறைந்துள்ளது. நான்…நான் சென்று அதிலிருக்கும் தூசிகளையெல்லாம் தட்டி எடுத்து, அதை ஆராய்ந்து பார்த்து அது என்னவாயிருக்கிறது என்பதைக் காண விரும்புகிறேன். (நீங்கள் விரும்பவில்லையா?) அரிசோனாவில் இருக்கும் மக்களாகிய நீங்கள் எப்படி பூமியின் தூளிலிருந்து மகத்தான, விலையுயர்ந்த நகைகள் வருகின்றது என்பதை அறிவீர்கள். அங்கிருந்து தான் அவை வருகின்றன. அதேபோன்று தேவனின் அணிகலங்களும் கூட தூசியிலிருந்து எடுக்கப்படுகின்றன. ஆகவே அவர்…அவருடைய மகத்தான தூய்மை செய்கின்ற உலைக்களத்திற்குள் சென்று எல்லா உலோகக் கழிவினையும், அகற்றப்பட நமக்களிக்கப்பட்டுள்ள சிலாக்கியத்திற்காக நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 12 அவைகள் எவ்விதம் செய்யப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? உருக்கி பிரித்தெடுக்கும் முறையை அவர்கள் கொண்டிருப்பதர்கு முன்பு, அவர்கள் வழக்கமாக எப்படி சுத்திகரிப்பார்கள் என்பதை அரிசோனாவில் உள்ள ஜனங்களாகிய நீங்கள் உண்மையாக அறிந்துள்ளீர்கள். அவர்கள் தங்கக் கட்டியை நன்றாக அடிப்பார்கள் என்று நமக்கு கூறப்பட்டுள்ளது, பண்டைய இந்தியர்கள் வழக்கமாக அவ்விதம் செய்வார்கள். அதைத் திருப்பி திருப்பி அடித்து, அதில் இருக்கின்ற உலோகக் கழிவுகள் வெளியே வரும்வரை நன்றாக அடிப்பார்கள். அடிப்பவன் தன்னுடைய பிரதிபலிப்பை, தன்னையே அவன் அதில் காணும்போது அதில் உள்ள (நிமிளை மற்றும் எல்லாக் கழிவுகளும்) அகன்று விட்டது என்று அந்த விதமாகவே அவர்கள் அதை அறிந்து கொண்டனர். அவனால் தன்னையே அதில் காண முடிந்தது. அது அவனுடைய உருவத்தை பிரதிபலிக்கும்போது, அது சுத்தமாகிக் கொண்டு வருவதை அவன் அறிந்து கொண்டான்.

813 உங்களுக்குத் தெரியுமா, தேவன் தமது சபையையும் அவ்வாறே செய்ய விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன். அதை அடித்து அதிலுள்ள எல்லா உலகத்தை வெளியேற்றி நம் ஒவ்வொருவரிலும் இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பையும், நாம் அவருடைய ஜீவியத்தை பிரதிபலிக்கும் வரையிலும் அவர் அவ்விதம் செய்ய விரும்புகிறார். அப்பொழுது நாம் அவருடையதற்கு…ஆயத்தமாயிருக்கிறோம். நம்மை நெருக்கிக் கொண்டிருக்கிற பாரங்களையும், பாவங்களையும் விட்டு விட்டு நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமான இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டை மனதில் கொண்டு நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிற பந்தயத்தை நோக்கி பொறுமையோடு ஓடும்போதோ …அந்நேரத்தில் தம்மைத் தாமே நம்மூலமாக அவர் பிரதிபலித்துக் காண்பிக்கிறார். அதற்காக மிகவுமாய் சந்தோஷப்படுகிறோமே!

914 இப்பொழுது வழக்கமாக நான் ஒவ்வொரு இரவும்…கூறுகிறேன், நான் சகோ. கார்ல் வில்லியம்ஸிடம், “சகோதரனே இரவில் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் விழித்திருந்து என்னுடைய பேச்சை கேட்பதை அந்த பள்ளத்தாக்கில் சுற்றுப் புறங்களில் இருக்கிற மக்கள் விரும்பமாட்டார்கள்” என்று நான் கூறினேன். அதற்கு அவரோ, “பரவாயில்லை, இருக்கட்டும் வாருங்கள்” என்று கூறினார். 15 எனவே என்னை மீண்டும் அழைத்திருப்பதில் உள்ள உங்களுடைய பொறுமையை நான் பாராட்டுகிறேன். இப்பொழுது ஒவ்வொரு இரவும்… 16 சற்று நேரத்திற்கு முன்னர் நான் என்னுடைய மனைவியோடு பேசினேன்…அவள் இப்பொழுது டூசானில் இருக்கிறாள், அப்பொழுது நான், “அங்கு காலநிலை எவ்வாறு உள்ளது?” என்று கேட்டேன். 17 அவள், “அங்கு உஷ்ணமாயிருக்கிறது” என்று கூறினாள். மேலும் அவள், “நீங்கள் திட்டமிட்டுள்ள அட்டவணைப்படி கூட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டாள். அப்பொழுது நான், “ஒவ்வொரு நாளும் பத்து அல்லது பதினொரு மணி சரியாக ஆகிறது” என்று கூறினேன். 18 நான் அவளிடத்தில், அரிசோனாவில் நடைபெறும் சிறிய கூட்டத்திற்கு இந்த முறை செல்லும்போது நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறேன். அங்குள்ள சபைகளுக்கு சென்று சகோதரர்களை சந்திக்கப் போகிறேன். அந்த மக்களை நான் கஷ்டப்படுத்த போவதில்லை. நான் அங்கு செல்லும்போது அவர்களை குதூகலமாக பாடல்கள் பாடவிட்டு விடுவேன். என்னை கட்டுப்படுத்திக் கொண்டு பதினைந்து, இருபது நிமிடங்கள் என்னுடைய குறிப்பிலிருந்து பேசி ‘ஆமென்’ என்று சொல்லி விட்டு வீட்டிற்கு சென்று விடுவேன்” என்று கூறினேன். அதற்கு அவள், “அவ்வளவு சரியாகவா நடந்து கொள்கிறீர்களா?” என்று கேட்டாள். 19 அப்பொழுது நான், “ஆம் தேனே, நான் அவ்வாறு தான் நடந்து கொள்கிறேன், வழக்கமாகவே மூன்று மணி நேரமாகிறது” என்றேன். மிக அருமையான ஜனங்கள்; மிகுந்த பொறுமையுடையவர்கள்.

1020 நாம் இப்போது அவரை அணுகப்போகிற வேளையிலே சிறிது நேரம் நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. இப்பொழுது, விசேஷமாக விசுவாசிக்கிற இதைப் போன்ற அருமையான ஜனக் கூட்டத்தாரிடத்தில் நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன் …நான் இங்கே இரண்டு கட்டில்கள் கிடப்பதையும், ஜனங்கள் வியாதியாயும், தேவையாயும் இருப்பதையும் காண்கிறேன். அவர்கள் விசேஷித்த வேண்டுகோள்களை உடையவர்களாயிருக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். இங்கு இன்னும் அநேகர் ஜெப விண்ணப்பங்களோடிருக்கிறீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அப்படியானால் உங்கள கைகளை உயர்த்தி, நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவதானால் அதைத் தெரியப்படுத்துங்கள். நான் இப்போது இந்த கட்டில்களில் இருக்கும் இவர்களுக்காக ஜெபிக்கப்போகிறேன். விசுவாசிக்கிற மக்கள் மத்தியில் நாம் ஜெபிக்கும்போது நாம் கேட்டுக் கொள்வதை நிச்சயமாக பெற்றுக் கொள்வோம். ஏதாவது சம்பவிக்குமானால் …அவர்களை இங்கு கொண்டு வந்தவர்கள் நல்ல விசுவாசத்தோடு கொண்டு வந்திருக்கிறார்கள். நீங்கள் எல்லாரும் என்னோடு ஜெபிக்கும்படி நான் விரும்புகிறேன்.

1121 எங்கள் பரலோகப் பிதாவே, எங்களிலிருக்கும் எண்ணங்களை அப்புறப்படுத்தி, எங்கள் மனதை சுத்தப்படுத்திக் கொண்டு எங்கள் ஆத்துமா தூய்மை அடைவதற்காக நாங்கள் உமக்கு முன்பாக வந்திருக்கிறோம். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தை எங்களுக்கு முன்பாக நாங்கள் கொண்டு வருகிறோம். நீர் எங்களுக்குத் தரும் எந்த ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் தகுதியுடையவர்களல்ல என்று நாங்கள் அறிக்கை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் இந்த ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளும்படி அவர் மரித்தபடியால், பாவியின் ஸ்தானத்தை எடுத்துக்கொண்ட இம்மானுவேலாக இந்த பூமிக்கு வந்த எங்களுடைய கர்த்தராகிய இயேசுவின் கிருபையினூடாக இந்த ஆசீர்வாதங்களை நாங்கள் பெற்றுக் கொள்ள சிங்காசனத்திற்கு முன்பாக தைரியமாக வரும்படி எங்களுக்கு கூறியிருக்கிறீர். ஓ, நாங்கள் அவரைப் போல ஆக வேண்டும் என்பதற்காக அவர் எங்களைப் போலானார். 22 என்ன ஒரு பரிமாற்றம், கர்த்தாவே! நாங்கள் நரகத்திற்கே அனுப்பப்பட வேண்டிய பாவம் நிறைந்த வாழ்க்கை உடையவராய் இருந்தோம். ஒருவர் வந்து அந்த வாழ்க்கையை அவர் மேல் ஏற்றுக் கொண்டு, அவருடைய சிந்தப்பட்ட சொந்த ஜீவனின் இரத்தத்தால் எங்கள் பாவங்களை சுத்தப்படுத்தினார். கர்த்தாவே, இதுவோ எங்களுடைய இருதயங்கள் நினைத்துப் பார்க்க முடிந்ததற்கும் மேலானதாக உள்ளது. ஆகையால் இவை எல்லாவற்றிற்கும், அவருடைய தழும்புகளால் எங்களை குணப்படுத்தும்படிக்கும், மேலாக எங்களுடைய அக்கிரமத்தை எடுத்துப்போடும்படியான ஒரு வழியை அவர் உண்டாக்கினார். நாங்கள் அவரை சேவிக்கும்போது அவர் எங்களை நலமாக காத்துக் கொள்வார் என்று அவர் வாக்களித்துள்ளதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.

1223 ஆகவே இப்பொழுது இன்றிரவு, பிதாவே, அநேக விண்ணப்பங்கள் இங்கே இருக்கையில்…தங்கள் கைகளை உயர்த்தியிருக்கையில், அந்த கைகளுக்கு கீழே உள்ள இருதயத்தில் என்ன உள்ளது என்பதை நீர் அறிந்துள்ளபடியால், நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் உற்று நோக்குவீர் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். 24 கர்த்தாவே, இன்றிரவு வார்த்தையை வாசிக்கையில் அதை நீர் நினைவு கூர வேண்டும் என்றும், ஒரு சிறு பாடமாக அதன் பேரில் தியானித்து, ஒரு ஞாயிறு பள்ளி பாடத்தைப் போல, எங்களுடைய இருதயங்களில் இதை ஏற்றுக் கொண்டு, நாங்கள் இங்கு உள்ளே வந்ததைப் பார்க்கிலும் நாங்கள் வெளியில் செல்லும்போது உம்மோடு அதிகம் நெருக்கினவர்களாயிருப்பதை நாங்கள் உணர்ந்து, இன்றிரவு இங்கிருந்து நாங்கள் செல்லும்படி எங்களுக்கு உதவி செய்யும்படி நான் வேண்டிக் கொள்கிறேன். இது தேசம் முழுவதிலும் ஒரு எழுப்புதலைக் கொண்டு வருவதற்காகவே நாங்கள் இங்கிருக்கிறோம், அது எப்போது துவங்கும் என்பதையோ அறியோம். ஆனால் கர்த்தாவே, அதற்காக நாங்கள் எதிர்பார்ப்புகளோடு முன்னோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனையும், ஸ்தீரிகளையும், பையன்களையும், பெண் பிள்ளைகளையும் கிறிஸ்துவின் இரட்சிப்பை அறியும் அறிவிற்குள் கொண்டு வருவதற்கான ஒரு எழுப்புதலை எப்படி கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் அறிந்துள்ள் ஒவ்வொரு மானிட முயற்சிகளையும் நாங்கள் ஏறெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

1325 இந்த சபைக்காகவும், இதனுடைய அருமையான போதகருக்காகவும், அவருடைய குடும்பத்தினருக்காகவும் மற்றும் எல்லா உதவிக்காரர்களுக்காகவும், தர்மகர்த்தாக்கள், மற்றும் அதிலுள்ள மற்றெல்லாருக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்த விரும்புகிறோம். உறுதியாய் நிற்கும்படி தீரமாயுள்ள அவர்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, தேவனுடைய ஆசீர்வாதம் அவர்கள் மேல் தங்கியிருக்கும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். ஒவ்வொரு முயற்சியையும் ஆசீர்வதித்தருளும். கர்த்தாவே, இந்த பள்ளத்தாக்கில் இருக்கிறவர்கள் யாவரும் இங்கு வந்து இளைப்பாறுதலைக் கண்டு கொள்ளும் ஒரு இடமாக இது அமைவதாக. பிதாவே, இதை அருளும். நோயாளிகளுக்கான இந்த சபையின் மேய்ப்பனின் ஜெபங்களுக்கு பதில் அளிக்கப்படுவதாக, ஏனென்றால் அவையாவும் சுவிசேஷ வாக்குத்தத்தத்தின்படி செல்லுகின்றன, அவர்மேல் உம்முடைய ஆசீர்வதங்கள் தங்கியிருப்பதாக. இந்த சபை பரிசுத்தாவியின் எந்த வரத்திலும் குறைவுபட்டு போகாமல் எல்லா சமுதாயத்தாருக்கும் ஒரு எடுத்துக் காட்டான சபை ஸ்தலமாக திகழ்வதாக. கர்த்தாவே, அதை அருளும்.

1426 பிதாவே, இப்பொழுது, இந்த கூட்டத்தில் உட்கார முடியாமல் கட்டில்களின் மேல் படுத்துக் கொண்டும் செய்தியைகேட்டு மகிழ்ந்து கொண்டு, அதே சமயத்தில் அமர்ந்து கேட்கும்படியான சிலாக்கியமும் கூட அற்றவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் இன்றிரவு இங்கு ஏதோ ஒரு வழியில் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். ஓ, தேவனே இரக்கமாயிரும். நானோ, “அது என்னுடைய மனைவியாகவோ, அல்லது என்னுடைய சகோதரனாகவோ அல்லது என்னுடைய உறவினர்களில் யாராவது எனக்கு தெரிந்த ஒருவராக இருக்குமானால் எனக்கு எப்படி இருக்கும்?” என்றே எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் யாரோ ஒருவருடையவராய் இருக்கிறார்கள். பிதாவே, அந்த தேவனுடைய கிருபை அவருடைய வல்லமையோடு இறங்கி வந்து இந்த கட்டில்களில் இருப்பவர்களுக்கு இன்றிரவு தெய்வீக விடுதலையை அளித்தருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இன்றிரவு இந்த கூட்டத்தின் பிறகு அவர்கள் இனி ஒருபோதும் இந்த கட்டில்களில் இல்லாதிருப்பார்களாக. அவர்கள் இங்கிருந்து செல்லும்போது, இந்த கட்டில்களை விட்டு எழுந்து செல்வார்களாக. இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பிய அதே வல்லமை, அவர்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பித்து புதிய சுகத்தையும் பெலத்தையும் மீண்டும் அருளுவதாக. எங்கள் பிதாவே, இதை அருளும். இப்பொழுது, நீர் அதைச் செய்வதாக வாக்களித்தீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். 27 ஆகையால், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவர்கள்” என்றே வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளன. 28 இப்பொழுது, பிதாவே, இந்த கட்டளையின் நினைவாகவே நான் நடந்து செல்கிறேன். நாங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது சந்திக்க முடியாதவர்களாய் எவரும் இல்லாதிருப்பார்களாக. தேவனே, நான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் செல்லுகிறபடியால், இது குணமடைந்தது என்ற ஒரு கடிதத்தை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும்படி நான் எதிர்பார்க்கப் போகிறேன்.

1529 [சகோதரன்.பிரான்ஹாம் கீழே இறங்கி சென்று கட்டில்களில் படுத்திருக்கிறவர்களுக்காக ஜெபிக்கிறார். அவ்வேளையில் சபையார் நம்பிடுவாய் என்னும் பாடலை நான்கு முறை பாடுகிறார்கள். பின்பு அவரும் திரும்பி வந்து பாடுகிறார்.—ஆசி.] …?… கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், ஓ கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், யாவும் கைகூடிடும், கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்; கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், யாவும் கைகூடிடும், கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்.

16இரண்டு பெண்களுக்கும் சதை வளர்ச்சி இருந்தது. அதில் ஒருவருக்கு புற்று நோய். 30 நான் என்னுடைய பேச்சைக் குறைக்க வேண்டுமென்றால் இந்த சிறு சாட்சியை நான் சீக்கிரமாக கூற வேண்டும். நான் வீட்டிலிருந்து புறப்படும் முன் எனக்கிருந்த கடைசி காரியம், அது ஒரு மகத்தானா காரியமாகும். அங்கே ஒரு ஸ்திரீ இருந்தாள். அவளுடைய பெயர் டையர்; அவள், நான் இப்பொழுது அவளது பெயரை மறந்து விட்டேன். லூயிவில்லில் உள்ள மருத்துவர் டையர் அவர்களாகும். ஏ.ஜேம்ஸ், மருத்துவர் ஜேம்ஸ் டையர், சதை வளர்ச்சிகள் போன்று காரியங்களுக்கு அவர் லூயிவில்லில் ஒரு சிறப்பு மருத்துவர். 31 மருத்துவர் காபல் அவர்கள் போதகராக இருக்கும் திறந்த வாசல் சபையில் அவருடைய மகள் இசைப் பேழையை இசைத்தாள். (ஓ), ஒரு மகத்தான பண்டைய யூத தேவலாயம். அந்த மனிதன்தாமே சர்ச் ஆப் கிரைஸ்ட், சர்ச் ஆஃப் கிரைஸ்ட் என்ற ஸ்தாபன சபையை சேர்ந்தவர், அவர் பூரண சுவிசேஷத்தாரின் சுவிசேஷத்தை கேட்டு மனமாற்றமடைந்தவர். மிக அருமையான ஒரு மனிதன். நான் லூயிவில்லில் உள்ள நினைவு அரங்கம் என்ற இடத்தில் கூட்டம் நடத்தியபோது அவள் அங்கு இசைக்கருவி வாசித்தாள். அவள் அங்கு நிகழ்ந்தவைகளைக் கண்டு வியப்படைந்து தன்னுடைய தந்தையாரிடம் அதைக் குறித்து கூற முயன்றாள். 32 அவர் “இதெல்லாம் வெறுமென மனோத்தத்துவம், அந்த ஜனங்கள் இன்னமும் அவர்கள் எப்போது இருந்தது போல சுகவீனமாகவே இருக்கிறார்கள்” என்று சொன்னார். ஆகவே—ஆகவே இதை அவர் நம்பவில்லை.

1733 அவள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, கடைசியில் சபையைவிட்டு சென்று, பாப்டிஸ்டு வேதபாட சாலையிலிருந்து ஒரு பையனை விவாகம் செய்து கொண்டாள். அவனும் முடிவிலே தன்னுடைய விசுவாசத்தை விட்டு விலகிச் சென்று விட்டான். பாப்டிஸ்டுகள் செய்கின்ற விதமாக அவர் ஒரு ஊழியக்காரராக இருக்க பயிற்சி பெற்ற ஒருவராவார். ஆகவே அவர்கள்…கடைசியில் அவன் அதிலிருந்து விலகிப்போய் விட்டான். அவன் பிரசங்கிக்க விரும்பவில்லை. ஆகவே அவர்கள் தங்கள் ஜனங்கள் இருந்த இல்லினாயிஸிலுள்ள ராக்போர்ட் என்ற இடத்திற்கு சென்று விட்டனர். 34 கடைசியாக அவளுக்கு, ஜீன், ஏதோ ஒரு பெண்களுக்குரிய கோளாறு ஆரம்பமானது. தன் தகப்பனாரிடத்தில் பரிசோதித்துப் பார்ப்பதற்காக அவள் லூயிவில்லிற்கு வந்தாள். ஆகவே அவர்கள் பரிசோதித்துப் பார்த்த போது, “சாக்லேட் கட்டி” என்று அழைக்கப்படும் கோளாறு இருப்பதைக் கண்டறிந்தனர். அது பெண்களுக்குரிய சுரப்பியில் இருக்கும். அவளுடைய தந்தை ஒரு பெரிய அறுவை சிகிச்சையின் மூலம் அந்த கட்டிகளை எடுக்கையில், அவர் கட்டிகளின் முழு பாகங்களையும் எடுக்காமல் விட்டிருக்க வேண்டும். ஆகவே கடைசியாக…அவளுக்கு உன்னிப்பாக ஆய்ந்து பார்க்க ஊடுகதிர் நிழற்படத்தையும், நோய் நீக்கல் (Therapy) சிகிச்சையும் அளித்தார்கள். 35 ஆகையால் அதன்பின் அவர்கள்…அவள் பின்பு வீடு திரும்பினாள். ஆயினும் அவளுக்கு அந்த தொல்லை தொடர்ந்து இருந்து வந்தது. 36 ஏறக்குறைய ஒரு ஆண்டிற்குப் பிறகு அவர்கள் மற்றொரு மருத்துவப் பரிசோதனைக்காக அவளைக் கொண்டு வந்தனர். அப்பொழுது அவர்கள் கர்ப்பப்பையை நீக்க அறுவை சிகிச்சை செய்தனர். தென்பாக பெரிய சிறந்த மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் ஹூயும்ஸ் என்பவருடன் சேர்ந்து அவளுடைய தந்தை அறுவை சிகிச்சை செய்து பார்க்கையில் அந்த கோளாறு வரம்புக்கு மீறி முற்றிப் போய் இருப்பதைக் கண்டார்கள். புற்று நோயானது ஏற்கனவே குடல் வாலிலிருந்து மலக்குடல் வரையுள்ள பெருங்குடல் பகுதி முழுவதுமாக மூடி பரவியிருந்தது. ஆகவே சிறிது நேரத்திற்கு அவர்கள் அவளை அப்படியே விட்டுவிட்டார்கள். பிறகு அவர் மறுபடியுமாக ஊடுகதிர் சிகிச்சை முறையை அளித்துப் பார்த்தார். அது எந்த வித நன்மையையும் அளிக்கவில்லை என்பதை அவர்கள் கண்டனர். ஆகவே அவளை மறுபடியுமாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவளுக்கு …அவளுக்கு குடலிளக்க மருந்தை செலுத்தியும் அவளது குடலை செயல்படுத்த முடியாமற் போயிற்று. ஆகையால் குடலைக் கழுவும் அழுத்தக் குழாய் கருவியின் (Enema) மூலமாக அவளது குடலைக் கழுவ முயன்றனர். ஆனால் குடலைக் கழுவும் அழுத்தக் குழாயின் மூலம் செலுத்தப்பட்ட நீர் குடலுக்குள் செல்லவில்லை.

1837 அப்பொழுது அவளுடைய கணவனோ என்னை குறை சொல்பவர்களில் ஒருவராக இருந்தார். ஆகவே கடைசியாக ஒரு நாள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு அவர் வந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கத் துவங்கினார். (இங்கு என்னுடைய மகனும் மற்றும் சகோதரன் சாத்மனும், அவர் தர்மகர்த்தாக்களில் ஒருவர், அவர் இங்கு எங்கோ இருக்கிறார்.) அவளுடைய கணவனோ சபையின் படிகளில் காத்திருந்தார். ஏன், ஏறக்குறைய இரண்டு நாட்கள் அவர் அங்கே இருந்திருக்கிறார். நான்—நான் ஒரு கூட்டத்திற்காக வெளியே சென்றிருந்தேன். திரும்பி வந்ததும், நான்—நான் அவளைப் பார்க்கச் சென்றேன். அப்பொழுது அவளுடைய கணவன் என்னிடம், “இப்பொழுது, அவளுக்கு புற்று நோய் இருப்பது அவளுக்கே தெரியாது. நீங்கள் சென்று அவளிடம் பேசி அவளுக்காக ஜெபியுங்கள்” என்றான். 38 எனவே நான் அவளைக் காண அங்கு சென்றபோது, அவள் என்னிடம், “சகோதரர் பிரான்ஹாம் என்னுடைய கணவர் இப்பொழுது தெய்வீக சுகமளித்தலை ஏற்றுக் கொள்ள போகிறார், ஏனென்றால் முன்பெல்லாம் ஒரு புத்தகத்தையாகிலும் என்னால் வாசிக்க வைக்க முடியவில்லை. இப்பொழுதோ புத்தகங்களில் ஒன்றை எடுத்து நாள் தோறும் என்னிடம் பக்கம் பக்கமாக படிக்கிறார்” என்று கூறினாள்.

1939 அப்பொழுது நான், “ஜீன், எனக்கு அது புரிகிறது” என்றேன். மேலும் நான், “இப்பொழுது ஜீன், நாம் கர்த்தரிடத்தில் பேசி அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்” என்றேன். அப்போது அந்த அறையில் யாருமில்லை. மருத்துவச்சியும் போய்விட்டிருந்தாள். ஆகவே நாங்கள் சிறிது நேரம் பேசினோம். அப்போது கொஞ்ச நேரம் கழித்து எனக்கு ஒரு தரிசனம் உண்டானது. நான்…அவள் ஏறக்குறைய நாற்பது வயதுடையவளாய் இருந்தாள், அதே சமயத்தில் நரை முடியே இன்னும் வரவில்லை. ஆனால் அவள் மிகவும் நரைத்து வயதானவள் போல் இருந்தாள். அப்பொழுது நான் அவளிடம் “ஜீன் நீ பல கூட்டங்களுக்கு வந்திருக்கிறாய்” என்றேன். அதற்கு அவள், “ஆம் “சகோதரன் பிரான்ஹாம்” என்றாள். 40 நான், “அவர்கள் இதை உன்னிடம் கூறாதபடி மறுத்துவிட்டனர், நானும் அதைக் கூறக் கூடாது என்று கூறி விட்டனர். ஜீன், ஆனால் உனக்கு புற்று நோய் உள்ளது” என்றேன். மேலும் நான், “உன்னுடைய தகப்பனும்…இல்லை உன்னுடைய கணவனும், ‘அதைக் குறித்து ஒன்றுமே கூற வேண்டாம்’ என்றார். ஆனால் ஜீன், உனக்கு புற்று நோய் இருக்கிறது. ஆனால், இப்பொழுது நான் உனக்கு கூற விரும்புகிறேன், ஏனென்றால் இப்பொழுது நீ பல கூட்டங்களில் இருந்திருக்கிறாய். ஒரு தரிசனம் ஒரு போதும் தவறினதேயில்லை. ஜீன், நான் உனக்கு கூறப்போகிறேன். அது கர்த்தர் உரைக்கிறதாவது! புரிகிறதா?” என்றேன். பார்த்தீர்களா?

2041 இப்பொழுது, நீ அதைக் குறித்து நிச்சயமாக உண்மையாக இருக்க வேண்டும், பாருங்கள், அது…அது கர்த்தரால் உண்டானது. மனதில் ஏற்பட்ட கருத்தல்ல; நீ அதைப் புரிந்துகொள்வாய் . புரிகிறதா? அப்பொழுது நான், “நீர் பிழைக்கப் போகிறீர். அவர்கள்…அவர்…” என்றேன். 42 அவள், “சகோதரன் பிரான்ஹாம், மருத்துவரான என் தந்தையால் வளர்க்கப்பட்ட எனக்கு என் உடலில் இருந்த நோயைப் பற்றி சந்தேகம் இருக்கத்தான் செய்தது. நான் அதைக் குறித்து சந்தேகித்தேன். அது நான் நினைத்தது போலவே ஆகிவிட்டது” என்றாள். பின்பு நாங்கள் ஜெபித்தோம். 43 அடுத்த நாள், அதாவது இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் பெருங்குடல் இறுதியில் கீறி செயற்கை குதம் ஏற்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கென்று அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அது உங்களுக்குத் தெரியுமா, அதாவது அங்கு பெருங்குடலின் கடை முனையில் கீறி பக்கவாட்டில் ஒரு பையை இணைப்பார்கள். நோயாளி புற்று நோயினால் சாகும் வரையிலும்…இவ்வழியாகத்தான் கழிவை எடுக்க வேண்டும். அந்த சிகிச்சைக்கென அறுவை சிகிச்சை மேஜைக்கு அவர்கள் அவளை ஆயத்தப் படுத்தும்போது அவளுக்குள் ஒரு வித்தியாசமான உணர்வு உண்டானது. அவளோ மருத்துவச்சி வந்து கழிவறையில் அவளுக்கு உதவும்படி கூப்பிட்டாள். அங்கு சென்றபோது அவளுக்கு வயிற்றிலிருந்து முற்றிலுமாக இயற்கையாகவே வெளியேறி விட்டது. அவளுடைய—அவளுடைய கணவனால் அவளுடைய அதனை எளிதாக ஏற்கமுடியவில்லை. இரண்டாம் நாள்…எனவே அவர்கள் அவளை அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லவில்லை. மறுநாளும் காலை உணவிற்கு பின்பு இயற்கையாகவே வயிற்றிலுள்ளவை முழுமையாக வெளியேறிவிட்டன. எனவே அவள்… 44 அவளுடைய மருத்துவர் அழைக்கப்பட்டார். அப்பொழுது அவர் விம்மியழது, “என்னாள் இதை புரிந்து கொள்ள முடியவில்லை, எங்களால் அதைக் குறித்த நோயின் ஒரு அறிகுறியைக் கூட அவளிடம் கண்டறிய முடியவில்லையே. அது குணமாகிவிட்டதே” என்றார்.

2145 இப்பொழுது, இப்பொழுது, என்னுடைய விலையேறப் பெற்ற சகோதரிகளே, கிறிஸ்துவின் ஊழியக்காரனாக இங்கே நின்று தவறான ஒன்றை சொல்லுவதற்கு எனக்கு எந்தக் காரணமும் இல்லையே. ஏனென்றால் அந்த நாளில் நான் நியாயம் தீர்க்கப்பட்டு, ஒரு மாய்மாலக்காரனாக தள்ளுண்டு போவேன். 46 இப்பொழுது, தேவனுடைய வார்த்தை திறந்திருப்பதோடு கூறுகிறேன், நான் உங்களுக்காக ஜெபித்ததைக் காட்டிலும் உத்தமமாக நான் ஜீனுக்கு ஜெபிக்கவில்லை. பாருங்கள்? விசுவாச ஜெபம் ஜெபிக்கப்பட்டது என்று அறிந்தே நாங்கள் வந்து விட்டோம். அதுவே அதனை அங்கே சரியாக தீர்த்து வைக்கிறது. பாருங்கள், “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கும்” என்றே தேவனுடைய வார்த்தை உரைத்துள்ளது.

2247 இப்பொழுது, அதே தேவன் தான் மருத்துவர் டையரினுடைய மகள் ஜீனையும் சுகப்படுத்தினார்…இப்போது அவளுடைய பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் அந்த மனிதன் நிச்சயமாக பூரண சுவிசேஷத்தை தழுவியிருக்கின்றார். சென்ற முறை நான் இங்கு சபையில் பிரசங்கம் செய்த போது அவர் அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். நம்மோடு இராப்போஜனம் எடுத்தார், மற்றுமுள்ள காரியங்களிலும் கலந்து கொண்டார். பாப்டிஸ்ட் சபை வேதாகம கல்லூரியின் மாணவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக கர்த்தரிடத்தில் வந்திருந்தார். இப்பொழுது, தேவன் தேவனாக இருக்கிறார் என்பதை இது காண்பிக்கிறது. 48 ஒரு மருத்துவரான அவளுடைய தகப்பனார், அழகான மனிதன், ஆனால் அந்த விதமாக சம்பவிக்கிற எந்தக் காரியத்தையும் அவர் ஒரு போதும் கண்டதேயில்லை. 49 இப்பொழுது, தேவன் எல்லா காரியங்களுக்காகவும் ஒரு நேரத்தை வைத்திருக்கிறார். விசுவாசிக்கிறபடியால் நீங்கள் இருவரும் விசுவாசிகள். சில வேளைகளில் இந்தக் காரியங்கள் நன்மைக்கென்றே நடக்கின்றன. உங்களுக்குத் தெரியும், வேதம், “சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது” என்று கூறியுள்ளது. 50 இப்போது யோபு அவனுடைய எல்லா சோதனைகளையும் நினைத்துப் பார்த்தீர்களா? இப்பொழுது, அது தேவன் யோபுவை தண்டிக்கவில்லை. ஆனால் அது தேவன் தம்முடைய ஊழியக்காரணை அங்கீகரித்தல் ஆகும். ஆகவே அவை எல்லாம் நன்மைக்காகவே நடந்தன. நீங்கள் பாருங்கள். யோபுவின் புஸ்தகம் எல்லா தலைமுறையினருக்கும் ஒரு சாட்சியாக இருக்க வேண்டுமென்றே எழுதப்பட்டது. இப்போதும், தேவன் நன்மைக்கேதுவாக கிரியை செய்கின்றார். 51 நான் என்னுடைய முழு இருதயத்தோடும், விசுவாச ஜெபத்தை ஏறெடுத்தேன் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசித்தால் அது ஆகும். காரியம் அப்படியே ஆகும். அப்படியே முடிவுகளுக்காக மாத்திரம் காத்திருங்கள்.

2352 இப்போது இந்த மாலை வேளையில் நேராக செய்திக்கு, ஒரு சிறு செய்திக்குப் போவோம், (அநேகர் நின்று கொண்டிருக்கிறார்கள்) 53 ரமாதாவில் நடைபெறப் போகும் கூட்டங்களில் இம்முறை அருமையான பிரசங்கிமார்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே ரமாதாவில் வியாபாரிகள் சங்கம் நடத்தும் கூட்டங்கள். ஆகவே இந்த கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அங்கே இரவு விருந்தில் சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் இருக்கப் போகிறார். 54 இப்பொழுது, டூஸ்ஸானில் ஒரு சிறு பகுதியில், அடுத்த திங்கட்கிழமை இரவு இது போன்ற ஒரு கூட்டத்தை நடத்தப் போகிறேன். நீங்கள் அப்போது அங்கு வர நேர்ந்தால் அந்த கூட்டத்திற்கும் வாருங்கள். அப்படியென்றால் நீங்கள் …சிறிது நேரத்திற்கு என்னுடன் நீங்கள் சற்று அவதியுற வேண்டும். ஏனென்றால் நான் அதைப் பற்றி பேசித்தான் ஆக வேண்டும். டூஸ்ஸானிலுள்ள ரமாதா பயணிகள் விடுதியில் அடுத்த திங்கள் கிழமை இரவு அக்கூட்டம் நடைபெற உள்ளது. உண்மையாகவே, டூஸ்ஸானிலுள்ள வெளிப்புறத்தில் பீனிக்ஸ் உள்ளது என்று நம் எல்லோருக்கும் தெரியும். நாம் யாவரும் அதை அறிவோம், நீங்கள் பருங்கள், ஆகவே—ஆகவே மலைப்புறங்களில் வாழும் மக்கள் எவ்விதமாய் வாழ்கிறார்கள் என்பதை அங்கு வந்து பாருங்கள்.

2455 இப்பொழுது நாம் நம்முடைய வேதாகமங்களில் உள்ள சகரியா 14-ம் அதிகாரம், 6-வது மற்றும் 7-வது வசனத்துக்குத் திருப்புவோம். நான் பேச விரும்பும் பாடத்திற்காக இந்த சிறு பகுதியை நான் இதிலிருந்து…எடுத்து வாசிக்க விரும்புகிறேன். அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒரு வேளை பிரகாசமும் ஒரு வேளை மப்புமாயிருக்கும். ஒரு நாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். 56 நான் இப்பொழுது இதிலிருந்து சாயங்கால செய்தியாளன் என்னும் ஒரு பாடப் பொருளில் பேச விரும்புகிறேன். சாயங்கால செய்தியாளன் . உண்மையாகவே நமக்கு செய்திக் கொண்டு வருபவர்கள் நாள் முழுவதும் வரலாம். இந்நாளைக் குறித்து அவர் உரைத்தபடியே அநேக செய்தியாளர்கள் உள்ளனர். ஆனால் அங்கே ஒரு சாயங்கால செய்தி என்பது வருகின்றது. இன்றிரவு ஒரு ஞாயிறு பள்ளி பாடத்தைப் போன்ற ஒரு விதத்தில் நாம் அதை நோக்கிப் பார்த்து சற்று நேரம் பேச விரும்புகிறோம்.

2557 இப்பொழுது, சகரியா இங்கே எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஏனென்றால் அவன் “ஒரு நாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது. அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்” என்று கூறினான். இப்பொழுது, அது பகலுமல்ல அல்லது இரவும் அல்ல என்பதை நாம் அறிந்திருப்போமானால் அது ஒரு—ஒரு—ஒரு இருளார்ந்த நாளாயிருக்கும். தெளிவில்லாத ஒரு விதமான மூடுபனி மிகுந்த நாளாய் இருக்க வேண்டும். 58 கிழக்கிலிருந்து நாகரீகம் மேற்கு நோக்கி பயணம் செய்தது என்பதை நாம் யாவரும் அறிவோம். நம்மிடையே இருப்பதில் மிகப் பழமையான நாகரீகம் சீன நாகரீகம் ஆகும். நாகரீகமானது சூரியனை பின்பற்றி கிழக்கிலிருந்து புறப்பட்டு மேற்க்கில் வந்து இப்பொழுது நம்முடைய மேற்கு கடற்கரையோரத்தில் இருக்கிறது. இன்னும் சற்று செல்வோமானால் நாம் மீண்டும் கிழக்கை அடைவோம், பாருங்கள். ஆகையால் நாம் இப்பொழுது பாதையின் கடைசியில் இருக்கிறோம்.

2659 நாம் சபையாக இருக்கிற காரணத்தால் சுவிசேஷம் ஏறக்குறைய முடிவுற்றிருக்கிறது என்றே விசுவாசிக்கிறோம். காலங்கள் தோறும் வந்த மகத்தான செய்தியாளர்கள், இந்த கடைசி நாட்களிலும், கடந்த பல நூறு ஆண்டுகளாக இந்த மகத்தான காரியங்களுக்காக போராடியிருக்கிறார்கள் என்று நாம் விசுவாசிக்கிறோம். லூத்தர், விசுவாசத்தால் நீதிமானாக்கப்படுதல், மற்றும் வெஸ்லியின் பரிசுத்த மாக்கப்படுதல், மற்றும் பெந்தெகோஸ்தேகாரர்களினால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அந்த மூல தத்துவங்கள் இயற்கையானதைப் போன்ற ஆவிக்குரிய சரீரத்தை நிறைவுபடுத்துகிறது என்று நாம் விசுவாசிக்கிறோம். 60 எப்பொழுதும் போல ஒரு குழந்தை பிறக்கும்போது முதலாவதான காரியம் என்ன? முதலில் தண்ணீரும், பின்பு இரத்தமும்; அதன் பின்பு ஜீவனும் வெளிப்படுகின்றன.

2761 I யோவான் 5:7, “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே. இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். ” நீங்கள் குமாரனைக் கொண்டிராமல் பிதாவைக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிராமல் குமாரனைக் கொண்டிருக்க முடியாது. பாருங்கள், அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். “ஆனால் பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று. ஆவி, ஜலம், இரத்தம்; இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. இவைகள் ஒன்றாயிருக்கவில்லை. ஆனால் அவைகள் ஒருமைப்பட்டிருக்கின்றன . புரிகிறதா? 62 இப்பொழுது, நீங்கள் பரிசுத்தமாக்கப்படாமல் நீதிமான்களாக்கப்படலாம்; நீங்கள் பரிசுத்த ஆவியில்லாமல் பரிசுத்தம் பண்ணப்படலாம். புரிகிறதா? ஆவியிலே, கிறிஸ்துவின் வல்லமையின் பிரசன்னம் குடிகொள்ளுதலே பரிசுத்த ஆவியாகும். இப்பொழுது, இயற்கையானது ஆவிக்குரியதை ஒப்புமையாக்குகிறது என்று நாம் காணலாம். ஆகவே சபையானது இப்பொழுது முழு முதிர்ச்சியுடன் இருக்கிறது. நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். நாம் இப்பொழுது நம்முடைய சொந்த சபையில் தான் ஏழு சபைக் காலங்களைப் பார்த்தோம். அது அழகாக ஒப்பிட்டுக் காட்டுகிறது.

2863 சபைக் காலங்களைக் குறித்த ஒலிநாடாக்களை யாராவது கேட்டிருக்கிறீர்களா? சென்ற முறை அக்காலங்களைக் குறித்து கரும்பலகையில் வரைந்து காண்பித்தேன். பரலோகப் பிதா அதை உண்மை என்று அறிவார். தேவன் எனக்களிக்கும் ஆவியின் ஏவுதலின்படி சிறந்த முறையில் என்னால் முடிந்த வரையில் நான் அவைகளை வரைந்து முடித்த போது, நீங்கள் படத்தில் காண்கிறவாறே (அநேகர் அந்த புகைப்படத்தைப் பார்த்துள்ளனர். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா, அந்த ஒளி?) கர்த்தருடைய தூதன் சுமார் முந்நூறு அல்லது நானூறு பேர்களுக்கு முன்பாக அறைக்குள் நேராக வந்து சுவற்றின் பக்கத்தில் நேராகச் சென்று (அந்த ஒளியைப் போன்றே) சபையின் காலங்களின் படத்தை வரைந்தார். நாங்கள் எல்லோரும் நின்று கொண்டு, முதலாவது சபையின் காலம், இரண்டாம், மூன்றாவது, நான்காம், ஐந்தாம், ஆறாம் ஏழாம் சபையின் காலத்தை வரைந்ததைப் பார்த்தோம்.

2964 இப்பொழுது, அதைப் பார்த்த சில ஜனங்கள் இங்கே ஒரு சாட்சியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வண்ணமாய் அதைப் பார்த்தவர்கள் உங்களுடைய கைகளை உயர்த்துங்கள். வேதம், “இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்” என்று உரைத்துள்ளது. 65 அங்கு உட்கார்ந்திருந்தவர்கள் எல்லோருமே கூச்சலிட்டனர். அப்பொழுது நான், “அதோ அங்கே உள்ளது! இப்பொழுது, நீங்கள் அதைப் பார்க்க விரும்பினீர்கள்; ஒவ்வொருவரும் அதை நேராக பார்க்கலாம்” என்று கூறினேன். பகல் பதினொரு மணிக்கு அங்கு நின்று அந்த சபைக் காலங்களை அந்தச் சுவரில் வரைந்தது. முதலில் ஆவி நிறைந்த காலத்திலிருந்து ஆவி புறக்கணிக்கப்பட்ட இருண்ட காலம் வழியாகச் சென்று பின்பு சரியான வழியில் திரும்பி வந்தது. அது நான் வரைந்திருந்த படம் போலவே இருந்தது. நான் வரைந்த அந்தப் படத்தை நாங்கள் சுவரில் தொங்கவிட்டிருக்கிறோம். அது சரியாக அதே விதமாகவே இருந்தது. அது வரைந்து முடிக்கப்பட்டபோது கார்த்தருடைய ஆவியானவர் அதில் திருப்தியடைந்தவராய் இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் திரும்பி வந்து, அது சரியாயிருந்தது என்பதை ரூபகாரப்படுத்தினார். 66 தாங்கள் நிர்வாணிகளாயிருந்தும், பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருந்தும், குருடர்களாயிருந்தும் அறியாது தாங்கள் எதற்கும் குறைவுபட்டவர்கள் அல்ல என்று கருதும் ஐஸ்வரிய சபையான லவோதிக்கேயா சபைக் காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது, அவை யாவும் மாதிரியாயுள்ளன.

3067 இப்பொழுது, கிழக்கில் உதிக்கின்ற அதே சூரியன்தான்…மேற்கில் மறைகிறது. இப்போது இந்த செய்தியின் பிண்ணணியைக் கூற சிறிது நேரம் நாம் நிறுத்திக் கொள்ளுவோமாக. இந்த சூரிய குடும்பத்தில் இருக்கிற சூரியனை நாம் அறிவோம். தேவனுடைய ஞானத்தின்படியே தேவக்குமாரன் கிழக்கிலே தேவனுடைய ஒளியாகத் தோன்றினார். நாம் இப்பொழுது இரண்டாயிரம் வருடத்திற்கு பிறகு இருக்கிறோம். தேவனுடைய ஆழ்ந்த சிந்தனையினால், அவர், “ஒரு நாள் உண்டு. அது பகலும் அல்ல இரவும் அல்ல. அது ஒரு விதமான மந்தகாரமான நாளாயிருக்கும். ஆனால் சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” என்று கூறினார்.

3168 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், பரிசுத்த ஆவியானவர் முதலில் கிழக்கில் உள்ள மக்கள் மேல் இறங்கினார். அதன்பிறகு சபைகள் இணைக்கப்பட்டு, விடப்பட்ட சிறு முணைகள் அடைக்கப்பட்டு, சண்டையிட்டிருந்த சிறு காரியங்கள் சரி செய்யப்பட இருந்தது. அதன் பிறகு உலகத்தின் மேற்கு பாகத்தில் சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும். நாம் இப்பொழுது அந்த நேரத்தில் தான் இருக்கிறோம். நாகரீகம் கிழக்கில் ஒரு பெரிய நிலப் பிளவைப் போல தோன்றி காலப் போக்கில் எல்லாப் பாவங்களையும் கொண்டு வந்து மேற்கு கரையை, கடலிடுக்கை வந்து மோதினது. எனக்கு தெரிந்தவரை மேற்கு கரை தான் மிகவும் சீர்கேடான ஓர் இடமாகும். அவள் விழுந்து போனாள். நீங்கள் நினைக்கின்ற எந்த காரியமானாலும், பாவம், ஒழுக்கக் கேடு, விவாகம், விவாகரத்து, நரகத்தின் திறப்பிடமான ஹாலிவுட் என்ற நவ நாகரீக திரைப்படத் துறை ஆகியவை அவர்களுக்கு உள்ளன. அது முற்றிலும் சரி.

3269 நான் வேதாகம அசலான பரிசுத்தத்தில் விசுவாசம் உள்ளவன். நம்முடைய மக்களுக்கு முன்னால் ஒரு உதாரணமாக இருக்கும் ஹாலிவுட் என்ற நவ நாகரீக திரைப்படத் துறை என்று அழைக்கப்படுகின்ற இந்த அழுகிப் போன காரியத்தில், ஒழுக்கக் கேட்டில் நான் நம்பிக்கை கொள்வதில்லை. நான் எப்பொழுதுமே அதற்கு எதிராக இருக்கிறேன். தேவனுடைய ஆவியை தன்னில் கொண்டுள்ள ஒரு மனிதன் அதற்கெதிராகவே இருப்பான் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் தேவனுடைய ஆவி, “அது தவறு” என்று அவனிடம் சாட்சி பகரும். 70 இப்பொழுது நான் நினைக்கிறேன். அது ஒரு …நம்முடைய பெண்களை நிர்வாணிகளாக்க, முன்பெல்லாம் விளம்பரத்திற்கு வேண்டிய நிர்வாணப் பெண்களுக்காக, நாம் பாரீஸ் நகரத்திற்கு சென்று கொண்டிருந்தோம், ஆனால் இப்பொழுதோ நம்முடையதைப் பெற்றுக் கொள்ள பார்ஸில் உள்ளவர்கள் இங்கு வருகிறார்கள். பார்த்தீர்களா? ஹாலிவுட் உலகத்தை வழி நடத்துகிறது. பிரான்ஸ் நாட்டை மிஞ்சத்தக்கதாக இன்றைக்கு நம்மிடையே உள்ள நிர்வாண நாகரீகம் (அதைக் குறித்து நினைத்துப் பாருங்கள்) அந்த குடி வெறி, சண்டையிடுதல், சீர்கேடான ஒரு இடம், ஆனால் அதே சமயத்தில் அவை எல்லாவற்றையுமே ஹாலிவுட் என்ற திரைப்பட நவ நாகரீகத் துறையானது மிஞ்சி விடுகிறது. 71 நம்முடைய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிற எல்லா காரியங்களும் தணிக்கை செய்யப்படாத கீழ்த்தரமான நகைச்சுவைகளாய், அழுகிப் போன ஒழுக்கக் கேடான காட்சிகளாய்த் தான் உள்ளது. அது எல்லாவற்றிற்குள்ளும் புகுந்து கொண்டிருக்கிறது. ஆகவே மக்கள், அந்த பிசாசு…ஆதி பெந்தெகோஸ்தே மக்களாகிய நாம் அநேக வருடங்களுக்கு முன் நம்முடைய பிள்ளைகளை திரைப்படத்திற்கு செல்வதற்கு கூட நாம் அனுமதிக்க மாட்டோம். ஆனால் இப்பொழுதோ பிசாசு மெல்ல நழுவி நம் வீடுகளுக்குள் அதைக் கொண்டு வந்து வைத்து விட்டான். உங்களுக்குப் புரிகிறதா? ஆகவே அவன் திரைப்படக் காட்சிகளை நேராக வீடுகளுக்குள்ளேயே கொண்டு வந்து விட்டான்.

3372 இப்பொழுது, உலகமானது இத்தகையா சீர்கேட்டிற்குள் சென்று விட்டதை நினைக்கும் போது அது—அது மிக பயங்கரமான ஒரு காரியமாக இருக்கிறது, ஏனென்றால் எல்லா வித குப்பைக் கூளங்களும், நீங்கள் பாருங்கள், நாகரீகத்தோடு சேர்ந்து இவ்வழியாக மிதந்து வந்து விட்டன. 73 ஆனால் எல்லா நேரத்திலும்…கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் ஒரு சில நாட்களில், “ இறங்கு வரிசையில் எண்ணுதல் ” என்பதன் பேரில் நான் ஒரு செய்தியை பிரசங்கிக்கப் போகிறேன். உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் சுற்றிப் பார்க்கும் போது, எனக்குத்—எனக்குத் தெரியும், அங்கே என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம்—நாம் காண்கிறோம். இந்தக் காரியங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, எல்லா நேரத்திலுமே, நீங்கள் பாருங்கள், தேவன் தம்முடைய சபையில் ஏதோ ஒன்றை செய்யக் கூடியவராக இருந்து வருகிறார். நாம் இப்பொழுது கடைசி காலத்தில் இருக்கிறோம். கர்த்தருக்கே நன்றி!

3474 ஒவ்வொரு காலமும் தன்னுடைய செய்தியையும், செய்தியாளனையும் பெற்றிருந்தது. தேவன் அவ்வாறு நிகழ்ந்தேறும்படி தீர்மானித்திருந்தார். ஒவ்வொரு …சபை காலங்களிலும் கூட, ஒவ்வொரு சபையும் ஒரு செய்தியாளனைப் பெற்றிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் காலத்திலே ஜீவித்தனர்; ஆகவே வேறொருவன் உள்ளே வந்தபோது; இவன் வெளியே சென்றான்; பிறகு வேறொருவன் உள்ளே வந்தான்; அப்படியே ஏழாம் சபை காலம் வரை தொடர்ந்து வந்தது; ஒவ்வொரு நட்சத்திரம், ஒவ்வொரு சபையின் தூதன், ஒவ்வொரு செய்தியாளனும் வந்தான். 75 வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தின் 10-ஆம் அதிகாரத்தில் கடைசி சபையின் காலத்தில் ஒரு எக்காள முழக்கமும், சத்தமிடுகிற ஏழு சத்தங்களும் முழங்கினது என்பதை…நாம் கண்டறிகிறோம். அவைகள் எழுதப்படுவதற்கு அனுமதிக்கப்பட வில்லை. ஆனால் ஏழு முத்திரைகள் புத்தகத்தின் பின்புறத்தில் இருந்தன, அது புத்தகத்தின் பின் புறத்தில் முத்தரிக்கப்பட்டிருந்தது. அந்த புத்தகம் எழுதப்பட்டபின் அங்கே அது புத்தகத்தின் பின்புறத்தில் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டது. அவைகள் என்ன என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால், அதுவோ, “ஏழாம் தூதன் தன்னுடைய செய்தியாகிய எக்காளத்தை தொனிக்கும் நாளிலே” என்று கூறப்பட்டுள்ளது. அது இப்பொழுதுள்ள பூமிக்குரிய தூதன். 76 ஏனெனில் இந்த தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்தான். இது பூமியில் நடந்தது. தூதன் என்பவன் “ஒரு செய்தியாளன்” அந்த காலத்துக்குரிய செய்தியாளன்.

3577 அந்த தூதனின் தலைக்கு மேல் வானவில்லிருந்தது என்பதை நாம் கவனிக்கிறோம். அந்த தூதன் தன் கைகளை உயர்த்தி இனி காலம் செல்லாது என்று சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர் மேல் ஆணையிட்டு கூறினான். (இந்த ஏழு சத்தங்களும் ஒலித்த போது ஏழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கின). அப்பொழுது அவர் “இவைகளை எழுதாதே, முத்திரை போட்டு வை” என்று கூறினார். அது புத்தகத்தின் பின்புறத்தில் இருந்ததை நாம் கண்டறிந்தோம். 78 “ஆனால் ஏழாம் தூதன் தன்னுடைய செய்தியை, அந்த நாளிற்குரிய தன் தீர்க்கதரிசனத்தை கூறி முடிக்கையில், தேவ இரகசியம் யாவும் நிறைவேற வேண்டும்,” என்று வேதம் கூறுகிறது என்பதை எல்லோரும் அறிவார்கள். “தேவ ரகசியம், தேவன் என்றால் என்ன? தேவன் எனப்படுவது யார்? மற்றும் ஞானஸ்நானத்தைக் குறித்த காரியங்களும் மற்ற காரியங்களும் அந்த நாளிலே இவையாவும் தீர்த்து வைக்கப்பட வேண்டியதாயுள்ளது.

3679 ஒவ்வொரு செய்தியாளனும் தன்னுடைய செய்தியை கொண்டிருந்தான். அந்தந்த காலத்திற்குரிய செய்தியும் செய்தியாளனும் …மிகச் சிறந்த ஒரு காரியம் என்னவென்றால் ஒவ்வொரு செய்தியாளனும் …தேவன் அந்தந்த காலத்திற்குரிய செய்தியாளனை அந்த காலத்தின் கடைசி நேரத்திலே தான் அனுப்பினார் என்பதை நாம் சபையின் காலங்களின் மூலமாகப் பார்த்தோம். காலத்தின் துவக்கத்தில் அல்ல, எப்பொழுதுமே முடிவில், முடிவில் (இன்றிரவு நாம் பழைய ஏற்பாட்டிற்குச் சென்று, அதேக் காரியம் தான் அங்கும் இருப்பதை நாம் கண்டறிவோம்.) 80 இப்பொழுது, லூத்தரின் காலம் மறைந்து கொண்டிருக்கையில், அப்பொழுது வெஸ்லி உள்ளே வந்தார். வெஸ்லியின் பரிசுத்தமாக்கப்படுதல் மறைந்த பின்பு பெந்தெகோஸ்தேயின் காலம் வந்தது. பார்த்தீர்களா? கடந்து போகப் போகிற காலத்தின் கடைசியில் தான் எப்பொழுதுமே ஒரு செய்தியாளன் வந்து ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்துகிறான் என்பதைக் கவனியுங்கள். ஒவ்வொரு காலத்திலும் அவ்விதமாகவே நடந்தது. அது உண்மை என்பதை நாம் அறிவோம்.

3781 வேதாகமம் முழுவதும், ஒவ்வொரு சமயத்திலும் இது தான் திரும்பத் திரும்ப சம்பவித்துள்ளது. பழைய காலம் முடிவுறுகின்ற நேரத்தில் புதியதான ஒன்று தோன்றுவதையும், அந்த பழையகாலம் மறைகின்ற போது, புதிய காலம் தோன்றுவதையும், தேவன் அப்பொழுது செய்தியாளனை அனுப்புவதையும் இந்த பரிசுத்த வேத வசனங்கள் முழுவதிலும் நாம் கண்டறிகிறோம். 82 ஆகவே, எப்பொழுதுமே—எப்பொழுதுமே ஒவ்வொரு சமயத்திலும் ஒரு செய்தியாளன் வரும்போது எப்பொழுதுமே தவறிப் போகாத வார்த்தைக்கு திரும்பவும் வரும்படிக்கு அழைக்கிறான். இது இயேசு கிறிஸ்துவினுடைய முழு வெளிப்பாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதிலிருந்து ஒன்றைக் கூட்டவோ அல்லது எடுத்துப் போடவோ முடியாது. இது இயேசு கிறிஸ்துவினுடைய முழு வெளிப்பாடு ஆகும். இதைக் குறித்து எப்பொழுதுமே நாம் நிச்சயமாக இருப்பதற்கான ஒரே வழி …இந்த வெளிப்பாட்டைக் குறித்ததான முரண்பாடான ஒரு காரியம் நம்மிடையே எழும்புமானால், அது தவறானதாகும். பாருங்கள்? அது “வார்த்தைக்கு திரும்புங்கள்” என்று எப்பொழுதுமே திரும்ப அழைப்பதாகும்.

3883 வேதத்திலுள்ள ஒவ்வொரு காரியத்திலும் ஒவ்வொரு காரியத்திலும், அந்தந்த காலத்தை திரும்பவுமாக அழைக்க எப்பொழுதுமே தேவன் ஒரு தீர்க்கதரிசியை உபயோகிக்கின்றார். அவர் எந்த ஒரு சமயத்திலும் தவறினதேயில்லை. அவர் எப்பொழுதுமே ஒரு—ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகின்றார். ஆகையால் இப்பொழுது ஏன் அவர் அவ்விதம் செய்கின்றார்? காரணம் வேதம், “தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வருகின்றது” என்று கூறுகிறது. அந்த வார்த்தையை வெளிப்படுத்துபவனிடத்தில் வருகின்றது. 84 இப்பொழுது, நான் தவராக புரிந்து கொள்ளப்படவில்லை என்று நான்—நான்—நான் நம்புகிறேன். புரிகிறதா? நான் தவறாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் நான் கருதவில்லை. ஆனால் அழைப்புக்கு நான் உண்மையும் உத்தமுமாயிருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். நாம் அவ்விதம் இருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

3985 இப்பொழுது, தேவன் எப்பொழுதுமே ஒரு—ஒரு தீர்க்கதரிசியை, ஒரு மனிதனை உபயோகிக்கின்றார். நீங்கள் ஒரு கூட்டம் மனிதரை பயன்படுத்துவீர்களானால் பலவிதமான கொள்கைகளைப் பெறுவீர்கள் (பாருங்கள்?) ஒவ்வொரு மனிதன், இரண்டு மனிதன். எப்பொழுதுமே பூமியில் இரண்டு பெரிய தீர்க்கதரிசிகளை ஒரே சமயத்திலே அவர் கொண்டிருந்ததே கிடையாது. அவர் ஒருவனை எடுத்து விடுகிறார். ஆகையால் அடுத்த நாளிற்குரிய, வேறொரு செய்தியுடன் அந்த ஸ்தானத்தை அடுத்தவன் எடுத்துக் கொள்ள இயலும். எப்பொழுதுமே அவர் இரண்டு பேரைக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொருவரைத்தான் அவர் உடையவராயிருப்பார். 86 ஆகையால் முடிவில்லாத தேவன் தமது திட்டத்தை ஒருபோதும், மாற்றுகிறதில்லை. அவர் எதைக் கொண்டு தொடங்கினாரோ எப்பொழுதுமே அதில்தான் கண்டிப்பாக அவர் நிலைத்திருக்க வேண்டும். அந்தக் காரணத்தால் தான் அவர் என்ன கூறுகின்றாரோ அதன் பேரில் நாம் நம்பிக்கை வைக்க முடிகின்றது. அவர் மாறமுடியாது. தேவனில் கொண்டிருக்கும் ஒரு மனிதனுடைய விசுவாசத்தின் அடிப்படையில் அவர் ஒரு மனிதனை இரட்சித்தார் என்றால், அடுத்த மனிதனும் அவ்விதமாகவே இரட்சிக்கப்பட வேண்டும்.

4087 தேவன் தம்முடைய சிருஷ்டிகளிடம் ஐக்கியம் கொள்வதற்காக ஒரு நிலையை அமைத்தபோது, ஆதாம் தனக்குத் தானே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள முயன்றான், தனக்கும் தன் மனைவிக்கும் அத்தி இலைகளால் இடைக்கச்சைகளை செய்தான். தேவனோ அதைப் புறக்கணித்துவிட்டார். ஆகவே எந்த அடிப்படையில், அல்லது எந்த செயல் முறையில் மனிதனை சந்தித்து அவனுடன் ஐக்கியம் கொள்ள வேண்டும் என்று தேவன் தீர்மானித்திருந்தார் என்றால், அது சிந்தப்பட்ட இரத்தமே ஆகும். அதை அவர் ஒரு போதும் மாற்றவேயில்லை. 88 இப்பொழுது மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளுமாக நாம் ஒருவருடைய கரங்களை ஒருவர் கரங்குலுக்கிக் கொள்ளலாம். ஆனால் அடிப்படையாக மெதோடிஸ்டாக இருப்பதாலும், பாப்டிஸ்டாக இருப்பதாலும் நமக்கு பொதுவானது ஒன்றும் கிடையாது. நான் பாப்டிஸ்டுகளுக்காகவும், நீங்கள் மெத்தோடிஸ்டுகளுக்காகவும் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. ஆனால் எல்லா விசுவாசிகளும் தான் சந்திக்கத்தக்கதாக ஒரே ஒரு அடிப்படை தான் உண்டு. அது சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் மாத்திரமே ஆகும். அங்கே தான் நாம் சந்தித்து இவ்வெல்லாக் காரியங்களையும் அப்புறப்படுத்துகிறோம். ஆகையால் நாம் எல்லாரும் ஒரு அமைப்பாக வரமுடியாது. நாம் அதைச் செய்ய முடியாது.

4189 இந்த சிறு அமைப்புகளில் தேவன் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். முழுகாரியத்திலும் ஆனால் மக்கள்…ஏனெனில் நாம் வித்தியாசப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் பலவித கோணங்களில் பார்க்கிறான். இரண்டு மனங்கள் சரியாக ஒன்றுபட்டிருக்காது. இரண்டு நபர்கள் தாங்கள் பரிபூரணமாக ஒன்றுபட்டிருக்கிறோம் என்று அவர்கள் உரிமைக்கோரிக்கொண்டாலும், அவ்விதமாக இருப்பதில்லையே. இரண்டு மூக்குகள் ஒன்றாக இருப்பதில்லை. இரண்டு பெருவிரல் சுவடுகள் ஒன்றாய் இருப்பதில்லை. பாருங்கள்; நாம் வித்தியாசப்பட்டவர்களாய் உண்டாக்கப்பட்டிருக்கின்றபடியால், அந்தவிதமாகவே நம்மிடையே வித்தியாசப்பட்ட அமைப்புகளும், குழுக்களும் இருந்ததாக வேண்டும். 90 ஆனால் தேவன் எப்பொழுதுமே ஒரு தனிப்பட்ட நபருடன் கிரியை செய்கின்றார். நீங்கள் மெதோடிஸ்டு ஆக இருப்பதினால் தேவன் உங்களை இரட்சிக்கவில்லை; நீங்கள் பாப்டிஸ்டாக இருப்பதினால் தேவன் உங்களை இரட்சிக்கவில்லை; நீங்கள் பெந்தெகொஸ்தேயினராக இருப்பதினால் உங்களை இரட்சிக்கவில்லை. அவர் உங்களோடு தனிப்பட்ட முறையில் ஈடுப்பட்டதினால் உங்களை இரட்சிக்கிறார். நீங்கள் அதை ஏற்றுக் கொண்டீர்கள் என்கிற அடிப்படையில் நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆதலால் தேவனால் உங்களுடன் ஈடுபாடு கொள்ள இயலும். தன்னுடைய சபையின் கட்டளையின்படி அவர் உன்னுடன் ஈடுபடுவதில்லை. ஒரு தனிப்பட்ட நபராகவே அவர் உங்களோடு ஈடுபடுகின்றார். 91 ஆதலால் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளை, பழைய, புதிய ஏற்பாட்டு தம்முடைய செய்தியாளர்களை அனுப்புகையில், அவர் ஒரு மனிதனுடன் பேசுவார். அந்த மனிதன் செய்தியை கொண்டு வர வேண்டியதாயிருந்தது. மற்றவர்கள் அவனிடமிருந்து அதே செய்தியை எல்லாவிடங்களிலும் கொண்டு சென்றனர். ஆனால் தலைமை அலுவலகம் ஒன்று இருந்தாக வேண்டியதாயிருந்தது. தேவன் அதை எப்பொழுதும் வைத்திருக்கிறார். இன்றிரவு அவர் அதை கொண்டிருப்பதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவர் தான் பரிசுத்த ஆவியானவர், உண்மையாகவே, நாம் எல்லோரும் அதை உண்மையாகவே அறிவோம். இப்பொழுது சில குழுக்கள் அல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய தலைமை அலுவலகம் ஆகும். அந்த மணி நேரத்திற்குரிய தேவனுடைய செய்தியாளன் ஆகும்.

4292 இப்பொழுது, ஏனென்றால் தேவனுடைய வார்த்தை எப்பொழுதுமே தீர்க்கதரிசியினிடத்தில் வரும். வார்த்தைக்குரிய உண்மையான தீர்க்கதரிசியாக அவர்கள் இருப்பார்கள் என்றால், தேவன் அந்த தீர்க்கதரிசியினால் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்துகிறார். 93 இப்பொழுது, அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் இருந்து வந்திருக்கின்றனர். காலங்கள்தோறும் நாம் அநேக கள்ள கள்ளத் தீர்க்கதரிசிகளை கொண்டிருந்தோம். நாம் பழைய ஏற்பாட்டிற்கு திரும்பிச் செல்வோமேயானால், அவர்கள் எழும்பி கர்த்தருடைய நாமத்தில் பேசினார்கள், உரைத்தார்கள் என்று நாம் காணலாம். அது சரியானதாய் இருக்கவில்லை. அதனிடம் செய்வதற்கென்று தேவனிடம் ஒன்றும் இருக்கவில்லை. அவர் தம்முடைய சொந்த வார்த்தையைத் தவிர வேறெதையும் அவர் ரூபகாரப்படுத்துகிறதில்லை. எப்படியாயினும் அவர் அவ்விதமாக தம்முடைய வேலையை செய்யமாட்டார். புரிகிறதா? 94 தேவன் தம்முடைய வார்த்தையை மாத்திரமே ரூபகாரப்படுத்துகிறார் என்பதை நீங்கள் சற்று நினைவில் கொள்ளுங்கள். ஒரு உண்மையான தீர்க்கதரிசி மாத்திரமே…நீங்கள் ஒரே ஒரு வழியைக் கொண்டுதான் அவன் உண்மையான தீர்க்கதரிசியா இல்லையா என்று கூற முடியும். அது வார்த்தையினால் மாத்திரமே. அதுவே அவனை நிதானிக்கக் கூடிய வழியாயுள்ளது.

4395 இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், மிகாயாவின் நாட்களில், அங்கே ஆகாபிற்கும், யோசபாத்திற்கும் முன்பாக நானூறு எபிரேய தீர்க்கதரிசிகளும் நின்று, “ கர்த்தர் உரைக்கிறதாவது , புறப்பட்டு சென்று வெற்றி பெறுங்கள்” என்று கூறினார்கள். அடிப்படையான விதத்தில் அவர்கள் சரியாகத்தான் இருந்தனர். அப்பொழுது அவர்களால் வெறுக்கப்பட்ட மிகாயா காட்சியில் அழைக்கப்பட்டான். இப்பொழுது அது காணப்பட்ட விதம்…நானூறு (பிலேயாமின் தீர்க்கதரிசிகளை நான்—நான் குறிப்பிடவில்லை) எபிரேய தீர்க்கதரிசிகளும் எழுந்து நின்று, “கிலேயாத்திலுள்ள ராமோத்திற்கு செல்லுங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், நீங்கள் வெற்றி பெற்று செழிப்படைவீர்கள்” என்று ஒருமனதுடன் கூறினார்கள். ஆகவே அந்த மனிதர்கள் மாய்மாலக்காரர்களாய் இருக்கவில்லை, அவர்கள் முற்றிலுமாக ஏவப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுடைய…

4496 அப்படியானால் இந்த ஒரு நபர் மாத்திரம், அதாவது இம்லாவின் குமாரனான மிகாயா என்னும் பெயருள்ளவன் அங்கு வந்து அவர்களுக்கு எதிர்மறையாக ஏன் தீர்க்கதரிசனம் உரைத்திருக்க வேண்டும்? இப்பொழுது, அதை கூறுவதற்கு அவனுக்கு தைரியம் தேவையாயிருந்திருக்கும். அது அவர்களை குற்றப்படுத்தியிருக்ககூடும். புரிகிறதா? ஆனால் அவன் சொன்னது சரிதான் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் அங்கு நின்றிருந்தால் அவன் கூறியது சரி என்று எப்படி அறிந்திருப்பீர்கள்? நீங்கள் அதைச் செய்யக் கூடிய ஒரே வழி, அந்த மனிதன் என்ன கூறுகிறான் என்பதை எடுத்து வார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும். புரிகிறதா? இப்பொழுது, மிகாயா சரியாக வார்த்தையின் பேரில் நின்றிருந்தான். ஏனென்றால் கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றிருந்த அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய எலியா, ஆகாபையும் யேசபேலையும் எல்லோரையும் சபித்திருந்தான். பாருங்கள்? சபிக்கப்பட்டவர்களை மீண்டும் தேவன் எப்படி ஆசீர்வதிக்க முடியும்? பாருங்கள், அதனால் தான் அது கிரியை செய்யமுடியவில்லை.

4597 இப்பொழுது தேவன் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்துகிறவராக இருக்கிறார் என்று நாம் கண்டுகொண்டோம். அந்த தீர்க்கதரிசியினுடைய வார்த்தை, அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், அப்பொழுது அது…அவன் வார்த்தையின்படியே பேசுகின்றான். “அவர்கள் வேதத்தின்படியும் தீர்க்கதரிசிகளின் கூற்றுப்படியேயும் பேசாவிட்டால் அவர்களிடத்தில் விடியற்காலத்து வெளிச்சம் இல்லை” என்று வேதத்தில் ஒரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்பொழுது கூப்பிடுவான்…இந்த செய்தியாளன் வெளியே அழைக்கப்பட்டவர்களை வெளியே அழைக்கின்றான். தேவனுடைய வார்த்தையின்படி அவன் சரியாக இருக்கிறான். தான் சரியாயிருக்கிறான் என்பதை நிரூபிக்கிறான். கவனியுங்கள், கவனியுங்கள், இப்பொழுது நாம் சில நல்ல குணாதிசய சாட்சிகளை அழைத்துக் கேட்போம்.

4698 உலகம் ஜலப்பிரளயத்தால் அழிக்கப்படுவதற்கு முன்பிருந்த கடைசி காலத்திற்கு தேவனுடைய சாட்சியாக நோவா இருந்தான். ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்படும் முன் இருந்த முழு உலகத்திற்குமே அவனுடைய செய்தியானது எவ்வளவு முரண்பாடாயிருந்தது என்பதை இப்பொழுது பாருங்கள். ஏன், அவன் ஏன் ஒரு பைத்தியம் பிடித்த மனிதனாகக் கருதப்பட்டான். ஏன்? அவனுடைய…ஆனால், அதே சமயத்தில் கர்த்தருடைய வார்த்தையை அவன் சரியாகக் கொண்டிருந்தான். இப்பொழுது, தேவன் நோவாவிடம், “பாவத்தை பொறுக்க முடியவில்லை” என்று கூறினார். ஜனங்கள் பாவம் செய்ய ஆரம்பித்த போது, தேவன் கீழே இறங்கி வந்தார். நோவா கடைசி கால செய்தியை பிரசங்கித்தான். எப்பொழுது அது நிகழ்ந்தது? கடைசி நேரத்திற்கு சற்று முன்பதாக இந்த செய்தியாளன், தூதன் எழும்பினான். கடைசி காலத்திற்கான செய்தியோடு தேவன் இந்த தீர்க்கதரிசியை அனுப்பினார். அவன் பரிகசிக்கப்பட்டு, கேலிக்குரிய நிலைக்கு ஆளானான். பரிகாசம் செய்யப்பட்டான். அவனால் தன்னுடைய வீட்டாரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. அது உண்மை. அவனை வேறு யாரும் நம்பவில்லை. ஆனால் அவன் கடைசி காலச் செய்தியை உடையவனாயிருந்தான். இப்பொழுது, விசுவாசியாதவர்கள் எல்லோரும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டனர். செய்தியை விசுவாசித்தவர்களோ இரட்சிக்கப்பட்டனர். தேவன் அவர்களுக்கு ஜீவனை அளித்தார். அவர்கள் இரட்சிக்கப்பட்டனர். ஆனால் அதை விசுவாசிக்காதவர்கள் இழந்து போகப்பட்டனர்.

4799 இப்பொழுது ஒரு காரியத்தை நான் ஒப்பிடுகிறேன். தேவன், எப்படி அவர் இதை மூன்று முறை செய்திருக்கிறார் என்பதை கவனியுங்கள். 100 மூன்று தேவனுடைய பரிபூரண எண்ணாகும். “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி,” “நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம்,” என்பது போன்ற மூன்றில் தேவன் பரிபூரணப்படுகிறார். அவர் பரிபூரணமானவர், ஏனென்றால் மூன்று என்பது அவருடைய “பரிபூரணமாகும்.” ஐந்து என்பது “கிருபையின்” எண்ணாகும். ஏழு…என்பது “ஆராதனைக்குரிய” எண், பன்னிரண்டு. “உபத்திரவத்தின்” எண் நாற்பது ஆகும். “யூபிலி,” ஆராதனை என்பது ஐம்பது ஆகும். “பெந்தெகொஸ்தே” என்றால் ஐம்பது என்று அர்த்தம். மோசே நாற்பது நாள் சோதிக்கப்பட்டான். கிறிஸ்து நாற்பது நாள் சோதிக்கப்பட்டார். நீங்கள் பாருங்கள். இவை எல்லாம் மாதிரியாய் இருக்கின்றன. இப்பொழுது, தேவன் மூன்றில் பரிபூரணப்படுகிறார்.

48101 மூன்று அழிவுகளிருக்கின்றன. அவைகளில் ஒன்று, நோவா பேழைக்குள் சென்ற போதும், இரண்டாவது சோதோமை விட்டு லோத்து வெளியேறினபோதாகும். கவனியுங்கள். இயேசு “நோவாவின் நாட்களில் நடந்தது போலவும், லோத்துவின் நாட்களில் நடந்தது போலவும், மனுஷகுமாரனின் வருகையின் நாட்களிலும் நடக்கும்” என்று இவைகளைக் குறிப்பிட்டார். கவனியுங்கள். ஒருவன் உள்ளே சென்றான், மற்றொருவன் வெளியே வந்தான். அடுத்தது மேலே செல்வது. உ—ஊ, புரிகிறதா? உ—ஊ, உள்ளே செல்லுதல், வெளியே வருதல், மேலே செல்லுதல். இப்பொழுது, இதுதான் கர்த்தருடைய ஒழுங்கு முறையாகும். பாருங்கள், இயேசுவும் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளை குறிப்பிட்டுள்ளார். “நோவாவின் நாட்களில் நடந்தது போல” பாருங்கள். “லோத்தின் நாட்களில் நடந்தது போல,” என்று குறிப்பிட்டுள்ளார். ஆபிரகாம் தீர்க்கதரிசியாயிருந்ததால் “அன்று இருந்தது போல, மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் அவ்விதமாய் இருக்கும்.” பாருங்கள், இவ்விதமாக முன்பு இருந்தவைகளை குறிப்பிடுகிறார்.

49102 இப்பொழுது, எகிப்து காலத்தின் கடைசி நாட்களில் மோசே என்னும் இன்னொரு தீர்க்கதரிசி இருந்தான். தேவன் தம்முடைய ஜனங்களை விடுவிக்கப்போகும் நேரத்தில் எகிப்தியர்கள் அவர்களை மிகவும் மோசமாக துன்பப்படுத்தினதையும், ஆளோட்டிகளை அவர்கள் மேல் ஆளுகை செய்யும்படி வைத்து, சரியாகக் கூறினால் அவர்கள் மேல் எஜமானாக வைத்தனர் என்பதை நாம் கண்டறிகிறோம். எனவே தேவன் அப்பொழுதும் அவர்களுடைய அழிவுக்கு முன், தேவன் எப்பொழுதும் போல ஒரு தீர்க்கதரிசியை கர்த்தருடைய வார்த்தையோடு அனுப்பினார். நினைவில் கொள்ளுங்கள், ஆபிரகாமுக்கு தேவன் (நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னால், நானூறு அல்லது அநேக வருடங்களுக்கு முன்பு) அவனுடைய சந்ததி அந்நிய தேசத்தில் அலைந்து திரிவார்கள். ஆனால் அவர்களை பலத்த கரத்தைக் கொண்டு வெளியே கொண்டு வருவேன் என்று செய்திருந்த வாக்குத்தத்தத்துடன் இந்த தீர்க்கதரிசி சரியாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டான். உங்களுக்குத் தெரியும், மோசே எரிகிற முட்செடியில் தேவனை சந்தித்தபோது, அவர், “என்னுடைய ஜனத்தின் கூக்குரலை நான் கேட்டேன். அவர்களுடைய வேதனைகளை நான் பார்த்தேன். என்னுடைய உடன்படிக்கையை நான் நினைவு கொள்ளுகிறேன்” என்று அவனிடம் சொன்னார். தம்முடைய வார்த்தையை நினைவு கூருதல். 103 அவர் இப்பொழுதும் தம்முடைய வார்த்தையை நினைவில் கொண்டிருக்கிறார். புரிகிறதா? அவர் தவறுகிறதில்லை. ஒவ்வொரு நேரமும் அவர் அதையே செய்தாக வேண்டும். நீங்கள் மனதில் வைத்து திரும்பவும் சிந்திக்கும்படியாக நான் இந்தக் காரியங்களை உங்களுக்கு சொல்லுகிறேன். வியாதியாய் இருந்த ஜனங்களாகிய நீங்களும் கூட, “சுகவீனமாய் இருந்து” என்று நான் கூறினதை நீங்கள் கவனித்தீர்களா?

50104 இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள், தேவனால் மாறவே முடியாது என்பதை ஜனங்களாகிய நீங்கள் எல்லோரும் இதை நினைவில் கொள்ளத்தான் வேண்டும். அவர் மாறாத தேவனாயிருக்கிறார். காலங்கள் மாறும், மக்கள் மாறுவார்கள். தேவன் முடிவற்றவர், அவரால் மாறமுடியாது. அவருடைய…அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாமல் தரித்திருக்க வேண்டும், அவர் எப்பொழுதும் அவ்விதமாகவே இருக்க வேண்டும். இதை நாம் தேவனுடைய வார்த்தை என்று விசுவாசிப்போமானால், அவர் கூறின எல்லாவற்றின் மேலும் நான் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும். பாருங்கள்? 105 இப்பொழுது, அங்கே எவ்விதமாக அவருடைய செய்தி வருகிறது என்றும், எவ்வாறு தம்முடைய செய்தியை அனுப்புகிறார் என்பதையும் நீங்கள் பாருங்கள். அவர் அதை மாற்ற முடியாது. அவ்விதமாகவே எப்பொழுதும் அவர் செய்திருக்கிறார். அவர் அவ்விதமாக எப்பொழுதுமே இருந்தாக வேண்டும். அந்த விதமாகவே அவர் எப்பொழுதும் அதைச் செய்வார். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். அவர் எப்பொழுது அதைச் செய்வார்? அழிவிற்கு முன்னால் காலத்தின் கடைசியில் தான், அப்பொழுதான் அவர் தம்முடைய ஜனங்களை அழைப்பதற்காக தம்முடைய செய்தியை அனுப்புகிறார். (அவர்கள் எப்பொழுதுமே அதை குழப்பிக் கொள்கிறார்கள்) ஆகையால் இங்கே அவர்கள் வருகின்றனர்.

51106 இப்பொழுது, மோசேயின் நாட்களில் விசுவாசிகள் இரட்சிக்கப்பட்டார்கள். அவிசுவாசிகள் அழிந்து போனார்கள். 107 இப்பொழுது மோசேயின் செய்தி தேவனிடத்திலிருந்து வந்தது என்று விசுவாசித்தவர்கள், இப்பொழுது, மோசே தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்டு, தேவனுடைய வார்த்தை அவனிடத்தில் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டிருந்தாலொழிய அவர்கள் விசுவாசித்திருக்கவே மாட்டார்கள். அது அவனை ஒரு தீர்க்கதரிசி ஆக்கிற்று. அவன் அங்கே சென்று, “நாளை சுமார் இந்நேரத்தில் நீங்கள் இன்ன—இன்ன காரியம் சம்பவிப்பதைக் காண்பீர்கள்” என்றான். அடுத்த நாள் அது சம்பவித்தது. அவ்வளவுதான். கர்த்தருடைய நாமத்தில் பேசுகின்ற எந்த ஒரு தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியும் அதைச் செய்வான். “ இன்ன—இன்ன சம்பவிக்கும்போது இது நடந்தேறும். நான் பார்வோனிடத்திற்கு செல்கிறேன். ஆனால் அவன் கடினப்படுவான், கடினப்பட்ட இருதயத்தை கொண்டிருப்பான். நான் உங்களை போகவிடுவேன் என்று சொல்லுவான். ஆனால் போகவிடமாட்டான் என்று மோசே சொன்னான். அது அவ்விதமாகவே நடந்தது. புரிகிறதா? ஏன்? அப்பொழுது அதைக் கண்ட மக்கள் இந்த மனிதன் தேவனிடத்திலிருந்து வந்தவன் என்று அறிந்து கொண்டனர். அப்பொழுது தேவன் அவனை ஆசீர்வதித்தார் என்பதை காணத் துவங்கி, அவர்கள் அவனை கனம்பண்ணினர், அந்த விதமாக அவர்கள் செய்த போது மகத்தான காரியங்கள் சம்பவித்தன.

52108 ஆகவே கேலி பரியாசம் செய்து சிரித்து அவனுடைய செய்தியை ஏற்றுக் கொள்ளாத ஜனங்கள், அவர்கள் மற்ற அவிசுவாசிகளுடன் சேர்ந்து அழிந்து போனார்கள். 109 ஆனால் விசுவாசிகளோ வெளியே சென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தனர். அவர்கள் செய்தியாளனுடைய, அபிஷேகிக்கப்பட்ட செய்தியின் கீழ் சென்றனர். அதுவோ தம்முடைய ஜனங்களை பாலும் தேனும் ஓடுகிற ஒரு தேசத்திற்குள் அவர் கொண்டு வருவார் என்று தேவன் வாக்குத்தத்தம் பண்ணின ஒரு மீட்பின் செய்தியாய் இருந்தது. அது அப்படியே நடந்தேறியது. ஏனெனில் தேவன் ஏற்கனவே அவ்வாறே கூறியிருந்தார். ஆகவே மோசே வந்தான். அந்நாளிற்குரிய ரூபகாரப்படுத்தப்பட்ட செய்தியாளனாக, அவன் இருந்தான். இப்பொழுது அது நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

53110 சரி, அப்பொழுது மோசே சரியாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டான் என்பதை நாம் கண்டறிகிறோம். 111 அதன் பின்னர் காலம் மாறினபோது…பிரமாணத்திற்கும் கிருபைக்கும் இடையேயான வேளை வந்தது. அங்கே இந்த உரைக்கப்பட்ட மேசியா வர வேண்டிய வேளையும் வந்தது. அப்பொழுது ஜனங்கள் ஏதோ ஒரு மகத்தான குழுவை அமைத்து, அதனுள் வித்தியாசப்பட்ட மனித பாரம்பரியங்களை கொண்டிருந்து, அவர்கள் அதற்குள் உட்புகுத்தி, நியாயப்பிரமாணத்தை அந்த நேரத்தில் புரட்டிப் போட்டிருந்தார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம். காலமானது மாறுகின்ற வேளையில் இயேசு வந்தார். வேறொரு தீர்க்கதரிசி, தேவன்-தீர்க்கதரிசி. இப்பொழுது நீங்கள் “அவர் தீர்க்கதரிசி அல்ல” சொல்லலாம். 112 அவர் தீர்க்கதரிசியாயிருந்தார் என்று வேதம் உரைத்துள்ளது. “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவார்.” நியாயப்பிரமாணத்திலிருந்து கிருபைக்கு மாறும் இடைப்பட்ட கால நேரத்தில் அவர் தேவன்—தீர்க்கதரிசியாக இருந்தார். காலங்கள் முழுவதிலும் அவரைக் குறித்து தான் உரைக்கப்பட்டிருந்தது. அவர் மோசேயிடம் நியாயப்பிரமாணத்தை அளித்த பிறகு அது நடப்பிக்கப்படும் என்று அவர் கூறின போது, காலமானது மாறின போது, அவர் கிருபைக்கு திரும்பி வந்தார். அந்த வேளைக்குரிய தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசியை அவர் அனுப்பினார். இப்பொழுது—இப்பொழுது விசுவாசிகளை, அவர்களை அவர் ஒன்று சேர்த்தார்; அவிசுவாசிகள் அவருடைய நாசியிலே அழிந்து போனார்கள். அவர்மேல் விசுவாசம் வைத்தவர்கள் எல்லாரும் இரட்சிக்கப்பட்டனர்; அவருடைய செய்தியை விசுவாசிக்காதவர்கள் எல்லோரும் இழக்கப்பட்டுப் போனார்கள்.

54113 நோவாவின் நாட்களில் சரியாக அதுதான் சம்பவித்தது; லோத்தின் நாட்களிலும் அதுதான் சம்பவித்தது. மோசேயின் நாட்களிலும், இயேசு கிறிஸ்துவின் நாட்களிலும் இன்னும் மற்ற பிற நாட்களிலும் அதுவே சம்பவித்தது. ஏனென்றால் அவர்கள் செய்தியை இழிவாக கருதி அழிந்து போனார்கள். செய்தியை விசுவாசித்தவர்கள் இழக்கப்பட்டனர் இல்லை…இரட்சிக்கப்பட்டார்கள். 114 இப்பொழுது, இப்பொழுது சபையின் காலம் வருகின்றது. ஜலப்பிரளாயத்திற்கு முன்பு இருந்த நோவாவின் காலத்தில் நாம் வாழ்ந்தோம். நியாயப்பிரமாண காலத்திற்குள் நாம் வந்தோம். பிறகு கிருபையின் காலமாகிய சபையின் காலத்திற்குள் வந்திருக்கிறோம். ஆகவே இப்பொழுது சபையின் காலமானது முடிவடைந்து கொண்டிருக்கிறது. நாம் எல்லோரும் அதை அறிவோம். 115 இப்பொழுது, தேவன் அந்த யுகத்தில், அந்த இரண்டு காலங்களில் அவைகளைச் செய்தாரானால், அதே விதமாகவே அவர் இருந்து, இந்த காலத்திற்கும் அதே போன்று செய்ய வேண்டியவராய் இருக்கிறார், ஏனென்றால் அதைச் செய்வேன் என்று அவர் கூறியிருக்கிறார். அவர் அதைச் செய்வேன் என்று கூறின வார்த்தையைக் கொண்டு இன்னும் சில நிமிடங்களில் அதை நான் நிரூபிப்பேன். இப்பொழுது அவர் தம்முடைய திட்டத்தை மாற்ற முடியாது. அவர் தேவனாயிருக்கிறார். அந்தக் காலங்களில் அவர் என்ன செய்தார் என்பதை கவனியுங்கள்.

55116 இப்பொழுது நாம் சபைக்காலத்தின் முடிவில் வருகிறோம். அதைத்தான் இன்றிரவு நான் படித்து காண்பித்தேன். …சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும். 117 இருள் சூழ்ந்த காலம் ஏராளமானவற்றை நாம் கொண்டிருந்தோம். ஆனால் வெளிச்சமானது வரும். முற்காலத்திலே வந்து காலங்களை மாற்றின அதே குமாரன் மறுபடியுமாக வருகின்றார்! அது பூமியிலிருந்து மகிமைக்கு செல்கின்றதாய் இருக்கும். நாம் அதில் செல்வோம். ஒரு காலத்தில் நாம் உள்ளே சென்றோம். மற்றொரு காலத்தில் நாம் வெளியே சென்றோம். இந்தக் காலத்திலோ நாம் மேலே செல்கிறோம்! பாருங்கள்? அது சரி. உள்ளே, வெளியே, மேலே நாம் கடைசிக் காலத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். நாம் வந்து கொண்டிருக்கிறோம் என்பது மாத்திரமல்ல, நாம் ஏற்கனவே வந்து விட்டோம். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். 118 இந்தக் கடைசி காலத்தில் தேவன் எதைக் காண்கிறார்? ஏனைய கடைசி காலங்களில் சரியாக அவர் கண்ட அதே காரியத்தைதான் தேவன் இந்த கடைசி காலத்திலும் காண்கிறார். அது அவிசுவாசம்! எப்பொழுதுமே அவர் வரும்போதெல்லாம், அவர்—அவர் அவிசுவாசத்தை தான் காண்கிறார். அவர் காண்கிறார், தாம் ஜனங்களுக்கென்று வகுத்த திட்டமானது…

56119 முன்னர் நோவாவினுடைய காலத்தில், அவருடைய கட்டளையின்படி அவர்கள் வாழ்ந்து பலிகளை செலுத்தியிருப்பார்களானால் …அவர்கள் அதை விட்டு புறம்பாக சென்று விட்டனர். அவர் வந்த போது, அந்த காரியம் தவறாக நடைபெறுகிறதை அவர் கண்டார். 120 அவர் பூமியின் மீது வந்தபோது அதேக் காரியத்தைத்தான் அவர் செய்தார். ஜனங்களும் பரிசேயர்களும் இன்னும் மற்றவர்களும் நியாயப்பிரமாணத்தின் பின்னால் இருப்பதைக் கண்டார். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? சிறிதளவும் கூட அதில் உத்தமமாயிராமல், அதை சேற்றைப் போல அழுக்காக்கி ஏதோ ஒரு பழைய முறையை கைக்கொண்டனர். “சபையில் காலாகாலமாக சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு அது மாத்திரமே தேவையாயிருந்தது.” ஆகவே இக்காரியங்களைத்தான் அவர் கண்டார். 121 அவர் அதைத்தான் மீண்டுமாக கண்டறிந்துள்ளார். அவர் அதேக் காரியங்களையும், ஜனங்கள் மாறாமல் இருப்பதையும் அவர் காண்கிறார். ஆகவே அவர் தமது திட்டத்தை அனுப்புகையில், மக்கள் அதை அங்கே விசுவாசிக்காமல், அவர்கள் அழிந்து போனார்கள். அவர்கள் அதை விசுவாசித்து ஜீவித்தனர். (இப்பொழுது அந்த இருவரைக் குறித்து) அது அதேவிதமாக இந்த நேரத்திலும் இருக்க வேண்டும். அதே விதமாக இருக்க வேண்டும். இல்லை… 122 செய்தியாளனுக்கு பழையதிலிருந்து புதியதான ஒன்றை வேறுபிரித்தல் எப்பொழுதுமே ஒரு போராட்டமாகவே இருந்து வருகிறது. அந்த போராட்டம் எப்பொழுதுமே இருந்து வருகிறது. ஏனென்றால்—ஏனென்றால் வருகின்ற, செய்தியாளனுக்கு எப்பொழுதுமே அது ஒரு போராட்டமாக இருந்தது. செய்தியானது வேதப்பூர்வமாக இருக்க வேண்டியதாய் இருந்தாலும் பழையதிலிருந்து புதியதான ஒன்றை வேறு பிரித்தல் போராட்டமாகவே இருந்து வருகிறது, ஏனென்றால் ஒவ்வொருவரும் வரக்கூடியவரைப் பற்றியே முன்னுரைத்துள்ளனர்.

57123 இப்பொழுது, நாம் இயேசுவை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்வோம். நியாயப்பிரமாணத்தினின்று கிருபைக்கு மாறத்தக்கதான செய்தியை கொண்டு வர அவருக்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும். அதே சமயத்தில் அவ்விதமாக சம்பவிக்கும் என்று வேதம் கூறுகின்றது. “மேசியா வந்து அன்றாட பலியை நீக்கிப் போடுவார்” என்று உள்ளது. அது தீர்க்கதரிசிகளின் மூலமாய் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் என்பதை நாம் அறிவோம். அவ்விதம் செய்வது அவருக்கு அது எவ்வளவு பெரிய காரியமாக இருந்திருக்கும். ஆனால் அவர் அதைச் செய்தார் என்று நாம் கண்டறிகிறோம். ஒரு …வேதாகமத்தில் அவ்வாறு உரைக்கப்பட்டிருந்ததால் அவர் அதைச் செய்தார். ஆனால் அந்த நாளின் விசுவாசிகள் (விசுவாசிகள் என்று அழைக்கப்பட்டவர்கள்) முற்றிலுமாக அவரோடு ஒவ்விப்போகவில்லை. 124 அந்த பரிசேயரையும், சதுசேயரையும் பாருங்கள், அவர்கள் தங்கள் சொந்த பாரம்பரியங்களை உடையவர்களாய் இருந்தனர். ஆகவே அதை விட்டு அவர்களை யாருமே அசைக்கப் போவதில்லை. அதைத்தான் அவர்கள் விசுவாசித்தனர். அவர்களுடைய தாய் அதை விசுவாசித்தாள், அவர்களுடைய தந்தை அதை விசுவாசித்தார், அவர்களுடைய முப்பாட்டன், முப்பாட்டி அதை விசுவாசித்தனர். “மோசே அவ்வண்ணமாய்க் கூறியுள்ளனே!” ஆனால் நியாய்ப்பிரமாணத்தை அளித்த அதே மோசே தான் இந்த நபர் வருவார் என்று கூறியிருந்தான். ஆனால் அவர்கள் அதை அடையாளம் கண்டுகொள்ளத் தவறினார்கள். ஏனென்றால் அவர்கள் உண்மையான தேவனுடைய வார்த்தையை பாரம்பரியங்களுள் வைத்து, அதன் மூலக்கோட்பாட்டை விட்டுவிட்டார்கள். அது அவ்விதமாகவே இருக்க வேண்டியதாயிருந்தது.

58125 ஒவ்வொருவரும் இன்னொருவர் வருவார் என்று முன்னுரைத்திருந்ததைக் கவனியுங்கள். ஒவ்வொரு செய்தியாளர்களும் செய்திக்குப் பிறகு அது சம்பவிக்கும் என்று முன்னறிவித்தனர். ஆனால் இப்பொழுதோ மக்கள் தாங்கள் பெற்ற அந்நாளிற்குரிய செய்தியை ஏற்றுக் கொண்டு அதோடு நின்று விட்டார்கள். 126 நாம் புரிந்து கொள்ளும் வகையில் இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். லூத்தரை நாம் பார்ப்போம். லூத்தர் விசுவாசத்தால் நீதிமானாக்கப்படுதலை பிரசங்கித்தப்போது, அவர் அந்த காலத்திற்குரிய செய்தியாளனாகவும், சர்தை சபையின் தூதனாகவும் இருந்தார். அது சரி. இப்பொழுது கவனியுங்கள். அவர் செய்தியை பிரசங்கித்தபோது லூத்தரன்களை அவர் ஒழுங்குபடுத்தினார். இப்பொழுது லூத்தர் செய்தியை பரப்பிக் கொண்டு சென்றார். பிலதெல்பியா சபையின் காலத்தில் வெஸ்லி பரிசுத்தமாகுதல் என்ற செய்தியோடு வந்தபோது அதைக் காண லூத்தருக்கு சற்று கடினமாக இருந்தது. லூத்தரன்களால் அதை விசுவாசிக்க கூடாமற் போயிற்று.

59127 யாத்ரீக பரிசுத்தர்கள் மற்றும் சுயாதீன மெத்தோடிஸ்டுகள் மற்றும் இன்னும் பிற மக்களை பரிசுத்தமாக்கப்படுதலின் மீது வெஸ்லி நிலைகொள்ளச் செய்தபோது, பெந்தெகோஸ்தே செய்தியானது வந்தது. ஏன், அதை விசுவாசிக்க ஒரு மெதோடிஸ்டுக்கு மிகவும் கடினமாக இருந்தது. உ—ஊ, நிச்சயமாக அவ்வாறே இருந்தது. பாருங்கள், அது ஒரு… 128 இன்னுமாய் ஒருவர் மற்றொருவரைக் குறித்து உரைக்கிறார், வேத பூர்வமாக உரைக்கிறார். வர்ப்போகின்ற அழிவைக் குறித்து ஏனோக்கு தன்னுடைய எடுத்துக் கொள்ளப்படுதல் மூலம் அறிவித்தான். தேவன் அவனை வீட்டிற்கு எடுத்துக் கொண்டார். அவன் ஒரு சாட்சியாக இருந்தான். ஆபிரகாம் அவர்களிடம் மோசேயைக் குறித்து கூறினான். மோசே மேசியாவைக் குறித்து கூறினான். பாருங்கள் இவ்விதமாக அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து கூறினார்கள். மேசியா இந்த வேளை எப்படியாயிருக்கும் என்பதைப் பற்றி கூறினார். நீங்கள், “ஆஹா, சகோதரர் பிரான்ஹாம்!” என்று கூறலாம்.

60129 ஓ, ஆம், அவர் கூறினார்! நாம்…நிறைய வேத வாக்கியங்களை நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன். நான் அவைகளில் இரண்டு அல்லது மூன்றைக் குறிப்பிட உள்ளேன். நாம் மத்தேயு 24-ம் அதிகாரத்தை எடுத்துப் பார்ப்போமாக. இப்பொழுது மத்தேயு 24-ம் அதிகாரத்தை எடுத்து, என்ன சம்பவிக்கும் என்று அவர் கூறியுள்ளதை நாம் படிப்போம். எவ்வாறு “ராஜ்ஜியங்களுக்கு விரோதமாக ராஜ்ஜியம் எழும்பும்.” ஆனால் அங்கே அவர், “நோவாவின் நாட்களில் நடந்தது போலவும், லோத்தின் நாட்களில் நடந்தது போலவும் மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்” என்று கூறுகிறதை நினைவு கூறுங்கள். அவர் அதை முன்னறிவித்தார், இக்காரியங்கள் சம்பவிக்கும் என்று அவர் முன்னுரைத்திருக்கிறாரே! 130 அவர், “இப்பொழுது, இவையாவும் சம்பவிக்கையில், அந்த வேளையானது வரவில்லை” என்று கூறினார். ஆனால், “அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதிலும், மற்ற மரங்களிலும், இளங்கிளை தோன்றி துளிர் விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அந்த நேரமானது சமீபமாய் இருக்கிறது, வாசல் அருகே வந்திருக்கிறது” என்று கூறினார். இப்பொழுது நீங்கள் எதைக் காணும்போது? அத்திமரம் துளிர்விடுவதும், மற்ற மரங்கள் துளிர்விடுவதும், அது ஒரு அடையாளமாக இருக்கிறது. ஆகவே அத்திமரம் எப்பொழுதுமே இஸ்ரவேலாக இருக்கின்றது.

61131 யோவேலும் அதைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்திருக்கின்றான். “பச்சைப்புழு விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது. இன்னும் மற்ற காரியங்களை தின்று போட்டது. ஆனால் தேவன், ‘கர்த்தர் சொல்லுகிறதாவது நான் திரும்ப அளிப்பேன்’” என்று வாக்குரைத்திருக்கிறார். அவர் அதைச் செய்வார். ஆனால் அதனுடைய ஆவிக்குரிய நிலைக்கு அதை திருப்புவதற்கு முன்னர், புறஜாதி சபையானது வெளியே எடுக்கப்பட வேண்டும். அவைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் அவர் கொண்டிருக்கமாட்டார். இப்பொழுது, வேத வாக்கியங்களை உங்களால் சிக்கலாக்கி முடிச்சுபோட முடியாது, பாருங்கள்? ஒரே நேரத்தில் இரண்டு சாட்சிகளை, பெரிய சாட்சிகளை அவர் வைத்திருந்தது கிடையாது. அவர் …அவர் ஒரு போதும்—அது போல ஒரே நேரத்தில் அவர் இரண்டு சபைகளைக் கொண்டிருப்பதில்லை.

62132 கவனியுங்கள் முதலில் புறஜாதி சபை எடுக்கப்பட்டாக வேண்டும். பின்பு யூதர்களுக்கு தானியேலின் எழுபது வாரத்தின் கடைசி பாகம் நிறைவேறும். தீர்க்கதரிசனத்தின்படி எழுபதாவது வாரத்தின் மத்தியில், அதாவது மூன்றரை வருட முடிவில் பிரபுவாகிய மேசியா கொல்லப்பட்டார். இன்னமும் மூன்றரை ஆண்டுகள் விடப்பட்டிருக்கின்றன. பின்பு வெளிப்படுத்தல் புத்தகம் 11-ம் அதிகாரத்தில் இருக்கின்ற இரண்டு தீர்க்கதரிசிகள் பூமிக்கு வந்து யூதர்களுக்கு தீர்க்கதரிசனம் உரைப்பார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம். (அவர் தம்முடைய வழியை ஒருபோதும் மீண்டும் மாற்றுகிறதில்லை), இப்பொழுது, அந்த நேரத்தில் சபை எடுக்கப்பட்டிருக்கும். 133 ஆகவே, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து, ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரவேல் ஒரு நாடாக ஆகியிருப்பதை நாம் காண்கிறோம்; அவள் சொந்த இராணுவம், அவள் சொந்த பணம் உடையவளாயிருக்கிறாள். இஸ்ரவேல் சொந்த தாய் நாட்டில் இருக்கிறாள்; அவளுடைய சொந்த தேசத்தில், சொந்த கொடியோடு இருக்கின்றாள். அவள் ஐக்கிய நாடுகளின் அமைப்பில் இருக்கின்றாள். அவள் ஒரு நாடாயிருக்கின்றாள்! ஏன், இஸ்ரவேல் தன்னுடைய சொந்த நாட்டில் இருப்பது, சரியாக இப்பொழுது நாம் நினைத்துப் பார்க்கின்ற அடையாளங்களில் இது ஒரு மகத்தான அடையாளம் ஆகும். ஆகவே, இயேசு, “இஸ்ரவேல் தன் தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்வதை காணும் இந்தச் சந்ததி, எல்லாம் நிறைவேறும் வரைக்கும் ஒழிந்து போகாது” என்றார். பாருங்கள், அவர் இந்த நாளைக் குறித்து பேசினார்.

63134 நான் இன்னும் மற்றொன்றை தரட்டும். II தீமோத்தேயு 3-ஆம் அதிகாரத்தில் கடைசி காலத்தில் உள்ள சபையைக் குறித்து “துணிகரமுள்ளவர்களாயும் இறுமாப்புள்ளவர்களாயும், தேவ பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும் இருப்பார்கள்” என்று அவர் உரைத்திருக்கிறார். சபை உலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், “தேவப் பிரியராயிராமல் சுகப்போகபிரியராய் இருக்கிறார்கள்,” புதன் கிழமை இரவு ஜெபக் கூட்டத்தில் பங்கு கொள்வதற்கு பதிலாக வீட்டிலேயே தங்கி தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண்கிறார்கள். நீங்களோ, “அது பாப்டிஸ்ட் தான்” என்று கூறலாம். 135 அது பெந்தேகோஸ்தேயினர்! நிச்சயமாகவே! ஆம் ஐயா. ஓ! “துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், சுகபோகப்பிரியர்களாயும்”; அவர்கள் மூக்கிற்கு கீழாக வார்த்தையை வைத்துப் பாருங்கள், அதை அவர்கள் காணவே மாட்டார்கள். உ—ஊ. “தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,” தங்கள் முடியைக் கத்தரிக்ககூடாது என்று ஸ்திரீகளிடம் கூறிப்பாருங்கள், அவர்கள் எப்படியாயினும் கத்தரித்து விடுவார்கள். உ—ஊ, “தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாகவும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் இருப்பார்கள். அவ்வாறிந்து…” நீங்கள் “அது தேவ நம்பிக்கையற்ற நாத்தீகர்கள் தானே” என்று கூறலாம். இல்லை! 136 “தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும்,” இப்போதைய உலக ஒழுங்கு முறைமை, இந்த ஆவிகளிடத்திலிருந்து உங்களை விடுவிக்கக் கூடிய அந்த பெலன், “…பெலனை மறுதலிக்கிறவர்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.” மற்ற ஜனங்கள் என்ன கூறினாலும் அதைக் குறித்து கவலை கொள்ளாதீர்கள். தேவனுக்கு முன்பாக தனிப்பட்ட மனிதனை நீங்களே பதிலளிக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். இந்தப் பெண் என்ன செய்கிறாள்? அல்லது அந்தப் பெண் என்ன செய்கிறாள்? இந்த மனிதன் என்ன செய்கிறான்? அல்லது அந்த மனிதன் என்ன செய்கிறான் இந்த போதகர் என்ன சொல்லுகிறார்? அல்லது அந்தப் போதகர் என்ன சொல்லுகிறார் என்று கவலைப்பட வேண்டியதில்லை. அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையே உள்ளதாகும். “வேஷத்தைத் தரித்து” பாரம்பரியங்களின் பின்னால் சென்று, “அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு” அந்த நாளிலா நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்? நிச்சயமாகவே நாம் அந்த நாளில்தான் ஜீவிக்கின்றோம்!

64137 கடைசி சபையின் காலத்தில் உள்ளதை மறுபடியும் கவனித்துப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர், இயேசுதாமே, “இவைகளை சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன்” என்று கூறினார். ஆகவே வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தில், இயேசு, இந்த சபைக் காலத்தைக் குறித்து பேசுகிறார். கடைசி நாட்களில் என்ன சம்பவிக்கும் என்பதைக் குறித்து சாட்சி அளிக்கின்றார். அவர், “சபையானது ஐசுவரியம் பொருந்தியதாகவும், லவோதிக்கேயா, வெது வெதுப்பாகவும் ஆகிவிடும்” என்றார். இசையானது இசைக்கப்படும் போது சுற்றும் முற்றும் குதித்து கூச்சலிடும். பாருங்கள்? அது உண்மை. ஆனால் பரிசுத்தப் படுகின்ற ஜீவியம், சாட்சியிலிருந்து அது வெகுதூரம் அகன்றிருக்கின்றது.

65138 நான்…எந்தக் காரியத்திற்காகவுமே நான் உங்களை புண்படுத்தமாட்டேன். ஆனால் அண்மையில், நான் இருந்த தேவனுடைய பரதீசில் ஒரு தரிசனத்தை கண்டேன். உங்களிடம் உண்மையைத் தவிர வேறு எதையும் என்னால் கூற முடியாது. தேவனே, ஊழியக்காரர்களாகிய நாங்கள் இந்தக் காரியங்களில் உண்மையுள்ளவர்களாயிருந்து, சத்தியத்தையே கூற உதவி செய்யும். 139 பாருங்கள், “ …?… குளிருமின்றி,” அவ்வாறு இருப்பார்கள் என்று வேதம் கூறுகின்றது. ஆகவே அவ்விதமாகவே அவர்கள் இருக்கப் போகின்றார்கள். லூத்தருடன் அது சரியாக இணைந்தது என்றால், அது பிலதெல்பியா காலத்தில் வெஸ்லியுடன் இணைந்தது. அது உரைக்கப்பட்டவாரே பூரணமாக இருக்க வேண்டும்…அது அவ்வாறே உரைத்துள்ளது. ஆகவே லவோதிக்கேயாவிலும் சரியாக அவ்விதமாகவே இருக்கும். 140 “ஐசுவரியவான்கள், தேவைகள் ஒன்றும் இல்லை!” நூற்றுக்கணக்கான டாலர்களை வைத்து நாம் கட்டிடங்களை எழுப்பலாம், நாம் எல்லா—எல்லா…உலகக் காரியங்களையும், கோரிக்கைகளையும் வைக்கலாம், அருமையான சபைகளை நாம் கட்டலாம். அதெல்லாம் சரிதான், அதில் ஒன்றும் இல்லை, அது முற்றிலும் சரிதான்.

66141 ஆனால் நான் கூற முயற்சிப்பது, அப்பொழுது செய்தியானது அவர்கள் பக்கமாக செல்ல ஆரம்பிக்கும் போது, நீங்கள் அவர்களுக்கு தேவையில்லை, “நீ ஒரு கிறுக்குத்தனமானவன், நீ ஒரு மதவெறியன், நீ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ வேண்டிய ஒருவன்.” பாருங்கள்? ஓ, ஒரு வேளை நீங்கள் “இப்படிப்பட்ட ஒருவரை நான் போதகராக கொண்டிருக்கமாட்டேன்” என்று நினைக்கலாம். எப்படியாயினும் அவர் உங்கள் போதகர்தான்! எலியா தன்னுடைய போதகர் என்று யேசபேல் ஒப்புக்கொள்ளவே மாட்டாள். ஆனால் நிச்சயமாக அவன் அவளுடைய போதகன் தான். அவன் இஸ்ரவேல் தேசத்திற்கு ஒரு உதாரணமாக, ஒரு செய்தியாளனாக அனுப்பப்பட்டான். ஆகவே இன்றைக்கு விலையேறப்பெற்ற பரிசுத்த ஆவி, தேவனுடைய வார்த்தை தான் சபையை சீர்படுத்தி அவர்களை வார்த்தைக்கு திரும்பக் கொண்டுவரும் சபைக்கான ஒரு செய்தியாளன் ஆகும். நாம் அதைக் குறித்து பேசுகின்றோம், ஆனால் நீங்கள் ஒரு அசைவியையும் காண்பதில்லை. உ—ஊ ஊ, பாருங்கள், அக்காரியங்களை நாம் மிகவுமாக குழப்பி விட்டுள்ளோம்.

67142 “அவனைத் தூக்குங்கள், எப்படி நீங்கள் அவனை தூக்கிவிடுவீர்கள்?” என்று யாரோ ஒருவர் சாட்சியில் கூறினதை நான் கேட்டேன். ஆகவே, ஓ, அந்த சிறிய கோட்பாடுகளை (isms) பெற்றுக் கொள்கிறார்கள், யாரோ ஒருவர் ‘“விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.’ அப்படி என்றால் ஜெபிக்கும் பொழுது ஒரு கண்ணை திறந்து வைத்துக் கொண்டு மற்றொரு கண்ணால் பார்க்க வேண்டும் என்று கூறினார். ‘விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்’” (ஏன், விழித்திருங்கள் என்றால் “கர்த்தருடைய வருகைக்காக விழித்திருங்கள்,” ஆகவே ஜெபம் பண்ணுங்கள் என்று அர்த்தம்) பாருங்கள், அது காரியத்தை புரட்டிப் போடுதல் ஆகும். 143 ஆகவே எந்த விதத்தில் நாம் அதைச் செய்கிறோம்? அது தேவனால் அமைக்கப்பட்டதோ, இல்லையோ (ஆகவே பிறகு…) நம் யோசனையின்படி நாம் ஒரு சிறிய பாரம்பரியத்தை உருவாக்குகிறோம். ஆகவே முதலாவதாக காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா. நாம் வெளியே சென்று, நம்மை பின்பற்றத்தக்கதாக ஒரு சிறு குழுவை ஏற்படுத்தி, முக்கியத்துவம் கொண்டதாக சபையின் சரீரத்திலிருந்து அவர்களை இழுத்து விடுகிறோம். அதுதான் உண்மை. சபையில் வந்து ஜெபித்து, பிரச்சனையைத் தீர்த்து, சரீரத்தை அசையச் செய்வதற்கு பதிலாக, நாம் அக்காரியங்களைச் செய்கிறோம். அது அமைக்கப்பட்டிருந்தாலும் அல்லது இல்லையென்றாலும் நாம் அந்தக் காரியங்களைச் செய்கிறோம். நீங்கள் சத்தியத்தைப் பெற்றிருந்தால், அப்பொழுது சத்தியத்திலேயே தரித்திருங்கள். அது முற்றிலும் சரியானதே. ஆனால் சத்திய வேதமே முதலாவதாக இருக்கட்டும்! கவனியுங்கள், இந்த…இந்த லவோதிக்கேயா காலம்.

68144 ஆகவே அந்த தீர்க்கதரிசிகள், அல்லது பரிசுத்த ஆவியானவர் பவுலின் மூலமாக பேசுகின்றார், அது மேசியா ஆகும். அது பவுல் அல்ல, அது கிறிஸ்து ஆகும்! “பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும், வகை வகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்த கடைசி நாளில் இயேசு கிறிஸ்து மூலமாய்” எபிரேயர் 1. கவனியுங்கள், பரிசுத்த ஆவி, கிறிஸ்து, கிறிஸ்துவை மையமாகக் கொண்டுள்ள சுவிசேஷம். கிறிஸ்துவை மையமாக கொண்டுள்ள வார்த்தை. ஆகவே அது கிறிஸ்துவை மையமாக கொண்டிருக்குமானால்…அது சத்தியம் என்று தேவன் அதை ரூபகாரப்படுத்துவார். 145 அதன் காரணத்தால்தான் பெந்தெகோஸ்தே மக்களாகிய நீங்கள் மெதோடிஸ்டுகளின் பரிசுத்தமாகுதல் என்னும் விசுவாசத்தின்படி பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளுகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் சரியாக வார்த்தையின் மேல் இருந்தீர்கள். 146 லூத்தரன்கள் அதில் விசுவாசம் கொள்ளாமற்போனதன் காரணத்தால்தான் மெத்தோடிஸ்டுகளாகிய நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீங்கள் வார்த்தையின் மேல் நிலைத்திருந்தீர்கள். 147 அவ்விதமாகத் தான் லூத்தரன்களாகிய நீங்கள் இரட்சிக்கப்பட்டு, நீதிமானாக்கப்பட்டீர்கள். ஏனென்றால் உங்கள் செய்தியாளன் நீதிமானாக்கப்படுதலை பிரசங்கித்து, எல்லாவற்றிற்கும் சின்னமாக அடையாளமாக இருந்த கத்தோலிக்க சபையை எதிர்த்தார். அவர்கள் சபையில் மாத்திரமே விசுவாசம் கொண்டிருந்தனர்; நீங்களோ வேதாகமத்திற்கு திரும்பி வந்து, நீங்கள் அந்த வேத சத்தியத்தை ஏற்று, அதைப் பற்றிக் கொண்டீர்கள். 148 ஆகவே பிறகு வெஸ்லி வேறொரு சத்தியத்துடன் வந்து அதிலே நிலை கொண்டார்; பெந்தெகோஸ்தேயும் வேறொரு சத்தியத்துடன் வந்து அதிலே நிலை கொண்டது. ஆகவே அது உண்மையென்று கண்டு அதை உங்களால் பிடித்துக் கொள்ள முடிகிறதென்றால், முழுமையான உண்மை என நிரூபிக்கப்பட்ட காரியத்தை ஏன் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது? எல்லாவற்றையும் விசுவாசியுங்கள்!

69149 இப்பொழுது, நாம் இந்த செய்தியாளர்களை, தூதர்களை பார்க்கையில், நாம் அறிந்து கொள்கிறோம். அந்த மகத்தான தேவன்-தீர்க்கதரிசி, கிறிஸ்து இந்த கடைசி நாட்களில் நடை பெறப் போகின்ற இவைகளை முன்னுரைக்கின்றதை நாம் பார்க்கின்றோம். அது எதைச் செய்கின்றது? அது பயிரின் காலத்தை அறிமுகப்படுத்துகின்றது. இந்த கடைசி நாட்களில் என்ன சம்பவிக்கப்போகின்றது என்றும், பயிர் அறுவடை செய்யப்படப் போகின்ற காலத்தையும், நேரத்தையும் அது அறிமுகப்படுத்துகிறது. உங்களுக்கு இது புரிகிறதா? 150 இப்பொழுது, கடைசி நாட்களிலே இக்காரியங்கள் சம்பவிக்கும். எந்த விதமான பயிருக்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஒரு காலத்தில் வெளிச்சதைக் கொண்டிருந்த சபையை நாம் காண எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதிலிருந்து வெளிச்சம் புறம்பே சென்று, உலக கவர்ச்சிக்குள் சென்று, முழுவதுமாக மெருகேற்றப்பட்டு (அது சரிதானே?) புறம்பே சென்று, ஏதாவது ஒரு தன்மையை உடைய ஒருவரை அங்கத்தினராக சேர்த்து, ஏதோ ஒன்றை ஞானஸ்நானம் பண்ணுவித்து பெந்தெகோஸ்தேயினர் என்று அழைத்துக் கொள்கின்றனர். 151 தண்ணீர் ஒரு மனிதனை இரட்சிப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தமே அதைச் செய்கிறது. தண்ணீரில் ஜீவன் இல்லை. இரத்தத்தில் உள்ள உயிர் அணுக்களில் இருந்துதான் ஜீவன் வருகிறது. பரிசுத்தமாக்கப்படுதல் அந்த ஜீவியத்தைக் கழுவி, பாவத்தின் வாஞ்சையை கொன்று போடுகிறது. பிறகு பரிசுத்த ஆவி அந்த தூய்மையான பாத்திரங்களுக்குள் வந்து ஊழியத்திற்கென்று அதை வேறு பிரிக்கின்றது. பலிபீடம் அந்த பாத்திரத்தை தூய்மையாக்கிற்று. ஆனால் அந்த…அதன் நிறைவு தான் ஊழியத்திற்கென்று அந்த பாத்திரத்தை அமர்த்துகின்றது. அது ஊழியத்திற்கென்று வேறுபிரிக்கப்பட்டது. இப்போது அது ஊழியத்திற்குட்படுத்தப்பட வேண்டும் பரிசுத்த ஆவியானவர் சபையை ஊழியத்திற்குட்படுத்தப்பட வேண்டும் பரிசுத்த ஆவியானவர் சபையை ஊழியப்பாதையில் நடத்திச் செல்லுகிறார். நான் வழக்கமாக விரும்புகிற அந்த சிறிய பாடல்: அவர்களெல்லாரும் மேலறையில் கூடியிருந்தார்கள், அவர்களெல்லாரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டனர். ஊழியத்திற்கான வல்லமை வந்தது. ஆம். பாடலின் மீதியான பாகம் கூறுகிறது: அந்நாளில் அவர்களுக்கு அவர் என்ன செய்தாரோ, அவரால் உங்களுக்கு அதையே செய்திட முடியும். நிச்சயமாக.

70152 பயிரைப் பற்றியும், தீர்க்கதரிசிகளைப் பற்றியும் பேசி, நாம் கிறிஸ்துவோடு நிறுத்தினோம். இப்பொழுது சற்று பின்னோக்கி செல்வோம். 153 தீர்க்கதரிசியான ஏசாயா கடைசி காலத்தை குறித்து தீர்க்கதரிசனமுரைத்து, எப்படியாய் அவன் சாட்சி பகர்ந்தான். அவன் “சரீரம் முழுவதும் புண்ணாகி நொதிக்கிற இரணமும் உள்ளதாய் இருக்கின்றது. போஜன பந்தியெல்லாம் வாந்தியால் நிறைந்திருக்கிறது” என்று கூறினான். ஏன், இன்றைக்கு ஆண்களும் பெண்களும் இரண்டு அல்லது மூன்று மனைவிகளுடனும் அல்லது இரண்டு அல்லது மூன்று கணவன்களுடனும் வாழ்கின்றனர். (சரியா) எல்லா விதமான…சிகரெட்டுகளைப் புகைத்துக் கொண்டும், இன்னும் மற்ற காரியங்களை செய்துக் கொண்டும் சபைக்கு வந்து இராப்போஜனத்தில் பங்கு கொள்கின்றனர். 154 இப்பொழுது, இதைவிட கீழ்த்தரமான காரியங்களை என்னால் கூற முடியும். ஆனால் நான் சிறிது காத்திருக்கிறேன். ஒருவேளை அது சரியாய் இருந்திருக்காது. ஆனால் நான் கூற நினைத்ததை கூறாதபடிக்கு தடை செய்யப்படுகிறதை நான் உணர்ந்தேன். ஆனால் நான்…நீங்களே அந்த மறைபொருளை வாசித்தறிய முடியும். எது வழக்கமானது என்றும், எவை வழக்கத்திற்கு மாறான காரியங்களாய் உள்ளன என்று வேதம் கூறுகிறதை நீங்கள் அறிவீர்கள்.

71155 இப்பொழுது நடைபெறும் இக்காரியங்களை நாம் காண்கிறோம். ஆகவே அந்த தேசம்…விஞ்ஞானம் இவ்வாறு கூறுகிறது, அது…நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னால், “அது நள்ளிரவிற்கு மூன்று நிமிடங்கள்” என்று கூறினது. இஸ்ரவேல் தனது தாய் நாட்டில் உள்ளது. சபையானது லவோதிக்கேயாவில் உள்ளது. ஓ, என்னே. நாம் எதை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? காரியம் என்ன? 156 நாம் சாயங்கால வெளிச்சத்திற்காக எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். ஓ, அது வருமென்றால், நாம் அதை அடையாளங் கண்டுகொள்ள முடியுமா? அல்லது கடந்த காலங்களில் நடந்ததுபோல் நம் தலைகளுக்கு மேலே கடந்து சென்று விடுமா என்று நான் வியப்புறுகிறேன். அது வெகு தூரம் செல்லும் வரை அவர்கள் அதை அறியாதிருந்தார்கள். 157 தங்களிடத்தில் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளைக் கொன்றது அந்த மதப்பற்றுள்ள மக்கள் தான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். இயேசுவும் அவ்விதமாகவே கூறியுள்ளார். அவர், “மாயக்காரரே! உங்கள் பிதாக்கள் அவர்களை உள்ளே போட்டு பிறகு, அவர்கள் கட்டின் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளை நீங்கள் அலங்கரிக்கிறீர்கள்” என்று கூறினார்.

72158 ரோமன் கத்தோலிக்க சபையைப் பாருங்கள், அவர்கள் பரிசுத்த பாட்ரீக்கின் கல்லறையை அலங்கரித்தனர். ஜோன் ஆப் ஆர்க்கின் கல்லறையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் அந்த ஸ்திரீயைக் கொன்று போட்டு, அவள் ஒரு சூனியக்காரி, மந்திரம் செய்பவள் எனக்கருதி அவளை உயிருடன் எரித்தனர். ஏனெனில் அவள் ஆவிக்குரியவளாய் இருந்தாள். அவள் தரிசனங்களைக் கண்டாள். அவள் ஒரு சூனியக்காரி என்று அவளைத் தொழு மரத்தில் எரித்தனர். இருநூரு ஆண்டுகளுக்கு பிறகு அவள் கிறிஸ்துவின் ஊழியக்காரி என்று அறிந்து அவர்கள் அதற்கு பிரயாயச்சித்தமாக அந்த மதகுருக்களின் பிணங்களை தோண்டியெடுத்து ஆற்றிலே வீசியெறிந்து விட்டார்கள். ஆனால் அந்த நாளிலோ, சபையானது கடந்து செல்கையில், அவள் யார் என்பதை அறியாதிருந்தார்கள். 159 அது மக்களுக்கு மேலாக கடந்து செல்லும். ஆகவே மக்கள் அதை அடையாளங்கண்டு கொள்ளவேமாட்டார்கள். 160 இயேசு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்தெழுத்தவரையிலும் அவர் தேவனுடைய குமாரன் என்று அவர்கள் அறியவில்லை. “மனிதர்களே, அக்கிரமக்காரருடைய கைகளினாலே ஜீவாதிபதியை கொலை செய்தீர்களே!” என்று பெந்தெகோஸ்தே நாளிலே பேதுரு அவர்களை குற்றஞ்சாட்டினான் அல்லவா?

73161 ஓ, அவருடைய வருகையின் அடையாளமான அந்த சிகப்பு விளக்கு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஆமென்! நாம் முடிவில் இருக்கின்றோம். ஆமென்! “இக்கபோத்” என்று எழுதப்பட்டுள்ள அந்த பிரகாசிக்கும் சிகப்பு அடையாள விளக்கு எல்லாவிடங்களிலும், எல்லாவிடங்களிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. காலம் முடிவடைந்து விட்டது. நேரமே கடந்து விட்டது! 162 விஞ்ஞானம் தனது முடிவை அடைந்து விட்டது. அது சரி. இப்பொழுது முழு உலகத்தையே வெடிக்கச் செய்யும் ஏதோ ஒன்றை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஒருவரையொருவர் பார்த்து பயப்படுகின்றனர், அவர்கள் கடைசி காலத்தில் இருக்கின்றார்கள். 163 நாகரீகமானது மக்களை ஒரு நிலைக்கு…அதன் உச்ச நிலை பின் நோக்கி வீசுகின்றது, ஊஞ்சலாடுகின்றது. ஜனங்கள் நாகரீகம் பொருந்திய ஒழுக்க நெறியுள்ள ஜனங்களாக நடந்து கொள்வதில்லை. ஒரு நவீன இசைக் குழுவில் அங்கம் வகித்து மீசை இப்படி தொங்கிக் கொண்டிருக்கும்படி வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட அளவிற்கு மேலாக, முன்னே உந்தித் தள்ளி விரைத்துக் கொண்டு இடுப்பிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கின்ற பெரிய அரைக்கால் சட்டை அணிந்து தான் காணப்பட வேண்டும் என்று கற்பனைச் செய்து கொண்டிருக்கிற ஒரு மனிதனை நீங்கள் பாருங்கள். அவன் ஒரு பள்ளிக் கூட மைதானத்தில் இந்த விதமாக திரிந்து கொண்டிருக்க, (இதற்குப் பிறகு உலக ஞானமானது தொடர்ந்து வருகிறதாய் இருக்கிறது, இதைவிட அதிகம் இருக்குமாயின்) இப்படிப்பட்டவன் பதினான்கு வயது சிறுமிகளை அழைத்துச் சென்று திரிந்து கொண்டு, அங்கே தெருவில் வெளியே செல்கிறானே?

74164 இன்று நான் தங்கியிருந்த ஒரு விடுதியில் ஒரு தாயும் அவளுடைய கணவனும் உடலில் போதிய அளவு துணியில்லாமல் ஒரு சிறு கை துப்பாக்கியை சுற்றுகிற அளவுக்கு உள்ள துணியளவு கூட தங்கள் உடலில் இல்லாமல் இந்த குளிர்ந்த காற்றில் வெளியில் படுத்திருந்தனர். அவர்கள் தங்கள் சரீரம் பிறருக்கு காண்பிக்கப்பட வேண்டிய அளவுக்கு அழகு வாய்ந்தது என்று எண்ணுகிறார்கள். அது பிசாசு என்பதை நீங்கள் உணருவதில்லையா? அது உண்மை. ஒரு பைத்தியக்காரன், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள்தான் தங்கள் ஆடைகளை களைவார்கள், லேகியோன் அவ்விதமாக செய்தான். ஏனென்றால் அவன் பைத்தியக்காரனாயிருந்தான். கவனியுங்கள்! ஆகவே அதை நாம் கொண்டுள்ளோம். ஆனால் அது “நாகரீக பாணி” என்றும் “நவீன நாகரீகப் பண்பாடு” என்றும் அழைக்கப்படுகின்றது. நாம் அதை “பிசாசு” என்று அழைக்கின்றோம். அது பிசாசு தான் என்பதை நிரூபிக்க என்னிடம் வேதாகமம் இருக்கின்றது. அது பிசாசு பிடித்துக் கொண்டிருத்தல், பேய் பிடித்துக் கொண்டிருத்தல் ஆகும். (அது அட்டூழியம் அல்ல). உடைமையாகக் கொண்டிருத்தல் அவன் உங்களை பிடித்து ஆட்கொண்டிருக்கின்றான்! அது உண்மையே அவர்களிடம் இதைப்பற்றி கூறிப்பாருங்கள்? அவர்கள் சீறி எழுவார்கள். அவர்கள் அதனோடு எந்த சம்மந்தமும் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. இல்லை, ஐயா, அவர்களுக்கு தங்கள் சொந்த கருத்துக்கள் உள்ளன. ஏனென்றால் அவர்கள் ஆணவம் கொண்டு நடக்கின்றனர், அதை அவர்கள் ஒரு போதும் கடிந்து கொள்வதில்லை. (Sex Appeal) பாலின கவர்ச்சி இப்பொழுது பள்ளிக் கூடங்களிலும், சபைகளிலும் கையாளப்படுகின்றது. மேய்ப்பர்கள் அதைக் கடிந்து கொள்ளப் பயப்படுகிறார்கள். ஏதாவது ஒரு காரியத்தை கடிந்து கொள்வதென்பது மிகவும் அபூர்வமான செயலாகிவிட்டது.

75165 அன்றொரு நாளில் ஒரு ஊழியக்காரன், “கண்களுக்கான இந்த நீல நிற மையையும், உதடுகளுக்கான சிகப்பு சாயத்தையும் அவர்கள் கண்டுபிடித்த போது அவர்கள் ஒரு அழகு மிகுந்த உலகத்தை உண்டாக்கினார்” என்று கூறினதை நான் கேட்டேன். சுவிசேஷத்தில் உள்ள ஒரு ஊழியக்காரன், பிரசங்கபீடத்தில் நிற்கும் ஒருவன் இப்படிப்பட்ட ஒரு கருத்தைக் கூறுவானானால், ஒரு கல்வாரிப் பிரயாணம் அவனுக்கு தேவையாய் இருக்கின்றது. வேதாகமம் அதைக் கடிந்து கொள்ளும்போது, அது முற்றிலும் சரியானதாகும். 166 நீண்ட தலைமுடையை உடையவளாயிருந்து தன் தலையின் பின்னால் கொண்டை போட்டுக் கொண்டிருந்த ஒரு சகோதரியிடம் ஒரு பெந்தேகோஸ்தே குழு (அந்த இடத்தில் அவள் அழுது கொண்டே வந்திருந்தாள்) “உன்னுடைய உதிரி சக்கரம் போன்ற உபயோகமற்ற நீண்ட கூந்தலை வெட்டி விட வேண்டும்” என்றனர். “ஏனென்றால் வேதாகமம், ஏசாயா 5-ம் அதிகாரத்தில், அவள் பிறைச்சிந்தாக்குகளை கொண்டிருந்தாள் என்று கூறுகிறது” என்றனர். இப்பொழுது, “ஒரு ஸ்திரி வழக்கத்திற்கு மாறான காரியத்தைச் செய்கின்றாள்,” அவள் தன் முடியை வெட்டிக் கொள்கையில் தன் தலையை கனவீனப்படுத்துகின்றாள், வாழத் தகுதியற்றவள் என்று வேதாகமம் எப்படி கூற முடியும். அப்படியானால் நீண்ட முடி ஒரு…? அதைப் போன்ற ஏதோ ஒன்றை வேதம் கூறத்தக்கதாக உன்னால் எப்படி செய்ய முடியும்? நல்லது, நம்முடைய பெந்தெகோஸ்தே ஸ்திரீகளுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து விட்டீர்கள்! நீங்கள் உலகத்தின் காரியங்களை மிகவுமாக கண்டுவிட்டீர்கள். ஆதலால் தேவனுடைய வார்த்தையால் உங்களுக்கு போதுமான ஆர்வம் உண்டாவதில்லை. இப்பொழுது அதைத் தான் வேதாகமம் கூறியுள்ளது. அதைத் தான் வேதம் கூறியுள்ளது. அது நானல்ல, இப்பொழுது, அது வேதமே!

76167 ஓ, பாலினக் கவர்ச்சி! சிறிது காலத்திற்கு முன்பு குட்டைக் கால் சட்டைகள் அணிவதைக் குறித்து நான் ஒரு பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவள், “நான்—நான் தளர்காற் சட்டைகளை அணிகிறேன்” என்று கூறினாள். 168 அப்பொழுது நான், “அது மிகவும் மோசமானது” என்று கூறினேன். நீ…வேதம் அவ்வாறு கூறுகின்றது. அவர் மாற்ற முடியாது. 169 நீங்களோ, “அது பாப்டிஸ்ட்” என்று கூறலாம். அது பெந்தெகோஸ்தேயும் ஆகும். நான் உங்களிடம் பேசுகின்றேன். அது சரியே. அது உண்மை. 170 ஆனால் காரியம் என்ன? காரியம் என்ன? கம்பித் தடுப்புகளை யாரோ எங்கேயோ எடுத்துவிட்டார்கள் என்று வயதான பிரசங்கியாகிய என்னுடைய நண்பர் ஒருவர் கூறுவது வழக்கம். நாம் குறுக்கு கம்பிகளை எடுத்து விட்டோம், நாம் குறுக்குக் கம்பிகலை எடுத்து விட்டோம், நாம் பாவத்தோடு சமரசமாகிவிட்டோம்; நாம் குறுக்குக் கம்பிகளை எடுத்து விட்டோம், எனவே செம்மறியாடுகள் வெளியே சென்றன, ஆனால் இந்த வெள்ளாடுகள் எப்படி உள்ளே வந்தன? 171 காரியம் என்ன? தடுப்புக் கம்பிகளை, தேவனுடைய வார்த்தையாகிய தடுப்புக் கம்பிகளை நீங்கள் எடுத்து விடும்போது, ஞாபங்கொள்ளுங்கள். தன்னுடைய சபைக்கு அரணாக அவருடைய வார்த்தையை அமைப்பதே ஆதியிலே இருந்த தேவனுடைய திட்டமாயிருந்தது.

77172 ஆகவே, ஏவாள் “நல்லது, இப்பொழுது, இது நியாயமாகத் தோன்றுகிறதல்லவா, நான் நன்றாக வாழக் கூடும்” என்று தன் சுய புத்தியிலே சிந்தித்து கூறினபோது, அது நடந்தது. 173 ஆகவே எப்பொழுதுமே அதைச் செய்தது. அதன் காரணமாகத்தான் ஒரு பிரசங்கியாக இருப்பதற்கு அவள் தடை செய்யப்பட்டாள். பாருங்கள், அது தடுப்புக் கம்பிகளை அகற்றிவிட்டது. அங்குதான் (சபையானது) பெந்தெகொஸ்தேயில் அடிவேர்கள் முளைத்தன. அது தான் அடிவேர்களாகும். அதற்கான வேதவாக்கியங்கள் இல்லை. பாருங்கள்? இப்பொழுது, அப்படியானால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அங்கே முன்பு ஏதேனில் இருந்த அதே பலதரப்பட்ட குழப்பமான காரியங்களைத் தான் நீங்கள் பெறுவீர்கள். கவனியுங்கள், இப்பொழுது, ஆகவே நாம் வார்த்தைக்கு வருவோமானால், நீங்கள் அதைக் குறித்து… 174 யாராலும் அதை எதிர்த்து நிற்க முடியாது. அதைக் குறித்து யாராயினும் பேச நான் சவால் விடுகிறேன். சர்ப்பத்தின் வித்தைக் குறித்து நான் பிரசங்கித்தபோது, அநேகர் அதைக் குறித்து எதிர்த்து, கோபங் கொண்டனர். அதைக் குறித்து என்னிடம் நேரிடையாகப் பேச சில நபர்களை நான் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்களை என்னால் காண இயலவில்லை.

78175 அண்மையில் சிக்காகோவில், ஏதோ ஒன்றில் எனக்கு கண்ணி வைத்து சிக்க வைத்து விட்டதாக நினைத்திருந்தனர். அந்த ஒலி நாடாக்களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். சிக்காகோ பெரிய ஊழியக்காரர்கள் கூட்டமைப்பு முழுவதையும் அங்கே அவர்கள் கொண்டிருந்தனர். சகோதரன்…என்ன…டாமிஹிக்ஸ், சகோதரன் கார்ல்ஸன் அங்கே இருந்தனர். ஆகவே அந்த சம்பவும் நடப்பதற்கான இரண்டு இரவுகளுக்கு முன்னர், இரவில் கர்த்தர் என்னை எழுப்பி, “சென்று அந்த ஜன்னல் அருகே நில்” என்றார். நான் சென்றேன். அப்பொழுது புயல் காற்று அடித்துக் கொண்டிருந்தது. அவர் “இப்பொழுது இந்த காலை உணவு கூட்டத்தில் அவர்கள் உனக்கு ஒரு கண்ணியை வைத்திருக்கின்றனர். நீ பயப்படாதே, அங்கே செல், நான் உன்னுடனே கூட இருப்பேன்” என்று கூறினார். இப்பொழுது இதை நான் கர்த்தருடைய நாமத்திலே சொல்லுகிறேன். நீங்கள் இதை அவர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தேவனால் முன்னதாகவே உரைக்கப்பட்ட இந்த காரியம் ஒலி நாடாவிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அவர், “இப்பொழுது நீ அங்கு செல்ல பயப்பட வேண்டாம், போய் நில், நான் உன்னோடு இருப்பேன்” என்றார்.

79176 அடுத்தநாள் அங்கிருக்கும் அந்த அமைப்பின் தலைவரான சகோதரர் கார்ல்ஸனையும், சகோதரர் டாமி ஹிக்ஸ் அவர்களையும் நான் சந்தித்தேன். தேவன் என்னிடம் “டவுன் அன்ட் கன்டரி” என்று அழைக்கப்படும் இடத்திற்கு சென்று காலை சிற்றுண்டி வேளையில் நான் அவர்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்று சொன்னார். சரியாக நான் அங்கு சென்றேன். நான் “சகோதரர் ஹிக்ஸ் நீங்கள் வேதத்தில் தெய்வீகப் பாண்டித்திய பட்டம் பெற்றவர். நாம் அங்கிருக்கும் மகத்தான ஊழியக்காரர்களின் கூட்டத்தையும், அவர்களுடைய சிக்காகோ அமைப்பையும் சந்திக்கப் போகிறோம். நீங்கள் ஏன் சென்று எனக்காக பேசக் கூடாது? நான் உங்களுக்கு அநேக காரியங்களை செய்திருக்கிறேனே” என்று கூறினேன். நான் அவரை சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர், “ஓ, சகோதரன் பிரான்ஹாம், என்னால் அதைச் செய்ய முடியாது” என்று கூறிவிட்டார். 177 மேலும் நான், “நல்லது, ஏன் நீங்கள் இதை செய்தால் என்ன?” என்றேன். தொடர்ந்து நான், “நான் உங்களுக்கு எதை வேண்டுமானாலும் செய்வேன், இப்பொழுது நீங்கள் ஏன் அதை எனக்காக செய்யக் கூடாது?” என்று கேட்டேன். 178 அவர், “ஓ, சகோதரன் பிரான்ஹாம், என்னால் அதைச் செய்ய முடியாது, அவர்கள் அதைக் கேட்கமாட்டார்கள்” என்று கூறினார். சகோதரன் கார்லஸனும், இல்லை, “அவர்கள் கேட்கமாட்டார்கள்” என்றே கூறினார். 179 நான் “ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டேன். மேலும் நான், “உங்களுக்கு, நான் இதைக் கூறட்டும். ஏனென்றால் கேள்விக் கணைகளால் என்னை சிக்க வைக்கத்தக்கதாக ஒரு கண்ணியை அவர்கள் ஆயத்தப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை நீங்கள் இருவரும் அறிவீர்கள். அதை ஏற்பாடும் செய்திருக்கின்றீர்கள்” என்றேன். இப்பொழுது, இது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலி நாடா உங்களுக்கு தேவையாய் இருக்குமானால் அதை நாம் பெற்றுக் கொள்ளலாம். இம்மனிதர்கள் எல்லோரையும் நீங்கள் அறிவீர்கள். ஆகவே நான், “நாம் இக்காலை இங்கு உட்காருவோம் என்பதையும், டாமி இதை செய்ய மறுத்து விடுவார் என்பதையும் கடந்த இரவில் நான் தரிசனத்தில் கண்டேன். இப்பொழுது கவனியுங்கள். அந்த உணவு விடுதி அறையை நீங்கள் வாடகைக்கு எடுத்துள்ளீர்கள்” என்று நான் கூறினேன். அவர், “ஆம்” என்றார். நான், “அதற்குரிய வாடகை தொகை செலுத்தப்பட்டது” என்றேன். சகோதரன் கார்ல்ஸ்ன், “ஆம்” என்றார். 180 “ஆனால் அந்த அறையை நீங்கள் பெறப்போவதில்லை. அது கர்த்தர் உரைக்கிறதாவது! ” “ஏன்?” 181 “நீங்கள் வேறொரு இடத்திற்கு செல்லப் போகிறீர்கள். இப்பொழுது ஆயத்தம் செய்திருக்கிற இடம் பச்சை நிறம் கொண்டது. நாம் கூடப்போகும் அறை காவி நிறமுடையதாயிருக்கும். அங்கு நான் ஒரு ஓரத்தில் அமர்ந்திருப்பேன். டாக்டர் மேட் என்னுடைய வலது புறத்தில் உட்காருவார்; அந்த வயதான கருப்பு நிற ஊழியக்காரரும், அவருடைய மனைவியும் இங்கே இடது புறமாக உட்காருவார்கள்,” அது அந்த விதமாகவே அமைந்திருக்கும். ஆகவே நான், “நீங்கள் அப்படியே கூட வந்து இப்பொழுது கவனியுங்கள். தேவன் நோயாளிகளை சுகப்படுத்தினதை கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது அவர் யுத்தத்தில் இருப்பதையும் ஒரு முறை பாருங்கள்.” மேலும், “அவர் மகத்தானவர், அற்புதமானவர்,” என்றேன். தொடர்ந்து, “என்னிடம் கேட்கப்படப்போகும் கேள்விகளையும் எவ்வாறு அவை சந்தடியின்றி அமைதலாய் காணப்படும் என்பதையும் கவனியுங்கள்” என்று கூறினேன். நாங்கள் அந்தக் காலை அங்கு சென்ற போது…

80182 உங்களுக்கு அந்த ஒலி நாடா தேவையாய் இருக்குமானால்…ஜிம், நீ அதை வைத்திருக்கிறாய், அதை நீ கொண்டு வந்துள்ளாயா? சரியாக இங்கே, உங்களுக்கு ஒலி நாடா தேவையாயிருப்பின் அதை கூட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம். 183 நான், “நீங்கள் எனக்கு எதிராக என்ன வைத்துள்ளீர்கள்? மனிதர்களே, உங்களோடு உள்ள காரியம் என்ன?” என்று கேட்டேன். 184 சகோதரன் கார்ல்ஸன், “சகோதரன் பிரான்ஹாம் நமக்கு அது கிடைக்காது என்று இரண்டு நாட்களுக்கு முன்னார் கூறினார்” என்றார். எனவே அவர்களுக்கு அந்த இடம் கிடைக்கவில்லை. அவர்கள் அதை ரத்து செய்து விட்டார்கள். ஏனென்றால் ஒரு இசைக்குழு அந்த இடத்திற்கான முன்பணத்தை செலுத்தி இருப்பதை அவர்கள் அறியாதிருந்தனர். ஆகவே இந்த வியாபாரிகள் சங்க மக்கள் அந்த இடத்தை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. அதை குறித்ததான செய்தியை அநேகமாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கேயிருக்கும் சகோதரன் வில்லியம்ஸ் அவர்களும் கூட அறிவார். மேலும் அவர், “ஒவ்வொரு நபரும் எங்கெங்கு அமர்ந்திருப்பார்கள் என்றும், சரியாக என்ன சம்பவிக்கும் என்பதை சகோதரன் பிரான்ஹாம் என்னிடம் கூறியுள்ளார்” என்றார். மேலும், “ஒரு காரியம்,” நான்… “ஏறக்குறைய நாம் எல்லோருமே சகோதரன் பிரான்ஹாமுடனும் அவர் கொண்டுள்ள செய்தியின் பேரிலும் நாம் இணங்காதிருக்கலாம். ஆனால்,” “ஒரு காரியத்தை மாத்திரம் நான் ஒப்புக் கொள்ள வேண்டும். அதை உரைக்க அவர் பயம் கொள்வதில்லை. பயமே அடைவதில்லை” என்று கூறி “இப்பொழுது வாருங்கள் சகோதரன் பிரான்ஹாம்” என்று அழைத்தார். 185 நான், “இப்பொழுது, நான் துவங்குவதற்கு முன்னர், நான் கூறின காரியங்களின் பேரில் அந்த வேதத்தை எடுத்துக் கொண்டு யாராவது ஒரு மனிதன் என் பக்கத்தில் வந்து நின்று பேச வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறினேன். நீங்கள் கேள்விப்பட்டதிலேயே மிகவும் அமைதியான குழுவாக அது இருந்தது. நான் “உங்களால் அதற்கு ஆதாரம் அளிக்க முடியாவிட்டால், என்னைவிட்டு அகன்று விடுங்கள்! ஆம், சகோதர்களே, நான் உங்களுடன் தோளோடு தோள் கொடுக்க வந்துள்ளேன். ஆனால் வேத சத்தியங்களுக்கு நாம் வர வேண்டியவர்களாய் இருக்கின்றோம்” என்று கூறினேன். 186 “ஏன் நீங்கள்…நீங்கள் பெண்களை கடிந்து கொள்வதை விட்டு விடலாம் அல்லவா? ஓ, ஆம் நீங்கள் ஒரு…நீங்கள் தேவனுடைய ஒரு ஞான திருஷ்டிக்காரர் என்று மக்கள் விசுவாசிக்கின்றனரே” என்று கூறினர். அப்பொழுது நான், “அவ்விதமாக நான் ஒரு போதும் கூறினதில்லையே” என்று கூறினேன். 187 அவர் “ஆனாலும் மக்கள் அதை விசுவாசிக்கின்றனர்.” என்று கூறினார். மேலும், “ஏன் நீங்கள் பெண்களைக் கடிந்து கொள்வதை விட்டு விடக் கூடாது? பெண்கள் ஆடை அணிகிற விதத்தையும், தலைமுடி வெட்டிக் கொள்வதையும், அவர்களுக்கிருக்கிற மற்ற பழக்கங்களையும் குறித்து பேசுவதை விட்டு விடலாம் அல்லவா? அவர்கள் எப்படி வரங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தேவனுடைய மகிமைக்கென்று ஏதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் அவர்களுக்கு போதித்தால் என்ன? என்று கேட்டார். 188 அப்பொழுது நான், “தங்களுடைய மொழியின் முதல் எழுத்துகளைக் கூட அவர்கள் கற்றுக் கொள்ளாமலிருக்கும்போது, நான் எப்படி இயற்கணிதத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடியும்?” என்று கூறினேன். அது உண்மையே. நீங்கள் அடித்தளத்திற்கு திரும்பி வந்து அங்கிருந்து தொடங்க வேண்டும். தேவனே எங்கள் மீது இரக்கமாயிரும். ஆம் ஐயா.

81189 இப்பொழுது நாம் கடைசி காலத்தில் இருக்கின்றோம். சிகப்பு விளக்கு பிரகாசித்து மின்னுகிறது. கர்த்தருடைய வருகை சமீபமாய் இருக்கின்றது. ஆம், ஐயா கவனியுங்கள். கடைசி கால செய்தி கடைசி கால நிலைமைகளை சந்தித்தாக வேண்டும். எந்த இடத்திலிருந்து அவர்கள் விட்டு விலகினர்களோ அவ்விடத்திற்கு செய்தியானது திரும்பக் கொண்டு வர வேண்டும். எப்பொழுதுமே கடைசி கால செய்தி கடைசி கால நிலைமைகளைச் சந்தித்தாக வேண்டும். வேத வாக்கியங்கள் முழுவதுமாக அவ்வாறேதான் உள்ளது. இந்த காலத்திலும் அவ்விதமாகவே அது நடப்பிக்க வேண்டும். அதாவது மூல வார்த்தைக்கு திரும்ப அழைத்தல் ஆகும். ஓ, என்னே! மற்ற நாளிலே முந்தின செய்தியாளர்கள் செய்தவிதமாக, இந்த செய்தியும் அவ்விதமாகவே இருந்தாக வேண்டும். நமக்கு அவ்விதமாகவே வாக்களிக்கப்பட்டுள்ளது! தேவன் தம்முடைய வார்த்தையில் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். “பிள்ளைகளுடைய விசுவாசத்தை பிதாக்களிடத்திர்கு திருப்புவான்” என்கின்ற காரியம் சம்பவிக்கும் என்று மல்கியா 4. கூறுகிறது. அதை வாக்குத்தத்தம் செய்கின்றது. ஆகவே அந்த நாளிலே நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். 190 ஒவ்வொரு சமயத்திலும் ஜனங்களை வழி நடத்தும் ஒரு கூட்ட நபர்கள் தான் அவர்களை மிகவுமாக குழப்பத்திற்குள்ளாக்கி விடுகிறார்கள். ஓ, எப்பொழுதும் அவ்வாறே தான் இருந்து வருகின்றது. அதிக பட்சமாக ஜனங்கள் குழம்பி விடுவதில்லை. வழி நடத்துபவர்கள் அவர்களை குழப்பி விடுகிறார்கள். இப்பொழுது… நீங்களோ, “ஓ, சகோதரர் பிரான்ஹாமே!” என்று கூறலாம்.

82191 நல்லது, இப்பொழுது ஒரு நிமிடம், இதை வேதாகமப்பூர்வமாக நாம் பார்த்தாக வேண்டும். அது வேதாகமப் பூர்வமாக இல்லையெனில் அப்பொழுது அதில் எந்தப் பயனும் இல்லை. அவர்களுடைய ஞான வார்த்தைகளினால், ஆவியில் ஏவப்படாத அவர்களுடைய வழி நடத்துதலினாலும், உலகப் பிரகாரமான வார்த்தைகளின் ஞானத்தினால், அவர்கள் …ஏன், அறிவாளிகளான அவர்களில் சிலர் அதை செய்யக் கூடும். ஆனால் சாத்தானும் அவைகளைச் செய்யத்தக்கதான ஞானத்தைக் கொண்டிருப்பவன் என்பதையும் கூட நீங்கள் சிந்திக்கிறதில்லையா? அவன் இயேசு கிறிஸ்துவை அணுகி அவருக்கு ஒரு காரணத்தை அளித்து, வேத வாக்கியங்களையும் அவருக்கு மேற்கோள் காட்டினான் அல்லவா, அப்படித்தானே? அவன் அதைச் செய்தான். அதில் அவன் திறமை மிக்க அறிவாற்றல் கொண்டவன். ஆனால் இயேசு அவனிடம் ஒரு போதும் தர்க்கம் செய்யவில்லை; அவர், “அப்பாலே போ சாத்தானே; இவ்வண்ணமாகவும் எழுதியிருக்கிறதே” என்று கூறினார். ஆம் ஆவியில் ஏவப்பட்டிராத வழி நடத்தும் தன்மை.

83192 கோராகை கவனியுங்கள், தேவன் மோசேயை செய்தியுடன் அனுப்பின நாட்களில் கோராகும் தாத்தானும் யோசனை செய்து, மோசேயிடம் வந்து, “இப்பொழுது, ஒரு நிமிடம், நீ உன் மீது அளவிற்கதிகமாக காரியங்களை வைத்துக் கொண்டிருக்கின்றாய். நீ கடற்கரையில் உள்ள ஒரே கூழாங்கல் தான் என்றும்; நீ மாத்திரமே சேற்றில் உள்ள ஒரு வாத்து என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறாய். பரிசுத்தமுள்ள மற்ற ஜனங்களும் இருக்கிறார்கள் என்று நான் உனக்குத் தெரியப்படுத்துவேன்” என்றனர். அவர்கள் பரிசுத்தமுள்ளவர்கள் அல்ல என்று மோசே கூறவில்லை. ஆனால் அவன் ஒரு கட்டளையை உடையவனாய் இருந்து அதை செய்ய வேண்டியவனாய் இருந்தான். ஆகவே அவர்கள் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு மோசேக்கு எதிராக வந்து கொண்டிருந்தனர். 193 ஆகவே தேவன் அவனிடம், “போய் அந்த வாசலில் நில்” என்று கூறினார். அந்த மனிதர்கள் தங்களுடைய கரத்தில் தூபகலசத்தை வைத்திருந்தனர். அந்த தூபகலசம் என்ன செய்திருக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். தேவன் பூமியைப் பிளந்து அவர்களை விழுங்கிப் போட்டார். அந்த தூபகலசத்தினுள் பலி பீடத்திலிருந்து எடுத்த நெருப்பு இருந்தது. நெருப்பு நிறைந்திருந்த தூபகலசத்தை அவர்கள் கையில் வைத்திருந்தாலும், மிகவும் அடிப்படையானதாக அமைந்திருந்த அந்த செய்தியை அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளத் தவறினர் 194 தேவன் “மோசே, நான் இதை செய்வதற்கென்றெ உன்னை அனுப்புகிறேன். அவர்களை இங்கே அழைத்து வா” என்று சொன்னார். 195 பாருங்கள், அவர்கள் அதை அடையாளங் காண தவறினார்கள். அந்த வேதாகம பள்ளித் தீர்க்கதரிசிகளுக்கு எப்படி எலியா, “வளைந்து கொடுக்காதவனாக” வார்த்தையோடு நிற்பவனாகக் காணப்பட்டானோ அதே விதமாக மோசேயும் அவர்களிடம்; “வளைந்து கொடுக்காதவனாக” காணப்பட்டான். 196 அந்தவிதமாகத்தான் பெந்தெகொஸ்தே மக்களாகிய நீங்களும் உலகத்தின் போக்கிலிருந்து உங்களை வேறு பிரித்து வார்த்தையுடன் சரியாக இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் விட்டு வெளியே வந்த அதே காரியத்திற்குள் நீங்கள் சென்று மறைந்து போகாதீர்கள். நீங்கள் நெறிதவறி அடித்துச் செல்லப்படுகிறீர்கள். கல்வாரியிலிருந்து உங்கள் நங்கூரத்தை அறுத்து விடாதீர்கள். தேவனுடைய வார்த்தையை பற்றிப் பிடித்துக் கொண்டிருங்கள். ஏனெனில், “இந்த கல்லின் மீது என் சபையைக் கட்டுவேன்,” அதனோடே தரித்திருங்கள்.

84197 இப்பொழுது, தாத்தானும் மற்றவர்களும் அவர்கள் ஒரு…வேறொரு மனிதன் இருக்கக் கூடும் என்று நினைத்தான். பாருங்கள். அது தேவனுடைய திட்டத்தில் தங்களுடைய கருத்துகளை புகுத்த முனையும் மனித அறிவுத் திறனாகும். அது அருமையான ஒன்று தான். தேவனுடைய வார்த்தைக்குள் தங்களுடைய கருத்துகளை புகுத்த முனையும் மனித அறிவுத் திறமை. அது கிரியை செய்யாது! அது கிரியையே செய்யாது. அது ஒருபோதும் கிரியை செய்ததுமில்லை. அது ஒருபோதும் கிரியை செய்யாது. 198 இப்பொழுது இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் அங்கே நின்று கொண்டு “என்னில் பாவம் உண்டென்று உங்களில் எவன் என்னை குற்றம் சாட்ட முடியும்? நான் செய்வேன் என்று வேதம் என்னைக் குறித்து சொல்லியிருக்கிறதின்படி நான் செய்யவில்லை என்று உங்களில் யாரால் காண்பிக்க முடியும்? நான் தான் மேசியா என்று உரிமை கோருகிறேன். என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாவிட்டால், என்னை நீங்கள் விசுவாசிக்க வேண்டாம். ஆனால் நான் அந்தக் கிரியைகளைச் செய்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க முடியாவிட்டாலும், நான் செய்கிற கிரியைகளை விசுவாசியுங்கள். அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன” என்றார். சரியாக அவர்களால் அவற்றை விசுவாசிக்க முடியவில்லை. அவர்களுடைய சொந்த வழிகளின்படி அவர் கிரியை செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

85199 இதைச் செய்ய் முனைந்து தவறாய் போகும்படியாக அவர்கள் எண்ணவேயில்லை. அவர்கள் அவ்வாறு…மனிதன் அவ்வாறு செய்தாக வேண்டும் என்று எண்ணுவதில்லை என்று நான் விசுவாசிக்கிறேன். அங்கே புறம்பேயுள்ள அந்த பெரிய ஸ்தாபன சபைகளில் அருமையான மக்களை நான் கண்டிக்கின்றேன். அருமையான மக்கள் இருப்பதை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஒரு வழக்கறிஞர் இங்கு ஒலிபரப்பப்படுகின்ற வானொலியில் இவ்வாறு கூறினதை நான் இங்கு வந்து கொண்டிருக்கும்போது கேட்டேன், அதாவது, “ஊழியக்காரர்கள் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு இப்படிப்பட்ட தான வேளைகள் வருவதைப் பார்த்து, உலகத்தின் பாவங்களைக் குறித்து நீதியான உளக்கொதிப்பை எப்படி கிளப்பி விடாதிருக்கிறார்கள் என்பது வினோதமான காரியமாயுள்ளதே!” என்றார். ஒரு வழக்கறிஞர் எழும்பி அதைக் கூற வேண்டியதாயுள்ளதே! “ஆகவே எப்படி சபை மக்கள் உலகத்திற்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்வதற்கான மிஷினெரிமார்களின் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்காமல், எல்லா விதமான விலங்கியல் பூங்காக்களிலும், மற்ற பூங்காக்களிலும் தங்கள் பணத்தை எப்படி செலவு செய்ய முடிகின்றது.” 200 பட்டினியால் வாடும் மிஷினெரிமார்கள் தங்கள் கால்களில் காலணிகள் இல்லாமல்…அல்லேலூயா. ஏன்னென்றால் அவர்கள் தேவனுடைய வார்த்தைக்காக நிற்கின்ற காரணத்தால் அவர்களை ஆதரிக்க எந்த ஸ்தாபனமும் இல்லை. அவர்களை ஆதரிக்க ஒன்றுமேயில்லை. அங்கிருக்கும் அவர்களை நீங்கள் ஏதோ ஒன்றைக் கொண்டு ஆதரிக்கின்றீர்கள். அப்படியானால் அவர்கள் எதைக் கொண்டவர்களாய் இருப்பார்கள்? ஸ்தாபனக் கொள்கை கருத்துக்கள் கொண்ட ஒரு பெரிய கூட்டமாயிருப்பவர்கள். ஒரு உண்மையான, உத்தமமான, அடையாளங்கள் பின் தொடருகின்ற ஒரு ஊழியக்காரன் தங்களுக்கென சில காசுகள் சேமித்து வைக்கும் ஏதோ ஒரு சலவை தொழில் செய்யும் ஒரு பெண்ணைத்தான் சார்ந்திருக்க வேண்டியதாயிருக்கும். கவனியுங்கள். அதுதான் காரியம். 201 அவ்விதமாகவே நடந்து கொள்ள வேண்டும் என அவர்கள் எண்ணங்கொள்வதில்லை…நல்லது. ஆனால் அவர்களுக்கு என்ன ஆயிற்று? அவர்கள் குருடாயிருக்கின்றார்கள். இயேசுவும் அவ்வண்ணமாகவே கூறியிருக்கின்றார். நினைவிருக்கட்டும். அதே காரியத்தை தான் இயேசு கூறியிருக்கின்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே அதே போன்று தான் இன்றைக்கும் இருக்கின்றது.

86202 இப்பொழுது கவனியுங்கள். அதிகமாக கடிந்து கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன். ஆனால் நீங்கள் சத்தியத்தை அறிந்து கொள்கின்ற வேளையும், நான் கடிந்து கொள்வதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நான் முயற்சிப்பது என்னவென்றால்…நான்—நான் நேசிக்கின்றேன். ஆகவே நீங்கள்…நான்—நான் சபையைக் குறித்து வைராக்கியம் கொண்டவனாய் இருக்கிறேன். இது, அவர்கள் அநேகமாக அசெம்ப்ளீ ஆப் காட் சபையாகவோ அல்லது எதுவயிருந்தாலும், அது என்னவென்பது எனக்குத் தெரியாது. என்ன…அது எனக்கு எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. அது தேவனுடைய சபையாகும். அது தான், அது தேவனுடைய சபை என்று நான் விசுவாசிக்கின்றேன். நல்லது இப்பொழுது நாம் ஸ்தாபன தேவனுடைய சபையாயிராமல் இருதயத்திலே கிறிஸ்தவர்களாக காணப்பட்டாக வேண்டும். நாம் அவ்வாறே தான் இருந்தாக வேண்டும் தேவனுடைய சபையானது சுவருகளுக்குள் வாசமாயிருக்கின்றது. பெயரளவில் இன்னும் மற்றவைகளில் அல்ல.

87203 இப்பொழுது, இன்றைக்கு இதைக் குறித்து அதிகமாய்க் காணப்படுகின்றது. அதாவது உறுப்பினர், அங்கத்தினர் ஆவதுதான் மக்கள் முக்கியமான ஒன்றாகக் கருது கின்றனர். இப்பொழுது பாப்டிஸ்டுகள் கொண்டுள்ள எழுப்புதலைப் பாருங்கள், ஓ, அவர்கள் ஏற்கனவே ஒன்றைக் கொண்டிருந்தனர். 1944-ல் அவர்கள் ஒரு கொள்கைக் குரலை கொண்டிருந்தனர். அது “1944-ல் பத்து லட்சத்திற்கு மேல்.” பில்லி கிரஹாமின் செய்தி சென்று கொண்டிருக்கின்றது. ஏன், நிச்சயமாக அது மகத்தான ஒரு காரியத்தை செய்திருக்கின்றது. மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், அது மகத்தான ஒரு காரியமாய் இருக்கின்றது. ஆனால் நாம் எதைக் கொண்டிருக்கிறோம்? 204 இயேசு பரிசேயர்களைப் பார்த்து “குருடர்களுக்கு வழி காட்டுகிற குருடர்களே, ஒருவனை உங்கள் மார்க்கத்திற்குள் கொண்டு வர சமுத்திரங்களைச் சுற்றி சுற்றி வருகிறீர்கள். பிறகு அவன் துவக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேலாக நரகத்தின் பிள்ளையாக ஆகிவிடுகிறான்” என்று கூறினார். ஆகவே அதைத்தான் இன்றைக்கு நாம் கொண்டிருக்கின்றோம்,

88205 நான் கென்டக்கியிலுள்ள லூயிவில்லில் பில்லிகிரஹாமின் காலை உணவு கூட்டத்தில் இருந்தபோது, ஒரு கண்டிப்பு மிகுந்த சுவிசேஷகனான அவர், “நான் செல்கின்ற…பவுல் கூறினான்…இதோ ஒரு உதாரணம்.” மேலும் அவர், “பவுல் ஒரு பட்டிணத்திற்கு சென்று ஒருவனை மனம் திரும்பச் செய்தான். பிறகு ஒரு வருடம் கழித்து அவன் திரும்பி வந்த போது அந்த ஒருவனின் மூலம் முப்பது பேர்களைக் கொண்டான்” என்றார். மேலும், “நான் ஒரு பட்டினத்திற்கு சென்று முப்பதாயிரம் பேர்களை மனம்மாறும்படிச் செய்கின்றேன். ஆனால் ஒரு வருடம் கழித்து திரும்பவும் வந்தால் அங்கே முப்பது பேர்களைக் கூட என்னால் காண முடியவில்லை” என்றார். அவர், “அதற்கான காரணம் என்ன?” என்று கேட்டார். அந்த சுவிசேஷகனுடைய அணுகுமுறையை நான் பாராட்டினேன், அங்கு உட்கார்ந்திருந்த சுமார் முன்னூறு பேர்களுக்கு நேராக அவர் தன் கை விரலை நீட்டி, “சோம்பேறி பிரசங்கிகளாகிய உங்களால் தான் அப்படி ஆகின்றது. நீங்கள் உங்கள் அலுவலகங்களில் மேசைக்கு மேல் கால்களை போட்டுக் கொண்டு உட்கார்ந்து தொலைபேசி மூலமாக ஒருவனை அழைத்து அவனை உங்கள் சபையில் சேர்ந்து கொள்ளுமாறு கூறுகின்றீர்கள். நீங்கள் தான் அவனைப் போய் சந்தித்ததாக வேண்டும்” என்று கூறினார்.

89206 நான் அங்கு உட்கார்ந்து கொண்டு, “(ஓ தேவனே!) உங்களுக்குத் தெரியுமா, சுவிசேஷகர் பில்லி, நீர் ஒரு மகத்தான மனிதன். நானோ—நானோ ஒன்றுமற்றவன். ஆனால் நான் உங்களை ஒன்று கேட்க வேண்டும்” என்று எண்ணினேன். இதை கூறியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான்—நான்—நான் அந்த சகோதரனை மெச்சுகிறேன். அவர் தேவனுடைய ஊழியக்காரர் என்று நான் கருதுகிறேன். ஆனால் நான் “அப்படியானால், பில்லி தன்னைப் பின்பற்றத்தக்கதாக பவுல் எப்படிப்பட்ட ஒரு பிரசங்கியை உடையவனாய் இருந்திருப்பான்?” என்று நான் கூற விரும்பினேன். என்ன நடந்தது? அவன் தன் கையை தூக்கி ஒரு முடிவு எடுக்க மாத்திரம் பவுல் விடவில்லை. அவனை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு கொண்டு சென்று, அவனுடைய ஆத்துமாவை கொழுந்து விட்டெரியச் செய்தான். பிறகு அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.

90207 அது தான் இன்றைக்கு நடைபெறும் காரியமாய் இருக்கின்றது, அது அங்கத்தினர் ஆகுதல். ஆம். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] …அங்கத்தினர்கள், பெரிய அங்கத்தினர்கள், பெரிய ஞாயிறு பள்ளி வகுப்புகள், மனம்மாறச் செய்கிறவர்களுக்கும் மற்ற சபைகளிலிருந்து யாராவது சிலரைக் கொண்டு வருபவர்களுக்கும் பரிசுகள் வழங்குதல், யார் நிறைய பேர்களைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை பார்த்தல். உங்களுக்குத் தெரியுமா? அது பரிசேய முறையாகும். அதன் பிறகு “கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர்களை மிஞ்சிவிட்டோம்” என்று அதைக் குறித்து மிகப் பெருமையாகப் பேசுவது. தேவனுடைய சபையை ஒரு போட்டியில் கொண்டு சென்று வைக்க வேண்டிய நிலைமைக்கு, போட்டி போட்டுக் கொண்டு ஆள் சேர்க்கும் நிலைக்கு நீ வந்து விட்டால், கதவுகளை மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் இதுவேயாகும். 208 தேவனுடைய சபையானது பூமியிலே தேவனுடைய ஜீவிக்கின்ற பொருளாய் இருந்து கொண்டு, இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தும் ஒன்றாய் இருக்கிறது. அது பிரபலமான ஒன்றாய் இருக்காது என்பதை நான் அறிவேன். அது அவ்வாறு இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நாம் சரியாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.

91209 அதைக் குறித்து மிகப் பெருமையாகப் பேசுகின்றனர்…ஆனால் உங்களுக்கு தெரியுமா? அந்த பெரிய இரைச்சல்கள் தீர்க்கதரிசியாகிய எலியாவை பாதிப்படையச் செய்யவில்லை. அவன் நெருப்பும் புகையும் செல்வதையும், இடியும் மின்னலையும் அவன் கேட்டான். இரத்தம் எண்ணெய் மற்ற எதுவும் அவனுக்கு ஒருபோதும் பாதிப்பை உண்டு பண்ணவில்லை. உங்களுக்குத் தெரியுமா? அதிக சத்தத்தை உடைய ஏதோ ஒரு பெரிய காரியத்தைத் தான் அமெரிக்கா எப்பொழுதுமே எதிர் நோக்கி கொண்டிருக்கிறது. ஆனால் தேவன் தீர்க்கதரிசியை கவருகின்ற “ஒரு அமர்ந்த மெல்லிய சத்தமாய்” இருக்கின்றார்.

92210 உங்களுக்குத் தெரியுமா, ஒரு முறை ஒரு வாகனம் வெளியே உள்ள வயல் வெளிக்குள் சென்றது. அது குலுங்கிக் கொண்டே சென்றதால் அதிக சத்தத்தை எழுப்பிக் கொண்டு வயலில் சென்றது. ஆனால் அது திரும்பவுமாக வந்த போது அதே விதமாகத்தான் மேடு பள்ளங்களின் மேல் குலுங்கிக் கொண்டு வந்தது. ஆனால் ஒரு சிறு சத்தத்தைக் கூட அது உண்டு பண்ணவில்லை, ஏனெனில் அதில் நல்ல பொருட்கள் ஏற்றப்பட்டு நிரப்பப்பட்டிருந்தது. பாருங்கள்? ஆம். 211 ஆனால் நாம் நம்முடைய அனுபவத்தை ஒரு இரைச்சல் கூட்டத்தின் மேல் இளைப்பாற வைக்கிறோம். எப்படி நம்மால் அதைச் செய்ய முடியும். அதைப் போன்ற காரியங்களை எப்படி நம்மால் செய்ய முடியும்? ஓ, என்னே! ஆகவே பிறகு ஹாலிவுட்டின் கவர்ச்சியை உள்ளே கொண்டு வந்து மிகவுமாக இறுக்கமான ஆடைகள் அணிந்து கவர்ச்சியாகக் காணப்படுகின்ற பெண்களை பிரசங்க பீடத்தின் மேல் ஏற்றி ஆவியிலே நடனமாடுதல். அது எப்படிப்பட்ட எந்த விதமான ஆவி என்று எனக்கு தெரியவில்லை! 212 நான் இப்பொழுது, குற்றம் காண்கிறவனாயிருக்க வேண்டும் என்று கருதவில்லை. நான்—நான்…நான்—நான் உங்களை நேசிக்கின்றேன். அப்படி நேசிக்கவில்லையெனில், அதைவிட வேறொரு நோக்கத்தை நான் கொண்டிருப்பேனானால் தேவன் என்னை நியாயந்தீர்ப்பார். புரிகிறதா? 213 ஆனால் நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்களா? பாருங்கள். அங்குதான் பெந்தெகொஸ்தேயினர் அடித்துச் செல்லப்படுகின்றனர். “அந்த மூலையில் உள்ள சகோதரன் கொண்டிருப்பதைக் காட்டிலும் நாம் அதிகமாக கொண்டிருக்கிறோம். ஓ! அசெம்பிளீஸ் கொண்டிருப்பதைக் காட்டிலும் நாம் அதிகம் உடையவர்களாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் ஒருத்துவக்காரர், அல்லது நாம் அந்த திரித்துவக்காரர், நாம் தான்…” ஓ! இது, அது அல்லது வேறொன்று எல்லாம் அவர்கள் கொண்டிருக்கின்ற வித்தியாசப்பட்ட வகைகள் ஆகும். நீங்கள் பாருங்கள். ஓ, சகோதரனே, அது தேவனுக்கு ஒரு பொருட்டல்ல. அவர் ஒரு தனிப்பட்ட நபருடன் ஈடுபடுகின்றார். அது சரி.

93214 கவனியுங்கள், பெரிய சத்தங்கள், ஆனால் அவை அந்த தீர்க்கதரிசியின் கவனத்தை ஈர்க்கவில்லை. அந்த தீர்க்கதரிசி அந்த பெரிய சத்தங்களை குறித்து அக்கறை கொள்ளவில்லை. ஆனால் அவன் அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தை கேட்டபோது, அது வார்த்தை என்று அவன் அறிந்திருந்தான். ஆகவே தன் முகத்தை மூடிக் கொண்டு வெளியே நடந்து வந்தான். 215 உங்களுக்குத் தெரியுமா, சூரியனானது சிறு சத்தம் கூட இல்லாமல் பதினைந்து நிமிடங்களில் அதிகமான தண்ணீரை ஈர்த்திழுக்கும் தன்மை கொண்டதாய் உள்ளது. மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் …சூரியனானது பத்து லட்சம் பீப்பாய்கள் அளவு தண்ணீரை ஈர்ந்திழுக்கும்போது இருப்பதைக் காட்டிலும் ஒரு காலன் அளவு தண்ணீரை இழுக்க நாம் அதிக சத்தத்தை உண்டு பண்ணுகிறோம். அது சரி. ஏதோ பெரிதான ஒன்றையும், ‘ஓ…ஹூரா என்கின்ற ஆதரவான ஆரவார மகிழ்ச்சிக் குரல்களையும் இன்னும் அதிகமான ஆரவார பேரொலிகளையும் உடைய ஒன்றை நாம் எப்பொழுதுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் தேவனுடைய வார்த்தையை எடுக்க வேண்டும் என்கின்ற நிலை வரும்போது, அப்பொழுது காரியமானது வருகின்றதாயுள்ளது. புரிகிறதா? அவர்கள் வந்து, “நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் உனக்குக் கூறுகிறேன்…” என்று கூறுவர்.

94216 அண்மையில் இங்கே ஒரு மனிதனை சந்தித்தேன் …இது புனிதத்துவத்தை பாழாக்குகிற ஒன்றாய் இருக்குமென்றால், தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும். நான் ஒரு கூடார கூட்டத்தில் இருந்தேன். ஒரு பெந்தெகொஸ்தே ஊழியக்காரர் தன்னுடைய மனைவியை இசைப் பேழை என்ற இசைக்கருவியை இசைப்பதற்காக அழைத்து வந்தார். அவர் தன் மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தும்போது, உண்மையாகவே சொல்லுகிறேன். நான் அநேகமாக மயக்கமடைந்து விட்டேன். அந்த ஸ்திரீ முடியை குட்டையாக கத்தரித்திருந்தாள். அது சுருள் சுருளாக ஆக்கப்பட்டிருந்தது. மிகப் பெரிய மகத்தான காதணிகளை அவள் அணிந்திருந்தாள். அவள் உதடுகளில் போதுமான அளவிற்கு சாயம் அல்லது வேறு என்னவோ பூசப்பட்டிருந்தது. கை நகங்களும் வர்ணம் தீட்டப்பட்டிருந்தன. அவள் ஒரு …அது பெரிய விலங்கின் நீளமான நகத்தைப் போல, பயங்கரமாய் காட்சியளித்தது. அவள் பாலுணர்ச்சியை தூண்டும் விதத்தில் கவர்ச்சியாகக் காணப்பட்டாள். சிறிய துணியினை அணிந்து கொண்டு, உட்காரும்போது தன் கால் முட்டிகளை மறைக்க முடியாததாய் இருந்தது. நல்லது, நான் ஒரு கணப்பொழுது அங்கே நின்று விட்டேன். பிறகு நான், “சகோதரனே நான் ஏதாவதொன்றைக் கூறுவேனானால் உமக்கு வருத்தத்தை உண்டாக்குமா?” என்று கேட்டேன். 217 அவர், “ஏன், நிச்சயமாக இல்லை” என்றார். அருமையான மனிதன். அவளும் ஒரு அருமையான ஸ்திரீயாக காணப்பட்டாள். அப்பொழுது நான், “உம்முடைய மனைவி ஒரு பரிசுத்தவாட்டி என்று நீர் கூறுகிறீரா?” என்று கேட்டேன். அவர் “ஆம்” என்றார் 218 நான், “நான் கூறும் கருத்துக்காக பொறுத்துக் கொள்ளவும். ஆனால் அவள் எனக்கு பரிசுத்தமில்லாதவளாகக் காணப்படுகிறாள்” என்றேன், மேலும் நான், உங்களுக்குத் தெரியுமா, “அதைப் போன்ற ஏதாவதொன்றாய் உள்ளது” என்றேன். நான் கூறினேன்… 219 அவர் “நீர் என்ன கூற முற்படுகிறீர் சகோதரன் பிரான்ஹாம்?” என்று கேட்டார். “ஓ” மேலும் அவர், “நீர் பழைய நடைமுறைப் பாணியைப் பின்பற்றுகிற கூட்டத்தை சார்ந்தவராய் இருக்கிறீர்” என்று கூறினார். 220 நான், “வேத வசன நடைமுறைப் பாணியை பின்பற்றுகிற பிரிவைச் சேர்ந்தவன் நான். அது உண்மை, வேத வசன நடைமுறை பாணியை பின்பற்றுகிற கூட்டப் பிரிவு” என்று கூறினேன். ஒரு பரிசுத்தவான் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டான் என்றே நான் நினைக்கிறேன். வேதாகமம் அதை அவ்வண்ணமாய்க் கடிந்து கொள்ளும் போது என்னால் அதைச் செய்ய முடியாது. புரிகிறதா?

95221 சரி, ஒவ்வொரு சமயமும், நாம் கேள்விப்படுகின்ற காரியம், “அவர்கள் நாற்பது தீர்மானங்கள் எடுத்தார்கள்,” “நாற்பத்து நான்கு தீர்மானங்கள்,” “முன்னூறு தீர்மானங்கள் நாங்கள் எடுத்தோம்” என்பதேயாகும். நல்லது. அது தான் அறிக்கை. அறிக்கைகள் என்பது “கற்களாகும்.” அது சரி. ஏனெனில் பேதுரு தன்னுடைய அறிக்கையின் பேரிலே “கல், சிறிய பாறை” என்று அழைக்கப்பட்டான், பேதுரு, அவனுடைய அறிக்கை. இப்பொழுது கற்கள் என்பது சரியே, ஆனால் வார்த்தை என்னும் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு அவைகளை செதுக்கி அவைகளை தேவனுடைய குமாரர்களாக ஆக்கும் ஒரு உண்மையான கல்கொற்றன் இல்லையெனில் அந்த கல்லினால் ஒரு கட்டிடத்திற்கு என்ன மதிப்பு, அல்லது என்ன பயன்? புரிகிறதா? ஒரு நல்ல அறிக்கை என்பது என்ன? 222 அதன் காரணமாகத்தான் நீங்கள் திரும்பி வந்து பார்க்கும் பொழுது முப்பதாயிரத்தில் முப்பது பேரைக் கூட காண முடிவதில்லை. நீங்கள் புழுதியிலிருந்து கற்களை அங்கே வெளியே உருட்டி விடுகிறீர்கள். ஆகவே அவை இன்னுமாக ஆலயத்திற்கு ஏற்றதாக அமைந்திருக்கவில்லை! அவைகள் செதுக்கப்பட்டாக வேண்டும். தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றவாறு அளக்கப்பட்டு, அங்கே பொருத்தப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டு அப்போஸ்தலர்களுடைய உபதேசமாகிய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட வேண்டும். மூலைக்கல் இயேசு கிறிஸ்துவே ஆவார். ஆகவே தான் அவர் “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்” என்றார். அது உண்மை.

96223 நாம் ஒருவரையொருவர் இழிவாக கருதும்போது நாம் எல்லாரும் ஒரே சபையாக எப்படி இருக்க முடியும்? அவர், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாய் இருக்கும் பொழுது நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லா மனிதர்களும் அறிந்து கொள்வார்கள்” என்று கூறினார். நாம் கொள்கை மாற்றம் செய்து கொண்டு, வேறு பிரிந்து ஸ்தாபன வேறுபாடுகளால் …நான் அதை மக்கள் மீது போடவில்லை. அதை நான் ஸ்தாபனத்தின் மீது சுமத்துகிறேன். அது சரி. மக்களால் அது நேரிடுவதில்லை. புரிகிறதா? ஓ, அது மிகவும் கேடானது, இன்னுமாய் நான்… 224 அவர்களை கட்டிடத்தின் பிள்ளைகளாக செதுக்கி வடிவமைக்க தேவனுடைய வார்த்தையாகிய கூர்மையான ஆயுதத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். ஓ, என்னே, “தேவனே, மல்கியா 4-வுடன் துரிதப்படும் இந்த கடைசி நாட்களில் செய்தியை எங்களுக்குத் தாரும். யாரையாவது எங்களுக்குத் தாரும். இந்த பெந்தெகோஸ்தே சபையைக்காக்க ஏதாவதொன்றை அனுப்பும்” என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது.

97225 இந்த கடைசி நாட்களுகென எந்தவிதமான ஒரு செய்தியாளனை தேவன் நமக்கு அனுப்புவார்? அந்த சமயம் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கும் உங்கள் சகோதரனாக, உடன் ஊழியக்காரனாக, நான் இதை உங்களுக்கு கூறுகிறேன். என்னுடைய சகோதரனே, சகோதரியே முந்தைய காலங்களில் வந்த செய்தியாளனைப் போலவே இவனும் அதேவிதமாகவே இருப்பான். அதே விதமாகவே! அவன் சபையை வார்த்தைக்கு திரும்பக் கொண்டு வருவான். தேவனே, அது இங்கே நடந்தேறுவதற்கு முன்னர் அதற்கான அஸ்திபாரத்தை நாங்கள் போடட்டும். அவன் வருவதற்கு முன்னர் ஒரு அஸ்திபாரத்தை அமைத்து, அவனோடு செதுக்கப்பட்ட கற்களாக, தேவன் அவனை அனுப்பும்போது நாங்கள் அவனோடு தோளோடு தோள் கொடுத்து நிற்க தயாராயிருக்கும்படி செய்யும். ஏனெனில் அதைச் செய்வதாக அவர் வாக்குரைத்திருக்கின்றார்.

98226 இப்பொழுது, நான் அறிகிறேன். அது திரும்பவுமாக வருகிறதை நான் உணர்கிறேன். நான் ஒரு சிறிய வரத்தைக் கொண்டு ஆவியை பகுத்தறியமுடியும். இப்பொழுது, நான் மல்கியா 4-என்று கூறினபோது, நீங்கள் அதைக் குறித்து மனக்கசப்புக் கொள்ளுகிறீர்கள் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். ஆனால் உங்களுக்கு நான் ஒரு காரியத்தை கூறட்டும். நீங்கள் கூறினீர்கள், “இயேசு, ‘நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், உரைக்கப்பட்ட எலியா இவன்தான்.’” என்றார். 227 ஆனால் பரிசுத்த மத்தேயு 11-ம் அதிகாரம் 6-வது வசனத்தில் அவர் என்ன கூறினார் என்று நீங்கள் பார்ப்பீர்களானால், “நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், உரைக்கப்பட்டவன் இவன் தான், ‘நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புவேன்’” என்று கூறினார். அது மல்கியா 3 ஆகும், மல்கியா 4 அல்ல. 228 ஏனெனில், மல்கியா 4-ல் அவர், “இந்த நாள் வருவதற்கு முன்னர் பூமியானது எரிக்கப்படும். ஜனங்கள் அதன் மேல் நடந்து துரும்பைப் போல் சுட்டெரிக்கப்படுவார்கள்” என்று கூறினார். அது சரி. நமக்கு முன்பாக வரப்போகின்ற செய்தியாளன், தூதனைக் குறித்து அவர் அப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறார். அது எலிசா ஆகும். அது…

99229 எலியாவின் சால்வையைக் குறித்தும் மற்றவைகளைக் குறித்தும் இங்கு காணப்படுகின்ற காரியங்களில் நான் நம்பிக்கை கொள்வதில்லை. நான்…உண்மையான காரியம் ஒன்று வருவதற்கு முன்னர், அதைச் சீர்குலைக்க நிச்சயமாக, அதைப் போன்ற போலியானவைகள் வந்தாக வேண்டும். ஆனால், இதை நான் உங்களுக்கு கூறட்டும், இந்த பெந்தெகொஸ்தே காலத்தின் முடிவில் ஒரு செய்தியாளன் எழும்புவான், அந்த காரியங்களை முடிவுக்கு கொண்டு வருவான். அது ஒரு மனிதனாக இருக்கும். ஒரு குழு அல்ல, ஒரு ஸ்தாபனம் அல்ல, ஆனால் ஒரு மனிதன். அது எப்பொழுதும் அவ்வாறே தான் இருந்தது. ஆகவே தேவன் தம்முடைய திட்டத்தை மாற்ற முடியாது. அவர் நித்தியமான தேவனாயிருக்கிறார்.

100230 நினைவில் கொள்ளுங்கள். அப்படியானால் அந்த செய்தியாளன் (யோவான்) மல்கியா 4-யை சேர்ந்த செய்தியாளனாய் இருந்தால், அப்படியானால் வேத வாக்கியங்கள் தவறிப் போய்விடும். ஏனெனில் அது கூறினது அது … “பூமியானது துரும்பைப் போல சுட்டெரிக்கப்படும். துன்மார்க்கரின் சாம்பலின் மீது நீதிமான்கள் நடப்பார்கள்” ஆகையால் அதை வாசித்து, அது அவ்வாறு இல்லையா என்று பாருங்கள். புரிகிறதா? ஆனால் இயேசு ஒருபோதும் அதைக் கூறவில்லை. அவர் மல்கியா 3-யைக் குறிப்பிடுட்டுக் கூறினார், “எனக்கு வழியை ஆயத்தம் பண்ணத்தக்கதாக என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புவேன்” அது முற்றிலும் சரியாகும். 231 இப்பொழுது, ஆனால் இந்த மற்றொருவன் பிள்ளைகளுடைய விசுவாசத்தை பிதாக்களிடத்திற்கு திருப்ப வேண்டியவனாய் இருக்கின்றான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய விசுவாசத்தை மூல வேதமாகிய பிதாக்களுடைய விசுவாசத்திற்கு திருப்புவான். 232 மோசேயும் சரியாக அதைத்தான் செய்தான். இயேசுவும் சரியாக அதைத்தான் செய்தார். வேதத்தில் காணப்படுகின்ற ஒவ்வொருசெய்தியாளனும் சரியாக அதைத்தான் செய்தார்கள். அந்தந்த காலத்தின் முடிவிலே, அவர்கள் செய்தியை திரும்பக் கொண்டு வந்தனர். அந்தந்த நாட்களிலே ஜனங்கள் ஸ்தாபனங்களின் மூலமாகவும் மற்றைய காரியங்களின் மூலமாகவும் அவை எல்லாவற்றையும் தாறுமாறாக்கி இருந்தனர்.

101233 அதே காரியத்தைத் தான் இன்றும் அவர்கள் செய்திருக்கின்றனர். ஆதலால் நாம் ஒரு செய்தியாளனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். (தேவனே, அவனை அனுப்பும்!) நாம் அவனை ஏற்றுக் கொள்வோம் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இல்லை ஐயா! அவன் “ஒரு பித்துகொள்ளி மற்றும் மதவெறியனாய்” இருப்பான். நிச்சயமாக ஆனால் தேவன் அவனை நிரூபிப்பார். அந்த உண்மையான விசுவாசி, நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டவர்கள், இயேசு, “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும், என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். என் பிதா எனக்குக் கொடுத்த யாவும்” (இறந்த காலம்) “என்னிடத்தில் வரும்” என்றார். அது சரி, அவர்கள்… 234 இங்கிருக்கும் பாப்டிஸ்ட் போதகமாகிய நித்திய பாதுகாப்பு என்பதில் நான் விசுவாசம் கொள்வதில்லை. ஒருவகையில் நான் அதை நம்புகிறேன். ஆனால் நீ சபையில் இருக்கும் வரை நீ பாதுகாப்பாக இருப்பாய் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நீ வெளியே…இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழிலிருந்து நீ வெளியே செல்வாயானால் உனக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். நான் இந்தக் கட்டிடத்தின் உள்ளே இருக்கும் வரைக்கும் மழையினிடத்திலிருந்து எனக்கு பாதுகாப்பு உண்டு. 235 ஆகையால் நீங்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டோம் என்று கூறி பின்னர் எப்படி நீங்கள் தேவனுடைய வார்த்தையை மறுதலிக்க முடியும்? விசுவாசித்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டோம் என்று நீங்கள் கூறி , பிறகு வார்த்தையானது உண்மை என்பதை மறுதலிக்கின்றீர்கள். வேதாகமத்தை எழுதியது பரிசுத்த ஆவியானவராய் இருக்கையில் எப்படி மறுதலிக்கும் அந்த ஆவி பரிசுத்த ஆவியாய் இருக்க முடியும்? பரிசுத்த ஆவியானவர் தம்முடைய சொந்த வார்த்தையை மறுதலித்து, “நான்—நான் தவறாயிருந்தேன், நீ சரியாயிருக்கிறாய்” என்று கூற முடியுமா? இல்லை, அது தேவன் அல்ல, இல்லை ஐயா.

102236 கருக்குள்ள பட்டயம்! (கர்த்தாவே, ஒரு மகத்தான செய்தியை எங்களுக்கு அனுப்பும்) அதைத் தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படியானால், பிறகு, அவன் அந்த கற்களை நிர்ணயித்து அந்த கட்டிடத்திற்காக அவைகளை செதுக்கி எடுக்க வரும்போது என்ன நிகழும்? அவர்களில் அநேகர் வார்த்தைப் பரிசோதனையில் நிற்க மாட்டார்கள். தேவனுடைய வார்த்தையை நேசிப்பதைக் காட்டிலும் தங்கள் ஸ்தாபனங்களைத்தான் அவர்கள் நேசிப்பார்கள், அந்த வார்த்தை அந்த மனிதனால் ரூபகாரப்படுதப்பட்டாலும் அவ்வாறு ஸ்தாபனத்தையே நேசிப்பார்கள். அவன் கர்த்தருடைய நாமத்தில் வருகின்ற ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பான், அவன் பூமியில் வருகிற ஒருவனாய் இருப்பான். நான் அதை விசுவாசிக்கிறேன். ஓ, எல்லோருமே, “அது ஒரு கூட்ட ஜனங்களாயிருக்கும்” என்று கூறுகிறார்கள். 237 அது ஒரு கூட்டம் மக்களாயிருக்கும் என்று வேதத்தில் எங்குள்ளது என்பதை யாராவது என்னிடம் காட்ட விரும்புகிறேன்; தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை மீறுவாரா? அவரால் அதைச் செய்ய முடியாது. இல்லை ஐயா. அவர் இதை வாக்களித்தார். அது ஒரே ஒரு மனிதனாக இருக்கும். ஆகவே மற்றவர்கள் அவனுடன் இருப்பார்கள். உண்மையாகவே, ஆயிரக்கணக்கில், எங்குமுள்ள முழு சபை விசுவாசிகளும் அவனுடன் இருப்பர்.

103238 நோவாவின் நாட்களில் இருந்தது போல, அவர்களில் அநேகம் பேர்கள் இரட்சிக்கப்படமாட்டார்கள். ஏனெனில் இயேசு, “நோவாவின் நாட்களில் நடந்தது போல” என்று கூறினார். நீங்கள் அதை அறிவீர்களா? “லோத்தின நாட்களில் நடந்தது போல” (அவர்களை எண்ணுங்கள்) “அப்படியே நடக்கும்.” 239 “வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால் என்னுடைய வார்த்தை ஒழிந்து போவதில்லை.” நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? ஓ, சகோதரனே, நாம் பட்டியலிட்டுப் பார்ப்பது மேலானதாயிருக்கும். நாம் நினைப்பதைக் காட்டிலும் உண்மையாகவே காலதாமதாயிருக்கும். என்றோ ஒரு நாளில் நாம் விழித்துக் கொள்வோம். பிறகு ஏதோ ஒன்றை தவறவிட்டு விட்டோம் என்று பார்ப்போம். எச்சரிக்கையாய் இருங்கள்! விழித்திருந்து, ஜெபித்து, ஆராய்ந்து, தேடுங்கள். அது உங்களை கடந்து சென்று விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆகவே, நினைவில் கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படும்போது, தேவன் அந்த வார்த்தைக்கு கட்டுப்பட்டவராய் இருந்து அதை ரூபகாரப்படுத்துவார்.

104240 அங்கே அவர் என்ன கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? லோத்தின் நாட்களில் என்ன சம்பவித்தது? அவர், “லோத்தின் நாட்களில் நடந்தது போல” என்றார். அக்கினி விழுவதற்கு முன்னர் மறுபடியுமாக என்ன சம்பவிக்கும்? எந்த விதமான ஒரு செய்தியை சபையானது பெறும்? இப்பொழுது சோதோம் அல்ல, தெரிந்து கொள்ளப்பட்ட சபை. மூன்று பிரிவுகளாக அவைகளை வைப்போம். அங்கே இருக்கின்ற சோதோமியர்கள்; அங்கே லோத்தும் நாகரீக ஒழுங்கு முறையைச் சேர்ந்த சடங்காச்சாரமான சபையாகிய அவனுடைய குழுவும்; அங்கிருந்த தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகாம். அந்த எல்லா மூன்று வகையினரும் ஒரு செய்தியை, வெவ்வேறு செய்தியாளர்கள் மூலமாகப் பெற்றனர். ஆம். தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு எப்படிப்பட்ட ஒன்று சென்றது என்பதைக் கவனியுங்கள். ஆபிரகாமிற்கு அவர் என்ன செய்தார்? இயேசு “மனுஷகுமாரன் வரும்போது அப்படியே நடக்கும்” என்று கூறினார். இப்பொழுது அதை நாம் மறுதலிக்க முடியாது. சரியாக இயேசு அதைத் தான் கூறினார். ஆகவே, நிச்சயமாக அவ்விதமாகவே அது இருக்கும்.

105241 இப்பொழுது, அநேகர்…இயேசு வந்து அந்த சோதனையை அவர் கொண்டு வந்த போது, “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே. என்னைக் குறித்து சாட்சிக் கொடுக்கிறவைகளும் அவைகளே” என்று கூறினார். அந்த பரீட்சையில் சோதனையில் அவர்களால் நிற்கமுடிந்ததா? இல்லை. வார்த்தை என்னும் சோதனையில் நிற்க முடியாத எல்லா அறிக்கைகளாகிய கற்கள் யாவும் கற்குவியலில் போடப்படும். அது வெடிப்புள்ளதாய், தண்ணீரினால் கீறல் ஏற்பட்டதாய் இருப்பதால் அது பரிசோதனையில் நிலைக்காது. ஓ, மனிதனே, பிறகு அது ஓட்டை உடைசல் உள்ள கழிவுக் கற்குவியலில் போடப்படும்! தேவன் எண்ணிக்கைகளுக்கு பதிலாக நற்பண்புகள் மிக்க குணாதிசயத்தையே எப்பொழுதும் தெரிந்து கொள்கிறார். 242 நான் முடிக்கப் போகிறேன். இவ்வளவு நேரம் உங்களை வைத்திருந்ததற்காக நான் வருந்துகிறேன். உங்களை காக்க வைக்க வேண்டுமென்பது எனது நோக்கமல்ல. ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு இந்த கடைசியான் காரியத்தை நான் கூறிவிடுகிறேன். பிறகு ஒரு நிமிடத்தில் நான் முடித்து செல்வேன். உங்களுக்கு உதவும் படியாக நீங்கள் ஆராயத்தக்கதாக நான் சிலவற்றைக் கூறினேன் என்று நான்—நான்—நான் நம்புகிறேன். பாருங்கள், புரிகிறதா?

106243 தேவன் எப்பொழுதுமே குணாதிசயங்களையே கணக்கில் கொள்கின்றார். அங்கத்தினர்களை அல்ல. ஆனால் இன்றைக்கோ நாம் எதிர்மாறாகச் செய்கின்றோம். நாம் குணாதிசயத்திற்கு பதிலாக அங்கத்தினர்களையும், நல்ல ஆடைகளை உடையவர்களையும், நன்றாக காணிக்கை கொடுப்பவர்களையும் நாம் கணக்கில் கொள்கிறோம். ஹூ—ஹூ. 244 ஒரு குணாதிசயத்தை கண்டுபிடிக்கும் வரை எலியேசர் அரும்பாடுபட்டான். அது உண்மை. யாரை அவன் தெரிந்தெடுப்பான்? ஆகவே அவன் தேவனை உறுதியாக நம்பியிருந்தான். எதற்கு குணாதிசயம்? ஈசாக்கிற்கு குணாதிசயம், குணசாலி மணவாட்டி, அது சபைக்கு மாதிரியாயுள்ளது. உங்களுக்கு அது தெரியும். அது ஆபிரகாமின் இயற்கையான, மாம்சபிரகாரமான வித்தாக இருந்தது; இது ஆபிரகாமின் இராஜரீக வித்தாக இருக்கின்றது. நல்லது. அந்த செய்தியாளனாகிய எலியேசர் ஒரு மணவாட்டியை, ஒரு குணசாலியை தேடிக் கண்டு பிடிக்க முயசித்துக் கொண்டிருந்தான் என்றால், அந்த மனிதன் கடைசி நாளுக்குரிய ஒரு செய்தியாளனாக வந்து கிறிஸ்துவிற்காக ஒரு மணவாட்டியை கண்டெடுக்க முயற்சித்துக் கொண்டிருப்பானானால், ஒரு ஸ்தாபன அங்கத்தினர்களுக்காக அவன் பார்த்துக் கொண்டிருக்கமாட்டான். அவன் மனபூர்வமான சம்மதமுள்ள குணசாலியையே தேடுவான். 245 கவனியுங்கள்! முதலாவதாக நல்ல குணாதிசயம், பிறகு ஈசாக்கை சந்திக்கத்தக்கதாக அவளை ஆயத்தப்படுத்துவது, அவன் அந்த குணாதிசயத்தைக் கண்டெடுத்தவுடன், அதன்பின்னர் ஈசாக்கை குறித்த அவனுடைய செய்தியைக் கேட்கும்படியாக நிலைத்து நிற்கத் தக்கதாக அவளை ஆயத்தப்படுத்தல்.

107246 கடைசி நாட்களுக்குரிய, சாயங்கால வெளிச்சத்திற்குரிய அந்த செய்தியாளன் அவன் தான். முதலாவதாக அந்த சபையைத் தேடி (செய்தியை அவர்கள் எங்ஙனம் விசுவாசிப்பார்கள்?) அதைத் தேடி கண்டெடுப்பான். நான் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? உங்களையும் உள்ளே வர அனுமதிக்கின்ற உங்களுக்கு முன்பாக வாசற்கதவை மூடாதிருக்கின்ற அந்த சபை எங்கிருக்கின்றது என்று அவன் தேடுவான். ஆகவே நீ அங்கு செல்வாயானால், அப்பொழுது உன்னுடைய குணாதிசயத்தை கண்டெடுத்துக் கொள்வாய். இப்பொழுது அவள் நிலைத்து நின்று மணவாட்டி எவ்விதம் உடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவதை கேட்பானேயானால், அவள் ஆடையுடுத்திக் கொள்ளத்தான் வேண்டும். அசையாமல் நிலைத்து நில்! அவள் தானே…

108247 ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த அந்த சிறிய ரெபேக்காளைப் பாருங்கள். அவளுடைய சிறிய இருதயமானது துடித்துக் கொண்டிருந்தது. அவள்…அவன் அவளிடம் கூறிக் கொண்டிருந்தான். இப்பொழுது நீ அரும்பாடுபட்டுள்ளாய், “நான் எங்கே போவேன்?” அந்த குணாதிசயத்தை கண்டெடுக்கும் வரை நான் அந்த குணாதிசயத்தை, குணசாலியை கண்டெடுத்த பிறகு, அவளை நிலை கொள்ளச் செய்து அவரைச் சென்று சந்திக்கத்தக்கதாக அவளை ஆயத்தம் செய்வேன். ஓ, என்னே, என்ன ஒரு மகத்தான காரியம்! (நமக்கு அந்த கடிகாரத்தில் இன்னும் சிறிது நேரம் இருந்தால் நலமாயிருக்கும்.) அவளை ஆயத்தம் செய்து; அவனைக் குறித்த தன்னுடையச் செய்தியைக் கேட்கத்தக்கதாக அவளை நிலை கொண்டு நிற்கும்படி செய்தல். எலியேசர் தன்னைக் குறித்து பேசிக்கொண்டிருக்கவில்லை, ஆனால் தன்னை அனுப்பின நபரைக் குறித்தே அவள் பேசிக்கொண்டிருந்தான். அவரிடத்திலிருந்து அவன் அனுப்பப்பட்டிருந்தான் என்பதை நிரூபிக்கும்படியாக அவன் வெகுமதிகளைக் கொண்டிருந்தான். ஆமென்! இக்காரியங்களைக் கொண்டு அவளை உடுத்துவிக்க அவன் விரும்பினான். அவளை எப்படி அவன் ஆயத்தம் செய்தான் என்பது உங்களுக்கு தெரியும். 248 அவளுடைய முகத்தை கழுவத்தக்கதாக அவளை கொண்டு செல்ல என்னால் முடியுமானால் நலமாயிருக்கும்! பாருங்கள்? உங்களுக்கு தெரியுமா? நான்—நான் அதைக் குரித்து பேச தடை செய்யப்படுகிறதை நான் இப்பொழுது உணர்ந்தேன். ஆதலால நான் பேசாமல் நிறுத்திக் கொள்வது நல்லது. எப்படியாயினும், நான் போதுமான அளவிற்கு கூறியுள்ளேன். நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். இப்பொழுது கவனியுங்கள், அப்படியே நிலை கொண்டு நில்லுங்கள்.

109249 கவனியுங்கள், கடைசி கால செய்தியாளன், அவனுடைய வேலையானது மணவாளனுக்கு மணவாட்டியை, பரிசுத்தவான்களை ஆயத்தம் செய்வதாகும். அது தான் அவனுடைய செய்தியாய் இருக்கும். இப்பொழுது இயற்கணிதத்தை பின்னால் கற்றுக் கொள்ளும்படி முதலில் மொழியின் முதல் எடுத்துகளைக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? புறம்பேயுள்ள இந்த முத்திரைகள் உடைக்கப்படும் போது மாத்திரமே அவைகள் அவர்களுக்கு வெளிப்படுத்தப்படும். அது உண்மை. முதலாவதாக ஏ.பி.சி.யைக் (A.B.C) கற்றுக்கொள்ளுங்கள். ஏ.பி.சி. (A.B.C) என்றால் என்ன? “எப்பொழுதும் விசுவாசியுங்கள் கிறிஸ்துவை” என்பதாம். (உங்களுடைய கோட்பாடுகளை அல்ல) கிறிஸ்துவை புரிகிறதா? அவர் என்ன கூறுகிறார் என்பதை விசுவாசிப்பது, யாரோ ஒருவன் என்ன கூறினார் என்பதை அல்ல. 250 ஒரு மனிதன் உங்களிடம் வந்து “ஸ்திரீகளே, நீங்கள் உங்கள் முடியைக் கத்தரித்துக் கொள்வது சரியானது தான்” என்று கூறுவானானால், அது முரண்பாடான காரியமல்லாவா? அவன் பொய் சொல்கின்றான் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். வேதம் அது தவறு என்கிறது. அவன் வந்து “நான்கு அல்லது ஐந்து மனைவிகளை நீங்கள் உடையவர்களாயிருந்தாலும் நீங்கள் ஒரு உதவிக்காரராக இருக்கலாம்” என்பானானால், அவன் பொய் சொல்கின்றான். அது வார்த்தைக்கு முரண்பாடானா ஒன்றாகும். புரிகிறதா? நாம் பேசிக் கொண்டிருக்கின்ற மற்ற காரியங்கள், அதை வார்த்தையுடன் பார்த்து, வார்த்தையோடு சரியாயிருக்கிறதா பார்க்க வேண்டும்.

110251 சபையை வார்த்தைக்குத் திரும்பக் கொண்டு வாருங்கள். இப்பொழுது மல்கியா 4-ல் உள்ள செய்தியாளன் என்ன செய்ய வேண்டியவனாய் இருக்கிறான்? மூல விசுவாசத்தை, உயிர்த்தெழுதலின் விசுவாசத்தை திரும்ப கொண்டு வருதல். மரித்தோரிலிருந்து எழுந்த பிறகு இயேசுவை அவர்கள் கண்டனர். அவர்கள் மத்தியில் அவர் கிரியை நடப்பித்ததை அவர்கள் கண்டனர். 252 சில வார்த்தைகள் மாத்திரமே பேசக் கூடிய மனிதராய் அவர்கள் இருந்தனர். அவர்கள் சென்று வார்த்தையைப் பிரசங்கித்தனர். ஓ, அவர்கள் நீண்ட நேரம் பிரசங்கித்தனர். பவுல் ஒரு சமயம் ஒரு இரவு முழுவதும் பிரசங்கம் செய்தான். பாருங்கள்? ஒரு மனிதன் கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்து மரித்துப் போனான். அப்பொழுது பவுல் அந்த மனிதனுடைய சரீரத்தின் மேல் படுத்துக் கொண்டான். அவனை மறுபடியும் உயிரடையச் செய்தான். பாருங்கள். புரிகிறதா? பாருங்கள், தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டேயிருந்தான்.

111253 இப்பொழுது, கவனியுங்கள். Ph., L.L., Q.U.S.T., இன்னும் இன்றைக்கு நீங்கள் அழைத்துக் கொள்ளும் மற்றைய படிப்புகளை உடைய மனிதர்களை விட அவர்கள் வித்தியாசமானவர்களாய் இருந்தனர். என்ன? அது செய்தியாளனை …சரியாகக் கூறினால் செய்தியாளனைக் காட்டிலும் செய்தியானது அவிசுவாசிகளிலிருந்து விசுவாசிகளை வேறு பிரிக்கின்றது. சிலர் அதற்கு கீழ்படிந்து அதனுடன் நடப்பார்கள். மற்றவர்கள் நடக்கமாட்டார்கள். லூத்தர்களில் சிலர்…கத்தோலிக்கர்களில் சிலர் லூத்தரின் வழியில் நடந்தனர், சிலர் நடக்கவில்லை. சில லூத்தரன்கள் மெத்தோடிஸ்டுகளின் வழியில் நடத்தனர். சிலர் நடக்கவில்லை. சிலர் பெந்தெகொஸ்தேயுடன் நடப்பர். சிலர் நடப்பதில்லை. சிலர் சாயங்கால வெளிச்சத்துடன் நடப்பர். சிலர் நடவாதிருப்பார்கள். 254 அது சாயங்கால வெளிச்சமா அல்லது இல்லையா என்று நீங்கள் எப்படி அறிந்து கொள்ளப் போகிறீர்கள்? அதை வார்த்தையோடு சோதித்துப் பாருங்கள். (ஒரே ஒரு வார்த்தையில் அல்ல. ஒன்று சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையோடும்), அது சரியா அல்லது தவறா என்று பாருங்கள். ஓ, அதனுள் என்ன இருக்கின்றது? அப்படியானால் இந்த செய்தியானது தேவன் தாம் என்ன செய்ய போகின்றார் என்று கூறப்பட்டு, அது தேவனால் நடப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்கின்ற நிரூபணமாய், வார்த்தையோடு சரி வர பொருந்தியிருக்கிறதென்றால், முந்தைய தீர்க்கதரிசிகள் செய்த விதமாக, மற்றைய காலங்களில் நிரூபிக்கப்பட்ட விதமாகவே வார்த்தையானது நிரூபிக்கப்படும்.

112255 கவனியுங்கள், செய்தியானது…கவனியுங்கள் செய்தியானது மக்களால் புறக்கணிக்கப்படும் போது செய்தியாளனும் முற்றிலுமாக தோல்வியுற்றவனாகக் காணப்படுவான். அவனுக்கு வேறே வாசல் கிடைக்காது. வேறு இடம் அவனுக்கு கிடைக்காது. 256 நம்முடைய கர்த்தர் இருந்தது போல. நினைவிருக்கட்டும், அவர் …ஓ, அவர் ஒரு வாலிப தீர்க்கதரிசியாக வியாதியஸ்தரை சுகப்படுத்தின போது, “ஓ, என்னே! அவர் ஒரு மகத்தான நபர்!” “ரபி அவர்களே எப்படி இருக்கிறீர்கள்?” ஆனால் ஒரு நாள் அவர் உட்கார்ந்து அவர்களுக்கு சத்தியத்தை கூற ஆரம்பித்தார். சபை, மக்களின் தயவு அவருக்கு கிடைத்தது. ஆயிரக்கணக்கானோர் அவர் பின் சென்றனர். பன்னிரண்டு பேர்களுக்கு அப்பாற்பட்டு இன்னும் அவரைச் சுற்றி எழுபது ஊழியக்காரர்களை கொண்டவராக இருந்தார். ஆனால் ஒரு நாளிலே அவர் அப்பத்தை…அல்லது அந்த…தாம் தேவன் என்பதை நிரூபிக்கதக்கதாக அவர் அப்பங்களை பெருகும்படிச் செய்தார். ஏனெனில் வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியச் செய்தவர் தேவனே ஆகும். ஆம், பாருங்கள்? அவர் அப்பங்களை பெருகும்படிச் செய்தார். ஆகவே அதன் பிறகு…அவர் தண்ணீரின் மீது நடந்தார். அற்புதங்களைச் செய்தார். இவர்தான் அவர் என்பதை நிரூபிக்கும்படியாக அவர் செய்த காரியங்களை இவர் செய்தார். 257 ஆகவே அதன் பிறகு, அவைகளையெல்லாம் செய்தபின், அவர் அமர்ந்து ஜனங்களுக்கு கண்டிப்புடன் போதனை செய்ய ஆரம்பித்தார். ஜனங்களோ திரும்பிச் சென்றுவிட்டனர். அந்த எழுபது பேரும், “ஹா! யார் இதை கேட்பார்கள்? இது ஒரு கடினமான காரியம். நாங்கள் நினைத்த பெரிய காரியத்தை எல்லாம் நீ கடிந்து கொண்டு கிழித்தெறிகின்றாய். இப்பொழுது, இக்காரியங்களையெல்லாம் கூறுவதற்கு நீ யார்?” என்று கூறினர். ஆகவே அவர்கள் கடந்து சென்று விட்டனர். 258 நோவாவின் நாட்களில் இருந்தது போன்றும், சோதோமின் நாட்களில் இருந்தது போன்று இருந்த அந்த தம்முடைய சிறு குழுவிடம் இயேசு திரும்பி, “நீங்களும் போக மனதாயிருக்கிறீர்களோ?” என்றார். 259 அப்பொழுது பேதுரு அந்த மகத்தான வார்த்தைகளைக் கூறினான், “கர்த்தாவே, நாங்கள் எங்கே போவோம்?” என்றான். (தேவனே, எங்களுக்கு உதவும்.)

113260 கவனியுங்கள், செய்தியானது புறக்கனிக்கப்பட்டு செய்தியாளன் தோல்வியுற்ற நிலையில் காணப்படும் போது, அப்பொழுதுதான் தேவன் காட்சியில் இடைபடுகிறார், அவனுடைய செய்தி முற்றுப் பெறுகிறது. 261 நோவா, (இப்பொழுது முடித்துவிடுகிறேன்), நோவா தன்னுடைய பேழையின் வாசலிலே நின்று, நூற்று இருபது வருடங்கள் அவர்கள் முடிவாக அவனை பரியாசம் செய்து நிந்திக்கும் வரை பிரசங்கம் செய்தான். நோவா பேழைக்குள்…எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணி உள்ளே சென்று விட்டான். தேவன் கதவை அடைத்தார். ஜனங்கள் சுற்றிலும் நின்று கொண்டு என்ன் நடக்கப் போகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தனர். ஏழு நாட்கள் அவன் உள்ளே இருந்து வேர்வை சிந்தினான். ஆனால் ஏழாம் நாளிலே மழை வந்தது. ஊ—ஊ. 262 மோசே, அவன் எதில் இருந்தான்? கடமை என்னும் பாதையிலே ஜனங்களை வழி நடத்திக் கொண்டிருந்தான். சிவந்த சமுத்திரம் அவனுடைய பாதையில் குறுக்கிட்டது. தன் பாதையின் முடிவில் அவன் இருந்தான். பாதையின் முடிவில் அந்தப்பொழுதில் தேவன் பலத்த கீழ்க்காற்றுடன் வந்து சமுத்திரத்தைப் பிரித்தார்.

114263 தானியேல், தன்னுடைய செய்தியில் நிலையாக நின்று கொண்டு, “நான் என்னை இந்த இராஜாவினுடைய ராஜ்யத்தில் கறைப்படுத்திக் கொள்ள மாட்டேன்.” தேவனுக்கு உண்மையானவனாய் நின்று, சரியாக தன்னுடைய பாதையின் முடிவில் நின்று கொண்டிருந்தான். அவனுடைய கடைசிவேளை வந்து விட்டது போன்று இருந்தது. சிங்கக் கெபிக்குள் அவனை அவர்கள் தூக்கி போட்டனர். தேவன் காட்சியில் வந்தார். 264 ஒரு நாள் காலை, பாபிலோனில்…ஆமென்! மேலே வானத்தை என்னால் காண முடிகிறது. ஒரு—ஒரு சிங்காசனத்தை என்னால் காண முடிகிறது. அதை சுற்றிலும் தூதர்கள் இருந்தனர். இங்கே பாபிலோனை நோக்கிப் பாருங்கள். ஒரு—ஒரு எரிகின்ற அக்கினி சூளையை என்னால் காண முடிகின்றது. அங்கே மூன்று பிள்ளைகள் நின்று கொண்டு “எங்களை விடுவிக்க தேவன் வல்லவராய் இருக்கிறார். புரிகிறதா? ஆனாலும் உன்னுடைய சொரூபத்தை நாங்கள் வணங்கப் போவதில்லை. ஏனெனில் அது வார்த்தைக்கு முரணாய் உள்ளது” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. புரிகிறதா? “இங்கு தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.”

115265 அப்பொழுது ராஜாவோ, “அப்படியானால் சரி, படிகளில் ஏறுங்கள், நீங்கள் சுட்டெரிக்கப்படப் போகிறீர்கள்” என்று கூறினான். அந்த திடகாத்திரமான மனிதனுடைய ஈட்டி முனையில் இருந்த அவர்கள் இங்கே படிப்படியாக மேலேறி வர, உஷ்ணமோ அதிகரித்துக் கொண்டிருந்தது. 266 சிங்காசனத்தின் பக்கத்தில் இருந்த ஒரு தூதன் நிற்கிறதை என்னால் காணமுடிகிறது. அவன் பட்டயத்தைப் பிடித்து அதை வெளியே உருவி எடுத்து “பிதாவே, கீழே நோக்கி அங்கே பாரும். அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது. நான் கீழே செல்லட்டும், நான் காபிரியேல், நான் காட்சிகளையே மாற்றி விடுகிறேன்” என்று கூறினேன். 267 “உன்னுடைய பட்டயத்தை உறையிலே போடு, காபிரியேல். நானும் அதை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.” 268 இங்கே வேறொருவன் வந்து, “பிதாவே, நான் எட்டி, நான் தண்ணீரினால், அழிக்கின்றவன். ஜலப்பிரளயத்திற்கு முன்னர், மனிதன் பாவம் செய்து, உம்முடைய ஜனங்களை துன்புறுத்தினர். ஆதலால் நான்—நான் முழு உலகத்தையே ஒரு தண்ணீர் உலகமாக மாற்றிவிட்டேன். இந்தக் காலையில் பாபிலோனை உலக வரைப்படத்திலிருந்தே அழித்து விடுகிறேன். நான் போகட்டும்” என்றான். 269 “உன்னால் முடியும் என்பது எனக்குத் தெரியும் எட்டி, நீ ஒரு உண்மையுள்ள தூதனாவாய். பார்? ஆனால், நான் உன்னை அனுப்ப முடியாது. இது என்னுடைய பணியாகும். நானே செல்கின்றேன்.” “இதோ, நீர் அவர்களைக் கண்டீரோ? 270 “இரவு முழுவதும் நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களுடைய ஜெபக் கூட்டத்தில் ஏறெடுத்த ஜெபத்தை நான் கேட்டேன். என்னுடைய வார்த்தைக்காக அவர்கள் எடுத்திருக்கும் உறுதியான தீர்மானத்தை நான் கண்டேன். ஆகவே சரியான நேரத்தில் அங்கு நான் இருப்பேன்” ஓ, என்னே! அவர் எழுந்திருப்பதை என்னால் காண முடிகிறது. அவருடைய ராஜ வஸ்திரங்கள் அதைப் போன்று அவரைச் சுற்றிலும் தொங்குகின்றது. அவர், “கீழ்காற்றே, வடக்கு, தெற்கு, மேற்கு காற்றுகளே இங்கே வாருங்கள். அந்த இடியின் கீழ் வந்து ஏறி நில்லுங்கள். இந்த காலை வேளையில் உங்களை இரதமாக்கி உங்கள் மீது சவாரி செய்யப் போகிறேன். நான் கீழே பாபிலோனுக்குப் போகப் போகிறேன். நான் காட்சியை மாற்றப் போகிறேன்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஓ, சகோதரனே அவர் சரியான நேரத்தில் அங்கு இருந்தார். 271 அவருடைய கண் அடைக்கலான் குருவியின் மேல் நோக்கமாயிருக்கிறது. அவர் என்னையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். இன்றிரவு இன்னுமாக அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார், என்னை கவனித்துக் கொண்டிருக்கின்றார். அவர் உன்னையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். நாம் நிற்போமா அல்லது நிற்கமாட்டோமா என்பதையும், என்ன தீர்மானங்களை நாம் எடுப்போம் என்பதையும், நாம் வார்த்தைக்கு உண்மையாய் நிற்போமா அல்லது அதை விட்டு புறம்பே சென்று விடுவோமா என்பதையும் அவர் கவனித்துள்ளார். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது.

116272 யாக்கோபு வீட்டிற்கு திரும்பிச் செல்ல ஏவப்பட்டு, வீட்டிற்கு செல்லும் தன்னுடைய பாதையிலிருந்தபோது, அவனுடைய சகோதரனை அவன் சந்திக்க வேண்டியவனாய் இருந்தான். ஓ, ஆனால் ஒரு இரவு அவன் தேவனோடு போராடினான். தன்னுடைய சகோதரனை சந்திக்க பயந்தான். ஆனால் அடுத்த நாள் காலையில் அவன் ஒரு பயமற்ற, நொண்டுகின்ற இளவரசனாக இருந்தான். “அப்பொழுது ஏசாவோ அல்லது அவனுடைய சேனையோ, மற்ற எதுவுமே எனக்குத் தேவையில்லை” என்றான். தேவன் காட்சியில் இறங்கினார். பாருங்கள். ஒரு வினோதமான வழியில் அவர் கிரியை செய்கிறார்.

117273 இயேசுவானவர் தேவனுடைய குமாரன் என்று நிரூபிக்கப்பட்ட பிறகு புறக்கணிக்கப்பட்டு, “நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டாம்” என்றார். அவர் அந்த நாளிற்குரிய வெளிச்சமாக இருந்தார். (அவர் இன்னமும் வெளிச்சமாக இருக்கிறார்!), காட்சியில் வந்தார். ஆகவே அந்த மக்கள், அவர்…அப்பம், மீன்கள் மற்றும் அப்பத்துண்டுகள், அளித்த வரையில் அவர்கள அவரைப் பின்பற்றினர். ஆனால் வார்த்தைக்குரிய சத்தியத்தை அவர்களுக்கு அவர் கூற ஆரம்பித்தபோது, அது அவர்களை வேறுபிரித்து விட்டது, அவர்கள் தங்களுடைய சொந்த பாரம்பரியங்களை உடையவர்களாயிருந்து, அதைப் பற்றிக் கொண்டனர். அது ஒரு முரணானதாயிருந்தது. ஆனாலும் அவர் வேத வாக்கியங்களுடன் சரியாக காணப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் குருடாக்கப்பட்ட உலகத்தினுடைய கண்கள் அதைக் கான முடியவில்லை. இப்பொழுது சரி, ஒவ்வொரு காலத்திலும் அதாவது நான் கூற முனைவது என்னவெனில் ஒட்டு மொத்தமாக அவர்களாலே முடியவில்லை. நடந்தது என்ன? அவர் தோல்வி அடைந்தது போன்று காணப்பட்டது.

118274 அந்த நேரத்திலேயே அவருடைய புகழானது அவரை விட்டு அகன்றது என்பதை நீங்கள் கவனியுங்கள். எப்பொழுது? அவர்களுக்கு அவர் வார்த்தையை கூற ஆரம்பித்த பொழுதே. அவர் சென்று சுகமளிக்கும் ஆராதனைகளையும் மற்றும் கூட்டங்களையும் நடத்தின போது, “ஓ, ரபீ, இங்கு வாருங்கள்,” “ரபீ, இங்கே வாருங்கள்” என்று ஒவ்வொருவரும் அவரை அழைக்க விரும்பினர். ஆனால் அவருடைய போதகமானது ஆரம்பமானபோது, “ஓ, உம்முடைய போதகங்கள் எங்களுடைய ஜனங்களை கலங்கச் செய்கிறது.” ஓ, என்னே! “ஓ, ரபீ, என்னுடைய சபையில் இன்னுமாக உம்மை என்னால் வைத்திருக்க முடியாது. ஏனென்றால் நீர் எங்களுடைய ஜனங்களைக் குழப்புகிறீர், உம்முடைய போதகமானது நாங்கள் விசுவாசிக்கின்ற காரியத்திற்கு மிகவும் முரண்பாடாய் இருக்கின்றது. ரபீ, அது இன்னும் மாறவேயில்லை. பாருங்கள்? மாறவேயில்லை, ஆம். ரபீ உம்மை இனி எங்கள் கூட்டத்திற்கு அழைக்க முடியாதோ? அவர் யார் என்பதை வேத வாக்கியங்கள் நிரூபித்தும், ரூபகாரப்படுத்தப்பட்டவராய் அவர் இருந்தும் கூட இன்னுமாக அவர்களால் அதை விசுவாசிக்க முடியவில்லை. 275 முடிவில் சாத்தான் அவரை சிலுவையில் அறைந்து “அவரைப் பிடித்து விட்டேன்” என்று எண்ணினான். அது வரையிலும் அவர் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார். முடிவாக அவருடைய காரியத்தை முடித்து விட்டதாக எண்ணி அவரை கல்லறைக்குள் வைத்தனர். ஆனால் அந்த பொழுதில் தான் தேவன் காட்சியில் வந்தார். அவர் கல்லறையிலிருந்து வெளியே வந்தார்! ஏன்?

119276 அதே விதமாகத்தான், பவுல், அவன், “எல்லாரும்…தேமா என்னை விட்டுப் போய் விட்டான். வார்த்தையின் நிமித்தமாக எல்லா மனிதரும் என்னை விட்டுப் போய்விட்டார்கள்” என்றான். தேமா, இரவு நடன கேளிக்கை விடுதிகளுக்கும் மற்ற காரியங்களுக்கும் சென்றிருப்பான் என்று நான் நம்பவில்லை. ஆனால் தேமா போய் விட மனதாயிருந்தான். தேமா ஒரு ஐஸ்வரியமான மனிதனாயிருந்தான். அவன் புகழ்பெற்ற குழுவினரோடு செல்ல விரும்பினான். எனவே அவன் மற்ற எல்லோரும் சென்ற இடத்திற்கே சென்று விட்டான். ஆகவே தான் பவுல், “தேமா என்னை விட்டு பிரிந்து போய் விட்டான்” என்று கூறினான். ஏன்? அவனுடைய ஊழியமானது அதனுடைய தலைக்கல்லை நோக்கி, அதனுடைய முடிவை நோக்கி வந்து கொண்டிருந்தது. 277 ஒரு இரத்த சாட்சியாக மரிக்க வேண்டும் என்பதே அவனுடைய வாஞ்சையாயிருந்தது, ஏனென்றால் அவன் ஸ்தேவானைக் கொன்றிந்தான். அவனுடைய மரணத்திற்கு இவன் சாட்சியாயும், அதற்கு ஒப்புதல் அளித்தவனுமாயிருந்தான். ஆகவே அவன் மரிக்க விரும்பினான். அந்த…அகபு, அந்த பிரசித்திப் பெற்ற தீர்க்கதரிசி பவுலோடு நின்று, அவன் எருசலேமிற்கு போகக் கூடாது என்று கூறினபோது, அவன், “போகக் கூடாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் எருசலேமிற்குள் சென்று சங்கிலிகளால் கட்டப்பட்டவனாக இருக்க மாத்திரம் நான் விரும்பவில்லை. ஆனால் நான் சென்று கர்த்தராகிய இயேசுவிற்காக நான் மரிக்கவும் ஆயத்தமாயிருக்கின்றேன்” என்று கூறினான். அது என்னவாயிருந்தது? அவன் தன்னுடைய ஊழியத்தை முத்தரித்துக் கொண்டிருந்தான்.

120278 ஓ, ஜீவனுள்ள தேவனுடைய சபையே, நாம் இரவு முழுவதும் பேசிக் கொண்டேயிருக்கலாம். நாம் எவ்வாறு நம்முடைய செய்தியை முத்தரிக்கப்போகிறோம்? அதை நாம் எவ்வாறு செய்யப் போகிறோம்? தேவனே, இந்த வார்த்தையை நாங்கள் எடுத்து தீரமுள்ளவர்களாக நிற்க உதவி செய்யும். வார்த்தையுடன் நான் மரிக்கட்டும்; வார்த்தையைக் கொண்டு ஜீவிக்கட்டும். வார்த்தையோடு மரிக்கட்டும். வெளிச்சத்தைப் பரவச் செய்யும், ஏனென்றால் சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும். நண்பர்களே, நாம் அந்த மணி நேரத்தில் உள்ளோம். நாம் நம்முடைய தலைகளை வணங்குகையில் அதை நாம் விசுவாசிப்போமாக. 279 முதலாவதாக, உங்களை இவ்வளவு நேரமாக காக்க வைத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சரியாக இரண்டு மணி நேரங்கள், ஒரு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்கள் என்று நான் நினைக்கிறேன். மனவருத்தம் ஏற்படுவதற்கு ஒன்றும் இல்லை என நான் நம்புகிறேன். நாம் புண்படுத்தப்படவில்லை. அதாவது புண்படுத்தும்படியான, அப்படிப்பட்ட ஒரு எண்ணம் எங்கள் இருதயத்திலும் ஆத்துமாவிலும் இருக்குமென்றால், இங்கிருக்கும் ஊழியக்காரர்களாகிய நாங்கள், பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட இங்கிருக்கும் என் சகோதரர்கள் அந்த காரியங்களை மாத்திரமே கூறுவோமென்றால் நாங்களே தவறானவர்களாக காணப்படுவோம். புரிகிறதா?

121280 நான் இரட்சிக்கப்பட்டபோது என்னுடைய பாப்டிஸ்டு போதகரிடத்தில் நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டேன் என்றும், ஆகவே இப்படிப்பட்ட காரியங்கள் எல்லாம் …கர்த்தருடைய தூதன் நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினதையும் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் “பில்லி, நீ மனபயத்தினால் ஒரு பயங்கரமான கனவை கண்டிருப்பாய்” என்று கூறினார். நான், “டாக்டர் டேவிஸ், நான் ஒரு தூதனைக் கண்டேன்” என்று கூறினேன். 281 அவர், “ஓ, அர்த்தமற்றது! அது—அது பிசாசினால் உண்டானது.” என்றார். பார்த்தீர்களா? ஓ, என்னே, அது எப்படியாய் என்னைப் புண்படுத்திவிட்டது! மேலும் அவர், “நீ இராஜாக்களுக்கும், ஆளுநர்களுக்கும் பிரசங்கிக்கப் போகிறாயா?” என்று கேட்டார். பாருங்கள்? நான் “அதைத் தான் கர்த்தருடைய தூதன் கூறினார்” என்றேன். அதற்கு அவர், “ஏழாம் வகுப்புப் படிப்பைக் கொண்டா? என்று கேட்டார் அப்பொழுது நான், “அதைத்தான் அவன் கூறினான்” என்று கூறினேன். 282 அவர், “யார் உனக்கு செவி கொடுப்பார்கள் என்று நினைக்கிறாய்? சிறந்த மருத்துவ ஆராய்ச்சிக் காரியங்கள் மற்ற எல்லாமும் இன்றைக்கு இருக்கின்ற வேளையில் நீ எப்படி சென்று தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கிக்கப் போகிறராய்?” என்று கேட்டார். அப்பொழுது நான், “எத்தனை கோலியாத்துக்கள் அங்கே நின்றாலும் எனக்கு அது ஒரு பொருட்டல்ல” என்று கூறினேன். மேலும் அவர், “அவர்கள் உனக்கு செவி சாய்ப்பார்கள் என்று நீ நினைக்கிறாயா?” என்று கேட்டார். 283 அதற்கு நான் “தேவன் என்னை அனுப்புகிறார் என்றால் எனக்குச் செவி கொடுக்க யாராவது இருப்பார்கள்” என்று கூறினேன்.

122284 ஜனங்களாகிய உங்களைக் குறித்து அப்பொழுது எனக்குத் தெரியவில்லை. நான் உங்களிடம் வந்த போது, ஒரு கை உறையை கையில் பொருத்துவது போன்று இருந்தது. நான் உங்களுடன் சரியாக பொருந்தி விட்டேன். நான் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். என்னுடைய போதக சகோதரர்களை நான் நேசிக்கிறேன். இன்றிரவு நாம் இங்கே அமரத்தக்கதாகவும், இவ்விதமான ஒரு செய்தியை பிரசங்கிக்கத்தக்கதாகவும் இந்த சகோதரன் தனது சபையைத் திறந்து கொடுத்தது போல ஒரு பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு அல்லது லூத்தரன்கள் தங்களுடைய சபையை திறந்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை. ஐயா, செய்யவேமாட்டார்கள். இந்த மனிதர்களோ சத்தியத்தை விசுவாசிக்கின்ற தீரமுள்ள மனிதர். இப்பொழுது வார்த்தையோடு இவர்களுடன் ஒருமித்து நின்று உலகத்தின் காரியங்களிலிருந்து விலகி நில்லுங்கள், பாருங்கள். 285 சகோதரிகளே, உங்கள் தலை முடியை வளரவிடுங்கள். நல்ல மற்றும் ஒழுங்கான உங்களுடைய ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு அவமானம். உங்கள் முகத்தில் உள்ள அந்த சாயத்தை எடுத்துப் போடுங்கள். பாருங்கள்? சாயத்தினாலும், உங்கள் முடியை கத்தரிப்பதன் மூலம் உங்களை அழகுபடுத்துவதைக் காட்டிலும் நீங்கள் அணிந்து கொள்வதற்கென அதிகமான வேதவாக்கியம் உங்களுக்கு உள்ளது. அது உண்மை. அதைச் செய்யாதீர்கள். அதைச் செய்யாதீர்கள். ஒரு ஸ்திரீ அதைச் செய்வது ஒரு கனவீனமான காரியம் என்று வேதம் உரைத்துள்ளது. தலைமுடி அவளுடைய மகிமையாயுள்ளது. இப்பொழுது, நீங்களோ, “அது ஒரு சிறு காரியம் தானே” என்று கூறலாம். அது சரிதான். ஆனால் சிறு காரியங்களை வழியிலிருந்து அகற்றி விட்டு, பிறகு பெரிய காரியங்களைக் குறித்து நாம் பேசலாம். நாம் சரியாக துவங்குவோமாக.

123286 இப்பொழுது சகோதரர்களே, ஓ, என்னே! மனிதனுக்கு ஒரு காரியத்தை நான் கூறட்டும். திருவாளரே, என்னுடைய சகோதரனே, உன்னுடைய மனைவி அப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்ய நீ அனுமதித்து, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட ஒருவன் என்று நீ கூறிக் கொள்வாயானால், உன்னைக் குறித்து நான் வெட்கமடைகிறேன். உனக்கு அவமானம். உன்னுடைய மனைவி அவ்வாறு தெருவில் செல்ல அனுமதித்தால் உனக்கு அவமானம். 287 நீ இவ்விதமாக பாலுணர்ச்சியை தூண்டும் விதத்திலும் மற்றக் காரியங்களைப் போலவும் நீ ஆடை அணிந்திருக்கிறாய். வேதம் கூறினதை, அதாவது இயேசு, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரஞ் செய்தாயிற்று” என்று கூறினார் என்பதை நீ அறிவாயா? 288 நீங்கள், “இப்பொழுது என்னுடைய சகோதரனே ஒரு நிமிடம் பொறுங்கள். நான் குற்றமற்றவள்” என்று கூறலாம். என் சகோதரியே, நீ அப்படித்தான் என்று நானும் கூட நம்புகிறேன். உன்னுடைய இயற்கையான நடத்தையில் நீ குற்றமற்றவள்தான். ஆனால் நீ உன்னைத் தானே அவ்விதமாக காண்பித்து, உன்னை அவ்விதமாக காண்பிக்கும்போது, ஒரு பாவி உன்னை நோக்கிப் பார்ப்பானானால், யார் குற்றவாளி? நீ தான். ஏனென்றால் நீ அவ்வாறே உன்னைத் தானே காண்பிக்கிறாய். பிறகு நியாயத்தீர்ப்பின் நாளிலே, அந்த பாவி விபச்சார குற்றத்திற்கு பதில் கூறும்போது, தன் இருதயத்தில் யாருடன் அவன் விபச்சாரம் செய்தான்? உன்னுடன் தான். ஏன்? ஏனென்றால் நீ உன்னைத்தானே அவ்விதம் காண்ப்பித்தாய். இப்பொழுது, அது சத்தியமாய் உள்ளது. 289 சகோதரியே, தயவு செய்து நீ அதை செய்யமாட்டாயா, நீ செய்யமாட்டாயா? இயேசுவின் நாமத்தில், உங்கள் சகோதரனாக, நீங்கள் அதை சரி செய்து கொள்ள வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்ளலாமல்லவா? 290 சகோதரனே, அவ்விதமாக நீ உன் வீட்டை நடத்திக் கொண்டிருப்பது உனக்கு வெட்கக் கேடான ஒரு காரியமாகும். சரிபடுத்திக் கொள். நீ ஒரு மனிதனாயிருப்பதால் உன்னைக் குறித்து மேம்பட்ட நம்பிக்கையை நான்—நான் கொண்டுள்ளேன். பாருங்கள்?

124291 இரண்டு அல்லது மூன்று மனைவிகளுடன் வாழுகின்ற உதவிக்காரர்களையும், அதைப் போன்ற மற்ற காரியங்களையும், ஜனங்களையும் உள்ளே வர அனுமதிக்கின்ற போதகர்களே, ஊழியக்காரனே, உனக்கு வெட்கம் என்பது இல்லையா? அந்தக் காரியங்களைக் குறித்து நீ வெட்கமடைவதில்லையா? புகைப் பிடிக்கின்ற, விபசாரத்தில் வாழ்கின்ற, மற்ற எல்லாக் காரியங்களையும் செய்கின்றவர்களை அங்கத்தினர்களாக சேர்த்துக் கொண்டு, பிரசங்க மேடையிலிருந்து அதைக் குறித்து ஒன்றுமே கூறாமல் இருப்பது உனக்கு அவமானமாயிற்றே! சகோதரனே உனக்காக நான்—நான்—நான் ஜெபிக்கின்றேன். 292 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னோடு கூட பொறுத்திருந்த உங்களுடைய பொறுமைக்காக உங்களுக்கு நன்றி. இப்பொழுது, நான் வியப்புறுகிறேன்… 293 அந்த சாயங்கால வெளிச்சமானது வந்திருக்கிறது. சாயங்கால வெளிச்சம் இங்கிருக்கிறது. வார்த்தைக்கு திரும்புங்கள்.

125294 இப்பொழுது, உங்கள் தலைகள் வணங்கியிருப்பதோடும், உங்களுடைய இருதயங்களும் வணங்கியிருப்பதோடு, இக்கேள்வியை நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள், “இந்த வார்த்தையுடன் நான் சரியாகக் காணப்படுகிறேனா? அப்படி நான் இருக்கின்றேனா?” 295 பிரசங்கபீடத்திலிருந்து செய்யப்படுகின்ற என்னுடைய ஜெபமானது. “ஓ, தேவனே, உம்மைப் போன்று இல்லாத காரியங்கள் எல்லாவற்றையும் என்னிடத்திலிருந்து தரித்து எடுத்துப் போடும். ஓ, தேவனே, என்னிடத்திலிருந்து எடுத்துப் போடும்” என்பதேயாகும். நாம் இங்கே பாதையின் முடிவில் இருக்கின்றோம். 296 சரி, நீங்கள் உத்தமமாக உங்களுடைய கரங்களை உயர்த்தி, “தேவனே, உம்மை போன்று இல்லாத காரியங்களை எல்லாம் என்னிடத்திலிருந்து வெட்டி எடுத்தருளும். கர்த்தாவே, என்னை வனையும், என்னை உருவாக்கும்” என்று நீங்கள் கூறுவீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 297 இங்கே யாராவது சரியான நிலையில் இல்லாமல், ஒரு பாவியாய், இங்கிருந்து விலகியிப்போயிருந்து, கிறிஸ்துவை இரட்சகராக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது ஒரு பின் வாங்கிப் போனவர்களாய் அல்லது ஏதோ ஒன்றாய் இருந்து இன்றிரவு இங்கே திரும்பி வர விரும்பினால், நீங்கள் இங்கே பீடத்தின் அண்டையில் வந்து நிற்க அழைக்கப்படுகிறீர்கள். வியாதியஸ்தருக்கான என்னுடைய ஜெபங்களுக்கு தேவன் செவி கொடுப்பார் என்று நீங்கள் விசுவாசித்தால், அவர் எனக்கு செவிகொடுப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே நீங்களும் நானும் ஒன்றாக நம்முடைய விசுவாசத்தை தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னும் பலியின் மீது வைத்து ஜெபத்தை ஏறெடுப்போம். அப்பொழுது தேவன் அதைக் கேட்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் ஜெபத்திற்காக வந்து நிற்கும்படி வரவேற்கப்படுகிறீர்கள்.

126298 இப்பொழுது, எங்கள் பரலோகப் பிதாவே, நீண்ட நேரமாக பேசப்பட்ட இந்த கோர்வையற்ற வார்த்தைகளையும், இந்த கூட்டத்தாரையும் உம்மிடத்தில் நாங்கள் சமர்ப்பிக்கின்றோம். கர்த்தாவே அநேகர் சோர்ந்து களைத்துப் போய் வீட்டிற்கு சென்றிருக்கின்ற வேளையில், ஒரு வேளை சிலர் சற்று மனக்கசப்பு அடைத்திருக்கலாம். கர்த்தாவே கூட்டத்தில் யார் யார் முழுவதுமாக இருந்தனர் என்று என்னால்—என்னால் கூற இயலவில்லை. ஆகவே, பிதாவே, அது உமது வார்த்தையாகும். என்னுடைய இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர். ஆகவே…நான்…அதை நான் செய்யாதிருந்தால் எனக்கு ஐயோ. கர்த்தாவே, அதை நான்—நான் செய்தாக வேண்டும். ஆகையால் வார்தையைக் குறித்த சரியான புரிந்து கொள்ளுதலை உடையவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என்றே நான் இப்பொழுது ஜெபிக்கிறேன். நீர் எவர்களை ஜீவனுக்கென்று அழைத்திருக்கிறீரோ, தங்கள் இருதயத்தை தேவனை நேசிக்கத்தக்கதாக கொண்டிருந்து உலகத்தில் உள்ளதை நேசிக்காமல் இருக்கிறவர்கள் நிச்சயமாக புரிந்துகொள்வார்கள், அவருடைய சபைக்கான இந்த காரியங்களுக்காக நான் மன்றாடுகிறேன். 299 பிதாவே, அங்கே உள்ள கூடுதலான அந்த எல்லா காரியங்களையும் தறித்து எறிவதற்காக, ஒரு விருத்தசேதனத்திற்காக இங்குள்ள எல்லாக் கைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. தேவனே, எங்கள் எல்லோருக்கும் உதவி செய்யும். கர்த்தாவே சரியாக அவர்களுடனே நான் நிற்கின்றேன். நானும் அவர்களில் ஒருவனாயிருக்கிறேன். பாவமும், அவமானமும் என்றென்றைக்குமாக அழிக்கப்படும். அந்த மகிழ்ச்சிக்குரிய ஆயிர வருட நாளின் வருகைக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே, பிதாவே, நாங்கள் இந்த உலகத்தில் இருக்கையில் இந்த காரியங்களுக்கு நாங்கள் உட்பட்டிருக்கிறோம். நாங்கள் தவறுகளுக்கு உட்பட்டிருக்கிறோம். நாங்கள் பாவத்திற்கு உட்பட்டவர்களாயிருக்கின்றோம், அதே சமயத்தில் நாங்கள் அதைச் செய்ய வாஞ்சிக்காமல் இன்னும் நாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறோம். வேதம் கூறுகின்றது போல, “கடிந்து கொள்ளப்படும் போது சோர்ந்து போகாதே.” ஆனால், பிதாவே, வார்த்தையின் கடிந்து கொள்ளுதல் மற்றவர்களை பலமாக வெட்டுவது போன்று என்னையும் பலமாக வெட்டுகிறது. பிதாவே, அவர்கள் அதை அந்த விதமாகவே புரிந்து கொள்ளவேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன்.

127300 இப்பொழுது நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன். நாங்கள் முன்னமே ஜெபித்ததுபோல, நாங்கள் கேட்கப் போவதை அறிந்தவராக கவனித்துக் கொண்டிருக்கின்ற கர்த்தாவே, தவறான ஒன்றை நான் கேட்க விரும்பவில்லை. சொற்களால் நிறைந்த ஏதோ ஒன்றை நாங்கள் கேட்க விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் உம்முடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். 301 இன்றிரவு நான் இங்கு வந்து பிரசங்கிக்கத்தக்கதாக தன்னுடைய கதவைத் திறந்த இந்த எங்களுடைய சிறிய சகோதரனை ஆசீர்வதிக்கும்படியாக நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன். நீர் அவருடைய சபையையும், அவருடைய அங்கத்தினர்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று கர்த்தாவே, நான் ஜெபிக்கிறேன் …தேவனுடைய வரங்கள் தடையின்றி செயல்படவும், மற்ற ஒவ்வொரு காரியங்களும் இசைவாய் செல்லுகின்ற ஒரு ஸ்தலமாக, ஒரு கலங்கரை விளக்கமாக இது அமைவதாக. 302 இங்கு அமர்ந்திருக்கின்ற ஒவ்வொரு ஊழியக்காரரையும், அவர்களுடைய சபைகளையும் ஆசீர்வதியும். ஒரு அசைவு அல்லது முசுக்கொட்டைச் செடியின் ஓசையைப் போன்று தேவனுடைய ஆவியானது பீனிக்ஸை கடந்து சபைகளை ஐக்கியத்திற்கும், ஒரு மகத்தான எழுப்புதலுக்கும் கொண்டுவந்து, அதாவது ஊழியக்காரர்கள் பிரசங்கிக்கக் கூடாத அளவிற்கு தேவனுடைய மகிமைக்கென்று, பரிசுத்தவான்கள் சீக்கிரமாக மத்தியானப் பொழுதிலேயே கூடி வந்து அழுது, ஜெபித்து, செய்திகளையும், சாட்சிகளையும் கூறி, ஒரு உண்மையான ஆவியின் பொழிவை அடைந்து, முழு பட்டினமே கவர்ந்து ஈர்க்கப்பட்டு செவி கொடுப்பதாக. அதை இப்பொழுது அருளும். 303 கர்த்தாவே, எங்கள் மத்தியில் உள்ள வியாதியஸ்தரை சுகப்படுத்தும். பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினூடாக அவர்களுக்கு தெய்வீக விடுதலையை அருளும்.

128304 இப்பொழுது நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கின்ற வேளையில், பீடத்தைச் சுற்றி நிற்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் யாராவது அங்கே இருப்பார்களானால், நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கின்ற வேளையில், நாம் ஒரு—ஒரு—ஒரு சிறிய பாடலை, ஒரு நல்ல பழைய சுவிசேஷ பாடலை மெளனமாக வாய் திறவாமல் பாடப் போகிறோம். நாம் அதை வாய்திறவாமல் பாட விரும்புகிறோம். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படியாக, இன்னும் ஒரு—ஒரு ஆழமான அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள, அல்லது நீங்கள் இரட்சிக்கப்பட்டு இன்னுமாக பரிசுத்தமாக்கப்படாமல் இருந்தால் அல்லது என்னவாயிருந்தாலும் நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று எவரேனும் வாஞ்சை கொண்டிருந்தால் நாங்கள் ஜெபிப்போம். நாம், “ நான் அவரை நேசிக்கிறேன் ” என்ற இந்தச் சிறிய பாடலை வாய் திறவாது பாடுகையில், நாங்கள் ஜெபிக்க சந்தோஷமடைவோம். நீங்கள் அவரை நேசிப்பீர்களானால், இப்பொழுது நாம் அவருடைய வார்த்தைக்கு கனத்தை செலுத்துவோமாக. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் முதலில் அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. 305 அவர்கள் வந்துக் கொண்டிருக்கையில், ஒவ்வொருவரும் தங்கள் இடத்தில் இப்பொழுது இங்கே நிற்க நான் விரும்புகிறேன். சரி, சகோதரியே. அவரை நேசிக்கிறேன், நான் அவரை சிக்கிறேன். முந்தி அவர்… இப்பொழுது வர வேண்டும் என்று விரும்புகிற நீங்கள் பீடத்தைச் சுற்றிலும் வாருங்கள். …என்னை சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி…

129306 குட்டை தலைமுடியினையுடைய சகோதரிகளாகிய நீங்கள் ஏன் இங்கு வந்து தேவனுடன் பொருத்தனை செய்து கொள்ளக் கூடாதா? உங்களுக்கு நான் அதை வேதாகமத்திலிருந்து வாசித்துக் காண்பிக்க வேண்டுமா? சரி. நீங்கள் வந்து, “கர்த்தாவே, நான் எல்லாக் காரியங்களிலும் சரியாக இருக்க விரும்புகிறேன். நான் சரியாக துவங்க விரும்புகிறேன். நான் சரியான பாதையில் சென்று அங்கேயே தரித்திருக்க விரும்புகிறேன். ஆகவே, கர்த்தாவே, இன்றிரவு நான் உம்மிடம் ஒரு பொருத்தனை செய்து கொள்ளப் போகிறேன். இப்பொழுதிலிருந்து சரியாக அது வளரப்போகிறது,” என்று கூறமாட்டீர்களா? 307 ஒரு மனிதன் நீண்ட முடியை உடையவனாயிருந்து ஒரு ஸ்திரீயைப் போன்று காணப்படுவானானால் அது அவனுக்கு ஒரு வெட்கக் கேடான காரியம் என்று வேதம் உரைத்துள்ளது. தேவன் இரண்டு உடன்படிக்கைகளை, அதாவது ஆதாமுடன் ஒன்றையும், ஏவாளோடு ஒன்றையும் செய்தார். அவர்களை வித்தியாசமான உடுத்துவித்தார். ஆக மொத்தம் அவர்கள் வித்தியாசபட்டவர்களே. அவர்கள் எப்பொழுதும் வித்தியாசமாகவே இருந்து வருகின்றனர். இரண்டு உடன்படிக்கைகள் வேதம் முழுவதிலும் உள்ளன. நான் எப்பொழுதுதாவது ஒரு இரவு இந்த இரண்டு உடன்படிக்கைகளைக் குறித்து பிரசங்கித்து, அதிலுள்ள வித்தியாசத்தை நான் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். ஓ, என்னே, அது மகத்துவமானது. அது உங்கள் விவாகமும் விவாகரத்தும் போன்ற காரியங்களிலும் கூட உள்ளது. நீங்கள் அதைக் குறித்த சத்தியத்தை அறிந்தீர்களானால் முழு காரியத்தையுமே அது ஒரு முடிவுக்கு கொண்டு வரும். அது உண்மை. சரி, மீண்டும் இப்பொழுது, நாம் இப்பொழுது நிச்சயமுடையவர்களாய் இருப்போம், நீங்கள் வரமாட்டீர்களா? நான் அவரை நேசிக்கிறேன்… உங்களுக்கு பரிசுத்த ஆவி தேவையாய் இருக்கின்றதா? மேலே வந்து சுற்றிலும் நில்லுங்கள். முந்தி அவர் என்னை நேசித்ததால் … நீங்கள் அவரோடு நெருங்கி நடக்க விரும்புகிறீர்களா? வாருங்கள். ஒரு உறுதி மொழியை எடுத்து அதைக் கைக்கொண்டு அதன் படி நடந்து கொள்ளுங்கள். அதைக் கைக்கொள்ளாவிட்டால் நீங்கள் ஒரு உறுதி மொழியை செய்வதில் எந்த ஒரு பயனும் இல்லை. … நீங்கள் வந்து உங்களுடைய உறுதி மொழியை எடுத்துக் கொள்ளலாம். தேவன் அதை நிரப்ப வேண்டும். நீங்கள் உங்களுடைய உறுதிமொழியை கைக்கொள்ளுங்கள்.

130308 இப்பொழுது என்னுடைய ஊழியக்கார சகோதரர்களே, நீங்கள் இப்பொழுது இங்கு கீழே சுற்றி நடந்து வந்து, இங்கே நாம் ஜெபிக்கையில், இந்த விலையேறப்பெற்ற ஜனங்களுடன் நின்று ஒவ்வொருவருடன் பேசி அவர்களுடைய தேவைகள் என்னவென்பதை நாம் இங்கிருக்கையிலேயே கேட்டு அறியுங்கள் என்று நான் கேட்டுக் கொள்ளப் போகின்றேன். 309 உங்களால் இயன்றவரை ஒவ்வொருவரும் பயபக்தியுடன் இருங்கள். இப்பொழுதும், இந்த ஜெபமானது ஏறெடுக்கப்படும் வரையில் நீங்கள் மிக பயபக்தியுடன் இருங்கள், இப்பொழுது தேவன் உங்களை கனப்படுத்துவார், இப்பொழுது இங்கே ஜெபத்திற்காக சுற்றிலும் நின்றுள்ள இந்த மக்களின் பின்னால் வந்து, இங்கு வந்து, நீங்கள் இங்கு வந்து இப்பொழுது சுற்றி நிற்கலாம். கல்வாரி மரத்திலே. 310 இப்பொழுது மறுபடியுமாக அங்கே ஊழியக்காரர்கள் இரண்டு பக்கமும் சேர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். நான் அவரை நேசிக்கிறேன், நான்… பல்வேறு ஸ்தாபனங்களின் ஊழியக்காரர்கள், எல்லோரும் இப்பொழுது ஒன்றாக வந்திருக்கின்றனர், அதாவது இரத்தத்தின் கீழே, அதையே நான் காண விரும்புகிறேன். முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் (என்னே!) 311 சகோதரர்களே இப்பொழுது நடந்து வாருங்கள், நீர் நிற்கின்ற நபரின் அருகில் வந்து அவர் மேல் கைகளை வைத்து தேவனிடத்திலிருந்து அவர்களுக்கு தேவைப்படுவது என்னவென்பதை கேட்டறியுங்கள். இது ஒரு அற்புதமான நேரம்தானே? உங்களுக்குத் தெரியுமா? நான் இதைப் பார்க்கையில், இங்கே பாருங்கள், உங்களுக்குத் தெரியுமா? பல்வேறு சபைகளை சேர்ந்த ஊழியக்காரர்கள் ஒன்றாக சேர்ந்து நிற்கின்றனர். அங்கே கட்டில்கள் மேல் கிடத்தப்பட்டிருந்த சகோதரிகள் எழுந்துவிட்டார்கள். நடந்து சென்று விட்டார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எனவே அதற்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன், கர்த்தருடைய நாமத்தில் அவர்கள் நிற்கிறார்கள்.

131312 இப்பொழுது, கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் உங்கள் தலைகளை தாழ்த்துங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்திலே என்னிடம் பேசுவது போல் தேவனிடத்தில் பேசுங்கள். அதாவது நீங்கள் வந்து, “சகோதரன் பிரான்ஹாம், நான்—நான்…” அதாவது நீங்கள் ஏதாவது தவறு செய்து விட்டால், என்னிடம் வந்து “சகோதரன் பிரான்ஹாம், என்னை மன்னியுங்கள், நான்—நான் இதைச் செய்தேன், அதற்காக நீர் என்னை மன்னிப்பீரா? அதை நான் மறுபடியுமாக உமக்கெதிராக செய்யமாட்டேன் என்று நான் வாக்களிக்கிறேன். சகோதரன் பிரான்ஹாம்” என்று கூற விரும்புவீர்கள். இப்பொழுது என்னிலுருந்து, என்னுடைய பெயரிலிருந்து சற்று மாற்றி உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடம் அவ்வாறு ஜெபியுங்கள். 313 ஆகவே உங்களுக்கு சுகமளித்தல் தேவைப்படுகிறது என்றால், “சகோதரன் பிரான்ஹாமே, பாருங்கள், நான்—நான் நொருக்குண்டிருக்கிறேன். இன்றிரவு ஆகாரம் சாப்பிட என்னிடத்தில் எதுவுமில்லை. ஆம், உங்களிடம் ஒரு டாலர் இருந்தால், அதை எனக்குத் தருவீர் என்பதை நான் அறிவேன்” என்று நீங்கள் கூற விரும்புவீர்கள். இப்பொழுது பாருங்கள், “உம்மிடம் சுகமளிக்கும் வல்லமை இருக்குமானால்” என்று நீங்கள் தேவனிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. “அவர் அதை உடையவராயிருக்கிறார்” பாருங்கள்? “உங்களிடம் அது இருக்குமானால் ” என்று நீங்கள் என்னிடத்தில் கூர வேண்டியதாயிருக்கும். ஆனால் அவரிடத்தில் “உம்மிடம் இருக்குமானால்” எனக் கேட்கத் தேவையில்லை. அவர் உடையவராயிருக்கிறார். புரிகிறதா? ஆகவே நீங்கள் “சகோதரன் பிரான்ஹாமே எனக்கு ஒரு டாலர் தருவீரா? சாப்பிட ஏதாவது எனக்கு—எனக்கு—எனக்கு தேவையாயிருக்கின்றது” என்று கூறுவீர்களானால், ஏன், நிச்சயமாக நான் செய்வேன், நீங்கள் அதை அறிவீர்கள். என்னிடம் அது இருந்தால், எந்த நேரத்திலும் நான் அதை உங்களுக்குக் கொடுப்பேன். அவ்விதம் நான் செய்யாவிடில் நான் கொடூரமான இருதயத்தை கொண்டவனாக இருப்பேன். ஆகவே, கொடுமையான, பாவம் நிறைந்த ஒரு மனிதனான நான் உம்மைப் போன்ற யாரோ ஒருவனுக்கு நல்ல இருதயமுடையவனாய் இருப்பேன் என்றால், தேவன் எப்படிப்பட்டவராயிருப்பார்?

132314 “பொல்லாத மனிதர்களாகிய நீங்களே நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும்போது பரிசுத்த ஆவியைக் கேட்பவர்களுக்கு, உங்கள் பரமபிதா அவர்களுக்கு ஆவியை அளிப்பது அதிக நிச்சயமல்லவா.” “நீங்கள் மீனைக் கேட்டால், அவர் உங்களுக்கு பாம்பைக் கொடுப்பாரா? நீங்கள் அப்பத்தைக் கேட்டால், அவர் உங்களுக்கு கல்லைக் கொடுப்பாரா?” நிச்சயமாக அப்படியல்ல! 315 ஏன், என்னிடத்தில் ஏதாவதொன்று கிடைப்பதை விட பத்துலட்சம் மடங்கு அதிகம் அவரிடத்தில் கேட்டால் சீக்கிரமாகக் கிடைக்கும் என்று விசுவாசத்துடன், அவ்விதமாக நம்பி கேட்டால் என்ன? நான் உங்களுக்கு உதவுவேன் என்று உங்களுக்குத் தெரியம். என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்வேன். இந்த சகோதரர்களில் எவரும் அவ்விதம் செய்வார்கள். நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய எங்களுடைய சட்டைப் பையை துழாவி அதிலுள்ள ஒவ்வொரு காசையும் எடுத்து கொடுப்போம். எங்களால் முடிந்த ஒவ்வொன்றையும் நாங்கள் செய்வோம். ஆனால் இதுவோ நீங்கள் நம்பிக்கையுடன் கூடிய விசுவாசத்தினால் செய்யப்பட வேண்டிய ஒரு காரியமாய் உள்ளது. 316 இப்பொழுது, நாங்களும் ஜெபிக்கையில், நீங்கள் ஜெபிக்கையில், கூட்டத்தார் ஜெபிக்கையில் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்கள். தேவன் இறங்கி வந்து நம்முடைய ஜெபங்களை கனப்படுத்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் உங்களுடைய ஜெபத்திற்கு பதிலளிக்கப் போகின்றார் என்ற ஒர் உணர்வை நீங்கள் பெற்ற் அதே நிமிடத்தில், “கர்த்தாவே, நான் தவறு செய்தேன், அதை இனி நான் செய்யமாட்டேன். என்னுடைய கரத்தை உயர்த்தி இனிமேல் நான் அதை செய்யமாட்டேன் என்று நான் வாக்களிக்கிறேன்” என்ற ஒரு உடன்படிக்கையை நீங்கள் செய்தீர்கள். உங்களுடைய வார்த்தையை கொண்டே தேவன் உங்களை ஏற்றுக் கொள்வார். ஆகவே நீங்கள் அதை அந்த விதமாகவே விசுவாசித்தால், எல்லாம் சரியாகி விடும். அப்படியானால் உங்கள் கரங்களை உயர்த்தி “கர்த்தாவே, என்னுடைய உறுதிமொழியை நான் செய்துள்ளேன். ஆகவே அது உம்முடையது என்பதை நான் அறிவேன். நீர் அதற்கு பதிலளிப்பதாக வாக்குப்பண்ணினீர், நீர் தவறிப்போக முடியாது” என்று கூறி அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

133317 பரலோகப் பிதாவே, உம்முடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள், இந்த நேரத்தில் உம்முடைய கவனத்தையும் உம்முடைய ஆசீர்வாதங்களைக் கோரி இங்கு முன்னே வந்திருக்கும் இந்த மக்கள் குழுவிற்கு முன்பாக நாங்கள் நிற்கின்றோம். பிதாவே, இவர்கள் செய்தியின் வெற்றிச் சின்னங்களாய் சாயங்கால வெளிச்ச நேரத்தில் இருக்கிறார்கள். கர்த்தாவே அவர்களில் அநேகர் அறிக்கையிடுகின்றனர். இவர்களில் சிலர் தேவையுள்ள பதறலோடு உள்ளனர். தேவனே, நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் புறம்பே தள்ளுவதில்லை. ஏனெனில் நீர் உம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்வீர் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். பேதுருவும் மற்ற சீஷர்களும் அப்போஸ்தலர் 4-ம் அதிகாரத்தில் ஜெபித்தது போல நானும் உம்முடைய வார்த்தையை உம்முடைய நினைவிற்கு கொண்டு வருகிறேன். அவர்கள், “கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை நினைவுகூறும்! புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக் காரியங்களை சிந்திப்பானேன்? என்று கூறினர்.

134318 இப்பொழுது பிதாவே, நாங்கள் உம்முடைய வார்த்தையைக் கொண்டு வருகின்றோம். நீர், “என்னில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாய் இருக்கிறான். என்னிடத்தில் வருபவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என்னுடைய வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினை தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்று கூறினீர். 319 ஓ, நம்முடைய விண்ணப்பங்களை தேவனுக்கு தெரியப்படுத்துங்கள். அவர் நமக்கு பதிலளிப்பார். அவர் அபரிமிதமாக … “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவர்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” எனவே நாங்கள் எங்களுடைய தவறுகளை அறிக்கையிடுகிறோம். நான் ஜனங்களுடைய தவறுகளை அறிக்கை செய்கிறேன். என்னுடைய சொந்த தவறுகளை நான் அறிக்கையிடுகிறேன். இரக்கத்திற்காக நான் வேண்டுகிறேன். சுகமளித்தலுக்காக நான் வேண்டுகிறேன். கிருபைக்காக நான் வேண்டுகிறேன். கர்த்தாவே, இப்பொழுது இங்கு காத்துக் கொண்டிருக்கின்ற இந்த மக்களின் மீது பரிசுத்த ஆவியைப் பொழிய வேண்டும் என்றும், அவர்களுடைய ஜீவியமானது தேவனுடைய வனைகின்ற கலத்தில் மாற்றியமைக்கப்பட்டு, தேவனுடைய குமாரனின் சாயலில் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், அதாவது அவரை உயிர்ப்பித்த அந்த ஆவியானது இவர்களுடைய சரீரங்களுக்குள் வந்து தேவனுடைய குமாரர்களாக குமார்த்திகளாக மாற்ற வேண்டும் என்று நான் வேண்டிக்க்கொள்கிறேன். கர்த்தாவே அதை அருளும். 320 நீர் இங்கு பிரசன்னமாயிருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். உம்முடைய வார்த்தையை நீர் கனம் பண்ணுவீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். வார்த்தையின் பிரயாசங்களை நீர் கனம் பண்ணுவீர் என நாங்கள் விசுவாசிக்கிறோம். இங்கு உம்முடைய பிரசன்னமானது பீடத்தண்டையிலே இவர்களை சந்திக்கத் தக்கதாக காத்துக் கொண்டிருக்கையில் இந்த மக்களின் மீது இப்பொழுது இந்த ஆசீர்வாதங்களை அனுப்பும். இயேசுவின் நாமத்தில்.

135321 இப்பொழுது நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என்று விசுவாசித்தால், உங்களுடைய கரத்தை தேவனிடத்தில் உயர்த்துங்கள். அதை விசுவாசத்தின் ஜெபம் என நீங்கள் ஏற்றுக் கொண்டு உங்களுடைய உறுதி மொழியுடன் தேவனிடத்தில் திரும்புகையில், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். 322 கூட்டத்தார் எழுந்து நிற்கட்டும், தேவனிடம் பொருத்தனை செய்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் எழுந்து நின்று, “அதை நான் விசுவாசிக்கிறேன். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன்” என்று இப்பொழுது கூறுங்கள். 323 இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்தி அவருக்கு துதியை செலுத்துங்கள். அவை யாவும் முற்று பெற்றுவிடும். தேவனுக்கு மகிமை! கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய தயவிற்காகவும், உம்முடைய இரக்கத்திற்காகவும், நீர் எங்களுக்காக செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி, கர்த்தாவே. இயேசு கிறிஸ்துவின் மூலம் நாங்கள் உமக்கு துதி செலுத்துகிறோம். 