சத்தியத்தின் ஆவி

63-0118

நமபடவய. இபபழத நம ஜபககயல நம சறற நரம நனறவணணமய இரபபமக. நம நமமடய தலகளத தழததவமக. 2 நதயளள எஙகள பரலகப பதவ, நர எஙகளககக சயதளளவறறறககவம, இநத உலகததனடய சரததரததன மடவன கடசகளன இநத கடச நடகளல, எஙகள கணகள கணடளளதறககவம, எஙகளடய கதகள கடடளளவறறறககவம, எலலவறறககம பதமன நமமகய கரததரகய இயசவன நமததல இபபழத நஙகள உமம அணகககணடரககயல, நஙகள

சத்தியத்தின் ஆவி

63-0118பீனிக்ஸ் அரி1061963-01-18

சத்தியத்தின் ஆவி

63-0118பீனிக்ஸ் அரி1061963-01-18

1 …நம்பிடுவாய். இப்பொழுது நாம் ஜெபிக்கையில் நாம் சற்று நேரம் நின்றவண்ணமாய் இருப்போமாக. நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 2 நீதியுள்ள எங்கள் பரலோகப் பிதாவே, நீர் எங்களுக்காக செய்துள்ளவற்றிற்காகவும், இந்த உலகத்தினுடைய சரித்திரத்தின் முடிவான காட்சிகளின் இந்த கடைசி நாட்களில், எங்கள் கண்கள் கண்டுள்ளதற்காகவும், எங்களுடைய காதுகள் கேட்டுள்ளவற்றிற்காகவும், எல்லாவற்றுக்கும் போதுமான நாமமாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இப்பொழுது நாங்கள் உம்மை அணுகிக்கொண்டிருக்கையில், நாங்கள் உமக்கு துதியை செலுத்த விரும்புகிறோம், காலமானது மங்கிக்கொண்டு நித்தியத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், வெளிச்சங்கள் பிரகாசிப்பதை நாங்கள் காண்கிறோம், கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு இப்பொழுது நீண்ட காலம் இல்லை என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்.

23 பரலோகப் பிதாவே, இன்றிரவு நீர் எங்களை நினைவுகூரும்படியாக, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறோம். இன்றிரவு நீர் வருவீரானால், நாங்கள் உமக்கு அளிக்கும்படியாக, இன்றிரவு, கர்த்தாவே, எங்களிடத்தில் ஏதாவது பொல்லாங்கு இருக்குமாயின், அதை எடுத்துப் போடும். வியாதியஸ்தருக்காகவும், தேவையுள்ளவர்களுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். 4 “இதோ, மணவாளன் வருகிறார். போய் அவரைச் சந்தியுங்கள்” என்ற அந்த அழைப்பிற்காக செவிகொடுக்கவும், எங்களுடைய வஸ்திரங்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் கழுவப்படும்படியாகவும், இங்கும் மற்றும் கடல் கடந்து, உலகத்தை சுற்றிலுமுள்ள, உம்முடைய சபைக்காகவும், ஒவ்வொரு தேசத்திலும் எங்குமுள்ள உம்முடைய பிள்ளைகளுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, தேவனுடைய கிருபையினாலும், நாங்கள் நம்பியிருக்கிற இயேசுவின் தகுதியினாலும், எங்கள் தீவட்டிகளை சுத்தப்படுத்தி, மணவாளனைச் சந்திக்க, அந்த நேரத்தில் நாங்கள் முன்னோக்கிச் செல்வோமாக. இன்றிரவு கர்த்தருடைய வார்த்தையை எடுத்து, எங்கள் இருதயங்களை விருத்தசேதனம் செய்யும். எல்லா அவிசுவாசத்தையும் எடுத்துப் போடும். மகத்தான ஒரு ஆராதனையை எங்களுக்குத் தாரும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். உட்காரலாம்.

35 இன்றிரவு, மீண்டுமாக இங்கே…கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தில், ஆராதனையில் இருப்பது இது நிச்சயமாகவே அருமையானதாயுள்ளது. நாம் நேற்று மாலை சகோதரர் க்ரூமெரின் இடத்தில்…மிகவும் மகத்தான ஒரு நேரத்தைக் உடையவர்களாயிருந்தோம். கடந்த வருடம் நமக்கு ஒரு மகிமையான நேரம் உண்டாயிருந்ததை நான் நினைவுகூருகிறேன். 6 நாம் எங்கும், ஒரு மகத்தான நேரத்தைக் உடையவர்களாயிருந்தோம். அவர் செய்வார் என்று நான் எப்போதும் நினைத்ததைக் காட்டிலும், அதிகமாகவும், அபரிமிதமாகவும் கர்த்தர் எங்களை ஆசீர்வதித்திருக்கிறார். ஆனால் அவர் மிகுந்த இரக்கமும், தயவும் உடையவராயிருக்கிறார். அவரை அறிந்துகொள்ளவது நன்மையாயிருக்கிறது. அப்படித்தானே? “அவரை அறிவதே, ஜீவனாக இருக்கிறது” என்று கருதுகிறோம். அவரை அறிவதே, ஜீவன்.

47 இப்பொழுது, நாளை இரவு, நாம் சென்ட்ரல் அவென்யூ அசெம்பிளிக்குப் போகிறோம், அது அப்படி அழைக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். சகோதரர் புல்லர், மற்றொரு அருமையான சகோதரன். அங்கே அது ஒரு பெரிய சபையாய் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சகோதரன் புல்லருக்கு ஆட்சேபனையில்லையென்றால், நாம் அங்கே ஒரு—ஒரு ஜெபவரிசையை ஏற்படுத்தலாம் என்று நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம். எனவே நாங்கள்… 8 அதன் பிறகு, மறுநாள் காலை, நாங்கள் இங்கே பீனிக்ஸில் அப்போஸ்தல சபை என்று அழைக்கப்படுகிற சபையில் இருப்போம் என்றே நான் நினைக்கிறேன். அந்த மேய்ப்பர், அந்த சகோதரன் யார் என்பது எனக்கு ஞாபகமில்லை. கடந்த வருடம் நான் அங்கு இருந்தேனா? [ஒரு சகோதரன், “இல்லை. சகோதரன் பிரான்ஹாம், அது ஒரு புதிய, மெக்ஸிகன் சபை” என்கிறார்.—ஆசி.]

59 அதன்பின்னர் ஞாயிறு இரவு இங்கு இருக்கும் விலையேறப்பெற்ற சகோதரன் அவுட்லாவினுடைய சபையில், இயேசுவின் நாம சபையில் இருப்போம். நானும், என் குடும்பத்தாரும் அங்கே போவதற்கும், அங்கு சில அருமையான பாடல்களைக் கேட்பதற்கும் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். 10 பில்லி பால் ஒவ்வொன்றையும், மனப்பாடமாக அறிந்திருக்க வேண்டும். நான் மேலே, மேலே சென்றுகொண்டிருக்கிறேன் என்ற ஒலி நாடாவை, உண்மையாகவே, அந்த பாடல் தேய்ந்துபோகுமளவிற்கு நாங்கள் போட்டுக் கேட்டோம். அவன் அதை அலுவலகத்தில் போடுவதால், நான் அங்கு செல்லும்போது ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு மணிநேரமும் அதைக் கேட்பேன், எதையும் பொருட்படுத்தாமல், அவன், “மேலே, மேலே, மேலே” என்ற பாடலை இயக்கிக்கொண்டேயிருப்பான். அதில் ஏதோ ஒரு காரியம் உண்டே! நாங்கள் அதை வெளியிலும் போட்டுக் கேட்டபடியால், அந்த ஒலித்தட்டு கிட்டத்தட்ட தேய்ந்தே போய்விட்டது.

611 உங்களுக்குத் தெரியுமா, எனக்கு இன்றிரவு ஒரு விதமான உணர்வு உண்டாயிருந்தது, அதாவது, எனக்கு தொண்டை சற்று கரகரப்பாகவுள்ளது. எனவே நான், “என்னே, எனக்காக வேறு யாரையாவது பேச வைக்க முடியுமா என்று பார்க்கலாமா” என்று எண்ணினேன், இங்கே எதேச்சையாக நோக்கிப் பார்க்க நேர்ந்தபோது, ஜேக் மூரைக் கண்டேன். முற்றிலும் உண்மை. நான் ஒருபோதும்… ஓ, சகோதரன் ஜேக், அது அற்புதமாய் இருக்கும் என்று நான் நினைத்தேன். [சகோதரன் ஜேக் விளக்கமளிக்கிறார்—ஆசி.] இப்பொழுது அதற்கு செவிகொடுங்கள். 12 சகோதரர் ராய் பார்டர்ஸ் கூட இங்கே அமர்ந்திருப்பதை நான் காண்கிறேன் என்று நான் நினைக்கிறேன். ஆம், ஐயா. சகோதரர் நோயல் ஜோன்ஸ் இங்கே அமர்ந்திருக்கிறார். ஒ, என்னே! நாம் யாவரும் சுற்றிலுமாய், எங்கும் இருக்கிறோம். உங்களுக்குத் தெரியும், எனக்குத் தொண்டை கரகரப்பாக இருக்கும்போது, எனக்காக இந்த அருமையான மனிதர்கள் சிலர் இங்கே எழும்பி பேசினால், உங்களுக்குத் தெரியும், நான் சற்று இளைப்பாறினால், ஒருக்கால், அது ஒரு நல்ல நேரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சகோதரன் ஜேக், “கர்த்தர் அந்த வெளிப்பாட்டில் இல்லை” என்று கூறினார். பாருங்கள், நான் வந்தபோது, நான் களைப்புற்றிருந்தேன். நான்—நான் தொடர்ந்து, சற்று களைப்பாகவே இருந்து வருகிறேன். 13 அங்கே ஜனங்கள் நிற்பதையும், அவர்கள் எப்படி நிற்க வேண்டும் என்பதையும் நான் அறிவேன், மேலும் நான் அவர்களோடு நிற்பதற்காக ஒரு விதமாக மகிழ்ச்சி அடைகிறேன். இப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

714 நாம் வரப்போகிற இந்த மற்ற கூட்டங்களுக்காக இப்பொழுது எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன் பிறகு அடுத்த வாரம், அங்கே கீழேயுள்ள பெந்தெகொஸ்தே அசெம்பளியிலும், மற்றும் மேல் உள்ளதிலும் இருக்கும். நாங்கள் அடுத்த புதன்கிழமை இரவு, 11-வது கார்பீல்டில் கூட்டங்களை முடிக்கிறோம். என்னால் அவை எல்லாவற்றையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை. அதுவே அந்த பட்டணத்தில் இருக்கும் முதலாவது அசெம்பிளி ஆஃப் காட் சபை என்று நான் நினைக்கிறேன். மேலும்—மேலும் அதன்பின்னர் தொடர் கூட்டங்கள் ராமதாவில் துவங்குகின்றன. 15 மேலும் இப்பொழுது அரிசோனாவின் முக்கிய நகரமான: டூசானில் வர்த்தக புருஷர்களுக்கான பெருவிருந்து ஒன்று இருக்கிறது. 16 நிச்சயமாகவே, நாம் எல்லாரும் அறிந்துள்ளபடி பீனிக்ஸ் மற்றும் இந்த இடங்கள் யாவும் நகரத்தின் வெளிப்புறங்களாக உள்ளன. அது உண்மையே. அதுவே முக்கியமான இடம். இது என்னுடைய சொந்த நகரம், அந்த குன்றின் மேலுள்ள, இன்னார் மற்றும், இன்னாரை உங்களுக்குத் தெரியும். அப்படியானால் இது, இது அதனுடைய வெளிப்புற நகரமாகும், ஏன், உங்கள் எல்லோரையும் அண்டை வீட்டாராகக் கொண்டிருப்பது அருமையானது, ஆகவே…

817 அது சகோதரர் ரஸ்முஸ்சன் என்று நான் நினைக்கிறேன், அவர் ஓர் இரவு, ஒரு கூட்டத்தில் அந்த விதமான ஒரு காரியத்தைக் கூறினார், மேலும், ஓ, என்னே, அது கூட்டத்தையே பாழ்படுத்தியது போன்றாகிவிட்டது. நாங்கள்—நாங்கள் ஹவுஸ்டனில் இருந்தோம் என்று நான் நினைக்கிறேன். அது ராம்சார். அது அவராகத்தான் இருந்தார். அவர் கூறினார், அந்த இரவு கர்த்தருடைய தூதன் இறங்கி வந்தபோது, அவர்கள் அந்த புகைப்படத்தை எடுத்தனர், மேலும் அவர், “டல்லாஸிலிருந்து வந்து இங்கு சுற்றிலுமாயுள்ள ஜனங்களாகிய நீங்கள் யாவரும்” என்று கூறி, “அது ஹவுஸ்டனின் நகர்ப்புற எல்லையில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்” என்றார். மேலும், ஓ, என்னே! அரிசோனா ஜனங்களாகிய நீங்கள் இதை ஏற்றுக்கொண்ட வண்ணமாக டெக்சாஸ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அந்தக் கூட்டத்தில் ஒரு பெரிய நிசப்தம் ஏற்பட்டது. 18 பாருங்கள், அவர் மிகவும் நல்லவராயிருக்கிறார். இப்பொழுது நாம் இங்கே வேத வார்த்தைக்குச் சென்று, ஒரு சிறிய சாட்சியைக் கொடுக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அது ஒருவிதமான மாற்றமாயிருக்குமல்லவா? உங்கள் முகத்தை பார்க்க வெட்கமடையுமளவுக்கு நான் இந்தக் காரியத்தைக்குறித்து அதிகமாகப் பேசிவிட்டேன். நான் சிறிது நேரம் உங்களை இளைப்பாறச் செய்திட நம்முடைய கர்த்தரின் நன்மையைக் குறித்த சாட்சியைச் சொல்வேனாக.

919 நாம் பரிசுத்த யோவானில், பரிசுத்த யோவானின் 16-வது அதிகாரத்தில் ஒரு இடத்தை நாம் கண்டறிவோமாக. நான் 16:12-ஐ எடுத்துவிட்டேன். நான் பரிசுத்த யோவானின் சுவிசேஷத்தில் அந்த இடத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். நான் வார்த்தையை வாசிக்க விரும்புகிறேன், ஏனென்றால் வார்த்தையே சத்தியம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ளச் செய்கிறது. பன்னிரெண்டாம் வசனத்தில் இருந்து துவங்குவோம், இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், ஏனென்றால் நான் சாட்சி கூற விரும்புகிறேன். 20 அதனால் நாம் சற்று சீக்கிரமாகப் போக முயற்சிப்போம். நான் நீண்ட நேரம் உங்களை காக்க வைத்திருக்கிறேன். நாளை இரவு, ஏன், நாம் கூடுதலாக ஒரு அரை மணிநேரம் தரித்திருப்போம். அது சரியாக ஒருமணி ஆகிவிடும், அது சரிதானே? எனவே, ஆகையால், இது பன்னிரெண்டாம் வசனத்தில் துவங்குகிறது: இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் இப்பொழுது என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.

1021 உங்களுக்குத் தெரியுமா, நேற்று மாலை, குறிப்பாக, நாம் அதைக் குறித்து ஒரு சிறிய முன் மாதிரியைப் பெற்றோம். இப்பொழுது, நாம் முழு சுவிசேஷத்தையுடைய ஜனங்களாய் இருக்கிறோம், பரிசுத்த ஆவியின் கிரியைகள் எல்லாவற்றிலும் விசுவாசங்கொண்டுள்ளோம். இப்பொழுது, நாம் முழு சுவிசேஷத்தை உடையவர்களாயிருக்க முடிந்ததற்கு ஒரே வழி, முழு சுவிசேஷத்தை, கர்த்தர் எழுதியிருக்கிற யாவற்றையும் விசுவாசிக்கிறவர்களாய் இருப்பதேயாகும். நாம் தாமே ஒன்றுமற்றவர்களாய் இருக்கிறோம் என்பதை நாம் நம்புகிறோம். நாம் இருக்கிற விதமோ… 22 நான் நேற்றைய தினம் சகோதரன் கேரலிடம், ஒரு மரத்தைப் பார்த்துச் கூறினதுபோலவே, நான், “அது ஒரு அழகான பனை மரமல்லவா? ஆனால், மொத்தத்தில், அது ஒரு எரிமலை சாம்பல் குவியலேயல்லாமல் வேறொன்றும் இல்லை. அது அவ்வளவுதான்” என்றேன். அதன் பின்னர் நான், “இப்பொழுது அந்த கற்பூரத் தைல மரத்திலிருந்து அது எப்படி வித்தியாசமாக உள்ளது. பாருங்கள், ஒரு கற்பூர தைல மரம் என்றால் என்ன? அதனுள் ஒரு ஜீவனைக்கொண்டுள்ள, எரிமலை சாம்பல்” என்றேன். மேலும் நான், “மொத்தத்தில், நானும், நீங்களும் என்னவாயிருக்கிறோம்? சரியாக, பூமியில் இருந்து எடுக்கப்பட்ட, எரிமலை சாம்பல்; அது ஜீவனைக்கொண்டுள்ள பூமியின் தூசியே” என்றேன்.

1123 ஒவ்வொரு ஜீவனும், ஜீவனைக் கொடுக்கின்ற எஜமானால் நடப்பட்டுள்ளது, மேலும் எப்படி மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஒவ்வொரு காரியத்தையும் அவர் இந்த பூமியில் இங்கே தம்முடைய மகிமைக்காக வைத்திருக்கிறார். நட்சத்திரங்கள் அவருடைய மகிமைக்காக இருக்கின்றன. காற்றுகள் அவருடைய மகிமைக்காக இருக்கின்றன. பூக்கள் அவருடைய மகிமைக்காக இருக்கின்றன. நாம் அவருடைய மகிமையின் முடிசூட்டுதலாய் இருக்கிறோம். 24 ஆனால் மனிதனைத்தவிர எல்லாமே அவருக்கு கீழ்படியும் என்பது போன்றே தென்படுகிறது. மனிதன் வெறுமனே…அவன் விழுந்துபோயிருந்த ஒரே காரியமாயிருந்தபடியால், அவன் அத்தகைய ஒரு நேரத்தை உடையவனாயிருந்தான். ஒவ்வொரு காரியமும் அதன் மூலநிலையிலேயே தரித்திருந்தது. ஆனால், மனிதனோ விழுந்துபோனான். ஆகையால், அவனை சரியானதைச் செய்ய வைக்கவும், கீழ்ப்படிய வைப்பதற்கும், தேவனுக்கு அவனோடே ஒரு யுத்தம் உண்டாயிருக்கிறது.

1225 சபையின் சரித்திரத்தினூடாக பார்க்கையில், வருடங்களினூடாக, தம்முடைய கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்திருக்கக் கூடிய யாராவது ஒருவரைக் கண்டறிவதே தேவனுக்கான மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகும். அவருக்கு ஒரு மனிதன் மாத்திரமே தேவைபடுகிறான். அவர் எப்பொழுதுமே ஒரு நேரத்தில் ஒரு மனிதனை மாத்திரமே எப்பொழுதும் பயன்படுத்தி வந்துள்ளார். நாம் கடந்த சில இரவுகளாக தியானித்தோம்: ஒரு மனிதன், ஒரு குழு அல்ல. அவருக்கு ஒரு மனிதன் தேவைப்படுகிறான். அவருக்குத் தேவைப்படுகிறதெல்லாம் அவ்வளவுதான். ஏனென்றால், இரண்டு மனிதர்களுக்கு இரண்டு வெவ்வேறு எண்ணங்கள் இருக்கும். அவர் ஒரு மனிதனை ஆயத்தப்படுத்தி, அந்த ஒரு நபர் மூலமாக தம்மையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் அதைப் பார்க்கிலும் வேறுவிதத்தில் அதை ஒருபோதும் செய்ததில்லை. புரிகிறதா? 26 இப்பொழுது, அவர் இன்றைக்கு ஒரு நபரை உடையவராயிருக்கிறார், நாம் சற்று முன் வாசித்தபடி அந்த ஒருவராயிருக்கிற அந்த நபர்: பரிசுத்த ஆவியானவரே. அந்த நபரையே தேவன் பூமிக்கு, இயேசு கிறிஸ்துவின் ஆவியையே, தேவனுடைய ஆவியை, அவருடைய சபையின் மூலமாக கிறிஸ்துவை அறிவித்து வெளிப்படுத்த, பாருங்கள், சபையின் மூமாக கிறிஸ்துவின் ஜீவன் தொடரவே அனுப்பியிருக்கிறார்.

1327 இப்பொழுது, நாம் சற்று நின்று நிதானித்துப் பார்த்தால், இது ஒரு அற்புதமான காரியமாகும், அதேசமயத்தில் அது மிகவும் எளிமையானதாயுமிருக்கிறது. நாம் நெருங்குகிறோம், நாம் நடுங்குகிறோம், நாம்—நாம் பயப்படுகிறோம், நாம் குழப்பங்களும், சந்தேகங்களும் அடைந்து, “சரி, நான் உள்ளே நெருங்கி முன்னேற வேண்டுமா…?” என்று சிந்திக்கிறோம். இது அதுவல்ல. அது அப்படியே ஒப்புக்கொடுப்பது, பாருங்கள், நீங்கள் ஒன்றுமில்லை என்று தெளிவாக உணர்ந்து, உங்களையும் உங்கள் சிந்தனையையும் மேற்கொள்ள, அவர் உங்களை மேற்கொள்ள அனுமதிப்பதாகும். 28 இப்பொழுது, நீங்கள் ஒரு—ஒரு வெற்று மனதோடு—கிறிஸ்துவிடம் செல்லுங்கள் என்று நான் பொருட்படுத்திக் கூறவில்லை. நான் அவ்விதமாக பொருட்படுத்திக் கூறவில்லை. நீங்கள் அவரிடம் சரியான சிந்தையோடும், தவறுக்காக வருந்துகிற ஒரு—ஒரு—ஒரு சிந்தையோடும், தாழ்மையோடும் அவரிடம் செல்லுங்கள். அதன்பின்னர், “கர்த்தராகிய இயேசுவே, இதோ நான் இருக்கிறேன்” என்று கூறுங்கள். இப்பொழுது, சீஷர்களிடத்தில் ‘இன்னும் அநேக காரியங்களை சொல்ல வேண்டியதாயிருந்தீர்’ என்று, இங்கே உம்முடைய வார்த்தையில் எழுதப்பட்டிருக்கிறது. நீரோ, ‘அவைகளை இப்பொழுது அவர்கள் தாங்கமாட்டார்கள்,’” என்றீர். அது ஒருவேளை எங்களுடைய காரியமாயும் இருக்கலாம், நாங்கள் அவைகளை புரிந்துகொள்ள முடியாது.

1429 தேவன் ஒரு சிறிய வித்தியாசமான காரியத்தை எழுப்பினால், நாங்கள் அதை ஒன்றுசேர்ந்து மறுதலிக்கிறோம். அது சரியா தவறா என்று வேதத்தை ஆராய்வதற்குப் பதிலாக, “அதில் ஒன்றுமில்லை” என்று நாங்கள் அதை துரிதமாக வீசிவிடுகிறோம். நாங்கள் இந்த காரியங்களை ஆராய்ந்து, அவைகள் சரியா அல்லது இல்லையா என்று கண்டறிய வேண்டும். மேலும் நினைவிருக்கட்டும், அவைகள் சரியாயில்லையென்றால், அவைகள் முடிவிலே மரித்துபோகும், ஏனென்றால் இயேசு, “என் பரம பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்” என்று கூறினார். 30 அந்த சமயத்தில் இந்த மகத்தான கூற்றை கமாலியேல் கூறினான் என்று நான் நினைக்கிறேன், “அது தேவனால் உண்டாயிருந்ததேயானால், தேவனோடே போர் செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள். மேலும்—மேலும் அது தேவனுடையதாய் இல்லையென்றால் எப்படியும் அழிந்துபோம்.” ஆகவே அதை ஆய்ந்துப் பார்த்து, அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்.

1531 இப்பொழுது, அவர் இங்கே, “ஆனால் பரிசுத்த ஆவியாகிய அவர் வரும்போது” என்று கூறினார். 32 இப்பொழுது, சிறிது காலத்துக்கு முன்பு, யாரோ ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, “பரிசுத்த ஆவி என்பது உண்மையாகவே உங்களுடைய மனஞ்சார்ந்த சிந்தனை. நீங்கள் நினைப்பது” என்றார். அது பரிசுத்த ஆவியை ஒரு சிந்தனை என்று நினைக்க வைக்கும். 33 ஆனால் வேதம், “அவர்…” என்று கூறியுள்ளது. “அவர்” ஒரு தனிப்பட்ட பிரதிப்பெயர். புரிகிறதா? பார்த்தீர்களா? “அவர்,” அந்த நபர், பரிசுத்த ஆவியானவர், தேவன், “வருகிறபோது, நான் உங்களுக்குக் கூறியுள்ள, இந்த காரியங்களை அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்” என்று கூறியுள்ளது. 34 அப்படியானால், நீங்கள் பாருங்கள், சத்தியம் என்னவென்பதை அறிந்துகொள்வதற்கு வேறு வழியேயில்லை. நீங்கள் கலாச்சாரத்தினால், வேத சாஸ்திர அனுபவத்தினால் மூலம் மாத்திரமே…அதைப் பெற்றுக்கொள்ள முடியாது. பரிசுத்த ஆவியானவர் மூலமாக மட்டுமே நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வீர்கள். நமக்கு அதை வெளிப்படுத்த அனுப்பப்பட்டிருக்கிற ஒருவர் அவர்தான். இப்பொழுது, அப்படியானால், அவர், “வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” என்றும் கூட கூறினார்.

1635 இப்பொழுது, எபிரெயர், 1-வது அதிகாரத்தில், “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக்கடைசி நாட்களில் குமாரன் மூலமாய், இயேசுகிறிஸ்து மூலமாய் திருவுளம் பற்றினார்” என்று கூறப்பட்டுள்ளது. பார்த்தீர்களா? அது பரிசுத்த ஆவியானவர் உரிமையை எடுத்துக்கொண்டு, அதாவது கிறிஸ்து சபையில் செயல்படும்படி, சபையின் உரிமையை எடுத்துக் கொள்வதாகும். அப்பொழுது அவர் இருந்தவிதமாக நீங்கள் ஆகிவிடுகிறீர்கள். அவர் இருந்தவிதமாக நீங்கள் ஆகும்படியாக, நீங்கள் இருந்தவிதமாக அவர் ஆகிகிறார். புரிகிறதா? நீங்கள் அவராகும்படிக்கு அவர் உங்களைப்போலானார். அது, அது—அது நம்முடைய புத்திக்கு மேலானதாக இருக்கிறது. அதை விவரித்துக் கூற வழியேக் கிடையாது, அதைச் செய்ய முயற்சிக்காதீர்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் அதை உரைத்தார், அதுவே அதற்கு தீர்வாகிறது. அது சரி என்று அப்படியே கூறுங்கள், அதை விசுவாசியுங்கள்.

1736 இப்பொழுது, ஒரு வாலிப கிறிஸ்தவனாக, நான் எப்பொழுதுமே இந்தக் கூற்றை சொல்லுவதுண்டு. சபை என்னைப் பிடிப்பதற்கு முன் கர்த்தர் என்னைப் பிடித்துக்கொண்டதற்காக நான் மகிழ்ச்சியடைந்தேன். நான் என்னவாக இருந்து வருகிறேன் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் நான்—நான் அந்த வழிநடத்தும்தன்மையைக் குறித்தும், நான் அதற்கு சரணடைவதற்கு முன்பே, என் ஜீவியத்தோடு ஈர்க்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் நேரடியான தொடர்பிற்காகவும் மகிழ்ச்சியாயிருந்தேன். ஏனென்றால், நான் ஒரு சிறு பிள்ளையாயிருக்கையில், ஏதோ ஒன்று இருந்தது என்பதை நான் அறிந்திருந்தேன். அவர் பேசியிருந்தார், நான் அவரோடு பேசுவேன். அவர் மீண்டும் என்னிடத்தில் பேசினார். ஒரு சிறு பிள்ளையாயிருந்தபோது, அவர் என்னிடத்தில் சொல்லியிருந்த காரியங்களை நான் கவனிக்கத் துவங்கினேன், அது சம்பவிக்கும் என்று அவர் கூறின விதமாகவே அவைகள் சம்பவிக்கத் துவங்கின. எனவே அது உண்மையாயிருக்க வேண்டியதாயிருந்தது என்பதை நான் அறிந்துகொண்டேன்.

1837 இப்பொழுது, நான் இப்பொழுது ஒரு வயோதிக மனிதனாய் இருக்கிறேன். என்னிடத்தில்—என்னிடத்தில் ஒருபோதும் ஒருமுறையாவது…முழு உலகத்தாரையும் அழைத்து, அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். “அவர் எப்போதாவது என்னிடத்தில் கர்த்தருடைய நாமத்தில், கர்த்தர் உரைக்கிறதாவது என்று என்னிடத்தில் கூறிய கோடிக்கணக்கான காரியங்களில் ஒரு காரியமாவது முற்றிலும் உண்மையாயும் சத்தியமாயும் நிறைவேறவில்லை என்று உங்களுடைய விரலை சுட்டிக் காட்ட முடியுமா என்று கேளுங்கள்.” என்ன செய்கிறது… 38 நான் எதற்காக கூறிக் கொண்டிருக்கிறேன்? பாருங்கள், நாம் யாவரும் எரிமலை சாம்பலை போல இருக்கிறோம் என்றே நான் கூறியுள்ளேன். ஆனால் இது தேவனுடைய வார்த்தையின் வாக்குத்தத்தமாயுள்ளது. ஆகையால் நான் என்னிலேயே நம்பிக்கை வைக்க முடியாது. நீங்களும் உங்களிலேயே நம்பிக்கை வைக்க முடியாது. ஆனால் நாம் ஒன்று சேர்ந்து நம்மை ஆட்கொண்டுள்ளதில் நம்பிக்கை வைக்க முடியும். பரிசுத்தாவியானவர் நம்மை ஆட்கொண்டிருக்கிறார். நாம் அதில் நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் நம்முடைய நம்பிக்கையை அதில் வைக்கும்போது, அப்பொழுது பலன்கள் உண்டாகின்றன.

1939 பரிசுத்த ஆவியானவர் என்னுடைய நொறுங்குண்ட ஜீவியத்தில், என்னுடைய நாட்களில் செய்துள்ள காரியங்கள் சிலவற்றை உங்களுக்கு சொல்வது பூமியின் மேற்பரப்பை நான் சுரண்ட முயற்சிப்பது போன்ற காரணமாய் இருக்கும். அவருடைய வேதாகமம் திறந்திருப்பதோடு, அவருடைய வார்த்தையோடு நான் இதைக் கூறுகிறேன். அந்த விதமாகத்தான் அவர் இருக்கிறார். அவர் வார்த்தையாய் இருக்கிறார். 40 பாருங்கள், இந்த—இந்த வித்தானது இங்கே எரிமலை சாம்பலுக்குள், ஆவிக்குரிய வழியில் வருகிறது. தேவன் ஆவியாக வந்து சாம்பலினூடாக கிரியை செய்கிறார். ஆகவே, அது மனிதன் அல்ல, அது தேவனாயுள்ளது. 41 நான் அமர்ந்து, நான் கண்டுள்ள அவர் செய்கிற காரியங்களை எழுத நேரம் எடுத்துக்கொண்டால், அது புத்தகங்களின் அநேக தொகுதிகளாகும். இங்கே, அதைக் குறித்து சிந்திக்கும்போது, ஐம்பத்தி மூன்று வயதான என்னாலே, தேவனுக்கு முன்பாக, அவர் சபைக்கு முன்பாக, வேதாகமத்துக்கு முன்பாக, இந்த கூட்டத்தாருக்கு முன்பாக, “அது தவறிப்போனதை ஒருமுறை கூட நான் கண்டதில்லை; ஒவ்வொரு முறையும், பரிபூரணமாக நிறைவேறியுள்ளது” என்று கூற முடியும்.

2042 விதிவிலக்காக, அன்றொரு நாள் நான் மேற்கு நோக்கி வந்தபோதே. உங்களில் அநேகர், நீங்கள் அந்த ஒலிநாடாவைப் போட்டு கேட்டிருக்கிறீர்கள் என்றும், அதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்றும், நான் யூகிக்கிறேன். எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. நான் காத்துகொண்டிருக்கிறேன். நான் இங்கே இப்பொழுது இருக்கிறேன். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் காத்துக் கொண்டிருக்கிறேன். 43 இது ஒருவேளை நான் என் பரலோக வீட்டுக்கு போவதற்கான நேரமாய் இருக்கலாம். அது அந்த விதமாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அது அப்படியாக இருந்தால், எனக்கு பிறகு வேறு ஒருவர் எழும்பி, இந்த செய்தியைக் கொண்டு போவார். அவர் வினோதமான நபராய் இருப்பார், ஆனால் இதற்கு பிறகு எழும்பி, செய்தியைக் கொண்டு செல்வார். நீங்கள் அதற்கு செவிகொடுங்கள். அது வேதவசனமாய் இருக்கும் வரையில், அதனோடே தரித்திருங்கள். 44 அது அப்படி இல்லையென்றால், இப்பொழுது வேறு ஒரு பகுதி வருகிறது, ஏனெனில் நாம் கடைசி நாட்களில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன், இந்த நாளில் நான் ஜீவித்துள்ளதற்கு நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். இந்த நாளை வேறெந்த நாளுக்காகவும் நான் பரிமாற்றம் பண்ணமாட்டேன். இதுவே பூமியில் எப்போதும் இருந்து வந்ததிலேயே மிகவும் மகிமையான நாளாயுள்ளது. வேறெந்த நாளும் இந்த நாளின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளவே முடியாது. 45 ஓ, மோசே, எலியா, பவுல், சீலா, கடந்துபோன நாட்களில் இருந்த, அந்த மகத்தான விசுவாச வீரர்கள் எழும்பி, ஒரு சரித்திர புத்தகத்தை எடுத்து, அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்திருந்ததைக் குறித்தும், அது நிறைவேறியதையும், நாம் இப்பொழுது எங்கே இருக்கிறோம் என்பதையும் சரியாக நோக்கிப் பார்க்க முடிந்தால் என்னவாகும்? ஏன், ஒரு மணி நேரத்துக்குள், இவர்கள் அவர்களை சிறைச்சாலையில் போட்டுவிடுவார்கள். நிச்சயமாக. அவர்கள் காட்டுவாசிகளைப்போல், மேலும் கீழுமாக வீதிகளில், அவர்களால் செல்ல முடிந்தளவு கடினமாக சென்று, சுவிசேஷத்தை முழக்கமிடுவர். “வேளையோ சமீபமாயிருக்கிறது.” ஆகையால் நாம் தேவமகிமையற்றவர்களாய் வீழ்ந்துபோயிருக்கிறோம் என்பதை இன்றிரவு, நாம் காண்கிறோம்.

2146 ஆனால் நான் சபையை ஒரு விதமாக புரிந்துகொள்ளச் செய்ய…திரும்ப திரும்ப உடனடியாக கூற விரும்புகிறேன். 47 பில்லி பால் ஜெப அட்டைகளை இந்த இரவில் இந்த சபைக்கு கொடுத்தானா? நான் சில நிமிடங்களுக்கு முன்புதான் டூசானிலிருந்து வந்தேன். [யாரோ ஒருவர், “ஆம்” என்று கூறுகிறார்.—ஆசி.] அவன்—அவன் ஜெப அட்டைகளைக் கொடுத்தான். இப்பொழுது, அவர்களை வரிசையில் கொண்டு வருவது, அது ஒரு சரியானவிதமாக இருக்கப்போகிறதில்லை. நாம் அதை முயற்சிப்போம். 48 இப்பொழுது, இந்த வேதவாக்கியத்தின் பேரில் சாட்சி கொடுக்க, நான் நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ளமாட்டேன். 49 அதாவது, கிறிஸ்து தம்முடைய எல்லா வார்த்தைகளையுமே காத்துக்கொள்கிறார். அவர் காத்துக்கொள்ள வேண்டும். அவர் அதைச் செய்ய வேண்டியவராயிருக்கிறார். புரிகிறதா? நான் அதைச் செய்ய வேண்டியதில்லை; நான் அழிவுள்ள ஒருவன், தவறுகளுக்கு உட்பட்டவன். அவர் அழிவில்லாதவர், பிழையற்றவர். அவர் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டும். புரிகிறதா? ஆனால் நான் என் வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டியதில்லை. நீங்களும் உங்களுடைய வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆயினும் அவர் காத்துக்கொள்கிறார். ஓ, அவர்—அவர் அந்த வார்த்தைக்கு முற்றிலுமாக கட்டுப்பட்டிருக்கிறார் என்று அறியும்போது, அது உங்களிடத்தில் ஏதோ ஒன்றைச் செய்யவில்லையா?

2250 மேலும், அதாவது, இந்த வாரம், தீர்க்கதரிசிகளை மற்றும் கோத்திர பிதாக்களை, தேவன் ஒவ்வொரு முறையும் சபை விலகிபோனபோது, அவர் யாரையாவது ஒருவரை அனுப்பி, அவர்களை உலுக்கி வார்த்தையண்டை திரும்பவும் கொண்டு சென்று, சபையை சரியான ஒழுங்கில் வைப்பார் என்பதை நாம் எப்படி வேதத்தினூடாகப் பார்த்துள்ளோம். அது எப்பொழுதும் அந்த விதமாக இருந்து வந்துள்ளது. அது தேவனுடைய கொள்கையாக இருக்கிறது. அவர் அதைச் செய்யும்படியாய் மனிதரைத் தெரிந்துகொண்டார். 51 இப்பொழுது, சுவிசேஷத்தை பிரசங்கிக்க அவர் நட்சத்திரங்களை தெரிந்துகொண்டிருந்திருந்தால், அது நீண்ட காலத்திற்கு முன்பே செய்யப்பட்டிருந்திருக்கும். அவைகள் ஒருபோதும் அவருடைய சித்தத்திற்கு புறம்பாக செல்லாது. அவர் அந்த சூரியனை பிரசங்கிக்கத் தெரிந்துகொண்டிருந்தால், அல்லது அந்த காற்றுகளை பிரசங்கிக்க தெரிந்துகொண்டிருந்தால், அவைகள் ஒருபோதும் அவருடைய சித்தத்திற்கு மாறாக போயிருக்காது. புரிகிறதா? 52 ஆனால் நாமோ சுயாதீனமாக தெரிந்துகொள்ளும் அடிப்படையில் இருக்கிறோம். நாம் விரும்புகிறவிதமாகவே நாம் நடந்துகொள்ள முடியும். அந்தக் காரணத்தினால்தான் நாம் அவருக்கு அப்படிப்பட்ட ஒரு மனவேதனையாக இருந்து வருகிறோம். எப்பொழுதுமே இந்த விதமாக, நம்முடைய சொந்த வழிகளை உட்புகுத்த விரும்பி, அவருடைய வழிகளிலிருந்து விலகிச் செல்கிறோம். புரிகிறதா? 53 மனிதன் எப்பொழுதுமே தேவன் செய்துள்ளவற்றிற்காக இடைவிடாது புகழ்ந்துகொண்டிருக்கிறான் என்று, நான்—நான் முன்பே கூறியுள்ளேன். அவர் என்ன செய்வார் என்பதை அவன் எப்பொழுதுமே கூறிக்கொண்டிருக்கிறான். அதன்பின்னர், அதே சமயத்தில், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதில் கண்டும் காணாததுபோல இருந்துவிடுகிறான். புரிகிறதா?

2354 அநேகர் “ஓ, தேவன் சிவந்த சமுத்திரத்தைப் பிளந்தார். ஆம். தேவனுக்கு மகிமை! அது உண்மைதான்” என்று கூறுவார்கள். “ஆம், இயேசு மறுபடியும் வருகிறார். அல்லேலூயா! அது உண்மையே.” ஆனால், இன்றைக்கு அவரைக் குறித்து பேசுகிறீர்களா? “ஆ, அது மற்றொரு நாளுக்கானதாயிருந்தது.” புரிகிறதா? பார்த்தீர்களா? எப்பொழுதுமே அவர் என்ன செய்துள்ளார், என்ன செய்வார் என்று கூறி, அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைப் புறக்கணிக்கின்றனர். 55 இயேசுகிறிஸ்து பூமிக்கு வந்தபோது அவர் அதே நிலைமைகளைத்தான் கண்டறிந்தார். சரியாக. தேவன் என்ன செய்திருந்தார் என்பதை அவர் வாக்களித்திருந்தார். இதோ அவர் அவர்களுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார், அவர்கள் அவரை அறிந்திருக்கவில்லை. “அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.” அது உண்மை. 56 “ஆனால் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.” அதுவே அந்த மகிமையான பாகமாயிருந்தது.

2457 கொஞ்ச காலத்திற்கு முன்பு, கண்ட ஒரு தரிசனத்தைக் குறித்து, நான் உங்களிடம் பேச விரும்புகிறேன். எனக்குத் தெரியவில்லை, நான் இதைக் குறித்து எங்கோ ஒரு தனிப்பட்ட நபரிடத்தில் சொன்னது தவிர வேறு எங்கும் சொல்லாமலிருக்கலாம். ஆனால் எனக்கு பூமியின் மேல் இருந்தவர்களிலேயே, நான்—நான் இழந்துவிட்ட மகத்தான நபர்களில் ஒருவர் என்னுடைய தாய் ஆவார். 58 நான்—நான் என்னுடைய தாயாரை நேசிக்கிறேன். நாங்கள் மிகவும் ஏழையாய் சாப்பிட ஒன்றுமே இல்லாமலிருந்தபோது, அவள் மேஜையைவிட்டு எழுந்து சென்றதை நான் எப்படியாய் பார்த்திருக்கிறேன்! மேலும் அவள்…அப்பா அங்கே ஒரு கடையில் அல்லது ஏதோ ஒரு காரியத்தை சுத்தம் செய்து கொஞ்சம் அப்பத்தை கொண்டுவருவார். மேலும்—மேலும் அவர்கள் அதன் மீது காப்பி ஊற்றி, அதன்பின்னர் அதன் மேல் சர்க்கரையைப் போடுவர். பிள்ளைகளாகிய நாங்கள் எதையாவது சாப்பிடும்படி, தாயார் தான் பசியாயில்லாதது போல் நடிப்பார். ஒ, அதை என்னால்—என்னால் எப்பொழுதுமே மறக்கமுடியாது. பார்த்தீர்களா? மேலும் அனேக சமயங்களில் அவள் என்னை தூக்கி அவள் எனக்காக எவ்வளவோ காரியங்களைச் செய்தாள். ஆனால், உங்களுக்கு தெரியுமா, தேவன்—முழுவதும் அவ்வளவு இரக்கமுள்ளவராக இருக்கிறார். அவர் அவர்களை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்போது, அவர் எல்லா காரியங்களையும் புரிந்துகொள்கிறார். நான்—நான் அதற்காக அவரை நேசிக்கிறேன்.

2559 என்னுடைய ஜனங்களில் எவரும் மரிப்பதற்கு முன்பே, நான் அது சம்பவிப்பதை அதற்கு முன்பே, தரிசனத்தில் காண்கிறேன், அது எப்பொழுதும் அந்த விதமாக இருந்து வருகிறது. 60 நான் சுமார் பதினெட்டு பத்தொன்பது வயதுடையவனாக மாத்திரமே இருந்தபோது, நான் என் சகோதரனைக் குறித்து தரிசனத்தில் கண்டேன். அவன் மரிப்பதற்கு முன்பே நான் அவனை தரிசனத்தில் கண்டேன். நான் அப்பொழுது ஒரு கிறிஸ்தவனாக கூட இருக்கவில்லை, ஆனால் எனக்கு முன்பாக தரிசனம் தோன்றுவதை நான் கண்டேன், என் சகோதரன் மரிப்பதை நான் கண்டேன். என்னுடைய தந்தையார் என்னைவிட்டு சென்றதை நான் தரிசனத்தில் கண்டேன். 61 ஹாவர்ட், உங்களில் எத்தனை பேருக்கு ஹாவர்ட்டை நினைவிருக்கிறது. “ஹாவர்ட்,” அது சம்பவிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் கூறினது உங்களுக்கு நினைவிருக்கும், அப்பொழுது நான், “ஹாவர்ட், உன்னுடைய இடம் குறிக்கப்பட்டிருக்கிறதை நான் கண்டேன். நீ அடுத்ததாக இருக்கிறாய்” என்று கூறினேன். அப்பொழுது நான், “சகோதரனே, சரிப்படுத்திக்கொள், ஏனென்றால் நீயே அடுத்ததாக போகப் போகிறாய்” என்று கூறினேன். அவன் அதேவிதமாக மரித்துப்போனான். அதன்பின்பு, இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு…

2662 இப்பொழுது, இது அவபக்தியாக தென்படாது என்று நான் நம்புகிறேன், ஆனால் தேவனுடைய அக்கரையை காண்பிக்கிறது. தேவன் பெரிய காரியங்களில் அக்கறை கொண்டுள்ளது போலவே, சிறு காரியங்களிலும் எப்பொழுதுமே அக்கறை கொண்டுள்ளார். நான் இதை இந்த அருமையான சில பிரசங்கிமார்களின் நன்மைக்காகவே கூற விரும்புகிறேன். அது ஒருகால்…நான் அதில் என்னையும் சேர்த்தே கூறிக்கொள்கிறேன். 63 இப்பொழுது, நாம் ஒவ்வொருவரும் பில்லிகிரஹாமைப் போல இருக்க விரும்புவோம், ஆனால் நாம்…நாம் ஒவ்வொருவரும் ஓரல் ராபர்ட்ஸ் போல் இருக்க விரும்புவோம். ஆனால், நாம், நாம் ஒரு பில்லி கிரஹாமோ அல்லது ஓரல் ராபர்ட்ஸோ அல்ல. அவர் நம்மை வைத்துள்ள ஊழியக்களத்தில் நாம் தேவனுடைய ஊழியக்காரராக இருக்கிறோம். புரிகிறதா? அது எவ்வளவு சிறியதாயிருந்தாலும் அல்லது அது எவ்வளவு பெரிதாயயிருந்தாலும், அது நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அந்த இடத்தில் சரியாக செயல்படும்படிக்கு அது எப்பொழுதும் தேவனுடைய பார்வையில் ஒரே விதமாகவே இருக்கிறது. எப்பொழுதுமே, கர்த்தரைப் பின்பற்றுவது ஒரு மகத்தான காரியமாக இருக்கிறது.

2764 நான் தேவனுடைய சித்தமில்லாத ஐந்தாயிரம் பேரைக் கொண்ட சபையை உடையவனாயிருப்பதைக் காட்டிலும் தேவனுடைய சித்தத்தோடிருக்கிற ஐம்பது மக்களை ஆதாயப்படுத்துகிற… அதாவது அப்படிப்பட்ட சபையை உடையவனாயிருப்பதையே விரும்புவேன். நிச்சயமாக. தேவன் அவருடைய சித்தத்துக்குப் புறம்பாக ஐம்பது வருடங்களாய் உள்ள ஒரு மனிதனோடு செய்ய முடிந்ததைக் காட்டிலும் அவருடைய சித்தத்தில் இருக்கிற ஒரு மனிதனோடு ஒரு மணி நேரத்தில் அவரால் அதிகம் செய்ய முடியும். புரிகிறதா? அவனோ இருட்டில் துப்பாக்கி சுடுகிறவனைப்போல் தடுமாறித் தள்ளாடுகின்றான். ஆனால் ஒரு மனிதன் உண்மையாகவே தேவனின் சித்தத்தில் இருந்து, அவனுடைய அழைப்பை அறிந்நிருக்கும்போது, அவன் அங்கே தரித்து இருக்க வேண்டும். இப்பொழுது, தரிசனங்கள், தேவனாகிய கர்த்தர் ஆவிகளோடு எப்படியாய் கிரியை செய்கிறார். நான்…

2865 “பரிசுத்த ஆவியாகிய அவர் வரும்போது, நான் உங்களிடத்தில் கூறியிருக்கிற காரியங்களைக் குறித்த இந்த காரியங்களை அவர் வெளிப்படுத்துவார்.” இப்பொழுது, இதை வேறு வழியில் கண்டுபிடிக்க முயற்சிக்கத் தேவையில்லை. அவரே ஆக்கியோன். அவர் என்ன எழுதினார் என்பதை அவர் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். புரிகிறதா? அவரே அதை எழுதினார் என்று வேதம் உரைந்துள்ளது. “பண்டைய மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு வார்த்தையை எழுதினார்கள்.” பரிசுத்த ஆவியானவர் வார்த்தையின் ஆக்கியோனாக இருப்பாரானால், நிச்சயமாகவே நாமே வியாக்கியானிப்பதைவிட அதை எப்படி நன்றாக வியாக்கியானிக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவரே அதற்குரிய வியாக்கியானத்தை செய்யட்டும். அவர் அதை வியாக்கியானிக்கிற விதம் எப்படி என்பதை நீங்கள் அறிவீர்களா? இப்பொழுது, நீங்கள் ஒரு சுகமளிக்கும் ஆராதனைக்கு வருகிறீர்கள் என்றால், இந்த காரியங்களை தவறவிட வேண்டாம். பாருங்கள். இதைத் தவறவிடாதீர்கள். அவர் அதை எப்படி வியாக்கியானிக்கிறார்? இதை ரூபகாரப்படுத்துவதன் மூலமே, இதன் மூலமே, பாருங்கள், அதை அவ்வண்ணமாக நிரூபிக்கிறார்.

2966 அதைத்தான் இயேசு, “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே; அவைகளே நான் யாராயிருக்கிறேன் என்று கூறுகின்றன. அவைகளே என்னைக் குறித்துக் கூறுகின்றன. யார் கண்டணம் செய்ய முடியும்? என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?” என்றார். பாவம் என்பதே “அவிசுவாசமாயுள்ளது.” “என்னை குறித்து எழுதப்பட்ட கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. ஆனால் நான் அந்த கிரியைகளை செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசிக்க முடியாவிட்டாலும், அந்த கிரியைகளையாவது விசுவாசியுங்கள், ஏனெனில் வார்த்தை அதைக் குறித்து உரைத்தது.” புரிகிறதா? அது தினம்தோறும் நாம் உபயோகப்படுத்தும் பொது அறிவு. இப்பொழுது, தேவன், “தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.” வேதம் அதைக் கூறுகிறது என்பதை நாம் அறிவோம். அவைகள் அதைச் செய்கின்றன.

3067 இது இப்பொழுது சுமார், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தது. நான்…ஒருநாள் காலையில் நான் வீட்டுக்குள் நடந்துகொண்டிருந்து, பின்னர் ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். இப்பொழுது, இதில் தேவன் மிருகத்தையும் சேர்த்துக்கொள்வார் என்பது மிகவும் வினோதமாக தென்படுகிறது. அந்த பரலோக தரிசனத்தின் பேரில், எனக்கு உண்டாயிருந்த ஒரு சிறு எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து; ஒருவிலையேறப்பெற்ற சகோதரன் கூறினதுபோல, நான் இதைக் குறித்து உங்களிடத்தில் ஒருமுறை, அல்லது ஒரு கூட்டத்தில் சொன்னேன் என்று நான் நினைக்கிறேன். அவர் அன்றொரு நாள் எனக்கு ஒரு கடிதத்தை எழுதினார், மேலும் கூறியிருந்ததை…வர்த்தக புருஷர்களுடைய சத்தம் என்ற பத்திரிக்கை அதை பிரசுரித்தது. “அது…சகோதரன் பிரான்ஹாம், உங்களுடைய தரிசனம், உங்களுடைய எடுத்துக்கொள்ளப்படுதல் சரியானதாயிருந்தது. ஆனால், கவனியுங்கள், நீங்கள் சவாரி செய்த, உங்களுடைய குதிரை, வந்து தன்னுடைய தலையை உங்களுடைய தோள் மீது வைத்தது என்று நீங்கள் கூறும் வரை அது சரியானதாக இருந்தது” என்றார். அவர், “சகோதரர் பிரான்ஹாம், பரலோகத்தில் குதிரைகளே இல்லை. பரலோகம் மானிடர்களுக்காக உண்டாக்கப்பட்டதேயன்றி, குதிரைகளுக்காக அல்ல” என்றார். சரி, நான் நினைத்தேன்… 68 பாருங்கள், வழக்கமாக, நீங்கள் அந்த விதமான ஏதோ ஒன்றைக் காணும்போது, நீங்கள் ஒவ்வொரு காரியத்தையும் விளக்கிக் கூறவேண்டும், அப்பொழுது அவர்கள் ஏதோ ஒன்றை குற்றமாக எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். புரிகிறதா? உங்களால் எப்படியும் தேவனை விளக்கிக் கூற முடியாது. நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டும். 69 ஆனால் அது அவரைத் தேற்றலாம், நான், “சகோதரனே, நான் பரலோகத்திலிருந்தேன் என்று நான் ஒருபோதும் கூறவேயில்லை. தரிசனத்தில், நான் இயேசுவை காண வேண்டும் என்று கேட்டேன், அப்பொழுது அவர்கள் அவர் இன்னும் அப்பால் இருக்கிறார் என்று கூறினர். நான் பரதீசைப் போன்ற ஒரு இடத்தில் இருந்தேன். ஆனால், அதாவது இது உங்களுக்கு உதவலாம், வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் வேதம், ‘இயேசு பரலோகத்திலிருந்து ஒரு வெள்ளைக்குதிரை மீது சவாரி செய்துகொண்டு வந்தார் என்று உரைத்தது. பரலோகத்தின் முழு சேனையும் வெள்ளைக் குதிரைகளின் மேல் அவரைப் பின்தொடர்ந்தன.’ எனவே அது வானாதி வானங்களில் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

3170 தேவன் ஒவ்வொரு காரியத்திலும் அக்கறை கொண்டிருக்கிறார். அவர் நீங்கள் செய்கிற சிறிய காரியங்களிலும், அதாவது நீங்கள் செய்கிற பெரிய காரியங்களிலும் அக்கறை கொண்டிருக்கிறார். நீங்கள் உங்களுடைய சிறு மந்தையை எப்படி கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதில் அல்லது உங்களுடைய பெரிய மந்தையை கவனித்துக்கொள்கிற மற்ற நபரான உங்கள் மீதும் அக்கறை கொண்டிருக்கிறார். அவர் அக்கறை கொண்டிருக்கிறார். 71 கொஞ்ச காலத்திற்கு முன்னர் ஒரு புகழ்பெற்ற, என்னுடைய அருமையான சகோதரன், நாங்கள் ஒரு—ஒரு…ஒரு இடத்திலேயே மீன் பிடித்துக்கொண்டிருந்தோம். நான் கூட்டங்களை முடிந்துவிட்டு வந்து, இளைப்பாறிக் கொண்டிருந்தேன். நாங்கள் நத்தைகளைக் கொண்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தோம், நாங்கள் ஒரளவிற்கு மீன்களை பிடித்தோம். அன்று இரவில் நாங்கள் நீண்ட தூண்டில்களில் மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்தோம், மேலும் எங்களுக்கு தூண்டில் இரை தீர்ந்துபோனது. சாயங்கால வேளையிலே, நான் சில நீல நிற மீன்களைப் பிடிக்கச் சென்றேன், அவைகள் மிகச் சிறியவை. முடியவில்லையா…பெரிய மீன்களை நீங்கள் சாப்பிடலாம், ஆனால் இந்த சிறய மீன்கள் தூண்டில்களுக்கானவை. மேலும் நான் அந்த தூண்டிலை வீசி, அந்த தூண்டிலைப் போட்டு, அவைகளை பிடித்து, ஒரு வாளியில் போட்டுக்கொண்டிருந்தேன். 72 இந்த படகில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, ஏதோ ஒன்று எனக்கு தென்பட்டது. இந்தப் பையன் யேகோவா சாட்சிக்காரனாயிருந்து வந்தான், மேலும் அவனுடைய சகோதரன் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தான், எனவே இரண்டு பையன்களும் எங்களோடு இருந்தனர். நான் இந்த மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் யாவரும் இருக்கையில், ஏதோ ஒன்று எனக்கு தென்பட்டது. அப்பொழுது நான், “உங்களுக்கு தெரியுமா, ஒரு சிறிய மிருகத்தைப் போன்ற, ஏதோ ஒரு ஜீவனின் ஒரு உயிர்த்தெழுதல் சம்பவிக்கபோகிறது” என்று கூறினேன். பாருங்கள் ஒரு சிறு மிருகம்.

3273 இப்பொழுது, வார்த்தையின் முன்னுரைத்தலைக் குறித்து உங்களில் அநேகருக்கு நினைவிருக்கும், அதாவது, “மோட்டார் வாகனத்தினால் மோதப்பட்டிருந்த ஒரு சிறு பையன் மரித்த நிலையில் இருந்து மீண்டும் உயிர் பெறுவான்” என்று உரைக்கப்பட்டிருந்தது. இன்றிரவு என்னோடு இங்கு இருக்கும் சகோதரன் ஜேக் மூர், அது நடந்தபோது பின்லாந்தில் என்னோடு இருந்தார். பார்த்தீர்களா? இங்கு இருக்கும் அநேருக்கு நான் இதைக் குறித்து இங்கே சொன்னது நினைவிருக்கும், பாருங்கள், உங்களுடைய புத்தகத்தில் அதை எழுதிக்கொள்ளும்படி உங்களிடம் கூறினேன். கவனியுங்கள். 74 மேலும் சகோதரர் வுட் திரும்பி, சகோதரன் பாங்ஸ் வுட், அவருடைய பையன் ஒருவன் இளம்பிள்ளை வாதத்திலிருந்து, சுகம் பெற்றிருந்தான். அவர் திரும்பி தன்னுடைய சகோதரனிடம், “நீ கவனி. ஏதோ காரியம் சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது” என்றார். நீங்கள் பாருங்கள், நான் தொடர்ந்து மீனைப் பிடித்துக்கொண்டிருந்தேன். எனவே நாங்கள் மீன் பிடிதூண்டிலை மீன்களோடு எடுத்து வைத்தோம். அன்றிரவு நாங்கள் எதையும் பிடிக்க்கவில்லை. 75 அடுத்த நாள் காலையில் நான், “அங்கே சில, வெகுசில, நீல நிற மீன்களே அங்கிருந்தன” என்றேன். 76 அப்பொழுது அவர், “நீங்கள் ஏதோவொரு விதமான ஜீவனின் உயிர்த்தெழுதல் சம்பவிக்கப்போகிறது என்று கூறவில்லையா?” என்று கூறினார். அப்பொழுது நான், “ஆம்” என்றேன்.

3377 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் வீட்டை விட்டு புறப்பட்டபோது, அவர்கள்…என்னுடைய சிறு பெண்…நாங்கள் ஒருவிதமான… நீங்கள் பூனைகளை விரும்பினால் ஜனங்களாகிய நீங்கள் அவைகளை வைத்துக்கொள்ளுங்கள், இப்பொழுது, பாருங்கள், ஆனால் நான் ஒரு பூனையை குறித்து பயமடைகிறேன். நீங்கள் உங்களை சுற்றிலும் பெற்றுள்ள மூட நம்பிக்கையான உணர்வுகளைப் போன்றவற்றை நான்—நான் விரும்புகிறதில்லை. ஆகையால் நாங்கள் அவைகளை வீட்டில் வைத்துக்கொள்வதில்லை, நான் பூனையைக் குறித்து பயம் அடைகிறேன் என்று அதனால் உணர முடியும். எனவே, என்னுடைய தகப்பனாரும் பூனைகளைக் குறித்து பயமடைந்தார். எனவே, என்னுடைய சிறிய பெண் பிள்ளைகளும் இங்கு எந்த பூனையும் வைத்திருக்கக் கூடாது என்பதை அறிந்திருந்தனர். மேலும் அந்த சிறிய… 78 என்னுடைய சிறிய பெண் மற்ற சிறு பெண்ணோடு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தாள், அப்பொழுது அவள் முகத்தில் முழு சோகத்துடன் திரும்பிவந்து, அவள், “அப்பா?” என்று கூப்பிட்டாள். அதற்கு நான், “தேனே, உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டேன். அப்பொழுது அவள், “ஒரு பயங்கரமான காரியம் நடந்துள்ளது” என்றாள். அதற்கு நான், “அது என்ன?” என்றேன். அப்பொழுது அவள், “நீங்கள் மாத்திரம் அதை அறிந்து கொண்டால்!” என்றாள். அதற்கு நான், “சரி, என்னிடம் சொல்லு” என்றேன். 79 அவளோ, “ஒரு பரிதாபமான வயோதிக பூனையை இங்கே தெருவிலே யாரோ வீசி எறிந்துள்ளனர்” என்றாள். மேலும், “அது கிட்டத்தட்ட நடக்க முடியாமல், மரிக்கும் நிலையில் உள்ளது” என்றாள். அவள் தொடர்ந்து, “அப்பா, நாங்கள் அதை போஷித்து, அதை பார்த்துக்கொண்டால், உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை உண்டா?” என்று கேட்டாள். 80 அப்பொழுது நான், “நிச்சயமாகவே இல்லை. நீங்கள் அதை போஷிக்க விரும்பினால், கவனமாக இருங்கள். அது உங்களை பீறிட அனுமதிக்க வேண்டாம்” என்று கூறினேன். மேலும் நான், “நான் அந்த பூனையைப் பார்க்கட்டும்” என்றேன். 81 அவர்கள் அந்த பூனையைக்கொண்டு வந்தபோது, மேலும், உண்மையாகவே, நான் அதற்கு ஒரு பெட்டியை ஆயத்தம் செய்து வைத்தேன், அடுத்த நாள் காலை நாங்கள் ஒரு கூட்ட பூனைக் குட்டிகளை உடையவர்களாயிருந்தோம்.

3482 அதன்பின்னர், எனவே, என்னுடைய குட்டிப்—குட்டிப் பையன், நான் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, குட்டி ஜோசப், அவன் அவைகளை பார்த்துக்கொண்டிருந்தான். ஓ, உங்களுக்குத் தெரியுமா, அவைகள் சுற்றி ஏறிக்கொண்டிருந்தன, உங்களுக்குத் தெரியுமா, அழகாய் இருந்தன என்று அவன் எண்ணினான். மேலும்—எனவே அவன் ஒன்றை தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டான்; அவன் அதை மிகவும் சற்று இறுக்கமாக பிடித்துவிட்டான், மேலும் அவன் அதை சிமெண்ட் தரையில் போட்டுவிட்டான். அந்த குட்டி பூனை இப்படியும் அப்படியுமாக சுற்றி, சுற்றித் திரும்பத் தொடங்கியது. நான், “என்னே” என்று நினைத்தேன். 83 நான், “சரி, இப்பொழுது, நான் வீடு திரும்பும்போது, அது நான் கண்ட அந்த சிறு பூனைக் குட்டியாக இருக்கலாம்” என்று எண்ணினேன். உங்களுக்கு அந்த ஆப்ஸம் என்ற பைக்கீரி விலங்கின் காரியம் நினைவிருக்கும். நான், “சரி, அது அந்த பூனைக்குட்டியாக இருக்கலாம்” என்று எண்ணினேன். அதன்பின்னர் நாங்கள் ஒரு சிறு வளைவிடத்தில் அமர்ந்து, மீன் பிடித்துக்கொண்டிருந்தோம், மேலும் நாங்கள் அப்பொழுது மிக நல்ல பெரிய அளவிலிருந்த நீல நிற மீன்களைப் பிடித்துக்கொண்டும், சிறிய மீன்களை வீசிக்கொண்டுமிருந்தோம்.

3584 சகோதரன் லையில், சகோதரன் பாங்க்ஸின் சகோதரன், ஒரு பெரிய தூண்டில் கயிற்றிலிருந்த, பெரிய தூண்டில் முள்ளில், ஒரு கூட்ட புழுக்கள் மாட்டப்பட்டிருந்த தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் அந்த சிறிய நீல நிற மீனை அதன் சிறு வயிற்றுக்குள் அந்த கொக்கியை விழுங்கவிட்டார். அதன்பின்னர் அவர் அதை மேலே இழுத்தபோது, அவர், “இப்பொழுது நீங்கள் அங்கே பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார். அது சுமார் அந்த அளவு நீளமுள்ளதாக இருந்தது. மேலும் அவர் அப்படியே…அவரால் அந்த தூண்டில் முள்ளை வெளியே எடுக்க முடியவில்லை என்று நான் நினைக்கிறேன். வேறு வழியில்லாமல்; அந்த கயிற்றை அவர் துண்டித்தார். மேலும் அவர் தன்னுடைய தூண்டில் முள்ளை பத்திரமாக வைத்துக்கொள்ள விரும்பினார். ஆகையால் அவர் அதிலிருந்து இழுத்தபோது, அதனுடைய வயிற்றிலிருந்து எல்லாமே அந்த விதமாக வெளியேவந்துவிட்டன, எனவே அவர் அதை தண்ணீரில் வீசி எறிந்துவிட்டார். அது—அது மூன்று அல்லது நான்கு முறை துடித்து, அங்கேயே கிடந்தது. அவர், “சிறு மீனே, நீ உன்னுடைய கடைசியான மூச்சை விட்டாய்” என்றார். 85 நான், “லையில், அது கடிக்க ஆரம்பிக்கும்போது…இதைக்காட்டிலும் சிறிய கொக்கியை உபயோகியுங்கள். அது கடிக்க தொடங்கும்போது, இங்கே கிடக்கிற இந்த தூண்டில் கோலை எடுத்து, அது கடித்தவுடனே அதை பிடித்துவிடுங்கள். புரிகிறதா? அது அதனை உள்ளே விழுங்குவதற்கு முன்பே, அதனுடைய வாயில் இருக்கும்போது பிடித்துவிடுங்கள்” என்றேன். நான், “அதுதான் அவைகளைப் பிடிக்கும் முறை” என்றேன். 86 “ஆ,” அவர், “நான் அதை தவறாக இழுத்துவிடுகிறேன்” என்று கூறி, அவர் மீண்டும் முயற்சித்தார். மேலும் அவர் ஒரு சில முறைகள் முயற்சித்து, கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு முறைகள் தவறவிட்டுவிட்டார். அதன் பின்னர் அவர் அதை கீழே வைத்துவிட்டு, நான், “அது அதை மீண்டும் விழுங்கும்படி செய்வேன்” என்றார்.

3687 எனவே இந்த சிறிய மீன் கிட்டத்தட்ட முப்பது நிமிடமாக, ஓ, அங்கே இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தது, என்று நான் நினைக்கிறேன். மேலும் அலைகள் எழும்பி, வரத் தொடங்கின. 88 நான், “பாருங்கள், நாம் சீக்கிரமாக இங்கிருந்து போக வேண்டும். இப்பொழுது நமக்கு ஒரு வாளி நிறைய மீன் இருக்கிறது, ஆகையால் நாம் இங்கிருந்து புறப்பட வேண்டும்” என்றேன். 89 அப்பொழுது நான் எழுந்து, அதை சில லில்லி இதழ்களில் வீசி, அதை ஆட்டிவிட்டு இழுத்தேன். அங்கே சிகப்பு நிறம்கொண்ட வயிறுள்ள மீன்கள் சில இருந்தன. ஆகவே நான் அந்த தூண்டிலை அந்த இதழ்களிலிருந்து இழுக்கத் துவங்கினேன், உங்களுக்குத் தெரியுமா, அந்த இதழின் மேலே புரட்டி, அதை அதிலிருந்து இழுத்தேன், நீங்களும் ஸ்திரீகளும் மீன்பிடித்தலைக் குறித்து அறிந்திருக்கிறீர்கள். 90 நான் அதைச் செய்யத் துவங்கினபோது, திடீரென்று, ஒரு காற்று வீசுவதை போன்று, மலைகளினூடாக ஏதோ ஒன்று வந்தது. அது என் மீது சென்றது. நான் அந்த தூண்டிலை கீழே போட்டுவிட்டு, படகில் எழுந்து நின்றேன். மேலும் நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அப்பொழுது ஒரு சத்தம், “அந்த சிறு மீனைப் பார்த்தாயா?” என்று கூறுகிறதைக் கேட்டேன். அந்த மீன் அங்கேயே கிடந்தது. 91 நான், “நீர் அந்த சிறிய மீனை பார்த்தீரா?” என்று கேட்டேன். அவர் அதைக் கூறியது போன்றே. அங்கே அதனுடைய சிறு துடுப்புகள் விறைத்துப்போய்விட்ட நிலையில், அது அரை மணி நேரமாய் அந்த தண்ணீரில் கிடந்தது. இந்த வேதாகமம் இப்பொழுது திறந்து வைக்கப்பட்டுள்ளது. புரிகிறதா? அப்பொழுது அவர், “அதனிடத்தில் பேசி, அதனுடைய ஜீவனை அதற்குத் திரும்பத் தா” என்று கூறினார். 92 அப்பொழுது நான், “சிறு மீனே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், நான் உன்னுடைய ஜீவனை திரும்பக் கொடுக்கிறேன்” என்றேன். 93 அந்த மனிதர்கள் நின்று, கவனித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சிறு மீன் திரும்பி, தண்ணீரினூடாக நீந்திச் சென்றது. அவர்கள மயக்கமுறுவது போலாகிவிட்டனர். லைல் தன்னுடைய முகத்தை தண்ணீரில் கழுவினார். அப்பொழுது அவர், “நான் கொஞ்ச நேரத்தில் விழித்தெழுவேன்” என்று கூறினார், அவர், “நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன் என்பதை நான்—நான் அறிவேன்” என்றார். அதற்கு நான், “நீர் கனவு கண்டு கொண்டிருக்கவில்லை” என்று கூறினேன். 94 சரியாக அதே சமயத்தில், என்னிடத்தில், ஜெப பட்டியலில், வலிப்பு நோய்க்குள்ளான பிள்ளைகள் முப்பது அல்லது நாற்பது பேர் இருந்தார்கள் என்று யூகிக்கிறேன். தேவன் எப்படி அந்த வலிப்பு நோய்க்குள்ளான பிள்ளைகளை விட்டுவிட்டு அந்த சிறு மீனை திரும்பவும் ஜீவனுக்கும் கொண்டு வந்தார். அவர் ஒவ்வொரு காரியத்திலும் அக்கறைக்கொண்டிருக்கிறார் என்பதையே அது காண்பிக்கிறது.

3795 ஆயிரக்கணக்கான குஷ்டரோகிகள் தேசத்தில் இருந்தபோது, அவர் ஏன் தன்னுடைய வல்லமையை அந்த அத்தி மரத்தை சபிக்க உபயோகப்படுத்தினார்? அவர் அந்த குஷ்டரோகிகளைக் கடந்து சென்று, ஒரு அத்தி மரத்தின்மேல் சாபத்தைப் போட்டார், “எந்த மனிதனும் உன்னிடத்தில் புசிப்பதில்லை,” என்று கூறினார், அப்பொழுது அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று. அவர் மரங்களில் அக்கறை கொண்டிருக்கிறார் என்று காண்பிப்பதற்காக அவர் தம்முடைய வல்லமையை உபயோகித்தார். அவர் மீனின் மீது அக்கறைகொண்டிருக்கிறார். 96 அவர் உங்களில் அக்கறைக்கொண்டிருக்கிறார். அவர் என்னில் அக்கறைக்கொண்டிருக்கிறார். அவருடைய வார்த்தை வெளிப்படுவதைக் காண அவர் அக்கறைக்கொண்டிருக்கிறார், அவர் அதைச் செய்வதற்கு நம் பேரில் சார்ந்திருக்கிறார், ஏனென்றால் நாம் அவருடைய பிரதிநிதிகள். நம்மில் ஒன்றுமேயில்லை. அது அவராயுள்ளது; நம்மையே அவருக்கு ஒப்புக்கொடுத்து அவரோடு நடப்போம்.

3897 அந்தக் காலை ஒரு தரிசனம் கண்டேன். ஒரு பெரிய மிருகம் ஒரு மலையின் பக்கத்தில் படுத்திருப்பதை நான் கண்டேன். ஓ, அது மிகப்பெரிய கொம்புகளை உடையதாயிருந்தது. நான் இந்த தரிசனத்தில் வேட்டைப் பயணத்தில் இருந்தேன், அப்பொழுது நேரம் பத்து அல்லது பதினொரு மணி இருக்கும். நான் நழுவிச் சென்று அந்த மிருகத்தைச் சுட்டேன். 98 அதன் பிறகு திரும்ப போய்க் கொண்டிருந்தபோது, ஒரு மிகப் பெரிய, பழுப்பு நிற கரடி எனக்கு எதிராக எழும்பி வந்தது, அப்பொழுது நான் அதைச் சுட்டேன். 99 அதன்பின்னர் அந்த கொம்புகளை அவர்கள் எடுத்துக்கொண்டு போவதையும், ஒரு சிறு கரம், அந்த கொம்புகளைப் பற்றிப் பிடித்து, அதன் மேல் அளவு நாடாவைக்கொண்டு அளப்பதையும் கண்டேன். அது கொம்பின் அடிபாகத்திலிருந்து கொம்பின் நுனி வரை, அது நாற்பத்திரண்டு அங்குலம், நாற்பத்திரண்டு அங்குலங்கள் என்று அளவிடப்பட்டது. நான் அதைப் போன்று எந்த மிருகத்தையுமே கண்டதே இல்லை, அதன் கொம்புகள் மிகப் பெரியதாய் கூர்மையாக இருந்தன. மேலும், அதேசமயத்தில், அது ஒரு மானைப் போல் காணப்பட்டது, ஆனால் அது, ஓ, என்னே, அது எப்படியும் இரண்டு அல்லது மூன்று மான் அளவு இருக்கும். நான் அதைப் போன்ற எதையுமே ஒருபோதும் கண்டதேயில்லை. 100 “சரி,” நான், “என்றோ ஒரு நாளில் அநேகமாக இது நடக்கும். நான் அதை எழுதி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறிக்கொண்டேன்.

39101 நான் என்னுடைய நண்பர் ஒருவரோடு கென்டக்கிக்குச் சென்றிருந்தேன், அப்பொழுது சகோதரன் மைனர் ஆர்கன்பிரைட் என்னை தொலைபேசியில் அழைத்து, “சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் அலுவலாக இருக்கிறீர்களா?” என்று கேட்டார். 102 அப்பொழுது, “அந்த அளவுக்கு அலுவலாக இல்லை” என்றேன். மேலும் நான், “நான் என்னுடைய…எனக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. நான் ஒரு சிறு விடுமுறை ஓய்வில் இருக்கிறேன்” என்று கூறினேன். 103 வழியில், “கனடாவுக்கும், அங்கு இருக்கும் அலாஸ்க்காவிற்கு என்னோடு வாருங்கள். நாங்கள் அங்கு ஆன்கரேஜ் என்னுமிடத்திலும் மற்றும் பேர் பாங்க்ஸிலும் கிறிஸ்தவ வர்த்தக புருஷருடைய குழு ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்த நாங்கள் விரும்புகிறோம்” என்றார். அப்பொழுது நான், “நன்றாகத்தான் தோன்றுகிறது, அதைச் செய்வதற்கு எனக்கு நேரம் கிடைத்தால் நலமாயிருக்கும்” என்றேன். 104 அதற்கு அவர், “சரி, சகோதரன் பிரன்ஹாம், நீர் அதைச் செய்வீரானால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், நாங்கள் உம்மை ஒரு நல்ல பெரிய பழுப்பு நிற கரடி வேட்டைக்கு கூட்டிச் செல்வோம்” என்றார். 105 அப்பொழுது, “ஓ, அது நன்றாக இருக்கிறது,” என்று எண்ணினேன். மேலும் நான், “ஓ, ஒ, அதைக் குறித்த ஒரு தரிசனம் உண்டு. பாருங்கள், அதுதான் இது” என்று எண்ணினேன்.

40106 நான், “ஒரு அருமையான பெரிய பழுப்பு நிற கரடி வேட்டை,” என்றும், “இது நன்றாக இருக்கிறது. நான் அதற்காக செல்கிறதில்லை. ஆனால், நாங்கள் அங்கு இருக்கும்போது, வழிகாட்டிகளில் சிலர் என்னை இலவசமாக கூட்டிக்கொண்டு போக விரும்பினர், எனவே நான் சந்தோஷத்துடன் செல்வேன்” என்றேன். எனவே, அவர், “சரி, அவர்கள்—அவர்கள் அதைச் செய்வார்கள். நாங்கள் அதை ஆயத்தப்படுத்திவிட்டோம்” என்றார். அப்பொழுது நான், “சரி, இப்பொழுது பொறுங்கள். நான் இதன் பேரில் ஜெபிக்கட்டும்” என்றேன். 107 நான் அந்த நாளில் காடுகளுக்குள் சென்று, ஒவ்வொரு முறையும் நான் ஜெபித்தேன், அப்பொழுது நான் முழுமையாக அந்த தரிசனத்திலிருந்து தூரமாயிருப்பதை உணர்ந்தேன். அப்பொழுது நான், “அது வினோதமாக இருக்கிறதே” என்று நினைத்தேன். அதன்பின்னர் இரண்டு நாட்கள் கழித்து, நான் சகோதரன் ஆர்கன்பிரைட்டை தொலைபேசியில் அழைத்தேன். அப்பொழுது நான், “வரவில்லை” என்று கூறினேன். 108 அவர், “சகோதரன் பிரான்ஹாம், நாங்கள் எல்லாவற்றையும் இப்பொழுது ஒழுங்குபடுத்த ஆரம்பித்துவிட்டோம்” என்று கூறினார். 109 நான், “அதைச் செய்யாதீர்கள். பரிசுத்த ஆவியானவர் அதைக் கண்டித்திருக்கிறார்” என்றேன். மேலும் நான் அவரிடம் அந்த தரிசனத்தைக் கூறினேன். நான், “சகோதரர் ஆர்கன்பிரைட், எனக்குத்—எனக்குத் தெரியவில்லை, ஆனால் இது வினோதமாய் இருக்கிறது. ஆனால் நான் அங்கே போக அவர் அனுமதிக்கமாட்டார், மேலும், அதேசமயத்தில், அது அந்த—அந்த இடமாகத்தான் இருக்கும் என்று தென்படுகிறது” என்றேன். மேலும் அவர், “இப்பொழுது, நாம் எல்லோருமே போவதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார். மேலும் நான் கூறினேன்… 110 இப்பொழுது, உங்களில் அநேகர் சகோதரன் ஆர்கன்பிரைட்டை காண்பீர்கள். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு வெளிநாடுகளுக்கு செல்ல, என்னோடு ஆயத்தப்படுவதற்கு இப்பொழுது இங்கே வந்துகொண்டிருக்கிறார். ஆகையால் இந்த சம்பவத்தை நீங்கள் அவரிடம் கேட்கலாம். எனவே நாங்கள் கூறினோம்… நான், “இல்லை. என்னால் அதைச் செய்ய முடியாது. பரிசுத்த ஆவியானவர் என்னிடம் வேண்டாம் என்று சொல்கிறார்” என்றேன்.

41111 எவ்வளவுதான், அது காண்பதற்கு நன்றாகத் காணப்பட்டாலும் அது ஒரு பொருட்டல்ல, கீழ்படிவதே சிறந்தது. கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு அதைப் போன்ற ஒரு காரியத்தின் பேரில் நான் பிரசங்கப்போகிறேன். எனவே இப்பொழுது, நினைவிருக்கட்டும், அது எவ்வளவு நன்றாக காணப்பட்டாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம், தேவன் அதில் இல்லையென்றால், அதிலிருந்து விலகியிருங்கள். எவ்வளவாக அது கவர்ச்சியாக இருந்தாலும் பொருட்படுத்த வேண்டாம், அதிலிருந்து விலகியிருங்கள். எவ்வளவு செழிப்பாக இருந்தாலும், தேவன் அதில் இல்லையென்றால், அதிலிருந்து விலகியிருங்கள். அதிலிருந்து விலகியிருங்கள். இப்பொழுது கர்த்தருக்கு சித்தமானால், நாளை இரவு அதன் பேரில் நாம் பேசப்போகிறோம். 112 இப்பொழுது, அதன் பின்னர் நான் வீட்டுக்கு சென்றபோது, பில்லி என்னிடத்தில் கூறினான் என்னுடைய மகன், அவன், “அப்பா, நீங்கள் கடந்த வசந்த காலத்தில் அங்கே வேட்டைக்கு சௌத்விக் என்ற பெயர்கொண்ட வேட்டைக்காரனுடன் சென்றது உங்களுக்குத் நினைவிருக்கிறதா?” என்றான். 113 “ஓ,” நான், “மேலே…உள்ள…அங்கே யூக்கான் என்ற இடத்திற்கு கீழா?” என்று கேட்டேன். அதற்கு அவன், “ஆம்” என்றான். அப்பொழுது, “அவர் உங்களுக்காக இங்கே ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்” என்றான். 114 அவர் சகோதரன் எடி பிஸ்கல், அவர் வடமேற்கு தேசத்தில் உள்ள ஊழியர் சங்கத்தின் தலைவனாயிருக்கிறார், மிக அருமையான ஒரு வாலிபன், ஒரு வேளை இந்த கூட்டத்தில் இங்கு இருக்கலாம். அவர் இந்த நேரத்தில் இந்த ஒரு வழியாக வருவதாக திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார். அருமையான வாலிபன், அவருக்கு ஒரு அருமையான குடும்பம் உண்டு. அவர்—அவர் இப்பொழுது கீரீஸ், கீரீ இந்தியர்களிடம் ஊழியம் செய்துகொண்டு இருக்கிறார். நான் கடந்த இலையுதிர் காலத்தில் அவரோடு இருந்தேன். அதன்பின்னர்…இல்லை, சரியாக கூறினால் கடந்த கோடையில்.

42115 அப்பொழுது அவர், எடி, கிறிஸ்துவினிடத்தில் மனமாற்றம் அடைந்த அவருடையவர்களில் ஒருவரான, பட் என்பவரிடம் என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். அவருடைய மனைவி ஒரு தீவிரமான பெந்தெகொஸ்தேயாவார். பட் ஒரு பண்ணையாளர், அவர் சமீபத்தில் இங்கு வந்தார். ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்ததோ, அவர்கள் அங்கே இந்தியர்களை துரத்திவிட்டு, வேட்டைக்காக ஒரு பெரிய எல்லைப் பகுதியை, தனி இடமாக ஒதுக்கிக்கொண்டனர். ஏறக்குறைய ஆறு…ஓ, அங்கே சுற்றிலும், அவர் கிட்டத்தட்ட முன்னூறு சதுர மைல்கள் அல்லது அதற்கு மேலாக பெற்றுக்கொண்டார் என்று நான் நினைக்கிறேன், கனடா அரசாங்கத்தால் அவருக்கு ஒரு பெரிய எல்லைப் பகுதி ஒதுக்கப்பட்டது.

43116 சரி, அந்த வசந்த காலத்தில், நான் அங்கு இருந்தபோது, கூட்டம் முடிந்த பிறகு நாங்கள் கரடி வேட்டைக்குச் சென்றோம், ஆனால் நாங்கள்…அந்த மே மாதத்தில், உலர்ந்த சூடான காற்று உண்டாகி, அது எங்களை தடை செய்தது. நாங்கள் கிட்டத்தட்ட…அவர் ஒருபோதும் கூட்டங்களைப் பற்றி ஒன்றுமே கேள்விப்பட்டிருந்ததில்லை, மேலும் எடி கூட்டங்களைக் குறித்து அவரிடத்தில் அதிகமாக தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார். 117 மேலும் அவர், “தேவன் இன்றைக்கும் தன்னை வெளிப்படுத்தி, காரியங்கள் சம்பவிக்கிறதுக்கு முன்பே அவை வரப்போகின்றதை காண்பிக்கிறார் என்று இன்றைக்கு நீர் எனக்கு பொருட்படுத்திக் கூறுகிறீரா?” என்று கேட்டார். அதற்கு எடியோ, “அது முற்றிலும் சரியே” என்றார். 118 எனவே அவர் என்னிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவர், “உங்களுக்கு தெரியுமா, வலிப்பு வியாதியுடைய ஒரு சகோதரன் எனக்கு இருக்கிறான்” என்று கூறினார். “உங்களால் மாத்திரம் இந்த சகோதரனை கொண்டு செல்ல முடிந்தால் நலமாய் இருக்கும்!” என்றார். “நீர் எப்போதாவது அவனை அவருடைய கூட்டங்கள் ஒன்றுக்கு கொண்டு செல்ல முடிந்தால், நான் நினைக்கிறேன், அவன் சுகமடைந்து விடுவான் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறினார். நான் கூறினேன்…“அவனுக்கு அது அவனுடைய ஜீவியம் முழுவதும் இருந்து வருகிறது” என்று கூறினேன். நான், “ஒருவேளை அவ்வாறு நடக்கலாம்” என்று கூறினேன். 119 பாருங்கள், வருடத்தின் அந்த நேரத்தில், உங்களுக்கு தெரியுமா, அங்கே சீக்கிரம் இருண்டு போவதில்லை. சூரியன் அஸ்தமிக்கிறபோதோ, அஸ்தமிக்கையில்…ஓ, உங்களால் எந்த நேரத்திலும், நடு ஜாமத்திலும், ஒரு மணிக்கும், நீங்கள் நின்று செய்தித்தாளை, எந்த காரியத்தையும், நீங்கள் பாருங்கள், வாசிக்கலாம். மேலும் கிட்டத்தட்ட—கிட்டத்தட்ட மே மாதக் கடைசியில் சூரியன் அஸ்தமிக்கிறதில்லை. அது கிட்டத்தட்ட சற்று நேரம் மறைந்துவிட்டு, சுமார் பத்து நிமிடங்களில், மீண்டும் உதயமாகிறது. அதனால் எங்களுக்கு களைப்பு ஏற்படும்போதெல்லாம் நாங்கள் அப்படியே படுத்துவிடுவோம்.

44120 அதன்பின்னர் அங்கிருந்து வெளிவரும் சாலையில், நாங்கள் இந்தியர்களின் கூட்டத்தை சந்தித்தோம். மேலும், ஓ, நான் அவர்களின் அந்த வயதான தலைவனை அங்கே சந்தித்தேன். அவர்கள் அவரை அங்ககேயே தங்க அனுமதித்தனர், ஏனெனில் அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய பிள்ளைகள் மரிக்கும்போதும், அவர்களுடைய அன்பார்ந்தவர்கள் மரிக்கும்போதும், ஒரு பெரிய மரக்கட்டையில் அவர்களை அடக்கம் செய்கிறார்கள். ஒரு விதமான மார்க்கம். மேலும் அவர்கள் இவர்களை மரத்தில் தொங்க வைக்கிறார்கள், எனவே அவர்கள் அங்கேயே அந்த குடும்பத்தை தங்க அனுமதிக்கின்றனர். அருமையான வயோதிக நபர், தொண்ணூறு வயதைக் கடந்தவர், அவருடைய பையன்களின் ஒருவரைப் போல அவ்வளவு நன்றாக தன்னுடைய குதிரையின் மேல் அமர்ந்துகொண்டிருந்தார். 121 நாங்கள் அடுத்த நாள் அங்கு இருந்து புறப்பட்டோம். அப்பொழுது அவர், “இப்பொழுது கடந்து செல்ல எந்த வழியும் இல்லை. நீங்கள் மலைகளின் மேல் ஏறி இந்த வழியாக தான் செல்ல வேண்டும்” என்று கூறினார். ஒ, ஒரு பாதையை கடக்க, அது மற்றொரு நூறு மைலாயிருந்தது. எனவே, எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. அது மிகவும் கால தாமதமாக இருந்தது. நாங்கள் திரும்பிச் செல்லத் துவங்கினோம்.

45122 அப்படியாக நாங்கள் திரும்பச் செல்கின்றபோது, பட் சில இளம் குதிரைகளை வைத்திருந்தார், அவைகளில் சில சகதியான சேற்றில் இறங்கின. நான் அங்கே போய்க்கொண்டே, நானும் எடியும் பேசிகொண்டிருந்தோம். பட் முன்னே போகும் குதிரையை சேற்றிலிருந்து வெளியே கொண்டு வர முயற்சித்துக்கொண்டிருந்தார். நாங்கள் இருபத்தோரு முடிச்சிகளையுடைய கயிறுகளை வைத்திருந்தோம். நான் அந்த கயிற்றை அதன் மேலாக போட்டு அதை இழுத்தேன். நான் அவ்வாறு செய்தவுடனே, அப்பொழுது என்னுடைய சேனம்பூட்டிய குதிரையோ அந்த சேற்றில் இறங்கியது. இதோ நானும், அங்கே இறங்கிக்கொண்டிருந்தேன். என் மீது முழுவதுமாக சேறாயிற்று… அப்பொழுது ஒரு சில நிமிடங்களில், நான் என்னுடைய குதிரையின் மேல் உட்கார்ந்து, என்னுடைய ஆடைகளிலிருந்த சேற்றையெல்லாம் இந்த விதமாக துடைத்துவிட்டு, புறப்பட்டேன். 123 அப்பொழுது என் முன் இருக்கும், அந்த மலைப்பகுதியிலிருந்து ஒரு வாலிபன் வந்தான். நான் அவனை நோக்கிப் பார்த்தேன். நான் என்னுடைய சேனத்தில் பின்தள்ளி அமர்ந்து, என்னுடைய குதிரையை நிறுத்தினேன். அவன் ஒரு வலிப்பு நோயினால் கீழே விழுந்து, மேலும் கீழுமாய் புரண்டு, வாயில் இருந்து நுரைத் தள்ளி, அவன் மிகவும் அகந்தையாக எல்லாவற்றையும் கிழித்துக்கொண்டு இருந்தான். அதன்பின்னர் அவன் அமைதியானான். நான் கட்டுக் கதைகளில் கூறப்படுகிற தீயில் வாழும் பல்லியைப் போன்று கண்டேன். நான் அவனுடைய சட்டை நெருப்பில் எரிகிறதைக் கண்டேன்.

46124 எடி ஏறக்குறைய ஒரு நகர வட்டார பாதியளவு தூரத்தில் எனக்கு முன்பாக, மற்றொரு குதிரையை சேற்றிலிருந்து எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அந்த இளம் குதிரையானது தன் மேலிருந்த பொருட்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, சீறி மிரண்டு, பாதையைவிட்டு ஓடிவிட்டது. எனவே நான் அங்கே எடியிடம் ஓடினேன். நாங்கள் அந்த குதிரையை அமைதிப்படுத்தினோம். அப்பொழுது நான், “எடி, நான் பட்டுக்காக கர்த்தர் உரைக்கிறதாவதைப் பெற்றுக்கொண்டேன்” என்று கூறினேன். அவர், “சகோதரன் பிரான்ஹாம், என்ன சம்பவித்தது?” என்றார். நான், “ஒரு தரிசனம். நான் அவருடைய சகோதரனைக் கண்டேன்” என்றேன். அவர், “ஓ, அவரை அழைத்து வாருங்கள்” என்றார். 125 அப்பொழுது நான், “குதிரையை பிடித்துக்கொள்ளுங்கள். நான் என்னுடைய குதிரையை தூண்டுகோலால் குத்தி, முன்செல்லவிட்டு, இந்த குதிரைகளை சுற்றி ஓடவிட்டு, நான் அவைகளை அந்த குன்றிக்கு எதிரான பக்கவாட்டில் அவைகளைப் பிடிக்க முடியுமா என்று பார்ப்பேன்” என்றேன். 126 நான் குன்றின் வழியாக இந்த விதமாக என் குதி…குதிரையில் வந்தேன். அதை மேலே இழுத்துக் கொண்டு அங்கே சென்று அடைந்தேன். நான் என்னுடைய கரத்தை சேனத்தின் மேல் வைத்தேன். நான், “பட்?” என்று கூப்பிட்டேன். அதற்கு அவர், “சொல்லுங்கள், சகோதரன் பிரன்ஹாம்” என்றார். 127 நான், “உங்களிடத்தில் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். உங்களுடைய சகோதரன்…” என்று கூறி, மேலும் அவனைக் குறித்து விவரித்தேன். அப்பொழுது அவர், “சரிதான். யார் உங்களுக்கு கூறினது” என்று கேட்டார். அப்பொழுது நான், “யாருமில்லை. கர்த்தர் சற்று முன் அவனை எனக்குக் காண்பித்தார்” என்றேன். மேலும் நான், “நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரனாக விசுவாசிப்பீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவரோ, “நிச்சயமாக, சகோதரன் பிரான்ஹாம்” என்றார். 128 அப்பொழுது நான், “கீழே அனுப்பி,” பட்டணத்தை விட்டு சுமார்—சுமார் எண்ணூறு மைல்கள் தூரத்தில் இருக்கிறோம், “உங்களுடைய சகோதரனை இங்கு வரச் சொல்லுங்கள். அவன் முதல் தரம் வலிப்பினால் விழும்போது…” என்றேன். மேலும் நான், “அவனுக்கு இவைகள் இரண்டு வயதிலிருந்தே இருந்து வருகின்றன. நீங்கள் அதை நம்பாமல் இருக்கலாம், ஆனால் இது பரம்பரையாக உங்கள் குடும்பத்தில் இருக்கிறது. உங்களுடைய பாட்டனாருக்கு அவைகள் இருந்தன” என்றேன். அதற்கு அவர், “இப்பொழுது, அது உண்மை. அது சரியே” என்றார். 129 அப்பொழுது நான், “இப்பொழுது, இந்த பையனுக்கு இந்த வலிப்பு உண்டாகி விழும்போது, அவன் அணிந்துள்ள சட்டையைக் கழற்றி அதை நெருப்பிலே போட்டுவிட்டு, ‘இதை நான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், அவருடைய வார்த்தையின்படி செய்கிறேன்’ என்று சொல்லுங்கள். அதன் பிறகு அவன் அதை நம்பும் வரைக்கும், அவனுக்கு மற்றொரு முறை ஒருபோதும் வலிப்பே வராது” என்றேன். 130 அவர் அப்படியே தன்னுடைய கரங்களை உயர்த்தி சத்தமிடத் துவங்கினார். அதற்கு அவர், “நான் இது போன்று கூறப்பட்டதை ஒருபோதும் கண்டதில்லை, ஆனால் நீர் என்னுடைய சகோதரன் எப்படி காணப்படுவான் என்பதையும் நிச்சயமாகவே என்னிடத்தில் கூறி கூறிவிட்டீர், மேலும் என்னுடைய பாட்டனாரைக் குறித்த உண்மையையும் என்னிடம் கூறிவிட்டீர்” என்றார். அப்பொழுது நான், “அது சரியே,” என்றேன்.

47131 நாங்கள் அங்கிருந்து புறப்பட்டப் பிறகு, அவர் தன்னுடைய சகோதரனை அழைத்து வர அனுப்பினார். மேலும் அவர் அந்தக் காலையில் பாதையை வெட்டி சீர்படுத்த போய்க்கொண்டிருந்தார், அவர் சகோதரன் பேருந்தில் வரும்போது (மேலே வரும்போது, வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை அலஸ்க்கா நெடுஞ்சாலை வழியாக வருவார்), அவர் வருவதற்கு… 132 மேலும் பட்டினுடைய மனைவி, லைலா, ஒரு சிறிய உருவங்கொண்ட, ஒரு ஸ்திரீ, ஒரு குடும்பத்தின் துணிகளை ஒரு பெரிய நீளமான சோப்பினில் துவைத்தப் பிறகு தேய்ந்து போன சோப்பைப் போல பெரிதாக இருக்கிறாள். வெறுமனே ஒரு சிறிய…அவளுக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிற, ஒரு இனிமையான ஸ்தீரி. 133 மேலும் பட் தன்னுடைய குதிரைகளை ஆயத்தப்படுத்தப் போனார், ஏனெனில் அவர் பாதையை வெட்டி சீர்படுத்தப் போகிறார், அதனால் நாங்கள் அதில் அவருடைய வேட்டைக்காரர்களோடு திரும்பிச் செல்ல முடியும்.

48134 அவர் சென்றவுடனே, பாருங்கள், அவருடைய சகோதரன் அங்கே, இன்னும் அவருடைய நல்ல ஆடைகளை களையாமலிருக்கும்போதே, அவர் ஒரு வலிப்புக்குள்ளாகி விழுந்துவிட்டார். அமெரிக்கர்கள் இங்கு ஒரு நெடுஞ்சாலை கட்டிக்கொண்டிருந்தபோது, அங்கே இருந்த ஒரு பழைய இராணுவக் குடியிருப்பில், இவர்கள் தங்கியிருந்தார்கள். மேலும்…அங்கே ஒரு சூட்டடுப்பைப் போன்ற ஒரு பெரிய பழைய நெருப்பூட்டும் இடத்தினை சமைப்பதற்கு உபயோகபடுத்தினார்கள். அப்பொழுது அந்த பெண் லைலா…அவனுக்கு—அவனுக்கு வலிப்பு உண்டானபோது அவன் தாறுமாறாக செயல்பட்டான். விரைந்து ஓடினான். மேலும் அவள் இவனைக் குறித்து மரண பயமடைந்திருந்தாள், அவள் அங்கு இருந்து வெளியேறுவதற்கு, ஒரு ஜன்னலையோ, வேறு எதையோ அல்லது மற்றதையோ சரிப்படுத்த மனதாயிருந்தாள். ஆனால் அவள் வெளியே குதிக்கத் துவங்கினாள், அவனைக் குறித்து என்ன கூறப்பட்டிருந்தது என்பதை குறித்த அவள் எண்ணிப் பார்த்தாள். அவள் டாஸன் க்ரீக், கூட்டங்களில் ஒன்றில் இருந்திருந்ததாள். 135 அவள் அங்கே அவனிடம் விரைந்தோடிச் சென்று, இந்த பெரிய உருவங்கொண்ட நபரை பின்புறமாக இழுத்துப் பிடித்து, அழுதுகொண்டே, அந்த வெள்ளை நிற சட்டையிலிருந்து அந்த பொத்தான்களை கழற்றி, பின்பு அந்த அடுப்பு அருகே சென்று, “எங்களுக்கு சொல்லப்பட்டிருந்த கர்த்தருடைய வாக்கின்படி, நான் இதை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் செய்கிறேன்” என்று கூறினாள். அதிலிருந்து அவனுக்கு ஒரு முறை கூட அவ்வாறு வலிப்பு வந்ததில்லை. அதுவே இதற்கு தீர்வானது.

49136 நான் ஒரு இலவசமான வேட்டைக்கு வரும்படி, அவர் என்னை அழைத்திருந்தார். நான் எப்பொழுதுமே இலவசமான காரியங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை, நீங்கள் அறிவீர்கள். எனவே நான், “சரி…” என்று நினைத்தேன், “நான் செல்வேன். கர்த்தர் என்னைப் போக அனுமதிக்கிறாரா என்று நான் பார்ப்பேன்” என்று கூறினேன். நான் ஜெபித்தேன். ஜெபம் ஏறெடுக்கப்பட்டவுடனே, ஒவ்வொரு காரியமும் அதற்கு சாதகமாக அதனூடாகச் சென்றது. 137 நான் சகோதரன் பிரெட் சாத்மனைக் கூட்டிகொண்டு போனேன். அவர் இந்த கூட்டத்தில் எங்கோ இருக்கிறார். எங்கே இருக்கிறீர், பிரெட்? அதோ அங்கு இருக்கிறார். ஆம். அவர் எங்களுடைய சபையின் தர்மகர்த்தாக்களில் ஒருவர். இது நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்டது என்பது சகோதரன் பிரெட்டுக்குத் தெரியும். அது சரிதானே, சகோதரன் பிரெட்? மேலும், சகோதரன் சிம்ப்சன் என்று, நான் நினைக்கிறேன். அது சம்பவிப்பதற்கு முன்னமே கூறப்பட்டதை அறிந்திருக்கிற எத்தனை பேர் இந்த இரவு கட்டடத்தில் இருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அதோ இருக்கிறார்கள். என்ன சம்பவிக்கும் என்று சரியாக, சபைக்கு முன்னரே கூறப்பட்டது. பாருங்கள், இது தான் அந்த சமயம் என்று எனக்குத் தெரியவில்லை.

50138 ஆகவே நான் அந்த—அந்த அலாஸ்க்கா நெடுஞ்சாலைக்குச் சென்றேன், மேலும் போகும் வழியில் சகோதரன் பிரெட் கடமான் வேட்டைக்கு செல்வதற்கு அவருடைய சிநேகிதனுடைய இடத்தில் நின்றுவிட்டார். கடமானுக்காக மிகவும் தூரத்தில் செல்ல வேண்டியிருந்தது. எனவே நாங்கள் செம்மறியாடுகள் உள்ள தேசத்தில் இருந்தபடியால், அங்கே நாங்கள் அதற்காக போய்க்கொண்டிருந்தோம். எனவே நாங்கள்…நான் ஒரு—ஒரு துண்டு சுண்ண எழுது கோலை எடுத்து இல்லை தூசியைக்கொண்டு காரின் காற்றுத் தடுப்பு கண்ணாடியில் வரைந்தேன். அப்பொழுது நான், “இப்பொழுது, சகோதரர் பிரெட், இது தான் அதற்கு நேரமாய் இருக்குமானால், அது எப்படியாக இருக்கும் என்று நீங்கள் சரியாக நினைவுகூருவீர்கள்” என்றேன். மேலும் அவர் அதை நினைவுகூர்ந்தார். 139 நான் மேலே சென்றேன். அன்று இரவு நாங்கள் முகாமை வந்தடைந்தபோது, பட், “சகோதரன் பிரான்ஹாமே!” என்றார். உங்களுக்குத் தெரியுமா, அவர் என்னை அணைத்துக்கொண்டு, பிறகு மேலும் கீழுமாக குதித்து, அந்நியபாஷையில் பேசி, சத்தமிட்டார். அவர் கூறினார்…மேலும் அதாவது, ஒரு கரடு முரடான கால்நடைகளை மேய்ப்பவராகவும் கூட இருந்தார். அவர்—அவர் தேவனை துதித்துக்கொண்டிருந்தார். அவர், “சகோதரன் பிரான்ஹாமே, உமக்கு என்னவென்று தெரியுமா? அந்த நேரத்திலிருந்து என்னுடைய சகோதரனுக்கு ஒரு முறை கூட வலிப்பு உண்டாகவில்லை. அவன் பரிபூரணமாக இயல்பு நிலைக்குத் திரும்பி ஒரு வருட காலமாக சுகமாய் இருக்கிறான்” என்றார். 140 அப்பொழுது நான், “அவர் அதை விசுவாசிக்கும் வரை அது அந்த விதமாகவே இருக்கும்” என்றேன். மேலும் நான், “இப்பொழுது அவர் கிறிஸ்துவுக்கு அவருடைய ஜீவியத்தை அர்ப்பணித்து, அவருடைய எஞ்சியுள்ள நாட்களில் அவரை சேவிக்கும்படி அவருக்கு கூறுங்கள். ‘போ இனி பாவம் செய்ய வேண்டாம், இல்லையென்றால் அவன் மீது ஒரு மோசமான காரியம் வரும்’ என்றும் கூறினேன். புரிகிறதா?” நான், “இப்பொழுது அதைச் செய்யும்படி அவரிடம் சொல்லுங்கள்” என்றேன்.

51141 எனவே நான், “எனக்கு இன்னொரு தரிசனம் உண்டு” என்று கூறி, நான் அந்த தரிசனத்தை குறித்து அவரிடம் கூறினேன். நான், “இப்பொழுது, அப்பொழுது அங்கே அதில் என்னோடு சிறு உருவங்கொண்ட நபர்கள் சிலர் இருந்தனர். நாங்கள் ஒரு வேட்டை பயணத்திலிருந்தோம். அவர்கள் சிறு உருவங்கொண்ட மனிதர்களாக இருந்தனர். மேலும் அவர்களில் ஒருவர் ஒரு பச்சை நிற கட்டம்போட்ட சட்டை அணிந்திருந்தார்” என்றேன். 142 மேலும் அவர், “சரி” என்று கூறிவிட்டு, அவர், “சகோதரன் பிரான்ஹாம்” என்று கூறி, அவர், “என்னிடத்தில் பச்சை நிற கட்டம்போட்ட சட்டை இல்லை” என்றார். அவருடைய பையன் பிளைன், அவரும் பச்சை நிற கட்டம்போட்ட சட்டை வைத்திருக்கவில்லை என்று கூறினார். 143 எடி பிஸ்கல், அவர் நூற்றிபத்து பவுண்ட் எடையுள்ள, ஒரு சிறிய உடலமைப்பு உள்ளவர், அவர், “சகோதரன் பிரான்ஹாம், என்னிடத்திலும் அவ்விதமான ஒன்று இல்லை” என்றார். நான், “சரி” என்றேன். நான், “இப்பொழுது, அந்த மிருகம்…” என்றேன். அப்பொழுது அவர், “அது எந்த வகையான ஒரு மிருகமாயிருந்தது?” என்றார். அதற்கு நான், “அது காண்பதற்கு ஒரு மானைப் போன்று காணப்பட்டது” என்றேன். 144 அப்பொழுது அவரோ, “இங்கே மேலே மானே இல்லை. இது மிகவும் உயரமாக இருக்கிறது” என்றார். அவர், “அது ஒரு கலை மானாக இருந்திருக்கலாம்” என்று கூறினார். அதற்கு நான், “ஒரு கலைமானுக்கு இதைவிட அகலமான ஒரு நீண்ட கொம்பு இருக்கும்” என்றேன். அதற்கு, “அது உண்மைதான்” என்றார். அப்பொழுது நான், “இதற்கு கூர்முனைகள் இருந்தன” என்றேன். 145 அவர், “பாருங்கள், சகோதரன் பிரான்ஹாம்,” என்று கூறிவிட்டு, “நாம் ஒரு செம்மறியாடுகள் இருக்கும் தேசத்திற்கு போகப்போகிறோமேயன்றி, மான் இருக்கும் தேசத்திற்கு, அதாவது அதைப் போன்ற இடத்திற்கு அல்ல” என்றார். 146 நான், “சரி, ஒருவேளை அது வேறொரு வேட்டைப் பயணத்தில் இருக்கலாம். சகோதரர் ஆர்கன்பிரைட்… அது எங்காவது அலாஸ்காவில் இருந்திருக்கலாம்” என்று கூறினேன். நான், “ஏனெனில் அது ஒரு மிகப் பெரிய, பெரிய பழுப்புநிற கரடியாக இருந்தது” என்றேன். அதற்கு அவர், “அது எந்த விதமான ஒரு பழுப்பு நிறமாயிருந்தது?” என்றார். அப்பொழுது நான், “வெள்ளி-முனை கொண்டது” என்றேன். அது அவைகள் எல்லாவற்றையும்விட மிகவும் பிரசித்தி பெற்றது. 147 அவர், “நான் ஒரு வழிகாட்டி. நான் இங்கே இந்தக் காடுகளில் என் ஜீவியம் முழுவதும் இருந்திருக்கிறேன். நான் ஒருபோதும் ஒரு வெள்ளி-முனைக் கொண்ட கரடியைப் பார்த்ததேயில்லை” என்றேன். “மேலும், நான் வழக்கமாக உள்ள ஒரு பழுப்புநிற கரடியைப் பார்த்திருக்கிறேன். ஆனால்” என்று கூறிவிட்டு, “ஒரு வெள்ளி முனைக்கொண்ட கரடியை ஒருபோதும் பார்த்ததில்லை, என் ஜீவியத்தில் அப்படிப்பட்ட ஒன்றை ஒருபோதும் பார்த்ததில்லை” என்றார். 148 நான், “பாருங்கள், சில, எங்கோ ஒன்று இருக்கும், நான் அதை வேட்டையாடப்போகிறேன்” என்றேன். அவர், “அது உண்மை என்று நான் கூறுவேன்” என்றார். அவர், “நான் அதைக் கூறுவேன்” என்றார்.

52149 நாங்கள் மூன்று நாள் கழித்து புறப்பட்டோம். எங்கள் கூடாரத்தை, மரக் கட்டைகளின் மேலாகக் கட்டியிருந்தோம். 150 தேவனே எனக்கு உதவி செய்யும், அவைகள் அந்த விதமாகவே ஆயிரம் வருட அரசாட்சி வரை இருக்குமானால், நான் ஆயிரம் வருட அரசாட்சியில் அங்கு ஜீவிக்கட்டும். அந்த இயற்கையில் மூழ்கி இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஓ! அங்கே தேவனைக் காண முடியாத எவரும், குருடர், செவிடர், ஊமையரேயாவர். அந்த பெரிய, மிகப் பெரிய மலையின் மேலாக அவர் தம்மை பிரதிபலிப்பதை பார்ப்பதற்கு எப்படியாயுள்ளது! ஒ, என்னே, ஆழம் ஆழத்தை நோக்கிக் கூப்பிடுகிறது, அப்படியானால், அங்கு மேலே ஒரு மகிமையான நேரமாய் இருந்தது.

53151 ஆகவே நாங்கள் ஒரு மலையின் மேலாக ஏறினோம். அதன்மேல் போவதற்கு, அந்த விதமாக, நீங்கள் அதன் மேலாக நேராகவே நடந்து செல்ல வேண்டும். ஓ, அங்கு மரங்கள் இல்லை, எங்கு பார்த்தாலும் முழுவதும் வெறும் புதை சேற்று நிலங்களாக இருப்பதையே நீங்கள் காணலாம். நாங்கள் கிட்டத்தட்ட முப்பது அல்லது நாற்பது செம்மறி ஆடுகளின் தலைகளைப் பார்த்தோம். அவைகள் எங்கள் வேட்டைக்குரியவாறு பெரியதாக இல்லை. எல்லாம் சிறியதாக அரைபாகம், முக்கால் பாகம் அளவே இருந்தது. நானோ—நானோ இன்னும் தூரமாக சென்று, அங்கிருந்து ஒரு பெரியதான ஒன்றை எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்று இருந்தேன். ஆகவே நாங்கள்…நான் கீழே சென்றேன். 152 அடுத்த நாள் நாங்கள் அங்கே கடந்து சென்றோம், அப்பொழுது எடி பெரிய காலணிகளைப் போட்டுக் கொண்டு, அங்கே தாண்ட முயன்றபோது தண்ணீரில் விழுந்துவிட்டார். 153 மலையின் பக்கவாட்டில் மேல் நோக்கி சென்றபோது, பட் நின்று, “பில்லி, உங்களுடைய தூரதரிசினி கண்ணாடியை நான் எடுத்துக்கொள்ளட்டும்” என்றார். அப்பொழுது நான் அவரிடம் அந்த கண்ணாடியைக் கொடுத்தேன். 154 நாங்கள் கொஞ்சதூரம் நடப்போம், பிறகு கர்த்தரைக் குறித்துப் பேசி, சத்தமிட்டு, மலையின் பக்கபாட்டில் மேலும் கீழுமாக ஓடி, ஒரு மகிமையான நேரத்தை உடையவர்களாக இருப்போம். நீங்கள் சகோதரர்களோடு செல்வீர்களானால், அது போவதற்கு நல்ல ஒரு வேட்டை பயணமாயிருக்கும்.

54155 ஆகவே அவர் என்னுடைய கண்ணாடியை எடுத்துக்கொண்டார். அவர், “சகோதரன் பிரன்ஹாம், அதோ உள்ளது உங்களுடைய ஆட்டுக்கடா. அவைகளில் கிட்டத்தட்ட எட்டு சுமார் ஆறு மைல் தூரத்தில், அங்கே மற்றொரு மலை உச்சியில் இருக்கிறது. அவைகளைப் பாருங்கள். எல்லாம் ஒன்றுசேர்ந்து இருப்பதை காண்கிறீர்களா?” என்று கேட்டார். நான் அந்த கண்ணாடியை எடுத்துக்கொண்டேன். அப்பொழுது நான், “சரியாக, அவைகள் அங்கே இருக்கின்றதை, நான் பார்த்துக் கூறுவேன்” என்றேன். 156 அவர், “சரி, நாம் இப்பொழுது கீழே இறங்கி, விடியற்காலையில் மூன்று மணி அளவுக்கு புறப்படுவோம்” என்றார். மேலும், “நாம் அங்கே ஒன்பது அல்லது பத்து மணியளவில் இருக்க வேண்டும். அப்பொழுது வயதான ஆட்டுக்கடாகள் படுத்துக் கிடக்கும். அது தான் சரியான நேரம்” என்றும் கூறினார். நான், “அங்கே சுற்றி நடந்துகொண்டிருக்கிற மற்றவைகள் என்ன?” என்றேன். 157 அவர், “அது கலைமான்” என்றார். நான் கூறினேன்…எனவே ஆறு மைல் தூரத்தில் இருக்கும் என்பதை, நீர் அறிவீர், அவைகள் என்னவாயுள்ளன என்று கண்டறிந்து கூறுவது கடினம்.

55158 அதன்பின்னர், அங்கிருந்து, அறுநூறு மைல் தொலைவில், காகங்கள் பறந்துகொண்டிருந்த திசையில் ஒரு வழியோ அல்லது பாதையோ இல்லை. அப்படியே நீங்கள் வடக்கு கரையோரம் சென்று, அங்கிருந்து நீங்கள் கிட்டத்தட்ட எண்ணூறு மைல்கள் தூரம் சென்றால் வான்கூவர் செல்லலாம், அங்கு சிறிதளவு கூட மக்கள் குடியிருப்பு எதுவுமே இல்லை. மேலும் இந்த வழியாகப் போவோமென்றால் அடுத்த மக்கள் குடியிருப்பு அன்கரேஜ், அது சுமார் எழுநூறு அல்லது எண்ணூறு மைல் தொலைவில் உள்ளது. இந்த வழியாக திரும்பிப் போவோமென்றால், எல்லோ நைப் என்ற, ஒரு சிறிய பட்டணத்திற்கு நீங்கள் செல்வீர்கள், இந்த இடத்தில் கப்பல் வருடத்துக்கு ஒரு முறை எஸ்கிமோக்களுக்காக வருகிறது. அதற்கு, அடுத்து, நீங்கள் ரஷ்யாவிற்குச் செல்லலாம். ஆகவே, நீங்கள் அந்த இடத்தில் தனிமையாகவே இருக்க வேண்டும். நாம் தேவனுக்குக் கொடுக்கும் உபத்திரவங்களிலும் மற்றும் சோதனைகளிலுமிருந்து அங்கேதான் அவர் இளைப்பாறுவார். ஆகவே அவர் இளைப்பாறிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் பாருங்கள், நான் அவரிடம் சென்று பேச நான் விரும்புகிறேன், எனவே அது கப்பலில் இருந்தது போல்—அது கடைசி இரவு.

56159 ஆகவே நாங்கள் கீழே சென்று, மறுநாள் காலை நாங்கள் சீக்கிரமாகவே புறப்பட்டோம். அந்த குன்றின் உச்சிக்குப் போகும் வரை சுமார் எட்டு மணி அளவில் புதர் செடிகளினூடாக எல்லாவற்றையும் சுற்றி வந்தோம். மேலும் மேலே செல்லும் வழியில் வயதான ஒரு பெண்மானும், மற்றும் ஒரு நல்ல பருமான ஆண் மானும் மலைக்கு மேலாக ஏறிக்கொண்டிருந்தன. அது மலையின் மேல் ஏறிச் சென்றபோது, அதற்குப் பெரிய கொம்புகள் இருந்தன. மேலும் நான், “சரி, இதோ இந்த காட்டுப் பகுதியில், நான் பார்த்த முதல் மான் இதுவே, நான் இதற்கு முன்பு இவ்வளவு உயரத்தில் ஒருபோதும் இருந்ததில்லை” என்றேன். அவர், “ஆம். அது ஒரு கலைமான்” என்றார். 160 ஆகவே நாங்கள் அந்த மலைக்கு மேலாகச் சென்று பார்த்தோம். அந்த செம்மறியாடுகள் அங்கு இல்லை. ஆகையால் பட்டும் நானும் சுற்றி நடந்துகொண்டிருந்தோம். எடி வேறு வழியாக நழுவிச் செல்லத் துவங்கினார், பிளைன், அவருடைய பையன், வேட்டையாட சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான். 161 நாங்கள் அங்கே நடந்து சென்றோம், மேலும், ஓ, என்னே, “தேவனுக்கு மகிமை!” என்று அப்படியே சத்தமிட்டேன். நான் அங்கே கீழே நோக்கிப் பார்த்தேன், அங்கே கூர்மையான பெரிய பனி மலைகள் இருந்தன, அந்த பனிக்கு கீழாக மஞ்சள் நிற அடர்ந்த பாசை செடிகள் இருந்தன. அதற்குக் கீழாக பசுமை மாறாத, ஊசி இலை மர வகைகள் வளர்ந்திருந்தன. அதற்கு சற்று தூரத்தில் பார்க்கும்போது, சிகப்பு நிற புதர்கள் இருந்தன. அதற்கும் சற்று தூரத்தில், மஞ்சள் நிற காட்டு அரச மரம் இருந்தது. இவையெல்லாம் கீழே இருக்கும் ஏரியின் மேல் பிரதிபலிக்கின்றன. ஓ என்னே!

57162 பட்டும் நானும் ஒருவர் மேல் ஒருவர் கரங்களை போட்டுக்கொண்டு, அங்கே சுற்றி நடனமாடி, கூச்சலிட்டு சத்தமிட்டு தேவனை துதித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் கரங்களைப் போட்டவாறு அமர்ந்துகொண்டு தேவனைத் துதித்தோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாக இருந்தோம் என்றே, நான் யூகிக்கிறேன். 163 நான், “எடிக்கு என்ன நேர்ந்ததோ?” என்று கேட்டேன். நாங்கள் அவரை “டுயூட்” என்று அழைத்தோம். ஆகவே, நாங்கள் திரும்பிச் சென்றோம். நாங்கள் மலையின் குறுக்கே ஏற ஆரம்பித்தோம். அப்பொழுது நான், “அவரால் இங்கே தொலைந்துபோயிருக்க முடியாது” என்றேன். 164 மேலும், “இல்லை, பிளைன் அங்கே எங்கோ இருக்கிறான், அவன் ஒரு இந்தியன்” என்று கூறினான். 165 ஆகையால் நாங்கள் சுற்றும் முற்றும் நோக்கி பார்த்தோம். அப்பொழுது நான் அங்கே ஒரு புகைப்படக் கருவி கிடப்பதைக் கண்டேன். அப்பொழுது நான், “அது எடியினுடையதாயிருந்தது” என்றேன். நான் மலையின் கீழே பார்த்தேன். நான் இந்த வழியாகப் போனேன், அவர் மற்றொரு வழியாகச் சென்றார். 166 எடியோ, “ஷூ-ஷூ-ஷூ-ஷூ” என்று கூறிக்கொண்டே போய்க்கொண்டிருந்தார். அவர் அந்த சிறிய ஆண் கலைமானை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். அவர் அதை வேட்டையாடி எடுத்துக்கொண்டு போய், அவர் ஊழியம் செய்துகொண்டிருக்கின்ற அந்த இந்திய நண்பர்களை போஷிக்கப்போவதாக இருந்தார். ஆகவே அவர் அந்த கலைமானைச் சுட்டார். நாங்கள் அங்கு சென்று, அதை சுத்தப்படுத்தினோம்.

58167 திரும்பி வந்தபோது, அது கிட்டத்தட்ட ஒரு மணியாயிருந்தது. எங்களுடைய சேணம் பூட்டப்பட்ட குதிரைகள் மீண்டும், சுமார் அரை மைல் தொலைவில், அவைகள் நின்றுகொண்டிருந்தன. மேலும் நாங்களும் அங்கு நின்று கொண்டிருந்தோம். அப்பொழுது அவர், “சகோதரன் பிரான்ஹாம், நீர் நடக்க விரும்புகிறீரா?” என்று கேட்டார். அதற்கு, “நான் நிச்சயமாக விரும்புகிறேன்” என்றேன். 168 அவர், “நாம் இந்த மலையில் ஏறிப் பார்த்தால்… அந்த ஆட்டுக்கடாக்கள் ஒருவேளை வேறு ஒரு துளை வழியாக, இந்த வழியாகச் சென்றிருக்கக் கூடும். அவைகள் அப்படி சென்றிருக்கவில்லையென்றால், இந்த மற்றொரு வழியாக திரும்பி சென்றிருக்கலாம்” என்றேன். மேலும், “எடியும் மற்றவர்களும், இந்த குறுக்கு வழியில் இங்கே கீழே சென்று, உங்களுடைய குதிரையையும், என்னுடைய குதிரையையும் அழைத்துக்கொண்டு, அந்த கலைமானையும் எடுத்துக்கொண்டு கூடாரத்துக்கு திரும்பிச் செல்லட்டும். நாம் இங்கே இதனூடாக நடந்துசென்று அந்த இடத்தை அடைவோம். நாம் இன்றிரவு பத்து அல்லது பதினொரு மணி அளவில் அங்கு சென்றடைய வேண்டும்” என்றார். நான், “அருமை. நாம் அதைச் செய்வோம்” என்றேன்.

59169 எனவே, நாங்கள் அங்கு நின்று கொண்டிருந்தோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்காக, எங்களால் ஒரு டப்பா நிறைய சில மீன்களை சாப்பிட முடிந்தது. நாங்களும் இந்த சிறிய மீன்களை, புதற் செடியின் கீழே புதைத்து வைத்திருந்தோம். எங்களுடைய ரொட்டிகளை, நாங்கள் எங்களுடைய சட்டைப் பையில் வைத்திருந்தபடியால், அது வியர்வையினால், அது ஒரு பெரிய உருண்டையைப்போல் ஆகிவிட்டது. ஆனாலும் நீங்கள் பசியாயிருக்கும்போது, அது நன்றாகவே இருக்கும். பரவாயில்லை. ஆகவே, அங்கே நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். 170 மேலும் நான் சுற்றும் முற்றும் நோக்கி பார்த்துக்கொண்டிருந்தேன். நான் கண்ணாடியினூடாக நோக்கிப் பார்த்தேன். அப்பொழுது நான், “பட், இங்கே பாருங்கள். அங்கு இருக்கும் அது என்ன?” என்றேன். 171 சுமார் மூன்று மைல் தொலைவில், அங்கே அந்த கலைமான் படுத்திருந்தது. அது வினோதமான ஒன்றாக இருந்தது. அதற்கு படர்ந்த கொம்புகள் இல்லை; அதற்கு நீண்ட கூரிய கொம்புகள் இருந்தன. அப்பொழுது நான், “உங்களுக்கு நினைவிருக்கிறதா? இங்கே பாருங்கள். அதோ அந்த அழகான காட்சி, சரியாக அதே விதமாக உள்ளது. அந்த மிருகம், அதே விதமாக படுத்திருக்கிறது” என்றேன். மேலும் நான், “ஒரு காரியம் மாத்திரமே இந்த தரிசனத்துக்குத் தடையாக இருக்கிறது, அது பச்சை நிறக் கட்டம் போட்ட சட்டை அணிந்த ஒருவர்” என்றேன். அங்கே எடி ஒரு பச்சை நிறக் கட்டம் போட்ட சட்டையோடு நின்றார். அப்பொழுது நான், “உங்களிடம் அவ்விதமான ஒரு சட்டை இல்லை என்று நான் நினைத்தேன்” என்றேன்.

60172 அதற்கு அவர், “என்னுடைய மனைவி என்னுடைய பயணப் பையில் அதை வைத்திருக்க வேண்டும். நான் நேற்றைய தினம், தண்ணீரில் விழுந்தபோது, சட்டையை மாற்ற வேண்டியதாக இருந்தது” என்றார். அவர் தொடர்ந்து, “சகோதரன் பிரான்ஹாம், அவள் அதை அதில் வைத்திருந்தது எனக்குத் தெரியாது. நான் உங்களிடத்தில் தவறாக எதையோ கூறினதற்கு என்னை மன்னியுங்கள்” என்றார். அப்பொழுது நான், “மகனே, நீ அதைச் செய்ய வேண்டியதாக இருந்தது” என்றேன். 173 ஓ, பட் சத்தமிடத் தொடங்கினார். அவர், “நீங்கள் இங்கு நின்று, மூன்று மைல் தொலைவில் உள்ள அதை சுட முடியும். சகோதரன் பிரான்ஹாம், உங்களால் சுட முடியுமல்லவா?” என்றார். அப்பொழுது நான், “தரிசனத்தின்படி, நான் அதற்கு மிகவும் அருகில் இருந்தேன்” என்றேன். 174 அதற்கு அவர், “சகோதரன் பிரான்ஹாம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அங்கே எப்படிச் செல்லப்போகிறீர்கள்?” என்று கேட்டார். அப்பொழுது நான், “எனக்குத் தெரியாது, ஆனால் நான் அங்கு செல்லப்போகிறேன்” என்றேன். எனவே அவர், “நீங்கள் எப்படிப்போவீர்கள்?” என்று கேட்டார். அப்பொழுது நான், “இந்த அழகான இயற்கைக் காட்சியைச் சுற்றியே போகப்போகிறேன்” என்று கூறினேன். 175 அவரோ, “அது சரிவுறச்செய்கிற இடம்” என்றார். மேலும் நான்…“நீங்கள் அங்கே வழுக்கி விழுந்தால், ஒரு நொடியில் சுமார் ஆயிரக்கணக்கான டன்கள் பனி உங்கள் மீது இருக்கும்” என்றார். 176 மேலும் நான், “கர்த்தர் அதைப் பார்த்துக்கொள்வார். அந்த விதமாகத்தான் நான் தரிசனத்தில் சரியாக சுற்றிச் சென்றேன்” என்றேன். அவர், “சரி, நான் உங்களைப் பின் தொடரப்போகிறேன்” என்றார். இதோ அவர் வந்தார்.

61177 மேலும் இந்த வாலிபர்கள், “நீர் இந்த கலைமானை சுட்டுக் கொல்வதை நாங்கள் பார்க்கும் வரை நாங்கள் இப்பொழுது இங்கேயே தரித்திருப்போம்” என்றனர், மேலும் அவர்கள், “அதன்பின்னர் நாங்கள்—நாங்கள் போய், அந்த குதிரைகளை அழைத்துக்கொண்டு, உள்ளே போவோம். நாங்கள் உங்களை கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து மைல் தொலைவில், கிட்டத்தட்ட, ஓ, அந்த உச்சியின் கடைசியில் உள்ள இடத்தில் சந்திப்போம்” என்று கூறினர். அவர், “சரி” என்றார். 178 ஆகவே நானும் பட்டும், புறப்பட்டோம். சுமார் அரை மணி நேரத்தில், நாங்கள் அந்த இடத்திற்கு போக வழி வகுத்தோம். மேலும் நாங்கள் வரும் திசையைப் பார்த்தபடி அந்த கலைமான் அப்படியே அங்கே இருந்தது, எங்களையோ கவனிக்கவேயில்லை. அது தூங்கியிருந்திருக்க வேண்டும். ஒரு சிறிய குறுக்கு வழியில் ஏறி, அதற்குச் சரியாக ஒரு முப்பது கெஜ தூரத்தில் வந்தோம். அது அங்கேயே படுத்திருந்தது. இந்த, மிகப் பெரிய, பெரிய மிருகம் அங்கிருந்து எழுப்பியபோது, நான் அதைச் சுட்டேன்.

62179 நாங்கள் அங்கே உட்கார்ந்துகொண்டு, அதிலிருந்து அதை, அந்த விதமாக, சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, பட், “நீர் இந்த கொம்புகள் நாற்பத்தி இரண்டு அங்குலங்களாய் இருந்தன என்று கூறினீரல்லவா?” என்றார். அப்பொழுது நான், “அது முற்றிலும் உண்மையே” என்றேன். 180 அதற்கு அவர், “சகோதரன் பிரான்ஹாம், அவைகள் நூற்றிநாற்பத்தி இரண்டாய் இருக்க வேண்டும்,” மிகப் பெரிய தலையாய் உள்ளதே என்றார். அப்பொழுது நான், “இல்லை. அது சரியாக நாற்பத்தி இரண்டு அங்குலமாய் இருந்தது” என்றேன். மேலும், “நான் அங்கே ஒரு அளவு நாடாவை வைத்திருக்கிறேன்” என்றார். அப்பொழுது நான், “நீர் அதைக் குறித்து சந்தேகப்படுகிறீரா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “இல்லை, ஐயா” என்றார். 181 அவர், “ஆனால், ஒரு நிமிடம் பொறுங்கள், நீர் கீழே திரும்பி செல்வதற்கு முன்பு ஒரு பெரிய பழுப்பு நிற கரடியை வேட்டையாடி பெற்றுக்கொள்ளப் போவதாக இருந்தீரென்று என்னிடத்தில் சொல்லவில்லையா? பச்சை நிற சட்டை அணிந்துள்ள அந்த பையன் இருக்கும் அந்த இடத்திற்கு நீர் திரும்பி செல்வதற்கு முன்பு ஒரு வெள்ளி முனைகொண்ட கரடி ஒன்று இருக்கும் என்று கூறினீரா?” என்றார். அதற்கு நான், “அது உண்மைதான்” என்றேன். 182 அவர் அந்த மலைப்பகுதியில் கீழே பார்த்தார். பாருங்கள், அங்கே அந்த உயரத்துக்கு ஒன்றுமே இல்லை, ஒன்றுமே இல்லை. நீங்கள் எங்கு பார்த்தாலும், மைல்கள் கணக்கில் பாசைச் செடிகள், மலைகளின் பாசை செடிகள் சுருண்டு படர்ந்திருந்தன. எனவே அவர், “சகோதரன் பிரான்ஹாம், அது எங்கே இருக்கிறது?” என்று கேட்டார். 183 அப்பொழுது நான், “அவரால் எனக்கு ஒன்றை அருள முடியும். அவர் அவ்வண்ணமாய்க் கூறினார்” என்றேன். நான், “பட், நீங்கள் அதை சந்தேகிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவரோ, “இல்லை, ஐயா” என்றார். 184 பாருங்கள், நாங்கள் இந்த விதமாக, மலையின் கீழே இறங்கி வந்துகொண்டிருந்தோம். அவர் கொஞ்சம் நேரம் ஒரு துப்பாக்கியைச் சுமப்பார், நான் கொஞ்ச நேரம் அதன் தலையைச் சுமப்பேன், அப்படியே ஒருவருக்கொருவர் அதை மாற்றிக்கொண்டும் தூக்கிக்கொண்டும் வந்தோம். அப்படியே பக்கவாட்டில் நடக்க வேண்டும், இறங்கி வருகையில், அந்த பெரிய கொம்புகள் பாசையில் கிளறிக்கொண்டேயிருந்தது. நாங்கள் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்திற்குள் இருந்தோம். நாங்கள் நின்று சுற்றிப் பார்த்தோம். அவர், “அந்த கரடி வெளியே காணப்படுவது நலமாயிருக்கும், அது காணப்பட வேண்டுமல்லவா?” என்றார். நான், “உங்களை எது—உங்களை எது அதைக் குறித்து தொல்லைப்படுத்தியது?” என்று கேட்டேன். அதற்கு, “ஒன்றுமில்லை” என்றார்.

63185 நாங்கள் குறுக்கே வந்துகொண்டிருந்த ஒரு சிறிய பனிப்பாறை அருகே வரும் வரை நாங்கள் நடந்தே சென்றோம். நாங்கள் அங்கே அமர்ந்து சற்று நேரம் இளைப்பாறினோம். அப்பொழுது அவர், “சகோதரர் பிரான்ஹாம், அதைக் குறித்து சற்று யோசித்துப் பாருங்கள்,” என்றார், மேலும், “நாம் கிட்டத்தட்ட இன்னும் அங்கு செல்லவில்லை, ஓ, நாம் அந்த வாலிபர்களை சந்திக்க இன்னும் அரை மைல் தூரம் கூட இல்லை, மேலும் நீர் இங்கும் அங்கும் உள்ள தூரத்திற்கு இடையே ஒரு வெள்ளிமுனை கொண்ட கரடியை கொல்லப்போகிறீர்,” என்றார். 186 அப்பொழுது நான், “அது உண்மை. அது உண்மை” என்றேன். அவர் கூறினார்…நான், “பட், நீர் அதை சந்தேகித்துக்கொண்டிருக்கிறீர்” என்றேன்.

64187 அவர் எழுந்து என் கையை பிடித்துக்கொண்டார். அவர், “சகோதரன் பிரான்ஹாம், என் சகோதரனுக்கு அந்த நாளிருந்து இந்நாள் வரை வலிப்பு வந்ததேயில்லை” என்றார். அவர், “என்னுடைய சகோதரனை குறித்து உங்களிடத்தில் கூற முடிந்த அந்த தேவன், உங்களிடத்தில் பொய் சொல்ல மாட்டார்” என்றார். நான், “பட், அது அங்கே இருக்கும்” என்றேன். அவர், “அது எங்கிருந்து வரும்?” என்றார். 188 அப்பொழுது நான், “எனக்குத் தெரியாது, ஆனால்” என்றேன், நான், “பட், எனக்கு ஐம்பத்திரண்டு வயதாகிறது” என்றேன், (ஆகையால்), தொடர்ந்து நான், “நான் ஒரு குழந்தையாயிருந்தது முதற்கொண்டே தரிசனங்களை பார்த்திருக்கிறேன். மேலும் நான் இங்கே கொல்லப்பட்ட இந்த கலைமானைப் பார்த்தபோது, அதனுடைய கொம்புகள் நாற்பத்தி இரண்டு அங்குலமாக இருக்கிறதா என்று நீங்கள் பார்ப்பீர்கள். மேலும் அதன்பின்னர், அதே தரிசனத்தில், நான் இருந்த, அந்த வேட்டைக் கூட்டாளிகளின் இடத்திற்கு நான் திரும்பிச் செல்லும் என்னுடைய வழியில், நான் இந்த பழுப்பு நிற வெள்ளி முனை கொண்ட கரடியைக் கொன்றேன்” என்றேன். அப்பொழுது அவர், “சகோதரன் பிரான்ஹாம், என்னால் இருபது மைல் தூரம் வரை பார்க்க முடிகிறது” என்றார். 189 அவர், “தேவன் தரையிலிருந்து அதை வெளியே கொண்டு வரவேண்டும் அல்லது ஆகாயத்திலிருந்து, அல்லது வேறெங்கிருந்தாவது கொண்டுவர வேண்டும்” என்றார். நான், “நீர் கவலைப்படாதீர். அது அங்கு இருக்கும்” என்றேன்.

65190 நாங்கள் இன்னும் கிட்டத்தட்ட ஒரு நூறு கெஜ தூரத்திற்குச் சென்றோம். அவரும் கிட்டத்தட்ட மிகவும் களைத்துப்போயிருந்தார். இது எங்களுடைய வேட்டை வெற்றிப் பொருள், கிட்டத்தட்ட நூற்றைம்பது பவுண்ட் இருக்கும். ஆகவே, மலையிலிருந்து கீழே வந்துகொண்டிருந்தோம், அவர்—அவர் அதை கீழே வைத்தார். அவர், “வ்யூ! என்னால் இதற்குமேல் முடியவில்லை” என்றார். 191 நான், “ஆம்” என்றேன். நாங்கள் அப்பொழுது சுமார் அந்தளவு குட்டையான, ஒரு சிறிய அந்த ஊசி இலை மரவகைகள் கிட்டே வந்தோம். ஒருவகையான காடையைப் போன்ற பறவை மற்றும் பனிப்பகுதி காட்டுக் கோழிகள் இருந்தன, எனவே நான் அந்த விதமாக அதன் மேல் சில கற்களை வீசினேன். அப்பொழுது அவர், “நீர் இந்த பனிப்பகுதி காட்டுக் கோழிகளை எப்போதாவது சாப்பிட்டிருக்கிறீரா?” என்றார். அதற்கு நான், “இல்லை. நான் சாப்பிட்டதில்லை என்றே நினைக்கிறேன்” என்றேன். 192 அதற்கு அவர், “அவைகள் அருமையாயிருக்கும். அந்த காடை போன்ற அவைகள் நன்றாக இருக்கும்” என்றார். அவர், “சகோதரன் பிரான்ஹாமே?” என்று கூப்பிட்டார். தன்னுடைய பெரிய பழைய கருப்புத் தொப்பியைக் கழற்றி, தனக்கு காற்று வீசிக்கொண்டார். மேலும், “கிட்டத்தட்ட அந்த கரடி வெளியே வருவதற்கான நேரமாயிற்று, வாலிபனே, அப்படித்தானே?” என்றார். அதற்கு நான் கூறினேன், நான், “பட், நீர் அதை சந்தேகித்துக்கொண்டிருக்கிறீர்” என்றேன். 193 அப்பொழுது அவர், “இல்லை. நான் சந்தேகித்துக்கொண்டிருக்கவில்லை. ஆனால், சகோதரன் பிரான்ஹாம், என்னால்—என்னால்—என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார். 194 அப்பொழுது நான், “என்னாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அது நான் புரிந்து கொள்வதற்கானதல்ல. அது நான் விசுவாசிப்பதற்கானதாகும்” என்றேன். ஆமென். பரலோகத்தில் உள்ள தேவன் இந்த காரியங்கள் உண்மையா இருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறார். இது உண்மையாயில்லாதிருந்திருந்தால், நான் இன்று இதைக் கூறுவேனா?

66195 அதன்பின்னர் நான் துப்பாக்கியை அவரிடம் கொடுப்பதற்காகவும் மற்றும் அதன் தலையை எடுப்பதற்காகவும் நான் திரும்பினேன். மேலும் நான் திரும்பகையில், நான், “பட், நீர் அந்த கண்ணாடியை உம்முடைய கழுத்தில் மாட்டியிருக்கிறீர. அங்கே அந்த மலையின் ஒரமாக நிற்பது என்ன?” என்று கேட்டேன். 196 அவர் தூரதரிசினி கண்ணாடியை வைத்துப் பார்த்தார். அவர், “ஓ, எனக்கு உதவி செய்யுங்கள், அது வேறுயாரோ ஒருவருடைய பால் கொடுக்கும் பசுவாக இருக்குமானால்!” என்றார். தேசத்தில் அப்படிப்பட்ட ஒன்றேயில்லை. மேலும், “என்னுடைய ஜீவியத்தில் நான் கண்ட மிகப் பெரிய பழுப்பு நிற கரடி அதுவே. எனவே எனக்கு உதவி செய்யுங்கள், அந்த மஞ்சள் நிற சூரிய வெளிச்சம் அதன் மீது படுவதைப் பாருங்கள். அது ஒரு வெள்ளி முனை கொண்டதாயுள்ளது.” “அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று நீர் சொல்லுவீரா?” என்று கேட்டார். 197 அப்பொழுது நான், “அது சுமார் அங்கே இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது” என்றேன். நாங்கள் மிகவும் களைத்துப் போய்விட்டிருந்தோம். அவர் கூறினார்…நான், “நாம் எதற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்? நாம் போவோமே” என்றேன். அப்பொழுது அவர், “நீர் அதை நிச்சயமாக வேட்டையாடிவிடுவீரா?” என்று கேட்டார். அதற்கு நான், “நான் அதை நிச்சயமாகவே வேட்டையாடிவிடுவேன்” என்றேன். அவர், “நீர் அங்கே எந்த வகையான துப்பாக்கியை உபயோகப்படுத்தப்போகிறீர்?” என்று கேட்டார். 198 அதற்கு நான், “இப்பொழுது, அதைக் குறித்து கவலையேப்படாதீர்” என்றேன். (பல வருடங்களுக்கு முன்னர் ஒரு கூட்டத்தில் ஒரு சமயம் ஒரு சகோதரன் எனக்கு கொடுத்த ஒரு சிறிய துப்பாக்கி.) மேலும் நான்…(ஒரு சிறிய, மலிவான விலையில் உள்ள .270 என்ற வகை.) நான், “சரி. நான் வைத்திருக்கிறேன்…நான்…அதுவே இருக்கப் போகிறது” என்றேன்.

67199 நாங்கள் அதற்கு இன்னும் சற்று நெருக்கமாக சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் அதிகமாக நெருங்க, நெருங்க பார்த்ததை விட அந்த கரடி மிகப் பெரியதாக இருந்தது. ஓ, உங்களுக்குத் தெரியுமா, அது அங்கே பார்ப்பதற்கு ஒரு மிகப் பெரிய வைக்கோல் கட்டுகள் அடுக்கப்பட்ட உயரத்தில் அந்த பாசை செடியின்மேல் உட்கார்ந்துகொண்டிருந்தது. மிகப் பெரிய, பெரிய, மிக மிக பெரிதாக, தலை அந்த விதமாக அகன்றதாக இருக்க, உங்களுக்குத் தெரியுமா, தாடைகள் வெளியே தொங்கிக் கொண்டிருக்க, மிகப் பெரிய பாதங்கள். மேலும் அது ஒரு வகையான நீல நிற பெர்ரி பழ மரத்தின் கிளைகளை, உங்களுக்குத் தெரியுமா, அந்த விதமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தது. மேலும் மிகப் பெரிய உருவங்கொண்டதாய், அமர்ந்திருந்தது! நாங்கள் கிட்டத்தட்ட, ஓ, அதற்கு எண்ணூறு கெஜ தூரத்தில் வந்துவிட்டிருந்தோம். 200 அவர், “ஹே, சகோதரன் பிரான்ஹாம், இதற்கு முன் நீ ஒரு பெரிய கரடியை சுட்டிருக்கிறீரா?” என்று கேட்டார். 201 நான், “பட், நான் அநேக கரடிகளை சுட்டிருக்கிறேன், ஆனால் நான் ஒருபோதும் வெள்ளி முனை ரோமமுள்ள உள்ள பழுப்பு நிறகரடியை சுட்டதில்லை” என்றேன். 202 அவர், “உங்களுக்குத் தெரியுமா, இருக்கிறதிலேயே வெள்ளி-முனை கொண்ட கரடிதான் எல்லாவற்றையும் விட அதிகமாக சண்டையிடும்” என்றார். அப்பொழுது நான், “ஆம், நான் அதை புரிந்துகொண்டேன்” என்றேன். அதற்கு அவர், “அதற்கு எப்படி மரிப்பது என்று தெரியாது” என்றார். அதற்கு நான், “அப்படியா?” என்றேன். 203 அவர், “வேண்டாம்…எவ்வளவு—எவ்வளவு—நீர் எவ்வளவு தூரம் …? அதைச் சுடுவதற்கு நீர் எவ்வளவு தூரம் நெருங்கிச் செல்ல வேண்டும்?” என்று கேட்டார்.

68204 இப்பொழுது, நீங்கள் அவரிடம் கேளுங்கள். அவருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். நான் உங்களுக்கு விலாசத்தைத் தருகிறேன். அவர், “எவரேனும் விருப்பப்பட்டால், அந்த காரியங்களில் எதுவாக இருந்தாலும், அதைக் குறித்து எனக்கு எழுதட்டும். நான் அவர்களுக்குச் சொல்லட்டும்” என்றார். ஆகையால் மேலும்… அப்பொழுது நான், “அப்படியா?” என்றேன். நான் கூறினேன்… அவர், “இந்தளவு தூரம் போதுமா?” என்றார். 205 நான், “இல்லை, இல்லை. பட், நான் இதைவிட நெருக்கமாக இருந்தேன். நான் அதற்கு மிக நெருக்கமாக இருந்தேன்” என்றேன். 206 அவர், “நாம் இப்பொழுது மிக நெருக்கத்தில் இருக்கிறோம். அது நம்மை எந்நேரத்திலும் தாக்கும்” என்றார். 207 அப்பொழுது நான், “அது எனக்குத் தெரியும். ஆனால்,” என்றேன். நான், “பட்” என்றேன். நான், “அது பரவாயில்லை” என்றேன். 208 அவர், “இப்பொழுது நீர் ஒரு கரடியை சுடும்போது” என்று கூறி, “இப்பொழுது, சகோதரன் பிரான்ஹாம், நீர் அதை முதுகில் சுட வேண்டும். நீர் அதன் முதுகினை உடைக்க வேண்டும், ஏனென்றால் அது தொடர்ந்து சண்டையிடும், அவ்வாறு முதுகில் சுட்டுவிட்டால், அப்பொழுது அதனால் எழும்ப முடியாது” என்றார். அப்பொழுது நான், “இல்லை, அந்த தரிசனத்தின்படி, நான் அதன் இருதயத்தில் சுடுகிறேன்” என்றேன். அதற்கு அவர், “அதன் பேரில் நீர் எந்தவித தவறையும் செய்யவில்லை என்று நான் நம்புகிறேன்” என்றார். 209 நான் கூறினேன்—நான், “நான் தவறு செய்யவில்லை” என்றேன். நான், “எனக்கு நினைவிருக்கிறது” என்றேன். ஏனெனில் ஒரு—ஒரு தரிசனத்தில், நான் அன்று இரவு அதை விளக்கினதுபோல, நீங்கள்—நீங்கள் ஒன்று, இரண்டு உணர்வுகளிலும் இருக்கிறீர்கள். நீங்கள் இரண்டு உணர்வுகளில் இருக்கிறீர்கள். உங்களால் அதை மறக்க முடியாது. புரிகிறதா? எனவே அங்குதான் உங்கள் காரியமே உள்ளது.

69210 ஆகவே நாங்கள் மேலே ஏறி சுமார்—சுமார் இருநூற்று ஐம்பது கெஜத்திற்கு வந்தோம். அதுவே நாங்கள் சென்ற கடைசி சிறு ஓடையாய் இருந்தது. மேலும் நான், “அது இப்பொழுது கிட்டத்தட்ட இவ்வளவு தூரம்தான். அதனைப் பாருங்கள். அது அழகாக இருக்கவில்லையா?” என்றேன். அவர், “ஆம், அவ்வளவு தூரத்தில் தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்றார். 211 மேலும்—மேலும் நான், “சரி, பட். இப்பொழுது நான் இங்கிருந்து எழும்பும்போது, அது வந்துகொண்டிருக்கிறது” என்றேன். நான், “நீங்கள் அதை கவனியுங்கள்” என்றேன். அதற்கு அவர், “நான் கவனித்துக் கொண்டிருப்பேன்” என்றார். 212 ஆகவே நான் ஒரு குண்டை துப்பாக்கியில் போட்டேன், உங்களுக்குத் தெரியுமா. நாங்கள் அந்த சிறிய ஓடையின் கீழே இருந்தோம். நான் எழும்பினபோது, இதோ அது வந்தது. என்னே, என்னே! நான் நின்று அதைச் சுட்டேன், அது ஒரு பொம்மைத் துப்பாக்கி சுடும் தோட்டா போன்ற தொனியில் அதைச் சுட்டது. அது ஒரு இம்மியளவு கூட அதைச் தடை செய்யவில்லை. என்னே, முன்பு… 213 நீங்கள் வேகத்தை குறித்து பேசுகிறீர்களே! நான் அதைப் போன்ற எதையுமே கண்டதில்லை. அது, உங்களுக்குத் தெரியுமா, ஒரு குதிரையை அல்லது ஒரு மானை அல்லது வேறு எதையாவது விட ஒரு கரடி, அவை வேகத்தில் அப்படி மிஞ்சிவிடும். அது அவ்வாறு மலையின் கீழாக நேராக எங்களை நோக்கி வந்தது. 214 மேலும் நான், இன்னொரு குண்டை துப்பாக்கியில் போடும் முன், அது விழுந்து மரித்துப்போயிற்று, சுமார், ஓ, என்னிடத்திலிருந்து முப்பது அல்லது நாற்பது கெஜம் தூரத்தில் கடைசியாக உருண்டு விழுந்தது; அதன் இருதயம், நுரையீரல், மற்ற எல்லாமே சேதமடைந்துவிட்டன. அது ஒரு நொஸ்லெர் குண்டு, அதை உபயோகிக்கும் உங்களுக்குத் தெரியும். ஆகவே அது—அது அதனை வெடிக்க செய்தது, அது விழுந்துபோயிற்று. 215 பட், அங்கே நின்று, அதைப் பார்த்தபோது, அவர் திகிலடைந்துபோய்விட்டிருந்தார். அப்பொழுது அவர், “சகோதரரன் பிரான்ஹாம், அது என் மடியில் விழ நான் விரும்பவில்லை” என்றார். அதற்கு நான், “நானும் அதை விரும்பவில்லை” என்றேன். 216 அவர், “வியூ” என்றார். மேலும், “வாலிபனே, இது எல்லாம் முடிந்த பிறகு, நான் உனக்கு சொல்ல விரும்பினேன். அது அந்த தரிசனங்களில் ஒன்றாய் இல்லாமல் இருந்திருந்தால், அது சம்பவத்திற்கு முன்பே நான் பார்த்திராவிட்டால், நான் உங்களோடு இந்த அளவு நெருங்கிய தூரத்தில் அந்த கரடியிடம் வந்திருக்கமாட்டேன்” என்றேன்.

70217 மேலும் எங்களில் ஒருவராலும் அதை நகற்றவே முடியவில்லை. அது ஆயிரம் பௌண்டுகளாயிருந்தது, அது மிகப் பெரிய, பெரிய உருவம் கொண்டதாய் இருந்தது என்று நான் நினைக்கிறேன். எங்களால் அதைச் சுத்தம்பண்ண முடியவில்லை, எங்களால்…தோலுரிக்க முடியவில்லை. நாங்கள் கீழே இறங்கத் தொடங்கினோம். மேலும் நாங்கள் கூறினோம்…“சகோதரன் பிரான்ஹாமே?” நாங்கள் அந்த கொம்புகளை தூக்கிக்கொண்டோம். அவர், “அந்த கொம்புகள் சரியாக நாற்பத்தி இரண்டு அங்குலம் இருக்குமானால்,” என்று கூறி, “நான் அதை சரியாக அளந்து பார்க்கப் போகிறேன்” என்றார். 218 நானோ, “அப்படியானால், நீங்கள் அதை இப்பொழுதே செய்வது மேலானதாகும், ஏனென்றால் அது அந்த அளவேதான்” என்றேன். 219 அவர், “நான் இதுபோன்ற ஒன்றை—ஒன்றை—ஒன்றை ஒருபோதும் கண்டதில்லை…இதுவோ நான் கனவு கண்டு கொண்டிருப்பது போன்று எனக்கு தென்படுகிறது” என்றார். 220 மேலும் நாங்கள் அங்கே கீழே இறங்கிச் சென்றபோது, நான் எடியிடம் கூறினேன், நான், “இப்பொழுது நீங்கள் கவனியுங்கள். பிளைன் தன்னுடைய கரங்களை வைப்பான்” என்றேன். 221 இப்பொழுது, அந்த கொம்பினை சுற்றியவாறு ஒரு சிறு கரம் இருந்தது என்பது, உங்களுக்கு நினைவிருக்கும். சகோதரன் பிரெட், அது எப்படி இருக்கும் என்று நான் உங்களுக்கு கூறினது நினைவிருக்கிறதா? மேலும் நான் எடியினிடத்தில் “நீங்கள் அதைக் கவனியுங்கள்” என்றேன். எனவே பட், “நீங்கள் பொறுங்கள்” என்றார். அவர் தன்னுடைய குதிரையை அங்கு கொண்டு வந்தார். 222 உங்களுக்குத் தெரியுமா, நாங்கள் எங்கள் மேல் கரடியின் வாசனையை உடையவர்களாயிருந்தோம், அந்தக் குதிரைகள் மிரணடு ஓடப் பார்த்தன. அவைகள் ஒரு பழுப்பு நிற கரடியை அல்லது எந்த விதமான ஒரு கரடியின் வாசனையை முகரும்போதும் அவைகள் எப்படி நடந்துகொள்ளும் என்று உங்களுக்குத் தெரியும். ஆகவே நான்—நான் சேனம் வைத்த குதிரையினிடம், அங்கு சென்று, அதைக் கட்டுப்படுத்த முயற்சித்தேன், அது அங்கேயிருந்து ஓட முயற்சித்தது.

71223 அவர் சென்று தன்னுடைய அளவு நாடாவைக் கொண்டு வந்தார், அங்கிருந்து குறுக்கே நடந்து வரும்போது அந்த விதமாக, என்னை பார்த்துக்கொண்டே வந்தார். “இங்கே வா, பிளைன்” என்றார். நான் எடியைத் தட்டினேன். இதை கீழிருந்து அளந்து பாருங்கள். எனவே எனக்கு உதவி செய்யுங்கள், மூக்கு வரை நாற்பத்திரெண்டு அங்குலங்கள்தான்! 224 இப்பொழுது, அந்த கொம்புகள் காய்ந்த பின்னர் சுமார் இரண்டு அங்குலங்கள் சுருங்கும். அந்த பெரிய பழுப்பு நிறக் கரடியின் தோல் என்னுடைய சிறு அறையில் இருக்கிறது, அந்த கொம்புகள் சுவற்றின்மேல் தொங்கிக்கொண்டிருக்கின்றன. தோற்பாவை கலைஞர்கள் அவைகளை பதப்படுத்தி, அவைகளை வடிவமைத்துக் கொடுத்தனர். சரியாக, நாற்பத்தி இரண்டு அங்குலங்கள் என்பதற்கு, அவைகளின் மேல் ஒரு அளவு நாடா தொங்கிக்கொண்டிருக்கிறது.

72225 இப்பொழுது, ஒரு வேட்டை பயணத்தைக் குறித்து, அதைப் போன்றதான ஒரு காரியத்தைக் குறித்து தேவன் எதற்கு ஒரு மனிதனிடம் சொல்லுவார்? 226 நான் திரும்பி வந்தபோது, என்னுடைய தாயார் சுகவீனமாக இருந்தார். நான் அவரைப் பார்க்கச் சென்றேன். அப்பொழுது அவள், “பில்லியா?” என்று கேட்டாள். பாருங்கள், அவர் என்னை ஊக்குவித்துக் கொண்டு, ஏதோ ஒரு காரியத்திற்காக என்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார். நான், “அம்மா, கர்த்தர் உங்களை எப்பொழுதுமே சுகப்படுத்தியிருக்கிறார்” என்றேன். அதற்கு அவள், “பில்லி, நான் அப்பாவைப் பார்க்க பரலோக வீட்டுக்கு சென்றுகொண்டிருக்கிறேன்” என்றாள். “ஓ,” நான், “அம்மா அந்த விதமாக பேசாதீர்கள்” என்றேன். அதற்கு, “ஆம், நான் போய்க்கொண்டிருக்கிறேன்” என்றாள். நான் அவளுக்காக ஜெபித்தேன். சகோதரன் பிரெட் மற்றும் இங்கே சாட்சியாய் அமர்ந்திருக்கிற எல்லோருக்குமே தெரியும். 227 அதன்பிறகு, அடுத்த காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் அவளை மருத்துவமனையில் வைத்தார்கள். மருத்துவரால் என்ன பிரச்சனை என்றே கூட கண்டுபிடிக்க முடியவில்லை. பாருங்கள், நான் அவளுக்காக ஜெபிக்கச் சென்றேன். அப்பொழுது அவள், “மகனே, நான் மரித்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள். இப்பொழுது, எப்படியிருந்தாலும், என்னுடைய தாய் ஒருவிதமான பலமுள்ள ஸ்திரீயாக இருந்தாள்.

73228 இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள், நான் அங்கு சென்றேன். அவள் அங்கே நின்றுகொண்டு, பரலோகத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள், “பில்லி, நான் உன்னைக் காண்கிறேன்” என்றாள். அப்பொழுது நான், “ஏன், நிச்சயமாகவே, அம்மா” என்றேன். “நானும் உங்களை இங்கே காண்கிறேன்” என்றேன். 229 அப்பொழுது அவள், “ஓ, பில், உனக்கு மிகவும் வயதாகிவிட்டது,” என்று கூறி, “உன்னுடைய வெள்ளை தலை முடியும் தாடியும் ஒன்றாக தொங்கிக்கொண்டிருக்கிறது. நீ சிலுவையை சுற்றி உன்னுடைய கரங்களை போட்டுக்கொண்டு என்னிடமாக நீட்டுகிறாய்” என்றாள். அப்பொழுது எனக்கு மரிப்பதைக் குறித்து திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது, அவ்வளவுதான். இப்பொழுது, இங்கு இருக்கும் சகோதரராகிய உங்களுக்கு அது உண்மை என்பது தெரியும். 230 அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையாய் இருந்தது. நான் பிரசிங்கித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் எனக்கு எழுதி அனுப்பின வார்த்தை, “உன்னுடைய…” அப்பொழுது நான், “அம்மா மரித்துக் கொண்டிருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய ஜனங்கள் மரிப்பதை, தேவன் எப்பொழுதுமே எனக்கு காண்பிக்கிறார். ஆனால், அம்மாவைக் குறித்து, அவரோ என்னிடத்தில் ஒன்றுமே காண்பிக்கவில்லை” என்றேன். இதோ உள்ளே எனக்கு ஒரு செய்தி வந்தது. அப்பொழுது நான் இந்த விதமாக என்னுடைய செய்தியை பாதி பிரசங்கித்துவிட்டவனாய் இருந்தேன். யாரோ ஒருவர் உள்ளே வந்து, “உங்களுடைய அம்மாவிடம் உடனடியாக செல்லுங்கள், செல்லுங்கள். அவளை தொலைபேசியில் அழையுங்கள். அவள் இந்த நிமிடமே, மரித்துக்கொண்டிருக்கிறாள்” என்றார். 231 அப்பொழுது நான், “மரணமே, அவளை தொடாது அப்படியே நில். தேவனுடைய வார்த்தை அதை விட முக்கியமானதாக இருக்கிறது” என்றேன்.

74232 இதோ இந்த மனிதன் இங்கே அமர்ந்திருக்கிறார், சகோதரன் பார்டர்ஸ். ஆராதனை முடிந்த பிறகே, நான் அம்மாவைக் காணச் சென்றேன். நான் அப்பொழுது சகோதரன் பார்டர்ஸ்ஸை சந்தித்தேன். அப்பொழுது அவர், “நீங்கள் ஆறு அடி உயரம் கூட இல்லை, ஆனால் நான் இந்த காலை பிரசங்கப் பீடத்தில் ஒரு பத்தடி உயரம் உள்ள மனிதனைப்போன்றிருப்பதைக் கண்டேன்” என்றார். அதற்கு நான், “சகோதரன் பார்டர்ஸ், அம்மாவுக்கான எல்லாவற்றையும் தேவன் பார்த்துக்கொள்வார்” என்றேன். 233 அதற்கு சில நாட்கள் கழித்து, அவர்கள் என்னை அந்த அறைக்கு அழைத்தார்கள், அப்பொழுது அவள் உண்மையாகவே மரித்துக்கொண்டிருந்தாள். பிள்ளைகள் ஒன்றுகூடி, படுக்கையைச் சுற்றி நின்றனர். அப்பொழுது நான், “அம்மா, நீங்கள் உண்மையாகவே மரித்துக் கொண்டிருக்கின்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “ஆம்” என்றாள். அதன்பிறகு அவளால் பேச முடியவில்லை. 234 நான் தொடர்ந்து அவளிடத்தில், “அம்மா, இயேசுவானவர் உங்களுக்கு என்னவாக பொருள்படுகிறார்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். நீண்ட நாட்களுக்கு முன், நான் அவளுக்கு தண்ணீரில், அவருடைய நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்ததை நினைவுகூருகிறேன். அப்பொழுது நான், “இப்பொழுது உங்களுக்கு அவர் என்னவாக பொருள்படுகிறார் என்று என்னிடத்தில் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அப்பொழுது அவள், “என் ஜீவனைக் பார்க்கிலும் மேலானவர்” என்றாள்.

75235 அப்பொழுது நான், “அம்மா, நீங்கள் மரித்துக்கொண்டிருந்தால், நான் உங்களுடைய பையன்,…ஒரு பிரசிங்கியார். தேவனை சந்திக்கச் சென்றுகொண்டிருக்கிற என்னுடைய சொந்த தாயினிடத்திலிருந்து, நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். அம்மா, உங்களுடைய கரத்தை இங்கே பற்றிப் பிடிக்க நான் விரும்புகிறேன்” என்றேன். “நான் உங்களை பற்றிப் பிடிக்க விரும்புகிறேன்” என்றேன். நான் தொடர்ந்து பிடித்துக் கொண்டிருந்தேன். 236 அவளால் பேச முடியவில்லை. அது காண்பதற்கு அவள் முடமாக்கப்பட்டிருந்ததுபோல் இருந்தாள், அவளுடைய முகமும் அவ்வாறிருந்து. அப்பொழுது நான், “அம்மா, உங்களால் பேச முடியவில்லையா?” என்று கேட்டேன். அவளால் பேச…முடியவில்லை. அப்பொழுது நான், “கவனியுங்கள், இன்னமும் இயேசு உங்களுக்கு அதே விதமாக இருக்கிறாரா?” என்று கேட்டேன். அவளால் தன்னுடைய தலையை அசைக்க முடிந்தது. 237 அதற்கு பிறகு அவளால் தலையை அசைக்க முடியாத ஒரு நிலைக்கு அவள் சென்றுவிட்டாள். அப்பொழுதும் நான், “அம்மா, இப்பொழுது இயேசு உங்களுக்கு எல்லாமுமாய் இருக்கிறாரா? அவர் உங்களுக்காக, இன்னும் ஒரு நிமிடத்தில் வருவார். அவர் உங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறாரா?” என்று கேட்டேன். அவளால் அசைய முடியவில்லை. 238 அப்பொழுது நான், “அம்மா, நீங்கள் ஒரு காரியத்தை மாத்திரமே செய்தீர்கள், நீங்கள்…நீங்கள் உங்களுடைய கண் இமைகளை சிமிட்டுவதை நான் காண்கிறேன். நான் உங்களுக்கு தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுத்தபோது, இயேசு உங்களுக்கு எவ்வாறு இருந்தாரோ, அதே விதமாகவே இப்பொழுதும் இருக்கிறாரென்றால் உங்களுடைய கண் இமைகளை வேகமாக சிமிட்டுங்கள்” என்றேன். அவள் தன்னுடைய கண்களை சிமிட்டினாள். கண்களிலிருந்து கண்ணீர் அந்த விதமாக வழிந்தோடியது. 239 அப்பொழுது மெல்லிய காற்று அறைக்குள் வந்து வீசியது. அப்பொழுது அம்மா பரலோக வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

76240 நான் வீட்டுக்கு வந்தேன், பிறகு இறுதி அடக்க ஆராதனை நடைபெறும் வீட்டுக்குச் சென்று, அவர்களுடைய துணிகளை எடுத்தேன். ஓ, அது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். நீங்களும் அதே காரியத்தை செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். பிள்ளைகள் எல்லாம் ஒருவர் ஒரு இடத்திலும் இன்னொருவர் இன்னோரு இடத்திலும் அழுது கொண்டிருந்தார்கள். நான், “அம்மா எங்களுக்கு இடையிணைப்பு கம்பமாக இருந்தார். நாங்கள் இனி அதே விதமாக இருக்க மாட்டோம்.” டாக்கும், அவனுடைய குடும்பம் இந்த மூலையில் இருந்தனர். ஜெஸ்ஸியும் அவனுடைய குடும்பம் அந்த மூலையிலும் இருந்தனர். நாங்கள் அண்மையில்தான் ஹோவர்ட்டை அடக்கம் செய்திருந்தோம். அப்பொழுது நான், “சரி, பையன்களே, நாம் பிரிந்துவிட்டோம்” என்றேன். நான், “நாம்…நாம் இனி ஒருவரை ஒருவர் காண வரமாட்டோம். அம்மா நம்முடைய குடியிருப்பாய் இருந்தார்” என்றேன். நான், “நாம் இனிமேல் அதிகமாக, இப்பொழுது ஒருவரை ஒருவர் காணமாட்டோம்” என்றேன்.

77241 அவருடைய வஸ்திரங்களை நாங்கள் எடுத்துக்கொண்ட பிறகு, இரவு நேரமானதால், நான் வீட்டிற்குச் சென்றேன். நான் வீட்டுக்குச் சென்றேன். 242 திருமதி. டி’அமிக்கோ, சிகாகோவில் இருந்துவரும் அவரை யாருக்காவது தெரியுமா? தொடர் கூட்டங்களிலிருந்தே மிக அருமையான ஒரு சிநேகிதியாய் இருந்து வருகிறார். அவள் எனக்கு ஒரு வேதாகமம் கொடுத்தாள். (என்னை மன்னிக்கவும்.) அது அந்த சிகப்பு எழுத்துக்களை கொண்ட வேதாகமங்களில் ஒன்றாயும், அதன் மேல் இருபல் வரிசுகளைக் கொண்ட நாடா மூடியோடிருந்தது. நான் ஆட்டுக்குட்டியும் புறாவும் என்பதன் பேரிலான அந்த செய்தியை பிரசங்கித்தபோது, யாரோ ஒருவர், அவர்கள் எனக்கு இரண்டு புறாக்களை ஒரு பிடிப்பு சட்டத்தோடு அனுப்பியிருந்தனர். என்னுடைய மற்றொரு சகோதரன், சகோதரன் நார்மன், ஒரு சிறு புறா குஞ்சியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும் எனக்கு அனுப்பியிருந்தார், என்னுடைய சகோதரன் பாடர்ஸ் ஒரு எனக்கு ஆட்டுக்குட்டியைக் கொடுத்தார். நான் அந்த வேதாகமத்தை எடுத்தேன். மேடா ஒரு மூலையில் அழுதுகொண்டிருந்தாள்.

78243 நான் ஜமாய்க்காவில் இருந்தபோது, என்னுடைய மாமியாரைக் கண்டதையும், ஜமாய்காவில் அங்கே மேஜையில் கண்டேன் என்று உங்களிடத்தில் கூறினதையும், இங்குள்ள வர்த்தக புருஷர்களாகிய நீங்கள் யாவரும் அறிவீர்கள். நான், “என்னுடைய ஜனங்களில் யாரோ ஒருவர் மரித்துகொண்டிருக்கிறார், அவருக்கு பற்களே இல்லாதிருந்து. நான் அவர்கள் மரிப்பதை காண்கிறேன்” என்று கூறினேன். டீமாஸ் ஷகரியன் மற்றும் அவர்கள் எல்லோருமே அங்கே, மேஜையண்டை அமர்ந்திருந்தனர். அப்பொழுதிலிருந்து ஒரு சில மணி நேரங்களில், என்னுடைய மாமியார் கிட்டத்தட்ட விழுந்து மரித்துவிட்டார், பாருங்கள், சரியாக அதே விதமாக பற்களே இல்லை. 244 நான், “ஒரு வாலிப மனிதனுடைய வாயிலிருந்து ரத்தம் கொப்பளிப்பதை நான் பார்த்தேன்” என்றேன். அப்பொழுது நான் தொலைபேசியில் அழைத்து, “பில்லியை அனுமதிக்காதீர்கள்…” என்றேன். 245 இங்கு எவரேனும் கிங்ஸ்டன், ஜமாய்க்காவில்—அந்த நேரத்தில் அங்கே ஜமாய்க்காவில் இருந்த எவரேனும் இங்கே இருக்கின்றீர்களா? காண முடியவில்லை. ஆம். இரண்டு பேர் உள்ளனர். எனவே அப்பொழுது… 246 நான், “அது இருக்க வேண்டும்…பில்லி, நீ அங்கே போகாதே. ஒரு வாலிப நபர் இரத்தம் கொப்பளிப்பதை நான் கண்டேன்” என்றேன். அது என்னுடைய மைத்துனனாக இருந்தது. அவனுடைய தாயார் இறந்தபோது, அவனுக்கு இரத்தக்கசிவு ஏற்பட்டது. அது அவனுக்கு அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சியை அளித்துவிட்டது.

79247 அதன் பிறகு அந்த நாளில் இங்கு நின்றுகொண்டிருந்தபோது, நான் வேதாகமத்தை எடுத்தேன். நான், “பிதாவே, எனக்குத் தெரியவில்லை. உம்முடைய அன்பாக இருக்கலாம், தாயார் மரிப்பதை நீர் எனக்குக் காண்பிக்கவில்லை. ஆனால் தேவனே, நான் மிகவும் நொருங்குண்டுப் போயிருக்கிறேன். உம்முடைய வார்த்தையிலிருந்து ஆறுதலின் ஒரு வார்த்தையை நீர் எனக்கு தருவீரா?” என்று கேட்டேன். நான், “ஆறுதல்படுத்துகின்ற ஒன்றை, எனக்கு ஆறுதலாயிருக்கின்ற ஒன்றை நான் வாசிக்கட்டும்” என்றேன். நான் இந்த விதமாக வேதாகமம் தானாக திறக்கும்படிவிட்டேன். அது, சிகப்பு எழுத்துக்களில், “அவள் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள்” என்றிருந்தது. நான் என் அறைக்குச் சென்றேன். நாங்கள் உறங்கச் சென்றோம்.

80248 அடுத்த நாள் காலை, கிட்டத்தட்ட எட்டு மணியளவில், எழுந்தோம். அவர்கள் சுமார் பிற்பகலில், அவளை அடக்கம்பண்ணப்போவதாய் இருந்தனர், எனவே நாங்கள் போய் அவளை பார்க்கவிருந்தோம். மேடா பிள்ளைகளுக்கான காலை சிற்றுண்டியை ஆயத்தம் செய்ய சென்றாள், குட்டி ஜோ அழுதுகொண்டிருந்தான். பெக்கி ஒரு மூலையில், “நான் பாட்டியை மீண்டும் எப்போது பார்ப்பேன்?” என்று அழுதுகொண்டிருந்தாள். 249 அதற்கு நான், “ஆம். ஆம். நீ அவளைப் பார்ப்பாய். அவள் மேலே கடந்துபோய்விட்டாள்,” என்றேன். நான், “அவள், நாம் மறுபடியுமாக அவளைப் பார்ப்போம்” என்றேன். அவள் இந்த சிறுபிள்ளைகளை மிகவும் நேசித்தாள் என்று உங்களுக்குத் தெரியும். 250 மேலும், எனவே, அவர்கள் எல்லோரும், “நாங்கள் இந்த பிற்பகல் பாட்டியைக் காண முடியுமா?” என்றே அழுதுகொண்டிருந்தனர். 251 அப்பொழுது நான், “அவள் ஜீவித்த சரீரத்தை நீங்கள் காண முடியும், ஆனால் பாட்டி உங்களுடைய இன்னொரு பாட்டியோட இருக்க மேலே பரலோகத்திற்கு சென்றிருக்கிறாள்” என்றேன். 252 உங்களுக்கு தெரியும், என்னுடைய குட்டி பையன், ஜோ அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்பொழுது அவன், “அப்படியானால் பாட்டி இந்த இரவு மீண்டும் திரும்பி வருவாளா?” என்று கேட்டான். 253 அதற்கு நான், “இல்லை, இல்லை. அவள் எப்பொழுது திரும்ப வருவாள் என்று எனக்குத் தெரியாது. இயேசு வரும்பொழுது, அவள் திரும்பி வருவாள்” என்றேன்.

81254 மேலும் நான் அங்கே நின்றுகொண்டிருந்தேன். நான் திரும்பி, என் அறைக்குச் சென்றேன். நான் அறைக்குச் சென்றபோது…அதை விளக்கிக் கூற என்னிடம் கேட்காதே. அதை விளக்கி கூறுவதற்கு வழியே இல்லை. நான் இந்த கூட்டத்தாரை பார்ப்பது போல அதே விதமாக நான் என்னையே அங்கு நின்று கொண்டிருக்க கண்டேன். நான் பாடல்களை முன்னின்று பாடிக்கொண்டிருந்தேன். நான் அதை ஒருபோதும் செய்ததில்லை. என்னால் சரியாகப் பாட கூட முடியாது. எனவே, அங்கு ஒரு பெரிய, மிகப் பெரிய ஜனக் கூட்டம் இருந்தது. 255 இந்தப் பக்கமாக, அந்த—அந்த அரங்கத்தைப் பார்ப்பதற்கு அது வெளிப்புறமாக இருந்தது, ஓ, நீங்கள் அதை என்னவென்று அழைப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது, காண்பதற்கு அது ஒரு விதமான குன்றைப் போலவும், ஒரு விதமான அரங்கைப் போலவும் இருந்தது. பின்னால் உட்காருபவர்கள் பார்ப்பதற்கு மேலே உயர்த்தப்பட்ட இருக்கைகளைக் கொண்டதான, நீண்ட வரிசையாயிருந்து, அந்த வரிசைகள் எல்லாம் இந்த விதமாக பின்னாலிருந்து பார்க்க உயர்த்தப்பட்டிருந்தன. ஆனால் சரியாக நடுவில்… இந்த விதமாக மூன்று வரிசைகள் இருந்தன. நடுவில் ஜன்னல் போல் வரிசைப்படுத்தப்பட்ட இருக்கைகள் இருந்தன, அந்த வரிசைகளில் வலிப்புள்ள சிறிய முடமான பிள்ளைகள் படுத்திருந்தனர்.

82256 மேலும் நான் ஒரு கருமை நிற சூட் அணிந்திருந்தேன், நான், “அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், சிறுவர்களை இயேசுவிடம் கொண்டு வாருங்கள்” என்று பாடிக்கொண்டிருந்தேன். நாங்கள் அதை சபையில், சில நேரங்களில், விசேஷமாக பிள்ளைகளை பிரதிஷ்டை செய்கையில் பாடுவோம். பிரசித்திப் பெற்றவர்கள் உட்காருவதற்கு, அங்கு ஒரு—ஒரு பெட்டி போன்ற இருக்கை இருந்தது, அது பிரசங்க பீடத்திற்கு அருகில் இருந்தது. ஆனால் நான் கீழே, பாடல்களை நடத்திக் கொண்டிருந்தேன். திடீரென, நான் அங்கே நின்றுகொண்டு, என்னையே பார்த்துக்கொண்டிருந்தேன், அப்பொழுது… ஓ, அது குறித்து சிந்திக்க முயற்சிக்க வேண்டாம், ஏனென்றால் உங்களால் முடியாது. அப்பொழுது நான் இங்கே இருந்தபோது, அப்பொழுது இது இங்கே மாறுகிறது. எனக்குத் தெரியவில்லை. அவைகள் இரண்டும் ஒன்று சேர்ந்துவிட்டன. மேலும் அது… உங்களுடைய இரு உணர்வுகளும் ஒன்று சேரும்போது அது ஒரு நல்ல காரியமாக இருக்கிறது. 257 நான் அங்கே புகைப்படமெடுக்கும் ஒரு நிழற்பட கருவியை வைத்திருந்தேன். இறங்கி வரும்போது, எனக்கு எப்படி ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தெரியாதிருந்தது. நான் அதன் மூலமாகப் பார்த்தேன், மேலும், எனக்கு ஐந்து அல்லது ஆறு பொருள்களாகத் தெரிந்தது. எனவே நான் அதில் குவிமையப் பார்வையை சரிப்படுத்த துவங்கினேன். பில்லி என்னிடம் கூறினான், “அதில் குவிமையப் பார்வையை சரிப்படுத்தும்போது, அவைகள் யாவும் ஒன்றாக வந்துவிடும்” என்றான். 258 அதை செய்வது நல்லது என்பதை, நீங்கள் அறிவீர்கள். நீங்கள் குவிமைய பார்வையண்டை செல்லும்போது, நீங்கள் வித்தியாசமான காரியங்களை காண்கிறீர்கள். அவர் பேரிலான ஒரு சரியான பார்வைக்காக தேவனுடைய வார்த்தையை உபயோகியுங்கள், அப்பொழுது நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள்—நீங்கள் புரிந்து கொள்வீர்கள். ஆனால் முதலாவது, நீங்கள் பாருங்கள், குவிமையப் பார்வையில் அதை சரிபடுத்துங்கள்.

83259 ஆகவே அங்கு நின்றுகொண்டு, பார்த்துக்கொண்டிருக்கையில், நான் அந்த தரிசனத்திற்குள்ளாகச் சென்றேன். அங்கே உள்ளே இருக்கையில், ஒரு புகழ்பெற்ற நபர் அந்த இடத்தின் பின்பக்கத்திற்கு திரும்பி வருவதை நான் கவனித்தேன். மேலும் அவர்கள் இருந்த…நான், “பாருங்கள் அவர்கள் அந்த புகழ் வாய்ந்தோரின் பெட்டியில் உள்ள இருக்கைக்கு வந்துகொண்டிருந்தார்கள்” என்று கூறினேன். எனவே அவர்கள் இந்த வழியாக மேலே வந்துகொண்டிருந்தனர். நான், “பாருங்கள், அந்த பெண்மணி வந்து கொண்டிருக்கையில், நான் இன்னும் ஒரு விசை பாடுவேன்” என்று எண்ணினேன். அவள் பண்டைய நாகரிக பாணியில் உடை உடுத்தியிருந்தாள். 260 இப்பொழுது, பெண்மணிகளாகிய உங்களில் சிலருக்கு இது நினைவிருக்கும், அவர்கள் இந்த விதமாக இங்கே கீழே வரை உள்ள பாவாடைகளை அணியும்போது, அது காலணிகளில் அணிந்துள்ள நாடாக்கள் வரை கீழே தொங்கினது. அவர்கள் ஒரு விதமாக முழுமையாக அணிந்திருந்த போது…இப்பொழுது இங்கே இந்த பெண்மணி அணிந்துள்ளது போன்று—போன்றுள்ளதை, நீங்கள் அந்த காரியங்களை என்னவென்று அழைப்பீர்கள்? அந்த மேற்சட்டை. மேற்சட்டை, அதைப் போன்ற அந்த காரியங்களில் ஒன்றை, அதற்கு உண்மையாகவே நீளமான சட்டை கை இருந்தது. உங்களுக்கு அவைகள் நினைவிருக்கிறதா? இங்கே மேலே கழுத்தைச் சுற்றி, ஒரு விதமான பொத்தானால் இணைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர், ஒரு பெரிய தொப்பியை, பக்கவாட்டமாக அணிந்திருப்பர். அந்த நாட்களில், பெண்கள், அவர்கள் நீண்ட கூந்தல் வைத்திருந்தனர். எனவே தலை முடியை இந்த விதமாக இழுத்து கொண்டையிட்டு, ஒரு தொப்பியை அதன்மேல் வைத்து, அதை இணைப்பானால் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள செய்வர், அதை அப்படி வைத்துக்கொள்வது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா, ஏனென்றால் அவர்கள் குதிரையில் ஒருபக்கமாக சவாரி செய்ய வேண்டியதாய் இருந்தது.

84261 ஆகவே இந்த சீமாட்டி மேலே வந்து கொண்டு இருந்தார், மற்ற எல்லோரும் அந்த சீமாட்டிக்கு மரியாதையை செலுத்திக்கொண்டிருந்தனர். அப்பொழுது நான், “சரி, அவள் அந்த புகழ்வாய்ந்தோரின் பெட்டி போன்று இருக்கைக்கு செல்வாள்” என்று நினைத்தேன். 262 எனவே, அப்பொழுது, நான், “இன்னும் ஒரு விசை, இந்த பக்கத்தில் உள்ள எல்லோரும், ‘அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்’ என பாடுங்கள். இப்பொழுது இங்கு உள்ளவர்கள் ‘அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்’ என்று பாடுங்கள்” என்றேன். “அதன்பின்னர் நடுவில் உள்ள எல்லோரும், இப்பொழுது எல்லோருமாக ஒன்று சேர்ந்து, ‘சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வாருங்கள்’” என்று பாடுங்கள் என்றேன். 263 நான் அதைக் கூறியபோது, இந்தப் பெண்மணி அந்த பெட்டி போன்ற இடத்திற்குள் ஏற்கனவே நுழைந்துவிட்டிருந்தாள். அவர் அந்த பெட்டி போன்ற இடத்தில் நுழைந்தபோது, எல்லோருமே எழுந்து நின்றதை, என்னால் காண முடிந்தது. மேலும் அவர்கள் இந்த விதமாக செய்துகொண்டிருந்தனர், அவர்கள் அவளை அடையாளம் கண்டுகொள்ள, அவளோ அவர்களை அடையாளம் கண்டு கொண்டிருந்தாள். 264 நான், “பாருங்கள் நான் பிரசங்கிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நான் போய் அந்த வியாதியாயுள்ள அந்த ஜனங்களுக்காக ஜெபிப்பேன்” என்றேன். நான் அந்த பிரசங்க பீடத்திற்கு இந்த விதமாக, மேலே—மேலே சென்றேன், ஓ, அந்த பெட்டியோ இங்கே உட்கார்ந்திருக்கும் இந்த சகோதரனுக்கு அவ்வளவு நெருக்கமாக இருந்தது. நான் இந்த விதமாக, சுற்றித் திரும்பினேன்.

85265 அப்பொழுது நான், “சரி, இப்பொழுது, அந்தப் பெண்மணி எனக்கு தலை வணங்கும்போது நான் அவளை அடையாளங்கண்டு கொள்வேன்” என்று எண்ணினேன் ஆகவே நான் என் தலையை திருப்பிப் பார்த்தபோது, அந்த பெண்மணி இந்த விதமாக ஏற்கனவே தன்னுடைய தலையை தாழ்த்திவிட்டிருந்தாள். நான் என்னுடைய தலையை இந்த விதமாக கீழே தாழ்த்திக்கொண்டிருந்தேன். மேலும் நான் என்னுடைய தலையை உயர்த்தினபோது, ஒரே நேரத்தில், அவளை சந்தித்தேன், அது அழகான, வாலிபமான, என்னுடைய அம்மாவாக இருந்தது. நான் அவளை நோக்கிப் பார்த்தேன். நான், “அம்மா?” என்றேன். அவள், “பில்லி” என்றாள். 266 அப்பொழுது, மின்னல் கட்டடத்தை சுற்றிலும் பிரகாசிக்கத் தொடங்கி, இடி முழங்கி, ஒரு குலுக்குதல் உண்டானது. அப்பொழுது ஒரு சத்தம், “உன்னுடைய தாயாரைக் குறித்து பயப்படாதே” என்றுரைத்தது. மேலும், “அவள் 1906-ல் இருந்த அதே விதமாகவே இருக்கிறாள்” என்றும் உரைத்தது. அதற்கு நான், “என்ன 1906?” என்றேன். அப்பொழுது மேடா, “உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டாள். என்னுடைய மனைவி. நான், “தேனே, 1906, 1906 என்னவாயிருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவள், “ஏன்?” என்று கேட்டாள். நான், “ஒரு தரிசனம், நான் இங்கே அம்மா நின்று கொண்டிருக்கிறதைக் கண்டேன்” என்றேன். அதற்கு அவள், “நீங்கள் என்ன கண்டீர்கள்?” என்றாள். அப்பொழுது நான், “அம்மாவை நான் கண்டேன்” என்றேன். அதற்கு, “பில், நிச்சயமாகவா?” என்றாள்.

86267 நான் கூறினேன், “ஆம். அவள் இங்கே நின்றுகொண்டிருந்தாள், அவள் அழகாக இருந்தாள். மேலும் அவர் கூறினார்…” நான், “அவள் ஒரு வாலிப ஸ்திரீயாக இருந்தாள்” என்றேன். 268 எனவே நான் சென்று அந்த பழைய குடும்ப பதிவுகளை எடுத்து வந்தேன். அவள் 1906-ல் என்னவாக இருந்தாள் என்று உங்களுக்குத் தெரியுமா? என்னுடைய தகப்பனாருடைய மணவாட்டியாக. அந்த வருடம் தான் அவர்களுக்கு திருமணம் ஆயிற்று. இப்பொழுது அவள் வேறு ஒரு மணவாட்டியின் பாகமாக இருக்கிறாள், அது கர்த்தராகிய இயேசுவின் மணவாட்டி. 269 யாரோ ஒருவர் எங்கிருந்தோ எனக்கு ஒரு நிக்கல் காசு அனுப்பி வைத்தார்கள். அது இங்கே என்னுடைய சட்டைப் பையில் இருக்கிறது, அதில் 1906 என்று உள்ளது. 270 “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.”

87271 இப்பொழுது, அது என்ன? இந்த வேட்டைப் பயணம் என்னை பலப்படுத்திக்கொண்டு மாத்திரமே இருந்தது, நீங்கள் பாருங்கள். நான் எப்போதும் மேற்கொண்ட பயணங்களிலேயே மிகச் சிறந்த ஒன்றாக இருந்தது என்பதை அறிந்தும், இது ஒரு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. அதுவே அன்பாயிருந்தது. மேலும் சகோதர, சகோதிரியே, பரிசுத்த ஆவியானவர் காண்பித்திருந்த இந்த மற்ற எல்லா தரிசனங்களும் சரியாக இருந்து வந்திருந்தால், இதுவும் பரிசுத்த ஆவியாகவே இருக்க வேண்டும். வேதம், “அது நிறைவேறினால், அப்பொழுது அது அவராயிருக்கும்” என்று, கூறியுள்ளது. 272 அப்படியானால் நாம் என்ன ஒரு நம்பிக்கையை பெற்றுள்ளோம்! என்றோ ஒரு நாளில் நாம் இந்த இடத்தை விட்டு செல்ல போகிறோம். நாம் திரும்பவும் ஒரு வாலிப மனிதனாக ஒரு வாலிப ஸ்தீரியாக மாறி, ஒருபோதும் மரிக்காமல் இருக்கப்போகிறோம். நான் உலகத்தின் ஜனாதிபதியாக இருந்து பத்து இலட்சம் ஆண்டுகள் ஜீவிக்கப்போகின்றேன் என்று அறிந்திருப்பதை காட்டிலும் அதை அறிந்திருப்பதையே நான் விரும்புவேன். நான் தேவனுடைய கரங்களில் இருந்தேன் என்பதையே நான் அறிந்துகொள்ள விரும்புவேன்.

88273 அதே மாறாத இயேசுவானவர் அந்த கூற்றைக் கூறினார் என்று இன்றிரவு நான் அறிந்து கொள்வதற்கு மகிழ்ச்சியடைகிறேன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் இங்கிருக்கிறார். பாருங்கள், அது அழிந்துபோக முடியாது. அது நித்தியமாய் இருக்கிறது. இந்த வாக்குமூலத்தை கூறின அந்த நாளில் இருந்த அதே இயேசுவானவராக அவர் இன்றிரவும் இருக்கிறார். நாம் விசுவாசிப்போமானால், அவர் அந்த வார்த்தையை இன்னமும் உறுதிபடுத்துபவராக இருப்பார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 274 “பரிசுத்த ஆவியாகிய, அவர் வரும்போது, அவர் தம்மைக் குறித்து பேசமாட்டார். ஆனால் அவர் என்னுடைய காரியங்களை எடுத்துப் பேசுவார்,” அந்த வார்த்தையை, “அவைகளை உங்களுக்குக் காண்பிப்பார். அப்பொழுது, வரபோகிற காரியங்களையும், கூட காண்பிப்பார்.” 275 எபிரெயரின் புத்தகம், 4-வது அதிகாரத்தில், வேதம், “தேவனுடைய வார்த்தை கருக்கானதாயும்…” என்று கூறியுள்ளது. 276 இப்பொழுது, யார் வார்த்தையாக இருந்தது? இயேசு. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமானார். வாசம்பண்ணி…” 277 “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.”

89278 அவரே நம்முடைய தேவன். நண்பர்களே, நாம் இழக்கப்படவில்லை. நாம் இன்னமும் தேவனுடைய கிருபையில் இருக்கிறோம். நான்—நான் எந்த காரியத்தை குறித்து பேசவும், ஒரு கடந்த காலத்தை குறித்து பேசவும் உணருகிறேன்… கடந்த இரவு நான் கூறினது போல, அந்த சீஷர்கள் அவர்கள் முந்தைய தினக் கூட்டத்தில் கேட்டதை ஜீவிக்க முயற்சித்து, மற்றொன்றிற்காக எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர், ஆனால் படகில் மோதிக்கொண்டிருந்த காற்றையும் அலைகளையும் சிருஷ்டித்த சிருஷ்டிகரை மறந்துவிட்டார்கள். 279 அங்கே அந்த மலைகளில் மேலேயிருந்த தேவன், அவருடைய வார்த்தையின்படியே அந்த வெள்ளி முனை கொண்ட பழுப்பு நிறக் கரடி, அத்தாட்சியாக அங்கே தரையில் இருக்கும்படி செய்தார். 280 இப்பொழுது, நீங்கள் அந்த மனிதனுக்கு எழுத விரும்பினால், பட் சௌவுத்விக், சௌ-வு-த்-வி-க், பட் சௌவுத்விக், ஃபோர்ட் செயின்ட் ஜான், பிரிட்டிஷ் கொலம்பியா என்ற முகவரிக்கு எழுதுங்கள், அவர் உங்களுக்கு திரும்ப பதில் கடிதம் எழுதட்டும். அதன் மூலமாக, நீங்கள் ஒரு வேட்டை பயணம் மேற்கொண்டால், உங்களோடு செல்ல அவர் ஒரு நல்ல நபராயிருக்கிறார். 281 இப்பொழுது கவனியுங்கள். நான் அடுத்த முறை அங்கே வழிகாட்டிகளோடு செல்லும்போது நான் உண்மையாகவே ஒரு கூட்டத்தை நடத்தப்போகிறேன் என்று நான் நினைக்குமளவிற்கு, ஆம், அந்த காரியங்கள் அந்தவிதமாகவே சம்பவிப்பதை அவர்களும் பார்க்கும்படியாக, அங்கு அந்த பகுதியில் இருக்கும் எல்லா வேட்டைக்காரர்களிடமும் இதைக் குறித்துச் சொல்லியிருக்கிறார். அது கடந்த வருடமாக இருந்தது.

90282 இது இப்பொழுது, இந்த வருடமாக இருக்கிறது. வாக்களித்த அதே இயேசு, “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை. உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடு இருப்பேன்” என்று கூறினார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 283 அப்படிப்பட்ட சாட்சிகளோடு, ரூபகாரப்படுத்தப்பட்ட அப்படிப்பட்ட சத்தியத்தோடு, உறுதியான சத்தியத்தோடு இருக்கும்போது, நாம் அந்த கூரையின் வழியாகச் சென்று எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பது போன்று நாம் எப்படி வேறுவிதமாக உணர முடியும்? அப்படிப்பட்ட ஒரு வழியில் இருக்கையில், நம்மை மந்தமாக்குகிற உலகத்தின் காரியங்களை அனுமதிக்க வேண்டுமா, அங்கே, நாம் காண்கிற முக்கியமான உறுதியான காரியங்கள் சத்தியத்தை உண்மை என்று நிரூபிக்கப்பட வேண்டாமா?

91284 இப்பொழுது, இங்குள்ள ஒவ்வொரு சுகவீனமான நபரும், வாக்குத்தத்தம்பண்ணின மாறாத ஒருவரை மாத்திரம் நீங்கள் விசுவாசிப்பீர்களானால், அந்த மனிதனிடத்திலிருந்து, அந்த பையனிடத்திலிருந்து காக்காய் வலிப்பை எடுத்துப்போட்ட அதே தேவன், இப்பொழுது சரியாக இங்கே அவர் மாறாத அதே தேவனாய் இருக்கிறார். என்னால் அதை உங்களிடத்திலிருந்து எடுத்துப்போட முடிந்தால், நான் அதை செய்வேன், ஆனால் என்னால் அதை செய்ய முடியாது. அவர் அதை உங்களுக்காக ஏற்கனவே சம்பாதித்துவிட்டார், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் அதை விசுவாசிப்பது மாத்திரமேயாகும். 285 இப்பொழுது அந்த பையன் காக்காய் வலிப்பினால் விழுந்தபோது, அந்த ஸ்திரீ, “இப்பொழுது, அந்த சட்டைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று சொல்லியிருந்தால் என்னவாயிருக்கும். அது அநேகமாக வேறு எவர் பேரிலும் கிரியை செய்யாது. புரிகிறதா? அவன் பேரில் மாத்திரமே, ஏனென்றால் அது அவனுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. நாகமான் ஏழு முறை ஆற்றில் முழுகினான்; ஆனால் வேறு ஒருவர், முழுகினால், அனேகமாக அவர்களுடைய குஷ்டரோகத்திலிருந்து குணமடைந்திருக்கமாட்டார்கள். புரிகிறதா? ஆனால் கவனியுங்கள். அவர் என்ன சொல்லுகிறாரோ அது தான் சத்தியமாய், ஒரு ரூபக்காரப்படுத்தப்பட்ட, பரிபூரண சத்தியமாயிருக்கிறது.

92286 இப்பொழுது, ஒரு ஜெப வரிசையை அழைப்பதற்கு கூட, காலதாமதமாகிக் கொண்டிருக்கிறது. நாம்—நாம் ஒரு நிமிடம் அதற்காக நிறுத்துவோமாக. 287 நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போமாக. இதைத் தான் தேவன் வாக்களித்தாரா? அசலான பரிசுத்த ஆவியானவரே அதைச் செய்பவராக இருப்பார். அது சரிதானே? பாருங்கள், அவர் பரிசுத்தாவியாயிருக்கவில்லை என்று யார் சொல்வார்கள்? அவரேதான். “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.” பரிசுத்தாவியானவரே அவருடைய பிதாவாயிருந்தார். “அவள் பெறுவாள். இங்கே கருவுற்றிருக்கிற இந்த பரிசுத்தமானது பரிசுத்த ஆவியினுடையதாய் இருக்கிறது.” ஆகவே, பரிசுத்தாவியும் தேவனும் ஒரே ஆவியாகும், அது அவருக்குள் இருந்தது. 288 ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டபோது அவர் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள், அவர் இந்த கூட்டத்தாரினூடாக நோக்கி பார்த்தபோது, அவர்களுடைய சிந்தனைகளை அறிந்துகொண்டார். வார்த்தையானது, “தேவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று கூறவில்லையா? அவர் பரிசுத்த யோவான் 12-ல், இல்லை பரிசுத்த யோவான் 14:12-ல், “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று அவர் வாக்குத்தத்தம் செய்யவில்லையா? அல்லது அது எப்போதாவது தவறிப்போய் இருக்கிறதா, ஆனால் அது சத்தியமாய் இருக்கிறதா?

93289 அப்படியானால், தேவன் இங்கு இருக்கிறார். அவர் இங்கிருக்கும் ஒவ்வொரு நபரையும் சுகமாக்கவே இங்கு இருக்கிறார். அவர் இழந்துபோன ஒவ்வொரு ஆத்துமாவையும் இரட்சிக்கவே இங்கு இருக்கிறார். நான் பீட அழைப்பை விடுக்கும் முன், நான் இந்த பீட அழைப்பை விடுக்க, வழி நடத்தப்படுவதை உணர்கின்றபடியால், நாம் அவரை அழைப்போமாக. எத்தனை பேர் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்துவிட்டு அல்லது “என்னால் முடியுமானால்…” என்று கூறுவீர்கள். இங்குள்ள அந்நியர்கள், “நான் அந்த கூட்டங்கள் ஒன்றையும் ஒருபோதும் கண்டதில்லை. இந்த காரியங்களை குறித்து ஜனங்கள் பேசுவதை நான்—நான் கேட்டிருக்கிறேன், ஆனால் நான்—நான் உண்மையாகவே அதை ஒருபோதும் கண்டதேயில்லை. கிறிஸ்துவின் பிரசன்னம் ஜனங்களுக்கு மத்தியில் வந்து அவர் செய்த அதே காரியங்களை செய்வதை என்னால் காண முடிந்தால் அது என் இருதயத்துக்கு ஊக்குவித்தலாய் இருக்கும்” என்று கூறலாம். அது உங்களை ஊக்குவிக்குமா? 290 நாம் ஜெப வார்த்தைக்காக; நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. எல்லா கண்களும் மூடப்பட்டிருக்கட்டும். இப்பொழுது ஆவியானவர் வார்த்தையைப் பின்தொடருவராக.

94291 இப்பொழுது, பிதாவே, எப்படி என்று நான் அறிந்த மிகச் சிறந்ததையே, நான் உடையவனாய் இருக்கிறேன், நீர் என் இதயத்தை அறிந்திருக்கிறீர்… இந்த ஜனங்கள் இந்த உஷ்ணத்தினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் கூட்டமாக இருக்கின்றபடியால் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்திருக்கிறீர், ஆனால் பொறுமையாக இருந்து வருகின்றனர். நீர் படகிலிருந்து பேசிக் கொண்டிருந்ததை அந்த நாளில் கரையில் நின்று கேட்ட ஒரு கூட்டம் இதேவிதமானதாயிருந்தது என்றே என்னால் யூகித்துப் பார்க்க முடிகிறது. அப்பொழுது நீர் அவர்களிடத்தில், “ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய் மீன்பிடிக்கும்படி உங்கள் வலையைப் போடுங்கள்” என்று சொன்னீர். அங்கு சில இருக்கிறதா என்று பார்ப்பதற்கு அல்ல. அவைகள் அங்கே இருந்தன. 292 எப்படி அந்த அப்போஸ்தலனின் குறிப்பிடத்தக்க அந்த வார்த்தைகளோ, “ஆண்டவரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறோம்” என்று கூறினான். அவர்கள் உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தபோது, அவர்களுடைய வலைகள் கிழிந்துபோகுமளவிற்கு அவர்கள் திராளான மீன்களைப் பிடித்தனர்.

95293 கர்த்தராகிய இயேசுவே சந்தேகமின்றி அந்தக் காலையில் அநேக ஸ்திரீகள் துணிகளை துவைப்பதை விட்டுவிட்டு, அநேக புருஷர்கள் தங்களுடைய நிலத்தில் பணிபரிவதை, விளைச்சலை விட்டுவிட்டு, மீனவர்கள் தங்களுடைய வலையை விட்டுவிட்டு, தேவனுடைய வார்த்தையைக் கேட்க வந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. கர்த்தராகிய இயேசுவே, நீர் உம்முடைய மாம்ச சரீரத்தில் இன்றிரவு இங்கிருப்பீரானால், அன்றைக்கு கூடினதைப் பார்க்கிலும் இன்றைக்கு அதிகமாக கூடியிருப்பார்கள் என்பது சந்தேகமாயுள்ளது. ஆனால் இந்த ஜனங்கள் நீர் மரித்துவிடவில்லையென்றும், நீர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தீர் என்றும், நீர் உம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தி, இன்றிரவு பரிசுத்த வேத வாக்கியங்களிலிருந்து நான் அவர்களுக்கு வாசித்துள்ள வார்த்தையை, உம்முடைய வார்த்தையை காத்துக்கொள்வீர் என்றும் விசுவாசிக்கிறார்கள். 294 ஒரு சமயம் எங்களுடைய கர்த்தரிடத்தில் ஒரு வேதாகமம் இல்லை அந்த—அந்த புத்தகச் சுருள் கொடுக்கப்பட்டபோது, அவர் வாசித்து அமர்ந்தார். மேலும் அவர், “இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேற்று” என்றார். 295 கர்த்தாவே, அது மறுபடியும் சம்பவிக்கட்டும். அது திரும்பவும், இந்த நாளிலே, இந்த இரவிலே, திரும்பவும் நிகழ்வதாக, அதாவது நான் வாசித்த வேதவாக்கியம் நிறைவேற்றப்படுவதாக. கடைசி காலம் என்பதை நிரூபிக்கும்படியான காரியத்தையே, வார முழுவதும், நாங்கள் போதித்து வந்துள்ளோம். ஆகையால் எங்களுடைய இருதயங்கள் மகிழ்ச்சியாய் பொங்கும். 296 கர்த்தாவே, நீர் பேசிக் கொண்டிருக்கிறவர்கள் அநேகர் இங்கிருக்கலாம். சத்தியம் என்று ரூபகாரப்படுத்தப்பட்ட உம்முடைய வார்த்தையை, உம்முடைய வார்த்தையை அறிந்துகொள்வதற்கு இன்றிரவு எங்களுக்கு உதவி செய்யும். பிதாவே, இதை அருளும்.

96297 நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், பிரசங்கிப்பதிலிருந்து என்னை அமைதிப்படுத்தும்படிக்கு ஒரு கணக்கெடுக்கும் விதமாகவே இதை செய்வோம். இங்குள்ள எத்தனை பேர் உண்மையாகவே, மறுபடியும் பிறவாத ஒரு கிறிஸ்தவராக இருக்கிறீர்கள்? இப்பொழுது, நீங்கள் சபைக்குச் செல்லலாம், ஆனால் அதை நான் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. நீங்கள்…நீங்கள் மறுபடியும் பிறவாத ஒரு கிறிஸ்தவராக இருந்தால், ஆனால் நீங்கள் ஜீவிக்கிற இயேசு, உண்மையாகவே பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று விசுவாசித்தால், நீங்கள் இப்பொழுது அவரிடத்தில் நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்பினால், ஒவ்வொரு தலையும் வணங்கப்பட்டிருக்க, கண்கள் மூடப்பட்டிருக்க, நீங்கள் உங்களுடைய கரத்தை அவரிடத்தில் உயர்த்தி, “கர்த்தாவே என்னை நினைவுகூரும்” என்று கூறுவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது மிகவும் அருமையாக இருக்கிறது. வேறு யாரேனும் உண்டா? 298 இப்பொழுது, நாம் எண்ணிக்கையில் மிக அதிகமானவர்களாயிருக்கவில்லை. ஆனால், உலகமானது பெரிய காரியங்களையும் திரளான எண்ணிக்கைகளையும் எதிர்பார்க்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நாம் கடந்த மாலை கூறினது போல, தீர்க்கதரிசி முன்னோக்கி வந்து தன்னுடைய முகத்தை மூடிக்கொள்ளும்படி கவர்ந்தது அந்த அமர்ந்த மெல்லிய சத்தமாய் மாத்திரமே இருந்தது.

97299 இப்பொழுது, நீங்கள் தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னுடைய சகோதரனே, சகோதரியே, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். நம்முடைய மகத்தான, அன்பான கர்த்தராகிய இயேசு இந்த வார்த்தை இருக்கும் இடத்திற்கு வந்து, தம்முடைய சொந்த வார்த்தையைத், திறந்து, நான் பேசி இருக்கிறது சத்தியம் என்று இந்த பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு நிரூபிப்பாரே! நீங்கள் அநேக காரியங்களினால் அநேக முறைகள் குழப்பமடைந்திருக்கலாம், ஆனால் எங்கோ உண்மையானது இருக்கிறது என்பதை காண்பிக்கும்படியாக மாத்திரமே இது உள்ளது. அவர் அதைச் செய்கிறபோது, உங்களுடைய கரங்களை உயர்த்தின நீங்கள், சற்று, என்னை நோக்கிப் பார்க்கும்படி, நான் விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் உங்களுடைய தலைகளை உயர்த்தலாம். 300 கர்த்தராகிய இயேசுவே, இப்பொழுது இந்த ஆராதனையை உம்முடைய கரங்களில் எடுத்துக்கொள்ளும். நான் உம்முடைய ஊழியக்காரன். பிரசங்கித்த யாவும்… நாங்கள் எங்களுடைய ஜீவிய காலம் முழுவதும் கூற முடிந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் உம்மிடத்திலிருந்து வரும் ஒரு வார்த்தை அவ்வளவாய் பொருள்படும்; ஒரு வார்த்தையே. நான் இதை, இந்த சாட்சிகளை ஒப்புவிக்கையில், பிதாவே, அதை இப்பொழுதே அருளும். பிதாவே, அவைகள் உண்மை என்பதை நீர் அறிந்திருக்கிறீர். நீரே அவைகளை கொடுத்தவராய் இருந்தீர். அவைகள் ஒருபோதும் தவறிப்போனதில்லை. இயேசுவின் நாமத்தில், இதை அருளும். ஆமென்.

98301 இப்பொழுது, இங்கு உள்ள எத்தனை பேர், சுகவீனமாய் இருந்து, ஜெப அட்டைகள் இல்லாமல் இருக்கிறீர்கள்? சுகவீனமாயிருந்து, ஜெப அடைகள் இல்லாதவர்கள், கட்டிடத்தில் எங்கிருந்தாலும், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். சரி. ஜெப அடைகளை வைத்திருப்பவர்கள், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். கிட்டத்தட்ட அதே அளவுள்ளவர்கள் தான் இருக்கிறீர்கள். அவர்கள் எல்லோரும் கலந்திருக்கின்றனர். 302 இப்பொழுது கூட்டத்தாரை நோக்கி பார்க்கும்படிக்கு, முதலாவது, தேவனுக்கு முன்பாக உத்தகமாக இருக்கும்படிக்கும், உங்களுக்கு முன்பாக… நான் அதை அறிவேன், நான் இங்கு பார்த்துக் கொண்டிருக்கிறேன், அதாவது இங்கே இந்த மூலையில் என்னுடைய நண்பர்களில் சிலர் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். சகோதரன் நோயல், அவருடைய—அவருடைய…மற்றும் சகோதரி ஜோன்ஸ், சகோதரன் அவுட்லா, என்னுடைய மகன், இங்குள்ள இந்த சகோதரர்கள், மற்றும் சகோதரன் மூர். நான் இந்த சகோதரனை அறியேன், ஆனால் நான் அவரை கூட்டங்களில், கடந்த சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். இந்த சகோதரனுடைய பெயரை என்னால் கூற முடியாது, ஆனால் அவருடைய முகத்தின் மூலம் நான் அவரை அறிவேன். இங்கு இருக்கும் சகோதரி, சகோதரி வில்லியம்ஸ், சகோதரி ஷாரிட் அந்த மூலையில் அமர்ந்துள்ளனர். ஜெபர்சன்வில் கூடாரத்திலிருந்து வந்துள்ள சில ஜனங்கள் மிகவும் பின்னால் உள்ளனர்.

99303 என்னுடைய விலையேறப்பெற்ற ஒரு வயோதிக நண்பர் இங்கே உட்கார்ந்திருக்கிறார், தொண்ணூறு வயதானவர், தேசத்தைக் கடந்து, ஒஹையோவிலிருந்து காரோட்டி வருகிறார். நான் ஆப்பிரிக்காவிற்கு செல்ல போகிறேன், அவரும் அவருடைய அருமையான மனைவியும் அவர்களும் என்னோடு ஆப்பிரிக்காவிற்கு வர முடியுமா என்று கேட்டனர். “நாங்கள்…செலுத்துகிறோம்” என்றனர். தொண்ணூறு வயதானவர், ஒரு ஜெர்மானிய சகோதரன், கர்த்தரை ஒருபோதும் அறியாதிருந்தவர். ஓர் இரவு நான் பிரசங்கித்தபோது, அவர் தன்னுடைய நல்ல ஆடைகளோடு ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள உள்ளே வந்தார். தொண்ணூறு வயதானவர்! வெளிப்புறத்திலிருந்து… 304 ஒ, இது சகோதரன் வால்ட்ராப் மற்றும் சகோதரி வால்ட்ராப் அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, கிட்டத்தட்ட அவ்வளவுதான் தெரியும்…மற்றும் சகோதரன் பாடர்ஸ். இப்பொழுது இதைக் குறித்து அவ்வளவுதான். 305 இப்பொழுது நான் அவர்களுடைய பெயரை அழைத்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது, அந்த விதமாக என்னை நீங்கள் அறிந்திருந்தால், ஜெபிக்க வராதீர்கள். புரிகிறதா? எனக்காக ஜெபியுங்கள். புரிகிறதா?

100306 ஆனால் என்னை அறிந்திராத நீங்கள், நான் உங்களை அறிந்திருக்கவில்லை என்று அறிந்தவர்கள், நீங்கள் உங்களுடைய இருதயத்தில், “கர்த்தராகிய இயேசுவே, இது உரைக்கப்பட்டதைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த வேதாகமத்திலிருந்து இந்த ஊழியக்காரன் இன்றிரவு வாசித்ததை நான்—நான் கேட்டிருக்கிறேன். நான் அந்த சாட்சிகளைக் கேட்டேன், உங்களுக்குத் தெரியுமா, இது போலவே பல்வெவ்வேறு சமயங்களில் இது சம்பவித்ததை நான் கேட்டிருக்கிறேன். கர்த்தாவே, நாங்கள் முடிவு காலத்துக்கு சமீபமாய் இருக்கிறோமா? நாங்கள் நெருக்கமாக இருக்கிறோமா?” 307 சோதோமில் அந்த அடையாளம் செய்யப்பட்டபோது, அந்த பட்டணம் சுட்டெரிக்கப்பட்டதை, நினைவில்கொள்ளுங்கள், இயேசு அதை குறிப்பிட்டுக் கூறினார், “…இருந்ததுபோல” என்றார். அந்த பட்டணம் அழிக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் பெற்றுக்கொண்ட கடைசி அடையாளம் அதுவாயிருந்தது. மனுஷகுமாரன் வருகையில் அது மறுபடியும் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார். 308 இப்பொழுது, அதுசரிதான் என்று உங்களுக்குத் தெரியும், எப்படி அந்த…தேவன், மாம்சத்தில் தேவன்! தேவன் ஆபிரகாமிடத்தில் பேசினார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? ஆம். பாருங்கள், வேதம், “ஏலோஹிம்,” என்று கூறுகிறது, எனவே, அதாவது, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்த அந்த—அந்த மகத்தான சிருஷ்டி கர்த்தர், எல்லாவற்றிற்கும் போதுமான ஒருவர். அவர் அவ்வாறு இருந்தார்.

101309 அவர் என்ன காண்பித்துக் கொண்டிருந்தார்? அவர் ஒரு மானிட சரீரத்தில் இருந்து, அங்கே நின்று கன்றுக் குட்டியின் மாம்சத்தைப் புசித்து, பசுவின் பாலை குடித்து, அதன்பின்னர் காட்சியிலிருந்து மறைந்து போனார். “நான் உனக்கு வாக்களித்த குறித்த காலத்தின்படியே உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்” என்றார். புரிகிறதா? அவனை அவனுடைய பெயர் சொல்லி அழைத்தார். அவருடைய முதுகு திரும்பியிருப்பதோடு, “சாராள் எங்கே?” என்று கேட்டார். அப்பொழுது, “அவள் உமக்கு பின்னே கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். “நான் ஒரு உற்பவகாலத்திட்டத்தில உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்” என்றார். 310 சாராள், கூடாரத்தின் பின்புறத்தில், “ஹம், ஹம்,” என்றாள். 311 அவர், “சாராள் ஏன் நகைத்தாள்?” என்று கேட்டார். நினைவிருக்கட்டும், அவள் அவருக்கு பின்னே கூடாரத்தில் இருந்தாள் என்று வேதம் கூறியுள்ளது. “சாராள் ஏன் நகைத்தாள்?” என்று கேட்டார். சாராள், “நான் நகைக்கவில்லை” என்றாள். அதற்கு, “ஆம், நீ நகைத்தாய்” என்றார். புரிகிறதா? அது உண்மை. 312 ஒரு மனிதன் அங்கு நின்று, தேவன் தம்மை மாம்ச சரீரத்தில் பிரிதிநிதித்துவப்படுத்துதல். மனுஷகுமாரன் வருகையிலும் அவ்வாறே இருக்கும் என்று இயேசு கூறினார்: தேவன் தம்முடைய சபையில், உங்களை, என்னை, தம்மைப் பிரிதிநிதித்துவப்படுத்துதல். இப்பொழுது, ஒரு ஸ்தீரி இருந்தாள்…

102313 தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தபோது, அவர் ஆவியை முழுமையாக உடையவராக இருந்தார். அவர் தேவனாக இருந்தார். நான் அவருடைய ஊழியக்காரர்களில் ஒருவனாக இருக்கிறேன், நீங்களும் அவருடைய ஊழியக்காரர்களில் ஒருவராக இருக்கிறீர்கள். நாம் அந்த—அந்த ஆவியை ஒரு அளவாக பெற்றிருக்கிறோம். அவர் அதை அளவில்லாமல் பெற்றிருந்தார். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.” எனக்குள் ஒரு சிறிய வரம் இருக்கிறது, உங்களுக்குள்ளும், அவரைக் குறித்த, ஒரு சிறிய வரம் உள்ளது. ஆனால், அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது அதே ஆவியாயிருக்கிறது. 314 இப்பொழுது, அது தேவனுடைய ஆவியாயிருந்தால், அது தேவனுடைய கிரியைகளைச் செய்யும். இப்பொழுது, நீங்கள் ஜெபித்து, “கர்த்தராகிய இயேசுவே, ஒரு ஸ்தீரி ஒரு சமயம் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாளே” என்று கூறுங்கள். மேலும் நாம் கூறுவோம்… 315 இங்கே புதிய ஏற்பாட்டில், அவர் எபிரெயரில் கூறினார், அவர், “அவர் நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய, பிரதான ஆசாரியராய் இப்பொழுது இருக்கிறார்” என்றார். அது வேதாகமத்தில் உள்ளது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] நிச்சயமாக. பாருங்கள், அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

103316 பாருங்கள், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பாரானால், அவர் எவ்வாறு உங்களுக்கு பதில் அளிப்பார்? அவர் இன்றைக்கும் மாறாதவராயிருப்பாரென்றால், அவர் நேற்று பதில் அளித்தது போலவே அளிப்பார். 317 இப்பொழுது, நீங்கள் ஜெபித்து, “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்முடைய வஸ்திரத்தைத் தொடட்டும். அதன்பின்னர், எங்களை உற்சாகப்படுத்த, நீர் சகோதரன் பிரான்ஹாமுக்கு ஒரு சிறிய வரம் கொடுத்திருக்கிறீர். அவருக்கு என்னைத் தெரியாது. (நான் மிகவும் பின்னால் இங்கே: இங்கே; இங்கே கீழே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்; நான் எங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறேனோ…) அவருக்கு என்னைத் தெரியாது, ஆனால் நீர் என்னை அறிந்திருக்கிறீர். கர்த்தாவே, நான் உம்முடைய மகத்தான ஆவியைக் காணட்டும். நான் அதைச் செய்ய வேண்டும் என்றல்ல, ஆனால் என்னையும் மற்றவர்களையும் ஊக்குவிக்க உதவி செய்வீராக, ஏனெனில் நாங்கள் வார்த்தையைப் படித்துள்ளோம். நான் உம்முடைய வஸ்திரத்தைத் தொடட்டும், அப்பொழுது நீர் உடனே திரும்பப் பேசுவீர். இன்றிரவு அந்த நோக்கத்துக்காக, கர்த்தாவே, என்னை உபயோகப்படுத்துவீராக. அது நீர் இன்னும் உயிரோடிருக்கிறீர் என்பதை முழு கூட்டத்தாருக்கும் காண்பிக்கும்.” என்று கூறுங்கள். அவர் அதைச் செய்தால் அது அற்புதமாயிருக்குமா?

104318 இப்பொழுது, நீங்களாகவே அமைதியாக, நீங்கள் இந்த விதமாக ஜெபியுங்கள். “கர்த்தாவே நான் உம்முடைய வஸ்திரத்தை தொடட்டும்” என்று கூறுங்கள். நான் ஆவியானவருக்கு என்னை ஒப்புக்கொடுப்பேன், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரே மற்றதை செய்வாராக. காரணம், இப்பொழுது நான் பேசியுள்ளேன், சாட்சி பகிர்ந்துள்ளேன், ஆனால் என்னால் இதற்கு மேல் எதுவுமே இப்பொழுது செய்ய முடியாது. நான் என்னுடைய பாதையின் முடிவில் இருக்கிறேன். 319 உங்களுக்கு தெரியுமா, நான்…நான் அதைப் பார்க்க வேண்டுமானால், நான் கூட்டத்தாரை கவனிக்க வேண்டும். நீங்கள் அதை புரிந்துகொள்கிறீர்கள். 320 என்னுடைய இடப்பக்கத்தில், பின்னால், கிட்டத்தட்ட கட்டிடத்தின் பின் பகுதிகளின் நடுவில், ஒரு ஸ்திரீ ஜெபித்துகொண்டிருக்கிறாள். தேவன் அவளுக்கு உதவிசெய்யவில்லையென்றால், அவள் மரிக்கப்போவதாயிருக்கிறாள். அவளுக்கு புற்றுநோய் இருக்கிறது, அந்த புற்றுநோய் அவளுடைய மார்பகத்தில் இருக்கிறது. ஓ, இதை அவள் தவறவிடாதிருப்பாளாக! ஓ கர்த்தாவே, எனக்கு உதவி செய்யும். சகோதரியே நீங்கள் விசுவாசித்தால் நலமாய் இருக்குமே! ஓ, என்னே! அவள் அதை தவறவிடப்போகிறாள். கர்த்தராகிய இயேசுவே, எங்களுக்கு உதவி செய்யும் என்றே, நாங்கள் ஜெபிக்கிறோம். 321 மேரி மே. நீ அங்கு இருக்கிறாய். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோமா? எனக்கு உன்னைத் தெரியாது. உனக்கும் என்னைத் தெரியாது. அந்த நிலைமைகளாய்த்தான் இருந்தது, என்ன…கூறப்பட்ட ஒவ்வொரு காரியமும் சரியாயிருந்ததா? அப்படியானால் விசுவாசி. அது முற்றுபெறும். ஆமென்.

105322 அவள் மேலிருந்த இருள், இப்பொழுது, அது வெளிச்சமாய் உள்ளது. நிச்சயமாகவே அந்தப் பையனைப் போலவே, அந்த காக்காய் வலிப்பு அவனை விட்டு விலகியே இருந்தது. அங்கே வடக்கு காட்டுப்பகுதிகளில் இருந்த ஒருவர், அதே தேவன், இங்கும் அதே தேவனாய் இருக்கிறார். அப்படியே விசுவாசித்துக் கொண்டிருங்கள். ஆமென். “நீங்கள் விசுவாசிக்கக் கூடுமானால் நலமாயிருக்குமே!” 323 இங்கே என் முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற ஒரு ஸ்திரீயின் மேல் அது உள்ளது. அவளுக்கு அவளுடைய முதுகில் ஏதோ கோளாறு உள்ளது. அது அவளுடைய முதுகில் உள்ள, ஒரு இணைப்பு எலும்பு விலகலாயுள்ளது. அவள்—அவள் இந்தப் பகுதியிலிருந்து வரவில்லை. அவள் மோன்டானாவிலிருந்து வந்திருக்கிறாள். அவளுடைய பெயர் செல்வி ஸ்டப்ஸ். எழும்பி நின்று, உங்களுடைய சுகமளித்தலை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கடினப்பட வேண்டாம். இறுக்கமற்றிருங்கள். 324 ஒரு பெரிய நபர் இங்கே உட்கார்ந்து, என்னையே பார்த்துக்கொண்டு, அந்த விதமாக செய்கிறார். விசுவாசியுங்கள். நீங்கள் சுகமடைவீர்கள். நரம்புத் தளர்ச்சி அடைந்துள்ளீர்கள். நீங்கள் அதை விசுவாசித்தால், தேவன் உங்களை சுகமாக்குவார்.

106325 ஸ்திரீகளுக்கான தொல்லையோடுள்ள பெண்மணி. இதை விசுவாசி, நீ சுகமடைய முடியும். வீட்டுக்குத் திரும்பிச் சென்று, தேவனில் விசுவாசமாய் இரு. நான் ஏன் வீட்டுக்கு திரும்பிச் செல்லக் கூறினேன்? திரு. மற்றும் திருமதி வாட்க்கின்ஸ், நீங்கள் அங்கு சென்றடைய, நியூ மெக்சிகோவிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். இப்பொழுது, எனக்கு உங்களைத் தெரியாது என்று உங்களுக்குத் தெரியும். ஆமென். 326 உங்களுக்கு சரியாக பின்னால் அந்தப் பெண்மணி, காலில் புண்ணோடு இருக்கிறாள், செல்வி பௌரவுன். தேவன் உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிப்பாயா? நீ மிகுந்த ஆர்வங்கொண்டு நோக்கிப் பார்க்கிறாய். இப்பொழுது, நான் உன்னை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதில்லை என்பதை நீ அறிவாய். இடது காலின் மேல். இப்பொழுது, நீ உன்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசி, நீ சுகமடைவாய். 327 ஒரு பெண்மணி அசைய முயற்சிக்கிறாள், அவளுக்கு மூட்டு வீக்கம் உள்ளது. அது அவளை மோசமாக, இறுக்கிக்கொண்டிருக்கிறது. திருமதி ஃபேர்ஹெட், நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள், நீங்கள் சுகமடைவீர்கள். இப்பொழுது, உங்களை என் ஜீவியத்தில் நான் ஒருபோதும் பார்த்ததேயில்லை என்று உங்களுக்குத் தெரியும். அதாவது, ஓ… [அந்த சகோதரி, “…முன்பே குணமடைந்தேன். நான் முன்பே குணமடைந்திருந்தேன், மேலும் எனக்கு சுகமாகப்போகிறது என்று எனக்குத் தெரியும்” என்று கூறுகிறாள்.—ஆசி.] ஆமென். ஆம். 328 இப்பொழுது நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, அவர் என்ன செய்வார்? “நான் உங்களுக்கு கூறியிருக்கிற காரியங்களை அவர் எடுத்து அவைகளை உங்களுக்கு காண்பிப்பார். அதன் பின்னர் அவர் வரப்போகிற காரியங்களையும் உங்களுக்குக் காண்பிப்பார்.” நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை மீண்டும் வணங்குவோமாக.

107329 இப்பொழுது, நீங்கள் இந்த ஜீவியத்திலிருந்து இன்றிரவு கடந்து செல்வீர்களானால், அதாவது நீங்கள் இருக்கலாம்…இல்லாமலும் இருக்கலாம், நீங்கள் மறுபடியும் பிறவாதிருந்தால், அப்பொழுது நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தைக் காணமாட்டான்.” நீங்கள் ஏன் இங்கே வரக்கூடாது? இங்கே நில்லுங்கள், சரியாக இங்கே, அப்படியே ஒரு நிமிடத்தில், நாங்கள் உங்களுக்காக ஜெபிப்போமாக. இந்த ஆவியின் பிரசன்னத்தில் இப்பொழுதே நீங்கள் வருவீர்களா? 330 நீங்கள் கர்த்தருடைய வருகையை காணும்வரை நீங்கள் ஒருபோதும் வேறந்த பெரிய காரியம் சம்பவிப்பதையும் காணமாட்டீர்கள். இப்பொழுது, அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாகவே நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன், இல்லையென்றால் அவர் இந்த ஊழியத்தை அருளமாட்டார். இது உங்களை இப்பொழுது கடந்து செல்ல விட்டுவிட வேண்டாம். நீங்கள் உத்தமமாக இருக்கிறீர்களா? 331 நீங்கள் வருவீர்களா? இல்லையென்றால், அப்பொழுது, அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையேயுள்ளது. நான் குற்றமற்றவன். நான் எல்லாருடைய இரத்தபழிக்கும் நீங்கி சுத்தமாயிருக்கிறேன், ஏனெனில் நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்லியிருக்கிறேன். நான் உங்களுக்கு வார்த்தையைப் பிரசங்கித்திருக்கிறேன். அவர் என்னவாக இருந்தார் என்பதை நான் உங்களுக்கு கூறியிருக்கிறேன். அவர், அவர் வரும்போது, அப்பொழுது அவர் என்னவாக இருந்தார் என்பதை அவரே நிரூபிப்பார்; அவர் இப்பொழுது என்னவாக இருக்கிறார் என்று என்னை நிரூபிக்க அனுமதிக்கிறார். அவர் அப்பொழுது இருந்தவிதமாகவே இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?

108332 அப்படியானால், அப்படியானால் இங்கு உள்ளே சுகவீனமாய் இருக்கிறவர்கள், இங்கே சுகவீனகமாய் இருக்கிற மற்றவர்கள் எத்தனை பேர்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். 333 இப்பொழுது ஒருவர் மீது ஒருவர் உங்களுடைய கரங்களை வையுங்கள், நாங்கள் உங்களுக்காக விசுவாச ஜெபத்தை ஜெபிப்போமாக. 334 இப்பொழுது உங்களிடத்தில் ஒரு காரியத்தை, அமைதியாக கேட்க விரும்புகிறேன். தேவனால், தேவன் வந்து அந்த அற்புதத்தை செய்தால் நலமாயிருக்குமே! விவரிக்கப்பட முடியாத ஒரு காரியமே ஒரு அற்புதமாகும். இப்பொழுது, நீங்கள் சுற்றிலும் உள்ள இந்த ஜனங்களிடத்தில் எந்த கேள்வியாக கேட்க வேண்டும் என்று விரும்பினால், எந்த நேரத்திலும் எங்கிருந்தாலும், போய் அவர்களிடத்தில் கேள்வி கேளுங்கள். புரிகிறதா? இது தேவனாய் இருக்கிறது என்பதை, அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கே இந்த தரிசனங்கள் சிறிய காரியமாயுள்ளது. யார்—யார், எது அதை செய்துகொண்டிருக்கிறது? அது நீங்கள், நீங்களாகவே உள்ளது. அதை செய்துகொண்டிருக்கிறது நீங்கள்தான்.

109335 நீங்கள் பாருங்கள், அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டபோது அவரோ, “வல்லமை என்னிடத்திலிருந்து புறப்பட்டது” என்றார். ஆனால் பிதாவானவர் லாசருவைக் குறித்து அவருக்குக் காண்பித்தபோது, அவர் போய்விட்டிருந்தார், பின்னர் திரும்பி வந்து மரித்தோரிலிருந்து லாசருவை உயிரோடு எழுப்பினார் அப்பொழுது அவர் ஒருபோதும் “வல்லமை” என்று சொல்லவேயில்லை. அது தேவன் தம்முடைய சொந்த வரத்தை உபயோகித்துக் கொண்டிருந்தது, மற்றொன்றோ ஒரு ஸ்திரீ தேவனுடைய வரத்தை உபயோகித்துக் கொண்டிருந்ததாயிருந்தது. 336 நான் தேவனுடைய வரம் அல்ல. இயேசுகிறிஸ்துதான் தேவனுடைய வரம். இது அவர் எனக்குக் கொடுத்த ஒரு வரமாய் இருக்கிறது, அதாவது நான் மறைநினைவோடும் சுயநினைவோடும் (முதல் சுயநினைவு) ஒன்று சேர்ந்து அந்த விதமாக பிறந்தேன். அப்படியானால் நீங்கள் உறங்கச் செல்வதில்லை; நீங்கள் அப்படியே அதை காண்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் முதலாம் சுயநினைவில் வருவதுபோல் அவர் மறைநினைவிலும் வருகிறார். அது உங்களுடைய மறைநினைவின் மேல் வந்தால், அப்பொழுது நீங்கள் ஒரு ஆவிக்குரிய சொப்பனத்தைக் காண்பீர்கள். அது என் மீது வரும்போது நான் சொப்பனம் காண்கிறதில்லை. நான் அங்கே நோக்கிப் பார்த்து அதைக் காண்கிறேன். புரிகிறதா? மேலும், நீங்கள் உங்களை எந்த காரியத்திலும் வித்தியாசமாகிக் கொள்ள முடியாது. நீங்கள் அந்த விதமாக பிறந்திருக்கிறீர்கள். புரிகிறதா? “தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.” இது எதைச் செய்வதகாக உள்ளது? இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்கே. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.

110337 உங்களுடைய கரங்களை ஒருவர் இன்னொருவர் மீது வைத்திருப்பதோடு, நீங்கள் உங்களுடைய இருதயத்தை இப்பொழுதே தேவனுடைய கவனத்தில் வைத்து, “கர்த்தாவே, என்னை ஆராய்ந்து பாரும். கடந்து சென்று கொண்டிருக்கிற இந்த மகத்தான நேரத்தை நான் காண தவறிக் கொண்டிருக்கும்படி உலகத்தின் காரியங்களினால் நான் அவ்வளவாக மரத்துப்போயிருக்கிறேனா என்று கூறுவீர்களா?” என்று நான் நம்புகிறேன். 338 அது எப்பொழுதுமே அந்த விதமாக இருந்து வந்துள்ளது என்பதை, நீங்கள் அறிவீர்கள். அது சபையினூடாக சென்றபோது அவர்கள் அதை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அது சரித்திரமாயுள்ளது. நண்பர்களே, மேலும் மேலும், வார்த்தை நிரூபிக்கப்படுவதைக் காணவும், தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்பட்டதைக் காணவும், மேலும் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் இந்த ஜனங்களுக்கு மத்தியில் வந்து அவர் இதற்கு முன்பு செய்த விதமாகவே செய்வதையும், காணாமல் அதை கடந்துபோக விட வேண்டாம்.

111339 பரலோகப் பிதாவே, கர்த்தாவே உம்முடைய வார்த்தை வாசிக்கப்பட்டது என்பதை, நான் இப்பொழுதே உணருகிறேன். சாட்சி கொடுக்கப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து வார்த்தையையும் சாட்சியையும் ரூபகாரப்படுத்தினார். கர்த்தாவே, இப்பொழுது இது ஜனங்களுடைய கரங்களில் உள்ளது. இது அவர்களுடைய மடியில் உள்ளது. கூறுவதற்கு எனக்குத் தெரிந்து வேறு எதுவும் என்னிடத்தில் இல்லை. நீர் செய்வதாக, வார்த்தையில் எழுதியுள்ளதைத் தவிர வேறு எதையும் நான் அறியேன், ஏனென்றால் நீர் அவர்களை ஏற்கனவே சுகமாக்கிவிட்டீர். அது அவர்கள் அதை விசுவாசிக்க செய்வதற்காகும். இந்தவிதமான ஒரு காரியத்தை நீர் செய்யும் போது, நாங்கள் எப்படி இனிமேலும் சந்தேகிக்க முடியும்? எப்படி சாத்தான் எங்களுடைய சுயநினைவை இனிமேலும் மரத்துப்போகச் செய்ய நாங்கள் அனுமதிக்க முடியும்? 340 சாத்தானே, இந்த ஜனங்களின் மீது இந்த சுகமளித்தலை நான் அறிவித்து, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இங்கிருந்து வெளியேறும்படி, நான் உனக்கு கட்டளையிடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வெளியே வா, இந்த ஜனங்களை போகவிடு,” என்று உன்னிடத்தில் கூறுகிறேன். 341 இப்பொழுது, நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களேயானால், எழும்பி நில்லுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் எழும்பி நின்று, தேவனுக்கு துதி செலுத்துங்கள். எழும்பி நின்று விசுவாசியுங்கள். இனி அதை சந்தேகிக்காதீர்கள். 342 கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பரிசுத்த ஆவியானவர் இந்த ஜனங்களுக்கு சந்தோஷத்தையும், வல்லமையையும், உயிர்த்தெழுதலையும், ஜீவனையும் கொண்டு வரட்டும். 343 அவருக்கு இப்பொழுது துதி செலுத்துங்கள், அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரியுங்கள். நாங்கள் அவரை நேசிக்கிறோம். நாங்கள் அவரை துதிக்கிறோம். நாங்கள் இணையற்ற ஒருவரை, நித்தியமான ஒருவரை, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய, அவரைப் போற்றுகிறோம். அவருடைய நாமத்தில், அவரை ஏற்றுக்கொள்கிறோம். அவர் இங்கிருக்கிறார். ஆமென். 