1 சகோதரன் பார்டர்ஸ், உங்களுக்கு நன்றி. நாம் ஜெபம் செய்யும்போது, நாம் அப்படியே நின்ற வண்ணமாய் இருப்போமாக. இன்றிரவு உங்களுடைய கரங்களை உயர்த்தி, “கர்த்தாவே, அது நானே”? என்று கூறும் ஒரு வேண்டுகோளை யார் உடையவராய் இருக்கிறீர்கள்என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது நாம்நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
22 எங்களுடைய பரலோகப் பிதாவே, “கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்” என்ற அந்தப் பாடலை நாங்கள் கேட்கும்போது, உலகெங்கிலும், பல மொழிகளில் நாங்கள் அதை கேட்டிருக்கிறதையும், அந்த சமயங்களைக் குறித்தும் நாங்கள் சிந்தித்துப் பார்க்க முடிகிறது, “கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்.” விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். பிதாவே, இது இன்றிரவு எங்களுக்கு ஒரு பாடலைக் காட்டிலும் மேலானதாக ஒரு உண்மையாக மாற வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இன்றிரவு நாங்கள் உம்மில் மகத்தான விசுவாசம் கொண்டிருப்போமாக. 3 இப்பொழுது நாங்கள் இந்த சிறிய சபைக்காகவும், அதன் போதகருக்காகவும், எங்களுடைய சகோதரன் புல்லர், உம்முடைய ஊழியக்காரன், நாங்கள் நம்பிக்கை கொண்ட ஒரு சகோதரனுக்காக ஜெபிக்கிறோம். நாங்கள் அவருடைய குடும்பத்தினருக்காகவும், இங்குள்ள அவருடைய ஊழியர்கள், உதவிக்காரர்கள், தர்மகர்த்தாக்கள் மற்றும் இந்த பரிசுத்தமாக்கப்பட்ட வாசல்களுக்குள் வந்துள்ள எல்லோருக்காகவும் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, அது இயேசு கிறிஸ்துவுக்கான ஒரு கலங்கரை விளக்கமாக எப்பொழுதும் தரித்திருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 4 இன்றிரவு இங்குள்ள எல்லா ஊழியக்கார சகோதரர்களையும், வீதியினூடாக எங்களோடு உள்ளேயும், வெளியேயும் வருகிறவர்களையும் ஆசீர்வதியும். பிதாவே, நீர் அவர்களை அபரிமிதமாக ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 5 இன்றிரவு உம்முடைய பிரசன்னத்தின் மற்றொரு பொழிவை எங்கள் மேல் பொழியும்படி நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே, நாங்கள் தேவையுள்ளவர்களாயிருக்கிறோம். எங்களுக்கு நீர் தேவை. கர்த்தாவே, நாங்கள் இங்கே யுத்தகளத்தில் உள்ள காரணத்தால் நாங்கள் தொடர்ந்து தேவையுள்ளவர்களாக இருக்கிறோம், அங்கு முடிவுகளை எடுக்க வேண்டும். பிதாவே, உம்முடைய பிரசன்னத்தினால் எங்களை நீர் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்று, நாங்கள் ஜெபிக்கிறோம். நீர் எங்களோடு இருக்கிறீர் என்பதை அறிந்துகொள்வது எங்களுக்கு நிறைய செய்கிறது. கர்த்தாவே, உம்முடைய பிரசன்னத்தை அப்படியே காண்பியும், அப்பொழுது அது முன்னேறிச் செல்லும்படி எங்களை ஊக்குவிக்கும். வியாதியஸ்தரையும், பாதிக்கப்பட்டோரையும் சுகப்படுத்தும். இழக்கப்பட்டவர்களை இரட்சியும். சோர்வுற்றவர்களை உற்சாகப்படுத்தும். உமக்கே மகிமையை எடுத்துக் கொள்ளும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம்.
36 “‘கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்’ என்று அவர்கள் என்னிடத்தில் சொன்னபோது நான் மகிழ்ச்சியாயிருந்தேன்” என்று தாவீது கூறினான் என்று நான் நினைக்கிறேன். 7 சற்று முன்னர் பில்லி, “அப்பா, நீங்கள் ஒருவிதமாக சோர்வடையவில்லையா?” என்று கேட்டான். 8 நான், “ஆம். என் வாழ்நாள் முழுவதும் நான் களைப்படைந்து வந்திருக்கிறேன்” என்று கூறினேன். அதனால், அது எனக்கு மிகவும் பழக்கமாகிவிட்டது. 9 நான், “பாருங்கள், எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. நான் ஒருவிதமாக சற்று குறைத்துக் கொள்ள வேண்டும்” என்று எண்ணத் துவங்கினேன். அப்பொழுது சுமார் எண்பது அல்லது தொண்ணூறு வயதுடைய யாரோ ஒருவர் வந்து தேசத்தையே கொழுந்துவிட்டு எரியச் செய்கிறார், அது கிட்டத்தட்ட என்னைவிட இருமடங்காகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான், “என்னே! நான் என்னைக் குறித்து வெட்கப்படுகிறேன்” என்று எண்ணிக் கொண்டேன்.
410 வீட்டில் உள்ள கூடாரத்திற்கு, அங்கே ஒஹையோவிலிருந்து கிட் என்ற பெயருடைய எளிய வயோதிக தம்பதிகள் வருகிறார்கள். இப்பொழுது, அவர்கள் இருவருமே, மிகவும் வயோதிகர்களாய், எண்பத்தைந்து அல்லது எண்பத்தியெட்டு வயதுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் சபைக்கு செல்ல முடியாத அளவிற்கு அவர்கள் மிகவும் வயோதிகராகிவிட்டார்கள், ஏனென்றால் அவர்களுடைய…அவர்களுக்கு பேசுவதற்கு போதிய பெலன் இல்லை. ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒலிநாடாவையும்…இந்த வயோதிக ஸ்திரீ தன்னுடைய பணத்தை சேமித்து ஒரு ஒலிப்பதிவு கருவியை வாங்கினாள். எனவே அவள் ஒரு ஒலிநாடாவைப் பெறுகிறாள். நான் அவளுக்கு ஒலிநாடாக்களை அனுப்புகிறேன். அவள் இந்த ஒலிநாடாக்களை எடுத்து, அவள் மருத்துவமனைகளுக்குச் சென்று, இந்த ஒலிப்பதிவு கருவியை வைத்து, அவளும் அவளுடைய எளிய வயதான கணவனும் அந்த ஒலிநாடாக்களை இயக்கி காண்பிக்க முடிகிறது. அதன்பின்னர் நான் ஜெபித்திருக்கிற ஜெப துணிகளின் ஒரு பெரிய சுருளை அவளுக்கு அனுப்புவேன். எப்பொழுதாவது ஒரு முறை, “சகோதரன் வில்லி, என்னிடத்தில் ஜெபத்துணி மீண்டும் தீர்ந்து விட்டது” என்பார். அதன்பின்னர் நான் அவர்களைக் காணும்போது, அவள் சிறிய வெள்ளை முடியோடும், சிறிய சால்வையோடும் சபைக்கு வந்திருப்பாள்; மற்றும் அவர், ஒரு சிறு உருவம் கொண்டவராய் இருந்தார். சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் இருந்தபோது…
511 ஓஹையோவில் அவர்கள் ஒவ்வொரு வருடமும் அந்த தொடர் கூட்டத்தை நடத்தும் அந்த இடத்தின் பெயர் என்ன? அவர்கள் அதை சாட்டாகுவா என்று அழைக்கிறார்கள். ஆனால் இப்பொழுது நான் மறந்துவிட்டேன். அது அங்குள்ள மைதானத்தில் உள்ளது. ஆனால் அந்த நகரத்தின் பெயர் என்ன, என்னால் அதைக் குறித்து நினைவில் வைத்திருக்க முடியவில்லை. [ஒரு சகோதரன், “பிராங்க்ளின்” என்று கூறுகிறார். ஒரு சகோதரி, “மியாமி, மிடில்டவுன் அருகில்” என்று கூறுகிறார்.—ஆசி.] இப்பொழுது, அது, நீங்கள் இப்பொழுது அருகாமையில் இருக்கிறீர்கள். நாம் மியாமி வழியாக செல்கிறோம் என்று யாரோ கூறினார். [அந்த சகோதரன் மீண்டும், “பிராங்க்ளின்” என்று கூறுகிறார்.] அது பிராங்க்ளினுக்கு அருகில் உள்ளது. ஆம். அது உண்மை. சரியாக…இது பிராங்க்ளினுக்கு இடையில் இருப்பதாக நான் நம்புகிறேன்…பிராங்க்ளின்… [இரண்டு சகோதரர்கள், “மிடில் டவுன்” என்று கூறுகிறார்கள்.] மிடில்டவுன். அதுதான். அது உண்மை. எனவே, அது உண்மை, மிடில்டவுன், ஆற்றண்டையில், எனவே அங்கே உள்ள சாட்டாகுவா மைதானத்தில் உள்ளது. அதுதான் அந்த பெரிய கூடைப்பந்து, தடகள விளையாட்டு மையம்.
612 இந்த சகோதரன், ஓ, நான் அவர்களை பல வருடங்களாக அறிந்திருக்கிறேன், எளிய வயதான சகோதரன் கிட், ஓ, அவர்கள் அவரைக் கொண்டு சென்றபோது, அவருக்கு எண்பது வயதாயிருந்தது என்று நான் யூகிக்கிறேன், அவருடைய சுக்கிலவிலுள்ள சுரப்பிகள் வீரியம் மிக்கதாக மாறிவிட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். எனவே இந்த வளர்ச்சி அவரை சுற்றிக் கொண்டது. பாருங்கள், அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அதை திறந்தபோது, “அவருக்கு அது முற்றிப்போய் இருந்தபடியால், ஏன், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை” என்றனர். பார்த்தீர்களா? அதற்கு அவர், “அதைச் செய்ய வழியேக் கிடையாது” என்றார். பாருங்கள், அந்த எளிய நபரை வீட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் எண்பது வயது நிரம்பிய ஒரு மனிதனுக்கு அறுவை சிகிச்சை கடினமானதாகும். அவர் ஏறக்குறைய, ஓ, நூறு பவுண்டுகளுக்கும் குறைவான எடையில் மாத்திரமே இருந்தார், என்று நான் யூகிக்கிறேன். 13 எனவே, திருமதி கிட் தொலைபேசியில் அழைத்தார். நான் எங்கிருந்தோ வீட்டிற்கு வந்திருந்தேன். சகோதரன் கிட் மரித்துக் கொண்டிருந்தார். மேலும், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள்…அவர் மரிப்பதற்கு முன்பு அவர் உங்களைக் காண விரும்புகிறார்” என்றார். சரி, பில்லியும் நானும் ஒரு திருப்புமுறைக்கு திரும்பினோம். நாங்கள் ஒரு இரவு, சுமார் பத்து மணிக்கு, செய்தியைப் பெற்றோம். அடுத்த நாள் காலை சுமார் நான்கு மணிக்கு நாங்கள் புறப்பட்டோம். காரணம், அடுத்த நாள் நண்பகல் வேளையில், நான் மறுபடியும் செல்ல வேண்டியதாயிருந்தது. நாங்கள் எங்களுடைய காரின் டயர்கள் ஏறக்குறைய கிழிந்து போகுமளவு வேகத்தில் அங்கு சென்றடைந்தோம்.
714 எளிய வயோதிக நபர், நான் அங்கு சென்றபோது, அவர்கள் அவரை எழுப்பினர். அவர் தன்னுடைய தோள்களில் ஒரு சிறிய சால்வையை அணிந்து, அங்கே ஒரு வயோதிக கோத்திரப் பிதாவைப் போல அமர்ந்திருந்தார். அது எனக்கு ஏதோ ஒரு காரியத்தைச் செய்தது. நான் அவரை நோக்கிப் பார்க்கச் சென்றபோது, அவர் நோக்கிப் பார்த்தார். 15 அவருடைய சபையின் அங்கத்தினர்களில் ஒருவரான மற்றொரு வயோதிகப் பெண்மணி அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தாள் அவர் கென்டக்கியில் உள்ள நிலக்கரி தேசமான மலைகளில் பிரசங்கித்தார், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி தன்னுடைய கணவனை ஊழிய களத்திற்கு அனுப்ப, அங்கே ஒரு நாளைக்கு பதினைந்து செண்டுகளுக்காக துணிகளை துவைத்தார். அது நான் பிறப்பதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே; அவர் செய்தியை பிரசங்கித்து வருகிறார்! அவர் அவளை நோக்கிப் பார்த்து, “பாட்டி,” என்று அழைத்தார், அவருக்கு எண்பது வயது. அவளோ தொண்ணூறு வயதைக் கடந்தவளாயிருந்தாள். எனவே அவர், “பாட்டி, நீ பனியைப் போல வெண்மையாக இருக்கிறாய்” என்றார். 16 அப்பொழுது நான், “ஒரு ஊழியக்காரன் தன்னுடைய சபையில் உள்ள சிலரை, அங்கேயே படுத்துக்கொண்டு, மரித்துக் கொண்டிருக்கையில், அந்தவிதமாகவே நோக்கிப் பார்க்க வேண்டும். ‘பாட்டி, நீ பனியைப் போல வெண்மையாக இருக்கிறாய்’” என்று எண்ணினேன். ஆம். அவர் திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தார். அவர், “சகோதரன் பிரான்ஹாமா?” என்று கேட்டார். நான், “ஆம், சகோதரன் கிட் என்ன?” என்று கேட்டேன்.
817 அதற்கு அவர், “பாருங்கள், அவர் என்னுடைய இரதத்தை அனுப்புவதற்கு நீண்ட காலம் செல்லாது என்று நான் யூகிக்கிறேன்” என்றார். “நான் இன்று காலை மேலே போகிறேன்” என்றார். 18 நான், “அற்புதம், சகோதரன் கிட்” என்றேன். நான், “அந்தவிதமாகத்தான் உணர வேண்டும்” என்றேன். 19 இங்குள்ள சகோதரி கிட் அவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம். எனக்குத் தெரியும், ஓ, உங்களில் அநேகர் அவர்களை அறிவீர்கள். எனவே அவர் கூறினார்…அவள், “ஆனால், சகோதரன் வில்லி, இப்பொழுது தேவனால் அப்பாவை சுகப்படுத்த முடியும் என்று நீர் நினைக்கவில்லையா?” என்று கேட்டாள். அதற்கு அவர், “நிச்சயமாக, அவரால் முடியும்” என்றார். 20 அவர், “நல்லது, தேவனுக்கு மகிமை!” என்றார். அவர், “அவர் என்னை சுகப்படுத்த விரும்பினால்,” என்று கூறி, “நான்—நான் மீண்டும் ஊழியம் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன்” என்றார். நான், “எண்பது வயதாயிற்றே!” என்று எண்ணினேன். நான் முழங்காற்படியிடத் துவங்கினேன். அங்கே தரிசனம் உண்டானது. அதுதான் அது. 21 இரண்டு நாட்கள் கழித்து, அவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருடைய பையன்கள் அங்கே நகரத்தில் காவல் துறையில் இருந்தனர். அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரை மீண்டும் மருத்துவரிடம் கொண்டு சென்றனர். மருத்துவர் அவருடைய தலையை சொறிந்து கொண்டு, “அதைக் குறித்த எந்த ஒரு தடயத்தையும் என்னால் எங்கும் கண்டறிய முடியவில்லை, இப்பொழுது உன்னுடைய கதையை என்னிடம் கூறு” என்றார். அதன்பின்னர் அவர் மருத்துவமனையையே பரவசமடையச் செய்தார். இதோ அவர் தன்னுடைய ஒலிப்பதிவு கருவியுடன் வந்து, செய்தியை இயக்கிக் காண்பிக்கிறார். அவர்கள் அங்கே…அங்கே சாட்டாகுவாவுக்கு அருகாமையில், அங்கே வசிக்கின்றனர்.
922 இப்பொழுது, நாம் ஏழு சபைக் காலங்களை பிரசிங்கித்தது போல, நான் ஏழு முத்திரைகளை பிரசங்கிக்கப் போவதாக கூறின உடனே, அன்றொரு இரவு அவள் என்னை தொலைபேசியில் அழைத்தாள், அவள், “தேனே, என்னிடம் பணம் இருந்தால் நலமாயிருக்கும்” என்றாள். அவள், “நான் நிச்சயமாக இங்கு வர விரும்புகிறேன்” என்றாள். 23 நான், “திருமதி கிட், அதை மறந்துவிடுங்கள். உங்களுடைய—உங்களுடைய அறை காத்துக் கொண்டிருக்கிறது. நீங்களும் அப்பாவும் இங்கு வாருங்கள்” என்றேன். அவள், “உங்களுடைய எளிய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக!” என்றாள். 24 அது என்னை மிகவும் நன்றாக உணரச் செய்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏனென்றால் அவைகள் என்னை உற்சாகப்படுத்துகின்றன. எண்பத்தைந்து அல்லது எண்பத்தாறு வயதாயிருந்தாலும், இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது நான், ஐம்பத்து மூன்று வயதில், இங்கே குறை கூறுகிறேன். எனவே, என்னே, அது உங்களுக்கு தைரியம் வருவதைப் போன்ற உணர்வை உண்டாக்குகிறது.
1025 சரி, நாங்கள் பேசுவதற்கு நிறைய இருக்கிறது, மேலும் பேசுவதற்கு ஒரு அழகான குழு உள்ளது, ஏன், நாம் பாதி இரவு இங்கேயே இருக்க முடியும். 26 ஆனால் நீங்கள் இப்பொழுது காலையில் ஞாயிறு பள்ளிக்குச் செல்ல வேண்டும். இப்பொழுது, நீங்கள் அதைச் செய்ய நிச்சயம் இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளை மாத்திரம் ஞாயிறு பள்ளிக்கு அனுப்புவது முற்றிலும் பாவம் என்று நான் எப்பொழுதும் கூறியிருக்கிறேன் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அதை ஒருபோதும் செய்யாதீர்கள். அது தவறு. எப்பொழுதும் அவர்களோடு செல்லுங்கள். பார்த்தீர்களா? எப்பொழுதும் அவர்களோடு செல்லுங்கள். அவர்…எனவே, இப்பொழுது, அது காலையில். 27 ஆகையால், இப்பொழுது, நீங்கள் எங்களோடு இருந்து, எங்களோடு ஜெபிக்க, பேசுவதை கேட்கும் படி இருக்க, நீங்கள் பணிக்கு செல்வதை தவற விட்டு விட்டாலும், நீங்கள் வேலையை தவற விட்டுவிட்டால், அது பரவாயில்லை. பணிக்கு செல்வது தவறிப் போனாலும் போகட்டும், ஆனால் நீங்கள் சபையை தவறவிடாதீர்கள். நீங்கள் சபையை தவறவிடாதீர்கள். சபையை தவறவிட நான் உங்களை மிகவும் தாமதிக்க வைக்கமாட்டேன். ஆனால் நீங்கள் எப்பொழுதாவது ஒருமுறை வேலையைத் தவறவிட வேண்டியதாயிருந்தால், அது தீங்கு செய்யாது. இப்பொழுது, ‘ஏனெனில், பணிபுரிவது உங்களுடைய அனுதின ஆகாரம், உங்களுக்கு, அதை அளிப்பதாக கர்த்தர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். எனவே, ஆனால், இது, நீங்கள் உண்மையாகவே சபைக்கு நிச்சயம் வர வேண்டும். நீங்கள் பார்த்தீர்களா?
1128 நாளை காலை, நான் இங்கே நகரத்தில் உள்ள ஒரு நல்ல சகோதரனோடு இருப்பேன் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இப்பொழுது அவனுடைய பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. அது அப்போஸ்தல சபை அல்லது சரியாகக் கூறினால், அப்போஸ்தல சபை என்று அழைக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். அது அப்போஸ்தல சபையாகும். எனக்கு—எனக்கு அந்த சகோதரனைத் தெரிந்திருக்கலாம். அவருடைய பெயர் தாளில் இல்லை. ஆனால் இந்த நேரத்தில் அந்த சகோதரன் யார் என்று எனக்குத்—எனக்குத் தெரியாது. பிறகு நாளை இரவு… [ஒரு சகோதரன், “மாசியாஸ்” என்று கூறுகிறார்.—ஆசி.] திரும்பக் கூறுவீர்களா? [“சகோதரன் மாசியாஸ்.”] சகோதரர் மசியாஸ். ஓ, மசியாஸ். ஓ, மெக்சிகன் சபை. அது சரியா? ஓ, சகோதரன் கார்சியா இங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவருடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டது இதுவா? [“சரி.”] அருமை. அது மிகவும் அருமையாயுள்ளது. 29 இங்கே சில காலத்திற்கு முன்னர், அவருடைய மகளிடத்திலிருந்து, எனக்கு ஒரு கடிதம் வந்துள்ளது… கலிபோர்னியாவில் உள்ள சகோதரன் கார்சியா, இன்னமும் வைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் சான் ஜோஸில் இருந்தபோது சகோதரன் கார்சியாவையும், சகோதரி கார்சியாவையும், அங்கே சகோதரன் பார்டர்ஸையும் கண்டேன் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். அந்த சிறிய மெக்சிகன் சபையில் இருந்த அந்த இரவுகளை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. “குளோரியா எ டியோஸ்” என்ற பாடலை நான் என் வாழ்நாளில் இவ்வளவு அதிகமாக கேட்டதேயில்லை. நான் அதை ஒருபோதும் மறக்கவே மாட்டேன், “குளோரியா எ டியோஸ்”.
1230 [சகோதரன் வில்லியம்ஸ் சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார்—ஆசி.] என்னே! சகோதரன் வில்லியம்ஸ், உங்களுக்கு நன்றி. அது நல்லதுதான். காலையில், இந்த சபையில், ஆயிரத்து ஐநூறு இருக்கைகள் உள்ளன. நீங்கள் போகவில்லையென்றால், ஒவ்வொருவரும் வாருங்கள்…இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். நான் அதைக் குறித்து கவனமாக இருப்பது நல்லது. அப்பொழுது நான் ஏதோ தவறாகக் கூறிவிட்டேன். இல்லை. முழு உத்தமத்தோடும், நீங்கள் உங்களுடைய கடமையின் நிலையைச் சார்ந்திருக்கிறீர்கள். பார்த்தீர்களா? வேண்டாம்…இப்பொழுது, அதெல்லாம் சரிதான். 31 இன்று நான் அவர்களை கண்டுபிடித்தேன்…ஒரு கூடாரத்தைக் கண்டேன். நான் இங்கே பதினாறாவது ஹென்ஷாவில் இருந்தேன். அல்லது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அரிசோனாவில் நான் இருந்தபோது அதுதான் பழைய மண் சாலை. அவர்கள் இருந்த இடத்திற்கு நான் அங்கு சென்றேன், அது பதினாறாவது ஹென்ஷா. நான் அங்கே சில ஜனங்களோடு வசித்து வந்தேன், பிரான்சிஸ்கோ, மற்றும்—இப்பொழுது அதே இடத்தை நீங்கள் ஒருபோதும் அடையாளங் கண்டு கொள்ள மாட்டீர்கள். பெயரைக் கூட மாற்றிவிட்டார்கள். அது இப்பொழுது பக்கி சாலை என்று அழைக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். மேலும், ஓ, எப்படியாய் காரியங்கள் மாறுகின்றன, ஆனால் தேவன் மாறுகிறதில்லை. 32 எனவே நான் அங்கு இருந்தபோது, ஒரு சகோதரன் கூடாரக் கூட்டம் நடத்துவதைக் கண்டேன். அங்கே ஒரு சகோதரன் ஒரு கூடாரத்தை வைத்திருக்கிறார். நான் அவரைக் காணமுடிகிறதா என்று சுற்றிலும் சென்றேன், ஆனால் நான் அவரை எங்கும் காணவில்லை, அவருக்குப் போட்டியாக நாங்கள் இங்கே இருக்கவில்லை என்பதை அவரிடம் கூறுவதற்கு. ஆனால் இங்கே அநேக ஜனங்கள் இருக்கிறார்கள்.
1333 நான் ஜேக் ஷுலரை நினைவு கூருகிறேன். இது மெத்தோடிஸ்டு ஜனங்களாகிய உங்களுக்கு நன்மையாயிருக்கும். ஒரு முறை நான் மாடிசன் சதுக்கத் தோட்டத்திற்கு வந்தபோது, ஜேக் இங்கே உயர்நிலைப் பள்ளியில் இருந்தார். மேலும்—நான் அவரை அழைத்தேன். நான், “சகோதரன் ஜேக்கா” என்று கேட்டேன். அவர், “ஆம். இது சகோதரன் பிரான்ஹாமா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம்” என்றேன். நான், “நீங்கள் இங்கே இருக்கும் பொழுதே நானும் நடத்திக் கொண்டிருக்கிறேன்” என்றேன். 34 அதற்கு அவரோ, “இல்லை” என்றார். அதற்கு அவர், “இல்லை. நான் நீண்ட நேரம் நடத்திவிட்டு உங்களுடைய நேரத்திலும் நடத்திக் கொண்டிருக்கிறேன்” என்றார். 35 அதற்கு நான், “ஓ, சகோதரன் ஜேக் அவர்களே, நான் வருந்துகிறேன்” என்றேன். நான், “நான்…” என்றேன். 36 “ஆ,” அவர், “அது பரவாயில்லை, சகோதரன் பிரான்ஹாம்.” என்று கூறினார்—கூறினார், மேலும், “அவர்கள் நான் தங்கியிருக்க வேண்டும் என்று விரும்பினர்” என்றார். 37 நான், “ஓ, என்னுடைய குழுவினர் அங்கே உங்களை தொந்தரவு செய்யமாட்டார்கள், எப்படியும், ஜேக்,” என்றேன். நான், “ஏனென்றால் என்னுடையது பெரும்பாலும் பெந்தேகோஸ்தேயினரே” என்றேன். அதற்கு அவர், “உண்மையாகவே, என்னுடையதும் கூட” என்றார. நான், “அப்படியா?” என்றேன். “ஏன்,” அவர், “நிச்சயமாக” என்றார். அவர், “நான் ஒரு பெந்தேகோஸ்தே” என்றார். 38 நான், “இப்பொழுது, பாப் அதை அறிந்து கொள்ளாதபடிக்கு நீ விடாமல் இருப்பது நல்லது” என்றேன். அது அவனுடைய தந்தை என்பதை, நீங்கள் அறிவீர்கள். அவன் தீவிரமான மெத்தோடிஸ்டு, என்பதை நீங்கள் அறிவீர்கள். 39 “நல்லது,” அவர், “சகோதரன் பிரான்ஹாம், ஒரு பெந்தேகோஸ்தே என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாதா?” என்றார். நான், “அப்படித்தான் நான் நினைக்கிறேன்” என்றேன். “அது ஒரு வைதீக மெத்தோடிஸ்டு” என்றார். 40 வைதீக மெத்தோடிஸ்டுகளே, அது ஏறக்குறைய சரியே. அது உண்மை. மெதோடிஸ்டு சபையானது அதனுடைய செய்தியோடு தொடர்ந்து சென்றிருந்தால், அது பெந்தெகொஸ்தேக்குள் சென்றிருக்கும். உண்மையான சபை அவ்வாறு செய்தது. 41 இல்லை, சகோதரனே, இப்பொழுது உங்களுடைய ஸ்தாபனத்தை அவமதிக்க வேண்டியதில்லை. பார்த்தீர்களா? ஏனெனில் பெந்தெகொஸ்தே என்பது ஒரு ஸ்தாபனம் அல்ல. அவர்கள் அதைச் செய்ய முயன்றனர், ஆனால் அவர்கள் நிச்சயமாக அதில் தோல்வியடைந்துள்ளனர். பார்த்தீர்களா? அது ஒரு அனுபவம். ஆம். பெந்தெகொஸ்தே என்பது கத்தோலிக்கர்களுக்கு, அல்லது—அல்லது யூதர்களுக்கு, அல்லது பெறும் எவருக்கும்…பெந்தெகொஸ்தே என்பது ஒரு அனுபவம், ஒரு ஸ்தாபனம் அல்ல.
1442 இப்பொழுது ஒவ்வொருவரும் உங்களுடைய வேதாகமத்தை திறந்து வைத்திருந்தால், அல்லது அதை மூடி வைத்திருந்தால், நீங்கள் என்னோடு சேர்ந்து ஒரு சில வார்த்தைகளை வாசிக்க விரும்புவீர்கள். நான் வார்த்தையை வாசிக்க விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா? ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, நான் கூறுவது தவறிப்போகலாம், ஏனென்றால் நான் ஒரு மனிதனாயிருக்கிறேன். ஆனால் அவர் கூறுவது தவறிப்போக முடியாது. பார்த்தீர்களா? “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தையோ ஒழிந்து போவதில்லை.” ஓ! அது அற்புதமாயிருக்கவில்லையா? அவருடைய வார்த்தை ஒருபோதும் தவறிப் போவதில்லை. அது என்னே ஒரு மகிமையான காரியமாய் உள்ளது! அவருடைய வார்த்தை ஒருபோதும் தவறிப் போவதில்லை. 43 இப்பொழுது நாம் இன்றிரவு அதிலிருந்து வாசிப்போம், அதிலிருந்து ஒரு சிறு சூழலை எடுத்துக் கொள்வோம், கர்த்தருக்குச் சித்தமானால், நான் அதை ஒரு பாடப் பொருளாக எடுத்துக் கொள்ளப் போகிறேன். அது ஆமோஸின் தீர்க்கதரிசனமாகிய ஆமோஸின் புத்தகத்தில் உள்ளது. அவர் ஏறக்குறைய எழுநூறு மற்றும்…அது கிறிஸ்துவின் வருகைக்கு முன்னர், ஏறக்குறைய எழுநூற்று எண்பத்தேழு ஆண்டுகள் என்று நான் நினைக்கிறேன். நாம் ஆமோஸ் 3-ம் அதிகாரத்திற்கு திருப்புவோம், ஆமோஸ் மூலம் கர்த்தருடைய வார்த்தை. எனக்கு—எனக்கு இந்த மனிதனைப் பிடிக்கும். அவன் சிறிய தீர்க்கதரிசிகளில் ஒருவனாகவே கருதப்படுகிறான், ஆனால் அவன் நிச்சயமாகவே கர்த்தருடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள். பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன். இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ? தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரைபிடியாமல் இருக்கும்போது பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ? குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ? ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்? 44 இந்த வார்த்தைகளோடு கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக.
1545 அந்தக் காலையில் உஷ்ணமான சூரியன் பிரகாசித்து, பளபளப்புடன் இருந்தபோது, அவனுடைய சிறிய கண்கள் குறுகிகிப் போயிருக்க அவனுடைய வெள்ளை தாடியோடும் தலை முடியோடும் இருந்திருக்க வேண்டும், அவன் சமாரியாவிற்கு வடக்கே உள்ள மலையின் உச்சியில் அமர்ந்து நகரத்தை நோக்கிப் பார்த்தான். அவனுடைய உடைகள் சாதாரணமாயும், அவனுடைய கால்கள் தூசி படிந்ததாயும் இருந்தது. அவன் காண்பதற்கு மிகையாக காணப்படவில்லை, ஆனால் அவன் ஜனங்களுக்காக கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாயிருந்தான். 46 நம்முடைய நவீன சுவிசேஷத்திலிருந்து இன்றைக்கு எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது! நாம் அவனைக் காட்டிலும் என்ன ஒரு வித்தியாசமான அமைப்பைப் பெற்றுள்ளோம்! 47 இந்த எளிய நபர், வேறு யாருமல்ல, ஆமோஸ், ஒரு உண்மையான கர்த்தருடைய தீர்க்கதரிசி, பாவம் நிறைந்த அந்த சந்ததிக்காக கர்த்தருடைய வார்த்தையோடிருந்தவன்! இந்த பயமற்ற, எளிய மனிதன் இரண்டாம் யெரொபெயாமின் நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்தான். 48 யெரொபெயாம் புத்திசாலி, மிகவும் புத்திசாலி, ஞானமுள்ள மனிதன், ஆனால் அவன் ஒரு விக்கிரகாராதனைக்காரனாயிருந்தான். யெரொபெயாம் தன்னுடைய இராஜ்ஜியத்தை அதன் உச்சக்கட்டத்திற்கு வழிநடத்தியிருந்தான், ஆனால் அவன் விக்கிரகாராதனையில் இருந்தான். அவன் அதை தவறான வழியில் செய்தான். ஆனால் யெரொபெயாமின் கீழ் இராஜ்ஜியம் செழித்திருந்தது.
1649 மேலும், வழக்கமாக, செழிப்பு பாவத்தை உண்டாக்குகிறது. அநேக ஜனங்கள் செழிப்பை ஆசீர்வாதங்களாகவே பார்க்கின்றனர். நாம் அதை சரியாக கையாள முடிந்தால், அது அவ்வாறு இருக்கும். ஆனால் அது வழக்கமாக பாவத்திற்கு வழிநடத்துகிறது, தேவனை கனவீனப்படுத்துகிறது. 50 அவனுடைய நாளில் இராஜ்ஜியமும், ஜனங்களும் செழித்துக்கொண்டிருந்தன. அவன் தன்னைச் சுற்றிலுமுள்ள எல்லா தேசங்களோடும் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டான். 51 எப்படியாய் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை விட்டு விலகி, பயங்கரமான பாவத்திற்குள்ளாக வழிதவறி, அவருடைய கற்பனைகளிலிருந்தும், அவருடைய பிரமாணங்களிலிருந்தும் விலகி, ஒரு வெறித்தனத்தில், முற்றிலும் போய்விட்டிருந்தனர். ஸ்திரீகள் தங்களுடைய விலையுயர்ந்த, நாகரீகமற்ற ஆடைகளைஅணிந்து, தெருக்களில் நடந்து சென்றனர். புருஷர்கள் சூதாடியும், குடித்தும் சுற்றித் திரிந்தனர். சாலை வீடுகள், நாம் அதை இன்றைக்கு கேளிக்கைகளின் இடம் என்று அழைக்கலாம், நகரத்தில் விசாலமாக திறந்திருக்கும். 52 ஊழியத்தினால் பாவம் கண்டு கொள்ளாமல்விடப்பட்டு, அப்படியேதிறந்தே கிடந்தது. ஒரு அழகான இடம், சுற்றுலாப் பயணிகளுக்கான ஒரு பெரிய மையம், அது பரந்த அளவில் திறந்திருந்தது. பாவமானது பிரசங்க பீடத்திலிருந்து ஒரு போதும் கடிந்து கொள்ளப்படவில்லை. அது கட்டவிழ்க்கப்பட்டுக் கொண்டிருந்தது.
1753 இந்த தீர்க்கதரிசனம் வந்தபோது, அது வராது என்பது போன்று தென்பட்டது… அதுவே சம்பவிக்கக் கூடிய கடைசி காரியமாய் இருக்கும். இந்த தீர்க்கதரிசி அவர்களிடம் கூறினதின்படி, அவன் அந்த சந்ததியை சபித்த விதத்திலிருந்து, அது அவர்களுக்கு நேரிடக் கூடிய கடைசி காரியமாயிருக்கும். ஆனால், அதே சமயத்தில், ஐம்பது ஆண்டுகளுக்குள் அவர்களுடைய இராஜ்ஜியம் பூமியிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டது. 54 தேவன் தம்முடைய வார்த்தையைப் பேசுகிறார். தேவனுடைய வார்த்தை ஒரு விதையைப் போன்றது. அது விதைக்கப்பட்டபோது, அந்த தீர்க்கதரிசி கர்த்தருடைய வார்த்தையோடு வந்து, இந்த வார்த்தைகளைக் கூறினபோது, அவைகள் தேவனுடைய வார்த்தைகளாயிருந்தால், அவை நிறைவேற வேண்டியதாயிருந்தது. கர்த்தருடைய வார்த்தை அபிஷேகிக்கப்பட்டு, அது கர்த்தருடைய வார்த்தையாயிருக்கும்போது, அது அதனுடைய காலத்தில் அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதாயுள்ளது. 55 ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, அது இன்றைக்கு அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்வதை நம்மால் காண முடிகிறது. அது அதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் அது கர்த்தருடைய வார்த்தையாயுள்ளது, அது அழிந்து போக முடியாது.
1856 அன்றொரு நாள் யாரோ ஒருவர் என்னிடத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, “ஆதியாகமமும், சிருஷ்டிப்பின் ஆறு நாட்களும் தவறாயுள்ளது” என்று கூறினார். 57 நான், “ஆதியாகமம் 1 முதல் (ஆதியாகமம்) 2 வரை முற்றிலும் வேறுபட்ட காரியம்” என்றேன். ஆதியாகமம் 1-ம் அதிகாரம், “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று கூறுகிறது, அவ்வளவுதான். அவர் அதை எப்படிச் செய்தார், அவர் எப்பொழுது அதைச் செய்தார் என்பது அவரைப் பொறுத்ததாயுள்ளது. ஆம். அதன்பின்னர், “உலகமானது ஒழுங்கின்மையும், வெறுமையுயாயிருந்தது,” அதன்பின்னர் நாம் சிருஷ்டிப்பிற்காக அங்கிருந்து துவங்குகிறோம். ஆனால், “ஆதியிலே,” எவ்வளவு காலம் என்று, நாம் அறியோம். அந்த எல்லா விதைகளையும் அவர் கொண்டிருந்தபோது, தண்ணீர் சென்றபோது, பூமியில் மீண்டும் ஜீவன் உண்டாகி, பூமியை நிரப்பினது. தேவனுடைய வார்த்தை விதைக்கப்படும்போது, அது சம்பவிப்பதிலிருந்து எதுவுமே தடுக்க முடியாது.
1958 இந்த பயமற்ற சிறு தீர்க்கதரிசி எங்கிருந்தோ வந்தான். அவன் ஒரு ஆடு மேய்ப்பவன் என்ற ஒரே காரியம் நமக்குக் கூறப்பட்டுள்ளது. அவனுடைய தகப்பனார் யாரென்று நமக்குத் தெரியாது. அவனுடைய தாய் யாரென்று நமக்குத் தெரியாது. அவனுடைய வம்சாவளி எங்கிருந்து வந்தது என்பதை நாம் அறியோம், அவனைக் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. 59 வழக்கமாக தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட மனிதர்கள் அந்தவிதமாகத்தான் காட்சியில் வருகிறார்கள். அவர்கள் எங்கிருந்தோ வந்து, அதேவிதமாக மறைந்து விடுகின்றனர். என்ன நடந்ததென்றால், அவனைக் குறித்து நம்மிடம் எந்த பதிவும் இல்லை.
2060 இந்த மகத்தான மனிதன் யெரொபெயாம், அவன் ஒரு—ஒரு மகத்தான மனோதத்துவ வல்லமையுள்ளவனாயிருந்தான், அவன் தேசத்தை செழிப்பில் வைத்திருந்தான், அதே சமயத்தில் பாவத்தில் இருந்தான். 61 நான் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால, இன்றிரவுநம்முடைய சொந்த தேசத்தோடு நம்மால் சற்றுமுன்னடையாளமாயிருக்க முடியவில்லையென்றால், நம்முடைய சொந்த தேசமே பாவத்தில் உள்ளது. அதேசமயத்தில், செழிப்பு, நம்முடைய வரிப்பணத்தை உடனே குறைக்க போகிறார்கள் என்று, நான் கேள்விப்படுகிறேன். நிச்சயமாகவே, தேர்தல் வரப்போவதை, அங்கே எவருமே மறைமுகமாக இருப்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்த காரியங்கள் யாவும் நடந்து கொண்டிருக்கின்றன. 62 இஸ்ரவேலர், பிரசங்கிமார்கள், ஆசாரியர்கள் மற்றும் அரசாங்கமானது தேவனுடைய வார்த்தையை விட்டுவிட்டு, ஒரு ஒப்புரவாகுதலைச் செய்திருந்தனர். ஆகையால் தான் அந்த தேசம் அந்த நிலைமையில் இருந்தது, அவர்களுக்கு அவ்வளவு போதகர்கள் இருந்தபோதிலும், இன்னும் எத்தனையோ பிரசங்கிமார்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் தேவனுடைய வார்த்தையை விட்டுவிட்டு, அதை விட்டு விலகிவிட்டனர். அது எப்பொழுதுமே அந்த நேரத்தில் தான், தேவன் அதை மீண்டும் அதனுடைய பாதையில் முழங்க செய்ய, எங்கிருந்தோ யாரோ ஒருவரை அனுப்புகிறார். யாரோ ஒரு பயமற்ற நபர் கர்த்தருடைய வார்த்தையோடு எழும்பி, ஜனங்களை மீண்டும் வார்த்தைக்கு திரும்ப அசைப்பார்.
2163 நான் இங்கே தான் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் இங்கே ஏதோ ஒன்றை எழுதி வைத்திருந்தேன், அதை நான் மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். அது 2-ம் அதிகாரம், 4-ம் வசனம். நான் அதை வாசிக்க விரும்புகிறேன். இந்த எளிய நபர் இதை பேசுவதைக் கேளுங்கள். மேலும்: யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே. 64 அவருடைய செய்தி எங்கேயிருந்தது என்று பார்த்தீர்களா? அவர்கள்தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகிச் சென்று விட்டார்கள் என்பதையே அது காண்பித்தது. வேதாகமத்தை வாசிக்கிற எவரும், அவன் ஒரு உண்மையான தீர்க்கதரிசியாயிருந்தான் என்பதை அது உங்களை அறிந்துகொள்ளச் செய்கிறது. அவர்கள் எங்கிருந்து விழுந்து போயிருந்தார்களோ, அந்த வார்த்தையின் பேரில் அவன் அவர்களை திரும்ப வைத்தான். 65 ஓ, ஒருவேளை அவர்களுடைய சபைகள் செழித்திருந்திருக்கலாம். அவர்கள் அநேகமாக அருமையான கட்டிடங்களை உடையவர்களாயிருந்திருக்கலாம். அவர்களுடைய நகரம் அநேகமாக பீனிக்ஸைக் காட்டிலும் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்திருக்கலாம். அது சமாரியாவிலுள்ள ஒரு பெரிய சுற்றுலா மையமாயிருந்தது என்பதை நாம் யாவரும் அறிவோம். அது இன்னமும் கூட அழகான இடமாகும். 66 ஆனால் அதே சமயத்தில் அவர்கள் தேவனிடத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டனர். தேவன் இந்த செய்தியாளனை அவர்களிடத்திற்கு அனுப்பினார். தேவனிடத்திலிருந்து வரும் கடிந்து கொள்ளுதலின் என்னே ஒரு செய்தி! இந்த எளிய தீர்க்கதரிசி அவர்களை வெளியே கொண்டு வந்தான்.
2267 இப்பொழுது, ஆமோஸ் வனாந்திரத்திலிருந்து, கவர்ச்சிகரமான நகரத்திற்கு வந்தான். அவன் மலையின் உச்சிக்குச் சென்றபோது, தேவனால் அளிக்கப்பட்ட அவனுடைய சிறு கண்கள் குறுகியிருந்ததில் வியப்பொன்றுமில்லை. அவர்… 68 ஒரு சுற்றுலாப் பயணியைப் போல, பெண்கள் சொல்வது, “பெண்கள் பொருட்களை வாங்க கடைக்குச் செல்வதைப் பாருங்கள். அவர்கள் இங்கே கொண்டு வந்துள்ள புதிய பாணியைப் பாருங்கள்,” என்றல்ல, அல்லது, “நகரத்தில் சூதாட்ட விடுதிகள் போன்றவை மிகப் பெரியதாய் இருந்தன” என்று சில மனிதர்கள் நினைப்பது போல அல்ல, அல்லது அவர்கள் வீதியின் மூலைகளில் அமர்ந்து, மற்ற பாலினத்தவர் கடந்து செல்வதை இச்சையோடு கவனித்துக் கொண்டிருக்கக் கூடும். 69 ஆனால் இந்த தீர்க்கதரிசியோ, நகரத்தில் அவன் கண்ட பாவத்தின் நிமித்தமாக அவனுடைய கண்கள் குறுகிப்போயின. அவன் பாராட்டிக் கொண்டிருந்த காரியங்களின் நிமித்தமாக குறுகிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள், அவர்கள் தேவனிடத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருந்தனர் என்பதைக் காணவேயாகும். நீங்கள் இங்கே கவனித்தீர்களா? அவர், “உங்களைத் தவிர வேறு ஜனங்களை எனக்குத் தெரியாது. நான் உன்னை எகிப்திலிருந்து வெளியே வழி நடத்தினேன், அதன்பின்னர் நீ இந்த விதமாக என்னை விட்டு அகன்று போனாய்” என்றார்.
2370 இந்த தீர்க்கதரிசி, வட தேசத்தில் ஒரு ஆடு மேய்ப்பவனாய் இருந்து, கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டு, எப்படியாய் அவன் அந்த நகரத்தை நோக்கிப் பார்த்தான். வியர்வையைத் துடைத்திருக்க வேண்டும். அவனுடைய உடைகள் கரடுமுரடாயிருந்தன. அன்றிரவு அவனுக்கு ஒரு—ஒரு அறையில் தங்க போதுமான பணம் இல்லாமல் இருந்திருக்க கூடும். அது அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை. அவன் தன்னுடைய இருதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த ஒரு செய்தியை உடையவனாயிருந்தான், அவன் அதை வெளிப்படுத்த வேண்டும். அது மாத்திரமல்ல, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வனாந்திரத்தில் அவனை தாக்கியிருக்க, உலகத்தின் கவர்ச்சியிலிருந்து தன்னுடைய கண்களை மூடிக் கொண்டிருந்தான். 71 கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட எந்த ஊழியக்காரனும், அவர்களுடைய கண்கள் உலகத்தின் காரியங்களிலிருந்து குருடாக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் அந்தக் காரியங்களைக் காண்கிறதில்லை. அவர்கள் அவைகளை நோக்கிப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு ஒரு காரியம் உண்டு: கிறிஸ்து அவர்களுக்கு முன்பாக இருக்கிறார். அதைத்தான் அவர்கள் காண்கிறார்கள். அவர்கள் எதற்கும் பயப்படுவதில்லை. கிறிஸ்து அவர்களுக்கு முன்பாக இருக்கிறார். ஜனங்கள் ஒரு செய்தியை பெற்றுக் கொள்ள வேண்டும், அவர்கள் ஒன்றையுமே நிறுத்துகிறதில்லை. அவர்களிடத்திலிருந்து நீங்கள் அதை எரித்துவிட முடியாது. நீங்கள் அவர்களை சிறைச்சாலையில், காவலறையில், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். அவர்கள் அதிலிருந்து மீண்டும் வெளியே வருகிறார்கள். அவர்கள் கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆம்.
2472 அவன் நகரத்தின் ஆவிக்குரிய சீரழிவையும், ஒழுக்கக்கேடான, நகரத்தின் ஆவிக்குரிய சீரழிவையும் நோக்கிப் பார்த்தான். 73 எத்தனை கர்த்தருடைய ஊழியக்காரர்கள் இங்கே மலையின் மேல் கடந்து செல்லும்போது, பீனிக்ஸை நோக்கிப் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்? நீங்கள் கவர்ச்சிக்காகவும், சூரிய வெளிச்சத்திற்காகவும், இளைப்பாறுதலுக்காகவும் இங்கு வந்துள்ளீர்கள், அதைக் குறித்து நாம் லேசாகப் பேச முடியாது. 74 இங்கே அண்மையில், நான் இங்கு நான் இங்கிருந்த போது, தெற்கு மலையில் அமர்ந்திருந்தபோது, என் மனைவி அங்கே பின்னால் அமர்ந்திருக்கிறாள், நான் அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான், “சுமார் முன்னூறு அல்லது நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பள்ளத்தாக்கு ஒரு அழகான இடமாக இருந்தது, எந்த சந்தேகமும் இல்லை, உப்பு நதி இங்கு ஓடும்போது, ஓநாய்கள் போன்றவை இருக்கும், மற்றும் கற்றாழை பூக்கும். அது எப்படியிருக்கிறது என்பதைப் பாருங்கள்…முழு காரியமும் பாவத்தின் திரள்கூட்டமாகிவிட்டது” என்றேன். அப்பொழுது அவள், “சரி, அப்படியானால் உங்களை இங்கு கொண்டு வருவது எது?” என்று கேட்டாள். 75 நான், “இதோ இதுதான் என்னை இங்கே கொண்டு வருகிறது. அதனுடைய இருளிலும், நகரத்திலுள்ள பாவத்திலும், கர்த்தருடைய சில சாட்சிகள் இருக்கின்ற, அங்கே கீழே ஜீவனுள்ள கிறிஸ்துவின் சிலைகள் உள்ளன. சுவிசேஷத்தின் ஒளியைப் பிரகாசிக்க, அவர்களோடு என் தோள் கொடுக்கவே நான் வருகிறேன். அந்தச் சிறிய வயதான சகோதரர்களில் சிலர், எங்கோ தெரு முனையில், அதைச் செய்தார்கள், வியர்வை வழிந்து, அழுது ஜெபித்து, தங்களுடைய இருதயத்தில் ஒரு செய்தியை வைத்திருந்தனர். இயேசு கிறிஸ்துவின் கலப்படமற்ற சுவிசேஷத்தின் ஒரு ஒளியைப் பிரகாசிக்க, அவர்களுடன் என் பங்கை அளிக்க நான் வருகிறேன். இந்த பீனிக்ஸ் நகரத்தின் பெரிய பெருநகரப் பகுதிக்கு செல்ல வேண்டும்” என்று கூறினேன்.
2576 அதில், அது ஒரு அற்புதமான இடமாக இருக்கக் கூடும்; மனிதன் அவனால் செய்ய முடிந்த அவனுடைய சாதனைகளை எடுத்துக் கொண்டால், கேமல்பேக் மலை, காவலியர் மலை போன்ற இடங்களில் அழகான வீடுகளைக் கட்டுகின்றனர். நான் அங்கே கடந்து சென்றபோது, ஏன், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அது ஒரு பாலைவனமாக இருந்தது. நாம் குதிரைகளைக் கொண்டும் கழுதைகளைக் கொண்டும் வண்டிகளை ஒட்டி சென்றோம். இங்கே தெற்கு மலையில், துரத்துகிற கழுதைகளும் குதிரைகளும் உண்டு.
2677 இப்பொழுது அது இந்த மகத்தான அற்புதமான நகரத்தின் ஒரு பெரிய பெருநகரப் பகுதியாக மாறிவிட்டது. அது இலட்சக்கணக்கான மடங்காக வளர்ந்து கொண்டிருக்கிறது. பட்டணங்களின் சொந்த அழிதல் அதை ஒரு குழப்பத்திற்கு கொண்டு வரும் வரைக்கும் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. புகை உள்ளே வந்து கொண்டிருக்கிறது. ஓஹையோ பள்ளத்தாக்கில் உள்ள இந்தியானாவில் உள்ள ஜெபர்ஸன்வில்லில் உள்ளதைப் போன்றே உங்களுடைய ஈரப்பதம் மோசமாக உள்ளது. நீர்ப்பாசனம்…மனிதன் எப்பொழுதுமே உலகத்தை மாசுபடுத்துகிறான். இந்தியர்கள் அதை வைத்திருந்தபோது, அது ஒரு அழகான இடமாக இருந்தது. ஆனால் வெள்ளையன் உள்ளே வந்தபோது, அவன் தன்னுடைய பாவங்களையும், மதுவையும், ஒழுக்கக்கேட்டையும் கொண்டு வந்தான். அவன் நிலங்களை மாசுபடுத்த, அது கிட்டத்தட்ட ஒரு சாக்கடைக் குளமாக மாறிவிட்டது. நோக்கிப் பார்க்க வேண்டிய என்னே ஒரு காரியம்! இந்நாட்களில் ஒன்றில், தேவன் அதை பூமியிலிருந்து துடைத்தழிப்பார். 78 அவர் இராஜாவாக ஆளுகை செய்யும்போது, அவர் பூமியின் மேல் ஆளுகை செய்யும் ஒரு ஜனத்தை, நீதியில் தெரிந்து கொண்டிருக்கிறார். அவர் இப்பொழுது தம்முடைய ஜனங்களை அவருடைய நாமத்திற்காகவும், ஒரு ஜனத்தை அவருடைய இராஜ்ஜியத்திற்காகவும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
2779 இப்பொழுது, இந்த புத்திசாலித்தனமான, அறிவாற்றல் கொண்ட, அறிவாற்றல் கொண்ட இஸ்ரவேல் குழு, அதனுடைய மகத்தான, வல்லமையுள்ள, அறிவாற்றல் கொண்ட ஜனாதிபதி, இல்லை, ராஜா, யெரொபெயாம், அவன் ஒரு புத்திசாலி மனிதனாயிருந்தான், அறியப்படாத இந்த சிறிய தீர்க்கதரிசிக்கு அவர்கள் செவி கொடுப்பார்களா? இந்த மகத்தான செய்தி, அது அவனுடைய இருதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்தால், அவன் தெருக்களில் நடந்து செல்ல முடிந்தால், ஜனங்கள், ஸ்திரீகள் தங்களை மீண்டும் அழகாக உடை உடுத்திக்கொண்டு, புருஷர்கள் மதுபானக் கடைகளையும், பாவம் செய்யும் இடங்களையும் விட்டு, இந்த எளிய, அறியப்படாத நபரின் பிரசங்கத்தில் தேவனிடம் திரும்புவீர்களா? அவனுடைய சிந்தையில் ஒரு கேள்வி வந்திருக்கலாம் அல்லது அது என்னுடைய சிந்தையில், அவர் அங்கே நின்று கொண்டிருப்பதை நான் காணும்போது, அவனுடைய சிறிய வழுக்கைத் தலை வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவனுடைய நரைத்த தாடி அவனுடைய மேலங்கியைச் சுற்றி தொங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய கண்கள் குறுகிப்போய், அவனுடைய இருதயம் துடிக்க, அங்கே கீழ்நோக்கியவாறு அந்த நகரத்தை நோக்கிப் பார்த்தான். 80 அதே சமயத்தில், அங்கே, தேவனுடைய இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படுவதை அவன் கண்டான், எல்லாமே பாவத்தினால் நிறைந்திருந்தது. தேவனிடத்திலிருந்து வரும் ஒரு கடிந்து கொள்ளுதலோடு, அதாவது ராஜாவிலிருந்து தெருவில் உள்ள பிச்சைக்காரன் வரைக்கும், ஒவ்வொரு ஆசாரியனும், பிரசங்கியும், இராஜாவும், வல்லமையுள்ளவனாயும், அரசனாயும், அவன் யாராயிருந்தாலும், தேவனுடைய சாபத்தை அவர்கள் மேல் சுமத்த வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் அவர்கள்…அவர்கள் அவனை ஏற்றுக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஓ, அவர்கள் அதை புரிந்து கொள்வார்களா?
2881 அவனுக்கு எந்த சிபாரிசும் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் நம்முடைய இன்றைய சுவிசேஷகர்களிடமிருந்து வித்தியாசமாக வந்தான். ஆசாரியர்களிடத்திலிருந்து அவனுக்கு சிபாரிசு ஏதும் இல்லை. அந்த நபர் யார் என்று கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவன் யாராயிருந்தான் என்பதை அறிந்திருந்த ஒருவர் இருந்தார். அந்த ஒருவர்தான் அவனை அனுப்பினார். அவன் எங்கிருந்து அனுப்பப்பட்டான் என்பதை அவன் அறிந்திருந்தபடியால், அவ்வளவுதான் அவனுக்கு தேவையாயிருந்தது. அவனுடைய செய்தியும் எதையும் பொருட்படுத்தாமல், அவ்வாறே செல்ல வேண்டியதாயிருந்தது. 82 அவன் நகரத்திற்குள்ளாகச் சென்றபோது, அவனை ஆதரிக்க எந்த ஸ்தாபன நற்சான்றிதழ்களையும் அவன் கொண்டிருக்கவில்லை, “என் சகோதரர்களே, நான் இந்த குறிப்பிட்ட குழுவிலிருந்து, இந்த மதசம்பந்தமான குழுவிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறேன். நான் இன்னின்னதை—இன்னின்னதைச் சேர்ந்தவன்” என்று கூறும்படியாக, ஊழிய சங்கத்திற்கு வரவில்லை. அவன் அதைப் பெற்றிருக்கவில்லை. அவனிடம் அந்தக் காரியங்கள் எதுவும் இருக்கவில்லை. அவன் நல்ல ஒரு ஐக்கியத்தில் நின்றான் என்பதைக் காண்பிக்கும்படியான ஒரு ஐக்கிய அட்டையையும் கூட அவனிடத்தில் கொண்டிருக்கவில்லை அவன் வந்திருந்த தேசத்திலிருந்து வந்துள்ள ஊழியக்காரர்கள் சங்கம். அவனுடைய பிரச்சாரத்திற்காக அவனுக்கு எந்த ஒத்துழைப்பும் இல்லாதிருந்தது. அவன் அதைக் குறித்து யாரிடமும் கலந்தாலோசித்தது கூட கிடையாது.
2983 அந்த எளிய நபர் ஒரு கடினமான இடத்தில் நின்று கொண்டிருந்தான். ஒரு மனிதன் திரும்பிச் சென்று, தன்னுடைய மந்தையை மறுபடியும் எடுத்துக் கொள்ள அது போதுமானதாயிருக்கும், அவன் நினைத்திருப்பானேயானால், அவன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்திருக்க முடியும். 84 ஆனால், நீங்கள் பாருங்கள், அந்த மனிதன் மறுபடியுமாக சிந்திக்கவில்லை. அவன் எந்த நற்சாட்சிப் பத்திரங்களைக் குறித்தும் சிந்திக்கவில்லை, அல்லது ஒரு ஐக்கிய அட்டையைக் குறித்தும் அவன் நினைக்கவில்லை. அவன் ஒரு காரியத்தைக் குறித்து மாத்திரமே சிந்தித்திருந்தான், அது கர்த்தருடைய வார்த்தையாயிருந்தது. அவன் அங்கு சென்று தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும் என்று தேவன் அவனுக்கு ஒரு கட்டளையைக் கொடுத்திருந்தார். அது மாத்திரமே அவனுக்கு ஒரு பொருட்டாயிருந்தது. அவன் கர்த்தருடைய வார்த்தையை உடையவனாயிருந்தான், ஆகையால் அவனுக்கு நற்சாட்சிப் பத்திரங்கள் அல்லது எந்த சிபாரிசும், அல்லது எந்த ஒத்துழைப்பும் தேவையில்லை என்று அவன் உணர்ந்தான். அவனுக்கு தேவைப்பட்ட ஒரே காரியம், அவன் தேவனோடு ஒத்துழைத்தலை உடையவனாயிருந்தான், அவ்வளவுதான் அதற்கு தேவைப்பட்டது. அவன் கர்த்தருடைய சித்தத்தில் இருந்த வரைக்கும், அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணியது? அவனுடைய செய்தி தேவனிடத்திலிருந்து வந்தது என்பதை அவன் அறிந்திருந்தபோது, தேவன் அந்த செய்தியை ரூபகாரப்படுத்துவார். அவர் செய்ய வேண்டியதாயிருந்தது.
3085 அவன் செய்தியைக் கொண்டு வந்தபோது, அங்கே இருந்த எல்லா ஆசாரியர்களும், பிரசங்கிமார்களும் அந்தக் காலத்திலிருந்த தீர்க்கதரிசிகள் உள்ளே வந்து, மனந்திரும்புவார்கள் ஏனென்றால் அவர்கள் அந்த இடத்தின் நிலைமையையும், ஒழுக்க சீர்கேட்டையும் கண்டிருப்பார்கள் என்று தென்பட்டது. ஆனால் அவன் கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டு தீர்க்கதரிசனம் உரைக்கத் துவங்கினபோது, அது அவர்களுக்கு அந்நியமாயிருந்தது. அவர்கள் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. 86 அது இன்றைக்கு அதைக் குறித்த ஒரு மிகச் சிறந்த காட்சியாயுள்ளது. கர்த்தருடைய செய்தி அந்நியமாயுள்ளது! சபைக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. ஜனங்கள் எழும்பி, அந்நிய பாஷைகளில் ஒரு செய்தியைக் கொடுப்பதை அவர்கள் கேட்டு, அதற்கு அர்த்தம் உரைக்கும்போது, ஒரு குறிப்பிட்ட காரியம் சம்பவிக்கப்போகிறது என்று கூறி, ஜனங்கள் தங்களுடைய தலையை திருப்பிக் கொண்டு நடந்து செல்கின்றனர்; ஜனங்கள் பைத்தியம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் யாரோ ஒருவர் ஆவியில் எழும்பி தீர்க்கதரிசனம் உரைப்பதை அல்லது கர்த்தரிடத்திலிருந்து ஒரு செய்தியைக் கொடுப்பதைக் கண்டு, ஏன், இன்றைக்கு சபை உலகத்திலுள்ள ஜனங்கள் அந்த நபர் தங்களுடைய சிந்தையை இழந்துவிட்டதாக நினைக்கின்றனர். அது அவர்களுக்கு அந்நியமாயுள்ளது, ஏனென்றால் அவர்கள் அந்நாளில் சமாரியாவில் இருந்தது போலவே இன்றைக்கும் ஏறக்குறைய அதே நிலையில் உள்ளனர். 87 ஆனால், நினைவில் கொள்ளுங்கள், தேசங்கள் அல்லது தேவனுடைய சபை எப்பொழுதுமே அந்த நிலைமைக்கு வரும்போது, தேவனால் அவர்களுக்கு கர்த்தருடைய வார்த்தையோடு ஒரு தீர்க்கதரிசியை எழுப்ப முடிந்தது. நிச்சயமாக.
3188 அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே, அதை மறந்துவிட்டனர். அவர்கள் தங்களுடைய சில பள்ளிகளிலிருந்து வேத பண்டிதர் ஆமோஸ் என்ற பெயர் கொண்ட ஒரு நபர் இருக்கிறானா அல்லது இல்லையா என்று பார்க்கவும், தங்களுடைய புத்தகங்களினூடாக ஆராய்ந்து பார்க்கவும் முடியுமா என்பதைப் பொருட்படுத்தாமல், இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள், “ஆபிரகாமின் தேவன் இந்தக் கல்லுகளினாலே பிள்ளைகளை அல்லது அவருடைய வார்த்தையைக் கொண்டு வர தீர்க்கதரிசிகளை உண்டுபண்ண வல்லவராயிருந்தார்,” என்பதை அறிந்திருக்க வேண்டும். 89 அதே தேவனால் அன்று இருந்தது போலவே இன்றிரவும் இருக்க முடியும். அது, நிச்சயமாகவே, ஜனங்களுக்கு தவறான புரிந்து கொள்ளுதலாய் இருக்கும். அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டு வரும்படி, மனிதர்களை அபிஷேகித்து, மனிதர்களை எழுப்ப முடியும். அவரால் ஒரு மனிதனுக்குள் வார்த்தையை வைத்து, அவனை அனுப்பி, தேவனை அவருடைய வார்த்தையில் ஏற்றுக்கொள்ள பயப்படாமல், தன்னை தேவனுக்கு சமர்ப்பித்து, தன்னைத் தாழ்த்தும் அந்த நபரால் அவர் தேவன் என்று நிரூபிக்க முடியும். அவரால் அதைச் செய்ய முடியும், அவர் அதைச் செய்வார். அவர் செய்வதாக வாக்குப்பண்ணினார். 90 உண்மையாகவே, அவருடைய வார்த்தைகள் அந்த நாளில் அவர்களுக்கு ரூபகாரப்படுத்தப்பட்டன. காரணம், அதே சந்ததி இருந்தபோதே, ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்த யாவும் நிறைவேறினது.
3291 நான் இன்றைக்கு எதிர்பார்ப்பதோ, இப்பொழுது, ஆமோஸ் நம்மிடம் வந்தால், நாம் அவனை இன்றைக்கு ஏற்றுக் கொள்வோமா? பீனிக்ஸ் ஆமோஸை ஏற்றுக்கொள்ளுமா? இங்கே மலையின் குறுக்கே எங்காவது, எங்காவது அல்லது நாட்டின் ஏதோ ஒரு பாகத்திலிருந்து கீழே இருந்தால், கரடுமுரடான ஆடைகளை அணிந்த ஒரு மனிதன் இங்கு நடந்து வந்து, ஊழியக்காரர்களை ஒழுங்குபடுத்தும் படி அழைக்க, “நான் கர்த்தருடைய வார்த்தையை வைத்திருக்கிறேன்” என்று கூறினால், நாம் அவனை ஏற்றுக்கொள்வோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. முதல் காரியமாக நாம் அவனிடம், “நீங்கள் எந்தக் குழுவைச் சார்ந்திருக்கிறீர்கள்?” என்று கேட்போம். 92 அவன் திரும்பி, “பரலோகக் குழு” என்று கூறினால் என்னவாகும்? அது நமக்கு அந்நியமாயிருக்கும் என்றே நான் பயப்படுகிறேன். 93 ஆனால் அப்பொழுது அந்தவிதமாகவே அது இருந்தது. ஆமோஸ் காட்சியில் தோன்றினால், அது ஒருவேளை இன்றைக்கும் அதே விதமாக இருக்கலாம்.
3394 நான் கூறினதின் நிமித்தமாக, நாம் அவனை இங்கே ஒரு சில நிமிடங்கள், அவனை இங்கே கொண்டு செல்வோமாக, அவன் என்ன செய்வான் என்று நாங்கள் நினைக்கிறோமென்பதையும் பார்க்கிறோம். அவன் என்ன செய்வான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் நம்முடைய முழு அமைப்போடும் இணங்கமாட்டான் என்று நான் நம்புகிறேன். ஆம், ஐயா. அவன் நம்முடைய ஸ்தாபன உபதேசங்களுடன் இணங்கமாட்டான். அவன் மெத்தோடிஸ்டுகளையும், பாப்டிஸ்டுகளையும், பிரஸ்பிடேரியன்களையும், லூத்தரன்களையும், கத்தோலிக்கரையும், பெந்தேகோஸ்தேயினரையும் கண்டனம் செய்வான். அவன் முழு காரியத்தையும் உள்ளே கொண்டு செல்வான். அவன் நிச்சயமாகவே அவ்வாறு செய்வான். அவன் அவர்களுடைய ஸ்தாபன உபதேசங்களுடன் இணங்கமாட்டான். அவன் வார்த்தையின் அடிப்படை அஸ்திபாரத்திற்கு நேராக சென்று, வார்த்தையின் பேரில் துவங்குவான். அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன் பேரில் தன்னுடைய பிரச்சாரத்தைத் துவங்குவான்.
3495 ஏன், ஏன், பீனிக்ஸ் அவனை ஏற்றுக்கொள்ளும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? லூயிவில் அவனை ஏற்றுக் கொள்ளும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா; நியூயார்க், பாஸ்டன், மாசசூசெட்ஸ் அல்லது அது எங்கிருந்தாலும், கலிபோர்னியாவும் ஏற்றுக்கொள்ளுமா? இல்லை ஐயா. அவர்கள் அந்த எளிய நபரை அவர்களால் முடிந்தளவு துரிதமாக சிறைச்சாலையில் அங்கே அடைத்து விடுவார்கள். நிச்சயமாக அவ்வாறு செய்வார்கள். அவர்கள் அதை நிச்சயமாகவே செய்வார்கள். அவன் வார்த்தைக்கு திரும்பிச் சென்றால், அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன், ஏனெனில் ஒவ்வொரு குழுவும் அவனோடு இணங்காதிருக்கும். அவனோடு ஒருவரும் ஒத்துப்போகமாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் வார்த்தையோடு இணங்காதபடிக்கு தங்களுடைய பாரம்பரியங்களைப் பற்றிக்கொள்ள வேண்டும். 96 அவன் ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவன் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், அவன் அவ்வாறு இருந்திருந்தால், அவன் அவனுக்கு ஒரு அடையாளம் இருக்கும், அவன் ஒரு தீர்க்கதரிசி என்று நாம் அறிந்து கொள்ள ஒரு திட்டவட்டமான அடையாளமாய் இருப்பான்: அவன் வார்த்தையோடு தரித்திருப்பான். காரணம், அங்கேதான் தேவனுடைய வார்த்தை, தீர்க்கதரிசிகளிடத்திற்கு வந்தது.
3597 அவன் என்ன செய்வான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் இந்த சந்ததியைக் கண்டனம் செய்து முழக்கமிடுவான். அவன் தேசத்தில் உள்ள ஒவ்வொரு முடியைக் குட்டையாக வெட்டிக் கொள்ளும் பெண்ணையும் கண்டனம் செய்வான். அவன் ஒவ்வொரு ஸ்தாபன பிரசங்கியாரையும் கண்டனம் செய்வான். அவன் நிச்சயமாக அவ்வாறு செய்வான். சிகரெட் புகைப்பவர் ஒவ்வொருவரையும், குட்டை கால் சட்டை அல்லது தளர் கால் சட்டைகளை அணியும் ஒவ்வொரு பெண்ணையும் அவன் கண்டனம் செய்வான். அவன் அவைகளை கிழித்தெறிவான். ஏன்? அது வார்த்தைக்கு விரோதமாயுள்ளது. முற்றிலும் சரி. 98 நாம் அவனை ஏற்றுக்கொள்வோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த வகையிலும் இல்லை. அவர்கள் அவனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். 99 அவன் சபையின் ஒழுக்கக்கேடுகளைக் கண்டனம் செய்வான். அவன் அந்த பிரசங்கிமார்களின் முகத்தில் சுருக்கம் விழுந்த அந்த சிறிய விரலை அசைத்து, “நீங்கள் உங்களை தேவனுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியக்காரன் என்று அழைத்துக்கொள்கிறீர்கள், பிரசங்க பீடத்தில் நின்று, உங்களுடைய ஆண்களுக்கு மத்தியில் பாலுணர்ச்சியுடன் கூடிய ஆடைகளை, அதைப் போன்ற காரியங்களை உடுத்தும் பெண்களை அனுமதிப்பீர்களா? உங்களுடைய வாலிப ஸ்திரீகளை அந்தவிதமாக வளர அனுமதிக்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய புருஷர் இரண்டு அல்லது மூன்று முறை விவாகம் செய்துகொள்ளவும், சபைகளில் உதவிக்காரர்களாகவும் இருக்க அனுமதிப்பீர்களா? நீங்கள் உங்களுடைய கரத்தில் வைத்துள்ள அந்த நற்சாட்சிப் பத்திரத்தை நீங்கள் பற்றிக் கொள்வீர்கள் என்று நீங்கள் என்னிடம் கூறினால், தேவனுடைய வார்த்தையை புறம்பே தள்ளிவிடலாமா?” ஓ, என்னே! அவர் அந்த காரியத்தை கண்டன முழக்கமிடுவான். ஆம், ஐயா. சபையின் ஒழுக்கக்கேட்டையும், அங்கத்தினர்களின் ஒழுக்கக்கேட்டையும், அவன் அதை கண்டன முழக்கமிடுவான். என்னே! ஒவ்வொரு அங்கத்தினரையும், அவர் நிலைகுலையச் செய்வான். மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு வேதபாட கருத்தரங்கு உபதேசத்தையும் அவன் துண்டு துண்டாக கிழித்துவிடுவான்.
36100 இப்பொழுது, அப்படிப்பட்ட ஒரு மனிதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இல்லை. அவர்கள் அதைச் செய்யமாட்டார்கள். அவர்கள் நிச்சயமாக அதைச் செய்யமாட்டார்கள். அவர்கள் தங்களால் முடிந்தளவு துரிதமாக அந்த நபரை நகரத்தை விட்டு வெளியேற்றிவிடுவார்கள். ஏன், சங்கம் ஒன்று கூடி, “நாம் இதைக் குறித்து ஏதாவது செய்ய வேண்டும். அதைக் கேட்க அங்கே போக வேண்டாம் என்று உங்களுடைய சபையாரிடம் சொல்லுங்கள்” என்று சொல்லும். வேண்டாம். இல்லை. நாம் அவனை ஏற்றுக்கொள்ளமாட்டோம், எந்த வகையிலும் நாம் அவனை ஏற்றுக்கொள்ளமாட்டோம். நிச்சயமாக. அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. 101 அவன் முழக்கமிடுவதைக் கேளுங்கள். ஓ, நான் அதை இங்கே விரும்புகிறேன். அவன் என்ன கூறினான் என்பதை நான் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன், “நீங்கள் சேவிப்பதாக உரிமை கோரும் அதே தேவன் உங்களை அழித்துப் போடுவார் என்றான்.
37102 இன்றைக்கும் அவன் அதையே கூறுவான். அமெரிக்கர்களாகிய நாம் நம்மை அநேக அற்புதமான காரியங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறோம், மிகப் பெரிய கட்டிடங்களிலும், நம்முடைய ஸ்தாபனங்கலும் பெரிய அங்கத்தினர்களை உடையவராகவும் இருக்கிறோம், மற்றும் இந்த அருமையான எல்லா புகழையும், அமைதியாக இருக்க பயிற்சி பெற்ற பயிற்றுவிக்கப்பட்ட வேதபாட கருத்தரங்கு ஊழியக்காரர்கள் அதைப் பற்றி எதுவும் கூறவில்லை, ஏனென்றால் அவர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அவர்கள் பயப்படுகின்றனர். நிச்சயமாக. அவன் அந்த காரியத்தை முழங்கி சின்னா பின்னமாக்குவான், ஏனென்றால் அது வார்த்தைக்கு விரோதமாயுள்ளது. நிச்சயமாக அவ்வாறு இருக்கும். நாம் ஊழியம் செய்கிறதாக உரிமை கோருகிற அதே தேவன் இந்நாட்களில் ஒன்றில் இந்தக் காரியத்தை சுட்டெரிப்பார். அவன் அதை முழங்கி சின்னா பின்னமாக்குவான். 103 ஆமோஸ் இன்றைக்கு இங்கிருந்தால், அவன் தன்னுடைய வார்த்தைகளை மாற்றமாட்டான். வார்த்தைக்கு திரும்பி தரித்திருங்கள்! ஓ! என்ன? அவன் அங்கே அவர்களிடத்தில், “தேவன் உங்களில் அன்பு கூர்ந்தார். அவர் உங்களைக் கொண்டு வந்தார். அவர் உங்களை தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களாக ஆக்கினார்” என்றான். 104 ஒருமுறை பெந்தேகோஸ்தே சபையில் அவன் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன். அவன் அமோஸ் என்று நீங்கள் நம்புகிறீர்கள், ஒருவேளை நீங்கள் சிறிது நேரம் என்னை கடிந்துரைக்காமல் இருக்கலாம். புரிகிறதா? ஆம், அவன் அவர்களிடம் கூறுவான். அவன் மறைக்க மாட்டான். அவன் தன்னால் இயன்றவரை அதை முழக்கமிட்டு, அவர்கள் வார்த்தையில் எங்கே தவறிவிட்டனர் என்பதை அவர்களிடம் கூறுவான்.
38105 அநேக ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனால் உண்டாக்கப்பட்ட இந்த பிணவறைகளிலிருந்து உங்களை தேவன் வெளியே கொண்டு வந்தாரே! ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், உங்களுடைய தகப்பன்மார்களும், தாய்மார்களும் கட்டப்பட்டிருந்த இந்த முறைமைகளிலிருந்து வெளிவந்து, உலகத்தை அவற்றிற்குள் கொண்டு சென்றனர். தேவன் தம்முடைய இரக்கத்தை அனுப்பி, சபையில் இருந்த பாவத்திலிருந்தும் மற்ற காரியங்களிலிருந்தும் உங்களை வெளியே அழைத்தார். இப்பொழுது நீங்கள் சமாரியா செய்ததைப் போல திரும்பிப் போய்விட்டீர்கள். அதாவது தேவன் அவர்களை அந்த தேசங்களிலிருந்து வெளியே கொண்டு வந்து, அவர்கள் திரும்பி, அந்த தேசத்தோடு ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு, இன்றைக்கு நாம் எப்படி இருக்கிறோம் என்றால், அந்த பெரிய ஸ்தாபன சபைகளோடு போட்டிபோட முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பெரிய பள்ளிகளை கட்டிக் கொண்டிருக்கிறோம். என்ன? நமக்கு பெரிய பள்ளிகள் தேவையில்லை. அது சரிதான்; அதற்கு எதிராக நான் ஒன்றும் கூற வேண்டியதில்லை.
39106 ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு ஸ்தாபகரை அல்லது அவருடைய காலத்தில் புறப்பட்டுச் செல்லும் ஒரு தலைவரை எடுத்துக் கொள்ளும்போது, பாருங்கள், அவன் தன்னுடைய நாளில் நன்மையையே செய்வான், ஆனால், அவன் போய்விட்டவுடனே, அப்பொழுது அவர்கள் அவனுடைய ஊழியத்தின் மேல் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்குவார்கள். அதன்பின்னர் அவர்கள் ஒரு கூட்ட சிறு ரிக்கிகளையும், எல்விஸ்களையும், நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முதல் காரியம், அவர்கள் அந்த காரியத்தை தங்களுக்கு ஏற்றவாறு திரித்துக் கொள்கின்றனர். அதன்பின்னர் இந்த மற்றொருவன் மேலே வந்து, அவன் வேறு ஏதோ ஒரு காரியத்தை உட்புகுத்துகிறான், ஏனென்றால் அவன் எங்கோ ஹார்வர்டில் அல்லது ஏதோ ஒரு கல்லூரியிலிருந்து ஒரு சிறந்த அறிவாற்றல் கொண்ட மாணாக்கராய் இருக்கிறான். முதலாவதாக, அவர்கள் இதை புகுத்தி, இதை வெளியே எடுத்து, இது அது, அதை பொருட்படுத்தவில்லை என்று கூறுகிறார்கள். நீங்கள் மீண்டும் அதே பழைய நிலைக்குத் திரும்பியிருக்கிறீர்கள். ஆம்.
40107 ஆமோஸ் இங்கிருப்பானேயானால், அவன் அந்த காரியத்தை நேராக பூமியிலே முழங்குவான். எத்தனை சபைகள் அவனுடன் ஒத்துழைக்க முடியும் என்பதன் பேரில் அவன் ஒருபோதும் தன்னுடைய பிரச்சாரத்தை செய்யவில்லை. அவன் தன்னுடைய சபையை ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தின் பேரிலோ அல்லது சபையின் உட்குழுவினர் பாகங்களின் பேரிலோ ஒருபோதும் உருவாக்க மாட்டான். அவன் செய்ய வேண்டிய காரியம், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன் பேரில் தொடர் பிரச்சாரத்தை உருவாக்குவான். தேவன் எப்பொழுதும் செய்தது போலவே அவனுக்கு ஆதரவளித்து, அது சரியென்று நிரூபிப்பார். அவன், “தொல்லை உள்ளது. உங்களுடைய சபையில் கொந்தளிப்புகள் உள்ளன” என்றான். 108 இன்றைக்கு அவன் என்ன கூறுவான்? தேவனுடைய வார்த்தை இங்கே நமக்கு முன்பாக தொங்கிக் கொண்டிருக்கும்போது, அவன் என்ன கூறுவான்? இரண்டாம் தீமோத்தேயு 3-ம் அதிகாரத்தில், “அவர்கள் துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நன்றாய் ஜீவிக்க முயற்சிக்கிறவர்களை பகைக்கிறவர்களாயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்” என்று அங்கே கூறப்பட்டுள்ளது. ஒரு தீர்க்கதரிசி காட்சியில் எழும்பி அந்த தீர்க்கதரிசனத்தை புறக்கணிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
41109 அவன், “அது இந்நாளில் உங்கள் கண்களுக்கு முன்பாக நிறைவேறியிருக்கிறது” என்று கூறுவான். எப்படி சபையானது சம்பிரதாயமானதாயிருக்கும் என்றும், அவர்கள் எப்படிப்பட்ட காரியங்களைச் செய்வார்கள் என்று. அவன்—அவன் அந்த தேவனுடைய வார்த்தைகளை உங்களுடைய நினைவிற்கு கொண்டு வருவான். ஆமோஸ் காட்சியில் உயிர்த்தெழுந்தால், இந்நாளில் தேவன் என்ன செய்வதாகக் கூறினாரோ அதை அவன் உங்களுடைய ஞாபகத்திற்குக் கொண்டு வருவான். அது மாத்திரமல்ல, ஆனால் தேவன் இந்த நாளில் செய்வதாக வாக்களித்திருந்ததை ஆமோஸ் மூலம் நிரூபிப்பார். நிச்சயமாக. அவர் அவ்வாறு செய்வார். அந்நாளில் அவர் அதைச் செய்தார். அவர் எப்பொழுதுமே அதைச் செய்திருக்கிறார். நிச்சயமாக. ஆமோஸ் காட்சியில் எழுந்திருந்தால் நாம் அவனை ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
42110 இப்பொழுது, எப்படி, “அந்த தேவபக்தியின் ரூபம்” அங்கே பாடற் குழுக்களில், மற்றும்—மற்றும் சுற்றி நின்று, பெரிய நீண்ட அங்கி அணிந்த பாடகர் குழுக்கள், மற்றும்—மேலும் தேவதூதர்களைப் போல பாடுகின்றனர்; அடுத்த இரவு பிசாசுகளைப் போல நடனமாடுவார்கள். அது உண்மை. பார்த்தீர்களா? அது முற்றிலும் உண்மை. சிலர் பெரிய, நீண்ட அங்கிகளை அணிந்து, அதைப் போன்ற அழகான தோற்றத்துடன், ஒருவிதமான தூதனைப் போன்று காணப்படுகின்றனர்; அங்கே எழும்பி நின்று, எந்த பொல்லாத ஆவியையும் போல வார்த்தையை மறுதலிக்கின்றனர். “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதில் பெலனை மறுதலிக்கிறார்கள்.” போய், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து பேசிக் கொண்டிருந்தால், அவர்கள், ஏன், அவன்—அவன் உங்களை சபையை விட்டு துரத்திவிடுவார்கள். பார்த்தீர்களா? ஏன்? அவர் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் இந்த சபைகளில் நின்று தங்களுடைய அங்கத்தினர்களை அனுமதித்து, அடித்தளத்தில், நெளிந்து வளைந்து சுழன்று உருண்டு ஆடுகின்றனர்.
43111 நம்முடைய ஒய்.எம்.சி.ஏ.க்கள் என்று அழைக்கப்படுகிற, அந்த சி என்பது எதைக் குறிக்கிறது என்று நான் யோசிக்கிறேன். அவைகளுக்குள்ளாக நடந்து செல்லும்போது, கர்த்தருடைய நாமத்தைத் தவிர வேறொன்றையும் உங்களால் கேட்க முடியாது…அதுதான் வாலிப புருஷருடைய சபிக்கும் சங்கமா? 112 அண்மையில், நான் ஒய்.டபிள்யூ.சி.ஏ-க்கு எதிரேயிருந்த ஒரு விடுதியில் தங்கியிருந்தேன் அந்த சிறு பெண் பிள்ளைகள் அங்கே தரையில் இருப்பதைக் காண்பது ஒரு அவமானமாயிருந்தது, ஏறக்குறைய ஒன்பது மணி வரைக்கும், அவர்களுடைய கால்களை உடைத்துக் கொள்ள முயற்சித்து, முறுக்கிக் கொண்டிருந்தனர். அது உண்மை. அவர்கள் யாவரும், ஒரு சபையின் அங்கத்தினர்கள், பாடற் குழுக்களில் பாடி, ஞாயிறு பள்ளியை கற்பித்தனர். அது சிறு பிள்ளைகளுக்கு தரையில் கற்பிக்கிற, பிசாசேயன்றி வேறொன்றுமில்லை, மதம் என்று அழைக்கப்படுகின்ற ஒரு முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக. ஒரு உண்மையான தீர்க்கதரிசி அந்த காரியத்தை நரகத்தின் புகையில் அது தோன்றின இடத்திலேயே வெடிக்கச் செய்வான். நிச்சயமாகவே உண்மையாயுள்ளது.
44113 ஆமோஸ் மேடையின் மேல் நின்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், கூந்தலை கத்தரித்துக்கொண்ட ஒரு கூட்ட ஸ்திரீகளைப் பார்த்து அதைக் கண்டிக்கமாட்டானா? அவன் ஏசாயா 5-ம் அதிகாரத்தையும், முதலாம் கொரிந்தியர் 14-ம் அதிகாரத்தையும் மேற்கோள் காட்டமாட்டான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மேலும், ஓ, அவன்—அவன் அதன் பேரில் கொந்தளிக்க மாட்டானா? நிச்சயமாக. அவன் அவ்வாறு செய்வான். தெருக்களில் நடந்து சென்று, இந்த சிறிய ஆடைகளை அணிந்துள்ள ஸ்திரீகளைப் பார்ப்பான், தோற்றத்தில் ஆண்களைப் போன்று காணப்படும், தோல் கிட்டத்தட்ட வெளிப்புறத்தில், காணப்படுமளவிற்கு இறுக்கமாக அணிந்து; கீழே சென்று, நெளிந்து, மெல்ல மெல்ல, அந்தவிதமாக நடந்து, தங்களை ஓசையோடு காண்பிக்கிறார்கள். ஒரு தேவனுடைய மனிதன் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு, அந்தக் காரியத்தை கண்டன முழக்கமிடமாட்டான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பிரசங்க பீடத்திலிருந்து பேசுவது மிகவும் அரிதாகவே உள்ளது. அது பெந்தேகோஸ்தே சபைகளிலும், கூட அவ்வாறு உள்ளது. அது முற்றிலும் உண்மை. அது ஆமோஸூக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை. ஹூ-ஹூ. சிலர்…அவன் அதைக் கூறும் ஒருவராயிருப்பான். அவன் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தபடியால், அவன் பயப்படமாட்டான். அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாயிருந்தால், அது கர்த்தருடைய வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும்.
45114 அவன் சமாரியாவுக்கு வந்தது, அவர்களுடைய கவர்ச்சியை நோக்கிப் பார்க்க அல்ல, அவர்கள் எத்தனை ஸ்தாபனங்களை உடையவர்களாயிருந்தனர் என்றும், எத்தனை எங்கத்தினர்களை உடையவர்களாக இருந்தனர் என்பதையுமே பார்க்க வரவில்லை. 115 அன்றொரு இரவு நான் கூறினது போன்று, இன்றைக்கு, முழு சபையும் எதன் பேரில் கட்டப்பட்டுள்ளதென்றால் சபைகளில் இன்றைக்கு சகோதரர்கள் மத்தியில் உள்ள முக்கியமான காரியம், “எண்கள், எண்கள்” என்பதாகும், ஒன்று மற்றொன்றை விஞ்ச முயற்சிக்கிறது. “எண்கள்!” தேவன் எண்களை எண்ணுகிறதில்லை. அவர் குணாதிசயத்தை எண்ணுகிறார். குணாதிசயம் என்பது தேவன் தம்முடைய கரங்களில் பொருத்தக்கூடிய யாரோ ஒருவரை, போதிய அளவு நிலைத்து நிற்கக்கூடிய யாரோ ஒருவரைக் கண்டறிய விரும்புவதாகும்.
46116 நாங்கள், “தீர்மானங்கள்! ஆண்டு முழுவதும், நாங்கள் அநேக தீர்மானங்களை உடையவர்களாயிருந்தோம்” என்று கூறினது போலவே. அது கற்கள், “ஒப்புதல் அறிக்கைகள்.” ஒரு தேவனுடைய குமாரனாக வெட்டுவதற்கு, தேவனுடைய கருக்குள்ள வார்த்தையைக் கொண்ட ஒரு கல் கொத்தனார் இல்லாத ஒரு கல்லால் என்ன பயன், அல்லது ஒரு தேவனுடைய குமாரத்தியை, அவன் சார்ந்திருக்கிற சபையில் அவனை வைக்கலாமா? கற்களை உருட்டுவது கட்டிடத்தை உருவாக்காது. நீங்கள் அவைகளை வெட்டி, அவைகளை வடிவமைக்க வேண்டும். 117 நமக்கு இன்றைக்கு மனிதர்கள், ஆமோஸைப் போன்ற அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதர்களே தேவை, அது அந்த ஸ்திரீயினிடத்திலிருந்து உலகத்தை துண்டித்து, அவளை ஒரு தேவனுடைய குமாரத்தியாக்கும், அந்த உலகத்தை மனிதனிடமிருந்து பிரித்தெடுக்கும். எத்தனை தர்மகர்த்தாக்கள் அவனை வெளியே தூக்கியெறிந்தாலும், அல்லது வேறு எதையுமே பொருட்படுத்தாமல், அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன் பேரில் நிற்பான். ஆம்.
47118 நாம் ஆமோஸை இந்த விதமாக, ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று, நான் நினைக்கிறேன். பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுவதாக உரிமை கோருகிற இன்றைய ஒரு பெந்தகோஸ்தே சபைக்குள் ஆமோஸ் நடந்து செல்லும்போது, பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுவதாக உரிமை கோருகிற பெந்தேகோஸ்தே சபையில் அப்பொழுதும் அதே காரியத்தை காண்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் வியப்புறுகிறேன். இப்பொழுது, நாம் பாப்டிஸ்டுகள், மெத்தோடிஸ்டுகள், லூத்தரன்களைக் குறித்துப் பேசலாம், ஆனால், அது நம்முடைய சொந்த அழுக்கான வாசலுக்கு வரும்போது, அப்பொழுது அதைக் குறித்து என்ன? தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகிப் போய்விட்டதே! எங்கோ ஏதோ தவறு நேர்ந்துவிட்டது. அது முற்றிலும் உண்மை. ஆம். அவர்கள் வந்து இந்த வித்தியாசமான எல்லாக் காரியங்களையும் செய்து, தாங்கள் ஆவியினால் நடத்தப்பட்டதாக உரிமை கோருகின்றனர். ஆவியில் நடனமாடலாம், சில சமயங்களில் அந்நிய பாஷைகளில் கூட பேசலாம்.
48119 நான் அந்நிய பாஷைகளில் பேசுவதை விசுவாசிக்கிறேன். நான் ஆவியில் நடனமாடுவதை விசுவாசிக்கிறேன். நான் சத்தமிடுவதை விசுவாசிக்கிறேன். ஆனால் அதனோடு இன்னும் அநேக காரியங்கள் உள்ளன. அது உண்மை. நீங்கள் அந்தக் காரியங்களையெல்லாம் செய்து, வார்த்தையை மறுதலித்தால், அப்பொழுது ஏதோக் காரியம் எங்கோ தவறாயுள்ளது, தவறான ஆவியைப் பெற்றுள்ளீர்கள். ஹூ-ஹூ. தேவன் தம்முடைய ஜனங்களை எப்படியும், அப்படிப்பட்ட காரியங்களுக்கு வழி நடத்துகிறதில்லை. இல்லை. அவர் அவ்வாறு செய்வதில்லை. 120 இது மற்றொரு வரவிருக்கும் விருந்து, மற்றொரு பாஸ்டனில் தேநீர் விருந்து என்று கூறுவதற்கு இது ஒரு நேரம் என்று நான் நினைக்கிறேன். சபைக்கு ஒன்று தேவை. அதற்கு உண்மையாகவே ஒரு நல்ல சுத்திகரித்தல் தேவை.
49121 ஜோன் ஆஃப் ஆர்க், கடந்த நாட்களில், கத்தோலிக்க சபை, அவள் ஒரு பரிசுத்தவான் என்பதை அவள் உயிரோடிருந்தபோது அறியத் தவறியது, ஏனென்றால் அவள் தரிசனங்களைக் கண்டாள், சொப்பனங்களுக்கு அர்த்தம் உரைக்க முடிந்தது, ஒரு ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு ஸ்திரீ. தேவன் அந்த சிறு பெண்மணியை உபயோகித்தார். அவள் ஒரு சூனியக்காரி என்று அவர்கள் நினைத்தனர். அவர்கள் அவளை ஒரு சூனியக்காரி என்று கருதி, ஒரு கழுமரத்தில் கட்டி எரித்தனர். நீங்கள் அதை அறிவீர்கள். கத்தோலிக்க குருமார்களே அதைச் செய்தனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கடந்து சென்றபோது, அவள் ஒரு பரிசுத்தவாட்டி என்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதன்பின்னர், அவர்கள் அவளை புனிதர் என்று அறிவிக்கப்போவதாயிருந்தபோது, அவர்கள் தவம் செய்ய வேண்டியதாயிருந்தது. எனவே அவர்கள் அந்த குருமார்களின் பிணங்களை தோண்டியெடுத்து, அவைகளை ஆற்றில் போட்டு, தவம் செய்தனர். நீங்கள் பாருங்கள், அது கவனிக்கப்படாமல் கடந்து சென்றது, அவர்கள் அதைக் காணத் தவறுகின்றனர். அவர்கள் பரிசுத்த பாட்ரிக்குடனும் மற்ற எல்லோருடனும் கிட்டத்தட்ட அதேக் காரியத்தையே செய்தனர். 122 இயேசு, “நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளை அலங்கரித்து வெண்மையாக்குகிறீர்கள். அவர்களை அங்கே உள்ளே வைத்தது நீங்கள் தான்” என்று சொன்னதில் ஆச்சரியமில்லை. அது உண்மை. கர்த்தருடைய வார்த்தையை நமக்குத் திரும்பக் கொண்டு வரும் ஆமோஸ் தான் இன்றைக்கு நமக்குத் தேவை. நிச்சயமாகவே தேவை.
50123 இப்பொழுது, தேவனுடைய ஆவியானவர் அங்கே நம்முடைய உரிமை கோரல்களை ஆதரித்தால் ஒழிய, நம்முடைய உரிமைகோரல்களும் மற்றக் காரியங்களும் ஒன்றையுமே பொருட்படுத்துகிறதில்லை. நம்முடைய ஜீவியம் நம்முடைய உரிமைகோரலோடு ஒப்பிட்டுப் பார்க்கவில்லையென்றால், அப்பொழுது ஏதோக் காரியம் தவறாயுள்ளது. 124 ஜோன் ஆஃப் ஆர்க் பிரான்ஸை ஒரு புரட்சியாளனாக வழிநடத்தினார். அவர்களுக்கு ஒரு புரட்சியாளர் தேவையாயிருந்தது. சரியாக அதைத்தான் அவர்கள் செய்தனர். அவர்களுக்கு ஒரு புரட்சியாளர் தேவைப்பட்டார், அவள் அதை வழிநடத்தினாள். ஆனால் புரட்சிக்குப் பிறகு, எங்கே தவறு செய்யப்பட்டது, அவர்கள் எதைக் குறித்து கலகம் செய்து கொண்டிருந்தார்களோ அதை சரிபடுத்த—ஒரு எதிர் புரட்சியாளர் தேவைப்பட்டது.
51125 பெந்தேகோஸ்தே சபைதான் இன்றைக்கு வேதாகமத்திற்கு மிகவும் நெருக்கமானது என்று நான் அறிந்துள்ள காரியமாக கூறுகிறேன். அது இல்லையென்றால், நான் வேறொன்றில் இருந்திருப்பேன். அது உண்மை. நான் இங்கே நின்று கொண்டு, பெந்தேகோஸ்தே ஜனங்களிடத்தில் பேசி, என்னுடைய நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கமாட்டேன், ஒரு நம்பிக்கை இருந்தது என்று நான் நினைக்கவில்லையென்றால். சரி. பெந்தேகோஸ்தே சரியே. ஆனால் பெந்தெகொஸ்தேயினர் ஒன்று கூடி, நம்முடைய பாரம்பரியங்கள் உடைக்கப்படும்போது, அப்பொழுது நமக்கு ஒரு எதிர்-புரட்சி தேவைப்படுகிறது. நமக்கு ஒரு எதிர் வருகை தேவை. நான் பெற்றுள்ள…ஒரு பெந்தேகோஸ்தே உரிமை கோருதல் அல்ல, ஆனால் ஒரு பெந்தேகோஸ்தே சுத்தமான வருகை. 126 தேவன் பரிசுத்தமானவர். அவரால் ஜீவிக்கிறவர்கள் பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டும். அவர் ஒரு பரிசுத்த தேவன். வேதம், “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிக்கமாட்டான்” என்று கூறியுள்ளது. அது உண்மை. அவருடைய ஜீவியம் பரிசுத்தமானது. அவருடைய ஜீவன் உங்களுக்குள் இருக்குமானால், அது உங்களை பரிசுத்தமாக்குகிறது. அது இல்லாமல் நீங்கள் கர்த்தரைக் காண்பதில்லை. அவள் எங்கே கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்று பாருங்கள்.
52127 அந்த நாட்களில் இருந்த இஸ்ரவேல் ஜனங்களைப் போன்றே நாமும் இருக்கிறோம். இஸ்ரவேலர் நினைத்தது, அவர்கள் செழித்துக்கொண்டிருந்ததால், எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுடைய நாட்களில் மற்ற பட்டணங்களோடு ஒரு கூட்டணியை உடையவர்களாயிருந்தனர். அவர்களுக்கு ஒரு கூட்டணி இருந்தது. அரசாங்கம் போதகர்களோடும், ஆசாரியர்களோடும், தீர்க்கதரிசிகளோடும் ஒரு கூட்டணியைக் கொண்டிருந்தது. அவர்கள் இது சரியென்று எண்ணினர். அது கர்த்தருக்குப் பிரியமாயிருந்தது என்று அவர்கள் எண்ணினர். ஆனால் ஒரு சிறிய நபரை எழுப்பி, அவர்களை மீண்டும் கொண்டு வந்தனர். அது உண்மை. 128 அவர்கள் செழித்திருந்த காரணத்தால், அங்குதான் நாம் ஒரு தவறு செய்கிறோம். செழிப்பு என்பது ஆவிக்குரிய ஆசீர்வாதத்தின் அடையாளம் அல்ல. அது உண்மை. அது சிறிது கூட இல்லை. செழிப்பு, சில சமயங்களில், ஒரு தடையாக இருக்கிறது.
53129 இஸ்ரவேலரைக் குறித்து கர்த்தர் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? “நீ சிறு பிள்ளையாயிருந்தபோது, உன்னிடத்தில் ஒன்றுமில்லாதிருந்தபோது, நீ உன் சொந்த இரத்தத்திலே வயலில் கிடத்தப்பட்டபோது, உங்களை சுத்தப்படுத்த ஒருவரும் இல்லை, நான் உங்களை உள்ளே அழைத்துச் சென்றேன். அப்பொழுது நீங்கள் எனக்கு சேவை செய்தீர்கள். ஆனால் நீ போதிய வயதை அடைந்தபோது, நீ சுகமடைந்து சுயபாதுகாப்பை அடைந்துவிட்டாய், அப்பொழுது நீ என்னை விட்டுவிட்டாய்” என்றார். அவர்கள் எப்பொழுதுமே அதையே செய்திருக்கிறார்கள். 130 உசியா, அன்றொரு காலையில் வர்த்தக புருஷருடைய காலை சிற்றுண்டி வேளையில் நான் பேசினதுபோல, அவன் ஒரு மகத்தான மனிதனாய் இருந்தான். அவன் கர்த்தரைப் பற்றிக் கொண்டான். ஆனால் ஒரு நாள் தேவன் அவனை பெலப்படுத்தினபோது…அவன் ஏசாயா தீர்க்கதரிசிக்கு ஒரு மகத்தான மாதிரியாயிருந்தான். ஆனால் அவன் பலமடைந்து, கட்டியெழுப்பப்பட்ட பிறகு, தேசங்கள் அவனுக்குப் பயப்படத் துவங்கின. அவன் தன்னுடைய மதில் சுவர்களைக் கட்டி, கவர்ச்சியான காரியங்களைச் செய்யத் துவங்கினான். அவன் தன்னைப் பற்றி அகந்தை கொண்டவனாயிருந்தான். அவன் எவ்வளவு மகத்தானவனாய் காணப்பட்டான். அதன்பின்னர் அவன் பிரசங்கியின் ஸ்தானத்தை எடுக்க முயன்றான். தேவன் அவனைத் தொழுநோயால் தாக்க, அவன் ஒரு குஷ்டரோகியாக மரித்துப்போனான். பார்த்தீர்களா? நாம் நம்முடைய இருதயங்களில், ஒருபோதும் மேட்டிமைகொள்ள விரும்புகிறதில்லை.
54131 சில சமயங்களில், நம்முடைய ஸ்தாபனங்கள் செழித்தோங்குவதை நாம் காணும்போது, நாம், “நாங்கள் பெரிய குழுவாக இருக்கிறோம். நாம்தான் மிகப்பெரிய பெந்தேகோஸ்தே குழுவாயிருக்கிறோம். மற்றவர்களைக் காட்டிலும் நாங்கள் அதிகம் பெற்றுள்ளோம்.” அல்லது, “நீங்கள் எங்களுடைய குழுவைச் சேர்ந்தாலொழிய நீங்கள் பரலோகம் செல்ல முடியாது” என்று கூறத் துவங்குகிறோம், அல்லது ஏதோ ஒன்றைக் கூறுகிறோம். நீங்கள் அந்தவிதமாக வரும்போது, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையிலிருந்து உங்களை பிரித்துக் கொண்டீர்கள். சரி. நினைவிருக்கட்டும், அந்த போர்வையானது உங்களுடைய சகோதரனுக்காக விரிவடையும் அளவிற்கு அகலமாய் உள்ளது. அது முற்றிலும் உண்மை. அவனை உள்ளே அழைத்துச் செல்லுங்கள். 132 ஓ, இன்றைக்கு கர்த்தருடைய வார்த்தைக்கு திரும்பவும் ஒரு அழைப்பு நமக்கு எவ்வளவு தேவையாயிருக்கிறது. பாருங்கள், இன்றைக்கு. நமது தேசத்திற்கு திரும்ப அழைப்பு தேவைப்படுகிறது.
55133 என்னால் முடிந்தால், இந்த இரவுகளில் ஒன்றில் பேசப் போகிறேன்…நான் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளேன். நான் எல்லா பிரசங்கிமார்களையும் ஒன்று சேர்க்கும் வரை நான் காத்திருக்க வேண்டும். ஆம். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் இந்த சந்ததியை நான் குற்றஞ்சாட்டி, அதை உங்களுக்கு நிரூபிக்க விரும்புகிறேன். பார்த்தீர்களா? இப்பொழுது, அதைச் செய்ய நான் எங்காவது வெளியே வைக்க வேண்டியிருக்கலாம். ஆனால் நாம், நாம் என்றோ ஒரு நாள் காலையில் போதகர்கள் மாத்திரம், காலை சிற்றுண்டியை அருந்த முடியுமா என்று நாம் பார்ப்போம். நாம் சரியாக எங்கே—நாம் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை சரியாக காண்பிக்க கர்த்தர் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான்—நான் விரும்புகிறேன். நாம் திரும்பி வர வேண்டும். திரும்பி வருவதைத் தவிர வேறு வழியே இல்லை. சரி.
56134 இன்றைக்கு நம்முடைய தேசத்தைப் பாருங்கள். நாம் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பாருங்கள், இருண்ட காலத்தில் நிகழ்ந்த அதே காரியம், சபையையும், அரசாங்கத்தையும் ஒன்றாக இணைக்கிறது. 135 ஐக்கியத்தை, இல்லை, உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தைப் பாருங்கள், எல்லா சபைகளும் இந்த உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திற்குள் செல்ல, இது தேவனுடைய ஒருத்துவம் என்று அவர்கள் கருதுகின்றனர், ஏனென்றால், எல்லா சபைகளும், ஐக்கிய சகோதரர்களும், அடிப்படை சபைகளின் மனிதர்களும் இந்த மகத்தான ஒரு பெரிய ஸ்தாபனத்திற்குள் செல்கின்றன, அது தேவனுடைய வார்த்தையை அறியாத காரணத்தினால் உண்டானது. அந்தக் காரியம் சம்பவிக்கும் என்று தீர்க்கதரிசி கூறினான், “அவர்கள் மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குவார்கள், அது பேசும் வல்லமையுள்ளதாயிருக்கும்.” 136 ஓ, ஆமோஸ் இன்றிரவு இங்கே பிரசங்க பீடத்தில் நின்று, அவன் பீனிக்ஸில் இருந்தால், அந்தக் காரியத்தைக் குறித்து கூக்குரலிடத் தவறிவிடுவான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவன் சகோதரர்களாகிய நமக்கு விரோதமாயிருக்கிறான் என்பது அல்ல, ஆனால் அவன் வார்த்தையிலிருந்து நம்மை தூர இழுக்கும் முறைமைக்கு எதிராக இருப்பான். அவன் அதைத்தான் செய்வான். “அந்த மனிதர்கள் எப்படி ஒன்று சேர்ந்து நடக்க முடியும்” என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வேதம் இங்கே, இங்கே, ஆமோஸில் கூறியுள்ளது. கர்த்தர், “ஜனங்களிடத்தில், ‘இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய, எப்படி ஒருமித்து நடக்க முடியும்’ என்று கூறுங்கள்?” என்று கேட்டார்.
57137 இப்பொழுது, அங்கே அவர்களின் பாதி பேர், அதற்கும் அதிகமானவர்கள் எண்பத்தைந்து அல்லது தொண்ணூற்றைந்து சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் கன்னிப் பிறப்பை மறுக்கும்போது, நாம் எப்படி நம்முடைய பெந்தேகோஸ்தே குழுக்களை எடுத்துக்கொண்டு, உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திற்குள் செல்லப் போகிறோம்? அவர்கள் மறுக்கின்றனர். அவர்களில் தொண்ணூற்றொன்பது சதவிகிதத்தினர் தெய்வீக சுகமளித்தலை மறுதலிக்கின்றனர் என்று நான் யூகிக்கிறேன். அவர்கள் வேதாகமத்தின் கொள்கைகளை மறுதலிக்கின்றனர். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதை மறுதலிக்கின்றனர். பெந்தேகோஸ்தே குழு மாத்திரமே அதை ஏற்றுக்கொள்கிறது. நாம் எப்படி அவர்களோடு ஒரு ஐக்கியத்தில் நம்மை இணைத்துக் கொள்ளப் போகிறோம்? நாம் எப்படி அவர்களோடு ஒன்றாக இருக்கப் போகிறோம்? நாம் அவர்களோடு உடன்படாமல் எப்படி அவர்களோடு நடக்கப் போகிறோம்? நீங்கள் அதை எப்படி செய்யப் போகிறீர்கள்? நீங்கள் கொண்டுள்ள மகத்தான சுவிசேஷ நம்பிக்கையை நீங்கள் மறுதலிக்க வேண்டும், வேதாகமத்தின் அடிப்படை நியமங்களோடு நடக்க வேண்டும்.
58138 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேவன் ஒரு தனிப்பட்ட நபரை அழைக்கிறார். ஒரு தனிப்பட்ட நபராக, அவருடைய வார்த்தையோடு தரித்திருந்து, அவரோடு தரித்திருக்கும்படி அவர் உங்களை அழைத்துக்கொண்டிருக்கிறார். 139 அவர்களுடைய சொந்த கோட்பாடுகள், அவர்களுடைய சொந்த உலக ஞானத்தினால் உண்டாக்கப்பட்டு, அவருடைய வார்த்தையை மறுதலிக்கும்போது, தேவனால் எப்படி அவர்களோடு நடக்க முடியும்? ஒரு கோட்பாடு ஒரு கூட்ட மனிதர்களின் ஒரு கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, வார்த்தை அவ்வண்ணமாய் இருப்பதை மறுதலிக்கும்போது, அப்பொழுது நீங்கள் தேவனை உங்களிடத்திலிருந்து திருப்புகிறீர்கள். தேவன் பரிசுத்தமானவர். தேவன், அவர் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்த, அதை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. வார்த்தை அங்கே இல்லாதிருக்கும்போது, அவர் எப்படி வார்த்தையை ரூபகாரப்படுத்த முடியும்? அந்தக் காரணத்தினால்தான் நாம் பிள்ளைகளுக்குப் பதிலாக அங்கத்தினர்களையே உடையவர்களாயிருக்கிறோம். அது, நாம் கோட்பாடுகளை உடையவர்களாயிருக்கிறோம். எல்லோராலும் முடியும்… 140 உலகம் ஒரு சிறந்த மனிதனைத் தேடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்…அவர்கள் அவர்களை அனுமதிக்கக் கூடிய ஏதோ ஒன்றை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் தங்களுடைய கிறிஸ்தவ ஊழியத்தை பற்றிக் கொண்டு, அவர்கள் விரும்புகிற எந்த விதத்திலும் ஜீவிக்கிறார்கள். ஸ்திரீகள் ஹாலிவுட்டைப் போன்று நடந்து கொள்ள விரும்புகிறார்கள், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனர் என்று இன்னமும் பராமரித்து வருகின்றனர். பிரசங்கிமார்கள் மிகப் பெரிய சபையைக் கட்ட விரும்புகிறார்கள், இந்த எல்லாக் காரியங்களையும் செய்ய விரும்புகிறார்கள், மேலும் பல முறை திருமணம் செய்துகொண்ட உதவிக்கார்களை உடையவர்களாக இருக்கின்றனர். மேலும்—மேலும் அவர்கள் இந்த அற்பத்தனமான காரியங்களைச் செய்து, இந்த ஆடைகளை அணிய முடியும், அவர்கள் அதை பெண்களின் விடுதலை என்று அழைக்கிறார்கள்.
59141 ஆமோஸ் அதற்காக அமைதியாக நிற்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை. உண்மையாகவே அவன் விரும்பமாட்டான். ஆமோஸ் அமைதியாக நின்று, அங்குள்ள தலைமைப்பீடங்களையும், பேராயர்களையும் சந்தித்து, “சகோதரர்களே, நீங்கள் ஒரு மகத்தான காரியத்தைச் செய்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறுவான் என்று நினைக்கிறீர்களா. 142 அவன், “நீங்கள் ஒரு கூட்ட துரோகிகளே! நீங்கள் ஏமாற்றுக்காரர்களே! நீங்கள் விசுவாசத்தை மறுதலிப்பவர்களே!” என்று கூறுவான். அந்த நாளிலே அந்த நானூறு எபிரெய தீர்க்கதரிசிகள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்களுக்கு முன்பாக, மிகாயா கூறின அதேக் காரியத்தையே அவன் கூறுவான். 143 அவர்கள், “எண்ணிக்கையில், திரளான கூட்டமும், பாதுகாப்பும் உண்டு” என்றனர். நீங்கள் அந்த வேதவாக்கியத்தை எங்கே பொருத்திக்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. 144 நான், “யூதாஸ் போய் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்; நீ போய் அதேக் காரியத்தைச் செய்வாய்” என்று கூற முடியும். அது அங்கே பொருந்தாது. 145 “ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.” என்பது பொருந்தாது. அப்படியானால் கத்தோலிக்க சபை உங்கள் எல்லோர் மேலும் அதைக் கொண்டுள்ளது.
60146 தேவனுடைய வார்த்தையில் பாதுகாப்பு உண்டு. வேதம், “கர்த்தருடைய நாமம் பலத்த துருகம். நீதிமான் அதற்குள் ஓடி, சுகமாயிருப்பான்” என்று கூறியுள்ளது. எனக்குத் தெரிந்த ஒரே பாதுகாப்பான இடம் அதுதான். தீர்க்கதரிசிகள் எப்பொழுதுமே அதை விசுவாசித்தனர். ஆபிரகாம் மரித்தபோது…யோபு மரித்தபோது, அவன் தன்னை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில், தன்னுடைய கல்லறையில் வைத்தான். 147 ஆபிரகாம் மரித்தபோது, அவன் யோபுவிற்கு அருகில், அதே இடத்தில் ஒரு நிலத்தை வாங்கினான். அவன் என்ன செய்தான்? அவன் அந்த தீர்க்கதரிசியைக் கவனித்தான். அது ஒரு தேவனுடைய மனிதன் என்பதை அவன் அறிந்திருந்தான், மேலும் அவன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாட்களில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.” என்றான். ஆம். ஆபிரகாம் அதை அறிந்திருந்தான். அவன் சாராளை அங்கே அடக்கம் பண்ணினான். அவன் ஒரு நிலத்தை வாங்கி, அடக்கம் பண்ணினான்…அவன், தாமே, அங்கே அடக்கம் பண்ணப்பட்டான்.
61148 ஈசாக்கு, அவன் மரித்தபோது, அவன் மீண்டும் கொண்டு செல்லப்பட்டு அங்கேயே அடக்கம் பண்ணப்பட்டான். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான். 149 யாக்கோபு எகிப்தில் மரித்துப் போனான். ஆனால் அவன் மரிப்பதற்கு முன்பு, அவன் தன்னுடைய தீர்க்கதரிசி குமாரனாகிய, யோசேப்பை அழைத்தான். அவன் ஒரு தீர்க்கதரிசி என்றும், ஆவிக்குரிய மனிதன் என்றும், சொப்பனங்களுக்கு வியாக்கியானம் செய்தவனாகவும், தரிசனங்களைக் கண்டவனாகவும் இருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன், “என் தீர்க்கதரிசி குமாரனாகிய யோசேப்பே, இங்கே வா. சர்வவல்லமையுள்ள தேவன் அநேக ஆண்டுகளுக்கு முன்பு என்னைத் தொட்ட இந்த இடுப்பின் மேல் உன்னுடைய கரத்தை வைத்து, என் பெயரை ‘எத்தன்’ என்பதிலிருந்து ‘தேவனோடு இளவரசன்’ என்று மாற்றினார்.’ என்னை இங்கே எகிப்தில் அடக்கம்பண்ணமாட்டாய் என்று தேவன் பேரில் ஆணையிட்டுக் கூறு” என்றான். ஏன்? ஏன்? அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணியது? 150 இன்றைக்கு அதைத்தான் அவர்கள் கூறுகிறார்கள், “அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது?” நாம் ஒரு கூட்ட ஜனங்களைக் கொண்டு, தெருக்களில் உள்ளவர்களை சபையில் சேர்ந்து கொள்ளச் செய்கிறோம். நீங்கள் சில சமயங்களில் அவனை தெருவில் இருந்ததைக் காட்டிலும் இருமடங்கு நரகத்தின் பிள்ளையாக்குகிறீர்கள். அது உண்மை. ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது.
62151 யோசேப்பு, அவன் மரித்தபோது, அவன், “ஒரு நாள் தேவனாகிய கர்த்தர் உங்களை சந்திப்பார்” என்று கூறினதாகக் குறிப்பிட்டான். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன், “தேவனாகிய கர்த்தர் உங்களை சந்திப்பார். என் எலும்புகளை இங்கே வைக்காமல், அவைகளை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு செல்லுங்கள்” என்றான். ஏன்? உயிர்த்தெழுதலின் முதற்பலன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலிருந்து வெளிவரும் என்பதை அவன் அறிந்திருந்தான். அது சரியாகத்தான் உள்ளது. 152 இயேசு, அவர் மரித்து, ஈஸ்டர் காலையில் எழுந்தபோது, வேதம், “பூமியின் தூளிலே நித்திரையடைந்த பரிசுத்தவான்களில் அநேகர் எழுந்து, கல்லறைகளை விட்டு வெளியே வந்து, அநேகருக்கு தரிசனமானார்கள்” என்று கூறியுள்ளது. அது யாராயிருந்தது? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு. ஏன்? அவர்கள் சரியான இடத்தில் இருந்தனர்.
63153 அந்தக் காரணத்தினால்தான் அது ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது என்று நான் கூறுகிறேன். நீங்கள் என்னை இங்கே ஏதோ ஒரு மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு அல்லது வேறு ஏதோ ஒரு சபையில் அடக்கம் செய்ய வேண்டாம். என்னை இயேசுவுக்குள் அடக்கம் பண்ணுங்கள், “ஏனென்றால் கிறிஸ்துவுக்குள்ளானவர்களை தேவன் வரும்போது அவரோடு கொண்டு வருவார்.” அது ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. நிச்சயமாக, அது உண்டுபண்ணுகிறது. யாரோ ஒருவர், “நீங்கள் சபையைச் சேர்ந்து கொள்வதால்” என்று கூற அனுமதிக்காதீர்கள். 154 ஆமோஸ் அதற்காக ஒருபோதும் அமைதியாயிருக்கமாட்டான். அவன், “நீங்கள் சேவிப்பதாக கூறிக்கொண்டிருக்கிற அதே தேவன்…” என்று கூறுவான். 155 கர்த்தருடைய நாமத்தில் நான் இதைக் கூறுவேன்: இந்த தேசம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அதே தேவன் இந்த தேசத்தை அழித்துப் போடுவார். அவர் இந்த சபைகளை அழித்துப் போடுவார். பரலோகத்தின் தேவன் நியாயத்தீர்ப்பில் தம்முடைய கோபாக்கினையை அனுப்பி, சபைகள் என்று அழைக்கப்படுகின்ற இந்த சபைகளை அழித்துப் போடுவார். நினைவிருக்கட்டும், நீங்கள் என்னுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
64156 எவருமே சபையில் சேர முடியாது. நீங்கள் ஒரு விடுதியில் சேரலாம். நீங்கள் ஒரு சபையில் சேரவில்லை, நீங்கள் ஒரு சபையில் பிறக்கிறீர்கள். பார்த்தீர்களா? நீங்கள் மெத்தோடிஸ்டு விடுதியில், பாப்டிஸ்டு விடுதியில், கத்தோலிக்க விடுதியில், பெந்தேகோஸ்தே விடுதியில் சேரலாம். ஆனால் நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்குள் பிறந்திருக்கிறீர்கள்; அதைத்தான் அவர் பின்பற்றி வருகிறார், அந்த சபை. எனவே, நமக்கு விடுதிகள் உள்ளன, சபைகள் அல்ல. அந்த விடுதியில் யாவரும், மாய்மாலக்காரர்களும் மற்ற யாவரும் கூடலாம். ஆனால் நான் இதை இப்பொழுதே வார்த்தையின்படியே உங்களுக்குத் தெரியப்படுத்துவேன், ஜீவனுள்ள தேவனுடைய சபையில் மாய்மாலக்காரன் ஒருவனும் இல்லை. அங்கே பரிசுத்தவான்களைத் தவிர வேறொன்றுமில்லை. 157 இப்பொழுது, அங்கத்தினர்கள் உங்களை உள்ளே கொண்டு செல்ல முடியும். ஆமோஸ் அதை கடிந்துரைக்க மாட்டான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவன் அந்த காரியத்தை அதனுடைய அஸ்திபாரத்திற்கு அசைப்பான். அவன் நிச்சயமாக அவ்வாறு செய்வான்.
65158 பாருங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்துக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்பாக ஒரு அக்கினி ஸ்தம்பம் இருந்தது, ஒரு அடிக்கப்பட்ட கன்மலை அவர்களைப் பின்தொடர்ந்தது. 159 அப்பொழுது மோவாப் ஒரு சகோதரனாயிருந்தான். அவன் இஸ்ரவேலின் பாகமாகவும் கூட இருந்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் அந்த யூத வம்சத்திலிருந்து வந்த ஒரு பாகமாயிருந்தான், ஏனென்றால் அது லோத்தின் குமாரத்தியின் மூலம் பிறந்தது. அது மோவாபை வெளியே கொண்டு வந்தது. 160 பிலேயாம் என்னும், ஆசாரியனைப் பாருங்கள், அங்கே வெளியே வந்து, ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, அதே விதமான பலிகளை செலுத்தி, அவனால் முடிந்தளவு அடிப்படையானவைகளை கொண்டிருந்தான். பார்த்தீர்களா? அவன் தன்னுடன் பிரபலமானவர்களையும் உடையவனாயிருந்தான். அவன் ஒரு இராஜாவை உடையவனாயிருந்தான். அவன் எல்லா மகத்தான மனிதர்களையும், பிரபுக்களையும், அண்ணகர்களையும் தன்னோடு நின்று கொண்டிருக்க செய்தான்.
66161 ஆனால் மோசேயோடு ஒருவர் நின்று கொண்டிருந்ததை அவன் காணவில்லை. அவர்தான் ஆமோஸோடு நின்றார். இன்றிரவு, இங்குள்ள ஒவ்வொரு நபரோடும் நிற்பார், அதாவது தேவனுக்காகவும், நீதிக்காகவும் நிற்பவருக்கு. எவ்வளவுதான் வல்லமையுள்ளவர்களாயிருந்தாலும், ராஜாக்கள் அங்கிருந்தபோதிலும், அதனோடு எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது. தேவன் ஆசீர்வதித்திருக்கிறதை அவர்களால் ஒருபோதும் சபிக்க முடியாது. ஏன்? அது ஜீவிக்கிற ஒரு வித்து. அது தேவனுடைய வார்த்தையாகும். அது அதனுடைய பரிபூரணத்திற்கு வளரும். ஓ, பாளையத்தில் ஜீவனுள்ள தேவனுடைய அடையாளங்கள்! அதாவது, இஸ்ரவேலர் அங்கே தவறு செய்திருந்தது போன்று காணப்பட்டது. ஆனால் அவர்கள் அந்த அடிக்கப்பட்ட கன்மலையையும், இஸ்ரவேலருக்காக பாவநிவிர்த்தி செய்யப்படுவதையும் காணத் தவறுகின்றனர். அப்பொழுது பாளையத்தில் ராஜாவின் ஜெயகெம்பீரம் இருந்தது. தேவன் அவர்களோடு இருந்தார். ஏன்? அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்தி, மகத்தான அற்புதங்களையும், அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்து கொண்டிருந்தார், அவர்கள் மேல் ஒரு அக்கினி ஸ்தம்பம் தொங்கிக் கொண்டிருந்தது. மோசே அக்கினி ஸ்தம்பத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். இஸ்ரவேல் புத்திரர் மோசேயைப் பின்பற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் தங்களுடைய பாதையில் இருந்தனர், அவர்களை எதுவுமே தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஆமென். 162 ஓ, தேவன் தம்முடைய கரத்தில் யாரையாவது அவருடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்தால், இன்றைக்கும் அது எளிதாய் மீண்டும் நிகழ முடியாதா? அந்த அக்கினி ஸ்தம்பம் இன்னமும் உயிரோடிருக்கிறது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். வார்த்தை இன்னமும் ஜீவிக்கிறது. 163 தேவனே, சத்தியத்தையும், சரியானதையும் நிலைநிறுத்த, இந்த…இந்தக் காரியங்களை அசைக்கக் கூடிய ஒரு ஆமோஸை எங்களுக்கு அனுப்பும். 164 நீங்களோ, “நாம்…அவருக்கு என்னவிதமான பலன்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்கலாம். 165 நல்லது, தேவன் முன்குறித்திருந்த அனைவரையும் அழைக்குமளவிற்கு அவன் ஒரு பலன்களை உடையவனாயிருப்பான். அந்தவிதமாகத்தான் அவன் பெறுவான். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் வரும்.” ஆம்.
67166 மிகாயா ஆகாபுக்கு முன்பாக இருந்தான், ஆகாப் அவனை வெறுத்தான். எல்லா ஊழியக்காரர்களும் அவனுக்கு எதிராக இருந்தனர். அவர்கள் யாவரும் கூட, ஏவப்பட்டிருந்தனர், ஆனால் அவர்களுடைய ஆவியின் ஏவுதல் வார்த்தையோடு ஒத்துப் போகவில்லை. ஒரு வேளை, ஆமோஸ் அதே காரியத்தைத்தான் செய்திருப்பான் என்று நான் நினைக்கிறேன். 167 ஆசாரியர்கள் தெருவில் நடந்து சென்றபோது, “இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள்! என்ன—என்ன…? உன்னுடைய நற்சாட்சிப் பத்திரங்களை எனக்குக் காண்பியுங்கள். நீ எந்தப் பள்ளியிலிருந்து வந்தாய்? நீ எந்த வம்சத்திலிருந்து வந்தாய்? நீ ஒரு…? உன்னை ஆசாரியனாக்கியது யார்?” என்று கேட்டார்கள். அவன், “தேவன் என்னை நியமித்தார்” என்று கூறுவான். “நீ எந்தப் பள்ளியிலிருந்து வந்தாய்?” 168 “யெகோவா தேவன். நான் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாய் இருக்கிறேன்.” அவர்கள் அவனுக்கு செவி கொடுப்பார்களா? நிச்சயமாக இல்லை. அவர்கள் அந்த நபரைக் கேட்க விரும்பவில்லை. நிச்சயமாக இல்லை. அவர்கள் விரும்பவில்லை…
68169 மேலும், அதே சமயத்தில் அந்த மனிதர்களும், “நான் ஏவப்பட்டிருக்கிறேன். பாருங்கள், நான் இங்குள்ள பரிசேயர்களின் மகத்தான சபையைச் சேர்ந்தவன். தேவன் நம்மை எப்படியாய் ஆசீர்வதித்திருக்கிறார் என்று பாருங்கள். நாம் பொன் பலிபீடங்களை உள்ளே கட்டுகிறோம். நாம் ஆலயங்களை கட்டுகிறோம். நாம் இந்த எல்லாக் காரியங்களையும் செய்துள்ளோம். மேலும், ஓ, எங்களுடைய மிஷனரி காணிக்கை யூதேயா முழுவதிலும் உள்ள மற்ற சபைகளைக் காட்டிலும் அதிகமானதாயிருக்கிறது. பாருங்கள், நாம் இங்கே இந்த எல்லாக் காரியங்களையும் செய்கிறோம். எங்களுடைய ஜனங்கள் அதிக தசமபாகம் செலுத்துகிறவர்களாயிருக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் மிகாயா இல்லை… 170 ஆமோஸ் அங்கே நின்று, “நீ சேவித்துக் கொண்டிருக்கிறாய் என்று நீ உரிமை கோருகிற தேவன் உன்னை அழிக்கப் போகிறார்” என்றான். அது அந்தவிதமாகவே சம்பவித்தது.
69171 இப்பொழுது, நான் மிஷனரி திட்டங்களைக் கண்டிக்கவில்லை. நான் பெரிய சபைகளைக் கண்டிக்கவில்லை. ஆனால், அதைக் குறித்த தொல்லை என்னவெனில், ஜனங்கள் தங்களுடைய கண்களை அதன் மேல் வைத்து, வார்த்தையிலிருந்து…விலகியிருக்கிறார்கள். மேலும், முடிவிலே, அது உங்களை அந்தக் காரியத்திற்குள்ளாக வழி நடத்திச் செல்கிறது, நீங்கள் நழுவிச் செல்வதைக் காணலாம். வார்த்தைக்கு திரும்பி வாருங்கள். அதிலிருந்து விலகிச் செல்லாதீர்கள். ஓ, இன்றைக்கு நமக்கு வனாந்திரத்திலிருந்து ஒரு கூக்குரல் தேவை. இப்பொழுது நிச்சயமாகவே உண்மையாயுள்ளது. நிச்சயமாக. 172 மற்ற காரணங்கள், ஜனங்கள் சிந்திக்கிறார்கள். அவர்கள் சிந்திக்க விரும்புகிறார்கள். அதுவே பெற்ற முதல் காரியம்…அதுதான் மானிட வர்க்கத்தின் ஐக்கியத்தை இழந்துவிட்டது, வார்த்தை அவ்விதமாக இருப்பதற்கு எதிராக சாத்தான் யோசனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தினான். அது மிகவும் தர்க்க ரீதியாக தொனிக்கிறது.
70173 தேவன் தம்முடைய வார்த்தையால் அவர்களைத் உள்ளே தடுப்புகளால் சூழப்பட்டிருந்தபோது, சாத்தான் ஏவாளிடம் என்ன சொல்லியிருப்பான் என்பதை நாம் எடுத்துக் கொள்வோம்,. 174 தேவன் தம்முடைய ஜனங்களை சத்துருவினிடத்திலிருந்து பலப்படுத்த அவர்களுக்கு அளித்த ஒரே காரியம், வார்த்தை மாத்திரமேயாகும். அவர் நமக்கு ஒரு கோட்பாட்டை ஒருபோதும் அளிக்கவில்லை. அவர் அவருடைய வார்த்தையைத் தவிர வேறொன்றையும் நமக்கு ஒருபோதும் அளிக்கவில்லை. அவ்வளவுதான். தேவன் முடிவற்றவர், சர்வ வல்லமையுள்ளவர், மாறாதவர். அவரால் மாற முடியாது. அவருடைய முதல் திட்டம் பரிபூரணமாயுள்ளது. அவர் அதை ஒருபோதும் மாற்ற வேண்டியதில்லை. 175 அவருடைய முதல் தீர்மானம், மனிதன் பாவம் செய்து, அவனுக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள அந்த பெரிய பிளவைக் கடந்து, தன்னால் திரும்பி வர முடியாத நிலையில் இருந்தபோது, தேவன் இரக்கத்தினாலும், கிருபையினாலும் நிறைந்தவராய், ஒரு பதிலியை ஏற்றுக்கொண்டார். இரக்கமும் கிருபையும் நிறைந்த ஒரு தேவனால் மாத்திரமே அதைப் போன்ற ஒரு காரியத்தைச் செய்ய முடியும். அவர் ஒரு பதிலியை ஏற்றுக்கொண்டார், அந்த பதிலீ இரத்தமாயிருந்தது. அந்த இடத்தில் மாத்திரமே மனிதன் மீண்டும் தேவனோடு ஐக்கியத்தில் வர முடியும், அது சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் மாத்திரமேயாகும். மனிதனால் இரத்தத்தின் மூலம் மாத்திரமே, தேவனோடு ஐக்கியங்கொள்ள முடியும் என்பது ஒரு போதும் இருந்ததில்லை. அவ்வளவு உண்மையா இருக்கிறது, அங்கேதான் அவன் தேவனோடு ஐக்கியங்கொள்கிறான்.
71176 இப்பொழுது, ஏவாள் தடைகளை போட்டுவிட்டாள். ஏவாள் யோசிக்கத் துவங்கினாள். சாத்தான் இந்த விதமாக, “இப்பொழுது, நீ…உனக்குத் தெரியாது. நீ இன்னும் பள்ளிப்படிப்பைப் பெறவில்லை. நான் இங்குள்ள வேதபாட கருத்தரங்கில் பேராசிரியராக இருக்கிறேன்” என்றான். அவனுடைய சொந்த. “மேலும், நான் உனக்கு சொல்லுகிறேன், நாம் அங்கே சில காரியங்களைக் கற்றுக் கொண்டோம். தேவன் மிகவும் நல்லவர் என்று நாம் கற்றுக் கொண்டோம்! தேவன் மிகவும் நல்லவராயிருக்கிறார் என்று நாம் நம்முடைய வேதபாட கருத்தரங்கில் கற்றுக்கொண்டோம்! அவர் அங்கு எழுதின எல்லாவற்றையும் நீ செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் அதை எதிர்பார்க்கவில்லை” என்று கூறினான். “ஆம், ஆனால்,” அவள், “ஆம், ஆனால் தேவனாகிய கர்த்தர் கூறினார்” என்றாள். 177 இப்பொழுது, அவள் அதில் தரித்திருந்தால், அவள் ஒரு நல்ல பிரசங்கியாராகியிருந்திருப்பாள். அந்தக் காரணத்தினால்தான் அவள் இன்றைக்கு பிரசிங்கியாய் இல்லாதபடி ஆக்கினைக்குட்படுத்தப்பட்டிருக்கிறாள். பார்த்தீர்களா? அவளை அதிலிருந்து விலக்கி வைத்திருங்கள். ஆமோஸ் அதைக் குறித்து என்ன கூறுவான்? நான் சுமார் ஐந்து நிமிடங்கள் அவனுடைய பேச்சைக் கேட்டு, அவனுடைய செய்தியை பதிவு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அதை ஒலிநாடாவில் பதிவு செய்வேன், முழு உலகமும் அதைக் கேட்கட்டும். ஹூ-ஹூ. அப்பொழுதிலிருந்து நான் அதைக் குறித்து அமைதியாக இருக்க முடியும். கவனியுங்கள். ஆம், ஐயா, அவன் அதைக் கடிந்து கொள்வான்.
72178 அவள் என்ன கூறினாள் என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது, சாத்தான் கூறினான்…இப்பொழுது, அவனால் அதை ஏவாளோடு செய்ய முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்… 179 அவனால் ஆதாமுடன் அதைச் செய்ய முடியவில்லை, ஆனால் அவன் ஏவாளோடு அதைச் செய்தான். எனவே அவன் ஏவாளிடம், “இப்பொழுது நீ இதை அறிவாய்” என்றான். அவன், “உனக்குத் தெரியும், நிச்சயமாகவே தேவன் மிகவும் நல்லவராய் இருக்கிறபடியால் உன்னை புண்படுத்த மாட்டார். தேவனே…நீ நிச்சயமாக மரிக்கமாட்டாய். அவர் ஒரு நல்ல தேவன் என்பதை நீ அறிவாய்” என்றான். 180 நாம் இன்றைக்கு அதைக் குறித்து அதிகமாக கேள்விப்படுகிறோம். அவர் ஒரு நல்ல தேவன். ஆனால், அவர் நல்லவராயிருக்க வேண்டுமென்றால், அவர் நீதியுள்ளவராகவும் கூட இருக்க வேண்டும். அதுதான் அவரை நல்லவராக்குகிறது. அவர் செயல்முறைப்படுத்தாதவர் அல்ல. அவர் தேவனாயிருக்கிறார். 181 இப்பொழுது, “தேவன் மிகவும் நல்லவராய் இருக்கிறபடியால் உனக்கு அதை செய்யமாட்டார்.” அவன் அவ்வாறு துவங்கி, “ஏன், நீ ஞானமுள்ளவளாயிருப்பாய். நீ கல்வியறிவு பெற்றிருப்பாய். நீ புத்திசாலியாகவும், ஞானமுள்ளவளாயும் இருப்பாய். இப்பொழுது நீ அறியாத காரியங்களை நீ—நீ அறிந்து கொள்வாய்” என்றான். பார்த்தீர்களா? 182 அவள் ஒரு காரியத்தை மாத்திரமே அறிந்திருக்க வேண்டியதாயிருந்தது, அது வார்த்தையாயிருந்தது. நாம் ஒரு இளங்கலை பட்டம், மற்றும் ஒரு பி.எச்.டி., மற்றும் ஒரு எல்.எல்.டி.,. பட்டம், மற்றும் இந்த மற்ற எல்லா காரியங்களையும் பெற்றிருக்க வேண்டியதில்லை. தேவனுடைய வார்த்தையை மாத்திரம் அறிந்து கொள்ளுங்கள். வாசிக்க முடிந்த மிகவும் எளிமையான பிள்ளையாலும், அதை அறிந்து, தெரிந்து கொள்ள முடியும்.
73183 ஆனால், தர்க்கஅறிவு, அவர்கள் என்ன பெற்றுக் கொண்டனர்? அவர்கள் என்ன பெற்றனர்? அங்கேயே அவர்கள் நிலைகுலைந்து போனார்கள். சாத்தான் அங்கே மானிட வர்க்கத்தை தோற்கடித்துவிட்டான் என்பதை அறிந்திருந்தான். அங்குதான் அவன் அவர்களை தோற்கடித்து வந்தான். 184 அதன் காரணமாகத்தான் ஆமோஸ் வந்தான். ஏனென்றால், புகழும், பிரபலமான கருத்துகளும், அருமையான, மகத்தான தலைவனும் அல்லது ராஜாவும், செழிப்பைக் கொண்டு வந்திருந்தன. ஜனங்கள் ஏசாவைப் போல, ஒரு பீன்ஸ் ஆகாரத்திற்காக தங்களுடைய ஜீவியங்களை விற்றுவிடுவார்கள். நான் புண்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை, ஆனால் நான் உண்மையைக் கூறவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 185 அண்மையில் ஜனநாயகக் கட்சியினராகிய நீங்கள் உங்களுடைய பிறப்புரிமையை விற்றுவிட்டீர்கள். அது உண்மை. நான் ஒரு குடியரசுக் கட்சிக்காரன் அல்ல. நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால், சகோதரனே, என்னே ஒரு அவமானம்! அந்தவிதமாக வாக்களிக்க ஒரு நேர்மையற்ற இயந்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. ஆனால் அமெரிக்கா அதைத்தான் விரும்பியது. அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர். நீங்கள் விரும்புகிறதை அவர் வழக்கமாகவே உங்களுக்கு அளிக்கிறார். 186 தேவனே, உம்முடைய வார்த்தையை எனக்கு தாரும். அதுதான் எனக்கு வேண்டும். “கர்த்தாவே, நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உம்முடைய வார்த்தையை என் இருதயத்தில் மறைத்துக்கொள்வேனாக.”
74187 ஓ, மற்றவர்கள் யோசிக்கின்றனர். ஆனால், பாருங்கள், ஆமோஸ் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், அவனால் யோசிக்க முடியவில்லை. வார்த்தை அவனிடத்திற்கு வந்தது. இல்லை. 188 இன்றைக்கும் வார்த்தையைப் போலவே, நீங்கள் அதை வியாக்கியானிக்க வேண்டும், பரிசுத்த ஆவியானவர் அதை உங்கள் ஜீவியத்தில் ரூபகாரப்படுத்துவதன் மூலம் அதை வியாக்கியானிக்கட்டும். 189 அதுதான் கூறப்பட்டது, என்ன, உங்களுக்குத் தெரியுமா, எரேமியா தீர்க்கதரிசி அனனியாவிடம் கூறினான். அவன், “அந்த தீர்க்கதரிசி பேசி, அவன் கூறுகிறது வெளிப்படும்போது, அவன் சரியென்று தீர்க்கதரிசிகள் அறிந்து கொண்டனர்” என்றான்.
75190 ஆமோஸ் இங்கிருந்தால், அவன் என்ன செய்வான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவன்—அவன் வார்த்தையோடு தரித்திருப்பான். அதைத்தான் அவன் செய்வான். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? தேவனுடைய மூல வார்த்தையின் அஸ்திபாரத்திலிருந்து நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம் என்று அவன் நமக்கு கூறுவான். நாம் முதல் பெந்தேகோஸ்தே சபையிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்று அவன் நமக்குக் கூறுவான். பெந்தேகோஸ்தேயினருக்கு அவன் அதைத்தான் கூறுவான். “அவர்கள் ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக உங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டியதாயிருந்தது. ஆனால் நீங்கள் இன்னும் அங்கு வரவேயில்லை” என்று கூறலாம். ஓ, அவன் ஸ்தாபன ஆளுமைக்கு என்ன கூறுவான்? பாருங்கள், ஓ, அவன் அதை அளிக்காமலிருந்தால், கோட்பாடுகளை ஏற்று, சபையில் பிறப்பதற்கு பதிலாக சபையில் சேர்ந்து கொண்டதற்காக, அவன் சபைகளை அவர்களுடைய ஒழுக்கக்கேடான செயல்களுக்காக கிழித்தெறியவில்லையென்றால்! 191 பாருங்கள், சகோதரனே, சகோதரியே, நீங்கள் அதற்குள் பிறந்திருந்தால், நீங்கள் வித்தியாசமாக செயல்படுகிறீர்கள். நீங்கள்—நீங்கள் வார்த்தையோடு நிலைத்திருங்கள். பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருக்குமானால், அது வார்த்தையை மாத்திரமே போஷிக்கிறது. இயேசு, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்,” வார்த்தையின் ஒரு பாகத்தினால் அல்ல, “தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும்” என்றார். 192 அவன், ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், அவன் நமக்குள்ளாக இந்தக் காரியத்தைக் காண்பான்.…ஆமோஸ் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான்.
76193 இப்பொழுது நான் இன்னும் ஒரு நிமிடத்தில், முடிக்கப் போகிறேன், ஆனால் என்னால் முடிந்தால், இந்தக் குறிப்புகளை பதிய செய்ய நான் கூற விரும்புகிறேன். நான் அதைக் கூறுவேன், பரிசுத்த ஆவியானவர் அதை பதிய செய்ய வேண்டும். நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். 194 ஆமோஸ் இன்றிரவு இங்கு வந்து இந்த மேடையின் மேல் நின்றிருந்தால், அவன் பீனிக்ஸின் தெருக்களில் மேலும் கீழும் நடந்து சென்றிருந்தால், அவன் இன்றைக்கு நமக்குள்ளும், நம்முடைய தேசிய விவகாரத்திலும், நம்முடைய சபை உலகத்திலும், அவன் சமாரியாவில் கண்ட அதேக் காரியத்தை: தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகி, ஒழுக்கக் கேடுகளுக்கு முற்றிலுமாக அடிமைப்படுத்தப்பட்டதை அவன் காண்பான். அவன் மிகவும் மதசம்பந்தமான குழுவைக் காண்பான். அவர்கள், அவர்கள் ஒவ்வொருவரும், இஸ்ரவேலர். ஆனால் அவன் ஒரு—ஒரு ஒழுக்கக்கேடான, ஒழுக்கக்கேட்டைக் காண்பான். அவன் ஜனங்களின் மத்தியில் சமுதாய மற்றும் ஒழுக்கக்கேடான சீரழிவைக் காண்பான். அவன் தேசத்தின் மேல், ஒழுக்கக்கேடான சீரழிவைக் காண்பான். அவர் வார்த்தையிலிருந்து ஒழுக்கக்கேடான சிதைவைக் காண்பான். அவன் சபையில், விபச்சாரத்தைக் கண்டிருப்பான். நான் அதை பொருட்படுத்திக் கூறிக் கொண்டிருக்கவில்லை…ஆம், இரண்டுமே; மாம்சப்பிரகாரமாகவும், அவன் ஆவிக்குரிய விபச்சாரத்தையும் காண்பான். எப்படியாய் அவர்கள் இங்கே மனிதனுடைய கோட்பாடுகளை, மனிதனுடைய கோட்பாடுகளாக, வார்த்தைக்கு பதிலாக அவைகளை ஏற்றுக்கொண்டு, அது தேவனுக்கு விரோதமாக ஆவிக்குரிய விபச்சாரம் செய்வதாகும். வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரம் அவ்வண்ணமாய்க் கூறுகிறது, அதாவது அவர்கள், இந்த வேசி, பாவம் செய்தாள், ஏனெனில், “அவள் தன்னுடைய அருவருப்புகளினால் தன்னுடைய கோபாக்கினை என்னும் மதுவை பூமியைப் பருகப்பண்ணினாள்.” ஆம். அது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்பதை நாம் காண்கிறோம். அவன் அதை, ஒழுக்கக்கேடான சீரழிவைக் காண்பான்.
77195 ஆமோஸ் அரசாங்கத்தை குற்றப்படுத்தவில்லை. கவனியுங்கள். ஆமோஸ் தன்னுடைய வேதம் முழுவதிலும் அரசாங்கத்தைக் குற்றப்படுத்தவில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுத்ததற்காக அவன் ஜனங்களை குற்றம் சாட்டினான். ஓ, என்னால் முடியும்… 196 நீங்கள் களைப்புற்றிருக்கிறீர்களா? [சபையோர், “இல்லை” என்கின்றனர்.—ஆசி.] சரி, அப்படியே ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள். பார்த்தீர்களா? 197 உங்களுடைய அரசாங்கத்தைக் குற்றப்படுத்தாதீர்கள். மணலுக்காக ஜனங்கள் வாக்களிக்கும்போது பாறையின் மேல் அரசாங்கம் ஒரு வீட்டைக் கட்ட முடியாது. ஜனங்கள் அதை விரும்புகிறார்கள்.
78198 அநேக சமயங்களில் நான் பிரசங்க பீடத்தில் உள்ள காரியங்களை கூறுகிறேன், என்னுடைய சகோதரர்கள், ஊழியக்காரர்கள், நல்ல மனிதர்கள் அங்கே அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நான் அவர்களை ஒரு மூலையில் அழைத்து பேசுகிறேன். இந்தக் காரியங்களை அறிந்துள்ளபடியால், என்னுடைய சகோதரர்களுக்கு அதைக் கூற வேண்டியது என்னுடைய கடமையாகும். நான் அவர்களிடத்தில் பேசுகிறேன். அவர்கள், “சகோதரன் பிரான்ஹாம், நீர் கூறுவது சரியென்று நாங்கள் அறிவோம், ஆனால் என்னுடைய சபையானது வெளிநடப்பு செய்யும்” என்கிறார்கள். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] பார்த்தீர்களா? உங்களால் முடியாது. அது ஜனங்கள்.
79199 இப்பொழுது, நான் இங்கே தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தில் பெண்மணிகளுக்கான பண்டைய நாகரீகமான உயர் குதிகால் சரிகை காலணிகளை விற்றால் என்னவாகும்? இன்றைக்கு ஒரு முழு கடையில் உள்ள தோலைக் காட்டிலும்—அவர்கள் அணிந்துள்ள ஒரு ஜோடி மிக விலை உயர்ந்த தோலைக் கொண்டதாய் உள்ளது. ஆனால் நான் அவைகளை ஒரு ஜோடி ஐம்பது சென்டுகளுக்கு விற்றாலும், நான் பட்டினியாய் மரித்துப் போவேன். ஏன்? உங்களுக்கு அவைகள் வேண்டாம். 200 நான் அந்த பண்டைய நாகரீகமான, மதர் ஹப்பார்ட் பாவாடைகளை இன்றைக்கு பெண்களுக்கு விற்றால், அவர்கள் அதை வாங்குவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. அவர்கள் தங்களைத் தாங்களே இறுக்கமாக அணிந்து கொள்ளக் கூடிய ஏதோ ஒரு காரியத்தை விரும்புகின்றனர். அவர்கள்—அவர்கள் மிகவும் இறுக்கமாக உடுத்த விரும்புகிறார்கள். தெருவில் நடந்து செல்லும்போது, கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து வெவ்வேறு வகையில் வளைந்து நெளிந்து காணப்படும் படி, உள்ளே தள்ளி, வெளியே தள்ளப்பட்டு, பின்னால் உயரமாக இருக்கும் ஒரு ஜோடி குதிங்கால் செருப்புகளை அணிந்து, அவர்களுடைய தலை வெளியே நீட்டியிருக்க விரும்புகின்றனர். நான் அதை நகைச்சுவைக்காக கூறவில்லை. இது கேலி பேசுவதற்கான இடமல்ல. ஆனால் அதுதான் உண்மை. எனக்கு நல்ல கல்வியறிவு இல்லை. அந்த விதமாகத்தான் நான் என்னுடைய வார்த்தையை கூற முடியும், நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். பார்த்தீர்களா? இப்பொழுது, அது உண்மையாயுள்ளது. அவர்கள் அந்த விதமான ஆடைகளை வாங்கமாட்டார்கள்.
80201 அன்றொரு இரவு மேடையின் மேல், ஒரு சிறிய இந்தியப் பெண்மணி அங்கே வந்தாள். நான் அவளுடைய சிறிய கரத்தைக் குலுக்க விரும்பினேன். சகோதரன் க்ரூமரின் சபையில் அல்லது எங்கேயிருந்தாலும் சரி. என்னுடைய தாயார் உடுத்தியிருந்தது போன்ற ஒரு ஆடையை அவள் அணிந்திருந்தாள். நான், “சரி, பெண்மணியே, உன்னுடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக” என்று எண்ணினேன். அவள் என்னிடத்திற்கு வருவதற்கு முன்பே, கர்த்தர் அவளை அங்கேயே சுகமாக்கினார். அவள்…பார்த்தீர்களா? நான், “நான்—நான்—நான் அமைதியாக இருப்பது நல்லது” என்று எண்ணினேன். பார்த்தீர்களா? “எப்பொழுதாவது, அந்த தருணம் வரும் வரை காத்திருங்கள்.” பார்த்தீர்களா? அது அங்கிருந்தது. 202 பாருங்கள், நீங்கள் அந்த ஆடைகளை விற்க முடியாது. நீங்கள் அவைகளை ஒரு இந்தியருக்கு விற்கலாம், ஆனால் அவர்களில் அநேகருக்கு விற்க முடியாது. அவர்கள் மற்றவர்களைப் போலவே கிட்டத்தட்ட தளர்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மிக அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய பிள்ளைகள் வெளியே வருவதையும், இந்த நவீன, வெள்ளை நிற, பள்ளி ஆசிரியர்களில் சிலர் உள்ளே வருவதையும், இந்த மற்ற எல்லாமே அர்த்தமற்ற காரியங்கள். நீண்ட காலத்திற்கு முன்பு, வெள்ளையர்களின் எதிர்ப்பாளர்களாயும் மற்றவர்களையும் போல, நீங்கள் முன்பு இருந்திருந்தால் நீங்கள் நலமாக இருந்திருப்பீர்கள்.
81203 ஆப்பிரிக்காவில், நாம் அங்கே கருப்பு நிறத்தவர் இருந்தபோது, அவர்கள் என்ன செய்தனர்? அங்கே சென்று, அந்த மிஷனரிமார்கள், வாசிக்க, எழுத, எண்கணிதத்தையும் கற்பிக்கின்றனர். அவன்…ஏன், அவர்கள், அவர்கள், உங்களால் முடிந்ததை விட, கிறித்துவம் அவர்களிடம் கொண்டு வர முடிந்ததை விட, தங்களுடைய கோத்திரங்களில், நல்லொழுக்கங்களைக் குறித்து அதிகம் அறிந்திருக்கிறார்கள், அது உண்மை. அது சரிதான். அந்த ஸ்திரீகளில் எவரேனும் அங்கே சூலு கோத்திரத்தை சேர்ந்திருந்தால், அவள் விவாகம் செய்ய ஒரு குறிப்பிட்ட வயது வரை காத்திருந்தாள், யாரோ ஒருவர் அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அவள் அங்கிருந்து வெளியேற வேண்டும். அவள் இனிமேல் ஒரு பழங்குடியினரல்ல. இல்லை ஐயா. அவள் விவாகம் செய்து கொள்ளும்போது, அவளுடைய கன்னித்தன்மை சோதிக்கப்படுகிறது. அவள் குற்றவாளி என்று கண்டறியப்பட்டால், அதைச் செய்த மனிதனை அவள் சொல்ல வேண்டும், அவர்கள் இருவரும் ஒன்றாகக் கொல்லப்பட்டனர். 204 நாம் அந்தவிதமான ஒரு அமைப்பை உடையவர்களாயிருந்தால், இங்கே சுற்றிலும் ஏராளமான கொலைகள் உண்டாகும். நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? அது உண்மை. புருஷர்களையும், ஸ்திரீகளையும் அடக்கம் செய்ய அவர்களுக்கு போதிய அடக்கம் செய்யும் ஆட்கள் இருக்கமாட்டார்கள். நிச்சயமாக. “ஆனால் நீ எப்படியும், மரித்தாய், அதை அறியாமலிருக்கிறாய்.” எனவே அதுவே அதனுடைய தொல்லையாயுள்ளது. பார்த்தீர்களா? ஆனால் இப்பொழுது, மிக மிக அதிக அளவில், அது உண்மையாயுள்ளது.
82205 அப்படியானால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவர்கள் அவர்களை அங்கே அழைத்துச் சென்று, அவர்களுக்கு பள்ளியில் கற்பிக்கிறார்கள். அதன்பின்னர் நீங்கள் அவர்களை தெருவில் காணலாம். அவர்கள் கொண்டிருந்த தங்களுடைய சொந்த கோத்திர பாவங்களையும், அவர்கள் கொண்டிருந்ததையும்; உள்ளே வந்து, வெள்ளையரின் பாவங்களை எடுத்துக் கொள்கின்றனர்; அப்பொழுது அவர்கள் துவக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான நரகத்தின் பிள்ளைகளாயிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான ஒரேக் காரியம், அவர்கள் இருக்கிற இடத்திலேயே தரித்திருக்க கிறிஸ்து மாத்திரமேயாகும். சரி. 206 அந்தவிதமாகத்தான் நமது அமெரிக்க இந்தியர்களும் உள்ளனர். இந்த தேசத்தில், அந்த இந்தியனுக்காக நான் வருந்துகிறேன். நிச்சயமாகவே அதிலிருந்து ஒரு மோசமான ஒப்பந்தம் இருந்தது! நான்…நான் ஒரு நபர் மாத்திரமே, ஆனால் நான் அவர்களுக்காகவே இருக்கிறேன். ஆம், ஐயா. என்னுடைய செய்தி முடிவுறும்போது, கர்த்தர் எப்பொழுதாவது என்னை இந்தவிதமாக இடைபடுதலின் துறைகளிலிருந்து அழைத்தால், அவர் என்னை இனிமேல் வாழ விட்டுவிட்டால், நான் இந்தியர்களிடம் செல்லப் போகிறேன். ஆம், ஐயா. ஆம், ஐயா. என்னே!
83207 ஆமோஸ் கூப்பிடும்போது என்ன செய்வான் என்று நாம் பார்க்கிறோம். நம்முடைய முழு முறைமையும் ஆக்கினைக்குட்படுத்தப்படும். நிச்சயமாக இல்லை… 208 தேசம் மணலுக்காக வாக்களிக்கிறபடியால் ஒரு பாறையின் மேல் அரசாங்கம் கட்ட முடியாது, (என்னுடைய கருத்து என்னவெனில்). 209 நீங்கள் எப்படி உங்களுடைய சபையை கன்மலையின் மேல் கட்டப்போகிறீர்கள்? பிரசங்கி பீடத்தில் நின்று கொண்டு, கன்மலையைக் குறித்து எப்படி பிரசிங்கப்பீர்கள், முழு சுவிசேஷத்தின் அடிப்படைகளின் மேல் அதைக் கட்டியெழுப்ப, அவனுடைய கூட்டத்தார், அவனுடைய ஜனங்களில் சிலர், அவரை வெளியே தள்ளிவிடலாமா? இப்பொழுது, இந்த பிரசங்கியார் தைரியத்தையும், தேவனுடைய ஆவியையும் உடையவராயிராமல், வெறுமனே கதவை அடைத்ததற்காக, “அந்த காரியத்திற்காக வேறு யாரையாவது அழைத்துக் கொள்ளுங்கள், எனக்கு அல்ல” என்று கூறுகின்றனர். அதைச் செய்யும் ஒரு பிரசங்கியாரை நான்—நான் பாராட்டுகிறேன்.
84210 அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு தேவனுடைய மனிதன் வார்த்தையை அவர்களுக்கு கொண்டு வர முயற்சிக்கும்போது, அந்தச் சபைக்கு ஐயோ, அப்பொழுது அவர்கள் அதனோடு இணையமாட்டார்கள். அது உண்மை. அவன் எப்படி ஒன்பது வரங்களும் கிரியை செய்கின்ற ஒரு சபையை உடையவனாயிருக்கப் போகிறான், அவர்களும், அதுவும், சபையானது கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் கூட—கூட வாழாதவர்கள், தங்களுடைய சுவிசேஷத்தின் முதல் எழுத்துக்களைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள்? அப்படியானால், “எனக்கு ஒரு மேலான பிரசங்கி இருந்தால் நலமாயிருக்குமே!” என்று சொல்லுங்கள். ஏன், அது உங்களுடைய தவறு. அது உண்மை. 211 அது நம்முடைய தேசத்தின் தவறு, நம்முடைய அமெரிக்கர்கள், நாம் இங்கே மத சுதந்திரத்திற்காக வந்திருக்கிறோம். எதிலிருந்து? நாம் திரும்பிச் சென்று, நாம் விடுதலையாகும்படி இங்கு வந்திருந்த அதே காரியத்தை நம்முடைய தலை நகரத்திற்குள் செலுத்துகிறோம். 212 இந்த தேசம் முழுவதுமாக இஸ்ரவேலைப் போன்றது. அவர்கள், இஸ்ரேல், பாலஸ்தீனாவிற்குள் வந்து, ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்து, நிலத்தைக் கைப்பற்றினர். முதலாவதாக, அவர்கள் மேல் சில நல்ல—நல்ல மனிதர்கள் இருந்தனர். அவர்கள் தாவீதையும், சாலமோனையும், மகத்தான மனிதர்களையும் உடையவர்களாயிருந்தனர். முடிவாக, கொஞ்ச காலம் கழித்து, அவர்கள் தொடர்ந்து வாக்களித்து, ஒரு அஞ்ஞானியை விவாகம் செய்து கொண்ட ஆகாபை அவர்கள் பெற்றுக் கொள்ளுமளவிற்கு உள்ளே தள்ளி, உள்ளே தேர்ந்தெடுத்து கொண்டனர். இப்பொழுது, ஆகாப் ஒரு நல்ல நபராயிருந்தான். அவனுடைய…ஓ, அவன்—அவன் சரியானதைச் செய்ய விரும்பினான், ஆனால் அவனுடைய அந்த ஸ்திரீயின் நிமித்தம் அவனால் சரியாக செய்ய முடியவில்லை.
85213 இப்பொழுது, ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு நான் பேசிக்கொண்டிருந்த அந்த மனிதனுக்கு எதிராக நான் ஒன்றும் இல்லை. அவர் ஒரு நல்ல மனிதனாக இருக்கலாம். ஆனால் அவனுக்குப் பின்னே உள்ள அந்த வேசியின் முறைமையே அவருடைய கழுத்தை சுழிக்கச் செய்கிறது. அந்த காரியத்தைத்தான் அது செய்யப்போகிறது. தன்னால் முடிந்தளவு எளிமையாக உள்ளே வந்து, அந்த முழு காரியத்தையும் திடீரெனத் செய்தான். 214 உங்களுக்குத் தெரியுமா நாம்—நாம் இப்பொழுது…நம்முடைய தேசத்தின் கடன் மிகப் பெரியதாய் உள்ளது, நாம் கடனாக வாங்கப் பட்ட பணத்துக்காக, இன்றிலிருந்து பதினான்கு ஆண்டுகள் வரிப் பணத்தை நாம் செலுத்துவோம். இந்த முறைமை உடைக்கும்போது என்ன சம்பவிக்கப் போகிறது?
86215 காஸ்ட்ரோ, நிச்சயமாக, நான் அவனுக்கு எதிரானவன். அவன் ஒரு கம்யூனிஸ்ட். சரி. நான் அவனுக்கு எதிரானவன். ஆனால் அவன் ஒரு நல்ல காரியத்தை செய்தான் அவன் நாணயத்தை மாற்றி, தங்கத்தை திருப்பி அனுப்பினான், பத்திரங்களை வாங்கி, தங்கத்தை திருப்பி அனுப்பினான். 216 நாம் அதைச் செய்ய வேண்டும், அல்லது நம் முகத்தில் ஒன்று சிக்கியிருக்கிறது, அதாவது கத்தோலிக்க சபை உலகத்தின் செல்வங்களை சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. அவள் பணத்தை வைத்திருக்கிறாள். நம்முடைய பத்திரங்களை மீண்டும் வாங்க, அவள் தங்கத்தை வைத்திருக்கிறாள். அது சரியாகத்தான் உள்ளது. இந்த விஸ்கி வியாபாரிகளும், புகையிலை வியாபாரிகளும், தேசத்திலுள்ள பெரிய மனிதர்ளும் அவ்வாறு விற்க மாட்டார்கள் என்றும், தங்களுடைய எல்லா வியாபாரத்தையும் இழக்காதபடிக்கு காத்துக்கொள்ளவும், கள்ள நோட்டுகளை புகுத்துவதையும் காத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்றும் நீங்கள் நினைக்கிறீர்களா?. அவர்கள் திரும்பிச் சென்று கத்தோலிக்க சபையிடமிருந்து அந்தப் பணத்தை எடுத்துக் கொள்வார்கள், அதன்பின்னர் அவள் விற்கப்படுகிறாள். சரி. “உலகத்தின் செல்வம்” என்று வேதம் முன்னுரைக்கவில்லையா? நான் ஒரு அரசியல்வாதியுமல்ல, ஒரு புத்திசாலியான மனிதனுமல்ல, ஆனால் நான் அறிந்த கர்த்தருக்கு நான் நன்றி கூறுகிறேன். அது உண்மை. அங்கே தான், அவள் கிடக்கப் போகிறாள். நீங்கள் அதைக் கவனியுங்கள். அது சரியல்லவா என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள். அப்படியே…நாம் எல்லோரும் அதைக் காண ஜீவிப்போம் என்று நான் நம்புகிறேன், நாம் நீண்ட காலம் வாழ வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்.
87217 ஆனால் நீங்கள் எப்படி செய்யப் போகிறீர்கள்? நாம் எப்படி ஒரு சபையைக் கட்டப் போகிறோம்? நாம் எப்படி ஒரு தேசத்தை உருவாக்கப் போகிறோம்? இப்பொழுது இதன் பேரில் நாம் எப்படி ஒரு தேசத்தை உருவாக்கப் போகிறோம்? அதைக் குறித்து நாம் என்ன செய்யப் போகிறோம்? 218 நான் வாயை மூடிக்கொண்டு வேறு எங்காவது செல்லலாம். ஆனால், உங்களுக்குத் தெரியும், நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுமளவிற்கு நான் போதுமான அளவு கூறியிருக்கிறேன். பார்த்தீர்களா? நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
88219 நமக்கு என்ன வேண்டும் என்று பாருங்கள். நீங்கள், உங்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அதைத்தான் நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். அதுவே உங்களுடைய விருப்பங்களாயிருக்கின்றன. 220 இன்றைக்கு தணிக்கை செய்யப்படாத நம்முடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாருங்கள். வழக்கமாக, அது நம்முடைய பிள்ளைகளுக்கு தவறாக இருந்தது, அவர்கள் நகரத்திற்குள்ளாகச் சென்று, படக்காட்சி பெட்டிகளில் காண்பிக்கப்படும் புகைப்படங்களைப் பார்க்க நாங்கள் அவர்களை அனுமதிக்கமாட்டோம். ஆனால் இப்பொழுதோ பிசாசு அதைத் திருப்பி, அதை ஒரு தொலைக்காட்சியாக மாற்றி, ஒவ்வொரு வீடுகளிலும் பொருத்துகிறான். 221 நீங்கள் அதைக் குறித்த சரியான காரியத்தைப் பெற்றிருந்தால், அது சரியாயிருக்கும், தொலைக்காட்சி எல்லாம் சரிதான். நிச்சயமாகவே, அதுதான்.
89222 ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தேவனுடைய நாமத்தை உபயோகிப்பதும், ஆணையிடுவதும், சபிப்பதும், நிர்வாணமான பெண்கள், ஒழுக்கக்கேடான செயல்களினால் அது அழுகிப்போய், உடை மற்றும் நடத்தையில் இணக்கமற்ற ஒரு கூட்டத்தை நாம் வளர்க்குமளவிற்கு இந்த பிள்ளைகளின் சிந்தையை விஷமாக்கிவிட்டோம், அது உண்மை, முரடர்கள். அது முற்றிலும் உண்மை. நீங்கள் அதை நோக்கிப் பார்ப்பது நல்லது. 223 நம்முடைய முழு தேசமும் ஒரு முரடர்களின் கூட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது. எந்தப் பையனும் தன்னுடைய இடுப்பில் தொங்கிக் கொண்டிருக்கிற அவனுடைய கால் சட்டையோடும், தலைக்குப் பின்னாக தொங்கிக் கொண்டுள்ள, அவனுடைய தலைமுடி திருமதி கென்னடியின் சிகை அலங்காரத்தை போன்று தலைமுடியானது கழுத்தின் கீழே தொங்கிக் கொண்டும், ஒரு முரட்டுத்தனமாக, அந்தவிதமாக சுற்றித் திரிந்து, அதன்பின்னர் அதை அமெரிக்கன் என்று அழைக்கிறீர்களா? நீங்கள் கிருபையிலிருந்து விழுந்துவிட்டீர்கள். மனந்திரும்பி தேவனண்டை திரும்புங்கள், இல்லையென்றால் நீங்கள் அழிந்து போவீர்கள். அந்தக் காரணத்தினால்தான், நாம் விரும்புகிற எந்தக் காரியத்தையும் செய்ய நம்மை அனுமதிக்கிற ஒருவரை நாம்—நாம் இங்கே உள்ளே கொண்டுவர விரும்புகிறோம். அது உண்மை. 224 அந்தவிதமாகத்தான் சபைகளும் உள்ளன. அவர்கள் ஒரு போதகரைத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர், அங்கே நின்று தங்களுக்கு சுவிசேஷத்தை கண்டிப்போடு அளிக்கும் ஒரு போதகரை அல்ல. ஆனால் அவர்கள் ஒரு குளியல் உடையை உடுத்திக்கொண்டு, அடித்தளத்தில் பங்கோ விளையாடி, தங்களுடைய விருப்பப்படி வாழவும், தணிக்கை செய்யப்படாத மோசமான, அசுத்தமான, வானொலியின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, சபையையும், உலகத்தையும் ஒன்றாக இணைக்க அனுமதிக்கிற யாரோ ஒருவரையே விரும்புகிறார்கள்.
90225 ஆமோஸ் அந்த காரியத்திற்கு எதிராக கூக்குரலிட்டதில் வியப்பொன்றுமில்லை. ஜனங்கள் அந்த காரியத்திற்கு சரியாக வாக்களித்தால், அவர்கள் அவனை ஏற்றுக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 226 போதகர் இருபது நிமிடங்களுக்கு மேல் பிரசங்கம் செய்தால், தர்மகர்த்தா குழு அவரை அறைக்குள் அழைத்து, “போதகரே, இங்கே பாருங்கள். நாங்கள்—நாங்கள் அதைப் போன்ற ஒரு காரியத்தை செய்ய உங்களை இங்கே கொண்டு வரவில்லை. எங்களுக்கு இருபது நிமிட நிகழ்ச்சி நிரல் உள்ளது. அது முடிந்தவுடன், அவள் போகட்டும்” என்கிறார்கள். 227 அவர் செய்ய வேண்டியது என்னவெனில், அந்த தர்மகர்த்தாக் கூட்டத்தை வாசலுக்கு புறம்பே தள்ளிவிட்டு, வேதாகமத்தை எடுத்துக்கொண்டு, இரவு முழுவதும் பிரசங்கித்து, பவுல் மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் கண்டதுபோல செய்வதேயாகும். சரியாக. அவர்கள் அவனை கட்டிடத்திற்கு வெளியே தள்ளினர்; தெரு மூலை போதுமானதாக உள்ளது. “தேவன் இந்தக் கல்லுகளினாலே…”
91228 தொலைக்காட்சி, தணிக்கை செய்யப்படாத படக் காட்சிகள், அழுக்கும் அசுத்தமுமே ஒரு மாதிரியை உருவாக்குகிறது. இன்றைக்கு நம்முடைய வாலிபப் பிள்ளைகளைப் பாருங்கள். நம்முடைய பெண் பிள்ளைகளைப் பாருங்கள். பள்ளியிலிருந்து வருகிற சிறு பயன்களைப் பாருங்கள், ஆறு, ஏழு, எட்டு வயதிற்கு மேல் இல்லை, சிகரெட்டுகளை பற்றவைக்கிறார்கள். அது ஏன்? அநேகமாக அவர்களுக்கு முன்பே அவர்களுடைய தாயார் அதை செய்திருக்கலாம். அவர்கள் அதைச் செய்யவில்லையென்றால், அப்பொழுது அவர்கள் அவ்வாறு செய்யும் சில பிள்ளைகளோடு தொடர்பு கொண்டுள்ளனர். உங்களுடைய பிள்ளைகள் யாருடன் விளையாடுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். சரி. இங்கே மற்ற… 229 சில காலத்திற்கு முன்பு, நாங்கள் மேஜையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, மனைவி அதை அறிவாள். என்னுடைய குட்டி ஜோசப் ஒரு குடிகார கப்பலோட்டியே தன்னைக் குறித்து வெட்கப்படும்படியான ஒரு வார்த்தையை கூறிவிட்டான். நான் திரும்பினேன். நான், “அது என்ன?” என்று கேட்டேன். தாயாருக்கு மயக்கம் வருவது போன்று இருந்தது. அந்த சிறுவன் அப்பாவி போன்று காணப்பட்டான். 230 அவன், “அப்பா, என்ன விஷயம்?” என்று கேட்டான். அவனுடைய கண்களில் கண்ணீர் பெருகியது. 231 அதற்கு நான், “அதைப் போன்ற ஒரு காரியத்தை நீ ஒருபோதும் கூற வேண்டாம்” என்றேன். அது என்னவென்பதை அவன் அறிந்திருக்கவில்லை. பள்ளியில் பிள்ளைகள் அந்த அசுத்தமான வார்த்தையை உபயோகித்தது கண்டறியப்பட்டது. நான், “தேனே, அது பிசாசினால் உண்டானது” என்றேன். 232 பாருங்கள், அந்த நிலையில் தான், உங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள். சகோதரனே, அது நெறிமுறைகள் இல்லாத ஒழுக்கக்கேடான அப்பேர்ப்பட்ட பாவத்தின் திரள்கூட்டமான ஒரு நிலைக்கு அது வந்து விட்டது. ஓ, என்னே! தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாவப் பிரியர்கள், சுகபோகப் பிரியர்கள்! ஓ, என்னே! 233 “இருபது நிமிடங்கள் போதுமானதாயுள்ளது. நான் தாமதமான நிகழ்ச்சியைக் காண வேண்டும்” என்கிறார்கள். பார்த்தீர்களா? “சீக்கிரமாக இதை இங்கிருந்து கொண்டு வாருங்கள். நான் அதைச் செய்ய வேண்டும்.” பார்த்தீர்களா? அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை செய்துவிட்டனர். அவர்கள் அங்கு சென்றனர், அது போதும்.
92234 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு உண்மையான மனிதனோ அல்லது ஸ்திரீயோ ஒவ்வொரு மணி நேரமும் அமர்ந்து, தேவனுடைய வார்த்தையைக் பருகிக் கொண்டிருக்கிறார்கள். அது மாத்திரமல்ல, ஆனால் அது அங்கு விழும்போது, அது நங்கூரமிட்டு, வாழ்க்கையை மாற்றுகிறது. ஆமென். ஆம். 235 அது எங்களுடைய ஜனங்களின் விருப்பங்கள். நம்முடைய முழு அமைப்பும் கெட்டுப்போய், அழிந்துபோயிருக்கிறது. அது எங்களுடைய ஜனங்களின் விருப்பமாய்யுள்ளது. 236 நீங்கள் ஒரு நல்ல மனிதனை எடுத்துக் கொண்டால், ஒரு நல்ல மனிதனைப் போன்றே, அவனை சுகபோகப் பிரியர்களைக் கொண்ட ஒரு கூட்ட குடும்பத்தில் சேர்த்துவிட்டால், அல்லது ஒரு நல்ல பெண்மணியை, அல்லது நல்ல ஒரு மனிதனை, அவர்களை ஒரு கலப்படமான குடும்பத்தில் சேர்த்துவிட்டால்; அவர்கள் அந்த மனிதனை ஒரு பரிதாபமான வாழ்க்கைக்கு நடத்துவார்கள். ஏன், முழு குடும்பமும் தேவனண்டை ஒப்புவிக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகள் இரட்சிக்கப்படும் வரை, நம்முடைய வீட்டை ஒழுங்காக வைத்திருக்கும் வரை, ஜெபிப்பது நம்முடைய வேலையாகும். ஆம். 237 நாமும் இஸ்ரவேல் தங்கள் சத்துருக்களோடு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டதைப் போன்றே இருக்கிறோம். முதலாவதாக, அவர்கள் அதைச் செய்வதற்கு முன்பு அவர்கள் வார்த்தையிலிருந்து விலகிச் செல்ல வேண்டியதாயிருந்தது. வார்த்தையிலிருந்து அமெரிக்கா எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதையே அது காண்பிக்கிறது.
93238 உங்களுக்குத் தெரியும், நீங்கள் ஒரு பொய்யை விசுவாசிப்பதற்கு முன்பு நீங்கள்—நீங்கள் சத்தியத்தை மறுதலிக்க வேண்டும். அது உண்மை. அது சரியாகத்தான் உள்ளது. ஏவாள் சாத்தானின் பொய்யை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, ஏவாள் முதலில் தேவனுடைய வார்த்தையை மறுதலிக்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் அப்பொழுதும் வார்த்தையிலிருந்து விலகிச் செல்ல வேண்டியதாயிருந்தது, இப்பொழுதும் அதேவிதமாக, ரோமாபுரியை துப்பாக்கிச் சூடு ஏதுமின்றி கைப்பற்ற அனுமதித்தனர். இந்தக் காரியங்களைக் குறித்து அவர்கள் தேவனுடைய வார்த்தையை அறிந்திருக்கவில்லை. அதுதான் அதனுடைய தொல்லையாயுள்ளது. 239 வார்த்தைக்கு நம்மை திரும்பக் கொண்டு வர, ஒரு உண்மையான தீர்க்கதரிசியின் எழுச்சி நமக்குத் தேவை. அது உண்மை. ஒன்று நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. அது நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. ஆம், உண்மையாகவே. மல்கியா 4 செய்வேன் என்று கூறினார். “அவர் ஜனங்களுக்கு, அவர்களுக்கு அவர் மீண்டும் பெந்தேகோஸ்தே பிதாக்களின் விசுவாசத்தை திரும்ப அளிப்பார்.”
94240 இஸ்ரவேலரின் தேவபக்தியற்ற சுகபோக பிரியர்கள் என்றோ ஒரு நாளில் அவளை அழித்துப் போடுவார்கள் என்பதை ஆமோஸ் அறிந்திருந்தான். இப்பொழுது நான் இதை பயபக்தியுடன் கூறட்டும். அவ்வாறே இன்றைக்கு ஒரு விசுவாசி உலகம், இந்த அமெரிக்காவின் தேவபக்தியற்ற சுகபோகப்பிரியர்கள், அதை அழிக்கப் போகிறார்கள் என்பதை அறிந்திருக்கிறான். உங்களுடைய அரசியல் பாசம்! நான் ஒரு நிமிடம் அந்த நங்கூரத்தை விட்டுவிடுகிறேன். அது தேசத்தை அழித்துவிடும். உலகத்தின் மேல் உள்ள உங்களுடைய அன்பு, வார்த்தையோடு வராமல், சரியானதைச் செய்ய முயற்சிக்காதது, சபையை அழித்துவிடும். அது முற்றிலும் உண்மை. அது புரிந்து கொள்ளப்பட்டது என்று நான் நம்புகிறேன். சபையானது அவரை விட்டுச் சென்றுவிட்டது, அவருடைய ஜீவ வார்த்தையை விட்டுச் சென்றுவிட்டது. முழு உலகமும் ஒரு இடறல் போல, அதில் இடறுகிறது. அவர்கள் இன்றைக்கும் அதேக் காரியத்தைச் செய்கின்றனர். ஆம். ஆமோஸ் இங்கிருந்தால், அவன் முழு முறைமைக்கு எதிராகவும் கூக்குரலிடுவான்.
95241 இப்பொழுது, முடிவாக, நான் இதை வசனம் 8-ல் கூற விரும்புகிறேன். கூர்ந்து கவனியுங்கள். அவர், “சிங்கம் கெர்ச்சிக்கும் போது, சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்?” என்றார். 242 நான் சிங்கங்களை வேட்டையாடியிருக்கிறேன். சிங்கம் மிருகங்களுக்கு ராஜாவாயிருக்கிறது. நான் ஆப்பிரிக்காவில் உள்ள அந்த பாலைவனங்களில், ஒரு இரவு நேரத்தில், அந்த சிறு புற்களின் கீழ், இல்லை அது சிறிய முட்களை கொண்டதாக இருக்கும். 243 ஒரு சிங்கம் சுடும் துப்பாக்கியின் முன்னே குதிக்கும். அது அதைக் குறித்து பயப்படாது, ஆனால் அது ஒரு முள்ளின் அருகில் செல்லாது. நீங்கள் அந்த புராணக்கதையைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால், அது உண்மை, ஒரு சிங்கம் ஒரு முள்ளின் அருகில் செல்லாது. அவர்கள் இப்படிப்பட்ட முட்களைக் கொண்ட குடிசைகளைக் கட்டுகிறார்கள், சிங்கம் அதில் குதிக்காது. இல்லையென்றால், அது உள்ளே வரக்கூடும். 244 பில்லியும் நானும். ஒரு இரவு அங்கே படுத்திருந்தபோது, அதனுடைய பெரிய வயோதிக வாயிலிருந்து கர்ஜனை சத்தம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது, என் தலைக்கு அவ்வளவு தூரம், பாருங்கள், ஆனால் அது—அது அருகில் வராது. அதனுடைய பெரிய பாதத்தோடு, ஏறக்குறைய அந்தவிதமாக, தரையில் சுற்றி நடந்து கொண்டிருந்தது. 245 நீங்கள் கழுதைப் புலிகளிருந்து இருந்து ஒவ்வொன்றையும் கேட்க முடியும், சிரிக்கும் கழுதைப்புலிகள், அழுகின்ற கழுதைப்புலிகள், அவைகள்—அவைகள் கூச்சலிடுகின்றன. மேலும்—மேலும் நீங்கள் ஆப்பிரிக்க பெரிய குரங்குளையும், குரங்குகளையும், ஒட்டகச்சிவிங்கிகளையும், யானைகள் மிகுந்த சிணுங்கலுடன் “வீ” என்று சப்தமிடுகின்றன. நீங்கள் பல மைல்களுக்கு அவைகளைக் கேட்க முடியும். எல்லாவிதமான பூச்சிகளும், வண்டுகளும் தங்களுடைய இரைச்சலை எழுப்பின. ஆனால் ஒரு சிங்கம் தூரத்தில் கெர்ச்சிக்கட்டும், வண்டுகள் கூட சத்தமிடுவதை நிறுத்தி விடுகின்றன. அவைகள் செவிகொடுக்கின்றன. ஏன்? அது அவர்களுடைய ராஜா. அவைகள் அதற்கு செவிகொடுக்கின்றன.
96246 வேதம், “தேவன்…சிங்கம் கெர்ச்சிக்கிறபோது யார் பயப்படமாட்டான்? தேவன் பேசும்போது, தீர்க்கதரிசனம் உரைப்பதிலிருந்து நாம் எப்படி விலகியிருக்க முடியும்?” என்று கூறியுள்ளது. அதிலிருந்து நாம் எப்படி விலகியிருக்க முடியும்? தேவன் பேசும்போது, தீர்க்கதரிசி உரைக்கப்பட்ட வார்த்தையை உரக்கக் கூறுகிறான். அது தேவனுடைய வார்த்தையாயிருந்தால்… 247 சிங்கம் கெர்ச்சிக்கிறது; வண்டுகள், அவைகள் யாவும், அவைகள் பயத்தின் காரணத்தால், அமைதியாயிருக்கின்றன. அவர்களுடைய—அவர்களுடைய—அவர்களுடைய ராஜா பேசிக்கொண்டிருக்கிறார். அவைகள் தங்களுடைய ராஜா பேசும் போது, அவரை கனப்படுத்த போதுமான உணர்வையும், தைரியத்தையும், போதுமான கனத்தையும் பெற்றிருந்தன. 248 ஆகையால் தேவன் தம்முடைய வார்த்தையினால் பேசுகிறார், அவருடைய சிருஷ்டிப்பின் ஒவ்வொரு சிருஷ்டியும் செவிகொடுக்கட்டும். அவர் இந்தக் கடைசி நாட்களில் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் தமது வார்த்தையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய இராஜ்யத்திற்குள்ளாகச் சேர்ந்திருக்கிற ஒவ்வொரு சிருஷ்டியும் அவர் என்னக் கூறிக்கொண்டிருக்கிறார் என்பதற்கு செவிகொடுக்கட்டும். அப்படியே நிற்கட்டும். சரிபார்த்துக் கொள்ளும். அவர் இப்பொழுது ரூபகாரப்படுத்தப்பட்ட தம்முடைய வார்த்தையினால் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். அவர் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த கடைசி நாட்களில் அவர் கெர்ஜிக்கும்போது, நாம் செவிகொடுத்து, ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகிறது என்பதை அறிந்து, தேவன் முதலில் கெர்ஜிக்காமல் அதை ஒருபோதும் செய்கிறதில்லை என்பதை அறிந்திருக்கிறோம். அது முழங்கும்போது, அப்பொழுது ஏதோ ஒன்று அந்த கர்ஜனையைத் தொடர்ந்து வருகிறது, ஆம், ஏனென்றால் அப்பொழுது அவர் புறப்பட்டு வருகிறார். 249 அவன், “ஒரு—ஒரு…காரணமில்லாமல் ஒரு சிங்கம் கெர்ச்சிக்கிறதா? ஒரு வாலிப சிங்கம் எதையாவது பிடித்துக் கொள்வதற்கு முன்னே, குகையிலிருந்து வெளியே வந்து சத்தமிடுகிறதா?” என்று கேட்டான். பார்த்தீர்களா?
97250 தேவன் கெர்ச்சிக்க ஒரு காரணத்தை உடையவராயிருக்கிறார், ஏனென்றால் நியாயத்தீர்ப்பு சமீபமாயிருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவருடைய வார்த்தை, அவருடைய வார்த்தை ஒரு தீர்க்கதரிசி. அவர் அப்படித்தான். “ இது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனமாயிருக்கிறது.” அது ஒரு வெளிப்பாடு, தேவன் தம்முடைய எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார். அவர் வார்த்தையாயிருக்கிறார். இப்பொழுது, இது அவருடைய வார்த்தையாயுள்ளது. அதனோடு ஒன்றும் கூட்டப்படவோ அல்லது அதிலிருந்து எடுக்கப்படவோ முடியாது, ஆனால் அது ஜீவிக்கப்பட்டு, அது இருக்கிற விதமாகவே நேராக்கப்பட வேண்டும். நாம் அதிலிருந்து எதையும் எடுக்கவோ அல்லது அதனோடு எதையும் சேர்க்கவோ துணிவதில்லை. தேவன் இன்னமும் தேவனாயிருக்கிறார். அவர் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். 251 அவர், “நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும். அவர்கள் புசித்து, குடித்து, பெண் கொண்டும், பெண் கொடுத்தும் ஒழுக்கக்கேட்டிலும் இருந்தனர்” என்றார். 252 “லோத்தின் நாட்களில் நடந்தது போல,” அவர்தாமே ஒரு மாம்ச சரீரத்தில் வந்து, தம்மை அங்கே ஆபிரகாமுக்கு ரூபகாரப்படுத்தினார். “மனுஷகுமாரன் வருகையிலும் அப்படியே நடக்கும்” என்றார். இந்தக் காரியங்களுக்காக கவனியுங்கள். சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. 253 ஓ, இன்றைக்கு நாம் ஆமோஸை காட்சியில் உடையவர்களாக இருந்தால் நலமாயிருக்குமே, அவன் கர்ஜிக்கட்டும், அவன் நம்முடைய முறைமைகளையும், நம்முடைய பாரம்பரியங்களையும் கண்டன முழக்கமிட, தேவனுடைய வார்த்தை வெற்றியோடு சவாரி செய்யும். நாம் ஜெபிப்போமாக.
98254 பரலோகப் பிதாவே, மீண்டும் பேசும். கர்த்தாவே, பரிசுத்த ஆவியினால் முழங்கும். அவர் இந்த நேரத்தின் தீர்க்கதரிசி. அவர் இந்த நாளின் தீர்க்கதரிசியாக இருந்து, அவரால் சத்தியத்தை பேசும்படிக்கு, புருஷர்கள் மற்றும் ஸ்திரீகளின் இருதயங்களுக்குள் தம்முடைய வழியைக் கண்டறிய முயற்சிக்கிறார். அவர் சிலரைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பரலோகப் பிதாவே, அவர் இன்றிரவு இங்கு அநேகரைக் கண்டறிந்து, பயபக்தியாயிருக்க ஆயத்தமாயிருக்கிற ஒருவரை அவர் உபயோகிக்க முடியும் என்று நான் ஜெபிக்கிறேன். சர்வ வல்லமையுள்ள தேவனின் கர்ஜனையை அவர்கள் கேட்கும்போது, அவருடைய வார்த்தையின் மூலம் புறப்பட்டுச் செல்லும்போது, நியாயத்தீர்ப்பு சமீபமாயிருக்கிறது. 255 ஒரு சிங்கம் கெர்ச்சிக்கும்போது, அது வெளியே வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிருஷ்டியும்—ஒவ்வொரு சிருஷ்டியும் தான் ஒளிந்து கொள்வது மேலானதாயிருக்கும் என்பதை அறிந்திருக்கிறது, ஏனென்றால் ஒரு இராஜா முன்னோக்கி நடந்து கொண்டிருக்கிறார். 256 தேவனே, இராஜாதி இராஜா கெர்ச்சிக்கிறபோது, எங்களுக்கு ஒரே ஒரு பாதுகாப்பு மண்டலம் மாத்திரமே உண்டு, அது இயேசு கிறிஸ்துவின் இரத்தமாயுள்ளது. எங்களுக்கு ஒரு பாதுகாப்பு மண்டலம் உண்டு. பரலோகப் பிதாவே, நீர் இன்றிரவு இருதயங்களண்டைப் பேச வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கிறிஸ்துவின் வருகையின் நிழல்களில் அவர்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், தேசங்கள் உடைந்து கொண்டிருக்கின்றன, அவைகள் என்னவாயிருக்கின்றன என்பதைக் குறித்தும், காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயத்தில் உம்முடைய மென்மையான இரக்கத்தில்…
99257 நாங்கள் அதிக பாவம் செய்துள்ளோம். நீர் உம்முடைய முதுகை எங்களிடத்திலிருந்து திருப்பி, எங்களை பிரிந்து செல்ல அனுமதிப்பது போன்று தென்படுகிறது. ஆனால், அப்பொழுதும், நீர் அங்கே ஏதேனில் இருந்தபோல, நீர் தப்பித்துக் கொள்ள ஒரு வழியை உண்டாக்குகிறீர். நீர் நோவாவிற்கு தப்பித்துக் கொள்ள ஒரு வழியை உண்டாக்கினீர். நீர் மோசேக்கும், தானியேலுக்கும், எபிரெய புத்திரருக்கும் ஒன்றை உண்டாக்கினீர். நீர், நீர் தொடர்ந்து ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர். அதைக் கண்டடைகிறவர்கள் தேவனுடைய வெளிச்சத்தில் நடந்து ஜீவனைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதைப் புறக்கணிக்கிறவர்கள் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டு, தூக்கியெறியப்படுகின்றனர். 258 பரலோகப் பிதாவே, தூக்கியெறியப்பட்டவர்கள் எவருமே இன்றிரவு இங்கு இருக்கக்கூடாது என்று, நான் ஜெபிக்கிறேன். அவர்கள் தேவனுடைய கர்ஜனையை இனிமையாய் கேட்பார்களாக, பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயங்களில் பேசி, “இது நான். பயப்படாதீர்கள். அது நான்தான்” என்று கூறுவாராக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
100259 நான் ஏறக்குறைய பத்து நிமிடங்களுக்கு பீட அழைப்பை நிறுத்தி வைக்கப் போகிறேன். நான் சற்று தாமதமாக வந்துவிட்டேன். ஆனால் பில்லி இரண்டு இரவுகளுக்கு முன்பு ஜெப அட்டைகளை, அல்லது சகோதரன் க்ரூமரின் வீட்டில் வேறு ஏதோ ஒன்றைக் கொடுத்தான் என்று நான் நினைக்கிறேன். நேற்றிரவு அவன் அவைகளை கொடுத்துக் கொண்டிருந்தான் என்று நான் நினைக்கிறேன். நான் அவர்களை ஒருபோதும் அழைக்கவில்லை. நான்…அவன் இன்றிரவு அவைகளை மீண்டும் கொடுப்பான் என்று நான் யூகிக்கிறேன். அவன் அதைச் செய்தானா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது, ஆனால் அந்த அட்டைகள் சிலவற்றை நாம் அழைப்போம். சகோதரன் குரூமர் இங்கே இருக்கிறாரா? குரூமரா? இல்லை, இல்லை. குரூமர். அவர் இங்கிருக்கிறாரா? நாம் எங்கிருந்து துவங்கினோம்? எண்ணிலிருந்து துவங்குவோம்…அங்கே, நாம் எண் ஒன்றிலிருந்து துவங்கவில்லையா? 260 நேற்றிரவு எங்களிடம் ஜெப அட்டைகள் இல்லை. நாம்…பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தினரிடையே சென்று ஜனங்களை அழைத்தார். நீங்கள் அதை விரும்புகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நானும் கூட அவ்வாறு கூறுகிறேன். இந்தவிதமாக கடினமாக பிரசங்கிப்பதால், நான் அதன் பேரில் சற்று தயக்கமுடையவனாய் இருக்கலாம். 261 நான்—நான் ஜனங்களுக்கு ஜெப அட்டையை கொடுத்திருக்கிறேன், அந்த நபருக்காக நான் ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறேன். அவ்வளவுதான். நமக்கு பகுத்தறிதல் இல்லையென்றால், பரவாயில்லை. ஆனால் அந்த நபருக்காக நான் ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய மகன் ஒரு ஜெப அட்டையை கொடுக்கிறான், நான்—நான் அந்த நபருக்காக ஜெபிக்க வேண்டும். அவ்வளவுதான். எனவே, நான்—நான் அந்த விதமாகவே உணருகிறேன். நான் அதைச் செய்வேன், தேவன் எனக்கு உதவி செய்வார். நான் இந்த தேசத்தை விட்டுச் செல்வதற்கு முன்பு, நான்—நான் அதைச் செய்வேன்.
101262 இப்பொழுது, நாம் அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாது. நாம் பார்ப்போம், நாம் ஒன்று முதல் இருபத்தைந்து வரை, அந்த இரவு, அது இருந்தது என்று நான் நினைக்கிறேன். ஆம், ஒன்று முதல் இருபத்தைந்து வரை. நான்…சகோதரன் குரூமர், நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? சகோதரன் குரூமரா? நான் அதை சரியாக உச்சரிப்பதில்லை. ஆனால் அது சரியென்று நான் நினைக்கிறேன். ஒன்று… 263 சரி, இன்றிரவு நாம் வேறு எங்காவது துவங்குவோம். நாம் துவங்குவோம், நாம் எழுபத்தைந்திலிருந்து துவங்கி, அதன்பின்னர், நூறு வரை பார்ப்போம். ஜெப அட்டை எண் எழுபத்தைந்தை பெற்றுள்ளவர், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அப்படியானால்…அது சரியா என்று நாம் பார்ப்போம். அது நல்லதுதான். சரி, பெண்மணியே, இங்கே வாருங்கள். எழுபத்தைந்து, எழுபத்து நான்கு, எழுப…எழுபத்தைந்து. இப்பொழுது எழுபத்தி ஆறு, எழுபத்தி ஏழு, எழுபத்தெட்டு, எழுபத்தி ஒன்பது, எண்பது, எண்பத்தியொன்று, எண்பத்திரண்டு, எண்பத்தி மூன்று, எண்பத்தி நான்கு, எண்பத்தைந்து, எண்பத்தி ஆறு, எண்பத்தி ஏழு, எண்பத்தி எட்டு, நூறு வரை. அவர்கள் இங்கு வரட்டும். பில்லி பால் எங்கே? என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். சரி. அங்கே செல்லுங்கள். சில வாயிற்காப்போர் ஜெப வரிசையில் வரும் வரையில் அவருக்கு உதவி செய்யட்டும்.
102264 இப்பொழுது, மீதமுள்ள நீங்கள், ஒரு நிமிடம் என்னை நோக்கிப் பாருங்கள். ஆம். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நாம் சற்று மெதுவாக, இனிமையாக, ஒரு நிமிடம் பாடுவோம், வாயிற்காப்போர் சகோதரர்களாகிய நீங்கள் அங்கே செல்லலாம். ஓ, உங்களுக்கு நன்றி. அவர்கள் அவைகளை அங்கே வைத்துள்ளனர், எனவே அவர்கள்…எனவே வரிசைகள் ஒன்றுக்கொன்று கலக்கப்படமாட்டாது. நான் இந்த ஜனங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன். அதன்பின்னர், நாளை, நாம் அநேகமாக வியாதியஸ்தருக்காக ஜெபிப்போம், தொடர்ந்து தொடர் கூட்டம் வரையிலுமே அவ்வாறு செய்யலாம். நான்… 265 சகோதரன் ராபர்ட்ஸூம் கூட, அந்த இடத்தில், ஜெப வரிசையை வைத்திருக்கலாம். நாங்கள் இருவருமே ஒன்று சேர்ந்து, ஒருவர் ஒரு பக்கத்திலும், ஒருவர் மற்றொரு பக்கத்திலும் இருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் அதை விரும்புவாரா அல்லது விரும்ப மாட்டாரா என்று எனக்குத்—எனக்குத் தெரியாது. நான் அவரிடத்தில் பேசியிருக்கவில்லை, நீங்கள் பாருங்கள், நான் முதலில் அவரிடத்தில் பேசுவது நல்லது. சகோதரன் ஓரல் ஒரு அருமையான சகோதரன், அவர் ஒரு உண்மையான கிறிஸ்துவின் ஊழியக்காரர். அவர் அதைச் செய்ய போதுமான தாழ்மையுள்ளவராயிருப்பார், ஆனால் நான் அதைப் போன்ற ஒரு மனிதனோடு என்னை அங்கே இணைத்துக்கொள்ள ஒருவிதமாக வெறுக்கிறேன், நீங்கள் பாருங்கள். எனவே நான் அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. நல்லது, அவர் என்னிடம், “சகோதரன் பிரான்ஹாம், வந்து எனக்கு உதவி செய்வீரா” என்று என்னிடம் கேட்டால், நான்—நான் அதைச் செய்ய மகிழ்ச்சியடைவேன். ஆனால், இப்பொழுது, அவர் தாழ்மையான, மிகவும் இனிமையான சகோதரன். அவர் அதைச் செய்யும்படி என்னைக் கேட்டால், நான், நிச்சயமாக, நான் அதைச் செய்வேன். ஆனால் முதலில் அவர் என்னிடத்தில் கேட்கும்படி நான் விரும்புகிறேன், நீங்கள் பாருங்கள். நான் அதைக் குறித்து ஒன்றுமே கூறாமல் இருப்பது நல்லது. இப்பொழுது நீங்கள் அதை அவரிடத்தில் குறிப்பிட வேண்டாம். அவர் என்னிடம் கேட்கட்டும், அப்பொழுது அது சரியென்று நான் அறிவேன். பார்த்தீர்களா?
103266 ஆனால் இப்பொழுது—இப்பொழுது நாம் பார்க்கப் போகிறோம். எத்தனை பேர்…சரி, இப்பொழுது, நாம் பார்ப்போம். இந்தக் கட்டிடத்தில் எத்தனை ஜெப அட்டைகள் உள்ளன? நாங்கள் உங்களுடைய கரங்களைக் காணட்டும். ஓ, இன்னும் சில, இன்னும் ஐம்பது பேர் இருக்கலாம். நாற்பது, இன்னும் ஐம்பது, ஒருகால் இருக்கலாம். ஓ, ஆம், இன்னும் முப்பது பேர் இருக்கலாம். சரி. இப்பொழுது நாம் பார்ப்போம்—நாம்… 267 நாம் அவைகளைப் பார்க்கப் போகிறோம். இப்பொழுது நாம்…நீங்கள் அழைக்கப்படாவிடில், உங்களுடைய அட்டையை வைத்துக் கொள்ளுங்கள். பாருங்கள், பத்து மணிக்குப் பிறகு பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன. நீங்கள் காலையில் ஞாயிறு பள்ளிக்கு வர வேண்டும் என்று நான்—நான் விரும்புகிறேன். ஒருக்கால் நாளை இரண்டு ஆராதனைகள் நடைபெறவிருக்கும்போது, அப்பொழுது நாம் பெற்றிருந்த எல்லா அட்டைகளையும் நாம் பார்த்துவிடலாம், பின்னர்—அதன்பின்னர் மீண்டும் திங்கட்கிழமைக்கான புதியதாக தொடங்க வேண்டும்.
104268 நாம் திங்கள் இரவு எங்கே? ஓ, நாம் டூசானில் இருப்போம். இப்பொழுது டூசானில் நடைபெறும் தொடர் கூட்டத்தில் கலந்து கொள்ள மறந்துவிடாதீர்கள். யாராவது இங்கே டூசானிலிருந்து வருகிறீர்களா? ஆம். நிச்சயமாக. உலகத்தின் தோட்ட மையம், நிச்சயமாகவே, நீங்கள் அங்கிருந்துதான் வந்திருக்க வேண்டும். சகோதரன் கார்ல் வில்லியம்ஸ் இந்நாட்களில் ஒன்றில் அதற்காக என்னிடத்தில் வாதிடுவார். நான் முதலில் இங்கு வந்தபோது, அவைகள் போட்டியிட்ட நகரங்களாக இருந்தன, அவைகள் இன்னமும் அவ்வாறே இருப்பதை நான் காண்கிறேன். 269 நான் அதற்குப் பழக்கப்பட்டவன். நம்முடைய பந்து வீச்சு, தயூலகட்டுப்பந்தாட்டம் அல்லது உள்ளூர் கூடைப்பந்து அணி, ஜெபர்ஸன்வில் மற்றும் நியூ ஆல்பனிபனி நகரங்களுக்கு போட்டியாக, ஓ, என்னே, என்னே, என்னே! வ்யூ! அவர்கள் ஒரு விளையாட்டை நடத்தும்போது, எப்பொழுதுமே ஒவ்வொரு இரவிலும் ஒரு பெரிய சண்டை உண்டு, அப்படியானால் இதைப் போன்று எங்காவது இருக்கக் கூடுமா என்று எனக்குத் தெரியாது. 270 அவர்கள் தொடர்ந்து டூசானில் உள்ளதை நான் அறிவேன். ஆனால் பீனிக்ஸ் டூசானை விட பல மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் நான்…டூசான், பீனிக்ஸைப் போல மூன்றில் ஒரு பாகம் அளவுள்ளதாக நான் கருதவில்லை. ஆனால்…
105271 நாம் அங்கே போய்க் கொண்டிருக்கிறோம், ஏனென்றால் அங்கே சில நல்ல, பரிசுத்தமான ஜனங்கள் இருக்கிறார்கள் என்று, நான் நிச்சயமாக நம்புகிறேன். நான் உலகில் எங்கும் சென்றிருக்கிறேன், ஆப்பிரிக்காவின் காடுகளுக்குள் சென்றிருக்கிறேன், நான் இன்னமும் அவர்களைக் கண்டிருக்கிறேன். ஓ, என்னே! என்னுடைய மனைவி இங்கு வந்து உங்களுக்காக அந்தப் பாடலை ஒரு இரவு பாடும்படி நான் விரும்புகிறேன், “அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து, தூர தேசங்களிலிருந்து வந்திருக்கிறார்கள்.” இப்பொழுது, நான் அதைக் கூறும்போது, அவள் எழுந்து நழுவிச் சென்று விடுவாள். 272 எனவே, அவள் சகோதரன் ரோஸைக் குறித்து மரண பயமடைந்திருக்கிறாள். சகோதரன் ரோஸ், “சகோதரி பிரான்ஹாம் இங்கே இருக்கிறார். நாங்கள் அவர் ஒரு வார்த்தை கூறும்படி வரச் செய்வோம்” என்றார். 273 அவள், “என்னுடைய இருதயம் ஏறக்குறைய பதினைந்து தாவல்கள் தாண்டியது” என்றாள். “நான் என் தலையை குனிந்து கொண்டேன்” என்றாள். மேலும், “பில், அவர் எங்காவது கூட்டத்தில் இருந்தால்,” என்று கூறி, நான் நிச்சயமாக ஒளிந்து கொள்ளப் போகிறேன்” என்றாள். அவள் உண்மையாகவே பின்தங்கிய நிலையில் இருக்கிறாள். எனவே, நான் வீட்டிற்கு வரும்போது நான்—நான்—நான் இதிலிருந்து கேட்கிறேன். 274 வாலிப ஜனங்களாகிய நீங்கள் யாவரும்…நான் இதைக் கூறுகிறேன் என்று நான் நம்புகிறேன், அவள் இங்கே இருக்கிறாள் என்பதற்காக அல்ல. நீங்கள் அதை அறிவீர்கள், அவளை அறிந்த யாவரும் அதை அறிவீர்கள். இந்தக் கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு வாலிபனும், அவன் தன்னுடைய மனைவியை மணந்து கொள்ளும்போது, அவள் அவனுக்கு இனிமையாக இருக்கிறாள் என்று நான் நம்புகிறேன், நானும் என்னுடைய மனைவியும் இத்தனை வருடங்களாக மகிழ்ச்சியாய் ஒன்றாக இருந்து வந்ததைப் போன்றே நீங்களும் ஒன்றாக இருப்பீர்களாக. பிரான்ஹாம் குடும்பத்திற்கு ஏதாவது நன்மதிப்பு அளிக்கப்படுமானால், அது அவளையே சென்றடையட்டும். அவள் ராணி. அவள் நிச்சயமாகவே அவ்வாறு இருக்கிறாள். ஒரு காரியம், அவள் ஒரு உண்மையான தாய். அதன்பின்னர் அவள் எதனோடு சகித்துக்கொள்ள வேண்டுமென்று பாருங்கள், அப்பொழுது, பாருங்கள், அது என்னவென்று நீங்கள்—நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஏன், ஜனங்கள் வாசலில் இரவும் பகலும் இருக்கிறார்கள். அவள் எனக்கும் பொதுமக்களுக்கும் இடையே நிற்கிறாள், பாருங்கள், அங்கேதான், வீட்டில் இருக்கிறாள். எனவே அது உண்மையாகவே ஒரு கடினமான வேலையாகும்.
106275 அந்த சிறிய பில்லி பாலைக், குறித்து நான் நினைக்கிறேன், அநேக சமயங்களில், அவருடைய தாயார் மரித்தபோது, நான் அவனை சுற்றிலும் தூக்கிச் செல்வேன், ஒரு சிறு குழந்தை. மருத்துவர் அடேயர் வழக்கமாக, “நீ ஒரு விசித்திரமான நபர்” என்று கூறுவதுண்டு. நான் வீதியில் அவனைத் தூக்கிக்கொண்டு செல்வேன், அவனோ அவனுடைய தாயாருக்காக அழுது கொண்டிருக்க, குளிரான காலநிலையில், நான் அவனை இந்தவிதமாக, என்னுடைய தோளில் தூக்கி வைத்திருக்கிறேன் என்பது, உங்களுக்கு தெரியும். 276 அவனுடைய…அல்லது அவனுக்கு ஒரு உண்மையான புட்டியை வாங்க போதிய பணம் இல்லை. நான் அவனுக்கு ஒரு குளிர்பான புட்டியை வைத்திருந்தேன், அதன் மேல் ஒரு முலைக்காம்பு இருந்தது. நான் அதை இங்கே வைத்து, அதை என் கரத்தின் கீழ் வைத்து, அதை சூடாக வைத்துக் கொள்வேன். அவன் அதிகமாக அழுவான், நான் சுற்றி வந்து, அந்த முலைக்காம்பை அவன் வாயில் ஒட்டிக் கொள்ளும்படி செய்வேன். அவன் சிறிது நேரம் பால் குடித்துவிட்டு, புட்டியை இங்கே மீண்டும் கீழே வைத்து விடுவான். என் மீது முழுவதுமாக பால் தெளித்திருந்தது, மற்றும் எல்லாம், உங்களுக்கு தெரியும். 277 நான் அவனைப் பிடித்துக் கொண்டு, தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன், நீங்கள் அறிவீர்கள், அவனை தூக்கிக் கொள்வேன். இரவு நேரத்தில், என்னே, என்னே, நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கச் செல்லும்போது, நான் எப்படியாய் அவனை உறங்கச் செய்து, யாரோ ஒருவரை வந்து அவனை கவனிக்க வைக்க முயற்சிப்பேன். நாங்கள் ஒன்றாக நீண்ட தூரம் வந்துள்ளோம். அவர் அந்தவிதமாக எங்களை காத்துக் கொள்கிறார் என்று நம்புகிறேன். 278 நான் நேற்றைய தினம் அவன் தன்னுடைய சிறு பையனைக் கொண்டு செல்வதைக் கண்டேன். மேலும் நான், “பில்லி, சற்று முன்பு, அது நீ அவ்வாறு தான் இருந்தாய்” என்று எண்ணினேன். பாருங்கள், அந்தவிதமாகத்தான் நாம் செய்ய வேண்டும், அந்த வழியை விட்டு விலகி, மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக.
107279 “சிங்கம் கெர்ச்சிக்கும்போது, பாருங்கள், பயப்படாதவன் யார்?” “தேவனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.” அது சரியா? அதைத்தான் அந்த ஞானமுள்ள மனிதன் கூறினார். “தேவபயம்.” 280 இப்பொழுது, ஜனங்களாகிய நீங்கள் அந்த ஜெப வரிசையில், அங்கே நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அறிந்த நீங்கள் யாவரும் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். ஒவ்வொருவரும். பரலோகத்தின் நல்ல கர்த்தர் என்னுடைய நியாயாதிபதியாயிருக்கிறார்; என்னுடைய வாழ்க்கையில் நான் அறிந்தமட்டில், நான் என்னுடைய வாழ்க்கையில் அவர்களில் ஒருவரையும் கண்டதேயில்லை. அவர்கள் அநேகமாக கூட்டத்திலிருந்து உட்கார்ந்து என்னைப் பார்த்திருக்கலாம். 281 இப்பொழுது, உங்களைக் குறித்து ஒரு காரியமும் எனக்குத் தெரியாது என்பதை கூட்டத்தில் உள்ள எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? ஆனால், அதே சமயத்தில், நீங்கள் சுகவீனமாயிருந்து, தேவனே, நீங்கள் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், தேவன் அந்த அசலான ஸ்திரீயான, அந்த ஸ்திரீக்கு செய்ததுபோல, உங்களை அழைக்க என்னிடத்தில் பேசுவாரா? ஓ, என்னே! நான் நீண்ட நேரம் பிரசங்கித்ததில் வியப்பொன்றுமில்லை. அதைப் போன்ற ஒரு கூட்டத்தார், அந்த விதமான விசுவாசத்தோடு, அதைச் செய்ய வேண்டும்.
108282 இது அந்தப் பெண்மணியா? இப்பொழுது, இங்கே ஒரு பெண்மணி இருக்கிறாள். நாம் இன்றிரவு அந்நியர்களாக சந்திக்கிறோம், இப்பொழுது அவள் இங்கே நிற்கிறாள். உண்மையாகவே ஒரு வேளை அவள் சுகவீனமாயிருக்கலாம் அல்லது அவளுக்கு வேறு ஏதாவது தொல்லை இருக்கலாம். 283 பாருங்கள், தேவன் வியாதியஸ்தரை சுகப்படுத்துவதைத் தவிர மற்ற காரியங்களையும் செய்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே…அவர் நம்முடைய எல்லா தேவைகளையும், நம்முடைய தேவைகளையும், சில சமயங்களில் நம்முடைய விருப்பங்களையல்ல, நம்முடைய தேவைகளையும் சந்திப்பதாக வாக்குப்பண்ணினார். இப்போது நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது, அல்லது இதற்கு முன் அதை ஒருபோதும் வாசித்திருக்காவிடில், நீங்கள் சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், பரிசுத்த யோவான் 4-ம் அதிகாரத்தை வாசித்து, இப்பொழுது பாருங்கள். இப்பொழுது, இங்கே, இப்பொழுது, எனக்கு ஞாபகமில்லை… 284 நான் இதைக் கூறட்டும். இந்த ஊழியம், ஒன்று அவர் என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லப் போகிறார் என்று நான் நினைக்கிறேன் அல்லது அதை உயர்த்தப் போகிறார். அது—அது இந்த கடைசி காலம் வரையிலும் உள்ளது. அல்லது, என்னை வெளிநாடுகளுக்கு அனுப்புங்கள் அல்லது அவர்கள் ஒருபோதும் இதை கேள்விப்படாத எங்காவது அனுப்புங்கள். பார்த்தீர்களா? ஏதோ ஒன்று சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு நினைவிருக்கும்.
109285 மேலும், கவனியுங்கள், நான் ஒரு ஒலி நாடா விற்பனை செய்பவன் அல்ல. ஆனால் இந்த ஒலிநாடாக்களை பதிவு செய்யும் ஒரு நல்ல சகோதரன் இங்கே எனக்கு இருக்கிறார் அதுதான் திரு. மகையர். அது ஜேம்ஸ் மகையர் என்று நான் நினைக்கிறேன். அவருடைய—அவருடைய மாமனார், அங்கே பின்னால் உள்ள சகோதரன் சாத்மன், அவர்கள் இந்த ஒலிநாடாக்களோடு இருக்கிறார்கள். நான் விரும்புவேன், உங்களில் எவரேனும் ஒரு ஒலிப்பதிவு கருவியை வைத்திருந்தால்… நான் அதைக் குறித்து இப்பொழுது ஒன்றும் கூறப்போவதில்லை, ஏனென்றால் அதைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் அவர்களிடத்திலிருந்து நீங்கள் எப்போதாவது ஒரு ஒலிநாடாவை வாங்கியிருந்தால், ஐயன்மீர், இது என்ன சமயம்? என்ற அந்த ஒலிநாடாவை வாங்குங்கள், ஐயன்மீர், இது என்ன சமயம்? இதைக் கேளுங்கள். அதை ஜெபத்தோடு இயக்கி கேளுங்கள், அப்பொழுது நீங்கள் எனக்காக ஜெபிக்கத் துவங்குவீர்கள். பார்த்தீர்களா? நீங்கள்…இன்றிரவு நான் என்ன—என்ன இக்கட்டான நிலையில் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். ஒரு இக்கட்டான நிலையைக் குறித்துப் பேச வேண்டுமானால், நான் இப்பொழுது, சரியாக, நான் நின்று கொண்டிருப்பதை மாத்திரம் நீங்கள் அறிந்திருந்தால் நலமாயிருக்குமே! பார்த்தீர்களா? ஆனால் நான் தொடர்ந்து செல்ல வேண்டும். ஒரு வெற்றியாளர் ஒருபோதும் விலகுவதில்லை, ஒரு விலகுகிறவன் ஒருபோதும் ஜெயிப்பதில்லை. அது உண்மை. நான் பிரசங்கித்ததை நான் நடைமுறைப்படுத்த வேண்டும். பார்த்தீர்களா? இப்பொழுது, நான் தேவனை விசுவாசிக்கிறேன். நான் அவரை இப்பொழுதே விசுவாசிக்கிறேன்.
110286 இப்பொழுது, இங்கே ஒரு அடிப்படை உள்ளது. இப்பொழுது, நான்—நான் இங்கே நின்றுகொண்டிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுவாயிருந்தால், இந்த ஸ்திரீ சுகவீனமாயிருந்தாள், நான் கர்த்தராகிய இயேசுவாயிருந்தால், என்னால் அவளை சுகப்படுத்த முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னால் அதைச் செய்ய முடியவில்லை, ஏனென்றால் நான் அதை ஏற்கனவே செய்துவிட்டிருந்தேன். இப்பொழுது, அது உண்மை என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] பாருங்கள்? நிச்சயமாக. 287 அவர் ஏற்கனவே எல்லா பாவங்களையும் மன்னித்துவிட்டார். அவர் ஏற்கனவே சுகவீனமான ஒவ்வொரு நபரையும் சுகப்படுத்திவிட்டார். அவர் ஏற்கனவே அந்த இரத்தத்தை கல்வாரியின் நோக்கத்திற்காக வைத்திருந்தார். அதற்கான கிரயம் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது. அது முழுவதும்செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசித்து, அதை ஏற்றுக் கொள்வதேயாகும். நீங்கள் முதலில் அதை விசுவாசிக்கும் வரை உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. பார்த்தீர்களா? சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்.
111288 இப்பொழுது, ஆனால் நல்ல கர்த்தர் சகோதரன் மற்றும் சகோதரி வில்லியம்ஸ் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனக்காக வாங்கியிருந்த இந்த மேலங்கியை அணிந்து, அவர் இங்கே நின்று கொண்டிருந்தால் என்னவாகும்? அவர் அந்த மேலங்கியோடு இங்கே நின்று கொண்டிருந்தால், இந்த மேலங்கியை அணிந்து கொண்டிருந்தால், இந்த ஸ்திரீ இங்கே நின்று கொண்டிருந்தால் என்னவாகும்? 289 இப்பொழுது, அவர் தம்முடைய கரத்தில் தழும்புகளை உடையவராயிருந்தால், அவர், “நீங்கள் பாருங்கள், நான் மேசியா, நான்…அந்த வடுக்களை பார்த்தீர்களா? என் நெற்றியைப் பாருங்கள்” என்று கூறினால் என்னவாகும். இப்பொழுது, எந்த வஞ்சகனும் அதைச் செய்ய முடியும். அது உண்மை. அதன் மூலம் அவரை அறிந்துகொள்ள முடியாது. அவர் அந்த விதமாக இங்கே நின்று கொண்டிருந்தால், அது அவர் அல்ல என்பதை நான் அறிவேன். அது அல்ல என்பதை நான் அறிவேன். 290 காரணம், அவர் வரும்போது, எக்காளம் தொனிக்கும். நாம்…அவர் ஒருபோதும் பூமிக்கு வரமாட்டார். நாம் அவரைச் சந்திக்க ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். பார்த்தீர்களா? நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம். “உயிரோடிருக்கிற நாம் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்.” அவர் ஒருபோதும் பூமிக்கு வருவதில்லை. நாம் அவரை ஆகாயத்தில் சந்திக்கிறோம். 291 ஆனால் இப்பொழுது, அவர், “உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே கூட இருப்பேன். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்றார். அவர் எப்படி இருக்க முடியும்? அவருடைய ஜீவியம். அப்படியானால், அவருடைய ஜீவன் எனக்குள் இருக்குமானால், அப்பொழுது நான் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருப்பேன். அப்படியானால், அது அவருக்குள் இருந்த அதே ஜீவனாய் இருக்குமானால், அது அவர் செய்த அதேக் காரியங்களைச் செய்யும்.
112292 இப்பொழுது, இங்கே பரிசுத்த யோவான் 4-ம் அதிகாரத்தைப் போல ஒரு மனிதனும் ஸ்திரீயும் உள்ளனர். அவர் ஒரு ஸ்திரீயை சந்தித்தார். அவர் அவளை இதற்கு முன்பு கண்டதேயில்லை. அவள் அவரை ஒருபோதும் கண்டதேயில்லை. அங்கே அவர்கள் ஒன்றாக நின்றனர். கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயினிடத்தில், அவளுடைய தொல்லை என்னவாயிருந்தது என்பதை அவர் அவளிடத்தில் கூறினார். அவர் அதைச் செய்தபோது, அவள், “ஐயா, நீர்—நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன்” என்றாள். அவள், “ஆனால் கிறிஸ்து என்னப்படுகிற, அவர் வரும்போது, அது மேசியா என்பதை நாங்கள் அறிவோம், அதற்கு ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்’ என்று அர்த்தம்; அவர் வரும்போது, அவர் இந்தக் காரியங்களைச் செய்யப்போகிறார், இந்த காரியங்களை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கூறினாள். அவர், “உன்னோடு பேசுகிற நானே அவர்” என்றார். 293 இப்பொழுது, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருப்பாரானால்; மாம்சப்பிரகாரமான சரீரத்தை மாத்திரமே…அவர் நம்முடைய சரீரத்தை உபயோகிக்கிறார். “அவரே திராட்சைச் செடி. நாம் கொடிகளாயிருக்கிறோம்.” அப்பொழுது, அந்த ஆவியானது அவருக்குள் இருந்தபோது, அது கிரியை செய்தவிதமாகவே மீண்டும் செயல்படும். அது சரியா? அது உங்களை விசுவாசிக்கச் செய்யுமா? அது அவ்வாறு இருக்குமானால், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.]
113294 இப்பொழுது, பெண்மணியே, நான் உங்களை அறியாதவனாய், எனக்குத் தெரிந்தவரையில், என் ஜீவியத்தில் உங்களை ஒருபோதும் கண்டதேயில்லை. நிச்சயமாகவே, நீங்கள் என்னை தெருவில் அல்லது கூட்டங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் இதுவே நம்முடைய முதல் சந்திப்பாய் உள்ளது. 295 இப்பொழுது, உங்களுக்கு சுகமளித்தல் தேவையாயிருந்தால், சரி, நான், என்னால் அதைச் செய்ய முடிந்தால், எனக்கு ஏதாவதொரு வழி இருந்தால், நான் செய்வேன். அது நிதிநிலைமையானால், என்னால்—என்னால் அதற்கு உதவி செய்ய முடிந்தால், நான் அதை செய்வேன். நீங்கள் வேறு யாருக்காகிலும் இருக்கலாம் என்று கூறினால், அப்பொழுது நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், என் மகனுக்காக அல்லது என் மகள் அல்லது என் சகோதரிக்காக அல்லது யாரோ ஒருவருக்காக ஜெபிப்பதற்காக நான் இங்கு வருகிறேன்” என்று கூறுவீர்கள். பாருங்கள், என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்வேன். 296 மேலும்—மேலும் உங்களுக்கு குடும்பத் தொல்லை இருந்தால், நான், “நான் உங்களையும், உங்களுடைய கணவரையும் ஒன்றாகச் சந்தித்து, இங்கு இல்லாமல் எங்காவது உங்களோடு பேச விரும்புகிறேன், நீங்கள் பாருங்கள், எனவே நான் உங்கள் இருவரிடமும் பேசி, சரியாக எங்கே தவறு உள்ளது என்பதைக் கண்டறிய முடியும்” என்று கூறுவேன். அதன்பின்னர், பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தும்போது, “ஒரு நிமிடம் பொறுங்கள். நீர் இதை இங்கே இந்த குறிப்பிட்ட நேரத்தில் செய்தீர்” என்கிறேன். அதுவே அதை தீர்த்து வைக்கிறது. நீங்கள் அதை மறுக்க முடியாது. பார்த்தீர்களா? “நீங்கள் இதை இங்கே செய்தீர்கள்” என்று கூறலாம். அதன்பின்னர் அது தீர்த்து வைக்கப்படுகிறது, நீங்கள் பாருங்கள். இப்பொழுது, நீங்கள் அங்கிருந்து துவங்குங்கள். பார்த்தீர்களா? அந்தவிதமாகவே, அது செய்ய வேண்டியதாயிருக்கிறது.
114297 இப்பொழுது, ஏதோ ஒரு நோக்கத்திற்காக நான் உங்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். பார்த்தீர்களா? அதன்பின்னர் நான்—நான் என்னையே வேறொரு காரியத்திற்கான அபிஷேகத்துக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறேன், நீங்கள் பாருங்கள், பரிசுத்த ஆவியானவர் வந்து ஒரு தெய்வீக வரத்தோடு என் மேல் கிரியை செய்வாரா என்று பார்க்க; அதாவது இரண்டு உணர்வுகளும் ஒன்றாக இணைகின்றன, அது எனக்கு தரிசனங்களைக் காணும்படியான தேவனுடைய கிருபையை அளிக்கிறது, என்ன சம்பவிக்கிறது என்றும், என்ன சம்பவிக்கப் போகிறது என்றும், என்ன நடந்துள்ளது என்றும் பார்க்கிறேன். 298 அது உண்மையா அல்லது இல்லையா என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இங்கே குறைந்தது ஐநூறு பேருக்கு முன்பாக. பாருங்கள், அல்லது அதற்கு அருகாமையில், எப்படியாயினும், முந்நூறு பேர்களுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறீர்கள். பார்த்தீர்களா? மேலும்—மேலும் அது—அது உங்களுக்குத் தெரியும்…அது உண்மையா அல்லது இல்லையா என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும்—மேலும் அது உண்மையாயிருந்தால், அப்பொழுது அது தேவனாயிருக்கும். வேதம், “உங்களுக்குள்ளே ஒருவன் ஆவிக்குரியவனாயிருந்தாலும் அல்லது தீர்க்கதரிசியாயிருந்தாலும், அவன் சொன்னது நிறைவேறினால், அப்படியானால் அவனுக்கு செவிகொடுங்கள்” என்று கூறியுள்ளது. பார்த்தீர்களா? இப்பொழுது, “அது அப்படியில்லையென்றால், அப்பொழுது அவனுக்கு செவி கொடுக்க வேண்டாம்.”
115299 இப்பொழுது, இந்தப் பெண்மணி இங்கே எதற்காக இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வந்து, அவர் அதைக் கூறவாரா என்று பார்க்கட்டும். பார்த்தீர்களா? அது நம்முடைய கர்த்தர் செய்த அதேக் காரியமாய் இருக்கவில்லையென்றால்! அவர் இங்கே நின்று கொண்டிருப்பாரானால், அவரால் செய்ய முடிந்ததெல்லாம் அவ்வளவுதான், ஏனெனில், அது அவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது அவர். அது நானல்ல. எனக்கு அவளைத் தெரியாது. நான் அறிக்கை செய்து கொண்டிருக்கிறேன், எனக்கு அவளைத் தெரியாது. எனவே, அதற்கு அவரே தேவை. இப்பொழுது, உண்மையாகவே, இந்தப் பெண்மணி தன்னுடைய ஆவியில் ஒரு அற்புதமான உணர்வை உடையவளாயிருக்கிறாள். 300 அவள் தன்னுடைய கரத்தை உயர்த்தியிருப்பதால் அல்ல. நீங்கள் யாவரும் கூட்டங்களில் இருந்து கொண்டு, அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தி, அப்படி செய், பரிசுத்த ஆவியானவர் உடனே அவர்களை அழைத்து, அவர்கள் என்னவாயிருந்தனர் என்று கூற. பார்த்தீர்களா? அது உண்மை. அது எந்தக் காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. அவர்கள் கூச்சலிடுவதையும், சத்தமிடுவதையும் கேளுங்கள்; அப்பொழுது நீங்கள், “நீங்கள் இந்த மனிதனுடைய மனைவியோடு ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்” என்று அவர்களிடத்தில் சொல்லப்படுகிறது, அதை இங்கே சரியாகக் கண்டிருக்கிறீர்கள், மேலும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும். நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கூட்டங்களில் இருந்து கொண்டு, அந்தக் காரியங்கள் எப்படியென்று கண்டிருக்கிறீர்கள், அவைகள் எப்படி என்று பார்த்தால், அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை.
116301 ஆனால் இந்தப் பெண்மணியோ அவளுடைய ஆவிக்கு ஒரு அற்புதமான உணர்வாகத் தென்படுகிறாள். இப்பொழுது, அந்தப் பெண்மணி ஏதோ ஒரு கோளாறினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள். அவள் புசிக்கும் விதத்தை நான் கவனிக்கிறேன். அவள் இப்பொழுது எனக்கு முன்பாக, ஒரு மேஜையில் இருக்கிறாள், ஒருவிதமான உணவுமுறை அல்லது ஏதோ ஒருவிதமான, ஒரு விதமான ஒரு வினோதமான உணவுமுறை போன்றதில் இருக்கிறாள். அது உண்மை. அது உண்மையா? [அந்த சகோதரி, “அது உண்மை” என்கிறாள்.—ஆசி.] அதன்பின்னர் ஜனங்கள் அதை காணும்படியாக உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். பார்த்தீர்களா? எனக்கு முன்னிருந்த பெண்மணி ஏதோ ஒரு காரியத்தைச் செய்வதை நான் கண்டேன். அது என்னவாயிருந்தாலும், அது ஒலிநாடாவில் உள்ளது. பார்த்தீர்களா? சரி. இப்பொழுது, நீங்கள் ஏன் என்று அறிந்து கொள்வீர்கள்…அவள் ஒரு அருமையான நபர். 302 அப்படியே ஒரு விநாடி கவனியுங்கள். இப்பொழுது ஆவியானவர் அபிஷேகித்துக்கொண்டிருக்கிறார். இப்பொழுது, ஒவ்வொருவரும் உண்மையாகவே பயபக்தியோடு இருங்கள். தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள். ஜெபத்தில் இருங்கள், ஏனென்றால் அது கூட்டத்தாரின் மேல் அசைவதை நான் கண்டேன். பார்த்தீர்களா? இப்பொழுது உண்மையான பயபக்தியாயிருங்கள். 303 நாம் அந்த பெண்மணியுடன் பேச மீண்டும் அவளைப் பார்ப்போம். அவர் உங்களிடத்தில் என்ன கூறினார்…ஆம். இதோ அது உள்ளது. அது ஒரு மேஜையில் உள்ளது. அது—அது ஒரு வயிற்றுக் கோளாறு. மேலும் ஏதோ ஒருவிதமான தொற்று நோய் அல்லது வயிற்றில் உள்ள ஏதோ ஒன்று போன்றவை. ஒரு மருத்துவர் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீண்ட காலமாகவே நீங்கள் இந்தப் பிரச்சனையை உடையவர்களாயிருந்து வருகிறீர்கள் என்று கூறுகிறார். மேலும், ஒருமுறை, அது, “சீழ்ப்புண்ணாக, அது வளர்கிறது” என்று உச்சரிக்கப்பட்டது. இப்பொழுது அவர் ஒரு காரியத்தைக் கூறினார். அது என்னவாயிருந்தது? “சிறுகுடற்பகுதி, சிறுகுடற்பகுதி, சிறுகுடற்பகுதி.” அவர் அதைக் கூறக் கேட்டேன். பார்த்தீர்களா? அது உண்மை. அது முற்றிலும் உண்மை. உங்களுடைய பெயர் செல்வி மெக்ரா. அது உண்மை. இப்பொழுது போய், உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
117304 அங்கே பின்னால் அமர்ந்து அந்த விதமாக அழுது கொண்டிருக்கும், ஐயா, நீங்கள் விசுவாசிப்பீர்களேயானால், அந்த சரிந்த நுரையீரல்கள் இப்பொழுது குணமானதை நீங்கள் உணர வேண்டும். இப்பொழுது எல்லாம் சரியாகிவிட்டது. சரி, அது அதைச் செய்தது. ஆமென். அவர் எதைத் தொட்டார்? 305 மனிதனே, தமனிகள் கடினப்படுதலோடு, அங்கே அவருக்கு ஏறக்குறைய இரண்டு பேருக்கு பின்னால் இருக்கிறார், நீங்களும் கூட விசுவாசிப்பீர்களானால், ஐயா! 306 அவர் எதைத் தொட்டார்? அந்த ஒளி சரியாக அங்கே தொங்கிக் கொண்டிருப்பதை உங்களால் காண முடியவில்லையா? அங்கே அந்த சொகுசா நிற ஒளியைப் பாருங்கள். நான் அந்த மனிதனை அறியேன், என் வாழ்க்கையில் அவரை ஒருபோதும் கண்டதேயில்லை. கர்த்தராகிய இயேசுவை அப்படியே விசுவாசியுங்கள். 307 இப்பொழுது, எங்கோ, இங்கே ஒரு சிறு குழந்தை உள்ளது, ஒரு குழந்தைக்கு கழுத்து வளைந்துள்ளது. இதோ அது உள்ளது. எனக்கு அவளைத் தெரியாது. சகோதரியே, விசுவாசியுங்கள். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களேயானால், அந்தக் குழந்தையின் கழுத்து நேராகிவிடும். அவள் எதைத் தொட்டாள்? அல்லேலூயா. 308 ஒரு கழுத்தைக் குறித்து வேறு ஏதோ ஒன்று உண்டு. நான் அதைக் கண்டேன். அது ஒரு பெண். என்னால் அவளை அந்த இடத்தில் வைக்க முடியவில்லை. ஆம். அவள் இங்கே அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறாள். திருமதி ரைலி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், அப்பொழுது உங்களுடைய கழுத்து சுகமாயிருக்கும். விசுவாசியுங்கள். 309 அந்தப் பெண்ணை எனக்குத் தெரியாது. என் வாழ்க்கையில் நான் அவளை ஒருபோதும் கண்டதேயில்லை. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதேயாகும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.
118310 ஐயா, எனக்கு உங்களைத் தெரியாது. எனக்குத் தெரிந்தமட்டில் நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். உங்களுடைய தொல்லை என்னவென்பதை இயேசு கிறிஸ்து என்னிடம் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது சரியா அல்லது இல்லையா என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் அறிந்திருக்கவில்லையா? இப்பொழுது உங்களுடைய முழு இருதயத்தோடு உங்களால் விசுவாசிக்க முடிந்தால் நலமாயிருக்குமே! கூட்டத்தாரிடத்திற்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. அங்குள்ள உங்களுடைய மனைவியும் கூட சரியாகிவிடப் போகிறாள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரன், “ஆம்” என்கிறார்.—ஆசி.] கண் கோளாறு, அவள் ஒரு கண் கோளாறினால் அவதியுறுகிறாள். அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இங்கிருந்து வரவில்லை. இல்லை. நீர் நிறைய தண்ணீர் உள்ள இடத்திலிருந்து, ஏதோ ஒரு வழியில் வருகிறீர்கள். அது ஒரு கடற்கரை நகரமாகும். அது கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ். திரு. போமன் அவர்களே திரும்பிப் போய் சுகமடையுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார்.
119311 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, நீங்கள், நீங்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுதே சுகமடைய முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 312 ஜெப வரிசையில் உள்ள உங்களைக் குறித்து என்ன, நீங்களும் கூட அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசத்தை உடையவர்களாயிருக்கிறீர்கள், சந்தேகப்படாதீர்கள். ஒரு நிமிடம், உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 313 இந்த பெண்மணியை, நான் அவளோடு நிறுத்தக் காரணம், அவள் ஆபத்தான நிலையில் இருக்கிறாள். இந்த ஸ்திரீக்கு ஏதாவது செய்யப்படவில்லையென்றால், அவள் உடனே மரித்துப் போவாள். ஏனென்றால் அவள் நிழலிடப்பட்டிருக்கிறாள். அந்த இருண்ட நிழல் அவள் மேல் இருப்பதைப் பார்த்தீர்களா? 314 கூற வேண்டுமானால், நாம் அந்த மரணத்தின் நிழல் ஜனங்கள் மேல் இருப்பதை, கர்த்தருடைய தூதனைப் போல, புகைப்படக் கருவி மூலம் நாம் புகைப்படம் எடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்களா? நாம் அதை நம்முடைய சபையில் தொங்க வைத்துள்ளோம்; அது ஒரு பெண்ணின் மேல் தொங்கிக் கொண்டு, ஒரு சூறாவளியைப் போன்று, மிகப் பெரிய கருப்பாகக் காணப்படுகிறது. அந்தப் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அவர்கள் கூறினர். பரிசுத்த ஆவியானவர், “அதை இப்பொழுதே எடு” என்றார். அவர்கள் அந்த புகைப்படத்தை எடுத்தனர், அங்கே அது இருந்தது. பார்த்தீர்களா? இருபுறமும், இங்கே. அது அங்கேயே தொங்கிக் கொண்டிருக்கிறது. 315 இக்கூடாரத்திலிருந்து வந்துள்ள ஜனங்களாகிய நீங்கள், இங்குள்ள உங்களில் சிலர், அதாவது சகோதரன் ஃபிரட் மற்றும் மற்றவர்களும், அதே காரியம் தான் இந்த ஸ்திரீயின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. 316 அவளுக்கு சிறுநீர்ப்பையில் புற்று நோய் உள்ளது, அது உண்மை. அது உண்மை. அது சரியா? அது உண்மையானால் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். பார்த்தீர்களா? இப்பொழுது ஒன்றுமே கூறாமல் இருள் போய்விட்டது. பாருங்கள், அவளுடைய விசுவாசம் மாத்திரமே அதைச் செய்தது. போய், விசுவாசியுங்கள். ஆமென். ஆமென். அதை சந்தேகப்படாதீர்கள். போய் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள்.
120317 இருதயக்கோளாறு ஏராளமான ஜனங்களைக் கொல்லுகிறது, ஆனால் நீங்கள் விசுவாசித்தால் அது உங்களைக் கொல்லாது. ஆமென். அப்படியே போய், “கர்த்தருக்கு நன்றி” என்று கூறுங்கள். போய் சுகமாயிருங்கள். சரி. 318 பிசாசு உங்களுடைய வாழ்நாள் முழுவதும் இந்த மூட்டுவலி உங்களுக்கு இருக்கச் செய்ய விரும்புகிறான். ஆனால் நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், இயேசு கிறிஸ்து உங்களை குணமாக்குவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? தேவனுக்கு நன்றி செலுத்தி, உங்களுடைய பாதையில் செல்லத் துவங்குங்கள். 319 நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் போய் உங்களுடைய இரவு ஆகாரத்தை உண்ணலாம், அப்பொழுது அந்த வயிற்றுக் கோளாறு உங்களை விட்டுப் போய்விடும். அப்படியே போய், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூறுங்கள். போய், உங்களுடைய முழு இருதயத்தோடு அவரை விசுவாசியுங்கள். 320 உங்களுக்கும் கூட, ஒரு வயிற்றுக்கோளாறு இருந்தது. உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள், போங்கள், இயேசு கிறிஸ்து உங்களை குணமாக்குவார். சரி. 321 நீங்கள் எதைக் குறித்து மிகவும் பயப்படுகிறீர்கள்? நீங்கள் நரம்புத் தளர்ச்சியினால் தொல்லைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். கிட்டத்தட்ட, ஒரு செயலிழப்பில், சாத்தான் உங்களிடம் பொய் சொல்கிறான். ஆனால் அது இப்போது முடிந்துவிட்டது. நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? போய், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூறுங்கள். 322 கர்த்தராகிய இயேசுவே, நீர் எங்களுடைய சகோதரியை சுகப்படுத்தி, அவளை ஆரோக்கியமுள்ளவளாக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். 323 வாருங்கள், விசுவாசியுங்கள், சகோதரியே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளுடைய சுகமளித்தலுக்காக நான் என் கரங்களை அவள் மீது வைக்கிறேன். 324 என் சகோதரனே, வாருங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் என்னுடைய கரங்களை அவருடைய சுகமளித்தலுக்காக அவர் மீது வைக்கிறேன். ஆமென்.
121325 உயர்த்தவுள்ள ஒரு கரத்தின் கீழே, விசுவாசிக்கிற இருதயத்தை எத்தனை பேர் பெற்றிருக்கிறீர்கள்? இப்பொழுது அந்த கரத்தை உங்களுக்கு அடுத்துள்ள யாரோ ஒருவர் மீது வையுங்கள். நீங்களோ, “ஆமோஸ் அதைக் கூறுவானா?” என்று கேட்கலாம். அவன் நிச்சயமாக அவ்வாறு செய்வான். அது கர்த்தருடைய வார்த்தையாயுள்ளது. நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துகிறீர்கள், நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். 326 இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். அவர்கள் தங்களுடைய கரங்களை வியாதியஸ்தர் மேல் வைத்தால்…” என்றார். அவர்கள் அவர்களுக்காக ஜெபிப்பார்கள் என்று கூட கூறவில்லையா. “அவர்கள் தங்களுடைய கரங்களை வியாதியஸ்தர் மேல் வைப்பார்களேயானால், அவர்கள் மேல் கரத்தை வைத்தால், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார். நாம் ஜெபிப்போமாக. 327 கர்த்தராகிய இயேசுவே, ராஜாவானவர் தம்முடைய சத்தத்தால், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று கர்ஜித்திருக்கிறார். தேவனாகிய கர்த்தாவே, ஒவ்வொரு பிசாசும் சத்தமிடட்டும். ஒவ்வொரு சுகவீனமும் நீங்குவதாக. பிசாசு தோற்கடிக்கப்படுவானாக, தேவனுடைய பிள்ளைகள் இன்றிரவே இந்தக் கட்டிடத்தை விட்டு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் ஜெயத்திலும் வல்லமையிலும் வெளியே போவார்களாக.
122328 அதை விசுவாசியுங்கள். அது உண்மை. அதனோடு அப்படியே நிலைத்திருங்கள். யாரோ ஒருவர் மீது கரத்தை வைத்து, இவ்வாறு கூறுங்கள், “கர்த்தாவே, அவர்களை சுகப்படுத்தும்” என்று கூறுங்கள். நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் ஜெபித்தேன். நீங்கள் யாரோ ஒருவருக்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள்—நீங்கள்…நீங்கள் என்னைப் போன்ற ஒரு கிறிஸ்தவர். நாம் எல்லோரும் கிறிஸ்தவர்கள். இப்பொழுது நீங்கள் யாரோ ஒருவருக்காக ஜெபியுங்கள். அவர்கள் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். 329 இப்பொழுது, உங்களுக்காக யாராவது ஜெபிக்கும்படி நீங்கள் எப்படி விரும்புகிறீர்கள்? யாரோ ஒருவர் உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது போல நீங்கள் அவர்களுக்காக ஜெபியுங்கள். “மற்றவர்கள் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.” அவர்கள் உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது போல, உண்மையாகவே ஜெபியுங்கள். 330 “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். தேவன் அவர்களை எழுப்புவார். அவர்கள் ஏதாகிலும் அவிசுவாசத்தை உடையவர்களாயிருந்தால், அது அவர்களிடத்திலிருந்து எடுக்கப்படும்.” ஏன்? “ராஜா கர்ஜிக்கிறார். யாரால் தீர்க்கதரிசனம் உரைக்காமல் இருக்க முடியும்? இராஜா கர்ஜிக்கும்போது யாரால் சாட்சி கொடுக்காமல் இருக்க முடியும்?” அவருடைய வார்த்தை, “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறுகிறது. சகோதரன் புல்லர், வாருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.