1 மாலை வணக்கம், நண்பர்களே. இன்றிரவு இங்கே இருப்பதும், இந்த அற்புதமான இசை விருந்தினை கேட்டு மகிழ்வதும், அவர்கள் உண்மையாகவே உற்சாகத்துடன் பாடின இந்த பாடல்களை கேட்டு மகிழ்வதும் ஒரு சிலாக்கியமாகவே உள்ளது. ஜிம்மியை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். பாடல்களைப் பாடும்போது ஜிம்மி உணர்ச்சிவசப்படுவதுபோல, நாமும் நமது சொந்த வாழ்க்கையில் தேவனுடைய காரியங்கள் எல்லாவற்றிலும் உற்சாகங்கொள்ளுவோமானால், நாம் முன்னேறுவோம். நான் அந்த பையனை உண்மையாகவே பாராட்டுகிறேன், அவனுடைய தந்தை, எங்களுடைய நல்ல நண்பராக இருக்கிறார். 2 நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். “நான் அதைப் பேசி தீர்மானிக்க விரும்புகிறேன்,” என்று இந்தப் பெண்மணிகள் இந்தப் பாடலைப் பாடினார்கள். அனேக ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கிருந்தபோது, பாடின அதே பாடற் குழுவா இது? அது அதே குழுவினரா? நான் அந்த பாடலை எங்கெல்லாமோ தேடி கண்டுபிடிக்க முயற்சித்தேன். என்னுடைய சோதனைகளின் அந்தகார நேரங்களில், “நான் அவரோடு பேசி தீர்மானிக்க விரும்புகிறேன்” என்றே நான் எண்ண முயற்சித்துள்ளேன். ஜிம்மி மக்கையர் அவர்களே, நீங்கள் அந்த பாடலை ஒலிநாடாவில் பதிவு செய்தீர்களா? அவர் அதை செய்திருப்பார் என்று நான் நம்புகிறேன். பார்த்தீர்களா? நீங்கள் அதை ஒரு ஒலித்தட்டில் பதிவு செய்திருக்கிறீர்களா? அதை பதிவு செய்திருந்தால், அது எனக்கு வேண்டும். நான் அதை எண்ணிப் பார்க்க முயற்சித்துள்ளேன். “என்னுடைய பாதை மங்கலாயிருக்கும்போது, அவர் என்னை நேசிப்பார்” என்றே நான் நினைக்கிறேன். புரிகிறதா? நான்—நான் நிச்சயமாகவே அந்த அழகான சீயோனின் கீதத்தை கேட்டு மகிழ்ந்தேன்.
23 இப்பொழுது, நான் கேள்விப்படுகிறேன், இதைக் குறித்து நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை, ஆனால் இதே குழுவினர்தான் வர்த்தக புருஷருடைய கூட்டத்தில் பாடப்போவதாக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அது ஞாயிற்றுக்கிழமை, அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்று நான் நினைக்கிறேன். நான் அதை தவறாக புரிந்துகொள்ளவில்லையென்றால், அது சரி என்றே நான் நினைக்கிறேன், அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணிக்கு பாடப்போகிறார்கள். எனவே இந்தவிதமாக பாடுவதை நீங்கள் விரும்புகிறீர்கள், காரணம் அவர்கள் மீண்டும் நமக்காக பாட அங்கிருப்பார்கள். நாளை இரவு நாம் அவர்களை டூசானுக்கு அழைத்துச் சென்று அங்கேயும் அவர்களைப் பாட வைக்க வேண்டும். அது ஜனங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாயிருக்கும் என்று நான்—நான் நிச்சயம் நம்புகிறேன். 4 இப்பொழுது, நாளை இரவு டூசான் வர்த்தகக் குழுவினர் கூட்டம் உள்ளது. நாளை இரவு டூசானில் உள்ள ராமதா சத்திரத்தில் நாம் இருக்கப் போகிறோம். டூசானின் எல்லைப் புறத்தில்தான் ஃபீனிக்ஸ் உள்ளது என்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். புரிகிறதா? அரிசோனாவின் மகத்தான நம்முடைய பொருளாதாரத்தின் உடன் பிரஜைகள் என்ற முறையில் நீங்கள் அனைவரும் அங்கு இருப்பதில் நாங்கள் நிச்சயமாகவே மகிழ்ச்சியடைகிறோம். இப்பொழுது, நாங்கள் மலையின் மேல் இருக்கிறோம்; நீங்கள் ஒரு பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் பாருங்கள், நீங்கள் இருப்பதைக் காட்டிலும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நகரத்தின் இந்த எல்லைப் புறத்தில் உள்ள உங்களோடு இன்றிரவு இங்கே ஐக்கியங்கொள்வதற்கு நாங்கள் நிச்சயமாகவே மகிழ்ச்சி அடைகிறோம். ஆகையால் நாளை இரவு அரிசோனாவின் முக்கிய இடத்தில் வர்த்தக சங்கத்தினருடைய விருந்து நடைபெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பின்னர் அதற்கு அடுத்த நாள் இரவு நாம் இங்கு இருப்போம், இப்பொழுது அந்த சபையின் பெயரை நான் மறந்து விட்டேன், அது தென்பாகத்து சபை. அதன்பின்னர் புதன்கிழமை இரவு நாம் லெவன்த் அண்ட் கார்ஃபீல்டு என்ற இடத்தில், அங்குள்ள அசெம்பிளிஸ் ஆஃப் காட் என்ற சபையில் இருப்போம் என்று நான் நினைக்கிறேன். அதன் பின்னர் வியாழக்கிழமையன்று கூட்டம் துவங்குகிறது.
35 இப்பொழுது, நீங்கள் மிகவும் அருமையானவர்கள், நமக்கு இந்த வாரம் அப்பேர்ப்பட்ட ஐக்கியத்தின் ஒரு அற்புதமான நேரம் உண்டாகியிருந்தது, மேலே உள்ள அந்த எல்லா சபைகளிலும் மற்றும் இங்கே கீழே உள்ள மாரிகோபா பள்ளத்தாக்கிலும் அவ்வாறே இருந்தது. நான் கர்த்தர் செய்யும்படி எதிர்பார்த்ததைவிட, நிச்சயமாகவே அவர் நம்மை அதிகமாகவும் அபரிமிதமாகவும் ஆசீர்வதித்திருக்கிறார். இடங்களோ ஜன நெருக்கங்கொண்டதாகி முற்றங்களும் நிரம்பி வழிய, ஜனங்களோ நின்று கொண்டிருந்தனர், வார்த்தையின் பேரில் ஓரு மகத்தான ஐக்கியம் உண்டாயிருந்தது. ஊழியர்களோ வருகை புரிந்திருந்தனர். என்னைப் பொறுத்தமட்டில் நாம் நடத்தியிருந்த ஒவ்வொரு ஆராதனையிலும் போதகர் சகோதரன் அவுட்லா அவர்கள் வந்திருந்ததை நான் கவனித்தேன். மற்றவர்கள் ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு வந்திருந்தனர். அந்தவிதமாகத்தான் செய்ய வேண்டும், ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்வதென்பது எனக்குப் பிரியம்.
46 மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கடந்து சென்று, இப்பொழுது மகிமையிலுள்ள வயோதிக சகோதரன் பாஸ்வர்த் கூறினது போல, அதாவது அவர் என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, ஐக்கியம் என்றால் என்னவென்று உங்களுக்குத்—உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நான், “இவ்வாறு நான் கருதுகிறேன்” என்று கூறினேன். 7 அப்பொழுது அவர், “அது ஒரே கப்பலை இரண்டு நபர்கள் பகிர்ந்து கொள்வதாகும்” என்றார். எனவே அது—அது உண்மைதான். ஒரே கப்பலில் இரண்டு நபர்கள் இருப்பதாகும். 8 எனவே நாம் இன்றிரவு கூட்டத்தாரை நோக்கிப் பார்க்கும்போது, நான் இதற்கு முன்பு இங்கு கண்டிராத நண்பர்களை காண்பதில் (நான் மகிழ்ச்சியடைகிறேன்.) அவர்கள் கென்டக்கியிலிருந்தும், இந்தியானாவிலிருந்தும், ஒஹையோவிலிருந்தும் நம்மிடத்திற்கு வருகை தந்து, இங்கு அமர்ந்திருக்கின்றனர். இன்றிரவு அவர்கள் இங்கு இருப்பதில் நாம் நிச்சயமாகவே மகிழ்ச்சியடைகிறோம். மற்ற கூட்டங்களிலும் நீங்கள் இருந்திருக்கலாம், ஆனால் பெரிய கட்டிடங்களில் உங்களை கவனிக்காமல் இருந்திருக்கலாம். எனவே கர்த்தர் உங்களை உண்மையாகவே முழு நிறைவோடு ஆசிர்வதிப்பாராக.
59 இப்பொழுது நான் இங்கு சிறிது நேரம் தங்கப்போகிறேன். இன்றிரவு என்னுடைய குடும்பத்தினரை திரும்பவும் காரில் அழைத்துச் செல்ல வேண்டும். நாளை டூசானில் நடைபெறும் கூட்டத்திற்காக நாங்கள் ஆயத்தமாக வேண்டும். எனவே ஆராதனைக்கு பிறகு, இன்றிரவு நாங்கள் புறப்பட்டுச் செல்லப் போகிறோம். அது சுமார் நூற்று இருபத்தைந்து மைல்கள் தூரத்தில் உள்ளது. அது ஒரு நீளமான வனாந்திரப் பகுதியாகும், நான் தூக்கமாயும், களைப்பாயுமிருக்கிறபடியால், நான் உங்களை சீக்கிரமாக அனுப்பிவிட முயற்சிப்பேன். 10 இப்பொழுது, நான் இந்தக் காலையில் கூறினேன், அதாவது தீர்க்கதரிசியை மலையுச்சிக்கு கொண்டு சென்றேன். நான்…அது நேற்றிரவாயிருந்தது, அப்படித்தானே? இந்த காலையில் நாம் வேறு ஏதோ ஒரு காரியத்தின் பேரில் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் நீங்கள் உங்களுடைய வேலைக்கு…தாமதமாக செல்வதாக இருந்தாலும் நான் அதை முக்கியத்துவப்படுத்துவதில்லை. நீங்கள் அவ்வப்போது ஓரிரண்டு நாட்கள் செல்லாமல் இருந்தாலும் நான் அதை முக்கியத்துவப்படுத்துவதில்லை. ஆனால் ஞாயிறு வேதபாட பள்ளியைத் தவறவிடாதீர்கள். பாருங்கள், எனவே ஞாயிறு வேதபாட பள்ளிக்கு நீங்கள் வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.
611 இப்பொழுது, இன்றிரவு நாம் வார்த்தையை அணுகுவதற்கு முன்பு, நாம் ஜெபத்தினால் ஆக்கியோனை அணுகுவோமாக. அதற்கு முன்பு இந்த அருமையான சிறு பாடற் குழுவினருக்கு, இந்த தேவனுடைய பிள்ளைகளுக்கு நான் இதை கூற விரும்புகிறேன். நான் நிச்சயமாகவே அவர்கள் அருமையாக பாடினதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன். சகோதரன் மூர் அவர்கள் ஆராதனையை என்னிடத்தில் விட்டுவிட்டு மெல்ல நழுவிச் சென்றுவிட்டார். நான் இந்த ஆராதனையை அவரிடத்தில் ஒப்படைத்துவிடலாம் என்று இருந்தேன். ஆனால் அவர்—அவர் நழுவிச் சென்றுவிட்டார். நான் அவருடைய அழகான மனைவி இங்கே அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். எனவே இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை ஜெபத்திற்காக வணங்குவோமாக.
712 கர்த்தராகிய இயேசுவே, முதலாவதாக நீர் எங்களுக்கு அளித்துள்ள எல்லாவற்றிற்காகவும் நாங்கள் மீண்டும் உமக்கு நன்றி செலுத்த வருகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக நீர் எங்களுக்கு பிரதானமாயுள்ளதான நித்தியஜீவனை தந்திருக்கிறீர், ஏனென்றால் நாங்கள் மீண்டும் சந்திப்போம் என்பதை நாங்கள் அறிவோம்; இப்பூமியின் மீது அல்ல, இனி வரப்போகும் உலகத்தில் சந்திப்போம். இப்பொழுது இன்றிரவு உம்முடைய வார்த்தையை ஆசீர்வதியும். நீர் எவ்வளவாய் இந்தப் பாடுதலை ஆசிர்வதித்துள்ளீர் என்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்பொழுதும், பிதாவே, நீர் இந்த பாடல்களையும், பாடுபவர்களையும், இந்த சபையின் போதகரையும், இதனுடைய சக போதகர்களையும், உதவிக்காரர்களையும், தர்மகர்த்தாக்களையும் அதற்காக நிற்கிற யாவரையும் தொடர்ந்து ஆசிர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். பிதாவே, அவர்களை ஆசீர்வதியும். 13 இன்றிரவு செய்திக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த சில வார்த்தைகளை நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அதற்கான சந்தர்ப்பத்தை நீர் சேர்த்து, உம்முடைய ஆசீர்வாதங்களை எங்களுக்கு தரும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். வியாதியஸ்தர் யாவரையும், துன்பப்படுகிறவர்களையும் சுகப்படுத்தும். இன்றிரவு ஸ்திரீகளும் புருஷர்களும் தரிசனத்தை கிரகித்துக்கொண்டு, இந்த கடைசி நாளுக்கான தேவனுடைய திட்டம் என்னவென்பதை புரிந்து கொள்வார்களாக. நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய திட்டத்திற்குள் நுழைந்து கொள்வதேயாகும். அதன் பின்னர் மற்ற காரியங்கள் எல்லாம் தானாகவே சரியாக அமைந்துவிடும். அவர் அந்த விதமாகவே எங்களுக்குக் கற்பித்தார், நாங்கள்… அவர், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என்றார். எனவே நாங்கள் இராஜ்யத்தின் ஆசீர்வாதங்களுக்கும், இராஜ்ஜியத்தின் திட்டத்திற்கும் இன்றிரவு திரும்பி வந்து, உம்மிடம் கற்றுக்கொள்வோமாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
814 இப்பொழுது நான் அதிகமாக பேசி வந்துள்ள காரணத்தால், என் தொண்டையோ சற்று கரகரப்பாக உள்ளது. இங்கு வெதுவெதுப்பான உஷ்ணம் உள்ளது என்பதை நான் அறிவேன், நின்றுகொண்டிருக்கும் எல்லோருக்காகவும், விசேஷமாக சுவர்களை சுற்றிலும் நின்றுகொண்டிருக்கிற இந்த பெண்மணிகளுக்காகவும், முன்னறையில் நின்றுகொண்டிருக்கிறவர்களுக்காகவும் நான் வருந்துகிறேன். என்னால் முடிந்த அளவு, சீக்கிரமாகவே முடிந்த அளவிற்கு நான் துரிதமாக முடித்துவிடுவேன். நான் படித்துக் கொண்டிருக்கும்போதும் அல்லது பேசிக்கொண்டிருக்கும்போதும் சர்வவல்லமையுள்ள தேவன் எப்பொழுதும் இங்கே பிரசன்னமாயிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடந்த முறை நாம் இங்கே இருந்தபோது, ஒரு சகோதரன் வலிப்பு நோய்யைக் குறித்து கூறினதுபோல, தேவனால் புற்றுநோயையும், முடக்குவாதத்தையும், அது என்னவாயிருந்தாலும் சுகப்படுத்த முடியும். அவர் ஏற்கனவே அதை செய்துவிட்டார். அவரால் உங்களை அதை விசுவாசிக்க செய்யக் கூடுமானால்! நீங்கள் இன்றிரவு இரட்சிக்கப்பட வேண்டும். நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள். நீங்கள் ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரட்சிக்கப்பட்டீர்கள். ஒருகால் இப்பொழுது இன்றிரவில் நீங்கள் அந்த இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கான கிரையம் ஏற்கனவே செலுத்தப்பட்டாயிற்று, கடனானது செலுத்தித் தீர்க்கப்பட்டாயிற்று. பிசாசு உங்களை அடகு கடையில் வைத்திருந்தான். இயேசு வந்து உங்களை மீட்டு, அந்த கதவுகளைத் திறந்துவிட்டார். நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் வெளியே நடந்து வந்து, உங்களுடைய விடுதலையை உரிமை கோருவதேயாகும். அவ்வளவுதான். கடனானது செலுத்தப்பட்டுவிட்டது என்பதற்கு நீங்கள் தேவனிடத்திலிருந்து ஒரு ரசீதைப் பெற்றிருக்கிறீர்கள். இயேசு தம்முடைய கடைசி வார்த்தைகளில், “முடிந்தது!” என்று கூறினார். ஒவ்வொரு மீட்பின் ஆசீர்வாதமும் முழுமையாக முடிந்துவிட்டன. தேவன் பாவத்தின் மேல் கொண்டிருந்த பெரிதான கோபம், அவர் நமக்காக பாவமானபோது, அந்தக் கடன் தீர்க்கப்பட்டாயிற்று.
915 சாத்தானுக்கு இனி வல்லமையேக் கிடையாது, அவனால் அப்படி உள்ளதாக பொய்யை மாத்திரமே கூற முடியும். அவன் உங்களிடத்தில் பொய்யைக் கூறினால், சரி, நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் சட்டபூர்வமாக அவனிடத்தில் எந்த வல்லமையுமே கிடையாது, அவனிடத்திலிருந்த ஒவ்வொரு வல்லமையும் கல்வாரியிலே அவனிடத்திலிருந்து பிடுங்கப்பட்டாயிற்று. அங்கேதான் கிரயமானது செலுத்தப்பட்டது. அவன் பொய்யுரைத்து ஏமாற்றுபவனே யல்லாமல் வேறொன்றும் அல்ல! நீங்கள் அவனுடைய பொய்க்கு செவிகொடுக்க விரும்பினால், பாருங்கள், அது உங்களைப் பொறுத்தது. ஆனால் நீங்கள் செவி கொடுக்க வேண்டியதில்லை. நீங்கள் இன்றிரவு விடுதலையடைந்திருக்கிறீர்கள். அவர் உங்களை விடுதலையாக்கியிருக்கிறார். 16 இப்பொழுது வார்த்தையில் இருக்கின்ற ஏதோ ஒன்று நீங்கள் தேவனுடைய கிருபையினால் விடுதலையாயிருக்கிறீர்கள் என்று உங்களை தெளிவாக உணரச் செய்யக் கூடுமானால், இல்லையென்றால், வார்த்தையோ அல்லது தேவனுடைய ஏதோ ஒரு கிரியையோ உங்களை புரிந்து கொள்ளச் செய்யுமானால், நீங்கள் உட்பட, நம் எல்லோரையுமே, தெளிவாக உணரச்செய்யுமானால், அப்பொழுது நீங்கள் அந்த அடிப்படையின் பெயரில் அதை ஏற்றுக்கொள்ளும்போது, நீங்களும் கூட விடுதலையாயிருக்கிறீர்கள். நீங்கள் வித்தியாசமான உணர்ச்சியை பெற்றிருக்க வேண்டியதில்லை. நீங்கள் எவ்விதமான உணர்ச்சியையும் பெற்றிருக்க வேண்டியதேயில்லை. அது அந்த அடிப்படையின் பேரில் அல்ல…இயேசு ஒருபோதும், “நீங்கள் அதை உணர்ந்தீர்களா?” என்று கேட்கவேயில்லை. அவர், “நீங்கள் அதை விசுவாசித்தீர்களா?” என்றே கேட்டார். அது விசுவாசமாய் உள்ளதே! அது நம்முடைய—அது நம்முடைய—நம்முடைய…விசுவாசம் ஒரு கரமாய், இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை பிடித்திருக்கிற ஒரு வல்லமையுள்ள கரமாய் உள்ளது. அந்த விசுவாசக் கரமானது அந்தப் பட்டயத்தைப் பிடித்திருக்குமேயானால், அப்பொழுது அந்த இருபுறமும் கருக்குள்ள பட்டயமானது ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் வெட்டிக்கொண்டே செல்லும். சில ஜனங்கள் மிகவும் பலவீனமான தசைப் பிரச்சனையைக் கொண்டுள்ளனர். எனவே அவர்களால் ஒரு சபையில் சேர்ந்துகொள்ளும் அளவிற்கு ஒரு சிறு கீறலை மாத்திரமே உண்டாக்கக் கூடும். மற்றவர்கள் நீதிமானாக்கப்படுதலுக்குள் வர முடியும். சிலரால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்குள்ளாக செல்ல முடியும். ஆனால் ஒரு பெரிய பலமுள்ள கரமானது இந்த வேதாகமத்தை பிடித்துக்கொண்டிருக்குமானால், அது ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் வெட்ட முடியும். அது உண்மை. எனவே கர்த்தருக்குள் பலமுள்ளவர்களாயிருங்கள்!
1017 இப்பொழுது நான்—நான் இங்கே எழுதி வைத்துள்ள சில குறிப்புகளுக்கு ஒரு சிறு பாடப் பொருளாக இன்றிரவு வேதத்திலிருந்து ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். அது நியாயாதிபதிகளின் புஸ்தகம் 16-ம் அதிகாரத்தில், 27, 28 வசனங்களில் காணப்படுகிறது. நான் கூற விரும்புவதற்கான ஒரு பாடப் பொருளை இதிலிருந்து எடுத்துக்கொள்கிறேன். அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது. அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, என்னைப் பலப்படுத்தும் என்று சொல்லி,
1118 கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை வார்த்தையுடன் கூட்டுவாராக. நான் இதை ஒரு பாடப் பொருளாக அழைக்க வேண்டுமானால், அடுத்த சில நிமிடங்களுக்காக, “கர்த்தாவே, இந்த ஒரு விசை மாத்திரம்,” என்பதையே நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் ஒரு விசை, கர்த்தாவே. 19 இந்த இருவரும் அந்த பெரிய அரங்கத்தினுள், இல்லை விளையாட்டு அரங்கத்தினுள் நுழைந்தபோது, ஏறக்குறைய மூவாயிரம் பெலிஸ்தர் அரங்கத்தின்மேல் அமர்ந்துகொண்டு கீழே நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தனர் என்று வேத வசனம் உரைக்கிறது. மிகவும் கீர்த்தி வாய்ந்த இராணுவ தலைவர்கள் அழகிய ஆபரணங்களை அணிந்திருந்த தங்களுடைய பெண்மணிகளோடு அவ்விடத்தில் அமர்ந்திருந்தனர். அறிவிப்பாளனோ, “சிம்சோன் தளத்திற்குள் நுழைகிறான்” என்று அறிவித்தான்.
1220 அவனை நன்றாக காணும்படிக்கு அவர்கள் எழும்பி நின்று, சற்று அருகில் வந்து, தங்கள் கழுத்தை நீட்டிப் பார்த்திருக்க வேண்டும். அவர்கள் ஒரு காலத்தில் தலை சிறந்த போர் வீரனாக விளங்கிய ஒரு மனிதனை, அப்பொழுது மாமிசப் பிண்டமாக, குருடனாக, ஒரு பிள்ளையாண்டானால் கைலாகு கொடுக்கப்பட்டு, அந்த தளத்திற்கு கொண்டு வரப்படுகிறதைக் கண்டனர். நாள் முழுவதும் அந்த அறைகள் குடித்து வெறித்த ஆண்கள் பெண்கள் இவர்களின் களியாட்டத்தினால் சுவற்றுக்கு சுவர் எதிரொலித்திருக்கும். அது என்ன ஒரு காட்சியாக இருந்திருக்க வேண்டும்! கட்டிடத்திலோ என்ன ஒரு அமைதி நிலவியிருக்க வேண்டும். அவர்களுக்கு முக்கிய விரோதியாக இருந்த இந்த மனிதன் ஒரு சிறு பையனால் நடத்தப்பட்டு, கண்களே இல்லாமல், வெளியே தரையிலேயே நடந்துவர ஒரு சிறு பிள்ளையாண்டானால் வழிநடத்தப்பட வேண்டியதாயிருந்தது. ஒரு தீரமான மனிதனாயிருந்து வந்த அப்பேர்பட்ட ஒரு மனிதனாயிற்றே! வீரனாயிருந்து வந்த ஒரு மனிதனான சிம்சோன், அப்பொழுது நடந்து வருவதற்கே ஒரு சிறு பிள்ளையாண்டானால் வழிநடத்தப்பட வேண்டியதாயிருந்தது. தேவனுடைய ஊழியக்காரனாக இருந்த ஒரு மனிதன் குடியும், களியாட்டமும் உள்ள இந்த இடத்திற்கு இந்த நிலையில் கொண்டுவரப்பட்டான்.
1321 யேகோவாவின் மேல் வெற்றி கொண்டதாய் கருதின, மீனைத்-தெய்வமாகக் கொண்ட தாகோன் என்ற அவர்களுடைய தேவனுக்கு அது ஒரு பெரிய கொண்டாட்டமாய் இருந்தது. இங்கே ஒரு நிமிடம் நாம் நிறுத்துவோமாக. யேகோவாவினுடைய சேனையின் மேல் பெற்ற ஒரு வெற்றிக் கொண்டாட்டம் என்பது உங்களுக்குள் ஊடுருவிச் செல்லட்டும். அஞ்ஞானிகளின் விக்ரகமாகிய தாகோன், பெலிஸ்தரின் மீன்-தெய்வமாயிருந்தது, தேவன் அதை வெறுத்திருந்தார். இங்கோ அவர்கள் குடித்து வெறித்து, தேவனுடைய ஊழியக்காரனின்மேல் பெற்ற வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அதைக் குறித்து நினைத்துப் பார்ப்பதே என்ன ஒரு பயங்கரமான காரியமாக உள்ளது! கூடுமானால் நான் நின்று கொண்டு ஒரு சில நிமிடங்கள் அதைக் குறித்த ஒரு காட்சியை விளக்கிக் கூறுவது எனக்குப் பிரியம். ஆனால் அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் நின்றுகொண்டு பார்க்க நேர்ந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் மனதில் சற்று கற்பனை செய்து பாருங்கள். பிறகு அந்தக் காட்சியை நான் உங்களிடம் கொண்டு வரப்போகிறேன்.
1422 சற்று கற்பனை செய்து பாருங்கள், நாள் முழுவதும் குடித்தல், கொண்டாட்டம், அழகாக உடுத்தியிருந்த பெண்களும் ஆண்களும், பிரபுக்களும், போர் வீரர்களும், தேசத்தின் மகத்தான மனிதர் இந்த புதிய கட்டிடத்தில் கூடியிருந்தனர், அங்கே அவர்கள் மீன்-தெய்வமான ஒரு புதிய விக்ரகத்தை வைத்து, யெகோவாவின் ஊழியக்காரர்கள் மீது பெற்ற வெற்றிக்காக அந்த தெய்வத்துக்கு கனத்தையும், துதியையும் செலுத்திக் கொண்டிருந்தனர். இப்பொழுது, அதை இன்னும் மோசமாக்க, அரங்கத்திற்குள் யாரோ ஒரு சிறு பையனால் கைலாகு கொடுக்கப்பட்டு, ஒரு மனிதன், அந்த நாளின் செய்தியாளன் தன்னுடைய கண்கள் பிடுங்கப்பட்டிருப்பதோடு இங்கே அழைத்து வரப்படுகிறான். அந்த சிறுவன் தடுமாறும் குருடனை அந்த இடத்திற்கு கொண்டு வந்தபோது, ஒரு பெரிய இயந்திரத்தைப்போல் அங்கு நின்றுகொண்டிருந்த பருமனான அந்த—அந்த மனிதன் முற்றிலும் உதவியற்ற நிலையில் மெல்லப் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது. தேவன் அவனை ஒரு நோக்கத்திற்காக எழுப்பியிருந்தார். அவனோ தன்னுடைய பிறப்புரிமையை விற்றுப் போட்டிருந்தான்; அவனோ இங்கு ஒரு பெரிய இயந்திரமாக, அதேசமயத்தில் அதில் சிறிதும் பெலனில்லாமல் நின்றுகொண்டு, ஒரு சிறு பையனால் சுற்றி வழிநடத்தப்பட்டிருந்தான். ஆனால் சிம்சோன் இந்த எல்லா காரியங்களைக் குறித்தும் சிந்தனை செய்திருப்பான் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. அவன் தன் பெலத்தை இழந்திருந்த போது, என்ன சம்பவித்திருந்தது என்பதைக் குறித்து அவன் எண்ணிப் பார்த்திருந்தான். அவனுடைய பொருத்தனை அவனிடத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. அவன் தன்னுடைய சத்துருவிடம் சரணடைந்திருந்தான். அவர்கள் அவனுடைய கண்களைப் பிடுங்கி, குருடாக்கியிருந்தனர். அப்பொழுது அவன் அந்த சிறு பிள்ளையாண்டானிடம், “கட்டிடத்தைத் தாங்குகின்ற அந்த தூண்களிடத்திற்கு என்னை நடத்திச் செல், அந்தத் தூண்களிடத்திற்கு என்னை நடத்திச் செல்” என்றான்.
1523 அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! அவர்கள் அவனை வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக அவனை வேடிக்கைக்காட்டி, குடித்து வெறித்திருந்த அந்தக் குழுவினரை மகிழ்வித்தனர். அது என்னே ஒரு நிந்தையாக இருந்தது! அது என்னே ஒரு அவமானமாக இருந்தது! அது என்ன ஒரு உதாரணமாக இருந்தது! சிம்சோனை தூண்களின் அருகில் நிற்க வைத்து பகைஞருக்கு வேடிக்கைக் காட்டினது… நன்னடத்தை அழிவடைந்து, தோற்கடிக்கப்பட்ட ஒரு தேசத்தையே என் நினைவிற்கு கொண்டு வருகிறது இழிவுபடுத்தப்பட்டு, மனமுடைந்து போய், அவன் என்னே ஒரு நிலையில் இருந்தான்! ஒரு விழுந்துபோன தேசத்திற்கும், ஒழுக்கக்கேடு அடைந்துள்ள ஒரு தேசத்திற்கும், தன்னுடைய பிறப்புரிமையை விற்றுப்போட்ட ஒரு விழுந்துபோன சபைக்கும், ஒழுக்கக் கேட்டிற்குள்ளாக விழுந்து போன, சத்துருவிடம் சரணடைந்துள்ள ஒரு தேசத்திற்கும் ஒரு கருணையான அடையாளமாக இருந்தான். தேவனை சேவிக்க நீ எழுப்பப்பட்டிருந்தாலும், நீ ஒழுக்கக்கேட்டிற்குள்ளாக விழுந்துபோதல், உன்னை அந்த நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதற்கு அது ஒரு பொது உதாரணமாக இருக்கிறது. அது என்ன ஒரு உதாரணமாய் இருந்தது!
1624 அங்கு குழுமியிருந்த எல்லா போர்வீரர்களும், அழகான மணிகளையும், வளையல்களையும், அருமையான நகைகளையும் அணிந்திருந்த அந்த பெண்கள் யாவரும், “இவன்தான் சிம்சோனா? நீங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த பராக்கிரமசாலி இவன்தானா. வல்லமையுள்ள தேவர்களின் ஆவி இவனுக்குள் வாசம் செய்தது என்று நீங்கள் கூறினது இவன்தானா? தேசத்தைக் கைப்பற்றக் கூடிய பலமுள்ளவன் என்று நீங்கள் கூறினது இவன்தானா? ஆனால் இப்பொழுது அவனை நோக்கிப் பாருங்கள்!” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 25 என்னே ஒரு உதாரணம்! அது நமக்கு எப்படிப்பட்ட ஒரு பாடமாக இருக்க வேண்டும்! அது என்ன ஒரு பயபக்தியான காரியமாக இருக்க வேண்டும். ஒரு கொண்டாட்டத்தில் ஒரு நல்ல நேரம் உண்டாயிருக்க வேண்டும் என்று நாம் கூடி வந்துள்ளதற்காக நாம் இதை அணுகக்கூடாது. நமது நிலை என்னவென்றும், நமக்கு என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் காணும்படிக்கே நாம் ஒன்று கூடியுள்ளோம்.
1726 “பாருங்கள், இவன்தான் சிம்சோன்!” என்று அவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த ஜனங்கள் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு கூறுவதை என்னால் கேட்க முடிகிறது, சிம்சோனும் அதைக் கேட்டிருப்பான் என்பதில் சந்தேகமியில்லை. 27 இன்றைய நம்முடைய பெந்தேகோஸ்தே அசைவைக் குறித்தும் அதே காரியத்தையே இந்த நேரத்தில் சத்துருவால் கூற முடியுமல்லவா என்று நான் எதிர்பார்க்கிறேன். 28 சிம்சோன் என்ற பெயரைக் கூறினாலே, அவர்கள் எல்லோரும் நடுங்குவார்கள், ஏனென்றால் அவன் தேவனால் அபிஷேகிக்கப்பட்ட ஊழியக்காரனாக இருந்தான். அவன் ஒரு நசரேய வரத்தோடு பிறந்திருந்தான் என்றும், அவன் நசேரய வரத்தை உடையவனாய் இருந்தவரைக்கும், எதுவுமே அவனைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். அவன் அந்த நாளில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மனிதனாயும், அந்த நாளில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட செய்தியாளனாயும் இருந்தான். இது என்னவாய் இருக்க வேண்டுமென்று அவர்களில் அநேகர் நினைத்தனர். அவர்களில் அநேகர் அவனை எண்ணிப் பார்த்தனர். இந்த உதவியற்ற சிருஷ்டியாய், குருடனாய், தன் கரங்களினால் தூண்களை பிடித்து கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தபோது, அனேகர் அவனைக் குறித்து நினைத்துப் பார்த்தனர். அவனை கேலி செய்து, அவனை வாரினால் அடித்து, “மகா பெலங்கொண்ட சிம்சோனே, இங்கே வா! ஏதாவது ஒன்றைச் செய்! நீ மிகவும் பராக்கிரமசாலியிருக்கிறாயே, உன்னுடைய தேவன் எங்கே?” என்று கேட்டனர்.
1829 உங்களை தோற்கடிக்கும் நிலைக்கு சத்துரு உங்களைக் கொண்டு வரும்போது, அதைத்தான் அவன் செய்ய விரும்புகிறானே! ஆனால் தேவனுடைய வல்லமை சபையினூடாக கிரியை செய்து கொண்டு வரும் வரைக்கும் சாத்தான் அதைச் செய்ய தைரியங்கொள்வதில்லை. நசரேய ஆசீர்வாதங்கள் உங்கள் மீது இருக்கும்போது, சாத்தான்—சாத்தான் அதைச் செய்ய பயப்படுவான். ஆனால் நீங்கள் வாரினால் அடிக்கப்படுவதை அவனால் காண முடிந்தால், அப்பொழுது அவன் உங்களை பரிகாசம் செய்கிறான். அப்பொழுது அவன், அவர்களுக்கும் நமக்குமிடையே எந்த வித்தியாசமும் கிடையாது என்றும், அவர்களும் நம்மைப் போன்றவர்களே என்றும் கூறுவான். ஆனால் வித்தியாசமான ஏதோ ஒரு காரியம் இருக்கும்போது, அது யேகோவாவினுடைய ஆசீர்வாதங்களைக் கொண்டு உயர்ந்து நிற்கும்போது, அப்பொழுது அவர்கள் எந்த ஒரு காரியத்தையும் கூறப் பயப்படுகின்றனர். தேவனுடைய வல்லமை கிரியை செய்வதை அவர்கள் காண முடிந்த வரைக்கும், பிசாசு தன் வாயை மூடிக்கொண்டிருக்க போதிய அறிவு படைத்தவனாயிருக்கிறான். ஆனால் நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்கள் என்று அவன் அறியும்போது, அவன் எல்லா பிசாசுகளையும் உங்கள் மேல் (அவிழ்த்து) விடுகிறான்.
1930 அந்த நிலையில்தான் சிம்சோன் அங்கு நின்றுகொண்டிருந்தான். நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போமாக, போர்வீரர்கள், அனுபவம் வாய்ந்த வயோதிக போர்வீரர்களில் சிலர் தங்களுடைய முகத்தில் தழும்புகளோடு, அங்கே சிம்சோன் நம்பிக்கையற்றவனாய், உதவியற்றவனாய் நிற்பதை அவர்கள் நோக்கிப் பார்ப்பதை என்னால் காண முடிகிறது. ஒருசமயம் அவன் தன்னுடைய கையில் ஒரு கழுதையின் தாடை எலும்போடு நின்று, தன்னுடைய பாதத்தின் கீழே ஆயிரம் பெலிஸ்தியர்களை கொன்று குவித்ததை அவர்கள் நினைவுகூர்ந்தனர். இப்பொழுது ஒரு சிறு பையனால் கைலாகு கொடுக்கப்பட்டு சுற்றி வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறான். ஒரே ஒரு மனிதன் சூரிய வெப்பத்தினால் உலர்ந்து, கருகிப்போன ஒரு கழுதையின் தாடையெலும்பை…எடுத்துக்கொண்டு, அத்தனை பெலிஸ்தியரையும் கொன்றுபோட்டான் என்னும் செய்தி அவர்களுடைய ஆலோசனை சங்கத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, அது எப்படி முடியும் என்று அவர்கள் கேள்வி கேட்டதை அவர்களால் நினைவு கூர முடிந்தது.
2031 இப்பொழுது உங்களில் அநேகர் பெலிஸ்தரின் சரித்திரத்தைப் படித்திருக்கிறீர்கள். அவர்கள் அணிந்திருந்த போர்க் கவசங்கள்; அவர்களுடைய தலையிலிருந்த தலைச்சீரா ஏறக்குறைய ஒரு அங்குலம் கனமுள்ள பித்தளையினால் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அணிந்திருந்த அவர்களுடைய மார்க்கவசமோ, அதாவது அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்தனர். ஒரு நீண்ட ஈட்டியோ அல்லது இருபுறமும் கருக்குள்ள ஒரு—ஒரு பட்டயமோ அவர்களைத் தாக்கினாலும் அவர்களுக்கு காயம் ஏற்பட்டு விழுந்துபோகாதிருக்க, அவர்கள் அரை-அங்குலம் கனம் கொண்ட பித்தளையினால் செய்யப்பட்ட மார்க்கவசத்தை அணிந்து தங்கள் உடல் முழுவதையும் மறைத்திருந்தனர். 32 இப்பொழுது, எப்படி ஒரு மனிதன் தன்னைச் சுற்றிலும் ஆயிரம் பேர் இத்தகைய போர்க் கவசம் அணிந்து, கையில் ஈட்டியைப் பிடித்துக்கொண்டு, கண்கள் மாத்திரம் காணத்தக்கதாய் தலை முழுவதையும் மறைத்த பெரிய தலைச்சீராக்கள் அணிந்தவர்களாயிருந்தபோது, ஒரு கழுதையின் தாடை எலும்பைக் எடுத்துக்கொண்டு ஒரே சமயத்தில் அந்த ஆயிரம் பேரை கொன்றிருக்க முடியும்? ஏன்? அந்த தலை சீராவின் மேல் அவன் அடித்த முதல் அடியே, உடையும் தன்மை கொண்ட அந்த தாடை எலும்பை சுக்குநூறாக்கியிருக்கும். அவன் அந்த போர்வீரனை தலையில் அடித்தபோது, அது தலைச்சீராவில் துளையுண்டாக்கி அவனை உடனடியாக கொன்றுபோட்டதால், அவனிடம் ஏதோ இயற்கைக்கு மேம்பட்ட பெலன் இருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர். அவன் வலது கையாலும் இடது கையாலும் தாக்கிக்கொண்டே சென்றான். அவன் ஒவ்வொரு முறை தாக்கும்போதும் தேவனுடைய வல்லமையும் அதனோடு தாக்கியது.
2133 அதற்கு நாம் நினைப்பதுபோல ஒரு பெரிய காரியம் அவசியமில்லை. சத்துருவை எந்த சூழ்நிலையிலும் மடங்கடிக்க, பரிசுத்த ஆவியினால் முற்றிலுமாக அபிஷேகம் பண்ணப்பட்டு, தேவனுடைய வல்லமை பெற்ற ஒரு—ஒரு கரம் மாத்திரமே அவசியமாயுள்ளது. 34 அந்தப் போர் வீரர்கள் அவையெல்லாவற்றையும் எப்படியாய் நினைவுகூர்ந்தனரே! “ஒருக்கால் நாம் வேறு ஏதாவது ஒரு மனிதனைப் பிடித்துகொண்டு வந்துவிட்டோமா?” என்று சிலர் எண்ணியிருக்கக் கூடும். அப்பொழுது அவர்களில் சிலர், “இல்லை, அவனேதான். அவன் உருவத்தை என்னால் காணமுடிகிறதே, அது சிம்சோன்தான். அவன் உண்மையுள்ள தேவனை சேவிப்பதாக கூறிக்கொண்டான். ஆனால் அவனுடைய தேவனோ அவனை கைவிட்டுவிட்டார்” என்று கூறியிருக்கலாம். 35 ஆனால் அவர்கள் தவறாக நினைத்திருந்தனரே! தேவன் அவனைக் கைவிட்டிருக்கவில்லை. அவன்தான் தேவனை கைவிட்டிருந்தான். இன்றிரவு ஜனங்களோடுள்ள வழியும் கிட்டத்தட்ட அந்தவிதமாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். அது தேவன் தம்முடைய சபையை கைவிட்டுவிட்டார் என்பதாயிருக்கவில்லை, அது சபை தான் தேவனையும், அவருடைய வார்த்தையையும் கைவிட்டுவிட்டது என்பதாயுள்ளது. அதுதான் காரியமாக உள்ளது.
2236 கவனியுங்கள், அவர்களில் அநேகர் நினைவுகூர்ந்தனர். ஒரு பக்கமாக நின்றிருந்த அந்தக் கூட்டம், “தெலீலாள் அவனை குதிரைகளும் கூட இழுக்க முடியாத கயிறுகளால் கட்டிப்போட்டது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அவன் மேல் விழுந்த போது, அவன் சாதாரண நூலைப்போல அதை அறுத்துப் போட்டான். இங்கோ அவன் தோல்வியடைந்தவனாய் நின்று கொண்டிருக்கிறான்” என்றனர். 37 மற்றொரு கூட்டத்திற்கு, ஒரு இரவு காசாவில் நடந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. அவர்கள் அவனை வளைத்துக்கொண்டு, அதன் வாசல் கதவுகளையும் அடைத்துவிட்டனர். ஆனால் அவன் அப்பொழுது அவன் மீது அபிஷேகத்தை உடையவனாக இருந்தான். அவர்கள், “இப்பொழுது, நாம் அவன்மேல் விழுந்து, அவனைக் கொன்றுபோடுவோம்” என்றனர். ஆனால் கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கியது. அவன் பட்டணத்து வாசல் கதவுகளைப் பெயர்த்து அவைகளை மலை உச்சிக்கு சுமந்துகொண்டு சென்றான். 38 ஒரு மனிதன் தேவனுக்காக கடமையின் பாதையில் இருக்கும்போது, எந்த வாசலுமே, எதுவுமே அவனுடைய வழியில் குறுக்கே நிற்க முடியாது. பிசாசு ஒருநாள் தேவனுடைய மனிதனையும், அவருடைய ஜனங்களையும் சிவந்த சமுத்திரத்தைக் கொண்டு வேலியடைக்க முயன்றான். ஆனால் தேவனுடைய மனிதனோ அதனூடாக கடந்து சென்றுவிட்டான். ஒரு மனிதன் தேவனுடைய சேவையில் இருக்கும் வரை, அபிஷேகமும், ஆசீர்வாதமும் அவன்மீது இருக்கும் வரை, அவன் எதற்கும் பயப்படக்கூடாது, ஏனென்றால் அவர் நம்மோடு இருப்பதாக நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். எனவே எதுவும் நம்மை எக்காரணத்தைக் கொண்டும் தொல்லைப்படுத்தாது.
2339 ஆனால் தேவனுடைய, அவருடைய நீடிய பொறுமை முடிவில் உங்களை விட்டு விலகும்போது, என்ன சம்பவிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணமாயிருக்கிறது. இப்பொழுது, அவர் நீடிய பொறுமையுள்ளவராயருக்கிறார். ஆனால் நினைவிருக்கட்டும், அவருடைய பொறுமைக்கு ஒரு முடிவு உண்டு. இப்பொழுது, அவர்கள் சிம்சோனை அங்கே பிடித்த அந்த இரவே அவன் தவறு செய்துகொண்டிருந்தான். ஆனால் முடிவிலே தேவனுக்கு அது போதுமென்றாகிவிட்டதே! அவரால் அவனைத் திருத்த முடியவில்லை. “தேவனே, தேவனுடைய பொறுமை உங்களோடு அற்றுப்போகும் ஒரு நிலைக்கு இந்த பெந்தேகோஸ்தே சபையானது ஒருபோதும் வர வேண்டாம்” என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது. இந்த வாரம் நாம் கற்பித்துள்ளவிதமாக, அவர் செய்தியாளர்களை அனுப்பி, காலங்களினூடாக தீர்க்கதரிசிகளை எழும்பப் பண்ணி, அவருடைய வார்த்தையை முன்னுரைத்து, அவருடைய வார்த்தையை திரும்ப அளித்துக் கொண்டே வந்தார். அதன்பின்னரும் நீங்களோ அதிலிருந்து தொடர்ந்து விலகி நடப்பீர்களேயானால், அப்பொழுது நீங்களும் கூட உங்களை குருடராய், வல்லமையற்றவர்களாய், உதவியற்றவர்களாய், தோற்கடிக்கப்பட்டவர்களாய் கண்டறிவீர்கள். பாருங்கள், சிம்சோன் பகட்டுக்காக விழுந்துபோனான். இன்றைக்கு சபையும் அதே காரியமான பகட்டுக்காகவே விழுந்துபோகிறது. இந்தக் காரியங்கள் சம்பவிக்கிறதை காண்பது என்ன ஒரு பரிதாபமாக உள்ளது.
2440 ஆம், அவர்கள் தேவனுடைய வல்லமையை வேலியிட்டு வைக்க முயன்றபோது, அவர்களால் அதை செய்ய முடியவில்லை என்பதை அவர்கள் கண்டறிந்தனர். சிம்சோன் பல டன்கள் எடையுள்ள அந்த இரும்புக் கதவுகளைப் பெயர்த்து, அவைகளை நடந்தே மலையின் உச்சிக்கு கொண்டு சென்று அவைகளை அங்கே கீழே கிடத்தினான். நிச்சயமாகவே, யாரும் அவனை மேற்கொள்ளப்போவதில்லை என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்! 41 ஒரு மனிதன் பரிசுத்தாவியின் அபிஷேகத்தில் கர்த்தருடைய வார்த்தையோடு, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வருகிறபோது, அவனைத் தாக்க முயற்சிக்காமலிருக்க நீங்கள் போதிய அறிவைப் பெற்றிருப்பது மேலாகும், ஏனென்றால் அங்கே ஒரு ஜீவனுள்ள தேவனுடைய கரம் உள்ளது என்றும், அது பலமுள்ளது என்றும் நீங்கள் கண்டடைவீர்கள்.
2542 ஒருநாள் அவன் தன்னுடைய பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிங்கம் அவனை நோக்கி ஓடி வந்து, கெர்ச்சித்ததைக் கண்ட மற்றொரு கூட்டம் அங்கே இருந்ததை நாம் கண்டிருக்கிறோம். ஒரு வினாடிக்குள் ஒரு மனிதனை, நான்கு அல்லது ஐந்து பேர்களை கொல்லக் கூடிய ஆபத்தான ஒரு மிருகமாய் ஒரு சிங்கம் உள்ளது. ஒரே ஒரு பாய்ச்சல் மாத்திரமே அதற்கவசியம். இந்த சிங்கமோ சீற்றங்கொண்டிருந்தது, அவர்கள் சிங்கத்தைக் கவனித்த போது, அவர்கள் அதனுடைய செயலையும் கவனித்தனர். சிங்கம் அனேகமாக சீற்றமும், கோபமுங்கொண்டதாய் சிம்சோனின் மேல் பாய்ந்தது. ஆனால் அவனோ உதவியற்றவனாய் அங்கே நின்றான். ஆனால் திடீரென்று! 43 ஓ, அவர் ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையாயிற்றே! திடீரென்று! இன்றிரவு வியாதியுள்ள ஜனங்களாகிய உங்களால் ஏன் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்க முடியவில்லை? யாராவது உங்களுக்கு எதிராக ஏதோ ஒரு காரியத்தை கூறுவார்கள் என்றும், உங்களைக் குறித்து ஏதோ ஒரு காரியத்தை கூறுவார்கள் என்றும் பயப்படுகிற உங்களால் ஏன் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்க முடியவில்லை? அவர்கள் இயேசுவைக் குறித்தும் கூட கூறினார்கள். திடீரென்று அவனை தேவனுடைய வல்லமை ஆட்கொண்டதே! உங்கள் ஒவ்வொருவரின் அறிக்கையின் மூலமாகவும், விசுவாசத்தின் மூலமாகவும் வானங்களிலும் பூமியிலும் உள்ள வல்லமைகள் யாவும் உங்கள்மேல் வந்து இறங்கும்படி கீழ்படுத்தப்படும்.
2644 சிம்சோன் அங்கு நின்று கொண்டிருக்கையில், தேவனுடைய வல்லமை அவன் மேல் வந்தது, அப்போது சிங்கம் அவன் மீது பாய்ந்தபோது, அவன் அதன் வாயைத் தன் கைகளால் பிடித்து அதை இரண்டாக கிழித்துப்போட்டான். அதைப் போன்ற ஒரு காரியத்தை செய்ய முடிந்த மனிதன்…இங்கே அதே மனிதன் தோற்கடிக்கபட்டவனாய், உதவியற்றவனாய், குருடனாய் நிற்கிறான். 45 அதைப்போன்றே உதவியற்றதாய், தோற்கடிக்கப்பட்டதாய், குருடானதாய், வாக்குத்தத்தங்களை புறக்கணித்ததாய், வார்த்தையைப் புறக்கணித்த ஒரு சபையை, வியாதியின்மேல் வல்லமையை பெற்றிருக்கும்படி கிறிஸ்து வாக்களித்த ஒரு சபை அந்நிலையில் இருப்பதை நான் உங்களுக்கு கிட்டத்தட்ட சுட்டிக்காட்ட முடியும். “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்.” பிசாசை எதிர்த்து அவனைத் துரத்துதல். அவர் ஆசீர்வாதங்களை தம்முடைய சபைக்கு வாக்களித்துள்ளார். ஆனால் சபையானது ஜெபக் கூட்டங்களிலிருந்தும், உத்தமத்திலிருந்தும் விலகி, கிறிஸ்தவ மார்க்கத்தை ஒரு பாரம்பரியமாக்கிவிட்டபடியால், அதன் பெலன் அனைத்தும் அதனை விட்டு எடுக்கப்பட்டாயிற்று. பகட்டு நம்முடைய சபைகளுக்குள் நுழைந்துவிட்டபடியால், அவள் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்பட்டவளாய் நிற்கிறாள். ஓ, என்னே!
2746 வல்லமை யாவுமே ஒரு ஸ்திரீயினால் உரியப்பட்டவனாய் அவன் அங்கு நின்றான், ஏனென்றால் அவனுடைய கண்கள் அதை விரும்பிச் சென்றன. தேவனுடைய ஊழியக்காரனை ஜெயங்கொள்ளும்படியான ஒரு முறைமையை ஒரு ஒழுக்கக் கேடான யேசபேல் ஏற்படுத்தியிருந்தாள். 47 நான் இதை பயபக்தியுடன் கூறுவேனாக, யேசபேலின் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது ஜெயங்கொண்டு, எல்லா ஸ்தாபனங்களையும், பெந்தேகோஸ்தேயினரையும் மற்றுமுள்ள யாவரையும் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திற்குள் கொண்டு வந்துள்ளது. அது உங்களிடமுள்ளதை எடுத்துப்போடும்படியாயுள்ள பிசாசின் கன்னியேயன்றி வேறொன்றுமில்லை. அப்பொழுது அவள் உங்களைப் பார்த்து நகைப்பாள். அந்த ஸ்திரீயினால் வல்லமை நீக்கப்படுமே!
2848 சில ஆண்டுகளுக்கு முன்பு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, பெந்தேகோஸ்தே உயர்ந்து நின்றது. அதிலிருந்த ஜனங்கள் வித்தியாசமாய் இருந்தனர். அவர்கள் உலகப்பிரகாரமான வெவ்வேறு குழுக்களிலிருந்து, அவை உலகப்பிரகாரமாயிருந்த காரணத்தால், பிரிந்து வந்தவர்கள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினர். தேவன் அந்த சபையை தெரிந்துகொண்டபடியால், அது உலகத்திலேயே மிகவும் வல்லமையுள்ள சபைகளில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால் அவள் செய்துகொண்டிருக்கிற காரியம் என்னவென்றால், அவள் எதிலிருந்து வெளியே அழைக்கப்பட்டிருந்தாளோ, அதே கதம்பக் கூளத்திற்கு, திரும்பவும் அதற்குள்ளாகவே திரும்பிச் சென்றுவிட்டாள். அவள் அதைச் செய்யத் தொடங்கியபோது, அவளுடைய வல்லமை அவளிடத்திலிருந்து எடுக்கப்பட்டது. முழு-இரவு ஜெபக் கூட்டம் நடத்தப்படுவதை நாம் இன்றைக்கு எங்கே காண்கிறோம்? போதகர் முன்பு செய்வதுபோல் காலை ஒன்று அல்லது இரண்டு மணி வரை பிரசங்கித்தால், அவர் காலி இருக்கைகளுக்கு மாத்திரமே பிரசங்கம் செய்வார். அவர்களோ வீட்டிற்கு சென்று, நாங்கள் சூசியை நேசிக்கிறோம் என்ற நாடகத்தை அல்லது வேறு யாரோ ஒருவருடைய குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்க்க வேண்டும். இப்பொழுது, அது உண்மையாயிற்றே! ஏன்? “உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயம் இருக்கும்.” நம்முடைய பொக்கிஷங்கள் வார்த்தையில் இருக்க வேண்டுமே! அரிசோனா ஜனங்கள் கனிமப் பொருட்களை தேடுபவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் சிறிது நேரம் தோண்டிப் பார்த்து, பாருங்கள், எது உங்களுக்கானது என்று அறிந்துகொள்ள வேண்டும். 49 ஆனால் அங்கு சிம்சோன் தோற்கடிக்கப்பட்டவனாய், ஒரு ஸ்தீரியினால் பெலனிழக்கப்பட்டவனாய் நின்றான். அவன் தன்னையும், தன்னுடைய இரகசியத்தையும் ஒரு ஸ்தீரிக்கு ஒப்புவித்துவிட்டபடியால், அவனிடத்திலிருந்து எல்லா வல்லமைகளும் எடுக்கப்பட்டு விட்டன.
2950 இப்பொழுது, நாம் போதிய அளவுக்கு பெரியவர்களாகி, நமது கஷ்டங்களை நீக்கி, நாம் எங்கோ நடத்திக்கொண்டிருந்த சுவிசேஷ ஊழியத்தைவிட்டு வெளிவந்தவுடனே, அடுத்த நபரைப் பார்க்கிலும் நாம் பெரிய சபைகளைக் கட்ட முயற்சிக்கிறோம். நாம் மெதொடிஸ்ட்களையும், பிரஸ்பிடெரியன்களையும், பாப்டிஸ்டுகளையும் இந்த விஷயத்தில் மிஞ்சிட விரும்புகிறோம். அது உங்களுடைய நோக்கமல்லவே! அதற்காக நீங்கள் இப்பொழுதுள்ள நிலையில் இல்லை. தேவன் ஏற்கனவே அதை உடையவராயிருந்தார். அவர் உங்களை அதற்காக எழுப்பவில்லை. அவருடைய மகிமையை காண்பிக்கும் பொருட்டு, அவருடைய வல்லமையை உங்களுக்குள் வைத்து, ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதற்காகவே அவர் உங்களை எழுப்பினார். 51 ஆனால் சில நற்பண்பற்ற ரிக்கிகள் அதற்குள் நுழையட்டும், அவர்கள் எல்லாவற்றையும் மாற்றி அமைத்து, உலகத்தின் கவர்ச்சியான காரியங்களின் பின்னால் சென்றுவிடுவார்கள். சபையோர் பெரும்பாலும் அழகான சுருள் முடி கொண்ட ஒரு வாலிபனை தங்கள் போதகராகப் பெற விரும்புகின்றனர். அவனுக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் தெரியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்களுடைய சரீரத்தில் சுகவீனம் அடையும்போது, அப்பொழுதுதான் மருத்துவ பள்ளியை விட்டு வெளிவந்த மருத்துவரை நீங்கள் விரும்புவது கிடையாது. உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்போவதாக இருந்தால், உங்களுடைய இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படப் போவதாயிருந்தால், அப்போது நீங்கள் தலை நரைத்த அனுபவமிக்க வயோதிக மருத்துவரையே விரும்புகிறீர்கள். இன்றிரவு சபைக்குத் தேவையென்னவெனில், தேவனுடைய வல்லமையென்று நிரூபிக்கப்பட்டுள்ள பண்டைய நாகரிகங்கொண்ட சுவிசேஷமேயன்றி, நம்முடைய வேதபாட கருத்தரங்கு பள்ளிகள் உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த நற்பண்பற்ற ரிக்கிகளில் சிலர் அல்ல. நீங்கள் அதை அறிவீர்கள். அந்நிலையில்தான் நாம் இன்றிரவு உள்ளோம். அவ்விதமான குழப்பத்திற்குள் செல்ல உங்களுக்கு எந்த வேலையும் கிடையாது. நீங்கள் அங்கேயே விழ ஆரம்பித்து விட்டீர்கள். நீங்கள் திரும்பி வரவேயில்லை, நீங்கள் அதில் சென்றுகொண்டிருக்கும் வரைக்கும் நீங்கள் திரும்பி வரவேமாட்டீர்கள்.
3052 அந்த பெலிஸ்தர் சிம்சோனை குறித்து வியந்துகொண்டிருந்த நேரத்தில், சிம்சோனின் மனதில் என்னவெல்லாம் எழுந்தன என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்துள்ளீர்களா? அந்த மனிதனுடைய சிந்தனையினூடாக என்னவெல்லாம் ஓடிக்கொண்டிருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவன் முழு குருடனாய், திரும்பவும் பார்வையைப் பெற முடியாத நிலையில் அங்கிருந்த சமயத்தில், தேவன் அவனுக்கு அளித்திருந்த மகத்தான வெற்றிகளை குறித்து நினைத்துப் பார்த்திருப்பான் என்று நான் நினைக்கிறேன். அவன் அதற்கு முன்பிருந்த நாட்களைக் குறித்தே எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்திருப்பான். 53 சிறிது நேரத்திற்கு முன்பு நான் இங்கு கூறினது போன்றே, மனிதனுடைய வழி அவ்வாறே உள்ளது. மனிதன் எப்பொழுதுமே தேவன் முன்பு செய்ததைக் குறித்து சிந்தனை செய்கிறான், அவர் வருங்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை எதிர்நோக்கியிருக்கிறான், ஆனால் தேவன் இப்போது செய்துகொண்டு வருகிறதை அவன் அசட்டை செய்கிறான். பார்த்தீர்களா? அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள்! அவர் என்ன செய்துள்ளார் என்று நமக்கு தெரியும். அவர் நமக்கு அனுப்பி, நம்மை அசைத்து, அவருடைய வார்த்தையின் பாதைக்கு நம்மை மறுபடியும் கொண்டுவர முயன்று, அதை ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையினால் அதை நிரூபித்துக்கொண்டு வருகிறார். நாமோ உட்கார்ந்து, உறங்கி, வீட்டுக்குச் சென்று, “அவர் என்ன சொன்னார்? அவர் அவ்வளவு நேரமாக பிரசங்கம் செய்தது எனக்கு பிடிக்கவில்லை” என்கிறோம்.
3154 அவனுடைய “சிறந்த காலத்தில்,” என்று நாம் அழைக்கும் விதமாக, கர்த்தருடைய ஆவி அவன்மேல் தங்கியிருந்தபோது, கர்த்தர் அவனுடைய ஜெபத்திற்கு பதிலளித்திருந்த யாவும் அவனுடைய மனதில் எழுந்தன. அவன் ஜெபிப்பதற்கு முன்பாகவே அவன் தேவனுக்காக வாழ்ந்த வரைக்கும், தேவன் சரியான நேரத்தில் வந்தார். “பாருங்கள், இப்பொழுது, நான் ஜெபித்து, இந்த ஆயிரம் பெலிஸ்தியரை இப்பொழுது மடங்கடிப்பேனா என்று அறிய வேண்டும்…” என்று யோசிக்கக்கூட அவனுக்கு நேரமிருக்கவில்லை. தேவன் அவனோடு இருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே எந்த ஆக்கினைத் தீர்ப்பும் அவனுக்கில்லாதிருந்தது. எனவே அவன் தன்னுடைய கையில் கிடைத்த முதல் பொருளை எடுத்துக்கொண்டு, அவர்களை மடங்கடித்துக்கொண்டே சென்றான். அது உண்மை. அவன் இளங்கலை பட்டம் பெறும் வரைக்கும் அல்லது சண்டையிடுவது எப்படி என்று கற்கும் வரைக்கும் காத்திருக்கவில்லை. அவன் கையில் கிடைத்ததை எடுத்து, அதைக் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்கினான்.
3255 ஆனால் இன்றைக்கு எல்லா கோட்பாடுகளுடனும், அப்படிப்பட்டவைகளுடனும் எப்படி கோபம்கொண்டு சண்டையிடுவது என்று நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் எங்குமே முன்னேற்றமடைவதில்லை. கோலியாத்தின் நாட்களில் இருந்ததுபோல், நாம் ஏமாற்றுக்காரர்கள். ஒருகால் தேவன் நமக்கு கோட்பாடுகளை அறியாத பரீட்சிக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு தேவனுடைய வல்லமையை மாத்திரம் அறிந்துள்ள ஒரு தாவீதை அனுப்புவார். திடகாத்திரமுள்ள ஒருவன், “அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன” என்று கூச்சலிட்டதன் விளைவாக முழு சபையுமே தோல்வியடைந்ததாய் அங்கு நின்று கொண்டிருந்தது. ஆனால் சிறிய உருவமும், தொங்கின தோள்களும், சிவந்த மேனியுங்கொண்ட தேவனுடைய மனிதன் ஒருவன் அங்கு வந்த போது, கோலித்தினுடைய வார்த்தை கிரியை செய்யவில்லை. ஆனால் தேவன் அவனோடு கூட இருந்தார். அவனுக்கு ஒரு அனுபவம் இருந்தது. 56 அவர்களோ, “இங்குள்ள எங்களுடைய இந்த சபையின் கோட்பாட்டை எடுத்துக்கொண்டு, அங்கு போய் அவனை சந்திக்கப் புறப்படு” என்றனர். 57 அதற்கு அவனோ, “நான் அந்த காரியத்தை ஒருபோதும் நிரூபித்ததேக் கிடையாது. இதைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று கூறினான். பார்க்கப்போனால், சவுலின் மத சம்பந்தமான உடை தேவனுடைய மனிதனுக்குப் பொருந்தவில்லை என்பது தெரியவந்தது. எனவே அவன் அவைகளைக் களைந்துப்போட்டு, அவன் சரியென்று அறிந்திருந்ததை உடுத்திக்கொண்டான். 58 இன்றைக்கு சபையை கண்காணிக்க அல்லது ஏதோ ஒரு காரியத்தை செய்ய நமக்கு ஒரு இளங்கலை பட்டம் பெற்றவரோ அல்லது—அல்லது வேத பாண்டித்தியப் பட்டம் பெற்றவரோ அவசியமில்லை. தேவனுடைய வார்த்தையைக் கையாள, நம்முடைய வாழ்க்கையில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையைக் கொண்டு, நமது இருதயங்களில் தேவனுடைய அன்போடு, நாம் என்ன கேட்கிறோமோ, அதற்கு தேவன் பதிலளிப்பார் என்ற உறுதியை நாம் உடையவர்களாயிருக்கிறோம் என்ற ஒரு காரியமே நமக்குத் தேவையாய் இருக்கிறது. “உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் நன்மையை வழங்காதிரார்.”
3359 இப்பொழுது சிம்சோன் தன்னுடைய மகத்தான நாட்களை, அந்த மகத்தான நாட்களை நினைத்துப் பார்த்தான். சபையும் இன்றிரவு ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தெய்வீக சுகமளித்தலின் எழுப்புதல் ஒன்றுண்டாகி, அதனால் உண்டான வெற்றிகளைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறது. இப்போது, அவனும் கூட தேவனுடைய…தவறிப்போயிருந்த அவருடைய ஜனங்களும். அது மிகவும் கவலைக்கிடமான ஒரு செயல், சிம்சோன் தேவனிடத்தில் தோல்வியடைந்திருந்ததை அங்கு நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தோல்வியடைந்தது தேவனுடைய தவறல்ல, அது அவனுடைய சொந்த தவறாயிருந்தது. ஜனங்களுக்கு, தேவனுடைய ஜனங்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அவன் எழுப்பப்பட்டான், அவனுடைய பெலத்தில், அவன் நடத்தை கெட்ட ஸ்தீரியிடம், ஒழுக்கக்கேடான ஸ்தீரியிடம் சரசமாடினதால், தேவன் அவனுக்கு அளித்திருந்த எல்லா பெலனையும் இழந்துபோய்விட்டிருந்தான். 60 சபையும் அதே நிலையில் உள்ளதே! சபை ஒரு கலங்கரை விளக்கமாய் இருக்க வேண்டும் என்றும், அவருடைய வல்லமையை அதன் மூலம் பயன்படுத்தி, வியாதியஸ்தர்களை சுகப்படுத்தவும், மரித்தோரை எழுப்பவும், பிசாசுகளைத் துரத்தவும், பரிசுத்தமாக வாழ்ந்து, முழு சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தேவன் சபையை எழுப்பியிருந்தார். ஆனால் நாமோ மெல்லத் தளர்வடையத் துவங்கிவிட்டோம்.
3461 நாம் தவறான உதாரணங்களை எடுத்துக் கொண்டோம். ஸ்தீரிகள் மேய்ப்பருடைய மனைவியைப் போன்று நடந்துகொள்கின்றனர். அவர் அவளைத் தன் விருப்பத்திற்கு விட்டுக் கொடுத்து, அவள் தலைமுடியைக் கத்தரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளை அணியவும் அனுமதித்து, ஒருபோதும் அவளைக் கடிந்துகொள்வதேயில்லை. மற்ற ஸ்திரீகள் அவளைக் கண்டு, “சகோதரி இன்னார்-இன்னார் அப்படி செய்யும்போது நானும் செய்யலாம்” என்கின்றனர். அதை உங்கள் உதாரணமாக்கிக் கொள்ளாதீர்கள். பாருங்கள்? நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டுள்ளதோடு நிலைத்திருங்கள். 62 இப்பொழுது, நீங்கள் அவ்வாறு நடந்துகொள்ளும்போது, நீங்கள் தேவனிடத்தில் தவறிப் போகிறீர்கள், நீங்கள் அவருடைய ஜனங்களிடத்திலும் கூட, அவருடைய ஜனங்களிடத்திலும் தவறிபோகிறீர்கள். நீங்கள் ஜனங்களிடத்தில் தவறிப் போகும்போது, நீங்கள் தேவனிடத்திலும் தவறிப் போகிறீர்கள். தேவன் உங்களை அங்கே ஒரு ஜாமக்காரனாக வைக்கிறார். பாவம் உள்ளே நுழைவதை நீங்கள் காணும்போது, அதை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக, அவர்கள் அதினால் வசீகரிக்கப்படுகின்றனர். “எல்லா போதகர்களும் ஒன்று கூடும்போது, நாம் ஒரு—ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யப் போகிறோம். நாங்கள் தெய்வீக சுகமளித்தல் என்ற இந்த குறிப்பிட்ட உபதேசத்தை சபையிலிருந்து அகற்ற வாக்களிக்கப் போகிறோம். எங்களுக்கு—எங்களுக்கு அது பிடிக்கவில்லை” என்கிறார்கள். அதன் பின்னர் நீங்கள் அதற்கு எதிராக வாக்களிக்கச் செல்கிறீர்கள். ஓ, அது, அந்தவிதமாகத்தான் அது சம்பவித்தது.
3563 மெத்தோடிஸ்ட்டுகள், மெத்தோடிஸ்டுகளாகிய நீங்கள் முன்பு உங்கள் சபைகளில் தெய்வீக சுகமளித்தலை உடையவர்களாயிருந்தீர்கள். பிரஸ்பிடேரியன்களே, லூத்தரன்களே, நீண்ட காலத்திற்கு முன்பு நீங்கள் அதைப் பெற்றிருந்தீர்கள். நீங்கள் கூச்சலிட்டு மகிழ்ச்சிகொள்வது வழக்கம். அதற்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஆயிரத்து எண்ணூறு நற்பண்பற்ற ரிக்கிகளைக் கொண்டிருக்கிறீர்கள், அவர்கள் அதை பகட்டான காரியத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். அதன் விளைவாகவே அது உங்களை விட்டுப் போய்விட்டது 64 பெந்தேகோஸ்தேயினராகிய நீங்களும் அதையே செய்துள்ளீர்கள்! அது உண்மை! இப்பொழுது நீங்கள் யாவரும் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டு, அவர்களைப்போலவே தோற்கடிக்கப்பட்டவர்களாக நிற்கிறீர்கள். “எங்கள் குழு, நாங்கள் இதை விசுவாசிக்கிறோம். நீங்கள் எங்களை சேராவிட்டால், நீங்கள் நரகத்துக்குத்தான் செல்லப்போகிறீர்கள்” என்கிறீர்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், தர்க்கம் செய்துகொண்டிருக்கிறீர்களா? அதனால் உங்களுக்கு எந்த உபயோகமுமில்லை. தேவன் உங்களுக்கு எந்த ஆதரவையும் காட்டுவதில்லை, ஏனெனில் நீங்கள் மற்றவர்களைப் போலவே தோல்வியடைந்த நிலையில் இருக்கிறீர்கள். காரணம் அவர்கள் சென்ற பாதையையே நீங்களும் தெரிந்துகொண்டீர்கள். நிச்சயமாகவே!
3665 அவன் அழிக்கும்படி எழுப்பப்பட்ட அதே தேசத்தில் அவன் ஒரு சிறைவாசியாயிருந்தான். இதோ அந்த திடகாத்திரமுள்ள மனிதன், எந்த தேசத்தை அழிக்க வேண்டும் என்று தேவனால் எழுப்பப்பட்டானோ, அதே தேசத்தின் ஒரு சிறைவாசியாக அங்கு நின்றுகொண்டிருந்தான். 66 நான் உங்களைப் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் இது உங்களுக்கு உதவி செய்யும் என்று நான் நம்புகிறேன். இதோ தேவனால் எழுப்பப்பட்ட பெந்தேகோஸ்தே சபை ஸ்தாபனத்திலிருந்து வெளியே வந்தது. ஆனால் இப்பொழுது அது அவர்களை எங்கே கொண்டு சென்றுள்ளது, இப்பொழுது அதே வர்க்கத்திற்கு நீங்கள் சிறைவாசியாகிவிட்டீர்கள். இப்பொழுது, அது உண்மை என்று உங்களுக்குத் தெரியுமே! பிறகு யாராவது ஒருவர் அதற்கு விரோதமாக ஒன்றைக் கூறிவிட்டால், அவர்களை வெளியே எறிந்துவிட ஆயத்தமாயிருக்கின்றீர்கள். அது ஏறக்குறைய “குருடர் குருடருக்கு வழிகாட்டுவதாய்” உள்ளது.
3767 ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெந்தேகோஸ்தே சபையானது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டதென்பதை எவருமே அறிவர். நீங்கள் சகோதர சகோதரிகளாயிருந்தீர்கள். நீங்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்தீர்கள். நீங்கள் நவீன சபையையும், அதனுடைய நாகரிகத்தைக் குறித்தும், பெண்கள் நடந்து கொண்ட விதத்தையும், அவர்கள் கைக்கொண்ட நாகரீகங்களைக் குறித்தும், மனிதன் தேவனுடைய வார்த்தையை விட்டு விலகிச் சென்றதைக் குறித்தும் பேசினீர்கள். தேவன் உங்களை அதிலிருந்து அழைத்திருந்தார். ஆனால் நீங்களோ தேவன் உங்களை எதிலிருந்து வெளியே அழைத்தாரோ, அதே காரியத்திற்குள்ளாகவே நீங்கள் நேராக திரும்பிச் சென்று விட்டீர்கள். நீங்கள் அப்படி இருக்க வேண்டும் என்று தேவன் உங்களை எழுப்பின போதிலும், நீங்கள் ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் தூணில் கட்டப்பட்டு, சிம்சோனைப்போல் தோல்வியடைந்த நிலையில், வார்த்தையைக் காணக்கூடாதவாறு உங்கள் கண்கள் பிடுங்கப்பட்டு, நின்று கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை. அது மிகவும் மோசமான செயல். அதை தோற்கடிக்கவே தேவன் உங்களை எழுப்பினார், நீங்களோ அதனுடன் சேர்ந்துகொண்டீர்கள்.
3868 சிம்சோன், தேவன் அவனை எதிலிருந்து வெளியே இழுத்தாரோ, அங்கேயே சென்று ஒரு பெண்ணை மணந்துகொண்டான். பெந்தேகோஸ்தே சபையும், தேவன் அதை வெளியே இழுத்த அதற்கே திரும்பச் சென்று மணந்துகொண்டது. தேவன் ஒரு குழுவோடு ஈடுபட முடியாது. அவர் ஒரு தனிப்பட்ட நபருடன் மாத்திரமே ஈடுபடுகிறார். அதுவே எப்பொழுதும் அவர் கொள்கையாக அமைந்துள்ளது. இரு மனிதருக்கு இரு வெவ்வேறு கருத்துகள் இருக்க வகையுண்டு. தேவன் ஒரு மனிதனைத் தெரிந்து கொண்டு, அவனை அவருடைய கருத்துக்குள் கொண்டு வருகிறார். அவ்வளவுதான். அவருக்கு தேவையெல்லாம் ஒரு மனிதனே! அதைத்தான் அவர் இன்றைக்கும் பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய கரங்களில் உங்களைப் பெற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் இங்கே ஒருவரை, அங்கே ஒருவரை தெரிந்துகொள்வார். அது ஒரு குழுவாக ஒருபோதும் இராது, எனவே அப்படிப்பட்ட எண்ணத்தை உங்கள் மனதைவிட்டு எடுத்துப் போடுங்கள்.
3969 நீங்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொள்ளும்போது, அங்கேயே…நீங்கள் உங்களுடைய பிறப்புரிமையை இழந்துவிடுகிறீர்கள். நான் எந்த ஒரு நபரையும் கேட்க விரும்புகிறேன், தேவனுடைய செய்தியுடன் ஒரு—ஒரு—ஒரு மனிதன் எழுப்பப்பட்டு, அவன் இவ்வுலகை விட்டுச் சென்றவுடனே, அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்ட மாத்திரத்தில், மரித்துப் போய், திரும்பி வரவேயில்லை, அப்படி திரும்பி வந்ததை நீங்கள் எப்போதாவது கண்டதுண்டோ. அதை ஆதரிக்க ஒரு—ஒரு வேதவாக்கியமோ, ஒருசரித்திரத் துணுக்கோ கிடையாது. அவ்வாறான எந்த ஸ்தாபனத்தையோ அல்லது ஸ்தாபித்துக்கொண்ட எந்த ஜனக் குழுவையோ காண்பிக்கிற ஒரு சரித்திரம் பாகம் கூட இல்லை. அவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய வல்லமையை இழந்து, ஒருபோதும் திரும்பி வந்ததேயில்லை. அதன்பின்னர் ஜீவனுள்ள தேவனுடைய ஒரு சபையாயிருப்பதில்லை. அவர்களுடைய ஆவிக்குரிய நிலை மிகவும் குளிர்ந்துபோய், ஆவிக்குரிய தட்பவெப்பநிலையை அளந்து காட்டும் கருவியானது எப்பொழுதும் பூஜ்ஜிய பாகைக்கு கீழே நாற்பதிலேயேயுள்ளது. அந்தவிதமாகவே அது உள்ளது, “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.”
4070 அந்நாட்களில் தேவன் அதை அஸ்திபாரத்திலேயே தகர்த்தெரியக் கூடிய ஒரு மனிதனை எழுப்பி, அவர் மூலம் ஒரு சிறு குழுவை, எஞ்சியுள்ள சபையை தெரிந்து கொண்டு, அதை வெற்றிக்குக் கொண்டு சென்றார். அவர் அதை மீண்டும் செய்வார். அவர் மாறுகிறதில்லை. அவர் தேவனாயிருக்கிறார். தேவன் எந்தக் காரியத்தையாவது எப்போதாவது கூறுகிறபோது, அவருக்கு அதைப் பார்க்கிலும் சிறந்த கருத்து ஒரு போதும் அதற்குப்பின் தோன்றவே முடியாது. அதுவே நம்முடைய நம்பிக்கையாயுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏதேனில் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழே தேவனை ஆராதிக்கும்படியாக அவர் மனிதனுக்கான ஒரு வழியை உண்டுபண்ணினார். அவர் அதை ஒருபோதும் மாற்றினதேயில்லை. அவரால் அதை மாற்ற முடியாது. அவர் அப்படி மாற்றுவாரேயானால், அப்பொழுது அவருக்கு முதல் முறை இருந்ததைக் காட்டிலும் ஒரு மேலான கருத்து தோன்றிவிட்டது என்றாகிவிடும். எனவே அவரால் அப்படிச் செய்ய முடியாது. அவர் எப்பொழுதும் ஒரேவிதமாகவே இருக்கிறார். ஒரு தேசம் தேவனை விட்டு விலகிச் செல்லும்போது, அவர் எப்பொழுதுமே ஒரு மனிதனை எழுப்பி, அவனை அங்கு நிறுத்தி, அவனுக்கு தேவனுடைய வார்த்தையை அனுப்பி, முழுவதையுமே கண்டனம் செய்தார். அவர் இவ்வாறே ஒரு மனிதனைத் தெரிந்துகொண்டு தமது பணியை நிறைவேற்றினார். அவர் ஒரு ஸ்தாபனத்தை தெரிந்துகொண்டு அவ்வாறு ஒருபோதும் செய்யமாட்டார். நீங்கள் மாத்திரம் அவருக்கு செவிகொடுத்து, உங்களை அர்ப்பணித்தால், அவர் உங்களைத் தெரிந்துகொள்வார்.
4171 ஆம், அவன் எந்த நோக்கத்துக்காக இவ்வுலகில் பிறந்து, அதற்கானதைச் செய்யும்படியான அதிகாரத்தையும் பெற்றானோ, அதே காரியத்தின் ஒரு சிறைவாசியாக அங்கு நின்றான். அவர்கள் பொழுதுபோக்கிற்காக அவனை வேடிக்கைக் காட்ட முடிவு செய்தனர், அவர்களை மகிழ்விக்க வேடிக்கைக் காட்டுதல். ஓ, என்னே! ஒரு—ஒரு ஸ்திரீ அவனைக் கவர்ந்து, தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகும்படிச் செய்ய அவளை அனுமதித்தான். தேவனுடைய வார்த்தை அவனுக்கு ஒரு இரகசியமாக அளிக்கப்பட்டிருந்தது. அது ஒரு நசரேய வரமாய் இருந்தது. அவன் அதை யாரிடமும் கூறக்கூடாது. ஆனால் அவனோ ஒரு ஸ்திரீயின் கவர்ச்சிக்கு அதைக் கூறிவிட்டான். 72 அதுதான் இன்றைக்கு நமக்கும் நேர்ந்துள்ளது. கிறிஸ்தவர்களுக்குரியதாயில்லாத காரியங்களை நாம் நம்முடைய சபையிலே ஏற்றுக்கொண்டுள்ளோம். எந்த சபையிலுமே மாய்மாலக்காரர்களே இல்லை என்று கூறக்கூடிய சபையே கிடையாது. முழு அமைப்புமே எல்லாவிதமான மாய்மாலக்கார்களாலும் நிறைந்துள்ளது. அது உண்மையே. ஆனால் நான் உங்களுக்கு இந்த உறுதியை அளிப்பேன்…இப்பொழுது அது ஒரு விடுதியில் இருக்கிறது. நீங்கள் மெதோடிஸ்டு விடுதியை அல்லது பிரஸ்பிடேரியன் விடுதியைச் சேர்ந்திருக்கலாம், ஆனால் நீங்கள்…சேர்ந்து இருக்க முடியாது.
4273 உங்களால் சபையில் சேர முடியாது. நீங்கள் ஒரு விடுதியில் சேரலாம். ஆனால் உங்களால் ஒரு சபையில் சேர முடியாது. நீங்கள் அதற்குள்ளாகப் பிறக்கின்றீர்கள். நீங்கள் அந்த சபைக்குள் பிறக்கின்றபோது, அதில் ஒரு மாய்மாலக்காரனும் இல்லை. அங்குள்ள ஒவ்வொரு காரியமும் பரிசுத்தமானதாயும், பரிசுத்தமாயுமுள்ளது, ஏனென்றால் நீங்கள் மரித்திருக்கிறீர்கள். உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவினூடாக தேவனுக்குள் மறைக்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டிருக்கிறது. பிசாசு உங்களை பிடிக்க வேண்டுமென்றிருந்தாலும், அவனால் உங்களைப் பிடிக்க முடியாது. காரணம் நீங்கள் சென்றுள்ள அதே பாதையில் அவன் வரவேண்டும். அப்பொழுது அவன் உங்களுடைய சகோதரனாய் இருப்பான். புரிகிறதா? ஆகையால் அவனால் அதைச் செய்ய முடியாது. 74 ஆனால் நீங்கள் அங்கத்தினர்களை அதிகமாக்க, தீர்மானங்களைச் செய்ய, வேறெந்த காரியத்திற்காகவோ நீங்கள் ஒரு சபையை சேர்ந்து கொள்ளலாம். நேற்றிரவு நான் கூறியதுபோல, இன்றைக்கு நாம் கேட்பதெல்லாம், “அதிக அங்கத்தினர்கள், அதிக அங்கத்தினர்கள்!” என்பதே இன்றைக்கு மிகப் பெரிய ஆரவாரமாய் தென்படுகிறது. “நாம் அவர்களை தோற்கடித்துவிட்டோம்” என்ற விளம்பரப் படங்கள்! மதமாற்றத்திற்காக யாரோ ஒருவரை ஞாயிறு வேதபாட பள்ளிக்கு அவர்கள் அழைத்துக் கொண்டு வந்ததற்காக அவர்களுக்கு ஒரு வெகுமதியை அளித்தல். நீங்கள் அவனை அங்கே பெற்றுக்கொண்டப் பிறகு, அவன் என்னவாக இருக்கிறான்? அவன் என்னக் கேட்டான்? ஒரு வாலிப வர்ண்ணந் தீட்டப்பட்ட யேசபேல் அதற்கு முந்தின இரவு தன் ஆண் நண்பனுடன் வெளியே சென்று வந்ததைக் குறித்து பேசுகிறாள், அல்லது ஏதோ ஒரு—ஒரு அச்சிடப்பட்ட பிரதிகள் சுவற்றில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அது உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். பெந்தேகோஸ்தேயினரும் சரியாக அதற்குள்ளாக சரிந்துகொண்டேயிருக்கின்றனர்! நீங்கள் எதைக் கற்பிக்க வேண்டும் என்பதற்கான உங்களுடைய புத்தகம் வேறு எங்கோ தயாராகின்றன. 75 சபையிலேயே மிகவும் உயர்ந்தவர் ஒரு மூப்பர், ஒரு பேராயர் அல்ல, யாரோ ஒரு போதகர் அல்ல, அல்லது வேறு யாரோ அல்ல. தேவன் அந்த சபையின் முப்பரோடு தொடர்புகொள்கிறார். இப்பொழுது அவர்களுக்கு என்ன தேவையோ அதற்காக அவர் தன்னுடைய செய்தியை தன்னுடைய சபைக்குக் கொடுக்கிறார்.
4376 ஆம், ஒரு ஸ்திரீ அவனைக் கவர்ந்து, அவன் தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகும்படி செய்ய அவன் அனுமதித்தான். எனவே இன்றைக்கும் அவர்கள் அதையே செய்துள்ளனரே! அவர்கள் அதை எப்படி செய்தனர்? “பாருங்கள், இப்பொழுது பாருங்கள், சகோதரன் பிரான்ஹாமே, இன்னார்-இன்னாரை நான் உங்களுக்கு சொல்லுவேன். இப்பொழுது, அங்குள்ள ஜனங்களை உங்களுக்கு தெரியும், அவர்கள் அதைச் செய்கிறார்கள், அவர்கள் இதை கவனித்துப் பார்க்கிறார்கள்.” அது உங்களுடைய மாதிரியல்லவே! 77 கிறிஸ்துவே உங்களுடைய மாதிரியாயிருக்கிறார். அவர், “நான் உங்களுக்கு மாதிரியை கொடுத்திருக்கிறேன்” என்றார். அவரே உங்களுடைய மாதிரியாயிருக்கட்டும். 78 சபைகளுக்கும் அதேக்—அதேக் காரியம்தான். ஆனால் அவர்கள் செய்துள்ளது சரியாக என்னவென்றால், வெளிப்படுத்தல் 17-ல் உள்ள வேசிகளின் தாயாகி யேசபேல் அதே காரியத்தைச் செய்ய அனுமதித்துவிட்டு, சபையை பழைய அமைப்பிற்கு திரும்ப கொண்டு சென்று, இப்பொழுது சம்பவித்துகொண்டிருக்கிற ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து குருடாயிருக்கின்றனர். ஓ, நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? ஆனால் நீங்கள் அவ்வாறுதான் இருக்கிறீர்களே! இல்லையென்று என்னிடம் கூறாதீர்கள். புரிகிறதா? நான் கடந்த பதினைந்து வருடங்களாக தேசம் முழுவதும் இங்கும் அங்கும் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். குருடாக்கப்பட்டிருக்கிறீர்களே! ஆவிக்குரிய காரியங்களை, பாருங்கள், தேவன் என்ன செய்வதாக கூறினாரோ, சரியாக இந்த கடைசி நாட்களில் அவரே வந்து அதைச் செய்யும்போது, நீங்களோ, “பாருங்கள், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அது சரியாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அதற்குப் பின்னால் உள்ள ஊழியமோ தேவனால் உண்டானதல்ல” என்று கூறுகிறீர்கள். தேவன் எப்படி ஒரே ஊற்றிலிருந்து கசப்பான தண்ணீரையும் தித்திப்பான தண்ணீரையும் தோன்றச் செய்ய முடியும்? அது அங்கு இருக்காதே!
4479 ஆம், ஆவிக்குரிய காரியங்களுக்கும், தேவனுடைய வார்த்தைக்கு குருடாக்கப்பட்டவர்களாய் எந்தக் குழியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டனரோ, அதேக் குழிக்கு திரும்பிச் சென்றுவிட்டனர். பெந்தேகோஸ்தே ஒரு ஸ்தாபனத்தில் பிறந்து வெளியே வந்தது. ஆனால் மனிதர்களோ அதைத் திரும்ப ஸ்தாபனத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். பெந்தேகோஸ்தே என்பது ஸ்தாபனம் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு அனுபவமாக உள்ளது, ஏனெனில் அது ஒவ்வொரு தனிப்பட்ட நபரோடும் உள்ள ஒரு தனிப்பட்ட அனுபவமாக உள்ளது. அது உண்மை. இப்பொழுது அந்த முழு குழுவுமே தோற்கடிக்கப்பட்டவர்களாய் அங்கு நின்றுகொண்டிருப்பதைப் பாருங்கள். ஊழியக்காரர்களை, அவர்கள் ஒரு வேதபாட கருத்தரங்கு அனுபவத்தை பெற்றிருந்தாலொழிய, அவர்களுடைய சபையில் அமர்த்தமாட்டார்கள். 80 நம்முடைய பெரிய பெந்தேகோஸ்தே ஸ்தாபனங்களில் ஒன்று, அன்றொரு நாள், மிஷினரிமார்களுக்கு மிஷனரிகளாக இருப்பதற்கு போதிய உயரிய—உயரிய அறிவுத் திறன் உள்ளதா என்று அறிந்துகொள்ள அவர்களை ஒரு மனோதத்துவ நிபுணரிடம், அதாவது அவர்களுக்கு உயரிய அறிவுத் திறன் உள்ளதா என்று அறிந்துகொள்ள நம்முடைய பெரிய ஸ்தாபனங்களில் ஒன்று கூட்டிச் சென்றது. தேவன் அப்படிப்பட்ட எதையும் ஒருபோதும் செய்ததேயில்லை. அவர், “நீங்களோ உன்னதத்தில் இருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் அங்கேயே இருங்கள்” என்றார். அப்பொழுது நீங்கள் உங்களுடைய அறிவுத் திறனைப் பெற்றுக் கொள்கிறீர்கள். அதைப் பெற்றுக் கொள்வதற்கு அதுதான் தேவைப்படுகிறது. இயேசு அவர்களை பரிசோதிக்க சொன்ன நியமத்தின்படி அவர்கள் பரிசோதிப்பது கிடையாது. அவர்கள் தங்கள் சொந்த அறிவினால் விளைந்த கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு, ஒரு மிஷனரியின் அறிவுத்திறனை பரிசோதித்துப் பார்க்கின்றனர். தேவன், “அவர்களுக்கு அறிவுத்திறனைப் புகட்டுங்கள்” என்று கூறவில்லை. ஆனால் அவர், “நீங்கள் உன்னதத்திலிருந்து வல்லமையை பெற்றுக்கொள்வீர்கள்!” என்று மாத்திரமே கூறினார். ஆனால் நாமோ அதனின்று விலகிச் சென்று கொண்டிருக்கிறோம்.
4581 ரோமன் கத்தோலிக்க சபை முதலில் பெந்தேகோஸ்தே சபையாக இருந்தது என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். அது முற்றிலும் உண்மை, கி.பி. 33. ஆனால் அதற்குள் அந்த நாகரீகப்பண்பற்ற ரிக்கிகள் நுழைந்த காரணத்தால், அங்கே அதனூடாக களைகளாக பிரபலமானவர்கள் படர்ந்தனர், நிசாயா ஆலோசனை சங்கத்தில் முதலாவது நடந்த காரியம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் இந்தத் திட்டத்தை அமுல்படுத்தி, அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டனர். அந்தக் காரியம் மரித்துப் போனது. உண்மையான தீர்க்கதரிசி அவனுடைய காலம் வரை வாழ்ந்தான். ஏறக்குறைய ஆயிரம் வருடங்களாக அது இருளின் காலங்களைக் கடந்து வந்தது. அதைத்தான் தேவன், தொடக்கத்திலேயே அவர் முழு முறைமையின் மேலும் ஆக்கினைத் தீர்ப்பைக் காண்பித்தார். அது உண்மை. 82 ஊழியக்காரர்கள், ஒரு சபைக்கு போதகராவதற்கு முன்பு, வேதபாட கருத்தரங்கிற்குச் சென்று, “நான் தத்துவப் பட்டங்களை அல்லது மற்ற பட்டங்களைப் பெற்றுவிட்டேன்” என்று கூறுகிறார்கள். ஒரு ஐக்கிய சீட்டைக் காண்பிக்கிறார்கள். அர்த்தமற்றதாயிற்றே!
4683 கர்த்தருடைய தீர்க்கதரிசி வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் எங்கிருந்து வந்தான் என்றும், எங்கு சென்றான் என்றும் யாருக்குமே தெரியாது. ஆனால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாய் இருந்தானே! தேவன் அதை நிரூபித்தார். அவன் அவர்களுடைய எந்த ஸ்தாபனங்களிலும் சேர்ந்திருக்கவில்லை. அது தேவனுடைய முறைமையாயிருந்தது. அது உண்மை. 84 வேதாகம கருத்தரங்கு ஊழியர்கள், அவர்கள் என்ன செய்தனர்? உலகப்பிரகாரமான உடை உடுத்தி, குட்டை கால் சட்டைகளை அணிந்து, தலை முடியை கத்தரித்திருந்த பெண்களின் போக்கைக் கடிந்துகொள்ள அவர்களுக்கு போதிய ஆவி கிடையாது. 85 தன் மனைவியை அவ்வாறு செய்ய அனுமதிக்கும் எந்த மனிதனுக்கும் ஒரு நல்ல சுவிசேஷ சவுக்கடி அவசியமாயுள்ளது. அது உண்மை. அவள் தன்னை கனவீனமுள்ளவளாக நிரூபிக்கிறாள், அதற்கு நீ சம்மதிக்கிறாய். தங்கள் சருமம் வெளியில் தெரியும் வண்ணம் அவ்வளவு குட்டையாகவும், இறுக்கமாகவும் கால் சட்டைகளை அணிந்துள்ள மனைவியை வீதியில் கூட்டிக் கொண்டு செல்லும் மனிதன் எவனுமே, மானிட வர்க்கத்திற்கு முற்றிலும் அவமானத்தையே விளைவிக்கிறவனாயிருக்கிறான். என்னைப் பொறுத்தவரையில் உட்புறத்தில் ஏதோ ஒன்று குறைவாயுள்ளது என்பதையே அது காண்பிக்கிறது. அது வெறுமையாயுள்ளதையே காண்பிக்கிறது.
4786 நீங்கள் அழகாக காணப்பட வேண்டுமென்று விரும்பினால், அப் 2:38-யும், யாக்கோபு 5:14-யும், யோவான் 3:16-யும் எடுத்து ஒன்றாகக் கலந்தால், இவை யாவையும் ஒன்றாகக் கலந்தால், அது உங்களுக்கு போதுமான சிறந்த அழகு சாதனமாகிவிடும். 87 மாக்ஸ் பாக்டர் நிறுவனமானது, உதட்டுச் சாயம் அல்லது மற்ற ஏதோ ஒன்றுக்கு, அதைப் போன்ற அழகு சாதனங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான டாலர்கள் செலவிடப்படுவதை நான் காண்கிறேன். மிஷனரிமார்களோ ஊழியக் களத்தில் பட்டினி கிடக்கின்றனர். ஆனால் நீங்களோ, “நாங்கள்தான் சபை” என்று கூறுகிறீர்கள். ஏன், அது என்னை வெட்கமடையச் செய்கிறதே! நாம் இந்த பகட்டான பெரிய காரியங்களுக்குள்ளாக செல்கிறோம். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் யேசபேலின் ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதையே இது காண்பிக்கிறது. காலியிடமே!
4888 அன்றொரு நாள் ஒரு போதகர் பேசுவதைக் கேட்டேன். அவர் ஒரு அருமையான மனிதர், ஒரு மனிதன் என்ற முறையில் அவரை எனக்குப் பிடிக்கும். அவர் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர், அவர் நமக்கு எதிரே உள்ள ஆற்றுக்குப் பக்கத்தில் வசிக்கிறார். அவர் வானொலி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அவர் இப்பொழுதுதான் திரும்பி வந்தார். அவர் இங்கு உள்ள இந்த பெண்கள் அணிந்துகொண்டிருக்கின்ற எல்லா காரியங்களையும், அவர்களுடைய முகத்தில் பூசுகின்ற நீல வர்ணம் போன்றவற்றைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். 89 பாருங்கள், நான் முதன் முறையாக அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டபோது, நான் திகிலடைந்தேன். நான் அப்பொழுது லாஸ் ஏஞ்சலிஸில் இருந்தேன். நான் ஒரு கிறிஸ்தவ வர்த்தக புருஷர், சகோதரன் ஆர்கன்பிரைட் அவர்களுக்காக காத்துகொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு ஸ்திரீ நடந்து வருவதை நான் கண்டேன். உடனே நான், “பரிதாபமான பெண்” என்றே எண்ணிக்கொண்டேன். நான்—நான் ஒரு மிஷனரி. நான் குஷ்டரோகத்தைக் கண்டிருக்கிறேன். நான் பிளேக் தொற்று நோயையும் கண்டிருக்கிறேன். ஆனால் நான் இதைப் போன்ற ஒன்றை ஒருபோதும் கண்டதேயில்லை. நான் அவளிடத்தில் நடந்து சென்று, அவளுக்காகக் ஜெபிக்கலாமா என்று நான் அவளிடத்தில் கேட்கப் போவதாக இருந்தேன். அப்பொழுது இன்னொருத்தியும் அங்கே அதேவிதமாக வருவதை நான் கண்டேன். நீங்கள் மிகச்சிறந்த முறையில் காணப்பட முயற்சிப்பதை நான் குற்றப்படுத்தவில்லை. ஆனால் அது உண்மையாகவே மானிடரைப் போன்று இருக்க வேண்டும். புரிகிறதா? அது உண்மையே!
4990 அவர்கள் இப்படிப்பட்ட முகவர்ணத்தை உண்டாக்குவதால், அவர்கள் அழகில் சிறந்த உலகத்தையே படைத்துவிட்டதாக இந்த மனிதன் கூறினார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், அவர்கள் ஒரு கூட்ட அஞ்ஞானிகளைத்தான் படைத்துவிட்டனர். எந்த ஸ்தீரி அதை செய்தாலும், அவளுக்குள் ஏதோ காரியம் குறைவாயிருக்கிறது என்பதையே காண்பிக்கிறது, அந்த காலியான இடம் கிறிஸ்துவினால் நிரப்பப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு காரியத்தை தன்னுடைய மனைவி செய்ய அனுமதிக்கும் எந்த ஒரு மனிதனும், தானும் கூட வெறுமையாயிருப்பதையே அது காண்பிக்கிறது! அதைத் தன்னுடைய சபையில் ஆதரிக்கும் எந்த போதகரும், தனக்குள் ஒரு வெறுமையை கொண்டிருக்கிறார் என்பதையே காண்பிக்கிறார். அதை ஆதரிக்கும் எந்த ஸ்தாபனமும், அது மரித்துவிட்டது என்பதையே காண்பிக்கிறது. அது உண்மை. வேதாகமத்திற்கு திரும்பி வாருங்கள்! 91 அங்கே சிம்சோன் அப்படிப்பட்ட முகவர்ணத்துக்கு விழுந்துபோனவனாக நின்றுகொண்டிருந்தான். அந்த மகத்தான மனிதன் நமக்கு ஒரு உதாரணமாக விளங்குகிறான். ஓ, என்னே, அவர்கள் எப்படியோ அவனை அதில் சிக்கவைத்து விட்டனரே! சிம்சோன் தவறுகளை குறித்து எண்ணிப் பார்த்தபோது, அவன் செய்திருந்த காரியங்களை குறித்து நினைத்து, அவன் எப்படி தேவனிடத்தில் தவறிப்போயிருந்தான் என்பதையும் எண்ணிப் பார்த்தான். அதற்கு எதிராகப் பிரசங்கிக்கப்படும் இப்படிப்பட்ட செய்திகளைக் கேட்கும்போது, ஜனங்களுடைய மனதில் ஏதாகிலும் உதயமாகிறதா என்றே நான் எதிர்பார்க்கிறேனே? அன்றொருநாள் என்னுடைய மனைவி என்னிடத்தில் கூறினாள். கூறின பிறகு…
5092 யாரோ ஒருவர் என் மேல் கோபம்கொண்டு, எனக்கு ஒரு கடிதம் எழுதினார் என்று கூறப்பட்டது—கூறப்பட்டது. அதில், “பில்லி, பெண்கள் தலை முடியைக் கத்தரித்துக்கொள்வதையும் இன்னும் அவர்களுடைய…அவர்களுடைய மற்ற செயல்களையும் குறை கூறுவதை நீர் ஏன் விட்டுவிடக் கூடாது?” என்றும், “ஜனங்கள் உம்மை ஒரு ஞானதிருஷ்டிக்காரராக விசுவாசிக்கிறார்கள். ஸ்தீரிகள் எப்படி மகத்தான ஆவிக்குரிய வரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீர் போதித்து, அத்துடன் விட்டுவிட வேண்டும்” என்றும் எழுதியிருந்தார். 93 அதற்கு நான், “அவர்கள் தங்களுடைய மொழியின் முதலெழுத்துக்களையே அறியாதிருக்கும்போது, நான் எப்படி அவர்களுக்கு இயற்கணிதத்தைக் கற்றுத் தரமுடியும்?” என்று விடையளித்தேன். பார்த்தீர்களா? புரிகிறதா? நிச்சயமாகவே! உங்களால் அதை எப்படிச் செய்ய முடியும்? அப்படிப்பட்ட பாவமே ஒன்று திரண்டுள்ளது என்பதை அதனுடைய அடையாளமே காண்பிக்கிறது. வர்ணம் தீட்டிக்கொள்ளுதல் என்பது அஞ்ஞானிகளின் இயல்பு என்பதை எவருமே அறிவர். நான் ஒரு மிஷனரி. அஞ்ஞானிகளின் வர்ணம் பூசுதலாயிற்றே! இங்கே அரிசோனாவில் உள்ள இந்தியர்கள் தேவனை அறிந்து கொள்வதற்கு முன்பு தங்களுடைய முகத்தில் வர்ணம் தீட்டி வந்தனர். அவர்கள் தேவனை அறிந்து கொண்டபோது, நீங்கள் அவர்களிடம் அதைக் குறித்துக் ஒன்றும் கூற வேண்டிய அவசியமில்லை. அவர்களே அதை எடுத்துவிடுகின்றனர். அவர்கள் தேவனிடம் சண்டையிலிருந்தனர் என்பதையே அது காண்பிக்கிறது. அவர்கள் அதைக் களைந்துவிட்டபோது, அவர்கள் தேவனுடன் சமாதானமாக இருப்பதையே அது காண்பிக்கிறது.
5194 நாம் நம்மை ஒரு கிறிஸ்தவ தேசமாக அழைத்துக்கொள்கிறோம். நம்முடைய ஜனங்களை கிறிஸ்தவ ஜனங்களாக அழைத்துக் கொள்கிறோம். நான் ஒருநாள் ஆப்பிரிக்காவில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கே கர்த்தர் ஊனமுற்றிருந்த ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமான சுகத்தை அளித்து, கண்கள் கோணலாயிருந்த பையனுக்கு சுகத்தை அளித்து, சுமார் பதினைந்து நிமிடங்களுக்குள் அவர் அந்தக் காரியங்களை அங்கு செய்திருந்தார். நான் டர்பனில் பேசிக்கொண்டிருந்த இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர்களில், “எத்தனை பேர் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்வீர்கள்?” என்று கேட்டபோது, அவர்களில் ஏறக்குறைய முப்பதாயிரத்துக்கும் சற்று அதிகமானவர்கள் எழும்பி நின்றனர். 95 எனக்கிருந்த பதினைந்து மொழிபெயர்ப்பாளர்கள் அதைக் கூறினர். அவர்கள், “சரீரப்பிரகாரமான சுகமளித்தலைப் பொருட்படுத்திக் கூறினர்” என்றனர். 96 அப்பொழுது நான், “இரட்சிப்பையே நான் பொருட்படுத்திக் கூறுகிறேனே!” என்றேன். நான் அதை மொழிபெயர்ப்பாளர்கள் மூலமாக மீண்டும் கூறச் சொன்னேன். நான், “என்னைப் புரிந்து கொள்கிறவர்கள் யாவரும்…” என்றேன். அவர்கள் இரத்தம் தெளிக்கப்பட்ட சிறு விக்கிரகங்களையும், ஆண்மானின் கண்களையும், எல்லாவிதமான மூடப்பழக்க வழக்கங்களையும, சிங்கத்தின் நகங்களையும் அங்கு வைத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது நான், “எல்லாவிதமான உங்களுடைய மூடப்பழக்க வழக்கங்களையும் கைவிட்டுவிட்டு, அங்கு நின்று கொண்டிருந்த இந்த மனிதனை குணமாக்கி, அவனுக்குத் தெளிந்த புத்தியைக் கொடுத்துள்ளதை இன்றைக்கு நீங்கள் கண்டுள்ளபடியால், நீங்கள் அவரை விசுவாசித்து சேவிக்கும்படி, அந்த தேவனை உங்கள் சொந்த இரட்சகராக நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பினால், உங்கள் விக்கிரகத்தை தரையில் போட்டு உடைத்து, உங்களுடைய உத்தமத்தை காண்பியுங்கள்” என்று கூறினேன். அப்பொழுது அங்கு புழுதியானது புயல்போல் தோன்றினதாயிருந்தது.
5297 அங்கு பெண்கள் முழு-நிர்வாணமாய் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் ஒரு சிறு துணி மாத்திரமே தொங்கிக்கொண்டிருந்தது. அவர்களுடைய இடுப்புக்குமேல் அவர்கள் நிர்வாணமாக இருந்தனர். அப்பொழுது நான், “உங்களுடைய கரங்களை உயர்த்தி, ஒரு பாவியின் ஜெபத்தை ஏறெடுத்து, ‘தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்’ என்று கூறுங்கள்” என்றேன். மேலும் நான், “நீங்கள் நின்று கொண்டிருக்கும் அதே இடத்திலேயே, உங்கள் கரங்களை இப்பொழுது உயர்த்தி, கிறிஸ்துவின் ஆவியின் அபிஷேகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இங்குள்ள சில ஊழியக்காரர்கள் உங்களுக்கு கிறிஸ்தவ ஞானஸ்நானம் கொடுப்பார்கள்” என்றேன். அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தினபோது, வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாதவர்களாய், முழுவதும் நிர்வாணமாக உள்ளே வந்த பெண்கள், வெளியே நடந்து சென்றபோது, கூட்டத்தாரின் முன்னிலையில் தங்கள் கரங்களை மடக்கி மறைத்துக்கொண்டே சென்றனர். இயேசு கிறிஸ்துவுடன் அவர்கள் இருந்த அந்த ஒரு நிமிட நேரத்திலேயே அவர்கள் நிர்வாணிகளாயிருந்தனர் என்று அது அறிந்துகொள்ளும்படி செய்துவிட்டது. 98 ஆனால் நாமோ ஆண்டுதோறும் அதிகமாக ஆடைகளைக் களைந்தே வருகிறோம். ஓ, நான்…அப்படியானால் அதை தேவன் என்று அழைக்கலாமா? அதை செய்துள்ளது எது? உங்களுடைய ஸ்தாபனமே நீங்கள் அது செய்யும்படி அனுமதிக்கிறது. அது உண்மை. உங்களை சுத்தப்படுத்திக்கொள்வதற்கே நீங்கள் அந்த முறைமையில் வளர்க்கப்பட்டீர்கள், ஆனால் அதே முறைமையே உங்களைத் திரும்பவும் உள்ளே கொண்டு வந்துவிட்டது. நான் தேவதூஷணமாக ஏதும் கூறவில்லை என்று எண்ணுகிறேன். நான்…அது தேவதூஷணம் அல்ல என்றே நான் நம்புகிறேன். அது கர்த்தருடைய வார்த்தையாயிருக்கிறது. நிச்சயமாகவே. அது கர்த்தருடைய வார்த்தையே!
5399 இப்பொழுது சிம்சோன் அங்கு நின்று, செய்திருந்த தன் பிழைகளை எண்ணிப் பார்த்து, தன்னுடைய உள்ளான மனசாட்சியில், அவன்—அவன் தேவனிடத்தில் தவறிப்போயிருந்ததையும், அவன் தேவனுடைய ஜனங்களிடத்தில் தவறிப்போயிருந்ததையும் எண்ணிப் பார்த்தான் என்று இப்பொழுது நாம் கண்டறிகிறோம். அவன் அங்கு ஒரு உதாரணமாக நின்று, அவன் முன்பு எப்படி இருந்தான் என்று சிந்தித்துப் பார்த்து, இப்பொழுது எந்நிலையில் இருக்கிறான் என்றும் சிந்தித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அப்படி செய்தபோது, அவன் கதறினானே! 100 ஓ, சபை மாத்திரம் இன்றிரவு ஒரு நிமிடம் அமைதியாயிருந்து, பெந்தேகோஸ்தே நாளுக்கு திரும்பிப் பார்த்து, நாம் எங்கிருந்து தொடங்கினோம் என்பதைத் திரும்பிப் பார்த்து, நம்முடைய ஸ்தாபன பிரமாணங்கள் மற்றும் சண்டைகள் நம்மை எந்நிலைக்கு கொண்டு வந்துள்ளன என்பதை தெளிவாக உணருவோமேயானால் நலமாயிருக்கும். மீண்டும் கதறுங்கள்! சிம்சோன், “தேவனாகிய கர்த்தாவே, என் இரண்டு கண்களுக்காக பழிவாங்குவீராக!” என்று கதறினான். நாமும் அதேவிதமாக மனந்திரும்பி, “தேவனாகிய கர்த்தாவே, இந்த எல்லா நேரங்களிலும் இந்தக் காரியங்கள் என்னை குருடனாக வழிநடத்தியிருக்கின்றன” என்று கதறினால் நலமாயிருக்குமே! அதற்காக ஒரு கிரயம் செலுத்த வேண்டியிருந்ததை அவன் அறிந்திருந்தான். நீங்கள் அதை இப்பொழுது அறிவீர்கள்.
54101 என் மனைவி மேடா என்னிடத்தில் கூறினாள், அவள், “நீங்கள் தேசங்கள் அனைத்தும் சுற்றித் திரிந்து பிரசங்கித்து வருகிறீர்கள். நீங்கள் மறுபடியும் அங்கு செல்லும்போது, ஜனங்கள் முன்பு செய்ததையே செய்து கொண்டிருக்கின்றனர். அது என்ன நன்மையைச் செய்கிறது?” என்று கேட்டாள். 102 அதற்கு நான், “நியாயத்தீர்ப்பின் நாளன்று, தேவனுடைய மகத்தான ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது போட்டுக் காண்பிக்கப்படும்” என்று கூறினேன். இந்தக் காரியங்களைக் குறித்து நீங்கள் அறியாதவர்களாயிருக்கவில்லை. தேவன் அதை ஆகாயத்தில் முழங்கச் செய்வார். உலகத்தை ஆக்கினைத்தீர்ப்புக்குட்படுத்த அவருக்கு ஒரு சத்தம் இருக்க வேண்டும். அந்த சத்தம்தான் சுவிசேஷமாயுள்ளது. 103 “கர்த்தாவே, என் சத்துருக்களை என் நிமித்தம் பழிவாங்கும். என் கண்பார்வையை போக்கினவர்களை பழிவாங்கும்! கர்த்தாவே, அவர்கள் அதைப் பிடுங்கிவிட்டார்கள், இதோ நான் இங்கு நிற்கிறேன்.” தேவன் இன்னும் ஒரு விசை அவனுக்கு செவி கொடுக்கும்படியான ஒரு சாத்தியம் இருந்தது என்பதை சிம்சோனும் கூட அறிந்திருந்தான். அவனுடைய அந்த நிலைமைகளிலும் கூட, ஒரு சாத்தியம் இருந்தது. ஓ, சபையே, அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறபோதிலும் ஒரு சாத்தியம் உண்டு. நாம், “அநேகர் தீர்மானங்களை, தீர்மானங்களை செய்தனர்” என்று அதிகமாக இன்றைக்கு கேட்கிறோம். தீர்மானங்கள் என்பதன் பொருள் “ஒரு கல், ஒரு அறிக்கை” என்பதாகும். நான் இதற்கு முன்பு கூறியிருப்பதுபோல, ஒரு கல்லை கூர்மையான உளியினால் செதுக்கி, அதை கட்டிடத்தில் பொருத்த, நீங்கள் ஒரு ஒரு கல்கொத்தனை உடையவராயில்லாமற்போனால், அந்தக் கல்லினால் என்ன பயன்? நீங்கள் ஆண்களையும் பெண்களையும் முன்புபோலவே இருக்க அனுமதித்துவிட்டு, அவர்கள் சபையைச் சேர்ந்து கொள்ளும்படி செய்தால், தீர்மானங்கள் செய்வதனால் என்ன பயன்? அவை செதுக்கப்படாத கற்குவியலாக இருக்கும். நமக்கு தேவை என்னவென்றால், தேவனுடைய வார்த்தையைக் கொண்டுள்ள ஒரு மனிதன், தேவன் அவனை அனுப்பினார் என்று நிரூபிக்கும்படியாக ரூபகாரப்படுத்தப்பட்ட வல்லமையோடு, சபையை ஒழுங்குபடுத்தி, உலகப்பிரகாரமான காரியங்களிலிருந்து வெட்டி, அவருடைய கட்டிடத்திற்குள் பொருந்தும்படியான தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமான கற்களாக அவர்களை உருவாக்கும் ஒரு கல்கொத்தனேயாகும். அது முற்றிலும் உண்மை. ஓ, என்னே!
55104 தேவன் ஜெபத்தைக் கேட்பார் என்பதற்கான சாத்தியம் உண்டு என்பதை அவன் அறிந்திருந்தான். இன்றிரவு நாமும் அதை மாத்திரம் செய்யக் கூடுமானால் நலமாயிருக்குமே! இயேசு கூறினார், அவர் பூமியின் மேலிருந்தபோது,…யோவான் 14:12, “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்” என்றார். இயேசு கூறினார், இல்லை வேதம் எபிரெயர் 13:8-ல் கூறியுள்ளது, சற்று முன்னர் நான் அதை மேற்கோள் காட்டினேன், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” நமக்குள்ளே இருக்கும் இந்த ஸ்தாபன ஜீவனை நாம் கிறிஸ்துவின் ஜீவன் என்று அழைத்து, நாம் செய்து வருகிற காரியங்களையே செய்கிறோமே? “என்னை ‘ஆண்டவரே’ என்று நீங்கள் சொல்லியும், என் கற்பனைகளை கைக்கொள்ளாமற் போகிறதென்ன?” பாருங்கள்? “ஏன் என்னை அப்படி அழைக்கிறீர்கள்?” 105 ஓ, உங்கள் சபையில் ஐந்து அங்கத்தினர்களைக் கூட நீங்கள் பெற்றிருக்கவில்லையென்றாலும், அது சத்தியம் என்னும் உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். இப்பொழுதும் அதே சாத்தியம் உண்டு. ஆனால் இன்றுள்ளவர்கள் சிம்சோன் செய்ததுபோல, அந்த தரிசனத்தை கிரகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அதை புரிந்து கொள்ளாமல், “பாருங்கள், நான் நன்றாக இருக்கிறேன். எங்களுக்கு நல்ல சபைகள் உள்ளன. எங்களுக்கு ஒரு குறையும் இல்லை…” என்று கருதுகின்றனர். புரிகிறதா?
56106 வேதம், “ஐஸ்வர்யமுள்ள லவோதிக்கேயா சபையின் காலத்தில் ஐஸ்வரியத்தில் ஒரு குறைவும் இராது, ஆனால் அவள் நிர்வாணியாயும், குருடாயும், பரிதபிக்கப்படத்தக்கவளாயும் இருப்பதை அறியாமல் இருக்கிறாள்” என்று கூறியுள்ளது. இப்பொழுது, ஒரு நபர் வீதியில் நிர்வாணியாயும், குருடாயும் நடந்து வருவதை நீங்கள் கண்டு, அவர்கள் அந்த நிலைமையில் இருப்பதையும், அவர்கள் நிர்வாணியாய் இருப்பதையும், அவர்கள் எங்காவது சென்று மறைந்துகொள்ள வேண்டும் என்றும் உங்களால் அவர்களுக்கு எடுத்துக் கூற முடியுமானால், பாருங்கள், அந்த நபரை நீங்கள் தெருவிலிருந்து அனுப்பிவிட ஒரு சாத்தியம் உண்டு. ஆனால் அதை அறிந்துகொள்ள போதிய புத்தி சுவாதீனம் அவருக்கு இல்லாமலிருந்தால், அவர் அதைப் புறக்கணிக்கக் கூடும்; ஆனால் இப்பொழுது சபையானது அதை அறிந்துகொள்ள போதிய ஆவிக்குரிய வல்லமையை பெற்றிருக்கவில்லை. நிர்வாணியாய், குருடாய், பரிதபிக்கப்படத்தக்கதாய், தரித்திரமாய் உள்ளது. கிறிஸ்து வெளியிலிருந்து கொண்டு, கதவைத் தட்டி, உள்ளே வர முயற்சித்துக்கொண்டிருக்கிறார். அதே சமயத்தில், உங்களுக்கு ஒரு குறைவுமில்லை என்று சொல்லிக் கொள்கிறீர்கள். 107 உங்களில் சிலருக்கு இது அந்நிய காரியமாக உள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் அது தேவனுடைய சத்தியமாயுள்ளது. வார்த்தை அவ்வண்ணமாகக் கூறுகிறது. அவர்கள் தரிசனத்தை கிரகித்துக் கொள்வதில்லை. நீங்கள் அவர்களிடம் அதைக் குறித்து எடுத்துக் கூற முடிந்தாலும், அதை அவர்கள் கேளாமலேயே போய்விடுகின்றனர். ஒருகால் அப்பொழுது அவர்களுக்கு ஒரு சிறு உணர்வு உண்டாகலாம். ஆனால் அடுத்த நாள் அவர்கள் அதைக் குறித்தெல்லாம் மறந்துவிட்டு, அவர்களுடைய சீட்டாடத்திற்கும், அவர்களுடைய பழக்கவழக்கங்களுக்கும் மற்ற—மற்ற இந்த எல்லாக் காரியங்களுக்கும் திரும்பவும் சென்றுவிடுகின்றனர். இது முழுவதுமாக மறக்கப்படுகின்றது.
57108 தேவன் யாருக்காவது ஏதோ ஒரு காரியத்தை செய்வாரானால், அவர்களோ, “ஓ, பாருங்கள், அது தானாகவே நடந்தது” என்பார்கள். பாருங்கள், அவர்கள் எந்நிலையில் உள்ளனர் என்பதை அவர்களால் அறிந்துகொள்ள முடியாதபடிக்கு, பிசாசு அந்தக் காரியங்களினால் அவர்களுடைய மனதில் விஷமேற்றியுள்ளான். கவனமாய்க் கேளுங்கள்! ஓ, அவர்கள் தங்களுடைய கரங்களைத் தட்டி, “ஆமென்” என்று சத்தமிட்டு, ஆவியில் நடனமாட முடியும். அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்துவதில்லை. அஞ்ஞானிகள் அதைச் செய்வதை நான் கண்டிருக்கிறேன். அது உண்மை. பெரிய கூட்டங்கள் நடக்கிறதே, ஓ, நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நாங்கள் இன்னும் எழுப்புதலை உடையவர்களாயிருக்கிறோமே” என்று கூறலாம். ஹு-ஹூ, எந்தவிதமான ஒரு எழுப்புதல்? உங்களுடைய சபை ஸ்தாபனக் கூட்டங்களையே நடத்துகிறீர்கள்.
58109 கென்டக்கியில் நாங்கள் அதை “நீண்ட கூட்டங்கள்” என்று அழைப்பதுண்டு. அதைத்தான் அது செய்கிறது, நீண்ட கூட்டங்கள். ஆனால் அவர்கள் சுவிசேஷத்தினால் கவரப்படுவதில்லை. அது உண்மை. ஆம், அவர்கள், “ஓ, நாங்கள் ஒரு கூட்டம் நடத்தினோம். என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? நாங்கள் வேத பண்டிதர் இன்னார்-இன்னாரை பட்டணத்திற்கு வரவழைத்தோம். நாங்கள் ஆயிரக்கணக்கானவர்களை உடையவர்களாயிருந்தோம். எல்லா சபைகளும் ஒன்றுசேர்ந்து ஒத்துழைத்தன.” நமக்கும் ஒரு எழுப்புதல் உண்டாக நாம் என்ன செய்தோம்? ஜனங்களை தேவனுடைய வார்த்தைக்கு திருப்பிக் கொண்டு வர, தேவன் ஸ்தாபன சபைக்கு சென்று கிரியை செய்கிறாரா? நாம் என்ன செய்தோம்? ஒரு கூட்ட ஜனங்களையும் நாம் ஒன்று கூட செய்து, அது உலகப்பிரகாரமான ஆடம்பரத்தினால் பளிங்குபோல் ஜொலித்தது, அது முற்றிலும் உண்மை. அறிவுத்தன்மை, நவநாகரீக ஹாலிவுட்டின் பகட்டான விளம்பரக் காட்சிப் போன்றிருந்தது. ஓ, நீங்களோ, “அது பாப்டிஸ்டுகள்” எனலாம். 110 அது பெந்தேகோஸ்தேயினர். அது உண்மையே! மேடையின்மேல், பெண்கள் சிறிய இறுக்கமான ஆடைகளை அணிந்துகொண்டு, குதித்து நடனமாடுதல் காண்பதற்கு பயங்கரமாய் உள்ளது. அது ஒரு அவமானமாயுள்ளது. அதை விவரிக்க எனக்கு போதிய வார்த்தைகள் இப்பொழுது இல்லை. அது ஒரு அவமானமாயுள்ளது. ஆண்கள் அங்கு உட்கார்ந்து கொண்டு, “தேவனுக்கு மகிமை! அல்லேலுயா!” என்று கூச்சலிடுகின்றனர். எவ்வாறாயினும், நீங்கள் எந்த விதமான ஒரு ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள்? இயேசு அதைப்போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியத்திற்கு சத்தமிடுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர் அதை கண்டனம் செய்வாரே! ஏசாயா, எரேமியா, ஆமோஸ், மற்றும் அந்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளில் ஒருவர் காட்சியில் எழும்பி, அந்தவிதமான காரியங்கள் சம்பவிக்கிறதை அவர்கள் கண்டு, அவர்கள் செய்தது போல செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவர்கள் எப்படியாய் அதற்கெதிராக கூக்குரலிட்டு, “நீங்கள் சேவிக்கிறதாக உரிமை கோரும் அதே தேவன் உங்களை அழிப்பார்” என்றே கூறிவிடுவார்கள். அவர் இன்றைக்கு அதே காரியத்தையே கூறுவார். நிச்சயமாகவே அப்படித்தான் கூறுவாரே!
59111 அப்படிப்பட்ட ஒரு பகட்டான விளம்பரக் காட்சி போன்ற கூட்டத்தினால் ஒரு பயனும் இல்லை. நாம் அதிகமாகவே நவநாகரீக திரைப்படத்துறையான ஹாலிவுட்டைப் பெற்றிருக்கிறோம். ஆனால் அது தேவனுடைய ஆவியையும் வல்லமையையும் கீழேக் கொண்டு வராது. அது ஒருக்கால் உற்சாகமூட்டலாம். ஆனால் அது தேவனுடைய வல்லமையைக் கொண்டு வராது. 112 அவர்கள் அதற்கான கிரயத்தை செலுத்த பிரியப்படுகிறதில்லை. சிம்சோன் சரியாக ஜெபித்தான். அவன் என்னவென்று ஜெபித்தான்? முடிக்கும் தருணத்தில் நான் இதைக் கூறுவேனாக. “கர்த்தாவே, என் சத்துருக்களோடு நான் மரிக்கட்டும்” என்று அவன் ஜெபித்தான். அதுதான் தொல்லையாயுள்ளது, அவர்கள் மரிக்கும் கிரயத்தை செலுத்த விரும்புகிறதில்லை. நீங்கள் சொந்தமாக உங்களுக்கென்று ஒரு சமுதாயத்தை தெரிந்துகொண்டு, அந்த ஒரு கூட்ட ஜனங்களோடு மாத்திரம் நீங்கள் தொடர்புகொண்டு, சீட்டு விளையாடி, வீட்டிலே தரித்திருந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து, “அவித்த ஒரு கிண்ண உருளைக்கிழங்குகளை” புசித்து, குளிர்பானங்களை பருகுகிறீர்கள். சபையோ காலியாக உள்ளது. அது உண்மை. நீங்கள் ஒரு சபை வருகை அட்டையில் கையொப்பமிட, வருடத்தில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஞாயிறு வேதபாட பள்ளிக்கு வருவீர்கள். மனிதனால் உண்டாக்கப்பட்ட அத்தகைய உற்சாகம்! உங்களுக்கு தேவை பரிசுத்த ஆவியே. ஓ, நீங்களோ, “நான் அதைப் பெற்றுக்கொண்டேன்” என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டதுபோல நிச்சயமாகவே அதன்படி நடந்து கொள்வதில்லை. ஆம், ஐயா. போதகர் ஒரு மணிநேரம் அல்லது அதைப் போன்று சற்று அதிகமாக பிரசங்கிக்கட்டும், உடனே நீங்கள் தர்மகத்தா குழுவை அழைத்து, அவரை வெளியே அனுப்பிவிட ஆயத்தமாயிருக்கிறீர்கள். அது உண்மை. ஓ, நீங்கள்—நீங்கள் உங்களுடைய பணியாரத்தை சாப்பிடவும், அதை வைத்துக்கொள்ளவும் கூட விரும்புகிறீர்கள். அதை அப்படி செய்ய முடியாது. இல்லை, ஐயா. நீங்கள் உங்களையே ஒப்புவித்தாக வேண்டும். நீங்கள் ஒரு கிரயத்தை செலுத்த வேண்டும். ஒரு துப்பரவு பணி செய்யப்பட வேண்டும். நான் உங்களுக்கு சொல்வதென்னவென்றால், உலகம் முழுவதுமே உள்ள சபைகளுக்கு வாயிற்காப்போன் அறையிலிருந்து பிரசங்கபீடம் வரை ஒரு சுத்தப்படுத்துதல் தேவையாய் இருக்கிறது. அது உண்மை. அது சத்தியமாய் இருக்கிறது. கிரையம் செலுத்தவோ மனமில்லை.
60113 ஆனால் சிம்சோன் ஜெபித்தபோது, “கர்த்தாவே, இந்த பெலிஸ்தியரோடு நான் மடியட்டும்” என்று சரியான ஜெபத்தை ஏறெடுத்தான். அவன் தவறிப்போயிருந்தான், ஆனால் நான், “மரிக்கட்டும்” என்றான். உங்கள் மேல் ஜெயங்கொண்ட சத்துருவுக்கு நீங்கள் மரிக்க ஆயத்தமாயிருக்கவேண்டும். உங்களுடைய சொந்தக் கருத்துக்களை விட்டுவிட, நீங்கள் ஆயத்தமாயிருக்க வேண்டும். தேவனுடைய வல்லமையை மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காக—பெற்றுக்கொள்வதற்காக சிம்சோன் கிரயத்தை செலுத்த ஆயத்தமாயிருந்துகொண்டிருந்தான். 114 ஸ்தீரிகளாகிய நீங்கள் உங்கள் தலை முடியை வளரவிட விருப்பமுள்ளவர்களாயிருக்கிறீர்களா? என்றே எதிர்பார்க்கிறேன். புருஷராகிய நீங்கள் மனைவியிடம் அதைக் கூறுவதற்கு போதிய தைரியத்தைப் பெற்றுள்ளீர்களா? என்றே எதிர்பார்க்கிறேன். நீங்கள் வீட்டின் தலைவராயிருக்க வேண்டும். அவள் கழுத்தாயிருந்து, அவளே உங்களை திருப்பிக்கொண்டிருக்கிறாள். அது முரண்பாடாயிருக்கிறதே! ஒரு அசைக்கக் கூடிய எழுப்புதல் இந்தப் பொது அலுவலகங்களிலுள்ள இந்த ஸ்திரீகளையும், வீடுகளிலும் மற்ற இடங்களிலுமுள்ள காவல்காரர்களையும் வேலையிலிருந்து எடுத்துப் போட்டுவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவள் சமையலறையில் இருக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் அவளை அந்த இடத்திற்கு கொண்டு வர முடியும் என்று நினைக்கிறீர்களா? இல்லை, ஜயா. அவள் இரட்சிக்கப்பட்டாலொழிய அதைச் செய்யமாட்டாள். அவள் இரட்சிக்கப்பட்டுவிட்டால் அப்பொழுது அதைச் செய்வாள். அப்பொழுது நீங்கள் அவளிடத்தில் அதைக் குறித்து எதையுமே சொல்ல வேண்டிய அவசியமிராது. அவள் தன்னுடைய ஸ்தானத்தை கண்டறிந்து கொள்வாள். பரிசுத்த ஆவியானவர் அவளுடைய ஸ்தானத்திற்கு அவளை வழிநடத்துவார். ஆனால், “பரிசுத்த ஆவி என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறது” என்று கூறுகிறீர்களா? வார்த்தைக்கு முரணாகவா? அதை பரிசுத்த ஆவி என்று அழைக்காதீர்கள்.
61115 நீங்கள் அந்த கிரயத்தை செலுத்த சித்தமாயிருக்கிறீர்களா? அதில் உள்ள ஒரு…பெந்தேகோஸ்தே சபையே, நீ அந்த கிரயத்தை செலுத்த சித்தமாயிருக்கிறாயா? அதுதான் இது. நாம் எந்தவிதமான ஒரு அவமானத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் பாருங்கள். சரி. தேவனுடைய வல்லமையை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படியான கிரையத்தைச் செலுத்த சிம்சோன் சித்தமாயிருந்தான். ஓ, உங்களில் சிலர், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நாங்கள் எழுப்புதலை பெற்றுள்ளோம்” என்று கூறுவதை நான் கேட்கிறேன். ஆனால் உங்களுக்கு உண்டான எழுப்புதலுக்குப் பிறகு, நீங்கள் எதைப் பெற்றுக்கொள்கிறீர்கள்?
62116 நான் பில்லி கிரஹாம் அவர்களோடு கென்டக்கியில் உள்ள லூயிவில்லில் காலை சிற்றுண்டி கூட்டத்தில் அமர்ந்திருந்தபோது, அவர் தன்னுடைய செய்தியில் கூறினார். அவர் அங்கு எழுந்து நின்று, வேதாகமத்தை கையிலெடுத்து, அவர், “இந்த வேதாகமம் காரியங்களை செய்கிற தேவனுடைய வழியாக இருக்கிறது” என்றார். அது எவ்வளவு உண்மையாயுள்ளது! ஆனால் அதன்படி செய்யுங்கள் என்பது அடுத்த காரியமாய் இருக்கிறது. மேலும் அவர், “பவுல் ஒரு பட்டணத்துக்குள் பிரவேசித்து, ஒருவனை இரட்சிப்புக்குள் கொண்டு வந்தான். இரட்சிக்கப்பட்ட அவனை அந்தப் பட்டணத்தில் விட்டுச் சென்றான். இப்படியாக அந்த இரட்சிக்கப்பட்டவன் அங்கேயே இருந்தான். அடுத்த வருடம் அவன் அங்கு சென்றபோது, இரட்சிக்கப்பட்ட அந்த ஒருவன் முப்பது அல்லது நாற்பது பேர்களை இரட்சிப்புக்குள் கொண்டு வந்து, கிறிஸ்துவிடம் சேர்த்திருந்தான்” என்றார். அதைத் தொடர்ந்து, “நான் ஒரு பட்டணத்துக்கு செல்கிறேன். நான் என்ன செய்கிறேனென்றால், முப்பதாயிரம் பேரை இரட்சிப்புக்குள் கொண்டு வருகிறேன்” என்றார். அதன்பின்னர் அவர், “நான் ஒரு ஆண்டுக்குள் அங்கு திரும்பிச் செல்லும்போது, அவர்களில் முப்பது பேர் கூட நிலைத்திருப்பதில்லை. இதன் காரணம் என்ன?” என்று கேட்டார். இதன்பின்னர் அவர் பிரசங்கிமார்களை சுட்டிக்காட்டி, “சோம்பேறி பிரசங்கிகளாகிய நீங்களே அதற்குக் காரணம் என்றும், உங்கள் கால்களை மேசையின் மேல் போட்டு அமர்ந்துகொண்டு, நீங்கள் ஜனங்களை சந்திக்கச் செல்லுவதில்லை” என்றார்.
63117 இப்பொழுது, அதில் நிறைய உண்மை உள்ளது. அது உண்மையே. ஆனால் அது முழுவதும் உண்மையல்ல. தர்பூசணி பழத்தைப் தின்னும் ஒரு மனிதனைப்போல. அந்த வயோதிக கருப்பு நிற மனிதன், அவனுக்கு அந்த தர்பூசணி பழத்தை ஒரு கடி கடிக்க கொடுங்கள் என்றானாம். அப்பொழுது கடித்த அந்த மனிதன், “ஓ, அது அருமையாய் இருந்தது. ஆனால் அது இன்னும் அதிகமாகவே உள்ளது,” என்றானாம். அது உண்மையே. 118 அதுதான் இங்கு காரியமாய் இருந்தது. அந்த மகத்தான சுவிசேஷகனுக்கு கூற நான் யார், பில்லி கிரஹாமைப் போன்ற ஒரு மனிதனிடத்தில் ஒரு வார்த்தையை பேசுவதற்கு நான் யார்? அது எனக்கு தூரமாயிருப்பதாக. அவர் தேவனுடைய ஊழியக்காரனாயிருக்கிறார். அவர் என்னைக் கேட்டாலொழிய நான் அதைக் குறித்துப் பேசமாட்டேன். ஒருகால் நான் ஏதோ ஒரு காரியத்தை கூறலாம். ஆனால் நான், “பில்லி, பவுல் ஜனங்களை இரட்சிப்புக்குள் கொண்டு வந்த பிறகு, எந்த சோம்பேறி பிரசங்கியார் காலை மேசை மேல் போட்டுக்கொண்டிருந்தார்? அப்பொழுது தேசத்தில் ஒரு பிரசங்கியார் கூட இல்லை. அது என்னவாயிருந்தது? பவுல் ஒரு தீர்மானத்தின் பேரில் அவர்களை ஒருபோதும் விட்டுவிடவில்லை. அவன் தன்னுடைய தீர்மானத்தை செய்தபோது, பவுல் தேவனுடைய வார்த்தையுடன் அங்கு நின்றுகொண்டு, அவனை ஒரு தேவனுடைய புத்திரனாக செதுக்கினான். அதன் பிறகு அவனால் அமைதியாயிருக்க முடியவில்லை” என்று இந்தவிதமாக கூறியிருக்க வேண்டும்.
64119 இன்றைக்கு அதுதான் காரியமாக உள்ளது. அந்த தீர்மானங்கள் எல்லாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் செதுக்கப்பட்ட வேண்டியதாயிருக்கிறது. சுத்தப்படுத்திக் கொண்டு தேவனுடைய வார்த்தைக்கு திரும்பி வாருங்கள். சுவிசேஷத்திற்கு திரும்பி வாருங்கள். நிச்சயமாக, அதுதான் நமக்குத் தேவை. ஆம், இன்றைக்கு நமக்கு ஒரு எழுப்பதல் உள்ளது. ஆனால் அது என்னவாக இருக்கிறது? அது ஒரு ஸ்தாபன எழுப்புதலாக உள்ளது. பாப்டிஸ்டுகள், “1944-ல் பத்து இலட்சம் பேர்” என்ற ஒரு விளம்பர கவர்ச்சி வாசகத்தை உடையவர்களாக உள்ளனர். அதன் மூலம் நீங்கள் என்ன பெறுகிறீர்கள்? அவர்கள் ஒரு எழுப்புதலை நடத்திக்கொண்டிருந்த ஒரு சபையிலே இருந்தபோது, அவர்கள் கூறினர், அவர்கள் பதினைந்து நிமிடம் இடைவெளி கொடுக்க வேண்டியதாயிருந்ததாம், ஏனென்றால் ஜனங்கள் வெளியே சென்று ஞாயிறு வேதபாடப் பள்ளிக்கிடையே புகைபிடித்தனர். போதகரும் கூட புகைப்பிடித்தார். வேதம், “எல்லா அசுத்தமான பழக்க வழக்கங்களிலிருந்தும் உங்களை சுத்திகரித்துக் கொள்ளுங்கள்” என்று உரைத்துள்ளது. புரிகிறதா? இப்பொழுது அதைக்குறித்து நாம் என்ன செய்யப்போகிறோம்?
65120 பாருங்கள், நீங்கள், “அது சரியில்லை” என்று கூறலாம். பரிசுத்த ஆவியானவர், அவர் வரும்போது, அவர் இந்த எல்லாக் காரியங்களைக் குறித்தும் போதிப்பார். பாருங்கள், நிச்சயமாக போதிப்பார். 121 யாரோ ஒருவர் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து ஏதோ ஒரு காரியத்தைக் கூறினார், அவர்கள், “அது வேறொரு நாளுக்குரியது” என்று கூறினர். பாருங்கள், முன்பு என்னவாயிருந்தது என்பதை அவர் சுட்டிக் காண்பித்தார். “ஒருகால் அது ஆயிர வருட அரசாட்சியில் முடிவு பெறலாம்.” ஆயிர வருட அரசாட்சியின்போது, நீங்கள் அழிவில்லாமையை தரித்திருக்கும்போது, உங்களுக்கு ஏன் தெய்வீக சுகமளித்தல் தேவைப்படும்? இன்றுதான் அந்த நாளாயிருக்கிறதே! இதுவே அந்த நாள். 122 “பாருங்கள், நாங்கள் எழுப்புதல்களை உடையவர்களாயிருக்கிறோம்” என்று கூறுகிறீர்கள். சபையிலுள்ள ஒழுக்க சீர்கேட்டைப் பாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் அது எவ்வளவு மோசமாகிக்கொண்டே வருகிறது என்பதை பாருங்கள். நம்முடைய பெந்தேகோஸ்தே குழுக்கள், அது எப்படியாய் விழுந்துபோய் உள்ளது என்பதை நோக்கிப் பாருங்கள். உங்களுடைய கண்களை மூடிக்கொண்டு, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கிருந்தபோது இருந்த நிலையை யோசித்துப் பாருங்கள். பின்பு கண்களை திறந்து, இன்று நீங்கள் என்ன பெற்றுள்ளீர்கள் என்பதைப் பாருங்கள். அது உண்மை என்று உங்களுக்குத் தெரியுமே! அது பாவமும், அவமானமுமாக உள்ளது. அது உண்மை. தேவனுடைய வார்த்தையை விட்டு எல்லா நேரத்திலும் மேலும் மேலும் விலகிச் சென்றுகொண்டேயிருத்தல்.
66123 சிம்சோன் தன்னுடைய பின்வாங்கிப்போன நிலைமைகளை அறிந்திருந்தான். அவன் அங்கிருந்தபோதிலும், அந்த நேரத்துக்கான சவாலை சந்திக்க அவனுக்கு பலமில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். அவனுடைய எல்லா இயந்திர சாதனமும் அங்கிருந்தது. ஒரு கழுதையின் தாடை எலும்பை எடுத்து பத்து இலட்சம் பேரைக் கொன்ற அதே தசைகள், அந்த மனிதனின் உடலில் இருந்தன. காசாவின் வாசல்களை மலையின் உச்சிக்கு சுமந்து சென்ற அதே தோள்களிலிருந்த தசைகள், அவன் உடலில் இருந்தன. ஓ, நான் இங்கு ஒரு காரியத்தைக் கூறக் கூடும். பாருங்கள். ஆனால் அவனால் அந்த வேளையின் சவாலை சந்திக்க முடியாது என்பதை அவன் அறிந்திருந்தான். 124 அதுபோன்றே சபையும் அதனுடைய ஒழுக்க சீர்கேட்டில் உள்ளதை நாம் அறிந்துள்ளபடியால், நாம் ஒருபோதும் இந்த மணி நேரத்துக்கான சவாலை சந்திக்கவேமாட்டோம். கம்யூனிசம் முழு காரியத்தையும் கைப்பற்றிக்கொண்டு வருகிறது. நாம் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்? தெய்வீக சுகமளித்தலிலும், தேவனுடைய வல்லமையிலும் விசுவாசங்கொண்டிராத ஸ்தாபனங்கள் இந்த ஜனங்களோடு இந்த நுகத்திலே பிணைக்கப்பட்டு, அவர்களோடு சேர்ந்துகொள்வதன் மூலம் ஆறுதலைத் கண்டடைகின்றனர். இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போக முடியுமா? நாம் அப்படிப்பட்ட ஒன்றுடன் நம்மை நுகத்தில் பிணைத்துக்கொண்டு, தேவன் உதவி செய்வார் என எதிர்பார்க்கிறோம்… நாம், “அதிக எண்ணிக்கைகள்” என்று கூறுகிறோம். தேவன் அதிக எண்ணிக்கைகளை கவனக்கிறதில்லை. அவர் நற்பண்பையே எதிர்நோக்குகிறார்.
67125 நற்பண்புள்ள ரெபேக்காளைக் கண்டுபிடிக்குமளவும் எலியேசர் வியர்வை சிந்த பாடுபட்டான் என்று நான் கூறினேன். அதன்பின்பு அவன் அவளுக்கு உடை உடுத்தி, ஆயத்தப்படுத்தி, அவனுடைய செய்தியை அமரிக்கையாக கேட்கும்படிச் செய்தான். ஆனால் இன்றைக்கு உள்ள தொல்லை என்னவெனில், நீங்கள் நற்பண்புள்ளவரைக் கண்டுபிடிக்கும்போது, உடை உடுக்க அவர்களைப் போதிய நேரம் அமரிக்கையாக நிறுத்துவதென்பது கடினமாயுள்ளது. அது உண்மை. யாரோ ஒரு நாகரிகப் பண்பற்றவன் அவர்களை வேறொரு திசையில் இழுத்துச் சென்றுவிடுகிறான். அது உண்மை. ஆனால், அங்கோ எலியேசர் வியர்வை சிந்தப் பாடுபட்டான்.
68126 இப்பொழுது, சிம்சோனுக்கு தசைகள் இருந்தபோதிலும், அவனுக்கு பலமில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். நாம் நம்முடைய எல்லா இயந்திரங்களையும் பெற்றுள்ளோம். நாம் எல்லா பெரிய மாவட்ட போதகர்களையும் பெற்றுள்ளோம், நாம் எல்லா பேராயர்களையும் பெற்றுள்ளோம். நாம் முக்கிய பேராயர்களையும் பெற்றுள்ளோம். நாம் போப்பாண்டவர்களைப் பெற்றுள்ளோம், நாம் குருக்களாட்சி முறைப்படி வேலை செய்யும் குழுக்கள் அனைத்தையும் பெற்றுள்ளோம். நாம் எல்லா இயந்திரங்களையும் பெற்றுள்ளோம். நான் மிகப் பெரிய கட்டிடங்களையும், உலகில் உள்ள பெரும்பாலான பணத்தையும் பெற்றுள்ளோம். அது என்ன நன்மையை நமக்கு செய்கிறது? அது சத்தமிடுக்கிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் உள்ளது. அது உண்மை. ஆனால் இந்த மணி நேரத்தின் சவாலை நாம் சந்திக்க முடியாதவர்களாயிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம்.
69127 இன்றைக்கு கம்யூனிசம் ரஷ்யாவிலும் மற்றும் உலகத்தையே கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. காரியம் என்னவாய் உள்ளது? யாரோ ஒருவர் தான் உறுதி கொண்டுள்ள ஒன்றை, அது தவறாயிருந்தபோதிலும், எழுந்து நின்று எடுத்துக்கூற துணிச்சல் படைத்துள்ளார். ரஷ்யாவில் ஒரே ஒரு சதவிகிதம் மாத்திரமே கம்யூனிசம் உள்ளது, ஒரே சதவீதம்தான்! தொண்ணூற்றொன்பது சதவிகிதம் ஜனங்கள் இப்போதும் கிறிஸ்தவர்கள் என்றே அழைக்கப்பட்டு, சுயாதீனமாக இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் சுவிசேஷத்தின் அறிவுத்திறனைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள் பணம் படைத்தவராயிருந்தாலும், அவர்கள் மற்ற எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும், சுவிசேஷம் அளிக்கிறதை அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஆனால் அவர்கள் தைரியத்தையும், கிருபையையும் பெற்றிருக்கவில்லை. ரஷ்யாவில் தேவனுக்கு தேவைப்படுகிறது என்னவென்றால், தேவனுடைய வல்லமையினாலும், தேவனுடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் அபிஷேகிக்கப்பட்டிருக்கிற ஒரு மனிதனேயாகும்.
70128 சிம்சோன் தனக்கு என்ன தேவைப்பட்டது என்பதை அறிந்திருந்தான். நாம் முழு அமெரிக்காவையும் திருப்பி, ஒவ்வொருவரையும் சபைக்கு போகச் செய்யலாம், அப்படியிருந்தும் நாம் அதை இன்னும் பெற்றுக்கொள்ளாமல் இருப்போம். …நமக்கு அவசியமானதை நாம் பெற்றிருக்கவில்லை. சீஷர்கள் பெந்தேகோஸ்தேவுக்குச் செல்லும் வரைக்கும் அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லை. மூன்று ஆண்டுகள் பிரசங்கித்தப் பிறகும், அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லை என்று இயேசு அவர்களிடம் கூறினார். அதன்பிறகும் அவர்களுக்கு அது தேவைப்பட்டது. சபைக்கு அது தேவைப்படுகிறது. அது உண்மை. 129 கவனியுங்கள், சிம்சோன் தேவையாயிருந்ததை, அவனுக்கு போதுமானதாயில்லாதிருந்ததை அவன் அறிந்திருந்தான். ஸ்தாபனங்கள் அதை உற்பத்தி செய்ய முடியாது. அவர்கள் வார்த்தையை ரூபகாரப்படுத்துகிறதில்லை, அவைகள் அதற்கு எதிராக போதிக்கின்றன. ஆம். உங்களுக்கு தெரியும், சிம்சோன் தன்னுடைய எல்லா ஆதிக்கத்தையும் பெற்றிருந்தபோதிலும், அவன் தனக்குள்ளே குறைவுள்ளவனாயிருந்ததை, அவன் அப்பொழுதும் குறைவுள்ளவனாயிந்தான் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தான். அவனைக் கவனியுங்கள்! பெலிஸ்தியர் தங்களுடைய வெற்றியின் நிமித்தமாக பெருமிதங் கொண்டிருந்தனர். அவன் தன்னுடைய தலையை மேலே உயர்த்தி, முன்பு கண்களிருந்த குழிகளிலிருந்து கண்ணீர் வடிந்து, அவனுடைய உதடுகளை அசைத்து, ஜெபம் செய்வதை அவர்கள் ஒருபோதும் கவனிக்கவேயில்லை. அவர்கள் அதை கவனிக்கவேயில்லை. அவர்கள் வெறுமனே…அவர்கள் ஒரு பெரிய கொண்டாட்டத்தை அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். இந்த யேசபேலுக்கு தேவன் தம்மை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவன் விரும்பினான். ஓ, அவ்வாறு எழும்பக் கூடிய சில சிம்சோன்களை நாம் பெற்றிருக்கக் கூடுமானால் நலமாயிருக்குமே! ஓ, சபையே! ஒரு புதிய ஸ்தாபனம் அல்ல, மற்றொரு கோட்பாட்டை துவங்குவதோ அல்லது, பின்மாரியோ அல்ல. நமக்கு தேவனுடைய வல்லமையே தேவை. அது உண்மை.
71130 தேவன் அவனுடைய ஜெபத்திற்கு பதிலளித்தால், என்ன நேரிடும் என்று அவன் விழிப்புணர்வோடிருந்தான். அந்த நிலைமையை சந்திக்க அவன் ஆயத்தமாயிருந்தான். அவன் மிகுந்த ஆர்வமுள்ளவனாயிருந்தான். ஓ, சபையும் இன்றிரவு மிகுந்த ஆர்வமாய் அந்த நிலையில் நின்றுகொண்டு, இவ்வுலகில் உங்களுக்கு அருமையாயுள்ள எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்று அறிந்திருக்குமானால் நலமாயிருக்குமே. இன்றிரவு ஆண்களும் பெண்களும், இது உலகத்தின் ஒவ்வொரு காரியத்திலிருந்தும் உங்களை பிரிக்கப்போகிறது என்று அறிந்துகொள்ள ஆயத்தமுள்ளவர்களாயிருந்தால் நலமாயிருக்கும். போதகர்களே, அவர்கள், “வேத பண்டிதர் இன்னார்-இன்னாரே அது அற்புதமாய் இருந்தது, நீங்கள் இந்த பிற்பகல் எங்களோடு நீச்சலடிக்க வருவீர்களா?” என்று உங்களிடத்தில் கூறி, உங்கள் முதுகில் தட்டுவதை நிறுத்தி விடுவார்கள். சபையிலிருந்து பங்கோ என்ற சூதாட்ட விளையாட்டுக்களையும், பந்தயங்களையும், குலுக்கு சீட்டுப் போன்றவைகளையும் எடுத்துவிடுங்கள். பங்கோ என்ற சூதாட்ட விளையாட்டு ஒரு குலுக்கல் சூதாட்ட விளையாட்டேயாகும். போதகருக்கு ஊதியம் தர, சூப் என்ற வடிசாறு இரவு விருந்து நடத்துவதை நிறுத்திவிட்டு, தசமபாகம் என்னும் தேவனுடைய முறைமைக்குத் திரும்புங்கள்! தேவனுடைய வார்த்தைக்கு திரும்பி வாருங்கள்! அவர்கள் அதைச் செய்ய விருப்பமுள்ளவர்களாயிருக்கிறார்களா? இல்லை, ஐயா. அவர்கள் விருப்பமாயிருக்கவில்லை. அதற்காக செலுத்த வேண்டிய கிரயம் என்னவென்று உங்களுக்கு தெரியும். அந்தப் பெண்கள் உங்களை மீண்டும் அந்த பண்டைய நாகரிகம் என்றே அழைப்பார்கள். ஆனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றே தேவன் அழைப்பார்.
72131 நீங்கள் மரிக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? அங்குதான் அதைக் குறித்த தொல்லையே உள்ளது. நீங்கள் நவநாகரீக திரைப்படத் துறையான ஹாலிவுட்டிற்கு உயிரோடிருக்க விரும்பி, அதே சமயத்தில் தேவனோடும் உயிரோடிருக்க விரும்புகிறீர்கள். அது கலவாது. ஒரு வித்து, இயேசு, “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்” என்று கூறினார். நீங்கள் ஒருபோதும் ஒரு பலனையும் கொடுக்கமாட்டீர்கள். 132 ஓ, இயேசுவின் நாம சபையே! என்னே ஒரு மகிமையுள்ள சபை! என்னே ஒரு மகிமையுள்ள நாமம்! இயேசுவின் நாமமே! நீங்கள் மரிக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? அசெம்பளீஸ் ஆஃப் காட் என்ற சபையே, ஜெனரல் அசெம்பளி என்ற சபையே, நீங்கள் மரிக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? மெதொடிஸ்டுகளே, பாப்டிஸ்டுகளே, பிரஸ்பிடேரியன்களே, உங்களுடைய சத்துருவிற்காக நீங்கள் மரிக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? தியாகம் என்னும் கிரயத்தை, உண்மையாகவே உத்தமமாக செலுத்த நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? வெறுமனே வந்து, “பாருங்கள், நான் அதை கொடுக்க முயன்று பார்க்கிறேன். நான் எப்படி வெளியே வருவது என்று பார்க்கிறேன்” என்று கூறுவதில்லை. அப்படியானால் நீங்களும் இன்னும் ஆயத்தமாயிருக்கவில்லை. நீங்கள் அந்த கிரயத்தைச் செலுத்த ஆயத்தமாகி, மரிக்க வேண்டும்.
73133 தகப்பன்மார்களாகிய நீங்கள், தாய்மார்களாகி நீங்கள், உங்களுடைய வீட்டில் ஜெப பீடத்தை நிலைநாட்ட ஆயத்தமாகி, அந்த தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்துப்போடுவீர்களா? மேசையின் மீது உள்ள சீட்டுக் கட்டை எடுத்து நீங்கள் வீசியெறிய ஆயத்தமாயிருக்கிறீர்களா? உங்களுடைய பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிற நகைச்சுவை நிகழ்ச்சிப் புத்தகங்கள், பிசாசு அவர்களுக்குக் கொடுக்கப்போகும் அதிர்ச்சிக்கு அவர்களுடைய இளம் உள்ளங்களை ஆயத்தப்படுத்துகின்றன. நீங்கள் மீண்டும் பழைய குடும்ப ஜெப பலிபீடத்தை நிலைநாட்ட ஆயத்தமாயிருக்கிறீர்களா? அல்லது இப்பொழுதுள்ள உங்கள் வழியிலேயே நீங்கள் தொடர்ந்து செல்ல விரும்புகிறீர்களா? நீங்கள் தொடர்ந்து செல்ல விரும்பினால், அதை விட்டு வெளியே வரும் நிலையில் நீங்கள் இன்னும் இல்லை; ஆனால் நீங்கள் சிம்சோனைபோல, நீங்கள் செலுத்த வேண்டிய கிரயத்தைக் கண்டு, நீங்கள் அதற்கு ஆயத்தமாகி, “கர்த்தாவே, அவர்களோடு நான் மரிக்கட்டும்” என்று கூற வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 134 தேவன் தன்னுடைய ஜெபத்திற்கு பதில் அளித்துவிட்டால், அதனுடைய கிரயம் என்னவாயிருக்கப்போகிறது என்பதை சிம்சோன் அறிந்திருந்தான். நான் இங்கு வந்தது முதற்கொண்டு கவனித்து வருகிறேன், அநேக ஜனங்கள், பீடத்தண்டை வருகின்றனர். பரிசுத்த ஆவியும் அவர்களிடம் வருகிறது. ஆனால் அவர்களோ மரிக்க விரும்புவதில்லை. அவர்கள் இந்த உலகத்துக்கு உயிருள்ளவர்களாக தரித்திருக்க விரும்புகின்றனர். நீங்கள் ஒரே சமயத்தில் இரண்டு தேவர்களுக்கு ஊழியஞ் செய்ய முடியாது. தேவனை சேவிப்பதற்கு நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட ஆயத்தமாயிருக்கிறீர்களா? “இந்த ஒரு விசை மாத்திரம் கர்த்தாவே” என்று சிம்சோன் கதறுவதைக் கேளுங்கள்.
74135 பெந்தேகோஸ்தே சபை, ஜெனரல் கவுன்சில், அசெம்பளிஸ் ஆஃப் காட், சர்ச் ஆஃப் காட், இன்னும் மற்றவர்களாகிய நீங்கள் கிரயத்தை செலுத்த விருப்பமுள்ளவர்களாயிருக்கிறீர்களா? நீங்கள், “இன்னும் ஒரு விசை கர்த்தாவே! இதோ நான் நிற்கிறேன், நான் என்னுடைய ஒருத்துவ சகோதரனோடு அல்லது என்னுடைய திரித்துவ சகோதரனோடு கரங்களைக் குலுக்க கிறிஸ்தவ ஆவியையும், துணிவையும் பெற்றிருக்கவில்லை. அதைச் செய்ய நான் துணிவையும் பெற்றிருக்கவில்லை. அது செய்ய நான் கிருபையையும் பெற்றிருக்கவில்லை. அது என்னை எங்கே கொண்டு செல்கிறது என்பதை நான் காணும்போது, ஸ்தாபனங்களை உடைத்து, ஐக்கியங்கொள்ளாமல், சபையோர் ஒருவருக்கொருவர் விரோதங்கொண்டு, நாம் பரிசுத்த ஆவியினால் ஒரே களிமண்ணைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறந்தவர்களாய், வீதியில் கண்டாலும் கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை” என்று கூற விருப்பமுள்ளவர்களாயிருக்கிறீர்களா?
75136 நீங்கள், “இந்த ஒரு விசை, கர்த்தாவே, அது நடக்கட்டும்” என்று கதற விருப்பமுள்ளவர்களாயிருக்கின்றீர்களா? நீங்கள் விருப்பமுள்ளவர்களாயிருந்தால், அப்பொழுது தேவன் உங்களுடைய ஜெபத்திற்கு நிச்சயம் செவிகொடுப்பார். அந்த மனிதன் அங்கே எல்லா தசைநார்களோடும், தன்னுடைய பெரிய ஆதிக்க செயல்திறனைக் கொண்டிருந்தபோதிலும், அப்பொழுதும் அவன் குருடாகவே இருந்தான். அவன் கிரயத்தை அறிந்திருந்தான். அது சாத்தியம் என்று அவன் அறிந்திருந்தான். அவன், “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே! இந்த ஒரு விசை மாத்திரம் என் கண்களுக்காக பழிவாங்கும்!” என்று ஜெபித்தான். அவன் அந்த ஜெபத்தை ஏறெடுத்தபோது, தேவன் அதற்கு பதிலளித்தார். அவனுடைய சரீரத்தின் ஒவ்வொரு தசைநாரும் இறுக்கமாகத் துவங்கி, அந்த சதைகளுக்குள் ஆவியானது வரத் துவங்கியது. ஓ, நமக்கு ஒவ்வொரு புதன்கிழமை இரவு ஜெபக் கூட்டத்திலும், நமது ஞாயிறு பள்ளியிலும் ஆவியானவர் இறங்கி, தேவனுடைய வல்லமையையினால் தசைநார்கள் இறுக்கம் கொள்ளுவதையும், பரிசுத்த ஆவியானவர் அங்கு உள்ளே வர முடிவதையும் நம்மால் உணரக் கூடுமானால் நலமாயிருக்குமே. கேலித்தனமாக அல்ல, ஆனால் இருதயத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தும் உண்மையான ஆவியில், அங்குள்ள பாவத்தை சரிபடுத்தி, பொல்லாங்கை வெளியேற்றிவிடுமானால் நலமாயிருக்குமே.
76137 அவனுடைய தசைநார்கள் இறுக்கங்கொள்ளத் துவங்கிய போது, “நான் அவர்களோடு மரிக்கட்டுமே! அவர்களை அழிக்கவே நான் பிறந்தேன். எனவே நான் அவர்களோடு மரிக்கட்டும்” என்றான். அவனுடைய தசைநார்கள், அவனுடைய தசைகள் இறுக்கமானபோது, அவனுடைய பிரம்மாண்டமான தசைகள் பெலனைப் பெற்றுக்கொண்டன. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவன் மீது அசைவாடத் தொடங்கினார், அப்பொழுது அவன் தன்னுடைய பராக்கிரமத்தின் வல்லமையோடு, அந்தப் பாறைத்தூணை அசைத்துத் திருப்பினான். நமக்கு தேவையெல்லாம், “இன்னும், ஒரு விசை, கர்த்தாவே!” என்ற ஒரு உத்தமமான ஜெபமேயாகும். 138 நாம் வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைந்திருக்கவேண்டும். நாமோ இன்னமும் வனாந்திரத்திலேயே சுற்றி அலைந்துகொண்டிருக்கிறோம். இஸ்ரவேலர் தங்களால் ஏதோ ஒரு காரியத்தை செய்ய முடியும் என்பதற்காகவே ஒரு நியாயப்பிரமாணத்தை விரும்பினர். உங்களால் அதைக் குறித்து ஒன்றுமே செய்யமுடியாது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுங்கள்! நாம் நம்மையே ஏதோ ஒரு காரியத்தைக் கொண்டு பெருமையடித்துக்கொள்ளவும், மற்றவரைக் காட்டிலும் ஒரு வித்தியாசப்பட்ட வகுப்பினரைப் பெறவுமே ஒரு உபதேசத்தை விரும்பினோம். நாம் எங்கே வந்து அடைந்துவிட்டோம் என்று பார்த்தீர்களா? குருடாக்கப்பட்டோம். சரி.
77139 அந்தப் பெரிய ஸ்தாபனம் கீழே சாய்ந்தது. தேவன் உள்ளே வரும்பொழுது, மற்ற காரியங்கள் விழுந்துவிடுகின்றன, அது எப்பொழுதும் அந்தவிதமாகவே இருந்து வருகிறது. அப்பொழுது சிம்சோன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தான். ஓ, ஜீவனுள்ள தேவனுடைய சபை இன்றிரவு நின்று, “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே! எனக்கு உள்ள ஒவ்வொரு காரியமும் அதற்கு கிரயமானாலும், இன்னும் ஒரு விசை ஒரு எழுப்புதலை அனுப்பும். நான் பெற்றுள்ள ஒவ்வொரு காரியமும் அதற்கு கிரையமானாலும், எனக்கு ஒரு எழுப்புதலை அனுப்பும். கர்த்தாவே, அதை என் மீது அனுப்பும்” என்று கூறுவதையே நான் காண முடிந்தால் நலமாயிருக்கும். இன்றிரவு இங்கே கிட்டத்தட்ட இந்த குழுவில் முந்நூறு பேர்களுக்கும் அதிகமானவர்கள் இதைக் கேட்டு, “தேவனாகிய கர்த்தாவே, இன்னும் ஒரு விசை நான் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவை காணட்டும். அவர் எனக்கு அருகில் இருக்கிறார் என்பதை நான் அறிந்து கொள்ளட்டும். என்னை கவனித்துக்கொள்ள அவர் இங்கே இருக்கிறார். நான் இப்பொழுது சித்தமுள்ளவனாக இருக்கிறேன்” என்று ஒரே சத்தத்தோடு கதறட்டும்.
78140 ஓ, சத்துருக்கள் முழுமையாக கைவிடப்பட்டு, அழிக்கப்பட்டனர். பெந்தேகோஸ்தேயினரே, இன்றிரவு அந்தத் தூணன்டையிலே நிற்கிறீர்கள். நீங்கள் அழிக்க வேண்டுமென்று பிறந்துள்ள காரியங்களை அழித்துப் போடுங்கள். மனந்திரும்பி, “கர்த்தாவே, இன்னும் ஒரு விசை, இன்னும் ஒரு விசை நாங்கள் அதைக் காணட்டுமே!” என்று சத்தமிட்டு கூப்பிடுங்கள். 141 என் நண்பனே நான் இதைக் கூறட்டும். உன்னுடைய சத்துரு உன்னை அழிப்பதற்கு முன்பு நீ உன்னுடைய சத்துருவை அழிப்பது மேலாகும். பண்டைய—நாகரீகங்கொண்ட ஜெபக் கூட்டங்களை திரும்ப நடத்துங்கள். பண்டைய நாகரீகங்கொண்ட மனந்திரும்புதலில், அவர்கள் மரித்து, பாவத்தோடு முடிவுண்டாக்குமட்டாய், பீடத்தண்டையிலேயே அவர்கள் தரித்திருந்தனர். ஒரு ஸ்திரீ பீடத்தண்டை சென்று, பாவத்திற்கு மரித்துவிட்டு, அடுத்த நாள் திரும்பவும் தன்னுடைய தலைமுடியை குட்டையாக வெட்டிக்கொண்டு, தன்னுடைய முகத்தில் வர்ணம் தீட்டிக் கொண்டு வருவதை நீங்கள் ஒருபோதும் கண்டிருக்கவே மாட்டீர்கள். அப்படிப்பட்ட ஒரு காரியமேயில்லை. பரிசுத்தாவி அதைப் போதிக்கிறது, சுபாவம், பரிசுத்தாவியின் சுபாவம் அதைச் செய்கிறது. ஸ்திரீகள் வெளியே சென்று பாலுணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளை அணிந்துவிட்டு, உள்ளே வரும்போது தங்களை மூடிக்கொள்ள முயற்சிப்பதை அப்பொழுது நீங்கள் ஒருபோதும் காணவேமாட்டீர்கள். ஒரு மனிதன் முன்நின்று உறுதியாக செயல்பட பயப்படுவதையோ அல்லது தன்னுடைய மனைவி அவனை விட்டு போய்விடுவாள் என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக பயப்படுவதையோ, அப்பொழுது நீங்கள் ஒருபோதும் காணவேமாட்டீர்கள். பாருங்கள், மனிதர் அந்த நாட்களில் ஆண்மைத்தன்மை கொண்டவர்களாயிருந்தனர். அவர்கள் தைரியமாக பேசி, அவர்கள் புருஷர்களாயிருந்து, அவர்கள் தங்களுடைய இல்லத்தை ஆளுகை செய்தனர். அவர்கள் வீட்டின் தலைவராயிருந்தனர். ஆனால் இந்த ஆடம்பரமான அமெரிக்கர்கள்…
79142 இங்கு உட்கார்ந்துகொண்டு இப்போது என்னையே நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிற ஒரு எளிமையான கிரேக்க மொழி பண்டிதரிடமிருந்து நான் இதைத் தெரிந்துகொண்டேன். அவர் கிரீஸ் நாட்டிலிருந்து வந்தவர், கிரேக்க மொழியில் ஒரு பண்டிதர். அவர் என்னுடைய ஒலிநாடாவை போட்டு கேட்கத் துவங்கி, அந்த செய்தியை கவனித்து வந்துள்ளார். அப்பொழுது அவர் என்னிடம், “நீங்கள் போதிய கல்வியறிவைப் பெற்றிருக்கவில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, உங்களுடைய வார்த்தைகளும், உங்களுடைய செய்தியும் வேதாகமத்தின் கிரேக்க வியாக்கியானத்தோடு பரிபூரணமாக பொருந்துகிறது” என்றே கூறினார். மேலும், “அது முற்றிலும் சரியாயுள்ளது. நீங்கள் கூறியது முற்றிலும் சரியே” என்றும் கூறினார். அவர் என்னிடத்தில் வந்து, “ லவோதிக்கேயா என்ற வார்த்தை கிரேக்க மொழியில் ஒரு ‘ஸ்திரீயை’ பொருட்படுத்துகிறது” என்று என்னிடத்தில் கூறிக் கொண்டிருந்தார். இது ஒரு ஸ்தீரியினுடைய உலகம், இது ஒரு ஸ்தீரியினுடைய சபை, இது ஒரு ஸ்தீரியினுடைய காலம். மேலும், “பாருங்கள், புருஷர்கள் அதைச் செய்யமாட்டார்கள்” என்றுக் கூறினார். தேவன் எப்போதாவது அந்த நிலைமையைப் பெற்றிருந்தாரா? ஆம், நீங்கள் ஒரு எழுப்புதலை திரும்பவும் கொண்டுவர ஆயத்தமாயிருக்கிறீர்களா? நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? 143 ஒரு ஸ்திரீ, “நான் செய்ய விரும்புகிறதை செய்ய எனக்கு உரிமை உண்டு. அது என்னுடைய அமெரிக்க சிலாக்கியம்” என்று கூறினாள். அது உன்னுடைய அமெரிக்க சிலாக்கியமாக இருக்கலாம். ஆனால் அது உனக்கு தேவனால் அளிக்கப்பட்ட சிலாக்கியமாயிராது. ஒரு செம்மறியாடு… ஒரு வெள்ளாடு எப்பொழுதுமே உதைத்து சண்டையையே உண்டாக்குகிறது. ஆனால் செம்மறியாடோ அப்படியே நின்று தனது உரிமைகளை பறிகொடுத்து விடுகிறது. புரிகிறதா? நீங்கள் உண்மையாகவே ஒரு தேவனுடைய பிள்ளையாயிருந்தால், நீங்கள் உங்களுடைய அமெரிக்க உரிமைகளை பரிசுத்த ஆவியானவருக்கு பறி கொடுத்துவிட்டு, அவர் உங்களை வனைய, நீங்கள் இருக்கவேண்டிய விதமாக உங்களை உருவாக்க அனுமதிப்பீர்கள். “இன்னும் ஒரு விசை கர்த்தாவே.” ஓ, என்னே!
80144 ஓ, சபையே, நவநாகரீக திரைப்படத் துறையான ஹாலிவுட் என்னும் தெலீளாளை விட்டுவிடு. அவள் உன்னை கொல்லப் போகிறாள். அவள் உன்னுடைய ஆவிக்குரிய ஜீவியத்தை எடுத்து போட நெருக்கிக்கொண்டிருக்கிறாள். அவளை விட்டுப் போ! மேடையின் மேல் காணப்படும் உன்னுடைய பகட்டான ஹாலிவுட் நடிப்பு, உன்னுடைய ஹாலிவுட் பாணி, உன்னுடைய அற்ப மினுக்கான காரியங்கள், உலகிலுள்ள மற்றவர் செய்வது போலவே நமது கூட்டங்களும் பெரிதாக இருக்க வேண்டும் என்றும், பெரிய சபைகளில் நடத்தப்பட வேண்டும் என்பது போனறவை. ஒரு சுவிசேஷகர் ஒரு நகரத்துக்கு வரவேண்டுமானால், அவருக்கு ஒரு குறிப்பிட்டத் தொகையைத் தருவதாக நீங்கள் வாக்குக் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அவர் வரமாட்டார். எவ்வளவு கேலித்தனமாயுள்ளது! உங்களுடைய பொக்கிஷம் எங்கே உள்ளதோ, அங்கேதான் உங்களுடைய இருதயமும் இருக்கிறது என்பதையே அது காண்பிக்கிறது. முழு இருதயத்தோடு தேவனிடத்திற்கும், அவருடைய வார்த்தைக்கும் திரும்புங்கள். நாம், “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே! இன்னும் ஒரு விசை, எங்களுக்கு உம்முடைய பிரசன்னத்தைத் காண்பியும்!” என்று கதறுவோமாக.
81145 இயேசு, “இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம்,” அது உலக ஒழுங்கு, அது காஸ்மாஸ் என்ற வார்த்தை, சகோதரனே அதற்கு அங்கு அதுதான் அர்த்தம் என்று நான் நினைக்கிறேன். “உலக ஒழுங்கு என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்” என்று கூறினார். அதாவது விசுவாசி. “ஏனென்றால் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் காலத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள். நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியினால், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.” பாவனையாக-விசுவாசிப்பவனல்ல; ஆனால் உண்மையாக விசுவாசிக்கிறவன். ஓ, சபையே, நாம்…இயேசு மரித்து போய்விடவில்லை. அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்துள்ளார். அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். நான் அதற்கான ஆதாரத்தைப் பெற்றிருக்காவிடில், நான் அவ்வாறு கூறமாட்டேன். அவர் இங்கிருக்கிறார் என்பதை நான் அறிவேன். அவர் தாமே இங்கிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்த எப்பொழுதும் இங்கே இருக்கிறார். அவர் இன்றிரவு இங்கே நிற்பாரானால், அவர் என்னக் கூறுவார்? அவர் மீண்டுமாக வார்த்தைக்கு திரும்பிவந்து, அவர் கூறின அதே காரியத்தையேக் கூறுவார். 146 இப்பொழுது நீங்களோ, “அந்த இயேசு பேசிக்கொண்டிருந்தாரா?” என்று கேட்கலாம். பாருங்கள். இல்லையென்றால் நான் உங்களிடம் நிச்சயம் அப்படிக் கூற விரும்பமாட்டேன். நிச்சயமாகவே! “அது எப்படி நிரூபிக்கப்பட முடியும்?” ஒரு நிமிடம் உங்களுடைய தலைகளை வணங்குங்கள்.
82147 பரலோகப் பிதாவே, உம்முடைய ஊழியர்களால் அவர்கள் பேச வாஞ்சிக்கிற எல்லாவற்றையும் பேச முடியும், நாங்கள் சத்தியத்தை ஜனங்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கலாம். ஆயினும் அது இன்னமும் வெறுமனே உணர்ச்சிவசப்படுதலாகவே உள்ளது. அது ஒரு மானிட உதடுகளில் சபையோரிடத்தில் பேசிக் கொண்டிருப்பதாக இருக்கிறது. கர்த்தாவே, நீர் இயற்கைக்கு மேம்பட்டவராக இருக்கிறீர். நீர் எங்கெல்லாம் இருக்கிறீரோ, அங்கே இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களும், அங்கே அற்புதங்களும் நிகழ்த்தப்படுகின்றன, அந்த காரியங்கள் விவரிக்கப்பட முடியாது. நீர் இங்கே பூமியின்மேல் இருந்தபோது, ஜனங்கள் மத்தியில் நீர் நடந்து, வியாதியஸ்தரை சுகப்படுத்தினீர். ஒரு சமயம் ஒரு ஸ்திரீ உம்முடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அப்பொழுது நீரோ திரும்பிப் பார்த்து, “என்னை தொட்டது யார்?” என்று கேட்டீர். நீரே அதை அறிந்திருக்கவில்லை. “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டீர். ஆனால் தேவன் உமக்குள்ளாக இருந்தார். நீர் இருதயத்தின் இரகசியத்தை அறிந்திருந்தீர், ஏனென்றால் வேதம், “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று கூறுகிறது. நீர் நோக்கிப் பார்த்தபோது, அந்த எளிமையான ஸ்தீரியால் தன்னை மறைத்துக்கொள்ள முடியவில்லை. அப்பொழுது அவளுடைய விசுவாசம் அவளை இரசிட்சித்திருந்தது என்று அவளிடத்தில் கூறினீர். 148 நீரோ, “பிதாவானவர் முதலில் எனக்குக் காண்பிக்காமல் நான் ஒன்றையும் செய்வதில்லை. பிதாவானவர் கிரியை செய்கிறார், நானும் அந்தப்படியே செய்கிறேன்” என்று கூறினீர். இன்றிரவு இங்கே நீர் இருப்பீரேயானால், பிதாவானவர் நீர் செய்யும்படி காண்பித்தை நீர் அப்படியே செய்வீர்.
83149 கர்த்தாவே, இந்த சபையை இன்னும் ஒரு விசை நீர் கொண்டு வரவேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். தேவனாகிய கர்த்தாவே, இன்றிரவு இந்த ஜனங்கள் வெவ்வேறு சபைகளிலிருந்து இங்கு கூடியுள்ளனர், மெதொடிஸ்ட், பாப்டிஸ்ட், கத்தோலிக்கர், பிரஸ்பிடெரியன், பெந்தேகோஸ்தேயினர், அவர்கள் மேல் எல்லாவிதமான ஸ்தாபன பெயர்களும் உள்ளன. நீர் அந்த அடையாளப் பெயர்களை நோக்கிப் பார்கிறதில்லை, நீர் அந்த இரத்த அடையாளச் சீட்டையே நோக்கிப் பார்க்கிறீர். பரலோகப் பிதாவே, ஜனங்கள் இன்றிரவு தாங்கள் அணிந்துகொண்டுள்ள தங்களுடைய அடையாளப் பெயர்களைப் புறக்கணித்து, பெந்தேகோஸ்தே என்பது ஒரு ஸ்தாபனமல்லவென்றும், அது உம்மை நம்பும் எந்த மனிதனுக்கும், ஸ்திரீக்கும் உண்டாகிற ஒரு அனுபவம் என்பதையும் நினைவு கூர வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, வியாதியஸ்தரை குணப்படுத்தும். இழக்கப்பட்டவர்களை இரட்சியும். உமக்கே கனத்தை எடுத்துக்கொள்ளும். 150 இப்பொழுது, நான் இந்த கூட்டத்தாரை, கர்த்தாவே, இந்தக் கோர்வையற்ற வார்த்தைகளோடு உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். நான் சொல்வன்மை படைத்தவன் அல்ல. வார்த்தையைப் பேசுவதற்கு நான் போதுமான தகுதியுடையவன் அல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் இந்த காரியங்களை எடுத்து, அவர்களுக்கு வெளிப்படுத்துவார் என்றும், அவைகள் கொடுக்கப்பட்டிருந்த மனப்பான்மையிலேயே, அவைகளை அவர்களுக்கு தெரியப்படுத்துவார் என்றும் நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். தரத்தில் தாழ்வாக உணரும்படியாக அல்ல, ஆனால் மிகத் தாழ்மையாக உணரும்படிக்கேயாகும். வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் உண்மையாயும், நான் தேவனோடு இருப்பது போல, ஜனங்களோடும் நேர்மையாய் இருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும். நான் தேவனுடைய பிள்ளைகளோடு நேர்மையாயிருக்க முடியவில்லையென்றால், நான் எப்படி தேவனோடு நேர்மையாயிருக்க முடியும்? 151 தேவனே, ஜனங்கள் காலத்தின் நிழல்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், இந்த மணிநேரத்தின் செய்தியானது, “மனந்திரும்பி, பிதாக்களின் விசுவாசத்திற்கு திரும்புவதே” என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளும்படியாக, இப்பொழுதே ஜனங்களுக்கு முன்பாக நீர் இதை—இந்த இரவே ரூபகாரப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அதை அருளும். நான் அதை உம்மிடத்திற்கு சமர்ப்பிக்கிறேன். பாவிகளை இரட்சியும். விசுவாசிகளை நிரப்பும். வியாதியஸ்தரை குணப்படுத்தும். மகிமையைக் கொண்டு வாரும். நாங்கள் யாவரும் ஏக மனதோடு, “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை!” என்று கதறுவோமாக. அது இன்னும் ஒரு விசை நடக்கட்டுமே! இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம்.
84152 உங்களுடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, ஜெபத்தில், “கர்த்தாவே, இது நானா? நான் என்ன செய்யமுடியும், நான் என்ன—என்ன செய்யவேண்டும்?” என்று எண்ணிப் பார்க்கமாட்டீர்களா? இசையானது மிருதுவாக இசைக்கப்படுகையில், உங்களையே ஆராய்ந்துப் பாருங்கள். இந்த எளிய கோர்வையற்ற செய்தியைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். செய்தியாளனை நோக்கிப் பார்க்காதீர்கள், செய்தி என்னவாக—என்னவாக இருக்கிறது என்பதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இப்பொழுது உங்களுக்கு தேவன் தேவை என்பதை நீங்கள் உணருகின்றபடியால், உங்களுடைய தலைகளை நீங்கள் வணங்கியிருக்கும்போது, அப்படியே உங்களுடைய கரங்களை மெதுவாக உயர்த்தி, “கர்த்தாவே, என்னை நினைவு கூரும்” என்று கூறுங்கள். உங்களுடைய தேவை எதுவாயி ருந்தாலும் கவலைப்படாதீர்கள். “ஓ, கர்த்தாவே, என்னை நினைவு கூரும்” என்றே கூறுங்கள். 153 இப்பொழுது தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். விசுவாசியுங்கள். தேவன் உங்களிடத்தில் பேசும் வரை உங்களுடைய விண்ணப்பங்களை பற்றிக் கொண்டு, “நான் என்னுடைய விண்ணப்பத்தை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன்” என்று கூறுங்கள். 154 “கர்த்தாவே, நானும் கூட குருடாக்கப்பட்டவனாய் நிற்கிறேன். நான் என்னைக் குறித்து வெட்கமடைகிறேன். நான் ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக்கொண்டு, இந்த விதமாக நான் வாழ்ந்து வருகிறேன். எனவே நான் என்னை குறித்தே வெட்கப்படுகிறேன். கர்த்தாவே, என் மேல் இரக்கமாயிரும். என்னை குணப்படுத்தும்! சரீரப்பிரகாரமாக என்னைக் குணப்படுத்தும். ஆவிக்குரியப்பிரகாரமாகவும் என்னைக் குணப்படுத்தும். என்னை உம்முடையவனாக்கிக்கொள்ளும். உம்முடைய ஆவி என் மீது இருப்பதை நான் உணர்ந்தேன். நீர் இங்கே எங்களுடன் இருப்பதாக சகோதரன் பிரான்ஹாம் கூறினார். நான்—நான் அதை இப்பொழுது விசுவாசிக்கிறேன், ஏனென்றால் நான் உம்மை உணர்ந்தேன். நீர் இங்கிருக்கிறீர் என்பதை நான் அறிவேன்.” பரலோகத்தின் தேவன் உங்களுடைய ஜெபத்திற்கு பதிலளிப்பார். இப்பொழுது விசுவாசியுங்கள், செய்தியானது உங்களுக்குள் ஆழமாகப் பதியட்டும். ஜெபியுங்கள், விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். விசுவாசியுங்கள்.
85155 இப்பொழுது, கர்த்தாவே, புருஷரும், ஸ்திரீகளும், பையன்களும், பெண்களும் ஆலோசனை செய்து பார்ப்பதற்காக இந்த நேரத்தை நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். இது சிலருக்கு ஒரு வினோதமான செய்தியாய் இருந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் கர்த்தாவே, இது உண்மையாயிருக்கிறது என்பதை நீர் அறிவீர். இந்த பிற்பகல் அறையில் அமர்ந்துகொண்டிருந்தபோது, ஒருகாலத்தில் உமக்காக வாழ்ந்த இந்த மகத்தான மனிதனையும், அவன் அடைந்த நிலைமையையும், நீர்—நீர் இதை என் நினைவிற்குக் கொண்டு வந்தீர். இப்பொழுதும், பிதாவே, தேவனுடைய வெற்றியையும் வாக்குத்தத்தத்தையும் திரும்பக் கொண்டு வர, சிம்சோன் மரிக்க, தனக்குத்தானே மரிக்க, தன்னுடைய சத்துருவோடு மரிக்க சித்தமாயிருந்ததுபோன்று, நாங்கள் எங்களுடைய எல்லா சபைக்காரியங்களுடனும், எங்களுடைய எல்லா வேறுபாடுகளுடன், எங்களுடைய சொந்த சிந்தனைக்கு மரித்து, உம்முடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வோமாக; “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன” என்று எங்களுக்கு கூறப்பட்டிருந்த சிந்தனைகளுக்கு மரிப்போமாக. இயேசு நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். கர்த்தாவே, இந்த கூட்டத்தார் இன்னும் ஒரு விசை தேவனுடைய கரத்தின் அசைவைக் காண அருள் புரியும். அப்பொழுது அவர்கள் வந்து, மனந்திரும்ப, அதுவோ ஒரு மகத்தான கூட்டமாயிருக்கும். இந்த சிறிய சபையிலிருந்து ஒரு எழுப்புதல் புறப்பட்டு சென்று தேசத்தினூடாக உலகப்பிரகாரமான எல்லாப் பெலிஸ்தர்களையும் கொல்வதாக. ஜனங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்போது, அது ஒரு உதாரணமாக இருப்பதாக.
86156 நீர் எம்மாவூருக்குச் சென்ற வழியில் செய்ததுபோலச் செய்ய, இங்கே உள்ளே வாரும் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். நாள் முழுவதும் அந்த மனிதர்களோடு நீர் பேசினீர். அவர்கள் உம்மைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். நீரும் அவர்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தீர். ஆனால் அவர்களோ உம்மை அறிந்திருக்கவில்லை. கர்த்தாவே இங்குள்ள அநேக ஜனங்கள் சபைக்கு செல்கிறார்கள், அவர்கள் உத்தமமாயிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையாகவே வித்தியாசமாக போதிக்கப்படவில்லை. ஆனால் அப்பொழுது நீர் அவர்களோடு அறைக்குள் சென்று, அந்த இரவு, கதவை மூடினீர். நீர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு செய்த ஒரு செயலை அங்கு செய்தீர். அப்பொழுது நீர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டிருந்தீர் என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். உடனே அவர்கள் துரிதமாக ஓடிச் சென்று, மகிழ்ச்சியான இதயங்களோடு, சீஷர்களிடத்தில், மகிழ்ச்சியான இதயங்களோடு அவர்கள், “வழியிலேயே அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிய வில்லையா?” என்று கூறினர். 157 கர்த்தாவே, இன்னும் ஒரு விசை அது நடக்க அருள்புரியும். இந்த அப்பிரயோஜனமற்ற ஊழியக்காரன் அவர்களிடத்தில் பொய்யுரைத்திருக்கவில்லையென்றும், அவர்களுக்கு சத்தியத்தையே கூறியுள்ளேன் என்பதையும் அவர்கள் அறிந்துகொள்ளும்படி, இந்த கூட்டத்தாரிடத்திற்கு வந்து, உம்முடைய சிலுவையேற்றத்திற்கு முன்பு நீர் செய்த காரியங்களைச் செய்யும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
87158 இப்பொழுது, நம்மிடம் ஜெப அட்டைகள் இருந்தாலும், ஜெப வரிசையை அழைக்க நமக்கு ஒரு வழியும் இல்லை. எந்த ஜெப வரிசையும் இல்லையென்றே—இல்லையென்றே நான் நினைக்கிறேன். சில இரவுகளுக்கு முன்பிருந்தே நாம் ஜெப அட்டைகளைக் கொடுத்து வருகிறோம். இன்றிரவு அவர்கள் ஜெப அட்டைகளைக் கொடுக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் இங்கு ஜெப அட்டைகளை வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஜெப அட்டைகளைக் கொடுத்திருந்தாலும், நாம் குழப்பமுற்றுள்ள இந்நிலையில், பாருங்கள், உங்களால் ஒரு ஜெப வரிசையை அமைக்க முடியாது. இப்பொழுது, ஆனால் நாம்—நாம் இதை முடித்துவிடுவோம். ஆனால் இங்குள்ள எத்தனை பேர் சுகவீனமாயிருக்கிறீர்கள்? நாங்கள் உங்களுடைய கரத்தைக் காணட்டும். உங்களுக்கு தேவனைக் குறித்த ஒரு தேவையாயிருந்தால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள் அல்லது வேறு யாருக்காவது ஒரு தேவையிருக்குமானால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். ஜெபியுங்கள்.
88159 இப்பொழுது பயபக்தியாயிருங்கள். இப்பொழுது, நாம் இந்த செய்தியைப் இப்பொழுது புரிந்துகொள்ளத் தவறிப்போகாமலிருப்போமாக. கவனியுங்கள். இயேசுவானவர் இங்கே இந்த சூட் துணி அணிந்தவராய் நின்றுகொண்டிருப்பாரானால், நீங்கள் மேடையிலே அவரண்டை ஓடிச்சென்று, “கர்த்தராகிய இயேசுவே என்னை குணப்படுத்தும்” என்று கூறுவீர்கள். அப்பொழுது அவர் உங்களுக்கு என்ன கூறுவார் என்று உங்களுக்குத் தெரியுமா? “நான் அதை ஏற்கனவே செய்துவிட்டேன்” என்று பதிலளிப்பார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம். கிரயமானது ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது. நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். 160 நீங்களோ, “அவர் எனக்கு அருகில் இருக்கிறார் என்று என்னால் விசுவாசிக்க முடியுமானால், அவர் இங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரிந்தால் நலமாயிருக்குமே! நான்…அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு” என்று கூறலாம். 161 பாருங்கள், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் கூறியுள்ளது. நாம் அவரைக் காண விரும்புகிறோம். நான் அவரை காண்போமேயானால், அவர் முன்பு செயல்பட்டவிதமாகவே இப்பொழுதும் செயல்படுவார்.
89162 இப்பொழுது ஊழியக்கார சகோதரர்களாகிய உங்களுக்காக, சில வேத வாக்கியங்களை நான் கொடுக்கப் போகிறேன். புதிய ஏற்பாடு, “அவர் நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியராயிருக்கிறார்” என்று கூறுகிறது. அது சரிதானே? அவர் பூமியின் மேல் பிரதான ஆசாரியராயிருந்தபோது, அவர் எவ்வாறு செயல்பட்டார். ஏன், அவர் அதைக் காட்டிலும் மேலானவர், ஏனென்றால் அவர் தேவனாயிருந்தார். எப்படி—எப்படி ஜனங்களால் அவரிடத்திலிருந்து ஏதோ ஒரு காரியத்தைப் பெற முடிந்தது? ஒரு ஏழ்மையான ஸ்திரி அவருடைய வஸ்திரத்தை தொட்டுவிட்டு போய் அமர்ந்து கொண்டபோது, இயேசுவானவர் திரும்பிப் பார்த்து, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் எல்லோருமே அதை மறுத்தனர். ஆனால் அவருடைய…அவரை இம்மானுவேலாக்கின, தேவனுடைய ஆவி கிறிஸ்துவுக்குள் இருந்தபடியால், அவர் அந்தக் கூட்டத்தில் அந்த ஸ்திரீயை கண்டுபிடித்து, அவளுடைய நிலைமை என்னவாயிருந்தது என்றும், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று கூறும் வரைக்கும் சுற்றும் முற்றும் தேடினது. அது சரிதானே? பாருங்கள், இப்பொழுது, நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக் கூடிய பிரதான ஆசாரியராயிருப்பாரானால், அவர் அதே பிரதான ஆசாரியராயிருப்பாரானால், அவர் அதேவிதமாகவே செயல்படுவார்.
90163 இப்பொழுது, நீங்கள், உங்களில் அநேகர் எனக்கு அந்நியராயிருக்கிறீர்கள். இங்குள்ள இந்த முன்வரிசையில் இங்கே அமர்ந்துகொண்டிருக்கிற சகோதரன் டால்டன் அவர்களையும், அவரோடுள்ளவர்களையும், இங்குள்ள இந்த குழுவையும் நான் அறிவேன், ஏனென்றால் அவர்கள் கென்டக்கியிலிருந்து வந்திருக்கிறார்கள். நான் அவர்களை அநேக வருடங்களாகவே அறிந்துள்ளேன். நான் தவறாக உரைக்கவில்லையென்றால், பின்வரிசையில் உள்ள சகோதரன் ஜீன் கோடையும், சகோதரன் லியோ மெர்சியரையும் நான் கண்டேன் என்று நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. சகோதரர்களே உங்களை காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் சகோதரன் மற்றும் சகோதரி டௌ அவர்கள் இங்கே அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். உங்களுக்கு ஏதாகிலும் கோளாறு இருந்தால், காத்திருங்கள், இப்பொழுது அல்ல, ஜனங்களே இப்பொழுது நீங்கள் வரவேண்டும் என்று நான் விரும்பவில்லை. என்னை அறியாதவர்களும், நான் உங்களை அறியேன் என்பதை அறிந்தவர்கள் மாத்திரமே எனக்குத் தேவை. நான் உங்களுக்கு ஜெபிக்க விரும்புகிறேன்.
91164 அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருப்பாரனால், நீங்கள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டால், அப்பொழுது அவருடைய பரிசுத்த ஆவியானது எங்கள் மூலமாக கிரியைச் செய்யும். நீங்கள் சரியான வாய்க்காலை, விசுவாசிப்பதற்கான ஆவியைப் பெற்றிருந்தால், இங்கு உள்ள அதே வாய்க்காலில், அது அதேவிதமாக அங்கு கிரியை செய்யும். அது கிரியை செய்தாக வேண்டும், ஏனென்றால் அது தேவனே! ஒரு ஆப்பிள் மரத்தில் உள்ள ஜீவனை ஒரு பீச் மரத்திற்குள் செலுத்தினால், அது ஒருபோதும் பீச் பழங்களைத் தராமல், அது ஆப்பிள் பழங்களையேத் தரும். நீங்கள் கிறிஸ்துவின் ஜீவனை மரித்துப் போகக் கூடிய ஒரு—ஒரு மனிதனுக்குள் செலுத்தினால், அப்பொழுது அவன் ஆவியின் கனிகளைக் கொடுப்பான். அவன் உயிர்த்தெழுதலின் கனிகளைக் கொடுப்பான்.
92165 கிறிஸ்து இந்த செய்தியை அளித்திருக்க, இந்த—இந்த செய்தியை சபையானது, “உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும்” கொண்டு செல்ல வேண்டும். கோடிக்கணக்கானவர்கள் அதை இன்னும் கேட்கவில்லை. தேசங்கள் அதை இன்னும் கேட்கவில்லை. எவ்வளவு தூரத்திற்கு? “உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும், விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்.” எவ்வளவு தூரம்? “உலகமெங்கும்.” யாருக்கு? “சர்வ சிருஷ்டிக்கும்.” அப்படித்தான் அவர் சபைக்கு கட்டளையிட்டார். இப்பொழுது அவர் அந்தக் கட்டளையை எங்கே எடுத்துவிட்டர் என்பதை நீங்கள் வேதத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள். மனிதர் தங்களுடைய சொந்த கருத்துக்களை நுழைக்கலாம், ஆனால் அது தேவனுடைய கருத்தல்ல. அவர், “உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும்” என்றார். [ஒலிநாடா முடிவடைகிறது. சகோதரன் பிரான்ஹாம் ஜனங்களுடைய இருதயங்களின் இரகசியங்களைத் தொடர்ந்து பகுத்தறிகிறார்—ஆசி.]