1 இந்தக் காலையில் மீண்டுமாக இந்த ஸ்பானிய ஜனங்களுக்கு மத்தியில் வந்திருப்பது நிச்சயமாகவே ஒரு சிலாக்கியமாய் உள்ளது. ஜிம் அவர்களுக்கு இது கேட்கிறதா என்று நான் வியக்கிறேன். ஓ, அவர் ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்னால் சகோ.கார்சியாவுடன் நான் இங்கு வந்திருந்தபோது, அந்த சிறு ஸ்பானிய பாடகர் குழு பாடிய பாடலின் ஒலிப்பதிவினை நான் இன்னமும் வைத்துள்ளேன். அவர்கள் எனக்குப் பாடின அந்த சிறு பாடலை நான் மறந்துவிட்டேன். ஆனால், ஓ, நான் எவ்வளவாய் அதை விரும்பினேன்! அதைப் பாடிய அந்த சிறுவர்கள் எல்லாரும் இப்பொழுது வளர்ந்து, அவர்களுக்கு திருமணமும் நடந்து விட்டது. நான் அவ்வப்போது அவர்களைக் குறித்து கேள்விப்படுகின்றேன். இந்தக் காலையில் நான் இங்கு உள்ளே நடந்து வந்தபோது, குட்டி ஜோசப்பைக் கண்டேன். இப்பொழுது உண்மையாகவே அது எனக்கு ஏதோ ஒரு காரியத்தைச் செய்தது, நான் நிச்சயமாகவே உங்களைக் காண்பதற்கு மகிழ்ச்சி அடைந்தேன். 2 இப்பொழுது, ஸ்பானிய மொழியில் என்னால் கூற முடிந்த ஒரே ஒரு வார்த்தையை நான் அறிந்துள்ளேன். நீங்கள் அதைக் கேட்க விரும்புகிறீர்களா? “அல்லேலூயா.” நான் அந்த வார்த்தையை ஒருபோதும் மறக்கவே மாட்டேன். ஒரு சமயம் ஒரு செவிட்டுப் பெண் நான் கூறுவதைக் கேட்கும்படிக்கு முயற்சித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது, ஒரு வேளை நான் இதைக் கூறுவது முழுவதும் தவறாயிருக்கலாம், நீங்கள் பாருங்கள், ஆனால் எனக்கு ஞாபகம் உள்ளவரைக்கும், அது, ‘ஓயி’ என்ற ஸ்பானிய சொல்லாய் இருந்தது. அது சரிதானே? ஸ்பானிய மொழியில் நான் கூறுவது கேட்கிறதா என்பதற்கு, கேட்பது என்பதற்கு ஓயீ என்ற வார்த்தையாம். பின்பு “க்ளோரியா அ டயாஸ்!” என்னும் ஸ்பானிய சொற்களையும் நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். அற்புதமானது! ஓ, நான் தலைநகரான மெக்ஸிகோ நகரத்துக்கு சென்று அங்கிருந்தவர்களுடன் பேசும் வாய்ப்பு எனக்கு உண்டாயிருந்தது. அப்பொழுது நான் எவ்வளவு மகிழ்ச்சியாயிருந்தேன்! நான் வழக்கமாக…
23 நான் இங்கிருந்த பிறகு நான் பின்லாந்துக்கு சென்றேன். அப்பொழுது, ஒரு சிறு பின்லாந்து பெண்ணினிடம் பேசினது எப்பொழுதும் என்னுடைய நினைவிற்கு வரும். “பெத்தானி” என்று அவர்கள் அழைக்கும் இடத்துக்கு அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள்: ஒவ்வொரு தேசமும் தன் சொந்த கருத்தைக் கொண்டுள்ளது. (உங்களுக்கு சத்தம் எதிரொலிக்கிறதா, நான் ஒலிபெருக்கிக்கு மிக அருகாமையில் இருக்கிறேனோ? நான் பேசுவது உங்களுக்கு சரியாகக் கேட்கிறதா? இப்பொழுது எப்படியிருக்கிறது?) இந்த சிறு ஸ்திரீ அவள் ஒரு அருமையான சிறு நபராயிருந்தாள். ஆனால் அவள் என்னைப்போல் அதிகமாக பேச விருப்பம் கொண்டவள். அந்த மொழி பெயர்ப்பாளர்…அவள் மிக வேகமாகப் பேசினாள். ஆனால் அவள் என்ன கூற வேண்டுமென்றிருந்தாளோ அதை மொழிபெயர்பாளாரால் அவ்வளவு வேகமாக மொழிப்பெயர்த்துக் கூற முடியவில்லை. அவள் தன்னுடைய முகம் சிவக்க அங்கு நின்று, “இந்த நபர்கள் பாபிலோனில் இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்” என்றாள். 4 ஆனால், உங்களுக்குத் தெரியுமா, பறவைகள் எல்லாம் ஆங்கிலத்தில் பாடுவதையும், நாய்கள் ஆங்கிலத்தில் குரைப்பதையும், குழந்தைகள் ஆங்கிலத்தில் அழுவதையும் நான் கவனித்திருக்கிறேன். எப்படியும் நம்மோடு உள்ள காரியம் என்ன என்றே நான் வியப்புறுகிறேன். ஆனால் நாம் ஒவ்வொருவரும் நமது—நம்முடைய மொழிதான் ஆயிர வருட அரசாட்சியின் போது பேசப்படும் மொழியாயிருக்கும் என்று உண்மையாகவே நினைத்துக்கொள்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள நமக்கு பரலோக மொழி ஒன்றுண்டு என்பது உண்மை.
35 இந்தக் காலையில் சகோதரன்.ரோ. இங்கு நம்முடன் இருக்கிறார். அவர் வாஷிங்டனில் ஒரு அரசியல் நிபுணராக பணியாற்றுகிறார். அவர் ஐந்து அல்லது ஆறு, ஏழு ஜனாதிபதிகளிடம் பணிபுரிந்திருக்கின்றார் என்று நான் நம்புகிறேன். அவ்வளவு பெரிய மனிதர் எனக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் போது, இந்த மேடையின் மேல் நின்று நான் பேசுவதை எப்படி உணருகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆனால் அவருடைய சாட்சி எனக்கு அப்பேர்ப்பட்ட தலை சிறந்த ஒன்றாக விளங்குகிறது, விஷேஷமாக அவர்… அவர் லூத்தரனாயிருந்தார் என்று நான் நினைக்கிறேன். அதை நான் தவறாக கூறவில்லையென்று எண்ணுகிறேன், அவர் கத்தோலிக்கரோ அல்லது லூத்தரனோ, லூத்தரன். அவர் சொன்னார்…அவர் பெந்தேகோஸ்தே கூட்டம் நடக்கும் கூடாரத்திற்குள் நுழைந்து சென்றாராம். அவர் எழுந்து நின்றாராம்… இறுதியில் அவர் தானாகவே பீடத்தண்டை சென்றாராம். அவர் அப்படி செய்தபோது, கர்த்தர் அவர் மீது இறங்கி அவரை மிக அதிகமாக ஆசீர்வதித்தாராம்… அவரால் ஏழு வெவ்வேறு பாஷைகள் பேச முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர் சொன்னார், அவர் ஒரு பாஷையை பேச முயற்சி செய்தாராம், “அது கிரியை செய்யவில்லை,” அதன்பின்னர் மற்றொன்றை பேச முன்றாராம், “அதுவும் கிரியை செய்யவில்லையாம்.” அவரால் உங்களைப் போல் ஸ்ப்பானிய மொழியை நன்றாக பேசமுடியுமென்று நான் நினைக்கிறேன். அவர்—அவர் எல்லா பாஷைகளையுமே முயற்சி செய்து பார்த்தாராம், அவை யாவும் கிரியை செய்யவில்லையாம். பிறகு பாருங்கள், என்னவென்று தெரியுமா, தேவன் மிகவும் நல்லவராய் இருந்தார், அவர் கீழே இறங்கி வந்து, அவர் அதற்கு முன்பு ஒருபோதும் பேச முயற்சி செய்யாத ஒரு பாஷையை கொடுத்தாராம். “இது கிரியை செய்கிறதே!” என்று கூறினார். அது உண்மை. மறு கரையிலே அது அந்தவிதமாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
46 ஒரு சிறு சபையைக் குறித்து என் உள்ளத்தில் பல நினைவுகள் உள்ளன. நான் நினைக்கிறேன். அது…ஓ, அது எங்கிருக்கிறது என்பதை நான் மறந்துவிட்டேன். அது இங்கு எங்கோ டோன்டோ தெருவின் அருகில் உள்ளது. நான் அதை நினைவு கூருகிறேன். “டோன்டோ தெரு” என்னும் வார்த்தையை குறித்து என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. அத்தெருவில்தான் முன்னர் ல்ப்பானிய அப்போஸ்தல சபை இருந்தது. 7 நான் போதகரிடத்தில், “இது எழுப்புதல் கூட்டம் நடத்த ஒரு பிரமாண்டமான இடமாயிருக்கும்” என்று கூறிக்கொண்டிருந்தேன், இதில் நிறைய இடமும், இது புதிய சபையாயும், இதில் அருமையான ஜனங்களும் உள்ளனர். ஆகவே என்றாவது ஒரு நாள் இங்கு எழுப்புதல் கூட்டம் நடத்துவதற்கு இது ஏற்றதாயிருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இங்கு வந்து ஒரு எழுப்புதல் கூட்டம் நடத்துவதற்காக நீங்கள் ஜெபியுங்கள். இப்பொழுது, மற்ற சபையில் நமக்கிருந்த எழுப்புதல் போலவே இதுவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த எழுப்புதல் கூட்டத்தின்போது நான் முற்றத்தில் நின்று கொண்டு, வேலியின் மேல் சாய்ந்து கொண்டு, தெருவில் இங்குமங்கும் நடந்து, இரவு நேரத்தில் யாரும் காணாமல் இங்கிருந்து புறப்பட்டுச் செல்ல முயன்றதை நான் நினைவு கூருகிறேன். அது நிச்சயமாக நான் மறக்க முடியாது ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவமாயிருந்தது. அங்கே அந்த சிறுமிகளும், சகோதரரும் சேர்ந்து பாடின பாடல்களின் ஒரு—ஒரு ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது. அவர்கள் “நம்பிடுவாய்” (Only Believe) என்ற ஆங்கிலப் பாடலை பாட முயன்ற போது, அதை சரிவர உச்சரிக்கவில்லை, உங்களுக்குத் தெரியுமா? ஆகவே “ஒன்லி பிலீவ்” என்று ஆங்கிலத்தில் பாடுவதற்கு பதிலாக அவர்கள் “இயோனே பிலிவ்” (Yeonea Believe) என்று பாடியிருக்கிறார்கள், பாருங்கள்.
58 அதே சமயத்தில் என் மகள் ரெபேக்காள், சாராள் இருவரும், “அப்பா, அந்த சிறுமிகள் பாடின ஒலி நாடாவைப் போடுங்கள்…” என்று கேட்பது என் நினைவுக்கு வருகிறது. அவர்கள் “ஸ்ப்பானிய சிறுமிகள்” என்று கூறுவதற்கு பதிலாக, “ஸ்பினாக் சிறுமிகள் பாடிய ‘ஒன்லி பிலீவ்’ என்ற ஆங்கிலப் பாடலைப் போடுங்கள்” என்பார்கள். அவர்களால் “ஸ்பானிஷ்” என்னும் சொல்லை சரியாக உச்சரிக்க முடியவில்லை. 9 அவர்கள் கூட்டத்தை பின் தொடர்ந்ததை நான் நினைவு கூருகிறேன். அப்பொழுது எழுப்புதல் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் கூட்டத்தை பின் தொடர்ந்து, மேற்கு கரை வரைக்கும் வந்தார்கள். நான்…நாங்கள் கலிபோர்னியாவிலிருந்து புறப்பட்டபோது ஒரு சிறு காரியம் என் இருதயத்தில் நங்கூரமிட்டது. சகோ.மூரும், நானும், சகோ.ப்ரெளனும் வழியிலே தலைநகரில் இருந்தோம். அன்றிரவு அந்த கட்டிடத்தினூடாக நான் சென்றபோது, அந்த சிறுவர்கள் அங்கு நின்று கொண்டு “அவர் உனக்காக கவலை கொள்கிறார்” என்னும் பாடலைப் பாடினார்கள். நீங்கள் அதைக் கேட்டிருக்கிறீர்கள். “சூரிய வெளிச்சமானாலும் அல்லது நிழல்களானாலும், அவர் உனக்காக கவலை கொள்கிறார்.” பல சமயம் வெளிநாடுகளில் உலகத்தின் யுத்தங்களில் ஏற்படும் கடுமையான போராட்டங்களினூடே கிறிஸ்துவின் செய்தியை நான் கொண்டுவர முயற்சிக்கும்போது, அப்பொழுது அந்த சிறு பெண்பிள்ளைகளும், பையன்களும் பாடுகிற, “அவர் உனக்காக கவலை கொள்கிறார், சூரிய வெளிச்சமானாலும் அல்லது நிழல்களானாலும், அவர் எப்பொழுதும் உனக்காக கவலை கொள்கிறார்” என்னும் பாடலே எனக்கு நினைவிற்கு வரும். ஆகவே அது எனக்கு ஒரு பெரிய எழுச்சியாகவும், ஒரு உதவியாகவும் இருந்து வருகிறது.
610 உங்களுடைய அருமையான மேய்பரைச் சந்தித்து, சபையானது உயிருள்ளதாயிருக்கக் காண்பதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இங்கே எல்லோரும் அமரும்படியாகவும், வாகனங்களை நிறுத்த ஏராளமான வசதியுங்கொண்ட இந்த பெரிய அழகிய கட்டிடத்தைப் பெற்றுள்ளீர்கள். பரிசுத்த ஆவியின் கரங்களில் இது நல்ல இடமாக அமைந்துள்ளது. நாம் ஒரு பெரிய எழுப்புதல் கூட்டம் நடத்த அழைப்பு விடுவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து, அதைக்காண நம்மால் அவரை அழைக்க முடிந்தால், அப்பொழுது அவர் அந்த எழுப்புதலை அளிப்பார் என்று நான் நம்புகிறேன்.
711 இப்பொழுது, இன்றிரவு நாங்கள் இயேசுவின் நாமம் சபை என்றழைக்கப்படும் சகோதரன் அவுட்லாவின் சபைக்கு போகிறோம், அது மற்ற பக்கத்தில் உள்ளது. சகோதரன் அவுட்லாவின் சபை…அதுவும் கூட அப்போஸ்தல சபை என்றுதான் நான் நினைக்கிறேன். அவர் தம்முடைய சபையை, இயேசுவின் நாமம் சபை என்று அழைத்தாலும், அவர் அப்போஸ்தல விசுவாசம் கொண்டவராயிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஆகவே இன்றிரவு நாங்கள் அங்கிருப்போம். இப்பொழுது நாங்கள் இந்த ஸ்பானிய சபையை, “அங்கே வாருங்கள்” என்று கூறவில்லை, ஏனென்றால் நீங்கள் உங்களுடைய கடமையின் பாதையில் தரித்திருங்கள். அதன்பின்னர் வியாழக்கிழமை முதல், மற்ற சபைகளிலுள்ள ஆராதனைகள் முடிந்தவுடன், கிறிஸ்த வர்த்தக புருஷர்களின் ஒரு பெரிய கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டங்களில் தலைச்சிறந்த பேச்சாளர்கள் பங்கு கொள்ளப்போகிறார்கள். ஆகவே ஓரல் ராபர்ட்ஸ், மற்றும் சமீபத்தில் இரட்சிக்கப்பட்ட ஏதோ ஒரு மெதோடிஸ்டு சகோதரன் அவர்களும் கலந்துகொள்கிறார்கள். இந்த சகோதரன் மிகவும் வல்லமையாக பிரசங்கம் செய்கிறார் என்று அவர்கள் கூறுகின்றனர். எனவே நீங்கள் இந்தக் கூட்டங்களில் அதிக மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நான் நிச்சயமாகவே நம்புகிறேன். சகோதரன் அறிவித்தது போல, பத்தொன்பது வயதுக்குட்பட்ட வாலிபப்பருவத்தினருக்கான கூட்டமும் அங்கே பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக என்னுடைய பிள்ளைகளை நான் கொண்டு வருகிறேன். எனவே அங்கு வாருங்கள். நீங்கள் வருவது எங்களுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
812 இப்பொழுது நான் வேதாகமத்தைத் திருப்பி, அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தை சிலவற்றை படிக்க விரும்புகிறேன். இக்காலை வேளையில் சிறிது நேரம் பேசுவதற்காக இதை நான் தெரிந்து கொண்டேன். உங்களை நான் நீண்ட நேரம் பிடித்து வைக்க விரும்பவில்லை, பாடப்பகுதிக்கான ஒரு சில வசனங்கள். அவைகளில் ஒன்று சாமுவேலின் முதலாம் புத்தகத்தில் உள்ளது மற்றது ஏசாயாவில் கண்டறியப்பட்டுள்ளது. நான் முதலில் ஏசாயாவிலுள்ள பாகத்தை படிக்க விரும்புகிறேன். மேலும் நான்… 13 சுற்றிலும் உள்ள நீங்கள் எல்லோருமே நான் பேசுவதை நன்றாகக் கேட்க முடிகிறதா? இந்த இரு ஒலிபெருக்கிகளும் அதிகமாக ஒலியை பெருக்குவது போல் எனக்குத் தென்படுகிறது. அது ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அங்குள்ள உங்கள் எல்லோருக்கும் தெளிவாக கேட்கிறதா? அப்படியானால் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நல்லது, நல்லது.
914 இப்பொழுது, எனக்கு தொண்டை சிறிது கரகரப்பாய் உள்ளது, அது அதிகம் பேசுவாதால் விளைந்த ஒன்று, பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்பானிய சகோதரர்களின் மத்தியில் நான் வந்திருந்த அன்று முதற்கொண்டு, அது ஒருக்கால் பதினாறு அல்லது பதினேழு ஆண்டுகள் இருக்குமென்று நான் யூகிக்கிறேன், அது முதற்கொண்டு நான் பிரசங்கித்துக் கொண்டேயிருக்கிறேன். ஆகையால் நான் அப்பொழுது களைப்படைந்துவிட்டதையேக் கூறினேன். நான் இன்னமும் களைப்படைகிறேன், ஆனால் நான் தேவனுடைய கிருபையினால் இன்னமும் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். 15 இப்பொழுது நான் ஏசாயா, 40, 40-ம் அதிகாரத்துக்கு திருப்புவோம்; பிறகு 1சாமுவேல் முதலாம் அதிகாரம் இல்லை, 3-ம் அதிகாரம் நாம் வார்த்தையை வாசிப்பதற்காக இவ்விடங்களை எடுத்துள்ள இவ்வேளையில், நாம் நம்முடைய தலைகளை அப்படியே ஒரு நிமிடம் ஜெபத்திற்காக வணங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
1016 எங்கள் பரலோகப் பிதாவே, தேவனுக்கென்றும் அவருடைய ஊழியத்துக்கென்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த அழகான பிரகாரத்தில் நின்று கொண்டிருக்கும் இந்த சிலாக்கியத்திற்காக நாங்கள் இன்று நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இங்கே இந்த மேடையில் அல்லது பிரசங்க பீடத்தின் பின்னே, உம்முடைய ஊழியக்காரர்கள் உம்முடைய ஊழியத்திற்கென்று ஒரு அர்பணிக்கப்பட்ட ஜீவியத்தோடு பல முறை நின்றிருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். 17 அதாவது இது இந்தக் காலையில் கடந்த கால நினைவுகள், அதாவது பரிசுத்த ஆவியானவர் ஒரு பெரிய ஒளியின் ரூபத்தில், ஒரு அக்கினி ஸ்தம்பத்தைப் போன்று இறங்கி வந்து, ஒரு எழுப்புதல் துவங்கியிருந்த நேரத்தில், செய்தியானது உலகம் முழுவதும் விரைவில் பரவும் என்று உரைத்திருந்த அந்த நினைவுகளே எங்களுக்கு திரும்பவும் வருகிறது. இப்பொழுது இன்றைக்கு அதுவோ சரித்திரமாய் உள்ளது. ஓரல் ராபர்ட்ஸ், டாமி ஆஸ்பார்ன், டாமி ஹிக்ஸ் இன்னும் மற்ற அநேகர் அதைக் கண்ட பின்பு, அவர்கள் மூலம் செய்தி பற்றி எரிந்தது. நாங்கள் ஒருமித்து செய்த உழைப்பின் பலனாக இந்தச் செய்தி—பெந்தெகொஸ்தே செய்தி—வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு தேசத்திலும் எழுப்புதல் அக்கினியை கொழுந்து விட்டு எரியச் செய்து கொண்டிருக்கிறது. இதற்காக, ஓ வல்லமையுள்ள தேவனே, நாங்கள் நன்றியும் துதியும் உமக்கு செலுத்துகிறோம்.
1118 இப்பொழுது இன்று எங்கள் இருதயத்தைப் பக்குவப்படுத்தி, விரைவில் சம்பவிக்கும் என்று நாங்கள் விசுவாசிக்கிற அந்த மகத்தான எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக எங்களை ஆயத்தப்படுத்தியருளும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அதற்கு, அல்லது நீர் எங்களுக்காக வைத்துள்ள வேறெதற்காவது, எங்கள் இருதயங்கள் பக்குவப்படாமலிருக்குமானால், எங்கள் குறைகளை நீர் எங்களுக்கு மன்னித்து, இன்று உம்முடைய வார்த்தையின் மூலம் எங்களுடன் பேசவேண்டுமென்று நாங்கள் உம்மிடத்தில் ஜெபிக்கிறோம். இந்த சபையின் போதகரையும், இதன் உதவிக்காரர்களையும், தர்மகர்த்தாக்களையும், சபையின் அங்கத்தினர் அனைவரையும் ஆசீர்வதியும். இந்த சிறு பாடற் குழுவினரையும், இசைப் பேழையை இசைப்பவரையும், இசைக்கருவிகள் இசைப்பவர்களையும் ஆசீர்வதிப்பீராக. இந்த இடத்தின் வாசலுக்குள் பிரவேசிக்கும் யாவரையும் ஒருமிக்க ஆசீர்வதியும். அவர்கள் உட்பிரவேசித்த போது இருந்ததைக் காட்டிலும், அவர்கள் வெளியே செல்லும்போது ஒவ்வொரு முறையும், மாற்றமடைந்து, உம்மிடம் சிறிது அதிக நெருக்கமாக சேர்ந்திருக்க அருள் புரிவீராக. பிதாவே, இதை அருளும். இக்காலை வேளையிலும் அது அப்படியே இருப்பதாக, ஏனென்றால் நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
1219 இப்பொழுது நாம் ஏசாயாவின் புத்தகம் 40-ம் அதிகாரத்துக்கு திருப்பி, அதை வாசிப்போம். என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படுமென்றும், கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று. இப்பொழுது சாமுவேலின் புத்தகம், 1 சாமுவேல் 3-ம் அதிகாரம், நான் 1, 2 மற்றும் 19-ம் வசனங்களைப் படிக்க விரும்புகிறேன். சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை: ஒரு நாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார், அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, 19-ம் வசனம்: சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போக விடவில்லை.
1320 ஓ, நாம் இங்கே ஒரு மாத காலம் பேசுவதற்கு இந்த வேதவாக்கியங்கள் போதுமானவையாயிருக்கும். இந்த மகிமையான வேதவாக்கியங்களிலிருந்து நாம் நிறைய சந்தர்ப்பங்களைப் பேசலாம். ஆனால் இன்று காலை வேளையில் நாம் குறித்த நேரத்தில் வெளியேறுவதற்கு நமக்கு கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் மட்டுமே உள்ளன… ஞாயிறு வேதபாட பள்ளி முடிந்திருக்கும் என்று நான் யூகிக்கிறேன் அல்லது அது இதற்குப் பிறகு ஒரு வேளை நடக்கலாம், எனக்குத் தெரியாது. ஆனால் எப்படியிருந்தாலும், நான், இந்த கடைசி நாட்களில் தேவனுடைய சத்தம் என்னும் பாடத் தலைப்பையே உபயோகிக்க விரும்புகிறேன். 21 அது மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு நேரமாக இருந்தது. நாம் எந்த வேதபாகத்திலிருந்து இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறோமோ, அதில், “சாமுவேலின் நாட்களில் பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை” என்று கூறப்பட்டுள்ளதை நாம் தெளிவாக அறிந்துகொள்கிறோம். “தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்” என்று வேதம் உரைத்துள்ளது. நாம் ஒரு தரிசனத்தை உடையவர்களாயிருக்க வேண்டும். தரிசனங்கள் தீர்க்கதரிசிகளுக்கு வருகின்றது. அது அவர்களிடம் உரைக்கப்படும் கர்த்தருடைய வார்த்தையாயுள்ளது.
1422 ஏலி ஒரு தீர்க்கதரிசியாயிருக்கவில்லை, அவன் ஒரு ஆசாரியனாயிருந்தான் என்று நாம் கண்டறிகிறோம். அவனுக்கு வயதாகிக்கொண்டிருந்தபோது, அவனுடைய கண்கள் இருளடைந்து கொண்டிருந்தன, எனவே அவனுக்கு சுற்றிலும் செல்ல பார்வை இல்லாதிருந்தது. அவன் பெரிய தேக அமைப்பு கொண்டவனாயிருந்தான். அவன் கர்த்தருடைய பணியைத் துவங்கி, அதை செய்து முடிக்காமல் அப்படியே விட்டுவிட்டான். 23 இன்றைக்கு உள்ள ஒரு காரியம் போலவே அது இருந்தது. சபை, அந்த ஸ்தாபன அமைப்பு மற்றும் ஸ்தாபனங்கள் சுவிசேஷ பணியில் நீண்ட நாள் ஈடுபட்டு, இப்பொழுது அவர்கள் தளர்ந்த நிலையை அடையத் தொடங்கியிருக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன். கர்த்தருடைய பணிசெய்யப்படாமல் விடப்பட்டுள்ளது. சத்திய வார்த்தை, உரைக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. ஏனெனில் ஸ்தாபன சபையின் பார்வை இருளடைந்துள்ளது. தேவனுடைய சத்தம் நம் மத்தியில் பேசி, நம்மை முன்னிருந்த நிலைக்கும் கொண்டு செல்வதே இன்றைய நமது தேவையாயுள்ளது. 24 பாருங்கள், ஏலி படுத்துக் கொண்டிருந்தான்…அவன் பார்வை மங்கிக் கொண்டிருந்தது. அவன் ஒரு ஆசாரியனாயிருந்தான். அவர்களுக்கு அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து பிரத்தியட்சமான தரிசனம் இல்லாதிருந்தது. அது மிகப்பெரிய தேவையாயிற்றே!
1525 தேவன் அந்தந்த வேளைக்கான தேவையை சந்திப்பதாக வாக்களித்திருக்கிறார். அவர் எப்பொழுதும் அதை செய்கிறார். இந்த நேரத்திற்கான தேவையை சந்திக்கவும், நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற இந்நேரத்தைச் சந்திக்கவும் நமக்கு இன்று தேவனுடைய சத்தம் தேவையாயுள்ளது. அவர் அதை வாக்களித்த பிறகு, அவர் அந்த வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்ளுவார் என்று நாம் உறுதி கொள்ளமுடியும். அவர் தேவையை சந்திப்பார் என்று வாக்களித்ததின் பேரில் ஒரு விசுவாசி கொண்டிருக்கும் உறுதியே தன் சிருஷ்டிகரின் மேல் வைத்திருக்கும் அந்த நம்பிக்கையாயுள்ளது. 26 இன்றைக்கு சபை இந்நிலையிலுள்ளதற்கு ஒரு காரணம் என்னவெனில் அநேக சத்தங்கள் இருக்கின்றதே அதற்கு காரணமாகும், எனவே சபை தேவனுடைய சத்தத்தைக் கவர்ந்து கேட்கக் கூடாதபடிக்கு அதை திசை திருப்ப பல்வேறு சத்தங்கள் இருக்கின்றன. அதன் விளைவாக தேவனுடைய சத்தம் அவர்கள் மத்தியில் பேசின போதிலும் அவர்கள் அதை கேட்பார்களா என்பது மிகவும் சந்தேகமாயுள்ளது. அவர்களால் ஒருவேளை அதை புரிந்து கொள்ளவுங்கூட முடியாமலிருக்கலாம், ஏனெனில் அது அவர்களுக்கு ஒரு அந்நிய காரியமாக இருக்கும். அவர்கள் இந்நாளில் காணப்படும் பல்வேறு சத்தங்களுக்கு தங்களை மையப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1627 நாம் வாசித்த நம்முடைய வேத வாசிப்பை கவனிப்போமானால், தேவனுடைய சத்தம் அவர்களுக்கு அந்நிய காரியமாக இருந்தது. 28 இன்றைக்கும் கூட தேவனுடைய சத்தம் மீண்டும் அந்தவிதமாகத்தான் மாறிவிட்டது…பல்வேறு சத்தங்கள் இருக்கின்றன. ஆகையால் தேவன் தம்முடைய சத்தத்தை அளிப்பதாக வாக்களித்திருந்தால், அப்பொழுது மற்ற சத்தங்கள் அந்த தேவனுடைய சத்தத்திற்கு முரண்பாடாயிருந்தால், அப்பொழுது தேவனுடைய சத்தம் பேசப்படும்போது, அதை நாம் புரிந்து கொள்ளாதபடிக்கு நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும்படியான நம்முடைய சத்துருவின் சத்தமாய் அது இருக்க வேண்டும். 29 அது ஏலியோடும், சாமுவேலோடும் இருந்த ஒரு காரியத்திற்கு ஒத்ததாக இருப்பத நாம் கவனிக்கிறோம், ஆனால் ஏலி அது தேவன் என்று உடனே அடையாளங் கண்டு கொண்டான். அது முற்றிலும் ஏலியின் பேரிலான ஒரு—ஒரு தேவப் பழியாயிருந்தது. காரணம் தேவனுடைய சத்தம் சாமுவேலிடம் பேசினபோது, அது ஏலியினுடைய தவறுகளைக் குறித்து அவனிடத்தில் எடுத்துரைத்திருந்தது, ஏனென்றால் அவன் தன் குமாரரை அடக்காமலிருந்தான், அவர்கள் காணிக்கையின் பணத்தையும், பலியின் இறைச்சியையும் அபகரிக்கின்றனர் என்று அவர்கள் கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் அப்படி செய்தது தவறாகும். அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு முரணான தவறான காரியங்களை செய்து கொண்டிருந்தனர்.
1730 மேலும் சாமுவேல்…சாமுவேலால் செய்ய முடிந்த ஒரேக் காரியம், அதை அப்படியே கூறுவதேயாகும். அதை ஏலியிடம் அறிவிக்க சாமுவேல் சற்று தயக்கமுற்றிருந்தான். ஏனெனில், அது அவனை ஆலயத்தில் வளர்த்து வந்த ஏலிக்கு விரோதமாக அமைந்திருந்தது. ஆனால் ஏலி, “மறைக்காமல் சொல்” என்றான். புரிகிறதா? அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் மறைக்காமல், என்ன நடக்கப் போகிறதென்று அப்படியே …இல்லை, கூறி, “ஏலி ஆசாரியனாயிருந்த நாட்கள் முடிவடைந்து விட்டது” என்று கூறினான். ஏனெனில் தேவன் அதை உரைத்தார். தேவன் தமது செய்தியை தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் மூலம் அனுப்பிக் கொண்டிருந்தார். சாமுவேல் மிக விநோதமான பிறப்பாய், ஒரு குழந்தை பருவம் முதற்கொண்டே தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தான். தேவன் அவனிடத்தில் ஒரு பிள்ளைப் பருவத்திலிருந்தே பேசி, அவனுக்கு முன் வைக்கப்பட்டிருந்த ஊழியத்திற்காக அவனை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார். ஏலியினுடைய காலம் முடிவுற்றுகொண்டிருந்தது.
1831 இன்றைக்கு பூமியில் அநேக சத்தங்கள் உள்ளன, அவை முற்றிலும் கடினமானவையாயுள்ளன, ஏனெனில் அவை இயற்கைக்கு மேம்பட்டதின் சத்தத்தை அமிழ்த்திவிடுகின்றன. பல நுண்ணறிவுள்ள சத்தங்கள், நுண்ணறிவு மிக்க மகத்தானவர்களின் பெரிய சத்தங்கள், அதாவது அவர்கள் தங்களுடைய நுண்ணறிவின் விளைவால் தேசங்களையே அசைத்துள்ளனர். அவர்கள் ஒரே இரவில் தோன்றியவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் பெரிய ஸ்தாபனங்களை ஒன்றாக கூட்டி, பெரிய கூட்டங்கள் நடத்தி, தங்கள் சிறப்பான பேச்சுகளின் மூலம் தேசங்களையே குலுக்கினவர்கள். இதைக் காணும் ஒரு நபர் சற்று குழப்பமுறலாம். இவை எவ்வாறு தொடர்ந்து நடந்து செழிப்படைகின்றன என்பது அவர்களைப் போதிய அளவுக்கு குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சத்தங்கள் எழுந்து இவைகளைச் செய்யும்போது, அவை உண்மையான தேவனுடைய சத்தத்தை எங்கோ பின்னால் தள்ளி விடுவதற்கே காரணமாகிறது.
1932 “தேவனுடைய சத்தம்”. “அது தேவனுடைய சத்தம் என்று நாங்கள் எப்படி அறிவது” என்று கேட்கின்றனர். ஏனெனில் இன்றைக்காக…அப்பொழுது அது ஒரு ரூபகாரப்படுத்த தீர்க்கதரிசிக்குள் இருந்தது. இப்பொழுது, அது தேவனுடைய சத்தம் என்று இன்றைக்கு எப்படி அறிந்து கொள்வது என்றால், அது தீர்க்கதரிசியினுடைய வார்த்தையின் வெளிப்படுத்தலாய் அமைந்திருக்கும். இது தான் தேவனுடைய தீர்க்கதரிசி ஆகும். ஒரு உண்மையான தேவனுடைய சத்தம் உண்மையான, ஜீவிக்கிற, இயற்கைக்கு மேம்பட்ட தேவனையும், அவருடைய இயற்கைக்கு மேம்பட்ட வார்த்தையோடு, உண்மையான வார்த்தையின் இயற்கைக்கு மேம்பட்ட வெளிப்படுத்துதலையுமே திரும்பக் கொண்டு வருகிறது. அப்பொழுது அது தேவனுடைய சத்தம் என்று நாம் அறிந்து கொள்கிறோம். ஏனெனில் அந்த இயற்கைக்கு…மற்ற ஆதிக்கங்களில் வேறு அநேக சத்தங்கள் இருந்து கொண்டு, உண்மையான தேவனுடைய சத்தத்தை அமிழ்த்தி விடுகின்றன. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அது பிரகாசிக்கும், அது புறப்பட்டு வரும். அது நிச்சயம் இதைச் செய்யும்.
2033 இப்பொழுது, இன்று அரசியல் உலகில் ஒரு சத்தம் உள்ளது. அது ஒரு பெரிய சத்தமாயிருக்கிறது. அரசியலின் இந்த பெரிதான நாட்களில் ஜனங்கள் முற்றிலுமாக…அது அவர்கள் சபைகளிலும் மற்றயிடங்களிலும் கலந்துள்ளது. பல சமயங்களில், நாம் சமீபத்தில் கண்டது போல, சபைகளில், நாம் சமீபத்தில் கண்டது போல, சபைகளில் அரசியலின் சத்தம் தேவனுடைய சத்தத்தை விட உண்மையாகவே மிகவும் வலிமையாயுள்ளது. அவ்வாறு இல்லையெனில் அமெரிக்கர் இப்பொழுது செய்துள்ளதை ஒருக்காலும் செய்திருக்கமாட்டார்கள். பாருங்கள்? அவர்கள் ஒருக்காலும் இதை செய்திருந்திருக்கமாட்டார்கள். தேவனுடைய சத்தம் சபைகளிலே உயிருள்ளதாக காத்துக்கொள்ளப்பட்டிருந்தால் அவர்கள் இந்த தவறுகளை ஒரு போதும் செய்திருந்திருக்கமாட்டார்கள். ஆனால் அரசியலின் சத்தம் தேவனுடைய சத்தத்தை விட இன்று இவ்வுலகில் வலிமையாக இருக்கும் காரணத்தால் ஜனங்கள தங்களுடைய கிறிஸ்தவ பிறப்புரிமையை அசிங்கமான ஒரு புகழுக்காகவும், கல்விக்காகவும், அரசியல் அதிகாரத்திற்காகவும் விற்றுப்போட்டுவிட்டனர். அதைக் காண மிகவும் வெட்கமாய் உள்ளது. நமது தேசம் எதனால் உருவாக்கப்பட்டுள்ளதோ, நாம் எக்காரணத்தைக் கொண்டு மற்ற தேசத்தை விட்டு வெளிவந்து இங்கு வந்து குடியேறி, பிளைமெளத் பாறை, மேஃப்ளவர் போன்றவைகளில் இந்த சிறந்த பொருளாதாரத்தை நிலை நிறுத்தினோமோ, அதற்கே ஜனங்கள் இப்பொழுது திரும்பி தங்கள் வாக்குகளை அளித்து விட்டனர். நாம் வெளிவர கடினமாக போராடின அதன் பிடியிலே மறுபடியும் சிக்கிக் கொண்டோம். ஏனெனில் அது அந்தவிதமாகத்தான் இருக்கும் என்று வேதாகமம் கூறுகிறது.
2134 ஏலியின் முறைமை, ஒரு தீர்க்கதரிசிக்குப் பதிலாக ஒரு ஆசாரியனாயிருந்தான். தீர்க்கதரிசிதான் வார்த்தையாயிருக்கிறான். ஆசாரியன் சபையாயிருந்தான். 35 அது மிகவும் தளர்ந்த ஒரு நிலையை அடைந்து, வார்த்தையானதை ஜனங்களுக்கு அந்நிய காரியமாக ஆகிவிட்டது. அவர்கள் அதைப் புரிந்துகொள்ளுகிறதில்லை. ஆகையால் நீங்கள் அதைக் குறித்துப் பேசினாலும், அவர்களால் அதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்கள் அதற்காக பயிற்றுவிக்கப்படவில்லை. பவுல், “எக்காளம் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?” என்றான். 36 ஜனங்கள் ஒரு—ஒரு—ஒரு சபையின் சத்தத்தை ஒரு சபையின் எக்காளத்தை—கேட்க பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். “மற்றவர்களுக்கு உள்ளதைக் காட்டிலும் எங்கள் ஞாயிறு வேதபாட பள்ளிகளில் அதிகம் பேர் உள்ளனர்” என்று கூறுகின்றனர். அதுவோ ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. மற்ற ஸ்தாபனங்களில் உள்ளதை விட எங்கள் ஸ்தாபனத்தில் அதிகம் பேர் உள்ளனர். நாங்கள் ஸ்தாபனங்கள் அனைத்திலும் மிகப்பெரிய ஸ்தாபனமாயிருக்கிறோம். பாருங்கள், அம்மாதிரியான ஒரு சத்தத்துக்கே ஜனங்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீதிகளில் சென்று ஜனங்களை உள்ளேக் கொண்டு வருகின்றனர். ஒரு பெரிய கூட்டம் நடத்தி இலட்சக்கணக்கான பேர்களை உள்ளே கொண்டு வருகின்றனர். அவர்கள் எதில் ஆர்வங்கொண்டுள்ளனர்? “நாங்கள் மிகப்பெரிய சபையைக் கொண்டுள்ளோம். நாங்கள் மிக அதிகமான சபை அங்கத்தினர்களை உடையவர்களாயிருக்கிறோம். நாங்கள் அதிகமான அங்கத்தினர்களைக் கொண்டே ஞாயிறு வேதபாட பள்ளியை உடையவர்களாயிருக்கிறோம். நகராண்மைத் தலைவர் கூட நமது சபைக்குத் தான் வருகிறார்” போன்றவைகளில் ஆர்வங்கொண்டுள்ளனர். அவையெல்லாம் நல்லது தான். ஆனால் அந்த சபை தேவனுடைய சத்தத்தை—சுவிசேஷ எக்காளத்தை—கேட்க பயிற்றுவிக்கப்படாமல் இருந்தால், இவற்றால் என்ன நன்மை விளையப் போகின்றது?
2237 நமது அரசாங்கத்தில் எழுந்ததுள்ளது போன்ற ஒரு காரியம் எழும்புகிறபோது, என்ன சம்பவித்தது? சபையானது எக்காள சத்தத்தை அறிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. செழிப்புக்கான பெரிய வாக்குறுதி, நுண்ணறிவு படைத்த ஒரு சிறந்த அறிவாளி வருகிறார், அவர்கள் வேதம் முன்னுரைத்துள்ளதற்கு சென்று அதை உள்ளேக் கொண்டு வந்து விட்டனர். பாருங்கள், ஒரு அரசியல் சத்தம்! அது மத சம்மந்தமான சத்தத்தை—சுவிசேஷ சத்தத்தை—மிஞ்சி விட்டது என்பதை நிரூபித்துவிட்டது. இல்லையென்றால் அவர்கள் செய்ததை ஒருபோதும் செய்திருந்திருக்கமாட்டார்கள். ஏனென்றால் நமக்கு அநேக காரியங்கள் வாக்களிக்கப்படுகின்றன, நமக்கு செழிப்பு வாக்களிக்கப்படுகின்றது. நாம் அதைப் பெற்றுக்கொள்வோம் என்பதில் சந்தேகமில்லை. 38 ஆனால் இன்னமும் ஒரு விசுவாசிக்கு அது எந்தக் காரியத்தையுமே பொருட்படுத்துகிறதில்லை. நீங்கள் எபிரெயரின் புத்தகம் 11-ம் அதிகாரத்திற்கு திருப்பி, பரிசுத்த பவுல் அதைக் கூறுவதைக் கேளுங்கள்—எப்படி அவர்கள் அந்த நாட்களில் “செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்திக் கொண்டு திரிந்து, குறைவையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள். அவர்களுக்கு போக்கிடம் இல்லை, ஒரு நகரத்திற்குள் பிரவேசிக்க முடியவில்லை” என்று கூறுகிறான்.
2339 நான் நிசாயா ஆலோசனை சங்கத்தைக் குறித்து படித்துக் கொண்டிருந்தேன். கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு முன்னூறு ஆண்டுகள் கழித்து, ரோமாபுரியிலிருந்து நிசாயாவில் பெரிய பிரச்சனைகள் எழுந்தன. அப்பொழுது உண்மைக்காக நின்ற அந்த மகத்தான சபை, தங்களுக்கு வேதாகமம் மாத்திரமே வேண்டும் என்று கூறினது. ஆனால் முதலாம் ரோம சபையிலிருந்த மதம் மாறின ரோமர்கள் கோட்பாடுகளை உள்ளேப் புகுத்தினர். உதாரணமாக, நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது போல. 40 கிறிஸ்துமஸ், கிறிஸ்து டிசம்பர் 25-ம் தேதி பிறக்கவேயில்லை. ஏன்? யூதேயாவில் மலைகள் அப்பொழுது பனியால் மூடப்பட்டிருக்கும். மேலும் அவர்…அது பல வேதாகம தீர்க்கதரிசனங்களுக்கு முரண்பட்டதாக இருக்கிறது. அவர் மற்ற ஆட்டுக்குட்டிகளைப் போல வசந்த காலத்தில் பிறந்தார். அவர் ஏன் ஒரு வீட்டில் பிறக்காமல் தொழுவத்தில் பிறந்தார்? ஏனெனில் அவர் ஒரு ஆட்டுக்குட்டியாயிருந்தார். அவர் ஏன் சிலுவையில் அறையப்பட அந்த பலிபீடத்திற்கு தாமாக செல்லவில்லை? அவர் சிலுவைக்கு வழிநடத்தப்பட்டார். நீங்கள் செம்மறியாட்டை கொல்வதற்காக கொண்டு போகின்றீர்கள். அவர் ஒரு ஆட்டுக்குட்டியாயிருந்தார். அப்படியானால் அவர் ஆட்டுக்குட்டிகள் பிறக்கும் சமயத்தில் தான் பிறந்தார்.
2441 ஆனால், நீங்கள் பாருங்கள், அந்த பண்டிகையைக் கொண்டாட அவர்கள் சூரிய தேவனின் பிறந்த நாளைக் குறித்தார்கள். அதாவது சூரிய சுழற்சி முறையில் மாதத்தில் ஐந்து நாட்கள், அதாவது சூரியன் டிசம்பர் 20 முதல் 25-ம் தேதி வரைக்கும் நகருவதில்லை. அது ஒவ்வொரு நாளும் சிறிது மாறி, நீண்டு கொண்டே வந்து, ஜூலை மாதத்தில் மிகவும் நீண்ட பகலை அடைகின்றது. அதன் பின்னர் டிசம்பரில் அது மிகக் குறுகிய பகலை அடைகின்றது. ஆகவே அந்த இருபத்தைந்தாம் நாளின் குறுகிய நாளில், இருபதாம் தேதியிலிருந்து இருபத்தைந்தாம் தேதி காலத்தில் அவர்கள் ரோம வட்டாரங்கு வேடிக்கையாட்டங்களில் ஈடுபட்டு சூரிய தேவனின் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். ஆகையால் அப்பொழுது அவர்கள் ரோம கடவுளான ஜூபிடரை கிறிஸ்தவ மார்க்கத்திற்குள் நுழைத்துவிட்டனர், அதன்பின்னர் அவர்கள், “நாம் தேவ குமாரனுடைய (Son of God) பிறந்த நாளையும், சூரிய தேவனுடைய பிறந்த நாளையும் ஒன்று சேர்த்து, அதை மிகச் சிறப்பான ஒரே கொண்டாட்டமாக செய்து விடுவோம்” என்றனர். இது மாறுபாடானது! ஓ, அவர்கள் அநேக கோட்பாடுகளை அங்கே உள்ளே நுழைத்து விட்டார்களே!
2542 அப்பொழுது வார்த்தையோடு தரித்து நிற்க விரும்பின உண்மையான தேவ மனிதர்கள், பரிசுத்தவான்களாகிய பாலிகார்ப், ஐரினேயஸ், மார்டின் போன்ற அந்த மகத்தான மனிதர் ஆதியில் சத்தியத்தில் நிலைத்திருக்க விரும்பினர்… நிசாயா ஆலோசனை சங்க கூட்டத்தின்போது, இந்த ஜனங்களில் சிலர் நிராகரிக்கப்பட்டு, முடிவில் தீர்க்கதரிசிகள் உடுத்திக்கொள்ள ஒன்றுமில்லாமல், ஒரு துண்டு செம்மறியாட்டுத் தோலை போர்த்தினவர்களாய், வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு வந்து அந்த ஆலோசனை சங்கக் கூட்டத்தில் பங்கு கொண்டனர். ஆனால் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை அறிந்திருந்தனர். ஆனால் புகழுக்காக, பதினைந்து நாட்கள் இரத்தம் சிந்திய அரசியலுக்குப் பின்பு, இது சத்தியத்தை புறக்கணித்துவிட்டது. அதன் பிறகு நாம் ஆயிரம் ஆண்டுகள் இருண்ட காலத்தை உடையவர்களாயிருந்து வந்தோம், பாருங்கள்.
2643 ஆனால் எக்காளம் மறுபடியும் தொனிக்குமென்று தேவன் வாக்களித்தார். ஜனங்கள் எப்பொழுதுமே வார்த்தையின் உண்மையான சத்தத்துக்கு செவிகொடுக்கிறார்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை எப்பொழுதுமே வார்த்தையின் மூலம் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். 44 அரசியலின் சத்தம்! அமெரிக்காவிலுள்ள நாமும் உலகத்தின் மற்ற பாகங்களில் உள்ளவர்களும், இன்று ஒரு உரத்த சத்தத்தைப் பெற்றுள்ளோம், அது நவநாகரீக திரைப்படத் துறையின் சத்தமாயுள்ளது. அது உலகத்தைக் கைப்பற்றிவிட்டது. யாராவது ஒருவர் ஏதாவது ஒரு காரியத்தோடு நவநாகரீகத் திரைப்படத் துறையிலிருந்து வந்தால், அது தேசம் முழுவதிலும் செய்யப்படுவதை நீங்கள் கண்டறியலாம். இப்பொழுது அவர்கள் நமது பெண்களின் உடைகளிலும், அவர்களுடைய சிகை அலங்காரங்களிலும் ஒரு மாதிரியை அமைந்துள்ளதை நாம் கவனிக்கலாம். அவர்கள் அந்த உடையின் விஷயத்தில் மாதிரிகளை அமைத்துள்ளதை நாம் கவனிக்கலாம். அவர்கள் அந்த உடையின் விஷயத்தில் மாதிரிகளை அமைத்துள்ளனர்.
2745 சபையானது அதன் பேரிலான தேவனுடைய எக்காள சத்தத்தை அறிந்திருக்க வேண்டும். ஆனால் இதில் அதிகப்படியான குழப்பம் உள்ளது, ஏனெனில் நீங்கள் மற்றவர்கள் அதை செய்வதைக் கண்டு அவர்களை உதாரணங்களாக எடுத்துக்கொள்ளுகிறீர்கள். அந்த விதமான ஒரு மாதிரியை நீங்கள் உங்களுக்கு உதாரணமாக ஒருபோதும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம், ஏனென்றால் அது அழிந்துபோகக் கூடியது. அவர் அதைக் குறித்து என்னக் கூறுகிறார் என்ற தேவனுடைய சத்தத்திற்கே எப்பொழுதும் செவிகொடுங்கள். 46 பின்னும் நாம் நவநாகரீகத் திரைப்படத் துறையில் அவர்கள் அநேக காரியங்களை கண்டு பிடிக்கின்றனர் என்பதைக் கவனிக்கிறோம். நாம் வேறு காரியத்திற்கு போகும் முன்பு இதன் பேரில் சிறிது நேரம் நான் அப்படியே பேசட்டும். அண்மையில் நவநாகரீகத் திரைப்படத் துறையிலிருந்து ஒரு—ஒரு காரியம் வெளிவந்தது. நவ நாகரீக திரைப்படத் துறையிலிருந்த ஒரு—ஒரு மனிதன்… அவனுக்கு விரோதமாக ஒன்றுமில்லை, அவன் ஒரு மானிடன், அவனுக்காகவும் கிறிஸ்து மரித்தார், ஆனால் உங்களுக்கு காண்பிக்கவே இதை கூறுகிறேன். அவர்கள் ஒன்றை கண்டு பிடித்தனர். அதை சிறு பிள்ளைகள் “ஹூலா ஹூப்” ஹூலா—ஹூப் அல்லது ஏதோ ஒன்று என்று அழைப்பது வழக்கம்—இடுப்பில் வளையத்தை மாட்டி நெளிந்து நடப்பது ஆகும். நீங்கள் எப்பொழுதாவது அந்த சிறு பிள்ளைகளில் அது உண்டாக்கின அவலட்சணத்தையும், அதைத் தொடர்ந்த ஏராளமான காரியங்களையும் கவனித்திருந்தீர்களேயானால் நலமாயிருக்கும். அது சரியல்ல.
2847 இப்பொழுது நவநாகரீகத் திரைப்படத் துறை துப்பாக்கிச் சண்டையிடுபவர்களால் நிறைந்துள்ளது. இப்பொழுது சரித்திரம் அறிந்தவர் எவரும், முன் காலத்தில் துப்பாக்கி சண்டையிட்ட ஆட்கள்—ஆல் கபோன், டில்லிங்கர் போன்றவர்கள் வித்தியாசமான நபர்களாய், அவர்கள் நாணயமான குடிமக்களாயிராமல், அவர்கள் துரோகிகளாயிருந்தனர் என்பதையும் அறிந்துள்ளனர். அந்த நவநாகரீக திரைப்படத் துறையினர் தொலைக்காட்சியில் “துப்பாக்கி புகை” என்று அவர்கள் அழைக்கும் ஒரு தொடர் நிகழ்ச்சி காண்பிக்கப்படுகின்றது. நான் அதை மானிட்டர் என்ற செய்திப் பத்திரிக்கையில் அன்றொரு நாள் வாசித்தேன். அதில் நடிக்கும் ஆர்னஸ் என்பவன் அல்லது அப்படி ஏதோ ஒன்று ஆர்னஸ் அல்லது அவன் பெயர் என்ன என்பதை நான் மறந்துவிட்டேன்… அவன் கான்சாஸில் காவல் அதிகாரியாக இருந்த மாட் டில்லியன் என்பவனின் பாகத்தை ஏற்று நடிக்கிறான். இந்த மாட் டில்லியன் மிகவும் பொல்லாதவன். அவன் டாட்ஜ் நகரத்தை விட்டு வெளியே சென்று புதரில் பதுங்கியிருந்து இருபத்தெட்டு அப்பாவி மக்களை முதுகில் சுட்டுக் கொன்றவன். யாராகிலும் ஒருவர் அவனிடம் வந்து ஒரு குறிப்பிட்ட போக்கிரி அவ்வழியே வருகிறான் என்று கூறினால், அவன் அங்கே பதுங்கியிருந்து, அந்த மனிதன் வரும்போது, அவனை முதுகில் சுட்டுக் கொன்றுவிடுவான். இப்பொழுது, அவன் “பெரிய நபராக” மதிக்கப்படுகிறான், ஏன்? அது—அது பாவத்தை முற்றிலுமாக மகிமைப்படுத்துதலாய் உள்ளது. ஆனால் நமது தேசத்தில் உள்ள சிறுவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைக் குறித்து உங்களிடத்தில் கூற முடிந்த விஷயத்தைக் காட்டிலும் மாட் டில்லியனைக் குறித்த விஷயங்களை அதிகமாக உங்களிடத்தில் கூற முடியும். அந்த கடைகள், பத்து செண்டு கடைகள், துணிகள் விற்கும் பிரிவில் சிறு விளையாட்டு துப்பாக்கிகளும், தொப்பிகளும் எல்லாவிடங்களிலும் தொங்கவிடப்பட்டுள்ளன. அவைகளை நீங்கள் எங்கும் வாங்கலாம். அவற்றை அணிவதனால் தவறில்லை, ஆனால் நான்—நான் இதை உங்களிடம் எடுத்துக் கூறுகிறேன், நீங்கள் பாருங்கள். வர்த்தக உலகம் அந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டு, அவர்கள்—அவர்கள் கோடிக்கணக்கான டாலர்களைச் சம்பாதிக்கிறது.
2948 நாம் “பரிசுத்த பாட்ரிக் நாள்” என்று ஒரு நாளை அழைக்கிறோம். நமக்கு “மர்க்க சம்பந்தமான விடுமுறைகள்” என்று அழைக்கப்படுகிற நாட்கள் உள்ளன. வர்த்தக உலகம் இவைகளை எடுத்துக்கொண்டு கோடிக்கணக்கான டாலர்களை சம்பாதிக்கின்றது. “அன்னையர் தினத்தில்” ஒரு கொத்து மலர்களை தாய்க்கு அனுப்புகிறோம். ஏன், ஒவ்வொரு நாளும் தாயை கெளரவிக்கும் நாளாக இருக்க வேண்டும். அவர்கள் எங்காவது தனியாக இருந்தால் வயதான அவர்களைச் சென்று பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் மலர்களை அனுப்புவதை விட அல்லது வேறெந்த செயலையும் செய்வதை விட அது அதிக விலையேறப் பெற்றதாய் இருக்கும். பாருங்கள், ஆனால் அவர்கள் அதை தெரிந்தெடுத்துக் கொள்கிறார்கள். அது ஒரு சத்தமாய் உள்ளது. நாமும் அதனுடன் கலந்து விடுகிறோம். அது உண்மையில் சரியல்ல. ஆனால் அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? பாருங்கள், நாம்—நாம் வெறுமனே… 49 நான் உங்களிடம் நான் நம்புகிற ஒரு முக்கியமான காரியத்தை கூற முயன்று கொண்டிருக்கிறேன். சத்தம், தேவனுடைய சத்தம் மிகவும் அபூர்வமாயுள்ளது.
3050 இப்பொழுது, அவர்கள் அதை தொடங்கி விடுகிறார்கள் என்று நாம் கண்டறிகிறோம். நீங்கள் அதை எப்போதாவது கவனித்துள்ளீர்களா? நம்முடைய வாலிப பையங்கள் “ரிக்கி”, “எல்விஸ்” என்னும் பெயர்கள் கொண்டுள்ளவர்களாக மாறியுள்ளனர். அந்த பெயரைக் கொண்ட ஒரு பிள்ளை உங்களுக்கு இருந்தால், அந்தப் பெயரை உடனே மாற்றுங்கள். வேண்டுமானால் அவனை எண் “ஒன்று” அல்லது “இரண்டு” அல்லது வேறு ஏதாவது அழையுங்கள். அந்த பெயர் வேண்டாம், அது மிகவும் பயங்கரமானது…நீங்கள், “பெயர் என்ன வித்தியாசத்தை உண்டாக்குகிறது?” என்று கேட்கலாம். ஏன்? நிச்சயமாகவே, அது ஏதோ ஒரு காரியத்தை பொருட்படுத்துகிறது. உங்கள் பெயர் உங்கள் வாழ்க்கையின் குணத்தைக் காட்டுகிறது. “இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் எண் ஜோதிடம் பற்றி கூறுகிறீர்கள்” எனலாம், இல்லை, நான் அதை பற்றி கூறவில்லையே! நான் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதையே எடுத்துக் கூறுகிறேன். யாக்கோபு தன் பெயருக்கேற்ப எத்தனாக, ஏமாற்றுக்காரனாக வாழ்ந்தான். தேவன் அவனை மாற்றினபோது, ஏன் அவனுடைய பெயரையும் மாற்றினார்? தேவன் சவுலை பவுலாக, சீமோனை பேதுருவாக மாற்றினார். நிச்சயமாகவே அதில் ஏதோ ஒரு காரியம் உண்டு. ரிக்கி, எல்விஸ் என்ற அப்படிப்பட்ட பெயர்கள் நவீன அமெரிக்க பெயர்களாயுள்ளன, அவை ஒரு பிள்ளையைத் தானாகவே அதற்குள் ஆழ்த்தி விடுகின்றன. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா?
3151 இப்பொழுது நான் நம்புகிறேன்…நீங்கள் புரிந்துகொள்ளாத ஒன்றைக் குறித்தே நான் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்காமல், இதிலிருந்து விலகி விடுவது நல்லது, (நான் என்ன கூறுகிறேன் என்பது புரிகிறதா?) ஆனால் இவையனைத்தும் சாதாரண ஜனங்களால் புரிந்துகொள்ளவுங் கூட இயலவில்லை. அவர்கள் அதைக் கிரகித்துக் கொள்வதில்லை, ஏனெனில் அவர்கள் ஒரே போக்கில் சென்று கொண்டிருக்கின்றனர். அந்த சத்தங்களுக்கு மாத்திரமே அவர்கள் செவிகொடுக்கின்றனர். 52 தத்துவ ஞானிகள், கம்யூனிஸ்டுகள் இவர்களின் ஒரு சத்தமும் உள்ளது. அவர்களால் தரித்திருக்க முடியாத ஒன்றைக் குறித்து அவர்கள் வாக்குறுதி அளிக்கின்றனரர். அதே சமயத்தில் அமெரிக்க ஜனத்தொகையில் ஒரு பெரிய சதவிகிதத்தினர் இந்த கம்யூனிஸக் கொள்கையில் பீடிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது நான் கம்யூனிஸத்தில், சரியாக கூறினால், கம்யூனிஸ நாடுகளுக்கு சென்றிருக்கிறேன்; ஜெர்மனியில் உள்ள பெர்லின் கிழக்கு பாகத்திற்கு சென்று வந்துள்ளேன். அவர்கள் வெளியரங்கமாகத் தெரியக் கூடிய பெரிய வீடுகளில் வசிக்கின்றனர். நீங்கள் உள்ளே சென்று பார்த்தால், அவை கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளன. அது ஒரு பொய்யான பொருளாதாரம், அவர்கள் ஏதோ ஒன்றை வேகமாக அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
3253 கம்யூனிஸத்தின் பிறப்பிடமான ரஷியாவில்… அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு வாலிபப் பிரசங்கியாக இருந்தபோது, முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்று என்னால் கூறக் கூடும், அப்பொழுது நாஸிஸம், பாஸிஸம், கம்யூனிஸத் தத்துவங்கள் எழும்பிக் கொண்டிருந்தபோது, “நான் கர்த்தருடைய நாமத்தில் உரைக்கிறேன். அவையாவும் கம்யூனிஸத்தில் முடிவடையும்” என்று நான் கூறினேன். ஆனால், நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? நாம் மாத்திரம் ஏற்றுக் கொள்வோமானால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ள தேவன் ஒரு வழியை நமக்கு வைத்திருக்கிறார். ரஷியாவின் ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் மாத்திரமே கம்யூனிஸத்தை ஆதரிப்பவர். ஒரு சதவிகிதம், ஆனால் அந்த சதவிகிதத்தினர் தான் ஆதிக்கம் கொண்டவர்கள். கம்யூனிஸத்தின் ஒரு சதவிகிதம் மாத்திரமே…அதாவது சரியாகக் கூறினால் ரஷியாவின் ஒரு சதவிகிதம் மாத்திரமே கம்யூனிஸ்டுகள். ஆனால் அவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
3354 அதேக் காரியம், நவ நாகரீக திரைப்படத் துறை என்ற ஒரு இடம், ஆனால் அவர்களே ஆதிக்கத்தில் உள்ளனர். 55 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பாகம், அல்லது மூன்றில் இரண்டுபாகம் சபைகளுக்கு சென்று அங்கத்தினர்களாக உள்ளனர். ஆனால் அந்த ஸ்தாபனங்களே அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன. 56 இன்றைக்கு அந்நாடுகளிலுள்ள கம்யூனிஸத்திற்கு தேவை என்னவெனில், தேவனுடைய சத்தம் அவர்கள் மத்தியில் எழுவதே. அப்பொழுது அது அதை வெட்கத்திற்குள்ளாக்கும். 57 பின்லாந்தில் இறந்து போன அந்த சிறுவன் உயிரோடெழுப்பப்பட்ட அந்த நாளிலே, அவர்கள் என்னை மூன்று சதுரங்களுக்கு அப்பால் கொண்டு வந்தார்கள். அங்கு இறந்த அந்த சிறுவன் உயிரோடெழுப்பப்பட்டான். அங்கு கம்யூனிஸ்டு போர் வீரர்கள், ரஷியர்கள், ரஷிய இராணுவ மரியாதை செலுத்தினவர்களாய் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடைய கன்னங்களில் கண்ணீர் வடிந்தது. அவர்கள், “மரித்தோரை உயிரோடெழுப்பக் கூடிய ஒரு தேவனையே நாங்கள் ஏற்றுக் கொள்வோம்” என்றனர். அது கத்தோலிக்க சபை, லூத்தரன் சபை, அந்த மற்றெல்லா ஸ்தாபனங்களின் அலட்சியத்தினால் விளைந்த ஒன்று, அவர்கள் எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டு தங்கள் ஸ்தாபனங்களை கட்டினார்களேயன்றி, மக்களுக்கு ஒன்றுமே அளிக்கவில்லை. அவர்கள் மற்றவர்களைப் போலவே வாழ்த்தலைப்பட்டனர். அங்கே… 58 ரஷியாவுக்கு தேவை என்னவெனில், அவர்கள் வாயை அடைக்கக் கூடிய தேவனுடைய வார்த்தையைக் கொண்ட ஒரு தீர்க்கதரிசி காட்சியில் எழும்புவதேயாகும். அப்பொழுது அந்த தொண்ணூறு சதவிகிதம் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். 59 அமெரிக்காவுக்கு தேவை என்னவெனில், எழுந்து நின்று நவநாகரீகத் திறைப்படத் துறையை கண்டித்து, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இந்தக் காரியங்களை கண்டிக்கும் ஒரு தேவனுடைய தீர்க்கதரிசியின் சத்தமேயாகும். அப்பொழுது பரிசுத்த ஆவி சபை ஜெயங்கொள்ளும். பாருங்கள், அதிகமான குழப்பம், அதற்கு விரோதமாக எழும்பியுள்ள அநேக மாறுபாடான சத்தங்கள்.
3460 சபை, அதன் சத்தம், ஒவ்வொன்றும் அதிக உறுப்பினர்களைப் பெற விரும்புகின்றது. பாப்டிஸ்டுகள் எல்லோரையும் தங்களிடம் இழுத்துக் கொள்ள விரும்புகின்றனர். மெதோடிஸ்டுகளும் எல்லோரையும் பெற விரும்புகின்றனர். அப்படியே பிரஸ்பிடேரியன்களும் உள்ளனர். இப்படிப்பட்டவை நம்மிடையே உள்ளன. கத்தோலிக்கர்கள் எல்லோரையும் எடுத்துக் கொள்வார்கள் போல் தோன்றுகிறது. அவர்கள் அதை செய்வார்கள். அது சரியாக அப்படி நடக்கும் என்பது வேதாகமத்திலிருந்து தொனிக்கும் தேவனுடைய சத்தமாயுள்ளது. அவர்கள் ஆளுவார்கள். 61 ஆனால் உன்னதமான தேவன் முடிவில் ஆளுகை செய்வார். ஒரு நாள் பரிசுத்தவான்கள் உலகை ஆளுவார்கள், வேதம் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளது. அவர்கள் ஆளுகை செய்வார்கள். 62 இப்படிப்பட்ட பல பயங்கரமான சத்தங்கள்! பிறகு கள்ளத்தீர்க்கதரிசியின் சத்தம் ஒன்றுண்டு. அது மிகவும் பயங்கரமான சத்தம்—தன்னை ஒரு தீர்க்கதரிசியென்று அழைத்துக் கொள்ளும் ஒரு மனிதன் உண்மையாகவே ஒரு தீர்க்கதரிசி என்பவன் ஒரு பிரசங்கியாயிருக்கிறான். நவீன மொழியில் “தீர்க்கதரிசி” என்னும் சொல், “பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் பிரசங்கிக்கும் ஒரு மனிதன்” என்றே முற்றிலுமாகப் பொருள்படுகிறது. தன்னை தீர்க்கதரிசியென்று அழைத்துக் கொண்டு, அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தையை—தேவனுடைய சத்தியத்தை—மறுதலிக்கும் ஒருவன் உண்டு. இப்படியாக பல சத்தங்கள் உள்ளனவே!
3563 சிறிது நேரத்துக்கு முன்பு, நான் எப்படி இங்கு வர வேண்டுமென்று ஒரு சகோதரன் எனக்கு வழி காண்பித்துக் கொடுத்தார். ஆனால் நான்…நான் ஏன் தெருவில் சென்று, பிறகு திரும்பி இங்கு வந்தேன் என்று அவர் வியந்திருப்பார் என்று நான் யூகிக்கிறேன் …சகோதரனே, நீங்கள் இங்கிருப்பீர்களானால், ஏதோ ஒன்று என் செவிகளில் விழுந்தது. அது நமது—நம்முடைய கறுப்பு நிற நண்பர்கள், அந்த கறுப்பர் இனத்தைச் சார்ந்தவர். அவர்களுக்கு ஒரு கோவில் இங்குள்ளது. அவர்கள் அதை “எலியா முகம்மது” என்றழைக்கின்றனர். இல்லை அப்படி ஏதோ ஒரு பெயர். “இளம் எலியா முகம்மது.” அவர்கள் ஒரு சத்தத்துடன் எழும்பி, கறுப்பு நிறத்தோரை குழப்பத்திலிருந்து வெளியே கொண்டு வரப்போகும் சத்தம் இவர்கள்தான் என்கின்றனர், அதாவது நீங்கள் பாருங்கள், அதேக் காரியம், அந்த அவர்களுடைய—அவர்களுடைய—அவர்களுடைய முஸ்லீம்களின் மசூதி இங்குள்ளது. ஏன், அதன் பிண்ணணி அடிப்படையே தவறு என்பதை உங்களால் காணமுடியவில்லையா?
3664 கறுப்பு நிறத்தோரே, நீங்கள் முகம்மதிய மார்க்கத்துக்கு செல்லாமல், வெள்ளையர், பழுப்பு நிறத்தோர், மஞ்சள் நிறத்தோர் செய்வது போல் கிறிஸ்துவினிடம், வேதம் போதிக்கும் கொள்கைகளுக்கு வாருங்கள். முகம்மதிய மார்க்கம் வார்த்தைக்கு விரோதமானது. இப்பொழுது, தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனில், ஒரே நேரத்தில் பத்தாயிரம் முகமதியர்களை கிறிஸ்துவினிடம் வழிநடத்தும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் மார்க்கம் மனோதத்துவ உணர்ச்சியை தவிர வேறொன்றையும் தோன்றச் செய்வதில்லை. மனோத்தத்துவம் தேவனுடைய வார்த்தையை மறுதலிக்காமல் இருக்கும் வரையில் அது சரிதான். ஆனால் மனோத்தத்துவம் வார்த்தையை மறுதலிக்கும்போது, அப்பொழுது மனோத்தத்துவம் தவறாகி விடுகின்றது. ஆனால் அது விளங்காத சத்தமிடுகிறது. தேவனுடைய வார்த்தையைத் தவிர மற்றெல்லாமே ஒழிந்து போகும். “வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” என்று இயேசு கூறினார். ஆகையால், நீங்கள் பாருங்கள், நாம் வார்த்தையோடு, சத்தத்தோடு தரித்திருக்க வேண்டும்.
3765 குழப்பமான பல காரியங்கள் உள்ளனவே! ஜனங்கள் எழுந்து நிற்கின்றனர். அவர்களுக்கு வார்த்தை தெரியாது, அவர்கள் சில காரியங்களைக் கூறுகின்றனர். அவை ஒரு வேளை மிகவும் நியாயமானதாக தென்படலாம். கம்யூனிஸக் கொள்கையும் மிகவும் நியாயமானதே. “எல்லோரும் சமமானவர்கள். பணம் படைத்த முதலாளிகள் இனி இருக்கப் போவதில்லை, எல்லோரும் கம்யூனிஸ்டுகளே” என்று கூறுகிறது. கம்யூனிஸக் கொள்கை ஒரு தவறான எழுப்புதல் என்று என்றைக்காவது நீங்கள் நின்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? அது எதை மாதிரியாகக் கொண்டு தோன்றினது? இயேசு, “இரண்டு ஆவிகளும் ஒன்றோடொன்று மிகவும் நெருங்கியிருந்து, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்” என்று கூறினார். பிசாசு பெற்றுள்ள ஒவ்வொன்றும், தேவன் சிருஷ்டித்தவைகளின் தாறுமாறான ஒரு நிலையேயாகும். பாவம் என்பது நீதி தாறுமாறாக்கப்படுதல். பொய் என்பது உண்மை தவறாக எடுத்துரைக்கப்படுதல். விபச்சாரம் என்பது தேவன் நமக்கு நியமித்துள்ள செயல் தாறுமாறாக்கப்படுதலே. அவிசுவாசம் அனைத்தும் விசுவாசத்தின் தாறுமாறான நிலையாயுள்ளது. தாறுமாறான நிலையைப் பெற நீங்கள் சத்தியத்தை மறுதலிக்க வேண்டும். பாருங்கள், இந்த சத்தங்களை சீர்தூக்கிப் பாருங்கள். அவைகளை வார்த்தையைக் கொண்டு சோதித்து, அது சத்தியமாயுள்ளதா என்று அறியுங்கள்.
3866 ஓ, இன்றுள்ள சத்தங்களைக் குறித்து நாம் பேசிக் கொண்டே போகலாம். ஆனால் நம்முடைய நேரம் கடந்துவிட்டது. ஆனால் பல சத்தங்கள் உள்ளதால் என்ன செய்வதென்று மக்களுக்குத் தெரியவில்லை. ஒரு பாப்டிஸ்டு போதகர் பிரசங்கிப்பதை மெதோடிஸ்டுகள் கேட்க, பாப்டிஸ்டு சபைக்கு சென்று விடுகின்றனர். அங்கு சிறிது காலம் தங்கியிருந்து, பிறகு லூத்தரன் சபைக்கு செல்கின்றனர். பெந்தெகொஸ்தேயினரிடையே வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. அவர்கள் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு ஓடுகின்றனர். இப்படியாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். நீங்கள் நிலையற்றவர்கள் என்பதை அது காண்பிக்கிறது. அவருடைய சத்தத்துக்கு செவி கொடுங்கள்! அந்த சத்தம் இதோ காகிதத்தில் எழுதி வேதமாக வைக்கப்பட்டுள்ளது. அந்த சத்தம் சத்தியமாயிருந்தால், அது உறுதிபடுத்தப்படும். 67 என்ன செய்வதென்று சபை உலகிற்கு தெரியவில்லை. அரசியல் உலகம் குழப்பத்திலுள்ளது. ஒவ்வொரு காரியமும் குழப்பத்தில் உள்ளது போன்று தென்படுகிறது. ஆட்கள் இங்கும் அங்கும் ஓடித் திரிகின்றனர். “சட்டை” “மேல் சட்டை” போன்ற ஏதோ ஒன்று பொய்யான காரியமாய் திடீரென்று கிளம்பிவிடுகிறது. நான் ரோமாபுரிக்கு சென்றிருந்த போது, இயேசுவின் கைகளில் கடாவப்பட்டதாக சான்றுகள் உள்ள பத்தொன்பது ஆணிகளை அவர்கள் வைத்துள்ளதைக் கண்டேன். மூன்று ஆணிகளே கடாவப்பட்டன. ஆனால் அதே சமயத்தில், பத்தொன்பது வித்தியாசமான ஆணிகளுக்கு அவர்கள் சான்று வைத்துள்ளனர். இப்பொழுது யாரிடம் அந்த ஆணி உள்ளது என்பதனால் என்ன பயன்? நாம் ஆணிகளை வழிபட வேண்டுமென்று கிறிஸ்து ஒருபோதும் அவைகளை விட்டுச் செல்லவில்லை. அவர் தமது வார்த்தையின் மூலம் பரிசுத்த ஆவியை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறாரே! “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும், அவர்கள் உண்மையான ஆணியைப் பெற்றிருப்பார்கள்” என்றா எழுதப்பட்டுள்ளது? “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும், நான் தொடங்கின ஸ்தாபனத்தை அவர்கள் சேர்ந்திருப்பார்கள்” என்றா? அவர் ஒரு ஸ்தாபனத்தையும் தொடங்கவில்லை, சத்தம் எவ்வளவு மாறுபாடாய் உள்ளதென்று பார்த்தீர்களா?
3968 ஆனால், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்.” அதுதான் வார்த்தை. “நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், அது அவர்களுக்கு தீங்கு செய்யாது. சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” இந்தக் காரியங்களும் இன்னும் மற்ற வேத வசனங்களும் ஒருங்கே நிறைவேறுகிறதா என்பதை நீங்கள் கவனியுங்கள். 69 ஆனால் இந்த அடையாளங்கள் மாத்திரம் அதை உறுதிப்படுத்தாது, இல்லவே இல்லை. அங்கு தான் பெந்தெகொஸ்தேயினராகிய நாம் தவறான வழியில் செல்கிறோம். “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, உமது நாமத்தினாலே நான் மகத்தான் காரியங்கள் செய்தேன் அல்லவா? உமது நாமத்தினாலே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன் அல்லவா? உமது நாமத்தினாலே நான் இவைகளையெல்லாம் செய்தேன் அல்லவா? என்பார்கள்” என்று இயேசு கூறவில்லையா? அப்பொழுது இயேசுவோ, “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள், நான் ஒருக்காலும் உங்களை அறியேன்” என்பார். என் சகோதரிகளே, சகோதரரே, நான் ஏன் இந்த சந்ததியை இப்படி கண்டித்து குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? நீங்கள் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசலாம். நீங்கள் சபையைச் சுற்றிலும் ஆவியில் நடனமாடலாம். ஆனால் இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
4070 முகமதியர் இதைப் போன்று சுற்றி சுற்றி நடனமாடுவதை நான் பார்த்திருக்கிறேன். நான் மந்தரவாதிகளிடத்தில்…கேள்விப்பட்டிருக்கிறேன், அதாவது மந்திரவாதிகளின் முகாமிலும், மந்திரவாதிகள் எழுந்து நின்று அந்நிய பாஷைகள் பேசி அவைகளுக்கு அர்த்தம் உரைத்து, என்ன நடக்கப்போகிறது என்று சரியாகக் கூறுவதையும், அது அப்படியே நடந்ததையும் நான் பார்த்திருக்கிறேன். ஒரு பென்சிலும் கூட நேராக நின்று, அந்நிய பாஷைகளைத்தானாகவே எழுதுவதையும் நான் பார்த்திருக்கிறேன். அதை ஒருவன் மாத்திரமே படிக்க முடியும். அவன் பிசாசை சேர்ந்தவன். நீங்கள் நித்தியத்திற்கு செல்லும் இடம் இப்படிப்பட்ட ஏதோ சில உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டிருக்க முடியாது. சாத்தானால் இந்த உணர்ச்சிகளில் எதையும் பாவனை செய்ய முடியும். இல்லையெனில்…கிறிஸ்துவை அறிந்துகொள்வதென்பது உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு காரியம் மாற்றத்தை உண்டாக்குகிறதாயுள்ளது. உங்கள் வாழ்க்கையை கவனித்துப் பார்த்து, அதை வார்த்தையின்படி மாதிரியாக அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். நீங்கள் நிச்சயமாகவே கணக்கெடுத்து பார்க்க வேண்டும்.
4171 இந்த பாவனைகள், போலியான சத்தங்கள், கள்ளத்தீர்க்கதரிசிகள், இப்படிப்பட்ட இந்தக் காரியங்கள் யாவும் எழும்பின போதிலும், இயேசு, “ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு என்னைப் பின்பற்றினால்” என்கிறார். அவரே வார்த்தையாயிருக்கிறார். கவனியுங்கள். இந்த சத்தங்களின் மத்தியிலும் அவருடைய கட்டளை என்னவென்றால்: இந்த சத்தங்களைக் குறித்து விளக்கிப் பேசுவதென்றால் மணிக்கணக்காகும் என்று நான் கூறினேன். அது மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அது ஒரு பரிதாபமான காரியமாய் உள்ளது. ஆகவே மொத்தத்தில் நீங்கள் இரண்டாம் தருணத்தைப் பெற்றுக்கொள்வதில்லை, இதை நீங்கள், இப்பொழுதே ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றிரவு உங்களுக்குத் தருணம் கிடைக்காமல் போகலாம், நாளை ஒரு வேளை தருணம் கிடைக்காமல் போகலாம், அந்த தருணம் இப்பொழுதே! “என் சத்தத்தை கேட்பீர்களானால், வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோது நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.” இப்பொழுதே அந்த நேரம். “ஒருவன் என் சத்தத்தைக் கேட்டால், இதுவே அநுக்கிரக நேரம்.” இந்த குழப்பம் அனைத்தின் மத்தியிலும் அவருடைய சத்தம் இருந்து வருகிறது என்பதை அது காண்பிக்கிறது. அவர் இன்னமும் ஒரு சத்தத்தை உடையவராயிருக்கிறாரே! ஏன்? அவருடைய சத்தம் எப்பொழுதும் நிலைத்திருக்கும். இதோ அது, “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” என்பதாயுள்ளது. அவருடைய வார்த்தை.
4272 நாம் இன்னும் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டு வேகமாக பார்க்கலாம். அவ்வளவு நேரம் அல்லது இன்னும் சில நிமிடங்கள் உங்களால் தங்க முடியுமா? இப்பொழுது நான் வேகமாக முடித்துவிடுவேன். அவருடைய சத்தத்தைக் கேட்டு அதற்கு கீழ்ப்படிந்தவர் சிலரை நாம் பார்க்கும்படி எடுத்துக்கொள்வோம். அவர்களை அது எப்படி நடந்து கொள்ளச் செய்தது, அது அவர்களை என்ன செய்யத் தூண்டியது என்று பார்ப்போம். இப்பொழுது நான் உங்களிடம் நேரடியாக பேச வேண்டும் என்பதற்காக, இங்கு நான் குறித்து வைத்துள்ள அநேக வேத வசனங்களை விட்டுவிடப் போகின்றேன். அவர்களுடைய வாழ்க்கையை அது எப்படி மாற்றினது, என்றும், அவர்களைக் குறித்த மற்றெல்லாமே, அவர்கள் எப்படி விநோதமானவர்களானார்கள், நாம் “விநோதமானவர்கள்” என்றே அழைக்கிறோம் என்பதைப் பார்க்கப் போகிறோம். தேவனை விசுவாசித்த ஒவ்வொரு மனிதனும் எப்போதுமே விநோதமானவன் என்றே கருதப்பட்டான். ஏனெனில், நீங்கள் உலகத்தின் போக்கில் சென்று கொண்டிருந்தால், உங்களில் ஏதோ தவறுண்டு. ஒரு கிறிஸ்தவனாயிருக்க, நீ வினோதமானவனாகவே இருக்க வேண்டும். “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.” வேகமாக பார்ப்போம். நாம் முடிக்கப் போகும் நேரத்தில் இப்பொழுது துரிதமாக கூர்ந்து கவனியுங்கள்.
4373 மாலையில் குளிர்ச்சியான வேளையில் ஆதாம் அவருடைய சத்தத்தைக் கேட்டான். அவன் அவருடன் ஐக்கியம் கொண்டிருந்தான். அவன் மேல் அப்பொழுது எவ்வித ஆக்கினைத் தீர்ப்பும் இருக்கவில்லை. அவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். அவன், “பிதாவே, நான் படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன்” என்றான். அவன் படுத்துக் கொண்டான். ஏவாள் அவன் கரங்களில் இருந்தாள். சிங்கம், புலி, மற்ற காட்டு மிருகங்கள் அவனைச் சுற்றி படுத்துக் கொண்டிருந்தன. அங்கு தீங்கு எதுவுமில்லை. அங்கு வியாதிப்பட வழியேயில்லை. அவன் காலையில் எழுந்திருப்பானா, அவர்கள் காலையில் தூக்கத்தை விட்டு எழுந்திருப்பார்களோ என்று வியப்புற வேண்டிய அவசியமில்லை. ஆதாம், அவன் கேட்கிருக்க வேண்டிய விதத்தில், தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். 74 ஆனால் ஒரு நாள் அவன் தன் மனைவியின் சத்தத்தைக் கேட்டான். அதை சிறிது நேரம் தனியே விட்டு விடுகிறேன். ஆனால் அவன் தவறான சத்தத்துக்கு செவி கொடுத்தான். அதே சமயத்தில் அது பூமியில் அவன் மிகவும் நெருங்கியிருந்த அவனுடைய மனைவியின் சத்தமாயிருந்தது. அவன் ஏன் யோபைப் போல், “நீ பயித்தயக்காரி பேசுகிறது போல பேசுகிறாய்” என்று கூறவில்லை? அவன் அப்படி செய்திருந்தால், மானிடவர்க்கம் முழுவதுமே மரிப்பதற்கு பதிலாக உயிரோடிருந்திருக்கும். அவனுடைய செயல் மானிடர்களின் போக்கையும் காலத்தையும் மாற்றிவிட்டது. ஆனால் அவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அதனோடு ஐக்கியங்கொண்டிருந்தான். ஆனால் அவன் திரும்பி… அவனுடைய மனைவி தவறாயிருந்தாள் என்பதை அவன் எப்படி அறிந்து கொண்டான்? நினைவில் கொள்ளுங்கள், அது இனிமையாயிருந்தது.
4475 இன்றைக்கு நாம் நினைக்கிற நமது ஸ்தாபனம், சபை, நாம் இன்றைக்கு பெற்றுள்ள செழிப்பு அனைத்தும் தேவன் நம்மை நோக்கி புன்முறுவல் செய்வதனால் விளைந்தது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். அது பார்வைக்கு நலமாயுள்ளது. அன்று மிகாயா நானூறு தீர்க்கதரிசகளுக்கு முன்பாக நின்றபோது, அது பார்வைக்கு நலமாயிருந்தது. தேசம் முழுவதுமே அவர்களுக்கு சொந்தமாயிருந்தது. பெலிஸ்தியர், இல்லை அசீரியர், அதன் மேல் படையெடுத்தனர். அது பார்வைக்கு நலமாயிருந்தது. அந்த தீர்க்கதரிசிகள் “அங்கு போங்கள். அது நமக்குச் சொந்தம். அதைக் கைப்பற்றுங்கள்” என்று கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அது தேவனுடைய சத்தமல்ல. மிகாயா திரும்பி பார்த்து அந்த சத்தத்தை சபித்தான். அவன் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதை எப்படி அறிந்திருந்தான்? ஏனெனில் அவனுடைய தரிசனம் சரியாக வார்த்தையையொட்டியிருந்தது. அந்த ஒரு விதத்தில் மாத்திரமே அதை நம்பி, நாம் அதை இன்றைக்கும் காணமுடியும். அது வார்த்தையின்படி இருக்க வேண்டும்.
4576 அதன்பின்னர் நீங்கள் கவனித்தீர்களா? ஆதாம் தேவனுடைய சத்தத்துடன் கூட வேறொரு சத்தத்துக்கு, தன் சொந்த மனைவியின் சத்தத்துக்குச் செவி கொடுத்த பின்பு… சபையும் அதனுடைய ஸ்தாபன சத்தத்துக்கு செவிகொடுத்து, வார்த்தைக்கு பதிலாக கோட்பாடுகளை புகுத்தி, அவர்கள் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ அவர்களை அனுமதித்துள்ளது. அவர்கள் சபைக்கு சென்று, ஒரு குறிப்பிட்ட சபையின் அங்கத்தினராயுள்ள வரைக்கும், அதுவே முக்கியம் வாய்ந்தது என்பது அவர்கள் கருத்து. ஒரு விசுவாசிக்கு இவ்வுலகில் உள்ள நெருங்கிய உறவு சபையே. ஆனால் விசுவாசிக்கு, உண்மையான விசுவாசிக்கு நெருங்கிய உறவு பரிசுத்த ஆவியாய், தேவனுடைய வார்த்தையாயுள்ளது. 77 ஆகையால் ஆதாம் தன் நிலையை உணர்ந்தான் என்று நாம் கண்டறிகிறோம். தேவனுடைய சத்தம் மறுபடியும் கூப்பிடுவதை அவன் கேட்டான். அப்பொழுது அவன் அத்தி இலைகளை உடுத்தியிருந்தான். ஆனால் அது, “நீ ஏன் இதை செய்திருக்கிறாய்?” என்னும் ஆக்கினைத் தீர்ப்பின் சத்தமாயிருந்தது.
4678 இன்று அமெரிக்கா, இன்று உலகில் காணப்படும் மதசம்பந்தமான ஆர்ப்பாட்டங்களால் அமெரிக்கா விழுங்கப்பட்டு அது விரைவில் தேசிய மார்க்கமாகி விடுமோ என்று நான் வியக்கிறேன். வியக்கிறேன். [ஒலி நாடாவில் காலி இடம்.—ஆசி.] 79 எனக்கு முன்னால் இருப்பது எது? அது ஒலி நாடாக்கள் என்றும், அவை உலகம் முழுவதிலும் செல்லும் என்றும் நான் அறிவேன். எங்களுக்கு ஒலி நாடா திட்டங்கள் உண்டு, அதாவது ஒலிப் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு செய்தியும் உலகம் முழுவதிலும், மற்றெல்லா நாடுகளுக்கும் செல்கின்றது. 80 நல்லது, இப்பொழுது நீங்கள் நோக்கிப் பார்ப்பீர்களானால், நீங்கள் அத்தி இலைகளை உடுத்தி நின்று கொண்டிருக்கிறீர்கள். உண்மையான தேவனுடைய சத்தம் ஒலிக்கும்போது, அவர்களுக்கு அதைக் குறித்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. அது குழப்பமாயுள்ளது, ஆகையால் என்ன செய்வதென்று அவர்களுக்கு தெரிவதில்லை. 81 துரிதமாக, நோவா தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். அவனுடைய ஜீவனைக் காத்துக் கொள்ள அது அவனை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தது. அவன் அந்த போதனைகளைப் பின்பற்றி அதில் நிலைநின்றான்.
4782 ஒரு மனிதன் சத்தத்தைக் கேட்டால்…இப்பொழுது கவனியுங்கள், இதை உண்மையாகவே நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இதை புரிந்துகொள்ளத் தவறாதீர்கள். ஒரு மனிதன் ஏதோ ஒரு சத்தத்தைக் கேட்டு, அது தேவனுடைய சத்தமென்றும், அது காலத்துக்கேற்றது என்றும் நிரூபிக்கப்பட்டு, அது அந்த மனிதனிடத்திலிருந்து புறப்பட்டு வருமானால், வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அந்த வார்த்தையோ ஒழிந்து போக முடியாது. 83 நோவா தேவனுடைய சத்தத்தைக் கேட்டு உலகத்தை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தினான். அவர்கள் அவனுடைய முகத்தைப் பார்த்து பரிகசித்தனர். ஏனெனில் அவனுடைய—அவனுடைய செய்தி அவர்களுடைய விஞ்ஞானப் பூர்வமான சாதனைகளுடன் ஒத்துப் போகவில்லை. ஆனால் மழை பெய்து முழு உலகத்தையும் அழித்துப் போட்டது. புரிகிறதா? அவருடைய சத்தம் புறப்பட்டுச் சென்றது. விதை அங்கு புதைந்திருந்தது. ஒவ்வொரு காலத்திலும் அவ்விதமே நடந்துகொண்டு வருகிறது. 84 சாமுவேல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டபோது திடுக்கிட்டான்…அவன் சென்று ஏலியை, தன்னை வளர்த்து வந்த மனிதனை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்த வேண்டியிருந்தது. அவன் அவனுக்குத் தகப்பனாக இருந்து, அவனை வளர்த்து போஷித்து வந்திருந்தான்.
4885 ஊழியக்கார சகோதரர்களே, நான் சொல்லட்டுமா? அநேக சமயங்களில் ஊழிக்காரர்கள் தங்கள் ஸ்தாபன அடிப்படையிலும் கோட்பாடுகளிலும் தேர்ச்சி பெற்று, தங்கள் நற்சாட்சி பத்திரங்களைப் பெற்று மிக சந்தோஷமாகி, அந்த ஸ்தாபனம் அவர்களுக்கு தகப்பனாயிருந்து, அவர்களை வளர்த்து போஷித்து, அவர்களுக்கு சபையில் ஒரு பதவியைக் கொடுத்து, அவர்களை சபையில் நியமிக்கிறது. அப்பொழுது நீங்கள் அவர்கள் என்ன போதிக்கிறார்களோ அதற்கு அடிபணிய வேண்டியுள்ளது. ஆனால் உண்மையான தேவனுடைய ஊழியக்காரன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அவனை வளர்த்து ஆளாக்கிய அதே தாய் ஸ்தாபனத்துக்கு வந்து, “நீங்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் நீங்கள் ஆக்கினைக்குட்படுத்தப் பட்டிருக்கிறீர்கள் என்று கூறுவது என்ன ஒரு பயங்கரமான காரியமாய் அது இருக்கும்! என்ன ஒரு காரியம்! அது சாமுவேலுக்கு கடினமாயிருந்தது. ஆனால் அவன் தீர்க்கதரிசியாயிருந்தான், எனவே அவன் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அது மற்றவர்களை வேதனைப்படுத்தினாலும் அல்லது வேதனைப்படுத்தாவிட்டாலும், அவன் அதை எப்படியும் செய்தாக வேண்டியதாயிருந்தது.
4986 மோசே தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். அவன் வேத சாஸ்திர அறிவினால் நிறைந்திருந்தான். அவன் நுணுக்கங்கள் அனைத்தும் அறிந்திருந்தான். ஆனால் அது தவறிப்போனது. மோசே தேவனுடைய சத்தத்தைக் கேட்ட பின்பு, அவன் பழைய மனிதனாக இருக்கவில்லை. 87 எந்த மனிதனுமே ஒருபோதும் இருந்தவிதமாகவே அதன்பின்னர் இருக்கமாட்டான். நீங்கள் சத்தம் பேசுவதை உங்கள் காதுகளில் கேட்கக் கூடும். ஆனால் அந்த சத்தம் உங்கள் இருதயத்தில் பேசும் போது மாத்திரமே நீங்கள் உண்மையில் கேட்கிறீர்கள். பாருங்கள். நீங்கள் உங்களுடைய கண்களைக் கொண்டு புரிந்துகொள்கிறதில்லை. நீங்கள் உங்களுடைய கண்களால் காண்கிறீர்கள், உங்கள் இருதயத்தினால் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் ஒன்றைக் கண்டு, “என்னால் அதை காண முடியவில்லையே” என்னும்போது, அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்னும் அர்த்தத்தில் கூறுகிறீர்கள். நீங்கள் உங்களுடைய காதுகளினால் கேட்டு புரிந்து கொள்கிறதில்லை. நீங்கள் உங்களுடைய இருதயத்தில் கேட்டே புரிந்து கொள்கிறீர்கள். அநேகமுறை உங்கள் காதுகள் உண்மையான தேவனுடைய சத்தத்தைக் கேட்கின்றன, ஆனால் அது வாத்தின் முதுகிலிருந்து தண்ணீர் விழுந்து விடுவது போல், உங்களை விட்டு விலகிவிடுகின்றது. ஆனால் நீங்கள் உண்மையாக கேட்கும்போது, உங்கள் இருதயத்தினால் கேட்கிறீர்கள்.
5088 மோசே எல்லா வேதசாஸ்திர அறிவைப் பெற்றிருந்தும், அவன் தேவனுடைய சத்தத்தை கேட்காமலிருந்தான். ஆனால் ஒரு நாள் தேவன் இந்த எண்பது வயது ஆடு மேய்ப்பவனை ஒரு புறம் அழைத்து அவனோடு பேசினார். அவன் அதை கிரகித்துக் கொண்டான். அவர் தேவன் என்பதை அவர் நிரூபித்தார். அவர் மோசேக்கு செய்த முதல் காரியம், “நான் வாக்குப்பண்ணினதை நினைவு கூர்ந்து இறங்கி வந்தேன்” என்று கூறி தமது வார்த்தையை ரூபகாரப்படுத்தினதேயாகும். 89 கடைசி நாட்களுக்கென்று அவர் இதை தான் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். அதாவது அவர் புறஜாதிகளிலிருந்து ஒரு ஜனத்தை எழுப்பப் போவதாகவும் மற்றும் இந்த எல்லா வாக்குத்தத்தங்களையும் பண்ணினார். 90 அவர், “மோசே, இதை நான் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறேன். உன் பாதா ரட்சையை கழற்றி போடு” என்றார். வேறு விதமாக கூறினால், “அதை கனப்படுத்து” என்பதாம். பின்பு, “உன் கோலைத் தரையிலே போடு.” …வனாந்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு—ஒரு உலர்ந்த கோல் சர்ப்பமாக மாறினது. மோசே அதை பிடித்த போது, அது அதனுடைய நிலைக்கு மீண்டும் திரும்பினது. புரிகிறதா? அது தேவன் என்பதை அவன் அறிந்து கொண்டான், ஏனெனில் தேவன் அவனிடம், அவர் பேசிக் கொண்டிருந்த தேவனுடைய வார்த்தையானது அவனிடம், “உன் கையிலுள்ள கோலை தரையிலே போடு” என்றது. அது தேவனுடைய வார்த்தை. அதையே நீங்கள் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டாம். ஏனெனில் அது உங்களுக்குண்டான தேவனுடைய வார்த்தை அல்ல. அது மோசேக்கு உண்டான தேவனுடைய வார்த்தை. இதோ உங்களுக்கான தேவனுடைய வார்த்தை உள்ளதே! தேவன் மோசேயிடம், “உன் கோலை தரையிலே போடு” என்றார். அது ஒரு சர்ப்பமாக மாறினது. அவர், “அதைக் குறித்து நீ பயப்படுகிறாயா? அதன் வாலைப்பிடி” என்றார். அது மீண்டும் கோலாக மாறினது. அது அவனுக்குண்டான தேவனுடைய வார்த்தை. தேவன் என்ன செய்தார்? அவர் தமது வார்த்தையை ரூபகாரப்படுத்தினார்.
5191 சில மாதங்களுக்கு முன்பு எனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. ஓ, அது ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு முன்பு, ஒரு ஆண்டுக்கும் அதிகமாக இருந்தது. ஒரு ஸ்திரீ ஒரு பாப்டிஸ்டு போதகருடனும், ஒரு பெந்தெகொஸ்தே போதகருடனும் தொலைபேசியில் இணைக்கப்பட்டவளாய், என்னுடன் தொலைபேசியில் பேசினாள். அவள், “சகோதரன் பிரான்ஹாமே கர்த்தர் என்னை ஒரு பெண் தீர்க்கதரிசியாக நியமித்திருக்கிறார்” என்றாள். நான், “நல்லது” என்றேன். 92 அவள், “உங்களுக்குத் தெரியுமா, என் ஊழியம் தேவனால் உண்டானது என்று நீர்—நீர் சாட்சி கொடுத்ததாக எனக்குக் கூறப்பட்டது” என்றாள் 93 இப்பொழுது, நான் அப்படி ஒருக்காலும் கூறியிருக்க முடியாது, ஏனெனில் அது தேவனுடைய வார்த்தைக்கு முரணான ஒன்று. ஆகவே நான், “பெண்மணியே, அது தவறு. எனக்கு உன்னை தெரியவே தெரியாது” என்றேன். 94 பாப்டிஸ்டு போதகர் என்னுடன் பேசினார், பெந்தெகொஸ்தே போதகரும் என்னுடன் பேசினர். அவள், “இங்கு நான் கூட்டம் நடத்துகிறேன். கர்த்தர் மகத்தான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்” என்றாள். 95 அப்பொழுது நான், “அதற்காக நான் அவருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்” என்றேன். அவள் சொன்னாள்…மேலும் நான் அவளிடம், “கர்த்தர் உன்னிடம் ஏதாவது கூறியிருக்கிறாரா?” என்று கேட்டேன். அவள், “ஆம், நான் ஒரு பெரிய திட்டத்தையே கையில் வைத்துள்ளேன்” என்றாள். 96 அதற்கு நான், “அற்புதம்” என்றேன். மேலும் நான், “இப்பொழுது, உன் திட்டம் என்ன?” என்று கேட்டேன். அது மட்டுமின்றி நான், “கர்த்தர் உன்னிடம் என்ன கூறினார்?” என்று கேட்டேன். 97 அவள், “தேவன் என்னிடம், ‘ இன்னின்ன தேதியில் அரிசோனாவிலுள்ள பினிக்ஸீக்கு செல். உனக்கு நான் காணமற்போன ஆலந்து நாட்டுக்காரனின் தங்க சுரங்கத்தைக் கொடுக்கப் போகிறேன். அங்குள்ள தங்கத்தை நீ தோண்டியெடுத்து, உலகம் பூராவும் மிஷனரிமார்களை உன் செலவில் அனுப்பப்போகிறாய் என்றார்’” என்று கூறினாள். காணமற்போன ஆலந்து நாட்டுக்காரனின் தங்கச் சுரங்கம் ஒரு கட்டுக்கதையென்று நம்மெல்லோருக்கும் தெரியும். அவளோ, “அவர் அவ்வண்ணமாய்க் கூறினார்” என்றாள். 98 அதற்கு நான் அவளிடம், “அது தேவனா இல்லையா என்று எப்படி கண்டு கொள்வது என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்றேன். பின்னர் நான், “அந்த நாளில் நீ அங்கு போ. நீ காணமற்போன ஆலந்து நாட்டுக்காரனின் தங்க சுரங்கத்தை கண்டு பிடித்தால், அப்பொழுது அது தேவன் உரைத்தது. நீ அந்த காணமற்போன ஆலந்து நாட்டுக்காரனின் தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடிக்கவில்லையென்றால், அப்பொழுது மனந்திரும்பி, அந்த பொய்யின் ஆவியை உன்னை விட்டு விலக்கு” என்றேன். அப்படித்தான் அது தேவனா அல்லது இல்லையா என்பதைக் கண்டு கொள்ள முடியும்.
5299 தேவன் மோசேயிடம், “உன் கோலை தரையிலே போடு. அது சர்ப்பமாக மாறும்” என்றார். அவன் அப்படியே செய்தான். அவர், “அதை கையிலெடு. அது மறுபடியும் கோலாக மாறும்” என்றார். அவன் அப்படியே செய்தான். 100 தேவன் இக்கடைசி நாட்களில் ஒரு ஊழியத்தை குறித்த வாக்குத்தத்தம் செய்யும்போது, அவர் அதைச் செய்வதாக அவர் சொன்னபடியே அதை அப்படியே நிறைவேற்றி உறுதிப்படுத்துவார். அப்பொழுது நீங்கள் சரியான சத்தத்தை பெற்றிருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்வீர்கள். நீங்கள் சரியான காரியத்தை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஏனெனில் அது வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாய் உள்ளது. புரிகிறதா? ஓ, எப்படி…நான் வருந்துகிறேன். நான்…சரி.
53101 மோசே வித்தியாசமாக நடந்து கொண்டான். மோசே என்ன ஒரு—ஒரு கோமாளித் தனமான செயலைப் புரிந்தான் என்று பாருங்கள். இப்பொழுது, நீங்கள் எப்பொழுதும் தேவனுடைய சத்தத்தை பின்பற்றிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் உலகத்துக்கு பயித்தியக்காரராக இருக்கிறீர்கள். அடுத்த நாள் மோசே தன் மனைவியை ஒரு கழுதையின் மேல் ஏற்றினான். ஆங்கிலத்தில் குழந்தைக்கு இயங்கன் (Young’n) என்ற வார்த்தையை தென்பாகத்திலுள்ளவர்கள் உபயோகிப்பது வழக்கம், அவளுடைய இடுப்பிலோ ஒரு குழந்தை இருந்தது. அவர்கள் புறப்பட்டு சென்றனர். இந்த கிழவன் இப்படி தாடி தொங்கினவனாய், அவனுடைய வழுக்கைத் தலைப் பிரகாசிக்க, தன்னுடைய கையில் ஒரு கோலைப் பிடித்துக் கொண்டு, கழுதையை நடத்திக் கொண்டு, அவனால் இயன்றவரை எகிப்தை நோக்கி வேகமாக சென்றான். யாரோ ஒருவர், “மோசே, எங்கே போகிறாய்?” என்று கேட்டார். 102 அதற்கு அவனோ, “எகிப்தை கைப்பற்ற அங்கு போகிறேன்.” என்றான். அவன் ஒரு வாலிபனாய் இருந்தபோது, அங்கே அவன் தோல்வி கண்டிருந்தான். அவன் ஒரு இராணுவ வீரனாயிருந்தபோது, அவன் தோல்வி கண்டிருந்தான். ஆனால் இப்பொழுதோ அவன் கைப்பற்ற அங்கு சென்று கொண்டிருந்தான். அவன் அதை கைப்பற்றினான். ஏன்? அவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, தன்னுடைய நாளில் காரியங்கள் என்னவாக இருக்கப் போகிறதென்றும், அது தன்னுடைய நாளிலே ரூபகாரப்படுத்தப்படுவதையும் அவன் கண்டான். அவன் அதைக் கண்டான்.
54103 பரிசேயன் என்று தன்னை அழைத்துக் கொண்ட பவுல் அவனால் முடிந்தவரைக்கும் வேத சாஸ்திரத்தினால் நிறைந்திருந்தான். ஆனால் ஒரு நாள் அவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். அவன் ஒரு அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டு, ஏதோ வித்தியாசமான ஒன்றுண்டு என்பதை அவன் அறிந்து கொண்டான். அது அவன் வாழ்க்கையை மாற்றினது. எத்தனை பரிசேயர்கள், எத்தனை கமாலியேல்கள் அல்லது வேறு யாராவது பவுலிடம், நீ தவறாயிருக்கிறாய், நீ தவறாயிருக்கிறாய் என்று சத்தமிட்டாலும் அவன் கவலை கொள்ளவில்லை. பவுல் தேவனுடைய சத்தத்தைக் கேட்ட பொழுது, அது சத்தியம் என்பதை அவன் அறிந்து கொண்டான். 104 பேதுரு தன்னால் இயன்றவரை பக்தியாயிருந்து, முன்னோர்களின் பாரம்பரியங்களைக் கடைபிடித்து வந்தான். அவன் மாம்சம் புசிக்க மனமில்லாதிருந்தான். இல்லை, ஐயா, அதனுடன் அவன் அதைக் குறித்த எவ்வித தொடர்பும் கொள்ள விரும்பவில்லை. அவன் உண்மையாகவே ஒரு வார்த்தையும் கூட பிசகாமல் முன்னோர்களின் பாரம்பரியங்களைக் கடைபிடித்து வந்தான். என்ன சம்பவித்தது? ஒரு நாள் அவன், “நான் சுத்தமாக்கினவைகளைத் தீட்டாக எண்ணாதே” என்று கூறின தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். அப்பொழுது அவன் மாற்றமடைந்த ஒரு மனிதனாய் இருந்தான். கர்த்தர் அவனை அனுப்பும் எந்த இடத்திற்கும் அவன் போக ஆயத்தமாயிருந்தான்.
55105 முடிக்கப் போகும் நேரத்தில் நான் கூறுவேனாக. ஒரு சமயம் விசுவாசியான ஒரு மனிதன் இருந்தான். அவன் மரித்து நான்கு நாட்களாகி விட்டன. அவன் கல்லறையில் நாற்றமெடுத்து, அழுகிபோய்க் கிடந்திருந்தான். ஆனால் அவன் “லாசருவே, வெளியே வா” என்று உரைத்த தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். மரித்து அழுகிப் போன ஒரு மனிதனை அது உயிரோடு வெளியே கொண்டு வருமானால், இன்னும் உயிரைப் பெற்றுள்ள ஒரு சபைக்கு அது என்ன செய்ய வேண்டும்? அது நாம் பேசியிருக்கிற இந்த எல்லா சத்தங்களின் குழப்பத்திலிருந்தும், மத சம்பந்தமான, அரசியல் சம்மந்தமான, நவ நாகரீக திரைப்படத்துறை மற்றும் இப்பொழுது வெளியே பரவியுள்ள இந்த எல்லா கள்ளத் தீர்க்கதரிசனங்களின் குழப்பத்திலிருந்தும் அவர்களை உயிரோடெழுப்ப வேண்டியதாயிருக்கும். அவை எல்லாவற்றின் மத்தியிலும் உண்மையான தேவனுடைய சத்தம், பாவத்தினாலும் அக்கிரமங்களினாலும் மரித்துள்ள ஒரு மனிதனை கூப்பிட்டு உயிரோடெழுப்பும். அது பின் வாங்கிப் போன ஒரு சபையை கூப்பிட்டு, அதை உயிரோடெழுப்பும். நிச்சயமாக!
56106 முடிக்கும் தருணத்தில் இதை நினைவில் கொள்ளுங்கள், இதை கூறி, அதன் பின்னர் நான் முடிக்க உள்ளேன். இயேசு, “பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் தேவனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்” என்று கூறினார். அதை நீங்கள் கேட்கப் போகிறீர்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் அதை எப்படியும் கேட்கப் போகிறீர்கள். அவர்களில் சிலர் பிரேதக் குழியிலிருந்து வெளியே வந்து, ஆக்கினை அடைவார்கள். அவர்கள் சத்தத்தைக் கேட்பார்கள், ஆனால் அது ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தும். “இன்று அந்த சத்தத்தை நீங்கள் கேட்பீர்களானால், இன்று, வெகுகாலத்திற்குப் பின்பு, என் சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோமூட்டுதலில் நடந்தது போல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.” பெந்தெகோஸ்தே மக்களாகிய நீங்கள் வெவ்வேறு குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு, மீண்டும் கோட்பாடுகளுக்குச் சென்று, உலப்பிரகாரமாக நடந்து கொண்டு, “தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருந்தால்,” உயிர்த்தெழுதலின் போது நீங்கள் உயிரோடெழுந்து ஆக்கினை அடைவீர்கள். ஏனெனில் இப்பொழுது உங்களுடன் வார்த்தையின் மூலம் பேசிக் கொண்டிருக்கும் தேவனுடைய சத்தம் அந்நாளில் உங்களை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தும்.
57107 நீ ஒரு வெதுவெதுப்பான விசுவாசியாயிருந்தால், இந்தக் காலையில் தேவனுடைய சத்தம் உன் இருதயத்தில், “நீ வெது வெதுப்பான விசுவாசியாயிருக்கிறாய்” என்று சத்தமிடுகிறபடியால், நீ மனந்திரும்புவது மேலானதாகுமே! 108 கிறிஸ்துவுக்காக ஜீவிக்காத மனுஷர்களே ஸ்திரீகளே பையனே, பெண்ணே, தேவனுடைய சத்தம் அவருடைய வார்த்தையின் மூலம் உன்னுடன் பேசி, “அப்படி செய்வதை நிறுத்திவிடு” என்று கூறும்போது, அதற்கு கீழ்ப்படிவது நல்லது. ஏனெனில் மறுபடியும் ஒரு நாள் நீங்கள் அந்த சத்தத்தைக் கேட்கப் போகிறீர்கள். அப்பொழுது அது உன்னை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தும். அது உங்களிடத்தில் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறது, எனவே அதை உங்களால் மறுக்க முடியாது. அது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 109 ஆனால் சரியானதை செய்து அவருடைய சத்தத்தை கேட்பவர்கள், நீதியில் உயிரோடெழுந்து, மகிமைக்குள் பரலோகத்தில் பிரவேசிப்பார்கள்.
58110 ஆகவே என்றாவது ஒரு நாள் நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்கப் போகிறீர்கள். ஒரு வேளை இந்தக் காலையில், நீ சென்றுகொண்டிருக்கிற வழியை விட்டு, தேவனிடம் திரும்ப வேண்டும் என்று அது உன் இருதயத்தில் மெதுவாகப் பேசலாம். இப்பொழுது, உன்னுடைய இருதயத்தில் பேசிக்கொண்டிருக்கிற அந்த சத்தத்தை அவர்கள் பரலோகத்தில் ஒலிப்பதிவு செய்கின்றனர் என்பதை நினைவில் கொள். என்றாவது ஒரு நாள் இயேசு கூப்பிடும்போது, பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் நன்மை செய்தவர்களும், தீமை செய்தவர்களும் எழும்புவார்கள். ஆகையால் நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் இதே சத்தம் அப்பொழுது, “ஒரு குறிப்பிட்ட ஞாயிறு காலையில் அரிசோனாவிலுள்ள பீனிக்ஸில், போதகர் நீண்ட நேரம் உங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, தேவனுடைய சத்தத்தைக் குறித்து பேசின போது, நான் உங்களிடம் பேசினேன்; பெண்களாகிய உங்களிடம், நீங்கள் தலைமுடியை நீளமாக வளர்க்க வேண்டுமென்றும், ஒழுக்கமற்ற உடைகள் உடுத்துவதை விட்டு விட வேண்டுமென்றும்; ஆண்களாகிய உங்களிடம், நீங்கள் பொய் சொல்வதையும், புகைபிடிப்பதையும் விட்டுவிட வேண்டுமென்றும்; பிரசங்கிமார்களாகிய உங்களிடம் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறினேன்” என்ற மிருதுவான குரலில் உங்களிடம் பேசும். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அது உண்மை. அந்த மெல்லிய சத்தம், “அது உண்மை” என்று கூறும்.
59111 நான் நிக்கொதேமுவைப் போல் வரவேண்டியதாயிருந்தால், அப்பொழுதும் நான் அங்கு வந்தடைய முயற்சி செய்வேன். நான் அவரிடம் வந்து, இந்த வனாந்திரத்தில் எங்காகிலும் சென்று, “தேவனாகிய கர்த்தாவே, இதோ நான் இங்கிருக்கிறேன். என்னை இப்பொழுதே மாற்றும். உம்மைப் போல் என்னை உருவாக்கும்” என்று கூறுவேன். வார்த்தைக்குத் திரும்புங்கள். நீங்கள் எங்காகிலும் வார்த்தையை விட்டு விலகியுள்ளதைக் கண்டால், உடனே அதற்கு திரும்பி வாருங்கள். ஏனெனில் ஒரு சங்கிலியின் பலமானது அதன் மிகவும் பலவீனமான இணைப்பில் தான் உள்ளது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தேவனுடைய கட்டளையை எங்காகிலும் விட்டு விலகி, பாரம்பரியத்தை சேவித்துக் கொண்டிருந்தால், நீங்கள் மற்ற காரியங்களில் எவ்வளவாக உறுதியாயிருந்த போதிலும், அந்த இடத்தில் உங்கள் சங்கிலி அறுந்து விடும். தேவனுடைய மாறாத கரத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
60112 நாம் ஜெபம் செய்வோமாக. கர்த்தாவே, நீண்ட காலத்துக்குப் பிறகு, இன்று நீர் பேசப்போவதாக கூறினீர், உமது கற்பனைகளை எங்கள் இருதயமாகிய கற்பலகைகளில் எழுதிவைப்பதாக கூறினீர். எனக்கு முன்னால் என்ன உள்ளதென்று நான் அறியேன். எனக்குச் செய்யத் தெரிந்த ஒன்றே ஒன்று, உமது வார்த்தையை எடுத்து அதை பரப்புவதேயாகும். நிச்சயமாக அது சில கற்பாறைகளின் கீழ் எங்காவது விழும்.தேவனே, நீர் ஒவ்வொரு வாலிப நபரிடத்திலும், ஒவ்வொரு நடுத்தர வயதுள்ளோரிடத்திலும், முதியோரிடத்திலும், அது யாராயிருந்தாலும், அவர்களுடன் பேச வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, என் இருதயத்தில் பேசும், இந்த ஊழியக்காரர்களுடைய இருதயங்களில் பேசும். சபையோரின் இருதயங்களில் பேசும். 113 பிதாவே, இன்று நாங்கள் உம்முடைய சத்தத்தை கேட்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். சாமுவேலின் நாட்களில் பிரத்தியட்சமான தரிசனம் அபூர்வமாயிருந்தது, அது ஜனங்களை திடுக்கிடச் செய்தது. அது இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது என்பதை நாங்கள் அறிவோம், எங்களுக்கு சொப்பனமும் சொப்பனக்காரர்களும் உள்ளனர். எங்களுக்கு பேச்சாளர்களும், மொழி பெயர்ப்பாளர்களும் உள்ளனர். ஆனால் தேவனுடைய வார்த்தையோடு பிரத்தியட்சமான தரிசனம் புறப்பட்டு வந்து, திருத்துவதென்பது… பரலோகப் பிதாவே, “கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்” என்று வனாந்திரத்திலே கூப்பிட்ட அதே சத்தத்தை பரிசுத்த ஆவியானவர் தாமே இன்றைக்கு மறுபடியும் அருளி, “கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தம் பண்ணுங்கள்” என்று உரைப்பார் என்று நாங்கள் விசுவாசித்து ஜெபிக்கிறோம். இது எவ்வளவு வினோதமாயுள்ளது! ஏனெனில் அதை மரத்து போகச் செய்து, எடுத்துப் போட, வேறு பல சத்தங்கள் உள்ளன. ஆனால் அதை கேட்பவர்களின் காதுகளுக்கு அது கிருபையுள்ளதாயுள்ளது. பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் எல்லோருடைய இருதயங்களிலும் கிரியை செய்ய வேண்டுமாய் நான் ஜெபிக்கிறேன்.
61114 நமது தலைகளை நாம் வணங்கியிருக்கையில், நமது இருதயங்களும் வணங்கியுள்ளன என்று நான் நம்புகிறேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எங்காவது கீழ்ப்படியாமலிருந்திருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்திருப்பீர்களானால், நீங்கள் வேத வாக்கியங்களை அறிந்திருந்து, நீங்கள் அந்த வேத உபதேசத்துடன் ஒத்துழைக்காமல், நவ நாகரீகத் திரைப்படத் துறையின் சத்தம் நீங்கள் வித்தியாசமாக ஏதோ ஒரு காரியத்தை செய்யும்படி செய்திருந்தால், ஊழியக்காரர்களாகிய நீங்கள் உண்மையாகவே சத்தியம் என்று அறிந்துள்ள ஒரு பகுதியை வேதத்தில் கண்டறிந்திருந்து, அதை நீங்கள் போதித்தால் உங்கள் ஸ்தாபனம் உங்களை புறம்பாக்கும் என்று அறிந்திருந்தாலும், அது முற்றிலும் சத்தியம் என்பதையே நீங்கள் அறிந்துள்ளீர்கள். தவறான காரியங்களை எடுத்துக்கொண்டு தவறான வாழ்க்கை வாழும் உங்களுக்கு, உங்கள் பிள்ளைகளை திருத்த முயற்சி செய்யாமல், அவர்களை சரியான வளர்ப்பில் வளர்க்காத தகப்பன்மார்களும், தாய்மார்களுமாகிய நீங்கள், உங்களால் இயன்றவரை நீங்கள் முயற்சி செய்தும், அவர்கள் உலகப் பிரகாரமாக நடந்து கொள்ளுகின்றனர், ஆனால் நீங்கள் அவர்களுக்கு முன்பாக மாதிரியாக இருந்து கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அவ்வாறு மாதிரியாயில்லையென்றால், தேவனுடைய சத்தம் உங்களிடத்தில், “அவ்வாறு மாதிரியாயில்லாமலிருக்காதீர்கள்” என்று பேசிக்கொண்டிருக்கிறது.
62115 எல்லா தலைகளும் வணங்கி, எல்லாக் கண்களும் இப்பொழுது மூடியிருக்கும் இந்நேரத்தில், பசி கொண்டவர்களாய், அவர்கள் எங்கே தவறு செய்துள்ளனர் என்று ஆராய்ந்து பார்க்கும் ஒவ்வொருவருடைய இருதயத்தையும் பரலோகத்தின் தேவன் தாமே நோக்கிப் பார்ப்பாராக. தேவனிடம் ஒரு கரத்தை உயர்த்தி, “கர்த்தாவே, உமது சத்தம் எல்லா அவிசுவாசத்தையும், உம்மைப் போல் இல்லாத எல்லா காரியங்களையும் அகற்றி, நான் எப்படி இருக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ, அந்நிலைக்கு என்னை உருவாக்க வேண்டுமென்று நான் உண்மையாகவே வாஞ்சிக்கிறேன்” என்று சொல்லுங்கள். உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? உங்களை…கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 116 இந்த மற்ற எல்லா சத்தங்களும் இருந்த போதிலும், “ஒருவன் என் சத்தத்தைக் கேட்டால்” என்று இயேசு வேதாகமத்தில் கூறியுள்ளார். அவரை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் உங்களுடைய வாஞ்சையைப் பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள்.
63117 கர்த்தாவே, நேரம் விரைவாக கடந்து கொண்டிருக்கிறது. ஆனால், “விசுவாசித்தவர்கள் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்” என்று வேதம் கூறியுள்ளது. பரலோகப் பிதாவே, தாங்கள் படித்துள்ள தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக அவர்கள் தவறாய் இருந்து வந்துள்ளதைக் கண்டு, உண்மையாகவே அறிக்கை செய்து கைகளை உயர்த்தின ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். அவர்களில் பாதி பேரைக் கூட நான் ஒருபோதும் காணவில்லை, நான் காண வேண்டுமென்ற அவசியமில்லை. கர்த்தாவே, அது நீர் காண வேண்டியதாய் உள்ளது. உயர்த்தப்பட்ட கரத்துக்கு பின்னால் உள்ள நோக்கத்தையும் குறிக்கோளையும் நீர் அறிந்திருக்கிறீர். அவர்கள் தாமே இந்த நேரம் முதற்கொண்டு, “இன்று முதல் நான் தேவனுடைய வார்த்தையை, தேவனுடைய சத்தத்தை ஏற்றுக்கொண்டு அதற்கான கிரயம் எதுவானாலும் கவலைப்படாமல், அதைப் பின்பற்றுவேன்” என்று தங்கள் இருதயங்களில் தீர்மானிப்பார்களாக. அவர்கள் செல்லும்போது, “இயேசு மாத்திரம் சிலுவையை தனியாய் சுமக்க வேண்டும், ஆனால் முழு உலகமும் சுமக்காமலே போக வேண்டுமா? இல்லை, ஒவ்வொருவருக்காகவும் ஒரு சிலுவை உண்டு; எனக்காகவும் ஒரு சிலுவை உண்டு. மரணம் என்னை விடுதலையாக்கும் வரைக்கும், அர்ப்பணிக்கப்பட்ட இந்த சிலுவையை நான் சுமப்பேன்” என்று அந்தப் புலவனின் பாடலை தங்களுடைய சிந்தையில் கொண்டிருப்பார்களாக. அப்பொழுது தேவனுடைய சத்தம் பேசும்போது, “அவருடைய நீதியில் நான் வெளியே வருவேன், எனெனில் அவருடைய சத்தத்தை, அவருடைய வார்த்தையின் சத்தத்தை, நான் பின் பற்றினேன்.” என்பார்கள். கர்த்தாவே, நான் அவர்களை இப்பொழுது உம்மிடம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சமர்ப்பிக்கிறேன்.
64118 இப்பொழுது நாம் நமது தலைகள் வணங்கியிருக்கையில், உங்களுடைய பாவ அறிக்கைகளையும், உங்களுடைய வாக்குறுதிகளையும் செய்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், இங்கே தன்னுடைய தலையை சுற்றும் முற்றும் திருப்பும் ஒரு சிறுவனைக் குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். “உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே” என்ற ஒரு சத்தம் சபைக்கானதாய் உள்ளது. அதுவே சபையில் உள்ள ஒரு சத்தம் ஆகும். சுகம் பெற அவசியமுள்ள நீங்கள் யாவரும்; தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றுக்கும் பிரதிஷ்டை செய்யப்பட்ட வாழ்க்கையைக் கடைபிடித்து, நீங்கள் சரியென்று அறிந்துள்ள ஒவ்வொன்றையும் நீங்கள் செய்திருந்து, உங்களுக்கு சுகம் தேவைப்பட்டால், உங்கள் கைகளையுயர்த்துவீர்களா என்று நான் வியப்புறுகிறேன். “கர்த்தாவே, எனக்கு சுகம் தேவையுள்ளது” என்று கூறி உங்களுடைய கைகளையுயர்த்துங்கள். சரி. 119 இப்பொழுது, “உன் நோய்களையெல்லாம் குணமாக்கும் கர்த்தர் நானே” என்னும் அந்த சத்தத்தை உங்கள் இருதயத்தில் பதித்துக்கொள்ளுங்கள். வார்த்தை உரைக்கப்பட்டிருந்தால் அது நிறைவேறியே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு, “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்” என்று மாற்கு 11:22- ல் கூறியுள்ளார்.
65120 இப்பொழுது ஒவ்வொருவரும் உங்களுடைய தலையை வணங்கி, உங்களுடைய சொந்த வழியில் உங்களுடைய அறிக்கையைச் செய்யுங்கள், “கர்த்தாவே, நான் உம்முடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன். நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்று என்னிடத்தில் சொல்லிக்கொண்டிருக்கிற உம்முடைய சத்தத்தை நான் கேட்கிறேன்.” நான் இப்பொழுது கீழே நடந்து சென்று இந்த குழந்தையின் மேல் கைகளை வைக்கப் போகிறேன். ஏனெனில் இது என்னவென்று அறிந்து கொள்வதற்கு அவன் மிகச் சிறியவன், விலையேறப்பெற்ற சிறு பையன், என் மகன் குட்டி ஜோசப்பின் அளவும், வயதும் கொண்டவன். நீங்கள் எல்லோரும், “கர்த்தாவே, நான் உம்முடைய சத்தத்தை கேட்கிறேன். நான் விசுவாசிக்கிறேன்” என்று ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
66121 பரலோகப் பிதாவே, நாங்கள் இந்தக் கூட்டத்தாரை அவர்களுடைய சரீர சுகத்திற்காக உம்மிடம் கொண்டு வருகிறோம். கர்த்தாவே, இங்கு ஒரு ஏழையான சிறு பையன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். செய்தி முழுவதிலும் அவன் என் கவனத்தை கவர்ந்து கொண்டிருந்தான். அவனுடைய பெற்றோர் அங்கு அவனைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். மருத்துவ விஞ்ஞானத்தின்படி, அந்த சிறுவன் சுகம் பெறுவான் என்னும் நம்பிக்கையில்லை. ஆனால் இவையெல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய சத்தம் ஒன்றுண்டு. எனக்கு செய்யத் தெரிந்த எல்லா கட்டளைகளையும் நானும் சபையும் ஒன்று சேர்ந்து செய்துவிட்டோம். பிதாவே, மற்றவை நீர் செய்ய வேண்டியதே. நான் நடந்து சென்று என் கைகளை அந்த பிள்ளையின் மேல் வைக்கிறேன். 122 பிதாவாகிய தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இதைக் கடிந்துக்கொள்கிறேன். தேவனுடைய வல்லமை, தேவனுடைய சுகமளிக்கும் வல்லமை… அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் அவனுடைய நிலைமையில் வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக. அவர்கள் எல்லோரும் உம்முடைய மகிமைக்காக தேவனிடம் வருவார்களாக. 123 பரலோகப் பிதாவே, நீர் வாக்களித்தீர் அவ்வளவு தான் எனக்குத் தெரிந்தது. நீரே வாக்களித்தீர். அது நிறைவேறி விட்டது. “இதை பார்த்து நீ சொல்வாயானால்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்திலுள்ள மக்களையும் வேதனையினால் கட்டியிருக்கும் ஒவ்வொரு சுகவீனப் பிசாசையும் ஒவ்வொரு அவிசுவாச ஆவியையும், “இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஜனங்களிடத்திலிருந்து அகன்று போ” என்று நான் கூறுகிறேன். இப்பொழுது, அது எழுதப்பட்டுள்ளது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இப்பொழுது அது சொல்லப்பட்டுவிட்டது. தேவனுடைய நாமத்தின் கனத்துக்கும் மகிமைக்கும் அது செய்யப்படுவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அது கேட்கப்பட்டுவிட்டது.
67124 இப்பொழுது, விசுவாசிக்கக் கூடிய நீங்கள், விசுவாசிக்கிறவர்களாகிய நீங்கள், என்ன நேர்ந்த போதிலும் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. விதை அங்கு விதைக்கப்பட்டு விட்டது. உங்களுக்குள் இருக்கும் அந்த சிறிய ஒன்று, அந்த சத்தம். இந்த குழந்தையின் பெற்றோரை, அந்தக் குழந்தையினுடைய நிலை எதுவாயிருந்தாலும், கவலைப்பட வேண்டியதில்லை, தேவனுடைய வித்து உங்கள் இருதயத்தில் விழுந்துவிட்டதென்றும், அந்தப் பையன் குணமடைவான் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒருவருக்காக ஒருவர் ஜெபித்துக்கொண்டிருக்கிற நீங்கள் யாவரும் தேவனுடைய வித்து உங்களுடைய இருதயத்திற்குள் விழுந்துவிட்டது என்றும், “என்னுடைய சுகவீனம் போய்விட்டது” என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆகையால் விசுவாச ஜெபம் உங்களுக்காக ஏறெடுக்கப்பட்டுவிட்டது. அந்த கம்பத்தை அங்கு நாட்டுங்கள். சாத்தான் எப்பொழுதாவது முயற்சி செய்தால், நீங்கள் திரும்பி வந்து, “அந்த ஞாயிறு காலையில், நான் ஸ்பானிய சபையில் நின்று கொண்டிருந்தபோது, எனக்காக விசுவாச ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. தேவன் வாக்களித்திருந்தாரே!” என்று கூறுங்கள். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; தேவன் அவர்களை எழுப்புவார். அது நிறைவேற வேண்டும். அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் “ஆமென்” என்று சொல்லுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது ஆராதனையை சகோ.ரோஸ் அவர்களிடம் ஒப்படைக்கிறேன். அவர் இங்கிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். சகோ.ஜூவல் ரோஸ்.