தேவன் எளிமையில் மறைந்திருந்து அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல்

63-0317M

சகதரன நவல உஙகளகக நனற. கரததர உமம ஆசரவதபபரக. கல வணககம. நணபரகள. இககல நரததல மறபடயமக இககடரததறக வநத இககடடடததன அழகன அமபபயம இஙக தவனடய பளளகள இனற அவரடய வடடல ஒழஙகக உடகரநதரபபதயம கணபத என வழககயல நரநத அநக உயரய சமபவஙகளல ஒனறக நன நசசயமயக கரதகனறன. 2 நறற இஙக நன வநத பத கடடடததன அமபபக கணட மகவம வயபபறறன. இத இநதவதமய இரககம என

தேவன் எளிமையில் மறைந்திருந்து அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல்

63-0317Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி1831963-03-17

தேவன் எளிமையில் மறைந்திருந்து அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல்

63-0317Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி1831963-03-17

1 சகோதரன் நெவில் உங்களுக்கு நன்றி. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. காலை வணக்கம். நண்பர்களே. இக்காலை நேரத்தில் மறுபடியுமாக இக்கூடாரத்திற்கு வந்து இக்கட்டிடத்தின் அழகான அமைப்பையும் இங்கு தேவனுடைய பிள்ளைகள் இன்று அவருடைய வீட்டில் ஒழுங்காக உட்கார்ந்திருப்பதையும் காண்பது என் வாழ்க்கையில் நேர்ந்த அநேக உயரிய சம்பவங்களில் ஒன்றாக நான் நிச்சயமாய்க் கருதுகின்றேன். 2 நேற்று இங்கு நான் வந்த போது கட்டிடத்தின் அமைப்பைக் கண்டு மிகவும் வியப்புற்றேன். இது இந்தவிதமாய் இருக்கும் என்று நான் ஒருபோதும் கனவு கண்டதும் கூட இல்லை. திட்டவரைப் படங்களை நான் பார்த்தபோது, அவர்கள் அந்த திட்ட வரைப்படத்தை (Blue print) வரைந்தபோது, ஏதோ ஒரு சிறு அறை ஒரு பக்கத்தில் வரையப்பட்டிருந்ததை நான் கண்டேன். ஆனால் இப்பொழுதுதோ, அது அழகான ஒரு—ஒரு இடமாக இருப்பதை நான் கண்டறிகிறேன். இந்த அழகான ஸ்தலத்திற்காக நாம் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாம்…

23 இக்காலையில் என் மனைவியினிடத்திலிருந்தும், பிள்ளைகளிடத்திலிருந்தும் வாழ்த்துக்களை நான் உங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். இப்பிரதிஷ்டை ஆராதனையிலும், கிறிஸ்துவுக்கென அர்பணிக்கப்பட்ட இவ்வாரத்தின் ஆராதனையிலும் இந்த நேரத்தில் இங்கிருக்க அவர்கள் வாஞ்சித்தனர். ஆனால் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் இருக்கின்றனர். அதனால் அவர்கள் வருவது கடினமான காரியமாயுள்ளது. வீட்டையடைய வேண்டுமென்ற ஆவல் அவர்களை விட்டு சற்று போயிருக்கிறது. ஆனால் ஜனங்களாகிய உங்களைக் காண வேண்டுமென்ற ஆவல் ஒருபோதும் எங்களை விட்டு என்றும் போகவே போகாது. நீங்களும் அதை நீக்கிவிட முடியாது. நண்பர்கள் இருப்பதும் மிகவும் நல்லது. எல்லாவிடங்களிலுமுள்ள என் நண்பர்களை நான்—நான் மதிக்கிறேன். ஆனால் பழைய நண்பர்களைக் குறித்த ஒரு காரியம் உண்டு. நீங்கள் புதிய நண்பர்களை சம்பாதித்துக் கொண்டாலும், பழைய நண்பர்களுடன் அவர்களை ஒப்பிட முடியாது. 4 நான் எங்கு சுற்றித் திரிந்தாலும், இந்த இடம் எனக்கு எப்பொழுதுமே புனிதமாக இருக்கும். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இது ஒரு சேறு நிரம்பிய குட்டையாக இருந்தபோது, இந்த சேறு நிரம்பிய ஒரு—ஒரு குட்டையான இந்த துண்டு நிலத்தை நான் இயேசு கிறிஸ்துவிற்கு பிரதிஷ்டை செய்தேன். இந்த இடம் முழுவதும் ஒரு குட்டையாகவே இருந்தது. அங்கு குட்டை இருந்த காரணத்தால் இதனருகில் வழித்தடம் ஏதுமில்லை, பாதையோ இங்கிருந்த குளத்திலிருந்து சற்று தூரமாக சுற்றிக் கொண்டு போகும்படியாக அப்பொழுது அமைக்கப்பட்டிருந்தது. இக்குட்டையில் இங்கே லீலிப் புஷ்பங்கள் வளர்ந்திருந்தன.

35 இந்த—இந்த லீலிப் புஷ்பம் மிகவும் விநோதமான ஒரு புஷ்பமாகும். அது சேற்றில் பிறந்தாலும் கூட, அது தன் அழகைக் காண்பிக்க வேண்டுமெனில், அது சேறு, தண்ணீர், சுண்ணாம்பு இவைகளை உந்தித் தள்ளி, அதனூடே வரவேண்டியதாயுள்ளது. 6 ஆகவே அதுதான் இங்கே இக்கூடாரத்துக்கும் முழுமையாக சம்பவித்துள்ள காரியம் என்று நான் இக்காலையில் கருதுகிறேன். அந்நேர முதற்கொண்டு இச்சிறு குட்டையின் லீலி, தண்ணீரின் வழியாக தன்னை உந்தித் தள்ளி, வெளிப்பட்டு, தன் இதழ்களைப் பரப்பி, இதனுடைய பூவிதழ்கள் புறப்பட்டுச் சென்றன. அது பள்ளத்தாக்கின் லீலியைப் பிரதிபலித்தது. இது நீண்ட காலம் நிலைத்திருப்பதாக! தேவனுக்கென்று முற்றிலுமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வீடாக இது திகழ்வதாக.

47 1933-ம் வருடத்திலேயே இக் கூடாரம் பிரதிஷடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் காலை வேளையிலே கிறிஸ்துவின் பேரிலுள்ள அவர்களுடைய அன்பின் காரணமாகவும், பக்தியின் காரணமாகவும், விசேஷமாக இதனைக் கட்ட சாத்தியமாக்கின ஜனங்களுக்கென்று பிரத்தியேகமாக மறுபடியும் ஒரு—ஒரு சிறிய பிரதிஷ்டை ஆராதனை நடத்துவது ஒரு—ஒரு நல்ல காரியமாயிருக்கும் என கருதுகிறோம். கிறிஸ்துவுக்கென்று இந்த சபையை பிரதிஷ்டை செய்ய நீங்கள் அறிந்துள்ள உங்களுடைய காணிக்கைகள் மற்றவைகளுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்.

58 இங்கே சபையின் நம்முடைய நல்ல சகோதரர்கள் தங்களுடைய பணிகளை இதற்கென்றே அர்பணித்த அவர்களின் சார்பில் இந்த வார்த்தைகளைக் கூறி, சபையோருக்கு நன்றி தெரிவித்து மகத்தான பாராட்டுதல்களையும் நான் அளிக்கிறேன். சகோதரன் பாஸ்ஸ் உட், நம்முடைய பெருந்தன்மையான சகோதரன்; சகோதரன் ராய் ராபர்ஸன், நம்முடைய பெருந்தன்மையான சகோதரன்; மற்றும் அநேகர் சுயநலமின்றி, ஏகமனதோடு இது சரியாக கட்டிமுடிக்கப்படுவதைக் காணும்படி இங்கேயே தரித்திருந்து, பல மாதங்கள் இந்தவிதமாய் இருக்கும்படி இந்த இடத்தில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

69 நான் இந்த பிரசங்க பீடத்தைக் காணும்படி உள்ளே நடந்துவந்தபோது, என் ஜீவியகாலமெல்லாம் நான் எப்பொழுதும் வாஞ்சித்துவந்த விதமாகவே அது இருந்தது. நான்…நான் எப்படி அதை விரும்பியிருந்தேன் என்பதை சகோதரன் உட்ஸ் அறிந்திருந்தார். அவர் அதைப் போன்றே கட்டப்போவதாக அவர் ஒருபோதும் கூறவேயில்லை, ஆனால் அவர் அதை கட்டியிருக்கிறார்.

710 இக்கட்டிடமும், கட்டமைப்பும் எந்தளவு, ஓ, அது மேம்பட்டதாயிருக்கிறது என்பதை நான் கவனித்தேன். என் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே கிடையாது. அதைச் செய்ய வழியே இல்லை, பாருங்கள். ஆனாலும் தேவன் என் உணர்வுகளை அறிந்திருக்கிறார். இந்த ஸ்தலத்தில் இந்த விதமான கட்டிடத்தில் இதை ஒரு கர்த்தருடைய வீடாக்க நீங்கள் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும், உங்களுடைய பங்களிப்புகளுக்காகவும் உங்கள் ஒவ்வொருவருக்கும் பலனளிக்கப்படும். இப்பொழுது நான் இந்த வார்த்தைகளைக் கூறிட விரும்புகிறேன். இப்பொழுது இக்கட்டிடமோ உள்ளும் புறமும் அழகாக உள்ளது. 11 என் மைத்துனராகிய ஜீனியர் வெபர் (Junior Weber) கொத்தனார் வேலை செய்துள்ளார். எப்படி இதனைக் காட்டிலும் முழுநிறைவான பணியாய் வேறேதும் இருக்கக் கூடும் என்பதை என்னால் காண முடியாது.

812 இங்குள்ள வேறொரு சகோதரன், நான் அந்த மனிதனை சந்தித்ததேயில்லை, அவர் ஒலி அமைப்பை அமைத்திருக்கிறார். ஆனால் கவனியுங்கள், இக்கட்டிடம் இந்தவிதமாக சமசட்டமாக இருந்தாலும்கூட ஒலியானது என்னால்…எதிரொலிக்கவில்லை. இவ்வொலிப் பெருக்கிகள் கூரைகளில் பலவிதமான வழிகளில் பொருத்தப் பட்டுள்ளன. நான் எங்கு நின்றாலும் ஒரே விதமான ஒலி எல்லாவிடங்களிலும் கேட்கின்றது, பாருங்கள். ஒவ்வொரு அறைகளிலும் ஒலிப்பெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே நீங்கள் விரும்பும் வண்ணம் அதைக் கேட்க முடியும். இந்தக் காரியங்களைச் செய்தது சர்வவல்லமையுள்ள தேவனின் கரம் என்பதை நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது…

913 நாம் அவரை தொழுதுகொள்வதற்கென்று முப்பது வருடங்களுக்கு முன் இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது ஒரு சிறந்த கட்டிடத்தை கர்த்தர் நமக்கு அளித்துள்ளார். நாம் ஒரு மண் தரையில் துவங்கினோம், மரத்தூளைப் போட்டு, பழைய நிலக்கரி அடுப்புகளின் அருகில் குளிர்காய இங்கே அமருவோம். கட்டிடம் கட்டும் ஒப்பந்தக்காரர் சகோதரன் உட்டும், அவர்களில் ஒருவரான சகோதரன் ராபர்ஸன் அவர்களும் பழைய கட்டிடத்தில் சதுரத்தூண்கள் அமைந்திருந்த ஸ்தலத்தைக் குறித்து என்னிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தனர். ஒரு முறை அந்த பழைய அடுப்புகளிலிருந்து புறப்பட்ட நெருப்பு கைமரத்தை (rafter) இரண்டு இல்லை மூன்று அடிகள் எரிந்து விட்டது. ஏன் அது முழுவதும் எரிந்து போகவில்லையென்றால், தேவன் அதைக் காத்துக்கொண்டார். அது எரிந்து போன பிறகும், கூடாரத்தின் முழு பாரமும் அதன் மேல்தான் அமர்ந்திருந்தது. என்றாலும் அது ஏன் விழுந்து போகவில்லை, தேவனுடைய கரம் தான் அதைத் தடுத்தது. ஆனால் இப்பொழுதோ எஃகினால் செய்யப்பட்ட உத்திரங்களால் [girders] அது ஸ்திரமாக்கப்பட்டுள்ளது.

1014 தேவனுடைய கிருபையினாலே உட்புறத்தை சரியாக்குவதே நம்முடைய கடமை என்று நான் நினைக்கிறேன். நாம் தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவராயிருக்கும் விதத்தில்… இது ஒரு அழகிய கட்டிடமாக அமைவது மாத்திரமல்ல இங்கு உள்ளே வருகிற ஒவ்வொருவருக்குள்ளும், இயேசு கிறிஸ்துவின் அழகான குணாதிசயம் உள்ளே வருகிற ஒவ்வொருவருக்குள்ளும் காணப்படுவதாக. இது நம்முடைய கர்த்தருக்கென்றும், ஒரு பிரதிஷ்டை செய்ய ஜனங்களுக்கென்றும் திகழ்வதாக! ஏனெனில் இக்கட்டிடம் எவ்வளவு அழகுடன் இருந்தாலும்…இதன் அழகை நிச்சயமாக மெச்சுகிறோம் ஆனால் ஒரு சபையின் அழகு அந்த ஜனங்களின் குணாதிசயமாய் உள்ளது. இது எப்பொழுதும் அழகான தேவனுடைய வீடாகத் திகழும் என நான் நம்புகிறேன்.

1115 முன்பு மூலைக்கல்லை நாட்டி பிரதிஷ்டை ஆராதனை நடத்தியபோது ஒரு மகத்தான தரிசனம் உண்டானது. அத்தரிசனம் அன்று காலை நான் பிரதிஷ்டை செய்த மூலைக்கல்லின் மேல் எழுதப்பட்டுள்ளது.

1216 ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் நான் வெளிவர தாமதித்ததைக் குறித்து நீங்கள் ஒருக்கால் வியப்புற்றிருக்கலாம். நான் இப்புதிய சபையில் நுழைந்ததும் என் முதல் வேலையாக அலுவலகத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபனுக்கும் வாலிபப் பெண்ணுக்கும் விவாகம் செய்து வைத்தேன். அந்நாளின் வைபவத்திற்கென ஒரு மணவாட்டியை ஆயத்தப்படுத்தும் ஒரு உண்மையுள்ள ஊழியக்காரணாக நான் இருப்பேன் என்பதற்கு இது ஓர் அடையாளமாயிருப்பதாக.

1317 துவக்கத்தில் நாம் செய்தவிதமாகவே இப்பொழுது நாம் செய்வோம். சபையின் முதல் பிரதிஷ்டை ஆராதனையை நாம் செய்தபோது, நாம் மூலைக் கல்லை நாட்டினபோது, நான் இருபத்தொன்று அல்லது இருபத்திரண்டு வயது சென்ற ஓர் வாலிபனாயிருந்தேன். நான் விவாகம் செய்வதற்க்கு முன்பாகவே அது நடந்தது. அவருடைய ஜனங்களோடு சரியான முறையில் தேவனை…தேவனை ஆராதிக்க ஒரு தகுந்த ஸ்தலத்தை ஆயத்தம் செய்ய வேண்டுமென்று நான் எப்பொழுதும் விரும்பியிருந்தேன், பாருங்கள். ஒரு அழகான கட்டிடத்தின் மூலமாக மட்டும் நாம் தேவனை சரிவரத் தொழுது கொள்ள இயலாது, ஆனால் ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜீவியத்தின் மூலமாக மட்டுமே நாம் அவ்வாறு செய்ய முடியும்.

1418 நாம் பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு ஒரு பிரதிஷ்டை ஜெபத்தை ஏறெடுக்கும் முன்பு, சில வேதவாக்கியங்களை வாசித்து, இந்த சபையை மீண்டும் தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்வோம். அதன் பின்னர் நான்…கொடுக்கவிருக்கிற என்னுடைய செய்தியை அமைப்பதற்காக, இக்காலையில் சுவிசேஷத்தைக் குறித்த ஒரு செய்தியை நான் உடையவனாயிருக்கிறேன். 19 இன்றிரவு நான் வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தை எடுக்க விரும்புகிறேன், அது ஏழு சபையின் காலங்களை ஏழு முத்திரைகளுடன் பொருத்துகின்றது. ஆதலால் நான்…பிறகு நாம்… 20 திங்களிரவு வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்பவனைக் குறித்ததாயிருக்கும். செவ்வாய் இரவு…கருப்புக் குதிரையின் மேல் சவாரி செய்பவனைப் பற்றியும், அவ்வாறே நான்கு குதிரைகளின் மேல் சவாரி செய்பவர்களைக் குறித்தும் பார்ப்போம். அதன் பின்பு ஆறாம் முத்திரை திறக்கப்படுகின்றது. 21 ஆகவே பிறகு ஞாயிறு காலையில், அடுத்த ஞாயிறு காலை, கர்த்தருக்குச் சித்தமானால்…நாங்கள் அதைப் பிறகு பார்த்து அறிவிப்போம். ஒரு வேளை, அடுத்த ஞாயிறு காலையில் வியாதியஸ்தருக்கென்று இக்கட்டிடத்தில் ஒரு ஜெப ஆராதணை இருக்கலாம். 22 அதன் பின்னர் ஞாயிறு இரவு முடித்துவிடுவோம்… ஏழாவது முத்திரையைத் திறக்க கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. அது மிக சிறிய வசனமாகவே அங்கு உள்ளது. அதாவது, அந்த அமைதியினாலே “பரலோகத்தில் ஏறக்குறைய அரை மணி நேரம் அமைதல் உண்டாயிற்று” என்று அதுவே இதைக் கூறுகிறது.

1523 இப்பொழுது, இம்முத்திரைகள் எவற்றைக் குறிக்கின்றன என்பதனை நான் அறியேன். உங்களைப் போலவே நானும் இன்று காலையில் அவைகளை அறியாதவனாயிருக்கிறேன். அவைகளை வியாக்கியானம் செய்யும் வேதத்துவ போதனைகளுண்டு. ஆனால் அவை மனிதனால் அளிக்கப்பட்டவை. என்வே அவை சரியாயிருக்க முடியாது. ஆகையால் நீங்கள் கவனிப்பீர்களானால் அதன் உண்மையான வியாக்கியானம் தேவ ஆவியால் ஏவப்பட்டு அளிக்கப்பட வேண்டும். அது தேவனாயிருக்க வேண்டும், ஆட்டுக்குட்டியானவர் ஒருவர் மாத்திரமே, அவர்தாமே அதைச் செய்ய முடியும். எனவே இன்று இரவு அது மீட்பின் புத்தகமாய் உள்ளது.

1624 இப்பொழுது நான் இந்த ஜெப கூட்டங்களில் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதைக் குறித்து அறியாதக் காரணம் என்னவென்றால்… நான் சில நண்பர்களுடன் தங்கி, என்னுடைய ஒவ்வொரு நிமிடமும் படிப்பதிலும், ஜெபிப்பதிலுமே தரித்திருக்கிறேன். நான் மேற்கில் செல்வதற்கு சற்று முன்பு, அந்த ஏழு தூதர்கள் பறந்து வந்ததைக் குறித்து நான் கண்ட தரிசனத்தை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, நீங்கள் அதை பற்றி பிறகு புரிந்து கொள்வீர்கள்.

1725 இப்பொழுது, இப்பொழுது, தேவனுடைய ஆராதனைக்கென்று பிரதிஷ்டை பண்ணப்பட்ட அல்லது இன்னும் சில நிமிடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்ற இக்கட்டிடத்தில் நாம் இவைகளைச் செய்ய வேண்டுமென்று நான் நினைக்கிறேன். இந்த கட்டிடத்தில் நாம் வியாபாரம் எதுவும் செய்யக்கூடாது. தேவனுடைய வீட்டில் வாங்கவோ விற்கவோ கூடாது. ஊழியக்காரர் இங்கு வந்து புஸ்தகங்களையும், மற்றவைகளையும் விற்பது ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அது எதுவாயிருந்தாலும் சரி. புஸ்தகங்கள் விற்பதற்கு வேறு ஸ்தலங்கள் உள்ளன. ஏனென்றால் நாம்—நாம் நம்முடைய கர்த்தரின் வீட்டில் கொள்ளவோ விற்கவோ கூடாது. ஆராதனை ஸ்தலமானது பரிசுத்தமானதாயும், ஆராதனைக்கென்று ஒதுக்கப்பட்ட ஸ்தலமாயுமிருக்க வேண்டும். புரிகிறதா? இப்பொழுது அவர் நமக்கு ஒரு அருமையான ஸ்தலத்தை அளித்திருக்கிறார். நாம் அதை அவருக்கு பிரதிஷ்டை செய்து, அதனுடன் நம்மையும் அவருக்கென்று பிரதிஷ்டை செய்வோமாக!

1826 இப்பொழுது நான் கூறப்போவது சற்று கடுமையாக இருக்கலாம். ஆனால் இது ஒருவரையொருவர் சந்தித்துப் பேசும் ஒரு ஸ்தலம் அல்ல. இது ஒரு ஆராதனை ஸ்தலம். நாம் இங்கு ஆராதிக்கும்போது உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ ஒருவரோடொருவர் ஒருவார்த்தையும் முணுமுணுக்கக்கூடாது; மிக அவசியமானால் ஏதாவது ஒரு வார்த்தை பேசலாம். புரிகிறதா? நாம் கூட்டமாகக் கூடி வீணான வார்த்தைகளைப் பேசக்கூடாது. நாம் கட்டிடத்திற்குள் இங்கும் அங்கும் நடக்கக்கூடாது. அல்லது நம் பிள்ளைகளை ஓட அனுமதிக்கக்கூடாது. இதை உணர்ந்தவர்களாய், இவையெல்லாவற்றையும் கவனமாகச் செய்யும்படி, நாங்கள் இக்கட்டிடத்தை கட்டியுள்ளோம். இவைகளை இவ்விதமாய் இங்கு அமைத்துள்ளோம். இங்கு குழுமியிருக்கும் ஜனங்களில் அநேகர் அன்னியராயிருக்கிறார்கள். ஆனால் இக்கூடாரத்தின் அங்கத்தினர்கள் இது சர்வ வல்லமையுள்ளவரின் ஊழியத்திற்கென்று பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது என்பதை அறிவர். ஆகையால் நாம் நம்மை பிரதிஷ்டை செய்து, நாம் பிராகரத்துக்குள் நுழையும்போது நாம் ஒருவருக்கொருவர் அமைதியாயிருக்க வேண்டும் என்பதை நாம் நினைவில்கொண்டு தேவனை ஆராதிப்போம்.

1927 நாம் ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால், அந்தவிதமாக நாம் வேறு இடங்களில் சந்தித்துக்கொள்ளலாம். ஆனால் இவ்விதம், இங்கே சுற்றி நடக்க வேண்டாம். ஏனெனில் இங்கு அதிக சப்தமும் மற்றவைகளும் இருப்பின், நீங்கள் நினைப்பதையே உங்களால் அறியமுடியாது; உள்ளே வருபவருக்கும் என்ன செய்வதென்றும் தெரியாமல் போய்விடும். பாருங்கள். இது மனித சுபாவமாகும். இச்செயல்கள்தான் உண்மையாகவே வருந்தும் அளவிற்கு என்னை பாதிப்புக்குள்ளாக்கிய உணர்வினை உண்டாக்கியதை அநேக சபைகளில் நான் கண்டிக்கிறேன். ஏனென்றால் நாம் ஒருவரையொருவர் சந்திப்பதற்காக இந்த கர்த்தருடைய பிரகாரத்திற்குள் வருகிறதில்லை. நாம் இங்கே தேவனை ஆராதிக்கவே வந்து, பின்னர் நம்முடைய வீடுகளுக்குச் செல்கிறோம். இந்தப் பிரகாரம் ஆராதனைக்கென்றே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஒருவரோடொருவர் பேச விரும்பினால், கூடாரத்திற்கு வெளியே நின்று பேசவிட்டு வாருங்கள். நீங்கள் அங்கு பேசுவதும் வீணான சம்பாஷணையாயிராமல் அது பரிசுத்தமுள்ளதாயும் சரியானதாயும் இருக்க வேண்டும். நீங்கள் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் செல்லுங்கள். மற்றவரிடத்திற்கு நீங்கள் விஜயம் செய்யுங்கள். ஆனால் நீங்கள் அந்த கதவிற்குள் கூடாரத்திற்குள் நுழையும்போது அமைதியாக கையாளுங்கள். 28 நீங்கள் தேவனுடன் உரையாட இங்கு வருகின்றீர்கள். பாருங்கள். அவரும் உங்களுக்கு மறு உத்தரவு அருள விட்டுக்கொடுங்கள். நம்மிடமுள்ள ஒரு குறைபாடு என்னவெனில், நாம் அதிகமாக அவருடன் உரையாட விரும்புகின்றோமேயன்றி, அவர் நம்முடன் பேசுவதை உற்றுக்கேட்க நாம் விரும்புவதில்லை. நாம் இதற்குள் வரும்போது, அவருக்கு காத்திருக்க வேண்டும்.

2029 பழைய கூடாரத்தை நான் பிரதிஷ்டை செய்தபோது மேஜர் உல்ரிச் (Major Ulrich) இசையிசைத்தார். நான் மூன்று சிலுவைகள் பின்னால் நின்று அந்த ஸ்தலத்தை பிரதிஷ்டை செய்தேன். அவ்வாராதனையில் பங்கேற்ற ஒரு நபரும்கூட ஒருக்கால் இன்று காலை நாம் மத்தியில் இல்லாமலிருக்கலாம். அப்பொழுது நாம் யாரும் இடையில் பேசுவதற்கு சம்மதிப்பதேயில்லை…வாயிற்காப்போர் கதவுகள் அருகில் நின்று, யாரும் பேசாதபடி கூர்ந்து கவனித்துக்கொள்வர். வெளியில் நீங்கள் பேசிமுடித்த பின்னர், நீங்கள் உள்ளே வாருங்கள். நீங்கள் விரும்பினால், அமைதியாக பீடத்தின் முன்னால் வந்து, அமைதியாக ஜெபியுங்கள். பின்னர் உங்கள் ஆசனங்களுக்குச் சென்று வேதத்தை திறந்து வாசிக்கலாம். உங்களுக்கு அடுத்து உட்கார்ந்திருப்பவர்கள் அவ்வாறு செய்யாவிடில், அது அவர்களைச் சார்ந்தது. நீங்கள் ஏதும் கூற வேண்டியதில்லை. அவர்கள் உங்களிடம் பேச விரும்பினால், “நான் உங்களை வெளியில் சந்தித்து பேசுகிறேன். இங்கு நான் ஆண்டவரை ஆராதிக்க இங்கே வந்துள்ளேன்” என்று அவர்களிடம், கூறுங்கள். நீங்கள் அவருடைய வார்த்தையை படித்துக்கொண்டிருக்கலாம் அல்லது அமைதியாக ஆசனத்தில் அமர்ந்திருக்கலாம்.

2130 அதன் பின்னர் இசை இசைக்கப்படுதல். சகோதரி கெர்ட்டி, இக்காலையில் அவள் இங்கிருக்கிறாளா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. சகோதரி கிப்ஸ் முன்பிருந்த கூடாரத்தில் பியானோ வாத்தியக் கருவி அம்மூலையில் இருந்தது என்று நான் நினைக்கிறேன். சகோதரி கெர்டி (Sister Gertie) ஆராதனை சமயம் வரும்வரை, என் “மீட்பர் மரித்த குருசண்டை” என்றும் பாட்டையோ அல்லது வேறுபாட்டையோ மிகவும் இனிமையாகவும், மிருதுவாகவும் பியானோ வாத்தியக் கருவியில் வாசிப்பாள். அதன்பின்னர் பாடலை முன்னின்று நடத்துபவர் எழுந்துவந்து, பாட்டுக்களைப் பாடி நட்த்துவர். அதன் பின்பு யாராவது தனியாகப் பாடுவதாயிருந்தால், அவர் அதைத் தனியாகப் (Solo) பாடுவார். ஆனால் ஒரு குழுவாகப் பாடிக்கொண்டேயிருக்க நான் ஒருபோதும் அனுமதித்ததேயில்லை. இவ்விதமாக தொடர்ந்து இசை இசைக்கப்படும். அப்பொழுது நான் அதைக் கேட்கும்போது, அதுவே நான் வெளியே வருவதற்கான என்னுடைய நேரம் என்பதை அறிந்துகொள்வேன். 31 சபையார் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு ஊழியக்காரன் ஆவியின் அபிஷேகத்துடன் அவர்கள் மத்தியில் பிரசங்கிக்க வந்தால், அவர்கள் பரலோகத்திலிருந்து வரும் செய்தியைக் கேட்பார்களென்பது திண்ணம். அது நிச்சயமானதாகும். அதினின்று விலகியிருக்க வழியே கிடையாது. ஆனால் ஒரு போதகர் குழப்பமற்ற நிலையில் சபையாரின் மத்தியில் வரும்போது, நீங்கள்—நீங்கள்…நீங்கள்—நீங்கள் குழப்பமடைந்திருப்பீர்கள். அதன் காரணமாக, பரிசுத்த ஆவியானவரும் துக்கமடைவார். நமக்கு குழப்பமான ஒன்று அவசியமில்லை. நாம் இங்கு வந்து ஆராதிக்கவே விரும்புகிறோம். நமக்கு அழகிய வீடுகள் உள்ளன, இன்னும் ஒரு சில நிமிடங்களில் அதைக் குறித்து நான் பேசப் போகிறேன். நாம் நம்முடைய நண்பர்களை வீடுகளிலே சந்திக்கச் செல்கிறோம். அவர்களை நம் வீடுகளில் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இதுவோ கர்த்தருடைய வீடாயிருக்கின்றது.

2232 இப்பொழுது இங்கு சிறு பிள்ளைகள், இப்பொழுது சிறு குழந்தைகள் உள்ளனர். இப்பொழுது அவர்களுக்கு எவ்வித வித்தியாசமும் தெரியாது. அவர்கள் வேண்டுவதை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், அழுவதைத்தவிர வேறொன்றையும் அவர்கள் அறியார்கள். இந்தக் குழந்தைகள் சில வேலைகளில் தண்ணீருக்காகவோ அல்லது கவனிக்கப்படவோ அழ நேரிடும், …ஆகவே, தேவனுடைய கிருபையால் அவர்களுக்கென்று நாங்கள் ஒரு அறையை அர்ப்பணித்துள்ளோம். நீங்கள் பட்டியலில் பார்க்கும்போது “அழுகின்ற பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்கான அறை” என்றிருப்பதைக் காணலாம். அது எனக்கு நேர் எதிராய்க் கட்டப்பட்டுள்ளது. வேறுவிதமாகக் கூறினால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அங்கு எடுத்துச் செல்லலாம். 33 இப்பொழுது, இங்கே பிரசங்க பீடத்தில் இருக்கும் எனக்கு அது எந்த இடையூரையும் விளைவிக்காது. நான் அபிஷேகிக்கப்பட்டு பிரசங்கிக்கையில் குழந்தைகள் அழுவதை நான் கவனிக்காமல் கூட இருக்கலாம். ஆனால் மற்ற ஜனங்கள் அருகில் அமர்ந்திருக்கிறார்கள். அது அவர்களைப் பாதிக்கிறது. பாருங்கள், அவர்கள் ஆராதனைக்கு பிரசங்கத்தைக் கேட்க வருகிறார்கள். தாய்மார்களே உங்களுடைய குழந்தைகளின் விசும்பலை உங்களால் தவிர்க்க (Whimpering) முடியாது. நீங்கள் உங்கள் குழந்தைகளைச் சபைக்குக் கொண்டு வரவேண்டும். ஒரு உண்மையான தாய் தன் குழந்தையை சபைக்கு அழைத்து வரவே விரும்புவாள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டியக் காரியம். 34 அழும் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் அறையிலிருந்து கட்டிடத்தின் எல்லா பாகங்களையும் காணலாம். அங்கு ஒரு ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் விருப்பப்படி, ஒலியின் அளவை நீங்கள் கூட்டி அல்லது குறைத்துக் கொள்ளலாம். தாய்மார்களின் சௌகாரியத்திற்காக கடைசியில் ஒரு—ஒரு கழுவறையும் குழாயும் வைக்கப்பட்டுள்ளது. அங்கே நாற்காலிகளும் மற்றக் காரியங்களும் உள்ளன. எனவே நீங்கள் அமர்ந்து கொள்ளலாம். குழந்தைகளின் உடுப்புக்களை மாற்றுவதற்கும் அங்கு வழியுண்டு. எல்லாம் சரியாக அமைக்கப்பட்டுள்ளன.

2335 அநேக சமயங்களில் வாலிபப் பிள்ளைகள் குறிப்புச் சீட்டுகளையும், மற்றவைகளையும் சபையில் மாற்றிக் கொள்வதுண்டு. இதைவிட சிறந்ததை அறியும் வயது உங்களுக்கு உண்டு. பாருங்கள்? இதைவிட சிறந்ததை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். புரிகிறதா? நீங்கள் அதைப் பார்க்கிலும் மேலானதை அறிந்து கொள்ள வேண்டும். புரிகிறதா? உண்மையான ஒரு மனிதனாயிருந்து, ஒரு நாளில் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென்று ஒரு குடும்பத்தை எழுப்ப வேண்டுமென்று எதிர்ப்பார்ப்பீர்களேயானால், இப்பொழுதே, ஆரம்பத்திலேயே துவங்கட்டும். நீங்கள் பாருங்கள், செயல்படுங்கள்; சரியானதைச் செய்யுங்கள். இது உண்மை. 36 இப்பொழுது, அவ்விதம் நேர்ந்தால் அவர்களைத் தடுப்பதற்கென்றே வாயிற் காப்போர் கட்டிடத்தின் மூலையில் நிற்கிறார்கள். அவர்கள்—அவர்கள் அதற்கென்றே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் கடமையும் இதுவே. தர்மகர்த்தாக்கள் இங்கு முன்னால் அமர்ந்திருப்பார்கள். வாலிபப் பிள்ளைகளில் யாராவது துர்ச்செய்கைகளில் ஈடுபட ஆரம்பித்தால், அவர்களை அமைதியாக இருக்கும்படிச் சொல்ல வாயிற் காப்போர் கட்டளை பெற்றுள்ளனர்.

2437 இப்படிப்பட்ட மரியாதை அற்றவர்கள், தங்கள் ஆசனங்களை, பிரசங்கத்தை உண்மையாய் விரும்பிக் கேட்பவர்களுக்கு அளித்தல் நல்லது. தேவனுடைய வார்த்தையை கேட்கும் நோக்கத்துடன் வருபவர் உண்டு. நாமும் அதற்காகவே இங்குள்ளோம், கர்த்தருடைய வார்த்தையை கேட்பதற்காகவே இங்குள்ளோம். ஆகவே ஒவ்வொருவரும் அதைக் கேட்கவே விரும்புகின்றனர். வார்த்தையைக் கேட்க வருகின்ற ஒவ்வொருவரும், மிக அமைதியாயிருக்க வேண்டுமென்றே விரும்புகின்றனர்; பேசவும் மற்றவைகளைச் செய்யவும் அல்ல. 38 நிச்சயமாகவே யாரோ ஒருவர் எதிர்பார்க்கப்பட்டபடியே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறார். அந்தவிதமாகவே அது இருக்க வேண்டும். அதற்காகத்தான், நீங்கள் கர்த்தரைத் தொழுது கொள்ளவே இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் சத்தமிட்டு கர்த்தரைத் துதிக்க விரும்பினால் யாரும் உங்களைத் தடை செய்யப்போவதில்லை. பாருங்கள். ஏனெனில் உங்களுக்கு விருப்பமுள்ள முறையில் தேவனை ஆராதிப்பதற்கென்றே நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் பேசிக்கொண்டும் குறிப்புச் சீட்டுகளை மாற்றிக் கொண்டு இருக்கையில் ஒருவருமே கர்த்தரைத் தொழுது கொள்ள முடியாது. அவ்வாறு செய்யும்போது கர்த்தரைத் தொழுது கொள்வதிலிருந்து யாரோ ஒருவர் விலகிச் செல்ல நீங்கள் ஏதுவாயிருக்கிறீர்கள். பாருங்கள். அது தவறானது என்றே நாங்கள் உணருகிறோம். இச்சபையானது தேவனுடைய ராஜ்ஜியத்திற்கென்றும் அவருடைய வசனம் பிரசங்கிக்கப்படுவதற்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால், நீங்கள் இங்கு வந்து ஜெபம் செய்து தேவனை ஆராதித்தல் வேண்டும் என்னும் இக்காரணத்திற்காகவே இங்கு வர வேண்டும் என்றும் இச்சபைக்கும் இங்குள்ள சபையோருக்கும் ஒரு விதியாக (Ruling) வைக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஜெபியுங்கள், ஆராதியுங்கள், ஆராதிக்க வேண்டும் என்ற அந்த காரணத்திற்காகவே நீங்கள் இங்கே வர வேண்டும்.

2539 வேறொரு காரியத்தை நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன், ஆராதனை முடிவுறும்போது, வழக்கமாக சபைகளிலுள்ள மக்கள்… இது இங்குள்ளதாக நான்—நான் நினைக்கவில்லை, ஏனெனில்…நான் இங்கிருந்து எப்பொழுதுமே உடனே சென்றுவிடுகிறேன்…பாருங்கள். 40 நான் மற்ற ஆராதனைகளில் பிரசங்கம் செய்கின்ற நேரத்திலும் அபிஷேகம் வருகின்றது. தரிசனங்கள் சம்பவிக்கின்றன. அதன்பின் நான் களைப்படைந்து, அறைக்குள் சென்றுவிடுகிறேன். இது எனக்கு மிகுந்த சிரமத்தை அறிவிப்பதால், பில்லியோ அல்லது இங்குள்ள மற்றவர்களோ என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வர். அது என்னிலிருந்து விலகும்வரை நான் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்வேன். ஏனெனில் அது மிகவும் ஒரு மட்டுமீறி நலிவுச் சோர்வாய் உள்ளது. 41 சிறுபிள்ளைகள் பிரகாரம் முழுவதும் ஓட அனுமதிக்கின்ற சபைகளை நான் கண்டிருக்கிறேன். வாலிபரும் நின்று அறைமுழுவதும் ஒலிக்கும்படியாக ஒருவருக்கொருவர் சத்தமிடுவதையும் நான் கண்டிருக்கிறேன். அன்று இரவு ஆராதனையோ அல்லது பின்னொரு சமயம் நடக்கும் ஆராதனையையோ குலைப்பதற்கான நல்ல வழி இதுதான். புரிகிறதா?

2642 ஆராதனை முடிந்தவுடன் கூடாரத்தை விட்டு உடனே சென்று விடுங்கள். அப்பொழுது நீங்கள் ஆராதனை முடித்திருப்பீர்கள். பிறகு நீங்கள் வெளியில் சென்று ஒருவரோடொருவர் நீங்கள் விரும்புகின்ற காரியங்களைப் பேசலாம். யாரிடமாவது எதையாவதொன்றை நீங்கள் பேச விரும்பினால் அல்லது காணவிரும்பினால் அல்லது எதுவாயிருந்தாலும் அவர்கள் வீட்டிற்குச் சென்று நீங்கள் பேசலாம். ஆனால் இதனுள் அதைச் செய்யாதீர்கள். தேவனுக்கென்று இந்த ஸ்தலத்தை பிரதிஷ்டை செய்வோமாக! பாருங்கள்? இது தேவன் சந்திக்கும் ஸ்தலமாயிருக்கிறது. இங்குதான் நாமும் அவரை சந்திக்கிறோம். புரிகிறதா? நிச்சயமாகவே இந்தப் பிரகாரத்தினின்று தேவனுடைய வார்த்தை புறப்பட்டுச் செல்லுகின்றது. அது நம்முடைய பரமபிதாவிற்குப் பிரீதியாயிருக்கும் என்று நான்—நான் நம்புகிறேன்.

2743 நீங்கள் இங்கு வரும்போது, உங்கள் நடுவில் வரங்கள் கிரியை செய்யத் துவங்குவதை நீங்கள் கண்டுகொள்ளல் வேண்டும். இப்பொழுது…சாதாரணமாக…இது இவ்விதமாக இங்குள்ளதாக நான் நம்பவில்லை; ஆனால் மக்கள் ஒரு புதிய சபையை பெறும்போது, அவர்கள் செய்கின்ற முதல் காரியம், அவர்கள் மிகவும் ஆசார விரைப்பு நடை வாய்ந்தவர்களாகி (Strachy) விடுவார்கள், அதை நீங்கள் ஒருபோதும் விரும்பக்கூடாது, ஏனெனில் இது தேவனை ஆராதிக்கும் ஸ்தலமாகும். இது கர்த்தருடைய வீடாகும். ஆவிக்குரிய வரங்கள் உங்கள் நடுவில் கிரியைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது… 44 நான் ஜெபர்ஸன்வில்லை விட்டுச் சென்ற பிறகு அநேகர் இதைத் தங்கள் வீடாக்கிக்கொள்ளும்படியாக வெவ்வெறு பாகங்களிலிருந்து இங்கு குடிவந்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டேன். இதற்காக நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன் என்று நான் நம்புகிறேன்… 45 ஒரு வாலிபனாக நான் மூலைக்கல்லை நாட்டி இக்கூடாரத்தை நான் பிரதிஷ்டை செய்த காலை வேளையில், இயேசு கிறிஸ்துவின் வருகையை காணுமட்டும் இது நிலைத்திருக்க வேண்டுமென்று நான் அப்பொழுது ஜெபித்தேன். நான் அந்த கூடாரத்தை எழும்பினபோது, நான் ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு கடனாளியானேன். சபையோர் சொற்ப பேராயிருந்தபடியால் ஒரு முறை காணிக்கை எடுத்தால் முப்பது அல்லது நாற்பது செண்டுகள் மாத்திரம்தான் கிடைக்கும். ஆனால் கடனை அடைப்பதற்கும் மற்ற செலவிற்கும் மாதம் நூற்றைம்பது அல்லது இருநூறு டாலர்கள் தேவைப்பட்டன. என்னால் எப்படி அதை அடைக்க முடியும்? நான் வேலையிலிருந்தபடியால், இக்கடனை என்னால் தீர்க்க முடியுமென்ற உறுதி எனக்குள்ளிருந்து. என் போதக உத்தியோகத்தின் பதினேழு வருடகாலத்தில் நான் என் ஜீவனத்திற்கு அவசியமானதைத்தவிர, எனக்குக் கிடைத்த எல்லா பணத்தையும், உண்டிப் பெட்டியில் சேர்ந்த காசுகளையும் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கென்று செலவிட்டேன்.

2846 ஒரு வருட காலத்திற்குள் இது ஒரு மோட்டார் வண்டிக் கொட்டையாக (garage) மாறுமென்று அநேகர் எண்ணினர். தீர்க்கதரிசனமும் உரைத்தனர். சாத்தானும் வழக்குமன்ற ஒரு மோசடி உரிமை கோரிக்கை வழக்கு மூலம் இதனைப் பறிக்கப் பார்த்தான். இக்கூடாரத்தில் பணிபுரிந்த சமயம் தன் காலில் அடிப்பட்டது என்று ஒருவன் ஒரு உரிமை கோரிக்கை வழக்கைத் தொடுத்து, அதற்கு நஷ்ட ஈடாக இக்கூடாரத்தையே எடுத்துக் கொள்ள வேண்டுமென்றிந்தான். அநேக வருடங்களாக இவ்வூழியத்தில் நான் நிலைநின்றேன். ஒரு வருடகாலத்தில் இக்கூடாரம் அழிந்து போகும் என்று அவர்கள் கூறின தவறான கணிப்பிற்கு மாறாக இது அமெரிக்காவின் தலைசிறந்த சபைகளுள் ஒன்றாக இன்று விளங்குகிறது. அது உண்மை.

2947 இங்குள்ள ஜீவனுள்ள தேவனின் வார்த்தை புறப்பட்டு உலகின் எல்லா பாகங்களுக்கும் தொடர்ந்து சென்றுக்கொண்டேயிருக்கின்றது. ஆம். நாம் அறிந்துள்ளபடி அது வானத்தின் கீழே உலகிலுள்ள ஒவ்வொரு தேசத்தையும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருப்போமாக! 48 நாம் ஆராதிப்பதற்கென்று நம்முடைய தலைக்கு மேலே தளமிடப்பட்ட நமக்கு ஒரு நல்ல, சுத்தமான, அமருவதற்கு அருமையான சபை நமக்குண்டு. நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஊழியத்தில் நாம் நம்மை அர்ப்பணித்து கிறிஸ்துவுக்கு நம்மை பிரதிஷ்டை செய்வோமாக!

3049 ஜீவனுள்ள தேவனின் ஊழியக்காரனும், உண்மையான போதகனும், நம் அருமை சகோதரனுமான சகோ. நெவில் (Bro. Neville), தான் செய்தியை அறிந்த அளவுக்கு அதை உறுதியாக பற்றிக்கொண்டு தன் முழு முயற்சியுடன் ஊழியத்தில் நிலைகொண்டிருக்கிறார். அது உண்மை. அவர் சாதுவான குணம் படைத்தவர். அவர் சிறிது தயக்கம்…இல்லை. தயக்கம் இல்லை; அவ்வாறு கூற நான் விழையவில்லை. ஆனால் அவர் மிக மிக சாதுவான குணம் படைத்தவராயிருப்பதால் கடூரமான வார்த்தைகள் உபயோகித்து, ஜனங்களின் மனதைப் புண்படுத்த அவர் விரும்புவதில்லை என்பதை நீங்களே அறிவீர்கள். அவர் யாரையும் “அமைதியாயிரு” என்றோ அல்லது “உட்காரு” என்றோ அதட்டுவதை நான் ஒலிநாடாக்களில் (tapes) கேட்டதில்லை. அதை நான்—நான் கவனித்திருக்கிறேன். 50 ஆனால் நான் அவ்வாறு செய்வதுண்டு. ஆகவே நான்—நான்…என்னுடைய வார்த்தைகளை நீங்கள் நினைவு கூற வேண்டுமென்று நான்—நான் விரும்புகின்றேன். நீங்கள் பாருங்கள். நான் கூறுவதெல்லாம் ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்படுகின்றன. பாருங்கள். ஒவ்வொரு காரியமும் ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது. ஆகவே தயவு செய்து, ஒவ்வொரு கண்காணிப்பாளனும், தன்னுடைய கடமையின் ஸ்தானத்தில் நிற்கவேண்டும். தேவனிடத்திலிருந்து வந்துள்ள ஒரு கட்டளையின் கீழிருந்து அந்த ஸ்தானத்தை புனிதத்துடன் கைக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புரிகிறதா? ஒவ்வொரு தர்மகர்த்தாவும் அவ்விதமே செய்யவேண்டும். ஒரு மேய்ப்பன் கொண்டு வரவேண்டியதோ…

3151 இவைகளைக் கூறவேண்டிய ஸ்தானம் ஒரு மேய்ப்பனுடையதல்ல. அது தர்மகர்த்தாக்கள்…இல்லை…நான் பொருட்படுத்திக் கூறுவது என்னவென்றால், கண்காணிப்பாளர்கள் தான் சபையின் காவல் படையினராயிருக்கிறார்கள். அதாவது, கூட்டங்களுக்கு வருகின்ற இளஞ்சோடிகள், வெளியே வந்து, இவ்விதமாக மோட்டார் வாகனத்தில் அமைக்க்கப்பட்டுள்ள எச்சரிக்கை ஒலிக்கருவியிலிருந்து ஒலிகளை சாதாரணமாக எழுப்புவதையும், அதைப் போன்ற சிலவற்றை செய்வதையும் நீங்கள் அறிவீர்கள். சில சமயங்களில், ஒரு தாய் தன் மகளை இச்சபைக்கு அனுப்பி, அவள் இங்கே இருக்கிறாள் என்று நினைக்கையில், அப்பெண்ணோ, யாரோ ஒரு நிலையற்ற மனதுள்ள ஒருவனோடு காரில் செல்ல விரைவாள், அல்லது சென்றேவிடுகிறாள். கண்காணிப்பாளன் அதை கவனித்தாக வேண்டும். “நீ ஒன்று உள்ளே வா அல்லது இங்கே உட்கார், இல்லையெனில் என்னுடைய காரில் உன்னை வீட்டிற்குக்கொண்டு சென்று உன் தாயிடம் ஒப்படைத்துவிடுவேன்” என்று கூற வேண்டும். பாருங்கள்? நீங்கள் அதைச் செய்தாக வேண்டும்.

3252 நினைவில் கொள்ளுங்கள், அன்பானது எப்பொழுதுமே திருத்துகின்றதாயிருக்கின்றது என்பதைக் கவனியுங்கள். பாருங்கள், உண்மையான அன்பு பிழைகளைத் திருத்துகிறதாயுள்ளது. ஆகையால் பிழைகள் திருத்தப்படும்போது நீங்கள் அதை நல்ல முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். தாய்மார்களே! உங்கள் குழந்தைகளுக்காகவே அங்கே ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இப்பொழுது அறிந்துகொள்ளுங்கள். சிறு பிள்ளைகளே! நீங்கள் கட்டிடத்தினுள் அங்குமிங்கும் ஓடக்கூடாது. புரிகிறதா? பெரியோர்களே, நீங்கள் இந்த அரங்கத்திற்குள்ளே வந்து உங்கள் உரையாடல்களைத் தொடர்வதைவிட, வித்தியாசமானதை அறிந்திருக்கிறீர்கள். புரிகிறதா? அதைச் செய்யாதீர்கள். அது தவறாயிருக்கிறது. அது தேவனுக்கு பிரீதியாயிருப்பதில்லை. 53 இயேசு, “என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் தொழுகின்ற ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறதே; எல்லா தேசங்களாலும் ஜெபவீடு என்று அழைக்கப்படும்,” என்று கூறினார். அவர்கள் ஜெப ஆலயத்தில் வாங்கிக்கொண்டும்; விற்றுக்கொண்டும் இருந்தார்கள். ஆகவே இயேசு ஒரு கயிற்றைப் பின்னி அவர்களெல்லாரையும் ஆலயத்தினின்று விரட்டினர். அவ்வாறு இப்பிரகாரத்தில் நேரிடுவதை நாம் விரும்புவதில்லை, ஆகையால் நமது ஜீவியத்தை, நமது சபையை நமது ஊழியத்தை, நமது பணியை மற்றும் நமக்குள்ள எல்லாவற்றையும் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கென்று நாம் பிரதிஷ்டை செய்வோமாக!

3354 இப்பொழுது, இப்பொழுது நாம் பிரதிஷ்டை ஜெபம் ஏறெடுக்குமுன்பு சில வேதவசனங்களை நான் வாசிக்க விரும்புகிறேன். இது ஒரு மறு பிரதிஷ்டைதான், ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்னமே இது பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டது. இப்பொழுது ஒரு…நாம்—நான் வேதத்தை வாசித்து சற்று நேரம் அதைக் குறித்து பேசினால், தேவன் தம் ஆசீர்வாதங்களை நமக்களிப்பார் என்று நான் நம்புகிறேன். 55 வேறொரு காரியம், ஆம்! இப்பொழுது பிரசங்கங்கள் பதிவு செய்ய உபயோகிக்கும் ஒலிப்பதிவு கருவிகளை வைப்பதற்கென ஒரு பிரத்தியேக அறை உண்டு. ஆகையால் பிரசங்களைப் பதிவு செய்ய விரும்புகிறவர்கள் அங்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். பிரசங்க பீடத்தில் பொறுத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கியிலிருந்து பேசுவதை நேரடியாக பதிவுசெய்யும்படியாக விசேஷித்த இணைப்புக் கொக்கிகள் எங்கும் அமைக்கப்பட்டுள்ளன.

34ஞானஸ்நான ஆராதனைக்கென்று ஒரு தனி அறையுண்டு. அப்பொழுது அணிந்துகொள்ள வேண்டிய நீண்ட ஆடைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. 56 மேலும் ஒரு காரியம், கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவது போன்ற ஒரு உருவத்தை (Crucifix) நான் சபையில் வைத்திருப்பதைக் குறித்து வேதம் கூறுவதை உண்மையாகவே சரிவர அறியாத அநேக ஜனங்கள் என்னைத் தவறாக நினைக்கின்றனர். ஒரு முறை இங்கே அதைக் குறித்த ஒரு காரியம் சம்பவித்தது எனக்கு ஞாபகம் வருகிறது. நான் மூன்று சிலுவைகளை இங்கு வைத்திருந்தேன். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவம் கத்தோலிக்க கொள்கையைத் தழுவியது என்று ஒருவகை ஸ்தாபனத்தார் பிரசங்கித்ததன் காரணமாக, ஒரு சகோதரன் இம்மூன்று சிலுவைகளையும் கண்டு பதறினார். 57 வேத மாணாக்கனாவது அல்லது மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாவது சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் உருவம் கத்தோலிக்கர்களுக்கே உரியது என்று என்னிடம் கூறட்டும். அத்தகைய உருவம் கத்தோலிக்க மார்க்கத்துக்கு அடையாளமல்ல, அது தேவனையும் அவரது ராஜ்யத்தையும் குறிக்கிறது. மரித்தபின் பரிசுத்தவான்கள் என்னும் பட்டம் சூட்டப்பவர்கள்தான் கத்தோலிக்க மார்க்கத்தின் அடையாளமாயிருக்கின்றனர். “தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரேயென்றும் அவர்தான் கிறிஸ்து” என்றும் நாம் விசுவாசிக்கிறோம். ஆனால் கத்தோலிக்கர்களுக்கோ ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் மத்தியஸ்தராயிருக்கின்றனர். உத்தம வாழ்க்கையை நடத்திய கத்தோலிக்கன் எவனும் மரித்தபின் மத்தியஸ்தனாக மாறுகிறான் என்பதே அவர்களது எண்ணம். ஆனால் கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையின் உருவம் இயேசுகிறிஸ்துவையே குறிக்கின்றது.

3558 ஆதிகாலத்து கிறிஸ்தவர்கள், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று மற்றவர் அறிந்து கொள்வதற்கென, அவர்கள் எங்கு சென்றாலும், சிலுவைகளை முதுகில் சுமந்து கொண்டு சென்றதாக சபையின் சரித்திரம் கூறுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆதிகாலத்து கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்கள் என்று தற்காலத்து கத்தோலிக்கர்கள் உரிமை பாராட்டுகின்றனர். ஆனால் கத்தோலிக்க சபையானது ஆதிகாலத்தில் ஸ்தாபிக்கப்படவில்லை, புரிகிறதா? “முதுகில் சிலுவை சுமந்தவர்கள்” என்று ஜனங்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது தற்காலத்து கத்தோலிக்கரைக் குறிப்பிடுவதாக நீங்கள் எண்ணுகிறீர்களா? 59 அது பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு உலகம் முழுவதும் பரவியுள்ள சபையைக் குறிக்கிறது. அவர்கள்தான் உண்மையான கத்தோலிக்கர். நாம் கத்தோலிக்கர். நாமெல்லாரும் வேதத்தை விசுவாசிக்கும் மூல கத்தோலிக்கர். புரிகிறதா? தற்கால கத்தோலிக்கர், கத்தோலிக்க ஸ்தாபனம் என அழைக்கப்படுவதைச் சேர்ந்தவர்கள். நாம் அந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களல்ல. நாம் அதனின்று விடுவிக்கப்பட்டுவிட்டோம். நாம் அப்போஸ்தலர்களின் உபதேசக் கோட்பாட்டின் தொடர்ச்சியாயிருக்கிறோம். நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மற்றும் ஆதி சபை எதற்கெல்லாம் நின்று விசுவாசித்தனரோ அதன் தொடர்ச்சியாயிருக்கிறோம். ஆனால் கத்தோலிக்க ஸ்தாபனத்தார் இவை யாவையும் பின்பற்றுவதில்லை. புரிகிறதா?

3660 ஆகவே கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையின் உருவத்தை இங்கே வைத்துள்ளனர். இயேசு கிறிஸ்து எந்த ஒலிவ மரத்தின்கீழ் ஜெபம் செய்தாரோ, அந்த ஒலிவ மரத்திலிருந்து வெட்டி இந்த சிலுவையின் உருவம் செய்ய அநேக வருடங்களானது. இதனை சகோதரன் ஆர்கன் பிரைட் எனக்களித்தார். ஆகவே நான் இந்த கூடாரத்துடன் இச்சிலுவையையும் சேர்த்து பிரதிஷ்டை செய்ய விரும்புகிறேன். 61 இது எனது—எனது இடதுபாகத்தில் தொங்குவதைப் பாருங்கள். யார் அதை அங்கு மாட்டினார்களோ நான் அறியேன். ஆனால் அது மாட்டப்பட்ட இடம் எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது! இயேசு தமது வலது பாரிசத்திலுள்ள கள்ளனை மன்னித்தார். அது நான்தான். 62 இச்சிலுவையில் அவருடைய தலையானது குனிந்திருப்பதை நீங்கள் காண்கையில், அது அவருடைய பாடுகளின் பிரதிநிதித்துவமாயிருக்கின்றது. பாவியே, அவர் உன்னை இங்கே எதிர்பார்த்து நோக்கிக் கொண்டிருப்பார். பின்னர் பீட அழைப்பு கொடுக்கப்பட்டு, ஜனங்கள் இங்கே வரும்போது …வெளிச்சம் விட்டுவிட்டு பிரகாசிக்கின்ற விளக்கு ஒன்று அங்கே வைக்கப்படும்.

3763 நீங்களோ, “அது ஏன் உங்கள் தேவை? நீங்கள் சொரூபத்தை வைக்கக்கூடாதே” என்று கேட்கலாம். 64 நல்லது “யாதொரு சொரூபத்தையாகிலும் விக்கிரகத்தையாகிலும் உங்களுக்கு உண்டாக்க வேண்டாமென்று” கூறின அதே தேவன், “இரண்டு கேருபீன்களை உண்டாக்கி அவைகளின் சிறகுகள் ஒன்றையொன்று பார்த்தவாறு, ஜனங்கள் ஜெபிக்கும் கிருபாசனத்தண்டையில் வை” என்று கூறினாரே. நீங்கள் பாருங்கள். அது—அது புரிந்துகொள்ளும்படியாக இல்லாத ஒன்று. பார்த்தீர்களா? 65 ஆகையால் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் இந்த சிலுவை சரியான இடத்தில் மாட்டப்பட்டுள்ளது. நான் அவரது வலது பாரிசத்திலிருக்கும் ஒருவனாக இருப்பதற்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன், அவர் என் பாவங்களை மன்னித்து விட்டாரென்று நான் விசுவாசிக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை நான் என் வாழ்க்கையில் இதுவரை களவு செய்ததேயில்லை. ஆனால் அவர் எனக்களித்த அவருடைய நேரத்தை நான் சரிவர உபயோகிக்காததின் காரணமாகவே களவு செய்தவனாவேன். நான் செய்யத்தகாத அநேக காரியங்களைச் செய்திருக்கிறேன். என் பாவங்களை அவர் மன்னித்திருக்கிறதற்காக இன்று காலையில் நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.

3866 இப்பொழுது 1நாளாகம புத்தகம் 17-ம் அதிகாரத்திலிருந்து சில வசனங்களைப் படித்து, சுமார் ஐந்து நிமிடங்கள் பிரதிஷ்டை ஆராதனையைக் குறித்து நான் பேச விரும்புகிறேன். பிறகு ஜெபம் செய்து அதன் பின்பு செய்தியைப் பிரசங்கிப்போம். இப்பொழுது 1நாளாகமம் 17-ம் அதிகாரம்; தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி; பாரும், நான் கேதுருமர வீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான். அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான். அன்று ராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்: நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி:…நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: (சரியாகக் கூறினால்) கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம். நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன். நான் சகல இஸ்ரவேலோடும் உலாவி வந்த எவ்விடத்திலாகிலும், நான் என் ஜனத்தை மேய்க்கக் கற்பித்த இஸ்ரவேலின் நியாயாதிபதிகளில் யாதொருவனை நோக்கிநீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று யாதொரு வார்த்தை சொன்னது உண்டோ? இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையை விட்டு எடுத்து, நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.

3967 இந்த இடத்தில் நான் கூற விரும்புவது என்னவென்றால் நாம் கண்ட அதே காரியத்தைத்தான் தாவீதும் கண்டான். “கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி திரைகளின் கீழ் இருக்கும்போது, ஜனங்களாகிய நீங்கள் கேதுருமர வீட்டை எனக்குக் கட்டிக் கொடுத்து சரியல்ல” என்று தாவீது கூறினான். மிருங்கங்களின் தோல்கள் ஒன்று சேர்ந்து தைத்து திரைகள் உண்டாக்கப்பட்டன. “என் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி ஒரு கூடாரத்தில் இருக்கையில், எனக்கு ஒரு அழகான வீடு இருப்பது சரியல்ல”, என்று தாவீது கூறினான். ஆகவே ஒரு கூடாரத்தைக் கட்டவேண்டுமென்ற எண்ணத்தை தேவன் அவனுடைய இருதயத்தில் எழும்பப் பண்ணினார். 68 தாவீது, கர்த்தர் பேரில் அன்பு கொண்டவனும், தன்னையே தத்தம் செய்தவனாயிருந்தாலும்கூட, அவன் அதிக இரத்தம் சிந்தினவனாயிருந்தான். ஆகையால் அவன் கூறினாள்…தாவீது அக்காலத்தில் தீர்க்கதரிசியாக விளங்கிய நாத்தானின் முன்பு இவ்வார்த்தைகளைச் சொன்னான். தேவன் தாவீதின் பேரில் அன்பு கொண்டுள்ளார் என்பதனை நாத்தான் அறிந்து. “தாவீதே உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும். தேவன் உம்மோடிருக்கிறார்” என்றான். இது எப்பேற்பட்ட ஒரு அறிக்கை! “உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும். ஏனென்றால் தேவன் உம்மோடு இருக்கின்றார்”. ஆகவே தாவீது தேவனின் அன்புக்கு தன்னை தத்தம் செய்திருக்கிறான் என்பதைக் காண்பிக்கத்தக்கதாக அந்த அதே இரவில்…

4069 அவன் தவறில் இருப்பதால், அவன் தேவனுடைய ஆலயத்தைக் கட்ட அனுமதிக்கப்படவில்லை என்பதைக் காண்பிக்க அன்று ராத்திரியிலே தேவன் கிருபையுள்ளவராய் இறங்கி வந்து நாத்தானுடன் பேசுகின்றார். எனக்கு எப்பொழுதுமே இந்த வார்த்தைகள் பிடிக்கும், அதாவது நாத்தானுடன் அவர், “நாத்தானே போய்ச் சொல் என்னுடைய…உன்னை ஆட்டு மந்தையை விட்டு எடுத்தேன் என்பதாய் என் தாசனாகிய தாவீதிடம் சொல்” என்று கூறினார். அவன் ஒன்றுமில்லை என்று அவர் எடுத்துக்காட்டினார். 70 ஆகவே ஒரு நிமிடம் நான்—நான் அதை எடுத்து இங்கே பொருத்த விரும்புகிறேன். “ஒன்றுமில்லாத உன்னை நான் எடுத்து பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை நான்—நான்—நான் உனக்களித்தேன்” என்னும் வசனத்தை தனிப்பட்ட விதத்தில், என் கருத்தை வலியுறுத்தும் எண்ணத்தில், என்னுடைய வாழ்க்கையில் பொருத்திக் கொள்ள விரும்புகிறேன். நான் அதை சிந்தித்துக் கொண்டிருந்தேன்… 71 சில வருடங்களுக்கு முன்பு இந்த பட்டிணத்தில் இங்கே நான் இருந்தபோது யாரும் எனக்காகக் கவலைப்படுவது கிடையாது. எவருமே என்னை நேசித்ததில்லை. நான் ஜனங்கள் நேசித்தாலும், என் குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக யாரும் என்னை நேசிப்பதில்லை. இதை கூறுவதனால் என் விலையேறப்பெற்ற தாய், தந்தையரை நான் அவமதிக்கிறேன் என்று எண்ணவேண்டாம். 72 இன்று காலை இப்பிரகாரத்திற்குள் என் தாயார் உயிரோடிருந்து நடந்து வந்திருக்க வேண்டும் என்று எப்படியாய் நான் விரும்பினேன். இக்கட்டிடத்தை கட்டுவதற்கு பண உதவி செய்து மரித்துப்போயிருக்கிற அநேக பண்டைய காலத்தவரை இன்று காலை நடக்கும் ஆராதனையை அக்கரையிலிருந்து காண ஒருக்கால் தேவன் அனுமதிப்பார்.

4173 மது குடித்ததன் காரணமாக பிரான்ஹாம் குடும்பத்திற்கு நல்ல பெயரே கிடையாது. யாரும் என்னுடன் சவகாசம் வைத்துக் கொள்வதில்லை. என்னுடன் பேசுவதற்கு யாருமே முன் வருவதில்லை என்று என் மனைவியிடம் அண்மையில் நான் கூறிக்கொண்டிருந்தது எனக்கு நினைவிற்கு வருகிறது. யாரும் எனக்காக கவலைப்படுவதேயில்லை. ஆனால் இப்பொழுதோ சற்று இளைப்பாறுவதற்கு ஜனங்களிடமிருந்து நான் ஒளிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 74 ஆகவே இப்பொழுது கர்த்தர் நமக்கு இந்த மகத்தான ஸ்தானத்தை அளித்து அநேக பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். அவர் எனக்கு கொடுத்துள்ளார்…ஆதியில் எனக்கு மோசமான பெயரிருந்தாலும், அவர் எனக்கு பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த ஒரு நாமத்தைக் கொடுத்துள்ளார். நான் சென்றவிடமெல்லாம் என் சத்துருக்களை அதமாக்கினார். வார்த்தை சென்றவிடமெல்லாம் அதற்கு முன்பாக யாதொன்றும் நிற்கமுடியவில்லை. ஆகவே, அதற்கு எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

4275 கந்தை அணிந்த சிறுவனாக, இங்கிருந்து இரண்டு, மூன்று வீதிகளுக்கு (Blocks) அப்பாலுள்ள இன்கிராம்வில் (ingramvill) பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, முழுபள்ளிக்கூடமே நான் கந்தை அணிந்து குட்டையில் விளையாடுவதைக் கண்டு சிரித்தது. அக்குட்டையின் அடிப்பாகத்தில் லீலி புஷ்பத்தின் வித்து இருந்ததென்றும், அது இவ்வளவு அழகாக மலரும் என்றும் நான் எங்ஙனம் அறிவேன்? யாரும் என்னுடன் அப்பொழுது பேசாத நிலையில், அவருடைய ஜனங்கள் மத்தியில் மதிப்பையுண்டு பண்ணும் ஒரு நாமத்தை தேவன் எனக்குத் தந்தருளுவாரென்பதை நான் எங்ஙனம் அறிவேன்?

4376 ஆகவே இப்பொழுது, ஆலயத்தைக் கட்டுவதற்கு தாவீது அனுமதிக்கப்படவில்லை. அவன் அதைக் கட்ட முடியாமற்போயிற்று. ஆனால் கர்த்தர், “உன் சந்ததியில் ஒரு புத்திரனை எழும்பப்பண்ணுவேன். அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான். அது நித்திய ஆலயமாயிருக்கும். உன் புத்திரனாகிய தாவீதின் குமாரன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் ராஜ்யத்தை ஆளுவான்” என்றார். மாம்சத்தில் தோன்றிய தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் இயற்கை பலத்தைக்கொண்டு கர்த்தருக்கு ஒரு வீட்டை, ஒரு ஆலயத்தைக் கட்டினான். 77 ஆனால் தாவீதின் உண்மையான சந்ததியான தாவீதின் குமாரன் தோன்றியபோது, அந்த தேவாலயம் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடி நிர்மூலமாக்கப்படும் நேரம் வரும் என்று அவர் அவர்களிடம் கூறினார். ஆனால் அவர் வேறொரு ஆலயத்தை அவர்களுக்கு சுட்டிக் காண்பிக்க முயன்றார்.

4478 திவ்விய வாசகனாகிய யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தில் இந்த கூடாரத்தைக் கண்டான். வெளிப்படுத்தினவிசேஷம் 21ல் “அந்த புதிய ஆலயம் தேவனிடத்திலிருந்து பரலோகத்தை விட்டு இறங்கிவர அவன் கண்டான். அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும் அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு பெருஞ்சத்தம் பின்வருமாறு உண்டாயிற்று: ‘இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது. அவர்களிடத்திலே தேவன் வாசமாயிருப்பார். தேவன் தாமே அவர்களோடே கூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். இனி மரணமுமில்லை; துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்து போயின.”’ 79 அப்படியானால் உண்மையாகவே தாவீதின் குமாரன், அவரைக் குறித்து இவ்வாரத்தின் செய்திகளில் தியானிக்கப்போகிறோம், தம்முடைய ஆலயமாகிய தேவனுடைய ஆலயத்திற்கு வருவார். அந்த உண்மையான கூடாரத்தைக் கட்டுவதற்காகத்தான் இப்பொழுது அவர் சென்றிருக்கிறார். யோவான் 14-ம் அதிகாரத்தில், “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. நான் போகிறேன்…” என்று இயேசு கூறுகிறார். அப்படியாயின் அவர் எதைப் பொருட்படுத்திக் கூறினார்? அது ஏற்கனவே முன்குறிக்கப்பட்டுவிட்டது என்றுதான் பொருள்படும். “நான் போய் உங்களுக்கு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்வேன்” என்றார். உண்மையாகவே, வரப்போகும் அந்த மகத்தான காலத்தில் அது சம்பவிக்கும் என்று நாமறிவோம். உண்மையான தாவீதின் வித்தாகிய இயேசு கிறிஸ்து சிங்காசனத்தில் அமர்ந்து, அவரோடு ஆலயத்திலிருக்கும் அவருடைய மணவாட்டியான சபையையும், இஸ்ரவேலின் பண்ணிரண்டு கோத்திரங்களையும் நித்திய காலமாய் அரசாளுவார்.

4580 இந்த இடங்களில் அதாவது, தாவீது தேவனுடைய உண்மையான ஆலயத்தைக் கட்டக்கூடாமற் போயிற்று. ஏனென்றால் அதைக் கட்டுவதற்கு அவன் ஆயத்தமாக்கபடவில்லை. எனவே அவனால் ஒன்றுமே செய்ய முடியாமலிருந்தது. அவன் அழிவுள்ள ஒருவனாயும், இரத்தம் சிந்தினவனுமாயிருந்தான். இன்றைக்கும் நாம் அப்படித்தாம் இருக்கிறோம், உண்மையான தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு நாம் ஆயத்தமாக்கப்பட்டிருக்கவில்லை. ஒரே ஒருவர் மாத்திரமே அதைக் கட்ட முடியும். இப்பொழுது அது கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. 81 ஆனால் உண்மையான கூடாரம் பூமியில் ஸ்தாபிக்கப்படும்வரை, இந்த சிறிய கூடாரமும், சாலொமோன் அவருக்கு கட்டிய தேவாலயமும், மற்றவைகளும் தேவனை ஆராதிப்பதற்கென்று அளிக்கப்பட்ட தற்காலிக ஸ்தலங்களாகும்: உண்மையான கூடாரம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், “நீதியானது வானத்திற்கு வானம் அரசாளும்; துக்கம் ஒருபோதும் இருக்காது”. மரித்தோர் அடக்க ஆராதனை அந்த கூடாரத்தில் நிகழ்வதில்லை. விவாக ஆராதனைகள் அங்கு நடபெறாது. அந்த விவாகமானது நித்தியத்திற்கென உள்ள ஒரு மகத்தான விவாகமாயிருக்கும். என்னே ஒரு சமயமாய் அது இருக்கும்!

4682 உண்மையான கூடாரம் வருவதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதன் அறிகுறியாக, அவருடைய ஆவியின் தன்மையைப் பெற்று அந்த கூடாரத்தில் நாம் எவ்விதம் வழிபடுவோமோ அவ்விதமே இந்த கூடாரத்திலும் நாம் வழிபடுவோமென்று இன்றைக்கு நம்முடைய இருதயத்தில் தீர்மானம் எடுப்போம். 83 நாம் நம்முடைய காலூன்றி எழுந்து நிற்போம். நான் பரிசுத்த வேத வசனத்தை வாசிக்கின்றபடியால் எழுந்து நிற்போம். “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற் போயிற்று. யோவானாகிய நான் புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது; இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்தது அவர்களுடைய தேவனாயிருப்பார்”

47நாம் இப்பொழுது நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 84 எங்கள் பரம பிதாவே, நாங்கள் பயத்தோடும், மரியாதையுடனும், பரிசுத்த பக்தியோடும் உமது சந்நிதியில் நிற்கிறோம்., ஆண்டவரே, நீர் எங்களுக்குக் கிருபையாக அளித்த பணத்தின் மூலம் ஒரு ஆராதனை ஸ்தலத்தை நாங்கள் கட்ட முடிந்தது. எங்களுடைய அந்த காணிக்கையைத் தயவாய் அங்கீகரிக்கும்படி உம்மை வேண்டிக் கொள்கிறோம். தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்வதற்குத் தகுதியுள்ள ஒரு ஸ்தலத்தை நாங்கள் பூமியில் ஆயத்தம் செய்யவே முடியாது. ஆயினும் நாங்கள் உம் பேரில் வைத்திருக்கும் அன்பின் அடையாளமாக இதை உமக்குக் காணிக்கையாகப் படைக்கிறோம். கர்த்தாவே, நீர் எங்களுக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். 85 ஆண்டவரே, இந்தக் கட்டிடமும், நிலமும் அநேக வருடங்களுக்கு முன்னமே உமது ஊழியத்திற்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த பழைய நினைவுகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவனாகிய கர்த்தாவே, அநேக வருடங்களுக்கு முன்பே, அன்று நான் ஒரு தரிசனத்திலே பழைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டதையும், நான் நதியைக் கடந்து செல்ல அனுப்பப்பட்டதையும் கண்டேன் என்பதை வெளிப்படுத்திக் கூறினேன்.

4886 வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்த தேவனாகிய கர்த்தாவே, உம் மந்தையின் ஜனங்களாகவும் நாங்கள் நிற்கிறோம். உம்முடைய ராஜ்யத்தின் பிள்ளைகளாகவும் நாங்கள் நிற்கிறோம். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய ஊழியத்திற்கென்று, என்னையும் இச்சபைப் போதகரையும், சபையின் அங்கத்தினரையும் இக்கூடாரத்தையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பயபக்தியுடனும், மரியாதையுடனும் தேவனுக்கென்று அர்ப்பணிக்கிறோம். சுவிஷேசம் இங்கிருந்து உலகின் எல்லாப்பாகங்களுக்கும் சென்று, உலகின் நாலு பாகங்களிலிருந்தும் ஜனங்கள் இங்கு வந்து தேவனுடைய மகிமை இங்கிருந்து புறப்படுவதைக் காணட்டும். நீர் எங்களுக்கு முன்பு செய்த நன்மையைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமாக எதிர்காலத்தில் நன்மை கிடைப்பதாக.

4987 பிதாவே உம்முடைய வார்த்தையின் மூலமாய் எங்களையும் எங்களுக்குள்ள எல்லாவற்றையும் உம்முடைய ஊழியத்திற்கென்று சமர்பிக்கிறோம். சபையாரும் தேவனுடைய வசனத்தைக் கேட்பதற்காக அவர்களை இன்று காலையில் அர்ப்பணிக்கின்றனர். ஆகவே, ஊழியக்காரர்களாகிய நாங்கள், “சமயம் வாய்ந்தாலும் வாய்க்காவிட்டாலும் நாங்கள் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணவும், எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு புத்தி சொல்லவும்” எங்களையே அர்ப்பணிக்கிறோம். அது அங்கே மூலைக்கல்லில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னனே எழுதப்பட்டிருந்தது. நீரோ, “ஜனங்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு சத்தியத்திற்குச் செவியை விலக்கி, கட்டுகதைகளுக்குச் சாய்ந்து போகும் காலம் வரும்” என்று உரைத்திருக்கிறீர். கர்த்தாவே, தேவனுடைய வசனத்தை ஜனங்களுக்கு எடுத்துரைக்க நாங்கள் முயன்று கொண்டிருக்கும் சமயத்தில், நாங்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, இரட்டிப்பாக பலப்படவும், இந்த ஸ்தலத்தை இரட்டிப்பான ஆவியின் பங்கு நிரப்பவும், பரிசுத்த ஆவியானவர் தாமே…உதவி செய்வாராக.

5088 எருசலேம் தேவாலயத்தை பிரதிஷ்டை செய்த சமயம் சாலொமோன் ஜெபம் பண்ணி முடிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் மேகஸ்தம்பத்தின் உருவிலும், அக்கினி ஸ்தம்பத்தின் உருவிலும் முன் வாசல் வழியாய் பிரவேசித்து, கேரூபீன்களின் மேலேறி பரிசுத்த ஸ்தலத்தில் இளைப்பாறினது போன்று, இரட்டிப்பான ஆவியால், நாங்கள் பிரசங்கிக்கும் இந்த ஸ்தலத்தையும் வல்லமையுள்ளதாய் நிரப்ப வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். ஓ, தேவனே! “உம்முடைய ஜனங்கள் கஷ்டத்திலிருக்கும்போது, இந்த பரிசுத்த ஸ்தலத்தை நோக்கி ஜெபம் பண்ணினால் பரலோகத்திலிருந்து அவர்கள் ஜெபத்தைக் கேட்டருளவீராக” என்று சாலொமோன் ஜெபித்தான். 89 ஆண்டவரே இந்த காலையில் இங்கு பரிசுத்த ஆவியானவர் தங்கள் ஜீவியத்தை உமக்கென்று அர்ப்பணித்துள்ள ஒவ்வொரு ஆத்துமாவின் இருதயத்திலும் பிரவேசிப்பாராக. “தேவனுடைய மகிமை அதிகமாயிருந்தபடியால் ஊழியக்காரர் தேவனுக்கு முன்பாக ஊழியஞ் செய்ய கூடாமற் போயிற்று” என்று வேதம் கூறுகின்றது. ஓ, தேவனாகிய கர்த்தாவே, எங்களையும் இந்த கூடாரத்தையும் உமது ஊழியத்திற்கென்று நாங்கள் பிரதிஷ்டை செய்யும் போது, அதே சம்பவம் மறுபடியும் இப்பொழுது நிகழட்டும். “கேளுங்கள் அப்பொழுது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறதே.

5190 இந்த காலையில் எங்களையும் இந்த கூடாரத்தையும், சாயங்கால நேரத்தில் உண்டாகும் வெளிச்சத்திற்காக, உமது ஊழியத்திற்கென்று சமர்ப்பிக்கின்றோம். உமது வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் ஜனங்களுக்கு ஆறுதலையும், விசுவாசத்தையும் நாங்கள் கொண்டு வருவோமாக. மணவாளன் வந்து மணவாட்டியை கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் உடுத்துவித்து, அவர்களை ஏற்றுக்கொள்ள அவர்கள் காத்திருக்கின்றனர். இந்த கூடாரத்தையும், என்னையும், சகோதரன் நெவிலையும், சபையாரனைவரையும் தேவனுடைய ஊழியத்திற்கென்று சமர்ப்பிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். நீங்கள் உட்கார்ந்துகொள்ளலாம்.

5291 “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்” என்று தாவீது கூறினான். அது நம்மோடு எப்பொழுதும் இருப்பதாக, அவ்விதமாக கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவோமென்று யாராவது நம்மிடம் சொல்லும்போது, கர்த்தருடைய வீட்டில் ஒன்று கூடுவதற்கு நாம் மகிழ்ச்சியடைவோமாக. [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஆமென்.

5392 இப்பொழுது பிரதிஷ்டை ஆராதனைக்குப்பிறகு இன்னும் ஒரு மணி நேரம் அவகாசம் எனக்குண்டு.

5493 நாம் பயபக்தியாயும், பரிசுத்தமாயும், தேவனுடைய சமூகத்தில் அமரிக்கையாயுமிருப்போமென்று நம்மை அர்ப்பணித்திருக்கிறோம் என்பது ஞாபகமிருக்கட்டும். கர்த்தருடைய வீட்டில் உங்களால் முடிந்தளவு பயபக்தியாயிருங்கள். இப்பொழுது ஆராதனை முடிவுறும்போது, ஆராதனை முடிவுற்றப் பிறகு உடனடியாக, இக்கட்டிடத்தை விட்டு வெளியேறிவிடுங்கள். புரிகின்றதா? அப்படி செய்தால் வாயிற்காப்போன் துப்புரவு செய்து அடுத்த ஆராதனைக்கு ஆயத்தமாயிருக்க ஏதுவாகும். அப்படிச் செய்தால் கர்த்தருடைய ஆலயத்தில் எந்தவிதக் குழப்பமும் இராது. அன்றியும் …?… ஆராதனை முடிந்த பதினைந்து நிமிடங்களுக்குள் எல்லாரு வெளியேறிவிட வேண்டும். ஒருவரோடொருவர் சினேகிதமாயிருங்கள். எல்லோரும் கைக்குலுக்கி, மறுபடியும் ஆராதனையில் கலந்துகொள்ள அழையுங்கள்.

5594 வரப்போகும் இந்த வாரத்தில் இக்கூடாரத்தில் முன்பு இதுவரை நடத்திராத மிகவும் பயபக்தியான ஆராதனைகள் நடக்குமென்று நாம் எதிர்பார்க்கிறோம். நாமெல்லாரும் அதை எதிர்நோக்கியிருக்கிறோம். இப்பொழுது நான்—நான்…கடந்த இரவு நான் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது சிலவற்றை நான் தரிசனத்தில் காணத் தொடங்கினேன். ஆகையால் கர்த்தர் நமக்கு உதவி செய்வாரேயானால், “இது மகத்தான சமயமாயிருக்கும்” என நான் நம்புகிறேன். நான் “மகத்தான சமயம்” என்று சொல்லும்போது அப்படிப்பட்டக் காரியத்தைக் குறித்து நான் இன்று காலையில் பேசப் போகிறேன். உங்களுக்குத் தெரியுமா, “மகத்தானது” என்று மனிதன் எதைக் கருதுகிறானோ, சில சமயங்களில் அது மகத்தானதாய் இருப்பதில்லை ஆனால் “மகத்தானது” என்று தேவன் எதை அழைக்கின்றாரோ அதை மனிதன் மூடத்தனம் என்று கூறுகின்றான். தேவன் “மூடத்தனமானது” என்று எதைக் கூறுகிறாரோ, அதை மனிதன், “மகத்தான ஒன்று” என்று கூறுகிறான். ஆகையால் நாம் இதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு வார்த்தையையும் சீர்தூக்கிப் பார்ப்போமாக.

5695 இப்பொழுது, ஆராதனைகள் நீண்டதாக இருக்கின்றன. அவை அவ்வாறுதான் இருக்கும். ஏனெனில் இவை கடினமான ஆராதனைகள், அதிக போதனையும் சமர்ப்பணமும் அவசியமாயிருக்கின்றது. 96 நான் இப்பொழுது தங்கியுள்ள இடத்தில், ஜனங்கள், “நீங்கள் மிகவும் எடை குறைந்துவிட்டீர்கள், சகோதரன் பிரான்ஹாமே என்று சொல்லி என்னை அதிகமாக போஷிக்கின்றனர். ஆயினும் நான் தொடர்ச்சியாக ஊழியம் செய்துகொண்டு வருகிறேன். அடுத்த ஞாயிறு இரவு இந்த ஸ்தலத்தைவிட்டு சென்று விரைவில் மெக்ஸிக்கோவில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்ய வேண்டும். ஆகையால் இது ஒரு கடினமான காரியம். ஆகையால் நான் அதிகம் உண்ணுவதை தவிர்க்க முயற்சித்துக் கொண்டு வருகிறேன், இக்கூட்டங்களுக்காக என்னை ஆயத்தம் செய்துகொள்கிறேன். 97 இன்று காலை சகோதரன் ஜீனியர் ஜாக்ஸன், சகோதரன் ரடல் மற்றும் அநேக ஊழியக்காரர்களை காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தேவன் உங்களெல்லாரையும் ஆசீர்வதிப்பாராக!

5798 இன்று காலையில் நான் இங்கே எழுதிவைத்துள்ள சில குறிப்புகளின் பேரிலான ஒரு பொருளில் நான்—நான் உங்களிடத்தில் பேச விரும்புகிறேன். நான் முதலில் ஏசாயாவின் புத்தகம் 53-ம் அதிகாரத்திலிருந்து படிக்க விரும்புகிறேன். நீங்கள் வேதத்தை திருப்பி அந்த அதிகாரத்தை எடுக்கும்போது, ஓரிரண்டு அறிவிப்புக்களை நான் செய்ய ஆசைப்படுகிறேன். 99 அதாவது, இன்றிரவு இந்த புஸ்தகத்தைக் குறித்து பேசி, அதனைக் கடைசி சபையின் காலத்துக்கும். முத்திரைகள் திறக்கப்ப்டுதலுக்கும் இடையே பொருத்த விரும்புகிறேன், இப்பொழுது, அவ்விரண்டுக்குமிடையில் ஒரு அகலமான பிளவுண்டு. 100 நான் சபையின் காலங்களைக் குறித்துப் பேசி முடித்தபின், அதைத் தொடர்ந்து உடனே அடுத்ததாக தானியேலின் எழுபது வாரங்களைப் பற்றி பேசினேன். ஏனெனில் அவையிரண்டும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. ஏழு முத்திரைகளைக் குறித்து பிரசங்கிக்கும் முன்பு தானியேலின் எழுபது வரங்களைப் பற்றி நான் பிரசங்கித்தாக வேண்டும் என்று முடிவுபண்ணினேன். ஏனெனில் அது ஏழு முத்திரைகளுடன் பொருத்தப்பட வேண்டும். இன்னும் ஒன்று மாத்திரமே பாக்கியாயுள்ளது, அதுதான் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புத்தகத்தை விவரிக்கும் வெளிப்படுத்தின விசேஷம் 5ம் அதிகாரம். நாம் அதை குறித்து இன்றிரவு சிந்திப்போம்.

58101 நாம் இன்று இரவு சற்று சீக்கிரமாகவே ஆராதனையை ஆரம்பிக்க விரும்புகிறோம். என்னைக் குறித்தோ எப்படியோ… நீங்கள் இதை ஏற்கனவே குறிப்பிட்டீர்கள், நீங்கள் சீக்கிரமாக ஆரம்பித்து விடுவீர்களா? [சகோதரன் நெவில், “ஆம்” என்கின்றனர்.] உங்களைக் குறித்து என்ன? சரியாக ஏழு மணிக்கு எல்லோரும் வர முடியுமா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.] சரி. ஆறு முப்பது மணிக்கு வழக்கமாக பாடல் ஆராதனையை ஆரம்பிக்கலாம். நானோ ஏழு மணிக்கெல்லாம் இங்கு இருப்பேன். இந்த வாரம் முழுவதும் நாம் சற்று நேரத்துடன் ஆராதனையை ஆரம்பிப்போம். நாம், இப்பொழுது, நாம்…வந்து… 102 கிறிஸ்தவர்களைப் போல பாடல்களை பாடுவதில் ஆர்வம் கொண்டவர்கள் யாருமேயில்லை. நாம் பாடுவதை விரும்புகிறோம். அந்த காரியங்களை நாம் நேசிக்கின்றோம்.

59103 ஆனால் இப்பொழுதோ நாம்—நாம் வேறு ஏதோ ஒன்றில் இருக்கிறோம், நாம்—நாம் வார்த்தையில் இருக்கிறோம், பாருங்கள், ஆகையால் இப்பொழுது நாம் அதனோடு தரித்திருப்போமாக. நாம் செய்யப்போவதோ, நாம் போதனையில் இருக்கிறோம். அது எனக்கு எவ்வளவு அதிக பிரயாசை (Strain) என்பதை நீங்கள் அறியலாம், பாருங்கள், ஏனெனில் நான் எதையாவது தவறாக போதித்தால், அப்பொழுது அதற்காக நான் பதில்கூற வேண்டியவனாயிருப்பேன். புரிகின்றதா? ஆகையால்தான் மற்றவர்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. அது தேவ ஆவியினால் ஏவப்பட வேண்டும். ஏழு இடி. முழக்கங்களை பிடித்திருக்கிற ஏழு தூதர்கள் அதை வெளிப்படுத்தித் தருவார்கள் என்று நான் நம்புகிறேன். புரிகின்றதா?

60104 இப்பொழுது ஏசாயாவில், ஏசாயா 53-ம் அதிகாரம் முதலிரண்டும் வசனங்களை வாசிப்போம். நான் இந்த கேள்வியை கேட்க விரும்புகிறேன். 105 இப்பொழுது, இது ஏழு முத்திரைகளுடன் சம்மந்தப்பட்டதல்ல. இது ஒரு சிறிய செய்தி. நான் பிரதிஷ்டை ஆராதனையை நடத்தினபடியால், என்னால் தெளிவாக இன்னும் பேசமுடியவில்லை, ஏனென்றால் எனக்கு நேரமும் இல்லை என்பதை நான் அறிந்துள்ளேன். ஆனால் இது ஒரு சிறு பிரதிஷ்டை ஆராதனையாகி, இந்த சபைக்கான சிறு ஞாபகர்த்த ஆராதனையாக அல்லது பிரதிஷ்டை ஆராதனையாக இருப்பதால், சரியாகக் கூறினால், இந்தப் புத்தகம் திறக்கப்படுதலைக் குறித்து நான் என்னக் கூற விரும்புகிறேன் என்பதைக் கூற அப்பொழுது எனக்கு சமயமிராது என்று நான் எண்ணினேன், பாருங்கள், ஆகையால் நான் அதை இன்றிரவு கூறுவேன். இது ஒரு சிறிய ஆராதனையாக இருந்தாலும் இது அதனுடன் சரியாக இருக்கின்றது.

61106 ஆகையால் நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டு அதைப் பற்றிக்கொள்ளுங்கள். இதை நீங்கள் ஒலிநாடாக்களில் (Tapes) பதிவு செய்தால், ஒலிநாடாக்களிலுள்ள போதனையில் நிலை கொண்டிருங்கள். ஒலிநாடாக்கள் கூறுவதைத்தவிர வேறொன்றையும் கூறாதீர்கள். சரியாக ஒலிநாடாக்கள் கூறுவதை மாத்திரம் அப்படியே சொல்லுங்கள். புரிகிறதா? இப்பொழுது, ஏனெனில் நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளப்போகும் காரியங்கள், தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். பாருங்கள்? ஒலிநாடாக்கள் சொல்லுவதையே சொல்ல நீங்கள் நிச்சயமுள்ளவர்களாயிருங்கள். வேறொன்றையும் சொல்லாதிருங்கள், பாருங்கள்? காரணம் இதை நான் என் சுயமாய் சொல்லவில்லை. தேவன் தான் இதைக் கூறுகிறார். நீங்கள் பாருங்கள், ஒலிநாடாக்கள் சொல்லாததை சொல்வதன் மூலம் அநேக சமயங்களில், குழப்பங்கள் ஏற்படுகின்றன. அநேகர் எழுந்திருந்து, “இதற்கு இதுதான் அர்த்தம் என்று இன்னார்—இன்னார் கூறினார்” என்று கூறுகிறார்கள். ஒலிநாடாக்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதோடு விட்டு விடுங்கள்.

62107 பாருங்கள், அந்தவிதமாகவே நமக்கு வேதம் தேவை. அந்தவிதமாகவே வேதம் கூறுவதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் அவசியம். உங்கள் சொந்த வியாக்கியானத்தை அதனுடன் சேர்க்காதீர்கள். ஏனெனில் வேதம் ஏற்கனவே வியாக்கியானம் செய்யப்பட்டதாகிவிட்டது. நீங்கள் பாருங்கள். இப்பொழுது: “எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 108 இப்பொழுது நான் அதை மறுபடியும் கூர்ந்து வாசிக்கட்டும். எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? (கேள்வி!) கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 109 வேறு விதமாய்க் கூறினால் “நீங்கள் எங்களுடைய செய்தியை விசுவாசித்திருந்தால், அப்பொழுது கர்த்தருடைய புயம் வெளிப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.” பாருங்கள்? எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

63110 இப்பொழுது நான் பரிசுத்த மத்தேயுவினுடைய சுவிசேஷப் புத்தகம் 11ம் அதிகாரம் 25—26 வசனங்களையுங்கூட படிக்க விரும்புகிறேன். உங்களிடம் ஒலிப்பதிவு கருவியில்லையெனில்…நாம் தொடர்ந்து இவைகளை… நீங்கள் உங்கள் காகிதங்கள் மற்றவற்றைக் கொண்டு அதில் குறித்துக் கொள்ளலாம். மத்தேயு 11ம் அதிகாரம் 25—26ம் வசனங்கள், 11ம் அதிகாரம் 26 மற்றும் 27ம் வசனங்கள். சரி, இயேசு ஜெபிக்கையில் பேசுகின்ற வார்த்தைகள்…நான் அதற்கு முன்புள்ள வசனத்தையும் வாசிக்க விரும்புகிறேன். நாம் மத்தேயு 11:25…26ஐ வாசிப்போம். இதை நான் என்னுடைய வேத புத்தகத்தில் குறித்து வைத்துள்ளேன், நான் இதைத்தான் அறிவித்தேன் என்று நம்புகிறேன். அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.

64111 இந்த இரண்டு வேதவாக்கியங்களையும் பிடித்துக் கொள்ளுங்கள். “எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?” “அந்த சமயத்திலே இயேசு தேவனை ஸ்தோத்தரித்துச் சொன்னது…கல்விமான்களுக்கும் ஞானிகளுக்கும் இரகசியங்களை மறைத்து கற்றுக்கொள்ளும் பாலகருக்கு வெளிப்படுத்தினீர். ஆம், பிதாவே, இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்திற்கு பிரியமாயிருந்தது” இப்பொழுது இதிலிருந்து. 112 இந்த வேதவசனங்களிலிருந்து இன்றைக்கு பேசவிருக்கும் செய்தியின் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்: “தேவன் எளிமையில் மறைந்திருந்து, அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல்.” ஒலிநாடாக்களில் பதிவு செய்பவருக்காக நான் மறுபடியும் கூறுகிறேன். நீங்கள் பாருங்கள், காரணம் அவர்கள்—அவர்கள் அதை பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். புரிகிறதா? தேவன் எளிமையில் மறைந்திருந்து, அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல்.

65113 தேவன் எப்படி இந்தக் காரியத்தைச் செய்கிறார் என்பதை நாம் நினைக்கும் போது அது விசித்திரமாயிருக்கிறது. புத்திமான்கள் அவரை இலட்சக்கணக்கான மைல்கள் தூரத்தில் இழந்துவிடும் விதத்தில் தேவன் எளிமையான ஒன்றிற்குள் தம்மை மறைத்துக் கொண்டு பின்பு அதே வழியில் திரும்பி, தாம் கிரியை செய்யும் விதமான எளிமையான விதத்தில் மிகவும் எளிமையான ஒன்றின்மேல் தம்முடைய எளிமையான வழியில் கிரியைசெய்து தம்மை மறுபடியும் வெளிப்படுத்திக் காட்டுகிறார். ஏழு முத்திரைகளைக் குறித்த மகத்தான போதனைக்குள்ளாக நாம் செல்லும் முன்பு நாம் இதனை இந்தப் பொருளில் படிக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். அவர் எவ்வழியினால் தம்மை வெளிப்படுத்துகிறாரோ அவ்வழியை அநேகர் தவறவிடுகின்றனர்.

66114 இப்பொழுது, தேவன் எவ்வாறிருக்க வேண்டுமென்றும் தேவன் என்ன செய்யப் போகிறார் என்றும் மனுஷர் தங்கள் சொந்த கருத்துக்களை உடையவர்களாயிருக்கிறார்கள். நான் முன்பு அநேகமுறை உங்களிடம் கூறினவாறு, மனிதன் இன்னுமாய் மனிதனாகவே இருந்து கொண்டிருக்கிறான். தேவன் கடந்த காலத்தில் செய்தவைகளுக்காக அவருக்கு எப்பொழுதும் ஸ்தோத்திரத்தை ஏறெடுக்கிறான். அது போன்று அவர் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதனை எதிர் நோக்கியிருக்கிறான். ஆனால் அவர் தற்பொழுது செய்து கொண்டிருப்பவைகளை அவன் அசட்டை செய்கிறான். பார்த்தீர்களா? புரிகின்றதா? அந்தவிதமாகத்தான் அவர்கள் அவரை தவறவிடுகின்றனர். அவர்கள் பின்நோக்கி அவர் செய்த மகத்தான கிரியைகளைக் காண்கின்றனர். ஆனால் அவர் அதைச் செய்வதற்கு எளிய ஒன்றை உபயோகித்தார் என்பதைக் காணத் தவறுகின்றனர். பாருங்கள்? அவர்கள் மகத்தான சம்பவம் நிகழப்போகிறதென்று எதிர் நோக்கியிருக்கின்றனர், ஆனால் பெரும்பாலும் அவர்கள் எதிர்பாத்திருக்கும் காரியம் பத்தில் ஒன்பது அவர்களுக்குச் சற்று அருகாமையிலே சம்பவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது ஒரு எளியவிதத்தில் அமைந்திருப்பதால் அவர்கள் அதை அறியாதிருக்கின்றனர். பாருங்கள்?

67115 ஊடிகா (Utica) என்னும் பகுதியில் ஜிம் டார்ஸி (Jim Dorsey) என்பவர் ஒருவர்—ஒருவர் இருந்தார். அவருடைய ஜனங்களில் சிலர் இங்கே இருப்பார்களானால், நான் அந்த மனிதன் தீவிரவாதத்தை இகழ்ச்சிப்படுத்தும் நோக்குடன் இதைக் கூறவில்லை, உள்நாட்டுப் பேரில் சண்டையிட்ட அனுபவம் வாய்ந்த ஒரு—ஒரு போர் வீரர். யார் சார்பில் அவர் சண்டையிட்டாரென்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால் புரட்சிக்காரர் சார்பில் அவர் சண்டையிட்டார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர்—அவர் ஒரு ஒரு நாத்திகராய் இருந்தார், தேவன் என்ற அப்படிப்பட்ட ஒருவர் இல்லை என்றே அவர் உரிமை கோரினார். அவர் ஊடிகாவில் வசித்துவந்தார். அவருடைய பெயர் ஜிம் டோர்ஸி. உங்களில் அநேகர் அவரை அறிந்திருப்பீர்கள். 116 நான் சிறுவனாயிருக்கையில் அவர் எனக்கு நிறைய தர்பூசணி பழங்கள் கொடுத்திருக்கிறார். அவர் வழக்கமாகவே நதியின் கீழ்ப்புறத்தில் தர்பூசணி பழம் பயிரிட்டிருந்தார். என் தகப்பனாருக்கு அவர் ஒரு நெருங்கிய நண்பர். ஒருநாள் அவருடைய வாழ்க்கையில் அவர் கொண்டிருந்த எண்ணத்திற்கு மாறாக அவரிடத்தில் மகத்தான காரியங்களில் ஒன்று அவரிடத்தில் கூறப்பட்டது என்று அவர் கூறினார். அந்நாட்களில் நான் ஒரு சிறு பையனாய் இருந்தேன். ஆனால் அவர் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மாறாக கூறப்பட்டதே அவரை மனந்திரும்பி, தலைகுணிந்து கண்ணீர் விடச்செய்தது. எண்பத்தைந்தாவது வயதில் அற்புதமான விதத்தில் கிறிஸ்துவண்டை மனமாற்றமடைந்தார் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

68117 அவர் ஒருநாள் ஞாயிறு பள்ளியிலிருந்து வரும் ஒரு சிறுமியைப் பார்த்து, “ஞாயிறு பள்ளிக்குச் சென்று நீ ஏன் உன் நேரத்தை வீணாக்குகிறாய்?” என்று கேட்டார். அந்தப் பெண் “தேவன் இருக்கிறார் என்று நான் விசுவாசிப்பதால் அப்படிச் செய்கிறேன்” என்று பதிலுரைத்தாள். அதற்கு திரு. டார்ஸி, “சிறுமியே, நீ அப்படி விசுவாசிப்பது தவறாகும்” என்றார். 118 உடனே அந்த சிறு பெண் தரையில் குணிந்து, ஒரு—ஒரு ஒரு சிறு பூவைப் பறித்து, அதன் இதழ்களைப் பிய்த்து, திரு. டார்ஸி அவர்களே, “இது எப்படி ஜீவிக்கிறது என்று நீங்கள் செல்ல முடியுமா?” என்று கேட்டார். 119 அங்குதான் காரியம். டார்ஸி, அது முதல் சிந்திக்கத் தொடங்கினார், “அது பூமியில் முளைக்கிறது” என்று டார்ஸி பதிலுரைத்திருக்கலாம். உடனே “பூமி எங்கிருந்து வந்தது? அந்த வித்து எப்படி பூமிக்குள் சென்றது? அது எவ்வாறு நிகழ்ந்தது?” என்றெல்லாம் கேள்விகள் எழுந்திருக்கக்கூடும். இவ்விதமாக அவர் சிந்தனை மேலிட்டவராய் தேவன் இருக்கிறாரென்று கண்டுகொள்ள முடிந்தது. பாருங்கள்?

69120 நாம் நினைக்கும்வண்ணம் பகட்டான காரியங்களில் அல்ல, எளிமையான காரியங்களில் தேவன் தத்ரூபமாக காணப்படுகிறார். எனவே, தேவன் தம்மை வெளிப்படுத்தி, பின்பு மறைந்து கொள்வதில் பிரியம் கொள்கிறார். அதேவிதமாக தம்மை மறைத்துக் கொண்டு சாதாரணமாக சிறு காரியங்களில் தம்மை வெளிப்படுத்துகிறார். அது—அது மனிதனின் தலைக்குமேல் சென்று விடுகின்றது. ‘நீதியுள்ள தேவன் ஏன் இவ்விதம் செய்கிறார்?” என்று நீங்கள் கேட்கலாம். 121 ஏனெனில், ஆதியிலேயே, மனிதன் தன்மேல் சார்ந்திருக்க முயற்சிக்கக் கூடாதவாறு உண்டாக்கப்பட்டிருந்தான். தேவன் பேரில் முற்றிலுமாக சார்ந்திருக்க வேண்டும் என்றே சிருஷ்டிக்கப்பட்டான். அதனால் தான் அவன் ஆட்டுக்குட்டிகளுக்கும், செம்மறியாடுகளுக்கும் ஒப்பிடப்படுகிறான், ஒரு செம்மறியாடு தன்னைத்தானே வழிநடத்திக் கொள்ள முடியாது. அதை வழி நடத்த ஒருவன் தேவை. ஆகவே பரிசுத்த ஆவியானவர் நம்மை வழி நடத்த வேண்டியவராயிருக்கிறார். ஆதலால், மனிதன் அந்த விதமாகத்தான் உண்டாக்கப்பட்டிருக்கின்றான். 122 ஆகவே, எளியவர்கள் கண்டுகொள்ளத்தக்கதாக தேவன் தம் கிரியைகள் எல்லாவற்றையும் எளியவிதத்தில் அமைத்திருக்கின்றனர். சாதாரணமானவர்கள் தம்மை அறிந்து கொள்ள வேண்டுமென்று கருதி, தேவனும் எளியவர்களிடம் எளியவராகி விடுகிறார். மற்றபடி ஏசாயா 35-ம் அதிகாரத்தில், அவர், “பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப்போவதில்லை” என்று கூறியுள்ளார் என்று நான் நினைக்கிறேன். அது எவ்வளவு எளிமையானது!

70123 தேவன் மகத்தானவர் என்று நாம் அறிந்துள்ளோம். ஆதலால் அவருடைய காரியங்களை ஏதோ ஒரு மகத்தான காரியமாக இருக்கும் என்று நாம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதன் காரணமாக சாதாரண, எளிமையான காரியங்களை நாம் இழந்து விடுகிறோம். எளிமையைக் கண்டு நாம் இடறிப் போகிறோம். அவ்வாறேதான் நாம் தேவனை காணமுடியாமல் தவறவிட்டுவிடுகிறோம், அதாவது எளிமையைக் கண்டு இடறி விழுவதால்தான் அவ்வாறாகிவிடுகிறது. தேவன் மிகவும் எளிமையாய் இருப்பதன் காரணமாக இக்காலத்திலும், எல்லா காலங்களிலுமுள்ள ஞானிகள் அவரை இலட்சக்கணக்கான மைல்கள் இழந்து போகின்றனர். ஏனெனில் தேவனைவிட மகத்தானவர் யாருமில்லை என்பதனைத் தங்கள் அறிவுக் கூர்மையால் அவர்கள் அறிந்துள்ளனர். ஆனால் அவருடைய வெளிப்படுத்துதலில், அவர் அதை மிக எளிமையாக்குவதால், அவர்கள் இடறி விழுந்து அவரை காணத் தவறினார்.

71124 இப்பொழுது நீங்கள் அதனை ஆராய்ந்து பாருங்கள். இவைகள் எல்லாவற்றையுமே ஆராய்ந்து பாருங்கள். இங்கு காண வந்திருப்பவர்களே, உங்கள் அறைகளுக்குச் சென்றவுடன் இங்கு கூறப்பட்டவைகளை நன்றாக ஆலோசித்துப் பாருங்கள். இதை விவரிக்க வேண்டிய அளவுக்கு விவரிக்க நமக்கு சமயம் போதாது. ஆயினும், நீங்கள் அறைகளுக்குச் சென்றபிறகு, அல்லது நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்களோ அங்கே அல்லது உங்களுடைய வீட்டிற்குச் சென்றபிறகு, இவைகளெல்லாவற்றையும் ஒன்றாகப் பிணைத்து அதனை தியானிக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.

72125 அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்தும் விதத்தில் அவரைக் காணத் தவறுகின்றனர்; ஏனெனில் அவர் மிகவும் மகத்தானவர், ஆனாலும் எளியவர்களுக்கு தம்மைத்தாமே வெளிப்படுத்தும் பொருட்டாக அவர் தம்மை எளிமையில் மறைத்துக் கொள்கின்றார். எளியமுறையில் மறைந்திருக்கிறார், புரிகிறதா? பெரியவைகளில் அவரைக் காண முயற்சிக்காதீர்கள். ஏனெனில் அவர் அவைகளைத் தாண்டிச் சென்று விடுகிறார். ஆனால் தேவனுடைய எளிமையைக் கூர்ந்து கவனியுங்கள். அப்பொழுது தேவனை சரியாக எளிமையான விதத்தில் இங்கேயே தேவனைக் கண்டுகொள்வீர்கள். 126 மெருகேற்றப்பட்ட உலக ஞானம், கல்வி, இவைகளைக் கொண்டவர்கள் அவரை எப்பொழுதும் காணத் தவறுகின்றனர். இப்பொழுது, நான் இங்கே…நான் அறிந்துள்ள பள்ளி ஆசிரியர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். நான் கல்வித்திட்டத்தையும் அதைப் போதிக்கும் பள்ளிக்கூடங்களையும் குறைகூறிப் படிப்பறியாமையை ஆதரிப்பதற்காக நான் இங்கு இல்லை. நான் அதற்காக இங்கே இல்லை. ஆனால் ஜனங்கள் கல்வியறிவுக்கு அதிக முக்கியத்துவம் செலுத்துகின்றனர். வேத பள்ளிகளிலும் இவ்விதம் இருப்பதால், தேவன் அவர்களுக்கு முன்வைத்தவைகளை அவர்கள் காணக்கூடாமற் போகின்றனர்.

73127 ஸ்தாபனத்தில் இருக்கும் சகோதரனின் பேரில் எனக்கு யாதொரு வெறுப்பும் இல்லை, ஆனால் ஸ்தாபனத்தின் கொள்கைகளை நான் தீவிரமாய் எதிர்க்கிறேன் ஏனெனில், ஸ்தாபனங்கள் தங்களைப் பெரிதாகக் கருதி தங்களுக்கு போதகர்களுக்கு முக்கியமான இடங்களில் கல்வி கல்வி அறிவை அளித்து, அவர்கள் சரியானபடி வேதக் கல்வி அறிவு பெறாவிடில் அவர்களை வெளியேற்றுகின்றனர். அவர்களுக்கு மனோதத்துவப் பரிசோதனை செய்யப்படுகின்றது. மனோதத்துவத்தினால் ஒரு போதகன் பரிசோதிக்கப்படுவது தேவனுடைய சித்தம் என்று நான் எண்ணியதில்லை. ஆனால் அவன் தேவனுடைய வார்த்தையினால் பரிசோதிக்கப்படவேண்டும். பாருங்கள்? அது—அது—அது அவர் அனுப்பின வார்த்தையைக் கொண்டிருக்கத்தக்கதாகவே தாம் அனுப்பின மனிதனை தேவன் பரிசோதிக்கும் முறையானது இருக்கும். 128 “வார்த்தையை பிரசங்கி!” இப்பொழுதோ நாம் இன்று தத்துவத்தைக் குறித்தும் பிரமாணங்களைக் குறித்தும், ஸ்தாபனங்களின் கொள்கைகளைக் குறித்தும், இன்னும் அநேகர் காரியங்களைக் குறித்து பிரசங்கிக்கிறோம், வார்தையையோ விட்டு விடுகிறோம், ஏனென்றால் அது புரியவில்லையென்று அவர்கள் கூறுகிறார்கள். அதைப் புரிந்து கொள்ள முடியும். அவர் அதைச் செய்வதாக வாக்களித்தார். இப்பொழுதோ அவர் அதைச் செய்யும்படிக்கு நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

74129 இப்பொழுது சில நிமிடங்களுக்கு நாம் ஒரு சில குணாதிசயங்கொண்டவர்களை சிந்திக்கும்படி எடுத்துக் கொள்ளப் போகிறோம். 130 நோவாவின் காலத்தை, நாட்களைக் குறித்து நாம் பார்ப்போம். நோவாவின் காலத்தில், உலக ஞானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அது மதிப்பீடு அடைந்திருப்பதை தேவன் கண்டார். தேவன் தம் மகத்துவத்தை அந்த ஜனங்களுக்குக் காண்பிக்க எண்ணி ஒரு சாதாரண மனிதன் மூலமாய் ஒரு சாதாரண செய்தியை அனுப்பினார். 131 நோவாவின் காலத்தில் நாகரீகம் உச்சநிலையை அடைந்திருந்ததென்றும், நம்முடைய தற்கால நாகரீகத்திலும் கூட நாம் இன்னும் அந்நிலையை அடையவில்லையென்பதையும் நாம் அறிவோம். ஆனால் முடிவில் நம் நாகரீகம் அந்த காலத்தின் நாகரீகத்தின் நிலையை அடையும், ஏனெனில் “நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷ குமாரனுடைய நாட்களிலும் நடக்கும்” என்று நம்முடைய கர்த்தர் உரைத்திருக்கிறார். அவர் சில திருஷ்டாந்தங்களையும் நமக்கு அளித்திருக்கிறார்.

75132 அவர்கள் எகிப்தில் பிரமாண்டமான கூர்நுனிக் கோபுரங்களையும், சிறகுடைப் பெண்முகச் சிங்க உருவச் சிலைகளையும் கட்டினர். அவர்கள் பிரம்மாண்டமானவைகளைக் கட்டினார்கள். அத்தகைய வடிவங்களை இக்காலத்தில் கட்டுவதற்கு நமக்குப் போதிய ஞானம் கிடையாது. அக்காலத்து சவங்களைத் தைலமிட்டு அவைகள் இந்நாள் வரைக்கும் கெடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட பதனம் செய்யப்பட்ட சவக் கல்லறைகளை கட்டுவதற்கு நம்மிடம் தைலங்கள் கிடையாது அதைச் செய்வதற்கென ஞானம் இன்றைக்கு நம்மிடையே கிடையாது. அவர்கள் ஒரு—சவத்தை பதனீடு செய்து, தைலமிட்டு, அது அப்படியே இந்நாள் வரை அவ்வளவு தத்ரூபமாக காணப்படும்படிக்கு செய்து வந்தனர். நம்மால் அவ்வாறு செய்யமுடியாது. நம்மால் இன்றைக்கு ஒரு சவத்தை அவ்வாறு பதனிட முடியாது. அவ்வாறு தைலமிடக்கூடிய பொருட்களும் நம்மிடைக் கிடையாது. நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் ஆண்டுகள் கெடாமலிருக்கும் சாயங்களை [Colour] அவர்கள் கண்டுபிடித்திருந்தனர். இன்று வரைக்கும் அவை சாயம் போகாமலிருக்கின்றன. பாருங்கள்? அப்படிப்பட்ட சாயங்கள் இன்று நம்மிடமில்லை.

76133 இவையெல்லாம் நம் நாகரீகத்தைக் காட்டிலும் அக்காலத்து நாகரீகம் சிறப்பாயிருந்ததென்பதற்கு அத்தாட்சிகளாம். இதிலிருந்து கல்வியும், விஞ்ஞானமும் நாம் விட்டு வந்த அந்த நாகரீகத்திற்கு மிகச் சிறந்த அடையாளங்களாயிருந்தன என்பதை உங்களால் யூகித்துப் பார்க்க முடியும். அந்தச் சிறந்த நாகரீகத்திற்கு விஞ்ஞானமானது மக்களிடையே இன்றுள்ள நவீன நாகரீகம், கல்வியைப்போல எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதையே இந்த நினைவுச் சின்னங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. “அவைகள் அப்படித்தான் இருக்க வேண்டும். அது அவ்வாறு இருக்க வேண்டியதாயிருந்தது.” இதிலிருந்து படிப்பில்லாமை அவர்களுக்கு மத்தியில் அக்காலத்தில் இருந்திருக்க முடியாது என்றே நான் யூகிக்கிறேன். 134 ஆகையால் செய்தியைக் கொடுக்கத்தக்கதாக அவர்களுடைய ஸ்தாபனங்களில் அந்த மகத்தான செல்வ செழிப்பு மிக்க அமைப்புகளில் தேவன் ஒரு சரியான மனிதனைத் தேடி ஒருவனும் அதற்கு பொருந்தாதவனாயிருக்கையில், முடிவில் நோவா என்னும் பேர் கொண்ட படிப்பில்லாத ஒருவனைத் தெரிந்தெடுத்தார். நோவா ஒருக்கால் குடியானவனாயிருந்திருக்கக்கூடும், அல்லது ஆடு மேய்ப்பவனாயிருந்திருக்கலாம். அவர் ஜனங்கள் மத்தியில் பிரசங்கிப்பதற்கென தம்முடைய செய்தியை அவனிடம் கொடுத்தார், அது மிகவும் எளிமையாயிருந்தது. அக்காலத்து அவர்களுடைய—அவர்களுடைய கல்விமான்கள் செய்தியின் எளிமையைக் கண்டு இடறி விழுந்தனர். அதே சமயத்தில் அச்செய்தி விஞ்ஞானத்தின் மத்தியில் “அடிப்படையானதாய்! அமைந்திருந்தது. வானத்தில் தண்ணீர் இல்லாத போது மழை எப்படி பெய்யும்” என்று அநேகர் எண்ணினர். பாருங்கள்? மிதக்க விட தண்ணீர் இல்லாத் போது, வெள்ளம் வரும்போது அதனுள் நுழைவதற்கென ஒரு பேழையைக் கட்டும் பணியான ஒரு சாதாரண செய்தியாக நோவாவின் செய்தி அமைந்திருந்தது. நோவா ஒரு எல்லை மீறிய மத வைராக்கியம் பொருந்தினவனாக [Fanatic] கருதப்பட்டான். இக்காலத்தில் அத்தகையோரை “வினோதமானவன்” என்று கூறுவர், இந்தவிதமாக கூறுவதற்கு நீங்கள் மன்னிபீர்களேயானால் நலமாயிருக்கும்.

77135 தேவனுடைய பிள்ளைகள் எல்லோருமே கிட்டத்தட்ட “வினோதமானவர்கள்” தான், பாருங்கள். அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். நான் அவர்களில் ஒருவனாயிருப்பதனால் மகிழ்ச்சியுறுகிறேன், ஆகையால், உங்களுக்குத் தெரியும், அவர்கள் நவீன நாகரீகத்தின் போக்கினின்று வித்தியாசப்பட்டவர்கள். ஆகையால்தான் அவர்கள் வினோதமாகக் கருதப்படுகின்றனர். அவர் தம்முடைய ஜனங்கள், “விசேஷித்தவர்கள் என்றும், வினோதமானவர்கள் என்றும், ஆனால் அவர்கள் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாயும், ராஜரீக சந்ததியுமாயிருந்து தேவனுக்கு ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகின்றனர் என்றும், அவருடைய நாமத்திற்கு உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளை அவர்கள் செலுத்துகின்றனர்” என்று கூறினார். என்னே—என்னே ஜனங்கள்! அவர்கள் அவருக்குச் சொந்தமானவர்கள்.

78136 கவனியுங்கள், இப்பொழுது, பக்திவைராக்கியம் அதிகமுள்ள ஒருவன் சபைக்கு வந்து ஜனங்களின் சிந்தனைகளுக்கு மாறாக முற்றிலும் வித்தியாசப்பட்ட ஒரு செய்தியைப் பிரசங்கித்தால் எவ்வளவு விசித்திரமாக இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். விஞ்ஞானிகள் அதனைப் பைத்தியக்காரத்தனம் என்று அழைத்திருக்கக் கூடும். ஏனெனில் விஞ்ஞான ரீதியாக அங்கு மழையே இல்லை என்று அவர்களால் நிரூபிக்க முடிந்தது! 137 ஆனால் இந்த சாதாரண மேய்ப்பனோ “தேவன் மழை பெய்யும் என்று சொன்னால், நிச்சயமாக மழை பெய்யும் என்று விசுவாசித்தான்” பார்த்தீர்களா? 138 அதனை இக்காலத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். யாராகிலும் ஜெபத்தினால் குணமடைந்தால் உடனே ஜனங்கள் “இது வெறும் மன உணர்ச்சியின் விளைவுதான். புற்றுநோய் இன்னும் அவனுக்குள் இருக்கிறது என்று விஞ்ஞான ரீதியாக நாங்கள் நிரூபிக்க முடியும்” என்று சொல்வார்கள். ஆனால் ஒரு சாதாரண விசுவாசிக்கோ அந்த புற்றுநோய் போய்விட்டது. புரிகிறதா? ஏனெனில் அவன் புற்றுநோயைக் கவனிப்பதில்லை, நோவா செய்தது போன்று, அவன் வாக்குத்தத்தத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

79139 நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷ குமாரனுடைய நாட்களிலும் நடக்கும் என்னும் வாக்கின் உண்மையை நீங்கள் காணமுடிகிறதல்லவா? 140 வைத்தியர் ஒருக்கால் “சதை வளர்ச்சி (Tumour) இன்னும் அங்கு தான் இருக்கிறது. ஆகையால் புற்றுநோய் அகலவில்லை என்றும், உன் கை முடமாகத்தான் இருக்கிறது குணமானாய் என்று நீ எண்ணினால் நீ பைத்தியக்காரன்’ என்றும் விஞ்ஞான ரீதியாக கூறலாம். 141 நினைவிருக்கட்டும், நோவாவின் நாட்களிலிருந்த அதே ஆவிதான் இக்காலத்திலும் இருக்கிறது.நோவாவின் காலத்தில் “மழை வானத்தில் இல்லை. நாங்கள் கருவிகளைச் சந்திரனுக்கு அனுப்பி எங்களால் பார்க்க முடியும். அங்கு தண்ணீர் இல்லவே இல்லை” என்று கூறியிருப்பார்கள். ஆனால் மழை பெய்யும் என்று தேவன் கூறினால், அது நிச்சயமாகப் பெய்யும். 142 “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது”. விசுவாசமானது தேவனுடைய வார்த்தையை தன் முடிவான இளைப்பாறும் ஸ்தலமாகக் கொண்டிருக்கிறது. அங்குதான் அது அதனுடைய இளைப்பாறும் ஸ்தலத்தைக் கண்டடைகிறது. உங்களுக்குப் புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] தேவனுடைய வார்த்தையின் பேரில்தான் அதன் இளைப்பாறும் ஸ்தலம் அமைந்துள்ளது.

80143 நோவாவும் அங்குதான் இளைப்பாறிக் கொண்டிருந்தான், “தேவன் அவ்வாறு கூறியுள்ளார்”. அத்துடன் முடிவு பெற்றுவிட்டது. இப்பொழுது நீங்கள் மீண்டும் கவனிப்பீர்களேயானால், இப்படிப்பட்ட காரியங்களில் விசுவாசம் வைத்ததால் நோவா பைத்தியக்காரனாக அக்காலத்தில் கருதப்பட்டான். 144 இன்றைக்கும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் ஜனங்கள் விசுவாசம் வைத்துள்ளனர். ஆனால் ஸ்தாபன சபைகளோ, “இந்த ஜனங்கள் பைத்தியக்காரர்கள். இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, சத்தமிடும் திகில் கொண்ட பைத்தியக்கார மக்கள்” என்று அழைக்கின்றன. தேவனுடைய வார்த்தை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து போதிக்கின்றதென்றும், அது ஒரு வாக்குத்தத்தமென்றும் அவர்கள் அறியாதிருக்கின்றனர்.

81145 ஆகவே அவர்கள் என்ன கூறினாலும் நோவா அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை, “கிழவனின் மூளை கெட்டு விட்டது. அவன் கூறுவது விஞ்ஞானப் பூர்வமாகத் தவறு. சிந்தைப் பூர்வமாக அவன் தவறாயிருக்கிறான்” என்று அவர்கள் கூறினர். ஆனால் நோவாவிற்கோ அது கர்த்தருடைய வார்த்தையாய் அமைந்திருந்தது. எனவே நோவா அதனோடு தரித்திருந்தான். புத்திமான்களும் கல்விமான்களும் அந்த எளிய செய்தியின் மேல் இடறி விழுந்து தங்கள் ஜீவனை இழந்தனர். என்னே ஒரு—ஒரு—ஒரு கடிந்து கொள்ளுதல். அது இந்த சந்ததிக்கும் உரியதாயிற்றே! 146 அநேக ஜனங்கள், “நான் நோவாவின் காலத்தில் வாழ்ந்திருந்தால்…” என்று கூறுவதுண்டு. இல்லை, நீங்கள் அப்பொழுது வாழ்ந்திருந்தால் அக்காலத்து ஜனங்களின் போக்கையே நீங்களும் கடை பிடித்திருப்பீர்கள். ஏன்னில் இன்றைக்கு அதே காரியம் வேறுவகையில் மீண்டும் சம்பவிக்கிறது, அன்றைக்கு ஜனங்கள் இடறினது போல் இன்றைக்கும் இடறுகிறார்கள்.

82147 அக்காலத்தில் அவர்களுக்கு அநேக பிரசங்கிகள் இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நோவா மாத்திரமே தேவனால் ஏவப்பட்டு அனுப்பப்பட்டவனாயிருந்தான், விபசாரமும் கேடுபாடும் நிறைந்த சந்ததியை தேவன் பொருக்கக் கூடாமல் அழிக்கப் போகிறாரென்று நோவாவால் காண முடிந்தது. நாமும் இன்றைக்கு அதேக் காரியத்தைக் காணமுடிகிறது. விபசாரமும் கேடுபாடும் நிறைந்த நவீன சோதோம் கொமோரா, மெருகேற்றப்பட்ட கல்வி ஞானம் நிறைந்தவர்களாய் தேவனும் அவருடைய வார்த்தையும் வெளிப்படும் எளிய தன்மையின் பேரில் இடறி விழுகின்றனர்.

83148 உலகிலுள்ள யாருமே ரோசல்லா…அல்லது உலகிலுள்ள யாவருமே தேவனுடைய வார்த்தையானது வெளிப்படுத்துவதை நாங்கள் காணவில்லை என்று கூற இயலாது. கடைசி நாட்களுக்குரிய சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும் என்னும் வாக்குத்தத்தம் இப்பொழுது நிறைவேறிக் கொண்டு வருகிறது. அதைத் காணத்தக்கதாக நாம் மிகவும் சிலாக்கியம் பெற்ற ஜனங்களாய் இருக்கிறோம். ஆனால் நாகரீகம் பொருந்திய உலகத்தின் மக்களுக்கு அது மறைக்கப்பட்டுள்ளது. இயேசு பிதாவை நோக்கி, “இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைப்பது உமது திருவுளத்துக்குச் சித்தமாயிருந்தது” என்றார். அவர்களுடைய அறிவினால் அதை… 149 நீங்கள் பாருங்கள், பாவச்சேற்றில் அமிழத்தக்கதான காரியங்களை முதன் முதல் ஆரம்பித்தது அறிவேயாகும்: ஏனெனில் சாத்தானை ஏவாள் சந்தித்தபோது, அவள் அறிவைத் தேடினாள், சாத்தானும் அவளுக்கு அதைத் தந்தான். பாருங்கள். ஞானமானது வார்த்தைக்கு முரண்பட்டதாக அமைந்துள்ளது. நாம் ஞானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளவில்லை. ஏற்கனவே கூறப்பட்டுள்ளதில் நாம் விசுவாசம் கொள்ள வேண்டுமென்றுதான் நாம் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறோம். ஆகையால் பாருங்கள்? ஆனால் இன்றைய கல்விமான்களோ வார்த்தைக்கு மெருகேற்றி தங்கள் சொந்த வியாக்கியானத்தை அளிக்கின்றனர். எல்லா காலத்திலும் இதுவே சம்பவிக்கிறது. அதே காரியத்தைத்தான் இன்றைக்கு செய்கின்றனர். அது அதேநிலையில்தான் உள்ளது. ஆனால் இப்பொழுது ஜனங்கள்…

84150 அப்பொழுது ஜனங்கள் காணத் தவறியது போன்று இன்றைக்கும் காணத் தவறுகின்றனர். அதேக் காரியம் அவர்கள் அதே காரியத்தைச் செய்கின்றனர். பாருங்கள்? அவர்கள் அதைத் தவறவிட்டதற்கான காரணம், அதை விசுவாசிக்க முடியாதபடி அவர்கள் அதிக புத்திசாலிகளாயிருந்தனர். புரிகிறதா? இப்பொழுது அந்த செய்தி மிகவும் எளிமையாயிருந்தது. ஆனால் அவர்கள் அதிக புத்திசாலிகளாயிருந்த காரணத்தினால் செய்தியின் எளிமைத் தன்மையை அவர்களால் விசுவாசிக்கக்கூடாமற்போயிற்று. ஓ, என்னே, தேவன் சத்தியத்தை எளிய விதத்தில் அளித்ததன் விளைவாக கலிவிமான்களும், புத்திசாலிகளும் அதைக் காணத் தவறினர். ஏனென்றால் அது மிகவும் எளிமையாய் இருந்தது. ஒரு மகத்தான தேவன் தம்மை எளிமையாக ஆக்கிக் கொள்வதில்தான் தேவனுடைய மகத்துவமே அடங்கியுள்ளது. அதுதான் தேவனுடைய மகத்துவத்தை இன்னும் மகத்தானதாக்குகிறது.

85151 இன்றைக்கு மனிதர்கள் தங்களை மிகப் பெரியவர்களாக கருதி பெரிய பேராயர் என்றும், பண்டிதர், பரிசுத்த போப்பாண்டவர் என்றெல்லாம் பட்டங்களைச் சூடிக்கொள்கின்றனர். இதிலிருந்து அவர்கள் தேவனைச் சார்ந்தவர்களல்ல என்பதை தெரியப்படுத்துகின்றனர். தகுதியற்ற அவர்கள் தங்களைப் பெரிதாகக் கருதி கொள்கின்றனர். ஆனால் மகத்துவம் போருந்திய தேவனோ தம்மை எளிமையாக்கிக் கொள்கிறார். எளிமையில் தான் மகத்துவம் அடங்கியுள்ளது. 152 நாம் ஜெட் விமானங்களை உண்டாக்கிக் கொள்ளலாம், நாம் ஒரு ராக்கெட்டை அனுப்பலாம்…அல்லது ஒரு—ஒரு—ஒரு செயற்கை கிரகத்தை வானத்திற்கு அனுப்பலாம். இன்னும் மற்ற எல்லாக் காரியங்களையும் நாம் செய்யலாம். ஆனால் புல்லின் ஒரு இதழையாவது நம்மால் சிருஷ்டிக்க முடியாது. ஊ ஊம். ஆமென். அதைக் குறித்தென்ன? புல்லின் அமைப்பு யாது என்று ஆலோசித்து அதை உண்டாக்கின தேவனை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, வேறொருவர் ஒரு பாய்ந்து தாக்கும் ஏவுகணை ஆயுதத்தை உண்டாக்கும் முன்பே, நம் ஆயுதம் அங்கு துரிதமாக சென்று தாக்கவேண்டுமென்று எண்ணி ஒன்றை உண்டாக்க நாம் முற்படுகிறோம். பார்த்தீர்களா?

86153 நாம் சபையில் மிகவும் சாமார்த்தியமுள்ளவர்களாயும், புத்திகூர்மையுள்ளவர்களாகவும் மாறி லட்சக்கணக்காக பண மதிப்புள்ள கட்டிடங்களைக் கட்டிக் கொள்கிறோம். நம் கட்டிடம் மெத்தோடிஸ்டுகள் கட்டின கட்டிடத்தைக் காட்டிலும் அல்லது பாப்டிஸ்ட் பிரஸ்பிடேரியன் ஸ்தாபனத்தார் கட்டின கட்டிடத்தைக் காட்டிலும் விலை மதிப்புள்ளதாயிருக்க வேண்டுமென்று நாம் போட்டியிருக்கிறோம். பெந்தேகொஸ்தேயினரும் அந்த நாற்றம் எடுக்கும் போட்டியில் இறங்கிவிட்டனர். நாம் கல்விமான்களாக நம்முடைய சொந்த வழிகளைப் பின்பற்றும் காரணத்தால் நம்மை நாமே தாழ்த்தி ஒரு சிறிய மூலையில் நடத்தப்படும் ஊழியத்தில் தேவன் பிரசன்னராயிருப்பதைக் காணத் தவறிவிடுகிறோம். புரிகிறதா? அது உண்மை அதன் எளிமையின் காரணமாக நாம் இடறிவிடுகிறோம். அவர்கள் எப்பொழுதுமே அதைத் தான் செய்தனர்.

87154 இப்பொழுது அவர்கள்—அவர்கள் அதிக கல்வி அறிவு படைத்ததன் விளைவாக ஒரு எளிய செய்தியை அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. அவர்களுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்குப் போதிய அளவு மெருகேற்றப்பட்டதாய் அமைந்திருக்கவில்லை அக்காலத்தில் அவர்களுக்கிருந்த கல்வித்திட்டங்களுக்கு ஏற்ப சிறந்த ஒன்றாக அது அமைந்திருக்கவில்லை. பார்த்தீர்களா? தேவன் இருக்கிறாரென்றும், அவர் மகத்தானவரென்றும் அவர்கள் படித்திருந்தனர். ஆனால் அவருடைய மகத்துவத்துக்கேற்ற ஒரு மகத்துவத்தை அவர்கள் உண்டாக்கிக்கொள்ள முயன்றனர் ஆனால் மேலே செல்வதற்குரிய வழி எப்பொழுதும் தாழ்வில்தான் அமைந்திருக்கிறது. 155 இப்பொழுது, வடதுருவம் வடக்கிலிருக்கிறதென்றும், தென் துருவம் தெற்கிலிருக்கிறதென்றும் நாம் எங்ஙனம் அறிவோம்? அல்லது வடதுருவம் தென்திசையிலிருக்கின்றதோ அல்லது தென்துருவம் வடதிசையிலுள்ளதோ என்று யாரறிவார்? மேல் எது? கீழ் எது? நாம் வெற்றிடத்தில் (Space) தொங்கிக் கொண்டிருக்கிறோம். “வடதுருவம் மேல் நோக்கியிருக்கிறது” என்று நாம் கூறுகிறோம், அதை நாம் எப்படி அறிவோம்? ஒருக்கால் தென்துருவம் வடதிசையாக இருக்கலாம். பாருங்கள். உங்களுக்குத் தெரியாது. ஆகவே ஞாபகம் கொள்ளுங்கள். இந்த வார்த்தை… 156 அப்படியானால் சகோ. பிரான்ஹாம், “மேலே போவது தாழ்மையில்தான் இருக்கிறதென்று நீங்கள் எப்படிச் செல்லலாம்?” என்று ஒருக்கால் நீங்கள் என்னைக் கேட்கலாம். 157 இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு நான் இதைக் கூறுகிறேன்; “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான். தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்றார். ஆகவே உண்மையாகவே ஒருவன் உயர்த்தப்படுவது அவனுடைய தாழ்மையிலும், தாழ்த்தப்படுவது அவன் தன்னை உயர்த்துவதிலும் சார்ந்திருக்கிறது.

88158 சிக்காகோவிலுள்ள அந்த வயதான பரிசுத்தவான் கூறியதை போல… ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு போதகர் பெந்தேகொஸ்தேயினரிடம் பிரசங்கிக்கச் சென்றிருந்தார். அவர் நுண்ணறிவின் சகல காரியங்களையும் ஒருங்கே கொண்டிருந்தார். அவர் அங்கே சென்று, அந்த பெந்தேகொஸ்தேயினர் அறிந்திராத வார்த்தைகளை உபயோகித்தார். அவர் கூறும் காரியங்கள் அந்த பெந்தேகொஸ்தே மக்களுக்கு புரியும்படியாக எந்த ஒரு அசைவையும் கொண்டு வரவில்லை என்பதை அவர் கண்டார். ஆகவே அவர் தன் நெஞ்சை நிமிர்த்தி, தான் “ஒரு பரிசுத்த பண்டிதர் இன்னார் — இன்னார்” என்பது உங்களுக்குத் தெரியுமா, அங்கே சிக்காகோவில் உள்ள அந்த குறிப்பிட்ட—குறிப்பிட்ட பெரிய வேதாகமப் பள்ளியிலிருந்து வந்தவன் என்று கூறினார். ஆகவே அவர் சற்றும் முற்றும் பார்த்தபோது அந்த பெந்தேகோஸ்தேயினர் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் என்னபதே அவர்கள் புரிந்துகொள்ள முடியாமற் போயிற்று. அவர் அதிகக் கல்வி அறிவு பெற்று புத்திசாலியாக இருந்தார். அவர்கள் அதை அறிந்துகொள்ளவில்லை.

89159 டக் கூட்ஸ் (Tuck Coots) என்பவர் சமீப காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் நின்று தோற்றவர். நான் ஃபோர்ட் அம்மையாரின் அடக்க ஆராதனையில் நிகழ்த்திய பிரசங்கத்தை அவர் கேட்டார். நான் அச்சமயம் உயிர்த்தெழுதலைக் குறித்தும் உயிர்த்தெழுதலின் உத்திரவாதத்தைக் குறித்தும் இவ்விதம் பிரசங்கித்தேன். “சூரியன் உயிர்த்தெழுவது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாய் நான் உயிர்த்தெழுவேன். இலையுதிர் காலத்தில் இலை நிலத்தில் விழுந்து செத்து, மறுபடியும் ஏற்ற சீதோஷ்ண காலத்தில் இலைகள் மரத்தில் தோன்றுவது எவ்வளவு நிச்சயமோ, நாம் உயிர்த்தெழுவதும் அவ்வளவு திண்ணம்”.

90160 நானும் சகோ. நெவிலும் காரில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது டக் என்னிடம் வந்து “பில்லி, உம் செய்தியை நான் மிகவும் பாராட்டுகிறேன்.” என்றார். அப்பொழுது நான், “டக்…” என்றேன். அவர், “நான் உங்களுடைய செய்திகளைப் பாராட்டுகிறேன்” என்றார். அப்பொழுது நான், “டக்கிடம், எனக்கு அதிக கல்வியறிவு கிடையாது” என்றேன். “அதுதான் மிகவும் சிறந்த தகுதி” என்று அவர் பதிலளித்தார். பாருங்கள்? 161 இப்பொழுது, அவர் ஒரு முறை ஒரு மனிதன் பேசுவதைக் கேட்கச் சென்றாராம். அந்த மனிதன் என்னை மன்னிப்பார் என்று நான் யூகிக்கிறேன், ஏனென்றால் நான் தவறாகக் கூறவில்லை, அதாவது ஆட்லாய் ஸ்டீவன்ஸன் அவர்களை நீங்கள் அறிவீர்கள். அவர் ஒருமுறை ஆட்லாய் ஸ்டீவன்ஸன் பேசுவதை பதினைந்து நிமிடங்கள் கேட்டார். திரு. ஸ்டீவன்ஸன் அவர்கள் மிகவும் சிறந்த ஒரு பேச்சாளர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் கல்லூரியில் பயின்றவர் என்று நான் யூகிக்கிறேன். அப்பொழுது டக் அங்கே அமர்ந்து தூங்கி விட்டாராம். அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருந்து பதினைந்து நிமிடத்திற்குள் டக் தூங்கிவிட்டாராம். “கல்லூரி அறிவை ஸ்டீவன்ஸன் பெற்றிருந்ததனால், அவர் பேசினதில் ஒரு சில வார்த்தைகள் கூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறினார். அவை மிகச் சிறந்த அளவில் மெருகேற்றப்பட்டிருந்தது. ஆனால் சகோதரன் பிரான்ஹாம், “உங்கள் ஆராதனைகளில் நான் ஒரு முறையாவது உறங்குவதை நீங்கள் கண்டிருக்க முடியாது” என்று டக் கூறினார். 162 ஆகவே, பாருங்கள், இது அதனுடைய எளிமையாய் உள்ளது. சாதரணமாக ஒன்று, அங்குதான் தேவன் தங்கியிருக்கின்றார்.

91163 அக்காலத்தில் அவர்கள்—அவர்கள் அதிக புத்திசாலிகளாயிருந்தபடியால் தேவன் எளியவிதத்தில் நிகழ்த்திய காரியங்களின் அர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது அவர்களுக்கு மெருகேற்றப்படாத ஒன்றாய் இருந்தது. அது மெருகேற்றப்பட்டு, சிறந்த வர்ணம் தீட்டப்பட்டதாயிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அதை இழந்து போவர். ஆனால் மகத்துவம் வாய்ந்த யேகோவா தம்முடைய வார்த்தையில் மறைந்திருந்தார். அவர் வார்த்தையில் விசுவாசம் கொண்டுள்ளவர்களுக்கு அவர் தம்மை வெளிப்படுத்தி, அவர்களை இரட்சித்து, ஒரு எளிய செய்தி கூறுவதை நிறைவேறச் செய்கிறார். நோவாவின் எளிய செய்தியை தேவன் நிறைவேறச் செய்தார். இப்பொழுது அதை கவனியுங்கள்.

92164 மறுபடியும் மோசேயின் நாட்களில் விடுதலையின் வேறொரு சமயம். கவனியுங்கள். 165 தன் ஜனங்களை விடுவிக்க தேவன் ஒன்றைச் செய்யும்போது அவர் அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார். அது ஒரு எளிய செய்தியாயிருக்கும். முத்திரைகளை உடைக்கும்போது நாம் இதைக் குறித்து அறிந்து கொள்ளலாம். இச்செய்தியை முதலில் பிரசங்கிப்பதன் நோக்கம் அதுவே. முத்திரைகளின் வெளிப்பாடு மிகவும் எளிமையாயிருப்பதால், கல்விமான்கள் அதை இலட்சக்கணக்கான மைல்கள் தூரத்தில் காணத் தவறி விடுகின்றனர். பாருங்கள்? அதற்காக தேவன் என்னை அபிஷேகிக்கிறார் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? பாருங்கள்? ஆனால் அது அவர்கள் மேலே கடந்து சென்று விடுகிறது. தேவனுடைய எளிமையைக் குறித்தும், தேவன் எவ்விதம் தம்மை எளிமையில் மறைத்துக் கொள்கிறார் என்பதைக் குறித்து, ஒரு அஸ்திபாரமிடுதலே, இந்தக் காலையில் ஏற்றதாயிருக்கும் ஏற்ற காரணத்தினால் இச்செய்தியைக் குறித்து நினைத்தேன்.

93166 இன்றைக்கு அணுக்களைப் பிளக்கவும் மற்ற எல்லாக் காரியங்களையும் செய்ய மனிதர் அறிவைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் உயிர் எங்கிருந்து தோன்றுகிறது என்று அவர்களால் கூறமுடியவில்லை. புல் சாதாரணமானதுதான்; தேவன் அதில் மறைந்திருக்கிறார். அவர்கள் சந்திரனுக்கு ஒரு விண்கலத்தை, தொலைநிலை இயக்கமானியையும் (Radar) இன்னும் மற்றவைகளையும் இன்று அனுப்பமுடியும். ஆயினும் புல்லின் உயிரைப் பற்றி அவர்களால் விளக்கம் கூற முடியாது. ஏனெனில் அதற்கு விளக்கம் கூற இயலாது. அது சரி. பாருங்கள்? அது விவரிக்கப்பட முடியாது. அது மிக சாதாரணமாக ஒரு காரியமாயிருப்பதனால், அவர்கள் அதற்கு விளக்கம் கூறாமல் விட்டுவிடுகின்றனர்.

94167 இப்பொழுது கவனியுங்கள். இஸ்ரவேல் புத்திரரை தேவன் தம்முடைய வார்த்தையின்படியே விடுவிக்க சமயம் வந்தபோது அவர் என்ன செய்தார்? அவர் ஒரு எளிய குடும்பத்தைத் தெரிந்து கொண்டார். அவர்களைக் குறித்த குறிப்பேடு எதுவும் நம்மிடம் இல்லை. பாருங்கள், நாம் அறிந்துள்ளதெல்லாம் அது “ஒரு லேவியின் குடும்பம்” என்பது மட்டுமே. பாருங்கள்? அந்த குடும்பத்தின் தலைவனும் அவன் மனைவியும் சேற்றில் பணிபுரிந்து, தங்கள் விரோதிகளுக்குச் செங்கல் அறுத்துக் கொடுத்தனர். அவன் இஸ்ரவேல் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண அடிமை. ஆனால் தேவன் ஒரு விடுவிப்பவனை எழுப்ப அந்த சாதாரண யூத குடும்பத்தைத் தெரிந்து கொண்டார். அவர் ஒரு ராஜ குடும்பத்திலிருந்து அவனைத் தெரிந்து கொள்ளவில்லை; ஒரு மேட்டு குடியிலிருந்து அவனைத் தெரிந்துக் கொள்ளவில்லை. அல்லது ஒரு ஆசாரியனையும் அவர் தெரிந்து கொள்ளவில்லை. ஒரு சாதாரண குடும்பத்தை அவர் தெரிந்து கொண்டார். பார்த்தீர்களா? எளிமை! அதன் பின்னர் அவர் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள், அக்குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தது, மானிடவர்க்கத்தை சேர்ந்த எளிமையான ஒரு மனிதன். அவர் ஒருபோதும்…

95168 இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க அவர் சூரியனை நியமித்திருக்கலாம். அவர் அவர்களை விடுவிக்க அதற்கென்று ஒரு தேவதூதனை நியமித்திருக்கலாம். ஓ, அல்லேலூயா!. தேவன் செய்ய விரும்புகிற எதையும் அவரால் செய்ய முடியும். “நல்லது சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அதை எப்படி அறிவீர்கள்?” 169 ஆனால் தேவன் தம்முடைய திட்டத்திலிருந்து ஒரு போதும் மாறுவது கிடையாது. அதன் காரணமாகத்தான் இன்றைக்கு அது எளிமையாக அமைந்திருத்தல் வேண்டும் என்பதை நாம் அறிகிறோம். புரிகிறதா? அவர் எப்பொழுதும் எளிமையில்தான் கிரியை செய்கிறார். சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கென ஆதியிலே தேவன் சூரியனையோ அல்லது சுவிசேஷத்தை பிரசங்கிக்க தேவதூதனையோ நியமித்திருக்கலாம். ஆனால் அந்த நோக்கத்திற்காக அவர் மனிதரை நியமித்தார். அதுலிருந்து அவர் ஒருபோதும் மாறுவதில்லை. அவர் ஸ்தாபனங்களை ஒருபோதும் நியமனஞ் செய்யவில்லை. அவர் ஒருபோதும் மனித குழுக்களை நியமனஞ் செய்யவில்லை. அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க மனிதரை நியமனஞ்செய்தாரேயன்றி இயந்திரத்தையோ, இயந்திர சம்பந்தமான கருவிகளையோ அல்லது தேவதூதர்களையோ அல்ல. அவர் நியமித்திருந்தது மனிதனையே! 170 இஸ்ரவேல் ஜனங்களுக்கு விடுதலையை அவர் கொண்டுவந்தபோது, மத்தியில் காணப்பட்ட ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண மனிதனை அவர் அனுப்பினார். ஓ, என்னே! அவர் மகத்துவம் பொருந்திய எத்தகைய தேவன்! எளிமையாக தம்மை வெளிப்படுத்துகிறார்.

96171 இப்பொழுது கவனியுங்கள். உலகப்பிரகாரமான ஞானத்தினால் விடுதலையைக் கொண்டுவர முடியாது என்பதைக் காண்பிப்பதற்காகவே, அவன் தோல்வியடையும்படியாக மோசேக்கு அவர் உலக ஞானத்தினால் பயிற்சியளித்தார். நாம் விசுவாசத்தினால் மாத்திரமே விடுவிக்கப்படமுடியும். எகிப்தியர்க்கு ஞானத்தைக் போதிக்கும் அளவிற்கு அவன் கல்வி பயில அவர் அவனை அனுமதித்தார். அவன் கல்வி அறிவு படைத்தவனாயிருந்தான். தங்கள் பெயரையும்கூட எழுதுவதற்குப் போதிய கல்வி அறிவு படைத்திராத அந்த எளிய குடும்பத்துடன் தேவன் இருந்தார். மோசே தன் சிறந்த கல்வி அறிவினால், ஆசிரியர்களுக்கு ஞானத்தை போதிக்கும் அளவிற்கு, கல்வியின் உயிர் நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அவனால் புத்திமான்களுக்கு போதிக்க முடிந்தது. ஆம், தேவன் தம்முடைய தாழ்மையை வெளிப்படுத்தவும், ஞானத்திற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று காண்பிக்கவே அவர் மோசேயை அந்த வழியில் செல்ல அனுமதித்தார். ஆகவே மோசே தன் ஞானத்தில் பயங்கரமான தோல்வி கண்டான். தேவன் தம்முடைய நோக்கத்தினிமித்தம் அவன் தோல்வியடையும்படி அவ்வழியில் அவனை அனுப்பினார். அவன் தோல்வி அடைந்தான். அவன் வீழ்ந்தான்.

97172 ஆகையால், “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல,” என்று காண்பிக்கும்படியாக, எகிப்தின் ஞானத்தினாலும் அல்ல, நம்முடைய பள்ளிகளின் ஞானத்தினாலும் அல்ல; நம்முடைய வேதசாஸ்திர பள்ளிகளின் சக்தியினால் அல்ல, ஸ்தாபனங்களின் எண்ணிக்கையினாலும் அல்ல, கல்வித்திறனால் போதிக்கப்படும் போதகத்தின் வல்லமையினாலும் அல்ல, “என்னுடைய ஆவியினாலே ஆகும்” என்று தேவன் கூறுகிறதை வெளிப்படுத்தினார். முடிவில் மோசேயின் ஞானமெல்லாம் மறைந்துபோனது. அங்கே எரியும் முட்செடியில் அவன் அவரைச் சந்தித்தபோது, அவன் தன் பாதரட்சைகளைக் கழற்றி, தன்டைக்கத்தோடு தன்னைத்தானே தாழ்த்தி, தான் பெற்றிருந்த ஞானத்தை அறவே மறந்து போனான்.

98173 நாம் நம் சுயபுத்தியின் பேரிலோ அல்லது மற்றவர்களின் ஞானத்தின் பேரிலோ சார்ந்திருக்கக்கூடாது என்பதனைக் காண்பிப்பதற்கென தேவன் மோசேக்குக் கல்வி அறிவில் பயிற்சிக் கொடுத்து தேவனுடைய கரமே முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்திக் காண்பிக்க அவனை அவர் விழச் செய்தார். உங்களால் இதை புரிந்துகொள்ள முடிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] எளிமையில் தேவன் அவரை வெளிப்படுத்துவதற்கென்ற அவனை அவ்வாறு விழச்செய்தார். மோசே பார்வோனுக்கு அடுத்தபடியான ஸ்தானம் வசிக்க தேவன் அவனை உயர்த்தினார். அவன் ஒரு தலைசிறந்த தளபதியாக இருந்தான். சுற்றிலுமுள்ள நாடுகளை அவன் ஜெயித்து கைப்பற்றினான் என்று சரித்திரம் கூறுகிறது. தனக்குள்ள இராணுவ, கல்வி திறமையனைத்தோடும்கூட அவன் தேவனுடைய ஊழியத்தை செய்ய முன்வந்தபோது, தேவன் அவனை தலைகீழாக்கும்படிக்கு வனாந்தரத்துக்குக் கொண்டுசென்று, அவனுக்குள்ள எல்லாவற்றையும் களைந்துபோட்டு எளிமையில் அவனுக்கு தரிசனமாகி, ஜனங்களை விடுவிக்க அவனுடைய கையில் ஒரு கம்புடன் மாத்திரம் அவனை அனுப்பினார். 174 மோசே இராணுவப் பயிற்சியினாலும், கல்வியினாலும், அறிவியற் கல்வியினாலும் அதைச் செய்ய முடியவில்லை. இராணுவ சக்தியினாலும் அவனால் அதைச் செய்ய முடியவில்லை. அவர் அவனுக்கு அளித்த வானாந்திரத்திலிருந்த அந்த பழைய கோணலான கம்பை வைத்துக்கொண்டு இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்தான். தேவன் எளிமையில் வெளிப்படுதல். தேவன் மோசேக்குள்ளும் அந்த கம்பிற்குள்ளும் இருந்தார். தேவன் மோசேக்குள் இருந்த காரணத்தால், மோசே அந்த கம்பை தன் கையில் வைத்திருந்தது, தேவன் அதை தமது கையில் வைத்திருந்ததற்குச் சமானமாயிருந்தது. நிச்சயமாக.

99175 கவனியுங்கள், “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும்” என்று வேதம் கூறுகிறது. ஆனால் எளிமையான விசுவாசத்தின் மூலமேயாகும். 176 மோசே தான் ஒரு விடுவிக்கிறவனாயிருப்பான் என்று தன் தாயின் போதகத்தின் மூலம் புரிந்து கொண்டான், ஆகவே தன்னை இராணுவத்தினால் பயிற்றுவித்தான். இராணுவ பலத்தினால் விடுவிக்க முடியும் என்று நினைத்து அவன் தோல்வியுற்றான். பாருங்கள்? அவன் புரிரிந்து கொண்டிருந்தான்; அவன் கல்வி பெற்றிருந்தான், ஆனால் அவைகள் அவனுக்கு உதவவில்லை. ஆகவே அவன் அவைகள் எல்லாவற்றையும் மறந்து எளிமையான, சாதாரணமான காரியமாகிய, தேவனை அவருடைய வார்த்தையின்படி சந்திக்க வேண்டியதாயிருந்து. பின்புதான் அவன் ஜனங்களை விடுவித்தான். ஆம் ஐயா.

100177 தேவன் (எதனால்?) விடுவிக்கிறார், அவருடைய வார்த்தையின் மேலுள்ள விசுவாசத்தினால் விடுவிக்கிறார். எப்பொழுதும் அது அவ்விதமாகவே இருந்து வருகிறது. நமக்கு நேரம் இருக்குமானால் இன்னும் அதிகம் காணலாம். நமக்கு இன்னும் இருபது நிமிடங்கள் உள்ளன. நாம்… 178 நாம் காயீனையும், ஆபேலையும் சற்று பார்ப்போம். காயீன் அழகினால் தேவனைப் பிரியப்படுத்த முயன்றான். 179 அவ்வாறே இன்னும் அழகான உடையணிந்த சபையாரும், அங்கிகள் அணிந்த போதகரும், அங்கிகள் அணிந்த பாடற்குழுவினரும் தேவனைப் பிரியப்படுத்துவதாக மனிதர் எண்ணுகின்றனர். அத்தகைய எண்ணம் எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடிகிறதா? காயீனும் அதே காரியங்களைச் செய்ய முயன்றான். அவன் தேவனுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சந்தேகத்திற்கிடமின்றி அதை அழகுபடுத்தினான். 180 அந்த மனிதன் உத்தமமாய் இருந்தான். அவன் ஆராதித்தான். அவன், “நான் உண்மையாய் இருக்கும்வரை, இதில் வேறு எந்தவித வித்தியாசமுமில்லை” என்று எண்ணினான். ஆனால் அது வித்தியாசமுண்டாக்கினது. நீங்கள் உண்மையாகவே இருந்தும் தவறாக இருக்க முடியும்.

101181 கவனியுங்கள், காயீன் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி அழகான பழங்களையும் புஷ்பங்களையும் அதன்மேல் வைத்து, “உண்மையாகவே, ஒரு மகத்தான பரிசுத்தமுள்ள, அழகுள்ள தேவன், இந்த பலியை அங்கீகரிப்பார்” என்று அவனுக்குள் எண்ணினான். ஆனால், பாருங்கள், அவன் தன் சுய ஞானத்தைக் கொண்டு இவைகளைச் செய்தான். அவன் தன் சுய எண்ணங்களால் இவைகளைச் செய்தான். 182 அது இன்றைக்கும் அவ்விதமாகவே உள்ளது. அவர்—அவன்…அவர்கள் தங்கள் சொந்த ஞானத்தினாலும், தங்கள் கல்வியினாலும், வேத பள்ளியில் கற்றவைகளினாலும், அவர்களுக்குப் புகட்டப்பட்ட வேதசாஸ்திரிகளினாலும் தேவனைப் பிரியப்படுத்த முயல்கின்றனர். 183 “ஆனால் ஆபேலோ விசுவாசத்தினால், வெளிப்பாட்டின் மூலம், காயீனைக் காட்டிலும் மேன்மையான பலியைத் தேவனுக்குச் செலுத்தினான்.” மனிதனுடைய நிர்ணயத்தின்படி பார்த்தால், அவன் செலுத்தின் பலியில் சுத்தம் என்று அழைக்கப்பட ஏதுவுமில்லை. அந்த நபர் ஆட்டுக்குட்டியை கழுத்தில் அருகில் பிடித்து ஒரு திராட்சை கொடியில் அதை கட்டி பலிபீடத்துக்கு இழுத்துச் சென்று இருப்பான். அதைப் பார்க்க அழகாகவே இருந்திருக்க முடியாது. அந்த ஆட்டுக்குட்டியை பலிபீடத்தின் மேல் கிடத்தி, ஒரு கூர்மையான கல்லையெடுத்து அதன் தொண்டைய அறுத்திருப்பான். அப்பொழுது இரத்தம் அதன் மேல் பீறிட்டு வந்து அங்கும் இங்கும் சிதறிக் கொண்டிருக்கும். ஆட்டுக்குட்டியோ கதறிக்கொண்டே செத்திருக்கும். அது பார்ப்பதற்கு ஒரு பயங்கரமான காட்சியாயிருந்திருக்கும், பாருங்கள், ஆயினும் அது சாதாரணமாயிருந்தது. 184 தகப்பனின் இரத்தமும் தாயின் இரத்தமும் சேர்ந்ததால் அவன் பிறந்தானென்று எளிமையாக அறிந்திருந்தான். அவனுடைய தகப்பனின் இரத்தத்தினால் தன்னுடைய தாயினுடைய இரத்தத்தில் பிறந்தான். அது மட்டுமின்றி, இரத்தத்தின் காரணமாகவே மாணிடவர்க்கம் பாவத்தில் விழுந்ததென்றும், ஆகையால் இரத்தம் மாத்திரமே அவர்களை மீட்க முடியுமென்றும் அவன் அறிந்திருந்தான். “எனவே அவனுக்கு இது வெளிப்படுத்தப்பட்டிருந்தபடியால், காயீனைக் காட்டிலும் மேன்மையான பலியை அவன் தேவனுக்குச் செலுத்தினான்.”

102185 ஆகவே சில சகோதரர், அவர்கள் ஆப்பிள்களை மற்றும் பேரிக்காய்களைப் புசித்தனர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்! அன்றொரு நாள் பத்திரிக்கையிலே ஒரு தீவிரவாத தர்க்கத்தைக் கண்டேன். அவர்கள் “ஏவாள் புசித்து ஆப்பிள் பழம் அல்லவென்று அவர்கள் நிரூபித்துவிட்டனர்” என்றனர். அதாவது, “அது ஏப்ரிகாட்” என்று அவர்கள் உரிமை கோருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆகவே, ஓ! அந்த ஆவி எங்கேயிருந்து வருகின்றது என்பதை கவனியுங்கள். 186 மேலும் அவர்கள், “மோசே உண்மையாகவே சிவந்த சமுத்திரத்தைக் கடக்கவில்லையென்றும், அங்கு நாணல் புல் முடிச்சுகள் இருந்ததென்றும், இஸ்ரவேல் ஜனங்களை மோசே அந்நாணல் புல்லின்மேல் நடத்திச்சென்றான் என்றும், சமுத்திர முடிவுரை அங்கே பெரிய நாணற் புதர் இருந்தது. மோசே சமுத்திரத்தை ஒரு நாணற் புதரினூடாகவே கடந்தான், உங்களுக்குத் தெரியுமா, அங்கிருந்த உயரமான நாணற் புற்கள், கொடிகளினூடாகவே அவன் கடந்துவந்தான்” என்கிறார்கள். எவ்வளவு ஏளனமாயுள்ளது! 187 “தேவன் பலத்த கீழ்க்காற்றை எழும்பப் பண்ணினார். அது தன்ணீரை வலது புறம் இடது புறமாக பிரித்ததென்று” வேதம் கூறுகிறது. பாருங்கள்? பாருங்கள்? 188 அவர்கள் தங்கள் யோசனையைக்கொண்டு அது எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என்று ஊகிக்கத் தலைபடுகின்றனர். அதன் காரணமாகவே அவர்கள் எப்பொழுதும் உண்மையைக் காணத் தவறுகின்றனர். அவர்கள் தொடர்ந்து தவறிக் கொண்டேயிருப்பர். நீங்கள் இந்த எல்லாக் காரியங்களையுமே அறிவீர்கள்.

103189 வெளிப்புறம் பக்தியாக காட்சியளிக்கும் மாம்ச சிந்தையுள்ள மனிதனுக்கும் காயீன் அடையாளமாயிருக்கிறான். அத்தகைய மனிதன், மனிதன் காணத்தக்கவாறு அநேக காரியங்களைச் செய்ய விரும்புகிறான். அவன் சபைக்குச் சென்று, அந்த கட்டிடத்திற்கான ஏராளமான காரியங்களைச் செய்வான். ஒரே ஒரு சபை மாத்திரமே உண்டு. நீங்கள் அதில் சேர்வதில்லை. 190 சபைகள் என்று கூறப்படுபவை அனைத்தும் விடுதிகளாம். (Lodges) பாருங்கள்? நீங்கள் மெத்தோடிஸ்ட் விடுதியைச் சேரலாம், அல்லது பாப்டிஸ்ட் விடுதியை, பிரஸ்பிடேரியன் விடுதியை, பெந்தேகோஸ்தே விடுதியைச் சேரலாம். ஆனால் நீங்கள் சபைக்குள் பிறக்கிறீர்கள். ஆம் ஐயா. பாருங்கள்? 191 அவைகள் யாவும் விடுதிகளாகும். அவைகள் சபைகளல்ல. அவைகள் விடுதிகளாயிருக்கின்றன. மெதோடிஸ்ட் “சபை”, அல்லது பெந்தேகோஸ்தே “சபை” என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. இல்லை, அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. இல்லை, அவை யாவும் தவறாகும். புரிகிறதா? அவைகள்…அது உண்மை. அவைகள் ஜனங்கள் சேருகின்ற விடுதிகளாகும். 192 ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்குள் நீங்கள் பிறக்கிறீர்கள். அதுதான் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இயேசு கிறிஸ்துவின் இரகசியமான சரீராமாகிய சபையாகும்.

104193 இப்பொழுது, ஆனால் தேவன் தம்முடைய இரகசியத்தை ஆபேலுக்கு வெளிப்படுத்த பிரியங்கொண்டார், எனவே சிந்தப்பட்ட இரத்தத்தில் அவன் விசுவாசங்கொண்டிருந்தான். ஓ அதை விவரித்துக் கூற எனக்கு சற்று சமயமிருந்தால் நலமாயிருக்கும். 194 பாருங்கள்? ஆனால் புத்திசாலியான காயீன் தனக்கிருந்த ஞானத்தைக் கொண்டு அதைச் செய்தான். “ஓ,” “சகோதரன் பிரான்ஹாமே இப்பொழுதுதான் நீர் கூறினீர். அவன் ஒரு…அவனை ஒரு படித்த மேதாவியாக சித்தரிக்க முயல்கின்றீரா?” என்று நீங்கள் கூறலாம். ஆம், அவன் அப்படித்தான். அவன் கல்விமான்தான். அவன் புத்திசாலியாயிருந்தான். அவனுடைய சந்ததியில் பிறந்த ஒவ்வொருவரையும் கவனியுங்கள். அவனுடைய பிள்ளைகளைப் பாருங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் விஞ்ஞானிகளும், வைத்தியர்களும், புத்திசாலிகளுமாயிருந்தார்கள். 195 ஆனால் சேத்திலிருந்து நோவாவின் ஜலப்பிரளய அழிவு வரையிலான காலம்வரை வழி வந்த சந்ததியைப் பாருங்கள். அவர்கள் எளிமையானவர்களாய் இருந்தனர். அவர்கள் எளிய குடியானவர்களும், விசுவாசிகளுமாயிருந்தனர். 196 இதற்கு மாறாக காயீனின் சந்ததி புத்திக் கூர்மை படைத்தவராயிருந்தனர். அவர்கள் உலோகத்தொழில் செய்து, கட்டிடங்களைக் கட்டினர். அவர்கள் புத்திசாலிகளாய் இருந்தனர். 197 ஆனால் சேத்தின் சந்ததி கூடாரங்களில் வசித்து, ஆடு மேய்த்து, தேவனுடைய வாக்குத்தத்தங்களில் நிலைநின்றனர். பாருங்கள்? பாருங்கள்? அது என்னவாயிருந்தது என்று பார்த்தீர்களா? இப்பொழுது அவர்கள் வம்ச வரலாற்றை தொடர்ந்து பார்த்ததால், அது உண்மை என்று நீங்கள் காணலாம். பாருங்கள்? அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தில் நிலைநிற்கின்றனர். 198 அந்தவிதமான ஜனங்கள் மத்தியிலிருந்துதான் நோவா தெரிந்தெடுக்கப்பட்டான். அந்தவிதமாகவே பவுலும் தன்னுடைய மந்தையிலிருந்து எடுக்கப்பட்டான். புரிகிறதா? அந்தவிதமாகத்தான் ஜான் வெஸ்லியும், மார்டின் லூதரும், இன்னும் மற்றவரும், தெரிந்தெடுக்கப்பட்டனர். தேவனுடைய எளிமையான வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கும்படி, தாழ்மையாய், பாருங்கள், நீங்கள் இன்றைக்கு எந்நிலையில் இருக்கவேண்டுமோ அந்நிலைக்கு நீங்கள் அந்தவிதமாகவே வந்திருக்கிறீர்கள்.

105199 இப்பொழுது கவனியுங்கள். அதனுடன் அடையாளம் கொண்டது தேவனைப் பிரியப்படுத்தியது. இப்பொழுது, அது சத்தியமா இல்லையா என்பதை தேவன் எப்பொழுதும் ரூபகாரப்படுத்துவார். பாருங்கள்? இப்பொழுது அநேக ஜனங்கள் இலட்சக்கணக்கான மைல்கள் தூரத்தில் தேவன் தரித்திருக்கிற ஏதோக் காரியத்திற்குள் தங்களை செயல்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர். அது சரி. ஆனால் ஒருவன் கூறுவதை தேவனே, “அது சரி… அது சரி… அது சரி…” என்று ஆமோதிப்பதை நீங்கள் காணும்போது அதுதான் சத்தியம் என்று நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். 200 பலிபீடத்தின் மேல் காணிக்கைகள் செலுத்தப்பட்ட போது, தேவனைக் குறித்து அவனுடைய அறிவுப்பூர்வமான கருத்தினை அவர் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஆனால் தேவன் ஆபேலைக் கண்டபோது, அவன் சாதாரண விசுவாசம் கொண்டவனாக, அது ஆப்பிள் பழங்கள் அல்லது பூமியின் கனிகள் அல்ல, அது இரத்தம் என்று தேவனிடத்திலிருந்து பெற்ற வெளிப்பாட்டின் மூலம் அறிந்துகொண்டு அதை விசுவாசித்தபோது, தேவன் ஆதாமின் காணிக்கையை அங்கீகரித்து அவன் சரியென்று ரூபகாரப்படுத்தினார். பாருங்கள்?

106201 வியாதிக்காகவும், மற்றவைகளுக்காகவும் நாம் ஜெபிப்பதைக் குறித்து அங்குதான் நாம் நினைத்துப் பார்க்கிறோம். இதையேதான் இயேசுவும், “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்றார். 202 இப்பொழுது நமக்கு இன்னும் இருபது நிமிடங்கள் உள்ளன. நாம் இப்பொழுது சற்று விரைவாகப் பார்ப்போம்.

107203 கவனியுங்கள், எலியாவின் நாட்களில், தேவன் ஒரு சாதாரண நபருக்குள் மறைந்துகொள்ளும்படித் தெரிந்துகொண்டார். இப்பொழுது நீங்கள் அதைக் குறித்து சற்று சிந்தியுங்கள். அதுதான் அவருடைய தெரிந்துகொள்ளுதல். நினைவிருக்கட்டும், அந்த காலத்தில் அவர்கள் ரபீகளையும், ஆசாரியர்களையும் உடையவர்களாயிருந்தனர். அவர்கள் தங்களுடைய நாட்களில் மகத்தான மனிதர்களையும் உடையவர்களாய் இருந்தனர். ஆகாப் அரசனும்கூட ஒரு யூதன்தான். அந்நாளில் மகத்தான மனிதர் அநேகர் தேசத்தில் இருந்தனர். ஆனால் அவனிடம் தேவன் தாமே தம்மை ஒரு சாதாரண மனிதனுக்குள் மறைத்துக் கொண்டாரேயன்றி, ஒரு படித்த மேதைக்குள்ளாக அல்ல, இல்லை, ஒரு உலகப் பிரசித்திபெற்ற மனிதனுக்குள்ளாக அல்ல, ஏதோ ஒரு பெரிய ராணுவ மேதைக்குள் அல்ல அல்லது வேறேதோ ஒன்றிற்குள்ளோ, அல்லது பேர்பிரஸ்தாபம் கொண்டவருக்குள்ளும் அல்ல. அவனுடைய தாய், தகப்பன்மார் யாரென்று கூட நமக்குத் தெரியாது. அவனுடைய வம்ச வரலாற்றைக் குறித்த எந்தக் காரியத்தையுமே நாம் அறியோம். அவனைத் தீர்க்கதரிசியாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அவன் தேவனால் எங்கேயோ வளர்க்கப்பட்ட ஒரு சாதாரன குடியானவன் ஆவான். அவன் வனாந்திரத்தில் தேவனுக்கென்று சஞ்சரித்தான். ஒரு நாள் எங்கிருந்தோ அவன் தோன்றி, அக்காலத்திலுள்ள வழிபாடு முறைமையை எதிர்த்தான் என்பதை மாத்திரமே நாம் அறிவோம். என்னே!

108204 அவனைக் குறித்து ஜனங்கள் என்ன நினைத்தார்கள் என்று தெரியுமா? “அவன் எந்த வேத பள்ளியிலிருந்து வந்தான்? பாருங்கள்? பரிசேயரிடமிருந்தானா அல்ல சதுசேயரிடமிருந்தானா? அல்லது எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவன்?” என்றெல்லாம் அவர்கள் கேட்டிருக்கக்கூடும். அவன் இவர்கள் யாரையும் சார்ந்தவனல்ல. ஆனால் அவன் தவறான எல்லாவற்றையும் கடிந்து கொண்டான், பாருங்கள்? அவன் அங்ஙனம் கடிந்து கொள்ள வேண்டுமென்று தேவன் சித்தம் கொண்டார். 205 ஆனால், கல்வியறிவு இல்லாத ஒரு எளிய மனிதன். அவன் ஒரு தடையாவது பள்ளிக் கூட்டத்திற்கு சென்றானா என்பதைக் குறித்த குறிப்பு இல்லவேயில்லை என்பதை நாம் பார்க்கலாம். அவனைக் குறித்த எந்த காரியமும் நம்மிடம் கிடையாது. ஒரு சாதாரண எளிய மனிதன். ஆனால் அந்த எளிய நபருக்குள் மறைந்துகொள்ள தேவன் பிரியங்கொண்டார். தேவன் அக்காலத்தில், இந்த எளிய மனிதனுக்குள், ஒரு மானிட சரீரத்திற்குள் மறைந்துகொண்டிருந்தார். உங்களால் அதை கிரகித்துக் கொள்ள முடிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 206 தேவன் உலகத்தில் “படிப்பறியாத ஒரு பைத்தியக்காரனுக்குள்” மறைந்திருக்கிறார். எலியா ஒரு மந்திரவாதி என்று அவன் பேரில் குற்றஞ்சாட்டினார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லா தீர்க்கதரிசிகளும் இவ்விதம் குற்றச்சாட்டப்பட்டனர். பாருங்கள். 207 ஆகவே நீங்கள் பாருங்கள். இயேசுவும் அவர்களைப் போன்ற ஒருவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டார். “பெயல்செபூல்; பைத்தியக்காரன்” என்றனர் “ஏன்? நீ பைத்தியம் பிடித்தவன். நீ பிசாசு பிடித்தவன் என்று நாங்கள் அறிவோம். நீர்—நீர் மதிமயங்கியிருக்கிறீர்” என்றனர். பாருங்கள்? 208 அவர் அவர்களிடத்தில், “கடைசி காலத்தில்,…அவ்விதம் கூறுவது தேவ தூஷணமாகக் கருதப்படும்” என்பதாய் கூறினார். இயேசு அவர்களை மன்னித்தார், ஆனால் இந்தக் கடைசி நாட்களில் அது மன்னிக்கப்படாது. அது நித்திய பிரிவினைக்கு ஒருவனை ஆளாக்கும். “இம்மையிலும் மறுமையிலும் ஒரு போதும் அது மன்னிக்கப்படுவதில்லை.”

109209 எலியா ஒரு பைத்தியக்காரனாக எண்ணப்பட்டான். இந்த நவநாகரீக நாட்களைப் போல் அக்காலத்தில் ஸ்திரீகள் தங்கள் தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டிருந்தனர். நாட்டின் முதல் பெண்மணியான யேசபேலைப் போன்று வர்ணந்தீட்டிக் கொண்டிருந்தனர் என்று நான் யூகிக்கிறேன். எல்லா பிரசங்கிமார்களுமே உலகப் பற்றுள்ளவர்களாகி விட்டிருந்தனர். அப்பொழுது என்ன நேர்ந்தது? அப்பொழுது வயோதிக எலியா அங்கு தோன்றி யேசபேல் முதல் எல்லாரையும் கடிந்துகொள்ள ஆரம்பித்தான். 210 “ஏன்,” “நீர் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை எங்களுக்கு போதகன்மார் உண்டு” என்று ஜனங்கள் கூறியிருக்கலாம். 211 அது உண்மைதான், அவர்கள் கேட்கவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் என்னவாயிருந்தாலும் சரி அவன் அவர்களுடைய போதகனாயிருந்தான். அவன் யேசபேலுக்கும் போதனாயிருந்தான். அவன் அதை விரும்பவில்லை. யேசபேலுக்கு வேறுவிதமான போதகர் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவன் தேவனால் அனுப்பப்பட்டவனாயிருந்தான். புரிகின்றதா? அவன் அவளுக்காக தேவனால் அனுப்பப்பட்ட போதகனாயிருந்தான். அவள் அவனை வெறுத்தாள். ஆயினும் அவன் அதேவிதமாக போதகனாகவே இருந்தான். கவனியுங்கள்.

110212 ஆகவே எளியா தன்னைத் தாழ்த்தி தேவன் கூறினவற்றில் நிலைநின்ற காரணத்தால் தேவன் அவன் மேல் பிரியம் கொண்டு எலியாவுக்குள்ளிருந்த அந்த ஆவியை மூன்று முறை திரும்பவும் அளிப்பதாக வாக்குத்தத்தம் செய்தார். பாருங்கள்? ஆமென்! அவர் அதை நிறைவேற்றினார். ஆமென். நிச்சயமாகவே, அவர் செய்தார். நிச்சயமாகவே. அது வருமென்று அவர் வாக்குத்தத்தம் செய்தார். அது அவனுக்கும் பின் வந்த எலிசாவின் மேலும், அதன் பின்பு யோவான் ஸ்நானன் மேலும் வந்தது. மல்கியா 4ம் அதிகாரத்தின்படி இங்கே மீண்டும் இந்த கடைசி நாட்களில் எலியாவின் ஆவி மறுபடியும் காணப்படும். பாருங்கள்? 213 காட்டில் வசித்த அந்த எளிய படிப்பறியாத மனிதனின் மேலுள்ள அந்த ஆவியில் தேவன் பிரியம் கொண்டார். அது அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிந்தது. எலியாவே இதைச் செய் என்று அவர் கூறினால் எலியா உடனே செய்வான் ஆகவே தேவனே அவனுக்குள் எளிமையில் மறைந்திருந்தார். 214 அவர்கள் எல்லாரும் அவனை, “அந்தக் கிழப் பைத்தியக்காரனோடு, அவனிடம் தொடர்பு எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்றார்கள்.

111215 ஆனால் ஒரு நாள் அவன்—அவன் வயது சென்றவனாகி, அவனுடைய தலை வழக்கை விழந்து, அவனுடைய—அவனுடைய மீசை தொங்கி நரைத்து தலையிலுள்ள சிறிது முடியும் அவனுடைய தோள் வரை தொங்கி, கைகள் மெலிந்து தசைகள் தளர்ந்து அந்தவிதமாகி கண்கள் ஆகாயத்தை நோக்கினவாறு, கையில் ஒரு கோணலான கம்பையும் பிடித்து சமாரியாவுக்குச் செல்லும் வழியில் அவன் நடந்து வந்தான். அப்பொழுது அவனது தோற்றம் வசீகரமாயிருந்திருக்காது. ஆனால் அவன், அந்நாட்களுக்கான “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதை உடையவனாயிருந்தான். அவன் சொல்ல வேண்டியதை திக்கி திக்கிச் சொல்லவில்லை. அவன் ஆகாபை நோக்கி “இப்பொழுது மகத்தான ஆகாபே” என்று கூறவில்லை. அவன் ஆகாபின் முன் நடந்து சென்று, “நான் கட்டளையிட்டாலன்றி வானத்திலிருந்து பனியும் கூட விழாது” என்று தைரியமாகச் சொன்னான். அல்லேலூயா! பாருங்கள்? தேவன் அவனுடைய எளிமையைக் கௌரவித்து நிறைவேற்றினார்.

112216 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அது எளிமையான வழியில் இருந்தபோது, மற்றவர் அனைவரும் அவனுக்கு விரோதமாக எழும்பினர், அவனை ஒழிக்க எண்ணினர். எல்லா ஊழியர் சங்கங்களும் அவனை அழித்து ஒழித்துவிட அவனுக்கு விரோதமாக எழும்பினது உண்மையாகும். அவன் எளிமையில் இருந்தபோதிலும், அவர்கள் அவனுடைய கூட்டங்களுக்கும் அவனுடைய மற்ற யாவற்றிற்கும் ஒத்துழைக்கவில்லை. தேவன் அவனுக்குள் மறைந்திருந்தாலும், அவனைப் பைத்தியக்காரனென்று அவர்கள் எண்ணினர். 217 ஆனால் அவனுக்குள் விதைக்கப்பட்ட வித்து முதிர்வுபெற சமயமானபோது, தேவன் வானத்திலிருந்து அக்கினியைஅ அனுப்பி தம்மை வெளிப்படுத்தி அந்தப் பலியை அங்கீகரித்தார். தேவன் எளிமையில் மறைந்து அதன்பின் தம்மை மறுபடியும் வெளிப்படுத்தினார். பாருங்கள்? நிச்சயமாக. ஆம் அப்படி செய்வது தேவனுக்குப் பிரியமாயிருந்து எப்பொழுதும் அதே விதத்தில் அவர் கிரியை செய்தார். ஆம் ஐயா. இப்பொழுது இவைகளை அவர்—அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்று நாம் காண்கிறோம்.

113218 ஆனால் இன்றைக்கு அநேகரிலுள்ள தவறு என்னவெனில் அவர்கள் ஸ்தாபன கொள்கைளைப் பின்பற்றி. கல்வி அறிவுக்கு முக்கியத்துவம் செலுத்துவதால், தேவன் அப்படிப்பட்டவர்களை உபயோகிக்க முடியாமல் போகின்றது. ஒருவனுக்குத் தேவன் தொடக்கத்தில் ஒரு நல்ல ஊழியத்தைக் கொடுக்கலாம். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முதல் காரியம், அந்த மனிதன் மற்றவர்கள் சொல்வதை ஆமோதித்து அதையே போதித்து இவ்விதமாக ஒரு ஸ்தாபனத்தில் சிக்கிக் கொண்டால் தேவன் அவருடைய கரத்தை அவனிடமிருந்து எடுத்து அவனைத் தனியே விட்டு விடுவார். பாருங்கள்? பாருங்கள்?

114219 அதன் பின்னர் அவர் மற்றொரு மனிதனை முயற்சிப்பார், அதைச் செய்யக்கூடிய வேறொருவனைக் கண்டறிய முயற்சிப்பார். புரிகிறதா? தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு திவ்விய வெளிப்பாட்டைப் பெற்று அதனின்று வழுவாத ஒருவனை தேவன் தெரிந்தெடுப்பார். அவன் தேவனுடைய வார்த்தையில் நிலைநிற்பான். அந்தவிதமாகவே அவர் அதைச் செய்கிறார். அவர் அந்தவிதமாகவே அதை எப்பொழுதும் செய்துள்ளார். 220 ஆகையால் மனிதன் மிக்க கல்வித் திறனும் புத்திசாலியுமுள்ளவனாகும்பொழுது அவன் தன் சொந்த வியாக்கியானத்தை கொடுக்க முயற்சிக்கிறான். சொந்த வியாக்கியானத்தை அளிக்கும்போது…உதாரணமாக அவர்கள், “பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இப்போதைக்குரியதல்ல” என்கிறார்கள். அவர்கள், “ஓ, அது வேறொரு நாளுக்கானது” என்று கூறுகிறார்கள். அவர்கள், “அது வேறொரு நாளுக்கானது. ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன், பரிசுத்த ஆவியானவர் பெந்தேகோஸ்தே நாளில் வந்தவிதமாய் இப்போது வருவதில்லை. நாம் விசுவாசிக்கும்போதே பரிசுத்த ஆவியியைப் பெறுகிறோம்” என்றெல்லாம் கூறுகின்றனர். அந்தவிதமான எல்லாக் காரியங்களுமே. நீங்கள் பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைக் குறித்துப் பேசுவோம். வேதம் அதை சரியென்றே அந்தவிதமாகவே போதிக்கிறது, ஆனால் நீங்களோ, “வேதப்பள்ளிகள் இவ்விதம் கூறுகின்றன என்றும், இன்னார்—இன்னார் இவ்விதம் கூறுகிறார்!” என்று அவர்கள் கூறுகின்றனர். அது தான் தவறான செயலுக்கு ஒப்புரவாகுதலாகும். பாருங்கள்? அவ்விதமான ஒரு நபரை தேவன் உபயோகிக்க முடியாது. புரிகிறதா?

115221 ஒரு மனிதன் தேசத்தினுடாக இந்தவிதமாக எல்லா நாளும் துன்புறுத்தப்பட்டு பரிகசிக்கப்பட அவர் ஒருக்கால் சம்மதிக்கலாம். ஆனால் உண்மையான பலப்பரீட்சை வரும்போது, தேவன் எளிமையில் நின்று அவனுடைய ஊழியத்தை ரூபகாரப்படுத்துகிறார்.

116222 ஒரு பூவானது மேலே வருவது போன்றுள்ளது. வித்தானது நிலத்தில் விழுந்து மரித்து எல்லாம் முடிந்து போனது போல தோன்றும். அந்தச் சிறிய வித்தை தோண்டி எடுத்தால், அது அழுகிப் போய், குப்பைக் கூளம் போல காட்சி அளிக்கிறது. ஆனால் அந்த சிறிய வித்திலிருந்து ஜீவன் புறப்பட்டு வேறொரு பூவை முளைக்கச் செய்கிறது. 223 தேவன் எளிமையில் வெளிப்படுதல். அவர் எப்பொழுதும் அதையே செய்கிறார். மேன்மைக்குச் செல்லும் வழி எப்பொழுதும் தாழ்மையில்தானுள்ளது. உங்களைத் தாழ்த்துங்கள். என்னிடம் இது இருக்கிறது, அது இருக்கிறது என்று நீங்கள் ஒருபோதும் கூற வேண்டாம். உங்களிடம் ஒன்றுமில்லை. நினைவிருக்கட்டும், தேவ கிருபை மாத்திரமே உங்களிடம் இருக்குமானால், அதற்காக நன்றியுள்ளவர்களாய் இருங்கள். அதற்காக தாழ்மையாயிருங்கள். பாருங்கள், உங்களை எப்பொழுதும் தாழ்த்திக்கொண்டேயிருங்கள்.

117224 இப்பொழுது நேரமாகின்றதினாலே நான் உங்களை அதிக நேரம் வைத்திருந்து உங்களைக் களைப்படையச்செய்ய எனக்கு விருப்பமில்லை, பாருங்கள். நமக்கு இந்த வாரமுழுவதும் இன்னும் நீண்ட நேரமுண்டு.

118225 இப்பொழுது மக்கள் அதிக புத்திசாலிகளும் கல்விமான்களுமாயிருக்கிறார்கள் என்று நாம் கண்டோம். 226 வேறொரு சாராரைக் குறித்து நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். அவர்கள் பாதையின் மற்றொரு எல்லைக்குச் சென்று எல்லைக்கு மீறிய மத வைராக்கியம் பொருந்தினவர்களாயுய் காணப்படுகின்றனர். இப்பொழுது அவ்வகையினர் நம்மிடம் உண்டு என்று நாம் அறிவோம். பாருங்கள்? அவர்கள் மற்றொரு பக்கம் செல்கிறவர்கள். 227 அங்குதான் இந்த “பிரதரன்” [Brethren] குழுவினரிடம் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு, அவர்கள் அண்மையில் ஒளியின் வழியிலிருந்து பிரிந்துசென்றனர். அவர்கள் செய்யப்படுகின்ற அற்புதங்களைக் காணமுடியாமல், தங்களை ஒரு குழுவாக்கிக் கொண்டு, கனடாவில் ஒன்றுகூடி, ஒரு குழுவினை அழைத்து தங்களுக்கென்று அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும் நியமித்துக்கொண்டனர். அது விழுந்துபோனது. பார்த்தீர்களா? அது எப்பொழுதும் அப்படியே சம்பவிக்கும். புரிகிறதா? அவர்கள்… அவர்கள் பாதையின் மறு எல்லைக்குச் செல்லுளவிற்கு மற்றவர்களைக் கடிந்து கொள்வார்கள். பார்த்தீர்களா?

119228 ஆகையால் ஒரு சாரார் உயரிய கல்வி அறிவு படைத்தவர்களாய், குளிர்ந்துபோனவர்களாய், அலட்சியமுள்ளவர்களாய் சத்தியத்தை மறுதலிக்கின்றனர். மற்றொரு சாரர் உணர்ச்சி வசப்பட்டவர்களாய் பக்தி வைராக்கியம் பொருந்தினவர்களாய் தங்களைக் கருதிக் கொண்டு வார்த்தையை மறுதலிக்கின்றனர்.

120229 ஆனால் உண்மையான சபையோ பாதையின் நடுவில் சரியாக தரித்திருக்கிறது. இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களேயானால், அது—அது—அது தேவன் என்னைக் கூறியுள்ளார் என்ற வேதாகம அறிவைப் பெற்றிருக்கிறது. அது—அது தன்னுடைய இருதயத்தில் அனலாயிருக்கும்படி ஆவிக்குரியதாயிருக்கிறது. அது பாதையில் உள்ளது. அது அந்த வழியாய் இருக்கும் என்று ஏசாயாக் கூறினான். அவன், “அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்…” என்றான். 230 நசரின் [Nasarene] சபையிலுள்ள அருமையான பரிசுத்தமுள்ள விலையேறப்பெற்ற நண்பர்களை கவனிப்போம். அது தேவனால் தொடங்கப்பட்ட ஒரு சிறு அசைவாயிருந்தது. ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அன்னிய பாஷை பேசுதலை தேவன் சபையில் கொண்டு வந்தபோது அவர்கள் மத வைராக்கியம் பொருந்தினவர்களாய் சுய உணர்ச்சியற்றவர்களாய் அது பிசாசினால் உண்டானது என்று கூறினர். அவர்களுக்கு என்ன சம்பவித்தது என்று நீங்கள் பாருங்கள்? பாருங்கள்? பாருங்கள்? அவர்கள், “உங்களைவிட நாங்கள் பரிசுத்தவான்கள்” என்றனர். விதையானது விதைக்கப்பட்டும் அங்கேயே மரித்துப் போகின்றது என்பதையே நாம் இக்காரியங்களிலிருந்து காண்கிறோம். பாருங்கள்? இது மற்றொரு பக்கமாகும்.

121231 இப்பொழுது, ஒரு பக்கம் மத வைராக்கியம் கொண்டவர்களாக மாறிவிடுகின்றனர். மற்றொரு பக்கத்திலோ குளிர்ந்து விரைத்துப் போனவர்களாய் மாறிவிடுகின்றனர். இப்பொழுது ஏசாயா, “அங்கு பெரும்பாதை இருக்கும்” என்றான். 232 நசரீன் குழுவினரும், பண்டைய பழைய பரிசுத்த குழுவினரும், வழக்கமாக, “ஆசீர்வதிக்கப்பட்ட பழைய பெரும்பாதை! தேவனுக்கு மகிமை! நாங்கள் பழைய பெரும் பாதையில் நடந்து செல்கிறோம்” என்று கூறுவதுண்டு. ஆனால் ஏசாயா கூறினது சரியாக அதுவல்லவென்பது நினைவிருக்கட்டும். 233 அவன் “அங்கு ஒரு பெரும் பாதையும் ஒரு வழியும் இருக்கும்” என்றான். அந்த பெரும்பாதை “பரிசுத்த பெரும் பாதை” என்று அழைக்கப்படவில்லை. “பரிசுத்த வழி” என்று அழைக்கப்படுகிறது.

122234 பரிசுத்த பெரும்பாதையில் செல்வதாக எண்ணிக் கொள்பவர்கள் தங்களைப் பரிசுத்தமாக்கிக் கொள்ள முயல்கின்றனர். நீங்கள் அவ்விதம் செய்யும்பொழுது, நான் உங்களுக்கு முன்பு கூறியிருப்பதுபோல… ஒரு பருந்து புறாவின் சிறகுகளை இணைத்துக்கொண்டு, அது புறாவாகி விட்டது என்று எண்ணுவதற்கு இது சமானம். அது என்ன செய்தாலும், அது பருந்தின் சுபாவத்தைத்தான் பெற்றிருக்கும். பாருங்கள்? அவர், அது…ஒரு காகம் ஒரு புறா அல்லது ஒரு மயிலின் சிறகைப் பொருத்திக்கொண்டு, “நான் எவ்வளவு அழகான பறவை பார்” என்று சொல்வதற்கு அது ஒத்திருக்கும். பாருங்கள், இவையெல்லாம் செயற்கை முறையில் உண்டாக்கப்பட்டவை. 235 ஒரு மயில், தனக்கு மயில் இறகுகள் உண்டாகுமோ இல்லையோ என்று கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை. அவ்வாறே ஒரு புறாவும் தனக்கு புறாவின் இறகுகள் உண்டாகுமோ இல்லையோ என்று கவலைப்படவேண்டிய அவசியமில்லை, அதற்கு புறாவின் தன்மை உள்ளனவா, புறாவின் சிறகுகள் அதில் தோன்றும். 236 பாருங்கள், பரிசுத்த குழுவினர், “பெண்கள் நீண்ட முடியினை வளர்த்து, நீண்ட கைகள் உள்ள ஆடைகள், நீண்ட பாவாடைகள் அணிய வேண்டும் என்றும், கலியாண மோதிரமோ அல்லது ஆபரணங்கள் எதுவும் அணியக்கூடாது” என்றும் சொல்கின்றனர். ஆகவே அது சுயநீதி கொண்ட பரிசுத்தமாக அமைகிறது. பாருங்கள்? பாருங்கள்? அது—அது—அது செயற்கையாக அவர்கள் உண்டாக்கிக் கொண்ட பரிசுத்தம். ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையோ எதையும் சுயநீதியாக உற்பத்தி செய்ய வேண்டுவதில்லை…ஸ்தாபனத்திற்கு என்ன சம்பவித்துள்ளது என்பதைப் பாருங்கள். பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தவர் இப்போது முடியைக் கத்தரித்துக் கொண்டனர். அவர்கள் கிட்டத்தட்ட மோதிரங்களையும் மற்றவைகளையும் அணிந்துகொள்கின்றனர். ஆனால் அநேக வருடங்களுக்கு முன்னால் இருந்த பெந்தேகோஸ்தேக்கள், “நாங்கள் தான் சபை! நாங்கள் தான் சபை” என்று பறைசாற்றினர்.

123237 சபை என்பது கிறிஸ்துவின் சரீரமாயுள்ளது. அது தேவனுடைய ராஜ்யத்தில் பிறந்த தனிப்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்த கூட்டமாகும். அது உட்புறத்திலிருந்து வெளியே வருகிறது. அது எவ்வித முயற்சியுமின்றி ஜீவிக்கப்படுகிறதாகும்.

124238 நீங்கள் ஒரு ஒரு செம்மறியாட்டைப்பார்த்து நீ ஆட்டு உரோமத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதில்லை. செம்மறியாடும் உரோமத்தை உற்பத்தி செய்ய வேண்டியதில்லை. அவ்வாறே செம்மறியாடும், “என் எஜமான் ஆட்டு உரோமத்தை இந்த வருடத்தில் உற்பத்தி செய்யச் சொல்கிறார். ஆகையால் நான் அதற்கென்று பாடுபடவேண்டும்” என்றும் கூறுவதில்லை. அது செய்யவேண்டிய ஒரே காரியம் அது செம்மறியாடாகவே இருக்க வேண்டும். அது சரி. அப்பொழுது தானாகவே ஆட்டு உரோமம் அதன்மேல் தோன்றும்…அது தானாய்த் தோன்றும். அது தானாய் உண்டாகும். அது அதனை தானாய்க் கொடுக்கும். ஏனென்றால் … 239 நாம் செயற்கையாக கனிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படவில்லை. நாம் கனியை, பாருங்கள், கனிகளை பிறப்பிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். புரிகிறதா? நாம் கனிகளைக் கொடுக்க வேண்டும். நீ தேவனுடைய வார்த்தையுடன் தேவனுடைய கனிமரமாக இருக்கும் வரைவில், தேவனுடைய வார்த்தை தன்னை ரூபகாரப்படுத்தும். தேவனுடைய வார்த்தை அதனுக்குள் இருக்கும்வரை, அதில் கனிகள் காணப்படும். “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்று இயேசு கூறினார். பாருங்கள்? நீங்கள் அதை உற்பத்தி செய்ய வேண்டியதில்லை. நீங்கள் அதற்கு அரும்பாடுபட வேண்டிய அவசியமில்லை. அது உண்மையாக அங்கேயே உள்ளது. அது தொடர்ந்து செல்கின்றது. 240 நமக்கு இன்னும் சில நிமிடங்களே விடப்பட்டுள்ளன, சீக்கிரமாக இவைகளைக் கண்டு, பின்னர் நாம் முடித்துவிடுவோம்.

125241 இப்பொழுது மற்ற சாரர் எந்த அளவு மூட வைராக்கியமாயிருக்க வேண்டுமோ அந்தளவு போய்விடுகின்றனர். இப்பொழுது அவர்கள் மற்றொரு பக்கம் செல்கின்றனர். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு மேலும் கீழும் குத்தித்து, அன்னிய பாஷை பேசி, அல்லது—அல்லது—அல்லது தீர்க்கதரிசனம் உரைத்து, அதாவது—அதாவது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மையன்று. 242 இயேசு “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்,” என்றார், அப்பொழுது அவர் “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை” என்பார். பாருங்கள்? அது அதுவல்ல. ஆகையால் நண்பனே அது அதுவல்ல. 243 அதன் காரணமாகத்தான்…அன்னிய பாஷை பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளமா? நானும் அன்னிய பாஷை பேசுதலில் விசுவாசம் கொண்டுள்ளேன். ஆனால் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் ஒரே அடையாளம் அன்னிய பாஷை பேசுதல் என்பதை நான் நம்புவதில்லை. இல்லை ஐயா. ஆவியின் கனிகள்தான் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளமாகும். பாருங்கள்? ஆம். இப்பொழுது, நீங்கள் பாருங்கள், இதனால்தான் எனக்கும் பெந்தேகோஸ்தே சகோதரருக்குமிடையில் வேறுபாடு காணப்படுகின்றது. அவர்கள், “ஒரு மனிதன் அன்னிய பாஷை பேசினால் அவன் பரிசுத்த ஆவியைப் பெற்று விட்டான்” என்கிறனர். நான் வேறுபடுகிறேன். அது அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டான் என்பதற்கு அடையாளமே இல்லை. புரிகிறதா? 244 ஜனங்கள் மனித மண்டை ஓட்டிலிருந்து இரத்தத்தைக் குடித்து, அவர்களால் முடிந்ததளவு வேகமாக அன்னியபாஷை பேசி, பிசாசைக் கூப்பிடுவதை நான் கண்டிருக்கிறேன்.

126245 அமெரிக்க இந்தியர்கள், அரிசோனாவில் மழை பெய்யும்போது, பாம்புகளை தங்கள் மேல் சுற்றிக்கொண்டு, கைகளைத் தூக்கி நடனமாடுவதையும் நான் கண்டிருக்கிறேன். அப்பொழுது மந்திரவாதி நீண்ட ஈட்டியால் தன்னைக் குத்திக் கொண்டு, ஒரு பென்சிலைத் தரையில் வைக்க, அது தானாகவே அன்னிய பாஷையில் எழுதி அதன் அர்த்தத்தை விவரிப்பதை நான் கண்டிருக்கிறேன். பாருங்கள்? ஆகையால் என்னிடத்தில் அதை சொல்லாதீர்கள். நான் அதற்கான அதிக அனுபவம் வாய்ந்தவன். புரிகிறதா? 246 ஆகையால், ஆவியின் கனி என்பது… இயேசு, “அவர்களுடைய கனிகளினால்”, அந்நிய பாஷை பேசுவதனால் அல்ல, அல்லது உணர்ச்சிவசப்படுவதினால்ல, “ஆனால் அவர்களுடைய கனிகளால் அவர்களை அறிவீர்கள்” என்று கூறினார். புரிகிறதா? அதுதான் ஆவியின் கனியாயுள்ளது. அது தேவன் தம்மை எளிமையில், அதேவிதமாக வெளிப்படுத்துகிறார். வார்த்தையோடு காத்திருக்கிற மனிதனுக்கு அதைக் குறித்த ஏதோ ஒரு காரியம் உண்டு. ஒவ்வொரு முறையும் அவன் வார்த்தையைக் காணும்போது, மற்ற ஜனங்கள் என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல், அவன் “ஆமென்” என்று சொல்லி அதை ஆமோதிப்பான். அவன் அதை விசுவாசிக்கிறான். அது சரி. பாருங்கள்?

127247 ஆனால் நாம் இதுவரை பார்த்தமட்டில் சாத்தான் பக்தி வைராக்கியம் கொண்டதாக எண்ணும் மக்களில் மத்தியில் குடிகொண்டிருக்கிறான். அது சாத்தானின் வேலையாகும். சாத்தான் தன் அலுவலை நன்கு செய்யும் ஒருவனாயிருக்கிறான். அவன் அவர்கள் மத்தியில் குடிகொண்டு, அவர்கள் மேலும் கீழும் குதிக்க முடிந்தால், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதாக எண்ணும்படிச் செய்கிறான். அப்படி நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற பிறகு, நீங்கள் உங்களுடைய அண்டை வீட்டாரை வெறுக்க முடியுமா? முடியாதே. பார்த்தீர்களா?…அந்நிய பாஷையில் பேசுதல் மற்றும் அதுபோன்ற காரியங்களையெல்லாம் அற்புதமாய்தான் உள்ளது. 248 பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் உண்மையான அன்னிய பாஷையை நீங்கள் பேசி அதே சமயத்தில் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமலும் இருக்கலாம் என்பது ஞாபகமிருக்கட்டும். வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினால் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. நான் சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்”. 1கொரிந்தியர் 13. பார்த்தீர்களா? ஆகையால் நீங்கள் அதைச் செய்கிறதில்லை, பாருங்கள்.

128249 மெதோடிஸ்ட் ஸ்தாபனத்தினர். “நாங்கள் சத்தமிட்டபோது, நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டோம்” என்கின்றனர். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நசரின் ஸ்தாபனத்தார், “அவர்கள் பரிசுத்தமாக வாழ்ந்தபோது அதைப் பெற்றுக் கொண்டனர்” என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. பெந்தேகோஸ்தே, “நாங்கள் அன்னியபாஷை பேசும் போது அதைப் பெற்றுக் கொண்டோம்” என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அப்பொழுது அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. பாருங்கள்? பாருங்கள்? 250 தேவன் இவ்வித உணர்ச்சிகளின் மூலமாய் தம்மை வெளிப்படுத்துவதில்லை. இல்லை…அத்துடன் உணர்ச்சிகள் உண்டென்பது உண்மைத்தான். உங்களால் அதைக் காண முடிகின்றதா? அவர் யாவரும் காணத்தக்கவாறு மிகவும் எளிமையில் வெளிப்படுகிறார். ஆனால் நீங்கள்—நீங்கள் உங்கள் சொந்த சிந்தனையையும், உங்களுடைய சொந்த கருத்துக்களையும் புகுத்த முயற்சிக்காதிருந்தால் காணலாம். அது தேவன். 251 இப்பொழுது, சிலர் முடபக்தி வைராக்கியம் கொண்ட குழுவாகின்றனர். இங்கே இந்தப் பக்கம் குளிர்ந்துபோன சம்பிரதாய முறைகள் கொண்ட கூட்டமும், மறுபடியும் இங்கே மூடபக்தி வைராக்கியம் கொண்ட கூட்டமும் உள்ளன. ஆனால் இங்கே, இந்த இரு பக்கங்களிலிருந்து அழைக்கப்பட்ட மணவாட்டியோ நேராகச் செல்கின்றான். அது சரி, தேவன் தம்முடைய வார்த்தையோடு செல்லுகிற காரணத்தால், அவர் அதை ரூபகாரப்படுத்துகிறார். 252 இப்பொழுது,…ஓ, நான் இங்கு நிறைய குறித்து வைத்துள்ளபடியால், நான் இதில் சிலவற்றை விட்டுவிட்டு தாண்டிச் செல்ல வேண்டியதாயுள்ளது. நான்—நான்…என்னுடைய நேரமும் கடந்து விட்டது. எனவே என்னால் முடிந்தளவு துரிதமாக இப்பொழுது முடிக்கவுள்ளேன்.

129253 ஏதேனின் காலமுதற்கொண்டு, ஒரு மேசியா தோன்றுவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு வந்துள்ளது. 254 தேவன் எளிமையில் மறைந்திருந்தல் என்ற செய்தியை என்னால் முடிந்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக முடிப்பதற்காக, நான் இங்கு எழுதி வைத்துள்ள என்னுடைய வேத வசனங்களையும், குறிப்புகள் சிலவற்றைக் கடந்து செல்ல விரும்புகிறேன். இப்பொழுது நான் வேகமாகப் பேசுவேன், ஆனால், அதேசமயத்தில் நீங்கள் கிரகித்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பாருங்கள்?

130255 ஏதேனின் கால முதற்கொண்டு, ஒரு மேசியா தோன்றுவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு வந்துள்ளது. அவர் எவ்விதமான ஒரு நபராய் இருப்பாரென்று முன்னுரைக்கப்பட்டது. இதைக் குறித்து நம்மால் அதிக நேரம் பேசமுடியும். நீங்கள் வேதாகமத்தையும், அவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்பதையும், எப்படிப்பட்ட ஒரு நபராய் இருப்பார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். மோசேயும், “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்,” என்று சொல்லியிருக்கிறான். மேசியா ஒரு தீர்க்கதரிசியாயிருப்பாரென்றும், அவர் தம்முடன் எத்தகைய ஊழியத்தை உடையவராயிருப்பாரென்றும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர் என்ன செய்யப் போகிறாரென்று எல்லாத் தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதைக் குறித்து அடையாளங்களாக உரைத்திருந்தனர். அது அவர்களில் சிலருடைய தலைக்கு மேலே கடந்து சென்றது. மற்றவர்களுக்கோ தலைக்கு கிழே சென்றது. பாருங்கள்? பாருங்கள்? அது சிலர் தலைக்கு மேலும், மற்றோருக்கு கீழாகாவும் சென்றது. பாருங்கள்? 256 அதன் விளைவாக மேசியா காட்சியில் தோன்றியபோது அவர் யாருக்காக அனுப்பப்பட்டாரோ, அவர்கள் தங்கள் சொந்த வியாக்கியானத்தின் மூலம் அவர் எவ்விதமாக இருக்கவேண்டுமென்று கற்பனைச் செய்து பார்த்து வியாக்கியானம் செய்யத் தொடங்கினார்.

131257 ஆனால் வேதம் ஒருபோதும் மாறுவதில்லை, வேதம் எப்பொழுதும் அதேவிதமாகவே இருக்கிறது. ஆகவேதான் நான் வேதம் இவ்விதம் உரைக்கிறது என்று சொல்லி அதில் நிலை கொள்கிறேன். “வேதம் தனிப்பட்ட வியாக்கியானத்திற்குரியதல்ல”. 258 ஆனால் மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தார் போன்றவர் தங்களுக்கு விருப்பமான வழிகளில் அதற்கு அர்த்தமுண்டாக்கிக் கொண்டு, “அதன் அர்த்தம் அதுவல்ல, இதுதான் ” என்கின்றனர். 259 ஆனால் வேதம் சொன்னபடியே சரியாக அர்த்தம் அமைந்துள்ளது. யாராவது, “அது எப்படி?” என்று கேட்கலாம். அது எப்படி என்று எனக்குத் தெரியாது. அதைக் கூறியது நானல்ல. தேவன் அதைக் குறித்து கருத்துள்ளவராயிருக்கிறார். அதைக் கூறினது நானல்ல, அவரே, எனவே அவர் தம்முடைய சொந்த வார்த்தையைக் குறித்து கருத்துள்ளவராயிருப்பார்.

132260 ஆனால் இப்பொழுது…இந்த மேசியா தோன்றுவாரென்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. அவர் எவ்விதம் தோன்றுவாரென்றும் அவர் வரும்போது என்ன செய்வாரென்றும் தீர்க்கதரிசிகள் சரியாகக் கூறினார். ஆனால் ஜனங்கள் தங்கள் மத்தியில் அதைக் குறித்த தங்கள் சொந்த தனிப்பட்ட வியாக்கியானத்தைக் கொண்டிருந்தனர். அவர் வந்தபோது, முழு ஸ்தாபன சபைகளும் இடறும்படிக்கு அவர் அப்பேர்ப்பட்ட எளிமையான விதத்தில் இருந்தார். அது சரிதானே? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அங்கே அந்த மனிதர் போதிக்கப்பட்டிருந்ததோ… 261 ஒருவன் ஒரு பிரத்தியேக சந்ததியில் பிறந்தாலன்றி அவன் போதகனாகவோ அல்லது ஆசாரியனாகவோ இருக்க முடியாது. அவன் தான் லேவி கோத்திரத்தான். அவனுடைய பெரிய—பெரிய—பெரிய—பெரிய—பெரிய—பெரிய—முப்பாட்டனாரும் ஒரு ஆசாரியனாயிருந்து, அந்த வார்த்தையில் இருந்துகொண்டு ஊழியம் செய்து ஆலயத்தில் இரவு பகலும் தங்கியிருந்தார். 262 அந்த ஊழியம் தற்போதைய கத்தோலிக்க குரு அல்லது குறிப்பிட்ட சபைகளில் அடுத்த தலைமுறையிலிருந்து வருபவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவது போன்று, “என்னுடைய பெரிய—பெரிய முப்பாட்டனார் ஒரு மெதோடிஸ்டு பேராயர் என்னுடைய பாட்டனாரும் ஒரு பேராயராயிருந்தார்” என்று கூறிக்கொள்வது போன்றே. புரிகிறதா?

133263 லேவி கோத்திரத்தார் ஆசாரிய ஊழியம் நடத்திக் கொண்டு வரும்போது, அவர்கள் தங்கள் சொந்த வழியில் சொந்த முறைகளை உருவாக்கிக் கொண்டனர். அவர்களுடைய பிள்ளைகள் தங்களுடைய தகப்பனார் கற்பித்திருந்ததை அந்த வழியில் ஏற்றுக் கொண்டிருந்தனர். தகப்பன் உண்மையான வழியைப் பின்பற்றாதவனாயிருந்தால் மகனும் அவ்விதமே இருப்பான். இங்ஙனம் தங்களுக்கென்று அவர்கள் ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிகொண்டு முடிவில் பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தை அவர்களுக்கு அளிக்க முயற்சித்தபோது, அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள முடியாமற் போயிற்று. 264 அதுவேதான் இன்றைக்கும் சம்பவிக்கிறது நான் கொடூரமாக பொருட்படுத்திப் பேசவிரும்பவில்லை. ஆனால் நான் கூறுவது சரியே. இன்றைக்கும் அதேவிதமாகத்தான் இருக்கின்றது. அவர்கள் வேறு வழியைப் பின்பற்றி அதிக சிக்கலை உண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் தங்களுடைய…போதிப்பது… “தேவனுக்குப் பேரப்பிள்ளைகள் கிடையாது” என்று கூறப்பட்டிருப்பது போன்றே, அது உங்களுக்குத் தெரியுமா? தேவனுக்கு, மகன்களும் மகள்களும் தான் உள்ளனர். ஆனால் பேரன்மார்களோ, பேத்திமார்களோ கிடையாது. ஒவ்வொரு மனிதனும் அதே கிரயத்தைச் செலுத்தி அதே வழியில் வர வேண்டும். உங்களுடைய பிதாக்கள் செய்தது போன்றே, நீங்களும் செய்ய வேண்டும்.

134265 இப்பொழுது, மேசியா மிகவும் சாதாரணமானவராக இருந்தார். நாலாயிரம் வருடங்களாக ஒவ்வொருவரும் தீர்க்கதரிசியும் அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தனர். தாவீதும் அவரைக் குறித்துப் பாடினான். அவர் வந்தபோது, அவர் என்ன செய்ய வேண்டும், அவர் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஜனங்கள் தங்கள் சொந்த கருத்துக்களை மனதில் எழுப்பி வைத்திருந்தனர். அவர் வருவதைக் குறித்து வரைபடங்கள் வரைந்து நன்றாக விளக்கப்பட்டிருந்தது. அவரோ உண்மையான எளிய முறையில் தோன்றினபோது, அவர்களது வேத சாஸ்திரத்தை நாசமாக்கினது. பாருங்கள். அவர்கள் அதை அறியாதிருந்தனர். 266 அவரோ வார்த்தையின்படியே வந்தார். மேசியா ஒரு பிரத்தியேக முறையில் தோன்றுவார் என்று தீர்க்கதரிசிகள் மூலமாக தேவன் பேசினார் என்பதை நீங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? இன்னும் ஒரு மணி நேரம் நமக்கிருந்தால் இதைக் குறித்து நாம் தெளிவாக விளக்கலாம். ஆனால் சமயமில்லாதது மிகவும் வருந்தத்தக்கது, பாருங்கள்? அது எவ்வாறு இருந்தது என்பதை நம்மில் ஏறக்குறைய எல்லோரும் அறிந்துள்ளோம். “பெத்லகேமே, நீ யூதாவிலே சிறியதாயிருந்தும்…” என்றும் தேவன் கூறி, அவர் எங்கு பிறப்பார் என்றும், அவர் என்ன செய்வாரென்றெல்லாம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. பாருங்கள்.

135267 அதே சமயத்தில் அவர் மிகவும் எளிமையாயிருந்தார். அந்த காலத்து கல்விமான்கள் குழப்பமுற்று அரெவரைக் கண்டுகொள்ளத் தவறினர். ஆனால் இயேசு வார்த்தைக்கு முரண்பட்ட விதத்தில் தோன்றவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் வார்த்தையின்படியே வந்தார். ஆனால் அவர்களுடைய வியாக்கியானத்திற்கு முரண்பாடாய் வந்தார். பாருங்கள்? தம்மைக் குறித்த அவர்களுடைய மதசம்பந்தமான பயிற்சிக்கு எதிரான காரியங்களை அவர் போதித்தார். 268 இப்பொழுது உதாரணமாக, “மேசியா வரும்போது, அவர் நேராக ஆலயத்துக்கு வந்து ‘காய்பாவே’ அல்லது பிரதான ஆசாரியரே, ‘நான் வந்துவிட்டேன்’ என்று சொல்வார் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும், அல்லது ஒரு கோடி தேவதூதர்கள் அவரை வணங்கிய வண்ணம் அவர் தோன்றுவார் என்று எண்ணியிருக்கலாம். தேவன் “பூமியிலுள்ள ஜனங்களோ, நீங்கள் ஒரு—ஒரு மகத்தான சபை, நீங்கள் என் ஜனம். இயந்திரக் கைப்பிடியைச் சுழற்றி வானத்தின் தாழ்வாரங்களைக் கீழே இறக்கப் போகிறேன். இன்று காலை மேசியாவை உங்களுக்கு அனுப்புவேன். ‘அவர் உங்கள் முற்றத்தில் நேராக இறங்குவார்’ என்று சொல்வார். அப்பொழுது சூழ்ந்திருக்கும் ஜனங்கள், “பாண்டித்தியப் பெற்ற இன்னார்—இன்னார், பாண்டித்தியப் பெற்ற இன்னார்—இன்னாராகிய நீங்கள் எல்லோரும் முன்னால் நின்று இயேசுவுக்கு முதலில் வாழ்த்துக் கூறுங்கள், நீங்கள் பாருங்கள்” என்று கூறுவார் என்று நினைத்திருக்கலாம்.

136269 ஒருக்கால் இன்றைக்கும் அவர்கள் அவ்வாறு நினைக்க வழியுண்டு. இப்பொழுது, இது ஒரு சிறு…நான் கூறுவது கொடூரமாகக் காணப்படலாம். ஆனால் நான்…நான் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 270 “நாங்கள் நினைத்தவண்ணமே அது நடக்கவேண்டும்; நாங்கள் நினைத்ததற்கு மாறாக அதுவாறு நடந்தால் அது சரியல்ல; அது அந்திக் கிறிஸ்துவாகும். புரிகிறதா? அவர்கள் நினைத்தவிதமாக அது வரவில்லையென்றால், அப்பொழுது அது அந்திகிறிஸ்து, நீங்கள் பாருங்கள், அது கிறிஸ்துவாய் இருக்காது என்று எண்ணுகின்றனர். பின்னர் ஏறக்குறைய ஒரு கோடி தேவதூதர்கள் தங்களுடைய மேளத்தை அடித்துக் கொண்டு வணங்குவார்கள். அப்பொழுது மரித்தவரும் இவர்களும் சாலொமோன் தேவாலயம் கட்டப்பட்ட இடத்தில் இறங்கி பரிசுத்தவான்களும் (Saints) புத்திமான்களும் (Sages) மரித்த இடமாகிய இந்த புனித ஸ்தலத்தில் சுற்றி அங்குமிங்குமாக உலாவுவார்கள் என்று கற்பனை செய்கின்றனர்.”

137271 இயேசு அவர்களை நோக்கி “ஆம் மாயக்காரரே! பிசாசின் பிள்ளைகளே! உங்கள் பிதாக்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்று அவர்கள் அவர்களுக்கு எழுப்பின கல்லறைகளை நீங்கள் சிங்காரிக்கிறீர்கள்” என்றார். அது சரி. அது உண்மை. பாருங்கள்? “எத்தனை நீதிமான்களையும் தீர்க்கதரிசிகளையும் உங்களிடத்தில் அனுப்பினேன்! அவர்கள் எல்லோரையும் நீங்கள் கொன்று போட்டீர்கள்” என்றார். பாருங்கள்? நீதிமான்களென்று தேவன் அழைத்தவர்களை அவர்கள் “பைத்தியக்காரரென்றும், மூடரென்றும்” அழைக்கின்றனர். ஆம். இவ்விதமாக அது அவ்வழியில் வரும் என்று அவர்கள் எண்ணினர். 272 ஒரு மாட்டுத் தொழுவத்தில் இயேசு, ஒரு—ஒரு கன்னி வயிற்றில் பிளந்தார். அவருடைய வளர்ப்புத் தந்தை ஒரு சாதாரண தச்சனாவார். அவருடைய தாயார் யாதுமறியாத ஒரு—ஒரு சிறுபெண்: பாருங்கள் அவள் பிராதான ஆசாரியனின் மகளல்ல. நாசேரத் என்னும் ஒரு இழிவான ஊரில் வாழ்ந்த ஒரு சிறு பெண்ணின் மூலம் அவர் தோன்றினார். அவர் வளர்ப்புத் தகப்பனார் மனைவியை இழந்த ஒருவர் (Widower). அவர் மனைவி ஏற்கனவே மரித்துப் போனார். அவருக்கு முதல் மனைவியின் மூலம் சில பிள்ளைகள் இருந்தனர். யோசேப்பு, இந்த சிறுபெண் இவரோடு நிச்சயக்கப்பட்டிருந்தாள். அப்பொழுது இயேசு துவக்கத்தில் பிறந்தபோதே ஒரு அவப்பெயருடன் பிறந்தார். அவர் முறைதவறிப் பிறந்தவர் என்று அவர்கள் கூறினர். ஓ, என்னே!

138273 அவருடைய தோற்றம் அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களை அதிகமாகப் பாதித்தது. பாருங்கள்? அவர்களுடைய கல்வி அறிவு அதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவர்களுடைய வேத வியாக்கியானத்தினால் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அது கர்த்தர் உரைக்கிறவிதமாகவே இருந்தது. ஓ, என்னே! 274 அதை நினைக்கும்போதே, அதே சம்பவம் இப்பொழுது மறுபடியும் நிகழ்வதைக் காணும்போது எனக்கு நெருக்கம் உண்டாகிறது. தேவனால் மாற முடியாது. 275 ஏற்கனவே பன்னிரெண்டு மணி ஆகிவிட்டது. நான் நிறுத்தி விடவா…அல்லது தொடர்ந்து பிரசங்கிக்கவா? [சபையோர், “நிறுத்த வேண்டாம். தொடர்ந்து பிரசங்கியுங்கள்” என்கின்றனர்.—ஆசி.] உங்களுக்கு நன்றி. சற்று நேரம் நீங்கள் உட்கார்ந்து கேட்கலாம் என்று நினைக்கிறேன், பாருங்கள். [தொடர்ந்து பிரசங்கித்துக்கொண்டிருங்கள்.] வரவிருக்கும் செய்திக்கு ஆதாரமாக இருக்கும் இந்த ஒன்றை இப்பொழுது நான் இங்கே கூறிக் கொண்டிருக்கிறேன். பாருங்கள். கூடுமானால் இன்னும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் நான் உங்களை விட்டு விடுகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

139276 இப்பொழுது கவனியுங்கள். அது மிகவும் எளிமையாக இருந்தது. எனவே அவர்களது குறி தவறினது. ஆனால் தேவனுடைய இலக்கை, வார்த்தையை அது சரியாக அடித்தது. பாருங்கள்? தேவன் சொன்னவிதமாகவே அவர் தோன்றினார். ஆனால் அதைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த வியாக்கியானம் தவறாயிருந்தது. அவ்வாறே மோசேயின் காலத்தில் விடுவிப்பவனைப் பற்றிய ஜனங்களின் வியாக்கியானமும் தவறாயிருந்தது. நோவாவின் காலத்தில் மனிதர் கொண்டிருந்த வியாக்கியானமும் தவறாயிருந்தது. பாருங்கள்? ஆனால், தேவன் தம்முடைய வார்த்தையின்படியே தோன்றுகிறார். 277 அப்பொழுது இயேசு வந்து, அவர்களது கருத்துக்களுக்கு முரண்பாடானவைகளை அவர்—அவர் போதித்தார். ஆகையால் அவர்கள், “நீ மேசியாவானால் இதை—இதை செய்” என்றனர். நீங்கள் பாருங்கள். “நீ மேசியாவானால் சிலுவையிலிருந்து இறங்கி வந்து, இப்பொழுதே அதை எங்களுக்கு காண்பியும்” என்றும் சொன்னார்கள். பாருங்கள்? ஆனால் தேவன் ஜனங்களுக்கு வேடிக்கை காட்டுவதில்லை. அவர் தமக்கு பிரியமுள்ளதும், சரியானதுமான காரியத்தையேச் செய்கிறார்.

140278 இம்மகத்தான தேவன் தூதர்களின் மகத்தான வறவேற்புடனே நிச்சயமாக வரவேண்டும் என்று அவர்கள் எண்ணினர். ஆனால் அவரோ ஒரு மாட்டுத் தொழுவத்தில் வந்தார். சர்வ வல்லமையுள்ள தேவன், பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த மகத்தான யேகோவா, தம் சொந்த பிள்ளைக்கு மாட்டுச்சானம் குவிவிந்துள்ள மாட்டுத் தொழுவத்தை காட்டிலும் ஒரு நல்ல இடத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைப்பது அவர்களுடைய சொந்த மெருகேற்றப்பட்ட வேதசாஸ்திரத்திற்கும், ஒரு சாதாரண மனிதனுக்கும் கேலித்தனமாகவேக் காணப்பட்டது. அது எப்படி இருக்கக் கூடும்…பாருங்கள்? 279 அது என்னவாயிருந்தது? அது தான் எளிமையில் தேவன். அது தான் அவரை மகத்தானவராக ஆக்கினது. பாருங்கள், வேதசாஸ்திர கல்வி அறிவினால் அதனை சகிக்க முடியவில்லை, பாருங்கள் அதனை பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் தேவன் மகத்தானவராயிருப்பதால் அவர் தம்மை அவ்வளவாகத் தாழ்த்த முடிந்தது. தன்னுடைய சொந்த குழந்தைக்கு உடுத்துவிக்க அவருக்கு ஆடைகள் கூட இருக்கவில்லை. அதை சிந்தித்துப் பாருங்கள். சத்திரத்தில் அவருக்கு இடம் இல்லாதிருந்தது. மலையின் ஒரு பாகத்தில் ஒரு—ஒரு குகை போன்ற ஒரு சிறிய ஸ்தலத்தில், மாட்டுத் தொழுவத்தில் வைக்கோல் படுக்கையின் மேல் தேவனுடைய குமாரன் அவதரித்தார். ஓ…அங்கிருந்ததிலிருந்து அது அதிக வித்தியாசமுள்ளதாயிருந்தது.

141280 அவருடைய தாயாக அவள் இருக்க வேண்டுமென்று நியமிக்கப்பட்டிருந்தாள். ஓ, அவளுடைய விவாக நியமனம் செய்வதற்கு அநேக மாதங்கள் முன்னரே அவள் ஒரு தாயாக இருந்தாள் என்றறியப்பட்டது…அல்லது விவாகம் செய்வதற்கு முன்னரே, பாருங்கள்? அவள் தாயாக இருக்க வேண்டியவளாயிருந்தாள். ஆகவே ஜனங்கள் அதைக் கண்டனர், அவ்வழியாகத் தான் அது வர வேண்டும் என்று அறிந்திருந்தனர். மரியாளும் என்ன நேரிடுகிறது என்பதை தன் சொந்த இருதயத்தில் அறிந்திருந்தாள். 281 யோசேப்புக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் கர்த்தருடைய தூதன் இரவில் அவனிடம் வந்து “யோசேப்பே, நீ தாவீதின் குமாரன். உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது” என்றான். அத்துடன் அந்த காரியம் முடிவு பெற்றது. யோசேப்பு தேவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் தேவன் அவனுடன் பேச முடிந்தது.

142282 ஆனால் இன்றைக்கு நாம் வேததத்துவ போர்வைகளை நம்மைச் சுற்றிப் போர்த்திக் கொண்டிருப்பதால் அந்த குழுவைச் சார்ந்தவர் தவிர வேறு யாரும் நம்மிடம் பேச முடியாமற் போகிறது. நான் யாரையும் கொடூரமாகக் கடிந்து கொள்ள விரும்பவில்லை. கவனியுங்கள் அதனோடு அதை விட்டு விடுகிறேன். கவனியுங்கள், ஆனால் நான் சொல்ல வந்த காரியத்தை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். கவனியுங்கள்.

143283 மாட்டுத் தொழுவம் மெருகேற்றப்பட்டிருந்த அவர்களுக்கும் பரிகாசமாக இருந்தது. அவர் ஒரு நாள் கூட பள்ளிக் கூடம் சென்றதாக நம்மிடம் குறிப்பு எதுவுமில்லை, அதேசமயத்தில் ஒரு சாதாரண பையன் தன் பன்னிரண்டாம் வயதிலேயே தன் போதகத்தினால் ஆலயத்திலிருந்த ஆசாரியர்களைப் பிரமிக்க வைத்தான். ஓ என்னே! அது என்ன? அது தான் தேவன் தம்மை மறைத்திருத்தல் …?… நான் இப்பொழுது பக்தி வசப்படுகிறேன். தேவன் ஒரு மாட்டுத் தொழுவத்தில் தம்மை மறைத்துக் கொண்டிருக்கிறார். தேவன் தம்மை ஒரு சிறிய குழந்தைக்குள் மறைத்துக் கொண்டிருக்கிறார். புரிகிறதா? கவனியுங்கள். இருந்தபோதிலும், சிறிது காலம் கழிந்து, அது காட்சியில் வரவிருக்கின்றது. பாருங்கள். அவர் காட்சியில் வந்தாக வேண்டும். 284 அவர் சிறு பையனாக தெருவில் விளையாடச் சென்றிருக்கும்போது, மற்ற பிள்ளைகளின் பெற்றோர் அவர்களிடம், “அந்த பையனுடன் விளையாடாதே, அவனுடன் எந்த சாவகாசமும் வேண்டாம். அவனுடைய தாயார் ஒரு வேசி. பாருங்கள்? தகப்பனுக்கும் தாய்க்கும் முறைப்படி, அவர்களுக்கு விவாகமாகுமுன்பு, அவள் தாயாகி, அவளுக்கு அவன் பிறந்தான். எனவே அவனோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று சந்தேகத்திடமின்றி கூறியிருப்பார்கள்.

144285 மரியாள் என்ன நினைத்தாள்! ஆனால் வெளிப்புறத்தில் மற்றவர்கள் என்னை நினைத்தாலும் மரியாள் கவலைகொள்ளவில்லை. அவள் இவையெல்லாவற்றையும் இருதயத்தில் வைத்து சிந்தனை பண்ணினாள். அவர்களிருவரும் அதை தங்கள் இருதயங்களில் மறைத்து வைத்தார்கள். அவர்கள் அதை அறிந்திருந்தனர். அதற்கு விரோதமாக அவர்களால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. 286 சில சமயங்களில் தேவன் தம் இருதயத்திற்குகந்த மனிதனை நோக்கி, “நீ ஒன்றும் பேசாதே. அதை குறித்து ஒன்றும் சொல்லாதே” என்று கூறுவது வழக்கம். 287 நான் நடத்தும் கூட்டங்களில் ஜனங்கள் என்னிடம் வந்து, “நீர் கிறிஸ்துவின் ஊழியக்காரனானதால், இது சம்பவிக்கப்போவதை நீர் முன்கூட்டியே அறிந்திருக்கவேண்டும்” என்று சொல்வார்கள். 288 ஆம், இந்தக் காரியம் சம்பவிக்குமென்று நான் முன்னமே அறிவேன். ஆனால் “அதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லக் கூடாது” என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கும்போது, நான் என்ன செய்ய முடியும்?

145289 அன்றொரு நாள் நான் சிலரை அழைத்துச் சென்று, புத்தகத்திலுள்ளதைக் காண்பித்து, “பல வருடங்களுக்கு முன்பாக பேசியது” என்று நான் கூறினேன். அதற்கு அவர்கள், “எங்களால் அதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை” என்றனர். 290 அப்பொழுது நான், “நீங்கள் அதைக் காண்கிறீர்களா?” என்றேன். அது அப்பொழுது சம்பவிக்கும் என்று தேதியிடப்பட்டு, புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அநேக ஜனங்கள் அதை அங்கே புத்தகத்தில் கண்டிருந்தனர். நான் அவர்களிடம் காண்பித்து, “இது இவ்விதமாக நிறைவேறும், அது அவ்விதம் நிறைவேறும்,” என்று கூறினேன். 291 அவர்கள், “நல்லது, இதைக் குறித்து நீங்கள் ஏன் ஒன்றும் கூறவில்லை?” என்று கேட்பார்கள். காரண…அது அவ்விதம்தான் இருக்க வேண்டும். பாருங்கள்?

146292 யோசேப்பு வித்தியாசமான முறையில் அதை அறிந்திருந்தான். அந்தக் குழந்தை யாரைச் சேர்ந்தது என்று அறிந்திருந்தான். மரியாளும் அவ்விதமே அறிந்திருந்தாள். இயேசு தம் பிதா யாரென்று அறிந்திருந்தார். அவர் என்ன சொன்னார் தெரியுமா? “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டும்” என்றார். மரத்தை வெட்டி கதவுகளை செய்வதல்ல, ஆனால் தம்முடைய பிதாவுக்கடுத்தவைகளில். ஆமென். அவர் தன்னுடய தாயினிடத்தில், “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டிய நேரமென்று புரிந்து கொள்ள முடியவில்லையா?” என்றார்.

147293 இப்பொழுது, அவர்களோ, “இது கிறுக்குத்தனமான சிறு பிள்ளை…” என்றே எண்ணினர். முறை தவறிப் பிறந்த எந்த ஒரு குழந்தையும் ஒரு வினோதமாய் கருதப்படுவதுண்டு. அதுதான். பாருங்கள். ஆனால் தேவன் தம்மை மறைத்துக்கொள்ளுதல். கவனியுங்கள். ஆனால் “அசுத்தமாயும் இழிகேடாகவும், முறைகேடானதுமாக” உலகம் கருதியிருந்த ஒன்றில் தேவன் மறைந்திருந்தார். 294 அழுகி செத்துப்போன வித்தினின்று ஜீவனைப் பிறப்பிக்க தேவன் தம்மை மறைத்துக்கொள்கிறார், பாருங்கள். புரிகிறதா? நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.] 295 தேவன் ஒரு எளிய சலவைத் தொழில் செய்யும் பெண்ணுக்குள் மறைந்து கிடக்கக்கூடும் அல்லது ஆகாரத்தைத் தன் அக்குளில் வைத்து தன் மனைவியையும் பிள்ளைகளையும் முத்தம் செய்து காலையில் வேலைக்குச் செல்லும் ஒரு சாதாரண மனிதனுக்குள் அவர் மறைந்து கிடந்து, பிராதான பேராயர் அறிந்து கொள்ள முடியாத ஒன்றை அவர் செய்யக் கூடும். புரிகிறதா? அவர் எக்காளம் ஊதி, ஒருவரை அனுப்புவதில்லை. அவர் எல்லாவற்றிலும் மகிமையை மாத்திரம் பெற்றுக்கொள்கிறார். அவ்வளவுதான். பேதையர் அதைக் கண்டு சந்தோஷமடைகின்றனர். பாருங்கள்?

148296 தேவன் தம்மைத்தாமே ஒரு எளிய குழந்தைக்குள் மறைத்துக் கொண்டிருந்தார். ஒரு எளிய சாதாரண குடும்பத்தில் மறைந்திருந்தார். அது தேவன். ஆனால் அக்காலத்து குருமார்கள், மகத்தான மனிதர்கள், சிந்தனையாளர், மேதைகள், அவர்கள் அனைவரும், ஏரோதுராஜா, ரோம அரசர்கள் யாரும் அதைக் கண்டுகொள்ள இயலவில்லை. தேவன் எளிமையில் மறைந்திருத்தல்.

149297 இப்பொழுது வேகமாகப் பார்ப்போம். ஏசாயா 40-ம் அதிகாரத்தில் யோவான் ஸ்நானகன். வேண்டுமானால் நாம் மல்கியா 3ம் அதிகாரத்தையும் வாசிக்கலாம். ஆம், நீங்கள் அதைக் குறித்துக்கொள்ள விரும்பினால், குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அறிந்துள்ளபடி ஏசாயா 40-ம் அதிகாரம். எல்லாம்…உள்ளபடி…சமாதானத்தைக் குறித்து பேசுகிற …உங்களுக்கு நேரமிருந்தால் நான்—நான்—நான் அதை வேதத்தினின்று படித்தால் நலமாயிருக்கும். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஒரு நிமிடம் நாம் அதைச் செய்வோம். ஏசாயாவின் புத்தகம் 40-ம் அதிகாரத்திற்கு நாம் திருப்பி, இங்கே வாசித்து, இதைக் குறித்து இப்பொழுது அவன் என்ன கூறுகிறான் என்று பார்ப்போம். இங்கே கவனியுங்கள், “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்” இப்பொழுது ஞாபங்கொள்ளுங்கள், இது எழுநூற்றுபன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு…இங்குள்ள தலைப்பைக் கவனியுங்கள் …இயேசு பிறப்பதற்கு எழுநூற்றுபன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசி அவரைக் குறித்து இங்கே சொல்லுகிறான்.

150“என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்கிறார். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும், குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்,…வனாந்திரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.

151298 ஓ! என்னே, என்னே! அவன் எப்படிப்பட்ட மனிதனாக இருக்க வேண்டும். பாருங்கள்? இப்பொழுது மல்கியாவின் புத்தகத்திற்கு வருவோம். பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகம்; தீர்க்கதரிசியின் புத்தகத்தில் கடைசி புத்தகம். இப்பொழுது, மல்கியாவில், இங்கே கவனியுங்கள். மல்கியா முடிவு கால சம்பவங்களைக் காண்கிறான். எனவே நீங்கள் நிச்சயமாக இதை மறந்து போக வேண்டாம். மல்கியா 3-ம் அதிகாரம். இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்: அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 299 இன்னமும் யோவானைக் குறித்தேப் பேசுகிறார், “வழியை ஆயத்தப்படுத்தும்படி, என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்”. இயேசு அதைக் குறித்து மத்தேயு 11ம் அதிகாரம்10-ல் பேசினார். நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளக் கூடுமானால், “இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்…என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.

152300 பார்த்தீர்களா? அது சரி. எப்படியாய் இவை யாவும் உரைக்கப்பட்டன! இப்பொழுது, மேசியாவுக்கு முன்பு ஒரு முன்னோடியாகத் தூதன் வரவேண்டுமென்று எழுநூறு வருடங்களுக்கு முன்னால் உரைக்கப்பட்டது. ஆனால் அவன் எளிமையில் தோன்றினபோதோ, அவர்கள் அவனைக் கண்டுகொள்ளத் தவறினர். அவர்கள் அவனைக் கண்டு கொள்ளத் தவறினர். 301 இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள். அவன் ஒரு ஆசாரியனின் மகன். நல்லது, அவன் வேத பள்ளிக்குச் சென்று அவன் தகப்பனின் உத்தியோகத்தை மேற்கொள்ளாதது தவறான காரியமாக என்ன வகையுண்டு. ஆனால் அவனுக்கு அளிக்கப்பட்ட ஊழியம் மிகவும் முக்கியமானது. ஒன்பதாம் வயதில் அவன் வனாந்தரத்துக்குச் சென்றான். பல வருடங்களுக்குப் பின்னர் வனாந்தரத்தினின்று புறப்பட்டு ஜனங்களிடையே பிரசங்கித்தான். அவர்கள் அதை புரிந்துக் கொள்ளத் தவறினர். அவன் எளிமையில் வெளிப்பட்ட காரணத்தால் நாகரிகம் பொருந்திய அவர்களுடைய கல்வியறிவு அவனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்த மனிதன் தோன்றும் போது… 302 உண்மையாகவே பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படும், சகல மலையும், குன்றுகளும் தாழ்த்தப்படும், கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். தாவீதும், இதனைக் கண்டு, “மலைகள் ஆட்டுக்கடாக்களைப் போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப் போலவும் துள்ளினது” என்றான். [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை பலமுறை கொட்டுகிறார்—ஆசி.]

153303 என்ன? அது சம்பவித்ததா? கல்வி அறிவு படைத்திராத ஒரு மீசைக்காரக் கிழவன் போர்த்தினவனாக யூதாவின் வனாந்தரத்திலிருந்து தடுமாறி நடந்துவந்து, “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்றும், விரியன் பாம்புக்குட்டிகளே, நீங்கள் ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்” என்று பிரசங்கித்தான், என்னே! “நல்லது, அங்கே இருப்பது அவன் அல்ல. அது அவனல்ல என்று நாம் அறிந்திருக்கிறோம்”. 304 ஆனால் அது அவன்தான்! பாருங்கள்? அவன் பாதையை செவ்வைப்படுத்திக் கொண்டிருந்தான். பாருங்கள்? அப்பொழுதுதான் கரடுமுரடானவை சமமாக்கப்பட்டன. உயர்ந்த மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டன. “ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள். தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்” என்றான். உயர்ந்த ஸ்தலங்கள் தாழ்த்தப்பட்டன. ஓ, என்னே! அதுதான். ஆம். வித்தியாசத்தை உங்களால் காண முடிகிறதா? சம்பவிக்க வேண்டியது அதுதான் என்று அவர் கூறியிருந்தார்.

154305 ஓ, என்னே, அவன் அவர்கள் ஸ்தாபனத்திற்கு வருவான் என்று அவர்கள் எண்ணினார்கள். அப்பொழுது அவனை அவர்கள் ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்தனர். ஆனால்…அவனோ ஒரு எளிய முறையில் தோன்றினான். அதே சமயத்தில் வேதவசன வியாக்கியானத்தினால் உயர்ந்த ஸ்தலங்களை தாழ்த்திக்கொண்டிருந்தான். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் அவைகள் அவ்விதமே இருந்தன. 306 அவன் அவர்களை வெறுமையாக்கினான். அவன் அவர்களைப் பயங்கரமாக கடிந்து கொண்டான்! “விரியன் பாம்புக் குட்டிகளே, புல்லின் கீழுள்ள பாம்புகளே, இப்பொழுதே கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். மனந்திரும்புதலுக்கென்று ஜலத்தினால் நான் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன். எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார். அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். தூற்றுக்கூடை அவர் கையிலிருக்கிறது. அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத் அக்கினியில் சுட்டெரிப்பார்” என்றான். ஆமென். 307 அப்பொழுதுதான் கரடு முரடானவைகள் சமமாக்கப்பட்டன. பாருங்கள்? ஆனால் ஜனங்கள் அதைப் புரிந்து கொள்ள இயலவில்லை, ஆயினும், வார்த்தை சொன்ன விதமாகவே அது நிறைவேறினது. அது எளிமையாகத் தோன்றினதால், ஜனங்கள் அதைக் காணத் தவறினர். அவர்கள் அதைக் காண தவறிவிட்டனர். 308 நீங்கள் அவர்களைப்போல் குருடராயிருக்க வேண்டாம். பாருங்கள்? நீங்கள் அவர்களைப்போல் குருடராயிருக்க வேண்டாம். ஆகையால் இப்பொழுது கவனியுங்கள்.

155309 அவர்கள் அதைக் காணத் தவறினர். அவன் அவர்களுடைய பொதுவான நம்பிக்கைகளுக்கு எதிராக மிகவும் எளிமையாயிருந்தால் அவன் அதை இழந்துவிட்டான் என்று எண்ணினர். மறுபடியும், அது என்ன? வார்த்தையாகிய தேவன் எளிமையில் மறைந்திருத்தல்; கழுத்துப் பட்டையைத் தூக்கி விட்டுக்கொண்டு, கல்வி அறிவு படைத்த குருவானவர் அல்ல அது. 310 யோவானின் சீஷர்கள் இயேசுவைக் காண வந்து திரும்பிச் சென்ற பிறகு, இயேசுவும் யோவானைக் குறித்து அவர்களிடத்தில் அதையேதான் கேட்டார். “நீங்கள் எதைப் பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரம் தரித்த மனிஷனையோ, அல்லது போதகனின் அங்கியைத் தரித்தவனையோ? அது மென்மையான ஆடையென்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த—அந்த—அந்த—அவ்விதமான பிரசங்கியைக் காணவா சென்றீர்கள்?” என்று அவர் கேட்டார். அவர், “நீங்கள் அதைப்பார்க்கவா போனீர்கள்?” என்று கேட்டார். 311 “அப்படிப்பட்டவர்கள் குழந்தைகளை முத்தமிட்டு, மரித்தோரை அடக்கம் செய்வர் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் போர்க்களத்தில் உபயோகிக்க வேண்டிய இருபிடிகளுள்ள பட்டயத்தைக் குறித்து அவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் சங்கத்தில் அல்லது ஏதாவதொன்றில் கல்வித்திறன் படைத்த ஒரு சொற்பொழிவு ஆற்றவே அவர்களுக்குத் தெரியும். அத்தகைய இடத்திற்கு அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் போர்க்களத்தில் எதிரியைச் சந்திக்க வேண்டுமானால் அவர்களுக்கு அதைக் குறித்து ஒன்றுமேத் தெரியாது. அவர்கள் அரசர் மாளிகைகளில் இருந்து கொண்டு அங்குள்ளோரிடம் சமயத்தை வீணாக்கிறார்கள்” என்றார். 312 மேலும். அவர், “எதைப் பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?” என்றார். ஒரு மனிதன் ஒருவனிடம் வந்து, “நீ ஒருத்துவத்தைச் (Oneness) சேர்ந்தவனாய் இருக்கின்றாய். நீ அதை விட்டு இங்கே அஸெம்பிளீஸ் ஸ்தாபனத்திற்கு (Assemblies) வருவாயானால், நான் உனக்குச் சொல்லுகிறேன், நான் அநேக நன்மைகளைச் செய்து தருவேன்… ‘நான் அதைச் செய்து தருவேன் என்று நான் நம்புகிறேன்’ என்று கூறலாம். ஹூ! அதற்கு தலையசைப்பவன் காற்றினால் அசையும் நாணலுக்கு ஒப்பாவான்…யோவான் அப்படிப்பட்டவன் அல்ல. இல்லை, இல்லை. இல்லவே, இல்லை. அவ்விதமாகவே, யோவானிடம், ‘நீ பரிசேயரைச் சேராமல் சதுசேயராகிய எங்களைச் சேர்த்துக்கொள் அல்லது அதுபோன்ற ஒரு காரியத்தைக் கூறியிருந்தால்’, மற்றவர் காற்றில் அசையும் நாணற்போல தலையசைப்பதை பார்க்கலாம். ஆனால் யோவான் அப்படிப்பட்டவனல்ல” இல்லை ஐயா. சகோதரனே, அவன் அப்படிப்பட்டவனல்ல.

156313 மேலும் இயேசு, “அப்படியானால் நீங்கள் எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ?” என்றார். ஒரு தீர்க்கதரிசிதான் அவ்விதம் உறுதியாய் நிற்க முடியும். பாருங்கள். அதுதான் தீர்க்கதரிசியின் அடையாளம். பாருங்கள், தேவனுடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கின்றது. தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது. பாருங்கள். இயேசு, “எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம் அதுசரி. ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தீர்க்கதரிசியையோ? தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே” என்றார். 314 அவன் ஏன் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனாய் இருந்தான்? அவன் உடன்படிக்கையின் தூதனாயிருந்தான், நிச்சயமாக நியாயப்பிரமாணத்திற்கும் கிருபைக்கும் இடையே இந்த இடைவெளியை அவன் தான் பிணைக்க வேண்டியவனாயிருந்தான். அவ்விதம் பிணைக்கும் முக்கியமான கல்லாக முன்னுரைக்கப்பட்டவன்தான் இவன். 315 இயேசு, “நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால் ‘இதோ’ ‘நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புவேன், மல்கியா 3ம் அதிகாரம், அவன் எனக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுவான்’ என்று தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டவன் இவன் தான்” என்றார் பாருங்கள்? ஒ. அவன் மிகவும் எளிமையாய் இருந்தான். தேவன் மறுபடியும் எளிமையில் மறைந்திருத்தல்.

157316 அவன் என்ன செய்தான் என்று கவனியுங்கள். யோவான் ஸ்நானன் அந்த வல்லமையுள்ள கிறிஸ்து வருகிறார் என்று பிரசங்கித்தான், “தூற்றுகூடை அவர் கையில் இருக்கிறது. பையனே, அவர் தூற்றுகூடையுடன் வந்து களஞ்சியத்தை முழுமையாகப் பெருக்குவார் என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். அவர் பதரை எடுத்து, அதை தூர எறிந்து, எரித்துப்போவார். அவர் கோதுமை மணியையோ களஞ்சியத்தில் சேர்ப்பார்” என்றான். பாருங்கள், அவன் ஆவியினால் ஏவப்பட்டிருந்தான். 317 ஆனால் இயேசு வரும்போது, அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருந்ததோ… உங்களுக்குத் தெரியும், அந்த அப்போஸ்தலர்கள் எல்லோரும், ஏதோ ஒரு மகத்தான காரியம் சம்பவிக்க அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர். “என்னே, என்னே! ஓ, அவர் வருகிறார். எல்லாமே அவ்வளவுதான், பையனே, அவர் வல்லமையானவராயிருப்பார். அவர் ரோமர்களை பூமியிலிருந்து அற்றுப்போகப் பண்ணுவர். எனவே அவர் வரும்போது, கிரேக்கரை இந்தவிதமாகவும், ரோமரை அந்தவிதமாகவும் மடங்கடிப்பார் என்று எண்ணியிருந்தனர்.” 318 ஆனால் அவர் எளியவராக எல்லாராலும் தள்ளப்பட்டவராக வந்தார். அது என்ன? தேவன் தாம் எளிமையில் மறைந்திருத்தல். ஓ…என்னே!

158319 அதன் பின்னர் அவர் தம் செய்தியின் முடிவில் நின்று “என்னில் பாவமுண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் செய்வேன் என்று வேதம் கூறின அனைத்தையும் நான் செய்தேன். என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால் என்னைக் குற்றப்படுத்துங்கள். ஆனால் நான் என்ன செய்வேன் என்று வேதவாக்கியங்கள் கூறியிருந்ததோ, நான் அவைகளை செய்திருக்கவில்லையா?” என்று கேட்டார். பாவம் என்பது அவிசுவாசம் என்று நீங்கள் அறிவீர்கள். “யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் தேவனுடைய விரலினால் பிசாசுகளை துரத்தினால். நீங்கள் அதைக் குறித்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை எனக்கு காண்பியுங்கள்” என்றார். எளிமை! 320 மரண பரியந்தம் தம்மைத் தாழ்த்தினார். ஆனால் ஓ, உயிர்த்தெழுந்த காலையன்று…அல்லேலூயா! அவர் தம்முடைய களத்தை நன்றாய் விளக்கினார், சகோதரனே, அவர் பதரை பெருக்கித் தள்ளினார். அது சரி. சகோதரனே, ஆம், அது உண்மை. கோதுமையையோ களஞ்சியத்தில் முத்தரித்தார். அங்கு அது நித்திய ஜீவனைப் பெற்றதாய் அந்த மகத்தான நாளுக்கென்று காத்திருந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. கர்த்தர் வருகின்ற அந்த மகத்தான நாளில் அந்த ஜீவன் உயிரடைவதைப் பற்றியே நாம் பேசப் போகிறோம். கர்த்தருடைய வருகையில் நாமெல்லாரும் உயிரொடெழுந்து, அவருடன் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, களஞ்சியத்தில் சேர்க்கப்படுவோம். பதரும் அதனுடன் கூட கோதுமையைச் சுற்றியிருந்து அதனை அந்தப் புறமும் இந்தப் புறமும் இழுத்துக்கொள்ள முனைந்த உமியும் அவியாத் அக்கினியில் சுட்டெரிக்கப்படும். ஆமென்! ஓ, அவர் அதிசயமானவரல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.]

159321 தேவன் எளிமையில் இருந்தார் அவரை அவர்கள் கண்டு கொள்ளத் தவறினர். ஏன்? ஏன்? யோவான் வேததத்துவ சாஸ்திர முறையை அனுசரித்துப் பிரசங்கிக்கவில்லை. அவன் ஒருபோதும் அவ்வாறு பிரசங்கிக்கவில்லை. அவன் ஒரு பிரசங்கியைப் போல ஒருபோதும் பிரசங்கிக்கவில்லை. பாருங்கள்? அவன்…ஒரு விதமாக பிரசங்கித்தான்…அவன் தேவனுடைய எளிமையைக் குறித்துப் பிரசங்கித்தபோது, இயற்கையில் சாதாரணமாகக் காணப்படும் “கோடாரி வைக்கப்பட்டுள்ளது, மரம், பாம்புகள்” என்ற பொருட்களை உபயோகித்தே அவன் பிரசங்கித்தான். அந்நாளிலிருந்த மதகுருக்களைப் போன்றோ, வேதக்கல்லூரி போதகனைப் போன்றோ அல்லது தெய்வீக டாக்டர் பட்டம் பெற்றவனைப் போன்றோ. டாக்டர் இன்னார்—இன்னார் போலவோ யோவான் பிரசங்கம் செய்யவில்லை. அவன் காட்டில் வசித்த ஒருவனைப்போல் பிரசங்கித்தான். அவன் “கோடாரிகள், மரங்கள், சர்ப்பங்கள், கோதுமை களஞ்சியம் இன்னும் ஒவ்வொன்றையும் குறித்துப் பேசினான். இந்நாளில் அவர்கள் அவனை ஒருவிதமான சோப்புப் பெட்டி பிரசங்கி என்றே நினைப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன். அவன் படகுகளைக் கட்டுவதற்கான யோர்தானில் காணப்பட்ட கட்டைகளின் மேல் நின்று பிரசங்கித்த காரணத்தால், அந்நாளில் அவன் ஒரு கட்டைப் பிரசங்கியார் என்று அழைக்கப்பட்டான் என்று நான் நினைக்கிறேன். அநேக…உலக ஞானத்திலிருந்து தேவன் எளிமையில் மறைந்திருந்தார்.

160322 இப்பொழுது நாம் கண்டறிவோமாக. இயேசு, “பிதாவே, நீர் உலகத்தின் கல்விமான்களுக்கு இவைகளை மறைத்து கற்றுக் கொள்ளக்கூடிய பாலகர்களுக்கு வெளிப்படுத்தப்போகிறபடியால் நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்” என்றார். பாருங்கள்? தேவன் எளிமையில் கிறிஸ்துவுக்குள் மறைந்திருத்தல் தேவன் யோவானுக்குள் மறைந்திருத்தல். பாருங்கள்? அப்படியே…பாருங்கள், அவர்—அவர் அதைக் குறித்து சிறிது சிந்தியுங்கள். தேவன் உலகத்தின் ஞானத்திலிருந்து மறைந்து எளிமைக்குள் இருத்தல். 323 இப்பொழுது நாம் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் முடித்து விடுவோம், ஏனென்றால் உங்களை அதிக நேரம் நிறுத்தி வைக்க எனக்கு விருப்பமில்லை.

161324 பாருங்கள், நாம் ஒரு நிமிடம் நிறுத்துவோமாக, தனிப்பட்ட விஷயம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நாம் இப்பொழுது வாழ்ந்து வரும் நாட்களைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் இப்பொழுது குழுமியுள்ள இந்த எளிய ஸ்தலத்திற்கு தேவன் இறங்கி வந்து, வியாதியஸ்தரை சுகப்படுத்துவதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். இச்சமயத்தில் ஐசுவரியவான்களும், பெருமைக்காரரும், கல்வியறிவு படைத்த அநேகரும் “அற்புதங்களின் காலம் கடந்து போய்விட்டன. தெய்வீக சுகமளித்தல் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது” என்று கூறி வருகின்றனர். 325 தாவீதயும், கோலியாத்தையுங் குறித்து இந்த இடத்தில் அன்று காலை நிகழ்த்தினப் பிரசங்கம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? 326 நான் ஊழியத்திற்கென்று சென்றபோது அநேகர் என்னிடம், “சகோதரன் பிரான்ஹாமே, கல்வி அறிவு படைத்த இந்த உலகத்தை நீங்கள் எங்ஙனம் சந்தித்து, இந்த சுவிசேஷத்தைக் கூறப் போகின்றீர்கள்?” என்று கேட்டனர். 327 அப்பொழுது நான், “நான் அதை எப்படி சந்திக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. தேவன், ‘போவென்று என்னிடம் கட்டளையிட்டார்”’, என்றேன். பாருங்கள்? அவ்வளவுதான். பாருங்கள்? அது அவருடைய வார்த்தை. அவர் அதை வாக்களித்துள்ளார். அந்த நேரம் இங்குள்ளது.

162328 நீங்கள் அங்கு தொங்கும் புகைபடத்தில் காணும் அந்த தூதன், முப்பது இல்லை முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்பாக ஒரு ஜீன் மாதம் அங்குள்ள அந்த நதியினருகில் இறங்கி வந்து, ஐநூறு பேர்களுக்கு அல்லது அதற்கும் அதிகமானோருக்கு முன்பாக, “யோவான் ஸ்நானன் இயேசுகிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டது போன்று, உன்னுடைய செய்தியும் உலகம் முழுவதும் பரவுவதற்கான வேளை வந்து விட்டது” என்றார். 329 ராய் ஸ்லாட்டர், ஸ்பென்ஸரின் மனைவி, அல்லது இங்கு உட்கார்ந்திருக்கும் சில வயோதிபர் அன்று தெய்வீக சுகமளித்தலைக் குறித்து உண்டாயிருந்த குறைகூறுதலை நீங்கள் ஞாபகத்தில் கொண்டிருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். பாருங்கள், ஜார்ஜ் ரைட் மற்றும் இன்னும் சிலர் அது எப்படி இருந்தது என்பதை அறிவர். பாருங்கள், ஆனால் அது அதைச் செய்யவில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அது அதைச் செய்தது. 330 அவர்கள் “இது மனோதத்துவத்தின் மூலம் உண்டான சுகம்” என்றெல்லாம் குறைகூறினர். ஆனால் தேவனோ அந்நேரத்தில் ஒரு ஊமையான ஆப்ஸம் என்னும் மிருகத்தை அனுப்பினார். அது தேவனுடைய வல்லமையினால் சுகமாக்கப்பட்டது.

163331 ஒரு முறை நானும் லயல் உட்டும், பாங்ஸும் (Banks) படகில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தியத்தை அறிந்தோம். அங்கு ஒரு சிறிய மீன் செத்துப்போய் தண்ணீரில் கிடந்தது. தேவன் தமது மகிமையை எங்களுக்குக் காண்பிக்கப் போவதாகவும், இவ்விதமாய் சம்பவிக்கப் போவதாகவும் பரிசுத்த ஆவியானவர் அதற்கு முந்தின நாள் எனக்கு அறிவித்தார். அந்தக் காலை அங்கு நின்று கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் படகுக்குள் வந்தார். நான் எழுந்து நின்று, அந்த மீனுடன் பேசினேன். அந்த மீன் அப்பொழுது மரித்துப்போய், அரைமணி நேரமாய்த் தண்ணீரில் கிடந்தது. அதனுடைய சுவாச உறுப்புகளும், குடல்களும் வாயின் வழியாக வெளியே வந்து விட்டிருந்தன. நான் அதனுடன் பேசினபோது, அது ஜீவனைப் பெற்று, மற்ற மீனைப் போன்றே நீந்திச் சென்றது. அது என்ன? தேவன் தம்மை எளிமையில் மறைத்துக் கொள்ளுதல்.

164332 தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார். அவர் ஆப்ஸம் என்ற மிருகத்தையோ, மீனையோ அல்லது வேறெதையுமோ சுகப்படுத்த முடியும். தேவன் கொண்டு வரும் தம்முடைய செய்தியை ஜனங்கள் விசுவாசிக்காவிடில், அதை விசுவாசிக்க ஒரு ஆப்ஸம் என்ற மிருகத்தை அவரால் உயிரோடெழுப்ப முடியும். அல்லேலூயா! மரித்துப்போன ஒரு மீனை அவரால் உயிரோடெழுப்ப முடியும். மரித்துப்போன ஆப்ஸம் என்ற ஒரு மிருகத்தை அவரால் உயிரோடெழுப்ப முடியும். அவரால் முடியும். அவர் செய்ய விரும்புகிற எந்தக் காரியத்தையும் அவரால் செய்ய முடியும். 333 இந்த சந்ததிக்கு என்னே ஒரு கடிந்துகொள்ளுதல்! அவர்கள் செய்தியைக் கேட்டு இடறி, அதைக் குறித்து பகட்டாரவாரம் செய்து, “நீ இதை செய்யவில்லை, அதை செய்யவில்லை” என்று குறை கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் தேவன் சுகம்பெற ஒரு சாதரண மிருகத்தை அனுப்புகிறார். பாருங்கள்? என்ன ஒரு கடிந்து கொள்ளுதல்! அது என்னவாயிருந்தது? தேவன் எளிமையில் வெளிப்பட்டு, பாருங்கள், அவரை மகத்துவமுள்ளவராகக் காண்பித்தலே. ஓ, என்னே, இந்த சந்ததியில் உள்ள இந்த மனிதர்களை அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் கடிந்து கொள்கிறார்.

165334 இப்பொழுது, அவர்கள் எப்பொழுதும் சிந்திப்பதுபோல, இப்பொழுதும் அது தங்கள் சொந்த வழியிலேயே வரவேண்டும் என்று நினைக்கின்றனர். ஒருமுறை ஒரு கத்தோலிக்க மனிதன், “இப்பொழுது, தெய்வீக சுகமளித்தல் என்று ஒன்று இருக்குமானால்…,” அந்த கத்தோலிக்க மனிதன் அன்று இரவு அதைக் குறித்து என்னிடம் கூறினார். நீங்கள் அதைக் குறித்து அறிவீர்கள். நான் அயர்ஸ் என்பவரின் மகனைக் குறித்து அவனைக் காணும்படியாய், ஹவுஸ்டன் (Houston) சென்றிருந்தேன். அப்பொழுது அந்தக் கத்தோலிக்கன், “அது தேவனுடைய வரமாயிருந்தால், அது கத்தோலிக்க சபைக்கு வரவேண்டியதாயிருக்கிறது” என்றான். நீங்கள் பாருங்கள்? பாருங்கள்? ஆம், அதுபோன்று மெத்தோடிஸ்டு சபையினரும், அது அவர்களுடைய சபைக்கு வரவேண்டியதாயிருக்கிறது என்று எண்ணினர். பெந்தேகோஸ்தே சபையினரும் அது அவர்கள் சபைக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று கூறுகின்றனர். ஆனால் அது அவர்கள் எவரிடத்திற்குமே வரவில்லை. 335 அது தம்மைத்தாமே வெளிப்படுத்திக் காட்டுகின்ற, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையில் வருகிறது. அது சரி. நிச்சயமாக அவர் செய்கிறார். ஆம். நீங்கள் அதைச் சற்று கவனியுங்கள். இது உங்களைவிட்டு நழுவிச் செல்ல அனுமதிக்காதீர்கள். அதை உங்கள்—உங்கள் இருதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள், அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதை சிந்தனை செய்யுங்கள். 336 அது அவர்களுடைய சொந்த வழியில், அவர்களுடைய சொந்த ஸ்தாபனத்தின் வழியில் வரவேண்டும். “அது அவ்வாறு வரவில்லையென்றால், அது அவரல்ல” என்று கூறுகிறார்கள். பாருங்கள். அது மனோதத்துவம் அல்லது அது பிசாசு. அது ஒரு—அது ஒரு…அது தேவனல்ல என்று அவர்கள் எண்ணுகின்றனர். ஏனென்றால் அது தேவனாயிருந்தால், “அவர்களுடைய சொந்த வழியில்,” நீங்கள் பாருங்கள், “நாம் பெற்றுள்ள வியாக்கியான முறையின்படியே அது நம்மிடம் வரவேண்டியுள்ளது” என்கின்றனர்.

166337 இயேசு பரிசேயரிடத்தில் இவ்விதமாகவே வரவேண்டுமென்றிருந்தனர். அது அவ்வழியில்தான் இருக்க வேண்டுமென்றனர். பாருங்கள்? அவர்களுடைய…தேவன் மேசியாவை அனுப்புவாரெனில், அவர் எப்படியிருக்க வேண்டுமென்று என்ற எல்லா வியாக்கியானத்தையும் உடையவராயிருந்தனர். அவர் வேறுவிதத்தில் வந்தபோதோ, அவர்கள், “அவர் மேசியா அல்ல, அவர் முறைதவறி பிறந்த ஒருவர், அவர் பெயல் செபூல்,” என்றனர். ஆனால் அது தேவன் எளிமையில் மறைந்திருந்ததாகும். 338 முன்னோடியானவன் ஒரு குறிப்பிட்ட கல்விமானாய் இருக்க வேண்டுமென எண்ணினர். நல்லது… ஒன்று, சந்தேகமின்றி…அவர்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும், தங்கள் மார்க்கத்திற்கு ஆட்களைக் கொண்டுவர, மிஷனரிகளாக ஒவ்வொருவரையும் நியமஞ் செய்கையில், “இவன்தான் வருகிறவனாகிய முன்னோடியாய் இருப்பான்” என்று எண்ணினர். ஆனால் தேவனோ வேத பள்ளியில் படித்திராத, அவைகளைப் போன்ற ஒன்றிலிராத, வனாந்தரத்திலிருந்து அவனை எழுப்பினார். பாருங்கள்? பாருங்கள்? தேவன் தாழ்மையிலும், எளிமையிலும் மறைந்திருத்தல்.

167339 ஆனால் இப்பொழுது பொறுத்திருங்கள். முடிவாக நான் இதைக் கூறுகிறேன். தேவனுடைய எளிமையான செய்தியை, அதை புறக்கணிப்பது, தேவனுடைய எளிமையான வழியை புறக்கணித்தால் நித்தியமாக அழிக்கப்படுவோம். இப்பொழுது, அது எவ்வளவு…நாம் அது எவ்வளவு எளிமையாயுள்ளது என்று பேசுகிறோம். அந்த செய்தியை பரிகசித்து அதனை காலால் உதைக்கலாம். ஞானிகள் விரும்புகிற எந்த வழியிலும் அதைப் பாவித்து நடத்தலாம் என்று ஜனங்கள் எண்ணுகின்றனர். ஆனால் அது தேவனிடமிருந்து நித்திய பிரிவினையை உண்டாக்கும். 340 நோவாவின் காலத்தில் வாழ்ந்து அவன் செய்தியை ஏற்றுக் கொள்ளாதவர் அழிந்து போயினர். இயேசு மரித்த பின்பு, உயிரோடெழுமுன்பு, அந்தகார சங்கிலிகளில் கட்டப்பட்டிருந்தவர்களுக்கு போய்ப் பிரசங்கித்தார். அவர் பாதாளத்திற்குச் சென்று, நோவாவின் நாட்களிலே தேவன் நீடிய பொறுமையோடு காத்திருந்தும், ஒரு எளிய மனிதன் கொண்டு வந்த ஒரு சாதாரண தேவனுடைய செய்திக்குக் கீழ்ப்படியாமற்போனதின் விளைவாக காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அவர் அங்கு சென்று, “நான் இங்கு வருவேன் என்று நோவா என்னைக் குறித்துப் பிரசங்கித்தான். இதோ நான் இங்கே வந்திருக்கிறேன்” என்றார். அது சரி பாருங்கள்?

168341 தீர்க்கதரிசியினுடைய செய்திக்கு செவிகொடுக்கத் தவறினவர்கள், மோசே தேவனிடத்தில் செய்தியைப் பெற்றிருந்து, அக்கினி ஸ்தம்பத்தினால் அவனுடைய ஊழியம் ரூபகாரப்படுத்தப்பட்டு, இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தில் வழிநடத்திச் சென்றான். அவர்களோ ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ள முயன்று, அதன் விளைவாக யோசுவா, காலேப் என்னும் இருவரைத்தவிர, மற்றவரெல்லாம் மாண்டு போயினர். 342 பரிசேயர் மிகவும் குருடராயிருந்தபடியால், அதை சரிவரக் காணக் கூடாமல், அவர்கள் பின்னோக்கிப் பார்த்து, “எங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்” என்றனர்.

169343 ஆனால் இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, “அவர்கள் எல்லாரும் மரித்தார்கள்” என்றார். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய மகிமையைக் கண்டனர். அவர்கள் வெளிச்சத்தில் நடந்தனர்…அவர்கள் வெளிச்சத்தில் நடந்தனர். அவர்கள் அக்கினி ஸ்தம்ப வெளிச்சத்தில் நடந்தனர். அவர்கள் தேவனுடைய வல்லமையின் பிரசன்னத்தில் நடந்து சென்றனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கென்று ஏற்படுத்திக் தந்த ஸ்தலங்களின் வழியாக அவர்கள் சென்றனர். தேவன் அவர்களுக்கென்று வானத்திலிருந்து விழப்பண்ணின மன்னாவை அவர்கள் புசித்தனர். என்றாலும் அவர்கள் இழக்கப்பட்டு, நரகத்துக்குச் சென்றனர். “அவர்கள் ஒவ்வொருவரும் மரித்துப் போயினர் .” நீங்கள் அந்த வார்த்தையை ஆராய்ந்து பார்த்தால், அது, “தேவனுடைய சமூகத்திலிருந்து நித்திய பிரிவினை” என்று உள்ளது. அவர்கள் எல்லாரும் மரித்துப் போயினர். புரிகிறதா?

170344 இயேசுவை ஏற்றுக் கொள்ள மறுத்த அனைவரும் அழிந்து போயினர். நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? தேவனுடைய எளிமையை ஏற்றுக் கொள்ள மறுத்த அனைவரும் அழிந்துபோயினர். அது அப்படியே ஏதோ ஒன்றாய் அல்ல…நீங்களோ, “நான் ஒரு தவறு செய்துவிட்டேன்.” என்று கூறலாம். நீங்கள் அந்தவிதமாகக் கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. தேவன் அதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார். நீங்கள் நித்தியமாய் அழிந்து போவீர்கள். நாம் இதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். இப்பொழுது அது சரிவர தேவனால் அடையாளங் கண்டு கொள்ளப்பட வேண்டும், பாருங்கள், அப்படியானால், அது அவருடைய வார்த்தையாய் இருக்க வேண்டும். புரிகிறதா? ஓ! மோசேயைப் புறக்கணித்தவர்கள், எலியாவைப் புறக்கணித்தவர்கள், யோவானைப் புறக்கணித்தவர்கள், இயேசுவைப் புறக்கணித்தவர்கள், அவர்களுடைய நாட்களில் அழிந்து போயினர்.

171345 இங்கே ஒரு சிறு சம்பவத்தை நான் உங்களுக்குக் கூறப்போகிறேன். நான் யாரையும் அதிகம் புண்படுத்திக் கொண்டிருக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அன்றொரு நாள் ஒரு மன்னிப்பு பத்திரத்தைப் பெற முயற்சிக்க நான் டெக்ஸாஸிலுள்ள ஹூஸ்டன் என்னும் ஸ்தலத்திற்கு அழைக்கப்பட்டேன். அங்கு ஒரு வாலிபனும் ஒரு வாலிபப் பெண்ணும் தொந்தரவில் சிக்கிக்கொண்டனர். அதைப் பற்றி நீங்கள் பத்திரிக்கைகளில் வாசித்திருப்பீர்கள். அவர்களுக்கென ஒரு மன்னிப்பு பத்திரத்தில் கையெழுத்துக்கள் வாங்க எண்ணி கூட்டம் ஒன்றைக் கூட்டி ஒரு செய்தியை பிரசங்கிக்க நினைத்தேன். அந்த வாலிபன் திரு அயர்ஸ் என்பவரின் மனைவிக்கு அவன் முதல் கனவரின் மூலம் பிறந்த மகனாவான்.

172346 திரு. அயர்ஸ் என்பவர்தான் அங்கு தொங்கும் கர்த்தருடைய தூதனின் புகைப்படத்தை எடுத்தவர். அவர் ரோமன் கத்தோலிக்கர். அவர் மனைவி யூத மார்க்கத்தைச் சேர்ந்தவள். அவர் இந்த யூதப் பெண்மணியை விவாகம் செய்துள்ளார். அவர்கள் தங்களுக்குள்ளே எந்தவித மத சம்பந்தமான காரியங்களையும் பேசிக் கொள்ளவதில்லை. டெட் கிப்பர்மன் (Ted Kipperman) என்பவர் அயர்சுடன் புகைப்பட வியாபாரத்தில் ஈடுபட்டவர். அவர் டக்லஸ் ஸ்டுடியோ (Dougas Studio) என்னும் புகைப்படம் எடுக்கும் ஸ்டுடியோவின் சொந்தக்காரர். 347 பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்த டாக்டர் பெஸ்ட் என்பவர் சகோ. பாஸ்வர்த்தின் கூட்டத்தில், அவர் கை முட்டியை பாஸ்வர்த்தின் முகத்திற்கு நேராக வைத்து அவரைக் குத்துவதுபோல் பாவனை செய்து “நான் அவரைக் குத்துவது போன்று ஒரு புகைப்படம் எடுங்கள்” என்று சொன்னபோது, இவர்தான் அதை எடுத்தார். “அந்தக் கிழவனின் தோலை உரித்து தெய்வீக சுகமளித்தல் மரித்ததன் ஞாபகர்த்தமாக அதை என் படிக்கும் அறையில் மாட்டுவேன்” என்று கூறினவர்தான் இந்த டாக்டர் பெஸ்ட். 348 நான் டெக்ஸானில் உள்ள ஹூஸ்டனுக்குப் போக கர்த்தராகிய தேவன் எனக்குக் கட்டளையிட்டார். நானும் கர்த்தருடைய நாமத்தில் அங்கு சென்றிருந்தேன். அங்கு நேர்ந்த தர்க்கங்களையும் சம்பவங்களையும் எல்லாவற்றையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் அதைப் புத்தகத்தில் வாசித்திருக்கிறீர்கள். அன்று இரவு நான் தேவனுடைய சமூகத்தில் என்னை அதிகமாக தாழ்த்தினேன். 349 “ஏன்” அவர்கள், “அவர்கள் அறிவீனம் கொண்ட ஒரு கூட்டத்தார்” என்று கூறினர். டாக்டர் பெஸ்ட், “இவர்கள் அறிவீனம் கொண்ட ஒரு கூட்டத்தாரேயன்றி, வேறொன்றுமில்லை” என்றார். மேலும் “தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டவர் யாருமேயில்லை அதெல்லாம் சுத்த பொய்” என்றார். அது எளிமையில் மறைந்திருக்கின்ற தேவன் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். அவர்கள் சகோதரன் பாஸ்வர்த்தைப் பார்த்து, “இந்த மனிதன் ஆரம்பப்பள்ளியிலும் கூட படிக்கவில்லை” என்று பழித்தார்கள். 350 டாக்டர் பெஸ்ட்டும், அவருடன் கூட இருந்தவர்களும் கல்வியறிவு படைத்த பட்டதாரிகளாயிருந்தனர். அதைக் கண்டு சகோதரன் பாஸ்வர்த்தைத் திறைச் செய்யலாம் என்று டாக்டர் பெஸ்ட் எண்ணினார். ஆனால் தேவனுடைய வார்த்தையின் பேரில் தர்க்கம் வந்தபோது, டாக்டர் பெஸ்ட் பத்தில் ஒரு பாகம்கூட சகோதரன் பாஸ்வர்த்துக்கு நிகரில்லை. பாருங்கள்? சகோதரன் பாஸ்வர்த் தான் செய்வது சரியென்பதை நன்கு அறிந்திருந்தார். இன்று உட்கார்ந்திருக்கும் உங்களில் அநேகர் அன்று நேர்ந்த தர்க்கத்தைக் கேட்டீர்கள். அங்குதான் காரியம்.

173351 டாக்டர் பெஸ்ட் கைகளை மேலே தூக்கியவண்ணம், இவர்கள் அறிவீனம் படைத்தவர்கள். “யோக்கியமுள்ளவர் யாரும் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொள்வதில்லை” என்றார். 352 அப்பொழுது சகோதரன் பாஸ்வர்த் அவர்களோ, “ஒரு நிமிடம்” பொறும் என்றார். அப்பொழுது சகோதரன் பாஸ்வர்த், அன்றைய இரவு கூட்டத்தில், சுமார் முப்பதாயிரம் பேர் கூடியிருந்தனர், அவர் ஜனங்களை நோக்கி, “சகோதரன் பிரான்ஹாம் இந்த பட்டிணத்தில் கூட்டம் நடத்தின நாள் தொடங்கி, இந்தப் பெரிய, அருமையான பாப்டிஸ்ட் சபையைச் சார்ந்த உங்களில் எத்தனைபேர் தேவனுடைய வல்லமையால் தெய்வீக சுகம் பெற்று அதற்கு ஆதாரமாக மருத்துவர்களின், நற்சாட்சி பத்திரம் பெற்றிருக்கிறீர்கள்? தயவுசெய்து எழுந்து நில்லுங்கள்” என்றார். அப்பொழுது முந்நூறு பேர் எழுந்து நின்றனர். அவர் டாக்டர் பெஸ்டைப் பார்த்து, “இதற்கு என்ன சொல்லுகிறீர்” என்று கேட்டார். ஆம். தேவன் எளிமையில் மறைந்திருந்தார். அப்பொழுது அவர், “சகோதரனே…”

174353 அப்பொழுது டாக்டர் பெஸ்ட், “தெய்வீக சுகமளிப்பவனைக் கொண்டு வாருங்கள். அவன் என் முன்னிலையில் யாரையாவது வசீகரிக்கட்டும் (hypnotize), ஒரு வருடம் கழித்து வசீகரிக்கப்பட்டவனின் நிலையை நான் காணட்டும்” என்று கூறினார். டெட் கிப்… 354 அந்த புகைப்படம் எடுத்த டெட் கிப்பர்மனும், அயர்சும் அப்பொழுது அங்கிருந்தனர். அயர்ஸ் என்பவர், “பிரான்ஹாம் வசீகரிக்கும் திறனைப் பெற்றவரேயன்றி வேறொருவருமல்ல. தொண்டையில் களகண்ட மலை இருந்த ஒரு ஸ்திரீயை நான் கண்டேன். பிரான்ஹாம் அவளை வசீகரித்தார். அடுத்த நாள் காலை, நான் அவளிடத்தில் பேசினபோது, அந்த களகண்ட மாலை அவளுடைய தொண்டையில் இல்லாதிருந்தது. எனவே அந்த மனிதர் அவளை வசீகரித்தார்” என்று கூறினார். டாக்டர் பெஸ்ட் என்னை நிந்தித்தார். நான் அந்த பட்டினத்திலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டுமென்றும், அவர்தான் என்னை முதலில் விரட்டியடிக்கப் போவதாகவும் கூறினார். பாருங்கள்? ஹூஸ்டன் கிரானிக்கல் என்னும் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் இது பிரசுரிக்கப்பட்டது. 355 நான் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. என் பிதாவுக்கடுத்தவைகளைச் செய்யவே நான் அங்கு சென்றிருந்தேன். அவ்வளவுதான். நான் வார்த்தையில் நிலைநிற்க வேண்டியதே என் கடமையாகும். அவர்தான் என்னை அங்கு அனுப்பினார். அது அவருடைய வேலையாயிருந்தது.

175356 அன்றிரவு நான் அங்கு நடந்து சென்றேன், மேலும், “நான்—நான்—நான்—நான் தெய்வீக சுகமளிப்பவன் அல்ல. நான் சுகமளிப்பவன் அல்ல. என்னை எவரேனும் அவ்வாறு கூறினால்,” அப்பொழுது நான், “அவர்கள் கூறுவது தவறாகும்” என்றேன். “நான் ஒரு தெய்வீக சுகமளிப்பவன் என்று அழைக்கப்பட விரும்பவில்லை” என்று நான் கூறினேன். நான், “டாக்டர் பெஸ்ட் ரட்சிப்பைக் குறித்து பிரசங்கித்தால், அவர் தெய்வீக ரட்சகர் என்று அழைக்கப்பட விரும்பமாட்டார்” என்றேன். அவ்வாறே “நான் தெய்வீக சுகமளித்தலைப் பற்றி பிரசங்கிப்பதன் காரணத்தால் ஒரு தெய்வீக சுகமளிப்பவன் என்று அழைக்கப்பட நான் விரும்பவில்லை, ஆனால் அவர் ஒரு தெய்வீக இரட்சகர் அல்ல என்றே அவர் கூறுகிறார்; நிச்சயமாகவே, அவர் தெய்வீக இரட்சகரல்ல; நானும் தெய்வீக சுகம் அளிப்பவன் அல்ல. ஆனால் ‘அவருடைய தழும்புகளால் மாத்திரமே நாம் குணமானோம்’ என்பதையே நான் சுட்டிக் காட்டிக்கொண்டிருக்கிறேன்” என்றேன். பாருங்கள்? ஆகையால் அவர், “இது அர்த்தமற்றது” என்று கூறிவிட்டு, நடந்து வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 357 மேலும் நான், “தேவனுடைய வரத்தைக் குறித்தும், கர்த்தருடைய தூதனைக் குறித்தும், அவருடைய பிரசன்னத்தைக் குறித்தும், சந்தேகமிருந்தால், அது நிரூபிக்கப்படும்” என்று கூறினேன். அந்த சமயத்தில் கர்த்தருடைய தூதன் சுழன்று கொண்டு இறங்கி வந்தார். அப்பொழுது நான், “இனி நான் பேச வேண்டிய அவசியமில்லை. அவரே எனக்குப் பதிலாகப் பேசிவிட்டார்” என்று சொல்லி வெளி நடந்தேன்.

176358 நான் ஹவுஸ்டனுக்குச் சென்றேன், அந்தப் பெரிய பட்டிணம், தேசத்தில் உள்ள அழகான பட்டிணங்களில் ஒன்றாகும். அன்றொரு நாள் நான் அதன் வீதிகளின் வழியாக நடந்து சென்ற போது, அந்த பட்டிணத்தைப் பார்ப்பதற்கே அவமானமாயிருந்தது. வீதிகளோ அழுக்கு படிந்து காணப்பட்டன. பின்னர் நேராக டெக்ஸாஸ் நெடுஞ்சாலையில் உள்ள திரைப்பட நடிகர்கள் தங்கும் ரைஸ் ஹோட்டலுக்குள் (Rice Hotel) சென்றேன். அங்கு அந்த அடித்தளத்திற்குச் சென்றபோது, கூரையின் மேலிருந்து சுண்ணாம்பு கொட்டிக் கொண்டேயிருந்தது. தரையிலிருந்து பூசப்பட்ட சாந்து அடர்ந்து வந்திருப்பதை நான் கண்டேன். ஹோட்டல் முழுவதும் அழுக்கு நிறைந்ததாய் காட்சியளித்தது. அந்த பட்டிணத்தின் போதகர்களிடையே இதுவரை நான் முன் வாழ்நாளிலியே கேட்டிராத குழப்பம் குடிகொண்டிருந்தது. 359 ஏன்? வெளிச்சத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அந்தகாரத்தில் நடக்கவேண்டும். அவர்கள் பிள்ளைகள் மரண வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். சரி. தேவன் இறங்கி வந்து எளிமையில் தம்மை வெளிப்படுத்த சித்தம் கொண்டபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அப்பொழுது தேவன் தம்மை எளிமையில் காண்பித்தார். 360 அங்கு அவர்கள் எடுத்த புகைப்படம் உலகம் பூராவும் பரபரப்பை உண்டு பண்ணியது. இவ்வுலகத்தின் சரித்திரத்திலேயே முதன் முறையாக தெய்வீக உருவம் புகைப்படத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்ளுகின்றனர். அது வாஷிங்டனில் மதக்கலைகளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் தொங்க விடப்பட்டிருக்கிறது. பாருங்கள்? பாருங்கள்? அது தேவன் எளிமையில் மறைந்திருந்து, பின்பு தம்மை வெளிப்படுத்துதல். பாருங்கள்?

177361 இப்பொழுது அவர் கிறிஸ்துவின் மரணத்தில் தம்மை மறைத்துக்கொண்டு, அவர் உயர்தெழுதலில் தம்மை வெளிப்படுத்திக் கான்பித்தார். ஓ, என்னே!… இதைப்பற்றிக் கூறப்போனால் அதற்கு முடிவேயில்லை. அதற்கு ஆதாரமாக எத்தனையோ சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அங்குதான் காரியம், பாருங்கள். 362 ஆயினும் கட்டிடத்தின் அடித்தளத்திற்குச் சென்று கண்களை மூடிக்கொண்டு, சூரிய வெளிச்சம் கிடையாது என்று ஜனங்கள் சொல்வதற்கு இவர்கள் ஒத்திருக்கின்றனர். அது சரி. சரியான ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுப்பதனால் நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என்பதனை நினைவு கொள்ளுங்கள். பாருங்கள்? உங்கள் கண்களைத் திறக்க மறுப்பதனால், நீங்கள் இருளில் வாழ்கின்றீர்கள். பாருங்கள்? நீங்கள் கண்களைத் திறந்து பார்க்க மறுத்தால், நீங்கள் எப்படி காணப்போகிறீர்கள்? பாருங்கள்? சாதாரண காரியங்களைக் கவனியுங்கள். நீங்கள் செய்யாமல் விட்டு விடும் சிறிய காரியங்கள்தான் உங்களைக் கஷ்டத்தில் ஆழ்த்துகின்றன…நீங்கள் செய்ய—செய்ய முயலும் பெரிய காரியங்கள் அல்ல.

178363 ஓ, என்னே! இப்பொழுது…இங்கு கவனியுங்கள். நான் உங்களுக்கு இதைக் கூறட்டும். மல்…மத்தேயு. 11. 10. ல், இயேசு, “நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், வழியை ஆயத்தம்பண்ண எனக்கு முன்னே அனுப்பப்பட்ட யோவான் ஸ்நானன் இவன்தான்” என்றார். பாருங்கள். அது எளிமையாயிருந்தது. 364 “அப்படியானால் வேதபாரகர் ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?” என்று ஒரு நாள் அவரைக் குறித்து இப்படி கேட்கப்பட்டது. 365 இயேசு, “மனுஷகுமாரன் எருசலேமுக்குப் போகிறார். அங்கே நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் மனுஷகுமாரனைக் கொன்று போடுவார்கள். அவர் மரிக்கப் போகிறார், ஆனாலும் அவர் மீண்டும் மூன்றாம் நாளில் உயிரோடெழுந்திருப்பார்” என்றார். மேலும் அவர், “இந்த தரிசனத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்றார்.

179366 சீஷர்கள், இப்பொழுது இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். யோவான் ஸ்நானனுடன் நடந்து, அவனுடன் உரையாடி, வனாந்தரத்தில் அவனோடு புசித்து, நதிக்கரையில் அவனுடன் உட்கார்ந்து சம்பாஷித்த அவனுடைய அதே சீஷர்கள் தான் இயேசுவிடம், “எலியா முதலில் வரவேண்டுமென்று வேதபாரகர் ஏன் சொல்லுகிறார்கள்? நீர் சிலுவையில் அறையுண்டு பின்பு உயிர்த்தெழப் போவதாகச் சொல்கிறீர். நீர்தான் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆளப்போகும் மேசியா, கிறிஸ்து வருவதற்குமுன், எலியா வரவேண்டுமென்று வேதவாக்கியங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றனவே” என்று கேட்டனர். ஆம் பாருங்கள்? 367 அப்பொழுது இயேசு, “எலியா முதலில் வந்தாயிற்று. நீங்கள் அதை அறியவில்லை” என்று கூறினர். இப்பொழுது, அவர்கள் யார்? சீஷர்கள்.

180368 இப்பொழுது நான் இங்கே சற்று புண்படுத்தப் போகிறேன். ஆனால் வேண்டுமென்று நான் அப்படிச் செய்யப்போவதில்லை. பாருங்கள்? நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமென்ற காரணத்தால்தான் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு நான் அங்ஙனம் செய்ய முற்படுகிறேன். நான் கூறுவதை உங்களால் கேட்க முடிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 369 பாருங்கள், “ஏன்?” கிறிஸ்துவோடு நடந்த அந்த மனிதர்கள், “எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்படுத்த வேண்டுமென்று வேதம் ஏன் கூறுகின்றது?” என்று கேட்டனர். அவர்கள் யோவானுடைய ஊழியத்தில் மனந்திரும்பின சீஷர்கள், ஆனாலும் அவனை அறிந்து கொள்ளவில்லை. “ஏன் வேதபாரகர் வேதம் அவ்விதம் கூறுகின்றது என்று கூறினர்?” நான் எதைப் பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்? “எலியா முந்தி வர வேண்டும் என்று வேதம் ஏன் கூறுகின்றது?” அவரோடு நடந்த சீஷர்கள், “இந்த காரியங்களுக்கு முன்னர் எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்படுத்த வேண்டும் என்று ஏன் வேதம் கூறுகிறது?” என்று கேட்டனர். அவர் ஏறக்குறைய ஆறு பேருக்கு மாத்திரமே அதை வெளிப்படுத்தினார். அவ்வளவுதான் பார்த்தீர்களா? அவ்வளவு பேர் மாத்திரமே அதை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாயிருந்தனர். அதை அறிந்து கொள்ள அவர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டிருந்தனர்.

181370 இயேசு “எலியா ஏற்கனவே வந்தாயிற்று. நீங்கள் அதை அறியவில்லை சொன்னார். ஆயினும் அவன் செய்யப்போவது என்ன என்று வேதம் கூறிய அனைத்தையும் அவன் செய்து முடித்தான். நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டு விசுவாசிக்க, அவன் உங்களைத் திருப்பினான். அவன் என்ன செய்வான் என்று வேதம் கூறினதை அவன் சரியாகச் செய்தான். அவர்கள் என்ன செய்வார்கள் என்று வேதம் கூறினதையும் அவனுக்கு அவர்கள் செய்தனர். அவன் ஏற்கனவே வந்தாயிற்று. நீங்கள் அதை அறியவில்லை” என்றார்.

182371 நீங்கள் ஆயத்தமா? உங்களுக்கு இப்பொழுது சற்று அதிர்ச்சியைக் கொடுக்க விரும்புகிறேன். எடுத்துக்கொள்ளப்படுதலும் அவ்விதமாகவே சம்பவிக்கும், அது மிகவும் சாதாரணமாய் இருக்கும். அவ்விதமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்நாட்களில் ஒன்றில் எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும். அதைக் குறித்து எவருமே அறிந்துகொள்ள மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் எழுந்து போய்விட வேண்டாம். நான் கூறுவதை ஒரு நிமிடம் ஆலோசனை செய்து பாருங்கள். நான் இப்பொழுது நிச்சயமாகவே முடிந்து விடுகிறேன். எடுத்துக்கொள்ளப்படுதல் ஒரு எளியவிதத்தில் சம்பவித்த பிறகு, நியாயத்தீர்ப்பு ஜனங்களின் மேல்விழும், அப்பொழுது அவர்கள் மனுஷகுமாரனைக் காண்பார்கள். அப்பொழுது அவர்கள், “நாங்கள் இன்னின்னவற்றை உடையவர்களாயிருந்திருக்க வேண்டும்? எலியா எங்களுக்கு அனுப்பப்பட வேண்டுமே? எடுத்துக்கொள்ளப்படுதல் சம்பவிக்க வேண்டுமே?” என்று கேட்பார்கள். 372 அதற்கு இயேசு பிரதியுத்தரமாக, “அவையெல்லாம் ஏற்கனவே சம்பவித்துவிட்டன. நீங்கள் அதை அறியவில்லை” என்பார். தேவன் எளிமையில் காணப்படுதல், பாருங்கள்?

183373 இப்பொழுது, இந்த வாரம் சில ஆழமான போதனைகளுக்காகச் செல்லப் போகிறோம் …?… இப்பொழுது, கவனியுங்கள், வெகு சிலர் மாத்திரமே எடுத்துக்கொள்ளப்படுதலில் மணவாட்டியாக செல்வர். அது… 374 இப்பொழுது போதகர்கள் அதை எப்படி போதித்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா? அவர்கள் லட்சக்கணக்கான மக்கள் எடுக்கப்படுதலில் செல்வதாக போதித்து, அதை விவரிக்க படங்களும் வரைந்து காண்பிக்கின்றனர். மெதோடிஸ்ட் போதகர் பிரசங்கிக்கும்போது எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்பவர் எல்லாம் மெதோடிஸ்ட் சபையினராயிருப்பவர் என்றும், பெந்தெகொஸ்தே போதகர் பிரசங்கிக்கும்போது அவர்களெல்லாரும் பெந்தெகொஸ்தே சபையினராயிருப்பார்கள் என்றும் சொல்கின்றனர். அது ஒருபோதும் உண்மையல்ல. 375 ஒருகால் ஜெபர்ஸ்ன்வில் பட்டிணத்திலிருந்து ஒரே ஒரு நபர் மாத்திரமே எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லக் கூடும். அவர் எங்கோ காணாமற்போனார் என்று ஒரு சிலர் நினைத்துக் கொள்பவர்கள், மற்றவர்கள் அதை பற்றி அறியவே மாட்டார்கள். ஜார்ஜியா (Georgia) பட்டிணத்திலிருந்து ஒருவர் செல்லலாம், பாருங்கள்? ஆப்பிரிக்கா கண்டத்தில் ஒருவர் செல்லலாம். ஆக உயிருள்ளவர்களில் ஐந்நூறு பேர் மாத்திரம் மறுரூபமடைந்து செல்லலாம். அது—அது சபையல்ல, அது மணவாட்டி. அது சபையல்ல. அது மணவாட்டி. புரிகிறதா? 376 சபையானது ஆயிரக்கணக்கான பேர்களைக் கொண்டதாயிருக்கும், ஆனால் அவர்கள் இரண்டாவது உயிர்த்தெழுதலின் பிறகுதான் வருவார்கள். அவர்கள் ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடைவதில்லை. பாருங்கள்?

184377 ஆனால் மணவாட்டி, இந்த நிமிடத்தில் ஐந்நூறு பேர் இந்த பூமியை விட்டுச் சென்றால், உலகத்தினர் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்து கொள்ள முடியாது. இயேசு, “படுக்கையில் படுத்திருக்கும் இருவரில் ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்” என்றார். அது இரவில் நிகழ்கின்றது. “வயலில் இருவர் வேலை செய்து கொண்டிருப்பார்கள்”, பூமியின் மற்றைய பாகத்தில் அப்பொழுது பகலாயிருக்கும். “ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான் மற்றவன் கைவிடப்படுவான். நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்”. 378 நினைத்துப் பாருங்கள். எல்லாமே அப்பொழுது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும். அப்பொழுது “அந்த ஊழியக்காரர் எங்கோயோ சென்று விட்டார்; அவர் திரும்ப வரவில்லை என்ற பைத்தியக்காரனமான செய்தி மெதுவாகப் பரவும். ஒருக்கால் அவர் வேட்டையாட காட்டுக்குப் போயிருப்பார். அவர் இனி திரும்ப வரமாட்டார், என்று கூறிக் கொள்வார்கள். இந்த நபர் எங்கோ சென்றுவிட்டார். என்ன சம்பவித்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அந்தப் பெண் எங்கோ காணமற் போய்விட்டாள். உங்களுக்குத் தெரியுமா, ஒருக்கால் யாராவது அவளை—அவளை மானபங்கப்படுத்திவிட்டு நதியில் எறிந்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அவள் யாருடனும் இல்லை” என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். ஒரு கோடி மக்களில் ஒரு மனிதனுக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழ்ந்து விட்டது என்று தெரிந்து கொள்ள வகையில்லை. எடுத்துக்கொள்ளப்படுதலில் பங்கு பெற்றவர்களுடன் அறிமுகமான யாராவது ஒருவர் “அந்த பெண் காணாமற்போனாள். ஏனென்று எனக்குச் சற்றும் புரியவில்லை; அவள் அவ்விதமாக வீட்டை விட்டு இதுவரை வெளியேறினதேயில்லை” என்று இவ்விதமாகச் சொல்லக் கூடும். இல்லை. பாருங்கள்.

185379 அவர்கள், “கல்லறைகள் திறக்கும்” என்று கூறும்போது, கல்லறைகள் எப்படித் திறக்கப் போகிறது? நான் சொல்ல விரும்பினதைப் பற்றி பேச எனக்கு—எனக்கு இப்பொழுது அவகாசமில்லை. ஆயினும் தேவனுடைய எளிமையை உங்களுக்கு காண்பிக்க ஒரு சில காரியங்களை மாத்திரம் கூறுகிறேன். பாருங்கள்? நம் சரீரம் கால்ஷியம், பொட்டாஸியம் இவைகளால் உண்டாக்கப்பட்டுள்ளது. சரீரம் அழியும்போது இவையெல்லாம் சேர்ந்து ஒரு கரண்டியளவுதான் உள்ளது. அது உண்மை. இது மறுபடியும் உயிர்த்தெழுதலில் ஜீவனைப் பெறுகிறது. தேவன் பேசும்போது எடுத்துக்கொள்ளப்படுதல் சம்பவிக்கும். தேவதூதர்கள் இறங்கி வந்து, மண் வெட்டியினால் கல்லறைகளிலுள்ள மண்ணை அகற்றி, அதனுள்ளிலிருந்து ஒரு செத்த பிணத்தை எடுப்பார்கள் என்றவிதமாய் அது அங்கே இருக்கப் போவதில்லை. அது என்னவாயிருக்கிறது? முதலாவதாக இந்த சரீரம் பாவத்தில் பிறந்தது. ஆனால் புதிய ஒன்றோ, உயிர்த்தெழுதலில் அளிக்கப்படுவது அதற்கு ஒப்பான ஒரு புது சரீரம். உங்களுக்குத் தெரியும், பாருங்கள்? இந்த சரீரத்தை நாம் அப்பொழுது பெற்றுக்கொண்டால், நாம் மறுபடியும் மரிப்போம். பாருங்கள்? நீங்கள், “கல்லறைகள் திறக்கப்படும். மரித்தோர் அவைகளினின்று வெளியே நடந்து வருவர்” என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் திறக்கும் என்று கூறுகிறவிதமாக அது திறக்காது. புரிகிறதா? அது உண்மை. பார்த்தீர்களா, அது அந்தவிதமாயிருக்காது. 380 அது இரகசியமாக நிகழும். ஏனெனில் அவர் “இரவில் திருடன் வருகிற விதமாய் வருவார்.” எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து அவர் ஏற்கனவே நமக்குக் கூறிவிட்டார்.

186381 அதன்பின்னர் நியாயத்தீர்ப்பு தாக்கும். பாவம், வாதைகள், வியாதிகள் போன்றவை தாக்கும். நியாயத்தீர்ப்பின் நேரத்தின்போது, ஜனங்களோ மரணம் தங்களுக்கு நேரிட வேண்டும் என்று கதறுவர். “கர்த்தாவே, முதலில் எடுத்துக்கொள்ளப்படுதல் சம்பவிக்கும் என்று நீர் கூறியிருக்கும்போது, பின்னை ஏன் இந்த நியாயத்தீர்ப்பு இப்பொழுது எங்கள்மேல் விழ வேண்டும்?” என்று அவர்கள் கூக்குரலிடுவர். 382 அவர் அதற்கு “எடுத்துக்கொள்ளப்படுதல் ஏற்கனவே சம்பவித்துவிட்டது. நீங்கள் அதை அறியவில்லை” என்பார். பாருங்கள்? தேவன் தம்மை எளிமையில் மறைத்துக்கொள்ளுதல். ஓ, என்னே! அது சரி. “அவ்வளவுதான், அது ஏற்கனவே சம்பவித்து விட்டது. நீங்கள் அதை அறியவில்லை”. 383 விசுவாசிகள் ஏன் அவருடைய வருகையை அறிவிக்கும் எளிய அடையாளங்களை நம்புவதில்லை? 384 அவர்கள் சூரியன் மத்தியான வேளையில் இருளடையும், சந்திரன் அஸ்தமிக்கும் போன்றதாக வேதத்தில் உரைக்கப்பட்டுள்ள இந்த எல்லாக் காரியங்களையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவிதமாக காரியங்கள் யாவுமே சம்பவிக்கத்தான் போகிறது. அதை விவரிக்க நமக்கு இப்பொழுது சமயமிருந்தால் நலமாயிருக்கும்…அவையெல்லாம் எதைக் குறிக்கின்றன, என்பதைப் பற்றி நான் இங்கு குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன். இவ்வாரம் முத்திரைகள் உடைக்கப்படுதலைப் பிரசங்கிக்கும் போது, இவைகளையும் குறித்து சிந்திக்கலாம். பாருங்கள், பாருங்கள்? அது ஏற்கனவே சம்பவித்திருந்தும், நீங்கள் அதை அறிந்திருக்கவில்லை என்று இங்கே கூறப்பட்டுள்ளது. பாருங்கள், கர்த்தருடைய தூதன் முத்திரைகளை நமக்காக உடைத்துத் தருவார், அது மறை பொருளான ஏழு இடி முழக்கங்களால் முத்தரிக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கட்டும். புரிகிறதா?

187385 இப்பொழுது என்ன? ஒரு எளிய கூட்டத்தார் கொண்டுள்ள எளிமையையும், தேவனுடைய அடையாளங்களின் சத்தத்தையும் ஜனங்கள் ஏன் விசுவாசிக்க முடியவில்லை? ஏன் அவர்களால் அதை விசுவாசிக்க முடியவில்லை? ஆதி முதற்கொண்டு அது அவ்வாறே நிகழ்ந்து வருகிறது. வெளிப்படுத்தப்படுகின்ற உண்மையான தேவனுடைய வார்த்தை. அவர்கள் அதிகக் கல்வி அறிவு படைத்து சாமாத்தியம் கொண்டதன் விளைவாக எளிய ரூபத்திலான எழுதப்பட்ட வார்த்தையை விசுவாசிக்க மறுக்கின்றனர். அவர்கள் அதற்கு தங்களுடைய சொந்த வியாக்கியானத்தை அளிக்க விரும்புகின்றனர். “இதன் அர்த்தம் இப்படியல்ல, அதற்கு அர்த்தமும் அதுவல்ல” என்கின்றனர். பாருங்கள்? ஆனால் அதன் கருத்து அதுதான்.

188386 கவனியுங்கள். நான் இதை துரிதமாகக் கூறுவேனாக. இந்த ஸ்தலத்தில் இங்கே தேவன் எனக்கு அருளின தரிசனங்களும்கூட தவறாக அர்த்தங் கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாகத்தான், “ஒலி நாடாக்களில் (Tapes) என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் சொல்லுங்கள், தரிசனங்கள் என்ன கூறுகின்றனவோ அதை மாத்திரம் கூறுங்கள்” என்று ஒலிநாடாக்களில் நான் கூறுவதை நீங்கள் கேட்கிறீர்கள். நீங்கள் நன்றாக விழித்திருந்தால் ஒன்றை உங்களால் காணமுடியும். பாருங்கள்? நான் அதை என் கையில் பிடித்து உங்களுக்குக் காண்பிக்க வேண்டியதில்லை என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? பாருங்கள்? பாருங்கள்? நீங்கள்…அது—அது இங்குள்ளது. நாம் முடிவில் இருக்கிறோம். பாருங்கள்? ஆம் ஐயா, கல்வி அறிவு படைத்த சாமர்த்தியமுள்ளவர் அதைத் தவறவிடுகின்றனர். அது ஜனங்களுடைய தலைகளை கடந்து செல்லுமளவிற்கு எளிமையான இந்த தரிசனங்கள், எளிமையான விதத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன. பாருங்கள்? 387 நான் வேட்டையாடச் செல்லும்போது என்ன நேரிடும் என்பதை நான் தரிசனத்தில் கண்டு உங்களுக்கு முன் கூட்டியே அறிவித்தேன். ஆனால் அது ஜனங்களை இடறச் செய்தது. அந்த முக்கிய நோக்கத்திற்காகவே தேவன் அங்கு என்னை அனுப்பினார். நான் திரும்பி வந்து, அதைச் சரியாக வியாக்கியானித்தேன். அவ்வாறே என் தாயின் மரணத்தையும், இன்னும் நேரிடவிருந்த காரியங்களும் தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது. அப்பொழுது அது நிகழ்வதற்கு முன்னதாகவே நான் வந்து கூறினேன். அவர் எனக்கு தரிசனத்தில் காண்பித்தவாறே அவை யாவும் சம்பவித்தன. பாருங்கள்?

189388 யோவானும் வனாந்திரத்திலிருந்து வெளியே வந்து, “நான் மேசியாவல்ல…நான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்?” என்று அறிக்கை செய்தான். 389 அவனுடைய சீஷர்களே இயேசுவிடம், “வேதபாரகர்கள் ஏன் இவ்விதம்…எலியா முதலில் வரவேண்டுமென்று வேதம் போதிக்கின்றதே” என்று கேட்டனர். பாருங்கள்? தேவனுடைய எளிமை. ஜனங்களுக்கு தலைகீழ் பாடமாக அமைகிறது. 390 நான் இதை எடுத்துக் கூறி, பின்னர் முடித்துவிடுவேன். தேவனுடைய ஒத்தாசையினால் நான் முடித்துவிடுவேன். புரிகிறதா? கவனியுங்கள். இப்பொழுது நாம் இதை விவரித்துக் கூறுவோம். நான் உங்களை இவ்வளவு நேரம் வைத்துக் கொண்டதற்காக வருந்துகிறேன். ஆனால் இன்னும் சில மணி நேரங்களில் நாம் மறுபடியும் இங்கு கூடப் போகிறோம்.

190கவனியுங்கள், நாம் சாதாரண ஒரு துளி எழுதும் மையை (Ink) எடுத்துக் கொள்வோம். 391 ஒவ்வொரு காரியமும் ஒரு நோக்கத்திற்காக அமைந்திருக்கிறது. இன்று காலையில் நீங்கள் ஒரு நோக்கத்திற்காகவே இங்கே கூடி வந்திருக்கிறீர்கள். நான் சாரிலி, உங்கள் வீட்டில் உண்டதும், நெல்லி நீங்கள் எனக்கு சமைத்துப் போட்டதும் ஒரு நோக்கத்திற்காகவே. நான்…ஒவ்வொரு காரியமும் ஒரு நோக்கத்திற்காகவே அமைந்துள்ளது. இந்த சபை ஒரு நோக்கத்திற்காகவே கட்டப்பட்டுள்ளது. எந்தக் காரியமும் ஒரு நோக்கமில்லாமல், ஒரு காரணமில்லாமல் அமைந்திருக்கவில்லை.

191392 சாதாரண ஒரு துளி எழுதும் மையை நாம் எடுத்துக்கொள்வோம். நான் கூறுவதை உங்களால் கேட்க முடிகிறதா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] நாம் சாதாரண ஒரு துளி மையை எடுத்துக்கொண்டு, அதைக் கவனிப்போம். அது என்ன? ஒரு துளி மை. அது எங்கிருந்து வந்தது? சரி. இப்பொழுது நாம் இந்த துளி மையை எடுத்துக் கொள்வோம். அது கறுப்பாய் உள்ளது என்று நாம் வைத்துக் கொள்வோம். அது ஒரு நோக்கத்திற்காக உள்ளது. நான் சிறையிலிருந்து விடுபட எனக்களிப்படும் மன்னிப்பை அதைக்கொண்டு எழுதலாம். நான் மரண தண்டனை அடைந்தால் அதனின்று விடுபட அவசியமான மன்னிப்பின் பத்திரத்தை அந்த மையைனால் எழுதலாம். அது சரியா? அது யோவான் 3:16-ஐ எழுதி, அதை நான் விசுவாசிப்பதன் மூலம் என் ஆத்துமாவைக் காக்கமுடியும், அது உண்மைதானே? [“ஆமென்”] அல்லது என்னுடைய மரண தண்டனைக் கட்டளையை அது எழுத முடியும். பார்த்தீர்களா? நியாஸ்தலத்திலே எனக்கு ஆக்கினைத் தீர்ப்பை அது எழுத முடியும். அது ஒரு நோக்கத்திற்காகவே உள்ளது. அது சரிதானே? [“ஆமென்”] 393 நாம் அந்த மைத் துளியை நோக்கிப் பார்த்து, அது எங்கிருந்து வருகிறது என்பதைக் காண்போம். இப்பொழுது அது மை. ரசாயனங்கள் ஒன்றோடொன்று சேர்க்கப்பட்டு மை உண்டாக்கப்பட்டது. அது கறுமை நிறமாயிருக்கிறது. அது உங்கள் ஆடைகளின் மேல் விழுந்தால் கறைபடியும். 394 ஆனால் அந்த கறையைப் போக்குவதற்கு ஒருவகை ரசாயனத்தை நாம் உபயோகப்படுத்துகிறோம். பெண்களாகிய நீங்கள் க்ளோராக்ஸ் பீளிச் (Clorox Bleach) என்னும் வெண்மையாக்கும் திரவத்தை உபயோகிக்கிறீர்கள். இந்த ரசாயனம் நிரம்பிய ஒரு தொட்டியில் ஊற்றினால், அந்த மையிற்கு என்ன சம்பவிக்கின்றது? பாருங்கள்? ஏன்? அந்த வெண்மையாக்கும் திரவமானது இரசாயனங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், அது அந்த மையை நீங்கள் கண்டுபிடிக்க முடியாத வகையில் அதின் நிறத்தைச் சிதைத்து விடுகின்றது. அந்தத் துளி மையும் எங்கேயோப் போய்விடுகிறது. அந்த மையை மறையச் செய்யும் ரசாயனத்தின் ஒரு பாகம் தண்ணீராகும்.

192395 தண்ணீர் H2 0, ஹைட்ரஜன் வாயும், பிராண வாயும் ஒன்று சேர்வதனால் உண்டாகிறது. இவ்விரண்டு வாய்ப்புகளும் வெடிக்கும் தன்மை வாய்ந்தவை. அவை உண்மையாகவே ரசாயனப் பொருட்கள். அந்தவிதமாகத்தான் அது உள்ளது, அது உண்மை, அவை ரசாயனப் பொருட்கள், இரசாயனப் பொருட்கள். இப்பொழுது அவை ஒன்று சேரும் போது தண்ணீராக மாறுகிறது. தண்ணீரை ரசாயனப் பொருட்களாகப் பிரிக்கும்போது இவ்விரண்டு வாய்ப்புகளும் கிடைக்கின்றன. 396 இப்பொழுது ரசாயன சாஸ்திரிகள் ஒருகால் இங்கு உட்கார்ந்துகொண்டிருக்கலாம். இப்பொழுது நான் அதைக் கூற விரும்புகிறேன், ஏனென்றால் ரசாயன சாஸ்திரிகள் இங்கு உட்கார்ந்துகொண்டு ஒருக்கால் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கலாம். அந்த ரசாயன விதிமுறை (Formula) என்ன என்பதை நான் அறியேன். ஆனால் என் தாழ்மையான முறையில் தேவன் அவரை அதில் வெளிப்படுத்துவார் என்னும் நம்பிக்கையுடன் இதை நான் விவரிக்க விரும்புகிறேன்.

193397 கவனியுங்கள். நான் அந்த மையை வெண்மையாக்கும் திரவத்தில் போடுகிறேன். என்ன சம்பவிக்கிறது? உடனடியாக அந்த கறுமை நிற கறை மறைந்துவிடுகிறது. நீங்கள் அந்த நிறத்தை மறுபடியும் கண்டுபிடிக்க முடியாது. அது போய்விடுகிறது. நீங்கள் அதை ஒருபோதும் காணமாட்டீர்கள். என்ன சம்பவித்தது? இப்பொழுது அதிலிருந்து ஒன்றும் வெளிவர நீங்கள் காண்பதில்லை. நீங்கள் காண்கிறதில்லை. உங்களால் ஏன் காண முடிவதில்லை? அது இரசாயன பொருட்களாக உடைந்த காரணத்தால்தான். 398 இப்பொழுது, “அது அதனுடைய மூல அமிலங்களாக மாறிவிட்டது” என்று விஞ்ஞானம் கூறும். 399 அமிலங்கள் எங்கிருந்து வந்தன? பாருங்கள்? நல்லது, நீங்களோ, “அது குறிப்பிட்ட காரியங்களிலிருந்து வந்தன” என்று கூறலாம். சரி. உதாரணமாக, “அது புகையிலிருந்து வந்ததாக வைத்துக் கொள்வோம்”. இந்த புகை எங்கிருந்து வந்தது? நல்லது, நாம், “அது மூலக் கூறுகள் (Molecules) ஒன்று சேர்ந்தனால் உண்டானது” என்று கூறலாம். இந்த மூலக் கூறுகள் எங்கிருந்து வந்தன? “அணுக்களிலிருந்து,” இந்த அணுக்கள் எங்கிருந்து வந்தன? “மின்னணுக்களிலிருந்து.” இந்த மின்னணு எங்கிருந்து வந்தன? “இயலுலக ஒளியிலிருந்து” பாருங்கள், இப்பொழுது இவ்விதமாய் நீங்கள் ரசாயனங்களைக் குறித்து ஆராய்ந்து பார்க்கலாம். எனவே அது ஒரு பொருளும், சிருஷ்டிப்புமாயிருந்தால், அது ஒரு சிருஷ்டிகரிடத்திலிருந்தே வரவேண்டும்.

194400 ஆகையால் நீங்கள் இங்கு தற்செயலாக உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை, நானும் உங்களைத் தற்செயலாக பன்னிரெண்டு முப்பது அல்லது ஒரு மணிவரை வைத்துக் கொண்டிருக்கவில்லை. “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்”. பாருங்கள்? அதற்கொரு காரணம் உண்டு. நீங்கள் விசுவாசிப்பதற்கு ஒரு காரணம் உண்டு. நீங்கள் விசுவாசியாமலிருப்பதற்கு ஒரு காரணமுண்டு. அந்த கறுப்புநிற மையைப் போல. 401 இப்பொழுது நாம் அதனைப் பிரித்துப் பார்ப்போம். முதலாவதாக, நாம் மீண்டும் மூலக் கூறுகள் வரையில் (Molecules) வருவோம். இப்பொழுது நாம் மூலக்கூறு ஒன்றிற்கு ஒன்பது மூலக் கூறுகள் என்ற விகிதத்தில் சேர்த்தால் பன்னிரண்டு மூலக் கூறுகளாகின்றன. இப்பொழுது அது 11 என்று இருந்தால், சிகப்பு நிறம் உண்டாகும். ஆனால் அது—அது கறுப்பு நிறமாக இருக்க வேண்டுமானால் 12 ஆக இருக்க வேண்டும். 402 இப்பொழுது நாம் மூலக் கூறிலிருந்து அணுவிற்குப் போவோம். அது அணு 9 6 +4 3 என்று சேர்த்தால் அது 16 11 அணுக்குச் சமமாகின்றது. அது 16 12 ஆக இருந்தால், இரத்தாம்பர நிறம் உண்டாகும். புரிகிறதா? இப்பொழுது நீங்கள் அதைத் தொடர்ந்து பிரித்துக் கொண்டே செல்லுங்கள்.

195403 இவ்விதமாக நாம் பிரித்துக்கொண்டே போனால் ஆரம்பத்தில் அங்கே ஏதோ ஒன்றிருந்ததை அது காண்பிக்கிறது. அது சிருஷ்டிப்பு என்று சாதாரண பொது அறிவே நமக்கு வெளிப்படுத்தும். அப்படியென்றால், அங்கே சிருஷ்டிகர் அதற்கு இருக்க வேண்டும். அது சிருஷ்டி கர்த்தரிடத்திலிருந்து வெளிப்பட்டது. இவ்வாறு வித்தியாசமானவைகளாய் இருக்கும்படி தீர்மானிக்கப்பட்டதாய் இருந்தது. ஆனால் இவ்வாறு அணுக்கள் B16 க்கு, 12, 14 மற்றவை எதுவோ அவைகளை விஞ்ஞானத்தினால் உண்டாக்க முடியாது. தேவன்தான் அதைச் செய்ய வேண்டியிருந்தது. 404 அதாவது சிருஷ்டி கர்த்தர் அந்த நுணவான பொருட்களை உண்டாக்கி அவை ஒன்று சேர்ந்ததனால் அணுவாக மாறுகின்றன. அணுக்களின் நிலையை அது அடையும்போது விஞ்ஞானம் அதைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றது. அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக் கூறுகளாக மாறும்போது, அணுக்களைவிட மூலக் கூறுகளை நன்றாக விஞ்ஞானிகளால் காணமுடிகிறது. இப்படியே சேர்த்துக் கொண்டே போனால் அவை ரசாயன பொருட்களாக மாறி அவை ஒன்று சேர்க்கப்படுகின்றன.

196405 இப்பொழுது, மனிதன் பாவம் செய்ததற்கு முன்பு…நான் இப்பொழுது முடிக்கப் போகிறேன். ஆகவே நீங்கள் இதைக் காணத் தவற வேண்டாம். மனிதன் பாவம் செய்தபோது, அவன் தேவனிடத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு, அகன்ற பிளவைக் (Chasm) கடந்து மரணத்தின் பாகத்தில் நின்றான். அவன் விட்டுவிட்டான். அவன் பழைய நிலைக்கு வர அவனுக்கு வழியே இல்லாமல் இருந்தது. அவனுக்கு திரும்பி வர வேறு வழியேயில்லை. அவன் அவ்வாறே செய்துவிட்ட போது, அதன் பின்பு தேவன் ஆட்டுக் குட்டி, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தை பிளவின் இப்பாகத்தில் ஆதாம் பேசிய அல்லது ஆபேல் குறிப்பிட்டதைப் பாவப் பிரகாரமாக ஏற்றுக் கொண்டார். 406 அந்தப் பக்கத்திலே, அவன் ஒரு தேவ புத்திரனாயிருந்தான். அவன் தேவனுடைய சந்ததியாயிருந்தான். அவன் பூமியின் சுதந்தரவாளியாய் இருந்தான். அவனால் இயற்கையை கட்டுப்படுத்த முடிந்தது. அவனால் சிருஷ்டிக்க முடிந்தது. ஏன், அவன் தாமே ஒரு சிருஷ்டிகராய் இருந்தான். அவன் தேவனுடைய சந்ததியாயிருந்தான்.

197407 ஆனால் அவன் பிளவைக் கடந்த மாத்திரத்தில் அவன் புத்திரத்துவத்தை இழந்தான். அவன் தன் சுபாவத்தில் பாவியாக ஆனான். அப்பொழுது அவன் சாத்தானின் கைகளுக்கும் ஆளுகைக்கும் உட்பட்டான். 408 தேவன் பலியின் மூலம் சிந்தப்பட்ட இரத்தத்தின் இரசாயனத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் பாவத்தை போக்கவில்லை, அது பாவத்தை மூடினது. என் கையில் ஒரு சிவப்புப் புள்ளி இருந்தது, அதை ஒரு வெள்ளையால் மூடினால், அப்பொழுதும் அந்த சிவப்புப் புள்ளி இன்னும் அங்கேயேதான் இருக்கிறது. பாருங்கள். அது அங்கேயேதான் இருக்கிறது. 409 ஆனால் தேவன் பாவத்தைப் போக்க பரலோகத்திலிருந்து வெண்மையாக்கும் திரவத்தை அனுப்பினார். அதுதான் தம் சொந்தக் குமாரனின் இரத்தமாயிருந்தது. நாம் பாவங்களை அறிக்கையிடும்போது, பாவம் தேவனுடைய வெண்மையாக்கும் திரவத்தில் விழுவதால், அது முற்றிலுமாக மறைந்து விடுகிறது. அதை மறுபடியும் காணமுடியாது. பாவத்தின் வர்ணம் இவ்விதமாக காலந்தோறும் மறைந்து, கடைசியில் அது நம்மைக் குற்றப்படுத்தும் சாத்தானைத் தாக்கி, நியாயத் தீர்ப்புநாள் வரைக்கும் அது அவன் மேல் தங்கியிருக்கும்.

198410 தேவபுத்திரனுக்கு சம்பவிக்கிறது என்ன? அவனுக்கு எதிரான பாவத்தின் நினைவுகூறுதல் என்பதே இல்லாமல், பிளவின் மறுகரையில் நிற்கும் பிதாவுடன் மறுபடியும் பரிபூரண ஐக்கியம் கொள்கிறான். அவன் பாவத்தின் கறை என்பதே இனிமேல் எங்கேயும் காணமுடியாது. அவன் சுயாதீனனாயிருக்கிறான். அல்லேலூயா! அந்தக் கறுப்பு மையானது ஒருபோதும் இனி கறுப்பாகவே இருக்க முடியாது, ஏனென்றால் அது உடைக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகிறது. அதுபோல அறிக்கை செய்யப்பட்ட பாவமானது, தோய்க்கப்படும்போது… அதாவது ஒரு மனிதனின் பாவமோ அல்லது ஒரு ஸ்திரீயின் பாவமோ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் மூழ்க்கப்படும்போது, அது பாவத்தின் அறிகுறிகள் யாவற்றையும் கொன்றுவிடுகின்றது. பாவத்தின் ஒவ்வொரு மூலக்கூறும் சாத்தானண்டை திரும்பிச் சென்று, நியாயத் தீர்ப்பின் நாள் வரைக்கும் அவன் மேல் தங்கியிருக்கும். அந்த நாளில் அவன் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான். அப்பொழுது அந்த பிளவு அடைக்கப்பட்டு, அவனுடைய பாவம் மறுபடியாக நினைக்கப்படுவதில்லை. அதன் பின்பு மனிதன் நீதிமானாக்கப்பட்டவனாக தேவபுத்திரனாக ஏற்றுக் கொள்ளப்படுவான். எளிமை.

199411 மோசே காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தின் கீழ் தேவனுடைய வார்த்தை உண்மையென வாயினால் அறிக்கையிட்டான். தேவன் இந்த எளிய மனிதனைத் தெரிந்தெடுத்து அவருடைய வார்த்தையை அவன் வாயிலே போட்டார். அவன் யேகோவாவின் ஊழியக்காரன் என்பதனை நிரூபித்தான், ஏனென்றால் அவனால் அங்கே நடந்து செல்ல முடிந்தது, யேகோவா அவனுடன் தரிசனத்தின் மூலம் பேசினார். அவன் நடந்து சென்று தன் கைகளைக் கிழக்கு திசைக்கு நேராக நீட்டினான். 412 தேவன் அவனுடன் பேசினார் என்பது இப்பொழுது நினைவிருக்கட்டும். அது தேவனுடைய சிந்தையாயிருந்தது. தேவன் மனிதனை உபயோகிக்கிறார். தேவன் அவனுடன் பேசினார். அது சரி. அவர் “உன் கையிலிள்ள தடியை கிழக்கு திசைக்கு நேராக நீட்டு, வண்டுகள் உண்டாக்கக்கடவது என்று சொல்” என்றார்.

200413 வெள்ளாட்டுக் கடா, ஆடு இவைகளின் இரத்தத்தின் கீழிருந்த மோசே கீழ்த்திசைக்குச்சென்று தன் தடியை அதற்கு நேராக நீட்டி, “வண்டுகள் உண்டாக்கக்கடவது என்று கர்த்தர் உரைக்கிறார்” என்றான். அதற்கு முன்பு அவர்கள் வண்டுகளைப் பற்றி கேள்விப்பட்டதேயில்லை. அவன் நடந்து சென்று விட்டான். அது ஏற்கனவே உரைக்கப்பட்டாயிற்று. அது ஒரு சிந்தையாயிருந்து, இப்பொழுது அது பேசப்பட்டு, அது வெளிப்படுத்தப்படுகிறது. அப்பொழுது அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. அது காளை அல்லது வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்தின் கீழிருந்து ஒரு எளிமையான மனித உதடுகளின் மூலம் வெளி வந்தது. 414 முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவன் பேசிய மாத்திரத்தில் ஒரு பச்சை வண்டு அங்கு பறந்து வந்தது. அதற்கடுத்த காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒவ்வொரு கெஜத்திற்கும் ஐந்து பவுண்டு எடையுள்ள வண்டுகள் காணப்பட்டன. அது என்ன? அதுதான் சிருஷ்டினாகிய மோசேயின் மூலம் பேசப்பட்ட தேவனுடைய வார்த்தையாகும். ஏனெனில், அவன் காளை, வெள்ளாட்டுக்கடா இரத்தத்தின் கீழ் தேவனுடைய சமூகத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் சொந்த வார்த்தைகள் அவனுடைய வார்த்தையல்ல.

201415 “நீங்கள் என்னிலும் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்கு அருளப்படும்” இன்றைக்கு சபை எங்கு நின்று கொண்டிருக்கிறது? 416 “தவளைகள் உண்டாகக்கடவது”. அந்த நாட்டில் ஒரு தவளையும் இல்லாதிருந்தது. ஒரு மணி நேரத்திற்குள் சில இடங்களில் பத்து அடி ஆழத்திற்கு தவளைகள் உண்டாயிருந்தன. அது என்ன? அதுதான் சிருஷ்டி கர்த்தராகிய தேவன் ஒரு சாதாரண மனிதனுக்குள் மறைந்திருத்தலாகும். 417 இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். பாவத்தைப் போக்காமல் அதை மூடின காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் ஒரு மனிதனை தேவனுடைய சிருஷ்டிப்பின் வார்த்தையைப் பேசி வண்டுகளை சிருஷ்டிக்கும் நிலையில் வைக்குமானால், பாவத்தை முற்றிலும் போக்கும் வெண்மையாக்கும் திரவமாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம், ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையைப் பேசி, ஒரு அணிலைச் சிருஷ்டிக்கச் செய்யும் போது ஏன் இடறுகிறீர்கள்? 418 நீங்கள் அதைக் குறித்து தடுமாற வேண்டாம். எளிமையைக் கண்டு நீங்கள் இடற வேண்டாம். அவர் இன்னும் தேவனாக இருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள் ஓ, என்னே! பாவமன்னிப்பாயிற்றே! ஓ! நான் எவ்வளவாய் விரும்புகிறேன்… 419 மாற்கு 11.22, “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து, நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்”.

202420 என்னே! நான் குறிப்புகள் எதிய மூன்று, நான்கு பக்கங்கள் இன்னும் உள்ளன. நாம் அதை நிறுத்த வேண்டியதாயுள்ளது. உங்களுக்கு நன்றி. 421 தேவன் தம்மை எளிமையில் மறைத்துக்கொள்கிறார். உங்களால் அதை காண முடியவில்லையா? எங்கோ ஏதோக் காரியம் தவறாய் உள்ளது. எங்கோ ஏதோக் காரியம் தவறாய் உள்ளது. தேவன் ஒன்றை அறிவிக்கும்பொழுது. அவரால் பொய் சொல்ல முடியாது. அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். பாருங்கள்? அவர் எளிமையில் மறைந்திருக்கிறார். அது மிகவும் எளிமையாய் உள்ளது. 422 கல்விமான்களும் மேதைகளும், “ஆ, அது…ஓ, அது வசீகரணம் அல்லது ஏதோ ஒன்று. உங்களுக்குத் தெரியுமா, அது ஒரு…” என்கின்றார்கள்.

203423 தேவன் தாமே கடந்த காலத்தின் இயக்கங்களுக்கு பரந்தகன்று பாய்ந்து சென்று அங்கு சம்பவித்தது என்னவென்று சரியாகக் கூறுகிறவறாயிருக்கிறார். நீ இப்பொழுது எப்படியிருக்கிறாய் என்றும், சில காலம் கழித்து நீ எப்படியிருப்பாய் என்றும் அவரால் அப்படியே கூறமுடியும். அது இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகிய வெண்மையாக்கும் திரவத்தினால் (Bleach) மாத்திரமே சாத்தியமாகிறது, அவர் ஒரு பாவியின் பாவத்தை அந்த வெண்மையாக்கும் திரவத்தினால் போக்குகிறார். அதனால் அவன் தேவனுடைய சமூகத்தில் நிற்கிறான். 424 “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால். நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்”. 425 “நீங்கள் ஏன் என்னைக் குற்றப்படுத்துகிறீர்கள்? ஓ, தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் தீர்க்கதரிசிகள், தேவர்களென்று உங்கள் சொந்த பிரமாணம் சொல்லவில்லையா? பின்னை நான் தேவகுமாரன் என்று என்னைக் கூறும்போது, என்னை ஏன் குற்றப்படுத்துகிறீர்கள்” அவர்கள் அதைக் காணத் தவறுகின்றனர். அவர்கள் அதைக் காணத் தவறுகின்றனர்.

204426 இப்பொழுது, சபையே, இன்று இரவு முதல் பிரசங்கிக்கவிருக்கும் செய்திகளில் அதைக் காணத் தவற வேண்டாம். பாருங்கள்? நாம் வாழும் இந்த நாட்களை அறிந்து கொள்ளுங்கள். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் உங்கள் பாவங்களை வெகுதூரம் அப்புறப்படுத்தி, அவை தேவனுடைய நினைவில் கூட இல்லை என்பதனை நினைவு கூருங்கள். அவருடைய இரத்தம் எல்லா கறையும் போக்குகிறது. “பாவம் சிவந்த கறையை விட்டிருந்தது அவரோ அதை உறைந்த மழையைப்போல் வெண்மையாக்கினார். எனவே சிங்காசனத்தின் முன்பாக அவரில் நான் பூரணனாக நிற்பேன்”

205427 ஓ, என்னே! நான் எப்படி பூரணமாக முடியும்? நான் எங்ஙனம் பூரணமாக முடியும்? இரத்தத்தின் மூலமாக அன்றி என்னால் அவர் கூடாது. எனக்கும் தேவனுக்குமிடையே அந்த இரத்தம் நிற்கிறது. நான் அதை ஏற்றுக்கொண்டேன். அவர் அதை போட்டார்…நான் ஒரு பாவி, ஆனால் அவர் தேவன். ஆனால் இரத்தத்தின் ரசாயனம் எங்களுக்கிடையே நின்று, பாவத்தைக் கொன்று போடுகிறது. தேவன் அந்த—அந்த வெண்மையாக்கும் திரவத்தில் உள்ள தண்ணீரின் (Bleach) வெண்மையைப் போன்று என்னை வெண்மையாக் காண்கிறார். என் பாவம் அறவே போய்விட்டது. அது தேவனிடத்தில் சேரவும் முடியாது. ஏனெனில் அங்கே ஒரு பலி இருக்கிறது.

206428 தேவனுடைய எளிமையான வார்த்தையை விசுவாசிப்பதற்கான நம்முடைய விசுவாசம் எங்கே? தேவன் என்னைக் கூறினாரோ, அவரை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக் கொள்ளுங்கள். தேவன் இப்பொழுது எளிமையில், தாழ்மையான சிறு கூட்டத்தினருக்குள் தம்மை மறைத்திருக்கிறார். ஆனால் இந்நாட்களில் ஒன்றில் அவர் கடந்த நாட்களில் தம்மை எப்போதும் வெளிப்படுத்தி வந்தவிதமாகவே தம்மை வெளிப்படுத்துவார். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே.

207429 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] என்னே! அவர் அற்புதமானவரல்லவா? [“ஆமென்”] நான் நம்புகிறேன், நீங்கள் அழகொப்பனை வாய்ந்த சொல் நியமிக்க காரியங்களுக்கு எதிர்நோக்கியிராதபடிக்கு இந்த செய்தி உங்களை மாற்றும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் தேவனை மகத்துவமுள்ளவராகக் காணும்போது, அவர் எவ்வளவு தாழ்மையுள்ளவர் என்பதை நினைவு கூருங்கள். அப்பொழுது நீங்கள் தேவனைக் காண்பீர்கள். அவரை நோக்கிப் பார்க்க வேண்…

208430 எலிசா குகைக்குச் சென்றபோது, அங்கு புகை, இரத்தம், இடி முழக்கம், மின்னல் போன்றவை உண்டாயின. இன்றைக்கும் முகத்திலும், கைகளிலும் இரத்தம் தோன்றப் பண்ணுதல் போன்ற உணர்ச்சிகள் நம்மிடையே காணப்படுகின்றன. ஆனால் அவ்வித உணர்ச்சிகள் அந்த தீர்க்கதரிசியைத் தொல்லைப்படுத்தவில்லை. அவன் அந்த மெல்லிய சத்தத்தை கேட்கும் வரையில் அவன் அங்கு படுத்துக்கொண்டிருந்தான். (அது என்ன?) அதுதான் வார்த்தை. அதன்பின்பு அவன் தன் முகத்தை மூடிக் கொண்டு வெளிவந்தான். பாருங்கள், அதுதான்.

209431 நினைவிருக்கட்டும், நண்பனே, மகத்தான பெரிய காரியங்களை நோக்கிப் பார்க்க வேண்டாம்…நீங்களோ, “மகத்தான பெரிய காரியங்களை குறித்து தேவன் பேசுகிறார். இந்த, அந்த அல்லது மற்ற பெரிய காரியங்கள் சம்பவிக்கும் காலம் வரும்” என்று கூறலாம். நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? “மகத்தான, பெரிய காரியங்கள், பாருங்கள்! ஓ, அது நிறைவேறும்போது, இதைப் போன்று மகத்தானதாய், மிகப் பெரியதாயிருக்கும்”. 432 ஆனால் பெரிய காரியங்கள் என்று அழைக்கப்படுபவை உண்மையாக சம்பவிக்கும்போது, அது மிகவும் எளிமையாக அமைந்திருப்பதன் காரணமாக நீங்கள் அதைக் கண்டுகொள்ளாமல் இழந்து போவீர்கள். பாருங்கள்? நீங்கள் திரும்பிப் பார்த்து, “நல்லது, அது சம்பவிக்கவில்லையே…” என்று சொல்வீர்கள். பாருங்கள், அது உங்கள் முன்னிலையில் நடந்தது. ஆனால் நீங்கள் அதைக் கண்டு கொள்ள முடியவில்லை. அது நடந்தது. பாருங்கள்? அது மிகவும் எளிமையாயிருந்தது. பாருங்கள்? தேவன் தம்மை மகத்துவமுள்ளவராக வெளிப்படுத்த எளிமையில் ஜீவிக்கிறார். பாருங்கள். அவரை மகத்தானதாக்குகிறது எது? அவர் தம்மை தாழ்த்துவதன் மூலமேயாகும். 433 ஒரு பெரிய மனிதன் தன்னைத் தாழ்த்திக் கொள்ள முடியாது. அவன் கனம் வாய்ந்தவனாக இருந்தாக வேண்டும். பாருங்கள்? அப்படியானால் அவன் போதிய அளவுக்குப் பெரியவனாகவில்லையென்று அர்த்தமாகிறது. அவன் அந்நிலையை அடையும்போது, இந்தவிதமாய் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான். நீங்கள் பாருங்கள்.

210434 ஒரு சமயம் சிக்காகோவிலுள்ள அந்த வயோதிப பரிசுத்தவான் இவ்விதம் கூறினார். “அந்த மனிதன் கல்வியறிவு பெற்றவனாய் மேலே சென்று, மீண்டும் வரும்போது தோல்வியடைந்தவனாய் தலைகுனிந்து கீழேயிறங்கி வந்தான். அவன் எம்முறையில் கீழே இறங்கி வந்தானோ அவ்விதம் மேலே சென்றிருந்தால் அவன் மேலே சென்றவிதமாய் கீழே இறங்கி வந்திருப்பான்.” நல்லது, அது சரி. பாருங்கள்? 435 உங்களைத் தாழ்த்துங்கள். தாழ்மையுள்ளவர்களாய் இருங்கள். வினோதமானவர்களாக இருக்க முயலவேண்டாம். இயேசுவை நேசியுங்கள். பாருங்கள்? “கர்த்தாவே, என் இருதயத்தில் கபடு இருந்தால், என்னிடம் ஏதாவது தவறு காணப்பட்டால், பிதாவே, நான் அவ்விதம் இருக்க விரும்பவில்லை. நீர் அதை களைந்துபோடும். நான் அவ்விதம் இருக்க விரும்பவில்லை. ஓ, கர்த்தாவே, அந்த நாளிலே அவர்களில் ஒருவராக எண்ணப்பட நான் விரும்புகிறேன். அந்த நாள் சமீபித்து வருகிறதை நான் காண்கிறேன்” என்று கூறுங்கள். 436 இந்த முத்திரைகளைத் துவங்கப் போவதை பாருங்கள், தேவன் அவைகளை நமக்கு திறந்து தருவார். அவர் மாத்திரமே அதைச் செய்ய முடியும் என்பது நினைவிருக்கட்டும். நாம் அவர் பேரில் சார்ந்திருக்கிறோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

211437 நாம் இன்று பிற்பகல் மறுபடியும் சந்ததிக்குமுன், நம்முடைய போதகர் உங்களுக்கு சில வார்த்தைகளைச் சொல்லுவார் என்று நான் நினைக்கிறேன். ஆராதனை…நான் நினைக்கிறேன், போதகரே, பாடல் ஆராதனை ஆறு முப்பது மணிக்கு துவங்கும் அல்லவா? அது… [சகோதரன் நெவில், “ஆறு முப்பது மணிக்கு துவங்கும்” என்கின்றார்.—ஆசி.] ஆறரை மணிக்கு. அது… [“ஆறு மணிக்கு கதவுகள் திறக்கப்படும்.”] கதவுகள் ஆறு மணிக்குத் திறக்கப்படும். பாட்டு ஆராதனை ஆறரை மணிக்கு ஆரம்பிக்கப்படும். 438 கர்த்தருக்குச் சித்தமானால், இன்று இரவு ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புஸ்தகம் என்ற பொருளில் நான் பேசுவேன். அதன்பின், திங்கள் இரவு வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்பவனைக் குறித்தும், செவ்வாய் இரவு…கறுப்புக் குதிரையின் மேல் சவாரி செய்பவனைக் குறித்தும், புதன் இரவு, சாம்பல் நிறக் குதிரை, மங்கின நிறமுள்ள குதிரை, சிவப்பு குதிரையின் மேல் சவாரி செய்பவனைக் குறித்தும் பேசுவேன். அதன்பின் நான்கு, ஐந்து, ஆறு முத்திரைகள், அதன்பின் ஞாயிறு இரவு… அடுத்த ஞாயிறு காலையில் சுகமளிக்கும் ஆராதனை இருக்கலாம். அதை நான் அறியேன்.

212439 இப்பொழுது ஞாபங் கொள்ளுங்கள். தேவனுடைய ஊழியத்திற்கென்று நம்மையும், இந்தச் சபையையும் நாம் பிரதிஷ்டை செய்துள்ளோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 440 நான்—நான் ஒரு மணி நேரம் தாமதமாக்கிவிட்டேன் நீங்கள் என்னை மன்னிப்பீர்களா? [சபையார் “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நான்—நான் செய்கிறதில்லை, பாருங்கள், நான் அவ்விதமாக தாமதப்படுத்த வேண்டுமென்று கருதவில்லை. ஆனால், பாருங்கள், நான்—நான் இந்த வாரம் உங்களிடமிருந்து, பின்னர் உங்களை விட்டு நான் மீண்டும் பிரிந்து செல்ல வேண்டியுள்ளது. நான் எங்கு செல்வேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் நடத்துகிற இடத்திற்குச் செல்வேன். நான் உங்களுடன் நித்தியத்தைக் கழிக்க விரும்புவதால், எனக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு நிமிடத்தையும் உங்களிடம் வைக்க நான் விரும்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, சகோதரன் நெவில். 