மூன்றாம் முத்திரை

63-0320

மல வணககம, நணபரகள. நம இபபழத ஜபததறகக சறற நரம எழநத நறபமக. நம நமமடய தலகள வணஙகவம. 2 எஙகள பரலக பதவ, அநதஅநத அழகன படல நஙகள கடகமபத, நர அரகல இரககறர எனபத கரததவ நஙகளநஙகள நனததக கணடரககறம. கரததவ, இனறரவ நர எஙகள உம பளளகளக ஏறறககணட, எஙகள பவஙகளயம, தபபதஙகளயம மனனதத, நஙகள தவயளள ஜனஙகளய இரககறபடயல, உமத ஆசரவதஙகள எஙகளகக அரளவணட

மூன்றாம் முத்திரை

63-0320ஜெபர்ஸன்வில் இந்தி1321963-03-20

மூன்றாம் முத்திரை

63-0320ஜெபர்ஸன்வில் இந்தி1321963-03-20

1 மாலை வணக்கம், நண்பர்களே. நாம் இப்பொழுது ஜெபத்திற்காக சற்று நேரம் எழுந்து நிற்போமாக. நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். 2 எங்கள் பரலோக பிதாவே, அந்த—அந்த அழகான பாடலை நாங்கள் கேட்கும்போது, நீர் அருகில் இருக்கிறீர் என்பதை கர்த்தாவே நாங்கள்—நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, இன்றிரவு நீர் எங்களை உம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு, எங்கள் பாவங்களையும், தப்பிதங்களையும் மன்னித்து, நாங்கள் தேவையுள்ள ஜனங்களாய் இருக்கிறபடியால், உமது ஆசீர்வாதங்களை எங்களுக்கு அருளவேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 3 நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிற இம்மகத்தான வேளையில், வருடந்தோறும் உலகமானது அந்தகாரமாகிக்கொண்டே செல்வத்தை நாங்கள் காண்கிறோம். கர்த்தர் தம்மை வார்த்தையின் மூலமும் தம்மை வெளிப்படுத்துகிற காரணத்தால், அவருடைய வருகை பிரகாசமடைந்து வருவதையும் நாங்கள் உணருகிறோம். கர்த்தாவே இந்த புஸ்தகத்தின் இந்த மூன்றாம் முத்திரையை நீர் எங்களுக்கு திறந்து, நாங்கள் என்ன செய்யவேண்டுமென்றும், எப்படி ஜீவிக்க வேண்டுமென்றும், எப்படி சிறந்த கிறிஸ்தவர்களாய் இருக்க வேண்டும் என்பதை நீர் எங்களுக்கு வெளிப்படுத்தித்தர வேண்டும் என்பதற்காக நாங்கள் ஜெபிக்கும்படியாகவே, கர்த்தாவே, இன்றிரவு, மீண்டுமாய் இந்த கூட்டத்திற்கு நாங்கள் வருகை தந்துள்ளோம்.

24 இன்றிரவு இங்கு கூடியுள்ள கிறிஸ்தவரல்லாத ஒவ்வொருவரும் உம்மைக் குறித்த அவர்களுடைய தேவையை நீர் அவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும் என்று தேவனே நான் ஜெபிக்கிறேன். பரலோகப் பிதாவே, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர் யாவரும் முன்பிருந்ததைக் காட்டிலும் உம்மில் இன்னும் அதிகமாக நெருங்கி ஜீவிக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும், அதுவே கிறிஸ்தவ அன்பின் ஐக்கியத்திலும் விசுவாசத்திலும் நாங்களெல்லாரும் நிலைநிற்கவும் எங்களுக்கு ஏதுவாயிருக்குமென நான்—நான் ஜெபிக்கிறேன். 5 கர்த்தாவே, எங்கள் மத்தியில் நோயுற்றுள்ள எல்லாரும் இன்றிரவு சுகமடைய அருள் செய்யும். உம்மை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். பிதாவே, உம்முடைய கனத்திற்கென்று, மகிமைக்கென்று இங்கு நடப்பவைகளையும், பேசப்படுபவைகளையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் இயேசுவின் நாமத்தில் இவைகளைக் கேட்டுகொள்கிறோம். ஆமென்.

36 நல்லது, இன்றிரவு—இந்தவார இந்த புதன்கிழமை இரவரன்று—நாமெல்லாரும் மறுபடியும் கூடிவந்துள்ளோம். கர்த்தர் தாமே தம் மகத்தான ஆசீர்வாதங்களை அவருடைய வார்த்தையின்மேல் பொழிவார் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். வழக்கப்படி நான் இன்று படித்துவிட்டு, உங்களிடம் எடுத்துக்கூறுவதற்குப் பொருத்தமானவை எவையென்று யோசித்துக்கொண்டே, வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த கர்த்தருடைய வார்த்தைக்கு உண்மையான விளக்கத்தையும் அர்த்தத்தையும் எனக்களிக்க அவர் பேரில் சார்ந்திருந்தேன். இவ்வாரத்தில் அவர் நமக்குச் செய்துள்ள யாவற்றிற்கும்…இந்த முத்திரைகளைத் திறந்ததற்காக அவருக்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.

47 இப்பொழுது, ஞாயிறு காலை…இது ஒருவேளை நன்மையான காரியமாக இருக்கலாம். நீங்கள் அறிவீர்கள், அநேக சமயங்களில்… நாம் கூறியுள்ளவை தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் இவைகளைக் குறித்த கேள்விகள் உங்கள் மனத்தில் எழுந்தால், அவைகளை எழுதி நான் அது என்னவென்று காணும்படியாக அடுத்த சனி இரவு இங்குள்ள மேசையின்மேல் வைத்துவிடுங்கள். நான் அவைகளைப் படித்துவிட்டு, கர்த்தருக்குச் சித்தமானால், ஞாயிறு காலையன்று பதிலுரைக்க முயற்சிப்பேன். நாம் என்ன திட்டமிட்டுக் கொண்டிருந்தோமோ, அதைவிட இது நன்மையாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். ஏனெனில், அது சில சமயங்களில் தவறாக புரிந்துகொள்ளப்படுகின்றது. எனவே நான் அதை சரிபடுத்துவது மேலானதாயிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது என்னவாய் இருக்க வேண்டுமோ அந்தவிதமாவே அது இருக்கும். காரணம், சில சமயம், இப்பொழுது…

58 இன்று ஒருவர் என்னை அணுகி, “எடுக்கப்படுதலின்போது ஜெபர்ஸன்வில் பட்டிணத்திலிருந்து ஒருவரும், நியூயார்க் பட்டிணத்திலிருந்து ஒருவரும் மாத்திரமே எடுக்கப்படுவாரென்றும், மற்றவரெல்லாம் அயல் நாடுகளிலிருந்து எடுக்கப்படுவர்” என்று கேட்டார். ஆகவே, நீங்கள் பாருங்கள்? அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாகும். வேறொருவர், “சனியிரவு கடைசி முத்திரையை கர்த்தர் நமக்கு திறப்பாரேயானால், அப்பொழுது ஞாயிறு காலையில் இங்கே வந்துவிடுவார்” என்றார். பாருங்கள்? எனவே அது ஒரு—அது ஒரு…நீங்கள் பாருங்கள், நீங்கள்—நீங்கள்…அது அவ்வாறில்லை. உங்களால் முடியாது…அது அல்ல. 9 நாம் அதை அறியோம். யாராவது அவர் எப்பொழுது வருவாரென்று அறிந்துள்ளதாக உங்களிடம் கூறினால், அவர்கள் ஆரம்பத்திலேயே தவறாயிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் அதை எவருமே அறியார். ஆனால் அவர் இன்றைக்கு, இப்பொழுதே வந்துவிடலாம் என்பது போன்று நாம் நினைத்து வாழ வேண்டும்.

610 நீங்கள் ஆயத்தமாக இருக்க வேண்டுமென்பதற்காக, ஒரு நிமிடம் நான் இதை இவ்விதமாக கூறப்போகிறேன். அவருடைய கால அளவின்படி, இயேசு இன்னும் மூன்று நிமிடங்களுக்குள் வந்து விடுவாரென்று நான்—நான் நம்புகிறேன், அது எவ்வளவு காலமென்று தெரியுமா? சுமார் முப்பத்தைந்து வருடங்கள். பாருங்கள், அவருடைய பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் ஒரு நாள் போல உள்ளது. நீங்கள் பாருங்கள்? 11 எனவே அப்போஸ்தலனும் இங்கே, “காலம் சமீபித்துவிட்டது” என்றும், “காலம் சமீபமாயிற்று” என்று கூறுவதைக் கேட்கிறீர்கள். அதை வெளிப்படுத்தின விசேஷத்தில் அப்போஸ்தலன் கூறினான். அது எவ்வளவு காலம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது…அது தேவனுக்கு நேற்று கழிந்த நாள்போலுள்ளது. அவருடைய கால அளவின்படி அவர் வருகையின் நேரம் வந்துவிட்டது என்று கூறப்பட்டு இன்னும் இரண்டு நாட்கள் ஆகவில்லை. 12 ஆகவே பாருங்கள், அவர் வருகைக்கு மூன்று நிமிடங்களைவிட குறைவான நேரம் உள்ளது. பாருங்கள். மூன்று நிமிடங்கள் என்பது அவருக்கு எவ்வளவாய் உள்ளது; நமக்கு அது முப்பது வருடங்களுக்குச் சமானம். அவர் வருவதற்கென சிங்காசனத்தைவிட்டு அவர் ஏற்கனவே எழுந்துவிட்டார். ஆகையால் நாம், நீங்கள்…சில சமயங்களில் நீங்கள் இங்கே வாசிக்கையில், அவர் தம்முடைய வார்த்தையின் கருத்தின்படி பேசுகிறார், பாருங்கள், நம்முடைய கருத்தின்படியல்ல.

713 நாளை இரவு அவர் வருவாரென்று நான் ஒருகால் அறிவேனானால், நாளை இரவு பிரசங்கிக்கவிருக்கும் நான்காம் முத்திரையைக் குறித்த செய்தியை அருளுமாறு அவரிடம் கேட்டு, நாளை இரவு இங்கு வந்து உங்களுக்கு அதைப் பிரசங்கிப்பேன். பாருங்கள்? அவர் வரும்போது நான்—நான் என்னை செய்துகொண்டிருக்க வேண்டுமென்று விரும்புகிறேனா, அதையே நான் ஒவ்வொருநாளும் செய்துகொண்டிருப்பேன். அவர் வரும்போது எனக்களிக்கப்பட்ட உத்தியோகத்தின் ஸ்தானத்தில் நான் கனப்படுவதைத் தவிர வேறு சிறந்த ஸ்தானம் எதுவுமில்லை, பாருங்கள், ஆகையால் அவர் வரும்வரையில் நாம் தொடர்ந்து உத்தியோகத்தில் நிலைத்திருத்தல் அவசியம். 14 சில சமயங்களில் நாம் சற்றே படிக்கும்போது, ஆகவே, இப்பொழுது, மிக கவனமாக இருங்கள். நீங்கள் படிக்கையில்,. ஒலிநாடாக்களைப் பெற்று, அவைகளை கவனமாக கூர்ந்து கேளுங்கள். ஏனெனில், நீங்கள் அதை ஒலிநாடாவில் கேட்கலாம். ஏனெனில் அவைகள் திரும்பி போட்டு கேட்கப்படும்போது, அவைகள் உண்மையாகவே நல்லமுறையில் பதிவு செய்யப்பட்டு, மிகத் தெளிவாக இருக்கின்றன. எனவே நீங்கள் அதைத் தெளிவாகக் கேட்கலாம்.

815 இப்பொழுது கிறிஸ்துவில் அன்பு கூறுகிறவர்களே! நீங்களெல்லாரும் கிறிஸ்துவை நேசிக்கிறவர்கள் என்று இன்றிரவு நான் நம்புகிறேன். 16 சில நேரங்களில் ஜனங்களை குழப்பமுறச் செய்வது எது என்பதை நான் உங்களுக்கு கூறவுள்ளேன். சிலர் ஆராதனையில் செய்தியின் முதல்பாகத்தைக் கேட்காமல், தாமதித்து வந்து பிரசங்கத்தின் முதலாம் பாகத்திலிருந்து சில குறிப்புகளையோ அல்லது யாரையாவது நான் குறை கூறுவதையோ மாத்திரம் கேட்பதனால், அவர்கள் குழப்பமுற்று, முரண்பட்ட காரியங்கள் பிரசங்கிக்கப்பட்டதாக எண்ணுகின்றனர். ஆனால் அது—ஆனால் அது உண்மையன்று. 17 ஆகையால் நீங்கள் புரிந்து கொள்ள முடியாத ஏதாவது ஒன்றைக் குறித்த கேள்வி இருக்குமானால், அதை நீங்கள் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி சனிக்கிழமை இரவுக்குள்ளாக கொடுத்துவிடுங்கள். உதாரணமாக, “நல்லது. இதன் அர்த்தம் என்னவென்று எனக்குப் புரியவில்லை”, அது எனக்கு சற்று புதிராக உள்ளது என்று நீங்கள் எழுதிக் கொடுக்கலாம். நான் என்ன கருதுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். கர்த்தருக்குச் சித்தமானால், ஞாயிறு காலையன்று நான் அவைகளுக்குப் பதிலுரைக்க முயல்வேன்.

918 இப்பொழுது இன்ன்றிரவு நாம் இந்த ஆசீர்வதிக்கப்பட்டுள்ள பண்டைய வார்த்தையிலிருந்து மறுபடியுமாக 6 -வது அதிகாரத்தில் வாசிக்கப்போகிறோம். நாம் இன்றிரவு மூன்றாம் முத்திரையைத் துவங்கப் போகிறோம். அது 5 -வது, 5 -வது 6 -வது வசனங்களில் உள்ளது. 19 நாளை இரவு குதிரை சவாரி செய்யும் நால்வரைக் குறித்தும் வெள்ளைக்குதிரை, சிவப்புக்குதிரை, கறுப்புக் குதிரை, மங்கின நிறமுள்ள குதிரை இவைகளைக் குறித்து தியானித்து முடித்திருப்போம்.

1020 ஆகவே, நான் இதைக் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் நாளின் அன்றாட நடவடிக்கைகள் துவங்குவதற்கு முன்பாகவே அதிகாலையில் நான் எழுந்து ஜெபிக்க ஆரம்பித்து விடுகின்றேன். நாள் முழுவதும் ஜெபத்தில் தரித்திருக்கிறேன். இன்று விடியற்காலை, பரிசுத்த ஆவியானவர் நானிருந்த இடத்தை அடைந்து, எல்லாவற்றையும் வெளியரங்கமாக்கினார். இந்த முத்திரை முற்றிலுமாகத் திறக்கப்பட்டதை நான்—நான் கண்டேன். இப்பொழுது—இப்பொழுது—இப்பொழுது நான் பேசுவதை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறாரென்று நானறிவேன். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 21 இப்பொழுது ஏதோ ஒரு காரியம் சம்பவித்துக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பாருங்கள், முக்கியமான ஒரு காரியம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் கிரகித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான்—நான் நம்புகிறேன். பாருங்கள், ஏதோ ஒன்று சம்பவித்துக் கொண்டு வருகின்றது. அது நடந்தேறுவதற்கு முன்பாகவே அதில் ஏதோ ஒன்றை அவர்களால் கண்டுகொள்ள முடியுமா என்று இந்த சபையை ஒருமுறை நான் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன். இப்பொழுது, உங்களிடம் நான் என்ன கூறியிருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நினைவில் கொள்ளுங்கள். ஆகவே இப்பொழுது கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக.

1122 இப்பொழுது 5-ம் வசனத்தில், அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.

1223 இம்முத்திரையைக் குறித்து சிந்திக்கும் முன்பாக, இதுவரை முத்திரைகளைக் குறித்தி தியானித்தவைகளை நாம் அதற்கு ஆதாரமாகச் சற்று சிந்தித்து, அவைகளை இம்முத்திரையுடன் ஒன்றுக்கொன்று சம்மந்தப்படுத்துவோம். வேதத்திலுள்ளபடியே சபையின் காலங்களும் அவ்வாறே ஒன்றுக்கொன்று பொருந்துகின்றன. ஏணியில் ஏறுவது போன்று, ஒவ்வொரு படியாக ஏறுவது, நீங்கள் ஒவ்வொரு அடியாக ஏறுகையில் கீழிருந்து மேல்வரை ஒவ்வொன்றிற்கும் தொடர்புண்டு.

1324 இப்பொழுது இந்த முத்திரைகள்…இது ஒரு—முத்திரிக்கப்பட்டுள்ள மீட்பின் புத்தகமாயுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் புரிந்து கொள்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] மீட்பின் புஸ்தகம் ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டுள்ளது. இது ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட புஸ்தகம். பாருங்கள்? 25 ஆகவே இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். நான் எரேமியா தீர்க்கதரிசன புஸ்தகத்திலிருந்து உங்களுக்கு எடுத்துக் காண்பித்தேன். அவர்கள் காகிதத்தில் இவ்விதம் எழுதி…ஒரு காகிதத்தில் அல்ல, சரியாகக் கூறினால், காகிதத்தில் அல்ல, ஆனால் அது ஒரு தோலில் இருந்தது. [சகோதரன் பிரான்ஹாம், தாள்களைக் கொண்டு ஒரு சுருளானது எவ்விதம் சுருட்டப்பட்டு முத்திரிக்கப்படுகின்றது என்பதை விளக்கிக் காட்டுகின்றார்.—ஆசி.] இப்பொழுது அது…எனவே அவர்கள் அதை இந்தவிதமாக சுருட்டி வைத்திருந்தனர். அதன் முனை இவ்வாறு விடப்பட்டது. அது என்னவென்பதை அம்முனை பாகம் குறிக்கும். அடுத்த ஒன்றும் அதேவிதமான நிலையில், அதேவிதமாக சுருட்டப்படுகிறது. அவ்விதம் ஒவ்வொன்றுமாக சுருட்டப்பட்டு, அதன் முனை தெரியுமாறு, அது கிழிந்ததுபோன்று விடப்பட்டிருந்தது.

1426 நல்லது, அதுதான் ஏழுமுத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட புஸ்தகமாகும். தற்போது நம்மிடம் புஸ்தகங்கள் உள்ளது போன்று அக்காலத்தில் கிடையாது. பழைய காலங்களில் புத்தகங்கள் சுருள்களாய் இருந்தன. அவைகள் சுருட்டப்பட்டிருந்தன. அப்பொழுது அவர்கள் அதிலிருந்து ஒரு பொருளை அல்லது எதையாவது வாசிக்க வேண்டுமென்றால்… வேதம் இவ்விதமாக சுருட்டப்பட்டிருந்தால், அதிலிருந்து ஏசாயாவின் புஸ்தகத்தை நீங்கள் படிக்க வேண்டுமானால், அப்பொழுது நீங்கள் ஏசாயா என்று எழுதப்பட்ட முனைக்குத் திருப்பி சுருளைப் பிரித்து, அதைப் படிக்க வேண்டும். இது ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட மீட்பின் புத்தகமாகும். 27 ஆகவே, இப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் புறப்பட்டு வந்து, சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய கரத்திலிருந்து புஸ்தகத்தை எடுத்து, ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று கருதி, முத்திரைகளை அவிழ்க்கிறார் என்று நாம் கண்டறிகிறோம். 28 சபையின் காலங்களைக் குறித்து நாம் சிந்தித்தபோது நாம் கண்ட அதே நான்கு ஜீவன்கள்—அவைகளை வேதம் முழுவதிலும் நாம் காணலாம்—அவைகள்தான் இந்த முத்திரை உடைக்கப்படுதலை அறிவிப்பு செய்கின்றன. இப்பொழுது, இது ஒரு—ஒரு மீட்பின் புஸ்தகம் என்பதை நாம் காண்கிறோம்.

1529 பின்பு, மீட்பின் இனத்தானின் (kinsman redeemer) ஊழியம் என்னவென்பதை பார்த்து, அவரை கண்டுகொண்டோம். இப்பொழுது இத்தனை வருடங்களாக கிறிஸ்து மீட்பின் இனத்தானின் ஊழியத்தை செய்துகொண்டுவருகிறார். இப்பொழுது அதைப் புரிந்துகொண்டவர்கள் எல்லோரும் “ஆமென்” என்று சொல்லுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அவர் மீட்பின் இனத்தானின் ஊழியத்தை செய்து கொண்டு வருகிறார். 30 ஆனால் அவருடைய மீட்பின் ஊழியம் முடிவடையப்போகும் தருணம் ஒன்று வரும். ஆகவே மீட்பின் ஊழியம் முடிவிற்கு வருகையில் அப்பொழுது அவர் தற்போது அமர்ந்திருக்கும் தேவனுடைய சிங்காசனத்தை விட்டுப் புறப்படுவார். அது அவருடைய சிங்காசனமல்ல. “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்கானத்திலே உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்”. ஆகையால் அவர் வீற்றிருப்பது அவருடைய சிங்காசனமல்ல, அது ஆவியாகிய தேவனுக்குச் சொந்தமானது. அது ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்துவுக்குச் சொந்தமானதல்ல. அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். பாருங்கள், ஆவியாகிய தேவன்தான் மாம்சத்தில் வெளிப்பட்டார். இப்பொழுது அவர் சிங்காசனத்தை விட்டு எழுந்திருக்கிறார்…

1631 முதலாவதாக, “மீட்பின் புஸ்தகத்தைப் பெற்றுக்கொள்ளப் பாத்திரவான் யார்?” என்னும் அறிவிப்பு விடப்பட்டது: பாருங்கள், ஆதாமிலிருந்து முழு மீட்பின் திட்டம், ஆதாம் இழந்த எல்லாம். 32 ஆதாம் வரையிலும் ஒன்றும் இழக்கப்படவில்லை. ஆதாமுக்குப் பிறகு பூமியிலுள்ள யாவும் இழக்கப்பட்டன. பூமியினுடைய சிருஷ்டிப்பு யாவும் இழக்கப்பட்டன. ஆதாமுடன் சர்வசிருஷ்டியும் எல்லாவற்றையும் இழந்து, ஆதாமுடன் பாவத்தில் விழுந்து, திரும்ப வரக்கூடாதப்படிக்குப் பிளவைக் கடந்தன, வழியே இல்லாதிருந்தது. மனிதன் பாவம் செய்தபோது, அவன் தன் வழியை விட்டுவிட்டான். அவன் திரும்பவும் வரமுடியாத அளவிற்கு தனக்காக எந்த ஒரு வழியுமே விட்டுவைக்கவில்லை. ஆகவே அப்பொழுது அந்த…

1733 திவ்ய வாசகனாகிய யோவான், தீர்க்கதரிசியாகிய யோவான் இந்தக் கேள்வி கேட்கப்படுவதைத் தரிசனத்தில் காண்கிறான். வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைப் பார்க்கவும்கூட பாத்திரவானாயில்லை. பாருங்கள்? இப்பொழுது அதைக் குறித்து சற்று சிந்தனை செய்யுங்கள்! அப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் முன்வந்து, அவரே புஸ்தகத்தை எடுக்கிறார். யோவான், இனி அழாதபடிக்கு கேட்டுக்கொள்ளப்பட்டான். “புஸ்தகத்தை வாங்கவும் அதைத் திறக்கவும் யூதா கோத்திரத்தின் சிங்கமானவர் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்று ஒரு மூப்பன் கூறினான். யோவான் சிங்கத்தைக் காணத் திரும்பிப் பார்த்தபோது, அவன் ஒரு ஆட்டுக்குட்டியைக் கண்டான். மூப்பனானவன் அழைத்து, “சிங்கமானவர் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்றான். ஆனால் அவன் வந்து பார்த்தபொழுது, சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிற ஒரு ஆட்டுக்குட்டியைக் கண்டான்.

1834 இப்பொழுது யோவான் அதற்கு முன்பு இந்த ஆட்டுக்குட்டியானவரைக் காணவில்லை. ஏன்? அவர் இரத்தம் தோய்ந்தவராய், உலகத்தோற்றத்துக்கு முன்பு ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிருக்கும் கடைசி ஆத்துமா உட்பிரவேசிக்கும் வரை, மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து, ஜனங்களுக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருந்தார். அநேகர் அதில் உட்பிரவேசித்திருப்பார்கள். அவ்வளவுதான். மற்றவர்கள் உட்பிரவேசிக்க விரும்பக்கூட மாட்டார்கள். அவர்களுக்கு உட்பிரவேசிக்க வேண்டும் என்ற வாஞ்சையே கிடையாது. ஆகவே, கடைசி ஆத்துமா உட்பிரவேசித்த பின்பு, மீட்கப்படும் சமயம் முடிவடைகிறது.

1935 அப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் தாம் மீட்டுள்ளவர்களை சொந்தமாக்கிக்கொள்ள புறப்பட்டு வருகிறார். உலகமும் சர்வசிருஷ்டியும் அப்பொழுது அவருக்குச் சொந்தமாகும். பாருங்கள்? அவர் தமது சொந்த இரத்தத்தினால் அவைகளை மீட்டிருக்கிறார். அப்புஸ்தகத்தை எடுத்து அதை திறப்பதற்கென அவர் புறப்பட்டு வரும்போது…ஏன்? யோவான் பின்பு அழவேயில்லை. அவன் அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கும் ஆட்டுக்குட்டியைக் கண்டான். அது ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தது. ஆனால் அது மறுபடியுமாக உயிரோடிருந்தது. அடிக்கப்பட்டிருக்கும் ஆட்டுக்குட்டியானது முழுவதுமாக இரத்தத்தால் தோய்ந்திருந்தது என்று நாம் அறிந்துகொண்டோம். அது அடிக்கப்பட்டிருந்தது. அது அடிக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு அது மறுபடியுமாக உயிரோடெழுந்தது. அது சிங்காசனத்தில் வீற்றிருந்தது, இந்தவிதமாக உட்பிரவேசிக்க வேண்டிய ஆத்துமாக்களுக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறது. கடைசி நபர் உட்பிரவேசிக்கும் வரை, தேவன் மீட்பின் புஸ்தகத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும். பாருங்கள்? இப்பொழுது அவர் மீட்பின் இனத்தானின் ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கிறார்.

2036 போவாஸ் புறப்பட்டு சென்றபோது, ரூத் அங்கே அமர்ந்து போவாஸிற்காக காத்துக் கொண்டிருந்ததுபோன்றே, போவாஸ் இனத்தான் மீட்பின் ஊழியத்தை செய்து கொண்டிருந்தான் என்றே நான் குறிப்பிட்டுக் கூறுகிறேன். ரூத்தைப் பற்றி சமீபத்தில் நான் பிரசங்கித்தது நினைவிருக்கிறதா? ரூத் தானியத்தைச் சேர்த்தல்…ரூத், அவன் என்ன செய்தாலும், கடைசி காரியம் ரூத் காத்துக்கொண்டிருத்தல். இச்சரித்திரத்தை நான் சபையுடன் எப்படி ஒப்பிட்டுப் பேசினேன் என்பது நினைவிருக்கிறதா? போவாஸ் மீட்பின் இனத்தானின் ஊழியத்தைச் செய்து தன் பாதரட்சையைக் கழற்றிப்போட்டு, உறிதிப்படுத்தி, நகோமியை மீட்டெடுத்து, அவள் மூலம் ரூத்தை அடைந்தான். இப்பொழுது, ரூத் ஏற்கனவே பணிசெய்து, அதன்பின் காத்துக்கொண்டிருந்தாள். அவள் செய்ய வேண்டிய யாவையும் செய்து முடித்த பின்னர் காத்துக்கொண்டிருந்தாள். அவ்வாறே ஆட்டுக்குட்டியானவர் மீட்பின் இனத்தானின் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும்போது, சபையின் (அநேகர், அநேகர் பூமியின் தூளில்) நித்திரையடைந்து மீட்கப்படுவதற்கென காத்துக்கொண்டிருக்கின்றனர்.

2137 இப்பொழுது உலகம் இன்னும் மோசமாகிக்கொண்டே செல்கின்றது. பாவம் அதிகரித்து குவிந்துக் கொண்டு வருகிறது. அதன் விளைவால் வியாதியும் துன்பமும் மரணமும், துயரமும் உண்டாகின்றன. தேவனற்ற மனிதரும், தேவனற்ற ஸ்திரீகளும் மரித்துக் கொண்டிருக்கின்றனர். புற்றுநோய் மற்றும் பல வியாதிகள் அவர்களை அரிக்கும்போது, அதற்குரிய சுகத்தை பெற்றுக்கொள்ள போதிய விசுவாசமில்லாமல் மரித்துப்போகின்றனர். 38 இப்பொழுது கவனியுங்கள். பரிந்து பேசுதல் ஊழியம் முடிவடைந்த பின்னர், அவர் புறப்பட்டுவந்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய கரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்குகிறார். அப்பொழுது யோவானும் பரலோகத்திலுள்ள மற்றவரும் களிகூறுகின்றனர். பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் கூச்சலிடுகின்றனர். நாம் அதை மீண்டும் ஆறாம் முத்திரையில் காணலாம். எப்படியாய் அவர்கள் களிகூர்ந்தனர். மூப்பர்கள் தாழ விழுந்து பரிசுத்தவான்களின் ஜெபங்களைத் தரையில் ஊற்றுகின்றனர். பலிபீடத்தின் கீழேயுள்ள ஆத்துமாக்கள். “நீர் பாத்திரவானாயிருக்கிறீர். நீர் தேவனுக்கென்று எங்களை மீட்டுக்கொண்டீர். நாங்கள் பூமிக்குச் சென்று ராஜாக்களும் ஆசாரியர்களுமாய் வாழுவோம்” என்று சத்தமிட்டனர். ஓ, அது அங்கே மகத்தானதாய் இருந்தது…

2239 யோவான், “பரலோகத்திலுள்ள யாவரும், பூமியின் கீழுள்ள அனைவரும்” தேவனுக்கு ஏறெடுத்த துதியைத் தான் கேட்டதாக கூறுகிறேன். உங்களுக்குத் தெரியுமா? யோவான் தன் பெயர் அதில் எழுதப்பட்டிருப்பதை அங்கே கண்டிருக்க வேண்டும். அந்த நேரத்தில்! 40 அப்பொழுது அந்த மூப்பன், “அவர் மீட்பின் புஸ்தகத்தை வாங்கிக்கொள்ள பாத்திரவானாயிருக்கிறார்” என்றான். அவர் அதை வாங்கிய பிறகு அது மீட்பருக்கு சொந்தமானதாகிறது. மீட்பரே அந்த மீட்பின் ஊழியத்தைச் செய்து முடித்திருக்கிறார். 41 இப்பொழுது, அவர் செய்தது யாதென்பதை சபைக்குக் காண்பிக்கப்போகிறார். ஆமென். பாருங்கள்? அவர் புஸ்தகத்தை வாங்கின போது…ஆனால் அந்த புஸ்தகம் மூடப்பட்டிருந்தது. அதிலுள்ள இரகசியம் யாருக்கும் தெரியவில்லை. அது மீட்பின் புஸ்தகம் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் அது கடைசி நாட்களில் வெளிப்படுத்தப்பட வேண்டியதாயுள்ளது. வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரத்தின்படி அதற்குரிய செய்தி ஏழாம் தூதனால் அளிக்கப்படவிருக்கிறது. ஏனென்றால், “ஏழாம் சபையின் தூதன் எக்காளம் ஊதும் நேரத்தில், அவன் எக்காளம் ஊதும்போது, அவன் எக்காளம் ஊதுவதனால் தேவரகசியம் யாவும் நிறைவேற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இவை யாவும் வெளிப்பட்ட பின்பு கிறிஸ்துவாகிய அந்ததூதன் பரலோகத்திலிருந்து இறங்கிவருகின்றார். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். பூமியில் உள்ள இந்த தூதன், ஒரு செய்தியாளன் ஆவான். 42 கிறிஸ்து இறங்கி வருவதை, நீங்கள் அவரை வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரத்தில் காண்கிறீர்கள். அவர் சிரசின்மேல் வானவில் கொண்டவராய், அக்கினி ஜூவாலை போன்ற கண்களையும் உடையவராய், ஒரு காலை பூமியின் மீதும், மற்றொரு காலை சமுத்திரத்தின் மீதும் வைத்து, கையை வானத்திற்க்கு நேராக உயர்த்தி “இனி காலம் செல்லாது” என்று சதாகாலங்களிலும் உயிரோடிருந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர்மேல் ஆணையிட்டு கூறுகிறார். அவர் இவ்விதம் ஆணையிடும்போது, ஏழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கின.

2343 ஆவிக்குள்ளாகி பரலோகத்துக்கு எடுக்கப்பட்ட யோவான் தான் கண்டவைகளையும் கேட்டவைகளையும் எழுத வேண்டுமென்ற உத்தரவு பெற்றிருந்தான். அவன் அதை எழுத ஆரம்பித்தான். அவர், “அதை எழுதாதே”, என்றார். ஏனெனில்,…“நீ அதை எழுதாதே”. அது…அவர் “அதை முத்திரைப்போடு” என்றார். உள்ளே என்ன? “முத்திரைபோடு. அதைக் கூறாதே”. பாருங்கள் அது வெளிப்பட வேண்டும், ஆனால் அது வார்த்தையானாலும் கூட எழுதப்படவில்லை. 44 ஆகவே அப்பொழுது, ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளைத் திறந்தபோது, அவை யாவும் புதிராயிருந்தன என்பதை நாம் கண்டறிகிறோம். பாருங்கள்? அவர் முதல் முத்திரையைத் திறந்தபோது, “இப்பொழுது அது இன்னார்—இன்னார் சிங்காசனத்தில் அமருவார், நிச்சயமாக இதைச் செய்வார், இது அதைச் செய்யும் என்று இவ்விதமாக கூறும்”, என்று எண்ணியிருந்தான். 45 ஆனால் அதற்குமாறாக ஒரு வெள்ளைக்குதிரையையும் அதின் மேலேறியிருக்கிறவனையும் அவன் காண்கிறான். நல்லது, “குதிரையின் மேலேறியிருக்கிறவன் கையில் ஒரு வில் இருந்தது. சற்றுபின்னர் அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்படுகிறது” என்று கூறினான். அவ்வளவே.

2446 ஆகவே ஆட்டுக்குட்டியானவர் மறுபடியுமாகத் திரும்பி வேறொரு முத்திரையைத் திறந்தபோது, சிவப்பு குதிரையின் மேலிருக்கிறவன் புறப்பட்டுச்சென்றான். “அவனுக்கு ஒரு பட்டயம் கொடுக்கப்பட்டது. அவன் யுத்தம் பண்ணப்போகிறான். பூமியின் சமாதானத்தை எடுத்துப்போடவும், ஒருவரையொருவர் கொல்லத்தக்கதாகவும் அவனுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது”. அவர் முத்திரையைத் திறந்தபொழுது, அது ஒரு இரகசியமான காரியமாயிருந்தது. (அது அவ்வாறிருந்ததல்லவா?) 47 அது தொடர்ந்து, “இப்பொழுது இடிமுழக்கங்களுக்கு சற்று முன்னாளில், இங்குள்ள தேவரகசியம் யாவும் வெளிப்படுத்தப்படுகின்றன,” என்று கூறினது.

2548 இப்பொழுது கவனியுங்கள், சபையின் காலங்களை நாம் ஆராய்ந்து கொண்டே வரும்போது சீர்திருத்தக்காரர் உண்டாயிருந்தனர்—தீர்க்கதரிசிகளல்ல என்று நாம் கண்டறிகிறோம். சீர்திருத்தக்காரர்! ஒவ்வொரு உத்தியோகத்துக்கும் ஒரு பிரத்தியேக ஊழியமுண்டு. 49 தொலைபேசி இயக்குநர் மின்சார வேலை செய்பவராக முடியாது. ஒருக்கால் சிறு மின்சார வேலையை அவர் செய்யலாம். அதற்காக அவரை மின்சார வேலைக்காரனாகக் கருத முடியாது. அவ்வாறே, மின்சாரக்கம்பிகள் அமைப்பதற்கென கம்பம் நடுபவன் மின்சாரக் கம்பிகளை அமைக்க முடியாது. அந்த வேலையை அவன் செய்ய முயற்சிக்காமலிருப்பது நலமாயிருக்கும்; ஆனால் ஒருக்கால் அந்த அலுவலை அவன் சிறிது அறிந்திருக்கலாம்.

2650 ஆனால், கடைசி நாட்களில், சபையின் கடைசி பாகத்திற்கு, வேத வசனங்களின்படி நமக்கு அனுப்பப் போவதாக தேவன் கூறியுள்ளார். நாம் அதை முற்றிலுமாக ஆராய்ந்து பார்த்து, அவர் முன்னுரைத்துள்ள எலியாவின் ஆவி யாரோ ஒரு மனிதனுக்கு திரும்ப வரும்போது, அந்த உண்மையான காரியம் வெளிப்படுத்தப்படும். நாம் அதை முற்றிலுமாக ஆராய்ந்தோம். இப்பொழுது அது வெளிப்படையாய் சொல்லப்பட்டுள்ளது. அது நிகழ்வதற்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். அபிஷேகம் பெற்ற ஒருவர் எங்கேயாவது கடைசி நாட்களில் எழுப்புவார். இப்பொழுது தீவிர மதப்பற்றுள்ள காரியங்களையும், இன்னும் மற்ற எல்லாக் காரியங்களையும் நீங்கள் கேள்பிப்படுவீர்கள். ஆனால் அவை… அது பிசாசாகும். அந்த உண்மை மனிதன் இங்கே தோன்றும்போது, இன்னும் ஜனங்கள் கண்டு சூழ்ச்சியாகும். பாருங்கள், ஆனால் உண்மையான அந்த மனிதன் சரிவர அறிந்து கொள்ளப்படுவான். எலியா பழைய ஏற்பாட்டில் எவ்விதம் இருந்தான் என்பது உங்களுக்குத் தெரியும். இக்காலத்தில் வேறொருவன் அதுபோன்று இருக்கின்றானா என்று கவனித்துக்கொண்டு வாருங்கள். இப்பொழுது தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அவனை அறிந்துகொள்வர்.

2751 மற்றவரல்ல. மற்றவர் அவனை நிச்சயமாகவே அறிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் இலட்சக்கணக்கான மைல்கள் தொலைவில் (a million miles) அதை இழந்து விடுவார்கள். இவையெல்லாம் நாம் சந்தித்துக்கொண்டே வந்தோம். அவர்கள் எவ்வாறு யோவானைக் காணத் தவறினர் என்றும், அவர்கள் எவ்வாறு எலியாவைக் காணத் தவறினர் என்றும், அவர்கள் எவ்வாறு இயேசுவைக் காணத் தவறினர் என்றும், அவர்கள் எவ்வாறு தொடர்ந்து காணத்தவறினர் என்பதையும் காண்பித்தோம். ஆகவே அவர்கள் அதைப் போன்றே செய்வார்கள், ஏனெனில் அவர்கள் அவ்வாறே செய்வார்கள் என்று வேதாகமம் கூறியுள்ளது. பாருங்கள்? அது கடைசி காலத்தில் மிகவும் தாழ்மையும், எளிமையுமாக காணப்படுவதால் ஜனங்கள் அதைக் கண்டு இடறி விழுவார்கள். அது அவர்களுக்கு மிகவும் எளிமையாக அமைந்திருக்கும். நான் காண்பது என்னவெனில்; எப்பொழுதுமே ஜனங்கள் மெருகேற்றப்பட்டவர்களாய் கல்வி ஞானம் பெற்று புத்திசாலிகளாய் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும்போது, அப்பொழுது அதுவே அவர்களை… காணக்கூடாதவாறு இழ்ந்து போகச் செய்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? 52 இயேசு ஒருபோதும் புத்திமான்களையும் கல்விமான்களையும் தம்முடைய சீஷர்களாக (இருக்கும்படி) தெரிந்துகொள்ளவில்லை. படிப்பறியாத ஜனங்களையும், மீன் பிடிப்பவர் போன்றவரையே அவர் தெரிந்துகொண்டார். அவர்கள் அக்காலத்து சபைகளுடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை. அவர் சாதாரண துறையிலுள்ள மனிதரை—சுங்கம் வசூலிப்பவர்கள், குடியானவர்கள், மீன் பிடிப்பவர்கள் போன்றவரையே தம்முடைய ஊழியத்திற்கென்று தெரிந்துகொண்டார். பாருங்கள்? ஏனெனில் அவர்கள்—அவர்கள் தாங்கள் ஒன்று மற்றவர் என்பதை அறிந்திருந்தனர். அப்பொழுதே அவர்களிடத்திலிருந்து ஏதோஒரு காரியத்தை அவரால் உண்டுபண்ண முடியும். அவர்கள் தங்களை ஒன்றுமில்லாதவர்கள் என்று எண்ணும்போது மாத்திரமே தேவனால் கிரியை செய்ய முடியும். 53 ஆனால் அவர்கள் ஏதோஒன்றை அறிந்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளத் துவங்கும்போது, அப்பொழுது, “நீங்கள் அறிய வேண்டியவைகளை ஒன்றையுமே அறிந்துகொள்ளாமல் இருக்கின்றீர்கள்” என்பதாக வேதம் கூறுகிறது. எனவே நாம் அதை கண்டறிகிறோம்.

2854 ஆகவே, இப்பொழுது இந்த இரகசியங்கள் வெளியரங்கமாக வேண்டும் என்பதை நாம் பார்க்கிறோம். 55 நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் போன்றவைகளைப் போதித்த லூத்தர், வெஸ்லி இன்னும் மற்ற அந்த மகத்தான சீர்திருத்தக்காரர், இந்த மனிதர்களானாலும், பெந்தெகொஸ்தே காலத்தினுடாகவுள்ள பரிசுத்த ஆவியின் அபிஷேகம், மற்றும் காரியங்களினாலும் ஏன் இந்த—இந்த செய்திகளை புரிந்துகொள்ள முடியாமற்போயிற்று? ஏன் அவர்களால் அவைகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை? ஏனென்றால் அவர்கள் சீர்திருத்தக்காரர்களாய் இருந்தனர். பாருங்கள்? 56 அங்கே உள்ளே வந்த ஜனங்கள், “ராஜாக்கள்போல் வல்லமையுடையவராய் இருந்தனர். ஆனால் அவர்கள் ராஜாக்கள் அல்ல” என்பதைப் போன்றதாகும். பாருங்கள்? பாருங்கள்? எந்த ஒன்றிற்கும் நீங்கள் வேதக்கூற்றை உடையவராயிருத்தல் வேண்டும். பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். ஆனால் இந்த நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் போன்ற சத்தியங்களில் இதுவரை வெளிப்படாத இரகசியங்களும், ஏவாள் தின்றது ஆப்பிள் கனியா அல்லது மாதுளம் பழமா? அல்லது வேறொன்றா பாருங்கள்? சர்ப்பத்தின் வித்து என்பது என்ன? “பிதா குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலான ஞானஸ்ஞானமா” அல்லது “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானமா”, இவைகளில் எது சரி? போன்ற விடுபட்டுப்போன நூற்றுக்கணக்கான இரகசியங்களும் இப்பொழுது வெளிப்பட வேண்டும். பாருங்கள்?

2957 ஆகவே, கடைசி மணி வேளையில் இந்த நபர் தோன்றி வேதத்தின் வாயிலாக இந்த இரகசியங்களை வெளிப்படுத்தவேண்டும். அது சரிவர அடையாளங்கண்டு கொள்ளப்படும். கவனியுங்கள். ஆம், ஐயா. ஆகவே இப்பொழுது அது ஒரு மகத்தான, பெரிய காரியமாக இருக்காது. இங்கே வேதத்தில் அது ஏதோ ஒரு பெரிய காரியம் போன்று காணப்படுகிறது. அது பெரிய காரியமாய் இருக்கும். 58 யோவான் ஸ்நானன் வந்து, ஞானஸ்நானம் கொடுப்பதாய் இருந்தபொழுது, அது எவ்வளவு மகத்தான ஒன்றாய் இருந்தது! இப்பொழுது அதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். யோவான் ஸ்நானனின் தோற்றத்தை ஏசாயா, மல்கியா அவர்கள் எல்லோருமே அவன் வரும்போது எப்படி இருப்பான் என்பதைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்திருந்தனர். ஆனால் அவன் வந்தபோதோ, அவன் தனித்து, வயது முதிர்ந்தவனாய் கல்வியறிவு இல்லாதவனாய், முகம் முழுவதும் தாடியை வளர்த்துக்கொண்டு, தலை முடியோ பஞ்சைப் போன்ற புழுவைப் போலிருக்க, ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு வனாந்திரத்திலிருந்து வந்தான். கல்வியறிவே இருக்கவில்லை, நமக்குத் தெரிந்தவரையில், அவன் ஜீவிய காலத்தில் ஒரு நாளாவது பள்ளிக்கூடம் செல்லவில்லை. பாருங்கள்? இங்கே அவன் வனாந்தரத்தை விட்டு வெளியே வருகிறான். ஒரு பிரசங்க பீடத்திற்குகூட அழைக்கப்படக்கூடாத நிலைமையில் அவன் இருந்தான். அவன் யோர்தான் நதியில் நின்று கொண்டு ஜனங்கள் மனந்திரும்ப வேண்டுமென்று பிரசங்கித்தான். உங்களால் கற்பனை செய்யக் கூடுமா!

3059 “மலையும் குன்றும் தாழ்த்தப்படும், பள்ளமெல்லாம் உயர்த்தப்படும் அளவிற்கு, அந்த காலத்திலிருக்கும் ஒவ்வொன்றும் மகத்தானதாயிருக்கும்” என்று வேதம் கூறுகின்றது. ஆம், ஐயா. “கரடு முரடானவை சமமாகும்”. 60 யோவான் கிறிஸ்துவின் முன்னோடியாக வரும்போது, வனாந்தரத்தை எல்லாம் சமப்படுத்தி, அதில் புல்லை முளைப்பான் என்று அவர்கள் எண்ணியிருக்கக் கூடும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். பாருங்கள்? ஓ! மகத்தான காரியங்கள் நடபெறுமென்று இன்று எண்ணுவது போன்றே ஜனங்கள் அன்றும் எண்ணியிருப்பார்களென்று நான் யூகிக்கிறேன். 61 ஆனால் அது எளிமையாக அமைந்திருந்த காரணத்தால், அப்போஸ்தலர்களும்கூட அதைக் காணத் தவறினர். அவர்கள் இயேசுவிடம், “நீர் உம்மை பலியாக ஒப்புக்கொடுக்கப்போகிறீர், எலியா தீர்க்கதரிசி முதலில் வரவேண்டுமென்று வேதம் உரைத்துள்ளதே!” என்று கேட்டனர். 62 அதற்கு அவர், “அவன் வந்தாயிற்று. நீங்களோ அதை அறியவில்லை. அதே போல அவர்கள் மனுஷ குமாரனுக்கும் அதையே செய்வார்கள்” என்று பதிலுரைத்தார். ஆனால் யோவானோ, “என்ன செய்யவேண்டுமென்று எழுதப்பட்டிருந்ததோ அதை அவன் செய்தான். அவர்கள் அவனுக்கு என்ன செய்ய வேண்டுமென்று எழுதப்பட்டுள்ளதோ, அதை அவர்கள் செய்தனர்” என்று அவர் சொல்லி, “மனுஷ குமாரனும் இவ்விதம் பாடுபட வேண்டும்” என்று முடித்தார். 63 முழு யூத வம்சத்திலிருந்தவகளில் மூன்றில் ஒரு பாகம்கூட இயேசு கிறிஸ்து பூமியிலிருந்ததை அறிந்திருக்கவில்லை. மூட நம்பிக்கைக் கொண்ட ஒருவன் அங்கே எங்கோ இருக்கிறான் என்று அவர்கள் அவனைக் குறித்து கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் எவ்வித கவனமும் தொடர்ந்து செலுத்தவில்லை. “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை”. இப்பொழுது, நான் விசுவாசிக்கிறேன்…இப்பொழுது, அவர் இரகசியமாக வருவார் என்று சொல்லப்படவில்லை.

3164 ஆனால் எடுக்கப்படுதல் இரகசியமாக நிகழும். ஆகவே அவரது தோற்றம் அவ்வளவு இரகசியமாக இருந்தால், அதைக் காட்டிலும் அதிக இரகசியமாக எடுக்கப்படுதலும் இருக்க வேண்டும்! பாருங்கள்? அவர்கள் அதை அறிய மாட்டார்கள். அவர்கள், “பூமியில் இந்த நியாயத்தீர்ப்பு உண்டாகும்முன்பு எடுக்கப்படுதல் சம்பவிக்குமென்று நாங்கள் எதிர்பார்த்தோம்” என்று நேரடியாக கூறுவார்கள். 65 அவரோ, “அது ஏற்கனவே சம்பவித்துவிட்டது. நீங்கள் அதை அறியாமற் போனீர்கள்” என்பார். பாருங்கள்? அது இரவிலே திருடன் வருகிறவிதமாய் இருக்கும். 66 நான் ஒருமுறை படித்த அந்த புஸ்தகத்தைப்போல…அது என்னவென்று அழைக்கப்படுகிறது? ரோமியோவும் ஜுலியட்டுமா? அல்லது வேறொன்றா? ரோமியாவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் காதலன் இரவு நேரத்தில் ஏணியை வைத்து, அதன் வழியாக இறங்கி காதலியை அவன் அடைந்ததற்கு ஒப்பாக அது இருக்கும். நான் நீண்ட காலத்துக்கு முன்பு படித்திருக்கிறேன்.

3267 இப்பொழுதும் அது இவ்விதமாகவே சம்பவிக்கும். அது கடந்துபோகும். ஒரு கூட்டம் தேவதூதர்களை அனுப்பி மண்வெட்டிகளினால் கல்லறைகளைத் தோண்டுவார்கள் என்பது அல்ல. “உங்கள் கண்களை நீங்கள் இமைக்கும் முன்பு, இமைப்பொழுதில் நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்” என்று வேதம் உரைத்துள்ளது. ஒரு இமைப்பொழுதில் அவை அவ்வளவு துரிதமாக முடிந்துவிடும். “அவர் காணாமற் போய்விட்டார்” என்று நீங்கள் சொல்வீர்கள். 68 நல்லது, நான் இவ்விதம் கற்பனை செய்து பார்க்கிறேன். இன்றைக்கு பூமியிலிருந்து ஒவ்வொரு நாளும் மறைந்து காணப்படாமற்போன ஐந்நூறு பேரை நாம் உலகம் முழுவதும் தேடுவோமானால், பாருங்கள், ஆனால் அவர்கள் காணாமற்போனதை உலகிலுள்ள எல்லோருமே அறிவது கிடையாது. அவர்கள் காணாமற் போய்விடுவர். நல்லது, அந்த எடுக்கப்படுதலிலும் அநேகம் பேர் செல்வதில்லை.

3369 இப்பொழுது நான் உங்களை பயமுறுத்த விரும்பவில்லை. அது அவ்விதமல்ல என்றே நான்—நான்—நான்—நான்—நான் நினைக்கிறேன். ஆனால் கர்த்தர் கூறியுள்ளதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்களே அதை அறிவீர்கள். “நோவாவின் நாட்களில் தண்ணீரினால் எட்டுபேர் காப்பாற்றப்பட்டதுபோல, உலகத்திலிருந்தே எட்டு ஆத்துமாக்கள் மாத்திரமே தண்ணீரினால் காப்பாற்றப்பட்டனர்”. 70 நல்லது. “ஓ, என்னே! அப்படியானால் நான் முயறிசி செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று நீங்கள் கூறலாம். எடுக்கப்படுதலுக்கு அவசியமான விசுவாசம் உங்களிடம் இல்லை என்பதை அது காண்பிக்கின்றது. 71 எடுக்கப்படுதலில் ஒருவன் மாத்திரம் செல்வானேயாகில், அது நானாயிருக்கவேண்டும். ஆமென், பாருங்கள். ஏனெனில் நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? “அது நான்தான்” என்று அந்தவிதமாக நீங்கள் விசுவாசிக்க வேண்டும். பாருங்கள். நிச்சயமாகவே. நான் அவரிடம் நெருங்கி ஜீவிக்க விரும்புகிறேன். அப்படியானால் அவர் வரும்போது என்னைக் கொண்டு செல்லப்போகிறாரென்று நான் அறிந்திருக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். அது உண்மை. மற்றவர் அதில் செல்லத்தவறினாலும், அவருடைய கிருபையால் நான் அங்கிருக்கப்போகிறேன். ஏனெனில் அவர் எனக்கு அவ்விதம் வாக்களித்துள்ளார். நான் அங்கிருப்பேன் என்று நான் அறிந்திருக்கிறேன். ஏனென்றால் அவரால் பொய்யுரைக்க முடியாது. நான் தினந்தோறும் அவர் இன்று வருவாரென்று கருதி அவருக்குகந்தவிதத்தில் ஜீவிக்கிறேன் என்பதை என் ஆத்துமாவும் ஜீவனும் சாட்சி கொடுக்கின்றன. செல்லும் அந்த ஒருவனாக நான் இருக்கப் போகிறேன். அந்தவிதமாகவே நீங்களும் உணர வேண்டும். “எட்டுபேர் எடுத்துக்கொள்ளப்படப் போவதாயிருந்தால், நான் அந்த எட்டுபேரில் ஒருவனாயிருப்பேன். ஐந்நூறு பேர் எடுத்துக் கொள்ளப்படப் போவதாயிருந்தால், அப்பொழுது நான் அந்த ஐந்நூறு பேரில் ஒருவனாக இருக்க வேண்டும். மற்ற நபரைக் குறித்து நான் அறியேன். ஆனால் நான் அந்த ஐந்நூறு பேரில் ஒருவனாயிருக்க விரும்புகிறேன்” என்று அந்தவிதமாக நீங்கள் உணர வேண்டும். பாருங்கள்? அந்தவிதமாகத்தான் நீங்கள் நினைவில் கொண்டிருக்க வேண்டும். பாருங்கள்? 72 நீங்கள் அவ்விதம் விசுவாசிக்காவிடில், நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தில் ஏதோ தவறுண்டு. பாருங்கள்? அவ்வாறாயின் இரட்சிக்கப்பட்டதன் நிச்சயம் இன்னும் உங்களுக்கு ஏற்படவில்லை. இரட்சிக்கப்பட்டதாக நீங்கள் ஊகித்துக்கொள்கின்றீர்கள். அவ்விதம் செய்யவேண்டாம். சரி.

3473 நாம் இம்முத்திரைகளுக்குள் வரமுடியாமல் இருக்கிறோம் அல்லவா? சரி. நான் விரும்புவது, ஒவ்வொரு இரவும்…நான் உங்கள் நேரத்தை எடுத்துக்கொள்வதைக் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்பதை நான் அறியேன். நாம் சிறிது சீக்கிரமாகவே போகக்கூடும். அவ்விதம் அதிகமாக… 74 இந்த முத்திரைகள் வெளிப்படுதலில், ஒவ்வொரு முத்திரையைப் பற்றி விவரணமும் ஒரே வசனத்தில் அடங்கியுள்ளது என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். முதல் வசனம் அதை குறித்து அறிவிக்கிறது. அதன்பின்னர் இரண்டாம் வசனம். நான் மற்றவர்களின் வர்ணனைகளையும், அவர்கள் சிந்தனைகளையும் நான் படித்துப் பார்த்தபோது, முதல் குதிரையின் மேல் ஏறியிருக்கிறவன் ஆதி சபையென்று அவர்களைப் போல் நானும் நினைத்திருந்தேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதன் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தினபோது, அது முற்றிலும் அதற்கு முரண்பட்டதாயிருந்தது. ஆகவே, அது செய்வதெல்லாம், அது என்ன என்பதையே காண்பிக்கின்றது. அதன்பின் நான் முயற்சிக்கிறேன்……

3575 இப்பொழுது, இது எனக்கு மிகவும் புனிதமானதாய் உள்ளது. அதன் காரணமாகவே, நான் அந்த கேள்விகளுக்கு பதிலளிப்பேன். நாம் ஒவ்வொருவரும், ஒலிநாடாக்களைக் கேட்பவரும் கூட அதைச் சரியாக புரிந்து கொள்ளும்படியாக, நாம் அதை இப்பொழுது பெற்றுக் கொள்வோம். பாருங்கள்? நான் ஒவ்வொரு இரவும், ஜனங்கள் பெற்றுக்கொள்ள…முன்னர் பேசின பிண்ணனியை சற்று நேரம் பேச முயற்சிக்கிறேன் 76 நீங்கள் தள்ளிக்கொண்டு உள்ளே வருவது…நீங்கள் அவ்விதம் செய்யக்கூடாது. பாருங்கள்? ஆனால் நாம் அவ்வாறு செய்யும்போது, அது மனித இயல்பாயுள்ளது. இங்கே மிகவும் உஷ்ணமாயுள்ளது. நீங்கள்—நீங்கள் தவித்து விடுகிறீர்கள். 77 ஆனால் நீங்கள் மிகமிக அருமையாகவே இருந்து வருகிறீர்கள். நீங்கள் அமைதியாக அமர்ந்திருப்பதும், தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் அழத்துவங்கும்போது அவர்களைக் குழந்தைகள் அறைக்கு எடுத்துச்செல்வதும், இவ்வாறு ஜனங்கள் செயல்படுவது, இந்தக் கூட்டங்களில்தான் மிகவும் சிறப்பாக இருந்து வருகின்றது. நான் வேறு எப்பொழுதுமே இவ்வாறு இக்கூடாரத்தில் கண்டதில்லை. ஒவ்வொன்றும் மிகவும் அருமையாகவே இருந்து வருகிறது.

3678 எனக்கு வெளிப்படுத்தப்பட்டது எதுவோ அந்த வார்த்தைகளை நான் சொல்லும்படியாக பரிசுத்தாவியின் அபிஷேகம் என் மேல் வருவதை நான் உணரும் வரையிலும், நான் பிண்ணனியாக முன்பு பேசியவைகளைப் பேச முயற்சிக்கிறேன். நான் அவ்வாறு செய்கையில், நான் இங்கே தவறு செய்திருப்பேனாகில், எல்லா மக்களுக்கும் முன்பாக நிச்சயமாக அவர் அதை எனக்காக திருத்துவார். நான்—நான் அதை விரும்புகிறேன். அது—அது…நான் அதை உண்மையாக விரும்புகிறேன். நீங்கள் என்ன கற்பனை செய்கிறீர்களோ அதை எடுக்க வேண்டிய அவசியமில்லை. சரியானது ஒன்று உண்டு, நமக்கு அதுதான் வேண்டும். தேவன் நமக்கு சரியானதையே தர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

3779 ஆகவே, நாம் இப்பொழுது, குதிரையின் மேல் சவாரி செய்கிற இவர்களை ஒவ்வொன்றாய் நாம் பார்த்தோம். முதல் குதிரையின்மேல் புறப்பட்டுச் சென்றவன் அந்திக்கிறிஸ்து என்று நாம் பார்த்தோம். வெள்ளைக் குதிரையிமேல் அந்திக்கிறிஸ்துவாக புறப்பட்டுச் சென்ற அதே ஆள் சிவப்பு குதிரையின் மேலேறி சவாரி செய்து, கையிலுள்ள பட்டயத்தினால் ஜனங்களைக் கொல்வதாக நாம் கடந்த இரவு அறிந்துகொண்டோம். 80 இப்பொழுது மாம்சப்பிரகாரமான ஒன்றும், ஆவிக்குரியப் பிரகாரமான ஒன்றும் எப்பொழுதும் இருந்து வருகிறது. இந்த முத்திரைக் குறித்த வெளிப்பாட்டை நாம் பெற்றுக்கொள்ளும் முன்பு சபையின் நிமித்தமாக நான் இந்த மாதிரியை எடுத்துக்கூற விரும்புகிறேன். 81 தேவன் அவைகளை எனக்குக் கொடுத்தார். அதை நான் இங்கு எழுதி வைத்துள்ளேன். நான் அதைக் குறித்த அநேக வேதவாக்கியங்களை இங்கே எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன். அவை ஏழு அல்லது எட்டு பக்கங்கள் உள்ளன. நான் அந்த குறிப்புகளைக் கொண்டு பேசுவேன். 82 கவனியுங்கள். நான் சபையைக் குறித்த ஒரு மாதிரியைக் கொடுத்து, நீங்கள் அவைகளை கட்டாயமாகக் காணும்விதத்தில், மிகவும் தெளிவாக்க விரும்புகிறேன். பாருங்கள்?

3883 இப்பொழுது ஏதேன் தோட்டத்தில் மாம்சப்பிரகாரமான மணவாட்டி இருந்தாள். நேற்று இரவு கூறினது நினைவிருக்கிறதா? மாம்சப்பிரகாரமான மணவாட்டியான அவள் ஆதாமுடைய இனிய இருதயமாக இருந்தாள். அதேசமயத்தில் அவள் அப்பொழுது அவன் மனைவியாகவில்லை, எனென்றால் ஆதாம் அப்பொழுது அவளை மனைவியாக அறிந்திருக்கவில்லை. 84 அது மரியாளும், யோசேப்பும் போல. யோசேப்பு தன் மனைவியாகிய மரியாளை அறியும் முன்பே, “அவளுக்குப் பிள்ளை உண்டாயிருந்தது”. பாருங்கள்? 85 இப்பொழுது, ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறியும் முன்பு, அவள் அவனுடைய மணவாட்டியாக மட்டுமே இருந்தாள். சரி. நாம் இங்கே கண்டறிவதோ…அவள் தேவனுடைய வார்த்தையில் நிலை நிற்கத் தவறியதால், அவன் ஏதேன் தோட்டத்தில் விழுந்து போனாள்.

3986 இப்பொழுது சாத்தான் அவர்கள் மத்தியில் அவிழ்த்து விடப்படுவான் என்பதைக் கர்த்தர் அறிந்திருந்தார், ஆகவே, அவர்கள் மறைந்து தங்கியிருக்க அரணாக ஒரு—ஒரு ஸ்தலத்தை அளித்திருந்தார். நல்லது. தேவன் தம் சொந்த பிள்ளைகளைப் பாதுகாக்க முன்வரும்போது, தேவனைத் தவிர வேறுயார் சிறந்த அரண் ஒன்றை அமைத்துத்தர முடியும்? 87 என் மகன் ஜோசப்பை உயிர்போகும் ஆபத்தினின்று காக்க வேண்டுமென்று நான் விரும்பினால், நல்லது, சகோதரனே, அதற்கு நாற்பது அடி தளமிடப்பட்ட அமைப்பு போதுமானதாயிருந்தாலும், அதிகபாதுகாப்பு அளிக்க நான் தொண்ணூறு அடி தளமிடப்பட்ட அமைப்பைக் கட்டுவதற்கு நிச்சயமாக முயல்வேன். 88 ஏதாவது (ஒருநாள் இறக்கவேண்டிய என் சிறு பையனைக் குறித்து குழந்தையும் இரட்சிக்கப்படக்கூடும் என்று நான் விசுவாசிக்கிறேன்) நான் இவ்வளவு அக்கரை கொள்வேனானால், அதைக்காட்டிலும் எவ்வளவு அதிகமாக தேவன், தம் பிள்ளை நித்தியத்தை இழக்கக் கூடாதென்று பாதுகாப்பளிப்பார். அவர் எதற்குப் பின்னால் ஆதாமை மறைத்திருந்தார்? அவர் தம் சொந்த வார்த்தையின் பின்னால் அவனை வைத்திருந்தார். நீங்கள் அவ்வார்த்தையில் நிலைநிற்கும் வரை, நீங்கள் பாதுகாப்பாய் இருக்கின்றீர்கள். “நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்”. அதுதான் வார்த்தையின் முக்கியத்துவம்.

4089 ஆகவே, ஏவாள் ஏதேன் தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்த சமயம் சர்ப்பத்தைச் சந்திக்க நேர்ந்தது. அவன் மிகவும் நாகரீகமும் பெருமையும் கொண்டவன். அவள்…அவன் ஆரம்பித்தான். அவன் மற்றொரு பக்கத்தில் இருந்தான். தேவன் எளிமையில் வாழ்ந்து கிரியை செய்பவர் ஆவார். வேறு எந்த விதத்திலும் அல்ல. பாருங்கள்? இப்பொழுது அதற்கு மாறான தன்மைகளைச் சாத்தான் கொண்டிருந்தான். தாழ்மையுள்ள அந்த சிறிய ஸ்திரீ அங்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, புத்தியும் நாகரீகமும் கொண்ட சாத்தான் அங்கு வந்து, அவன் தீட்டியிருந்த திட்டத்தை அவளுக்கு விற்க முற்பட்டான். அது வரை… 90 சாத்தான் எவ்வளவாக அவளைச் சூழ்ந்து இருந்தாலும், வார்த்தையை அவள் அரணாகக் கொண்டிருந்தால் எல்லாம் சரிவர அமைந்திருக்கும். [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை மெதுவாகத் தட்டுகிறார்—ஆசி.] பாருங்கள்? சாத்தான் அவன் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்யட்டும்; நீங்கள் வார்த்தையில் மாத்திரம் நிலைநில்லுங்கள். எந்த விதத்திலும் அதில் சிறிதளவு வித்தியாசமும் வேண்டாம். அவன், “நீ ஏன் வியாதிப்பட்டிருக்கிறாய்?” என்று கேட்டால், “அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்’ என்று பதிலளியுங்கள். அவன், “நீ மரிக்கப் போகிறாய்” என்று கூறினால், ‘அவர் என்னை மீண்டும் உயிரோடெழுப்புவார்; அவர் அதை வாக்களித்துள்ளார்” என்று பதிலளியுங்கள்.

4191 பாருங்கள்? வார்த்தையை அரணாகக் கொண்டு அதன் பின்னால் மறைந்திருங்கள். அவ்வளவுதான். கிறிஸ்துவும்கூட “எழுதியிருக்கிறதே” என்று கூறி வார்த்தையின் பின்னால் ஒதுங்கியிருந்தார். பாருங்கள்? இப்பொழுது, வார்த்தையின் பின்னால் மறைந்திருங்கள். 92 ஆனால் ஏவாளோ வார்த்தையைத் தளரவிட்டாள். ஆனால் வார்த்தை முழுவதையும் அவள் விட்டுவிடவில்லை. அதில் ஒரு சிறிய பதத்தை மாத்திரம் அவள் விட்டுவிட்டாள். சாத்தானும் அதைத்தான் அவள் செய்யவேண்டுமென்று விரும்பினான். ஞானத்தின் காரணத்தால் அவள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை விட்டு அகன்று சென்றாள். தேவனுடைய வார்த்தையை நீங்கள் விவேகித்த தலைப்பட வேண்டாம். அதை அப்படியே விசுவாசியுங்கள். பாருங்கள்? 93 ஆகவே, அவள் அங்கிருந்து அடியெடுத்து வைத்தாள். ஆதாம் ஏவாளை மனைவியாக அறியும் முன்பே, அவள் சாத்தானால் ஏற்கனவே கறைப்பட்டுப்போனாள். அவள்… 94 நீங்கள் அதை கவனித்தீர்களா? நம்மை மீட்பதற்காக கிறிஸ்துவும் சரியாக அவ்வாறே செய்தார். இப்பொழுது, நாம் மீட்கப்படுவதற்கு நமக்கு தேவன் முதலில் அவசியம். நீங்கள் அதைக் கவனித்தீர்களா? ஆகையால் யோசேப்பு மரியாளை அறியுமுன்பு, பரிசுத்த ஆவியானவர் அவளை நிழலிட்டார். ஆமென். பாருங்கள்? அதன் விளைவாக மீட்பர் தோன்றினார்.

4295 இப்பொழுது கவனியுங்கள். மாம்சப்பிரகாரமான ஸ்திரீ பாவத்தில் விழுந்தபோது, அவளை மீட்டெடுக்க தேவன் ஒரு வழியை வகுத்தார். அவள் விழுந்துவிட்டபோதிலும், அவர் ஒரு வழியை ஏற்படுத்தினார். 96 இப்பொழுது, பூமியின் மேல் முதல் மணவாட்டியாய் இருந்த அவள் ஆதாமின் மனைவியாக வாழ்க்கைப்படுமுன்பு, விழுந்து போனாள். அவள் வார்த்தையில் நிலைநிற்பதற்குப் பதிலாக விவேகத்தை உபயோகித்து, விழுந்துபோனாள். அவள் விழுந்தாள். அவள் மரணத்துக்கேதுவாக விழுந்து, நித்திய பிரிவினையை அடைந்தாள். அவளுடன் அவள் கணவனும் பூமியிலுள்ள மற்றெல்லாமே விழுந்துபோயின. அவள் விழுந்தாள்!

4397 இப்பொழுது, ஆனால் இரக்கம் நிறைந்த தேவன் ஸ்திரீ மீட்கப்படுவதற்கு ஒரு வழியை வகுத்தார். உண்மையான வார்த்தை அவளிடத்தில் மறுபடியும் ஒரு நேரத்தில், எதிர்காலத்தில் தோன்றுமென்று அவர் வாக்களித்தார். உண்மையான வார்த்தை அவளுக்கு அறிவிக்கப்படும். இப்பொழுது அது நினைவிருக்கட்டும். கிறிஸ்து ஸ்திரீயின் மூலம் தோன்றுவார் என்று அவர் வாக்குத்தத்தம் செய்தார். 98 ஆகவே கிறிஸ்துதான் வார்த்தை. பரிசுத்த யோவான் 1-ல் “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி”, பாருங்கள் “நமக்குள்ளே வாசம் பண்ணினார்,” தேவன் நம் மத்தியில் மாம்சத்தில் வாசம் செய்தார். அவர் வார்த்தையாயிருந்தார். 99 அது வார்த்தையாகுமுன்பு சிந்தையாயிருக்கும். ஒரு சிந்தை என்பது உருவாக்கப்படவேண்டும். சரி. ஆகவே, தேவனுடைய சிந்தனைகள் ஒரு வார்த்தையினால் பேசப்படும்பொழுது, அது சிருஷ்டிப்பாகிறது. அதாவது, அவர் ஒரு சிந்தையை, தம்முடைய சிந்தை உங்களிடத்தில் கொடுக்கும்பொழுது, அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. நீங்கள் அதைப் பேசுகின்ற வரையில், இது இன்னும் சிந்தையாகவே இருக்கின்றது. அதன் காரணமாகவே…

44100 மோசே ஜெபிக்கச் சென்றான். மோசேயைச் சுற்றி அக்கினி ஸ்தம்பம் இருந்தது. அவர் அவனிடம் “உன் கோலை கீழ்த்திசைக்கு நேராக நீட்டி ‘வண்டுகளை’ வரவழைப்பாயாக” என்றார். 101 அப்பொழுது வண்டுகள் அங்கு இல்லை. ஆனால் அவன் போய் தன் கோலை நீட்டி, “வண்டுகள் உண்டாகட்டும்” என்று கட்டளையிட்டான். இன்னும், வண்டுகள் என்பதே அங்கு இல்லை. அவனோ கடந்து சென்றான். ஆனால் தேவனுடைய சிந்தையானது வார்த்தையாக பேசப்பட்டு, அது வண்டுகளை சிருஷ்டித்தது. அது தேவனுடைய வார்த்தையாயிருப்பதால், அதன் சொற்படி நிகழவேண்டும்.

45102 இயேசுவும், “நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல; நான் சொல்லும்போதல்ல, ஆனால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து சொல்லும்போது, ‘அது போகும்’” என்றார் என்பதை நீங்கள் காணவில்லையா? 103 மோசே வண்டுகள் உண்டாகக் கட்டளையிட்டபோது, முதலில் சில பச்சை வண்டுகள் ரீங்காரம் செய்து பறந்திருக்கும். பின்னர் ஒரு கெஜம் நிலத்திற்கு ஐந்து பவுண்டு எடையுள்ள வண்டுகள் உண்டாயிருந்தன. பாருங்கள்? அவை எங்கிருந்து வந்தன? அவர்…தேவன் அவைகளைச் சிருஷ்டித்தார். எவ்விதம் என்று நீங்கள் காணவில்லையா? 104 தேவன் விரும்பினால், இவ்வுலகை இன்றிரவே சிறிய கொசுக்களால் அழிக்க முடியும், நல்லது, ஏன், அவர் சந்திரன் உயரத்திற்கு கொசுக்களை குவியலாகக் குவிக்க முடியும். அவர், “சந்திரன் வரை கொசுக்கள் உண்டாகட்டும்” என்று சொன்னால் மாத்திரம் போதும் அளவிற்கு வந்துவிடும். இரசாயனங்களோ, வேறொன்றோ அல்ல, அவை உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து கொண்டே சென்று சந்திரனையடையும். பாருங்கள்?

46105 தேவன் சிருஷ்டி கர்த்தராயிருப்பதால் அவர் விரும்பும் எதையும் சிருஷ்டிக்கலாம். அதை சிருஷ்டிக்க அவர் பேசினால் போதும். [சகோதரன் பிரான்ஹாம் தன் விரல்களை ஒருமுறை சொடுக்குகிறார்.—ஆசி.] அது உண்மை. அவர் சிருஷ்டிகர். இப்பொழுது, அவர் எவ்வளவு மகத்தானவர் என்பதை மட்டும் நாம் அறிந்துகொள்வோமானால்! பாருங்கள்? அவர் தம் விருப்பம் எதுவோ அதை மட்டும் செய்கிறார். 106 அத்தகைய மகத்தான தேவன் பரலோகத்தில் வீற்றிருந்து, “தேவன் இல்லை” என்று சொல்லிக்கொண்டிருக்கும் இச்சிறு கல்விமான்களையும், புத்திமான்களையும், ஜனங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஊம்…ஏன், சரியாகக் கூறினால் மறுபடியும் பாபேல் காலத்தில் அவர்கள் இருந்தது போன்றே இது உள்ளது. 107 இப்பொழுது கவனியுங்கள், “வெகுகாலம் கழித்து வார்த்தை உன்னிடத்தில் திரும்பவும் வரும்” என்று தேவன் ஏவாளிடம் கூறினார். இப்பொழுது, அவள் எவ்விதம் விழுந்தாள்? என்னுடைய வகுப்பு அதைச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவள் எதினின்று விழுந்தாள்? ஏவாள் எதினின்று விழுந்தாள்? வார்த்தை. அது உண்மையா? [சபையோர், “வார்த்தை” என்று கூறுகின்றனர்.—ஆசி.] வார்த்தை. எனவே தேவன், அவளை மீட்டெடுத்து வார்த்தைக்குக் கொண்டுவர ஒரு வழியை உண்டாக்குவேன் என்று சொன்னார். சரி. வெகுகாலம் கழித்து அவள் வார்த்தையை அறிந்து கொள்வாள். சரி. ஒரு நோக்கத்திற்காக வார்த்தை இப்பொழுது அவளிடம் வரும். நான் கூறிக்கொண்டிருக்கிறதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். ஒரு முக்கிய நோக்கத்திற்காகவே வார்த்தை அவளிடம் வரும். அது அவளுடைய மீட்பிற்காகவாயிருந்தது. சரி.

47108 ஆனால் அந்த மூல வார்த்தை வரும் நேரம் வரை ஒரு பதிலீயை (substitute) அவளுக்கு அளிக்கப்பட்டது. இப்பொழுது, நீங்கள்—நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] பாருங்கள்? அவர் அவளிடம் வார்த்தையானது மறுபடியும் அவளிடத்திற்கு வரும் என்று கூறினார். ஆனால் அந்நேரம் வரும்வரையிலும், அவர் அவளுக்கு ஒரு பதிலியை அளித்தார். ஆகவே, அந்த இரத்தத்திற்காக அவள் ஒரு பலியை செலுத்தும்படி பதிலியை அவர் அவளுக்கு அளித்தார். 109 இப்பொழுது, அது காளை, செம்மறியாடு, வெள்ளாட்டுக்கடா, இவைகளின் இரத்தமாயிருந்தது. ஆனால் அது அவளுடைய பாவத்தைப் போக்கவில்லை. பாருங்கள்? அது அவளுடைய பாவத்தை மூடினது. அது பாவத்தை ஒருபோதும் போக்கவில்லை. அது அதனை மூடினது. ஏனெனில் அது மிருகத்தின் இரத்தமாயிருந்தது. மிருகத்தின் இரத்தத்தில் மிருகத்தின் ஜீவன்தான் உள்ளது. நிஜமானது வரும்வரையில் அது ஒரு பதிலியாக இருந்தது…இப்பொழுது நீங்கள் மிகவும் உன்னிப்பாக கவனியுங்கள்.

48110 உண்மையான மனித இரத்தத்திற்காக, மானிட வர்க்கத்திற்காகவே (தேவன்) மனிதனாய் அவதரித்தார். இனச் சேர்க்கையின்றி கன்னியினால், கன்னிப்பிறப்பு அதை தோற்றுவித்தது. இப்பொழுது தேவன் வாக்குத்தத்தம் செய்த வார்த்தையானது இரத்தமாகி, இயேசுகிறிஸ்து என்னும் நபராகிய நம் இரட்சகரில் குடிகொண்டது. “காளை வெள்ளாட்டுக்கடா மற்றவைகளின் இரத்தம்…” 111 ஆனால் இப்பொழுது பொறுத்திருங்கள். ஸ்திரீயின் வித்து வரும் போது “அது சர்ப்பத்தின் தலையை நசுக்குமென்று” இங்கே தேவன் வாக்கருளியிருந்தார். இப்பொழுது, அவளுடைய வித்து ஆதாமிலிருந்ததைப் போலவோ அல்லது சர்ப்பத்திலிருந்ததைப் போலவோ, அவ்வழியில் தோன்றியிருந்தால் அது இன்னும் பாவத்தில் பிறந்த வித்தாயிருக்கும். 112 அதன் காரணமாகத்தான் யோவான் அழுதான். ஒரு மனிதனும் பாத்திரவானாகக் காணப்படவில்லை. எல்லோரும் பிளவின் மற்றைய பாகத்தில்தான் இருந்தனர். ஆனால் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு அவருடைய இரத்தம் சிந்தப்படும்போது, அதற்கு பதிலீயாக அளிக்கப்பட்டிருந்த காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் செலுத்தப்படுதல் முடிவடையும். தேவன், மாம்சமும் இரத்தமும் ஆகுதல். தேவன் அவ்விதம் ஆனார் என்று வேதம் கூறுகின்றது. 1தீமோ 3:16 “அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்கிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்”. அது உண்மை. கன்னிப்பிறப்பே இதைச் செய்தது.

49113 இப்பொழுது, காளை வெள்ளாட்டுக்கடா, இவைகளின் இரத்தம் பாவத்தை மூடினதேயன்றி அதைப் போக்கவில்லை. ஏனெனில் அது மிருகத்தின் இரத்தமாயிருந்தது. ஏனெனில் அது மிருகத்தின் இரத்தமாயிருந்தது. அது ஒரு பதிலீயாக மாத்திரமே அளிக்கப்பட்டிருந்தது. அது சரியாக இருக்க வேண்டியதாயிருந்தது. 114 ஆகவே பதிலீயாக அளிக்கப்பட்ட இப்பழக்கத்தை அவர்கள் செய்தனர். ஆகவே இப்பழக்கம் தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வந்தது. 115 நிஜமான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையானது இயேசு கிறிஸ்துவுக்குள் வெளிப்படுத்தப்பட்டது. அவர் மகத்தான சிருஷ்டிகராகிய தேவகுமாரானாகத் தோன்றினார். அவர் ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையென்பதை தாமே ரூபகாரப்படுத்தினார். வ்யூ! என்னே! அவர் தான் அவர் என்று நிரூபித்தார். அவர் பேசி காரியங்களை சிருஷ்டிக்க முடிந்தது. 116 எந்த ஒரு மானிடனும் அல்லது உலகத்தில் உள்ள எந்த ஒன்றும் அதைச் செய்ய முடியாது. தேவனைத் தவிர, பூமியிலுள்ள ஒன்றும் சிருஷ்டிக்க முடியாது. சாத்தான் ஒன்றையும் சிருஷ்டிக்க முடியாது. ஏற்கனவே சிருஷ்டிக்கப்பட்டதை அவன் வழி தவறச் செய்வானேயன்றி (pervert) அவனால் சிருஷ்டிக்கமுடியாது. பாவம் என்பது தாறுமாறாக்கப்பட்ட நீதியாகும். நான் என்ன கருதுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். பொய் என்பது என்ன? உண்மை திரித்துக் கூறப்படுதலே பொய்யாகும். பாருங்கள்? அவ்வாறே விபச்சாரம் எனப்படுவது என்ன? தேவனளித்த ஒரு சட்டப்பூர்வமானச் செயல் தாறுமாறாக்கப்படுவது. ஒவ்வொன்றும் பாவத்திலுள்ளது. பொய் என்பது சத்தியம் தாறுமாறக்கப்படுதலாகும். சாத்தான் சிருஷ்டிக்க முடியவில்லை.

50117 ஆனால் கிறிஸ்து வந்தபொழுது அவர் சிருஷ்டி கர்த்தர் என்பதை நிரூபித்தார். நம்முடைய பாவங்களுக்காக சிந்தப்படுமென்று வாக்களிக்கப்பட்ட அந்த இரத்தம் அவருக்குள் இருந்தது. இப்பொழுது நீங்கள் அதைப் படிக்க விரும்பினால், நீங்கள்…ஒரு நிமிடம் திருப்புவோம். எப்படியாயினும், இன்றிரவு நாம் சிறிது நேரம் எடுத்துக்கொள்வோம். நான்… 118 அது என்னை தளர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஒவ்வொருவரும் வீட்டிற்குச் செல்லவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா? ஆகவே அது ஒரு… [சபையோர், “இல்லை” என்று கூறுகின்றனர்.—ஆசி.] நாம் இப்பொழுது அப்போஸ்தலர் 2 ஐப் பார்ப்போம். உங்களுக்கு நன்றி. நாம் சற்று… 119 இயேசு தேவனென்று நிரூபிக்கப்பட்டாரென்பது சரியா அல்லது தவறா என்பதை அப்போஸ்தலர் 2-ல் நாம் கண்டறியலாம். சரி. அப். 2. இப்பொழுது நாம் இங்கே 22-ம் வசனத்தைப் பார்ப்போம். பெந்தெகோஸ்தே நாளன்று பேதுரு பேசுகிறான். இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.

51120 “ஒரு மனிதன் மெய்ப்பித்துக் காட்டப்பட்டதினாலே, அது தேவன் உங்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை நிரூபித்தது”. அது அவர்தான் என்பதை அவர் செய்த கிரியைகளே நிரூபித்தன. பேதுரு ஆலோசனைக் சங்கத்துக்கு முன்பாக நின்று இதை அவர்களுக்கு சொல்லுகிறான். 121 நிக்கொதேமுவும் இதை அறிந்திருந்தான். அவன், “ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவன் தேவனிடத்திலிருந்து வராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட கிரியைகளைச் செய்யமாட்டான்” என்றான். பாருங்கள்? அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். ஆனால் ஏன்?

52122 இப்பொழுது கவனியுங்கள். ஏவாளுக்கு இது வாக்களிக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்மையான வார்த்தை அவளிடத்தில் வந்தபொழுது, அந்த ஸ்திரீ, எபிரெய மணவாட்டி அதை அவள் அடையாளம் காண மறுத்துவிட்டாள். எனவே தேவன் அவளைத் தள்ளிவிட எத்தனித்தார். ஏனெனில், அவள் தேவனுடைய மணவாட்டியாயிருந்தாள். அது உண்மையா? அவள் தேவனுடைய மணவாட்டியாய் இருந்தாள். 123 நீங்கள், “நல்லது, அவர்களுக்கு இன்னும் விவாகம் ஆகவில்லையே” என்று கூறலாம். அது உண்மை. ஆனால் அதைத்தான் யோசேப்பு செய்யவேண்டுமென்று எத்தனித்தான். அவர்களுக்கு விவாகம் ஆகுமுன்பே அவளைத் தள்ளிவிட எத்தனித்தான். பாருங்கள்? அவள் அவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். 124 ஆகவே அவர் வந்தபோது, அவர் வாக்குத்தத்தம் செய்த வார்த்தையானது விவாகம் செய்துகொள்வதற்கென வரும்போது, மணவாட்டி தேவனுடைய உண்மையான வாக்குத்தத்தமான வார்த்தையாகிய கிறிஸ்து என்னும் போர்வையினால் சுற்றப்படுவதற்குப் பதிலாக, ஸ்தாபன தத்துவங்களினால் சுற்றப்பட்டிருப்பதை அவர் கண்டார்.

53125 இதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையென்று நினைக்கிறேன். அதை மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாருங்கள்? 126 மீட்பர் ஒருவர் வருவாரென்று (மணவாட்டியாகிய ஏவாளுக்கு) வாக்களிக்கப்பட்டது. அந்த மீட்பர் வார்த்தையாயிருப்பர். அந்த வார்த்தை மாம்சமாகி வந்தபோது, அவள் அதை புறக்கணித்து விட்டாள். அவளுக்கு பதிலீகள் அளிக்கப்பட்டன. இப்பொழுது, “பதிலீ” என்பதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். மீட்பர் வரும்வரை, அதற்குப் பதிலாக அவளுக்கு பதிலீகள் (substitutes) அளிக்கப்பட்டன. ஆனால் மீட்பர் வந்தபிறகும், அவள் அந்த உண்மையான வார்த்தையை ஏற்றுக்கொள்ள மறுத்து, அவளுக்கு அளிக்கப்பட்டிருந்த பதிலீகளில் நிலைத்திருக்க விரும்பினாள். அதை காண்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அதுதான் எபிரெய மணவாட்டி. 127 ஆகவே அவர் செய்தார்…அவள் இரண்டாம் ஏவாளாகிய மணவாட்டி, அவள் ஆவிக்குரிய ஜீவனுள்ளோருக்கும் தாயானவள். பாருங்கள்? ஏவாள் என்பதற்கு “ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்” என்பது அர்த்தம். அந்த ஆவி…“ஜீவனுள்ளோருக்கெல்லாம்”. அதாவது ஏவாள், ஏவாள் “ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்”.

54128 இப்பொழுது அவர் எபிரெய மணவாட்டியினிடத்தில் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயான அவளிடத்தில் வந்தபோது, அவள் அவரை புறக்கணித்தாள். 129 மாம்சத்துக்குரிய ஏவாள் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான சாத்தானின் விவேகத்திற்கு செவிசாய்த்து, ஏதேன் தோட்டத்தில் விழுந்துபோனாள். சரி, ஐயா. அவள் அதைச் செய்ததால் விழுந்துபோனாள். 130 ஆனால் ஆவிக்குரிய ஏவாள், கிறிஸ்துவின் மணவாட்டி, சபை, ஏதேனில் விழவில்லை; ரோமாபுரியில் விழுந்தாள். பாருங்கள், நிசாயா மாநாட்டில் அவள் உண்மையான பெந்தெகொஸ்தே சபையைப் புறக்கணித்து, வார்த்தையில் நிலைநிற்பதற்கு பதிலாக ரோமாபுரியின் விவேகத்துக்குச் செவி கொடுத்தாள். அவளும் அவளைச் சூழ்ந்தவரும் ஆவிக்குரிய மரணம் எய்தினர். மாம்சப்பிரகாரமான ஏவாள் விழுந்தது போன்று, ஆவிக்குரிய ஏவாளும் விழுந்தாள். தேவனுடைய மணவாட்டி ஏதேன் தோட்டத்தில் விழுந்தாள். கிறிஸ்துவின் மணவாட்டி ரோமாபுரியில் விழுந்தாள். பாருங்கள்?

55131 கவனியுங்கள், இருவரும் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான சாத்தானின் விவேகத்தை ஏற்றுக்கொண்டு தங்கள் கற்பை சாத்தானுக்கு விற்றுப்போட்டனர். முத்திரைகள் உடைக்கப்பட்டபோது, அது சாத்தான் என்றும், இன்று வரையிலும் அவன்தான் என்றும் நாம் கண்டறிந்தோம். ரோமாபுரி சாத்தானின் சிங்காசனமிருக்கிற இடம் என்று வேதம் உரைத்துள்ளது. ஏவாள் தன் கற்பை ஏதேன் தோட்டத்தில் சாத்தானுக்கு அளித்தாள், சபை, கிறிஸ்துவின் மணவாட்டியும் அதையே செய்து ரோமாபுரியில் வேதத்திற்குப் பதிலாக அவர்களுடைய ரோம கொள்கைகளையும், விவேகத்தையும் ஏற்றுக்கொண்டாள். அந்த உதாரணத்தை நீங்கள் கவனித்தீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 132 பழைய ஏற்பாட்டில் முன்னடையாளங்களை புதிய ஏற்பாட்டில் சம்பவங்களுடன் பொருத்தி நோக்கினால், நீங்கள் ஒருக்காலும் தவறு செய்யவே முடியாது. என்னுடையகை இவ்விதம் இருக்குமானால்…நான் என்னையே பாராதிருந்து, என் நிழல் வருவதை நான் காணும்போது, காண்பதற்கு நான் எவ்விதம் இருக்கிறேன் என்பதை நான் அறிந்துகொள்வேன். பாருங்கள்? அது போன்று என்ன வரப்போகின்றது என்பதை நீங்கள் அறியவேண்டுமானால், என்ன நிகழ்ந்தது என்பதை நீங்கள் முதலில் கவனியுங்கள். “ஏனென்றால்…முன்பு நடந்த யாவும் இனி நடக்கப் போவதற்கு நிழலாயிருப்பதாக” வேதம் கூறியுள்ளது. சரி. 133 கிறிஸ்துவின் மணவாட்டி வேதத்தை விற்றுப்போட்டதால், கற்புள்ள தேவனுடைய வார்த்தையை இழந்து, எல்லாவற்றையும் மாற்றி அமைப்பதற்கு சபைக்கு அதிகாரமுண்டு என்று சொல்லும் ஒரு மனிதனை ஏற்படுத்தினாள். அவர்கள் அதைச் செய்துவிட்டனர். ஏவாள் தன் கற்பை சாத்தானுக்கு ஏதேன் தோட்டத்தில் விற்றுப்போட்டது போன்று, கிறிஸ்துவின் மணவாட்டி, பெந்தெகொஸ்தே மணவாட்டி, அவள் கற்பை நிசாயாவில் விற்றுப்போட்டாள். சரியாக. சரி.

56134 ஏவாளுக்கு தேவன் வாக்குத்தத்தம் செய்திருந்ததுபோல, இந்த சபையும் அதையே செய்யும் என்பதை அறிந்தவராய், பெந்தெகொஸ்தே சபைக்கும் அவர் வாக்களித்துள்ளார்… 135 அவள், பெந்தெகொஸ்தே சபையானவள் மனைவியாவதற்கு முன்பு தன் பிறப்புரிமையை விற்றுப்போட்டாள் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையார் “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] ஆம், அவள் அதை நிச்சயமாகவே செய்தாள். இந்த வேதத்தை ஆதாரமாகக் கொண்டிராத பிரமாணங்களினால் (Creed) என்ன பயன்? அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணம் என்னப்படுவதில் ஒரு வார்த்தையாவது வேதத்தில் காணப்படுகிறதா என்பதை நீங்கள் கண்டறிய நான் விரும்புகிறேன். அது கத்தோலிக்கப் பிரமாணம், அப்போஸ்தலருடைய பிரமாணம் அல்ல. 136 அப் 2:38 ஐப் படியுங்கள். அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38-தான் உண்மையான அப்போஸ்தலருடைய பிரமாணம். ஆம். பாருங்கள்? அதைத்தான் அவர்கள் எப்பொழுதும் உபயோகித்தனர். ஆகவே, உங்களால்…பாருங்கள்?

57137 ஆகவே, அவர்கள் தங்கள் பிற்ப்புரிமையை விற்றுப்போட்டனர். அவர்கள் மாத்திரமல்ல. மெத்தோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பிரெஸ்பிடேரியன்களும், பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தாருமே, ஏனையோரும் அவ்வாறேசெய்தனர். அவள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டாள். ரோமாபுரிதான் அவளை ஸ்தாபனம் உண்டாகச் செய்தது. அவள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கி, ஒரு மனிதனை அதன் தலைவனாக ஏற்படுத்தினாள். மெத்தோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தாரும் அதையே செய்தனர். ஒரு குழுவை ஸ்தாபனத்தின் தலைவராக ஏற்படுத்திக்கொண்டனர். தேவன் கூறியது எதுவாயிருப்பினும், அவர்கள்…அவர்கள் கூறுவதை மாத்திரமே நீங்கள் செய்ய வேண்டும். 138 நல்லது, அது என்ன? இந்த உலகத்தில் ஆவிக்குரிய வேசித்தனமேயன்றி வேறல்ல, தவறான ஸ்திரீக்கு, அவள் மனிதனால் உண்டாக்கப்பட்ட பொய்யான பிரமாணங்களை நுழைத்தாள். ஆம், ஐயா. அவள் அதைச் செய்தபோது, அப்பொழுது அவள்…இப்பொழுது, நான் இதை நிரூபிப்பேன். அதன் மூலம் தேவனுடைய பார்வையில் அவள் வேசியாகக் கருதப்பட்டாள். வேதம் அவ்விதம் அவளை அழைக்கிறதென்று நீங்கள் நம்புகிறீர்களா? ஆம், ஐயா, அவள் குமாரத்திகளும் அதையே செய்துள்ளனர்.

58139 இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில், உங்களுக்கு வேண்டுமானால் அதைக் குறித்துக் கொள்ளுங்கள். யோவான் ஆவிக்குள்ளாகி, “ஒரு மகா வேசி உட்கார்ந்திருப்பதைக் காண்கிறான்”. கடந்த இரவு நாம் அதைப் படித்தோம். அங்கே ஏழு மலைகள் இருந்தன. அவள் உலகத்துக்கு தன் அசுத்தமுள்ள வேசித்தனத்தைக் கொடுத்தாள். அவள் சரியாக அதையே செய்தாள். அது சரியா? “பூமியின் ராஜாக்கள் அவளுடன் வேசித்தனம் பண்ணினார்கள்”. ஏமாற்றுதல், திருடுதல், பொய் சொல்லுதல், ஆத்துமா இரட்சிக்கப்பட காசு வசூலித்தல், ரோமன் கத்தோலிக்க தொழுகை நோன்புகள் போன்றவைகள் அவர்களுடைய செய்கைகளாயிருக்கின்றன. 140 நல்லது. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். அந்த வேசிக்கு குமாரத்திகள் இருந்தனர். நல்லது. அவள் ஸ்தாபன முறைமைகளை உண்டாக்கிக்கொண்டாள். அதனால் அவள் ஒரு சரீரமானாள். அது, ஸ்தாபன முறைமைகள் முற்றிலும் தவறாகும். ஏவாள் தேவனுக்கு கீழ்ப்படியாமல், அவளுக்குப் பின்வந்த எல்லாரையும் மரணத்தினுள் ஆழ்த்தியது போன்று, ஸ்தாபனமுண்டாக்கிக் கொண்ட ஒவ்வொரு சபையும், அவளைச் சேர்ந்தவர்களை மரணத்தில் ஆழ்த்துகின்றது. எல்லாம் போய்விட்டது. நான் கூறுவது வேதத்தின்படியானதாகும். வெளிப்படுத்தல் 17-ம் அதிகாரத்தைப் படியுங்கள். “அது அவளும் அவளுடைய குமாரத்திகளும் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவார்களென்று” வேதம் கூறுகிறது. சரி அப்படியானால், ஒவ்வொரு ஸ்தாபனமும் அந்த வேசியுடன் அக்கினியால் சுட்டெரிக்கப்படும். வேதம் அவ்வாறு கூறுகிறது. ஆகையால் அது நிச்சயம் சம்பவிக்கும்.

59141 இப்பொழுது, அது கடினமானதாக ஒலிக்கலாம்; நீங்கள் அதிலிருந்து கேட்பீர்கள் என்பதை நான்—நான் அறிவேன். நானும்—நானும் அதிலிருந்து கேட்க விரும்புகிறேன். நான்—நான்…இருந்தாலும், அது உண்மையாகும். வேதம் அவ்விதம் கூறுகின்றது. ஆகவே அதை அது உண்மையாக்குகிறது. 142 அவள் ஒரு “வேசியாயிருக்கிறாள்”. நீங்கள் அதை வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் படிக்கலாம். அவள், அவள் என்ன செய்தாள்? அவள் தன் சொந்த கணவனுக்கு விரோதமாக வேசித்தனம் செய்தாள். நீங்கள், “நல்லது, இல்லை, அது வேதாகமம்” என்று சொல்கிறீர்கள். வார்த்தை தேவனாயிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒன்றைக் குறைக்கவோ… 143 உங்கள் மனைவி வேறொருவனை முத்தம் செய்ய நீங்கள் விரும்புவீர்களா? அவள் அப்படி செய்யவில்லையென்றாலும், அவள் அதைச் செய்ய நீங்கள் விரும்பமாட்டீர்கள். அப்படி அவள் செய்தாள், அவளுடைய உண்மையற்ற தன்மையை நிரூபிக்கிறாள்.

60144 “ஒருவன் அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால் அல்லது கூட்டினால்…” அல்லேலூயா! கிறிஸ்து தம் மனைவி வார்த்தையில் சுத்தமானவளாய் நிலைத்திருக்க விரும்புகிறார். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மேல் நான்கு முறைதட்டுகிறார்.—ஆசி.] அவள் அப்படித்தான் இருக்கவேண்டும். 145 ஏனெனில் நியாயப்பிரமாணமாகிய புத்தகத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகும். “வானமும் பூமியும் ஒழிந்துபோகும். என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” என்று இயேசு கூறியுள்ளார். 146 தேவனுடைய வார்த்தைக்கு உங்கள் சொந்த வியாக்கியானத்தைக் கொடுக்கவேண்டாம். சுத்தமான—கலப்படமில்லாத ஒருவள் அவருக்குத் தேவை—வேறொருவனுடன் சரசம் செய்யும் ஒருவள் அல்ல. என் மனைவி வேறொருவனுடன் சரசம் செய்வதை நான் விரும்பமாட்டேன். தேவனுடைய வார்த்தைக்கு அப்பாற்பட்ட விவேகத்திற்கு நீங்கள் செவி சாய்த்தால், நீங்கள் சாத்தானுடன் சரசம் செய்கின்றீர்கள் என்று அர்த்தமாகின்றது. ஆமென்! அது உங்களை பக்திபரவசமடையச் செய்கிறதல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நீங்கள் கலப்படமற்றவராய் இருக்க தேவன் விரும்புகிறார். தேவனுடைய வார்த்தையில் நிலைநில்லுங்கள். அதனுடன் நிலை நில்லுங்கள். சரி.

61147 தேவன் ஏதேன் தோட்டத்தில் ஏவாளுக்கு வாக்குத்தத்தம் செய்ததுபோல இந்த ஏவாளுக்கும் இங்கே செய்தார். இந்த பெந்தெகொஸ்தே சபையே தான் முதல் சபையாகும். அவர்கள் அங்கு சென்றவரையிலும் அதுவே ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயாக இருந்தது. ஆனால் அவர்கள் பாவங்களுக்கு உடன்பட்டபோது, அவளுடன் மரிக்கின்றனர். நீங்கள் பாருங்கள். 148 இங்கே ஒருவன் வந்து, “நான்—நான் தேவனை சேவிக்க விரும்புகிறேன்” என்று கூறுகிறான். 149 அவர்கள், “நல்லது, நீ செய்ய வேண்டியது இதுதான். நீ போய் மனந்திரும்பு” என்கின்றனர். “சரி, நான் அதைச் செய்வேன். தேவனுக்கே மகிமை உண்டாவதாக”. அவன் சென்று மனந்திரும்புகிறான். 150 “இப்பொழுது, நீ எங்களிடம் வந்து சேர்ந்துகொள்”, என்கின்றனர். அவர்கள் அவ்விதமாகவே இருக்கின்றனர். ஊ—உ. பாருங்கள்? ஸ்தாபனத்தைச் சேர்ந்த மாத்திரத்தில் அவன் ஆவிக்குரிய மரணம் அடைகிறான். அது உண்மை. பாருங்கள்? பாருங்கள்? அது…நான் இவ்வாறு கூறவில்லை. வேத புத்தகம் அவ்வாறே போதிக்கின்றது. இது இங்கே இவ்விதம் கூறுகின்றது. சரி.

62151 இப்பொழுது தேவன் ஏவாளுக்கு வாக்குத்தத்தம் செய்தது போன்று சபைக்கும் வாக்குத்தத்தம் செய்திருந்தார். அவளிடம் வார்த்தை திரும்பவும் வருமென்று தேவன் ஏவாளிடம் கூறியிருந்தார். உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? அவள் எதை இழந்தாளோ, அதுவே அவளுக்கு திரும்ப அளிக்கப்படும். காரணம் ஒரே ஒரு காரியம் மாத்திரமே திரும்ப அளிக்கப்பட முடியும், அது வார்த்தையாகும். சரியாக. 152 நான் உங்களுக்கு முன்னே கூறியது போன்று, துப்பாக்கியைச் சுடும்போது குறி தவறினால், அதன் காரணம் என்னவென்று கண்டுபிடித்து, முன்பிருந்த நிலைமைக்குத் துப்பாக்கியைக் கொண்டுவந்து மறுபடியும் சுட வேண்டும். பாருங்கள்? 153 அவ்வாறு முன்பிருந்த நிலைமை என்னவென்று ஆலோசனை செய்தால், நீங்கள் நிசாயாவை (Nicaea) அடைவீர்கள். அங்கிருந்து நீங்கள் மறுபடியும் தொடங்க வேண்டும். பாருங்கள். ஸ்தாபனங்களை விட்டு அகன்று, எல்லா சபைகளையும் விட்டு அகன்று, திரும்பி செல்லுங்கள். நாம் இப்பொழுது இவைகளை முத்திரைகளைக் குறித்து சிந்திக்கும்போது முழுமையாய் பார்த்துக்கொண்டு வருகிறோம். 154 ஸ்தாபனங்கள் கொண்டுள்ள முறைமைகளுக்கு நான் எதிரியாயிருப்பதன் காரணமென்னவென்று என் வாழ்நாள் முழுவதும் நான் வியந்ததுண்டு. ஸ்தாபனத்திலுள்ள மக்களுக்கு நான் விரோதியல்ல, ஏனெனில் அவர்கள் என்னைப்போல அல்லது உங்களைப் போன்ற அல்லது வேறு எவரையும் போன்று மனிதர்கள்தாம். ஆனால் ஸ்தாபனங்கள் கையாளும் அந்த முறைமைகளை நான் எதிர்க்கிறேன். இப்பொழுது நான் அவ்வாறு செய்கிறது சரி என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இதுவரையிலும் நான் அதை ஒருபோதும் அறிந்ததில்லை. அது சரி.

63155 மாம்சப் பிரகாரமான ஏவாளுக்கு தேவன் வாக்களித்தது போன்று, ஆவிக்குரிய ஏவாளுக்கும் கடைசி காலத்தில் தேவனுடைய வார்த்தை ஏவாளுக்குத் திரும்பவும் அளிக்கப்படுமென்ற உறுதியை அவர் அளித்தார். அவர் சபையை மீண்டும் மூல வார்த்தைக்கு அப்பொழுது திருப்புவார். 156 இப்பொழுது நன்றாகக் கூர்ந்து கவனியுங்கள். இதை நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டுமென்று நான்—நான் விரும்புகிறேன். தேவனுடைய வார்த்தையானது ஏவாளின் வித்தின் மூலம் திரும்பவும் அளிக்கப்படுமென்னும் உறுதியை தேவன் ஏவாளுக்கு அளித்திருந்தார். அச்சமயம் இந்த வார்த்தையே வித்தாக மாறும். அவளுக்கு ஒரு பதிலீ கொடுக்கப்பட்டிருந்த போது, அவள் அந்த பதிலீயை இறுகப் பற்றிக் கொண்டாள். வார்த்தை அவளிடத்தில் வந்தபோது, அவள் என்ன செய்தாள்? “எனக்கு அது அது வேண்டாம்” என்று கூறினாள். ஏனெனில் வார்த்தை மிகவும் தாழ்மையுள்ள விதத்தில் தோன்றியது. அது அவளுக்கு உண்மையானதாய்த் தோன்றவில்லை. அது பகட்டாய்க் காணப்படவில்லை. “ஒரு மாட்டுத் தொழுவமா? ஓ, என்னே! என்னே! அதில் பிறந்தவனையா ஏற்றுக்கொள்வது? பள்ளிக்கூடத்தில் அவர் ஒருநாள் கூட படிக்கவில்லையே? என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது? அவர் மேசியா அல்ல. ஜனங்களால் உதறித் தள்ளப்படும் ஒரு மனிதன் எவ்வாறு ‘மேசியாவாக’ இருக்க முடியும்? ஒரு கந்தைத் துணியை அவர் முகத்திலே போர்த்தி அவர் தலையில் குட்டினார்களே? அப்படிப்பட்டவர் ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக எழும்பியிருக்கிறார் என்றும், மேலும் தம்மையே தீர்க்கதரிசி அழைத்துக்கொண்டாரே?” என்றெல்லாம் அவர்கள் சிந்தனை செய்தனர். 157 உண்மையாகவே, அவர்கள் தீர்க்கதரிசிகளை அறியாதவராயிருந்தனர். இயேசுவும் “தீர்க்கதரிசிகளை நீங்கள் அறிவீர்களானால் என்னையும் அறிவீர்கள்” என்றார். அது உண்மை.

64158 இப்பொழுது கவனியுங்கள். ஆனால் எபிரெய மணவாட்டியிடம் தேவனுடைய வார்த்தை தோன்றினபோது, அது எவ்வகையில் தோன்றுமென்று தேவன் கூறியிருந்தாரோ, முற்றிலும் அவ்வாறே அது தோன்றியது. ஆனால் அவளோ அதை வேறு விதமாகக் கற்பனை செய்திருந்தாள். நான் யூத மணவாட்டி, எபிரெய மணவாட்டியைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். அவள் ஆரம்பத்திலேயே ஏவாள் ஆகும். ஆனால் அது அவளிடத்தில் வந்தபோது அவள் அதை நிராகரித்து, அதற்குப் பதிலாக அளிக்கப்பட்டிருந்த பதிலீகளில் நிலைகொண்டிருக்க விரும்பினாள். 159 இப்பொழுது, தேவன் ஆவிக்குரிய ஏவாளுக்குப் பெந்தெகொஸ்தே ஆவியைத் தருவதாக வாக்கருளியிருந்தார். ஆனால் அவள் விழுந்து போவாளென்றும், அப்பொழுது அவள் என்னென்ன கிரியைகள் செய்வாளென்றும், அவள் விழுவதற்கு நானூறு வருடங்களுக்கு முன்னமே அவர் முன்னறிவித்திருந்தார். ஆனால் கடைசி நாட்களில் வார்த்தையைத் திரும்பவும் அனுப்புவதாக அவர் வாக்களித்துள்ளார்.

65160 இயேசுவும் பூமியிலிருந்தபோது அதையே கூறினார். அவர் அதை மறுபடியும் அளிப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால் அது வரும்போது என்ன காணப்படுகிறது? ஆதியிலே அது வந்தபோது எதைக் கண்டதோ, அதையே அது காணும். சரி. அவர்கள் பெற்றுள்ளது…அவர்கள் தங்களுடைய பதிலீகளை விரும்புகின்றனர். அவர்கள் தங்கள் ஸ்தாபனங்களை விரும்புகின்றனர். அவர்கள் தங்களுடைய பிரமாணங்களை விரும்புகின்றனர். அவர்கள் தாங்கள் விரும்புகிற விதத்தில் வாழ விரும்புகின்றனர். அவர்கள், “நல்லது, நான் இன்னார்—இன்னார் ஆவேன், நான் இன்னார்—இன்னாரைச் சேர்ந்தவன்” என்று கூறிக்கொள்கிறார்கள். என்ன செய்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு எந்த வித்தியாசமும் உண்டாவதில்லை. எவ்வளவுதான் அவர் தம்மை வெளிப்படுத்தினாலும், அவர் மரித்தோரை உயிரோடெழுப்பினாலும், அவர் இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினாலும், அவர் என்ன செய்வாரென்று வேதத்தில் கூறப்பட்டுள்ள எல்லாவற்றையும் அவர் செய்தாலும், அது அவர்களுக்கு ஒரு துளி வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை. “அது என்னுடைய ஸ்தாபனத்துடன் சம்மந்தப்படாதவரை அதற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை” என்று அவர்கள் கூறுகின்றனர். பாருங்கள்? 161 எபிரெய மணவாட்டியும் அதையே செய்தாள். சரி, பாருங்கள். அவர்கள் தங்களுடைய பதிலீகளுக்கு செவிகொடுத்தார்கள். தேவன் அவர்களுக்கு உண்மையானதை வாக்களித்தார். அந்த உண்மையானது வந்தபோதோ, அதை அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில், அது மிகவும் தாழ்மையுள்ளதாயிருந்தது.

66162 இப்பொழுது அது காட்சியில் எழும்புகிறபொழுது, இந்நாளில் அது அதே காரியமாய்த்தான் உள்ளது. இப்பொழுது கடைசிகாலத்தில் தேவன் ஒரு செய்தியை அனுப்பி ஜனங்களின் இருதயத்தை திருப்புவாரென்று மல்கியா 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. யோவேலும், “பூச்சிகள் பட்சித்த வருஷங்களின் விளைவைத் திரும்பவும் அளிப்பதாக தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளதாகக்” கூறியுள்ளான். மூல பெந்தெகொஸ்தே கிளையிலிருந்து ரோமபுரி தின்று மீதியாய் விட்டதை மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள் இவர்கள் தின்றனர். “கடைசி நாட்களில் அவை யாவும் திரும்ப அளிப்பேன்” என்று தேவன் கூறினார். அது உண்மை. 163 அவர் அவ்விதமான நபரை நமக்கு அனுப்பக்கூடும்… ஒரேக்காரியம் தேவன் தம்முடைய வார்த்தையை எப்பொழுதும் ஒரு தீர்க்கதரிசியினிடத்திற்குத்தான் அனுப்பியிருந்தார். சீர்திருத்தக்காரரிடமல்ல; தீர்க்கதரிசிகளிடத்திற்கே அனுப்பப்பட்டது. அது அப்பொழுது அதற்கான வேளையாயிருக்கவில்லை. ஆனால் இப்பொழுது அந்தத் தருணம் வந்துவிட்டது. அந்த காரணத்தினால்தான் அது வருவதை நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது மிகவும் தாழ்மையாகவும், சாதுவானதாகவும் இருக்கும்! ஆகையால்…ஓ, என்னே!

67164 அதை மேம்பட்ட மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், பெந்தெகொஸ்தேகாரர் இதை ஏற்றுக்கொள்வார்களென்று நினைக்கிறீர்களா? “ஓ” “பெந்தெகொஸ்தேகாரர்களை நீங்கள் ஏன் சொல்லுகிறீர்கள்?” என்று நீங்கள் கேட்கலாம். 165 பெந்தெகொஸ்தேயினர் தாம் லவோதிக்கேயா சபை. தாங்கள் ஐசுவரியவான்களென்றும் அவர்களுக்கு ஒரு குறைவுமில்லையெனவும் எண்ணுகின்றனர். 166 ஆனால், “நீங்கள் தரித்திரராயிருப்பதை அறியாமலிருக்கிறீர்கள்” என்று வேதம் அவர்களிடம் உரைக்கிறது. கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து நீங்கள் பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் ஆவிக்குரிய விதத்தில் நீங்கள் இன்னும் தரித்திரரே. “ஓ”, “நான் எல்லாவற்றையும் காண்கிறேன்” என்று நீங்கள் கூறலாம். “நீங்கள் குருடர்”. “நல்லது”,“தேவனுக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஆடையுடுத்தியுள்ளோம்” என்று நீங்கள் கூறலாம். ஆனால், “நீங்கள் நிர்வாணியே!” “நம்முடைய பையன்களைக் குறித்து நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். எங்களுக்கு வேதப் பள்ளிகள் உண்டு என்கின்றனர். நாங்கள்…” 167 “நீங்கள் அதை அறியாதிருக்கிறீர்கள்”. அவர்கள் எண்ணியிருப்பதற்கு மாறாக அவர்கள் நிலைமையுள்ளதைக் கவனியுங்கள். லவோதிக்கேயா சபை இத்தகைய நிலையில் காணப்படும் என்று வேதம் கூறுகின்றது… 168 இது கடைசி காலமென்பதை பூமியின் மேலுள்ள எவருமே மறுக்க முடியாத உண்மையாகும். ஏனெனில் லவோதிக்கேயா சபையின் காலம்தான் ஏழாம் சபையின் காலம். நாம் அக்காலத்தில் வாழ்கிறோம். இரண்டாயிரம் வருடங்களானது அதை முடிவடையச் செய்கின்றது. இதற்குபின் வேறு சபைக் காலங்கள் உண்டாவதில்லை. அந்தக் காரணத்தினால் தான் பின்மாதிரி என்ற ஸ்தாபன சகோதரரே நீங்கள் வேறு ஸ்தாபனத்தைத் தொடங்க முடியாது. இனி வேறொன்று இருக்கப் போவதில்லை. அது உண்மை. இதுவே முடிவானதாகும். ஆமென். இனி வேறு சபைக் காலங்கள் இருக்க முடியாது. எல்லாமே முற்றுபெற்றுவிட்டது.

68169 பெந்தெகொஸ்தே சபையினர் அளித்த செய்திதான் கடைசி செய்தியாயிருக்குமானால்… நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் கடைசி மூன்று சபை காலங்களில் அளிக்கப்பட்டுள்ள மூன்று செய்திகள், மறுபிறப்பை முற்றுப் பெறச்செய்கின்றன. 170 ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கும்முன்பு, முதலில் வெளிவருவது தண்ணீர், அடுத்தபடியாக இரத்தம், முடிவில் ஜீவன். 171 இயேசுவை அவர்கள் சிலுவையில் கொன்றபோது, மறுபிறப்பை முற்றுப்பெறச்செய்ய அவர் விலாவிலிருந்து தண்ணீரும், இரத்தமும், ஆவியும் வெளிவந்தன. “பிதாவே, உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று இயேசு கூறினார். அவருடைய சரீரத்திலிருந்து வெளிவந்தது என்ன? தண்ணீர், இரத்தம், ஆவி.

69172 இப்பொழுது, “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை (அது கிறிஸ்துவாகும்,) பரிசுத்தாவி” என்று அதை குறித்து உங்களுக்கு 1யோவான் 5:7-கூறுகிறது. இம்மூவரும் ஒருமைப்பட்டிருக்கிறார்கள்; ஒன்றாயிருப்பதல்ல: ஆனால் ஒருமைப்பட்டிருக்கிறார்கள் …சாட்சியிடுகிறவைகள் மூன்று…அல்ல “அவர்கள் மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்பதை நான் அங்கு தவறாகக் கருதிவிட்டேன். “பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஜலம், இரத்தம், ஆவி என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது”. 173 நீங்கள் பரிசுத்தமாக்கப்படாமல் நீதிமானாக்கப்பட முடியும். நீங்கள் நீதிமானாக்கப்படாமல் பரிசுத்தமாக்கப்பட முடியும். பரிசுத்த ஆவியைப் பெறாமலும் நீங்கள் பரிசுத்தமாக்கப்பட முடியும். அது சரியே. 174 யோவான் 17; 17ல், சீஷர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, பிசாசுகளைத் துரத்துவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை. பாருங்கள்? நிச்சயமாக. அவர்கள் பெந்தெகொஸ்தே வரை வந்து பரிசுத்த ஆவிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. 175 அங்கு தான் யூதாஸூம் தன் உண்மை சொரூபத்தைக் காண்பித்தான். அந்த ஆவி நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் என்பவைகளின் மூலம் எவ்விதம் கிரியை செய்தது என்று பார்த்தீர்களா? ஆனால் அது முடிவில் வந்தபோது, யூதாஸ் தன்னுடைய சொரூபத்தைக் காண்பித்தான். பாருங்கள்? அது உண்மை.

70176 நாம் இப்பொழுது இங்கே கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது கவனியுங்கள். மாம்சப்பிரகாரமான ஏவாளுக்கு, எபிரெய ஏவாளுக்கு எவ்விதம் வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டதோ…வார்த்தையானது திரும்ப வரும் என்று எபிரெய மணவாட்டிக்கும் வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டது. பெந்தெகொஸ்தேவிலிருந்து வந்த ஆவிக்குரிய மணவாட்டி, அவள் நிசாயாவில் விழுந்தபோது, கடைசி நாட்களில் அவளிடம் வார்த்தை திரும்பவும் வரும் என்பதாக அவளுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் கூறுவது, அப்பொழுது… 177 நீங்கள் வேறொரு வசனத்தை இங்கே எடுக்க விரும்பினால்… “ஏழாம் தூதனுடைய (ஏழாம் செய்தியாளன்) சத்தத்தின் மணி நேரத்தில், நேரத்தில் தேவரகசியம் நிறைவேறும்” என்று வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரம் உரைக்கிறது. பாருங்கள்? மறுபடியும் வார்த்தைக்கு திருப்புதல்! இந்தக் கடைசி நாட்களின் செய்தியாளன், “அவர்களைப் பிதாக்களின் விசுவாசத்திற்கு, மூல விசுவாசத்திற்குத் திருப்புவான்” என்று வேதம் கூறுகின்றது. ஆனால் ஸ்தாபனங்கள் அதை ஏற்றுக்கொள்ளுமென்று நினைக்கிறீர்களா? இல்லை, ஐயா. அவர் மல்கியா 4-ம் அதிகாரத்தில் கூறியுள்ளவாறு, “கடைசி நாட்களில் அவன் மூல வார்த்தையைத் திரும்பவும் அளிப்பான்”. 178 ஆனால் அவள் புறக்கணித்துவிட்டிருந்தாள். இப்பொழுது அவள் அந்த வார்த்தையை நிசாயாவில் புறக்கணித்திருந்தாள். ஏவாள் ஏதேனில் புறக்கணித்தாள். இந்த ஏவாள் கல்வாரியில் அதைப் புறக்கணித்தாள். நிசாயா குழுவினர் வார்த்தையை இந்தக் கடைசி நாட்களில் அதேவிதமாக நிராகரித்துக் கொண்டிருக்கின்றனர். என்னே! 179 அதே விதத்தில் வார்த்தை மாம்சமாக வெளிப்பட்டபோது, ஏவாள், எபிரெய சபை ஆவிக்குரிய ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயான அவள், அப்பொழுது அவள் அதை புறக்கணித்தாள். அவள் தன்னுடைய பாரம்பரியங்களிலும், கொள்கைகளிலும் மரித்துப்போய், அதை அவள் தவற விட்டாள். இப்பொழுதும் இந்த ஒன்றும் சரியாக அதேவிதமாகவே உள்ளது. அது சரி.

71180 வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாம் மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையாகிய அவரை, அவர்கள் காணத்தவறுகின்றனர். இவைகளைச் செய்யும்படியாக வார்த்தையானது வாக்குத்தத்தம் செய்துள்ளது. கடைசி நாட்களில் இது இவ்வாறு இருக்கும் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. “சோதோமின் நாட்களில் நடந்ததுபோல, மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்”. சோதோமிலே அப்பொழுது என்ன நிகழ்ந்தது என்பதை இப்பொழுது கவனியுங்கள். “நோவாவின் நாட்களில் நடந்ததுபோல, மனுஷகுமாரம் வரும் நாட்களில் நடக்கும்”. பாருங்கள்? அப்பொழுது என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். பாருங்கள்? இப்பொழுது, அது அவ்விதமாகவே இருக்கும் என்று அவர் கூறினார். நாம் அக்காலத்தில் தான் வாழ்கிறோம். அவ்விதம் நிகழுமென்று வேதத்தில் கூறப்பட்டுள்ள அறுநூறு வாக்குத்தத்தங்களை நான் உங்களுக்கு எடுத்துக் காண்பிக்க முடியும், அவ்வளவுதான் என்று நான் யூகிக்கிறேன். பாருங்கள்? ஆனால் அவர்கள் அதை நிராகரித்தனர். 181 அவள் தன் பாரம்பரியங்களிலும், பதிலீயிலும் நிலை கொண்டிருந்தாள். இயேசுவாகிய வார்த்தை தோன்றியபோது, உண்மையான அவருடைய இரத்தத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, “அதற்கு பதிலீயாகக் கொடுக்கப்பட்டிருந்த மிருகங்களின் இரத்தத்தில் அவள் திருப்தி கொண்டிருந்தாள்”. எனவே வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாகிய இயேசு மணவாட்டியிடம், எபிரெய மணவாட்டியிடம், “நீங்கள் உங்கள் பாரம்பரியங்களில் நிலைகொண்டுள்ளதால், தேவனுடைய வார்த்தையை அவமாக்குகிறீர்கள்” என்றார். பாரம்பரியம் நற்பயனளிக்க முடியாது.

72182 இப்பொழுது, இன்றைக்கு அதுதான் காரணமாகும், அதாவது, நாம் பெற்றிருப்பதாக என்ணப்படும் எழுப்புதல்கள் யாவும் ஸ்தாபன எழுப்புதல்கள் ஆகும். ஆனால் உண்மையில் அவை இருதய உணர்ச்சிகளை எழுப்புவதாக அமைந்திருக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லை, இல்லை ஐயா, நம்மிடையே எழுப்புதல்கள் உண்டாவதாகக் கருத வேண்டாம். அது நம்மிடம் இல்லை. ஓ, ஸ்தாபன சபைகளில் அவர்களுக்குக் கோடிக்கணக்கான அங்கத்தினர்கள் உண்டு. ஆனால் உண்மையான எழுப்புதல் எங்கேயும் காணப்படுவதில்லை. இல்லை. இல்லை. 183 மணவாட்டிக்கும் உண்மையாக எழுப்புதல் இன்னும் நிகழவில்லை. பாருங்கள்? இன்னும் அங்கே எழுப்புதல் இல்லை, மணவாட்டியை அசைத்தெழுப்பும்படியாக இன்னும் தேவனுடைய வெளிப்படுத்துதல் இன்னும் வரவில்லை. பாருங்கள்? நாம் இப்பொழுது அதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை இரகசியமாயுள்ள அந்த ஏழு இடிகள் தான் அவளை மறுபடியுமாக எழுப்பும். பாருங்கள், ஆம். அவர் அதை அனுப்புவார். அவர் அதை அனுப்புவதாக வாக்களித்துள்ளார். இப்பொழுது கவனியுங்கள்.

73184 இப்பொழுது, அவள்—அவள் மரித்துவிட்டாள். இன்றைய சபை ஸ்தாபனங்களை தங்கள் பிரமாணங்களை மறந்து, தங்களுடைய கொள்கைகளையும் மறந்து, வேதத்தை எடுத்துக்கொண்டு, அதில் அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தத்தை ஆதாரமாகக்கொண்டு தேவனிடம் மன்றாடினால், அப்பொழுது அந்த வார்த்தை சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஆனால், பாருங்கள். இயேசு, “உங்கள் பாரம்பரியத்தினால் நீங்கள் தேவனுடைய வார்த்தையை அவமாக்குகிறீர்கள்” என்றார். இன்றைக்கு ஆவிக்குரிய ஏவாளோடு உள்ளதும் அதேக் காரியம்தான், பாருங்கள், ஆவிக்குரிய இன்றைய மணவாட்டி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இன்றைய சபை ஸ்தாபனங்கள். அவள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அவளோ அதை ஏற்றுக்கொள்ள மாட்டாள். அவள் அதற்கு பதிலாக கோட்பாடுகளை ஏற்றுக்கொள்கிறாள். ஆகையால் தேவனுடைய வார்த்தையோடு தன்னுடைய ஸ்தாபனங்களின் பிரமாணங்களை அவள் புகுத்த முன்வருவதால், பாருங்கள், தேவனுடைய வார்த்தை அவளுக்கு சக்தியளிப்பதில்லை. அது கிரியை செய்யாது. நமது இன்றைய தேவை என்னவென்றால்…

74185 அவருடைய வருகையின் தூதன் (Herald of His Coming) என்னும் பத்திரிக்கையின் தலைப்பில், “நமக்கு ஒரு தீர்க்கதரிசி திரும்பவும் வருவது அவசியம்! நமக்கு ஒரு தீர்க்கதரிசி திரும்பவும் வருவது அவசியம்!” என்று இந்தவிதமாக எழுதப்பட்டுள்ளதை நான் வாசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த தீர்க்கதரிசி உண்மையாக வரும்போது, அவர்கள் அதைக் குறித்து ஒன்றுமே அறியாமற்போவார்கள் என்று நினைக்கிறேன். அது உண்மை. ஒவ்வொரு காலத்திலும் அந்தவிதமாகவே சம்வித்து வருகிறது. நீங்கள் பாருங்கள். “நமக்கு அது தேவையே”. நீங்கள் எல்லாவற்றைக் குறித்தும் பேசுகிறீர்கள், ஆனால் “கர்த்தருடைய வார்த்தையைத் தைரியமாக நமக்குக் கொண்டு வரும் ஒரு தீர்க்கதரிசி நம்மிடையே தோன்றுவது அவசியம்; வேதம் அதை வாக்களித்துள்ளது என்று நாம் விசுவாசிக்கிறோம்”. 186 இப்பொழுது, அப்பத்திரிக்கையின் பதிப்பாசிரியராகிய சகோதரன்—சகோதரன்.மூர் (Bro.Moore) என்பவரை நான் அறிவேன். அவர் வீட்டில் நான் உணவருந்தி இருக்கிறேன். அவர் மிகவும் சிறந்த மனிதர்: ஆனால் பாருங்கள். நாம் அதைப் பெற்றவராயிருக்க வேண்டும் என்பதை அவர் அறிவார். சகோதரி மூர் அவர்களும் மிகவும் அருமையானவர். அவர்கள் எல்லாவற்றையும் ஊழியத்திற்கென்று தியாகம் செய்துள்ளனர். 187 அவருடைய வருகையின் தூதன் என்னும் பத்திரிக்கை இன்று காணப்படும் மிகச்சிறந்த பத்திரிக்கைகளில் ஒன்றாகும் என்பதே என் கருத்தாகும். ஆனால் அவர்கள் “நமக்கு ஒரு தீர்க்கதரிசி அவசியம்! நமக்கு ஒரு தீர்க்கதரிசி அவசியம்!” என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டேயிருக்கின்றனர் என்பதை நீங்கள் கண்டறியலாம். பார்த்தீகளா? என்னே! அதைக் குறித்தே அவர்கள் பேசுகிறார்கள்.

75188 வானொலியில் பாப்டிஸ்ட் சபைகள், “நாம் கத்தோலிக்க சபையுடன் சேரவேண்டிய அவசியமில்லையென்றும், ஆனால் அவர்களுடன் ஒருவித ஐக்கியங்கொள்ளுதல் அவசியமென்றும்” நேற்றும், இன்றும் பிரசங்கங்கள் நிகழ்த்தின. பாருங்கள்? 189 ஆனால் அதே நேரத்தில், “அந்த விஷத்தினின்று நாம் விலகவேண்டுமென்ற” செய்தி இவ்விடமிருந்து செல்கின்றது. பாருங்கள்? பாருங்கள்? “இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?” ஒளியும் இருளும் ஒன்றாக ஐக்கியங்கொள்ள முடியாது. ஒளி உட்பிரவேசிக்கும்போது, இருள் தானாகவே அகன்று விடும். பாருங்கள்? அதனால் முடியாது…ஒளியோ மிகுந்த வல்லமையுள்ளது. உங்களால் இருளினால் ஒளியை அணைக்க முடியாது. ஆனல் ஒளியினால் இருளை அணைக்க முடியும். அது உண்மை. தேவன் ஒளியாயிருக்கிறார். அவரே வார்த்தை. பாருங்கள்? இப்பொழுது, அங்குதான் காரியம், மறுபடியும் சீர்படுத்துகிறது. அந்த வார்த்தையை பொய்யுரைக்கவும் அல்லது ஏதாவது தவறிழைக்கவுஞ் செய்ய உங்களால் முடியாது. அது மறுபடியுமாக அதே ஸ்தலத்திற்கு சரியாகத் திரும்ப வருகிறது. ஆம், ஐயா.

76190 ஒரு மனிதன் உங்களிடம் தவறான போதகங்களைக் கொண்டு வந்து சண்டையிட முயற்சிக்கும்போது, அவன் என்ன விசுவாசிக்கிறான் என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நீங்கள் எங்கு நிலைகொள்ள வேண்டுமென்று அறிந்திருந்தால்… 191 ஒரு முயலை அதன் பட்டியல் அவிழ்த்துவிட்டு, எல்லா துவாரங்களையும் அடைத்து, பட்டியலின் வாசலருகில் நின்றால், அது மறுபடியும் வாசலிடம் தான் வரவேண்டும். அதைத் தவிர வேறொன்றும் இல்லை. பாருங்கள்? ஏனென்றால் அது வாசலின் வழியாகத்தான் வெளியேறமுடியும். அது தன் தலையை உடைத்துக் கொண்டபிறகு, அங்குமிங்கும் நுழைத்து வெளியேற முயலுவதை நீங்கள் நின்று கவனித்துக் கொண்டே இருக்கலாம். முடிவில் அது வாசலிடம்தான் வரவேண்டும். பாருங்கள்? அவ்வளவுதான். 192 செய்ய வேண்டிய ஒரே வழி அதுவேயாகும். வார்த்தையோடு தரித்திருங்கள். அவ்வாறே நீங்களும் எவ்வளவாக உங்கள் தலைகளை ஸ்தாபனங்களின் பிரமாணங்களிலும் கோட்பாடுகளிலும் நுழைக்க முயன்றாலும், முடிவில் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குத்தான் வரவேண்டும். பாருங்கள். ஆம் ஐயா. அனைத்தும் அதனுடையதாகவே உள்ளது.

77193 இப்பொழுது, பாருங்கள், அவர்களுக்கு—அவர்களுக்கு—அவர்களுக்கு—அவர்களுக்கு அது தேவையில்லை. அவர்களுக்கு தேவனுடைய வார்த்தை தேவையில்லை. ஏனென்றால், அவள் தன்னுடைய பாரம்பரியத்தைப் பற்றிக்கொண்டதால், தேவனுடைய வார்த்தை பலனளிக்காதபடி தடை செய்தாள். 194 ஆவிக்குரிய ஏவாளும் அதையே செய்தாள். அவள் அதை விரும்பவில்லை…அவள் தன்னுடைய பாரம்பரியங்களைப் பற்றிக்கொண்டு, தேவனுடைய வார்த்தையினின்று விலக விரும்புகிறாள். தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, அவள் மறுபடியுமாக ஸ்தாபனங்களையும், அவைகளின் பிரமாணங்களையும், அவளுடைய மூப்பர்களின் பாரம்பரியங்களையும் பற்றிக்கொள்கிறாள். 195 கடைசி நாட்களில் வாக்குத்தத்த வார்த்தையானது அவளிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவளுடைய பாரம்பரியங்களினிமித்தமாக அவள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாள். அந்த எபிரெய மணவாட்டி செய்ததுபோன்றே, உண்மையான வார்த்தை அவளிடம் வெளிப்படுத்தப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, ரூபகாரப்படுத்தப்பட்டபோதிலும் அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள். அவள் ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டாள்? ஏனென்றால் அங்கே அவளுடைய மாதிரி உள்ளது. அவளால் அதைச் செய்ய முடியாது. அது உண்மை. அவளால் இவளுடைய மாதிரியை மிஞ்சி ஏற்றுக்கொள்ள முடியாது. புரிகிறதா? அவள் இவ்விதம் செய்வாள் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நீங்கள் எப்படி அதிலிருந்து எந்த ஒரு காரியத்தையும் விலக்கப்போகிறீர்கள்? 196 ஆகையால் நீங்கள் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று, நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குள் இருப்பதாக சந்தோஷம் கொள்வதேயாகும். அவ்வளவுதான். அதற்காக காத்திருங்கள். சரி.

78197 கடைசி நாட்களில் தேவன் வெளிப்பட்டு அவருடைய வார்த்தையை அவளுக்கு ரூபகாரப்படுத்துவதாக வாக்களித்துள்ளார் என்றாலும், அவள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாள். தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள் மூலம் அவளுக்கு அவை எல்லாவற்றையும் வாக்களித்தார். தேவன் இயேசு கிறிஸ்து மூலமாக வாக்களித்தார். தேவன் யோவேல் மூலமாக வாக்களித்தார். தேவன் பவுல் மூலமாக வாக்களித்தார். தேவன் மல்கியா மூலமாக வாக்களித்தார். யோவான்…தேவன் திவ்விய வாசகனாகிய யோவான் மற்றும் எல்லா தீர்க்கதரிசிகள் மூலமாய் அவளுக்கு என்ன கடைசி செய்தி அளிக்கப்படும் என்று சரியாக வாக்களித்தார். நீங்கள் அவைகளை குறித்துக்கொள்ள வேண்டுமானால் இவ்வசனங்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் யாவரும் அவைகளை அறிவீர்கள். இயேசு: யோவான் 14:12; யோவேல்: யோவேல்: 2:38; பவுல்: 2தீமோத்தேயு 3; மல்கியா 4; திவ்வியவாசகனாகிய யோவான்: வெளி 10: 1-7, சரியாக இப்பொழுது என்ன சம்பவிக்கும் என்று பாருங்கள். சபைக்கு அது என்னவாயுள்ளது? வார்த்தையானது மறுபடியும் அவருடைய மக்களிடையே மாம்சமானது. பாருங்கள்? ஆனாலும் அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை.

79198 இயேசு ஜனங்களுக்கு முன்னால் அற்புதங்களைச் செய்து, அவர் தேவனென்று நிரூபித்தபோது என்ன கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை நிரூபித்தார். அவர் சரியாக அப்படியே செய்தார். அவர், “ஓ, வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே…உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமில் செய்யப்பட்டிருந்தானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும்” என்றார். அது உண்மை. கப்பர்நகூமில் ஒரு சிலரை மாத்திரம் சொஸ்தப்படுத்தி, அவர்கள் இருதயங்களின் இரகசியங்களை அறிந்து அவைகளை வெளிப்படையாகக் கூறிவிட்டு, வெளிநடந்தார். ஊ—ஊ. அவ்வளவுதான். பாருங்கள்? 199 பலத்த செய்கைகள் என்னவென்பதை அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் பெரிய திட்டங்களை அமைப்பது அவசியமென்று எண்ணுகின்றனர். எல்லாரும் எழுந்து நிற்க நீதிபதி ஒரு சொற்பொழிவு ஆற்றுவார். அப்பொழுது வாத்தியங்கள் முழங்கி, கொடிகள் பறந்து ஆடம்பர ஆடைகளணிந்துள்ள பெண்மணிகள் கலந்திருக்க, பெரிய உயரமான தொப்பிகளைப் போட்டுக்கொண்டு, பி.எச்.டி., எல்.எல்.டி., பட்டதாரிகள். கழுத்துப்பட்டைகளைத் தூக்கி விட்டுக்கொண்டு உள்ளே நடந்து செல்வர். “அது மிகவும் மகத்தானது” என்று ஜனங்கள் கருதுகின்றனர். ஆனால் தேவனோ “அது மூடத்தனம்” என்கிறார்.

80200 மொழியின் முதல் எழுத்துக்களுக்கிடையேயுள்ள வித்தியாசம் என்னவென்றுகூட அறியாத படிப்பறியாத பேதையர் மூலமாய் தேவன் அநேக காரியங்களைச் செய்து உண்மையான சபைக்கு அனல் மூட்டுகிறார். ஆனால் மற்றவர்கள் அவர்களைப் பார்த்து, “பரிசுத்த உருளைகளின் குழு” என்று கூறுகின்றனர். ஆனால் தேவனோ அதை “மகத்தானது” என்று அழைக்கிறார். ஆனால் உலகமோ அதை “மூடத்தனம்” என்று அழைக்கிறது. உலகம் அதை “மகத்தானது” என்று அழைப்பதை தேவன் “மூடத்தனமென” அழைக்கிறார். பாருங்கள் அப்படியே எதிர்மாறாக இருப்பதைப் பார்த்தீர்களா? தேவன் தாம் வாக்களித்துள்ள காரியத்தை நிறைவேற்றுவார். அவர் ஏற்கனவே அவைகளை நிறைவேற்றியிருக்கிறார். பாருங்கள்? நாம் இங்கே இருக்கிறோம்.

81201 இப்பொழுது, இன்னமும் எபிரெய ஏவாள் செய்தது போலவே அவள் நிலைகொண்டிருக்கிறாள். அவள் அதை செய்யமாட்டாள். உங்களால் மரித்தோரை எழுப்ப முடிந்தாலும், உங்களில் தேவ ஆவியை காண முடிந்தாலும் அவள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாள். இயேசு தேவகுமாரன் என்பதை அவர் தாமே வந்து ரூபகாரப்படுத்தினார். முதலில் அவர் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். “இவர் ஒரு விநோதமான மனிதன், இவர் யார்?” என்று அவர்கள் எண்ணினர். நல்லது, முதலாவது நீங்கள் அறிவது என்னவென்றால், ஜனங்கள் சொல்ல ஆரம்பிப்பது… 202 அவருடைய முன்னோடியாக யோவான் ஸ்நானன் வந்தபோது, உண்மையாகவே அவர்கள் அவனிடம், “நீ மேசியாவா?” என்று கேட்டனர். 203 அவன், “இல்லை, ஆனால் அவர் உங்கள் மத்தியில் எங்கேயோ நின்றுகொண்டிருக்கிறார்” என்றான். ஊம். பாருங்கள்? ஏன்? அவனுடைய செய்தி வந்தபோது, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை யோவான் அறிந்திருந்தான். அவன் தான் என்ன செய்யப் போகிறான் என்பதையும் அவன் அறிந்திருந்தான்.

82204 உதாரணமாக, நோவா ஏனோக்கை கவனித்துக்கொண்டே வந்தான். ஏனோக்கு மேலே சென்றவுடன் நோவா, “நாம் பேழையுடன் அருகாமையிலே செல்லவேண்டிய சமயம் வந்துவிட்டது” என்றான். நோவா ஏனோக்கை கவனித்துக்கொண்டே வந்தான். பாருங்கள்? 205 அவ்வாறே, யோவானும் இயேசு கூறியதை அல்லது தேவன் அவனைக் கவனிக்கக் கூறிய அடையாளம் நிகழ எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஜனங்களிடம், “அவர் உங்கள் மத்தியில் எங்கேயோ நின்றுகொண்டிருக்கிறார். நானும் அவரை அறியேன். ஆனால் அவரை நான் அறிந்துகொள்வேன்” என்றான். 206 அங்கே நின்றுகொண்டிருந்த அவர்கள் யோவானிடம் வந்து, “நீ மேசியாவா?” என்றும், “நாங்கள் தலைமை ஸ்தலத்திலிருந்து (headquaters) அனுப்பப்பட்டுள்ளோம்”, ஊ—ஊ. “அங்குள்ள மூப்பர்கள் அனைவரும் எங்களை இங்கே அனுப்பினர். நீ மேசியாவானால், இங்குள்ள தாழ்ந்தவரிடத்தி உன்னை வெளிப்படுத்துவதைக் காட்டிலும், அங்கு ஏன் வந்து உன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளக் கூடாது?” என்று கேட்டனர். எனவே, அவர்கள், “நீ அங்கே வந்து உன்னை அறிமுகப்படுத்திக்கொள்” என்றனர். 207 அதற்கு யோவான், “நான் மேசியாவல்ல” என்றான். மேலும் அவன், “நான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்” என்று கூறினான். 208 அது மேலே போகமுடிந்த அளவுக்கு அவர்கள் தலைகளுக்கு மேல் சென்றது பாருங்கள். அதைக் குறித்து ஒன்றையுமே அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதேசமயத்தில் அவர்களெல்லாரும் அவன் வருகையை எதிர் நோக்கியிருந்தனர். “ஆனால் அவன் வந்தபோது, அது அந்தவிதமான ஒரு நபராயிருக்க முடியாது என்று கூறிவிட்டனர். ஓ, என்னே, அது பயங்கர மோசமாயிருக்கிறதே!” அவர்கள் “நீ எந்தப் பள்ளியில் படித்தாய்?” என்று கேட்டனர். அவன், “எந்தப் பள்ளியிலுமில்லை” என்றான். அப்பொழுது அவர்கள், “நீ உன்னுடைய ஐக்கியச்சீட்டைப் (Fellowship Card) பெற்றுள்ளாயா?” என்று கேட்டனர்.

83அதற்கு அவன் “அப்படியென்றால் என்ன?” என்று அவர்களையே கேட்டிருப்பான். பாருங்கள்? 209 அவன் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவனாய் இருந்தான். அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, “என்னிடம் ஒரு செய்தி மாத்திரமேயுண்டு. அதாவது, கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது” என்றான். இப்பொழுது, அவன் பெற்றிருந்ததெல்லாம்—பெற்றிருந்ததெல்லாம் அதுவே. ஒரு போதகனைப் போல் போதியாமல், மரம் வெட்டுபவன் ஒருவனைப் போன்று அவன் போதித்தான்; விரியன்பாம்பு குட்டிகள், கோடாரிகள், மரங்கள் போன்ற சொற்களை அவன் உபயோகித்தான். அவன்—அவன் மதசம்பந்தமான முறையிலான (ecclesiastical) சொற்களைப் பேசவில்லை. 210 ஆனால் இயேசுவோ, “அவனைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி ஒருபோதும் இருந்ததேயில்லை” என்று கூறினார். “ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் அவனுடைய நாட்கள் வரையிலும் (till his day) எழும்பவில்லை”. அது சரி. “அவன் தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவனாயிருந்தான்”. அவன் உடன்படிக்கையின் செய்தியாளனாயிருந்தான், இரண்டு யுகங்களுக்கிடையே நின்றவன். பாருங்கள்? “அவன் தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவன்”. 211 ஆகவே அப்பொழுது—அப்பொழுது அவர்கள் அவனை அறிந்து கொள்ளவில்லை. அவன் விநோதமான ஒருவனாய் இருந்தபடியால், அவர்கள் அவனைத் தள்ளிவிட்டனர். பாருங்கள்.

84212 அப்பொழுது, இயேசு தோன்றியபோது, தச்சனுடைய குமாரனாகப் பிறந்த அவரை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர், நிச்சயமாக. மேலும் அவர் “முறைதவறிப் பிறந்தாரென்னும்” மோசமான பெயர் அவருக்கு உண்டாயிருந்தது. அப்படிப்பட்ட ஒரு நபரை அவர்கள் காணச் செல்லவில்லை. 213 ஆனால் தேவன் என்ன செய்தாரென்று பாருங்கள். அவர் படிப்பறியாதவரையும், ஏழை, செம்படவர்களையும், மரம் வெட்டுபவரையும், குடியானவரையும், வேசிகளையும் தெரிந்து கொண்டு, கௌரவம் மிகுந்தவர்களைச் சும்மா விட்டுவிட்டார். ஏன்? என்ன? ஏன் அதைச் செய்தார்? அவர் ஏன் அங்ஙனம் செய்தார்? உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஏனெனில் அவரே வார்த்தை என்பதை அந்தப் படிப்பறியாதவர்கள் அடையாளங்கண்டு கொண்டனர். இப்பொழுது படிப்பறியாத இவர்களைச் சற்று கவனிப்போம்.

85214 பேதையான மீன் பிடிப்பவன் ஒருவன் இருக்கிறான், பேதுரு. அவனுடைய பெயரை எழுதவும் கூட அவனால் முடியாது. “அவன் படிப்பறியாதவனென்றும் பேதமையுள்ளவனென்றும்” வேதம் கூறுகிறது. அவன் தன்னுடைய மீன்களைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, மீண்டும் அங்கே சென்று என்ன சத்தம் கேட்கின்றது என்று பார்க்கிறான். ஆயினும் அவன் இருதயத்தின் ஆழத்தில் மேசியா வருவாரென்று…வேதம் உரைத்திருப்பதை அறிந்திருந்தான். எல்லா எபிரெயர்களும், மேசியா வருவாரென்று எதிர் நோக்கியிருந்தனர். ஏனெனில் அவர் வரும்போது ஒரு வேதப் பூர்வமான காரியம் சம்பவிக்கவேண்டியதாயிருந்தது.

86215 “நான் தான் அவர்” அதாவது மேசியாவென்று தங்களைக் கூறிக் கொண்டவர் அநேகர் எழும்பி நூற்றுக்கணக்கானவரை வனாந்தரத்திலும் மற்றவிடங்களிலும் வழி நடத்திச் சென்றனர். ஆனால் அவர்களெல்லாம் மாண்டுபோயினர். ஆனால் பாருங்கள், உண்மையான மேசியா வரும்போது அவரைத் தூக்கியெறிவதற்கென இத்தகைய சம்பவங்கள் நிகழுகின்றன. 216 அவ்விதமாக தற்போது நம்மிடையே எலியாவின் சால்வைகளும் அங்கிகளும் இன்னும் மற்ற காரியங்களும் காணப்படுகின்றன. எலியா வரும்போது, அந்த—அந்த—அந்த—அந்த உண்மையானக் காரியத்தை அப்புறப்படுத்துவதற்கென இவையாவும் சம்பவிக்கின்றன. பாருங்கள்? அது உண்மை. இவ்விதமான அங்கிகளையும் சால்வைகளையும் தரித்துக்கொண்டு, எல்லாவிதமான அடையாளச் சின்னங்களுக்குள்ளும் (hoods) மற்றவற்றிலும், தங்களை அமிழ்த்துக் கொண்டவர்கள்…ஆனால் இத்தகைய போலிச் செயல்கள் ஏதோ ஒன்று சம்பவிக்கவிருக்கிறது என்பதை ரூபகாரப்படுத்துகின்றன. ஒரு போலி டாலர் நோட்டை காணும்போது, உண்மையான ஒரு டாலர் நோட்டு எங்கோ இருக்கிறது என்பதை உங்களால் கண்டறிய முடியும். பாருங்கள்? 217 ஆகவே இதோ அவர் வந்தார். அப்பொழுது இந்த கௌரவம் மிகுந்தவர்கள் வெளியே வந்து, அவர்கள் தங்கள் பதிலீகளில் (substitutes) இருந்தவர்கள் “மேசியா வருவாரானால்”, “ஏன்”, அவர்கள், “அவர் நிச்சயமாக காய்பாவனிடத்தில் தான் வரவேண்டும். அவர் நம்முடைய ஸ்தாபனங்களுக்கு வருவார். அவர் பரிசேயர்களிடத்திற்குத்தான் வருவார்” என்றெல்லாம் கூறினர். உடனே சதுசேயர், “அந்தவிதமாக நீங்கள் நினைக்கிறீர்கள். அவர் சதுசேயர்களிடம் தான் வருவார்” என்று கூறினர். பாருங்கள், அவர்கள் அவர்கள் இருந்தது போன்றே, இன்றைக்கு அதேக் காரியம்தான் நிகழ்ந்து கொண்டு வருகிறது.

87218 இப்பொழுது, ஆனால் அவர் வந்தபோது, அது விநோதமாயிருந்தது. ஓ, அவரோ அவர்கள் நினைத்திருந்ததற்கு முரண்பட்டவிதத்தில் வந்தார். ஆனால் அவர் தேவனுடைய வார்த்தையின்படியே வந்தார். ஆனால் அவர்களோ அந்த வார்த்தையை அறியாமலிருந்தனர். 219 உண்மையாகவே உங்கள் சிந்தனையில் பதியவேண்டுமென்று இதை நான் கூறட்டும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்றைக்கு உங்களிடமும் அதே தவறுதான் காணப்படுகின்றது. பாருங்கள், நீங்கள் தேவனுடைய வார்த்தையை அறியாமல் இருக்கிறீர்கள்! பாருங்கள்? 220 இயேசு, “வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் முடியவில்லையா?” என்றார். அவர்களோ, “எங்களுக்கு மோசே போன்றவர் உண்டே” என்றனர். 221 ஆகையால் இயேசு, “மோசேயை அறிந்திருப்பீர்களானால் என்னையும் அறிந்திருப்பீர்கள்” என்று பதிலுரைத்தார். அவர்கள் மோசேயை அறியவில்லை. ஆகவேதான் அவர்கள் அவரையும் அறிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் தாங்கள் குஞ்சு பொரித்த கோட்பாடுகளை மாத்திரமே அறிந்திருந்தனர்.

88222 இப்பொழுது நாம் இந்த வயோதிப மீனவனை எடுத்துக்கொள்வோம். அவன்தன் கூடையைக் கீழே வைத்து, நரைத்திருந்த தன் தாடியை வருடிக்கொண்டே, “அவர் யாரென்பதை நான் அறிந்து கொள்வேன் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று நடக்கிறான். 223 அப்பொழுது அவன் சகோதரன் அவனிடம் வந்து, “சீக்கிரம் வா, நாம் அங்கே போகலாம்” என்றான். அப்பொழுது, “அவர்கள் அந்த நாளில் சென்றார்கள். அந்த ஆள் (Guy) அவர்தான். சென்ற இரவு முழுவதும் நான் அவருடன் கழித்தேன். நீ யோவானை அறிவாயா? நான் உன்னிடம் அதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேனே?” என்று சொன்னான். 224 அதற்கு வயோதிக சீமோன், “யார், அங்கு உள்ள அந்தகாட்டு மனிதனா? நான் அவனைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன்”. “பரவாயில்லை”, உனக்குத் தெரியுமா, “நான் அவனைக்குறித்து அங்கே கேள்விப்பட்டேன். எனவே நான் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குமுன் அங்கு சென்று அவன் பிரசங்கத்தை நான் கேட்டேன்” என்றான். 225 “நல்லது, அவர் கூறினார்…யோவான் அங்கு ஒருநாள் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன், ‘உங்களுக்குத் தெரியுமா, இப்பொழுது இங்கே அவர் வருகிறார்’ என்று விநோதமான ஒன்றைச் சொன்னாள். அதற்கு அவர்கள், ‘உனக்கெப்படித் தெரியும்?’ என்று கேட்டனர். அப்பொழுது அங்கே நோக்கிப்பார்த்தபோது, இயேசு சாதாரண ஒரு மனிதனாக அங்கு நின்றிருந்தார். யோவான் அவர்களிடம், ‘தேவ ஆவியானவர் அவர்மேல் புறாவைப்போல் இறங்குகிறதை நான் காண்கிறேன், அல்லாமலும்: “இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குள் வாசம் செய்ய நான் பிரியமாயிருக்கிறேன் என்னும் சத்தம் கேட்கிறது”’ என்று கூறினான். பின்பு அவன் தண்ணீருக்குள் சென்று அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். நல்லது, யோவான் அவரை அறிந்துள்ளதாகக் கூறினான்”. 226 சீமோன், “ஓ, எனக்கு ஒன்றும் புரியவில்லை”. “இவை எல்லாவற்றையுங் குறித்து நான் அநேகமுறை கேட்டிருக்கிறேன்” என்றான். ஆனால் அவன் இங்கே வருகிறான். ஆனால் அவனுடைய இருதயத்தின் ஆழத்தின் முன்குறிக்கப்பட்ட ஒருவித்து இருந்தது. பாருங்கள்? இயேசு அவ்விதம் கூறினார். சரி, அவரண்டை நடந்து சென்றான். நடந்து சென்றான். மேலும் அவன், “நான் இயேசுவானவரின் கூட்டத்திற்கு சென்று என்ன நடக்கிறது என்பதை பார்ப்பேன்” என்று சீமோன் கூறினான். பின்னர் அங்கு சென்றான்.

89227 அங்கு இயேசு நின்று கொண்டிருந்தார் அவர் ஒரு சாதாரண மனிதனாகக் காணப்படார். அவன் நடந்து சென்றான். அப்பொழுது அவர் அவனைக் கண்டமாத்திரத்தில், “உன் பெயர் சீமோன். உன் தகப்பனாரின் பெயர் யோனா” என்றார், அது அவனை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. ஏன்? அப்பொழுது அவனில் பதிந்திருந்த நித்திய ஜீவனின் வித்து உணர்வடைந்து, ஆம் ஐயா. 228 பேதுரு அவரிடம், “ஒரு நிமிடம் பொறும்! அது எப்படி? இதற்குமுன் நீர் என்னைக் கண்டதில்லையே. என் தந்தையும் உமக்குத் தெரியாதே. ஏனென்றால் நீர் என்னைக் கண்டதில்லையே. என் தகப்பனாரும் காலமாகி அநேக வருடங்கள் ஆகின்றதே. ஆனால் எங்ஙனம் எங்கள் பெயர்களை நீர் அறிந்திருக்கிறீர்?” என்று கேட்டான். பின்பு அவன், “வேதம் என்ன சொல்கின்றதென்று நான் அறிந்துள்ளேன்”. மூப்பர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதற்காக திரும்பச் செல்லவில்லை. “மேசியா தீர்க்கதரிசியாயிருப்பார் என்று வேதம் உரைத்துள்ளது. அவர் இங்கே இருக்கிறார். அது அவர்தான்” என்றான்.

90229 ஒரு நாள் இயேசு சில யூதர்களுடன் சமாரியா வழியாய் நடந்து சென்றார். சற்றுபின்னர் அவர் அவர்களை விட்டு விலகிச் சென்றார். அப்பொழுது மோசமான பெயரைக் கொண்டிருந்த அந்த பெண் நடந்து செல்வதை அவர் கண்டார். அவள் மிகவும் அழகுள்ள இளம் பெண்ணாயிருந்திருக்கலாம். அவள் சிறு குழந்தையாயிருந்தபோது, தெருவில் விடப்பட்டவளாய் இருந்தாள். அவள் ஏதோ ஒன்றைக் குறித்து நினைத்துக் கொண்டே சென்றிருக்கலாம். அவள் கிணற்றினருகில் வந்து தண்ணீர் மொள்ளத்தொடங்கினவுடன் ஒரு மனிதன் அவளிடம், “குடிப்பதற்கு தா” என்று கூறுவதை அவள் கேட்டாள். அவள் திரும்பிப்பார்த்து நடுத்தரமான வயதுள்ள ஒரு யூதன் அங்கு உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். 230 அவள், “நீர் யூதனல்லவா? நீர் அவ்விதம் செய்யக்கூடாது. நான் ஒரு சமாரிய ஸ்திரீ. நீர் என்னுடன் பேசுவதற்கான வழக்கம் இங்கு இல்லையே” என்றான். 231 அதற்கு அவர், “உன்னிடம் பேசுபவர் யாரென்று நீ அறிந்திருந்தால், நீயே என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய்” என்றார். 232 அதற்கு அவள், “உம்முடைய வாளி எங்கே? உம்முடைய கயிறு எங்கே என்று கேட்டாள். பாருங்கள்? அவரோ, “நான் கொடுக்கும் தண்ணீர் ஜீவ தண்ணீராகும்” என்றார். 233 உடனே அவள், “என்ன அது?” பாருங்கள்? “ஏன்?” அவள், “நீங்களெல்லாம் தேவனை எருசலேமில் தொழுதுகொள்ள வேண்டும் என்கிறீர்களே, எங்கள் பிதாக்கள் இங்கல்லவா தொழுதுகொண்டு வந்தார்கள்?” என்று கேட்டாள். 234 “ஓ”, அவர், “அது சரியே, ஆனால் யூதர்களாகிய நாங்கள் யாரை வழிபட வேண்டுமென்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் மனுஷர் எருசலேமிலும் இந்த மலையிலும் மாத்திரமல்ல. எங்கும் தேவனைத் தொழுதுகொள்ளும் காலம் வரப்போகிறது. தேவன் ஆவியாயிருப்பதால் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்வார்கள்” என்றார். இதைக் கேட்ட அவள் யாரென்பதை ஆராயத்தொடங்கினாள். அவர் அவளை நோக்கி, “உன் புருஷனை அழைத்துவா” என்றார். அதற்கு அவள் “என் புருஷனா? எனக்கு புருஷன் இல்லை” என்றாள். 235 அதற்கு அவர், “என்னை நீ கூறுவது உண்மையே. நீ இதற்கு முன்பு ஐந்து பேருடன் வாழ்ந்திருக்கிறாய். இப்பொழுது உனக்கிருப்பது ஆறாவது ஆள்” என்றார். “உனக்கு ஐந்து புருஷர் இருந்தனர். நீ அதை அறிவாய். நீ உண்மையையேக் கூறினாய்” என்றார்.

91236 கவனியுங்கள்! அது என்ன? அந்த வெளிச்சம் வித்தின்மேல் விழுந்தது. தேவனால் பேசப்பட்ட வித்தானது அங்கு புதைந்திருந்தது. ஆம் ஐயா! 237 வித்து பூமிக்குள் புதைந்து இருந்தது. தேவன் தண்ணீரை விலக்கிய பின்னர் சூரிய வெளிச்சம் அதன்மேல் பட்டவுடன் அது முளைக்கத் தொடங்கினது. அது உண்மை. பாருங்கள்? வித்து முளைப்பதற்கு சூரியன், வெளிச்சம் அவசியமாயிருக்கிறது. அதற்கு வெளிச்சம் மாத்திரம் தேவையாயிருந்தது. ஆம், ஐயா. 238 அவ்வாறே இயேசுவுக்குள்ளிருந்த பரிசுத்த ஆவியானவர் அவளுடைய கடந்தகால வாழ்க்கையைக் குறித்து அவளிடம் உரைத்தபோது, அந்த வெளிச்சம் வித்தின்மேல் பட்டது. அவள், “ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன்”. என்றாள். மேலும் அவள், “மேசியா வரும்போது அவர் எவ்விதம் இருப்பாரென்பதை நானறிவேன். நாங்கள் அறிவோம். நூற்றுக்கணக்கான வருடங்களாக எங்களுக்கு ஒரு தீர்க்கதரிசி இல்லை. எங்களுக்கு நூற்றுக்கணக்கான வருடங்களாகவே ஒரு உண்மையான தீர்க்கதரிசி இருக்கவில்லை” என்றாள். அவள், “என் புருஷனைக் குறித்தும், எனக்கு எத்தனை பேர் இருந்தனர் என்பதையும் நீர் அறிவித்தீர், எவ்விதம் அதைச் செய்தீர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மேசியா வரும்போது அதையே செய்வார். அப்படியானால் நீர் யார்?” என்று அவள் கேட்டாள். “நான்தான் அவர்” என்று அவர் பதிலுரைத்தார். அதுதான் அங்கே நடந்தது. பாருங்கள்? ஒரு வேசி அதைக் கண்டு கொண்டாளே!

92239 ஆசாரியர்கள் சற்றும் முற்றும் பார்த்து தங்களுடைய சபையோருக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டியதாயிருந்தனர். “அந்த மனிதனுடன் சேர்ந்து ஏமாந்து போக வேண்டாம். அவன்—அவன் பிசாசினால் பீடிக்கப்பட்டுள்ளான். அவ்வளவுதான்” என்று எச்சரித்தனர். இப்பொழுது, அதுதான் வித்தியாசமாயிருந்தது. இன்றைக்கும் அதுவே சம்பவிக்கின்றது. பாருங்கள்? அது சரியாக அவ்விதமே பொருந்துகின்றது. ஆம். ஆம், ஐயா. 240 ஒளியானது வித்தின்மேல் விழுந்தால், அவள் அதை அறிந்து கொண்டாள். அவர்கள்…மீனவர்கள், மரம் வெட்டுபவர்கள், குடியானவர்கள், சுங்கம் வசூலிப்பவர்கள், வேசிகள் அனைவரும், அவர் செய்யப்போவது என்னெவென்றும், எளிமையான வேதவாக்கியங்கள் கூறிய அனைத்தும் அவரில் நிறைவேறியதையும் கண்டனர். அதே சமயத்தில் பரிசேயர் அவர்களுடைய பாரம்பரியங்களின் காரணத்தால் அவரைக் கண்டு கொள்ள முடியவில்லை. [சகோதரன் பிரான்ஹாம் சிறிது நிறுத்தி, ஒரு குறிப்பிட்ட விதத்தில் சைகையைச் செய்கிறார். சபையோர் சம்மதம் தெரிவிக்கும் விதத்தில் பதிலளிக்கிறார்கள்.—ஆசி.] அவர்கள் தங்களுடைய பாரம்பரியத்தினால், அவர்களால் காணமுடியவில்லை. ஆனால் வேசி, குடியானவர்கள், அவர்கள் எல்லோரும் முன்குறிக்கப்பட்டதனால், அவர்கள் அதைக் கண்டனர். சந்தேகங்கள் நிவிர்த்தியானபோது, அவர்களிலிருந்த வித்து முளைக்கத் தொடங்கினது. அது உண்மை.

93241 அவள் என்ன செய்தாள்? அந்த சமாரிய ஸ்திரீ, “நான் மேசியாவைக் சந்தித்ததினால் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறி நின்றுவிட்டாளா? இல்லை, சகோதரனே, அவள் நேராக அந்த ஊருக்குள்ளே ஓடினாள். அவள் தண்ணீர் எடுப்பதைக் குறித்து மறந்துவிட்டாள். அவள், “நான் செய்த எல்லாவற்றையும் எனக்கு கூறின மனுஷனை வந்து பாருங்கள். மேசியா இவைகளைச் செய்யப்போகிறார் என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றதல்லவா? இது அதேவிதமாய் சரியாயிருக்கின்றதல்லவா?” என்றாள். அந்த ஜனங்களாலும் அதே காரியத்தைக் காணமுடிந்தது. 242 இயேசுகிறிஸ்து யோவான் 14:12-ல் இது மறுபடியும் இக்காலத்தில் நிகழும் என்று கூறினார். “நோவாவின் நாட்களில் நடந்தது போல…” என்று அவர் கூறினதை, லூக்காவிலும் கூட கூறியுள்ளார். தேவன் எப்படியாய் ஒரு மனிதனில் வெளிப்பட்டு, அவருடைய பின்புறத்தில் நடந்ததை, அதாவது சாராள் கூடாரத்திலிருந்து சிரிப்பதை பகுத்தறிந்து கூறினார்! இந்த கடைசி நாட்களைக் குறித்து மல்கியா, மற்றும் இந்த எல்லா வேத வாக்கியங்களும் முன்னுரைத்துள்ளன. எபிரெயர் 4- “வார்த்தை” திரும்பவரும்பொழுது என்று கூறியுள்ளது. மல்கியா 4- “அது ஒரு மனிதன் மூலம் திரும்ப வரும்” என்று கூறியுள்ளது. எபிரெயர் 4, “தேவனுடைய வார்த்தை இருதயத்திலுள்ள நினைவுகளை வகையறுக்கிறது” என்று கூறியுள்ளது. 243 ஆகவே, தற்போது நிறைவேறுகிறதை அவர்கள் கண்கூடாகக் கண்டும், அதினின்று அகன்றுபோகின்றனர். அவர்களுடைய பாரம்பரியம் அதை மறைத்து அவமாக்குகின்றது. நல்லது. நாம் இங்கே தான் இருக்கின்றோம். அவ்வளவுதான். ஊ—உ.

94244 அவரால் இன்றைக்கும் அதையே செய்யமுடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்தான் செய்வேன் என்று கூறியதைப்போல சரியாக காட்சியில் வந்து, அன்று செய்தது போலவே இன்றைக்கும் செய்வார். பாருங்கள்? அவர் இவ்விதம் செய்வதாக வாக்களித்துள்ளார். அவர் அதைச் செய்வதாக வாக்களித்துள்ளார். அவர் அதே காரியத்தைச் செய்வாரானால், லவோதிக்கேயா தூதனும் அதைச் செய்யவேண்டியவராயிருக்கிறார். 245 லவோதிக்கேயா சபை அது செய்யப்பட்டதைக் கண்டபோதிலும், எபிரெய சபை அதை ஆரம்பத்திலே நிராகரித்ததுபோன்று அவர்களும் அதை நிராகரிக்கின்றனர். அது எவ்வளவாய் ரூபகாரப்படுத்தப்பட்டாலும் ஓ, அவர்கள் அதை எப்படியாயினும் நிராகரிப்பார்கள். ஓ, என்னே! 246 இப்பொழுது, அது அதைச் செய்யும் என்று கூறுகின்றது. அவர் இக்காலத்தில் வெளிப்பட்டு, நாம் மூல வார்த்தைக்கும், மீண்டும் மூல விசுவாசத்திற்கும் திரும்புவோம் என்று வாக்களிக்கப்பட்டுள்ளது. அவர் தம்மை வெளிப்படுத்த வேண்டுமானால் ஜனங்களின் மத்தியில் அவர் வாசம் செய்து இக்கிரியைகளைச் செய்ய வேண்டும். அவருடைய புகைப்படம் எடுக்கப்பட்டு விஞ்ஞான ரீதியாய் அது நிரூபிக்கப்படவும் அவர் அனுமதித்தார். அவர்கள் இன்னமும் அதை விசுவாசிப்பதில்லை. எபிரெயர் 13:8-ன் படியாய் நேற்றும், இன்றும், என்றும் மாறாத அந்த அக்கினி ஸ்தம்பம் புகைப்படக் கருவியின் இயந்திரக் கண்ணான கண்ணாடியின் வழியாக ஊடுருவிச் சென்று புகைப்படத்தில் விழுந்து, ஆவிக்குரிய மண்டல பரிமாணங்களில் விஞ்ஞான ரீதியாகவும் மற்ற எல்லா வழியிலும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதை எல்லா வழியிலும் ரூபகாரப்படுத்தப்பட முடிந்தது. அது ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிறது. 247 ஆயினும் அன்று செய்தது போன்று இன்றும் அவர்கள் அதை விசுவாசியாமலிருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அதைவிட்டு அகன்று சென்று, அவர்கள் அன்று செய்ததைப் போலவே இன்றும் செய்வார்கள்.

95248 ஓ, தேவனே எங்களுக்கு உதவி செய்யும்! ஓ, நாம் இங்கே இத்துடன் இதை நிறுத்திக் கொள்வோம். நாம் இப்பொழுது இவைகளை அறிந்து கொள்வதற்கு தேவன் தாமே உதவி செய்வாராக என்பதே என் ஜெபமாயுள்ளது. ஏனென்றால் நான் உங்களை அதிக நேரம் தாமதிப்பதற்கு விரும்பவில்லை. நாம் அதைக் காணும்படி தேவன் நமக்கு உதவி செய்வாரக. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் இப்பொழுது நம்மேல் இருப்பதால் இந்த முத்திரையைத் திறந்து அதை வெளிப்படுத்த அவர் நமக்கு உதவி செய்வாரென்று நாம் நம்புகிறேன். 249 இப்பொழுது நாம் படிப்போம். இன்றைய சபையின் நிலமையை நாம் காண்கிறபடியால், சபையானது ஆதியில் எங்கிருந்தது என்று நாம் காண்கிறோம். அது என்ன செய்ததென்றும் கண்டோம். அது எங்கு வரவேண்டும் என்றும் காண்கிறோம். அது உள்ள நிலயைக் காண்கிறோம். அவர்கள் என்ன செய்ய வேண்டியவர்களாயிருக்கிறார்கள் என்றும் காண்கிறோம். அவர்கள் அதை அப்படியே செய்துவிட்டார்கள். இப்பொழுது, நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நீங்கள் காண்கிறீர்களா? நீங்கள் தீர்ப்பு கூறுங்கள். நான் தீர்ப்பு கூறமுடியாது. தேவனுடைய வார்த்தையை உங்களுக்குக் கொண்டு வருவதற்கு மாத்திரமே நான் உத்திரவாதமுடையவனாயிருக்கிறேன். அது எனக்கு அளிக்கப்பட்ட பிரகாரம் தான் என்னால் எதை உங்களுக்கு அளிக்க முடியும். எனக்கு அது அளிக்கப்படும்வரை, நானோ அல்லது வேறு யாரும் அதை உங்களுக்கு அறிவிக்க முடியாது. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது; நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணையையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.

96250 இப்பொழுது, ஆட்டுக்குட்டியானவர் தம் கரத்திலுள்ள புஸ்தகத்தின் முத்திரைகளை ஒவ்வொன்றாக உடைக்கிறார். முதலாம், இரண்டாம் முத்திரைகளை உடைத்த பிறகு இப்பொழுது மூன்றாம் முத்திரையை அவர் உடைக்கிறார். அவர் அதை உடைக்கயில், ஆட்டுக்குட்டியானவர் அதை அந்த மூன்றாம் முத்திரையை உடைக்கையில், மூன்றாம் ஜீவனானது… 251 இப்பொழுது, மூன்றாம் ஜீவன் காண்பதற்கு எவ்விதமிருந்தது என்று எத்தனை பேர் அறிவீர்கள்? அது மனுஷமுகம் போன்ற முகத்தை உடையதாயிருந்தது. முதல் ஒன்று சிங்கத்திற்கொப்பாகவும், மற்ற ஒன்று காளைகளைக்கொப்பாகவும் இருந்தன. மூன்றம் ஜீவன் மனித முகத்திற்கொப்பாய் இருந்தது. அவன் அந்த ஜீவன்களில் ஒன்றை மீண்டும் பேசக் கேட்கிறான். மனித முகம் போன்ற முகம் கொண்ட இந்த ஜீவன் யோவானிடம், “மறைக்கப்பட்டிருந்த இந்த இரகசியம், இது என்னவென்று வந்துபார்” என்றது. இந்த மீட்பின் வருஷங்கள் முழுவதுமாக என்ன சம்பவிக்கும் என்பது, உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே இந்த முத்திரையின் கீழ் மறைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது, “இது என்னவென்று வந்துபார்” என்றது. 252 ஆகவே அவர் அதைத் திறக்கிறார். ஒரு இடிமுழங்குகிறது. ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளைத் திறக்கிறார்.

97253 இப்பொழுது, அது என்னவென்பதைக் காண யோவான் சென்றான். அவன் என்ன கண்டான்? அவன் ஒரு கறுப்பு குதிரையைக் கண்டான். அதின்மேல் ஏறியிருக்கிறவன் ஒரு தராசை தன்னுடைய கையில் பிடித்திருக்கிறான். இப்பொழுது அதைத்தான் அவன் முதலில் கண்டான். ஆட்டுக்குட்டியானவர் முத்திரையை உடைத்தார்: அந்த ஜீவன் அறிவிக்கின்றது …ஒவ்வொரு ஜீவனும் அதன் முறை வரும்போது, “வந்துபார்” என்று அறிவிக்கின்றது. ஒருவேளை இவ்விதம் நின்றிருந்த யோவான், ஆட்டுக்குட்டியானவர் முத்திரையை உடைத்தவுடன் நடந்து சென்றான். சாதாரணமாக… 254 அவர் முதலாம் முத்திரையைத் திறந்தபோது நாம் பார்த்தபடி, இடிமுழங்கினது. அங்கு என்ன சம்பவிக்கின்றது என்பதை யோவான் கவனிக்கிறான். முதலில் வெள்ளைக் குதிரையின் மேல் ஒருவன் சவாரி செய்து வருவதை அவன் காண்கிறான். அவன் சவாரி செய்வதை யோவான் கவனிக்கிறான். அவன் இவ்விதம் கடைசி வரைக்கும் சவாரி செய்துகொண்டே செல்வதை யோவான் கவனிக்கிறான். வெள்ளைக் குதிரையில் சவாரி செய்பவன் தன் கையில் ஒரு வில்லை வைத்திருப்பதை யோவான் காண்கிறான். அவனிடம் அம்புகள் இல்லை. அவன் காண்கிற அடுத்த காரியம், அவன் ஒரு கிரீடம் பெற்றுக் கொண்டு, சவாரி செய்துகொண்டு செல்கிறான்.

98255 பிறகு, ஆட்டுக்குட்டியானவர் முன்வந்து, மற்றொரு முத்திரையை உடைப்பதை நாம் கண்டறிகிறோம். யோவான் அதை கவனிக்கிறான். இப்பொழுது, இதோ ஒரு—ஒரு சிவப்பு குதிரையை வருகிறது. இந்த மனிதன் தன்னுடைய கையில் ஒரு பட்டயத்தை வைத்திருக்கிறான். அவன் தன் கையில் உள்ள இந்த பட்டயத்துடன் வேதம் முழுவதும் சவாரி செய்துகொண்டு செல்கிறான். ஜனங்களைக் கொன்றுபோடவும் சமாதானத்தைப் பூமியிலிருந்து எடுத்துப்போடவும் அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்படுகின்றது. 256 இப்பொழுது, ஆட்டுக்குட்டியானவர் வேறொரு முத்திரையை உடைக்கிறார். அப்பொழுது மனிதனைப் போன்று ஜீவன் யோவானிடம், “வந்துபார்” என்று சொல்கிறது. இப்பொழுது அவனும் அது என்னவென்று காணச் செல்கிறான். அப்பொழுது அவன் காணச் சென்றபோது, ஒரு கறுப்பு குதிரையின் மேல் சவாரி செய்யும் ஒருவன் வருகிறான்.

99257 இப்பொழுது வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்தவனே சிவப்புக் குதிரையின்மேல் சவாரி செய்தானென்று நாம் கடந்த இரவு கண்டறிந்தோம். 258 நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து ஒரு சத்தம் உண்டானது. நீங்கள் பாருங்கள். அது என்னவென்று காணும்படி யோவான் சென்றான். அவர் இந்த நான்கு ஜீவன்களிலிருந்தார். யோவான் இந்தக் கறுப்புக் குதிரையைக் கண்டான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும் ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். (பாருங்கள்?)

100259 இந்த சவாரியாளன், நாம் இவனைக் குறித்து ஆராய்ந்து பேசுவோம். முதலாம் குதிரையின்மேல் சவாரி செய்தவனே, குதிரையை மாத்திரம் மாற்றிக்கொண்டு இரண்டாம் குதிரையின்மேல் சவாரி செய்கிறான் என்று நேற்று இரவு வேதப்பூர்வமாக நாம் கண்டறிந்தோம். என்ன சம்பவித்தது? அவன் தன்னுடைய ஊழியத்தை மாற்றிக்கொண்டான். பாருங்கள்? சரி. அவன் அந்திக்கிறிஸ்துவாயிருந்தான் என்றும், அவன் தன்னுடைய உத்தியோகத்தை மாற்றியிருந்தான் என்றும் நாம் கண்டறிந்தோம். 260 முதலாவதாக, அவன் வெள்ளைக்குதிரையின் மேல் இருந்தபோது, அவன் ஒரு போதகமாக மாறினான் என்பதை நாம் கண்டறிந்தோம். இப்பொழுது நாம் இவை ஒவ்வொன்றையும் சரியாக வேத வசனத்திற்குக் கொண்டு சென்றோம். பாருங்கள்?

101261 இப்பொழுது நாம் இன்றிரவு நாம் எங்கே இருக்கிறோம் என்றும், மற்றொரு சபைக் காலத்தையும் கவனியுங்கள். பாருங்கள். இப்பொழுது நாம் மூன்றாம் சபையின் காலத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். அது சரியாக மூன்றாம் குதிரையாயிருப்பது போன்று, அது மூன்றாம் சபைக் காலாத்திற்கானதாயுள்ளது. பாருங்கள்? 262 இப்பொழுது, முதலாம் சபையின் காலம், அது என்னவாயிருந்தது? முதலாவதாக நிக்கொலாய் மதஸ்தரிடம் ஒரு போதகம் இருந்தது. அது சரி. நாம் அறிந்துள்ளபடி முதல் காரியமாவது, இந்த நிக்கொலாய் மதஸ்தரின் உபதேசம், அவை சரியென்று சபையின் அங்கீகாரம் பெற்று செயல்பட ஆரம்பித்தன. அப்பொழுது அவர்கள் இந்த நபருக்கு கிரீடம் சூட்டினர். அதன் பின்னர், இந்த ஆவி, அந்திக்கிறிஸ்துவின் ஆவி ஒரு மனிதனில் வாசம் செய்கிறது. பாருங்கள்? அதன் பின்னர் பிசாசே அந்த மனிதனுக்குள் குடிகொள்வதாக நாம் பார்த்தோம். அசுத்தஆவி வெளியில் சென்று, பிசாசே உட்புகுகிறான்.

102263 அந்தவிதமாக சபையைப் போன்றே, அந்திக்கிறிஸ்துவின் சபையும் இவ்விதம் வளர்ச்சியடைந்து கொண்டு வந்த அதே சமயத்தில் மணவாட்டியும் மூன்று வித்தியாசமான காரியங்களினூடாக அபிவிருத்தியடைந்து, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மூலம் வளர்ச்சியடைகிறாள். பாருங்கள்? அவர்களின் எழுப்புதல் முதலிலும், சபையின் எழுப்புதல் கடைசியிலும் உண்டாகிறது. சபையின் காலங்களில் முதல் மூன்று கட்டங்கள் இருளின் காலங்களில் நிகழ்கின்றன. அடுத்த மூன்று கட்டங்களில் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பவைகளால் சபை வெளியே வருகின்றது. பின்பு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் தேவன் மனிதனுக்குள் வாசம் செய்து நம்மிடையே வெளிப்படுகிறார். அவன் அந்திக்கிறிஸ்துவாகவும் கள்ளத்தீர்க்கதரிசியாகவும், பின்னர் மிருகமாகவும், பின்னர் இருளின் காலங்களுக்குள் செல்கிறான். உண்மையான சபையோ இருளின் காலங்களிலிருந்து வெளிவந்து, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்தஆவியின் அபிஷேகம் என்பவைகளின் வழியாக கடந்துசென்று, வார்த்தை அதனுள் குடிகொள்ள அது இந்தவிதமாக வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. அந்திக்கிறிஸ்துவோ தாழ்ந்த நிலையை அடைகிறான். ஊம்—ஊம். உங்களுக்கு அது புரிகிறதா? அவன் கீழே செல்கிறான். சபை மேலே செல்கிறது. பாருங்கள்? ஓ, இது எந்த அளவு பரிபூரணமாயிருக்க முடியுமோ அந்தளவு பரிபூரணமாயுள்ளது. ஓ, அது அழகாயுள்ளது. இது எனக்குப் பிரியம்.

103264 குதிரை சவாரி செய்பவன் ஒரே ஒருவன்தான். ஆனால் தன்னுடைய ஊழியத்தில் மற்றொரு கட்டத்தில் இருக்கிறான். கட்டங்களை அடைகிறான். 265 முதலாம் கட்டத்தில் அவன் ஒரு வெள்ளைக்குதிரையின் மேலிருக்கிறான். பாருங்கள், அவன் ஒரு போதகனாய், அந்திக்கிறிஸ்துவின் போதகனாய் இருக்கிறான். அவன் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாயிருந்தான். 266 இப்பொழுது நீங்கள் எப்படி அந்திக்கிறிஸ்துவாயிருக்க முடியும்? இந்த ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானதல்லவென்று மறுதலிக்கிற எவரும், அவ்விதமாக போதிக்கபடுகிற எவனும் அந்திக்கிறிஸ்துவாயிக்கிறான். ஏனென்றால் அவர்கள் வார்த்தையை மறுதலிக்கிறார்கள். அவர் வார்த்தையாயிருக்கிறார்.

104267 இப்பொழுது, முதலாம் கட்டத்தில் வெள்ளைக் குதிரையின் மேல் அவன் ஒரு போதகனாய் இருந்தான், ஆனால் தன் உபதேசத்திலும், அதன் தன்மையிலும் அந்திக்கிறிஸ்துவின் ஆவியாய் இருந்தான். அது குற்றமற்ற ஒன்றாய் காணப்படுகிறது. அது எவ்வித தீங்குமிழைக்க முடியாதது போன்று தென்பட்டு, தொடர்ந்து செல்கிறது. அவ்விதமாகவே சாத்தான் நுழைகிறான். ஓ, அவன் தந்திரமுள்ள ஒருவன். 268 அவன் ஏவாளிடம், “இப்பொழுது நீ ஞானத்தைத் தேடிக்கொண்டிருக்கிறாய் என்பதை நீ அறிவாய். நன்மை தீமை எதுவென்று நீ அறியாமல் இருக்கிறாய்” என்றான். மேலும் அவன், “உன் கண்கள் திறக்கப்பட்டால், நீ அதை அறிந்து கொள்வாய்” என்றும், “இந்தக் கனி இன்பமானதாய் இருக்கிறது. இது நல்லது. இது—இது பார்வைக்கு மிகவும் அருமையானதாயிருக்கிறது. அதை இப்பொழுது நீ புசிக்கவேண்டும். அது அருமையானதா அல்லவா என்று உனக்குத் தெரியாது அல்லவா?” என்றான். அவள், “இல்லை என்னால் முடியாது. தேவன் அதைப் புசிக்க வேண்டாமென்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றாள். அதற்கு அவன், “ஆனால், ஓ, அப்படியா எனக்குத் தெரியும், ஆனால்…” என்று கூறினான். அவளோ, “தேவன் சொல்லிவிட்டார்,…எனவே நாங்கள் மரித்துப்போவோமே” என்றாள். 269 ஆனால் “அவர் நிச்சயமாக அவ்விதம் செய்யமாட்டார்” என்று சாத்தான் கூறினான். பாருங்கள்? அவன் மிகவும் இனிமையாக ஏவாளிடம் பேசினான். அது என்ன விளைவித்தது என்று பாருங்கள். 270 அதேப்போன்று, ஆதிகால சபையில், இந்த அந்திக்கிறிஸ்துவின் ஆவி எழும்பி, நிக்கொலாய் போதனைகளை அளித்தது என்பதை கவனியுங்கள். நிக்கொலாய் என்பதற்கு “சபையோர் மேல் ஜெயங்கொள்ளுதல்” என்று அர்த்தம். பரிசுத்த மனிதன் என்னும் ஒருவனைச் சபையின் தலைவனாக ஏற்படுத்துதல். ஓ, அப்படியே… “நல்லது, நமக்கு ஐக்கியம் வேண்டும், ஏனென்றால், நீங்களெல்லாரும் சிதறியிருக்கிறீர்கள். யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை. எனவே, நாம் யாவரும் ஒன்றாக இணைந்து ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்தி வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பாருங்கள், நாம் போய் ஒன்றாக நம்மை இணைத்துக்கொள்வோம். நாம் அதன் மூலம் ஒரு விடுதியை (lodge) உண்டாக்கி கொள்ள வேண்டும்”. அது அவ்விதமாகத்தான் இருக்கிறது. அது மிகவும் உண்மையாகும். மெதோடிஸ்ட் சபை என்னும் ஒரு கிறிஸ்தவ சபை என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. அது சபையல்ல. அது ஒரு விடுதி. அவ்விதமாகவே பாப்டிஸ்ட் சபை என்று அழைக்கப்படுவது ஒரு சபையல்ல, அது ஒரு விடுதி.

105271 ஒரே ஒரு சபைதான் உண்டு. அது இயேசுகிறிஸ்துவின் மறைவான (mystical) சரீரமாயிருக்கிறது. அதில் நீங்கள் முன்குறித்தலினால் பிறக்க வேண்டும். அது உண்மை. “பிதாவானவர் எனக்குக் கொடுத்த யாவும் என்னிடத்தில் வரும். பிதாவானவர் ஒருவனை அழைக்காவிட்டால் அவன் வரமுடியாது. பிதாவானவர் கொடுத்த என்னிடத்தில் வரும்” ஆகவர், அது அவ்விதமாகவே உள்ளது. அவர் அப்படியே… 272 கடைசி நபர் உட்பிரவேசிக்கும் வரை ஆட்டுக்குட்டியானவர் அங்கு பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். கடைசி நபர் உட்பிரவேசித்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் புறப்பட்டுச் சென்று தம் உடமைகளைப் பெற்றுக்கொள்கிறார். பாருங்கள், அவ்வளவுதான். அவர் தம்முடைய சபையை, தம்முடைய பிரஜைகளை வீட்டிற்கு அழைத்து வருகிறார். அப்பொழுது அவர் தம்முடைய சத்துருவையும், அவனோடிருந்த அவனுடைய பிரஜைகளையும் அக்கினிக் கடலில் தள்ளுகிறார். அதன்பின்னர் நாம் ஆயிரவருட அரசாட்சியில் பங்குகொள்கிறோம்.

106273 குதிரை சவாரி செய்பவன் ஒரே மனிதன்தான். முதலாம் கட்டத்தில் அவன் களங்கமற்றவனைப்போல காணப்படுகிறான். இரண்டாம் கட்டத்தில் இன்னும் சற்று முன்னேறுகிறான். பின்னர் அவனுக்குக் “கிரீடம் சூட்டப்படுகிறது” என்பதாக வேதம் உரைத்துள்ளது. அவர்கள் ஒரு மனிதனுக்கு, பராக்கிரமசாலிக்கு (superman) கிரீடம் சூட்டினர். அவனைப் “போப்பாண்டவர்” என்று வேதம் அழைப்பதில்லை. “கள்ளத்தீர்க்கதரி”யென்றுதான் வேதம் அழைத்துள்ளது. ஏன்? ஆம். உண்மையாகவே, அவன் அந்திக்கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டவனாய், தேவனுடைய மூல வார்த்தைக்கு விரோதமாய்ப் பிரசங்கிப்பதனால், அவன் கள்ளத் தீர்க்கதரிசியாகத்தான் இருக்கவேண்டும். மூல வார்த்தைக்கு விரோதமாய்ப் பிரசங்கிக்கிறவனும் அந்திக்கிறிஸ்துவே. அது அவ்விதமாகவே இருந்தது. ஏனெனில் வார்த்தை தேவனாயிருக்கிறது, பாருங்கள், கிறிஸ்து. அது சரி. அதன்பின்னர் அவனுக்குக் கிரீடம் சூட்டப்படுகிறது என்று நாம் கண்டறிகிறோம். அவனுக்கு கிரீடம் சூட்டப்பட்டது. தொடக்கத்தில் அவன் மிகவும் களங்கமற்றவனாக, உதவியற்றவனாக இருந்தான். அவன் ஒரு சிறிய நபராகக் காணப்படுகிறான்.

107274 இப்பொழுது, ஆனால் நிசாயா மகாநாட்டில் கான்ஸ்டன்டைன் (constantine) அரசன் அவனுக்கு எல்லா சொத்துக்களையும் கொடுத்தான். அதன்பின்பு அவன் என்ன செய்தான்? சாத்தான் தன் சிங்காசனத்தையும் அதிகாரத்தையும் அவனுக்கு அளிக்கிறான். வேதம் அவ்வாறு கூறுவதை நாம் முன்பே படித்திருக்கிறோம். 275 இப்பொழுது, அடுத்தக் காரியம் இதற்கு முன்பிருந்ததும், இனி இருக்கப்போவதுமான அரசியல் எல்லாவற்றின்மேலும் பிசாசு ஆதிக்கம் வகிக்கிறான் என்று நாம் கண்டறிகிறோம். நாம் அதை மத்தேயு 4:11-ல் கண்டறிகிறோம். சாத்தான் ஏற்கனவே அரசியல் செல்வாக்கை உடையவனாயிருந்தான் என்பதை நாம் இப்பொழுது கண்டறிகிறோம். 276 ஆனால் அவன் சபைக்குள் நுழைய முயற்சித்துக்கொண்டிருக்கிறான். ஆகவே அவன் சபையை வஞ்சிக்கச் செல்கிறான். அவன் தன் பராக்கிரமசாலியை ஸ்தாபனத்திற்குள் நுழையச் செய்து, அவனைப் பிரதிகுருவாக (Vicar) “கிறிஸ்துவுக்குப் பதிலாக” என்று அர்த்தம் கொள்ளும் பட்டத்தால் முடி சூட்டுகிறான். கிறிஸ்து தேவனுக்குப் பதிலாக கிரியை செய்தார். பாருங்கள்? இந்த மனிதன் தேவனுக்குப் பதிலாக இருப்பவனாகக் கருதப்டுகிறான். பாருங்கள்? இந்த மனிதன் “தேவனுக்குப் பதிலாக” இருப்பவனாகக் கருதப்படுகிறான். பாருங்கள்? அவன் கிறிஸ்துவின் கீழ் பிரதிகுருவாக நியமிக்கப்பட்டுள்ளதாக எண்ணப்படுகிறான்.

108277 இப்பொழுது, இப்பொழுது, அவன் அதன்பின் என்ன செய்கிறான்? சாத்தான், அவன் ஏற்கனவே கொண்டிருந்த அரசியல் ஆதிக்கத்தையும், முடிசூட்டப்பட்டதினால் பெற்ற மதசம்பந்தமான ஆதிக்கத்தையும் ஒன்றாக இணைக்கிறான். 278 ஆகவே பிறகு நரகத்தின்மேலும் அவன் ஆதிக்கம் கொண்டிருப்பதற்காக மற்றொரு கிரீடத்தை உண்டாக்கிக் கொண்டான். ஜனங்கள் போதிய பணம் கொடுத்தால், அவர்களை அவன் நரகத்திலிருந்து விடுவிப்பானாம். பாருங்கள்? இப்பொழுது அவன்—அவன் பரலோகத்திலின் மேலும், அவன் அழைக்கப்பட விரும்புவதின்படியே பாவ விமோசனமான ஸ்தானத்தின் மேலும் (Purgatory) பிரதிகுருவாகக் கருதப்படுகிறான். பாவவிமோசன ஸ்தானம் என்பது வேதத்தில் காணப்படுவதில்லை. பாருங்கள், ஆனால் அவனாக அதை உண்டாக்கிக் கொண்டான். அவன் முடிவில்லாத பாதாளத்திலிருந்து ஏறிவருவதாக வேதம் சொல்லுகிறது. அவன் அதே வழியில் மறுபடியும் சென்று நாசமடைவான். ஆனால் இப்பொழுது அவன் பூலோகத்தில் ஆளுகை செய்கிறான்.

109279 இப்பொழுது, அவனுக்குக் கொடுக்கப்பட்டது என்ன? முதலில் அவனிடம் ஒரு வில் இருந்தது. ஆனால் அவனிடம் அம்புகள் இல்லை. இப்பொழுது அவன் கையில் ஒரு பெரிய பட்டயம் இருப்பதால், அவனால் ஏதாவது ஒன்றைச் செய்ய முடியும். அவன் தன்னுடைய வெள்ளைக் குதிரையிலிருந்து இறங்குகிறான்? வெள்ளைக் குதிரையிலிருந்து இறங்குகிறான்? எதன்மேல் சவாரி செய்கிறான்? ஒரு சிவப்பு குதிரையின் மேல், இரத்தநிற, இரத்த சிவப்பு நிறமுள்ள குதிரை. அவன் உண்மையாக அந்த ஒன்றில்தான் சவாரி செய்கிறான். ஓ, நிச்சயமாக. இப்பொழுது கொல்வதற்கென்று அவனுக்கு மிகுந்த வல்லமையும், பெரிய பட்டயமும் கொடுக்கப்பட்டது. அப்பொழுது அவன் இரத்த சிவப்பு நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறான்.

110280 நேற்று இரவு உடைக்கப்பட்ட இரண்டாம் முத்திரையில் அவன் பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப் போட்டானென்றும், ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்றனர் என்னும் நாம் பார்க்கிறோம். ஹிப்போ நாட்டைச் சேர்ந்த பரி. அகஸ்டின் நாட்கள் முதற்கொண்டு 1580ம் வருடம் வரை 6,80,00,000 பிராடெஸ்டெண்டுகள் இரத்த சாட்சிகளாக மரித்துள்ளனர் என்று ரோமன் கத்தோலிக்க சபையின் இரத்த சாட்சிகளின் பட்டியலே கூறுகின்றது. ஸ்மக்கர் (schmucker) என்பவர் எழுதிய மகிமையுள்ள சீர்திருத்தம் (Glorious Reform) என்றும் புத்தகத்தில் இது காணப்படுகின்றது. நீங்கள் மகிமையுள்ள சீர்திருத்தம் என்ற புத்தகத்தை படிக்க விரும்பினால், அதைப் படித்துப் பாருங்கள். இப்பொழுது, இரத்தசாட்சிகளின் பட்டியல் 6,80,00,000. அவர்களுடைய பரிசுத்தவான்கள் என்று அழைக்கப்பட்டவர்களில் ஒருவன், ரோம சபையின் கொள்கைகளுடன் இணங்காதவன், மதத்துரோகியாகக் கருதப்பட்டு கொலை செய்யப்படவேண்டுமென்ற வெளிப்பாட்டைப் பெற்றபோது, அவர்கள் ஜனங்களைக் கொல்லத் தொடங்கினர். அவன் சிவப்பு குதிரையின் மேலேறி, இரத்தம் சிந்திக் கொண்டே சவாரி செய்தான். ஓ!

111281 இப்பொழுது அவனுக்கு மிகுந்த வல்லமை வருகின்றது. அவன் ஆதிக்கம் பெற்று, பரலோகத்தின் பிரதிகுருவாக நியமிக்கப்பட்டு, தேவனைப்போல் ஆராதிக்கப்பட்டான். அவனுக்கு ஒரு கிரீடம் அளிக்கப்பட்டு, சபையையும் அரசாங்கத்தையும் அவன் ஒன்றாக இணைத்து, பூமியின் மேல் ஆளுகை செய்தான். பாவ விமோசன ஸ்தானத்திலிருந்து தன் ஜெபத்தினால் ஆத்துமாக்களை விடுவிப்பானாம். பூமியில் அவன் தேவனுக்குப் பதிலாக தேவனைப் போலவே இருந்தான். அவன் கட்டளைக்கு கீழ்ப்படியாத எவரையும் கொல்வதற்கு அவன் மிகுந்த வல்லமை பெற்றிருந்தான். யார் அவனுக்கு விரோதமாக ஏதாவதொன்றைக் கூற முடியும்? அவன் சபைக்குத் தலைவனாக இருக்கிறபடியால், சபை அவனுக்கு விரோதமாக ஒன்றும் கூற முடியாது. அவ்வாறே, அரசாங்கத்தின் தலைவனாக அவன் இருக்கும் காரணத்தால், அரசாங்கமும் ஒன்றும் கூறமுடியாது. ஆகவே, அவர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். சகோதரனே, சிறுசிறு சபைகள் யாவும் உடைக்கப்பட்டு, அவர்கள் கொல்லப்பட்டனர். பாருங்கள்? சிங்கங்களுக்கு இரையாயினர். “வலுசர்ப்பமாகிய” ரோமாபுரி, “அவனுக்கு தன் சிங்காசனத்தையும், அதிகாரத்தையும் கொடுத்ததாக” வேதம் உரைத்துள்ளது. பாருங்கள்? ஆகவே, அவன் குதிரையை இரத்த வெள்ளத்தின் வழியாக ஓட்டினதன் காரணத்தால் அதன் நிறம் சிவப்பாக மாறியது. 282 இப்பொழுது யோவான் அவனை கறுப்புக் குதிரையின்மேல் காண்கிறான். அவன் வேறொன்றுக்கு மாற்றிக்கொண்டான். 283 எனக்கு வெளிப்பாடு அளிக்கப்பட்ட விதத்தில் நான் அதை உங்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். இது வேத வாக்கியங்களுடன் பொருந்தாவிடில், இந்த வெளிப்பாட்டை தேவன் எனக்களிக்கவில்லையென்று அர்த்தம். பாருங்கள்? வேதவாக்கியங்கள் யாவும், சிறப்பான ஒன்றாய் உள்ளன. வேத வாக்கியங்கள் மற்ற வேதவாக்கியங்களுடன் இணங்க வேண்டும். வேதவாக்கியத்திற்கு முரணான ஏதாவதொன்று இருக்கிறதென்றால்… கர்த்தருடைய தூதன் வேத ஆதாரமாக என்னிடம் ஒன்றைக் கூறாவிடில், நான் அவனை நம்பவே மாட்டேன். பாருங்கள்?

112284 அன்று சிக்காகோவில் நூற்றுக்கணக்கான போதகர்கள் மத்தியில் நான் நின்று கொண்டிருந்தேன் …யாராவது அந்தக் கூட்டத்தில் இருந்தீர்களா? நிச்சயமாக. அப்பொழுது நான் அவர்களிடம், “இப்பொழுது, ஏதோ உள்ளதுபோல நீங்கள் அனைவரும் பேசுகிறீர்கள். ஏதேனும் ஒன்றைக் குறித்து, என்னை குறுக்குவிசாரனை செய்ய நினைத்தீர்கள்” என்றேன். ஏறக்குறைய இப்பொழுதுள்ள இந்த அறையைப் போல அது இருந்தது. நான், “அது என்ன? எனக்கு விரோதமாக நீங்கள் பெற்றிருப்பது என்ன? நீங்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த இடத்தில் நிற்பீர்கள் என்றும், நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த அறையில் அந்தக்கூட்டம் நடைப்பெறப் போவதில்லையென்றும் மூன்று இரவுகளுக்கு முன்னமே பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார் என்றேன். அது சரியா என்று இங்குள்ள கார்ல் அவர்களைக் கேளுங்கள்,” என்றேன். 285 சகோதரன் ஹாங்க், மற்றையோரும் அங்கிருந்தனர். “அது உண்மை” அதைக் கேட்பதற்காக, அவர்கள் அனைவரும் அங்கேயிருந்தனர்.

113286 நான், “என் போதனைகளுக்கு முரண்பட்ட கருத்துக்களை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். கேள்விகள் பல கேட்டு என்னை மடக்கவேண்டுமென்று நீங்கள் மனதில் எண்ணம் கொண்டிருக்கிறீர்கள். உங்களில் யாராவது ஒருவர் வேதாகமத்துடன் என் பக்கத்தில் வந்து என் போதகம் தவறென்று நிரூபிக்க உங்களை அழைக்கிறேன்” என்றேன். அப்பொழுது எல்லோரும் மிகவும் அமைதியாயிருந்தனர். அப்பொழுது நான், “உங்களுக்கு என்ன நேரிட்டது?” என்று கேட்டேன். மேலும் நான் “தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் உங்களால் நிற்க முடியாதென்று நீங்கள் அறிந்துகொண்டீர்களென்றால், எனக்குப் பின்னால் சென்றுவிடுங்கள். வேத சாஸ்திரி படிப்பில் பாண்டித்திய பட்டம் பெற்று ஒருவரையொருவர் ‘பண்டிதர்,’ ‘பண்டிதர்,’ ‘பண்டிதர்’ என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்களே, நான் ஒரு…” என்றேன் (ஓ, சகோதரன் உட்ஸ் அவர்களும் நானும், “அனுபவமற்றவர்” அல்லது “போதிய அனுபவமில்லாதவர்”) என்று கூறுவோம். “எனக்கு கல்வியறிவும் கிடையாது, எந்த வேத சாஸ்திர பள்ளியினூடாகவும் நான் ஒருபோதும் வரவில்லை, ஆனால் நீங்கள் உங்கள் வேதாகமத்தை எடுத்துக்கொண்டு இங்கே வந்து நின்று, சர்பத்தின் வித்து, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம், இன்னும் நான் போதிக்கின்ற மற்றவற்றையும் தவறென்று நிரூபியுங்கள்” என்றேன். அவர்களில் ஒருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நீங்கள் யாவரும் அறிவீர்கள். நான் இதுவரை கண்டதிலே மிகவும் அமைதியான குழுவாக அது இருந்தது. 287 எனக்கு ஒன்றும் தெரியாதென்று அவர்கள் காகத்தைப்போல கரைகின்றனர். நான் யாருடைய விவாகரத்திலும் தலையிடுவது கிடையாது. ஆனால் ஏதாவது ஒரு தர்க்கத்தில் அவர்கள் என்னை சிக்க வைக்க விரும்பினால் …நானாகவே அங்கு சென்றிருக்கமாட்டேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “அங்கே போ. நான் உன்னோடு கூட இருப்பேன்” என்றார்.

114288 அந்தக்கூட்டம் நிகழும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னரே சகோதரன் கார்ல்ஸன், சகோதரன் டாமிஹிக்ஸ் இவர்கள் நான் கூறினதைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் எங்கே அமர்ந்துள்ளனர். நான் மூன்று நாட்களுக்கு முன்பே அவர்களிடம் சென்று, “கூட்டத்திற்கென்று நீங்கள் ஆயத்தம் செய்துள்ள அந்த ஸ்தலத்தை ரத்து செய்யப் போகிறீர்கள்” என்று கூறினேன். 289 புயல் அடித்துக் கொண்டிருந்த ஓர் இரவு அன்று. நான் அப்பொழுது கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த தருணம், அவர் என்னிடம் “அந்த மூன்றாம் வரிசை கட்டிடத்திலுள்ள ஜன்னலின் அருகே நின்றுகொள்” என்று கூறினார். நானும் அவ்விதமே அங்கு சென்று நின்றேன். நான் இவ்விதமாகப் பார்த்தேன். 290 அப்பொழுது அவர், “அவர்கள் உனக்கு கண்ணியை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் சிக்காகோவின் மகத்தான போதகக் குழுவில் உன்னைப் பேச அழைக்கப்போகிறார்கள்” என்றார். மேலும் அவர், “போதித்த என் வார்த்தையின் போதனைகளில் உன் பேரில் குற்றம் கண்டுபிடிக்க உனக்குக் கண்ணிவைக்க வேண்டுமென்று அவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்” என்றார்.

115291 மேலும் அவர், “கூட்டம் நடத்துவதற்காக அங்கே அவர்கள் ஏற்பாடு செய்திருந்த அந்த ஸ்தலத்தை ரத்து செய்யப்போகிறார்கள். அவர்களுக்கு அந்த ஸ்தலம் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் பழுப்பு நிறமான வேறொரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்யப் போகிறார்கள்” என்று சொல்லி, “அந்த ஸ்தலத்தைப் பார்” என்று அதை தரிசனத்தில் எனக்குக் காண்பித்தார். அந்தக் கூட்டம் நடைபெறுவதை நான் தரிசனத்தில் முன்கூட்டியே கண்டேன். ஒரு மூலையில் நான் அமர்ந்திருந்தேன். நான் அவர்கள் எல்லோரையுமே அங்கு கண்டேன். அப்போதகர்கள் கூட்ட்த்தில் எங்ஙனம் உட்கார்ந்திருந்தனரோ அதேவிதமாக உட்கார்ந்திருப்பதை நான் தரிசனத்தில் கண்டேன். நான் அவர்கள் எல்லோரையுமே அங்கு கண்டேன். அவர் சொன்னார்… 292 “ஓ”, அப்பொழுது நான் கர்த்தரிடம், “அவர்கள் எனக்குக் கண்ணிவைக்க விருப்பங் கொண்டிருந்தால், நான் அங்கு போகாமலிருப்பது நல்லது. ஏனெனில் நான் அவர்கள் மனதைப் புண்படுத்தவோ அல்லது தவறிழைக்கவோ விரும்பவில்லை” என்று சொன்னான். அவரோ, “நீ அங்குசெல், நான் உன்னுடனே கூட இருப்பேன்” என்றார், அவர் அந்த வார்த்தையை நிறைவேற்றினார். அது உண்மை. 293 இப்பொழுது இங்கு உட்கார்ந்திருப்பவரில் சிலர் அந்தக் கூட்டத்தில் என்ன நேர்ந்ததென்பதற்கு சாட்சிகளாயிருக்கிறீர்கள். அது உண்மையன்று அவர்கள் அறிவார்கள். அது சரி. நல்லது அந்த சம்பவம் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களும்கூட இங்கே இருக்கின்றன. ஆனால் அங்குதான் காரியம். நீங்கள் பாருங்கள்.

116294 இப்பொழுது, இந்த முத்திரையின் இரகசியம் இதுவே. இன்று விடியற்காலையில் அது எனக்கு வெளியானபோது நான் துரிதமாக வேதவாக்கியங்களை ஆராயத்தொடங்கினேன். அது உண்மையாகவே இருந்தது. எனவே, இதுவரை மூன்று முத்திரைகளும் முற்றிலுமாக இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் வெளிப்படுத்தப்பட்டன. ஆம். கறுப்புக்குதிரையின் இரகசியத்தைக் குறித்து எனக்கு வெளிப்படுத்தப்பட்டிருப்பது இதுவேயாகும்.

117295 அவன் இருளின் காலங்களில் சவாரி செய்துகொண்டு செல்கிறான். கறுப்பு குதிரை இருளின் காலங்களுக்கு அறிகுறியாகும். மீதியாக விடப்பட்டிருந்த உண்மையான விசுவாசிகளுக்கு அது நள்ளிரவு போன்ற காலம். இருளின் காலங்களில் உண்டாயிருந்த இடையிலுள்ள சபைக் காலமாகிய சபையைப் பார்த்து, அவர், “உனக்குக் கொஞ்சம் பெலனிருக்கிறது” என்கிறார் என்பதைக் கவனியுங்கள். உண்மையான விசுவாசிக்கு அது நள்ளிரவாயிருந்தது. இப்பொழுது கவனியுங்கள். உண்மையான சபை அப்பொழுது நம்பிக்கையற்ற நிலையில் இருந்தது, ஏனெனில் இவன் சபையின் மேலும் அரசாங்கத்தின் மேலும் அதிகாரம் பெற்றிருந்தான். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? பாருங்கள்? கத்தோலிக்க மார்க்கம் இவ்வாறு சபையின் பேரிலும் அரசாங்கத்தின் பேரிலும் அதிகாரம் கொண்டிருந்தால், அந்த மார்க்கத்துடன் இனங்காதவர் அனைவரும் கொலை செய்யப்பட்டனர். ஆகவே தான் அவன் கறுப்பு குதிரையின்மேல் காணப்பட்டான். அவன் என்ன அந்தக்காரக் காரிய்த்தைச் செய்தான் என்பதைக் கவனியுங்கள். பாருங்கள்? அப்பொழுது உங்களால் புரிந்து கொள்ள முடியும். சபையின் சரித்திரத்தை நீங்கள் அறிந்திருந்தால் அவன் செய்த அந்தக்காரக் கிரியைகள் அனைத்தையும் நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள். அதை அறிந்துகொள்வதற்கு சரித்திரம் அறியவேண்டுமென்னும் அவசியமும் கிடையாது. இப்பொழுது கவனியுங்கள், சபைக்கான எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிருந்தது. அதுதான் அவன் ஏறியிருந்த கறுப்புக் குதிரையை எடுத்துக்காட்டுகிறது. இப்பொழுது அவன் முதலில் தன்னுடைய வெள்ளைக் குதிரையின் மேலேறி சவாரி செய்தான். தந்திரமுள்ளவன். 296 அதன் பின்பு சமாதானத்தை எடுத்துப்போட அவனுக்கு அதிகாரம் அளிக்கப்படு, லட்சக்கணக்கானவரை அவன் கொன்று போட்டான். அவன் கடைசி வரையிலும் அதையே செய்யும்படியாக இருந்தான். அவன் இப்பொழுதும் அதைச் செய்து கொண்டு வருகிறான். பாருங்கள்? 297 இப்பொழுது அவன் கறுப்பு குதிரையின் மேலேறி சவாரி செய்து வருகிறான். அந்தக்காலம் இருளின் காலமாயிருந்தது. அந்த நேரத்தில் சபையானது அதிகாரம் பெற்றவுடன், அடக்கு முறையைக் கையாண்டு நசுக்கிப்போட்டது. அது நூற்றுக்கணக்கான வருடங்களாக அவ்வாறு சென்றது என்பதையும், அது இருளின் காலங்கள் என்பதையும் வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிவர். எத்தனைபேர் அதை அறிவீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நிச்சயமாக. அதுதான் இருளின் காலங்களாகும். அதுதான், இருளின் காலத்திற்கு அடையாளமாக இருந்த கறுப்புக் குதிரையாகும். இப்பொழுது, எல்லா நம்பிக்கையும் போயிற்று. நம்பிக்கையே இல்லை. அச்சிறு விசுவாசிகளுக்கு எல்லாம் இருளாய்க் காணப்பட்டது. இப்பொழுது, அதன் காரணமாகவே, கறுப்புக்குதிரை என்று அடையாளமாக அழைக்கப்பட்டது.

118298 “அவன் கையில் தராசு இருந்தது” என்பதை நீங்கள் பாருங்கள்? “ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமை, ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமை” என்னும் சத்தம் அப்பொழுது உண்டானது. பாருங்கள்? கோதுமையும் வாற்கோதுமையும் நாம் உயிர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களாம். அவற்றிலிருந்துதான் ரொட்டியும், உணவுப் பொருட்களும் செய்யப்படுகின்றன. ஆனால், நீங்கள் பாருங்கள், அவன் காசுக்கு அதை விற்றுக்கொண்டிருந்தான். அதன்அர்த்தம் என்னவெனில், அவன் தன்னுடைய பிரஜைகளுக்கு தான் அனுப்பிக் கொண்டிருக்கும் ஜீவனின் நம்பிக்கையானதற்கு பணம் வசூலிப்பவன் என்பதாகும். அவன் அந்த காலத்திலேயே அவனுடைய பிரஜைகளிடமிருந்து ஜெபம் ஏறெடுப்பதற்கும் கூட அவன் காசு வாங்குகிறான். இன்றைக்கும் அவர்கள் மரித்தவர்களின் ஆத்துமாக்களுக்காக நோன்புகளை நடத்தி அதற்கு காசு வாங்குகின்றனர். 299 ஏனெனில் அவன் என்ன செய்துகொண்டிருந்தான்? அவன் உலகத்தின் செல்வமனைத்தையும் கைப்பற்றி, “ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையும்” தராசில் நிறுத்தித் தருகிறான். கறுப்புக் குதிரையின் மேலிருக்கிறவன் தன் பிரஜைகளிடமிருந்து பணத்தை அபகரிக்கிறான். உலகத்தின் செல்வமனைத்தையும் அவன் பெற்றிருப்பதாக வேதம் முன்னறிவிக்கிறது. நேற்று இரவு நான் ருஷியா, மற்றெல்லாவற்றையும் குறித்து பேசியது போன்று, அவர்கள் ஜனங்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொள்கின்றனர். ஆகையால் அங்குதான் காரியம்.

119300 இப்பொழுது கவனியுங்கள், இன்றைய சபைகளில் காணப்படும் பணம் எங்கிருந்து வந்தது என்பதை இப்பொழுது அறிகிறீர்களா? அதினின்று விலகியோடுங்கள். லட்சக்கணக்கான டாலர்கள் செலவழித்து ஒரு பெரிய ஸ்தாபனம் உண்டாக்குதல்… அவள் தாய் யாரென்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? 301 கர்த்தாவே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஓ, என்னே! நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆம் ஐயா, அது உண்மை. அது அவருடைய கிருபையாயுள்ளது. அவ்வளவுதான். சரி. 302 அது நள்ளிரவின் காலமாயிருந்தது. இப்பொழுது உங்களுக்குப் புரிகின்றதா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] அவன் அவ்விதமான ஜீவியத்திற்கு காசு வாங்குகிறான், அதுதான் அவனுடைய வாற்கோதுமை, மற்றவையும். வாற்கோதுமை இயற்கையாக வளரும் தானியங்கள். அவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தைக் கடைபிடிக்கவில்லை. அது வாற்கோதுமை ஆகும், பாருங்கள், பார்லி ரொட்டியும், வாற்கோதுமை ரொட்டியுமாகும். அவன் தன் பிரஜைகளுக்கு அளித்திருந்த ஜீவியத்திற்குப் பணத்தை வசூலித்துக் கொண்டிருந்தான். ஜனங்கள் பாவவிமோசன ஸ்தானத்திலிருந்து வெளியேறுவதற்கு குருக்கள் ஏறெடுக்கும் ஜெபத்திற்கு அவன் ஜனங்களிடம் காசு வசூலிக்கிறான். காசு வசூலித்தல். நான் இப்பொழுது இதை சபையின் சரித்திரத்திலிருந்து எடுத்துக் கூறிக்கொண்டிருக்கிறேன். மரித்தவர்களின் ஆத்துமாக்களுக்கான நோன்பு என்னும் தொழுகைக்காக பணம் வசூலித்தல் என்று நான் யூகிக்கிறேன். அதை எல்லோருமே அறிவர் என்றே நான் யூகிக்கிறேன். நோன்பு, அது நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை செய்யவேண்டும் என்று நான் யூகிக்கிறேன். அது ஒருவிதமான தவம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்காக பணம் செலுத்தப்பட வேண்டும். உலகத்தில் உள்ள செல்வத்தை அவனுக்காக அவன் சபைக்குள் கொண்டு வருகிறான். அவன் இன்னும் சவாரி செய்து கொண்டிருக்கிறான். ஓ, நிச்சயமாக. அவன் இன்னும் சவாரி செய்துகொண்டிருக்கிறான். ஆம், ஐயா. இன்னும் சவாரி செய்கிறான்.

120303 கவனியுங்கள். இந்த முத்திரையின் முக்கியமான பாகத்தை சற்று கவனியுங்கள். …எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே’. 304 “அதில் சிறிது மாத்திரமே விடப்பட்டுள்ளது. ஆனால் நீ அதைத் தொடாதே!” 305 இப்பொழுது, எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு அடையாளமாயிருக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால், நான் ஒரு சில வேத வசனங்களை நான் உங்களுக்குத் தருகிறேன். இரண்டு வேதவாக்கியங்கள் உள்ளன. லேவியராகமம் 8:12-ல் ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கும் முன்பு எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்க வேண்டும், நீங்கள் பாருங்கள். சகரியா 4:12-ல் குழாய்களின் வழியாக இறங்கும் எண்ணெய், “இது என்னுடைய ஆவியாயிருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு காரியம் நீங்கள் மத்தேயு 14…25-ல் பார்த்தால் இல்லை. மத்தேயு 25: 3-4-ல் புத்தியில்லாத கன்னிகைகளிடம் எண்ணெய், அதாவது ஆவி இல்லையென்றும் மத்தேயு 25:4-ல் புத்தியுள்ள கன்னிகைகள் தங்களுடைய விளக்கில் எண்ணெய் வைத்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருத்தல். ஆவி! ஆகவே எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. ஓ மகிமை! [சகோதரன் பிரான்ஹாம் தன் கரங்களை ஒருமுறை தட்டுகிறார்.—ஆசி.] சரி. உங்களுக்கு அது புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சரி. இப்பொழுது, எண்ணெய் ஆவிக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது.

121306 எண்ணெய் பரிசுத்த ஆவிக்கும், திராட்சரசம் வெளிப்பாடு அளிக்கும் ஊக்கத்திற்கும் அடையாளமாய் உள்ளன. ஓ, எனக்கு—எனக்கு எல்லாவிடங்களிலும் ஓடவேண்டுமென்ற உணர்ச்சி இப்பொழுது ஏற்படுகின்றது. கர்த்தர் இதை எனக்கு வெளிப்படுத்திக் கான்பித்தபோது, உணர்ச்சி மிகுதியில் அக்கம் பக்கத்திலுள்ளவர்களை நான் தூக்கத்தினின்று எழுப்பாதது ஆச்சரியம் தான். பருங்கள், “வெளிப்பாடு அளிக்கும் ஊக்கம்”. பாருங்கள்? 307 வேதத்தில் எண்ணெயும் திராட்சரசமும் எப்பொழுதும் ஒருங்கே கூறப்பட்டுள்ளன. வேதத்தின் ஒப்பந்த ஒத்துவாக்கிய அட்டவணையை (Concordance) நான் பார்த்தபோது, எண்ணெயும் திராட்சரசமும் எப்பொழுதும் அந்தவிதமாகவே ஒன்றுசேர்த்து கூறப்பட்டுள்ள அநேக வரிகளை அதில் கண்டேன். பாருங்கள்?

122308 வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தையின் உண்மையான அர்த்தம் எண்ணையினால் நிரப்பப்பட்டுள்ள அவருடைய பரிசுத்தவான்களுக்கு உண்மையாக வெளிப்படுத்தப்படும்போது, அவர்கள் ஊக்கமடைகின்றனர். திராட்சரசம் ஒரு ஊக்கமளித்தலாயிருக்கிறது. மகிமை! நான் இப்பொழுது சரியானவிதமாக உணர்ச்சிவசப்படுகிறேன். சந்தோஷத்தினால் ஊக்கவிக்கப்படுதல், சத்தமிடுதல்! பாருங்கள்? ஒரு சாதாரண மனிதன் திராட்சரசம் குடிக்கும்போது, அவன் மீது ஒரு விதமான ஊக்கத்தை பெற்றுக்கொள்கிறான். அதேவிதமாக எண்ணியினால் நிரப்பப்பட்ட உண்மையான விசுவாசிக்கு தேவனுடைய சத்தியத்தைக் குறித்த உண்மையான வெளிப்பாடு அளிக்கப்படும்போது, வெளிப்பாடு வெளிப்படுத்தப்படும்போது, ஊக்கம் மேலிட அது அவர்களை அசாதாரண விதத்தில் நடத்திக்கொள்ளச் செய்கிறது. சரி. மகிமை! [சபையோர் களிகூருகின்றனர்.—ஆசி.] பாருங்கள், அதுதான் இப்பொழுது அவர்களோடுள்ள காரியமாகும். அது உண்மை. அது அவர்களை அசாதாரணமான விதத்தில் நடக்கச் செய்கிறது.

123309 இப்பொழுது இதற்கான வேதவாக்கியம் உங்களுக்கு வேண்டுமானால், அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தை வாசிக்கத் தொடங்குங்கள். அவர்கள் எங்கிருந்தனர்? அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தத்தை அவர்கள் பெற்றிருந்தனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவி அவர்கள் மேல் ஊற்றப்பட்டது. அது வேதப்பிரகாரமாக ரூபகாரப்படுத்தப்பட்டதாயிருந்தது. இப்பொழுதும் நீங்கள் பாருங்கள்,… 310 அவர்கள் இவ்வாறு கூறியிருந்தால்…“இப்பொழுது காத்திருப்போம். நம் ஊழியத்திற்காக இங்கே நம்மைக் காத்திருக்கும்படி அவர் சொன்னார்” என்று அவர்கள் காத்திருந்து, எட்டு நாள் கழித்து அவர்கள், “நல்லது, பைன்களே, நாங்கள் உங்களுக்கு கூறவுள்ளோம்” என்றனர். மாற்கு மத்தேயுவை நோக்கி, “நாம் ஏற்கனவே அதை பெற்றுக்கொண்டு விட்டோம் என்று நான்—நான் நம்புகிறேன். நண்பர்களே, நீங்கள் அவ்வாறு கருதவில்லையா? பாருங்கள், நாம் அதை ஏற்கனவே பெற்றுவிட்டோம். நாம் நம்முடைய ஊழியத்திற்காக இப்பொழுது காத்துக் கொண்டிருக்கையில், நாம் வெளியில் சென்று பிரசங்கிக்கத்தான் வேண்டும். அவர் நம்மை இங்கு வந்து காத்திருக்கும்படி சொன்னார். நாம் அவ்விதம் காத்திருந்து எட்டு நாட்களாயிற்று” என்று சொல்லியிருந்தால் என்னவாயிருக்கும்? “நல்லது, நாம் இன்னும் ஒருநாள் காத்திருப்போம்”. 311 ஒன்பது நாட்கள் கழிந்தன. அதன்பின் மாற்கு வருகிறான் அல்லது—அல்லது—அல்லது யோவான் ஒருக்கால் மற்றவர்களைப் பார்த்து, “இனி நாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லையென்று நான்—நான்—நான்—நான் நினைக்கிறேன். பரிசுத்த ஆவியை நாம் ஏற்கனவே பெற்றுக்கொண்டு விட்டோம் என்று நான் எண்ணுகிறேன் நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா?” என்று சொல்லியிருக்கக்கூடும்.

124312 அப்பொழுது சீமோனை என்னால் காணமுடிகின்றது. ஏனெனில் அவனிடம் திறவுகோல்கள் இருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன், “இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள், பையன்களே! இதைக் குறித்து வேதவாக்கியம் ஏதோ ஒன்றைக் கூற வேண்டும். எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமென்று அவர் ஒருபோதும் நமக்கு கூறவில்லை. அவர், ‘அது நிறைவேறும் வரை நீங்கள் அங்கேயே தரித்திருங்கள். யோவேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறும்வரை, ஏசாயாவின் தீர்க்கதரிசனம் ரூபகாரப்படுத்தப்படும்வரை நீங்கள் அங்கேயே தரித்திருங்கள்’” என்றார். 313 “பரியாச உதடுகளினாலும் அன்னிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடு பேசுவேன்; இதுவே இளைப்பாறுதல்” அதுவே அவர்கள் மேல் ஊற்றப்பட்ட திராட்சரசமாகும். வேதத்தில் திராட்சரசம் என்பது எதைக் குறிக்கிறது? இளைப்பாறுதலைக் குறிக்கிறது. “இது கர்த்தருடைய சமூகத்திலிருந்து வரும் இளைப்பாறுதலாகும்”. பாருங்கள்? அது—அது இப்பொழுது வேதபூர்வமானதாக இருக்க வேண்டும். பாருங்கள்?

125314 ஆகவே, திராட்சரசமானது வெளிப்படுத்தலின் ஊக்குவிக்கப்படுதலின் அடையாளமாய் இருக்கின்றது. பரிசுத்த ஆவி விழுந்தபோது, அவர்கள் தேவனுடைய அக்கினி அவர்கள் மேல் விழுவதைக் கண்டனர். என்னே, அது அவர்களை ஊக்குவிக்கத் தொடங்கியது. முதலாவது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால், அவர்கள் குடித்து வெறித்திருக்கிறார்கள் என்று ஜனங்கள் உண்மையாக நினைக்குமளவிற்கு அவர்கள் அவ்வளவாய் ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால் இது வெளிப்பாட்டினால் உண்டான உணர்ச்சியாயிருந்தது…இது இங்கே இருக்கின்றது. தேவன் வெளிப்பாட்டை அவர்களுக்கு தெளிவுபடுத்தி, ரூபகாரப்படுத்தியிருந்தார். அதைக் குறித்து அவர்கள் மகிழ்ச்சியாயிருந்தனர். தேவன் அதை வாக்குபண்ணியிருந்தார். இங்கே அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு ரூபகாரப்படுத்தப்பட்டது. ஆமென்! இதோ ஒரு மனிதன் எழுந்து நின்றுகொண்டு, “இதற்கு இது அர்த்தம். இது அதைக் குறிக்கிறது” என்று கூறிக்கொண்டிருந்தான். இது இன்று நாம் பெற்றுள்ள அதே அடையாளத்தினால் ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்பாட்டினால் தூண்டப்படுதல். பாருங்கள்? அவர்கள் அதை உண்மையாக பெற்றவர்களாய் இருந்தனர். 315 ஆகையால் தான் பேதுரு அங்கு எழுந்து நின்று, “யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, எனக்குச் செவி கொடுங்கள், தெய்வீக பாண்டித்திய பட்டம் பெற்ற மேதைகளே, நான் உங்களுக்கு சொல்லப்போவதை சற்றுக்கேளுங்கள்” என்றான். பாருங்கள்? 316 ஓ, என்ன ஆச்சரியம்! வெளிப்பட்டது! வெளிப்பட்டது! அது ரூபகாரப்படுத்தப்பட்டதை அவர்கள் கண்டபோது அவர்கள் மிகவுமாய் ஊக்குவிக்கப்பட்டனர். அது எப்பொழுதுமே அதைச் செய்கிறது. அது எப்பொழுதுமே சம்பவிக்கின்றது.

126317 இக்காலத்திலும் தேவன் ஒரு குறிப்பிட்ட காரியத்தை இந்த நாளில் செய்யப்போவதாக வாக்களித்துள்ளார் என்பதை நான் காணும்போது, இக்கடைசி நாட்களில் முத்திரைகளை உடைத்து இரகசியங்களை வெளிப்படுத்தப்போவதாக அவர் நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்பதையும் நான் காணும்போது! அந்த இரகசியங்களை அவர் வெளிப்படுத்துகையில் நான் அதைக் கண்டு, நான் அங்கு நின்று அது சம்பவிப்பதை நான் கவனிக்கும்பொழுது, அந்த மகிழ்ச்சியையும், மகிமையும் உங்களால் அறிந்துகொள்ள முடியாது. அவர் கூறின ஒரு காரியமாவது அந்தவிதமாகவே நிறைவேறாமல் போனதில்லையென்பதை நான் தைரியமாக எந்த நபரிடமும் கூறமுடியும் என்று அறிந்துள்ளேன். அவர் செய்வதாக வாக்குத்தத்தம் பண்ணினதைப் போலவே, இந்த கடைசி நாட்களுக்கென அவருடைய வாக்குத்தத்தம் நிறைவேறுவதை நான் காணும்போது, என் இருதயம் சந்தோஷத்தினால் பொங்குகின்றது. அது இப்பொழுது ரூபகாரப்படுத்தப்பட்டு, பரிபூரணமாய் உறுதிப்படுவதை நான் காண்கிறேன். “நான் பக்திபரவசப்படுகிறேன்” என்று நான் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அதுதான் காரியம். அப்படியானால் வெளிப்பாட்டினால் நான் அதிக உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்பது அதன் அர்த்தம். வெளிப்பாட்டிலிருந்து வருகின்ற ஊக்குவித்தல்! சரி.

127318 அவர்கள் வெளிப்பாட்டினால் அதிகம் ஊக்குவிக்கப்பட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை ரூபகாரப்படுத்திக் காண்பித்தனர். சரி, இப்ப்பொழுது, ஓ, என்னே! தேவன் தம் வாக்குத்தத்தத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினபோது, மகிழ்ச்சியினால் ஏற்பட்ட உணர்ச்சி அவர்களில் பொங்கி எழுந்ததினால், “அவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்” என்று ஜனங்கள் சொல்லத் தொடங்கினர், தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர் அதை மாத்திரம் வெளிப்படுத்தாமல், அவர் அதை நிரூபித்தார். 319 அதைத்தான் நான் எப்பொழுதும் கூறியிருக்கிறேன், ஒரு மனிதன் எந்தக் காரியத்தையும் கூற முடியும், ஆம், அவன் எந்த காரியத்தையும் சரியாகக் கூறக் கூடும், ஆனால் தேவன் வரும்போதே அதை ரூபகாரப்படுத்துகிறார்.

128320 இப்பொழுது “ஆவிக்குரியவன் என்றோ ஒரு அல்லது தீர்க்கதரிசி என்றோ சொல்லும் ஒருவன் உங்கள் நடுவில் இருந்தால், அவன் கர்த்தரின் நாமத்தினால் சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அவனுக்கு நீ எந்த கவனமும் செலுத்த வேண்டாம்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம். அந்த மனிதனுக்கு பயப்பட வேண்டாம். அவன் சொன்னது நிறைவேறினால், அது நான் கூறியதாகும். நீங்கள் பாருங்கள், நான் அதில் இருக்கிறேன். அது நானே ஆகும் என்பதை நிரூபிக்கிறது” என்று வேதம் உரைத்துள்ளது. 321 ஆகவே, அப்பொழுது…அந்த சமாரிய ஸ்திரீயோ மேசியா வரும்போது இந்தக் காரியங்களைச் செய்வாரென்று வேத கூறியுள்ளதை அறிந்திருந்தாள். வேதம் கூறியவாறே இயேசு அங்கு நின்று அதை செய்தார். அப்பொழுது அவள், “அவர் இங்கே இருக்கிறார். ஒரு மனிதனை வந்து பாருங்கள். சம்பவிக்கும் என்று வேதம் கூறின அதேக் காரியமாய் இது இருக்கிறதல்லவா?” என்று கூறினாள். பாருங்கள்? அவள் வெளிப்படுத்தலின் மூலம் ஊக்குவிக்கப்பட்டாள். அது உண்மைதானே? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ரூபகாரப்படுத்தப்பட்டபோது, அவள் வெளிப்படுத்தலின் மூலம் ஊக்குவிக்கப்பட்டாள். பாருங்கள்? அது உண்மை. அவள் அதை அறிந்திருந்தாள்…

129322 அவள் “கிறிஸ்து என்னப்படுவகிற மேசியா வருகிறார் என்று நாங்கள் அறிவோம். அவர் வரும்போது, அவர் இந்தக்காரியங்களைச் செய்வார்” என்றாள். அவள் அதை அறிந்து கொண்டாள். அவர், “நானே அவர்” என்று கூறினார். 323 அப்பொழுது, அவளுக்குள் அந்த ஊக்குவித்தல் தொடங்கினது. அவள் ஊர் முழுவதும் சத்தமிட்டுக் கொண்டே சென்றாள். அவள் தண்ணீர் குடத்தை விட்டு விட்டு ஓடோடிச் சென்று, ஊர் ஜனங்களிடம், “வந்து பாருங்கள்” என்றாள்.

130324 இப்பொழுது கிழக்கு தேசத்து பழக்கவழக்கங்களை நீங்கள் அறிவீர்களானால், அவள் அவ்விதம் செய்தது தவறாகும். ஆம் ஐயா, அத்தகைய ஸ்திரீ கூறுவதை யாருமே கேட்கமாட்டார்கள். இல்லை ஐயா. பாருங்கள் முறைதவறி நடக்கும் ஸ்திரீ என்னும் மோசமான பெயரை அவள் கொண்டிருந்தாள். அத்தகையவள் வீதியில் சென்று இவ்விதம் சத்தமிடும்போது, அந்தத் தெருவில் உள்ள மனிதர் யாருமே அவளுக்குச் செவிகொடுக்கமாட்டார்கள். 325 ஆனால் சகோதரனே! அவளிடம் ஜீவனுள்ள வார்த்தை இருந்தது. அவள் ஊக்குவிக்கப்பட்டதனால் தூண்டப்பட்டாள். நீங்கள்…காற்றுபலமாக அடிக்கும் நாளில் எரிந்து கொண்டிருக்கும் வீட்டில் தீயை அணைக்க முயல்வது போன்றதாய் அது இருந்தது. ஓ, காற்று அந்த அக்கினி எரியும்படி வீசிக்கொண்டேயிருக்கும். எனவே அவள்—அவள் ஆயத்தமாகிவிட்டிருந்தாள். ஆம், அவர்களால் அதை அணைக்க முடியவில்லை. அது தேவனுடைய அக்கினி எரிந்துகொண்டிருந்ததாயிருந்தது. ஆம் ஐயா. அவள் அவர்களிடம், “நான் கூறுவதை நீங்கள் நம்பாவிடில், கூட்டம் நடந்துகொண்டிருக்கும் இடத்திற்கு வாருங்கள், அப்பொழுது நான் உங்களுக்கு அதைக் காண்பிப்பேன்” என்றாள். ஆம். அதுதான். ஆம், ஆம், ஐயா.

131326 ஆகவே ஜனங்கள் எல்லோரும் அங்கே சென்றனர். அப்பொழுது அவரோ மேலும் ஒருமுறை அக்கிரியைகளைச் செய்யவில்லை. ஆனால் அந்த ஸ்திரீக்கு ஏதோ ஒன்று நேர்ந்துள்ளது என்பதை மாத்திரம் அவர்கள் அறிந்து கொண்டனர். அவள் முற்றிலும் மாறிவிட்டதால், ஜனங்கள் அவரை விசுவாசித்தனர். ஆம் ஐயா. அவர்கள் அவர் மேல் விசுவாசம் கொண்டனர். 327 ஏனெனில், “விசுவாசம் கேள்வினால், தேவனுடைய வார்த்தையாகிய தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் கேட்பதனால் வரும். தேவனுடைய வார்த்தை நிறைவேறுவதை அவர்கள் கண்கூடாகக் கண்டனர்”. காரணம், அது ஒரு வித்தாயிருக்கிறது. எனவே அதை விதைக்கப்பட்டபின் உயிரடைகிறது. அது எதைக் குறித்துப் பேசுகின்றதோ அதே பலனை அது தருகின்றது. அங்ஙனம் அது செய்யாவிடில், அது தேவனுடைய வித்தல்ல, அல்லது விதைக்கிறவன் அதை விதைக்க வேண்டிய முறையை அறியவில்லையென்று அர்த்தம். அதாவது, விதைகள் விதைப்பதற்கு அவன் தேவனால் அனுப்பப்படவில்லை. அவன் விதையை மலையின்மேல் அல்லது விதைக்கக்கூடாத ஸ்தலத்தில் தெளித்திருப்பான்? எனவே, நீங்கள்—எனவே நீங்கள் பாருங்கள், விதை சரியான இடங்களில் விழும்போது, அது சரியாக முளைக்கிறதாவென்று தேவன் பார்த்துக்கொள்கிறார். நீங்கள் பாருங்கள். ஓ, என்னே!

132328 கறுப்புக் குதிரையின் மேலிருக்கிறவனிடம், அது கூறியது என்ன? “என்னுடைய எண்ணெயையும், திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே, என்னுடைய எண்ணெயையும் திராட்சரசத்தையும் நீ தொடாதே. நான் அங்கே அவைகளில் சிறிதுதான் மீதியாக வைத்திருக்கிறேன். ஆனால் அங்கே இன்னும் கொஞ்சம் உண்டு. ஆம், நீ ஜனங்களுக்கென வகுத்திருக்கும் வாழ்க்கையை அவர்களுக்கு நிறுத்துத் தருவதைப்பற்றி எனக்கு ஒன்றுமில்லை. அது உன் விருப்பம். நீ அதற்கான கிரயத்தை கடைசியில் அங்கே செலுத்தப்போகிறாய். ஆனால் எண்ணெயையும் திராட்சரசத்தையும் நீ காணும்போது, அதை சேதப்படுத்தாமல் விட்டுவிடு” என்று கூறப்பட்டது. ஓ, என்னே! உங்களால் கூடுமானால்… 329 அதாவது, இந்தவிதமாக வேறு வார்த்தைகளில் கூறினால், “சுத்த வார்த்தையாகிய எண்ணெயையும் திராட்சரசத்தையும் அபிஷேகமாக பெற்ற என் சிறு மந்தையில் சிலரை நீ பிடித்து அவர்களைக் கொன்று போடுவாய். ஏனெனில், அதையே நீ செய்து கொண்டும் வருகிறாய். ஆனால் ‘மரியாளே வாழ்க’ என்று சொல்லவும் உன் கோட்பாடுகளில் சிலவற்றைக் கைக்கொள்ளவும் அவர்களை நிர்ப்பந்தம் செய்ய வேண்டாம். உன்னுடைய கரங்களை அவர்களிடத்திலிருந்து விலக்கி வை. அவர்கள் போகுமிடத்தை அறிந்திருக்கின்னர். ஏனெனில் அவர்கள் என் எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். என் எண்ணெயினால் அபிஷேகிக்கப்பட்டு, அவர்கள் சந்தோஷமென்னும் திராட்சரசத்தைப் பெற்றிருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் என் வார்த்தையின் வாக்குத்தத்தத்தை அறிந்திருக்கிறார்கள். ‘நான் அவர்களை மறுபடியும் உயிரோடெழுப்புவேன்’ அதை சேதப்படுத்த வேண்டாம். அவர்களை குழப்பமுறச் செய்ய வேண்டாம். ஏனென்றால் அவர்களை விட்டு அகன்று நில். வேண்டாம்” என்று அவர் சொல்கிறார். எல்லா…

133330 அவர் தம் வார்த்தையை ரூபகாரப்படுத்தி எதை நிறைவேற்றுகிறார். அவர்கள் அறிந்துள்ளனர். அவர்கள் மறுபடியும் உயிரோடெழுப்புவர் என்று அறிந்திருந்தனர். ஓ. அதை நான் மிகவும் விரும்புகிறேன். வ்யூ! அவர்கள் மறுபடியும் உயிரோடு எழுந்திருப்பார்கள். இதோ அந்தக் கறுப்பு குதிரை வருகிறது, இருளின் காலங்களில் இப்பொழுது சவாரி செய்கிறான். 331 வெள்ளைக் குதிரையின் மேலிருந்தவன் என்ன செய்தான் என்பதை பரிபூரணமாக நாம் அறிந்துகொண்டோம். இதோ வருகிறது சிகப்பு குதிரை; அவன் செய்தான் என்பதை நாம் சரியாகக் கண்டோம். இதோ வருகிறது கறுப்பு குதிரை. எல்லா நேரத்திலும் ஒரே ஆள் சவாரி செய்கிறான். அவன் காலங்களினூடாக என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை நீங்கள் பாருங்கள். 332 இப்பொழுது அவன் கோதுமையும் வார்கோதுமையும் நிறுத்திக் கொடுத்து அதற்குக் காசு வசூலித்தான் என்று நான் கண்டறிகிறோம். கோதுமை என்பது மாம்சப் பிரகாரமான ஜீவியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய் இருக்கிறது. அதனைக் கொண்டுதான் அவர்கள் வாழ்ந்து வந்தனர். 333 ஆனால் எண்ணெய் பரிசுத்த ஆவிக்கும், திராட்சரசம் அதனால் உண்டாகும் மகிழ்ச்சிக்கும் அடையாளமாயுள்ளன. “அந்த ஆவிக்குரிய ஜீவியத்தை சேதப்படுத்த வேண்டாம். அதை ஒன்று செய்யாமல் விட்டுவிடு”. வேறுவிதமாய்க் கூறினால், “ரோமாபுரியே, நீ அதைத் தொடாதே! அது என்னுடையது. அது எனக்கு சொந்தமானது” என்பதாகும்.

134334 இப்பொழுது நான் வேறொரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். கவனியுங்கள். “எண்ணெய் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே” என்று நான்கு ஜீவன்களில் ஒன்று கூறவில்லை. நீங்கள் அதை கவனித்தீர்களா? நான்கு ஜீவன்களும் பேசிக்கொண்டிருந்தன, ஆனால்…கவனியுங்கள், இப்பொழுது நான் அதை சற்று வாசிக்கட்டும், பாருங்கள். இப்பொழுது. “அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும்,… 335 இப்பொழுது, இங்கு கவனியுங்கள். …நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். 336 அது யாராயிருந்தது? அதுதான் ஆட்டுக்குட்டியானவர்! ஆமென்! அது நான்கு ஜீவன்கள் கூறினதல்ல. அவர்கள் மத்தியிலிருக்கும் ஆட்டுக்குட்டியானவர் இதைக் கூறினார். ஏன்? அவர் தமக்குச் சொந்தமானவர்களைப் பெற்றுக்கொள்ளப்போகிறார். அவர்கள் அவருக்குச் சொந்தம். அவர் அவர்களை மீட்டுள்ளார். பாருங்கள்? ஆமென். “அந்த எண்ணெயைச் சேதப்படுத்தாதே!” இல்லை ஐயா. அந்த நான்கு ஜீவன்கள் அதைக் கூறவில்லை. ஆனால் அதைக் கூறினதோ ஆட்டுக்குட்டியானவராய் இருந்தது. ஓ என்னே! ஆட்டுக்குட்டியானவர்! இல்லை…நான்கு ஜீவன்கள் இதை அறிவிக்கவில்லை. ஆட்டுக்குட்டியானவர்தாமே இதை அறிவித்தார். 337 நான்கு ஜீவன்களில் ஒன்று யோவானை நோக்கி, “நீ வந்துபார்” என்று சொன்னது. யோவான் சென்று அதனை இந்தவிதமாக கண்டான். 338 ஆகவே அவர், “ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு… இவ்வளவு வாற்கோதுமையென்றும்,” கூறினார். ஆனால் அதன்பின் அவைகளின் மத்தியிலிருந்த ஆட்டுக்குட்டியானவர், “எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே” என்று சத்தமிட்டார். உ—ஊ. அது சரி. ஓ, என்னே! “பையனே, அதைச் செய்யாதே என்று கூறினதைக் கவனியுங்கள், இல்லையென்றால் அப்படிசெய்தால் ஒரு நாள் அதன் பலனை அனுபவிக்கப் போகிறாய்” என்று கூறுகிறார். ஓ, என்னே!

135ஒன்பது முப்பது நிமிடங்கள். 339 நல்லது. எனக்குத் தெரிதவரை மூன்று முத்திரைகளின் உண்மையான அர்த்தம் இவையே என்று நான் என் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறேன். அதற்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இது அவர் எனக்கு அருளின வெளிப்பாடாகும் என்று நான் கூறிட விரும்புகிறேன், அதைக் குறித்த வெளிப்பாட்டை அவர் எனக்கு அருளினார். நாம் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். 340 நாளை இரவு, நாம் மங்கிய நிறமுள்ள குதிரையின் மேலிருக்கிறவனைப் பற்றி சிந்திப்போம். அதைக் குறித்து இப்பொழுது எனக்கு இதுவரை ஒன்றும் தெரியாது. நான் அதை அறியேன். நான் கூறுவது உண்மையென்பதை தேவன் அறிவார். அதைக் குறித்த ஒரு காரியத்தையும் நான் அறியேன். இல்லை. 341 அநேக வருடங்களுக்கு முன்பு நான் வைத்திருந்த என்னுடைய பழைய குறிப்புகளைப் பார்த்தேன். நான் சிறிது நேரத்திற்கு முன்பாக சகோதரன் கிரஹாம் ஸிநெல்லிங் அவர்களைக் கண்டேன்; அவர் ஒருவேளை வெளியே சென்றிருக்கலாம். நான் முன்பு இங்கே பிரசங்கித்ததை நினைத்துப் பார்க்கிறேன். நான் பல வருடங்களுக்கு முன்பாக என்ன கூறினேன் என்பதைக் காணும்படியாக…எடுத்துப்பார்த்தேன். ஒருநாள் வெளிப்படுத்தின விசேஷ புத்தக்த்தில் நான்கு குதிரைகளின் மேலிருக்கிறவர்களைக் குறித்து ஒரே நாளில் நான் பிரசங்கித்தேன்.

136342 அப்பொழுது, “ஒரு வெள்ளைக் குதிரை, அது ஆதி சபையாயிருந்தது என்று சந்தேகத்திடமின்றி” கூறினேன். நான் அதை ஏழாம் நாள் ஆசரிப்போரின் புத்தகத்திலிருந்து வாசித்திருந்தேன். அதைக் குறித்த சிலவற்றை நான் அங்கே படித்தேன். மேலும் நான், “ஜெயங்கொள்ளும்படியாய் சென்ற ஆதி சபை” என்றேன். அடுத்ததாக கறுப்புக் குதிரை…நான் கூறினேன்…கறுப்புக் குதிரையை நான் என்னவென்று அழைத்தேன் என்பதை இப்பொழுது மறந்துவிட்டேன். நான் கூறினேன்… 343 அடுத்ததாக, “சிவப்பு குதிரை” சரியாகக் கூறினால், நான், “அந்த சிவப்புக் குதிரை அநேகமாக தொந்தரவுகள் சபைக்கு வரக்காத்திருக்கின்றன என்றும், அது நேரிடவிருக்கும் ஏராளமான யுத்தங்களுக்கு அல்லது அதுபோன்ற ஒரு காரியத்திற்கு ஒருக்கால் அறிகுறியாயிருக்கும்” என்றேன். எனவே நான், “அந்தவிதமாகத்தான் அது இருக்கும்” என்று நான் கூறினேன். அதன்பின்னர் நான் கூறினது, “மங்கின நிறமுள்ள குதிரை…

137344 இல்லை, “கறுப்பு குதிரை”, நான், “ஒரு நாள் பூமி அந்தகாரப்பட்டு, நட்சத்திரங்களும், சூரியனும் சந்திரனும் ஒளியைக் கொடாமற்போகுமென்றும், அதையே கறுப்புக் குதிரை சித்தரிக்கிறது” என்றும் சொன்னேன். எனவே நான், “அநேகமாக அதைத்தான் அது பொருட்படுத்துகிறது” என்று கூறினேன். 345 நான், “மங்கிய நிறமுள்ள குதிரை அநேக வியாதிகள் வரக் காத்திருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றது” என்று அப்பொழுது பிரசங்கித்தேன். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் இன்னும் எனக்கு வெளிப்படவில்லை. ஆனால் அப்பொழுது அதைக் குறித்த என்னுடைய வியாக்கியானம் அதுவே. நான் இங்கே இந்த பிரசங்க பீடத்தில் நின்று, என்னால் முடிந்தவரை அதைப் பிரசங்கித்தேன். 346 ஆனால், ஓ, ஏறக்குறைய ஏதோ ஒன்றைக் கூறினேன். சரி. ஹூம்! ஓ! நீங்கள்—நீங்கள் காண்பீர்கள். சற்று கவனமாயிருங்கள். பாருங்கள்? 347 இப்பொழுது, ஓ, இந்த வேளையில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக நீங்கள் மகிழ்ச்சியடைகின்றீர்களல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] இந்த காரியங்கள் எல்லாம் எங்கு சென்று முடியவடையும் என்பதை நாம் பார்க்கும்பொழுது, நான் நினைக்கிறேன். நாடுகள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்தெழும்புகின்றது, தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்கள் இவை; புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன, திகில் அவர்களை சூழ்ந்துள்ளது; “சிதறப்பட்டாரோ, உங்கள் சொந்தத்திற்கு திரும்புங்கள்”. மீட்பின் நாள் சமீபமாயுள்ளது, மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகின்றன; ஆவியினால் நிரப்பப்பட்டு, உங்கள் விளக்குகளின் திரியை சுத்திகரியுங்கள், மேல் நோக்கிப் பாருங்கள், உங்களுடைய மீட்பு சமீபமாயுள்ளது! (ஓ, என்னே!) கள்ளத்தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர், இயேசு கிறிஸ்துவே நம் தேவன் என்னும் தேவனின் சத்தியத்தை அவர்கள் மறுதலிக்கின்றனர். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஆனால் நாமோ அப்போஸ்தலர்களின் அடிச்சுவடுகளில் நடப்போம். மீட்பின் நாள் சமீபமாயுள்ளது, மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்துபோயுள்ளன; ஆவியால் நிறையப்பட்டு, உங்கள் விளக்குகளின் திரியை சுத்திகரியுங்கள் மேல் நோக்கிப் பாருங்கள், உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது!

138348 அது அற்புதமாயுள்ளதல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நான் அதை விரும்புகிறேன். மீட்பு சமீபமாயுள்ளது. சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும், மகிமையின் பாதையை நீங்கள் கண்டடைவீர்கள்; தண்ணீரின் வழியில் மாத்திரமே இன்றைய வெளிச்சம் உண்டு; அதுவே இயேசு என்னும் விலையேறப்பெற்ற நாமத்தில் அடக்கம் பண்ணப்படுதலாகும். வாலிபரே, வயோதிபரே, உங்கள் எல்லா பாவங்களிலிருந்தும் மனந்திரும்புவீர், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உட்பிரவேசிப்பார்; சாயங்கால வெளிச்சம் தோன்றி விட்டது, தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்பது சத்தியம்.

139அவர் வார்த்தையாயிருக்கிறார்! ஓ! என்னே! அற்புதம்! ஆட்டுக்குட்டியானவர் தம்முடைய மணவாட்டி என்றென்றுமாய் தம்பக்கத்தில் இருக்க, விரைவில் அவளைக் கொண்டு செல்வர். அப்பொழுது பரலோகத்தின் சேனையாவும் அங்கு கூட்டப்பட்டிருக்கும். ஓ, அது மகத்தான காட்சியாயிருக்கும், எல்லா பரிசுத்தவான்களும் கரையற்ற வெண்மையுடன் இருப்பர்; நாம் இயேசுவுடன் நித்தியமாக விருந்துண்போம். ஓ, “வந்து புசியுங்கள்” என் எஜமானன் அழைக்கிறார்,“வந்து புசியுங்கள்;” ஓ, நீங்கள் இயேசுவின் மேசையில் எந்நேரமும்விருந்துண்ணலாம்; திரளான ஜனங்களை போஷித்தவர், தண்ணீரை திராட்சரசமாய் மாற்றினவர், பசியுள்ளோரை “வந்து புசியுங்கள்” என எஜமானன் அழைக்கிறார்,“வந்து புசியுங்கள்”. ஓ, “வந்து புசியுங்கள்” என எஜமான் அழைக்கிறார், “வந்து புசியுங்கள்;” (வார்த்தையைப் புசியுங்கள்!) நீங்கள் இயேசுவின் மேசையில் எந்நேரமும் விருந்துண்ணலாம்; திரளான ஜனங்களை போஷித்தவர், தண்ணீரை திராட்சரசமாய் மாற்றினவர், பசியுள்ளோரை “வந்து புசியுங்கள்” என இப்பொழுது அழைக்கிறார்.

140349 ஓ, என்னே! நீங்கள் பசியாயிருக்கிறீர்களா? [சபையோர் களிகூறுகின்றனர்—ஆசி.] “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்”. 350 நீங்கள் அவரை நேசிக்கின்றீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நீங்கள் அறிந்துள்ள நான் அவரை நேசிக்கிறேன் என்ற பாடலுக்கு சுருதி கொடுங்கள். நாமெல்லாரும் அப்படியே எழுந்து நின்று, நம் கைகளையுயர்த்தி, “நான் அவரை நேசிக்கிறேன்; நான் அவரை நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்ததார்” என்ற பாட்டைப் பாடி நமக்கு அவர் பேரிலுள்ள மதிப்பைத் தெரிவிப்போம். சரி, நாம் எல்லோரும் இப்பொழுது பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், அவர் முதலில் என்னை நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே.

141351 [ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார். சகோதரன் பிரான்ஹாம் சிறிது நேரம் நிறுத்துகிறார்—ஆசி.] உண்மையான பயபக்தியோடு இருங்கள். நம்மிடையே வியாக்கியானம் செய்கின்ற சகோதரன் ஹிக்கின் பாதம் இங்குள்ளார். அவர் இன்றிரவு இங்கே இருக்கின்றாரோ, இல்லையா நாம் கண்டறிய விரும்புகிறோம். அப்படியே ஒரு நிமிடம் காத்திருங்கள். இதோ, இங்கே… [ஒரு சகோதரி வியாக்கியானம் அளிக்கிறார்.] 352 நிச்சயமாக, கர்த்தருக்கே புகழ்ச்சி! என்னுடைய விசுவாசம் தேவனுக்குள்ளாக எழுப்பப்பட்டுள்ளது. நீங்கள் இன்று இரவு அவரை உங்களுடைய முழு இருதயத்துடன் நேசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஓ, அவரை ஸ்தோத்தரித்து, “கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி” என்று சொல்லுங்கள். [சபையோர் தேவனை ஸ்தோத்தரிக்கிறார்கள்.] 353 கர்த்தாவே, நாங்கள் எங்கள் முழு இருதயத்துடனே உம்மை எவ்வளவாய்ப் போற்றுகிறோம்! தேவனுக்கே மகிமை! 354 ஜனங்களே, நீங்கள் எல்லோரும் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். தேவன் உங்களோடிருப்பாராக! [சபையோர் தொடர்ந்து களிகூர்ந்து, தேவனை ஸ்தோத்தரிக்கிறார்கள்—ஆசி.] 