1 மாலை வணக்கம். நாம் இப்பொழுது ஜெபத்திற்காக சற்று நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 2 கிருபை பொருந்திய எங்கள் பரலோகப் பிதாவே, மற்றுமொரு நாளுக்காக உமக்கு நன்றி செலுத்த நாங்கள் மறுபடியும் இன்றிரவு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடம் அணுகிக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது இன்றிரவு நடக்கவிருக்கும் ஆராதனையில் உம்முடைய ஆசீர்வாதங்களுக்காகவே இப்பொழுது நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். நாங்கள் மிகுந்த ஊக்கத்துடன் ஆராய்ந்து கொண்டிருக்கும் இவ்விஷயங்களின் வியாக்கியானத்தை பரிசுத்த ஆவியானவர்தாமே வந்து எங்களுக்கு வெளிப்படுத்துவாராக. ஓ, தேவனே, வார்த்தையின் பேரில் ஐக்கியங் கொள்வதை நாங்களெல்லாரும் விலையுயர்ந்த ஒன்றாகக் கருதி, முடிவில் இவ்விடத்தை விட்டுச் செல்லும்போது, “வழியிலே அவர் நம்முடனே பேசினபோது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?” என்று நாங்கள் கூற கிருபை அளியும். நீர் எங்களுக்கு செய்துவருகிற யாவற்றிற்கும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் பிரயாணத்தில் நீர் எங்களுடனே தங்குவீர் என்று நாங்கள் நம்புகிறோம். இவை யாவையும் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
23 இன்றிரவு மறுபடியுமாக ஆராதனைக்கென்று கர்த்தருடைய வீட்டிற்கு வருவதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன். நாம் அனைவரும் சந்தோஷப்படுகிறோம். நான் மிகவும் மகிழ்ச்சியுடையவனாய்… 4 இன்று பேச வேண்டுவதற்கு வெளிப்பாடு கிடைக்காதென்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் முடிவில் அதன் அர்த்தம் வெளிப்பட்டது. அந்த நான்கு முத்திரைகளில் சவாரி செய்பவர்களில் கடைசியானதைக் குறித்த இரகசியம் வெளிப்பட்டதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இக்காலத்தில் சபைக்கு அளிக்க அவசியமுள்ள முக்கியமான செய்திகளில் இது ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 5 அடுத்த முத்திரையின் இரகசியம் என்னவென்பது எனக்குத் தெரியாது. அவர் அதை வெளிப்படுத்துகிறவிதமாகவே நான் ஒவ்வொரு நாளும் அதை எடுத்து கூறிக்கொண்டிருக்கிறேன். அவர் எனக்கு அதை அளிக்கிறவிதமாகவே…நான் அதை அளிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 6 ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவித்து மகிழுகின்றீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] முத்திரைகளின் இரகசியம் சபையின் காலங்களுடன் எவ்வளவு அழகாகப் பொருந்துகின்றது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவையிரண்டும் முற்றிலுமாக இணைகின்றன. சபையின் காலங்களுக்கு விளக்கவுரையை அளித்த அதே பரிசுத்த ஆவியானவர்தான் முத்திரையின் இரகசியங்களையும் வெளிப்படுத்துகிறார் என்பதனை அது காண்பிக்கின்றது, நீங்கள் பாருங்கள், ஏனென்றால் அவை ஒன்றாக இணைகின்றன. தேவன் வித்தியாசமான வழிகளில் தம்மை வெளிப்படுத்தும் ஒரு மகத்தான கிரியையாக இது அமைந்துள்ளது.
37 நீங்கள் கவனியுங்கள், அவர் தரிசனங்களில் தம்மை தானியேலுக்கு வெளிப்படுத்தின போது, அநேக அடையாளங்களின் மூலம்—ஒரு—ஒரு வெள்ளாடு, ஒரு மரம், அடுத்தது சொரூபம் போன்றவைகளின் மூலம் அவைகளைக் காண்பித்தார். அவையெல்லாம் ஒரே சம்பவத்தையே எடுத்துக் காண்பிக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ளத் தவற வேண்டாம். 8 இப்பொழுது, சற்று முன்பு இங்கு அமர்ந்துகொண்டிருந்த எண்பத்தைந்து வயது சென்ற ஒரு பெண்மணியோடு நான் பேசிக்கொண்டிருந்தேன். அந்த அம்மாள் கூறியது என்னை சிலிர்க்க வைத்தது. அவர்கள்… 9 அண்மையில் நான் மேற்கு திசைக்குச் செல்லும் முன்பு, ஒரு சிறு பெண் ஓஹையோ (Ohio) பட்டிணத்தில் இரத்தப் புற்றுநோயால் லுக்கிமியா பீடிக்கப்பட்டுச் சாகும் கடைசித் தருணத்தில் இருந்தாள் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது லுக்கிமியா என்பதோ இரத்தத்தில் உண்டான புற்றுநோயாகும். ஓ, அந்த சிறு பெண் அப்பேர்ப்பட்ட பயங்கரமான நிலைமையில் இருந்தாள். எனவே உங்களுக்குத் தெரியுமா, அவள் பிழப்பாள் என்ற நம்பிக்கையே இல்லாதிருந்தது. அவர்கள் இரத்தக் குழாய்கள் மூலம் அவளுக்கு ஆகாரம் செலுத்திக்கொண்டிருந்தனர். அவள் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆகவே அவர்கள்… 10 சகோதரன் கிட் (Bro.Kidd) என்பவரும் அவருடைய மனைவியும் கர்த்தர் எவ்விதம் ஜெபத்திற்குப் பதிலுரைக்கிறார் என்று அவர்களிடம் எடுத்துக் கூறினபோது அவர்கள் ஒரு வாடகை மோட்டார் வண்டியில் அந்தப் பெண்ணை இங்கு அழைத்து வந்தனர். அவள் ஏறக்குறைய ஆறு அல்லது ஏழுவயது சென்ற மிகவும் அழகுள்ள பெண்ணாக இருந்தாள் [ஒரு சகோதரி, “ஒன்பது வயது” என்று கூறுகிறாள்.—ஆசி.] ஒன்பது வயது. அவள் அங்கே பின்னால் உள்ள அறையில் இருந்தாள்.
411 ஆகவே, நாங்கள் கர்த்தருடைய சமூகத்தில் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர் அவளுக்கான வார்த்தையை அருளினார். அவர் கூறியவாறே அவளுக்கு சாதாரண முறையில் வாய்வழியாக ஆகாரம் கொடுக்கப்பட்டது. முடிவில் அவள் அந்த இடத்தை விட்டுச் செல்லும் முன்பு இறைச்சி கலந்த ரொட்டி வேண்டுமென்று அழுதாள். அவளுக்கு இயற்கையான முறையில் வாய் வழியாக அந்த இறைச்சி கலந்த ரொட்டியைக் கொடுத்தார்கள். 12 சில நாட்கள் சென்ற பிறகு அவர்கள் மருத்துவரிடம் அந்த பெண்ணைக் கொண்டு சென்றனர். மருத்துவருக்கோ என்ன நேர்ந்ததென்று ஒன்றுமே புரியவில்லை. அவர், “அந்த பெண்தான் அவள் என்று கண்டு கொள்ளக் கூடாத அளவிற்கு அவள் வித்தியாசமான தோற்றம் கொண்டவளாயிருந்தாள்” என்றார். மேலும் “இரத்தப் புற்றுநோயின் அடையாளம் அவளில் சிறிதேனும் காணப்படவில்லை” என்பதாக மருத்துவரே கூறினார். புற்று நோயினால் மரிக்கும் தருவாயிலிருக்க அவர்களால் அவள் கைவிடப்பட்டு, எல்லாவித நம்பிக்கையும் அற்றுப்போய், இரத்தக் குழாய்களின் வழியாக ஆகாரம் செலுத்தப்பட்டு மஞ்சள் நிறமாய்க் காணப்பட்ட அதேபெண் இன்று மற்ற பிள்ளைகளுடன் பள்ளிக்கூடத்தில் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கிறாள்.
513 இதைப் போன்று வேறொரு சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. நான் அப்பொழுதுதான் வீடு திரும்பியிருந்தேன். அங்கே… அப்பொழுது கான்ஸாஸ் (kansas) பட்டிணத்திலிருந்து ஒரு பெண்ணைக் கொண்டு வந்தனர். அவர்கள் எபிஸ்கோ பால் ஸ்தாபனத்தார் அல்லது பிரஸ்பிடேரியன்கள் என்று நினைக்கிறேன். நான் தவறாக கூறவில்லை, அப்பொழுது மருத்துவர்களோ இரத்தப் புற்றுநோயினால் அவளைக் கைவிட்டிருந்தனர். இன்னும் நான்கு நாட்கள் மாத்திரமே அவள் பிழைத்திருப்பாள் என்று அவர்கள் கூறியிருந்தனர். அவள் மிகவும் மோசமடைந்தாள். அவளுக்காக ஜெபிக்க வேண்டும் என்பதற்காக, அந்த நான்கு நாட்கள் செல்வதற்கு முன், பனியை எவ்வாறாயினும் கடந்து இங்கு அடைந்து விடலாம் என்று எண்ணங்கொண்டு அவர்கள் புறப்பட்டனர். அவள் பாட்டனார் தலை நரைத்து வயது சென்ற கம்பீரமான தோற்றத்தையுடையு ஒருவர்.
614 அவர்கள் இங்கு வந்து ஒரு விடுதியில் தங்கி ஏற்கனவே இரண்டு நாட்களாகிவிட்டன. அப்பொழுது சில்வர் கிரீத் என்ற இடத்தில் இருந்த அந்த விடுதி இப்பொழுது அங்கு இல்லை என்று நான்—நான் யூகிக்கிறேன். எனவே அவளுக்காக ஜெபம் செய்ய நான் சென்றேன். அது விடியற்காலையாயிருந்தது. முந்தின இரவுதான் நான் வீடு திரும்பியிருந்தேன்; அங்கு சென்றபோது, அவள் பாட்டனார் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அந்த தாயாரோ அந்தப் பெண்ணை கவனித்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தாள். 15 ஆகவே, நான் ஜெபம் செய்ய முழங்கால் படியிட்டபோது, அவளுடைய தந்தையும் தாயும் செய்திருந்த ஒரு இரகசிய செயலைப் பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார். நான் அவர்களை ஒருபுறம் அழைத்து அது உண்மையாவென்று கேட்டேன். அப்பொழுது அவர்கள் அழத் தொடங்கி, “அது உண்மைதான்” என்று கூறினார்கள். 16 பின்பு அந்தப் பெண் ஒரு கயிற்றை வைத்து குதித்து விளையாடிக்கொண்டிருப்பதை நான் தரிசனத்தின் கண்டேன் …ஆகவே, இப்பொழுது அந்த சிறு பெண்…மூன்று வாரத்திற்குள் அந்தபெண் இரத்தப் புற்று நோயில்லாமல் பரிபூரண சுகமடைந்து, பள்ளிக்கூடத்தில் கயிறு வைத்து அவள் குதித்துக் கொண்டிருப்பது போன்று ஒரு புகைப்படத்தை அவர்கள் அனுப்பியிருந்தனர். 17 இப்பொழுது, இப்பொழுது, இந்த சாட்சிகள் அனைத்தும் முற்றிலும் உண்மையாகும். பாருங்கள். ஆகவே, நம் தேவன் மிகவும் உண்மையுள்ளவராயிருக்கிறார், நீங்கள் பாருங்கள். நாம் அவரைச் சேவித்து, அவரில் விசுவாசம் கொள்ளுவோம். எனவே அவர் உண்மையுள்ளவர் என்பதை நான்—நான் அறிவேன்.
718 இப்பொழுது, நான் என்னால் முடிந்தவரை சிறந்ததை செய்ய முயன்றுக் கொண்டிருக்கையில், நம் மத்தியில் உள்ளான ஏதோ ஒன்று தன்னுடைய வழியின் மூலம் கிரியை செய்துக் கொண்டிருக்கின்றது. இன்றிரவு தேவ கிருபையைக் கொண்டு, நான்காம் முத்திரை என்னவென்பதைப் பற்றியும், பரிசுத்த ஆவியானவர் அதைக் குறித்து நமக்கு என்ன சொல்லப் போகிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்ள முயல்வோம். 19 இப்பொழுது, வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரத்தில் 7-ம் வசனத்திலிருந்து துவங்கி 8 வரை நான் படிக்கப் போகிறேன். ஒவ்வொரு முத்திரைக்கும் இரண்டு வசனங்கள் உண்டு. முதல் வசனம் அதன் வருகையை அறிவிக்கிறது. யோவான் என்ன கண்டான் என்பது இரண்டாம் வசனத்தில் அடங்கியுள்ளது. அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யுமபடியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. 20 இப்பொழுது, இதனை அறிந்துகொள்ள கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. இது ஒரு இரகசியம்.
821 இப்பொழுது, சபையின் காலங்களை ஆராயும்போது நாம் செய்தவாறு, இப்பொழுது, இதற்குமுன்பு முத்திரைகளைக் குறித்தும், குதிரை சவாரி செய்பவர்களைக் குறித்தும் நாம் சிந்தித்ததை மறுபடியும் கூறுவோம். இப்பொழுது, நான்காம் முத்திரையைப் பற்றி பேசுவதற்கு ஏற்ற தருணம் வந்துவிட்டது எனும் சிந்தை நமக்குள் எழும்வரை இவைகளை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். 22 இப்பொழுது முத்திரைகளை உடைத்தலில் நாம் இது முத்திரிக்கப்பட்ட மீட்பின் புஸ்தகம் என்பதை நாம் கவனித்துள்ளோம். பண்டைய காலத்தின்படி புத்தகமானது ஒரு சுருள் வடிவில் சுற்றப்பட்டிருந்தது. 23 [சுருளானது எவ்வாறு சுருட்டப்பட்டு முத்திரிக்கப்படுகின்றது என்று காகிதங்களைக்கொண்டு சகோதரன் பிரான்ஹாம் விளக்குகிறார்—ஆசி.] அது இந்த மாதிரியான ஒரு புத்தகமாயிருக்கவில்லை. ஏனென்றால் இக்காலத்திலுள்ள இந்த புத்தகங்கள் அண்மையில் தோன்றினவை. இத்தகைய புத்தகங்கள் சுமார் நூற்றைம்பது அல்லது இரு நூறு வருடங்களுக்கு முன்புதான் தோன்றின என்று நான் யூகிக்கிறேன். பழங்காலத்தில் எழுதியவைகளை அவர்கள் சுருள் வடிவில் சுருட்டி முனையைச் சுருட்டாமல் விட்டு விடுவார்கள். அது எவ்விதம் சுருட்டப்படும் என்பதனை நான் உங்களுக்கு முன்னமே எடுத்துரைத்துள்ளேன். இதை குறித்து எரேமியா தீர்க்கதரிசனப் புத்தகத்தில் காணலாம் என்றும் நான் கூறியுள்ளேன். இவ்விதம் சுருள் வடிவில் சுருட்டப்பட்டு, முனைவிடப்பட்டு அது முத்திரிக்கப்படும். 24 ஒவ்வொன்றும் ஒரு முத்திரையாகும். அது ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட ஒரு புத்தகமாயிருந்தது. அது ஒரு …எவரும்…அவர்கள்…அது ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட மீட்பின் புத்தகமாயிருந்தது. என்னை மன்னிக்கவும்.
925 வானத்திலாவது பூமியிலாவது ஒருவரும் அல்லது பூமியின் கீழாவது அதைத் திறக்கவும் அல்லது அதைப் பார்க்கவும்கூட பாத்திரவானாய்க் காணப்படவில்லை. எனவே யோவான் அழத் தொடங்கினான், ஏனென்றால் அவனால் ஒரு மனிதனையும் காணமுடியவில்லை,…ஆதாமும் ஏவாளும் பாவத்தின் காரணத்தால் தேவனுடைய வார்த்தையில் கொண்டிருந்த உரிமைகளை, வாக்குத்தத்தங்களை, அவர்களுடைய சுயாதீனத்தை இழந்து பறிகொடுத்தபோது, அந்தப் புத்தகம் அதன் மூல உரிமையாளரின் கரத்தையடைந்தது. அப்புஸ்தகம் அவர் கையிலிருந்து வாங்கப்படாமற் போயிருந்தால்… 26 ஞாபகங்கொள்ளுங்கள், ஆதாமும் ஏவாளும் பூமியின் மேல் ஆதிக்கம் செலுத்தினர். அவன்—அவன் தேவனுடைய குமாரனாயிருந்தபடியால், அவன் ஒரு குட்டித் தேவனாக பூமியின் மேல் ஆளுகை செய்தான். தேவனுடைய குமாரன் ஒரு குட்டி தேவனாயிருக்கிறான். இப்பொழுதோ அது வேதவாக்கியத்திற்கு முரணானதொன்றல்ல. அது விநோதமாக தென்படுகிறது என்பதை நான் அறிவேன். 27 ஆனால் இயேசு, “தேவ வசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று சொல்லியிருக்க…” என்றார். யாரிடத்தில் தேவ வசனம் வருகிறது? [சபையோர், “தீர்க்கதரிசிகள்” என்கின்றனர்.—ஆசி.] தீர்க்கதரிசிகளிடத்திற்கேயாகும். “தேவ வசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணம் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?” என்று இயேசு கூறினார். பாருங்கள்?
10ஆகவே, அவர்கள் தேவர்களாயிருந்தனர். 28 மனிதனே, ஒரு குடும்பத்தில் நீ பிறந்திருப்பதால், அந்த குடும்பத்தின் பெயரை நீ ஏற்றுக் கொள்கிறாய், குமாரன் என்னும் ஸ்தானத்தில் உன் தகப்பனாரின் ஒரு பாகமாக நீ இருக்கிறாய். 29 பாவம் பிரவேசித்தபோது, மனிதன் பிளவின் மற்ற எல்லையை அடைந்தான் என்று நாம் கண்டறிந்தோம். காளை, வெள்ளாட்டுக்கடா, இவைகளின் இரத்தம் பாவ நிவிர்த்திக்கென்று செலுத்தப்பட்டது. ஆனால் அவை பாவத்தை மூடினதேயன்றி அதைப் போக்கவில்லை. உண்மையான வெண்மையாக்கும் திரவம் வரும்வரை, இது கைக்கொள்ளப்பட வேண்டும். வெண்மையாக்கும் திரவம் பாவத்தின் கறையை அகற்றி, அதை மூலப்பொருட்களாக மாற்றி, வார்த்தையைப் புரட்டி சாத்தானிடம் அதைக் கொண்டு சேர்க்கும். 30 சாத்தானை அது அடைந்த பிறகு, அவன் தன்னுடைய நித்திய அழிவு வரும் வரை காத்திருக்கிறான். இப்பொழுது, நாம் விசுவாசிப்பது என்ன என்று அது காட்டுகின்றது. அவன் முற்றிலுமாக அழிக்கப்படுவான் என்று நாம் நம்புகிறோம்.
1131 இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை ஆதாரமாகக் கொண்டு பாவம் அறிக்கையிடப்படும்போது அது மறைந்து போகிறது என்று நான் நம்புகிறேன். ஒரு துளி கறுப்புநிற மையை வெண்மையாக்கும் திரவத்தில் ஊற்றும்போது அது மூல இரசாயனப் பொருட்களாக மாறி முன்பிருந்த நிலைமையை அடைவதற்கு இது ஒப்பாயிருக்கிறது. பாருங்கள்? இயேசு கிறிஸ்துவின் இரத்தமும் அதையே செய்கிறது. 32 மனிதன் மறுபடியுமாக பிளவைக் கடந்து தேவனுடைய குமாரனாகும்படி அது செய்கிறது. பாருங்கள்? ஆகவே அப்பொழுது அவன்—அப்பொழுது அவன்,…அதாவது…தேவனுடைய சிருஷ்டிக்கும் வல்லமையையும்கூட அவனுக்குள் இருக்கின்றது. தேவன் அவன் மூலம் அதைக் கட்டளையிடும்பொழுதெல்லாம், அது செய்யப்படும். நாம் பழைய நிலைக்குச் செல்கிறோம். அப்பொழுது…
1233 காளை, வெள்ளாட்டுக்கடா இரத்தத்தின் கீழிருந்த மோசே…பற்றியெரியும் முட்செடியில் அக்கினி ஸ்தம்பத்தை அவன் சந்தித்தான். ஆகவே அவன், தேவன் அவனுக்குக் கொடுத்த கட்டளையுடன் அங்கே நின்றான். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் வந்தபோது, அவன் பேசினான். அப்பொழுது வார்த்தையானது காரியங்களை சிருஷ்டித்தது. பாருங்கள்? 34 இப்பொழுது, காளையின் இரத்தத்தின் கீழிருந்து, அதைச் செய்தால், இயேசுவின் இரத்தத்தைக் குறித்து என்ன? ஏனெனில் இயேசுவின் இரத்தம் பாவத்தை மூடாமல் அதை அறவே அகற்றுகிறது. அப்பொழுது நீங்கள் தேவ சமூகத்தில் ஒரு மீட்கப்பட்ட புத்திரனாக நிற்கிறீர்கள். இப்பொழுது சபையானது தற்போதுள்ள நிலையைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததாயிருக்கிறது. பாருங்கள், நாம் தைரியமாக வெளிவந்து பிரச்சனையை சந்திப்பதற்குப் பதிலாக அநேக சமயங்களில் நாம் செய்யலாமா வேண்டாமாவென்று ஆலோசனை செய்பவர்களாகக் காணப்படுகிறோம் என்று நான் நினைக்கிறேன். நான் வைத்துள்ள ஒரு காரியத்தை உங்களிடம் கூற வேண்டும். நான்—நான் அதை தக்க சமயத்தில் கூறுவேன்.
1335 ஆகவே இப்பொழுது, சபைகளில் எங்கோ தவறு காணப்படுகின்றது. ஸ்தாபனங்கள் தவறான போதகங்களினாலும் ஜனங்களின் மனதைக் குழப்பமுறச் செய்வதால் எது சரியென்று அறியாத நிலையை அவர்கள் அடைந்துள்ளனர். அது உண்மை. 36 ஆனால் சத்தியம் வெளிப்படும் என்று நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. இந்தப்புஸ்தகமானது ஏழுமுத்திரைகளால் முத்திரிக்கப்பட்டுள்ளது. ஏழுமுத்திரைகள் கொண்ட இப்புஸ்தகம்… 37 ஏழு முத்திரைகள் முடிவு பெற்றவுடன், இடி முழக்க இரகசியங்களை நாம் வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். யோவான் அவன் கண்டவைகளையும், கேட்டவைகளையும் எழுத வேண்டுமென்ற கட்டளை பெற்றிருந்தான், ஆனால் இடிமுழக்கங்கள் சொன்னவைகளை எழுதக்கூடாதென்று அவனிடம் கூறப்பட்டது. அந்த இடிகள் முழங்கும்போது, கிறிஸ்து, “அதாவது பலமுள்ள தூதன் வானவில்லுடன் இறங்கிவந்து, தமது பாதத்தை பூமியின் மீதும், சமுத்திரத்தின் மீதும் வைத்து, இனிகாலம் செல்லாதென்றும், சமயம் கடந்து விட்டதென்றும் ஆணையிடுகிறார்” என்று நாம் பார்த்தோம்.
1438 மேலும், ஆட்டுக்குட்டியானவர் தம்முடைய பரிந்துபேசும் ஊழியத்தை விட்டு விட்டு, தம் மரணத்தினால் அவர் மீட்டுக்கொண்ட அனைவரையும் சொந்தமாக்கிக் கொள்ளப் புறப்பட்டு வருகிறாரென்று முத்திரைகளின் வெளிப்பாடுகளில் நாம் கண்டறிகிறோம்—கண்டறிகிறோம். 39 ஆகவே, அந்த புஸ்தகத்தை யாராலுமே திறக்க முடியவில்லை. அதை யாரும் புரிந்து கொள்ளவும் இயலவில்லை. அது ஒரு மீட்பின் புஸ்தகமாகும். கிறிஸ்து சிங்காசனத்திலே மத்தியஸ்த ஊழியத்தை செய்துக்கொண்டிருந்தால், ஆவியாகிய பிதா அந்தப் புஸ்தகத்தை தம் கரத்தில் வைத்திருந்தார். அவர் ஒருவரே மத்தியஸ்தர். ஆகையால் எந்த பரிசுத்தவானும், மரியாளும், யோசேப்பும் வேறு யாருமே மத்தியஸ்தராக அந்த பலிபீடத்தில் இருக்க முடியாது. அதற்கு இரத்தம் சிந்துதல் அவசியம். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே பாவநிவிர்த்தி செய்ய முடியும். ஆகவே வேறு யாரும் அந்த மத்தியஸ்த ஊழியத்தை வகிக்க முடியாது. அதுசரி. வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது.
1540 ஆகவே, அரசியல் சம்பந்தமான காரியங்களுக்காக பரிசுத்த யூதா (Jude) வேண்டிக்கொள்வாரென்றும், சில காரியங்களுக்காக பரிசுத்த சிசீலியா (Cecilia) வேண்டிக்கொள்வாரென்று கருதுவதும் அர்த்தமற்றவையாகும். அது அல்ல… அவ்விதம் நினைக்கும் ஜனங்கள் நேர்மையும், உத்தமமுமானவர்கள் அல்ல என்று நான் கூறவில்லை. நீங்கள் அதை உத்தம இருதயத்தோடு செய்தாலும், நீங்கள் தவறாயிருக்கிறீர்கள், நீங்கள் உண்மையாகவே தவறாயிருக்கிறீர்கள். எந்தக்காரியமானாலும்… 41 “ஒரு தேவதூதன் பரிசுத்த போனபெர் (St.Bonifer) என்பவருக்குப் பிரத்தியட்சமாகி இதை, அதை, மற்றதை போன்ற அநேக காரியங்களைக் கூறியுள்ளானே!” என்று நீங்கள் கேட்கலாம். மற்றவர் கண்ட தரிசனங்களை நான் சிறிதேனும் சந்தேகிக்கவில்லை. ஜோசப் ஸ்மித் (Joseph Smith) கண்ட தரிசனத்தையும் நான்—நான் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவர்கள் கூறுவது தேவனுடைய வார்த்தையுடன் பொருந்தாமல் இருப்பதால் அது தவறு என்று எனக்குத் தென்படுகிறது. பாருங்கள்? அவை யாவும் தேவனுடைய வார்த்தையுடன் இணங்க வேண்டும்.
1642 அவ்வாறே சபையின் காலங்களைக் குறித்த வெளிப்பாடும், முத்திரையின் இரகசியங்களின் வெளிப்பாடும், மற்றயாவும் வேதத்துடன் பொருந்த வேண்டும். ஏழு இடி முழக்கங்களின் இரகசியங்களை வைத்திருப்பதாக ஒருவன்கூறி, அவன் கூறுபவை தேவனுடைய வார்த்தையுடன் இணங்காமற்போனால், எங்கோ தவறுள்ளது. பாருங்கள்? அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று ஏனென்றால் இதுதான் அந்த புஸ்தகம். வரவேண்டும், இது இயேசு கிறிஸ்துவினுடைய வெளிப்பாட்டை பூரணமாகக் கொண்ட புஸ்தகமாகும். இப்பொழுது, அப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் முன்னே வந்தார் என்று நான்—நான் நம்புகிறேன்.
1743 அவர்கள் அதை அறியார்கள். யோவான் அழுது கொண்டிருந்தான். அந்த புஸ்தகத்தைத் திறப்பதற்கு வானத்திலாவது பூமியிலாவது ஒருவனையும் பாத்திரவானாக காணவில்லை. ஏனெனில் எல்லாருமே பாவம் செய்து பிளவின் மற்ற எல்லையை அடைந்திருந்தனர். பாருங்கள். ஒரு மனிதனும் பாத்திரவானாயிருக்கவில்லை…ஒருகால் தேவதூதன் ஒருவன் அதற்குப் பாத்திரவானாக இருந்திருக்கலாம். ஆனால் அவன் ஒரு மீட்பின் இனத்தானான மனிதனாக இருக்க வேண்டியதாயிருந்தது. அது மானிட வர்க்கமாயிருக்க வேண்டியதாயிருந்தது. அவ்விதம் எவரும் இல்லை. ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் இனச் சேர்க்கையினால் உண்டாயிருந்தான். 44 இனச்சேர்க்கையின்றி பிறந்த ஒருவர்தான் அதற்குப் பாத்திரவானாக வேண்டியதாயிருந்தது. எனவே, தேவனே கன்னியின் வயிற்றில் பிறந்து இம்மானுவேல் ஆனார். அவருடைய இரத்தம் தான் தகுதியுள்ளதாயிருந்தது. அவரே இந்தப் பிளவைக் கடந்து கிரயத்தைச் செலுத்தி, ஏனையோருக்கு வழியை உண்டு பண்ணினார். பின்பு அவர் மத்தியஸ்த ஸ்தானத்தை வகித்தார். இப்பொழுதும் அவ்வூழியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்.
1845 அந்த புஸ்தகம் உண்மையாகவே இதுவரை மூடப்பட்டிருந்தது. அது அடையாளங்களைக் கொண்டுள்ளது. அவர்கள் அதைக் கண்டார்கள். யோவானும்கூட அதை அடையாள ரூபத்தில் கண்டான். முதலாம் முத்திர உடைக்கப்பட்ட சம்பவம் யோவானுக்கு அறிவிக்கப்பட்டது. அவன், “வெள்ளைக் குதிரை புறப்பட்டு சென்றது. அதன்மேல் ஒருவன் ஏறியிருந்தான். அவன் கையில் ஒரு வில் இருந்தது” என்று கூறினான். அது ஒரு அடையாளமாயிருக்கிறது. அது வெளிப்படுத்தப்படவில்லை. இல்லை. அது வெறுமென ஒரு அடையாளமாயிருக்கிறது. பூமியிலுள்ள எந்த ஒரு மனிதனும், அவனால் கூற முடிந்தது அதுதான். அது உண்மை. அதன் இரகசியத்தை அறிவதற்கென மனிதன் தட்டுத் தடுமாறி, அதன் அர்த்தம் இதுவாயிருக்கும் அல்லது அதுவாயிருக்கும் என்று ஊகித்துக் கொண்டே வந்தான். 46 ஆனால், “ஏழாம் தூதனின் செய்தியில், இரகசியங்கள், (தேவரகசியம் அனத்தும்) அந்த நாட்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும்” என்று வெளிப்படுத்தின விசேஷத்தில் நாம் காண்கிறோம். இப்பொழுது, அவர் அந்த நாளில் அதைச் செய்கையில், வெளிப்படுத்தல் 10:1-7 அந்த நேரத்தின்படியே வெளிப்படுத்தப்படும். 47 பின்னர் ஏழு இடிமுழக்கங்களும் தங்கள் விசித்திரமான சத்தங்களை முழங்கின. யோவான் அவைகளை எழுதப்போவதாயிருந்தான். ஆனால் யோவான் அவை என்ன என்பதை அறிந்திருந்தான். ஆனால் அவன்—அவன் அதை எழுதவில்லை, ஏனென்றால் அவன் அதை எழுதாதபடிக்கு தடைசெய்யப்பட்டான். அது முற்றிலும் பரமரகசியமாய் அமைந்துள்ளது. அவை அடையாளங்களின் மூலமாகவும் கூட வர்ணிக்கப்படவில்லை. அந்த இடிகள் முழங்கின என்று மாத்திரம் நாம் அறிவோம். அவ்வளவுதான்.
1948 ஆகவே இப்பொழுது நாம் இதைப் படிக்கின்ற வேளையில், ஞாயிறு காலையன்று நடக்கவிருந்த சுகமளிக்கும் ஆராதனையை நாங்கள் ரத்து செய்துவிட்டோம் அதற்குப் பதிலாக முத்திரைகள் பேரில் ஜனங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலுரைப்போம் என்பதை நீங்கள் மறக்கவேண்டாம். இப்பொழுது, உங்கள் கேள்விகள் யாவும் ஏழு முத்திரைகளின் பேரில் இருக்க வேண்டும். அது உங்களுக்கு புரியாமல் இருந்தால், நீங்கள் புரிந்துகொள்ளாத ஒன்றாய் இருக்க வேண்டும். ஆகவே, கேள்விகள் முத்திரைகளின் பேரிலே இருக்கட்டும். நான் பதிலுரைப்பதற்குப் போதுமான கேள்விகள் இருக்கின்றனவா என்று என்னால் சனியிரவு கூற முடியும். நீங்கள் பாருங்கள். “நான் இதைச் செய்ய வேண்டுமா?” அல்லது நான் ஒரு சொப்பனம் கண்டேன் என்பவைகள் மதிப்பார்ந்தவைகள்தான் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். அவைகள் போற்றத்தக்கவைகள்தான். ஆனால் சரியாக நாம் ஏழு முத்திரைகளுடன் தங்குவோம். அதைத்தான் நாம் செய்கிறோம். இந்தக் கூட்டமும் அதற்கென்றே நியமிக்கப்பட்டுள்ளது. நாம் அதனுடன் சரியாக தங்கியிருக்கட்டும். கூடுமானவரை, கேட்கப்படும் கேள்விகள் ஏழு முத்திரைகளையொட்டி அமைந்திருக்கட்டும்.
2049 நான் வீடு திரும்ப வேண்டும். மேற்பகுதியில் சில கூட்டங்களை நான் நடத்த வேண்டும். ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கழித்து நான் திரும்பவும் வருவேன். அப்பொழுது சுகமளிக்கும் ஆராதனையை நடத்த கர்த்தர் ஒருவேளை அனுமதிப்பார். 50 ஏழு எக்காளங்களைக் குறித்தும், ஏழு கலசங்களைக் குறித்தும் நாம் ஆராய வேண்டிய அவசியமுண்டு. நீங்கள் பாருங்கள்? அவையெல்லாம் ஒன்றுக்கொன்று பொருந்துகின்றன. ஆனால் இதுவரை அவை இரகசியங்களாகவே அமைந்துள்ளன. 51 இப்பொழுது, கடந்த இரவு…முதலாம் முத்திரையானது திறக்கப்பட்டது, சவாரி செய்தவன்…கர்த்தாவே… எனக்கு உதவும், நான் அதற்கு முன்பாக அதை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொரு முத்திரையின் இரகசியமும் எனக்கு வெளிப்படும் முன்னர், அதன் உண்மையான அர்த்தத்தை நான் அறியாமல் இருந்தேன். அது சரி. நான் அதைச் சற்றும் அறியாதிருந்தேன். 52 நான் வேதத்தை எடுத்துக்கொண்டு, அது வெளிப்படும்வரை உட்கார்ந்தவண்ணம் இருப்பேன். அது வெளிப்படும்போது, நான் என் எழுதுகோல் எடுத்துக்கொண்டு, அது முடியும்வரை அநேக மணி நேரமாக எழுதிக்கொண்டே இருப்பேன்.
2153 அதன் பின்னர், அவர் இதை எங்கே கூறியிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பேன். “நல்லது, நான் இதை எங்கேயோ கண்டிருப்பதைப் போல் தோன்றுகிறதே” என்று நான் நினைத்து, என் ஒத்துவாக்கிய வேத அட்டவணையை (concordance) எடுத்து “அதைப்போல ஏதாவதொன்று அங்கே உள்ளதா? இங்கே இது சரியாக இருக்கின்றது. அதன்பின், அங்கேயும் அது மறுபடியுமாக அவ்விதமாக இருக்கின்றது. இங்கேயும், இங்கும் அங்கும் அது உள்ளது” என்று அதைத் திரும்பப் பார்ப்பேன். அதன்பின் நான் அதைச் சரியாக இணைப்பேன். வேத வாக்கியங்கள் ஒன்றோடொன்று பொருந்துவதனால் இந்த வெளிப்பாடு தேவனால் அளிக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்வேன். அந்தவிதமாகத்தான் அதைச் செய்ய வேண்டும். கட்டிடம் கட்டும்போது ஒரு கல் மற்றொரு கல்லுடன் இணைவதுபோல் வேதவாக்கியங்களும் ஒன்றோடொன்று இணையவேண்டும்.
2254 இப்பொழுது, நேற்று இரவு மூன்றாம் முத்திரை நமக்குத் திறக்கப்பட்டது. முதலாவதாக ஒரு வெள்ளைக்குதிரை, அடுத்தது சிவப்புக் குதிரை. அதற்குப் பின்பு கறுப்புக் குதிரை. ஒரே ஆள்தான் எல்லாக் குதிரைகளின் மேலும் சவாரி செய்கிறான் என்பதை நாம் காண்கிறோம். அவன் தொடக்கத்தில் அந்திக்கிறிஸ்துவின் ஆவியாய் இருந்தான். தொடக்கத்தில் அவனுக்குக் கிரீடம் இல்லை. சற்று கழிந்த பின்னர் அவன் கிரீடத்தைப் பெறுகிறான். பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போட அவனுக்கு ஒரு பட்டயம் பின்பு அளிக்கப்படுகின்றது. சமாதானத்தை அவன் எடுத்துப்போட்டதாக நாம் கண்டோம். அதன்பின்பு அவன் தன் கோட்பாடுகளை நுழைத்து சபைக்குக் காசை சேமிக்கிறான். ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையும் ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையும் விற்கப்படுகிறது. ஆனால் சிறிது விடப்பட்டிருந்த எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதபடி அவன் தடை செய்யப்படுகிறான்.
2355 ஆகவே, எண்ணெயும் திராட்சரசமும் எவைகளுக்கு உதாரணமாயிருக்கின்றன என்றும், அதனால் உண்டாகும் பலன் என்னவென்பதையும் நாம் சென்ற இரவு பார்த்தோம். அது சற்று கொடூரமாகக் காணப்பட்டிருக்கும், ஆனால் நான் கூறியது முற்றிலும் சத்தியமாகும். பாருங்கள்? இப்பொழுது, நாம் முடித்தோம்…நாம் மறுபடியும் அதைக் குறித்து சிறிது நேரம் ஆராய்வோமாக. திராட்சரசத்தின் வல்லமை என்னவென்று விவரித்து, நாம் சென்ற இரவு கூட்டத்தை முடித்தோம். எண்ணெய் என்பது பரிசுத்த ஆவிக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. இப்பொழுது, நீங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டீர்கள் என்று நான் யூகிக்கிறேன். நீங்கள் புரிந்துகொள்ளவில்லையெனில், நீங்கள் அதை ஒலிநாடாக்களில் கேட்டு புரிந்துகொள்ளலாம். அதற்கான வேத வசனங்களை நீங்கள் எங்கே கண்டறியலாமென்றால், எண்ணெய் எப்பொழுதுமே பரிசுத்த ஆவிக்கு எடுத்துக்காட்டாயுள்ளது. புத்தியில்லாத கன்னிகைகளிடம் எண்ணெய் இல்லை. புத்தியுள்ள கன்னிகைகளிடம் எண்ணெய் இருந்தது. பழைய ஏற்பாட்டின் தீர்கதரிசிகளும் அதைப் பெற்றிருந்தனர் என்று கண்டோம். இப்பொழுது நான்… 56 உண்மையாக இதைக் குறித்து எல்லா வேதவாக்கியங்களையும் எடுத்துக்கூற நான் முயற்சிக்கவில்லை. அவைகளைக் குறித்துப் பேச முடியாதபடிக்கு அநேகக் காரியங்கள் அங்குள்ளன. அதற்கு அதிக நேரம் தேவைப்படும். ஆனால் ஜனங்கள் அறிந்து கொள்ளவேண்டிய அளவிற்குப் போதுமான வேதவாக்கியங்களை மாத்திரம் எடுத்துக்கூற நான் முனைகிறேன். முத்திரைகளைப் பற்றி நாம் சரிவர ஆராயவேண்டுமானால், ஒவ்வொரு முத்திரையைக் குறித்து ஒரு மாதம் தினந்தோறும் பிரசங்கம் நிகழ்த்தினாலும் அதின் ஒரு பாகத்தைக் கூட நாம் முடிக்க முடியாது. பிரசங்கிக்க வேண்டிய சங்கதிகள் அவ்வளவு அதிகம் உண்டு. இவைகள் யாவும் எதைப் பற்றியது என்று நீங்கள்—நீங்கள் காணும்படியாக அவற்றின் மேலான தனியிடக் கூற்றை மாத்திரம் (high spot) சரியாக உங்களுக்குக் கொடுக்கிறோம்.
2457 இப்பொழுது எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு அடையாளமாயிருக்கிறது. எண்ணெயும் திராட்சரசமும் எப்பொழுதும் ஆராதனையுடன் சம்பந்தப்பட்டது என்று நாம் கண்டோம். 58 எனக்கு அளிக்கப்பட்டதின்படி திராட்சரசம் வெளிப்பாடு அளிக்கப்படும் ஊக்க உணர்ச்சிக்கு அடையாளமாயுள்ளது என்று நான் கூறினேன். பாருங்கள்? ஏதாவதொன்று வெளிப்படும்போது, அது அவிசுவாசிக்கு உற்சாகத்தை அளிக்கிறது. ஏனெனில் அது வெளிப்பாட்டினால் அவனுக்கு வழங்கப்படுகின்றது. பாருங்கள்? அது தேவன் கூறியிருக்கிற ஏதோஒரு காரியமாயிருக்கிறது. அது ஒரு இரகசியம். எனவே அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது, பாருங்கள், ஆனால் சற்று பின்னர் தேவன் அதை வெளிப்படுத்தி அதை ரூபகாரப்படுத்துகிறார்.
2559 சத்தியம் வெளிப்படும்போது, அந்த சத்தியம் ரூபகாரப்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு மனிதன் தன்னுடைய கூர்மையான அறிவுத்திறம் வாய்ந்தவனாயிருந்தாலும் அல்லது எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், அவன் கூறுவதை தேவன் தொடர்ந்து ஆமோதிக்காவிடில் எங்கோ தவறுண்டு. பாருங்கள்? சரி. தேவனுடைய வார்த்தை அப்படித்தான் கூறுகிறது. 60 இப்பொழுது, மோசே தேவனுடைய ஏவுதலினால், “வண்டுகள் உண்டாகக்கடவது” என்று கட்டளையிட்டபோது வண்டுகள் தோன்றின. அவன், “தவளைகள் உண்டாக்கக்கடவது” என்று கட்டளையிட்டபோது தவளைகள் தோன்றின. 61 பாருங்கள், அவன் அவ்விதம் “வண்டுகள் உண்டாகக்கடவது”, என்று கூறினபோது, வண்டுகள் உண்டாகாவிடில், பாருங்கள் கர்த்தருடைய வார்த்தையை அவன்—அவன் பேசவில்லையென்றும், அவன் தன் சொந்த வார்த்தையே பேசினான் என்று அர்த்தம். அங்கு வண்டுகள் உண்டாகவேண்டுமென்று அவன் எண்ணியிருப்பான். ஆனால் தேவன் அவ்விதம் உரைக்காததால் வண்டுகள் அங்கு—அங்கு உண்டாகவில்லை என்பது அதன் அர்த்தம். 62 ஆகவே தேவன் உங்களிடம், “நீ போய் இதைச் செய். அது என் வார்த்தையாய் இருப்பதால், நான் உன்னுடனே இருப்பேன்” என்று அவர் கூறி, அது வேதத்தில் உள்ளது என்று காண்பிக்கும்பொழுது, அப்பொழுது தேவன் அதற்குப் பின்னே நிற்கிறார். அவர் கூறியது வேத புத்தகத்தில் எழுதப்படாவிடினும் அது தேவனுடைய வார்த்தையாயிருப்பதால், அவர் அதை ஆதரிக்கவேண்டும். பாருங்கள்? 63 ஆகவே அது அதன் வெளிப்புறம் இருப்பின், அது தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுகிறது. ஏனெனில் தேவரகசியம் யாவும் தீர்க்கதரிசிகளுக்கு மாத்திரம் வெளிப்பட வேண்டும் என்று நாம் அறிந்துகொள்கிறோம். பாருங்கள், ஆமோஸ் 3:7
2664 இப்பொழுது, இப்பொழுது, வெளிப்பாட்டின் வல்லமை விசுவாசிக்கு ஊக்கத்தைகொண்டு வருகிறது. ஏனெனில் இயற்கையான திராட்சரசம் எவ்விதம் பருகுகிறவனுக்கு உற்சாகத்தை அளிக்கிறதோ, பாருங்கள், அவ்வாறே வெளிப்படுதலின் வல்லமையும் சோர்ந்து போயிருக்கும் விசுவாசிக்கு ஊக்கத்தையளிக்கிறது. பாருங்கள்? பாருங்கள்? ஆகவே, வார்த்தையின் வெளிப்பாட்டின் வல்லமை விசுவாசிக்கு சந்தோஷத்தின் ஊக்கத்தையும், திருப்தியான ஊக்கத்தையும் அளிக்கிறது. அது ஊக்கம் ரூபகாரப்படுத்தப்பட்டு, நிரூபிக்கப்படுகிறது. 65 நாம் அதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புதிய ஏற்பாட்டில் அது “புது திராட்சரசம்” என்று அழைக்கப்படுகிறது. “அவர்கள் புது திராட்சரசத்தினால் நிறைந்திருக்கின்றனர்” என்று நாம் எப்பொழுதுமே அதை ஒப்பிட்டுக் கூறுவதுண்டு. பாருங்கள்? சரி. அதை “ஆவிக்குரிய திராட்சரசம்” என்று அழைத்தால், அதுவே மிகச் சிறந்த வியாக்கியாமையாயிருக்கும் என்று நான் கருதுகிறேன். அது ஆவிக்குரிய திராட்சரசம் என்பதாய் இருக்கும். திராட்சரசம் அதைப் பருகுகிறவனுக்கு எவ்விதம் உற்சாகமூட்டுகிறதோ, அவ்விதமாகவே ஆவியாகிய தேவனுடைய வார்த்தை வெளிப்படும்போது, அந்த புதிய திராட்சரசம் விசுவாசிக்கு உற்சாகமூட்டுகிறது. ஓ, இப்பொழுது அங்கே…அது ஒரு…பாருங்கள்? வார்த்தைதான் ஆவி. அதை நீங்கள் நம்புகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.]
2766 நாம் அதை வாசிக்கட்டும். நாம் அதை வாசிக்கட்டும். பரிசுத்த யோவான் 6-ம் அதிகாரத்தை வாசிப்போம். நாம் அதை மாத்திரம்…ஆம், அதன்பின், நீங்கள்—அதன்பின் நீங்கள்—“நல்லது, இப்பொழுது, வேறு யாரோ ஒருவர் அதைச் சொன்னார்”, என்று உங்களால் கூறமுடியாது. அவ்விதம் கூறியது யாரென்று நாம் பார்க்கலாம். அப்பொழுது அது உண்மையா தவறா என்று நாம் அறிந்துகொள்வோம். பரிசுத்த யோவான் 6-ம் அதிகாரம். 6-ம் அதிகாரம் 63-ம் வசனம் என்று நினைக்கிறேன். சரி. ஆம், ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
2867 தேவனுடைய வார்த்தையே ஆவியாயிருக்கிறது. ஆவியானது வார்த்தையின் உருவில் அமைந்துள்ளது. ஆகவே அது உயிர்ப்பிக்கப்படும்போது, அல்லது ஜீவனுக்கு கொண்டுவரப்படும்போது, வார்த்தையாகிய ஆவி கிரியை செய்கிறது. பாருங்கள்? ஏனென்றால் அது… 68 இப்பொழுது, இங்கு கவனியுங்கள். ஒரு வார்த்தை பேசப்படும் முன் அது சிந்தனையாயிருக்கிறது. அது பேசப்படும்போது வார்த்தையாக அமைகிறது. இப்பொழுது, இதுதான் தேவன் வார்த்தையில் வைத்துள்ள அவருடைய சிந்தையாகும். அதன்பின் நாம் அவரிடமிருந்து அதை ஏற்றுக்கொள்ளும்போது, அது வார்த்தையாகிறது. 69 மோசே என்ன செய்ய வேண்டுமென்று தேவன் அவனுக்கு வெளிப்படுத்தினார். மோசே பேசினபோது, அது அப்படியே நிகழ்ந்தது. பாருங்கள்? தேவனிடத்திலிருந்து ஒன்று வரும்போது, அது நிகழவேண்டும். 70 இப்பொழுது அது—அது தேவனுடைய வார்த்தையாயிருப்பதால், அது உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது என்று—என்று இப்பொழுது நாம் காண்கிறோம். புது திராட்சரசமானது…புதிய திராட்சரசம் வார்த்தையை வெளிப்படுத்தும்போது, உற்சாகமூட்டுகிறது. சில சமயங்களில் அதனால் கிடைக்கப்பெறும் சந்தோஷம் வரம்பு கடந்துவிடுகிறது. நிரம்பிவழியும் அளவிற்கு அது மகிழ்ச்சியூட்டுகிறது என்று நாம் அதைக் குறித்துப் பேசினோம்.
2971 இப்பொழுது, ஆனால் சிலர் அதிதீவிர மதப்பற்று கொண்டவர்களாய் இவைகளைச் செய்கின்றனர் என்று நான் அறிவேன். சில சமயங்களில் அவர்கள் இசை இசைக்கப்படும்போது மாத்திரம் குதித்து ஆடுகின்றனர் என்று நான் அறிவேன் அதாவது குதித்து ஆடுதல் அதனுடன் செல்கின்றது என்று நான் அறிந்துள்ளேன். நானும்—நானும் கூட அதை நம்புகிறேன். ஆனால் இசை இசைக்கப்படுகிறபோது, ஜனங்கள் குதித்து ஆடி, சத்தமிடுவதையும், இசை நிறுத்தப்பட்டவுடன், அவர்களும் நின்று விடுகிறதையும் நான் கண்டிருக்கிறேன். பாருங்கள்? நான் நம்புகிறேன்…என்னைப் பொருத்தமட்டில் ஜனங்கள் சரியான ஜீவியமுடையவராய் இருக்கும் வரையில் அது இன்னும் சரியானதுதான். நீங்கள் பாருங்கள். 72 ஆனால், இப்பொழுது, என்ன, நாம் வார்த்தையைக் கொண்டு வருகையில்! இப்பொழுது, உண்மையில் வார்த்தைதான் ஜீவனைக்கொடுக்கிறது. அதுதான் புதிய திராட்சரசத்தின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. பாருங்கள்? ஆம். பெந்தெகொஸ்தே நாளன்று தேவனுடைய வார்த்தை ரூபகாரப்படுத்தப்பட்டபோது அதுதான் சம்பவித்தது.
3073 இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது இயேசு சீஷர்களிடம், “என்பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் எருசலேம் நகருக்குச் சென்று பரிசுத்த ஆவி வரும்வரைக்கும் அங்கு தங்கியிருங்கள்” என்று லூக்கா 24:49-ல் கூறியுள்ளார். பிதாவின் வாக்குத்தத்தம் என்ன? யோவேல் 2:28-ல் சொல்லியுள்ளபடி அவர் “ஆவியை ஊற்றப்போகிறார்”. ஏசாயா 28:19-ல் கூறிய வண்ணம் ஆவியைப் பெற்றவர்கள் “பரியாச உதடுகளினாலும் அன்னிய பாஷைகளினாலும்” பேசுவார்கள் என்ற இந்தக் காரியங்கள் எல்லாம் எப்படியிருக்கும். 74 அவர்கள் மேலே சென்று தங்கியிருந்தனர். நாம் பார்த்தபடி, அங்கு கூடியிருந்தவர்களில் யாராவது ஒருவர், “நாம் நீண்டநேரம் காத்துக்கொண்டிருந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். ஆகவே, விசுவாசத்தில் அதை ஏற்றுக்கொள்வோம்” என்று சொன்னார் என்று வைத்துக்கொள்வோம். அது ஒரு நல்ல பாப்டிஸ்ட் (Baptist) உபதேசமாக இருக்கலாம். ஆனால் மேலறையில் கூடியிருந்தவர்களுக்கு அது சரியானதாகத் தோன்றவில்லை. 75 ஆகவே, அது உண்மையாக சம்பவிக்க வேண்டியதாயிருந்தது என்பதை நீங்கள் முதலாவதாக அறிந்துகொள்கிறீர்கள். தேவனுடைய வார்த்தையை ரூபகாரப்படுத்துவதற்கென அவர்கள் ஊழியத்தில் காத்துக்கொண்டிருந்தனர். நீங்களும் பரிசுத்த ஆவியைத் தேடி பெற்றுக்கொள்ள வரும்போது, அதையே செய்ய வேண்டும். 76 ஆம், அதை நீங்கள் விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ள முடியும். கிறிஸ்துவை நீங்கள் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது முற்றிலும் சரி. பரிசுத்த ஆவியை நீங்கள் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளும்போது, அவர் உங்கள் விசுவாசத்தை அங்கீகரித்தன் சாட்சியாக அவர் உங்களை ஆவியினால் அபிஷேகித்து விருத்தசேதனம் செய்ய வேண்டும். நீங்கள் பாருங்கள். அப்பொழுது, பாருங்கள், “ஆபிரகாம் தேவனை நோக்கி விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது”. ஆனால் அவனுடைய விசுவாசத்தை அங்கீகரித்ததன் அடையாளமாக தேவன் அவனுக்கு விருத்தசேதனம் என்னும் அடையாளத்தைக் கொடுத்தார்.
3177 ஆகவே நாமும் அதே காரியத்தைத்தான் செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் ஒரு காரியத்தை செய்யும் வரையில் நாம் அவர் பேரில் காத்திருக்க வேண்டும். நாம் அந்நியபாஷை பேசுகிறோம் என்பது முக்கியமல்ல, நாம் நடனமாடுகிறோம் என்பது முக்கியமல்ல, நாம் உணர்ச்சிவசப்படுகிறோம் என்பது முக்கியமல்ல, நாம் சத்தமிடுகிறோம் என்பதும் முக்கியமல்ல. நாம் முற்றிலும் மாறும்வரை, ஏதோஒன்று சம்பவிக்கும்வரை நாம் காத்திருக்க வேண்டும். அது எந்த உருவில் வந்தாலும் எனக்குக் கவலையில்லை. அது அவ்வண்ணமாய் சம்பவிக்கவேண்டும், அதுதான் முக்கியமான காரியமாகும். பாருங்கள்?
3278 ஆகவே அன்னியபாஷை பேசுவதும், மற்ற எல்லா காரியங்களும் சரியே என்று நான் நம்புகிறேன். ஆனால் அது மாத்திரம்போதாது. அது அவ்விதம் கிரியை செய்வதில்லை. 79 நான் மந்திரவாதிகள் அந்நிய பாஷையில் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். சூனியக்காரர் அன்னியபாஷை பேசி, ஆவியில் நடனமாடுவதை நான் கண்டிருக்கிறேன். நிச்சயமாக. அவர்கள் ஒரு பென்சிலைத் தரையில் வைக்க, அது அன்னியபாஷையில் ஏதோ ஒன்றை எழுதும். அதுசரி. அது உண்மையைக்கூறும். அதுசரி. வேறொருவர் அதற்கு விளக்கம் கூறுவார். முன்பு நிகழ்ந்தவைகளை அது அப்படியே எழுதும். அது சரியாக அந்தவிதமாகவே இருக்கும். அவர்கள் புழுதியைத் தங்களுடைய தலையின்மேல் வாரிப்போட்டுக்கொண்டு, கத்திகளினால் தங்களை காயப்படுத்திக்கொண்டு, காட்டு மிருகத்தின் இரத்தத்தை அல்லது ஏதோ ஒன்றை மேலே பூசிக்கொண்டு பிசாசை நோக்கிக் கூப்பிடுவார்கள். ஆகவே, நீங்கள் பாருங்கள், அது அல்ல… 80 எனவே அன்னிய பாஷை பேசுதல் என்பது மாத்திரம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதன் அடையாளமன்று. “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை”. பாருங்கள், நான் அதைச் செய்ய முடிந்தாலும்! பாருங்கள்? ஆகையால் அந்தக் காரியங்கள் நீங்கள் பரித்த ஆவியைப் பெற்றுவிட்டீர்கள் என்பதை பொருட்படுத்துகிறதில்லை. 81 ஆனால் அவர், அந்த நபர், நித்திய ஆவியாகிய கிறிஸ்து உங்கள் சொந்த இரட்சகராக ஆகி, உங்களை முற்றிலும் மாற்றி உங்கள் கருத்துக்களைக் கல்வாரியில் அவருடைய இந்த வார்த்தைக்கேற்ப அமைத்தால், உங்களில் ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது என்பது உறுதியாகும். ஆம், ஐயா. ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது. அவ்விதம் உங்களில் ஒன்று சம்பவித்தால் அதை யாரும் உங்களுக்கு எடுத்துக்கூற அவசியமில்லை. அது நிகழும்போது, நீங்களே அதை அறிந்துகொள்வீர்கள்.
3382 புதிய திராட்சரசம் வெளிப்பாட்டை அளிக்கும். அப்பொழுது, அது—அது வெளிப்படுத்தப்படுகிறது. 83 அந்தவிதமாகத்தான் பெந்தெகொஸ்தே நாளில் அது இருந்தது. அவர்கள் மேல் ஆவி ஊற்றப்பட வேண்டுமென்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அது சம்பவிக்கும் வரை அவர்ள் காத்திருந்தனர். அந்த வெளிப்பாட்டின் ரூபகாரப்படுத்துதல் சம்பவித்தபோது, அப்பொழுது அவர்கள் மேல் உற்சாகம் மேலிட்டது. அவர்கள் நிச்சயமாக அதைச் செய்தனர். அவர்கள் அனல்கொண்டு தெருக்களில் சென்று பிரசங்கித்தனர். அதற்கு முன்பு அவர்கள் பயந்துபோய் அறையின் கதவுகளையெல்லாம் அடைத்துக்கொண்டனர். ஆனால் ஆவியைப் பெற்ற பிறகு யாரைப் பார்த்து பயந்தார்களோ அவர்களிடமே அவர்கள் சுவிசேஷத்தைத் தைரியமாகப் போதித்தனர். அதுசரி. பாருங்கள்? அவர்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்தது. ஏனெனில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த உண்மையான வார்த்தை அப்பொழுது ரூபகாரப்படுத்தப்பட்டது.
3484 இப்பொழுது, நாம் ஒரு நிமிடம் இங்கு நிறுத்துவோம். பரிசுத்த ஆவியைப் பெற்றதன் பயனாக, என்ன நேர்ந்தபோதிலும் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதை இழந்து போகாமல், தங்கள் சாட்சிகளை தங்களின் சொந்த இரத்தத்தினால் முத்திரித்து மரித்தனர். அது அங்கே தரித்திருந்தது, ஏனெனில் அது வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்த தேவனுடைய உண்மையான வார்த்தையாய் இருந்தது. அது ரூபகாரப்படுத்தப்பட்டது. வெளிப்பாடு ரூபகாரப்படுத்தப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த இரத்தத்தினால் தங்கள் சாட்சியை முத்திரித்து மரித்தனர். 85 இப்பொழுது கடைசி காலத்தின் வாக்குத்தத்தத்தை நோக்கிப்பாருங்கள். அது நம் முன்னிலையில் ரூபகாரப்படுத்தப்படுவதை நாம் இங்கே காண்கிறோம். இந்நிகழ்வேளையில், பரிசுத்த ஆவியானவர் வருகையும் (the present coming of the Holy Spirit) அவர் என்ன செய்யப் போகிறார் என்று சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் செய்து காண்பிக்கிறதையும் நாம் உண்மையாக நம்மிடையே காண்கிறோம், பாருங்கள்? ஓ! நாம் செய்ய…ஓ என்னே! நாம் எவ்விதம் கேட்கக் கூடும்? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நண்பனே, ஏதோ ஒன்று சம்பவிக்கிறது. முன்குறிக்கப்பட்ட உண்மையும் உத்தமுமான விசுவாசி என்னும் வித்தின் மீது வெளிச்சப்படும்போது, புதிய ஜீவனுக்கென்று ஏதோ ஒன்று உடைந்து வெளிப்படுகிறது. கிணற்றிலிருந்த அந்தப் பெண்…
3586 அக்காலத்து கல்வியறிவு படைத்த ஆசாரியர்கள் இயேசுவைப் பிசாசு என்றும், அவரை குறி சொல்லுகிறவன் என்றும் அழைத்தனர். அவர்—அவர் “அந்த ஜனங்கள் குறி சொல்லுகிறவன். அவன்—அவன் ஒரு பிசாசு” என்றனர். 87 ஆனால் முன் குறிக்கப்பட்ட வித்தினால் அந்தப்பெண்! இப்பொழுது அது சரியல்ல என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆனால், இயேசு, “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் என்னிடத்தில் வரான். என் பிதா எனக்களித்த யாவும் என்னிடத்தில் வரும்” என்று சொன்னார். அவர்…
3688 கடைசி காலத்தில் அந்திக் கிறிஸ்து செய்யக்கூடியது… ஸ்தாபனங்களில் காணப்படும் அந்திக்கிறிஸ்துவின் ஆவியைப் பற்றி இப்பொழுது நாம் படித்துக் கொண்டுவருகிறோம். ஸ்தாபன முறைகள் அனைத்தும் அந்திக்கிறிஸ்துவினால் உண்டானவை என்று நாம் நிரூபித்தும் இருக்கிறோம். ஸ்தாபன முறைமைகள் அந்திக்கிறிஸ்துவினால் உண்டானதல்லவென்று ஆட்சேபித்து இங்கிருந்து யாராவது ஒருவர் வெளிநடப்பாரானால், அவர்களில் ஏதோ தவறுண்டு என்று அர்த்தம். சபையின் சரித்திரத்தின் மூலமாகவும், வேதவாக்கியங்களின் மூலமாகவும், ஸ்தாபனங்கள் அந்திக்கிறிஸ்துவினால் உண்டானவை என்று முற்றிலுமாய் நிரூபிக்கப்பட்டுள்ளது. ரோமாபுரிதான் அதற்கு தலையாயுள்ளது. குமாரத்தி சபைகள் அவளைப் பின்பற்றுகின்றன. அவர்கள் இருவரும் பாதாளத்தில் தள்ளப்படுகின்றனர். அது உண்மையே. ஆகையால் இந்தக் காரியத்தில் அந்திக் கிறிஸ்துவின் ஆவியைக் குறித்து நாம் பார்க்கிறோம். 89 நாம் வாழும் இந்நாட்கள் “சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷத்தை” நமக்களிக்க வேண்டும். அது அந்தப் பெண்ணை தாக்கிய போது, என்னே அந்த வித்து உடைந்து வெளிப்பட்டது.
3790 இப்பொழுது, கடைசி நாட்களில் அந்திக்கிறிஸ்து “முழு உலகையும் ஏமாற்றிவிடுவான்” என்பதாக வேதம் உரைக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். 91 உலகத் தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர் வெகு சிலர் மாத்திரமே இருப்பர். தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் ரூபகாரப்படுத்துதல் அவர்கள் இருதயங்களைத் தொடும்போது, கன்மலை பிளந்து தண்ணீர் புரண்டு வந்தது போன்று, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் இருதயத்தை பிளப்பதனால், புதிய ஜீவன் அவர்களிலிருந்து புரண்டோடி வரும். அதை யாருமே நிறுத்த முடியாது. ஏனெனில் புதிய ஜீவன் அங்கே கிரியை செய்தது.
3892 சில நாட்களுக்கு முன்பு நான் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம் தர்க்கம் செய்து, “தேவன் வானத்தையும் பூமியையும் மூன்று நாட்களில்…இல்ல ஆறு நாட்களில் சிருஷ்டித்தார் என்று சொல்ல உமக்கு வெட்கமில்லையா?” என்று கேட்டார். “வேதாகமம் அப்படித்தான் கூறுகிறது” என்று நான் பதிலுரைத்தேன். 93 அவர், “இவ்வுலகம் லட்சக்கணக்கான வருடங்களாய் இருக்கின்றது என்பதற்கு சான்றுகள் எங்களிடம் உண்டு” என்றார். 94 அதற்கு நான், “அதைக் குறித்து கவலையில்லை என்றேன். ஆதியாகமம் 1:1ல் ‘ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’ என்று கூறுகின்றது. காலப் பகுதி! (period) அளவளவே, பாருங்கள்? ‘இப்பொழுது பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது என்று எழுதப்பட்டுள்ளது’”. “ஒவ்வொரு வித்தும் ஒன்றிலிருந்து அநேக வருடங்களாக அங்கு புதைக்கப்பட்டிருந்தது என்று நான் நம்புகிறேன். தண்ணீர் விலக்கப்பட்டு, வெளிச்சம் அதன்மேல் பட்டவுடன், அவை வளர்ந்து மரங்களாயின” என்றேன். 95 மனிதன் வாழ்க்கையில் சம்பவிக்கும் ஒரு செயலுக்கு அது ஒரு உதாரணமாய் அமைந்துள்ளது. மனிதனுக்குள்ளிருக்கும் வித்தை மறைக்கும் யாவும் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தினால் நீக்கப்பட்டு, வார்த்தையின் உண்மையான உறுதிபாட்டினால், சுவிசேஷமென்னும் வெளிச்சம் அதன்மேல் பட்டவுடன், அதனுள் ஜீவன் இருப்பதால் அது ஜீவிக்கத் தொடங்குகிறது. அது அதனை நம்புகிறது. ஏனெனில் அதன் சூழலுக்கு புறம்பானதில் ஜீவன் இல்லை.
3996 அவர்களுடைய பெயர்கள் உலகத் தோற்றத்துக்கு முன்னால் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆகவே நிச்சயமாக அவர்களுக்குள் ஜீவன் உண்டு; அவர்கள் வெளிப்படுவார்கள். ஆகையால் தான் கடைசி வித்து உட்பிரவேசிக்கும் வரை இயேசு தமது மத்தியஸ்த ஊழியத்தை செய்து கொண்டிருக்கிறார். வெளிச்சம் எப்பொழுது வித்தின் மேல் படவேண்டுமென்பதை அவர் அறிவார். 97 டாக்டர் லீ வேயில்…அவர் இக்கூட்டத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அநேக நாட்களாக நான் அவரைக் காணவில்லை. நான் அவரைக் கண்டதாக, நான் நம்பவில்லை. [ஒரு சகோதரன், “அவர் இங்கே இதோ இருக்கிறார்” என்கிறார்.—ஆசி.] அவர் இங்கிருக்கிறார். நல்லது. அன்றொரு நாள் அவர் ஐரினேயஸ் (Irenaeus) கூறியவைகளை ஒரு காகிதத் துண்டில் எழுதி எனக்கு அனுப்பினார். நல்லது. அநேக நாட்களுக்கு முன்பாக ஐரினேயஸை அக்காலத்து சபையின் தூதனாக நான் தேர்ந்தெடுத்தேன். அவர், “கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினனாயிருக்கும் அந்தக் கடைசி நபர் உட்பிரவேசித்தல்” கடைசி நாட்களில், இந்தக் காலத்தில், “நிகழ வேண்டும்…அந்த நேரத்திலே அந்த காரியமானது வெளிப்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார். அது இங்குள்ளது. அது முற்றிலும் சரியாகும். பாருங்கள்? நாம் அந்த கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சரி.
4098 சரி. பிறகு பெந்தெகொஸ்தே காலத்தவர் அகமகிழ்ந்திருந்தனர். அவர்கள் உண்மையாக ஊக்குவிக்கப்பட்டனர். அது ஒவ்வொருவரையும் அவ்விதமே செய்யும் என்று நான் நினைக்கிறேன். 99 நாம் இன்னும் சற்றுநேரம் எடுத்துக்கொள்வோம். நாம் தாவீதைக்குறித்து சிந்திப்போம். அவனும்—அவனும் கூட முழுமையாய் ஊக்கமூட்டப்பட்டிருந்தான். எனவே அவன் உற்சாக மூண்டவனாய், “என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” என்றான். அவனுடைய வாழ்க்கையில் மகத்தான சம்பவம் ஒன்று—ஒன்று நிகழ்ந்தது என்று நான் நம்புகிறேன். அவனை அவ்விதம் செய்யத் தூண்டியது என்ன? அவன் ஆவியில் நிறைந்தபோது அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் அவ்வாறிருந்தான் என்பதை நாம் அறிவோம். வேதம் அவ்வண்ணமாக கூறியுள்ளது. தீர்க்கதரிசி தாவீது, இப்பொழுது, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் ஆவியில் நிறைந்தபோது, உயிர்த்தெழுதலை அவன் கண்டான். நீங்கள் அதைப் படிக்க விரும்பினால் சங்கீதம் 16:8-11யைப் படியுங்கள். அவன், “என் இருதயம் பூரித்தது. என் மகிமை களிகூர்ந்தது. என் மாம்சம் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்” என்றான். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவன் பாத்திரம் அப்பொழுது நிரம்பி வழிந்தது. ஏனெனில் அவன் உயிர்த்தெழுதல் நிகழ்வதைக் கண்டான். அது என்னவாயிருந்தாலும் சரி, ஓ, அவன் உயிர்த்தெழுதல் நிகழ்வதைக் கண்டான். ஆம், உண்மையாகவே…அவன் பாத்திரம் நிரம்பி வழிந்தது.
41100 மீண்டும் வேறொரு முறை தாவீதின் பாத்திரம் நிரம்பி வழிந்தது, (நீங்கள் உங்கள் பென்சிலை எடுத்து), வேண்டுமானால் 2சாமுவேல், 6:14ஐக் குறித்துக் கொள்ளுங்கள். அங்கே வறட்சியான ஒரு நிலையிருந்தது. 101 பெலிஸ்தர் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் சென்றனர். அவர்கள் உள்ளே வந்து அந்த உடன்படிக்கை பெட்டியைக் கைப்பற்றி அவர்கள் தெய்வமாகிய தாகோன் முன் அதை வைத்தனர். தாகோன் சிலை முகங்குப்புற விழுந்தது. வேறொரு இடத்திற்கு அதைக் கொண்டு சென்றபோது, அங்குள்ள ஜனங்கள் வாதையால் பீடிக்கப்பட்டனர். அது… அங்கே அவர்கள் தங்கள் கரங்களில் ஒருபோதும் பெற்றிராத பயங்கரமானதாக அது அவர்களுக்கிருந்தது. அது இடம் மாறி இருந்ததால், அதனின்று அவர்களால் தப்பிக்க இயலவில்லை. 102 இப்பொழுது, அவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் அதை காளை வண்டியில் ஏற்றி அனுப்பினார்கள். உடன்படிக்கை பெட்டியை தாவீது கண்டவுடன் அவன் என்ன செய்தான் தெரியுமா? அவன்—அவன் முழுமையாய் உற்சாகம் கொண்டபடியால், அவனுடைய பாத்திரம் நிரம்பி வழிந்தது. வார்த்தையானது மறுபடியும் இஸ்ரவேலருக்கு வெளிப்படுவதை அவன் கண்டு, ஆவியில் நிறைந்து, சுற்றி, சுற்றி, சுற்றி, சுற்றி, சுற்றி அந்தவிதமாக நடனமாடினான். ஆம், அவன் பாத்திரமே நிரம்பி வழிந்தது. நீங்கள் பாருங்கள், ஏன்? வார்த்தை திரும்ப வருவதை அவன் கண்டான். 103 அநேக வருடங்களுக்குப் பிறகு, உண்மையான வார்த்தையானது, இங்கே இருக்கும் என்ற வாக்குத்தத்தத்தால் கொண்டு வரப்பட்டு நிரூபிக்கப்படுவதைக் காணும் எவரும் ஊக்க உணர்ச்சி பெறுவர் என்று நான் நினைக்கிறேன். என்னே ஒரு தருணம்! என்னே ஒரு தருணம்!
42104 இப்பொழுது நாம் வாசிப்போம். நான்—நான் முத்திரையைக் குறித்து இப்படி பேசிக்கொண்டே சென்றால் இந்த பொருளுக்காக நான் வரமாட்டேன். நான் உங்களை இங்கே பத்தரை மணிவரையில் வைத்திருக்க வேண்டியதாயிருக்கும். நேற்று இரவு நான் உங்களை சீக்கிரம் அனுப்பிவிட்டதால், இன்று இரவு அதிக நேரம் வைத்திருக்கத்தான் வேண்டும். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஆம். ஆம். இல்லை. நான் உங்களை சற்று நையாண்டி செய்தேன்! (teasing) பாருங்கள்? நான்…இப்பொழுது கர்த்தர் நம்மை வழி நடத்துகின்றபடியே…நாம் செய்ய விரும்புகிறோம். அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.
43105 இப்பொழுது “ஆட்டுக்குட்டியானவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது…” நாம் இங்கு சற்று இப்பொழுது நிறுத்துவோம். நான்காம் முத்திரை, இப்பொழுது, யார் அதை உடைத்தது? ஆட்டுக்குட்டியானவர். அதைத் திறக்க வேறு யாராவது பாத்திரவானாகக் காணப்பட்டார்களா? வேறு யாரும் அதைத் திறக்கக் கூடாதிருந்தது. இல்லை. ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். 106 கழுகைப் போன்று காணப்பட்ட நான்காம் ஜீவன் யோவானிடம், “இப்புஸ்தகத்தில் மறைக்கப்பட்டிருக்கின்ற, மீட்பின் திட்டத்தின் நான்காவது இரகசியத்தை வந்து பார்”, என்றது. ஏனெனில், ஆட்டுக்குட்டியானவர் அதைத் திறந்து கொண்டிருந்தார். நாம் வேறு விதத்தில் அதைக் கூறினால், அவர் யோவானிடம், “இது இங்கே நான்காம் இரகசியம். நான் அதை அடையாளங்களாக உனக்கு காண்பித்துள்ளேன். இப்பொழுது யோவானே, அதைப் புரிந்து கொண்டாயோ என்னவோ?” என்றார். என்றாலும், அவன் கண்ட விதமாக அதை எழுதினான். அதன் அர்த்தம் இரகசியமாகவே இதுவரை இருந்து வந்தது. ஆகவே, அவன் என்ன கண்டானோ அதை எழுதி வைத்தான்.
44107 ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளை உடைத்துக் கொண்டிருந்தார். ஆனால் தேவனோ அதை இன்னும் வெளிப்படுத்தாதிருந்தார். அது கடைசி நாட்களுக்கென்று விடப்பட்டிருந்தது. பாருங்கள்? அது அடையாளங்களாய் இருந்தது. அதை நாம் ஆராய்ந்தோம். சில சமயங்களில் மிக நன்றாகவே ஆராய்ந்தோம். ஆனால் அதுவோ தொடர்ந்து முன் சென்றது என்று நாம் அறிவோம். ஆனால் இப்பொழுது, இந்தக் கடைசி நாட்களில், அது என்னவாயிருந்தது என்பதை நாம் திரும்பிப் பார்க்க முடிகின்றது. எடுக்கப்படுதலுக்கு முன்னர் கடைசி கால சபையின் முடிவில் அது வெளிப்படும். 108 சபையானது உபத்திரவ காலத்தில் பிரவேசிக்கும் என்று எங்ஙனம் யாராகிலும் கூறமுடியுமென்று எனக்குப் புரியவேயில்லை. ஆனால் அதற்கு பாவமென்பதே இல்லாதிருக்கும்போது, அது எதற்காக உபத்திரவ காலத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்? நான் சபையைக் குறிப்பிடவில்லை. சபையானது உபத்திரவ காலத்தில் பிரவேசிக்கும். ஆனால் நான் மணவாட்டியைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். மணவாட்டியினிடம் பாவமென்பது கிடையாது. அது முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டது. அதன் வாசனை என்பதும் இல்லை. அதில் சிறிதேனும் விடப்படவில்லை. பாருங்கள். அவர்கள் தேவனுக்கு முன்பாக பரிபூரணமுள்ளவராய் இருக்கின்றனர். ஆகவே அவர்களைச் சுத்திகரிக்க உபத்திரவம் அவசியமில்லை. ஆனால் மற்றவர்க்கு அது அவசியம். சபையானது உபத்திரவ காலத்திற்குள் செல்லவேண்டும். ஆனால் மணவாட்டிக்கு அது அவசியமில்லை. 109 இப்பொழுது, இதற்கு முன்னடையாளங்களாக இருப்பவைகளை நாம் எடுத்துக் காண்பித்தோம். நோவா உபத்திரவ காலத்திற்குள் சென்று வெளிவந்து, பாவத்தில் விழுந்தான். நோவா உபத்திரவ காலத்திற்குள் சென்று வெளிவருவதற்கு அடையாளமாயிருந்தான். பாருங்கள்? இப்பொழுது, அவர்கள் உபத்திரவத்திற்குள்ளாகச் சென்றனர். ஆனால் ஏனோக்கு அதற்கு முன்னால் எடுக்கப்பட்டான். உபத்திரவ காலத்திற்கு முன்பு பரிசுத்தவான்கள் எடுக்கப்படுவார்கள் என்பதற்கு ஏனோக்கு ஒரு உதாரணமாயிருக்கிறான்.
45ஆட்டுக்குட்டியானவர் முத்திரையை உடைத்தார் என்று நாம் இப்பொழுது காண்கிறோம். 110 இப்பொழுது, நாம் முதலாம் ஜீவனைக் கண்டோம், நீங்கள் கவனிப்பீர்களானால், முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பானதாய் இருந்தது என்பதை நாம் காண்கிறோம். அதை நாம் சபையின் காலங்களைப் பற்றி சிந்திக்கும் போது பார்த்தோம். இரண்டாம் ஜீவன் காளைக் கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனிதமுகம் கொண்டதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன என்று நான் நினைக்கிறேன். அவைகள் எவ்வாறு தொடர்ச்சியாக மாறி மாறி வந்தன (Rotation) என்று நாம் சரியாகப் பார்த்தோம். அது இந்தப் புஸ்தகத்திலும் சரியாக அவ்விதமே அமைக்கப்பட்டுள்ளது.
46111 ஒருமுறை ஒரு சிறந்த போதகர் ஃப்ளாரிடாவில் (Florida) “அப்போஸ்தல நடபடிகள் புஸ்தகம் சபைக்கு சாரமாக (Scaffold Work) அமைந்திருக்கிறது. சபையானது நான்கு சுவிசேஷங்களில் காணப்படுகின்றது”, என்றார். 112 இந்த நான்கு சுவிசேஷ புத்தகங்களும், அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தைக் காவல் புரிகின்றன என்று நாம் காண்கிறோம். இந்த நான்கு சுவிசேஷங்களிலிருந்துதான் அப்போஸ்தல நடபடிகள் எழுதப்பட்டன. அப்போஸ்தல நடபடிகள், பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலருக்குள் செய்த கிரியைகள் ஆகும். இவை முறையே கிழக்கு வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளிலும் உட்கார்ந்து கொண்டு அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தைக் காவல் காக்கின்றன என்றும் நாம் பார்த்தோம். நாம் அதை எவ்விதமாக இங்கே வரைந்து காண்பித்தோம் என்பது நினைவிருக்கிறதா? எவ்வளவு அழகாக பரிபூரணமாக இவை பொருந்துகின்றன!
47113 இப்பொழுது, நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டுமென்று நான் நம்புகிறேன். அந்த ஜீவன் “வந்து, பார்” என்றது. யோவான்…அந்திக் கிறிஸ்துவின் கிரியைகள் வெளிப்படுவதால் குதிரை சவாரி செய்பவர்களில் இவன்தான் கடைசியானவன் என்பதை நீங்கள் மீண்டும் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நாளை இரவு பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களைக் குறித்து நாம் தியானிப்போம். அதற்கு அடுத்த நாளிரவு—நியாயந்தீர்ப்பு. 114 அதற்கும் அடுத்த இரவு, யுகம் முடிவடைதல், எல்லாம் முடிந்து போகும் சமயம். பாருங்கள், அப்பொழுது மணவாட்டி எடுக்கப்பட்டிருப்பாள். ஏழாம் முத்திரையின்போது, கலசங்கள் ஊற்றப்படுகின்றன. எல்லாமே அப்பொழுது ஊற்றப்படுகின்றது. அவை என்னவென்பதை நான் இதுவரை அறியேன்.
48115 கவனியுங்கள். ஆனால் இப்பொழுது, நாம் காண்கிற இந்த நபர் இங்கே கழுகாக இருக்கிறான். இந்த மனிதன்…அல்லது இப்பொழுது ஊற்றப்பட்டிருக்கின்ற இந்த ஜீவன் பறக்கும் கழுகுக்கு ஒப்பாக இருந்தது. வேறு வகையில் கூறுவோமானால், நான்கு வித்தியாசமான காலங்கள் உண்டாயிருந்தன. சிங்கத்தின் காலம் ஒன்று உண்டாயிருந்தது. இப்பொழுது உள்ளதோ நான்காம் காலம் என்பதை நாம் கண்டறிகிறோம். 116 ஆகவே அந்த ஜீவன் யோவானிடம், “மீட்பின் புஸ்தகத்தில், இந்த புஸ்தகத்தில் மறைந்துள்ள நான்காம் இரகசியம் என்னவென்று வந்து பார்” என்று சொன்னது. யோவான் பார்க்கச் சென்றபோது, அவன் மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டான். மீண்டும் மற்ற குதிரைகளில் மேல் சவாரி செய்த அதே ஆள் அதின்மேல் ஏறியிருப்பதையும் கண்டான்.
49117 இப்பொழுது அவனுக்கு ‘மரணம்’ என்னும் பெயரிடப்பட்டிருந்தது. இப்பொழுது கவனியுங்கள். இவன் மற்றைய குதிரைகளின் மேல் சவாரி செய்தபோது, இவன் சவாரி செய்த எந்த காலத்திலும், அவனுக்குப் பெயர் சூட்டப்படவில்லை என்பதைக் கவனிக்கவும். ஆனால் இப்பொழுது அவன் “மரணம்” என்று அழைக்கப்படுகிறான். அது அப்பொழுது கூறப்படவில்லை. பாருங்கள்? அவன் இப்பொழுது வெளிப்படுகிறான். அவன் என்னவாயிருக்கிறானென்றால் மரணமாயிருக்கிறான். 118 நல்லது, அதைக் குறித்து நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பிரசங்கம் செய்து, அதை உண்மையாகவே தெளிவுபடுத்தலாம். ஆனால் உண்மையான ஒன்றுக்கு விரோதமாயிருப்பது, மரணமாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் ஜீவன், மரணம் என்ற இரண்டு மட்டுமே உண்டு. பரிசுத்த ஆவியானவர் இக்காலத்தில் இதைக் குறித்து அளிக்கும் வெளிப்பாடு முற்றிலும் உண்மை என்பதை இது நிரூபிக்கின்றது. ஜீவனுக்கு விரோதமானதுதான் மரணம், ஏனெனில், வார்த்தைதான் ஜீவன். அதை நாம் சிறிது நேரத்தில் காண்போம். பாருங்கள்?
50119 ஆகவே, இந்த மனிதன் மரணம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான். இப்பொழுது இந்த குதிரை சவாரி செய்பவனைக் குறித்து, மற்ற காலங்களில் இவ்வாறு குறிப்பிடப்படவில்லை. ஆனால், இப்பொழுதோ இவன் மரணம் என்று அழைக்கப்படுகிறான். 120 ஆனால் சிங்கத்தின் வெளிப்பாட்டிலே…இப்பொழுது கவனியுங்கள். நான் நிச்சயமுள்ளவனாயிருக்கும்படி நான் இதைக்கூர்ந்து படிக்க விரும்புகிறேன். நான் இதைக் குறிப்பெடுத்து எழுதி, பொருத்தி உங்கள் முன் நிற்கிறேன். முதலாம் காலமாகிய சிங்கத்தின் வெளிப்பாட்டின் காலத்தில் அவன் பெயர் என்னவென்பது வெளிப்படவில்லை. அதற்கடுத்த காலமாகிய காளையின் காலத்திலும், இருளின் காலங்கள், இடைபட்ட நடுமைய காலத்தில் அது என்னவென்று வெளிப்படவில்லை. அடுத்த காலமாகிய மனிதன், முகம் போன்ற ஜீவனின் காலத்திலும், லூதர் வெஸ்லி ஞானத்தை பிரதிநிதித்துவப்படுத்தின காலத்திலும் இது வெளிப்படவில்லை. ஆனால் கடைசி காலமாகிய கழுகின் காலத்தில், அதாவது தீர்க்கதரிசியின் காலத்தில், ஒரு தீர்க்கதரிசியின் மூலம் இரகசியங்கள் வெளிப்படவிருக்கும் காலத்தில் இது வெளிப்படுகின்றது. இப்பொழுதோ நாம் இங்கே தான்…
51121 நீங்கள் நன்றாக இதை அறிந்து கொள்ள வேண்டுமென்று கருதி இதை சற்று இன்றிரவு விவரிக்க விரும்புகிறேன். இப்பொழுது, அநேக நேரங்களில், நாம் அறிந்து கொள்வது, இவைகள்…நான் இப்பொழுது அளிக்கும் செய்தி இங்கு கூடியவர்களுக்காக மாத்திரமல்ல். இது பதிவு செய்யப்பட்டுள்ள ஒலி நாடாக்கள் மூலம் எல்லாவிடங்களுக்கும் செல்கின்றன. பாருங்கள், ஆகவே நான் இதை தெளிவுபடுத்த வேண்டுமென விரும்புகிறேன். ஏனெனில் யாராவது ஒருவருக்கு இந்த ஒரு ஒலிநாடா மாத்திரம் கிடைத்து, மற்றைய ஒலிநாடாக்கள் கிடைக்காவிடில், அவருக்கு ஒன்றுமே புரியாது. பாருங்கள். கலப்புற்று வந்துள்ள எல்லா வித்தியாசமன காரியங்களுக்கும் இக்கடைசி காலத்தில் முடிவு அளிப்பதாக, தேவன் இதை வாக்களித்திருந்தார். பாருங்கள், நாம்… 122 நாம் எலியாவினுடைய அங்கிகளை உடையவர்களாயிருந்தோம். எலியாவின் அங்கி காணப்பட்டது. ஓ, மக்கள் இருந்தனர்…ஜான் அலெக்ஸாண்டர் டூயி (John Alexander Dowie) என்பவர் தன்னை எலிசாவென்று அழைத்துக் கொண்டார். அவர் ஒரு—ஒரு அங்கியினால் சுற்றப்பட்டு புதைக்கப்பட்டார். அவ்விதமாக அநேக செயல்கள் நம்மிடையே காணப்பட்டன. அவை என்ன? இனி வெளியாகவிருக்கும் சத்தியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துப்போடவே இவை அனைத்தும் உண்டாயின. பாருங்கள்? இயேசு இவ்வுலகில் தோன்றும் முன் அநேக கள்ள கிறிஸ்துக்கள் தோன்றினர். பாருங்கள்? எல்லா காலத்திலும் அவ்வாறே சம்பவிக்கின்றது. உண்மையான ஒன்று சம்பவிக்கும் முன்னர் போலியானவைகளைக் கொண்டு ஜனங்களின் இருதயங்களைக் குழப்பமுறச் செய்ய சாத்தான் விழைகிறான். அவ்வளவே தான்.
52123 அக்காலத்து யூதர்களிடம் கமாலியேல், “இந்நாட்களுக்கு முன்னே ஒருவன் எழும்பி நானூறு பேரை வனாந்திரத்துக்கு அழைத்துச் சென்றான். அவன் அழிந்து போனான். அவனை நம்பியிருந்தவர்கள் சிதறி அவமாய்ப் போனார்கள்” என்று கூறினானல்லவா? 124 இயேசுவும், “என் பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்” என்று சொன்னார். 125 கமாலியேல் அவர்களிடம் “இவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுங்கள். இது மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம், தேவனால் உண்டாயிருந்ததேயானால், தேவனோடு போர் செய்கிறவர்களாகக் காணப்படுவீர்கள்” என்றான். அந்த மனிதன் ஞானத்தை உபயோகித்து பேசினான். அவன் ஒரு போதகனாய் இருந்தான்.
53126 இப்பொழுது கவனியுங்கள், இதுவரை வெளிப்படாத எல்லா தேவரகசியங்களையும் வெளிப்படுத்துவதற்கென உண்மையான எலிசாவின் ஆவியைக் கொண்ட அபிஷேகிக்கப்பட்ட ஒருவரை எழுப்புவதாக கர்த்தர் மல்கியா 4-ம் அதிகாரத்தில் வாக்குத்தத்தம் செய்துள்ளார். அது தவறு என்று ஒருவர் எனக்கு எழுதியுள்ள குறிப்புகளும் கடிதங்களும் என்னிடமுள்ளன. ஆனால் அதை எழுதினவரிடம் நான் உரையாட விரும்புகிறேன். பாருங்கள்? ஏன்? இதை யாருமே மறுக்க முடியாது. வேத சாஸ்திரம் நன்கு படித்த எவரும் இது உண்மை என்பதனை அறிவர். அவர்களும் அவன் வருகையை எதிர் நோக்கியிருக்கின்றனர். 127 கிறிஸ்துவின் காலத்தில் முன்னோடியாக யோவான்ஸ்நானன் தோன்றியபோது என்ன நிகழ்ந்ததோ அதுவே இப்பொழுது சம்பவிக்கும். ஏன், யோவான் ஸ்நானனைக் குறித்து மகத்தான காரியங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தபடியால், அவர்கள் அவனை அறிந்து கொள்ளத் தவறினர். ஏன், அவன் வந்து, “குன்றுகளைத் தாழ்த்தி, பள்ளங்களை உயர்த்தி, கரடுமுரடானவைகளைச் சமமாக்குவானென்று” கூறப்பட்டிருந்தது. ஓ, அவன்…தீர்க்கதரிசிகள்; அவன் தோன்றுவதற்கு முன்பு 712 வருடங்களுக்கு முன்பு ஏசாயாவும், 400 வருடங்களுக்கு முன்னர் மல்கியாவும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். பரலோகத்தின் நடைபாதை பூமிக்கு இறக்கப்பட்டு, இந்த தீர்க்கதரிசி தன் கையில் கோலைப் பிடித்துக்கொண்டு அதன் வழியாக தேவனிடத்திலிருந்து இறங்கி வருவாரென்று அக்காலத்தவர் எண்ணியிருந்தனர்.
54128 ஆனால் என்ன நேர்ந்தது? ஒரு ஐக்கிய சீட்டைக் கூட காண்பிக்க முடியாத ஒரு மனிதனாயிருந்தான். அவனால் எந்த ஒரு நற்சாட்சிப் பத்திரத்தையும் காண்பிக்க முடியவில்லை. சாதாரண கல்வியறிவும்கூட படைத்திராமல், வனாந்திரத்தில் தரித்திருந்தான். அவன் ஒன்பது வயது சென்றபோது, அவன் பெற்றோர் காலமான பிறகு, அவன் வனாந்திரத்துக்குச் சென்றதாக சரித்திரக்காரர்களால் நமக்கு கூறப்படுகிறது. அவனுக்களிக்கப்பட்டிருந்த ஊழியம் மிகவும் முக்கியமான ஒன்றாய் இருந்ததால், அவன் வேதப்பள்ளிகள் போதிக்கும் தத்துவங்களினால் குழப்பமடையக் கூடாது. அவன்—அவன் மேசியாவின் வருகையை அறிவிக்க வேண்டியதாயிருந்தது. 129 வேதபள்ளிகளின் போதனைகளால் நிரம்பிய ஒருவனை தேவன் உபயோகிக்க முடியாது. ஏனென்றால் அவன் எப்பொழுதும் அப்போதனைகளினால் இழுக்கப்பட்டுச் செல்வான். அது அவன் கல்வியின் வரிசைப்படியே அமைந்திருக்கும். அதனிடம் இழுபட்டுச் செல்வான். அவன் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற நேரிட்டாலும், அவனறிந்த போதங்களுக்குச் சென்று, அதனுடன் அந்த வெளிப்பாட்டை ஒப்பிட்டு நோக்க முயல்வான், அவைகளின்று அவன் விலகி, தேவனை மாத்திரம் விசுவாசத்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! 130 அவர்கள் அவனைக் கண்டுகொள்ளத் தவறினர் என்று நாம் காண்கிறோம். அங்கு நின்றிருந்த அப்போஸ்தலரும் கூட அவனைக் கண்டுகொள்ளத் தவறினர். ஏன், “எலியா முந்தி வரவேண்டுமென்று வேதவாக்கியங்கள் உரைக்கின்றனவே?” என்று அவர்கள் கேட்டனர். 131 அதற்கு இயேசு, “எலியா ஏற்கனவே வந்தாயிற்று, நீங்களோ அவனை அறியவில்லை” என்பதாக பதிலுரைத்தார். 132 உயிர்த்தெழுதலும் அல்லது எடுக்கப்படுதலும் அதே மாதிரி சம்பவிக்கும். அது சம்பவித்ததை அவர்கள் அறியாமல் போவார்கள். இது உங்களுக்கு வினோதமாகத் தென்படுகிறது என்பதை நான் அறிவேன். கர்த்தருக்குச் சித்தமானால் இன்றிரவு கூட்டத்துக்குப் பிறகு, அது எவ்விதம் சம்பவிக்குமென்பதை சற்று அதிகமாக நீங்கள் அறிந்துகொள்ளலாம். பாருங்கள்? அது இரகசியமாக நிகழ்வதால், பெருபான்மையோர் நிகழ்ந்ததை அறியமாட்டார்கள். உலகத்திலுள்ளோர் அவர்கள் எப்பொழுதும் போல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பார்கள். அவர் எப்போதும் அதை அதே வழியில் தான் செய்கிறார்.
55133 உங்களுக்குத் தெரியும், நான் சந்தேகப்படுவது ஒன்று—ஒன்று… இயேசுகிறிஸ்து இங்கே பூமியில் இருந்தபோது, அக்காலத்து ஜனத்தொகையில் பத்தாயிரத்தில் ஒருவரும் கூட அதை அறிந்திருக்கவில்லையென்று நான் சொல்லக் கூடும். எலியா தீர்க்கதரிசனம் உரைத்தபோது, அவன் தீர்க்கதரிசி என்பதை அநேகர் அறிந்து கொள்ளவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அவனை ஒரு பைத்தியக்காரனாக, பழைய மதவெறியனாக—அவர்கள் கருதி, அவனை முற்றிலும் வெறுத்தனர். நிச்சயமாக. அவர்கள் அவனை விநோதமானவன் என்று அழைத்தனர். 134 மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் உலகத்தாரின் கண்களில் விசித்தரமுள்ள ஒருவனாகவே (Odd Ball) தென்படுவான் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் நீங்கள் மாற்றப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்தவர்கள். பிளவின் மற்ற எல்லையிலுள்ள ஆவியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் இங்கேயோ எல்லாமே குழப்பமுற்றுள்ளது. நீங்கள்—நீங்கள் அவர்களினின்று வித்தியாசமுள்ளவர்களாகக் காணப்படாவிடில், உங்களில் ஏதோ தவறுண்டு. நீங்கள் இன்னும் பூமிக்குரியவர்களாயிருக்கின்றீர்கள். அங்ஙனமாயின், நீங்கள் பரலோக சிந்தையையே உடையவர்களாயிருத்தல் வேண்டும். பரலோகம் தேவனுடைய வார்த்தையினால் ஜீவிக்கின்றது.
56135 இப்பொழுது, இந்த—இந்த மகத்தான சம்பவம் நிகழ்ந்தது என்று பார்த்தோம், இக்காலத்திலும் உண்மையான எலிசாவின் ஆவி திரும்பவும் வரவேண்டுமென்று நாம் விசுவாசிக்கிறோம். அது வருமென்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. பாருங்கள் ஆகவே ஏற்றகாலத்திலும் நேரத்திலும் அது தோன்றும் என்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது வருவதற்கென்று ஒருக்கால் நாம் இப்பொழுது அஸ்திபாரம் போட்டுக்கொண்டிருக்கலாம். என்னவாயினும் அது ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒன்றாக இருக்கவே முடியாது. 136 நான்—நான் அதன்பேரில் என் நல்ல நண்பர் ஒருவரோடு ஒவ்வாமலிருக்கிறேன். அவரோ அது ஒரு கூட்ட ஜனமாயிருக்கும் என்கிறார். அனவே வேதத்தின் மூலம் நீங்கள் அதை எனக்கு காண்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்றும் மாறிடா தேவன் தம் திட்டங்களையும் ஒருபோதும் மாற்றுவது கிடையாது. அவர் அங்ஙனம் செய்தால், அவர் தேவனல்ல. அது உண்மை. அப்படியானால் அவர் நாம் அறிந்துள்ளது போலவும், நம்மைப் போன்று பிழைகளைச் செய்யும் மனிதனாகவும் அவரைக் கருத வேண்டும்.
57137 ஏதேன் தோட்டம் காலம் முதற்கொண்டு தேவன் தமது திட்டங்களை ஒருபோதும் மாற்றி அமைத்தது கிடையாது. மீட்புக்கென்று அவர் ஒரு திட்டத்தை வகுத்தார். அதுதான் இரத்தம் சிந்துதலாகும். நாம் கல்வியறிவைப்பெற முயற்சித்துள்ளோம். நாம் அடக்கு முறையைக் கையாள முயற்சித்துள்ளோம். நாம் மனோத்தத்துவ முறைகளை உபயோகிக்க முயற்சித்துள்ளோம். நாம் ஸ்தாபன முறைமைகளை உபயோகித்துள்ளோம். நாம் ஒருவரோடு ஒருவர் ஒன்று சேர்ந்து அன்புகூற ஒவ்வொன்றையும் முயற்சித்துள்ளோம். ஆனால் இயேசுவின் இரத்தத்தின் கீழன்றி வேறி எவ்விடத்திலும் நாம் ஐக்கியங்கொள்ளுதல் இயலாது. தேவன் மனிதனைச் சந்திக்கும் ஒரே ஸ்தலம் அதுவாகும். 138 தேவன் எப்பொழுதுமே தனிப்பட்ட நபருடன் ஈடுபடுகிறார். இருவர் இருந்தால் அவர்களுக்கு இருவித எண்ணங்கள் உண்டாயிருக்கும். ஒரே சமயத்தில் இரண்டு பெரிய தீர்க்கதரிசிகள் ஒரே காரியத்தில் தீர்க்கதரிசனத்தை உரைத்துக் கொண்டு பூமியில் ஒருபோதும் இருந்ததேயில்லை. அவ்வாறு இருந்தனரா என்று ஆராய்ந்து கண்டுகொள்ளுங்கள். இல்லை. ஐயா. அவர் எப்பொழுதும் தன்னை முற்றிலும் ஒப்புவித்த ஒருவனை மாத்திரமே காலங்கள்தோறும் உபயோகித்துக் கொண்டு வந்திருக்கிறார். அவர் அந்தவிதமான நபரையே தேடிக் கண்டு பிடிக்கிறார்.
58139 ஆனால், அவருடைய வார்த்தைக்கு வார்த்தை செவி கொடுக்கும் யாரோ ஒருவன் இருப்பான். மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. அவர்கள் ஒருபோதும் அதனின்று அசையமாட்டார்கள். அது உண்மை. கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்காக அவர்கள் காத்திருப்பார்கள். அதுவரையிலும் அவர்கள் அசைவதில்லை. அவன் சரியாக ரூபகாரப்படுத்தப்படுவான். நீங்கள்… 140 இப்பொழுது, உலகத்தார் அவனை வெறுப்பார்கள். ஆனால் தெரிந்துகொள்ளப்பட்ட வித்து, முன் குறிக்கப்பட்ட வித்து, இயேசுவின் காலத்தில் அவரை அறிந்துகொண்டது போன்று, அவனை அறிந்து கொள்வோம். வெளிச்சம் அதன் மேல் பட்டவுடன், அந்த வித்து அதைப்போன்று உயிர்பெறும். [சகோதரன் பிரான்ஹாம் தன் விரல்களை ஒருமுறை சொடுக்குகிறார்.—ஆசி.] அவர்கள் அவனை எளிதில் அறிந்து கொள்வார்கள், அவர்கள் அவனைப் புரிந்து கொள்வார்கள். நீங்கள் அதைக் குறித்து ஒரு வார்த்தையும் மறுத்துப் பேச அவசியமிராது. 141 சமாரிய ஸ்திரீ, “ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியா வரும்போது இவைகளைச் செய்வார்” என்றாள். அப்பொழுது இயேசு, “நானே அவர்” என்றார். 142 மனிதனே, அது அவளுக்குப் போதும். அதை அறிந்து கொள்ள அவள் முழு இரவும் அதற்கடுத்த இரவும் காத்திருக்க வேண்டிய அவசியம் உண்டாயிருக்கவில்லை. அந்த நிமிடமே அவள் அவரை அறிந்துகொண்டாள். அவள் தெருக்களில் சென்று அந்தச் செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்தாள்.
59143 இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள், முதலாம் காலம் சிங்கத்தின் காலமாயிருந்தது. அது யூதா கோத்திரத்து சிங்கமாய், கிறிஸ்துவாய் இருந்தது. அவருடைய ஜீவனின் சொந்த செல்வாக்கு அக்காலத்தில் ஆட்கொண்டது. அதுதான் முதலாம் ஜீவன், மிருகம் என்றால் “வல்லமை” என்று பொருள். அது மனித சத்தத்தின் மூலம் பதிலளித்தது. 144 அதற்கடுத்த காலம் காளையின் காலம் அல்லது கறுப்புக் குதிரையின்மேல் சவாரி செய்பவனின் காலம். பாருங்கள்? 145 இப்பொழுது, முதலாம் காலம் வெள்ளைக் குதிரையின் காலம். வெள்ளைக் குதிரை சபையின் வல்லமையைக் குறிக்கிறது என்றும், அது ஜெயித்துக்கொண்டே சென்றது என்றும் ஜனங்கள் கூறக் கேட்டிருக்கிறேன். அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு ஒரு கிரீடம் பின்னர் அளிக்கப்பட்டது என்று நாம் பார்த்தோம். அது சபைதான். ஆனால் அது எங்கு சென்றது? ரோமாபுரிக்கு சென்றது. அங்குதான் அவன் சென்றான். அவன் தன் கிரீடத்தைப் பெற்றுக்கொண்டான். 146 இப்பொழுது, இரண்டாம் காலம் சிவப்பு குதிரையின் மேல் சவாரி செய்பவனின் காலம். அது இருண்ட காலம். 147 இப்பொழுது—இப்பொழுது, அதற்கடுத்த காலம் மனிதனின் காலம் அல்லது கறுப்புக் குதிரையின் மேல் சவாரி செய்பவனின் காலம்.அவன் சீர்திருத்தக்காரர்களின் காலத்தில் இருந்தான், பாருங்கள், பேசினதோ அந்த சத்தமாகும். இப்பொழுது, கறுப்புக் குதிரையின் மேல் சவாரி செய்பவன் அந்திக்கிறிஸ்து. ஆனால் அந்த காலத்தில் பேசிய அந்த ஒன்று மனிதனில் பிரதிநிதித்துவம் காண்பித்தது. மனிதன் ஞானத்திற்கும், புத்திசாலித்தனத்திற்கும், மதி நுட்பத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறான். பாருங்கள்? அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை, பாருங்கள். கறுப்புக் குதிரையின் மேல் சவாரி செய்பவனுக்கு ஒரு பெயர் அப்பொழுது கொடுக்கப்படவில்லை. பாருங்கள்? அவன் சவாரி செய்தான் என்று மாத்திரமே அவர்கள் கூறினர்.
60148 ஆனால் இப்பொழுது, நான்காம் காலமாகிய கழுகின் காலத்தில்—தேவன் தம் தீர்க்கதரிசிகளை எப்பொழுதும் கழுகுக்கு ஒப்பிடுகிறார். தம்மையும் ஒரு கழுகுக்கு என்று அவர் அழைத்துக் கொள்கிறார். கழுகு அதிக உயரம் பறப்பதால், வேறெதுவும் அதைத் தொட முடியாது. அது உயர பறப்பது மாத்திரமல்ல, அது உயர பறப்பதற்கு அவசியமான உடலமைப்பை அது பெற்றுள்ளது. அது உயர செல்லும்போது அது எங்கிருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறது. சிலர் உயரமான நிலையையடைந்ததும், அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை காணமுடிவதில்லை; அதனால் எவ்வித உபயோகமுமில்லை. ஆனால் நீங்கள்… 149 ஆனால் நீங்கள் ஒரு காகத்தை அல்லது ஒரு பருந்தை, இரண்டில் ஒன்றை கழுகோடு பறக்கவிட முயற்சித்தால், அது சின்னாபின்னாகப் போய்விடும், அப்படி பறக்க வேண்டுமானால் கழுகைப்போன்று அழுத்தத்தை தாங்கக்கூடிய உடல்வண்மை அதற்கு இருக்க வேண்டும்.
61150 நம்மிடம் அதே தவறுதான் காணப்படுகின்றது. நம்மில் சிலருக்கு அவ்வாறே அழுத்தத்தை மேற்கொள்ளும் அளவுக்கு சக்தியில்லை. அதன் விளைவாக நாம் உயரச் செல்லும்போது வெடித்துப் போகிறோம். நீங்க பாருங்கள்? அழுத்தத்தை மேற்கொள்ளும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். 151 நீங்கள் உயரச் செல்லும்போது, வரப்போவது என்னவென்பதை அறிந்து செய்ய நமக்குச் கழுகின் பார்வை அவசியம். இப்பொழுது, கழுகின் காலம் அதை வெளிப்படுத்தியது. கழுகின் காலம் கடைசி நாட்களில் வருமென்று வெளிப்படுத்தல் 10:7-லும், மல்கியா…1,4லும் வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது என்று நாம் காண்கிறோம். பாருங்கள், அது கடைசி நாட்களில் இங்கே இருக்கும். அது சரி, அது இங்கிருக்கும். சரி. கவனியுங்கள்.
62152 இப்பொழுது, இந்த மனிதன் இப்பொழுது மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறான் என்று நாம் காண்கிறோம். மங்கின நிறம்! ஓ, என்னே! பிறகு, கவனியுங்கள் பிறகு… 153 “ஆறு கோடியே எண்பது இலட்சம் பிராடெஸ்டெண்டுகள்” ரோம சபையை எதிர்த்ததன் விளைவாக ஆறு கோடியே எண்பது இலட்சம் பேர் இரத்த சாட்சிகளாக கொல்லப்பட்டதாக ஸ்மக்கர் என்பவர் எழுதிய மகிமையுள்ள சீர்திருத்தம் என்னும் புத்தகத்தில் நாம் வாசித்துள்ளோம் என்று நேற்று இரவு பார்த்தோம். ஆயிரத்து ஐநூறு வருடம்வரை என்று நாம் கண்டறிகிறோம். அது பதினெட்டாவது என்று நம்புகிறேன், இல்லை. இப்பொழுது எனக்கு அது சரியாக ஞாபகமில்லை. ஆனால் ரோம சபையை எதிர்த்ததன் விளைவாக ஆறு கோடியே எண்பது இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். அவன் தன்னைத்தானே ஆள்மாறாட்டம் செய்து மரணம் என்னும் பெயரில் உருவகப்படுத்திக் கொண்டதில் வியப்பொன்றுமில்லை. அவன் நிச்சயமாக அவ்வாறே இருக்கிறான். 154 இப்பொழுது, அவன் விரோத, வார்த்தைக்கு விரோதமான தன்னுடைய போதனையால் ஆவிக்குரியப் பிரகாரமாக எத்தனைப் பேரைக் கொன்றான் என்பதை தேவன் மாத்திரமே அறிவார். ஆறு கோடியே எண்பது லட்சம் பேரை அவன் பட்டயத்தினால் கொன்றுபோட்டான். சரியாகச் சொல்வோமானால் அநேகமாக அவனுடைய கள்ள போதகத்தினால் கோடிக் கணக்கில் (Billions) ஆவிக்குரிய பிரகாரமாக மாண்டனர். ஆகையால் மரணம் என்று அவன் அழைக்கப்படுவதில் வியப்பொன்றுமில்லை.
63155 அந்த சவாரி செய்பவனை கவனித்தீர்களா? தொடக்கத்திலேயே அந்திகிறிஸ்துவாக, அவன் மரணமாயிருந்தாலும், களங்கமற்றவனைப்போல் அவன் எப்பொழுது காணப்பட்டான். அதன் பின்பு ஒரு கிரீடத்தை, மூன்று கிரீடங்களை, அவன் பெறுகிறான். அவன் கிரீடம் சூட்டப்பட்டபோது, சபையையும் அரசாங்கத்தையும் அவன் ஒன்றாக இணைத்து அதன் மேல் ஆதிக்கம் செலுத்துகிறான். அந்திகிறிஸ்து என்று அழைக்கப்படும் இவன் மனிதனின் உருவில் காணப்படும் சாத்தானாகும். 156 சாத்தான் நமது கர்த்தராகிய இயேசுவுக்கு உலகத்தின் இராஜ்யங்கள் அனைத்தையும் அவைகளின் மகிமையையும் ஒரு நொடிப்பொழுதில் காண்பித்து, அவை அவனுக்குச் சொந்தமானதென்றும், அவனைப் பணிந்து கொண்டால் உலகத்தில் இராஜ்யங்களை அவருக்கு அளிப்பதாகவும் கூறினானெறு மத்தேயு 4-ம் அதிகாரம் நமக்கு கூறுகிறது என்று நான் நம்புகிறேன். அவன் சொன்னான்…அவைகள் அவனுடையது என்றே அவன் கூறினான். 157 ஆகவே, நீங்கள் பாருங்கள், சாத்தான் தன்னுடைய சபையையும் தன்னுடைய அரசாங்கத்தையும் ஒன்றுபடுத்த முடியுமானால், சிவப்பு குதிரையின் மேலிருக்கிறவன் நிச்சயம் அதின் வழியாக சவாரி செய்து செல்லமுடியும். பாருங்கள்? உண்மை! இப்பொழுது, அவனுடைய சபை, அரசாங்கத்தில் இரகசியம் என்ன என்று இங்கே நாம் காண்கிறோம்.
64158 சாத்தான் தன்னுடைய ஊழியத்தின் நான்காவது கட்டத்தில் மிருகம் என்று அழைக்கப்படுகிறான். தொடக்கத்தில் அவன் அந்திக்கிறிஸ்துவென்று அழைக்கப்படுகிறான். அதன் பின்னர் அவன் கள்ளத்தீர்க்கதரிசியென்றும் அழைக்கப்படுகிறான். பின்னர் அவன் மிருகம் என்றும் அழைக்கப்படுகிறான். ஆனால் இப்பொழுது இங்கே மிருகம் என்றும் அவன் அழைக்கப்படுகிறான் என்று நாம் கண்டறிகிறோம். இப்பொழுது இந்த நான்காவது குதிரையைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 159 இந்த நான்காவது குதிரையில், நீங்கள் கவனித்தால், எல்லாம்…அவன் ஏறிச்சென்ற முதலாம் குதிரை வெள்ளை நிறமுடையதாயிருந்தது. அதற்கடுத்து சிவப்பு நிறமுள்ளதாயும், அதற்கடுத்த மூன்றாம் குதிரை கறுப்பு நிறம் கொண்டதாயும் இருந்தன. நான்காவது ஒன்றோ இந்த மூன்று நிறங்களை கலந்தாய் காணப்படுகிறது. ஏனென்றால் மங்கின நிறமுள்ளதாயிருந்தது. வெள்ளை, சிவப்பு, கறுப்பு இம்மூன்று வர்ணங்களைக் கலந்தால், மங்கின நிறம் கிடைக்கின்றது. பாருங்கள்? அவை எல்லாம் இந்த—இந்த ஒரு குதிரைக்குள் கலந்துள்ளன. பாருங்கள்? எனவே முதல் மூன்று ஊழியங்களையும் ஒருங்கே கொண்டவனாக அவன் நான்காம் குதிரையின் மேல் சவாரி செய்கிறான்.
65160 இப்பொழுது இந்த நான்கு குதிரைகளையும் நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான்கு, அந்த ஆவிக்குரிய கணிதம் என்ன என்பதைக் கவனியுங்கள். தேவனுடைய எண்ணிக்கை மூன்று என்பதாகும். இதுவோ நான்காகும். ஆனால் இவன் எண்ணிக்கை நான்காக இருப்பதைக் கவனிக்கவும். அவன் இங்கே நான்கில் இருக்கிறான். முதலில் அந்திக்கிறிஸ்து, வெள்ளை; இரண்டாவது கள்ளத்தீர்க்கதரிசி, சிவப்பு; மூன்றாவது வானத்துக்கும் பூமிக்கும் பாவவிமோசன ஸ்தானத்துக்கும் (Purgatory) பிரதிகுரு (Vicar) கறுப்பு; நான்காவது, மிருகம், மங்கின நிறமுள்ள குதிரை, சாத்தான் வானத்திலிருந்து உதைத்துத் தள்ளப்படுகிறான். அதை நீங்கள் படிக்க விரும்புகிறீர்களோ? அது வெளிப்படுத்தல் 12:13-ல் காணப்படுகிறது. வெளிப்படுத்தல் 13:1-8-ல் அவன் ஒரு மனிதனுக்குள் குடிகொண்டு மிருகம் என்னும் பெயர் கொள்கிறான். 161 முதலில் அவன் நிக்கொலாய் போதகத்தை அளிக்கும் அந்திக்கிறிஸ்துவாக இருக்கிறான். அதன் பின்னர் அதனிலிருந்து அவன் கள்ளத் தீர்க்கதரிசியாகிறான். அந்திக்கிறிஸ்து என்பது கிறிஸ்துவுக்கு விரோதமாயுள்ளவன் என்று பொருள்படும். தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாயுள்ள எதுவும் தேவனுக்கு விரோதமாயிருக்கிறது. ஏனெனில் வார்த்தைதான் தேவன். “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி கிறிஸ்துவாக ஆகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” இப்பொழுது அவன் வார்த்தைக்கு விரோதமாயிருப்பதால் அவன் அந்திக்கிறிஸ்துவென்று அழைக்கப்படுகிறான். ஆனால் ஒரு ஆவிக்கு கிரீடம் சூட்ட முடியாது. எனவே தொடக்கத்தில் அவம் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவனிடம் வில் மாத்திரம் இருந்தது. ஆனால் அம்புகள் இல்லை.
66162 ஆகவே பிறகு அவனுக்குக் கிரீடம் சூட்டும் தருணம் வந்தபோது, அவன், அவனுடைய அந்திக்கிறிஸ்துவின் போதகத்தைப் போதிக்கும் கள்ளத்தீர்க்கதரிசியாகிறான். இது புரிகிறதா? பின்னர் அவன் பட்டயத்தைக் கையிலேந்தியவனாய், அரசாங்கத்தையும் சபையையும் ஒன்றுபடுத்துகிறான். இனிமேல் அவன் யாருடைய உத்தரவும் பெற வேண்டுமென்ற அவசியமில்லை. அவனே அரசாங்கத்தின் தலைவன்; அவனே பரலோகத்தின் தலைவனாகவும் கூட இருக்கிறான். அவன் மூன்று கிரீடங்களைப் பெற்றுக்கொள்கிறான். “பாவ விமோசன ஸ்தானம்” ஒன்று உண்டென்னும் கருத்தை நுழைத்து, மரித்தவர்கள் அந்த ஸ்தலத்தில் தங்கியிருக்கிறார்கள் என்றும், அதினின்று மரித்தவர் விடுபட வேண்டுமாயின் அவர்களுடைய சுற்றத்தார் அதற்கென்று காசைச் செலுத்தினால் பிரதிகுரு என்னும் ரீதியில் பெற்றுள்ளான் என்றும் கூறினான் …அவன் பிரதிகுரு என்று தன்னை அழைத்துக்கொண்டான். நிச்சயமாக, அவன் அவ்விதமாகவே இருக்கிறான். “அவன் பூமியில் தேவனுடைய ஸ்தானத்தைக் கைப்பற்றிக் கொண்டான்”. இது மிகவும் தெளிவாக இருக்கிறதல்லவா? 163 வேதத்தில் எப்பொழுதும் அவனுடைய எண்ணிக்கை நான்காக இருக்கிறது என்று நாம் காண்கிறோம். இதோ அவன் …?… மூன்றல்ல. அது நான்காகும். பாருங்கள்.
67164 இப்பொழுது, வெளிப்படுத்தல் 12க்குத் திருப்புவோம். அதைப் படிப்பதற்கு நமக்கு—நமக்கு நேரம் இருப்பதால் நாம் சற்று படிக்கலாம். இப்பொழுது வெளிப்படுத்தல் 12-ம் அதிகாரம் 13-ம் வசனத்தை நாம் படிப்போம். “அந்த நேரத்தில் ஒரு பெரிய பூமியதிர்ச்சி…” இல்லை, நான் தவறான பகுதியை எடுத்துள்ளேன், 13-வது… வலுசர்ப்பமானது தான் பூமியில் தள்ளப்பட்ட்தை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப் பெற்ற ஸ்திரீயைப் துன்பப்படுத்தினது.
68165 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அவன் பூமியில் தள்ளப்பட்டு, அந்திக் கிறிஸ்துவின் ஆவியாக ஒரு மனிதனுக்குள் வாசம் செய்கிறான். அந்த மனிதர் ஒன்றிலிருந்து வேறொன்றாக மாறுகிறான். அந்திக்கிறிஸ்துவிலிருந்து கள்ளத்தீர்க்கதரிசியாக, பின்னர் மிருகம் அவனுக்குள் வருகிறது. 166 சபை நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் கிறிஸ்து ஜனங்களுக்குள் குடிகொள்ளுதல் போன்றவைகளின் மூலம் வளர்ந்து கொண்டு வந்தவிதமாகவே சாத்தானின் சபையும் அந்திக்கிறிஸ்துவிலிருந்து கள்ளத்தீர்க்கதரிசியாக வளர்ந்து வர இருக்கின்ற மகா பெரிய உபத்திரவ காலத்தின், முடிவில் மிருகமாக எழும்புகிறான். இவன் இங்கு, இந்நாளில் நடப்பதற்கு முன்னடையாளமாக (antitype) பாருங்கள். சரியாகச் சொன்னால் அவன் அதற்கு நிழலாயிருக்கிறான். அவன் சரியாக அவ்வாறே இருக்கிறான். அது அவனே வானத்திலிருந்து அவன் உதைத்து தள்ளப்படுகிறான்.
69167 இப்பொழுது வெளிப்படுத்தல் 13:1-8 வசனங்களை நாம் பார்ப்போம். பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வரக்கண்டேன்; 168 இப்பொழுது இங்கே 12-ம் அதிகாரத்தில் சாத்தான் வானத்திலிருந்து தள்ளப்படுகிறான். இப்பொழுது கவனியுங்கள். அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது; அதின் கால்கள்… 169 ஓ, நமக்கு மாத்திரம் சமயம் இருந்தால், இந்த இரவு முழுவதும், இவ்வடையாளங்களை விவரித்து, அவை சாத்தானைக் குறிக்கின்றன என்று காண்பிக்கலாம். உங்களில் அநேகர், அதை மற்ற பாடங்களிலிருந்து அறிந்துள்ளீர்கள். அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும்…சிங்காசனத்தையும்…அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. 170 ஊம்! சாத்தான் குடிகொள்ளுதல், பாருங்கள்? அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்க கண்டேன்;
70171 நாம் தொடர்ந்து படிக்கையில், நீங்கள் விரும்பினால், உங்களுக்குத் தருணம் இருந்தால் இதைத் தொடர்ந்து படியுங்கள். இல்லை. நாம் சிறிது படிப்போமாக. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,… 172 நீங்கள் சற்று கவனியுங்கள்! நீங்கள் எப்போதுமே கம்யூனிஸத்தைக் கவனிக்க வேண்டாம். இதைக் கவனியுங்கள், கம்யூனிஸம் என்பது “சிந்தப்பட்ட இரத்தத்திற்கு என்றைக்காவது பழி வாங்குவதற்கென” தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாக அமைந்துள்ளதேயன்றி வேறொன்றுமல்ல. நாளை அதைக் குறித்து சிந்திப்போம். பாருங்கள்? அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்க கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். 173 அந்த வலுசர்ப்பம் யாராயிருந்தது? சாத்தான். அது சரியா? “அந்த வலுசர்ப்பம்”. சரி. அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த (மிருகம் யாரிடமிருந்து அதிகாரம் பெறுகின்றதென்பதை கவனியுங்கள்) … அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம் பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, (அதுதான், பாருங்கள். சரி) அவருடைய நாமத்தையும் (ஒரு பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டு), அவருடைய வாசஸ்தலத்தையும், (அதாவது பரிசுத்த ஆவியானவர் தங்குமிடம்) ,… 174 அதை ரோமாபுரிக்கு, வாடிகன் பட்டணத்திற்கு மாற்றினான். நீங்கள் அதைத் தொடர்ந்து படித்துக் கொண்டே போகலாம். …பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. 175 அவர்கள் மத்தியஸ்த ஊழியம் செய்கின்றவர்கள் தூஷணம் என்று சொல்லி…
71மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி (அவன் அதைச் செய்தான்) அவர்களை ஜெயிக்கும்படிக்கு (அவன் அதைச் செய்தான்) அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டதுமல்லாமல்,… 176 பரிசுத்தவான்களை அவன் தொழு மரத்தில் கட்டி அவர்களை எரித்து, சிங்கங்களுக்கு இரையாகக் கொடுத்து, எல்லாவிதங்களிலும் அவர்களைக் கொன்று போட்டான். ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும் பாஷைக்காரர் மேலும் ஜாதிகள் மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 177 அஞ்ஞான ரோமாபுரி போப்பாண்டவரின் ரோமாபுரியாகும்வரை இவ்விதம் உண்டாயிருக்கவில்லை. அதன் பின்பு கத்தோலிக்க ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவி அகில உலக கத்தோலிக்க சபை நிறுவப்பட்டது. உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். 178 “என்னுடைய எண்ணெயையும், திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே”, பாருங்கள்? உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன். சிறைபடுத்திக் கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப் போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.
72179 இப்பொழுது, அவன் தன்னுடைய பெரிய பட்டயத்தைக் கையிலேந்தியவனாய், கொல்லப் புறப்பட்டான் என்று சென்ற இரவு நாம் பார்த்தோம். 180 ஆனால் அவன் பட்டயத்தினாலே மடிந்து போவான்—தேவனுடைய வார்த்தை என்னும் பட்டயம், இருபுறமும் கருக்குள்ள அந்த பட்டயம் அவனைக் கொன்றுபோடும் என்று நாம் அறிந்து கொண்டோம். ஏழு இடி முழக்கங்கள் அந்த சிறு குழுவுக்கு தங்கள் சத்தங்களை முழங்கும் வரைக் காத்திருங்கள். அப்பொழுது அவர்கள் தேவனுடைய வார்த்தையை வல்லமையாய் பிரயோகிக்க முடியும். அந்த வார்த்தை துண்டு துண்டாக வெட்டும். வானத்தை அடைக்கவும், அவர்கள் இதையோ அல்லது அதையோ நிறுத்தவும், அவர்கள் விரும்பினதைச் செய்யவும் அவர்களுக்கு அதிகாரமுண்டாகும். மகிமை! தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தை அவனைக் கொன்றுபோடும், இருபுறமும் கருக்கான எந்த பட்டயத்திலும் அது கருக்கானதாயிருக்கிறது. அவர்கள் விரும்பினால் லட்சக்கனக்கான டன்கள் எடையுள்ள வண்டுகளை வரவழைக்க முடியும். ஆமென்! அவர்கள் என்ன சொன்னாலும் அது நிறைவேறும். ஏனெனில் அது தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வாத்தையாயிருக்கிறது. ஆம். ஆமென். தேவன், எப்பொழுதுமே அது அவருடைய வார்த்தையாய் இருக்கிறது. ஆனால் அவர் அது கிரியை செய்யத்தக்கதாக எப்பொழுது அவர் மனிதனை உபயோகிக்கின்றனர். 181 வேண்டுமானால் எகிப்தில் அவரே வண்டுகளை வரைவழைத்திருக்க முடியும். ஆனால் அவர் மோசேயிடம் “மோசே, அது உன் பணியாகும். என்ன செய்ய வேண்டுமென்பதை நான் உனக்குச் சொல்வேன். அதை நீ செய்வாயாக” என்றார். அவ்வாறே அவன் அதைச் செய்து நிறைவேற்றினான். பாருங்கள்? வண்டுகளை வரவழைக்க அவர்—அவர் சூரியனை தெரிந்துகொண்டிருக்கலாம். அவர் அதை வரவழைக்க சந்திரனை தெரிந்துகொண்டிருக்கலாம் அல்லது அதை வரவழைக்க காற்றை தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனால் அவர்—அவர் அவர் “மோசே” என்றார். அது, அது…ஆனால் அவர் அதற்கென்று தம்முடைய மனிதனைத் தெரிந்துகொண்டார். சரி.
73182 இந்த சாத்தான் வானத்திலிருந்து தள்ளப்பட்ட பின்பு அவன் ஒரு மனிதனுக்குள் குடிகொள்கிறான் என்று நாம் இங்கே கண்டறிகிறோம். அவன் இப்பொழுது மிருகமாக இருக்கிறான். அந்திக்கிறிஸ்து, கள்ளத்தீர்க்கதரிசி, இப்பொழுது மிருகம். மரணம் என்னும் பெயர் அவனுக்குச் சூட்டப்படுகின்றது; பாதாளம் அவனைப் பின் தொடருகின்றது. சாத்தான் அவன் சிங்காசனத்தில் முற்றிலுமாக வீற்றிருத்தல். ஓ, என்னே! அவன் இவ்வுலகில் வீற்றிருத்தல். ஓ, என்னே! அவன் இவ்வுலகில் சாத்தானின் பிரதிநிதியாக இருந்து வந்து, மத்தேயு 4-ம் அதிகாரத்தில் கர்த்தராகிய இயேசுவுக்கு அவன் அளிப்பதாகச் சொன்ன அந்த உலகத்தில் ராஜ்யங்களின் மேல் ராஜ்யபாரம் செய்கிறான். சாத்தான் இப்பொழுது முழு ராஜாவாகிறான்.
74183 அது சற்று பின்பு நடைபெறுகிறது. இப்பொழுது அவன் கள்ளத் தீர்க்கதரிசியாக மட்டுமே இருக்கிறான். அங்கே யூதர்களுடன் அவன் செய்த உடன்படிக்கையை முறித்த பிறகு, அவன் மிருகமாக ஆகிறான். அது எப்படி நமக்கு தெரியும்… அதாவது, சரி இப்பொழுது கவனியுங்கள். அந்த சமயத்தில் அவன் குடிகொள்ளும் மனிதனுக்கு மிருகத்தின் இருதயம் அளிக்கப்படுகின்றது. ஏனென்றால் சபையானது மேலே போகிறபோது, சாத்தான் தள்ளப்படுகிறான். பாருங்கள்? பாருங்கள்? அப்பொழுது அவனுடைய குற்றச்சாட்டுகள் யாவையுமே அவன் முடித்துவிட்டான்…பாருங்கள்? இப்பொழுது… 184 கவனியுங்கள். நமது மத்தியஸ்தர் சிங்காசனத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கும் வரை சாத்தானால் நம் பேரில் குற்றச்சாட்ட முடியும். ஏனெனில் அவன் எதிர் தரப்பிலிருக்கும் வழக்கறிஞன். அவன் கிறிஸ்துவின் விரோதி. கிறிஸ்து…அவன் கிறிஸ்துவின் எதிர்தரப்பிலிருந்து கொண்டு, “சற்று பொறுங்கள்! ஆதாம் பாவத்தில் விழுந்தான்! ஆதாம் இவையெல்லாம் செய்தான். நான் அவனை மேற்கொண்டேன். அவன் மனைவி ஏவாள் ஒரு பொய்யை நம்பும்படி செய்தாள். அவள் அதன் விளைவால் உம்மால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டாள். நான்தான் அதைச் செய்தேன்!” என்றெல்லாம் கூறி அவன் வாதிப்பான். 185 ஆனால் நமது மத்தியஸ்தர், ஆமென்! அங்கு தாம் சிந்தின இரத்தத்துடன் நின்று கொண்டிருக்கிறார். அந்த இரத்தம் கொடூரமான பாவியின் இருதயத்தையும் மாற்றவல்லது. மத்தியஸ்தர் இப்பொழுது, சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். ஆம், ஐயா! சாத்தான், “அவர்கள் குற்றஞ் செய்தவர்கள்” என்பான். அவரோ, “அவர்கள் குற்றஞ் செய்தவர்கள் அல்ல” என்று கூறுவார்.
75186 கறையைப் போக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கலோராக்ஸ் என்னும் வெண்மையாக்கும் திரவம் எழுதும் மையின் நிறத்தை அல்லது வேறெந்த கறையையும் அகற்றிவிடும். அது மறைந்து போவதால், அது எங்கிருந்தது என்பதை யாரும் அறியவும் முடியாது. அது மறுபடியும் வாயுவாக மாறி, இயலுலக ஒளியாகின்றது. அதன்பின் மேலும் பிரிக்க முடியாத அணுமூலக்கூறுகள் (molecules) மற்றுமாகி, எங்கிருந்து வந்ததோ அந்த மூலத்தன்மையாகின்றது. அது ஒரு சிருஷ்டிப்பாகும். ஒரு சிருஷ்டிப்பு என்றால் சிருஷ்டி கர்த்தரிடத்திலிருந்துதான் வந்தாக வேண்டும். ஆனால் கண்டுபிக்கப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்ட இரசாயனம் யாவும் மறுபடியும் அது மூலப் பொருட்களாக சிதைக்கப்பட்டு மறைந்து விடுகிறது. அது ஒன்றுமில்லாததாகி விடுகின்றது. தண்ணீரும்கூட பொடி வடிவிலுள்ள க்ளோராக்ஸ் என்னும் வெண்மையாக்கும் திரவத்துடன் சேர்ந்துவிடுகிறது. 187 ஆமென்! தேவனுக்கு மகிமை! கறை மறைந்து அது சுத்தமாகி விடுகிறது. இயேசு கிறிஸ்துவின் இரத்தமும் உண்மையான தேவனுடைய பிள்ளைக்கு அதையே செய்கிறது. அவன் தன் பாவத்தை அறிக்கையிட்டு, அவருடைய… கிருபையினாலும், நன்மையினாலும் நீதிமானாக்கப்படுகிறான். அப்பொழுது தேவன், “அவனுடைய பாவம் என்னவென்பதும் கூட எனக்கு நினைவில்லை. அவன் முற்றிலுமாய் என் குமாரன்” என்று சொல்லுவார். 188 “இந்த மலையைப் பார்த்து: இவ்விடம் விட்டு ‘அப்புறம் போ’ என்று சொல்லி உன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசத்தால் அது அப்புறம் போம் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்”. நீ எது நடைபெற வேண்டுமென்று கூறினாயோ, நீ அதை உடையவனாயிருப்பாய். ஏனெனில் நீ ஒரு மீட்கப்பட்ட புத்திரனாய் இருக்கிறாய். ஆமென்! அது உண்மையென்று நானறிவேன்.
76189 ஏனெனில் ஆறு வெவ்வேறு தருணங்களில் அது ஒவ்வொன்றும் எந்த இடத்தில் இருக்கும் என்று அறியாத தருணத்தில் அணில்கள் தோன்றும்படி தேவன் செய்ததை நான் கண்டிருக்கிறேன். மோசேயின் காலத்தில் வண்டுகளையும் தவளைகளையும் எதை வேண்டுமானாலும், சிருஷ்டித்த அவரால் அணில்களையும் சிருஷ்டிக்க முடியும். அவர், தேவன். சிருஷ்டிகர். உண்மை! அழிந்து போகும் மனிதன்… 190 ஒரு மனிதன் பாவம் அறிக்கை செய்யப்பட்டு அது இயேசுவின் இரத்தமென்னும் வெண்மையாக்கும் திரவத்தில் விழும்போது, பாவமனைத்தும் அகன்றுவிடுகிறது. அவன் பாவமில்லாதவனாக, குற்றமற்றவனாகக் கருதப்படுவான். “தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான். ஏனெனில் அவன் பாவஞ் செய்ய முடியாது.” இயேசுவின் இரத்தம் என்னும் வெண்மையாக்கும் திரவம் அவனுக்கும் தேவனுக்கும் இடையே நிற்கின்றது. அது பாவத்தை உடைத்தெறிந்து அதன் ஆதிகாரணமான சாத்தானிடம் அனுப்பும்போது, பாவம் எங்ஙனம் தேவனுடைய சன்னதியை அடைய முடியும்? ஆமென்! 191 வ்யூ! நான் பக்தியுணர்ச்சி அடைகிறேன். இவை இப்பொழுது வெளிப்பட துவங்குவதால், எனக்குள் உற்சாகம் எழுகின்றது என்றே நான்—நான் கூறுகிறேன்.
77192 கவனியுங்கள். சாத்தான் முற்றிலுமாக தன் சிங்காசனத்தி வீற்றிருக்கிறான். ஆம், ஐயா. உலகத்தின் இராஜ்யங்களை நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு அளிக்க முற்பட்டான். இப்பொழுது மிருகத்தின் இருதயம் கொண்டவனாய் அவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறான். பிசாசு குடிகொண்டிருக்கும் மிருகமாகிய அந்த மனிதன் பூமியின் மேல் இங்கே போலியான பாசாங்கின் கீழ் தன்னை வெளிப்படுத்துகிறான். ஓ, என்னே! உண்மையான தேவனுடைய வார்த்தையுடன் தொடர்பு கொண்டுள்ள ஒருவனைப் போன்று பாசாங்கு செய்கிறான். 193 இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அவனுக்கு—அவனுக்கு முன்னடையாளமாயிருந்த யூதாஸும் அதையே செய்தான். அவன் என்ன செய்தான்? அவன் ஆதிமுதற்கொண்டு பிசாசாக இருந்த போதிலும், அவன் விசுவாசி போன்று காணப்பட்டான். “அவன் கேட்டின் மகனாகப் பிறந்தான்”. இயேசு வார்த்தையாயிருந்தபடியால், அவன் யாரென்பதை ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். அதனால் அவன் அவர்மேல் ஒன்றும் சுமத்த முடியவில்லை. ஆமென். சரி. ஆகவே யூதாஸ் பொக்கிஷதாரியாயிருந்து பண ஆசையினால் விழுந்து போனான் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள்.
78194 இன்றைய சபையும் அவ்வாறே பண ஆசையின் காரணமாகவே விழுந்து போயிருக்கிறது. கத்தோலிக்க சபையானது நோன்புகளுக்கு, மரித்துப் போனவரின் ஆத்துமாக்களுக்காகவும் மற்றவற்றிற்காகவும் ஜெபம் ஏறெடுப்பதற்கென சபையாரிடம் காசு வசூலிக்கின்றதைக் குறித்து நாம் கடந்த இரவு சிந்தித்தோம். கத்தோலிக்க சபையின் குமாரத்திகளான பிராடெஸ்டெண்டுகளும் இன்று பணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். எல்லாமே பணத்தையொட்டி அமைந்துள்ளது. யூதாஸ் பணத்தின் காரணமாக விழுந்தான். அவன் எங்கே விழுந்தானோ, பிராடெஸ்டெண்டுகளும் அங்கு தான் விழுகின்றனர்.
79195 கவனியுங்கள். மங்கிய குதிரையின் மேல் ஏறிக்கொண்டு இவன் தன் கடைசி சவாரியைச் செய்கிறான். அவன் இப்பொழுது தன்னுடைய கடைசி சவாரியில் இருக்கிறான். இப்பொழுது, இது நமது நாட்களில் நிறைவேறாது. அது பின்பு சம்பவிக்கும். இந்த முத்திரையின் இரகசியம் முன்னறிவிக்கப்படுகின்றது. காரணம், சபையானது எடுக்கப்பட்டிருக்கும். பாருங்கள். கிறிஸ்துவானவர் பூமியில் தோன்றும்போது… இந்த மனிதன் தோன்றி முழுவதும், முழுவதுமாக பிசாசாகிறான். இவன் அந்திக்கிறிஸ்துவாக முதலில் தோன்றி, பின்னர் கள்ளத் தீர்க்கதரிசியாக மாறி, முடிவில் மிருகமாக—பிசாசாகவே ஆகிறான். எல்லா வண்ணங்களும் சேருவதனால் உண்டாகும் மங்கின நிறம் கொண்ட குதிரையின் மேல் அவன் சவாரி செய்து, மரணம் என்று அழைக்கப்படுகிறான். 196 ஆனால் நமது கர்த்தர் இங்கே பூமியில் வெண்மை நிறமுள்ள குதிரையின்மேல் தோன்றுவார். அவர் முற்றிலும், தேவனுடைய வார்த்தை ஒரு மனிதனுக்குள் குடிகொண்டிருக்கும் இம்மானுவேலாக இருப்பார். பாருங்கள்? அவர்களுக்குள் அவ்வளவு வித்தியாசம் உண்டு. அதுதான் அவர்களுடைய அந்த வித்தியாசம் ஆகும்.
80197 கவனியுங்கள். அந்திக்கிறிஸ்துவோ எல்லா நிறங்களும் சேருவதனால் உண்டாகும் மங்கின நிறமுள்ள குதிரையின்மேல் காணப்படுகின்றான். குதிரையென்பது ஒரு மிருகம். மிருகம் வல்லமைக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. அவன் எல்லா வல்லமையும் ஒருங்கே கொண்டவனாயிருக்கிறான். ஏன்? அது அரசியல் வல்லமை, அது—அது தேசங்களின் வல்லமை, அது மதசம்பந்தமான வல்லமை, அது பிசாசின் வல்லமையாயுள்ளது. எல்லாவிதமான வல்லமையும் ஒருங்கே கொண்டதன் அறிகுறியாக அவன் மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறான். அவன் எல்லா விதமான வல்லமையும் உடையவனாயிருக்கிறான். 198 ஆனால் இயேசு சவாரி செய்துகொண்டு வருவது ஒரே நிறமுள்ள குதிரையாகும்—வார்த்தை. ஆமென்! 199 ஆனால் அந்திக்கிறிஸ்து சவாரி செய்வது, சிவப்பு, வெள்ளை, கறுப்பு என்னும் மூன்று நிறங்கள் ஒருங்கே கொண்ட ஒரு குதிரை. வெள்ளைக் குதிரை, சிவப்புக் குதிரை, கறுப்புக் குதிரை இவை சித்தரிக்கும் வல்லமைகளை அவன் ஒருங்கே கொண்டிருக்கின்றான். ஒன்றில் மூன்று கிரீடங்கள். பாருங்கள்? நிச்சயமாக.
81200 ஓ, இந்த கிரீடத்தை நான் நேரில் மிக அருகில் நின்று கண்டேன். அது ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு, அது பெரிய பூட்டினால் பூட்டப்பட்டிருந்தது. அதனால் அதனை நான் என் கையில் எடுக்க முடியவில்லை. மூன்று கிரீடங்கள், ஆகவே, அது உண்மையென்பது எனக்குத் தெரியும். ஊம்—ஊ. அவன் பரலோகத்துக்கும், பாவ விமோசன ஸ்தலத்துக்கும், பூமிக்கும் பிரதிகுருவாக இருக்கிறான் என்பதற்கு அறிகுறியாயிருக்கின்றன. 201 மூன்று வல்லமைகளும் ஒன்றாக இணைந்து மங்கின நிறத்தில் கலந்துள்ளன! அவன் மூன்று வல்லமைகளும்—அரசியல் வல்லமை—மத சம்பந்தமான வல்லமை. பிசாசின் வல்லமை இவைகளை ஒருங்கே கொண்டிருப்பதால், அவை மரணத்தை விளைவிக்கின்றன. அரசியல், அரசியலில் அவன் ராஜாவாக இருக்கிறான். சாத்தான் மிகவும் சாமார்த்தியமுள்ளவன். வ்யூ! நிச்சயமாக. அவனைத் தோற்கடிக்க முயலவேண்டாம். கர்த்தர் பேரில் மாத்திரம் நம்பிக்கை வைத்திருங்கள். அவ்வளவு தான். 202 நான் உங்களுக்கு முன்பு பலமுறை கூறியதுபோன்று, சாமார்த்தியம், கல்வியறிவு அதுபோன்ற அனைத்தும் தவறான தரப்பிலிருந்து வருகின்றது. இது உண்மையன்று வேதத்தின் வாயிலாக நாமறியலாம். இது உண்மையென்று வேதத்தின் வாயிலாக நமறியலாம். காயீனின் சந்ததி என்னவாயினர் என்று வேதத்தில் பாருங்கள்; பின்பு சேத்தின் சந்ததியார் என்னவாயிருந்தனர் என்றும் பாருங்கள். நான் அறியாமையை (Ignorance) ஆதரிக்கிறேன் என்று நீங்கள் எண்ண வேண்டாம். இல்லை ஐயா. நீங்கள் வேதத்தில் காணப்படும் எந்த நபரையாவது எடுத்துக்கொள்ளுங்கள்…
82203 ஆகவே பவுல் என்னும் கல்வியறிவு படைத்த ஒருவனைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அவன் கிறிஸ்துவை அறிவதற்கென, அவன் பெற்றிருந்த கல்வியறிவு அனைத்தையும் மறக்க வேண்டியதாயிருந்தது. அவன், “நான் உங்களிடம் மனுஷ ஞானத்திற்குரிய நய வசனத்துடன் வராமல், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையுடன் வந்திருக்கிறேன்” என்றான். அது உண்மையாகும், பரிசுத்த ஆவியின் வல்லமை. 204 மற்றவர்களையும் கவனித்துப் பாருங்கள். தேவன் உபயோகித்தவர்களில் சிலர் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத அளவுக்கு படிப்பறியாதவர்களாயிருந்தனர். காலங்களினூடாக தீர்க்கதரிசிகளை எப்படிப்பட்டவராயிருந்தனர் என்று, ஆராய்ந்து பார்த்து அறிந்துகொள்ளுங்கள். நான் சொல்வது உங்களுக்குப் புரிகின்றதா? 205 பாருங்கள், சாமர்த்தியமும், கல்வியறிவு, ஞானம். ஞானம் உங்களை சரியாக தேவனை விட்டு அகலும்படி செய்கின்றன.
83206 அவன் மூன்று வல்லமைகளைக் கொண்டிருக்கின்றான் அல்லது அவன் மூன்றின்—மூன்றின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறான்: பூமி, பரலோகம், பாவ விமோசன ஸ்தாம். 207 அவனோ ஒரு திரித்துவமாயிருக்கிறான். அந்தவிதமாகத்தான் அவன் அமைந்துள்ளான். அவன் திரித்துவத்தின் மேல் சவாரி செய்கிறான். அவன் வல்லமை திரித்துவமாயிருக்கிறது. அவனுடைய கிரீடம் ஒரு திரித்துவம். அவனுடைய குதிரை ஒரு திரித்துவம். அவனே ஒரு திரித்துவம், அவன் வல்லமை ஒரு திரித்துவம். அவன் கிரீடம் ஒரு திரித்துவம், அவன் (சவாரி செய்யும்) குதிரை ஒரு திரித்துவம்—அவனுடைய அலுவல்கள் (office) நான்கு என்னும் எண்ணிக்கை என்பதை இங்கு நாம் பார்க்கலாம். பாருங்கள்? மறுபடியும் நான்கு. சரி. 208 அவனுடைய ஊழியம் மூன்று கட்டங்களில் அமைந்துள்ளது—அந்திக் கிறிஸ்து, கள்ளத் தீர்க்கதரி, மிருகம், ஆனால் அவன் ஒரு நபர் ஆகும். பாருங்கள்? அவை மூன்றும் நிழல்களாக உள்ளன. பாருங்கள். இப்பொழுது மூன்று நிழல்கள் உள்ளன, இப்பொழுது அவைகள் ஒரு மனிதனே. 209 தேவனும் தண்ணீர், இரத்தம், ஆவி என்னும் மூன்றில் தம்மை வெளிப்படுத்துகிறார். இவை மூன்றும் ஒரு கிறிஸ்தவனை தேவனுடைய வார்த்தையால் தேவ புத்திரனாக ஆக்குகிறது. பாருங்கள்? இந்த மூன்று வல்லமைகளும் அவனைப் பிசாசாக ஆக்குகின்றன. பாருங்கள்? தண்ணீர், இரத்தம், ஆவி இவை மூன்றும் தேவனால் உண்டாயிருக்கின்றன. அவை ஒருவனைத் தேவபுத்திரனாகும்படி செய்கிறது. ஆனால் அந்த அரசியல், மதம், அசுத்த ஆவியின் வல்லமை இம்மூன்றும் ஒருங்கிணைந்து அவனை அந்தப் பிசாசாகும்படிச் செய்கின்றது.
84210 கிறிஸ்துவின் முதல் வருகை, ஒரு மனிதனாக தோன்றினார். மூன்று முறை வருகிறார். மூன்று என்னும் எண்ணிக்கையில் பரிபூரணப்படுகிறார். பாருங்கள்? (ஆனால் சாத்தானின் எண்ணிக்கை நான்காகும். அவன் வருவதைக் கவனியுங்கள்.) கிறிஸ்துவை கவனியுங்கள். முதலாவதாக, கிறிஸ்து இரத்தம் சிந்தி மரிப்பதற்கென மனிதனாகத் தோன்றினார். அது சரியா? அதுவே அவருடைய முதலாம் வருகை. எடுத்துக் கொள்ளுதலின்போது அவர் இரண்டாம் முறை வருகிறார். அப்பொழுது நாம் அழியாமையைத் தரித்து அவரை ஆகாயத்தில் சந்திப்போம். அவர் மூன்றாவது முறை வருகையில், அவர் தேவன் அவதாரமாக இருக்கிறார். ஆமென். [சகோதரன், பிரான்ஹாம் தன் கரங்களை ஒரு முறை கொட்டுகிறார்—ஆசி.] தேவன், இம்மானுவேல் பூமியை ஆளுவதற்கென வருகிறார்! அது உண்மை. அவர் மூன்று முறை மட்டுமே வருகிறார். 211 சாத்தானின் நான்காம் கட்ட சவாரியைக் கவனியுங்கள். இந்த நான்காம் கட்ட சவாரியாளன் மரணம் என்று அழைக்கப்படுகிறாள். “தேவனிடமிருந்து நித்திய பிரிவினையை உண்டாக்குவதே” மரணமாகும். அதுவே மரணம் என்பதின் அர்த்தம். தேவனிடத்திலிருந்து நித்தியமாக பிரிக்கப்பட்டிருப்பது. 212 இப்பொழுது இவன் யாரென்பதை நாம் வேதத்திலிருந்து பார்த்தோம். அவன் மலைகளின்மேல் இருக்கிறானென்றும், இன்னும் அவனைக் குறித்த வேறு அநேக விவரங்களை நாம் ஆராய்ந்தோம். இப்பொழுது கழுகானது அவனை “மரணமென்று” அழைக்கிறது. அவர் அவனை அவ்விதமே அழைக்கிறார். மரணம் என்பது நித்திய பிரிவினையை குறிக்கின்றது என்று ஞாபகங்கொள்ளுங்கள். பாருங்கள்.
85213 பரிசுத்தவான்கள் மரிப்பதில்லை என்று நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் மறிக்கிறதில்லை, நித்திரையாயிருக்கிறார்கள். “என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு”. அது மிகவும் உண்மையாகும். இயேசு “அவன் நியாயத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தினின்று நீங்கி ஜீவனுக்குள் பிரவேசிக்கிறான். நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்றார். “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்”. லாசரு மரித்துப் போனானா? “அவன் நித்திரையடைந்திருக்கிறான்”. 214 “பயப்பட வேண்டாம். இந்தச் சிறுபெண் மரிக்கவில்லை. நித்திரையாயிருக்கிறான்”. அதற்காக அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். நான் கூறுவது சரிதானா? ஓ, என்னே! பாருங்கள். பரிசுத்தவான்கள் மரிப்பதில்லை.
86215 தேவனிடமிருந்து பிரிக்கப்படுதலே மரணம் எனப்படும், நித்திய மரணம். இந்தநபர் “மரணம்” என்னும் பெயரைக் கொண்டிருக்கிறான். எனவே, அவனிலிருந்து விலகியிருங்கள். அவன் யார்? ஒரு ஸ்தாபன முறைமை. அதுதான் ஸ்தாபனமாக்கப்பட்ட முதலாம் சபை, முதலாவது ஒன்று. நிசாயா மகாநாட்டில் கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தியின் ஆலோசனையை ஏற்று ஸ்தாபிக்கப்பட்டது. 216 முதல் மணவாட்டியான ஏவாள். தன் கணவனை அறியும் முன்பு எவ்வாறு தேவனுடைய வார்த்தையில் அவிசுவாசங்கொண்டு ஏதேனில் விழுந்து போனான் என்று கடந்த இரவு நாம் பார்த்தோம். அவ்வாறே பெந்தெகொஸ்தே நாளன்று உருவான ஆவிக்குரிய மணவாட்டியும், கிறிஸ்து அவளை அடையும் முன்பு என்ன சம்பவித்தது? அவன் ரோமாபுரியில் விழுந்து போனாள். என்ன? ஸ்தாபன கோட்பாடுகளுக்காக தன் வார்த்தையின் கற்பைப் பறிகொடுத்தாள். ஆமென்! ஓ, என்னே! 217 நான்—நான்—நான்…அதை நினைக்கும் போதே எனக்கு மறுபடியும் ஊக்க உணர்ச்சி மீண்டும் தோன்றுகிறது. ஆம், ஐயா. பைத்தியக்காரனைப் போல் நடிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை. நான் அவ்வாறு அதைக் கருதவில்லை. ஆனால் சற்று…அது எனக்கு என்ன செய்கிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. நான் அந்த அறையில் நான்கு நாட்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நான் சற்று மனித உணர்வடைய சில காரியங்களை கூற வேண்டியதாயிருக்கிறது. நான் என்ன கருதுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். ஆம்… சரி. இவைகளைக் கூறும்போது எனக்கு அநேக தரிசனங்கள் கிடைக்கின்றன. அது உண்மை. பாருங்கள்? நான் என் சுய நிலைக்கு வருவதற்கெனவும் மறுபடியும் மாற்றி அமைத்துக் கொள்ளவும் (shake) சில காரியங்களைச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. புரிகிறதா?
87218 நான் ஜனங்களின் சிந்தனைகளைப் பகுத்தறிந்து கூறும்போது, எப்பொழுதாவது என்னை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அப்பொழுது நான் ஜனங்களை சிரிக்க வைக்க வேண்டுமென்று சிலவற்றைக் கூறுவேன். அவர்களை அழவைக்கும் சில காரியங்களையும் நான் கூறுவது வழக்கம். அவர்களைக் கோப மூட்டுவதற்கென்று சிலவற்றைச் சொல்லுங்கள். அந்த வெளிச்சத்தை நான் கண்ட மாத்திரத்தில் அந்த மனிதன் அதை எவ்விதம் ஏற்றுக் கொள்ளுகிறான் என்பதைக் காண நான் ஏதாவது ஒன்றைக் கூறுவேன். அப்பொழுது நான் அந்த வெளிச்சம் எங்கே உள்ளது என்றும் அறிந்து கொள்வேன். அது யார் மேல் தங்குகின்றதென்றும், அது அழைக்கின்றதா அல்லது இல்லையா என்பதையும் நான் அறிந்து கொள்ளுவேன். இல்லையெனில் …அது உண்மையான விசுவாசியின் மேல் தங்கும்போது, சரி. அப்பொழுது நான், “இன்னின்னாராகிய நீர்” என்று அந்த வெளிச்சம் தங்கியிருக்கும் மனிதரின் பெயரைக் கூறுவேன். பாருங்கள். 219 அதன் பின்னர் ஆவியானவர் என்னை அபிஷேகம் செய்யும்போது, எல்லா இடங்களிலும், அந்த அறையைச் சுற்றி சுற்றி வெளிச்சம் விட்டு விட்டு பிரகாசிப்பதை நான் காண்பேன். ஆகவேதான் நான் ஒன்றைக் கூறிக்கொண்டேயிருந்து விட்டு, மறுபடியும் அதையே தொடக்கத்திலிருந்து கூறத் தொடங்குவேன். பாருங்கள். 220 கடந்த ஞாயிறு முதற்கொண்டு, நான் அறையில் உட்கார்ந்து பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தினால் நிறையப்பட்டு இவ்வெளிப்பாட்டுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். எனவே நான் கூறுவது முற்றிலும் உண்மை என்பது எனக்குத் தெரியும். நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்கள் என்று நானறிவேன். இந்த வாரத்தின் கடைசியில் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்கள். ஊம்—ஊ. பாருங்கள்? பாருங்கள்? சரி. பாருங்கள்?
88221 மரணம் என்பதற்கு, “தேவனிடத்திலிருந்து நித்திய காலமாக ஏற்படும் பிரிவினை” என்று பொருள்படும். இப்பொழுது பரிசுத்தவான்கள் மரிப்பதில்லை என்பது நினைவிருக்கட்டும். 222 அவனுடைய மணவாட்டிக்கு ஒரு மங்கின நிறமுள்ள குதிரை கொடுக்கப்பட்டது…நான் கூறுவது, இந்த குதிரை சவாரி செய்பவனுக்கு ஒரு மங்கின நிறமுள்ள குதிரை, அவன் சவாரி செய்வதற்கென அளிக்கப்பட்டது. அவன் சவாரி செய்யும்படியாய் அவனுக்கு இந்த—இந்த மங்கின நிறமுள்ள குதிரை கொடுக்கப்பட்டது. அவன் மரணமென்னும் மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறான். அது என்ன என்று நாம் இப்பொழுது அறிவோம். அது எந்த சபை என்றும் நாம் அறிவோம். 223 அவள் ஒரு “வேசி” மாத்திரமல்ல. அவள் “வேசிகளின் தாய்” என்பதை நாம் சென்ற இரவு பார்த்தோம் என்பது நினைவிருக்கட்டும். 224 அவளை வேசியாக்கினது எது என்று நாம் கண்டுபிடித்தோம். அவ்விதமான ஸ்திரீயானவளே வேசி என்று அழைக்கப்படுகிறாள். நான் சற்று…ஆண்களும் பெண்களும் ஒருங்கே கூடியிருக்கும்போது, வேசி (whore) என்று கூறுவது சரியல்ல. ஆயினும் வேதம் அவளை அவ்வாறு அழைக்கிறது. நீங்கள் பாருங்கள்? ஒரு ஸ்திரி தான் செய்த விவாக பொருத்தனைக்கு உண்மையாக வாழாவிடில் அவள் வேசி எனப்படுவாள் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். இவள் தன்னை “பரலோகத்தின் ராணி” என்று கூறுகின்றாள் என்பதையும் நீங்கள் கவனியுங்கள். (ஆனால் உண்மையில் தேவனுடைய மணவாட்டியே பரலோகத்தின் ராணி. கிறிஸ்து தேவனாயிருக்கிறார்.) இந்தப் பெயரைச் சூடிக்கொண்டிருப்பவள் வேசித்தனம் செய்து, பூமியின் ராஜாக்கள் அவளுடன் வேசித்தனம் செய்வதற்குக் காரணமாயிருக்கிறாள். ஐசுவரியவான்களும், பிரபலம் வாய்ந்தவர்களும், ஏன் முழு உலகமே, அவள் பின்னால் செல்கின்றது. பாருங்கள்?
89225 அவள் சில குமாரத்திகளை உண்டு பண்ணினாள். அவர்களும் வேசிகள் என்பதை நாம் கண்டறிகிறோம். வேசி என்பவள் ஒரு விலை மகள், அதேக் காரியம்தான். அவள் விபச்சாரம், வேசித்தனம் போன்ற செயல்களில் ஈடுபடுபவள். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஸ்தாபனங்களை அமைத்துக்கொண்டு பெந்தெகொஸ்தேயினர் உள்பட முழு கூட்டமே மனிதனால் ஏற்படுத்தப்பட்ட முறைமைகளைப் போதித்தனர். 226 இப்பொழுது பெந்தெகொஸ்தேயினரே, உங்கள்—உங்கள் மனசாட்சியை போக்கிக் கொள்ளாதீர்! நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூறட்டும். நாம் இந்த காரியத்தை நேர்முகமாக நோக்கிப் பார்ப்போம். சண்டையிட்டுக் கொள்வதற்கு இது நேரமில்லை. நமக்கு ஏற்கனவே காலதாமதமாகி விட்டது. நான் கூறுவதைக் கேளுங்கள். 227 நாம் லவோதிக்கேயா சபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லா சபையின் காலங்களைக் காட்டிலும் இது மிகவும் நிந்திக்கப்படத்தக்க சபைக்காலமாக அமைந்துள்ளது. இது வெதுவெதுப்பான ஒரு சபை. அன்றியும் கிறிஸ்து வெளியே காணப்பட்டு, உள்ளே நுழைய முயலும் சபையின் காலமும் இதுவே. இப்பொழுது சென்று கொண்டிருக்கும் பெந்தெகொஸ்தே செய்தி அவரை அவ்வாறு செய்துள்ளது. “நீங்கள் ஐசுவரியவான்கள்” என்று நீங்கள் கூறிக்கொள்கிறீர்கள். மனுஷரே நீங்கள் ஆரம்பத்தில் தரித்திரராய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உண்மையாகவே ஐசுவரியத்தைச் சேர்த்துக் கொண்டீர்கள். பாருங்கள். “உங்களுக்கு ஒரு குறைவுமில்லையென்று” நீங்கள் சொல்கின்றீர்கள். ஓ! நீங்கள் எவ்விதம் இருந்தீர்கள். 228 ஆனால் கிறிஸ்து உங்களைப் பார்த்து, “நீ நிர்வாணியும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்பாக்கியமுள்ளவனுமாயும் இருக்கிறதை அறியாதிருக்கிறாய்” என்றார். 229 இப்பொழுது ஒரு மனிதன் தெருவில் நிர்வாணியாய்க் கிடந்தால், அவன் அதை அறிந்திருந்தால், ஏன்?, அவன் நிர்வாணத்தை மறைக்க முயலுவான்! ஆனால் அவன் நிர்வாணி என்பதை உணராமலிருக்கும்போது, உங்களால் அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் எடுத்துக்கூற முடியாது. அப்படியானால் அவன் ஒரு பயங்கர நிலைமையில் இருக்கிறான். தேவன் அப்படிப்பட்டவனிடம் இரக்கம் பாராட்டுவாராக! சரி. கவனியுங்கள். ஓ, என்னே!
90230 இப்பொழுது, இந்த மனிதனாகிய அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டியாகிய கள்ள சபை மனந்திரும்ப வேண்டுமென்று தியத்தீரா சபையின் காலத்தில் அவளுக்குத் தவணைக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவளோ மனந்திரும்பவில்லை. உங்களுக்கு அது ஞாபகம் இருக்கிறதா? உங்களால்… 231 நல்லது, நாம் ஒரு நிமிடம் பின்னோக்கிச் செல்வோம். ஒரு நிமிடம் பின்சென்று அதைக் காண்பது நமக்கு பாதகமாயிராது. நாம் சற்று வெளிப்படுத்தின விசேஷம் இரண்டாம் அதிகாரத்திற்கு ஒரு நிமிடம் திரும்பிச் செல்வோம். நாம் அதை சற்று வாசிப்போம். இப்பொழுது தியத்தீரா சபையைப் பற்றி 2-ம் உம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பாதகத்தை வாசிப்போம். இப்பொழுது இதை கவனியுங்கள், இப்பொழுது சற்று துரிதமாக. என்னே, நாம் கிட்டத்தட்ட ஆராதனையை முடிக்க வேண்டிய நேரமாகிவிட்டது. இனியும் நாம் தியானிக்க வேண்டிய பொருளைக் குறித்து பிரசங்கிக்கத் தொடங்கவேயில்லை. ஆனால், கவனியுங்கள், தியத்தீரா. இப்பொழுது 2-ம் அதிகாரம் 18-ம் வசனத்திலிருந்து அது துவங்குகிறது.
91தியத்தீரா சபையின் தூதனுக்கு (அவன் தான் அந்த செய்தியாளன்) நீ எழுத வேண்டியது என்னவெனில்: அக்கினி ஜீவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவ குமாரன் சொல்லுகிறதாவது: உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் ஊழியத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும் உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள்.
92232 அங்குதான் காரியம். நீங்கள் அவளை வேதத்தின் மூலம் அறிவீர்கள். அவள் ஆகாபின் மனைவியாவாள். ஆனால் இந்த ஸ்திரீ—சபை—யேசபேல், கள்ளத்தீர்க்கதரிசியின் மனைவி, உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசி என்று கருதப்படுகிற போப், சரி, அவ்வாறு உண்மையான தீர்க்கதரிசி என்று கருதப்படுகிற—அவனுடைய மனைவியாகிய யேசபேல். இப்பொழுது ஆகாப் யூத குலத்தில் பிறந்த ஒருவன். ஒரு உண்மையான யூதனாக அவன் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவன் ஒரு அயோக்கியன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் அவன் தன் மனைவி அவனை வழிநடத்த, அவள் விருப்பத்திற்கிணங்கி அவன் எல்லாவற்றையும் செய்தான். யேசபேல் அவன் பணத்தை அபகரித்து, அவள் விருப்பப்படி அவனை இங்குமங்கும் வழி நடத்தினாள். யேசபேல் தன்னை தீர்கதரிசியென்று சொல்லிக் கொள்கிறாள், (அதைக் கவனித்தீர்களா?) என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போஷித்து (யேசபேலின் போதகம் நாடு முழுவதும் பரம்பினது) அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணை கொடுத்தேன்; (பாருங்கள்?) தன் வேசி மார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விரும்பவில்லை. 233 இந்த அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்: இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி (அதாவது நரகத்தில் தள்ளி) அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளை விட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்தில் தள்ளி (அதாவது உபத்திரவ காலத்திற்குள் அவர்கள் செல்வார்கள்; சபையல்ல). 234 இப்பொழுது இங்கே கவனியுங்கள்: அவளுடைய பிள்ளைகளையும் (வேசிகளை) மரணத்தினால் கொல்லுவேன்… (ஆவிக்குரிய மரணம்) 235 நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அது வார்த்தையாயுள்ளது. “அவர்களை மரணத்தினால் கொல்லுவேன்”, அவர்கள் கொல்லப்பட்டால், அவர்கள் நித்திய காலமாக தேவனிடமிருந்து பிரிக்கப்படுவார்கள். சரி, தியத்தீரா சபை மனந்திரும்ப வேண்டுமென்று கிறிஸ்து அவளுக்கு தவணை கொடுத்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
93236 தியத்தீரா சபையின் காலம் இருளின் காலமாகும். அக்காலத்தில் கறுப்புக் குதிரையின் மேலிருந்தவன் சவாரி செய்து எல்லா ஆராதனைக்கும் ஜெபங்களுக்கும், நோன்புகளுக்கும் காசு வசூலித்தான். இப்பொழுது அவனுடைய கறுப்புக் குதிரையைக் கவனியுங்கள். அவன் தியத்தீராவின் காலத்தில் மனந்திரும்ப மறுத்த பிறகு, (என்ன?) கறுப்புக் குதிரையிலிருந்து மாறி மங்கின நிறமுள்ள குதிரையின் மேலேறி, மரணம் என்னும் பெயர் கொண்டு, தன் ஊழியத்தின் கடைசி கட்டத்தை அடைகிறான்.
94237 இப்பொழுது, தனிப்பட்ட நபர் ஒவ்வொருவருக்கும் சிறிது அதிர்ச்சி கொடுக்க விருபுகிறேன். ஒவ்வொரு முறையும் தேவனுடைய அழைப்பை நீ மறுத்தால், ஒரு நாளில் அதை நீ கடைசி முறையாகச் செய்ய நேரிடும். தியத்தீரா சபைக்கு மனந்திரும்பும்படியாய் தவணை கொடுக்கப்பட்டு அது முடித்துவிட்டது. தேவனுடைய பொறுமை எப்பொழுது மனிதனுடன் போராடுவதில்லை. பாருங்கள்? 238 ஆகவே தேவனுடைய அழைப்பை அவள் ஏற்றுக்கொள்ள மறுத்த பிறகு அவள் நிலை மாறி, “மரணம்” பிரிவினை என்னும் பெயரைக் கொண்டாள். தேவன், “நான் அவளுடைய பிள்ளைகளாகிய பிராடெஸ்டெண்டுகளையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நித்திய பிரிவினையால் கொல்லுவதாக” அவளிடம் சொன்னார். அங்குதான் காரியம். தியத்தீரா சபையின் காலம்—இருளின் காலம். கறுப்புக் குதிரையின் மேலிருக்கிறவன். இப்பொழுது அவன் ஊழியத்தின் கடைசி கட்டத்தை அடைந்து மரணத்தை அளிக்கிறான். 239 சபையின் காலங்கள் முத்திரைகளுடன் எவ்வளவு பூரணமாய்ப் பொருந்துகின்றதென்று பார்த்தீர்களா? அதனால் இதன் விளக்கம் சரியென்று நாம் அறிந்துகொள்கிறோம். பரிசுத்த ஆவியானவர் தவறு செய்வதேயில்லை. நாம் சபையின் காலங்களைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, அது சரியென்று அவர் நமக்கு ஒரு மகத்தான ரூபகாரப்படுத்துதலை அளித்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 240 தேவனுடைய அன்பையும், நீடிய பொறுமையையும் பாருங்கள்! அவர் தியத்தீரா சபையின் மேல் நியாயத்தீர்ப்பு செலுத்தும் முன்பு, அவள் மனந்திரும்ப வேண்டுமென்று அவளுக்குத் தவணை கொடுத்தார். கர்த்தருடைய நாமத்தில் நான் இதைச் சொல்லுகிறேன்: மனந்திரும்ப வேண்டுமென்று அவர் பிராடெஸ்டெண்ட் சபைகளுக்கும் தவணை அளித்துள்ளார். ஆனாலும் அவள் ஒருக்காலும் மனந்திரும்பமாட்டாள். இச்செய்திகள் எல்லாவிடங்களிலும் அசைவை உண்டு பண்ணியிருக்கின்றன. ஆயினும் அவள் மனந்திரும்பமாட்டாள். நீங்கள் எவ்வளவாக இச்செய்தியை விளக்கிக் காண்பித்தாலும் அவள் தன் சொந்த கோட்பாடுகளிலும் பிரமாணங்களிலும் நிலைத்திருக்கப்போகிறாள்.
95241 அன்றொரு நாள் சிக்காகோவில் அங்கே அமர்ந்திருந்த அநேக போதகர்கள் முன்னிலையில் நான் கூறினபோது …அவர்கள் “சர்ப்பத்தின் வித்து” போதகத்தைக் குறித்தும், மற்றவற்றைக் குறித்தும் என்னிடம் தர்க்கித்து மடக்கப் பார்த்தனர். அப்பொழுது நான், “உங்களில் யாராவது ஒருவர் வேதாகமத்தை எடுத்துக்கொண்டு என் பக்கத்தில் வந்து நில்லுங்கள்” என்றேன், அப்பொழுது யாவரும் ஒன்றும் சொல்லவில்லை. 242 அதைக் கண்ட டாமி ஹிக்ஸ் (Tommy Hicks) என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, அதைப் போன்ற ஒன்றை நான்—நான் அதுவரை கேட்டதேயில்லை. அச்சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ள முந்நூறு ஒலிநாடாக்கள் எனக்குத் தேவை. என்னுடைய எல்லா ஊழியக்காரருக்கும் நான் அவைகளை அனுப்பப் போகிறேன்” என்றார். 243 சுமார் ஐம்பது அல்லது எழுபத்தைந்து பேர், “நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியுமாக ஞானஸ்நானம் பெறுவதற்கு வருகிறோம்” என்றனர். அவர்கள் வந்தார்களா? அவர்களில் ஒருவராவது வரவில்லை. ஏன்? மனந்திரும்ப அவர் அவர்களுக்கு தவணை கொடுத்தார். உங்கள் பிள்ளைகளை அவர் மரணத்தில், ஆவிக்குரிய மரணத்தில் ஆழ்த்துவார். 244 கர்த்தருக்குச் சித்தமானால் நாளை இரவு அல்லது சனியிரவு வரப்போகும் வாதைகளைக் குறித்து பேசலாம். அப்பொழுது என்ன நடக்குமென்று நீங்கள் கவனித்துப் பாருங்கள்.
96245 அவர் எகிப்துக்கு அளித்தது போல, அவர் எகிப்துக்கு மனந்திரும்ப தவணையளித்தார். எகிப்தில் நேர்ந்த கடைசி வாதை என்ன? மரணம். 246 பெந்தெகொஸ்தே சபையைத் தாக்கிய கடைசி வாதையும் அதுவே, ஆவிக்குரிய மரணம், அவள் மரித்துவிட்டாள். கர்த்தரின் நாமத்தில் இதை சொல்லுகிறேன். ஆவிக்குரிய விதத்தில் அவள் மரித்துவிட்டாள். அவள் மனந்திரும்ப அவர் தவணையளித்தார். அவளோ அதைப் புறக்கணித்து விட்டாள். இப்பொழுது அவள் மரித்த நிலையில் இருக்கிறாள். அவள் மறுபடியும் எழுந்திருக்கவேமாட்டாள். 247 அந்த ஜனங்கள் எபிஸ்கோப்பிலிய (Epicopalians) போதகர்களை வரவழைத்து, பரிசுத்த பிதாவே இன்னார் இன்னார் என்று அவர்களை அழைக்கின்றனர். ஏன்? அவர்கள் தங்களைக் குறித்து வெட்கமடைய வேண்டும். ஒரு மனிதன் எவ்வளவாக குருடாக முடியும். உறங்கிக் கொண்டிருந்த புத்தியில்லாத கன்னிகை எண்ணெய் வாங்க வந்தபோது, அவளுக்கு எண்ணெய் கிடைக்கவில்லை என்பதாய் இயேசு கூறவில்லையா?
97248 ஜனங்கள், “நான் பரிசுத்த ஆவியைப் பெற்று விட்டேன். நான் அன்னிய பாஷையில் பேசினேன்” என்று சொல்லுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் நம்முடைய சபைபோன்ற ஒரு சபைக்கு வர விரும்புவதில்லை. “ஓ, அவ்விதமான ஸ்தலத்துக்குச் செல்ல எனக்கு விருப்பமில்லை என்று அவர்கள் சொல்லுகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்”. அப்படிப்பட்ட நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றதாகக் கூறிக்கொள்கிறீர்களா? 249 ஆனால் உங்களுடைய கௌரவமான முறைகள்தான் உங்களுக்கு அவசியமாயிருக்கிறது. நீங்கள் பாபிலோனில் தங்கியிருந்து அதே சமயத்தில் பரலோகத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள். நீங்கள் இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் உலகத்தில் நிலைத்திருந்து, அதே சமயத்தில் தேவனைச் சேவிக்க முடியாது. தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாதென்று இயேசு கூறினார். ஆகையால் நீங்கள் எதிர்பாராவிடில்… 250 ஆகையால் நீங்கள் உண்மையாக இரட்சிக்கப்பட்டிருந்தால் பரிசுத்த ஆவியானவர் தம்மை ரூபகாரப்படுத்தி, தேவனுடைய வார்த்தையை அவர் கூறியவண்ணமே காண்பிக்கும் கூட்டங்களில் பங்குகொள்ள விரும்புவீர்கள்.
98251 “ஜனங்கள் இத்தகைய கூட்டங்களில் அதிக சத்தமிடுகின்றனர். அது எனக்கு நடுக்கத்தை உண்டாக்குகிறது” என்று ஒருவர் சொன்னார். அப்படியானால் நீங்கள் பரலோகம் செல்வதாயிருந்தால் அங்கேயும் நடுக்கமுறுவீர்கள். இங்கு சத்தமிடுகிறவர்கள் எல்லாரும் பரலோகத்தை அடைந்தால், பரலோகம் எப்படி தொனிக்கும் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள். ஓ, என்னே! கர்த்தர் எவ்விதமாக…விரும்புகிறாரோ… 252 தேவன் நோவாவின் காலத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்ததுபோல இப்பொழுதும் இருக்கிறார். அவர் மிகப் பொறுமையாயிருந்தார். நோவாவின் காலத்தவர் மனந்திரும்ப வேண்டுமென்று நூற்றிருபது வருட காலமாய் அவர் நீடிய பொறுமையுள்ளவராயிருந்தார். அவர்களோ மனந்திரும்பவில்லை. 253 எகிப்தின் நாட்களில் அவர் அநேக வாதைகளை அனுப்பினார். ஆயினும் அவர்கள் மனந்திரும்பவில்லை. அவர் யோவான் ஸ்நானனை அனுப்பினார்; அவர்கள் மனந்திரும்ப மறுத்தனர். 254 தேவனுடைய வார்த்தையைக் கேட்கும் கூட்டத்தாரை இரட்சிக்க எண்ணி அவர் இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
99255 இந்த கடைசி நாட்களில், ஜனங்களை மூல விசுவாசத்திற்கு, தேவனுடைய வார்த்தைக்கு திருப்புவதற்கென ஒரு செய்தியை அனுப்புவதாக அவர் வாக்களித்துள்ளார். ஆனால் அவர்களோ அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதை ஏற்க விரும்பாமல் தங்கள் கொள்கைகளையும் பிரமாணங்களையும் கைக்கொண்டு இறுமாப்புள்ளவராய் இருக்கின்றனர். ஓ, அவர்கள் நினைக்கின்றனர்…ஆகவே தேவதூதனே இறங்கி வந்து அவர்களிடம் சத்தியத்தை உரைத்தாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தேவன் அவ்விதம் செய்யமாட்டார். 256 அவர் படிப்பறிவு சிறிதேனும் இல்லாத மொழியின் முதல் எழுத்துக்களையும், மற்றவற்றையும் சிறிதளவு அறியாத ஒருவனை அதற்கென்று தெரிந்தெடுக்கிறார். ஒன்றுமற்ற ஒருவனை அந்த மாதிரியான ஒரு நபரை தெரிந்தெடுத்து, அவனை அவர் உபயோகித்து, அவன் மூலம் கிரியை செய்கிறார். தாங்கள் ஒன்றுமே செய்ய முடியாதிருந்தும் தங்களைப் பெரிதாக எண்ணிக்கைக்கொள்ளுபவர்களை, தேவன் உபயோகிக்க முடியாது. அவர் எப்பொழுதுமே அதையே செய்திருக்கிறார். தேவனுடைய பார்வையில் நீ முக்கியமானவனாக இருக்க எண்ணினால், நீ முதலில் ஒன்று மற்றவனாக ஆக வேண்டும். ஓ, என்னே!
100257 இப்பொழுது கவனியுங்கள், “அவள் மனந்திரும்ப அவர் தவணை கொடுத்தார். அவளோ மனந்திரும்பவில்லை”. 258 அவர் மறுபடியும் அதைச் செய்துள்ளார். அவளோ மனம் திரும்பவில்லை. அவள் அதைப் புறக்கணித்த காரணத்தால், சாத்தான் அவளுக்குள் முழுமையாக வாசம்செய்ய ஏதுவாகிறது. அது உண்மை. அவள் வார்த்தையைப் புறக்கணித்த காரணத்தால், சாத்தான் அவளுக்குள் குடிகொள்கிறாள். இவ்வாறே பிராடெஸ்டென்ட் சபையும் வேசியாக மாறியுள்ளது. அவள் ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்திய வார்த்தையை புறக்கணித்ததானால், பிசாசு அவளுக்குள் வாசம்செய்ய அது வழி வகுத்தது. அதோ அந்த தொலைவில் (right yonder) அவர்கள் அனைவரும் ஒன்றாக இணையும்பொழுது, அவன் (he) மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குவான். அவர் என்ன கூறினாரோ, அது சரியாக தொடர்ந்து சென்றுக் கொண்டிருக்கின்றது. அது முற்றிலும் உண்மையாகும். ஆமென்! 259 எனக்குக் கல்வியறிவு இருந்தால் இதை நன்றாக விளக்கித் தந்திருப்பேன். ஆனால் எனக்குக் கல்வியறிவு கிடையாது, பரிசுத்த ஆவியானவர் இதை உங்களுக்கு நன்கு வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதை விரும்பும் யாவருக்கும்…அவர் நிச்சயம் வெளிப்படுத்துவார். அது உண்மை. அவர் அதைச் செய்வார். ஆம். கவனியுங்கள்.
101260 அவள் என்ன செய்தாள் என்பதைக் கவனியுங்கள். அவள் மனந்திரும்ப வேண்டுமென்னும் தேவனின் செய்தியைப் புறக்கணித்தாள். அவள் அந்திக்கிறிஸ்துவாக தொடக்கத்தில் இருந்தாள், பின்னர் கள்ளத் தீர்க்கதரிசியாக மாறி, சாத்தான் அவளுக்குள் குடிகொண்டு, அவள் கள்ள போதகத்தை போதித்து வந்தாள். இவையெல்லாவற்றிலும், அவள் மனந்திரும்ப தேவன் அவளுக்குத் தவணை கொடுத்தார். அவளை அவரிடம் இழுத்துக்கொள்ள அவர் முயன்றார். 261 எப்படிப்பட்ட பொறுமை என்று பார்த்தீர்களா? என்னே ஒரு அதிசயமான அன்பு! அந்த அன்பிற்கு இணையேதுமில்லை. அவருடைய முகத்தில் துப்பினவர்களைக் கூட அவர் மன்னித்தார். அதுதான் தேவனின் இயல்வு. பாருங்கள். எனவே…வேண்டாம்… 262 தேவனுடைய செய்தியைப் புறக்கணியாதீர்! கவனியுங்கள், அவள் மனந்திரும்பி, எந்நிலையிலிருந்து அவள் விழுந்தாளோ அந்நிலைக்குச் செல்ல வேண்டுமென்று அவளுக்குக் கூறப்பட்டது. 263 அவள் எதிலிருந்து விழுந்தாள்? வார்த்தையிலிருந்து. சரி. ஏவாள் எதிலிருந்து விழுந்து போனாள்? [சபையோர், “வார்த்தை” என்று கூறுகின்றனர்.—ஆசி.] வார்த்தை! ஸ்தாபனம் எதிலிருந்து விழுந்தது? [“வார்த்தை”] அதுவே தான் ஆகும். பாருங்கள்? தேவனுடைய வார்த்தைக்கு ஒவ்வொரு முறையும் திரும்புவது தவிர வேறு வழியில்லை. பாருங்கள்? அவர்களோ தேவனுடைய வார்த்தையினின்று அவர்களை அகலச் செய்யும் முறைமைகளில் சேர்ந்திருக்கின்றனர். வார்த்தைக்கு அவர்களைக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அது வார்த்தையினின்று அவர்களை அகன்று போகும்படி செய்கிறது. கவனியுங்கள். 264 பாருங்கள், மனந்திரும்ப, மறுபடியும் திரும்பிச் செல்ல அவளுக்குத் தவணையளிக்கப்பட்டது. மனந்திரும்பு (Repent) என்றால், “திரும்பிப்போ, முன்னிலைக்குத் திரும்பு, நேர் எதிர்” என்று அர்த்தமாகும். மனந்திரும்பு என்பது “திரும்பிப்போ” என்பதேயாகும். மனந்திரும்பிச் செல்லும்படியாய் அவளுக்குத் தவணையளிக்கப்பட்டது…
102265 இப்பொழுது அவள் பெந்தெகொஸ்தே நாளன்று ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்த மூல பெந்தெகொஸ்தே சபை என்பது நினைவிருக்கட்டும். எத்தனை வேத மாணாக்கர் இதை அறிவீர்? நிச்சயமாக அவள் பெந்தெகொஸ்தே சபைதான். அவள் அங்கிருந்து எங்கே சென்றாள் என்று பாருங்கள்? அவள் வார்த்தையிலிருந்து விழுந்து, ஸ்தாபன கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டாள். பரிசுத்த ஆவியானவரை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர் “டாக்டர், LL, Ph, Q.U” போன்ற வேத பட்டங்களை அநேகம் பெற்ற பரிசுத்த மனிதனை விரும்பினாள். அதன்பின்னர் அவள் ஒரு போப்பாண்டவரை நியமித்துக்கொண்டாள். பாருங்கள்? நிச்சயமாக. ஆனால் காசு கொடுத்தால் யாராவது ஒருவர் அவளுக்காக ஜெபம் ஏறெடுக்க வேண்டும் என்பதையே அவள் விரும்பினாள். யாரோ ஒருவர்…பணம் கொடுத்துவிட்டால் போதும், அதுவே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. பாருங்கள்? 266 இப்பொழுது, இன்றைக்கும் அவ்வாறே சம்பவிக்கின்றது. ஆலயத்தில் உட்காருவதற்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட இடம் (pew) ஒன்று கிடைத்துவிட்டு, காணிக்கை தட்டில் நிறைய காசுபோட்டால் அது போதுமானது என்று அவர்கள் என்ணியிருக்கின்றனர். அவர்கள் அந்த சபையின் அங்கத்தினராகி விடுகின்றனர். சபை வேறொன்றையும் அவர்களிடத்தில் கூறவோ, கேட்டு தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லையென்று அவர்கள் கருதுகின்றனர். இவர்கள் தாம் வேசியின் குமாரத்திகள். 267 இப்பொழுது, அவள் எங்கிருந்து விழுந்து போனாள்? அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் இவர்களின் மூல வார்த்தையிலிருந்து, அங்கிருந்து அவள் விழுந்து போனாள். பிராடெஸ்டெண்டுகளும் அங்கிருந்துதான் விழுந்தனர். 268 மனந்திரும்புங்கள்! திரும்புங்கள்! தாமதமாவதற்கு முன் தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புங்கள்! ஏற்கனவே காலதாமதமாகிவிட்டது. வரப்போகும் என்றாவது ஒரு நாளில் ஆட்டுக்குட்டியானவர் அவருடைய சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு விடுவார். அப்பொழுது காலதாமதமாகிவிட்டது. ஆகவே, வேசியின் குமாரத்திகள், வேசியுடன் கூட நியாயந்தீர்க்கப்படுவதற்கு முன்னதாக, “திரும்பி வரவேண்டுமென்றும்” இப்பொழுது அழைக்கப்படுகின்றனர்.
103269 இப்பொழுது, நான் உங்களிடம் அடிக்கடி பேசிக்கொண்டு வரும் அந்த தீர்க்கதரிசி எழும்பும்போது, கடைசி செய்தியை அவர்கள் பெறுவார்கள். அந்த தீர்க்கதரிசியைக் குறித்து அறிவதற்கென நான் அநேக புத்தகங்களைப் படித்துக்கொண்டு வருகிறேன். உண்மையுள்ள, ஞானமுள்ள, ஆவிக்குரிய சிந்தையுள்ள எந்த ஒரு மனிதனும் அந்த தீர்க்கதரிசி வந்து செய்தியை அளிக்க வேண்டுமென்பதை அறிந்திருக்கிறான். அவர்கள் அதை அறிவார்கள். பாருங்கள். அது வரும் என்று அவர்கள் அறிவார்கள். அவர்கள்…ஆனால் அவர்களிடமுள்ள தவறு என்னவெனில், “எங்களுக்கு அந்த செய்தி அவசியம். அது நிச்சயம் வரும்” என்றெல்லாம் அவர்கள் சொல்லுகின்றனர். ஆனால் அது உண்மையில் வரும்போது மிகவும் எளிமையாய்க் காணப்படுவதால், சென்ற காலங்களில் அவர்கள் அதைக் கண்டுகொள்ளத் தவறினது போன்று, இப்பொழுதும் அவர்கள் அதைக் காணத் தவறக்கூடும். அது உண்மை. ஓ, “அது வரவேண்டியது அவசியம்” என்று மக்கள் தங்கள் பத்திரிக்கைகளில் எழுதலாம். ஆனால் அது அவர்கள் முன்னிலையில் நிகழும்போது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் கடந்து சென்று விடுகின்றனர். பாருங்கள். எல்லா காலங்களிலும் அவர்கள் அவ்வாறே செய்துகொண்டு வந்துள்ளனர்.
104270 இப்பொழுது கவனியுங்கள். அவள் மனந்திரும்பி மூல வார்த்தைக்குச் செல்ல வேண்டும். அவள் குமாரத்திகளும் மனந்திரும்பி அப்போஸ்தலருடைய போதகமாகிய மூல வார்த்தைக்குத் திரும்பவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு, அவளுடன் கட்டில் கிடையாக்கப்பட்டு கொல்லப்படுவர். அவர்கள் மூல வார்த்தைக்கு திரும்பிச் செல்லும்படிக்கு, அப்போஸ்தல உபதேசத்திற்கு திரும்பிப் போகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால் அவர்களோ தங்களுடைய ஸ்தாபன கோட்பாடுகளில் அமிழ்ந்து போயிருப்பதால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதைக் குறித்து பரிகசிக்க மாத்திரமே செய்வார்கள். 271 அதன்பின்னர் அவர்கள் என்ன செய்கிறார்கள்? முடிவிலே அவர்கள் வெளிப்படுத்தல் 13:14-ல் அவள் செய்வதாக சொல்லப்பட்ட பிரகாரம், மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குவாள். வேறொரு வல்லமை; கவனியுங்கள். ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டியை துன்புறுத்தும்படி நடந்துகொள்ளவே. அந்தவிதமாகத்தான் அவர்கள் செய்து துன்புறுத்துவார்கள். ரோமசபை உண்மையான கிறிஸ்துவின் மணவாட்டியைப் பரிகசிப்பது போன்றே மற்றைய ஸ்தாபன சபைகளும் அவளைப் பரிகசிக்கின்றன. சரியாக. ஆம், ஐயா. வெளிப்படுத்தல் 13:14-ல் அவள் செய்வதாக கூறப்பட்டதுபோல் அவள் உண்மையான ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டியிடம் நடந்து கொள்கிறாள். 272 இப்பொழுது கவனியுங்கள். ஆனால் தேவன் அவள் பிள்ளைகளை, ஸ்தபானங்களை அவளுடைய குமாரத்திகளை ஆவிக்குரிய மரணத்தினால் கொன்று போடுவார் என்னும் தேவனுடைய வார்த்தையின் வாக்குத்தத்தத்தை நாம் காண்கிறோம். இப்பொழுது அது வெளிப்படுத்தல் 2:22-ல் சொல்லப்பட்டிருக்கிறது. அதை மறந்து போகவேண்டாம். “கொல்வது” என்பது மரணத்டிற்குள்ளாக்குவதைக் குறிக்கின்றது. மரணம் என்னும் பதம், “தேவனுடைய சமூகத்திலிருந்து நித்திய காலமாக பிரிந்திருத்தல்” என்று பொருள்படும். அதைச் சற்று யோசித்துப் பாருங்கள், நண்பர்களே. அதைச் சற்று யோசித்துப் பாருங்கள். மனிதனால் உண்டாக்கப்பட்ட எந்த கொள்கைகளையும் நீங்கள் நம்ப வேண்டாம். தேவனுடைய வார்த்தைக்கு முரணயிருக்கும் எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் விலகியிருங்கள்.
105273 இப்பொழுது, கவனியுங்கள். இங்கே, வேதத்திலுள்ளதைக் கவனியுங்கள். அவனுடைய பெயர் பாதாளம் என்று அது கூறுகின்றது…நான் கருதுகிறேன். …மரணம் என்று பெயர். பாதாளம் அவன் பின்சென்றது. 274 இப்பொழுது, இயற்கையில் பாதாளம் எப்பொழுதும் மரணத்தைப் பின்தொடர்கிறது. ஒரு மனிதன் மரித்த பின்பு அவன் பாதாளத்தில், அதாவது கல்லறையில் வைக்கப்படுகிறான். ஆனால் ஒருவன் ஆவிக்குரிய மரணம் எய்தினால் அவனுக்கு அக்கினிக் கடல் காத்திருக்கிறது. பாருங்கள். அது தேவனிடமிருந்து நித்திய பிரிவினையை உண்டாக்கி அவர்களை எரித்துப் போடுகிறது. பாருங்கள்? 275 “அது வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும்” என்று மல்கியா 4-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆயிரம் வருட அரசாட்சிக்கென்று உலகம் அவ்விதமே சுத்திகரிப்பட வேண்டும். பாருங்கள்?
106276 இப்பொழுது குதிரையின் மேலிருக்கிறவன் ஒரு ஆண் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? “அவன்” “அவனுடைய” கரத்தில் வைத்திருந்தான்; “மனிதன்,” அவன் கள்ளத் தீர்க்கதரிசி. ஆனால் அவனுடைய சபை பெண்ணாக வர்ணிக்கப்பட்டுள்ளது. “அவள்” யேசபேல். ஆகாப்; யேசபேல் எவ்வளவு அழகாகப் பொருந்துவதைப் பாருங்கள். பாருங்கள்? பாருங்கள்? 277 குமாரத்திகள் என்று அழைக்கப்படுவார்கள் “பெண்கள்”. அவர்கள் பிராடெஸ்டெண்டுகள். அவர்கள் போப்பாண்டவரைப் போன்ற ஒரு மனிதனைத் தலைவனாகக் கொண்டிருக்கவில்லை எனினும், அவர்கள் பின்பற்றும் கொள்கைகளில், ஸ்தாபன முறைகளில், அவர்கள் வேசிகளாகவே இருக்கின்றனர். அது சற்று…அது அவ்விதமாகத்தான் கூறுகின்றது.
107278 கவனியுங்கள். இவையெல்லாம் எந்த சம்பவத்தில் முடிவடையப் போகின்றது? நமக்கு இன்னும் பன்னிரெண்டு, பதினான்கு நிமிடங்கள் உள்ளன என்று நான் ஊகிக்கிறேன். இவையெல்லாம் எந்த சந்தர்ப்பத்தில் முடிவடையப் போகின்றது என்று பாருங்கள். அது என்ன? ஆரம்பத்தில் என்ன சம்பவித்ததோ, அதுவே முதலில் சம்பவிக்கும். அது பரலோகத்தில் யுத்தமாகத் தொடங்கினது. அவ்விதமே அது கடைசி கால யுத்தத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. 279 பரலோகத்தில் முதலாவதாக ஒரு யுத்தம் தொடங்கினது, லூஸிபர் (Lucifer) அப்பொழுது பூமிக்குத் தள்ளப்பட்டான். அவன் ஏதேனை இப்பொழுது அசுசிப்படுத்தினான். அன்று முதல் அவன் எல்லாவற்றையுமே மாசுபடுத்திக் கொண்டு வருகிறான். அப்பொழுது பரலோகத்தில் யுத்தம் உண்டானது. கடைசி காலத்தில் அர்மகெதோன் என்று அழைக்கப்படும் யுத்தமாக பூமியில் மூண்டு அது முடியவடையும். இப்பொழுது எவருமே அதை அறிவர். முதலாவதாக பரிசுத்த பரலோகத்தில் யுத்தம் மூண்டது. மிகாவேலும் அவனைச் சார்ந்த தூதர்களும் லூசிபரையும். அவன் தூதர்களையும் முறியடித்து அவர்களைக் கீழே தள்ளினார்கள். அவர்கள் ஏதேனில் விழுந்த அன்று முதல், உலகத்தில் போர் செய்து கொண்டேயிருக்கின்றார்கள். சந்தி…
108280 ஆனால் தேவன் அவருடைய பிள்ளைகளுக்குத் தம்முடைய வார்த்தையை அரணாகக் கொடுத்திருக்கிறார். ஏவாள் அந்த அரணினின்று கழுத்தை வெளியே நீட்டி சாத்தானிடம், “நீ சொல்லுவது சரியென்று விசுவாசிக்கிறேன்” என்று சொன்ன அன்று முதற்கொண்டு அந்த போர் தொடங்கினது. எவர்கள் தாழ்மைப்படுவார்களோ, அவர்களை மீட்கும்படியாக தேவன் இறங்கி வந்தார். 281 நான் உங்களுக்கு முன்னமே கூறியுள்ள வண்ணம், தேவன் கட்டிடம் கட்டும் ஒரு பெரிய ஒப்பந்தக்காரர். கட்டுவதற்கு அவசியமான எல்லா பொருட்களையும் அவர் பூமியில் சேகரித்த பின்பு, அவர் தம்முடைய கட்டிடங்களைக் கட்டுகிறார். இப்பூமியில் ஒரு விதை உண்டாவதற்கு முன்னர் சூரியவெளிச்சம் பூமியில் படுத்து கிடந்திருந்தன என்பது நினைவிருக்கட்டும். ஏனெனில் நீங்கள் பூமியின் தூளிலிருந்து உண்டானவர்கள். பாருங்கள்? நாம் அவ்விதமே இருக்கிறோம். தேவனே ஒப்பந்தக்காரராயிருக்கிறார்.
109282 இப்பொழுது தேவன் கால்ஷியம், பொட்டாஷியம், அண்ட சராசர வெளிச்சம் (cosmic light) இவைகளை ஒருங்கே சேர்த்து ப்யூ என்று ஊதி (ஆதாமின் சரீரத்தை உண்டாக்கியது போன்று) ஒவ்வொரு சரீரத்தையும் “ப்யூ” என்று என்று ஊதி உண்டாக்கி “இதோ என் மற்றொரு குமாரன்.” மீண்டும் “ப்யூ” என்று ஊதி உண்டாக்கி, “இதோ வேறொருவன்” என்று சொல்ல வேண்டுமென்று எத்தனித்திருந்தார். பாருங்கள். 283 ஆனால் ஏவாள் என்ன செய்தாள்? அவள் அவ்வழியைக் கெடுத்துவிட்டு, இன சேர்க்கையின் மூலம் அவள் மானிடவர்க்கத்தைப் பிறப்பித்தாள். அப்பொழுது மரணம் அதை ஆட்கொண்டது. 284 இப்பொழுது தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவர் முன்குறித்த அநேக வித்துக்கள் காலங்கள் தோறும் உண்டாயிருந்தன. அவர் கடைசி காலத்தில், “ஏவாளே, வேறொரு குழந்தையைப் பிரசவிப்பாயாக” என்று சொல்லமாட்டார். அவர் என்னைக் கூப்பிடுவார் (“வ்யூ!”) நான் பதிலளிப்பேன். அவ்வளவு தான். அதுதான். அது தான் கருத்து. கடைசி நபர் உட்பிரவேசித்த பிறகு, எல்லாம் முடிவடையும்.
110285 இப்பொழுது, யுத்தம் பரலோகத்தில் ஆரம்பித்தது. அது பூமியில் அர்மகெதோன் யுத்தத்தில் முடிவடையும். 286 அது இப்பொழுது வெளிப்படுவதை நாம் கவனிப்போமாக. நாம் அதை ஒருவேளை வெளிப்படுத்தலாம். நாம் இப்பொழுது அதைச் செய்ய கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. அது வெளிப்படுவதை கவனியுங்கள். 287 குதிரையில் சவாரி செய்த மர்மமானவன் அவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனியுங்கள். தேவனுடைய வார்த்தையை “எதிர்த்து”, மனந்திரும்பி மூல இரத்தமான வார்த்தைக்குச் (Original Blood Word) செல்ல மறுத்தான். அந்த வார்த்தைதான் மாம்சமும் இரத்தமுமானது. பாருங்கள்? அவன் அதற்குத் திரும்பிச் செல்ல மறுத்தான். அவன்தான் அந்திக்கிறிஸ்து. உண்மையான வார்த்தை மணவாட்டி, எதிர்த்தவன்…அவன் உண்மையான வார்த்தை மணவாட்டிக்கு எதிர்ப்பாயிருக்கிறான். ஆனால் தன் சொந்த மணவாட்டியைத் தெரிந்து கொள்கிறான். இந்த உண்மையான மணவாட்டியையும் கூட எதிர்க்கிறான். அவன் கோட்பாடுகள், கொள்கைகள் என்றழைக்கப்படும் மார்க்க உருவத்தில் தன் மணவாட்டியைத் தெரிந்து கொண்டு, அவளைத் தன்னிடத்தில் கொண்டு வருகிறான். பாருங்கள்? அல்லாமலும் இப்பொழுது, அவன் பரிசுத்த மணவாட்டியைக் காணும்போது, அவளை விரோதிக்கிறான். ஆனால் அவன் கிறிஸ்துவுக்கு முரணாயிருக்கிற அந்திக்கிறிஸ்து போதகங்களை அளித்து அந்திக் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற தன் மணவாட்டியை உண்டாக்கிக் கொள்கிறான். அவன் எவ்வளவு சாமர்த்தியமுள்ளவன், பாருங்கள்? இப்பொழுது அன்பினால் ஒருமைப்பட்டு இரத்தத்தின்கீழ் ஆராதனை செய்வதற்குப் பதிலாக அவன் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கினான். தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வதற்கு மாறாக அவன் பிரமாணங்களையும் கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டான்.
111288 பிராடெஸ்டெண்டுகள் “அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணத்தை” உச்சரிக்கின்றனர். அதிலுள்ள ஒரு வார்த்தையாகிலும் வேதத்திலுண்டா என்று நீங்கள் தேடிக் கண்டுபிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணம் என்பது வேதத்திலேயே இல்லை. 289 நான் சில நாட்களுக்கு முன்பு எங்கோ ஒரு கூட்டத்தில் கூறியதுபோன்று, அப்போஸ்தலர்களுக்கு ஒரு விசுவாசப் பிரமாணம் உண்டாயிருந்தால், அது அப்போஸ்தலர் 2:38 ஆகத்தான் இருந்திருக்க வேண்டும். நான் அறிந்துள்ளதெல்லாம் அப்போஸ்தலன் இதை மட்டுமே பெற்றிருந்தான் என்பதாகும். அதைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர். கிறிஸ்தவர்களைப் போன்று காணப்பட்டவரிடம் பவுல் “நீங்கள் விசுவாசிகளான போது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அவர்கள் பிரதியுத்தரமான, “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவேயில்லை” என்றனர். அவன், “அப்படியானால் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்றான். 290 இப்பொழுது, இயேசுவின் நாமத்திலோ அல்லது சரியாகக் கூறுவோமானால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவது சரிதான். ஆனால் அது மாத்திரம் போதாது. இல்லை, ஐயா. நீங்கள் ஐம்பது முறை ஞானஸ்நானம் பெற்றாலும், பரிசுத்த ஆவியானவர் இருதயத்தை மாற்றிவிட்டால், அதனால் எவ்வித உபயோகமுமில்லை. இவையிரண்டையும் நாம் ஒருங்கே பெற வேண்டும். கவனியுங்கள், அது—அது கிறிஸ்துவாயுள்ளதே!
112291 அந்திக்கிறிஸ்து உண்மையான மணவாட்டியின் போதகத்தை ஏற்க மறுக்கிறான். எனவே அவன் தன் சொந்த மணவாட்டியைத் தெரிந்துகொண்டு, அவனுடைய சொந்த கோட்பாடுகளின்படியே அவளை உருவாக்குகிறான். தனக்கு சொந்த மணவாட்டியை தெரிந்துகொண்டு, அவளை ஒரு ஸ்தாபனமாக்குகிறான். இந்த பரிசுத்த வேதவாக்கியங்கள் கூறியவாறு இவள் குமாரத்திகளை—வேறு ஸ்தாபனங்களை ஈனுகிறான். குமாரத்திகள் அவர்கள் தாயைப்போல் மாம்சப் பிரகாரமாக, உலகப் பிரகாரமாக ஸ்தாபனங்களாக ஆகி, ஆவிக்குரிய மணவாட்டியை, வார்த்தையை எதிர்க்கின்றனர்.
113292 அவர்கள் சபையைச் சேர்ந்தவரல்ல என்று அவர்கள் ஒருபோதும் கூறுவதில்லை. நீங்கள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த யாராவது ஒரு நபருடன் பேசிப் பாருங்கள். “நிச்சயமாக நான் ஒரு சபையைச் சேர்ந்தவன்” என்று அவர் கூறுவார். “நீங்கள் கிறிஸ்தவரா?” என்று அவரிடம் கேட்டால், அவர் “நான் இன்னின்ன சபையைச் சேர்ந்தவன்” என்று பதிலுரைப்பார். அவர்களுக்கும் சபைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. அவர்கள் கூறுகின்றார்கள்…நீங்கள் சபை என்று அழைக்கப்படும் ஒன்றைச் சேர்ந்திருக்கலாம். ஆனால் அது சபையல்ல. அவையாவும் சபைகளல்ல. அவை ஜனங்கள் ஒன்றுகூடும் விடுதிகளாம் “இனத்தோடு இனம் சேரும்.” 293 ஆனால் ஒரே ஒரு சபைதான் உண்டு. அதுதான் காணக்கூடாத கிறிஸ்துவின் சரீரம். நீங்கள் அதில் சேருவதில்லை. நீங்கள் அதில் பிறக்கிறீர்கள். 294 நான் அடிக்கடி கூறியுள்ளதுபோன்று ஐம்பத்து மூன்று வருட காலமாக நான் பிரான்ஹாம் குடும்பத்தில் இருக்கிறேன். அதின் நான் ஒருபோதும் சேரவில்லை. நான் அதில் பிறந்தேன். பாருங்கள்?
114295 இப்பொழுது கவனியுங்கள். இந்த அழகான உதாரணத்தைப் பாருங்கள். ஒரு வேதவாக்கியத்தை நான்—நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அதைப் படிக்க இப்பொழுது சமயமில்லை. ஏசாவையும் யாக்கோபையும் எடுத்துக்கொள்வோம். 296 இப்பொழுது ஏசா பக்தியுள்ளவன், அவன் அவிசுவாசி என்று தன்னைக் கூறிக்கொள்ளவில்லை. யாக்கோபு விசுவாசித்த அதே தேவனைத்தான் அவனும் விசுவாசித்தான். அவனுடைய தகப்பனாரும் அந்த தேவனையே விசுவாசித்தார். ஆனால் அவன் நாணமுள்ளவன். இவ்விதமாக கூறுவதற்காக மன்னியுங்கள். அவன் எதற்கும் உபயோகமில்லாதவன். ஆனால் நல்லொழுக்கத்தைப் பொறுத்தவரை, அவன்—அவன் யாக்கோபைக் காட்டிலும் நல்லொழுக்கமுள்ளவனாயிருந்தான். ஆயினும், நீங்கள் பாருங்கள், “ஓ, அதற்கும் சேஷ்ட புத்திர பாகத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?” என்று அவன் நினைத்து, அவன் தன்னுடைய சேஷ்ட புத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்றுப்போட்டான். பாருங்கள்? 297 ஆனால் யாக்கோபோ ஏசாவைப் போல் பெரிய காரியங்களைச் செய்யவில்லை. ஏசாவுக்கிருந்த பிறப்புரிமை அவனுக்கு இல்லை. ஆனால் ஒரு காரியம் அவன் எங்ஙனமாயினும் சேஷ்ட புத்திர பாகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பினான். அவன் அதை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கவலைப்படவில்லை. ஆனால் அவன் அதைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றிருந்தான். தேவன் அதற்காக அவனுக்கு மதிப்பு கொடுத்திருந்தார். 298 மாம்சப் பிரகாரமான மனிதன், மாம்ச சிந்தை, உலகப் பிரகாரமான சிந்தையுள்ளவர்கள் இன்று ஏசாவைப் போலிருக்கின்றனர். “நல்லது நான் இந்த மாநில சபையைச் சேர்ந்தவன். நான் இந்த சபையைச் சேர்ந்தவன். நான் அதைச் சேர்ந்தவன்” என்று அவர்கள் சொல்லுகின்றனர். ஆனால் அதற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.
115299 கவனியுங்கள், குதிரை சவாரி செய்பவன் தன்னுடைய கலப்பு நிறமான மங்கின நிறமுள்ள குதிரையின் மேலேறி அவர்களை ஒன்று சேர்க்கிறான். அவன் தன்னுடைய கலப்பு நிறமான மங்கின நிறமுள்ள குதிரையின் மேலேறி அவர்களை ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறான். ஏனெனில் அவன் அரசியல் வல்லமையை கொண்டவனாயிருக்கிறான். 300 அவனுக்கு அரசியல் வல்லமை உண்டு என்று நீங்கள் நம்புகிறதில்லையா? இப்பொழுது இந்த அமெரிக்க ஜனாதிபதி எவ்விதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அந்த தவறு எங்ஙனம் உண்டானது? ஊம்—ஊம்! …நாம் மத சுதந்திரத்திற்காக இங்கு வந்தோம். ஜனநாயக (Democrat) கட்சியை சேர்ந்தவர்களே! உங்கள் பிறப்புரிமையை அரசியலுக்காக விற்றுப்போட்டவர்களே! எனக்கு எவ்விதமான…ஜனநாயகக்கட்சி சரிதான்; ஆனால் அவைகள் இரண்டும் நேர்மையிழந்துவிட்டன (rotten). நான் கிறிஸ்தவத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அத்தகைய மேற்கூறிய காரியத்தை தேர்ந்தெடுக்க உங்கள் பிறப்புரிமையை நீங்கள் விற்றுப்போட்டீர்கள். உங்களுக்கு அவமானமே!
116301 இந்த தேசம் இஸ்ரவேல் நாட்டின் மாதிரியையொட்டி அமைந்துள்ளது என்பதை நீங்கள் உணருவதில்லையா? இஸ்ரவேல் ஜனங்கள் என்ன செய்தனர்? அவர்கள் அந்நிய நாட்டில் புகுந்து அங்குள்ளவரைக் கொன்றுபோட்டு அந்நாட்டைக் கைப்பற்றினர். நாமும் அதையே செய்தோம். உண்மையான அமெரிக்கர்களான நம்முடைய நண்பர்களான சிவப்பு இந்தியர்களை நாம் கொன்று போட்டோம். 302 அவர்கள் என்ன செய்தனர்? இஸ்ரவேலருக்கு சில சிறந்த மனிதர் இருந்தனர். நாம் முதலாவது அறிந்து கொள்வது என்னவெனில்…அவர்கள் தாவீதை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் சில மகத்தான மனிதர்களை உடையவர்களாய் இருந்தனர். ஆனால் முடிவில் அவிசுவாசியாகிய யேசபேல் என்பவளை விவாகம் செய்துகொண்ட ஆகாப் என்னும் ஒரு துரோகியை அவர்கள் பெற்றிருந்தனர். 303 நல்லது, நாமும் அதையே செய்தோம். வாஷிங்டன், லிங்கன் போன்ற பிரசித்த பெற்ற ஜனாதிபதிகள் நமக்கிருந்தனர். ஆனால் இப்பொழுது நமக்கு உள்ள ஜனாதிபதியைப் பாருங்கள். அவர் ஒரு யேசபேலை விவாகம் செய்துக் கொண்டிருக்கிறார். அவர் அதில் தன்னை அழித்துக்கொண்டு, அவளுக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறார். அவர் ஒருக்கால் ஒரு நல்ல நபராக இருக்கலாம். ஆனால் அவர் மனைவிதான் விவகாரம் அனைத்தையும் நடத்துகிறாள். முழு குடும்பமே விவகாரத்தில் ஈடுபடுகின்றது என்பதை இப்பொழுதே நீங்கள் காணலாம்.
117304 சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பரிசுத்த ஆவியானவர் என்னிடம் என்ன கூறினார்? பழைய காலத்தவராகிய உங்களுக்கு அது தெரியும். முடிவு காலத்திற்கு முன்பு நேரிடப் போகும் ஏழு சம்பவங்களைக் குறித்து அவர் என்னிடம் சொன்னார். இப்பொழுது நடைபெறுகின்றது கடைசிக்கு முந்தின சம்பவம். யுத்தங்களைப் பற்றியும் மற்றவைகளைப் பற்றியும் அவர் கூறின யாவும் அதே போன்று முற்றிலும் நிகழ்ந்தன. பாருங்கள்? இப்பொழுது அமெரிக்க தேசம் ஒரு ஸ்திரீயினால் அரசாளப்படுவதற்கென்று அவள் கைகளில் சிக்கியுள்ளது. யேசபேல்! பாருங்கள்? 305 ஆனால் யேசபேலின் நாட்களில் ஒருவன் உண்மையாக அவர்களுடைய சுபாவத்தை அவர்களுக்கு வெளிப்படுத்திக் கூறினவன் என்பது நினைவிருக்கட்டும். பாருங்கள்?
118306 அவன் கலப்பு நிறமான மங்கின நிறமுள்ள குதிரையின் மேலேறி ஜனங்களைக் கூட்டி சேர்க்கிறான். அவன் பாருங்கள், அவன் கோட்பாடுகளினால், மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாட்டினால் கலந்த இந்த ஸ்தாபனங்களை ஒன்றாக சேர்க்கிறான். அது சரிதானே? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நிச்சயமாக. வண்ணங்கள் ஒன்றாகக் கலந்திருக்கின்றன. மரணத்தின் வர்ணமும், மங்கிய நிறமுள்ள குதிரையின் உலகப் பிரகாரமான போக்கும். இப்பொழுது, அது உண்மையாகும். மரணத்தின் வர்ணமும், மங்கின நிறமுள்ள குதிரையின் உலகப் பிரகாரமான போக்கும், ஓ, என்னே! அவர்களிடம் தேவனுடைய வார்த்தையின் பரிசுத்த இரத்தம் காணப்படவில்லை. 307 கவனியுங்கள். “அவர்களைப் பூமியின் நான்கு முனைகளிலிருந்தும் அர்மகெதோன் யுத்தத்திற்கு அவர்களைக் கூட்டி சேர்க்கின்றனர்” என்று வேதம் கூறுகின்றது. அதை நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அதை படிக்கப் போவதில்லை. அந்த வேதவாக்கியத்தை நினைவுப்படுத்தி உங்களிடம் கூறுகின்றேன், ஆனால் அவைகள் எழுதிவைக்கப்பட்டிருக்கிறபடியால், அவைகள் என்ன என்றுப் பாருங்கள். “தேவனாகிய கர்த்தருடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு அவர்களைக் கூட்டி சேர்க்கின்றனர்”. கவனியுங்கள்! எல்லா வண்ணங்களும் கலந்த உலகப் பிரகாரமான, மங்கிய நிறம் கொண்ட வெளிறிய தோற்றங்கொண்ட குதிரை. அதைக் குறித்து சற்று சிந்தித்து பாருங்கள். அது ஒரு தீங்கான காரியம் என்பதை நீங்கள்ள் அறிவீர்கள். அவன் அவர்களைப் “பூமியின் நான்கு முனைகளிலிருந்தும் கூட்டி சேர்ப்பதை” கவனியுங்கள். பலப்பரீட்சைக்காக அவர்கள் கூடுகின்றனர். அந்த யுத்த பலப்பரீட்சை வார்த்தையின்படியாய் “அர்மகெதோனில்” நடக்கும். பாருங்கள்?
119308 அவன் அப்பொழுது மங்கின நிறமுள்ள குதிரையின் மேலேறி, “மரணம்” அது ஐயத்துக்கிடமில்லாதது என்னும் பெயர் கொண்டு அங்கு சவாரி செய்வான். “மரணம்” அந்திக்கிறிஸ்து. கவனியுங்கள். முதலாம் ஸ்தாபனத்தில் (அது தர்க்கம் செய்யப்பட முடியாது) அதாவது அவன் ஆவியாக இருந்தான். வார்த்தைக்கு விரோதமாய் வேசித்தனம் செய்த அவனுடைய யேசபேலும் அவளுடைய குமாரத்திகளாகிய பிராடெஸ்டெண்டுகளும் இப்பொழுது ஒன்று சேர்க்கப்படுகின்றனர். 309 அன்று பாப்டிஸ்ட் ஸ்தாபனத்தார் சொன்னதை நீங்கள் கேட்டீர்களா? உங்களுக்கு அது தெரியுமா? ஊ? “ஓ! நாங்கள் கத்தோலிக்க மார்க்கத்துடன் சேரமாட்டோம், ஆனால் நாங்கள்—நாங்கள் அவர்களுடன் ஒருவாறு நட்பு கொள்வோம். நாங்கள் அவர்கள் சபையைச் சேரவேண்டிய அவசியமில்லை, ஆனால்…” என்கின்றனர், அதைப் பாருங்கள். அதைப் பாருங்கள்? தேவனுடைய வார்த்தை அதையே கூறுகிறது. பாருங்கள்? பாருங்கள்? அவள் தான் முதல் ஸ்தாபனத்தில் இருந்த அந்த பழைய வேசி. பாருங்கள்.
120310 இப்பொழுது அவர்கள் ஒன்று கூடி, எல்லா வண்ணங்களும் கலந்த குதிரையின் மீது அர்மகெதோன் பலப்பரீட்சைக்குப் புறப்படுகின்றனர். வெள்ளைக் குதிரை, சிவப்பான குதிரை, கறுப்புக் குதிரை. இந்த மூன்றும் வித்தியாசமானவை—ஆனால் அசுத்த ஆவியின் வல்லமையால் கட்டப்பட்டுள்ள, அரசியல்—அரசியல், மத வல்லமைகளாக அந்திக்கிறிஸ்துவாக இருக்கின்றது. அவன் இம்மூன்றும் ஒருங்கே பெற்று அவன் மங்கின நிறம் கொண்ட வெளிறிய தோற்றங்கொண்டே குதிரையின் மேல் சவாரி செய்கிறான். சரி. இப்பொழுது கவனியுங்கள். அவன் எதின்மேல் சவாரி செய்கிறான் என்பதைக் கவனியுங்கள். அவன் கறுப்பு, சிகப்பு, வெள்ளை வர்ணங்கள் மூன்றும் கலந்த மங்கின நிறமுள்ள சாம்பல் நிறமுள்ள குதிரையின்மேல் சவாரி செய்து, வானத்தின் கீழுள்ள எல்லா தேசங்களிலுமிருந்து தன் பிரஜைகளை அந்த யுத்தத்திற்கென்று கூட்டிச் சேர்க்கிறான். தானியேல் சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கி, இரும்பு ரோமாபுரியின் எல்லா இராஜ்யங்களிலும் பரவுவதை அறிவிக்கவில்லையா? இதோ அவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து வருகின்றனர். இப்பொழுது இன்னும் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து இதைக் கவனமாய்க் கேளுங்கள். நாம் ஆராதனையை முடித்துவிடலாம். 311 அவன் மூன்று நிறங்கள் கலந்த மங்கின நிறமுள்ள, வெளிறின தோற்றங்கொண்ட குதிரையின் மேல் சவாரி செய்து, அவன் பிரஜைகளை பூமியின் நாலாமுனையிலிருந்தும் கூட்டிச் சேர்க்கிறான். இந்தக் குதிரையின் மேல் சவாரி செய்பவனும் அதே மனிதன்தான்.
121312 இப்பொழுது, அவன் மாத்திரம்தான் தயாராயிருக்கவில்லை, அவனைச் சந்திக்கத்தக்கதாக கிறிஸ்து தயாராக இருக்கிறார் என்று வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரத்தில் நாம் பார்க்கலாம். யுத்தமோ மிக்க கடுமையானதாயும், பயங்கரமானதாகவும் இருக்கப்போகிறது. வெளிப்படுத்தல் 19ல், கிறிஸ்து. கிறிஸ்து அவருடையவர்களை பூமியின் நான்கு முனைகளிலிருந்து கூட்டிச் சேர்க்கப்போவதில்லை. ஏனெனில் அவர்களில் ஒரு சிலர் மாத்திரம் பூமியில் மீந்திருப்பார்கள். அவர் என்ன செய்வார்? அவர்களைப் பரலோகத்தின் நான்கு முனைகளிலிருந்து கூட்டிச் சேர்ப்பார். நாளை பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களைக் குறித்து சிந்திக்கும்போது நான் கூறுவது சரியா அல்லது இல்லையா என்பது விளங்கும். அவர் பனி நிற வெண்மை கொண்ட குதிரையின் மேலேறி அவர்களைப் பரலோகத்தின் நான்கு முனைகளிலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார். 313 அவருக்கு ஒரு பெயருண்டு. அது மரணம் என்பதல்ல. ஜீவனைக் குறிக்கும் “தேவனுடைய வார்த்தை” என்பதாம், ஆமென். “தேவனுடைய வார்த்தை” என்னும் அவர் நாமத்தை அவர் தொடையின் மீது எழுதி வைத்துள்ளார். அது ஒன்று தான் ஜீவனைக் கொடுக்க முடியும். ஏனெனில் தேவன் மாத்திரமே நித்திய ஜீவனின் உற்பத்தி ஸ்தானமாயிருக்கிறார். ஸோயீ என்பதாகும். அது சரிதானே? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.]
122314 அவர் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்து, “ஜீவன்” என்னும் பெயரைக் கொண்டு, பரலோகத்துக்குரிய தமது பிரஜைகளாகிய பரிசுத்தவான்களைக் கூட்டிச் சேர்க்கிறார். ஆனால் இந்த மனிதன் மூன்று வித்தியாசமான வல்லமைகளைக் கொண்டவனாய் “மரணம்” என்னும் பெயர்கொண்டு, பூமிக்குரிய தன் பிரஜைகளைக் கூட்டிச் சேர்க்கிறான். அவன் மீது “மரணம்” என்னும் பெயர் எழுதப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்துவின் மீது “ஜீவன்” என்னும் பெயர் எழுதியிருக்கிறது. 315 கிறிஸ்துவுடன் கூட இருப்பவர்கள் வெள்ளைக் குதிரைகளின் மேல் வீற்றிருக்கின்றனர். அவர்கள், “உலகத் தோற்றத்துக்கு முன் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர், ஆமென்! அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கின்றனர். ஆமென்! வ்யூ! அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் “உலகத் தோற்றத்துக்கு முன்னால் அழைக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டவர்களாய்,” தெரிந்து கொள்ளுதலின் மூலம் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவர்களாயிருந்து, புதிய திராட்சரசத்தினாலும் எண்ணெயினாலும் ஊக்குவிக்கப்பட்டவர்களாய், வெள்ளைக் குதிரைகளின் மீது சவாரி செய்து அவரைச் சந்திக்கப் புறப்படுகின்றனர். இடி முழக்கங்கள் வெகு விரைவில் இவைகளை முழங்கி வெளிப்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். பாருங்கள்?
123316 கவனியுங்கள். அவர் எவ்விதம் செய்கிறார்? ஆகவே அவர் வார்த்தையாயிருப்பாரானால், அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதாகும். அப்படியானால், வார்த்தைதான் ஜீவன். ஆனால் அந்திக் கிறிஸ்து; எந்தக்காரியத்திற்கு “எதிராக,” அதாவது கிறிஸ்துவுக்கு “விரோதமானவன்”—அதாவது தேவனுடைய வார்த்தைக்கு விரோதமானவன். ஸ்தாபனங்களும் அதன் கொள்கைகளும் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் உண்டாயிருக்க வேண்டும். 317 அதை எப்படி நீங்கள் காணக் கூடாமல் தவறவிடமுடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. உங்களுக்குப்—உங்களுக்குப் புரிகின்றதா? இதை எப்படி நீங்கள் காணத் தவற முடியும்? நீங்கள் எப்படி அதை தவறவிடப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. 318 அது உண்மை. Anti என்ற ஆங்கில பதத்திற்கு “விரோதமானது” என்று பொருள். அது சரிதானே? அந்தவிதமாகத்தான் அவன் இருக்கிறான். அவன் தன்னுடைய பலநிறங் கலந்த குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறான். நாம் அதை இங்கே தேவனுடைய வார்த்தையில் கண்டோம். 319 ஏழு சபையின் காலங்களை நாம் வியாக்கியானம் செய்தபோதும் அதையே நாம் கண்டோம். இப்பொழுது இயேசு முத்திரைகளை உடைத்து, ஏழு சபையின் காலங்களில் நடந்தவை என்னவென்பதைக் காண்பிக்கிறார். 320 Anti —என்பது வார்த்தைக்கு “எதிரானது.” ஏன் சென்று பாருங்கள், பிரமாணங்கள், நாம் ஏன் ஸ்தாபனங்களுக்கும் அவைகளின் பிரமாணங்களுக்கும் மிகவும் எதிராக இருக்கிறோம்? ஏனென்றால் அவைகள் வார்த்தைக்கு விரோதமாய் இருக்கின்றன. பாருங்கள்?
124321 இங்கு ஜீவனும் மரணமும் கடைசி போராட்டத்தில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். உண்மையான ஜீவனாகிய வெள்ளைக் குதிரையும், ஸ்தாபன பிரமாணங்களாகிய மங்கின நிறமுள்ள குதிரையும் உண்மையான பலப்பரீட்சைக்கு வருகின்றன. 322 இப்பொழுது நான் உங்களிடம் ஒன்றைக் இங்கே கூற விரும்புகிறேன். ஒரு வேளை நீங்கள் இதை நம்பமாட்டீர்கள். ஒரே ஒரு மூலநிறம் தான் உண்டு. அதுதான் வெள்ளை நிறம். ஆனால் நான் இதை ஊர்ஜிதப்படுத்துவதற்கென புத்தகங்களை ஆராய்ந்தேன். எத்தனை பேருக்கு இது தெரியும்? ஒரே ஒரு மூல நிறம்தான் உண்டு. மற்ற நிறங்கள் யாவும் வர்ணங்கள் கலந்ததனால் உண்டானவை. 323 எனவே, கிறிஸ்து ஆதிமுதற்கொண்டு போலியில்லாத வெள்ளை நிறமான (solid—white) கலப்படமில்லாத வார்த்தையின் மீது சவாரி செய்கிறார். ஆமென். ஆமென். இரசாயனம் வெள்ளை நிறத்தைப் பிரிக்காமல் இருந்தால், எல்லா நிறங்களும் வெள்ளை நிறமாகவே அமைந்திருக்கும். ஆமென்! மகிமை! இன்று சபைகளில் ஸ்தாபனங்களின் கொள்கைகளும் பிரமாணங்களும் கலந்திராவிடில், ஒவ்வொரு சபையும் அப்போஸ்தலருடைய போதகமாகிய தேவனுடைய வார்த்தையில் நிலை நின்றிருக்க, தேவனும் அதை அடையாளங்களினால் உறுதிபடுத்தியிருப்பார். அதைப் பாருங்கள். ஓ, சகோதரன் ஈவான்ஸ், நான் இப்பொழுது பரவசமான நல்ல உணர்வினை அடைகிறேன்! ஆம் ஐயா! ஆம் ஐயா! 324 ஒரே ஒரு மூல நிறம் தான். அதுதான் வெள்ளை. அது ஸ்தாபனங்களோடும் அத பிரமாணங்களோடும் ஒருபோதும்—ஒருபோதும் கலந்ததில்லை. இல்லை, ஐயா!
125325 கிறிஸ்துவின் பரிசுத்தவான்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கின்றனர். அவர்கள் ஸ்தாபனங்களோடும் அவைகளின் பிரமாணங்களோடும் கலக்கவில்லை, என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது ஸ்தாபன பிரமாணங்கள், ஸ்தாபனத்தாராகிய நீங்கள் இங்கே எல்லா நிறங்களும் கலந்த ஒருவகை நிறத்தையே உடையவர்களாயிருக்கிறீர்கள் என்பதை நாம் கண்டறிகிறோம். ஆனால் கிறிஸ்துவோ மூல நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறார். அந்த மூல நிறமே அவருடைய மக்களின் மேலும் உள்ளது. அவர்கள் அவருடைய இரத்தத்தில் தோய்க்கப்பட்டு, அவர்கள் அணிந்துள்ள ஆடைகள் வெண்மையாக்கப்பட்டு, பாவமனைத்துமே அதன் மூல காரண கர்த்தாவாகிய சாத்தானிடம் சென்று விட்டது. பாருங்கள்? அது உண்மை.
126ஆனால் ஸ்தாபனங்களின் பிரமாணங்களுடன் கலந்தவர்கள் மங்கின நிறமுள்ளவர்களாகி மரணத்தயடைகின்றனர். 326 வெள்ளை நிறத்துடன் மற்ற நிறங்களைச் சேர்ப்பது ஒரு தாறுமாறாகும், அது ஒரு தாறுமாறானதாயிருக்கிறது. அதனால் நீங்கள் மூல நிறத்தை தாறுமாறாக்குகிறீர்கள். அது உண்மையல்லவா? மூல நிறம் வெள்ளை என்றால், அதனுடன் நீங்கள் மற்ற நிறங்களைச் சேர்க்கும்போது, அதன் உண்மையான நோக்கத்தை நாம் தாறுமாறாக்கி விடுகிறோம். ஆமென். அது சரியா? 327 அவ்வாறே அவர் வெள்ளைக் குதிரையின் மேல் வீற்றிருந்து, அவரே தேவனுடைய வார்த்தையாயிருப்பாரெனில், அதனுடன் ஸ்தாபன பிரமாணங்களைக் கலந்து ஒரு வார்த்தையைக் கூட்டினாலும் அல்லது ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டாலும், நாம் எல்லாவற்றையும் தாறுமாறாக்குகிறோம். ஓ! என்னே! கர்த்தாவே, நான் தேவனுடைய வார்த்தையில் நிலைக்கச் செய்யும். 328 சத்தியமும் தவறும்! ஓ, என்னே! அது எவ்வளவு நல்லதாகத் தோன்றிடினும்…சத்தியமும் தவறும் ஒன்றோடொன்று கலவாது. அது அவ்வாறு கலக்கவே முடியாது. அது கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறார் என்று சொல்லப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருக்க வேண்டும். இல்லையேல் அது தவறான ஒன்றாக இருக்க வேண்டும். அது பரிசுத்த பிதா கூறினாலும் அல்லது பரிசுத்த போனிபர் அல்லது காண்டர்பரியின் பிரதம அத்யட்சகர் கூறினாலும் எனக்குக் கவலையில்லை. தேவனுடைய வார்த்தைக்கு மாறாக அது அமைந்திருந்தால் அது வார்த்தையைத் தாறுமாறாக்கும். அது ஒருபோதும் கலவாது. “இவர் இத்தனை மகத்துவமான செயல்களைப் புரிந்துள்ளாரே…” என்று நீங்கள் கூறலாம், அவர் எதைச் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர் எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும் அல்லது அதைப் போன்ற எந்தக்காரியமாயிருந்தாலும் அக்கரையில்லை. நம்மிடமிருப்பது நாம் தேவனிடமிருந்து நேரடியாகப் பெற்றுள்ள இந்த சத்தியமாகும். இந்த சத்தியத்திற்கு புறம்பேயிருந்தால், அது எந்த சபையானாலும் ஸ்தாபனமானாலும், அதனிடம் சத்தியம் என்பதே இல்லை என்று அர்த்தமாம்.
127329 சத்தியத்தைக் கடைபிடிக்கும் ஏதாவது ஒரு சபையை, நீங்கள் அதை எனக்குக் கூற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்குக் காண்பியுங்கள். வேதாகமத்தில் ஒரு பாதகத்தை திருப்பி, உங்களுக்கு ஒன்றை நான் கூறவுள்ளேன். பாருங்கள்? ஏதாவது ஒரு சபையைக் கூறுங்கள். நீங்கள், “பெந்தெகொஸ்தேயினர்” என்று கூறலாம். ஓ, என்னே! உங்கள் நினைவுகளை அங்கே யாரிடத்திலிருந்தோ இப்பொழுது நான் பகுத்தறிந்தேன். அந்தக் காரணத்தினால்தான் நான் அதை உங்களிடம் கூறினேன். அது உங்கள் மனதைப் புண்படுத்தியுள்ளது என்பதை நான் கண்டேன், அப்படியானால் நான் கூறவந்ததைச் சொல்லாமல் விட்டுவிடுகிறேன். உங்களைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால் நீங்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நானறிவேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவே நான்—நான் விரும்பினேன். பாருங்கள்?
128330 கலப்படமானது, (எதிரானது) மரணத்திற்கு திருப்பப்படுகின்றது, மூல காரியத்துடன் எதைக் கூட்டினாலும் அது மரண நிறம் கொள்கின்றது. 331 அது கிறிஸ்து கடுகு விதையைக் குறித்து சொன்னது போன்றேயுள்ளது. அதே சமயத்தில் அது எல்லா விதைகளைப் பார்க்கிலும் சிறிதாயிருந்தாலும் அது வேறொன்றுடன் கலவாது. கடுகு விதை எதனோடும் கலவாது. அது அலசான கடுகாயிருக்கிறது. ஆகையால் உங்களுக்கு அப்படிப்பட்ட கடுகு விதையளவு விசுவாசம் இருந்தால், அதில் நிலை கொள்ளுங்கள். 332 கவனியுங்கள். ஜீவன் வெள்ளையைக் குதிரையின் மேல் சவாரி செய்பவரைப் பின்பற்றினது, அவர்தான் தேவனுடைய வார்த்தை, ஜீவன் தம்முடன் கூட இருக்கும். உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களால் ரூபகாரப்படுத்தப்பட்டார். இப்பொழுது இந்த யுத்தம் எப்படி செல்லப் போகிறது? 333 “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” என்று இயேசு கூறினார். அவர், “நீ என்னை விசுவாசித்தால், மரித்தாலும் பிழைப்பாய்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்றார். மேலும் அவர், “என்னை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” என்றார். அது அவர் வாக்களித்த வேதவாக்கியமாகும்.
129334 சாத்தான் பூமியின் நான்கு முனைகளிலுமுள்ள தன்னுடைய பிராடெஸ்டெண்டுகளையும், தன்னுடைய—தன்னுடைய கத்தோலிக்கர்களையும் ஒன்று கூட்டி, அர்மகெதோன் யுத்தத்திற்கென்று படைதிரட்டி வருகிறான். சரி! 335 ஆகவே, இயேசுவும் தேவனுடைய வார்த்தையால் ரூபகாரப்படுத்தப்பட்ட உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களுடன் பரலோகத்திலிருந்து இறங்கி வருகிறார். 336 நான் முன்பு கூறியதுபோல், தேவன் உங்களுடன் பேசி உங்களை அனுப்புவாரெனில், அப்பொழுது நீங்கள் கூறுகிறதை அவர்…அவர்—அவர் ஆதரிக்கிறார். புரிகிறதா? கவனியுங்கள், நீங்கள் பரலோகத்தின் ராஜ்யப் பிரதிநிதியாக (Ambassador) இருப்பீர்களானால், அப்பொழுது பரலோகம் முழுவதுமே உங்களுக்கு பின்னால் உள்ளது. பரலோகம் தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருக்கிறது. ஊ—ஊம்.
130337 இப்பொழுது கவனியுங்கள். அவர் உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களுடன் வந்து, அவருடைய வார்த்தை உண்மையென ரூபகாரப்படுத்துகிறார். 338 ஆகவே, ஆழம் காணமுடியாத பாதாளம் (bottomless pites) அவனுக்கென்று ஆயத்தமாயிருப்பதை சாத்தான் அறிவான். பாருங்கள்! ஓ, என்னே! மரணம் மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் ஸ்தாபனங்களின் கொள்கைகளில் சவாரி செய்து, அவனப் பின்பற்றினவர்களைத் தேவனிடமிருந்து நித்திய காலமாய் பிரித்தது. ஓ, என்னே! நித்திய பிரிவினைக்குத்தான் அவன் அவர்களை வழி நடத்தினான். ஆனால் கிறிஸ்து சவாரி செய்து தம் சபையை உயிர்த்தெழுதலின் மகிமைக்குள் நடத்தினார்.
131339 நாம் முடிப்பதற்கு முன்பு 8-ம் வசனத்தின் கடைசி பாகத்தைப் பார்ப்போம்! பாருங்கள். …அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. 340 “அவைகள்” என்பது யார்? பாருங்கள்? சரி, அந்திக்கிறிஸ்து “மரணம்” என்று அழைக்கப்படுகிறான். “பாதாளம் அவன் பின் சென்றது”. அவனுடைய நான்கு முனைத் திட்டத்தைக் கவனியுங்கள். 341 அந்திக்கிறிஸ்து, வெள்ளைக் குதிரை; ஆவியினால் கொல்லுகிறான், அந்திக்கிறிஸ்துவாயிருப்பதால் ஆவிக்குரிய மரணம். 342 இரண்டாவதாக, சிவப்பு குதிரை: சபையும் அரசாங்கமும் ஒன்றாக இணைந்தபோது, அரசியல் வல்லமை கொண்டு பட்டயத்தினால் கொல்லுகிறான். 343 கறுப்புக் குதிரை: ஆத்துமாக்கள், அவன் போதகங்களை அறிவித்து, அவள் தன்னுடைய வேசித்தனங்களை அங்கே செய்தாள். அவன் ஆகாரத்தை தராசில் நிறுத்தி காசுக்கு அதனை விற்கிறான். 344 நான்காவதாக, ஒரு மங்கின நிறமுள்ள குதிரை: தேவனிடமிருந்து நித்தியமாகப் பிரிக்கிறான். மீண்டும் நான்கு என்னும் எண்ணிக்கையைப் பாருங்கள். ஓ, என்னே! தேவனுக்கு துதியுண்டாவதாக!
132345 இப்பொழுது, கடைசியாக, முடிக்கும் நேரத்தில் …நீங்கள் பெற்றிருக்கிறீர்களா…நான் நேரம் கடந்துவிட்டேன். ஆனால் இன்னும் 10 நிமிடங்களை நீங்கள் எனக்குத் தருவீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அநேகம் பேர் நான் இங்கு பேசுவதைக் குறித்து என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். 346 எலியாவைப் பற்றி அதிக மூட வைராக்கியம் நம்மிடையே உண்டாயிருந்தது. ஆனால் அவை யாவும் மரணத்துக்கேதுவாய் மடிந்துவிட்டன. நான் இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் விதமாய் நீங்களும் காண தேவன் என் மூலம் துணை புரிவாராக! நீங்கள் காண்பீர்களா? நாம் காண முயற்சிப்போமாக. பாருங்கள். 347 இப்பொழுது, இங்கே முடிப்பதற்கு முன்பாக இதைக்கூற விரும்புகிறேன். சபை காலத்தில் கடைசி செய்தியாளன் திர்க்கதரிசி எலியா, அதாவது அந்த வரிசையில் அபிஷேகிக்கப்பட்ட ஒரு மனிதன் என்று விசுவாசிக்காதவர்கள். 348 கவனியுங்கள். கடைசி சபை காலம் மரணமடைந்த பிறகு…என்ன நடந்தது என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள். மரணத்திற்குப் பிறகு அவர்களின் பிணங்கள் காட்டு மிருகங்களால் அழிக்கப்படுகின்றன. நீங்கள் அதை அறிந்துள்ளீர்கள். இப்பொழுது அது உண்மை. அவ்விதம் நேரிடும் என்பதற்கு யேசபேல் உதாரணமாயிருக்கிறாள்.
133349 இப்பொழுது வெளிப்படுத்தக் 2:18-20 வசனங்களுக்குத் திருப்புங்கள். ஒரு சில நிமிடங்களுக்குமுன்பு நாம் அதைப் படித்தோம் என்று நான் நினைக்கிறேன். நாம் படித்தோமல்லவா? ஆம்! நாம் சற்று முன்பு அதைக் கண்டோம். நான் அதை இங்கே எழுதி வைத்திருந்தேன்… ஆம். நல்லொழுக்கம் சிதைந்துபோன காலம் அதுவாகத்தான் இருந்தது. அது எப்படி இருந்தது என்றும், எப்படி யேசபேல் உள்ளே நுழைத்திருந்தாள் என்றும் பாருங்கள். இப்பொழுது சபைகளுக்கு, இந்த நவீன யேசபேல் உதாரணமாயிருக்கிறாள். மணவாட்டிக்கல்ல. இப்பொழுது, வெளிப்படுத்தக் 2:18,20-ல் உள்ள தேவனுடைய வார்த்தையின்படியாய் யேசபேல் பழைய ஏற்பாட்டில் இன்றைய சபைக்கு ஒரு முன்னடையாளமாயுள்ளாள். தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள்… 350 பாருங்கள்? அது சரியா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அது யேசபேலுடன் பூரணமாக ஒப்பிடப்பட்டுள்ளது. இப்பொழுது, முதலாவதாக…
134351 கடைசி காலத்தில் தீர்க்கதரிசியின் செய்தி சபைக்கு உண்டாகி, அவர்களை மூல வார்த்தைக்கு திரும்பும்படி அழைக்குமென்பதற்கு ஆதாரமாக வேதத்திலிருந்து அநேக வாக்கியங்களை நாங்கள் உங்களுக்கு எடுத்துக் கூற முடியும். இப்பொழுது, கவனியுங்கள். அது சரியா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகிறார்.—ஆசி.] மல்கியா 4-ம் அதிகாரம், வெளிப்படுத்தல் 10:7 அவ்வாறு கூறுவதைக் கவனியுங்கள். பாருங்கள்? இயேசு தாமே இதை முன்னுரைத்துள்ளார். அதாவது “லோத்தின் நாட்களில் நடந்ததுபோல” அதுபோன்ற அநேக வேதவாக்கியங்களை எடுத்துரைத்துக்கொண்டே போகலாம்.
135352 யேசபேல் தற்காலத்து நவீன சபைக்கு முன்னடையாளமாயிருக்கிறாள். ஏனென்றால் கத்தோலிக்கர்களும், பிராடெஸ்டெண்டுகளும் இப்பொழுது ஒன்று சேர்ந்துவிட்டனர். அதை யாரும் தடுக்க முடியாது, இரண்டும் ஸ்தாபனங்கள். ஒன்று தாய், மற்றொன்று குமாரத்தி, அவ்வளவுதான். அவைகள் ஒருவரோடொருவர் சந்தடி செய்து தர்க்கம் பண்ணினாலும் அவர்களிருவரும் வேசிகளே. இப்பொழுதும் நானாக அதைக் கூறவில்லை. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று வேதத்திலுள்ளதைத்தான் நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். பாருங்கள்? சரி. 353 இப்பொழுது நாம் கவனிப்போம், யேசபேல் தேவனுடைய கட்டளையின்படி கொல்லப்படுகிறாள். தேவன் யெகூவை அங்கு அனுப்பி, யேசபேல் ஜன்னலின் வழியாய் எறியப்பட்டு கொல்லப்படும்படி செய்கிறார். நாய்கள் அவள் மாம்சத்தைத் தின்றன. (நான் கூறுவது சரியா?) யேசபேலின் மாம்சத்தை. [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] முதலாவது எலியா தீர்க்கதரிசனம் உரைத்தபடி, அவளுடைய கணவனான தலையாகிய ஆகாப் ராஜாவின் இரத்தத்தை நாய்கள் நக்கின. நாம் எதை வலியுறுத்திக் கூறிக்கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துகொண்டீர்கள் அல்லவா?
136354 ஏன்? முதலாம் எலியா ஏன் சபைகளினால் புறக்கணிக்கப்பட்டான்? அந்த சபைகளுக்கு யேசபேலும் ஆகாபும் தலைவர்களாக இருந்தனர். சபையும் அரசாங்கமும் ஒன்றுபடுதல். எலிசா ஆகாபின் பாவங்களை எடுத்துரைத்து சபை முழுவதும் உண்மையான வார்த்தைக்குத் திருப்பும்படி கட்டளையிட்டான். 355 இக்காலத்து சபைக்கு இரண்டாம் எலியா வரும்போது சரியாக அதையே செய்வான், “மூல விசுவாசத்திற்கு திருப்புவான்”! அதனின்று நீங்கள் எவ்வாறு தப்ப முடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. அது உண்மை. உண்மையான வார்த்தைக்குத் திரும்புங்கள்! அது உண்மை!
137356 வார்த்தை அவர்களைக் கொன்றபிறகு, அவர்களுடைய பிணங்களை நீங்கள் காண வேண்டுமானால் நாம் இங்கே வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரத்தைத் திருப்புவோம். இப்பொழுது, தேவனுடைய வார்த்தை அவர்களைக் கொன்றுபோட்டது. அது உங்களுக்குத் தெரியும். சரி. கிறிஸ்து வரும்போது என்ன நேரிடுகின்றதென்பதை இப்பொழுது நீங்கள் கவனித்துப் பாருங்கள். வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரம் 17-ம் வசனத்தில் துவங்குவோம். பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக் கண்டேன்; 357 இப்பொழுது அது உண்மை, நாம் அதற்கு மேலே படிக்கும்போது, “இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார். ராஜாதி ரஜா, கர்த்தாதி கர்த்தா” என்று அழைக்கப்பட்டார். பதின்மூன்றாம் வசனத்தில் “அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை” என்றுள்ளது. பாருங்கள்? இப்பொழுது, இங்கே அவர், “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா” என்று அழைக்கப்படுகிறார். நான் ஒரு தூதனைக் கண்டேன்… 358 இப்பொழுது கவனியுங்கள். அவர் புறப்பட்டுச் செல்கிறார். புறஜாதிகளை வெட்டும்படி அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகின்றது… 359 “அவருடைய வாயிலிருந்து”, தேவனுடைய வாயிலிருந்து மோசேயின் வாய்க்கு வந்ததுபோல. பாருங்கள்? …இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின் மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது. நான் ஒரு தூதனைக் கண்டேன்… 360 இப்பொழுது கவனியுங்கள். அவர் சங்கரித்துக் கொண்டே வருகிறார். யாரை அவர் சங்கரிக்கிறார்? யேசபேலையும் கள்ளத் தீர்க்கதரிசியாகிய ஆகாபையும். பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக் கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து… மகா தேவன் கொடுக்கும் விருந்துக்கு கூடி வாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.
138361 அவர்களை அவர் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இரையாகக் கொடுக்கிறார். வெளிப்படுத்தலின் புத்தகம் வேறொரு அதிகாரத்தில் “பட்டயத்தினாலும் மரணத்தினாலும் பூமியின் மிருகங்களினாலும் கொல்லப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளதை இங்கே கவனியுங்கள். பார்த்தீர்களா? யேசபேல் சபை, அவருடைய சரீரத்தை (உண்மையாகவே) பறவைகளும் பூமியின் மிருகங்களும் பட்சிக்கும். ஆகாப் யேசபேல் இவர்களின் சரீரங்களைப் பட்சித்தது போன்று, ஆவிக்குரிய பிரகாரமான ரூபத்தில் உள்ள யேசபேல் சபையின் அங்கத்தினர்களின் சரீரங்களையும் அவை பட்சிக்கும். நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கு விளங்குகின்றதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சரி.
139362 எலியா…ஓ! மாம்சப்பிரகாரமான ஆகாப், யேசபேல் இவர்களின் நாட்களில் எலியா தீர்க்கதரிசியாயிருந்தான்; ஆவிக்குரியபிரகாரமான யேசபேலின் சபைக்கும் அதையே செய்வதாக கர்த்தர் உரைக்கிறதாவது என்று வேதத்தில் அவர் வாக்களித்துள்ளார். ஆவியின் வடிவில் எலியாவின் ஊழியம். 363 கவனியுங்கள். எலியா, அவன் காலத்தில் சரிவர அடையாளங்களின் மூலம் பூரணமாக நிரூபிக்கப்பட்டாலும், அக்காலத்தவரை தேவனுடைய வார்த்தைக்குத் திருப்ப அவனால் முடியவில்லை. அது சரியா? எலியா தன்னால் இயன்றவரை முயன்றான். அவன் ஒவ்வொரு காரியத்தையும் செய்தான். அவன்—அவன் அவர்களுக்கு அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பித்தான். அவர்களோ அவனைப் பார்த்து நகைத்தனர். தற்கால ஆவிக்குரிய எலியாவின் ஊழியத்திலும் அதையே அவர்கள் செய்வார்கள். பாருங்கள். அவர்களைத் தேவனுடைய வார்த்தைக்குத் திருப்ப அவனால் இயலவில்லை. கோடிக்கணக்கானவர்களில்…
140364 சபையே! இதைக் கூர்ந்து கேளுங்கள். இதைக் குறித்து சிறிது குழப்பமடைந்துள்ளவர்களே, சற்று கூர்ந்து கவனியுங்கள். 365 எலியாவின் காலத்திலிருந்த கோடிக்கணக்கான மக்களில், யேசபேலும் ஆகாபும் இன்றைய நம் அரசாட்சிக்கு முன்னடையாளமிருந்த அந்த காலத்தில் எலியாவின் போதகத்தின் மூலம் முழு உலகிலேயே அக்காலத்தில் 700 பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். அது சரியா? ஆம், அது சரி. 366 பாருங்கள், அதை எலியா அவர்களில் ஒருவரையும் அவ்விதமாக அறியாமலிருந்தான். நீங்கள் பாருங்கள். தேவன் முத்திரைகளில் ஒன்றை திறந்து, ஸ்தாபனங்களின் பிரமாணங்களுக்கு முன்னால் முழங்காற்படியிடாத 700 பேரை அவருக்காக வைத்திருக்கிறார் என்று அந்த புத்தகத்தில் உள்ள இரகசியத்தை அவனுக்கு காண்பிக்கும் வரையில் அவன் மாத்திரமே இரட்சிக்கப்பட்டுள்ளதாக அவன் கருதியிருந்தான். தேவன் எலியாவிற்கு அவருடைய புஸ்தகத்தைத் திறந்து, “சற்று பொறு மகனே; ஒளிந்து கொண்டிருக்கும் 700பேரை எனக்காக வைத்திருக்கிறேன். அவர்களுடைய பெயர்கள் உலகத் தோற்றத்துக்கு முன்னால் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றனர். அவர்கள் எனக்குச் சொந்தமானவர்கள்” என்றார். வ்யூ. தேவன் முத்திரைகளைத் திறந்தார். 367 ஆகவேதான் யோவான் அதிக சத்தமிட்டான் என்று அன்று இரவு பார்த்தோம். அவன் தன்னுடைய பெயரை அங்கே அப்புஸ்தகத்தில் கண்டிருக்க வேண்டும். நீங்கள் பாருங்கள். பாருங்கள்? ஒரு நாள் தேவன் திறந்தார்…
141368 எலிசா, அவன் பிரசங்கம் செய்தான். அவன் எல்லாவற்றையும் செய்தான். அவன் தன்னுடைய முழு இருதயத்தோடு பிரசங்கித்தான். அவன் தன்னால் இயன்றவரை எல்லாவற்றையும் செய்தபோதிலும், அவர்கள் அவனை “நிந்தித்து,” “நீ தான் இவையெல்லாவற்றிற்கும் காரணம். நீ ஆவிகளுடன் தொடர்பு கொள்பவன், இந்தத் தொந்தரவை நீதான் உண்டாக்குகிறாய். இதற்கெல்லாம் குற்றவாளி நீயே” என்ற அந்தவிதமான ஒவ்வொன்றையும் கூறினர். இப்படி அநேகக் காரியங்களைக் கூறி அவன் மேல் பழி சுமத்தினர். யேசபேலும் அவனுடைய தலையைத் துண்டித்து விடுவதாகப் பயமுறுத்தினாள். அது சரி. எல்லாருமே அவனுக்கு விரோதமாயிருந்தனர். 369 அப்பொழுது அவன், “கர்த்தாவே, நீர் என்னைச் செய்யும்படிச் சொன்ன யாவையும் நான் செய்து முடித்தேன், உம்முடைய வார்த்தையில் நான் அப்படியே நிலை நின்றேன். நான் பயம் எதுவுமின்றி ராஜாவின் முன் சென்று நீர் கூறச்சொன்ன எல்லாவற்றையும், ‘கர்த்தர் உரைக்கிறதாவது’ என்று தைரியமாகக் கூறினேன். நீர் எனக்குக் கூறின யாவும், நான் அவர்களுக்குக் கூறினேன். அவைகளில் ஒன்றாகிலும் சம்பவிக்காமற் போகவில்லை. ஆனால் இப்பொழுது அவர்களிடையே நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன். நான் ஒருவன் மாத்திரமே மீதியாயிருக்கிறேன். அவர்கள் என்னைக் கொல்ல முயல்கின்றனர்” என்றான்.
142370 அப்பொழுது தேவன், “நான் முத்திரைகளில் ஒன்றைத் திறந்து, உனக்கு ஒரு காரியத்தை காண்பிக்கப் போகிறேன்” என்றார். அப்பொழுது அவர், “ஸ்தாபனங்களின் கொள்கைகளுக்கு முழங்காற்படியிடாத, ஸ்தாபனங்களுடன் சேராத 700 பேரை எனக்காக வைத்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா? அந்த 700பேர் எடுக்கப்படுதலுக்கு ஆயத்தமாயுள்ளனர்” என்றார். பாருங்கள்! ஓ! ஓ! அவர் தமது தீர்க்கதரிசியிடம் அவனுக்கு மாத்திரமே அவர் தம் வார்த்தையை வெளிப்படுத்தி, வேத வாக்கியங்களின் மூலம் உண்மையைக் காணச் செய்கின்றார். “இந்த சந்ததியில் தெரிந்து கொள்ளப்பட்ட 700 பேர்களின் பட்டியலை வைத்திருக்கிறேன்: 700 பேர்கள் இருக்கின்றனர். (இக்காலத்தையொட்டிக் கூற வேண்டுமானால்) அவர்கள் மதசம்பந்தமான ஸ்தாபனங்களுக்கும் அவைகளின் கொள்கைகளுக்கும் முழங்காற்படியிடாமல் இருக்கின்றனர்” என்றார்.
143371 நான் கூறுவதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? அப்படியானால் அது எளிமையாகத்தான் இருக்க வேண்டும். அது அந்தவிதமாகத்தான் இருக்க வேண்டும். அது வார்த்தையின்படியாய் உள்ளது. அந்த மனிதன் காட்சியில் வரும்போது, நான் இப்பீடத்தின் மேல் இப்பொழுது நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக அவன் தீர்க்கதரிசியாயிருப்பான். பாருங்கள்? அவன் தேவனுடைய அந்த வார்த்தையில் முற்றிலும் நிலைத்திருப்பான். அவன் எந்த ஒரு ஸ்தாபனத்தின் கொள்கைகளையும் அல்லது மற்ற எந்தக்காரியத்தையோ ஏற்றுக்கொள்ளமாட்டான். அது உண்மை. அவன் எலிசாவைப் போன்றும் யோவானைப் போன்றும் காட்டில் சஞ்சரிக்கிறவனாக இருப்பான். அவன்—அவன் நன்னடத்தை கெட்ட ஸ்திரீகளை (பையனே!) வெறுத்து அவர்களைத் தாக்குவான். வ்யூ! பையனே, எலியாவும் யோவானும் அதையே செய்தனர். பாருங்கள்? பாருங்கள்? அவன் தேவனுடைய வார்த்தையில் முற்றிலும் நிலைநிற்பான். அவன் ஸ்தாபனங்களுக்கு விரோதமாயிருப்பான். ஸ்தாபனங்களா? “ஆபிரகாம் எங்களுக்கு தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்”, பாருங்கள்? உண்மையாகவே அவர் அதை நிறைவேற்றினார். 372 இப்பொழுது நண்பர்களே, அதைப் பாருங்கள். நான்காம் முத்திரை இங்கே திறக்கப்பட்டுவிட்டது. எனக்குத் தெரிந்தவரை, நான் குதிரைகளின் மேலிருப்பவர்களைக் குறித்து நான் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன். இவை மாத்திரமே பூமியில் சம்பவித்தன. 373 அடுத்த முத்திரை, பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள், பரலோகத்தில் சம்பவிப்பதை நாம் காணலாம்.
144374 இப்பொழுது, இங்கே நான் முடிக்கும் முன்பாக, நான் எழுதி வைத்துள்ள…சில வார்த்தைகளைக் கூறிட நான் விரும்புகிறேன். நாம் இந்த நான்கு முத்திரைகளை, முதல் நான்கு முத்திரைகளை ஒவ்வொன்றாகக் கண்டோம். 375 இப்பொழுது காட்சியானது பூமியிலிருந்து மாறி பரலோகத்துக்குச் செல்வதை நாம்—நாம் நாளை இரவு காணலாம். அவர் பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களை நோக்கிப் பார்க்கிறார். அதற்கு அடுத்த இரவு நியாயத்தீர்ப்பு விழுவதை நாம் காணலாம். 376 நான்காவது இரவு அல்லது கடைசி இரவாகிய ஞாயிறு இரவன்று, இவைகளின் அர்த்தமென்பதை நான் இதுவரை அறியேன். உங்களைப் போலவே நானும் அவைகளைப் படித்திருக்கிறேன். ஆனால் “பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதல் உண்டாயிருந்தது”. ஆனால் அங்கு ஏதோ ஒன்று சம்பவித்தது. அவர் அதை வெளிப்படுத்துவார் என்று நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் அதைச் செய்வார். அவர் அதை வெளிப்படுத்தித்தருவார் என்று நான் நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். 377 நாம் வேதாகமத்திலுள்ள அநேக பாகங்களைத் திருப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கிறிஸ்து வந்து அந்திக்கிறிஸ்துவைச் சங்கரிப்பார் என்பதைக் காண்பிக்க வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரத்தை நாம் பார்க்க வேண்டியதாயிருந்தது. ஆகவேதான் இம்முத்திரையைக் குறித்த இரண்டு வசனங்களை மாத்திரம் நான் சிந்தித்து, அதன் பின்பு இவைகளெல்லாம் நிரூபிக்க நான் வேதாகமத்திலுள்ள வித்தியாசமான பாகங்களைப் படிக்க அவசியம் உண்டானது. கிறிஸ்து வரும்போது அவர் அந்திக் கிறிஸ்துவைக் கொன்று அவனுடைய முடிவை காண்பிக்க நான் வெளிப்படுத்தின விசேஷம் 19-ம் அதிகாரத்திற்கு சென்று அதை உங்களுக்கு காண்பித்தேன்.
145378 இக்கடைசி நாட்களுக்கென்று நியமிக்கப்படும் ஏழாம் தூதன் மல்கியா 4-ம் அதிகாரத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளபடி, எலியா தீர்க்கதரிசியைப் போல் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு, தேவனுடைய உண்மையான மூல வார்த்தையை, தேவனுடைய மூல வார்த்தை இச்சந்ததிக்கு வெளிப்படுத்துவான் என்பதை நிரூபிக்க நாம் வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரத்தைப் படிக்க வேண்டியதாயிருந்தது. எலியா தீர்க்கதரிசி மாம்சபிரகாரமான யேசபேலுக்குச் செய்தவாறு இம்மனிதன் ஆவிக்குரிய யேசபேலாகிய ஸ்தாபன சபைகளுக்குச் செய்வான். அது சரியென்பதை நிரூபிக்கை நான் வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரம் 1முதல் 7 வசனங்களுக்கு செல்ல வேண்டியதாயிற்று. அல்லாமலும், அதை நிரூபிக்க மல்கியா, ஆமோஸ் போன்ற புத்தகங்களுக்கு செல்ல வேண்டியதாயிருந்தது. 379 எலியா என்பவன் தீர்க்கதரிசனம் உரைத்து, யேசபேலை அந்த குறிப்பிட்ட சந்ததியில் குற்றப்படுத்தின ஒரு தீர்க்கதரிசி. 380 ஆகவே, எலியா மரிக்கவேயில்லை. நிச்சயமாக அவன் மரிக்கவேயில்லை. எண்ணூறு வருடங்கள் கழித்து மறுரூப மலையில் இயேசு கிறிஸ்துவின் பக்கத்தில் அவன் காணப்பட்டான். அவன் மரிக்கவேயில்லை.
146381 இப்பொழுது கடைசி நாட்களில் தேவனுடைய வாக்கின்படி அவன் ஆவி ஒரு மனிதனை அபிஷேகிக்கும் என்பதை நாம் கண்டறிகிறோம். இயற்கையான யேசபேலுக்கு என்ன நேரிட்டதோ, ஆகவே கடைசி காலத்தில் ஆவிக்குரிய யேசபேலுக்கும் நேரிடும் என்று வாக்களிக்கப்படுகின்றது. 382 எனவே அதை நிரூபித்து உங்கள் சிந்தையில் உள்ள கேள்வியை அகற்ற நான்—நான் வேதாகமத்தை அங்குமிங்கும் திருப்ப வேண்டியதாயிருந்தது. உங்களுக்கு சந்தேகம் ஏதாகிலும் இருந்தால் ஒரு கடிதம் அல்லது ஒரு குறிப்பு எழுதி எனக்குத் தெரியப்படுத்துங்கள். 383 கடைசி நாட்களில் அவர்களுடைய மாம்சத்தை மிருகங்கள் அன்று பட்சித்ததுபோல் இன்றும் பட்சிக்கும் என்பதும் கூட எவ்வளவு அழகாக பொருந்துகின்றது.
147384 என்னுடைய மிகச் சிறந்த வெளிப்பாட்டின்படி, தேவனால் முன்னறிவிக்கப்பட்டு எனக்கு அளிக்கப்பட்டபடி அது நடக்கும். நான்கு குதிரைகளின் மேலேறியிருப்பவர்களைக் குறித்து எனக்கு அளிக்கப்பட்ட வெளிப்பாட்டின் சத்தியம் இதுவே என்று மிகச் சிறந்த முறையில் நான் அறிந்துள்ளேன். 385 இயேசுவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! [சபையார் களிகூருகின்றனர்—ஆசி.] நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே
148386 இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள், ஒன்றுமில்லாத…(அதுதான்; முன் செல்லுங்கள்; அது நல்லது) ஸ்தாபனங்களிலுள்ள அங்கத்தினர்களின் பேரில் எவ்வித விரோதமுமில்லை…ஏனெனில் தேவன் தம்முடைய பிள்ளைகளை கத்தோலிக்க முறையில் வைத்துள்ளார். அவர் தம்முடைய பிள்ளைகளை மெத்தோடிஸ்டு முறைமையில் வைத்துள்ளார். அவர் தம்முடைய பிள்ளைகளை பாப்டிஸ்டு முறைமையில் வைத்துள்ளார். நீங்கள் வெளிச்சத்தைக் கண்ட மாத்திரத்தில் அந்த வித்தியாசமான எல்லா முறைமைகளிலிருந்து வெளிவந்தவர்களாய் இன்றிரவு எத்தனைபேர் இங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை நாங்கள் காணட்டும். [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] உங்களைப் போன்ற தேவனுடைய பிள்ளைகள் அத்தகைய ஸ்தாபனங்களில் இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், ஸ்தாபனங்களின் முறைமை தான் அவர்களை மரணத்தில் ஆழ்த்துகின்றது. பாருங்கள். அவர்கள் சத்தியத்தைக் கேட்கக் கூடாதவாறு அந்திக் கிறிஸ்துவின் ஆவி அவர்களை அந்த ஸ்தலங்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறது.
149387 அன்றொரு இரவு நான் முத்திரிக்கப்படுதலைக் குறித்து பேசினபோது நினைவிருக்கிறதா? ஒரு மனிதன் யூபிலி வருஷத்தின் அழைப்பைக் கேட்ட பிறகும் விடுதலையாக மறுத்தால், அவன் கதவு நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவன் காது கம்பியினால் குத்தப்பட வேண்டும். காது என்பது நாம் கேட்பதற்கென்று கொடுக்கப்பட்டதாகும். விசுவாசம் கேள்வியினால், கேட்பதனால் (hearing) வரும். அவன் சத்தியத்தைக் கேட்ட பிறகும், அவனுக்களிக்கப்பட்ட விடுதலையை அவன் ஏற்றுக்கொள்ள மறுத்தால், ஸ்தாபனத்தின் எஜமானனை அவன் வாழ்நாள் முழுவதும் சேவிக்க நேரிடும். ஆமென். 388 ஓ! ஓ, என்னே! அவர் அதிசயமானவரல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நான் அவரை நேசிக்கிறேன், நான்… இப்பொழுது நமது கரங்களை நாம் உயர்த்தி, அவரை நாம் தொழுது கொள்ளுவோம். முன்பு அவர் என்னை நேசித்ததால் (மகிமை!) சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 389 [ நான் அவரை நேசிக்கிறேன் என்ற பாடலை சகோதரன் பிரான்ஹாம் மௌனமாகப் பாடுகிறார்—ஆசி.] இப்பொழுது உங்களுடைய தலைகளை வணங்கியிருங்கள். நாம் இப்பொழுது பல்லவியை வாய்த்திறவாமல் மௌனமாகப் பாடும்போது (hum) நாம் அவரை ஆராதிப்போம். [சகோதரன் பிரான்ஹாம் நான் அவரை நேசிக்கிறேன் என்ற பாடலை தொடர்ந்து மௌனமாக பாடுகிறார்.]
150390 கர்த்தாவே, நாங்கள் உமக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். உமக்காகவும் உமது ஜனங்களுக்காகவும் நான் மகிழ்ச்சியுறுகிறேன். ஓ, கர்த்தாவே எங்களுடைய இரட்சிப்பைக் கல்வாரியில் நீர் சம்பாதித்தீர். கர்த்தாவே, அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். 391 இப்பொழுதும் கர்த்தாவே, உமது ஆவியினால் எங்களை சோதித்தறியும். கர்த்தாவே, எங்களில் பொல்லாங்கு, தேவனுடைய வார்த்தையின் பேரில் அவிசுவாசம் ஏதாவது காணப்பட்டால், அல்லது தேவனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் ஆமோதித்து ‘ஆமென்’ என்று சொல்லக்கூடாதவர் யாராவது இங்கிருந்தால், பிதாவே வெள்ளைக் குதிரையின் மேல் வீற்றிருக்கும் பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது இறங்கி வந்து, தமக்குச் சொந்தமானவர்களை அந்திக்கிறிஸ்துவின் ஆவியிலிருந்து விடுதலையாக்கிக் கொள்வாராக. கர்த்தாவே, அவர்களை வெளியேக் கொண்டுவாரும். 392 அவர்கள் இப்பொழுதே மனந்திரும்பி உம்மிடம் விரைவில் வந்து, எண்ணெயினாலும் திராட்சரசத்தினாலும் நிரப்பப்பட்டு, காயீனின் மரணம் என்னும் ஸ்தாபன அங்கியைக் களைந்து போட்டு, மணவாளனால் அளிக்கப்படும் நித்திய ஜீவன் என்னும் பனி—வெண்மையான அங்கியை அணிந்து கொள்ளட்டும். அப்பொழுது அவர்கள் என்றாவது ஒரு நாள் தேவனுடைய வார்த்தையால் ரூபகாரப்படுத்தப்பட்ட உயிர்த்தெழுதலில் பங்கு கொண்டு கலியாண விருந்தில் பிரவேசிப்பார்கள். கர்த்தாவே, அதை அருளும். ஜனங்கள் உம்முடைய சமூகத்தில் காத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவர்களுடைய இருதயங்களை ஆராய்ந்து பாரும். இயேசுவின் நாமத்தின் மூலம் கேட்கிறோம்! [சகோதரன் பிரான்ஹாம் நான் அவரை நேசிக்கிறேன் என்ற பாடலை மௌனமாக பாட ஆரம்பிக்கிறார்—ஆசி.]
151393 இப்பொழுது என் சகோதரனே, என் சகோதரியே, என் நண்பனே! இப்பொழுது உங்கள் இருதயங்களை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் மத்தியில் நான் வெகுகாலம் இருந்துவருகிறேன். இது ஏறக்குறைய முப்பத்து மூன்றாவது வருடமாய் உள்ளது. நான் கர்த்தரின் நாமத்தில் உங்களிடத்தில் கூறின ஏதொன்றாகிலும் நிறைவேறாமல் இருந்திருக்கின்றதா? [சபையோர், “இல்லை” என்று கூறுகின்றனர்.—ஆசி.] உங்களுக்கு ஒரு தருணமுள்ளபொழுதே கிறிஸ்துவைத் தேடுங்கள். அவ்விதம் நீங்கள் செய்ய முடியாத தருணம் வெகு விரைவில் வரக்கூடும். பாருங்கள்? அவர் எந்த நேரத்திலும் தாம் வகித்துள்ள மத்தியஸ்த ஸ்தானத்தை விட்டுப் புறப்படக் கூடும். அப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் கதறினாலும், நீங்கள் தரையில் உதைத்தாலும், நீங்கள் அன்னிய பாஷையில் பேசினாலும் நீங்கள் தரையில் அங்குமிங்கும் ஓடினாலும், நீங்கள் விரும்புகிற எதை வேண்டுமானாலும் செய்தாலும், உலகத்திலுள்ள ஒவ்வொரு சபையிலும் சேர்ந்தாலும் ஒரு பிரயோஜனமுமிராது. ஏனெனில் உங்கள்—உங்கள் பாவங்களைப் போக்க வெண்மையாக்கும் திரவம் அப்பொழுது இராது. அப்பொழுது நீ என்ன செய்வாய்? அப்பொழுது நீ எங்கே இருப்பாய்?
152394 நல்லது, பரிந்து பேசும் சிங்காசனம் இன்னும் திறந்து உள்ளது என்று என் முழு இருதயத்தோடு நான் விசுவாசிக்கிறேன். அவர் இன்னமும் தேவனுடைய சிங்காசனத்தில் வீற்றிருந்து பரிசுந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறன். ஆனால் விரைவில் அவர் சிங்காசனத்தை விட்டு, எழுந்து, அவர் மீட்டுக் கொண்டவர்களைச் சொதமாக்கிக் கொள்ளப் புறப்பட்டு வருவார். இப்பொழுது ரூத் காத்துக் கொண்டிருக்கையில் அவர் மீட்பின் இனத்தானின் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறார். 395 போவாஸ் இனத்தானின் உத்தியோகத்தை நிறைவேற்றின பின்னர், அவன் வந்து தன்னுடைய உரிமைகளைப் பெற்றுக்கொண்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தவிதமாகத்தான் அவன் செய்தான் என்று வேதம் கூறியுள்ளது. அவ்வாறே இயேசுவும் மீட்பின் இனத்தானின் ஊழியத்தைச் செய்து முடித்த பின்னர், “புறப்பட்டு வந்து புஸ்தகத்தை எடுக்கிறார்.” அவர் சிங்காசனத்தை விட்டு எழுந்துவிட்டபடியால், பரிந்து பேசும் ஊழியம் அப்பொழுது முடிவடைந்திருக்கும். கிருபாசனத்தில் அப்பொழுது இரத்தம் இராது. அப்பொழுது அது என்னவாயிருக்கும்? அது நியாயசனமாக மாறிவிடும். 396 இந்நாட்களில் ஒன்றில் “எடுக்கப்படுதல் இனிமேல் நிகழும் என்று நான் நினைத்திருந்தேன்” என்று நீங்கள் கூற, “அது ஏற்கனவே நிகழ்ந்து விட்டது” என்று ஒரு சத்தம் உங்களிடம் பதிலுரைக்கும் நிலைக்கு வந்து விடாதீர்கள். தேவன் உங்களுக்கு உதவி புரிவாராக! நாம் நம்முடைய தலைகளை இப்பொழுது வணங்குவோமாக. 397 சகோ.நெவில்! ஆராதனையை முடிப்பதற்கு அல்லது என்ன செய்ய விரும்புகிறீரோ அதை செய்வதற்கு முன்னால் வாரும். நாளை இரவு சந்திக்கும் வரை தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.