வெற்றியின் நாள்

63-0421

நஙகள வரமபனல உடகரலம. தவனடய இரஜயததன சக பரஜகள சநதககமபடயக இஙக இரககம சலககயததறகக நன தவனகக எனனடய நனறயத தரவகக வரமபகறன. ஜனஙகளகய நஙகள இநத கலயல இநத சகதரனடய வடடல ஒனறசரநத ஐககயஙகளளமபடயக கட வநதரககயல, இத ஒரவதமக ஆத சபயக கறதத எனகக நனவடடகறத. கறஸதவ மரககம மதலவத தவஙகயத, அநதவதமக, வதம, அவரகள கபடமலலத இரதயததட வடகளதறம அபபமபடட

வெற்றியின் நாள்

63-0421சியரா விஸ்டா அரி1121963-04-21

வெற்றியின் நாள்

63-0421சியரா விஸ்டா அரி1121963-04-21

1 நீங்கள் விரும்பினால் உட்காரலாம். தேவனுடைய இராஜ்யத்தின் சக பிரஜைகளை சந்திக்கும்படியாக இங்கு இருக்கும் சிலாக்கியத்திற்காக நான் தேவனுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஜனங்களாகிய நீங்கள் இந்த காலையில் இந்த சகோதரனுடைய வீட்டில் ஒன்றுசேர்ந்து ஐக்கியங்கொள்ளும்படியாக கூடி வந்திருக்கையில், இது ஒருவிதமாக ஆதி சபையைக் குறித்தே எனக்கு நினைவூட்டுகிறது. கிறிஸ்தவ மார்க்கம் முதலாவது துவங்கியது, அந்தவிதமாக, வேதம், “அவர்கள் கபடமில்லாத இருதயத்தோடு வீடுகள்தோறும் அப்பம்பிட்டார்கள்” என்று கூறியுள்ளது. நாம் இங்கு இருக்கையில், அந்த விதமாகவே நாம் இந்தக் காலையில் கபடமில்லாத இதயத்தோடு ஒரே நோக்கங் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். 2 நாம் இந்த பூமியில் இருக்கையில், ஒரு—ஒரு காரியத்தை சாதிக்க நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், அது நம்முடைய ஜீவியங்களில் தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதாகும். ஒருவேளை, ஒருகால், அனேகமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தேவன், அவர் தம்முடைய முடிவற்ற ஞானத்தினால் இங்கே பின்னால் உள்ள புல்வெளியிலே, அல்லது—அல்லது இங்கே இந்த வனாந்தரத்தில், இந்த சிறு கட்டிடத்தில் இந்த காலை இங்கிருப்போம் என்று அறிந்திருந்தார். அவர் அதை அநேகமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தார்.

23 இப்பொழுது, இந்த காலை டூசானிலிருந்து வந்து கொண்டிருந்த நம்முடைய நண்பர்கள் சிலரை, ஸ்டிக்கர் குடும்பத்தினரை நாங்கள் சந்தித்தோம். அவர்களுடைய காரிலிருந்த ஜெனரேட்டர் என்ற மின் ஆக்கி கருவி பழுதடைந்துவிட்டிருந்தது. எங்களால் முடிந்தளவு கொண்டுவரக்கூடியவர்களை, அந்த பெண்மணியையும், பிள்ளைகளையும் இங்கே கொண்டு வந்துள்ளோம். மற்றவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களால் தங்களுடைய ஜெனரேட்டர் என்ற மின் ஆக்கி கருவியை சீர்செய்ய முடிந்துவிட்டால், சற்று நேரத்தில் வந்துவிடுவார்கள். இங்கே சில குறுக்குத் தெருக்கள் இருந்தன. அது எங்கே இருந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் இங்கு இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். 4 இப்பொழுது, இங்குள்ள சகோதரன் ஐசக்சன் அவர்களை, நாங்கள் கிறிஸ்துவுக்குள் சகோதர்கள் என்று நாங்கள் அறிந்திருப்பதைத் தவிர வேறுவிதத்தில் நாங்கள் ஒருவரை ஒருவர் அறியோம். நாங்கள் ஒன்றாக அநேக முறை ஐக்கியங்கொண்டிருக்கிறோம். அநேக ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடைய முதல் சந்திப்பு…பீனிக்ஸில் உண்டாயிருந்தது என்று நான் நினைக்கிறேன். அவருடைய மனைவியும் இங்கிருந்தால், அவள் யார் என்று எனக்குத் தெரியாது. இப்பொழுது, அவருடைய மனைவி யார் என்றும், அல்லது அவருடைய குடும்பம் எதுவென்றும் தெரியாத அந்த அளவிற்கு நாங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறோம். 5 நான் இங்கே உள்ளே வந்தபோது வாசலிலே நம்முடைய கருப்பு நிற சகோதரர்களில் ஒருவரை சந்தித்து, அந்த அருமையான நபரோடு கரங்குலுக்கினேன். இந்தக் காலையில் இந்தவிதமாக இந்த கூட்டத்தார் மத்தியில் இருக்கும்படி உள்ளே வரும்போது, உங்களுக்குத் தெரியும், நீங்கள் அதிகமாக வரவேற்கப்படும்போது, அது ஒருவிதமாக உங்களை உணரச் செய்வதை நீங்கள் அறிவீர்கள், அது எனக்கு ஒரு சிலாக்கியமாக இருக்கிறது.

36 இப்பொழுது, நான் திரளான கூட்டத்தார் கூடியிருந்த பகுதிகளில் பேசும் சிலாகியத்தை உடையவனாய் இருந்து வந்திருக்கிறேன். அங்கே லட்சக்கணக்கான ஜனங்கள் ஒன்றுகூடியிருப்பர். ஆனால் நான்…என் ஊழியத்தின் நினைவுகூருதல்கள் இது போன்ற நேரங்களை கொண்டதாகவே உள்ளன. அதாவது ஒரு டஜன் அல்லது இரண்டு டஜன் பேர் ஒன்றாக கூடியிருக்கும்போது, தேவன் ஜனங்களிடத்தில் நெருக்கமாக ஈடுபடுவது போன்று தென்படுகிறது. நாம் சிறிய எண்ணிக்கையில் ஒன்று சேரும்போது, நாம் அதிகமாக அறிமுகம் செய்யப்படுகிறதை உணருகிறோம் என்று நான் நினைக்கிறேன். அந்த இடத்திலே தேவனுடைய வார்த்தை நமக்கு மிக—மிக சிறந்தது போன்று தென்படுகிறது, அவர், “எங்கே இரண்டுபேராவது மூன்று பேராவது என் நாமத்தில் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்று கூறினார். 7 கடந்த இரவு நடு ராத்திரியில் ஒரு மனிதனும், அவருடைய மனைவியும், ஒரு சிறு காரியம் சம்பவித்ததினால் தன் சிந்தையை இழந்துகொண்டிருந்த ஒரு வாலிப பெண்ணும் இருந்த வீட்டில்…நானும் கூட இருந்தேன். நாங்கள்…ஒன்றுகூடி இருக்கையில், அந்த வாலிபப் பெண்ணும் நானும் ஒரு அறையில் இருந்தோம், ஏனென்றால் கூறப்பட வேண்டிய சில காரியங்களின் நிமித்தமாக நாங்கள் ஒன்றாக இருப்பது நலமானதாய் இருந்தது. நாங்கள் கூடியிருந்த இடத்திற்கு இந்த ஒளி, கர்த்தருடைய தூதன் வந்து, தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்கிறார் என்பதைக்—என்பதைக் காண்பித்தார்.

48 நேற்றைய தினம் ஒரு மிக முக்கியமான குடும்பத்திலிருந்த இருபத்திரண்டு வயதுடைய ஒரு வாலிபனுக்கு புட்டாளம்மை என்ற வியாதி, அதாவது கழுத்து வீங்கும் நோய் பற்றிப் பிடித்திருந்தது. வயது வந்தவர்களாகிய உங்களுக்கு, விசேஷமாக ஆண்களாகிய உங்களுக்கு அது என்னவென்று தெரியும். ஆண்களே, உண்மையாகவே அது அவர்களை கிட்டத்தட்ட கொன்று விடுகிறது. இந்தப் பையன் பல நாட்களாக, சரியாக இரண்டு வாரங்களாக, நூற்றைந்து பாகை காய்ச்சலோடு இருந்துகொண்டிருந்தான். இப்பொழுது, அது பக்கவாத பாதிப்புக்குள்ளாகும் நிலை என்பதை நீங்கள் அறிவீர்கள். மருத்துவர்கள், அவர்களால் முடிந்த எல்லாவற்றையும், பென்சிலின் போன்ற ஊசிகளையும் அந்த தொற்றுநோய் காய்ச்சலை நீக்க உபயோகித்துப் பார்த்துவிட்டனர். ஆனால் அது எந்தவித பயனையும் ஏற்படுத்தவில்லை என்பது போல காணப்பட்டது. ஆனால் தேவனுக்கு முன்பாக இருந்த ஒரு நிமிட நேரத்தில் ஒரு துளி காய்ச்சல் கூட அந்த வாலிபனுக்கு இல்லாதபடி அகன்று போயிற்று. அவன் சுகத்தோடு எழுந்தான். இதற்குக் காரணம் அந்த பிரதான நபர் கிறிஸ்துவே என்பதையே காண்பிக்கிறது. 9 அந்தக் காரணத்தினால்தான் இந்த ஓய்வு நாளில் கிறிஸ்துவை சேவிக்கும்படி இந்த காலையில் இந்த வீட்டில் நாம் இங்கே இருக்கிறோம்.

510 ஜனங்களாகிய உங்களையும், நம்முடைய விலையேறப்பெற்ற சகோதரனையும் சந்திக்கும்படி இங்கே வருவதற்கான நேரத்தையே நான் எதிர்நோக்கியிருந்தேன். இங்கே கூடுகின்ற இந்த சிறு கூடுகையிலிருந்து அநேக முறை சகோதரன் எனக்கு அனுப்பியிருக்கிற உங்களுடைய தசமபாகங்களை நான் பெற்றிருக்கிறேன். அதுபோன்ற பொக்கிஷங்களை நான் மிகுந்த பயத்தோடு செலவழிக்கிறேன், ஏனென்றால் அவை அங்கிருந்து எங்கே சென்றன என்று ஒரு நாளில் நான் பதில் கூற வேண்டியவனாய் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன். ஜனங்களாகிய உங்களுடைய உத்தமத்தைக் குறித்த என் நன்றியை நான் வெளிப்படுத்த வேண்டும் என்று கருதி, நான் நிச்சயமாகவே பாராட்ட விரும்பி, பாராட்டுகிறேன். நீங்கள் செய்துள்ள உங்கள் எண்ணத்தை குறித்தும், நீங்கள் அனுப்பியுள்ள தசமபாகத்தை குறித்தும் நான் பாராட்டுகிறேன். இதுபோன்று வீடுகளில் நடக்கும் கூட்டங்களிலும், உங்கள் இடத்தில் உள்ள கொஞ்சம் பணமும் உங்களுக்குத் தெரிந்தளவில் ஊழியத்தின் ஆதரவிற்கு அனுப்ப விரும்புகிறீர்கள். அப்பொழுதிலிருந்தே நான் அதற்காக உத்தரவாதமுள்ளவனாயிருக்க வேண்டியவனாயிருக்கிறேன். நாம் பூமியில் என்ன செய்தோம் என்பதற்கு பதில் கூற வேண்டிய அந்த நாளிலே நான் நம்முடைய கர்த்தருக்கு ஒரு நல்ல உக்கிராணக்காரனாக இருக்க விரும்புகிறேன்.

611 இப்பொழுது இங்கு ஒரு காரியம் உண்டு, பின்புறமாக உள்ள இந்த இடத்தில் வாகனப் போக்குவரத்து இரைச்சலால் தொல்லைப்படுத்தப்படமாட்டோம், அது நல்லது. 12 எனவே இதை எப்படி கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை, எனவே நாம் பல நாட்கள் கொண்ட எழுப்புதல் கூட்டத்தை இங்கே பின்னால் நடத்தினால் நலமாயிருக்கும் என்று நான் நம்புகிறேன். காரணம் இந்தவிதமாக நீங்கள் உள்ளே வந்து, “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நான் உங்களை சந்திக்க மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறுகிறீர்கள். கர்த்தரை குறித்து ஒரு சில வினாடிகள் பேசிவிட்டு மீண்டும் போய்விடுகிறீர்கள். நான் டூசானில் ஒன்றரை மணிக்கு இருக்க வேண்டும். எப்படியாய்…நாம் இங்கே இந்த விதமாக ஒருவரோடு ஒருவர் கரங்குலுக்கி, “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறிவிட்டு, புறப்பட்டுவிடுகிறோம். 13 ஆனால், உங்களுக்கு தெரியும், நாம் சந்திக்கப் போகும் ஒரு நாளைக் குறித்து நான் நினைக்கின்றேன், அங்கே நாம் பிரியா—விடை பெறுகிறோம் என்று கூறமாட்டோம். அங்கே நாம், “உங்களைக் காண்பது அருமையாக இருக்கிறது. உங்களை மீண்டும் காண்போம்” என்று நம்புகிறோம் என்று கூறமாட்டோம். இங்கே நாம் இரண்டு மணி நேரங்கள் ஒன்று சேர்ந்திருப்பதை ஒருகால் எண்ணிப் பார்ப்போம். அங்கே நேரம் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியம் இருக்குமானால், அப்போது நாம் அமர்ந்து பத்து லட்சம் வருடங்கள் பேசுவோம். நாம் அமர்ந்தபோது இருந்த நேரம் நமக்கு ஒரு போதும்—ஒரு போதும் குறையாது. புரிகிறதா? அது நித்தியமாய் இருக்கிறது. அதற்கு முடிவே இல்லை—இல்லை. நாம் வெளியே இருக்கப்போகும் அந்த நேரத்தை குறித்து நினைப்பது, இந்தவிதமாக உள்ளது, நாம் தேவனுடைய மகத்தான பரதீசின் தாழ்வாரங்களினூடாக நடந்து செல்லும்போதும், தூதர்கள் கீதங்களைப் பாடுவர்.

714 இப்பொழுது நாம் இங்கே சண்டையிட்டு, யுத்தத்தில் வெற்றிபெற, உலகத்தின் காரியங்களை ஜெயங்கொள்ளவேண்டிய நேரமாய் இது இருக்கிறது. 15 அங்கே, அங்கே எந்த யுத்தமும் இராது. கடைசி ஜெபம் செய்யப்படும்; அதன்பிறகு அவர்களுக்கு எந்த ஜெபக் கூட்டமும் இருக்க வேண்டியிராது. அங்கே ஜனங்கள் இரட்சிக்கப்படும்படிக்கான இடமே இருக்காது. அங்கே சுகமடையும்படியான சுகவீனமே இருக்காது. அது ஒரு மகத்தான மகிமையான காரியமாக இருக்கும். 16 நாம் மானிடர்களாய் இருக்கிறபடியால் நம்மால் இந்தக் காலை என்ன செய்ய முடியும். நாம் என்ன—என்ன வாக்களிக்க முடியும்? அந்த நேரத்தின் வாக்குத்தத்தத்தை நாம் நோக்கி பார்ப்பதைக் காட்டிலும் வேறு எந்த பெரிய காரியத்தை நாம் நோக்கி பார்க்க முடியும்? புரிகிறதா?

817 நாம் இதைக் குறித்து சிந்திக்கையில்…நான் இங்கே காலங்களின் மாற்றத்தை நோக்கி பார்க்கிறேன், தங்களுடைய தாயின் மடியில் பால் அருந்தும் சிறு குழந்தைகள், பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களாக மாறி, பின்னர் வாலிபப் பருவ பெண் பிள்ளைகளாகவும், பையன்களாகவும் மாறி, அதன் பின்னர் நடுத்தர வயதினை அடைந்து, அதன்பின்னர் முதிர்ந்தவராகின்றனர். புரிகிறதா? பள்ளிக்கு செல்லும் சிறுவன் கடந்த வருடம் தன்னுடைய தாயின் மடியில் ஒரு பால் உண்ணும் குழந்தையாய் இருந்தான். புரிகிறதா? அதன்பின்னர் வாலிபப் பருவத்தில் கடந்த வருடம்தான் பள்ளியில் சேர்ந்தவன்போல் தென்படுகிறான். நடுத்தர வயது ஒரு வாலிபப் பருவ வயதாயிருந்தது. அதன் பின்னரே முதிர்ந்த வயது உண்டாகிறது. அப்படியே…ஓ! பார்த்தீர்களா? அது அப்படி பூமியிலே தோன்றி மறைகிற புகையைப் போலிருக்கிறது. சாலமோன் அதைக் கூறினான் என்று நான் நினைக்கிறேன், “அது ஒரு பூவைப் போன்று உள்ளது. அது மலர்கிறது, பின்னர் அது வெட்டப்பட்டு, அழிந்து போய்விடுகிறது.” நாம்—நாம் இங்கு இருக்கிற நேரத்தை குறித்த பலனை ஆதாயப்படுத்த விரும்புகிறோம்.

918 எனவே இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை ஜெபத்தில் வணங்கியிருக்கையில், இப்பொழுது நாம் அவரிடத்தில் பேசுவோமாக. 19 இங்கிருக்கிற எவரேனும் ஜெபத்தில் நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்பினால், உதாரணமாக, சுகவீனமாயிருந்து அல்லது தேவை யுள்ளவர்களாயிருந்து உங்கள் இருதயத்தில் தேவனுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், “இப்பொழுதும் கர்த்தாவே, இந்த விண்ணப்பத்தை கேட்பதற்காகவே நான் உள்ளே வந்திருக்கிறேன்” என்று கூறுங்கள். நான் அறிந்துகொள்ளும்படியாக, நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, இந்தவிதமாக “என்னை நினைவு கூரும்” என்று கூறுவீர்களேயானால் நலமாயிருக்கும். கர்த்தர் உங்களை முழு நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

1020 சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய வார்த்தையால் வானங்களையும் பூமியையும் உருவாக்கினவரே, இந்த காலையில் இந்த வார்த்தையைக் குறித்து, வார்த்தையாய் இருக்கிற அந்த மகத்தான ஒருவரைக் குறித்து பேசுவதற்காக இங்கே நாங்கள் கூடி வந்திருக்கிறோம். 21 இந்த வனாந்தரத்தின் பின் பக்கத்திற்கு வரும்படியான இந்த மகத்தான சிலாக்கியத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஒருநாள் அங்கு ஒரு பற்றியெரிகிற முட்செடியானது ஓடிப்போன ஒரு தீர்க்கதரிசியின் கவனத்தைக் கவர்ந்து இழுத்தது. அவன் புதிதாக கட்டளையிடப்பட்டு அனுப்பப்பட்டான், அந்த நாளின் ஜனங்களை, அடிமைத்தனத்திலிருந்த தேவனுடைய சுந்தரத்தை மீட்டெடுக்கும்படியான ஒரு மகத்தான மீட்பனானான். ஓ மகத்தான தேவனே, இந்த காலையில் இந்த வனாந்தரத்தின் பின்பக்கத்தில் எங்களோடு இருக்கும்படி நீர் வரமாட்டிரா? நாங்கள் அறிந்துள்ளபடி, நீர் பெரிய தேவாலயங்களிலும், உலகத்தை சுற்றிலும் இருக்கிறீர். ஆனால் நீர் முடிவற்ற தேவனாக இருக்கிறீர் என்றும், எந்த இடமும் உமக்கு சிறியதல்ல என்றும், எந்த இடமும் சிறியதல்ல என்றும் அல்லது நாங்கள் எப்படி பூமியில் சிதறடிக்கப்பட்டு இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல என்றும், அதே சமயத்தில் நீர் சர்வ வியாபியாக இருக்கிறீர் என்றும், எல்லா நேரத்திலும் எங்கும் இருக்க முடியும் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் இதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

1122 இந்த காலையில் இந்தக் கூடுகையில் எங்களுடைய சகோதரருக்காகவும், இங்குள்ள அவருடைய சிறு மந்தைக்காகவும், அவர்களுடைய தைரியத்திற்காகவும், இந்த பூமியிலே தேவனிடத்தில் காண்பிக்கும் விசுவாசத்திற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய ஆசீர்வாதங்கள் அவர்கள் மேல் இருக்கும்படி நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். கிறிஸ்துவுக்கான ஒரு வாஞ்சை உள்ள ஒரு இருதயம் இருக்கும் வரை, எப்பொழுதுமே எங்காவது ஒரு செய்தியாளன் இருந்து அந்த பசியுள்ள இருதயத்திற்கு செய்தியைக் கொண்டு வருவானாக. 23 பரலோகப் பிதாவே, இப்பொழுது தங்களுடைய கரங்களை தேவைக்காக உயர்த்தின அந்த ஜனங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களுடைய கரத்தின் கீழும், அவர்களுடைய இருதயத்தை சுற்றிலும் என்ன துடித்துக் கொண்டிருந்தது என்பதை நீர் அறிவீர். அவர்களுக்கு ஒரு தேவை இருந்தது. அது சுகவீனமாயிருந்தால், கர்த்தாவே, (சில மணி நேரங்களுக்கு முன்பு பேசப்பட்ட பால் ஷாரீட்டை தூக்கி எடுத்து நீர், அவர் மரணத்துக்கும் ஜீவனுக்கும் இடையே படுத்துக் கொண்டிருந்தபோது, எல்லா மருத்துவ விஞ்ஞானத்தாலும் சுகப்படுத்த முடியாத அந்த கடுமையான காய்ச்சலை, ஒரு சிறு ஜெபம் அந்தக் காய்ச்சலை உடனடியாக நிறுத்திவிட்டதே; நீர் யேகோவா தேவனாயிருக்கிறீர்), இந்த வனாந்திரத்தின் பின்பக்கத்தில் இங்கே இன்றைக்கும் நீர் அவ்வளவு உண்மையான பிரதிநிதித்துவம் கொண்டவராக இருக்கிறீர் என்பதையும், அங்கே வனாந்திரத்தின் பின்பக்கத்தில் மோசேயோடு அந்த நாட்களில் இருந்துபோலவே, நீர் இங்கேயிருக்கிறீர் என்பதையே காண்பிக்கிறீர்.

1224 நீர் ஜெபத்திற்கு செவி கொடுப்பீர் என்று நான் அறிந்திருக்கிற காரணத்தால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் மிகுந்த தாழ்மையோடும், மிகுந்த உத்தமத்தோடும் உம்மண்டை வருகிறோம், நாங்கள் எங்களுடைய சிந்தையில் கற்பனை செய்துகொண்டிருக்கிற காரியங்களை உம்மிடத்தில் கேட்பது தவறாயிருக்கும் என்றும் அறிந்துள்ளோம். நாங்கள் கேட்டுக் கொண்டிருப்பதைக் குறித்து ஆர்வமுள்ளவர்களாயும், அசைக்க முடியாத நிச்சயமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். நாங்கள் அதை விசுவாசிக்க வேண்டும் என்றும், அதைத் தருவது தேவனுடைய சித்தம் என்றும் அறிந்திருக்க வேண்டும், ஏனென்றால், கர்த்தாவே, நாங்கள் அறிந்துள்ள யாவற்றோடும் எங்களுடைய இருதயத்தில் நாங்கள் அதற்கான தீர்வைச் செய்துவிட்டோம். 25 எனவே, இந்த காலையில் இங்குள்ள சுகவீனமான ஒவ்வொரு நபரையும் நீர் சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இழக்கப்பட்ட ஒவ்வொருவரையும் இரட்சியும். அதை அருளும். அவர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிற இடத்திலேயே இன்றைக்கு ஏதோ காரியம் சொல்லப்படுவதாக அல்லது செய்யப்படுவதாக, சுவர்களை சுற்றிலும் நின்று கொண்டிருக்கிற அல்லது அவர்கள் எங்கிருந்தாலும், அந்த தேவனுடைய விசுவாச நங்கூரமானது அவர்களுடைய இருதயத்திற்குள்ளாக நகர்ந்து சென்று, அதை எல்லாவற்றுக்கும் முழுமையானதாக தீர்த்து வைப்பதாக. பிதாவே இதை அருளும். 26 ஆராதனைக்காக இந்த வீட்டை நாங்கள் பயன்படுத்தும்படி இந்த வீட்டை வைத்துள்ள இந்த சகோதரனை ஆசீர்வதியும். 27 இப்பொழுது உம்முடைய வார்த்தையினூடாக எங்களிடத்தில் பேசும், கர்த்தாவே, அதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம். நாங்கள் ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்ள விரும்புகிறோம், ஆனால் அதேசமயத்தில் கர்த்தாவே, நீரே எங்களுக்கு வேண்டும். நாங்கள் வெளியில் சென்று எங்காவது மரங்களின் கீழே அமர்ந்து ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள முடியும். ஆனால் இங்கோ உம்மோடு தயைபெறும்படிக்கே நாங்கள் கூடியிருக்கிறோம். கர்த்தாவே, இப்பொழுது நீர் எங்களை சந்திக்க மாட்டீரா? எங்களுடைய இருதயத்தில் இன்றைக்கு நீர் சிங்காசனமிட்டு, எங்களிடத்தில் பேசி, எங்களுடைய தேவைகளை எங்களுக்கு கூறி, நாங்கள் எங்களுடைய அன்பை உமக்கு வெளிப்படுத்துவதுபோல, உம்முடைய அன்பை நீர் எங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளதை அறிந்துகொள்ளும்படி எங்கள் இருதயத்திலுள்ள இருக்கையைத் திறந்திருக்கிறோம். இதை நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.

1328 அங்கே பின்னாலுள்ள யாராவது உட்கார வேண்டும் என்று விரும்பினால், நான் இங்கே சில நாற்காலிகளைக் காண்கிறேன், அதாவது நீங்கள் அதிக வசதியாக இருக்க விரும்பினால், நீங்கள் இங்கு முன்வரலாம். 29 இப்பொழுது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நேரங்கள் பிரம்மாண்டமான நேரங்களாயிருக்கின்றன. இன்று நான் என்ன கூறலாம் என்பதைக் குறித்து நேற்று நான் சிந்தித்துக்கொண்டிருக்கையில், இங்கு வருவதை நான் எதிர்நோக்கியுள்ளேன் என்பதை அறிந்திருந்து, இந்த சிறு ஜெபக் கூட்டத்திற்கு நான் வரும்போது நான் என்னக் கூறுவேன்? என்றே யோசித்துக் கொண்டிருந்தேன். கர்த்தர் எனக்கு உதவி செய்யும்படி நான் கேட்டுக்கொண்டேன். கர்த்தருடைய ஆசிர்வாதங்களுக்காக நாம் காத்துக்கொண்டிருக்கையில், காலையில் நான் வெளிப்படுத்தி கூற விரும்பி, இங்கே வேதத்திலிருந்து ஒரு சில குறிப்புகளை நான் எடுத்துக் கொண்டேன். 30 நீங்கள் உங்கள் இருதயத்தை திறந்து, கிறிஸ்துவின் லேசான தட்டுதலை, இருதயத்திலே புரிந்துகொள்ள வேண்டும் என்று இப்பொழுது நாங்கள் ஜெபிக்கிறோம். நினைவிருக்கட்டும், நீங்கள், நீங்கள் ஒரு விசுவாசியாயில்லையென்றால், இன்னும் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமலிருந்தால், உங்களுக்கு எப்போதும் சம்பவித்த காரியங்களிலேயே மகத்தான காரியமாய் இது இருக்கும். இந்தக் காலை இந்த வீட்டில் கூட்டப்பட்டு, அந்த தட்டுதல் உங்கள் இதயத்தில் உண்டாகும்போது, நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால், அது ஜீவனுக்கான ஒரு வாசலாக உள்ளது. அதை புறக்கணிப்பது மரணமாயுள்ளது. விசுவாசிக்கக் கூடிய ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு திறந்த வாசல் உண்டு என்று காண்பிக்கும்படியான காரணத்திற்காகவே நாம் இந்த காலை இங்கே இருக்கிறோம்.

1431 இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்திலிருந்து நான் 15-ம் அதிகாரத்தை இப்பொழுது நான் வாசிக்க விரும்புகிறேன். வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் 15-ம் அதிகாரத்தில் முதல் நான்கு வசனங்களை ஒரு பாகமாக நான் படிக்க விரும்புகிறேன்: பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது. அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதன் சொரூபத்திற்கும் அதன் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக் கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.

1532 கர்த்தருக்குச் சித்தமானால், ஒரு வெற்றியின் நாளென்று இதை அழைக்கும்படியாக அதிலிருந்து ஒரு பாடப் பொருளை நான் எடுக்க விரும்புகிறேன், வெற்றியின் நாள் என்று நாம் அதை அடையாளப்படுத்தும்போது, அது ஒரு முழுமையான வெற்றி என்பதாகும். 33 நாம்…வாசித்திருக்கிற அந்த அதிகாரத்தில் இந்த ஜனங்கள் வெற்றியைப் பெற்றிருந்தனர். ஆங்கில மொழியில் வெற்றி என்ற வார்த்தை ஒரு மகத்தான வார்த்தையாக உள்ளது என்றே நான் நினைக்கிறேன். நீ—நீ சத்துருவை தோற்கடித்திருக்கிறாய், நீ ஜெயங்கொண்டிருக்கிறாய், நீ ஜெயத்தைப் பெற்றிருக்கிற ஒரு ஜெயவீரனாயிருக்கிறாய் என்று அது பொருள்படுகிறது. நாம் ஒரு வெற்றியில் பாடல்களைப் பாடி மகிழ்கிறோம். அக்கினி கலந்த இந்த கண்ணாடி கடலண்டை வந்திருந்த இந்த ஜனங்களிடத்தில் ஏதோ ஒரு காரியம் இருந்தது என்று இங்கே நாம் கண்டறிகிறோம். அவர்கள் மிருகத்தின் மீதும் அவனுடைய சொரூபத்தின் மீதும், அந்த முத்திரையில் மீதும், அவனுடைய நாமத்தின் எழுத்தின் மீதும் ஜெயங்கொண்டிருந்தனர். இந்த எல்லா காரியங்களின் மீதும் அவர்கள் ஜெயங்கொண்டிருந்து, மறு கரையிலே ஜெயவீரர்களாய் நின்று கொண்டு, அக்கினி கலந்த கண்ணாடி கடலண்டை நின்றுகொண்டு, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திர பாடல்களைப் பாடினர்.

1634 இப்பொழுது வெற்றியை குறித்தும், வெற்றியின் நாட்கள் போன்றவற்றை குறித்தும் பேசப் போகிறோம். நம் வெற்றியின் நாளை குறித்து நினைக்கும்போது, அது நம்மை யுத்த சிந்தனைக்குத் திரும்ப கொண்டு வருகிறது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக யுத்தத்தைக் குறித்த வெற்றியின் நாள் என்று அழைக்கிற ஒரு—ஒரு—ஒரு நாளுக்கு நாம் வந்தோம். அங்கே அவர்கள் சத்துருவின் மீது ஜெயம் பெற்றிருந்தனர். நாம அதை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்பது மிகவும் மோசமானதாக உள்ளது. ஆனால் நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதற்கொண்டு உலகமானது மானிட இரத்தத்தால் ஊறிப்போயிருக்கிறது. 35 நீதிமானாகிய ஆபேலின் இரத்தமே பூமியில் சிந்திய முதல் மானிட இரத்தமாயிருந்தது. அவன், அவன் தேவனோடு சரியாக இருந்த காரணத்தால், அவன் தன்னுடைய இரத்தத்தை சிந்த வேண்டியதாயிருந்தது. அவன் விசுவாசத்தினாலே தேவனுக்கு இந்த ஆட்டுக்குட்டியை பலியிட்டபோது, அவனுடைய—அவனுடைய பாவநிவர்த்தியை தேவன் ஏற்றுக்கொண்டிருந்தார்.

1736 அவனுடைய பொறாமையுள்ள சகோதரன், அவன் மேல் கொண்ட பொறாமையினால், நீதிமானாகிய ஆபேலை கொலை செய்தான். பூமியின் மேல் சிந்தப்பட்ட எல்லாம் மானிட இரத்தத்திற்கும் அதுவே காரணமாக அமைந்தது. நிச்சயமாகவே பண்டைய பூமியானது, உலகம் முழுவதும் மானிட இரத்தத்தால் ஊறிப் போயிருக்கிறது. நாம்…அதற்கான ஒரு காரணம் உண்டு. இந்த மானிட இரத்தம் சிந்தப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. அதற்கான முதல் காரணம் பொறாமையாயிருந்தது என்பதையே நாம் கண்டிருக்கிறோம். அதாவது—அதாவது தேவன் ஆபேலினுடைய பலியை ஏற்றுக்கொண்ட காரணத்தால் காயீன் ஆபேல் மீது பொறாமை கொண்டான். எபிரேயர் 11 அதிகாரம், “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேலான பலியை தேவனுக்கு செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சி பெற்றான்” என்று—என்று—என்று நமக்கு கூறுகிறது. உண்மையாகவே காயீன் இதைக்குறித்து பொறாமை கொண்டான், ஏனென்றால் அவனுடைய பலியானது புறக்கணிக்கப்பட்டு, ஆபேலினுடைய பலியானது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபேல் விசுவாசத்தினால் இதைச் செய்தான். அவன் “விசுவாசத்தினால்” இதை செய்தான் என்று வேதம் கூறியுள்ளது. 37 இரண்டு பையன்களும் திரும்பி வரும்படிக்கு தேவனிடத்தில் தயையைக் கண்டறியும்படி முயற்சித்துக் கொண்டிருந்தனர் என்பதைக்—என்பதைக் காண்கிறோம், ஏனென்றால் அவர்கள் ஜீவனின் தோட்டத்திலிருந்து சற்று முன்னர்தான் வெளியே வந்திருந்தனர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் தங்களுடைய பெற்றோர்களின் மீறுதலினால் மற்றொரு பக்கத்தில் விழுந்து போயிருந்தனர், அவர்கள் மரணத்திற் குட்பட்டவர்களாயிருந்தனர். அந்தவிதமாகவே இந்த காலையில் நாம் எல்லோரும் மரணத்துக்கு பாத்திரவான்களாக நிற்கிறோம். அவர்கள் மீண்டும் ஜீவனை கண்டடைய அந்த ஸ்தலத்திற்கு எப்படி திரும்பி வரவேண்டும் என்பதை அறிந்துகொள்ள விரும்பினர். இவ்வாறு செய்வதனால் அவர்கள்—அவர்கள் தேவனிடத்தில் தயையைக் கண்டறிய முயற்சித்துக்கொண்டிருந்தனர். 38 காயீன் அழகான மலர்களையும், நிலத்தின் கனிகளையும் காணிக்கையாகப் படைத்தான். அல்லது அது என்னவாக இருந்ததோ, அதை பலிபீடத்தின்மேல் அவன் படைத்தான்.

1839 ஆனால் ஆபேலுக்கு ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மூலம் அந்த மரணத்திற்கு காரணம் நிலத்தின் கனியாயிருக்கவில்லை என்பது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. “அந்த மரணத்திற்கு காரணம் இரத்தமாய் இருந்தது.” எனவே ஒரு குற்றமற்ற மாற்றீடின் இரத்தத்தை அவன் அதற்கு திரும்ப படைத்தான், தேவன் அதை ஏற்றுக்கொண்டார். அந்த நாள் முதற்கொண்டு அது நம்முடைய பாவங்களுக்கான தேவனுடைய பாவநிவிர்த்தியாயிருந்து வருகிறது. வேறு வழியே இல்லை, வேறெந்த அடிப்படையின் பேரிலாவது அவர் அதை ஏற்றுக்கொண்டிருந்திருப்பாரானால், அப்பொழுது நாம் தேவனிடத்தில் தயவைப் பெற அந்த அடிப்படையில் வரவேண்டியதாயிருந்திருக்கும். ஆனால் தேவனோ குற்றமற்ற பலியின் குற்றமற்ற இரத்தத்தை மாத்திரமே ஏற்றுக்கொண்டார். புரிகிறதா? 40 ஆகையால் அழகான பெரிய ஸ்தலங்கள் தேவனுடைய ஏற்றுக்கொள்ளுதலாக இருந்திருக்குமானால், இன்றைக்கு நாமோ…“அவர் இந்த வனாந்தரத்தின் பின்பக்கத்திற்கு, இந்த இரயில் பாதை தடத்திற்கு அருகே அமைந்துள்ள இந்த சிறிய வீட்டுக்கு அவர் வருவாரா? அவர் இங்கு திரும்பி வந்து நம்மை சந்திப்பாரா?” என்று நாம் சந்தேகப்பட்டிருப்போம். ஆனால் அது ஒரு மகத்தான தேவாலயமாக இருந்திருக்குமானால் அல்லது காயீன் பலிசெலுத்தின அழகான பலிபீடமாக இருந்திருக்குமானால், ஏன், அப்பொழுது நாம் விருதாவாய் பேசுகின்றவர்களாகவே இருந்திருப்போம் என்பதையே நாம் கண்டறிவோம். 41 ஆனால் தேவனோ சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையிலேயே வந்தார். ஆகையால் இன்றைக்கு நாம் எவ்வளவு சிறியவராக இருந்தாலும், நாம் எவ்வளவு ஏழ்மையானவர்களாய் இருந்தாலும், அல்லது நாம் எவ்வளவுதான் ஒரு பெரிய இடத்தை தேவனுக்கு அளிக்க விரும்பினாலும், அது ஒரு பொருட்டல்ல, இப்போது அவர் நம்மை ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும் தேவன் அதை கூடுதலாக ஏற்றுக்கொள்ள மாட்டார், ஏனென்றால் நாம் குற்றமற்ற பதிலீயின் சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையின் பேரில் வருகிறோம், அது பாவிகளாகிய நமக்காக மரித்த கிறிஸ்துவாயிருக்கிறது.

1942 இப்பொழுது இந்த இரத்தம் சிந்தப்பட்டுள்ளதன் காரணமாக நான் நினைப்பதோ, அதாவது மனிதன்… தேவன் பார்க்கும்படி மனிதனை அழைக்கிறார், ஆனால் மனிதனோ தன்னைக் காண்பிக்க விரும்புகிறான். மனிதன் தன்னுடைய—தன்னுடைய சொந்த கருத்தின் அடிப்படையின் பேரில் தேவன் அவனுக்கு காண்பிக்க முயற்சித்துக்கொண்டிருப்பதை மனிதன் காண விரும்புகிறான். புரிகிறதா? தேவன் மனிதனுக்கு ஒரு காரியத்தை காண்பிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார், ஆனால் அவன்…அதை நோக்கிபார்க்கிறவிதமாகவே அதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறான். 43 ஆனால் அது எந்த ஒருவரும் ஒரு காட்சியை காண விரும்புகிறதைப் போன்றே உள்ளது. இந்த காட்சியைக் காண்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அங்கே உள்ள…நீங்கள், “அப்பால் உள்ள அந்த மலையை நோக்கிப் பாருங்கள்” என்று கூறினால், இப்பொழுது அங்கே உங்களுடைய கவனத்தைத் தொட்ட ஒரு காரியம் உண்டு, எனவே நீங்கள் என்னை அந்த மலையை நோக்கிப் பார்க்கும்படி கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். புரிகிறதா? அல்லது “இந்த மரத்தை நோக்கி பார்” என்று கூறினால், பாருங்கள், நான் அந்த மரத்தைப் பார்க்கும் படிக்கு நீங்கள் விரும்புகிறது ஏதோ ஒரு காரியம் அதைக் குறித்து உண்டு. 44 இப்பொழுது தேவன் திரும்பி வரும் ஒரு வழிக்காக அந்த குற்றமற்ற மாற்றீடை மனிதன் நோக்கிப் பார்க்கும்படிச் செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறார். மனிதனோ அதை தன்னுடைய சொந்த வழியில் நோக்கிப்பார்க்க விரும்புகிறான். இந்த குற்றமற்ற மாற்றீடில் தேவன் அவனுக்கு காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறததை அவன் காண விரும்புவதில்லை. ஆகையால் அதுவே தொல்லைக்கு காரணமாயிற்று. அதன் பின்னர் மனிதன் அதை பார்க்கிறபோது, தூரதரிசினி கண்ணாடியை எடுத்து, தேவன் அவனுக்கு காண்பிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறதை, வெகுதொலைவில் உள்ள அதை நோக்கி பார்த்தாலும், அவன் தன்னுடைய கண்ணாடியில் அதை சரியாக குறிவைத்துப் பார்க்கத் தவறுகிறான்.

2045 இங்கே அண்மையில் மலைகளுக்கு பிரயாணம் செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில், யாரோ ஒருவரால், “இங்கு உள்ள இந்த தூரதரிசினி கண்ணாடியை எடுத்து அங்குள்ள ஒரு குறிப்பிட்ட காரியத்தைப் பாருங்கள்” என்று கூறப்பட்டேன். பாருங்கள், அப்பொழுது நான் அந்த கண்ணாடியை எடுத்து, நான் மூன்று அல்லது நான்கு வித்தியாசமான பொருட்களைக் கண்டேன். இப்பொழுது நீங்கள் பாருங்கள், அப்பொழுது அதனோடு ஏதோ காரியம் தவறாக இருந்தது என்பதை நான் அறிந்துகொண்டேன். புரிகிறதா? இப்பொழுது, வயலில் நின்றுகொண்டிருந்த இந்த மானோ, அங்கே மூன்று அல்லது நான்காக, அவைகள் ஒன்றுசேர்ந்து நின்று கொண்டிருப்பது போன்று தென்பட்டது. இப்பொழுது, அது என்னவாக இருந்ததென்றால் சரியாக ஒரே ஒரு மான்தான் அங்கே இருந்தது. அந்தக் கண்ணாடியும் சரியாகத்தான் இருந்தது. ஆனால் நான் என்ன செய்திருக்க வேண்டுமென்றால் அந்த மூன்று மான்களும் ஒரே மானாகும்படி கண்ணாடியில் உள்ள குவிமையப் பார்வையை சரியாக திருப்பியி ருக்கவேண்டும். புரிகிறதா? அப்பொழுது அது…பாருங்கள், எனக்குப் பின்னே, ஒரு மான்தான்…இருந்தது என்பதை நான் அறிவேன், ஏனென்றால் அப்படித்தான் எனக்கு கூறப்பட்டது. ஆனால் நான் கண்ணாடியை எடுத்து, அதனூடாக நோக்கிப் பார்த்தபோது, அங்கே மூன்று மான்கள் நின்றுகொண்டிருப்பதைக் நான் கண்டேன். பாருங்கள், கண்ணாடியின் குவிமையப் பார்வை சரியில்லாததாயிருந்து. நான்—நான் அங்கே அந்த ஒரு மானை பார்க்கும்படியான நிலைக்கு அந்த குவிமையப் பார்வையை சரிப்படுத்த வேண்டியனாயிருந்தேன். அப்பொழுது அது என்னவாய் காணப்படுகிறது என்பதை காணும்படி அந்த கண்ணாடியானது அதை மிக நெருக்கமான பார்வைக்குக் கொண்டு வருகிறது.

2146 இப்பொழுது, தேவன் நமக்கு வேதாகமத்தை தந்திருக்கிறார். இப்பொழுது, வேதம் வார்த்தையாக இருக்கிறது, வார்த்தை தேவனாக இருக்கிறது. எனவே, அதுவே நம்முடைய தூரதரிசினி கண்ணாடியாக இருக்கிறது. அதுவே நம்முடைய கண்ணாடியாயிருக்கிறது. ஆனால் நாம் வேதாகமத்தில் நோக்கிப் பார்க்கும்போது, நான்கு அல்லது ஐந்து வித்தியாசமான வழிகளில் பார்க்கும்பொழுது, நீங்கள் பாருங்கள், அதற்கு சரியான குவிமையப் பார்வைத் தேவைப்படுகிறது. தேவனிடத்தில் ஒரு பயபக்தியான நோக்கத்திற்காக நோக்கி பார்க்கும் இடத்திற்கு நாம்—நாம் அதை கொண்டுவர வேண்டியவர்களாயிருக்கிறோம். 47 ஆனால் மனிதனோ ஒரு ஸ்தாபனத்தை துவங்கி இந்த விதமாக நடத்த விரும்புகிறான். மற்றொருவன் விரும்புகிறதோ, “பாருங்கள், நான்…அவனைக் காட்டிலும் நான் ஒரு பெரிய நபராக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன், எனவே நான் இங்கே ஒன்றைத் துவங்குவேன். நாம் நம்முடைய பையன்களுக்கு மேலான கல்வியை கொடுப்போம், நாம் இது போன்றவற்றைச் செய்வோம்” என்கிறான். புரிகிறதா? அவர்கள் அந்த கண்ணாடியின் குவிமையப் பார்வையைச் சரிபடுத்த தவறுகிறார்கள். அவர்கள் ஒரு காரியத்தை காண வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், அது அவருடைய பாவங்களுக்காக சிந்தப்பட்ட குற்றமற்ற இரத்தமாகும். அதுவே துல்லியமாய் இருக்கிறது. அதுவே உண்மையான காரியமாய் இருக்கிறது, வேறு எதுவும் ஒரு பொருட்டல்ல. நமக்கு ஒரு ஸ்தாபனம் தேவையில்லை. நான் அவைகளுக்கு எதிராக இல்லை, அவைகள் மாத்திரமே…அவைகள் செய்கிற சேதமே, ஜனங்களை வெளியே இழுத்து சகோதரத்துவம் மற்றும் உள்ள காரியங்களை வேறுபிரிக்கிறது.

2248 ஆனால் நாம் ஒரு காரியத்தை மாத்திரமே நோக்கிப் பார்க்க வேண்டும், அது நம்முடைய மாற்றீடாகும். அது உண்மை. அந்த மாற்றீடு இயேசு கிறிஸ்துவாயிருக்கிறது. 49 ஆகையால் இன்றைக்கு நாம் எப்படி ஸ்தாபனத்தில் திருகி விடப்பட்டிருக்கிறோம் என்பதை நீங்கள் பாருங்கள். அவர்கள், “மெதொடிஸ்டுகள் ஒரு எழுப்புதலைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாகவே அது பாப்டிஸ்டுகளை பொருட்படுத்துவதில்லை. அதுதான் மெதொடிஸ்டுகள். இவர்கள் ஒரு எழுப்புதலை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.” எல்லா நேரத்திலும் அவர்கள்—அவர்கள் மற்ற நபரை வெளியே தள்ளிவிடுகிறார்கள். ஆனால் நாம் அதை அந்தவிதமாக காண விரும்புகிறதில்லை. 50 ஒரே தேவன் உண்டு என்று நாம் கண்டறியுமட்டாய் நாம் அந்த குவிமையப் பார்வையைத் தொடர்ந்து சரிபடுத்திக்கொண்டே இருக்க விரும்புகிறோம். நீங்கள் அங்கே மூன்று பேர்களை காணும்போது, நீங்கள் அந்த கண்ணாடியின் குவிமையப் பார்வையை சற்று சரிப்படுத்துவது மேலானது. புரிகிறதா? நீங்கள்—நீங்கள் ஒரு காரியத்தை தவறாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நம் எல்லோருக்கும் ஒரே தேவன் தான் உண்டு என்றும், அவரே மானிட வர்க்கத்தின் தேவனாக இருக்கிறார் என்றும் கண்டறியும்படி நீங்கள் அதை சரியாக கொண்டுவருவது மேலானதாயிருக்கும்.

2351 அவர் தேவனாயிருப்பாரேயானால், ஒவ்வொரு மானிடவர்க்த்திலும் அவர் சிரத்தைக் கொண்டிருப்பார், ஏனென்றால் அது அவருடைய சிருஷ்டியாயிருக்கிறது. அவர் பிள்ளைகளிடத்தில் சிரத்தை கொண்டிருக்கிறார். முதியோர் இடத்திலும், நடுத்தர வயதிலுள்ளவர்களிடத்திலும் சிரத்தைக்கொண்டிருக்கிறார். அவர் நம்முடைய நிறங்களில் நாட்டமுள்ளவராக இருக்கிறார், வெள்ளை, பழுப்பு, கருப்பு, மஞ்சள் என்று, நம்முடைய முற்பிதாக்களிலிருந்து நாம் வந்துள்ள தேசத்திலிருந்து தோன்றிய நம்முடைய தோலின் வித்தியாசமான நிறங்களில் அவர் நாட்டங்கொண்டவராயிருக்கிறார். நம் எல்லோரிலும் அவர் நாட்டங் கொண்டவராயிருக்கிறார். அவர் யூத இனத்தில் மாத்திரம் நாட்டங்கொண்டவராயில்லாமல், மஞ்சள் நிற இனத்தவர், கருப்பு நிற இனத்தவர், வெள்ளை நிற இனத்தவர், அது என்னவாயிருந்தாலும், எல்லோரிடத்திலும் நாட்டங்கொண்டவராயிருக்கிறார். 52 அவர் முழு மானிட வர்க்கத்திலும் நாட்டங்கொண்டு, அந்த மானிட வர்க்கம் அவருடைய வார்த்தையை சரியான பார்வையில் உற்று நோக்கிப் பார்த்தது, “ஒரே தேவன் உண்டு என்றும், அந்த தேவன் குற்றமற்ற மாற்றீடை நமக்கு அளித்து, பாவத்தை எடுத்துப்போட்டு, முழு மனித வர்க்கத்தையும் இரட்சிக்க அவர்தாமே வந்ததினால் மனிதனானார்” என்று கூறி புரிந்துகொள்ளும்படி செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறார். தீர்க்கதரிசியாகிய யோவான் மிக அழகாக, யாராயிருப்பினும், “இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று விளக்கிக் கூறினான். அங்கே அந்த ஒரே குற்றமற்ற மாற்றீடில் முழு பாவத்தின் பிரச்சனையும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

2453 ஆனால் மனிதனோ தேவனுடைய தூரதரிசினி கண்ணாடியை எடுத்து இங்கு காணத் துவங்கும்போது, அவன்—அவன் துவங்குகிறதோ… அவன் மிக அதிகமாக இயற்கையை நோக்கி பார்க்கிறான், ஆனால் அவன் வார்த்தை அளிக்கக்கூடிய ஆவிக்குரிய பயன்பாடுகளைக் காணத் தவறுகிறான். 54 இப்பொழுது, மனிதன் நோக்கி பார்க்க முயற்சிக்கும்போது, அவன் செய்கிற மகத்தான காரியங்களில் ஒன்று இதுவாகும், ஏனென்றால் அவன் அந்த கண்ணாடியினூடாக காயீனைப் போல நோக்கிப் பார்க்கிறான். அவன் ஒரு—ஒரு தனிப்பட்ட சாதனையை நோக்கிப் பார்த்தான். காயீனோ, “என்னால் ஆபேலை அப்புறப்படுத்திவிட முடியுமானால், அப்பொழுது நான் ஒரே ஒருவன் தான் இருக்கிறேன், ஆகையால், பாருங்கள், அங்கே மற்றொரு நபரை அப்புறப்படுத்திவிடலாம்” என்று எண்ணிக்கொண்டான். மற்ற நபரை வழியிலிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறதையே காலங்களினூடாக மனிதன் செய்து வந்துள்ளான். 55 நீங்கள் பாருங்கள், ஒரு சகோதரனாக இருக்கும்படி, அந்த மற்ற நபரை தன்வழி௧்கு அவனை அழைக்க முயற்சிக்க வேண்டுமேயன்றி, அதற்கு பதிலாக, “ஓ, அது சிறு கூட்டம் என்றும், அப்படியே அவர்களை வெளியே தள்ளி விடலாம் என்றும், இது இங்கே உள்ளது, ஓ, பாருங்கள், அவர்கள் இது அல்லது அது” என்று கூற முயற்சிக்கக் கூடாது. புரிகிறதா? நாம் அதை செய்யக்கூடாது. நாம் அந்த முழு காரியத்தையும் இயேசு கிறிஸ்துவாயிருக்கிற ஒரு—ஒரு சீரான காட்சிக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

2556 கடந்த இரவு பேட்டியில் ஒரு வாலிப பெண்மணி, அவள் கூறினாள்…ஆனால் அவள் கூறினாள்… ஒருவிதமான சிறு காதல் விவகாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு ஊழியக்காரனுடைய மகள், அதைக் குறித்த காரியத்தினால் அவளுடைய சிந்தையை இழந்துவிட்டிருந்தாள். அவள் நிலைகுலைந்து போயிருந்தாள். ஒரு அழகான வாலிபப் பெண், கிட்டத்தட்ட இருபத்தி-மூன்று வயதுடையவள். 57 அவள் ஒரு சிறு பெண்ணாய் கிட்டத்தட்ட பன்னிரண்டு வயதுடையவளாய் இருந்தபோது, அவள் சிகாகோவில் இருந்தாள். கூட்டத்தில் அமர்ந்திருந்தபோது…அதாவது அது எலிகன் என்ற இடமாயிருந்து. அவள் கூட்டத்தில் அமர்ந்திருந்த போது, பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தாரினூடாக சென்று, அவளை அழைத்து, அவள் யாராக இருந்தாள் என்றும், “உனக்கு இருதயத்துடிப்பு சரியாக இல்லை என்றும், நீ பதினைந்து வயது வரை கூட உயிர்வாழ மாட்டாய் என்று மருத்துவர் கூறுகிறார். ஆனால், கர்த்தர் உரைக்கிறதாவது , நீ சுகம் அடைந்துவிட்டாய்” என்றும் கூறினார். அது முதற்கொண்டு அவள் ஒரு போதும் ஒரு இருதயக் கோளாறை உணரக் கூட—கூட இல்லையாம். 58 கடந்த இரவு அவளுக்கு ஒரு வித்தியாசமான இருதயக் கோளாறு உண்டாயிருந்தது, அது ஒரு ஆவிக்குரிய இருதயக் கோளாறாயிருந்தது. அவளுடைய காதலன் அவளை விட்டு ஓடிப்போய் வேறு ஒரு பெண்ணை விவாகம் செய்து கொண்டான். அதே சமயத்தில் அவள் இன்னும் அவன் மீது காதல் கொண்டுள்ளாள். இந்தப் பையனும் அவள் மீது காதல் கொண்டிருந்ததாகவும், அதே சமயத்தில் “இது நடந்ததற்கு காரணம் அவனுடைய தகப்பனாரே” என்றும் கூறிக் கொண்டிருந்தான். 59 அப்பொழுது நான், “ஓ அர்த்தமற்ற காரியம். அவன் மற்றொரு பெண்ணை விவாகம் செய்திருக்க வேண்டியதில்லை. அவன் உன் மீது சரியான விதத்தில் அன்புகொள்ள தவறின காரணத்தால் அவன் அதை செய்தான்” என்று கூறினேன். அதுதான் உண்மை.

2660 ஆனால், பாருங்கள், முழுவதுமாக அதற்குள்ளாக புண்படுத்தப்பட்டிருந்தும், அந்தப் பெண் அப்படிப்பட்ட ஒரு மயக்கத்தில் இருந்தாள். அப்பொழுதும் அவளோ, “ஓ, ஜானி என்னை நேசிக்கிறான் என்பதை நான் அறிவேன், நான் அறிவேன்” என்று கூறினாள். புரிகிறதா? அவளால் புரிந்துகொள்ள முடிந்ததெல்லாம் அவ்வளவுதான். அவள் அந்த ஒரு சொந்த சிறு உலகத்தில் வாழ்ந்தாள், அவளாகவே தன்னை அங்கே அதற்குள்ளாக உருவாக்கியிருந்தாள். 61 அப்பொழுது நான் அவளுடைய ஒரு கரத்தைப் பற்றிப் பிடித்தேன். பின்னர் நான், “எனக்குச் செவி கொடு” என்றேன். அப்பொழுது கர்த்தர் ஒரு தரிசனத்தைக் காண்பித்தார், நீங்கள் பாருங்கள், அதைக் குறித்து நான் ஒன்றையும் அறிந்திருக்கவில்லை என்பதை அவள் அறிந்திருந்தாள். அந்த தரிசனத்தில் அது அவர்களுக்கிடையே நடந்திருந்த ஒரு உரையாடலைக் குறித்த சம்பவமாக இருந்தது. அது கூறப்பட்டபோது, அப்பொழுது அது அவளை உடனடியாக விழிப்படையச் செய்தது. அப்பொழுது நான், “இப்பொழுது, நீ அங்கு வெளியே உள்ளபோது, கல்வாரியை நோக்கிப் பார். நீ இங்கிருந்து புறப்பட்டு போய் குடிப்பதற்கு முயற்சிக்கப் போகிறாய், நீ ஒரு ஊழியக்காரரின் மகள், ஒரு பெந்தேகோஸ்தே ஊழியக்காரனுடைய மகள், நீ செய்து கொண்டிருக்கிற காரியத்தினால் அந்த துக்கத்தை மூழ்கடிக்க முயற்சிக்கிறாய், ஆனால் அந்த மனிதனும் உனக்காக சிறிதளவு கூட கவலை கொள்ளவில்லை” என்று கூறினேன். மேலும் நான், “பெண்ணே, அப்பாலுள்ள கல்வாரியே நோக்கி பார். நீ திரும்பி வருவதற்கான ஒரே வழி அதுதான்” என்று கூறினேன்.

2762 நாம் ஜீவித்தாலும் அல்லது மரித்தாலும், மூழ்கினாலும் அல்லது அமிழ்ந்து போனாலும், நாம் அந்த சரியான குவிமையப் பார்வையை பெற்றுக்கொள்ள வேண்டும், அது கல்வாரியாய், கிறிஸ்துவாய் உள்ளது. அந்தக் காரியமே நாம் திரும்பி வரும்படி தேவன் விரும்புகிறதாய் உள்ளது. 63 மனிதரோ தேவனுடைய வார்த்தையின் குவிமையப் பார்வையைச் சரிபடுத்தி, தேவன் கூறும்படி செய்கின்ற ஒரு காரியத்தை கூறுவதற்கு பதிலாக நாம் இயற்கையான பக்கத்தை நோக்கிப் பார்க்கிறோம். ஆகையால், அதை—அதை, மனிதன் அதை செய்வதினால், அளிக்கப்பட்டுள்ள காரியங்களுக்குப் பின்னான ஒரு இடத்திற்குள்ளாக அவனாகவே சென்றுவிடுகிறான். “நமக்கு, சிறு குழுவான நமக்கு இங்கே ஒரு தருணம் உள்ளது, நம்மால் இதைச் செய்ய முடியும் நம்மால் முடியும்… நாம் மற்றவர்களோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை.” அதாவது, பாருங்கள், அந்த முதல் காரியம் அளிக்கப்பட்டுள்ளது. நாம் ஒருவருக்கு ஒருவர் கொண்டிருக்க வேண்டிய சகோதர சிநேகத்தை அறிந்து கொள்ளும்படியான குவிமையப் பார்வைக்கு பதிலாக, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் நேசித்து, ஒருவரோடொருவர் சேர்ந்து ஆராதிப்பதற்கு பதிலாக, அவர்கள் ஒரு மனிதனை அவன் உடுத்துகிற ஆடைகளின் காரணமாகவும், அல்லது—அல்லது அவன் பெற்றுள்ள கல்வியின் நிமித்தமாகவும், அல்லது அவனுடைய தோலின் நிறத்தின் நிமித்தமாகவும் அல்லது—அல்லது அதுபோன்ற காரியத்தின் நிமித்தமாகவும் கேவலப்படுத்துகிறார்கள். அதாவது அவனுடைய…அதாவது, ஆகையால், அது ஜனங்களை வேறுபடுத்துகிறது, எனவே அந்த மனிதன் அதற்குப் பின்னே சென்று விடுகிறான்.

2864 அது உள்ளான மனுஷன் கிரியை செய்வதற்கு ஒரு வாய்ப்பினை ஒருபோதும் அளிக்கிறதேயில்லை. இப்பொழுது நாம்—நாம் ஒரு திருத்துவ சரீர பாகமாக இருக்கிறோம்: ஆத்துமா, சரீரம், ஆவி. இப்பொழுது, அந்த மாம்ச சிந்தை…உங்களுக்குள் கிரியை செய்கிற இரண்டு ஆவிக்குரிய சக்திகள் உங்களுடைய சிந்தனையிலும், உங்களுடைய—உங்களுடைய ஆவியிலும் உள்ளது. புரிகிறதா? இப்பொழுது மாம்ச சிந்தை உயர்வாக மெருகேற்றப்பட்டு தன்னுடைய அறிவாற்றலினால் ஏதோ ஒரு காரியத்தை சாதிக்க முயற்சிக்கும். புரிகிறதா? அவன் அதைச் செய்யும்போது, அவன் அதே காரியத்தை செய்யும்போது, அவனுக்குள்ளாக இருக்கிற ஆவிக்குரிய மனிதனிலிருந்து அவனே தன்னை தூர விலகிக் கொள்கிறான். சரியாக அங்குதான் தொல்லையே உண்டாக காரணமாகிறது, பாருங்கள், அவன் தன்னையே அதற்குள்ளாக வெளிப்படுத்த முயற்சிக்கிறான்.

2965 நான் பேசினதுபோல, நான் இங்கே கூடாரத்தில்தான் என்று நினைக்கிறேன், “தேவன் மகத்தானவராக இருக்கிறார், அவரால் மிகவும் எளிமையாக முடியும்” என்று பேசினேன். 66 இப்பொழுது, பாருங்கள், நாம் மகத்தானவர்களாகும்போது, நம்மால் எளிமையாக இருக்க முடியாது. புரிகிறதா? நாம், நாம் மிக அதிகமாக அறிந்துகொண்டவர்களாயிருக்கிறோம். நாம்—நாம், “ஓ, அது இந்த விதமாக இருக்க வேண்டும், நாம் கூறுகிற விதமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் அது கிடையவே கிடையாது” என்று கூறிவிடுகிறோம். புரிகிறதா? பாருங்கள், அந்தவிதமாகவே நாம் தேவனைத் தவறவிடுகிறோம். 67 ஒரு மனிதன் ஒரு மகத்தான மனிதனாக் கூடுமானால், மகத்தான, மகத்தான, தொடர்ந்து மகத்தானதாக ஆகிக் கொண்டே சென்றால் அவன் என்ன செய்வான்? அப்பொழுது அவன் அப்படியே மிகத் தாழ்மையானவனாக, மிக எளிமையானவனாக மாற, பாருங்கள், அவர்களுக்கு மத்தியில் இருக்கின்ற அந்த மகத்தான நபரின் நிலையினை அறியாமல், அவருடைய தலைக்கு மேலே நடந்து செல்லும் நிலையினை அடைவார்கள். 68 அதே காரியத்தையே நாம் செய்கிறோம். நாம்—நாம் ஒரு மின் பொறியினை அளக்கிறோம், நாம் ஒரு அணுவைப் பிளக்கிறோம், நாம் ஒரு—ஒரு செய்தியை சந்திரனுக்கு அனுப்புகிறோம், ஆனால் நாம் நடந்து செல்லும் சாதாரண புல்லைக் குறித்து ஒன்றும் அறியாதவர்களாயிருக்கிறோம். அது உண்மை. சிறிய மலரைக் குறித்து எவருமே விளக்கிக் கூறவோ அல்லது அடுத்த வருடம் ஒரு மலரைப் பிறப்பிக்கப் போகிற பூமியில் உள்ள அந்த சிறு விதையில் மறைந்திருக்கிற ஜீவனைக் கண்டறியவோ முடியாது. உலகத்திலுள்ள எல்லா விஞ்ஞானிகளாலும் ஒரு சாதாரண புல்லையோ, அதன் ஒரு சிறு துளிர் முனையையோ, ஒரு புல்லையோ உண்டாக்க முடியாது. புரிகிறதா? உங்களால் அதை செய்ய முடியாது, ஏனென்றால் அது ஜீவனை உடையதாய் இருக்கிறது. ஆகையால் பாருங்கள், நாம்…

3069 “தூதர்கள் நடக்க பயப்படும் இடத்தில், முட்டாள்கள் ஆணிகள் பதித்த காலணிகளால் நடப்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மையாகவே மெய்தான். நாம் சாதாரண காரியங்கள் மீது நடக்கிறோம். நாம் தேவன் மீது நடக்கிறோம். 70 நாம் ஒரு மகத்தான காரியத்தின் மீது நடந்து, ஒரு அற்பமானக் காரியத்தை எதிர்நோக்குகிறோம். இப்பொழுது, அதுதான் அது, பாருங்கள், பெரியக் காரியத்தின் மீது நடப்பது. நாம் நம்மை எளிமையாக்கிக் கொண்டு தாழ்த்தக் கூடுமானால் நலமாயிருக்கும். எவருமே நோக்கி பார்க்கக்கூட முடியாத… 71 அங்குள்ள அந்த திராட்சைச் செடி, அது என்ன? தேவன். அது என்ன? அது எரிமலை சாம்பலாய், அதற்குள் ஒரு ஜீவனைக் கொண்டதாய் உள்ளது. திரும்பி, அந்தப் பக்கமாய் நோக்கி பாருங்கள், அங்கே காட்டன்வுட் என்ற ஒரு வலிமையான மரம் நிற்கிறது என்று நான் நினைக்கிறேன். அது என்ன? அது எரிமலை சாம்பலாய், அதனுள் ஒரு வித்தியாசமான ஜீவனைக் கொண்டுள்ளது. இந்த விதமான ஜீவனே ஒரு—ஒரு மரத்தை உண்டாக்கியது. அந்த விதமான ஜீவனே ஒரு திராட்சச்செடியை உண்டாக்கியது. புரிகிறதா? 72 நாம் என்னவாக இருக்கிறோம? ஜீவனைக் கொண்டுள்ள எரிமலை சாம்பலாய் இருக்கிறோம். நாம் இருக்கிற விதமாக நம்மை உருவாக்கியது எது? தேவன் நமக்குள் ஜீவனை வைத்திருக்கிறார், ஆகையால் நாம் தேவனுடைய பிரஜைகளானோம், இல்லையென்றால் நாம் ஒன்றுமில்லாதவர்களாயிருப்போம். ஆகையால் நாம்—நாம் வார்த்தையில் குறிவைத்து தேவனைக் கவனித்து வருகிறோம்.

3173 ஆனால் மனிதன் ஒருபோதும் சரியானதை விளக்கிக் கூறும் படியான ஒரு வாய்ப்பினை உள்ளான மனிதனுக்கு அளிக்கிறதேயில்லை, அதன் காரணமாகத்தான் தொல்லையே உண்டாகிறது. கவனியுங்கள். அவன் அதை செய்யவில்லையென்றால், அப்பொழுது என்ன சம்பவிக்கிறது? பாருங்கள், அவனுடைய கோபமோ காயீனைப் போன்று உடனே பொங்கி எழுகிறது என்பதை நாம் கண்டறிகிறோம். அவன் பொறாமை கொண்டிருந்தான். காயீன் தன்னுடைய பலியை செலுத்தினபோது, தேவன் அவனுடைய பலிக்கு பதிலாக…ஆபேலினுடைய பலியை ஏற்றுக் கொண்டது அவனுக்கு பிடிக்கவில்லை. அவனும் கூட செல்ல விரும்பினான். அவன் தன்னுடைய சொந்த பலியை விரும்பினான். பாருங்கள், அவன் ஆபேலினிடத்தில் வந்து, “ஓ, என் சகோதரனே, தேவன் ஏற்றுக்கொண்டதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இப்பொழுது இந்தவிதமாக யேகோவா ஏற்றுக்கொள்ளுகிறார் என்று நாம் அறிந்துள்ள ஒரு வழியை நாம் பெற்றுள்ளோம், ஏனென்றால் உன்னுடைய பலியை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர் அதை நிரூபித்திருக்கிறார்” என்று கூறுவதற்கு பதிலாக அவன் தன்னுடைய சொந்த வழியை விரும்பினான். அதுதான் செய்யப்படவேண்டிய காரியமாய் இருந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் அதற்கு பதிலாக அவனோ பொறாமைக் கொண்டான்.

3274 இப்பொழுது, மனிதர்களுக்குள் இன்றைக்கு அதே காரியத்தை நீங்கள் காணவில்லையா? [சபையோர் “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] புரிகிறதா? இது அப்படியே அவனுடைய வழியாய் இருக்கிறது, பாருங்கள், இப்பொழுது, சத்தியமாயிருக்கிறது என்று தேவன் ரூபகராப்படுத்துகிற வழியை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவ்வாறு செய்வது. 75 தேவன் தாமே அந்தவிதமாக காட்சியில் அசைவாடி, “ இதுதான் அது. விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது, நீங்கள் என்னைக் காண்பீர்கள், நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் கூட இருப்பேன்” என்று கூறுகிறார். பாருங்கள், உலகம், நீங்கள்…“உலகம் என்னைக் காணாது, நீங்கள் என்னைக் காண்பீர்கள்.” பாருங்கள், “காயீன் என்னைக் காணமாட்டான், ஆனால் நீங்கள், ஆபேலோ என்னைக் காண்பீர்கள்.” உங்களுக்கு புரிகிறதா? ஏனென்றால் இது—இது அதேக் காரியமாய் உள்ளது. 76 வந்து, “பாருங்கள், அற்புதமானது, நாம் ஜனங்களுக்கு மத்தியில் தேவனையும், கிரியையும் காண்கிறோம். நாம் அதை செய்வோம்” என்று கூறுவதற்கு பதிலாக, வேண்டாம், ஐயா, என்று கூறி பிரமாணத்தோடும், அதே காரியத்தோடும், பேராசையோடும், சரியாகக் கூறினால், பொறாமையோடும், காயீன் கொண்டிருந்த அதேக் காரியத்தை உடையவர்களாயிருக்கிறோம், அவன் தன்னுடைய சகோதரனின் இரத்தத்தைக் கேட்கிறான். அவனை பாதையிலிருந்து அவன் அழித்துப் போட, அவனை அப்புறப்படுத்த முயற்சிக்கிறான். “அவர்கள் ஒரு கூட்ட பரிசுத்த-உருளையர்களேயல்லாமல் வேறொன்றுமில்லை, அவர்கள் அற்பமானவர்கள்” என்கிறான். புரிகிறதா? நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுதான் தொல்லையைத் துவக்குகிறது. அங்கேதான் தொல்லை ஆரம்பமாகிறது. அங்கேதான் உறுதிமொழிகள் முறிக்கப்படுகின்றன. அங்குதான் ஐக்கியமானது முறிக்கப்பட்டு வேறுபிரிகிறது. அந்த காரியமே இல்லங்களை உடைக்கின்றன. அந்தக் காரியமே விவாகரத்துக்களை நோக்கியவாறு செயல்படத் துவக்குகிறது. அதேக்காரியம்தான் ஐக்கியத்தை முறிக்கிறது.

3377 அந்தக் காரியம் தான் ஏதேனில் ஐக்கியத்தை முறித்தது, ஏனென்றால் ஏவாள் தேவனுடைய வார்த்தையின் பேரில் நோக்கிப் பார்க்கும்படியான தன்னுடைய பார்வையை சரியாக வைக்க தவறிப் போய், சத்துருவின் யோசனைகளுக்கு செவி கொடுத்தாள். புரிகிறதா? பார்த்தீர்களா? அவள், “தேவன் அவ்வண்ணமாய்க் கூறினாரே. அது அதற்கு தீர்வாகிறது. தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்” என்பதோடு அப்படியே தரித்திருந்தி ருப்பாளேயானால் நலமாயி ருந்திருக்கும், ஆனால் அவள் அதைச் செய்ய விரும்பவில்லை. புரிகிறதா? அவள் தன்னுடைய தூர தரிசினி கண்ணாடியின் குவிமையப் பார்வையை மாற்றி காணத் தொடங்கினாள், அது ஒரு வழியாய் இருப்பதற்கு பதிலாக அங்கே இரண்டு வழியானது. புரிகிறதா? அவள், “பாருங்கள், இப்பொழுது, இந்த மனிதன் ஒருகால் சரியாக இருக்கக்கூடும். அவன் சரியாக இருக்கலாம். இப்பொழுது, தேவன் சரியாய் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம், அவனும் சரியாக இருக்கலாம். இது தேவன் கூறினதின் பேரில் அதிக வெளிச்சமாய் உள்ளது” என்பதைக் கண்டாள். உங்களுக்கு அங்கே புரிகிறதா? 78 இன்றைக்கு அதே காரியமே சம்பவிக்கிறது, சரியாக அதே இடத்திற்கு திரும்பி வருதல். புரிகிறதா? பார்த்தீர்களா? நீங்கள் இரண்டு ஆலோசனைகளை காண்கிறீர்கள். ஒன்றே ஒன்றுதான் உண்டு. எந்தப் பிரமாணமும் கிடையாது. இது வார்த்தையாய், இது தேவனுடைய வார்த்தையாய் உள்ளது, தேவனுடைய நோக்கமாய், தேவனுடைய திட்டமாய் உள்ளது. மற்ற எல்லா திட்டங்களும் நன்மையானவைகளாய் இருக்கவில்லை. 79 அதாவது, ஏவாள் இந்தப் பொல்லாத காரியத்தைச் செய்தாள், அந்தக் காரணத்தினால்தான் இன்றைக்கு தேவன் தம்முடைய வார்த்தையில் ஸ்திரீகளை ஊழியக்காரிகளாக இருக்கும்படி ஒருபோதும் அனுமதிக்கிறதில்லை. புரிகிறதா? அது வார்த்தையில் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

3480 இந்த காலையில் எங்களுடைய வீட்டில் உள்ள காலை சிற்றுண்டி மேசையண்டையிலே அதிகாலையில் அமர்ந்தபோது, நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் சரியான நேரத்திற்கு வரும்படியாக, வேறு சந்திப்பு திட்டப் பணிக்கு திரும்பவும் செல்ல வேண்டியிருந்தபடியால், நாங்கள் புறப்பட்டு செல்ல விரும்பினோம். எனவே, நாங்கள், நான் சொன்னேன்…நாங்கள் மேசையண்டையில் பேசிக்கொண்டிருந்தோம். தேவதூதர்களை குறித்ததான வார்த்தையைக் குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அங்கு அமர்ந்திருந்த என்னுடைய குட்டிப் பையன் ஜோசப் தூதர்களைக் குறித்த ஏதோ ஒன்றைக் கூறினான். அவன், “இப்பொழுது அப்பா” என்று கூறி, அவன், “தூதர்கள்…” என்று கூறினான். அப்பொழுது நான், “தேவன் ஒரு மனிதனாய் இருக்கிறார்” என்றேன். “ஆனால்” என்று அவன் கூறி, “தூதர்களோ ஸ்தீரிகளாய் இருக்கிறார்கள்” என்றான். அதற்கு, “நான் அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது” என்று கூறினேன். புரிகிறதா? அவன் கூறினான்… 81 “பாருங்கள், அவர்கள் புரிந்து கொண்டதோ…” என் மகள் சாராள், “ஆனால் அப்பா, அவர்கள், தூதர்கள் பாவாடை அணிந்திருக்கிறார்களே” என்று கூறினாள். எனவே, “அவர்கள், அவர்கள் ஸ்திரீகளாய் இருக்கிறார்கள்” என்றாள். அப்பொழுது நான், “அது யாரோ ஒரு மனோதத்துவவாதி அந்த புகைப்படத்தை வரைந்ததாக உள்ளது” என்றேன்.

3582 வேதாகமத்தில் ஒரு தூதன் “அவள்” என்று அழைக்கப்படவில்லை என்பதை அவர்கள் ஒருபோதும் கண்டதில்லை. அது எப்பொழுதும், “அவன்” என்றே உள்ளது, அவன், அவன், அவன், “அவள்” என்று அல்ல—அல்ல. ஒரு தேவதூதன் ஒரு ஸ்திரீயாக உள்ளதாக அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. வேதத்தில் அவ்வாறு ஒருபோதும் இருந்ததேக் கிடையாது. ஜீவனுள்ள தேவனுடைய சபையிலும் அது கிடையாது. ஒரு பெண் செய்தியாளர் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமும் கிடையாது. தூதன் என்றால் ஒரு “செய்தியாளர்” என்பதாகும். எனவே தேவன் அதை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. 83 காரணம், வேதம் “முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்” என்று கூறுகிறது. புரிகிறதா? ஆகையால் அவள்…கூறினாள், பவுல், “உபதேசம்பண்ணவும் அல்லது எந்த அதிகாரத்தையும் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை, அவர்கள் சபையில் பேசாமல் இருக்கக்கடவர்கள், வேதமும் அப்படியே சொல்லுகிறது” என்று கூறினான்.

3684 இப்பொழுது, அதில், நீங்கள் பாருங்கள், இப்பொழுது, இப்பொழுது, நம்முடைய பெந்தேகோஸ்தே குழுக்கள் அதற்கு அஸ்திவார ஆதாரத்தைப் போன்று இருக்கின்றனர். பார்த்தீர்களா? அவர்கள் என்ன செய்கின்றார்களென்றால், அவர்கள், “பாருங்கள், இப்பொழுது, இங்கே உள்ள ஒரு ஸ்திரீயால் ஒரு மின்னலைப் போன்று பிரசங்கிக்க முடியும்” என்ற நோக்கத்தோடு பார்க்கிறார்கள். பாருங்கள், அதில் சந்தேகமே கிடையாது. முற்றிலுமாக. சில பெண் பிரசங்கிகள் பிரசங்கிப்பதை நான் கேட்டிருக்கிறேன், அவர்களால் பிரசங்கிக்க முடியும், அதாவது அவர்கள் பேசுகின்ற நிழலின் பக்கத்தில் கூட ஆண் பிரசங்கிகளால் நிற்க முடியாது. ஆனால் அதற்கு நீதியான காரியத்தோடு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை; பாருங்கள், எந்த ஒரு காரியத்தையும் அது உடையதாய் இருப்பதில்லை. 85 பவுல், “ஒருவன் அந்நியபாஷையில் பேசினால், அதற்கு அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், அவன் அமைதியாக இருக்ககடவன்” என்றான். நீங்களோ, “என்னால் அமைதியாக இருக்க முடியாது” என்று கூறலாம். 86 ஆனால் உங்களால் இருக்க முடியும் என்று வேதம் கூறி உள்ளது, பாருங்கள், எனவே அது தான் இது. புரிகிறதா? அது ஒழுங்கின்படி செய்யப்படவேண்டும், சீராக அதனுடைய ஸ்தானத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும், எப்போதுமே அதனுடைய ஸ்தானத்தில் தரித்திருக்க வேண்டும். 87 பாருங்கள், அங்கே நீங்கள் குறி தவறிப்போயிருக்கிறீர்கள். அதுவே மனஸ்தாபங்கள், பேராசை போன்றவற்றிற்கும் காரணமாகிறது. நாம் திரும்பிவரும்படி வார்த்தையோடு நம்மை குறிவைத்து பார்ப்பதற்கு பதிலாக, நாம் குறி தவறிப் பார்த்து, பாருங்கள், “பாருங்கள், அவர்கள் என்னக் காண்கிறார்களோ, அதையே செய்யட்டும்” என்கிறார்கள். பாருங்கள், அந்தவிதமாகவே, அப்பொழுது அது அந்தவிதமாகவே அப்படியே உள்ளது. சரி.

3788 அது குடும்ப ஐக்கியத்தை உடைத்துப்போடுகிறது என்பதை நாம் கண்டிருக்கிறோம். அது சபைகளின் ஐக்கியத்தை உடைத்துப்போடுகிறது. அது தேசங்களின் ஐக்கியத்தை உடைத்துப்போடுகிறது, அதேக் காரியம்தான். 89 தேசங்கள் தங்களுடைய சொந்த வழியைக் காண விரும்புகின்றன. ஜெர்மனி தன்னுடைய சொந்த வழியை மாத்திரமே காண விரும்புகிறது. ருஷ்யா தன்னுடைய சொந்த வழியை மாத்திரமே காண விரும்புகிறது. அமெரிக்கா தன்னுடைய வழியை மாத்திரமே காண விரும்புகிறது. பார்த்தீர்களா? ஆகையால், பாருங்கள், அதுதான் அது. அது தேசங்களின் ஆவியாயுள்ளது. நீங்கள் எங்கே சென்றாலும், நீங்கள் ஒரு தேசத்தின் ஆவியைக் கண்டறியலாம். நான் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் வித்தியாசமான வழிகளை கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் வினோதமாயிருக்கிறது. எனக்கு நேரமிருந்திருந்தால், நான் விட்டுவிட்ட சில தேசங்களைக் குறித்து உங்களுக்கு எடுத்துக் கூறியிருந்திருப்பேன். 90 நீங்கள் அதற்குள் செல்லும்போது, நீங்கள் ஜெர்மனிக்குள் செல்லும்போது, நீங்கள் ஒரு இராணுவ ஆவியைக் கண்டறியலாம். ஒவ்வொரு காரியமும் இராணுவமாயிருக்கிறது. நீங்கள் நேர்மையாக நின்று, நேர்மையாக நடந்து, உங்களுடைய காரியங்கள் ஒவ்வொன்றையும் சரிப்படுத்தலாம். அது இராணுவமாக உள்ளது. 91 நீங்கள் பிரான்சுக்குள் செல்லும்போது, நீங்கள் ஓரு ஒழுக்கக்கேடான ஆவியைக் கண்டறியலாம்: ஸ்திரீகள், மதுபானம், சாராயம், அதுபோன்ற காரியங்கள். புரிகிறதா?

3892 நீங்கள் பின்லாந்துக்குள் செல்லும்போது, நீங்கள் ஒரு விசுவாசமுள்ள ஆவியை கண்டறியலாம், ஒவ்வொரு காரியமும் அந்தவிதமாக நேர்மையாயிருக்கிறது. “நாம் எல்லாவற்றிற்க்கும் கிரயம் செலுத்தியாக வேண்டும்.” புரிகிறதா? அது அவ்வாறு செய்யப்பட வேண்டும். அது அந்தவிதமாக இருக்கவேண்டியதாய் உள்ளது. அவர்கள் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டியிருந்தாலும், அது என்ன கிரமாயிருந்தாலும் ஒரு பொருட்டல்ல, அது அந்த விதமாகவே இருக்கவேண்டும். 93 நீங்கள் அமெரிக்காவுக்குள் வரும்போது, நீங்கள் ஒரு பெரிய, “ஹா, ஹா, ஹா, ஹா, ஹா!” என்ற ஒரு சிரிப்பைக் கண்டறிவீர்கள். அது அப்படித்தான் உள்ளது. ஆம். அது அமெரிக்கனுடைய ஆவியாய் உள்ளது. யாரோ ஒருவர் ஒரு அசுத்தமான நகைச்சுவையை வானொலியில் கூறும்போது ஒவ்வொருவரும் அதற்காக சிரிக்கிறார்கள். எர்னி ஃபோர்ட்டு, அல்லது—அல்லது அவர்களில் சிலர், ஆர்தர் காட் பிரே, அதைப் போன்ற குழுவினர், உங்களுக்குத் தெரியும், எங்கும் அவர்களுக்குத் தெரிந்துள்ள நகைச்சுவைகளை கிறுக்குத்தனமாக கூறிக் கொண்டிருக்கிறார்கள், பாருங்கள், அதுவே—அதுவே அமெரிக்கனுடைய ஆவியாய் உள்ளது. நீங்கள் அதை அந்தவிதமாகவே கண்டறிகிறீர்கள்.

3994 ஆகையால் அந்த ஆவிகள் மற்ற ஆவியைக் குறித்து பொறாமை கொள்கின்றன. அவை என்ன செய்கின்றன? அவைகள் யுத்தத்தை விளைவிக்கின்றன. அது உண்மை. 95 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், ஒவ்வொரு தேசமும் சாத்தானால் கட்டுப்படுத்தப்படுகிறது. வேதம் அவ்வண்ணமாகவே கூறியுள்ளது. அவன் தேசங்களின் தேவனாயிருக்கிறான். சாத்தான் இயேசுவை மலையின் உச்சிக்கு கொண்டுசென்று, கூறினதாவது… உலகத்தில் உள்ள எல்லா இராஜ்ஜியங்களையும், எல்லா இராஜ்ஜியங்களையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்கு காண்பித்தான். அவன், “இவைகள் என்னுடையவைகள். நான் விரும்புகிற எந்த காரியத்தையும் அவர்களோடு செய்கிறேன்.” மேலும், “நீ என்னை ஆராதித்தால், நான் அவைகளை உனக்கு கொடுப்பேன்” என்று கூறினான். 96 இயேசு “அப்பாலே போ சாத்தானே” என்றார். ஆயிர வருட அரசாட்சியில் அவர் அவைகளுக்கெல்லாம் சுதந்திரவாளியாகப் போகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். புரிகிறதா? எனவே அவர் அவனுக்கு பணிய வேண்டியதாயிருக்கவில்லை. அவைகள் இருக்கப்போவதை…அவர் அறிந்திருந்தார். 97 இப்பொழுது, தேவன் மீண்டும் வரும்போது, தம்முடைய இராஜ்ஜியத்தை இங்கே அவர் எடுத்துக்கொள்ளும்போது, ஸ்தாபிக்கும்போது, பாருங்கள், அங்கு எந்தவித வித்தியாசமான ஆவிகளும் இருக்காது: ஒரு ஜெர்மானிய ஆவி, ஒரு பிரான்சு ஆவி, ஒரு—ஒரு நார்வே நாட்டுக்காரனின் ஆவி, அமெரிக்கனின் ஆவி என்று அந்த விதமாக இருக்காது. அது ஒரே ஆவியாய், ஆமென், தேவனுடைய ஆவியாய், ஒவ்வொரு இருதயத்திலும் ஜீவிக்கிறதாயிருக்கும். அது உண்மை. அங்கே ஒரே கொடியாய், ஒரே தேசமாய், ஒரே ஜனங்களாய், ஒரே சகோதரத்துவமுமாய், ஒரே தேவனின் பிதாத்துவமும், மனுஷரின் ஒரே சகோதரத்துவமும் இருக்கும். குமாரத்துவம்! ஆம்.

4098 ஜனங்கள் இதைச் செய்கின்றபடியால், இந்த பெரிய வம்புகள் போன்றவைகள் ஏற்படுகின்றன என்பதை நாம் கண்டறிகிறோம்… இப்பொழுது, பாருங்கள், சாத்தான் அதை கட்டுப்படுத்துகிற வரையிலும் அங்கே யுத்தங்களும் தொல்லைகளும், யுத்தமும் இருக்கப்போகின்றன. இயேசு பரிசுத்த யோவானில்…பரிசுத்த மத்தேயு 24-ல், “நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும், யுத்தங்களையும், யுத்தத்தையும் கேள்விப்படுவீர்கள்” என்றார். ஏன்? காரணம், இப்பிரபஞ்சத்தின் பிரபுவாகிய சாத்தான், தேசங்களின் வல்லமையை… இங்கு ஒரு தேசத்தின் ஆவி உண்டு, இங்கு ஒரு தேசத்தின் ஆவி உண்டு. அது பிசாசுகள். அவர்களால் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழமுடியாது. புரிகிறதா? 99 நீங்கள் எப்போதாவது அங்கே மேலே உள்ள ஒரு கூட்ட எஸ்கிமோக்கள் உள்ள தேசத்திற்கு சென்று, அங்கு நீங்கள் நாய்கள் இழுக்கும் வண்டியில் வட அலாஸ்கா மற்றும் வடமேற்கு எல்லையைச் சுற்றிலும் உள்ள இடங்களுக்குச் சென்றதுண்டா? அங்கு வழிகாட்டியானவன் ஹஸ்கீஸ் [வண்டி இழுக்கும் நாய் இனம்—மொழிபெயர்ப்பாளர்] என்று அழைக்கப்படும் இந்த நாய்களை…கட்டிக்கொண்டிருந்தபோது, அவன் இங்கே ஒன்றையும், அங்கே ஒன்றையும், இங்கே ஒன்றையும் தனித்தனியாகக் கட்டினான். அப்பொழுது நான், “நீ ஏன் அவ்விதம் கட்டிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன். 100 அதற்கு அவன், “அவைகள் முழுவதும் பிசாசினால் நிறைந்துள்ளன. எனவே அவைகள் ஒன்றையொன்று கொன்றுவிடும்” என்றான். பார்த்தீர்களா? வெறுமன—வெறுமன கொல்லுதல், அதைக் குறித்து அவர்கள் நினைப்பதெல்லாம் அப்படித்தான். 101 பாருங்கள், அது—அது பிசாசாய் உள்ளது. நீங்கள் பாருங்கள். அவன் ஒரு கொல்லுபவனாய் இருக்கிறான். அவன், அப்படியே அவன், தேசத்தை…பிசாசுகளும் கூட பிசாசுளோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. புரிகிறதா? அவைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுகின்றன. ஆனால் தேவன் முழுவதும் அன்பாய் இருக்கிறார். பாருங்கள், எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. 102 ஆகையால், நீங்கள் பாருங்கள், இந்த கொள்கையின் முழு அடிப்படைகளும் சரியாக அந்த ஆவிகளுக்கு திரும்பிச் செல்கின்றன, சரியாக ஆதி காலத்துக்கு திரும்பிச் செல்கின்றன. ஆதியாகமம் வித்தான அதிகாரமாய் உள்ளது. ஆகையால் அது உற்பத்தி செய்துள்ள ஒவ்வொரு காரியத்தையும் நாம் இங்கே பூமியிலே பெற்றுள்ளோம்.

41103 இப்பொழுது நாம் ஜெயங்களையும், மகத்தான வெற்றிகளையும் பெற்றுள்ளோம். ஒரு தேசம் உள்ளே வந்து மற்றொன்றை அடித்து வீழ்த்திவிட்டு “மகிமை! நாம் வெற்றியை பெற்றுவிட்டோம். நாம் அவர்களை வீழ்த்திவிட்டோம்” என்று கூறுகிறது. அதன்பின்னர் முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் நண்பர்களாக மாறி, கரங்களைக் குலுக்கி, ஒருவரோடு ஒருவர் வியாபாரம் செய்வார்கள். 104 கொஞ்சம் கழித்து, இன்னொரு ஜனாதிபதி அல்லது இன்னொரு இராஜா உள்ளே வருவான் அல்லது இன்னொரு அதிபதி உள்ளே வருவான், இன்னொரு முறைமை உண்டாகும். நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முதலாவது காரியம், இதோ அவர்களுடைய பேரப்பிள்ளைகள் துப்பாக்கிகளோடு திரும்பி வந்து ஒருவரோடு ஒருவர் மீண்டும் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். “யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும்.” இது மற்றொருவன் இன்னொருவன் மீது பாய்ந்து, “இப்பொழுது நீ என்னை சேவிக்க வேண்டும் என்பதை நீ அறிவாய். நானே ஜெயங்கொண்டவன், நீயோ—நீயோ தோற்று ஓடிப்போனவன்” என்று கூறுவான். இதே போன்றே காரியங்கள் உள்ளன. நீங்கள் வெறுமனே… 105 நான் ஒருமுறை, “தேவன் மனிதனை உண்டாக்கினார், மனிதன் அடிமைகளை உண்டாக்கினான்” என்று கூறக் கேட்ட கருத்து வாக்கியத்தைப் போன்றே உள்ளது. ஒருவர் மேல் ஒருவர் ஆளுகை செய்வதற்காக தேவன் மனிதனை உண்டாக்கவில்லை. சகோதரர்களாக இருப்பதற்காகவே தேவன் மனிதனை உண்டாக்கினார், அது உண்மையே, சகோதரர்களாக இருப்பதற்காகவே, ஒருவரை ஒருவர் ஆளுகை செய்வதற்கல்ல. உயர்ந்த இனமும் இல்லை, உயர்ந்த தேசமும் இல்லை, உயர்ந்த மொழியும் இல்லை. நமக்கு பரலோகம் மொழி ஒன்று மாத்திரமே உண்டு. புரிகிறதா? அது உண்மை. நமக்கு ஒரே சகோதரத்துவம் உண்டு: அதுவே மனிதன். அதுவே மனிதன், அவன் யாராக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.

42106 நாம் ஏன் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டும்? ஆனால் அவர்கள் அதைச் செய்கிறார்கள். ஆகையால் சில சமயத்தில் ஒரு நல்ல தேசம் அல்லது ஒரு நல்ல தேசத்தில் அவர்கள் கொண்டுள்ள ஒரு முறைமை சரியானதை செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறது, அதனுடைய உரிமைகளுக்காக போராட முயற்சித்துக்கொண்டிருக்கிறது, அப்பொழுது தீய தேசம் உள்ளே வந்து அதை மேற்கொள்ளும். அப்பொழுது இங்கே அவர்கள் மேற்கொண்டு, இந்த தேசத்தை அந்த தேசத்தைப்போல மாற்றுவார்கள். அதன்பின்னர் முன்னும் பின்னுமாக, முன்னும் பின்னுமாக அப்படியே மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். 107 தேசங்கள் முயற்சித்து பெரிய தேசிய வெற்றிகள் பலவற்றை, பலவற்றை உடையவைகளாயிருந்து வந்துள்ளன, தங்களுடைய தனி உரிமைகளுக்காக சண்டையிட அவர்கள் முயற்சித்துள்ளபடியால், அவைகளுக்கு—அவைகளுக்கு சொந்தமானவைகளை அவைகள் அடைந்துள்ளன. அவர்கள்—அவர்கள் எதைப் பெற்றுள்ளனர்? சாத்தான் அவர்களை கட்டுப்படுத்தும் வரையில், அவர்கள் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருக்கப் போகிறார்கள். ஆனால் அவர்கள் அனேக மகத்தான வெற்றிகளை, மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளனர். நாம் ஆரம்ப காலத்துக்கு திரும்பிச் செல்லக் கூடுமானால், எங்கே ஒரு தேசத்தை மற்றொரு தேசம் ஆண்டுள்ளது என்பதையும், மகத்தான வெற்றிகளின் விழாக்கள் போன்றவற்றையும் காண்பிக்க முடியும். 108 முதலாம் உலகப்போரில் இருந்தது போல, நமக்கு முதலாம் உலகப் போர் உண்டானபோது, பல தேசங்கள் ஒன்றுசேர்ந்து வந்து ஜெர்மனியில் உள்ள மைதானங்களில் சந்தித்தனர். அங்கே பெல்ஜியம் மற்றும் வித்தியாசமான தேசங்கள் வித்தியாசமான கொடிகளுக்கு கீழே சண்டையிட்டுக் கொண்டிருந்தன, அதுவே முதல் உலக மகா யுத்தம் என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது நான்…

43109 இங்கு அமைந்துள்ள இரண்டு இல்லை மூன்று, நான்கு சகோதரர்களாகிய நீங்கள் அதை நினைவுகூர முடியும். என்னால் அதை நினைவுகூர முடியும். எனக்கு ஐம்பத்து நான்கு வயதாகிறது. 110 1914-ல் நான் சுமார் ஒன்பது, எட்டு அல்லது ஒன்பது வயதுடைய ஒரு சிறு பையனாக இருந்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். நாம் ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்று, பதினான்கு வயதிலிருந்தே பார்ப்போம். அது துவங்கியபோது நான் ஐந்து வயதாயிருந்தேன். ஒரு யுத்தம் நடக்கப்போகிறது என்று அவர்கள் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. அப்பொழுது என் தந்தையாருக்கு சுமார் இருபத்திரண்டு வயதாயிருந்தது, அவர்கள் அவரை அனுப்ப வேண்டியதாயிருந்தது. ஓ, என் தந்தையை யுத்தத்துக்கு அனுப்புவதைக் குறித்து என்னால் நினைத்து பார்க்க முடியாததாயிருந்து. அப்பொழுது அவர் சாலை பக்கமாக வந்தார். அவர் ஒரு குதிரை வண்டியில் இருந்தார். அவர் ஒரு…எங்களுக்கு கீழ்பாகத்தில் பல மைல்கள் தூரத்தில் இருந்த ஒரு கடைக்கு அப்போது அவர் சென்றிருந்தார். அவர் ஒரு சாக்கு பை நிறைய பீன்ஸ் என்ற பருப்பை அங்கே வைத்திருந்தார். நாங்கள்…எனவே நான்…அந்த பீன்ஸ் பருப்புக்களைக் கொண்ட மூட்டையைத் தூக்கிப் பார்த்தேன். அப்பொழுது நான், “அவர்கள் வந்து, ஏதாவது யுத்தத்தைக் குறித்துப் பேசத் தொடங்கினால், அவர்கள் வந்தால், நான் அவர்களை இந்த பீன்ஸ் பருப்புக்களைக் கொண்ட சாக்கு மூட்டையால் அடிப்பேன்” என்று எண்ணினேன். புரிகிறதா? இப்பொழுது, அவர்கள் ஒரு…யுத்த சிந்தனைக் கொண்டிருந்தபடியால், என்னுடைய தந்தை யுத்தத்திற்கு போக வேண்டியதாயிருந்ததே!

44111 பாருங்கள், எக்காளம் முழங்கினது, “உங்களுடைய பத்திரங்களை வாங்கிக் கொள்ளுங்கள்” போன்றவை நிகழ்ந்தன. 112 “நாம் யாவரும் போய் இந்த உலக யுத்தத்தில் பங்கு கொண்டு நாம் இதைத் தீர்த்துவிடலாம்” என்று கூறி, “அதன் பின்னர் அவர்கள் ஒரு ஏற்பாடு செய்தனர்” என்பது நம் எல்லோருக்குமே நினைவிருக்கும். உலக நாடுகளின் சங்கம் என்று அவர்கள் அழைத்த அந்த அமைப்பை ஏற்படுத்தினர். “அப்பொழுது அவர்கள் ஒரு சமாதானம், நித்திய சமாதானம் இருக்கப்போகிறது. அவ்வளவுதான். இனி யுத்தமே இல்லை” என்று கூறினர். 113 அதன் பின்னர் மிகக் குறுகிய காலமான இருபது வருடங்களிலேயே நாம் திரும்ப அதனோடு ஈடுபட்டோம். அது பழையபடியே கொடூரமாக நடந்த மற்றொரு உலக மகா யுத்தமாயிருந்தது. புரிகிறதா? யுத்தங்கள்! ஏன்? அது பேராசையும், பொறாமையுமாயுள்ளது. பார்த்தீர்களா? கெய்சர் வில்லியம் ஜெர்மனியை விட்டு சென்றவுடன், அதன்பின்னர் வேறு ஒரு நபர் அடால்ஃப் ஹிட்லர் என்னும் பெயருடைய ஆஸ்திரிய நாட்டுக்காரன் உள்ளே வந்து, அந்த ஜனங்களுடைய சிந்தனைகளை எல்லாம் சிதைத்துவிட்டு, அவர்களால் உலகத்தை வீழ்த்த முடியும் என்று கூற பிசாசினால் ஏவிவிடப்பட்டான். அவர்கள், அங்குதான் உங்கள் காரியமே இருந்தது. புரிகிறதா? நீங்கள் பாருங்கள், அது மீண்டும் பிசாசுக்கு எதிரான பிசாசு என்பது போன்று இருந்தது. அது அந்த தேசங்களின் குற்றமற்ற குடிகளை, அதாவது அவர்கள் அப்படியே மற்றுமொரு யுத்தத்திற்கு, யுத்தத்திற்கு, யுத்தத்துக்கு வழி நடத்தினர். இது நீண்ட காலமாகவே அந்த விதமாக இருந்து வருகிறது.

45114 இப்பொழுது, இப்பொழுது, நாம் கண்டறிவது, அதன்பின்னர் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு காரியம், மற்றொரு யுத்தம் உண்டானது. இப்பொழுது, மீண்டும், முழு உலகமும் மீண்டும் சிறந்த கருவிகளோடும், சிறந்த விமானங்களோடும், மிகப்பெரிய வெடி குண்டுகளோடும் யுத்தத்திற்கு சென்றன. அவர்கள் சண்டையிட்டு, இரத்தம் சிந்தி, மரித்து, பட்டினியால் வாடி, பனியால் உறைந்துபோய், மற்றுமுள்ள யாவற்றையும் செய்தனர். யுத்தம், யுத்தம், யுத்தமே!

46115 அதன்பின்னரே வெற்றியின் நாள் என்று நாம் அழைக்கும் ஒருநாள் உண்டானது. வெற்றியின் நாள், வெற்றியின் நாள் என்பதிலிருந்தே நான் இந்த வேத பகுதியை எடுத்தேன். அவர்கள் வெற்றி பெற்றது அந்த நாளாய் இருந்தது, அங்கேதான் இராணுவங்கள் மற்ற இராணுவங்கள் மீது வெற்றியைப் பெற்ற வெற்றியின் நாள். இப்பொழுது, ஒரு யுத்த நாளும், அதன்பின்னர் ஒரு வெற்றியின் நாளும் உண்டாயிருந்தது. யுத்த நாள் என்பது அவர்கள் யுத்தத்திற்கு சென்றதாயிருந்தது. வெற்றியின் நாள் என்பது ஒரு சமாதானம் கையொப்பமிடப்பட்ட போதாயிருந்தது. ஜெர்மானியும், அவர்களுடன் கூட்டு சேர்ந்த மற்ற தேசங்களும் மற்ற தேசங்களிடம் முழுவதுமாக சரணடைந்தன. 116 நாம் என்ன செய்தோம்? வெற்றியின் நாளிலே நாம் கீதங்களைப் பாடினோம். நாம் கூச்சலிட்டோம், நாம் நம்முடைய தொப்பிகளை ஆகாயத்தில் வீசி எறிந்தோம். நாம் ஆகாயத்திலே துப்பாக்கிகளைச் சுட்டோம். நாம் அழுதோம். நாம் ஊதல்களை ஊதினோம். நாம் முரசுகளைக் கொட்டினோம். நாம், நாம் இசையை வாசித்தோம். நாம், நாம் ஒருவர் மற்றொருவர் முதுகின்மேல் தட்டினோம். அது என்னவாய் இருந்தது? அது ஒரு வெற்றியாய் இருந்தது. ஒ, நாம் வெற்றியைப் பெற்றிருந்தோம். எப்படி இவர்கள்…ஏன், நாம், “நாம் ஜெயம் பெற்றுள்ளதை, நாம் ஜெயம் பெற்றுள்ளதை” உணர்ந்தோம். கொடிகள் ஏற்றப்பட்டு, எக்காளங்கள் முழங்கின, ஓ, என்னே ஒரு நேரம் நமக்கு உண்டாயிருந்தது! “வெற்றி, வெற்றி, வெற்றியே! நாம் ஜெயித்துவிட்டோம்.” 117 அது ஒரு மகத்தான காரியமாயிருந்தது. அது கிறிஸ்தவ தேசங்கள் என்று அழைக்கப்படுகின்ற தேசங்களுக்கு சமாதானத்தைக் கொண்டு வந்தது. நாம் சிறிது நேரம் மூச்சுவிட்டோம். உயிரோடு இருந்த சில பையன்கள் வீடு திரும்பினர். இவ்விதமாக நடந்தது. ஆனால் அந்நாட்களில் அநேக நாட்கள் மகத்தானவையாக இருந்து வந்துள்ளன, பெரிய யுத்தங்கள்.

47118 ஆனால், உங்களுக்குத் தெரியும், அந்தவிதமாக சண்டையிடப்பட்டு வந்த ஒரு யுத்தத்தில், தேவனை விசுவாசிக்கும் ஜனங்களும் கூட பல வெற்றியின் நாட்களை உடையவர்களாக இருந்து வந்துள்ளனர். ஓ, ஆம்! இரண்டு பக்கங்களுமே இருந்து வந்துள்ளன. தூரதரிசினி கண்ணாடியானது குறி வைக்கப்பட்டு, மாம்சபிரகாரமான பக்கம் நோக்கியபோது வெற்றியின் நாட்கள் உண்டாயின; மேலும் வேதத்தில் உள்ள வார்த்தையை நோக்கி குறி வைக்கிறபோது, அது சில நேரங்களில் மற்றொரு வெற்றியையும் கொண்டு வருகிறது. 119 நாம் நம்முடைய சத்துருவிற்கு எதிராக பெரிய பல யுத்தங்களைப் புரிந்து வந்துள்ளோம். யுத்தத்தில் முன்னின்று நடத்த தேவன் மகத்தான மனிதர்களை உடையவராக இருந்து வந்துள்ளார். அவர்கள் தேவனுடைய ஆவியினால் ஜனங்களின் சிந்தனைகளை சிறைபிடிக்கக் கூடியவர்களாய் இருந்து, அப்பாலுள்ள தேவனுடைய இராஜ்யத்திற்குள்ளாக கொண்டுவந்து, வெற்றிகளோடு வெளிவந்தனர். 120 நாம் ஒவ்வொரு நாளும் அதற்கு சண்டையிடுகிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒவ்வொரு நாளும் ஒரு யுத்தம் செய்கிறான். நாம் இப்பொழுது நமக்குள்ளே தொடர்ந்து சரியானதிற்கும் தவறானதிற்கும் இடையேயுள்ள ஒரு யுத்தத்தில் இருக்கிறோம். “நாம் அதைப் பெற்றுக் கொள்ளலாமா? நாம் என்ன செய்வோம்? நாம் உலகத்திற்கு தலை வணங்கலாமா? நாம் கொண்டுள்ள இந்த எண்ணத்தை விட்டுவிடலாமா?”

48121 நாம் அதைக் காண்போமானால், அதைக் குறி வைத்துப் பார்ப்போமானால், அது ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை கொண்டு செல்கிறது. அது ஒவ்வொரு முறையும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயிருந்து, அங்கே அதனூடாகச் செல்கிறது. நாம் அதை விட்டுவிட முடியாது. நம்மால் மற்றவைகளோடு ஒப்பரவாக முடியாது. நம்மால் அதைச் செய்ய முடியாது. நாம் இங்கே தரித்திருக்க வேண்டும். அவ்வளவுதான். சத்துரு எவ்வளவு பெரியவனாயிருந்தாலும், அவன் நமக்கெதிராக எப்படிப்பட்ட இயந்திரத்தை வைத்திருந்தாலும், எத்தனை ஸ்தாபனங்கள் இருந்தாலும், இது , அது , அல்லது மற்றது என எத்தனைக் காரியங்கள் இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. நாம், அதே சமயத்தில், நமக்கு ஒரு காரியம் உண்டு என்பதை நாம் கண்டறியும்படியாய், இந்தக் குறியை தேவனுடைய வார்த்தையின் மேல் வைத்துள்ளோம். அது இயேசு கிறிஸ்துவின் இரத்தமாக உள்ளது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 122 ஆகையால், வேறு யாரேனும் எதைச் சொன்னாலும் அது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை. அவர்கள், “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. தெய்வீக சுகமளித்தல் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பதே கிடையாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் என்பது சீஷர்களுக்கு மாத்திரமானதாயிருந்தது” என்று கூறுவார்கள். இந்த காரியங்கள் எல்லாவற்றையும், அவர்கள் வார்த்தையிலிருந்து குறிதவறச் செய்ய முயற்சிக்கிறார்கள். அது அங்கில்லை என்று யார் கூற முடிந்தாலும், அசையாமல் அப்படியே இருந்து, இது சரியாக வார்த்தையின் பேரிலேயே திரும்ப குறி வைக்கிறது. அது உண்மை.

49123 ஆகையால், நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம். தேவனுடைய வீரர்கள் எப்பொழுதுமே யுத்தத்தை உடையவர்களாகவே இருந்து வந்துள்ளனர். 124 சிறு சபையே, நீ இங்கே திரும்பவும் நினைவில் வைத்துக்கொள், நீ அந்த இராணுவக் குழுவின் ஒரு பாகமாயிருக்கிறாய். நீங்கள் இங்கே ஒரு எல்லைக் காவலாயிருக்கிறீர்கள். அதாவது ஒரு எல்லைக் காவல் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியும். நீங்கள் அதனுடைய ஏதோ ஒரு பாகத்தை இங்கே உங்களுக்கு பக்கத்தில் சரியாக கொண்டு வர வேண்டும். எனவே, கொடிகள் தொடர்ந்து மேலே பறக்கும்படியாக, சரியானதைச் செய்ய, உலகத்தின் ஒரே நம்பிக்கை இயேசு கிறிஸ்துவே என்று இன்னமும் உரிமை கோரும்படியாக இங்கே பின்புறத்தில் உள்ள ஒரு இடத்திற்கு எல்லைக் காவலாக இருக்கின்றீர்கள். மெத்தோடிஸ்டு சபையாயல்ல, அல்லது பாப்டிஸ்டு சபையாயல்ல, அல்ல பிரஸ்பிடெரியன் கருத்தாய் அல்ல, கத்தோலிக்கராய் அல்ல, யூதராய் அல்ல, அல்லது வேறென்னவாயினும் அல்ல; வர்க்கம், வம்சம், அல்லது நிறம் அதைப்போலுமல்ல. இது அதுவல்ல. அது இயேசு கிறிஸ்துவாயுள்ளது. புரிகிறதா? அது அவர் ஒருவரே. அவரே நம்முடைய ஜெயவீரராயிருக்கிறார். அது அவர் ஒருவரே. அவரே செயலின் பிரதான தளபதியாக இருக்கிறார். இதுவே அவருடைய கட்டளைகள். நாம் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். எப்படி உங்களால்… 125 பையன்களாகிய உங்களில் சிலர் யுத்தத்தில் பணியாற்றினீர்கள். எப்படி உங்களால்… தளபதி ஒரு கட்டளையை கொடுக்க, நீங்கள் அதை விட்டுவிட்டு, பின்னோக்கிச் சென்று வேறு ஒரு காரியத்தை செய்தால் அப்போது நீங்கள் முழு இராணுவ சேனையையும் குழப்பிவிடுவீர்கள். அது உண்மை. நீங்கள் அதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்திவிடுவீர்கள். நீங்கள் அந்த கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். அதை செய்யக்கூடிய ஒரே வழி, அதை குறித்த யாவும் என்ன என்பதைக் காணும்படி, அதை குறி வைத்துப் பார்ப்பதேயாகும். சரி.

50126 நாம் பெரிய பல யுத்தங்களை, ஆவிக்குரிய யுத்தங்களை செய்து வந்துள்ளோம். அனேக மகத்தான வெற்றியின் நாட்களை சபையானது பெற்று வந்துள்ளது; நான் சபை என்றால் கிறிஸ்துவின் சரீரத்தையேக் குறிப்பிடுகிறேன். நான் இப்பொழுது ஸ்தாபன முறைமையைக் குறித்து பேசிக் கொண்டிருக்கவில்லை. நான் கிறிஸ்துவின் சரீரத்தைக் குறித்தே பேசிக்கொண்டிருக்கிறேன். காலங்களினூடாக இருந்து வந்துள்ள சரீரமாகிய விசுவாசிகள் பல மகத்தான வெற்றியின் நாட்களை உடையவர்களாக இருந்து வந்துள்ளனர். 127 நமக்கு உண்டாயிருந்து வந்துள்ள பல யுத்தங்களையும், யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும், வெற்றியின் நாட்களையும், வெற்றியின் நாட்களையும் மற்றும் வெற்றியின் நாட்களைக் குறித்துமே நாம் பேசுகிறோம். அது முடிவிலே பெரிய அர்மகெதோன் யுத்தத்திலே வந்து முடிவுறும். அதுவே அதனுடைய கடைசியாய் இருக்கும். அந்த அர்மகெதோன் யுத்தம் உண்டாகிறபோது, அதுவே முழு காரியத்தையும் தீர்த்து வைத்து விடும். அந்த மகத்தான ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பாக, அர்மகெதோன் யுத்தமானது பூமியை சுத்திகரிக்கிறதாயிருக்கிறது. பூமியானது தன்னை இந்த அணுகுண்டு வீசுதலினாலும், எரிமலை சாம்பலினாலும் மற்றும் பூமியின்மேல் ஊறிப்போன இந்த மனித இரத்தத்தையும், பாவத்தையும் குற்றத்தையும் மூழ்கடித்து தன்னை மறுபடியும் சுத்திகரித்துக்கொள்கிறது. பூமி தனக்கு கீழே அமிழும்போது, மீண்டுமாய் எரிமலை குழம்புகள் வெடித்து சிதறி, மகத்தான ஆயிர வருட அரசாட்சிக்காக பூமியை புதுப்பித்து சுத்திகரிக்கிறது. அந்த நேரத்தில் இங்கே ஒரு ஜனம் வாழ்வதற்காக அவர் தம்முடைய சபையைச் சுத்திகரிக்கிறார். ஆமென். நான்—நான் கூறுகிறேன், எனக்கு அது பிடிக்கும். ஆம், ஐயா. அது மகத்தானதாக இருக்கப்போகும் ஒரு நேரம் வருகிறது.

51128 இப்பொழுது, மகத்தான வெற்றியின் நாட்களை, நாம் அந்த நேரத்தை குறித்து சிந்திக்கிறோம். நாம் சற்று திரும்பிச் செல்வோமாக. இப்பொழுது சில யுத்த வீரர்களைக் குறித்து சிந்திக்கும்படியாக நமக்கு சில நிமிடங்கள் உள்ளன. நாம் திரும்பிச் சென்று அவர்களில் ஒருவரைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போமாக…நாம் ஆரம்பத்திற்கு திரும்பிச் செல்வோம். ஆனால் நாம் திரும்பிச் சென்று மோசே வரை பார்ப்போமாக. ஒரு பெரிய யுத்தத்திற்குள் சென்றிருந்த ஒரு நேரம் மோசேக்கு உண்டாயிருந்தது, ஏனென்றால் சபையானது தனக்குள்ளாகவே நீண்ட நாட்களாக வெற்றியை மறந்துவிட்டிருக்கிறது. 129 இன்றைக்கு சபையோடு உள்ள காரியம் அதுவேயாகும். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நாமும் கூட நீண்ட காலமாக மறந்துவிட்டிருக்கிறோம். தேவன் ஒரு சுகமளிப்பவர் என்பதையும், வியாதியஸ்தரை சுகப்படுத்த முடியும் என்பதையும் நாம் மறந்துவிட்டோம். சீஷர்களின்மேல் பரிசுத்தாவியின் அபிஷேகம் ஊற்றப்பட்டது என்பதையும், அது தலைமுறை தலைமுறையாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும், எவருக்கும், விருப்பமுள்ளவராய் வருகிற எவருக்கும் என்பதையும் நாம் மறந்துவிட்டோம். நாம் அதை நீண்ட, நீண்ட காலத்திற்கு முன்பே மறந்துவிட்டோம்.

52130 எனவே இஸ்ரவேல் அதை மறந்துவிட்டிருந்தது. அவர்கள் எகிப்திலே திருப்தியடைந்து, அதன் பின்னர் அடிமைகளானார்கள். 131 இப்பொழுது, இங்கே மோசே தன்னுடைய சொந்த அறிவாற்றலுள்ள காரியத்தோடு புறப்பட்டு சென்று, இல்லை அறிவாற்றலுள்ள சாதனையோடு, ஒரு இராணுவ பலத்தோடு சென்று, இஸ்ரவேலை வெளியே கொண்டுவர முயற்சித்து, அதை செய்யத் தவறிப்போனான். 132 ஆனால் வனாந்திரத்தின் பின்புறத்தில் தேவனிடத்திலிருந்து வந்த ஒரு வார்த்தையானது, அந்த முழு காரியத்தையும் மீண்டும் எழுச்சி அடையச் செய்தது. ஆனால் மோசேக்கு என்ன நேர்ந்தது? அவன் தன்னுடைய கண்ணாடியில் சரியாக குறி வைத்தான். அங்கிருந்த அழகான கருப்பு நிற இந்த எத்தியோப்பிய பெண்ணை மணந்து, பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதும், தன்னுடைய மாமனாருடைய ஆடுகளை வளர்ப்பதும் மாத்திரமே தேவனுடைய நோக்கமாயிருக்கவில்லை. ஆனால் அடிமைத்தனத்திலிருந்து தேவனுடைய பிள்ளைகளை விடுவிப்பதே அவனுடைய ஊழியமாயிருந்தது. அதுவே அவனுடைய கட்டளையாயிருந்தது. அதற்காகவே அவன் பிறந்திருந்தான். 133 நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரியத்திற்காக பிறந்திருக்கிறோம். நாம் ஒன்றுமே இல்லாத ஒரு நோக்கத்திற்காக இங்கே வைக்கப்பட்டிருக்கவில்லை. அந்த மலை சும்மா வெறுமனே அங்கே இருக்க வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டிருக்கவில்லை. அந்த மரம் அங்கே ஒரு நோக்கத்திற்காக வைக்கப்பட்டது. ஒவ்வொரு காரியமும் ஒரு நோக்கத்திற்காக உள்ளது. அது சேவை செய்தாக வேண்டும். நாம் இங்கே ஒரு நோக்கத்திற்காக இருக்கிறோம். அது ஒரு நபருக்கு சாட்சிப் பகர்ந்து, அவர் இரட்சிக்கப்படுவதற்காக இருக்கலாம். அதிலிருந்து ஒரு பிரசங்கி எழும்பி பத்து லட்சம் ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்கு அனுப்பலாம்.

53134 டுவைட் மூடி என்பவருடைய மனமாற்றத்தையும், இன்னும் அவர்களில் பலருடைய மன மாற்றத்தையும் நீங்கள் நோக்கிப் பாருங்கள். உங்களுக்குப் புரிகிறதா? வெறுமனே ஒரு எளிய வயோதிகப் பெண்மணி ஒரு…எளிய வயோதிக சலவைத் தொழில் செய்யும் ஸ்திரீ தன்னுடைய இருதயத்தில் கொண்டிருந்த ஒரு செய்தியினால் தேவனுக்காக ஏதோ ஒரு காரியத்தையும் செய்ய விரும்பினாள். அவள் ஒரு பழைய குதிரை வண்டி லாயத்தை வாடகைக்கு எடுத்து, அங்கே ஒரு ஊழியக்காரர் வந்து பிரசங்கிக்கும்படி செய்தாள். அப்போது அங்கு தன்னுடைய கழுத்தில் முடி தொங்கிக் கொண்டிருப்பதோடு வந்த ஒரு சிறு பையனை தவிர வேறு யாரும் வரவில்லை. அவன் தன்னுடைய தகப்பனாருடைய தோள்பட்டையோடு கூடிய கால் சட்டையை அணிந்துகொண்டு, அந்த இடத்திற்கு வந்து முழங்காற்படியிட்டான். அவன்தான் ஐந்து லட்சம் ஆத்மாக்களை இயேசு கிறிஸ்துவுக்கு அனுப்பி வைத்த டூவைட் மூடி ஆவான். புரிகிறதா? அந்த ஸ்திரீ ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டியதாயிருந்தது. அவள்…அது ஒரு நோக்கத்திற்கானதாயிருந்தது. அவள் ஒரு நோக்கத்திற்காகவே சலவைத் தொழில் செய்யும் ஒரு ஸ்தீரியாக உருவாக்கப்பட்டிருந்தாள். 135 தேவன் உங்களை வைத்திருக்கும் இடத்தை வெறுக்காதீர்கள். அனால் அந்த நோக்கத்திற்காக சேவைபுரியுங்கள். இந்நாட்களில் ஒன்றில் யுத்தமானது முடிவுடையும்போது, ஒரு மகத்தான வெற்றியின் நாள் உண்டாகும்.

54136 இப்பொழுது, கவனியுங்கள். மோசே தன்னுடைய கண்ணாடியில் சரியாக குறி வைத்துப் பார்த்து, அது தேவனுடைய திட்டமாயிருந்தது என்பதையும், அவன் என்ன செய்ய வேண்டியவனாயிருந்தான் என்பதையும் கண்ட பிறகே, அவன் புறப்பட்டுச் சென்றான். அவன் அங்கு சென்றான். அவன் கடினமாக போரிட்டான். அவன் அநேக பெரிய யுத்தங்களை உடையவனாய் இருந்தான். ஆனால் அவனுடைய பெரிய சோதனையான போராட்டங்களில் ஒன்றை நான் இப்போது எடுத்துக் கூற விரும்புகிறேன். அவன் அற்புதங்களையும் அடையாளங்களையும் காண்பிப்பதினாலும், தேவன் அவனுக்கு காண்பித்திருந்த வித்தியாசமான காரியங்களினாலும், வார்த்தையை உரைத்து, அது பொருளாக மாறினது நிகழ்ந்தபோதே அவன் சாதித்திருந்தான். 137 நாம் அதே காரியத்தை இன்றைக்குப் பெற்றுள்ளோம், வியாதியஸ்தர் மேல் வார்த்தையை உரைத்து, [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய விரலை சொடுக்குகிறார்—ஆசி.] அது சுகமாக்குகிறதை கவனிக்கிறோம். மானிட உதடுகளின் மூலமாக தேவனுடைய வார்த்தை உரைக்கப்பட்டு இந்த மற்ற காரியங்களையும் செய்கிறார். “நீங்கள் இந்த மலையைப் பார்த்து ‘தள்ளுண்டு போ’ என்று சொல்லி சந்தேகப்படாமல் இருந்தால், நீங்கள் சொன்னது நடக்கும் என்று விசுவாசித்தால், நீங்கள் கேட்டுக் கொண்டதை பெற்றுக்கொள்ள முடியும்.” இயேசு அவ்வண்ணமாய்க் கூறினார். இப்பொழுது, நாம் அதை விசுவாசித்து, அதைப் பற்றிக்கொண்டு, அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசிக்கிறோம். 138 இப்பொழுது, மோசே அதைச் செய்திருந்தான். அவன் அங்கு சென்றபோது, தேவன் அவனோடிருப்பதை நிரூபித்திருந்தார். ஆனால் அவன் எல்லோரையும் ஒன்றுசேர்த்தப் பிறகு, தேவன்…

55139 கிறிஸ்தவனின் வாழ்க்கையானது, அந்த நபர் முற்றிலுமாக கிறிஸ்துவின்மேல் மையங்கொண்டிராவிட்டால், அப்பொழுது கிறிஸ்தவனின் வாழ்க்கையானது பல ஏமாற்றங்களை கொண்டதைப்போல் தென்படுகிறது. ஆனால் நமக்கான தேவனுடைய தெய்வீக சித்தம் நடைபெறுவற்காகவே அந்த ஏமாற்றங்கள் உள்ளன. இப்பொழுது, அது இருக்கும் என்பது போல் தென்படுகிறதில்லை, ஆனால் அது காரியங்களை செய்கிற தேவனுடைய வழியாயிருக்கிறது. நாம் என்ன செய்வோம் என்று பார்க்கும்படி அவர் நமக்குத் தொல்லையை அனுமதிக்கிறார். 140 மோசே சரியாக கடமையின் பாதையில் இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தினான். பார்வோனுடைய சேனையோ அவனுக்கு பின்னால் இருக்க, ஐந்து லட்சம் ஆயுதம் தரிப்பிப்க்கப்பட்ட புருஷரிடமிருந்து தூசி பறந்து எழும்பிற்று. இங்கே இருபது லட்சம் யூதர்கள் எவ்வித ஆயுதமுமின்றி உதவியற்றவர்களாய், அங்கே புருஷர்களாகவும், ஸ்திரீகளாகவும், பிள்ளைகளாகவும் நின்று கொண்டிருந்தனர். சிவந்த சமுத்திரம் அவனை தடுத்திருந்தது. சிவந்த சமுத்திரம் அவனை தடுத்துப் போட்டிருந்தது. அவன்…போவதற்கு இடமே இல்லை. புரிகிறதா? ஆனால் மோசே ஜெபித்தபோது, அவனுக்கு ஒரு வெற்றியின் நாள் உண்டாயிருந்தது. அவன் சென்று கர்த்தரிடம் முறையிடத் துவங்கினான். 141 அப்பொழுது கர்த்தர், “நீ ஏன் என்னிடத்தில் முறையிட்டுக் கொண்டிருக்கிறாய்? நீ அதை செய்யும்படி நான் கட்டளையிட்டுவிட்டேன். அவர்கள் கடமையின் பாதையில் செல்லும்படி பிள்ளைகளிடத்தில் பேசு” என்றார். ஆமென். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. “என்னிடத்தில் முறையிட வேண்டாம். இந்த ஜனங்களை நீ அங்கு கொண்டு செல்ல கட்டளையிடப்பட்டிருக்கிறாய். அவர்கள் முன்னோக்கி சென்று, கடமையின் பாதையில் தரித்திருக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் பேசு.” ஆமென். 142 சுகவீனமான நபருக்கு அது என்னே ஒரு தைரியமாயிருக்க வேண்டும்! பின்வாங்கிப்போனவருக்கு அது என்னே ஒரு தைரியமாயிருக்க வேண்டும்! நீ சுற்றித் திரும்பி, திரும்பவும் புறப்படு. கடமையின் பாதையில் தரித்திரு. சிவந்த சமுத்திரங்களை திறப்பது தேவனுடைய வேலையாயிருக்கிறது. அது தேவனுடைய வேலை. நீ பேசி முன்னோக்கி செல். நீ செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான்.

56143 மோசேக்கு அங்கே சமுத்திரத்தண்டையிலே அது மகத்தான வெற்றியின் நாளாயிருந்தது. ஓ, அவர்கள் பேசி முன் சென்றபோது மோசேக்கும், அவர்களுடைய தீர்க்கதரிசியின் சத்தத்துக்கு கீழ்ப்படிந்த இஸ்ரவேல் புத்திரருக்கும் அது என்னே ஒரு வெற்றியின் நாளாயிருந்தது. மோசே, “நான் செய்திருக்கவில்லையா…நீங்கள் ஏற்கனவே பத்து அற்புதங்களை கண்டிருக்கிறீர்கள், ஆயினும் நீங்கள் இன்னமும் சந்தேகிக்கிறீர்கள்” என்றான். அவன் தன்னுடைய கையிலிருந்த கோலோடு சமுத்திரத்தை நோக்கி நடக்கத் துவங்கினான். தேவன் அன்றிரவு ஒரு காற்றை அனுப்பி, சமுத்திரத்திலே வீசச் செய்து அவற்றை இரு பக்கமாகப் பிரித்தார். அவர்கள் உலர்ந்த தரையின் மேல் நடந்து சென்றார்கள். ஒரு வெற்றியின் நாள். 144 இங்கே பாருங்கள். அவர்கள் நின்றார்கள், இன்றைக்கு நம்முடைய பாடப் பகுதியும் கூட, “அவர்கள் அந்த அக்கினி கலந்த கண்ணாடி கடல் மேல் நின்று மோசேயின் பாட்டைப் பாடினார்கள்” என்று உரைத்துள்ளது. பார்த்தீர்களா? புரிகிறதா? அவர்கள் பாடினார்கள். மோசே, அவன் கடந்து சென்றபோது, அவன் என்ன செய்வதென்று அறியாமலிருந்தான். அவன் அங்கு சென்றபோது…இதோ பார்வோனுடைய சேனை அவன் செய்துகொண்டிருந்த காரியங்களை போலியாகச் செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தது. மாம்சபிரகாரமான ஒப்பீடுதல்களே! என்ன சம்பவித்தது? சமுத்திரம் உள்ளே புரண்டு அவர்கள் ஒவ்வொருவரையும் மூழ்கடித்துவிட்டது. அவன் மரித்துப்போன ஆளோட்டிகளையேக் கண்டான். 145 மீரியாம் ஒரு தம்புருவை எடுத்துக்கொண்டு, அவள் கரையின்மேல் சென்று, இந்த தம்புருவை அடித்துக் கொண்டிருந்தாள். இஸ்ரவேலின் குமாரத்திகள் அவளைப் பின்தொடர்ந்து போய், ஆரவாரமிட்டு, தம்புராக்களை அடித்து நடனமாடினர். மோசே ஆவியில் பாடினான். அது பண்டைய—கால பரிசுத்த ஆவி கூட்டமாக இல்லையென்றால், நான் எந்த ஒன்றையும் ஒருபோதும் கண்டதேயில்லை. [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] 146 “இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனிமேல் என்றைக்கும் காணமாட்டீர்கள்.” ஆமென். என்னே ஒருநாள்! அது முற்றுப் பெற்றுவிட்டது. 147 என்றோ ஒருநாள் கிறிஸ்தவனுக்குக் கூட இன்னொரு வெற்றியின் நாள் உண்டாகும். அது உண்மை.

57148 கவனியுங்கள், யோசுவாவுக்குக் கூட நதியண்டையிலே ஒரு வெற்றியின் நாள் உண்டாயிருந்தது. யோசுவா எரிகோவில் ஒரு வெற்றியின் நாளை உடையவனாய் இருந்தான். அவன் நிச்சயமாக வெற்றிபெற்றிருந்தான். அங்கேதான் அவன் கடந்து வந்திருந்தான், நதிண்டையிலே அவன் முதலாவது ஒரு வெற்றியை நாளை உடையவனாயிருந்தான். அவன் ஏப்ரல் மாதத்தில் அங்கிருந்தான், அனேகமாக ஒரு மைல் அகலமாக யோர்தான் இருந்திருக்கலாம், ஏனென்றால் அங்கே மலையின் உச்சியிலிருந்து பனியானது உருகிக்கொண்டிருந்தது. நதியானது சமவெளி முழுவதிலும் படர்ந்திருந்தது. 149 சத்துரு, “இப்பொழுது தேவன் ஒரு—ஒரு சரியான படைப் பெருந்தலைவர், அவர் அவ்வாறில்லையா? நதியானது மிகவும் மோசமாக இருக்கின்றதுபோது, தம்முடைய சேனையை இந்த வசந்த கால நேரத்தில் இங்கே நடத்தி வருகிறாரே, இது கடப்பதற்கு மிகவும் மோசமான நேரமாயிருக்கும்போது, அவருடைய சேனையை இங்கே வழிநடத்தி, கடந்துபோகும்படி அவர்களை வழி நடத்திவிட்டாரே” என்று கூறியிருந்திருப்பான் என்பதில் சந்தேகமே இல்லை. இல்லை. 150 தேவன் வெற்றியை காண்பிக்கும்படிக்கு ஏமாற்றங்கள் நிகழ அனுமதிக்கிறார். ஓ, நம்மால் மாத்திரம் அதை புரிந்துகொள்ளக் கூடுமானால் நலமாயிருக்குமே! புரிகிறதா? இந்தக் காரியங்கள் உனக்கு அதிகமாக பற்றியெரிவது போன்றும், உன்னை நிலைகுலையச் செய்வது போன்றும் காணப்படுவதை மாத்திரமே நீ காண்கிறாய், அவைகள் சோதனைகளாய் இருக்கின்றன. அப்படியே அசையாமல் நின்று தேவனுடைய வார்த்தையின் பேரிலான கண்ணாடியின் மேல் உன்னுடைய குறிப்பார்த்தலை சரியாக வைக்கும்படியான காரியங்களாய் அவைகள் உள்ளன. வார்த்தையை பேசி அதன் பின்னர் அப்படியே முன்னோக்கி நட. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் அங்கே அவ்வளவுதான். 151 நாமோ, “தேவனே, என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் சிக்கிக் கொண்டேன்” என்று கூறுகிற ஒரு நேரத்தை நாம் பெற்றுக்கொள்கிறோம். 152 “கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன்” என்று வார்த்தையைப் பேசு. அப்படியே முன்னோக்கி நடந்து செல்லத் துவங்கு. தேவன் சமுத்திரத்தை பிளக்கச் செய்கிறார். நீங்கள் தொடர்ந்து நடந்துகொண்டேயிருங்கள். புரிகிறதா?

58153 இப்பொழுது, யோசுவா சரியாக அந்த நேரத்தில், அவன் ஜெபித்தான் என்பதை நாம் கண்டிருக்கிறோம். அது சம்பவிக்கும் என்று கர்த்தர் அவனிடத்தில் கூறியிருந்தார். அவன் ஒரு வெற்றியின் நாளை உடையவனாயிருந்தான். அவன் ஜெயங்கொண்டான். அதன்பின்னர் அவன் நதியைக் கடந்து மறு பக்கத்தை அடைந்தபோது, அவன் என்ன செய்தான்? அவன் உடன்படிக்கை பெட்டியை வைத்தான்… 154 தேவனுடைய வார்த்தையானது அந்த உடன்படிக்கை பெட்டிக்குள் இருந்தது. அவன் அதை முதலில் வைத்தான். அதன்பின்னர் பாடகர்கள், மற்றவரை அதற்குப் பின்னே வரவழைத்தான். ஆனால் உடன்படிக்கை பெட்டி முதலில் புறப்பட்டுச் சென்றது. 155 இஸ்ரவேலர் யுத்திற்கு சென்றபோது, முதலாவது புறப்பட்டுச் சென்றது பாடகர்களாய் இருந்தனர். பாடகர்கள் பாடிக்கொண்டே சென்றனர். அதன்பின்னர் எக்காளங்கள் போன்றவை முழங்கின. அதன்பின்னர் உடன்படிக்கைப் பெட்டி சென்றது. உடன்படிக்கைப் பெட்டி சென்றபோது, அப்பொழுது அவர்கள் உடன்படிக்கைப் பெட்டியை கீழே இறக்கி வைத்துவிட்டு, யுத்தத்தைத் துவக்கினர். 156 கவனியுங்கள். ஆனால் இப்பொழுது இதில், யோசுவா தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு, தேவனுடைய வார்த்தையை முதலில் வைத்து, அவன் கடந்து சென்றான்… 157 தேவன் அவனிடத்தில், “நான் மோசேயோடே இருந்ததுபோல உன்னோடும் இருப்பேன். நான் உன்னைக் கைவிடமாட்டேன். நான் உன்னோடு இருப்பேன். உன்னுடைய ஜீவிய காலம் முழுவதும் எந்த மனிதனும் உனக்கு முன்பாக நிற்கப்போவதில்லை. நான் அங்கு இருக்கப்போகிறேன். என்ன சம்பவிக்கப்போகிறது என்று பயப்படாதே. நான் அங்கு இருப்பேன்” என்று கூறியிருந்தார். அப்பொழுது அப்படிப்பட்ட ஒரு கட்டளையோடிருந்த யோசுவா, முதலாவது தேவனுடைய வார்த்தையை வைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? ஆமென். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. தேவனிடத்திலிருந்து வந்த ஒரு கட்டளையோடு தேவனுடைய வார்த்தை முதலில் வைக்கப்பட்டது. அது ஒரு வெற்றியின் நாளைக் கொண்டு வந்தது. ஓ, அது கொண்டு வந்தாக வேண்டும். அவ்வளவுதான்.

59158 அவன் முதலில் தேவனுடைய வார்த்தையை வைத்தான். என்ன சம்பவித்தது? உடன்படிக்கைப் பெட்டியே தண்ணீரண்டை முதலில் சென்றது. அது சென்றபோது சமுத்திரம் பிளந்தது, சரியாகக் கூறினால், நதியானது பிளந்தது, அவர்கள் கடந்து சென்றார்கள். 159 அவன் அங்கு சென்ற பிறகு, அப்பொழுது அவன் என்ன செய்யப் போவதாய் இருந்தான்? அவன் அங்கே மறுபுறம் சென்றடையும்போது, அடுத்து சம்பவிக்கப்போகிற காரியம் என்னவாயிருந்தது? அவன் அங்கு வரும்போது, அவனைக் குறித்த பயத்தினால், அவர்கள் எல்லோரும் சுவற்றின் பின்னால் மறைந்திருந்தை அவன் கண்டான். 160 ஆனால் அவன் ஒரு நாள் பிரதான தளபதியை சந்தித்திருந்தான். அவன் மற்றொரு வெற்றியின் நாளை உடையவனாயிருந்தான். சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அவனுக்கு கூறியிருந்தார், எனவே எரிகோவின் மதில்கள் கீழே விழுந்தன. அவன் அதை எப்படி செய்யப்போகிறான்? 161 மாம்சபிரகாரமான மனிதன் அங்கு கண்ணாடியினூடாக பார்த்து, “இப்பொழுது, இங்கே, நீர் என்னை இங்கே கொண்டுவந்தீர், இதோ நான் இருக்கிறேன். இந்த நிலைமையைப் பாரும். ஏன், அவர்கள் எல்லோரும் தங்களுடைய கவண்களோடு உட்புறத்தில் இருக்கிறார்கள். நாங்கள் அந்த மதிலுக்கு நெருக்கமாக செல்வோமானால், எங்களுக்கு ஐயோ. அவர்கள் அங்கே தங்களுடைய பெரிய கவண்களோடு கற்களையும் குவித்து வைத்துள்ளனர். அவர்கள் ஈட்டிகளையும் வைத்துள்ளனர். வில்களையும் வைத்துள்ளனர். அவர்கள் அங்கு எல்லா காரியங்களையும் வைத்துள்ளனர். அவர்கள் அப்படி…” என்று கூறியிருப்பான். ஆனால், பாருங்கள், யோசுவா தேவனை முதலில் வைத்தான். அவன் அதைச் செய்தபோது… 162 நீங்கள் எப்படி அங்கே சென்றடையப் போகிறீர்கள் என்பது அல்ல. அது தேவனைப் பொறுத்ததாகும். அப்படியே தொடர்ந்து முன்னேறி வார்த்தையைப் பின்தொடருங்கள். 163 அவரோ, “ஏழு நாட்கள் சுற்றி வாருங்கள். ஏழாம் நாளிலே ஏழு முறை சுற்றி வாருங்கள். கடைசி முறை சுற்றி வரும்போது, எக்காளம் ஊதுங்கள்” என்று கூறியிருந்தார். மாம்சப்பிரகாரமானதை தூர எடுத்துப் போடுவதே தேவனுடைய ஸ்தானமாகும். அப்பொழுது ஆவிக்குரிய காரியம் உள்ளே பிரவேசித்ததபோது மதில்கள் விழுந்தன. அவர்கள் நேராக புறப்பட்டுச் சென்று, காரியத்தைக் கைப்பற்றினர். ஆம், ஐயா. அப்பொழுது தேவன் ஒரு வெற்றியின் நாளை உடையவராய் இருந்தார்.

60164 ஆபிரகாம், குழந்தைக்காக வாக்களிக்கப்பட்டு, அநேக நாட்களுக்குப் பிறகே, அவனுடைய அன்பிற்காகவும், அவனுடைய உத்தமத்திற்காகவும் தேவன் அவனை சோதித்தப் பிறகே ஒரு வெற்றியின் நாளை உடையவனாய் இருந்தான். நாம் தேவனை விசுவாசிப்போமேயானால், அப்பொழுது நாம் யாருடைய வித்தாயிருக்கிறோம் என்பதை அறியலாம். 165 ஆபிரகாம் ஒரு வெற்றியின் நாளை உடையவனாயிருந்தான். அது எப்போதாயிருந்தது? அவன் சினேயார் தேசத்து சமவெளிகளை விட்ட அந்த நாளிலா? சரியா அதுவல்ல. அவன் ஐபிராத்தைக் கடந்து, இந்த மற்றொரு புறத்திற்கு சஞ்சரிக்கும்படி வந்தான். அது உண்மையே. அது ஒரு நல்ல நாளாயிருந்தது. அது அப்படியே ஒருவிதமான… 166 ஆனால் அவன் மோரியா மலையின் மேலே, அங்கு மேலே சென்ற அந்த நாளின்போதே, தேவன் அவனுக்கு முடிவான சோதனையை கொடுத்தபோதே, அவனுடைய முக்கியமான வெற்றியின் நாள் உண்டாயிருந்தது. அவன் தன்னுடைய ஒரே மகனை உடையவனாயிருந்தான். அவர், “இப்பொழுது, ஆபிரகாமே, அவனை அங்கே அந்த மலையின் மேல் கொண்டு சென்று, அவனை ஒரு பலியாக செலுத்து. நான் உன்னை ஜாதிகளுக்கு தகப்பனாக்கியிருக்கிறேன். உன்னை ‘ஜாதிகளுக்கு தகப்பனாக்கும்படி,’ நீ பெற்றுள்ள ஒரே காரியம் இந்த குமாரன் மூலமே என்பதே இங்கு உள்ள காரியம். நீ அவனைக் கொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார். ஓ, அது உங்களுக்குப் புரிகிறதா? “எல்லாவற்றையும் அழித்துப் போடு. அந்த நோக்கத்தையே அழித்துப் போடு. ஆபிரகாமே, இதோ நீ இருக்கிறாய். உனக்கு இப்போது சுமார் நூற்றுப்பதினான்கு, நூற்றுப் பதினைந்து வயதாகிறது. நீ குழந்தைக்காக இருபத்தைந்து வருடங்கள் காத்திருந்தாய். இப்பொழுது அந்த பையனோ பதினைந்து அல்லது பதினாறு வயதுடையவனாயிருக்கிறான். நான் உன்னை ஜாதிகளுக்கு தகப்பனாக்கும்படிக்கு, நீ அவனை அங்கு மேலே கொண்டு சென்று, கொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” ஓ, என்னே! ஆம்.

61167 ஆபிரகாம் ஒருபோதும் அசையவேயில்லை. அவன் தேவனுடைய வார்த்தையில் ஒருபோதும் நடுங்கவேயில்லை. “சரி கர்த்தாவே. இதோ நான் போகிறேன்” என்று கூறினான். விறகை எடுத்துக்கொண்டு, ஈசாக்கை மலையுச்சிக்கு சரியாக அழைத்துச் சென்றான். சரியான கீழ்ப்படிதல். ஏன்? அவன் தேவனுடைய கட்டளையை முதலில் வைத்தான். அவன் ஒரே மகனை மாத்திரமே உடையவனாயிருந்து, இப்பொழுது அவனுக்கு நூறு வயதாயிருக்கும்போது, அவன் எப்படி ஜாதிகளுக்கு ஒரு தகப்பனாக இருக்கப்போகிறான்? அவன் எப்படி அதைச் செய்தான்? காரணம், இதுவோ, அவன், “நான்…” என்றான். மரித்த நிலையிலிருந்த ஒருவனுக்கு தேவனால் ஈசாக்கை கொடுக்க முடிந்ததென்றால், அவர் அவனை மீண்டும் கூட மரித்தோரிலிருந்து எழுப்ப முடியும் என்றும் அவன் அறிந்திருந்தான். 168 இப்பொழுது, நண்பர்களே, அவர் நம்மை உலகத்தின் காரியங்களிலிருந்தும், பூமியின் சீர்கேட்டிலிருந்தும் உயிர்ப்பித்து எழுப்பியிருக்கும்போது, நமக்கு நித்திய ஜீவனை அளித்து, மரணமே இல்லாத ஒரு தேசத்தில் நம்மை அவரால் வைக்க முடியும் என்பது அதிக நிச்சயமல்லவா? புரிகிறதா? நாம் நமது சிறு சோதனைகளை நோக்கிப் பார்த்து, அவைகள் ஏதோ பெரிய காரியங்களாயிருக்கின்றன என்று நாம் எண்ணிக்கொள்கிறோம். ஏன்? அவைகள் சிறு சோதனை நேரங்களேயல்லாமல் வேறொன்றுமில்லை. புரிகிறதா? தேவன் ஆபிரகாமைச் சோதித்தார், ஆனால் அவன் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அங்கே சென்றபோது, அவன் தன்னுடைய வெற்றியின் நாளைப் பெற்றுக் கொண்டான்.

62169 “எனக்குத் தெரியும்” என்று அவர்கள் இன்றைக்கு கூறுவது போலவே. கொஞ்ச காலத்துக்கு முன்னர் ஒரு ஊழியக்காரர் அப்போஸ்தலர் 2:38-ஐ வாசித்ததை நான் கேட்டேன். ஆனால் அவர் அதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். பாருங்கள். அவர், “அவர்கள் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றும், அதன்பின்னரே—அதன்பின்னரே அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் பேதுரு கூறினார்” என்று கூறி, அதைக் குறித்த மற்ற பாகத்தை வாசிக்கத் தவறிப்போனார். ஏன்? பாருங்கள், அந்த காரியத்தோடு ஸ்தாபனங்கள் சண்டையிட்டன. இப்பொழுது நீங்கள் அந்தக் கருத்தை புரிந்துகொள்கிறீர்களா? புரிகிறதா? நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்? அந்தக் காரியங்களை நீங்கள் விட்டுவிடும்படி உங்களை செய்கிறது எது? 170 வேதம் அதைக் கூறுகிறதென்றால், வேதம் அதைக் கூறுகிற விதமாகவே நீங்கள் அதை வாசித்து, வேதம் கூறுகிற அதே காரியத்தையேக் கூறுங்கள். அப்பொழுதே நீங்கள் வார்த்தை என்ன கூறியள்ளதோ அதற்கு திரும்ப வரும்படியான, சரியான உங்களுடைய குறிப் பார்த்தலை நீங்கள் பெற்றுள்ளீர்கள். பாருங்கள். 171 இப்பொழுது, நாம் அதைக் கண்டறிகிறோம், அவர்கள், நீங்கள் உங்களுடைய—உங்களுடைய…இல்லையென்றால், நீங்கள் அங்கே குறித்தவறின நிலையில் இருக்கிறீர்கள்.

63172 இப்பொழுது, ஆபிரகாம் தன்னுடைய குறிப்பார்தலை சரியாக வைத்திருந்தவனாயிருந்தான், ஏனென்றால் தேவன், “நான் உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்கப் போகிறேன்” என்று கூறியிருந்தார். அப்பொழுது அவனுக்கு எழுபத்தைந்து வயதும், சாராளுக்கோ அறுபத்தைந்து வயதுமாயிருந்தது. 173 அவன் தேவனை விசுவாசித்தான். அவன், அவன் என்ன செய்தான்? அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்னவாயிருந்து என்பதன் பேரில் தன்னுடைய குறிபார்த்தலை வைத்தான். ஆம், ஐயா. கர்த்தர் உரைக்கிறதாவது என்னவாயிருந்தது என்பதோடு அவன் சீராக சஞ்சரித்தான். நாளுக்கு நாள் அவன் சஞ்சரித்தான். வருடா வருடம் அவன், “அதற்கு முரணான எந்தக் காரியமும் சரியானதல்ல. இல்லை, ஐயா. அது அந்தவிதமாக இருக்க வேண்டியதாயிருந்தது. தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்” என்று அறிக்கையிட்டுக்கொண்டே சஞ்சரித்து வந்தான். 174 அவனுடைய சத்துருக்களில் சிலர் சுற்றி நடந்து வந்து, “ஜாதிகளின் தகப்பனே, இப்பொழுது நீ எத்தனை பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாய்?” என்று கூறுவதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். 175 “இப்பொழுது நான் எத்தனை பிள்ளைகளைப் பெற்றிருக்கிறேன் என்பது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை. நான் ஜாதிகளுக்கு தகப்பனாயிருக்கிறேன். அவ்வளவுதான்.” “உனக்கு எப்படித் தெரியும்?” 176 “தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார். அதுவே இதற்கு தீர்வாகிறது. அதற்குரியதெல்லாம் அவ்வளவுதான். தேவன் அதைக் கூறினார், அதுவே அதற்கு தீர்வாகிறது.” 177 எனவே அந்தவிதமாகவே ஆபிரகாம் சென்றான். அவன் முடிவாக அதற்கு வரும்போது… அதன்பின்னர், நீங்கள் பாருங்கள், மிகவும் உண்மையுள்ளவனாய் இருக்கும் பட்சத்தில், அதிக உத்தமமாயிருக்க அதிகமான சோதனைகள் உண்டாயிருந்தன. புரிகிறதா? எனவே அவர் அவனை சரியாக திருப்பிக் கொண்டு வந்தார்.

64178 இப்பொழுது, நினைவில்கொள்ளுங்கள்…உங்களுக்கு ஒரு சோதனை உண்டாயிருக்கும்போதே, நீங்கள் தகுதியுள்ளவராயிருக்கின்றீர்கள் என்று தேவன் எண்ணியிருக்கிறார். இப்பொழுது இதை, இதை புரிந்துகொள்ளத் தவற வேண்டாம். உங்களுக்கு ஒரு சோதனையோ அல்லது பரீட்சையோ உண்டாயிருக்கும்போது, தேவனுடைய கிருபையானது உங்களை கண்டுபிடித்துள்ளது என்பதையும், நீங்கள் தேவனிடத்தில் தயையைப் பெற்றுள்ளீர்கள் என்றும், நீங்கள் அந்த பரீட்சையில் நிற்பீர்கள் என்று தேவன் நம்புகிறார் என்பதையுமே அது காண்பிக்கிறது. அவர் யோபுவிற்கு அதே காரியத்தைச் செய்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். 179 சாத்தானும், “ஓ, ஆம், நான் யோபுவை அங்கு கீழே கண்டேன்” என்று கூறினான். மேலும், “அவன்…இல்லை” என்றான். 180 தேவனோ, “அவன் ஒரு உத்தமமான ஊழியக்காரன். அவனைப் போன்று பூமியில் எவருமே இல்லை. யோபைப்போன்று ஒருவருமில்லை. அவன் ஒரு உத்தமமான மனிதன். இப்பொழுது, அவனே, அவனே என்னுடைய—அவனே என்னுடைய பெருமையும், சந்தோஷமுமாயிக்கிறான்” என்று கூறினார். 181 அப்பொழுது சாத்தானோ, “ஓ, நிச்சயமாக. அவன் வேண்டிக்கொள்கிற ஒவ்வொரு காரியத்தையும் பெற்றுக்கொள்கிறான். அவனை ஒருமுறை என்னிடத்தில் விடும். நான், நான் அவனை உம்முடைய முகத்திற்கு முன்பே தூஷிக்கும்படிச் செய்வேன். நான் அவனை உம்மை தூஷிக்கும்படிச் செய்வேன்” என்று கூறினான். 182 அதற்கு தேவனும், “அவன் உம்முடையடைய கரங்களில் இருக்கிறான். ஆனால் நீ அவனுடைய ஜீவனை மாத்திரம் எடுக்காதே” என்று கூறினார். புரிகிறதா? தேவன் யோபுவில் நம்பிக்கை வைத்திருந்தார். ஆமென்.

65183 ஒவ்வொரு காரியமும் தவறாகப் போய்விட்டதுபோல் காணப்படும்போது, தேவன் உனக்கு ஒரு சோதனையை கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் உன்னில் நம்பிக்கையை வைத்துள்ளார். உன்னை குழந்தையைப் போல் அவர் நடத்த வேண்டியதில்லை. நீ எளிதாக வளர்க்கப்படும் பார்வைக்கான ஒரு செடியல்ல, ஒரு கலப்பின செடியல்ல. நீ ஒரு உண்மையான கிறிஸ்தவன். தேவன் உனக்கு ஒரு சோதனையை கொடுத்துக்கொண்டிருக்கிறார், நீ அதைக் குறித்து என்ன செய்வாய் என்றும் பார்க்கிறார். ஆமென். பேதுரு, “இந்த பற்றியெரிகிற அக்கினி போன்ற சோதனைகளை, ஏன், அதை சந்தோஷமாக எண்ணிக்கொள். அது—அது உனக்கு பொன்னைப் பார்க்கிலும் விலையேறப்பெற்றதாயுள்ளது” என்று கூறுவதில் வியப்பொன்றுமில்லையே. 184 நாம் அனேக சமயங்களில், “ஓ, பாருங்கள், நான் வெறுமனே…” என்று முறுமுறுக்கிறோம். பாருங்கள், அது, பாருங்கள், நீங்கள் ஜெயங்கொள்ளும்படி தேவன் உங்களுக்கு கொடுக்கிற ஏதோ ஒரு காரியமாய் அது உள்ளது. நீங்கள் அதை செய்வீர்கள் என்று அவர்—அவர்—அவர் அறிந்திருக்கிறார். அவர், அவர்—அவர் உங்களில் அவருடைய நம்பிக்கையை வைத்திருக்கிறார்.

66185 அவர் ஆபிரகாமை நம்பினார்…சரியாகக் கூறினால், ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். தேவன் சாத்தானிடத்தில், “அவன் என்னை நேசிக்கிறான் என்பதை நான் உனக்கு நிரூபிக்க முடியும்” என்று கூறினார் என்பதில் சந்தேகமேயில்லை. மேலும், “நான்…அவன் அந்த வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கிறான், ஏனென்றால் நான் அதை அவனுக்கு கூறினேன்” என்றும் கூறினார். எனவே அவன் தன்னுடைய சொந்த மகனை மேலே மலையின் உச்சிக்கு கொண்டு சென்று, அவனுடைய கைகளை அவனுக்குப் பின்னே கட்டினான், அதாவது அந்நாளிலே தேவன் அவ்வண்ணமாய்க் கூறியிருந்தார். 186 குட்டி ஈசாக்கோ சந்தேகப்பட்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன் கூறினான், ஆதியாகமம் 22-ல், அவன் கூறினான், அவன், “தகப்பனே?” என்று கூப்பிட்டான். அதற்கு அவன், “என் மகனே, இதோ நான் இருக்கிறேன்” என்று பதிலளித்தான். 187 அப்பொழுது அவன், “இங்கே விறகு இருக்கிறது. இங்கே பலிபீடமும், மற்ற ஒவ்வொரு காரியமும் இருக்கிறது. ஆனால்—ஆனால்—ஆனால் பலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்டான். பாருங்கள். அவன் சற்று வினோதமாக உணரத் துவங்கினான். “என்ன, இவை யாவற்றையும் குறித்த என்ன? நாம், நாம் ஏதோ ஒரு காரியத்தை விட்டுவிட்டிருக்கிறோம்” என்றான். 188 நீ எதை விட்டுவிட்டாய் என்று நினைக்கிறாயோ, அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குகிறதில்லை. நீ ஐக்கியம், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தைக் குறித்தும் விட்டுவிட்டிருக்கிறாய். “பாருங்கள், நீ உன்னுடைய சீட்டாட்டக் குழுக்களை உடையவனாயிருக்க வேண்டும். நீ இதை செய்ய வேண்டும். நீ சற்று மது அருந்த வேண்டும். நீ அதை விட்டுவிட்டிருக்கிற…” நீ இவைகளை விட்டுவிடுவது மட்டுமல்லாமல். தொடர்ந்து போய், வார்த்தைக்கு கீழ்படி. புரிகிறதா? அப்படியே வார்த்தைக்கு கீழ்ப்படி, அவ்வளவுதான். நீ எதையோ விட்டுவிட்டாய் என்றில்லாமல், அப்படியே வார்த்தைக்கு கீழ்ப்படி. 189 அவன், “தேவன், ‘அவனை இங்கு மேலே கொண்டு செல்’ என்று கூறினார். அவன் அதைச் செய்ய—அவன் அதைச் செய்ய…இங்கிருந்து எழுந்து மலையின் உச்சிக்குச் சென்றான். நான் ஒரு காரியத்தை செய்ய வேண்டியவனாயிருக்கிறேன். நான் அங்கு சென்றடையும்போது, நான் அதை செய்வேன்” என்று கூறினான். 190 எனவே அவன் அங்கு மேலே சென்று, தன் மகனுடைய கரங்களை கட்டி, அவனை அந்தவிதமாக பலிபீடத்தின் மேல் படுக்க வைத்தான். குட்டி ஈசாக்கோ ஒருபோதும் முறுமுறுக்கவில்லை; கீழ்ப்படிதல், கிறிஸ்துவின் முன்னடையாளத்தைப் பாருங்கள். அதன்பின்னர் அவன் தன்னுடைய உறையிலிருந்து கத்தியை இழுத்து, அவனுடைய முகத்தின் பின்னிருந்த தலைமுடியை பிடித்து இழுத்து, அவனுடைய ஜீவனை எடுக்க விருந்தபோது, அது ஆபிரகாமினுடைய வெற்றியின் நாளாயிருந்தது; ஓ, என்னே, அவனுடைய சொந்த குமாரனை குறித்து அவன் தாங்கக்கூடிய கடைசி வரம்பு வரை சோதிக்கப்பட்டான்.

67191 இப்பொழுது, நீங்கள் ஆவிக்குரியவர்களாயிருந்தால், அந்த சோதனையை ஏற்றுக்கொள்வீர்கள். தேவன் தாம் நேசித்திருந்த தமக்கு சொந்தமானவரை அளித்தபோது, பாருங்கள், அது வெற்றியின் நாளாயிருந்தது, தேவன் ஆதாமினுடைய விழுந்துபோன இனத்தை அவ்வளவாய் நேசித்தாரே! நாம் இன்னும் சற்று நேரத்தில் அதற்குள் செல்வோம். 192 கவனியுங்கள், வெற்றியின் நாள், ஆபிரகாமுடைய வெற்றியின் நாள் மோரியா மலையின் மேல் இருந்தது. அங்கே கர்த்தர் அவனுடைய குமாரனுக்கு பதிலாக, அவனுக்காக ஒரு பலியை அருளினார். அன்பு, பாருங்கள், அன்பு. அந்த நாளிலேயே ஆபிரகாம் தேவனுக்கு ஒரு சந்தேகத்தின் நிழலுமின்றி தன்னுடைய விசுவாசத்தை நிரூபித்தான். ஆபிரகாம் தேவனுக்கு, அவனுக்குள் இருந்த தன்னுடைய விசுவாசத்தை நிரூபித்தான், ஏனென்றால் அவன், “நான் நூறு வயதாயிருந்தபோது, ஒரு வாக்குத்தத்தத்தை விசுவாசித்ததினால் நான் இந்த பையனைப் பெற்றுக்கொண்டேன்” என்று கூறினான். “நான் ஜாதிகளுக்கு தகப்பனாயிருப்பேன் என்று அவர் என்னிடத்தில் கூறியிருந்தார். அவர் அவனுடைய ஜீவனை எடுக்கும்படி என்னிடத்தில் கேட்டுக்கொள்வாரானால், அவனை மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறார்.” வியூ! என்னே, ஒ, என்னே! அது ஒரு பிரஸ்பிடெரியனையும் சத்தமிட்டச் செய்ய வேண்டும். அது அவ்வாறு செய்யாதா? புரிகிறதா? “எப்படியாய் அவர்—அவர்—அவர் எனக்கு வாக்குத்தத்தத்தையளித்து, அவர்—அவர்—அவர்—எனக்கு இதனுடைய அத்தாட்சியையும் காண்பித்தார். ஆமென். அவர், அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்கிறார் என்று அவர் அதை எனக்கு நிரூபித்திருக்கிறார்.”

68193 பாருங்கள், அவர் நம்மை எங்கே பெற்றுக்கொண்டார்? நான் எந்தவிதமான ஒரு குழப்பத்திலிருந்து வெளியே வந்தேன்? எந்தவிதமானதிலிருந்து நீங்கள் வெளியே வந்தீர்கள்? இந்த காலையில் நம்முடைய சிந்தனைகள் எங்கே உள்ளன? அவர் எதை நமக்கு மத்தியில் இருப்பதாக நிரூபித்திருக்கிறார்? அதைக் குறித்து சந்தேகமே கிடையாது. ஆமென். நம்முடைய—நம்முடைய வெற்றியின் நாள் நிச்சயமாக உண்டு. நாம் அதைப் பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். புரிகின்றதா? அவர் அதை நிரூபித்திருக்கிறார். 194 ஆபிரகாம், “அவர் அதை எனக்கு நிரூபித்தார். நான் குழந்தையில்லாதவனாயிருந்தேன். நான்—நான் வயோதிக மனிதனாயிருந்தேன். நான் மலட்டுத்தன்மை கொண்டவனாயிருந்தேன். என் மனைவியினுடைய கர்ப்பமும் செத்துப்போயிருந்தது. நாங்கள்…அவள் அறுபத்தைந்து வயதுடையவளாகவும், நான் எழுபத்தைந்து வயதுதுடையவனாகவும் இருந்தேன். ஆனால் தேவனோ, ‘நான் உனக்கு அவள் மூலமாக ஒரு குழந்தையைக் கொடுக்கப் போகிறேன்’ என்றார். அதுவே இதற்குத் தீர்வானது. அதற்குரியதாயிருந்ததெல்லாம் அவ்வளவுதான்.” ஆபிரகாம், “நான் இதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிறான். 195 அதன்பின்னர் தேவன் அவனை இருபத்தைந்து வருடகால சோதனைக்குட்படுத்தினார். அது ஆபிரகாமுக்கு ஒரு காரியத்தையும் பொருட்படுத்தவில்லை. அப்பொழுது அவன் முதலில் இருந்ததைவிட பலமுள்ளவனாகி, தேவனைத் துதித்தான். தேவனோ கீழ் நோக்கிப்பார்த்து, “என்னே ஒரு ஊழியக்காரன்!” என்று கூறினதில் சந்தேகமேயில்லை. அதற்கு சாத்தானும், “ஓ, ஆம்” என்று கூறினான். மேலும், “அவர்…” 196 “ஆனால் அவன் என்னை நேசிக்கிறான் என்பதை நான்—நான் நிரூபிப்பேன். அவனை அங்கேயே மலையின் உச்சிக்குக் கொண்டு சென்று, அந்த அத்தாட்சியை அழித்துவிடு. அவனை அங்கேயே மேலே கொண்டு செல்” என்றார். ஆபிரகாம் அதைச் செய்ய மேலே சென்றான். அது உண்மை.

69197 ஆபிரகாம் தன்னுடைய பிள்ளையினுடைய ஜீவனை எடுக்கத் துவங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் அவனுடைய கரத்தைப் பிடித்து, “ஆபிரகாமே உன்னுடைய கரத்தை நிறுத்து. நீ என்னை நேசிக்கிறாய் என்பதை நான் அறிவேன்” என்றார். ஆமென். 198 என்ன சம்பவித்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், தேவனை நேசிக்கிற அந்த விதமான ஒரு நபராகவே நான் இருக்க விரும்புகிறேன். “உன் கரத்தை நிறுத்து.” உனக்கு சோதனையைக் கொடுக்கிறேன். அது உன்னுடைய சொந்த சிந்தனைக்கு எதிராக கூட அங்கு இருக்கும். ஆனால் வார்த்தை அவ்வண்ணமாய் அதை உரைக்கும் வரை, எப்படியாயினும் அதைச் செய். புரிகிறதா? 199 “உன்னுடைய கரத்தை நிறுத்து. நீ உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காகக் அவனை ஒப்புக்கொடுத்தபடியினால், நீ என்னை நேசிக்கிறாய் என்பதை நான் அறிவேன்.” “நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்” என்றும், “அவனுடைய சந்ததியார் சத்துருவின் வாசலை சுதந்தரித்துக்கொள்வார்கள், அவன் ஜெயங்கொள்வான்” என்றும் கூறினார். ஓ, என்னே! அவர் அதையும் கூட செய்தார். 200 கொஞ்சங் கழித்து, “ஆபிரகாமின் வித்து” என்பதைக் குறித்து நாம் பார்க்கப் போகிறோம். சரி. என்ன செய்தா… 201 ஆபிரகாமினிடத்திலிருந்து சந்தேகங்கள் போய்விட்டிருந்தன. அவன் உண்மையான தேவனுடைய வார்த்தையை கேட்டபோது, சந்தேகங்கள் போய்விட்டன. தேவன் வார்த்தையை ரூபகாரப் படுத்துவதை அவன் கண்டபோது, சந்தேகங்கள் போய்விட்டன. அன்பு அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டது. “ஆபிரகாமே, நீ என்னை நேசிக்கிறாய் என்பதை நான் அறிவேன். நீ ஒரு துளி கூட என்னைக் குறித்து சந்தேகிக்கவில்லை. நீ எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதாயிருந்தாலும் கவலைப்படாமல், நீ அப்படியே என்னை விசுவாசித்தாய். நான் உனக்கு கொடுத்திருந்த அந்த அத்தாட்சியை நீ அழிக்கும்படி நான் கேட்டுக்கொண்டேன். உனக்கு அத்தாட்சியை அளித்து, அதன்பின்னர் அதை அழிக்கும்படி கேட்டுக் கொண்டேன். நீ என்னை மிகவும் நன்கு நேசிக்கிறாய், என்னுடைய வார்த்தை என்னவாயிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நீ அதை காத்துக்கொள்கிறாய்.” ஆமென். அதுவே தேவனுக்கான ஒரு உண்மையான வெற்றியின் நாளாயிருந்தது. புரிகிறதா?

70202 யாக்கோபு ஒரு சமயம் ஒரு வெற்றியின் நாளை உடையவனாயிருந்தான். அவன் தன்னுடைய சகோதரனிடத்திற்கு திரும்பிச் செல்ல பயப்பட்டான், ஏனென்றால் அவன் தீங்கு செய்திருந்தான். ஆனால், அதேசமயத்தில், பரிசுத்த ஆவியானவர் அவனை எச்சரிக்கத் தொடங்கி, அவனுடைய இருதயத்தில், “நீ எங்கிருந்து வந்தாயோ, அந்த தாய்நாட்டுக்கே திரும்பிச் செல். நீ தாய்நாட்டிலிருந்து வந்திருக்கிறாய். நீ அங்கே தீங்கு செய்திருக்கிறாய். இப்பொழுது நான் உன்னை திருப்பி அனுப்புகிறேன்” என்றார். அவன் நெருங்கி வந்தபோது, அவன்…உண்மையாகவே, நிச்சயமாகவே. 203 அந்தவிதமாகத்தான் பிசாசு நம்மைத் பின்தொடர்ந்து வருகிறான். புரிகிறதா? அந்தவிதமாகத்தான் பிசாசு மணவாட்டியை, சபையை பின் தொடருகிறான், ஆகையால், இப்பொழுது அது வெற்றியின் நாளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது உண்மை. அவள் உண்மையாகவே நெருங்கிக் கொண்டிருக்கிறாள். அப்பொழுதே சத்துருவானவன் மாற்று வழிக்கு தன்னுடைய கெடுதியை செய்கிறான். வேதமோ, “பூமியின்மேலிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஏனென்றால் பிசாசு கெர்ஜிக்கிற சிங்கம்போல, எவனை விழுங்கலாம் என்று இந்த கடைசி நாட்களில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறான்,” என்று உரைத்துள்ளது. நீங்கள் பாருங்கள். “அவர்களுக்கு ஐயோ”; துன்புறுத்தல்களும் மற்ற காரியங்களும் சம்பவிக்கும். அதை சரியாக பற்றிக் கொள்ளுங்கள். வலப்புறமோ அல்லது இடப்புறமோ அசையாதீர்கள். வார்த்தையோடு சரியாக தரித்திரு. தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார். அதுவே இதைச் செய்கிறது.

71204 யாக்கோபு தன்னுடைய இருதயத்தில் தயங்கினான், ஒவ்வொரு காரியமும் தவறாக இருப்பதுபோல் தென்பட்டது. அவன் வீட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பினான். பரிசுத்தாவியானவர் அவனை வழிநடத்திக் கொண்டிருந்தார். அவன் தேவனுக்கு ஒரு வாக்குறுதி செய்திருந்தான். அவன் இந்த தசமபாகங்கள் மற்றுமுள்ளவற்றை செலுத்த பெத்தேலுக்கு போக வேண்டியதாயிருந்தது. இங்கே, தன்னுடைய திரும்பி வரும் வழியில், தன்னுடைய சத்துருவான சகோதரன் ஏசா, இவனுக்காக ஒரு சேனையோடு நதிக்கு அப்புறத்திலே காத்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் கண்டறிகிறான். யாக்கோபு ஒரு கோழையாக இருந்தான், அதே சமயத்தில் அவன் தேவனுடைய ஆசீர்வாதங்களை உடையவனாக இருந்தான். அவனை ஆசீர்வதிப்பதாக தேவன் வாக்குப்பண்ணியிருந்தார். அவன் சேஷ்ட புத்திரபாகத்தைத் உடையவனாய் இருந்தான். ஆமென். 205 தேவனுடைய வார்த்தையின் வாக்குத்தத்தத்தோடு அதை ரூபகாரப்படுத்தும்படியான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இன்றைக்கு சபைக்கு என்ன ஒரு முன்னடையாளமாக உள்ளது, ஏனென்றால் நீங்கள் அந்த வார்த்தையின், சேஷ்ட புத்திர பாகத்தின் பாகமாகின்றீர்கள். 206 யாக்கோபு சேஷ்ட புத்திர பாகத்தை உடையவனாய் இருந்தான். ஆமென். அவன் உடையவனாயிருந்ததை…அவனுடைய சகோதரன் அதைக் குறித்து கவலைகொள்ளவில்லை. கூழுக்காக அவனுடைய சகோதரன் அதை இவனுக்கு விற்றுப்போட்ட காரணத்தால், இவன் அந்த சேஷ்ட புத்திர பாகத்தை உடையவனாய் இருந்தான். எனவே இன்றைக்கு சபை உலகமானது தங்களுடைய சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப்போட்டுள்ளது. 207 தேவனுக்கு நன்றி, நாம் அதைப் பெற்றுக்கொண்டோம். ஆம், நாம் அதைப் பெற்றுக்கொண்டோம். நீங்களும் சேஷ்ட புத்திர பாகத்தை பெற்றிருக்கும் வரை, சபைகளின் ஐக்கியத்தைப் பற்றியும், தேசங்களின் கூட்டமைப்பைப் பற்றியும், இந்த மற்ற காரியங்களைக் குறித்தும் நாம் ஏன் கவலை கொள்கிறோம்?

72208 சபையானது செய்யவேண்டியதென்னவென்றால், யாக்கோபை போல நீங்கள் ஒரு வெற்றியின் நாளை பெறும்வரை ஜெபிப்பதேயாகும். சரி, யாக்கோபு ஒரு போராட்டத்தை உடையவனாய் இருந்தான். அவன் முழு இரவும் கர்த்தரோடு போராடினான், ஆனால் அவன், “நான் இந்த வெற்றியைப் பெறும் வரையில் நான் உம்மைப் போகவிடப்போகிறதில்லை” என்று கூறினான். அதன்பின்னர் பொழுது விடியும் பொழுது, ஒரு காலையில் அவன் ஒரு வெற்றியின் நாளை உடையவனாயிருந்தான். ஆனால் அதற்குப்பின் அவன் அதேவிதமாக நடக்கவில்லை. ஆனால் இந்தப் பக்கத்தில், அவன் ஒரு மகத்தான பெரிய, பலமான, பயப்படத்தக்க சபை அங்கத்தினனாக இருந்தான். ஆனால் அந்தப் பக்கத்தில், அவன் ஒரு சாதாரண நொண்டுகிற ஆசாரியனாக, இல்லை சரியாகக் கூறினால் இளவரசனாக இருந்தான்; முழு சேனையையும் எதிர்த்துப் போரிட போதிய தைரியமுடைய ஒரு சாதாரண நொண்டுகிற இளவரசனாயிருந்தான். ஏசா, “நான் உனக்கு ஒரு சேனையைக் கொடுப்பேன்” என்றான். அப்பொழுது அவன், “எனக்குத் அது தேவையில்லை” என்றான். அவன் ஒரு வெற்றியின் நாளை உடையவனாக இருந்திருந்தான். 209 நமக்கு அவர்களுடைய ஸ்தாபனங்கள் தேவையில்லை. நமக்கு அவர்களுடைய—அவர்களுடைய இந்த உலகப் பொருட்கள் தேவையில்லை. நமக்கு அவர்களுடைய…இந்த உலகத்தின் காரியங்களோடு ஒத்துப் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் ஒரு வெற்றியின் நாளை உடையவர்களாயிருந்து வருகிறோம். நாம் ஒருநாள், இல்லை ஓரிரவு போராடினோம்.

73210 ஓ, நான் எனக்குத்தானே மரிக்க வேண்டியதாயிருந்த அந்தப் போராட்டத்தை எப்படியாய் நான் நினைவுகூருகிறேன். ஆனால் நான் அந்த வெற்றியைப் பெற்றபோது, ஒரு வெற்றியின் நாள் உண்டானது. அதன்பின்னர் தேவனுடைய வார்த்தை எனக்கு சரியானது. பாப்டிஸ்ட் சபையானது மற்ற எந்த ஸ்தாபனத்தையும் போன்றே எனக்கு ஒன்றுமற்றதாக இருந்தது. அது உண்மை. நான் ஒரு வெற்றியின் நாளை உடையவனாய் இருந்தேன். தேவனுடைய வார்த்தை சரியாக இருக்கிறது. வேத பண்டிதர் டேவிஸ், “ஏன்? நீ ஒரு பரிசுத்த—உருளையாவாயே” என்றார். நானோ, “ஒரு பரிசுத்த—உருளையரா, இல்லை பரிசுத்த—உருளையராயில்லையே!” என்றேன். 211 அங்கே கிரீன்மில்லில் நான் முழு இரவும் ஜெபத்தில் இருந்தேன். அங்கே அந்த காலையில் அந்தத் தூதன் ஒளியாக உள்ளே வந்தார். கூறப்பட்டது…என்ன? போராடும்படி தேவன் எனக்கு கொடுத்த காரியத்திலிருந்து நான் விலக முயற்சித்துக் கொண்டிருந்தேன், தரிசனங்கள், அவர்களோ அதை பிசாசு என்று என்னிடத்தில் கூறிக் கொண்டிருந்தபோது, அவர் வந்து என்னிடத்தில் வேதவாக்கியங்களை திரும்ப சுட்டிக் காண்பித்து, “தேவ குமாரனைக் குறித்தும் அதே காரியத்தை அவர்கள் கூறவில்லையா?” என்று கூறினார். எனக்கு ஒரு வெற்றியின் நாள் உண்டாயிருந்தது. அதற்கு மேல் வேறு எதுவும் எனக்கு வேண்டாம். நான் ஊழியக் களங்களுக்கு உலகத்தை சுற்றி, சுற்றிப் புறப்பட்டுச் சென்றேன். ஒரு வெற்றியின் நாளாயிற்றே! 212 பாருங்கள், யாக்கோபு இந்த வெற்றியின் நாளை உடையவனாய் இருந்தான். அவன் முழு இரவும் போராடினான். ஆனால் பொழுது விடிந்தபொழுது, அது அவனுக்கான ஒரு வெற்றியின் நாளாயிருந்தது.

74213 இந்த மகத்தான எல்லா வெற்றிகளையும், மற்றக் காரியங்களையும், இந்த காரியங்களைக் குறித்து பேசினால், நிறுத்த இடமே இல்லையல்லவா? இந்த மகத்தான வெற்றிகள் யாவும் அருமையாக இருந்தன. நாம் அவைகள் ஒவ்வொன்றையும் மெச்சிக்கொள்கிறோம். அவை யாவுமே மகத்தான வெற்றிகளாய் இருந்தன. யுத்தங்களின் மகத்தான வெற்றிகளும், ஆவிக்குரிய யுத்தங்களின் மகத்தான வெற்றிகள் போன்றவை மகத்தானவைகளாய் இருந்தன. ஆனால், நீங்கள் கவனியுங்கள், அவைகளில் ஒன்று கூட நீடித்திருக்கவில்லை. புரிகிறதா? நாம் பெற்றுள்ள ஒரு மகத்தான வெற்றி தற்காலிகமானதாய் உள்ளது. இப்பொழுது, நாம் அப்படியே… 214 நாம் இங்கே கண்டறிவதோ, அண்மையில் நாம் ஜப்பானோடு யுத்தத்திற்கு சென்றபோதோ, ஏன்? நான்—நான்…எங்களுடைய சொந்த வீட்டில் ஒரு மிகச் சிறிய இயந்திரக் கருவி இருந்தது. யாரோ எங்களுக்கு ஒரு மிகச்சிறிய, ஓ, ஒரு இயந்திரக் கருவியை, உங்களுக்குத் தெரியும், ஒரு பொம்மை போன்ற சிறிய கருவியை எங்களுக்குக் கொடுத்திருந்தனர். அதன் மேல் “ஜப்பானில் தயாரிக்கப்பட்டது” என்று இருந்தது. அப்பொழுது ஒரு நபர் அதை வீசி எறிந்து உடைத்துப் போட்டுவிட்டார். புரிகிறதா? நீங்கள் “ஜப்பானில் தயாரிக்கப்பட்டது” என்று கூறினால், அவர்கள் அதை உடைத்துப் போடுவார்கள். அதாவது ஒரு கூட்ட வெறித்தன பற்றுள்ளோர், உங்களுக்குத் தெரியும், அவர்கள் மலிவு விலை கடைகளுக்குச் சென்று அவ்வாறு செய்வார்கள். இல்லை…சமுதாய பண்பற்ற ஜனங்கள் சாமர்த்தியமாக செயல் புரிய, அங்கே மலிவு விலைக் கடைக்குச் சென்று, ஜப்பானிலி ருந்து வருகின்ற பொருட்களை உடைத்துப்போடுவர். அவர்கள் தங்களுடைய விசுவாசப் பற்றை ஒரு தேசத்திற்கு காண்பிக்க விரும்பினர்.

75215 அப்படியானால் தேவனிடத்தில் காண்பிக்கக் கூடியதைக் குறித்து என்ன? அவருடைய முகத்திற்கு முன்பாக சிரிக்கிறார்கள். புரிகிறதா? அவர்களால் எளிதாக ஒரு மலிவு விலை கடைக்குச் சென்று, அங்கு உள்ள அலமாரிகளை கீழேத் தள்ளி, அது போன்ற காரியங்களை செய்ய முடிந்தது, ஏனென்றால் அவர்கள் வைத்திருந்த சிறு பொம்மைகள், சிறு கருவிகள் மற்ற காரியங்கள், அவைகள் ஜப்பானிலிருந்து தயாரிக்கப்பட்டு…வந்திருந்தால், அவைகள் உள்ளே இருந்தால், அதற்காக சண்டையிட்டனர். புகை பிடிப்பதும், மது அருந்துவதும், பொய்யுரைப்பதும், திருடுவதும், அது போன்ற காரியங்களை செய்வதைக் குறித்து உண்மையான தேவனுடைய சேனை என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தீர்களா? புரிகிறதா? அவர்கள் உத்தமமாயிருக்க விரும்புகிறார்கள். நம்முடைய உத்தமத்தைக் குறித்து எப்படியிருக்கிறோம்? அதை செய்வதற்காக அவர்கள் சிறைச்சாலைக்கு சென்றிருந்தால், அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணியிருக்கும்? அவர்கள் அந்த தேசத்திற்கு, அந்த தேசக் கொடிக்கு உண்மையாய் இருக்க விரும்புகின்றனர். ஆனால் கிறிஸ்தவனோ சில சமயத்தில் நேர்மையாக பேசவே பயப்படுகிறான். புரிகிறதா? அந்தக் காரணத்தினால்தான் நமக்கு அதிகமான வெற்றியின் நாட்கள் தேவைப்படுகின்றன. நீங்கள் உங்களையே ஜெயங்கொள்ள முடியும்போதேயாகும். புரிகிறதா? தேவன் தம்முடைய அன்பின் வல்லமையால் உங்களை ஜெயங்கொள்ளட்டும்.

76216 இந்த எல்லா பெரிய வெற்றிகளும் தற்காலிக வெற்றிகளாயிருந்தன. மோசேக்கும் கூட, இஸ்ரவேலர் திரும்பவும் அடிமைத்தனத்துக்குள்ளாகச் சென்றனர். அவர்கள் எப்பொழுதுமே உள்ளேயும், வெளியேயும், உள்ளேயும் வெளியேயுமாக இருந்து வந்ததை நாம் கண்டறிகிறோம். பல வீரர்கள் போராடி மரித்தனர். அவர்கள் இன்னமும் மாம்சபிரகாரமாகவே கண்ணாடியின் குறிபார்த்தலைச் செய்து, யுத்தங்களைப் புரிகிறார்கள். அவர்கள் அதை ஆவிக்குரியபிரகாரமாகவும் செய்கிறார்கள். வீரர்கள் போரிட்டு மடிகின்றனர். நம்மால் இப்படி கீழே செல்ல முடியும். நான் இங்கே அவர்களின் முழு வரிசையையும், தானியேலைப் போன்றவர்கள், எபிரெயப் பிள்ளைகள் மற்றும் முன் காலத்தில் அங்கு ஜெயம் பெற்ற அந்த மகத்தான ஜெய வீரர்களைக் குறித்தும் எழுதி வைத்திருக்கிறேன். 217 ஆனால் அவர்கள் தொடர்ந்து…முடிவிலே மரணம் என்றழைக்கப்பட்ட ஒரு காரியம் வந்தபோது, எதையும் பொருட்படுத்தாமல் அவர்களைப் பிடித்துக்கொண்டது. பாருங்கள். அவர்கள் தொடர்ந்து சண்டையிட்டு மரித்தும், சண்டையிட்டு மரித்தும், வெற்றிகளை பெற்று மரித்தும், மீண்டும் வெற்றிகளைப் பெற்று மரித்துமிருந்தனர். பாருங்கள். 218 ஆனால், நீங்கள் பாருங்கள், மொத்தத்தில் மனிதன் மரிப்பதற்காக உண்டாக்கப்படவில்லை. மனிதன் ஜீவிப்பதற்கென்றே உண்டாக்கப்பட்டான். அவன் எத்தனை பெரிய மகத்தான சாதனைகளை செய்தாலும், அது ஒரு பொருட்டல்ல. அவன் இன்னமும் ஒரேவிதமாகவே மரித்துப்போனான். கல்லறைக்கு சென்றான், அவர்கள் அவனை அடக்கம் செய்தனர். அதுவே அதற்கு தீர்வாகிவிட்டது. அவர்கள் அவனுடைய கல்லறையில் அங்கிருந்த ஒரு கல்லறைக் கல்லோடு அல்லது அவனைக் கிடத்தின கல்லறையில் அடையாளமிட்டனர். அதுவே—அதுவே அதனுடைய முடிவாயிருந்தது. மரணம் அவனை விழுங்கிப் போட்டது. அந்த மகத்தான மோசே, மகத்தான யோசுவா, மகத்தான வேதாகமத்தின் தீர்க்கதரிசிகள், ஏறக்குறைய அவர்கள் எல்லோரையுமே, கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று பேரைத் தவிர, மற்றவர்களுடைய கல்லறைகள் எங்கே உள்ளன என்றும், அவர்களை எங்கே அடக்கம் செய்து அடையாளமிட்டோம் என்பதையும் நாம் அறிவோம். மரணமானது அவர்களை விழுங்கிப்போட்டு, அவர்களை கொண்டு சென்றுவிட்டது. புரிகிறதா?

77219 ஆனால் ஓர் நாள் அங்கே ஒரு யுத்தம் உண்டானது, தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னும் பிரதான யுத்தவீரர் அங்கே வந்தார். ஒரு உயிர்த்தெழுதல் உண்டானது. இயேசுவானவர் போராடி மேற்கொண்ட பிறகே, அதுவே உண்மையான வெற்றியின் நாளாயிருந்தது. அவர் எதிர்த்து போராட வேண்டியிருந்த ஒவ்வொரு சத்துருவையும் எதிர்த்து போராடினார். 220 முதலாவது காரியம், அவர் பிறந்தபோது, துவக்கத்தில், ஜனங்கள் மத்தியில் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளையாக, ஒரு இழிவான பெயரோடு பிறந்தார். அதனூடாக அவர்தாமே போராடினார். “மரியாள் விவாகமாகாமலேயே யோசேப்பின் மூலமாக இந்த குழந்தையைப் பெற்றெடுத்தாள்.” அவர் இப்படிப்பட்ட ஒரு பெயரோடு வாலிப ஜனங்களுக்கு மத்தியிலே வந்தார். ஆனால் அவருடைய இருதயத்தில் அவர் தேவ குமாரனாக இருந்தார் என்பதை அறிந்திருந்தார். புரிகிறதா? அவர் அதனூடாகப் போராடினார். 221 அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட பிறகு, அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த தம்முடைய தீர்மானத்தை செய்யும் அந்த நாளுக்கு வந்தார். 222 சாத்தான் அவரை மலையின் உச்சிக்குக் கொண்டு சென்ற அந்த நாள் வந்தபோது, அவன் உலகத்தின் இராஜ்ஜியங்களையெல்லாம் அவருக்குக் காண்பித்து, “நான் உம்மை இப்பொழுது ஒரு இராஜாவாக்குவேன். நீர் தேவனுடைய குமாரன் என்றும், உமக்கு வல்லமை உண்டு என்றும் கூறுகிறீர். நீர் சகல தேசங்களையும் ஆளும்படி நான் கொடுப்பேன்” என்றான். அந்தவிதமாகவே அந்திக்கிறிஸ்து இன்றைக்கு இருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு வெற்றியின் நாள் இருந்தது. அவர் அதனூடாக போராடினார். “நீர் தேவனுடைய குமாரனாயிருந்தால்…” என்றான். 223 அவர் வார்த்தையினால் சவாலிடப்பட வேண்டிய ஒரு நேரம் உண்டானது. “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி கட்டளையிடும்.” பார்த்தீர்களா? “நீர் பசியாய் இருக்கிறீர், இப்பொழுது அவைகளைப் புசியும்.” பார்த்தீர்களா? “நீர் தேவனுடைய குமாரனாயிருந்தால், உம்மால் அதை செய்ய முடியும்” என்றான். அவரால் செய்திருக்க முடியும். அது உண்மை. ஆனால் ஒரு வெற்றியின் நாள் உண்டாக வேண்டியதாயிருந்தது. அவர் அந்த சோதனையின் மீது வெற்றி பெற்றார். புரிகிறதா? அவர் வெற்றி பெற்றது…

78224 சாத்தான், “இப்பொழுது நீர் ஒரு மகத்தான நபராக இருக்க முடியும். நீர் என்னவாக இருக்கிறீர் என்பதை நீர்தாமே காண்பித்துக் கொள்ள முடியும்” என்றான். அவரை தேவாலயத்தின் உப்பரிக்கையின்மேல் கொண்டு சென்று, “தாழக்குதியும், ‘அவர் உம்மைக் குறித்து தூதர்களுக்கு கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்’ என்பதாய் எழுதியிருக்கிற வேதவாக்கியத்தை நான் உமக்கு சுட்டிக் காட்டுவேன்” என்றான். வேதபண்டிதனாயிருக்கிற அந்த சாத்தானைப் பாருங்கள். புரிகிறதா? 225 அப்பொழுது, “அப்பாலே போ சாத்தானே” என்ற வார்த்தை வந்தது. அது ஒரு வெற்றியின் நாளாயிருந்தது. அவர் ஒவ்வொரு வெற்றியின் நாளுக்கும் வந்தார். 226 அவர் பேதுருவின் மனைவியினுடைய தாயார் அங்கே ஜுரத்தால் படுத்திருந்தபோது, அவளிடத்திற்கு நடந்து சென்றார். அவளுடைய சரீரத்தில் ஜுரமானது கடுமையாகிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு சேவை தேவைப்பட்டது. அவர் அங்கு நடந்து சென்று, அவளுடைய கையைத் தொட்டார். சுகவீனமானது அவருடைய பிரசன்னத்தில் நிலைத்திருக்க முடியாமற்போயிற்று. நிச்சயமாக நிலைத்திருக்க முடியவில்லை.

79227 அதன்பின்னர் ஒரு குடும்பத்தில் மரணம் ஏற்பட்டிருந்த இடத்திற்கு அவர் வந்தார். லாசரு என்னும் பெயர் கொண்ட அவருடைய ஒரு சினேகிதனான ஒரு மனிதன் மரித்து அடக்கம்பண்ணப்பட்டிருந்த ஒரு இடத்திற்கு அவர் வந்தார். கல்லறையில் வைக்கப்பட்டு, கிட்டத்தட்ட நான்கு நாட்களாக நாறிக்கொண்டிருந்தான். சரீரமானது மூன்று நாட்களில் அழுகத் தொடங்குகிறது, பாருங்கள் எழுபத்திரெண்டு மணி நேரத்தில் அழுகும். மரணமும் ஜீவனும் சந்திக்கப்பட வேண்டிய ஒரு இடம் அமைந்தது. இதோ அவர் ஜீவனாய் இருக்கிறார்; அங்கே மரணம் அவருடைய சினேகிதனை எடுத்துக்கொண்டது; ஒரு பலப்பரீட்சை உண்டானது. அவர் கல்லறையண்டை நடந்து சென்று, தன்னுடைய சிறிய தோள்பட்டைகளை நிமிர்த்தி நின்று, “லாசருவே வெளிய வா” என்றார். ஓ, என்னே! அந்த வார்த்தை புறப்பட்டுச் சென்றது. அது தேவனுடைய வார்த்தையாயிருந்தது. மீண்டும் ஜீவனடைந்தான். மரித்து அப்பால் எஙகோ சென்றிருந்த அந்த ஜீவன் மீண்டும் அவனுடைய சரீரத்திற்குள் வந்தது. நிச்சயமாகவே, அவர் ஜெயம் பெற்றார். அது உண்மை. 228 சுகவீனம், சோதனை மற்றும் இருக்கக்கூடிய ஒவ்வொரு காரியத்தோடும், அதனுடைய ஒவ்வொரு துணுக்கோடும் அவர் போராடினார். ஒரு வெற்றியின் நாளாயிற்றே! முற்றிலும் சரியே. 229 முழு உலகமும் ஒரு நிழலில், மரணத்தின் நிழல்களின் பகுதியில் கிடந்திருந்த ஒரு நேரத்தில் அது உண்டானது; ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு மானிடனும், ஒவ்வொரு தீர்க்கதரிசியும், ஒவ்வொரு மகத்தான மனிதனும், அவர் அனுப்பியிருந்த இந்த மகத்தான எல்லா வீரர்களும், அவர்கள் எல்லோருமே அங்கு அந்த நிழலில் கிடந்தனர். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, அவர்கள் எல்லோருமே அங்கு கல்லறையில் கிடத்தப்பட்டிருந்தனர், “தேவனுடைய வார்த்தை அவ்வண்ணமாய் உரைத்தது, தேவன் அவ்வண்ணமாய் கூறினார்” என்பதைத் தவிர விசுவாசிப்பதற்கு வேறு அத்தாட்சியே இல்லாதிருந்தது.

80230 யோபுவைப் பாருங்கள், அவன் மிக கடினமாக போராடிக் கொண்டிருந்தபோது, அவனுடைய மனைவி, அவனுடைய மனைவியும் கூட, அவனுடைய வாழ்க்கைத் துணைவியும் கூட, “என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது” என்று அவன் கூறினான். அவன்… 231 அந்த சோதனைகளையுடைய அந்த மனிதனுக்கு அது என்ன ஒரு நேரமாயிருந்தது! பெல்ஷாரும், மற்றுமுள்ளோரும், எலிகூவும் கூட, அவனை குற்றப்படுத்தும்படியான அந்த விதமான காரியங்களைச் செய்தனர். ஆனால் அவன் தான் வார்த்தையோடு தரித்திருந்தான் என்பதை அறிந்திருந்தான். 232 அவனுடைய மனைவியோ வந்து, “யோபுவே, நீ பரிதபிக்கப்படத்தக்கவனாய் காணப்படுகிறாய்,” “நீ ஏன் தேவனை தூஷித்து ஜீவனை விடக்கூடாது?” என்று கூறினாள். 233 அப்பொழுது அவன், “நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்” என்று கூறினான். உ-ஊ! ஓ, என்னே! என்ன ஒரு வீரன்! இயேசுவானவரும்கூட, “யோபுவின் பொறுமையை குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று அவனைக் குறித்து குறிப்பிட்டுக் கூறினார். 234 யோபு சேணம் பூட்டப்பட்டு மரித்தான். ஆபிரகாம் சேணம் பூட்டப்பட்டு மரித்தான். ஆம், ஐயா. ஈசாக்கு சேணம் பூட்டப்பட்டு மரித்தான். யோசேப்பு சேணம் பூட்டப்பட்டு மரித்தான். 235 யோசேப்பு, “என்னை இங்கு அடக்கம்பண்ணாதீர்கள். என்னை என்னுடைய பிதாக்களோடு, பாருங்கள், அங்கேயே என்னை அடக்கம்பண்ணுங்கள். வார்த்தையின்படி அவர்கள் அடக்கம்பண்ணப்பட்டவிதமாகவே, அவர்கள் அடக்கம்பண்ணப்பட்ட சமபூமியில், அவர்கள் அடக்கம்பண்ணப்பட்ட இடத்திலே அதேவிதமாக என்னை அடக்கம் பண்ணுங்கள்” என்றான். 236 அதேக்காரியம்தான் எனக்குள்ளும் இருக்கிறது. அந்தக் காரணத்தினால்தான் நான் இயேசுவின் நாமத்தில் அடக்கம் பண்ணப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். “ஏனென்றால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களை தேவன் அவரோடு கூட கொண்டுவருவார்.” நீங்கள் பாருங்கள்.

81237 ஆகையால் இந்தவிதமாகவே வீரர்களுக்குப் பின், வீரர்களாக, வீரர்களாக தொடர்ந்து சென்றுகொண்டேயிருந்தனர் என்பதை நாம் கண்டறிகிறோம். அவர்களை அனுப்பியிருந்த…தலைமை தளபதி இங்கே வரும்படியான ஒரு நேரம் வந்தது. மகத்தான ஜெய வீரர்களான அவர்கள் யுத்தகளத்தில் விழுந்து போயிருந்தனர். அவர்கள் தங்களுடைய வெற்றியின் நாட்களுக்கு வந்தனர். அவர்கள் சத்துருவின் மீது ஜெயம் பெற்றனர். அவர்களும் கூட… 238 யோசுவா தேவையாயிருந்த…நேரத்தில்…அவன் தன்னுடைய சொந்த வார்த்தையினால் சூரியனை நிறுத்தினான், அது பிரகாசிக்கவில்லை. சூரியன் இருபத்தி நான்கு மணி நேரமாக அஸ்தமிக்கவேயில்லை. வேதம், “சூரியன் தரித்து நிற்கும்படி கட்டளையிட்ட ஒரு மனிதனுடைய சொல்லை, தேவன் கேட்ட அந்த நாளைளைப் போன்ற நாள் அதற்கு முன்னும், அதற்குப் பின்னும் இருந்ததே இல்லை” என்று உரைத்துள்ளது.

82239 ஏன்? பாருங்கள், அவன் சத்துருவை எல்லா வழியிலும் விரட்டியடித்திருந்தான். பார்த்தீர்களா? அவர்களை அப்படியே, அவர்கள் எல்லா வழியிலும் எங்கும் விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். எனவே அவன் அவர்களைத் தேடி கண்டுபிடித்து கொல்ல வேண்டியதாயிருந்தது. அவ்வளவுதான் அதற்கான காரணமாயிருந்தது, ஏனென்றால் அது அவனுடைய கட்டளையாயிருந்தது. இரவு நேரம் வந்துவிட்டால், அப்பொழுது அவர்கள் அணியாக ஒன்று திரண்டு மீண்டும் எதிர்க்கும் ஒரு நேரம் வந்தால், அப்பொழுது அவன் அதிகமான மனிதர்களை இழந்து விடுவான் என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே அவன், “எனக்கு நேரம் தேவைப்படுகிறது. எனக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. ஆகையால் சூரியனே தரித்து நில்” என்றான். ஆமென். ஓ தேவன். தேவன் ஒரு மனிதனுடைய சொல்லைக் கேட்டு சூரியனை நிறுத்தினார். அவன் அவர்கள் ஒவ்வொருவரையும் மடங்கடித்து, அவர்களை வெளியே இழுத்து வரும் வரை, அது அதனுடைய அதே இடத்தில் இருபத்திநான்கு மணி நேரங்களாக தரித்திருந்தது. அவர்களால் முடியாமற்போயிற்று…அவர்கள் மீண்டும் ஓரணியாய் சேர அவன் அவர்களுக்கு ஒரு நேரத்தைக் கொடுக்கவில்லை. அவன் தொடர்ந்து யுத்தத்தில் முன்னேறிக்கொண்டேயிருந்தான். 240 ஆயினும் யோசுவா தன் ஜீவனை கீழே பூமியிலே கிடத்தியிருந்தான். 241 ஆனால் தானியேல் கண்ட இந்த மகத்தான பிரபுவாகிய கிறிஸ்து வந்தபோது… 242 இந்த எல்லா தொல்லைகளிலின் மத்தியிலும், இது போன்ற காரியங்களிலும், அந்த மகத்தான யுத்த வீரனான தானியேல், அந்த மகத்தான… நமக்கு நேரமிருக்குமானால், நாம் அவனைக் குறித்து குறிப்பிட்டுக் கூறலாம். அதே சமயத்தில் அவன் பூமியின் தூளில் கிடந்தான். அவரோ, “நீ உன்னுடைய சுதந்திர வீதத்திலே இளைப்பாறிக்கொண்டிருப்பாய். ஆனால் தானியேலே, நீ மறுபடியும் நிற்பாய்” என்று கூறினார். 243 இப்பொழுது, வாக்குத்தத்தமானது அவனுக்கும், இந்த எல்லா வீரர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. முடிவிலே ஒரு நேரமுண்டாகி, அந்த முக்கியமான நேரத்தில் அது நிறைவேற்றப்பட வேண்டியதாயிற்று. இயேசுவானவர் பூமிக்கு வந்தார். அவர் ஒவ்வொரு சுகவீனத்தையும் ஜெயங்கொண்டார். அவர் ஒவ்வொரு காரியத்தையும் ஜெயங்கொண்டார். இப்பொழுது அவர் கல்லறையை ஜெயங்கொள்ள வேண்டும். 244 அவர் மரணத்தை ஜெயங்கொண்டார். மரணத்தால் அவருடைய சமூகத்தில் நிற்க முடியாமற்போயிற்று. அவர் ஒரு சவ அடக்க ஆராதனையில் கூட பிரசங்கித்ததேயில்லை. இல்லை, ஐயா. நாயினூர் விதவை மரித்த தன்னுடைய மகனோடு இந்த விதமாக வந்தாள். அப்பொழுது அவர் பாடையை நிறுத்தி, அவனை உயிரோடு எழுப்பினார். ஓ, என்னே! ஆம், ஐயா. மரணத்தின் மேல் அவருக்கு வல்லமை இருந்தது என்பதை அவர் நிரூபித்தார்.

83245 இரண்டு சத்துருக்கள் இருந்தனர்; அது அப்பாலுள்ள கல்லறையும் நரகமுமாயிருந்தது; பாதாளம், கல்லறை. எனவே அந்த நாளில் சூரியன் பிரகாசியாதபடி, அவர் மரித்தார். பூமியானது—பூமியானது அதிரும்படியாக, மலையிலிருந்து கற்பாறைகள் பெயர்ந்து விழும்படியாக, அது போன்ற காரியங்கள் சம்பவிக்கும்படி அவர் மரித்தார். அவர் பாதாளத்திற்கு சென்றார். அவர் மரணத்தை ஜெயித்தார். அவர் பாதாளத்தை ஜெயித்தார். ஈஸ்டர் காலையிலே அவர் கல்லறையை ஜெயித்தார். ஆமென். 246 ஒரு முழுமையான வெற்றியின் நாளை குறித்து பேசுகிறோமா? ஒரு உண்மையான வெற்றியின் நாள்: அவர்களை வெளியே கொண்டு வந்தது. அது மாத்திரமல்ல, ஆனால் அவர் கல்லறையிலிருந்து வெளியே வந்தபோது, அவர் அங்கே சிறைப்பட்டிருந்தவர்களை வெளியே கொண்டு வந்தார். வேதம், “அவர் சிறைப்பட்டவர்களை சிறையாக்கினார்” என்று உரைத்துள்ளது. அப்பால் இருந்த அந்த வீரர்களை கல்லறையிலிருந்து அவரோடு மேலே கொண்டு வந்தார். அவர்கள்—அவர்கள் அந்த இராஜ்ஜியத்திற்குள் பிரவேசித்தபோது, அங்கே அந்த நாளிலே, அது ஒரு மகத்தான நேரமாயிருந்தது என்பதை நீங்கள் அறியவில்லையா. என்னே, தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிரவேசித்து, சிறைப்பட்டிருந்த பரிசுத்தவான்களை அங்கிருந்து வெளியே கொண்டு வந்தாரே! அவர் ஒரு பரிபூரண வெற்றியாய், ஒரு பரிபூரண வெற்றியாயிருந்தார். அவர் மரித்த எல்லா வீரர்களையும் வெளியே கொண்டு வந்தார். அவர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோபு, மற்றுமுள்ள அவர்கள் எல்லோரையும், அவரோடு கல்லறையிலிருந்து அவர்களையும் வெளியே கொண்டு வந்தார். 247 அவர் சிறைபிடித்தார். பாருங்கள், அவர் பூமிக்கு வந்து, அவர் மரணத்தை சிறைபிடித்தார். அவர் பாதாளத்தை சிறைபிடித்தார். அவர் கல்லறையை சிறைபிடித்தார். அவர் எல்லாவற்றையும் சிறை பிடித்தார். இப்பொழுது, அவர் தம்முடைய பரிசுத்தவான்களோடு உயிர்த்தெழுந்துள்ளார். ஆமென்.

84248 “இப்பொழுது, அவர் உன் னதத்துக்கு ஏறிச் சென்று, மனிதருக்கு திரும்பவும் வரங்களை அருளினார்.” அது என்னவாயிருந்து? பட்டயங்களை, அவர்களுடைய கரங்களில் ஜெயங் கொள்ளும்படியாக, பாருங்கள், வார்த்தையை, பட்டயங்களைக் கொடுத்தார். ஓ, என்னே! அவர் அவர்களுக்கு பட்டயங்களைக் கொடுக்கிறார், (என்னத்திற்காக?) வார்த்தையை, எதை ஜெயங்கொள்ளும்படிக்கு? சுகவீனத்தை, பாவத்தை, மூட நம்பிக்கைகளை, பொல்லாங்கை, “நான் பிழைக்கிறபடியினால், நீங்களும் பிழைப்பீர்கள்,” என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளும்படியான ஒவ்வொருவரையும் கொண்டு வரவும், ஜீவிக்க விரும்புகிற ஒவ்வொரு ஜீவனுள்ள சிருஷ்டியையும் கொண்டு வருவதற்காகவேயாகும். 249 நமக்கு விசுவாச போராட்டம் உண்டு. நாம் நல்ல… நம்முடைய வெற்றியை நிறைவாக்க போராடுவோமாக, ஏனென்றால் நம்முடைய முழுமையான வெற்றி நிச்சயமானதாயிருக்கிறது. அது நிச்சயமானதாயுள்ளது. அது அப்படித்தான் இருக்கவேண்டும். அதனுடைய முதற்பலன்களை நாம் பெற்றிருக்கிறோம். நாம் இப்பொழுது நம்முடைய இருதயத்திற்குள்ளே அதனுடைய அத்தாட்சியைப் பெற்றுள்ளோம், ஏனென்றால் நாம் நமக்கு பின்னே இருந்த முதல் யுத்தத்தை ஏற்கனவே வென்றுவிட்டோம். இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தினூடாக நாம் ஜெயங் கொள்ளக்கூடியவர்களாக இருந்து வருகிறோம். நாம் ஒரு வெற்றியின் நாளைப் பெற்றுவிட்டோம்.

85250 ஓர் இரவு அங்கே சுமார் பத்து மணியளவில், நான் அங்கிருந்த அந்த சிறிய பழைய கொட்டகையில், “தேவனே என்னை கொன்று போடும் அல்லது இரட்சியும்” என்று ஜெபித்துக்கொண்டிருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் சபைகளுக்கு சென்றேன். நான் பிரசிங்கியாரோடு கரங்களைக் குலுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். நானோ, “எனக்கு அதை பார்க்கிலும் மேலான ஏதோ ஒன்று வேண்டும்” என்று கூறினேன். புரிகிறதா? 251 அப்பொழுது அந்த இரவு அந்த கொட்டகையில், நான், “தேவனே, என்னால் இதற்கு மேல் செல்ல முடியாது. நான்—நான் மரித்துப் போவேன்” என்று கூறினேன். நான் அங்கே அந்த பழைய ஈரமான கட்டிடத்தில் என்னுடைய முழங்காலில் இருந்தபோது… நான் புற்கள் வைக்கும் ஒரு பழைய கோணியின் மேல் முழங்காற்படியிட்டிக்கொண்டு, என்னுடைய கரங்களை உயர்த்தியிருப்பதோடு, “தேவனே, திருவாளரே, எனக்கு எப்படி பேசவேண்டும் என்று தெரியவில்லை” என்று கூறி, என்னை மன்னிக்கும்படி அவரிடம் வேண்டிக்கொள்ள, நான் அவருக்கு ஒரு கடிதம் எழுத விரும்பினேன். எப்படி ஜெபிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. “நான் மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.”

86252 நான் படுக்கையின் மேல் மரித்துக்கொண்டிருந்தபோது, நான் வாக்களித்தேன். அவர் என்னை…மருத்துவர் என்னை கைவிட்டுவிட்டபோது, இருதயத் துடிப்பானது ஒரு நிமிடத்திற்கு பதினேழு முறை மாத்திரமே அடித்துக்கொண்டிருந்தது. அது எவ்வளவு மெதுவாக இருந்திருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரோ, “அவன் மரித்துக்கொண்டிருக்கிறான்” என்று கூறினார். நான் அதைக் கேட்டேன். என் தந்தையிடம் அதைச் சொல்லி, என்னை சுற்றிலும் இருந்த திரைகளை இழுத்துவிட்டார். அங்கிருந்த அந்த அறையில், அந்த வேலையில், நான் அந்த திரைகளில் ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் ‘ஜெ’ என்ற எழுத்துக்களைக் கண்டேன். அந்த திரையானது அந்தவிதமாக என்னை சுற்றியிருந்தது. அப்பொழுது அந்த மருத்துவச்சியோ அழுதுகொண்டே, “அவன் ஒரு சிறு பிள்ளையாயிருக்கிறான்,” பாருங்கள், “இங்கே அவன் மரித்துக்கொண்டிருக்கிறான்” என்று கூறுவதை நான் கேட்டேன். முதுகுத்தண்டில் செலுத்தப்பட்ட மயக்க மருந்து கசிந்து வந்து என் இதயத்திற்குள்ளாகச் சென்றுவிட்டது. பார்த்தீர்களா? இருதயத் துடிப்பானது ஒரு நிமிடத்திற்கு பதினேழு முறை மாத்திரமே அடித்துக்கொண்டிருந்தது. 253 நான் வீட்டுக்கு சென்றபோது, நான்—நான் தேவனை நேசித்தேன் என்பதை நான் நிரூபிக்க வேண்டியதாயிருந்தது. பிறகு நான்—நான் அங்கே தரையிலே அமர்ந்தேன். அப்பொழுது நான், “எப்படி ஜெபம் செய்ய வேண்டும் என்று எனக்குத்—எனக்குத் தெரியவில்லை” என்று கூறினேன். நான்—நான் என்னுடைய கட்டை விரலைக் கடித்தும் பார்த்தேன். எனவே நான், “ஒருகால்…நான் புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன். எனவே நான் இந்தவிதமாக என் கைகளை மடக்கி என் விரல்களை ஒன்று சேர்த்து வைக்கலாம்” என்று எண்ணினேன். அப்பொழுது நான், “அன்புள்ள ஐயா, நான் உம்மோடு பேச விரும்புகிறேன்” என்றேன். நான் காத்திருந்து பார்த்தேன். நான், “நீர் பேசுவதை நான் கேட்கவில்லை” என்றேன். எனவே நான், “என்னுடைய கரங்களை நான் தவறாக மடக்கிவிட்டேன். ஒருவேளை நான் அதை இந்தவிதமாகச் செய்ய வேண்டும்” என்று கூறிக்கொண்டேன். எனவே நான் என்னுடைய… அப்பொழுது நான், “அன்புள்ள ஐயா, நான்…இயேசு கிறிஸ்துவே, நான் உம்மிடத்தில் பேச விரும்புகிறேன்” என்று கூறினேன். மேலும் நான், “ஐயா, நீர் பேசுவதை நான் கேட்கவில்லை. எனக்கு பதில் அளியும். ‘தேவன் என்னிடத்தில் பேசினார்’ என்று மற்ற ஜனங்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். இப்பொழுது நான் உம்மோடு பேசி முடிக்க விரும்புகிறேன். நான் இதை செய்வேன் என்று நான் உமக்கு வாக்களித்தேன். நான் இதை பேசி முடிக்க விரும்புகிறேன். எனவே ஐயா, தயவுகூர்ந்து நீர் வந்து என்னிடத்தில் பேசுவீரா?” என்று கேட்டேன். அப்பொழுதும், “இல்லையே, நான் என்னுடைய கைகளை சரியாக மடக்கி வைக்கவில்லை, இல்லையென்றால் அவர் ஏதாவது காரியத்தை கூறியிருப்பார்” என்று எண்ணினேன். அதை எப்படி செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய ஜீவியத்தில் நான் ஜெபித்ததேயில்லை. இந்த சிறிய பழைய கொட்டகையில் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை.

87254 அப்பொழுது ஒருநாள் நான் இதை நினைத்தேன். மேலும் நான், “வேத வாக்கியங்களின்படி, அவர் ஒரு மனிதனாக இருந்தார் என்று நான் படித்தும், கேட்டும் இருக்கிறேனே. அவர் ஒரு மனிதனாக இருந்தால், அவர் ஒரு மனிதனைப் போல அவர் புரிந்துகொள்வாரே” என்று எண்ணினேன். அது உண்மையே. “இப்பொழுது, நான் பேசுவதை நீர் கேட்கிறீரா என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறினேன். 255 பிசாசு, “ஏன்? நீ உன்னுடைய கிருபையின் நாளில் பாவம் செய்து, தூரமாய் சென்றுவிட்டாய். இனி அதற்கு இடமேயில்லை. பார், அவர் உன்னை மன்னிக்க முடியாதபடி நீ அவ்வளவு நீசத்தனமாக இருந்து வந்திருக்கிறாய்” என்று கூறினான். 256 அப்பொழுது நான், “நான் அதை நம்பவில்லை. என்னால் அதை விசுவாசிக்கவும் முடியவில்லை. அவர் என்னிடத்தில் பேசுவார் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றேன். 257 மேலும் நான், “ஐயா, நான் ஒரு தவறு செய்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. நான் என்னுடைய கரங்களை சரியாக மடக்கியிராவிட்டால், அல்லது அது என்னவாயிருந்தாலும் நீர்—நீர் அதற்காக என்னை மன்னியும். ஆனால் நான் உம்மிடத்தில் பேச விரும்புகிறேன்” என்று கூறினேன். நான் தொடர்ந்து, “உலகத்திலேயே நான் இழிவான கயவன்” என்றும் கூறினேன். மேலும் நான், “நான்—நான் இந்த எல்லா காரியங்களையும் செய்திருக்கிறேன், மற்றும் நான் உம்மை விட்டு ஓடி எல்லாவற்றையும் செய்துள்ளேன்” என்று கூறி, அந்தவிதமாக தொடர்ந்து பேசினேன். 258 அப்பொழுது முதலாவது நடந்தது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, நான் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சிறு ஒளி அறையின் குறுக்கே உள்ளே வந்து, சுவர் பக்கமாக சென்று, ஒரு சிலுவைப் போன்ற ஒளியை உருவாக்கியது, அந்த ஒளி ஒரு மொழியோடு பேசத் துவங்கினது. நான் அந்நிய பாஷைகளில் பேசுகின்ற அப்படிப்பட்ட ஒரு காரியத்தை ஒருபோதும், ஒருபோதும் கேட்டதே கிடையாது; அதை வேதத்திலும் கூட ஒருபோதும் வாசித்ததே கிடையாது; நான் யாக்கோபு 5:14-ஐ ஆதியாகமத்தில் தேடிக்கொண்டிருந்தேன். நான் அங்கே மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நான் அந்த ஒளியைக் கண்டேன், அது ஒருவிதமான பாஷையில் பேசிக்கொண்டிருந்தது. அதன் பின்னர் அது போய்விட்டது. 259 நான், “ஐயா,” என்று கூறினேன். நான், “இந்த கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்து எனக்கு—எனக்கு—எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று கூறினேன். நான் தொடர்ந்து, “அது நீர் என்னிடத்தில் பேசிக்கொண்டிருப்பதாயிருந்தால், ஐயா, என்னால் உம்முடைய மொழியை புரிந்துகொள்ள முடியவில்லையே. ஆனால் நீர் பேசினால்…நீர் என்னுடைய மொழியில் பேசாவிட்டால், பாரும், என்னால்—என்னால் நீர் பேசுவதை புரிந்துகொள்ள முடியாது, ஆனால் நாம் இந்தவிதமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாமே: நீர் மீண்டும் அங்கே திரும்பி வருவீரானால், அப்பொழுது நீர் என்னை மன்னித்துவிட்டீர் என்பதற்கு அது உமக்கும் எனக்கும் உள்ள ஒரு அடையாளமாக இருக்குமே” என்று கூறினேன். 260 அது அங்கே மீண்டும் வந்தது. ஓ, ஒரு வெற்றியின் நாளைக் குறித்து பேசுகிறோமா? எனக்கு ஒரு, ஆம், ஒரு உண்மையான வெற்றியின் நாள் உண்டாயிருந்தது. அது மீண்டும் அதேவிதமாக பேசிக்கொண்டிருந்ததாக இருந்தது. எனக்கு ஒரு வெற்றியின் நாள் உண்டாயிருந்தது. ஓ, என்னே! 261 அப்பொழுதிலிருந்து, அவர் அந்த வார்த்தையை என்னுடைய கரத்தில் வைத்தது முதற்கொண்டு, நான் இரத்த சமுத்திரங்களினூடாக பயணித்து பரிசை வெல்ல போராடியிருக்கிறேன்.

88262 நாம் யாவரும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளோம். நாம் அனேக வெற்றிகளினூடாக போராடியிருக்கிறோம். ஒரு மகத்தான வெற்றி சரியாக சீக்கிரத்தில் வந்து கொண்டிருக்கிறது. தேவ குமாரன் ஆகாயத்தினூடாக வரும்போது, பிரதான தூதனுடைய சத்தத்தோடும் முழங்கி, அவர் மீண்டும் வரும்போது, சீக்கிரத்தில் அதுவே நம்முடைய முழுமையான வெற்றியின் நாளாயிருக்கும். கல்லறைகள் திறக்கப்பட்டு மரித்தோர் வெளியே நடந்து வருவார்கள். 263 எனக்கு உண்டாயிருந்த தரிசனத்தை அல்லது மறுரூபமாகுதலை, ஒரு அறையில் நடந்த அது என்னவாயிருந்தாலும், அதைக் குறித்த என்னுடைய ஒலி நாடாவை நீங்கள் போட்டுக் கேட்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் அங்கு சென்று, அந்த ஜனங்களை நான் உங்களை காண்கிறவிதமாகவே அங்கு கண்டேன். இந்த வேதாகமம் எனக்கு முன்பாக இங்கே திறந்திருக்கிறது. அது சத்தியமாய் இருக்கிறது என்பதை தேவன் அறிந்திருக்கிறார். புரிகிறதா? அங்கே அவர்கள் வாலிபமாக இருந்தனர், அதேவிதமாக, அதே விதமாகவே…

89264 கூட்டங்களிலிருந்து வந்துள்ள நீங்கள் யாவரும் அந்த தரிசனங்களைக் குறித்து தெளிவாக புரிந்துகொள்ளகிறீர்கள். அவைகளில் ஒன்று எப்போதாவது நிறைவேறாமற்போயிருக்கிறதை நீங்கள் பார்த்துள்ளீர்களா? இல்லை, ஐயா. அண்மையில் என்ன சம்பவிக்கும் என்று என்னிடத்தில் கூறி, அவர் என்னை இங்கே அனுப்பினார். நீங்கள் யாவரும், நீங்கள் எல்லோருமே அதை குறித்து அறிவீர்கள். அதேவிதமாக சரியாக சென்றது, அது சரியாக இருந்தது, அது முற்றிலும் சரியே. அது ஒருபோதும் தவறுகிறதில்லை. 265 தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று இந்த காலையில் இங்கே ஒரு சிறு கிறிஸ்தவ குழுவாக உட்கார்ந்துகொண்டிருக்கிற உங்களுக்கு நான் கூறிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒரு தற்காலிக வெற்றியையே பெற்று வந்துள்ளீர்கள். ஆனால் இயேசுவானவர் வரும்போது, ஒரு உண்மையான, முழுமையான வெற்றியின் நாள் வரப்போகிறது. 266 “எக்காளம் முழங்கும்; கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழும்புவார்கள்.” நீங்கள் அந்த நம்பிக்கையை உங்களுக்குள் பெற்றிருக்கவில்லையென்றால், அதைப் பெற்றுக்கொள்ளாமல் இந்த நாளைக் கடந்து போகவிடாதீர்கள்.

90267 கொஞ்சம் காலத்துக்கு முன்னர் நான் ஒரு சிறு காரியத்தைக் குறித்துக் கேள்விப்பட்டேன். நான் அதை திருப்பிக் கூற விரும்புகிறேன். அதை எங்கிருந்து கேட்டேனென்றால், அதை எடுத்துரைத்தது பில்லி சண்டே என்று நான் நினைக்கிறேன். ஒரு குற்றம் புரிந்திருந்த ஒரு பையன் இருந்தான். நீங்கள் இதைக் குறித்து எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. அவன் ஒரு குற்றத்தை புரிந்துவிட்டிருந்தான். அவர்கள் அவனை சிறைச்சாலையில் போட்டிருந்தனர், அங்கிருந்து போடப் போவதாக…அவன் அதற்குள் இருந்தான். எனவே அவனுக்கு ஒரு வழக்கு விசாரணை உண்டாயிருந்தது. அப்போது நீதிபதி கூறினார்… 268 நீதிமன்றக் குழுவினர் வெளியே வந்து, “இந்தப் பையன் இந்த குற்றத்துக்கான குற்றவாளி என்பதை நாங்கள், நாங்களே கண்டறிகிறோம்” என்று கூறிவிட்டு, அந்த நீதிமன்றக் குழுவினர், “நாங்கள் அதற்காக அவனுடைய ஜீவனையே கேட்கிறோம்” என்றனர். 269 அப்போது நீதிபதியோ, “உன்னுடைய மானிட ஜீவன் பிரியும் வரை உன்னை ஒரு கையிற்றிலே தூக்கிலிட்டு மரிக்கச் செய்யும்படி நான்—நான் உனக்குத் தீர்ப்பளிக்கிறேன். தேவன் உன்னுடைய ஆத்துமாவின் மீது இரக்கமாயிருப்பாராக” என்று கூறினார். 270 அந்தப் பையன் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உட்காவலில் வைக்கப்பட்டான். அவன் மரிக்க வேண்டியிருந்த நேரம் வரை, அவன் அங்கு தரித்திருக்க வேண்டியதாயிருந்தது. 271 நண்பர்கள் நீதிபதியினிடத்திற்கு வந்து, “நீதிபதியே, இந்தப் பட்டணத்தில் நாங்கள் உம்மை தேர்ந்தெடுக்க உதவி செய்தோம். தயவு கூர்ந்து, தயவு செய்து, அந்த வாலிபனை அந்தவிதமாக மரிக்க விடாதேயும்” என்று கூறினர். 272 அது போன்ற மற்றொரு காரியத்திற்காகவே நான் டெக்ஸாஸிலிருந்து இப்போதுதான் வந்தேன். ஒரு வாலிப மனிதனையும், ஒரு வாலிப ஸ்திரீயையும், தேவன் அவர்களுடைய ஜீவன்களைக் காப்பாற்றினார். அவர்கள் கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு மரிக்க வேண்டியவர்களாயிருந்தனர். நீங்கள் யாவரும், என்னோடு அங்கிருந்த நீங்கள், அவர்கள் இவர்களுடைய ஜீவன்களை காப்பாற்றினர் என்பதை செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

91273 எனவே அவர்கள் கெஞ்சினர், கெஞ்சினார், அவர் அதை செய்யக்கூடாது என்று ஜனங்கள் கெஞ்சினர். கொஞ்ச காலம் கழித்து, அந்த மாநிலத்தின் ஆளுநரிடத்திலே… 274 வாசலுக்கு வெளியில் இருந்த தாயார் ஒரு நாள் இந்தவிதமாக வாசலில் விழுந்து உள்ளே வர கதறினாள். 275 முடிவிலே ஒரு மனிதன் உள்ளே வந்து, “ஆளுநர் அவர்களே, அந்தப் பையனின் தாயார் அங்கே வெளியிலிருக்கிறார். அவள் உம்மைக் காண விரும்புகிறாள்” என்று கூறினான். அதற்கு ஆளுநரோ, “அவளை உள்ளே அழைத்து வாருங்கள்” என்றார். 276 அந்த ஸ்திரீ தாழ்மையோடு தன்னுடைய கைகளாலும் கால்களாலும் தவழ்ந்து வந்து, அந்த ஆளுநரின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, “ஐயா, அது என்னுடைய பிள்ளை. அவனைக் கொன்றுவிடாதீர்கள். அவனைக் கொன்றுவிடாதீர்கள். எனக்கிருக்கும் ஒரே ஒருவன் அவன் மாத்திரமே. எனவே அவனைக் கொன்றுவிடாதீர்கள்” என்று கூறி, “அவன் அதை செய்ய வேண்டுமென்று கருதி செய்யவில்லை. எனவே அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுங்கள். ஆனால், ஆளுநரே, அவனுடைய ஜீவனை எடுத்துவிடாதீர்கள்” என்று கூறினாள். அப்பொழுது ஆளுநரோ, “சரி, நான் போய் அவனைப் பார்க்கிறேன்” என்று கூறினார். அதற்கு அவள், “சரி” என்றாள். 277 எனவே ஆளுநர் அவன் இருந்த அந்த சிறைச்சாலைப் பகுதிக்குச் சென்றார், அவர்கள் உள்ளே சென்றனர். அந்தப் பையன் அகங்காரமுள்ளவனாக இருக்க விரும்பினான். அப்பொழுது, “யாரோ ஒருவர் உன்னைக் காண வந்திருக்கிறார்” என்று கூறப்பட்டது. 278 அப்பொழுது ஆளுநர் உள்ளே சென்று, “வாலிபனே, நான் உன்னிடம் பேச விரும்புகிறேன்” என்று கூறினார். அவனோ உண்மையாகவே அகங்காரங்கொண்டு, அப்படியே அமர்ந்து, வாயை மூடிக்கொண்டு, ஒன்றையுமே கூறாதிருந்தான். அவரோ, “வாலிபனே, நீ என்னிடத்தில் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உன்னிடத்தில் பேச விரும்புகிறேன்” என்று கூறினார். அந்தப் பையனோ அவர் கூறுவதைக் கூட கேட்காதவன் போல நடந்துகொண்டான். அப்பொழுது அவரோ, “வாலிபனே, நீ எனக்கு செவிகொடுப்பாயானால், என்னால் உனக்கு உதவி செய்ய முடியும்” என்று கூறினார். 279 அதற்கு அவனோ, “இங்கிருந்து வெளியே போ. நீ கூறுகிற எதையும் நான் கேட்க விரும்பவில்லை” என்று கூறிவிட்டான். அப்பொழுது அவரோ, “அதாவது மகனே…” என்று கூறப் பார்த்தார். 280 அதற்கு அவன், “வாயை மூடு. நான் நடுக்கத்தோடு இருப்பதை நீ காணவில்லையா? நீர் கூறப்போகிற ஒரு வார்த்தையையும் நான் கேட்க விரும்பவில்லை” என்று கூறிவிட்டான். அப்பொழுது அவரோ, “சரி, நான் வந்துள்ளதோ…” அவன் உடனே, “இந்த உட்காவல் அறையை விட்டு வெளியே போ” என்றான். எனவே அவர் வெளியே நடந்து வந்துவிட்டார். அவர்களோ கதவுகளையும் மூடிவிட்டனர். 281 எனவே அவர் திரும்பி நடந்து சென்றுவிட்டபோது, அந்த சிறை பகுதியிலிருந்த காவலன்—வாசலில் இருந்த அந்த நபர், “நீ மிக முட்டாள்தனமான நபராய் இருக்கிறாய்” என்று கூறினான். அப்பொழுது அவன், “எப்படியிருந்தாலும் சரி, அந்த பைத்தியக்காரன் யார்?” என்று கேட்டான். அதற்கு காவற்காரனோ, “அவர் இந்த மாநிலத்தின் ஆளுநர்” என்று கூறினான். 282 அப்பொழுது அவனோ, “அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆளுநரை அவ்வாறு செய்திருக்கக்கூடாது. அவர் மாத்திரமே என்னை மன்னிக்க கூடிய ஒரு மனிதனாயிருக்கிறார். நான் அவரையே என்னுடைய உட்காவலறையைவிட்டுத் துரத்திவிட்டேனே. அந்த மனிதன் மாத்திரமே என்னுடைய மன்னிப்பிற்கு கையெழுத்திட முடியும். நான் அவரையே உட்காவலறையைவிட்டுத் துரத்திவிட்டேனே” என்று கூறினான். ஆளுநர் புறப்பட்டுச் சென்றபோது, “அவன் தன்னுடைய தெரிந்துகொள்ளுதலைத் தெரிந்து கொண்டான்” என்று கூறினார்.

92283 எனவே அவர்கள் அவனைத் தூக்கிலிட, அவனுடைய முகத்தின் மீது கருப்பு முகமூடியைப் போட்டபோது, அவன் மீது முகமூடியைப் போட்டு, அந்தத் தூக்குக் கயிற்றை இறுக்கமாக அவர்கள் இழுத்தபோது, அந்த பையன் கூறின கடைசிக் காரியம், “அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். ஆளுநர் என்னுடைய உட் காவலறையில் நின்றபோது, நான் அவரை புறக்கணித்துவிடாமலிருந்திருந்தால் அவர் என்னை மன்னித்துவிட்டிருப்பாரே” என்று கூறினான். 284 இந்த காலையில் நம்முடைய உட்காவலறையின் பக்கத்தில் ஆளுநர் இந்தக் காலை நின்றுகொண்டிருக்கவில்லை என்பதை இந்த காலை நாம் எப்படி அறிவோம்? நீங்கள் அவரிடத்திலிருந்து இதுவரை ஒருபோதும் மன்னிப்பைப் பெற்றிருக்கவில்லையென்றால், அவரை புறக்கணித்துவிடாதீர்கள். அவர் ஆளுநராக மாத்திரமல்ல, இராஜாவாய், உங்களை மன்னிக்கக் கூடிய ஒரே ஒருவராக இருக்கிறார். நீண்ட காலமாக நீ வசித்துக் கொண்டிருக்கிற அந்த உட்காவலறையின் பக்கத்தில் அவர் நின்றுகொண்டிருக்கலாம். நீ அவரண்டை ஒரு முழுமையான ஒப்புவித்தலை செய்திருக்கவில்லையென்றால், நீ அதை செய்திருக்கவில்லையென்றால், நீ ஏன் அவரை உள்ளே வரும்படி அனுமதிக்கக்கூடாது? 285 என்றோ ஒருநாள் நீ இந்த எளிமையான தாழ்மையான வழியைக் கண்டறிவாய். இது ஒரு கூட்ட மடமைத்தனமான ஜனங்கள் என்று நீ கருதலாம். தாங்கள் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதையே ஒரு கூட்ட ஜனங்கள் அறியாதிருக்கிறார்கள். ஆனால் இந்த காலையில் இங்கே ஆளுநர் இருந்தார் என்பதையும் நீ கண்டறிவாய். உங்களுக்கு தேவையிருந்தால், நீங்கள் சுகவீனம் என்னும் ஒரு சிறு உட்காவலறையில் இருப்பீர்களானால், ஆளுநர் இங்கே இருக்கிறார். உலகத்தின் ஆளுநர், அவர் நீதியுள்ளவர், அவர் உங்களை வெளியே கொண்டு வருவார். அவர் வந்துவிட்டார். அவர் உங்களுடைய மன்னிப்பிற்கு கையொப்பமிட்டுவிட்டார். அதை இந்த காலையில் உங்களிடத்தில் அவர் கொடுக்க விரும்புகிறார். அதைப் புறக்கணித்துவிடாதீர்கள். நாம் நம்முடைய தலைகளை ஒரு நிமிடம் தாழ்த்துவோமாக.

93286 உங்களுடைய தலைகள் தாழ்த்தப்பட்டிருப்பதோடு, உங்களுக்கு இப்பொழுது ஒரு உண்மையான வெற்றி வேண்டுமென்றால், நீங்கள் ஏன் சரணடைந்துவிட்டு, மாநிலத்தின் ஆளுநரை உள்ளே வர விட்டு, இந்த காலை ஆளுநர் உங்களுடைய மன்னிப்பிற்கு கையொப்பமிட அனுமதிக்கக் கூடாது? அவர் உங்களை வெளியே கொண்டு செல்ல; பாவத்திலிருந்து உங்களை வெளியே கொண்டு செல்ல, அவிசுவாசத்திலிருந்து உங்களை வெளியே கொண்டு செல்ல, சுகவீனத்திலிருந்து உங்களை வெளியே கொண்டுசெல்ல, நீங்கள் விரும்புகிற எதிலிருந்தும் என்றென்றுமாய் வெளியே கொண்டுசெல்ல ஆயத்தமாயிருக்கிறார். நாங்கள் ஜெபிக்கையில், நீங்கள் அதைச் செய்யுங்கள். இப்போது நீங்கள் உங்களுடைய சொந்த வழியில் ஜெபியுங்கள். நீங்கள் அவரிடத்தில் பேசுங்கள். புரிகிறதா? 287 அந்த சிறைக் காவலன் ஆளுநரிடத்தில் பேசியிருக்க முடியும். அது எந்த நன்மையும் செய்திருக்காது. புரிகிறதா? அந்தப் பையன் ஆளுநரிடம் பேச வேண்டியதாயிருந்தது. புரிகிறதா? 288 நீங்கள் ஆளுநரிடம் பேசவேண்டும். நீங்கள் சுகவீனமாக இருந்தால், அவரிடத்தில் பேசுங்கள். நீங்கள் பாவம் செய்திருந்தால், தவறு செய்திருந்தால், அவரிடம் பேசுங்கள். அவர் உங்களுக்கான மன்னிப்பை உடையவராயிருக்கிறார்.

94289 பரலோகப் பிதாவே, நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். கர்த்தாவே, நான் உமக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன். எப்போதுமே என்னுடைய பாவக் கடனை நான் செலுத்த கூடிய வழியேக் கிடையாது. ஒருநாள் நான் ஒரு உட்காவலறையில் இருந்தேன், ஏனென்றால் நான் அந்த உட்காவலறையிலேயே பிறந்தேன். சுதந்திரமானது என்ன—என்ன பொருட்படுத்தினது என்பதை நான் அறிந்துகொண்டேன். அதற்கான கிரையமோ மிகப் பெரியதாயிருந்தது, என்னால் அதை செலுத்த முடியவில்லை. ஆனால் நீர் என்னுடைய உட்காவலறைக்கு வருகை புரிந்த அந்த நாளுக்காகவும், அவர் ஒருவரே மன்னிக்கக்கூடியவராக இருந்தார் என்பதை நான் அடையாளங் கண்டுகொண்டதற்காகவும், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்த ஒரே வழியில் மாத்திரமே நான் என்றென்றுமாய் விடுதலையடைந்து, வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும். நீர் எனக்காக கையொப்பமிட்டிருந்த அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதே ஒரு முழுமையான வெற்றியாயிருந்நது. இன்றைக்கு நான் விடுதலையாயிருக்கிறேன். 290 கர்த்தாவே, நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். நான் சிறைச்சாலை சிறைச்சாலையாக விஜயம் செய்து, விவாக பிரச்சினையோடு உள்ளவர்களிடத்திலும், சுகவீனமாய், காய்ச்சலடைந்து, சுகவீனமாய் சிறைச்சாலையில் உள்ளவர்களிடத்திலும், பாவமுள்ளவர்களாய் சிறைச்சாலையில் உள்ளவர்களிடத்திலும், நிலை குலைவுகளோடும், சந்தேகத்தோடும் சிறைச்சாலையில் உள்ளவர்களிடத்திலும், நான் உட்காவலறை, உட்காவலறையாய் சென்று அவர்களிடத்தில், உங்கள் ஒவ்வொருவரையும் மன்னித்து, ஒவ்வொருவரையும் வெளியே கொண்டுசெல்ல ஆளுநர் வந்து கொண்டிருக்கிறார் என்று கூறிக்கொண்டிருக்கிறேன்.

95291 பிதாவே, இன்றைக்கு இங்குள்ள ஜனங்களின் இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர். இது ஒரு வெற்றியின் நாளாய், ஒரு முழுமையான வெற்றியின் நாளாயிருப்பதாக. கர்த்தாவே, ஒவ்வொருவரும் அந்த வெற்றியை பெற்றுக்கொள்ளும் நாளாய் இது இருப்பதாக. கர்த்தாவே, இதை அருளும். 292 இன்றைக்கு இந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு சுகவீனமான நபரும் சுகமாக்கப்படுவார்களாக. 293 பற்றியெரிகிற விசுவாசத்தினூடாக தேவனுடைய சத்தம் பேசும் ஒரு நேரமாய் இந்த வனாந்திரத்தின் பின்பாகம் இருப்பதாக. ஓ, தேவனே, அங்கே பற்றியெரிகிற அந்த சிறு அக்கினியின் விசுவாசத்தினூடாக, எரிந்துகொண்டிருக்கிற அந்த சிறிய நம்பிக்கையினூடாக, இந்தக் காலையில் ஒவ்வொரு சிறைவாசியிடமும் தேவனுடைய சுத்தமானது பேசி, “நான் உங்களை இன்றைக்கு விடுவிக்க வந்திருக்கிறேன்” என்று கூறுவதாக. ஒரு பையனோ அல்லது பெண்ணோ, புருஷனோ அல்லது ஸ்திரீயோ இங்கே உம்மை அவர்களுடைய இரட்சகராக அறிந்திருக்கவில்லையென்றால், அந்த சிறிய சத்தம், அந்த சிறு விசுவாசத்திடம் பேசி, ஒரு சத்தம் இப்பொழுது பேசி, “ஆம், தேவன் இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் இருக்கிறார் என்று அவர்கள் கூறுகிற ஒவ்வொரு காரியமுமாய் அவர் இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுவார்களாக. கர்த்தாவே, இப்பொழுது அந்த சிறு விசுவாசம் அவர்களை விடுவிப்பதாக. கர்த்தாவே, இதை அருளும். 294 அவர்களை ஆசீர்வதியும். கர்த்தாவே, இங்குள்ள சகோதரன் ஐசக்சனை ஆசீர்வதியும். நாங்கள் அந்த வாலிபனையும், அவனுடைய மனைவியையும், அவனுடைய சிறு பிள்ளைகளையும் நேசிக்கிறோம். ஓ, தேவனே, இந்த சிறிய சபையை ஆசீர்வதியும். நாங்கள் அவர்களுக்காக மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறோம். அவர்களுக்கு தங்க ஒரு இடம் கிடைத்திருப்பதற்காகவும், இங்கு ஒரு இடம் இருப்பதையும் காண நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கர்த்தாவே, நீர் அவர்களுக்கு மிகவும் நல்லவராகவே இருக்கிறீர். நாங்கள் உமக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவர்கள் தேவனுடைய பிரசன்னத்தில் எப்போதும் தாழ்மையாயும், எளிமையாயும் தரித்திருப்பார்களாக.

96295 எங்களுடைய வாசலில் உள்ள இந்த அந்நியரை ஆசீர்வதியும். கர்த்தாவே, இந்த வருகையாளரை ஆசீர்வதியும். நீர் அவர்களோடு இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். தேவன் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் “ஆமென்” என்று அவர்கள் கூற முடிந்த இந்த முழுமையான வெற்றியை அவர்கள் ஒருபோதும் பெற்றிருக்கவில்லையென்றால், கர்த்தாவே, இந்த காலையில் அவர்கள் உமக்குள்ளாக பெற்றிருக்கிற அவர்களுடைய விசுவாசமானது, ஒவ்வொரு வார்த்தைக்கும் “ஆமென்” என்பதோடு வலியுறுத்திக் கூறுவதாக. கர்த்தாவே, இதை அருளும். 296 எங்களை ஒன்றுசேர்த்து ஆசீர்வதியும். வியாதியஸ்தரையும், பாதிக்கப்பட்டவர்களையும் விடுவியும். உமக்கே மகிமை எடுத்துக்கொள்ளும். 297 அன்புள்ள தேவனே, இதற்கு பிறகு நாங்கள் இப்பொழுது அலைக்கழிக்கப்படாமல், எங்கள் மீது வருகிற இந்த சோதனைகளும் மற்ற காரியங்களும் தேவன் எங்களை நேசிக்கிற காரணத்தினால் மாத்திரமே கொண்டுவரப்படுகின்றன என்பதை நினைவில் கொள்வோமாக. அவர் எங்களில் நம்பிக்கை வைத்துள்ளபடியால், அவர் அதை எங்களுக்குத் தருகிறார். நாங்கள்…அவருக்கான விசுவாசமும், அன்பும் எங்களிடத்தில் உண்டு என்றும், எங்களால் அதை ஜெயங்கொள்ள முடியும் என்றும் அவர் நம்புகிறார். அவர் அதைப் பார்த்துக்கொள்வார். நாங்கள் அதைக் குறித்து அலைக்கழிக்கப்படாமலும், குழப்பமடையாமலும் இருப்போமாக. நாங்கள் அப்படியே அங்கே நடந்துசென்று, வார்த்தையை உரைத்து, முன்நோக்கி நடந்து செல்வோமாக. அப்பொழுது சமுத்திரங்கள் திறக்கும். வெற்றியின் நாள் உண்டாகும். கர்த்தாவே, இதை அருளும். எங்களுடைய காலத்தின் மகத்தான வெற்றியின் நாட்களில் ஒன்றாய் இது இருப்பதாக. நாங்கள் மீண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒன்றுசேர்ந்து சந்திக்கும் வரை, எங்களை ஆசீர்வதியும். ஆமென்.

97298 நான் செல்வதற்கு முன்பு இதைக் கூற வேண்டும் என்று விரும்புகிறேன். நான் டூசானை சென்றடைவதற்கு இப்பொழுது ஒன்றரை மணி நேரம் தேவைப்படும். அது மிக மெதுவாக காரோட்டிச் செல்வதற்கேயாகும். ஆனால் நான் இதைக் கூற விரும்புகிறேன், அதாவது நீங்கள் பெற்றுள்ள இந்த—இந்த விசுவாசத்தை உணர்ந்ததைக் குறித்து நான் இங்கிருந்து உண்மையாகவே மகிழ்ந்தேன். அதிலிருந்து ஒருபோதும் விலகிச் சென்றுவிடாதீர்கள். அந்த சிறிய அக்னித் தொடர்ந்து எரிந்துகொண்டே, எரிந்துகொண்டேயிருக்கட்டும். தேவன் அந்த சிறு அக்கினிகளில் பேசுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 299 சகோதரன் ஐசக்சன் அவர்களே, உம்மால் இங்கு வர முடிந்தற்கும், இந்த குழுவை ஒன்றுசேர்த்து வைத்திருந்ததற்கும், நான் எவ்வளவு நன்றியுள்ளவனாயிருக்கிறேன் என்பதை என்னால்—என்னால் எப்படி வெளிப்படுத்திக் கூற வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. என் சகோதரனே அதைத் தொடர்ந்து செய்ய, தேவன் உமக்கு எப்போதும் பெலனைத் தருவாராக. இதைக் கேட்க வருகிற ஜனங்களாகிய உங்களுக்கு, தேவன் உங்களை காத்துக்கொள்ளும்படியாக எப்போதும் பெலனை, தெய்வீக பெலனை அருள்வாராக. இப்பொழுது… 300 சகோதரன் ஐசக்சன் செய்கிற விதமாக இன்னும் சில நிமிடங்களில், நீங்கள் முறையாக அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் ஆராதனையை அவரிடம் ஒப்படைக்கிறேன். 301 இங்குள்ள உங்களில் எவரேனும், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி,” என்ற பட்டப் பெயர்களில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்திற்கு பதிலாக, “இயேசு கிறிஸ்துவின்” நாமத்தில் கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்து படித்தறிந்திருந்தால், எங்களுடைய எளிமையான போதகர் ஞானஸ்நானம் கொடுக்கும்படி, அதை சந்தோஷமாக செய்யும்படி, இங்கே ஆயத்தமாயிருக்கிறார். உங்களுடைய இருதயத்தில் ஏதேனும் தொல்லைகளிருந்து, அவர் உங்களோடு ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதை செய்ய அவர் இங்கே இருக்கிறார். நான்…அவரையே சந்தித்து, அவரோடு அமர்ந்து, அந்தக் காரியங்களை சரிசெய்து கொள்ளுங்கள், எனக்கு அவரைத் தெரிந்தவரை, ஒரு அருமையான, பெருந்தன்மையான, எளியமையான கிறிஸ்தவனின் ஆவி இந்த எளிமையான சகோதரனுக்குள் இருப்பதை கண்டடைவீர்கள். அதுபோன்ற ஒரு ஜெபத்தையே தேவன் கேட்கிறார் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன்.

98302 எங்களுடைய தேசத்தில் ஹே என்னும் பெயருடைய ஒரு வயோதிக மனிதன் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு மகத்தான வயோதிக மனிதராய் இருந்தார். அவர் ஒரு…ஒவ்வொரு முறையும் எவரிடத்திலும்…அவர் தாழ்மையாயும், பெருந்தன்மையுள்ளவருமாயிருந்தார். ஆனால் சிலர் அவர் ஒரு மத சம்பந்தமான பைத்தியம் அல்லது அதுபோன்ற ஏதோ ஒருவர் என்று எண்ணியிருந்தனர். ஆனால் உங்களுக்கு தெரியுமா, எவரேனும் சுகவீனமாயிருக்கும்போது, அவர்களுக்காக ஜெபிக்கும்படி அவர்கள் வயோதிக தந்தை ஹே அவர்களையே அழைப்பர். அவர் ஒரு பைத்தியக்காரனாயிருக்கவில்லை. அவர் ஒரு உண்மையான மனிதனாயிருந்தார். அந்த வயோதிகப் போர்வீரர்… 303 அப்பொழுது அங்கே குன்றின் உச்சியில் ஒரு நாத்திகன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு பண்ணையை வைத்திருந்தான். அவன் என்னுடைய தந்தைக்கு ஒரு சிநேகிதனாயிருந்தான். என்னுடைய தந்தை மது அருந்துவார். அதைக் கூறுவதற்கு நான் வெட்கமடைகிறேன். ஆனால் சத்தியம் சத்தியமாகவே இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்தியத்தைக் கூறுகிற ஒரே காரியம் வேதமாயுள்ளது. புரிகிறதா?

99304 இப்பொழுது சரித்திரம் என்று அழைக்கப்படுகின்ற ஒரு புத்தகத்தை நாம் வைத்துள்ளோம். அதில் ஜார்ஜ் வாஷிங்டன் ஒருபோதும் ஒரு பொய் கூட கூறினதேயில்லை என்று கூறப்பட்டுள்ளது. நான் அதைச் சந்தேகிக்கிறேன். நான் அதைச் சந்தேகிக்கிறேன். ஆம், ஐயா. நான்…நான்—நான்—நான்—நான் அதை நம்புகிறதில்லை. ஒரு குழந்தை வளரும் போது…“நீங்கள் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்களை பேசுகின்றவர்களாய் உலகத்திற்கு வந்தீர்கள்” என்று வேதம் கூறுகிறது. எனவே ஜார்ஜ் வாஷிங்டனைக் குறித்த அந்த சரித்திரப்பிரகாரமான செய்திக் குறிப்பை நான்—நான் சந்தேகிக்கிறேன். ஆனால் அது ஒரு மனிதனின் நல்ல பாகத்தை மட்டுமே சொல்லுகிறது. 305 மனிதர்களின் இருபக்கங்களையுமே வேதம் சொல்லுகிறது. லோத்து சோதோமில் ஒரு நல்ல மனிதனாயிருந்தான். “நகரத்தின் பாவங்களுக்காக நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்டான்.” ஆனால் அதே சமயத்தில் அவன் தன் சொந்தக் குமாரத்தியோடு சேர்ந்து ஒரு பிள்ளையைப் பெற்றான் என்று கூற வேதம் தவறவில்லை. பாருங்கள். வேதம் அதனுடைய இரண்டு பக்கங்களையும் கூறுகிறது. எனவே நாமும் இரண்டு பக்கங்களையும் சொல்ல வேண்டும்.

100306 என்னுடைய தகப்பனார் குடித்துவிட்டு, அவரும் இந்த நாத்திகனோடு ஓடித்திரிந்தார். அவன் இந்த வயோதிக மனிதனைப் பார்த்து சிரிப்பான். அவன் எப்பொழுதுமே அவரைக் குறித்து பரிகாசம் செய்துகொண்டிருப்பான். நாங்கள் அவரை, “வயோதிக தந்தை ஹே” என்றே அழைப்போம். “தந்தை ஹே” அவருக்கு தலையின் ஓரத்தில் மாத்திரமே வட்டமாக கொஞ்சம் முடியிருந்தது. அவர் ஒரு வயோதிக பிரசங்கியாக இருந்தார். அவருக்கு ஒருமுறை மழை தேவைப்பட்டது. அவர்களுடைய பயிர்கள் எல்லாம் தீய்ந்து கொண்டிருந்தன. அப்பொழுது அவர்கள் இதைப் பார்க்கிலும் பெரிதாக இல்லாமலிருந்த அந்த லிட்டில் ஆப்ஸம் கிங்டம் என்று அழைக்கப்பட்டு, முன்னர் அங்கு கென்டக்கியில் இருந்த அந்த ஒரு சிறிய சபைக்கு வந்தனர். அவர்கள் அங்கு சென்றபோது, அவர் கூறினதாக அவர்கள் கூறுவதோ… 307 அவர், வயோதிக தந்தை ஹே அவர்கள் வழக்கமாக ஒரு வார்த்தையைக் கூறுவாராம். அவர், “அருமையானவரே, என் ஆத்துமாவை ஆசீர்வதியும்” என்று கூறுவாராம். அந்த எளிய, தாழ்மையான நபரான அந்த வயோதிக சுற்றுப் பயண பிரசங்கியார் ஒரு குதிரையின் மீது பயணம் செய்வாராம். உங்களுக்கு தெரியும், அவர்கள் ஒரு கூடை நிறைய காய்ந்த பூசணிகளை அவருக்கு கொடுத்திருக்கலாம், அல்லது உங்களுக்குத் தெரியும், அவர்களிடத்திலிருந்த வேறு எதையாவது, கொழுப்பு அல்லது வேறு எதையாவது கொடுத்திருக்கலாம். அந்தவிதமாக அவர்கள் அந்த வயோதிக சுற்றுப் பயண பிரசங்கியார்களுக்கு கொடுத்து வந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கேயிருக்கின்ற ஜனங்களாகிய உங்களில் அநேகருக்கு அந்த பண்டைய கிழக்கத்திய சுற்றுப் பயண பிரசங்கிமார்களை நினைவிருக்கும்.

101308 ஒரு நாள் பயிர்கள் எல்லாம் தீய்ந்துகொண்டிருந்தன. அப்பொழுது வயோதிக தந்தை ஹே அவர்கள், “அருமையானவரே, நல்லது, என் ஆத்துமாவை ஆசீர்வதியும்” என்றாராம். அதன்பின்னர் இந்தவிதமான ஒரு சிறு ஆராதனைக்குப் பிறகு, “உங்களில் எவரேனும் மழைக்காக தரித்திருந்து ஜெபிக்க விரும்பினால், தேவன் உங்களுடைய பயிர்களைப் பாதுகாப்பார்” என்று கூறினாராம். அப்பொழுது அவர், “நீங்கள் என்னோடு தரித்திருங்கள்” என்றாராம். அப்பொழுது முழு சபையும் அவரோடு தரித்திருந்ததாம். 309 தந்தையார் வெளியே செல்லப் புறப்பட்டபோது, ஒரு வாலிபன் தன்னுடைய குதிரையின் சேணத்தை எடுத்து, அதை—அதை சபையின் கீழே வைத்துவிட்டானாம், ஏனென்றால் மழை பொழியப்போவதாயிருந்தை அவன் அறிந்திருந்தானாம். 310 அந்த வயோதிகர் பீடத்தண்டையிலே முழுங்காற்படியிட்டாராம். அதன்பின்னர் அவர் இன்னும் எழுந்திருக்கக் கூட இல்லையாம். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் அவர் ஒரு இரைச்சலைக் கேட்டதாக் கூறினார். அவர் சுற்றுமுற்றும் பார்த்தாராம். ஒரு கருத்த மேகம் குன்றின் மீது வந்துகொண்டிருந்ததாம். அங்குதான் காரியமே இருந்தது. பார்த்தீர்களா?

102311 தந்தையின் சினேகிதனான அந்த நாத்திகன் இந்த வயோதிக பிரசங்கியாரை பரியாசம் செய்தானாம். அவன் மரித்தபோது அவர்கள் அவனை படுக்கையில் தாங்கிப் பிடிக்க வேண்டியதாயிருந்ததாம். அவன் ஒருவிதமான குடற்காய்ச்சலால் பீடிக்கப்பட்டான். ஜனங்களாகிய உங்களில் அனேகர் அனேகமாக அது என்னவென்றே அறிந்திருக்கமாட்டீர்கள். ஓ, அது ஒரு பயங்கரமான காரியமாய் இருக்கிறது. அவன் மூன்று அல்லது நான்கு நாட்களாக பல மணி நேரமாக பிசாசுகளோடு போராடினான். அவன், “சார்லி, சார்லி,” என்று கூறினானாம். அது என்னுடைய தந்தையாக இருந்தது. மேலும் அவன், “அவன் என்னைப் பிடிக்கவிடாதீர்கள். அவன் என்னைப் பிடிக்கவிடாதீர்கள். அவன் அங்குள்ள அந்த படுக்கையின் பக்கத்தில் அவனைச் சுற்றிலும் சங்கிலிகள் சுற்றப்பட்டிருப்பதோடு அங்கு அமர்ந்திருப்பதை நீங்கள் காணவில்லையா? அவன் அவைகளினால் என்னை கட்டவிடாதீர்கள். ஓ!” என்றான். அவன் கூச்சலிட்டான். அவன் மரிக்க ஆயத்தமாவதற்கு முன்பே, நான்கு அல்லது ஐந்து மனிதர் படுக்கையில் அவனைத் தாங்கிப் பிடிக்க வேண்டியதாயிருந்ததாம். 312 கென்டக்கியில் முன்னர் அவர்கள் தங்களுடைய ஆடைகளை தொங்கவிட்டிருந்த சுவற்றின் பக்கத்திலே மதுபானங்களை வைத்திருப்பர். அவர்கள் அங்கே மதுபானம் வைத்திருந்த அதைப் போன்ற ஒரு வீட்டை எவரேனும் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? 313 அவன் தன்னுடைய பழைய நீர் காப்பு மேற்சட்டையை அங்கே தொங்கவிட்டிருந்தான். அப்பொழுது அவன், “சார்லி, அங்கே என்னுடைய சட்டைப்பையில் அரை காலன் மதுபானத்தை வைத்திருக்கிறேன். போய், அதை எடுத்து, என் பிள்ளைகளுக்குக் கொடு” என்றான். 314 அவனுடைய மனைவியோ ஒரு கிறிஸ்தவள், அவள் அங்கே வெளியே சமையலறையில் அழுதுகொண்டே இரவு ஆகாரத்தை சமைத்துக்கொண்டிருந்தாளாம். அப்பொழுது என் தந்தையோ, “என்னால் அதைச் செய்ய முடியாது” என்று கூறிவிட்டாராம். 315 பிசாசுகளோடு அவன் போராடிக்கொண்டே மரிக்கும் வரையில் அவர்கள் அவனை படுக்கையில் தாங்கிப்பிடித்திருந்தனராம்.

103316 அவன் பரிகாசம் செய்திருந்த அந்த வயோதிக தந்தை ஹே அவர்கள், அவர் மரிக்க ஆயத்தமானபோது, அவருக்கு சுமார் எண்பத்தைந்து, தொண்ணூறு வயதாம். அவர் நித்திரை அடையச் சென்றாராம். எல்லாப் பிள்ளைகளும் சூழ்ந்திருந்தனர். அவருடைய வளர்ந்த பெரிய பேரப்பிள்ளைகளுடைய பேரப்பிள்ளைகளும் படுக்கையை சுற்றிக் கூடிவந்தனர். அவர் எழுந்து அமர்ந்தார். உங்களுக்கு தெரியுமா, அவருக்கு வெள்ளை மீசையும், அவருடைய தலையை சுற்றி ஓரங்களில் ஒரு சிறு வளையம் போன்று கொஞ்சம் முடியும் இருந்ததாம். என்ன…தலையின் உச்சியிலோ வழுக்கையாயிருந்ததாம். அவர் தன்னுடைய மீசையை இப்படியும் அப்படியும் தடவி, “அருமையானவரே, என் ஆத்துமாவை ஆசீர்வதியும்” என்றாராம். மேலும் அவர், “வயோதிக தந்தை ஹே மரித்துவிட்டார் என்றே நீங்கள் எல்லோரும் நினைத்தீர்கள். நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா?” என்று கூறி, அவரோ, “பாருங்கள், என்னால் மரிக்க முடியாது” என்றாராம். அவர் தொடர்ந்து, “நான் அனேக ஆண்டுகளுக்கு முன்பே மரித்துவிட்டேன். நான் இப்பொழுது கர்த்தராகிய இயேசுவை சந்திக்கச் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றாராம். மேலும் அவர், “ஓ, அது மிகவும் மகத்தானதாயிற்றே!” என்று கூறி, “என் பிள்ளைகளே, நீங்கள் எல்லோரும் படுக்கையை சுற்றி வாருங்கள்” என்றாராம். அவர் மூத்தவன் முதற்கொண்டு இளையவன் வரை கரத்தை வைத்து அவர்களை ஆசீர்வதித்தாராம். 317 அதன்பின்னர் அவர் தன்னுடைய மூத்த இரு பையன்களிடமும், “என்னை எழுப்பி அமரச் செய்யுங்கள்” என்று கூறினாராம். அவர்கள் அவரை படுக்கையில் எழுப்பி அமரச் செய்தனராம். அவரால் தன்னுடைய கரத்தை மேலே உயர்த்த முடியவில்லையாம். அவர் மிகவும் பலவீனமாயிருந்தாராம். 318 அவர் தன்னுடைய மற்றொரு பையனிடத்தில், “என் கரங்களை உயர்த்திப் பிடி” என்றாராம். அவன் அவருடைய கரங்களை அந்தவிதமாக உயர்த்திப் பிடித்தானாம். 319 அப்பொழுது அவர், “இன்ப நாள், இன்ப நாள், இயேசு என் பாவங்களை கழுவினார். எப்படி விழித்திருந்து ஜெபித்து, ஒவ்வொரு நாளும் களிகூர்ந்து ஜீவிக்க வேண்டும் என்பதை அவர் எனக்குக் கற்பித்தார்” என்றும் கூறினாராம். அதன் பின்னர் தன்னுடைய தலையை சாய்த்து, மரித்துப் போனாராம். பாருங்கள், நாமும் அந்த முடிவுகளில் ஒன்றிற்கு வந்தாக வேண்டும்.

104320 நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும்படி உங்களை சுற்றி இந்தவிதமான ஒரு எளிய, தாழ்மையான மனிதனை நீங்கள் பெற்றுள்ளதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவரை நம்புங்கள்; தேவன் உங்களுக்காக, உங்களுக்கு மத்தியிலே அற்புதங்களை நடப்பிப்பார். 321 எனக்காக ஏதோ ஒரு காரியத்தை இந்த சிறு சபையிடம் நான் கேட்க விரும்புகிறேன். எனக்காக ஜெபியுங்கள், நீங்கள் ஜெபிப்பீர்களா? நானும் கூட உங்களுடைய சகோதரர்களில் ஒருவனாயிருக்கிறேன். நான் எல்லா நேரத்திலும் உங்களோடில்லை; நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் ஒலிநாடாக்களையும் மற்றும் மற்ற காரியங்களையும் இங்கே பெற்றுக்கொள்கிறீர்கள். நான் இங்கே வெளியே ஒரு பெரிய யுத்தகளத்தில் இருக்கிறேன். இது கர்த்தருடைய வருகைக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிற பணி நிலைகளில் ஒன்றாயிருக்கிறது. எனக்காக ஜெபியுங்கள், ஏனென்றால் உண்மையாகவே உங்களுடைய ஜெபங்கள் எனக்குத் தேவை. ஏராளமான நேரங்களில், நான் கடினமான இடங்களுக்கு செல்லும்போதும், விசேஷமாக வெளிநாட்டு ஊழியக் களங்களில் இருக்கும்போதும் நான் அதன் பேரிலேயே சார்ந்திருக்கிறேன். 322 அங்கு மந்திரவாதிகள் மற்றும் ஒவ்வொரு காரியமும், லட்சக்கணக்கானோர் அங்கு நின்று கொண்டு, உங்களுக்கு சவாலிடும்போதும், நீங்கள் அங்கு நடந்து சென்று தனியாக இருக்கும்போதும், நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நன்கு அறிந்திருப்பது மேலானதாகும். ஓ, என்னே! அப்பொழுது அவர்களால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும். கிட்டத்தட்ட தேவன் வைத்துள்ள எந்த காரியத்தையும் அவர்களால் அப்படியே பாவனை செய்ய முடியும். அவர்களால் அப்படியே யந்நேயும், யம்பிரேயும் போல பாவனை செய்ய முடியும், உ-ஊ, தேவன் இங்கு வைத்துள்ள எந்தக் காரியத்தையும் அவர்களால் பாவனை செய்ய முடியும். 323 அப்பொழுது நான் ஒரு சிறிய விசுவாசமுள்ள குழுவைக் குறித்து சிந்தித்துப் பார்த்து, “இது நாளின் எந்த நேரமாயுள்ளது?” என்பதையும், அங்கு வனாந்திரத்தின் பின்பக்கத்தில், வெளியே செல்லும் வழியில் சியரா விஸ்டா என்றழைக்கப்பட்ட பழமையான ஒரு சிறிய இடத்தில், பாருங்கள், கிட்டத்தட்ட இந்த நேரத்தில் ஒரு சிறு ஜெப கூட்டம் நடந்துகொண்டிருக்கும் என்பதை நினைவுகூருவேன். புரிகிறதா? அங்கு எங்கோ மலையின் மற்றொரு புறத்தில், அங்கே அந்த பழைய மாட்டுப்பண்ணை முகாமில், அதைப் போன்று எங்கோ, அவர்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்வேன். 324 அப்பொழுது நான் வெளியே நடந்து வந்து, “நான் ஜெபத்தினால் மூடப்பட்டிருக்கிறேன். சாத்தானே, உன்னால் எனக்கு எதையுமே செய்ய முடியாது. நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வருகிறேன்” என்று நான் கூறுவேன். நீங்கள் பாருங்கள், அப்போது ஏதோ ஒரு காரியம் சம்பவிக்கிறது.

105325 நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். இப்போது நீங்கள், நீங்கள் எல்லோருமே அதை செய்வீர்களா? [சபையோர், “ஆமென்” என்றனர்.—ஆசி.] ஆமென். சகோதரன் ஐசக்சன், இங்கே வாருங்கள். 326 நான்—நான் இங்கு தரித்திருந்து, சுற்றிலுமுள்ள உங்கள் ஒவ்வொருவரோடும் வீட்டிற்கு சென்று, இரவு ஆகாரத்தை புசிக்க நான் விரும்புகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு எனக்கு நீண்ட காலம் தேவை. உலகத்திலேயே மிகச் சிறந்த சமையற்கார்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று புருஷர்களாகிய நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். நீங்கள் அவ்வாறு பெற்றிருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பார்த்தீர்களா? அதை செய்ய நான் நிச்சயமாகவே விரும்புகிறேன். ஆனால் என்னால்—என்னால் அதை இன்றைக்கு செய்ய முடியாது. நீங்கள் யாவரும் அதை புரிந்துள்ளீர்கள், நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? என்னால் அதை இப்போது செய்ய முடியாது என்பது உங்களுக்கு, உங்களுக்குத் தெரியும். நான் ஒரு சிரமமான பணியில் தற்போது இருக்கிறேன். நான் வந்து உங்களோடு ஒரு சிறு ஐக்கியங்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நானும் கூட உங்களோடிருக்கும் படியாக திரும்பி வரவேண்டும் என்றும், மீண்டும் திரும்பி வர வேண்டும் என்றே விரும்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 327 இப்பொழுது சகோதரன் ஐசக்சன் அவர்களே, ஆரதனையை எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறாரோ அதைச் செய்யுங்கள். 328 இப்பொழுது, இயேசு கிறிஸ்து வினிடத்தில் ஒருபோதும் சரணடையாமலிருக்கிற உங்களில் எவரேனும் இங்கு வர விரும்பினால், சகோதரன் ஐசக்சன் அவர்களும், நானும் நிற்கிற இந்த பிரசங்க பீடத்தின் பக்கத்தில் இந்த காலை நீங்கள் இங்கு வந்து நிற்க வேண்டும் என்றும், ஜெபித்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் விரும்பினால், தேவன் உங்களை இரட்சிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கும்படி விரும்பினால், இப்பொழுது நீங்கள் வருவீர்களா? நீங்கள், நீங்கள் இன்றைக்கு ஒரு முழுமையான வெற்றியைப் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள்…

106329 உங்களில் எவரேனும் பின்வாங்கிப்போய், தேவனைவிட்டு விலகிப்போயிருந்தால், கடந்த இரவு இருந்த அந்த சிறு பெண்மணியைப் போன்று, நீங்கள் அந்த ஐக்கியத்தை இழந்துவிட்டிருப்பதை அறியாமல்—அறியாமலிருந்தால், ஓ, நீங்கள் தேவனை விட்டு விலகிச் செல்லும்பொழுது, அந்தகாரம் சூழ்ந்துகொள்கிறது. நீங்கள் ஒரு சேறான பாதையில் இருக்கிறீர்கள். நீங்கள் இழக்கப்பட வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் பெற்றிருக்க வேண்டிய வெற்றியை நீங்கள் பெற்றிருக்கவில்லையென்றால், நீங்கள் பெற்றுக்கொள்ள வரமாட்டீர்களா? இது ஒரு முழுமையான வெற்றியாயுள்ளது. உலகத்தின் எல்லா காரியங்களுக்குமான ஒரு வெற்றியின் நாளாய் இது உங்களுக்கு இருக்கக் கூடும். 330 நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், நான் பல அநேக சோதனைகளை உடையவனாயிருந்து வந்துள்ளேன். நான் இங்குமங்குமாக இழுத்தெறியப்பட்டிருக்கிறேன்” என்று கூறலாம். அது தேவன் என்றும், ஏனென்றால் அவர் உங்களை நம்பினார் என்றும் நான் உங்களுக்கு கூறியிருக்கவில்லையா? நீங்கள் அவரை விட்டுவிடமாட்டீர்கள், நீங்கள் விட்டுவிடுவீர்களா? நீங்கள் விழுந்து போயிருக்கலாம். நீங்கள் ஒரு தவறு செய்திருக்கலாம். ஆனாலும் நீங்கள் அவரை விட்டுவிடமாட்டீர்கள், நீங்கள் விட்டுவிடுவீர்களா? நீங்கள் மீண்டும் ஒரு உண்மையான போர் வீரனைப் போல எழும்பி, பட்டயத்தை இறுகப் பிடித்து, மீண்டும் முன்னோக்கி நடந்து வருவீர்கள். அதை செய்ய நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம். நிச்சயமாக. 331 இல்லையென்றால், சகோதரன் ஐசக்சன் உங்களுக்காக அப்போது தொடர்ந்து பேசுவார். 332 இப்பொழுது நீங்கள் என்னைத் தவறாக நினைக்கவில்லையென்றால், அப்பொழுதுதான் நான் புறப்பட்டு, டூசானுக்கு திரும்பிச் செல்ல முடியும். கர்த்தருக்குச் சித்தமானால், நான் உங்களைக் காண மீண்டும் திரும்பி வருவேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்களா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] 333 நினைவிருக்கட்டும், ஒரு முழு வெற்றியாளர், இயேசு கிறிஸ்துவின் மேல் உங்களுடைய மாறாத கவனத்தை வைத்திருங்கள். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். என்றோ ஒருநாள் அவர் ஆகாயத்திலிருந்து ஒரு ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும் இறங்கி வருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். அப்பொழுது இந்த அழிவுள்ள சரீரங்கள் அழியாமையை தரித்துக்கொள்ளும்போது, நாம் என்றென்றைக்கும் அவரோடு இருக்கும்படியாக செல்வோம். அதுவரை உங்களுடைய மாறாத எதிர்நோக்குதலோடு, விழித்திருந்து, ஜெபியுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 