1 பாருங்கள், இல்லை, அது பெக்கி பிறப்பதற்கு முன்பாயிருந்தது. ஆகையால் நான்—நான், “பாருங்கள், உங்களுக்குத் தெரியும்…” என்று நினைத்தேன். நான்—நான் வெறுமனே பத்து சென்ட் காசுகள் பெறுமானமுள்ள ஒரு கிண்ண ஓட்ஸ் ஆகாரத்தைத்தான் புசித்தேன். பாருங்கள், நான் சரியாக…அவர்கள் என்னுடைய ஆகாரச் சீட்டை என்னிடம் கொடுத்தனர், நான் அதில் கையொப்பமிட்டேன், நீங்கள் பாருங்கள், நான் அதற்கான கட்டணத்தைச் செலுத்தினேன், அவர்கள் அதை என்னிடம் திரும்பக் கொடுத்தனர், நானோ அதைத் திரும்பக் கொடுத்துவிட்டேன், ஏனென்றால் நான் ஒரு செலவு கணக்கை வைத்திருந்தேன். 2 ஒருநாள் ரோந்து பணியாளருக்கான ஒரு—ஒரு கூட்டம் எங்களுக்கு இருந்தது. “என்னே,” அவர்கள், “இவ்விதமான ஒன்றை திருப்பிக் கொடுக்கும் இந்த பைத்தியக்காரன் யார்?” என்று கேட்டனர். பாருங்கள்? உங்களுக்குத் தெரியுமா, அந்த—அந்த தலைமை நபர், “ஒரு காலை உணவுக்கு பத்து சென்ட்டுகளா?” என்று கேட்டார். எனவே அது மற்ற மனிதர்களுடைய பார்வையில் மிகவும் மலிவானதாக காணப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களில் சிலரோ ஒரு டாலர் பணத்தைக் கொடுத்தனர், பாருங்கள்; பகல் உணவுக்காக இரண்டு டாலர்கள். நானோ அது சரியாக எவ்வளவு பெறுமானமுள்ளதாக இருந்ததோ அவ்வளவு பணத்தையே கொடுத்தேன். 3 பாருங்கள், நான், “நல்லது, இப்பொழுது, நான் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நான் வெறுமனே பத்து சென்ட்டுகள், பெறுமானமுள்ள ஆகாரத்தைத் சாப்பிடுவேனானால், நான் என்ன செய்வேன்?” என்று கேட்டேன்.
24 உதவி மேற்பார்வையாளராயிருந்த திரு. ஃபீல்ட்ஸ், “பில்லி, நீர் எப்படியும், குறைந்தது ஒரு டாலர் பணத்தையாவது செலுத்த வேண்டும்” என்றார். மேலும், “அதைத்தானே மற்றவர்களும் செலுத்துகிறார்கள்” என்றும் கூறினார். தொடர்ந்து, “அவர்களோடு சேர்ந்து நீயும் அதைச் செய்தாக வேண்டும்” என்றும் கூறினார். 5 “பாருங்கள்,” அதற்கு நான், “ஒரு கிண்ண ஓட்ஸ் ஆகாரத்தைத் தவிர வேறொன்றையும் நான்—நான் ஒருபோதும் சாப்பிடவில்லையே, அதற்காகத்தான் நான் கட்டணம் செலுத்தினேன்” என்றேன். தொடர்ந்து, “ஓ, அதைச் செய்யாதே, அதை ஒருபோதும் செய்யாதே” என்றும் கூறினார். 6 பாருங்கள், அதன்பிறகு, “நான் அதனோடு என்ன செய்யலாம்?” என்று நான் எண்ணினேன். அதன்பிறகு நான் காலை உணவுக்காக ஐம்பது சென்ட்கள் செலுத்தினேன். அதன்பிறகு அதிலிருந்து நாற்பது சென்ட்களை எடுத்து, நான் எதையாவது செலவு செய்ய விரும்பினால், அதை வீதியிலுள்ள சில குழந்தைகளுக்குக் கொடுத்து விடுகிறேன்; சில குழந்தைகள், அவர்களுக்கு தேவைப்படுகிற ஒரு இடையீட்டு ரொட்டிக்கு, இடையீட்டு ரொட்டிக்குக் கூட எதிர்நோக்கியிருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள், நான் ஒருக்கால்…என்று நான் நினைத்தேன், சரி, அதுதானே, அவ்விதமாக என்னிடம் பேசிக்கொண்டிருந்தது நிறுவனமாயிருந்தது. அது அந்த நிறுவனத்திலிருந்து வந்த ஒரு மனிதனாயிருந்தது. எனவே, நான், “ஒருக்கால் நான் தவறான ஏதோவொன்றை செய்திருக்கலாம்” என்று எண்ணினேன்.
37 எனவே இங்கு அண்மையில், ஒரு ரோந்துப் பணியாளரோடு…உங்களுக்குத் தெரியும், இப்பொழுது அவர்கள் ஹெலிகாப்டர்களில் ரோந்து செல்கிறார்கள். எனவே அவர் என் அருகில் வந்து நின்றார். அதன்பின்னர் அவர், “சகோதரன் பிரன்ஹாமே என்று கூறி,” தொடர்ந்து, “இந்த மரம் வளர்ந்துகொண்டிருக்கிறதே” என்றார். அதற்கு நான், “ஆமாம்” என்றேன். மேலும், “பிள்ளைகள் அங்குள்ள அந்த மரத்தின் கீழே விளையாடுகிறார்கள்” என்றேன். அப்பொழுது அவர், “நாம் இதன் உச்சியை வெட்டிவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு நான், “சரி, ஆனால் இதை அடிப்பாகம் வரை வெட்ட வேண்டாம். புரிகிறதா?” என்று கூறினேன். அப்பொழுது அவரும், “பாருங்கள், நாங்கள் அதை வெட்ட விரும்புகிறோம், அதற்கான கிரயத்தை நாங்கள் உமக்கு செலுத்திவிடுவோம்” என்று கூறினார். 8 அப்பொழுது நான், “வேண்டாம். வேண்டாம். நீங்கள் அதை வெட்ட வேண்டாம்” என்றேன். பாருங்கள், அதை வெட்டுவதற்கான சட்ட விதிகளையும் கூட நான் அறிந்திருந்தேன், உங்களுக்குத் தெரியுமா, ஏனென்றால் நான் ஏழு வருடங்கள் அங்கிருந்தேன். எனவே நான், “வேண்டாம்” என்றேன். மேலும் நான், “அதை அடிப்பாகம் வரை வெட்ட வேண்டாம், ஆனால் நீங்கள் அதன் உச்சியை வெட்டி விடலாம்” என்றேன். நான், “ஆனால், நான்—நான் தொடர்ந்து அதன் உச்சியை வெட்டி வருகிறேன்” என்றேன். மேலும் நான், “நீங்கள் வெட்டலாம், நீங்கள் விரும்பினால் அதன் உச்சியை நீங்கள் வெட்டலாம்” என்றேன். நான் தொடர்ந்து, “நானும், சகோதரன் உட்ஸ் அவர்களும் நானும் அதன் உச்சியை வெட்டிவிட தீர்மானித்துக்கொண்டிருக்கிறோம். இங்குள்ள இந்த மற்ற எல்லா மரங்களுடைய உச்சிகளையும் நாங்கள் வெட்டிவிடுகிறோம்” என்றேன். மேலும் நான், “ஆனால் பிள்ளைகளின் நிமித்தமாக அந்த மரம் வெட்டப்படாமல் அங்கே இருக்கவே நாங்கள் விரும்புகிறோம், ஜோவும் மற்றவர்களும், உங்களுக்குத் தெரியும், சிறு பிள்ளைகள் அந்த மரத்தின் கீழே விளையாடுகிறார்கள்” என்றேன்.
49 நான் தொலைதூர பிரயாணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். நான் திரும்பி வந்தபோது, அந்த மரம் கீழ்வரை அறுக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டிருந்தது. நீங்கள் பாருங்கள், ஓ, அந்த மரத்தை வெட்டினதற்காக, என்ன ஒரு வழக்கை அந்த நிறுவனத்தின் மேல் தொடுத்திருக்கலாம், நீங்கள் பாருங்கள். எனவே நான், “இப்பொழுது,” நினைத்ததோ, “கர்த்தாவே, நான் அதைக் குறிப்பிடப்போவதுங் கூட இல்லையே” என்றேன். பாருங்கள்? “நான் அதன்—நான் அதன் பேரில் எதையாவது கொண்டிருப்பேனாகில், சில சமயங்களில் அதை நான் திரும்பக் கொடுத்துவிடுகிறேன், பத்து சென்ட்டுகள் பெறுமானமுள்ள ஆகாரத்தை மாத்திரமே சாப்பிட்டுவிட்டு, ‘ஐம்பது சென்ட்டுகளுக்கு’ கணக்கு கொடுக்க வேண்டியதாயுள்ளது.” பாருங்கள்? நான், “அங்கே அதன்பேரில் ஏதோவொன்று இருக்குமானால், அதை விட்டுவிடட்டும், பாருங்கள், அதாவது—அதாவது நான்—அதாவது நான் அதைக் கொடுத்து விடுகிறேன், நீங்கள் பாருங்கள். அதாவது நான்…” என்றேன். அதன்பிறகு பொதுச் சேவை நிறுவனத்தில் பணிப்புரிவதைக் குறித்து கனவு காணுவதை விட்டு விட்டேன், பாருங்கள், ஏனென்றால் அங்கே அதற்குப் பின்னால் ஏதோவொன்று இருந்திருக்க வேண்டும். நாம் என்ன செய்கிறோம் என்பதை நாம் கவனித்தாக வேண்டும். நாம் அதை ஏதோவொரு நாளில் சந்திக்க வேண்டியதாயுள்ளது.
510 வாலிப பிள்ளைகள், இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். ட்ரூடி, இன்றைக்கு உன்னுடைய தாயார் இங்கு வந்திருந்தார். அது உனக்குத் தெரிந்திருக்காது, உனக்கு அது தெரிந்திருக்கவில்லை என்று நான் ஊகிக்கிறேன். இது ஒருவகையில் வியப்பூட்டுவதாயுள்ளதை, என்னால் காண முடிகிறது. நீங்கள் பட்டமளித்தலைப் பெறப்போகிறீர்கள். நாம் இங்கே ஒன்றாக சேர்ந்து இப்பிரயாணத்தில் இருக்கிறோம். நான் இப்பொழுது இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, உடனடியாக மற்ற ஒரு கூட்டத்திற்குப் போகப் போகிறேன். அதன்பிறகு நாங்கள் வீட்டிற்குப் போகப் போகிறோம். 11 உங்கள் எல்லாரோடும் பேசுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக இது இருக்கும் என்று நான் எண்ணினேன், அதன்பிறகு மேலும் உங்களுடைய பட்டமளிப்பு நடைபெறுவதற்கு முன்பு சிறு வாலிப் பிள்ளைகளிடம் சிறிது பேசுவது நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். வேதாகமத்திலிருந்து ஒரு வசனத்தை வாசித்துவிட்டு, என் இருதயத்திலிருந்து சுமார் பத்து நிமிடங்கள் உங்களிடம் பேசப் போகிறேன். உங்களுடைய பாதையை விட்டு வெளியே போய் விடுவேன். புரிகிறதா?
612 நான் வாலிப் பிள்ளைகளிடம் பேசுவதற்கு முன்பு, நான் சற்றே ஒரு நிமிடம் வயது வந்தவர்களாகிய உங்கள் எல்லோருடனும் கூட பேச விரும்புகிறேன். அது இப்பொழுது, ஒருக்கால் கடினமான பயணமாக இருக்கலாம், அது அவ்வாறுதான் இருந்து வந்துள்ளது. ஆனால் நான் தேவனிடமிருந்து கற்றுக்கொண்டுள்ள அனுபவங்களை, நான் இங்கே இருந்தது முதற்கொண்டு கர்த்தரிடமிருந்து கற்றுக் கொண்டவைகளுக்குப் பதிலாக பத்தாயிரம் டாலர்கள் பணம் தந்தாலும் நான் பெற்றுக்கொள்ள மாட்டேன். சர்வவல்லவருடைய கட்டளைக்கு நான் முழுவதுமாக கீழ்ப்படியும்படியான ஒரு நிலைக்கு வந்துள்ளேன் என்று நான் மெய்யாகவே நம்புகிறேன், என்னால் அவ்விதமாகவே தொடர்ந்து எப்பொழுதும் இருக்க முடியும் என்றும் நான்—நான் நம்புகிறேன். மேலும் ஒரு…
713 ஒரு காரியம், நான் ஒரு தரிசனத்தின் மூலமாக வந்தபோது, நான் இங்கே டூசானுக்கு மேலே நின்றுகொண்டிருந்தபோது, அப்பொழுது ஒரு—ஒரு—ஒரு வெடிச் சத்தம் கேட்டது. பாருங்கள், அந்த வெடிச்சத்தம் கேட்டபோது, சகோதரன் ஃபிரட் அங்கேயிருந்தார். வானத்திலிருந்த அந்தக் காட்சியை, அவர்கள் அதை புகைப்படம் எடுத்தனர், நீங்கள் அறிவீர்கள். நான் அதைக் குறித்து அதிகமாக எண்ணிப்பார்க்கவில்லை, அதை ஒருபோதும் கவனிக்கவேயில்லை. ஆகவே அன்றொரு நாள், எப்படியோ அது என் மனதில் ஆழமாய்ப் பதியத் தொடங்கியது. சகோதரன் நார்மன், இங்குள்ள நார்மனின் தகப்பனார் என்னிடம், “நீங்கள் இதைக் கவனித்தீர்களா?” என்று கேட்டார். 14 நான் அதைக் உற்றுப் பார்த்த போது, தேவதூதர்கள் அவ்வளவு தெளிவாக, அங்கே அந்தப் படத்தில் இருந்தனர். பாருங்கள்? அது எப்போது சம்பவித்தது என்று காணும்படி நான் உற்றுநோக்கினேன், அது அதே நேரமாய், ஏறக்குறைய நான் அங்கே இருந்த நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு, அல்லது ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு நடந்ததாயிருந்து. அது எங்கே நடந்தது என்று கவனித்தேன், “ஃபிளாக்ஸ்டாப்பிற்கு வடகிழக்கில், அல்லது பிரஸ்காட்டில், அது ஃபிளாக்ஸ்டாப்பிற்குக் கீழே இருக்கிறது.” பாருங்கள், அங்கேதான் நாங்கள் இருந்தோம், பாருங்கள், அது மிகச் சரியாக இருந்தது.
815 “இருபத்தாறு மைல்கள் உயரம்.” ஏன், நீராவியோ, ஈரப்பதமோ, எவ்வகையிலான மூடுபனியோ அல்லது எதுவுமோ நான்கு, நான்கு அல்லது ஐந்து மைல்கள் உயரத்திற்குமேல்—மேல் போக முடியாது, நீங்கள் பாருங்கள். பத்தொன்பதாயிரம் உயரத்தில் விமானங்கள் பறக்கின்றன. எல்லா மேகங்களுக்கும் மேலாக அது எழும்பி வேண்டியுள்ளது, நீங்கள் பாருங்கள். பத்தொன்பதாயிரம் என்பது ஏறக்குறைய நான்கு மைல்கள் உயரமாகும். அது இருபத்தாறு மைல்கள் உயரத்திலும், முப்பது மைல்கள் குறுக்காகவும் உள்ளது, நீங்கள் அந்தப் படத்தைக் கவனித்துப் பார்ப்பீர்களானால், அது கூர்நுனிக் கோபுர வடிவிலும் இருந்தது. 16 நான் உங்களிடம் கூறினபடி, வலது பக்கத்தில் இருந்த அந்த தூதன், தனிச்சிறப்பு மிக்க தூதனாக இருந்ததை நான் கவனித்தேன். அவன் தன் மார்பை முன்தள்ளினவனாகவும், தனக்கு பிறகே செட்டைகளைக் கொண்டுள்ளவனாகவும், வந்துகொண்டிருந்தான், அது அந்த விதமாகவே மிகவும் சரியாக இருந்தது. அவர்கள் முதலாவது…நான் அதை ஒருபோதும் கவனிக்கவேயில்லை. அங்கே அநேக காரியங்கள் இருந்தன.
917 அன்றொரு நாள் நான் சாலையில் வந்து கொண்டிருந்த போது, நான்—நான் செய்ய வேண்டிய காரியத்தைக் குறித்து என்னிடம் பேசின ஒரு காரியம் சம்பவித்தது. இது—இது என்னுடைய செய்தி அல்ல. 18 ஒரு சமயம், லியோ மெர்ஸியர் கூறினார், “சகோதரன் பிரான்ஹாமே, இதற்குப் பிறகு அந்த நேரம் வரும்” என்று கூறி, மேலும், ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்பு, ஒருவேளை ஏழு வருடங்கள் இருக்கலாம், “சகோதரன் பிரான்ஹாமே, கர்த்தர் உம்முடைய ஊழியத்தை மாற்றப் போகிறார்” என்றும் கூறினார். மேலும், “அவர் அவ்வாறு செய்கிறபோது, நீர் அநேகமாக மருத்துவமனைகளில் நின்று கொண்டு, அந்தப்—அந்தப் படுக்கைகளிலும் மற்றக் காரியங்களிலும் இருக்கிறவர்களைப் பார்த்து பேச, அவர்கள் சுகமடைந்தனர்” என்றார். சகோதரன் லியோ அதைக் குறித்து உத்தமமாக இருக்கவே முயற்சித்துக்கொண்டிருந்தார் என்பதை நான் நம்பினபோதிலும், அது சரியாக இருக்கவில்லை.
1019 ஆனால் அது சரியாக இருக்கவில்லை, ஏனென்றால், பாருங்கள், நம்முடைய கர்த்தராகிய இயேசு ஒருபோதும் அதைச் செய்யவில்லை. புரிகிறதா? அவர் மருத்துவமனைகளுக்குள் சென்றார். அந்த மருத்துவமனையில் ஒருவன் அங்கே இருந்தான். அது வேதாகமத்தில் எங்கேயுள்ளது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? பெதஸ்தா குளம். பெருந்திரளான செயலிழந்த உறுப்புக்களைக் கொண்டிருந்த ஜனங்கள் அங்கே படுத்திருந்தனர், ஊனமுற்றவர்களும், சப்பாணிகளும், குருடர்களும், சூம்பின உறுப்புடையவர்களும் அந்தத் தூதனுக்காகக் காத்தி ருந்தனர். இப்பொழுது, அது ஒரு ஆவிக்குரிய மருத்துவமனையாக இருந்தது, அங்கே ஜனங்கள் தெய்வீக சுகமளித்தலுக்காகக் காத்திருந்தனர். இங்கே தெய்வீக சுகமளிப்பவர் தாமே உள்ளே வந்து, ஒருவனை சுகப்படுத்திவிட்டு வெளியே நடந்து சென்றுவிட்டார். எனவே அதைக் காட்டிலும் பெரிய எந்தவொரு சாவுக்குரிய மனிதனையோ, அல்லது வரப்போகும் ஒரு ஊழியத்தையோ உங்களால் எதிர்பார்க்க முடியாது. புரிகிறதா? என்னால் அதனோடு இணங்கிப் போக முடியவில்லை. 20 ஆனால் நான் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்க்கத் தொடங்கின போது, பரிசுத்த ஆவியானவர் என்மேல் வந்தார். எனக்கு ஒரு எழுதுகோல் வேண்டுமென்று நான் லியோவிடம் கேட்டேன். என்னிடம் ஒரு துண்டு காகிதம் இருந்தது, நான் அதில் எழுதினேன். அது எங்கேயிருக்கிறது என்று நீங்கள் அறிய விரும்பினால், அது இன்று அவருடைய பின் இணைந்த ஊர்தியில் உள்ளது. அது அந்தப் பழைய அலுமினிய பின் இணைந்த ஊர்தியில் இருக்கிறது, அங்கேதான் பொருட்களை ஏற்றி வைத்திருக்கிறேன். நீங்கள் அப்படியே வாசலுக்குள் போகும்போது, அங்கே வலது பக்கத்தில் ஒரு அலமாரியில் அது இருக்கிறது, அந்த பின் இணைந்த ஊர்தியின் வலது பக்கத்தில் அது இருக்கிறது. அது அங்கே கீழே இருக்கிறது. நான் அதை அங்கே வைத்தேன். “ஏதோவொரு நாளில் உன்னால் இதை விட்டு விலகி வர முடியும். ‘தேவன் ஒருபோதும் ஊழியத்தை மாற்றமாட்டார், ஆனால் அந்த ஊழியத்தோடு அம்மனிதனைத் தான் மாற்றுவார்’” என்று கூறப்பட்டது. அதுதான் செய்யப்பட வேண்டியதாயுள்ளது. 21 பாருங்கள், என்ன செய்ய வேண்டுமென்பதை நான்—நான் அறிவேன், ஆனால் என்னால்—என்னால்—என்னால் முடியாது, நான் இப்பொழுது இருக்கிற நிலையில் என்னால் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால், நான்…ஏதோவொன்று எனக்குள் சம்பவிக்க வேண்டும், அதைச் செய்வதற்கு தேவன் தேவையாயுள்ளார்.
1122 நாங்கள் வீட்டிற்கு திரும்பிப் போக திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். பிள்ளைகள் வீட்டைக் குறித்து ஏக்கங்கொண்டுள்ளனர், அவர்கள் யாவரும் திரும்பிப் போக விரும்புகின்றனர். எனவே கர்த்தருக்குச் சித்தமானால், நான் அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளேன், ஒருக்கால் சனிக்கிழமை ஆராதனைக்குப் பிறகு திரும்பிப் போவேன். அங்கிருந்து என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஜனங்கள் பட்சமாக என்னை அனுதாபங்கொள்ளச் செய்வதற்கு, எனக்குள் ஏதோவொன்று சம்பவித்தவுடனே, நான் இப்பொழுது செய்வதிலிருந்து அது வித்தியாசமாயிருக்கும் என்று நான் அறிவேன். நான் அந்த—அந்த ஜனங்களைப் புறக்கணித்திருந்தேன், பாருங்கள், நான்—நான் அவர்களோடு இதற்கு மேலும் எந்த தொடர்பும் கொள்ள விரும்பவில்லை. நான் என்ன கூறுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும், நான் “ரிக்கி, ரிக்கெட்டா” என்று நான் அழைத்த அந்த ஒழுங்கீனமானவர்களைத்தான் கூறுகிறேன், அவர்கள் செய்திருந்த காரியங்களையே அவர்கள் உடையவர்களாயிருந்தனர். நான் முழு உத்தமத்தோடும் பிரசங்கம்பண்ணினேன், தேவன் ஒவ்வொரு விதத்திலும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். “அவர்கள் அதை விசுவாசிக்க விரும்பாவிட்டால், ஏன், அப்படியானால் அவர்களைத் தனியே விட்டுவிடுங்கள்.” 23 வரப்போகிற இந்த இலையுதிர் காலத்தில், நான் பட் அவர்களோடு பொருத்துகிற வேலைகளில் சேர்ந்துகொள்வதற்காக, நான் அங்கே மேலே போய்க் கொண்டிருந்தேன். அந்த வனாந்தரத்திலேயே காத்திருந்து, என்னுடைய முடியையும் தாடியையும் வளர விடுவேன். நான் எங்காவது போகும்படி கர்த்தர் விரும்புவாரானால், அவர் என்னிடம் பேசுவார், நான் கீழே சென்று அதைச் செய்வேன். 24 அன்றொரு நாள் நான் சாலையில் வந்துகொண்டிருந்த போது, அவர் என்னை நிறுத்தினார். நான் எங்கே என்று…நான் எங்கு வந்து கொண்டிருந்தேன் என்று பார்த்தேன். நான்—நான் இப்பொழுது மற்ற ஏதோவொன்றை நோக்கிய என் பாதையில் இருந்தேன். நான் வீட்டை அடையும்போது, வெளிப்படையாக பேசுதல் என்று நாம் அழைக்கிறதையே நான் பேசுவேன் என்றே நான் எண்ணினேன், ஒருவேளை அது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படலாம், அப்பொழுது ஏன் இந்த திடீர் மாற்றம் என்று பொதுமக்கள் அறிந்துகொள்வார்கள்.
1225 இப்பொழுது, பிள்ளைகளாகிய நீங்கள், நாம் சற்றே…நாம் ஒரு சிறு ஜெபம் செய்வோமாக. 26 கர்த்தராகிய இயேசுவே, இங்கே நாங்கள் வாலிபரும், வயோதிகரும், நடுத்தர வயதினருமாய் கூடி வந்திருப்பதை அறியும், இந்த நேரத்திற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் நித்தியத்தின் இந்தப் பக்கத்தில், ஒரு விசை உம்மைக் குறித்தும் நித்திய ஜீவன் சம்பந்தமான இக்காரியங்களைக் குறித்தும் பேசும்படியாகவே கூடியுள்ளோம். 27 இந்த வாலிப வயதினர் இன்றிரவு இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள், அவர்களில் சிலர் பட்டம் பெறுகிறார்கள், சிலர் ஏற்கனவே பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் கர்த்தாவே, டூசானுக்கு வடக்கே அந்த கர்த்தருடைய தூதர்கள் கீழே இறங்கி வந்தபோது, அங்கே மேலே அந்த மலையில் சம்பவித்த பெரிய அதிர்ச்சி, அல்லது பெரிய வெடி சத்தம் உண்டாவதற்கு சில மணி நேரங்களுக்கு சற்று முன்பு ஏதோவொன்று சம்பவித்தது என்று நான் உணருகிறேன். என்ன சொல்லப்பட்டது என்பதை, மேலும்—மேலும் குறிப்பாக வாலிப ஜனங்களைக் குறித்து சொல்லப்பட்டதை நான் நினைவுகூருகிறேன். கர்த்தாவே, அதை புரிந்துகொள்ள எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் உம்மிடம் ஜெபிக்கிறேன். இன்றிரவு இந்த வாலிப ஜனங்களின் பிரயாணத்தினூடாக அவர்களுக்கு உதவி செய்யும் ஏதோவொன்றை அவர்களுக்குக் கூறும்படி நான் திறனுடையவனாய் இருப்பேனாக. கர்த்தாவே, இந்நேரத்தில் எங்கள் எல்லாருக்கும் உதவி அவசியமாயுள்ளது.
1328 எங்களை ஒருமித்து ஆசீர்வதியும். எங்கள் பாவங்களை மன்னியும். நாங்கள் இங்கே இருந்தது முதற்கொண்டு உமக்கு கோபமூட்டுகிற எதையாவது நாங்கள் செய்திருந்தால், அதற்காக நீர் எங்களை மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாளைய தினத்தைக் குறித்து எங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை—இல்லை என்பதை நாங்கள் இன்று உணருகிறோம். நாளைய தினம் என்ன கொண்டு வரும் என்பதும் எங்களுக்குத் தெரியாது. நாளைய தினத்தை சந்திப்பதற்காக இன்றே நாங்கள் ஆயத்தப்பட வேண்டும். மேலும், பிதாவாகிய தேவனே, இதைச் செய்ய நாங்கள் அறிந்துகொள்ள ஒரே ஒரு வழி தான் உண்டு, அதாவது, அது உம்மை சந்திக்க ஆயத்தப்படுவதுதான், சிறிது கழிந்து நாங்கள் எல்லாரும் அதைத்தான் செய்யப் போகிறோம் என்று நாங்கள் உணருகிறோம். நாங்கள் ஏதோவொரு சமயத்தில், ஒரு நண்பனாக அல்லது குழந்தையாக சமாதானத்தில் அல்லது ஒரு சத்துருவாக அதை சந்திக்க வேண்டும். கர்த்தாவே, உமக்கு சொந்தமான நேச பிள்ளைகளாக அதை சந்திப்பதைத் தவிர வேறேதாவதாக அதை சந்திப்பது தூரமாயிருப்பதாக. இந்தக் காரியங்களை அருளுமாறு நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
1429 இன்று, இந்தக் காலை அதிகாலையில் நான் களைச் செடிகளை வெட்டிக்கொண்டிருந்த போது, நான் வேதாகமத்தில் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தேன், அது இந்நேரத்தில் வாசிப்பதற்கு ஒரு நல்ல காரியமாக இருக்கும் என்று நான் எண்ணினேன். மேலும் அது ஒரு…அது ஒருக்கால் மிகுந்த பொருத்தமில்லாததாயிருக்கலாம், ஆனால் நான்…சரியாக ஒரு—சரியாக ஒரு சில நிமிடங்கள் பேசலாம் என்று நினைத்தேன். நான் பரிசுத்த லூக்கா 18-ம் அதிகாரத்திலிருந்து இதை வாசிக்க விரும்புகிறேன். நான்கு சுவிசேஷ எழுத்தாளர்களும் அதைக் குறித்து எழுதுகின்றனர். 18-ம் அதிகாரம் 18-ம் வசனம். அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும்…தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார். அதற்கு…இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். 30 என்னைப் பின்பற்றி, வா என்ற வார்த்தையைக் குறித்து நான் எண்ணிப்பார்க்கிறேன், நான் பத்தாயிரம் சிறு வாலிப பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருந்தாலோ அல்லது நானே என்னோடு பேசிக் கொண்டிருந்தாலோ, அது நான் கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த அறிவுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது ஒரு கட்டளையாக உள்ளது, எப்போதும் எவருக்கும் கொடுக்கப்பட்ட எந்தக் காரியத்தைப் பார்க்கிலும், குறிப்பாக ஒரு வாலிப நபருக்கு “என்னைப் பின்பற்றிவா” என்பது மகத்தான காரியமாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.
1531 நீங்கள் யாரோ ஒருவரைப் பின்பற்றப் போகிறீர்கள். இப்பொழுது, நீங்கள் அப்படியே…உங்களால் அதை நினைவுகூர முடியும். நீங்கள் யாரோ ஒருவரைப் பின்பற்றப் போகிறீர்கள். நீங்கள் அந்த நபரைப் பின்பற்றும் விதத்தில், நீங்கள் பின்பற்றுகிற அந்த நபர் யார் என்பதைக் குறித்து நிச்சயமுடையவர்களாயிருங்கள், புரிகிறதா? நாம்… 32 பவுல் ஒருசமயம், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என்று கூறினான். வேறு வார்த்தைகளில் கூறினால், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள்.” 33 இப்பொழுது, நாம் எல்லாருமே இந்தத் திருப்பு முனையில், ஜீவியத்தின் இந்த—இந்தக் கட்டத்தில் வந்திருக்கிறோம். அநேக சமயங்களில் நான், “ரிக்கி, ரிக்கெட்டா” என்று அவர்களுக்கு எதிராக உரக்க சத்தமிடுவதையும், மற்றக் காரியங்களையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது, அது இக்காலமாகும். அது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இக்காலமாகும், அது உண்மையாகவே அந்த ஜனங்களல்ல.
1634 அந்த ஜனங்கள் நம்மைப் போன்ற ஜனங்கள்தான். அந்த வாலிப் பிள்ளைகள் மோட்டார் வாகனங்களை மாற்றியமைத்து, இங்கே வெளியே தெருவில் மேலும் கீழும் ஓட்டி, அவர்கள் போகிற வழியிலேயே தொடர்ந்து போய்க்கொண்டிருந்து, சிகரெட்டுகளைப் புகைத்துக் கொண்டு, மதுபானங்களைக் குடித்துக்கொண்டு திரிகிறார்கள், மேலும் பெண் பிள்ளைகள் ஒழுக்கக் கேடாக உடையுடுத்துகிறார்கள், மற்ற காரியங்களையும் செய்கிறார்கள், அந்த பெண்பிள்ளைகளும் பையன்களும் நம்மைப் போன்றவர்கள்தான். பாருங்கள்? அவர்களும் மானிடர்கள்தான். அவர்களும் நேசிக்கிறார்கள். அவர்களும் புசிக்கிறார்கள். அவர்களும் குடிக்கிறார்கள். அவர்களும் உறங்குகிறார்கள். அவர்களும் சுவாசிக்கிறார்கள். அவர்களும் மரித்தாக வேண்டும். அவர்கள் நம்மைப் போன்ற ஜனங்கள்தான். அதே சமயத்தில் அவர்கள்… 35 அவர்கள் ஒரு அசுத்த ஆவியால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அது தெரிகிறதில்லை. அது அந்த ஜனங்களின் நிமித்தமாக அல்ல, ஆனால் காரணம் சில சமயங்களில், அவர்கள் பின்பற்றிப் கொண்டிருந்த ஒரு தலைவன் அவர்களைத் தவறான பாதையில் வழிநடத்தியிருக்கலாம்.
1736 இப்பொழுது, பெண்பிள்ளைகளும் பையன்களுமாகிய உங்களுக்கு அதைக் காட்டிலும் நன்றாகத் தெரியும். நீங்கள் அதை அறிவீர்கள். நீங்கள் அதைப் பார்க்கிலும் மேலாக கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் சிறந்த பெற்றோர்களைப் பெற்றுள்ளீர்கள், அதைப் போன்ற ஒரு காரியத்தைச் செய்வதைக் காட்டிலும் நல்ல பயிற்சி உங்களுக்கு தரப்பட்டுள்ளது. நீங்கள் மேலானவைகளை அறிவீர்கள். 37 ஆனால் அவர்களுக்கோ அது தெரியாது, பாருங்கள், ஏனென்றால் அவர்கள் போகிற சபைகள் நவ நாகரீக சபைகளாயிருக்கிறபடியால், நவநாகரீக பாணியில் உள்ளனர். அவர்கள்—அவர்கள் வெறுமனே இந்நாளுக்காக ஜீவிக்கிறவர்கள், மிகவும் பிரபலமானவர்கள். ஓ, என்னே! என்ன…அவர்களுக்கு ஒழுக்கங்கள் நல்லொழுக்கமாகிவிட்டது. புரிகிறதா? எனவே அவர்கள், என்ன…ஒருசமயம் நான் கூறினபடி, அண்மையில், இங்கே சோதோம் கோமோராவைக் குறித்த ஒரு படத்தில், அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்ட இந்த ஸ்திரீ லோத்தை நோக்கி, “நீ ஒழுக்கக்கேடு என்று அழைப்பதை நான் நல்லெழுக்கம் என்று அழைக்கிறேன்” என்று கூறினதைக் கண்டேன். 38 இயேசு, “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” என்று கூறினார். எனவே நாம் மீண்டுமாக அதே நிலைக்கு திரும்பி வருகிறோம்.
1839 நாம் ஒரு சில நிமிடங்களாக வாசித்துக்கொண்டிருந்த இந்த நபரைப் பார்ப்போம். அவன் சிறு வாலிப பிள்ளைகளாகிய உங்களைப் போல, ஒரு நல்ல வீட்டில் பிறந்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. அவன் நல்ல பெற்றோர்களால் வளர்க்கப்பட்டான். ஏனென்றால், இயேசு தேவனுடைய கட்டளைகளை அவனுக்குக் கொடுத்தபோது, அது அதை நிரூபித்தது. அவன், “நான் இவைகளை என் சிறு வயது முதற்கொண்டு கைக்கொண்டிருக்கிறேன்” என்றான். அவன் அதைக் கைக்கொண்டிருந்தான்—கைக்கொண்டு வந்திருந்தான் என்பதை அது காண்பித்தது— அவன் சரியான விதமாக வளர்க்கப்பட்டிருந்தான். அவன் வெறுமனே ஒரு சந்தர்ப்பவாதி அல்ல, உங்களுக்குத் தெரியும், அவன்—அவன் சிறு வாலிப பிள்ளைகளாகிய உங்கள் எல்லாரையும் போன்று எது சரியென்று அறியும்படியாக வளர்க்கப்பட்ட ஒருவனாயிருந்தான். அநேகமாக அவன் ஒரு சிறு பிள்ளையாயிருந்தபோதே, அவனுக்குச் சரியாகக் கற்பிக்கும்படியான, தேவனுக்கு பயந்த ஒரு தாய் தகப்பனின் கீழே வளர்க்கப்பட்டிருந்தான். நல்லது, அது நல்லதுதான்.
1940 ஒருக்கால், அவன் ஒரு சிறு குழந்தையாக இருந்தபோதே, அவன் என்றோவொரு நாளில் மகத்தான ஒரு மனிதனாயிருப்பான் என்று அவனைக் குறித்து அவனுடைய தாயார் உயர்வான நோக்கம் கொண்டிருக்கலாம். அவனுடைய தகப்பனார் தம்மால் கூடுமான ஒரு கல்வியை அவனுக்குக் கொடுக்கும்படி…அவனைப் பள்ளிக்கு அனுப்புவதற்கான பணத்தையுடையவராயிருந்தார். அவன் ஒரு நல்ல படிப்போடு வெளியே வந்து, உலகத்திலுள்ள ஏதோவொன்றாக இருக்க முடியும். இந்த தாய் தகப்பனின் உத்தமத்தைக் கொண்டு, இந்த சிறு பிள்ளைக்கு கல்வி கற்பிக்கப்பட்டது, ஒருக்கால் அவன் நீங்கள் இருப்பது போன்ற பட்டமளிக்கும் நேரத்திற்கு வந்திருப்பான், பாருங்கள், அவன் பள்ளியில் படித்து, தேர்ச்சி பெற்று, சரியான நேரத்தில் தன்னுடைய கல்வியை முடித்திருந்தான். அந்தத் தாய் தகப்பனின் ஜீவியத்திலே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் அவன் ஒருக்கால் இருந்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. அந்த நாட்களில், உங்களுக்கு இருக்கும் வாகனங்களைப் போன்றே, அவனுக்கு அருமையான குதிரைகள் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, நீங்கள் எல்லாரும் பெற்றிருக்கிறதைப் போன்று ஒரு நல்ல தகப்பனையும் தாயையும் அவன் பெற்றிருந்தான், அவர்கள் அதைக் கவனித்துக்கொண்டனர், உங்களுக்கு இருக்கிற நல்ல வஸ்திரங்கள், மற்றும்—மற்றும் உங்களுக்கு இருக்கிற ஒரு காரைப் போன்று அவனுக்கு இருந்தது, மேலும் முடிந்தளவு…நீங்கள் இன்று வாழ்க்கையை அனுபவிக்கும்படி உங்களுக்கு இருக்கிற ஏதோவொன்றைப்போலவே அவனும் வாழ்க்கையை அனுபவித்தான்.
2041 அந்தத் தகப்பனாரும் தாயாரும்…தங்களுடைய மகன் ஒரு சாதாரண மனிதனாக மாறி விடக்கூடாது என்று—என்று, அவன் ஒரு அசாதாரண மனிதனாயிருக்க வேண்டும் என்றும் இடைவிடாமல் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தனர். எல்லா பெற்றோருமே அதை விரும்புவார்கள். இயேசு, “உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக” என்ற அந்த கற்பனையை குறிப்பிடுவதை நீங்கள் கேட்டீர்களா, அதன்பிறகு அதை நிறுத்திவிட்டாரா? பாருங்கள்? பெற்றோர் தங்களால் முடிந்தளவு, தங்களுடைய பிள்ளைகளுக்கு சிறந்ததைச் செய்யவும், அவர்களை கல்வி கற்கச் செய்யவும், ஒருக்கால் தங்களால் பெற்றுக் கொள்ளக் முடியாத காரியங்களை அவர்களுக்குக் கொடுப்பது, அதுவே எந்த பெற்றோருடைய பேராவலாயிருக்கும். என்னுடைய பிள்ளைகளைக் குறித்தும் நான் அந்தவிதமாகத்தான் உணருகிறேன். 42 இப்பொழுது, பள்ளிகளுக்குப் போவதைக் குறித்து நான் சில சமயம் எண்ணுவதுண்டு; இந்த எல்லா காரியங்களும் நடந்து கொண்டிருக்கும் இடமாகிய இந்த உயர்நிலைப்பள்ளிகள், மற்றுமுள்ள காரியங்களுக்குள் பெக்கியையும், சாராவையும், ஜோசப்பையும் அனுப்புவதைக் குறித்து நான் யோசிக்கிறேனே? நான் அவர்களை அழைத்து வந்து, அந்த மலைப்பாங்கான இடங்களுக்குள் சென்று, இந்தியர்கள் ஜீவிப்பது போன்று…மேலும்—மேலும் அங்கே அவர்களை வளர்க்கலாமே என்று எண்ணினேன்.
2143 ஆனால் இங்கேதான் அது உள்ளது. அந்த சிறு பிள்ளையினிடத்தில் இருக்கிற காரியமானது வெளியே வரப்போகிறது. அது எங்கிருந்தாலும் ஒரு பொருட்டல்ல, அது பெற்றிருக்கும் காரியமானது, அது வெளியே வரத்தான் போகிறது. அங்கே உள்ளே பொல்லாத காரியம் இருக்குமானால், அது இந்தியர்களின் முகாமிலும் வெளியில் வந்துவிடும். அங்கே உள்ளே நன்மையானது இருக்குமானால், அதுவும் எந்த முகாமிலும் வெளியில் வரும். புரிகிறதா? அது அந்த பிள்ளைக்குள் என்ன இருக்கிறது என்பதாயுள்ளது, அது அந்த பிள்ளை எதனால் உண்டாக்கப்பட்டுள்ளது என்பதாயுள்ளது, அது உனக்குள் என்ன இருக்கிறது என்பதாயுள்ளது. அநேகமாக நீங்கள் இப்பொழுது எப்படியிருக்கிறீர்களோ, அதுதான் உங்களுடைய மீதமுள்ள ஜீவியத்திலும் இருக்கும். நீங்கள் ஒரு திருப்பு முனையில் இருக்கிறீர்கள். 44 என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்துவில் எண்பத்தியாறு சதவீத மனமாற்றங்கள் இருபத்தியொரு வயதிற்கு முன்னர் ஏற்படும் மனமாற்றங்கள்தான். புள்ளிவிவரங்கள் அதைக் காட்டுகின்றன. அது அதனைக் காட்டுகிறது. கிறிஸ்துவிடம் வருகிற எண்பத்தியாறு சதவீதம் பேர்கள், அவர்கள் இருபத்தியொரு வயதிற்கு முன்னரே வருகிறார்கள். நீங்கள், அந்த வயதை நீங்கள் கடந்த பிறகு, நீங்கள் அதிகமாக குறிப்பிட்ட வடிவில் உருவாகிவிடுகிறீர்கள் அல்லது உங்களுடைய வழிகளில் இறுகி பொருத்தப்பட்டுவிடுகிறீர்கள். ஓ, அது சம்பவிக்கக் கூடிய காரியம் தான், நிச்சயமாக. அவர்கள் எழுபது, எண்பது வயதுகளிலும் கிறிஸ்துவிடம் வருகிறார்கள், ஆனால் அது மிகவும் அரிதானதாயுள்ளது. பாருங்கள்? 45 நீங்கள் வாலிப பிள்ளைகளாக இருக்கும்போதே உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்றும், உங்களுடைய ஜீவியத்தில் என்ன சாதிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றும் உங்களுடைய குறிக்கோள்களை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதைக் குறித்து சிந்தியுங்கள். நீங்கள் சிந்திக்கும்போது, நிச்சயமாகவே, உங்களுடைய சிந்தையானது, அது உங்களுடைய சிந்தைக்குள் அறியப்படாத ஏதோவொன்றினால் அளிக்கப்பட்டு, அது—அது உங்கள் சிந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதன்பிறகு அது சிந்தைக்குள் உண்டாகும்போது, பின்பு அதை நீங்கள் பேசி, அதைத்தான் நீங்கள் செய்யப் போகிறீர்கள். அதன்பிறகு உங்களுடைய குறிக்கோள்களானது அதற்கு உங்களை நடத்துகிறது.
2246 எனவே, அந்த தகப்பனும் தாயும் கூட, இந்த வாலிபனைக் குறித்து எதிர்பார்ப்போடு இருந்தார்கள்…அவனுடைய குறிக்கோள்களானது பெரியதும்; அதை சாதிக்கும்படியாக போதுமான பணத்தை பெறுவதுமாக இருந்தது. அதன்பிறகு, இந்த—இந்த வாலிபன் அந்த தருணத்தைப் பெறும்படியாக ஜெபித்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் பாருங்கள், அவர்கள்—அவர்கள் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருந்தனர். அவனுக்கு அருமையான குதிரைகள் இருந்திருக்கலாம், மேலும்—மேலும் அவன் ஒருக்கால் பெண்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவனாயிருந்திருக்கலாம். 47 மனிதனை எது தொடருகிறதோ, அதுவே ஸ்திரீகளையும் தொடருகிறது, இதற்கு நேர்மாறாகவும் அவ்விதமே உள்ளது, பாருங்கள், ஏனென்றால் நாம் மானிட ஜீவியத்தைக் குறித்தும், ஆத்துமாக்களைக் குறித்தும், புருஷர் மற்றும் ஸ்திரீகள் இருவரைக் குறித்துமே பேசிக்கொண்டிருக்கிறோம். 48 மேலும் அதன்பிறகு, அந்த வாலிபன் பெற்றிருந்த இந்த எல்லா நல்வாய்ப்புகளுக்கும் பிறகு, பாருங்கள், அவன், “வசதி படைத்தவர்” என்று நாம் அழைக்கிறவனாய் மாறினான். அங்கே அதிகமாக எதைக் குறித்தும் அவன் கவலைப்பட வேண்டியதாயிருக்கவில்லை. அவனுடைய பெற்றோர்களிடம் பணமிருந்தது. அவனிடம் இருந்தது…அவன் மிகவும்…அவன் ஒரு தலைவனாக ஆனான். அவன் வாலிப, பணக்கார வாலிப தலைவனாயிருந்தான்…என்று வேதாகமம் அதை இங்கே குறிப்பிடுகிறது. மேலும் நாம் பார்க்கிறோம்…அவன் வாலிப வயதிலே, அவன் தன்னுடைய இளம் வாலிபப்பருவத்தில் இருந்திருக்கலாம், அப்போதுதான் பள்ளிப்படிப்பை விட்டு வெளியே வந்தவனாகவோ, அப்போது பட்டம் பெற்றவனாகவோ, ஒருக்கால், சில வாரங்களுக்கு முன்போ அல்லது ஏதோவொன்றாகவோ இருந்திருக்கக்கூடும், அவன்…ஆனான். அவன் ஒரு தலைவனாக இருந்தான், அவன் இருதயம் வாஞ்சித்த யாவுமே அவனிடம் இருந்தது.
2349 அந்த வாலிப பையன் ஒழுங்கற்ற நவீன ரிக்கியாக இருக்கவில்லை. அவன் ஒரு அருமையான பையனாயிருந்தான். லூக்கா அதைக் குறித்து எழுதும் போது, அல்லது மாற்கு அதைக் குறித்து எழுதும்போது, அது மாற்கு தான் என்று நான் நினைக்கிறேன், இயேசு அவனிடத்தில் அன்புகூர்ந்த காரணத்தால், அவனை நோக்கிப் பார்த்து பெருமூச்சுவிட்டார் என்று எழுதினான் என்று நான் நினைக்கிறேன். பாருங்கள்? அந்த வாலிபனைக் குறித்து ஏதோவொன்றிருந்தது. இந்த வாலிபனிடம் ஒரு அருமையான நற்பண்பு இணைந்திருந்தது. அவன் எங்கிருந்து வந்திருக்கிறான்? தேவனுடைய கற்பனைகளை அவனுக்குப் போதித்து, அவன் அவைகளை கைக்கொள்கிறானா என்று பார்க்கிற ஒரு அருமையான குடும்பத்திலிருந்து அவன் வந்திருந்தான். அவன் சிறு வயது முதற்கொண்டே, கற்பனைகளைக் கைக்கொண்டு வந்திருந்தான். 50 அந்த வாலிபனுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது; அவன் நித்திய ஜீவனை விரும்பினான். அவன், “நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
2451 பாருங்கள், இந்த உலகத்தில் நீங்கள் எல்லாவற்றையும் பெற்றிருப்பினும், உங்களுக்கு உட்புறத்திலிருக்கிற ஆத்துமா ஏதோவொன்று உங்களுக்கு தேவையாயுள்ளது என்றும், அதை நீங்கள் பெற்றிருக்கவில்லை என்றும் உங்களிடம் கூறுகிறது. வெறுமனே செல்வத்தின் மூலம்…இல்லை, அது எப்பொழுதும் செல்வமாய் மாத்திரம் இருக்க வேண்டியதில்லை. அது பிரபலமாகவும், அழகாகவும் இருக்கிற ஏதோவொரு பெண்ணாக இருக்கலாம், அவள் அழகாயிருப்பதாக எண்ணிக்கொள்ளுகிற தன்னுடைய அழகை அவள் பெற்றிருக்கலாம். அவள் ஒருக்கால் பள்ளியிலேயே மிகவும் பிரபலமானவளாக இருக்கலாம். ஒருக்கால் தான் விரும்புகிற எந்த பெண்ணையும் அடையக்கூடிய பையனாக அது இருக்கலாம். அவன் ஒருவிதமாக பாதுக்காப்பாக இருப்பதாக உணரலாம். அது பாதுகாப்பல்ல. அது வயல் நிலத்திலுள்ள மலரைப்போல வாடி வதங்கிப் போய்விடும். பாருங்கள்? அது போய்விடும். அது அதிக காலம் நீடிக்காது. சூரியனானது அப்படியே ஒருசில தடவைகள் சுற்றிவரும்போதே, அது வாடி வதங்கிப் போய்விடும், அப்பொழுது நீங்கள் நித்தியமாக ஜீவிக்க வேண்டிய ஒரு ஆத்துமாவைப் பெற்றிருக்க வேண்டும்.
2552 இந்த வாலிப பையனிடம் ஒரு அருமையான நற்பண்பு இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவன் கர்த்தராகிய இயேசுவுக்கு தன்னையே ஒப்புக்கொடுத்தான் என்பதையும், அவன் முழங்காலிட்டுப் பணிந்துகொண்டான் என்பதையும் அறிகிறோம், அவன், “நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். 53 அவர், “தேவன் ஒருவர் மாத்திரமே நல்லவர் என்று நீ அறிந்திருக்கும்போது,” என்று கூறி, “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?” என்றார். பாருங்கள்? அந்த வாலிபன் இதில் என்ன வெளிப்படுத்தினான்? அதாவது அவர் தேவனாயிருந்தார். புரிகிறதா? அவர், “கற்பனைகளை அறிந்திருக்கிறாயே. அவைகளைக் கைக்கொள்” என்றார். அப்பொழுது, அவன், “போதகரே, எந்த கற்பனைகளை?” என்று கேட்டான். 54 அவர், “‘உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக’ என்பதோடுள்ள மற்ற கற்பனைகளையும்,” என்றார். 55 அவன், “இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன். பாரும், நான் இதை செய்திருக்கிறேன்” என்றான். 56 அவர், “இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவுண்டு. நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடுத்து விட்டு, என்னைப் பின்பற்றி வா” என்றார். 57 என்னே ஒரு தருணம்! பேதுரு, யாக்கோபு, அல்லது யோவானோடு, அவனும் கூட அவர்களில் ஒருவனாக இருந்திருக்க முடியும். பாருங்கள், அந்த வாலிபனுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு சரியான விதமாக வளர்க்கப்பட்டிருந்தான், அவனை உபயோகப்படுத்துவதற்காக அவன் தன்னை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்திருந்தான். அவனிடமிருந்த உள்ளார்ந்த ஆற்றல்கள் யாவற்றையும், உபயோகப்படுத்துவதற்கு, அநேகமாக பள்ளிப்படிப்பைக் கொண்டும், வாலிப வயதைக் கொண்டும், ஜசுவரியத்தைக் கொண்டும், செல்வாக்கைக் கொண்டும், அவனால் சுவிசேஷத்தைப் எடுத்து ரைக்க முடியும், இருப்பினும் அவன் அதைப் புறக்கணித்து விட்டான். அந்த வாலிப பையனுக்கு அது என்ன ஒரு—என்ன ஒரு மடத்தனமான காரியமாக இருந்தது! பாருங்கள்?
2658 “எனனைப் பின்பற்றிவா.” இப்பொழுது, பாருங்கள், அவன் யாரோ ஒருவரைப் பின்பற்ற வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, அவனோடு சேர்க்கப்பட்டிருந்த அந்த ஜனங்களுடைய செல்வாக்கையோ, ஏதோவொரு வாலிப பெண்ணின் செல்வாக்கையோ, அவனோடு சேர்க்கப்பட்டிருந்த ஒரு கூட்ட பையன்களுடைய ஏதோவொரு செல்வாக்கையோ, பள்ளியில் இருந்த அவனுடைய சக மாணவர்களையோ, அல்லது இயேசு கிறிஸ்துவையோ பின்பற்ற வேண்டியதாயிருந்தது. அவனுக்கு எல்லா நற்குணங்களும் இருந்தபோதிலும், அவனிடம் நித்திய ஜீவன் இல்லை என்பதை அவன் அறிந்திருந்தான். பிள்ளைகளே, நீங்கள் அதைக் குறித்துத்தான் சிந்திக்க வேண்டும். புரிகிறதா? 59 இப்பொழுது இன்றிரவு அந்த வாலிபனை நோக்கிப் பாருங்கள், அவனால் என்னவாக இருக்க முடிந்தது, அவன் என்னவாக இருக்கிறான், இன்றிரவு அவன் என்னவாக இருக்கிறான். அவன் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறான். அவன் ஒரு மனிதனாக இருந்தான். அவன் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறான். அவன் நியாயத்தீர்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறான். அந்த நாளிலே நியாயத்தீர்ப்பை முகமுகமாய் எதிர்கொள்ளும்படி காத்துக்கொண்டிருக்கிறான், அவன் புறக்கணித்த அதே நல்ல தருணம் வாலிப பிள்ளைகளாகிய உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஏறக்குறைய அதே சூழ்நிலையில்; அருமையான வாலிபப் பிள்ளைகள், நல்ல குணநலன் உள்ளவர்கள், உங்களுக்கு அருமையான தகப்பன்மார்களும் தாய்மார்களும் உண்டு, உங்களுக்கு என்ன இருந்தாலும், நீங்கள் விரும்பினாலொழிய வேலை செய்ய வேண்டியது கூட இல்லை. பாருங்கள்?
2760 ஆனால் அதனோடு கடந்து செல்லுகிற வேறு ஏதோவொன்று உள்ளது. ஏதோவொன்று அதனோடு கூட செல்கிறது. இன்றிரவு, அந்த வார்த்தையானது, ஒருபோதும் மரித்துவிடவில்லை. “என்னைப் பின்பற்றிவா” என்பது இன்னமும் ஒவ்வொரு வாலிபனுக்கும், ஒவ்வொரு வாலிப் பெண்ணுக்கும் ஒரு சவாலாகவே இருக்கிறது. புரிகிறதா? 61 வார்த்தைகள் மரிப்பதில்லை. நீங்கள் எப்பொழுதாவது எதையாவது பேசினால், சற்று ஞாபகம் கொள்ளுங்கள், அது உங்கள் காரினுள் வைத்து இரகசியமாக பேசினாலும், அது பிரசங்க பீடத்தில் பேசப்பட்டாலும், உங்கள் ஆண்நண்பருடனோ, அல்லது பெண்சிநேகிதியோடே தெருக்கோடியில் பேசப்பட்டாலும், அது எங்கு பேசப்பட்டாலும், அது ஒருபோதும் மரித்துப் போவதில்லை. அது—அது என்றென்றுமாக உயிருள்ளதாயிருக்க வேண்டும்.
2862 நான் அந்த பெண்ணைக் கண்டபோது, நான்…அன்றொரு இரவு தரிசனத்தில், அந்த அழகான வாலிப பெண்ணாகிய, ஹாலிவுட் நடிகையைக் கண்டேன், அவள் மரித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன், உதவியைப் பெற்றுக் கொள்ளும்படியாக ஏதோவொன்றை அடைய முயற்சி செய்து கொண்டிருந்தாள். அவள் மாரடைப்பினால் மரித்துப் போனாள், அவள்தான் செல்வி மன்றோ. அது இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த காரியமாகும், அவள் மரித்துக்கொண்டிருப்பதைக நான் கண்டேன். நான் கண்ட இரண்டு நாட்கள் கழித்து அவள் மரித்துப்போனாள். 63 பிறகு, அன்றொரு இரவில், அந்த பெண்ணின் சத்தத்தை நான் கேட்டேன். எப்படி? சிறு பிள்ளைகள் என்னிடம், “அப்பா, நீங்கள் மறுபடியும் திரும்பி வராத நதிக்கு என்ற இடத்திற்கு எல்லா நேரமும் போகிறீர்களே.” இன்றிரவு, “அவர்கள் அதன் பேரில் ஒரு படக்காட்சியைத் திரையிடுகிறார்கள்” என்று கூறிக் கொண்டிருந்தனர். ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, அது ஒரு குறிப்பிட்ட இரவில் திரையிடுவார்கள் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். அப்பொழுது நான், “பாருங்கள், நான் அதைக் காண விரும்புகிறேன், ஏனென்றால் நான் அந்த நதியில் இரண்டு அல்லது மூன்று முறை இருந்திருக்கிறேன்; ஏறக்குறைய ஐந்து தடவைகள் என்று நினைக்கிறேன்” என்று எண்ணினேன். பாருங்கள், நான்—நான் அதைக் காண விரும்பினேன். 64 செல்வி மார்லின் மன்றோ அதில் நடித்திருந்தாள். பாருங்கள், அது தரிசனத்தில் நான் கண்ட பெண் தான். அவள் அங்கே அந்தப் படத்தில் இருந்தாள். மேலும் அந்த நடிப்புகள், மறுபடியும் திரும்பி வராத நதியில் அவள் நடித்திருந்த அதே நடிப்பு, அநேகமாக பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அவள் அந்த படத்தில் நடித்திருந்தாள். அது ஒரு பழைய படமாயிருந்தது, ஒருக்கால் இருபது வருடங்களுக்கு முன்பாயி ருக்கலாம். அவள் மரித்து இரண்டு வருடங்களாகிறது. அவளுடைய ஒவ்வொரு நடிப்பும், ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் உயிருள்ள தாயிருந்துகொண்டிருக்கின்றன. புரிகிறதா? அது மீண்டும் உயிருள்ள தாயிருக்கும் அளவுக்கு, அது இன்னமும் காந்த ஒலிநாடாவில் பதிவுசெய்யப்ப்பட்டிருந்தது.
2965 அது மாத்திரமல்ல, ஆனால் நாம் கூறுகிற யாவுமே ஜீவிக்கிறது. நாம் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் மரிக்க முடியாது. இப்பொழுது இந்த அறையினூடாக வார்த்தைகளும், ஜனங்களின் ரூபங்களும் வந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி அதைக் கிரகித்துக்கொள்கிறது. நீங்கள் இங்கே பேசக் கூடியதை, அதே வினாடியில் உலகத்தைச் சுற்றிலுமுள்ளவர்களால் உங்கள் சத்தத்தைக் கேட்க முடியும். நீங்கள் அதை இந்த அறைக்குள் கூட கேட்பதற்கு முன்பே, அது மின்னணு முறையினால் உலகத்தைச் சுற்றிலும் போகிறது. 66 மேலும் தேவனுடைய மகத்தான திரையானது அதை கிரகித்துக்கொள்கிறது. நீங்கள் அசைகிற ஒவ்வொரு அசைவும், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலும், நீங்கள் அதை நியாயத்தீர்ப்பில் சந்தித்தாக வேண்டும். புரிகிறதா? எனவே, வாலிப பிள்ளையே, அதை நிறுத்துவதற்கு இது ஒரு நல்ல காரியமாகும், இந்தக் காரியங்களைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், பாருங்கள், ஏனென்றால் நீங்கள் அதை மீண்டும் சந்திக்கப் போகிறீர்கள். புரிகிறதா?
3067 நாம் இந்த வாலிபனைக் குறித்தும், அவன் பெற்றிருந்த வாய்ப்புகளைக் குறித்தும் ஆராய்ந்து பார்ப்போம், அவனுடைய ஸ்தானத்தில் உங்களை நீங்களே பொருத்திப் பாருங்கள். பெக்கியைப் போலவும், மார்லினைப் போலவும் இருக்கிற ஒரு சிறு பெண்ணே, அவனுடைய ஸ்தானத்தில் நீ நின்று கொண்டிருந்தது போலவே, அதேவிதமாக, இன்னும் உயிருள்ள தாயிருக்கிற அந்த சத்தத்தை உன்னால் கேட்க முடிந்தது. 68 அது இன்னமும் உயிருள்ள தாயிருக்கிறது. அது இன்னும் அசைந்துகொண்டிருக்கிறது. விஞ்ஞானமானது, “இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அவர் பேசின அவருடைய சத்தத்தை இப்பொழுதிலிருந்து இருபது வருடங்களில் அவர்களால் கிரகித்துக்கொள்ள முடியும்” என்று கூறுகிறது. அது இன்னும் ஜீவிக்கிறது, கடலில் போடப்பட்ட ஒரு கூழாங்கல்லைப் போன்று, அந்த அலையானது ஒருபோதும் ஒய்ந்துபோவதேயில்லை. அது ஆயிரக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து, கரையை அடைந்து, மீண்டும் திரும்பி வருகிறது.
3169 அதுபோலவே சத்தமானது ஒருமுறை காற்றில் பேசப்படும்போது, ஒருபோதும் மரித்துப் போவதில்லை. நியாயத்தீர்ப்பில் உங்களால் எதையும் கூற முடியாது. அது அங்கே இருக்கிறது. “என்னைப் பின்பற்றிவா” என்று அந்த வாலிபனை அழைத்த இயேசு கிறிஸ்துவின் சத்தம் அங்கே திரையில் காட்டப்படும், அவன் அதைப் புறக்கணித்தது, துக்ககரமானது, ஏனென்றால் அவன் அந்த மகத்தான உடைமையைக் கொண்டிருந்தான். பாருங்கள்? நாமும் கூட…அது எப்போதுமே பணமாயிருக்க வேண்டியதில்லை. அது வேறு காரியங்களாகவும் இருக்கலாம். பாருங்கள்? நாம் அந்த அழைப்புக்குச் செய்வதைக் காட்டிலும், நாம் மிக அதிகமாக நேசித்து வைத்திருக்கிற எதுவுமே நமக்கு ஒரு பணத்தைப் போன்றே ஆகிவிடுகிறது, பாருங்கள். அது நம்மைக் கெடுக்கிற ஏதோவொன்றாகிவிடுகிறது.
3270 இப்பொழுது நாம் சிறிது அவனைப் பின்தொடர்ந்து போவோம். அவன் அதைப் புறக்கணித்தபோது, என்ன சம்பவித்தது? அந்த கிறிஸ்துவின் சத்தத்திற்கு அவன் செவிகொடுக்கவில்லை. அவன் தன்னுடைய நண்பர்களோடு சென்றுவிட்டான். 71 வாலிபப் பிள்ளைகளே, நீங்கள் எல்லாரும் அருமையான பிள்ளைகள், நீங்கள் நண்பர்களோடு சேர்ந்திருக்க வேண்டும்தான், ஆனால் நீங்கள் கொண்டிருக்கும் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கவனியுங்கள். அந்த நண்பன் கிறிஸ்துவைப் பின்பற்றிக்கொண்டிருந்தால், அந்த நண்பனோடு செல்லுங்கள். நீங்களும் கூட கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள். ஆனால் அவன் அவ்வாறில்லையென்றால், அவனோடு சேர்ந்துகொள்ள வேண்டாம். 72 நாம் அவனைக் கவனிப்போம். அவன் அநேகமாக அவனுடைய நண்பர்களைப் பின்பற்றிப் போனான் என்பதை நாம் கண்டுகொள்கிறோம். அவன் ஒரு மகத்தான தலைவனானான். அப்பொழுது அவன் ஒரு மகத்தான தலைவனாயிருந்தான். அதன்பிறகு, அவன்—அவன்—அவன் தன்னுடைய பொருட்களை வைப்பதற்காக கூடுதலான களஞ்சியங்களைக் கட்ட வேண்டியிருந்த அளவுக்கு அவன் மிகவும் செழிப்படைந்தான் என்பதை நாம் காண்கிறோம். பிறகு அவன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான், அவனுக்கு வயதான பிறகு, வாலிப வயதின் கவலைகளும் காரியங்களும் கடந்து போய்விட்டிருக்க, அவன் செய்திருந்ததெல்லாம், ஒருக்கால் மகிழ்ச்சியான பொழுபோக்காயிருந்திருக்கலாம்.
3373 என்னைப் போன்றோ, என்னுடைய மனைவியைப் போன்றோ உள்ள ஒரு வயதான மனிதனான அல்லது ஒரு வயதான பெண்மணியான உங்கள் தாய்மார்கள் மற்றும் தகப்பனைப் போன்றவருக்கு, தாங்கள் சிந்திக்கக் கூடிய எதுவும் இருப்பதில்லை. வாலிப பையன்கள் மற்றும் வாலிப பெண்களாகிய உங்களைப் போன்று அவர்கள் வெளியே சென்று மற்றும்—மற்றும் தெருக்களில் மேலும் கீழும் ஓட விரும்புவதில்லை, அதைச் செய்ய அவர்களால் முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். உங்களுடைய மனைவி அல்லது உங்களுடைய கணவன் யாராக இருக்கப்போகிறார்கள் என்பதற்கான சந்திப்புகள், அல்லது, பாருங்கள், அவர்கள் தங்களுடைய சிந்தையில் அதைக் கொண்டிருப்பதில்லை. அவர்களுக்கு, அவர்களுக்கு பிள்ளைகள் உண்டு, அவர்கள் அதிலேயே ஆர்வங்கொண்டுள்ளனர். நாளைய தினம், நாளைய என்று ஒன்று இருக்குமானால், நீங்கள் எல்லோரும் அப்படியே இருக்கப் போகிறீர்கள். புரிகிறதா? 74 மேலும் இந்த நபரைப் பாருங்கள், அதன்பிறகு, ஒருக்கால்…அவன் ஒருக்கால் விவாகம் கூட பண்ணியிருக்கமாட்டான். ஆனபோதிலும், அவன் ஒரு மகத்தான தலைவனாயிருந்தான். மேலும் அவன் அமைத்தான்… 75 இன்றும், எருசலேமில் இன்னும் கூட அவர்கள் வீட்டின் மேலிருந்து புசிக்கிறார்கள், இந்த நேரத்திலும், வெளியே சாயங்காலத்தில், குளிர்ச்சியாயிருக்கும்போதும், அவ்வாறு செய்கிறார்கள். மேலும் அவனோடு வேறொரு கதாபாத்திரம் நம் மனக்கண் முன்பாக கொண்டு வரப்படுகிறதைக் நாம் காண்கிறோம்: ஒரு பிச்சைக்காரன்.
3476 மேலும் அந்த மனிதன், அண்டைவீட்டாரைக் கனம்பண்ண கற்பிக்கப்பட்டவனாய் வளர்க்கப்பட்டிருந்தான், பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டுமென்றிருப்பதை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். பாருங்கள், கிறிஸ்துவின் அந்த அழைப்பை அவன் புறக்கணித்தன் மூலமாக, இறுதியில்… அதைப் போன்று காணப்பட்ட, அவ்விதமான ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டிருந்த ஒரு பையன், பிறரைக் கனம்பண்ணுகிற குணமானது அவனை விட்டு ஒருபோதும் அகன்று போயிருக்காது, ஆனால் அது அவனை விட்டுப் போய்விட்டது. அது போய்விட்டது. 77 லாசரு என்ற பெயருடைய ஒரு மனிதன் வாசலருகே படுத்திருந்து, அவனிடம் உணவுக்காகப் பிச்சை கேட்டுக்கொண்டிருந்ததோ, வீணாயிருந்தது. பெருக்கிபோடப்பட்ட துணிக்கைகளை அவன் புசித்துக் கொண்டிருந்தான், அது அந்தப் பிச்சைக்காரனுக்குப் போடப்படுவதல்ல, ஆனால் நாய்களுக்கு போடப்படுவதைத் தான் அவன் புசித்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய் இருந்தான். ஆனால் இந்த மனிதனோ சமுதாயத்தில் மெருகேற்றப்பட்ட வனாயிருந்தான், ஆகையால், அதற்கு மேலும் அவனுக்கு எந்த பரிதாப உணர்வும் இல்லாதிருந்தது. இவனோ உணர்வற்று விறைத்துப் போனவனாயிருந்தான், ஏனென்றால் கிறிஸ்து கொடுத்த அந்த உரிமை சலுகையை அவன் புறக்கணித்திருந்தான். 78 ஒருக்கால் ஒரு சாயங்கால நேரத்தில், அருமையான மதுபானங்களோடு தன்னுடைய மது விருந்தை மகிழ்ச்சியாய் புசித்துக்கொண்டிருந்திருப்பான், விலையுயர்ந்த அணிகலன்களை அணிந்திருந்த அழகான பெண்களும், அதைப் போன்ற காரியங்களும் அவனைச் சூழ இருந்தன, அவனுடைய இருதயம் வாஞ்சித்த எல்லாவற்றைக் கொண்டும் மதுவிருந்து நடந்திக் கொண்டிருந்தான். ஒரு பிச்சைக்காரனோ வாசலருகே படுத்திருந்தான். 79 அடுத்த நாள் காலையில், பொழுது விடிவதற்கு முன்பே, அவன் நரகத்தில் இருந்தான், லாசரு வந்து தன்னுடைய நாவில் தண்ணீர் விட வேண்டும் என்று கதறி சத்தமிட்டுக்கொண்டிருந்தான். காட்சியானது மாறினது.
3580 நீங்கள் கவனியுங்கள், அவன், “தகப்பனாகிய ஆபிரகாமே” என்று கூறினபோது, இப்பொழுது, ஆபிரகாம் யூதர்களின் தகப்பனாயிருந்தான் என்பதை அப்பொழுதும் அவன் நினைவுகூர்ந்தான். அவன், “தகப்பனாகிய ஆபிரகாமே, அந்த பிச்சைக்காரனாகிய லாசருவின் விரல்களில் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வந்து, என் நாவில் விடும்படி அவனை அனுப்பும். இந்த அக்கினி ஜூவாலைகள் வேதனைப்படுத்திக்கொண்டிருக்கிறதே” என்றான். 81 மேலும் அவன் கூறினான்…ஆபிரகாமோ, “இதை, என்னால் அதைச் செய்ய முடியாது” என்று மட்டுமே கூறி, “இவை எல்லாவற்றையும் தவிர, நீ பார், உன்னுடைய ஜீவியத்தில் உனக்கு தருணமிருந்தது” என்றும் கூறினான். 82 அவனுக்கு எப்போது அந்த தருணம் இருந்தது? இயேசு, “என்னைப் பின்பற்றி வா” என்று கூறினார். ஆனால் அவனோ அதைப் புறக்கணித்துவிட்டான். அவன் பணம் சம்பாதிக்கக்கூடிய வழியில் சென்றுவிட்டான். அது சரிதான், பணம் சம்பாதிப்பதில் தவறொன்றுமில்லை, ஆனால் நீங்கள் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும்போது இயேசுவைப் பின்பற்றுங்கள். புரிகிறதா? அவனோ ஜனக்கூட்டத்தினரோடு, வேறொரு வழியில் சென்றுவிட்டான். 83 அவன் கூறினான், நீங்கள் கண்டறிவதோ, ஆபிரகாம், “அதுவுமல்லாமல், உனக்கும் அவனுக்குமிடையே ஒரு பிளவு உண்டாக்கப்பட்டிருக்கிறது, அதாவது எந்த மனிதனும் ஒருபோதும் கடந்து வந்ததில்லை, ஒருபோதும் கடந்து வரவேமாட்டான். அங்கேயிருக்கிறவர்கள் இங்கே வர முடியாது, இங்கிருக்கிறவர்கள் அங்கேயும் போக முடியாது. அந்த பிளவு உண்டாக்கப்பட்டிருக்கிறது. எந்த மனிதனும் கடந்து வந்ததில்லை, அல்லது கடந்து வரப்போவதுமில்லை” என்று கூறினான்.
3684 அதன்பிறகு அவனைக் கவனியுங்கள். அவன் அப்பொழுது ஒரு சுவிசேஷகனாக இருக்க விரும்புகிறான். இயேசு தம்மைப் பின்பற்றும்படி அவனுக்கு கொடுத்திருந்த அழைப்பு, அவன் ஒரு வாலிபனாயிருக்கையில், ஒரு ஆத்தும ஆதாயம் செய்யும்படியான அழைப்பு அவனிடம் மீண்டும் திரும்பியது. அவன் அதை நினைவுகூர்ந்தான், அதாவது அவனுக்கு ஐந்து சகோதரர்கள் இங்கே பூமியில் இருந்தார்கள், அவர்கள் இந்த இடத்திற்கு வர அவன் விரும்பவில்லை. 85 அவன், “அப்படியானால், என்னுடைய சகோதரர்களும் இந்த வழியில் வரக்கூடாது என்று கூறும்படி லாசருவைத் திரும்ப அனுப்பும்” என்றான். வேறு வார்த்தைகளில் கூறினால், “‘என்னைப் பின்பற்றி வா’ என்ற அழைப்பை ஏற்றுக்கொள்ளுதல்” பாருங்கள்? ஆனால் ஆபிரகாமோ, “அவர்கள், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றான். 86 அவன், “ஆமாம், லாசருவைப் போல, மரித்தோரிலிருந்து ஒருவன் உயிர்த்தெழுந்து, திரும்பிச் சென்று அவர்களிடம் கூறினால், நலமாயிருக்கும்” என்றான். 87 நீங்கள் பாருங்கள், நாம் மரித்த பிறகும், அப்பொழுதும் நீங்கள் சுயநினைவுடையவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையே அது காட்டுகிறது. அவன் அதை நினைவுகூர்ந்தான். ஆபிரகாமோ, “மகனே, உன்னுடைய நாட்களில் நடந்ததை ஞாபகங்கொள்” என்றான். புரிகிறதா? உங்களுக்கு அப்பொழுதும் ஞாபகமிருக்கும். நீங்கள் உங்கள் நினைவை இழந்து போவதில்லை. உங்களுக்கு ஞாபகமிருக்கும். 88 மனிதன் கொண்டிருக்கக்கூடிய நினைவுகள், அப்பொழுதும் அந்த இடத்திலும் அதேவிதமாக இருக்கும், “என்னைப் பின்பற்றி வா” என்று இயேசு கூறினதை அவன் கேட்டிருந்த அத்தருணத்தை அவன் நினைவுகூர்ந்தான். ஆனால் அவனோ தவறான நபரை, தவறான கூட்டத்தைப் பின்பற்றினான். அவன் தவறான கூட்டத்தில் சேர்ந்து கொண்டு, தவறான இடத்திற்குப் போய், தவறான நித்தியத்தில் முடிந்து போனான்; அந்நாளில் அவன் தேவனிடமிருந்து என்றென்றுமாக நிர்மூலமாக்கப்படுவான்.
3789 இயேசு குறிப்பிடத்தக்க மகத்தான ஒரு வார்த்தையைக் கூறினார், “‘மரித்தோரிலிருந்து ஒருவன் திரும்ப எழுந்து போனாலும், அப்பொழுதும் அவர்கள் நம்ப மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணம் உண்டு, அவர்கள் அதற்கு செவி கொடுக்காவிட்டால், ஒருவன் மரித்தோரிலிருந்து எழுந்து போனாலும் அப்பொழுதும் அவர்கள் செவிகொடுக்கமாட்டார்கள். அவர்கள் நம்பமாட்டார்கள்’” என்றார். 90 ஏன்? ஏன்? நியாயப்பிரமாணம் அவ்விதமான ஏதோவொன்றைக் கூறினதா? ஆம். “பிறர் உங்களுக்கு எப்படி செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” அவன் நியாயப்பிரமாணத்தின் கீழாக ஜீவித்திருந்தான். ஆனால் அவனோ அந்த பிச்சைக்காரனை வாசலருகே மரித்துப்போக விட்டு விட்டான். பாருங்கள்? அவன்—அவன் தேவனுடைய கற்பனைகளின் கீழாக ஜீவித்திருந்தான், அதேசமயத்தில் அந்த மகத்தான நித்திய ஜீவனைக் காணத் தவறிவிட்டான்.
3891 வாலிபப் பிள்ளைகளே, நீங்கள் ஒவ்வொருவரும், என்னுடையவர்களைப் போன்று காணப்படுகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே என்னுடைய குமாரரையும் குமாரத்திகளையும் போன்று காணப்படுகிறீர்கள். ஒருவிதத்தில், நீங்கள் அவ்வாறு தான் இருக்கிறீர்கள், பாருங்கள், ஆவிக்குரியபிரகாரமாக பேசிக் கொண்டிருக்கிறேன். அது உண்மை. தேவனாகிய கர்த்தர் உங்கள் ஆத்துமாக்களை என்னுடைய பாதுகாப்பில் வைத்திருக்கிறார், ஏனென்றால் நீங்கள் வந்து, எனக்குச் செவிகொடுக்கிறீர்கள். நீங்கள் என்னை நம்புகிறீர்கள். பாருங்கள்? வார்த்தையின் ஒரு அரத்தத்தில், நீங்கள் என்னுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள். அது உண்மை. 92 தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுதல் என்பது ஒரு மகத்தான காரியம் என்பதை எப்பொழுதுமே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நல்ல வீட்டில் வளர்க்கப்படுவது என்பது தேவனிடமிருந்து வருகிற ஒரு சுதந்தரம். உங்களுக்கு இருப்பதைப் போன்று நற்பண்புகளுடன் கூடிய அருமையான வாலிப் பிள்ளைகளாய் இருப்பதென்பது நல்லது. கல்வியைப் பெற்றுக் கொள்வதென்பது அற்புதமானது. இந்த சுதந்திரமான தேசத்தில் ஜீவிப்பது கூட அற்புதமானதுதான். நாம் அநேக காரியங்களுக்காக நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். 93 ஆனால் நீங்கள் சுதந்தரித்துக் கொள்ளாத ஒரு காரியம் உண்டு, நீங்கள் அதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். அதுதான் நித்திய ஜீவன். இயேசுவைப் பின்பற்றுவதன் மூலமும், ஒரு மறுபடியும் பிறந்த அனுபவத்தின் மூலமும் மாத்திரமே உங்களால் அதைச் செய்ய முடியும். அதைப் புறக்கணித்துவிடாதீர்கள்.
3994 ஒரு சமயம் நான் ஒரு மனிதனைக் குறித்த ஒரு சிறு கதையைக் கேட்டேன், ஓ, அவன் ஏழையாக இருந்தான். மேலும் அவன்—அவன் எப்பொழுதுமே விரும்பினதோ…அது ஒரு சிறு கற்பனைக் கதையைப் போன்றது. ஆயினும் அது எப்போதுமே என்னுடைய மனதில் பதிந்திருந்தது. ஒருநாள் அவன் ஒரு மலரைப் பறித்தான். அந்த மலரானது மந்திர மலராயிருந்தது, அந்த மலரோ அவனிடத்தில் பேசினது, அது, “உன்னுடைய வாழ்நாளெல்லாம் தரித்திரமாய் இருந்து வந்திருக்கிறாய்” என்றது. மேலும் அது, “இப்பொழுது நீ என்ன விரும்பினாலும் கேள், அது உனக்குக் கொடுக்கப்படும்” என்றது. 95 அப்பொழுது அவன், “அதோ அங்கேயிருக்கிற அந்த மலை திறக்கப்பட்டு, நான் அதற்குள் சென்று, அந்த மலையில் தங்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றான். 96 “பார்,” அது, “நீ எங்கு போனாலும், உன்னோடு என்னை கொண்டு செல்ல வேண்டும். புரிகிறதா? நீ உன்னோடு என்னை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். எனவே, நான் எங்கிருந்தாலும், அப்போது நீ விரும்புவதைக் கேட்கலாம்” என்றது.
4097 அவன் அந்த மலைக்கு நடந்து சென்றான், அந்த மலை திறந்தது, அவன் உள்ளே சென்றான். அந்த சிறு கற்பனை கதை கூறுகிறபடி, அலமாரிகளில் தங்கமும், வைரங்களும் நிறைந்திருந்தன. அவன் அந்த மலரை ஒரு மேஜையின் மேல்—மேல் இல்லை, ஒரு பாறையின் மேல் வைத்தான். அப்போது அவன் ஓடிச்சென்று, ஒரு மிகப்பெரிய இரத்தினக்கல்லை எடுத்துக்கொண்டான், பின்பு அவன், “நான் போய் இதை என்னுடைய நண்பர்களிடம் காண்பித்தாக வேண்டும். இப்பொழுது நான் ஒரு செல்வந்தன். இப்பொழுது என்னிடம் எல்லாமே இருக்கிறது. நான் இதைக் காண்பித்தாக வேண்டும்” என்று கூறினான். 98 எனவே அந்த மலர் உரைத்ததோ, “ஆனால்,” என்று கூறி “நீ முக்கியமான காரியத்தை மறந்துவிட்டாயே” என்றது. 99 இந்நிலையில் அவன் திரும்பவும் ஓடி, கைகளில் பொறுக்கி, “பார், ஒருக்கால் நான்—நான் ஒரு தங்கக் கட்டியை எடுத்துக்கொள்வேன். நான் ஒரு வெள்ளித் துண்டையும் எடுத்துக் கொள்வேன்” என்றான். அதன்பிறகு அவன், “நான் எப்படி பணக்காரனாய் இருக்கிறேன் என்பதையும், என்னிடம் எல்லாமே இருக்கின்றன என்பதையும் அந்த ஜனங்களிடம் சொல்லும்படியாக, நான்—நான் துரிதமாக வெளியேறுவேன்” என்றான். 100 அவன் கதவண்டை சென்றான், அந்த மலரோ, “ஆனால் நீ முக்கியமான காரியத்தை மறந்து விட்டாயே” என்றது. 101 அதன்பிறகு அவன் மீண்டும் திரும்ப ஓடினான். அப்போதும் அவன், “இங்கே உள்ளே எல்லாவிதமான வஸ்துக்களையும் நாம் கண்டறிகிறோமே” என்றான். ஆகையால், அவன் ஒரு இரத்தினக்கல்லை எடுத்துக் கொண்டான். மேலும் அவன், “நான் இந்த இரத்தினக்கல்லை எடுத்துக்கொண்டு போய், இந்த மலை எம்மாதிரியான இரத்தினக்கல்லால் உண்டாக்கப்பட்டுள்ளது என்று ஜனங்களிடம் காண்பித்ததுவிட்டு, பின்னர் நான் இதற்கு திரும்பி வரலாம்” என்றான். பார்த்தீர்களா? 102 அவன் வாசலுக்கு வெளியே போகத் தொடங்கினான், அப்போது அந்த மலர்…கடைசி முறையாக, “நீ முக்கியமான காரியத்தை மறந்து விட்டாய்” என்றது. “ஓ,” அவன், “ஓ, வாயை மூடு” என்றான். 103 பாருங்கள், “முக்கியமான காரியத்தை மறந்துவிட்டாய்” என்ற அக்காரியத்தை அதற்கு மேல் கேட்க அவனுக்கு விருப்பமில்லை. அவன் வாசலுக்கு வெளியே ஓடினான். அவன் வெளியே போனபோது, அந்த மலரானது உள்ளே இருக்கையில், கதவு அவனுக்கு பின்னால் மூடிக்கொண்டது. அந்த முக்கியமான காரியம் அந்த மலராயிருந்தது. புரிகிறதா? அந்த முக்கியமான காரியமே மலராயிருந்தது.
41104 அநேக வருடங்களுக்கு முன்பு, நான் உங்கள் எல்லாரையும் போல, ஒரு சிறு பையனாய் இருக்கையில், இங்கே பீனிக்ஸின் மேற்பகுதியில் உள்ள கால்நடைப்பண்ணையில் இருந்தேன். அப்போது ஒரு துண்டு காகிதத்தில், கனிம வளத்தைத் தேடும் ஒருவனைக் குறித்தும் போடப்பட்டிருந்ததை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது, நெடுகிலும் சாலைகள் அப்போது இங்கே கிடையாது, வெறுமனே சிறிய மணல் பாதைகள்தான் இருந்தன. அவர்கள் இன்னும் இங்கே கனிம வளத்தைக் குறித்து அநேக ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். 105 ஆனால் இந்த கனிம ஆராய்ச்சியாளன் இந்த இடத்திற்குள் வந்திருந்தான், அவன் ஏராளமான பணமதிப்புள்ள, எதிர்பாராத ஏராளமான தங்கத்தையும் கண்டுபிடித்திருந்தான். அவனுடைய பாதையில், அவன் கண்டுபிடித்திருந்த ஒரு சிறு அறையில் அவன் தங்கியிருந்தான். அவன் ஒரு நாயையும் தன்னோடு வைத்திருந்தான், அந்த—அந்த நாய் வெளிப்புறத்தில் கட்டப்பட்டிருந்தது. மேலும், அந்த இரவு, இந்தத் தங்கத்தைப் பறித்துக் கொள்வதற்காக, கொள்ளைக்காரன் ஒருவன் அவனைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். அவன் தங்கத்தை அந்தப் பழைய ஸ்பானிஷ் சுரங்கங்களில் இருந்து கண்டுபிடித்து எடுத்திருந்தான், அவன் அதனோடு உள்ளே வந்துகொண்டிருந்தான். அப்போது அந்த நாய் குரைக்கத் தொடங்கியது. 106 அந்த நாய் தொந்தரவுபடுத்துவதை அந்த மனிதன் விரும்பவில்லை. எனவே அவன், “வாயை மூடு” என்றான். மேலும் அவன், “நாளை இதை நகரத்திற்குள் கொண்டு செல்வேன்” என்றான். நான்…இதுவே அந்த சம்பவத்தின் நன்நடத்தை நீதி விஷயங்களாயிருந்தன. “நான் இதை நிறுத்துப் பார்த்து இதன் எடையை அறிந்து கொள்வேன், பிறகு நான் ஒரு பணக்கார மனிதனாயிருப்பேன். நான் சிறந்த கார்களை வாங்குவேன். நான் எல்லாவிதமான பெண்களையும் பெரிய விருந்துகளையும் உடையவனாயிருப்பேன். நான் ஒரு பணக்கார மனிதனாய் இருப்பேன், ஏனென்றால் நான் ஏற்கனவே விலை மதிப்பு மிக்க பொருளைக் கண்டுபிடித்திருக்கிறேன். நான் இங்கே நிறைய தங்கத்தை எடுத்துள்ளேன்” என்றான். மேலும், “நான்,…” என்றான். 107 அவன் போய் தூங்க முயற்சித்துக்கொண்டிருக்கையில், நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தது, ஏனென்றால் அந்தக் கொள்ளைக்காரன் பதுங்கி வந்து கொண்டிருப்பதை அந்த நாய் பார்த்துவிட்டது, அவன் இந்த கனிம ஆராய்ச்சியாளன் தூங்கப் போவதற்காகக் காத்துக் கொண்டிருந்தான். 108 அவன் மீண்டும் எழுந்து, திரும்பவும் நாயைப் பார்த்து சத்தமிட்டு, “வாயை மூடு” என்றான். அந்தப் பரிதாபமான நாய் ஊளையிட்டபடி, ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது—காத்துக் கொண்டிருக்கிறது என்று தன்னுடைய எஜமானை எச்சரிக்க முயற்சித்தது. மேலும் அவன்… 109 அடுத்த முறை, அந்த நாய் குரைக்கத் தொடங்கினபோது, அந்த கனிம ஆராய்ச்சியாளன் ஒரு துப்பாக்கியை எடுத்தான். அவன் தொந்தரவுபடுத்தப்பட விரும்பவில்லை, எனவே அவன் எழுந்து அந்த நாயைச் சுட்டுவிட்டான். அந்தக் கனிம ஆய்வாளன் அந்த இரவில் அந்தக் கொள்ளைக்காரனால் கொல்லப்பட்டான். அவனுடைய ஆடம்பர கனவுகள் எல்லாம் அவனுக்கு நன்மை ஒன்றும் செய்யவில்லை. ஏன்? அவனை எச்சரித்துக்கொண்டிருந்த அந்த சத்தத்தை அவன் அடக்கிப் போட்டான்.
42110 யாருமே எதையும் செய்ய முயற்சிக்க முடியாது, வாலிபப் பிள்ளைகளே நீங்கள், நீங்கள் வளர்க்கப்பட்ட விதமாக வளர்க்கப்பட்ட பிறகு, அதைச் செய்யாதே என்று ஏதோவொன்று கூறுவதை நீங்கள் உணரும் வரை, உங்களால் ஒருபோதும் தவறான எதையும் செய்ய முடியாது, இப்பொழுது, உங்களை எச்சரித்துக்கொண்டிருக்கிற அந்த சத்தத்தை ஒருபோதும் அமைதிபடுத்திவிடாதீர்கள். 111 இதை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள், “என்னைப் பின்பற்றிவா” என்று கூறுகிற அந்த சத்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது நீங்கள் எப்போதுமே சரியாக வெளியே வருவீர்கள். நீங்கள் அவ்வாறு செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் உங்களிடத்தில் நம்பிக்கை வைத்துள்ளேன். ஆனால் இயேசுவாகிய, அந்த சத்தம், இன்றிரவும் பூமியில் ஜீவித்துக்கொண்டிருக்கிறது என்பதை எப்பொழுதுமே ஞாபகம் கொள்ளுங்கள். 112 அதேவிதமாக, நாம் பேசின ஒவ்வொரு சத்தமும் ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் ஜீவித்து, அந்தச் சத்தமானது காற்றில் ஈதர் அலையாக வெளியே போகிறது. அந்த…பாருங்கள், இதை வெளியே அனுப்ப இங்கே ஒரு அனுப்பித்தரும் கருவி உங்களுக்கு உண்டு. நீங்களே அதை வெளியே அனுப்புபவராயிருக்கிறீர்கள். இப்பொழுது அதை கிரகித்துக் கொள்ளும் நிலையத்தை அது பெற்றிருக்கிறது. 113 இயேசுவே தேவனுடைய வார்த்தையின் அனுப்புபவராயிருந்தார், ஏனென்றால் அவர் ஒரே மனிதனில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய திரித்துவமாயிருந்தார். அவர் முழுவதும் தேவனாகவும் முழுவதும் மனிதனாகவும் இருந்தார்.
43114 தேவனுடைய திரித்துவமாகவும், தேவனுடைய தன்மைகளின் திரித்துவமாகவும், அந்த ஒரே மனிதனாகிய, இயேசு கிறிஸ்துவில் பிரதிநிதித்துவமாயிருந்த பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகவும் இருந்தார். எனவே அங்கே அவர் வார்த்தையாக இருந்தார். 115 அவர் அனுப்புபவராயிருந்து, “என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்று கூறினார். புரிகிறதா? “என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” இப்பொழுது, அந்த வார்த்தையானது ஒரு அனுப்புபவரிடமிருந்து வெளியே போயிருக்கிறது. அவர், ஒரு நாளிலே, “நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘தள்ளுண்டு போ’ என்று சொல்லி, நீங்கள் சொன்னபடியே நடக்கும் என்று உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீங்கள் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். 116 இப்பொழுது, நீங்கள் உங்களுக்குள்ளேயிருக்கிற ஏதோவொரு கட்டுப்படுத்தும் வல்லமை மூலமாக, விசுவாசத்தின் மூலமாக, நீங்கள் அப்படியே அதைக் கிரகித்துக்கொள்ளும் நிலையமாக இருக்கக் கூடுமானால், அது உங்களை சரியாக தேவனுடைய திட்ட சுழற்சிக்குள், புதிய பிறப்பிற்கு, மறுபடியும் பிறக்க வேண்டியதற்குள் கொண்டு செல்லும். அப்போது ஆபத்து நெருங்கி வரும்போது, உங்களை எப்போதும் எச்சரிக்கும் அந்த சத்தத்தைக் கேட்பதற்காக, நீங்கள் எப்போதுமே தொடர்பில் இருப்பீர்கள். காரியங்கள் தவறாய் இருக்கும் போது, தவறாகப் போய்க் கொண்டிருக்கும் போது, அது எப்போதுமே உங்களை எச்சரிக்கும். அப்படியானால், நாம் பேசிக் கொண்டிருக்கிற அந்தப் பணக்கார வாலிபனைப் போன்று ஏதோவொரு நாளில் இருப்பதற்குப் பதிலாக, அப்போஸ்தலனாகிய பேதுருவைப் போன்றோ, பவுலைப் போன்றோ அல்லது இயேசு கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிற யாரோ ஒருவரைப் போன்றோ நீங்கள் இருப்பீர்கள். வாலிப் பிள்ளைகளே, நீங்கள் அதைச் செய்யுங்கள். நாம் ஜெபிப்போமா?
44117 கர்த்தாராகிய இயேசுவே! அங்கே நாளைய தினம் ஒன்று இருக்குமானால், இவர்கள் நாளைய தினத்தின் இளம் பருவத்தினரும், பருஷர்களும், ஸ்திரீகளுமாய் இருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் அவர்களுக்கு பயிற்சி கொடுத்தாக வேண்டும். நாளைய தினம் ஒன்று இருக்கும் என்பது போன்று அவர்களுக்குக் கற்பிக்கும்போது, நாங்கள் அந்த பாரத்தை உணருகிறோம். அவ்வாறில்லையென்றால், அப்பொழுது இன்றே அந்த தினமாக உள்ளது. 118 அப்படியானால், பிதாவே, உம்முடைய பார்வையில் யாருமே ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம். மாம்சமான எதுவும் மகிமையடைய முடியாது. ஒருக்கால் இந்தக் காரியங்கள் எவ்வளவு நன்றாக இருக்குமோ அவ்வளவு நன்றாக இருந்தாலும், பரிசுத்த ஆவியைத் தவிர தேவனுக்கு சாட்சி கொடுக்கக் கூடிய எந்த கல்வியும் கிடையாது, எந்த நற்கிரியைகளும் கிடையாது, எந்த மதசம்பந்தமான நிறுவனமும் கிடையாது, மனோதத்துவ சாஸ்திரமும் கிடையாது. நித்திய ஜீவனின் ரூபத்திலுள்ள, தேவன் தாமே, ஒரு தனிப்பட்ட நபராக எங்களிடம் வரக்கூடிய கருவியாக அவர் உள்ளார். நாங்கள் இதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 119 பேதுரு அந்த அறிக்கையை கூறினபோது, மெய்யாகவே அது வெளிப்படுத்தப்பட்டது. இயேசு அவனை நோக்கி, “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. நீங்கள் அதை ஒருபோதும் ஒரு வேதாகமக் கல்லூரியில் கற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் ஒருபோதும் அதை ஏதோவொரு பள்ளியில் கற்றுக்கொள்ளவில்லை” என்றார். அது ஒரு தனிப்பட்ட காரியமாய், ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் பெற்றுக்கொள்ள வேண்டிய ஏதோவொன்றாயுமுள்ளது. நீர், “இந்தக் கல்லின்மேல் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றீர். கர்த்தாவே, நாங்கள் அதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.
45120 அந்த சத்தம் இப்பொழுதும் இன்றிரவும் ஜீவிக்கிறதாயுள்ளது. அங்கே இன்னும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய விசுவாசத்தின் இலக்குக் குறிக்கம்பங்களும், தொலைதூர நிலையங்களும், இடைமறிக்கும் நிலையங்களும், அலைபரப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையங்களும் இருக்கின்றன. கர்த்தாவே, இந்தப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் அதை தங்களுடைய இருதயங்களில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அதை நினைவுகூரும், அவர்கள் செய்கிற நற்கிரியைகள் அல்ல, ஆனால் அவர்கள்… நாங்கள் செய்கிறவைகளின் மூலமாக தேவன் எங்களை நியாயந்தீர்க்கிறதில்லை, ஆனால் நாங்கள் எதை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதின் மூலமாகவே எங்களை நியாயந்தீர்க்கிறார். நாங்கள் எங்கள் விசுவாசத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டோம், எங்களுடைய கிரியைகளின் மூலமாக அல்ல. எனவே பரலோகப் பிதாவே, அவர்கள் இப்பொழுது அந்தத் தரிசனத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, “என்னைப் பின்பற்றி வா” என்ற அந்த மகத்தான நித்திய அழைப்பைக் கேட்டு அதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். 121 கர்த்தாவே, அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வுலகத்தின் எல்லா காரியங்களையும், இந்த மரணத்திற்குரிய ஓரம்கட்டப்பட்ட ஜீவியத்தையும் புறக்கணித்து விட்டுவிடுவார்களாக. இன்றிரவு அவர்கள் இங்கு, தங்களுடைய இளம் பொன்னிற தலை முடியையும், அவர்களில் சிலர் கறுப்பு தலைமுடியையும், கருமை நிற கண்களையும், நீல நிற கண்களையும், உடையவர்களாய் அவர்கள் எப்பொழுதும் இருப்பதிலேயே தங்களுடைய மிகச்சிறந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். 122 மகத்தான எழுத்தாளன், “உன் வாலிப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை, தீங்கு நாட்கள் வராததற்கு முன்னும், உனக்குப் பிரியமானதல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும்,” என்று கூறினது போன்றே. கர்த்தராகிய இயேசுவே, நீர் எப்படியாக பேதுருவிடம், “நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது, நீ எழுந்து நீ எங்கு போக விரும்பினாயோ அங்கு போனாய், ஆனால் நீ முதிர்வயதுள்ளவனாகும் போது, யாரோ ஒருவன் உன்னைக் கட்டி நீ போகாத இடத்திற்கு கொண்டு போவான்” என்றார். அவர்கள், “இப்பொழுதே அந்த நாள். இதுவே அந்த நேரம்” என்பதை நினைவுகூருவார்களாக. பிதாவே, இதை அருளும். 123 நான் இன்றிரவு இங்குள்ள, அவர்கள் ஒவ்வொருவரையும் என்னுடைய சொந்த பிள்ளைகளாக உரிமை கோருகிறேன், இங்குள்ள ஒவ்வொரு பிள்ளையையும் உரிமைகோருகிறேன். அவர்களை கவனித்துப் பார்த்துக் கொள்வதற்காக நீர் என்னுடைய கரங்களில் கொடுத்திருக்கிறீர் என்று நான் உணருகிறேன். நான் சாத்தானிடமிருந்தும், மரணத்திலிருந்தும், இயேசு கிறிஸ்துவின் ஜீவனுக்கு அவர்கள் எல்லாரையும் உரிமைகோருகிறேன். ஆமென்.
46124 பிள்ளைகளே, உங்களை ஆசீர்வதிக்கிறேன். உங்களிடம் ஒரு சில வார்த்தைகளைக் கூறினது உண்மையிலேயே அருமையானதாயிருந்தது. பில்லி, நான் திரும்பபோவேன். அருமையான பிள்ளைகளே, உங்களைப் பாராட்டுகிறேன். சகோதரன் ஃபிரட், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக.