1 சகோதரர் நெவில் அவர்களே உங்களுக்கு நன்றி. ஜெபத்திற்காக நாம் தலை வணங்குகையில் நாம் சற்று நேரம் இப்பொழுது நின்றவண்ணமாய் தரித்திருப்போமாக. நாம் நம்முடைய தலை வணங்குவோமாக. உங்களுக்கு ஏதாவது விசேஷித்த வேண்டுகோள் இருப்பின், உங்கள் கரங்களை உயர்த்துவதின் மூலம், அவைகளை தெரியப்படுத்துவீர்களாக. இப்பொழுது, உங்களுடைய தேவைகளை உங்கள் இருதயத்தில் நினைத்து, அவைகளை பரலோகப் பிதாவினிடத்தில் கேளுங்கள். அவர் அவைகளை உங்களுக்கு அருளுவார்.
22 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் இப்பொழுது உம்மிடத்தில் வருகிறோம். நாங்கள் வாஞ்சிக்கிறவைகளை ஜெபத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்பதை விசுவாசித்தவர்களாக நாங்கள் வருகிறோம். நாங்கள் கேட்பவைகளை பெற்றுக்கொள்வோம் என்று நாங்கள் விசுவாசிப்போமானால், அவைகள் எங்களுக்கு அருளப்படும். இப்பொழுது அந்த வாக்குத்தத்தமானது மிகவும் உண்மையுள்ளதாயிருக்கிறது. இத்தனை ஆண்டுகளிலும், அவ்வாக்குத்தத்தமானது பரீட்சிக்கப்பட்டதைக் கண்டு, அவை எல்லாவற்றிலும் அது உண்மையுள்ளதாகவே இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்கள் ஜீவனைக் காத்து, மீண்டும் இங்கு கர்த்தருடைய சபையில் ஒருமித்துக் கூடுவதற்கு எங்களுக்கு அருள் செய்தமைக்காக, முதற்கண் நாங்கள் உமக்கு நன்றி செலுத்த விரும்புகிறோம். 3 சத்தியத்தில் கட்டப்பட்டு, சத்தியத்திற்காக நிலைநிற்கிற இந்த சபைக்காகவும், போதகருக்காகவும், இந்த மகத்தான சத்தியத்திற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தெய்வீக சமூகத்தில் இருக்கிற ஒவ்வொரு நபருக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களுக்குத் தேவையான புரிந்துகொள்ளுதலை எங்களுக்கு அருளி, அதனால் நாங்கள் உமக்கு இன்னும் அதிகமான ஆற்றலுள்ள ஊழியக்காரராக விளங்க, இன்றைக்கு எங்களிடத்தில் நீர் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். எங்களுடைய ஜீவியங்களிலிருந்து மிகச் சிறந்ததை நீர் பெற்றுக் கொள்ளத்தக்கதாக, நாங்கள் உம்மை பயபக்தியோடும், ஒரு உண்மையுள்ள இருதயத்தோடும் சேவிக்க வேண்டும் என்பதே எங்களுடைய இருதயத்தின் வாஞ்சையாயுள்ளது. ஒவ்வொரு நாளிலும், அந்த நாளுக்கென்று நாங்கள் செய்கிற காரியங்களினால் நீர் மிகவும் பிரியப்படத்தக்கதாக எங்களுடைய சஞ்சரித்தல் இருப்பதாக.
34 இன்று இங்கே தேவ சமுகத்திலும் உலகமெங்கிலும் உள்ள உம்முடைய ஒவ்வொரு பரிசுத்த ஸ்தலங்களின் பிரசன்னத்திலும் வந்துள்ள சுகவீனமாயிருக்கிற மற்றும் தேவையுள்ளவர்களாயிருக்கிற எல்லோருக்காகவும் இப்பொழுது நாங்கள் ஜெபிக்கிறோம். மகத்தான யேகோவாவானவர், தமது வல்லமையோடு வந்து வியாதியுற்றவர்களையும், அல்லல்படுபவர்களையும் குணமாக்குவாராக. உமது மகத்தான நாமத்திற்கே மகிமையை எடுத்துக்கொள்ளும். இக்காலையில் இருதயங்களில் இரகசியமாய் ஏறெடுக்கப்பட்ட ஜெப வேண்டுகோள்களை ஆசீர்வதியும். அவர்கள் எந்தக் காரியத்தை முன்னிட்டு தங்களுடைய கரங்களை உயர்த்தினார்கள் என்பதை அவர்களது இதயங்களை நீர் உற்று நோக்கிப் பார்த்து, அவர்களது இதயத்தின் வாஞ்சைகளை நீர் அவர்களுக்கு அருள வேண்டுமென்று இப்பொழுது நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் மேற்கொண்டு தொடர்ந்து உம்மை ஆராதிக்கையில் எங்களை ஆசீர்வதியும். எம்மாவூருக்குப் போனவர்கள், “அவர் வழியில் நம்மோடு பேசுகையில் நம்முடைய இருதயம் கொழுந்து விட்டு எரியவில்லையா” என்று கூறியது போல், இக்காலையில் இக்கட்டிடத்தை விட்டு நாங்கள் புறப்பட்டுச் செல்லுகையில், நாங்களும் அவ்வாறு கூற இயலும்படி எங்களுக்கு அருளும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம்.
45 இக்காலையில் மீண்டும் இங்கே கர்த்தருடைய பிரசன்னத்தினால், ஜனங்களின் சபையில் வந்திருப்பது நல்லதாக இருக்கிறது என்று கூற நான் விரும்புகிறேன், சென்ற ஞாயிற்றுக்கிழமை நான் வர விரும்பினேன். ஆனால் அது கர்த்தருடைய சித்தமாயிருக்கவில்லை என்று நான்—நான் எண்ணுகிறேன். எவ்விதத்திலோ, இங்குள்ள இந்த பள்ளத்தாக்கு, எனக்கு மிகவும் ஆரோக்கியக் குறைவானதாக இருக்கிறது. நான் இங்கு வந்தவுடனே, இங்கு வீசுகிற காற்று எனக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. எனக்கு சரீரம் முழுவதும் தோல் வீக்கம் ஏற்பட்டது. அது எனக்கு வயிற்றுப் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்று எண்ணுகிறேன். எனவே நான் மிகவும் சுகவீனமடைந்து, எனக்கு…குளிரும் நடுக்கமும் உண்டானது. அதனால் என்னால் வரமுடியவில்லை. நான் எழுந்து வருவதற்கு என்னையே கட்டாயப்படுத்த முயற்சித்த போதிலும் முடியவில்லை. நான்—நான்…எனக்குத்—எனக்குத் தெரியும், இந்தப் பள்ளத்தாக்கு ஆரோக்கியக் குறைவானதாக இருக்கிறது. நான் இங்கு வசிப்பது எனக்கு உகந்ததாக கருதப்படவில்லை.
56 இப்பொழுது கர்த்தர் எங்களை ஊழியம் செய்வதற்காக அழைத்த தேசத்தின் வெவ்வேறு இடங்களில், கர்த்தருடைய ஆராதனைகளில் எங்களுக்கு மகத்தான வேளை உண்டாயிருந்தது என்று உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். சகோதரன் நெவில் அவர்கள் என்னிடம் வந்து, இங்கு ஜனங்கள் மத்தியில் வந்திருப்பதினால் ஏதாவது அவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதினால் ஒழிய, அதுவரையில், நான் குறிப்பிட்ட எந்தப் பொருளின் பேரிலும் பேசுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நாமெல்லோரும் அறிந்துள்ளபடி, அவர் எப்பொழுதுமே அந்தவிதமாக கருணையுள்ளவராக இருக்கிறார். நாம் சகோதரன் நெவில் அவர்களை நேசிக்கிறோம். அவரையும் அவரது மனைவி பிள்ளைகளையும் நினையாமலும், ஜெபிக்காமலும் இருந்த நாளே இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவர் தாமே தொடர்ந்து முன்னேறிச் செல்லத் தேவையான பெலத்தை தேவன் அவருக்கு தருவாராக. நாம் அறிந்திருக்கிறபடி நமது காலமானது முடிவடைந்து கொண்டிருக்கிறது. நாம் நாளைய தினத்திற்கு அதாவது சாயங்கால வெளிச்சத்தின் நாளின் முடிவுக்கு மிகவும் அருகில் வந்து விட்டோம். நான்…
67 எங்களது குடும்பம் மேற்கில் இருந்து வருகிறது. நாங்கள் யாவரும் நலமுடன் உள்ளோம். என் உடல் எடையில் பன்னிரெண்டு பவுண்டுகள் கூடியிருந்தது. நான் இங்கு திரும்பி வந்த பிறகு அதில் பத்து பவுண்டுகள் குறைந்து விட்டது. பில்லி பாலுக்கு பதினெட்டு பவுண்டுகள் கூடியிருந்தது. ரெபேக்கா, சாரா மற்றும் ஜோசப் ஆகியோருக்கும் எடை கூடியுள்ளது. உண்மையாகவே, என் மனைவிக்கு எடை கூடவில்லை. எனவே—எனவே அதை நான் இங்கு கூற துணியவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏனெனில் நான் சற்று நேரம் கழித்து வீட்டுக்குப் போக வேண்டும். எனவே நான்…ஆனால் எங்களுக்கு ஒரு—ஒரு அற்புதமான, அற்பதான நேரம் உண்டாயிருந்தபடியால், மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள்…
78 நான் திரும்பி வர ஒருவிதமாக தயக்கமாகத்தான் எண்ணினேன். ஆனால் அதில் ஒரு மகத்தான காரியமாயிருக்கிறது. முக்கியமாக இரண்டு காரியங்களை நாங்கள் இழந்திருந்தோம். அதின் ஸ்தானத்தை வேறு எந்த ஒன்றும் எடுத்து நிரப்பமுடியாது. ஒரு காரியம், இங்குள்ள நமது நண்பர்களும், இந்த சபையும் தான். நாம் எங்கு சென்ற போதிலும் நண்பர்களைக் காண்கிறோம். நமது நண்பர்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஆனால் இன்ப துன்பங்களிலெல்லாம் உங்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிற நண்பர்களைப் பற்றின காரியம் என்னவெனில், அவ்வித நண்பர்களை வேறு எந்த வகையிலும் எந்த ஒன்றோடும் ஈடு கட்ட முடியாது. மற்ற எந்தவொரு நண்பனும் எப்படியிருந்தபோதிலும், இந்தவகை நண்பனோடு ஈடு கட்ட முடியாது. நீங்கள் அவர்களுக்குள் ஒருங்கிணைந்து விட்டிருக்கிற ஒருவராய் இருக்கிறீர்கள். நாம் ஒருமித்து நாட்கள் செல்லச் செல்ல கர்த்தருடைய வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்களைப் பிரித்திட முடியாது. அதைப் பற்றி நினைப்பதே கடினமானது.
89 கொரிந்தியருக்கு பவுல் எழுதிய வசனம் என்று நினைக்கிறேன், அவ்வசனம் என் நினைவுக்கு வருகிறது. அதில், “நிகழ்காலமோ, எதிர்காலமோ, அதிகாரங்களோ, நிர்வாணமோ, பசியோ, அழிவோ, அல்லது எந்த சிருஷ்டியோ, ஜீவனோ, மரணமோ ஆகிய எந்த ஒன்றுமோ, இயேசு கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பிலிருந்து நம்மை பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” என்று கூறுகிறான். எப்படியாய் மரணம் கூட நம்மை பிரிக்க முடியாது. ஏனெனில், நாம் இருதயத்திலும், தேவனுடைய வார்த்தையைப்பற்றியுள்ள இந்த மகத்தான ஐக்கியத்திலும் ஒருமித்து இணைக்கப்பட்டிருக்கிறோம். மரணம் கூட நம்மைப் பிரிக்கமுடியாது. எல்லாக் காலங்களிலும், யுகங்களிலும், நித்திய நித்தியமாக நாம் ஐக்கியப்பட்டிருப்போம்.
910 பின்பு, ஒவ்வொரு நாள் காலையிலும் பிள்ளைகள்…நாம் எங்கு சென்றாலும், உண்மையாகவே, சபைக்குச் செல்கிறோம். ஆனால் இந்த மூலையில் உள்ள இந்த சிறிய கூடாரம் போல் இல்லை. அதைப்பற்றி ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த சிறிய பழைய ஆலயமணி காலையில் உயரேயிருந்து அடிப்பதைக் கேட்கிற வாய்ப்பில்லை. அது உரிய வேளையில் அடிக்கிறதில்லை. ஏனெனில் இன்னும் ஆலயமணிக்காக கோபுரம் கட்டவில்லை. 11 பின்பு, ஒருமித்து இங்கே பென்தெருவில் எட்டாம் எண்ணில், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன், எனது முதல் சபையைக் கட்டுவதற்கு அந்த பழைய சேறான இடத்தில் முழங்கால் படியிட்டேன். எவ்வாறு கர்த்தராகிய இயேசு என்னோடு இடைப்பட்டார். இன்றைய தினத்தில், அது ஒரு சிறிய புனித ஸ்தலமாகவுள்ளது. செங்கல்லும் சுண்ணாம்புக்காரையும் ஆனது…அது ஒரு புனித ஸ்தலமாக நிற்கிறது. ஆனால் என் நினைவுள்ளவுரை என் இருதயத்தின் ஆழத்தில் அது ஒரு புனிதஸ்தலமாகவே நீடித்திருக்கும். அது ஒரு… 12 எது ஒரு சபையை உருவாக்குகிறதென்றால், அது வெறும் கட்டிடம் அல்ல. அதின் கீழ் தேவனை தொழுது கொள்ளும்படி கூடி வருகிற ஜனங்கள் தான் அந்த சபையாகும். நாம் இந்தக் காரியங்களுக்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.
1013 நமக்கு அதிக நேரம் இல்லையாதலால், நிகழ்ந்து போன சில காரியங்களைப் பற்றி நான் உங்களோடு உரையாடலாம் எனக் கருதுகிறேன். அதன் பிறகு, நான் இங்கு இருக்கையில், சில செய்திகளை ஒலி நாடாக்களில் பதிவு செய்யவிருக்கிறேன். ஏனெனில் நான் உங்களெல்லாரிடமும், எந்தவொரு புதிய செய்தியும் முதலில் இந்த பீடத்திலிருந்து தான் கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறேன். இங்கிருந்து தான் எல்லா செய்தி ஒலி நாடாக்களும் தாயாரிக்கப்படுகின்றன. வேறு எங்கிருந்துமல்ல. இப்பொழுது சகோதரன் ஜிம் அவர்களும் ஏனையோரும் கூட்டத்தில் செய்தி அடங்கிய ஒலிநாடாக்களை விற்கிறார்கள். ஆனால் அவைகள் எப்பொழுதும் முதலில் இங்கிருந்து தான் புறப்படுகிறது. பார்த்தீர்களா? நீங்கள் அதை எவ்வகையிலும் சோதித்தறிந்து கொள்ளலாம். நான் அப்படிச் செய்வதாக உங்களுக்கு வாக்குரைத்திருக்கிறேன். கர்த்தர் வரும் வரையிலும் நாம் தொடர்ந்து அப்படியே செய்வோம். அதை மாற்றுவதில்லை.
1114 உலக முழுவதிலும் செய்தி ஒலிநாடாக்களின் வாடிக்கையாளர்கள் நமக்கு உள்ளனர் என்று நான் நினைக்கிறேன். எனவே செய்தியானது இங்கிருந்து பூலோகத்தையே சுற்றி வருகிறது. பார்த்தீர்களா? காடுகளிலும் மற்றும் எவ்விடங்களிலும் ஒலிப்பதிவு கருவிகள் மூலம் அது பரவி வருகிறது. பல்வேறு மொழிகளிலும் செய்தியானது மொழி பெயர்க்கப்பட்டு அஞ்ஞானிகளுக்கும் மற்றுள்ளோருக்கும் செல்கிறது. எனவே, நான் இங்கிருக்கிற வேளையில், கர்த்தருக்குச் சித்தமானால் சில புதிய செய்திகளை ஒலிநாடாக்களில் பதிவு செய்ய விரும்புகிறேன். மேலும் நமது போதகர், தான் சொல்லும்படி ஏதாவது தனது உள்ளத்தில் அவருக்கு கொழுந்துவிட்டு எரியுமென்றாலும் நல்லது, அதையும் இன்று இரவில் நான் பதிவு செய்ய விரும்புவேன்.
1215 பிறகு நான் நாளை அல்லது செவ்வாய் கிழமையன்று, சரியாகக் கூறினால் செவ்வாய் கிழமை காலை சர்வதேச சகோதரத்துவ கிறிஸ்தவர்களின் ஒரு சிறு கூட்டத்தில் உதவி செய்வதற்காகவே ஆர்கன்ஸாஸூக்கு போகப் போகிறேன். நான் நினைக்கிறேன்…இல்லை நான் அந்த பெயரை தவறாக கூறியிருக்கலாம். அது கிட்டத்தட்ட தேசிய சகோதரத்துவ கிறிஸ்தவர்கள் என்ற ஒன்றாய் இருக்கலாம். உண்மையாக நான் அதை அறியேன். என்னை மன்னிக்கவும். அதை முறையாக கூறவில்லையல்லவா? [ஒரு சகோதரன், “ஒருங்கிணைந்த சகோதரத்துவ கிறிஸ்தவர்கள்” என்கிறார். ஆசி.] ஐயா உமக்கு நன்றி. ஒருங்கிணைந்த கிறிஸ்தவர்களின் சகோதரத்துவம். நான் இன்று ஞாயிற்றுக் கிழமையிலிருந்தே அதில் பங்குபெற வேண்டியவனாயிருக்கிறேன். ஆனால் நான் இன்றோ இங்கு நமது கூடாரத்தில் இருந்து விட்டேன். அப்படியென்றால், நான் அங்கு வெள்ளிக் கிழமையன்று…ஐயா…வெள்ளிக்கிழமை கூட்டத்தின் கடைசி நாளன்று போவேன். பிறகு சனிக்கிழமை இரவில், ஞாயிறு காலை இங்கு இருக்கத்தக்கதாக திரும்பி வந்து விடுவேன். கர்த்தருக்குச் சித்தமானால் இன்னொரு செய்தி ஒலி நாடாவில் பதிவு செய்வேன். அதன் பிறகு சில நேரத்தில், மேலும் சில ஒலி நாடாக்களை இங்கிருந்து நான் புறப்படும் முன் பதிவு செய்ய நான் விரும்புகிறேன்.
1316 லூயிசியானாவில் பேட்டன் ரோக் என்ற இடத்தில் நடைபெறும் கூட்டத்திற்காக நான் மிகுந்த பாரமுள்ளவனாக இருக்கிறேன். அதன் பிறகு நான் திரும்பி வருவேன். அதற்குப் பிறகு, நான் ஆங்கரேஜீக்கு எவ்விதத்திலும் போக வேண்டியவனாக இருக்கிறேன். புரிகிறதா? ஃபோர்பாங்க்ஸ் மற்றும் ஆங்கரேஜ் ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்டு, கிறிஸ்தவ பூரண சுவிசேஷ வர்த்தகர்களின் கூட்டத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது, மறுபடியும் அங்கிருந்து இங்கு திரும்ப வேண்டும். அதன் பிறகு ஜுலை கடைசி வாரத்தில் கர்த்தருக்குச் சித்தமானால் சிக்காகோ செல்ல வேண்டும். 17 இவை எல்லாவற்றிற்கும் பிறகு, பிள்ளைகள் மீண்டும் தங்கள் பள்ளிகளுக்குச் செல்லும்படி அவர்களை அரிசோனாவிற்கு விரைந்து அனுப்ப வேண்டும் என கருதுகிறேன். ஏனெனில், சார்லி! நான் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி வாக்கில் இங்கு இருந்தாக வேண்டும். ஏனெனில், கர்த்தருக்குச் சித்தமானால், அந்த சமயத்தில் நான்—நான் கென்டக்கியில் இருக்க விரும்புகிறேன். யாவரும் நகைக்கின்றீர்கள், நான் சொன்னதின் அர்த்தம் என்னவென்று இங்கு வந்திருக்கும் புதியவர்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அந்த நாட்களில் தான் அணில் வேட்டையாடும் பருவகாலம். எனவே பிரசங்க பீடத்திலிருந்து இதைப் பற்றி சொல்வது தவறாக கருதப்படத்தக்கதல்ல என்று நம்புகிறேன். நீங்கள் பாருங்கள், மாமா காக்ஸ், அங்கு இரண்டு வாரங்கள் என்னுடைய விடுமுறைக்காக அதை நான் சார்ந்திருக்கிறேன்.
1418 இப்பொழுது நான் நினைக்கிறேன்…பில்லி எனக்கு எழுதி வைத்துள்ள சில சிறிய குறிப்புகள் இங்கு உள்ளன. அவற்றில் ஒன்றில் “தந்தையே, சகோதரன் நெவில் அவர்கள், உங்களால் இரு குழந்தைகளையும் பிரதிஷ்டை செய்யக் கூடுமோ என்று அறிய விரும்புகிறார்” என்று எழுதியிருக்கிறார். நிச்சயமாக செய்வேன். அது அருமையானது. ஆம், இப்பொழுதே அந்த குழந்தைகள் பிரதிஷ்டை ஆராதனையை நாம் வைத்துக் கொள்வோம். அதன் பிறகு, அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்களை, சம்பவித்த காரியங்களைப் பற்றி உரையாடுவதற்காக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 19 அநேக மக்களுக்காகவும், சபைகளுக்காகவும்…இது ஒரு திறந்த கூடாரமாயிருக்கிறது. இது ஒரு போதும் ஸ்தாபனமாக இருந்ததில்லை. அது ஒருபோதும் அவ்வாறு ஆகாதிருக்க தேவன் அருள் செய்வாராக. ஏனெனில், இந்த ஸ்தலம் நமக்கு எந்த பிரமாணமுமில்லாமல் அன்புள்ள இடமாக, எந்த ஸ்தாபன கோட்பாடுமல்லாமல், கிறிஸ்து உள்ள இடமாக; எந்த கோட்பாட்டுப் புத்தகமுமல்லாமல் வேதாகமம் உள்ள இடமாக இருக்க நாம் விரும்புகிறோம். நமக்கு அங்கத்துவம் (Membership) இல்லை, நாம் ஒருவரோடொருவர், எல்லா மக்களிடமும், எல்லா ஸ்தாபனங்களிடமும் ஐக்கியம் (Fellowship) கொண்டுள்ளோம். எல்லோருமே வரவேற்கப்படுகிறீர்கள், நாம் தேவனுடைய வார்த்தையை சுற்றியே ஐக்கியங்கொண்டுள்ளோம். எனவே ஒவ்வொருவருமே வரவேற்கப்படுவதை அவர்களால் உணர முடிகிறது. நாம் முதன்மையான கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறோம். நாம் இங்கு அறிஞர்கள் கூட்டம் அல்ல. நாம் சாதாரண மக்கள் தாம். அப்படிப்பட்ட நாம் வேதத்தை அப்படியே வாசித்து, அது சொல்வதினின்றும், புறம்பானதொரு வியாக்கியானத்தை அதற்கு அளிக்காமல் இருப்பவர்களாக இருக்கிறோம்.
1520 ஒரு நாளில் தேவன் உலகத்தை வேதாகமத்தினால் நியாயந்தீர்ப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது அவர்கள்…அவர் உலகத்தை நியாயந்தீர்க்கப்போகிறார். நியாயத்தீர்ப்புக்கென்று ஒரு நியமம் இல்லையென்றால், என்ன செய்ய வேண்டுமென்பதை மக்கள் எவ்வாறு அறிந்துகொள்வார்கள்? புரிகிறதா? அது தேவனாய்…நீங்கள் தேவனிடத்தில் அநீதியை கற்பிக்க முடியாது. தேவன் தாமே மக்களை நியாயந்தீர்ப்பதற்கென்று தம்முடைய நியமத்தை உடையவராக இருத்தல் வேண்டும். எனவே, அவர் ரோமன் கத்தோலிக்கச் சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரெனில், அப்பொழுது, கிரேக்க, வைதீக கத்தோலிக்கர், மற்றும் உள்ள அந்த சபைகள் அனைத்தும், மற்றும் உலகமனைத்தும் உள்ளவை இழந்து போனதாகக் காணப்படும். அவர் கிரேக்க வைதீக கத்தோலிக சபையினால், நியாயந்தீர்ப்பாரெனில், ரோம சபையின் மூலமாக அல்ல, ஏனென்றால் அப்பொழுது மற்ற… ரோம சபையும் மற்றும் உள்ள யாவுமே இழக்கப்படுகின்றன. லூத்தரன் சபையைக் கொண்டு அவர் உலகத்தை நியாயந்தீர்ப்பாரெனில் ப்ரெஸ்பிடேரியன்கள் இழக்கப்படுகின்றனர். ப்ரஸ்பிடேரியன்களைக் கொண்டு, அவர் நியாயந்தீர்ப்பாரெனில், அப்பொழுது லூத்தரன்களும், பாப்டிஸ்டுகளும் இழக்கப்படுகின்றனர். புரிகிறதா? ஆகவே, அவர் பெந்தேகோஸ்தேயினரைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரெனில் அப்பொழுது பெந்தேகோஸ்தேயினரைத் தவிர அனைவருமே ஒழிந்து போவார்கள்.
1621 ஆனால் என்னுடைய கருத்தோ, அவர் எந்த ஒரு சபையக் கொண்டும் நியாயந்தீர்க்கமாட்டார், ஏனெனில் அவர்களுக்குள் அதிகமான வேறுபாடுகளும், மிக அதிகமான குழப்பங்களும் காணப்படுகின்றன. ஆனால் அவர் அதை நியாயந்தீர்ப்பார், எப்படியெனில் வேதம், “தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்ப்பார்” என்றே கூறுகிறது. இப்பொழுது அது வேதப்பூர்வமானது. இப்பொழுது…வேதம், “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வாத்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்” என்று கூறியுள்ளது. “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” எனவே, அவரே வார்த்தையாயிருக்கிறார். இது வேதம் எழுத்து வடிவத்தில் உள்ள கிறிஸ்துவாகும். ரோமன் கத்தோலிக்கரிடையே அப்போகாலிப்ஸ் (Apocalypse) என்றும், ப்ராட்டெஸ்டெண்டுகளிடையே வெளிப்படுத்தின விசேஷம் என்றழைக்கப்படும் புத்தகத்தில் 22ம் அதிகாரத்தில், புத்தகத்தின் முடிவிலே, இயேசு தாமே கூறியுள்ளார். “ஒருவன் இவைகளிலிருந்து ஒரு வார்த்தை எடுத்துப்போட்டால் அல்லது இதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால், அவனுடைய பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப்போடப்படும்.” எனவே நான்…அந்த காரத்திணால்தான் நாம் இதை விசுவாசிக்கிறோம்; அப்படியே தரித்திருங்கள், …அவர் வேதத்தில் இங்கு எழுதியிராத காரியங்களையும் அவரால் செய்ய முடியும் என்பதை நாம் அதை அறிந்திருக்கிறோம். ஆனால், அவர் வேதத்தில் என்ன எழுதியிருக்கிறாரோ அதில் அப்படியே நிலைத்திருக்கும் வரையும் அது அருமையாக இருக்கும்.
1722 இப்பொழுது சிறு குழந்தைகள் பிரதிஷ்டையில், அநேக ஜனங்கள், மெத்தோடிஸ்டுகள் குழந்தைகளைத் தெளிக்கிறார்கள். கத்தோலிக்க சபை அல்லது லூத்தரன் சபையில் பிள்ளைகள் பன்னிரெண்டு வயது அடையும்போது தங்களது முதல் நற்கருணை ஆராதனையில் பங்கு பெறுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பிறக்கும் போது, ஒரு விதமான ஞானஸ்நான ஆராதனையும் அவர்களுக்கு உண்டு. குழந்தைகளுக்கு தெளிப்பு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சிறு குழந்தைகளின் ஞானஸ்நான விஷயத்தில் தான் நசரேயர்கள் மெத்தோடிஸ்டுகளிடையே அநேக ஆண்டுகளுக்கு முன்பாக பிளவு உண்டாயிற்று என்றே நான் நினைக்கிறேன். சகோதரர் ப்ரௌன் அவர்களே, அது சரியென்றே நான் நினைக்கிறேன். நசரேயர்கள் சிறு குழந்தைகள் ஞானஸ்நானத்தை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், அதுவே மெத்தோடிஸ்டு சபைக்கும் நசரேயர் சபைக்கும் உண்டான பிளவாயிருந்தது என்று நான் கருதுகிறேன். ஆனால் இக்கூடாரத்தில் உள்ள நமக்கோ, வேதாகமம் என்ன கூறியுள்ளதோ, அதனோடு நாம் நிலைத்திருப்போமானால், வேதத்தில் எந்த ஒரு இடத்திலும், அவர்கள் ஒரு சிறு குழந்தைக்கோ அல்லது வயது வந்தவர் எவருக்குமோ தெளிப்பு ஞானஸ்நானம் கொடுக்கவேயில்லை. ஆனால் அவர்கள்…வேதம் கூறுகிறது, சிறு பிள்ளைகளுக்காக நம்முடைய வேதத்தில் ஒரே பகுதியில், “…சிறு பிள்ளைகளின் மேல் அவர் கைகளை வைத்து ஜெபம் பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; இயேசுவோ; சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு தடை பண்ணாதிருங்கள்; பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று கூறினார்” என்றே உள்ளது.
1823 எனவே, இப்பொழுது இந்தப் பிள்ளைகளின் மீது கரங்களை வைக்கும்படி கர்த்தராகிய இயேசுவின் கரங்களின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள நானோ அல்லது நமது போதகரோ அல்லது வேறு எந்த போதகரோ தகுதியுள்ளவர்களல்ல. அவர் இன்று காலையில் இங்கு இருப்பாராயின், இந்தப் பெற்றோர் சிறு குழந்தையை கிறிஸ்துவிடமே கொண்டு வந்திருப்பார்கள். ஆனால், இங்கு நாம் அவரை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இருக்கிறபடியால், அவருடைய பிரதிநிதிகளாக இருக்கும் நம்மிடம் கொண்டு வருகிறார்கள். நாம் அவர்களை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்கிறோம். அவருடைய மகத்தான வார்த்தை மற்றும் அவரது மகத்தான செயலை நினைவு கூறத்தக்க வகையில், குழந்தைகள் மீது கரங்களை வைத்து அப்படிச் செய்கிறோம். ஆகவே, அவ்விதமாகத் தான் நாம் சிறு பிள்ளைகளை பிரதிஷ்டை செய்கிறோம். 24 கர்த்தருக்கென்று தன் குழந்தையை இதுவரையிலும் பிரதிஷ்டை செய்யாத, குழந்தையோடு உள்ள தாய் இங்கு இருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்; தங்கள் குழந்தைகளை பிரதிஷ்டை செய்ய இருக்கும் தாய்மார் அல்லது தகப்பன்மார்களோடு தானும் அவ்வாறு செய்ய விரும்பி முன்வர அந்தத் தாய் விரும்பக்கூடும். நாம் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து தேவனிடத்தில் அவர்களை சமர்பித்து, அவர்களுக்காக ஜெபித்து, அவருக்கு பதிலியாக நாம் நமது கரங்களை அவர்கள் மேல் வைக்கிறோம் என்று சொல்லுகிறோம். நான் இதுவரையிலும் கண்டவற்றுள் வேதத்திற்கு மிகவும் ஒத்ததாக இது இருக்கிறது. நீங்கள் ஒருவேளை உங்களுடைய சபைக்கோட்பாட்டு புத்தகத்திலிருந்தும், ஏதோ ஒரு குழுவைச் சார்ந்த மனிதன் கூறினவார்த்தையிலிருந்து கண்டறிந்து கூறலாம். ஆனால் வார்த்தை என்ன கூறியுள்ளது என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன், நீங்கள் பாருங்கள். இப்பொழுது நான் அது என்னவென்று மிகவும் தெளிவாகக் கூறிவிட்டேன் என்று நான் நினைக்கிறேன்.
1925 இப்பொழுது இசைப்பேழையை இசைப்பவர் இருந்தால், (சகோதரனே, நீங்கள் இசைப் பேழையை இசைப்பவரா?) இங்கு வாருங்கள். நான் என்னுடைய சொந்த சபையில், “இசைப் பேழையை இசைப்பவர் யார்?” என்று கேட்பது வினோதமாயுள்ளதல்லவா? நான் ஏறக்குறைய யாரோ ஒரு அந்நியனைப் போல கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதாயுள்ளது. சரி. அவர்கள் இந்த சிறு பாடலைப் பாட இல்லை அதை வாசிக்கட்டும் அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். 26 சபையார் இந்தப் பாடலைப் பாடுகையில், நாம் எழுந்து நிற்போமாக. தங்களுடைய சிறு பிள்ளைகளைக் கொண்டுவந்துள்ள தாய்மார்களும், தகப்பன்மார்களும் இப்பொழுது இங்கு வந்து நிற்கட்டும். அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களைஉள்ளே கொண்டு வாருங்கள், சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.
20இப்பொழுது மேய்ப்பன் அவர்கள்…இப்பொழுது, நாம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிற ஒரு—குட்டி—குட்டி நபரை வைத்துள்ளோம். சில நேரங்களில் அவர்கள், “ஆமென்” சற்று சத்தமாய் கூற நாம் அதை புரிந்துகொள்கிறோம், அவர்கள் குழந்தைகளாய் இருக்கிறார்கள். ஐயா, உங்களுடைய பெயர் என்ன? வில்லியம் ஹென்றி வின்சென்ட். உங்களுடைய குட்டிப்பெண்ணா? கிறிஸ்டியானா மரியா வின்சென்ட். அவளுடைய தகப்பனின் தோளில் படுத்துக்கொண்டிருக்கிற என்ன ஒரு அருமையான குட்டி நபர். நான் அவனை தூக்கிக் கொள்ளலாமா? கிறிஸ்டியானா, இங்கே உங்களுடைய தகப்பனாருக்காக, பதிலீடாக நான் வைத்துக் கொண்டிருக்க முடியாது, பாருங்கள். நாம்…நீங்கள் உங்களுடைய கரங்களை குழந்தையின் மீது வையுங்கள். நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. எங்களுடைய பரலோகப் பிதாவே, இன்றைக்கு அப்பால் உள்ள உம்முடைய சிங்காசனத்தை நாங்கள் அணுக்கிகொண்டிருக்கையில், எங்களுடைய விசுவாசம் எங்களை சந்திரன், நடசத்திரங்கள், சூரிய குடும்ப அமைப்பு முறைகளுக்கு அப்பால் உள்ள சர்வவல்லவரின் பிரசன்னத்திற்குள் கொண்டு செல்கிறது. நாங்கள் இந்த அருமையான சிறு குழந்தையை கொண்டு வருகிறோம். கர்த்தாவே, நாங்கள் எங்களுடைய கரங்களில் யாரை பிடித்துள்ளோம் என்பதை நாங்கள் அறியாமலிருக்கிறோம். இது வரப்போகிற நாட்களில் உமக்கு ஒரு மகத்தான ஊழியக்காரியாக இருக்கலாம். இது அவ்வண்ணமாயிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் நாங்கள் எங்களுடைய கரங்களை இந்தக் குழந்தையின் மீது வைக்கும்படி பிள்ளையின் தகப்பன் இந்த சிறுமியை எங்களிடம் கொண்டு வந்துள்ளார். அதாவது நீர் திரும்பி வரும்வரையில் உம்முடைய ஸ்தானத்தில் உம்முடைய ஊழியக்காரர்களாக இருந்து செயல்படும்படிக்கு நாங்கள் அறிக்கை செய்துள்ளோம், அதன் பின்னர் நீர் எல்லாக் காரியங்களையும் பொறுப்பெடுத்துக் கொள்வீர். அதுவரையில், கர்த்தாவே நாங்கள் உமக்கு உண்மையோடும், உத்தமத்தோடும் ஊழியம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். எங்களுடைய கரங்களை இந்த சிறுமியின் மீது வைத்திருப்பதோடு, நாங்கள் இவளை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறோம். நீர் இவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீர் என்று நம்புகிறோம்; இயேசுவானவர் வரத்தாமதிக்குமேயானால், இவள் உமக்கு ஒரு மகத்தான ஊழியக்காரியாக ஆவாளாக. இவள் வளர்க்கப்படும் இல்லத்தை ஆசீர்வதியும். இவள் தேவனுடைய போதனையில் வளர்க்கப்பட்டு, இவளுடைய ஜீவிய காலம் முழுவதும் உம்மையே சேவிப்பாளாக. இவளுடைய பெற்றோரை ஆசீர்வதியும், அவர்கள் தாமே இந்தக் குழந்தை கர்த்தருக்கென்று ஒரு கனமான பாத்திரமாக இருப்பதைக் காண உயிரோடிருப்பார்களாக; அவர்களுடைய இன்றைய செய்கையின் நிமித்தமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவளுடைய பெயர்… [ஒரு சகோதரி சகோதரன் பிரான்ஹாமிடத்தில் பேசுகிறார். ஆசி.] இது சகோதரி தாபெத், திரேஸா. நம்மால் திரேஸ்ஸாவை பிடித்துக் கொள்ள முடியுமா அல்லது முடியாதா என்று எனக்குத் தெரியாது. நான் அவ்வாறு நினைக்கவில்லை. அவள் மிகவும் சிறுமியாயுள்ளாள். சரி, நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. எங்கள் பரலோகப் பிதாவே, உமக்கென்று இந்த சிறுமியாகிய சகோதரியை பிரதிஷ்டை செய்ய நாங்கள் எங்களுடைய கரங்களை வைக்கையில், பெற்றொர்களும் கூட இந்த சிறுமி பிரதிஷ்டை பண்ணப்பட வேண்டுமென்றே விரும்புகின்றனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை இந்த குழந்தையின் மேல் தங்கியிருந்து, இவளுக்கு ஒரு நீண்ட ஆயுளையும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமக்கென்று ஒரு ஆசீர்வதிக்கப்பட ஜீவியத்தின் சேவையையும் அளிப்பதாக. ஆமென். தேவன் உங்களை இப்பொழுது ஆசீர்வதிப்பாராக, உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக. இந்த இரண்டு அருமையான குட்டி நபர்களை வைத்திருப்பதற்கு இந்த காலையில் நீங்கள் நல்ல பலமான அதிர்ஷ்டமான பெற்றோராய் இருக்கிறீர்கள்.
21அவனுடைய பெயர் என்ன? [தகப்பனாரோ, “ஜோ வில்லியம் கார்ட்ரைட்” என்று கூறுகிறார்.—ஆசி.] ஜொ வில்லியம் கார்ட்ரைட், அவர் இந்த காலையில் தன்னுடைய சிறிய உறக்கமான ஒய்வினை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். சரி. இப்பொழுது நீங்கள்—நீங்கள் எல்லோரும்…அம்மா நீங்கள்—நீங்கள் அவனை பிடித்துக் கொள்ளக் கூடுமானால் நலமாயிருக்கும். அதுவே நல்லது. ஜோசப், இங்கே வா. சரி, நீங்கள் விரும்பினால் அவனைப் பிடித்துக்கொள்ளலாம். எங்களுடைய பரலோகப் பிதாவே, நாங்கள் இந்த குட்டி ஜோசப் வில்லியம் கார்ட்ரைட்டை உம்மண்டை கொண்டு வருகிறோம். இந்த காலையில் நீர் அளித்துள்ள இந்தக் குட்டிப் பையனை சேவை புரியும் ஜீவியமாக உமக்கே திரும்ப அளிக்க இவனுடைய தகப்பனாரோ நிற்கிறார். தேவனே, இந்த சிறுவனை ஆசீர்வதியும், அவன் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பலமாகவும் ஜீவித்து, உமக்கென்று ஒரு மகத்தான ஊழியக்காரனாவானாக. அவனுடைய தகப்பனையும், அவன் வளர்க்கப்படும் இல்லத்தையும் ஆசீர்வதியும். கிறிஸ்துவானவர் எல்லா நேரங்களிலும் காணப்படாத விருந்தினராக இருப்பாராக. நாங்கள் இந்த சிறு பையனை உமக்கென சேவைபுரியும் ஜீவியமாயிருக்க இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அளிக்கிறோம். ஆமென். சகோதரன் ஸ்டீவ் கார்ட்ரைட் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
22குட்டிப் பெண்ணா? [அந்த சகோதரி, “ஆம் ஐயா” என்கிறாள்.—ஆசி.] பெயர் என்னம்மா? [“சில்வியா ஷிப்பை.”] சில்வியா ஷிப்பை. எங்களுடைய பரலோகப் பிதாவே, இந்தக் காலையில் இங்கே இவளைக் கொண்டுவந்துள்ள அன்பார்ந்தவர்கள் பீடத்தண்டை நிற்கையில், நாங்கள் எங்களுடைய கரங்களை இந்த சிறுமியின் மீது வைக்கிறோம். கர்த்தராகிய இயேசு தம்முடைய சொந்த ஆணிகள் கடாவின வடுக்களைக் கொண்ட கரங்களை இந்தக் குழந்தையின் மீது வைத்திருந்தால் வரக் கூடிய ஆசீர்வாதங்கள் இவள் மீது வருவதாக, அந்த ஆசீர்வதியுங்கள் இந்த சிறுமியின் மீது தங்கியிருப்பதாக. இப்பொழுது அவளை ஆசீவதியும், அவள் நீண்ட காலம் மகிழ்ச்சியாய் ஜீவித்து உமக்கு ஒரு ஊழியக்காரியாக இருப்பாளாக. இவளுடைய இல்லத்தையும், இவளுடைய பெற்றோரையும், இவளுடைய அன்பார்ந்தவர்களையும் ஆசீர்வதியும். வேதாகமத்தின்படி இந்த செயலை நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்கிறோம். ஆமென். ஆசீர்வாதங்கள் உன் மேல் இருப்பதாக …?… உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக …?…
23பாருங்கள், அவன் ஒரு பாடகனாயிருக்கப் போகிறான். பெயர் என்ன? [அந்த சகோதரன், “லோரி ஹெலன் மேயர்.”—ஆசி.] லோரி ஹெலன் மேயர். நான், “அவன் ஒரு பாடகனாயிருக்கப் போகிறான்” என்றேன். இது எனக்கு ஒரு சம்பவத்தை நினைப்பூட்டுகிறது. இதைக் கூறுவது சபையிலே மோசனமாகத் தென்படாது என்று நான் நம்புகிறேன், நான் ஒரு இந்தியனிடத்தில் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே ஒரு குட்டி குழந்தை நின்றுகொண்டிருந்தது. அப்பொழுது நான், “அவன் ஒரு அருமையான நபர். அவன் ஒரு அருமையான நபர்” என்று கூறினேன். அப்பொழுது அந்த சிகப்பிந்திய தலைவனோ என்னை ஒரு சில நிமிடங்கள் கவனித்தான். அதன் பின்னர் அவன் கிழ்நோக்கிப் பார்த்து, “ஆனால் அது பையன் அல்ல பெண்” என்றான். அதேசமயத்தில் அது கிட்டத்தட்ட இந்தவிதமாகத்தான் உள்ளது என்று நான் யூகித்தேன். குட்டி…அவளுடைய பெயர் என்ன? [அந்த சகோதரன், “லோரி ஹெலன்” என்று கூறுகிறார்.—ஆசி.] லோரி ஹெலன். ஹெலன் என்பது உன்னுடைய கடைசிப் பெயரா? [“மேயர்.”] மேயர். [“லோரி ஹெலன் மேயர்”.] லோரி ஹெலன் மேயர். அவள் ஒரு அழகான சிறுமியாயிருக்கிறாள். எங்களுடைய பரலோகப் பிதாவே, நாங்கள் எங்களுடைய கரங்களை இந்த சிறு குழந்தையின் மீது வைக்கிறோம். வேதத்தில் அவர்கள் சிறு பிள்ளைகளை உம்மிடம் கொண்டுவந்தபோது, நீர் உம்முடைய கரங்களை அவர்கள் மீது வைத்து அவர்களை ஆசீர்வதித்தீர். பூமியிலே நீர் செய்த அந்த உம்முடைய மகத்தான நினைவார்த்தமாக அந்த செயலையே நாங்கள் செய்கிறோம். இந்தக் குழந்தையையும், இதனுடைய பெற்றோரையும் ஆசீர்வதியும். இவளுடைய இல்லமானது ஜெபத்திற்கும், விசுவாசத்திற்கும் தடையற்ற ஒரு ஸ்தலமாக இருப்பதாக. இந்த சிறு பெண் நீண்ட காலம் மகிழ்ச்சியான ஜீவியம் செய்து, கால முழுவதும் உம்முடைய ஊழியக்காரியாக இருப்பாளாக. இந்த குடும்பம் ஒருபோதும் உடையாத சக்கரம் போல் இருப்பதாக. மகிமையில் என்றென்றுமாய் ஜீவிக்கப் போகும்படி அந்த நாளிலே ஒவ்வொரு அங்கத்தினரும் மகத்தான தேவனுடைய சிங்காசனத்தை சுற்றி ஒன்று கூட்டப்படுவார்களாக. அது வரையில் கர்த்தாவே, உம்முடைய நித்திய ஆசீர்வாதங்கள் இந்தக் குழந்தையின் மீது தங்கியிருப்பதாக, நாங்கள் இவளை இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறோம். ஆமென். [ஒரு சகோதரி, “இதோ அவளுடைய சகோதரி இருக்கிறார் …?… ” என்கிறார். ஆசி.] என் சகோதரனே, தேவன் உம்மை ஆசீவதிப்பாராக. இந்த குட்டி… [“இவளுடைய பெயர் ரெபெக்காள்”.] அது அவளுடைய இளைய சகோதரி, ரெபெக்காள். பரலோகப் பிதாவே, அவள் தண்ணீரண்டை, ஞானஸ்நான தொட்டியண்டை போகப்போவதாயிருப்பினும் நாங்கள் இந்த சிறுமி ரெபெக்காள் மீது எங்களுடைய கரங்களை வைத்து, அவளையும் கூட கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறோம். கர்த்தாவே, அவள் அந்த பொறுப்புடைமையுடைய வயதினையடையும் அந்த நாள் வரும் போது, அவன் தன்னுடைய தீர்மானத்தை எடுத்து, அங்கே ஞானஸ்நானத் தொட்டியண்டை நேராக நடந்து சென்று அவளுடைய பாவ மன்னிப்பிற்காக கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படுவாளாக. பிதாவே இதை அருளும். இப்பொழுது அவளையும், அவளுடைய இளைய சகோதரியையும் ஆசீர்வதியும். அவள் நீண்ட காலம் மகிழ்ச்சியான ஜீவியம் செய்து உமக்கு சேவை புரிவாளாக. ஆமென். அவளை ஆசீர்வதியும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
24இந்தப் பெண் பிள்ளையா? [தாயார், “இது ஜாக்குலின் கிரானல்ட்” என்கிறார்.—ஆசி.] குட்டி ஜாக்குலின் கிரானல்ட், மற்றொரு அழகான சிறு பெண். எங்களுடைய பரலோக பிதாவே, நாங்கள் எங்களுடைய கரங்களை இந்த சிறுமியின் மீது வைக்கிறோம். மகத்தான கர்த்தராகிய இயேசு தம்முடைய கரங்களை சிறு பிள்ளைகளின் மீது வைத்து அவர்களை ஆசீர்வதித்ததின் ஞாபகர்த்தமாக, உம்முடைய சொந்தக் கரங்கள் அதன்மேல் இன்றைக்கு இருப்பதைப் போன்றே இந்தக் குழந்தையின் மீது ஆசீர்வாதம் வருவதாக. நீர் இங்கே பூமியில் ஒரு மாம்ச சரீரத்தில் இருப்பீரேயானால், இந்தத் தாய் இந்தப் பிள்ளையை உம்மண்டைக் கொண்டு வருவாள். ஆனால் நாங்கள் உம்முடைய பிரதிநிதிகளாயிருக்கிறபடியால், பிதாவே அவள் இரண்டாந்தரமான நிலையில் எங்களிடம் வருகிறாள். நாங்கள் ஆசீர்வதிக்கையில் நீர் இந்தக் குழந்தையை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அது நீண்ட காலம் உம்முடைய சேவையில் மகிழ்ச்சியாக ஜீவியம் செய்வதாக. இவள் வளர்க்கப்படவுள்ள இல்லத்தை ஆசீர்வதியும். அது இயேசுவின் நாமத்தில் ஒரு நிலையான ஜெபவீடாயிருப்பதாக. ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
25நீங்கள் அவர்கள் இருவரையும் உடையவராயிருக்கிறீர்களா? [அந்த சகோதரி, “எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர், நான் இன்னும்…அவர்களை பிரதிஷ்டை செய்யவில்லை …?… ” என்கிறாள்.—ஆசி.] சரி. இப்பொழுது, இந்த குட்டிப் பையன்… [“ஜேம்ஸ் டேவிட்”.] ஜேம்ஸ் டேவிட். [“ஹும்ஸ்”.] ஹூம்ஸ். சகோதரி ஹூம்ஸ், எனக்கு உங்களைத் தெரியும் என்று நான் நினைத்தேன். நீங்கள் சுவிசேஷப் பிரச்சார மிஷினரியாக இருக்கிறீர்கள், நீங்களும் உங்களுடைய கணவரும். இந்தக்காலை உங்களுடைய கணவர் உங்களோடிருக்கிறாரா? நல்லது, சகோதரன் ஹும்ஸ் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கூறப்போனால், நீங்கள் நிச்சயமாகவே சில அருமையான, அருமையான சிறு பிள்ளைகளை உடையவர்களாயிருக்கிறீர்கள். இது டேவிட்டா? இது… [“ஜேம்ஸ் டேவிட். இது ஜோசப் பென்ஜமின், நாங்கள் பிளாரிடோவிலிருந்த போது …?… ”] நான் இந்தக் காலையில் பிளாரிடோவிலிருந்து வந்திருந்த சகோதரியோடு சற்று முன் படிக்கும் அறையில் பேசிக்கொண்டிருந்தேன். இந்த சிறு பையன், அவன்… அவர்கள் பிளாரிடாவிலிருந்து வந்திருக்கிறார்கள், அவர்கள் அங்கிருந்தபோது, இந்த குட்டிப் பையன், சிறுவனாய், மிகவும் சிறுவனாய், சின்னஞ்சிறு நபராய் பின் முற்றத்திற்குச் சென்று மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தானாம். அப்பொழுது அவன் இயேசுவைக் கண்டதாகக் கூறினான். இப்பொழுது குட்டி டேவிட் ஹும்ஸ், நாங்கள் இவன் மீது இயேசு கிறிஸ்துவுக்கென்று ஊழியம் செய்யும்படியான ஒரு ஜீவிய பிரதிஷ்டைக்காக எங்களுடைய கரங்களை வைக்கிறோம். கர்த்தாவே, அவனுடைய இல்லத்தில் உம்முடைய ஆசீர்வாதங்கள் தொடர்ந்திருப்பதாக. கர்த்தாவே ஊழியக் களத்தில் மிஷனரிகளாக பணிபுரியும்படி நீர் அழைத்துள்ள அவனுடைய தகப்பனும் தாயும் ஊழியத்தை தொடர்ந்து செய்யும்படி பலமுள்ளவர்களாகவும், ஆரோக்கியமுள்ளவர்களாகவுமிருக்கும்படி செய்வீராக. இப்பொழுது குட்டி டேவிட். இயேசு கிறிஸ்துவுக்காக மகிழ்ச்சியான ஜீவியப் பணிபுரிய நீண்ட காலம் ஜீவிப்பானாக, நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். அவனுடைய இளைய சகோதரன் ஜோசப், ஓ தேவனே, இன்னும் சின்னஞ் சிறிய ஒருவனாயிருந்த போது ஆகாயத்தில் நோக்கிப் பார்த்து கர்த்தராகிய இயேசுவின் ரூபத்தைக் கண்டானே. நாங்கள் இந்தக் காலையில் இயேசு கிறிஸ்துவுக்கென ஊழியம் செய்வதற்காக பிரதிஷ்டை செய்யும் இந்த சிறு பையன் மீது தேவனுடைய ஆசீர்வாதங்கள் வருவதாக. கர்த்தாவே, இந்த சிறு குழந்தையை உம்முடைய மகத்தான பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துவாராக. நாளை என்ற ஒன்று இருக்குமானால்… ஜீவியத்தில் எங்கேயாவது, நீர்…இன்றைக்கு நாங்கள் மிகவும் பெருந்தன்மையோடு நிற்க முயற்சிக்கிற இந்த சுவிசேஷத்துடன் தொடர்ந்து நிலைத்திருப்பானாக. பிதாவே, நாங்கள் உம்முடைய நாமத்தில் அவனை ஆசீர்வதிக்கையில், நீர் அவனை ஆசீர்வதியும். ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. [அந்தப் பிள்ளை, “அந்த மரத்தின் கீழே அங்கே நான் இயேசுவைக் கண்டேன்” என்று கூறினேன்.—ஆசி.] இயேசு மரத்தின் கீழே நின்று கொண்டிருந்தாராம், அவன் என்ன …?… பாருங்கள், நான் இந்த வாலிபனை அறிந்திருக்க வேண்டும். [ஒரு சகோதரன், “ஸ்டேன்லி” என்று கூறுகிறார்.—ஆசி.] சரி, ஐயா. நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? என்னால் அவருடைய பெயரை நினைவில் கொண்டுவர முடியவில்லையென்றாலும், டானி யூஜீன் ஸ்பால்டிங். நல்லது, நீ ஒரு சிறு பையனாயிருந்தது முதற்கொண்டே, தந்தையின் அடிச்சுவடுகளை பின்பற்றி வருகிறாய் என்று நான் நம்புகிறேன். இந்த குட்டிப்பையன், இந்த ஜனங்களோ இங்கே கூடாரத்துக்கு தொடர்ந்து வருகிறார்கள். முதன் முறையாக அவன்…இருந்தபோது, நான் அவனைப் பார்த்திருக்கிறேன். முதன் முறையாக நான் அவனை அப்போதுதான் பார்த்தேன் என்று நான் யூகிக்கிறேன். [அந்த சகோதரன், “எனக்குத் தெரிந்தவரை” என்கிறாள்.] ஆம், இதுவே நான் முதன்முறையாக அவரைக் கண்டுள்ளதாகும். பரலோகப் பிதாவே, இந்த கிறிஸ்தவ தகப்பனார் மற்றும் தாயாரின் பயிற்சி போதனையின் கீழான இந்த கிறிஸ்தவ இல்லத்தின் கவனிப்பிற்குள்ளாக வைக்கப்பட்டுள்ள சிறு குழந்தையை நாங்கள் உம்மிடம் கொண்டு வருகிறோம். கர்த்தாவே அப்படிப்பட்ட ஒரு வீட்டில் பிறக்கிற சிறு பிள்ளைகளைக் காண்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், ஏனென்றால் அவர்கள் தேவனுடைய போதனையில் வளர்க்கப்படுவார்கள் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த போதகரோடு சேர்ந்து இவன் மீது என்னுடைய கரங்களை வைக்கிறேன். இந்தக் குழந்தையானது பலமாகவும், ஆரோக்கியமாகவும், இவனுடைய ஜீவிய நாட்களெல்லாம் உமக்கு ஒரு ஊழியக்காரனாக ஜீவிப்பனாக. இதை நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். ஸ்டேன்லி, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. [சகோதரி ஸ்பால்டிங் சகோதரன் பிரான்ஹாமிடத்தில் பேசுகிறார்—ஆசி.] அவன் பிறந்ததும் கூட ஜெபத்தினூடாகவாயிருந்தது. அது மிகவும் அருமையாயிருக்கிறது.
26அவர்…ராபர்ட் டக்ளஸ் சேம்பில்ஸ். மற்றொரு அழகிய நீல நிறக் கண்களைக் கொண்ட பையன். பரலோகப் பிதாவே, கடந்த முப்பது வருடங்களாக ஆத்துமாக்கள் பிறந்து வந்துள்ள பீடத்தின் மேல் அவர் நிற்கையில், நாங்கள் இந்த சிறிய நீல நிறக் கண்களைக் கொண்ட பையனை இந்தக் காலையில் உம்மண்டை கொண்டு வருகிறோம். நாங்கள் எங்கள் கரங்களை அவன் மீது வைத்து, ஆரோக்கியமான மற்றும் பலமான ஒரு ஜீவியத்திற்கென்றும், தேவனுடைய இராஜ்ஜியத்தின் சேவைக்கென்றும் அவனை பிரதிஷ்டை செய்கையில் கர்த்தாவே, நீர் அவனை ஏற்றுக்கொள்வீராக, நாங்கள் இதை இயேசு கிறிஸ்துன் நாமத்தில் செய்கிறோம். ஆமென். குட்டி நபராகிய உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. அவள் உனக்கு கொடுப்பது…அங்கு நின்றுகொண்டிருந்த நீ தான் ஜிம்மி என்று எனக்கு தெரியாமலிருந்தது. என்னே, அவர்கள் செய்துள்ள… உங்களுடைய சிறிய குடும்பம் வளர்ந்துகொண்டிருக்கிறது. மிகவும் அருமை. இப்பொழுது, அதனுடைய…ஷான் பேட்ரிக் பூல். இந்தக் குட்டிப் பையனுடைய தாத்தாவும் நானும் சிறு பிள்ளைகளாய் பள்ளியில் இருந்தது முதற்கொண்டே வாழ்நாள் முழுக்க நண்பர்களாய் இருந்து வருகிறோம். நாங்கள் சந்தித்தபோது இதைவிட மிகப் பெரியவர்களாக இருக்கவில்லை. நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. பரலோகப் பிதாவே, சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன், ஊடிகா பைக் என்னும் இடத்தில் உள்ள இங்கே உள்ள இந்த பள்ளிக்கூட வாசலில் நின்று கொண்டிருந்தபோது, இந்த சிறு பையனை கூச்ச சுபாவங்கொண்ட, நாங்கள் ஒருவரையொருவர் நோக்கிப் பார்த்து, என்றோ ஒரு நாள் நான் அவருடைய பேரப்பிள்ளையின் மீது என்னுடைய கரத்தை வைத்து, பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்கென இவனை பிரதிஷ்டை செய்வேன் என்று எப்போதாவது நான் அறிந்திருப்பேனா? கர்த்தாவே குட்டி ஷானை இந்தக் காலையில் உமக்கென ஒரு ஊழியக்காரனாக ஏற்றுக்கொள்ளும். தாயும் தகப்பனும் தங்களுடைய கவனிக்கும் பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ள இவனை தேவனுக்கு திரும்பளிக்க பெருந்தன்மையோடு கொண்டு வருகின்றனர். அவர்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாகவும், பலமாகவும், கிறிஸ்துவுக்குள் உறுதியாக ஜீவிப்பார்களாக. இப்பொழுது ஒரு சேவை செய்யும் ஜீவியமாக நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த சிறு பையனை உமக்கு அளிக்கிறோம். அவன் நீண்ட காலம் ஜீவித்து, உம்மை சேவிப்பானாக. இந்த சிறுபெண் தான் பிரதிஷ்டை செய்யப்படவேண்டியவளா? அவளுடைய பெயர் என்ன? கர்லா. இதேப் போல் நாங்கள் சிறுமி கர்லாவின் மேல் எங்களுடைய கரங்களை இந்தக் காலையில் வைத்து இயேசு கிறிஸ்துவின் சேவைக்கென்று அவளை பிரதிஷ்டை செய்கிறோம். தேவனே, இவனை ஆசீர்வதியும். இவள் நீண்ட காலம் மகிழ்ச்சியான ஜீவியம் ஜீவிப்பாளாக. அவள் இந்த ஜீவியத்தின் வாழ்நாள் முழுவதுமே உமக்கு ஒரு ஊழியக்காரியாக இருப்பாளாக. கர்த்தாவே இதை அருளும். அவளுடைய இல்லத்தை ஆசீர்வதியும். அது எப்பொழுதுமே ஒரு ஜெபம் மற்றும் விசுவாசமுள்ள ஸ்தலமாக இருக்கட்டும். நாங்கள் இந்தக் காலையில் இந்தப் பீடத்தின்மேல் நிற்கிற தகப்பனார் மற்றும் தாயாரின் இருதயங்களிலிருந்து இந்த அழகான சிறு பெண்ணை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமக்கு அளிக்கிறோம்.
27ஆமென். [தகப்பனார், “அவனுடைய பெயர் ஜேம்ஸ் பூல்”. என்று கூறுகிறார்—ஆசி.] ஒரு குட்டி பையன். ஜிம் என்ற குடும்ப பெயரிட்டுள்ளனா? [“ஆம்”.] எங்களுடைய பரலோகப் பிதாவே, இந்த சிறு பிள்ளைகளின் தகப்பனார் இப்பொழுது தன்னுடைய கரங்களில் நீர் அவருக்கு ஒரு குழந்தையின் ரூபத்தில் அளித்துள்ளதை, கடைசி சிறு பொக்கிஷத்தை பிடித்திருக்கிறார், அந்த குழந்தையோ தன்னுடைய தகப்பனாரிடத்திலிருந்து ஜேம்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தேவனே அவன் வேதாகமத்தில் உள்ள யாக்கோபைப் போல ஒரு ஞானமுள்ள மனிதனாயிருக்க அருள்புரியும். கர்த்தாவே, நீர் அவனுக்கு ஒரு நீண்ட, ஆரோக்கியமான ஜீவியத்தை அளிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நாளை என்று ஒன்று இருக்குமாயின், அவன் வளர்ந்து தேவனுடைய வார்த்தையை கொண்டு செல்லட்டும். பிதாவே, இதை அருளும். எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகிய நீர் இந்த பூமியிலிருந்தபோது செய்த ஞாபகர்த்தமாக நான் என்னுடைய கரங்களை குட்டி ஜேம்ஸ் பூல் மீது வைத்து அவனை தேவனுடைய சேவைக்கென பிரதிஷ்டை செய்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். ஜேம்ஸ் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! சிறுவனை ஆசீர்வதியும். ஒரு சிறு பையன்; இப்பொழுது அவர்கள் இருவர். என்ன கூறுகிறீர்கள்? ஜெரி டீன் ஆலன். தேவனாகிய கர்த்தாவே; நாங்கள் ஜெரி டீன் ஆலன் என்ற பையன் மீது எங்களுடைய கரங்களை வைக்கையில், இந்த சிறு பையனின் தலையின் மேல் இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதங்கள் தங்குவதாக, நாங்கள் இவனுடைய வாலிப ஜீவியத்தை உமக்கு பிரதிஷ்டை பண்ணுகையில், அவனுடைய இல்லத்தையும், அவனுடைய பெற்றோரையும் ஆசீர்வதியும். நாங்கள் அவனை இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒப்புவிக்கையில், அவன் நீண்ட காலம் எங்களுடைய தேவனுக்கும், அவனுடைய தேவனானவருக்கும் மகிழ்ச்சியான சேவை புரியும் ஜீவியம் செய்ய ஜீவிப்பானாக. ஆமென். குட்டிப் பையனே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
2827 இப்பொழுது செய்த காரியத்தை பற்றி நான் சிந்தித்துப் பார்க்கிறேன். இப்பொழுது நாம் சரியாக பதினோராம் மணி வேளையில் இருக்கிறோம். இப்பொழுது உங்களுக்குத் தெரியுமா? தங்கள் குழந்தைகளுடன் வந்த தாய் தகப்பன்மாரை நான் காண்கையில், கர்த்தராகிய இயேசுவின் பிரதிஷ்டைக்காக அந்தக்காலை யோசேப்பும் மரியாளும் வந்ததை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. 28 சகோதரன் கிட் அவர்களே, இந்தக் காலையில் நான் அலுவலகத்தில் ஒருவருக்கு ஒரு சிறு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் உம்முடைய வயதுடைய ஒரு மனிதனிடத்திலிருந்து இந்தக் காலையில் இங்கே உம்முடைய உணர்ச்சி வசப்படுதலைக் குறித்து கேள்விப்பட்டேன். கர்த்தர் எப்படி உங்களைக் குணமாக்கினார் என்பதைப் பற்றி கூட்டத்தாரிடம் நீங்கள்…கூறிக் கொண்டிருந்திருப்பீர்கள் என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். நான் ஒரு நாள் அவரைப் பார்ப்பதற்காக காரே பழுது போய்விடுமளவிற்கு விரைந்து சென்று கொண்டிருந்தேன். அவர் ஒரு வயோதிக ஊழியக்காரர்.
2929 சற்று சிந்தித்துப் பாருங்கள், தன் மனைவியோடு இங்கு இருக்கும் இந்த மனிதர், நான் பிறக்கு முன்னரே, சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டு இருந்தார். நிலக்கரிச் சுரங்க வேலையாட்கள் உள்ள டென்னஸி, கென்டக்கி ஆகிய இடங்களில் உள்ள மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும் சென்று அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். இப்படியாக அவர் உழைத்து களைத்துப் போனார். உண்ண ஏதுமின்றியும் அவர் வாழ்ந்தார். இந்த எளிய தன் கணவனை சுவிசேஷம் பிரசங்கிக்க அனுப்ப வேண்டி, தினமும் இருபது அல்லது முப்பது செண்டுகள் துணிகளை துவைப்பதன் மூலம் சம்பாதித்தார். அது எந்த ஒரு நபரையும் உணர்ச்சிவசப்படச் செய்ய போதுமானதாயிருக்கவில்லையா? 30 அன்று அவர் அங்கு படுக்கையில் கிடந்தார். மிகச் சிறந்த மருத்துவர்களும், “அவர் மரித்துக் கொண்டிருக்கிறார், அவருடைய பாலின பெருஞ்சுரப்பி புற்றுநோய், அவரது உடல்முழுவதும் பரவியுள்ளது, சிலமணி நேரங்கள் தான் அவர் உயிர் வாழமுடியும், அல்லது ஓரிரண்டு நாட்கள் தான் உயிர் வாழமுடியும்” என்று கூறினார்கள். அது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இக்காலையில் அவர் இங்கு ஆரோக்கியத்துடனும், நலத்துடனும், தேவனுக்கு மகிமை செலுத்திக் கொண்டு இருக்கிறார். சகோதரன் கிட் அவர்களே, தாங்கள் சுகம் பெற்ற போது, உமக்கு வயது என்ன? கிட்டத்தட்ட அப்பொழுது வயது…, இப்பொழுது அவருக்கு என்ன வயது? [ஒரு சகோதரி “எண்பத்திரண்டு” என்கிறார்.—ஆசி] [எண்பத்தி…ஆகஸ்டு மாதத்தில் இருந்து எண்பத்தி மூன்று.”] தேவன் அவரை சுகமாக்கியப் போது அவர் என்பது வயதுள்ளவராக இருந்தார். சரி. தேவன் முதிர்வயதினராகிய நம்மைக் குறித்து அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? நிச்சயமாக, தேவன் அக்கறைக் கொண்டிருக்கிறார். ஆம் ஐயா.
3031 ஆபிரகாம் நூறுவயதினனாக இருக்கையில் தேவன் அவனை சுகமாக்கினார். சாராள் தொண்ணூறு வயதினனாக இருக்கையில் அவளை சுகமாக்கினார். அவர்கள் இஸ்மவேலை…இல்லை மன்னிக்கவும். ஈசாக்கை பெற்றெடுத்தார்கள். அது உண்மைதானே? இதற்காக நாம் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம். 32 நீங்கள் மிகவும் அருமையானவர்களாக இருக்கிறீர்கள். இப்படியாக நான் இந்தக் காலை முழுவதும் உங்களோடு பேசிக் கொண்டே இருக்கலாம். ஆனால் நாமோ சற்று தேவனுடைய விலையேறப்பெற்ற வார்த்தையில் கொஞ்சம் வாசித்து விட்டு, ஆராதனைக்குள் செல்வோம். தேவனுக்கு சித்தமானால், சம்பவித்த சில காரியங்களைப் பற்றி நான் உங்களோடு சற்று பேசலாம் என்று நான் எண்ணுகிறேன். அதன் பிறகு இன்றிரவில் கர்த்தருக்குச் சித்தமானால், ஒரு குறிப்பிட்ட பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன். நான் பேசுகிற செய்தி வெளியே போக இருப்பதால், அந்த செய்தியை முக்கியமாக பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் வந்து கேட்க விரும்பினால், அப்படியே செய்யலாம். போதகர் தன்னுடைய செய்தியை கொடுத்து முடித்ததும் நான் எனது செய்தியை கொடுப்பேன். நான் இந்த ஒலிநாடாவில் பதிவு செய்வேன். அவருடைய வருகையின் பிரகாசிக்கும் சிவப்பு விளக்கு என்பதன் பேரில் நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். அவ்வெளிச்சத்தின் மின்னுதல் எவ்வாறு நேராக நம்மேல் இப்பொழுதே பிரகாசிக்கிறது! அதைப் பற்றி இன்றிரவு பேச நான் விரும்புகிறேன். அவருடைய பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு என்பதன் பேரில் இன்றிரவு பேச விரும்புகிறேன். அவர் இங்கே அந்த கைகாட்டியின் பின்னே இப்பொழுது இருக்கிறார். கைகாட்டி கீழே இறங்கி விடப்பட்டது. இரயில் வண்டியே தடத்தில் உள்ளது.
3133 எண்ணாகமம் 16ம், அதிகாரத்தை நீங்கள் திருப்பி வாசிக்கலாம். இது நித்திய வார்த்தையாயிருக்கிறது, எனவே அதை பயபக்தியோடு வாசிப்போமாக. நான் சொல்ல விரும்பும் பொருளின் பின்னணியை பெறும்படி அதற்காக எண்ணாகமம் 16ம் அதிகாரம் 3,4 ஆகிய வசனங்களை நான் வாசிக்கும்படி விரும்புகிறேன். 34 இப்பொழுது ஒலிநாடா பதிவுக் கருவிகள் இயக்கிவிடப் படாமலிருந்தால் அவைகள் இப்பொழுது இயக்கிவிடப் பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அல்லது இப்பகுதி வெளியே அனுப்ப ஏதுவாக அதற்கேற்ற வண்ணம் ஒலிப்பதிவு கருவியை பொருத்த விரும்புகிறேன். இந்த செய்தி ஒலிநாடா வெளியே அனுப்பப்படுகிறது. நீங்கள் வேண்டுமானால், ஆராதனையில் ஏனைய பகுதியிலிருந்தும் பிரிக்கப்பட்டு தனியாக இருக்கத்தக்கதாக செய்தியின் இப்பகுதி பதிவு செய்யப்படும்படி நீங்கள் ஒலிப்பதிவு கருவிகளில் ஒலிநாடாவை ஒழுங்கு செய்ய முடியுமா? நீங்கள் பாருங்கள், அது ஒரு—ஒரு புதிய செய்தியாக இருக்கிறது. இப்பொழுது உங்களுக்கு வேண்டிய பகுதியோடு நிறுத்திக் கொண்டு அல்லது நீங்கள் வேண்டுவதுபோல் செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் நாங்கள்… எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறியத்தக்கதாக நான் ஒலிப்பதிவு கருவியை ஒரு வினாடி நிறுத்திவிட்டு, மீண்டும் ஆரம்பிக்கட்டுமா? அல்லது எதிலிருந்து நீங்கள் ஆரம்பிக்க வேண்டுமோ அதிலிருந்து நீங்களே ஆரம்பித்துக் கொள்ள முடியுமோ அப்படி ஆரம்பித்துக் கொள்ளக் கூடுமா? சரி. அது அருமையாயிருக்கும்.
3235 இப்பொழுது நாம் எண்ணாகமம் 16:3 மற்றும் 4-ஐ வாசிக்கப் போகிறோம். மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீகள்; சபையார் எல்லோரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள். மோசே அதைக் கேட்டபோது முகங்குப்புற விழுந்தான். 36 எங்கள் பரலோகப் பிதாவே, இந்த சில வசனங்களை ஆசீர்வதியும். எங்களது இருதயத்தின் தியானமும், எங்களுடைய உதடுகளின் கனியும் உமக்கு முன்பாக பிரீதியாக இருப்பதாக. இயேசுவின் நாமத்தினால் நாங்கள் ஜெபிக்கிறோம், ஆமென். 37 நான் இதை ஒரு பாடப் பொருளாக எடுத்து, நான் இக்காலையில் பேசப்போகும் பிரசங்கத்திற்கு இடைவெளியில் நிற்றல் என்று கூறிப் பேச விரும்புகிறேன்.
3338 இப்பொழுது நாம் பேசப் போகிற அல்லது வாசித்த சம்பவமானது, தாத்தான், கோராகு, ஆகியோர், “சபையோர் யாவரும் பரிசுத்தமாயிருக்கிறார்கள். அவர்கள் இன்னின்ன காரியத்தை செய்ய நீர் விட்டு விட வேண்டும்” என்று மோசேயிடம் கூறிக்கொண்டு, மோசேக்கு கர்த்தர் கொடுத்த அதிகாரத்தில் வீணாக தலையிடத் தீர்மானித்த சமயத்தில் ஏற்பட்ட சம்பவம் என்பதை நாம் யாவரும் புரிந்து கொள்கிறோம். வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு ஜனங்களை நடத்திச் செல்லும்படி மோசேக்கு தேவன் கட்டளையிட்டிருந்தார். அவர்களோ “நீ மிதமிஞ்சிப் போகிறாய். இக்கூட்டத்திலேயே நீ ஒருவன் தான் எதுவும் பேசவும், சொல்லவும் தகுதியுடையவன் போல் உன்னை ஆக்கிக் கொள்ள முயற்சி செய்கிறாய்” என்று கூறினார்கள். 39 அப்பொழுது அவர், “அவர்கள் மத்தியிலிருந்து உன்னைப் பிரித்துக்கொள். நான்—நான்—நான் அந்த முழு கூட்டத்தையும் கொன்று போட்டு, ஒரு புதிய சந்ததியை உருவாக்கி உன்னோடு அனுப்புவேன்” என்று மோசேயிடம் கூறுமளவிற்கு இது தேவனுக்கு மிகவும் கோபமூட்டினது. மோசேயோ தேவ சமூகத்தில் வீழ்ந்து, தேவன் தன்னைத் தாண்டித்தான் போக வேண்டும் என்று கூறினான். பார்த்தீர்களா?
3440 இப்பொழுது, இன்றைக்கு நாம் தொடர்ந்து தவறாகப் போய்க் கொண்டிருப்பதால், நம்முடைய பாவத்தின் அலட்சியத்தினால் தேவன் இளைப்படைந்து, அப்படிப்பட்ட வேளையில், ஜனங்களை அதம்பண்ணப் போகும்போது, மோசேயைப் போல் ஜனங்களுக்காக இன்று யார் நிற்கப் போகிறார்கள்? ஜனங்களுக்காக மோசே இடைவெளியில் நின்றபோது அதை தேவன் ஏற்றுக் கொண்டதுபோல், இன்று ஜனங்களுக்காக இடைவெளியில் நிற்கவும், அல்லது நிற்கக் கூடியவரை தேவன் ஏற்றுக் கொள்ளத் தக்கதான அப்படிப்பட்ட ஒரு நபரை நாம் எங்கே கண்டறிவோம்? தேவகோபத்தையே தடைசெய்து நிறுத்தும் அளவுக்கு, மோசேயின் சொந்த ஜீவியமானது பூமியிலே மிகவும் விசேஷித்ததாயிருந்தது. தேவன் மோசேயைத் தாண்டிச் செல்ல மனதில்லாதிருந்தார். வேத வாக்கியத்திலிருந்து இக்காரியத்தைப் பற்றி வெளிப்பாடு எனக்கு ஒரு நாள் கிடைக்கும் வரைக்கும் இது ஒரு புதிராகவே எப்பொழுதும் இருந்து வந்தது. அதாவது, நீங்கள் பாருங்கள், மோசே ஒவ்வொரு செயலிலும் மற்றவர்க்கு மாற்றீடாக இருந்தான். அவன் இயேசு கிறிஸ்துவின் ஒரு மாதிரியாயிருந்தான்.
3541 பாவிகள் யாவரும் மரணாக்கினைக்கு உள்ளாகி, தேவன் முழு உலகத்தினரின் ஜீவனை அழிக்கவிருந்தபோது, கிறிஸ்து நம் யாவருக்காகவும் மரித்தார். கிறிஸ்து தமது சொந்தக் குமாரனான படியால், அவரைக் கடந்து தேவனால் வரமுடியவில்லை. இயேசு தம்மையே இலவசமாக அளித்து அதன் மூலம் உரிய கிரயத்தைச் செலுத்தினார். மோசேயினால் அப்படிப்பட்ட காரியத்தை செய்ய முடியாமலிருந்தது. மோசேக்கோ நம்மைப்போல் மனித இரத்தம் தான் இருந்தது. எனவே, அவனது இரத்தம் போதுமானதாக இருக்கவில்லை. ஆனால் இயேசுவோ தேவனுடைய சொந்த இரத்தமான, சிருஷ்டிக்கும் தேவனுடைய இரத்தமாக இருந்தார். எனவே, தேவன் முழு மனித இனத்தையும் அதின் பாவத்தினின்றும் விடுவித்து விட்டார். ஏனென்றால் அவை யாவும் அவர் மேல் சுமத்தப்பட்டிருந்தன. அவர் தேவ சமுகத்தை விட்டு புறம்பாக கல்வாரிக்குச் சென்று பாடுபட்டு மரித்தார். நமது பாவங்கள் அவர் மேல் இருந்தபடியால், அவர் பாவமானார். அதனால் அவர் பாதாளத்தில் தள்ளப்பட்டார். நமது பாரம் சுமப்பவர். நம்முடைய பாவங்களை தம்மேல் எடுத்துக் கொண்டு கல்வாரிக்குப் போனார். கல்வாரியிலிருந்து அவர் பாதாளத்திற்குச் சென்றார். தேவன் அவரை மூன்றாம் நாளில், நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாக எழுப்பினார்.
3642 இன்று, இயேசுவே தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள மத்தியஸ்தராயிருக்கிறார். நாம் இலவசமாக மன்னிக்கப்பட்டிருக்கிறோம். நாம் பாவம் செய்தோமா என்று கூட தேவன் அறியமாட்டார். ஒருபொழுதும் நினைவுகூராதபடி மறதியின் கடலில் நம் பாவங்கள் யாவும் போடப்பட்டு விட்டன. நாமே இக்காரியத்தை செய்ய முடியாது. ஏனெனில் நாம் முடிவுள்ளவர்கள். அவரோ முடிவற்றவர், நாம் முடிவுள்ளவர்கள். ஆதலால் நாம் இன்னும் நினைவில் வைத்திருக்க முடியும். ஏனெனில் நாம் அவ்வளவு பெரிதானவர்களல்ல. ஆனால் நாம் எப்பொழுதும் பாவம் செய்தோம் என்பதையே அவர் மறக்கிற அளவுக்கு மிகவும் மகத்தானவராக இருக்கிறார். அவருடைய சமுகத்தில் நாம் குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். எவற்றிலெல்லாம் அவர் எப்படியிருந்தாரோ அவ்வாறாக நாம் இருக்கிறோம். நான் அவருடைய நீதியாகும்படி, அவர் என்னுடைய பாவமானார். நீங்கள் அவருடைய நீதியாகும்படி, அவர் உங்களுக்காக பாவமானார். எனவே கிறிஸ்து இயேசுவில் உங்களுடைய அறிக்கை இருக்கும் வரையிலும் தேவன் உங்களில் பாவத்தைக் காண முடியாது.
3743 கொஞ்ச காலத்திற்கு முன் யாரோ ஒருவர், “அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நான் விசுவாசிப்பேனென்றால், நாம் மிகவும் குதூகலித்து, ஊரையே அலங்கரித்து, ஒவ்வொரு நடனசாலைக்கும் சென்று, மிகவும் உற்சாகமாக குடித்து மற்றும் பல்வேறு களிப்பான காரியங்களைச் செய்வேன். ஏனெனில்…” என்று கூறினார். அப்பொழுது நான், “ஏன் அவ்வாறு செய்வீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “கிறிஸ்துவில் நீங்கள் ஏற்கனவே பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். எனவே அது என்ன செய்தாலும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாதல்லவா?” என்றார். 44 அப்பொழுது நான், “நீர் அதைப் பெற்றிருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது” என்றேன். உங்களுடைய இருதயத்தை தேவனுடைய அன்பானது இயேசு கிறிஸ்துவின் மனவுருக்கத்தில் தொடும்போது, அவரை நீங்கள் மிகவும் நேசிப்பீர்கள். அதனால், உங்கள் பாவத்தைப் போல், உலகம் உங்களுக்கு மரித்ததாக ஆகிவிடும். அவ்வாறு தான், நீங்கள் உங்களில் பரிசுத்தாவியைப் பெற்றுள்ளீர்கள் என்பதை அறிகின்றீர்கள். நீங்கள் அலறி, சப்தமிட்டு, அன்னிய பாஷைகளில் பேசக்கூடியதாக இருப்பதினாலோ, அல்லது வேறு எவ்விதத்தினாலோ அல்ல; பாவம் உங்களுக்கு மரித்து இருக்கும் போதும், நீங்கள் இயேசு கிறிஸ்துவில் ஜீவித்திருக்கும் போதும் மாத்திரமே அதை அறியக்கூடும். ஓ! தேவனுடைய அன்பு எவ்வளவு ஐசுவரியமுள்ளதாயிருக்கிறது, எவ்வளவு சுத்தமாயிருக்கிறது! பார்த்தீர்களா?
3845 அண்மையில் இங்கே கென்டக்கியிலுள்ள லூயிவில்லில் இருந்த ஒரு—ஒரு வாலிபப் பெண்மணியைக் குறித்து ஒரு ஊழியக்காரர் கூறிக் கொண்டிருந்தார். அவள் தனது இருபத்தைந்து, முப்பது ஆண்டுக் காலம் வரையிலும் நீண்ட நாட்கள் திருமணமாகாமல் காத்துக் கொண்டிருந்தாள். அவள் அருமையான உறுதியானதொரு கிறிஸ்துவ பெண்ணாயிருந்தாள். அதே லூயிவில்லில் இவ்விதமாயில்லாத ஒரு குறிப்பிட்ட மனிதன் இருந்தான். அவன் இப்படிப்பட்ட ஒரு நல்ல ஜீவியம் ஜீவித்திருக்கவில்லை. அவன் நாட்டியங்களுக்கும், இரவு விடுதிகளுக்கும் சென்று தன் காலத்தைக் கழித்தவனாயிருந்தான். ஆனால் ஒரு நாள் அவன் தனது பாவங்களுக்கு மன்னிப்பைக் கண்டு கொண்டான்; அவன் ஒரு உண்மையான ஒரு உறுதியான கிறிஸ்தவனாக ஆனான். அதற்கு ஓராண்டுக்குப் பிறகு, மேற்சொன்ன அந்த இளம் கிறிஸ்தவ பெண்ணிடம் அவன் காதல் கொண்டான். அந்தப் பெண்மணியும் அவனிடம் ஆழ்ந்த காதல் கொண்டான். அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
3946 அவர்கள் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஒன்று சேர்ந்து வாழ்ந்த பிறகு, இந்த வாலிப பெண்மணி தன்னுடைய கணவனுடம் ஒருநாள் இவ்வாறு கூறினதாக அவர்கள் கூறினர். அதாவது அவள், “அன்பே, புதியதாக கிறிஸ்தவனான உமக்கு இது சற்று கடினமாக இருக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன். நான் சிறு பெண்ணாக இருந்தது முதலே கிறிஸ்தவளாக இருந்திருக்கிறேன். ஆனால் இளம் கிறிஸ்தவராக இருக்கும் உங்களுக்கு, இதற்கு முன் இவ்வளவு நீண்ட காலம் நீங்கள்—நீங்கள் பாவத்தை செய்து கொண்டேயிருந்தபடியினால், பாவத்தின் வஞ்சனைகளையும், சோதனைகளையும் எதிர்த்து நிற்பதென்பது கடினமானது தான்” என்று கூறினாளாம். அதற்கு அவன், “ஆம், அது ஒரு போராட்டமாகத்தான் இருக்கிறது” என்று கூறினானாம். 47 அப்பொழுது அவள், “நீங்கள் ஒரு காரியத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதாவது, சத்துருவானவன் உங்களை எங்காவது நிலைகுலையச் செய்து, அதனால் நீங்கள் வீழ்ந்து பாவத்திற்குள் மீண்டும் போய் விடுவீர்களானால், அதினிமித்தம் நீங்கள் வீட்டை விட்டு வெளியே தரித்திருக்க வேண்டாம். அப்பொழுதும் நீங்கள் திரும்பவும் வீட்டிற்கு வரவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அப்பொழுதும் நீங்கள் திருமணம் செய்து கொண்டே அதே மனைவியையே வீட்டில் கண்டறியப் போகிறீர்கள்”என்றாளாம். அவள் மேலும், “நீங்கள் மீண்டும் ஜெபிக்க நான் உங்களுக்கு உதவி செய்வேன். மீண்டும் தேவனிடத்திற்கு திரும்ப ஜெபத்தினூடாக உதவி செய்வேன். எனவே நீங்கள் தூரமாய் விலகிச் சென்றுவிட நான்—நான்—நான்—நான் விரும்பவில்லை” என்று கூறினானாம். நீங்கள் எப்படியிருந்தீர்கள் என்ற அடிப்படையின் பேரில் நான் உங்களை மணம்புரியவில்லை. நான் உங்களை நேசித்தபடியினால் நான் உங்களை மணந்து கொண்டேன். நீங்கள் என்ன செய்தாலும் கவலைப்பட வேண்டாம், நான் இன்னும் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களை நேசித்தபடியினால்தான் உங்களை மணந்து கொண்டேன்” என்று கூறினாளாம்.
4048 அந்த மனிதன் அந்நாளில் தன் வேலைக்குச் சென்றபொழுது, தான் வேலை செய்துகொண்டிருந்த இடத்தில் இக்காரியங்களை அவன் திரும்பக் கூற அவர்கள் கேட்டனர். அப்பொழுது அவன், “இப்படிப்பட்டதான ஒரு பெண்ணுக்கு எதிராக ஒரு மனிதன் எவ்வாறு தவறு இழைக்க முடியும்?” என்று கூறினானாம். ஒரு மனைவி தன் கணவன் என்ன செய்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் அவனை மிகவும் நேசித்து, அவன் மீண்டும் திரும்பிவர வேண்டும் என்று மனப்பூர்வமாய் விரும்புவதும், அவனை திரும்பவும் ஏற்றுக் கொள்ள விரும்புவதும், இவ்வாறு மீண்டும் செய்ய முயற்சிப்பதுமான ஒரு காரியத்தை ஒரு பெண் செய்தால் அவளுக்கு எதிராக எப்படி தவறிழைக்க முடியும்? புரிகிறதா? இப்பொழுது அந்தப் பெண்ணுக்குள்ள அன்பை பலகோடியால் பெருக்கிப் பாருங்கள். அப்பொழுது தேவனுடைய அன்பு எப்படிப்பட்டது என்பதைப் பற்றி ஒரு அப்பிராயம் உங்களுக்கு உண்டாகும். புரிகிறதா? 49 ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவிடம் அன்புகூரும்போது, உலகத்தின் காரியங்கள்… அவர் உங்களுக்கு என்ன செய்தார் என்பதைப் பற்றி வேதத்தின் வெளிச்சத்தில் நீங்கள் எண்ணிப் பார்க்கையில், ஏதோ ஒரு உணர்ச்சிவசப்படுதலின் வெளிச்சத்தில் அல்ல, ஆனால் என்ன என்பதைப் பற்றிய உண்மைகளின் வெளிச்சத்தில் பார்க்கையில், அப்பொழுது உங்களுக்குள்ளாக ஏதோ ஒன்று சம்பவிக்கிறதாயுள்ளது. அவ்வமயம் புதிய பிறப்பை நீங்கள் அடைகிறீர்கள். பாவமானது அப்பொழுது நடு இரவைப்போல் மரித்ததாக இருக்கிறது. ஒளி உங்களிலிருக்கும் வரைக்கும், இருள் எவ்வாறு உங்களில் ஊடுருவும்? இருள் அவ்வாறு அதைச் செய்ய முடியாது. வாக்குத்தத்தத்தை எடுத்துக் கொண்டு தன்னையே இடைவெளியில் சமர்ப்பித்த ஒரு மனிதனுக்கு தேவன் அதைத்தான் செய்தார். மோசேயானவன் அந்த முந்தின சாயலுக்கு ஒரு—ஒரு மாதிரியாயிருந்தான். அந்தக் காரணத்தினால்தான் மோசே ஜனங்களுக்காக இடைவெளியில் நின்றான்.
4150 பின்பு நான், நாம் வாழும் இந்த தளர்ந்த நடையுள்ள, சோம்பேறித்தனமான, உறுதியில்லாத லவோதிக்கேயா காலத்தைப் பற்றி இந்நாளில் வியந்தேன். சபைக் காலங்களைப் பற்றி படிக்கையில், கடைசிக் காலமாகிய லவோதிக்கேயா சபைக்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் யாவரும் அறிந்திருக்கிறோம். இந்த சோம்பேறித்தனமான, தளர்ந்த நடையுள்ள, நிர்விசாரமுள்ள, பரியாசம் பண்ணிக் கொண்டிருக்கிற, இச்சையினால் நிறைந்த, பாவ காலமாகிய நாம் வாழுகிற இந்தக் காலத்தில், தேவனானவர், “சபையே கொஞ்சம் விலகி நில். இந்த முழு உலகத்தையும் நான் அதமாக்குவேன்” என்று இன்னமும் சொல்லாதது வியப்பாக இருக்கிறது. புரிகிறதா? நாம் என்ன ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! அக்காரியத்தை இந்நாட்களிலொன்றில் அவர் செய்தும் விடுவார். அது வருகிறது என்பதை நாம் அறிவோம். அப்பொழுது இதற்கு எதுவுமே தப்பிக்கப் போகிறதில்லை, ஏனென்றால் ஏற்கனவே தப்பித்துக்கொள்ள விரும்புபவர்களுக்காக ஒருவர் மரித்து விட்டார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவர்களாக ஆனவர்களை அவர் எடுத்துக் கொள்வார். அவர்கள் கோபாக்கினையிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுவார்கள். ஏனெனில் அப்பொழுது அவரால் அதைச் செய்ய முடியாது. மோசேயின் காலத்தில் அதைச் செய்வதற்கு ஒரு வழியும் இல்லாதிருந்தது.
4251 இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷ புத்தகம், வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்றாம் அதிகாரத்தில் நாம் பார்க்கும்போது, வேதம், லவோதிக்கேயா சபைக் காலமாகிய இக்காலம் “குருடாயிருக்கும்” என்று கூறியுள்ளது. “நீங்கள் ‘ஐசுவரியமுள்ளவர்களாயிருக்கிறபடியினால்’, ‘ஐசுவரியம்’ உடையவர்களாயிருக்கிறோம் என்றும், ‘திரவிய சம்பன்னரென்றும்’ கூறுகிறபடியினால், பெரிய சபைக் கட்டிடங்கள், அருமையாக உடுத்தியிருக்கும் மக்கள், எந்த ஒரு காலத்திலும் இல்லாத அளவுக்கு மகத்தான காரியங்கள் ‘எனக்கு ஒரு குறைவுமில்லையென்று’ நீ கூறுகிறாய். ஆனாலோ நீ உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், பரிதபிக்கப்படத்தக்கவனும், நிர்ப்பாக்கியமுள்ளவனும், நிர்வாணியும், குருடனுமாயிருக்கிறதை அறியாமலிருக்கிறாய்.” 52 இப்பொழுது ஒரு மனிதன் இந்த நிலைமையில் இருந்தால், நீங்கள் அவனுடைய நிலைமையை அவனுக்கு எடுத்துரைக்கலாம், அவர் சரியான மனநிலயில் இருந்தால், அப்பொழுது அவன் தன்னை சீர் செய்து கொள்ள முயலுவான். ஆனால், அந்த மனிதன் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருக்கும்போது, உங்களால் அவனிடம் எந்த வித்தியாசத்தையும் எடுத்துரைக்க முடியாது. அவன் தான் நிர்வாணியாயிருந்தும் அவன் அப்பொழுது அதை நம்புவதில்லை. அவன் அந்த நிலையில் இருப்பதை அவன் நம்பாதபடியால், அவன் குருடாயிருக்கிறான் என்பதையே அது இங்கு காண்பிக்கிறது. கிறிஸ்துவை சேவிக்க மறுப்போரின் கண்களை இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் குருடாக்கிவிட்டான். நாம் வாழுகிற நேரத்தின் அடையாளத்தை அவர்களால் காண இயலாதபடி, அவர்கள் மிகவும் குருடாயிருக்கிறார்கள். இடைவெளியில் ஏற்கனே ஒருவர் நின்று கொண்டிருக்கிறார் என்பது நினைவிருக்கட்டும். அங்கே வேறு ஒருவரும் நிற்க முடியாது. நீங்கள் அந்த பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இல்லையெனில் நீங்கள் நாசமடைவீர்கள்.
4353 இப்பொழுது, முடிக்கும் முன்னர் நான் இதைக் கூற விரும்புகிறேன். நம்மால் நிற்க முடியுமா…இப்பொழுது நான் இதை எனக்கே பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். குருடாயிருக்கிற ஒரு மனிதன், மாம்சபிரகாரமாக குருடன், அவன் செங்குத்தான மலையுச்சியின் மேல் நடந்து செல்வதை பார்த்து அறிந்து கொண்ட பிறகு நம்மால் சும்மா நிற்க முடியுமா? நாம் அதை இந்தக் காலை நம்முடைய சிந்தையில் அறிந்திருந்தும், செங்குத்தான மலையுச்சியின் மேல் ஒரு குருடன் நடந்து செல்வதைக் கண்டும், நாம் அவனை எச்சரிக்க முயற்சிக்காமல் நிற்க முடியுமா? அவ்வாறு செய்யாமலிருந்தால் மிகவும் கொடுமையானதாக இருக்கும். நமது இருதயத்தில் நாம் மிகவும் அக்கறையற்றவர்களாக இருப்போம். பார்க்க முடியாதவனும், தனக்குத் தானே உதவி செய்து கொள்ள இயலாதவனுமாகிய ஒரு குருடன் செங்குத்தானதொரு மலையுச்சியின் மேல் நடந்து செல்கையில், வேறொரு மனிதன் அதைப் பார்த்தும் அதைப்பற்றி அக்கறையில்லாமலும், மேற்கொண்டு நகைக்கக் கூடியவனான ஒரு மனிதனைப் பற்றி உங்களால் கற்பனை பண்ணி பார்க்க முடியுமா? அதைப்பற்றி எதுவும் செய்யாமல் இருப்பது மோசமானதாகும்.
4454 பாருங்கள், உலகமுழுவதிலும் உள்ள எனது சகோதரர்களுக்கு நான் இவ்வறிக்கையை விடுக்க விரும்புகிறேன். நான்—நான் மனத்தாழ்மையோடு, நான் என்ன செய்துக் கொண்டிருந்தேன் என்றும், என்ன செய்யப் போகிறதாக எண்ணியுள்ளேனோ அதையும் பற்றி கூறப்போகிறேன். நான் அநேக ஆண்டுகளாக பிரசங்கித்து வருகிறேன். நான் வயோதிக மனிதனாக, முதிர்ந்த அனுபவம் வாய்ந்த பிரசங்கியாக ஆகிவிட்டேன். ஏராளமான கடுமையான போராட்டங்கள் எனக்கு ஏற்பட்டது. என் உள்ளே முழுவதும் போராட்டங்களினால் வெட்டுண்டு போயிருக்கிறேன். ஏனெனில், தேவன் எனக்கு அளித்த பங்கு, குழ்தைகளை முத்தமிடுவது, இளைஞருக்கு விவாகம் செய்து வைப்பது, முதிர் வயதினரை அடக்கம் செய்வது போன்றதல்ல. ஆனால் அஞ்ஞான மார்க்கத்தின் வஞ்சனைகள், பேய்களின் உபதேசங்கள் மற்றும் அந்தகாரத்தின் வல்லமைகள் ஆகியவற்றுக்கு எதிரான யுத்தத்தில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய தேவனுடைய வார்த்தையப் பிடித்துக் கொண்டு எதிராளியானவன் தோற்கடிக்கப்படுவதை நான் காணும் வரையிலும் போரிடுவதேயாகும். நான் அநேக சமயங்களில் ஆழமான வெட்டு காயங்களைப் பெற்றிருக்கிறேன்.
4555 இந்நாளில் இச்செய்தியோடு நான் வந்த வேளையில், நான் சபைக்கு சொல்லவிருந்ததை சொல்லிவிட்டேன். இந்த வேலைக்காக பரிசுத்த ஆவியானவர் என்னை அழைத்த பொழுது, நான் அதை அநேக ஆண்டுகளிக்கு முன்பே முன்னறிவித்தேன். உங்களுக்கு நான் அவருடைய நாமத்தில் உரைக்கும்படி கர்த்தர் அனுமதித்த காரியங்கள் ஒவ்வொன்றும், அது எவ்வாறு நடக்க வேண்டுமோ அவ்வாறே நிறைவேறியிருக்கவில்லை என்று கூறக் கூடிய ஒரு நபரும் இன்றைக்கு இப்பூமியில் இல்லை. 56 அவர் எவ்வாறு என்னை முதலாவதான வரத்தோடு முதலில் அனுப்பினார், பிறகு இரண்டாவது வரம் …உலக முழுவதிலும் காரியங்கள் உரைக்கப்பட்டன அல்லது நடந்தேறியுள்ளன, மேலும் உண்மையாக லட்சக்கணக்கானவர்கள் கிறிஸ்துவினிடம் வந்திருக்கின்றனர். பத்தாயிரக்கணக்கான பிரசங்கிமார்கள் ஆவியில் ஏவப்பட்டு, அதனால் இன்றைய தினத்தில் ஒரு எழுப்புதலானது ஆரம்பிக்கப்பட்டு, அது பூமி முழுவதிலும் பரம்பிக் கொண்டு இருக்கிறது. பெந்தேகோஸ்தேயினர் ஒருவரே என்னுடைய செய்தியை ஏற்றுக் கொண்டிருக்கிறபடியால் அவர்களே ஆதாயமடைந்துள்ளனர். சிறு குழுக்களான பெந்தேகோஸ்தேயினரே, மற்ற எல்லா சபைகளையும் ஒன்றாக சேர்ந்தாலும், அவர்களால் காண்பிக்க முடியாத அளவுக்கு, அதிகமாக மக்களை மனமாற்றமடைய செய்திருக்கின்றனர். அது புள்ளி விவரமாயிருக்கிறது. ஏன்? ஏனெனில் அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளுதலினாலும், எழுப்புதலை ஏற்றுக் கொள்வதாலுமேயாகும்.
4657 நாமும், வைத்தியர்களும், பூமியின் பெரிய மனிதரும் சாட்சியிட்டதான, வியாதியஸ்தர் சொஸ்தமடைதல், பிசாசுகள் துரத்தப்படுதல், மரித்தோர் உயிரோடெழுப்புதல் ஆகியவைகள் நடைபெற்ற மகத்தான வேளைக்குள் வந்ததற்குப் பிறகு, கர்த்தராகிய இயேசு நம்மிடையே தோன்றுவது நேரிட்டது. அது நீங்கள் கண்ட சுவற்றில் கையறுப்பு தோன்றி எழுதுதலாகிய அடையாளத்தோடு தோன்றினது. அது கர்த்தருடைய தூதனால் ஏற்பட்டதாகும். இப்பொழுது விஞ்ஞானிகள் அதை தங்களது பதிப்புரிமை ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது உலகம் முழுவதிலும் அறியப்பட்ட உண்மையாயிருக்கிறது. அவர் செய்த காரியங்கள் யாவையும், நீங்கள் கண்டீர்கள். அவை ஒவ்வொரு வேளையிலும் நிறைவேறியுள்ளன. மோசேயின் நாட்களில் வனாந்தரத்தில் இஸ்ரவேலரோடு அக்கினி ஸ்தம்பம் கூடவே சென்றது. அந்த அக்கினி ஸ்தம்பத்தை நாம் கண்டோம். “கர்த்தருடைய ஊழியக்காரன்” என்றழைக்கப்பட்ட மோசே இரவில் அக்கினி ஸ்தம்பத்தையும், பகலில் மேகஸ்தம்பத்தையும் பின்தொடர்ந்தான்.
4758 இயேசு இப்பூமியில் இருந்தபோது, அவர் தாமே அந்த தேவன் என்று கூறினார். “ஆபிரகாமுக்கு முன்பே நான் இருக்கிறேன்” என்று சொன்னவர் தான் முன் காலத்தில் மோசேயோடு முட்செடியிலிருந்து அக்னிஸ்தம்பமாகத் தோன்றி பேசியவர். சகோதரன் வேயில் அவர்களே அது சரியானது என்று நான் நினைக்கிறேன். “நான் தேவனிடத்திலிருந்து வந்தேன். அவரிடத்திற்கு திரும்பிச் செல்கிறேன்” என்று அவர் கூறினார். அவர் சிலுவையிலறையப்பட்டு மரித்து உயிரோடெழும்பி உன்னதத்திற்கு ஏறி, தமது சரீரத்தை நித்திய தேவனின் பலிபீடத்தின் மேல் கிடத்தினார். அவர் அங்கே நமது ஸ்தானத்தில் கிரியை செய்யும்படியும், நமது பாவக்கடனை செலுத்தி தீர்த்து விட்டார் என்று அறியத்தக்கதாக சதாகாலமும் அவர் பிரசன்னமாயிருக்கிறார். அங்கிருந்து அவர் ஒரு மகத்தான அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் மீண்டும் பூமிக்குத் திரும்பியிருக்கிறார்.
4859 பரிசுத்த பவுல், அவன் பரிசுத்த பவுல் என்று அழைக்கப்படுமுன் தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்றே அழைக்கப்பட்டான். ஒரு நாள் அவன், தங்களது சபைகளின் பாரம்பரியத்திற்கு முரண்பாடானதொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டு, சத்தமிட்டுக் கொண்டிருக்கிற சில மக்களை கைது செய்யும்படி தமஸ்கு பட்டணத்திற்கு போய்க் கொண்டிருந்தான். அவனது வழியில் ஒரு நாள் கிட்டத்தட்ட பகலின் இவ்வேளையில், மகத்தானதொரு ஒளியினால் அவன் அடித்து வீழ்த்தப்பட்டான். அவன் யூதனானபடியால், இஸ்ரவேலரை வனாந்தரத்தில் நடத்திய அக்கினி ஸ்தம்பத்தைப் பற்றி அவன் அறிந்திருந்தான். எனவே அந்த மகத்தான ஒளி அவனை அடித்தபொழுது, தன் முன் தோன்றிய அந்த அக்னி ஸ்தம்பத்தைக் கண்டு அவன், “ஆண்டவரே நீர் யார்?” என்று கதறினான்! 60 உங்களுடைய யாக்கோபு அரசன் மொழிபெயர்ப்பான ஆங்கில வேதாகமத்திலும், நிலையான பதிப்பு, என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு வேதாகமத்திலும் நீங்கள் கவனிக்கலாம். அவற்றில் ஆங்கிலத்தில் L—O—r—d, க—ர்—த்—த—ர் என்று பெரிய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தங்களுடைய வேதாகமத்தை அறிந்தவர்கள். பெரிய எழுத்துக்களில் L—O—r—d, க—ர்—த்—த—ர் என்று குறிப்பிட்டிருந்தால் அது ஏலோஹிம்—ஐக் குறிக்கும் என்பதை அறிவர். ஆதியாகமம் 1:1ல் கூறப்பட்டுள்ள “கர்த்தர்” என்பது ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில் உள்ளது, அது வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்த எல்லாவற்றிற்க்கும் போதுமான ஒருவர் என்பதே. பவுல் பார்வையில் தென்படுகிறதொரு மாயமான தோற்றத்தை இவ்வாறு அழைத்திருக்க மாட்டான். அவன் அறிந்திரா ஏதோ ஒன்றைக் குறித்து அவ்வாறு அழைத்திருக்கமாட்டான். ஏனெனில் அவன் வேத வாக்கியங்களில் பயிற்றுவிக்கப்பட்டவன். அந்த நாளின் பெரிய போதகராகிய கமாலியேலின் கீழ் கல்வி பயின்றவன். அவ்வொளி யேகோவாதான் என்று தான் திருப்தியடையாமல் அவரை “ஆண்டவர்” (Lord) என்று அவன் அழைத்திருக்க மாட்டான். “ஆண்டவரே (Lord) நீர் யார்?” என்று கேட்டான்.
4961 பதிலாக வந்த அந்த சத்தத்தைக் கேளுங்கள்: “இயேசு நானே”. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். 62 எனவே, இவையெல்லாவற்றின் மத்தியிலும், தொடர்ந்து செல்லும் முன்பும், இங்கும், உலகமுழுவதிலும் இப்பொழுது இச்செய்தியினை கேட்டுக் கொண்டிருக்கும் யாவரும் இது நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துதான் என்பது ஒவ்வொரு செய்கையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவார்கள் என்று நான் எண்ணுகிறேன். அவர் முன்பு செய்த அதே காரியங்களை இப்பொழுதும் செய்து வருகிறார். வியாதியஸ்தரை குணமாக்குகிறார். இருதயத்தின் சிந்தனைகளை அறிந்தார். நடக்கப்போகிறவைகளை முன்கூட்டியே காண்பித்தார்; இத்தனை ஆண்டுகளிலும் ஒவ்வொரு வேளையிலும் அவை பரிபூரணமாக நிறைவேறியுள்ளது. நான் இப்பொழுது ஐம்பத்தி நான்கு வயதுடையவனாக இருக்கிறேன். என்னுடைய பதினெட்டு மாத பிராயத்திலிருந்து நான் தரிசனங்களைக் கண்டு வருகிறேன். அவைகள் ஒருபோதும் தவறியதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அது சத்தியமாகவே இருந்திருக்கிறது. புரிகிறதா? எனவே அது தேவனாகத்தானிருக்க வேண்டும். அப்படியானால், “மக்கள் அதைக் காணக் கூடாதபடி ஏன் குருடாயிருக்கிறார்கள்?” என்று நான் சிந்திக்கிறேன்.
5063 நான் அடிக்கடி நம்முடைய—நம்முடைய ஸ்திரீகளிடத்தில் அவர்களுடைய தலைமுடியை கத்தரித்துக் கொள்ளுதலைக் குறித்தும், அவர்களது ஒழுக்கக் குறைவான குட்டைப் பாவாடைகள் முதலான ஆடையணிதலைக் குறித்தும் பேசுகிறேன். அதைக் குறித்து ஏனைய ஊழியக்காரர்கள் எனக்கெதிராக கூக்குரலிடுகிறார்கள். பெண்களோ தங்களது இவ்விதமான பொல்லாத வழியில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய ஆண்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு, தாங்கள் ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்தை சேர்ந்தவர்களாக இருப்பதினால், அங்குள்ள மேசைகளில் இராபோஜன ஆராதனைகளில் பங்கெடுக்கிறார்கள். இவையெல்லாவற்றோடுங்கூட அவர்கள் புகை பிடிப்பதிலும், நட்புக்காக மது அருந்துவதும், மற்றும் இன்ன பிற காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஓ, அது அவர்களுக்கு சாதாரணமாக இருக்கிறது. நான் தேவதூஷணம் செய்கிறேன் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இதனால் தங்கள் ஸ்திரீகள் சீர்பொருந்தியிருக்கப் பெற்றிருக்கிறார்களா? இல்லை. அவர்கள் தேசம் முழுவதும் இன்னும் மோசமான நிலையை அடைந்திருக்கிறார்கள். 64 பின்பு, நான் சற்று பயந்த சுபாவமுள்ளவனாய் இருந்தபடியால், (நான் ஒரு விதமான அமைதியோடு இதைக் கூறுகிறேன்), நான் ஒருவிதமான ஒரு படபடப்பு தன்மை கொண்ட நபரைப் போன்றவனாயிருக்கலாம், இந்த வேலைக்கு நான் தகுதியற்றவன் என்று ஆரம்பத்தில் நான் அறிந்திருந்தபடியால், அநேகர் இதேபோல் என்னக் குறைகூறியபோதும், அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அது எனக்கு கடினமாக இருந்தது. ஆனால் நான்—நான், “தேவனே இந்த வேலையை செய்யக் கூடியவராகிய இன்னொருவரை ஏன் நீர் அழைக்கவில்லை?” நான் தோல்வியுறுகிறேன் என்பதற்கு நான் வருந்துகிறேன். ஜனங்கள் எனக்கு செவிகொடுக்க மாட்டார்கள். நான் செய்ய வேண்டியிருந்ததை செய்ய எங்கோ தவறிவிட்டேன், ஏனென்றால் அவர்கள் செவிகொடுக்கமாட்டார்கள்” என்று எண்ணினேன்.
5165 சுமார் ஓராண்டு முன்பு எனது தாயார் மகிமைக்குள் கடந்து சென்று விட்டார்கள். அவள் தகப்பனார் ஒரு—ஒரு வேட்டைக்காரர். நானும்—நானும்—நானும் அவரைப் போல் காடுகளை மிகவும் நேசிக்கிறபடியினால், இந்தத் தன்மைகளையெல்லாம் நான் அவரிடத்திலிருந்தே பெற்றுள்ளேன் என்று கருதுகிறேன். “கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த ஜனங்கள் நான் பிரசங்கிக்கும் இந்த செய்திக்கு செவிகொடுக்க விரும்பவில்லையெனில், அவர்கள் போகட்டும். நானும் இதை ஒரேயடியாக நிறுத்தி விட்டு மலைக்குப் போய்விடப் போகிறேன். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார்…” என்றே நான் எண்ணினேன். இங்குள்ள அநேகருக்கு இந்த சம்பவம் சம்பவிப்பதற்கு கிட்டத்தட்ட ஆறுமாதத்திற்கு முன்பே அதைப் பற்றி நான் முன்னுரைத்தது நினைவிருக்கும். அதில் நான் எவ்வாறு ஒரு இடத்திற்கு செல்வேன் என்பதையும், அங்கே மானைப்போல் காட்சியளிக்கும் ஒரு—ஒரு மிருகம் இருக்கும் என்றும், அதற்கு கூர்மையான கொம்புகள் இருக்குமென்றும், அக்கொம்புகள் நாற்பத்தி இரண்டு அங்குலங்கள் இருக்குமென்றும், எவ்வாறு அங்கு ஒரு வெள்ளி முலாம் பூசப்பட்டதுபோல் இருக்கும் ஏழு அடி நீள கரடி இருக்குமென்றும் கூறியிருந்தேன். அவையெல்லாவற்றையும் நீங்கள் ஒலிநாடாக்களில் கேட்டிருக்கிறீர்கள். அந்த நேரத்தை நீங்கள் எல்லோரும் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நான் அனுமானிக்கிறேன். [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] பாருங்கள், அது உண்மையென்று காண்பிக்கும்படி அவை எனது அறையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
5266 எனது தாய் இவ்வுலகை விட்டு போகுமுன்பு நடந்தவைகள் இவைகள், ஆண்டவர் எனது தாயை எடுத்துக்கொள்வதைக் குறித்து அறிந்திருந்தபடியால், அச்சம்பவம் நடக்கும் போது எனக்கு ஏற்படும் அதிர்ச்சியினின்று என்னை சாந்தப்படுத்தும்படி தேவன் விரும்பினார். 67 இப்பொழுது, நான் ஒரு கிறிஸ்தவராயிருந்த ஒரு மனிதனைச் சந்தித்தேன், அவர் அலாஸ்காவில் உள்ள ஒரு பெரிய தேசத்தில் இருக்கிறார். நான் இங்கிருந்து புறப்பட்டு மேற்கில் சென்று விட்டபடியினால், அங்கு என் மனைவியை எப்படியாவது அழைத்துச் சென்று விடலாம் என்றும், நான் அவளை இங்கே கொண்டு வந்த பிறகு, நான் ஒரு வழிகாட்டி (Guide) ஆகிவிட வேண்டுமென்றும் நான் என் மனதில் தீர்மானித்தேன். அதற்குப் பிறகு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்பினால்…என்னுடைய முடியை நீளமாக வளர விட்டு, மீசையையும் வளரவிட்டு அங்கே சென்று ஒரு வழிகாட்டி (Guide) ஆகிவிடுவேன். அந்நாட்டில் இரண்டு அல்லது மூன்று இந்தியர்கள் தான் வாழ்கின்றனர். நான் ஒரு வழிகாட்டியாக ஆகி, பட் (Bud) என்பவர்க்கு உதவி செய்யலாம் என நான் எண்ணினேன். நான் ஏதாவது செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்பினால், அப்பொழுது, “சரி ஆண்டவரே” என்பேன். அவர் எனக்கு ஒரு தரிசனம் தருவார். பிறகு நான் புறப்பட்டுச் செல்வேன்” என்று எண்ணினேன்.
5368 நான் இதை ஜனங்களுக்கு கூறுகிறேன்…நான் ஒருபோதும் என்னைக் குறித்து பெரிதாக எண்ணிக்கொள்ளவில்லை, எவருமே இதை அறிவர். ஆனால் ஜனங்கள், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக இருக்கும்படி அவர் உங்களை அழைத்திருக்கிறார்” என்கிறார்கள். ஆனால் நான்—நான் என்னை ஒருபோதும் அந்தவிதமாக எண்ணவில்லை. ஆனால் நான் அந்த வேலையைச் செய்ய ஆயத்தமாக இருக்கும் வேளைக்கு நெருங்க ஆரம்பிக்கும்போது, “பாருங்கள், ஒரு வேளை நான் அப்படியிருக்கலாம். அப்படி இருந்தால், நான் வனாந்தரத்தில் வாழ்வேன். நான் வனாந்தரத்தில் வாழ்ந்து கொண்டு அவருடைய தீர்க்கதரிசியாக இருப்பேன். பாருங்கள், அப்பொழுது என்னை அவர் எங்காவது அனுப்ப விரும்பினால், அவர் என்னை உபயோகிக்காத நேரத்தில் அருமையான சில மீன்களைப் பிடிப்பதும், மற்றும் சில காரியங்களையும் நிச்சயமாக நான் செய்வேன்” என்றேன். நிச்சயமாக ஒரு விதத்தில் சுயநலமான மனப்பான்மைதான், பாருங்கள், நான் அதைச் செய்ய விரும்பினேன். இப்பொழுது செய்ய வேண்டியதான காரியம் சரியாக அதுவல்ல. இப்பொழுது, நான் அதைச் செய்ய என் மனதில் தீர்மானித்திருந்தேன். 69 ஏழு சபைக் காலங்களைக் குறித்து பிரசங்கிக்கும் போது, அந்த நேரத்தில் எவ்வாறு கர்த்தர் அதை ஆசீர்வதித்து ஏழு சபை காலங்களைக் குறித்து வரையப்பட்டவைகளை அவர் சுவற்றில் அப்படியே வரைந்து பிரதிபலித்துக் காட்டினார். அந்நேரத்தில் இங்கிருப்பவர்களில் அநேகர் அங்கிருந்து அதை அறிந்துள்ளீர்கள். அன்று அவர்—அவர் இங்கு வந்த போது, இங்கே உங்களில் எத்தனை பேர் அங்கேயிருந்தீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அந்த அக்கினி ஸ்தம்பம் அதை வரைந்தது.
5470 சகோதரன் ஜாக்ஸனை நான் நினைவு கூறுகிறேன். அவர் வழக்கமாக நம்மோடு இருப்பவர். சகோதரன் ஜீனியர் ஜாக்ஸன் முன்பு மெத்தோடிஸ்டு ஊழியக்காரராக இருந்தார். ஆம், இப்பொழுது அவர் இங்கே அமர்ந்திருக்கிறார். அவர் என்னிடம் ஒரு சொப்பனத்துடன் வந்தார். இன்னும் சில சகோதரரும், ஒரேவிதமான சொப்பனங்களுடன் வந்தனர். கர்த்தர் எனக்கு மிகவும் நல்லவராக இருந்திருக்கிறார். அதனால் நான் ஒருபொழுதும் சொப்பனங்களுக்கு தவறான வியாக்கியானத்தைக் கொடுத்ததில்லை. (இதை நீங்கள் இக்காலையில் பதிவு செய்து கொள்ளுங்கள்). எந்த ஒரு சொப்பனத்திற்கும் நான் எப்பொழுதாவது தவறானதொரு வியாக்கியானத்தைக் கொடுத்ததுண்டா? இல்லை ஐயா! ஏனெனில் கர்த்தர், குறிப்பிட்ட நபர் கண்ட சொப்பனத்தை எனக்கு தரிசனத்தில் மீண்டும் காண்பித்து, அது என்னவென்று எனக்குச் சொல்லும் வரை நான் அதைப் பற்றி பேசவே மாட்டேன். அதன் பின்னர் சகோதரன் ஜாக்ஸன் கூறினார். நான் அவருடைய சபையில் ஒரு ஆராதனையை நடத்திக் கொண்டிருந்தேன். அந்த இராத்திரியில் அவர் எவ்வாறோ சற்று அதிர்ச்சியடைந்தவராக இருந்திருக்கிறார். அவர் தமது சபைக் கட்டிடத்தை விட்டு வெளியேறி வேறு வழியாக வந்து, காரில் இருந்த என்னை வந்து சந்தித்தார். அப்பொழுது மக்கள் கடந்து சென்று கொண்டிருந்தனர். அவர் என்னிடம் வந்து, “நான் உங்களிடம் ஒரு காரியம் சொல்ல விரும்புகிறேன்” என்று கூறினார்.
5571 தான் ஒரு சொப்பனத்தைக் கண்டதாக அவர் என்னிடம் கூறினார். அச்சொப்பனத்தில் அவர் கண்டதாவது: இந்தியானாவைப் போல் இங்கே ஏதோ ஒரு இடம், அங்கே நீண்ட பெரிய புல் நிறைந்த மலை ஒன்று இருந்ததாம். அதின் உச்சியில் இருந்த மண்ணெல்லாம் மழை பெய்து நீரால் முழுவதும் கழுவிவிடப்பட்டிருந்ததாம். அந்த மலையுச்சி அதனால் மொட்டையாக இருந்தது. அந்த வழுக்கையான பாறையின் மேல் ஏதோ வினோதமாக எழுதப்பட்டிருந்தது. இங்குள்ள சபையிலுள்ள எல்லா சகோதரரோடும் நின்று கொண்டு, எழுதப்பட்டவைகளை நான் வியாக்கியானித்துக் கொண்டிருந்தேனாம். எழுதப்பட்டவைகள் யாவையும் நான் வியாக்கியானித்து முடிந்த பின்பு, சொப்பனத்தை நான் சரியாக புரிந்து கொண்டிருப்பேனாயின்…நான் இவ்வாறு செய்தேனாம். நெம்புகோல் மாதிரி நெம்பக் கூடியதொரு கடப்பாறையினால் அம்மலையின் உச்சிப்பகுதியை நெம்பிப் பிளந்து திறக்கிறேனாம். அதன் உள்ளே பளிங்கு போன்று தீட்டப்பட்ட கருங்கல்லைப் போன்ற வெண்குறிக்கல் தன்னில் எதுவும் எழுதப்படாமல் இருக்கின்றது. நான் என்னோடிருக்கிற சகோதரர்களிடம், “நீங்கள் இங்கேயே இருந்து, இதைப் பார்த்துக் கொண்டிருங்கள்” என்று கூறினேன். அவர்கள் அவ்வாறு அதைப்பார்த்துக் கொண்டிருக்கையில், நான் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு மேற்கு நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறேன். சகோதரன் ஜாக்ஸன் கூறினதாவது: நான் ஒரு மலையின் மேல் செல்வதாகவும், பிறகு இன்னொரு மலையின் மேல் செல்வதாகவும் இவ்வாறு உருவம் மிகவும் சிறியதாகத் தெரியும் அளவுக்கு மேற்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறேனாம். உங்களுக்கு அது நினைவிருக்கும்.
5672 அச்சொப்பனமானது, அது நிறைவேறு முன்னதாக, இந்த சபையில் அதற்கான வியாக்கியானமானது கொடுக்கப்பட்டது. அந்த வேளை இப்பொழுதே வந்திருக்கிறது என நான் விசுவாசிக்கிறேன். லூத்தர், வெஸ்லி, ஜான் ஸ்மித், அலெக்ஸாண்டர் காம்பெல் மற்றும் ஏனையோரும் வேதத்திலிருந்தே பிரசங்கித்தனர். அவர்கள் காலத்தின் வழியாக கடைசியாக வந்த நமக்கு முழு வெளிப்பாடும் கிடைக்கும்படி, அதற்கான ஏழாவதான ஒரு தூதனின் செய்தி இருக்கிறது என்பது நமக்கு காண்பிக்கப்பட்டது. ஏழாம் தூதனின் செய்தி முழங்குகையில், எல்லா தேவ இரகசியங்களும் தெரியப்படுத்தப்படும். பிறகு ஏழு இரகசியமான இடிமுழக்கங்கள் வருகின்றன. 73 அதாவது நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கிறது அந்த கடைசி காலமாயிருக்குமாயின் நாம் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாகுதல், பரிசுத்தாவியின் அபிஷேகத்தினூடாக வந்தடைந்தோம். நமக்கு அற்புத அடையாளங்கள் மற்றும் பல்வேறு காரியங்கள் நடைபெற்றுள்ளன. சபைக்கு வரங்கள் திரும்பக் கிடைத்திருக்கின்றன. அவ்வரங்கள், தெய்வீக சுகமளித்தல், தீர்க்கதரிசனம் உரைத்தல், அன்னிய பாஷைகளில் பேசுதல் ஆகியவற்றிற்கு வியாக்கியானம் கூறுதல் போன்றவைகளாகும். அன்னிய பாஷைகளில் பேசுதலானது தவறாக பயங்கரமான முறையில் உபயோகப்படுத்தப்பட்டது. ஆனாலும் அதே சமயத்தில் அந்த தவறு நன்மையான ஒன்றை நீக்கிவிட முடியாது. அன்னிய பாஷைகளில் பேசுதலில் அது அசலானது ஆகும். உண்மையான ஒன்று எப்பொழுதும் சபையில் இருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
5774 நம்மிடையே ஏராளமான போலிகள் உள்ளன. நம்மிடையே கிறிஸ்தவர்கள் போல் நடித்துக் காட்டும் மக்கள் உண்டு. ஆனால் அவர்களுடைய ஜீவியங்கள் அதற்கேற்றாற்போல் இல்லையாதலால் ஏதோ தவறு அவர்களிடம் இருக்கிறது. இயேசு, “அவர்கள் கனிகளினால் அவர்களை அறிவீர்கள்” என கூறினார். ஒருவன் கிறிஸ்தவனா இல்லையா என்பதை அவன் ஜீவிக்கிறதைப் பொறுத்தே நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் ஜீவிக்கிறதற்கு மிஞ்சி ஒருபோதும் உயர குதிக்க வேண்டாம். எனவே…ஆனால் அதில், அதாவது அது உண்மையான காரியத்திலிருந்து உண்மையான அசலான விசுவாசிகளை விலக்கி வைக்க பிசாசு உண்டுபண்ணுகிற ஒரு போலியான விரட்டும் பொம்மை உருவத்தைப் போன்றுள்ளது. ஆனால் நன்மை, தீமை இவற்றை பகுத்தறிந்து, வேறு பிரித்து வைப்பதற்கு தேவன் நமக்கு உதவி செய்வாராக. வார்த்தையானது அதை எப்பொழுதும் நேராக்கும். 75 இப்பொழுது நாம் அதை இதில் கண்டறிகிறோம், அதாவது அந்த கற்பாறையின் பேரிலான வியாக்கியானத்தை நான் உங்களிடம் கூறினேன். அந்த சகோதரனுடைய சொப்பனத்தில் இருந்த கற்பாறை கிறிஸ்துவாகும், அது வேதாகமமாயிருக்கிறது. இத்தனை ஆண்டுக்காலமாக வேதாகமம் வியாக்கியானிக்கப்பட்டு, அதற்கு முழுவதுமாக மதஸ்தாபன பூர்வமான அர்த்தத்தையே கொடுத்து வந்தோம். லவோதிக்கேயாவின் சபைக் காலத்திலோ கடைசி வரமானது சபையில் சேர்க்கப்பட்டு, லவோதிக்கேயாவின் காலத்தில் பிரசங்கிக்கும்படி கொடுக்கப்பட்டது. அவ்வேளை ஏழாம் தூதனின் வேளையாகும். அக்காலத்தில் காலா காலமாக தவறாக அர்த்தப்படுத்தப்பட்ட ஏராளமான காரியங்கள் காணப்படும்.
5876 லூத்தர் ‘நீதிமானாக்கப்படுதல்’ என்ற செய்தியைப் பிரசங்கித்து விட்டு, அவர் நீண்ட காலம் உயிர் வாழாததினால், அது அப்படியே எந்தவித ஒழுங்குமின்றி நிலைத்திருக்க விட்டு விட்டார். அதன் பின்பு, அவர்கள் சபையை ஸ்தாபனமாக ஆக்கிவிட்டார்கள். லூத்தர் ஒருபோதும் ஸ்தாபனத்தை உண்டாக்கவில்லை. லூத்தருக்கு பிறகு தான் அது நடைபெற்றது. அதன் பிறகு வெஸ்லி வருகிறார். வெஸ்லியின் காலத்திற்குப் பிறகு, அவர்கள் வெஸ்லி சபையை உண்டாக்கினார்கள். அதன் பிறகு பாப்டிஸ்டாகிய ஜான் ஸ்மித்தும், அவருக்கு பிறகு அலெக்ஸாண்டர் காம்ப்பெல் மற்றும் ஏனையோரும் வந்தனர். ஆனால் சீர்திருத்தக்காரர்களாகிய மனிதர், எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்துக் கொடுப்பதற்கு நீண்ட காலம் உயிர் வாழவில்லை. எனவே வெளியாக்கப்படாத ஏராளமான நிச்சயமற்ற காரியங்கள் விடப்பட்டிருக்கின்றன. அவர்கள் அவ்வாறு செய்தபோது, உதாரணமாக ஜான் ஸ்மித் தண்ணீர் ஞானஸ்நானத்தை, தண்ணீரில் முழுக்கு ஞானஸ்நானத்தைக் கொண்டு வந்தார். ஆனால் அது ஒரு பட்டப் பெயர்களை உபயோகித்து கொடுக்கப்படும் ஞானஸ்நானமாயிருந்தது. இவ்வாறு எத்தனையோ விஷயங்கள் தீர்க்கமாக எடுத்துரைக்கப்படாமல் விடப்பட்டிருந்தன. இவையெல்லாவற்றிற்கும் பின்பு, முடிவுகாலத்தில் நாம் வந்திருக்கையில், கடைசி செய்தியானது, இது வரையிலும் தீர்க்கமாக எடுத்துரைக்கப்படாமல் விடப்பட்டிருந்த விஷயங்களை சரி செய்து கொடுத்து, இவைகளை ஒரே விசுவாசம், ஒரே கர்த்தர், ஒரே ஞானஸ்நானம் என்ற நிலைக்கு கொண்டு வந்தது. புரிகிறதா?
5977 இப்பொழுது வேதாகமமானது, முழுவதுமாக வியாக்கியானிக்கப்பட்டதற்குப் பிறகு, நீங்கள் கவனித்துப் பாருங்கள். அது கூர் நுனிக்கோபுர வடிவம் கொண்ட கற்பாறையின் உச்சிப்பகுதியை திறந்தது. இப்பொழுது இது கூர்நுனிக் கோபுர கோட்பாட்டு உபதேசமல்ல, அதுவல்ல, ஏனென்றால் நான்… ஏனெனில் சிலர் மனிதர் கூர்நுனிக்கோபுர உபதேசத்தை உபதேசிக்கிறார்கள். அவர்கள் பேசுவது என்னவென்பது பற்றி அவர்கள் அறிவார்கள் என நான் யூகிக்கிறேன். எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அது எப்படியிருந்தபோதிலும், அது ஒரு கூர்நுனிக் கோபுர வடிவத்தில் இருந்தது. ஆனால் கூர்நுனிக்கோபுரத்தின் தலைப்பாகம் அதில் பொருத்தப்படாமல் இருந்தது. நான் எகிப்தில் கெய்ரோவில் இருந்திருக்கிறேன். அங்கே கூர்நுனிக்கோபுரத்தின் உச்சியாகிய தலைபாகமானது அதின் மேல் இல்லை. ஏனெனில், அது மூலைக்கலும், தலைக்கல்லுமாக இருக்கிறது. சபையில் அது மூலைக்கல்லாயிருக்கிறது. முழுமையடையந்த சபையிலோ அது தலைக்கல்லாயிருக்கிறது. எனவே தான் அது இன்னும் வரவில்லை. அது புறக்கணிக்கப்பட கிறிஸ்துவாகும். அது வரப்போகிறது. அது வரும்போது, சபையானது அப்பொழுது, லூத்தரின் நீதிமானாக்கப்படுதல், வெஸ்லியின் பரிசுத்தமாகுதல், பிறகு பெந்தேகோஸ்தேயின் செய்தியின் வழியாக ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்திற்குள்ளாக உருவகமாகி, இறுதியில் சபையானது மிகவும் சிறுபான்மையினராகும் அளவுக்கு ஆகிவிடும். அம்மக்களின் மத்தியில் ஒரு ஊழியம் நடைபெறும். அவ்வூழியமானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த அதே ஊழியமாயிருக்கும். இவ்வூழியமானது இயேசுவை திரும்பிவரச் செய்து, பூரண சபையை எடுத்துக் கொண்டு போகச் செய்யும்.
6078 இயேசு கிறிஸ்து திரும்ப வரும்போது, உண்மையும், உத்தமுமான எல்லா லூத்தரன்களையும், பிரஸ்பிடேரியன்களையும், பாப்டிஸ்டுகளையும், மெதோடிஸ்டுகளையும், மற்றும் யாரெல்லாம் ஆவியினால் மறுபடியும் பிறந்திருக்கிறார்களோ, அவர்கள் யாவரும் அவரோடு கூட எடுத்துக் கொள்ளப்படுவார்கள். நான் அதை விசுவாசிக்கிறேன். நமது சில பெந்தேகோஸ்தே சகோதரர்கள், கடைசிக் காலத்தில் எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் மக்கள் தாம் சபையின் மீதியானவர்கள் என விசுவாசிக்கிறார்கள்; நான் அக்கருத்திற்கு மாறுபடுகிறேன், ஏனென்றால் தேவன்…எப்படி ஒரு மனிதன், எப்படி… “தேவன் எவ்வாறு இவ்வண்ணம் செய்ய முடியும்?” என்று நாம் கூறுவோமானால், அவர் விரும்புகிற எதையும் அவரால் செய்ய முடியும். தேவன் லூத்தருக்கு “விசுவாசத்தினால் நீதிமானாகுதலையே” வாக்குரைத்தார். அது தான் அவர்களுக்கு தெரியும். பார்த்தீர்களா? அவர் சபையை எடுத்துக் கொள்வதாக வாக்குரைத்தார். அதை அவர் ஆதரிக்கிறார் என்று தேவனுடைய கிருபையினாலும் வேத வாக்கியங்களை ஆதாரமாகக் கொண்டும் நான் விசுவாசிக்கிறேன். காரணம் அவர் முதலாம் ஜாமத்தில் வரவில்லை. அவர்கள் நித்திரையடைந்தனர். பிறகு இரண்டாம் ஜாமம் தொடங்கி ஆறு ஜாமம் வரையும் அவர் வரவில்லை. கடைசியாக ஏழாம் ஜாமத்தில் அவர் வருகிறார். அதுவே ஏழாம் சபையின் காலமாயிருக்கிறது. அது ஏழாம் தூதனின் செய்தியாயிருக்கிறது. புரிகிறதா? அவர் வந்த பொழுது, கன்னிகையர் யாவரும் தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். புரிகிறதா? தேவனுடைய ஆவியினால் பிறந்தவன் எவனும், அவன் பிரஸ்பிடேரியன், லூத்தரன், பாப்டிஸ்டு இதில் யாராயிருந்தாலும், எடுத்துக் கொள்ளப்படுதலில் போய் விடுவான். அவ்வேளையில் மணவாட்டி வெளியே அழைக்கப்படுவாள் என நான் விசுவாசிக்கிறேன். கடைசி நாட்களில் மரணத்தை ருசிபாராமல் ஒரு நொடிப்பொழுதில், ஓரிமைப்பொழுதில் மறுரூபமாகும் சிலர் இருப்பார்கள் என்றும் நான் விசுவாசிக்கிறேன்.
6179 ஆனால், சகோதரன் ஜாக்ஸனின் சொப்பனத்தில் நீங்கள் கவனித்தவரை, அந்தப் பாறையின் உள்ளே, எந்த எழுத்தும் இல்லை என்பதை அறிந்திருக்கிறீர்கள். அதினிமித்தமாகத் தான் நான் மேற்கு நோக்கிப் போனேன். இப்பொழுது, அது சம்பவித்துவிட்டது. மேலும் நான் ஒரு நாளில் அதின் அர்த்தம் என்ன என்பதை உங்களிடம் கூறுவேன் என்று கூறியிருந்தேன். அதற்காகத் தான் மேற்கே சென்றேன். ஐயன்மீர், இதுவா சமயம்? என்ற செய்தியை ஒலிநாடாவிலும், இந்தக்காலை இங்கு பிரசன்னமாகி கேட்டவர்களுக்கு தெரியும். நான் அந்த தரிசனத்தைக் கூறியுள்ளேன். செய்திகளை ஒலிநாடாவில் வழக்கமாக கேட்டும் சகோதரர்களில் யாரிடமாவது அந்த செய்தி இல்லாவிட்டால், அதைக் கேட்க விரும்பினால், ஐயன்மீர் இதுவா சமயம்? என்ற செய்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அச்சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்கள், வாரங்களுக்கு முன்பே, டூசானில் வடக்கே நான் இருப்பதை தரிசனத்தில், அதாவது ப்ளாக்ஸ்டாஃப்புக்கு கிழக்கிலும், டூசானுக்கு வடக்கிலும் இருப்பதாகவும், அப்பொழுது நான் என்னுடைய கால் சட்டையில் ஒட்டியிருக்கும் ஊமச்சியை எடுத்துக் கொண்டிருக்கும்போது தேசத்தையே அசைப்பது போல் தோன்றும் ஓர் வெடியோசை எழுப்புவதாகவும் கண்டேன். அதை உங்களில் எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] அது உண்மை அது தேசத்தையே அசைப்பதாயிருந்தது.
6280 பாருங்கள், அது அங்கு சம்பவித்தபோது அங்கே நின்று கொண்டிருந்தவர்களில், குறைந்தது ஒரு மனிதனாவது இப்பொழுது இங்கே பிரசன்னமாகியிருக்கிறார். அச்சம்பவம், அம்மலையின் பாறைகளை உண்மையிலேயே குலுக்கி உருண்டோடிச் செய்தது. இப்பொழுது அவர்கள்… நான் கண்டறிந்த, அதாவது அச்சமயத்தில் தான், நான் அந்த ஏழு தூதர்களை ஒரு கூர்நுனிக்கோபுர வடிவில் கண்டேன்.நான் அப்படியே மேலே எடுத்துக் கொள்ளப்பட்டு அதாவது, மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் தேவனுக்காக ஏழு முத்திரைகளைத் திறக்கும்படி கிழக்கில் கொண்டு வரப்பட்டேன். அவைகளை நீங்கள் பெற்றிருக்காவிட்டால்…இயேசு வரத் தாமதித்தால், மேலும் நான்…என்னுடைய கொள்ளுப் பேரன்கள், எனது மகன் சின்ன பவுலின் பிள்ளைகள் காலம் வரைக்கிலும் இயேசு வரத் தாமதித்தால் …அப்பொழுதும் அது ஜீவனுள்ள தேவனுடைய நித்திய சத்தியமாக இருக்கும்! அது இம்மலையினுள்ளே முத்திரையிடப்பட்டிருந்தது. அதில் ஏதும் எழுதப்படவில்லை. அதின் அர்த்தம் கொடுக்கப்பட்டாக வேண்டும். நான் திரும்பி வந்தபோது, முதலாம் தூதன் அந்த முதல் இரவில், முதலாம் முத்திரையைத் திறந்தார்; அதன் வியாக்கியானம் நம்முடைய ஜீவியத்தில் நாம் எப்போதும் கேட்டதற்கு முரணாயிருந்தது. ஏழு முத்திரைகளும் அதே விதமாக வந்தன. நீங்கள் அதை அறிவீர்கள். அது சம்பவித்தபோது, உங்களில் அநேகர் இங்கே இருந்தீர்கள். அவ்வேளையில் நான் அதை அறியவில்லை, ஆனால்…
6381 சகோதரன் ஃப்ரெட் சாத்மன் இங்கே இருக்கிறார் என்று நான் அறிவேன். சகோதரன் நார்மனும் இங்கே இருக்கிறார் என்று நான் நிச்சயித்திருக்கிறேன். நாங்கள் மலைமேல் இருந்தோம்…ஹூஸ்டனில் உள்ள ஒரு பையனுக்கு மின் நாற்காலியில் அளிக்கப்படும் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றும்படி நான் அங்கே போக வேண்டியதிருந்தது. நான் அங்கிருந்து திரும்பியதின் பிறகு சகோதரர்களுடன் வேட்டையாடச் சென்றேன். நான் அங்கே அந்தக் காலை நின்று கொண்டு, அங்கு வளர்ந்திருந்த முட்செடிகள், அதாவது கோஹெட்ஸ் என்று அவர்கள் அழைக்கும் ஒருவகை ஊமச்சியை, என் கால் சட்டையில் ஒட்டியிருந்த அதை எடுத்துக் கொண்டு இருந்தேன். தரிசனத்தில் சொல்லப்பட்ட வண்ணமாகவே, வெடிசத்தம் ஏற்பட்டது. சகோதரன் ப்ரெட் அவர்களே, அது சரிதானே? நான்—நான்—நான் தரையிலிருந்து ரொம்ப தூரம் உயர தாண்டியிருக்க வேண்டும். எனக்கு சற்று மேலே கர்த்தருடைய தூதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நான் இந்த ஏழு முத்திரைகளை இங்கு வந்து உடைக்கத்தக்கதாக, செய்தியைத் திரும்பக் கொண்டு வந்தனர். ஏன் இந்தக் கூடாரத்தில் அதைச் செய்ய வேண்டும்? அங்கே நான் ஏன் அதைச் செய்யக் கூடாது? ஏனெனில் நான் என்னுடைய சபையாருக்கும், தேவனுக்கும், எந்த ஒரு புதிய செய்தியும், இக்கூடாரத்திலிருந்தே முதலில் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும் என வாக்குரைத்திருக்கிறேன். நான் என்னுடைய வார்த்தையைக் காப்பாற்றும்படி, இங்கே தங்கி அதைச் செய்யும்படி தேவன் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு, நான் உடனே திரும்பிச் சென்றேன்.
6482 அந்த வேளையில், அதைப் பற்றிய புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. தூதர்கள் அச்செய்தியை கொண்டு வரும்படி பரலோகத்தை விட்டு கீழிறங்கியபோது விஞ்ஞானிகள்தான் அவற்றைப் படமெடுத்தார்கள். அத்தூதர் கூட்டத்தில் வலது பக்கத்தில் இருந்த தூதன் தனது மார்பை பின்தள்ளிக் கொண்டு, அவருடைய சிறகுகள் என்பதைப் பற்றி உங்களிடம் நான் ஏற்கனவே கூறியுள்ளது ஞாபகமிருக்கிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] எவ்வாறு நான் அவரைக் கவனித்தேன்? மற்றவர்களினின்றும் அவர் மிகவும் வித்தியாசமானவராக இருந்தார், அவர்கள் அதைப் புகைப்படமெடுக்கிறார்கள் என்பதை நான் அப்பொழுது அறியாதிருந்தேன். ஏனெனில், நான் உடனடியாக கிழக்கு நோக்கி விரைந்தேன். ஆனால், டூசானுக்கு நான் வீடு திரும்புகையில், அது ஏறத்தாழ தேசம் பூராவும், மெக்ஸிகோ மற்றும் மேற்கு மாகாணங்கள் பூராவும் காணப்பட்டு, அதைப் பற்றி பத்திரிக்கைகளில் வெளியாகியிருந்ததைக் கண்டேன். இங்கே கூரியர் என்ற பத்திரிகையில் வந்திருக்கிறது என நினைக்கிறேன். அசோஷியேடெட் அச்சகத்திலும் அது வெளியாகி இருக்கிறது. எத்தனை பேர், “அந்த மர்மமான மேகத்தை வானில்” பார்த்தீர்கள்? உயர்த்தப்பட்ட கரங்களை நீங்கள் பாருங்கள்! இப்பொழுது லைஃப் பத்திரிக்கை அதை பிரசுரித்திருக்கிறது. என்னிடத்தில் அதைப் பற்றிய லைஃப் பத்திரிக்கை கட்டுரை உள்ளது. அதேவேளையில் தான் நான் அங்கே இருந்தேன். ஏழு தூதர்களின் மேகத்தில் கூர்நுனிக்கோபுரத்தைப் பார்த்தீர்களா? அதற்கு சற்று கீழே தான் நான் நின்றுக் கொண்டிருந்தேன். அங்கே மற்றவர்களிலிருந்தும் சற்று விசேஷமாகக் காணப்பட்ட வலதுபக்கத்திலுள்ள தூதனைப் பார்த்தீர்களா? அத்தூதனுடைய முனைப்பான செட்டைகளைப் பார்த்தீர்களா? அதைப் பற்றிக் கூறப்பட்ட விதமாகவே அது இருந்தது. மெக்ஸிகோ மற்றும் பல்வேறு இடங்களில் இருந்தவர்கள் அதைப் புகைப்படமாக எடுத்துள்ளனர். இங்கே ஒரு விஞ்ஞானி இப்படத்தைப் பற்றியும் அதை வைத்துக் கொண்டிருக்கிற மக்களைப் பற்றியும் எல்லாவித தகவல்களையும் சேகரிக்கவும் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும் முற்பட்டுக் கொண்டிருக்கிறார்.
6583 அது ஒரு மேகம் என்று கருதப்படுவது இயலாத காரியம் என்றும், ஏனெனில் ஆகாயத்தில் ஆறு அல்லது எட்டு மைல்களுக்கு உயரத்திற்கப்பால் ஈரமானது இல்லை என்றும் இந்த விஞ்ஞானி கூறுகிறார். ஆகாய விமானத்தில் வெளிநாடுகளுக்கு பறந்து செல்கையில், வழக்கமாக விமானத்தில் நாம் பத்தொன்பதாயிரம் அடி உயரத்தில் பறக்கிறோம். அப்பொழுது புயல்காற்றுக்கு மேலே போய்விடுகிறோம். இந்த இக்கட்டுரையை எழுதியுள்ள இந்த விஞ்ஞானி கூறுகிறபடி, இந்த மேகமானது ஆகாயத்தில் இருபத்தியாறு மைல் உயரத்தில் காணப்பட்டுள்ளது. எனவே, மேகத்தை உண்டாக்குவதற்கான ஈரம் இருக்கக்கூடிய உயரத்தில் இந்த மர்ம மேகம் இருக்க வேண்டும். “ஒரு விமானத்தின் சப்தம் உண்டாக்கும் கருவியின் சப்தம் போல் அது இருந்தது” என்று நான் அன்று கூறியதை உங்களில் எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளீர்கள்? நினைவிருக்கிறதா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] ஆனால் அந்த நாளில், அப்பகுதியின் மேல் ஏதாவது விமானம் பறந்ததா என்பதை நன்கு புலனாய்ந்து அப்படியொன்றும் விமானம் அம்மாவட்டத்தில் பறக்கவில்லை என்பதையும் அவ்விஞ்ஞானி இப்பத்திரிக்கையில் கூறியுள்ளார். பொதூவாக விமானத்தின் பின்னால் வெளிப்படும் புகையானது வெளியே தள்ளப்படுகிற ஈரமுள்ள காற்று தான். ஒரு ஜெட்டைப் போல் விமானத்தின் இப்பகுதி அதை வெளியே இழுத்து தள்ளுகிறது. அவ்விமானமானது தன்னை முன்னே இழுத்துக் கொள்கையில், ஈரத்தை காற்றில் கக்குகிறது. விமானமானது ஈரத்தை வெளியே தள்ளுகிறது. அவ்விதமாக அதை வெளியே தள்ளித்தான் விமானம் முன்னே செல்ல முடிகிறது.
6684 ஆனால் இங்கோ அம்மேகம் இயல்பாக மேகங்கள் உருவாகக் கூடிய ஈரமுள்ள ஆகாயப் பகுதிக்கு அப்பால், அம்மாவட்டத்தில் விமானங்கள் ஏதும் பறக்காத வேளையில் தோன்றியது. அதாவது சாதாரணமேகம், இம்மேகம் தோன்றிய பகுதியில் ஏற்பட முடியாது. ஏனெனில், அதற்கான ஈரப்பசை இல்லாத இடமது. அது பூமிக்கு மேலே இருபத்தியாறு மைல் உயரத்தில், முப்பது மைல் நீளத்தில் காணப்பட்டது. உங்களுக்குப் புரிகிறதா? அநேக ஆண்டுகளுக்கு முன்பாக “கர்த்தருடைய தூதனானவர் அக்கினிஸ்தம்பம் போல் காணப்பட்டார்” என்று அங்கே நான் அந்தப்படம் எடுக்கப்படும் முன் கூறியது போல் அது இருக்கிறது. அது சத்தியமானது என்று விஞ்ஞானமும் அங்கீகரிக்கத்தக்கவண்ணம் தேவன் செய்தார். அதைப்பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதை அங்கீகரிக்கும்படியும் அப்படியாயிற்று. அது சத்தியமானது என்று விஞ்ஞானமும் சாட்சியிடத்தக்கதாக தேவன் செய்தார். இப்பொழுது நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம்? நான் இதை வைத்துக்கொள்ள விரும்புகிறேன், ஏழு முத்திரைகளை புத்தகமாக எழுதத்தக்கதாக இங்குள்ள எனது நண்பரொருவரை நான்—நான் ஒரு வேளை கேட்டுக் கொள்ளக்கூடும். அதற்காக இப்படத்தை அவர் உபயோகிக்க வேண்டியிருக்கலாம். எனவே இப்படத்தின் நகலை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், காரணம், நீங்கள் அதன் நகல் ஒன்றை வைத்திருந்தால், அதை குறிப்புக்காக வைத்துக் கொள்ளுங்கள். புரிகிறதா?
6785 இதைப்பற்றி கண்டுபிடிக்க விரும்பும் அவ்விஞ்ஞானியிடம் போய் இதைப்பற்றி நீங்கள் கூறுவது என்ன நன்மை பயக்கும்? அவர் அதைக் கேட்டு நகைப்பார். பாருங்கள், வெறுமென அதைக் கேட்டு அவர் பரிகசிப்பார். அவ்வாறு நமது முத்துக்களை நீங்கள் இறைக்க வேண்டாம். ஆனால் நாம் அதை அறிவோம். சபையானது அறிந்திருக்கிறது. தேவன் அது சத்தியமானது என்று அறிந்திருக்கிறார். 86 அதன் பிறகு, எனக்கு என்ன சம்பவிக்குமோ என்று எதிர்பார்த்துக்கொண்டு, இந்தக் காரியத்தின் பேரில் ஜெபித்துக் கொண்டிருந்தேன், நான் எங்கேயிருந்தேன் என்று உங்களுக்குத் தெரியுமோ? டூசானுக்கு வடக்கேயும், ப்ளாக்ஸ்டாப்புக்கு கிழக்கிலும் இருந்தேன். நான் எங்கே நின்று கொண்டிருப்பேன் அச்சமயத்தில் என்பதை பல மாதங்களுக்கு முன் சரியாக அந்த இடத்தைக் குறிப்பிட்டு முன்னுரைத்தது போல் அங்கே நான் நின்றுகொண்டிருந்தேன். முன்னுரைத்ததின்படி, இப்பத்திரிக்கை குறிப்பிட்டது போல், நமது சாட்சியின்படியும், சரியாக அந்த இடத்தில் இது சம்பவித்தது. தேவன் பரிபூரணமானவராக இருக்கிறார். அவரால் பொய்யுரைக்க முடியாது. அது நிறைவேறிய தீரும்.
6887 ஐயன்மீர், இது என்ன சமயம்? என்று செய்தி அடங்கிய ஒலிநாடாவில் நான் கூறினது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் அதை மீண்டும் குறிப்பிடவுள்ளேன். அதாவது அதில் நான், “ஏதோ ஒரு மகத்தானதொரு காரியம் சம்பவிக்கப் போகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளேன். இப்பொழுது அதைப்பற்றி முழுத்தேசம் சாட்சி பகரும்படி ஆகியிருக்கிறது. அசோசியேடட் அச்சக நிறுவனத்தில் ஒவ்வொரு செய்திப் பத்திரிக்கையும், மற்றுமுள்ள நமது முதன்மையான பத்திரிக்கைகளும் அவரைப் பற்றி சாட்சி பகர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் எல்லாம் முடிவு பெறவில்லை. விஞ்ஞானத்தின்படி இனி நம்பிக்கையே இல்லையென்றும், அணுகுண்டுகள் நமக்கென காத்துக் கொண்டிருக்கின்றன என்ற இவ்வந்தகார வேளையில், கிறிஸ்தவராயிருக்கும் மக்கள், இம்மகத்தான காரியங்களை அறிந்து கொள்வதற்கு எவ்வளவு சிலாக்கியம் பெற்ற ஜனங்களாயுள்ளனர். ஒன்று சேர்ந்து கொண்டிருக்கும் நம்முடைய ஸ்தாபனங்களில் எந்த நம்பிக்கைகளுமே இல்லை. அவைகள் மிருகத்தின் முத்திரைகளோடு ஒருங்கிணைந்து கொண்டிருக்கின்றன. நமது பொருளாதார துறையிலும், மத ஸ்தாபனங்களுக்கிடையே உள்ள கிறிஸ்தவ ஐக்கியத்திலும் நம்முடைய நம்பிக்கைகள் யாவும் அன்றுப்போய்விட்ட நிலையில் நாம் இருக்கிறோம். அது கத்தோலிக்க சபைக்குள்ளாக சென்று, சபை சங்கத்தில் மிருகத்தின் முத்திரையாயிருக்கும். 88 ஆனால், தேவனை நேசித்து, ஒரு மெய்பொருளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறவர்களுக்கோ, வேதத்தில் வாக்குத்தத்தம் செய்த தேவனானவர், அதை நமது முகத்திற்கு முன்பாக வியாபிக்கச் செய்து, சபையை உருவாக்கி, ஜனங்களும், விஞ்ஞானமும், பத்திரிக்கைகளும் மற்றும் யாவும் அவரே தேவன் என்றும், அவரால் தான் வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற முடியும் என்பதை அடையாளங்கண்டு கொள்ளும்படி செய்கிறார். என்னே ஒரு நேரம்!
6989 அன்றொரு நாள் காலையில் சபினோ கேன்யான் என்ற இடத்தில், அம்மலையின் உச்சியில் என் கரங்களை தேவனுக்கு நேராக உயர்த்தியவாறு, என்ன சம்பவிக்கப் போகிறதோ என்று வியந்து, ஜெபித்துக் கொண்டிருக்கையில், அந்தப் பட்டயம் எனது கையில் விழுந்தது. அதின் பிடியில் முத்து பதித்திருந்தது. அதற்கு உறையும் இருந்தது. அப்பட்டயம் மூன்று அடிநீளமுள்ளதாகவும் பளீரென மின்னும் ஒருவகை உலோகத்தாலாகியதும் மிகவும் கருக்கானதாயுமிருந்தது. அது என்னவாயிருந்தது என்பதை நான் அறிந்து கொள்ளவில்லை. மேலும் நான், “நான் இந்த காரியங்களைக் குறித்து பயப்படுகிறேன்” என்றேன். 90 அப்பொழுது அம்மலைக்கணவாயை அசைக்கத்தக்கதான ஒரு சப்தம் பேசியது. “இது கர்த்தருடைய பட்டயம்” என்று அச்சப்தம் கூறியது. கர்த்தருடைய பட்டயம், கர்த்தருடைய வார்த்தையேயாகும். தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள பட்டயத்திலும் கருக்குள்ளதாயிருக்கிறதே.
7091 அந்த சமயத்தில், இங்கே சபையில் தீரமிக்க சகோதரரொருவர் இருக்கிறார்… அவர் ஒரு இராணுவ வீரராக இருந்தவர். இராணுவத்திலிருக்கையில் சண்டையின் போது, குண்டு வெடிப்புக்கு அவர் இரையாகி, அவரது காலின் முக்கியமான நரம்பு வெடித்து, அவரது புயம் முழுவதும் காயப்பட்டு, ஒரு காலும் சேதமாகி, மருத்துவர்களால் கைவிடப்பட்டு மரிக்கும் தருவாயில் இருந்தார். மருத்துவர்கள் சிகிச்சையளிப்பது பயன்தராது. அவர் பிழைக்கமாட்டார் எனக் கருதினர். ஆனாலோ தேவன் கிருபையினால் அவரை இரட்சித்து ஒருநாள் அவரை குணமாக்கினார். 92 அது தான் சகோதரன் ராய் ராபர்ஸன் ஆவார். அவர் ஹூஸ்டனில் அப்படம் எடுக்கப்படுகையில் அங்கே இருந்தார். அவரது மனைவிக்கு, பகலில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதும், அவர்களுக்கு என்ன கோளாறு உள்ளது என்பதும், அது சுகமாக்கப்படும் என்பதும் தரிசனத்தில் கண்டு உரைக்கப்பட்டது. அதுவே அவரை ஒரு விசுவாசியாக கொண்டு வந்துவிட்டது. ஆனால் அவரோ இராணுவத்தினராக இருந்தவர். (இங்கிருந்து இதை சொல்வதற்கு அவர் என்னை மன்னிப்பார் என நான் நம்புகிறேன்.) எனவே, கடுமையான, மிகவும் கண்டிப்பான துறையில் இருந்தவர்; இராணுவத்தில் உத்தரவுகளை இடும் தளபதியாக இருந்தவர், “இதைச் செய்!” என உத்தரவு இட வேண்டியவராக இருந்தார். பார்த்தீர்களா? அப்படியிருந்தபோதிலும் அவர் விசுவாசித்தார். ஆனால் சபையில் நிலையாக வந்து கொண்டிருக்கையில், இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை அவர் பார்க்கையில் அவர், “நான் அதை விசுவாசிக்கிறேன். ஆனால் அவைகள் வேறு யாருக்கோ உரியது” என்று கூறினார்.
7193 ஒரு நாள் இரவு இல்லை. ஒருநாள் காலையில் கர்த்தர் அவரை எழுப்பினார். நாங்கள் எருசலேம் பட்டிணத்திலே கர்த்தருடைய இராபோஜன மேஜையில் நானும் அவரும் உட்கார்ந்திருந்தது போன்று காணப்பட்டது. நான் பேசிக்கொண்டிருந்தேன். அவரால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. சகோதரன் ராய் இங்கு அமர்ந்து என்னையே நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறாரே, அவர் அதைக் கண்டார். அவர் என்னை ஹுஸ்டனில் தொலைபேசியில் இல்லை அரிசோனாவில் அழைத்தார், இல்லை எனக்கு ஒரு கடிதம் எழுத நான் அவர் வரும்படி அழைத்தேன். அப்பொழுது அவர், “சகோதரன் பிரான்ஹாம், நீர் அங்கே அமர்ந்துகொண்டிருந்தபோது, பெரிய அக்கினி ஸ்தம்பம் உள்ளே வந்து கர்த்தருடைய இராபோஜன மேஜையிலிருந்து உம்மை தூக்கிச் சென்றுவிட்டது. நீர் மேற்கு நோக்கி சென்றுவிட்டீர்” என்று கூறினார். அவர் கிழக்குப் பக்கமாக உட்கார்ந்துகொண்டிருந்து நான் மேற்கு நோக்கி செல்வதை கவனித்துக்கொண்டிருந்தாராம். இந்த ஒளி உள்ளே வந்து என்னை தூக்கிச் சென்று விட்டதாம். 94 ஒருநாள் காலையில், இதை ஒரு தரிசனத்தைப் போலக் கண்டதாகக் கூறினார். ஒரு நாள் காலை மூன்று அல்லது நான்கு மணியளவில் படுக்கையிலிருந்து எழுந்து இது சம்பவித்ததைக் கண்டாராம். அப்பொழுது அவர் அநேக நாட்களாக, “சகோதரன் பில், திரும்பி வாருங்கள்” என்று கதறிக் கொண்டிருந்திருக்கிறார். நானும் சகோதரன் ராயும் உண்மையான சகோதரர்கள். நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம். ஒன்றாக வேட்டையாடுகிறோம். நாங்கள் சகோதரர்கள். “திரும்பி வாருங்கள்! அவரை திருப்பிக் கொண்டு வாருங்கள்! அவரை திருப்பிக் கொண்டு வாருங்கள்” என்று எனக்காக அவர் தன் தொண்டை கட்டிப்போகும் அளவுக்கு கதறிக் கொண்டிருந்திருக்கிறார். அவர் கூறினார் நான்…அந்த அக்கினி ஸ்தம்பமானது திரும்பி வந்து, இல்லை ஒரு மேகம் திரும்பி வந்து என்னை அம்மேசையின் தலைப்பகுதியில் உட்கார வைத்ததாம், அப்பொழுது நான் மறுரூபமாக்கப்பட்டிருந்தேனாம். நான் வேறுவிதமாக காட்சியளிக்கும்படி நான் மறுரூபமாக்கப்பட்டது சகோதரன் ராய்க்கு இரகசியமானதாக இருந்ததாம். நான் ஞாபகத்தில் வைத்திருக்கும்படியானதொரு காரியத்திற்காக நான் இவ்விஷயத்தை இங்கே வைக்கிறேன், “மறுரூபமாக்கப்பட்டு,” அதைக் குறித்த வியாக்கியானத்தை நான் அவருக்கு அளிக்கும்போது,
7295 ஏழு முத்திரைகளை நான் பிரசங்கிப்பதற்காக நான் திரும்பி வரும் முன் இது சம்பவித்தது. ஏழு முத்திரைகள், செய்திக்காக, நான் திரும்பி வந்திருக்கையில், ஒருநாள் காலையில் அவர் என் மகன் பில்லியைப் பற்றிக் கொண்டு, என்னை சந்தித்து என்னிடம் பேசும்படி விரும்பியிருக்கிறார். நான் அவ்வேளையில் ஏழு முத்திரைகளுக்காக ஜெபத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். பிறகு அவர் என்னிடம் அக்காட்சி மீண்டும் ஏற்பட்டதாகக் கூறினார். சகோதரன் ராய் அவர்களே! நான் இதை சொல்வதில் ஏதாவது தவறு ஏற்பட்டால், நீங்கள் அந்த தவறை எனது கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். அவர் கூறியதாவது: அவர் மீண்டும் அதிகாலையில் எழுந்தாராம்; அவர் தனது அறையில் அந்த பெரிய ஒளி அல்லது மேகத்தை ஒரு மலைமேல் இருக்கக் கண்டாராம். அவர் சமீபத்தில் என்னிடம், “ஒரு மலையின் மேல் மேகம் இருப்பதில் ஏதாவது முக்கியத்துவம் உண்டா?” என்று கேட்டார். நான் “வேதத்திலா?” என்று கேட்டேன். 96 அப்பொழுது நான், “ஆம் பேதுரு, யாக்கோயு, யோவான் ஆகியோர் மலையின் மேல் இயேசுவோடு சென்ற போது, கர்த்தராகிய இயேசுவை ஒரு மேகம் நிழலிட்டது. அப்பொழுது தேவன், ‘இவர் என்னுடைய நேச குமாரன்’” என கூறினார். சமீபத்தில் தான் நான் அதைப்பற்றி பிரசங்கித்திருக்கிறேன். அது ஒரு சிறிய செய்தியாகும்; ஒலிநாடாவில் பதிவு செய்கிற சகோதரர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள், அது அவருக்கு செவிகொடுங்கள் என்பதாகும். ஒருகால் நீங்கள் அந்த ஒலிநாடாவை வைத்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் வைத்திருப்பீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.
7397 சகோதரன் ராய் அக்காட்சியில் தான் மலையின் மேல் ஏறிப் போனதாகவும், நான் அப்பொழுது நின்று கொண்டிருந்ததைக் கண்டதாகவும் கூறினார். மேகத்திலிருந்து ஒரு சப்தம் கீழ்க்கண்டவாறு கூறிற்றாம். (அப்படித்தானே சகோதரன் ராய் அவர்களே?) “இவர் என்னுடைய ஊழியக்காரன், மோசே வழிநடத்தியது போல், இவரும் மக்களை வழிநடத்தத்தக்கதாக இக்காலத்திற்குரிய தீர்க்கதரிசியாக இருக்கும்படி அவரை நான் அழைத்திருக்கிறேன். வார்த்தையைப் பேசி எதையும் உருவாக்க அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.” அது மோசே வண்டுகள் ஏற்படும்படி பேசியதுபோல் உள்ளது ஆகும். ஏற்கனவே சம்பவித்த, அணில்கள் மற்றும் காரியங்கள் சிருஷ்டிக்கப்பட்டதைப் பற்றி நாம் அறிவோம். எளிமையான ஹேட்டிரைட்! அவள் வீட்டில் என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன். மோசே செய்த காரியத்தையே நான் செய்ததாக அங்கு அவரிடம் ஆண்டவர் கூறினார்.
7498 ஒரு பிரயாணத்திற்குப் பிறகு நான் திரும்பி வருகையில் அவர் அதைக் கூறினார். என்னுடைய சிந்தையிலோ நான் பட் (Bud) அவர்களைப் போய்ப் பார்த்து வர என் மனதில் தீர்மானித்திருந்தேன், ஏனென்றால் வேட்டைக்காரராகிய அவர் உடல் நலிவுற்றிருந்தார். 99 நான் இங்கிருந்து சீக்கிரமாக புறப்பட்டு செல்லுமுன் இதை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன். நான் ஒரு விநோதமான சொப்பனத்தைக் கண்டேன். ஒரு விநோதமான சொப்பனம். இதைப்பற்றி நான் கூறுவதால், அதைப் பற்றி எப்பொழுதாவது அறிய வரும்போது, அது எனது மைத்துனர் மனதை நோகச் செய்யாது என நான் நம்புகிறேன். இங்கே அமர்ந்திருக்கிற எனது மனைவியையும் இதினிமித்தம் நான் மனம் புண்படச் செய்யவில்லை. ஆனால் அவள் அதை அறிவாள். இச்சொப்பனத்தை நான் அநேக மாதங்களுக்கு முன்பாக, ஏறத்தாழ அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் கண்டேன். அச்சொப்பனத்தில் நான்—நான் இருளில் சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கிறவான இருந்தேன். என்னைப் பற்றி அக்கறையுள்ளவர்கள் யாவரும் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்கென்று போவதற்கு ஒரு இடமும் இல்லை. நான் எந்தவித வேலையுமின்றி ஊர் சுற்றுபவனாய் இருந்தேன். எனக்கு மிகவும் குளிராக இருந்தது. நான் தூரத்தில் உற்றுப் பார்த்தபோது, நான் அக்கினியைக் கண்டேன். நான் அங்கு சென்றபோது, அது ஒரு நகர குப்பை கொட்டும் ஸ்தலமாக இருந்தது. அவர்கள் அங்கே பள்ளங்களை தோண்டியிருக்க, அந்த குப்பை கொட்டும் பள்ளங்களில் நெருப்பு தான் இருந்தது. அப்பள்ளங்களுக்கிடையே குளிர் காலத்தில் கடுங்குளிரினால் உறைந்து போகாதபடி பிச்சைக்காரர்கள் தங்களை சூடு உண்டாக்கிக் கொண்டு படுத்துக்கொள்ளும்படியான இடங்கள் உண்டாயிருந்தன. எனக்கு மிகவும் குளிராயிருந்தது. எனக்கு சூடு உண்டாக்கிக் கொள்ளும்படி நான் அந்த கணப்பினண்டையில் சென்றேன். அங்கு முழுவதும், பிச்சைக்காரர்கள் படுத்திருந்தார்கள். அவர்களை நான் காணவில்லை. ஆனால் அவர்கள் யாவரும் தங்களுக்கு உறங்குவதற்குரிய இடங்களில் படுத்துக்கொண்டிருப்பதைப் போல் காணப்பட்டது. அங்கே எனது மைத்துனர் ஃப்ளெட்சர் ப்ராயைப் பார்த்தேன்.
75100 பிளட்சர், எப்படியாயும் நான் அவரை நினைத்துப் பார்க்கிறேன். அவன் ஒரு நல்ல பையன். ஆனால் இது வாலிப பிள்ளைகளுக்கு ஒரு பாடமாக அமையக் கூடும். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜேம்ஸ் ஃப்ளெட்சர் ப்ராய் என்ற அந்த கட்டழகு வாலிபன் தவறான கூட்டத்தாரோடு சேர்ந்து கொண்டு, தனது முதலாது மதுவை அருந்தினதை நான் நினைத்துப்பார்க்கிறேன். எனது வீட்டின் திரைகளுக்குப் பின்னாக இருந்து அவன் என்னை அழைத்ததை நான் நினைவு கூருகிறேன். அவரது தந்தை அநேகமாண்டுகளுக்கு முன்பே மகிமைக்குள் கடந்து சென்றுவிட்டார். அவர் அன்று சிறு வீணையை எடுத்து வைத்துக்கொண்டு, “தூர மலையின் மேல் ஒரு கரடு முரடான சிலுவையில் நின்றதே” என்ற பாடலை பாடி இசைத்துக் கொண்டிருந்தார். 101 ஃப்ளெட்சர் என்னை திரும்பவும் அழைத்தான். “சகோதரன் பில் எனக்காக ஜெபியுங்கள். எனது தந்தை அந்தப் பாடலை பாடிக் கொண்டிருந்தார். ஆனால் நானோ இன்று இவ்வாறு குடித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினான். 102 அப்பொழுது நான், “பிளெட்சர்” என்று கூப்பிட்டேன், அவன் அப்பொழுதே கிட்டத்தட்ட பதினெட்டு வயதுடைய பையனாயிருந்தான். மேலும் நான், “அந்த வழியில் செல்லாதே” என்று கூறினேன். ஆனால் அவனோ அதற்கு ஒருபோதும் செவிசாய்க்கவில்லை. அவனோ தொடர்ந்து அந்தப் பாதையிலேயே சென்று, ஒரு முழுக் குடிகாரனாக மாறிவிட்டான். அவனது மனைவியும் அவனுடைய பிள்ளைகளும் அவனை விட்டுச் சென்றுவிட்டனர். அவன் இவ்வேளையில்…நான் அவனை நேசிக்கிறேன் என்பதை தேவனறிவார். 103 வெறும் பிச்சைக்காரனாக அலைந்து கொண்டிருந்த அவனுக்காக நான் ஜெபிக்கச் சென்றிருந்தேன். அவனுடைய மனமோ புண்பட்டுவிட்டது. சமீபத்தில் தான் நான் அவனுக்காக ஜெபிக்கப் போயிருந்தேன். அப்பொழுது இங்கே ஏழு முத்திரைகளை நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். “ஃப்ளெட்ச்! என்னிடம் இரு ஜோடி உடுப்புகள் உள்ளன. அவற்றை நான் உனக்கு தர விரும்புகிறேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன், “அதை நீங்கள் எனக்குத் தராதீர்கள்” என்று கூறினான். அவனுக்கு துணிமணிகள் கிடையாது என்பதை நான் அறிவேன். எனவே நான் அவனிடம், “ஏன் நீ அந்த துணிகளை எடுத்துக் கொள்ளக் கூடாது?” என்று கேட்டேன். அவன் “ஊ…ஊ” என்று கூறிவிட்டு, என்னை உற்று நோக்கி “நான் அவற்றை என்னை செய்வேன் தெரியுமா? அவ்வுடுப்புகளை அடமானம் வைத்து, குடித்து விடுவேன்.” என்றான். மேலும் நான், “ஃப்ளெட்ச்! நான் கொஞ்சம் பணம் உனக்குத் தருகிறேன்” என்று கூறினேன். 104 அவன் அதற்கு, “இல்லை, அவ்வாறு செய்யாதீர்கள், சகோதரன் பில் அவர்களே. நீர் அதைச் செய்ய நான்—நான்—நான் விரும்பவில்லை” என்று கூறினான். அவன் தன்னுடைய இருதயத்தில் உண்மையானவனாக இருந்தான். ஆனால் அவன் குடிகாரனாக மாறி, ஒரு பிச்சைக்காரனாக அலைந்து திரிகிறவனாக ஆகிவிட்டான். அவனது—அவனது மனைவியும் தவறான பாதையைத் தெரிந்து கொண்டு விட்டாள். ஓ, இவ்வாறாக ஒவ்வொரு காரியமும் அந்த பரிதாபமான நபருக்கு நடந்துள்ளது.
76105 நான் படுக்கையை விட்டு எழும்பினபோது, நான் எழும்பும் முன்னதாக ஃப்ளெட்ச் அச்சொப்பனத்தில் என்னிடம், “பில்லி, நான் உமக்கு ஒரு இடத்தை தேடி தருகிறேன். என் பிள்ளைகள் பசியாயிருந்தபோது அவர்களுக்கு உணவளித்தீர். நீங்கள் ஒரு தகப்பனாக அவர்களுக்கு இருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு குளிரினின்று பாதுகாப்பாக இருக்கும்படி ஒரு இடத்தை நான் தேடித் தருவேன்.” என்று கூறினான். இவ்வாறு நாங்களிருவரும் அந்த பிச்சைக்காரர்கள் உட்கார்ந்திருந்த அவ்விடங்கள் வழியாக நடந்து வந்து இறுதியாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தோம். அப்பொழுது அவன், “நான் இங்கே உட்கார்ந்து கொள்கிறேன்” என்றான். அப்பொழுது நான், “நான் தொடர்ந்து நடந்து சென்று, என்னால் ஒரு இடத்தை கண்டறிய முடியுமா என்று பார்ப்பேன்” என்றேன். 106 அந்தக் குளிரான இராத்திரியில், நான் மேலே நடந்து சென்று இருளில் உற்றுக் கவனித்தேன். நான், “அதைக்குறித்து சிந்தித்தேன். ஒரு சமயத்தில் சர்வ வல்லமையுள்ள தேவன் என்னை தமது சபையை நடத்தும்படி செய்தார். ஒரு காலத்தில் அவரது சுவிசேஷத்தை நான் பிரசங்கிக்கவும், ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதைக் காணவும் செய்தார். சில நிமிடங்களாவது என்னோடு பேசி விட வேண்டும் என்று வாஞ்சித்து, உலகம் பூராவிலிருந்தும் ஆண்களும் பெண்களும் என்னிடம் வந்தார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும்போது! ஆனால், நானோ இப்பொழுது ஒரு தேசாந்திரியாக எங்கே இருக்கிறேன். என்னை யாரும் விரும்பவில்லை. எனக்கு குளிராயிருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?” என்று எண்ணினேன். அப்பொழுது நான் விழித்துக் கொண்டேன்.
77107 இச்சொப்பனத்தைப்பற்றி என் மனைவியிடம் நான் கூறுகையில், “ஒரு வேளை ஃப்ளெட்ச்சுக்கு ஏதாவது தேவைப்படலாம். அதுவே சொப்பனத்திற்கு அர்த்தமாயிருக்கலாம்” என்று நான் கூறினேன். எனவே நாங்கள் அவனைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்க நாங்கள் உடனே விரைந்தோம். அவனுடைய சகோதரன் அவனைக் கண்டுபிடித்தார். அவன் அங்கே வீட்னர்ஸ் (weidners) குடும்பத்துடன் தங்கியிருந்தான். அங்கே வெளியே…வியாபாரக் குதிரைகள் இருக்கின்றன. அங்குள்ள தானியக் களஞ்சியத்தின் மூலையில் உறங்குபவனாக அவன் இருந்தான். நான் புறப்பட்டுச் சென்றேன். அப்பொழுது நானோ, “நல்லது இதை இப்படியே விட்டுவிட வேண்டியது தான்” என்று எண்ணினேன். 108 எனவே அன்றொரு நாள் நானும் ஃபிரெட்டும் மற்றுமுள்ளோரும் கனடாவிலிருந்து திரும்பி வந்தோம். அப்பொழுது, “இந்த ஜனங்கள் என்னுடைய செய்தியைக் கேட்க விரும்பவில்லையாயின், சரி, அவர்கள் கேட்காமல் போகட்டும்” என்று இவ்வாறாக என் மனதில் நான் அதை தீர்மானித்தேன். இப்பொழுது சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் பிரசங்கித்து விட்டேன். அதுவும் கடந்த பதினைந்து முதல் பதினெட்டு ஆண்டு காலமாக, கர்த்தருக்கு ஊழியம் செய்ததைத் தவிர வேறெதையும் நான் செய்திருக்கவில்லை, நான் அவரண்டை மிகவும் நெருங்கி ஜீவித்து, அவர் முதலில் எதையும் சொல்லும் வரையிலும் நான் எதுவும் சொல்லாமல் இருக்க முயற்சித்து வந்துள்ளேன்.
78109 ஜனங்களோ, “சகோதரன் பிரான்ஹாம் உங்களிடம் தான் வருவதாகக் கூறினால், நினைவில் கொள்ளுங்கள். அவருடைய கூட்டத்திற்காக எதிர்பாருங்கள். ஏனென்றால் அவர் கர்த்தருடைய நாமத்தினால் வருகிறார். கர்த்தர் கூறும் வரை அவராக எதுவும் செய்ய மாட்டார்” என்று கூறுகின்றனர். அது சரிதான். அவர் எனக்கு எதுவும் கூறும் வரையிலும் நான் காத்திருக்கிறேன். அவர் என்னிடம் சொல்லும் வரை நான் அசைவதில்லை. அவர் கூறினபடியே அதன்பின்னர் செய்வேன், ஆனால் இந்த கடந்த சில மாதங்களாக நான் செல்ல வேண்டிய இடங்களைக் குறித்து அவர் என்னிடம் ஒன்றும் கூறவேயில்லை. 110 அதன்பின்னர் கனடாவிலிருந்து நானும், சகோதரன் பாங்க்ஸும், சகோதரன் ராயும் திரும்பி வந்தோம். நாங்கள் பிரிந்து செல்வதற்கு முன்னர் சகோதரன் ராய் என்னிடம் அவருடைய சொப்பனத்தைக் கூறினார். 111 அதன் பிறகு, அடுத்த நாள் காலையில், நாங்கள் ஃப்ரெட்டினுடைய வீட்டிற்குச் சென்றோம். அங்கு அவர் மகன் லின் வீட்டில் இல்லாததால், அவர் எங்களுடன் வர இயலவில்லை. எனவே அவரும் அவரது மனைவியும் மகனுக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. அவர் தனது மனைவியை சாஸ்கட்சிவானில் உள்ள ரோஸ்வுட் இல்லை மெல்ரோஸ் என்னுமிடத்தில் காரில் ஏற்றிக் கொண்டார். 112 நானும் பில்லியும் சகோதரன் ஃப்ரெட்டின் இணைப்பு வாகனத்தில் வந்தோம். அன்று இரவு முழுவதும் அடுத்த நாளும் கூட நாங்கள் பிரயாணம் பண்ணிக் கொண்டேயிருந்தோம். என்னால்—என்னால் ஒன்பது மணி வரை விழித்திருக்க முடியும். அதன் பின்பு எனக்கு உறக்கம் வந்து விடும். நான் உறங்கச் சென்றுவிட்டேன். பில்லி காலை நேர வெளிச்சம் வரும் வரை பத்து மணி வரை உறங்க விரும்புவான். எனவே, இவ்வாறான பிரயாணம் எங்களுக்கு மிகவும் அருமையாக இருந்தது.
79113 எனவே நான்—நான் ஏறக்குறைய நான்கு மணிக்கு எழுந்து வண்டியை ஓட்ட ஆரபித்தேன். அப்பொழுது பில்லி உறங்கிக் கொண்டிருந்தான். நாங்கள் ஒரு ஸ்தலத்திற்குள் பிரவேசித்தோம். அப்பொழுது எனக்குள்ளாக, “என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இந்நாட்களில் ஒன்றில் என் மனைவியை இந்த ஸ்தலத்திற்கு அழைத்துக் கொண்டு வருவேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை அவளுக்கு சொல்லமாட்டேன். ஆனால் நான் அங்கு சென்று, அதன் பின்பு அவளிடம், ‘நான் இந்த ஸ்தலத்தை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன். நான் வேறு எங்கும் போக வேண்டாம். நாம் இங்கேயே தங்கி விடுவோம்” என்று மனதில் சிந்தித்தேன். இவ்விடம் நாகரீகம் உள்ள எந்தவொரு பகுதியினின்றும் ஆயிரத்துநூறு மைல்கள் அப்பால் உள்ள பகுதியாகும். புரிகிறதா? அது வனாந்தரமான பகுதி. எனவே நான், “அது அருமையாய் இருக்காதா? நான் முடிவெட்டிக் கொள்ளத் தேவையில்லை. நான்—நான்—நான் நாகரீகமாக உடை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. நான் அப்படியே வழக்கமான மலையேறுபவனாகவே இருப்பேன். இப்படி இருக்கவே நான் எப்பொழுதும் விரும்பினேன்” என்றே எண்ணினேன். மேலும் நான், “என்னிடம் சில துப்பாக்கிகள் உள்ளன. சில ஜனங்கள் அதை எனக்குக் கொடுத்துள்ளனர். நீங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டிராத ஒரு வழிகாட்டியைப்போல நான் இருப்பேன். நான் அவ்வாறு இருக்க விரும்புவேன். பிறகு கர்த்தர் என்னை கீழே இறங்கிப் போய் யாரிடமாவது எதையாவது கூறும்படி கூறினால், அப்பொழுது அவர்களிடம் ஓடிப்போய் கர்த்தர் சொன்னவற்றை கூறிவிட்டு, திரும்பி வந்து விடுவேன். நான் பட் அவர்களுக்கு உதவி செய்வேன். நாம் இங்கே உண்மையாக ஒரு நல்ல ஸ்தலத்தை உடையவர்களாக இருப்போம்” என்று கூறிக் கொண்டேன். நான் அதன் பேரில் அவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
80114 காலையில் ஏழு மணியளவில் மலையில் இருந்த ஒரு சிறிய சிற்றுண்டி சாலைக்கு நாங்கள் சாப்பிடச் சென்றோம். நேரமாகிக் கொண்டிருந்தபடியால், நான் பில்லியை எழுப்பினேன். எங்களுடைய வாகனத்தில் இருந்த எரிவாயு தீர்ந்து போய்விட்டபடியால், எரிவாயு நிரப்பிக் கொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் இந்த சிறிய ஸ்தலத்துக்கு, சிற்றுண்டிச் சாலைக்குள் சென்றோம். அங்கு இருந்து கொண்டிருக்கையில், அவ்வீதி வழியாக ஒரு மனிதன் வந்து கொண்டிருந்தான். அவன் என்னைவிட சற்று வயது சென்றவன் போல் தோற்றமளித்தான். ஆனால் அவன் ஆண்மைத்தன்மை கொண்ட ஒரு மனிதனாக எனக்கு காட்சியளித்தான். அம்மனிதன் ஒரு சீருடை போன்ற ஆடையையும், அதன் மேல் மேற்சட்டையையும், சவாரி செய்தலுக்குரிய காலணிகளையும், ஒரு கருப்புத் தொப்பியையும், மீசையை நீளமாய் தன்னுடைய முகத்தில் வளர்ந்திருக்க பனிபோல் வெண்மையான அவனது தலைமடி, தொப்பியின் வழியாக பின்புறம் தொங்கிக் கொண்டிருந்தது. எனவே நான், “அவன் ஆண்மைத்தன்மையுள்ள ஒரு மனிதனாக இருக்கிறான்” என்றே எண்ணினேன். சில மனிதர் வலுவற்று சோம்பேறித்தனமாக, தன் வாயில் நீண்ட சுருட்டை வைத்துக் கொண்டு, அரைக்கால் சட்டையை அணிந்து கொண்டு முற்றத்திலோ அல்லது நீச்சல் குளத்தினருகோ உட்கார்ந்து கொண்டு தன் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் ஒரு கிழக்கித்தியரைப்போல் இருக்கவில்லை. இவ்விதமாக வெளிப்படுத்திக் கூறுகிற வார்த்தைகளுக்காக மன்னிக்கவும். ஆனால் அந்த மனிதனோ கரடுமுரடான, கடுமையான மனிதனாக காட்சியளித்தான். மனிதன் எங்கு வாழ வேண்டும் என்று தேவன் உண்டாக்கினாரோ அப்படிப்பட்டவனாகவே காட்சியளித்தான். நான் அவனை மனதில் பாராட்டிக் கொண்டிருந்தேன்.
81115 அவன் அச்சிற்றுண்டிசாலைக்குள் நுழைந்து சில பணியாரங்களைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டான். அங்கு கிட்டத்தட்ட பதினைந்து அல்லது இருபது பேர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அவன் தும்ப வேண்டியதாயிருந்தது. உங்களுக்குத் தெரியுமா, சில ஜனங்களைப் போல அடக்கமாக இல்லாமல்…பயங்கரமான காட்டுத் தும்மல் போட்டான். [சகோதரன் பிரான்ஹாம் மூச்சுத் திணறச் செய்யும் தும்மலைத் தும்மிக்காட்டுகிறார்—ஆசி.] என்னை மன்னிக்கவும். ஆனால் அவன் ஒரு பெரிய சத்தமான பயங்கரமான காட்டுத் தும்மலை “கெர்—சோ—யி!” என்று போட்டான். என்னே, அது காற்று வெடித்தது போல் இருந்தது. அவன் அப்படித் தும்மியபோது ஒருவரும் எதுவும் பேசத் துணியவில்லை. இல்லை ஐயா. அப்பொழுது நான், “பில்லி, என் இருதயத்திற்கேற்ற மனிதன் இதோ!” என்று கூறினேன். அதற்கு பில்லியோ, “ஆ, தந்தையே, அப்படி இருக்கும்படி நீங்கள் விரும்பவில்லையே” என்று கூறினான். “எதிர் காலத்தில் நான் அப்படித் தானிருப்பேன்.” புரிகிறதா? மேலும் நான், “அது நான் தான்” என்றேன்.
82116 நான் சற்று நேரம் அங்கு அமர்ந்திருந்தேன். பில்லி என்னை நோக்கிப் பார்த்துவிட்டு தொடர்ந்து அவனுடைய பணியாரங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நான்—நான் என்னுடையதை சாப்பிட்டு முடித்து விட்டிருந்தேன். ஒரு சில நிமிடங்களுக்குள் வேறு யாரோ ஒருவன் எங்களுக்கு எதிராக இந்த ஒரு சிறு கடைக்குள்ளிருந்து, இந்தவிதமான பலகைகள் கொண்ட கடையின் பின்னிருந்து எழும்பினான். என்னால் சுற்றிப் பார்க்க முடியவில்லை. அப்பொழுது எழும்பின அந்த மனிதன், அவன் சரியாக எனது முகச்சாயல் உள்ளவனாக, கிட்டத்தட்ட எழுபத்தைந்து வயதுடையவனாக சிறு உருவங்கொண்ட நபராய் இருந்தான். அவனது ஆடைகள் கிழிந்து போய், அவனது உடபோடு கட்டப்பட்டிருந்தது. அவனோடு எழும்பின அவனுடைய நண்பன் ஃப்ளெட்சர் ப்ராய்க்கு. நரைத்த முடி முகத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. பில்லி சற்று முற்றும் பார்த்து விட்டு, என்னிடம் “தந்தையே, அவர்கள் இருவரும் உங்களையும், ஃப்ளெட்சரையும் போல் இருக்கிறார்கள்” என்று கூறினான். நான் அதைப்பற்றி எவ்வாறு உணர்ந்தேன் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ள முடியும். அந்த சிறிய மனிதன் தள்ளாடுகிறவனாக என்னைப்போல் தோற்றமளித்தான். வெளியில் குளிர்காய்வதற்காக இருக்கும் நெருப்பண்டையில் நின்றதினால், முகமெல்லாம் அவர்களுக்கு புகைப்பிடித்து அழுக்காக இருந்தது. அவரிருவரும் சேர்ந்து காலைச்சிற்றுண்டி சாப்பிட்டார்கள் என நான் நினைக்கிறேன். ஒரு கோப்பை காபி அருந்துவதற்கு, அவரிருவருக்கும் அம்மனிதன் இருபது செண்டுகள் செலுத்தியிருக்க வேண்டும். என் இருதயம் எனக்குள்ளே துடித்தது. நான் அவர்களைக் கவனித்தேன். பில்லி, “உங்களுக்கு என்ன நேர்ந்தது” என்று கேட்டான். அதற்கு நானோ, “ஒன்றுமில்லை,” என கூறினேன். நான் அதை கவனித்தேன், அவர்கள் புறப்பட்டு வெளியேறினார்கள். பில்லி என்னிடம், “தந்தையே என்ன விஷயம்?” என்று கேட்டான். அதற்கு நானோ, “ஒன்றுமில்லை” என கூறினேன். அவன் காருக்குச் சென்றான். அப்பொழுது நான் சொன்னேன்… பில்லி, “நீங்கள் மீண்டும் காரை ஓட்டுகிறீர்களா?” என்று கேட்டான். அதற்கு நான், “இல்லை” என்று கூறினேன். அப்பொழுது பில்லி, “நான் இன்னும் தூக்க மயக்கத்தில் இருக்கிறேன்.” என்று கூறினான்.
83117 எனவே பில்லி உறங்கச் சென்று விட்டான். நான் அந்த வாகனத்தை மணிக்கு ஐம்பத்தைந்து மைல் வேகத்தில் வேகப்படுத்தி, மலையைவிட்டு இறங்கிக் கொண்டிருந்தேன். அரிசோனாவை நேராக்கி வீடு திரும்பும் எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஊடா என்ற இடத்திற்கு வந்தேன். அப்பட்டிணத்தை விட்டு இருபது மைல்கள் தாண்டி மலையை விட்டு வாகனத்தில் கீழே இறங்கிக் கொண்டிருக்கையில் இப்பொழுது என்னுடைய சத்தத்தை நீங்கள் தெளிவாக கேட்கும் வண்ணமாக ஒரு சத்தம் எனக்குக் கேட்டது. அணில்கள் மற்றும் சம்பவங்களைப் பற்றி நான் கூறுகையில் எவ்வாறு அந்த சத்தம் கேட்டது என்று நான் கூறியிருக்கிறேன். ஒருக்கால் அது நொந்துபோன பயத்தினால் ஏற்பட்டது போல தென்படுவதை நான் அறிவேன். ஆனால் நான் வெளிப்படுத்திக் கூறியிருப்பதுபோல, “சரியில்லாத ஏதாவதொன்றை நான் உங்களுக்கு எப்பொழுதாவது கூறியதுண்டா?” ஒரு—ஒரு சத்தம் என்னோடு பேசினது. நான் அவரிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். 118 அது “உனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள். நீ அவ்வாறே இருப்பாய்” என்று கூறியது. அப்பொழுது நான் “ஆண்டவரே நான் அவ்வாறிருக்க விரும்பவில்லை” எனக் கூறினேன். 119 மேலும் அவர், “உன் மனைவியும் கூட போய்விடுவாள். அவள் இம்மாதிரியான மலைகளில் வாழ விரும்பமாட்டாள். சொப்பனம் நீ எவ்வாறு ஒரு தேசாந்திரியாக ஆவாய் என்று காண்பித்ததோ, அவ்வாறே நீ ஆவாய்” என்று கூறினார். 120 அப்பொழுது நான், “அந்தவிதமாக இருக்க நான் விரும்பவில்லை. ஆனால்…நான்—நான்—நான்—நான் அந்தவிதமாக ஜீவிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நான்—நான் வித்தியாசமான ஒரு காரியத்தை செய்ய விரும்புகிறேன். ஆனால் நீர் என்னை ஒரு—ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும்படி அழைத்திருக்கிறீர் என்று எனக்குச்—எனக்குச் சொல்லப்பட்டது. எனவே தீர்க்கதரிசியைப் போல் நான் வனாந்தரத்தில் வாழ விரும்புகிறேன்” என்று கூறினேன். நான் வேட்டையாட முடியும் என்று காரணத்திற்காக, எனது சொந்த நலனுக்காக இத்தகைய சாக்குப் போக்கை கூறிக் கொண்டிருந்தேன். 121 அவர் “ஆனால் அப்படி ஜீவித்தவர்கள் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளாவர். அதை விட மேலானதொரு ஊழியத்திற்காகவே நீ அழைக்கப்பட்டிருக்கிறாய்” என்றார். அவர் மேலும், “அதுவுமின்றி மேற்கொண்டு உனக்கு அதிக வரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வியாதியஸ்தருக்காக ஜெபித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி நீ அழைக்கப்பட்டிருக்கிறாய். மேலும் அப்போஸ்தல ஒழுங்கின்படி, மேன்மையான காரியங்களைப் பற்றியும், அநேக மகத்தான வரங்களைப் பற்றியும் நீ அறிவாய்” என்றார். அவர் தொடர்ந்து, “நீ செயல்படுவதற்காக உன்னை அசைக்கும்படி ஒவ்வொரு தடவையும் ஏன் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறாய்? உனது பலன் எங்கே?” என்று கேட்டார். அதன் பிறகு நான் கண்டேன். அப்பொழுது, “உனக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்டார். நான் உன்னிடம் கூறினதோ …?… சகோதரன் ராய் ராபர்ஸன் தமது சொப்பனம் அல்லது தரிசனத்தில் கண்டு உன்னிடத்தில் கூறியவற்றை நீ ஞாபகத்தில் வைத்திருக்கிறாயா? அதை நீ மோசேயைப் போல் செய்திருக்கிறாய். உனது ஜனங்களின் உணர்வை நீ மறந்து விட்டாய். நான் உன்னை அழைத்த அழைப்பை நீ மறந்து விட்டாய்” என்று கூறினார்.
84122 வியாதியஸ்தர் கிடக்கும்படி நான் அப்படியே விட்டுவிட்டேன். நான் எங்கே போக வேண்டும், போகக் கூடாது என்பதைப் பற்றி கர்த்தர் சொல்லும்படி விரும்பினேன். அது தவறாகும். மக்கள் எனது செய்தியைக் கேட்காததினால், நான் எனக்குள்ளாகவே ஒருவிதமான மனப்பான்மையை உருவாக்கிக் கொண்டேன். மோசேயின் ஜீவியத்தோடு இப்பொழுதுள்ள என் ஜீவியத்தை நான் ஒப்பிட முயலாதபடிக்கு தேவன் தடுப்பாராக. ஆனால் அது அப்படியே மோசே செய்தது போலவேதான் இருக்கிறது. மோசே ஜனங்களை விடுவிக்க வந்தபோது அவர்கள் அவனுக்கு செவிகொடுக்கவில்லை. எனவே அவர்களை அவன் விட்டு விட்டான். அவன் வனாந்திரத்திற்குள் சென்று விட்டான். ஆனால் தேவனோ அவனை திரும்ப கொண்டு வந்தார். ஜனங்களுடைய வேதனையை அவன் நீண்டகாலம் மறந்திருந்தான். 123 அதன் பிறகு, “ஆண்டவரே எனக்கு ஆரம்பப்பள்ளி கல்வி மாத்திரம் தான் உண்டு. வேறு கல்வித் தகுதியில்லை. எளிமையான சுவிசேஷத்தைக் கேட்கும்படி மக்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பது வழக்கம்” என்று கூறினேன். அது மேலானதாக இருக்கிறது. பழைய உடன்படிக்கையின் கீழாகக் கொடுக்கப்பட்டதை விட இது மகத்தானது. அவர் உன்னதத்திற்கு ஏறி, மனிதருக்கு வரங்களைத் தந்தருளினார். புரிகிறதா? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நான் இவ்வாறு அவரோடு பேசவும், அவர் பேச நான் கேட்கவுமாக இருந்தது. பிறகு அவர் என்னை விட்டுப் போய் விட்டார்.
85124 அப்பொழுது நான், “பில்லி” என்று கூப்பிட்டேன். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நானோ, “பில்லி, பேசினது நீ தானா?” என்று கேட்டேன். அவன் உறக்கத்திலிருந்து எழும்பக்கூட இல்லை. 125 நான், “தேவனாகிய கர்த்தாவே, இதின் பொருள் என்ன?” என்று எண்ணிக் கேட்டேன். அப்பொழுது என்னுடைய காரின் வேகத்தை குறைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான், “பில்லி, பில்லி,” என்று கூப்பிட்டேன். அதற்கு அவன், “உமக்கு என்ன வேண்டும்” என்று கேட்டான். அப்பொழுது நான், “சற்றுமுன் நீ தான் என்னிடம் பேசிக் கொண்டிருந்தாயா?” என்று கேட்டேன். அதற்கு அவன், “இல்லையே, ஏன்?” என்று கேட்டான். 126 அதற்கு நான், “ஒரு விஷயம் உனக்கு நான் கூற விரும்புகிறேன். சமீபத்தில் நான் ஒரு சொப்பனம் கண்டேன். என்னைப் போலும், ஃப்ளெட்ச்சைப் போலும் காட்சியளித்த அந்த இருவரையும் கண்டது ஞாபகமிருக்கிறதா? நீ டூசானுக்குப் போகும்போது, அம்மாவிடம் இதைப்பற்றிக் கேள். நான் அவளிடம் இந்தச் சொப்பனத்தைக் கூறியுள்ளேன். பில்லி, ஏதோ ஒன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறது. அது இப்பொழுதே நடந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று என்னுடன் பேசி கொண்டிருந்தது. அது நீ தான் என நான்—நான் எண்ணினேன்” என்று கூறினேன்.
86127 அவன் என்னை சற்று விசித்திரமாக உற்று நோக்கினான், சற்று விழித்திருந்தான். நாங்கள் வாகனத்தை ஒட்டிக் கொண்டிருந்தோம். பிறகு ஒரு சில நிமிடங்கள் கழித்து, பிறகு மீண்டும் உறக்கத்திலாழ்ந்தான். நாங்கள் தொடர்ந்து வண்டியில் சென்று கொண்டிருந்தோம்; “அதின் அர்த்தம் என்னவாயிருக்கும்?” என்று அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டே நான் வண்டியை ஓட்டிச் சென்றேன். சாலையில் அவ்வாறு வாகனம் போய்க் கொண்டிருக்கையில், திடீரென்று மீண்டும் அந்த சத்தம் என்னோடு பேசியது. 128 அவர், “திரும்பு, ஆதியிலே நான் உன்னிடம் சுவிசேஷகனுடைய வேலையைச் செய் என்று கூறவில்லையா? நதிக் கரையில் உன்னை நான் அழைத்தபோது, நான் உன்னிடம், ‘யோவான் ஸ்நானன் முதலாம் வருகைக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டது போல்…’ என்று கூறவில்லையா? யோவான் தீர்க்கதரிசியை விட மேன்மையுள்ளவன் இல்லையா? இயேசு தாமே, ‘யாரைப் பார்க்கப் போனீகள்? ஒரு தீர்க்கதரிசியையா?…’ என்று கேட்டுவிட்டு, ‘தீர்க்கதரிசியை விட மேலானவன்’ என்று கூறினாரே” என்றார்.
87129 பின்பு இந்த விஷயங்களெல்லாம் எனது நினைவிற்கு வந்தன. வியப்புற ஆரம்பித்தேன். பிறகு அவர் மக்களைப் பற்றி எனக்கு மீண்டும் ஞாபகப்படுத்தினார். மோசே வனாந்திரத்தில் இருந்து கொண்டு எவ்வாறு மக்களைப் போய் அடைய முடியும்? அது போலவே, நான் வனாந்திரத்தில் இருந்து கொண்டு, எவ்வாறு மக்களை அணுக முடியும்? சரியாக அதேக் காரியம். பிறகு தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் நிருபம் 4-ம் அதிகாரம் …உங்களில் ஆரம்ப காலத்தில் இருந்தவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக சபையை நாம் பிரதிஷ்டை செய்கையில், அக்காலையில் அவர் எனக்குக் காண்பித்த அவ்விரு மரங்களை நான் இரு பக்கங்களிலும் நட்டேன் அல்லவா? அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த தரிசனம் உங்களுக்கு நினைவிருக்கும். அவைகளெல்லாம் புத்தகங்களிலும், ஒலிநாடாக்களிலும் உள்ளன. அநேகமாண்டுகளுக்கு முன்பாக, நான் இவைகளை எப்படி பார்த்தேனோ, அதாவது நான் ஒருபோதும் திரித்துவத்தின் பக்கமோ, அல்லது ஒருத்துவத்தின் பக்கமோ நான் சாயவில்லை. அவைகள் நடுவே நின்று, அம்மரங்களை நட்டேன். அவைகள் களைகளைக் கொண்டிருந்த இரண்டு மரங்களாய் மாத்திரமே இருந்தன. நான்…எல்லா மரங்களும் முப்பது அடி உயரம் மாத்திரமே வளர்ந்து, பிறகு நின்று விட்டன. ஆனால் அவைகள் நேராக பரலோகத்திற்கு வளர்ந்து சென்றன. அவைகளை ஒரே கிளையினின்று நான் முறித்தேன். புரிகிறதா? ஒரு பக்கத்தில் ஒன்றும் மற்றொரு பக்கத்தில் இன்னொன்றுமாக அவை இருந்தன. அவைகளை நான் முறித்தேன். அந்த தரிசனம் உங்களுக்கு நினைவிருக்கும். புரிகிறதா? அவைகள் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளன. அது எனது சுய சரிதையிலும் உள்ளது. அவைகள் நேராக வானளாவி வளர்ந்து பரலோகத்திற்குள் சென்றன. அப்பொழுது அவர் என்னிடம், “அவற்றின் கனியைப் பறிக்கும்படி உன் கரத்தை நீட்டு” என்று கூறினார். நான் அங்கே ஓடியபோது, அதே கனியைத்தான் நான் சிலுவையில் கண்டேன். அப்பொழுது அவர், “சுவிசேஷகனுடைய வேலையைச் செய். உன் ஊழியத்தை நிறைவேற்று. அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்திற்கு செவிகொடுக்க மனதில்லாமல் போகப்போகிற வேளை வரும்’. அவர்களை விட்டு விலகாதே. தொடர்ந்து போய்க் கொண்டேயிரு” என்று கூறினார். இவையாவும் என் நினைவிற்கு வந்தது.
88130 அதன் பின்னர் இந்த மார்லின் மன்றோ, இவள் மரிப்பதற்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு அவள் மரித்ததைக் கண்டேன். அவள் தற்கொலை செய்யாதபோது, எப்படியாய் அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்று அவர்கள் கூறினர். அது சம்பவிக்கும் முன்னர் அது எப்படி சம்பவிக்கும் என்று நான் அதைக் குறித்து அவர்களிடம் கூறினேன். அதேப் போல் குத்துச்சண்டைக்காரர்ளைக் குறித்தும் கூறினேன். அதாவது ஒருவர் மற்றொருவரை கொல்லப்போவதாயிருந்தார் என்று கூறினேன். நான் அந்தப் பெண்ணை தவறாகக் கூறிவிட்டேன். அங்கே மற்றொரு பெண் இருந்தாள். அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரன் டானி ஹென்றியாகும். அவளுடைய பெயர் என்ன? ஜேன் ரஸ்ஸல். அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரன், ஒரு பாப்டிஸ்டு பையன். 131 நான் லாஸ் ஏஞ்ஜெலிஸில் வர்த்தக புருஷருடைய காலை சிற்றுண்டி வேளையில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அங்கே அந்த ஸ்தாபனங்களின் பேரில் ஒரு காரியம் இருந்தது. அங்கே அசெம்பளீஸ் ஆப் காட் சபையின் தலைவரும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கூடி வந்திருந்தார்கள். நான் பேசி முடித்த பிறகு, மேடையை விட்டு புறப்படுகையில்… ஏனெனில் அச்செய்தியானது வானொலியில் தேசம் பூராவும் ஒலிபரப்பப்படுவதாக இருந்தது. அந்த நேரத்தில் வானொலி ஒலிபரப்பை நிறுத்திவிட்டு, இந்த செய்தி ஒலிபரப்பப்படும்படி, அதை அறிவிக்க வானொலி நிலையத்திற்கு வந்தனர். நான் அப்பொழுது க்ளிஃப்டனில் இருந்தேன். அங்கே எங்களுடைய காலைச் சிற்றுண்டியை புசித்தோம். நான் அவ்வாறு மேல் பிரசங்க பீடத்திலிருந்து கீழ்ப்பீடத்திற்கு இறங்கி வருகையில் முப்பது வயது மதிக்கத்தக்க அழகானதொரு வாலிபன் ஓடி வந்து தனது கரங்களால் என்னைத் தழுவி அணைத்துக் கொண்டார். அவர் “நான் தான் டேனி ஹென்றி” என்று கூறினார். அவருடைய சகோதரர் தான் தொலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்கிறார் என்பதை அறியாதிருந்தேன். ஊ, கிறிஸ்தவ வியாபாரிகளுக்காக அங்கே தொலைக்காட்சியில் ஒலிபரப்பும் காரியத்தைச் செய்கிறார். டேனி ஹென்றியின் ஒன்றுவிட்ட சகோதரி தான் அந்த சினிமா நடிகை ஜேன் ரஸ்ஸல் ஆவார். அவளுடைய தாய் ஒரு பெந்தேகோஸ்தே பிரசங்கியாவார்.
89132 அவர் அவ்வாறு என்னை நோக்கி ஓடி வந்து, என்னைச் சுற்றி தனது கரங்களால் அணைத்துக் கொண்டு, “தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் பிரான்ஹாமே” என்றார். மேலும் அவர், “நான் இப்போது சொல்லப்போவது தேவதூஷணமாக தொனிக்காது என்று நம்புகிறேன். என் அபிப்பிராயப்படி, நீங்கள் பிரசங்கித்த அச்செய்தியானது வெளிப்படுத்தின விசேஷத்தின் 23-ம் அதிகாரமாயிருக்க முடியும்” என்று கூறினார். அவர் அவ்வாறு கூறிக்கொண்டிருக்கையில், உடனே அன்னிய பாஷையில் அவரே பேச ஆரம்பித்தார். ஸ்தாபன ரீதியாக ஒரு பாப்டிஸ்டாக இருந்த அவன் ஒருபோதும் அன்னிய பேசுதலாகிய அப்படிப்பட்ட காரியத்தை கேள்விப்பட்டேயிருக்கவில்லை. அவர் அவ்வாறு அன்னிய பாஷையில் பேசியதும் என்னைப் பார்த்தார். அவர் முகம் வெளிறிவிட்டது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இங்கே உட்கார்ந்திருக்கும் சிலர் அப்பொழுது அங்கிருந்தனர்…ப்ரெட் நீங்கள் அங்கு இருந்தீர்களா? எத்தனை பேர்கள் அங்கு அவ்வேளையில் இருந்தீர்கள்? ஆம், இங்குள்ள மூன்று பேர்கள் அங்கு அந்த வேளையில் இருந்தீர்கள். அவருக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. 133 அங்கே அப்பொழுது ஒரு பருமனான ப்ரெஞ்ச் பெண்மணி ஒருவர் வீற்றிருந்தாள். அவள் எழும்பி, “அவர் பேசியதற்கு எந்தவித வியாக்கியானமும் தேவையில்லை. அது சுத்தமான பிரெஞ்சு மொழியாகும்” என்று கூறினாள். அந்தப் பையன், “எனக்கு பிரெஞ்சுமொழியின் ஒரு வார்த்தை கூடத் தெரியாது” என்று கூறினான். அப்பெண்மணியோ, அவர் கூறினவை யாவையும் எழுதி வைத்திருந்தாள். 134 அப்பொழுது அங்கே மூலையில் வேறொருவர் உட்கார்ந்திருந்தார். அவர், “அது சரியானது தான். அவர் கூறியவை யாவையும் நானும் எழுதி எடுத்திருக்கிறேன். அது ப்ரெஞ்சு மொழியிலுள்ளது” எனக் கூறினார். மிகவும் பின்னால் சுவரோரமாக உட்கார்ந்திருந்த பழுப்புநிற தலைமுடி உள்ள அழகான ஒரு மனிதன் எழும்பி முன்னுக்கு வந்து அவர்களுடைய குறிப்புகளை தம்முடையவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அவர் ஐக்கிய நாடுகள் சபையில் ப்ரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். இங்கிருந்த இந்த மனிதன் பெயர் விக்டர் லீ டூக்ஸ் (victor Le Doux) என்பதாகும். இவர் அர்னேவிக் என்பவரின் சபையைச் சேர்ந்தவர். அவர் அதை எழுதிக் கொடுத்தார். அதினுடைய மொழிபெயர்ப்பு என்னிடம் உள்ளது.
90135 நான் இதை வாசிக்கிறேன். இதைக் கேளுங்கள். “விக்டர் லீ டூக்ஸ் ஆகிய நான் கலப்படமற்ற ப்ரெஞ்சு இனத்தைச் சேர்ந்தவன் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன். பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்டவன். எனது முகவரி, 809, நார்த் கிங் ரோட், லாஸ் ஏஞ்ஜெலிஸ், 46. நான் அவர்னேவிக் என்பவரைப் போதகராக கொண்டுள்ள பெத்தேல் டெம்பிள் சபையைச் சேர்ந்தவன். 1961-ம் ஆண்டு பெப்ரவரி 11-ம் தேதியன்று, பூரண சுவிசேஷ வர்த்தகர்களின் காலைச் சிற்றுண்டியில் டேனி ஹென்றி என்பவரால் சகோதரன் பிரான்ஹாமுக்கு, ப்ரெஞ்ச் மொழியில் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் சரியான மொழிபெயர்ப்பை நான் அறிவிக்கிறேன்.” 136 இப்பொழுது, அது இவ்வாறு கூறப்பட்டுள்ளது. குறுகிய, கடினமான பாதையை நீ தெரிந்து கொண்டிருக்கிறபடியால், உனது சொந்த தெரிந்தெடுத்தலின்படியே நீ நடந்து சென்றிருக்கிறாய். இப்பொழுது அதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. மோசேயும் கூட தனது தெரிந்தெடுத்தலைச் செய்ய வேண்டியவனாக இருந்தான். புரிகிறதா? துல்லியமான, சரியான வழியை நீ தெரிந்து கொண்டிருக்கிறாய்; அது என்னுடைய வழியாயிருக்கிறது . அடியில் கோடிடப்பட்டிருக்கிறது. எனது வழி என பரிசுத்தாவியானவர் மீண்டும் பேசினார். முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்மானத்தினிமித்தமாக பரலோகத்தின் பெரும்பகுதி உனக்குக் காத்திருக்கிறது…உனக்கு காத்திருக்கிறது. என்னே! மகிமையானதொரு தீர்மானம்… (இப்பொழுது கவனமாக கேளுங்கள்.) என்னே மகிமையானதொரு தீர்மானத்தை நீ செய்திருக்கிறாய். நிறைவேறுவதான இத்தீர்மானத்தில், தன்னில் தானே மிகப்பெரிய வெற்றியைத் தெய்வீக அன்பில் அது கொண்டுவரக் கூடியதாயிருக்கிறது.
91137 அது வினையுரிச் சொல்லுக்கு முன் உள்ள வினைச் சொல்லாக இருக்கிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? பாருங்கள், பிரெஞ்சுமொழி. ஐ.நா.சபையின் ப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பாளர் அதை மொழிப் பெயர்த்துக் கொடுத்தார். அந்தப் பையனுக்கு ப்ரெஞ்சில் ஒரு வார்த்தை கூட தெரியாது. அன்னிய பாஷையில் பேசுவது என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியாது. அவர் ஒரு பாப்டிஸ்ட்டாய் இருந்தார். தற்செயலாக அவன் அங்கே உள்ளே நுழைந்து அங்கே இசைத்துக் கொண்டிருந்த இசையைக் கேட்டு விட்டு, பின்பு நான் அங்கு வந்து நின்று பிரசங்கித்ததைக் கேட்டிருக்கிறான். 138 இப்பொழுது “தெய்வீகமான அன்பில்,” தெய்வீக அன்பு. அது பரிசுத்தாவியாக இல்லாவிடில் அது எப்படி தெய்வீக அன்பாக இருக்கக் கூடும்? பரிசுத்தாவியே தெய்வீக அன்பாக இருக்கிறது.
92139 இவ்வாறு நானும் பில்லியும் வாகனத்தில் போய்க் கொண்டிருக்கையில், பாருங்கள், பில்லி மறுபடியும் உறங்கச் சென்று விட்டான். அந்த சத்தமானது, “நான் உனக்கு ஒரு நித்திய அடையாளத்தைக் கொடுப்பேன்” என்று கூறியது. 140 அப்பொழுது நான், “கர்த்தாவே, என்ன…” என்றேன். நான் சிறிது நேரம் காத்திருந்தேன். ஒன்றும் நடைபெறவில்லை. பிறகு நான், “கர்த்தாவே! நித்திய அடையாளம் என்றால் என்ன?” என்று கேட்டேன். நான் சில நிமிடங்கள் காத்திருந்தேன். அதன்பிறகு நான் பில்லியைப் பார்த்தேன்; அவனோ உறக்கத்திலிருந்தான். 141 அவர், “நான் உனக்கு நித்திய அடையாளத்தைக் கொடுப்பேன்” என்று மீண்டும் கூறினார். மேலும் அவர், “நீ இருக்கிற இடத்திலிருந்து மேற்கு நோக்கிப் பார்” என்றார். 142 மேற்கு நோக்கிப் பார்ப்பதற்காக நான் வாகனத்திலிருந்து என் தலையை இந்த விதமாகத் திருப்பிப் பார்த்தேன்; வாகனத்தை மெதுவாக ஓட்டினேன். உங்களுக்குத் தெரியுமா? ஓ, என்னே; அங்கே கர்த்தருடைய ஆவியானவர்! எனக்கு கதறி சத்தமிட வேண்டும் போல் இருந்தது. நான் பார்த்தபோது, வெண்மையான பனியினால் மேல்மூடியிடப் பட்டிருந்ததொரு மலையை கண்டேன். அப்பொழுது நான், “எனக்கு ஒன்றும் தெரியவில்லை, அதில் எந்தவொரு நித்திய அடையாளத்தையும் நான் காணவில்லையே” என்று கூறினேன். 143 அவர், “உனது பெயர் அதில் எங்கும் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார் 144 அப்பொழுது நான், “அது என்ன?” என்று எண்ணினேன். நான் மிகவும் பலவீனமடைந்தேன், எனவே நான் வாகனத்தை நிறுத்த ஆரம்பித்தேன். 145 பில்லி எழும்பி, “உங்களுக்கு என்ன நேரிட்டது?” என்று கேட்டான். நான் என்னுடைய கரங்களை இவ்வாறு தொங்கவிட்டேன், எனது கரங்களிலிருந்து வியர்வை கொட்டியது, ஆனால் வெளியிலோ பனிபொழிவாய் இருந்தது.
93146 நான், “பில்லி, ஏதோ ஒன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறது. நான் எங்கே தவறிழைத்தேன் என்பதை உடனடியாக அறிந்துகொண்டேன். நான் தேவனிடத்தில் தவறியிருக்கிறேன் என்று அறிவேன்” என்று கூறினேன். பின்வரும் பாடல் பாடுவதை நான் கேட்டது போல் எனக்குத் தோன்றியது. பலவிதமான மக்கள் நொண்டி, முடம், குருடு, உடல் சூம்பிப்போனவர் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை நான் கண்டேன். பிரசித்திபெற்ற ஒரு பாடல் குழுவினர் இப்பாடலைப் பாடுவதைக் கேட்டேன். அசுத்தம்! அசுத்தம்! அசுத்த ஆவிகள் அவனைத் துரத்தின (நீங்கள் அந்த பாடலை அறிவீர்கள்) இயேசு வந்து அந்த சிறைப்பட்டவனை விடுதலையாக்கினார். 147 வியாதியஸ்தர்களின் வரிசைகளை என்னால் எவ்விடத்திலும் பார்க்க முடிந்தது. அப்பொழுது நான் நிற்க வேண்டியதாயிற்று. பில்லியோ என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறதென்பதை அறியாதவனாயிருந்தான். நான் மேலே நோக்கிப் பார்த்தேன்,
94148 நான் வண்டியை நிறுத்தி மேல் நோக்கி மலையைப் பார்த்த போது, அந்த ஏழு சிகரங்களைக் கண்டேன். இப்பொழுது இங்கே நீங்கள் ஒரு காரியத்தைக் காண விரும்பினால், அம்மலையின்மேல் ஏழு சிகரங்கள் இருந்தன. அந்த ஒரு மலை பல மைல்கள் தூரம் வியாபித்திருந்தது. மற்றொரு தேசத்திற்கு நீங்கள் செல்வதற்கு முன்பிருந்த கடைசி மலை அதுவாகும். அதற்குப் பிறகு மலைகளே கிடையாது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அமைந்திருந்தது. அதின் உச்சியின் மேல் பனி மூடப்பட்டிருந்தது. 149 முதல் இரண்டும் சிறிய சிகரங்களாயிருந்தன. பிறகு ஒரு பெரிய சிகரம். அதன் பிறகு வெறொரு சிறிய சிகரம், அதற்கப்பால் ஒரு பெரிய சிகரம், அதற்கப்பால் ஒரு சிறிய சிகரம், அதன் பிறகு ஒரு பெரிய நீண்ட பெரிய பனி மூடிய மலை. அப்பொழுது நான், “கர்த்தாவே, அதன் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினேன். 150 அப்பொழுது அவரோ, “அங்கே எத்தனை சிகரங்களுள்ளன?” என்று கேட்டார். 151 அதற்கு நான் “ஏழு சிகரங்களுள்ளன” என்று கூறினேன். 152 “உன்னுடைய பெயரில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன? பி—ரா—ன்—ஹா—ம், B—r—a—n—h—a—m, M—a—r—r—i—o—n, ம—ரி—ய—ன் பி—ரா—ன்—ஹா—ம்,” என ஒவ்வொன்றிலும் ஆங்கிலத்தில் ஏழு எழுத்துக்களைக் கொண்டதாயுள்ளன.
95153 அங்கே தனிச்சிறப்பு வாய்ந்த மூன்று சிகரங்களிருந்தன. அவர், “அம்மூன்று சிகரங்களும், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இழுப்புக்களாம். அந்த முதலாவது சிகரம் உனது ஊழியத்தின் முதலாம் பாகமாயிருந்தது, பின்பு ஒரு சிறிய மலை, உனது முதலாம் இழுப்பு நல்ல உயரமாயிருந்தது” என்று கூறினார். கையில் தோன்றும் அந்த அடையாளம் உங்களுக்குத் தெரியும். அதன் பிறகு சற்று இடைவெளி உண்டாயிருந்தது. நான் அதிக களைப்புறாதபடி, இளைப்பாறின நேரமது, உங்களில் அநேகருக்கு ஞாபகமிருக்கும். அதன் பிறகு இரண்டாம் இழுப்பாகிய பகுத்தறிதல் வரம் வந்தது. இப்பொழுது எனக்கு மற்றொன்று உண்டாயிருந்தது, சில ஆண்டுகளாக இங்கே அந்த சிறிய சிகரங்கள் ஒப்புமையாய் இருக்கின்றன. பாருங்கள், எனது ஊழியம் முடிவு பெறவில்லையெனக் கருதி நான் திரும்பி பார்க்கிறேன். அதன் பிறகு மூன்றாம் இழுப்பானது வருகிறது. 154 பாருங்கள், மூன்று என்னும் எண் முடிவான எண்ணாக உள்ளது. அடுத்த சிகரம் கிருபையின் எண்ணாகக் கருதப்படுகிற ஐந்து ஆகும். அதன் பின்பு, உள்ள சிகரம் பூரணத்தின் எண்ணாக உள்ள ஏழு ஆகும், முடிவு. “ஆறு நாட்கள் நீ வேலை செய்து, ஏழாம் நாளாகிய” வாரத்தின் கடைசி நாளில் ஓய்ந்திருப்பாயாக; புரிகிறதா? அது காலத்தின் முடிவாயிருக்கிறது. புரிகிறதா?” நான் நின்று, பில்லியிடம் அவைகளைக் காண்பித்தேன், நானும் அவைகளை உற்று நோக்கினேன். 155 மேலும், அவர், “அது உன் மனதில் நிலைத்திருக்கட்டும். எப்பொழுதாவது உன் மனதில் சந்தேகம் உண்டானால் இந்த இடத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு, இங்கு திரும்பி வா” என்று கூறினார்.
96156 அப்பொழுது பில்லி என் தோளில் தட்டி, “தந்தையே, கிழக்கே பாருங்கள்” என்று கூறினான். அது எவ்வாறு சம்பவித்ததோ நான் அறியேன். சாலையின் கிழக்குப் பாகத்தில், அங்கே குப்பை, செத்தைகள் திடீரென எரிந்து கொண்டிருந்தன. எந்தவொரு நகரத்திற்கும், பல நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பால் உள்ள அந்த இடத்தில், அந்த குப்பை கூளங்கள், சாலையின் இடது பக்கம் எரிந்து கொண்டிருந்தன. 157 நான் ஊழியக் களத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன். ஆமென். வயோதிபமோ, வாலிபமோ எப்படியாயினும் ஜீவித்தாலும் அல்லது மரித்தாலும், மரணம் என்னை விடுவிக்குமளவும் நான் தேவனுக்குக் கீழப்படிவேன். நான் கர்த்தருடைய காரியங்களில் தவறி விட்டேன். மனப்பூர்வமாய் அல்ல. இவ்விஷயத்தை இங்கு கூற நான் கூறிவிடட்டும். பார்த்தீர்களா? இன்னும் கொஞ்சம் ஒலிநாடாவில் பதிவாகாமல் காலியாக உள்ளதா? நான் இதை இங்கே கூறிவிடட்டும். எந்தவித குறைவுமின்றி இயேசு கிறிஸ்து வெளிப்படும்படி நான் எப்பொழுதும் விரும்பியுள்ளேன். இந்த ஒலிநாடாவை கேட்கிற சகோதரர்களே, இந்த சபையின் அங்கத்தினரே, இன்றுவரை, இத்தனை ஆண்டு காலமாக, சொல்லப்பட்ட எந்தவொரு விஷயமும் அப்படியே நிறைவேறியிருக்கிறதேயல்லாமல், முன்னுரைத்த எதுவும் நிறைவேறாமற் போகவில்லை. ஆயிரக்கணக்கில் என்ன சம்பவிக்கும் என்பதைப் பற்றிய முன்னுரைத்தல்கள், மற்றும் இருதயத்தின் சிந்தைகளை பகுத்தறிந்து சொல்லுதல் ஆகியவைகள் பிரசங்க பீடத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளன, கூறினவாறே அவை நிறைவேறவில்லை என்று நிரூபிக்க முடியுமா என்று நான் சவால்விடுகிறேன். ஒவ்வொரு எழுத்தின் படியும் அவைகள் நிறைவேறின. சபையானது அதை விசுவாசிக்குமெனில், “ஆமென்” என்று சொல்வீர்களாக. [சபையார் “ஆமென்” எனக் கூறுகிறார்கள்—ஆசி.] இவ்வுலகத்தில் அவைகளை மறுத்துரைக்க ஒருவரும் இல்லை. ஆனால் இங்கே சபையும், இதற்கு பின் வரும் சபை மக்களும் தெரிந்து கொள்ளப்படட்டும். கிரியை செய்யும்படி ஒரு மனிதனை தேவன் உந்தித் தள்ளுகிறாரென்றால், அப்படியிருந்தும் அவனுக்கென்று தேவன் பேசும் வரை அவன் அசையாமல் இருப்பானென்றால் அக்காரியத்தில் விசுவாசம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. தேவன் தான் உன்னை ஒரு காரியத்திற்கு தள்ளிவிடுகிறார். ஒரு மனிதனும் ஊழியத்திற்கெதிராக ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாதபடி ஊழியமானது அவ்வளவு வளர்ந்துள்ளது. ஆனால் இது முதற்கொண்டு நீங்கள் செவி கொடுக்குமுன்னர், நான் முதலில் கர்த்தருடைய நாமத்தினால் உங்களோடு பேசட்டும். ஏனெனில், நான் விசுவாசத்தினால் புறப்பட்டு செல்ல வேண்டும். அது சரி அல்லது தவறு என்று எப்படி எண்ணியபோதிலும் நான் அதை விசுவாசத்தினால் செய்யவேண்டும். எது சரியென்று நான் எண்ணுகிறேனோ அதை என்னால் இயன்றவரை சிறப்பாக செய்ய முயல்வேன். இதுவரை அவர் என்னிடம் போய் செய்யும்படி சொல்லுகிறவரையிலும் நான் காத்திருந்து செய்தபடியால், அதில் தவறே இருக்கவில்லை. நான் அவருக்காக காத்திருந்தேன். எனவே அது நானல்ல. அவரே தான்!
97158 ஆனால், நீங்கள் பாருங்கள், மகத்தான பரிசுத்த பவுல் கூட ஒரு சமயத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தான். இவற்றை நிரூபிக்க அநேக சமயங்களில் தேவன் தனது ஊழியக்காரர்கள் தவறான காரியங்களைச் செய்ய அனுமதித்து விடுகிறார். மானிடர்கள் தவறுகள் செய்யக்கூடும் என்பதை நாம் அறிவோம். ஆனால் தேவனோ தவறு செய்யவே மாட்டார். ஆனால் இப்பொழுது நான் ஊழியக்களத்திற்கு பிரசங்கங்களுக்காக செல்வேனானால் இப்பொழுதுள்ள என் தீர்மானத்தின்படி நான் முன்னதாக கூட்டங்களை ஒழுங்கு செய்ய வேண்டியதாயிருக்கும். ஒருக்கால், நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற அந்த மகத்தான வேளை வருவதற்குரிய சமயம் இதுவாயிருக்கலாம். அப்படியானால் நிச்சயமாக இது தன்னில் தானே மகத்தானதாக, மகத்தான வெற்றியை தேவ அன்பில் கொண்டு வருவதாக இருக்கும். வினையுரிச் சொல்லுக்கு முன் உள்ள வினைச்சொல், அப்பொழுது அது தெய்வீக அன்பாகிய தேவனாகவேயிருக்கிறது. மக்களுக்காக இடைவெளியில் நிற்கும்படி முன்னால் ஓடி இடைவெளியில் நிற்பதற்கு தேவனுடைய அன்பே அவசியமாயுள்ளது.
98159 இந்த ரிக்கிகள் மற்றும் ரிக்கட்டாக்களான நவநாகரீக கிறிஸ்தவ பண்பற்ற அவர்களை ரிக்கி மற்றும் ரெக்கெட்டா என்றே நான் கொஞ்சம் இகழ்ச்சியாக குறிப்பிடுவதுண்டு. அவர்களில் அநேகர் இன்னும் தேவபிள்ளைகளாக இருப்பதால், நான் அவ்வாறு அவர்களைப் பற்றி குறிப்பிடக்கூடாது என்று தேவன் எனக்கு உணர்த்தினார். நான் ஒரு…அவர்கள் வேறுவிதமாக நடந்து கொள்ளுகிறபடியினால் அவர்களால் தங்களைச் சரிபண்ணிக் கொள்ள முடியவில்லை. இந்த பழைய, குளிர்ந்துபோன சடங்காச்சாரச் சபைகள் அப்படிப்பட்ட மக்களைக் கொண்டுள்ளன. அந்த ஆவி அவர்கள் மேல் இருக்கிறது. இஸ்ரவேலரை விடுவிக்கும்படி மோசே எகிப்துக்குச் சென்றபோது அவர்கள் எவ்வாறு எகிப்து என்னும் சிறையில் இருந்தனரோ, அதே நிலையில் இவர்களும் உள்ளனர். இயேசு கிறிஸ்துவை நேசிக்கிற மானிடர்கள், அவரை என்னவிதமாக சேவிக்க வேண்டுமென்று அறிந்திருந்தார்களேயானால், அவ்விதமாக அவரை சேவிப்பார்கள். ஸ்தாபனத்தின் கட்டுகளில் அவர்கள் சிக்குண்டு போயிருக்கிறார்கள். அந்த ஸ்தாபனங்கள் அவர்களிடம் “நீங்கள் இதைச் செய்யவில்லையா? என்றும், நீங்கள் அதைச் செய்யவில்லையா?” என்றும் கூறுகிறது.
99160 ஆனால், “வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அணிவகுத்து வர விரும்புவோர் அணிவகுத்து வருவீராக” என்ற தேவ அழைப்பு வந்தாக வேண்டும். நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லுகிற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். ஆமென். அவர்கள் அணி வகுத்து வரட்டும். இக்கடைசிக் காலத்தில் நாம் கிறிஸ்துவைச் சந்திப்பதற்கென பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எனவே ஒரு மனிதன் உத்தமமாயிருப்பினும், அவன் தவறு செய்யவும் கூடும் என்பதை உங்களுக்கு காண்பிக்கவே இதை உங்களுக்கு அறிவிக்க விரும்பினேன். 161 மோசே தன் ஜனங்கள் தனக்கு செவி கொடாமலிருந்ததால் அவர்களைப் பற்றிய உணர்வை இழந்தே போய்விட்டான். சகோதரன் ராய் அவர்களே! நீங்கள் அந்த சொப்பனத்தைக் கண்டீர்களல்லவா? தேவனே என்னிடத்தில் கூறினாலும் பரவாயில்லை, நான் என் இருதயத்தில் அந்த விதமான ஊழியத்தைப் பற்றி வித்தியாசமாக உணாராதவரை என்னால் அவ்விதமானதொரு ஊழியத்தை செய்ய முடியாது. ஆனால் அந்த மாற்றம் வருகிறதைப் பற்றிதான் சகோதரன் ராய் கண்டார். ஏதோ ஒன்று என்னை மாற்ற வேண்டும், ஏனென்றால் நான், என் இருதயத்தில், இப்பொழுது என் உள்ளத்தில் இருக்கிற அதே உணர்வோடு நான் சென்றால், அதாவது நான், இன்னமும் அவர்கள் அந்த செய்திக்கு செவி கொடுத்திருக்கத்தான் வேண்டும். அவர்கள் இதைச் செய்திருக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேனல்லவா, அப்படியானால் அந்த மக்களுக்காக எனக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் என்னிடம் இல்லை என்று அர்த்தமாகிறது. அந்த விதமான உணர்ச்சி எனக்கு இல்லாதவரை நான் போவதில் அர்த்தமில்லை. ஏனெனில், அப்படி நான் போவேனாகில் நான் ஒரு மாய்மாலக்காரனாக இருப்பேன்.
100162 இத்தனை ஆண்டுக்காலமும், நான் அவரை உண்மையான இருதயத்தோடு சேவிக்க முயற்சித்துள்ளேன். நான் மாய்மாலக்காரனாக அங்கு போக மாட்டேன். அவர்கள் நவீன நாகரீக பாங்குடைய ரிக்கி, ரிக்கெட்டா இல்லை என்று நான் உணர வேண்டும். இவர்கள் அந்தவிதமான கூட்டத்தார். அல்ல. அவர்களும் தேவனுடைய பிள்ளைகள் என்றும், அவர்கள் அடிமைத்தனத்தில் இருப்பதால் தான் அப்படியிருக்கிறார்கள்; நான் அவர்களிடம் அவர்களை விடுவிக்கப்போக வேண்டும் என்றதான உணர்வு முதலில் எனக்கு வர வேண்டும். அவ்விதமான உணர்வு எனக்கு வராதவரை, வெறுமனே நான் திரிந்து கொண்டிருக்கத்தான் வேண்டும். சில தொடர் கூட்டங்களில் பிரசங்கித்து விட்டு அதற்காக காத்திருக்க வேண்டும்.
101163 என்னிடம் ஒரு சிறிய பாடல் உள்ளது. அதை என்னால் பாட முடியாது. அதை நான் உங்களிட வெறுமனே மேற்கோள் காட்ட விரும்புகிறேன். நான் ஒருவிதமாக வரைந்து வைத்துள்ளேன். நான் அதை இன்னும் சரியாக முழுமையாக எழுதிவைக்கவில்லை. நான் அதை சரியாக எழுதவில்லை. அதை நான் படிக்கக்கூட முடியுமா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அது குடியரசின் யுத்தப்பாடல் இராகத்தில் அமைந்துள்ளது. “மகிமை, மகிமை அல்லேலூயா!” நீங்கள் அதைக் கேட்டிருந்தீர்கள். மகிமை, மகிமை, அல்லேலூயா!” எத்தனை பேருக்கு அது தெரியும்? உண்மையாகவே, நாம் எல்லோருமே அதைக் கேட்டிருக்கிறோம். தேசாந்திரியானதோர் பிரசங்கி தன் தோளில் துப்பாக்கியோடும், தன் கையில் வேதாகமத்தோடும் தேசந்தோறும் குதிரைமேல் சுற்றித்திரிந்து பரந்த புல்வெளியில் வாழும் மக்களிடம் ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குத்தத்த தேசம் பற்றி பிரசங்கித்தார், எங்கும் பாடிக்கொண்டே சென்றார். சார்ந்து இருப்பேன், சார்ந்து இருப்பேன், நித்திய புயத்தில் சார்ந்திருப்பேன்; சார்ந்து இருப்பேன், சார்ந்து இருப்பேன், நித்திய புயத்தில் சார்ந்து இருப்பேன். அக்கினி மற்றும் கந்தக நியாயத்தீர்ப்பையும், நீதியுள்ளவர்க்கு மகிமை, நித்திய பரலோகம் எனவும் அவர் பிரசங்கித்தார், மலைகள் தோறும் நீங்கள் அவர் இக்கீதம் பாடுவதை கேட்கும்படி குதிரை மேல் சென்றார். வல்லமையுண்டு, வல்லமையுண்டு, அற்புதமாய் கிரியை செய்யும் வல்லமை, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால், வல்லமை உண்டு, வல்லமை உண்டு, ஓ, அற்புதமாய் கிரியை செய்யும் வல்லமை, ஆட்டுக்குட்டியின் விலையேறபெற்ற இரத்தத்தினால்.
102164 முதிர்வயதான தேசாந்திரியான பிரசங்கி. நீங்கள் அவரை நினைவில் கொண்டுள்ளீர்களா? பார்த்தீர்களா? சுவரில் தொங்கும் அவர் துப்பாக்கியோ பழமையும், துருவேறியதுமாம், அவரது வேதப்புத்தகம் கிழிந்தும், தூசிப்படிந்தும், அதை நாம் தொடுவதோ அபூர்வம்; (அது சரிதான்) ஆனால் அதன் செய்தியோ அந்நாளில் நம்மைச் சந்திக்குமாம், தேவனுடைய சத்தியம் இன்னமும் பவனி வந்து கொண்டிருக்கிறது. யாவரும் பாடுவோம்: மகிமை, மகிமை, அல்லேலூயா! மகிமை, மகிமை, அல்லேலூயா! மகிமை, மகிமை, அல்லேலூயா! அவருடைய சத்தியம் பவனி சென்று கொண்டிருக்கிறது.
103165 இப்பாடலை நான் கற்றுக் கொள்ளப் போகிறேன். நான் இக்காலையில் நின்று இப்பாடலை நான் எழுதிக் கொண்டிருக்கையில், சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் எனது பழைய துப்பக்கியின் மேல் என் கையை வைத்தேன். அப்பொழுது நான், “நான் நீண்ட காலம் இருக்கமாட்டேன்” என்று எண்ணினேன். அவருடைய துப்பாக்கியோ பழமையும் துருவேறியதுமாய், சுவரில் தொங்கிக்கொண்டிருக்கிறது, (அது உண்மை.) வேதப்புத்தகமோ கிழிந்து, தூசிபடிந்து, அதைத் தொடுவதோ அபூர்வமாயுள்ளது. ஆனால் வேதத்திலிருந்து வந்த அவரது செய்தி ஓர்நாள் நியாயத்தீர்ப்பில் வரும்; அவருடைய சத்தியம் தொடர்ந்து பவனி வந்துகொண்டிருக்கிறது. 166 தேவனுடைய சத்தியம் இவ்வேதாகமமே! ஆம். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் மாறாதவராயிருக்கிறார்.
104167 இந்த வயதான, தேசந்தோறும் சுற்றிப் போய் பிரசங்கிக்கும் பிரசங்கியானவர் தனது தோளில் தன்னுடைய துப்பாக்கியோடும், தன்னுடைய கையில் தன்னுடைய வேதாகமத்தோடும் புல்வெளிப் பிரதேசங்களை கடந்து சென்று, மலைகள் மேல் ஏறிக் கடந்து, பள்ளங்களிலும், எங்கிலும் சென்று வரப்போகும் ஆயிர வருட அரசாட்சியைப் பற்றியும், அநியாயக்காரருக்கு உக்கிரமான நியாயத்தீர்ப்பை பற்றியும் நீதியுள்ளோருக்கான தேவனுடைய இராஜ்ஜியத்தைப் பற்றியும் பிரசங்கித்து வந்தார். அது உண்மையானது தான். அந்தப் பழைய வின்செஸ்டர் துப்பாக்கி துருவேறிப் போய்விட்டது. வேதாகமத்திற்குப் பதிலாக பாலுணர்வைத் தூண்டும் புத்தகம் அவர்களிடம் இருக்கிறது. ஆனால் தேவனுடைய சத்தியமானது தொடர்ந்து பவனி வந்துகொண்டிருக்கிறது. அவர் எவ்வளவு உண்மையுள்ளவராயிருந்தாரோ, அதே போல் தாம் இப்பொழுதும் இன்றும் உண்மையுள்ளவராயிருப்பதை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். தேவனுடைய சத்தியம் தொடர்ந்து பவனி வந்து கொண்டிருக்கிறது! மகிமை, மகிமை, அல்லேலூயா! மகிமை, மகிமை, அல்லேலூயா! மகிமை, மகிமை, அல்லேலூயா! அவருடைய சத்தியம் பவனி வந்துகொண்டிருக்கிறது.
105168 ஏன்? யாராவது அதை ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நாம் அதை மீண்டும் பாடுவோம். நாம் இங்கே மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், லூத்தரன்கள் என்று இவ்வாறாக பல சபைகளின் மக்களாக இங்கு கலந்து போய் விட்டோம். நாம் அந்த கடைசிப் பல்லவியைப் பாடும்போது உங்களை சுற்றிலும் இருப்பவர்களோடு, நாம் கரங்குலுக்கிக்கொள்வோமாக. பின்பு இங்கிருந்து நாம் கலைந்து செல்வோம். 169 இப்பொழுது நினைவிருக்கட்டும், உங்களுடைய சொந்த சபைகளுக்குப் போக வேண்டியவர்கள். இன்றிரவு அவ்வாறு போய் விடுங்கள். எனக்காக உங்களது போதகரை வாழ்த்துங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். பிறகு மீண்டும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு விஷயத்தைக் கூறுகிறேன். உங்களில் யாருக்காவது போவதற்காகென்று சபை ஏதும் இல்லையென்றால்… [சகோதரன் பிரான்ஹாம் சகோதரன் நெவிவிடம் பேசுகிறார்—ஆசி.] உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால், இன்றிரவு சகோதரர் நெவில் அவர்களுடைய செய்திக்குப் பிறகு அவருடைய வருகையின் பிரகாசிக்கும் சிவப்பு விளக்கு என்ற செய்தியை நான் அளிக்கையில் அதை பதிவு செய்யவும் விரும்புகிறேன். பாருங்கள். கர்த்தர் இப்பொழுது உங்களை ஆசீர்வதிப்பாராக அடுத்த ஞாயிற்றுக் கிழமை கர்த்தருக்குச் சித்தமானால், இன்னொரு செய்தியை பதிவு செய்யும்படி நான் மீண்டும் இங்கு வருவேன், ஏனெனில் அதற்கடுத்த வாரத்தில் நான் அர்கான்ஸாவில் இருந்தாக வேண்டும்.
106170 சரி, இப்பொழுது நாம் மீண்டும் பாடும்படி, இப்பொழுதே கரங்குலுக்கிக் கொள்வோம். மகிமை, மகிமை, அல்லேலூயா! மகிமை, மகிமை, அல்லேலூயா! கர்த்தராகிய இயேசுவே, இந்த உருமால்களை …?… இயேசு கிறிஸ்துவின் …?… ஆசீர்வதியும்… …வந்து கொண்டிருக்கிறது. தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! நாம் இப்பொழுது சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
107171 சகோதரர் ரடல் அவர்களே! நீங்கள் சரியான நேரத்தில் வந்திருக்கிறீர்கள். ஒரு நிமிடம் இங்கே வந்து, ஜெபியுங்கள். சகோதரன் ரடல் அவர்கள் நம்மோடு ஒத்துழைப்பவர்களில் ஒருவர். நம்மிடையே உள்ள ஸ்தாபனமல்லாத சிறிய சபைகளின் ஒத்துழைப்பு அல்லது ஐக்கியத்தில் உள்ள ஒருவர் அவர். சுவிசேஷத்திற்காக சகோதரன் ரடல் அவர்கள் மிகவும் தீரமானதொரு நிலையை எடுத்துள்ளார் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். நான்—நான் இதைக் கூறுகிறேன், சகோதரன் ரடல் அவர்களே! கடந்து செல்லும் பாதை நெடுகிலும்…தேவன் சௌகரியமான பூப்படுக்கையை வாக்குத்தத்தம் செய்யவில்லை. ஆனால் ஒரு யுத்த போராட்டத்தையே வாக்குரைத்திருக்கிறார். ஆம், ஆனால் அவர் வெற்றியையும் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அது தான் காரியமாய் உள்ளது. 172 நான் இந்த நிலையை முதலில் எடுத்தபொழுது, எனது தாயும் தந்தையுமே என்னை வீட்டை விட்டு வெளியேற்ற எண்ணினார்கள் என்ற காரியத்தை நான் நினைவு கூறுகிறேன். பார்த்தீர்களா? ஆனால், ஓ, என்னே, நான் எவ்வாறு அவர்களுக்கும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தேன்! இன்று எனக்கு நம்பிக்கை இருப்பதின் காரணமே நான் எடுத்துள்ள இந்த நிலைதான். வயது சென்ற அந்த தேசாந்திரியான பிரசங்கியின் காலம் முதல் இது வரையிலும் உள்ள வேதத்தின் செய்திக்காக நான் சந்தோஷப்படுகிறேன். மக்கள் அச்செய்தியை எடுத்து அதை திருத்தம் செய்து, அதை ஸ்தாபனமாக்கி, சடங்காச்சாரங்களை அதில் உட்புகுத்தின போதிலும், சத்தியமானது தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது. அது உண்மையே. அது தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது.
108173 தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! வெகுவிரைவில் உங்கள் யாவரையும் மீண்டும் காண்போம் என நாங்கள் நம்புகிறோம். அது வரையிலும் ஒலிநாடாக்களிலும், இங்கு நேரிலும், செய்தியைக் கேட்கும் சகோதரர்களாகிய நீங்கள் எனக்கு இப்பொழுது ஒரு தயவு செய்வீர்களா? நான் எனக்குள் ஏற்பட்ட அந்த விதமான மனோபாவத்தினால் (complex) இழந்துபோனதை, தேவன் என் இருதயத்திற்குள் தரும்படி ஜெபியுங்கள். ஒரு மனோபாவத்தை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் சுலபம் தான். இங்கு அமர்ந்திருக்கிற சகோதரன் வே அவர்களுடன் அன்றொரு நாள் ஒரு பேட்டி ஏற்பாடாயிருந்தது. இங்கு முன்னால் நிற்கிறார். ஒரு நல்ல மனிதன், ஆனால் அவரைச் சுற்றிலும் அவர் மனோபாவத்தை, மற்றொருவிதமான ஒரு மனப்பான்மையை உண்டாக்கிக் கொண்டார். அதே காரியத்தைச் செய்தார். சகோதரன் வே அவர்களே! அவ்வித மனோபாவத்தைப் பெறுவது சுலபம் தான். உங்கள் மனதில் ஏதாவதொரு காரியத்தை வைத்துக் கொண்டு, அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கலாம். அது சரியா இல்லையா என்பதை திரும்பிப் போய் வேதத்தோடு சரிபார்த்துக் கொண்டு அதிலிருந்து முன்னேறிச் செல்லுங்கள். ஆம். மக்களைப் பற்றிய உணர்வை நீங்கள் இழந்து போகாதீர்கள். புரிகிறதா? மக்கள் மரத்தூளிலிருந்து உண்டானவர்கள் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் ஆத்துமாவும், மாம்சமும், இரத்தமும் கொண்ட மானிடர் ஆவார்கள். நீங்கள் யாவரும் உங்களுக்கு விருப்பமானால், எனக்காக ஜெபியுங்கள். தேவன் இப்பொழுது உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் நம்முடைய தலைகளை வணங்கி சகோதரன் ரடல் அவர்களை கேட்டுக் கொள்ளப் போகிறோம், அவர்…
109174 மன்னித்துக் கொள்வீர்களா? [சகோதரன் பார்நெல், “சகோதரன் பிரான்ஹாம், நான் ஒரு காரியத்தை கூற வேண்டியிருப்பதால், நான் அரைவிநாடி எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறுகிறார்—ஆசி.] சரி, சகோதரனே, [சகோதரன் பார்நெல் தான் கண்டிருந்த ஒரு சொப்பனத்தைப் பற்றி சொல்லுகிறார்.] தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! இது ஒரு ஊழியக்காரர். அவரை சிலர் அறியாமலிருக்கலாம். அவர் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர், எனக்கு இந்தக் காலையில் நேரம் இருக்கவில்லை, அதாவது வேறு வழியில் நான் செல்வதைப் பற்றிக் குறிப்பிடுகிறதான அந்த சொப்பனங்களைக் கண்டவர்களில் அவரும் ஒருவர், கடைசி முறையாக மேற்கு நோக்கி செல்வதைப் பற்றி காரியம். சகோதரன் ஜே.டி.பார்னல்.
110175 இப்பொழுது, இங்கே சொப்பனங்காணுகிறவர்களைப் பற்றியும் சொப்பனங்களைப் பற்றியும் ஆச்சரியப்படக்கூடிய சில புதியவர்கள் இருக்கக்கூடும். இல்லை. நாம் எல்லாவிதமான சொப்பனங்களையும் பின்பற்றிக் கொண்டு போகக்கூடியவர்களல்ல. ஆனால் நாம், “என் ஆவியை கடைசி நாட்களில் ஜனங்கள் மேல் ஊற்றுவேன்; அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்! தரிசனங்களைக் காண்பார்கள், சொப்பனங்களைக் காண்பார்கள்” என்று வேதம் கூறுவதை விசுவாசிக்கிறோம். அவைகள் வேதத்தின்படி இருக்கிறவரையிலும், அதை விசுவாசித்து, அதைப்பற்றி பிரசங்கிக்க வேண்டியது எனது கடமையாகும். ஜனங்கள் சொப்பனங்களைக் கண்டு சொல்லும் போது, கர்த்தர் அதற்குரிய அர்த்தத்தை சொல்லாவிடில் அதை நாம் விட்டு விடுகிறோம். அது ஏதோ ஒன்றாக இருக்குமானால்…யாராவது ஒருவர் அந்நிய பாஷைகளில் பேசினால், அது சபைக்கு உரியதாக இருக்க வேண்டும். அது நிறைவேற வேண்டியதாகவும் இருக்கிறது. அது அவ்வாறு நிறைவேறாவிடில், அது ஒரு அசுத்த ஆவியினால் உண்டானதாயிருக்கும். அது நிறைவேற வேண்டிய ஒன்றாகும்; ஏனெனில், அன்னியபாஷைகளின் வியாக்கியானம் தீர்க்கதரிசனமாயிருக்கிறது. அது சரி என்பதை நாம் அறிவோம். எனவே வேதம் போதிக்கிறபடி இங்கு ஜீவிக்க நாம் முயலுகிறோம். அதிலிருந்து ஒன்றையும் நீங்கள் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம். அதில் எழுதியிருக்கிற விதமாகவே ஜீவியுங்கள். கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. சகோதரன் ஜே.டி.! நான் புறப்பட்டுச் சென்று பாவத்தோடு ஒத்துப்போக தேவன் எனக்குக் கூறவில்லை. ஆனால் புறப்பட்டுபோய் வேதம் கூறுகிறபடியே செய்து கொண்டேயிருக்க சொன்னார் என்று விசுவாசிப்பதற்கு அது எனக்கு உதவியாயிருக்கிறது. புரிகிறதா?
111176 இப்பொழுது நாம் ஜெபம் செய்வோமாக…சகோதரனே… [சபையில் ஒரு சகோதரி சப்தமிட்டு அழுகிறார்.—ஆசி.] …யாரோ மயக்கமடைந்து விட்டார்கள். ஒரு நிமிஷம், யாவரும் அமைதியாக அமருங்கள். பாருங்கள்? [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்திலிருந்து கீழே சபையோரிடம் செல்லுகிறார்.] 177 பரலோகப் பிதாவே, சகோதரன் வே அவர்களோடு உம்முடைய இரக்கமும், நன்மையும் இருப்பதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர் திரும்ப வருவாராக. கர்த்தாவே, அவரைத் திரும்பத் தாரும், அவருக்கு பெலனையும் ஆரோக்கியத்தையும் தாரும். எனக்கு உதவி செய்யும், அவருடைய இருதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்துவிட்டதே! எல்லோரும் அமைதியாய் இருந்து அப்படியே ஜெபியுங்கள். கர்த்தராகிய இயேசுவே உம்முடைய நன்மையும் இரக்கமும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சகோதரன் வே அவர்களோடு இருப்பதாக. 178 அது முற்றுபெற்று விட்டது. நான் நிற்கிற இந்த பீடத்திலிருந்து இங்கே அடக்க ஆராதனைப் பிரசங்கங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானவருக்காக நான் நிற்கிற இடத்திலிருந்து, கிறிஸ்துவிடம் ஜெபிக்கப்பட்டிருக்கிறது. நான் அவரிடம் போய் பார்த்தபோது, அவருடைய கண்கள் அசையாமல் நின்றுவிட்டன. அவருடைய நாடித்துடிப்பு நின்று போயிருந்தது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் கூப்பிட்ட மாத்திரத்திலேயே மீண்டும் அவருடைய நாடித்துடிப்பு வர ஆரம்பித்து விட்டது …?… சிலுவையின் ஊழியக்காரன் என்ற முறையில் இதை நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கூறுகிறேன். அவர் அற்புதமானவரல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஒரு மாரடைப்பு. பார்த்தீர்களா? நாம் போய் விட்ட பிறகு இது நிகழாமல், நாம் இப்பொழுது இங்கு இருக்கும்போதே அது நடந்துவிட்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். தேவனுடைய கிருபையைப் பார்த்தீர்களா? கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக! நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
112179 பரலோகப் பிதாவே, உம்முடைய தயவுக்காகவும், இரக்கத்திற்காகவும் இப்பொழுது உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். நீர் எப்பொழுதும் எங்கள் மத்தியிலிருக்கிறீர். எனது விளக்கில் எண்ணெயைத் தாரும், ஆண்டவரே! நான் கர்த்தருடைய கோலை வியாதிப்பட்டவர்களுக்கும், துன்பப்பட்டவருக்கும் நேராக நீட்டும்படிக்கு அதை எனக்குத் தாரும். தேவையுள்ளவர்களுக்கு விடுதலையைக் கொண்டு வரவும், புறக்கணிக்கிறவர்களுக்கு நியாயந்தீர்ப்பைக் கொண்டு வரவும் தக்கதாக நான் அதை அவர்கள் மேல்…கொண்டு வருவேனாக…பிதாவே அதை அளித்தருளும். உம்முடைய எல்லா தயவுக்காகவும், நாங்கள் உமக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நன்றி செலுத்துகிறோம். ஆமென். சகோதரர் ரடல், தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக சகோதரனே.