1 சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை தாழ்த்துகையில் நாம் ஒரு கணம் நின்றவண்ணமாயிருப்போம்.
22 கிருபையுள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் இந்தக் காலையில் ஒன்றாகக் கூடி உம்முடைய வார்த்தையை போதித்து, அதினால் நாங்கள் இன்றைய நாளில் நாங்கள் எவ்வாறு ஜீவிக்க வேண்டுமென்றும், நாங்கள் ஜீவித்துக்கொண்டிருக்கின்ற நாளின் சமயம் என்னவென்பதையும் அறிந்துகொள்வதற்காகவே, இன்று காலை எங்களுக்குத் தோன்றின விதமாகவே, இன்றைக்கு பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலுக்காகவும், இரக்கத்திற்காகவும் மறுபடியுமாக உம்மை அணுகிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று அவசியமாயிருக்கின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் எங்களை நடத்தி; எங்களுடைய வாய்களையும், எங்களுடைய இருதயங்களையும், கூட, நீர் விரிவாய்த் திறந்து, நீர் எங்களிடத்தில் பேசவிருப்பதை ஏற்றுக்கொண்டு, அதே சமயத்தில், சரியில்லாத காரியங்களுக்கு எங்கள் வாய்களை மூடி, தேவனுடைய வார்த்தையை நீர் ஒருவர் மாத்திரமே வெளிப்படுத்த முடியும் என்று அறிந்தவர்களாய், எங்கள் சிந்தனைகளுக்கும், எங்கள் இருதயங்களுக்கும் உம்முடைய பரிசுத்த வழிநடத்துதலை நாங்கள் கேட்க விரும்புகிறோம். 3 இச்சிறு சபையை விட்டுப் பிரிந்து, உலகின் மற்ற பாகங்களுக்கு நான் செல்ல வேண்டியவனாயிருக்கிறேன், கர்த்தாவே, நான் இவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். அதாவது, அவர்கள் இருதயமாய், என் இருதயத்திற்கு இனியவர்களாய் இருக்கிறார்கள் என்று கூறவேண்டும். அவர்கள்—சத்திய வசனத்தினால், உம்முடைய ஆவியினால் உமக்கென்று பிறப்பிக்கப்பட்டவர்கள். கர்த்தாவே, நீர் இவர்களை ஆசீர்வதித்து, கிறிஸ்துவின் அன்பு என்னும் கட்டுகளினால் இவர்களை ஒன்றாக பிணைக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்.
34 எங்களுடைய அன்புள்ள அருமையான போதகரை, மேய்ப்பனை ஆசீர்வதியும். உம்முடைய வார்த்தையின், பரிசுத்த ஆவியினால் நீர் அவரை அபிஷேகித்து, அவர்களுக்கு வெளிப்படுத்தி மந்தையை போஷிக்கச் செய்ய வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். 5 ஒருமுறை, சில நாட்களுக்கு முன்பு, இங்கே இச்சிறிய கூடாரத்தில், ஆகாரத்தைச் சேகரித்து வைக்க வேண்டும் என்றும், இவை அனைத்தும் தேவைப்படும் ஒரு நேரம் வருமென்ற தரிசனத்தையும் நீர் காண்பித்தீர். சகோதரன் சாத்மனும், சகோதரன் உட்டும், வேறொரு தேசத்திற்கு கடந்து செல்ல ஆயத்தமாயிருந்ததை நாங்கள் கண்டபோது… ஆனால் நீரோ, “அந்த நேரத்திற்காக இந்த ஆகாரத்தை இங்கே சேமித்து வை” என்று கூறினீர். கர்த்தாவே, பயபக்தியுடன் நான் அதைச் செய்ய முயன்றுள்ளேன். 6 இப்பொழுது, இந்தக் காலை இவர்களுக்கு நான் கற்பிக்க எத்தனித்துள்ள இந்த பாடத்தில், கர்த்தாவே, நீரே தேவனென்றும், இது உம்முடைய வார்த்தையென்றும், உம்முடைய சத்தியமென்றும் காண்பிக்கும்படியாக, நீர் அதைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றும் நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, ஜனங்கள் இதைப் புசித்து, தேவகிருபையினால் கொழுத்தவர்களாகி, இது இந்நாளில் நமக்களிக்கப்பட்டுள்ள தேவனுடைய மகத்தான கிருபை என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக, இதை அருளும். பிதாவே, இங்குள்ள யாவரையும், வர விருப்பங்கொண்டுள்ளவர்களையும் ஆசீர்வதியும். உமக்கே மகிமையை எடுத்துக்கொள்ளும், நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். இப்பொழுது கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.
47 நாம் தொடங்குவதற்கு முன்பு, காலின்ஸ் குடும்பத்தைச் ஒரு சிறு குழந்தை இங்கே நம்மிடத்தில் உண்டு என்று, நான் நினைக்கிறேன். நான் அதன் தகப்பனாரை சற்று முன்னர் சந்தித்தேன், அவர் பிரதிஷ்டை செய்ய விரும்புகிற ஒரு சிறு குழந்தையை வைத்திருப்பதாக கூறினார். இப்பொழுது நாம் அதைச் செய்ய விரும்புகிறோம், சகோதரன் அல்லது சகோதரி காலீன்ஸ், யாராகிலும் ஒருவர், இந்த சிறு குழந்தைக்கான பிரதிஷ்டை ஆராதனையை நாங்கள் செய்யும்படியாக அந்த சிறு குழந்தையை முன்னால் கொண்டு வாருங்கள்.
58 இவர்கள் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் விசுவாசமுள்ள அங்கத்தினர்கள்களாய் இருப்பதால்…விட்டுச் செல்ல முடியாது என்பதை, நீங்கள் அறிவீர்கள், ஏன், அது அவ்வாறாகிறது. நீங்கள் கவனியுங்கள், நான், “கூடாரத்தின் அங்கத்தினர்கள்,” என ஒருபோதும் கூறவேயில்லை. “கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்கள்,” என்றே கூறினேன், அந்த…இங்குள்ள இந்த சரீரம், அவருடைய சரீரத்தின் ஒரு பாகமாகும். 9 அவர்கள் இங்கே பிரதிஷ்டை செய்ய விரும்புகிற ஒரு குட்டி நபரை கொண்டு வந்துள்ளனர். மேலும்—மேலும் என்னுடைய—என்னுடைய மனைவி பொறாமை கொள்ளும் ஒரு பணியாகவே, குழந்தைகளை தூக்கிக்கொள்வது, இது எப்பொழுதுமே இருந்து வருகின்றது என்று நான் நினைக்கிறேன். ஹு-ஹூ. சகோதரன் நெவில், நீங்கள் விரும்பினால், நீங்கள் முன்னே வந்தால் நலமாயிருக்கும்.
610 உம்முடைய முதற் பெயர் என்ன, சகோதரனே? [தகப்பனார், “கிளைட்” என்கிறார்.—ஆசி.] இங்கேயுள்ள நம்முடைய விலையேறப்பெற்ற சகோதரன், சங்கை காலின்ஸ், வில்லார்ட், அவர்களுடைய சகோதரன், இவர்தான் சகோதரன் மற்றும் சகோதரி கிளைட் காலின்ஸ். ஒரு மிக அழகான சிறிய பையனாக, நான் இவனைக் காண்கிறேன், இங்கே காலின்ஸ் குடும்பத்தினரின் எண்ணிக்கை அவர்களுக்கு அதிகரித்துள்ளது. 11 சகோதரி காலின்ஸ், இவனுக்கு வயதென்ன? [தாயார், “ஏறக்குறைய நான்கு மாதங்கள்” என்கிறார்.—ஆசி.] ஏறக்குறைய நான்கு மாதங்கள். இவனுடைய பெயர் என்ன? [“மாற்கு டேவிட்.”] மாற்கு டேவிட். இது மிக அருமையான ஒரு பெயராயுள்ளது. இவன் மிக அருமையான ஒரு பையனாக காணப்படுகிறான். இவன் ஒரு விதமான ஒரு பெரிய பையனாயும், கூட இருக்கிறான் என்றும், கூறலாம். 12 இப்பொழுது இங்கே இந்த குட்டி நபரை தாய்மார்கள் பாராட்டுவார்கள் என்பது எனக்குத் தெரியும். இது ஒரு பொம்மை போன்றுள்ளதல்லவா? சரி, நாம் இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்குவோம்.
713 பரலோகப் பிதாவே, இந்த வாலிப தந்தையும் தாயும் அவர்களுடைய ஐக்கியத்திற்கு அளிக்கப்பட்ட, இந்த சிறிய, விலையேறப்பெற்ற மானிட மாம்சத்தை தேவனாகிய கர்த்தருக்கென்று வைத்து கொள்வதற்காக தங்களுடைய கரங்களில் வைத்துள்ளனர். அவர்கள் இந்த குட்டி மாற்கு டேவிட்டை இங்கே, இந்த விலையேறப்பெற்ற குட்டி பையனை, நல்ல ஆரோக்கியமான, ஒரு அருமையான பையனை அளித்திருக்கிற சர்வ வல்லவரிடம் பிரதிஷ்டைக்காக, அவர்களுடைய பாதுகாப்பிற்கென்று, தேவனுடைய மகிமைக்காக வளர்க்கும்படியாக பயபக்தியுடன் கொண்டு வருக்கின்றனர். 14 கர்த்தாவே, தகப்பனையும் தாயையும் ஆசீர்வதியும். இவர்கள் வீட்டிலே, பீப்பாய் ஒருபோதும் வெறுமையாக இல்லாதிருப்பதாக, அல்லது கலசம் ஒருபோதும் வறண்டு போகாதிருப்பதாக. இந்த குட்டி நபருக்கான உணவினை அளிக்கும்படிக்கு பணிபுரிய, கர்த்தாவே, தகப்பன் ஆரோக்கியமுள்ளுவராகவும் திறமையுள்ளவராகவும் இருப்பாராக; தாயார் அதை ஆயத்தம் செய்வதற்கு ஆரோக்கியமாக இருப்பாராக; தேவனுடைய போதனையில் அவனை வளர்க்கும்படி, இந்த குட்டி நபருக்கு போதிக்க, கர்த்தாவே, அவர்களுடைய இருதயங்கள் ஆயத்தப்படுவதாக. கர்த்தாவே இதை அருளும்.
815 இப்பொழுது இந்த அருமையான குழந்தை, குட்டி மாற்கு டேவிட், இவர்களுடைய கரங்களிலிருந்து என்னுடையதற்கு வருகிறது. இங்கே இந்த சபையின் மூப்பருடன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஒரு ஊழிய ஜீவியத்திற்கென்று இவனை நான் அளிக்கின்றேன். கர்த்தாவே, இதை அருளும். அவனுடைய ஜீவியத்திலிருந்து மகிமையை எடுத்துக்கொள்ளும். உமக்கு பிரியமாயிருந்தால், கர்த்தராகிய இயேசுவின் வருகை மட்டும், இவன் நீண்டகாலம் ஜீவிப்பானாக. அப்படியானால், வரவிருக்கின்ற காலத்தில், தேவனாகிய கர்த்தரின் செய்தியை இவன் தாமே கொண்டு செல்வானாக. இதை அருளும். இவனை சுகத்தோடும், சந்தோஷத்தோடும் வைத்திரும், இவனுடைய இருதயமானது, தேவனுக்கு முன்பாக, சரியான காரியங்களை எப்பொழுதுமே செய்யத்தக்கதாக அமைந்திருக்கட்டும். நாங்கள் இந்தக் குழந்தையை உம்மிடத்தில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அளிக்கிறோம். ஆமென். 16 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரி காலின்ஸ், இந்த அருமையான பையன், மற்றும் சகோதரன் காலின்ஸ், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களோடிருப்பாராக. நாம் எல்லாருமாக சேர்ந்து, அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் எனப் பாடுவோமாக: அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், உள்ளே கொண்டு வாருங்கள், பாவத்தின் களங்களிலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்; அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், உள்ளே கொண்டு வாருங்கள், சிறு பிள்ளைகளை இயேசுவண்டைக் கொண்டு வாருங்கள். 17 எனக்கு அது பிடிக்கும். பாருங்கள், பிசாசுக்கு ஒரு தருணம் கிடைக்கும் முன்பே அவர்களை கிறிஸ்துவினிடம் கொண்டு வாருங்கள். ஒரு ஊழியத்தின் ஜீவியத்திற்காக இவர்கள் ஏற்கெனவே அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளனர்.
918 டௌ குடும்பத்திலிருந்து, அவர்களில் யாராகிலும் வந்துள்ளனரா, அல்லது இல்லையா என்று யாருக்காவது தெரியுமா, சகோதரி டௌ? சகோதரன் ப்ரௌன், நீர் இங்கு இருக்கிறீரா, சகோதரன் ப்ரௌன்? ஆம், நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும்…சகோதரன் டெள இன்னும் நம்முடன் இருக்கிறாரா? அற்புதம்! [சகோதரன் டாம் பிரௌன் சகோதரன் வில்லியம் டௌவின் நிலையைக் குறித்து கூறுகிறார்—ஆசி.] சகோதரன் டெள நம்மை விட்டு ஏறக்குறைய பிரிந்து சென்றுவிட்டார். பாருங்கள், நாம் இன்னும் அதிகம் கூற முடியாது அல்லது நாம் இன்னும் அதிகம் கேட்க முடியாது, தேவன் அவரிடம் வாழச் சொல்லியிருந்த காலத்தை விட அவர் ஏற்கெனவே இருபத்தொரு ஆண்டுகள் அதிகமாக வாழ்ந்துவிட்டார். அது ஒரு சாதாரண ஜீவிய காலம், அவர் ஜீவிக்க முடியும் என்று தேவன் அவரிடம் கூறியிருந்த காலமும் கடந்துவிட்டது.
1019 அன்றொரு நாள் காலை, அவர்—அவர் மரித்துக்கொண்டிருந்ததாக எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, நாங்கள் அங்கு விரைந்தோம். தேவனாகிய கர்த்தர் அவருக்கு நல்லவராயிருந்து, அவரை காப்பாற்றியிருக்கிறார். சரியாக, கர்த்தருடைய வருகைக்காக அவர்—அவர் ஆயத்தமாக காத்துக்கொண்டிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். ஆனால், உங்களுக்குத் தெரியும், நாமனைவரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம். நாம் சற்று…இந்த வயோதிபர் எனக்கு இங்கு ஒரு—ஒரு தகப்பனைப் போன்றவர். 20 அவர் இங்கே பழைய கூடாரத்தில் அந்த பழைய பகுதியில் அமர்ந்துகொண்டிருந்ததை நான் நினைவுகூருகிறேன், அவர்…இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அந்த தண்ணீர் ஞானஸ்நானத்தின் பேரிலான பிரசங்கத்தில், அங்கே வெளிச்சம் முழுவதுமாக பிரகாசித்த மாத்திரத்தில், அவர் அங்கிருந்து உடனே வந்தார். அப்பொழுது எண்பத்தேழு அல்லது எண்பத்தெட்டு வயது நிரம்பியிருந்த அவர், உடனே ஒரு ஊன்றுகோலோடு, என்னிடம் இங்கு வந்து, “நான் அங்கு சென்று ஞானஸ்நானம் பெற வேண்டும்” என்றார். யாரோ ஒருவர் சென்று அதற்கான உடைகளை அவருக்குக் கொண்டு வந்து கொடுத்தார். அடுத்த முறை வரை அவரால் காத்திருக்க முடியவில்லை; அவர் அப்பொழுதே, அப்பொழுதே புறப்பட்டு வரவேண்டியதாய் இருந்தது. எனவே எனக்கு—எனக்கு அது பிடிக்கும். 21 அன்றொரு நாள், நான் கூறினேன், நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது அவர், “சகோதரன் பிரான்ஹாமே, என் உடல்நிலை சரியாயுள்ளதென்று நீங்கள் எண்ணுகின்றீர்களா?” என்று கேட்டார். 22 அதற்கு நான், “நீங்கள் எப்போதாவது ஒரு மருத்துவரிடம் ஒரு உடல்சார்ந்த பரிசோதனைக்காக சென்றீர்களா?” என்று கேட்டேன். அவர், “ஆம், ஐயா” என்றார். 23 நான், “மருத்துவர் இருதயத்துடிப்பு மானியை தன்னுடைய காதில் வைத்துக்கொண்டே, உங்கள் இருதயத்தின் மேல் வைத்து, உங்களுடைய இருதயத் துடிப்பு சரியாயுள்ளதா என்று பார்ப்பார்; மேலும் மின்னாற்றல் கொண்ட இருதயத் துடிப்பு வரைபட இயந்திரம், அதன்பின்னர் இரத்த அழுத்தம், சிறு நீர் பரிசோதனை, முதலியனவற்றை, உங்களுடைய சரீர நிலைமை என்னவாக உள்ளது என்பதைக் கண்டறிய இந்த கருவிகளைக் கொண்டு பரிசோதித்துப் பார்ப்பார். இப்பொழுது, அவர் அதை செய்கிற விதமோ, இங்கே இந்த வித்தியாசமான தலைப்புகளின் பேரில், வல்லுநர்கள் எழுதியுள்ள, இங்குள்ள ஒரு—ஒரு புத்தகத்தில், ‘ இது சம்பவித்தால், இதுதான் தவறு’” என்றுள்ளதை அவர் திருப்பிப் பார்த்துக்கொள்கிறார்.
1124 மேலும் நான், “இப்பொழுது, பாருங்கள், ஆத்துமாவுக்காக, என்னிடம் உள்ள ஒரே இருதய துடிப்பு மானி வேதாகமம் மாத்திரமே” என்று கூறினேன். அப்பொழுது நான், “உங்களுக்கு நான் ஒரு பரிசோதனையை கொடுக்கப்போகிறேன்” என்றேன். நான், “பரித்த யோவான் 5:24, ‘என் வசனத்தைக் கேட்டு’” என்றுரைக்கிறதே என்றேன். நான், “அதை அப்படியே அமர்ந்து கேட்பது அல்ல. அது அதை ஏற்றுக்கொள்வதாக இருக்கிறது, பாருங்கள், அதை ஏற்றுக்கொள்வது; நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று அது சரியென்று சொல்கிறது. நீங்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், அது உங்களுடையதாயிருக்கிறது. ‘என் வசனத்தைக் கேட்டு,’ அது ஏற்கெனவே உங்களுடையதாயிருக்கிறது, ‘என் வார்த்தைகளையும், என்னை அனுப்பினவரையும் விசுவாசிக்கிறீர்கள்.’ நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அவர், “நான் விசுவாசிக்கிறேன்” என்றார். 25 அப்பொழுது நான், “அப்படியானால் தலைமை மருத்துவர் என்ன கூறியுள்ளார் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுவேன், ‘அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல் இல்லை நியாயத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்’” என்றேன். நான், “நான் அறிந்துள்ளபடியும், இந்த புஸ்தகங்களின்படியும், நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள்” என்றேன். 26 ஏறக்குறைய நூறு வயதுள்ள, அந்த வயோதிகர், சபைக்கு செல்பவரல்ல; ஆனால் முதன்முறையாக அந்த ஒளி அவருடைய பாதையில் பிரகாசித்தபோது, அவர் அதை ஏற்றுக்கொண்டார். அந்த முன்குறிக்கப்பட்ட வித்து அங்கு இருந்ததை பார்த்தீர்களா? ஹு-ஹூ. ஆம், ஐயா. பாருங்கள், வெளிச்சம் அதன்மேல் பட்டவுடனே, அது உடனே உயிர் பெறுகின்றது.
1227 இப்பொழுது, இன்று மிகவும் உஷ்ணமாயுள்ளது என்பதை நான் அறிவேன், மேலும் நான், மறுபடியும் ஜனங்களாகிய உங்களை ஒரு ஆராதனைக்காக வரவழைப்பதும், நீங்கள் இங்கே இவ்வாறு நெருக்கமாக உட்கார்ந்திருப்பது மிகவும் கடினமானதொன்றாகும். ஆனால் அதே சமயத்தில் நான் உங்கள் எல்லோரையும் விட்டு செல்வதற்கு முன்பு; தேவ கிருபையினால், ஒரு குறுகிய காலத்திலே, நான் மீண்டும் மற்றொரு ஆராதனைக்கு உங்களை வர வழைக்கலாமென்று நான்—நான் எண்ணினேன் என்று நான் நம்புகிறேன். 28 நாளை இரவு புதன்கிழமை கூட்டத்தை துவங்க, நான் சிக்காகோவுக்கு போகத்தான் வேண்டும். முடிந்தால், நான் சற்று சீக்கிரமாகவே அங்கு சென்று, தொடர் ஆராதனைகளை துங்குவதற்கு முன்பு சற்று இளைப்பாறலாம் என்று நான் எண்ணினேன். அது—அது இங்கே விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் அதை செய்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன்…இதோ, நான் அதை இங்கே எதிர்நோக்கிக்கொண்டிருந்தேன். அது மாரேன்கோ…என்றழைக்கப்படுகிறது. [யாரோ ஒருவர், “சாமந்தி” என்று கூறுகிறார்.—ஆசி.] …பகுதியோ, ஆம், சாமந்தி, சாமந்தி, ஆம், பகுதி, அரங்கம். அது புதன்கிழமை இரவு துவங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை, சாமந்தி அரங்கில் நடைபெறவிருக்கிறது. சனிக்கிழமை காலை, முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களுக்கான காலை உணவு வேளையிலும் கூட, ஆராதனை உண்டு. அவர்கள் அதை எங்கே விளம்பரப்படுத்தியுள்ளனர் என்று எனக்குக் சரியாகத் தெரியவில்லை. இல்லை. சனிக்கிழமை மாலையில் லேன் டெக் என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது. அது—அது இங்கே விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதை நான் காண்கிறேன்.
1329 இப்பொழுது, நீங்கள் அந்தப் பகுதியைச் சுற்றியிருந்தால் அல்லது அங்கிருந்தால், அது நமக்கு எந்த நேரத்திலும் இருப்பது போன்று ஒரு வழக்கமான, ஒரு வழக்கமான சுவிசேஷ ஆராதனையாய் இருக்கும். பெரும்பாலான செய்திகள் முதலிலேயே இங்கே கற்பிக்கப்பட்டிருக்கிற காரியத்தின் பேரிலேயே இருக்கும், ஏனென்றால் நாம் இங்கே நம்முடைய ஒலிநாடாக்களை பதிவு செய்கிறோம், நீங்கள் பாருங்கள். அங்கே வெளியே அவர்கள் வம்பிடலாம். ஆனால் பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாக்களை இங்கிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டால், அவர்கள் எந்த ஒலிநாடாவைக் கேட்க வேண்டுமானாலும் அது அவர்களைப் பொறுத்தது. அது இங்கிருந்து வருகிறது. இது நம்முடைய சொந்த பிரசங்க பீடம். 30 எனவே அங்கே வெளியே, வழக்கமாக நான் மிக ஆழமாயில்லாத ஏதோ காரியத்தையே தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறேன், ஏனெனில் அவர்களில் பலர் ஆழமற்ற அனுபவமுள்ளவராகவே உள்ளே வருகிறவர்களாயிருக்கின்றனர். ஆனால் இங்கோ தேவன் என் இருதயத்தில் அருளுவதை, சரியாக இங்கிருந்து அதை கூறுவதற்கு எனக்கு உரிமையுண்டு என்றே நான் உணருகிறேன். எனவே தான் நம் ஒலிநாடாக்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. புரிகிறதா? அவர்கள் இப்பொழுது அங்கே அந்த அறையில் இருப்பதை, அவர்கள் தங்களுடைய ஒலிப்பதிவு கருவிகளோடு அங்கே அமர்ந்திருப்பதை, நீங்கள் அவர்களுடைய தலைகளை அங்குள்ள அந்த மங்கலான கண்ணாடியினூடாக காணலாம்.
1431 இப்பொழுது, நீங்கள் அந்த கூட்டத்திற்கு வரவேண்டும் என்று விரும்பினால், நாங்கள் உங்களை வரவேற்க மிகுந்த மகிழ்ச்சியாயிருப்போம். நீங்கள் அங்கு சென்றால், எங்கே செல்ல வேண்டும் என்று தெரியாது, ஏன், முழு சுவிசேஷ ஜனங்களில் எவரிடத்திலாவது சரியாக தொடர்பு கொள்ளுங்கள், அல்லது—அல்லது சகோதரன் கார்ல்சன், அவர்—அவர் உங்களுக்கு அதை சொல்லுவார்… அவர் உங்களுக்கு ஆலோசனை கூறலாம், அல்லது பிலெதெல்பியா சபை, அல்லது அவர்களில் எவராவது, சரியாக எப்படி அந்த இடத்தை சென்றடைய வேண்டும் என்பதை அவர்களால் உங்களுக்கு சொல்ல முடியும்.
1532 அதன்பின்னர் நான் அடுத்த திங்கட்கிழமை மாலை, எப்போதாவது, பிற்பகலோ அல்லது மாலையோ திரும்பவும் வருவேன். செவ்வாய்கிழமையன்று நாங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக அரிசோனாவுக்கு திரும்பிச் செல்கிறோம். பிறகு மீண்டும் எப்பொழுது திரும்பி வருவேனென்று எனக்கு சரியாகத் தெரியாது, ஏனெனில், கர்த்தர், என்ன செய்யவேண்டுமென்று அவர் என்னை வழிநடத்த வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். 33 ஒரு வினோதமான காரியம் சம்பவித்தது. நான்…இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது என்பதை நான் அறிவேன், எனவே நான் இதை இங்கே நன்றாகவே கூறலாம். தரிசனங்களும் பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலும் உள்ளபோது, அது அசைவாடிக் கொண்டிருக்கையில் நான் சரியாக அதை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதாவது…இப்பொழுது, கடந்த வருடத்தில் இருந்து வந்த ஒன்றே, என்னுடைய ஊழியம் முழுவதிலும், நான் எப்போதும் கொண்டிருந்ததிலேயே தரிசனங்களுக்கான மிக உயரிய நேரமாயிருந்த ஒன்றோ, இந்த கடந்த வருடத்தில், சம்பவித்திருந்த காரியங்களைக் குறித்ததேயாகும், அதாவது அது சம்பவிக்கிறதுக்கு முன்பே அது முன்வைக்கப்பட்டது என்பதை ஜனங்களாகிய நீங்கள் அறிவீர்கள், அது—அது கூறப்பட்ட விதமாகவே அது சம்பவித்திருந்தது.
1634 இப்பொழுது, மேலும்—மேலும் சந்திப்பதற்கு, நாங்கள் இங்கே திரும்பி வருவோம். இந்த இடத்தில் உள்ள சீதோஷ்ண நிலை, எனக்கு நிச்சயமாகவே பிடிக்கவில்லை, ஏனென்றால் நான்…நான் இங்கு வந்தவுடன் என் உடல்நிலை பாதிக்கப்படுகின்றது. மேலும் நான்…நான் அந்த மலை உச்சிகளைக் கடந்து இந்த பள்ளத்தாக்கிற்கு வந்து சேர்ந்து, நான் இங்குள்ள பத்து நிமிடத்திற்குள், எனக்கு படை நோய் ஏற்பட்டு, சுகவீனமடைகிறேன். வானிலை காரணமாக, என் தலை சுழல ஆரம்பிக்கிறது, எல்லாமே என்னுடைய கண்களுக்கு தெளிவற்று காணப்பட்டு, இருளடைகின்றன, மேலும் நான்—நான் அதிலிருந்து வெளிவர வேண்டியதாயுள்ளது. புரிகிறதா? அன்றொரு நாள் நான் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன்…
1735 ஆனால் முதலாவதாக, இங்கு என்னைக் கொண்டுவருவது என்னவென்றால், இங்கு என்னைக் கொண்டுவருவது, பாருங்கள், இந்த சபை, ஜனங்களாகிய நீங்கள்தான். என் வாழ்க்கையில் நான் எப்போதும் சென்றுள்ள எல்லா இடங்களைக் காட்டிலும், நான் வந்து சுவிசேஷத்தை பிரசிங்க இதுவே எனக்கு மிகவும் பிடித்த இடம் என்று, நான் உங்களுக்கு சொல்லுகிறேன். இங்கிருந்து நாங்கள் பதிவு செய்யும் ஒரு ஒலிநாடா வேறெங்கிலும் பதிவு செய்வதை காட்டிலும் பத்து மடங்கு சிறந்ததாக காணப்படுகிறது. புரிகிறதா? பாருங்கள், அதன் காரணமாகத்தான், “எங்கு ஒரு காரியத்தை தேவன் செய்து கொண்டிருக்கிறாரோ, அப்பொழுது அதனோடு சரியாக தரித்திருங்கள்” என்று நான் கூறுகிறேன். ஆனால் அவர் என்னை முதல்முறையாக அழைத்தபோது நான் செல்ல தவறியிருந்ததே, அங்கு அந்த பெரிய காரியமாய் இருக்கிறது என்று, நான் கருதுகிறேன், ஆகையால் நான் இங்கு உள்ளே வரும்போதெல்லாம் அவர் அதை எனக்கு கடினமாக்கியுள்ளார். பலியைக் காட்டிலும் கீழ்ப்படிதலே உத்தமம்.
1836 ஆகையால் நான் அவ்வப்போது இந்த கூடாரத்திற்கு வந்து பிரசங்கம் செய்துவிட்டு செல்வேன். மேலும் பட்டணத்திற்கு வெளியில் இருந்து வருகிற ஜனங்களாகிய உங்களுக்கு, உங்களுக்குத் அறிவிக்கப்படும். பில்லி பால் இந்த அலுவலகத்தில்தான் இருப்பான், அவன் மூலம், எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள முடியும். மேலும் நாங்கள் இங்கு திரும்பி வந்து, நடத்த… கர்த்தருக்குச் சித்தமானால், ஏழு எக்காளங்கள், கடைசி ஏழு வாதைகள், கலசங்கள் என்பவைகளின் பேரில் வந்து பேச உள்ளேன், நம்மால் முடிந்தவரை, சற்று குளிரான காலநிலையைப் பெற்றுக்கொள்ளலாம், ஒருவேளை, அல்லது ஏதாவது, கர்த்தர் எப்படி நடத்தினாலும் சரி.
1937 இப்பொழுது, அன்றொரு நாள், உள்ளே வந்தபோது, ஒரு காரியத்தைக் குறித்து, யாரோ ஒருவர் எனக்கு ஒரு—ஒரு காசோலை கொடுத்திருந்ததைக் குறித்து, ஒரு கேள்வி எழுப்பப்பட்டது, அதில், “தனிப்பட்ட” சரியாக எனக்கு, எனக்கு மாத்திரமே, “வரி செலுத்தப்பட்டு, இலவசமானது,” என்ற மற்ற ஒவ்வொரு காரியமும் எழுதப்பட்டிருந்தது. பாருங்கள், நாங்கள் சென்றோம், மேலும் எனக்கு அந்த காசோலை இப்பொழுது, அவசியமாயிருந்ததென்று பில்லி அறிந்திருந்தான். 38 அவன் வழக்கறிஞர்களிடம் சென்று நாங்கள் அதை வங்கியில் பணமாக்கலாமா என்று கேட்டான். அதற்கு அவர், “ஏன், அவர் அமெரிக்க குடிமகன். அவரால் ஏன் அதை பணமாக்க முடியாதா? பாருங்கள், ‘வரி செலுத்தப்பட்டுள்ளது,’ என்றும், மேலும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும் கூறி, ‘இலவசம்’ என்றும் கூறுகிறதே. எனவே எந்த குடிமகனும் அதைச் செய்ய முடியும்” என்றார்.
2039 ஆனால் பில்லி, அவன் அதனால் திருப்தியடைய முடியவில்லை, எனவே அவன் பொது கணக்காளரிடம் சென்று கேட்டான். அவரும், “ஏன், நிச்சயமாக, அவர் அதை பணமாக்கலாம்” என்றார். மேலும், “அவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒரு குடிமகன்” என்றார். 40 எனவே, பாருங்கள், அப்பொழுதும் அவனால் அதைக் குறித்து சரியாக எண்ணிப் பார்க்க முடியவில்லை, எனவே அவன் மெர்லி மில்லரை அழைத்தான், அவர்தான் அங்கே உள்ள இந்தியானா போலீசிலுள்ள வருமானவரி சங்கத்தின் தலைவர், எங்களுடைய வழக்கறிஞர்களும் இருந்தனர், எனவே ஐஸ் மற்றும் மில்லர். எனவே, “நிச்சயமாக, அது சரிதான். புரிகிறதா? நிச்சயமாகவே, அவர் அந்த காசோலையை வைத்துக்கொள்ள முடியும். அது—அது—அது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதால், ‘கையொப்பமாத்திரமே போட வேண்டும்’” என்று கூறினார். என்னால் முடியும், நான் ஒருவர் மாத்திரமே அதில் கையொப்பமிடலாம், மேலும் அதில்…நம்முடைய முத்திரையிடப்பட முடியாது
2141 பாருங்கள், எந்த காசோலையையும் நான் இப்பொழுது பணமாக்குவதில்லை. அப்படிச் செய்ததனால்தான் அவர்கள் முன்னர் குற்றம் கண்டுபிடித்தனர். யாராவது ஒருவர் ஒரு கட்டு காசோலைகளைக் கொண்டு வந்து, “இதோ, சகோதரன் பிரன்ஹாமே,” என்று சொல்லி கூட்டத்தில் கொடுக்கிறார்கள். அப்பொழுது நான், “வில்லியம் பிரான்ஹாம், வில்லியம் பிரான்ஹாம்…” என்று கையொப்பமிட்டுக் கொண்டிருந்தேன். பாருங்கள், அரசாங்கம் எல்லா நேரத்திலும், அவை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே வந்தது. மேலும் நானே அவைகளில் கையொப்பமிட்டுக்கொண்டு அங்கே கடன்களையும் செலுத்திக் கொண்டிருந்தேன், ஆனால் நான் அவை எல்லாவற்றுக்கும் குற்றமிழைத்த வரி, எப்படியும், முன்று இலட்சம் டாலர்கள் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர்கள் கூறினர். எனவே—எனவே அப்பொழுதுதான் அங்கே பிரச்சினை உண்டானது. 42 எனவே அப்பொழுது நான் இந்த காசோலையில் கையொப்பமிட்டு வங்கியில் கொடுத்தவுடனே, உடனே, இதோ அந்த அரசாங்க பிரதிநிதி திரும்பி வந்து, “இந்த வழக்கை இப்பொழுது நாங்கள் மீண்டும் தொடங்கவுள்ளோம்” என்று கூறிவிட்டார். அது என்னை ஒரு விதமான கஷ்டத்திற்குள்ளாக்கியது.
2243 இங்கு சகோதரன் லீ வேயில் அமர்ந்திருக்கிறார், நான் இதை கூறுவது சரியென்றே நான் யூகிக்கிறேன், நாங்கள் சரியாக… அவர் வந்திருந்தபோது, இந்த சிறந்த பாப்டிஸ்டு பண்டிதருக்கு இங்கே… அன்றொரு நாள் இங்கே தண்ணீர் தொட்டியில், சகோதரன் லீ வேயிலுக்கு, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தேன். எனவே உண்மையாகவே ஒரு அருமையான மனிதன், கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரன். அவர் முன்பு இங்கு நமக்காகப் பிரசங்கம் செய்திருக்கிறார், அவர் அதிகம் கல்வி கற்ற அறிவாளி, அது மாத்திரமல்ல, அவர் ஆவியினால் நடத்தப்படும் ஒரு மனிதர். அந்த வெளிச்சம் அவர் மேல் பிரகாசித்தபோது, அதிலிருந்து அவர் விலக முயன்றதாக அவர் கூறினார், ஆனால் அதைச் செய்ய முடியவில்லையாம், எனவே அன்றொரு நாள் காலை நான் அவருக்கு இங்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். அவரால் அதை தாமதம் செய்ய முடியவில்லை, எனவே நாங்கள் இங்கு வந்து, எங்களுடைய ஞானஸ்நான உடைகளையணிந்து, தண்ணீருக்குள் இறங்கி, அவருக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.
2344 பாருங்கள், அவர் அருமையான ஆவிக்குரிய ஆகாரத்தை உட்கொண்டதால், நாம் சற்று நேரம் அவருடன் பேசிக் கொண்டே இயற்கை ஆகாரம் உண்ணலாம் என்று நான் எண்ணினேன். எனவே நாங்கள் ப்ளூபோர் உணவு விடுதிக்குச் சென்று, அங்கு அமர்ந்து, பேசிக்கொண்டிருந்தபோது, இந்த பொருளுக்கு வந்தோம், அப்பொழுது “ஜனங்கள் உம்மை பற்றி இப்படி பேச நீர் எப்படி விட்டுக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார். 45 இப்பொழுது, சகோதரன் வேயில் நான் அறிந்துள்ள சிறந்த மனிதர்களில் ஒருவர், ஆனால் அவர், “எதற்கும் தயங்காமல் பதில் கூறுபவர்,” உங்களுக்கு தெரியும், நான் அவரிடம் எப்பொழுதும் கூறுவதுண்டு. எனவே, அவர், எனவே நான் கூறினேன்…சகோதரன் வேயில், அது சரி என்று நான் நம்புகிறேன். ஆதலால் அவர்…நான், “திடீரென்று பதற்றமடையாதீர்கள். அமைதியாக அமர்ந்திருங்கள். அதை செய்கிறவர் தேவன்” என்றேன். 46 அவர், “ஆ, அது உங்களுக்கு சரியாக இருக்கலாம்” என்றார், அவர் கூறினார்—அவர் கூறினார். ஆனால், பாருங்கள், அவர்—அவர்…நான் நினைக்கிறேன் அவர்—அவர் மிகவும் புத்திசாலியாக அந்த விதமாகத்தான் அவர் கூட்டத்தில் இருந்து வருகிறார், அந்த மதிநுட்பமுள்ள அறிவார்ந்த ஜனங்கள்; எனவே அவர்களுக்கு எவ்விதம் பதிலளிக்க வேண்டுமென்று அவருக்குத் தெரியும், அப்பொழுது அவர்களுக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் போய்விடும். அவ்வளவுதான்.
2447 எனவே நான் அவரிடம், “பாருங்கள், சகோதரன் வேயில்” என்றேன். நாங்கள் அப்பொழுது ப்ளூபோர் உணவு விடுதியில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுது நான், “தாவீது, ஒரு நாள், தன் சொந்த குமாரனால் சிம்மாசனத்திலிருந்து தூக்கியெறியப்பட்டப்பிறகு, அவன் சிம்மாசனத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டான், அங்கு கலகம் உண்டாகி, இஸ்ரவேலர் இரண்டாகப் பிளவுபட்டு, தாவீது தன்னுடைய சொந்த குமாரனால் சிங்காசனத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, அவன் அழுதுகொண்டே பட்டணத்தைவிட்டு வெளியே சென்றான். அவனுடைய கடைசி நாள் செய்தியை விரும்பாத ஒரு நபர், உங்களுக்குத் தெரியும், அவன் இவனுக்காக கவலைப்படவேயில்லை; வயோதிக நபரான, அவன் ஒருவிதமாக முட வனாயிருந்து, அங்கு கூடவே சென்று அவனை பரிகாசம் செய்துகொண்டு, அவன் தாவீதின் மேல் துப்பினான். தாவீதின் மெய்க்காப்பாளன் பட்டயத்தை உருவி, ‘என் ராஜாவின் மேல் துப்பின அந்த நாயின் தலையை நான் வாங்கிப் போடட்டும்?’ என்றான். தாவீதோ, ‘அவனை விட்டுவிடுங்கள். அப்படி செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருப்பார்’ என்றான். புரிகிறதா? அவன் தாவீதினுடைய முகத்தில் துப்பி அவனைக் கேலி செய்தான், அதன் பின்னரும் அவன் மேல் துப்பினான். ‘அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருப்பார்’” என்றான். பாருங்கள், அவன் எப்படி திரும்ப வந்தான் என்ற, அந்த வரலாறு நமக்குத் தெரியும். அதை செய்ய மிகுந்த கிருபை அவசியம் என்று சகோதரன் வேயில் எண்ணினார்.
2548 எனவே அலுவலகத்தில் நுழைந்தவுடனே, அந்த பொது ஜன கணக்கர் பில்லி பாலை தொலைபேசியில் கூப்பிட்டு இதைக்குறித்து சொன்னார். எனவே சகோதரன் வேயில் என்னுடன் வீட்டிற்கு வந்திருந்தார். நான் உள்ளே நுழைந்த போது, நான் மனைவியிடத்தில் கூறினேன்…அப்பொழுது சுமார் பிற்பகல் கழித்து நீண்ட நேரம் இருக்கும். நாங்கள் ஒரு அறைக்குள் சென்றோம். நான், “தேனே, நான் உன்னிடம் ஒன்றைக் கூறப் போகின்றேன்” என்றேன். 49 நான் புறப்படுவதற்கு முன்பு நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அவள், “பில், கர்த்தர் உம்மை அங்கே அனுப்பியிருக்கிறார் என்று எனக்குத் தெரியும்; நாங்கள் யாவரும் அதை அறிவோம், ஆனால் நீ அங்கிருந்து திரும்பி வரவேண்டும் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லையே. அவர் கூறினார்…இப்பொழுது, அதைக் குறித்து தான் எனக்கு கவலையாயுள்ளது” என்றாள்.
2650 அப்பொழுது நான், “சரி, அதை உனக்காகவும் பிள்ளைகளுக்காகவுமே நான் நினைக்கிறேன். எனக்கு ஒன்றுமில்லை. கர்த்தருக்குச் சித்தமானால், நான் எங்கே சென்றாலும், நான் அவருக்கு ஊழியம் செய்யப்போகிறேன்” என்றேன். எனவே நான் திரும்பி நடந்து சென்று, நான் அவரிடத்தில் இதைக் குறித்து இப்படி கூறினேன். ஆகவே நான் திரும்பி, என்னுடைய தொப்பியைக் கழற்றி வைத்தேன். 51 அப்பொழுது யாரோ என்னிடம், “ஓ இந்த வரி வசூலிப்பவர்! நாம் வெளியே செல்ல வேண்டும்…” என்ற ஏதோ ஒரு காரியத்தைக், குறித்து, கூறினார்கள். அந்த விதமாக ஏதோ திடீர் சோதனையிட வந்ததுபோல காணப்பட்டது. 52 நான் சகோதரன் லீவேயிலிடம் கூறினதை நினைக்காமலே, நான், “அவனை விட்டுவிடுங்கள். அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருப்பார்” என்று சொன்னேன். 53 அப்படிக் கூறின மாத்திரத்தில், ஒரு ஒளி சுவற்றின் மேல் பிரகாசித்து, சகோதரன் வேயிலும் என் மனைவியும் அங்கு அமர்ந்திருந்தபோதே, “அரிசோனாவுக்குத் திரும்ப வா” என்று அங்கே சுவற்றில் எழுதினது. “அரிசோனாவுக்குத் திரும்ப வா” என்ற எழுத்துக்களை சுவற்றின் மேல் எழுதினது. அது உண்மை. எனவே நான் இங்கிருந்து, ஆமென், அரிசோனாவுக்குத் திரும்பச் செல்கிறேன்.
2754 இப்பொழுது, இந்த வாரம் மகத்தான ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒன்றாயிருந்து வந்துள்ளது. எங்களுக்கு தனிப்பட்ட பேட்டிகள் இந்த வாரம் இருந்தன, ஏழு முத்திரைகள் வெளிப்பட்ட சமயம் முதற்கொண்டு காத்துக்கொண்டிருந்த ஜனங்களை நாங்கள் பேட்டி கண்டோம். அவர்களில் சிலர், உண்மையாகவே, பட்டணத்தின் வெளியிலிருந்தும், நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும், அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் பேட்டிகள் தொடங்குவதற்கு முன்பே, அந்தக் காலையில், அறையில் அமர்ந்திருக்கையிலேயே, அவர்கள் அறிந்திருந்த ஒவ்வொரு காரியத்தையும், அவர்கள் கேட்க விரும்பின ஒவ்வொரு காரியத்தையும், அவர்கள் எந்த வரிசையில் கேள்விகள் கேட்கப் போகிறார்கள் என்றும், அவர்களுடைய சொப்பனங்களையும் அவைகளின் அர்த்தங்களையும், பரிசுத்த ஆவியானவர் எனக்கு முன்கூட்டி அறிவித்து, நான் அவைகளை சரியாக எழுதிவைத்துக்கொள்ளும்படி செய்தார். 55 இப்பொழுது, ஜனங்கள் இங்கே, அங்கே அறையில் இருக்கிறார்கள். நான் அவர்களை பேச விட்டுவிடுவேன். அவர்கள், “பாருங்கள், சகோதரன் பிரான்ஹாமே, நான் இன்ன-இன்ன காரியத்திற்காக வந்திருக்கிறேன்” என்பார்கள்.
2856 அப்பொழுது நான், “இப்பொழுது, நினைவிருக்கட்டும், நாம் இங்கு ஒருவரோடொருவர் ஐக்கியங்கொள்வதற்காக கூடிவரவில்லை. ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்ள நாம் இங்கு வரவில்லை. உங்களுடைய சிந்தையில், உங்களுடைய இருதயத்தில் ஒரு கேள்வி எழுந்துள்ளது, அதனால்—அதினால் நீங்கள் நிலை தடுமாறி அதற்கு பதில் என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. தேவ ஒத்தாசையைக் கொண்டு ஒருக்கால் என்னால் உதவிசெய்ய முடியும்” என்றேன். 57 நான், “நினைவில் கொள்ளுங்கள், தென்தேசத்து ராஜஸ்திரீயும் கூட, சாலொமோனிடம் வந்தபோது, அவளுக்கும் சில கேள்விகள் இருந்தன. அவளுக்கு பதிலளிக்கக் கூடாதபடிக்கு ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை என்று வேதம் கூறியுள்ளது” என்றேன். மேலும் நான், “சாலொமோனிலும் பெரியவர் இங்கேயிருக்கிறார். புரிகிறதா? அது உண்மை. ‘இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன். அவர்கள் நினைக்கிறதும், அல்லது விரும்புகிறதும், மற்றும்—மற்றும் கேட்டுக்கொள்கிறதும் எதுவோ, அது அவர்களுக்கு அருளப்படும்’ என்று கர்த்தராகிய இயேசு வாக்களித்துள்ளார். நீங்கள் அறியாதிருக்கிற ஒரு காரியத்தை குறித்ததே இப்பொழுது உங்களுடைய கேள்வியாக இருக்கிறது, அதை எப்படி அணுகுவது என்று தெரியாத ஒன்றைக் குறித்தே, என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து நீங்கள் அறியாத ஒரு காரியம்” என்றேன்.
2958 மேலும் நான், “மீண்டும், ‘தேவனுடைய தூதர்கள் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்குகிறார்கள்’ என்று இதைக் குறித்து வேதம் கூறியுள்ளது. எனவே அந்த வேறொரு உலகிலே ஐம்புலன்களும் கிரியை செய்ய முடியாது என்ற அறிவிக்கின்றது” என்றேன். 59 ஐம்புலன்கள் இவ்வுலகுடன் மாத்திரமே தொடர்பு கொண்டுள்ளன. உங்களுக்கு உணர்வு இல்லாதிருந்தால், உங்களால் எதையுமே உணர முடியாது. உணர்ச்சி உங்களுக்கு ஒன்றுமே இல்லாதததாயிருக்கும்; அது மற்றொரு உலகமாய் இருக்கும். உங்களுக்குப் பார்வையே இல்லையென்றால், நீங்கள் பார்ப்பது வேறொரு உலகைத்தான், அப்பொழுது இவ்வுலகைக் குறித்து உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. எனவே இந்த ஐம்புலன்களை நாம் இவ்வுலகில் உபயோகிக்க தேவன் அனுமதித்துள்ளார். 60 இப்பொழுது ஆனால் விசுவாசம் என்றழைக்கப்படுகின்ற வேறொன்று உள்ளது. ஆனால் விசுவாசத்தினால் நீங்கள் ஒரு ஏணிப்படிகளில் ஏறிச்சென்று, மற்ற உலகிற்கு செல்லுமளவிற்கு உயர சென்றுவிடலாம், அதுதான் தரிசனம். அங்கே உங்களால் பார்க்க முடியும். 61 உங்களுடைய உணர்வு என்னும் புலனைக் கொண்டு இது என்னவாயிருந்தது என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டிருந்தீர்கள் என்பதை அறியாமலிருப்பதுபோலவே; அப்பொழுது உங்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, உங்களால் அதைக் காணமுடிகின்றது. அதை ஒருபோதும் காணமுடியாத அந்த நபருக்கு அது இரகசியமாகவே அமைந்திருக்கும். அது அவருக்கு ஒரு இரகசியமாகவே இருக்கும், ஆனால் அதே சமயத்தில் அதுதான் அது.
3062 அங்கு, கர்த்தர்…நாங்கள் இங்கு வருவதற்கு முன்பே, எங்கும், நாடு முழுவதிலும் இருந்து வடக்கிலும், தெற்கிலும், மேற்கிலுமிருந்து இந்த பேட்டிகளுக்காக ஜனங்கள் வந்திருந்தனர். அவர்கள் பேசத் தொடங்கி, அவர்கள் சரியாக கேள்விகளைக் கேட்க முடித்தவுடன், அவர்கள் கேட்டக் காரியத்தை குறித்து, நான், “இங்கு பாருங்கள்,” என்று சொல்லிவிட்டு எழுந்துபோய், ஒவ்வொரு கேள்வியையும் எழுதி வைத்திருந்த ஒரு துண்டு காகிதத்தைக் கொண்டு வருவேன், அவர்கள் எந்த வரிசையில் கேள்விகளைக் கேட்டார்களோ இருந்தார்களோ, அதே வரிசையில் அதில் கேள்விகள் எழுதப்பட்டிருக்கும். கர்த்தர் பெரியவர். அவர் எல்லா காரியங்களையும் அறிந்திருக்கிறார். ஆனால், அதே சமயத்தில், அந்த பிற்பகலிருந்து தெளிவடைந்து வருவதற்கு எனக்கு கிட்டத்தட்ட மூன்று நாட்கள் தேவைப்படும், அது என்னவாயிருந்ததென்றால், அப்படிப்பட்ட ஒரு நிலைகுலைவாகும். இப்பொழுது நாம் புறப்படுவதற்கு முன்பு, நான் அதைப் பெற்றுக்கொள்ள எண்ணினேன்.
3163 தனிப்பட்ட நபர்களுக்கென, ஒரு சரியான முறை, உண்மையான வழி இருக்கின்றது. இப்பொழுது, அநேக காரியங்களைக் கூற முடியும். 64 வெளிப்படுத்தப்பட்ட இருதயங்களின் ரகசியங்களை அறிந்திருக்கிற, ஜனங்கள் இங்கிருந்தால், அது முற்றிலுமாக… அது பயங்கரமாக இருக்கும்; அது குற்றம் புரிவதற்கு வாய்ப்பை அளித்துவிடும், அது இந்த விதமாக ஒரு பொது இடத்தில், பொதுமக்கள் முன்னிலையில், மேடையில் இங்கே வெளிப்படுத்தப்பட்டால், அது யாரோ ஒருவர் மற்றொருவரை சுட்டுவிடச் செய்யும் அல்லது ஏதாவது செய்ய காரணமாயிருக்கும். இது சிறைக் குற்றங்கள், மற்றுமுள்ள எல்லாவற்றையும் புரிய காரணமாயிருக்கும், அதாவது…
3265 ஆனால் நீங்கள் அந்த விதமாக ஒன்று சேர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, பரிசுத்த ஆவியானவர், நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் என்னிடம் கேட்பது தனிப்பட்டது என்றே, நாம் இதை புரிந்து கொள்கிறோம். நான் அதைக் குறித்து ஒன்றையுமே கூறுகிறதில்லை. மேலும் நான் அவர்களுக்கு கூறுகிறது என்னவென்றால், அவர்கள் அதைக் கூற விரும்பினாலும் அல்லது இல்லையென்றாலும் அது அவர்களை பொறுத்தது. புரிகிறதா? ஆனால் அந்த பேட்டியின்போது பேசப்படும் விஷயம் எங்களிருவருக்கு மாத்திரமே தெரியும். பாருங்கள், பரிசுத்த ஆவியானவர், ஒவ்வொரு காரியத்தையும் முழுமையாக தீர்த்து வைக்கும் வரையில் அங்கே அமர்ந்து, ஒரு நேரத்தில் ஒருவரோடு, அந்த நபருடனே பேசுகிறேன்.
3366 அவர்கள் ஒவ்வொருவரையும் பேட்டி காணும் முன்பே, பரிசுத்த ஆவியானவர் அதைக் குறித்த எல்லாவற்றையும் எனக்கு முன்கூட்டி அறிவிக்கும், அந்த கிருபையை நினைத்துப் பார்க்கும்போது; அவர்களில் அநேகர், நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்தவர்கள், அவர்களை நான் அதற்கு முன்பு என் ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதேயில்லை. அவர்கள் கேள்விகளுக்கு ஏற்ப வழக்கமாக, அவர்களுக்கு பதில் அளிக்கும் விதத்தில், அவர்கள் அறிந்துகொள்ளும்படியாக எழுதி வைத்திருப்பேன்.
3467 ஒரு சகோதரனுக்கு சர்ப்பத்தின் வித்தைக் குறித்த கேள்வி உண்டாயிருந்தது, அதற்கான விடையை என்னால் சரியாக எடுத்துரைக்க முடியவில்லை, ஏனெனில் அவருக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அரை மணி நேரம் அதற்குள் முடிந்துவிட்டது. அவர் அதைச் சரியாகப் பெற்றுக்கொண்டார் என்றே நான் நம்புகிறேன், அதற்கான பதில்கள், காகிதத்தில் இருந்தன. நான்…அவர் எழுதியிருந்தார், மேலும் அவர் தன்னுடைய எல்லா பதில்களையும் பெற்றுக் கொள்ளவில்லை, எனவே நான் பதிலை எழுதி வைத்திருந்த அந்த காகிதத்தை, அவரிடத்தில் திரும்ப கொடுக்கிறேன். அவர் பெற்றுக்கொள்ளவில்லையென்றால், பில்லி பால் அதை வைத்திருக்கிறான். அந்த மனிதன் இங்கு அமர்ந்திருக்கிறாரென்று எனக்குத் தெரியும்; சற்று முன்பு நான் அவரைப் பார்த்தேன். எனவே அவர்—அவர் கண்டறிய வேண்டுமென்றால், உங்களுடைய கேள்விகளுக்கான உங்களுடைய பதில்கள், அது ஒரு துண்டு காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
3568 இப்பொழுது, ஓ, கர்த்தர் எவ்வளவு நல்லவராக இருக்கிறார்! ஒவ்வொருவரும் நலமாக உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஹூ-ஹூம். 69 இப்பொழுது நாம் இந்த உறுமால்களுக்காக ஜெபம் செய்யும்போது, இப்பொழுது நாம் சகோதரன் டௌவை நினைவுகூருவோமாக. அவர் மிகவும் விலையேறப்பெற்ற ஒரு சகோதரன், நாம் அவரை ஜெபத்தில் நினைவுகூர விரும்புகிறோம்.
3670 மேலும் நான் சகோதரன் அன்கிரனை நான்—நான் காண்கிறேன், ஆனால் என்னால்—என்னால் சகோதரி அன்கிரனை எங்கேயும் காண முடியவில்லை, அவள் இப்பொழுது நலமாய் இருந்தால் சரி. ஆம், அவரை விட்டு சற்றுத் தள்ளி அமர்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக. ஆம். எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் நாங்கள் அன்றொரு இரவு, ஒரு…அவளுக்கும் மற்றும் அவருடைய மகள் சகோதரி…நான்…டௌனிங், டௌனிங் அவர்களுக்கும் ஏற்பட்ட அவசர நிலைமைக்காக அழைக்கப்பட்டோம். கார் சாலையை விட்டு கீழே இறங்கிவிட்டது, தேவனுடைய கிருபை, இல்லையென்றால் இருவரும் அங்கேயே நசுங்கியிருப்பார்கள். அவர்கள் இரயிலில் பிரயாணம் செய்து, இங்கே சபைக்கு வந்துள்ளனர்.
3771 உங்கள் யாவரையும் நான் மறக்கமாட்டேன். உங்களை நான் நேசிக்கிறேன். தேவன் அதை அறிந்திருக்கிறார். நான்—நான் உங்களை நேசிக்கிறேன். எப்படியாய், அந்த பயங்கரமான சீதோஷ்ண நிலையிலும் அவர்கள் பிரயாணம் செய்து வருகின்றனரே! 72 ஜார்ஜியா, அலபாமா, டென்னஸி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து இங்கு வந்துள்ள சில சகோதரரை நான் காணும்போது, அவர்கள் அங்கே தங்களுடைய காரில் சாலையில் பயணிக்கும்போது, அங்கு பனிக்கட்டி அந்த விதமாக மேலும் கீழுமாக சரிந்துகொண்டிருக்கும் அந்நிலையில், ஒரு ஆராதனைக்கு வருகின்றனர்.
3873 சகோதரன் டௌக்காக எனக்கு அவசர அழைப்பு வந்தபோது, ஓஹையோவிலுள்ள லைமா அவ்வளவுதூரம் என்று நான் உணரவில்லை. சரியாக…அது சிறிது தாவி, தத்தி, தாண்டும் தூரமாய் இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், என்னே, நான் அந்த அதிகாலையில் இங்கிருந்து புறப்பட்டு, அன்று பிற்பகல் ஒரு மணி வரை அங்கு சென்றடையவேயில்லை, அந்த இரட்டை நெடுஞ்சாலையில், வேகக்கட்டுப்பாட்டோடு செல்ல வேண்டுமென்று இருந்த அந்த அளவிற்கு காரோட்டி சென்றடைந்தேன். தெற்கிலிருந்து வருகிற இந்த மற்ற ஜனங்களுக்கும், வடக்கு மேற்குக்கு வெளியிலிருந்து வருகிற இவர்களுக்கும், அது எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். 74 உங்களை நான் நேசிக்கிறேன், அதனால் தான் நான் இங்கே மிகமிக உத்தமமாக இருக்க பிரயாசப்படுகிறேன்.
3975 பழைய காலத்தவர்களாயிற்றே! சகோதரன் க்ரீச்சும் மற்றவர்களும் அங்கு இப்பொழுது அமர்ந்துள்ளதை நான் காண்கிறேன், இவர்கள் இத்தனை ஆண்டு காலமாகவே என்னோடு கூட இருந்து வருகின்றனர், நாங்கள் எப்படியாய் ஒன்றாக வளர்ந்து வந்திருக்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்பு, மேரி ஜோவின் புகைப்படத்தை நான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் முதலில் சந்தித்தபோது, அவள் எவ்வளவு சிறியவளாக இருந்தாள், இப்பொழுது அவளுக்கு விவாகமாகி, குழந்தைகளும் இருக்கிறதென்று, நான் யூகிக்கிறேன். புகைப்படத்தில் சகோதரன் க்ரீச், சகோதரி க்ரீச் இருவரும் வாலிபமாய், கறுத்த முடியுடன் காணப்படுகின்றனர், நானும் மேடாவும் அந்த படத்தில் இருக்கிறோம், இப்பொழுது எங்களுக்கு முடி நரைத்துப்போய் குன்றிப்போயிருக்கிறோம். பாருங்கள், அப்படிப்பட்ட ஜனங்களை குறித்து ஏதோ ஒரு காரியம் உண்டு, அது—அது உங்களை இறுக்கி பிடித்துக்கொள்கிறது. பாருங்கள், நீங்கள்—நீங்கள்—நீங்கள் அவர்களோடு தங்க விரும்புகிறீர்கள். பார்த்தீர்களா? அது குறித்த மற்றொன்று அதாவது—அதாவது உங்களுடைய சிந்தை முந்தைய நாட்களுக்கு சென்றுவிடுகிறது. இங்குள்ள மற்றவர்களுக்கு அவர்களை முன் மாதிரியாக அளிக்கிறேன். வாலிபரும் வயோதிகருமாகிய, நாம் கர்த்தருடைய வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.
4076 எனவே இந்த காலை நான் இதை வைத்துள்ளேன்… தேவன், இந்தக் காலை இங்கே ஒரு ஞாயிறு வேதபாட பள்ளிப் பாடத்தை போதிக்கும்படியாக இதை என் இருதயத்தில் வைத்துள்ளார் என்று, நான் நினைக்கிறேன், தேவனுக்கு சித்தமானால், இதற்கு அதிக நேரம் பிடிக்கும். நான்…எனக்குத் தெரிந்த வரையில், கொஞ்ச காலத்திற்கு இப்பொழுது இதுவே என்னுடைய கடைசி ஆராதனையாக இருக்கிறது…
4177 சகோதரன் நெவில் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் இங்கே, இந்த சபையில், இந்த கூடாரத்தின் பொறுப்பாளியாய், அவர் இங்கே நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும், அவர் இந்த செய்தியை விசுவாசித்து, மேலும்—மேலும் நான் போதிப்பது போன்றே அவரும் அதை போதிக்கிறார் என்றுமே நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். சரி. நீங்கள் எந்த நேரத்திலும், சகோதரன் நெவில் பேசுவதைக் கேட்க வேண்டுமென்று, விரும்பி வருவீர்களானால், அவர் நிச்சயமாகவே உங்களுக்கு நன்மையையே செய்வார், நான் அதை நிச்சயமாகவே நம்புகிறேன். அவர் இயேசு கிறிஸ்துவின் மகத்தான ஒரு ஊழியக்காரன். 78 நான் ஒரு சிறு பையனாய் இருந்தது முதற்கொண்டு ஆர்மன் நெவில் அவர்களை நான் அறிந்திருக்கிறேன், அவர் சிறிதளவும் மாறாமல், தேவனிடத்திற்கு மாத்திரமே நெருங்கி வந்துள்ளார். நான் அவருடைய மெதோடிஸ்டு மேடைக்கு அழைக்கப்பட்டபோது…நான் அங்கு அவரை முதலில் கண்டதை நினைவுகூருகிறேன். நான் இங்கே கூடாரத்திற்கு திரும்பி வந்தபோது, நான், “என்றாவது ஒரு நாள், நான் அவருக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பேன்” என்றேன். இங்கே அவர் இப்பொழுது இந்த செய்தியுடன் இருக்கிறார், தொடர்ந்து இருக்கிறார், ஒரு உண்மையான தீரமான ஊழியக்காரன்.
4279 சகோதரன் நெவில் அநேக கஷ்டங்களையும் மன வேதனைகளையும் அனுபவிக்கிறார், அதாவது அவர் இங்கே கூடாரத்தில் காட்டிக் கொள்கிறதில்லை. ஜனங்களின் வாழ்க்கையிலுள்ள அந்தரங்க காரியங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பினை தேவன் எனக்குத் தந்திருக்கிறபடியால், அவர் எதைக் கடந்து கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும்; அது அதிகமாயுள்ளது, பாருங்கள். அவர் நிச்சயமாகவே அதிகமான கஷ்டங்களையும் தொல்லைகளையும் மற்ற காரியங்களையும் அனுபவிக்கிறார். மோசேயின் கரங்களை யோசுவாவும் காலேபும் தாங்கிப் பிடித்திருந்ததுபோல, இவர் தேவனுடைய வார்த்தையை அளிக்கும்போது, நீங்கள், இங்குள்ள ஜனங்களாகிய நீங்கள் அவரைத் தாங்கி வருகிறீர்கள்.
4380 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் அன்பு கூருங்கள். ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள். வேண்டாம்…பிசாசு என்ன கூற முயன்றாலும் கவலைப்பட வேண்டியதில்லையே! இப்பொழுது நீங்கள் எல்லாரும் ஒரு பெரிய இனிய கூட்டமாயிருந்து வருகிறீர்கள், ஆனால் என் எச்சரிக்கையை ஞாபகம் கொள்ளுங்கள், பாருங்கள், சாத்தான் அதை அப்படியே இருக்கவிடமாட்டான். இல்லை, ஐயா. அவன் தன்னுடைய இலக்கை அடைய யாராவது ஒருவரை கொண்டுவர வேண்டுமானால், அவன் எல்லாவற்றையும் எய்வான். அவன் குற்றம் கண்டுபிடிப்பவர் யாரையாகிலும் அல்லது ஒரு அவிசுவாசியை, அவனை உள்ளே அமர்த்தி, மெதுவாக உங்களுடன் ஐக்கியங்கொள்ளவும், மற்ற காரியங்களை செய்யவும் செய்து, அதன் பின்னர் ஒரு விதமான விஷத்தை அந்த நபர் மீது திணிக்க, அந்த மனிதன் விஷத்தை சபையில் நுழைக்கத் தொடங்குவான். அப்படிப்பட்ட எதனுடனும் நீங்கள் சேராதீர்கள். அதனுடன் நீங்கள் எவ்விதத் தொடர்பும் கொள்ள வேண்டாம். நீங்கள் ஒருவரோடொருவர் இனிமையாக இருந்து, ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்து தயையுள்ளவர்களாக இருங்கள். அந்த மனிதனுக்காக ஜெபியுங்கள், அதாவது அந்த மனிதனும் கூட அல்லது அந்த ஸ்திரீ, அது யாராயிருந்தாலும், அவர்களும் இரட்சிக்கப்பட வேண்டுமென்று, அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்களுக்காக ஜெபித்து, ஒருவரோடு ஒருவர் சேர்ந்திருங்கள். 81 உங்கள் போதகருடன் தரித்து நில்லுங்கள். பாருங்கள், அவர்தான் உங்கள் மேய்ப்பன், அவருக்கு எல்லாவித மரியாதையும் செலுத்துங்கள். அவர் உங்களை வழிநடத்துவார், ஏனெனில் அதற்கென அவர் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
4482 இப்பொழுது நீங்கள் அதை நினைவில் வைத்துக் கொள்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சத்துரு வருவான். அவன் வரும்போது, நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக பிணைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுடைய சத்துருவான பிசாசினால் உபயோகிக்கப்படும் அந்த மனிதன் உங்களை விட்டுப் போய் விடுவான் அல்லது உங்களில் ஒருவனாக ஆகிவிடுவான். அவ்வளவுதான். 83 நீங்கள் ஒரு தனிக்குழுவாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்…அல்லது—அல்லது கலந்து பேசி, உங்களையே ஒரு தனிக்குழுவாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். நாம் அனைவரும் ஒருவரே. நான், “இடது கையே, உன் மேல் நான்—நான் கோபமாயிருக்கிறேன், நீ வலது கையாயில்லாதபடியால், உன்னை சரீரத்திலிருந்து அகற்றிவிடப் போகிறேன்” என்று கூறமுடியாது. அது என்னுடைய இடது கை. அதனுடைய இடத்தில் அது இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். என் விரலின் நுனியும் கூட, அவ்வாறே என்னுடைய சரீரத்தின் ஒவ்வொரு சிறு அவயவமும் கூட, அதனதன் இடத்தில் இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகிறேன். விசுவாசிகளின் ஒரே சரீரமாகிய நாம் ஒருவருக்கொருவர் இணைந்து, ஒருவரோடொருவர் சரியாக இருந்து, நமது இடத்தில் பொருத்தப்பட வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார்.
4584 இப்பொழுது அதன் பேரிலான ஒலிநாடாக்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள். நாம் எதை விசுவாசிக்கிறோம் என்பதன் பேரிலான ஒலிநாடாக்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள். நாம் தேவனுடைய சபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்றும், நான் எப்படி இங்கே ஒன்று சேர்ந்து கூடி வந்து, உன்னதங்களில் ஒருமித்து உட்கார வேண்டும் என்று, சபையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளின் பேரிலான ஒலிநாடாக்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள். வீட்டிலேயே தரித்திருக்க வேண்டாம். தேவன் உங்களுடைய இருதயத்தில் வாசம் செய்வாரானால், உங்கள் சகோதரருடன் இங்கு வந்து ஐக்கியங்கொள்ள, இக்கூடாரத்தின் கதவுகள் திறக்கும் வரைக்கும் உங்களால் காத்திருக்க முடியாது. நீங்கள் அந்த விதமாக உணரவில்லையென்றால், அப்பொழுது நான் உங்களுக்கு செல்கிறேன், நீங்கள் போய் ஜெபிக்க வேண்டிய நேரம் இதுவேயாகும். 85 காரணம், நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம், வேதாகமமானது உயர்த்தப்பட்டுள்ள, இல்லை, நமக்கு அறிவுறுத்தியுள்ளபடி, “நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய் பார்க்கிறோமோ” அவ்வளவாய் நாம் ஒருவரிலொருவர் அந்த திவ்விய அன்பில் கிறிஸ்தவ அன்பில் அன்புகூர்ந்து, “நாம் சபை கூடி வந்து கிறிஸ்து இயேசுவுக்குள் அவரோடு கூட உன்னதங்களில் உட்காருவோம்,” ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருங்கள். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருக்கும்போது, இதனால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” அது உண்மை. நீங்கள் ஒற்றுமையாக இருங்கள்.
4686 சகோதரன் அல்லது சகோதரி யாராகிலும் தவறு சிறிது செய்துவிட்டனர் என்று நீங்கள் நினைத்தால், “கர்த்தாவே, கசப்பான வேர் முளைத்தெழும்ப அனுமதிக்க வேண்டாம். ஏனெனில் அது—அது அவரையும் பாதிக்கும், என் வாழ்க்கையிலிருந்தும் அது கிறிஸ்துவை எடுத்துப்போடும்.” என்று கூறுங்கள். தீய நோக்கம், பொறாமை, வெறுப்பு என்னும் விஷ அமிலங்கள் உங்களிடமிருந்து பரிசுத்த ஆவியை எடுத்துப் போட்டுவிடும். அது அவரை இந்த கூடாரத்திலிருந்து வெளியேறச் செய்துவிடும். அது தேவனுடைய ஆவியை விலகிப் போகச் செய்யும், அல்லது இங்கிருந்து அதை விரட்டிவிட்டு உங்களுடைய போதகரை புண்படுத்தும். அது எல்லாவற்றையும் செய்யும். புரிகிறதா? நீங்கள் அதைச் செய்ய வேண்டாம். 87 நீங்கள் மிக நெருக்கமாக ஒன்று சேர்ந்திருங்கள். இழுத்துக்…கொக்கியை எடுத்துக்கொள்ளுங்கள், அந்த சகோதரன் சாட்சி பகர்ந்ததுபோல, அன்றிரவு இங்குள்ள ஒரு ஊழியக்காரன், அந்தக் கொக்கியைப் பெற்றுக்கொண்டதைக் குறித்து, அதை ஒரு தரிசனத்தில் கண்டது போலவே. அப்படியே, அந்த கொக்கி தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தை மாட்டிக்கொள்ள உதவி செய்யும். அதை தரித்துக்கொண்டு, இறுக்கிக்கொண்டு, ஒருவருக்கொருவர் அருகில் வாருங்கள். எப்படியும், ஒருவரை ஒருவர் நேசியுங்கள். ஒருவரைக் குறித்து ஒருவர் நல்லதை மாத்திரம் பேசுங்கள், மற்றவரைக் குறித்த நல்ல காரியங்களை மாத்திரம் கூறுங்கள், அப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
4788 இப்பொழுது இந்தக் காலை, கர்த்தருடைய சித்தத்தினாலும், அவருடைய உதவியினாலும் கிருபையினாலும், இங்கே ஒரு கொத்து கேள்விகளை, நான் வைத்திருக்கிறேன், சரியாக கூறுவோமென்றால், அது வேதவாக்கியங்களைக் குறித்ததாகும். இப்பொழுது அதை நாம் அணுகும் முன்பு…ஒலிப்பதிவு கருவி இயங்கும் சத்தம் அங்கே கேட்கிறதென்று நான் நினைக்கிறேன். தேவனுடைய கிருபையினால், நாம் இப்பொழுது செய்தியைக் கொண்டுவரப் போகிறோம். முதலில், ஜெபம்.
4889 கர்த்தராகிய இயேசுவே, இந்த சபையாகிய சரீரத்தினிடத்தில், தேவனுடைய மாறாத கரத்தினால், அவர்களுடைய முற்றிலுமான, அந்த வார்த்தையினால், அவர்கள் ஒன்றாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று பேசி; “கொடிதான ஓநாய்கள் உள்ளே வரும்” என்று பவுல் தன்னுடைய மந்தையை எச்சரித்தது போல், அவர்களை எச்சரித்தேன். நீர் அப்பொழுது இருந்தது போலவே இன்றைக்கும் நீர் மாறாத தேவனாயிருக்கிறீர், அந்த சத்துருவும் அதே விதமாகவே இருக்கிறான். இந்த ஐக்கியமும் அன்பின் பிணைப்பும் இந்த மக்களிடையே எப்பொழுதுமே கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் நிலைத்திருப்பதாக. 90 கர்த்தாவே, நாங்கள் வார்த்தையை வாசிக்கையில், இந்தக் காலையில் உதவி செய்யும். பரிசுத்த ஆவியானவர் தாமே அதை வெளிப்படுத்தித் தந்து, சபையானது, “பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புவிக்கப்பட்ட அந்த விசுவாசத்தில்” முழுமையாக ஸ்திரப்படும்படியாக, அவர்களைப் பற்றிப் பிடித்துக்கொள்வதாக. மேலும், “ஆகாரத்தை சேமித்து வைத்துக் கொள்ளும்படி,” சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீர் அளித்த தரிசனம் போல, அருமையான, தரிசனத்தில் நான் கண்ட ஆரோக்கியமான காய்கறிகள், இங்கே இந்த கூடாரத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன, நாங்கள் இன்றைக்கு அதை ஒரு பீப்பாய் நிறைய அல்லது, ஒரு முழு நிறைவான ஒலி நாடாவாக பெற்றுக்கொள்வோமாக, (கர்த்தாவே, இதை அருளும்.): நாங்கள் ஜீவிக்கிற இந்த வேளையில் அது இயேசு கிறிஸ்துவை எங்களுக்கு வெளிப்படுத்தி, எங்களுக்கு பலத்தையும், எங்களுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிற பணிக்கான ஆவிக்குரிய பலத்தையும் அளிப்பதாக. பிதாவே, இதை அருளும்.
4991 உம்முடைய பிள்ளைகளாகிய, இவர்களை ஆசீர்வதியும். தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து அவர்கள் இன்று காலை இங்கு வந்துள்ளனர். ஒரு உஷ்ணமான, வியர்வையான காலையாயுள்ளது, ஆயினும் அதே சமயத்தில் இவைகள் அனைத்திலும், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை நாங்கள் உணருகிறோம். 92 நாங்கள் ஜான் வெஸ்லி, கால்வின், சாங்கி, நாக்ஸ், ஃபின்னி, இன்னும் அவர்களில் அநேகரைக் குறித்து நினைத்துப் பார்க்கிறோம், அவர்களுக்கு மின்விசிறி கூட இல்லாமல், ஜனங்கள் தங்கள் முகங்களில் வியர்வை வழிந்தோட, கூடங்களில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். தேகம் முழுவதும் மூடும் உடைகளை உடுத்திய, பெண்மணிகள், அங்கு கூட்டத்தாரிடத்தில் அமர்ந்துகொண்டு, வியர்வையினால் தங்கள் உடைகள் பூராவும் நனையுமட்டும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, தங்கள் ஆத்துமாக்களை போஷித்துக் கொண்டனர். இப்பொழுது, கர்த்தாவே, அவர்கள் எங்கேயோ அப்புறத்தில் இளைப்பாறிக்கொண்டு, கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று, நாங்கள் உணருகிறோம்.
5093 பிதாவே, எங்களை ஒன்றாக வைத்தருளும். பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு வழிகாட்டி வழி நடத்துவாராக. உமக்காக ஊழியம் செய்ய நீண்ட ஆயுளை எங்களுக்குத் தாரும். ஒவ்வொரு இருதயத்திற்கும் செல்லும்படியாக, உம்முடைய வார்த்தையிலிருந்து நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அந்த மகத்தான செய்தியை இன்று காலை எங்களுக்குத் தந்தருள்வீராக. கர்த்தாவே, இந்த உதடுகளைப் பேச செய்யும், சத்தியத்தை பேசச் செய்யும். அதை கேட்கும் ஒவ்வொரு இருதயமும் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கென வளம் பொருந்தியதாய் இருப்பதாக, அது நித்திய ஜீவனின் மகத்தான மரங்களாக வளர்ந்து, பிரகாசிக்கிற ஒளியாகவும், எல்லா மனிதராலும் வாசிக்கப்படுகின்ற நிரூபங்களாகவும் அமைந்து; மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து எங்கள் மத்தியில் இருக்கும் இயேசு கிறிஸ்துவை மற்றவர்கள் அறிந்துகொள்ளவார்களாக. எங்களை மிகுந்த அன்பினாலும் ஆவியின் கனிகளினாலும் நிறைத்து இந்த மகத்தான நிகழ்விலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும், கிறிஸ்துவின் ஜீவன் எங்களுக்குள் இன்னமும் ஜீவித்துக் கொண்டிருப்பதின் பலனை மற்ற மனிதரும், ஸ்திரீகளும், பையன்களும் பெண்பிள்ளைகளும் காணும்படி செய்வீராக. பிதாவே, உம்மை கனப்படுத்தும்படியாக, இதை அருள்வீராக. நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
5194 இப்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஒரு சிலவற்றை நான் வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் உங்களுடைய காகிதங்களையும் எழுதுகோல்களையும் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும், இப்பொழுது ஆயத்தமாக வைத்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். 95 மேலும், சகோதரன் நெவில், நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்கிறீர்கள். என் கோட்டை நான் கழற்றிவிடப்போகிறேன். அது… [சகோதரன் நெவில், “பரவாயில்லை. ஆமென்” என்று கூறுகிறார்.—ஆசி.] இது… என் கோட்டை நான் கழற்றுவதற்காக என்னை மன்னிக்கவும், ஆனால் இது—இது இங்கு மிகவும் உஷ்ணமாக இருக்கிறது.
5296 இப்பொழுது நீங்கள் கொலோசெயர் நிரூபத்திற்கு, கொலோசெயர் 1-ம் அதிகாரத்திற்கு திருப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பின்னர் நாம் இதை வாசிக்கையில்,…துவங்கி நீங்கள் வீட்டிற்கு சென்று, அந்த கொலோசெயர் முழு அதிகாரத்தையும் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் இன்று காலை, என்னோடு, 15-ம் வசனம் முதல், 29-ம் வசனம், முடிய, நீங்கள் வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 97 இப்பொழுது உங்களால் முடிந்த அளவு பொறுமையாயிருங்கள், ஏனென்றால் நான் இதில் இங்கே அதை உணர்கிறேன், தேவன் எனக்கு உதவிசெய்வாரானால், இத்தனை நாட்களாக நான் கூடாரத்தில் பேசி வந்துள்ள மற்ற எல்லா காரியங்களையும் உங்களுடைய சிந்தைக்கு கொண்டு வந்து வெளிப்படுத்துவேன்; நான் சொன்னதை ஏன் சொன்னேன், நான் செய்ததை ஏன் செய்தேன் என்பது வெளிப்படும். இதனால் தான். 98 இப்பொழுது 15-ம் வசனத்திலிருந்து. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங் களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர். எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். சகல பரிபூரணமும்—சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,…அவருக்குப் பிரியமாயிற்று. 99 நான் அதன் பேரில் மறுபடியும் சற்று வலியுறுத்தி கூற விரும்புகிறேன், இந்த 19-ம் வசனம். சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று, அந்த ஒப்புரவாக்குதல் எங்கு சென்றது என்பதைக் கவனியுங்கள். முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன். இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில்…குறைவானதை…அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன். ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு, உங்கள்பொருட்டுத் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன். 100 நானும் அந்த வசனத்தை மறுபடியும் படிக்க விரும்புகிறேன். ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு, புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் நாங்கள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு அவரையே நாங்கள் அறிவித்து எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
53101 இப்பொழுது இதற்கான ஒரு பொருளை, அங்கிருந்து தெரிந்துகொண்டு, வேதம் முழுவதிலும் அதை ஆதாரப்படுத்த விரும்புகிறேன், ஆனால் கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட தேவரகசியமாய் இருக்கிறார் : என்று இதற்கு தலைப்பிட விரும்புகிறேன். கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட தேவரகசியமாய் இருக்கிறாரே! இப்பொழுது, நாம் யாவரும் ஒன்று சேர்ந்து படித்து இந்த ஐக்கியத்தில் ஒன்று சேரும்படியாக, நான் இதை ஒரு ஞாயிறு பள்ளி பாடமாகவே எடுத்துக்கொண்டேன்.
54102 இப்பொழுது, தேவனுடைய மறைவான ரகசியத்தை, உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் உடையவராய் இருந்தார். இப்பொழுது, ஆதியிலேயே தேவனுடைய சிந்தையின் பாகத்தில் அவர் நிறைவேற்றப்போவதாக இருந்த ஒரு காரியத்தை முயற்சித்துக்கொண்டிருந்தார், அப்படிச் செய்வதில் அவருக்கு ஒரு நோக்கம் உண்டாயிருந்தது, அதாவது தம்மை வெளிப்படுத்த வேண்டுமென்றிருந்தார். ஏனென்றால், முதலில், ஒரு சந்திரன், நட்சத்திரம், அணு, மூலக்கூறு, அல்லது எந்த காரியமும் இல்லாதிருந்தது. அப்பொழுதே அவர் தேவனாயிருந்தார். ஆனால் அவர் அந்த நேரத்தில் சரியாக தேவனாகவே இருக்கவில்லை, ஏனென்றால் தேவன் என்றால் “ஆராதனைக்குரியவர்” என்பதாகும், ஆனால் அவரைத் தொழுதுகொள்ள அப்பொழுது ஒன்றுமேயில்லாதிருந்து. 103 எனவே, அவருடைய மகத்தான சிந்தையில், இந்த தன்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். அவருக்குள் அன்பு இருந்தது; அவருக்குள் பிதாவாக இருக்க வேண்டும் என்பது இருந்தது; அவருக்குள் குமாரனாய் இருக்க வேண்டும் என்பது இருந்தது; அவருக்குள் ஒரு இரட்சகராக இருக்க வேண்டும் என்பது இருந்தது; அவருக்குள் ஒரு சுகம் அளிப்பவராக இருக்க வேண்டும் என்பது இருந்தது. ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டு நாம் காண்கிற இந்த மகத்தான தன்மைகள் யாவும், அவைகள் தேவனுக்குள் இருந்தன.
55104 எனவே, என்னுடைய கருத்து, அவர் முதலாவதாக தேவ தூதர்களை சிருஷ்டித்தார். அப்பொழுது அவர்கள் அவரைத் தொழுதுகொண்டனர், அதுவே அவரை “தேவனாக்கியது.” அவர் அங்கிருந்தே தொடங்கினார். முந்தைய செய்திகளில் நான் அதை விவரிக்க முயற்சித்து, அதை விளக்கியுள்ளேன். இப்பொழுது, அதன் பின்னர், தேவதூதர்கள் அவரை ஆராதிக்கத் துவங்கினபோது, அது பூமியிலே ஒரு மூலக்கூறு கூட இல்லாதிருப்பதற்கு முன்பாக இருந்தது. ஒன்றுமே இல்லாதிருந்தது. அது முழுவதுமே அந்தகாரமாய் இருந்தது. சூரியனோ, அல்லது சந்திரனோ, நட்சத்திரங்களோ, ஒன்றுமே இல்லாதிருந்தது, அப்பொழுது அவர் தேவனாய் இருந்தார். அவர் யோபிடம், “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய், பாருங்கள், அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே? பார்த்தாயா? இப்பொழுது, நீ எங்கேயிருந்தாய்?” என்று கேட்டது போன்றே. புரிகிறதா? பூமி தோன்றுவதற்கு முன்பே அது நிகழ்ந்தது.
56105 இப்பொழுது, தேவன் ஒரு நோக்கத்தையும், ஒரு மறைக்கப்பட்ட ரகசியத்தையும் உடையவராய் இருந்தார். அதைக் தான் இன்று காலை நான் சபையிடம் பேச விரும்புகிறேன், இவ்வுலகம் தோன்றுவதற்கு முன்னமே அவருடைய சிந்தையில் இருந்த, மறைக்கப்பட்டிருந்த தேவ ரகசியத்தைக் குறித்தும், அது எப்படி நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இம்மணி நேரம் வரை படிப்படியாக வெளிப்பட்டுக் கொண்டு வந்தது என்பதைக் குறித்துமே. புரிகிறதா? ஆகையால் அதன்பின்னர் என்ன நடந்துள்ளது என்பதை, தொடர்ந்து, நீங்கள் தெளிவாக புரிந்து கொள்வீர்கள் என்றே நான் நினைக்கிறேன், நீங்கள் பாருங்கள்.
57106 தேவனுடைய மகத்தான ரகசியம், எப்படி, அது ஒரு ரகசியமாக இருக்கிறது. அவர் அதை ஒரு ரகசியமாக வைத்தார். அதைக் குறித்து யாருமே ஒன்றும் அறிந்திருக்கவில்லை. தேவதூதர்களும் கூட அதை விளங்கிக் கொள்ளவில்லை. பாருங்கள், அவர் அதை வெளிப்படுத்தவில்லை. அதனால்தான், நம்முடைய ஏழாவது இரகசியத்தில், ஏழாம் முத்திரை திறக்கப்பட்டபோது, பரலோகத்தில் அமைதல் உண்டாயிற்று. இயேசு, அவர் பூமியில் இருந்தபோது, அவர் எப்பொழுது வருவார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள விரும்பினர். அவரோ அதற்கு, “அதுவல்ல…அது எப்பொழுது நிகழப்போகிறது என்பதை குமாரனும் கூட அறியார்” என்றார். பாருங்கள், தேவன் இவை எல்லாவற்றையும் தமக்குள்ளே வைத்திருக்கிறார். அது ஒரு ரகசியமாய் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் பரலோகத்தில் அரை மணிநேரம் அமைதல் உண்டாயிற்று, ஏழு இடிகள் சத்தமிட்டு முழங்கினபோது, அதை எழுத வேண்டாமென்று யோவான் தடை செய்யப்பட்டான், பாருங்கள், கர்த்தருடைய வருகை. அவர் எவ்விதமாக வருவார், எப்பொழுது அவர் வருவார் என்கின்ற, ஒரு காரியத்தை மாத்திரமே அவர் இன்னமாக வெளிப்படுத்தவில்லை. அவர் வெளிப்படுத்தாமல் இருப்பது ஒரு நல்ல காரியமாகும். வெளிப்படவில்லையே.
58107 அவர் வேதாகமத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மாதிரியிலும் காண்பித்திருக்கிறார் அதாவது வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகையால், முழு வேதாகமமும் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய ரகசியத்தின் வெளிப்பாடாய் இருக்கிறது. ஹும்! முழு வேதாகமுமே தேவன் கொண்டிருந்த ஒரே குறிக்கோளின் வெளிப்படுத்துதலாய் இருக்கிறது, ஒரே நோக்கத்திலேயே அவர் முழு வேதாகமத்திலும் வெளிப்படுத்திக் காண்பிக்க விரும்பினார். வேதாகமத்தில் மாதிரியாக இருந்து வந்துள்ள எல்லா விசுவாசிகளின் செயல்களுமே, தேவனுடைய மகத்தான குறிக்கோள் என்னவாயிருந்தன என்பதை வெளிப்படுத்துகின்றன, இப்பொழுது இந்த கடைசி நாட்களில் அவர் அதை வெளிப்படுத்தி அதைக் காண்பிக்கிறார். தேவனுடைய உதவியினால், கர்த்தர் தம்முடைய சிந்தையில் இவ்வளவு காலமாக எதைக் கொண்டிருந்தார் என்பதையும், அதை வெளிப்படுத்தியிருக்கிறதையும், நாம் இங்கே இந்த காலையில் அதைப் புரிந்துகொள்வோம். 108 ஆகையால், அதன் மகத்தான பொருள் என்னவாயிருந்தது என்பதை அறிந்துகொள்ளும்படியாக நீங்கள் புரிந்துகொண்டு, அதன் பின்னர் அதை ஜனங்களுக்கு கொண்டு வர முயற்சிக்கலாம். புரிகிறதா? அப்பொழுது நீங்கள்…தேவன் அதை எனக்கு வெளிப்படுத்தியிருக்கிற பிரகாரமாக நான் அதை விளக்கிக் கூற முயற்சிக்கும்படியான விவரங்களுக்குள் செல்லவில்லை.
59109 இப்பொழுது, நீங்கள் இதை குறித்துக்கொள்ள விரும்பினால் நலமாயிருக்கும். நான் அநேக இடங்களிலிருந்து வாசிக்க விரும்பி அவைகளை எழுதி வைத்துள்ளேன். இப்பொழுது பரிசுத்த லூக்காவின் புத்தகத்தில், பரிசுத்த லூக்கா 24-ம் அதிகாரம், நாம் இதில் கண்டறிகிறோம்… இதில் இரண்டு சீஷர்கள் எம்மாவூருக்குச் செல்லும் வழியில் இருக்கின்றனர். இயேசு அவருடைய உயிர்த்தெழுதலுக்கு பிறகு, அவர் வெளியே வந்தபோது, அவர்கள் எம்மாவூருக்குச் செல்லும் தங்களுடைய—தங்களுடைய வழியில் இருந்தபோது, அவருடைய—அவருடைய மரணத்தைக் குறித்துப் பேசி, அழுதுகொண்டும், பேசிக்கொண்டும், சிந்தித்துக் கொண்டும் வழிநடக தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர், எப்படியாய் அவர் அவர்கள் நினைத்திருந்த எண்ணத்திற்கு மாறாக காரணமின்றி பாடுபட்டதைக் கண்டனர்; அவர்கள் தங்களுடைய கர்த்தரை கொண்டு சென்று அவரை சிலுவையில் அறைந்தனர். மேலும்—மேலும் அவர்கள் அங்கே வழி நெடுக, அழுதுகொண்டே சென்றனர். 110 அவர் சாலையோரத்திலிருந்து வந்து அவர்களிடம் இயேசுவைக் குறித்து பேசத் தொடங்கினார். அவர், “ஓ, புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே. தீர்க்கதரிசிகளும், சங்கீதங்களும் சொன்னயாவையும் நீங்கள் அறிந்திருக்கவில்லையா…” என்று கேட்டார். பாருங்கள், அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இந்த அப்போஸ்தலர்களோடும், தீர்க்கதரிசிகள் யாவரோடும், சங்கீதங்கள் யாவற்றோடும், மற்ற ஒவ்வொரு காரியத்திலும், அவர் இருந்ததை, வெளிப்படுத்தி, தம்மை அடையாளம் காண்பித்தார். புரிகிறதா?
60111 இப்பொழுது இந்த காலை நான் ஒருபோதும் பிரசிங்கக்காததற்கு காரணம் என்னவென்றால், போதிப்பதில், ஒரு பாட பொருளை எடுத்துக்கொண்டு அதை விளக்காமல் விட்டுவிட்டு செல்வதை காட்டிலும் இதில் நாம் மேலாக புரிந்துகொள்வோம் என்று நான் எண்ணினேன். எனவே நாம் அதை போதிப்போம்.
61112 இப்பொழுது, அவர் எல்லா சங்கீதங்களிலும் எல்லா தீர்க்கதரிசிகளிடத்திலும் அவரைக் குறித்து பேசினதை கூறிக்கொண்டிருந்தார். பாருங்கள், அங்கே, பழைய ஏற்பாடு முழுவதும், புதிய ஏற்பாடு முழுவதும், சங்கீதங்கள் முழுவதும், பாடின, பாடப்பட்ட பாடல்கள் அவரைக் குறித்து பாடப்பட்டன என்பதை காண்பிக்கின்றது. 113 22-ம் சங்கீதத்தை எடுத்துக்கொண்டு, அதைப் பாடி, சிலுவையில் அறையப்பட்ட காலையோடு அதை ஒப்பிட்டுப் பாருங்கள். பாருங்கள், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என் எலும்புகளையெல்லாம் அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.” அதே சமயத்தில் அந்த காரியங்கள் யாவும் அங்கு இருக்க, அவர்கள் அங்கே ஆலயத்தில் அந்த சங்கீதத்தை பாடிக்கொண்டு, அதற்குரியவரையே சிலுவையில் அறைந்து கொண்டிருந்தனர். புரிகிறதா? பாருங்கள், அந்த மகத்தான மதத்தலைவர்கள் அந்த மகத்தான மனிதர் அந்த மகத்தான ஆசிரியர்கள் அதே சமயத்தில் அவர்கள் குருடாகப்பட்டிருந்தனர், தீர்க்கதரிசிகள் கூறினவைகளைப் படித்துக் கொண்டும் அந்த பாடல்களைப் பாடிக் கொண்டுமிருந்து, அதே சமயத்தில் அவர்கள் என்ன செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளதோ அந்த குற்றத்தை அவர்கள் புரிந்தனர். அதே காரியமானது இக்காலை சம்பவித்துக் கொண்டடிருக்கிறதே!
62114 இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், காரணம்…கடிகாரம் என்ன மணி காட்டுகிறது என்று நான் கவனிக்கப்போகிறதில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். புரிகிறதா? நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் என்று, நான் விரும்புகிறேன். புரிகிறதா? [சபையோர் களிகூர்ந்து, “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] 115 எனவே அடிப்படையிலேயே, ஆதியிலே தேவன் தம்முடைய சிந்தையில் கொண்டிருந்த சிந்தனையை, நீங்கள் இங்கே புரிந்துகொள்ள முடியும், அவர் அதை அந்த படித்த மேதைகளுக்கு மறைத்துவிட்டிருந்தார். மேலும்…ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை, ஒரு குறிப்பிட்ட முன்குறிக்கப்பட்ட எண்ணிக்கைக்கொண்ட, முன்குறிக்கப்பட்ட ஜனங்கள், அவர்கள் மாத்திரமே அதைக் கேட்டனர். இப்பொழுது தீர்க்கதரிசிகளின் காலம் முதற்கொண்டு நீங்கள் வேதத்தில் ஆராய்ந்து பார்த்து, அது அதே காரியமாகத்தான் இருந்ததல்லவா என்பதை அறிந்துகொள்ளுங்கள். புரிகிறதா? 116 இப்பொழுது, இயேசு இங்கு தீர்க்கதரிசிகள் உரைத்தவைகளையும் சங்கீதங்களையும் குறிப்பிடுகிறார், அவர்கள் யாவரும் அவரைக் குறித்தே உரைத்திருந்தனர் என்று அவர் கூறினார். புரிகிறதா? இங்கே இந்த யூத போதகர்களும், ரபீக்களும், நியாயசாஸ்திரிகளும், பேராசிரியர்களும், அவர்கள் முன்பு செய்திருந்ததைப் போன்று சரியாக அதையே செய்தனர்.
63117 இப்பொழுது கவனியுங்கள், மீண்டும், அவர், “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், என்னைக் குறித்து சாட்சிக் கொடுக்கிறவைகளும் அவைகளே” என்றார். வேதவாக்கியங்களை, வேதவாக்கியங்களை, முழு வேத வாக்கியங்களையும் ஆராய்ந்து பாருங்கள். இப்பொழுது நான் என்ன செய்ய முயன்றுகொண்டிருக்கிறேன்? இந்த வேதம் தான் சரியானது என்பதை நான் உங்களுக்கு காண்பிக்க வேண்டும்.
64118 அன்றொரு நாள், ஒரு மருத்துவமனை அறையில் நின்றுகொண்டு, ஸ்தாபனங்களை குறித்து விளக்கிக் கூற என்னிடம் கேட்டிருந்த ஒரு சகோதரியினிடத்தில், நாம் ஏன் ஸ்தாபனங்களுக்கு, சில ஸ்தாபன ஜனங்களுக்கு விரோதமாக இருந்தோம் என்று பேசிக்கொண்டிருந்தேன். 119 நீங்கள் பாருங்கள், அது வார்த்தைக்கு திரும்பி வரவேண்டும், ஏனென்றால் வார்த்தை தேவனாய் இருக்கிறது. புரிகிறதா? இயேசுவும் இங்கு அதையே, வார்த்தை அவருக்குள் இருக்கிறது என்பதை பிரகடனம் செய்கிறார். வேதவாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரணானவைகளைக் கூறும்படி நீங்கள் செய்ய முடியாது. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. மேலும், அந்த வார்த்தை, மாம்சமானதே!” புரிகிறதா?
65120 இங்கு அவர், “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன. அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே,” அது உண்மை, “அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன. நானும் அவைகளைக் குறித்து சாட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் செய்வேன் என்று வாக்களித்துள்ள கிரியைகளை நான் செய்யவில்லையென்றால், அப்பொழுது எனக்கு செவி கொடுக்காதீர்கள். ஆனால் நான் அந்த கிரியைகளை செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாமற்போனாலும், அந்தக் கிரியைகளையாவது விசுவாசியுங்கள், ஏனெனில் நான் வார்த்தையென்று அவை சாட்சி கொடுக்கின்றன” என்கிறார். ஓ, இதைக்காட்டிலும் வேறொன்றும் அதிக வெளிப்படையாய் இருக்க முடியாது. புரிகிறதா? சரி. இப்பொழுது, “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்.” மோசேயும், நியாயப்பிரமாணங்களும், தீர்க்கதரிசிகளும், சங்கீதங்களும், அவரைக் குறித்தே சாட்சி கொடுக்கின்றனவென்றும் அவர் கூறினார். மேலும், மீண்டும், வேத வாக்கியங்கள் தம்மைக் குறித்தே சாட்சி கொடுக்கின்றன என்று அவர் கூறினார்.
66121 அவர் முழு வேதாகமத்தின் முக்கிய கருப்பொருளாக இருக்கிறார். நீங்கள் வேதாகமத்தை படிக்கும்போது, அதனுடைய ஒவ்வொரு வசனத்திலும் கிறிஸ்துவை காணவில்லையென்றால், அப்பொழுது திரும்பிச் சென்று அதை மீண்டும் படியுங்கள். புரிகிறதா? வேதாகமத்தில் ஒவ்வொரு வசனத்திலும் நீங்கள் கிறிஸ்துவை காண முடியாவிட்டால், அப்பொழுது நீங்கள் அதை மீண்டும் படியுங்கள், ஏனென்றால் நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை தவற விட்டுவிட்டீர்கள். வேதாகமம் கிறிஸ்துவாகும். அவரே வார்த்தை. நீங்கள், “ஆதியிலே தேவன் சிருஷ்டித்தார்” என்று படிக்கும்போது, அங்கு கிறிஸ்து இருக்கிறார். புரிகிறதா? ஒவ்வொரு…அதில் தொடங்கி, வெளிப்படுத்தின விசேஷப் புஸ்தகத்தில், “ஆமென்” என்று முடியும் வரை உள்ள ஒவ்வொரு வார்த்தையும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கொடுக்கிறது. 122 அதனால் தான் தானியலின் இரண்டாம் புத்தகம், மற்றும் மக்காபிகளின் புத்தகம் என்று அவர்கள் அழைக்கிறதான பின்னர் சேர்க்கப்பட்ட இந்தப் புத்தகங்கள், பாவ விமோசன ஸ்தலம் மற்றும் அது போன்றவை, பாருங்கள், அவை வேதத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. புரிகிறதா? அது வேதத்தின் இதர பாகங்களுடன் இணைவதில்லை. பாவ விமோசன ஸ்தலத்தைப் பொருத்துவதற்கு வேதத்தில் எங்குமே இடமில்லை. பரிசுத்தவான்களுக்கு ஜெபங்களை ஏறெடுத்தல், மற்ற காரியங்களுக்கு இடமே இல்லை. அதற்கான இடமே அங்கு இல்லை. ஒரு ஸ்தாபனத்திற்கான இடமே இல்லை. வேதத்திற்குப் புறம்பாயுள்ள கோட்பாடுகளுக்கு அதில் இடமில்லை. புரிகிறதா? எனவே நீங்கள் அந்த காரியங்களை காணும் போது, அவைகள்—அவைகள் காட்சிக்குள் வருகிறதில்லை. அந்த காரணத்தினால் தான் ஜனங்கள் அவைகளை சேர்த்துக்கொண்டு, ஒரு புதிரான படங்களை சரியான இடங்களில் வெட்டிப் பொருத்தும் செயலில் தங்களை—தங்களை—தங்களை குழப்பிக்கொண்டனர். புரிகிறதா? “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறா தவராயிருக்கிறார்,” என்று அவர்களால் அதை சரியாக வைக்க முடியாது.
67123 ஆனால், அந்த காரியத்தை நாம் ஒன்றுசேர்ந்து சரியான இடத்தில் அமைத்தோமென்றால், விழுந்துபோவதில் மற்றும் மறு பிறப்பை குறித்த முழு காட்சியும் கிடைக்கும். சிருஷ்டிபின் முழு காட்சியும், தேவனுடைய முழு திட்டமும் சரியாக இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டது. ஆமென்! ஒவ்வொரு சிறிய வளைவு மற்றும் மூலையிலும் ஒன்றாக அமைக்கப்பட்ட முழு படமும் அதுதான். அதுபோல இருக்கிறது…இதனால், நான் தேவ தூஷணம் சொல்வதாக நினைக்க வேண்டாம், இது ஒரு புதிரான படத்தைப் சரியான இடங்களில் பொருத்தி சரியான படத்தைப் பெறுவது போன்றது. 124 அந்த காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் எதிரும் புதிருமாக காணப்படுகின்ற காட்சிகளைப் பெற்றிருக்கிறோம். “நாங்கள் விசுவாசிகள்” என்று கூறி, மரத்தின் மேல் பசு புல் மேய்வது போன்ற காட்சியைப் பெற்றுள்ளனர். அது சரியாக இராது. அப்பொழுது அவர்கள், “ஆம், அவர் ஒவ்வொரு வழியிலும், ஆனால் ஒரு குறிப்பிட்ட… அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், ஆனால் ஒரு குறிப்பிட்ட காரியத்தில்” என்கின்றனர். புரிகிறதா? அப்பொழுது நீங்கள் உங்களுடைய படத்தை பாழாக்கிவிடுகிறீர்கள்.
68125 அவர் மாறாதவராய் இருக்கிறார் என்று வேதம் கூறியுள்றதே! பரிசுத்த யோவான் 5, இல்லை பரிசுத்த யோவான் 14:12-ல், அவர், “அவர்,” அவன், யாராயிருந்தாலும், “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று கூறியுள்ளார். “பாருங்கள், அது மற்றொரு காலத்திற்கானதாக இருந்தது.” 126 அப்படியானால் நீங்கள் மீண்டும் உங்களுடைய தவறான படத்தை பெற்றுள்ளீர்கள். ஒரு மனிதன் பாலைவனத்தில் மீன் பிடிப்பது போன்ற படத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள், மீனுக்காக, பாலைவனத்திலுள்ள சூடான மண்ணில் மீன் இருக்காது. புரிகிறதா? பாருங்கள், மீன்கள் ஏராளமாயுள்ள, கலிலேயாவிலே, அவர் மீன் பிடிப்பது போன்ற படத்திற்கு நீங்கள் மீண்டும் வர வேண்டும், நீங்கள் பாருங்கள். புரிகிறதா? 127 நீங்கள்—நீங்கள் படத்தை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். அது தேவனுடைய மகத்தான படம். ஒரே ஒரு வழியில் மாத்திரமே நீங்கள் அதை காணலாம், அது நீங்கள் இயேசு கிறிஸ்துவை காணும்போதேயாகும். அங்குதான் வேதாகமம் முழுவதுமே உள்ளது. அவர்தான் வேதாகமத்தின் முக்கிய கருப்பொருளாக உள்ளார்.
69128 இப்பொழுது இங்கே இத்தகைய பொருளை போதகர் ஒருவர் பிரசங்கத்துக்காக எடுத்துக்கொண்டால், அவர் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது. அவர் தொடர்ந்து பிரசங்கித்துக்கொண்டே செல்ல வேண்டும் என்று விரும்புவதுபோன்று காணப்படுவார், ஆனால் நாம் போதித்துக் கொண்டிருக்கிற பாகத்துக்கு நீங்கள் திரும்பி வர வேண்டும். 129 அவர் வேதாகமத்தின் முக்கிய கருப்பொருளாய் இருக்கிறார். அவர் தீர்க்கதரிசிகளுக்குள் இருந்தார். அவர் சங்கீதங்களில் இருந்தார். அவர் வேதாகமத்தின் சரித்திரத்தில் இருந்தார். வேதாகமம் ஒரு தீர்க்கதரிசன புத்தகமாகும். அது ஒரு சரித்திர புத்தகமாகும். அது ஒரு அன்பின் புத்தகம். அது பாடல்களைக் கொண்ட ஒரு புத்தகம். அது ஜீவனுள்ள ஒரு புத்தகம். அதில் நீங்கள் கிறிஸ்துவைக் கண்டடைகிறீர்கள். அவர் தீர்க்கதரிசிகளில் இருந்தார். அவர் சங்கீதங்களில் இருந்தார். அவர் சரித்திரத்தில் இருந்தார். வேதத்தில் காணப்படும், இனி நிகழ விருக்கும் காரியங்களிலும் கூட, அவர் இருக்கிறார். எனவே, அவர் முன்பும் இருந்தார், பின்பும் இருக்கிறார். அப்படியானால் அது அவரை என்னவாக ஆக்குகிறது? “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.”
70130 நீங்கள் அங்கு ஏதோ ஒரு காரியத்தை சேர்த்துக்கொள்கிறீர்கள், அது அவரை “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக்குகிறதில்லை.” சகோதரன் லீ, நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? நீங்கள் அங்கே ஒரு மோசமான படத்தையே பெற்றுக்கொண்டீர்கள். ஏனென்றால், அவரே சரித்திரமாக இருந்தார், பாருங்கள், அவரே தீர்க்கதரிசி. அவரே சங்கீதங்கள். அவரே எல்லாமுமாயிருக்கிறார். அவரை எல்லாமுமாக, மாறாதவராக்க முடியுவில்லையென்றால், அங்கே, உங்களுடைய படம் எப்படிப்பட்டதாயிருக்கும்? உங்களுக்கு அது புரிகின்றதா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சரி.
71131 அவரே அந்த காரியமாய் இருக்கிறாரே! அவர் தீர்க்கதரிசிகளாக இருந்தார். அவரே அவர்களுக்குள் இருந்தார். அவரே சங்கீதங்களில் இருந்தார். அவரே சரித்திரத்தில் இருந்தார், அவரே வரவிருக்கின்ற காரியங்களில், “நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்.” எபிரெயர் 13:8, நீங்கள் அதை குறித்துக் கொண்டிருந்தால் நலமாயிருக்கும். அப்படியானால், அவர் கருப்பொருளாக இருக்க வேண்டும், அவர் என்னவாக இருக்க வேண்டுமென்றால், அவர் அவ்வாறு இருக்க வேண்டும். நாம் அதை விசுவாசிக்கிறோம், நாம் விசுவாசிக்கிறதில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அப்படியானால், அவர் அதுவாக இருந்தால், அப்பொழுது அவர் நம்முடைய பேசுதலின், நம்முடைய சிந்தனையின், நம்முடைய பாடுதலின், நம்முடைய நடத்தையின் கருப்பொருளாக இருக்க வேண்டும். [“ஆமென்.”] அவர் நம்முடைய ஜீவியத்தின் முக்கிய கருப்பொருளாக இருக்க வேண்டும். அவர் வேதாகமத்தின் முக்கிய கருப்பொருளாக இருக்கிறாரென்றால், நமக்குள் வேதாகமம் இருக்கையில், அப்பொழுது அவர் நாம் செய்கிற, கூறுகிற அல்லது சிந்திக்கிற ஒவ்வொரு காரியத்தின் முக்கிய கருப்பொருளாக இருக்க வேண்டும்; கிறிஸ்துவாய் இருக்க வேண்டும். அது சரியா? [“ஆமென்.”] சரி.
72132 நாம் இதைக் குறித்து சிந்திக்கையில், அவர்—நமக்கு “எல்லாவற்றிற்கும்” தலையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். கொலோசெயரில் அப்படித்தான் இங்கு கூறப்பட்டது. அவர் நமக்கு, “எல்லாவற்றிற்கும் தலையாக” இருக்கிறார். ஏனென்றால் அவர் உண்டாக்கப்பட்ட…நமக்கான, நாம் கருதப்பட்டிருக்கிற “எல்லா காரியங்களும்.” நீங்களோ, “பாவிகளைக் குறித்தென்ன?” என்று கேட்கலாம். பாவியானவன் அதை ஏற்றுக் கொள்ளாமற்போனால், அப்பொழுது அவர் அவனுக்கு நியாயாதிபதியாக்கப்பட்டார். அதை ஏற்றுக்கொள்ளும் விசுவாசிக்கு அவர் மகிமையானவராக்கப்பட்டார். எனவே அங்கே, காரியமென்னவெனில், “சகலமும் அவரைக் கொண்டும் அவருக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது.” 133 பகலின் மகிமையை வெளிப்படுத்த இரவு தேவையாயுள்ளது. கனமுள்ள பாண்டங்களின் மேல் அவர் வைத்துள்ள அன்பையும் கவனத்தையும் வெளிப்படுத்த கனவீனமான பாண்டம் அவசியமாயுள்ளது. ஒழுக்கமுள்ள ஒரு அசலான பெண்ணின் நற்பண்புகளை வெளிப்படுத்த, ஒழுக்கங்கெட்ட ஆடைகளையணிந்து, தனது ஒழுக்கங்களை விற்றுப்போட்ட ஒழுக்கமற்ற பெண் ஒருத்தி அவசியமாயுள்ளது. புரிகிறதா? ஒரு உண்மையான விசுவாசி, உண்மையான கிறிஸ்தவன் ஒருவனின் உத்தமத்தை வெளிப்படுத்த, தந்திரமும் கள்ள புத்தியும் கொண்டவன் தேவையாயிருக்கின்றது. ஒரு விசுவாசி, அவன் யார் என்று காண்பிக்க, ஒரு மாய்மாலக்காரன் அவசியமாயுள்ளது.
73134 எனவே, “சகலமும் அவரைக்கொண்டு சிருஷ்டிக்கப்பட்டது.” சகலத்தையும் அவர் உண்டாக்கியது முதற்கொண்டு…நம் எல்லோருக்காகவும், உண்டாக்கிய, சகலமும் அவரைக் கொண்டு உண்டாக்கப்பட்டது. அப்படியானால், அது உண்மையாய் இருக்கிறபடியால், நாம் நம்முடைய அடையாளங்கண்டு கொள்ளுதலை அவருடன் (செய்ய வேண்டும்). நாம் நம்மையே, அவருடனே அடையாளங்கண்டு கொள்ளப்பட வேண்டும், ஏனெனில் அவர் தம்மைத்தாமே நம்முடன் அடையாளங்கண்டு கொண்டார். நாம் அவரோடு அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும். எவ்விதமாக? அவருக்காக வாழ்வதன் மூலம்; அவருக்காக வாழ்வதாக கூறிக் கொள்வதனால் அல்ல. 135 அநேக ஜனங்கள் ஒரு அறிக்கையை செய்கிறார்கள்…அது இப்பொழுது இந்த இடத்திற்கு வந்துவிட்டது என்று நான் கூறுகிறேன் என்கிறார்கள். நீங்கள் கிறிஸ்தவரா? என்று கேட்டால், “நான் மெதோடிஸ்டு” என்கின்றனர். பாருங்கள், நீங்கள் ஒரு கிறிஸ்தவராக அறியப்படுவதற்கு, அது வெகு தூரமாய் இருக்கிறது. பாருங்கள், மெதோடிஸ்டு ஒருவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனித்துப் பாருங்கள். “நான் பாப்டிஸ்டு.” சரி, பாப்டிஸ்டு ஒருவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனித்து பாருங்கள். “நான் கத்தோலிக்கன்.” அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதைக் கவனியுங்கள். புரிகிறதா?
74136 ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கக் கூடிய ஒரே ஒரு வழி கிறிஸ்து தம்மை உங்களுக்குள் அடையாளங் கண்டுகொள்ளுதலேயாகும். நாம் எப்படியாய் சிலவற்றை, அங்கே ஒரு கடுமையானதையும் பெற்றுள்ளோமே! ஒலிநாடாவில் கேட்கிற ஒவ்வொருவரும் கூட, அதை புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? புரிகிறதா? புரிகிறதா? நீங்கள், “நான் பெந்தெகொஸ்தேயினன்” என்கிறீர்களே. அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை.
75137 அது கிறிஸ்து உன்னில் அடையாளங்கண்டு கொள்ளப்படுதலே. அப்பொழுதே அவர் உன்னை அடையாளங்கண்டு கொண்டிருக்கிறார். “நான் அந்நிய பாஷையில் பேசினேன்” என்று கூறலாம். பிசாசுகளும் கூட பேசுகின்றன. 138 “நான் சத்தமிட்டேன்.” முகம்மதியர்கள், பௌத்தர்கள் மற்ற ஒவ்வொரு காரியமும் சத்தமிடுகின்றன. இந்தியர்களும் பாம்பு நடனத்திலே கூச்சலிடுகிறார்கள். புரிகிறதா? நிச்சயமாக. அவர்கள் எல்லாருமே அவ்விதம் செய்கின்றனர். வழிபாட்டு முறைகள், குல மரபு கோட்பாடுகள், மற்ற ஒவ்வொரு காரியத்திலும் கூச்சலிட்டு சத்தமிடுகின்றார்கள். அவர்கள் தளகட்டுப் பந்தாட்டத்தில் கூச்சலிட்டு சத்தமிடுகின்றனர். 139 ஆனால் கிறிஸ்து தம்மை உங்களில் அடையாளங்கண்டு கொள்ளப்படுகின்றபோது, தம்மையே அடையாளங்கண்டு கொள்ளப்படும் போது, அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவைப் போல் இருக்கிறீர்கள். இதில், கிறிஸ்தவன் என்ற வார்த்தை “கிறிஸ்துவைப் போல்” என்றே பொருள்படுகிறது. அங்குதான் உங்களுடைய அடையாளம் உள்ளது. சரி. இப்பொழுது, அவரே நமது அடையாளமாக இருப்பதால், அவருக்காக வாழ்வதன் மூலம், அவருடனே நாம் அடையாளங்கண்டு கொள்ளப்பட வேண்டும்.
76140 கவனியுங்கள், இந்த மகத்தான பரம இரகசியத்தில் மூன்று விதமான நோக்கத்தை தேவன் கொண்டிருந்தார். தேவன், உலகத் தோற்றத்திற்கு முன்னர் அவர் கொண்டிருந்த தம்முடைய மகத்தான பரம இரகசியத்தில், மூவகை நோக்கங்களை அதனுள் அவர் கொண்டிருக்கிறார். இப்பொழுது இன்று காலை, நாம் பார்க்கப்போவது என்னவென்றால், என்ன அந்த மூவகை நோக்கங்கள்? புரிகிறதா? இப்பொழுது, இங்கே பிரசன்னமாயிருக்கும், தேவனுடைய…ஒத்தாசையினால்…அவர்—அவர் அதை நமக்கு காண்பிப்பார் என்று, நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, அவர் இந்த மூவகை நோக்கத்தை கொண்டிருந்தாரென்றால், இந்த மூவகை நோக்கம் என்ன என்பதை நாம் கண்டறிய விரும்புகிறோம்.
77141 முதலாவது காரியம், தேவன் தம்மைதாமே ஜனங்களுக்கு வெளிப்படுத்த விரும்பினார். 142 எல்லா இடங்களையும், காலங்களையும், நித்தியத்தையும் நிரப்பின மகத்தான யேகோவா என்னும் ரீதியில் அவர் அப்படி செய்ய முடியவில்லை. அவரால் அப்படியிருந்து அதைச் செய்ய முடியவில்லை. அந்நிலையில் அவர் மக்களுக்கு வெளிப்படக் கூடாத அளவிற்கு அவ்வளவு மகத்துவ முள்ளவராயிருந்தார், ஏனெனில் அது மிகவும் ரகசியமாயிருந்திருக்கும். எவ்வித துவக்கமே இல்லாத அந்த மகத்தானதானது… நூற்றுக்கணக்கான கோடா கோடிகளின் ஒளி ஆண்டுகளின் சுழற்சிகளுக்கு அப்பால் நீங்கள் சென்ற பிறகு, மற்றும் எண்ணவே முடியாததற்குள், நித்தியத்திற்குள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்ற ஆண்டுகள் முன்பு இந்த எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருந்த மகத்தான ஒன்று, இன்றும் உள்ளது.
78143 ஆனால் அவர் செய்ய விரும்பியது என்னவென்றால், அவர் பிதாத்துவத்தை நேசித்தார், ஏனெனில் அவர் பிதாவாக இருந்தார். அவர் தம்மை வெளிப்படுத்தக் கூடிய ஒரே ஒரு வழி, ஒரு குமாரனாய், ஒரு மனிதனாக வேண்டியதாயிருந்தது. அதன் காரணமாகத்தான், “அந்த மனுஷக் குமாரன்” என்று இயேசு கூறிக் கொண்டேயிருந்தார். பாருங்கள், அவர் எதைக் குறித்துப் பேசிக்கொண்டியிருந்தார் என்பது அவர்களுக்கு, அவர்களில் அநேகருக்கு தெரியவில்லை. ஆனால் இப்பொழுது நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] புரிகிறதா? அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்த விரும்பினார். அது தான் அவருடைய, அவருடைய மகத்தான மூவகை நோக்கங்களில் ஒன்றாயிருந்தது, தம்மை வெளிப்படுத்துவது, மானிடருடன் தம்மை அடையாளங்கண்டு கொள்வது, கிறிஸ்துவிற்குள் தம்மை வெளிப்படுத்துவதாகும்.
79144 இரண்டாவதாக, தம்முடைய சரீரமாகிய விசுவாசிகளில், அதாவது, அவர் ஜனங்களுக்குள் ஜீவிக்கும்படியாக, தம்முடைய மணவாட்டிக்குள் முதன்மையான உயர்ந்த ஸதானத்தை கொண்டிருப்பதேயாகும்.
80145 இப்பொழுது, அவர் ஆதாமிலும் ஏவாளிலும் செய்திருக்க முடியும், ஆனால் பாவம் அவர்களைப் பிரித்துவிட்டது, எனவே அந்நிலையை மீண்டும் பெற்றுக்கொள்ள ஏதாவது ஒரு வழி இருக்கவேண்டும். ஓ, என்னே! ஓ, நான்…இது, அதைக் குறித்து யோசனை செய்தாலும் கூட, எனக்கு, அது சிறப்புமிக்கதாய் உள்ளது. புரிகிறதா? தேவனுடைய நோக்கம் என்னவாய் இருந்தது என்று பார்த்தீர்களா? இப்பொழுது ஆதாமையும் ஏவாளையும் அப்படியே அவர் ஏன் வைத்திருக்கவில்லை? அப்படியிருந்திருந்தால், அவருடைய முழுமையையும், அவருடைய முழு தன்மையையும் அவர் வெளிப்படுத்தியிருக்கவே முடியாது. ஏனென்றால், அவர் ஒரு பிதாவாக அங்கு இருந்திருக்க முடியும், அது உண்மைதான், ஆனால் அவர் ஒரு இரட்சகராயும் கூட இருக்கிறார். நீங்களோ, “அவர் இரட்சகராயிருந்தார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்கலாம். அவர் அவ்வாறு இருக்கிறார், ஏனெனில் எனக்கு அந்த அனுபவம் உள்ளது. புரிகிறதா? பார்த்தீர்களா? அவர் ஒரு இரட்சகராயிருக்கிறார், மேலும் அவர் அதை வெளிப்படுத்த வேண்டியதாயிருந்தது. அவர் எப்படி அதை வெளிப்படுத்தினார்? கிறிஸ்துவின் மூலமாகவே. அவர் எப்படி குமாரனாயிருக்க முடியும்? கிறிஸ்துவின் மூலமாகவே. அவர் எப்படி சுகமளிப்பவராக இருக்க முடியும்? கிறிஸ்துவின் மூலமாகவே. பாருங்கள், எல்லா காரியங்களுமே அந்த ஒரு நபரில், இயேசு கிறிஸ்துவில் முடிவடைகிறது. ஓ, என்னே! நான்—நான்…
81146 நான் அதைக் குறித்து நினைக்கும்போது, தேவனுடைய மகத்தான நோக்கத்தை காணும் போது, ஸ்தாபனங்கள் அனைத்துமே காட்சியை விட்டு அகன்றுவிடுகின்றதையும், மற்ற ஒவ்வொரு காரியமும் அகன்று போவதையும் நான்—நான் அப்படியே காண்கிறேன், பாருங்கள். தம்மை வெளிப்படுத்துகிற, முதலாவதாக “தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக” தம்மைத் தாமே கிறிஸ்துவில் வெளிப்படுத்துவதே. அதன் பின்னர், அந்த “தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக” ஒரு ஜனத்திற்குள் கொண்டு வந்து, அவர் தாமே முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களையும், கண்காணிப்பையும், வழிநடத்துபவராகவும் இருக்க முடியும்.
82147 மற்றொன்று, அந்த இரவு, நீங்கள் அந்த ஒலிநாடாவை பெற்றிருக்கவில்லையென்றால், நான் இங்கே ஒரு இரவு, “இயேசு கிறிஸ்துவின் ஒரு சிறைவாசி” என்பதன் பேரில் பிரசங்கித்தேன். பவுல், ஒரு சிறைவாசி! புரிகிறதா? தேவன் தம்முடைய சிறைவாசியாக இருக்கும்படி உங்களை வைத்திருக்கும்போது, அப்பொழுது ஆவியானவர் கூறுகிறதை செய்வதைத் தவிர வேறொன்றையும் நீங்கள் செய்ய முடியாது. பவுல், அவனுடைய மகத்தான எல்லா அறிவாற்றல்களோடும், அவன் கற்பித்தான்…என்றோ ஒரு நாள், அவன் பெரிய ஆசாரியனாக அல்லது ரபீயாக இருக்கும்படியாக கமாலியேலினால் பயிற்றுவிக்கப்பட்டான். அவன் உயர்ந்த லட்சியங்களை உடையவனாக இருந்தான். அவன் அறிவாற்றலில் ஒரு மகத்தான மனிதனாகவும், மகத்தான அதிகாரத்தையும், தேசத்தில் மகத்தான மனிதனாயும் இருந்தான். ஆனால் இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்த, வார்த்தையின் பாகமாக மாற, பாருங்கள், அதனுடைய ஒவ்வொரு பகுதியையும் அவன் தியாகம் செய்ய வேண்டியதாயிருந்தது. அதற்கென்ன கூற வேண்டியிருந்தது என்பதை…அவன் அறிந்திருந்தான். 148 அவன் ஏதோ ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் இருந்தான், சில சகோதரர்கள் அவனை அழைத்திருந்தனர், ஆனால் அவனுடைய சொந்த சித்தத்தை செய்ய ஆவியானவரால் அவன் தடை செய்யப்பட்டான். ஓ, ஜனங்கள் பாதியளவாவது ஆவிக்குரியப்பிரகாரமாக இருந்தால் அதை புரிந்துகொள்ள முடியுமே! புரிகிறதா? அவன் தன்னுடைய சொந்த சித்தத்தை செய்ய தடை செய்யப்பட்டான். அவனால் மாத்திரம் செய்ய முடிந்திருந்தால்…“ஆவியானவர் என்னை தடை செய்கிறார்.” புரிகிறதா? அவன் கிறிஸ்துவுக்கு ஒரு சிறைவாசியாக இருந்தான்.
83149 அதன்பின்னர், இந்த குறி சொல்பவள் ஒரு நாள், அவனை அறிந்திருந்தவள், பிசாசுகளைத் துரத்த தனக்கு வல்லமையிருந்ததை பவுல் அறிந்திருந்தான், ஆனால் தேவன அதை விரும்பியபடி மாத்திரமே அவனால் அதை செய்ய முடிந்தது. நாளுக்கு நாள் அவள் அவனை பின்தொடர்ந்து, அவன் பின்னே அழுதுகொண்டே வந்தாள், ஆனால் ஒருநாள் ஆவியானவர் அவனுக்கு அனுமதி அளித்தார். அப்பொழுது அவன் அவளை, அவளுக்குள் இருந்த அசுத்த ஆவியைக் கடிந்துகொண்டான். புரிகிறதா? ஒரு சிறைவாசியாக இருப்பது என்னவாயிருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான்.
84150 மோசே, அவனுடைய அறிவாற்றல்களை, ஒரு சிறைவாசியாய் இருக்க, கிறிஸ்துவைக் கண்டறிய அவன் அவைகளை இழக்க வேண்டியதாயிருந்தது. அதன் பின்னர் தேவன் முழு உலகத்தையும் அவனிடமிருந்து அடித்து வெளியேற்றியபோது, வல்லமையான மனிதனாயிருந்த அவனுடைய எல்லாவற்றையும் வெளியேற்றியபோது, அந்த நாளிலே அக்கினி ஸம்பத்தின் பிரசன்னத்தில் நின்றபோது, அவன் பேச்சற்றவவனாய் காணப்பட்டான். அவனால் பேச கூட முடியவில்லை, பேசக்கூட முடியாமல் ஆகிவிட்டது என்று, அவன் கூறினான். அப்பொழுது தேவன் ஒரு சிறைவாசியை உடையவராய் இருந்தார். புரிகிறதா? நீங்கள் உங்களுடைய சொந்த ஆராய்ச்சியின்படி முயற்சிக்காதீர்கள். அதன் பின்னர் தேவன் இந்த மனிதனை, இல்லை, அவன் அங்கே செல்லும்படியான போதிய வல்லமையால் அவனை நிரப்ப வேண்டியதாயிற்று. 151 அப்பொழுது அவன், “கர்த்தாவே, நான் பார்வோனிடம் நீர் கூறச் சொன்னதை சொன்னேன், அவனுக்கோ அதைக் கேட்க மனதில்லை” என்றான். 152 அவர், “அப்படியானால் இந்த, உன்னுடைய கோலை எடுத்துக் கொண்டு போ,” அது தேவன் பேசுவது, அது தேவனுடைய வார்த்தை, “நீ அங்கு போய் கிழக்கு திசை நோக்கி அதை நீட்டி, வண்டுகளை வரவழைப்பாயாக” என்றார். அப்பொழுது வண்டுகள் சிருஷ்டிக்கப்பட்டு வந்தன, ஏனென்றால் பாரர்வோனால் ஒன்றுமே செய்ய முடியாத ஒரு சிறைவாசியை அவர் உடையவராய் இருந்தார். எவராலுமே அவனை மற்றெந்த வழியிலுமே துரத்த முடியவில்லை. அவன் தேவனுடைய வார்த்தையின் சங்கிலியில், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்கு மாத்திரமே கட்டப்பட்டிருந்த ஒரு முழுமையான சிறைவாசியாயிருந்தான்.
85153 ஓ, தேவன் அதைப் போன்ற சிறைவாசிகளை அவருக்குப் பெற்றுக்கொள்ள முடிந்தால் நலமாயிருக்குமே! இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அப்பொழுதே அவரால் அந்த முதன்மையானவைகளை வெளிப்படுத்த முடியும். அவர், அவர் அந்த மனிதனை அல்லது அந்த நபரை பெற்றுக்கொள்கிறார், எனவே அவனுக்கு கிறிஸ்துவை தவிர ஒன்றுமே தெரியாது. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சரி. அது இரண்டாவதாகும். 154 முதலாவதாக, கிறிஸ்துவுக்குள் தேவன், தம்மை முழுமையாக வெளிப்படுத்துவது. 155 இரண்டாவதாக, இதன் முலம், தம்முடைய சரீரமாகிய, மணவாட்டியாகிய, தம்முடைய சபையில், முதன்மையான ஸ்தானத்தை கொண்டிருக்க, அவர்கள் மூலமாக அவர் தம்மை வெளிப்படுத்த முதன்மை ஸ்தானத்தை கொண்டிருத்தல். சரி. 156 மேலும், மூன்றாவதாக, முதலாம் ஆதாமினால் உண்டான பாவத்தினால் விழுந்துபோன இராஜ்யத்தை, அதற்குரிய சரியான ஸ்தானத்தில் திரும்பளிக்க, அங்கே சாயங்காலத்தின் குளிர்ச்சியான வேளையில், தம்முடைய ஜனங்களுடன் நடந்து, அவர்களுடனே பேசி, அவர்களுடன் ஐக்கியங்கொண்டிருந்த நிலைக்கு திரும்பவுமாக வருதல். 157 இப்பொழுது பாவமும் மரணமும் அவருடைய பிரசன்னத்திலிருந்தும், அவருடைய முழு வெளிப்படுத்தப்பட்டவிதத்தினின்றும் அவர்களை பிரித்துவிட்டிருந்தது. நீங்கள் அதைப் படிக்கிறீர்களா? உலகத் தோற்றுத்துக்கு முன் அவர் என்னவாயிருந்தாரோ, அந்த அவருடைய—அவருடைய—அவருடைய தன்மைகள் யாவற்றையும் வெளிப்படுத்துதல்.
86158 ஆகையால், இங்குள்ள திரித்துவக்காரர்கள் யாராகிலும் ஒரு நிமிடம் செலவழித்து நான் கூறுவதைக் கேட்பார்களானால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூன்று தேவர்கள் அல்ல. அவை ஒரே தேவனின் மூன்று தன்மைகள் என்றும் அறிந்துகொள்ளலாம். பாருங்கள், அது தோற்றம். பிதாவாக, அவர் ஒரு பிதாவாயிருக்க வேண்டுமென்றே, அவர் பிதாவாயிருந்தார். அவர் ஒரு குமாரனாயிருந்தார். அவர் பரிசுத்த ஆவியாக இருக்கிறார். பிதாவும் பரிசுத்த ஆவியும் ஒரே ஆவி. நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்கு அது புரிகிறதா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] மூன்று தேவர்கள் அல்ல. உங்களை விக்கிரகாராதனைக்காரராக்க, பிசாசு உங்களுக்கு அந்த காரியங்களை கூறியிருக்கிறான். புரிகிறதா? அது மூன்று தன்மைகளில் வெளிப்பட்ட ஒரே தேவனாகும். பிதாவாயிருக்க, இரட்சகராயிருக்க, குமாரனாயிருக்க, சுகமளிப்பவராயிருக்க, பாருங்கள், அவருடைய வெளிப்படுத்துதல்கள்.
87159 இக்கருத்தை இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்களும் கிரகித்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக, இதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அந்தப் பொருள்களில் ஒவ்வொன்றையும் விளக்குவதற்கு, எனக்கு அதிகமான நேரம் பிடிக்கும். ஆனால் நான் என்ன கூற வருகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளக் கூடிய விதத்தில் நான் அதை மிக தெளிவாக்குகிறேன் என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? 160 தேவன், இயேசுகிறிஸ்துவில் வெளிப்பட்டார், அவரே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாயிருந்தார், “தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக வாசம் செய்தல்.” 161 இப்பொழுது “தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக” அவருடைய சபையில் வாசம் செய்கிறது, முதன்மையான ஸ்தானம் வகித்தல். தேவனாயிருந்த எல்லாவற்றையும், அவர் கிறிஸ்துவுக்குள் ஊற்றினார்; கிறிஸ்துவாயிருந்த எல்லாவற்றையும், சபைக்குள், விசுவாசிகளுக்குள் ஊற்றிவிட்டார். 162 ஸ்தாபனத்தில் அல்ல! நாம் அதை இன்னும் ஒரு சில நிமிடங்களில் பார்ப்போம், அப்பொழுது அதைக் குறித்து நீங்கள் கொண்டுள்ள தவறான அபிப்பிராயங்கள் உங்கள் மனதைவிட்டு நிரந்தரமாக அகன்றுவிடும், பாருங்கள்; அதற்கு என்ன காரணம் என்பதை தேவனுடைய உதவியினால், அவர் அதைக் காண்பிக்க அனுமதித்தால், உங்களுக்குக் காண்பிப்பேன்.
88163 இப்பொழுது அவருடைய நோக்கம் என்ன? தம்மைத்தாமே ஒரு குமாரனாக வெளிப்படுத்துதல், பாருங்கள், மேலும், இப்பொழுது, அவருக்குள் தாமே “தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக” வாசம் செய்தல். நான், இங்கே எனக்கு முன்பாக, கொலேசெயரை நான் இங்கே திறந்து வைத்திருக்கிறேன். புரிகிறதா? அது, வேதாகமம் முழுவதுமாக, அது தான் தேவனுடைய நோக்கமாயிருந்தது. பிறகு, இந்த குமாரனின் ஜீவியத்தினூடாக, அவருடைய சிலுவையில், “இரத்தத்தினூடாக,” அது இங்கே “அவருடைய சிலுவையைக் குறித்து” கூறுகிறது, அதாவது அவர் தம்மை ஒரு சரீரத்திற்கு ஒரு மணவாட்டிக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளும்படிச் செய்தது; அது ஏவாளாய், இரண்டாம் ஏவாளாகும். தேவன் மோசேக்கும் மற்ற யாவருக்கும் செய்தது போல, அவர் அதை ஒரு மாதிரியாக அளித்தார். அதே காரியத்தையே அவர் ஆதாம் ஏவாளிலும் செய்தார், அவர்களை கிறிஸ்துவும் மணவாட்டியும் என்பதற்கான, ஒரு மாதிரியாய் அளித்தார். அவர் இரண்டாம் ஆதாம்; சபை இரண்டாம் ஏவாள். 164 இரண்டாம் ஏவாள் வார்த்தைக்கு எதிராக சமரசம் செய்துகொண்டே இருக்கும் வரையில், முதலாம் ஏவாள் செய்த அதேகாரியத்தை அவள் செய்துகொண்டிருக்கின்றாள் அல்லவா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] “அது வேறொரு காலத்திற்குரியது” என்று சொல்ல முயற்சிக்கிறாள். இன்னும் சில நிமிடங்களில் நாம் அதற்கு வருவோம், அது வேறோரு காலத்திற்குரியதென்று அவர் கூறினாரா என்று பார்ப்போம். அவர் “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கும்போது, அது எப்படி வேறொரு காலத்துக்குரியதாக இருக்கமுடியும்”? 165 ஆனால் தேவனோ “அதை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, முன்குறிக்கப்பட்டிருந்த பாலகருக்கு” அதை ஏற்றுக் கொள்ளும் முன்குறிக்கப்பட்டிருந்தவர்களுக்கு வெளிப்படுத்த சித்தம் கொண்டிருக்கிறார்.
89166 அதுதான் காரணம், ஒவ்வொரு காலத்தையும் கவனித்துக்கொண்டே வாருங்கள், அந்த ஒளி சிலர் மீது பட்டபோதெல்லாம், அது பிரகாசித்தபோது, அவர்கள் அதைப் புறக்கணித்து வந்தனர். மகத்தான அறிவாற்றலுள்ளவர்களும் அந்த பெரிய ஆசாரியர்களும் அங்கே நின்றவர்களும், பெரிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரத்தில் இருந்து வந்த ரபிமார்களும், பல்வேறுபட்டவர்களையும் போன்ற, நிக்கொதேமுவையும் மற்றவர்களையும் போன்று இருந்தவர்களும், மெருகேற்றப்பட்ட பாண்டித்துவம் பெற்ற மனிதன், அவனாலும் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. 167 அந்த வார்த்தையில் போதிக்கப்பட்டிருந்த அந்த ரபீக்களும் மற்றும் அந்த மகத்தான ஆசாரியர்களும் அங்கே நின்றுகொண்டிருந்தனர். என்னே, அவர்கள் அதை அறிவுபூர்வமாக அறிந்திருந்தனர்! ஆனால் அவரோ அவர்களை நோக்கி, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள், அவனுடைய கிரியைகளை நீங்கள் செய்வீர்கள்” என்றார். அதைக் குறித்து சற்று யோசித்துப் பாருங்கள், பரிசுத்த மனிதர், அவர்களுடைய வாழ்க்கையிலோ, அல்லது அவர்களுடைய தகப்பனாருடைய வாழ்க்கையிலோ, அல்லது அவர்களுடைய பாட்டனாருடைய வாழ்க்கையிலோ, அல்லது அவர்களுடைய பெரிய-பெரிய- பெரிய-பெரிய-பெரிய-பாட்டானாருடைய வாழ்க்கையிலும் கூட களங்கம் எதுவும் இருந்ததாக நீங்கள் சுட்டிக் காட்டவே முடியாது. அப்படி ஏதாகிலும் களங்கம் ஏற்பட்டால், அவர்கள் அவமானத்தில் மரித்துவிடுவார்கள், அவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட்டனர். ஆனால் இயேசு அங்கே நின்றுகொண்டு, அந்த குழுவை, பக்தியுள்ள ஜனங்களை, “ஒரு கூட்ட பிசாசுகள்” என்ற அழைக்கின்றார்.
90168 இப்பொழுது, ஓ, அந்த மகத்தான வெளிப்பாடு இப்பொழுது! இப்பொழுது தம்முடைய உறவின் முறையை திரும்ப அளிப்பதற்காக, திரும்பவுமாக கொண்டு வருவதற்காக…இப்பொழுது, அவர்கள் இழந்து போகும்படிக்கு அவர் செய்ய வேண்டிய தாயிருந்தது. நீங்கள் அதை புரிந்து கொள்கிறீர்களா? அவர் அவர்களை பாவம் செய்ய விட்டுவிட்டு, அவர்களை சுயாதீன… அவர்களை பாவம் செய்ய அவர்—அவர் அனுமதித்துவிட்டு, தேவனாக இருந்து, பிறகு அவர்கள் செய்ய அவர் அனுமதித்த ஏதோ ஒன்றிற்காக அவர்களை தண்டிக்க முடியாது. 169 ஆனால் அவர் மனிதனை தம்முடன் கூட்டாளியாக வைத்து, அதன்பின்னர் மனிதனை ஒரு சுயாதீன நேர்மையுணர்வுக்குரிய முகவராக செயல்பட அனுமதிக்கிறார், பாருங்கள், இன்றைக்கு அவர் உங்களுக்கு அதே காரியத்தை அளித்திருக்கிறார். புரிகிறதா? பார்த்தீர்களா? நீங்கள் விரும்புகிற எந்த விதமாகவும் செயல்படுகிறீர்கள்; நீங்கள் ஒரு சுயாதீன நேர்மையுணர்வுக்குரிய முகவர். எனவே, ஆகையால், அவர் முதலாவது அந்த விதமாக அளித்திருந்தால், அவர் அந்த விதமாகவே இரண்டாம் முறையும் அளிக்க வேண்டும், அவர் அந்த விதமாகவே ஒவ்வொருவருக்கும் அளிக்க வேண்டும், இல்லையென்றால் அவர் முதலில் தவறாக செயல்பட்டார் என்றாகிவிடும். புரிகிறதா? ஆனால் ஒவ்வொருவரும் அதே அடிப்படையின் பேரில் தான் இருக்கிறார்கள்.
91170 இப்பொழுது மீண்டும் திரும்ப கொண்டு வருவதில், கவனியுங்கள்; அந்த மனிதன் அதைச் செய்ய அனுமதித்து, அவன் அதைச் செய்வான் என்று அறிந்திருந்தார், அவன் அதைச் செய்வான் என்று அறிந்திருந்தார். ஆனால் அது என்ன செய்தது? அது இரட்சகராகிய அவருடைய தன்மையை வெளிப்படுத்தியது. அப்படியானால் முழு நோக்கமும் இயேசு கிறிஸ்துவில் விடப்பட்டுள்ளது… தேவன் தாமே அவரை புறக்கணித்ததன் மூலம் இழக்கப்பட்டிருந்த மனைவியை மீட்டுக்கொள்ளும்படியாக, மரிக்க, தன்னுடைய சொந்த நியாயப்பிரமாணத்தின் தண்டனையாகிய, மரணத்தை ஏற்றுக்கொண்டார். 171 ஏவாள் வார்த்தையை விட்டு விலகிச் சென்றபோது, அவள் தன்னுடைய கணவனிடமிருந்து பிரிந்து சென்றாள். சபையானது வார்த்தையிலிருந்து விலகி, ஒரு ஸ்தாபனத்திற்கு செல்லும்போது, அவள் தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தை புறக்கணித்து, உலக மனிதனுடைய ஞானத்தோடு வேசித்தனம் செய்து புறக்கணிக்கிறாள். அது தெளிவாக தொனிக்கிறதா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] வேதம், “ஆவிக்குரிய விபசாரம் செய்வதாக” கூறியுள்ளது. வேதத்தில் உள்ள எந்த வார்த்தையும், புறக்கணிக்கப்படுவதோ, அல்லது அதற்கு சொந்த வியாக்கியானத்தை அளித்தாலோ, அது உங்களுடைய கணவனாகிய தேவனுக்கு எதிராக விபச்சாரம் செய்து முற்றிலுமாக புறக்கணித்தலாய் உள்ளது. விபசாரி ஒருக்காலும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை, நாம் அதை அறிவோம். புரிகிறதா? பாருங்கள், முதலாவதாக ஏவாள் அதைத்தான் செய்தாள்.
92172 இப்பொழுது மறுபடியும் கவனியுங்கள், இப்பொழுது, அவருடைய அந்த மூவகை நோக்கமென்ன? தம்மை இயேசுகிறிஸ்துவில் வெளிப்படுத்துதல்; முதன்மை ஸ்தானத்தை கொண்டிருக்க, இயேசு கிறிஸ்துவினால், சரீரத்திற்குள் வருவது; (எதற்கு?) ஏதேனை திரும்ப அளிக்க, இழந்துபோனவற்றை திரும்ப கொண்டு வரவேயாகும். அந்த ஒரு காரியம் மாத்திரமே ஒழுங்கிற்கு அப்பாற்பட்டதாயுள்ளது. அவருடைய மற்ற எல்லா காரியங்களும் ஒழுங்கில் இருந்தன. 173 ஆனால் அவர் விழுந்துபோகும்படியாக மனிதனை சுயாதீன சித்தத்தில் அனுமதிக்க வேண்டியதாய் இருந்தது, அவருக்குள் என்ன இருந்தது என்பதை வெளிக்காட்டும்படியாக, அவர் ஒரு இரட்சகராக இருப்பதற்காகவும், பாருங்கள், அவருடைய இரட்சகரின் தன்மை. ஏதோ ஒரு காரியத்தை இழக்க வேண்டியதாய் இருந்தது. அதே காரியம், அதாவது மனிதன் விழுந்துபோய் இழக்கப்பட்டபோது, அவர் தம்முடைய சொந்த பிரமாணத்தை எடுத்து, அவர் அதைக் குறித்த இரட்சகரானார். அந்த மகத்தான யேகோவா எல்லாவிடங்களையும், எல்லா காலங்களையும் நிரப்பினவராக இருந்தபடியால், அவரால் செய்திருக்க முடியாது; பாருங்கள், அவரால் அதை செய்திருக்க முடியாது. எனவே அவர் ஒரு மனிதனாக வேண்டியதாயிருந்தது. அவர் இழக்கப்பட்டிருந்த மனிதனால் உறவின் முறையானின் ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு, ஆமென், ஒரு மனதனானார்: தேவன், மாம்சமானாரே! 174 அல்லேலூயா! நான் உணர்ச்சிவசப்படுவதாக நினைக்கிறீர்கள்; ஆனால் நான் அல்ல. எனக்குள்ளாக இருக்கிற ஏதோ காரியமே!
93175 என்னுடைய பாவத்தை அவர் மீது எடுத்துக்கொள்ள, என்னை அவராக்க, தேவன், தேவனிடத்திலிருந்து வந்து என்னைப் போலானார், ஆமென், தேவனுடைய குமாரரும் தேவனுடைய குமாரத்திகளுமான அவருடைய மகத்தான நோக்கத்திற்கு திரும்ப கொண்டு வரவே, ஏனென்றால் அவர் நித்திய பிதாவாக இருந்தார். அந்த தன்மை அவரிலிருந்தது, பாருங்கள், எனவே அது வெளிகாட்டப்பட வேண்டியதாய் இருந்தது. 176 இப்பொழுது அந்த மூவகை நோக்கத்தை காண்கிறீர்களா? பாருங்கள், தம்மை தாமே வெளிப்படுத்த, அவர் ஆக விரும்பியது… இப்பொழுது உலகம் இழந்துபோன நிலையில் உள்ளது, எனவே சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலமாக தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ள, அவர் இரட்சகராக ஒரு மனிதனில் வெளிப்பட வேண்டியதாயிற்று. இப்பொழுது அவர் இரட்சித்து, தம்மை தாமே மீண்டும் சபையில் கொண்டு வந்து தம்முடைய சபையில் முதன்மையான ஸ்தானத்தை கொண்டிருக்கத்தக்கதாக, அவர் மனிதனாகத் தோன்றி மரிக்க வேண்டியதாயிருந்தது.
94177 இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அது ஒரு ஸ்தாபனமாக முடியாது, ஆகாது, ஒருபோதும் அவ்வாறாகாது, ஒருபோதும் அவ்வாறு இருந்து வந்ததில்லை! அவர் முதன்மையான ஸ்தானத்தை கொண்டிருக்கத்தான் வேண்டும், அவர் வார்த்தையாயிருக்கிறார். ஆமென்! அப்படியிருக்க எந்த பிரமாணத்தையும் அதில் எப்படி நுழைக்க முடியும்? அது ஒரு…எந்த மனிதனுடைய பிரமாணத்தின் வார்த்தைகளையும் அல்லது எந்த ஸ்தாபனத்தையும் ஏற்றுக்கொள்வது, அது சபையை ஒரு விபச்சாரியாக்கிவிடுகிறது. அது விரைவில் வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில், ஒரு மகா வேசியாகவும் வேசிகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன; ரோமன் கத்தோலிக்க சபை மகா வேசியாகவும், பிராட்டஸ்டண்டுகள் வேசிகளாகவும் இருந்து வருகின்றனர். எந்த ஒரு நபரும் அதை படிக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு தெளிவாக உள்ளது. நாம் சபைக் காலங்களினூடாக பார்த்து வந்துள்ளோம், நீங்கள் அதைக் கேட்க விரும்பினால், உங்களால் அதை அந்த—அந்த ஒலிநாடாக்களில் கேட்டு புரிந்துகொள்ள முடியும். சரியாக. அதன்பின்னர், வேதத்திற்குப் புறம்பாயுள்ள கோட்பாடுகளுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் எதுவும், தேவனுடைய பார்வையில் ஒரு வேசியாக உள்ளது. ஏவாள் செய்த அதே காரியத்தையே அவர்களும் செய்துள்ளனர், அவர்கள் வார்த்தையாகிய கிறிஸ்துவினின்று புறம்பே சென்றுவிட்டனர். ஓ, என்னே! சரி.
95178 உலகத்தோற்றத்துக்கு முன்னமே அவருடைய சிந்தையில் அவர் மறைத்து வைத்திருந்த அவருடைய இரகசியத்தை நாம் காண்கிறோம். இப்பொழுது நீங்கள் இதை சற்று படிக்க விரும்புகிறீர்களா? நாம் அதை சற்று வாசிப்போமாக. உங்களுக்கு போதிய நேரம் இருக்கிறதா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நாம்—நாம் அதை படிப்போம். இப்பொழுது நாம் யாவரும், ஒரு வாசிப்பிற்காக, எப்படியாயினும், எபேசியரின் புத்தகத்திற்கு திருப்புவோமாக, நாம் வாசிக்கும்படியாக, எபேசியர் முதலாம் அதிகாரத்தில் துவங்குவோமாக. இப்பொழுது ஞாயிறு வேதபாட பள்ளி நடக்கையில், இதில் கிறிஸ்துவின் மூவகையான வெளிப்படுத்துதலை வாசிப்போமாக. தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல்,… 179 இப்பொழுது கவனியுங்கள், இது உலகத்தாருக்கு எழுதப்பட்டதல்ல, ஆனால்: …எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
96180 நீங்கள் எப்படி இயேசுகிறிஸ்துவுக்குள் வருகிறீர்கள்? ஒரு சபையை சேர்வதினாலா? [சபையார், “இல்லை” என்கின்றனர்.—ஆசி.] ஒரு பிறப்பினாலே! “ஒரே ஆவியினாலே,” முதலாம் கொரிந்தியர் 12, “ஒரே சரீரத்திற்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம்.” புரிகிறதா? 181 சரி, அப்படிப்பட்டவர்களுடன்தான் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். இது வெளிப்புற உலகத்தாருக்கு எழுதப்படவில்லை. நான் இதன் பேரில் பாவியினிடத்தில் பேச முடியாது, ஏனென்றால் அவன் இதைக் குறித்து ஒன்றுமே அறியாதிருக்கிறான். பவுல் இதை பாவிகளுக்கு எழுதவில்லை. அவன், “இது கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற அந்த—அந்த—அந்த குழுவுக்கு” என்றே கூறினான். நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் (எங்கே?) உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்;
97182 “உன்னதங்களிலே.” ஓ, எனக்கு நேரமிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! உன்னதங்களைக் குறித்து, உன்னதங்கள் என்றால் என்ன என்று என் வேதத்திலே இங்கு குறித்து வைத்திருக்கிறேன், உன்னதங்கள். உன்னதங்களிலே, ஒரு நிமிடம், அது “கிறிஸ்துவில் ஒரு விசுவாசியின் ஸ்தானம்,” பாருங்கள், “கிறிஸ்துவுக்குள் ஒரு விசுவாசி எங்கு நின்று கொண்டிருக்கின்றான்,” உன்னதங்களில். அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே அவருக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே (கூர்ந்து கவனியுங்கள்) …நம்மைத் தெரிந்து கொண்டபடியே… 183 அவர் எப்பொழுது நம்மை தெரிந்து கொண்டார்? “உலகத்தோற்றத்திற்கு முன்னே,” தம்முடைய மகத்தான மறைக்கப்பட்டிருக்கின்ற ரகசியம், அவருடைய மகத்தான ரகசியம். தமக்கு முன்பாக நாம் (எதில்?) அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் ( எதற்கு?) தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
98184 “முன்குறித்திருக்கிறார்!” அதுதான் அந்த ரகசியம். அவர், கிறிஸ்து அல்லது வேறெதுவும் இவ்வுலகில் தோன்றும் முன்பே, அவருடைய மகத்தான இரகசியத்தை நீங்கள் பாருங்கள், அவர் தமது மணவாட்டியைத் தெரிந்துகொண்டார். தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்காததனால், ஏவாள் விழுந்துபோவாளென்று அறிந்திருந்தார், அவள் விழுந்துபோவாள் என்று அறிந்திருந்தார்; ஆனால் அவர் விழுந்துபோகாத ஒரு மணவாட்டியைத் தெரிந்துகொள்வார், அதாவது உலகம் அதைக் குறித்து என்ன கூறினாலும் கவலைப்படாமல், வார்த்தையை பற்றிக்கொள்வாள். அவர்கள் வார்த்தையை பற்றிக்கொள்வார்கள்! அவர்கள் வார்த்தையில் நிலைநிற்க முன்குறிக்கப்பட்டவர்கள், “இயேசு கிறிஸ்துவின் மூலமாய் சுவீகாரப்புத்திரராகத் தெரிந்து கொள்ளுதல்” என்பது, அந்த மகத்தான, மகிமையான நிலையில் நிற்பதற்கு முன்குறிக்கப்பட்ட சபை!
99185 இப்பொழுது அவருடைய ரகசியத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? எதற்காக? விழுந்துபோன ஏவாளை மீட்டுக்கொள்ள, அவள் சபையின் முன்வடிவமாக இருந்தாள். இப்பொழுது கவனியுங்கள், தேவன் ஆதாமின் பக்கவாட்டை திறந்து ஏவாளை, அவனுடைய சொந்த மாம்சமும் இரத்தமுமாக எடுத்து; அவனுடைய ஆவியை இரண்டாக ஆண் ஆவி, பெண் ஆவி என்று பிரித்து, அந்த பெண் ஆவியை ஏவாளுக்கு அளித்தார். அவனுடைய பக்கவாட்டின் கீழிருந்து விலாவை எடுத்து, அதிலிருந்து ஏவாளை உண்டாக்கினார்; அதே விதமாக தேவன் செய்தார், இரத்தத்தையும் தண்ணீரையும் கிறிஸ்துவினுடைய பக்கவாட்டிலிருந்து எடுத்தார். கிறிஸ்துதான் வார்த்தை, வார்த்தையை எடுத்து தம்முடைய சபையை உண்டாக்குதல், ஏவாள்; பாருங்கள், தம்முடைய சரீரத்திலிருந்து வந்த இரத்தத்தினால் மீட்கப்பட்டு, மறுபடியுமாக தம்முடைய நிலைக்கு திரும்புதல். நீங்கள் இதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 186 உலகத்தோற்றத்துக்கு முன்பு மறைக்கப்பட்டிருந்த தேவனுடைய மகத்தான ரகசியம் இப்பொழுது வெளியரங்கமாக்கப்படுகிறது, ஆனால் காலங்கள் தோறும் அது முன்னடையாளமாக அளிக்கப்பட்டு வந்துள்ளது. இப்பொழுது கவனியுங்கள், அவர்—அவர் அதைச் செய்தார் என்றே, நாம் கண்டறிகிறோம். இங்கே எபேசியர் நிரூபத்திலும், இன்னும் மற்றவிடங்களிலும், ஆனால் இது உங்களுக்குப் போதிய விளக்கமளிக்கும்… இப்பொழுது, காலங்கள் தோறும், அவர் இந்த இரகசியத்தை படிப்படியாக வெளிபடுத்திக் கொண்டே வந்தார். உங்களால் இப்பொழுது அதைக் காண முடிகிறதா? இப்பொழுது, காலங்…
100187 அவர் எப்படிச் செய்தார்…? இப்பொழுது முன்னடையாளத்தில் என்ன சம்பவித்தது? அவர் ஏவாளை உண்டாக்க, ஆதாமின் பக்கவாட்டைத் திறந்து, அவனுடைய மாம்சத்தின் ஒரு பாகத்தை எடுத்தார், அது ஆதாமினுடையதாய் இருந்தது. மணவாட்டி வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில் அவர் வார்த்தையாயிருக்கிறார். அவளால் ஸ்தாபனக் கோட்பாடுகள் பேரில் நிற்கமுடியாது. அவளால் ஸ்தாபனத்தின் பேரில் நிற்க முடியாது. அவளால் நல்ல நடத்தையின் பேரில் மாத்திரம் நிற்கமுடியாது. அவள் தனியாக வார்த்தையின் பேரில்தான் நிற்க வேண்டும், ஏனெனில் அவள் அதன் பாகமாயிருக்கிறாள். அவள் கிறிஸ்துவிலிருந்து எடுக்கப்பட்டவள். புரிகிறதா?
101188 நிச்சயமாகவே, அதாவது, இப்பொழுது முழு எடுத்துக்கொள்ளப்படுதலும்; லூத்தர் ஒரு பாகமாக இருந்தார், வெஸ்லி ஒரு பாகமாக இருந்தார், தீர்க்கதரிசிகள் ஒரு பாகமாக இருந்தனர். அவர்கள்—ஒரு பாகமாக இல்லாவிடில்…இந்த வெளிப்படுதலில் அவர்கள் பாதங்கள், கால் விரல்கள், கைகள் போன்றவை என, தலை வரும் வரைக்கும் சரீரத்தை உருவாகிக்கொண்டே வந்தனர் (இன்னும் சில நிமிடங்களில் நாம் அதற்கு வருவோம்), பாருங்கள், அது முழு எடுத்துக்கொள்ளப்படுதலை உண்டாக்குகின்றது. அது கிறிஸ்துவாகிய, வார்த்தையினுடைய சரீரம். ஆமென்! 189 அதற்கு புறம்பே இருந்தால், நீ இழக்கப்பட்டுப் போவாய். நீ எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும், அல்லது உன்னுடைய உறவின் முறை என்னவாக இருந்தாலும், அல்லது நீ எத்தகைய ஐக்கியத்தில் சேர்ந்திருந்தாலும், உன்னுடைய ஸ்தாபனம் எதுவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, உனக்குள் இருக்க வேண்டிய அந்த வார்த்தைக்கு வெளியே இருந்தால், நீ இழக்கப்பட்டாய்.
102190 “நீங்கள் என்னிலும் அந்த வார்த்தை, என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ.” ஏனெனில் நீங்களும் வார்த்தையும் ஒன்றாயிருக்கிறீர்கள். அவர் முதன்மையான ஸ்தானங்களைக் கொண்டிருக்கிறார். அவர் ஆளுகையைக் கொண்டிருக்கிறார். நீங்கள் ஒரு—நீங்கள் அவருக்கு சிறைவாசியாக இருக்கிறீர்கள். உலகம் மரித்திருக்கிறது. உங்களுக்கு இனி எதுவும் அவசியமில்லை… மற்ற ஜனங்கள் அவர்கள் விரும்புகிற வழியில் ஜீவிப்பதை நீங்கள் காண்கிறீர்கள், ஆனால் அதே சமயத்தில் நீங்கள் அதை செய்கிறதில்லை. நீங்கள் ஒரு சிறைவாசியாக இருக்கிறீர்கள். நீங்கள் அவருடன் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள். “என் நுகம் மெதுவாய் இருக்கிறது.” கிறிஸ்துவுடன், அவருடைய வார்த்தையுடன் நீங்கள் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள். “பிதாவுக்குப் பிரியமானவைகளையே…நான் செய்கிறேன். நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், வார்த்தையை விசுவாசியுங்கள்.” அவ்வளவு பரிபூரணமாக இருக்கிறதே! கவனியுங்கள்.
103191 இப்பொழுது கவனியுங்கள், காலங்கள் தோறும் அவர் இந்த இரகசியத்தை தீர்க்கதரிசிகள் மூலமாகவும் முன்னடையாளங்களாலும், மெதுவாக வெளிப்படுத்திக்கொண்டே வந்தார். இப்பொழுது அவர் தம்மை எவ்விதம் வெளிப்படுத்தினார் என்று, நாம் தொடர்ந்து பார்ப்போம். 192 அவர் மோசேயில் தம்மை வெளிப்படுத்தினார். மோசேயைப் பாருங்கள். பிள்ளைகள் துன்புறுத்தப்பட்ட நேரத்தில் பிறந்தான். அவன் ஒரு விடுவிப்பவனாக பிறந்தான். இயேசு எகிப்துக்குள் கொண்டு செல்லப்பட்டதுபோல, அவன் நாணலுக்குள் மறைத்து வைக்கப்பட்டான். மோசே வெளியே வந்தான். அவன் மலையின் மேல் ஏறிச் சென்று, பத்து கட்டளைகளுடன் திரும்பி வந்தான். 193 இயேசுவும் மலையின் மேல் சென்றார், அவருடைய முதல் பிரசங்கம், மலைப்பிரசங்கம், அவர் கீழே கட்டளைகளுடன் இறங்கிவந்தார். நீங்கள், “‘விபசாரஞ் செய்யாதிருப்பாயாக’ என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று, அவர்கள் கூற கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று.” நியாயப்பிரமாணிகர், ஆசாரியன், ராஜா, தலைவர், சரியாக!
104194 அவர் யோசேப்பில் தம்மை வெளிப்படுத்தினார், அவனுடைய சகோதரராகிய, ஸ்தாபனத்தின் மத்தியில் பிறந்தான். அவன் ஆவிக்குரியவனாயிருந்தபடியால், அவர்கள் முகாந்தரமின்றி அவனைப் பகைத்தனர். அவன் தரிசனங்களைக் கண்டான். தேவன் அவனோடு கூட இருந்தார். அவனால் சொப்பனங்களுக்கு அர்த்தம் கூற முடிந்தது. அவனுடைய சகோதரர் அவனைப் பகைத்தனர். அவனுடைய சகோதரரால் ஏற-…அவன், ஏறக்குறைய முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டான். அவ்வாறே சரியாக இயேசுவும், அவருடைய சகோதரரில் ஒருவனான யூதாஸ்காரியோத்தால் முப்பது வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டார். அவன் குழியில் போடப்பட்டு, மரித்துபோனதாக எண்ணப்பட்டான். அது உண்மை. அவனுடைய தந்தைக்கும் மற்றவர்க்கும் அவன் மரித்துப் போய்விட்டதாக கூறப்பட்டது. அதாவது அவன் இந்தக் குழியில் வீசியெறியப்பட்டான்; பின்னர் வெளியே, எடுக்கப்பட்டு, பார்வோனின் வலதுபாரிசத்தை சென்றடைந்தான். 195 அந்த இருண்ட சிறையில், அவன் அங்கே எவ்வளவாக பாடுபட்டான்! மேலும்—மேலும் அங்கே இரட்சிக்கப்பட்ட…இரண்டு பேர் இருந்தனர் அங்கு பானப்பாத்திரக்காரனும் சுயம்பாகியும் இருந்தனர், சரியாக கூறினால், ஒருவன் இரட்சிக்கப்பட்டான், மற்றவன் கைவிடப்பட்டான். மேலும் அந்த—அந்த பானப்பாத்திரக்காரன்…அவர்களின் ஒருவன் கைவிடப்பட்டான் மற்றவன் இரட்சிக்கப்பட்டான். அது போன்றே சிலுவையில், அவர் தம்முடைய சிறை வீட்டில் இருந்தபோது, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டபோது, ஒரு சிறைவாசியானபோது, ஒரு கள்ளன் கைவிடப்பட்டான் மற்றவன் இரட்சிக்கப்பட்டான். பாருங்கள், அதேவிதமாகவே.
105196 அவன் ராஜாவாகிய பார்வோனின் வலக்கரமானான், ராஜாவாக அவன் சொப்பனம் கண்டிருந்தான், அதாவது அவன் ராஜாவினுடைய பாதத்தண்டையில் அமருவான் என்றும், எகிப்தில் உள்ள எல்லா அதிகாரமும் அவனுக்கு கொடுக்கப்படும் என்ற தரிசனத்தை உடையவனாய் இருந்தான். அந்த தரிசனம் நிறைவேறவேண்டியதாயிருந்தது. அவன் அந்த சிறையில் அங்கே இருந்தபோது, அநேக முறைகள், அவன் அதைக் குறித்து ஆராய்ந்து பார்த்திருக்கலாம். அவனுடைய மீசை தாடி முதலியன வளர்ந்திருந்தன, ஆனால் அவன் அதை ஆராய்ந்து பார்த்திருந்தான். என்றாவது ஒரு நாளில் அவனுடைய தரிசனம் நிறைவேற வேண்டியதாய் இருந்தது. 197 அது தாமதித்தாலும், அது நிறைவேறியாக வேண்டுமே! நான் சென்ற இரவு, இல்லை அதற்கு முந்தின இரவு, புதன் இரவு ஆராதனையில் பேசினது போன்றே. பாருங்கள், அது நிறைவேற வேண்டும். தேவன் அவ்வண்ணமாய் கூறுகிறபோது, அது சம்பவித்தாக வேண்டும். அது ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி, அது நிறைவேற வேண்டும், ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது.
106198 வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் மாத்திரமே வருகிறது. தீர்க்கதரிசி என்ற வார்த்தை “தெய்வீகமாக எழுதப்பட்ட வார்த்தையை வெளிப்படுத்தும் ஒருவர்,” என்றே பொருள்படுகிறது, அதே விதமாக அது “ஒரு முன்னறிவிப்பவர்,” பாருங்கள், அல்லது “ஞானதிருஷ்டிக்காரர்” என்று பொருள்படுகிறது. கவனியுங்கள். ஞானதிருஷ்டிக்காரர், நீங்கள் அறிந்த அந்த ஒருவர் கூறுகிறது, எப்படியாயினும், அவர் முன்காணுதலினால் தெய்வீகமாக ரூபாகாரப்படுத்தப்பட்டு, அது நிறைவேறும். “உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசி யாயிருந்தால், நான் அவனோடே பேசி, வரப்போகும் சில காரியங்களை அவனுக்கு அறிவிப்பேன். அது நிறைவேறாமல் போனால், அவனுக்கு செவிகொடுக்க வேண்டாம். ஆனால் அது நிறைவேறுமானால், அப்பொழுது நான் அவனோடு கூட இருக்கிறேன். நீங்கள் அவனுக்குப் பயப்படுவது நலம், ஏனெனில் நான் அவனோடு கூட இருக்கிறேன், நீங்கள் பாருங்கள்.” அது முற்றிலும் உண்மை. அங்கேதான் ரூபகாரப்படுத்துதல் உள்ளது, அது உண்மையா இல்லையாவென்று அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 199 தேவன் தம்முடைய வார்த்தையின் மூலமாக திரும்ப, தம்முடைய ஜனங்களுக்கு, ஜனங்களின் மூலமாக பேசிக்கொண்டிருக்கிறார். பாருங்கள், தேவன் மனிதனின் மூலமாக மாத்திரமே பேசுகிறார். “நானே திராட்சச் செடி, நீங்கள் கொடிகள்.” திராட்சச் செடி கனி கொடுப்பதில்லை. கொடிகள்தான் பேசி, திராட்சைக் கனிகளைத் தருகின்றன. கவனியுங்கள், அது எப்பொழுதுமே அவ்விதமாகவே இருந்து வந்துள்ளது.
107200 இப்பொழுது நாம் யோசேப்பைக் காண்கிறோம், அப்பொழுது, யோசேப்பை முதலில் காணாமல், எந்த மனிதனுமே பார்வோனைத் தொடவோ அல்லது வரவோ முடியாது. “குமாரனின் மூலமேயல்லாமல், ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” யோசேப்பு சிம்மாசனத்தைவிட்டு புறப்பட்டபோது, அவர்கள் எக்காளங்களை முழங்க, “ஒவ்வொரு முழங்காலும் பணிந்தன! யோசேப்பு வருகிறார்!” 201 மகிமை! ஒருநாள் அவர் தம்முடைய பிதாவின் சிங்காசனத்தைவிட்டு புறப்பட்டு வரும்போது, பாருங்கள், முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும். அவர் தேவனுடைய குமாரன் என்று எல்லாரும் சாட்சி கூறுவார்கள். நீங்கள்…அப்பொழுது காலதாமதமாயிருக்கும். அதை இப்பொழுதே செய்.
108202 இப்பொழுது நாம் மாதிரிகளினூடாக கவனிக்கிறோம், சிறிது நேரத்திற்கு முன்பு நான் பேசியதுபோல, நாம் தாவீதைக்கூட எடுத்துக்கொள்ளலாம், அவன் தன்னுடைய சொந்த ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டு, தன்னுடைய சிங்காசனத்திலிருந்து இறங்கி; அவன் தன்னுடைய சிறைக்கு சென்றுகொண்டிருந்தபோது, ஒலிவ மலையின் மேல், அதே மலையின் மேல் ஏறினான். அவன் தன் சகோதரராலும் சொந்த ஜனங்களாலும் புறக்கணிக்கப்பட்ட காரணத்தால், அவன் தன்னுடைய சிறை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். அவன் நடந்துகொண்டே மலையின் மீது ஏறினான். அது புறக்கணிக்கப்பட்டிருந்த, அவனுக்குள்ளிருந்த கிறிஸ்துவின் ஆவியாக இருந்தது, அவன் எருசலேமை நோக்கிப் பார்த்தபோது, அழுது, “எருசலேமே, எத்தனைதரமோ நான்…” என்றான். ஒரு புறக்கணிக்கப்பட்ட ராஜா. எண்ணூறு ஆண்டுகள் கழித்து, தாவீதின் குமாரன் புறக்கணிக்கப்பட்டவராய், எருசலேமில் நின்றுகொண்டு, அங்கே எருசலேமைப் பார்த்து, கண்ணீர்விட்டு, “இதோ, உன் நேரம் வந்துவிட்டது” என்றார். அது உண்மை. புரிகிறதா?
109203 இவையனைத்தும் அவருக்கு முன்னடையாளங்களாகத் திகழ்கின்றன, முன்னடையாளங்களாக மாத்திரமே, ஆனால் இன்னுமாக அந்த இரகசியம் மறைக்கப்பட்டிருந்தது. அந்த மனிதர் தாங்கள் செய்கொண்டிருந்தது என்னவென்றே அறியாதிருந்தனர். ஏதோ ஒன்றை செய்ய அவர்கள் ஆவியால் வழிநடத்தப்பட்டனர் என்பதை மாத்திரமே அவர்கள் அறிந்திருந்தனர். இப்பொழுது, இந்த மகத்தான வெளிப்பாட்டை, அவர் கடைசி நாட்களுக்கென வைத்திருந்தார். ஆனால், அதே சமயத்தில் அவர் தம்மை மோசே, தாவீது, யோசேப்பு, எலியா போன்றவரின் மூலமாக படிப்படியாக வெளிப்படுத்திக்கொண்டே வந்தார். நீங்கள்…நாம் அந்த தீர்க்கதரிசிகள் ஒவ்வொருவரையும் ஆராய்ந்து பார்த்து, அவருடைய ஜீவியங்களை கொண்டு வந்து, அது எவ்வாறு இயேசு கிறிஸ்துவை பரிபூரணமாக, சரியாக, வெளிப்படுத்தினது என்றும் காண்பிக்கலாம். அதே சமயத்தில், அவர் இன்னுமாகத் தம்முடைய இரகசியத்தை முழுமையாக அளிக்கவில்லை; அவர் வாக்குத்தத்தம் செய்தவாறே கடைசி நாட்களில் அதைத் தெரியப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறார், அது முழுவதுமாக கிரகித்துக்கொள்ளப்பட அவர் காத்துக்கொண்டிருக்கிறார், பாருங்கள், அவர் அதை வெளிப்படுத்தும் முன்னர். முழு காரியத்தையும் அவர் கூறியிருந்தால்… 204 ஏனெனில், வேதாகமம் இரகசியங்களாக எழுதப்பட்டுள்ளது. பாருங்கள், அது இரகசியங்களாக எழுதப்பட்டிருந்தபடியால், அதற்காக இயேசு பிதாவை ஸ்தோத்தரித்தார்.
110205 இப்பொழுது, கர்த்தருடைய வருகையும் இரகசியமாகவே உள்ளது. அவர் எப்பொழுது வரப்போகிறார் என்றும், எப்படி வரப்போகிறார் என்றும் நமக்குத் தெரியாது, ஆனால் அவர் வரப்போகிறார் என்பதை மாத்திரம் அறிந்திருக்கிறோம். புரிகிறதா? எனவே தேவனுடைய எல்லா இரகசியங்களும் இந்த கடைசி நாளிற்காக காத்துக்கொண்டிருக்கின்றன. அவர் ஏற்கெனவே முடித்துவிட்ட பிறகு, அதன் பின்னர் தாம் என்ன செய்திருக்கின்றார் என்பதை அவர் வெளிப்படுத்திக் காண்பிக்கின்றார். ஓ, என்னே! தம்முடைய இரகசியத்தை முழுவதுமாக அவர் அளிக்கவில்லை. 206 இது அதைப் போலவே, ஏழு முத்திரைகளுடன் ஒப்பிடுவதாயுள்ளது. இப்பொழுது, தேவன் மார்டின் லூத்தரை அந்த முதலாம் சபை அல்லது அந்த சபையின் காலம் தோன்றுவதற்காக உபயோகித்தார், அவர் ஜான் வெஸ்லியை உபயோகித்தபோது, அவர் அவர்களை படிப்படியாக வெளியே கொண்டு வந்து, அந்த சபை காலத்திலிருந்த அவர்களில் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். நாம்…இப்பொழுது வேதாகமத்தினூடாக அதை திரும்பிப் பார்க்கும்பொழுது கண்டறிகிறோம். ஆனால் இந்த கடைசி நாட்களில், ஒரு மிக மகத்தான காரியமாக இருக்க காரணம் என்னவென்றால், இங்கே அவர் அந்த ஏழு இடிழுழக்கங்களை காண்பித்து அதைக் குறித்துப் பேசினார். மேலும் லுக் மற்றும் லைஃப் என்ற பத்தி-…
111207 லைஃப் என்ற பத்திரிக்கை அந்த வட்டமான மேகத்தையும் ஒளியையும் வெளியிட்டன அதாவது அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, மற்றும் அதை இதுவரையிலும் அறிந்துகொள்ளவில்லை. ஆனால் இங்கு அவர் சொன்னதோ, “இந்த இரகசியங்கள் வெளிப்படுத்தப்படத்தக்கதாக அங்கே சென்று காத்திரு” என்றார், இங்கே அது நிறைவேறுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே கூறிவிட்டார், அவர் செய்வதாக கூறின விதமாகவே சரியாக அப்பொழுது அது சம்பவித்தது. அந்த புகைப்படத்தில் நீங்கள் கவனித்தீர்களா? வலது பாகத்திலுள்ள அந்த தூதன் காணக்கூடிய ரூபத்தில் இறங்கி வரும்போது, அவனுடைய செட்டைகள் பின்நோக்கியும் அவனுடைய தலை பக்கவாட்டிலும் இருக்கிறது, அது அந்த புகைப்படத்தில் அங்கே, சரியாக அப்படியே உள்ளது. இது நிகழ்வதற்கு பல மாதங்களுக்கு முன்னரே இங்கே, “அவர் சரீரமாகிய விசுவாசிகளை ஒன்று சேர்த்து, அந்த தளர்ந்த முனைகளை வெளிப்படுத்தப் போவதாக” கூறினார்.
112208 இதோ லூத்தர் தோன்றி, அவர் நீதிமானாக்கப்படுதல் என்பதைக் குறித்து மாத்திரமே பிரசங்கித்து, அந்த காலத்தில் அவர் வலியுறுத்தி இடித்துரைத்தார். அது எந்த சபையின் காலமாயிருந்து என்பது அவருக்குத் தெரியாது. இதோ வெஸ்லி தோன்றி, அவருடைய காலத்தில் அவர் தன்னுடைய காலத்தில் வலியுறுத்தி இடித்துரைத்தார். புரிகிறதா? பிறகு அதிலிருந்து அநேக வடிகால்கள் வெளிவந்தன, மற்ற சபைகள் எழும்பின. பின்பு இதோ பெந்தெகொஸ்தேயினர் தோன்றி, வல்லமையாய் கிரியை செய்தனர், அவர்களும் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டு சரியாக நேராக மரணத்திற்குள் சென்றனர்; இன்னும் சில நிமிடங்களில் அதைக் குறித்து பேசுவோம், நேராக “மரணத்திற்குள்” சென்றனர். 209 ஆகவே பிறகு அதைக் குறித்தென்ன என்பதை வெளிப்படுத்த, இரகசியத்தின் வெளிப்பாடு வருகின்றது. அதென்னவென்றால், இந்த சிறு போதனைகளை, லூத்தர் சபை போதனைகளை கற்றுக்கொடுக்க வினா விடை அடங்கிய நூலையும், மற்ற எல்லாவற்றையும் கொண்டு வந்தனர்; வெஸ்லி இதை, அதை, மற்றதை, இன்னும் வேறு காரியங்களை கொண்டு வந்தார்; அதன்பின்னர் பெந்தெகொஸ்தேயினரும் அவர்களைப் போலவே ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” ஞானஸ்நானம் போன்றவைகளைக் கொடுத்தனர்; அவை எத்தகைய வித்தியாசத்தை உண்டாக்குகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை, ஏனெனில்… அதன்பிறகு இந்த கடைசி நாட்களில் மறுபடியும் வந்து, இந்த இரகசியங்களையெல்லாம் எடுத்து தெளிவாக விளக்கி, அவைகளை வெளிப்படுத்துகிறார். ஏன்? இந்த கடைசி நாட்களில்தான் தேவன் தம்முடைய இருதயத்தில் கொண்டிருந்த இந்த மகத்தான இரகசியம் வெளிப்படுத்தப்படுகின்றது.
113210 இதை நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] உங்களால் விளங்கிக்கொள்ள முடியாவிட்டால், இந்த ஒலிநாடாவை மறுபடியும் கேளுங்கள். இன்னும் எவ்வளவு காலம் நான் உங்களுடனே இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. இது கர்த்தர் உரைக்கிறதாவது என்னும் சத்தியம் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். இதுதான் சத்தியம். இது வேத வசனமாயுள்ளது. 211 ஏழு கடைசி முத்திரைகளின் ஏழு இரகசியங்களைப் போல, அவைகளைக் குறித்த இரகசியங்கள். முத்திரைகள் உடைக்கப்பட்டுவிட்டன, ஒவ்வொரு சபையின் காலத்திலும் அவர்கள் நிறைய சிதறல்களை விட்டுச்சென்றனர். தேவன், அது சிதறக்கூடாது என்னும் சித்தம் கொண்டவராய், அவர் மறுபடியும் வந்து, அவர்கள் தொடங்கின போதனைகளையெல்லாம் கையிலெடுத்து, அவர்கள் துவங்கின அந்த உபதேசங்களை, அதை வெளிக்கொண்டு வந்து முழு காரியத்தையும் வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் இரகசியத்தை குறித்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கையில் எப்படி அவர் சபைக்கு தேவனுடைய மூவகை நோக்கமாக அமைந்திருந்தார் என்பதைக் குறித்த அதே காரியத்தைத் தான் அவர் இப்பொழுது செய்து கொண்டிருக்கின்றார்! ஓ, என்னே! தம்மை வெளியாக்குகின்றார். வெளிப்படுத்தல்!
114212 வெளிப்படுத்து என்னும் சொல்லுக்கு வெப்ஸ்டர் அகராதி, “தெரியப்படுத்துதல் என்று கூறுகின்றது. தெரியப்படுத்துதல், மற்றும், விசேஷமாக,” அந்த வெளிப்படுத்தல் என்பது, “தெய்வீக சத்தியத்தில்,” என்றே வெப்ஸ்டர் அகராதி கூறுகின்றது. வெளிப்படுத்தல்; அது தம்மைத் தாமே தம்முடைய சபைக்கு தெரியப்படுத்திக்கொள்ளும் கிறிஸ்துவினுடைய வழியாகும். 213 இப்பொழுது நாம், “இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாம், நீர் தான் இதை கூறிக்கொண்டிருக்கின்றீர்,” என்று கூறப் போகிறோம். இப்பொழுது, இதை மட்டும் கூறுங்கள் என்று, நாம் சொல்லமாட்டோம். 214 இப்பொழுது கவனியுங்கள், அவர் பேதுருவுக்கு தம்மை வெளிப்படுத்தினார். இப்பொழுது நீங்கள் இதை குறித்துக்கொள்ள விரும்பினால், மேலும் நாம்… நீங்கள் அதைப் படிக்க விரும்பினால், பரிசுத்த மத்தேயு 16:15 மற்றும் 17-ம் வசனங்களில் உள்ள அதை, நீங்கள் படிக்க விரும்பினால், நாம்—நாம் அதைப் படிக்கலாம். நான் அதை மேற்கோள் காட்டுவேன். அவர் மறுரூபமலையிலிருந்து இறங்கி வந்தபோது, அவர், “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யாரென்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்கிறார்.
115215 “சிலர் சொல்லுகிறார்கள், ஓ, நீர் ‘எலியா,’ என்று அவர்கள் நினைக்கிறார்கள், “சிலர், நீர், ‘தீர்க்கதரிசிகளில் ஒருவர்’ என்றும், ‘எரேமியா,’ என்றும், அதாவது அவர்களில் சிலர் சொல்லுகிறார்கள்.” ஆனால் அவர் கேட்டது அதுவாயிருக்கவில்லை. 216 அவர், “நான் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். இப்பொழுது அவர் பேசிக்கொண்டிருக்கின்ற சபை அதோ இருக்கிறது. புரிகிறதா? “நான் யாரென்று மனிதன் நினைக்கிறான்?” 217 இன்றைக்கு, “அவர் ஒரு தத்துவ ஞானி; இந்த சமுதாய மதம். அவர் ஒரு நல்ல மனிதன். அவருடைய போதனை சரியென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அது வாழ்ந்துகாட்ட வேண்டிய ஒரு பாடமாய் உள்ளது. நாம் அப்படிச் செய்தால், அது நம் அனைவரையும் மேம்படுத்தும் என்றே நான் நினைக்கிறேன். நாம் நம்முடைய சபைகளை, நம்முடைய—நம்முடையதை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.” அது ஒரு சாண்டா கிளாஸ், ஒரு சாண்டா கிளாஸ் கதையைப் போன்றதாகும். 218 அது நாம் ஏதோ ஒன்றை வெளிப்படுத்துகின்றதாயிருக்கின்ற சில சபையின் வெளிப்பாடுகள் அல்ல. அது நீங்களாகவே வாழ்ந்துகொள்ளும் ஒரு ஜீவியம் அல்ல, ஆனால் அவர் உங்களுக்குள் வந்து, அவர் தாமே ஜீவிக்க, நீங்கள் எந்த ஒரு மனித ஞானத்திற்கும் அப்பாற்பட்டு, நீங்கள் ஒரு சிறைவாசியாகிறீர்கள். நீங்கள் ஆவியினாலே அப்பொழுது நடத்தப்படுகிறீர்கள். எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?
116219 இப்பொழுது, நீங்கள், “என் புத்தியை இழந்து கொண்டிருக்கின்றேன் என்பதை நான் ஒருக்கால் தெரிந்துகொள்ளலாம். தன்னுடைய சிந்தையை இழந்துகொண்டிருக்கிற ஒரு மனிதன் அதை செய்யலாம்” என்று கூறலாம். 220 ஆனால் கிறிஸ்துவின் சிந்தையை நீங்கள் உடையவர்களாயிருந்தால், உங்கள் மூலமாக கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துவார், அது அவர் என்பதை அவர் காண்பிக்கிறார்…நீங்கள் உங்களுடைய சிந்தையை இழந்திருக்கவில்லை, இல்லையே. 221 சில ஜனங்கள் பொய்த் தோற்றங்களில் நம்பிக்கைக்கொண்டு அதன் விளைவாக அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது. பாருங்கள், அதை, அது தவறு என்பதை நாம் அறிவோம். அது உண்மையான ஒன்றை, அது தோன்றுவதற்கு முன்பு, பிசாசு பாவனை செய்தலாகும், பாருங்கள், எப்பொழுதுமே அது போலியான ஒரு காரியம். புரிகிறதா? 222 ஆனால் ஒரு உண்மையான மனிதன் தன்னுடைய சொந்த சிந்தனைகளையும் தன்னுடைய சொந்த கருத்தையும் விட்டுவிட வேண்டியவனாய் இருக்கிறானே! அந்த விதமாக குருட்டுத்தனமாக மேலே வர வேண்டாம். இல்லை ஐயா. உங்களுடைய சரியான புலன்களுடன் நீங்கள் வருகிறீர்கள், அப்பொழுது கிறிஸ்து உங்களை ஆட்கொண்டு, தம்மை தாமே வெளிப்படுத்துகிறார். மேலும் இப்பொழுது, உலகிற்கு, நீங்கள் பைத்தியக்காரரா நபராக இருக்கிறீர்கள். 223 இப்பொழுது, நீங்கள் பைத்தியமாக இருந்தால், நீங்கள் உண்மையிலேயே பைத்தியம் பிடித்தவர்களாயிருந்தால், அப்படியென்றால் ஒன்றுமில்லை…பிசாசு உங்களை முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியாது. அவன் உங்களை இந்த வார்த்தைக்கு மாறான ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வைப்பான். 224 ஆனால் கிறிஸ்து உங்களை ஆட்கொள்ளும்போது, அவர் அந்த வார்த்தையை உங்கள் மூலம் வெளிப்படுத்துவார், ஏனெனில் அது அவராயுள்ளது. அவர் வார்த்தையாயிருக்கிறார்! புரிகிறதா? அப்பொழுது உங்களால் கிறிஸ்துவின் வெளிப்படுத்துதலை காண முடியும். அது பொய்த் தோற்றம் அல்ல, ஆனால் உண்மையாகவே அசலாகவே கிறிஸ்து சரியாக உங்கள் மூலமாக தம்மை வெளிப்படுத்துதல். எவ்வளவு அழகாயுள்ளது!
117225 இப்பொழுது கவனியுங்கள். அவர், “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். அவர் சபையை, தம்முடைய பன்னிருவரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அந்த நாளின் கோடிக்கணக்கானவர்களுக்கு புறம்பே இருந்தவர்களில், அவருடைய பன்னிருவரிடத்தில், தம்முடைய சபையினிடத்தில் கேட்டார். நோவாவின் காலத்திலிருந்த கோடிக்கணக்கானவர்களில், அவர் எட்டுப் பேரைக் கேட்டார். ஹு-ஹூம். புரிகிறதா? 226 அவர், “நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருகையிலும் இருக்கும், பாருங்கள், அங்கே எட்டு பேர் காப்பாற்றப்பட்டனர்” என்று கூறினார். 227 எட்டுபேர் மாத்திரமே இப்பொழுது இரட்சிக்கப்படுவார்கள் என்று நான் கூற வரவில்லை. இப்பொழுது அதையெல்லாம் தவறாக எண்ண வேண்டாம். நான் அதை ஒருபோதும் கூறவேயில்லை. எத்தனைப் பேர், அதில் இரட்சிக்கப்படுவார்கள் என்று எனக்குத் தெரியாது, அது அது அந்த…அந்த சிறிய குழு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் அந்த கடைசி பொழுதில். அது ஒரு சிறு குழுவாக இருக்கும், நான் அதை உங்களிடம் சொல்லுவேன். “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதை கண்டுபிடிப்பவர்கள் சிலர்.”
118228 ஆனால் காலங்கள் தோறும் மீட்கப்பட்டவர்களைக் கொண்ட அந்த மகத்தான சரீரம் வரும்போது, அப்பொழுது அங்கே ஒரு மகத்தான சிங்காசனம் இருக்கப்போகின்றது! வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரம் அதை வெளிப்படுத்துகிறது, “ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்,” அவர்கள் ஒவ்வொரு சபை காலங்களினூடாக மீட்கப்பட்டவர்கள், அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட அளவுக்கு அவர்கள் வேதத்தின் வெளிச்சத்தில் நடந்தவர்கள். இப்பொழுது லூத்தரைக் காட்டிலும் வெஸ்லிக்கு அதிக வெளிச்சம் இருந்தது என்று நாமறிவோம். வெஸ்லியை காட்டிலும் பெந்தெகொஸ்தேக்கு அதிக வெளிச்சம் இருந்தது என்றும் நாமறிவோம். புரிகிறதா? நிச்சயமாகவே, அது அவ்விதமாக இருந்தது. 229 ஏனெனில், அது தீர்க்கதரிசிகளின் மூலமாகவும், மேலும் பலவற்றின் மூலமாகவும், அது முழுமையாக தெரியப்படுத்தப்படும் வரை, அது படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டது, “தேவத்துவம் கிறிஸ்துவின் சரீரத்துக்குள்.” 230 ஆகவே இப்பொழுது சபையில் உள்ள கிறிஸ்து தெரியப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த முழு காரியமும் தேவனுடைய வெளிப்பாடாகும், அது தன்னுடைய புருஷனுடன் மறுபடியுமாக ஏவாளை தன்னுடைய சரியான ஸ்தானத்திற்கு திரும்பவுமாக கொண்டு செல்வதற்காகவே ஆகும். கவனியுங்கள், தேவன் சபையின் புருஷன் ஆவார், சபை அவருடைய மணவாட்டி ஆகும்.
119231 இப்பொழுது, பேதுரு, அவர் அழைத்தபோது, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று கூறினான். 232 இப்பொழுது கவனியுங்கள். “ யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்,” அதாவது, “யோனாவின் குமாரன்” என்று அர்த்தம். புரிகிறதா? “நீ பாக்கியவான், ஏனெனில் மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. நீ ஏதோ ஒரு பள்ளியில் இதை கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.” அவர் மேலும் அவனிடம் என்ன கூறினார் என்று கவனியுங்கள், “இந்தக் கல்லின்மேல்…” அது பேதுரு, இந்த வெளிச்சத்தை பெற்றுக்கொண்ட இராஜ்ஜியத்தின் திறவு கோல்கள் அளிக்கப்பட்ட முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வித்து. “இயேசு கிறிஸ்து யார் என்னும் வெளிப்பாடாகிய இந்தக் கல்லின்மேல்,” அவர் முழுமையாக, வெளிப்பட்ட தேவனாயிருக்கிறார். “இந்தக் கல்லின்மேல்…” பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; அவர் இரண்டாம் ஆள் என்பதன் மேல் அல்ல. “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை அசைத்து ஒருபோதும் கீழே தள்ளி, அதை மேற்கொள்வதில்லை.” பார்த்தீர்களா? “இந்தக் கல்லினமேல் என் சபையைக் கட்டுவேன்.” இயேசு கிறிஸ்துவைக் குறித்த ஒரு வெளிப்பாடு.
120233 பாருங்கள், கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதே வெளிப்பாட்டின் ஜீவனின் மையமாக அவரை ஆக்குகிறது. புரிகிறதா? உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவின் ஜீவனே வெளிப்பாட்டின் மையமாக அவரைத் திகழச் செய்கின்றது. வேதத்தில், கிறிஸ்து, வேதாகமத்தை கிறிஸ்துவின் முழுமையான வெளிப்பாடாக ஆக்குகின்றார். உங்களுக்குள்ளிருக்கும் கிறிஸ்து உங்களை அந்த முழு காரியத்தின் முழுமையான வெளிப்பாடாக ஆக்குகின்றார், தேவன் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்று, பாருங்கள். 234 அப்படியானால் மறுபிறப்பு என்றால் என்ன? நீங்களோ, “சரி, சகோதரன் பிரன்ஹாமே, மறுபிறப்பு என்றால் என்ன?” என்று கேட்கலாம். நீங்கள் தனிப்பட்ட விதத்தில் பெறும் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடேயாகும். ஆமென்! பாருங்கள்? நீங்கள் ஒரு சபையில் சேர்ந்துகொண்டதல்ல, நீங்கள் ஒரு கரத்தை குலுக்கினதல்ல, நீங்கள் வித்தியாசமான ஏதோ ஒரு காரியத்தை செய்துவிட்டதல்ல, நீங்கள் ஒரு பிரமாணத்தை கூறினதல்ல, ஒரு—ஒரு குறிப்பிட்ட நெறி முறைகளை பின்பற்ற வாக்குகொடுத்திருந்ததல்ல. ஆனால் கிறிஸ்து, அந்த வேதாகமம், உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட அந்த வார்த்தை அவர்தான். யாராவது என்ன கூறினாலும், என்ன நடந்தாலும் ஒரு பொருட்டல்ல, அது கிறிஸ்து; மேய்ப்பன், ஆசாரியன், என்னவாயிருந்தாலும் சரி. அது உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து, சபை கட்டப்பட்டிருக்கும் வெளிப்பாடு அதுதான்.
121235 நீங்கள், “நல்லது நான் ஒரு லூத்தரன். நான் ஒரு பாப்டிஸ்டு. நான் பிரஸ்பிடேரியன்” என்று கூறலாம். அதனால் ஒரு அர்த்தமுமில்லை [சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய விரல்களை சொடுக்குகிறார்—ஆசி] அது தேவனுக்கு, ஒரு காரியமாயிருக்கவில்லை, உங்களுடைய விரலின் ஒரு துளியுமல்ல. 236 அது என்ன? கிறிஸ்து வெளிப்படுவதே, அவர் வார்தையாயிருக்கிறார். வார்த்தை வெளிப்படும்போது, அது தன்னை வெளிப்படுத்துகிறது. புரிகிறதா? இயேசு கிறிஸ்துவைப் பற்றி தேவன் கொண்டிருந்த நோக்கமே, அவர் தம்மை வெளிப்படுத்தி, தம்முடைய சொந்த நியாயப்பிரமாணத்தின்படி வாழ்ந்து காண்பித்து, கண்டி-…அவருடைய மரணத்தின் மூலம், அவருடைய சொந்த நியாயப்பிமாணத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதேயாகும். தேவன், கிறிஸ்துவாக, மாம்சத்தில் உள்ள பாவத்தை ஆக்கினிக்குட்படுத்தும்படிக்கு மாம்சத்தில் மரித்தார், அதாவது தேவனுடைய வார்த்தையில் மாத்திரமே விசுவாசம் வைக்கும்படியாக, தமக்கென்று ஒரு மகிமையான மணவாட்டியை திரும்ப மீட்டுக் கொள்ளவே; மனிதனின் அறிவார்ந்த கருத்துக்களுக்காக, ஏவாள் செய்ததுபோல அதை மாற்றிக்கொள்ள அல்ல. உங்களுக்கு அது புரிகிறதா? அதுதான் கிறிஸ்துவின் கருத்தாயிருந்தது. அதுதான் தேவனின் கருத்தாயிருந்தது. மறுபிறப்பு இதை வெளிப்படுத்துகின்றது.
122237 ஒரு மனிதன் தான் மறுபடியும் பிறந்ததாகக் கூறிக்கொண்டு, அதே சமயத்தில் இக்கடைசி நாளுக்கென்று அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் வேறொரு காலத்துக்குரியது என்று சொல்லி, அவர் நேற்றைய கிறிஸ்துவேயல்லாமல் இன்று அல்ல என்று ஆக்குவானானால், அந்த மனிதன் அல்லது அந்த நபர் சாத்தானால் ஒரு—ஒரு கொடிய வஞ்சகத்தில் இருந்து வருகிறான். அந்த மனிதன் அதை விசுவாசிப்பதாக கூறிக்கொண்டு, அது தானே அவன் மூலம் வெளிப்படாது என்று கூறுவானானால் என்னவாகும்? 238 இயேசு, மாற்கு 16-ல், “உலக முழுவதிலும், ஒவ்வொரு காலத்திலும் விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று கூறினார். பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், மேலும்—மேலும் வரங்களின் இந்த எல்லா மகத்தான வெளிப்படுத்துதல்களும், அதனைப், பின்தொடரும், “அவைகள் தொடரும்!” “அவைகள் தொடரலாம் என்பதல்ல; அவைகள் தொடர்ந்தாக வேண்டும் .” “அவைகள் கண்டிப்பாகத் தொடரும்!” வானங்களும் பூமியும் ஒழிந்துபோம், அவருடைய வார்த்தைகளோ ஒழிந்துபோகாது.
123239 எனவே அது கிறிஸ்து தனிப்பட்ட நபரின் மூலமாக தம்மைத்தாமே வெளிப்படுத்துவதாகும், அவன் கல்வி அறிவு கொண்டிருந்தாலும் சரி அல்லது அவன்—அவன் தன்னுடைய மொழியின் முதல் எழுத்தை அறியாதிருந்தாலும் சரி. பாதி அப்போஸ்தலர்கள் அதை அறிந்திருக்கவில்லை, அது உண்மை, ஆனால் அவர்கள் கிறிஸ்துவை அறிந்திருந்தனர். பேதுருவும் யோவானும் ஏதோ ஒரு வேதாகம கருத்தரங்கிலிருந்து வந்திருந்தனர் என்பதை அறிந்திருந்தபடியினால், அவர்கள் இவர்களுக்கு ஒருபோதும் செவி கொடுக்கவில்லை. அவர்கள், “இவர்கள் கிறிஸ்துவுடனே கூட இருந்தவர்கள் என்பதை அறிந்திருந்தபடியினால் அவர்கள் செவிகொடுத்தனர்” என்றே கூறினர், வாசலண்டையில் இருந்த சப்பாணியை அவர்கள் சுகப்படுத்தினபோது, பாருங்கள். இவர்கள்—அவர்கள் கிறிஸ்துவுடனேகூட இருந்தவர்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
124240 மறுபிறப்பு என்பது கிறிஸ்துவாய், ஒரு வெளிப்பாடாய் உள்ளது. தேவன் இந்த மகத்தான இரகசியத்தை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், அதுதான் ஒரு மறுபிறப்பு. இப்பொழுது நீங்கள் அந்த குழுவை ஒன்று சேர்த்து என்ன செய்யப் போகிறீர்கள்? அங்கே வெளிப்பாடு பரிபூரண இசைவாக இருக்கிறது, தேவன் அதைத் தம்முடைய வார்த்தையின் மூலமும் அதே கிரியைகள் மூலமும், அவர் செய்த அதே காரியங்கள் மூலமும் வெளிப்படுத்தி, வார்த்தையை வெளிப்படுத்துகிறார். ஓ, சபை மாத்திரம் அதனுடைய ஸ்தானத்தை அறிந்துகொள்ளுமானால் நலமாயிருக்குமே! ஒரு நாள், அதை அறிந்துகொள்ளும். அப்படியானால், அது என்னவென்பதை அது அறிந்துகொள்ளும்போது எடுத்துக் கொள்ளப்படுதல் நடக்கும். இப்பொழுது கவனியுங்கள். 241 நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், ஆனால் அது—அது அல்ல…” என்று கூறலாம். ஓ, ஆம், அதுவும் கூட. அது சத்தியம் ஆகும்.
125242 நீங்கள் கவனித்தீர்களா? பவுல் இயேசுவை, சரீரப்பிரகாரமாக ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. பவுல் அவரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. பவுல் அவரை அறிந்துகொண்டிருந்த ஒரே ஒரு வழி வெளிப்படுத்தலின் மூலமாகவும், தரிசனத்தின் மூலமாகவுமே. அது சரியா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] பேதுரு செய்தது போன்றே, பவுல் இயேசுவை வெளிப்பாட்டின் மூலமாகவே அறிந்திருந்தான். 243 பேதுரு அவரை மாம்சத்தில் கண்டிருந்தான், ஆனாலும் அவன் அவரை மாம்சத்தின் மூலம் அறியவில்லை, ஏனென்றால் இயேசு அவ்வண்ணமாய் கூறினார். “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. என்னுடைய சொந்த வாழ்க்கை உனக்கு அதை வெளிப்படுத்தவில்லை. ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா அந்த காரியத்தை உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்,” அதாவது அவர் தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறார், “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்.” பேதுரு அவரை மாம்சத்தின்படி அறிந்திருக்கவில்லை. அந்த மனிதர் நடந்து, அவரைத் தொட்டு, மற்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்தனர்.
126244 ஆனால் பவுல் இந்த அப்போஸ்தலர்கள் எல்லாரையும் விட மகத்தான ஒன்றைப் பெற்றிருந்தான். புரிகிறதா? 245 அவர்கள், “பாருங்கள், பவுலே, உன்னைக் காட்டிலும் எனக்கு—எனக்கு அதிகமான ஒரு வெளிப்பாடு உண்டு, ஏனெனில், உனக்கு தெரியும், நான் அவருடன் நடந்தேன். ஒரு நாள், நான் அவருடன் மீன்பிடிக்கச் சென்றேன். நான் அவர் பேசுவதைக் கேட்டேன். அவர் ஒரு படகில் என்னுடன் அமர்ந்து, ‘நாம் இந்த இடத்திற்கு போய் இங்கே மீன்பிடிப்போம், அங்கு நமக்கு அதிக மீன்கள் கிடைக்கும்’ என்றார். நாங்கள் அதைச் செய்தோம்.” புரிகிறதா? பார்த்தீர்களா? “நாங்கள் அவர் அந்த காரியங்களை செய்கிறதைக் கண்டோம்.” 246 ஆனால் பவுலோ அவர் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மீண்டும் உயிரோடெழுந்தபின்பு, இஸ்ரவேலரை வழி நடத்தின அந்த அக்கினி ஸ்தம்பத்தில் தம்மை வெளிப்படுத்துவதைக் கண்டான். அறிந்து…யூதனான, பவுல், அவன் அந்த வெளிப்படுத்தலில் கண்டிருக்கவில்லையென்றால், அவன் அவரை ஒருபோதும் “ஆண்டவரே” என்று அழைத்திருந்திருக்கமாட்டான். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கின்ற அவர் திரும்பி வந்திருந்தார். அவர், “பவுலே” என்றார், வேறுவிதமாக கூறினால், “நான் நேற்றிருந்த அதே தேவனாகத்தான் நான் இன்றும் இருக்கிறேன். இதோ நான், அதே ஒளியில், எரிகின்ற முட்செடியில் மோசயினிடத்தில் பேசின அக்கினி ஸ்தம்பத்தில் இருக்கிறேன்.” எபிரெயர் நிருபத்தில், அவன் நியாயப்பிரமாணத்தையும் கிருபையையும் வெவ்வேறாய் பிரித்ததில் வியப்பொன்றுமில்லை; அதே அக்கினி ஸ்தம்பத்தை அவன் சந்தித்தான். அவர், “நீ துன்பப்படுத்துகிற, இயேசு நானே” என்றார்.
127247 இங்கே இன்றைக்கும், அவர் அதே விதமாகவே இருக்கிறார், அதே அக்கினி ஸ்தம்பம் மூலமாக, இன்றைக்கு தம்மை அதே விதத்தில் வெளிப்படுத்தி, ரூபகாரப்படுத்தி, உலகத் தோற்றத்துக்கு முன்னால் மறைக்கப்பட்டிருந்த தேவனுடைய இரக சியங்களை வெளிப்படுத்திக் கொடுக்கிறார். புரிகிறதா? 248 பவுல் அவரை வெளிப்பாட்டின் மூலமாக மாத்திரமே அறிந்திருந்தான். பேதுருவும் அவரை வெளிப்பாட்டின் மூலமாகவே அறிந்திருந்தான். 249 அவன் அவருடன் நடந்தான், அவருடன் பேசினான். எனவே, உங்களால் இந்த வார்த்தையில் பொருந்த முடியும். இப்பொழுது, அவர் வார்த்தையாயிருந்தார் என்று சற்று முன்பு நான் கூறியிருக்கிறேன். இப்பொழுது, ஒரு வேத பண்டிதன் அமர்ந்து வேதத்தைப் படித்துவிட்டு, அவன் விரும்பினால், உங்கள் மனதை எந்த விதத்திலும் திருப்ப முடியும், ஏனெனில் அவன் புத்திகூர்மையுள்ளவனாய், நுண்ணறிவு படைத்தவனாய் இருக்கிறான். ஒரு கத்தோலிக்க பாதிரியாரை எடுத்துக்கொள்வோம், அல்லது, அவரைக் காட்டிலும் சிறந்த, ஒரு உண்மையான நல்ல, வேதத்தில் பயிற்றுவிக்கப்பட்ட வேத பண்டிதனை எடுத்துக்கொள்வோம். சகோதரனே, ஒரு பாப்டிஸ்டு, அல்லது ஒரு பிரஸ்பிடேரியன், அல்லது ஏதோ ஒருவரை, அவர்கள் பேச வரும்போது, உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நீங்கள் நினைக்குமளவுக்கு அவர்கள் செய்வார்கள், பாருங்கள். ஏன்? பாருங்கள், ஏனென்றால் அவன் அவரை வார்த்தையை, மாம்சத்தின்படி அவன் அறிந்திருக்கின்றான். [சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை தட்டுகிறார்—ஆசி.]
128250 ஆனால் நீங்கள் வெளிப்பாட்டினால் அவரை அறிந்திருக்கிறீர்கள் என்பதே நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதற்கான ஒரே வழியாய் இருக்கிறது! 251 என்னால் முடிந்தால், நான் பிரஸ்பிடேரியன் போதகங்களைக் எடுத்துக்கொண்டு பெந்தெகொஸ்தேயினராகிய நீங்கள் ஒன்றுமே பேச முடியாத அளவுக்கு உங்களை அடக்கிவிட முடியும். அதே போன்று நான் பாப்டிஸ்டு போதகத்தை எடுத்துக்கொண்டு, பெந்தெகொஸ்தேயினராகிய உங்களுக்கு லட்சக்கணக்கான காரியங்களைக் காண்பித்து, உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நிரூபிக்க முடியும். அது உண்மை, ஆனால் அதுவல்ல இது. அது அவருடைய சபையல்ல. அது அவருடைய சபையல்ல. 252 அவர் தேவனாக இருக்கிறார் என்று, வார்த்தையினால் தானே வெளிப்படுத்தப்பட்டு, (ஆமென்! உங்களுக்கு இது புரிகிறதா?) அவரே தம்மை வெளிப்படுத்துவது அவருடைய சபையாய் உள்ளது. புரிகிறதா?
129253 நீங்கள் எப்படி, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி,” என்று கூறிக்கொண்டு, அதன்பின்னர் அதிலேயே ஞானஸ்நானம் பண்ணப்பட முடியும்? அஞ்ஞானிகளே! உண்மையே! அதற்கான ஒரு வேத வாக்கியமும் வேதாகமத்தில் இல்லாதிருக்கும்போது, ஒரு இடத்திலும் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதாக இல்லாதிருக்கும்போது, அவர் வார்த்தையாக இருக்கிறார், இயேசுகிறிஸ்துவை உங்களுக்குத் தெரியும் என்று எப்படி நீங்கள் கூற முடியும்? 254 இயேசு-மாத்திரமே என்று கூறுகிற ஜனங்களாகிய நீங்கள்—நீங்கள், ஞானஸ்நானத்தின்போது, “இயேசு” என்னும் பெயரை உபயோகிக்கின்றீர்களே! “இயேசு” என்னும் பெயர் கொண்ட நான்கு அல்லது ஐந்து பேர்களைத் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும். எனவே உங்களுடைய ஸ்தாபனம் உங்களை எங்கு வழிநடத்துகிறது என்று பார்த்தீர்களா? அது இருள், காயீனின் வெளிப்படுத்துதல், அவன் இரத்தத்திற்குப் பதிலாக கனிகளைக் கொண்டு வந்தான். புரிகிறதா?
130255 ஆனால் வெளிப்பாடானது இரத்தத்தின் மூலமாக வருகின்றது, பாருங்கள், இயேசு கிறிஸ்துவின் மூலமாக, மரியாளின் கர்ப்பத்தில் இருந்த சிருஷ்டிக்கும் திறனுள்ள, தேவனுடைய இரத்தமாக இருந்தார். பவுல் அவரை வெளிப்படுத்தலினால் அறிந்திருந்தான். இன்றைக்கு அவ்விதமாகவே நாம் அவரை அறிந்துகொள்கிறோம், அந்த ஒரு வழியாக மாத்திரமே நீங்கள் அவரை அறிந்து கொள்ளமுடியும். “நான் மெத்தோடிஸ்டு” என்று கூறுவதானால் அல்ல. அது ஒன்றிற்கும் உதவாது. “நான் பாப்டிஸ்டு.” அது ஒன்றிற்கும் உதாவது. “நான் கத்தோலிக்கன்.” அது ஒன்றிற்கும் உதவாது. ஆனால் வெளிப்பாட்டின் மூலமே, தேவன் வார்த்தையை உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளாரே! அவர் வார்த்தையாயிருக்கிறார். ஆகவே அந்த வார்த்தை, அது வெளிப்பட்டது என்று உனக்கு எப்படி தெரியும், அது தானாகவே ஜீவித்து உங்கள் மூலமாக தன்னையே வெளிப்படுத்துகிறது. ஓ! 256 சபைகள் என்றைக்கோ மகத்தான வெளிப்பாட்டை மறந்துவிட்டன. அது உண்மை. சத்தியத்தின் வெளிப்படுத்துதல், அவர்கள் அதை மறந்துவிட்டனர். அவர்கள் சென்று… 257 இப்பொழுது, லூத்தர் எழும்பினபோது, அவர் ஒரு மகத்தான மனிதனாயிருந்தார். அந்நாளிற்குரிய வெளிப்பாட்டை அவர் பெற்றிருந்தார். ஆனால் என்ன நேர்ந்தது? ஒரு கூட்ட ரிக்கிகள் உள்ளே வந்தனர், தட்டையாக முடியை வெட்டிக் கொண்டுள்ளவர்களை, அவர்களை அப்படித்தான் நாம் இன்று அழைக்கிறோம், ரிக்கெட்டாக்கள், மேலும் இவர்கௌல்லாம், அவர்கள் அதில் சேர்ந்துகொண்டனர். மேலும்—மேலும்—மேலும், முதலாவதாக உங்களுக்கு தெரியுமா, அது அங்கே இருக்கின்றது.
131258 அந்த வெளிப்படுத்துதல். நீங்கள் மாத்திரம்—மாத்திரம் வேதாகம எண்சாஸ்திரத்தை நீங்கள் அறிந்திருப்பீர்களானால், எல்விஸ் அல்லது—அல்லது ரிக்கி என்றால் வேதாகமத்தை பொறுத்த வரையில் என்னவென்று அறிந்திருப்பீர்களானால் நலமாயிருக்குமே! ஹு-ஹூ. இயேசு ஏன் செய்தார், என்பது போல…நீங்கள், “உங்கள் பெயரைப் பொறுத்த வரை ஒன்றுமில்லை” என்று கூறலாம். ஒன்றுமில்லையா? அந்த பெயர் இந்த கடைசி நாட்களில் மாத்திரமே, இந்த கடைசி நாட்களின் மக்களிடம்தான் வரமுடியும். 259 இயேசு ஏன் ஆபிராம் என்னும் பெயரை ஆபிரகாம் என்றும், அதன்பின்னர், சாராய் என்னும் பெயரை சாராள் என்றும் மாற்றினார்? சவுல் என்னும் பெயரை அவர் ஏன் பவுல் என்று மாற்றினார்? அவர் ஏன் சீமோனை பேதுரு, போன்றவர்களை மாற்றினார்? நீங்கள் பாருங்கள், நிச்சயமாக அதற்கு ஏதோ ஒரு அர்த்தமுண்டு. 260 அந்தப் பெயர் இன்று வரைக்கும் உரைக்கப்பட முடியாமலிருந்தது. அதன் காரணமாகத்தான் நரகத்தைச் சார்ந்த காரியங்களை நாம் இன்று இவ்வுலகில் காண்கிறோம். இக்காரியங்களினால் மானிடவர்க்கம் முழுவதுமே கறைபட்டுள்ளது. அது—அது போய்விட்டது, பாருங்கள், அதனால் தான்.
132261 இப்பொழுது கவனியுங்கள், லூத்தர், அவர் அவருடைய நாட்களில், அவர் சரியாகத்தான் இருந்தார், அவர் வெளிப்பாட்டை உடையவராயிருந்தார்; ஆனால் அவர் போய்விட்டவுடன், அவர்கள் என்ன செய்தனர் என்று பாருங்கள். வெஸ்லி ஒரு செய்தியை உடையவராயிருந்தார்; அவர்கள் என்ன செய்தனர் என்று பாருங்கள். பண்டைய ஆரம்ப பெந்தெகொஸ்தேயினரிடம் ஒரு செய்தி இருந்தது; அவர்கள் என்ன செய்தனர் என்று பாருங்கள். அவர்கள் ஒரு கூட்ட ஜனங்களை மற்றவர்களைப் போலவே சேர்த்துக்கொண்டனர், சரியாக அதே விதமாக… 262 தேவன், கிருபையினால், இஸ்ரவேலுக்கு ஒரு அக்கினி ஸ்தம்பத்தையும், தீர்க்கதரிசியையும், ஒரு பலியையும் அனுப்பி, அவர்கள் மத்தியில் தம்மை வெளிப்படுத்தி, அவர்களை சிவந்த சமுத்திரங்களின் வழியாக எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். அவர்கள் பெரிய செல்வாக்குள்ளவர்களைப் பெற்றிருந்து, ஏதாவதொன்றைச் செய்ய வேண்டுமெனும் எண்ணங்கொண்டவர்களாய், அவர்கள் ஒரு நியாயப்பிரமாணத்தை விரும்பினர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் நாற்பது ஆண்டுகாலமாக வனாந்தரத்தில், அலைந்து திரியத்தக்கதாக விடப்பட்டனர், அவர்களுடைய ஸ்தாபனங்களில் ஒன்றாகிலும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடையவில்லை.
133263 காலேப், யோசுவா, இவ்விருவர் மாத்திரமே தைரியமாக நின்று, “நம்மால் தேவனுடைய வார்த்தையை நோக்கிப் பார்த்து அதைக் கைப்பற்ற முடியும்” என்றனர். 264 அவர்களில் ஒவ்வொருவரும் வனாந்தரத்தில் மரித்தார்கள். அவர்கள் நித்தியமாக மரித்துவிட்டதாக இயேசு கூறினார், சரியே, அவருடைய ஆசீர்வாதங்களையும் வல்லமையையும் அவர் லூத்தர், வெஸ்லி, இவர்களின் காலங்களில் காண்பித்த பிறகே. அவர் கூறினாரா? அவர்கள், “எங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்” என்றனர். 265 அவரோ, “அவர்கள், ஒவ்வொருவரும் மரித்தார்கள்” என்றார். அது தேவனிடமிருந்து நித்திய காலமாக பிரிக்கப்படுதல். அவர்களுடைய பிணங்கள் வனாந்தரத்தில் அழிந்துபோயின, பார்த்தீர்களா? “அவர்கள் மரித்தார்கள். நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்.” அவர்களால் அதைக் காணமுடியவில்லை. அவர்களால் அதைக் காண முடியவில்லை.
134266 சரி, அதை சபைகள் அநேக காலத்திற்கு முன்பே மறந்துவிட்டன. அவர்கள் வார்த்தையினுடைய சத்தியத்தினுடைய வெளிப்பாட்டிற்கு பதிலாக அறிவாற்றல் கொண்ட செய்தியையும், நுண்ணறிவு படைத்தவர்களையும், ஸ்தாபன அங்கத்தினர்களையும், அறிவையும் ஏற்றுக்கொண்டனர். 267 இப்பொழுது இங்கு கவனியுங்கள், இன்றைக்கு அவர்கள் கூறுகின்றனர். நீங்கள் உலகமெங்கும் போய், வியாதியஸ்தரை சுகப்படுத்தி, சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிசாசுகளைத் துரத்தவேண்டுமென்று தேவன் நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? “ஒ, ஓ, ஆம், அது சரி என்று நான் நினைக்கிறேன், ஆனால்…” உங்களுக்கு புரிகிறதா?
135268 ஒரு பெண்மணி, அன்றொரு நாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவள், “பாருங்கள், சபைகள் அனைத்துமே இணக்கமாக உள்ளன” என்றாள். 269 அதற்கு நானோ, “ஒரு சபை கூட மற்றெரு சபையுடன் இணக்கமாக இல்லை” என்று கூறினேன். அப்பொழுது கத்தோலிக்கர் அங்கு நின்றுகொண்டிருந்தனர். அப்பொழுது நான், “உங்களைக் குறித்தென்ன? நீங்கள் ஒரு மெதோடிஸ்டாயும் மற்றும் அவர் ஒரு கத்தோலிக்கராயுமிருக்க, நீங்கள் ஒருவருக்கொருவர் இணங்குகிறீர்களா?” என்று கேட்டேன். மேலும் நான், “போப்பாண்டவர் எல்லாரையுமே ஒன்று சேர்க்க வருகிறார், அப்படிப்பட்ட மக்களுக்கு அது ஒரு நல்ல செயலாக இருக்கிறது” என்றேன். 270 ஆனாலும் தேவனுடைய சபைக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது, ஒரு சம்பந்தமுமில்லை. அது அந்த முழு கூட்டத்தாரிடமிருந்து விலகியுள்ளது. ஹு—ஹூ. சரி. ஆம், ஐயா. 271 நீங்கள் அதை ஒன்று சேர்க்க விரும்புகிறீர்கள், ஒருவர் ஒரு காரியத்தில் விசுவாசம் கொண்டிருக்கிறார் மற்றவர்; மெதோடிஸ்டுகள் தெளித்தலை எடுத்துக் கொள்கிறார்கள், பார்ட்டிஸ்டுகள் முழுகுதலை எடுத்துக் கொள்கிறார்கள், அவர்கள் இருவருமே பரிசுத்த ஆவியை அதனுடைய வல்லமையின் முழுமையில் மறுதலிக்கின்றனர். அவர்கள், “நாங்கள் விசுவாசித்தபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டோம்” என்றனர்.
136272 வேதமோ, “நீங்கள் விசுவாசித்த பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கூறியுள்ளது. அதுதான் வித்தியாசம். புரிகிறதா? அது உண்மை. பார்த்தீர்களா? 273 அவர்கள், “நாங்கள் கத்தோலிக்க சபையினர். நாங்கள் முன்பே தொடங்கிவிட்டோம். நாங்கள் இதை செய்தோம்” என்கின்றனர். மொதோடிஸ்டுகள், “நாங்கள் வேதாகமத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறோம்” என்கின்றனர். 274 இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று கூறினார். இப்பொழுது அது எங்கே உள்ளது? ஹூ-ஹூம். புரிகிறதா? ஆமாம். “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்,” ஒவ்வொரு சிருஷ்டியும், அவருக்குள் விசுவாசம் கொண்டிருக்கும் ஒவ்வொரு நபரும். இப்பொழுது அது எங்கே உள்ளது? அது அவருடைய வார்த்தைகள். “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.” இப்பொழுது அது எங்கே உள்ளது? புரிகிறதா? ஓ, அது அப்படியே காண்பிக்கிறதே!
137275 அது என்னவாய் உள்ளது? அது ஒரு கலப்பினமான நிலையில் உள்ளது. இங்கு கவனியுங்கள், நீங்கள் ஒரு கலப்பினமான பெரிய சோள தானியத்தை எடுத்துக்கொள்கிறீர்கள், நீங்கள் அந்த கலப்பினமான சோளத்தை எடுத்துக்கொள்கிறீர்கள், அது ஒரு அழகான சோளம். ஆனால் நீங்கள் அதை நடுகிறீர்கள், உங்களுக்கு என்ன கிடைக்கிறது? ஒரு சிறு தண்டு இந்த விதமாக முளைத்தெழும்பி, பின்பு அது மஞ்சள் நிறமடைந்து உலர்ந்துவிடுகிறது. தேவனுடைய வார்த்தைகளுடன் மனிதனுடைய வார்த்தைகளை, கலப்பினம் செய்துள்ள, ஒவ்வொரு ஸ்தாபனமும் அதே நிலையில் உள்ளது. அது அடையாளங்களுடனும் அற்புதங்களுடனும் எழும்பும், ஆனால் வார்த்தையை விசுவாசிப்பதைக் குறித்து இயேசு என்ன கூறினார் என்ற நிலைக்கு வரும்போது, அவர்கள் மஞ்சள் நிறமடைந்து, “எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறிவிட்டு, திரும்பி சென்று விடுகின்றனர்.
138276 கானானுக்குச் சென்று பார்த்த மற்ற வேவுகாரரைப் போல. அவர்கள் அங்கிருந்து வந்து, “ஓ, நாங்கள் அவர்களுக்கு பக்கத்தில் வெட்டுக்கிளிகளை போல காணப்படுகிறோம்! நாங்கள் அவர்களை மேற்கொள்ள முடியாது! அமலேக்கியர்கள், இதையெல்லாம் செய்வார்கள், அவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ!” என்று கூறினர். அவர்கள் திரும்பி சென்றனர். 277 ஆனால் காலேபும் யோசுவாவும் தேவனுடைய வார்த்தையினால் கலப்பினமின்றி பிறந்த நல்ல ஜாதியினர், ஆமென், தேவன், “அந்த தேசத்தை நான் உங்களுக்கு கொடுப்பேன்” என்று கூறியிருந்ததை, தேவனுடைய வார்த்தையின் மூலம் அறிந்திருந்தனர். எனவே அவர்கள், “நாம் அதை எளிதில் வென்றுவிடலாம்!” என்றனர். 278 நீங்கள் எதினால் பிறந்தவர்கள் என்பதையே அது பொறுத்தது. நீங்கள் தேவனுடைய வார்த்தையினால் பிறந்தவர்களாக இருந்தால், தேவனுடைய வார்த்தையே அவருடைய சபையில் முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை கொண்டிருக்கின்றது. அதற்காகவே அவர் மரித்தார். தம்முடைய முதன்மையான உயர்ந்த ஸ்தானம் தம்முடைய சபையில் கிரியை செய்ய வேண்டுமென்பதே, நிறைவேற்ற வேண்டும் என்பதே, அவருடைய நோக்கம். மற்றவை எவ்வாறிருப்பினும், தேவனுடைய வார்த்தை முதலாவது பிரகாசிக்கட்டும். அறிவுக்கூர்மையானவர்கள் இதை, அதை, மற்றதைக் கூறினாலும் எனக்குக் கவலையில்லை, அதற்கும் இதற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. தேவனுடைய வார்த்தை அவ்வண்ணமாக கூறியுள்ளது, எனவே நாம் அதை எளிதில் வென்றுவிடலாம். 279 ஒரு போதகர் என்னிடம், “நான் அதை என் சபையில் பிரசங்கிக்க நேர்ந்தால்,” “நான் சபையில் நான்கு தூண்களுக்கு மாத்திரமே பிரசங்கம் செய்யும் நிலை ஏற்பட்டுவிடும்” என்றார். 280 நான், “அப்படி நேரிட்டாலும் நான் அவ்வாறு பிரசங்கிப்பேன்” என்றேன். ஆம், ஐயா. தேவனுடைய வார்த்தை அவ்வண்ணமாக கூறியுள்ளது. நாம் அதைச் செய்ய முடியும். தேவன் அப்படிச் செய்ய கூறினார். ஆமென்!
139281 ஓ, ஆமாம், அவர்கள் இதன் மூலம் தங்களுக்கு சாக்குபோக்கு சொல்லிவிடுகிறார்கள். புரிகிறதா? அதனால்தான் தேவன் இந்த கடைசி நாட்களில், தம்மை நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், அவர்கள் கடைசி கால செய்தியை காணாதபடிக்கு குருடாயிருக்கின்றனர். அது மரித்தவருடைய ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு பிரிவாக்க முயற்சிக்கிறார்கள், அல்லது ஏதோ, ஓ, (நான் அதை என்னவென்று அழைப்பேன்?) ஒருவித மனோதத்துவ, ஒரு மாயையான, அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்று என்றோ கூறி அதை தள்ளி விட முயற்சிக்கின்றனர். பாருங்கள், அவர்கள்—அவர்கள் அதை இல்லாத ஒன்றாக உருவாக்க முயற்சிக்கின்றனர். 282 அவர் இங்கே இருந்தபோது அவர்கள் செய்தது போன்றே, இயேசுவானவர் இங்கிருந்தபோது, அவர்கள் அவரை, “பெயல்செபூல்; ஒரு குறிசொல்லுகிறவன்,” என்று அழைத்தனர், இப்பொழுது அவர்கள் அது ஒரு விதமான மனோத்தத்துவம் என்றழைக்கின்றனர். புரிகிறதா? அவர் அங்கு நின்றுகொண்டு ஜனங்களை நோக்கிப் பார்த்து, அவர்களுடைய இருதயங்களிலுள்ள சிந்தனைகளை வகையறுத்துக் கூற முடியும் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். வேதாகமம் அவ்வாறு கூறியுள்ளது. 283 பாருங்கள், எபிரெயர் 4-வது அதிகாரம், “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று கூறவில்லையா? அவர் அந்த வார்த்தையாக இருந்தார். அந்த வார்த்தை மனிதனில் முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை வகிக்கும்போது, அதே காரியம் மறுபடியும் நிகழ்கிறது, ஏனெனில் அது வார்த்தையாயுள்ளது! ஆமென்!…இனிமேல் நீங்கள் எப்படி இதன் காரணமாக இடற முடியும் என்று பார்க்கலாம். அது மிகவும் வெளிப்படையாய் உள்ளது. புரிகிறதா? சரி.
140284 அதனால்தான் அவர்கள் குருடாயிருக்கின்றனர், பூமியின் மேல் கிறிஸ்துவின் நாட்களில் இருந்தது போலவே. ஓ, என்னே! அதே விதமாக அவர்கள் தடுமாறுகின்றனர். அவர்கள், “அவன் பெயல்செபூல். பெயல்-…” என்றனர். அவர் இதை செய்ய முடியும் என்று அவர்கள் அறிந்திருந்தனர், எனவே அவர்கள், “இவன் ஒரு…இவன் முறைதவறி பிறந்தவன், இவன் வினோத மானவன். இவன் ஏதோ பிசாசினால் பீடிக்கப்பட்டிருக்கிறான். அவன் ஒரு—அவன் அங்கு ஒரு சமாரியன், அவன் தனக்குள் ஒரு பிசாசை உடையவனாய் இருக்கிறான். அதனால்தான் அவன் செய்கிறான்” என்று கூறினர்.
141285 இயேசு, “அதற்காக உங்களை நான் மன்னிப்பேன்,” என்றார், பாருங்கள், தேவனுடைய வார்த்தையை, தேவனுடைய கிரியைகளை, ஒரு பொல்லாத ஆவி என்று அழைக்கிறீர்கள். அவர், “அதற்காக நான் உங்களை மன்னிப்பேன். ஆனால் ஒருநாளில் பரிசுத்த ஆவியானவர் வருவார், அவருக்கு விரோதமாக பேசப்படும் ஒரு வார்த்தையும்கூட இம்மையிலோ அல்லது மறுமையிலோ அல்லது அந்த மகத்தான நாளிலோ மன்னிக்கப்படாது. அது மன்னிக்கப்படாது” என்றார். எனவே, நீங்கள் பாருங்கள், அது அவ்வளவு வெளிப்படையாய் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. 286 எனவே அந்த நாளுக்கு ஜனங்கள் வரும்போது, எவ்வளவு அறிவாளிகளாக இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல, அவர்கள் எவ்வளவு பெரிய ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்திருந்தாலும், அது ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தப்பட்டுவிட்டது. அவர்கள் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட வேண்டுமே! பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக அவர்கள் தேவதூஷணம் உரைத்து, அதை “பரிசுத்த உருளையர்” என்றும், அல்லது வேறு மோசமான பெயர் கொண்டும் அழைத்தனர். தேவனுடைய சபை இவை எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டியதாயுள்ளது.
142287 பவுலும்கூட, அகிரிப்பாவிற்கு முன்பாக, “‘ மதபேதம் ’ என்று அழைக்கப்படுகின்ற விதத்தில்”, அது, “பைத்தியம்” என்று பொருள்படுகிறது. “அந்த விதமாகவே நான் எங்களுடைய பிதாக்களின் தேவனை ஆராதிக்கிறேன்” என்றான். அந்த மகத்தான நுண்ணறிவு படைத்த மேதை அந்த விதமான ஒரு இடத்திற்கு வரவேண்டியதாயுள்ளது, “‘மதபேதம்’ என்று சொல்லுகிறபடியே.” 288 ஏன்? அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவனுக்கு முன்பாக தொங்கிக் கொண்டிருந்த அந்த அக்கினி ஸ்தம்பம், “அங்கே வனாந்திரத்தில் மோசேயோடு இருந்த அந்த மகத்தான தேவன், நானே இயேசு. நான் தான் அவர், முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம்” என்றது. 289 அப்பொழுது அங்கே நின்று கொண்டிருந்த பவுல், தன் உயிருக்கு தீங்கு நேரவிருப்பதை அறிந்தவனாக, அவன், ‘“மதபேதம்’ என்று அழைக்கப்படுகின்ற அந்த விதமாகவே, அந்த விதமாகவே எங்களுடைய பிதாக்களின் தேவனுக்கு நான் ஆராதனை செய்கிறேன்” என்றான். அது அந்த விதமாக அழைக்கப்பட்டது. ஏனெனில் கிறிஸ்துவினுடைய மகத்தான சத்தியம் என்னவென்பது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இன்றைக்கு, ஜனங்கள், “அதை ஒரு ஸ்தாபனம்” என்று கூறுகிறார்கள். 290 அவர் தம்முடைய வார்த்தைகளை வெளிப்படுத்தும்படியாக, அவர் முதன்மை ஸ்தானங்களை கொண்டவராய், இயேசு கிறிஸ்து, புதிய பிறப்பாய், உங்களுக்குள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாகும். இந்த கடைசி நாட்களுக்கென ஏதாதொன்றை அவர் வாக்குத்தத்தம் செய்திருப்பாரானால், அவர் கிரியை நடப்பித்துக் கொண்டிருக்கும் தம்முடைய சரீரத்தின் மூலமாக அவரால் அதை நிறைவேற்ற முடியும். ஆமென்! அது அப்படியே தேவனுடைய வார்த்தை வெளிப்படுவதாகும். கவனியுங்கள். அது சரி.
143291 கிறிஸ்துவின் காலத்திலிருந்தது போலவே இப்பொழுதும் உள்ளது, கிறிஸ்துவைப் பற்றிய இந்த வெளிப்பாட்டை அளிக்கும் திறவுகோலை தேவன் தாமே வைத்திருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] வேதசாஸ்திரப் பள்ளிகள் அதை ஒருபோதும் கண்டுபிடிக்கவே முடியாது. இயேசு அவ்வண்ணமாய்க் கூறினார். நீங்கள் அதை இப்பொழுது படிக்க விரும்பினால், பரிசுத்த மத்தேயு 11: 25-27-ல் உள்ளது. “ஓ பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே, இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து கற்றுக்கொள்ளக் கூடிய பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் நான் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.” புரிகிறதா? புரிகிறதா? எனக்குக் கவலையில்லை… 292 அந்த காலத்திலிருந்த கல்விமான்களைப் பாருங்கள், அந்த யூதர்கள், மிக அருமையான மனிதர்கள், அவர்களுடைய ஸ்தாபனங்களை சேர்ந்த பரிசேயர், சதுசேயர், ஏரோதியர் மற்றும் அவர்கள் என்னவாக இருந்தாலும். புரிகிறதா? அவர்களுடைய எல்லா மகத்தான ஸ்தாபனங்களுமே, இயேசு, “நீங்கள் குருடாயிருக்கிறீர்கள்; நீங்கள் குருடருக்கு வழி காட்டுபவர்களாயிருக்கிறீர்கள். ஏசாயா உங்களைக் குறித்து நன்றாக உரைத்திருக்கிறான், ‘நீங்கள் கண்களிலிருந்தும் காண முடியாமலிருக்கிறீர்கள்; காதுகளிருந்தும், நீங்கள் கேட்க முடியாமலிருக்கிறீர்கள்.’ ஏனெனில், ஏசாயா இதை ஆவியில் உரைத்தான், ஆகையால் பரலோகத்தின் தேவன் உங்கள் கண்களைக் குருடாக்கினார். ஏவாள் செய்தது போலவே நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள், அதாவது மனித ஞானத்தை ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ஆவியைக் குறித்து ஒன்றுமே அறியாதிருக்கிறீர்கள். எனவே, குருடனுக்கு குருடன் வழிகாட்டினால், வழிகாட்டியும் குருடனும் இருவரும் குழியில் விழமாட்டார்களா?” என்றார். குருடருக்கு வழிகாட்டியும் குருடரோடு விழுந்துபோவான், ஏனென்றால் அவனும் கூட குருடாய் இருக்கிறான். குருடருக்கு வழிகாட்டியானவன் விழுந்து போகிறான், அதாவது குருடாயிருந்து குருடருக்கு வழிகாட்டுகிறான், இருவரும் குழுயில் விழுந்து போகிறார்கள்.
144293 தேவன் மாத்திரமே திறவு கோலைத் தம் கையில் வைத்திருக்கிறார்! இதைத்தான் அவர் சற்று முன்பு நான் வாசித்த வேதவாக்கியத்தில் அவர் வெளிப்படுத்தினார், அவர், “மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்றார். 294 பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். 295 அவர், “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்! இங்கே இந்த வெளிப்பாட்டின்மேல், மாத்திரமே, என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றார். புரிகிறதா? இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா?
145296 எனவே எந்தப் பள்ளியும், எந்த வேதபண்டிதர்களும், வேதப்பள்ளியில் போதிக்கப்படும் எந்த உபதேசங்களும், இதைக் குறித்து ஒன்றுமே அறியார்கள். அவர்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளமுடியாது. அவர்கள் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்து கொள்ளமுடியாது. அந்த தெரிந்துகொள்ளப்பட்ட போதகர்களிடத்திலிருந்து, மற்ற எல்லாம் அறிந்துகொள்ளாதபடிக்கு, அவர்களுடைய புலன்களுக்கு தேவன் இதை மறைத்திருக்கிறார். 297 அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கிறிஸ்துவுக்கும், அந்த மனிதனுக்கும் தனிமனிதனுக்குரிய, தனிப்பட்ட ஒரு விவகாரம் ஆகும். 298 ஆதலால் நீங்கள், “அவர் எனக்கு வெளிப்பட்டிருக்கிறார்” என்று கூறிவிட்டு, இங்கே வேதாகமத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கின்ற கிறிஸ்துவின் ஜீவியம், அவருக்குள் இருந்த அதே ஜீவியம், உங்களுக்குள்ளாக தம்மைத்தாமே பிறப்பித்துக் கொள்ளவில்லையென்றால், அப்படியானால் நீங்கள் தவறான வெளிப்பாட்டைப் பெற்றிருக்கிறீர்கள்.
146299 ஒரு பூசணிக்காயின் சத்தை நான் எடுத்து பேரிக்காய் மரத்தில் புகுத்தினால், அது பூசணிக்காயைத் தரும். “அவர்களுடைய கனிகளினால் நீங்கள் அவர்களை அறிவீர்கள்.” அது முற்றிலும் உண்மை. முதலாவது…நீங்கள் ஒரு மரத்தை, திராட்சை செடியை நட்டு, அது ஒரு கொத்து திராட்சை பழங்களைக் கொடுத்தால்; அதன் முதல் கொடி ஒரு கொத்து திராட்சை பழங்களைத் தந்து, அடுத்தது எலுமிச்சம் பழங்களையும், அதற்கடுத்தது பேரிக்காய்களையும், அதற்கடுத்தது ஆப்பிள் பழங்களையும் தருமானால், அந்த செடியில் மற்ற கிளைகள் ஒட்டுபோடப்பட்ட, அந்தக் கிளைகள் அவைகளின் ஜீவனுக்கேற்ற கனிகளைத் தருகின்றன என்று அர்த்தம். ஒவ்வொரு ஸ்தாபனமும் தனக்குள்ள ஜீவனுக்கேற்றபடி கனிகொடுக்கின்றது. ஆனால் அந்த மூல திராட்சை செடி வேறொரு கொடியை தோன்றப்பண்ணுமானால், முதலில் அது தந்தவிதமாகவே, திராட்சை பழங்களைத் தரும். 300 இயேசுவின் ஜீவன்—ஜீவன் வேறொரு விசுவாசிகளின் கூட்டத்தை தோன்றப் பண்ணினால், முதலில் அது கொடுத்த அதே கனிகளை இப்பொழுதும் தரும். அவர்களும் அதன்பேரில் அப்போஸ்தலருடைய நடபடிகள் எழுத முடியும், ஏனெனில் அது அதே ஜீவனாயுள்ளது. நான் கூறுவது என்னவென்று புரிகிறதா? அதிலிருந்து நீங்கள் விலக முடியாது. கிறிஸ்துவின் ஜீவன் உங்களுக்குள், புகுத்தப்பட்டு, அதுதானே பரிசுத்த ஆவியானவரினால் அந்த ஜீவன் உங்கள் மூலம் ஜீவிக்கின்றது.
147301 “குருடருக்கு வழிகாட்டும் குருடர்களே!” கவனியுங்கள், தேவன் மாத்திரமே இந்த திறவுகோலை வைத்திருக்கிறார். எந்த வேதபண்டிதனும் அதை உங்களுக்கு எடுத்துக் கூற முடியாது; அது அறியப்படவில்லை. அவர்களுக்கு அது மறைக்கப்பட்டுள்ளது. அதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. 302 எனவே பள்ளிகள், நீங்கள், “நான் ஒரு பி.எச்., எல் எல். டி., பட்டம் பெற்றுவிட்டேன்” என்று கூறும்போது, நீங்கள் செய்கிறதோ… என்னைப் பொறுத்தவரையில், மேலும், தேவனைப் பொறுத்த வரையிலும் மற்றெல்லா உண்மையான விசுவாசிகளைப் பொறுத்தவரையிலும், நான் நினைக்கிறேன் நீங்கள் தேவனைவிட்டு அதிக தூரம் சென்றுவிட்டீர்கள், நீங்கள் பின்வாங்கிவிட்டீர்கள் என்றே பொருள்படுகிறது. தேவன் கல்வியின் மூலம் அறியப்படுபவரல்ல. அதை எப்படி விளக்க வேண்டும் என்பதன் மூலம் அவர் அறியப்படுகிறதில்லை. 303 தேவன் எளிமையினாலும் மற்றும் மிகவும் படிப்பறிவே இல்லாத நபருக்கு இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டினாலும் அறியப்படுகிறார். புரிகிறதா? உங்களுடைய இறையியல் அல்ல. அது இயேசு கிறிஸ்துவின் ஒரு வெளிப்பாடாயுள்ளது. “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்.” வேறெந்த கற்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, மற்றொரு காரியமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, வேறெந்த ரோமக் கல்லுமல்ல, மற்றெந்த பிராடெஸ்டெண்டு கல்லுமல்ல, மற்ற எந்தப் பள்ளியும் அல்ல, மற்றெந்த காரியமும் அல்ல, ஆனால் சரியாக புதிய பிறப்பினூடான இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் மேல். அவர் அங்கு பிறந்து, அவர் தம்முடைய சொந்த ஜீவனைப் புகுத்துகிறார், அப்பொழுது உங்களுடைய ஜீவன் போய்விடுகிறது. அப்பொழுது கிறிஸ்துவின் ஜீவன் தம்மைத்தாமே ஜனங்களுக்கு முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களுடன் உங்கள் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது; அவர்கள் அதே ஜீவனை, அவர் செய்த அதே கிரியைகளை, அடையாளங்களை, அற்புதங்களை, அதே காரியம் உங்கள் மூலமாக செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறதைக் காண்கிறார்கள். அதற்குப் புறம்பாக, மற்ற எவருமே முதலாவதாக அழைக்கப்படவேயில்லை. தேவனுடைய மகத்தான வெளிப்பாடு படிப்படியாக வெளிப்படுவதைக் கவனியுங்கள்!
148304 இந்த வெளிப்பாடு இல்லாததன் காரணத்தால்தான் நமக்குள்ளே இத்தனை பிரிவுகள், இவ்வளவு கேலி பரியாசங்கள். நம் மத்தியில் அதிகப்படியான பிரிவினை இருப்பதன் காரணம் என்னவென்றால் ஜனங்களுக்கு அந்த வெளிப்பாடு இல்லை. பாருங்கள், போதகர்களுக்கு, அவர்களுக்கு அந்த வெளிப்பாடு இல்லை. 305 பவுல், தன்னுடைய கிறிஸ்துவின் மகத்தான வெளிப்பாட்டிற்குப் பிறகு, முதலாம் கொரிந்தியர் 2-வது அதிகாரத்தில் கூறுகிறான். நீங்கள் அதை குறித்துக்கொள்கிறதுபோலவே, அதை படிப்பதற்கு அதிக உறுதியாயிருங்கள். கவனியுங்கள்! ஓ! அவன், “நான் உங்களிடத்தில் ஞானத்தோடு ஒருபோதும் வரவில்லை” என்கிறான். ஞானத்தைக் கொண்டிருந்த அந்த மனிதனைப் பாருங்கள், அல்லது வேதபாண்டித்தியம் பெற்றிருந்த அந்த மனிதனைப் பாருங்கள், “அந்த விதமான வார்த்தைகளோடு நான் உங்களிடம் ஒருபோதும் வரவில்லை” என்கிறான். முதலாம் கொரிந்தியர், முதலாம் கொரிந்தியர், 2-ம் அதிகாரம், ஓ! நான் விரும்புகிறேன்… 306 சரி, நாம் அதைப் அப்படியே படிப்போமாக. எப்படி…நீங்கள் ஒரு நிமிடம் நிற்க நாம் ஒன்று அல்லது இரண்டு வசனங்களை வாசிக்கலாமா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நீங்கள்—நீங்கள்…நான் அதைப் படிக்க விரும்புகிறேன். இதை ஒலிநாடாவில் கேட்பவர்களும் கூட அதில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாயிருக்கும், எப்படியும், அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். 307 முதலாம் கொரிந்தியர், 2-ம் அதிகாரம். இங்கே இந்த மகத்தான அப்போஸ்தலனுக்கு செவிகொடுங்கள், பவுல், ஞானமுள்ள தேவனுடைய ஊழியக்காரன். இங்கே நாம் நோக்கிப் பார்ப்போமாக. …பவுலாகிய நான், நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப் பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. நான்—நான் வேதபண்டிதர் இன்னார்-மற்றும்-இன்னார் என்று ஒருபோதும் கூறவில்லை. புரிகிறதா? இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றெயும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்தேன். அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். என் பேச்சும் என் கெஞ்சுதலும் மனுஷஞானத்திற்குரிய நயவசன முள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் … பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.
149308 அங்கே, பாருங்கள், அதுதான் சுவிசேஷம். புரிகிறதா? இயேசு, “போய் பிரசங்கியுங்கள்” என்றார். “போய் கற்றுக்கொடுங்கள்” என்று கூறவில்லை. அவர், “போய் பிரசங்கியுங்கள்” என்றார். வேறு வார்த்தைகளில் கூறினால், “வல்லமையை வெளிப்படுத்திக் காண்பியுங்கள், இந்த அடையாளங்கள் அவர்களைப் பின்தொடரும்.” வேறுமெனே கற்பித்தல் அதை செய்கிறதில்லை. இந்த அடையாளங்களை செய்வதற்கு உண்மையாகவே ஆவியே அவசியமாயுள்ளது. புரிகிறதா? இதை கவனியுங்கள். உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு. 309 ஓ, என்னே! பாருங்கள், மனிதனை மாற்ற! அவர் மாறாதவராக இருக்கும்போது, “அவர் மாறாதவராக இருப்பவர் அல்ல” என்று நான் விளக்கிக் கூற முடிந்ததில் அல்ல. நான் அதைச் செய்வேனானால், எனக்கு, அது—அது எதைக் காண்பிக்கிறதென்றால்…நிச்சயமாக, அவ்விதம் ஒரு மனிதன் என்னிடம் கூறினால், அவன் வெளிப்பாட்டை பெற்றிருக்கவில்லை என்பதை அது எனக்கு காண்பிக்கும், தேவனைக் குறித்த மூவகை வெளிப்பாடு. புரிகிறதா? இப்பொழுது, மற்றும்… அப்படியிருந்தும் பலவீனத்தில்… தேறினவர்களுக்குள்ளே பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல. உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான (பாருங்கள், தேவனுடைய மூவகை இரகசியம்) தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பபிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; எந்த ஆசாரியர்களும், ரபீ—ரபீக்கள்…(என்னை மன்னியுங்கள்)…அல்லது யாரும் இதைக் குறித்து ஒன்றுமே அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. 310 நீங்கள், “அங்கிருந்து பிரசங்கமார்களையும் ரபீக்களையும் குறித்து நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள்” என்றீர்கள். அப்படியானால் யார் அவரை சிலுவையில் அறைந்தது? ஹு-ஹூ. 311 ஒ, நாம் இப்படி சொல்லிக்கொண்டே, போகலாம். அதை வாசித்துப் பாருங்கள், பாருங்கள், தொடர்ந்து நேரத்தை மிச்சப்படுத்த, ஏனென்றால் நமக்குள்ளதோ… இன்னும் தாமதமாகவில்லை, ஆனால், இப்பொழுது கர்த்தர் நமக்கு உதவி செய்வாரென்றால் கூறவேண்டியது அதிகம் நமக்கு இருக்கின்றது. இப்பொழுது, இதைக் குறித்த வெளிப்பாட்டு குறைவினால் இப்பொழுது…
150312 பவுல், இந்த மகத்தான கல்வி அறிவு பெற்ற மனிதன், தன்னுடைய மகத்தான இறையியல் சம்பந்தமான சொற்களை ஜனங்களிடத்தில் கூறி விளக்க முயற்சிக்கவில்லை. அவன் தாழ்மையோடு கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அந்த வார்த்தையை வாழ்ந்து காண்பித்ததன் மூலம் அது அவன் மூலம் வெளிப்பட்டது. அவன் மிகுந்த—மிகுந்த தேவபக்தியுள்ளவனாய் வாழ்ந்ததனால், ஜனங்கள் அவனில் இயேசு கிறிஸ்துவைக் கண்டு, அவனுடைய உறுமால்களைக் கொண்டுபோய் வியாதியஸ்தர்மேல் வைக்க விரும்பினர். அதுதான் கிறிஸ்துவின் ஜீவன். 313 இப்பொழுது சிலர், “ஓ, பாருங்கள், நீங்கள் பாருங்கள், அநேக நாட்களுக்கு முன்பே, எலியா அதைச் செய்துவிட்டான், அவனுடைய தடியை வைத்தான்; ஆனால், ஓ, அது எலியாவின் நாட்களிலாயிருந்தது” என்று கூறுவதை கவனியுங்கள். இப்பொழுது, உலகம் அதை சிந்தித்தது. அந்த அறிவுமிகுந்த ஆசாரியர்கள், மற்ற காரியங்கள், அந்த நாளின் சபைகள், அதை சிந்தித்தன.
151314 ஆனால் அந்த விசுவாசிகளுக்கோ, அவர்கள் வித்தியாசத்தை அறிந்திருந்தனர். எலியாவிற்குள் இருந்த கிறிஸ்துவின் வெளிப்பாட்டை அவர்கள் கண்டனர், பவுலுக்குள்ளும் அதே காரியம் இருந்து, அதே விதமான ஜீவனை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது, ஏனெனில் அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். புரிகிறதா? சரியாக அதே விதமாக நடந்தேறிய அநேக காரியங்களை அவன் முன்னுரைத்தான், அது தீர்க்கதரிசியின் தேவனுடைய அடையாளம் என்பதை அவர்கள் அறிந்தனர். அவன் தேவனுடைய தீர்க்கதரிசியாயிருந்தான் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களை அதினின்று உங்களால் அசைக்கவே முடியாது. பேதுரு முன்னுரைத்த அந்த காரியங்கள் நிறைவேறினதை அவர்கள் கண்டபோது, அவர்கள், “அவனுடைய நிழல் என் மேல் படட்டும்” என்றனர். ஆமென்! அது தான் சபை. அவர்கள்தான் அதை விசுவாசிக்கிறவர்கள். ஆம் ஐயா. அது வெளிப்படுத்தப்பட்டதனால்… 315 பவுல், “நான்—நான் ஒரு பிஎச்., எல் எல். டி., முதலிய, பட்டங்களை பெற்றுள்ளதால், அவர்கள் என்னை விசுவாசிக்கிறார்கள் என்று கூறினானா? இல்லையே.” அவன், “நான் அந்த காரியங்கள் எல்லாவற்றையும், மனித ஞானத்தையும் மறந்துவிட்டேன்,” என்றும், “நான் அவரை அவருடைய உயிர்த்தெழுதின் வல்லமையில் அறிந்துகொள்ள மரிக்க வேண்டியதாயிருந்தது என்றும் கூறினான், அதனால்தான் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்திக் காண்பிக்கவே உங்களிடம் வந்திருக்கிறேன்” என்றானா?
152316 அது என்னவாயிருந்தது? இயேசு கிறிஸ்துவை நேற்றும் இன்றும், என்றும் மாறாதவராகச் செய்தல். இயேசுகிறிஸ்து செய்த அதே கிரியைகளை, பவுலும் செய்தான். அவர்கள் தேவனை கண்டிருந்தனர், மகத்தான பிதா எரியும் முட்செடியில் தம்மை மோசேக்கு வெளிப்படுத்தியிருந்தார், பவுலுக்கு அதை வெளிப்படுத்தியிருந்தார், இங்கே அது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. 317 அவர் ஒவ்வொரு காலத்திலும் மாறாதவராக இருக்கின்றார். தேவனுடைய மூன்று விதமான செயல்வகை, “நேற்றும், இன்றும், என்றும்.” என்ன? மீட்பர்; தம்முடைய சபையில்; வரப்போகும் இராஜ்யத்தில் முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை கொண்டிருத்தல். ஆமென்! உங்களுக்கு அது புரிகின்றதா? அது முடிந்த அளவு அவ்வளவு பரிபூரணமாய் இருக்கிறது!
153318 ஓ, கவனியுங்கள்! கிறிஸ்துவினுடைய தெய்வீக வெளிப்பாட்டின் ஒரே வெளிப்படுத்துபவராய் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். எந்த வேதபள்ளியும் அதைச் செய்ய முடியாது. எந்த வேத பண்டிதனாலும் அதைச் செய்ய முடியாது. எந்த மனிதனும், அவன் எவ்வளவுதான் கல்வியறிவு பெற்றிருந்தாலும், அவன் எவ்வளவு தேவபக்தியாயிருந்தாலும், அல்லது எதுவாயிருந்தாலும், எந்த மனிதனும் அதைச் செய்ய முடியாது. 319 என்னால் இங்கு கடுமையாக உரைக்க முடியும். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட, மீண்டும் பிறந்த கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள், உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? சரி, அப்படியானால் நாம் இங்கே தொடரலாம். சரி. கவனியுங்கள். 320 அவர் அதை முன்குறிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே செய்வார். அது சரியே. “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் என்னிடத்தில் வரமாட்டான்.” புரிகிறதா?
154321 அந்த ஆசாரியர்களைப் பாருங்கள், “இந்த மனிதன் பெயல்சபூல். அவன் குறி சொல்பவன். இவன் ஒரு பிசாசு” என்று கூறினர். 322 அங்கே சுற்றிலும் நடந்து கொண்டிருந்த அந்த ஸ்திரீ, ஆனால் ஆறு புருஷர்களுடன் வாழ்க்கை நடத்தினாள்; அவள் ஐந்து பேருடன் ஏற்கனவே வாழ்க்கை நடத்தியிருந்தாள், அப்பொழுது அவளுக்கிருந்தது ஆறாவது ஆள். இயேசு, “போய் உன் புருஷனை, இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். அதற்கு அவளோ, “எனக்குப் புருஷன் இல்லையே” என்றாள். 323 அப்பொழுது, “ஆம், ஆறு புருஷர்கனை உடையவளாய் இருக்கிறாய். உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள், இப்பொழுது நீ வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவன் உன்னுடைய புருஷன் அல்ல” என்றார். அவள், “ஐயா!” என்றாள். என்ன? அந்த வெளிச்சம் அந்த வித்தின் மேல் பட்டது. 324 ஆனால் அது ஆசாரியர்களின் மேல் பட்டபோதோ, அவர்கள், “இந்த மனிதன் ஒரு குறிசொல்பவன்” என்றனர். பாருங்கள், அங்கு ஜீவன் இல்லை. ஒரு கலப்பினம், ஸ்தாபனம் வரை வளருகின்றது, பிறகு அதிலிருந்து மரித்துப்போய் விடுகிறது.
155325 ஆனால் இந்த ஸ்திரீயோ கலப்பினமல்ல. அவள், “ஐயா, நான் காண்கிறேனே!” என்றாள். அவளுடைய பெரிய அழகான கண்கள் பிரகாசமடைந்து, கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தோடுவதை என்னால் காணமுடிகின்றது. “ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். நான் மேசியாவை எதிர்நோக்கியிருக்கிறேன். மேசியா வரும்போது, அவர் இதே காரியத்தை செய்வார். அவர் இந்த காரியங்களை எங்களுக்கு சொல்லுவார்” என்றாள். அவர், “நானே அவர்” என்றார். 326 ஓ கர்த்தாவே! அவள் தன்னுடைய குடத்தை வைத்துவிட்டு சென்றாள். “இதோ, அவர்! எனக்கு இந்த காரியங்களை கூறியிருக்கிற ஒரு மனிதனை வந்து பாருங்கள்.” அது என்னவாயிருந்தது? அந்த வெளிச்சம் அந்த வித்தின் மேல் பட்டது. அந்த ஜீவன் அங்கிருந்தது. அது முளைக்கத் தொடங்கினது. இன்றைக்கும் அதே காரியமே!
156327 ஆனால் வேதபண்டிதரோ, “இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள். இன்னார்-இன்னார் , போதகர் மூடி அவ்விதம் சொல்லியிருக்கிறாரா, இல்லையா…என்று கண்டுபிடித்து சொல்கிறேன்” என்பான். 328 போதகர் மூடிக்கும், இந்த நாளுக்கும் என்ன சம்மந்தம்? போதகர் மூடி தன்னுடைய நாளில் வாழ்ந்தார், ஆனால் இப்பொழுது அல்ல. நிச்சயமாக. லூத்தர் தன்னுடைய நாளில் வாழ்ந்தார், ஆனால் வெஸ்லியின் நாளில் அல்ல. வெஸ்லி தன்னுடைய நாளில் வாழ்ந்தார், பெந்தெகொஸ்தேயினரின் நாளில் அல்ல. பெந்தெகொஸ்தேயினரும் அவர்களுடைய நாளில் வாழ்ந்தனர், ஆனால் இந்த மணி நேரத்தில் இதிலிருந்து அவர்கள் வெகு தூரம் உள்ளனர். நாம் கடைசி மணிநேரத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். நிச்சயமாக. 329 அவர்களுடைய ஸ்தாபனங்கள், நேர்மையற்ற நிலையில் உள்ளதால், அவர்கள் இக்காலத்தில் இல்லை என்பதை நிரூபிக்கிறது. அதில் வார்த்தை சரிவர ரூபகாரப்படுத்தப்படவில்லை; வெறுமனே அதனுடைய பலத்தில் மாத்திரமே இருக்கிறது. வித்துகள், ஸ்தாபனங்கள்… அவர்கள் ஸ்தாபனத்தை உருவாக்கி, அதன்பின்னர் அந்த அசலான கோதுமையோடு களையான விதைகளை ஒன்று சேர்த்து; அங்கேயே மரித்துப் போவர். பயிர்கள் களைகளையும், பச்சை முட்செடி வகைகள், பூனை காஞ்சொறி செடி வகைகளை மாறிக்கொடுக்க ஆரம்பித்து விட்டன, ஹூ-ஹூம். பயிர்கள் அங்கேயே மரித்துவிட்டன. பின்பு அவர்கள் நிலத்தை உழுது, மறுபடியுமாக சில உண்மையான விதைகளை விதைத்தனர், ஆனால் அது வளர்ந்து வந்தபோது, இந்த முட்கள் அதை நெருக்கிப்போட்டன.
157330 ஆனால் அதன்பின்னர், இக்கடைசி நாட்களில் தேவன், அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்ட ஜனங்களை கொண்டு வருவதாக கூறினார், அவர்கள் இதற்கென முன்குறிக்கப்பட்டவர்கள். அவர்கள் நிச்சயமாக அங்கு இருக்க வேண்டியவர்கள். தேவன் அவ்வண்ணமாய் கூறினார். அது வெளிப்படுத்தும்… அந்த அதே அடையாளத்தை, “நான்…அனுப்…” மல்கியா 4-ல் கூறப்பட்டவர் என்ன செய்வார், “மீண்டும் திருப்பளிப்பேன்,” திரும்பக் கொண்டு வருவேன், இந்த கடைசி நாட்களில் அவர் வாக்களித்த இந்த மகத்தான காரியங்களை, அது அந்த வெளிப்பாட்டைக் கொண்டு வரும். என்ன…மல்கியா 4, அவர் என்ன செய்யப்போகிறார்? பிதாக்களுடைய விசுவாசத்தை பிள்ளைகளிடத்தில் கொண்டு வர வேண்டியவராயிருக்கிறார். புரிகிறதா? அது உண்மை, அதே காரியத்தை, அதே அக்கினி ஸ்தம்பத்தைக், காட்சியில் திரும்பக் கொண்டு வருதல்; அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதே இயேசு; அவரை மாறாதவராகச் செய்து, அதே விதமாக அவரைக் குறித்து பிரசங்கித்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை ரூபகாரப்படுத்துதல். 331 “மெதோடிஸ்டு புழுவும், முசுக்கட்டைப்பூச்சி புழுவும், பாப்டிஸ்டு, கத்தோலிக்கர், மற்றெல்லா புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விசுவாசத்தை, நான் திரும்ப அளிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார், அங்கு விதைகள் எதுவும் விடப்படாமல், மரம் வெட்டியெடுத்தது போக எஞ்சி நிற்கும் ஸ்தாபன அடிக்கட்டைப் போலானது. “ஆனால் அந்த எல்லா வருஷங்களையும்,” “நான் மீண்டும் திரும்ப அளிப்பேன்,” என்று கர்த்தர் உரைக்கிறார். எதை? “அவர்கள் புறக்கணித்துள்ள எல்லா அடையாளங்களையும் அற்புதங்களையும். நான் திரும்ப அளித்து, அதை மூல மரத்திற்கு மீண்டும் கொண்டு செல்வேன்” என்று கர்த்தர் உரைக்கிறார். அந்த தீர்க்கதரிசி ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவனுடைய வார்த்தைகள் நிறைவேற வேண்டும். ஆமென்.
158332 பரிசுத்த ஆவியானவர், மாத்திரமே, கிறிஸ்துவினுடைய திவ்விய வெளிப்பாட்டை அளிக்கிறவராயிருக்கிறார், ஒவ்வொரு காலத்திலும் அது அவ்வாறே இருந்து வந்துள்ளது. எல்லா காலங்களிலுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்! யாரிடத்தில் கர்த்தருடைய வார்த்தை வந்தது? தீர்க்கதரிசியினிடத்தில், மாத்திரமே. அது உண்மை. அது சரியா? முதலாவதாக, அந்த தீர்க்கதரிசி ரூபகாரப்படுத்தபட வேண்டும். அவன் தன்னை தீர்க்தரிசியென்று அழைத்துக் கொள்வதனால் அல்ல; அவன் தீர்க்தகரிசியாகப் பிறந்து, தீர்க்கதரிசியென்று நிரூபிக்கப்பட்டுள்ள காரணத்தால்தான், அவன் கூறின ஒவ்வொன்றும் வார்த்தையின் பேரில் சரியாக இருந்து நிறைவேறும், அப்படியானால் மற்ற ஒவ்வொரு காரியமும் அப்படியே நிறைவேறுவதாக இருக்கட்டும். புரிகிறதா? அது, பரிசுத்த ஆவியானவரின் மூலமாகவே வந்த கர்த்தருடைய வார்த்தையாயிருந்து. வேதம், “தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு தேவனுடைய வார்த்தையை எழுதினார்கள்” என்று கூறியுள்ளது.
159333 கவனியுங்கள். யோவான் ஸ்நானனுக்கு பரிசுத்த ஆவியானவர் சுட்டிக் காண்பிக்கவில்லையென்றால், இயேசுவை அவன் அடையாளம் கண்டுகொண்டிருக்கவேமாட்டான். அது சரியா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] 334 அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய யோவான் ஸ்நானன் வந்து, “உங்கள் நடுவில் இப்பொழுது ஒருவர் நிற்கிறார். ஒரு சாதாரண மனிதன் இங்கு எங்கோ நின்று கொண்டிருக்கிறார், அவர்தான் தேவ ஆட்டுக்குட்டி” என்றான். யோவான், “அப்பொழுது நான் சாட்சி பகர்ந்தேன். நான் சாட்சிப் பகர்கிறேன். தேவனுடைய ஆவியானவர், பரிசுத்த ஆவியானவர், புறாவைப் போல் வானத்திலிருந்திறங்கி, இவர் மேல் தங்கினதைக் நான் கண்டேன். அப்பொழுது ஒரு சத்தம் உண்டாகி, இவர் ‘இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்’” என்றுரைத்தது. அது என்னவாயிருந்தது? பரிசுத்த ஆவியானவர், “அவனுக்கு நான் சுட்டிக் காட்டுவேன்” என்றார்.
160335 இன்றைக்கு அவரை நீங்கள் அறிந்து கொள்ளக்கூடிய ஒரே வழி அது மாத்திரமே, தேவனைக் குறித்த மூவகை வெளிப்பாட்டை நீ பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரே வழி, அந்த பரிசுத்த ஆவியின் மூலமாக மாத்திரமே. அப்படி நீங்கள் அறிந்துகொள்ளக் கூடிய ஒரே வழி, நீங்கள் அதை காண முன்குறிக்கப்பட்டிருந்தால் மாத்திரமே. நீங்கள் முன்குறிக்கப்பட வில்லையென்றால், உங்களால் அதை ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் அதைக் காணும்படி முன்குறிக்கப்படாதிருந்தால், நீங்கள் அதை ஒருபோதும் காணவேமாட்டீர்கள்; ஏனெனில் அந்த வெளிச்சம் பிரகாசிக்கும்போது, நீங்கள் விலகிச் சென்று, அதை ஏளனம் செய்து, உங்கள் மனித ஞானத்தின் மூலம் அதற்கு விளக்கம் தருவீர்கள். அதே தேவன், தம்மை, தம்மை வெளிப்படுத்தி அதை நிரூபிக்கும்போது, பாருங்கள், ஆனால், நீங்கள் அதைக் காணும்படி உங்கள்மேல் பரிசுத்த ஆவியானவர் இல்லையென்றால், அப்பொழுது நீங்கள் அதை காணமாட்டீர்கள்.
161336 தேவன், “நான் இவரைத் தெரிந்து கொள்கிறேன், அவரைத் தெரிந்து கொள்கிறேன்” என்று ஒருபோதும் கூறவில்லை, ஆனால் அவர் அறிந்திருந்தார் தன்னுடைய… அவரால் முன்குறிக்க முடிந்த காரணம், அவர் முடிவற்றவறாக இருப்பதனால், அவர்—அவர் ஒவ்வொன்றையும்…அறிந்திருக்கிறார். அவர் முடிவற்றவர், எனவே அவர் ஒவ்வொரு காரியத்தையும் அறிந்திருந்தார். அவர் முடிவு வரைக்கும் அறிந்திருந்தார், துவக்கத்தில் இருந்து முடிவு வரை அவரால் கூற முடிந்தது. அவர் தேவனாயிருக்கிறார். அவரால் அதை செய்ய முடியவில்லையென்றால், அவர் தேவன் அல்ல. ஆம், ஐயா. அவர் முடிவற்றவர். சரி.
162337 பரிசுத்த ஆவியானவர் சுட்டிக்காட்டவில்லையென்றால், இயேசுவை யோவான் ஸ்நானன் அறிந்து கொண்டிருக்கவே முடியாது. இல்லை, ஐயா. கல்வியறிவு கொண்ட உயரிய மேதைகளுக்கு தேவன் தமது இரகசியத்தை எவ்வாறு மறைத்து விடுகிறார் என்று பார்த்தீர்களா? பாருங்கள், அந்த ஜனங்கள் ஒவ்வொருவரும் சொல்லுகிறார்கள்…அதைக் காண எவர்களை அவர் முன்குறித்திருக்கிறாரோ அவர்களுக்கு அது எளிமையில் வெளிப்படுகிறது. இங்கே கவனியுங்கள்! மற்றவர்கள் அங்கு நின்று கொண்டிருந்தபோதிலும், புறா இறங்கி வந்ததை அவர்களால் காண முடியவில்லை, அவர்கள் எந்த சத்தத்தையும் கேட்கவில்லை, ஏனெனில் அது முன்குறிக்கப்பட்டிருந்த வித்திற்கு மாத்திரமே அனுப்பப்பட்டிருந்தது. முன்குறிக்கப்பட்டிருந்தது! நிச்சயமாக, முன்குறிக்கப்பட்டிருந்ததே! 338 ஏன், அவர் பிறப்பதற்கு ஏழு நூற்று பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர், ஏசாயா, ஆவியில், இந்த மானிட புலன்களுக்கு அப்பாலே எழும்பி, “‘கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள், அவருடைய…’ என்று வனாந்திரத்திலே ஒரு சத்தம் உண்டாகும்” என்று கூறினார். 339 அப்படியானால், ஏசாயாவினால் அதைக் காண முடிந்ததென்றால், அந்த அதே காரியத்தை ஒரு முன்குறிக்கப்பட்ட கடைசி தீர்க்கதரிசியை, பழைய ஏற்பாட்டின் எல்லா தீர்க்கதரிசிகளையும் முத்திரையிடுகின்ற, அந்த பிரதான…அந்த மகத்தான தீர்க்கதரிசி காலத்தின் முடிவில் அங்கே நின்று கொண்டிருப்பதை மல்கியா கண்டிருப்பானல்லவா? பார்த்தீர்களா? அவன் முன்குறிக்கப்பட்டிருக்கிறான் என்று அவன் கூறிக்கொண்டிருக்கிறான். நிச்சயமாக, அவன் முன்குறிக்கப்படடவன். மல்கியாவும் கூட அவனைக் கண்டான்.
163340 இயேசு, “நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், ‘இதோ நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்’, மல்கியா 3, ‘எனக்கு முன்னே வழியை ஆயத்தம் பண்ணுவான்’ என்னும் வேதவாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவனே” என்று கூறினார். புரிகிறதா? நிச்சயமாக, அந்தச் செய்தியைக் காண்பதற்கு அவன் முன்குறிக்கப்பட்டிருந்தான். அவன் மேலே நோக்கி அந்த புறா இறங்கி வருவதையும், இஸ்ரவேலரை வனாந்திரத்தில் வழி நடத்திய அந்த ஒளிவருவதையும் கண்டதில் வியப்பொன்றுமில்லை. 341 தேவன் தாமே, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்” என்று கூறினார். தேவனும் மனிதனும் ஒன்றாதல். 342 “நான் சாட்சி கொடுக்கிறேன்,” யோவான், “பிதாவினால் ஜெநிப்பிக்கப்பட்ட அந்த ஒரே ஒருவரை, நான் கண்டேன் என்று சாட்சி கொடுக்கிறேன்” என்று கூறினான். ஆமென்! 343 அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. எளிமை! ஒரு வயதான பிரசங்கியோடு, அவனுடைய தகப்பனார்; ஒரு மகத்தான வேத பண்டிதராயிருந்த அவனுடைய தகப்பனார், உங்களுக்கு தெரியுமா, அவர் வேத பள்ளியிலிருந்து வந்தவர். இவனும் தன்னுடைய தகப்பனின் ஸ்தாபனத்திற்கு திரும்பி சென்றுவிடுவான் என்பது போல காணப்பட்டது. அது தேவனுடைய சித்தமாய் இருந்திருக்காது.
164344 அவனுடைய பிறப்பின்போதே தேவன் அவனைத் தொட்டார், அவன் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டான். ஆம், ஐயா. மரியாள் அங்கு சென்றபோது, சிறிய யோவான் தன்னுடைய தாயின் கர்ப்பத்தில், ஆறுமாதமாக இருந்தான், ஒருபோதும்… அவனுடைய சிறு தசைகள் இன்னும் அசையாதிருந்தன. ஆகவே மரியாள் பயந்தாள்… அந்த சிறிய தசைகள் வளர்ந்துகொண்டிருந்தன, ஆனால் அதில் உயிர் இருப்பதாக அவளால் உணர முடியவில்லை, எலிசபெத், சரியாக கூறினாள், அவனுடைய தாயார். மரியாள் வந்து அவளைப் பிடித்து, அவளை இறுகக் கட்டித் தழுவி, அவளுடைய கைகளை அவள் மேல் வைத்தாள். பார்த்தீர்களா? ஆகவே, “தேவன் என்னிடம் பேசியுள்ளார், ஆகவே நானும் கூட ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளப் போகிறேன்” என்றாள். “உனக்கும் யோசேப்புக்கும் மணமாகிவிட்டதா?” “இல்லையே.” “மரியாளே, அது எப்படி நடக்கும்?” 345 “பரிசுத்த ஆவியானவர் என் மேல் நிழலிடுவார், அப்பொழுது எனக்குள் சிருஷ்டிக்கப்படும். நான் அவருக்கு ‘இயேசு’ என்று பெயரிடுவேன். அவர் தேவனுடைய குமாரனாயிருப்பார்.” 346 ‘இயேசு’ என்ற வார்த்தை உரைக்கப்பட்டவுடனே, அந்த குட்டி யோவான் தன்னுடைய தாயின் கர்ப்பத்தில் துள்ளி, சத்தமிட்டு, குதிக்கத் தொடங்கினான். 347 அவள், “தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக! என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது?” ஆண்டவருடைய தாயார்! ஓ, என்னே! “என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது? இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று” என்றாள்.
165348 அவன் வேத பள்ளியை விரும்பாததில் வியப்பொன்றுமில்லை, அது வெறொன்றை, ஏதோ ஒன்றை அவனுக்குள் திணித்திருக்கும். அவருக்கு ஒரு முக்கியமான பணி இருந்தது. அவன் ஒரு வனாந்திர மனிதனாயிருந்து, வனாந்தரத்துக்குள் புறப்பட்டு சென்று காத்திருந்தான். அங்கே தேவன் அவனிடம், கூறினார், இப்பொழுது, அவனுக்கு வெளிப்படுத்தினார். ஓ, அதோ அங்குதான் மறுபடியுமாக உங்களுடைய வெளிப்பாடு உள்ளது! “அவர் யார் என்பதை நான் உனக்கு கூறுவேன். நீ ஒரு தீர்க்கதரிசி. அந்த வார்த்தை உனக்குத்தான். நீ யார் என்று உனக்குத் தெரியும். நீ வரத்தான் வேண்டும்.” சென்ற ஞாயிறன்று கேட்கப்பட்ட கேள்விக்கு இது பதிலாக அமைகிறது. புரிகிறதா? “யோவான், நீ யாரென்று உனக்குத் தெரியுமா? அமைதியாயிரு. ஒன்றும் பேசாதே. அங்கு போ. இந்த ஒன்றை நீ காண்கையில், வானத்திலிருந்து வருகின்ற ஒளியைப் போன்ற, அடையாளம் ஒன்று இருக்கும், ஒரு புறா கீழே இறங்கி வரும். நீ அவரைக் காணும்போது அது அவராக இருக்கும்.”
166349 அந்த காரணத்தினால் தான், இயேசு தண்ணீருக்குள் நடந்து வந்தபோது, யோவான் நோக்கி பார்த்து புறா இறங்கி வருவதை அவன் கண்டு, அவன், “இதோ தேவாட்டுக்குட்டி! அதோ அவர் இருக்கிறார்! உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறவர் இவர் ஒருவர்தான்” என்றான். 350 இயேசுவானவர் தண்ணீருக்குள் நேராக நடந்து அவனிடத்தில் சென்றார். யோவானின் இரு கண்களும் இயேசுவின் இரு கண்களும் ஒன்றையொன்றை சந்தித்தன. மாம்சப்பிரகாரமாக, அவர்கள், ஒன்றுவிட்ட அண்ணன், தம்பி உறவு முறையானவர்கள். மரியாளும் எலிசபெத்தும் ஒன்று விட்ட சகோதரிகள். அவர்களுடைய கண்கள் ஒன்றையொன்று சந்தித்தன. தேவனும் அவருடைய தீர்க்கதரிசியும், ஆமென், அங்கு நின்றுகொண்டிருந்தனர். 351 யோவான், “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டும். அப்படியிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா?” என்றான். 352 அதற்கு இயேசு, “இப்பொழுது இடங்கொடு. இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்றார்.
167353 யோவான் ஏன் அதைச் செய்தான்? ஏனெனில் அவர் பலியாயிருந்தார். யோவான் தீர்க்கதரிசியாயிருந்ததனால், அதை அறிந்திருந்தான்; பலியானது செலுத்தப்படுவதற்கு முன்பு கழுவப்படவேண்டும். ஓ! ஓ! அதனால் அவன் இடங்கொடுத்து, அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். 354 அவன் அதை செய்தபோது, இதோ, வானங்கள் திறக்கப்பட்டது, ஓ, என்னே, அந்த புறா அவர் மீது வந்தது, ஒரு சத்தம் உண்டாகி, “இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்” என்றுரைத்தது. யாக்கோபு அரசனின் வேதாகமம் அப்படித்தான் கூறுகிறது, அதாவது “இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்.” நீங்கள் அதை எப்படி புரட்டிப் பார்த்தாலும் அதே காரியம் தான், “உள்ளே வாசமாயிருக்க” அல்லது… “இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் வாசமாயிருக்க நான் பிரியமாயிருக்கிறேன்” அல்லது “உள்ளே வாசமாயிருக்க,” இவற்றில் எந்த ஒன்றை எடுத்துக்கொண்டாலும், அதே காரியம்தான். அது சரி. 355 அப்பொழுது அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது என்று நாம் காண்கிறோம். அங்கே நின்றுகொண்டிருந்த மற்றவர்களுக்கு அதைக் குறித்த ஒன்றுமே கேட்கவில்லை. பரிசுத்த ஆவியானவர், மாத்திரமே, அதை வெளிப்படுத்துகிறார்.
168356 மற்றொரு முன்குறிக்கப்பட்ட வித்தான, பவுலுக்கு அவர் தம்மை வெளிப்படுத்துகிற போதும் அதே விதமாகத்தான். 357 பவுல் பயணம் செய்துகொண்டிருந்தான், அவன், “நான் மாத்திரம் அந்த கூட்டத்தைப் பிடிக்க நேர்ந்தால், அவர்களை கிழித்தெறிந்துவிடுவேன், நான் வேதபண்டிதர் சவுல். நான் கமாலியேலிடம் பயின்றவன். நான் மூடி வேதாகம…அங்கிருந்து வந்தவன்” என்று கூறியிருந்திருக்கலாம், அல்லது மற்ற ஏதோ ஒன்றிலிருந்து வந்திருக்கலாம், பாருங்கள். “நான், நான் ஒரு வேதபண்டிதன். நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். நான் அந்த பரிசுத்த ஊழியர்களின் கூட்டத்தை சின்னபின்னமாக்கிவிடுவேன். நான் மகத்தான பரிசுத்த பிதாவாகிய, உங்களிடத்தில் சொல்லுகிறேன், நான் அங்கு செல்வதற்கு நீங்கள் எனக்கு அனுமதித் தாருங்கள், நான் இங்கு கூச்சலிடுகின்ற ஒவ்வொருவரையும் கைது செய்துவிடுவேன். இந்த எல்லா தெய்வீக சுகமளிக்கும் காரியத்தையும், நாம் அதை நிறுத்திவிடுவோம்.” அவன் அதற்கான அனுமதிச் சீட்டை தனது சட்டை பையில் போட்டுக்கொண்டு, “நான் இப்பொழுது என் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்” என்றான். 358 அந்த நாளிலே, என்னே, பகல் சுமார் பதினோரு மணி அளவில், ஒரு—ஒரு ஒளி அவனுடைய முகத்தில் பிரகாசித்தது, அவன் தரையிலே விழுந்தான்.
169359 ஏன்? அவன் ஒரு முன்றிக்கப்பட்ட வித்தாயிருந்தான். தேவன், “நான் அவனைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆம். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபட வேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன். நான் அவனை புறஜாதிகளிடம் அனுப்பி, அவர்கள் அவமானப்படுத்தக் கூடிய ஒவ்வொரு விதத்திலும் அவனை அவமானப்படுத்துவேன், ஆயினும் அதே சமயத்தில் அவன் என்னுடைய நாமத்தை அறிவிப்பான்” என்றார். 360 பவுல் சென்றான், அவன் கற்ற மார்க்க போதனைகள் அவனைவிட்டு எடுபடும்வரை, அவன் வனாந்திரத்தின் பின்புறத்தில் மூன்றரை வருடம் இருந்தான். அங்கே அரேபியாவில் தேவனுடைய வார்ததையை அங்கு கற்றறிந்து, அவன் வார்த்தையானான். அவன் ஒரு சிறைவாசியானானான்; அவன் அன்பின் சங்கிலியினால் கட்டப்பட்டவனாய் இங்கே திரும்ப வந்தான்! “என் வேதபள்ளியின் அனுபவமெல்லாம் என்னைவிட்டு போய்விட்டதே! நான் இப்பொழுது இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு சிறைவாசியாய் இருக்கிறேன். ஆமென்! என் சகோதரனாகிய, பிலேமோனே, நான் இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு சிறைவாசியாய் இருக்கிறேன். அவர் என்னிடம் என்ன சொல்லுகிறாரோ அதை மாத்திரமே நான் பேசவும், கூறவும் முடியும்” என்றான்.
170361 அவருடைய சித்தத்துக்கு, அவருடைய வார்த்தைக்கு உங்களை சிறைப்படுத்திக்கொள்ளும் சிறைவாசிகளே தேவனுக்கு இன்றைக்கு தேவைப்படுகின்றனர். 362 பவுல் அப்படித்தான் இருந்தான். அவன் எவ்வளவாக கல்வியறிவு பெற்றிருந்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல், வெளிப்பாட்டின் மூலமாகவே அவன் தேவனை அறிந்துகொண்டான். ஆம், ஐயா. வெளிப்பாடு வந்தபோது, அறிவாற்றல் முழுவதும் அப்பொழுது வெளியே போய்விட்டிருந்தது; அந்த, கல்லின் மேல் தான் சபை கட்டப்பட்டுள்ளது. ஆம், ஐயா. கவனியுங்கள், அவன் ஒரு முன்குறிக்கப்பட்ட வித்தாயிருந்தன். 363 அவர் யாரென்பதை பரிசுத்த ஆவியானவர், மாத்திரமே, உனக்குக் காண்பிக்க முடியும். எந்த மனிதனாலுமே முடியாது; அவர்கள் உங்களை, “பிதா, குமாரன், பரிசுத்தாவி” மற்றும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும் அதிலிருந்து உங்களுக்கு உண்டாக்குவார்கள். புரிகிறதா? ஆனால் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் வெளிப்பட்டார், அதாவது அது, ஓ, அவரே என்று பரிசுத்த ஆவியானவர் அவனுக்கு வெளிப்படுத்துவாரே!
171364 இப்பொழுது கவனியுங்கள். தீர்க்கதரிசிகளல்ல, ராஜாக்களல்ல, வேறொருவருமல்ல; ஆனால் இங்கே, முதன் முறையாக, தேவத்துவத்தின் பரிபூரணத்தில், மானிட சரீரத்தில், தேவன் கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டார். அதுவே வெளிப்பாடாயுள்ளது. ஓ, என்னே! இப்பொழுது உங்களுக்கு ஒரு சரணத்தை பாடப்போகிறேன்: நாடுகள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்தெழும்பினாள், (அவர்கள் விழித்தெழும்புகிறாளா?) தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்கள்; புறஜாதி (ஒரு ஸ்தாபனத்தில் உள்ள ஒரு சபை,) அவர்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன, திகில்கள் எங்கும் சூழ்ந்துள்ளன; “ஓ, சிதறப்பட்டோரே, உங்களுடைய சொந்த இடத்திற்கு திரும்புங்கள்.” (நீங்கள் அங்கிருந்து உதைத்து தள்ளப்பட்டிருக்கிறீர்கள்.) மீட்பின் நாள் சமீபமாயுள்ளது, மனிதருடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்துபோயுள்ளன; 365 அவர்களுடைய எல்லா ஹாலிவுட் நகைச்சுவை துணுக்குகளெல்லாம் அதை மூடமுடியாது. இரவில் கல்லறையைக் கடந்து செல்லும் ஒரு சிறு பையன் விசில் அடித்துக்கொண்டு செல்வதுபோல. புரிகிறதா? பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, உங்களுடைய தீவட்டிகளை தெளிவாக சுத்தப்படுத்தி, மேல் நோக்கிப் பாருங்கள்! உங்கள் இரட்சிப்பு சமீபமாயுள்ளது. கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யுரைத்துக்கொண்டிருக்கின்றனர், அவர்கள் தேவனுடைய வார்த்தையை மறுதலித்துக் கொண்டிருக்கிறார்கள், அதாவது இயேசு கிறிஸ்துவே நம்முடைய தேவன்; (அது உண்மை.) இந்த சந்ததி தேவனுடைய வெளிப்பாட்டை இகழ்ந்து உதறித்தள்ளுகிறது, ஆனால் நாமோ அப்போஸ்தலர் நடந்த பாதையில் நடந்து கொண்டிருக்கிறோம். மீட்பின் நாள் சமீபமாயுள்ளது, மனிதரின் இதயங்கள் பயத்தினால் சோர்ந்துள்ளன; பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, உங்களுடைய தீவட்டிகளை சுத்தப்படுத்தி, தெளிவாக்கி, மேல் நோக்கிப் பாருங்கள்! உங்கள் இரட்சிப்பு சமீபமாயுள்ளது.
172366 சகோதரனே, வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள். இந்த சந்ததி, தேவனுடைய வெளிப்பாட்டை இகழ்ந்து உதறித்தள்ளுகிறதே! பார்த்தீர்களா? கள்ளத்தீர்க்கதரிசிகள் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். “அவர்களுடைய கனிகளினால் நீங்கள் அவர்களை அறிந்துகொள்வீர்கள்.” அவர்கள்—அவர்கள் கலப்பினமுள்ளவர்கள். ஒரு ஸ்தாபனத்திற்குள்ளாக அவர்கள் பிறப்பிக்கப்படுகின்றனர்; தேவனுடைய வார்த்தைக்கு, வார்த்தையாகிய, கிறிஸ்துவின் மூலம் தேவன் தம்மை வெளிப்படுத்தும் அந்த வெளிப்பாட்டிற்கு பதிலாக அவ்வாறு செய்கிறார்கள். ஓ, என்னே!
173367 நாம் இங்கே நிறுத்தலாம், ஆனால்…நீங்கள் விரும்பினால், நான் திரும்பி வந்து மீண்டும் தொடருவேன். இப்பொழுது அங்கே உள்ள…நான் தொடர்ந்து பிரசங்கம் செய்யவேண்டும் என்று விரும்புவது, அது உங்களைப் பொறுத்ததாகும். [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சரி. சற்று ஒரு சிறிய… நான் துரிதமாக முடித்துவிடுவேன், அதனால், ஆனால் நீங்கள் உங்களுக்கு போதுமான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்…இதற்குப் பிறகு இளைப்பாறுதவற்கு உங்களுக்கு சிறிது சமயம் உள்ளது. சரி. அதே விதமான, அந்த முன்குறிக்கப்பட்ட வித்தை, கவனியுங்கள்!
174368 அவர் யாரென்று, பரிசுத்த ஆவியானவர், மாத்திரமே, காண்பிக்கிறார்; தீர்க்கதரிசிகளல்ல அல்லது ராஜாக்களல்ல. இங்கு தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டிருக்கிறார். இங்கு பரிபூரணம் உள்ளது. அவர் முழுவதும் வெளிப்படுத்தப்பட்டு, உலகிற்கு அறியப்படுகின்றார். ஓ, என்னே! 369 மறுரூப மலையில் பாருங்கள், “இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்!” என்பதே தேவனுடைய சாட்சி. நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதியாக மோசே அங்கே நின்றான். தீர்க்கதரிசிகளின் பிரதிநிதியாக எலியா அங்கே நின்றான். ஆனால் அவன்…அவர்கள் மறைந்துவிட்டனர், அவர், “இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்!” என்றார். அங்கே மூவர் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்; நியாப்பிரமாணம், தீர்க்கதரிசிகள், மற்றும் மோ-…மற்றும் கிறிஸ்து. அவர், “ இது அவர்” என்றார். தேவன், பரிபூரணமாக; தீர்க்கதரிசிகளில் வெளிப்படவில்லை; நியாப்பிரமாணத்தின் மூலமாக வெளிப்படவில்லை; ஆனால் அவர், கிறிஸ்துவில் வெளிப்பட்டார்.
175370 கிறிஸ்து இரக்கமுள்ளவராயிருக்கிறார். நியாயப்பிரமாணம் உங்களை சிறையில் அடைக்கிறது, ஆனால் அதனால் உங்களை வெளியே கொண்டு வர முடியாது. தீர்க்கதரிசிகள் உங்களை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தி, பிறகு அதற்கென உங்களை கொல்லுகின்ற தேவனுடைய நீதியாவார்கள். அது உண்மை. ஆனால் இயேசுவோ அவர் உங்களை அழைத்திருக்கிறார் என்று, ஒரு முன்குறிக்கப்பட்ட வித்திற்கு தெரியப்படுத்துகின்ற தேவனுடைய அன்பும் வெளிப்பாடுமாக இருந்தார். “அது அவர். அவருக்குச் செவிகொடுங்கள்!” 371 தெரிந்துகொள்ளுங்கள்! தேவத்துவத்தின் பரிபூரணம் அறியப்படுகிறது. தேவன் வெளிப்பட்டார் என்னும் இந்த மறைபொருளின் இரகசியம் இப்பொழுது வெளிப்படுத்தப்படுகிறது. தேவனும் மனிதனும் ஒன்றாகிவிட்டனர், அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதன், கிறிஸ்து! கிறிஸ்து என்றால் என்ன அர்த்தம்? “அபிஷேகிக்கப்பட்ட ஒருவர்,” சரீரப்பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரணத்தால் அபிஷேகிக்கப்பட்ட அந்த அபிஷேகிக்கப்பட்டவர். ஓ, என்னே! ஜனங்கள் எப்படி அதை சந்தேகிக்க முடியும்?
176372 ஒரு காலத்தில், ஒரு பாகமாகவே, மோசே அவரைக் கொண்டிருந்தான்; தாவீதும் அவருடைய ஒரு பாகத்தையே கொண்டிருந்தான்; ஓ, என்னே, ஆனால் இங்கே அவர் பரிபூரணத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார், அவர்தாமே தெய்வீகத் தன்மையில் பூமியின் மீது நின்று கொண்டிருக்கிறார். ஜனங்களின் பாவத்திற்கு மரிக்கத்தக்கதாக, தம்முடைய சபையை ஒரு பரிசுத்தமாக்கப்பட்ட ஜீவனிற்கு அவர் கொண்டுவரத்தக்கதாக; தம்முடைய சபையில், பரிபூரணத்தில், அவர் முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை கொண்டிருக்கும்படியாக, இந்த கடைசி நாட்களுக்கென அவர் வாக்குத்தத்தம் செய்த, இந்த கடைசி நாட்களில் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் வெளிப்படுத்த, தம்முடைய பரிபூரணத்தில் தேவன் இருக்கிறார். புரிகிறதா? என்னவாயிருந்ததென்றால்… 373 இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் கவனிக்கிறீர்களா? இப்பொழுது நீங்களே உங்களைச் சற்று இப்பொழுதே விழிப்புள்ளவர்களாக்கிக் கொள்ளுங்கள். கவனியுங்கள்.
177374 இயேசு எதற்காக வெளிப்படுத்தப்பட்டார்? தேவனைக் காண்பிப்பதற்காக. அவர் தேவனாயிருந்தார். அவர் அப்படித்தான் இருக்க வேண்டும்; எந்த மனிதனுமே அவ்வாறு மரிக்க முடியாது, எந்த தீர்க்கதரிசியுமே அவ்வாறு மரிக்க முடியாது. அவர் தேவனாயிருந்தார். அவர் தீர்க்கதரிசிகளின் தேவனாயிருந்தார். அவரே தீர்க்கதரிசிகளாயிருந்தார். அவரே இராஜாக்களாயிருந்தார். அவரே சரித்திரமாயிருந்தார். அவர் தாமே வரவிருந்த அவராக இருந்தார். அவர் இருந்தவர், அவர் இருக்கிறவர், மற்றும் இந்த நாளிற்கென இருக்கபோகின்ற அவர்; நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அந்த நோக்கத்திற்காகவே அவர் வெளிப்படுத்தப்பட்டார். 375 அந்த நோக்கத்தின் மூலமாக அவர் ஒரு சபையை, தேவனின் பரிபூரண, அவர் தாமே இந்தக் கடைசி நாட்களில் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையையும் நிறைவேற்றும்படியாக, அவர் முதன்மையான ஸ்தானங்களை, சபையில் முதன்மையான ஸ்தானங்களை, ஸ்தானத்தை, சபையில் தன்னுடைய ஸ்தானத்தை அடைகிறபோதே, பெற்றுக்கொண்டார். இயேசு, “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்; இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகளையும் செய்வான்” என்று கூறியுள்ளார். பாருங்கள், அதுவே அவருடைய நோக்கமாயிருந்தது. அங்குதான் அவருடைய வெளிப்படுத்துதலேயிருந்தது. இப்பொழுது, இன்றைக்கு, அதை புரிந்துகொள்ளக்கூடிய யாரையாவது அவர் பெற்றுக்கொள்ள விரும்புகிறார், அவர்களால் அந்த வார்த்தையை அனுமதிக்க முடியும்…
178376 பாருங்கள், இயேசு அதை அவ்வண்ணமாககவே கண்டு, தேவன் செய்த ஒவ்வொரு அசைவையும் அவர் வெளிப்படுத்தும்படியாக, அந்த நாளுக்கென்று பரிபூரணமாகப் பிறந்தார். அவர் தேவனுடைய வெளிப்பாடாய் இருந்தார்; தேவன், வெளிப்படுத்தினார்.
179377 இப்பொழுது அவர் இந்தக் கடைசி நாளில் ஒவ்வொரு வாக்குத்தத்தமும் வெளிப்படுத்தப்படும்படியாக, ஒரு சபையை, தமது ஆவியினாலும் இரத்தத்தினாலும் அவர் பரிசுத்தப்படுத்தினார். இப்பொழுது, பாருங்கள், இந்த மற்றைய நபர்கள் இங்கு விட்டுவிட்டிருந்ததை அவர் தாமே பின்னோக்கிச் சென்று எடுத்து, இந்த கடைசி நாட்களில், தம்முடைய பரிசுத்த ஆவியினால் ஏழு முத்திரைகளின் எல்லா இரகசியத்தையும் வெளிப்படுத்தினார். பாருங்கள், அவர் தம்மை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். அதுவே அவரது நோக்கம். அதற்காகவே அவர் மரித்தார். அதுதான் அவருடைய மூவகை வெளிப்பாடுகளில் இரண்டாவதாக அமைந்துள்ளது. முதலாவதாக, அவர் கிறிஸ்துவில் தம்மை வெளிப்படுத்துதல், பிறகு சபைக்கு தம்மை தாமே வெளிப்படுத்துதல். ஆகவே அந்த அதே காரியம், கிறிஸ்து தான் வார்த்தையாயிருந்தார், சபையும் வார்த்தை அதன் மூலமாய் செல்ல அனுமதிக்கும்போது, அதுவும் வார்த்தையாகிவிடுகின்றது. 378 அவர்கள் கலப்பினமான ஸ்தாபனத்தை ஏற்றுக்கொள்ளும்போது, வார்த்தை எப்படி அவர்கள் மூலமாய் செல்ல முடியும்? மின்சாரக் கம்பி தரையில் படும்போது மின்சாரம் தடைபட்டு, மீன்காப்பு எரியிழையை அது எரித்துவிடுகிறது. புரிகிறதா? 379 ஆனால் அந்த தேவனுடைய வார்த்தையாகிய, மின்சாரம் தடையின்றி பாயும்போது, அது தன்னையே வெளிப்படுத்துகின்றது. “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்.” இந்த கடைசி நாட்களில் அது நிறைவேறும்: “இதோ, நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன், அவன் பிள்ளைகளுடைய இருதயத்தை பிதாக்களுடைய விசுவாசத்திற்குத் திருப்புவான்.”
180380 ஆகவே அங்கே, அவர் தம்மைத் தாமே தம்முடைய தேவத்துவத்தின் பரிபூரணத்தில், தம்முடைய சபையின் மூலமாக, தெய்வீக, தம்முடைய தெய்வத்துவத்தின் பரிபூரணத்தில் தம்மையே வெளிப்படுத்தும்போது, இந்த சபையில் முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை கொண்டிருக்கப்போகின்ற ஒரு நேரமானது வரும். ஓ, என்னே! என்ன? அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதன்; இப்பொழுது அபிஷேகம் பண்ணப்பட்ட ஜனங்கள்; ஓ, என்னே, அபிஷேகம் பண்ணப்பட்ட மணவாட்டியையும் மணவாளனையும் திரும்ப கொண்டுவருதல். அந்த அபிஷேகம் (ஏன்?) ஏவாள், ஆதாமும் கூட புறக்கணித்ததை ஏற்றுக்கொண்டு; வார்த்தையின் அபிஷேகத்துடன் திரும்பவருதல், ஏனெனில் அவர், “என் வசனம் ஆவியாயிருக்கிறது” என்று கூறினார். பாருங்கள், வார்த்தையினால் அபிஷேகம் பண்ணப்படுதல். ஏவாள் புறக்கணித்த வார்த்தையை, அவர் வார்த்தையாக திரும்ப வருகிறபோது நாம் ஏற்றுக்கொள்கிறோம். 381 மறுபடியும், எப்படி அந்த கலப்பின நிலை பார்த்தீர்களா, சரியாக அவன் ஏவாளுக்கு செய்த அதேவிதம். 382 அவர் ஏவாளிடம், “நீ இதைச் செய்யாதே, நீ அதைச் செய்யாதே; இதை மற்றும் அதை நீ செய்யலாம்” என்று கூறியிருந்தார்.
181383 சாத்தானோ, “ஓ! உனக்குத் தெரியுமா…” என்றான். அவள் திரும்பி அவனுக்கு செவி கொடுத்தாள். 384 ஆனால் இந்த கடைசி நாளிலுள்ள ஏவாள் அப்படி செய்யமாட்டாள், ஏனெனில் அவள் அதை செய்யக் கூடாதபடிக்கு முன்குறிக்கப்பட்டிருக்கிறாள். ஆம், ஐயா. தேவன் அதைச் செய்யப்போகிறார். அவருக்குத் தெரியும். அவர் பெற்றுக்கொள்வார். அவருடைய, கறை…“சபை கறைதிரையற்ற தாயிருக்கும்” என்று அவர் கூறினார். அவருடைய சுடரொளி பிரகாசத்தில் அவள் அங்கு நிற்கப்போகிறாள், அவருடைய வார்த்தை வெளிப்படுதல். 385 அவள் இவ்வுலகத்திற்கு அடையாளமாக இருப்பாள். அவள் ஒரு உதா-… உலகமானது பார்த்து கூறக்கூடிய ஏதோ ஒன்றாக அவள் உலகத்திற்கு இருப்பாள், பாருங்கள், உலகத்தின் ஏனையோரும், “ஆ, அவள் ஒரு பரிசுத்த-உருளுபவள். அவள் இரண்டாவது உறவினர். எங்கள் குழுவை அவள் சேர்ந்திருக்கவில்லை” என்பார்கள். எனக்கு தெரியும். அது நல்லதுதான். பாருங்கள். அவள்—அவள் மேலே இங்கே இருக்கின்ற இந்த குழுவைச் சேர்ந்தவள்.
182386 என்னிடம் அன்றொரு நாள், ஒரு மனிதன் நின்று பேசிக்கொண்டிருந்தார், அவர், “சரி, நீங்கள் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர்?” என்று கேட்டார். நான், “எதையும் சேர்ந்தவன் அல்ல” என்றேன். “என்ன?” “எதையும் சேர்ந்தவன் அல்ல.” நான், “நான் ஒரு ராஜ்யத்தை சேர்ந்தவன்” என்று கூறினேன். “சரி, அதில் எப்படி நீங்கள் சேர்ந்து கொள்ள முடியும்?” “அதில் நீங்கள் சேருவதில்லை. நீங்கள் அதற்குள் பிறக்கின்றீர்கள்.” ஹு-ஹும். “அது எப்படிப்பட்ட ராஜ்யம்?” நான், “அது காணக்கூடாத இயேசு கிறிஸ்துவின் சரீரம்” என்றேன். 387 “நாம் ஒரே ஆவியினாலே இந்த சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம்,” அவருடைய ஆவியினால் பிறந்தோம், அப்பொழுது நாம் ஒரு இராஜ்யத்துக்குரியவர்களாகிறோம். எங்களுடைய ஜீவியங்களில் அமெரிக்கர்கள் அல்ல, நாங்கள் ஜெர்மானியர்களும் அல்ல, நாங்கள் ஒன்றுமில்லாதவர்கள்; நாங்கள் கிறிஸ்தவர்கள். நாம் அமர்த்தப்பட்டு, ஆவியில் நடந்து, ஒரு அன்பின் அடிமையாயிருக்கிறோம். உலகத்தின் காரியங்களையும் உலகத்திற்கான நம்முடைய உரிமைகளையும், நாம் விற்றுப்போட்டுவிட்டு இந்த மகத்தான முத்தை கிரயத்திற்கு வாங்கி, பரிசுத்த ஆவியானவர் தம்மை வெளிப்படுத்தி நடக்க அனுமதித்துள்ளோம். அது தான் அவருடைய உண்மையான சபையாகும். அந்த விதமாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள், அந்த விதமாகத்தான் நானும் இருக்கிறேன், ஏதோ ஒரு கோட்பாடு கூறுகிறதினால் அல்ல அவருடைய வார்த்தையினால், நாம் நம்மை விட்டுவிட்டு தேவனுக்கு சேவை செய்வோமானால் நலமாயிருக்கும்.
183388 கவனியுங்கள், அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதன், அந்த கிறிஸ்து தாமே இங்கே, ஓ தேவனே, தெரியப்படுத்தப்படுகின்றார். ஆனால் இப்பொழுது, கவனியுங்கள், ஆனால்—ஆனால் இப்பொழுது (ஆஹா!) அவர் முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை கொண்டிருக்கிறார். தேவன் பரிபூரணமாக இயேசுகிறிஸ்துவில் வெளிப்பட்டார், தம்முடைய வெளிப்பாட்டின் தேவனுடைய மகத்தான இரகசியம். 389 வெளிப்பாட்டின் இந்த மகத்தான வெளிச்சம் இந்த உலகத்தின் ஞானத்தை எப்பொழுதும் குருடாக்கியிருக்கிறது. 390 இயேசுகிறிஸ்துவின் நாட்களில், அவர் இங்கே பூமியில் இருந்தபோது, அவைகள்—அவைகள் அவர்களை குருடாக்கியிருந்தன. அவர்கள், “ஏன், நீர் உம்மை தேவனாக்கிக் கொள்கிறீர்! உம்மை தேவனுக்குச் சமமாக்குகிறீர்!” என்றனர். அவர் தேவனுக்கு சமமானவராய் மாத்திரம் இருக்கவில்லை, அவர் தேவனாகவே இருந்தார். பாருங்கள், அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. இதன் மூலம், உங்களில் சிலர்…
184391 இயேசு தேவனுடைய குமாரனாய் இருந்தார் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை என்று ஒரு முறை என்னிடத்தில் சில நாத்திகர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். அவர் நிச்சயமாக அவ்விதம் கூறினார். அவர் நிச்சயமாகவே கூறினார். உங்கள் வேதத்தை நீங்கள் சரியாக அறிந்துகொள்ளவில்லை. கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயிடம் அவர் என்ன கூறினார்? பார்த்தீர்களா? அவளிடம் அவர் என்ன சொன்னார்? 392 “மேசியா வருகிறாரென்று நான் அறிவேன். அவர் வரும்போது, அவர் இந்த காரியங்களை செய்வார்” என்றாள். அப்பொழுது அவர், “உன்னுடனே பேசுகிற, நானே அவர்” என்றார். பவுலிடமும், மற்றவர்களிடமும், கூட கூறினார். கவனியுங்கள். ஆனால் இப்பொழுது சபை முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை கொண்டிருக்கிறது.
185393 தேவனுடைய மகத்தான இரகசியம் எப்பொழுதுமே உலக ஞானத்தை குருடாக்கியுள்ளது. அவர்களால் அதை புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் அதை புரிந்துகொள்வதில்லை. சாத்தான் அதை புரிந்துகொள்வதில்லை. அதை அதாவது எப்படி தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்பதை, முன்குறிக்கப்பட்டவர் மாத்திரமேயன்றி, வேறு யாரும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் ஒவ்வொரு முறையும் அவரை மூன்றாக ஆக்கிவிடுகின்றனர். புரிகிறதா? அவர்கள் அப்படி செய்வது நிச்சயம்.
186394 கவனியுங்கள், இரண்டாவதாக, மகிமையின் நம்பிக்கையாக, கிறிஸ்து உங்களுக்குள்ளிருந்து வெளிப்படுத்தப்படுதல். அந்த மகத்தான, வெளிப்படுத்தப்பட்ட தேவன் கிறிஸ்துவுக்குள், இப்பொழுது கிறிஸ்து உங்களில் வெளிப்படுத்தப்படுகிறார். நாம் துரிதமாக முடிப்போம். 395 பாருங்கள்! ஒரு காலத்தில் தேவனுடைய மகத்தான இரகசியம், தம்முடைய சிந்தையில் இருந்த மகத்தான இரகசியங்கள், இப்பொழுது விசுவாசியின் இருதயங்களில் வைக்கப்பட்டிருக்கின்றது, அதாவது, கிறிஸ்துவினுடைய சரீரத்தில். ஒரு காலத்தில் தேவனுடைய மகத்தான இரகசியமாக உலகத் தோற்றத்திற்கு முன்னர் தம்முடைய சிந்தையில் இருந்த ஒன்று, இப்பொழுது வெளிப்படுத்தப்படுகின்றது. அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே! ஓ, ஓ, நான்… 396 ஓ, அதை நாம் புரிந்து கொள்ளவில்லையென்று நிச்சயமாக எனக்குத் தெரியும், நாம் அதை புரிந்து கொள்ளவில்லை. பாருங்கள், எவ்விதமாக அதை நான் காண வேண்டுமோ அவ்விதமாக என்னால்—என்னால் அதை காண முடியவில்லை, மேலும்—மேலும் நீங்கள் அதை புரிந்து கொள்ளவில்லை என்பது எனக்கு நிச்சயமாக தெரியும். புரிகிறதா?
187397 ஆனால் தேவனுடைய மகத்தான இரகசியம், ஒரு இரகசியமாக நித்திய தேவன் எதை வைத்திருந்தாரோ, இப்பொழுது அது இயேசு கிறிஸ்துவுக்குள் வெளியரங்கமாக்கப்பட்டு, பிறகு சரியாக தம்முடைய சபைக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு காலத்தில் தேவனுடைய சிந்தையிலிருந்தவை இப்பொழுது கிறிஸ்துவின் சரீரத்திலிருக்கிறது. இயேசு தமது மணவாட்டியாகிய, சபையை நோக்கி காதல் செய்து, இரகசியங்களை குசுகுசுவென்று அவளிடம் மெல்லப் பேசிக்கொண்டிருக்கிறார். 398 நீங்கள் விவாகம் செய்யப்போகிற இளம் பெண்ணிடம், உங்களுக்குத் தெரியும், நீங்கள் காரியங்களை எப்படி உங்கள் மனைவியிடத்தில் சொல்லுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவளை நீங்கள் அதிகமாக நேசிக்கிறீர்கள், நீங்கள் ரகசியங்களை அவளிடத்தில் அப்படியே சொல்லுகிறீர்கள், அவளை உங்கள் பக்கத்தில் உட்காரவைத்து, மற்ற ஒவ்வொரு காரியத்தையும் கூறி, உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லுகிறீர்கள். அது எப்படி உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
188399 அதைத்தான் தேவன், கிறிஸ்து, சபைக்குச் செய்துகொண்டிருக்கிறார். புரிகிறதா? அவள் இரகசியங்களை, இரகசியங்களை மாத்திரம் அறியும்படி அவர் அனுமதித்துக் கொண்டிருக்கிறார். எல்லாரிடமும் சல்லாபம் செய்யும் பெண்களிடமல்ல; அவருடைய மனைவியிடம் என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன் (புரிகிறதா? சரி, இப்பொழுது கவனியுங்கள்.) தம்முடைய கிருபையினால், தம்முடைய இரகசியத்தைக் குறித்த வெளிப்பாட்டை அவர்களுக்கு தெரியப்படுத்துகின்றார், அறிந்து கொள்ள செய்கிறாரே! எப்படி தேவனுடைய கிருபை! ஜனங்களே, அது எனக்குத் தெரியும்…ஒரு ஒரு ஜனக் கூட்டத்திற்கு அல்லது இதற்கு, அதற்கு, இது தனிப்பட்டதாக தொனிக்கிறது என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்; தேவன் இரகசியத்தை முழு சபையிடம் பகிர்ந்துகொள்கிறார், அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களானால் நலமாயிருக்கும். புரிகிறதா? அது எனக்கும் அல்லது உங்களுக்கும் மாத்திரம் என்று பொருள்படவில்லை. அவர்—அவர் உள்ளே நுழைய முயன்றுகொண்டிருக்கும் சபைக்கு என்றே, அதையே அது பொருட்படுத்துகிறது. 400 நீங்கள், “பாருங்கள், அவர்கள் ஏன் அதை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை?” என்று கேட்கலாம். அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கூறினார், மீண்டும், அவர் இந்த காரியங்களைக் கூறினார். “ஆகவே எப்படி அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்?” ஏனெனில் அவர்களால் அதை காண முடியாது என்று ஏசாயா கூறினான். புரிகிறதா? ஆகவே அவர் எப்பொழுதுமே கூறியுள்ளார்…
189401 தீர்க்கதரிசியாகிய பவுல், “கடைசி நாட்களில் மனுஷர்கள் துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்; துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், பாருங்கள்; தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. இப்படிப்பட்டவர்கள் வீடுவீடாக நுழைந்து, பற்பல இச்சைகளினால் இழுப்புண்டுபோயிருக்கும் பெண் பிள்ளைகளை,” அரை கால்சட்டை அணிந்தவர்களை, முடியைக் கத்தரித்துள்ளவர்களை, அதுபோன்று மற்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்துள்ளவர்களை, வசப்படுத்திக்கொள்கிறார்கள். “பற்பல இச்சைகளினால் இழுப்புண்டு, ‘அதெல்லாம் பரவாயில்லை. ஓ, அவர்கள் அங்கே பைத்தியக்காரர்களாயிருக்கிறார்கள். அதற்கு…கவனம் செலுத்த வேண்டாம’” என்கின்றனர். பார்த்தீர்களா? “ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்கள். யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இம்மனிதர்களும் எதிர்த்து நிற் கின்றனர்,” அவர்கள் ஒரு கூட்டத்தை ஏற்படுத்திகொண்டு, ஒரு சபையை உண்டாக்கிக்கொள்கின்றனர். ஆம், ஐயா. 402 “ஆனால் அவர்களுடைய மதிகேடு வெளிப்படும்,” இயேசு தம்முடைய மணவாட்டியை எடுத்து, இங்கே அவளை நிறுத்தி, “ இது அவள்தான்” என்று கூறி, பிறகு அவளுடன் சென்றுவிடுகிறார். அது சரி. ஆகவே அவர்களுடைய மதிகேடு வெளிப்படும்.
190403 இதைப் பாருங்கள், தம்முடைய கிருபையினால் இந்த இரகசியத்தின் வெளிப்பாட்டை அவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறாரே! பாருங்கள்! இந்த மகத்தான வெளிப்பாடு, வெளிப்படுத்தப்பட்ட இரகசியம், உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்போது, அப்பொழுது நீங்கள் உலகத்தின் காரியங்கள் அனைத்தையும் கண்டனம் செய்கிறீர்கள். 404 இப்பொழுது நான் மீண்டும் அந்தப் பொருளுக்கே வரப்போகின்றேன். நான் அதை இப்பொழுதே கூறிவிடுவது நல்லது, ஆனால் அதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், ஒலிநாடாவிற்காக, வெளியிடம் செல்பவர்களுக்கு, இந்த ஒலிநாடா உலகின் பல்வேறு பாகங்களுக்கும் செல்கிறது. புரிகிறதா? 405 பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டதாக கூறிக்கொள்ளும் பெண்களாகிய உங்களுக்கு உங்கள் கூந்தலை நீளமாக வளர்ப்பதற்கு துணிவு இல்லை; வேதம் அதை கண்டனம் செய்கிறபோது ஒரு ஸதீரி… அவள் தன்னுடைய தலை முடியை குட்டையாக வெட்டிக் கொண்டால், ஒரு மனிதன் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது. அப்படி அவன் செய்வது தேவனுடைய பார்வையில் கனமுள்ளதாயிருக்கும். அவள் தன்னுடைய தலைமுடியை கத்தரித்துக்கொண்டால், அவள் தன்னுடைய தலையை கனவீனப்படுத்துகிறாள் என்று வேதம் கூறியுள்ளது. மேலும் இது பொதுவானது; அப்படியே, குட்டையாக தலை முடியை வெட்டியுள்ளதோடு ஒரு ஸ்திரி ஜெபிப்பது, முன்பு பொதுவாகவே ஒரு சாதாரண காரியமாக இருந்தது என்பதை, நீங்கள் அறிவீர்கள். புரிகிறதா? 406 அரை கால்சட்டை அணிந்துகொள்வதும், இந்த தளற்கால் சட்டைகளை, இன்னும் மற்றவைகளை அணிந்துகொள்வதுமே! வேதம், “எந்த ஸ்திரியுமே,” (ஓ, நீங்கள் சொல்லலாம்…) “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரித்தால், அது தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானது,” அது அவருவருப்பான, அழுக்கான, நாற்றமெடுக்கும் கழிவறைப் போன்றது. புரிகிறதா? ஓ, என்னே! தேவனுடைய நாசியில் உள்ள அழுக்காயிற்றே! அப்படியிருந்துகொண்டு, நீங்கள் தேவனிடம் உங்கள் ஜெபங்களை ஏறெடுக்க முயற்சிக்கிறீர்களா? தேவன் அதற்கு செவி கொடுக்க மறுத்து, அதை புறக்கணித்துவிடுகிறார். அது உண்மை.
191407 “சரி,” நீங்கள், “இப்பொழுது சகோதரன் பிரான்ஹாமே, ஒரு நிமிடம் பொறுங்கள். நீங்கள் பழைய ஏற்பாட்டைக் குறித்து பேசுகிறீர்கள்” எனலாம். 408 அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அது தேவனுடைய பூரண வெளிப்பாடாய் உள்ளது. தேவன் எப்போதுமே ஒரு காரியத்தைக் கூறுவாரானால், அவரால் அதை மாற்றவே முடியாது. அவர் அதைப் பெரிதாக்கிக் காட்டுவாரேயன்றி, அதை மாற்றமாட்டார். நியாயப்பிரமாணமும் பெரிதாக்கிக்காட்டப்பட்டதேயன்றி, மாற்றப்படவில்லை. பெரிதாக்கிகாட்டப்பட்டதே! 409 “‘விபசாரம் செய்கிற எவனும் மரணத்துக்குப் பாத்திரனாயிருப்பான்,’ ஆனால் யாராயிருந்தாலும்,” இப்பொழுது பெரிதாக்கப்பட்டது, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிறவன் எவனும்!” அவர் நியாயப்பிரமாணத்தை ஒருபோதும் மாற்றவில்லை. அவர் அதை பெரிதாக்கினார். 410 ‘“ஓய்வு நாளை நினைவுகூருவாயாக; அதை பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக,’” வாரத்தில் ஒருநாள்; இப்பொழுது தேவனுடைய ஆவியைப் பெறுவதனால், நமக்கு “இளைப்பாறுதல்” கிடைக்கின்றது என்று அவர் அதை பெரிதாக்கிக் காட்டினார். “கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும் என்கிறார்கள். நலமானதைப் பற்றிக் கொள்ளுங்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன். அதுதான் இளைப்பாறுதல். அதுதான் கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து கிடைக்கப்பெறும் புத்துணர்ச்சி.” 411 அப்படியிருந்தும் அதற்கு அவர்கள் செவிகொடுக்காமல், தங்களுடைய தலைகளை அசைத்துவிட்டு, தங்களுடைய ஸ்தாபனங்களுக்காக விலகிச் சென்றனர். ஹு-ஹும். “இதுதான் புத்துணர்ச்சி,” பாருங்கள், ஓய்வுநாளை பெரிதாக்குதல்; ஓய்வு நாளை ஆசரித்தல், மற்றும் அது போன்றவற்றை செய்கிற உங்களுக்குத்தான். ஓ, என்னே! அவர் எதையும் மாற்றுவதில்லை. அவர் அதை பெரிதாக்குகிறார். அவர்களை ஏற்றுக்கொள்ள பாதாளம் தன்னுடைய வாசல்களை விரிவாக்கியுள்ளது.
192412 இப்பொழுது, கடைசி காலச் செய்தி, ஏன் புறக்கணிக்கப்படுகிறதென்பதை, இப்பொழுது உங்களால் காணமுடியும். உங்களால் முடிகிறதா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] இப்பொழுது, ஸ்தாபனம் அல்ல, ஆனால் அவருடைய இரகசியத்தின் வெளிப்பாடு. பாருங்கள், ஸ்தாபனம் அல்ல. அந்த வெளிப்பாடு! தேவன் ஸ்தாபனங்களினால் அறியப்படுவதில்லை. அவர் வெளிப்படுதலினால் அறியப்படுகிறார். 413 பாருங்கள்! தேவன் தமது சரீரத்தில், கிறிஸ்து; கிறிஸ்து தமது சரீரத்தில், மணவாட்டி. ஓ-ஓ-ஓ. என்னே! தேவன் கிறிஸ்துவில் வெளிப்பட்டார்; கிறிஸ்து மணவாட்டியில் வெளிப்படுகின்றார்! தேவன் ஆதாமின் சரீரத்திலிருந்து ஸ்திரீயை எடுக்கையில், ஸ்திரீயானவள், அவள் விழுந்துபோனாள்; பிறகு தம்முடைய வார்த்தையாகிய, தம்முடைய சரீரத்திலிருந்து, தம்முடைய மாம்சத்திலிருந்து, கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து தேவன் எடுத்திருக்கிறார், பிரமாணத்தினாலோ அல்லது ஸ்தாபனத்தினாலோ விழுந்துபோகாத ஒரு மணவாட்டியை வெளியே கொண்டு வருகிறார். இல்லை, ஐயா! அவள் கறையற்ற, கலப்படமற்ற, வெளிப்படுத்தப்படுகின்ற தேவனுடைய வார்த்தைக்கு திரும்ப வந்துகொண்டிருக்கிறாள். 414 இந்த ஒலிநாடாவைக் கேட்கும் ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ஸ்திரீயும் இதைப் புரிந்துகொள்வார்களென்று நான் நம்புகிறேன். புரிகிறதா? 415 அவள் இரண்டாம் ஏவாள், ஆனால் அவள் தன் கணவனுக்கு, அவள் அளித்துள்ள பரிசுத்தத்தையும் கற்பையும் பாழ்படுத்தி, குலைத்துவிடமாட்டாள். யார் என்ன கூறினாலும் அதை பொருட்படுத்தாமல் அவள் அவருடைய வார்த்தையில் தரித்திருப்பாள். நீங்கள் விரும்புகின்ற எல்லாவித உலக சபைகளின் ஐக்கிய அசைவுகளையும் மற்ற எல்லா தொல்லைகளையும் கொடுக்கலாம்.
193416 விரைவில் அவர்கள் ஒரு துன்புறுத்தலைக் கொண்டு வந்து, எல்லா சபைகளையும் மூடப் போகிறார்கள். நீங்கள் அதைப் பார்ப்பீர்கள். ஸ்தாபனமாயிராத, இது போன்ற சபைகளை, அவர்கள் ஒரு பண்டகசாலையாக, எந்த காரியத்திற்கும் உபயோகிப்பார்கள். உலக சபைகளின் ஐக்கியத்தைச் சேர்ந்திராத யாருக்காகிலும் ஒரு மனிதன் சென்று ஜெபத்தை ஏறெடுத்தால், அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்படுவான். அது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்த ஐக்கியத்தின் தலைவரான லூத்தரன் போதகர் ஒருவர், அவ்விதம் கூறியுள்ளார். அது சரியாக இங்கே உள்ளது, உங்களால் அதை இங்கே உங்களுடைய பத்திரிக்கையிலேயே வாசித்துப் பார்க்க முடியும். உண்மையே. 417 அவர்கள் என்னக் கூறினாலும் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறதில்லை, அந்த சபை இந்த சண்டையில் உண்மையாய் நிற்கும். அவள் முன் காலங்களில் அதை நிரூபித்திருக்கிறாள், அவள் மறுபடியும் ஒவ்வொரு காரியத்தையும் எதிர்கொண்டு அதை மீண்டும் செய்வாள். இது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. எல்லா உலக சபை ஐக்கியங்களும் மற்றெல்லாம் ஒழிந்துபோகட்டும். அவளோ அங்கே கறைதிரையற்றவளாய் இருக்கப் போகிறாள். அது உண்மை. அவள் அங்கு நிற்பாள்.
194418 கவனியுங்கள், தேவன் தம்மைத்தாமே கிறிஸ்துவாகிய, தம்முடைய சரீரத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இப்பொழுது மூவகை அழகான காரியத்தை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? 419 தேவன் கிறிஸ்துவினூடாக செய்ததுபோல, கிறிஸ்து தம்முடைய சரீரத்தில், சபையில், தம்முடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை ரூபுகாரப்படுத்திக் கொண்டிருக்கிறார். 420 “என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் சொல்லக் கூடும்? என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், அப்படியானால் நான் எங்கே—நான் எங்கே தவறியிருக்கிறேன்? இப்பொழுது நீங்கள் அதை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூறுகின்ற நபர்களாகிய நீங்கள், இப்பொழுது ஸ்தாபனத்தாராகிய நீங்கள், இப்பொழுது எனக்கு காண்பியுங்கள். ஆம். நான் மேசியாவாயிராதபடிக்கு எங்கு தவறினேன் என்று எனக்குக் காண்பியுங்கள். மேசியா செய்வாரென்று தேவன் கூறியுள்ள அடையாளங்களில் ஏதாகிலும் ஒன்றை, நான் செய்யாமல் தவறிப்போனதை, அதை நிறைவேற்றாமலிருந்ததை காண்பியுங்கள்,” அவர் கூறினார். புரிகிறதா? தேவன் தம்முடைய சரீரத்தில் இருக்கிறார்.
195421 இப்பொழுது கிறிஸ்து, “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்.” பாருங்கள், பாருங்கள், அதே தேவன். புரிகிறதா? “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால், இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகளை செய்வீர்கள்,” சபையானது சற்று அதிக காலமாக வெளிச்சத்தில் இருக்கும், பாருங்கள். அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை ரூபகாரப்படுத்துதல். தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை கிறிஸ்துவின் சரீரத்தில் செய்ததுபோல, கிறிஸ்துவும் தம்முடைய அதே கிரியைகளை சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்தில் செய்து கொண்டிருக்கிறார், பாருங்கள், இப்பொழுது இந்த கடைசி நாளில் தம்முடைய மணவாட்டி மரத்திற்கு தம்முடைய இரகசியத்தை தெரியப்படுத்தி, ஆதியில் மரத்திலிருந்த கனிகளை அளித்துக் கொண்டிருக்கிறார்.
196422 கவனியுங்கள், அந்த மணவாட்டி மரம் ஒரு கிளையைவிட்டது, ஒரு லூத்தரன். அது என்ன செய்தது? மரம் வளர்ந்து வரும்போது, அதனுடன் கனிகளும் மேலெழுகின்றன. என்ன நேர்ந்தது? அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டனர். ஆகவே மரத்தை வெட்டி, சுத்தம் செய்கிறவர் வந்து, பிதா, திராட்சைத்தோட்டக்காரர், “அந்த கிளை செத்துப்போயிற்று” என்று சொல்லி அதை வெட்டிப்போட்டார். 423 பின்பு வெஸ்லியன்கள் தோன்றினார்கள்; அது நன்றாக மேலெழுந்தது. ஆனால் அது என்ன செய்தது? கனி மரத்திற்கே மீண்டும் சென்றுவிட்டது, எனவே அவர் அந்த கிளையை மரத்திலிருந்து வெட்டிப்போட்டார், அது மரித்தது. 424 ஒரு, ஒரு சபையை எனக்குக் காண்பியுங்கள்…நான் அறிய விரும்புகிறேன். முப்பத்து மூன்று ஆண்டுகளின் சபை சரித்திரம் என்னிடமுள்ளது. ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்ட எந்த சபையாவது எப்போதாவது மரிக்காமல் இருந்த இடத்தை ஒரு இடத்தை, ஒருமுறை எனக்கு காண்பியுங்கள். அவர்கள் எப்போதாவது மீண்டும் எழும்பின ஒரு இடத்தை எனக்கு காண்பியுங்கள், வெறுமனே எண்ணிக்கைகள் மற்ற காரியங்களுக்கு புறம்பே, ஒரு எழுப்புதலும் இல்லை. புரிகிறதா? அது அங்கே இல்லை. இல்லை, ஐயா. அவள் முழுவதுமாக போய்விட்டாள்.
197425 எனவே திராட்சைத் தோட்டக்காரர் என்ன செய்தார்? அவர் வந்து கிளைகளை வெட்டிப் போட்டார். புரிகிறதா? அவை ஸ்தாபன கனிகளை மாத்திரமே ஈன்றன; ஆரஞ்சு மரத்தில் எலுமிச்சை பழங்கள், எனவே மரத்தை அவர் வெட்டி சுத்தம் செய்தார், பாருங்கள். அதை வெளியே கொண்டு வந்து, பாதுகாத்தார். 426 ஆனால் மரத்தின் இருதயம் எங்குள்ளது? அதன் மையத்தில். அவர் கிளைகளை வெட்டி சுத்தம் செய்து, முடிவில் உயரத்தில்… 427 அந்த வேரில் அவர் வித்தை வைத்திருக்கிறார். நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்தைப்போல, அப்படிப்பட்டவன் தேவனுடைய பிரமாணங்களையும் அன்பையும் அவன் இருதயத் தில் கொண்டிருக்கிறான். “அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட” சங்கீதம் 1, “மரத்தை போலிருப்பான்; அவனுடைய இலைகள் உதிராது; அவனுடைய காலத்தில் அவருடைய கனியைத் தருவான்.” ஆகவே இது சரியாக… 428 பழம் வேகமாக எங்கு பழுக்கிறது? மரத்தின் உச்சியில். ஏன்? வெளிச்சம் அதன் மேல் படுகின்றது. ஆமென்! அது உண்மை. இந்த கடைசி நாட்களில், சரியாக மரத்தின் உச்சியில், ஒரு மணவாட்டி மரத்தை அவர் வளரச்செய்து கொண்டிருக்கிறார்.
198429 அவர்தான் ஜீவ விருட்சம் என்பதை, இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அதற்கு முரணாக “சர்ப்பத்தின் வித்து,” அமைந்துள்ளது, நீங்கள் பாருங்கள். அவரே அந்த வித்து, “அந்த ஸ்திரீயின் வித்து,” ஏதேன் தோட்டத்திலிருந்த ஜீவ விருட்சம். “அந்த மரத்தை அங்கிருந்து எடுத்திருக்காவிட்டால், அவர்கள் அதன் கனியைப் புசித்து என்றென்றைக்கும் ஜீவித்திருப்பார்கள்.” நீங்கள் புசித்து என்றென்றும் வாழ்வதற்கென அந்த ஒரு மரம் மாத்திரமே உள்ளது. அவருடைய வார்த்தையே ஜீவன். ஆகவே அப்பொழுது அந்த வார்த்தை, ஏதேன் தோட்டத்தில் ஏவாள் புறக்கணித்த தேவனுடைய வார்த்தை அதுவே; பிறகு இங்கே கிறிஸ்து, அந்த வார்த்தை, வெளிப்பட்டார். 430 அவர் பூமியின் மீது வந்தபோது, அவர் தான் ஜீவ விருட்சமாயிருந்தார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஆனால் ரோமாபுரி, அவர்கள் என்ன செய்தனர்? அவர் வெட்டிபோட வேண்டியதாயிருந்தது. அவர் அவமானம் என்னும் ஒரு மரத்தின் மேல் தூக்கிப்போடப்பட்டார், “மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்,” அவர் மானிட வர்க்கத்துக்காக சாபமானார். 431 இப்பொழுது அதன் மூலம், அவர் மணவாட்டி மரத்தை தோன்றச் செய்தார், அது ஜீவ விருட்சமாக அவருக்கு திரும்ப அளிக்கப்பட்டு, ஏதேன் தோட்டத்தில் கணவனும் மனைவியுமாக இருக்கும், (ஓ, தேவனுக்கு மகிமை) அதே வார்த்தையின் மூலம் அதே தேவன் கணவனும் மனைவியுமாக வெளிப்படுகின்றார், அதே மணவாட்டி மரம் மறுபடியுமாக உள்ளது.
199432 கவனியுங்கள், அதை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறாரே! எப்படி…என்னே, இங்கே இன்னும் எவ்வளவோ உள்ளது, நாம் சொல்லிக் கொண்டே போகலாம். கவனியுங்கள், ஏதேன் தோட்டத்திலிருந்த, கிறிஸ்துவின் சரீரமாகிய, இந்த விருட்சம். இப்பொழுது தம்முடைய இரகசியத்தை இந்த மணவாட்டி மரத்திற்கு தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். 433 அது கிறிஸ்து என்னும், இரண்டாம் ஆதாமினால் மீட்கப்பட்டதைக், கவனியுங்கள். அவர் அப்படி இருந்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] விழுந்துபோன தமது மனைவியை மீட்டெடுத்து, அவளுடன் தமது வீடாகிய ஏதேனுக்குச் செல்கிறார். அதுதான் இன்றைக்கு சபையில் உள்ள கிறிஸ்து, தம்முடைய மனைவியைத் திரும்ப கொண்டு செல்லுதல். இப்பொழுது மூவகை இரகசியத்தை பார்த்தீர்களா? [“ஆமென்.”] தேவன் கிறிஸ்துவில் வெளிப்படுதல்; கிறிஸ்து சபையில் வெளிப்படுதல்; இவை ஒருங்கே, மூல ஆதாமையும் ஏவாளையும் மீண்டும் கொண்டு வருதல், மனிதனும் ஸ்திரீயும், இருவரும் ஒருவராக, ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கப்பட்டு, ஒரே ஆவியையும் மற்றவைகளையும் பெற்றிருத்தல்.
200434 சபையானது ஆவியினால், கிறிஸ்துவினுடைய இரத்தமாயுள்ளது, ஏனெனில் அந்த—அந்த உயிர் இரத்தத்தில் தான் உள்ளது. அதுதான் நம்மை அவருடைய சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படச் செய்யும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அது அவருடைய சரீரத்தை, அவருடைய மாம்சத்தை, அவருடைய வார்த்தையை மாத்திரமே அடையாளம் கண்டுகொள்ளுகிறது. [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை மெதுவாக தட்டுகிறார்—ஆசி.] 435 ஸ்தாபனங்கள் அதை, ஒருபோதும் தொடவும் கூட முடியாது. அது ஒரு வெளிப்பாடாயிருக்கிறது. அவள் அதை அறிந்திருக்கிறாள். எனவே ஏவாளும் அதை அறிந்திருந்தாள், ஆனால் அவள் விழுந்துபோனாள்; ஆனால் இதை அறிந்திருக்கின்ற இவளோ, விழுந்துபோகமாட்டாள். இவள் நியமிக்கப்பட்டிருக்கிறாள்! அல்லேலூயா! வியூ! இவள் விழுந்துபோகாதபடி நியமிக்கப்பட்டிருக்கிறாள். அவள் தவறிப் போகமாட்டாள். அவள் அதற்கெனவே முன் குறிக்கப்பட்டிருக்கிறாள். “எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்.” இங்கு அமர்ந்திருக்கும் சுமார் இரண்டு டஜன் போதகர்களாகிய நீங்கள் நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கிறீர்கள். புரிகிறதா? “எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது கூறியுள்ளான்.
201436 கவனியுங்கள், திரும்ப மீட்டுக்கொண்டு, அவருடன், வீட்டுக்குக் கூட்டிச் செல்லுதல்; ஒரு மனித சரீரத்தில் மறுபடியும் நித்திய ஜீவனையடைந்து, புசித்து, குடித்து என்றென்றும் வாழ்ந்திருத்தல். ஏசாயா, “அவர்கள் வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருப்பதுமாயிராது” என்றான். பிள்ளைகள் அதை எடுத்துக்கொள்ளமாட்டார்கள், ஆனால் அவர்கள் தங்களுடைய சந்தானத்துடன் அங்கே இருப்பார்கள். அவன் அதைக் கட்டி அங்கே தங்கியிருப்பான். ஆமென். “அவன் கட்டுகிறதில்லை, மற்றொருவன் புசிக்கிறான்; அவன் தானே கட்டிப் புசிக்கிறான்.” ஆமென்! அது என்ன? அவருடைய மணவாட்டி அவருடன் கூட செல்லுதல், மீட்கப்பட்டு ஆதியிலிருந்த ஆதாம் ஏவாளின் நிலைக்குக் கொண்டு வரப்படல், மரணம் பின்னால் விடப்பட்டது. அவர்கள் சிலுவையை நோக்கிப் பார்த்து மரணத்திற்கு கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்கின்றனர். 437 இப்பொழுது, விசுவாசத்தினால், நாம் அவருடன் கூட உயிரோடெழுந்து, இப்பொழுதே உன்னதங்களில் வீற்றிருந்து, நம்மை எது மீட்டது என்பதை பின்நோக்கிப் பார்த்தவர்களாக; கணவர் வருவதற்காகவும், அவருடனே நாம் வீட்டை நோக்கி அணிவகுத்து செல்வதற்காகவும் காத்துக்கொண்டிருக்கிறோம்.
202438 தேவனுடைய மூவகை நோக்கம், ஆதாமிலும் ஏவாளிலும், ஒவ்வொரு தீர்க்கதரிசியிலும், காலங்களினூடாகவும், வரப்போகின்ற அவர்; இருந்தவர், இருக்கிறவர் மற்றும் வரப்போகிற அவர்—அவருக்குள்ளும் வெளிப்பட்டது. முழு வெளிப்படுத்துதலையும், தேவனுடைய வார்த்தை வெளிப்படுதலையும், ஆதாமும் ஏவாளும் வீட்டிற்குத் திரும்பி செல்லுதல், மீட்கப்பட்டவர்களாக, தேவன் தம்மை தாமே தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
203439 அவர் அங்கு தாவீதின் சிங்காசனத்தில் அமருவார் (அது சரியா?) எல்லா ஜாதிகளையும் அவர் சொந்த, இருப்புக் கோலால் அரசாளுவார். ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு—ஒரு மரம் இருக்கும், உள்ளே வருகிற ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகளாயிருக்கும்…இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டு வருவார்கள். தீட்டுப்படுத்தக்கூடிய எதுவுமே இருக்காது அல்லது தீட்டுள்ளது ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை. சீயோன் மலைக்கு இரவும் பகலும் வெளிச்சம் உண்டாயிருக்கும், மீட்கப்பட்வர்கள் அந்த வெளிச்சத்திலே நடப்பார்கள். ஓ, அல்லேலுயா! 440 சிந்தித்துப் பார்க்க வேண்டும், அது கட்டுக் கதையல்ல, அது வேதசாஸ்திரத்தினால் உருவாக்கப்பட்ட கருத்தல்ல. அது இயேசுகிறிஸ்து தமது வார்த்தையில் வெளிப்படுவதாக அமைந்து, எல்லா காலங்களிலும் பிரகாசமுள்ளாதாயும் உண்மையுமாயிருக்கிறது. அது இக்காலதத்திலும் உண்மையாயிருக்கிறது. அது இங்கே இப்பொழுது உண்மையாய் இருக்கிறது. எனக்கு அது உண்மையாக இருக்கிறது, உங்களுக்கும் அது உண்மையாயிருக்கிறது, இந்த வெளிப்பாட்டைப் பெற்றுள்ள ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அது உண்மையாயிருக்கிறது. ஆமென்.
204441 பாருங்கள் தேவன் தம்மைத் தெரியப்படுத்தி, தம்மை ஜீவனினூடான நாடித்துடிப்பாக, அதாவது நீங்கள் அவருக்கு இப்பொழுது ஒரு சிறைவாசியாக இருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய அன்பின்-சிறைவாசியாக இருக்கிறீர்கள். உலகம் அவர்களைப் பார்த்து நகைத்து, ஏளனம் செய்து, “அதனின்று வெளியே வா” என்று கூறலாம். நீங்களும் வெளியே போக முயற்சிக்கக் கூடும், ஆனால் உங்களால் முடியாது. புரிகிறதா? மற்ற ஸ்திரீகள் ஹாலிவுட்டில் நடிக்க முடியும், ஆனால் உங்களால் முடியாது. நீங்கள் ஒரு சிறைவாசியாக இருக்கிறீர்கள். ஆமென். பாருங்கள், நீங்கள் கிறிஸ்துவுக்கு ஒரு சிறைவாசியாக இருக்கிறீர்கள். மற்ற மனிதர்கள் புகைபிடித்து, மது அருந்தி, தாங்கள் விரும்பும் எதையும் செய்து, அதே சமயத்தில் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்றும், மூப்பர்கள் என்றும், போதகர்கள் என்றும் கூட அழைத்துக்கொள்ள முடியும், ஆனால் உங்களால் முடியாது. நீங்கள் ஒரு சிறைவாசியாய், வார்த்தைக்கு ஒரு சிறைவாசியாய் இருக்கிறீர்கள். ஆம், ஐயா. ஆம், ஐயா.
205442 இரண்டாம் ஆதாமாகிய; கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட, தமது மணவாட்டி மரத்திற்கு, தமது இரகசியத்தை அறிவித்தல்; வீட்டுக்கு திரும்பிச் செல்லுதல், மூல எதேனுக்கு திரும்ப அளிக்கப்பட, மரணம், வியாதி, துயரம், அவமானத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க, நித்திய ஜீவனுடன் திரும்பிச் செல்லுதல். 443 அப்படியானால், கவனியுங்கள், அநேகர் தவறான கருத்துக்களை உடையவராயிருக்கின்றனர். அந்த—அந்த…கிறிஸ்தவ மார்க்கத்துக்கும், அதன் அரசாங்கத்துக்கும் ஜனங்களை மதம் மாறச் செய்தல் என்பது, தேவனுடைய நோக்கமேயல்ல. நீங்கள், “அவருடைய அரசாங்கத்தினால் நாங்கள் ஜனங்களை கிறிஸ்தவ மார்க்கத்திற்கு மதம் மாறச் செய்கிறோம்” என்கிறீர்கள். அதுவல்ல. “பாருங்கள், அவர்கள் மது அருந்தக் கூடாது. அவர்கள் பொய் சொல்லக் கூடாது.” இந்த விஷயத்தில் முகமதியர் உங்களைவிட மேம்பட்டிருக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆப்பிரிக்காவிலுள்ள அஞ்ஞானிகள், அந்த கறுப்பு மனிதர்கள், அந்த ஆதிவாசி மரபினர் தங்களுக்கென ஏற்படுத்திக் கொண்டுள்ள சட்டதிட்டங்கள், கிறிஸ்தவ மார்க்கத்தில் நீங்கள் உருவாக்கக்கூடியதைக் காட்டிலும் மேம்பட்டிருக்க முடியும் என்பதை நீங்களே அறிவீர்கள்.
206444 ஏன், அந்த ஷுன்காய் ஆதிவாசி மரபினரிடம் நான் சென்றிருந்தேன். அந்த குலத்திலுள்ள வாலிபப் பெண் ஒரு குறிப்பிட்ட வயதில் மணம் செய்து கொள்ளாவிட்டால், அவள் குலத்தைவிட்டே நீக்கப்படுவாள், அவள் வழக்கமாக பூசிக் கொள்ளும் வர்ணத்தை அவள் அழித்து விடவேண்டும். அவளை அவர்கள் பட்டணத்திற்கு அனுப்பிவிடுவார்கள்; அவள் அங்கு அலைந்து திரிந்து கொண்டிருக்க வேண்டும். அவளால்…அவளுக்கு மணமாவதற்கு முன்பு, அவளுடைய கன்னித்தன்மை பரிசோதிக்கப்பட வேண்டும். ஏதாவது ஒரு மனிதனுடன் விபச்சாரம் செய்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால், அவன்…அவன் யாரென்பதை அவள் அறிவிக்க வேண்டும், அவர்கள் இருவரும் சேர்ந்தே கொல்லப்படுவார்கள். ஹு-ஹும். ஓ, அவர்கள்—அவர்கள்…என்று அழைக்கப்படுகின்ற இவர்களை மிஞ்சிவிட முடியும். 445 கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் உங்களிடையே இந்த விதிமுறைகள் இருக்க நேரிட்டால் என்ன நடந்திருக்கும்? காலை தோன்றுவதற்கு முன்பே தொண்ணூற்றொன்பது சதவீதிம் பேர் மரித்துப்போவர். அது உண்மை. அது உண்மை, ஆண்கள் பெண்கள் இருவருமே. அது உண்மை என்று உங்களுக்கு தெரியும். “என்ன?” நீங்கள், “வாருங்கள் நான் சுத்தமாக இருக்கிறேனே!” என்று கூறலாம்.
207446 “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரம் செய்தாயிற்று.” இப்பொழுது அதைக் குறித்து என்ன? அந்த விதமாக அந்த மனிதனிடம் உன்னை காண்பிக்கின்ற, சகோதரியே, உன்னை குறித்து என்ன? நீ அதை செய்ததுபோன்ற குற்றவாளியாகவே இருக்கிறாய். புரிகிறதா? 447 “ஓ, ஆனாலும் சரி.” காரணம் ஏன் என்று கூற, போதகர் பயப்படுகிறாரா? அதன்பேரில் பேரில் சரி செய்தால் அவருடைய ஸ்தாபன தலைமையகம் அவரை வெளியேற்றிவிடும். அவர்கள் கலப்பினமானவர்கள். அவர்கள் வார்த்தையை எடுத்துக்கொள்வதில்லை. அது உண்மை என்று வார்த்தை கூறினது. அது உண்மை என்று இயேசு கூறினார், ஆகவே அவர்தான் தலை.
208448 இப்பொழுது கவனியுங்கள், தேவன் தம்மை தெரியப்படுத்துகிறார். ஒரு அரசாங்கத்தினால் கிறிஸ்துவ மார்க்கத்துக்கு ஜனங்கள் மதம் மாறச் செய்ய வேண்டுமென்று நமக்குக் கூறப்படவில்லை; ஆனால் வெளிப்பாட்டினால், தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்ததுபோல், உங்களுக்குள் கிறிஸ்து இருக்கிறார். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தது போல, கிறிஸ்து உங்களுக்குள்ளே! தேவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்து என்ன செய்தாரோ, அதையே கிறிஸ்து உங்களுக்குள் செய்கிறாரே! தேவன் கிறிஸ்துவுக்குள் என்ன அடையாளங்களை செய்தாரோ, கிறிஸ்து அதையே உங்களுக்குள்ளிருந்து செய்கிறார்! ஓ, அது அழகாய் உள்ளதல்லவா? ஹூ! ஓ, என்னே! நான் அதை விரும்புகிறேன். 449 இயேசு, “அந்நாளிலே,” என்றார், அதுதான் இந்த நாள். “அந்நாளிலே,” இந்த வெளிப்பாடு தெரியப்படுத்தப்படும்போது, “நான் பிதாவிலும், பிதா என்னிலும்; நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை நீங்கள் அறிவீர்கள்.” இந்த வெளிப்பாடு வெளிப்படுகின்றபோது, “அந்நாளிலே நானும் பிதாவும் ஒன்றாயிருப்பதை, நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை அறிவீர்கள்.” பிறகு அந்த வெளிப்பாடு வருகின்றபோது, அப்பொழுது அது, “நான் உங்களிலும் நீங்கள் என்னிலும்” என்பதாயுள்ளது. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. பல்வேறானதைப் பாருங்கள், மூன்று வகையான வெளி-…எதற்காக? அதைத் திரும்பக் கொண்டு வருவதற்காக. நாம்…இருக்க வேண்டும் இயேசு தேவனுடைய வார்த்தையாயிருந்தபடியால், அவர் அதையே ரூபகாரப்படுத்தினார்.
209450 அவர்—அவர் வார்த்தையாயில்லாமலிருந்தால், வார்த்தையை அவர் வெளிப்படுத்தியிருக்கவே முடியாது, அவர் ஒரு மகத்தான வேத பண்டிதனாக இருந்திருப்பார். உலகம் எதிர்நோக்கியிருந்த உண்மையான மேசியா அப்படிப்பட்டவராய் இருந்திருப்பார். புரிகிறதா? ஆம், ஐயா, அது அவராக இருந்திருக்கும். 451 அதைத்தான் அவர்கள் இன்றைக்கு தேடிக்கொண்டிருக்கிறார்கள், பில்லிகிராமைக் காட்டிலும் சிறந்த யாரோ—யாரோ—யாரோ ஒருவரை அல்லது தங்களுடைய ஸ்தாபனத்துடன் ஒத்துழைக்கும் யாரோ ஒருவரை, அவர்கள் இந்நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியாதிருக்கிற அந்த பாப்டிஸ்ட்டுகளை வந்து காட்டவுமே. நிச்சயமாக. அவர்கள் அதற்காகத்தான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சபையோ தாழ்மையையும் ஜீவனுள்ள தேவனாகிய கிறிஸ்துவின் அடையாளங்களையும் எதிர்நோக்கியிருக்கிறது.
210452 இயேசு சிறந்த வேத பண்டிதராக இருக்கவில்லை. அவர் ஒரு சாதாரண விவசாயி, ஒரு தச்சனின் குமாரனாயிருந்தார், அவ்வாறு அவர் அழைக்கப்பட்டார். பார்த்தீர்களா? அவர் சுற்றித் திரிந்தார், ஆனால் தேவன்…அவர், “நான் செய்வேன் என்று வேதம் கூறுகிறதை நான் வெளிப்படுத்தாமல் இருக்கிறேன் என்பதை உங்களில் யாராவது எனக்குக் காண்பியுங்கள்” என்று கூறினார். 453 எனவே சபையும் அதே காரியத்தை இன்றைக்கு செய்ய முடியும். கிறிஸ்து செய்தவைகளை சபை இன்றைக்கு செய்கிறது. “நான் என் பிதாவிலும், பிதா என்னிலும்; நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே அறிவீர்கள்.” புரிகிறதா? நீங்கள், சீயோனுக்கு, அந்த (எங்கே?) இராஜ்ஜியத்திற்கே அணி வகுத்து சென்றுகொண்டிருக்கிறீர்களே! “நான் உங்களில் இருக்கிறதை அந்நாளிலே அறிவீர்கள்.”
211454 இங்கு கவனியுங்கள். இங்கே, இது அழகாயுள்ளது. அதை நீங்கள் தவறவிட்டுவிடக் கூடாது என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது ஒவ்வொருவரும், இந்த ஒலி நாடாவைக் கேட்பவரும், வெளியே காடுகளில் உள்ளவரும், நீங்கள் எங்கு இதைக் கேட்டாலும், இப்பொழுது இதை கவனியுங்கள். 455 “பிதா என்னை அனுப்பினதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்,” என்று இயேசு கூறினார். புரிகிறதா? இப்பொழுது கவனியுங்கள். அவரை அனுப்பின பிதாதாமே, ரூபகாரப்படுத்தும்படிக்கு, அவருக்குள் சென்றார், ஏனெனில் அவர் வார்த்தையாயிருந்தார். இப்பொழுது உங்களை அனுப்புகிற அதே இயேசு, அதே தேவனை ரூபகாரப்படுத்தும்படிக்கு, உங்களுக்குள் வாசம் செய்து உங்களுடன் செல்கிறார். “பிதா என்னை அனுப்பினதுபோல, நான் பிதாவினால் ஜீவிக்கிறதுபோல; நானும் உங்களை அனுப்புவேன், நீங்கள் என்னால் ஜீவிப்பீர்கள்.” அவர் யார்? அவர் வார்த்தை. நீங்கள் வார்த்தையினால் ஜீவிப்பீர்கள். ஓ, அதன் பேரிலான ஒரு பொருளைத் தெரிந்துகொண்டு, அதன் பேரில் சுமார் இரண்டு மணி நேரம் பேச எனக்கு எவ்வளவு ஆவலாயுள்ளது, பாருங்கள், அதன் பேரில், அவர் அதன் பேரில் எப்படி…இருந்தார். கவனியுங்கள், கவனியுங்கள், “என்னை அனுப்பின பிதா” அவருடன் சென்றார். அனுப்புகின்ற…நம்மை அனுப்புகிற இயேசுவும் நமக்குள்ளிருந்து செல்கிறார்.
212456 “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் நான்,” தனிப்பட்ட பிரதிப் பெயர், “நான்,” அந்த நபர், இயேசு, “உங்களுடனேயும், உங்களுக்குள்ளேயும், உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.” இப்பொழுது ஆராயந்து பார்த்து அவர் என்ன செய்தார் என்று பாருங்கள், அதன் பின்னர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றும் பாருங்கள், அதன்பின்னர் உங்களையே ஒப்பிட்டுப் பாருங்கள்.
213457 “நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷ குமாரனுடைய வருகையின் நாட்களிலும் நடக்கும். லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவே,” நவீன பில்லிகிரஹாம் மற்றும் ஓரல் ராபர்ட்ஸ் போன்ற இருவர் சோதோமுக்குச் சென்று, அங்கிருந்த சோதோமில் உள்ளவர்களுக்கு பிரசங்கித்து சுவிசேஷத்தினால் அவர்களுடைய கண்களை குருடாக்கினார்கள், பாருங்கள். ஒரு தூதன், ஒரு செய்தியாளன் மாத்திரம் ஆபிரகாமுடனும் அந்த தெரிந்துகொள்ளப்பட்ட குழுவுடனும் தங்கிவிட்டார், அவர் எந்தவிதமான ஒரு அடையாளத்தை செய்தார்? பார்த்தீர்களா? ஆபிரகாம் அவரை எவ்வாறு அழைத்தான்? ஏலோகிம், மாம்சத்தில் வெளிப்படடுத்தப்பட்ட தேவன். கடைசி நாட்களில் இயேசுவானவர் தாமே, அவருக்குள் இருந்த தேவன், தம்முடைய மணவாட்டியில் வெளிப்படுவார் என்பதை காண்பிக்கிறார்! ஓ, என்னே, என்னே! இதற்கு முடிவேயில்லை; இது தேவனுடைய வெளிப்படுதல்! அது நித்தியமாயுள்ளது, அது தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கிறது.
214458 கவனியுங்கள், அதன்பின்னர், பாவம் அவர்களை மரணத்தில் பிரிப்பதற்கு முன்னர், ஆதாமும் ஏவாளும் போன்ற ஒருவர், இப்பொழுது இரண்டாம் ஆதாமாகிய, கிறிஸ்து, ஜீவனின் மூலம் மணவாட்டியை மரணத்தினின்று மீட்டெடுத்து; இப்பொழுது மூல ஏதேனுக்கு திரும்பிச் செல்லும் தன்னுடைய பாதையில் மணவாட்டிக்கு தேவனிடமிருந்த ஐக்கியத்தை திரும்ப அளித்து, ஏதேன் தோட்டத்தில் அவர்கள் கணவனும் மனைவியுமாக இருக்கின்றனர், கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியும்.
215459 தேவன், அந்த நாளிலே, “அவரே சகலத்திலும் சகலமாயிருப்பதற்கு; இராஜ்யம் பிதாவுக்கு ஒப்புக் கொடுக்கப்படும்.” “அவன் பேசும்போதே, நான் கேட்பேன்.” தாவீது, கிறிஸ்து, தாவீது சிங்காசனத்தில் அமர்ந்திருந்து, மானிடவர்க்கம் அனைத்திற்கும் ராஜாவாயிருப்பார். “அவர்கள் நினைக்கும்போதே, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் கூப்பிடுவதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன். ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும். சிங்கம் மாட்டைப் போல வைக்கோலைத் தின்னும், அவைகள் ஒருமித்துத் தின்று படுத்துக்கொள்ளும். என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்கு செய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லை,” மறுபடியுமாக ஏதேனுக்கு, விரைந்து செல்லுதல்! 460 அது தான் மூவகை நோக்கம். ஓ, தேவனே, அதை அறிந்துகொள்ள எங்களுக்கு உதவி செய்யும்! நாங்கள் அதை அறிந்துகொள்ள எங்களுக்கு உதவி செய்யும்!
216461 மூல ஏதேனுக்குப் திரும்பிப் போவதை, நாம் இப்பொழுது மீண்டும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது கூர்ந்து கவனியுங்கள். 462 அப்படியானால் நாம் அவரால் பிறந்திருப்போமானால், நாம் அவரால் நிரப்பப்பட்டிக்கிறோம். பாருங்கள், உங்கள் ஜீவியம், அவருடைய ஜீவன் உங்களுக்குள் இருக்கின்றது. அப்படியானால், நம்முடைய செயல்கள் எல்லாம் அவரை பிரகடனப்படுத்த வேண்டும். 463 அது ஒரு மரத்திலுள்ள சத்தை எடுத்து—எடுத்து வேறொரு மரத்திற்குள் புகுத்துவது போன்றதாகும். நீங்கள் பேரிக்காய் மரத்தின் சத்தையெடுத்து ஆப்பிள் மரத்திற்குள் புகுத்தினால், அது பேரிக்காய்களைத் தான் தரும். அது அதற்குள் ஜீவனை, அந்த சத்தை பெற்றுள்ளபடியால், அதனுடைய கருஉயிர்மம் பேரிக்காயாய் உள்ளது. சரி. அப்படியானால், நம்முடைய கிரியைகள் அனைத்தும் அவரைப் பிரகடனப்படுத்த வேண்டும். 464 நாம் அவருடைய நாமத்தை உடையவர்களாயிருக்கிறோம். அது சரியா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அவருடைய நாமத்தை நாம் தரித்துக்கொள்ள வேண்டும்.
217465 நினைவிருக்கட்டும், நாம் இப்பொழுது, அவருடைய மணவாட்டியாக, அவருடைய ஆவியினால் கர்ப்பம் தரிக்கப்பட்டிருக்கிறோம். ஓ, என்னே! சபையானது, அவருடைய நாமத்தோடு அவருடைய ஆவியினால் கர்ப்பந்தரிக்கப்பட்டு, பாருங்கள், குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கிறது; அவருடைய நாமத்தைத் தரித்துக்கொண்டு, அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொண்டு; அவருடைய ஜீவனுக்கேற்ற அடையாளங்களை நடப்பித்து, முதன்மையானவைகளின் அத்தாட்சியோடு, அவருடைய உயிர்த்தெழுதலின் அத்தாட்சியையும், அவர் மரித்தவரல்ல, அவர் உயிர்த்தெழுந்து என்றென்றும் உயிரோடிருக்கிறார் என்றும் காண்பிக்கிறது. அது நித்திய ஜீவன், நாம் அவருக்குள் ஜீவித்திருக்கிறோம் என்பதை அது உலகத்திற்கு ரூபகாரப்படுத்துகிறது, ரூபகாரப்படுத்தியுள்ளது. வ்யூ!
218466 நீங்கள் ஒரு சபை அங்கத்தினராக இருக்கின்றபடியால் நீங்கள் எப்படி அறிந்து கொள்வீர்கள்? ஏனென்றால், கிறிஸ்து உங்கள் மூலமாக ஜீவித்துகொண்டிருக்கிறார், எனவே அவருடைய ஆவியினால் கர்ப்பம் தரிக்கப்பட்டபடியால் நீங்கள்—நீங்கள் மற்றெந்த காரியத்திற்கும் ஒரு சிறைவாசியாக இருக்க முடியாது. நீங்கள் சுவிசேஷத்திற்கு சிறைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள், ஓ, என்னே, தேவனுடைய வார்த்தைக்கு சிறைப்படுத்தப்பட்டு, அதன் விளைவாக நீங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் அனைத்தும் அவ்விதமாகவே இருக்கும், ஏனெனில் நீங்கள் ஒரு சிறைவாசியாயிருக்கிறீர்கள். 467 உங்களால் விபச்சாரம் செய்ய முடியாது; நீங்கள் ஏற்கனவே கர்ப்பந்தரித்துவிட்டீர்கள். மகிமை! அவனால் உங்களை அணுக முடியாது. ஜீவனின் கர்ப்பம் மற்றெல்லாவற்றிற்கும் அடைக்கப்பட்டுவிட்டது. முன்குறிக்கப்படுதலின் மூலம், நீங்கள் ஏற்கனவே அவருடையவர்களாய் இருக்கிறீர்கள். அந்த வித்து உயிர்பெற்றுவிட்டது; உலகம் எதுவும் உள்ளே நுழைய முடியாது. ஓ! ஓ, எப்படி நாம் இதன் பேரிலேயே சுமார் ஒரு மணி நேரமாக தரித்திருந்து பிரசங்கிக்க விரும்புகிறோம்! நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். புரிகிறதா? கிறிஸ்துவும், அவருடையவர்களும் மாத்திரமே, அது ஏற்கனவே முடிந்துவிட்டது. அந்த வித்து அங்கு இருந்தது. அந்த வித்து, ஏற்கனவே இருந்தது. அது எப்பொழுது அங்கு விதைக்கப்பட்டது? “உலகத்தோற்றத்துக்கு முன்பே, அவர் நம்மை நித்திய ஜீவனுக்கு முன்குறித்திருக்கிறார்.” ஜீவனை கொடுக்கும் அந்த அணுக்கள் பாய்ந்தவுடனே, அந்த வித்து அங்கே இருந்தது… அதிலிருந்த மற்ற வித்துக்கள் உள்ளே வந்து, சேர முடியாது, அதைப் போன்று, செய்ய முடியாது. ஆனால் அந்த வித்து உள்ளே வந்தபோது, உடனடியாக அது கருப்பையை மூடிவிட்டது, மற்ற எல்லா வித்துக்களும், பாருங்கள், அந்த விதமாக, வெளியேற்றப்ப்பட்டன. 468 நீங்கள் கிறிஸ்துவினால், சூழப்பட்டு, ஒரு சிறைவாசியாகின்றீர்கள். கிறிஸ்து உங்களுக்குள்ளிருக்கிறார், அவருடைய ஜீவன் அவருடைய அத்தாட்சியை அவருடைய அடையாளங்களை தோன்றச் செய்கின்றன. ஓ, என்னே, என்னே, என்னே! பாருங்கள், அவருடைய ஜீவனின் அடையாளங்களை அவருடைய உயிர்த்தெழுதலின் ஒரு அத்தாட்சியாக தோன்றச் செய்து, அந்த நித்திய ஜீவனை உலகத்திற்கு நிரூபிக்கிறது, நாம் அவருக்குள் உயிரோடிருக்கிறோம் என்று உலகத்திற்கு ரூபகாரப்படுத்துகிறது. அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், நமது மீட்பராகிய, தேவனுடன் ஜீவிக்கிறவர்களாயிருக்கிறோம், அந்த நோக்கத்திற்காகவே அவர் நம்மை, சபையை, சிருஷ்டித்தார், அவருடைய சிருஷ்டிக்கும் ஜீவன் நமக்குள்ளே இருக்கிறது. 469 அது, மோசே தேவனுடைய வார்த்தையைக் கொண்டவனாய், “வண்டுகள் வரக்கடவது” என்று கூற முடிந்தவுடன், வண்டுகள் வருகின்றன. வண்டுகளை சிருஷ்டித்த ஒரே தேவனால் அணில்களையும் சிருஷ்டிக்க முடியும். புரிகிறதா?
219470 அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அவரால் சிருஷ்டிக்க முடியும். அவரால் எந்த காரியத்தையும் செய்ய முடியும். அவர் தேவனாய் இருக்கிறார். அதே தேவன், அந்த சிருஷ்டிக்கும் ஜீவன், நீங்கள் பாருங்கள், அது உங்களுக்குள்ளாக இருக்கிறது, முடிந்த… நீங்கள் ஒரு சிறைவாசியாய் இருக்கிறீர்கள்; அதைப் பேசு என்று அவர் கூறுகிற வரையில் உங்களால் அதைப் பேச முடியாது. ஆனால், நீங்கள் பேசினபோது, அது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. அவ்வண்ணமாய் இருக்கும்படி அவர் அதை ரூபுகாரப்படுத்தியிருக்கிறார். மற்ற ஒவ்வொரு காரியமும் சரியாயிருக்கிறது, அதை பேசியபோது, அது அவ்வண்ணமாய் இருக்க வேண்டும் என்பதை, அவர் அறிந்திருக்கிறார். புரிகிறதா? 471 மோசே தன் கோலை எடுத்து, “தவளைகள் வரக்கடவது,” என்றான், ஏனெனில் தேவன், “தவளைகள் வரக்கடவது” என்று கூறினார். அவன் அதை உரைக்கும் ஒரு கருவியாக மாத்திரம் இருந்தான். அது உண்மை. அப்பொழுது தவளைகள் எல்லாவற்றிலும் இருந்தன, எல்லாவிடங்களிலும் இருந்தன. அவை எங்கிருந்து வந்தன? யாருக்குமே தெரியாது. அவைகள் அங்கு முன்பு இருக்கவில்லை. ஆனால் சிருஷ்டிகராகிய, தேவன், ஒரு மனிதனின் மூலம் கிரியை செய்து, காரியங்களை, ஒரு உயிரினத்தை சிருஷ்டித்தார். 472 முதல் தவளையை சிருஷ்டித்த அதே தேவன் இரண்டாம் தவளையையும் சிருஷ்டிக்க முடியும். அவர்தான் எல்லா தவளைகளையும் சிருஷ்டித்தார். ஓ, என்னே! நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? முதலாம் அணிலை சிருஷ்டித்தார், இரண்டாம் அணிலை சிருஷ்டிக்கிறார், எந்த அணிலையும் அவரால் சிருஷ்டிக்கக் கூடும்; அணில்களே இல்லாத இடத்தில் அவரால் அணில்களை சிருஷ்டிக்க முடியும். அவர் விரும்பின எதையும் செய்யமுடியும்! அவர் தேவன்! அவர் தேவன்! அவருடைய ஜீவன்! ஓ, என்னே! நான் அதைக் குறித்து நினைக்கும்போது, எனக்கு நடுக்கம் உண்டாகிறது. ஹூ-ஹூம்.
220473 ஓ, அவரோடு கூட ஜீவிப்பது என்பது, அவருடன் வீட்டிற்குச் சென்று, அவருடன் ஜீவிப்பது! அவரோடு என்றென்றைக்கும் ஜீவிக்கும்படி அவரோடு வீட்டுக்கு செல்ல, நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோமே! 474 இதுதான் தேவனுடைய மகத்தான அன்பின் இரகசியம் வெளிப்படுதல், அதாவது தேவனும் மனிதனும் ஒன்றாதல். புரிகிறதா? எல்லாமே தேவனும் மனிதனும், ஒன்றாதலே. அங்கு, தேவனும் மனிதனும் ஒன்றாயிருந்தனர், இங்கு, தேவனும் மனிதனும் ஒன்றாகின்றனர். புரிகிறதா? அது என்ன? அவருடைய ஆவியினாலே நிரப்பப்பட்டு, அவரே முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை கொண்டிருத்தல். அதுவே தேவனுடைய நிறைவேறுதலாய் இருந்தது, அதைச் செய்வதே தேவனுடைய நோக்கமாய் இருக்கிறது; அதாவது அவர் கிறிஸ்துவுக்குள்ளும்; கிறிஸ்து நமக்குள்ளும்; நாம் எல்லாரும், ஒன்றாதலே. பரிசுத்த ஆவி, அதேக் காரியம்; அது அதனை கிறிஸ்துவில் வெளிப்படுத்தினது, அது இங்கே வெளிப்படுகிறது; இயற்கைக்கு மேம்பட்ட சிருஷ்டிக்கும் வல்லமை. ஓ, என்னே!
221475 மோசேயின் மூலமாக இவை யாவற்றையும் கூற முடிந்த—கூறமுடிந்த அதே தேவன், “தவளைகள் வரக்கடவது,” என்ற அதே ஒருவர் அங்கே நின்று, “இந்த தண்ணீர் திராட்சரசமாக மாறக்கடவது” என்றார். புரிகிறதா? ஆமென். அது சரியா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அவர் அதே தேவனாயிருக்கிறார், அந்த அதே ஒருவர். 476 அவர் மாறுவதில்லை. அது மனிதனுக்குள் தேவன் இருப்பதாகும். அது அவருடைய வெளிப்படுத்துதல். அதைத் தான் அவர் வெளிப்படுத்துகிறார். அதைத் தான் அவர் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார், தேவனுடைய சொந்த வார்த்தையானது அதை வெளிப்படுத்திக் கொண் டிருக்கிறது. மனிதன் எதையும் சிருஷ்டிக்க முடியாது என்பதைக் காண்பிக்கிறது; தேவனே சிருஷ்டிகராயிருக்கிறார். அது மனிதனே அல்ல; அது இப்பொழுது தம்முடைய சபையாக இருக்கின்ற, மனிதனுக்குள், சிருஷ்டிகராகிய தேவன். ஆமென்! 477 பரலோகத்திற்குச் சென்று, அவருடன், என்றென்றும் ஜீவிப்போம். தேவன் தமது நித்திய அன்பை சபைக்கு வெளிப்படுத்துகிறார்.
222478 கவனியுங்கள், இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இதை புரிந்துகொள்ளத் தவறவேண்டாம் என்று நான் விரும்புகிறேன். வேறெந்த சபையும் இல்லை, வேறெந்த அடையாளமும் இல்லை, வேறெந்த ஐக்கியமும் இல்லை, வேறெந்த அரசாங்கமும் இல்லை, வேறெந்த சாட்சியும் இல்லை, வேறெந்த கோட்பாடும் இல்லை, இதற்கு புறம்பே வேறெந்த ஸ்தாபனமும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதில்லை. “மகிமையின் நம்பிக்கையாக, கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதைத்” தவிர வேறெந்த காரியத்தையும் தேவன் ஏற்றுக்கொள்கிறதில்லை, அந்த காரியத்தை மாத்திரமே தேவன் அடையாளம் கண்டுகொள்கிறார். வேறெந்த ஐக்கியமும் இல்லை, வேறெந்த சபையையும் இல்லை, வேறெந்த கோட்பாடும் இல்லை, வேறெந்த ஸ்தாபனமும் இல்லை, வேற எந்த காரியமும் இல்லை; மற்ற யாவும் மரித்துப் போய்விட்டன. கிறிஸ்து உங்களுக்குள் ஜீவித்து முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களைக் கொண்டிருக்கும் பொருட்டு, அந்த காரியத்தில் இருந்து துண்டிக்கப்பட வேண்டிய, துண்டிக்கப்பட வேண்டிய துண்டுகள். 479 திரும்ப குறிப்பிட வேண்டியதில்லையே! “இது என்னுடைய ஸ்தாபனம்” என்று கூறுகிற, ஒரு கிளையை நான் இங்கு பெற்றுள்ளேன். அதுவும் கூட, துண்டிக்கப்பட வேண்டும். “நான் என்னுடைய இன்ன-இன்னதை இங்கே பெற்றுள்ளேன். இது இதை கூறுகிறது. நான் ஒரு பரிசுத்த-உருளையர் என்று என்னுடைய தாயார் என்னை சொல்லுவார்.” அதுவும் கூட, துண்டிக்கப்பட வேண்டும். புரிகிறதா? “பாருங்கள், என்னுடைய கணவர் நான் இந்த அரை கால்சட்டை அணிய வேண்டுமென்று விரும்புகிறார் என்று எனக்குத் தெரியும்.” இதுவும் கூட, வெட்டி அகற்றப்பட வேண்டும். புரிகிறதா? நீங்களும் கிறிஸ்துவும் மாத்திரம் இருக்கும்படி இது வெட்டியெடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். புரிகிறதா? ஹு!
223480 யோசித்துப் பாருங்கள்! ஜீவிக்கிற கிறிஸ்து ஜீவிக்கிற வார்த்தையின் மூலம் தமது ஜீவனுள்ள பிரசன்னத்தைக் காண்பிக்கிறார்; ஓ, ஜீவிக்கிற கிறிஸ்து, ஜீவனுள்ள பிரசன்னம், ஜீவிக்கிற வார்த்தை! கவனியுங்கள்! தம்முடைய சொந்த தனிப்பட்ட, தனிப்பட்ட ரூபகாரப்படுத்துதலே நம்முடைய சபையை நிரூபிக்கிறது. 481 அங்கத்தினர்களால் அல்ல. மோசேயின் நாட்களில், அவர் அதை ஒருபோதும் செய்ததில்லை. வேறு எவருடைய நாட்களிலும் அவர் அதை ஒருபோதும் செய்ததில்லை; உலகத்தின் முடிவிலே, அந்த இடத்திற்கு அது வந்தபோது அது அங்கே அழிவாய் இருந்தது. லோத்தின் நாட்களில், அது அங்கத்தினராய் இருக்கவில்லை. அது தனிப்பட்ட ரூபாகாரப்படுத்தலாயிருந்தது, மாம்சத்தில் தேவன், பாருங்கள், தனிப்பட்ட ரூபகாரப்படுத்துதல்.
224482 நினைவிருக்கட்டும்! அதைக் குறித்து யோசித்துப் பாருங்கள், அதாவது, அவருடைய ஆவியினால் பிறந்த ஜனங்களுக்கு, இதைப் போன்ற ஒரு நாளில், நாம் ஜெபிக்கிற இந்த பெரிய ஸ்தாபன காலத்தில், ஜீவனுள்ள தேவன் தம்முடைய ஜீவனுள்ள வார்த்தையை எடுத்து அதை தனிப்பட்ட முறையில், ரூபகாரப்படுத்துகிறார், வார்த்தையில் உள்ள இந்த ஜீவன், வித்தில் உள்ள கருஉயிர்மமாயிற்றே! வார்த்தை விதைக்கிற ஒருவன் விதைக்க புறப்பட்டுச் சென்ற ஒரு விதையாய் இருக்கிறது. ஜீவன் கிறிஸ்துவில், வார்த்தையில், தனிப்பட்ட முறையில் உங்களுக்குள் இருக்கிறது; உங்களால் செய்ய முடியாத ஏதோ ஒரு காரியத்தை ரூபகாரப்படுத்துகிறது, அது நீங்கள் அல்ல, ஆனால் அது அவர்தான் என்று தம்மை நிரூபிக்கிறார். நீங்கள் ஒன்றாகிவிட்டீர்கள், ஒரு மணவாட்டியாயிருக்கும்படி, அவருக்கு ஒரு—ஒரு—ஒரு அன்பின்-அடிமையாகிவிட்டீர்கள்.
225483 வானங்களையும் பூமியையும் மற்றும் அதற்கு மத்தியில் உள்ள எல்லாவற்றையும் சிருஷ்டித்த ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! “அவர் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாய்; அவர் இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவர்; தாவீதின் வேரும், சந்ததியுமானவர்; பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம்” என்பதில் வியப்பொன்றுமில்லை. அவர் எல்லாவற்றிலும் எல்லாமுமானவராய் இருக்கிறார்.
226484 அவருடைய பிரசன்னம், தனிப்பட்ட நபரில், தம்மைத்தாமே வெளிப்படுத்தி தம்மைக் குறித்து ஒரு ரூபகாரப்படுத்துதலாய், இந்நாளுக்காக வாக்களிக்கப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையானது, உங்கள் மூலமாக தம்மை வெளிப்படுத்துகிறது, மகத்தான தேவனுடைய வெளிப்பாட்டின் ஒரு ரூபகாரப்படுத்தலாயுள்ளது. பாருங்கள், தனிப்பட்ட ஒரு நபருக்குள் மாத்திரமே, ஒருபோதும் ஒரு குழுவில் அல்ல! ஒரு தனிப்பட்ட நபர்; ஒரு குழுவில் அல்ல! அவருடைய அடையாளம் ஒரு தனிப்பட்ட நபரில் இருக்கின்றது. நீங்கள் அதை புரிந்து கொள்கிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்?—ஆசி.] மெதோடிஸ்டுகளிடமல்ல, பாப்டிஸ்டுகளிடமல்ல, பிரஸ்பிடேரியன்களிடமல்ல, லூத்தரன்களிடமல்ல, பெந்தெகொஸ்தேயினரிடமல்ல, ஆனால் ஒரு தனிப்பட்ட நபராகவே! 485 “நான் ஒருவனை ஏற்றுக்கொள்வேன், மற்றவனைக் கைவிடுவேன்; நான் அவர்களை பிரித்துவிடுவேன்.” அது உண்மையே. “வயலில் இரண்டு பேர் இருப்பார்கள்; நான் ஒருவனை ஏற்றுக்கொள்வேன், மற்றவனைக் கைவிடுவேன். படுக்கையில் இரண்டு பேர் இருப்பார்கள், நான் ஒருவனை ஏற்றுக்கொள்வேன், மற்றவனைக் கைவிடுவேன்.” 486 அது ஒரு குழுவல்ல. அது ஒரு கர்ப்பந்தரிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளையின் ஒரு தனிப்பட்ட ரூபகாரப்படுத்துவதலாய் உள்ளது, தேவனுடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவனிடத்தில் அவ்வளவாய் சரணடைந்துவிட்டபடியால் அவன் மற்றெந்த காரியத்தைக் குறித்தும் கவலைப்படமாட்டான். பரிசுத்த ஆவியானது அதனுடைய ஜீவியத்தை ஜீவித்து, அவன் மூலமாக நாடித்துடிப்புண்டாகி, வார்த்தையின் தனிப்பட்ட—தனிப்பட்ட ரூபகாரப்படுத்துதலை காண்பித்து, தம்மைத்தாமே, ஜனங்களுக்கும் உலகிற்கும் தம்மை வெளிப்படுத்துகிறார்.
227487 அதைப்போன்று ஒரு காரியத்தினால் எப்படி உலகமானது கண்மூடித்தனமாக நடக்க முடியும்? கத்தோலிக்கர்கள் பரி. பாட்ரிக்குடன் கூடவே இருந்து, அவர் மரிக்கும் வரைக்கும் அவரை அறிந்துகொள்ளாதது போன்று இது உள்ளது. பரிசுத்த மார்டினுக்கும் அவர்கள் அதே காரியத்தைச் செய்தனர், அதை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. காலங்கள் தோறும் அவர்கள் அதே காரியத்தை செய்துள்ளனர். 488 ஜோன் ஆஃப் ஆர்க்குக்கும் அவர்கள் அதேக் காரியத்தையே செய்தனர். அவள் ஆவிக்குரியவளாய் இருந்தபடியினால், ஒரு மந்திரவாதி என கருதி, கத்தோலிக்க சபை அவளை சுட்டெரித்துப்போட்டது. சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்குபின்பு, அவர்கள் அந்த பாதிரிமார்களின் சடலங்களை தோண்டியெடுத்து, பிராயச்சித்தம் செய்வதற்காக, அவைகளை வீசியெறிந்தனர்.
228489 அது அவர்களை கடந்து செல்கிறது, அது கடந்துபோகுமளவிற்கு அவர்கள் அதை அடையாளம் கண்டுகொள்ளுகிறதில்லை. பூமியின் அஸ்திபாரத்திற்கு முன்பே தேவன் முன்குறித்த முன்குறிக்கப்பட்ட வித்து மாத்திரமே அதை அறிந்துகொள்கிறது. நோவாவின் நாட்களிலும் அவ்வாறே சம்பவித்தது, மோசேயின் நாட்களிலும் அவ்வாறே சம்பவித்தது, எலியாவின் நாட்களிலும், தீர்க்கதரிசிகளின் நாட்களிலும், இயேசுவின் நாட்களிலும், வழி வழியாக சரியாக இந்த மணி நேரம் வரைக்கும் அவ்வாறே சம்பவித்து வருகின்றது. தேவனுடைய வித்தினால் கர்ப்பந்தரிக்கப்பட்ட நபர் மூலம், வார்த்தை அங்குத் தன்னை வெளிப்படுத்துகிறது, அவன் தேவனுடைய சித்தத்துக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்துள்ளபடியால், வார்த்தை மாத்திரமே இந்த நபரில், அந்த சிறைவாசியில், ஒரு தனிப்பட்ட நபரிடத்திற்கு, வெளிப்படுகின்றது.
229490 “என்னுடைய சபை…” என்று கூறாதீர்கள். இப்பொழுது, “என்னுடைய சபைக்கும்” இதற்கும் எவ்வித தொடர்புமில்லை. 491 அது தனிப்பட்ட, ஒரு நபரே! முழு பாதாளமும் இந்த போதனைக்கு விரோதமாயுள்ளது. முழு பாதாளமும் இந்த சத்தியத்துக்கு எதிராக உள்ளது, ஆனால் இது சத்தியம். 492 இயேசு, “இப்பொழுது, பேதுருவே, உனக்கும் யோவானுக்கும், மற்ற ஜனங்கள் எல்லாருக்கும், உங்களுக்கு வெளிப்பாடு கிடைத்துவிட்டது, இப்பொழுது முழு சபையும் இரட்சிப்படைந்துவிட்டது” என்று ஒருபோதும் கூறவேயில்லை. இல்லை. 493 அது தனிப்பட்ட விதத்தில், அவனுக்குக் கூறப்பட்டது. “நான் உனக்கு, உனக்குச் சொல்லுகிறேன்,” அவர்களுக்கு அல்ல, “உனக்கு, நீ பேதுருவாய் இருக்கிறாய்; இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்.” பேதுரு என்னும் சொல்; “ஒரு கல்,” என்றே பொருள்படுகிறது. கல் என்பது “அறிக்கை செய்த ஒருவன்,” அல்லது, “பிரிக்கப்பட்ட ஒருவன்” என்றே பொருள்படுகிறது. 494 ஒரு குறிப்பிட்ட கல்லின்மேல், ஒரு குறிப்பிட்ட காரியத்தின் மேல்; பாருங்கள், ஒரு வெளியே அழைக்கப்பட்ட, வெளியே அழைக்கப்பட்ட சபை; இந்தக் கல்லின் மேல், இந்த “வெளிப்பாட்டின்” மேல். “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. ஆனால் இந்த வெளிப்பாட்டின்மேல், வெளியே அழைக்கப்பட்ட குழுவின்மேல், அவர்களுக்குள் என் சபையை நான் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் யாவுமே அதனோடு ஒருபோதும் எதிர்த்து நிற்கவே முடியாது.” 495 “உன் தலையிலுள்ள ஒரு முடியும் அழிந்துபோகாது. நீ என்னுடையவன்! நான் கடைசிநாளில் உன்னை எழுப்புவேன், அவனுக்கு நித்திய ஜீவனைக்கொடுத்து, அவனைக் கடைசி நாட்களில் எழுப்புவேன்.” அதுதான், அந்த வெளிப்பாடு. அவர்கள் என்றல்ல; ஆனால் “அவன்,” தனிப்பட்ட ஒருவன்! ஒரு குழுவல்ல; தனிப்பட்ட நபர்! பாதாளம் முழுவதுமே அதற்கு எதிராயுள்ளது.
230496 அவருடைய இரகசியம் அவருடைய பிரியமுள்ள மணவாட்டிக்கு மாத்திரமே வெளிப்படுத்தப்படுகிறது. அவள் ஒருவள் மாத்திரமே அதை புரிந்துகொள்ள முடியும். 497 அவர், “நீங்கள் புல்லின் கீழிருக்கும் பாம்பு, நீங்கள் மாய்மாலக்காரர் என்று, ஏசாயா உங்களைக் குறித்து நன்றாய் சொன்னான். நீங்கள் இங்கிருந்து வெளியே போய், ‘ஓ, அந்த மகத்தான பரிசுத்த தீர்க்கதரிசிகள்! நாங்கள் அவர்களுடைய கல்லறைகளைக் கட்டினோம், நாங்கள் அவைகளை மெருகேற்றினோம்’” என்று கூறுகிறீர்கள். அவரோ, “நீங்கள்தான் அவர்களைக் கொன்று கல்லறையில் வைத்தீர்கள்” என்று கூறினார். அவர் அதைக் கூறினாரா? 498 கத்தோலிக்க சபைகளைப் பார்த்து அவர்களுடைய நாளிலே அவர் அப்படிக் கூறுவார், ரோமாபுரியிலுள்ள, நிசாயாவில் ஆலோசனை சங்கம் நடப்பதற்கு முன்பிருந்த நாட்களில், அவர் தெரிந்துகொள்ளப்பட்ட, பழைய—பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளை அவர்களிடம் அனுப்பினார். அந்த பண்டைய தீர்க்கதரிசிகள் அங்கிருந்து வெளியே வந்து, அவர்கள் நிலத்தின் வேர்களையும் மற்றவைகளையும் தின்று, உடுக்க உடையும் கூட இல்லாமல், ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டு சென்று, வேதாகமத்தின் சத்தியத்துக்காக நிற்க முயன்றனர். ஆனால் கத்தோலிக்க சபையோ தங்களுடைய நுண்ணறிவினால் உண்டான கருத்துக்களை விரும்பினது. அதன்பின்னர் அவர்கள் வெளியே கொண்டு வந்தனர்…பரிசுத்த ஐரினேயஸ், பாலிகார்ப், மார்டின், மற்ற அனைவரும் தோன்றினர். அவர்களை அவர்கள் என்ன செய்தனர்? இவர்கள் அவர்களைக் கல்லறையில் வைத்தனர், ஜோன் ஆஃப் ஆர்க், பரிசுத்த பாட்ரிக், என மற்றவர்களையுமே. இவர்கள் அவர்களைக் கல்லறையில் வைத்துவிட்டு, அவர்கள் ஜோன் ஆஃப் ஆர்க்கின் கல்லறைக்கு செய்தது போன்று, இப்பொழுது திரும்பி வந்து கல்லறைகளை வெள்ளையடிக்கின்றனர். அவர்கள் என்ன செய்தனர்? இவர்கள் அவர்களை அங்கே கல்லறையில் வைத்தனரே!
231499 அவருடைய ஆவியானது உங்களை, “வெள்ளையடிக்கப்பட்ட சுவர்களே! நீங்கள் மாயக்காரர், நீங்கள் உங்களை பெரிதாக அழைத்துக்கொள்கிறீர்கள், நீங்கள் மனிதனுடைய அறிவார்ந்த கருத்தினை ஏற்றுக்கொள்ளும்போது வார்த்தையை போகவிடுகின்றீர்கள். தேவனுடைய வித்தினால் உங்களுக்குள் வார்த்தையினால் கர்ப்பம் தரிக்கப்படுவதற்கு பதிலாக, நீங்கள் மற்ற ஒவ்வொரு கலப்பினத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறுகிறபடியால், நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அவள் ஒரு “வேசியாக” அமர்ந்திருப்பதில் வியப்பொன்றுமில்லை, ஏனென்றால் அவள் “ஆவிக்குரிய வேசித்தனங்களை செய்து,” ஜனங்களுக்கு தேவனுடைய காரியங்களைப் போதிப்பதற்கு பதிலாக, மனிதருடைய காரியங்களைப் போதிக்கிறாள். 500 ஆனால் அவர், “பயப்படாதே, சிறு மந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” என்று கூறினார். அது உண்மை. நிச்சயமாக. நாம் அதைப் பெற்றுள்ளோம்.
232501 வேதம், வெளிப்படுத்தின விசேஷத்தில், “இந்த மகத்தான நகரம் பூமியின் ராஜாக்கள் எல்லார் மேலும் ராஜ்யபாரம் பண்ணிற்று” என்று கூறினது. அவள் ஒரு “வேசியாயிருந்தாள்” என்று கூறினது. அது என்ன? ஒரு ஸ்திரீ தன்னை ஒரு பெண்மணி என்று அழைத்துக்கொண்டு விபசாரம் செய்தல். “அவளுடைய கையில் ஒரு கோப்பை இருந்தது,” உலகத்தை, களிப்பாக்க, “அது…அவளுடைய வேசித்தனங்களின் அருவருப்புகளின் அசுத்தங்களினால் நிறைந்திருந்தது.” அவளுக்கு குமாரத்திகள் இருந்தனர், பிராடெஸ்டெண்டு சபைகள், அவர்கள் ஒவ்வொருவரும் அவளிலிருந்து வெளியே வந்து, அவளுடைய கள்ளப் போதகங்களை உடையவர் களாயிருந்தனர், அதே ஞானஸ்நானம், மற்றும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு பதிலாக கரங்களை குலுக்கிக்கொள்ளுதல்; மற்றும் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி,” என்ற அவர்களுடைய கள்ள உபதேசம் மற்றும் அவை யாவுமே, மணவாட்டி…மணவாளனுடைய நாமத்தை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக உள்ளன. நீங்களோ, “அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை” என்று கூறலாம். அது வித்தியாசத்தை உண்டாக்குகிறது. 502 நான் ஒரு காசோலையில், “சங்கை,” “போதகர்,” அல்லது அதுபோன்று கையொப்பமிட்டால், அதனால் பணத்தை பெறமுடியாது. அது உண்மை. வங்கி அதை திருப்பி அனுப்பிவிடும். ஹு-ஹும். கவனியுங்கள். அது சரி
233503 ஆனால் இந்த எல்லா இரகசியமும் அவர் வாக்களித்தவிதமாகவே, அவருடைய மணவாட்டிக்கு மாத்திரமே வெளிப்படுத்தப்படுகிறது. இந்த சத்தியத்திற்கு, இந்த இரகசியத்தின் வெளிப்பாட்டிற்கு, நரகம் எதிராக இருக்கிறது. ஆனால் மணவாட்டியோ அதின்மேல் நின்று கொண்டிருக்கிறாள். அதுதான் அவளுடைய நிலைபாடு. 504 சபையே, நீ ஏன் பசியாயிருக்கிறாய், நீ ஏன் தாகமாயிருக்கிறாய்? இது இந்த மறைக்கப்பட்ட இரகசியத்தை வெளிப்படுத்த பிதாவானவர் முயற்சித்துக் கொண்டிருப்பதாயுள்ளது. ஆனால் நீயோ வேறு காரியங்களால் இதை புறம்பாக்க அனுமதித்துவிட்டாய். நீ உன்னுடைய உத்தியோகத்தை அனுமதித்துவிட்டாய், நீ உன்னுடைய மனைவியை அனுமதித்துவிட்டாய், நீ உன்னுடைய கணவனை அனுமதித்துவிட்டாய், நீ உன்னுடைய பிள்ளைகளை அனுமதித்துவிட்டாய், நீ உலகக் கவலைகளை அனுமதித்துவிட்டாய், நீ ஏதோ ஒரு போதகரை அனுமதித்துவிட்டாய், யாரோ ஒருவர் அதை உன்னிலிருந்து அகற்றிவிட அனுமதித்துவிட்டாய், உன் இருதயத்தின் ஆழத்தில் நீ தாகமாயிருப்பதையும், பசியாயுள்ளதையும் நீ அறிந்திருக்கிறாய். தேவன் அதை உனக்கு வெளிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார், பாருங்கள், வெளிப்பாடு. கடைசி நாள் இங்கே இருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள்.
234505 நாம் மீண்டும் திரும்பிப் பார்ப்போம். எல்லாவற்றையும் என்னால் கடந்து போக முடியவில்லை. புரிகிறதா? இப்பொழுது ஒரு நிமிடம் இங்கே அப்படியே நீங்கள் நோக்கி பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இன்னும் ஒரு சில நிமிடங்களில் நாம் முடித்துவிடுவோம். நீங்கள்… ஒரு நிமிடம் உங்களுடைய முழுமையான கவனத்தை எனக்குக் கொடுங்கள்.
235506 கவனியுங்கள், இங்கே கொலோசெயர், 18-வது வசனம். கொலோசெயரின் புத்தகம், 18-வது வசனம். இப்பொழுது அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
236507 “அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர், அவர் முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை கொண்டிருக்க விரும்புகிறார்.” இப்பொழுது கவனியுங்கள், நான் பேசிக் கொண்டிருக்கையில் கூர்ந்து கவனியுங்கள். என்ன? அவருடைய மணவாட்டியினுடைய சரீரத்துக்கு, அவரே சரீரத்துக்குத் தலையாக இருக்க வேண்டும், அது அவரிலிருந்து எடுக்கப்பட்டது; ஆதாமிலிருந்தது போன்று, மாம்சமும் எலும்பும் உடையதாயிருக்கிறது, பாருங்கள், மணவாட்டி. 508 “மரித்தோரிலிருந்து பிறந்தவள்,” பாருங்கள், அது, மரித்தோரிலிருந்து பிறந்தது, அவிசுவாசத்தின் பாவம். 509 ஏவாளைக் கொன்றது எது? அவிசுவாசம். அது சரியா? எதில் அவர்களுடைய அவிசுவாசம்? அதனால், அவி-…தேவனில் அவிசுவாசமா? இல்லை. அவள் தேவனில் விசுவாசமுடையவளாயிருந்தாள். நிச்சயமாக. அவள், “தேவன் இல்லை” என்று கூறினாளா? இல்லை, ஐயா. அவள் நாத்திகவாதியாக இருக்கவில்லை. “பாருங்கள்,” அவள், “உங்களுக்குத் தெரியுமா, நான் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கவேயில்லை” என்று கூறினாளா? ஓ, இல்லை, அவள் ஒரு சிறு காரியத்தைத் தவிர எல்லாவற்றையும் விசுவாசித்தாள். புரிகிறதா?
237510 இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் இயேசுதாமே, இவைகளை உங்களுக்கு சாட்சியாக அறிவிக்கும்படிக்கு “இயேசுவாகிய நான்—நான் என் தூதனை அனுப்பினேன்” என்று கூறவில்லையா? “இதிலிருந்து ஒரு வார்த்தையை எவனாகிலும் எடுத்துப்போட்டால், அல்லது இதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால்.” ஒரு ஸ்திரீ தேவனுடைய வார்த்தையில் ஒன்றே ஒன்றை சந்தேகித்ததனால், இவ்வளவு மனக்கவலைகளும், துன்பமும் தோன்றியிருக்க, ஒரு வார்த்தையையாகிலும் சந்தேகிக்க அவர் விட்டுவிடுவாரா? அப்படியானால் அவர் அநீதியுள்ளவராயிருப்பார். ஹு-ஹும். புரிகிறதா? பாருங்கள், அது சரியல்ல. ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டது… 511 இங்கு ஒரு மனிதன் நின்று, ஒரே ஒரு வார்த்தையைச் சந்தேகித்ததனால், அவன் இந்த எல்லா மனக்கவலையும் உண்டாகக் காரணமாயிருந்தான்; பின்பு, அவன் சென்று அநேக ஆண்டு காலமாக பெற்றிருந்த அனுபவங்களையும், மற்ற ஒவ்வொரு காரியத்தையும், வேதாகமம் போன்றவற்றை எடுத்துக்கொள்கிறான், மற்றவர்கள் அதற்காக தங்களுடைய ஜீவியங்களையே கொடுத்திருக்கின்றனர்; அப்பொழுது தேவன், “ஓ, நீ சென்று அதை புசிக்க முடியும். அதெல்லாம் சரி, நான் எப்படியிருந்தாலும், உன்னை திரும்ப அனுமதிப்பேன்” என்று கூறுகிறாரா? ஓ! தேவன் பட்சபாதமில்லாதவர், ஆனால் …?… புரிகிறதா? புரிகிறதா? தேவன் பட்சபாதமில்லாதவர். இப்பொழுது கவனியுங்கள்.
238512 இப்பொழுது கவனியுங்கள். தேவனுடைய வார்த்தையை அவிசுவாசித்ததினால் உண்டான பாவத்திலிருந்து வெளியே பிறந்த “சரீரத்துக்கு அவர் தலையாயிருக்கிறார்.” அது மன்-…ஒவ்வொரு ஸ்தாபனத்திற்கும் ஒவ்வொரு கோட்பாட்டிற்கும், பாருங்கள், மன்னிப்பேக் கிடையாது. வார்த்தையில் அவிசுவாசம்; அது அவர் தாமே ஜீவ வார்த்தையாய் இருக்கிறார். புரிகிறதா? வார்த்தை, மாத்திரமே, ஜீவனை உடையதாய் இருக்கிறது. மற்ற எந்த வார்த்தையும் ஒரு கலப்பினமாய் இருக்கிறது. அது எவ்விதமாக தோற்றமளித்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது வார்த்தையே அல்ல. 513 வார்த்தை அதனுடைய சொந்த ஜீவனையே உற்பத்தி செய்கிறது, அதை ஏவாள் தனிப்பட்ட அறிவிற்காக மாற்றிக்கொண்டாள். இன்றைக்கு, சபை எப்படியிருக்கிறது என்று பார்த்தீர்களா? ஏதோ ஒரு மனிதனின் புரிந்துகொள்ளுதல் மூலமாக. மோசே தேவனை எரியும் முட்செடியில் சந்திக்கும்வரை, தேவனைக் குறித்த ஒரு மகத்தான சொந்த அறிவைப் பெற்றிருந்தான், அதன்பின்னரே அவன் தன்னுடைய தோல்வியைக் கண்டான். மோசே என்ன குறைவோடு இருந்தான் என்பதை எரியும் முச்செடியில் அறிந்துகொண்டான். ஸ்தாபனம் என்ன குறையோடு இருக்கிறது என்பதை வார்த்தை பெற்றுள்ளது. “அவர், தலையாகிய, உயிர்த்தெழுதலின் முதற்பலனானவர்.”
239514 இன்னும் சற்று நேரம் பார்க்கலாம் என்று, நீங்கள் அவ்வண்ணமாய் கூறுவீர்களானால், நாம் இந்த “வெளிப்பாட்டைக்” குறித்து தொடர்ந்து பார்க்கலாம். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சரி. சரி, சரி, இப்பொழுது இன்னும் கொஞ்சம் பார்க்கலாம். 515 “அவரே உயிர்த்தெழுதலின் முதற்பலனானவர்.” அது சரியா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] கவனியுங்கள். அப்படியானால், அவர் என்னவாயிருக்கிறார்? “அவரே சரீரத்தின் தலையாய் இருக்கிறார், அது அவருடைய சபையாய், மணவாட்டியாய் உள்ளது.” ஹு-ஹூ. 516 அப்படியானால், மணவாட்டியாகிய சரீரம் தலையைப் பின்தொடர வேண்டும், ஏனெனில் அது உயிர்த்தெழுதலின் பாகமாகவும் மற்றும் இரகசியத்தின் பாகமாகவும் உள்ளது. அதைப் பின்தொடராமல் இருப்பது அதனால் கூடாத காரியம். ஓ, என்னே! அது தேவனுடைய இரகசியத்தின் பாகமாக அமைந்துள்ளது, எப்படி தேவன் இங்கே தம்மை வெளிப்படுத்தி, தமது வார்த்தையினால் அதை எழுப்பினாரோ, அது போன்று அவர் தம்முடைய சபையை வெளிப்படுத்தி, அதே வார்த்தையினால் அதை எழுப்புகிறார். அது அவருடைய மூவகை இரகசியத்தின் ஒரு பாகமாக உள்ளது.
240517 தலை எவ்விதமாக கல்லறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டதோ, அது போன்று சரீரமும் அவரைப் பின்தொடர்ந்து ஏதேனுக்குச் திரும்பவும் செல்லவேண்டும். அங்கே, மணவாளன், அந்த மனிதன், குடும்பத்தின் தலைவன்; மணவாட்டி மணவாளனின் சரீரமாய் இருக்கிறபடியால், மணவாட்டி, பின்தொடர வேண்டும், ஏனென்றால் அவர் தலையாய் இருக்கிறார். அந்த தலை வெளிப்பட்டு, நித்திய ஜீவனுடன் திரும்ப வந்திருக்கின்றது; சரீரம் அதைப் பின்தொடர்ந்துதான் செல்ல வேண்டும், ஏனெனில் மறுபடியும் அது கணவன் மனைவி. ஆமென்! அவருடைய சரீரமாகிய, அதே வார்த்தையினால் நீங்கள் கர்ப்பந்தரிக்கப்பட்டுள்ளவரைக்கும்; நீங்கள் அந்த வார்த்தையை ஏற்றுக்கொண்ட போது, நீங்கள் அவருடைய சரீரத்தை ஏற்றுக்கொண்டு, அவருக்குள் வந்துவிட்டீர்கள். கோட்பாட்டை அல்ல; அந்த வார்த்தையையே! ஓ, என்னே! 518 இன்று பிற்பகல் பேசுவதற்கு, அது நல்ல ஒரு பொருளாய் அமையுமல்லவா? ஹு? என்னே, அது அற்புதமாக இருக்குமல்லவா? புரிகிறதா? அது என்னவாயிருக்குமென்று, இப்பொழுது அதைக் குறித்து சற்று யோசித்துப் பாருங்கள். 519 ஆகையால், சரீரமானது அடையாளம் கண்டு கொள்ள முடியாது…இதைக் காணத் தவற வேண்டாம். எனவே, சரீரமானது, வார்த்தையைத் தவிர வேறெந்த தலைமையையும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. ஏனெனில் அந்த—அந்த தலையானது சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது, தலை வார்த்தையாய் உள்ளது, அது அதே வார்த்தையாய், ஒரே தலைமைத்துவமாயுள்ளதே! எனவே, ஸ்தாபனங்களும், பரிசுத்த பிதாக்களும், மற்றவைகளும், மரித்த சாணமாக காணப்படுகிறது. ஒரு தலைமைத்துவம் மாத்திரமே உள்ளது, அது கிறிஸ்து. சரீரம் ஒரு காரியத்தை மாத்திரமே, வார்த்தையையே, அடையாளம் கண்டு கொள்கிறதே!
241520 இப்பொழுது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தினாலே யாராகிலும் சரீரத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளதை எனக்குக் காண்பிப்பீர்களா? நீங்கள் எதை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறீர்கள்? பாருங்கள், இந்த ஒலிநாடாவைக் கேட்கப் போகும் ஆயிரக்கணக்கானவரிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நான் தெளிவாக உணர்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், நமக்கு உலகம் முழுவதும் ஒலிநாடா ஊழியம் உண்டு. நீங்கள் எந்த நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள்? “மனிதன் இரட்சிக்கப்படும்படிக்கு,” “வானத்தின் கீழெங்கும் இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லையென்று” வார்த்தை உரைத்துள்ளது. கிறிஸ்துவின் பேரில் உங்களுக்குள்ள விசுவாசத்தைக் காண்பிக்கும் பொருட்டு நீங்கள் ஞானஸ்நானம் பெற்று, ஒரு கோட்பாட்டின் நாமத்தை தரித்துக்கொண்டால், அப்பொழுது நீங்கள் ஒரு கலப்பினமாயிருக்கிறீர்கள். நீங்கள் சரியாக அந்த சபையைப் போல், அவர்களுடைய போதகங்களைப் போல நீங்கள் இல்லையென்றால்…
242521 அப்படியானால், கத்தோலிக்க ஜனங்களே நீங்கள், பாருங்கள், இப்பொழுது உங்களால் எப்படி ஒரு போப்பின் அதிகார வரம்பிற்குச் சென்று, அவர் அப்போஸ்தலரின் மூலம் வழி வழியாக வந்தவர், அதாவது கிறி-…பேதுரு வழி வந்தவர் என்று நீங்கள் கூறி, அவருடைய சபையாய் இருக்கும்படி அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும், தேவன் அங்கீகரித்த இந்த முதலாம் சபைக்கு மிக முரணாகவே இந்த போப்பும் இந்த சபையும் உபதேசிக்கும்போது, அவ்வாறு எப்படி கூற முடியும்? அதே வார்த்தை இன்று அதே சுத்தமான விதத்தில் கொண்டுவரப்பட்டு, அங்கே அவர் கொண்டிருந்த அதே உயிர்த்தெழுதலைக் காண்பிக்கிறதைப் பாருங்கள், தேவன் தம்முடைய ஜனங்களின் மத்தியில் ஜீவித்து, அதே காரியங்களை செய்கையில், நீங்கள் எப்படி ரோமாபுரியிலுள்ள தலைமைத்துவத்தை அங்கீகரிக்க முடியும்? 522 நமது தலைமைத்துவமோ பரலோகத்திலிருக்கிறது. நான் ரோமாபுரிக்கு செல்லப்போவதில்லை; நான் மரிக்கும்போது பரலோகத்துக்குச் செல்லப் போகிறேன். புரிகிறதா? புரிகிறதா? தலைமைத்துவமோ பரலோகத்திலிருக்கிறது.
243523 மனைவி கணவனைப் பின்தொடருவதுபோல, சரீரம் தலையைப் பின்தொடர வேண்டும். ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, அவன் ஏவாளுடன் நடந்து சென்றான். ஏவாளே வஞ்சிக்கப்பட்டாள், அவள் மீறுதலில் பங்குகொண்டாள், இல்லாவிட்டால் கர்த்தராகிய இயேசு கல்லறையிலிருந்து வெளிவந்தபோது, முழு சரீரமும் உயிர்பெற்று அவருடன் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் தம்முடைய சரீரமாகிய அவளை, மீட்கவேண்டியதாக இருக்கிறது. அவரிடம் வரவேண்டுமென்றால் அவள் மீட்கப்பட்டாக வேண்டும். உங்களுக்கு இது புரிகிறதா? [சபையோர், “ஆமென்,” என்கின்றனர்.—ஆசி.] ஓ, என்னே! பாருங்கள், அப்பொழுது அது நடந்திருக்க முடியாது. மீட்பு இன்னும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
244524 இப்பொழுது நீங்கள் முத்திரைகளை புரிந்துகொள்ளுகிறீர்களா? அவர் அங்கே தம்முடைய மத்தியஸ்த ஊழியத்தில் இருந்துகொண்டு, மீட்டுக்கொண்டிருக்கிறார், ஆனால் என்றாவது ஒரு நாளில் அவர் மீட்ட இந்த புஸ்தகத்தை பெற்றுக்கொள்ள அவர் வருகிறார். ஆகவே இந்த புஸ்தகத்தில் உள்ள எல்லாம் அவராக இருக்கும், ஏனெனில் அது விசுவாசிக்கானதாகும், புஸ்தகத்தில் உள்ள வார்த்தைகள், அந்த வார்த்தை அவர் ஆகும். அதிலுள்ள எல்லாம், அவர் இந்த மீட்பின் புஸ்தகத்தைப் பெற்றுக்கொள்வதற்காக புறப்பட்டு வருகிறார், அவர்களுடைய பெயர்கள் உலகத்தோற்றத்துக்கு முன்பே அவர் ஒரு ஆட்டுக் குட்டியாக அடிக்கப்பட்டபோது, அந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டன. 525 இன்றைக்கு அவர் இங்கே, தம்முடைய வார்த்தையில் அவர் தாமே அங்கே செய்த அதே காரியத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவள் மற்ற தலைமைத்துவத்தை அங்கீகரிக்க முடியாது. இல்லை, ஐயா. எந்தப் பேராயரும் இல்லை, வேறெந்த காரியமும் இல்லை. அவள் ஒரு தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறாள், அதுதான் கிறிஸ்து, கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். ஓ, என்னே! வ்யூ! எனக்கு அது பிரியம். ஹூம்! ஆம், ஐயா.
245526 தலையானது கல்லறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டதுபோல, அவருடைய சரீரமும் அவரை ஏதேனுக்குப் பின்தொடர வேண்டும். எனவே, சரீரம் வார்த்தையின் தலைமைத்துவத்தை தவிர வேறெந்த தலைமைத்துவத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 527 எந்த ஸ்தாபனமும் அதற்குள் எதையும் நுழைத்துவிட முடியாது. “எவனாகிலும் அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப்போட்டால், அல்லது அதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால், அது அதிலிருந்து எடுத்துப் போடப்படும்.” நீங்கள் கலப்பினமாகி, அங்கேயே, மரித்துவிட்டீர்கள். அவள் விசுவாசிப்பதாக உரிமை பாராட்டும் அதே வார்த்தைக்கு விரோதமாக, “ஆவிக்குரிய விபசாரம் செய்து, தன்னுடைய வேசித்தனங்களின் அசுத்தத்தினால்,” அவள் இங்கு, தன்னுடைய கரங்களில் இந்த சாட்சியோடு, இங்கே திரும்பி வருகிறாள். புரிகிறதா?
246528 எனவே, இது வார்த்தையாயுள்ளது, இல்லையென்றால் ஒன்றுமில்லை. அது உண்மை. அவர், வார்த்தையே! அது சரியென்று உங்களுக்கு எப்படி தெரியும்? அவர், வார்த்தையானது, ருபகாரப்படுத்தப்படுகிறது. புரிகிறதா? அவர், வார்த்தையானது, சரியாக ரூபுகாரப்படுத்தப்பட்டு, தலைமைத்துவமாய், சபையின் தலைமைத்துவமாய் உள்ளது. அவர் வார்த்தையாய், தலைமைத்துவமாய் இருக்கிறார். அவர் சரிவர அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, சபையில் தாமே தனிப்பட்ட நபரில் தம்முடைய சொந்த ஆவியினால், ரூபகாரப்படுத்தப்படுகிறார். ரூபகாரப்படுத்துதலில் தம்மை காண்பித்து, முழு சரீரத்திற்கும் நேரடியான நிரூபணமாய் இருக்கிறார். அப்படியானால், உங்களுக்கு பிரமாணங்கள் எதுவும் அவசியமில்லை. ஸ்தாபனங்கள் அழிந்துபோயின. ஆனால் தலைமைத்துவம் தாமே, தனிப்பட்ட அடையாளங்கள் மூலமாக சரீரத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, பாருங்கள், தம்மைத்தாமே அடையாளங்கண்டு கொண்ட, சரீரத்திற்கு தலைமைத்துவத்தை நீருபிக்கின்றது. அப்பொழுது, நாம் தேவனுடைய வார்த்தையாகிய கிறிஸ்து என்னும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரே தலைமைத்துவத்தின் கீழ் இணைக்கப்படுகிறோம் [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] எந்த சபையின் கீழிலும் அல்ல.
247529 அப்படியானால், நம்முடைய தலைமைத்துவம் ஒரு இராஜ்ஜியமாக இருக்கிறது. “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது” என்று இயேசு, வேதத்தில் கூறியுள்ளார். அந்த இராஜ்ஜியம்! நாம் ஒரு ஸ்தாபனம் அல்ல. நாம் ஒரு ராஜ்யத்தை சேர்ந்தவர்கள், அந்த ராஜ்யம் தேவனுடைய வார்த்தையாக அமைந்திருந்து, நமது சொந்த ஜீவியத்தில் ஆவியும் ஜீவனுமாயிருந்து, அந்த நாளில் வார்த்தையும் தேவனும் ஒன்றாயிருந்து செய்தது போல, இந்த நாளின் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்றுகிறது. இன்றைக்கு அவருடைய சபையில் வார்த்தையும் தேவனும் ஒன்றாயிருந்து, மீட்கப்பட்ட சரீரத்திற்கு தலைமைத்துவமாக அமைந்து, இக்கடைசி நாளின் செய்தியைக் கொண்டு வந்து; உயிர்த்தெழுதலில், மரித்தோரை உயிரோடெழுப்பி, தொடக்கத்திலே ஏதேன் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும் இருந்த நிலைக்கு அவர்களை திரும்பிச் செல்ல, மறுபடியும் திரும்பக் கொண்டு செல்கிறது. தேவனைக் குறித்த மூவகை இரகசியம், அவருடைய சரீரம்! ஓ, என்னே! இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், நிழல்களாக இருந்த, பண்டைய இஸ்ரவேல். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.]
248530 நான் அதன் பேரில் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறேனா? [சபையார், “இல்லை” என்கின்றனர்.—ஆசி.] என்னை அனுமதிக்க வேண்டாம், என்னையும் கூட அனுமதிக்க வேண்டாம்…இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது நம்மிடத்தில் இன்னும் சுமார் இருபது பக்கங்கள் உள்ளன. பார்த்தீர்களா? புரிகிறதா? ஆனால் இப்பொழுது நான்… இப்பொழுது இன்னும் சிறிது நேரம், அதற்கு பின்பு—அதன்பின்பு அடுத்த கோடை காலம் வரை, அல்லது கொஞ்ச காலம், கர்த்தருக்குச் சித்தமானால், நான் உங்கள் எல்லோரையும் விட்டுவிடுவேன். புரிகிறதா?
249531 இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள், பண்டைய இஸ்ரவேலின் மாதிரியான, ஒரே விதமாக, ஒரே தலைமையின் கீழ் ஒன்றுசேர்ந்து இணைக்கப்படுதல். இப்பொழுது நீங்கள் அதை புரிந்து கொள்ளுகிறீர்களா? பண்டைய இஸ்ரவேலரைப் போன்று; ஒரே தேவன், ஒரு அக்கினி ஸ்தம்பத்தினால் ரூபகாரப்படுத்தப்பட்டு, தம்மை வார்த்தையாக ஒரு தீர்க்கதரிசி மூலம் வெளிப்படுத்தினார். அதே தேவன், அதே அக்கினி ஸ்தம்பம், அதேமுறை; அவரால் தம்முடைய வழியை மாற்றிக்கொள்ள முடியாது. அது…அது அவ்வளவு பிழையின்றி அமைந்துள்ளது. இல்லையா? புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.]
250532 ஒரே தேவன்! இஸ்ரவேலருக்கு எத்தனை தேவர்கள் இருந்தனர்? [சபையார், “ஒன்று” என்று என்கின்றனர்.—ஆசி.] மணவாட்டிக்கு எத்தனை இருக்கின்றன? [“ஒன்று.”] எத்தனை இனிமேல் இருக்கும்? [“ஒன்று.”] நிச்சயமாக. நிச்சயமாக. 533 பாருங்கள், பரிசுத்த ஆவியின் தலைமையின் கீழ், அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய, மோசேயின் நாட்களில் அது அக்கினி ஸ்தம்பமாக இருந்தது. அவன் அக்கினி ஸ்தம்பத்தினால் வழி நடத்தப்பட்டான். அது சரியா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சரி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒரு தேசத்திற்கு செல்லுதல்.
251534 ஆகவே கிறிஸ்தவ காலத்திலும், ஒரே தேவன் அக்கினி ஸ்தம்ப வடிவில், பவுல் என்று அழைக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசிக்கு தரிசனமானார், ஒரு கூட்ட ஜனங்களை தமது நாமத்திற்காக தெரிந்துகொள்ள, அவன் புறஜாதியாரிடம் அனுப்பப்பட்டான். அது சரியா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] 535 இக்கடைசி நாட்களிலும், அவர் அதே விதமாக இறங்கி வந்து, அதே அடையாளத்தினாலும், அதே அற்புதத்தினாலும், அதே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அதே சுவிசேஷத்தினாலும், அதே வார்த்தையினாலும், அதே வெளிப்படுத்துதலினாலும் தம்மை ரூபகாரப்படுத்துகிறார், பாருங்கள்.
252536 அவருடைய சரீரம், அவர் மாற்கு 16 -ல் உள்ளதைப் போல வாக்களித்துள்ள கிரியைகளைச் செய்யும். அவருடைய சரீரத்தை கல்லறை பிடித்துக்கொள்ளவில்லை, அது உயிர்த்தெழுதலில் அவருடன் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. இது உங்களுக்குப் புரிகிறதா? [சபையார் “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஆகையால் அவருடைய சரீரமாகிய அவருடைய விசுவாசப் பிள்ளைகள் அவர் வரும்போது கல்லறையில் பிடித்து வைக்கப்படாது, அவர்கள் அவருடன் அடையாளம் கண்டுகொள்ளப்படுவார்கள், ஏனெனில் சரீரமாகிய, தமது மணவாட்டியை உயிரோடெழுப்ப வேண்டுமெனும் நோக்கத்திற்காகவே அவர் மரித்தார். அது அவருடைய சரீரமாக இருப்பதால், அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது, ஏனென்றால் அது வார்த்தையாக இருக்கிறது. அது ஸ்தாபன காரியங்களினின்று முழுவதுமாக விலகி, அவருக்கு, தன்னை ஒப்புவித்துள்ளது, அவர் வார்த்தையாக இருக்கிறார். புரிகிறதா? நாம் இப்பொழுது நம்முடைய உயிர்த்தெழுதலின் முதற்பலனாய் இருக்கின்றபடியால் அது அவரோடு அடையாளம் கண்டு கொள்ளப்பட்டிருக்கிறது, நாம் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்றும், அவருடைய சிறைவாசிகளாகிவிட்டோம் என்றும் அறிந்துகொள்கிறோம். தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்ற தன்னுடைய தனிப்பட்ட தலைமைத்துவத்தினால் அவரை, நமக்கு நிரூபிக்கிறார், அப்பொழுது அவர் செய்த அதே காரியங்களை சபையினூடாக செய்து கொண்டிருப்பதாலும் நிரூபிக்கிறார், “அவர் என்னிலும், நான் அவரிலும், உங்களுக்குள்ளும்,” போன்றிப்பதை, நீங்கள் அறிவீர்கள். அது உண்மை.
253537 அவருடைய சரீரம் கல்லறையில் விடப்படவில்லை. அது உயிர்த்தெழுதலில் அவருடன் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது, இப்பொழுது அவர் இருப்பது போலவே, கவனியுங்கள், இது தான் அதன் அர்த்தம்: அவருடைய வார்த்தை, அதுதான் அவர், உயிர்த்தெழுத் தொடங்கிவிட்டது. லூத்தரின் காலத்திலும், வெஸ்லியின் காலத்திலும், பாருங்கள், வழிவழியாக வந்த, வார்த்தை, அதனுடைய முழு வல்லமையுடன் இன்று உயிர்பெறத் தொடங்கிவிட்டது; அது அப்பொழுது நகரத் தொடங்கியது, அதன்பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்து, இப்பொழுது அது முழுவதுமாக ஒரு அடையாளத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. புரிகிறதா? கவனியுங்கள். இப்பொழுது, சரீரத்திலுள்ள அந்த ஜீவன், எடுத்துக் கொள்ளப்படுதல் அருகாமையிலுள்ளது என்பதற்கான ஒரு ரூபகாரப்படுத்துதலாதாய் உள்ளது. தலையும் சரீரமும் ஒன்றாக இணைந்து, அவருடைய வெளிப்படுத்துதலின் அளவின் முழுமையை நீங்கள் காணும்போது, தலை சரீரத்தை ஏற்றுக்கொள்ள சமயமாகிவிட்டது என்பதை அது காண்பிக்கிறது. நாடுகள் உடைந்து கொண்டிருக்கின்றன, இஸ்ரவேல் விழித்தெழும்பி கொண்டிருக்கிறாள்.
254538 நான் கூறுவது உங்களுக்குப் புரிகிறதா? அவர் தமது சரீரத்திற்கு ஜீவனைக் கொடுக்கத் தொடங்கி விட்டார், (ஏன்?) அது அவர் மீட்ட அந்த ஒன்றாகும். மத்தியஸ்த ஊழியம் நடைபெறுகின்றது, எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான ஒரு ரூபகாரப்படுத்துதலில், அவர் சரீரத்திற்கு தம்முடைய ஜீவனைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். ஞாபகம் கொள்ளுங்கள், இப்பொழுது, கடைசி நாளில்… 539 நான்—நான், நீங்கள் அனுமதித்தால், இதன் பேரில் சற்று நேரம் என்னிடம் பொறுத்துக்கொண்டால், இப்பொழுது—இப்பொழுது, அது சரியாக இருக்கும். இதை நீங்கள் தவறவிட நான் விரும்பவில்லை. நான்—நான், நான்—நான் இவ்வளவு தூரம் வந்த பிறகு இப்பொழுது, நான் இதையும், நான் ஒலிநாடாவில் பதிவு செய்தாக வேண்டும். இன்னும் அதை குறித்து சிலவற்றை நான் பார்க்க விரும்பினால், இன்னும் ஒரு மகத்தான குறிப்பைக் கூற விரும்புறேன்.
255540 இப்பொழுது கவனியுங்கள். இதைக் கவனியுங்கள். இப்பொழுது இது மகத்தான காரியமாயுள்ளது. இப்பொழுது இங்கே தான் நாம் கவனிக்க விரும்புகிறோம். நினைவில் கொள்ளுங்கள், கடைசி நாட்களில், சரியாக திரும்பிச் சென்று முதலாம் நாளை ரூபகாரப்படுத்தும்; பாருங்கள், ஆதாமும் ஏவாளும், கணவனும் மனைவியும், பாவம் எதுவுமில்லை, ஜீவன்; பின்பு வீழ்ச்சி. கவனியுங்கள், கூர்ந்து கவனியுங்கள். அவள் விழுந்துவிட்டாள். ஹு-ஹும். 541 கவனியுங்கள். அதற்கு காரணம் என்ன? லூசிபர்! லூசிபர் முதன்முறையாக செய்த அதே காரியத்தையே இப்பொழுதும் அவன் செய்துகொண்டிருக்கிறான். 542 ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரோடு, புறஜாதிகளின் ராஜ்ஜியம் உள்ளே கொண்டுவரப்பட்டது போல, அந்நிய பாஷைகளில் பேசுதல்களை, தரிசனங்களை, சொப்பனங்களை ஒரு தீர்க்கதரிசி வியாக்கியானிக்க முடிந்ததன் மூலம் புறஜாதி இனத்தை ரூபகரப்படுத்தினார். அது புறஜாதிகள் மூலம் வந்தது, எதுவுமே இல்லாமல், வெறுமனே மேதியர்-பெர்சியர், இரும்பு முதலானவைகளின் வழியாக, எவ்வித மாற்றமுமில்லாமல் கடந்துவந்து இப்பொழுது பாதங்களில் அவ்விதமாகவே இருந்து வருகிறது, புறஜாதிகளின் ராஜ்யம்.
256543 கவனியுங்கள் லூசிபர், முதலில் அவன் செய்தது போலவே இந்த கடைசி நாட்களிலும் செய்து கொண்டிருக்கிறான். லூசிபர் என்ன செய்தான்? முதலாவது லூசிபர் தேவனுக்கும் மனிதனுக்குமுள்ள ஐக்கியத்தை பிரித்துவிட்டு, தனக்கென்று ஒருங்கிணைந்த ஒரு ராஜ்யத்தை உண்டாக்கிக்கொள்ள விரும்பினான், மிகாவேல், கிறிஸ்து கொண்டிருந்த ஒரு மகத்தான இராஜ்ஜியத்திற்கும் மேலான ஒன்றை, அந்த ராஜ்யத்தைக் காட்டிலும் அதிக பளிங்குள்ளதாகவும் நாகரீகமுள்ளதாகவும் இருக்கவேண்டுமென்று விரும்பினான். 544 இது உங்களுக்குப் புரிகிறதா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] இப்பொழுது, இப்பொழுது நீங்கள் அதை தவறவிட்டிருந்தால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள், நான் மறுபடியும் அதைக் கூறுவேன், நீங்கள் பாருங்கள். புரிகிறதா? 545 லூசிபர், தொடக்கத்தில், கிறிஸ்து பரலோகத்தில் பெற்றிருந்த ராஜ்யத்தைக் காட்டிலும் ஒரு பிரகாசமான மற்றும் மகத்தான காரியத்தை சாதிக்க வேண்டும் என்று தன் இதயத்தில் எண்ணம் கொண்டிருந்தான். அது சரியா? கிறிஸ்துவினுடைய ராஜ்யத்தை காட்டிலும் மகத்தான, அழகான, பண்பட்ட ஒன்றை வெளித் தோற்றத்தில் கொண்டிருக்க விரும்பினான். ஆயிரம் வருட அரசாட்சியில் நமக்கு மோட்டார் வாகனங்களும், ஆகாய விமானங்களும் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? புரிகிறதா? லூசிபர் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்த்தீர்களா?
257546 இப்பொழுது, நுண்ணறிவு படைத்த ஆடம்பரமான பெரிய ஸ்தாபனங்கள் அதே காரியத்தையே செய்து கொண்டிருக்கின்றன, அனைத்தும் ஒன்றாக இணைந்து அதையே செய்து கொண்டிருக்கின்றன. பார்த்தீர்களா? அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒருவரைக் காட்டிலும் மற்றவர் மிஞ்சவேண்டுமென்று முயன்று கொண்டிருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் மிகவும் சிறப்பானதைப் பெற்று, அவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் கத்தோலிக்க சபையுடன் இணைகின்றனர். புரிகிறதா? லூசிபர் மறுபடியுமாக ஒரு பெரிய ராஜ்யத்தைக் கட்டி, ஸ்தாபனத்தில் நம்பிக்கை கொள்ளாதவர்களை வெளியே தள்ளி, அவர்களுடைய சபை கட்டிடங்களைப் பறித்துக்கொண்டு, அதை பண்டக சாலைகளாக மாற்றி அமைத்துவிட்டான், அந்த போதகர்களுக்கு எந்த உரிமைகளுமே இல்லாமல் இருக்கிறது. 547 தேவனால் அனுப்பப்பட்ட மனிதன் எவனும், அவனுக்கு வெளியே சென்று நோக்கிப் பார்க்கப் போதுமானது இருக்குமானால், அவன் இதைப் பார்த்துக்கொண்டு, அல்லது இதைக் குறித்து கேள்விப்பட்ட பிறகு, ஸ்தாபனத்தில் தங்கியிருக்கமாட்டான். நிச்சயமாகவே. புரிகிறதா? இதை நான் குற்றமாகக் கூறவில்லை; அது வெளிப்பட்டதை காணும்படி, பாருங்கள், நான் அதை உண்மையாகவே கூறுகிறேன்.
258548 கவனியுங்கள், இந்தக் கடைசி நாட்களில், லூசிபர் அதே காரியத்தையே செய்து கொண்டிருக்கிறான். உங்களால் அதைக் காண முடிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] பிசாசுகள் அதே காரியத்தைத்தான் செய்துகொண்டிருக்கிறன, ஒரு கலப்பின சபையைக் கட்டிக்கொண்டிருக்கிறான், கலப்பின அங்கத்தினர்களால், வார்த்தைக்கு பதிலாக அறிவினால் கலப்பினமான, மீண்டும் பிறந்த மனிதர்களுக்கு பதிலாக அறிவாற்றல் கொண்ட மனிதர்களால், கிறிஸ்துவினுடைய சிறு மந்தையை மிஞ்சும்படியான அறிவாற்றல் கொண்ட ராஜ்ஜியத்தை கட்டிக்கொண்டிருக்கிறான். புரிகிறதா? அதை செய்தது யார்? விழுந்துபோன தூதர்கள். 549 இந்த விழுந்துபோன தூதர்கள், தாங்கள் ஒருக்காலத்தில் சார்ந்திருந்த கிறிஸ்துவுக்கு செவிகொடுப்பதற்கு பதிலாக லூசிபருக்கு செவி கொடுத்தனர் என்று வேதம் கூறியுள்ளது. அது சரியா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.]
259550 இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், “விழுந்துபோன தூதர்கள்.” அவர்கள் எப்படிப்பட்ட தூதர்கள்? லூத்தரன்கள், வெஸ்லியன்கள், கத்தோலிக்கர்கள், பெந்தெகொஸ்தேயினர், விழுந்து போன தூதர்களைப் போலவே இவர்களும் தங்கள் ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், நிசாயாவில் லூசிபர் பெற்ற அவனுடைய முக்கிய ஸ்தாபனத்திற்கு ஒத்த ஸ்தாபனத்திற்குள் விழுந்துபோயினர். அவர்கள் என்ன செய்துள்ளனர்? வேதம் கூறியுள்ளது போல, “மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்க,” முழு உலக ஊழியர்களின் சங்கம் என்ற ஒரு பெரிய ஸ்தாபனத்தை ஸ்தாபித்துவிட்டனர். இந்த சபையின் கதவுகளையும் மற்றும் இதை போன்ற மற்றவைகளின் வாசல்களையும் மூட ஒரு கிறிஸ்தவ பொருளாதார முறையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். லூசிபரை அவனுடைய பணியில் பார்த்தீர்களா? 551 நான் உங்களுக்கு மூவகை வெளிப்பாட்டை, இல்லை தேவனுடைய ரகசியத்தை கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
260552 அவர்கள் என்ன செய்தனர்? ஏவாள் செய்தது போல, விழுந்துபோன தூதர்கள் செய்தது போல மனித ஞானத்தின் தக்க அறிவுகளுக்கும் கல்விக்கும் விற்றுப்போட்டனர். வெஸ்லி ஒரு தேவனுடைய மனிதனாக இருந்தார், ஆனால் அவரைப் பினதொடர்ந்தது என்ன? விழுந்துபோன தூதர்கள் அதில் நுழைந்துகொண்டனர். தூதர்கள், முதலில் என்னவாயிருந்தனர்? அவர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், ஆனால் லூசிபரின் ஞானத்திற்கு, லூசிபர்—லூசிபருடைய ஞானத்திற்கு விழுந்துபோயினர். அவர்கள் என்னவாயினர் என்பது உங்களுக்குப் புரிகிறதா? விழுந்துபோன தூதர்கள். ஸ்தாபனங்களுக்கு முன்பே, தேவனுடைய மனுஷர்கள் சத்தியத்தை பூமியிலே நிலைநாட்ட புறப்பட்டுச் சென்று, உண்மையான கிறிஸ்துவின் வெளிப்பாட்டைப் பெற்று சத்தியத்தைப் பிரகடனப்படுத்தினர், அதன்பின்னரே விழுந்துபோன தூதர்கள் உள்ளே நுழைந்து அதை மேற்கொண்டு அதிலிருந்து ஸ்தாபனங்களை உருவாக்கினர். 553 அதன் காரணமாகத்தான் ஏழு முத்திரை இரகசியத்தின் வெளிப்பாடு திறக்கப்பட வேண்டியதாயிருந்தது. 554 இப்பொழுது நீங்கள் இதை புரிந்துகொள்கிறீர்களா? அவர்கள் விட்டுவிட்டதை லூத்தரன்கள் தொடர்ந்திருந்தால், அது இங்கே இருந்திருக்கும். வெஸ்லியன்கள் தொடர்ந்திருந்தால், பெந்தேகோஸ்தேயினர் தொடர்ந்திருந்தால், அவர்கள் என்ன செய்திருப்பார்கள்?
261555 இப்பொழுது நடக்க வேண்டிய ஒரே ஒரு காரியம் மாத்திரமே உண்டு. இக்கடைசி காலத்தில் ஒரு செய்தி உண்டு, அதை தொடர்ந்து வேறொன்றும் வரமுடியாது. இப்பொழுது உலக ஆலோசனை சபை சங்கம் ஒரு பலத்த அரசாட்சியை உண்டாக்கிக்கொண்டுள்ளதால், அதை தொடர்ந்து வேறெந்த ஸ்தாபனமும் வேறு எதுவுமே தோன்ற வழியில்லை; ஒன்று அதில் சேர்ந்துவிட வேண்டும் இல்லையேல் அதற்கு புறம்பாயிருக்க வேண்டும். கனி இப்பொழுது மரத்தின் உச்சியில் காணப்படுகின்றது, வெளிச்சமானது அந்த முன்குறிக்கப்பட்ட கனியின் மேல் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. அவள் கிறிஸ்துவைப் போன்ற கனியாக பழுத்து, அவருக்குள் இருந்த அதே கனிவையும், இனிமையையும், ஆவியையும் வெளிப்படுத்துகிறாள். நீங்கள் அதைப்புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன்! புரிகிறதா? 556 ஒரே நாளில் அதிகமாக உங்களுக்குள் திணிக்க நான்—நான் முயற்சிக்கிறேன். அதனால் உங்களைக் களைப்புறச் செய்கிறேன். [சபையார், “இல்லை” என்கின்றனர்.—ஆசி.]
262557 எனவே, பாருங்கள், அவர்கள் தர்க்க அறிவுகளுக்காக விற்றுப்போட்டனர், ஸ்தாபனத்தின் தர்க்க அறிவுகளுக்காக விற்றுப்போட்டனர். “என்னால இதில் சேர்ந்து கொள்ள முடிந்தால்! நகராண்மைத் தலைவர் இந்த சபைக்கு செல்கிறார்.” பார்த்தீர்களா? “நான் ஒரு மெதோடிஸ்டாக அல்லது பிரஸ்பிடேரியனாக இருக்க முடிந்தால்.” அவர்கள் எந்நிலையை அடைந்துவிட்டனர் என்று பாருங்கள். இப்பொழுது, அந்தக் கிளைகள் வெட்டி போடப்படுகின்றன என்று, நான் சற்று முன்னர்தான் விவரித்துக் கூறினேன். அவர்கள் மரித்துவிட்டனர். அவர்கள் இன்னும் கிறிஸ்துவினுடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை; அப்படியிருந்திருந்தால் அவர்கள் அதே ஜீவனை தோன்றச் செய்திருப்பார்கள். அவர்கள் அதனோடு இணைக்கப்பட்டிருக்கவில்லை. 558 ஆனால் அவர்கள்—அவர்கள் புளிப்பு வகையான ஒரு பழத்தைப் போலிருக்கின்றனர். எந்த புளிப்பு வகையான கனியும் ஒரு புளிப்பு வகையான மரத்திலும் வாழும், ஆனால் அது தன்னுடைய சொந்த கனியைக் கொண்டு வரும். நீங்கள் ஒரு ஆரஞ்சு மரத்தில்—ஒரு திராட்சை செடியை ஒட்டுபோட்டுப் பாருங்கள், அது ஆரஞ்சு மரத்தின் சத்தைக் கொண்டு வளர்ந்து, ஆனால் அது திராட்சை பழங்களைத்தான் தரும். நீங்கள் புளிப்பு வகையான ஒரு எலுமிச்சை பழத்தை அங்கே, அந்த ஆரஞ்சு மரத்தில் ஒட்டுபோட்டுப் பாருங்கள், அது ஆரஞ்சு மரத்தின் சத்தைக் கொண்டு வளர்ந்து, அதே சமயத்தில் புளிக்கும் எலுமிச்சம் பழங்களைத் தரும். அதைத்தான் ஸ்தாபனங்கள் சபை என்னும் பெயரால் செய்து கொண்டிருக்கின்றன. 559 இது மூல மணவாட்டி மரமாய், அந்த மூல ஆவியாக உள்ளது. கிறிஸ்துவினிடமிருந்து மாத்திரமே வெளிப்பாடு வருகின்றது, ஸ்தாபனத்திலிருந்து அல்ல. கிறிஸ்துவே! கவனியுங்கள்.
263560 ஸ்தாபனம் என்ன செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறது? லூசிபரைப்போல் தங்களை உயர்த்திக்கொள்கின்றன. அவர்கள் “சபை, மணவாட்டி” என்று தங்களை அழைத்துக்கொள்கின்றனர். அது, அவர்கள் வெளிப்படுத்துதல் 17-ல், உரைக்கப்பட்டுள்ளதுபோல, கள்ள மணவாட்டியாய் இருக்கிறார்கள். கிறிஸ்துவின் சிறுமந்தைக்கு, மணவாட்டிக்கு மேல் தங்களை உயர்த்திக்கொள்ளகின்றனர்; வெளிப்பாட்டின் அறிவினால் உண்டான தாழ்மையான தேவனுடைய வார்த்தைக்கு மேலாக தன்னை உயர்த்திக்கொள்ள லூசிபர் எண்ணுகிறான், அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளுமளவிற்கு அவன் தன்னை ஒரு வேதாகம கருத்தரங்கு கல்வி மற்றும் இறையியல் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறான். எனவே நீங்கள் அவர்களுடைய குழுவைச் சேர்ந்திராவிட்டால், அப்பொழுது நீங்கள் ஒன்றுமற்றவர்கள் என்று அவர்கள் கருதுகின்றனர்.
264561 ஆதியில் லூசிபர் செய்தது போன்று, லூசிபர் ஏவாளிடம் கூறினதையே ஜனங்களிடம் கூறுகின்றனர், “நிச்சயமாக தேவன் நம்மை ஏற்றுக்கொள்வார்! நாம் ஏழைகளைப் போஷிக்கிறோம்.” அது நல்லதுதான். “நிச்சயமாக அவர் நம்மை ஏற்றுக்கொள்வார். நாம் ஒரு பெரிய ஸ்தாபன அமைப்பாய் இருக்கிறோம். நாம் ஒரு அழகான சபையாயிருக்கிறோம். ஏன், நம்முடைய மகத்தான கட்டிடங்களைப் பாருங்கள்! நம்முடைய பெரிய அங்கத்தினரின் எண்ணிக்கையைப் பாருங்கள். நாம் லட்சக்கணக்கில் நிற்கிறோம். நிச்சயமாகவே தேவன் அந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கமாட்டார்” என்கின்றனர். 562 காயீன் அதைத்தான் செய்தான், அவன் உழுது, பாடுபட்ட நிலத்திலிருந்து அழகான கனிகளைக் கொண்டு வந்தான், உழைத்து கனிகளை கொண்டு வந்து, அந்த எளிமையான ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை புறக்கணித்தான்.
265563 அதாவது ஏதோ ஒன்றை அல்லது ஒரு தனிப்பட்ட வெளிப்பாட்டை அல்லது ஏதோ ஒன்றை உயர்த்தவே இதை நான் கூறிக்கொண்டிருக்கிறேன் என்று, மனிதரும் ஸ்திரீகளும் நினைக்காமலிருக்க, தேவனே இரக்கம் பாராட்டும். நான் உங்களுக்கு சத்தியத்தை மாத்திரமே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? புரிகிறதா? நான் அதை உரத்த சத்தமாகவும் கடுமையாகவும் பேசுகிறேன், ஏனென்றால் நீங்கள் ஒரு ஆணி பிடித்துக்கொள்ளுமளவிற்கு அதை அடிக்க வேண்டும், நீங்கள் அதை புரிந்துகொள்ளுமளவிற்கு அது ஏதாவது நன்மையை செய்யப்போவதாயிருந்தால் நலமாயிருக்கும். புரிகிறதா?
266564 இப்பொழுது ஜனங்களிடம், “நிச்சயமாகவே! இவ்வளவு காலம் நிலை நின்ற நம்முடைய மகத்தான கத்தோலிக்க சபை, மெதோடிஸ்டு சபை, மற்ற யாவுமே என்றா நீங்கள் அதை எனக்கு பொருட்படுத்தி கூறுகின்றீர்கள்? நமது முற்பிதாக்களைப் பாருங்கள்!” என்கின்றனர். புரிகிறதா? ஆனால் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை மீறிவிட்டனர். ஏவாள் தேவனுடைய, அவருடைய ஒன்று, அவன்…அவள் ஆதாமின் ஒரு உபசிருஷ்டி ஆவாள்; அவள் தேவனுடைய வார்த்தையின் ஒரு வார்த்தையை அவிசுவாசித்ததன் நிமித்தம், அது இதை செய்தது.
267565 லூசிபர் மறுபடியுமாக இன்றைக்கு, தன் பணியில் ஈடுபட்டிருக்கிறான். மேலும் அந்திக்கிறிஸ்து கம்யூனிஸம் அல்ல என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அந்திக்கிறிஸ்து உண்மையான ஒன்றிற்கு மிக அருகாமையில் இருந்துகொண்டு, “கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அமைந்திருக்கும்,” இயேசு, “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும்” என்று மத்தேயு 24-ல் கூறினார். லூசிபர், மறுபடியுமாக, தன்னுடைய தர்க்க அறிவுகளுக்கு தேவனுடைய வார்த்தையை தனக்கு-தனக்கு மட்டுப்படுத்திக் கொள்வதனால், மனிதனில் உள்ள தேவனுடைய ஐக்கியத்தை லூசிபர் மீண்டும் முறித்துக்கொண்டிருக்கிறான். அவன் என்ன நினைக்கிறானோ, அவன் என்ன நினைக்கிறானோ அதுவே சரி என்று, தேவனுடைய வார்த்தையை மீறுகிறான். 566 இயேசுவின் காலத்திலும் அவன் அதையே செய்தான். இயேசு, “நீங்கள், உங்களுடைய பாரம்பரியத்தினால், தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள்” என்றார். 567 ஸ்தாபனங்கள், தங்களுடைய அறிவாற்றலில் உள்ள தர்க்க அறிவுகளினால் ஸ்தாபித்துக் கொண்டு, தேவனுடைய வார்த்தை ஜனங்களின் மேல் பலன்தராதபடிக்கு அவமாக்கிபோட்டுள்ளனர். அது உண்மையே. அவர்களால் அதை காணமுடியவில்லை. அதன்பின்னர் அவர்கள், “வேதாகமத்தின் தேவன் எங்கே?” என்று கேட்கிறார்கள். அவர் இங்கே இருக்கிறார். அவரே வேதாகமம், அதுதான் அவர்.
268568 கவனியுங்கள், இப்பொழுது, லூசிபர் தந்திரமாக நுழைந்து, அவன் சுய அதிகாரத்தினாலும் மற்றும் உயர்த்திக்கொள்வதினால் உண்டான வாக்குத்தத்தங்களின் பெரிய சோதனையினால், அவன் ஏதேனில் செய்ததுபோலவே மனிதனுக்கு தேவனுடைய ஐக்கியத்தை முறித்துப் போடுகிறான். “ஏன், நீ எங்களுடன் தங்கினால், நீ ஒரு பேராயராகலாம். நீ ஒரு மாவட்ட போதகராக வரலாம். அப்படிப்பட்ட ஒன்றுக்கு நீ ஏன் செல்ல வேண்டும்?” பாருங்கள், அதுதான் பெந்தெகொஸ்தேயினர், கத்தோலிக்கர், போன்றவர்; பாருங்கள், தேவனுடைய வார்த்தைக்கும் அவருடைய வாக்குத்தத்தத்துக்கும் புறம்பாக, மனிதர், வல்லமையைப் பெற்றுக் கொள்ளும்படியாக, ஒரு பெரிய தவறான வாக்குறுதி. பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமையைப் பெறுகின்றீர்களேயன்றி, நீங்கள் ஒரு பேராயராக அல்லது மூப்பராக ஆகும்போது அல்ல, அல்லது நீங்கள் யாராயிருந்தாலும் அல்ல. புரிகிறதா? ஆனால் லூசிபர் மறுபடியுமாக தன் பணியில் இருக்கிறான். 569 இந்த சபை அதை புரிந்துகொள்கிறதா? நாங்கள் உங்களுடைய கரத்தைக் காணும்படி அதை உயர்த்துங்கள். [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சரி, ஆகையால் நான் இனி அதிலேயே நிலைத்திருக்க போவதில்லை. தேவனுடைய வார்த்தையினின்று அகன்று செல்லுதல்! புரிகிறதா?
269570 அதைதான் அவன் ரோமாபுரியிலுள்ள, நிசாயாவில் செய்தான். கான்ஸ்டன்டைன் அவர்களுக்கு எதைக் கொடுத்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சபையின் காலங்களினூடாகப் பார்த்தீர்கள். அவர் கொடுக்கிற…அவர்கள் கிறிஸ்துவைத் தவிர வேறொன்றையும் பெற்றிருக்கவில்லை. அவர்கள் தங்களால் இருக்க முடிந்த எந்த சிறிய பழைய கட்டிடங்களிலும், கடினமான கருங்கற்களால் ஆன தரைகளிலும் அமர்ந்திருந்தனர். நீங்கள் நிசாயா ஆலோசனை சங்கம், மற்றும் நிசாயா ஆலோசனை சங்கத்திற்கு முன்பிருந்த காலம், நிசாயா பிதாக்கள், போன்ற புத்தகங்களை, சபையின் சரித்திரத்தை நீங்கள் படித்திருந்தால், நீங்கள் அதை அறிவீர்கள். அவர்கள் ஒன்றுமில்லாதிருந்தனர். ஆனால் அவர்கள் இந்த ஆலோசனை சங்கத்தைக் கூட்டி, ரோம அஞ்ஞான வழக்கங்களை கிறிஸ்தவ மார்க்கத்தில் புகுத்தி, பரிசுத்த மனிதர் மற்றும் பேராயர், போப், போன்ற, இந்த எல்லா விதமான அர்த்தமற்றவைகளை எல்லாம் நியமித்துக் கொண்டபோது, கான்ஸ்டன்டைன் அவர்களுக்கு என்ன கொடுத்தான்? அதை எந்த வேத பண்டிதனாவது என்னிடத்தில் சொல்லும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு அவன் சொத்துக்களைக் கொடுத்தான். அவர்கள் விரும்பின சுயாதீனத்தை அவன் அவர்களுக்குக் கொடுத்தான். 571 அவர்கள் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஞானம் மற்றும் மனிதனின் கலாச்சாரத்தையும் மாற்றிக் கொண்டனரே! அதே காரியத்தைத் தான் லூசிபர் அப்பொழுது செய்தான், அவன் எதேன் தோட்டத்தில் செய்தான், அவர்கள் அங்கேயே மரித்துப்போயினர். பெந்தகோஸ்து சபை ரோமாபுரியில் உள்ள நிசாயாவில் மரித்தது, ஆனால் கடைசி நாட்களில் மணவாட்டி மரத்தில் உயிரோடெழுப்பப்படவுள்ளது.
270572 கவனியுங்கள், லூசிபர் அப்பொழுது செய்தது போலவே, தந்திரமாக, அவன், சோதனைகளினாலும் மற்றும் தவறான வாக்குறுதிகளினாலும், தேவனுடைய வார்த்தைக்கு புறம்பான வல்லமையைக் கொண்டும் உள்ளே வருகிறான். ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் அவன் அதைத்தான் செய்தான். இன்றைக்கும் அவன் அதையே உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் செய்துகொண்டிருக்கிறான். 573 போப், “நாமெல்லாரும் ஒன்றாக இணைவோம்” என்கிறார். “அங்குள்ள உலக ஆலோசனை சங்க என்னுடைய சகோதரர்கள் யாவரும் என்னுடன் இணைய நான் விரும்புகிறேன். நாம் ஒன்றாக இருக்கிறோம்.” அது உண்மையே, ஸ்தாபனங்களில் நீங்கள் ஒன்றாய் இருக்கிறீர்கள். ஆனால் கிறிஸ்துவின் மணவாட்டிக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை; சகோதரனே, ஒரு காரியமும் இல்லை. நீங்கள் அவ்வாறான எந்தக் காரியத்தையும் அவளுக்கு ஒருபோதும் போதிக்க முடியாது.
271574 இப்பொழுது இந்த கடைசி நாட்களில், மணவாட்டி மரத்தின் காலத்தில் அதே மூல விசுவாசம்…தேவனுடைய பிள்ளைகளுக்கு திரும்ப அளிக்கப்படுமென்று வாக்களிக்கப்பட்டுள்ளது. மல்கியா 4-ல், தேவன், “உலகம் அக்கினியால் எரிக்கப்படுவதற்கு முன்பு, இதோ நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடத்திற்கு அனுப்புகிறேன், அவன் பிள்ளைகளின் விசுவாசத்தை திருப்புவான்” என்று கூறினார். இப்பொழுது, அது முதலாம் எலியாவல்ல. இல்லை, இல்லை. 575 இப்பொழுது, நாம் இங்கே எலியாவின் சால்வை மற்றும் எலியாவின் கம்பளங்கள், அதைப்போன்ற அந்த எல்லா காரியங்களையும் போதிக்கிறதில்லை. நாம் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே போதிக்கிறோம். புரிகிறதா? அதைத்தான் அவர் கூறினார். பாருங்கள், நாம் இந்த விதமான ஒரு எலியாவைக் குறித்தும் மற்றும் அந்த எலியாவைக் குறித்தும் பெற்றுள்ளோம், அது அர்த்தமற்றதாயுள்ளது. அது—அது…நாம் அதை அறிந்திருக்கிறோம். அது…நான் அது குறித்து பேசிக் கொண்டிருக்கவில்லை, ஆவிக்குரிய சிந்தைகொண்ட நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பாருங்கள், தாமதமாக, நேரம் கடந்துகொண்டே இருக்கிறபடியால், உண்மையாகவே, இவையனைத்தையும் நாம் ஒலிநாடாவில் பதிவு செய்ய முடியாது. இப்பொழுது, இந்த கடைசி நாட்களில் உள்ள வாக்குத்தத்தம். இப்பொழுது…
272576 இயேசு, மத்தேயுவில், 11 ம் அதிகாரத்தில் இல்லை 6-ம் அதிகாரத்தில், 11-வது… இல்லை, இது 11வது அதிகாரம் அநேகமாக 6-வது வசனமாக உள்ளது. யோவான் உண்மையாகவே அந்த ஒருவர் அவர்தானா என்று பார்க்க தன்னுடைய சீஷர்களை அனுப்பினான், இயேசு, “எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? ஒரு—ஒரு—ஒரு காற்றினால்…காற்றினால் அசையும் நாணலையோ? இன்னதை-இன்னதை பார்க்கவா நீங்கள் சென்றீர்கள்?” என்றார். அவர், “அல்லவென்றால் நீங்கள் ஒரு தீர்க்கதரிசியை காண சென்றீர்களா?” என்றார். அவர், “ஒரு தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே” என்று கூறினார். யோவான் ஸ்நானன் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனாயிருந்தான்; அவன் உடன்படிக்கையின் தூதனாயிருந்தான். மேலும் அவர், “உங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியுமானால், தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டிருக்கிறவன் இவன்தான், ‘என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்’” என்றார். 577 இப்பொழுது, அது மல்கியா 3, மல்கியா 4 அல்ல. ஏனெனில், மல்கியா 4-ல் உள்ள எலிசா வர வேண்டியதாய் இருந்தது, பூமி ஒரு சூளையைப் போல் எரிந்துபோக வேண்டியதாய் இருந்தது, நீதிமான்கள் ஆயிரம் வருட ஆட்சியில் துன்மார்க்கரின் சாம்பல்களின் மேல் நடக்க வேண்டியதாய் இருந்தது. புரிகிறதா? எனவே இது அந்த ஒன்று அல்ல. புரிகிறதா?
273578 இப்பொழுது அந்த வாக்குத்தத்தம் நிறைவேற்றப்படுகின்றதை நாம் காண்கிறோம். கிறிஸ்து, உண்மையான தலைமைத்துவம் உள்ளே சென்று, தம்முடைய மணவாட்டிக்குள் வந்து, அவர் ஆதியில் செய்த அதே கிரியைகளை செய்து, ஆயத்தப்படுத்தி, ஆதியில், அவர் செய்ததுபோல தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார், யோவான் 14 12-ல், “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.” அப்பொழுது, தலையும் சரீரமும், கிரியைகளிலும், அடையாளத்திலும், ஜீவனிலும் ஒன்றாக இணைந்து, இந்த கடைசி நாட்களுக்காக வாக்களிக்கப்பட்ட தன்னுடைய வார்த்தையின் மூலமாக தேவன் தாமே ரூபகாரப்படுத்தினார். இந்த கடைசி நாட்களில் அவர் இதை வாக்களித்தார். இப்பொழுது, நீங்கள் ஆவிக்குரியவர்களாயிருந்தால், இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
274579 ஆகையால் கலியாண விருந்து மிக அருகாமையிலுள்ளது என்பதை நம்மால் காண முடிகிறது. இப்பொழுது, நான் மறுபடியும் உங்களை ஒருபோதும் காணாவிட்டால், கலியாண விருந்து மிக அருகாமையிலுள்ளது என்பதை, ஞாபகம் கொள்ளுங்கள். அப்பொழுது வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பிரகாரம், ராஜ்யம் அளிக்கப்பட்டு, அந்த மகத்தான ஆயிர வருட அரசாட்சி, சபை எடுத்துக்கொள்ளப்படுதல், துன்மார்க்கர் அழிக்கப்படுதல். உலகமானது, ஆறாம் முத்திரையின் கீழ், எரிமலை குழம்பினால், எல்லா ஒழுக்கக் கேடுகளும் மற்றும் உலகத்தின் பாவமும் எடுக்கப்படும்படி, அவளை மீண்டும் உருவாக்க, வரப்போகும் அந்த பிரகாசமான புதிய ஆயிரம் வருட அரசாட்சிக்கென்று சுத்திகரிக்கப்படவுள்ளது. 580 இந்த எல்லா, மகத்தான மூவகை வெளிப்பாடுகளையும் நாம் காணும்போது; கிறிஸ்துவுக்குள் தேவன்; சபைக்குள் கிறிஸ்து; ராஜ்ஜியம் வருகின்றது. கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியின் பிரதிநிதித்துவமாக ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திற்கு மறுபடியுமாக மீட்கப்படுகின்றனர், அப்பொழுது அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே ராஜ்ஜியமானது திரும்ப அளிக்கப்படப்போகிறது. தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! இப்பொழுது, இந்த மூவகை இரகசியத்தின் வெளிப்பாடு, அந்த இரகசியம், அவருடைய மூல தலைமைத்துவத்தின் மூலம் தனிப்பட்ட ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையினால் வெளிப்படுதல்.
275581 “பாருங்கள், தேவனுக்கு மகிமை, நாங்கள் ஆரவாரமிடுகிறோம்; அல்லேலூயா, நாங்கள் பாடுகிறோம்” என்று கூறுவதல்ல. அதாவது, அதுவல்ல இது. நான் ஒரு மிஷனரி. நான் உண்மையாகவே, உலகத்தை, ஏழு தரம் சுற்றியிருக்கிறேன். புரிகிறதா? நான் அஞ்ஞானிகள், பிசாசுகள், நடனமாடி கூச்சலிடுவதையும், மற்ற ஒவ்வொன்றையும் கண்டிருக்கிறேன். நான் எல்லா விதமான மாம்சபிரகாரமான வெளிப்படுத்துதல்களையும் கண்டிருக்கிறேன். அது மாம்சப்பிரகாரமானது.
276582 ஆனால் நான் கிறிஸ்துவின் தலைமைத்துவத்தைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். கவனியுங்கள், தனிப்பட்ட விதத்தில் அந்த மூலத் தலைமைத்துவத்துடன் அடையாளங்கண்டு கொள்ளப்படுவதால், பிசாசினுடைய கேள்விக்கு நம்மிடம் பதில் உள்ளது. ஆமென்! மகிமை! பிசாசின் கேள்விக்கு நம்மிடம் பதில் உள்ளது. அவர், கிறிஸ்து, கிரையத்தை செலுத்தி, உயிரோடெழுந்து தலையை…இல்லை சரீரத்தையும் உயிரோடெழுப்பியிருக்கிறார். 583 பிசாசினால் அதை பொறுத்துக் கொள்ளமுடியாது. அதனால் தான் இந்த மதசம்பந்தமான ராஜ்யங்கள் தோன்றுகின்றன. அதனால் தான் அவர்கள் யாவரும் இப்பொழுது இத்தகைய காரியங்களை அவர்கள் செய்து கொண்டு வருகின்றனர். பிசாசு, அதன் காரணமாகத் தான் அவன் இவ்விதம் ஊளையிட்டுக் கொண்டேயிருக்கிறான். அவனுடைய பொல்லங்காய் இருந்து வருகிற…அவனுடைய திட்டம் உயிர்த்தெழுந்த, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மூலம் அவருடைய சரீரத்தின் தலைமைத்துவத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மகிமை!
277584 எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லை. நாம் பிசாசிற்கு பதிலை வைத்துள்ளோம். “பிழைத்திருக்கிறது நான் அல்ல, ஆனால் வார்த்தையாகிய கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்.” அது என்னுடைய கருத்தல்ல; அது அவருடைய வல்லமை. என்னுடைய கருத்தல்ல, அது அவருடைய வார்த்தை. அவர் அதை வாக்குத்தத்தம் செய்தார்; இதோ அது இங்கிருக்கிறது. அது இங்கே இருக்கும் என்றும், இதோ அது உள்ளது என்றும் அவர் கூறினார். நாம் அவனுடைய பதிலைப் பெற்றுக்கொண்டோம். 585 கிறிஸ்து உயிரோடெழுந்து நம்முடைய மீட்புக்கான கிரயத்தை செலுத்தியிருக்கிறார். கிறிஸ்துவில் வெளிப்பட்ட தேவன், அவர் அந்த மாம்சத்தையும், அந்த இரத்தத்தையும் செலுத்தி, அந்த இரத்தத்திலிருந்து ஜீவன் வந்து, மாம்சமானது மீட்கப்படவும், அதினால்—அதினால் இந்த மீட்கப்பட்ட மாம்சத்தில் தேவன் அந்த நாளில் அவர் செய்தது போலவே இந்த நாளுக்கான தம்முடைய வார்த்தையையும் வெளிப்படுத்த முடியும். வியூ, மகிமை! 586 நீங்கள் அதை புரிந்து கொள்கிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஓ, என்னே! எப்பொழுது நான் நிறுத்த வேண்டும்? அதை கவனியுங்கள். [“தொடருங்கள்!”]
278587 பிறகு, நாம் தேவனுடைய பிரசன்னத்தில் நீதிமான்களாக்கப்பட்டவர்களாக நிற்கிறோம். வெண்மையாக்கும் திரவம் கொண்ட ஒரு—ஒரு—ஒரு தொட்டியில் ஒரு துளிமையை ஊற்றினால், அந்த மையின் கறையை நீங்கள் ஒருபோதும் கண்டறியமாட்டீர்கள். அது எங்கோ சென்றுவிட்டது. அது இனி ஒருபோதும் திரும்பி வராது. மனிதன் உண்மையாக மீட்கப்படும்போது, அந்த முன்குறிக்கப்பட்ட வித்து அதைக் கண்டு அதை ஏற்றுக்கொள்ளும்போது, அவனுடைய பாவங்கள் நிர்மூலமாக்கப்படுகின்றன. அது போய்விட்டது. அது வேறு பிரிக்கப்பட்டுவிட்டது. அது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்னும் மைக்குள் விழுந்து, அது ஒருபோதும் நினைக் கப்படுவதேயில்லை. தேவன் அதை மறந்துவிடுகிறார். அவர்கள் தேவனுடைய சமுகத்தில் ஒரு தேவனுடைய குமாரனும் குமாரத்தியுமாக நிற்கின்றனர். ஆமென் ஆமென்! “இப்பொழுது நாம் தேவனுடைய குமாரர்களாய் இருக்கிறோம்.” நாம் இருப்போம் என்று அல்ல; நாம் இருக்கிறோமே! இப்பொழுது நாம் மீட்கப்பட்டிருக்கிறோம்.
279588 நாம் சாத்தானுக்கு பதிலை வைத்துள்ளோம். தேவன் தம்மை ரூபகாரப்படுத்தியிருக்கிறார். இந்த நாளில் தம்முடைய வாக்குத்தத்தத்திற்கு, தேவன் தம்மை நிரூபித்திருக்கிறார். அல்லேலூயா! தலைமைத்துவம் இங்குள்ளது. ஆமென்! கிறிஸ்து, உயிர்த்தெழுந்த கர்த்தர், அவர் எப்போதும் இருந்த தம்முடைய அதே உயிர்த்தெழுதலின் வல்லமையில் இங்கே இருந்து, தம்மை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். அதுதான் பிசாசின் பதிலாயுள்ளது.
280589 அதன் காரணமாகத்தான் இங்கு அமர்ந்திருக்கும், இந்த மனிதன் அன்றொரு நாள் மரித்து விழுந்தபோது, “ஜீவனே, திரும்ப வா!” என்று நம்மால் கூறமுடிந்தது. ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் அவ்விதம் கூறினார். 590 அதனால் தான் மெக்ஸிகோவில் மரித்து சுமார் பதினைந்து மணிநேரங்களுக்குப் பிறகு அந்த சிறு குழந்தைக்கு அதைச் செய்ய முடிந்தது, அந்த தரிசனம் தோன்றினபோது, “அதை மரண…ஜீவனுக்கு திரும்ப அழை” என்றது. மேலும், “அந்த சிறு குழந்தை ஜீவிக்கட்டும்” என்றது. அன்று காலை 9 மணிக்கு மரித்துப் போனதாக, மருத்துவர்கள் ஒரு அறிக்கையை எழுதிய அந்த குழந்தை, இரவில் 11 மணிக்கு உயிர்பெற்று; இன்றைக்கு உயிரோடிருந்து கொண்டிருக்கிறது.
281591 அது என்ன? அது மனிதர்களால் அல்ல. தலைத்துவமும் சரீரமும் இணைந்து ஒன்றாகிவிட்டது. அது தேவன் தம்முடைய ஜனங்களில் வெளிப்பட்டதாயுள்ளது. அதனால் தான் கணவனும் மனைவியும் இனிமேல் இருவரல்ல; அவர்களிருவரும் ஒருவரே. தேவனும் அவருடைய சபையும் ஒன்றாகிவிட்டனர், “கிறிஸ்து உங்களுக்குள் இருத்தல்,” தேவனுடைய மகத்தான வெளிப்பாடு. தேவனுக்கு மகிமை! அவருடைய நாமத்தை நாம் தரித்துக் கொண்டிருகிறோம்; அவருடைய நாமம் இயேசு, அபிஷேகம் பண்ணப்பட்டவர். அந்த காரணத்தினால் தான் அவர் இயேசு என்று அழைக்கப்படுகின்றார், அவர் அபிஷேகம் பண்ணப்பட்டவர். அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவின் சரீரம், அந்த சரீரம் செய்ததுபோலவே, தேவனை வெளிப்படுத்தி, நிரூபிக்கிறது. அந்த சரீரம் இந்த ஒவ்வொன்றையும், இந்த சரீரங்களையும் மீட்டு, அதன் மூலம் அங்கே தேவன் இராஜ்யத்திற்கு செல்லுகிற, தம்முடைய மூவகை வெளிப்படுத்துதல் மூலம் கிரியை செய்கிறார். உயிரோடெழுந்து, கிரயத்தை செலுத்தினாரே! நாம் மீட்கப்பட்டுவிட்டோம். தேவன் அதை நிரூபித்து, அதை ரூபகாரப்படுத்தியிருக்கிறார். புரிகிறதா?
282592 நாம் அவருக்கு முன்பாக, கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டவர்களாக நிற்கிறோம். ஏனெனில், அவர் இனி நியாயந்தீர்க்க முடியாது, ஏனென்றால் அந்த சரீரத்தை அவர் ஏற்கனவே நியாயந்தீர்த்துவிட்டார், அந்த சரீரத்தில் நான் ஒரு பாகமாக இருக்கிறேன். என்ன, நான் எப்படி அதன் ஒரு பாகமாக இருக்கமுடியும்? இதோ அது உள்ளது; அது எனக்குள் இருக்கிறது. “என்னுடைய…நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ… என் நாமத்தினால் நீங்கள் பிதாவைக் கேட்டுக்கொள்வதெதுவோ, அது அருளப்படும், ஏனெனில் அது அங்குள்ளது.” நீதிமான்களாக்கப்பட்டோமே! தேவனுக்கு மகிமை!
283593 ஒ, என்னால் இதை உலகம் புரிந்துகொள்ளும்படி செய்ய முடிந்தால்! ஏன்? அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. அங்கே கிறிஸ்துவின் சரீரம் ஜீவனுள்ளதாய், மீட்கப்பட்டதாய் நின்றுகொண்டிருக்கிறது. மீட்கப்பட்டிருக்கிறோம்! ஓ, என்னே! 594 அவருடைய பார்வையில் நீதிமானாக்கப்பட்டுள்ளோம்! நாம் ஏன் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்? நாமே அவருடைய வெற்றி. சபை அவருடைய வெற்றி. இக்கடைசி நாட்களில் நாம் இந்த மகிமையுள்ள சுவிசேஷத்தைக் கொண்டவர்களாய், அவருடைய வெற்றியை அறிவித்து வருகிறோம். இந்த நோக்கத்திற்காகவே அவர் மரித்தார், நாம் அவருடைய வெற்றியின் நிரூபணங்காளயிருக்கிறோம். ஆமென்! அவர் இறங்கி வந்து தமது சபையின் நடுவிலே ஜீவிப்பதை நாம் காணும்போது, அதுதான் அவருடைய வெற்றி. அவரைக் கல்லறையில் பிடித்து வைக்க முடியவில்லை என்பதை அது காண்பிக்கிறது, அவ்வாறே நம்மையும் அவர்கள் பிடித்து வைக்க முடியாது. அது உண்மை. நாம் அவரில் கட்டப்பட்டிருக்கிறோம். நாம் ஏற்கெனவே, உள்ளடங்கிய ஆற்றலாக, உயிரோடெழுந்துவிட்டோம், ஏனெனில் நாம் மரித்தோரிலிருந்தும், அவருடைய வார்த்தையின் பேரிலுள்ள அவிசுவாசத்திலிருந்தும், ஸ்தாபனக் கோட்பாடுகளிலிருந்தும், நித்திய தேவனின் நித்திய வார்த்தைக்கு உயிரோடெழுப்பப்பட்டிருக்கிறோம்; அது அவராயுள்ளது, தம்மை, நம் மூலம் கிரியை செய்து, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக தம்மை வெளிப்படுத்துகிறார்.
284595 பிறகு அந்த வார்த்தை நகர்ந்து, தலையிலிருந்து சரீரத்துக்குள் வருகிறது. அது என்ன? இந்த அதே வார்த்தை. அதனோடு ஒன்றையும் கூட்டவோ அல்லது அதிலிருந்து ஒன்றையும் எடுத்துப்போடவோ முடியாது. எனவே அந்த நாள் அருகாமையில் வருகிறபடியால், அதே வார்த்தை தலையிலிருந்து சரீரத்துக்குள் சென்று, சரீரத்திற்குள் இறங்கி, அவர்களிருவரும் ஒருவர் என்பதை ரூபகாரப்படுத்துகின்றது. அவர்கள் கணவனும் மனைவியுமாயிருக்கின்றனர். அவர்கள் அவருடைய மாம்சத்தில் மாம்சமாகவும், அவருடைய வார்த்தையில் வார்த்தையாகவும்; அவருடைய ஜீவனில் ஜீவனாகவும், அவருடைய ஆவியில் ஆவியாகவும் இருக்கின்றனர். புரிகிறதா? ஆமென்! அது உங்களுக்கு எப்படித் தெரியும்? அதுவே சாட்சி பகருகின்றது, அதே கனி, அதே வார்த்தை. புரிகிறதா? கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது; அதே ஜீவன், அதே தேவன், அதே ஆவி, அதே வார்த்தை, அதே புஸ்தகம்! ஆமென்! அதே அடையாளங்கள், “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்.” ஓ, அல்லேலூயா! என்னே!
285596 கவனியுங்கள், அவருடைய சரீரத்திலுள்ள ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையே அவருடைய வெற்றிக்கும் அவருடைய மரணத்திற்கும் காரணமாக உள்ளது. பாருங்கள், மரணம், ஆவியில் இல்லை; அவர் மரித்தபோது, அவர் மாம்சத்தில் மாத்திரமே மரித்தார். அவருடைய ஆவி பாதாளத்திற்குச் சென்று, காவலிலுள்ள ஆத்துமாக்களுக்குப் பிரசங்கித்தது. அது சரியா? அவருடைய சரீரம், மாத்திரமே, மரித்தது, அவர் அதை உயிரோடெழுப்பி அதை உயிர்ப்பித்தார். உயிர்ப்பித்தல் என்றால் “உயிரோடெழச் செய்தல்,” என்று அர்த்தம், அவருடைய மாம்சம், அவருடைய சரீரமாய் இருந்தது. அது தான் வார்த்தை. அநேக ஆண்டுகளாக மரித்திருந்தது, ஆனால் அது படிப்படியாக சீர்த்திருத்த காலத்தில் வளரத் தொடங்கி, இப்பொழுது அவள் தன்னுடைய காலூன்றி நின்றுகொண்டிருக்கிறாளே!
286597 ஓ, நான் எசேக்கியலுக்கு திரும்பிச் சென்று, “உலர்ந்த எலும்புகள்” என்ற அவைகளைக் குறித்து உங்களிடத்தில் பேசவும், உங்களுக்கு காண்பிக்கவும் நேரம் இருந்தால் எனக்கு நலமாயிருக்கும். அவர், “இந்த எலும்புகள் மீண்டும் உயிரடையுமா?” என்று கேட்டார். அதற்கு அவர், “தீர்க்கதரிசனம் உரை!” என்றார். 598 தீர்க்கதரிசனம் எப்படி வரும்? தீர்க்கதரிசியின் மூலமாக மாத்திரமே. அது கர்த்தருடைய வார்த்தை. “உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக், கேளுங்கள்!” அவைகள் மேல் நரம்புகளும் தோலும் உண்டாயிற்று, அவர்கள் காலூன்றி மகா பெரிய சேனையாய் நின்று, சீயோனை நோக்கி அணிவகுத்து செல்லத் துவங்கினர். தேவனுக்கு மகிமை! அது அவர். அது அவரே, அந்த வெற்றி. கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி ஆனந்த களிப்புடன் சீயோனுக்கு வருவார்கள், அவருடைய பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கிழைப்போர் அல்லது தீங்கு செய்வார் ஒருவருமில்லை. (ஹூ.)
287599 அவர் தம்மை ரூபகாரப்படுத்துகிறபோது அவர் தம்முடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை நிரூபிக்கிறார். அவள், மணவாட்டி, மற்ற எல்லோரிடமிருந்தும் பிரிந்து சுதந்திரமாய் இருக்கிறாள். அவள் சுயாதீனமுள்ள ஸ்திரீ, அவள் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமான பலவர்ணமான ஒரு மகத்தான பறவை. “மகத்தான பலவர்ணமான பறவை,” என்பதன் பெயரில் வேதம் கூறியுள்ளது உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால், அவள் அவருடைய நாமத்தை கொண்டிருந்தாள், அவருடைய ஜீவனை அவள் கொண்டிருந்தாள். ஏனெனில் அந்த… 600 அவர்கள் எப்படி அந்த பறவையை பலவருணமாக்கினர்? அந்த இரு பறவைகளுமே வெண்மை நிறமாயிருந்தன, அவர்கள் ஒரு பறவையின் தலையைக் கிள்ளியெடுத்து அதன் இரத்தத்தை மற்ற பறவையின் மேல் ஊற்றினார்கள். அந்த சிவப்பு இரத்தத்தினால் மற்ற பறவைக்கு பலவர்ணம் உண்டானது, அந்தப் பறவை இந்த விதமாக சிறகடித்து, அது தரையில் ஊற்றப்பட்டபோது, அந்த இரத்தம் “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று சத்தமிட்டது. 601 எனவே கிறிஸ்து, மரித்த துணைவர், அவருடைய இரத்தத்தை, அவருடைய ஜீவனிலிருந்த அவருடைய இரத்தத்தை, நமக்குள்ளாக வைத்தார்; தெளி-…அவருடைய இரத்தத்தை சுமந்து செல்லும்போது, “பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தர் பரிசுத்தர்!” என்று சத்தமிடுகிறது. அது வினோதமாக காணப்படுகிற பட்சி. நிச்சயமாகவே, அது அவ்வாறு உள்ளது. ஆனால் அவள், மணவாட்டி, அவரால் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறாள், அவள் மற்ற எல்லோரிடமிருந்து சுயாதீனமுள்ளவளாய் இருக்கிறாள். “நீங்கள் இருவரும் வாழும் வரைக்கும் அவளை உன்னிடம் மாத்திரம் வைத்துக்கொள். அவரை, வார்ததையை உன்னிடமே வைத்துக்கொள்,” இல்லை, விபசாரமேக் கிடையாது, ஸ்தாபனத்தின் எந்த ஒரு அடையாளமும் இல்லை, பிரமாணத்தின் எந்த ஒரு அடையாளமும் இல்லை, விபச்சாரம் என்பதே இல்லை. வார்த்தையும், அவரும் மாத்திரமே! 602 “கிறிஸ்து என்னும் உறுதியான பாறையின் மேல் நான் நிற்கிறேன், மற்றெல்லா நிலங்களும் அமிழ்ந்துகொண்டிருக்கும் மணலே,” என்று எட்டி ப்ரூயிட் கூறினார். ஹு-ஹூ.
288603 அதுதான் இது; கிறிஸ்து, அந்த வார்த்தை! அவர் அந்த வார்த்தையாக இருந்தார்; அவர் வார்த்தையாக இருக்கிறார். சபையும், அவராலே அவளை தம்முடைய ஒரு பாகமாக்குவதால், வார்த்தையாகின்றது, அதுவே மீண்டும் வார்த்தையாக இருக்கிறது. அவராலே தனிப்பட்ட விதத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறாள், அவள் அவருடைய சொத்து மாத்திரமே! அவருடைய சொத்து மாத்திரமே! அவள் அவராலும், அவர் மூலமாயும், அவருக்காகவும், அவருக்காக மாத்திரமே மீட்கப்பட்டவள். அது உண்மை. அப்படியிருக்க, எதைக் குறித்து பிசாசு அலறிக்கொண்டிருக்கிறான், அதாவது இது வெளிப்படுத்தப்படுகின்றது.
289604 நாம் ஒரு ஆபத்தான நேரத்தில் இருக்கிறோம். நினைவிருக்கட்டும், இவை சம்பவிக்கும்போது, “இனி காலம் செல்லாது” என்று வேதம் கூறுகிறது. நாம் அந்த வெளிப்படுத்துதலை காணும்போது, அவள் மங்கிக்கொண்டேபோகிறாள். 605 “பூமியதிர்ச்சிகள்.” அன்றொரு நாள் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை நீங்கள் பார்த்தீர்களா? “பல்வேறு இடங்களில் பூமியதிர்ச்சிகள்.” 606 “வானத்தில் பயங்கரமான தோற்றங்கள், அக்கினி ஸ்தம்பங்களைப்” போல், வானத்தில் மிதக்கும் பறக்கும் தட்டுகள். அது என்னவென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. பார்த்தீர்களா? அதைக் குறித்த எந்தவித கருத்தும்கூட அவர்களிடம் இல்லை.
290607 சோதோம் அழிக்கப்படுவதற்கு முன்பு, தூதர்கள் அங்கு சென்று விசாரணை செய்ததை நீங்கள் கவனித்தீர்களா? உங்களுக்கு அது ஞாபகமிருக்கிறதா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அவர்கள் மூவரும், அவர்கள் ஒரு கூட்டமாக அங்கு இறங்கி வந்தனர். ஒருவர் ஆபிரகாமிடம் தங்கிவிட்டார். உங்களுக்கு அது ஞாபகமிருக்கிறதா? [“ஆமென்.”] அதாவது அவர்கள் நியாயத்தீர்ப்பின் விசாரணைக்காக இறங்கி வந்த, வானத்திலிருந்து வந்த ஒளிகளாய் இருந்தனர். ஒருவருடைய… 608 அவை அனைத்தும் எங்கு காணப்படுகின்றன என்று பாருங்கள். பென்டகனை சுற்றிலுமே, அந்த காரியங்கள், அவர்கள் அவைகளை கண்டறிகின்றனர். அதுதான் உலக நியாயத்தீர்ப்பு, சோதோம். மேலும் ஒருவர் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார், சபைகளுக்கு மத்தியிலே பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார், கிறிஸ்து தாமே, தம்மையே ரூபகாரப்படுத்துவார். புரிகிறதா? “மேலே வானங்களில்…கீழே பூமியில் அடையாளங்கள்.” நிச்சயமாக.
291609 அடையாளங்கண்டு கொள்ளப்படுதல்! ஓ, பிசாசு இதைக் குறித்து அலறிக்கொண்டிருக்கிறான்: வார்த்தையின் வாக்குத்தத்தத்தின் வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் அவளுக்குள் மாத்திரமே இருக்கிறது. 610 யார் என்று அவர்கள் அறியாமலிருந்தனர். இயேசு வந்தபோது, ஏன் இந்த பரிசேயர்களால் அடையாளங்கண்டுகொள்ள முடியவில்லை? அவர், “நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால், நீங்கள் அவைகளை யாராலே துரத்துகிறீர்கள்?” என்று கேட்டார். பார்த்தீர்களா? அவர் தனியாக நின்றார். 611 அவருடைய சபையும் தனியாக நிற்கிறது. அவள் எதனுடனும் இணைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அவர் தேவனால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, தேவன் வாசம் செய்யும் சரீரமாக இருந்ததார்; சபையும் அவருடைய சரீரத்தினால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, அதே காரியத்தைச் செய்கிறது. அவள் அவருடைய சரீரமாய், இந்த கடைசிநாளுக்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள வார்த்தையின் வெளிப்படுத்தப்பட்ட சத்தியமாக இருக்கிறாள். அவள், அவள் மாத்திரமே அதன் மூலம், தனியாக நிற்கிறாள். அதனால் தான் அவளை தீர்த்துக்கட்டும்படி, பிசாசு இந்த ஸ்தாபனங்களுடன் ஒரு அமைப்பை உண்டாக்கிக்கொள்ள வேண்டுமென்று உளையிட்டுக் கொண்டிருக்கிறான். அவர்களால் அதை ஒருபோதும் செய்ய முடியாது. அவள் எடுத்துக்கொள்ளப்படுவாள், அவளைத் தீர்த்து கட்டமுடியாது. அவளுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையின் வல்லமையின் மூலம் அவள் இப்பொழுது உயிரோடெழுந்துவிட்டாள். ஆமென்!
292612 மணவாட்டி எவ்வளவாக அந்த வாக்குத்தத்தத்தை பற்றிக்கொள்ளுகிறாள்! “அவர் எனக்காக மறுபடியும் வருவதாக வாக்குத்தத்தம் செய்துள்ளார். அதை நான் விசுவாசிக்கிறேன்.” ஹூ-ஹூ. புரிகிறதா? ஆம், ஐயா. அவளுடைய தலைமைத்துவத்தை, அவளுடைய மீட்பரை, அவளுடைய கணவனை, அவளுடைய ராஜாவை, அவளுடைய கர்த்தரை, அவளுடைய நேசரை, அவளுடைய இரட்சகரை, அருளப்பட்ட சந்திக்கும் இடத்திலே சந்திக்க வேண்டுமே! 613 அவர்களைச் சந்திக்க அவர் ஒரு இடத்தை வைத்திருக்கிறார். அவர்—அவர்…மணவாளன் செய்யாமல் எதையும் விட்டுவிடுவதில்லை என்பது, உங்களுக்குத் தெரியுமா. அடையாளத்திற்காக, அவர் ஒரு மோதிரத்தை வைத்திருக்கிறார். அவள் அணிந்துகொள்கிற வஸ்திரத்தை, அவளுடைய உடையை அவர் அளித்திருக்கிறார். புரிகிறதா? அவளை சந்திக்க அவர் ஒரு இடத்தை அளித்திருக்கிறார், அது ஆகாயத்தில். எல்லாமே அளிக்கப்பட்டுவிட்டது. கலியாண விருந்தையும் அவர் ஏற்கனவே ஆயத்தம் செய்துவிட்டார்; ஏற்கனவே தெரிந்துகொள்ளப்பட்ட, விருந்தாளிகள் ஏற்கனவே அழைக்கப்பட்டுவிட்டனர். எல்லா தூதர்களும் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள், அவருடைய ஊழியக்காரர்கள், கவனமாக. ஓ, ஓ, ஓ, ஓ, ஓ! ஓ, ஆகாயத்தில் ஒரு சந்திப்பு உண்டாகப்போகிறது, அந்த இனிமையில், சீக்கிரத்தில் இனிமையாக; நான் உங்களை சந்திக்கப் போகிறேன், அங்கே உங்களை சந்திக்கப்போகிறேன் ஆகாயத்திற்கு அப்பால் உள்ள அந்த வீட்டில்; அழிவுள்ளோர் செவிகளில் கேட்டிராத, அப்படிப்பட்ட பாடுதலை எப்போதும் கேட்போம், அது மிகவும் மகிமையாயிருக்குமென்று, நான் உறுதியாக கூறுகிறேனே! தேவனுடைய சொந்த குமாரனே, அங்கு முன் நின்று நடத்தும் ஒருவராயிருப்பார், (தேவனின் முழு வெளிப்படுத்துதல்.) ஆகாயத்தில் அந்த சந்திப்பிலே. (ஓ, என்னே!) 614 இப்பொழுது அவருடைய ரூபகாரப்படுத்துதல்களை கவனிக்கவும். எரியும் முட்செடியினருகிலிருந்த மோசேயின் கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், பயமற்ற தாவீதையும் அவனுடைய கவணையும் குறித்து நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்; சொப்பனக்காரனாகிய யோசேப்பின் கதையையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், தானியேலையும் சிங்கங்களையும் குறித்து நாம் அடிக்கடி பாடுகிறோம். ஒ, வேதத்தில் ரூபகாரப்படுத்தப்பட்டவர்கள் அநேகர், மற்ற அநேகரும் உள்ளனர், அவர்கள் அனைவரையும் நான் சந்திக்க எவ்வளவு ஆவலாயிருக்கிறேன் என்று, நான் உறுதியாக கூறுகிறேனே! இன்னும் சிறிது காலத்தில் அவர்களைச் சந்திக்க கர்த்தர் அனுமதிப்பார், ஆகாயத்தில் அந்த சந்திப்பிலே. ஏனெனில் ஆகாயத்தில் ஒரு சந்திப்பு உண்டாகப்போகிறது, அந்த இனிமையில், சீக்கிரத்தில் இனிமையாகவே; நான் உங்களை சந்தித்து, அங்கே உங்களை வாழ்த்தப்போகிறேன் ஆகாயத்திற்கு அப்பால் உள்ள அந்த வீட்டிலே; அழிவுள்ளோர் செவிகளால் கேட்டிராத, அப்படிப்பட்ட பாடுதலை எப்போதும் கேட்போம், அது மிகவும் மகிமையாயிருக்குமென்று, நான் உறுதியாகக் கூறுகிறேனே! தேவனுடைய சொந்த குமாரனே அங்கு முன்னின்று நடத்தும் ஒருவராய் இருப்பார், ஆகாயத்தில் அந்த சந்திப்பிலே. (ஓ, என்னே!)
293615 நீங்கள் அதை விரும்பவில்லையா? இப்பொழுது அவருடைய மகத்தான வெளிப்பாட்டின் இரகசியமாகிய மூவகை நோக்கமானது இப்பொழுது வெளிபடுத்தப்பட்டிருக்கிறது. அவர்தான் அந்த முக்கயமான ஒருவர் ஆகும். அந்த ஒருவரே. ஓ, என்னே! நாம் அதைப் பாடுவோமாக. என்னால் இதற்கு மேல் பிரசங்கிக்க முடியவில்லை. நான் மிகவும் நன்றாக உணருகிறேன், பாருங்கள். ஓ, ஆகாயத்தில் ஒரு சந்திப்பு உண்டாகப்போகிறது, இனிமையாய், சீக்கிரத்தில் இனிமையாய்; நான் உங்களை சந்தித்து, அங்கே உங்களை வாழ்த்தப்போகிறேன் ஆகாயத்திற்கு அப்பாலுள்ள அந்த வீட்டிலே; அழிவுள்ளோர் செவிகளில் கேட்டிராத, அப்படிப்பட்ட பாடுதலை எப்போதும் கேட்போம், அது மகிமையாய் இருக்குமென்று, நான் உறுதியாக கூறுகிறேனே! தேவனுடைய சொந்த குமாரனே, அங்கு அவரே முன்னின்று நடத்தும் ஒருவராய் இருப்பார் ஆகாயத்தில் அந்த சந்திப்பிலே. 616 நீங்கள் சந்திக்கப்போகிறீர்களா? ஆமென்! தேவனுடைய கிருபையினால், தேவனுடைய கிருபையினால்! புரிகிறதா? ஓ, என்னே! எரியும் முட்செடியினருகிலிருந்த மோசேயின் கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், பயமற்ற தாவீதையும் அவனுடைய கவணையும் குறித்து நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்; (அவர்கள் யாவரும் மாதிரிகளே.) சொப்பனக்காரனாகிய யோசேப்பின் கதையையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், தானியேலையும் சிங்கங்களையும் குறித்து நாம் அடிக்கடி பாடுகிறோம். ஓ, வேதாகமத்தில் அநேகர், மற்ற அநேகர் உள்ளனர், (அது அவராகும்) அவர்கள் எல்லோரையும் சந்திக்க நான் ஆவலாய் இருக்கிறேன் என்று, நான் உறுதியாகவே கூறுகிறேன்! இன்னும் சிறிது காலத்தில் அவர்களைச் சந்திக்க கர்த்தர் அனுமதிப்பார் அந்த சந்திப்பில்… 617 ஆனால் அங்கே முக்கியமான ஒருவர் இருக்கிறார்! ஓ, ஆகாயத்தில் ஒரு சந்திப்பு உண்டாகப்போகிறது, இனிமையாய், சீக்கிரத்தில் இனிமையாய்; நான் உங்களை சந்தித்து, அங்கே உங்களை வாழ்த்தப்போகிறேன் ஆகாயத்திற்கு அப்பால் உள்ள அந்த வீட்டிலே; அழிவுள்ளோர் செவிகளால் கேட்டிராத, அப்படிப்பட்ட பாடுதலையே எப்போதும் கேட்போம், அது மகிமையாய் இருக்குமென்று, நான் உறுதியாக கூறுகிறேன்! தேவனுடைய சொந்த குமாரனே, அவரே முன்னேறு நடத்துகின்ற ஒருவராய் இருப்பார் ஆகாயத்தில் அந்த சந்திப்பிலே.
294618 இப்பொழுது, நாம் அங்கு ஒருவரையொருவர் சந்திக்கப்போகிறோம். நாம் அனைவரும், மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், நீங்கள் எவராயிருந்தாலும், தேவ ஆவியால் மறுபடியும் பிறந்தவர்கள், நாம் இதைப் பாடும்போது ஒருவர் மற்றவருடைய கரங்களை குலுக்குவோமாக. ஓ, ஆகாயத்தில் ஒரு சந்திப்பு உண்டாகப்போகிறது, அந்த இனிமையில், சீக்கிரத்தில் இனிமையில்; நான் உங்களை சந்தித்து, அங்கே உங்களை வாழ்த்தப்போகிறேன் ஆகாயத்திற்கு அப்பால் உள்ள அந்த வீட்டிலே; அழிவுள்ளோர் செவிகளால் ஒருபோதும் கேட்டிராத, அப்படிப்பட்ட பாடுதலை எப்போதும் கேட்போம், அது மகிமையாய் இருக்கும் என்று, நான் உறுதியாக கூறுகிறேனே! ஏனென்றால் தேவனுடைய சொந்த குமாரனே முன்நின்று நடத்தும் ஒருவராய் இருப்பார் ஆகாயத்திலே அந்த சந்திப்பிலே. 619 ஓ, ஓ, ஓ! ஓ, அது அற்புதமானது, பாருங்கள், அவர் என்னவாயிருப்பார் என்று பாருங்கள். இப்பொழுது பாருங்கள். 620 நண்பர்களே, இப்பொழுது நாம் முடிக்க வேண்டும். ஏறக்குறைய 2 மணி ஆகிவிட்டது, பாருங்கள், நாம்—நாம் இரவு உணவிற்கு இங்கே இருப்போம். நான் இதைக் குறித்து இன்னும் பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கிறேன், பாருங்கள், எனவே நாம் இதன் பேரில் முடிக்கப் போகிறோம். இதற்கு முடிவேயில்லை.
295621 இது ஒரு வெளிப்பாடு. தேவனுடைய வார்த்தையானது நித்தியமாயிருப்பது போல இதுவும் நித்தியமானது. கவனியுங்கள், தேவனுடைய இரகசியத்தின் மகத்தான மூவகை நோக்கம் வெளிப்பட்டுவிட்டதே! தேவன் கிறிஸ்துவில் வெளிப்பட்டார்; கிறிஸ்து சபையில் வெளிப்பட்டார்; விழுந்துபோன ஏவாளை ஏதேன் தோட்டத்திலிருந்த மூல நிலைக்கு திரும்ப மீட்டுக்கொள்ளவே. ஓ, என்னே! 622 ஓ, அந்நாளில் நமக்கு மகத்தான நேரங்கள் உண்டாயிருக்கப்போகிறது! ஆம். அது இப்பொழுதே உள்ளது. அதை நாம் விசுவாசிக்கிறோம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? நான் அதைக் குறித்து நினைக்கிற ஒவ்வொரு முறையும் அந்த பாடலைக் குறித்து நான் நினைக்கிறேன்.
296623 அவர் தம்மை தானியேலிலும், மோசேயிலும், எரேமியாவிலும் ரூபகாரப்படுத்தினார். அவர்கள் என்னவாயிருந்தனர்? வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்திற்கு, பாருங்கள், அந்த மகத்தான மனிதர்களிடத்திற்கு வந்தது. பாருங்கள், சொப்பனக்காரனாகிய யோசேப்பின் கதையையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், நீங்கள் பாருங்கள், சிங்கங்களின் கெபியில் தானியேல், மற்றும் இந்த மற்ற எல்லோரையும் உங்களுக்குத் தெரியும். அவர்கள், அதாவது, அவர்கள் என்னவாக இருந்தனர்? தீர்க்கதரிசிகள். புரிகிறதா? ஆனால் முக்கியமான ஒருவர்…தேவன், தற்காலிகமாக, அவர்களுக்குள் மாதிரியாய் இருந்தார். 624 அவர் ஆதாமில் தம்மை முன்னடையாளமாக்கிக் கொண்டு, எது சரியென்று அறிந்தவனாய், தன்னுடைய மனைவி தவறாயிருந்தபடியால், அவளை மீட்டுக்கொள்ள அவனும் வெளியேறினான். அதைப்போலவே கிறிஸ்து பாவமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் விழுந்து போன தம்முடைய பிள்ளையை மீட்டெடுக்க, அவர் வெளியேறி பாவத்தை எடுத்துக்கொண்டார். புரிகிறதா? பார்த்தீர்களா? அவர் தம்மை முன்னடையாளமாக்கிக் கொண்டார். …எரியும் முட்செடியினருகிலிருந்த மோசே, பயமற்ற தாவீதையும் அவனுடைய கவணையும் குறித்து நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்; சொப்பனக்காரனாகிய யோசேப்பின் கதையையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், (தீர்க்கதரிசி.) தானியேலையும் சிங்கங்களையும் குறித்து நாம் அடிக்கடி பாடுகிறோம். ஓ, வேதத்தில் அநேகர், இன்னும் அநேகர் இருக்கின்றனர், மேலும் நான்… 625 அவர்கள், அவர்கள் வேதாகமமாக இருக்கிறார்கள். மேலும் நான்… அவர்கள் எல்லோரும் அவரில், வெளிப்படுத்தப்பட்டனர். புரிகிறதா? அவர் இல்லையென்றால், அவர்கள் எல்லோரும் ஒழிந்துபோய் இருப்பார்கள். புரிகிறதா? நான் அவராயிருக்க வேண்டுமானால், அதன் ஒரு பாகமாக நான் ஆக வேண்டும். ஆமென்! புரிகிறதா? அவர்கள் அனைவரையும் சந்திக்க நான் ஆவலாயிருக்கிறேன் என்று, நான் உறுதியாக கூறுகிறேன். (அது உண்மை.) ஆனால் தேவனுடைய சொந்த குமாரனே, அவரே அதை முன்நின்று நடத்துகின்ற ஒருவராய் இருப்பார் ஆகாயத்திலே அந்த சந்திப்பிலே.
297626 “அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு” என்று எபிரெயர் 11, கூறியுள்ளது. மூளை, அறிவு, தலை, போன்றவை இல்லாமல் கைகளும் கால்களும் பரிபூரணப்பட முடியாது. புரிகிறதா? நாமெல்லாரும் அவரில் பரிபூரணமடைகிறோம், “நாமெல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு,” நியாயத்தீர்ப்பிலிருந்து நீங்கலாகி; மரணத்துக்கேதுவான, பாவத்தினின்று நீங்கலாகிவிட்டோம்…ஆமென்! “தேவனுடைய சொந்த குமாரனே அந்த ஆகாயத்தில் அந்த சந்திப்பில் முன்நின்று நடத்துகிற ஒருவராய் இருப்பார்.” நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால்… 627 கர்த்தராகிய இயேசுவே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இந்த உறுமால்களின் மேல் இறங்கி, கர்த்தாவே, வியாதியஸ்தரை சுகப்படுத்துவதாக. அவர்கள் அதை அவர்கள் மேல் வைக்கும்போது, அது அவண்ணமாகவே சம்பவிப்பதாக. நீர் அதை அவண்ணமாய் சுகமாக்கும்படி, இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். …கல்வாரி மரத்தினிலே. 628 “கிறிஸ்து, வெளிப்பட்டதை,” இப்பொழுது நமக்குள் இருப்பதை, நமக்குள் இப்பொழுதே இருக்கிறதை, சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர் எப்படி வெளிப்படுத்தினார், அவர் எப்படி வெளிப்படுத்தப்பட்டார்? ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார். அவர் என்ன செய்தார்? சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி…
298629 மகிமை! அந்த மகத்தான உடன்படிக்கையின் தூதன், வனாந்தரத்தில் மோசேயுடன் கூட இருந்த அந்த ஒருவர், பவுலை தமஸ்குவுக்குப் போகும் வழியில் சந்தித்த ஒருவர், தமது புகைப்படத்தை நம்மோடு எடுக்க அனுமதித்த அதே ஒருவர்; லைஃப் பத்திரிக்கையில் அன்றொரு நாள் வெளியான புகைப்படத்தில் இருந்த அதே ஒருவர்; அதே வார்த்தை, அதே தேவன், அதே வாய்க்கால்கள் மூலமாக, அதே வழியாக, அதே வாக்குத்தத்தம் மூலமாக! “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருகிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.” அப்படியானால் அவர் இங்கு இருக்கிறார். அவருடைய வார்த்தையில் மாத்திரம் நிலைத்திருப்பவர்களை, “கர்த்தருடைய தூதர்கள் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்குகிறார்கள்.” தேவனுக்கு பயப்படாத எந்த மனிதனும் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க முடியாது. புரிகிறதா? அப்படியானால், அவரை நாம் ஆவியில் தொழுதுகொள்ளும் இந்நேரத்தில், இதோ அவர் இங்கே இந்தக் காலையில், நம்மோடு இருக்கிறார்.
299630 ஓ, இதைப் போன்ற கடினமான ஒரு செய்திக்குப் பிறகு, நாம் அவரை சற்று ஆவியில் ஆராதிக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். பாருங்கள், உங்களுடைய கண்களை மூடி அவருக்கு மீண்டும் அதை, “நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன்,” என்று நாம் பாடுவோமாக, நீங்கள்—நீங்கள் உங்களுடைய கரங்களை, அவருக்கு இந்தவிதமாக, உயர்த்துங்கள். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால்…முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என்ற இரட்சிப்பை, கல்வாரி மரத்தினிலே. ஓ, என்னே, நாம் எவ்வளவாக அவரை நேசிக்கிறோம்! பிதாவில் விசுவாசம், குமாரனில் விசுவாசம், பரிசுத்த ஆவியில் விசுவாசம், இம்மூவரும் ஒருவரே; பிசாசுகள் நடுங்கும், பாவிகள் விழித்தெழுவர்; யேகோவாவின் மேலுள்ள விசுவாசம் எதையும் குலுக்கிவிடும்.
300631 ஆமென்! தேவனுக்கு மகிமை! நாம் எவ்வளவாக அவரை நேசிக்கிறோம்! இப்பொழுது உங்கள் இருதயத்தில் அவரை ஆராதியுங்கள், அவருக்கு கனத்தை செலுத்துங்கள், அவர் எவ்வளவு அழகாக செய்திருக்கிறார் என்பதை சற்று—சற்று நினைத்துப் பாருங்கள். அவர் நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை கவனித்துப் பாருங்கள். இத்தனை ஆண்டு காலமாக பெற்ற தரிசனங்களில், ஒன்றாகிலும் தவறினதேயில்லை. அவர் கூறின ஒவ்வொரு காரியமும் நிறைவேறும், அவர் அதைக் கூறிய விதமாகவே சரியாக நிறைவேறும்.
301632 நான் உங்களை நேசிக்கிறேன். சிறு பிள்ளைகளே, “ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்று உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தேவனுடைய கட்டளைகளை மறந்துவிடாதீர்கள். எல்லாரையும் நேசியுங்கள். சரியோ அல்லது தவறோ, பாவியோ அல்லது பரிசுத்தவானோ, எப்படியும் அவர்களை நேசியுங்கள். நீங்கள் அப்படி செய்யாவிட்டால், அப்படியானால் தேவன் உங்களுக்கு உதவி செய்யும்படி ஜெபியுங்கள், ஏனெனில் தேவன் பாவிகளை நேசித்தார். தேவனுடைய சுபாவம் உங்களுக்குள் இருக்கிறது. அந்த மனிதன் தவறாயிருந்தாலும், எப்படியும் அவனை நேசியுங்கள். அவனுடைய பாவங்களில் பங்குகொள்ளாதீர்கள். புரிகிறதா? அவனுடைய பாவங்களில் பங்குகொள்ளாதீர்கள். ஆனால் இனிமையில், கடுகடுப்பான, கடிந்துகொள்ளுதலில் அல்ல, உங்களுக்கு பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்ட இயேசுகிறிஸ்து மூலமாய், இனிமையில், உங்களுக்குள் தங்கியிருக்கிற நித்திய ஜீவனின் நம்பிக்கையை அவனுக்கு எடுத்துக் கூறுங்கள். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், துயரமும் துக்கமும் நிறைந்த பிள்ளையே; அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும், ஓ, நீ எங்கு சென்றிடினும் அதைக் கொண்டு செல். (இப்பொழுது மறந்துவிடாதே.) ஓ, விலையேறப்பெற்ற…(அந்த நாமம்!)…ஓ… 633 நாம் அவருடைய நாமத்தை உடையவர்களாயிருக்கிறோம். அவருடைய நாமத்தினால் நாம் அழைக்கப்படுகிறோம். பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்.
302634 நான் மறுபடியும் உங்களை சந்திக்கும் வரைக்கும், இப்பொழுது நான் ஒரு சிறு இரகசியத்தை உங்களுக்குக் கொடுக்கப்போகிறேன், நாம் நிற்கையில் இதை நினைவில் கொள்வோமாக: இயேசுவின் நாமத்தில் வணங்கி, அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுவோம், பரலோகத்தில் ராஜாதி ராஜாவாய் நாம் அவருக்கு முடிசூட்டுவோம், (நாம் அவருக்கு முடிசூட்டுவோமே!) நம்முடைய யாத்திரை முடிவுறும்போதே. விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்!) (ஓ எவ்வளவு இனிமை!) …நம்பிக்கையும் 635 என்ன? மூவகை வெளிப்பாடு! பரலோகத்தின் நம்பிக்கையும் சந்தோஷமும், அவரில் வெளிப்படுகின்றது. விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்!) ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும்…மகிழ்ச்சியுமாம்.
303636 என்ன? பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியும், எல்லாமே கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேவன், சபை, மற்ற ஒவ்வொரு காரியமும், கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வேதாகமம் கிறிஸ்துவாயுள்ளது. வேதாகமம் எழுதப்பட்ட வார்த்தையாயுள்ளது. அது, அவர் வார்த்தையாயிருக்கிறார். அதனுடைய வெளிப்படுத்துதல் அதை வெளிப்படுத்த, ஜீவனின் அத்தாட்சியானது வார்த்தையின் மாம்சத்திற்குள்ளாக வருகிறதாயுள்ளது. ஓ, இது மிகவும் அற்புதமானதல்லவா? இயேசுவின் நாமத்தை…கொண்டு செல். இப்பொழுது இப்பொழுதே கூர்ந்து கவனியுங்கள். ஒவ்வொரு கண்ணிக்கும்…(அதை இப்பொழுது மறந்து விடாதீர்கள்)…ஒரு கேடயமாக; சோதனைகள் உன்னை சூழ்ந்து கொள்ளும்போது, (நீ என்ன செய்ய வேண்டும்?) அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்!) ஓ எவ்வளவு இனிமை! (ஓ எவ்வளவு இனிமை!) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்!) ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்.
304637 அறியாமல் இருக்கிறோம்… உண்மையாகவே, ஆவிக்குரியவர்களாக இருப்பதால், நீங்கள் ஆவிக்குரிய காரியங்களை கவனிக்கிறீர்கள். இதை அறியாமல் இருக்கிறீர்கள். தேவன் அதை அறிந்திருக்கிறார். நீங்கள் திரும்பி கடிகாரத்தைப் பார்ப்பீர்களானால், இப்பொழுது சரியாக, 2.00 மணி, இரண்டாம் இழுப்பின் முடிவு. மூன்றாம் இழுப்பு சமீபமாயுள்ளதே! புரிகிறதா? இயேசுவின் நாமத்தில் வணங்கி, அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுவோம், பரலோகத்தில் ராஜாதி ராஜாவாய் நாம் அவருக்கு முடி சூடுவோம், நம்முடைய யாத்திரை முடிவுறும்போதே. விலையேறப்பெற்ற நாமம்… இரண்டாம் இழுப்பு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதே! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்.
305638 பரிசுத்த ஆவியானவர் அதே பாடலை எடுத்து இந்தவிதமாக எட்டுக் கட்டை மேல் சுருதியில் உரக்க பாடினதை நீங்கள் கவனித்தீர்களா? அடுத்த இழுப்பு சமீபத்தில் உள்ளதே! ஆமென்! ஹு-ஹும். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் தாமதமாகி விட்டதே! துன்பமும் துயரமும்… அது உனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும், ஓ, நீ எங்கு சென்றிடினும் அதைக் கொண்டு செல். விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்!) ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும்…மகிழ்ச்சியுமாம். இப்பொழுது சோதனைகள் வந்தால், நீ என்ன செய்வாய்? இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், ஒவ்வொரு கண்ணிக்கும் ஒரு கேடயமாக; சோதனைகள்…(ஏதோ ஒன்று உங்களை இப்பொழுது அவிசுவாசிக்கச் செய்யும்.)…சூழும்போது, நினைவிருக்கட்டும், அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்!) ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்.
306639 இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை இப்பொழுது, ஒவ்வொருவரும், பயபக்தியுடன் வணங்குவோமாக. இப்பொழுது பாருங்கள். இயேசுவின் நாமத்தில் வணங்கி… 640 [அந்நிய பாஷைபேசுதலும் வியாக்கியானமும் கொடுக்கப்படுகின்றன.—ஆசி.] இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்வீர்களானால், கர்த்தருடைய ஆவியானவர் இந்த கூட்டத்தில் இறங்கி அன்னிய பாஷையில், அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திராத ஒரு மனிதனிடத்தில் பேச; அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திராத வேறொரு மனிதனின் மூலம் அதை வியாக்கியானிக்கிறார். கர்த்தருடைய வார்த்தையாயிற்றே! சத்துரு எதிராக வந்துகொண்டிருந்தபோது, அவர்கள் என்ன செய்வதென்று அறியாதிருந்தனர் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? கர்த்தருடைய ஆவியானவர் ஒரு மனிதன் மேல் இறங்கி, அவர்கள் என்ன செய்யப்பட வேண்டுமென்று வெளிப்படுத்தப்பட்டது. ஓ, என்னே! 641 நம்முடைய தலைகளை இப்பொழுது, தாழ்மையோடு, வணங்குவோமாக. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை; நாம் சந்திக்கும் வரை! சரி, மேய்ப்பரே.