1 நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்குவோமாக. எங்கள் பிதாவே, இன்று காலை நாங்கள் மறுபடியுமாக ஒன்று கூடி வந்துள்ள இந்த கம்பீரமான நேரத்துக்காகவும், கர்த்தருடைய வார்த்தையை நீர் திறந்து எங்களுக்கு முன்னால் இங்கு வைக்கப் போவதற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனாயிருப்பதை எடுத்து, அதை எங்களுக்கு அளித்து, நாங்கள் இந்த ஆராதனை ஸ்தலத்தை விட்டுச் செல்லும்போது, எங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியோடு கூடிய முழு சந்தோஷத்தால் நிறைந்திருக்க வேண்டும் என்று இப்பொழுது ஜெபிக்கிறோம். கர்த்தாவே உம்முடைய மகத்தான விடுவிக்கும் வல்லமையை நாங்கள் காணவும், அது எவ்வாறு சிறைப்பட்டவர்களை விடுதலையாக்குகிறதென்று நாங்கள் அறிந்து கொள்ளவும், “இருந்ததும், இருப்பதும் வரப்போவதுமான காரியங்களை” எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்றும் வேண்டிக்கொள்கிறோம். நாங்கள் இந்தக் காரியங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். 2 நாங்கள் ஒருமித்து உமது வார்த்தையை ஆராயும் இந்நேரத்தில் நீர் எங்களை ஆசீர்வதித்தருளும் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் இங்கிருந்து செல்லும்போது, “வழியிலே பரிசுத்த ஆவியானவராகிய அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?” என்று நாங்கள் கூறப்படும்படி அருள் புரியும்.
23 இன்றைக்கு எங்கும் உள்ள உம்முடைய ஊழியர்களை, உமது சத்தியத்துக்காக, இதற்காக நிற்கும் உமது ஊழியக்காரரை ஆசீர்வதியும். வியாதியஸ்தருக்கான அவர்களுடைய ஜெபங்களுக்கு மறு உத்தரவு அருளுவீராக. அவதியுற்றுக் கொண்டிருக்கிற அவர்களுடைய சுகவீனமான சரீரங்களை சுகப்படுத்தும். 4 கர்த்தாவே, நீர் ஜனங்களின் மத்தியில் சென்று, அங்கு முன் குறிக்கப்பட்ட வித்தை தேடிக் கண்டுபிடித்து, கர்த்தாவே, அவர்களை உள்ளேக் கொண்டு வந்து, எப்படியாவது கர்த்தாவே அவர்களுடைய பாதையில் வெளிச்சம் விழச் செய்யும்படியாக வேண்டிக் கொள்கிறோம். ஏனென்றால் காலம் தாமதமாகிக் கொண்டிருக்கிறதென்றும், சூரியன் மேற்கில் துரிதமாக அஸ்தமித்துக் கொண்டிருக்கிறதென்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். அதன்பின்னர் சீக்கிரத்தில் “இனி காலம் செல்லாது” என்பதாயிருக்கும். அப்பொழுது காலமும் நித்தியமும் ஒன்றாக இணைந்து, தேவனும் அவருடைய ஜனங்களும் ஒன்றாக இணைந்திருப்பார்கள். தேவனே, அந்த சமயத்தில், நாங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டு, அவருடைய மணவாட்டி என்று அழைக்கப்படுபவர்களில் நாங்களும் ஒருவராக எண்ணப்பட வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் இன்று ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது, எங்களுக்கு உதவி செய்யும். நாளை என்ன வைத்துள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் கர்த்தாவே, அது நீர் எங்களுக்காக வைத்துள்ளது என்று நாங்கள் அறிந்துள்ள வரைக்கும், நாங்கள் எதையும் ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறோம். இந்த ஆசிர்வாதங்களை தேவனுடைய மகிமைக்கென்று நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம்.
35 நான் உள்ளே நடந்து வந்தபோது, கர்த்தருடைய ஆராதனைக்காக ஜனங்கள் ஒன்று கூடியுள்ளதைக் கண்டு நான் நிச்சயமாகவே இந்தக் காலை மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இப்பொழுது இன்றிரவுக்கான அறிவிப்பை நாங்கள் கொடுக்கிறோம். இன்றிரவு சுகமளிக்கும் ஆராதனை இருக்கும். நாங்கள் வியாதியஸ்தருக்காக இன்றிரவு ஜெபிப்போம். ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் அவர்கள்… 6 சற்று நேரத்துக்கு முன்னால் நான் உள்ளே நுழைந்தபோது, என் மகன் பில்லி, “அப்பா வெகு தூரத்திலிருந்து காரோட்டி வந்துள்ள ஒரு பெரிய மனிதர், ஒரு ஏழை மனிதன் இங்கிருக்கிறார்” என்றான். எனவே, “அவரை நான்—நான் அந்த அறையில் உட்காரவைத்திருக்கிறேன்” என்றான்.
47 நேற்றிரவு நான்—நான் தாமதமாக வீடு திரும்பினேன். எனவே இன்று காலை நான் பேச நினைத்திருந்த ஞாயிறு பள்ளி பொருளைக் குறித்து அதிகம் படிக்கவில்லை. எனவே ஏதோ ஒரு சகோதரன் பேச நான் கேட்டதை ஆதாரமாகக் கொண்டு, ஒரு சில குறிப்புகளை மாத்திரம் நான் எழுதி வைத்துக் கொண்டு, இன்று காலைக்கான ஞாயிறு பள்ளி பாடத்துக்கென ஒரு பொருளைத் தெரிந்துக் கொண்டு மாலை ஆராதனைக்கு நாம் ஆயத்தப்படும்போது, நன்றாக ஆயத்தம் செய்யலாமென்று எண்ணினேன். 8 பில்லி என்னிடம், “வியாதியாயுள்ள ஒரு மனிதன் அங்கிருக்கிறார். எனவே நான்—நான்—நான் சென்று அவரைப் பார்த்தால் நலமாயிருக்கும்” என்றான். எனவே நான் சற்று முன்பு அறைக்குள் சென்றேன். அவர் ஏறக்குறைய என் வயதுள்ள சகோதரர், அவருடைய மனைவியும் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தார். சற்று முன்பு பரிசுத்த ஆவியானவர் அறைக்குள் எங்கள் மத்தியில் இறங்கி வந்தார். 9 சற்று யோசித்து பாருங்கள், சுகமளிக்கும் ஆராதனையைப் பற்றி கூறியவுடனே அவர் அங்கு வந்து விட்டார். புரிகிறதா? அவர் அந்த சகோதரனிடம், அவர் என்னவெல்லாம் செய்தாரென்றும், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும், அவருக்கு இத்தொல்லை நேரிடக் காரணம் என்னவென்றும், அவர் எங்கிருந்து வருகிறாரென்றும் அவரைக் குறித்து எல்லா விவரத்தையும் கூறினார். ஒரு பெரிய இருண்ட நிழல் அந்த அறையில் தொங்கி கொண்டிருந்தது. பின்னர் அது வெளிச்சமாக, வெளிச்சமாக, வெளிச்சமாக, வெளிச்சமாக தொடங்கினது, முடிவில் பரிசுத்த ஆவியானவர் ஆதிக்கம் கொண்டார்.
510 இப்பொழுது, அந்த மனிதன் இங்கு எங்கோ பின்னால் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன், அவரும் அவருடைய மனைவியும் ஒருக்கால் கட்டிடத்துக்குள் வரமுடியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் எப்படியும் ஆராதனைக்குத் தங்கப் போவதாக கூறினார்கள். அவர்கள் வாஷிங்டனிலுள்ள யாகிமாவிலிருந்து காரோட்டி இங்கு வந்துள்ளனர். அவர் சுவிசேஷ ஊழியர். ஆனால் அங்கே தேவனுடைய கிருபையைப் பாருங்களே! அவர் மன நல மருத்துவ விடுதியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். பரிசுத்த ஆவியானவர் இதையெல்லாம் வெளிப்படுத்திக் கொடுத்தார். மருத்துவர்கள் அந்த மனிதனுக்காக தங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்தனர். ஆனால் அந்த நிலையை மாற்றி அமைக்க தேவனிடமிருந்து ஒரு சிறு தொடுதல் அவசியமாயிருந்தது. மின்சார அதிர்வு சிகிச்சை நல்லதுதான். ஆனால் “இருளில் சுடுதல்” என்று நாம் கூறுவது போல் அது உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள், அது உங்கள் நிலையை மோசமாக்கவும் செய்யக் கூடும் பாருங்கள், ஏனெனில் அவர்கள் அந்த மருந்தை உங்களுக்குள்ளாக உட்செலுத்தும்போது, நீங்கள் அறிந்துள்ள ஒவ்வொன்றையும் மறந்துவிடுவீர்கள். ஆனால் தேவனாகிய கர்த்தர், அவருடைய கிருபையும் இரக்கமும் எப்படியாய் உள்ளது! நான் ஒரு வார்த்தை ஜெபிப்பதற்கு முன்பே, அவர் குணமடைந்து விட்டார் பாருங்கள்? அதைச் செய்ய தேவனுடைய பிரத்தியேக ஒன்று, தேவனுடைய பிரத்தியேக தொடுதல் அவசியமாயிருந்தது. இதை நான் கூறியிருக்கக் கூடாது…ஆம், அந்த மனிதன் இப்பொழுது இங்கிருக்கிறாரா என்று நான் சுற்றும் முற்றும் பார்க்கிறேன். உம்மால் இன்று வரமுடியுமா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை.
611 இந்த வாரம் நான் தங்கியிருந்த நகர்புறத்தில்…அங்குள்ள என் நண்பர்களை நான்—நான்—நான் மிகவும் நேசிக்கிறேன். இந்த பெரிய கூட்டங்களுக்கு முன்பு அது எனக்கு சிறு விடுமுறை. நீங்கள் பாருங்கள். இந்த சகோதரர்களுடன் அணில் வேட்டைக்கு செல்வதற்காக நான் வீடு திரும்பி அங்கு செல்லவிருக்கிறேன். நான் அங்கு தங்கும் குடும்பம், சரியாகக் கூறினால், குடும்பங்கள்…மிகவும் அருமையானவர்களைக் கொண்டது. அந்த மனிதன் உண்மையான சகோதரன், அவர்கள் நண்பர்களாய் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் வேட்டை நாய்கள் வளர்ப்பதில் அதிகப் பிரியம் கொண்டவர். அவர் ஒரு பட்டி நிறைய நாய்களை அங்கே வைத்திருக்கிறார். அங்கு மிகவும் அழகான சிறு வேட்டை நாயைக் கண்டேன். அது சாதாரண நாயின் பாதி அளவு உயரமும், இரண்டு மடங்கு நீளமும் கொண்டது. அவை வீடு முழுவதும் ஓடித்திருகின்றன. அப்பொழுது நான் “அப்படிப்பட்ட ஒன்றை வளர்ப்பதில் ஜோவுக்கு மிகவும் பிரியமாயிருக்கும் அல்லவா!” என்று எண்ணினேன்.
712 ஆனால் உண்மையாகவே, அரிசோனாவில் அது எனக்கு உபயோகமிராது. அது கற்றாழை முட்செடிகளில் சிக்கிக் கொள்ளும். அதுவே அதன் முடிவாயிருக்கும். எனவே நான், “இந்த நாய்களை அங்கு வளர்க்க முடியாது…அந்த பாகத்தில், அங்கே அவர்கள் வேட்டை நாய்களை உபயோகிப்பதில்லை. ஏனெனில் அவை…அந்த நகரின் சீதோஷ்ண நிலையும் மற்றும் அங்கு கற்றாழை முட்செடிகளும் வளருகின்றன. நாய்கள் கற்றாழ முட்செடிகளில் சிக்கிக் கொண்டு அவைகள் மரித்து விடும். உண்மையாகவே அந்த வேட்டை நாய் அங்கே வெளியே சென்றால் ஒரு—ஒரு ஓநாயோ அல்லது மற்ற எவையாவது கொல்ல வகையுண்டு.” 13 ஆகையால் அந்த மனிதன் என்னிடத்தில், “வேண்டுமானால் நீங்கள் இந்த நாயை எடுத்துச் செல்லுங்கள்” என்றார். ஆனால் என்னால்—என்னால் அதைக் கொண்டு செல்ல முடியாது. அவரை நான்—நான் பாராட்டினேன். அது அவருக்கு மிகவும் விருப்பமான நாய்களில் ஒன்று என்று பிறகு கண்டறிந்தேன்.
814 இந்த மனிதனுக்கு அருமையான மனைவியும் சிறு பிள்ளைகளும் உள்ளனர். அன்றொருநாள் அவள் தன் ஓல்ட் மோபைல் காரை பின்புறமாக ஓட்டத் துவங்கினாள். அந்த குட்டி நாய் கிட்டத்தட்ட இந்த அளவு நீளம் மாத்திரமே இருந்தது, வெறுமென ஒரு குட்டி, அவள் அந்த காரை நேராக அதன் மீது ஏற்றிவிட்டாள். அந்த ஓல்ட் மோபைல் கார் அந்த குட்டி நாயின் மீது பின்பக்கமாக ஏறினவுடனே, உங்களுக்குத் தெரியுமா, அது காருக்கு பின்னல் இருந்தபடியால், அந்த கற்களைக் கொண்ட வழியில் பின்பக்கமாக அந்த காரை எடுத்தபோது, அதன் வயிற்றுப் பகுதியின் மீது ஏறி நசுங்கிவிட்டது. மனைவி கால்நடை மருத்துவ சாலைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக… அந்த மருத்துவ சாலையில் அவர்கள் உறக்க மருந்து கொடுத்து அதை கொன்றிருப்பார்கள்…புரிகிறதா? அப்பொழுது வேறொரு இளைஞன் என்னுடன் இருந்தான். அவன் அங்கு அடைந்தவுடன், “இது என் நாயாயிருந்தால், அதை சுட்டுக் கொன்றிருப்பேன். இப்படியா அதை வேதனை அனுபவிக்க விடுவது” என்றான். 15 அப்பொழுது நான், “நாங்கள் அதை சுடமாட்டோம்” என்றேன். மேலும் நான், “நாம் சற்று நேரம் காத்திருந்து பார்ப்போம்” என்றேன். அதன் பின்னர் எல்லோரையும் வெளியே போகும்படி செய்து விட்டு, அந்த நாய்க்குட்டிக்காக ஜெபித்தேன். அது குணமடைந்து, முன் தாழ்வாரம் வரைக்கும் என் பின்னால் வந்தது. அது, [சபையோர் களிகூருகின்றனர்—ஆசி] ஆம், அது…பாருங்கள்? “நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்கள் அவைகளைப் பெற்றுக் கொள்வீர்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்.” “எவைகளானாலும்.” அது தான் நம்முடைய தேவனாகிய கர்த்தர் இல்லையா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.] அவர்—அவர் ஆச்சரியமானவர், அற்புதமானவர். நாம் நிச்சயமாக இந்தக் காலையில் அவரை நேசிக்கிறோம், அவரை அறிந்து எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம்.
916 பாருங்கள், அன்றொரு நாள், ஒரு வயோதிக தம்பதிகள், இந்த—இந்த விசுவாசிகளின் சபையில் சிறந்த அங்கத்தினராக விளங்கும் ஒருவரின் தாயும் தந்தையும் கண்டேன். அந்த தாய்க்கு சுமார் ஓ, நூறு வயதிருக்கும் என்று நான் யூகிக்கிறேன். அந்த தந்தைக்கு கூட அவ்வாறே இருக்கும். இந்த மனிதன் ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டு காலமாக அசைய முடியாமல், மல்லாந்து படுத்துக் கொண்டிருந்தார். அவரால் ஒருக்களித்துக் கூட படுக்க முடியாது. பன்னிரண்டு ஆண்டு காலமாக அந்நிலையில் படுத்திருந்தார், வயோதிபமே அதற்கு காரணம். தாய்க்கு ஏறக்குறைய அவருடைய வயது, நூறு வயதுக்கு அருகாமையில் இருக்கும் என்று நான் யூகிக்கிறேன். பாவம் அந்த ஏழை அம்மாளுக்கு புத்தி சுவாதீனம் போய்விட்டது. யாரோ அவர்களுடைய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொள்வதாக கற்பனை செய்து கொள்வார்கள். நாங்கள் எல்லோரும்—வாலிபரும் வயோதிபரும்…மேசையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது நான், “நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?” என்று கேட்டேன். நான் தங்கியிருந்த வீட்டின் ஸ்திரீயின் பெற்றோர் தான் இந்த வயோதிப தம்பதிகள். நான் அவளைப் பார்த்து, “நீயும் கூட அந்த வழியில் தான் சென்று கொண்டிருக்கிறாய். அது முற்றிலும் உண்மை, நாம் ஒவ்வொருவருமே” என்றேன். பார்த்தீர்களா?
1017 நம்முடைய பாடத்தை நாம் துவங்குவதற்கு முன்பு இதைக் குறித்து சற்று யோசித்து பாருங்கள். அதை நோக்கியே நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதற்காக தவித்துக் கொண்டிருக்கிறீர்கள்? உயிர் வாழ்வதற்கே, நீங்கள் எதற்காக உயிர் வாழ்கின்றீர்கள்? மரிப்பதற்காக. அப்படியிருக்க, தேவன் நமக்கு அளித்துள்ள நித்திய ஜீவனை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது மூடத்தனமாக செயலாயிருக்குமல்லவா? அதைக் குறித்து நாம் என்ன நினைக்கிறோம். அதிலிருந்து நமது கவனத்தை வேறொன்றுக்கு இழுக்கும்படியாக நமது சிந்தையில் என்ன—என்ன உள்ளது? உங்களுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் இருந்து, நீங்கள் இந்தியானாவை அல்லது வேறெந்த நாட்டை அல்லது வேறெந்த தேசத்தையாவது அல்லது முழு உலகத்தை சொந்தமாக வைத்திருந்தாலும், அதனால் என்ன பயன்? போதிய நாட்கள் வாழ்ந்து பின்பு, நீங்களும் மரிக்க வேண்டிய இடத்துக்கு வர வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். பாருங்கள்? ஒவ்வொரு நாளும், உங்கள் இருதயம் விடாமல் துடிக்கும் போதெல்லாம், நீங்கள் அதை நோக்கியே சென்று கொண்டிருக்கிறீர்கள். புரிகிறதா? உங்களுக்கு, உங்களுக்கு வெற்றியே கிடையாது. நீங்கள் தோல்வியடையும் பக்கத்தில்தான் இருக்கிறீர்கள். நீங்கள் இழக்கத்தான் வேண்டும். ஆனால் தேவனுடைய வாக்குத்தத்தம், “என் நிமித்தமாக தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக் கொள்வான்” என்றுரைக்கிறது என்பது நினைவிருக்கட்டும். இப்பொழுது, ஜீவனைக் காட்டிலும் மேலான பொக்கிஷம் வேறெது உள்ளது? நீங்கள் உலகம் முழுவதையும் உங்கள் சொந்தமாக்கிக் கொண்டிருந்தாலும், நீங்கள் ஜீவனை பெறுவீர்களானால், உலகிலுள்ள மிகப் பெரிய பொக்கிஷத்தை கண்டுபிடித்தவர்களாயிருப்பீர்கள். நான்…விரும்புவது…
1118 என்னுடைய இடப் பக்கத்தை நோக்கிப் பார்த்து, இப்பொழுது கர்த்தருடைய கிருபையின் மற்றொரு வெற்றிச் சின்னத்தை மீண்டும் கண்டேன். சில வாரங்களுக்கு முன்பு என்னைத் தொலைபேசில் கூப்பிட்டார்கள். இச்சபையின் அருமையான அங்கத்தினர் ஒருவர்… இதை சபை என்று அழைக்க நான் விரும்பவில்லை. இதை நான் அழைக்க… நான் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள், “நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர்கள்?” என்று கேட்டார்கள். நான், “எந்த சபையையும் இல்லை” என்றேன். அவர்கள், “நீங்கள் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள்?” என்றார்கள். நான், “ஒரு ஸ்தாபனத்தையும் சார்ந்தவன் அல்ல” என்றேன். அவர்கள், “அப்படியானால் நீங்கள் எதை சேர்ந்தவர்கள்!” என்றார்கள். நான், “ஒரு ராஜ்யத்தை” என்றேன். 19 ஒரு ராஜ்யத்தையே! நாம் எல்லோரும் ஒரே ஆவியினால் அந்த ஒரே ராஜ்யத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். ஒரே ஆவியினால் யாவரும் இந்த இராஜ்ஜியத்துள்ளாக இருக்கிறோமே! இயேசு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று ஜெபம் பண்ணுங்கள்” என்றார். இப்பொழுது, அவர் மறுரூப மலையின் மேல் நிற்பதற்கு முன்பு ஒரு நாள், அவர், “இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். அது மறுரூபமலையின் மேல் முன் கூட்டியே காண்பிக்கப்பட்டது என்று ஏற்கனவே நாம் சிந்தித்திருக்கிறோம். மேலும் வேதாகமம், “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது” என்று உரைத்துள்ளது. எனவே இவர்கள் ஒரு இராஜ்யத்தை சேர்ந்த மக்கள், இது இவர்களுடைய வீடல்ல என்று அறிக்கையிடுபவர்கள். இது நம்முடைய வீடல்ல. ராஜா வந்து ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
1220 நான் ஒரு அவசர நிலைமையில் அழைக்கப்பட்டேன். எனக்குத் தந்தையைப் போல் இருந்து வருகிற வயோதிப சகோதரர். அவர்…அவரை எனக்கு நீண்ட காலமாகத் தெரியாது. ஆனால் தண்ணீர் ஞானஸ்நானத்திற்காக அவரைக் கொண்டு சென்ற நாள் எனக்கு நினைவிருக்கிறது. அவருக்கு விரைவில் தொண்ணூற்றொன்று வயதாக உள்ளது. அவருடைய அருமையான மனைவி என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, அவர்கள் முன்பு மருத்துவச்சியாக பணியாற்றியவர்கள், “அவருக்கு இருதயம் முழுமையாக செயல்பட தவறி விட்டதென்றும்; மேலும் அவருக்கு ஓ, அந்த பெயர்…எனக்கு ஞாபகம் வரவில்லை. மாரடைப்பு. [ஒரு சகோதரி, “இரத்த குழாய் சார்ந்த மாரடைப்பு” என்கின்றார்.—ஆசி.] இரத்தக் குழாய் சார்ந்த மாரடைப்பு. உங்களுக்கு நன்றி. இரத்தக் குழாயில் மாரடைப்பு ஏற்பட்டு, இருதயம் செயல்பட தவறி விட்டதாகவும், மருத்துவர் அவரைக் கைவிட்டதாகவும், அவர் மரித்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூறி, அவருக்காகவே என்னை அழைத்தார்கள்.
1321 நான் என் பழைய ஃபோர்ட் காரில் ஏறி, என்னால் முடிந்த வரை ஓஹையோவுக்கு செல்லும் சாலையில் வேகமாக சென்றேன். சக்கரங்களில் ஒன்று சரியாக பொருத்தப்பட்டிருக்கவிலை என்பதை நான் அறிந்திருக்கவில்லை. எனவே அதன் விளைவாக அந்த டயர் அதிலிருந்து வெளியே வந்துவிட்டது. எனவே நான்…அங்கு செல்ல பெட்ரோல் நிறைக்கும் ஸ்தலத்தை அடைந்து, அதை விட்டு வெளியே வரும்போது ஏறக்குறைய பதினோரு மணி ஆகிவிட்டது. நான் அவரைக் குறித்து கவலை கொண்டிருந்தேன். அவரை நான்—நான் நேசிக்கிறேன். இது இப்படியே தொடர்ந்து கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால், ஏன்? சீக்கிரத்திலோ அல்லது காலம் தாழ்ந்தோ, நாம் ஒருவரையொருவர் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றறிவேன். 22 ஆனால், அது எடுத்துக் கொள்ளப்படுதலைப் பாதிக்காது. புரிகிறதா? இல்லை. நித்திரையடைந்தவர்கள் முதலாவதாக எழுந்திருப்பார்கள். அவர்கள் முதலில் சென்ற சிலாக்கியம் பெற்றவர்கள். அவர்கள் முதலில் வருவார்கள். புரிகிறதா? பார்த்தீர்களா? கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. தேவ எக்காளம் தொனிக்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பர்கள். அப்பொழுது நமக்கு அருமையானவர்களை நம் கண்கள் காணும். பின்பு நாம் ஒரு நிமிடத்தில், ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாகி, அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். புரிகிறதா? முதலில் சென்றவர்கள் உயிரோடிருப்பவர்களைக் காட்டிலும் சிலாக்கியம் பெற்றவர்கள்.
1423 நான் பெட்ரோல் நிறைக்கும் இடத்திலிருந்து பதினோரு மணிக்குப் புறப்பட்டபோது பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “அவரைக் குறித்து கவலைப்படாதே. நீ மறுபடியும் அவருடன் தெருவில் கைகுலுக்குவாய் அவர் சபைக்கு வருவார்” என்றார். மரணத் தருவாயிலிருந்த தொண்ணூற்றொன்பது வயதான மனிதர். அவருடைய மனைவியையும் அவருக்கு அன்பார்ந்தவர்களையும் லைமாவிலுள்ள மருத்துவமனையில் நான் சந்தித்த போது, அவருடைய உடல் நிலைமையை அவர்கள் என்னிடம் எடுத்துக் கூறினார். நாங்கள் அங்கிருந்த அவரைக் காண உள்ளே சென்றோம். அப்பொழுது அங்கிருந்தவர், “இவருக்கு வினோதமான ஒன்று நடந்தது. அவர்—அவர் உடல் நிலை பதினோரு மணி முதல் மாற்றமடையத் துவங்கினது” என்றார். நல்லது, அது…நான்…கர்த்தர் அவர்களுக்கு எத்தனையோ காரியங்களைக் காண்பித்திருந்தார். அதைக் குறித்து நான் அவர்களிடம் கூறவில்லை என்பதை அவர்கள் அறிவர், ஏனென்றால் அவர்களே “அவர் தேறத் துவங்கினார்” என்பதை முதலில் என்னிடத்தில் கூறினார்கள். நான் அவர்களிடம் உண்மையையே கூறுவேன் என்று அவர்கள் அறிந்திருந்தனர். 24 ஆகையால், சென்ற ஞாயிறு நான் லூயிவில்லிலுள்ள ப்ளு போர் உணவு விடுதிக்கு சென்றிருந்தபோது …ஞாயிறு பிற்பகலில் உணவு உண்ண இந்த சபையோரில் என்பது சதவிகிதம் பேர் அங்குதான் கூடுகின்றனர் என்று நான் கருதுகிறேன். தெருவில் வருவதை நான் கண்டது யாரென்று நினைக்கிறீர்கள்? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நம்முடைய சகோதரன் டெள தெருவில் வருவதை நான் கண்டபோது, என் இருதயம் களிப்பினால் துள்ளியது. அவர் எனக்கு சொன்னபடியே நடந்தது. நான் அவருடன் தெருவில் கைகுலுக்கினேன்.
1525 அதன்பின்னர் சென்ற ஞாயிறு இரவன்று நான்—நான் இங்கு வந்து இணையும் நேரமும் அடையாளமும் என்னும் பொருளின் பேரில் பேசினேன். எனவே…அவர் உரைத்தது அவ்வாறே நிறைவேறினது. இதோ அவர் தேவனுடைய கிருபையின் வெற்றிச் சின்னமாக இன்று சபையில் நமது பக்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவர் பிராணவாயு கூடாரத்தில் இருந்தபோது, அவருடன் நான் கைகுலுக்கி, “சகோதரன் டெள, நீங்கள் நன்றாகி விடுவீர்கள். நான் மறுபடியும் உங்களைச் சபையில் காண்பேன். அது கர்த்தர் உரைக்கிறதாவது ” என்றேன். பார்த்தீர்களா? இதோ அவர் இப்பொழுது சபையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், சகோதரர் டெள.
1626 நான் தவறாக கூறவில்லையென்றால், சற்று நேரத்துக்கு முன்பு நான் குறிப்பிட்ட போதகர் இவர் என்று நினைக்கிறேன். பரிசுத்த ஆவி உள்ளே வந்து இந்த எல்லாக் காரியங்களையும் வெளிப்படுத்திக் கொடுத்தார். அது எப்படி நடந்ததென்றும், அவர் என்ன செய்தார் என்று அவரிடத்தில் கூறி, அது எப்படி சம்பவித்தது என்றும் கூறி, அது எப்படி நிறைவேறினது, அதுமுதல் சம்பவித்த மற்றெல்லாவற்றையும், மற்றும் அவருடைய குடும்பத்தாரின் குணாதிசயங்களையும், அதைக் குறித்த எல்லாவற்றையும் அவருக்கு எடுத்துக் கூறினார். மேலும், “அது முடிந்துவிட்டது” என்றும் கூறினார். இதோ அந்த போதகர் இங்கு வலது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஐயா, நீங்கள் உங்களுடைய கரத்தை சற்று உயர்த்துவீர்களா? அதோ அவரும் அவருடைய மனைவியும், சற்று முன்புதான். இதோ சகோதரர் டெள, இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஓ, என்னே! 27 அவர் அற்புதமானவர் அல்லவா? [சபையோர், “ஆமேன்” என்கின்றனர்.—ஆசி.] “முன் நடந்தவை, இப்பொழுது நடக்கிறவை, இனி நடக்கப் போகிறவை.” ஒன்று, இரண்டு, மூன்று சாட்சிகள். “முன் நடந்தவை. நீங்கள் முன்பு செய்தவை; இப்பொழுது நடந்து கொண்டிருப்பவை; இனி நடக்கப் போகிறவை,” ஒவ்வொரு முறையும் அது சரியாக வார்த்தையுடன் இணையாயுள்ளது. தேவன் மாத்திரமே அதை செய்யக் கூடும். ஓ! இவைகளுக்காக நாம் மிக்க மகிழ்ச்சி கொண்டவர்களாயிருக்கிறோம் அல்லவா? [“ஆமென்”]
1728 இப்பொழுது, நான் சிறிது கூடுதலான நேரத்தை எடுத்துக் கொள்ளும் காரணம் என்னவெனில், பில்லி சென்று அவன் மனைவியையும் குழந்தையையும் கூட்டிக் கொண்டு வர வேண்டும். அவன், “அப்பா, நான் திரும்பி வரும் வரைக்கும் பிரசங்கத்தை துவங்க வேண்டாம்” என்று கூறிச் சென்றான். அவன் திரும்பி வந்து விட்டான் என்று நான்—நான் நினைக்கிறேன். நானும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது. உங்களை நான் நான்கு மணிநேரம் வழக்கமாக தொல்லை செய்வதை நிறுத்திக் கொண்டு, பிரசங்கத்தை முப்பத்தைந்து அல்லது நாற்பது நிமிடங்கள் மாத்திரம் நிகழ்ந்தலாம் என்றிருக்கிறேன். நீங்கள் பாருங்கள், அவ்வாறு பிரசங்கிக்க முயற்சிப்பேன். 29 இப்பொழுது, ஒரு முறை நான் சிக்காகோவில் முப்பது, முப்பத்தைந்து நிமிடங்கள் மாத்திரமே பிரசங்கித்த போது, என்னைக் குறித்து மதிப்புரை ஜனங்களால் அளிக்கப்பட்டது. சென்ற ஞாயிறு இரவு நாற்பத்தைந்து நிமிடங்கள் மாத்திரமே பிரசங்கித்தேன். அப்பொழுது பில்லி, “அப்பா, நீங்கள் உண்மையில் முன்னேறிக் கொண்டு வருகிறீர்கள். அதற்காக உங்களைக் குறித்து நான் பெருமை கொள்கிறேன்” என்றான். 30 நல்லது, இன்று காலை இதை சிறு ஞாயிறு பள்ளி போதனை மாதிரியைப் போன்றாக்குவோம். உங்களை நீண்ட நேரம் நான் வைத்திருக்கப் போவதில்லை. ஆகையால் நீங்கள் நேரத்தோடு சென்று பகல் உணவை அருந்தி, ஜெபித்து, மறுபடியும் இன்றிரவு சுகமளிக்கும் ஆராதனைக்கு திரும்பி வரலாம். நாங்கள் இன்றிரவு ஜெப வரிசையை அமைத்து, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம்.
1831 இப்பொழுது, சுற்று வட்டாரத்திலுள்ள யாராகிலும் வியாதியாயிருப்பதை நீங்கள் அறிந்து, அவர்களுக்கு ஜெபம் தேவைப்பட்டால், அவர்களை இன்றிரவு இங்கு கொண்டு வாருங்கள். பாருங்கள்? அவர்களை எவ்விதத்திலாவது கொண்டுவர முடியுமானால், இங்கு கொண்டு வாருங்கள். பாருங்கள்? இன்றிரவு அவர்களை இங்கு கொண்டு வருவதே முக்கியமான காரியம், நாம் எல்லோரும் ஒன்றாக சந்திக்கலாம். அந்த விதமாக…அழைப்புக்கு இணங்கி ஒவ்வொரு இடத்துக்கும் செல்வது கடினமானது. அப்படிச் செய்யும்போது, யாரையாகிலும் விட்டுவிட நேரிடுகிறது. அதன் விளைவாக மனஸ்தாபம் உண்டாகிறது. ஆனால் அவர்கள் எல்லோரையும் என்னால் ஒரே இடத்தில் கொண்டு வர முடிந்தால், அவர்களுக்காக நான் ஜெபிக்கலாம். இப்பொழுது, நீங்கள்…ஜனங்கள் ஜெபிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால், அவர்கள்…, நீங்கள், “அவர்களுக்காக ஜெபம் செய்வீர்களா?” என்று கேட்கலாம். ஓ, நிச்சயமாக, அவர்களுக்காக ஜெபிக்கப்படும். அவர்களைக் கொண்டு வாருங்கள். கர்த்தருக்கு சித்தமானால், ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்க நாங்கள் இங்கிருப்போம். ஏனெனில் மூன்றாம் இழுப்பு அசையத் தொடங்கி விட்டது என்பதற்காக நான் உணருகிறேன். நீங்கள் பாருங்கள், அது இப்பொழுது எனக்குள் இருக்கிறது. நான்—நான்—நான் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்க விரும்புகிறேன்.
1932 இன்று காலையில் நமக்கு நன்றாகத் தெரிந்த வேத வாக்கியத்துக்கு நாம் திருப்புவோம். நேற்றிரவு நான் அதை அவசரத்தில் தேர்ந்தெடுத்தேன். எனக்கு அதிக உறக்கம் வந்தது. எனவே இதனுடன் சம்பந்தப்பட்ட இன்னும் சில வேதவாக்கியங்களை குறித்து வைத்துக் கொண்டேன். ஒரு விதமான பாராட்டு தெரிவிக்கவே எடுத்துள்ளேன். ஒரு முறை ஒரு சகோதரர் இந்த பொருளை உபயோகிப்பதைக் கண்டேன். நான் நினைத்தேன்…நான் குறித்துக் கொண்டேன். “அதை குறித்துக் கொள்ளலாம். ஏனென்றால் அது எப்பொழுதாவது நமக்கு உபயோகமாயிருக்கும்” என்று நான் எண்ணினேன். அநேக முறை நாம் அதைச் செய்கிறோம். இங்குள்ள உங்களில் அநேகர் ஒரு துண்டு காகிதத்தை வைத்திருப்பதைக் கவனித்துப் பார்க்கிறேன். ஒரு போதகர் கூறும் ஒன்று உங்களுக்கு—உங்களுக்கு முக்கியமானதாய் தோன்றக் கூடும். அது உங்கள் இருதயத்தைத் தொடக்கூடும். பரிசுத்த ஆவி அப்படி செய்வாரானால், அதிலிருந்து நீங்கள் தொடங்கி, கர்த்தருக்கென்று ஒரு செய்தியை உருவாக்கக் கூடும். அது நல்லது தான். நான் செல்லும் இடங்களிலெல்லாம், போதகர்களும் மக்களும் குறித்துக் கொள்வதை நான் கூட்டங்களில் கண்டிருக்கிறேன். அது நல்லது. அதற்காகத் தான் நாம் இங்கிருக்கிறோம், அதற்காகவே நாம் இங்கிருந்து, இந்த பாதைகளில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முயற்சிக்கிறோம்.
2033 இப்பொழுது வெளிப்படுத்தல் 3-ம் அதிகாரத்திலுள்ள சபை காலங்களுக்குத் திருப்புவோம்…ஒவ்வொரு சபைக்காலத்தைக் குறித்தும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இப்பொழுது நாம்…நாம்…அங்கே. ஆம். இந்த ஒரு பொருளை நான் தெரிந்து கொண்டு, பரிசுத்த ஆவியைக் கொண்டு, அதன் பேரில் நூறு ஆண்டுகள் பிரசங்கித்து, அப்பொழுதும் அதிலுள்ள எல்லாவற்றையும் என்னால் எடுத்துக் கூற இயலாமல் போகும். ஏனெனில் இந்த பொருள், வேதத்திலுள்ள மற்ற பொருள்களைப் போல், ஒன்றோடொன்று இணைந்துள்ளது. இன்று காலை நான், நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்? என்பதை என் பொருளாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது, இதை நான் தெரிந்து கொள்ளக் காரணம், எழுப்புதலின் ஆவியை நாம் ஒருபோதும் அணைந்து போகச் செய்யக் கூடாத ஒரு நேரமாய் இது உள்ளது என்றே நான் கருதுகிறேன். நாம் எழுப்புதலை கொண்டவர்களாய், அதை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உயிர்பிக்க வேண்டும். கிறிஸ்து அவனுக்குள் ஜீவிப்பதற்காக அவன் அனுதினமும் சாக வேண்டியிருந்ததாக பவுல் கூறினான். நாமும் நமக்குள் இருக்கும் எழுப்புதலை சாக விட்டுவிடக் கூடாது. இப்பொழுது வெளிப்படுத்தல் 3-ம் அதிகாரம், 21-ம் வசனம் தொடங்கி, நாம் இதை வாசிப்போம். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடு கூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்க்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். என்றெழுது என்றார்.
2134 அதைக் குறித்த அமைப்பினை—நீங்கள் கவனித்தீர்களா? பார்த்தீர்களா? “என்னுடைய சிங்காசனத்திலே உட்காரும்படிக்கு” “என்னுடைய சிங்காசனத்தின் மேல்” என்றல்ல, “என்னுடைய சிங்காசனத்தில்” அது அவருடைய ஆதிக்கம். பாருங்கள்? கிறிஸ்து அந்த நேரத்தில் தேவனுடைய முழு ஆதிக்கத்தையும் ஆளுகை செய்யும் போது, சபை அவருடன் கூட இருக்கும், மணவாட்டி முழு ஆதிக்கத்திலேயும் அவருடைய சிங்காசனத்திலே அவருடன் கூட இருப்பாள். பார்த்தீர்களா? “என்னுடைய சிங்காசனத்தின் மேல்” அல்ல. ஆனால் “என் சிங்காசனத்திலே.” பாருங்கள், அவருடைய ஆதிக்கம் பரந்துள்ள இடமெல்லாம் ஒரு சிங்காசனம் ஆதிக்கத்தின் மேல் உள்ளது. அவருடைய ஆதிக்கம் அதன் எல்லைகள் வரைக்கும் பரந்துள்ளது. இது நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும். அதைக் குறித்து யோசித்துப் பாருங்கள்.
2235 இப்பொழுது, இதை நாம் ஆராயும் போது; என் நோக்கம் இங்கு வந்து ஜனங்களாகிய உங்களிடம் ஐக்கியம் கொள்ளுதல் அல்ல. நான் அதைச் செய்ய விரும்புகிறேன். ஆனால் அதைச் செய்ய எனக்கு ஒரு தருணம் கிடைக்குமானால், உங்கள் வீடுகளுக்கு வந்து உங்களுடைய கரத்தைக் குலுக்கி அமர்ந்து, உங்களுடன் உணவு உண்டு, மரத்தின் நிழலில் சிறிது நேரம் உறவாடி ஐக்கியம் கொள்ளுவேன். ஆனால் நாம் இங்கு வரும்போது, நாம் இங்கே ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே வந்திருக்கிறோம். இது திருத்தப்படுதலின் வீடாய் உள்ளது. இது சிங்காசனமாய் உள்ளது. இது தேவனுடைய சிங்காசனமாய் உள்ளது, தேவனுடைய வீட்டிலிருந்துதான் நியாயத்தீர்ப்பு புறப்பட்டுச் செல்கிறது. இங்குதான் நாம் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்து ஒன்று கூடுகிறோம். கிறிஸ்தவர்கள் மாத்திரமே அவ்வாறு அன்பு கூற முடியும், ஆனால் இங்கே, நாம் இங்கு நாம் பரிசுத்த ஆவியின் ஒரு—ஒரு—ஒரு—ஒரு வழி நடத்துதலின் கீழ் இருக்கிறோம். பரிசுத்த ஆவி நமது மத்தியில் இருக்கிறார். நாம் இங்கே இருப்பது…நாம் நமது குறைகள் எங்கு உள்ளவென்று காணவும், நம்முடைய குறைவையும், நாம் எங்கே இருக்க வேண்டும் என்பதை எப்படி புரிந்து கொள்வது என்றும், நாம் எந்த நிலையை இப்பொழுது அடைய வேண்டும் என்றும், நாம் எங்கே, நாம் எங்கே இருக்க வேண்டும் என்றும் இங்கு நாம் கணக்கு பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அதை நான் நாம் ஆராய வேண்டும். ஊழியக்காரர்கள் அந்த மக்களுக்காக அந்த இடங்களை ஆராய்கின்றனர். மக்களின் குறைகளை அவர்கள் காணும்போது அதன் பேரில் திருத்த முயல்கின்றனர்.
2336 விரைவில் சபையானது, இந்த நேரத்தில் ஒருகால் ஒரு படி உயர செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இன்று காலை இந்தக் காரியங்களை காண்பிப்பதைக் குறித்து நான் திட்டமிட்டிருக்கவில்லை. ஆனால் விரைவில் கர்த்தருக்கு சித்தமானால், நான்—நான் அந்த எக்காளங்களைக் குறித்து பிரசங்கிப்பதற்கு முன்பு, நீங்கள் அறிய வேண்டுமென்று நான் நினைக்கிறேன். மேலும் நான் கருதுபவைகளை சபைக்கு கொண்டு வர எத்தனித்துள்ளேன். என்றே இப்பொழுது நான் நினைக்கிறேன்.
2437 இப்பொழுது நாம் ஜெயங்கொள்ளுதல் என்றே இந்தப் பொருளின் பேரில் பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையாகவே ஜெயங்கொள்ளுதல் என்னும் சொல்லுக்கு அர்த்தம் உங்களுக்கு தெரியும். நீங்கள் ஏதாவதொன்றின் மேல் ஜெயங்கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவர் லவோதிக்கேயா சபையைக் குறித்து பேசும் போது, அதை நாம் சற்று முன்பு பார்த்தோம், அதற்கு கடிந்து கொள்ளுதல் அவசியமாயிருந்தது. லவோதிக்கேயா சபை கிறிஸ்துவினிடம் நடந்து கொண்ட விதத்துக்காக கடிந்து கொள்ளப்பட வேண்டியதாயிருந்தது. அது அதன் காலத்தில் கிறிஸ்துவை வெளியே தள்ளிவிட்டது. கிறிஸ்து வெளியே இருந்து கொண்டு உள்ளே வர முயற்சி செய்கிறார். அது அன்பு. அவர் தமது சொந்த வீட்டிலிருந்து புறம்பாக்கப்பட்டப் பின்பு, உள்ளே வர முயற்சித்து, “ஒருவன் கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்” என்கிறார். பாருங்கள்? முழு சபையுமே அவரை புறம்பாக்கி விட்டது. 38 ஆனால் இப்பொழுது கவனியுங்கள். அவருடைய அழைப்பு இங்கு சபைக்கல்ல. “ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ” புரிகிறதா? சபையல்ல. சபை பெண்ணாக வர்ணிக்கப்பட்டிருக்கும், பாருங்கள், சபை சரீரம். ஆனால் அது “ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ,” என்று உள்ளது, அது ஜெயங்கொள்ளும் தனிப்பட்ட நபராய் இப்பொழுது உள்ளது.
2539 லவோதிக்கேயா அந்த கடிந்துகொள்ளுதலுக்கு வந்திருந்தது. இப்பொழுது நாம் பார்க்கிறோம், அதாவது அது லவோதிக்கேயா சபையின் காலம் என்றும், இந்த காலத்துக்கு தேவனிடமிருந்து கடினமான கடிந்து கொள்ளுதல் அவசியமென்றும் நாம் அறிகிறோம். அதற்கு கடினமான கடிந்து கொள்ளுதல் அவசியம். நம்முடைய குருவானவர்கள் மிகவும் மிருதுவாகி, பாட்டனார் பேரப்பிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்து, அவர்கள் எது செய்தாலும் சரி என்று கூறுவது போல்…அவர்கள்… 40 தேவன் மிகவும் நல்லவர் என்று கூறி, அவர்கள் அவரை செல்லம் கொடுக்கும் பாட்டனராகச் செய்து விடுகின்றனர். நீங்கள் பாருங்கள்? ஆனால் அவர் அப்படியல்ல. அவர் பிதாவாய், நீதியுள்ள பிதாவாய், திருத்துதலைக் கொண்ட பிதாவாயிருக்கிறார். அன்பு எப்பொழுதுமே திருத்துகிறது. பாருங்கள்? அன்பு திருத்துகிறது. அது எவ்வளவுதான் மோசமாக நோகச் செய்தாலும், அது இன்னமும் திருத்துகிறது. ஒரு உண்மையான தாய் தன் பிள்ளைகளைத் திருத்துவாள், அப்படியே ஒரு உண்மையான தகப்பனும் திருத்துவான். புரிகிறதா? நீங்கள் மிருதுவாகி, செல்லம் கொடுத்து, அவர்கள் எதையும் செய்ய அனுமதித்தால்…
2641 அன்றொரு நாள் நான் ஒரு சிற்றோடையை ஒரு மரக்கட்டை என அழைக்கப்படுகிற பழைய மரக்கட்டையின் மேல் கடந்து கொண்டிருந்தேன். அந்த மரக்கட்டையின் மேல் நான் குதித்தேன். வெளிப்புறத்தில் காண அது நன்றாக இருந்தது…வலிமையான மரக்கட்டையைப் போல், ஆனால் நான் அதன் மேல் குதித்தபோது, ஒரு பெரிய துண்டு உடைந்து விழுந்தது. அது உண்மையில் அரிக்கப்பட்டு மிருதுவாய் இருந்தது. அப்பொழுது நான், “கிறிஸ்தவர்களும் அப்படித்தான் ஆகி வருகிறார்கள்” என்று நினைத்துக் கொண்டேன். அவர்கள் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் நீண்டகாலமாக மரித்து, மிருதுவாகிவிட்டார்கள். அவர்களால் எந்த பளுவையும் தாங்க முடியாது. ஜெயங்கொள்ளுதல் என்றால் என்னவென்று அவர்களுக்குத்—அவர்களுக்குத் தெரியாது. அப்பொழுது இப்பொருளைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தேன். ஜெயங்கொள்ளுதல், உங்களுக்குள் ஜீவனை வைத்திருங்கள். ஜீவன் வெளியே சென்றபோது, மரக்கட்டை அந்த நிலையை அடைந்தது. பாருங்கள்? அந்த கிளை தண்ணீரில் விழுந்த போது அது இன்னும் மோசமாகி விட்டது.
2742 கிறிஸ்தவன் என்று கருதப்படும் ஒருவனை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். தேவனுடைய ஜீவன் அவனை விட்டுச் சென்றால் கிறிஸ்துவை சேவிப்பதில் களி கூறும் அனுபவத்தைப் பெற்ற சபையில் அவன் இருந்த போதிலும், அவன் இரட்டிப்பு வேகத்தில் துரிதமாய் அழுகிப்போகிறான், உண்மை, அப்படிப்பட்ட சபையின் கீழ் இருந்தாலும் சரி. 43 எனவே இந்நேரத்துக்கான செய்தியை அல்லது செய்தியின் இந்த பாகத்தையாகிலும் பின்பற்ற முயலுவோமானால், நாம் எந்நேரமும் கிறிஸ்துவின் ஜீவனைக் கொண்டவர்களாய் வாழ வேண்டும். புரிகிறதா? காரணம், அப்படிச் செய்யாமல் போனால், நீங்கள் அங்கேயே தங்கி, இவைகளை நீங்கள் செய்ய வேண்டுமென்று அறிந்திருந்தும் செய்யாமல் போய் விடுவீர்கள். வேதமோ, “ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் அதைச் செய்யாமற் போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” என்று உரைத்துள்ளது. நீங்கள் தேவனுடைய ஜீவனிலிருந்து பிரிந்து போகும்போது, மிருதுவாகி அழுகிவிடுகீறீர்கள். எனவே உங்களாலான மட்டும் கிறிஸ்துவின் ஜீவனில் நிலைத்திருக்க பாடுபடுங்கள். அப்பொழுது நீங்கள் கனி கொடுப்பீர்கள்.
2844 நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தை நாம் காண்கிறோம். இது எல்லா காலங்களைக் காட்டிலும் மிகக் கம்பீரமான காலம். லவோதிக்கேயா சபையின் காலம் எல்லா காலங்களை விட மிகக் கம்பீரமான காலம். ஏனெனில் இத்துடன் காலம் முடிவடைந்து நித்தியத்துடன் இணைந்து போகும். அது மாத்திரமல்ல. இது மிக அதிகமாகப் பாவம் பெருகியுள்ள காலம். மற்றெந்த காலத்தையும் விட இக்காலத்தில்தான் பாவம் மிகவும் பெருகியுள்ளது. மற்றெந்த காலத்தைக் காட்டிலும் இக்காலத்தில் தான் சாத்தானின் வல்லமையை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமாயுள்ளது. புரிகிறதா? இதோ! 45 ஆதி சபை காலங்களில், ஒரு கிறிஸ்தவன் சபையைச் சேர்ந்ததன் நிமித்தமோ, அல்லது கிறிஸ்துவைச் சார்ந்திருந்ததன் நிமித்தமோ தலைவெட்டப்பட்டான். அவன் கொல்லப்பட்டு, தன் துன்பத்திலிருந்து விடுதலையடைந்து, தேவனைச் சந்திக்க வேகமாக சென்று விட்டான். ஆனால் இப்பொழுதோ சத்துரு சபையின் பெயரால் வந்துள்ளதால், அது மிகவும் வஞ்சிக்கத்தக்கதாயுள்ளது. இது மிகப் பெரிய வஞ்சகத்தின் காலம். கிறிஸ்து அவ்விதம் கூறியுள்ளார், “கடைசி நாட்களில் இவ்விரு ஆவிகளும் ஒன்றுக்கொன்று மிக நெருங்கியிருந்து, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்” என்று அவர் கூறினார். புரிகிறதா? புரிகிறதா? பார்த்தீர்களா? கிறிஸ்து கடைசி நாட்களிலுள்ள தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் குறித்து கூறியுள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாருங்கள்? “கூடுமானால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அவ்வளவு நெருங்கியிருக்கும்.” மிக நெருக்கமாய் இருக்கும்! மக்கள் மிகத் தூய்மையான, மக்கள் சுத்தமான பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து, பாவம் செய்யாதவர்களாய், விபச்சாரம், மது அருந்துதல், பொய் சொல்லுதல், சூதாடுதல் போன்றவைகளைச் செய்யாமல் அதற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை வாழ்ந்தும், அதில் இல்லாமல் போகக் கூடும்.
2946 இது ஜீவனின் காலம், கிறிஸ்துவின் தனிப்பட்ட வாழ்க்கையின் காலம், அவருடைய சரீரத்தின் இரசாயனங்கள், அவருக்குள் இருந்தவை. முதலாவதாக, நீதிமானாக்கப்படுதலின் கீழ் தண்ணீர் ஞானஸ்நானம்; இரண்டாவதாக வெஸ்லியின் மறுபிறப்பின் காலத்தில் பரிசுத்தமாக்கப்படுதல், அது சுத்திகரிக்கிறது. மூன்றாவதாக, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழ், சுத்திகரிக்கப்பட்ட பாண்டம் சேவைக்கென்று நியமிக்கப்படுதல்…பாருங்கள்? பரிசுத்தமாக்கப்படுதல் என்னும் சொல் கிரேக்க மொழியில் ஒரு இரட்டை சொல், அது, “சுத்திகரிக்கப்பட்டு சேவைக்கென்று ஒதுக்கப்படுதல்” என்னும் அர்த்தம் கொண்டது. சேவைக்கென்று ஒதுக்கப்படுதல். இப்பொழுது பரிசுத்த ஆவி அதை சேவையில் நுழைக்கிறது. பாருங்கள்?
3047 “அசுத்த ஆவி ஒரு மனிதனை விட்டு புறப்படும் போது, வறண்ட இடங்களில் அலைகிறது என்று நாம் காண்கிறோம். பரிசுத்தமாக்கப்படுதலில் நம்பிக்கை கொண்டுள்ள பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு சபைகளுக்கு அது தான் நிகழ்ந்தது. அசுத்த ஆவி இந்த சபை சரீரத்திற்கு திரும்பி வந்த போது, அந்த வீடு பெருக்கி ஜோடிக்கப்பட்டு இருப்பதை அது கண்டதாக இயேசு கூறினார், சுத்தமான வாழ்தல், தூய்மையான வாழ்க்கை வாழ்தல். அது நல்லது தான். ஆனால் அந்த வீடு நிறைக்கப்படாமல், குடிபுகாமல், வெறுமையாயிருந்தால், அது தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக் கொண்டு வந்து அங்கு குடியிருக்கிறது. அப்பொழுது அதன் பின்னிலைமை முன்னிலையிலும் ஏழு மடங்கு கேடுள்ளதாயிருக்கும். இந்த வெளிச்சத்தைக் கண்டு அதை பின்பற்றாமல் இருப்பதைக் காட்டிலும் லூத்தரனாகவே இருந்து விடுவது நல்லது. அப்படியே பெந்தேகோஸ்தேயினரும், பாருங்கள், நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், வீடு ஜோடிக்கப்பட்டுள்ளது.
3148 அன்றொரு நாள் நான் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் “அநேக பரிசுத்த குழுக்கள் பரிசுத்த ஆவியை ஆங்கிலத்தில் ‘ஹோலி கோஸ்ட்’ (Holy Ghost) என்று அழைக்காதபடிக்கு கவனமாயுள்ளனர். அப்படி செய்தால் அவர்கள் பெந்தெகொஸ்தேயினருடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள் என்னும் பயம் அவர்களுக்குண்டு” என்றார். அவர்கள் அதை ஆங்கிலத்தில் ‘ஹோலி ஸ்பிரிட்’ (Holy Spirit) என்றழைக்கின்றனர். பாருங்கள். அவர்கள் ‘ஹோலி கோஸ்ட்’ என்றழைப்பதில்லை. ஏனெனில் பெந்தெகொஸ்தேயினர், எளிய ஜனங்கள், வேதத்தில் கூறியுள்ளபடி ‘ஹோலி கோஸ்ட்’ என்றழைக்கின்றனர். ஆங்கிலத்தில் ஹோலி ஸ்பிரிட் மற்றும் ஹோலி கோஸ்ட் என்ற இவ்விரண்டுமே பரிசுத்த ஆவியைக் குறிக்கின்றன. ஆனால் அவர்கள் அதைக் குறித்து கவனமாயுள்ளனர் …அவர்கள் அந்நிய பாஷைகள் பேசும் மக்களுடன் அடையாளம் கண்டு கொள்ள விரும்புவதில்லை. அதுவும் ‘ஹோலி ஸ்பிரிட்’ தான் பாருங்கள்? அப்படியானால் என்ன நேர்ந்தது? பரிசுத்தமாக்கப்படுதலின் கீழ் கழுவப்பட்டபோது, வெளியே சென்ற சத்துரு திரும்பி வந்து, அந்த வீடு பரிசுத்த ஆவியினால் நிறைந்திராததைக் கண்டான். இப்பொழுது சபையின் நிலை என்னவெனில், அது உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் சேர்ந்து விட்டது; அந்நிலையில் அது ரோமன் கத்தோலிக்க மார்க்கத்துடனும் அதன் மற்றவைகளோடும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அது லூத்தரன் மார்க்கத்திலிருந்து வெளிவந்ததைக் காட்டிலும் ஏழு மடங்கு கேடுள்ளதாயிருக்கிறது. அங்குதான் மனிதன் அதைக் கொண்டு செல்கிறான்.
3249 பரிசுத்த ஆவியைப் பெற்ற பிறகு லவோதிக்கேயா சபையைப் பாருங்கள். அதற்குள் பரிசுத்த ஆவி இருந்து, அது பரிசுத்த ஆவியைக் குறித்த அறிவைப் பெற்றிருந்தும், தேவனுடைய கிரியைகளை அது மறுதலித்து அதை பொல்லாத கிரியைகள் என்று அழைப்பதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அங்குதான் கிறிஸ்து தமது சொந்த சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார். பாருங்கள், அவர்…லவோதிக்கேயா சபையின் காலம் வரும் வரைக்கும் அவர் சபையிலிருந்ததாக காண்பிக்கப்படவில்லை. ஆனால் லவோதிக்கேயா சபையின் காலத்துக்கு அவர் வந்த போது, அவர் சபையிலிருந்து வெளியே தள்ளப்பட்டு, உள்ளே வர முயன்று கொண்டிருக்கிறார். 50 இப்பொழுது, பாருங்கள், நீதிமானாக்கப்படுதல் அவரை உள்ளே கொண்டு வரவில்லை. பரிசுத்தமாக்கப்படுதல் அவருக்காக இடத்தை சுத்தம் செய்தது. ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வந்தபோது, அது அவரை ஜனங்களுக்குள் வைத்தது. இப்பொழுது அவர் தம்மை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக காண்பித்து வரும்போது, அவர்கள் அவரை வெளியே துரத்திவிட்டனர், ஏனென்றால் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். ஏனெனில் தேவனுடைய ஆவி அவர்களுடைய ஸ்தாபனங்களுடன் இணங்குவதில்லை, உங்களுக்கு இப்பொழுது புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அதாவது, அவர்கள் அவரை வெளியே துரத்தி விட்டனர். “இந்த வசீகரணத்தோடு நாங்கள் எதையும் செய்ய விரும்பவில்லை. அது—அது பிசாசினால் உண்டானது, அது குறி சொல்லுதல் அல்லது…” என்கின்றனர். பாருங்கள்? அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. “கண்கள் காண முடியவில்லை, காதுகள் கேட்க முடியவில்லை.” புரிகிறதா? தேவன் மாத்திரமே தமது சித்தப்படி கண்களைத் திறக்கிறவர். “யாரை கடினப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ, அவர்களைக் கடினப்படுத்துகிறார். யாருக்கு ஜீவனைக் கொடுக்க அவர் விரும்புகிறாரோ, அவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறார்.” அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது.
3351 நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தையும், இந்தக் கட்டத்தையும், அது முன்பு எப்படியிருந்ததென்றும் நாம் காண்கிறோம். பரிசுத்த ஆவி, அவரை வெளியே அனுப்பிவிட்ட காலத்தைக் கடிந்து கொள்கிறார். ஆனால் இவையனைத்திலும் நீங்கள் கவனித்தீர்களா? “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ,” [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] இந்த உலகப் பிரகாரமான, பொல்லாங்கான சபை காலத்திலும் கூட, “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ.” 52 தேவனுக்கு எப்பொழுதும் ஜெயங்கொண்டவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள் என்று இங்கு நாம் காண்கிறோம். ஒவ்வொரு காலத்திலும், அவருக்கு ஜெயங்கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வுலகில் இருந்த ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு முறையும், தேவன் யாராகிலும் ஒருவரை தம்முடைய கரம் நீட்டிக் கூறும்படி இவ்வுலகில் சாட்சியாக உடையவராகவே இருந்து வருகிறார். அவர் எப்பொழுதும் சாட்சி இல்லாமல் இருந்ததில்லை. சில சமயங்களில் அது ஒரே ஒரு நபராக இருந்திருக்கலாம். ஆனால் பண்டைய பரிசுத்தவான்களைப் போல, ஜெயங்கொண்ட யாராகிலும் ஒருவர் அவருக்கு இருந்தனர்.
3453 அருமையான ஒருவர், ஒரு படித்த மேதை, ஏழு முத்திரைகள் பிரசங்கிக்கப்பட்ட பிறகு, அவர் என்னிடம், “சகோதரர் பிரான்ஹாமே, நீங்கள் முன்னடையாளத்தை ஆதாரமாகக் கொண்டு பேசுகிறவர். சபை உபவத்திரவகாலத்துக்குள் செல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லும் என்பதற்கு நீங்கள் எப்படி முன்னடையாளம் காண்பிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார். அவர் சென்னார்… நீங்கள் பாருங்கள், ஒரு மாதிரி இருக்குமானால்,…அங்கு ஒன்று இருக்க வேண்டும்…இருக்க வேண்டும். வருகிற ஒரு முன்மாதிரி இருக்குமேயானால், அந்த முன்மாதிரியிலிருந்து ஒரு மாதிரி இருக்க வேண்டும். நான் உண்மையென்று கூறும் ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதிரி உண்டு. அது ஒரு மாதிரியாயுள்ளது. உங்களுக்கு ஒரு நிழல் உண்டு. வேதம், “வரப் போகும் புதிய காரியங்களுக்கான ஒரு நிழலாய் பழைய காரியங்கள் உள்ளன்” என்று உரைத்துள்ளது. அவர் என்னிடம், “ஆனால் இப்பொழுது, நீங்கள் பழைய ஏற்பாட்டை ஒரு நிழலாக எடுத்துக் கொள்கிறீர்கள். இப்பொழுது,” என்றும், மேலும் அவர், “இந்த சபையைக் குறித்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றார்.
3554 இந்த மனிதன்… ஒரு மகத்தான மனிதர், என்னுடைய ஆத்தும நண்பராயிருந்து வருகிற ஒரு பெரிய போதகர், மிக நல்ல மனிதர், அவர் ஒரு அருமையான சகோதரன். அந்த சகோதரனுக்கு விரோதமாக நான் ஒரு வார்த்தையும் கூறத் துணியமாட்டேன். நான் எப்படியும் அவ்வாறு கூறமாட்டேன். ஒரு கிறிஸ்தவன் என்னும் முறையில் நான் அவருக்கு எதிராக ஒன்றையும் கூறவேமாட்டேன். அவர்—அவர்—அவர் ஒரு பொருளின் பேரில் என்னுடன் இணங்குவதில்லை. ஆனால் அவர்—அவர் என் விலையேறப் பெற்ற சகோதரர். நாங்கள் ஒன்றாக உணவு அருந்துவோம். ஓ, அவர் நன்றாக உடுப்பவர். அவருடைய பத்திரிக்கையிலுள்ள கட்டுரைகளை நான் படிப்பது வழக்கம். என்னுடைய செய்திகளையும் அவர் வெளியிடுகிறார். அவருடைய கட்டுரைகளிலிருந்து, அல்லது அவர் கூறக் கேட்டவைகளிலிருந்து நான் அநேக பொருள்களை என் பிரசங்கத்துக்காக தெரிந்தெடுத்திருக்கிறேன். அவர் ஒரு மகத்தான மனிதனாயிருக்கிறார், ஆனால் அவரால்—அவரால் என்னுடன் இணங்க முடியவில்லை. அவருடைய உத்தமத்தை நான் பாராட்டுகிறேன். நீங்கள் கூறும் ஒவ்வொன்றுக்கும் ஆமாம் கூறுபவர் அவரல்ல. அவருக்கு தன் சொந்த கருத்துக்கள் உண்டு. அதில் அவர் உறுதியாய் நிற்கிறார். அதை நான் பாராட்டுகிறேன். அவர் ஒரு நல்ல மனிதன். ஓ, நான்—நான் ஒரு போதகனோ அல்லது மேதையோ கிடையாது, ஆனால் இந்த மனிதன் போதகராயும், மேதையாயும் இருக்கிறார்.
3655 ஆனால் என்னால்—என்னால் அவருடன் இணங்க முடியவில்லை, ஏனெனில் எனக்கு அது புரியவில்லை. ஆனால் அது இரட்சிப்புக்கு சம்பந்தமான ஒன்றல்ல. அது கர்த்தருடைய வருகையுடன் சம்பந்தப்பட்டது. சபை சுத்திகரிக்கப்படுவதற்காக உபத்திரவ காலத்திற்குள் செல்ல வேண்டுமென்பது அவருடைய கருத்து. ஆனால் கர்த்தராகிய இயேசுவின் இரத்தமே சபையை சுத்திகரித்தது என்று நான் கூறுகிறேன். புரிகிறதா? அதற்கு அவசியமில்லை… சபை, அதாவது ஸ்தாபன சபை உபத்திரவ காலத்துக்குள் செல்லுமென்று நான் விசுவாசிக்கிறேன், ஆனால் மணவாட்டி செல்வதில்லை. விவாகம் செய்வதற்கு முன்பு சுத்திகரிக்கப்பட வேண்டிய பெண்ணை நீங்கள் தெரிந்து கொள்வீர்களா? புரிகிறதா? கிறிஸ்துவின் மணவாட்டி தெரிந்து கொள்ளப்பட்டவள், அவள் தெரிந்து கொள்ளப்பட்டவள். அவள் தேவனின் மணவாட்டி, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி.
3756 அவர், “உபத்திரவ காலத்தினூடாக சபை செல்வதற்கு முன்பு, மணவாட்டி மேலே செல்கிறாள் என்பதற்கு நீங்கள் எப்படி முன்னடையாளம் காண்பிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார். மேலும், “சபையானது உபத்திரவ காலத்தில் உள்ளது என்பதை உங்களுக்கு காண்பிக்க நான் வேத வாக்கியங்களை குறித்து வைத்துள்ளேன்” என்றார். அதற்கு நான், “ஆறாம் முத்திரையை படித்துப் பாருங்கள். அவ்வளவுதான். அவள் உபத்திரவ காலத்தில் இருக்கிறாள். ஆனால் நீங்கள் பார்ப்பீர்களானால், அதற்கு முன்பு மணவாட்டி சென்று விடுகிறாள். புரிகிறதா? அந்த சமயத்தில் அவள் மகிமையில் இருக்கிறாள். அவளுக்கு சுத்திகரிப்பு எதுவுமில்லை” என்றேன். புரிகிறதா? “என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். நாம் நியாயத்தீர்ப்பில் நிற்பது கூட இல்லையென்று கிறிஸ்து வாக்களித்திருக்கிறார். எனவே நான் முற்றிலும் விடுதலையாகுமளவிற்கு, அவர் இலவசமாய் என் இடத்தை எடுத்துக் கொண்டார். நான் மன்னிக்கப்பட்டபோதோ நான் மன்னிக்கப்பட்டு விட்டேன். அவர் என்னை அடகு கடையிலிருந்து மீட்டெடுத்து அதற்கான ஒரு தெளிவான ரசீதைப் பெற்ற பின்பு… அவர் என்னுடைய மீட்பராய், அடகு கடையிலிருந்து என்னை மீட்டெடுத்த பிறகு, என்னை அடமானமாகக் கொண்டிருந்தவன் நான் அவனுக்கு சொந்தம் என்று எப்படி கூற முடியும்? இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் எழுதப்பட்ட ரசீது ஆமென், பாருங்கள், என்னிடம் உள்ளதே! புரிகிறதா? இப்பொழுது அந்த விஷயத்தில் நாங்கள் இங்குதான் அடைந்தோம். அவர், “நீர் குறிப்பிடும் அந்த தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியை எவ்வாறு பிரித்து, அதற்கு ஒரு முன்னடையாளம் காண்பிக்கப் போகிறீர்?” என்றார்.
3857 நான் “மிகவும் நல்லது” என்றேன். மேலும் நான் கூறுகிறேன், “அது இங்குள்ளது. இப்பொழுது மத்தேயு 27-ம் அதிகாரம் 51-ம் வசனம்.” நாம்… நான் அதை வாசிக்கட்டும். அப்பொழுது நாம் அதை நன்கு அறிந்து கொள்வோம். அப்பொழுது அதற்கு முன்னடையாளம் உள்ளதா, அல்லது இல்லையா என்றும், அது தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டிதானா என்பதை நாம் கண்டறிவோம். மத்தேயு 27-ம் அதிகாரம் 51-ம் வசனம். சரி. நமது கர்த்தரின் சிலுவை மரணத்தின் போது நாம் இதை வாசிக்கிறோம். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது…
3958 அது நியாயப்பிரமாணம், அங்கு நியாயப்பிரமாணம் முடிவடைந்தது. ஏனெனில் திரைச்சீலை சபையோரை தேவனுடைய பரிசுத்த பொருட்களிலிருந்து பிரித்தது. அபிஷேகம் பெற்ற ஆசாரியன் மாத்திரமே வருடத்திற்கு ஒரு முறை உள்ளே சென்றான். உங்களுக்கு ஞாபகமுள்ளதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] இப்பொழுது, தேவன் தமது சொந்த கையினால், கவனியுங்கள் அந்த திரைச்சீலையை “மேல் தொடங்கிக் கீழ்வரைக்கும்,” கீழ்தொடங்கி மேல் வரைக்கும் அல்ல, இரண்டாக கிழித்தார். அது நாற்பது அடி உயரமாயிருந்தது. கவனியுங்கள். கீழ் தொடங்கி மேல் வரைக்கும் அல்ல, ஆனால், “மேல் தொடங்கிக் கீழ் வரைக்கும்,” அது தேவனால் செய்யப்பட்டது என்பதைக் காண்பிக்கிறது. அந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. ஆகையால் விருப்பமுள்ளவன் எவனோ அவன் வந்து அவருடைய பரிசுத்ததில் பங்கு கொள்ளலாம். புரிகிறதா? சரி. …மேல் தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்த பின்பு, இவர்கள் கல்லறைகளை விட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
4059 அதோ அந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், மணவாட்டி. யூத சபை முழுவதுமே அந்த சமயத்தில் உயிரோடெழவில்லை. அவர்கள் எல்லோருமே ஒரே பலியைச் செலுத்தினர். அவர்கள் எல்லோரும் ஆட்டுக் குட்டியின் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் இருந்தனர். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு கூட்டம் அங்கிருந்தது. அந்த சம்பவம் நிகழ்ந்தவுடனே உண்மையாகவே அந்த தெரிந்து கொள்ளப்பட்ட கூட்டம் அதில் விசுவாசம் கொண்டு, உத்தமமாயும் இருந்தது. இப்பொழுது நான் ஜெயங்கொள்ளுதல் என்னும் சொல்லுக்கு வருகிறேன். அதை பிடித்துக் கொள்ளுங்கள். அவர்கள் உண்மையாக ஜெயங்கொண்டு, மற்றவர்கள் செலுத்தின அதே பலியை செலுத்தி, ஆனால் அதை உத்தமமாக செலுத்தி, உலகத்தின் காரியங்களின் மேல் ஜெயங்கொண்டனர். அவர்களுக்கான பாவ நிவிர்த்தி சரியான விதத்தில் செலுத்தப்பட்டபோது, அந்த நேரம் வரைக்கும் அவர்கள் பரதேசில் இருந்தனர். அந்த நேரம் வரும் வரைக்கும் அவர்கள் ஜெயங்கொண்டு இளைப்பாறி, நித்திரையடைந்தனர்; பாருங்கள்? “புழுதியில் நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்கள்” பாருங்கள், நித்திரையடைந்திருந்தன.
4160 இப்பொழுது, நமக்கு நேரமிருந்தால், நாம் தானியேலின் புத்தகத்திற்கு திரும்பிச் செல்லலாம். தெரிந்து கொள்ளப்பட்ட அந்த தானியேல் ஜெயங்கொண்டவனாய் இருந்தான். அவர் தானியேலை நோக்கி, “தானியேலே, இந்தப் புத்தகத்தை முத்திரைபோடு. நீ இளைப்பாறிக் கொண்டிருந்து, உன் நாட்களின் முடிவில் உன் சுதந்திர வீதத்துக்கு எழுந்திருப்பாய். உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கும் பெரிய அதிபதி எழும்பும்போது, நீ உன் சுதந்திர வீதத்துக்கு எழுந்திருப்பாய்” என்றார். அது இங்குள்ளது! இந்த தேவனுடைய தீர்க்கதரிசியாகிய தானியேல் முடிவு காலம் வருகிறதைக் கண்டான். அவர், “தானியேலே, அந்த நாளில் உன் சுதந்திர வீதத்துக்கு எழுந்திருப்பாய்” என்றார். இதோ அவன் எழுந்திருக்கிறான். இஸ்ரவேலர் எல்லாரும் அல்ல, ஆனால் மணவாட்டிக்கு முன்னடையாளமாயிருந்த இஸ்ரவேலர். இஸ்ரவேலரில் மீதியானவர்கள் பொதுவான உயிர்த்தெழுதல் வரைக்கும் எழுந்திருப்பதில்லை.
4261 இப்பொழுது, கர்த்தராகிய இயேசுவின் வருகையின் போது, அவருடைய வருகையின் உண்மையில் பிரியம் கொண்டவர்களும், அதற்கென்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்; அவர் ஆகாயத்தில் தோன்றும்போது கிறிஸ்துவுக்குள் மரித்த சபை எழுந்திருந்து ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாகும். மற்றவர்கள் அதைக் குறித்து ஒன்றுமே அறியமாட்டார்கள். அவர்கள் நகரத்தில் அநேகருக்குக் காணப்பட்டார்கள் எனபதை ஞாபகம் கொள்ளுங்கள். புரிகிறதா? எடுத்துக் கொள்ளப்படுதலின் போதும் அவ்வாறே சம்பவிக்கும். நாம் ஒருவரையொருவர் காண்போம். அவர்களை நாம் காண்போம். உலகத்திலுள்ள மற்றவர்கள் அவர்களைக் காணமாட்டார்கள். அது இரகசியமாக செல்வதுபோல எடுத்துக் கொள்ளப்படுவோம். அந்த நாளுக்காகவே காத்திருக்கிறோம். பின்னர் அந்த மகிமையான ஆயிரம் வருட அரசாட்சிக்காக பூமிக்குத் திரும்பி வருவோம்… “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருடம் முடியுமளவும் உயிரடையவில்லை.”
4362 அதன்பின்னர் பொதுவான உயிர்த்தெழுதல் உண்டாகும், அங்கு எல்லா இஸ்ரவேலரும். அங்கு பாருங்கள், பன்னிரண்டு அப்போஸ்தலர்கள், பன்னிரண்டு கோத்திரப் பிதாக்கள், இவர்கள் எல்லோருமே பிரிதிநிதித்துவம் வகிக்கின்றனர். அதைக்குறித்து நாம் இன்னும் பார்க்கவில்லை. கர்த்தருக்கு சித்தமானால் அதைக் குறித்து நாம் புதிய ஏற்பாட்டில் காண்போம், எப்படி வச்சிரக்கல்லால் கட்டப்பட்ட மதில் இருந்ததென்றும், பன்னிரண்டு கற்களும், பன்னிரண்டு வாசல்களும், பன்னிரண்டு அஸ்திபாரங்களும், அவையாவும் பிரதிநிதித்துவமாயிருந்தன. இதோ அவர்கள் அந்த நாட்களிலிருந்த தூதர்கள்—செய்தியாளர்கள்—பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருந்து, செய்தியைப் புறக்கணித்தவர்களின் மேல் நியாயத்தீர்ப்பு வழங்குகின்றனர். ஆமென்! அந்த மகத்தான நேரம் வந்து கொண்டிருக்கிறது. ஆம் 63 என்ன ஒரு நாள், என்ன ஒரு நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சபையே, நாம் எவ்வளவாக நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம்! இப்பொழுது வரப்போகும் இவைகளைக்குறித்து நாம் பேசுகிறோம், அது வரப்போகிறது. இப்பொழுது இன்றைக்கு இங்கு நிறுத்திக் கொண்டு, நாம் விசுவாசத்தில் சரியாயிருக்கிறோமா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.
4464 இப்பொழுது சில நிமிடங்களுக்கு ஜெயங்கொண்ட சிலரைக் குறித்து பேசுவோம். இன்றைய காலத்துக்கு இயேசு ஒப்பிட்ட நோவாவின் நாட்களில்; நான் பத்து நிமிடங்கள் மாத்திரமே பேச வேண்டியவனாயிருக்கிறேன். ஆனால் இப்பொழுது இதைப் பேச எனக்கு அரைமணி நேரமாகிலும் பிடிக்கும். நான் இப்பொழுது தான் முதலாம் பக்கத்தை துவங்குகிறேன். என்னால் முடிந்தால் எழுதி வைத்துள்ள சிலவற்றை விட்டு விட்டுப் பேசவுள்ளேன். என்ன… 65 இந்நாளுக்கு முன்னடையாளமான நோவாவின் காலத்தில், இயேசு அதைக் குறிப்பிட்டுக் கூறினார். அதாவது “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷ குமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” என்றார். கவனியுங்கள், ஜலப்பிரளயத்துக்கு முன்னால் இருந்த காலத்தில், ஒருக்கால் கோடிக் கணக்கானவர் இருந்திருக்கக் கூடும், ஆனால் ஜெயங்கொண்டவர்கள் எட்டுபேர் மாத்திரமே. உண்மையாகவே எட்டுபேர் மாத்திரமே அசலாக ஜெயங்கொண்டவர்கள். அவர்கள் நோவாவின் மூன்று குமாரர்கள், அவர்களுடைய மனைவிகள், நோவாவும் அவன் மனைவியும், எட்டுபேர் ஜெயங்கொண்டு, சரியான நேரத்தில் பேழைக்குள் பிரவேசித்தனர். அவர்கள் எப்படி அதை செய்தனர்? அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுத்தனர். அவர்கள் பேழையின் வாசலுக்கு வெளியே மாட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் வாசலுக்கு உள்ளே இருந்தனர்.
4566 ஓ, என் அன்பார்ந்த நண்பர்களே, வாசல் அடைபடக் காத்திருக்காதீர்கள். இயேசு, “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” என்றார். (சகோதரனே உங்களுக்கு நன்றி.) “அப்படியே மனுஷ குமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.” இப்பொழுது, யாராகிலும் வாசலுக்கு வெளியே மாட்டிக் கொள்ளப்போகிறார்கள். அவர்களில் அநேகருக்கு நல்லெண்ணம் இருந்திருக்கக் கூடும். “என்றாகிலும் ஒரு நாள் அது நடக்கும் போது, நாங்கள் சகோதரன் நோவாவுடன் உள்ளே சென்று விடுவோம், ஏனென்றால் அவர் ஒரு அருமையான நபர்” என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கக் கூடும். ஆனால், நீங்கள் பாருங்கள், அது எட்டு பேரை மாத்திரமே உள்ளே விட்டது. 67 இப்பொழுது, சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள். நீங்கள் அதைக் குறித்து கவலையற்றவர்களாய் இருப்பீர்களானால், துரிதமாக உள்ளே வந்து விடுங்கள். ஏனெனில் எந்த நேரத்திலும் வாசல் அடைபடக் கூடும்.
4668 தேவனுடைய திட்டத்தில் எப்பொழுதுமே ஒரு பேழை இருந்து வந்துள்ளது. நோவாவின் காலத்தில் அவருடைய ஜனங்களை இரட்சிக்க ஒரு பேழை இருந்தது. நியாயப்பிரமாணத்தின் காலத்தில் ஒரு உடன்படிக்கை பெட்டி இருந்தது. நியாயப் பிரமாண காலத்தில் அவர்கள் உடன்படிக்கைப் பெட்டிக்குப் பின்னால் சென்றனர். இப்பொழுது மூன்றாம் யுகம்; நோவாவின் காலம், லோத்தின் காலம், தற்போதைய காலம். இப்பொழுது, ஒரு பேழை உள்ளது. அந்தப் பேழை ஒரு ஸ்தாபனம் அல்ல, அது நீங்கள் செய்யும் நற்கிரியைகள் அல்ல; அது “ஒரே ஆவியினாலே” ரோமர் 8:1-ல், “நாம் எல்லாரும் அந்த ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக, அந்த ராஜ்யத்தின் ஆதிக்கத்துக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. ஒரே ஆவியின் ஞானஸ்நானம். எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும், எவ்வளவு கெட்டவர்களாயிருந்தாலும், நீங்கள் எப்படி இருந்தாலும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் நீங்கள் அந்த ராஜ்யத்துக்குள் வந்து விடுகிறீர்கள். புரிகிறதா? அந்த ஒரு வழியில் மாத்திரமே நீங்கள் ஜெயங் கொள்ள முடியும். சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழுள்ள அனைவரும் ஜெயங்கொண்டவர்கள்; ஏனெனில் நீங்களாகவே ஜெயங்கொள்ள முடியாது. அவரே உங்களுக்காக ஜெயங்கொள்ளுகிறார். நீங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கிறீர்கள். 69 “சகோதரர் பிரான்ஹாமே, நான் அதற்குள் இருக்கிறேன் என்று எப்படி அறிந்து கொள்வது?” நீ எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறாய் என்பதை கவனி. நீ சுற்றிலும் பார். நீ எந்த முயற்சியுமின்றி தானாகவே அந்த வாழ்க்கை வாழ்கிறாயா என்று பார். இல்லாவிட்டால், நீ கடினமாக முயற்சி செய்து அந்த வாழ்க்கை வாழ வேண்டியுள்ளதா? ஆனால் அப்படி செய்ய முயலாதே. நீ எப்போதாவது முயற்சித்துள்ளாயா? ஆம், அவ்வாறு செய்யாதே.
4770 அது குழந்தையின் கையை அரைக் கை சட்டை கைக்குள் நுழைப்பது போன்றது, நீங்கள் பாருங்கள். அது எழுந்து, கீழே விழுந்து, புரண்டு, எல்லாம் செய்யும். பாருங்கள்? ஆனால் அந்த குழந்தையால் தானாகவே கையை சட்டைகைக்குள் போட முடியாது. “தேனே, உன் சட்டையை போட்டுக் கொள்” என்று சொல்வீர்களானால், அதனால் அதைச் செய்ய முடியாது, அது சிறிய கையை மேலே தூக்கும், கீழே போடும், அதன் கை எல்லா விடங்களிலும் இருக்கும். அதற்கு ஆடாத உங்களுடைய கரம் தேவைப்படுகிறது. ஓ, என் கையை பிதாவினிடம் சமர்ப்பித்து, “கர்த்தராகிய இயேசுவே, என்னால் அதற்குள் கையை நுழைக்க முடியவில்லை. நீர் எனக்கு உதவி செய்யும். என் சட்டையை எனக்கு அணிவியும்” என்று கூறுவதற்கு நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன். நான் முயற்சி செய்வதை விட்டு விடுகிறேன். அவரே அதைச் செய்யட்டும். புரிகிறதா?
4871 அந்த சிறு குழந்தை தொடர்ந்து முயன்று கொண்டேயிருந்து, “ஓ, என்னால் அதைச் செய்ய முடியும். என்னால் அதைச் செய்ய முடியும்” என்று கூறுமானால்; அது எல்லாவிடங்களுக்கும் நகர்ந்து சென்றாலும் அதனால் அதைச் செய்ய முடியாது. அப்படித்தான் உங்களாலும் செய்ய முடியாது, என்னாலும் செய்ய முடியாது. ஆனால் நாம் அமரிக்கையாயிருந்து அவர் அதைச் செய்யும்படி சமர்ப்பித்தால் நலமாயிருக்கும். அப்படியே அவரிடம் சமர்ப்பித்து, “இதோ, கர்த்தாவே, இதோ நான் இருக்கிறேன், நான் ஒன்று மற்றவன். என்னை—என்னை சமர்ப்பிக்கிறேன். நீர் என் கையை சரியாக இடத்தில் நுழைப்பீராக” என்று கூறுவோமாக. அது தான் வெற்றி. அதுவே ஜெயங் கொள்ளுதலாய் உள்ளது. 72 நீங்கள் ஜெயங்கொள்ள வேண்டியது உங்களையும், உங்கள் கருத்துக்களையும், உங்கள் காரியங்களையுமேயாகும். உங்களை அவரிடம் ஒப்புவியுங்கள். அவர் உங்களுக்காக ஜெயங்கொள்வார். அதற்கான வழியை அவர் அறிந்திருக்கிறார்; நமக்கோ அது தெரியாது.
4973 நோவாவின் காலத்தில் ஜெயங்கொண்டவர்கள் எட்டு பேராய் இருந்தனர். அவர்கள் தான் உள்ளே பிரவேசித்தனர். அவர்கள் உள்ளே மாட்டிக் கொண்டனர். இப்பொழுது, நண்பர்களே, பாருங்கள், அவர்கள் இதை ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அது தொலைக்காட்சியில் இருந்தாலும் அல்லது இல்லாமற்போனாலும்…என்னை மன்னிக்கவும், ஒரு ஒலி நாடாவில் பதிவாகிறது. நீங்கள் என்ன செய்தாலும், இப்பொழுது யார் கேட்டுக் கொண்டிருந்தாலும் அல்லது இனிமேல் யார் கேட்டாலும், காலம் தாமதமாகிவிட்டது, உங்களுக்கு நல்லெண்ணம் இருக்கக் கூடும், ஆனாலும் உள்ளே வந்துவிடுங்கள். இப்பொழுது, கஷ்டப்பட்டு முயற்சி செய்யாதீர்கள். “விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.” தேவன் அதை செய்யட்டும். உங்களை அவரிடம் ஒப்புவித்து, தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்னும் பரிபூரண திருப்தியான விசுவாசத்துடன் நடந்து செல்லுங்கள். அது ஒரு ஸ்தாபனத்தை சேர்வதோ, அதை விட்டு வேறொரு ஸ்தாபனத்தை சேர்வதோ, இங்கும் அங்கும் அல்லது வேறெங்கோ ஓடுவதோ, இதை முயற்சி செய்வதோ அல்ல. உங்களை தேவனிடம் ஒப்படைந்து அவருடன் நடந்து செல்லுங்கள். சமாதானத்துடன், அமைதியுடன், யாரும் உங்களை தொந்தரவு செய்யாதபடிக்கு, அவருடன் தொடர்ந்து நடந்து கொண்டேயிருங்கள். அதுவே சரியானதாகும். 74 மனநல குலைச்சல் ஏற்பட்ட சகோதரனுக்கு அதை தான் நான் கூறினேன். பாருங்கள்? “அவரிடம் உங்களை ஒப்புவியுங்கள். அவர் இங்கிருக்கிறார். நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்றும், நீங்கள் இப்படியிருக்க இந்த விதமாய் செய்ய காரணம் என்னவென்றும், உங்களைக் குறித்து எல்லாமே அவர் அறிந்திருக்கிறார். இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று இப்பொழுது அவர் உங்களிடம் கூறினார். இப்பொழுது, நான், நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, பழையவைகளை எல்லாம் மறந்து விட்டு, அவர் கூறினதைப் போய் செய்து, தேவனுடைய மகிமையிலும் பிரசன்னத்திலும் உங்கள் எதிர்கால வாழ்க்கையை நடத்துங்கள்” என்று கூறினேன். எட்டுபேர் ஜெயங்கொண்டவர்கள்.
5075 தானியேலின் காலத்தில் அக்கினியின் சோதனைக்கும் சிங்கங்களின் சோதனைக்கும் நிற்கக்கூடிய நான்கு ஜெயங்கொண்டவர்கள் இருந்தனர். இப்பொழுது, நாம் சோதிக்கப்பட வேண்டியவர்களாயிருக்கிறோம். பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் என் சகோதரனுக்கும் கூட அது ஒரு நல்ல பாடமாய் உள்ளது. “தேவனிடத்தில் சேருகிறவன் முதலாவது சோதிக்கப்பட வேண்டும்.” எதனால்? வார்த்தையினால் சோதிக்கப்பட வேண்டும். அது தேவனுடைய சோதனை. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] “தேவனிடத்தில் சேருகிறவன் சோதிக்கப்பட வேண்டும்.” அதுவே ஒரு உண்மையான பிள்ளை என்பதைக் காண்பிக்கிறது. ஆகையால் பாருங்கள், சோதிக்கப்பட வேண்டும். சோதனை நேரிடும் போது…ஒரு சோதனை உங்களுக்கு நேரிடாமல் நீங்கள் ஜெயங்கொள்ள முடியாது. சோதனை உங்களுக்கு அளிக்கப்படுவதே நீங்கள் ஜெயங்கொள்ள முடிகிறதா இல்லையா என்று காண்பதற்காகவே. இயேசு “ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ” என்று கூறினார். சோதனை. உங்களுக்கு நேரிடும் மிகப் பெரிய காரியம் இச்சோதனையே. பேதுரு, “அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும். அதைப் பார்க்கிலும் விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்படும் என்று கூறினதாக வேதாகமத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். இது சோதனையின் நேரம். நாம் சோதிக்கப்படுகிறபோது, தேவன் நம்மோடு கூட இருக்கிறார் என்பதற்கு அதுவே ஒரு நல்ல அத்தாட்சி. ஏனெனில் தேவனுடைய பிள்ளைகள் அனைவருமே சோதித்தறியப்படுகின்றனர், சோதிக்கப்படுகின்றனர்.
5176 தானியேல் என்னும் மனிதன் ஒரு தீர்க்கதரிசி. அவன் காலத்தில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர் இருந்தனர். தானியேல் தீர்க்கதரிசியாயிருந்தான். அந்தக் காலத்தில் சபையின் எண்ணிக்கை அவ்வளவு தான், அதாவது மணவாட்டியைப் பொருட்படுத்திக் கூறுகிறேன். சபையில் அநேகர் இருந்தனர். ஏறக்குறைய இருபது இலட்சம் பேர் அங்கே சென்றனர். ஆனால்…ஜெயங்கொண்டவர்களின் எண்ணிக்கை அவ்வளவே. அந்த ஜெயங்கொண்டவர்கள் சோதிக்கப்பட்டனர். ஜெயங்கொள்ளுகிற ஒவ்வொருவனும் சோதிக்கப்பட வேண்டும். அவர்கள், “வார்த்தை கூறுவதை விட்டு விடுங்கள். இல்லையேல் நீங்கள் எரிகிற சூளையில் போடப்படுவீர்கள்” என்றனர். வார்த்தை கூறுவதைத் தவிர வேறெதையும் செய்ய அவர்கள் மறுத்தனர்.
5277 வார்த்தை உரைப்பதை செய்யாதிருக்க தானியேலுக்கு ஒரு சோதனை கொடுக்கப்பட்டது. அவர்கள் தேவாலயம் உள்ள திசையை நோக்கி ஜெபம் செய்ய வேண்டுமென்றும், அவர்கள் அப்படி ஜெபம் செய்தால், பரலோகத்திலிருக்கிற தேவன் அவர்களுடைய விண்ணப்பங்களுக்கு செவி கொடுத்து, எல்லாவற்றிலிருந்தும் அவர்களை நீங்கலாக்கி விடுவிக்க வேண்டுமென்று சாலமோன் விண்ணப்பம் பண்ணினான். ஆனால் இவர்களோ, “இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் எவனாகிலும் ஒருவன் தேவாலயத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணினால், அந்த மனிதன் சிங்கங்களின் கெபியில் போடப்படுவான். நாங்கள் மேதியர், பெர்சியர், எங்கள் சட்டங்களை நாங்கள் மாற்ற முடியாது அல்லது எங்களுடைய சட்டப் பிரமாணங்களை திருத்த முடியாது” என்றனர். 78 அவர்கள் தானியேலுக்கு ஒரு கண்ணி வைத்தனர். அதை அந்த தீர்க்கதரிசி அறிந்திருந்தான் என்று நம்புகிறேன். ஆனால் அவர்கள் அவனுக்காக ஒரு கண்ணியை வைத்தனர். அவன் தாழ்மையாய் நடந்தான். ஜெபம் செய்ய வேண்டிய நேரம் வந்த போது… அவனுடைய வீடாகிய எருசலேமில், பலி பீடத்தின் மேல் எரிந்து கொண்டிருக்கும் ஒரு பலி இருந்ததென்று அவன் அறிந்திருந்தான். தானியேல் வேவுகாரர் யாருக்கும் பயப்படவில்லை, ஜன்னலை மூடி முழங்கால்படியிட்டு, தேவனிடத்தில் கைகளையுயர்த்தி ஜெபம் பண்ணினான். ஏன்? பிழைத்தாலும், மரித்தாலும் அவர் வெற்றியை உடையவவாயிருந்தான். ஆகையால், வெற்றி அவனுக்கு அதிகமாக இருந்த காரணத்தால், சிங்கங்கள் அவனைத் தின்ன முடியவில்லை. பாருங்கள்? அவன்—அவன் ஜெயங்கொண்டான். 79 சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ அதிக வெற்றி கொண்டிருந்த காரணத்தால் சிங்கம்…அக்கினி அவர்களை எரித்துப் போட முடியவில்லை. உங்களுக்குத் தெரியுமா, வெற்றியை எரித்துப்போடுவது அல்லது தின்றுவிடுவது அல்லது வேறெதாகிலும் செய்வது, மிகக் கடினமான செயல். புரிகிறதா? எனவே, அவர்கள், அவர்கள் அதை உடையவர்களாய் இருந்தனர்.
5380 நான் வேறொரு கதாபாத்திரத்தைக் குறித்து இங்கு கூறலாம். லோத்தின் நாட்களில், இயேசு அதைக் குறிப்பிட்டார், மூன்றுபேர் மாத்திரமே ஜெயங்கொண்டனர். லோத்தும் அவனுடைய இரண்டு குமாரத்திகளுமே. அவனுடைய மனைவியும் கூட ஜெயங்கொள்ளவில்லை. அவள்—அவள் புறப்பட்டாள். அவள் ஒரு முன்னடையாளமாயிருக்கிறாள். நமக்கு நேரம் இருந்தால் நலமாயிருக்கும். என்னுடைய முப்பது நிமிடங்கள் இப்பொழுதே முடிந்து விட்டது. பாருங்கள்? பார்த்தீர்களா? அவள், அவள் சரியாகத்தான் செய்தான். அவள் எல்லாவற்றையும் விட்டு புறப்பட்டான். 81 இப்பொழுது நான் இதை உங்களிடம் சிறிது நேரம் கூற வேண்டும். உங்களில் அநேகரும் கூட புறப்பட்டீர்கள். உங்களில் அநேகர் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்த பிறகு, அது உண்மையென்று கண்டறிந்த பிறகு, அதில் நிற்க வேண்டுமென்று இவைகளை விட்டுப் புறப்பட்டீர்கள். நீங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனின் ரூபகாரப்படுத்துதலைக் கண்டிருக்கிறீர்கள்; யாரோ ஒருவராய் அல்ல, அது ரூபகாரப்படுத்தப்பட்டது என்று வேறொருவர் கூறின அடிப்படையில் அல்ல, அது எப்படியிருக்கும் என்று வேதம் கூறினதோ, அப்படியே அது இங்கு அதனை செய்து கொண்டிருக்கிறது. அது சத்தியமாயிருந்தது என்பதை நீங்கள் கண்டீர்கள். எனவே நீங்கள் சோதோமை விட்டு, ஸ்தாபனத்தை விட்டு, உங்களை ஒரு கோட்பாட்டிற்கு கட்டும் காரியங்களை விட்டு, பரிசுத்த ஆவி தம்மை எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையின் மூலம் ரூபகாரப்படுத்துவதைக் கண்டு, கிறிஸ்துவைப் பின்பற்றப் புறப்பட்டீர்கள். வேறுவிதமாகக் கூறினால், நீங்கள் கோட்பாடுகளுக்குப் பதிலாக வேதாகமத்தை ஏற்றுக் கொண்டீர்கள். நீங்கள் பின்பற்றத் தீர்மானித்தீர்கள்.
5482 நல்லது, லோத்தின் மனைவியும் அதை தான் செய்தாளென்று உங்களுக்குத் தெரியும். அவள் புறப்பட்டுச் செல்ல தீர்மானித்து, தன் கணவனாகிய லோத்துடனும், தன் பிளைகளுடனும், தன் அன்பார்ந்தவர்களுடனும் புறப்பட்டுச் சென்றாள். ஆனால் அவளுடைய இருதயத்தில் புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனும் எண்ணம் இருக்கவில்லை. அவள் அப்பொழுதும் உலகத்தில் அன்பு கூர்ந்தாள். எனவே நீங்கள் புறப்பட்டு வெளியே வந்தாலும், உலகம் உங்களுக்குள் இருக்க வழியுண்டு. புரிகிறதா? அவள் ஒரு போதும் ஜெயங்கொள்ளவேயில்லை. அவள் அந்த பாதையில் இருந்த போதிலும், அது முடிவில் அவளை முறியடித்து விட்டது. அவள் திரும்பி, ஒரு பெரிய பார்வை பார்க்க வேண்டியதாயிருந்தது. அங்குதான் அவள் மாட்டிக் கொண்டாள். நீங்கள் திரும்பிப் பாராதீர்கள்! எந்த விருப்பமும் வைத்திராதீர்கள்! சென்று கொண்டேயிருங்கள்! உங்கள் சிந்தையை கல்வாரியின் மேல் வைத்து, கிறிஸ்துவை நோக்கிச் சென்று கொண்டிருங்கள்! புரிகிறதா?
5583 அவள் ஜெயங்கொள்ளுகிறவளாக புறப்பட்டாள்; ஆனால் அவள் ஜெயங்கொள்ளவேயில்லை. ஓ, அவள் ஸ்தாபனத்தை விட்டாள். அவள் விட்டு விட்டாள். அவள் லோத்துடன் சோதோமை விட்டு வெளி நடந்தாள். ஆனால் அவள் திரும்பிச் சென்று தன் தலைமுடியைக் கத்தரித்துக் கொள்ள விரும்பினாள். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். புரிகிறதா? அவள் திரும்பிச் செல்ல வேண்டியதாயிருந்தது. அவளால் சோதனையில் நிற்க முடியவில்லை. மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவள் திரும்பிப் பார்த்தாள். “ஓ, மொத்தத்தில் எனக்கு சில நல்ல நண்பர்கள் அங்கிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். மொத்தத்தில் எப்படியாயினும் இது ஒரு சிறு—ஒரு சிறு அசைவாக இருக்கக் கூடும். அது சரியா இல்லையா என்று எனக்குத் தெரியாது. இந்த மனிதர் கூறுவது மாத்திரம் எனக்குத்—எனக்குத் தெரியும். அவர் எனக்கு கணவனாயிருந்தபோதிலும், ஆனால் அதே சமயத்தில்…” உங்கள் போதகர் ஆவிக்குரிய விதத்தில் உங்கள் கணவராயிருக்கிறார், நீங்கள் பாருங்கள். “இப்பொழுது அது சரியா அல்லது தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவருடைய வெளிப்பாடு சரியாயில்லாமலிருக்கக் கூடும்.” அப்படியானால், உனக்குப் பரிபூரண திருப்தி இல்லையென்றால், அது தேவனுடைய வார்த்தையென்று நீ பரிபூரணமாய் அறிந்திருக்கவில்லை. அப்படியானால்—அப்படியானால் நீ போக முடியாது. புரிகிறதா? நீ உண்மையில் அதற்கு உன்னை முற்றிலுமாக விற்றுப் போட வேண்டும். நீ அதை அறிந்திருக்க வேண்டும். வெறுமென, “மற்றவர் அதைச் செய்யக் காண்கிறேன். நான் ஒரு அடையாளத்தைக் காண்கிறேன்” என்று நீ கூறுவதல்ல.
5684 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்டு வந்தனர் என்று உங்களுக்குத் தெரியும், அதை இதற்கு ஒப்பிட முடியும். அவர்கள் இருபது லட்சம் பேர்களாய் புறப்பட்டனர், ஆனால் இரண்டு பேர்களில் முடிவடைந்தனர். உண்மையே அவர்கள் தேவனுடைய கிரியைகளைக் கண்டனர்; அவர்கள் ஆவியின் வெளிப்படுத்துதலைக் கண்டனர். அவர்கள் எகிப்தில் மகத்தான வல்லமையான அற்புதங்கள் நிகழ்வதைக் கண்டனர். அவர்கள் புறப்பட்டு வெளியே வந்தனர். ஆனாலும் அந்த எண்ணம் அவர்கள் இருதயத்தில் இருக்கவில்லை. அவர்கள் ஜெயங்கொள்ளவில்லை. அவர்கள் சும்மா வெளி வந்தனர். இயேசு, “அவர்கள் வனாந்தரத்திலே அழிந்து நித்தியமாக மரித்தார்கள்” என்றார். “அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்,” அது நித்திய பிரிவினையைக் குறிக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் வனாந்திரத்தில் அழிந்து மாண்டனர்.
5785 ஆனால் யோசுவா, காலேப் என்று இருவர் இருந்தனர். அது பலப்பரீட்சைக்கு வந்த போது, தடயங்கள் மிகப் பெரியதாக இருந்தனர். அவர்களுக்கு முன்பாக அவர்கள் வெட்டுக்கிளிகளைப் போல் காணப்பட்டார்கள். யோசுவா காலேபுடன் சேர்ந்து கொண்டு, “நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்” என்று கூச்சலிட்டான். ஏன்? தேவன் அவ்வண்ணமாக கூறியிருந்தார். அவர்கள் ஜெயங்கொண்டவர்களாயிருந்தனர். அவர்கள் ஜெயங்கொண்டனர். ஜனங்களைக் கொண்ட அந்த பெரிய ஸ்தாபனத்தில் அவர்கள் இருவர் மாத்திரமே தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கொண்டு செல்லும் சிலாக்கியத்தைப் பெற்றனர். யோசுவாவும் காலேபும் இரண்டு தளபதிகளாக முன் வரிசையில் நடந்து, நதி வரைக்கும் அவர்களை நடத்தி, நதியை கடக்கச் செய்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் அவர்களைக் கொண்டு சென்றனர். ஏன்? அவர்கள் என்ன நடந்த போதிலும் கவலைப்படாமல், வார்த்தையை விசுவாசித்தனர்.
5886 அதன் பின்னர் தாத்தான் எழும்பினான். சரியாகக் கூறினால் தாத்தான் எழும்பினான், கோராவும் எழும்பினான். தேவன் மோசேயை முற்றிலுமாக ரூபகாரப்படுத்தின பின்பும் அவர்கள், “இந்த மனிதன் தன்னை எல்லாரிலும் மேலாக உயர்த்திக் கொள்ளப் பார்க்கிறான். மற்றவர்களை விட தான் பரிசுத்தன் என்று எண்ணிக் கொள்கிறான்” என்றனர். அவர்கள் “நாம் ஒரு மக்கள் குழுவினைத் தொடங்குவோம். நாம் இதை, அதை அல்லது மற்றதை செய்வோம், நாம் நமக்கு ஸ்தாபனங்களை ஏற்படுத்துவோம், நாம் ஏற்படுத்துவோம்…” என்றனர். அவர்கள் மரித்து, அழிந்து போயினர். ஆனால் அந்த மனுஷரோ தேவனுடைய வார்த்தையை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் அதில் நிலைநின்றனர். அவர்கள் அதில் பிரவேசித்தனர். “தொடங்குகிறவன் அல்ல, முடிக்கிறவனே.” அநேகர் ஓட்டத்தை தொடங்குகின்றனர். ஆனால் ஒருவன் மாத்திரமே அதை முடிக்கிறான். அநேக சபைகள், அநேக ஜனக்குழுக்கள் தொடங்கக் கூடும். ஆனால் ஒரு குழு மாத்திரமே முடிக்கும். அவர்கள் தான் ஜெயங்கொள்ளுகிறவர்கள்.
5987 லோத்தின் நாட்கள், ஆம், லோத்தின் மனைவி ஒரு பெரிய பார்வை பார்த்து, “ஓ நான் இன்னார்—இன்னாரை அங்கு விட்டு வந்து விட்டேனே. நாம் அவர்களோடு அருமையான தருணம் அனுபவித்தோம். அதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது” என்றாள். நோவாவின் நாட்களில் நடந்தது போல, அவள் வாசலுக்கு வெளியே மாட்டிக் கொண்டாள். அவள் மேல் இரக்கம் காண்பிக்கப்படாமல் வெளியே தள்ளப்பட்டு கதவு அடைக்கப்பட்டது. அவள் அழிந்து போனாள். அந்த உப்புத்தூண் இன்றைக்கும் அங்கு நின்று கொண்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு துண்டை உடைத்து எடுத்தால், அந்த உப்புத்தூண் மீண்டும் வளர்கிறதென்று அவர்கள் கூறுகின்றனர். (எனக்குத் தெரியாது.) நீங்கள் “சோதோம் கோமோரா” திரைப்படத்தைப் பார்த்தால், அந்த அசலான உப்புத்தூண் அங்கு நின்று கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். 88 இப்பொழுது உப்புத்தூணுக்கும் (Pillar of Salt) அக்கினி ஸ்தம்பத்துக்கும் (Pillar of Fire) வித்தியாசமுண்டு. புரிகிறதா? நீங்கள் இவ்விரண்டில் ஒரு வழியில் மாத்திரமே செல்ல முடியும். ஆம்.
6089 யோவான் ஸ்நானனின் காலத்தில் இருந்ததை கவனியுங்கள். யோவான் ஸ்நானகனின் காலத்தில் ஆறுபேர் மாத்திரமே ஜெயங்கொண்டவர்களாக காணப்பட்டனர். எல்லா காலங்களிலும் ஜெயங்கொண்டவர்கள் இருந்தனர். யோவானின் காலத்தில் ஆறுபேர் இருந்தனர். அவர்கள் யோசேப்பும் மரியாளும், சகரியாவும் எலிசபெத்தும், சிமியோனும் அன்னாளும். ஒரு ஆண் ஒரு பெண், ஒரு ஆண் ஒரு பெண், ஒரு ஆண் ஒரு பெண். பாருங்கள்? கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உதாரணம். கிறிஸ்துவும் சபையும், கிறிஸ்துவும் சபையும், கிறிஸ்துவும் சபையும் பார்த்தீர்களா? பார்த்தீர்களா? 90 கவனியுங்கள், அது மாமிச பிரகாரமான மனிதனிலிருந்து தொடங்குகிறது. இல்லை, மோசே…யோசேப்பு, மாமிசப்பிரகாரமான மனிதன் யோசேப்பு. அவன் என்னவாயிருந்தான்? ஒரு தச்சன், அதன்பிறகு ஆசாரியன். அவன் என்னவாயிருந்தான்? புரிகிறதா? கர்த்தருடைய வீட்டில் ஒரு ஊழியக்காரன்; சகரியா. அதிலிருந்து தீர்க்கதரிசியாகிய சிமியோனும் ஒரு தீர்க்கதரிசினியும். பார்த்தீர்களா? …?… நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். ஆமென். நீங்கள் அதை புரிந்துகொள்ளுகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] பரிபூரணமாக. ஆறு பேர் ஜெயங்கொண்டனர். அக்காலத்திலிருந்த மற்றவரும், அவர்களும் தங்களுடைய பலியையும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும் செலுத்தினர், ஆனால் இவர்கள் மாத்திரமே தெரிந்து கொள்ளப்பட்டனர். இவர்கள் ஜெயங்கொண்டனர்.
6191 கவனியுங்கள், ஒவ்வொரு சபை காலத்திலும், ஜெயங்கொண்டவர்கள் இருந்தனர். ஒவ்வொரு சபை காலத்திலும் ஒவ்வொரு குமாரன், அவர்கள் அக்காலத்தின் சோதனையின் மேல் ஜெயங்கொண்டனர். அதற்கு ஆதாரமான வேத வாக்கியங்களை இங்கு குறித்து வைத்திருக்கிறேன். அவைகளைக் கூற இப்பொழுது உண்மையாகவே நேரமில்லை என்றே நான் நினைக்கிறேன். ஆனால் சபையின் காலங்கள் ஒவ்வொன்றிலும் அவர்கள் இருந்ததை நாம் அறிவோம். இப்பொழுதும் அவ்வாறேயுள்ளது அது யாரோ ஒருவர்…என்பதைப் போன்று உள்ளது. 92 பாருங்கள், நான் துவக்கத்தில் கூறினது போன்று, நீங்கள் தோவியடைந்தவர்களாகப் பிறந்தீர்கள். அந்த பிறப்பு உங்களை ஒரு போதும் ஜீவனுக்கு கொண்டு வர முடியாது, ஏனெனில் நீங்கள் தோல்வியடைந்தவர்களாய்ப் பிறந்தீர்கள். நீங்கள் தோவியடைந்த உலகில், தோல்வியடைந்த மக்களின் மத்தியில், தோல்வியடைந்த கோட்பாடுகளின் மத்தியில், தோல்வியடைந்த ஸ்தாபனங்களின் மத்தியில் இருக்கிறீர்கள். நீங்கள் எவ்வகையிலாவது வெற்றியடைய வேண்டும்.
6293 அது ஒரு லீலிப்புஷ்பத்தைப் போன்றது. ஒரு லீலிபுஷ்பம் எல்லா மலர்களைக் காட்டிலும் மிக அழகானது என்று நான் நினைக்கிறேன். எனக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த லீலி புஷ்பம் மற்றும் குளத்து லீலிபுஷ்பம் என்றால் மிகப் பிரியம். குளத்தில் வளரும் தண்ணீர் லீலிப்புஷ்பத்தைப்போல் அழகானது எதுவுமில்லை என்றே நான் கருதுகிறேன். அது எவ்வளவு பிரகாசமாயுள்ளது. இப்பொழுது அது எதிலிருந்து தோன்றுகிறது? குளத்தின் அடியிலுள்ள சேற்றில் புதைந்துள்ள ஒரு சிறு விதையிலிருந்து அது தோன்றுகிறது. அது சேற்றில் உள்ள போது, அது மலராகும் போது உள்ள எல்லா பிரகாசத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில் ஏதோ ஒன்றுள்ளது என்பதை அது அறிந்து அனுதினமும் பாடுபட வேண்டியதாயுள்ளது…அது கறுப்பாயுள்ளது, அது அழுக்காயுள்ளது;அது சேறு நிறைந்தது. அது சகதியில் இருப்பதால் அதுவும் சகதியைப்போல் கொழகொழவென்றுள்ளது. இருப்பினும் அது சேற்றின் வழியாகவும், அழுக்கின் வழியாகவும், தண்ணீரின் வழியாகவும் தள்ளிக் கொண்டு மேலே வந்து, வெளிச்சத்தில் தன் தலையை வெளியே நீட்டி, அதற்குள் இத்தனை காலம் மறைந்திருந்த அனைத்தையும் வெளிப்படுத்துகிறது. 94 அதுவே ஜெயங்கொள்ளுகிறவனாய் உள்ளது என்று நான் நினைக்கிறேன். அவன் ஒரு சமயம் பாவத்தில் மூழ்கியிருந்து தவறான செயல்களைப் புரிந்து வந்தான். அதை குறித்து இப்பொழுது கவலை கொள்ள வேண்டியதில்லை. ஒரு காலத்தில் தவறான செயல்களைப் புரிந்து வந்தான். பிறகு…இப்பொழுது ஏன் மறுபடியும் குளத்தை திரும்பிப் பார்க்க வேண்டும்? புரிகிறதா? பாருங்கள், நீங்கள்…
6395 பாருங்கள் தேவன் அவருடைய முன்குறித்தலின் மூலம் இந்த விதையை ஜீவனுக்குக் கொண்டுவந்து, அது தன்னை வெளிப்படுத்தும்படி செய்து விட்டார். இப்பொழுது எல்லாவற்றிற்கும் மேலாக அது ஜெயங்கொண்டுவிட்டது. பார்த்தீர்களா? அது அங்கே சேற்றில் புதைந்து கிடந்திருந்த போது தன்னை வெளிப்படுத்த வில்லை. அது தன்னை வெளிப்படுத்துவதற்கென மேலே எழும்பி வருகிறது. அவ்வாறே நீங்களும் உங்களுடைய—உங்களுடைய பாவத்திலும், விபச்சாரத்திலும், நீங்கள் வாழ்ந்து வந்த ஒவ்வொரு காரியத்திலும் இருந்த போது, நீங்கள் எதையுமே வெளிப்படுத்தவில்லை. ஆனால் அங்கு ஒரு வித்து இருந்தது. அது வெளிச்சத்துக்குள் தன்னை தள்ளிக் கொள்ளத் தருணம் கிடைத்தது. இப்பொழுது நீங்கள் குமாரனின் வெளிச்சத்தினால் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இருக்கிறீர்கள். அதுவே நீங்கள் துவக்கத்தில் உண்மையில் என்னவாயிருந்தீர்கள் என்பதை வெளிக் கொண்டு வந்தது. நான் கூறுவதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் வெளிச்சத்தைக் கண்டீர்கள். நீங்கள் மலர்ந்து விட்டீர்கள். உங்கள் இருதயத்தை திறந்தீர்கள். இப்பொழுது நீங்கள் லீலிப் புஷ்பமாயிருக்கிறீர்கள்.
6496 லீலிப்புஷ்பம் என்பதன் பேரிலான என் பிரசங்கம் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? சங்கை லீலி புஷ்பம், அது எப்படியாய் பாடுபட்டு உழைக்கிறது. “ஆனால் அதே சமயத்தில் அது நூற்கிறதில்லை என்றாலும் சாலொமோன் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை. அவன்—அவன்—அவன்—அவன்—அவன்…அதை கவனித்துப் பாருங்கள். அது ஆயத்தமாய்…அது தனக்கென்று எதையும் எடுத்துக் கொள்வதில்லை. லீலிபுஷ்பம் தன்னைக் குறித்தும் கவலை கொள்வதில்லை. அது என்ன செய்கிறது? மற்றவர்கள் காணத்தக்கதாக தன் ஜீவனையும் அழகையும் அது—அது வெளிப்படுத்துகிறது. மற்றவர்கள் மகிமையை காணும்படியாக, சேற்றினுள் புதைந்திருந்தபோது அதற்குள் என்ன இருந்தது என்பதை அதன் ஜீவன் மூலம் வெளிப்படுத்துகிறது. இப்பொழுது அது மேலே உள்ளது. அதுதான் ஜெயங்கொள்ளுதல். அது சேற்றை ஜெயங்கொண்டது. அது உலகத்தின் காரியங்களின் மேல் ஜெயங்கொண்டது, இப்பொழுது தன்னை இலவசமாக வெளிக்காண்பிக்கிறது. எல்லோரும் அதை காணலாம். அதன் வாழ்க்கையை, அதன் மேல் நீங்கள் உங்கள் விரலைச் சுட்டிக் காட்டி ஏதும் கூற முடியாது. புரிகிறதா? அது உண்மையான ஒரு ஜெயங்கொள்பவனாயிருக்கிறது. அதற்கு விரோதமாக நீங்கள் ஒன்றையும் இப்பொழுது கூற முடியாது. “அது சேற்றிலிருந்து தோன்றினது” என்று மாத்திரம் கூறலாம். ஆனால் இப்பொழுது அது சேற்றில் இல்லை, அது அதிலிருந்து மேலே வந்து விட்டது. ஆமென். அது முன்பு என்னவாயிருந்தது என்பதை நீங்கள் இப்பொழுது சுட்டிக் காட்ட முடியாது. இப்பொழுது அது என்னவாயுள்ளது? அது மேலே வந்து விட்டது. 97 அதன் பின்னர் தேனீ அங்கு வந்து, “இது அற்புதமான நறுமணமாயுள்ளது. நான் போய், என்னுடைய வேலையை நான் செய்வேண் என நான் நினைக்கிறேன்” என்று கூறுகிறது. 98 லீலிபுஷ்பம் தன் இருதயத்தை திறந்து கொடுத்து, “இப்பொழுது வா. சரி” என்கின்றது. தேனீ அதிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறது. பார்த்தீர்களா? அது உண்மையான ஒரு போதகராயுள்ளது. அது தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆனால் பாருங்கள். அது எங்கிருந்து வந்தது என்று பாருங்கள். அது அதனைச் செய்ய ஜெயங்கொள்ள வேண்டியதாயிருந்தது.
6599 ஒரு காலத்தில் அவன் அல்லது அவள் இளமையாகவும், சிகப்பாகவும், அழகாகவும் இருந்தனர். அவர்கள் அநேக சோதனைகளின் வழியாய் கடந்து செல்ல வேண்டியதாயிருந்தது, ஆனால் அவையனைத்தையும் அவர்கள் ஜெயங்கொண்டனர். புரிகிறதா? அவர்கள் ஜெயங்கொண்டனர். இப்பொழுது அவர்கள் கிறிஸ்துவின் அழகை தங்கள் வாழ்க்கையின் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கவனியுங்கள், சேற்றின் வழியாக வெளிப்படுத்துதல். 100 நாம் அதை எப்படி செய்ய வேண்டுமென்று இயேசு நமக்கு ஒரு உதாரணத்தை அளித்தார். இப்பொழுது ஜெயங்கொள்வது எப்படியென்று நாம் அறிய விரும்புகிறோம். அதை எப்படி செய்ய வேண்டுமென்று இயேசு நமக்கு கூறினார். பாருங்கள்? தாழ்மை! அவர் ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக் கொண்டு, சீஷர்களுடைய கால்களைக் கழுவி அவைகளைத் துடைத்தார். பரலோகத்தின் தேவன் தம்மைத் தாழ்த்தினார். 101 நாம் தாழ்த்தப்பட வேண்டுமென்று விரும்புவதில்லை. அந்த காரணத்தினால்தான் பெண்கள் தங்களுடைய தலைமுடி வளரவிடுவதை விரும்புகிறதில்லை. (புரிகிறதா?) அந்தக் காரணத்தினால்தான் பெண்கள் உடை உடுத்துவதுபோல் உடுத்துவதையும் அவர்கள் விரும்புவதில்லை. அவ்வாறே ஆண்களும் விரும்புகிறதில்லை, பாருங்கள், அதேக் காரியம் தான். அவர்கள் விரும்புகிறதில்லை. அவர்கள், அவர்கள் அவ்வாறு செய்ய அவமானமடைகின்றனர். ஆனால் இயேசு எப்பொழுதுமே! அவர் யாரென்பதைப் பாருங்கள். பெருந்தன்மை தன்னைத்தான் தாழ்த்திக் கொள்ளும். மகத்தானதோ தன்னை தாழ்த்திக் கொள்கிறது. மேன்மை.
66102 புகழ் வாய்ந்த சிலரைச் சந்திக்கும் சிலாக்கியம் எனக்கு கிடைத்ததுண்டு, ஆனால் சில நபர்கள் ஒரு மாற்று உடையையும் சட்டைப்பையில் ஐம்பது செண்டு காசையும் வைத்துக் கொண்டு, அவன் ஒன்றுமில்லாதவனாயிருக்கும்போதே தன்னை உயர்ந்தவன் என்று நினைத்துக் கொள்கிறான். ஆனால் நான் உயர்ந்த மனிதர்களுடன் நின்றதுண்டு, அவர்கள் பழையதாய்ப் போய்விட்ட சட்டைகளை அணிந்து, நீங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைக்கும்படி செய்து விடுகின்றனர். பார்த்தீர்களா? பெருந்தன்மை என்பது தாழ்மை சபையே, அதை மறந்து விடாதே! பெருந்தன்மை எப்பொழுதும் தாழ்மையில் வெளிப்படுகின்றது, நீங்கள் எவ்வளவு அருமையாக இருக்க முடியும் என்பதில் அல்ல. இப்பொழுது நீங்கள் சுத்தமில்லாமல் இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் ஆவியில் தாழ்மையைக் குறித்து கூறுகிறேன். புரிகிறதா? நீங்கள் சென்று உங்கள் உடைகளை துவைக்கவில்லை என்னும் அர்த்தத்தில் கூறவில்லை. அதாவது நீங்கள் அதை செய்ய வேண்டும். அது உங்களுக்குத் தெரியும். புரிகிறதா? ஆனால் நான் தாழ்மையை, உண்மையான தாழ்மையைக் குறித்தேப் பேசிக் கொண்டிருக்கிறேன், ஏதோ ஒன்றை அணிவதை அல்ல. தாழ்மையான ஒன்றை, உண்மையான தாழ்மையையே.
67103 அதை எப்படி செய்ய வேண்டுமென்று இயேசு நமக்கு கூறியிருக்கிறார். அவர் ஜெயங்கொண்டார். ஜெயங்கொள்ளுதல் என்றால் “சோதனைக்கு நிற்பது” என்று பொருள், அது உண்மை…பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் செய்தது போல்; இயேசு தமது சத்துருக்களின் மத்தியில் செய்ததுபோல; அவர் சோதனையை மேற்கொண்டார். அவர் சோதிக்கப்பட்ட எல்லாவற்றிலும் மேற்கொண்டார். வியாதி அவரை சந்தித்தபோது, மேசியாவாகிய அவர் அவர்களை சுகப்படுத்தினார். மரணம் அவரை சந்தித்தபோது, அவர் அவர்களை உயிரோடெழுப்பினார். கல்வாரியில் தமது சொந்த மரணம் அவரைச் சந்தித்தபோது, அவர் தம்மை ஒப்புவித்ததன் மூலம் அதன் மேல் வெற்றி சிறந்தார். எப்படி? வார்த்தையின் மூலம். அவர், “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள். மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்றார். வார்த்தை அவ்வாறு உரைத்திருந்தது. பாருங்கள்? மரணம் அவரைச் சந்தித்தபோது, அவர் அதன்மேல் வெற்றி சிறந்தார். அவர் மரணத்தை ஜெயங்கொண்டார். நரகம் அவரை சந்தித்தபோது, அவர் அதன் மேல் வெற்றி சிறந்து நரகத்தை ஜெயங்கொண்டார். ஆம்! கல்லறை அவரை சந்தித்தபோது, அவர் கல்லறையை ஜெயங்கொண்டார். எப்படி? எல்லாவற்றையும் வார்த்தையிலும் தாழ்மையினாலும். ஓ, என்னே! அவர் உண்மையான மனிதன். அந்த ஒருவரே உங்களுடைய உதாரணமாக இருக்கிறார். புரிகிறதா? அவர் ஒவ்வொரு காரியத்தையும் மடங்கடித்து, அதை ஜெயங்கொண்டார்.
68104 பாருங்கள். சோதனை அவருக்கானதாயிருந்தது. அது உங்களுக்குத் தெரியுமா? வேதம், “அவர் எல்லாவிதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிறார்” என்று உரைத்துள்ளது. அவர் மது அருந்தும் விஷயத்தில் சோதிக்கப்பட்டார். அவர் பெண்களால் சோதிக்கப்பட்டார். அவர் எதைக் கொண்டெல்லாம் சோதிக்கப்பட வேண்டுமோ, அவை அனைத்தினாலும் சோதிக்கப்பட்டார். நாம் சோதிக்கப்படுகிற ஒவ்வொரு காரியத்தினாலும் அவர் சோதிக்கப்பட்டார். அவர் ஒரு மனிதனாயிருந்தார். அந்த சமயத்தில் அவர் மீது நீங்கள் குறை கூற முடியாமற்போயிற்று. ஆம் ஐயா. 105 ஜெயங்கொள்ளுதல் என்றால், “பிசாசின் தந்திரங்கள் ஒவ்வொன்றையும் அடையாளங் கண்டு கொள்ளுதல்” என்று அர்த்தம். அநேகர் பிசாசு என்று ஒன்றில்லை என்றும், அது வெறும் ஒரு கற்பனை எண்ணம் என்றும் கூறுகின்றனர். அதை நம்பாதீர்கள். பிசாசு உண்மையாக இருக்கிறான். நீங்கள் இருப்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மையாக பிசாசு இருக்கிறான். ஒரு உண்மையான பிசாசை, அவனை நீங்கள் உண்மையாகவே அடையாளங் கண்டு கொள்ள வேண்டும். அவன் ஒரு பிசாசு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நீங்கள் அவனை அடையாளங்கண்டு கொண்டு, அவன் ஒரு பிசாசு என்றும், அவன் உங்களுக்கு விரோதமாயிருக்கிறான் என்றும் அறிந்து கொண்ட பின்பு, அவனை ஜெயங்கொள்ள வேண்டுமானால், உங்களிலிருக்கிற தேவன் அவனை விட பெரியவரும் வல்லமையுள்ளவரென்றும், உங்களிலிருக்கிற அவர் அவனை ஏற்கனவே ஜெயங்கொண்டு விட்டாரென்று அடையாளங்கண்டு அறிந்திருக்க வேண்டும். அவருடைய கிருபையினால் நீங்கள் அவனை மிஞ்சினவர்களாய் இருக்கிறீர்கள். ஆமென். நீங்கள் அவனை அடையாளங்கண்டு கொள்ளும்போது, அது தான் உண்மையான ஜெயங்கொள்ளுதல்.
69106 நீங்கள் திரும்பிப் பார்த்து, “நான் இதை செய்துகொண்டிருக்கிறேன். நான் அதை செய்துகொண்டிருக்கிறேன்” என்று கூறுவீர்களானால், அப்பொழுது இல்லை, நீங்கள்—நீங்கள், நீங்கள் தோவியடைந்துவிட்டீர்கள். “ஆனால் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” அப்படியானால் நீங்கள் ஜெயங்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணருகிறீர்கள். அவன் ஒரு பிசாசு என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுகிறீர்கள். நீங்கள், “எனக்கு ஒரு வியாதி உண்டு. அது வியாதி என்று நான்—நான்—நான்—நான் நம்பவில்லை” என்று சொல்ல முடியாது. ஓ, ஆமாம், அது ஒரு வியாதி தான். உங்களுக்கு புற்றுநோய் உள்ளதென்று வைத்துக் கொள்வோம். அது ஒரு புற்றுநோய் என்று நீங்கள் நம்பவில்லை. ஆனால் அது ஒரு புற்றுநோய் தான். அது புற்று நோயே. ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.” உங்களிலிருக்கிற பரிசுத்த ஆவியானவர் இந்தக் காரியத்தை ஏற்கனவே ஜெயங்கொண்டு விட்டார் என்பதை நீங்கள் உணரவேண்டும். அவர் உங்களிலிருக்கிறபடியால், அவர் மூலமாய் நீங்கள் ஜெயங்கொள்ள முடியும். அது முற்றிலும் நியாயமானது. அப்படித்தான் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. ஜெயங்கொள்ளுதல். நான் வேகமாக முடிக்க வேண்டும். நான் ஏற்கனவே நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசிவிட்டேன். இப்பொழுதே அளிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் நான் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கிறேன்.
70107 கவனியுங்கள், ஜெயங்கொள்ளுதல், உங்களிலிருக்கிற தேவன் அவனை விட பெரியவர். இப்பிரபஞ்சத்தின் தேவன் உங்களிலிருக்கிற பரலோகத்தின் தேவனைப் பார்க்கிலும் பெரியவன் அல்ல. வெளிச்சத்துக்கு முன்னால் இருள் ஒரு போதும் நிற்க முடியாது. 108 இப்பொழுது, வெளிச்சத்துக்கு முன்னால் இருள் நிற்க முடியாது. அது எவ்வளவு இருளாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. வெளிச்சம் அதை அகற்றிவிடும். இருள் அதற்கு முன்னால் நிற்க முடியாது. மகிமை! ஆனால் நீங்கள் எவ்வளவு இருளை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு அதை எப்பொழுதாகிலும் வெளிச்சத்துக்கு முன்பாக நிறுத்தி, என்ன நடக்கிறதென்று பாருங்கள். உங்களிலிருக்கிறவர் தான் அந்த வெளிச்சம். உலகத்திலிருப்பவன் தான் அந்த இருள். எனவே வெளிச்சம் இருளின் மேல் ஜெயங்கொள்ளும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே கிறிஸ்துவுக்குள் இருக்கும் மனிதனும், அவன் உலகத்தின் காரியங்களின் மேல் ஜெயங்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்திருக்கிறான். ஆமென்! அது உங்களை கட்டி வைக்க முடியாது. நீங்கள் சுயாதீனர். “அவர் ஒளியிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியபட்டிருப்போம். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” அங்குதான் காரியம்.
71109 “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.” இப்பொழுது நீங்கள் பின்னோக்கிப் பார்த்து, நீங்கள் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படுவீர்கள் என்று காணப்பட்டால் அப்பொழுது நீங்கள் இன்னும் உலகத்தில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அதைக் காட்டிலும் உயர வாழ்வீர்களானால், உங்கலிலிருக்கிறவர் இருளுக்கு உயர உங்களை நடத்தியிருக்கிறார். லீலி புஷ்பத்தைப் போன்று, அது சேற்றின் இருளுக்கு உயர உள்ளது. அது சேற்றுத் தண்ணீரின் இருளுக்கு உயர உள்ளது. அது ஒளியிலிருந்து கொண்டு, அது சேற்றை விட்டு வெளிவருவதற்கு முன்பு அதற்குள் இருந்த அழகை பிரதிபலிக்கிறது. ஆமென்! 110 இப்பொழுது நான்—நான் ஒரு கூச்சலிடும் கிறிஸ்தவனாக இருப்பதைப் போன்று உணருகிறேன். துவக்கத்தில் தேவன் அதற்குள் வைத்திருந்தது தள்ளிக் கொண்டு மேலே வந்து ஜெயங்கொண்டது. அது ஓட்டை ஜெயங்கொண்டது, அது சேற்றை ஜெயங்கொண்டது; அது தண்ணீரை ஜெயங்கொண்டது. அது எல்லாவற்றையும் ஜெயங்கொண்டு, ஒரு ஜெயங்கொள்பவனாயிருந்தது, தேவனுடைய அழகையும் மகிமையையும் பிரதிபலித்தது.
72111 அப்படித்தான் ஒவ்வொரு விசுவாசியும் செய்கிறான். அப்படித்தான் நோவா செய்தான். அப்படித்தான் லோத்து செய்தான். அந்த விதமாகவே செய்தனர். அவன் எப்படிப்பட்ட குழப்பத்தில் இருந்தானென்று பாருங்கள். அப்படித்தான் மோசே செய்தான். அப்படித்தான் யோசுவா செய்தான். அப்படித்தான் தானியேல் செய்தான். அப்படித்தான் சாத்ராக், மேஷாக் செய்தனர். அப்படித்தான் யோவான் ஸ்நானன், சகரியா, எலிசபெத் செய்தனர். அப்படித்தான் சிமியோன், அன்னாள், மற்றும் அவர்கள் ஒவ்வொருவரும் செய்தனர். அவர்கள் தங்களைச் சுற்றிலுமிருந்த சேற்றை, அவர்கள் புதைந்து கிடந்திருந்த சேற்றை ஜெயங்கொண்டனர். அவர்கள் அதற்குமேல் தங்கள் தலைகளை நீட்டி, தேவனுடைய மகிமையை பிரகாசிப்பித்தனர். அதைத்தான் உண்மையான கிறிஸ்தவன் எவனும் செய்கிறான்.
73112 ஞாபகம் கொள்ளுங்கள், அதை எப்படி செய்வது என்பதை இயேசு அவளுக்கு காண்பித்தார். இயேசு கிறிஸ்துவின் சோதனையில், நாற்பது நாட்களின் சோதனையில் எந்த மனிதனும் சோதிக்கப்படாத அளவுக்கு அவர் சோதிக்கப்பட்டார். கவனியுங்கள். அதை ஜெயங்கொள்வது எப்படியென்று அவர் காண்பித்தார். இப்பொழுது இன்னும் சில நிமிடங்களில் நான் முடித்துவிடுவேன். 113 பாருங்கள், அதை எப்படி செய்வதென்று அவர் காண்பித்தார். அவர் எப்படி ஜெயங்கொண்டார்? வார்த்தையினால், அதைக் கொண்டுதான் அவர் ஜெயங்கொண்டார். ஏனெனில் அவரே வார்த்தையாயிருந்தார். இயேசு, “நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால்…” என்றார். அப்பொழுது நீங்கள் வார்த்தைக்கு, வாக்குத்தத்தமான வார்த்தைக்குத் திரும்புகிறீர்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் வாக்குத்தத்தமாக அளிக்கப்பட்டுள்ள வார்த்தை என்ன? “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” அப்படியானால் நான் எப்படி ஜெயங்கொள்வது? நான் அல்ல. எனக்குள் இருக்கும் வார்த்தை. வார்த்தையே தேவன். அப்படியானால் எனக்குள் இருக்கும் வார்த்தையின் காரணமாக நான் உலகத்தின் காரியங்களின் மேல் ஜெயங்கொள்கிறேன். “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” நீங்கள் உங்களை மேலே தள்ளிக் கொண்டேயிருங்கள். நீங்கள் நிச்சயமாக மேலே வந்து விடுவீர்கள். பாருங்கள்? நீங்கள் மேலே வந்து தான் ஆக வேண்டும்.
74114 அவருடைய நாற்பது நாட்களின் சோதனையில், அவர் தேவனுடைய வார்த்தையினால் ஜெயங்கொண்டார். நான் இங்கு சில நிமிடங்களுக்கு ஒன்றை வெளிப்படுத்திக் கூற விரும்புகிறேன். அந்த சோதனையின் போதூ சாத்தான் மூன்று பெரிய தாக்குதல்களை நடத்தினான். கவனியுங்கள். எப்பொழுதுமே அவைகள் மூன்றாக இருந்து வருகிறது. அதை மறந்தி விடாதீர்கள். புரிகிறதா? அவன் மேலிருந்து கீழ்வரைக்கும் மூன்று தாக்குதல்களைச் செய்தான். அவனால் முடிந்தவரை அவரை மேற்கொள்ளப் பார்த்தான். ஆனால் அவரோ வார்த்தை. ஆமென்! அவர் எதை உபயோகித்தார்? வார்த்தையாகிய தம்மையே. சாத்தான் மூன்று பெரிய தாக்குதல்களை அவர்மேல் நடத்தினான். ஆனால் அவர் அவைகளை வார்த்தையினால் சந்தித்தார். அவன் நிகழ்த்தின ஒவ்வொரு தாக்குதலையும் அவன் வார்தையை உபயோகித்தே செய்தான். இதை இப்பொழுது கவனியுங்கள், மேலிருந்து கீழ்வரைக்கும் நடத்தினான்.
75115 அவர் தம்முடைய வல்லமையை உபயோகிக்க வேண்டும் என்பதற்காகவே அவன் முதல் தாக்குதலை நடத்தினான். அவர் வார்த்தை என்று அவர் அறிந்திருந்தார்; அவருடைய ஸ்தானத்தை அவர் அறிந்திருந்தார். அவர் அறிந்திருந்தார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] “நான் மனுஷகுமாரன்” என்று அவர் அறிந்திருந்தார். அவர் தம்முடைய ஸ்தானத்தை அறிந்திருந்தார். அவர் தம்மை போஷிப்பதற்கென தமக்கிருந்த வல்லமையை தம் மீதே உபயோகிக்க வேண்டுமென்று சாத்தான் எண்ணினான். அவர் பசியாயிருந்தார். ஒரு மனிதன் பசியாயுள்ளபோது, அவன் கிட்டதட்ட எதை வேண்டுமானாலும் செய்வான். அவன் திருடுவான். கொள்ளையடிப்பான், பிச்சையெடுப்பான், கடன் வாங்குவான், எதையும் செய்வான், புரிகிறதா? அவருக்குப் அந்த பசி உண்டாயிருந்தது. ஜெயங்கொள்வதற்கென அவருக்கு அளிக்கப்பட்டிருந்த வல்லமையை அவர் தம் மீதே உபயோகிக்க வேண்டுமெனக் கருதி, சாத்தான் தன் முதலாம் பெரிய தாக்குதலை நிகழ்த்தினான். அவரோ அதை தமக்கென உபயோகிக்கவில்லை. இல்லை, அவர் பிறருக்காகவே அதை உபயோகித்தார். அது உண்மை. அவர் பிறருக்காக அதை உபயோகித்தார். தமக்காக அல்ல. அது அவருக்காக அளிக்கப்படவில்லை. வேண்டுமானால் அவர் அதை தமக்காக உபயோகித்திருக்கலாம். நிச்சயமாக அவர் அவ்வாறே செய்திருக்கலாம்.
76116 ஆனால் பிசாசு உங்களை எப்படி பிடிக்கிறான் என்று பார்த்தீர்களா? நீங்கள் அவனுக்கு செவி கொடுக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறான். இயேசு பிதா செய்யக் கூறினவைகளுக்கு மாத்திரம் செவி கொடுத்தார். அது உண்மை. அவர் கூறினார். “ஏன்,” பிசாசு, “அவர் தூதர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார் என்று எழுதியிருக்கிறதே” என்றான். 117 அதற்கு அவர், “ஆம், ஆனால் இப்படியும் கூட எழுதியிருக்கிறதே…” என்றார். பார்த்தீர்களா? அங்குதான் காரியம். புரிகிறதா? அவர் யாரென்பதை அறிந்திருந்தார் சாத்தான் அவ்வாறு செய்தான்… எழுதப்பட்டதைக் காட்டிலும் ஆழமான கருத்து அதில் உள்ளது. புரிகிறதா? அது பரிசுத்த ஆவியின் ஏவுதல். பருப்பு, கொட்டையின் உள்ளே தான் உள்ளது, நீங்கள் பாருங்கள், அதுதான் அதன் முக்கியமான பாகம். 118 அவர் அதை செய்திருக்கலாம் என்றாலும், அவர் அதைச் செய்ய வில்லை. ஆனால் சாத்தானின் ஆலோசனைகளுக்கு அவர் ஒருபோதும் கவனம் செலுத்த வில்லை. இப்பொழுது, இங்கு ஒரு நல்லக் காரியம் உள்ளது. பார்த்தீர்களா? சில சமயத்தில் சாத்தான் உங்களை ஆட்கொள்ளக் கூடும், அப்பொழுது நீங்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்வதாக நீங்கள் எண்ணும் போது, அவன் உங்களுக்கு ஒரு ஆலோசனைக் கூறும்போது, நீங்கள் அதில் விழுந்து போவீர்கள். ஆம் ஐயா. அவன் நிச்சயம் அவ்வாறு செய்யக் கூடும்.
77119 இப்பொழுது, நம்முடைய சகோதரிகளை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவர்கள் அழகாயுள்ளனர். அவர் உங்களை ஒரு நிலையை அடையச் செய்துவிட்டு, நீங்கள் உங்களுடைய தலைமுடியை வளரவிட்டு, அதை நீங்கள் உணராமலிருக்கலாம், அது உங்களுக்கு மிகவும் அழகாக காணப்படலாம், பிறகு முதலாவதாக காரியம் என்னவென்று தெரியுமா? நீங்கள் மற்றவர்களைக் காட்டிலும் அழகானவர்கள் என்னும் சிறிது கர்வம் உங்களுக்கு வந்து விடுகிறது. ஆண்களாகிய உங்களில் சிலரும் கூட நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? பார்த்தீர்களா? தேவனுக்குக் கீழ்ப்படிந்து நீங்கள் புரியும் செயல்களையே அவன் தெரிந்து கொண்டு, தவறான எண்ணங்களை உங்களுக்குள் நுழைக்கப் பார்ப்பான். அது உண்மை. பாருங்கள்? அதை நீங்கள் ஜெயங்கொள்ள வேண்டும். நீங்கள் தேவனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரே குறிக்கோள் உண்டு. அது தான் இயேசு கிறிஸ்து. அதற்கு புறம்பேயுள்ள எந்தக் காரியமும் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. அந்த குறிக்கோள் அவராய் இருக்க வேண்டும். அதன்பின்னர் இரண்டாவதாக, உங்களுடைய குடும்பதிற்கானதாயிருக்க வேண்டும். அதன்பின்னர் மூன்றாவது, உங்களுக்கானதாயிருக்க வேண்டும். ஆனால் முதலில் தேவனுக்காக, அடுத்தது உங்களுடைய குடும்பத்திற்காக, அதற்கு அடுத்ததே உங்களுக்கானதாயிருக்க வேண்டும். நீங்கள் மூன்றாவது எண்ணாயிருக்கிறீர்கள், அதுவே பாதையின் முடிவாயுள்ளது. உங்களை கடைசியில் நிறுத்திக் கொள்ள வேண்டும்; அவர் அப்படித்தான் செய்தார்.
78120 அவர் என்ன செய்திருக்க முடியுமென்று பாருங்கள். அவர், “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்புவார்” என்றார். அவர்களில் ஒருவனால் அப்பொழுது இந்த உலகத்தை அழித்திருக்க முடியும். மேலும் அவர், “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல. அது பரலோகத்திற்குரியது” என்றார். அங்குதான் காரியம். புரிகிறதா? அவரால் அதைச் செய்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. பார்த்தீர்களா? அவர் செய்ய முடிந்திருக்குமென்றாலும், அவர் சாத்தானின் ஆலோசனைகளுக்கு செவி கொடுக்க வில்லை. 121 இப்பொழுது, நீங்கள் ஜனங்கள் இவ்வாறு கூற கேட்டிருக்கிறீர்கள். “தெய்வீக சுகமளிப்பவர் ஒருவர் இருப்பதாக நீங்கள் நம்பினால்…நீங்கள் தெய்வீக சுகமளிப்பவர் என்றால்… நீங்கள் போய் தெய்வீக சுகமளிப்பவரைக் கொண்டு வாருங்கள். என்னிடம் வியாதியாயுள்ள ஒருவர் இருக்கிறார். அவர் சுகமளிக்கிறரா என்று நான் காண விரும்புகிறேன்.” அதே பிசாசைப் பார்த்தீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அவன் உங்களுக்கு ஆலோசனை கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் தேவனுக்குச் செவி கொடுப்பதற்கு பதிலாக அவனுக்கு செவிகொடுக்கும்படி முயற்சி செய்கிறான். ஆனால் உண்மையான தேவனுடைய ஊழியக்காரன் எவனும் பிதா என்ன சொல்கிறார் என்பதற்கு முதலாவதாக செவிகொடுப்பான். புரிகிறதா?
79122 அந்த ஸ்டாட்ஸ்கிலெவ் குழந்தை போல், அவர்கள் இங்கு அனுப்பினபோது, அதாவது, திருமதி.ஸ்டாட்ஸ்கிலெப், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் ஜெர்மனியிலிருந்து பேசுகிறேன்,” என்றார். அங்கு ஒரு அமெரிக்க இராணுவம் இருந்தது. ஒரே நாளில் என்னை ஜெர்மனிக்குக் கொண்டு சென்று திரும்பக் கொண்டுவர அவர்களுடைய ஜெட்விமானம் ஒன்று காத்திருந்தது. அவருடைய கணவர் ஒரு இராணுவ போதகராயிருந்தார். அவர்களுடைய குழந்தை மரித்துவிட்டது. தாய் கதறி அழுது, “இதைக் கேளுங்கள். ஒரு ஸ்திரீ அன்று காலை இறந்துபோன அவளுடைய குழந்தையை தன் கரங்களில் ஏந்திக் கொண்டு வந்திருந்தாள். சகோதரன் பிரான்ஹாம் அவளிடம் நடந்து சென்று, இறந்த குழந்தையின் மேல் தன் கரங்களை வைத்தபொது அது உயிர்பெற்றதை நான் அங்கு நின்று, பார்த்தேன்” என்றாள். மேலும் அவள், “சகோ.பிரான்ஹாமே, இது என் குழந்தை” என்றாள். அவளுடைய குடும்பத்தில் அதுவரை மரணமே நேர்ந்ததில்லை. பாருங்கள்? இந்த குழந்தை ஒரு காலை வியாதிப்பட்டு அன்று பிற்பகல் இறந்து விட்டது. அங்கு எல்லோரும் சுற்றி நின்று கொண்டு, “குழந்தை உயிரோடெழப் போகிறது” என்று எல்லோருமே அதேவிதமாக தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தனர். 123 நான், “சகோதரி ஸ்டாட்ஸ்கிலேவ். அது மிகவும் நல்லது. ஆனால் பிதா என்ன சொல்லுகிறார் என்று நான் பார்க்கட்டும்” என்று கூறினேன். அதன்பின்னர் நான் காட்டுக்குச் சென்று ஜெபம் செய்தேன். நான் அடுத்த நாள் காலை திரும்பி வருவதற்குள் அவள் இரண்டு மூன்று முறை தொலைபேசியில் கூப்பிட்டுவிட்டாள். ஒன்றுமே தெரியவில்லை. மருத்துவர் அவளிடம், “சரி பெண்மணியே, அப்படிப்பட்ட விசுவாசம் உங்களுக்கு இருக்குமானால், குழந்தையின் சடலத்தை மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்ல நான் விடமாட்டோம். அது இங்கேயே இருக்கட்டும். நீங்களும் இங்கே இருக்கலாம். அதனால் பரவாயில்லை” என்றார். சகோதரன் ஸ்டாட்ஸ்கிலெவ் சென்று இராணுவ அதிகாரியைக் கண்டார். அவர்கள், “நாங்கள் நிச்சயமாக அவரை விமானத்தில் கொண்டு சென்று திரும்பக் கொண்டு விடுவோம்” என்றனர்.
80124 இந்த குழந்தை உயிர்பெறுவதற்காக அன்று காலை என்னை ஜெர்மனியிலுள்ள ஹெய்டெல்பெர்குக்கு கொண்டு சென்று, அன்றிரவு என்னைத் திரும்பிக் கொண்டு வர விமாமனம் ஆயத்தமாயிருந்தது. நான், “தேவனால் நிச்சயமாக அதை செய்ய முடியும். ஆனால் அவருடைய சித்தம் என்னவென்று நாம் அறிந்துகொள்வோம்” என்றேன். 125 நான் வெளியே சென்று முழு இரவும் ஜெபித்தேன்; ஒன்றும் நடக்க வில்லை. அடுத்த நாள் காலை திரும்பி வந்தேன்; ஒன்றும் நடக்க வில்லை. நான் அறைக்குள் நுழையப் போனேன். அங்கு நான் பார்த்தபோது, அந்த ஒளி கதவினருகில் தொங்கிக் கொண்டிருந்தது. அவர், “உன் கரத்தை அதன் மேல் வைக்காதே. அதைக் கடிந்து கொள்ளாதே. அது தேவனுடைய கரம்” என்றார். 126 அப்பொழுது நான் அவளை தொலைபேசியில் கூப்பிட்டேன். மேலும் நான் “சகோதரி ஸ்டாட்ஸ்கிலெவ், உன் குழந்தையை அடக்கம் செய்து விடு. அது கர்த்தருடைய கரம். அது தேவனுடைய சித்தம். அது உயிரோடிருந்தால், அதற்கு வேறதாவது சம்பவிக்கும். அது எங்கு செல்லுகிறதென்று தேவன் அறிந்துள்ள அந்த இடத்திற்கு அதைப் போகவிடு. இப்பொழுது நீ அதனிடம் செல்ல முடியும். அது பிழைத்தால், நீ பிழைக்கமாட்டாய். எனவே நீ அதை அந்தவிதமாகவே விட்டு விடு” என்றேன். 127 ஜெர்மனியிலுள்ள அந்த பெரிய போதகர் எனக்கு கடிதம் எழுதி, “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் எந்த ஒன்றைக் குறித்தும் கூறுவதற்கு முன்பு தேவனுடைய திட்டவட்டமான தீர்மானத்துக்காக காத்திருப்பதைக் குறித்து உங்களைப் பாராட்டுகிறேன்” என்றார். அது தான்! தேவனுடைய தீர்மானத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் என்ன கூறினபோதிலும், அல்லது அது என்னவாயிருந்தாலும், சாத்தானின் ஆலோசனைக்கு உடன்படாதீர்கள்.
81128 சாத்தான், “‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால்’ கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானம் சரியே” என்பானானால்…, அவன் ஆலோசனையை உதறித்தள்ளுங்கள். தேவன் வேறுவிதமாக கூறியிருக்கிறார். அவன், “நீ ஒரு நல்ல மனிதன், நீ இப்படியிருக்க வேண்டிய அவசியமில்லை…நீ ஒரு நல்ல பெண்மணி, இதையெல்லாம் நீ செய்ய வேண்டிய அவசியமில்லை…” என்றால், அவனுடைய ஆலோசனைக்கு செவிகொடுக்க வேண்டாம். வார்த்தை வேறுவிதமாக கூறினால், அது என்னவாயிருந்தாலும், நீங்கள் வார்த்தையோடு நிலைத்திருங்கள். பிசாசு அவர்மேல் அந்த பெரிய தாக்குதலை நடத்தியபோது, பாருங்கள், அந்த உதாரணத்தை தான் இயேசு உங்களுக்கு அருளினார்.
82129 அதன்பிறகு இரண்டாம் தாக்குதல், நான் வேகமாக முடிக்க உள்ளேன். நேரம் வேகமாக கடந்து செல்வதுபோல் தோன்றுகிறது. அவர்மேல் நடத்தப்பட்ட அடுத்த பெரிய தாக்குதல். அவர் பிரபலமானவராக தம்மை காண்பித்துக் கொள்ள வேண்டும் என்பதே. பிரபலமாகக் காண்பித்துக் கொள்வதென்பது, உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பிப்பது, அது தேவனுடைய ஊழியக்காரரை எவ்வளவாக பாதிக்கிறது! “தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! நான் ஒரு விடுவிக்கிறவர்! நான் இன்னார்.” புரிகிறதா? பார்த்தீர்களா? 130 “நீர் தேவாலாயத்து உப்பரிகையின்மேல் வந்து உட்கார்ந்து கொள்ளும்.” அப்படி செய்யும்படி அவன் அவரைச் சோதித்தான். இப்பொழுது நினைவிருக்கட்டும், அவர் அதைச் செய்யும்படிக்கு கடினமாக சோதிக்கப்பட்டார். இப்பொழுது, “நீர் ஜனங்களுக்கு முன்பாக ஏதோ ஒன்றாக இருக்க வேண்டுமென்றால், இந்த தேவாலயத்து உப்பரிகையின் மேல் நின்று, அங்கிருந்து தாழக்குதியும்” பார்த்தீர்களா? “நான் அதற்கான ஒரு வேதவாக்கியத்தை தருகிறேன். தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறதே.” அவரைப் பெரியவராக காண்பித்துக் கொள்ள அவருடைய அதிகாரத்தைக் காண்பிக்க. 131 உண்மையான தேவனுடைய ஊழியன் எவனும் அவ்வாறு செய்யமாட்டான். யாராகிலும் ஒருவன் தன் மார்பை உந்தித்தள்ளி தன்னை பெரியவனாகக் காண்பித்தால் அவனிடம் ஏதோ தவறுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இல்லை, தேவன் அதை விரும்புவதில்லை. இயேசு நமக்கு உதாரணம் காட்டியிருக்கிறார். வேண்டுமென்றால் அவர் அப்படி செய்திருக்கலாம். அவர் நிச்சயமாக அப்படி செய்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. தேவனுடைய ஊழியக்காரன் எவனும் தன்னை உயர்ந்தவனாக காட்டிக் கொள்ளமாட்டான். அவன் தேவனுடைய வல்லமையை எடுத்துக் கொண்டு, மற்றவரிலும் உயர்ந்தவனாக தன்னை காட்டிக் கொள்ள முயற்ச்சிக்கமாட்டான்.
83132 மோசே அப்படி செய்தது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அது நினைவிருக்கிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அவனுக்கு விருப்பமான எல்லாவற்றையும் செய்ய தேவன் அவனுக்கு அதிகாரம் கொடுத்திருந்தார்; அவனை அவர் தீர்க்கதரிசியாக நியமித்திருந்தார். அவன் கன்மலையின் அருகில் சென்று அதை இரண்டாம் தரம் அடித்தான். அது தேவனுடைய சித்தத்துக்கு விரோதமான செயலாக இருந்தது. தேவன் அவனிடம், “கன்மலையிடம் பேசு! அதை மறுபடியும் அடிக்காதே! அப்படி செய்தால் முன்னடையாளம் அனைத்தையும் கெடுத்துவிடுவாய். கன்மலை ஒருதரம் தான் அடிக்கப்பட வேண்டும்” என்றார். ஆனால் அவன் அதை அடித்தபோது, அது குறைவுள்ளதாயிருந்தது போன்று, அவன் வார்த்தையைப் பலவீனப்படுத்திவிட்டான். ஆம், வார்த்தை தான் அவர்களோடு கூட சென்று கொண்டிருந்தது. அந்த கன்மலை வார்த்தையே. புரிகிறதா? 133 அவன் முதலாந்தரம் கன்மலையை அடித்தபோது, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினது. அவர்கள் மறுபடியும் தாகமடைந்தபோது, அவர், “நீ கன்மலையிடம் திரும்பிச் சென்று அதனிடம் பேசு” என்றார். அது ஒருதரம் தான் அடிக்கப்பட்டது. பார்த்தீர்களா? “வார்த்தை குறைவுள்ளது என்றும்,” “வார்த்தை சரியல்ல என்றும்; அது மறுபடியும் அடிக்கப்பட்ட வேண்டும்” என்றும் மோசே அதனண்டை சாட்சி பகர்ந்தான். 134 எனவே மோசே அங்கு சென்று கன்மலையை இப்படி அடித்து, “தண்ணீரே, புறப்பட்டுவா” என்றான். தண்ணீர் வரவில்லை, எனவே அவன் மறுபடியும் அதை அடித்து, “தண்ணீரே, புறப்பட்டு வரும்படி நான் உனக்கு கட்டளையிடுகிறேன்” என்றான். தண்ணீர் புறப்பட்டு வந்தது. 135 தேவன், “இங்கு வா, இங்கே வா, நீ உன்னை மகிமைப்படுத்திக் கொண்டாய். என் வல்லமையை நீ எடுத்துக் கொண்டாய். என்னைப் பரிசுத்தப்படுத்துவதற்கு பதிலாக நீ உன்னை பரிசுத்தப்படுத்திக் கொண்டாய். இப்பொழுது நீ வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் போகப் போவதில்லை. இங்கு பார், அது எப்படிப்பட்டதாய் காணப்படுகிறது என்று பார். ஆனால் நீ இங்கேயே மரிக்கப் போகிறாய்” என்றார். ஓ, என்னே! மோசேயை போல் ஒருவனும் இருந்ததில்லை என்று உங்களுக்குத் தெரியும். இல்லை, இல்லை.
84136 இயேசு தம்மை உயர்ந்தவராகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்னும் கட்டத்துக்கு சாத்தான் வந்த போது, அவன், “தேவாலயத்து உப்பரிகையின் மேலேறி, அங்கிருந்து தாழக்குதியும்” என்றான். 137 ஆமென், அவர், “உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார். புரிகிறதா? அந்த ஒவ்வொரு பெரிய தாக்குதலையும் அவர் வார்த்தையைக் கொண்டே அவனைச் சந்தித்தார். 138 எந்த உண்மையான ஊழியக்காரனும், தேவனுடைய வல்லமையைக் கொண்டு தன்னை பெரியவனாகக் காட்டிக் கொள்ள முயற்ச்சிப்பதேயில்லை. அவன் அப்படிச் செய்தால், அவன் அப்பொழுதே அந்த வல்லமையை இழந்துவிடுவான்.
85139 மூன்றாம் பெரிய தாக்குதல். சாத்தான் இந்த ராஜ்யத்தை அவருக்கு அளிக்க முற்பட்டான். அவன் அப்படி செய்தான். சாத்தான், “இந்த உலகத்தின் ராஜ்யங்களைப் பார்த்தீரா? இவை என்னுடையவை. என்ன வேண்டுமானாலும் நான் அவைகளுக்கு செய்கிறேன். நான் இவைகளை உமக்குத் தருவேன்” என்றான். ஆனால், சிலுவைக்கு செல்லாமல் இவைகளை அவர் பெற்றுக்கொள்ளும்படி சாத்தான் முனைந்தான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். அவர் அப்படி செய்திருந்தால், நாம் இழக்கப்பட்டிருப்போம். அவர் இராஜ்யத்தைப் பெற்றிருக்கக் கூடும். ஆனால் அவர் பின்பற்ற வேண்டிய…அவர் திரும்பி வந்தேப் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பொழுதே அதைப் பெற்றுக் கொள்ளும்படியாக அவர் சோதிக்கப்பட்டார். மரணமோ ஒரு கடினமான காரியமாய் உள்ளது. அவர் சுயாதீனமாக சிலுவைக்கு செல்லாமலேயே இவ்வுலகின் ராஜாவாகிவிட சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் அப்படி செய்திருந்தால், அவருடைய பிரஜைகள் மரித்திருப்பார்கள். சாத்தான் சந்தோஷமாக தன் ஆலோசனையை அவரிடத்தில் நிறைவேற்றியிருப்பான். ஆனால் அவரோ, “அப்பாலே போ சாத்தானே” என்றார். அவர் அதைச் செய்யவில்லை.
86140 அவர் வந்து பாடுபட்டு கடினமான கரடுமுரடான பாதையை தெரிந்து கொண்டார். அவர் துன்பத்தின் பாதையை தெரிந்து கொண்டார். அவர் மரணத்தின் பாதையை தெரிந்துகொண்டார். இன்று காலை நாமும் அவர் தெரிந்துகொண்ட பாதையில் செல்ல ஆயத்தமா? நாம் மரிக்க சித்தமாயிருக்கிறோமா? நம்மை தேவனிடத்தில் ஒப்புவித்து, உலகத்தையும் மற்றவைகளையும் புறக்கணித்து, அவரைச் சேவிக்க சித்தமாயிருக்கிறோமா? பார்த்தீர்களா? 141 இப்பொழுது, அவர் அதைச் செய்யவில்லை. சாத்தானோ அதை அவருக்கு மனப்பூர்வமாக அளிக்க ஆயத்தமாயிருந்தான். ஆனால் அவரோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இயேசு சோதிக்கப்பட்டபோதிலும், அவர் நமக்காக ஜெயங்கொண்டார். எனக்காகவும் உங்களுக்காகவும் அவர்—அவர் சகல சோதனைகளையும் சகித்தார். பார்த்தீர்களா? அவர் அப்பொழுதே ராஜ்யத்தைப் பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் ஏன் மற்ற பாதையைத் தெரிந்துகொண்டார்? நாம் வந்து அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும். அவர் அவ்வளவு பெரிய கிரயத்தை அதற்காக செலுத்தியிருக்கும்போது, அதை நாம் ஏற்றுக் கொள்ளாமலிருப்பது எவ்வளவு அற்பத்தனமான செயல்? எப்படியும், இங்கு ஒன்றுமில்லை என்பது நினைவிருக்கட்டும்.
87142 நீங்கள் நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தாலும், முடிவில் எங்கு போகப் போகிறீர்கள்? உங்களுக்கு மனநிலை கோளாறு ஏற்படுகிறது, உங்களுக்கு வயதாகி, நடுக்கம் உண்டாகி ஊனமடைகிறீர்கள். அங்குதான் நீங்கள் அடைகிறீர்கள். அதுதான் அதன் முடிவு. நீங்கள் இப்பொழுதே வந்து, அந்தக் காரியங்களை ஜெயங்கொள்ளுங்கள். அதை எப்படி செய்வீர்கள்? வார்த்தையினால், வார்த்தை எதை உரைக்கிறதோ, அதையே நீங்கள் செய்யுங்கள். தாழ்மையாக நடவுங்கள். இயேசுவின் முன்னிலையில் வாழுங்கள். 143 அவர் உங்களுக்காகவும் எனக்காகவும் சகலத்தையும் சகித்தார். நமது பொல்லாத சந்ததியை எவ்வாறு ஜெயங்கொள்ள வேண்டுமென்பதற்கு அவர் நம்முடைய உதாரணமாக, அவர் தமது பொல்லாத சந்ததியை ஜெயங்கொண்டார். 144 அவர் இவ்வுலகிற்கு வந்தபோது, எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு அவிசுவாசம் நிலைத்திருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் அது அவரை சிறிதேனும் தொல்லைப்படுத்தவில்லை. அவர்கள் அவரை தேவன் என்று அழைப்பதற்கு பதிலாக, பிசாசு என்றும், மற்றும் பல்வேறு பெயர்களால் அழைத்த போதிலும், அது அவரை சிறிதேனும் தொல்லைப்படுத்தவில்லை. அவருக்கு ஒரே ஒரு குறிக்கோள் மாத்திரமே இருந்தது: “பிதாவை கனம்பண்ணுதல். வார்த்தையை காத்துக்கொள்ளுதல்.” வார்த்தையே தேவன். அவர் ஒரே சிந்தையை உடையவராயிருந்தார்.
88145 நாம் சில சமயங்களில் திரும்பிப் போகும்படி சோதிக்கப்படுகிறோம். உங்களில் அநேகர் ஸ்தாபனங்களுக்கு திரும்பிச் சென்று அங்கு சேர்ந்து கொள்ளும்படியாக சோதிக்கப்படுகிறீர்கள், ஏனெனில் முழு உலகம் உங்களைப் பார்த்து, “நீங்கள் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர்கள்? நீங்கள் எந்த சபையுடன் தொடர்பு கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கிறது. ஆகவே அதைச் செய்யும்படிக்கு நாம் சோதிக்கப்படுகிறோம். எல்லோருக்குமே அப்படித்தான். நமது சகோதரிகள் திரும்பிச் சென்று மற்ற சபைகளோடு, அசெம்பிளீஸ் அல்லது சர்ச் ஆப் காட் அல்லது அவைகள் ஏதாகிலும் ஒரு சபையைச் சேர்ந்துக் கொண்டு, பெந்தேகொஸ்தேயினராக இருந்து, அதே சமயத்தில் தலைமுடியைக் கத்தரித்துக்கொண்டு, ஏறக்குறைய உங்கள் விருப்பத்திற்கேற்ப உடை உடுத்திக் கொள்ளும்படிக்கு சோதிக்கப்படுகின்றனர். பார்த்தீர்களா? நீங்கள் திரும்பிச் சென்று, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பொல்லாத சந்ததியாரிடையே பிரபலமாக இருக்கும்படிக்கு சோதிக்கப்படுகிறீர்கள். இதுவே நம்முடைய நாட்களில் உள்ள மிகப் பெரிய பாவமாய் உள்ளது. லவோதிக்கேயா காலத்தில் இருந்த…லவோதிக்கேயாவைப் பற்றி வேதம் கூறியுள்ளது போல உலகப் பற்று நம்முடைய ஜனங்களுக்கு மத்தியில் இருப்பதே மிகப் பெரிய பாவமாகும். அது உலகப் பிரகாரமாக, “திரவியசம்பன்னன் என்றும், தனக்கு ஒரு குறைவுமில்லை என்றும் சொல்லிக் கொண்டு, அது நிர்வாணமாயும் நிர்ப்பாக்கியமுள்ளதாயும் பரிதபிக்கப்படத்தக்கதாயும், குருடாகவும் இருப்பதை அறியாமலிருக்கிறது.” அது தான் நமது நாளின் பாவமாயுள்ளது. தேவனுடைய வார்த்தை அதற்கு விரோதமாக அறை கூவுவதை நீங்கள் கேட்டு, நீங்கள் வேறொரு பாதையில் செல்லும் போது, நீங்கள் உலகத்துக்கு பிரபலமற்றவர்களாய் காணப்படுகிறீர்கள். நீங்கள் திரும்பிச் செல்லும்படி சோதிக்கப்படுகிறீர்கள்.
89146 எனக்குத் தெரியும். நீங்கள் திரும்பத் திரும்ப அதை என்னிடம் கூறி வந்திருக்கிறீர்கள். நீங்கள், “எல்லா நேரத்திலும் அதையே கூறிக் கொண்டிருக்கிறீர்கள்” எனபதை நான் அறிவேன். இவைகளைக் குறித்து நான் திரும்பத் திரும்பக் கூறுவதனால் உங்களுக்கு என்மேல் சலிப்பு தோன்றுகிறது என்று நான் அறிவேன். ஆனால் நீங்களும் கூட அதை செய்வதை நான் காணும்போது எனக்கும் சலிப்பு உண்டாகிறது. அது உண்மை, இந்த பாவத்தைக் குறித்தே உங்களிடம் நான் கூற முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். “நீங்கள் எதற்காக அதை திரும்பத் திரும்பக் கூறுகிறீர்கள்?” என்று கேட்கலாம். அப்படியானால் அதை செய்வதை நிறுத்தி விடுங்கள்: வார்த்தையினால் உங்கள் ஜீவனைக் காக்க நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நானும் கூட களைப்படைந்துவிடுகிறேன். எனவே சீர்படுத்திக் கொள்ளுங்கள். அது ஒரு பாவமாயுள்ளது, அவ்வாறு செய்யக் கூடாது. ஆம் ஐயா! 147 நாம் இந்தக் காரியங்களை ஜெயங்கொள்ள வேண்டும். நாம் உலகத்தின் காரியங்களான அவைகளால் சோதிக்கப்படுவோம் என்று எதிர்ப்பார்க்கிறோம். இயேசு, “நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால் உங்களிடத்தில் தேவனின் அன்பில்லை” என்று கூறினார்.
90148 இப்பொழுது இதைக் கூறி நாம் முடிப்போம். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு ஒரு பலன் உண்டு. 149 நான் இங்கு ஒரு காரியத்தை உங்களுக்கு வாசிக்கட்டும். உங்கள் வேதாகமத்தில் திருப்புங்கள். நாம் வெளிப்படுத்தல் 3-ம், 2-ம் அதிகாரத்துக்கு திரும்பிச் செல்வோம். இப்பொழுது ஜெயங்கொள்ளுதலைக் குறித்து நான் பேசிக் கொண்டிருந்த அனைத்தையுமே இங்கே கவனியுங்கள். இப்பொழுது உங்களையே நோக்கிப் பாருங்கள். ஆவிக்குரிய நிலைக்கண்ணாடியில் உங்களைப் பரிசோதித்துப் பார்த்து, நீங்கள் ஜெயங்கொண்டீர்களா என்பதை பாருங்கள்.
91150 இப்பொழுது, எபேசு சபையின் தூதனுக்கு கொடுக்கப்பட்டமுதல் செய்தி. அவர் என்னக் கூறினார் என்று நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறன். வெளிப்படுதல் 2-ம் அதிகாரம், 7-ம் வசனம். இதுவே அந்த சபைக் காலத்துக்கானதாயிருக்கிறது, அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவர்களிடம் கூறி, “அவர்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டார்கள்” என்றார். 7-ம் வசனம். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ… (தனிப்பட்ட நபர், சபைக்கல்ல) … ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன். பார்த்தீர்களா? எபேசுவிலுள்ள ஜெயங்கொண்டவர்கள். 151 இப்பொழுது, அடுத்தது சிமிர்னாவாயிருந்தது. இப்பொழுது அதிலிருந்து ஜெயங்கொண்டவர்கள், இதை நாம் கேட்போம். இப்பொழுது 11-ம் வசனம். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. புரிகிறதா? அவர்கள் அதை ஜெயங்கொண்டார்கள். 152 இப்பொழுது, அது, இப்பொழுது பெர்கமுவை நோக்கிப் பாருங்கள், ஜெயங்கொண்டவனுக்கு என்ன அளிக்கப்பட்டது என்று நாம் கண்டறிவோம். நாம் பெர்கமு சபையில் உள்ள 17-ம் வசனத்தைப் படிப்போம். …காதுள்ளவன்… அது, அது தனிப்பட்ட நபர், முழு குழுவுக்கும் அல்ல. தனிப்பட்ட நபர், அது தான் சபையிலிருந்து வெளிவரும் மணவாட்டி, நீங்கள் பாருங்கள், சபை. ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை புசிக்க கொடுத்து அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின் மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன். அது அந்த சபையின் காலத்திலிருந்த ஜெயங்கொண்டவனுக்கானதாயுள்ளது.
92153 இப்பொழுது, அடுத்தது தீயத்தீரா. அந்த காலத்திலிருந்த ஜெயங்கொண்டவனுக்கு என்ன அளிக்கப்பட்டதென்று நாம் கண்டறிவோம். நாம் 26-ம் வசனத்தைப் பார்ப்போம். ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றது போல, ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பேன். (அது உண்மை.) அவன் இருப்புக் கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப்படுவார்கள். பாருங்கள், “அவருடன், அவருடைய சிங்காசனத்தில்.” கிறிஸ்து இருப்புக்கோலால் அவர்களை ஆளுவார். இதோ உள்ளது ஜெயங்கொண்ட சபை. “அவருடன் கூட சிங்காசனத்தில் உட்கார்ந்து இருப்புக்கோலால் ஜாதிகளை நொறுக்கிப் போடுகிறது”. 154 இப்பொழுது சர்தை சபையை எடுத்துக் கொள்வோம். இப்பொழுது 3-ம் அதிகாரம் 5-ம் வசனம். ஜெயங்கொள்ளுகிறவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப் போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். அது சர்தையிலுள்ள ஜெயங்கொண்டவனுக்கானதாயுள்ளது.
93155 இப்பொழுது நாம் 12-ம் வசனத்தைப் பார்ப்போம். இப்பொழுது இது பிலதெல்பியா சபைக்கு, 12-ம் வசனம். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன். அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும், என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன் மேல் எழுதுவேன். 156 ஜெயங்கொள்ளுகிறவனுக்கு என்ன வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள். புரிகிறதா? இப்பொழுது லவோதிக்கேயா, அது கடைசி சபை காலம்; அதில் சில ஜெயங்கொள்ளுகிறவர்கள் இருக்கப்போகிறார்கள். இங்கு கவனியுங்கள். அவர்கள், ஒவ்வொரு சபையின் காலமும், அதற்கு முன்னிருந்த சபைகளுக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் சுதந்தரித்துக் கொள்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கு கவனியுங்கள். இப்பொழுது, இங்கே, அவர்கள் இந்த வல்லமைகள் அனைத்தையும், இந்த புதிய நாமத்தையும், எழுதப்பட்டுள்ள ஒவ்வொன்றையும், மறைவான மன்னாவைப் புசிப்பார்கள் என்று அவர் வாக்குப்பண்ணினதையும் மற்றும் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டப் பிறகு, இந்த கடைசி சபையின் காலத்தைக் கவனியுங்கள். வெளிப்படுத்தல் 3:21. நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன் (ஆமென்!) ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். 157 ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு பலன் உண்டு. லீலிப்புஷ்பமே, நெருக்கிக் கொண்டு மேலே வா! அது உனக்குள் இருக்குமானால், சேறு மற்றெல்லாவற்றையும் தள்ளிவிட்டு, மேலே எழும்பி வா. ஆம் ஐயா! “என் சிங்காசனத்திலே என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்”
94158 உங்களுக்குத் தெரியுமா, ஒரு சமயம் யாக்கோபு, யோவான் இவர்களின் தாய்…அதைப்படிக்க நமக்கு நேரமிருக்காது …யாக்கோபு, யோவானின் தாய் இயேசுவினிடம் வந்து அவர்களுக்காக இந்த ஸ்தானத்தைக் கேட்டாள். அது உங்களுக்குத் தெரியுமா? அது ஞாபகமிருக்கிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] “ஆண்டவரே, ஒருவன் வலது பாரிசத்திலும் மற்றவன் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டும் என்றாள்.” அது தன்னுடைய மகன்களுக்காக ஒரு தாய்க்கிருந்த வாஞ்சை. ஆனால் கவனியுங்கள். ஆனால் “அந்த இடம்” அதாவது, “முன்குறிக்கப்பட்டிருந்ததாகவே” இயேசு கூறினார். அந்த சமயத்தில் அந்த இடம் அங்கிருக்கவில்லை. ஏன்? கவனியுங்கள். அது யாருக்காக வைக்கப்பட்டுள்ளதோ, அவர்களுக்கு அருளப்படும். என்ன? ஒருவன் அவருடைய வலது பாரிசத்திலும் மற்றவன் அவருக்கு மிக அருகாமையிலும் உட்காரப்போவது இனிமேல் ஜெயங்கொள்பவனே. புரிகிறதா? அது இன்னும்…அவர், “நான்—நான் இதை இப்பொழுது அருளமாட்டேன், என்னால் இதை அருள முடியாது, ஆனால் சோதனை நேர்ந்த பிறகு அது அளிக்கப்படும்” என்றார். ஆமென்! புரிகிறதா? “என்னால் இதை இப்பொழுது அருள முடியாது. ஆனால் சோதனை நேர்ந்த பிறகு, அவர்கள் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்காருவார்கள். அதற்காக முன் குறிக்கப்பட்ட வித்து காத்துக் கொண்டிருக்கிறது. அது வாக்களிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும். அது அங்கு கொடுக்கப்படும், ஆனால் சோதனை இன்னும் வரவில்லை; அதாவது, அவன் இன்னும் ஜெயங்கொள்ளவில்லை.” புரிகிறதா?
95159 அந்த ராஜ்யத்தில் அவருக்குப் பக்கத்தில் வலது பாரிசத்தில் ஒருவனும், இடது பாரிசத்தில் ஒருவனும் உட்கார வேண்டும். அது இன்னும் யாருக்கும் அருளப்படவில்லை, பாருங்கள், அங்கு உட்கார வேண்டியவர் இன்னும் ஜெயங்கொள்ளவில்லை. சோதனை இன்னும் விழவில்லை. “அது வருங்காலத்தில் விழும்.” “நாம் கிறிஸ்துவுக்காகவும் அவருடைய வார்த்தைக்காகவும் பாடுபட்டால், அவரோடு கூட ஆளுகை செய்வோம்; ஏனெனில் அவர் வார்த்தையாயிருக்கிறார்.” ஞாபகம் கொள்ளுங்கள், “நாம் அவருக்காகவும் அவருடைய வார்த்தைக்காகவும் பாடுபட்டால் நாம் அவரோடு கூட அவருடைய வார்த்தையில் ஆளுகை செய்வோம்.” 160 கவனியுங்கள், அவர் மரணம், நரகம், வியாதி, பாதாளம் இவற்றை ஜெயங்கொண்ட பிறகு நமக்கு திருஷ்டாந்தமாயுள்ள அவர் ஜெயங்கொண்டு உன்னதத்துக்கு ஏறிச் சென்றார். அவர் ஒவ்வொன்றையும் ஜெயங்கொண்டார். “அதன்பிறகு அவர் உன்னதத்துக்கு ஏறி, சிறைப்பட்டவர்களை சிறையாக்கி, மனுஷருக்கு வரங்களையளித்தார்.” அது பழைய ஏற்பாடாயிருந்தது, அது ஜெயங்கொண்ட பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள். அவர்கள் அப்படிப்பட்ட ஒரு நபரை எதிர்நோக்கியிருந்தனர். அவர் உலகில் தோன்றுவதற்கு முன்பு மரித்து விட்டனர். ஆனால் அந்த நபர் வந்த போது, “அது நித்திரையடைந்தவர்களை தடை செய்யவில்லை.” ஆமென்! அவர்கள் எப்படியும் இழந்து போவதில்லை, உயிரோடிருந்தாலும் அல்லது மரித்தாலும், அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? “அது தடை செய்யாது” பார்த்தீர்களா? அவர்கள் அதற்காக எதிர்நோக்கியிருந்தனர்.
96161 பண்டிய காலத்தில் இருந்த யோபுவும் கூட அதற்காக எதிர் நோக்கியிருந்தான். அவன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” என்றான். அவன் ஒரு நீதிமான், ஒரு பரிபூரண மனிதன். அவன் பலி செலுத்தினான். தேவன் அவனிடம் செய்யக் கூறின அனைத்தும் அவன் செய்தான். அவன் அதை பயத்தோடும் மரியாதையோடும் செய்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அதன்பின்னர் அவனைச் சோதிக்க சாத்தான் வந்தான். (உங்களை அவர் சோதிக்க வருவது போல்.) அவன் என்ன செய்தான்? அவன் அங்கே உறுதியாய் நின்று கொண்டிருந்தான். அவனுடைய மனைவியும் கூட வெளியே வந்து, “தேவனை தூஷித்து ஜீவனை விடும். நீர் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க பரிதாபமாய் உள்ளது” என்றாள். 162 அவன், “நீ பயித்தியக்காரி பேசுகிறது போல பேசுகிறாய்” என்றான். இப்பொழுது, அவன் அவளை பயித்தியக்காரி என்று ஒருபோதும் அழைக்கவில்லை, ஆனால் அவன் பயித்தியக்காரி போல் பேசுகிறாள் என்று தான் கூறினான். புரிகிறதா? அவன், “நீ பயித்தயக்காரி பேசுகிறது போல் பேசுகிறாய்” என்றான். மேலும், “கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்றான். அவன் ஜெயங்கொண்டான்.
97163 அவனுடைய அண்டை வீட்டார் கூறினதை அவன் ஜெயங்கொண்டான். எல்லா சபை அங்கத்தினர்களும் பில்தாத்தும் மற்றவர்களும் கூறினதை அவன் ஜெயங்கொண்டான். பேராயர் கூறினதை அவன் ஜெயங்கொண்டான். போப்பாண்டவருக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ளவர் கூறினதை அவன் ஜெயங்கொண்டான். ஸ்தாபனம் கூறினதை அவன் ஜெயங்கொண்டான். அவன் வார்த்தையின் நீதிமானாகுதலோடு நிலைநின்றான். ஆமென். அதேசமயத்தில் அவனுக்கிருந்த எல்லாவற்றையும், அவனுடைய பிள்ளைகள் உட்பட, அவன் இழக்க வேண்டியதாயிற்று. அவன் சாம்பலில் உட்கார்ந்து கொண்டு, ஒரு ஓட்டை எடுத்து, தன் பருக்களை உறண்டிக் கொண்டிருந்தான் இருப்பினும் அவன் ஜெயங்கொண்டான். அவன் அந்த சோதனை நேரத்தில் முடிவில் வெற்றியடைந்த போது, மேகங்கள் திரண்டு வந்தன.
98164 அவன் நியாயமான ஒவ்வொன்றையும் நோக்கினான். அவன், “ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப் போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும். விதை நிலத்தில் விழுந்து அழுகிப்போனாலும், அது திரும்ப வளர்கிறது. மனுஷனோ செத்த பின் ஒழிந்து போகிறான். அவன் பிள்ளைகள் வந்து அவனுக்காக துக்கிக்கிறார்கள். அவன் அதை அறியாதிருக்கிறான். அவன் எழுந்திருக்கிறதும் இல்லை. ஓ, அந்நிலையில் தான் அவன் இருக்கிறான். காரியம் என்ன? நானும் கூட ஒரு விதை. நான் ஒரு காரியமாய் உள்ளேன், அதாவது ஒரு விதை. நான் பூமிக்கடியில் செல்கிறேன். நான் எழுந்திருப்பதில்லை. நான் அங்கேயே படுத்துகிடப்பேன். ஓ, நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்துக் கொள்ளும். நான் நியாயத்தீர்ப்பில் இருந்தால் எப்படியிருக்கும்? மலை முதலாய் விழுந்து கரைந்து போம். தண்ணீர் கற்களைக் குடையும்…” என்றான். ஓ, அவன் இப்படி சொல்லிக் கொண்டே போகிறான். அவனால் அங்கே இருந்த எல்லா திருஷ்டாந்தங்களையும், அது என்னவாயிருந்தது என்பதையும் பார்க்க முடிந்தது. ஓ, அவனால் அதைப் புரிந்து கொள்ள இயலவில்லை.
99165 சகோதரி ராட்ஜர்ஸ், இதை பஸ்டியின் அடக்கத்தின்போது நான் பிரசங்கித்தது ஞாபகமிருக்கிறதா? புரிகிறதா? 166 எவ்வாறு தண்ணீர் கற்களைக் குடைகின்றதென்றும், இவையெல்லாம் எப்படி நடக்கிறதென்றும், “ஓ, ஓ நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, என்னை இரகசிய இடத்தில் மறைத்துக் கொள்ளும்.” அவன் தொடர்ந்து நெருங்கிக் கொண்டேயிருந்தான். அவன், “எனக்குத் தெரிந்தால் நலமாயிருக்கும். பாவமுள்ள மனுஷனாகிய என் மேலும் பரிசுத்த தேவனாகிய அவர் மேலும் தன் கையை வைத்து எனக்காக பேசக்கூடிய மத்தியஸ்தன் ஒருவனை அறிந்திருந்தால் நலமாயிருக்கும்” என்றான். ஓ, என்னே! “அவர் அங்கே இருக்கிறார். அவர் அங்கே இருக்கிறார். என்று நான் அறிந்திருக்கிறேன். அதை செய்யக் கூடிய ஒருவர் அங்கே இருக்கிறார் அந்த ஒருவர் எங்கோ இருக்கிறார். அந்த நபரை கண்டறிய முடியும்? நான் எங்கே கண்டறிய முடியும்? அவருடைய கதவைத் தட்டி அவரோடு பேசுவேன். யாராவது தம்முடைய கரத்தை என் மேலும், தேவன் மேலும் வைத்து, எனக்கு பேசி வழியை உண்டுபண்ண யாராவது இருந்தால் நலமாயிருக்குமே! நான் அந்த நபரை கண்டறியக் கூடுமானால் நலமாயிருக்குமே! ஓ, அவர் எங்கே இருக்கிறார்?”
100167 அவன் தன் சபையெல்லாம் தேடினான்; அவன் தன் ஸ்தாபனம் முழுவதும் தேடினான். அவனால் அப்படிப்பட்ட ஒரு நபரைக் கண்டறியமுடியவில்லை. 168 அப்பொழுது, திடீரென்று மேகங்கள் திரண்டு வந்தன. அப்பொழுது அந்த நபர் வருகிறதை அவன் கண்டான். ஓ, அவனுடைய இருதயம் மகிழ்ச்சியால் துள்ளினது. அப்பொழுது ஏதோ ஒன்று நடந்தது. “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன்.” அப்படி ஒருவர் இருக்கிறார்! ஆமென். அப்படி ஒருவர் இன்னமும் இருக்கிறார்! “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்.”
101169 அந்த ஈஸ்டர் காலையன்று, அவர் உயிரோடெழுந்தபோது, யோபின் சரீரம் ஒரு கரண்டி அளவு சாம்பலாக இருந்தது, அவன் உயிர்த்தெழுதலுக்காக காத்துக் கொண்டிருந்தான். அவன் அந்த தெரிந்து கொள்ளப்பட்ட கூட்டத்தில் இருந்தான். அவர் கல்லறையிலிருந்து உயிரோடெழுந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோபுவோடு நகரத்துக்குள் பிரவேசித்தார். ஓ, என்னே! ஆமென்! அவர்கள் அப்படிப்பட்ட ஒரு நபருக்காக எதிர்நோக்கியிருந்தனர். 170 “அவருடைய கிருபையினால் உலகத்தின் காரியங்களின் மேல் ஜெயங்கொண்டு, அவருக்குள் வந்து, அவரையும் அவருடைய வார்த்தையையும் தவிர மற்றெல்லாவற்றிற்கும் தங்கள் கண்களை மூடி, கிறிஸ்துவுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர் இரண்டாந்தரம் மகிமையில் தரிசனமாவார்,” “தேவ எக்காளம் தொனிக்கும்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதாலவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் ஒரு நிமிடத்தில் ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாகி அவர்களோடு கூட ஆகாயத்தில் எடுக்கப்பட்டு அவரைச் சந்திப்போம்.”
102171 அவர் வரும்போது நான் ஒரு கரண்டியளவு சாம்பலாகவோ அல்லது உயிருடனோ இருந்தால், அதனால் ஒரு வித்தியாசமுமில்லை. ஆமென்! அதனால் பாதகமில்லை, ஏனெனில் நான் தரிசனத்தை கிரகித்துக் கொண்டேன். திரை நீக்கப்படும்போது அவரை நான் காண்பேன். அவரே ஒரு பாவமுள்ள மனிதனாகிய என மேலும் பரிசுத்த தேவனின் மேலும் தன் கையை வைக்கக்கூடியவர். அவரே என்னுடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாயிருக்கிறார். அவரே நான் உறுதியாக நின்று கொண்டிருக்கும் வார்த்தை. “ஆதியிலே வார்த்தை இருந்தது;” அவரே அந்த வார்த்தை. அவர் எனக்குப் பதிலாக அங்கிருக்கிறார். ஆமென்! எனக்கு மூச்சுள்ள வரைக்கும் நான் கூச்சலிடுவேன், “அவரே என் உயிர்த்தெழுதலும் என் ஜீவனுமாயிருக்கிறார்.” மற்றெல்லா நிலமும் அமிழ்ந்து போகும் மணலே. மற்றெல்லா நிலமும் அமிழ்ந்து போகும் மணலே.
103172 அதற்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களை அவர் எடுத்துக் கொண்டது போல, ஸ்தாபனத்திலுள்ள குற்றம் கண்டுபிடிப்பவர்களை ஜெயங்கொண்டு, நாம் வாழும் இக்காலத்திலும் மற்றெல்லா சபை காலங்களிலும் பிரபலமாயிருந்த எல்லா பாவங்களையும் ஜெயங்கொண்ட ஒவ்வொரு புதிய ஏற்பாட்டு பரிசுத்தவானிடமும் அவர் வருவார். அந்தந்த சபை காலத்தில் ஜெயங்க் கொண்டவர்கள்; அவர்கள் எதை ஜெயங்கொண்டார்கள்? “நான் ஐசுவரியவான். எனக்கு ஒரு குறைவுமில்லை…ஓ, நான் இதுவாயிருக்கிறேன், நான் அதுவாயிருக்கிறேன். நான் மணவாட்டி. நான் இதுவாயிருக்கிறேன். எனக்கு ஒரு குறைவுமில்லை” என்று சொல்லிக் கொண்டு நீ நிர்வாணியும் குருடனாயும் இருப்பதை அறியாமலிருக்கிறாய். 173 நான் கூறின இந்த வஞ்சகமான காலத்தைப் பார்த்தீர்களா? தலை வெட்டப்பட்டு, வெண்குறிக்கல்லைப் பெற்றவர்கள் இருந்த காலம் போல் அல்ல இது. இரத்த சாட்சிகளாக மரித்து, தொழுமரத்தில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டு, கீரிடத்தைப் பெற்றவர் இருந்த காலம் போல் அல்ல இது. ஆனால் இது இப்பொழுது வஞ்சகமான காலம், தாங்கள் எல்லாமே என்று நினைத்துக் கொள்ளும் காலம். “நல்லது, நான் ஒரு சபை அங்கத்தினன், நான் ஒரு நல்ல மனிதன். நான் ஒரு நல்ல ஸ்திரீ. நான் இதை செய்கிறேன்; நான் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை.”
104174 ஆனால் ஜெயங்கொள்கிறவனெவனோ! இக்காலத்திலுள்ள உலகப்பிரகாரமான காரியங்களை ஜெயங்கொள்ளுகிறவர்கள் என்ன செய்வார்கள்? அவரோடே கூட அவருடைய சிங்காசனத்தில் உட்காருவார்கள், அவர் வரும்போது எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்கள். ஓ, என்னே! அப்படியானால் நான் ஏன் கவலைப்பட வேண்டும்? உலகம் என்ன கூறுகிறதென்று நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்? யார் என்ன கூறினாலும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? மகத்தான பரிசுத்த ஆவியானவர் நமது மத்தியில் இருக்கிறார். அவருடைய அக்கினி ஸ்தம்பம் நம்மை வழி நடத்துகிறது, நமக்கு வழிகாட்டுகிறது, அவருடைய வார்த்தை நமக்கு முன்பாக ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய அன்பு நம்முடைய இருதயத்தில் உள்ளது. உலகமோ பின்னால் உள்ளது. நாம் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம். நீங்கள் பைத்தியக்காரர் என்றே உலகம் எண்ணுகிறது. ஆனால் இயேசு இந்த சிலுவையைத் தனியே சுமக்க, முழு உலகமும் சும்மா இருக்க வேண்டுமா? ஒவ்வொருவருக்காகவும் ஒரு சிலுவை உண்டு, எனக்காகவும் ஒரு சிலுவை உண்டு. 175 ஊழியத்தில் முப்பத்துமூன்று ஆண்டுகள், மரணம் என்னை விடுவிக்குமளவும் இந்த அர்பணிக்கப்பட்ட சிலுவையை நான் சுமப்பேன். 176 என் சகோதரர் என்னைப் புறக்கணித்து, அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறி, என்னைப் புறக்கணிக்கட்டும். ஆனால் இந்த வார்த்தையின் பேரில் நான் நிற்கிறேன், இதில் மாத்திரமே நிற்கிறேன். இந்த மரணம் என்னை விடுவிக்குமளவும். இந்த பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலுவையை நான் சுமப்பேன். பிறகு எடுத்துக் கொள்ளப்படுதலில் வீடு சென்று ஒரு கிரீடம் தரிப்பேன். 177 அதைத் தான் நாம் எல்லோரும் விரும்புகிறோம். அல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அதுதான் நமக்கு வேண்டும். அதுவே நமது—அதுவே நம்முடைய நம்பிக்கையும், வேண்டுதலுமாயுள்ளது. கிறிஸ்துவின் மேல் நமக்குள்ள எண்ணத்தைத் தவிர வேறு எண்ணங்கள் நமக்கில்லை. அவருடைய நீதியின் மேல் நாம் தனித்து நிற்கிறோம். அவருடைய வார்த்தையிலுள்ள அவருடைய நீதியின் மேல். “வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்,” வார்த்தை இன்றும் தன்னை ரூபகாரப்படுத்திக் கொண்டு வருகிறது.
105178 ஜெயங்கொள்வது எப்படி? வார்த்தையை, வாக்குத்தத்தத்தை, தாழ்மையுடன் ஏற்றுக் கொண்டு தாழ்மையாக நடப்பதன் மூலமே. மரணம் என்னை விடுவிக்குமளவும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இச்சிலுவை நான் சுமப்பேன், பிறகு வீடு சென்று, ஒரு கிரீடம் தரிப்பேன் 179 “எக்காளம் தொனிக்கும் போது!” நீங்கள் என்னைக் கடலில் போட்டு விடலாம். ஆனால் எக்காளம் என்னை எழுப்பி விடும். சரி ஒரு நாள் நான் வீடு செல்லப்போகிறேன். ஆமென். அதுவரைக்கும் நான் கஷ்டப்பட்டு, ஆமென், இந்த சிலுவையைச் சுமந்து, என் கண்களை ஜனங்களின் மேல் அல்ல, அப்பாலுள்ள கல்வாரியில் வைப்பேன். ஏனெனில் அவரே என்னுடைய உதாரணமாயிருந்தார். நாம் எப்படி அதை செய்ய வேண்டுமென்று அவர் காண்பித்தார். அவருடைய உதாரணத்தை நாம் அனுதினமும் மகிழ்ச்சியோடு பின்பற்றுவோம்; நான் இயேசுவை வழியின் ஒவ்வொரு அடியிலும் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். நான் இயேசுவை வழியின் ஒவ்வொரு அடியிலும் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.
106180 நீங்கள் அதை விரும்புகிறீர்கள் அல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஓ, அனுதினமும் வழியின் ஒவ்வொரு அடியிலும் அவரைப் பின்பற்ற வேண்டுமென்று நான் எவ்வளவாக நினைக்கிறேன்! நாம் ஜெபம் செய்வோம். 181 கர்த்தராகிய இயேசுவே, ஒரு மணி நேரம் பதினைந்து நிமிடங்களாக இங்கு நின்று கொண்டு, உமது வார்த்தையை எடுத்து, எப்படி ஜெயங்கொள்வது என்பதைக் குறித்து மக்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தேன். அது எவ்வாறு செய்யப்பட்டது என்று எங்களுக்கு நீர் கூறினீர். நீர் எங்களுக்கு கூறினது மாத்திரமல்ல. அது எப்படி செய்யப்பட்டது என்று எங்களுக்கு நீர் காண்பித்தீர். நீர் எங்களை வழி நடத்தினீர். அதை எப்படி செய்ய வேண்டும் என்று நீர் எங்களுக்கு காண்பித்தீர்: எங்களுக்குள்ளாக வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அந்த வார்த்தையை உறுதியாக பற்றியிருந்து, ஒவ்வொரு சோதனையின் போதும் “எழுதியிருக்கிறதே” என்று கூறி; ஆனால், தாழ்மையாயிருந்து, தாழ்மையாய் நடக்க வேண்டுமென்று காண்பித்தீர். ஆகையால் உமது மூலமாய், ஏற்கனவே எங்களுடைய சத்துருவை மேற்கொண்ட உமது வல்லமையின் மூலமாய், நாங்களும் ஜெயங்கொண்டுள்ளோம். நாங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, விசுவாசத்தோடு தாழ்மையாய் நடந்து, அதை விசுவாசித்து, எங்களை அடையாளம் காண்பிக்கும் பரிசுத்த ஆவியைக் கொண்டவர்களாய் இருப்பதேயாகும். அப்பொழுது சாத்தான் விலகிச் செல்ல வேண்டும். 182 இங்கு உறுமால்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் வியாதியுள்ள ஜனங்களை சுட்டிக்காட்டுகின்றன. கர்த்தாவே, அவர்கள் தேவையுள்ளவர்களாயிருக்கிறார்கள். பரிசுத்த பவுலின் சரீரத்திலிருந்து அவர்கள் உறுமால்களையும் கச்சைகளையும் எடுத்து சென்று வியாதியஸ்தர்கள் மேல் போட்டதை அவர்கள் இந்த பிழையற்ற வார்த்தையில் வாசிக்கின்றனர். அவைகள் வியாதியுள்ள ஜனங்கள் மேல் போடப்பட்டன. அப்பொழுது பொல்லாத ஆவிகள் அவர்களை விட்டுச் சென்றன. மகத்தான அற்புதங்களும் நிகழ்ந்தன. இப்பொழுது நீர் இன்றைக்கும் மாறாத அதே கர்த்தராகிய இயேசுவாய் இருக்கிறீர்.
107183 பவுல் வார்த்தையைப் பிரசங்கித்து, இந்த வார்த்தையை எழுதினான், அதே வார்த்தையை நாங்கள் பின்பற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் அவன் பழைய ஏற்பாட்டை எடுத்து அதை மாதிரியாக காண்பித்து, அது முன்னடையாளமாயுள்ளது என்றும், பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டுக்கு ஒரு பரிபூரண முன்னடையாளமாயுள்ளது என்றும் காண்பித்தான். ஓ, கர்த்தாவே, நாங்கள் அந்த மாதிரியைப் பின்பற்றுவோமாக. 184 எங்கள் கர்த்தர் என்ன செய்தாரென்று நாங்கள் காண்கிறோம். அந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் சென்றார்கள் என்று இன்று காலை நாங்கள் உணருகிறோம். இயேசு உயிரோடெழுந்த போது, அவர்கள் அவரோடே கூட சென்றார்கள். கர்த்தாவே, அவர் எக்காளத்தை தொனிக்கும்போது நாங்களும் செல்வோமென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அந்த நாளில் மணவாட்டி சென்று, அந்த எபிரெய கூட்டத்தாருடன் ஒன்று சேர்ந்து, மகிமையில் கல்யாண விருந்து நடைபெறும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர்கள் காத்திருக்கின்றனர். எங்கள் மேல் உமது இரக்கமும், கிருபையையும் இருக்கவேண்டுமென்று இப்பொழுது நாங்கள் ஜெபிக்கிறோம். ஜெயங்கொண்டவர்களாய், கர்த்தாவே, நாங்கள் ஜெயங்கொண்டவர்களாக இருக்க வாஞ்சிக்கிறோம், எங்களை ஜெயங்கொள்வோமாக. கர்த்தராகிய இயேசுவே, நீர் உலகத்தை ஜெயங்கொண்டீர். இப்பொழுது இன்று காலை இங்குள்ள ஒவ்வொரு நபரும் “தங்களை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும், பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டு, எங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே நாங்கள் பொறுமையுடன் ஓடும்படிச் செய்யும்” என்றே நான் ஜெபிக்கிறேன். 185 எங்கள் பரலோகப் பிதாவே, பாரமான யாவற்றையும் நாங்கள் தள்ளிவிட வேண்டுமென்று பவுல் எபிரெயர் புத்தகம் 12-ம் அதிகாரத்தில் கூறியிருக்கிறான். யார் சென்றார்கள் என்றும், யார் செல்லவில்லை என்றும், யார் வெதுவெதுப்பாக பின்பற்றினார்கள் என்றும், யார் போர்களத்தில் முன் நிற்க சென்றார்கள் என்றும், யார் பின்னால் தங்கினார்கள் என்றும் அவன் ஏற்கெனவே அநேக உதாரணங்களை அங்கே காண்பித்தான். அவன், எல்லா உதாரனங்களையும் காண்பித்தான். அதன் பின்னர் அவன் திரும்பி, ‘பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற சிறு காரியத்தையும் கூட தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவரும் நமக்கு உதாரணமுமாயிருக்கிறவரை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் நாம் பொறுமையோடே ஓடக்கடவோம்” என்று கூறினான். பிதாவே, அதை இன்று காலை நாங்கள் செய்கிறோம்.
108186 இப்பொழுது, நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, உங்களை உண்மையாகவே கூர்ந்து, உண்மையாகவே, உண்மையாகவே கூர்ந்து பரிசோதித்துப் பாருங்கள். அதன்பின் உண்மையாகவே ஆழ்ந்த உத்தமத்தோடிருங்கள். அது மாத்திரமே அவசியம்…உங்களைச் சீர்தூக்கிப் பார்த்தாலும் உங்கள் உத்தமமும் மாத்திரமே அவசியம். இப்பொழுது உங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, உண்மையாகவே கவனமாய் இருங்கள். “கர்த்தாவே என்னை ஆராய்ந்து பாரும், என்னை சோதித்து பாரும். என்னில் பொல்லாங்கு ஏதாகிலும் உண்டா? இருக்குமானால், கர்த்தாவே, அதை நான் இப்பொழுதே இங்கு கீழே வைத்துவிடட்டும். நான் தலை வணங்கியுள்ள இந்த இடம் உமது பலிபீடம். அதை இங்கு இப்பொழுதே வைத்து அதன் மேல் என் காலை வைத்து மிதிக்கிறேன். நான் இங்கிருந்து நடந்து செல்லும்போது, அது இங்கேயே இருக்கப் போகிறது. உம்முடைய இரத்தத்தின் வல்லமை அதை பட்சித்துப் போடும். நான் ஜெயங்கொள்பவனாக இருக்க விரும்புகிறேன். கர்த்தாவே, ஏதோ ஒன்று என்னைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்று காலை நான் ஜெயங்கொள்ள விரும்புகிறேன். உமது ஒத்தாசையைக் கொண்டே என்னால் அதைச் செய்ய முடியும். உம்முடைய வார்த்தையினால் அது எனக்குக் கூறப்பட்டுள்ளது. கர்த்தாவே, இப்பொழுதே அதை கீழே வைக்கிறேன், நான் அதன் மீது பாதத்தை வைத்து மிதிக்கிறேன். இன்று காலை இந்த கட்டிடத்தை விட்டு நான் செல்லும்போது, அது தேவனுடைய வெண்மையாக்கும் திரவத்தைக் கொண்ட தொட்டியில் போடப்பட்டு விட்டது என்று அறிந்து இவ்விடம் விட்டு செல்கிறேன். அது இனி ஒரு போதும் நினைக்கப்படுவதில்லை. அதை இப்பொழுது நான் அறிக்கையிட்டு, உமது இரக்கத்துக்காக வேண்டிக்கொள்கிறேன்.” 187 நமது தலைகள் வணங்கி, நமது கண்கள் முடி, நமது இருதயங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில்; அது தான் இப்பொழுது ஆத்துமாவின் வாசல். இன்று காலை எதையாகிலும் தள்ளிவிட விரும்புகிறீர்களா? எதையாகிலும் ஜெயங்கொள்ள விரும்புகிறீர்களா? அதை விட்டுவிட நீங்கள் கடினமாக பிரயாசப்பட்டு, ஆனால் இன்று காலை நீங்கள் பிராயசப்படுவதை விட்டோய்ந்து, அவர் செய்ததை ஏற்றுக் கொள்ளப்போகிறீர்களா? அப்படியானால், “கர்த்தாவே, நான் ஜெயங்கொள்ள விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட காரியம் என்னைத் தொல்லைப்படுத்துகிறது” என்று கூறி, நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
109188 கர்த்தராகிய இயேசுவே, அந்த கரங்களை நீர் காண்கிறீர். இப்போது உமது ஊழியக்காரனாக மரித்தோருக்கும் ஜீவனுள்ளோருக்கும் நடுவில் நின்று கொண்டிருக்கும் நிலையில், இந்த ஜனங்களையும் என்னையும் தொல்லைப்படுத்தும் எல்லாவற்றையும் நான் கடிந்து கொள்கிறேன். இதை நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய பலிபீடத்தின் மேல் வைத்துவிட்டு, ஜெயங்கொண்டவர்களாக, சுயாதீனமாக இன்று காலை நாங்கள் இவ்விடம் விட்டு நடந்து செல்ல வேண்டுமென்று நான் வேண்டிக் கொள்கிறேன். 189 எங்கள் சகோதரிகள் இதற்கு முன்பு கிருபை பெறாமலிருந்தால், கர்த்தாவே, அது இப்பொழுதே அருளப்படுவதாக. எங்கள் சகோதரருக்கு கிருபை இல்லாமலிருந்தால், அது இப்பொழுதே அருளப்படுவதாக. தாழ்மை தாமே, பிள்ளைகளுடைய தாய் கர்வம் கொள்ளாமல்; அவளுக்குத் தெரியும்…அவள் தன் சிறு பிள்ளைகளுக்கு போதகராக இருக்கிறாள். அவளுடைய வாழ்க்கை ஒரு உதாரணமாயிருக்கிறது. தகப்பன் தாய்க்கு உதாரணம், ஏனெனில் அவனே வீட்டின் தலைவன். தாய் அவனை அதிகாரப்படுத்தி வருகிறாள். அவள் இனி ஒரு போதும் அதை செய்யாதிருப்பாளாக. அவனும் அவளை மிதியடியாக உபயோகித்து வந்திருந்தால், இனி ஒரு போதும் அதை செய்யாதிருப்பானாக. அவள் அவனுக்கு ஒரு துணை, கர்த்தாவே, இதை அருளும். கர்த்தாவே தடையாயிருக்கும் இந்த எல்லாக் காரியங்களும் அகற்றப்படுவதாக.
110190 பிதாவே, எங்கள் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களில் நாங்கள் எங்களை உமக்கென்று பிரதிஷ்டை செய்கிறோம். எங்கள் வாழ்நாளின் முடிவுக்கு நாங்கள் வரவேண்டுமென்று அறிந்திருக்கிறோம். அதுவும் உடனடியாக வரவேண்டும். எனவே இக்காலை வேளையில் இந்த செய்திக்குப் பிறகு, இத்தருணத்தை பயன்படுத்திக் கொண்டு உம்மண்டையில் வருகிறோம். ஏனெனில் நாங்கள் வரவேண்டுமென்று கட்டளையிடப்பட்டிருக்கிறோம். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்.” கர்த்தாவே, நீர் எங்களுக்காக கவலை கொள்பவர் என்பதை நான் அறிவேன். எங்கள் மேல் நீர் போதிய கவலை கொண்டு எங்களுக்காக மரித்தீர். நாங்களும், நீர் எதற்காக மரித்தீரோ அதை முன்வந்து ஏற்றுக் கொள்ள நிச்சயமாக போதிய அக்கறை கொண்டிருப்போம். 191 கர்த்தாவே, எங்களை பரிசுத்தப்படுத்தும். பரிசுத்த ஆவியினால் எங்களை புதிதாக நிரப்பும். பின்னானவைகளை, நாங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த உளையான சேற்றை மறந்து, எங்கள் உன்னத அழைப்பின் இலக்கை நோக்கித் தொடருவதற்கென பரிசுத்த ஆவி எங்கள் இருதயங்களை ஆண்டு கொள்வாராக. அங்கு எங்கள் வெளிச்சம் மிகவும் இனிதாயும், தாழ்மையாயும் பிரகாசித்து, வழிபோக்கர் ஒவ்வொருவரும் “இங்கு அந்த மலையின் மேல் ஒரு கிறிஸ்தவர் வசிக்கிறார். அந்த நபர், அந்த ஸ்திரி, அந்த மனிதன் உண்மையாக தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்ட மலராக இருக்கிறார். அவர்கள் மிக இனிமையாயும், மிகுந்த தயவாயும், எப்பொழுதும் அன்பு கூறுகிறவராயும், இனிமையானவராகவும், புரிந்து கொள்ளுகிறவராயும் இருக்கிறார்கள்” என்று கூற அருள்புரியும். பிதாவே இதை அருளும். நாங்கள் உப்பாக இருந்து, பூலோகத்திற்கு தாகமெடுக்க அருள் புரியும். பிதாவே, இதை அருளும். நாங்கள் இவ்வுலகத்தின் காரியங்களையும், இந்த ஜீவியத்தின் கவலைகளையும் ஜெயங்கொள்ளும்படி செய்வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். என்னால்…முடியும்… நாம் இப்பொழுது நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக. …இரட்சகர்… என்னவென்று அழைக்கிறார்? “சேற்றை விட்டு வெளியே வா.” ஒரு உயர்ந்த வாழ்க்கைக்கு; உனக்கு இருக்கும் ஏதோ ஒன்று உன்னை அந்த வழியாய் இழுக்கிறது. அது என்ன? அது அவர். சேற்றுக்குள்ளே சிறு மலர்கள். அங்கு நீ ஜீவனைப் பெற்றிருக்கிறாய், அது உன்னை நெருக்கி ஏவுகிறது. அது தான், “சேற்றிலிருந்து மேலே வா” என்று உன்னை அழைக்கிறது. பின் செல்வேன், பின் செல்வேன்…
111192 இப்பொழுது, அதை நீங்கள் அதை உண்மையாகவே உணருகின்றீர்களா? இப்பொழுது உங்களுடைய கண்களை மூடுங்கள். அவர் என்னை நடத்தும் இடத்துக்கு நான் பின் செல்வேன்… இப்பொழுது உங்களை அர்ப்பணியுங்கள்; இப்பொழுது அதை உண்மையாக உணர்ந்து பாடுங்கள். அவர் என்னை நடத்தும் இடத்துக்கு நான் பின் செல்வேன், அவர் என்னை நடத்தும் இடத்துக்கு நான் பின் செல்வேன். நான் வழி நெடுக அவருடன், அவருடன் செல்வேன். அவர் என்னை நடத்தும் இடத்துக்கு நான்… இப்பொழுது அப்படியே இனிமையாய். உங்களை அங்கு கிடத்த ஞாபகம் கொள்ளுங்கள். அவர் என்னை நடத்தும் இடத்துக்கு… “கர்த்தாவே, அதை இங்கு கிடத்துகிறேன். இப்பொழுது முதல் உமக்குப் பின் செல்லப்போகிறேன். நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்; நான் அதை விசுவாசிக்கிறேன்.” அவர் என்னை நடத்தும் இடத்துக்கு… நினைவிருக்கட்டும், உங்கள் வாழ்க்கை உங்களுடைய வாயின் சொற்களைக் காட்டிலும் உரக்க சாட்சியிடும். நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கை உங்கள் பேச்சைக் காட்டிலும் அதிகமாக ஜனங்களண்டை நிரூபிக்கும். நான் (வழி, எங்கு?) வழி நெடுக அவருடன், அவருடன் செல்வேன். [சகோதரர் பிரான்ஹாம் அவர் என்னை நடத்தும் இடத்துக்கு என்னும் பாடலை மெளனமாக இசைக்கிறார்—ஆசி.] 193 இப்பொழுது ஆழ்ந்த உத்தமத்துடன் முழு இருதயத்தோடும் உங்களை பிரதிஷ்டை செய்யுங்கள். நீங்கள் ஜெபம் செய்ய அனுமதிக்கப்படுவது ஒருக்கால் இதுவே கடைசி முறையாக இருக்குமானால், அப்படி ஒருக்கால் இருக்கக்கூடும்! அவ்வாறு இருக்காது என்று நான் நம்புகிறேன். ஒருக்கால் இருக்கலாம். ஆகையால், இப்பொழுது நிச்சயமுடையவர்களாக இருங்கள். உண்மையில் நிச்சயமுடையவர்களாக, உண்மையாகவே நிச்சயமுடையவர்களாயிருங்கள். ஒரு நாள் கதவு அடைப்படும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அப்பொழுது எல்லாம் முடிந்து விடும். “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்.” [சகோதரர் பிரான்ஹாம் அவர் எங்கே நடத்துகிறாரோ என்ற பல்லவியை மெளனமாக வாய் திறவாமல் பாடத் துவங்குகிறார்—ஆசி.] 194 அவர் உங்களுக்கு அங்கு அளித்த எல்லா மகிமையைக் குறித்தும், அவர் செய்துள்ள ஒவ்வொரு காரியத்தைக் குறித்தும் சிந்தித்துப் பாருங்கள். “நான் விசுவாசிக்கிறேன் கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்; நீரே என்னுடைய ஜெயங்கொண்டவர் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் உம்முடன் நடக்கிறேன், கர்த்தாவே, நாம் உம்முடன் நெருங்கியிருந்து, நீர் எங்கேயோ, அங்கே நானும் இருக்க விரும்புகிறேன்.”
112195 பிதாவே, “நாங்கள் எடுத்துக் கொள்ளப்படும்போது, நாங்கள் என்றென்றைக்கும் கர்த்தருடனே கூட இருப்போம்” என்று நீர் எங்களுக்கு கூறியிருக்கிறீர் என்பதை நினைவு கூருகிறோம். அவர் இப்பொழுது எங்களுடன் நடந்து கொண்டிருக்கும் போது, அவரை ஒரு கண நேர கண்ணோட்டமாகவே காணமுடிகிறது. ஆனால் அப்பொழுது நாங்கள்…அவர் எங்கள் மத்தியில் இருக்கிறார் என்று அறிந்திருப்பது எவ்வளவு பெரிய காரியம்! நாங்கள் என்றென்றைக்கும் அவரோடேகூட இருக்கப்போவது எப்படிப்பட்டதாயிருக்கும்? நாங்கள் எங்களுடைய நடவடிக்கைகள் அனைத்திலும் மிகவும் பிரியம் கொண்டிருக்கிறோம். நாங்கள் வெளியே போய் ஒரு குதிரை சவாரி செய்கிறோம். நாங்கள் அங்காடிக்குச் சென்று பொருட்களை வாங்குகிறோம். நாங்கள் வேட்டைக்கும், மீன்பிடிக்கவும் இல்லையென்றால் எங்களுக்கு என்னவெல்லாம் இன்பம் தருகிறதோ அவைகளைச் செய்கிறோம். ஆனால் ஓ, சபையானது திறக்கப்படும்போது, எங்கள் கர்த்தரை நாங்கள் சந்திக்க விரும்புகிறோம். அதுவே எல்லாக் காரியத்திலும் மகத்தானதாயிருக்கிறது. ஆகையால் “என்றென்றைக்கும் கர்த்தருடனே கூட இருந்து, அவருடன் அவருடைய சிங்காசனத்திலே உட்கார்ந்து கொண்டிருப்போம், என்றென்றெக்கும் அவரோடு இருப்போம்” என்று அவர் எங்களுக்கு வாக்களித்தத்தை எண்ணிப் பார்க்கிறோம். ஓ, தேவனே, நாங்கள் தாழ்மையுடன் தலைகளை வணங்கி அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.
113196 இப்பொழுது உங்களுடைய ஒவ்வொரு பாரத்தையும், ஒவ்வொன்றையும் இங்கு கீழே வைக்க முடியும் என்று நீங்கள் உணருகிறீர்களா? உங்களால் இப்பொழுது அதன் மேல், அதற்கு மேலாக நடந்து செல்ல முடியுமா? நீங்கள் செய்ய முடியுமென்றால், உங்கள் கரங்களை உயர்த்தி, “தேவனுடைய கிருபையினால் இந்த சோதனையை நான் கீழே வைக்கிறேன். நான் இனிமேல் அதற்கு போராடமாட்டேன். நான் அவருடைய கரத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, நடந்து செல்லத் துவங்கப் போகிறேன்,” என்று கூறுங்கள். “சகோதரன் பிரான்ஹாமே, நான் போராடியிருக்கிறேன். நான் புகை பிடிப்பதை விட்டுவிட முயற்சி செய்தேன். என் தலைமுடியை வளர்க்க நான்—நான் முயற்சி செய்தேன். நான் இதை செய்ய முயற்சித்துள்ளேன். நான் செய்த…சகோதரர் பிரான்ஹாமே, நான் கடினமாக முயற்சித்திருக்கிறேன். என்னால் அதைச் செய்ய முடியவில்லை” என்று கூறுங்கள். இனிமேல் அவ்வாறு செய்ய முயற்சி செய்யாதீர்கள். அவருடைய கரத்தை மாத்திரம் பற்றிப் பிடித்துக் கொண்டு, “பிதாவே, நீர் என் கரத்தை சட்டைக் கைக்குள் நுழையும்” என்று கூறுங்கள். புரிகிறதா? “என் கரத்தை நான் உம்மிடம் கொடுக்கப்போகிறேன். கர்த்தாவே, உம்மையே நோக்கிப் பார்த்து நான் நடக்கப் போகின்றேன்” என்று சொல்லுங்கள். அப்பொழுது அது சம்பவிக்கும். அது உங்களை ஒரு உண்மையான கிறிஸ்தவனாக மாற்றும். நீங்கள் உண்மையான ஒரு கிறிஸ்தவராக இருப்பீர்கள். 197 இன்றிரவு நான் உங்களை காணும் வரைக்கும், தேவன் தாமே உங்களிடத்தில் அன்பு கூர்ந்து உங்களுடன் இருப்பாராக. நீங்கள் என்னுடைய சுவிசேஷத்தின் பிள்ளைகளாயிருக்கிறீர்கள். நீங்கள் கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்கள். இப்பொழுது கலைந்து செல்வதற்காக, நான் உங்களை உங்கள் போதகரான சகோதரன் ஆர்மன் நெவில் அவர்களிடம் திரும்ப அளிக்கிறேன்.