அதன்பின் இயேசு வந்து அழைத்தார்

64-0213

நம பரசதத யவன 11-ஆம அதகரம 18-வத வசனம தவஙக வசகக வரமபகறன. பததனய ஊர எரசலமககச சமபமய ஏறககறய இரணடமல தரததலரநத. யதரல அநகர மரததள மரயள எனபவரகளடய சகதரனக கறதத அவரகளகக ஆறதல சலலமபட அவரகளடததல வநதரநதரகள. இயச வரகறர எனற மரததள களவபபடடபத, அவரகக எதரகணட பனள; மரயள வடடல உடகரநதரநதள. மரததள இயசவனடததல வநத: ஆணடவர, நர இஙகயரநதரனல

அதன்பின் இயேசு வந்து அழைத்தார்

64-0213துலேரே கலி681964-02-13

அதன்பின் இயேசு வந்து அழைத்தார்

64-0213துலேரே கலி681964-02-13

1 நாம் பரிசுத்த யோவான 11-ஆம் அதிகாரம் 18-வது வசனம் துவங்கி வாசிக்க விரும்புகிறேன். பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல் தூரத்திலிருந்து. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்; ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். (அதைக் கவனியுங்கள்!) இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து; போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.

22 நாம் ஜெபம் செய்வோமாக. பரலோகப் பிதாவே, நாங்கள் இப்பொழுது உம் பேரில் காத்திருக்கையில், இவ்வார்த்தைகளை, இந்த இரவில் எங்களுடைய இருதயத்திற்கு உறுதிபடுத்தித்தாரும். உம்முடைய வார்த்தை, உமது ஊழியக்காரன், இந்தப் பாடப் பொருள் யாவும் உமக்கே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். நீங்கள் அமரலாம்.

33 நான் இங்கு இருப்பதன் நோக்கம் என்னவென்றால் தேவனுடைய ஜனங்களுக்கு உதவ முயற்சிப்பதற்காவேயாகும். வியாதியஸ்தர் மேல் கரங்களை வைத்து ஜெபம் செய்வதற்கு மாத்திரமல்ல. நம் மத்தியில் இருக்கும் இயேசு கிறிஸ்துவை, நம் மத்தியில் இருக்கும் தேவ குமாரனை அவர்கள் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும். நாம் இன்றிரவு அதன் பின்னர் இயேசு வந்து அழைத்தார் என்ற இந்த பொருளின் பேரில் பேசப்போகின்றோம்.

44 இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருக்கிற இந்த நேரமானது மிகவும் துக்கம் நிறைந்த ஒரு நேரமாக இருந்தது. நமது ஆண்டவரின் வாழ்க்கையைக் குறித்த வரலாற்றை நீங்கள் எப்போதாவது படித்திருப்பீர்களானால், இந்தப் பையனுக்கு, லாசருவுக்கு அவர் ஒரு மகத்தான நண்பனாக இருந்தார் என்பதை நாம் கண்டறிகிறோம். அவர் வந்து…யோசேப்பு மரித்துவிட்ட பிறகு அவர் அவ்விடத்தை விட்டு, மார்த்தாள், மரியாள், லாசருவுடன் வந்து இருந்தார். அவர்கள் மகத்தான நண்பர்களாயிருந்தனர். அவர்கள்…அவர் ஒரு போதகரைப் போல, ஒரு—ஒரு உண்மையாக நண்பராக, அவர்களுக்கு இருந்தார். அவருக்கு சிறிய ஆடைகளையும், அணிந்து கொள்ள ஒரு மேற்சட்டையையும் தைத்துக் கொடுத்தனர். இவ்வாடையானது ஒரு தையல் விளிம்பு கூட இல்லாமல் நெய்யப்பட்டது என்று அவர்கள் கூறுகின்றனர் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அவரில் விசுவாசம் கொண்டிருந்தபடியால், அவர்கள் இவைகளையெல்லாம் அவருக்காகச் செய்திருந்தனர். அவர்கள்—அவர்கள் அவரைக் குறித்து அறிந்து அவரை விசுவாசித்திருந்தனர். அவர்கள் அவரைப் பின்பற்றுவதற்காக தங்கள் சபையையும், மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டனர். அக்காலத்தில் இது ஒரு பெரிய காரியமாயிருந்தது. ஏனெனில் சபையிலிருந்து வெளியே வருவதற்கான தண்டனையே மரணமாயிருந்தது.

55 ஆனால் இயேசுவோ, இந்த நபர் அவர்கள் கூறுகிறபடி சுற்றித்திரிந்து, அவர்கள் சபைகளைக் கிழித்தெறிந்து, அவர்களுடைய ஆசாரியர்களைப் பற்றி தீமையானதைப் பேசி, அவ்வண்ணமே அவர்—அவர் அவர்களுக்கு ஒரு பெருந்தீங்கிழைத்திருந்தார் என்று அவர்கள் நினைத்தனர். ஆதலால் அவரைப் பற்றி அறிக்கை செய்தால் கூட யூத சபையிலிருந்து புறம்பாக்கப்படும் சூழ்நிலை இருந்தது. பிறகு சபையிலிருந்து நீங்கள் தள்ளப்பட்டால் மீட்கப்படும்படியான வாய்ப்பே உங்களுக்கு இல்லையென்று அவர்கள்—அவர்கள் கருதினர். பரிசேயர், சதுசேயர் என்பதுபோன்ற ஒரு குழுவில் நீங்கள் இல்லை என்றால், அல்லது வேறெதோ ஒன்றில், நீங்கள் அந்த குழுவிற்கு வெளியே இருந்தால் மீட்பே கிடையாது என்பதாயிருந்தது. அவர்களுக்கு உரிமையிருந்ததால், அதிகாரமிருந்ததால், அவர்கள் விரும்பும்போதெல்லாம் உங்களை வெளியே உதைத்து தள்ள முடியும் என்று கூறியிருந்தனர். அதுவே அவர்களுடைய சொந்த கருத்தாய் இருந்தது. “உங்கள் பாரம்பரியங்களாலே தேவனுடைய வார்த்தைகளை அவமாக்கினீர்கள்” என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லையே. புரிகிறதா?

66 இப்பொழுது அது மீண்டும் சம்பவிக்கிறது, ஏனென்றால் சரித்திரமானது அவ்வப்போது திரும்பவும் நிகழ்கிறதாயிருக்கிறது என்று நாம் யாவரும் அறிவோம். இதைக்— இதைக் கூறுவதற்கு சற்று வருத்தமாயிருக்கிறது. ஆனால் திரும்பவும் இக்காரியங்கள் நடக்க வேண்டும் என்று தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்டுள்ளது. ஆதலால் மறுபடியும் அது நடந்துள்ளது. இயேசுவை யாரும் சரியாக நினைத்துப் பார்க்கவில்லை என்பதை நாம் கண்டறிகிறோம். 7 அநேக சமயங்களில் ஜனங்கள் தங்களோடு உடன்படாத மனிதனை நியாயந்தீர்க்க விரும்புகிறார்கள். நாம் அப்படிச் செய்யக் கூடாது. நாம் ஒருவரோடு ஒருவர் உடன்படாமல் அதே சமயத்தில் இன்னும் நண்பர்களாக இருக்கலாம். நான் ஒரு மனிதனிடம் முரண்பாடான கருத்தை உடையவனாயிராமல், அவனை இன்னுமாய் நேசித்து அவனுக்காக ஜெபித்து, வேதத்தின் பேரில் அவனோடு முரண்பாடான கருத்தை உடையவனாயிராமல், அவன் புரிந்து கொள்ளுதலை நன்கு கண்டு கொள்வேன். அப்பொழுது நான் அவனிடம் ஒன்றையும் கூறமாட்டேன். நான் எப்போதும் அவனிடம் உடன்படாதவனாயும், அதே நேரத்தில் நண்பனாகவும் இருப்பேன். ஏனென்றால் நான் அவனை நேசிக்கின்றேன். அவன் இழக்கப்பட்டு போகப்பட நிச்சயமாக நான்—நான் விரும்பமாட்டேன். அவனும் என்னிடம் இதே விதமாக நடந்து கொள்ள வேண்டும். நாம் இழக்கப்பட்டுப்போக விரும்புகிறதில்லை. நாம் நமது சிந்தனைகளுக்கெல்லாம் அடித்தளமாக வார்த்தை என்ன கூறுகின்றதோ அதன்மேல் நாம் அவைகளை அமைக்க வேண்டும். வார்த்தையானது சத்தியமாகயிருக்கட்டும். நமது பிரமாணமோ அல்லது நம்முடைய சிந்தனைகளோ அல்ல, ஆனால் அவர் என்ன கூறுகின்றார்; தனிப்பட்ட வியாக்கியானம் அல்ல. வார்த்தை என்ன கூறிற்று என்று பார்த்தலே அவசியம்.

78 அன்று ஒரு இரவு நான் ஒரு காரியத்தை செய்தேன். அது கூட்டத்தில் ஏறக்குறைய புனிதத்துவத்தைப் பாழாக்குவதைப் போல தென்பட்டது என்று நான் நினைக்கிறேன். நான் இயேசுவை வழக்கு விசாரனையில் (trial) வைத்தேன். நான் “அன்றைக்கு அவரை எப்படி நடத்தினார்களோ, அவ்வண்ணமே அவர்கள் இன்றைக்கும் செய்கின்றனர்” என்று கூறினேன். நமக்கு நேரமிருந்தால், நாம் சிறிது நேரம் அதை மறுபடியும் செய்தால் நலமாயிருக்கும். இப்பொழுது நான் கூறினேன், இன்றைக்கு நாம் அதை…கண்டறிகிறோம்… 9 லூத்தரின் சீர்திருத்தத்தில், அவர், அந்தக் காலத்தில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று லூத்தர் கூறினார். “விசுவாசிக்கிறவன் எவனோ அதைப் பெற்றுக் கொள்வான்” ஆனால் அநேகர் அவர்கள் விசுவாசிப்பதாகக் கூறி அதைப் பெற்றுக் கொள்ளாதிருந்தார்கள் என்று நாம் கண்டோம். 10 ஜான் வெஸ்லியின் காலத்திலே அவர்கள் அதை பரிசுத்தமாக்கப்படுதல் என்று அழைத்தனர், முழுவதும் பரிசுத்தமாகுதல் என்ற இரண்டாவது ஆசீர்வாதத்தைப் பெற்று மகிழ்ந்து ஆர்ப்பரித்தார்கள். “எல்லாரும் ஆர்ப்பரித்துப் பெற்றுக் கொண்டோம் என்றனர்.” ஆனால் அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். ஏராளமானோர் சப்தமிட்டனர். ஆனால் அதை பெற்றுக்கொள்ளவில்லை. 11 பெந்தேகோஸ்தே நாளிலே, அவர்கள், “ஆவிக்குரிய வரங்கள் திரும்ப அளிக்கப்படும் நேரம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வந்துள்ளது. அந்நிய பாஷைகளை பேசுகிறவன் அதைப் பெற்றுக் கொண்டான்” என்றனர். அந்நிய பாஷைகளில் பேசினவர்கள் அநேகர் அதைப் பெற்றுக் கொள்ளவில்லையென்று நாம் கண்டறிகிறோம்.

812 எனவே, “ஆவிக்குரிய கனி அதுதான்” என்று அவர்கள் கூறுகின்றனர். ஓ, இல்லை. ஆவிக்குரிய கனி அதுவல்ல. கிறிஸ்தவ விஞ்ஞானத்தில் சிறிதளவும் கூட…அன்புதான் ஆவிக்குரிய கனியாகும். பிறகு அவர்கள் எல்லோரைக் காட்டிலும் அதிக அன்புடையவர்களாய் இருந்து, இயேசு கிறிஸ்துவின் தெய்வத்தன்மையை நிராகரித்து, அவரை ஒரு தீர்க்கதரிசி என்றும், சாதாரண மனிதன் என்றும் அழைக்கிறார்கள். புரிகிறதா? ஆதலால் அது கிரியை செய்கிறதில்லை. 13 நான் இதைக் குறித்து ஒரு நிமிடம் கேள்வி எழுப்பட்டும். இயேசுவை விசாரனைக்கென்று நாம் எடுத்துக் கொள்வோம். இந்த மேடையிலிருந்து நான் கொடுக்கப் போகும் இந்த அறிக்கைக்காக தேவன் என்னை மன்னிப்பாராக. ஆனால், உங்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு நிமிடம் அவருக்கெதிராக நான் இருக்கப் போகிறேன். புரிகிறதா?

914 “இன்றிரவு நான் இங்கு ஜனங்களாகிய உங்களைக் கொண்டுள்ளேன்; நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கின்றேன். அன்று நசரேயனாகிய இயேசு பூமியில் இருந்த நாளுக்கு நான் சென்றிருந்தேன். இப்பொழுது இந்த நசரேயனாகிய இயேசுவிற்கெதிராக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக நான் உங்களிடம் வந்துள்ளேன். தேவன் அன்பாயிருக்கிறார் என்று நாமெல்லாரும் அறிந்துள்ளோம். வேதம் அவ்வாறு கூறுகின்றது. சரி, அன்பானது, ஆவியானது…நீடிய பொறுமை, தயவு, சாந்தம் மற்றவை. நான் இப்பொழுது கூறுகிறேன், அதாவது நான் உங்களிடம் சிலவற்றைக் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது நாம் ஒரு கிறிஸ்தவர் என்று அறிந்துள்ள ஒருவரை எடுத்துக் கொள்வோம். 15 “உங்களுடைய இந்த வயதான ஆசாரியனைப் பாருங்கள். அவருடைய மூத்த—மூத்த முப்பாட்டனாரும் ஒரு ஆசாரியன் ஆவார். ஒரு ஆசாரியனாக இருக்க அவர் லேவிக் கோத்திரத்தில் பிறக்க வேண்டியதாயிருந்தது. மற்றவர்களைப் போன்ற வாலிப ஜீவியம் அவரால் செய்ய முடியாதென்று நாம் காண்கிறோம். அவர் என்ன செய்கிறார்? வேத வார்த்தையைப் படிப்பதற்காக, தேவனுடைய வார்த்தையை படிப்பதற்காக அவர் தன்னையே தியாகம் செய்கிறார். இரவும் பகலும் அதைப் படித்து அந்த சுருளில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் உறுப்பையும் மனப்பாடமாக அறிந்து கொள்ள வேண்டியவராய் இருக்கிறார். அவர்—அவர் அதை முழுமையாக அறிய வேண்டும்.

1016 “அதன்பின் உன் தாயையும், தகப்பனையும் விவாகத்தில் புருஷனும் மனைவியுமாக இணைத்தது யார்? உன்னுடைய தேவ பக்தியுள்ள வயதான ஆசாரியன்தான். உன் தந்தை அவருக்கு தேவை உண்டானபோது, தன் நிலத்தை பணத்திற்கு அடகு வைத்து, திருப்பிச் செலுத்த பணமில்லாதிருந்து, அடகுக்காரர்கள் நிலத்தை அபகரிக்கப் போவதாயிருந்தபோது உன் தந்தைக்காக நின்றது யார்? உன்னுடைய அன்பான, வயதான ஆசாரியன்தான். உன் தாய் உன்னைப் பெற்றெடுக்கும்போது அந்த அறையிலே உன் தாயினருகில் இருந்தது யார்? உன்னுடைய அன்பான வயோதிக ஆசாரியன்தான். நீ சுகவீனமாயும், தேவையுள்ளவானாயுமிருக்கும் பட்சத்தில் உன்னிடத்திற்கு வருபவர் யார்? உன்னுடைய அன்பான வயோதிக ஆசாரியன். எட்டாம் நாளிலே உனக்கு விருத்தசேதனம் செய்து உன்னை தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்து உன்னை ஆசீர்வதித்தது யார்? உன்னுடைய அன்பான வயோதிக ஆசாரியன். உன்னுடைய தாயும் தந்தையும் விவாகரத்து செய்ய முனைந்தபோது அவர்களைத் திரும்பவும் கொண்டு வந்து பிணைத்தது யார்? உன்னுடைய அன்பான வயதாக ஆசாரியன். அக்கம் பக்கத்தில் பிரச்சனை இருக்கும்போது, அதைப் பார்த்துக் கொள்வது யார்? உன்னுடைய வயதான ஆசாரியன் தான். நிச்சயமாகவே.

1117 “தேவனுக்கு பலி செலுத்த ஒரு ஆட்டுக்குட்டி தேவையென்று வேதம் கூறுவதை இந்த அன்பான வயதான ஆசாரியன் அறிவான். வாணிபத் துறையில் ஈடுபட்டுள்ள ஜனங்களாகிய உங்களால் ஆடு வளர்க்க முடியாது, அதே சமயத்தில் தேவன் ஒரு ஆட்டைக் கேட்கிறார். ஆதலால் அவர்கள் சில கடைகளை அமைத்து ஆடுகளை விற்றார்கள். வணிகர்கள் அங்கு சென்று வாங்கி அவர்களுடைய ஆத்துமாவிற்காக, தேவன் கேட்கிற ஒரு பலியை செலுத்த ஏதுவாயிருந்தது. 18 இயேசு என்று அழைக்கப்பட்ட இந்த வாலிப நபர் என்ன செய்தார்? எங்கிருந்து இவர் வந்தார்? இவர் பிறப்பு ஒரு கன்னிப்பிறப்பு என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட அர்த்தமற்ற ஒரு காரியத்தை யாராவது கேள்விப்பட்டிருப்பார்களா? அவருடைய தாய் யோசேப்பை மணப்பதற்கு முன்பாகவே இவரைச் சுமந்திருந்தாள். இப்பொழுது அவர்—அவர் துவக்கத்திலேயே ஒரு அவப்பெயரையுடையவராய் இருந்தார் என்று நாம் கண்டறியலாம். 19 எந்த ஐக்கியச் சான்றிதழ் இவரிடம் உள்ளது? இவர் தேவ மனுஷனாய் இருந்தால், எந்தப் பிரிவை, குழுவை இவர் சேர்ந்திருந்தார்? உன்னுடைய ஆசாரியன் அந்த வார்த்தையை அறிவதற்கென படிக்கும்போது, படிக்கும்போது, ஆழ்ந்து படிக்கும்போது, மிகவும் ஆழ்ந்து படிக்கின்ற போது இங்கே இவர் வந்து அவர் கட்டினதையெல்லாம் கிழித்தெறிந்துக் கொண்டிருக்கின்றார். அதை “தேவன்” என்று உன்னால் அழைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.

1220 “இப்பொழுது, நீங்கள் போய் பலிக்கான அப்பொருளை வாங்கி உங்கள் ஆசாரியன் அந்த இடத்தை ஏற்படுத்தி இருக்கும்போது இந்த இளம் வாலிபர் என்ன செய்தார்? கயிற்றை எடுத்து சவுக்கை உண்டுபண்ணி கோபமடைந்து, மேஜைகளை உதைத்து, ஜனங்களை விரட்டி அடித்தார்? அது அன்பா? அவர்களைக் கோபமாகப் பார்ப்பது, இதை நீங்கள் ஆவியின் கனிகள் என்று கூறுகின்றீர்களா? பாருங்கள். மனிதன் யெகோவாவை ஆராதிக்க இருக்கும் அவனுடைய வாய்ப்பை இழக்கச் செய்வது! வணிகர் அவரை ஆராதிக்க வேண்டும் என விரும்பினர். அவர் ஆடுகளை வளர்க்கிறதில்லை. ஆதலால் அவர் அங்கு சென்று வாங்கினர். இவரோ அவைகளைக் கவிழ்த்து, உதைத்து, வெளியே துரத்தினார். 21 யார் அங்கே ஆவிக்குரிய கனிகளை கொண்டுள்ளது? பாருங்கள்? அங்குதான் காரியம். பாருங்கள், அது ஆவிக்குரிய கனி அல்ல, அந்நிய பாஷைகளில் பேசுவது அல்ல, சத்தம் போடுவது அல்ல.

1322 நீங்கள், அப்படியானால் “சகோதரர் பிரான்ஹாமே, அதற்கு அத்தாட்சி என்ன? அதற்கு அத்தாட்சி என்ன?” என்று கேடகலாம். அது அந்த மணி நேரத்தின் வார்த்தையானது ரூபகாரப்படுத்தப்படுதலாகும். 23 அவர்கள் வேதத்தை வைத்திருந்தார்கள். யெகோவா என்ன சம்பவிக்கும் என்று கூறியிருந்தாரோ, அந்த விதமாகவே அவர் இருந்தார். அதற்கு எந்த வியாக்கியானமும் தேவை இல்லை. அது அங்கே வியாக்கியானிக்கப்பட்டிருந்தது. உங்கள் ஆசாரியங்கள் எல்லாவற்றையும் பெற்றிருந்தார்கள். காரியங்கள் சரியாக சம்பவித்துக் கொண்டிருந்தன. ஆனாலும் அதே சமயத்தில் அவர்கள் வார்த்தையை காணத்தவறினார்கள். வார்த்தையானது அந்த காலத்திற்கென ஜீவிக்கும்படி அவர் செய்தார். அதுதான் அந்த காலத்தின் அத்தாட்சி ஆகும். 24 லூத்தர் அவருடைய காலத்திற்கேற்ற அத்தாட்சியைப் பெற்றிருந்தார். வெஸ்லி அவருடைய காலத்திற்கேற்றதையும், பெந்தெகோஸ்தேயினரும் அவர்களுடைய காரியத்திற்கேற்றதைப் பெற்றிருந்தனர். ஆனால் நாம் மற்றொரு காலத்தில் உள்ளோம். அந்தக் காரியங்களெல்லாம் நல்லதுதான். ஆனால் ஒரு குழந்தைக்கு விரல், கண், காது உள்ளது. பிறகு அது ஒரு—ஒரு முதிர்ந்த குழந்தையாகி மனிதப் பிறவியாக வந்து பிறந்து ஆத்துமா, சரீரம், ஆவியையுடையதாயிருந்து, அசைய வேண்டும்.

1425 இப்பொழுது இவையெல்லாவற்றைக் காட்டிலும் சிலவற்றில் தான் இயேசு தம்மை பிரகடனப்படுத்தினார் என்பதை நாம் கண்டறிந்தோம். ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்கள் தான் அவரைக் கண்டனர். பெரிய கூட்டங்கள் அல்ல, பெரிய காய்பாவைச் சேர்ந்த கூட்டங்கள் ஒருபோதும் அவரை அடையாளங் கண்டு கொள்ளவில்லை. காரணம், காய்பாவினால் முழு தேசத்தையுமே ஒன்றாகக் கூட்ட முடியும். இயேசுவோ சில பேர்களைத்தான் அழைத்தார். அநேகர் அவரை அறிந்து கொள்ளவேயில்லை. அவர் பூமியின் மீது வந்ததை ஆயிரமாயிரம் பேர் அறிய முடியவில்லை. அவர் பூமியிலே பயணித்தார். ஆனால் அவர் இங்கிருக்கிறார் என்று கூட அவர்கள் ஒரு போதும் அறிந்துகொள்ளவில்லை. 26 மறுபடியும் அப்படியே செய்வார்கள்! ஜீவனுக்கென்று அழைக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்களிடத்தில்தான் அவர் வருவார். எவர்கள் ஜீவனுக்கென்று அழைக்கப்பட்டவர்கள் என்பது அவருக்குத் தெரியும். அவர்…அவர்களைப் பார்த்துக் கொள்வது அவளுடைய வேலை.

1527 இப்பொழுது கவனியுங்கள். இவர்கள் அவரை விசுவாசித்து சபையைவிட்டு வெளியே வந்தவர்களாய் இருந்தனர். அவரைக் குறித்த எல்லாவற்றையும் வார்த்தையானது கூறியிருந்தது. அவர் அங்கிருந்தார். 28 இவர்கள் வீட்டைவிட்டு ஒரு நாள் அவர் வெளியில் சென்றார். மூன்று விதமான காரியங்களை குறித்து உங்களிடம் நான் பேசவிருக்கிறேன். இயேசு அவர்களை விட்டுச் சென்றார்; மரணம் வந்தது; எல்லா நம்பிக்கையும் அற்றுப்போனது. இந்த மூன்று காரியங்களைக் குறித்து சில நிமிடங்கள் நான் பேச விரும்புகிறேன். 29 இயேசு அவ்விடத்தை விட்டுச் சென்றார். அவர் சென்ற பிறகு தொல்லையானது உட்பிரவேசித்தது. இப்பொழுது அவர் உன்னையோ அல்லது நீ வசிக்கும் உன் வீட்டையோ விட்டுச் சென்ற பிறகு துன்பமானது வழியில் வந்து கொண்டிருக்கிறது. இயேசுவானவர் புறப்பட்டுச் சென்று விடும்போது, சாத்தான் ஒரு திறந்த வாசலைப் பெற்றுக் கொள்கிறான். 30 அவர் சென்று விட்டார், அவர் சென்றவுடனே மரணம் உட்பிரவேசித்தது. இயேசு வெளியில் செல்லும்போது, மரணம் உள்ளே பிரவேசிக்கிறது. அவரிடமிருந்து பிரிக்கப்படுதல் என்றால் அது மரணமாகும். ஆகையால் இயேசு வெளியில் சென்ற பிறகு மரணம் உள்ளே வந்தது.

1631 மரணமானது லாசருவைச் சுற்றி உலாவிக் கொண்டிருந்தது, அவர்கள் அவரை கண்டிருந்து, அவர் தேவன் என்று அறிந்திருந்தபடியால், அப்பொழுது அவர் வந்து லாசருவிற்காக ஜெபிக்க, தாங்கள் விசுவாசித்து நேசித்த அவரிடத்தில் அனுப்பினார்கள். மார்த்தாள், “நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்கு தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்” என்று அதை வெளிப்படையாகக் கூறினான். அவரும் தேவனும் ஒன்றாயிருக்கிறார்களென்று அவள் அடையாளங் கண்டு கொண்டாள். அவர் அந்த மணி நேரத்தின் வார்த்தையாயிருந்தார், எனவே அவள் அதை அடையாளங் கண்டு கொண்டாள். அவரைத் தொடர்பு கொண்டால் போதும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அவரோ சென்று விட்டிருந்தார். அவரை கண்டு பிடிக்க அவர்களால் இயலவில்லை. அவரிடம் ஆள் அனுப்பினபோது, அவர் வருவதற்கு பதிலாக, தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். மறுபடியும் ஆள் அனுப்பின போதும் வருவதற்கு பதிலாக இன்னும் தூரமாகச் சென்று கொண்டிருந்தார். 32 சில நேரங்களில் ஏன் இப்படி சம்பவிக்கின்றது என்று நாம் வியப்புற்றுகிறோம். ஆனால் வேதாகமமானது “தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கும்” என்று கூறுகிறதல்லவா? அவர் செய்து கொண்டிருக்கிறது என்ன என்று அவர் அறிந்திருக்கிறார். அவர் தாமதித்தாலும், பரவாயில்லை. அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அதற்கு ஒரு நோக்கமிருந்தது.

1733 அவர், “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்காளுக்குச் சொல்லுகிறேன். பிதாவானவர் செய்ய குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றயும் தாமாய்ச் செய்ய மாட்டார்” என்று பரிசுத்த யோவான் 5:19-ல் கூறினார் என்பதை நாம் காண்கிறோம். 34 பிதாவானவர், அவர் சென்று விட வேண்டுமென்றும், இவ்வளவு நாட்கள் அப்புறம் இருக்க வேண்டுமென்றும் கூறி இருந்தார். அந்த நாட்கள் முடிந்த பின்பு, அப்பொழுது அவர் என்ன கூற வேண்டியிருந்ததோ அதைக் கூறினார், அதாவது “நம்முடைய சிநேகிதன் லாசரு நித்திரையடைந்திருக்கிறான்” என்றார். மேலும் அவர், “பரவாயில்லை, அவன் நன்றாய் இருக்கிறான்” என்றார். 35 மேலும் அவர், “அவன் மரித்துவிட்டான். நான் அங்கே இராததினால் உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்” என்று கூறினார். ஏனெனில் அவனை சுகப்படுத்துவதற்கு அல்லது என்ன செய்யப்பட வேண்டும் என்று கூறுவதற்கு அவரைக் கண்டுபிடிக்க அவர்கள் முயன்று கொண்டிருந்தனர். ஆனால் என்ன செய்யப்பட வேண்டியதாயிருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார், எனவே அவர் என்ன செய்ய வேண்டுமென்று நியமிக்கப்பட்டிருந்ததோ அதையே அவர் சரியாகச் செய்தார்; அதாவது தூரமாக விலகி தரித்திருந்தார். அவர் திரும்பி வந்தபோது, நீங்கள் அவரை கல்லறையண்டை கவனிப்பீர்களேயானால், அவர் மறுபடியுமாக இந்த வீட்டிற்கு திரும்பவும் வந்தடைந்தபோது அதை வெளிப்படுத்தினார்.

1836 எல்லா நம்பிக்கையும் அற்றுப்போனது. லாசரு மரித்துப் போனான். “அவர் காட்சியில் வரலாம். அவர் காட்சியில் வரலாம். அவர் திரும்ப வரலாம்” என்று ஒவ்வொரு மணி நேரமும் இவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர். முடிவிலே சுவாசம் அவனைவிட்டுச் சென்றபோது, அவன் மரித்தான். 37 ஆகையால் அவர்கள் அவன் சரீரத்திலிருந்து ரத்தத்தை எடுத்து விட்டு பிறகு அதை ஒரு சீலையினால், கந்தவர்க்கங்களைக் கொண்டு சுற்றி கல்லறையில் வைத்து அந்நாட்களின் முறைமையின்படி அதை ஒரு கல்லினால் மூடினார்கள். பூமியில் அல்லது பாறையில் ஒரு சிறிய குழியை வைத்து அதின் மேல் கல்லால் மூடுதல் அவர்கள் பழக்கமாயிருந்தது. 38 முதலாம் நாள் கடந்தது. இரண்டாம் நாள் கடந்தது, மூன்றாம் நாள் கடந்தது, நான்காம் நாளும் கடந்தது. அந்த மனிதன் கல்லறையில் அழுகிக் கொண்டிருந்தான். அநேகமாக அவனுடைய மூக்கானது அழுகி உள்ளே விழுந்திருக்கலாம். முதலாவதாக மூக்கு தான் அழுகி உள்ளே விழும் என்று நான் நினைக்கிறேன். பிறகு அவன் அழுகிக் கொண்டிருந்தான். அவனுடைய—அவனுடைய மாம்சமானது பூமியின் தூளிற்கு சென்று கொண்டிருந்தது. ஆத்துமா அவனிடத்திலிருந்து நான்கு—நாள் பிரயாணமாக எங்கோ சென்றிருந்தது. 39 இவ்வாழ்க்கையில் அவனைத் திரும்பவும் காண முடியும் என்ற எல்லா நம்பிக்கையும் முற்றிலுமாக அற்றுப் போனது. எல்லா நம்பிக்கையுமே அப்பொழுது அற்றுப் போனபோது…அவர்கள், “முதலாம் நாள் அல்லது இரண்டாம் நாளாவது அவர் வருவார்” என்று காத்திருந்தனர்! வரவில்லை. அப்பொழுது அவன் மரித்தான். அதன்பிறகும் அவர் வரவில்லை. பிறகு எல்லோருக்குள்ளும் பதறல் குடி கொண்டது.

1940 சிறிது நேரம் கழித்து, “போதகர் வெளியில் வந்திருக்கிறார்” என்று யாராவது சொல்லியிருக்க வேண்டும். இதோ மார்த்தாள் வீதியண்டை செல்லுகிறாள். 41 எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிருந்த அந்த இருள் சூழ்ந்த வேளையில் தான் இயேசு வந்தார். அந்நேரத்தில்தான் அவர் வழக்கமாக வருகிறார். பார்த்தீர்களா? அந்த அந்தகார நேரத்தில் அவர் வருகிறார், அப்பொழுதே இயேசு காட்சியில் பிரசன்னமாகிறார். 42 இப்பொழுது கவனியுங்கள். அவர் வந்து மார்த்தாளை அழைத்தார். அவருடைய பிரசன்னமானது புது நம்பிக்கைகளை கொண்டுவந்தது. அந்தப் பையன் மரித்துப் போயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அதே சமயத்தில், அவருடைய பிரசன்னமானது புதிய நம்பிக்கையை கொண்டு வருகிறது.

2043 என் நண்பனே, புற்று நோய், இருதயக் கோளாறு இருப்பதால் மருத்துவர்கள் கைவிட்டுவிட்ட நிலையில் இன்றிரவு நீ இங்கு அமர்ந்திருக்கலாம். ஒரு வேளை நீ முடவனாய் நாற்காலியில் இருக்கலாம். முழு விஞ்ஞானமும் நீ குணமடைவதற்கான நம்பிக்கையில்லை என்று கூறியிருக்கலாம்; கால்ஷியம் என்ற வேதியல் தனிமம் உன்னுடைய—உன்னுடைய—உன்னுடைய எலும்புகளில் படிந்து விட்டிருப்பதால் அதை உன்னால் இயக்க முடியாமல் போகலாம் அல்லது உன்னுடைய—உன்னுடைய இருதயமானது மிக மோசமான நிலையில் இருக்கலாம். நீ எந்த நிமிடத்திலும் மரித்துப் போகலாம் என்று மருத்துவர் கூறலாம்.ஓ, காச நோய், புற்று நோய் உள்ள அநேக ஜனங்களுக்கு இது ஒரு வேளை ஒரு கடைசி வாய்ப்பாக இருக்கலாம். மருத்துவர் உங்களை கைவிட்டிருக்கலாம். அதே சமயத்தில் அவருடைய சமூகத்தில் இருப்பதும், இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தின் அடையாளங் கண்டு கொள்ளப்படுதலும் மீண்டும் நம்பிக்கைகளைக் கொண்டு வருகிறது.

2144 யாரோ ஒருவர் அதற்குக் கூட பெயரிடக் கூடும். நீங்கள் இதற்கு முன் ஒரு போதும் கேள்விப்பட்டிராதப் பெயரை இடலாம். ஆனால் ஒருவர் “அங்கு ஒரு சபை உள்ளது என்று எனக்குத் தெரியும். அவர்கள் தேவனில் விசுவாசம் வைத்து வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறார்கள்” என்று கூறட்டும், (நீ மரிக்க ஆயத்தமாயிருந்தாலும்) பாருங்கள். உடனே உங்களுக்கு புதிய நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கிறது. அது எப்பொழுதும் அதையே செய்கிறது. அந்த இருள் சூழ்ந்த வேளையில், அதாவது வழக்கமாக யாராவது அதைப்பற்றி ஒரு காரியத்தை, இயேசுவைப் பற்றி உனக்கு கூறும்போது அது அப்படித்தான் ஆகும். அவருடைய பிரசன்னம் புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வந்தது. 45 கடந்த இரவு அது செய்தது போல, நாம் அந்த ரூபகாரப்படுதப்பட்ட வார்த்தையை எந்த ஒரு சந்தேகத்திற்கு இடமின்றி காணும்போது, ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, கல்வாரியிலே மரித்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து, அந்த சீஷர்களுக்கு பிரசன்னமாகி, அவர்களுடைய கண்களைத் திறந்து, இந்நாளுக்கான இந்த வாக்குத்தத்தத்தை அளித்த அந்த இயேசுவானவர் இப்பொழுது இன்றிரவு இங்கு நமக்கு மத்தியில் உள்ளார் என்பதை அது வெளிப்படுத்தி நிரூபித்தது போல, அதே காரியத்தை அது இன்றிரவு செய்வதாக. அது மக்களுக்கு நம்பிக்கையை கொண்டு வர கடமைப்பட்டுள்ளது. புதிய நம்பிக்கைகள் பிரகாசிக்கின்றன.

2246 யாராவது, “சபையானது சிறிது காலமாக வறண்ட நிலையில் இருந்து வருகிறது. நமக்கு சில மாதங்களாக நல்ல புதிய தண்ணீர் கிடைப்பதில்லை. நாம் எழுப்புதலையும் அடையவில்லை. எல்லோரும் ஒரு தேக்க நிலையை அல்லது வேறெதையோ அடைந்துள்ளனர். நாம் சபைக்கு மாத்திரம் சென்று ஒரு துதிப்பாடலைப் பாடி சில செய்திகளைக் கேட்டு பிறகு திரும்புகிறோம்” என்று கூறலாம். ஆனால் நாம் வறண்ட நிலையை அடையத் துவங்கும்போது, திடீரென்ரு இயேசு காட்சியில் வந்து உயிர்ப்பித்து நமக்கு புதிதான ஒன்றைக் கொண்டு வருகிறார். அதை செய்ய அவர் அங்கு எப்போதும் உள்ளார். இயேசு உள்ளே வரும் போது புதிய நம்பிக்கையும் உள்ளே வருகின்றது. அவருடைய பிரசன்னம் புதிய நம்பிக்கையை கொண்டு வருகிறது. 47 அவர் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருந்தார் என்று அவள் அறிந்திருந்தாள். அவள் அந்த காலத்தில் அதைக் கண்டிருந்தாள். இல்லையென்றால், அவள் அவ்வாறில்லாமல், அவள் இன்னுமாய் ஆச்சாரமானதில் இருந்திருப்பாள். அவள் சபையைச் சார்ந்தவளாயும் இருந்திருப்பாள். ஆனால் அவள் அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையைக் கண்டிருந்தாள். அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை அவரால் வெளிப்படுத்தப்பட்டது என்று அவள் கண்டிருந்து, அவரே அந்த ஜீவிக்கிற வார்த்தையாயிருந்தார் என்று அவள் அறிந்து கொண்டாள். அவள் அதைப் பற்றி கேட்ட போது, எவ்வளவு பேர் அவளை விமர்சித்தனர் என்று அவள் கவலைப்படவில்லை, அவள் அவருக்காக என்னவெல்லாம் செய்ய முடிந்ததோ அதையெல்லாம் முடிந்தளவு செய்தாள். புரிகிறதா? அவர் அந்த வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை என்பதை அவள் அறிந்திருந்தாள்.

2348 எலியாவின் நாட்களில் நடந்த கதையை அவள் படித்திருப்பாள் என்பதில் சந்தேகமே இல்லை. இப்பொழுது, அந்த நாளின் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக அவன் இருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான், கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது. அங்கு ஒரு ஸ்திரீ இருந்தாள். அந்த தீர்க்கதரிசி அவளை ஆசீர்வதித்ததின் மூலம் கிடைக்கப்பெற்ற ஒரு குழந்தையை அவள் உடையவளாய் இருந்தாள். 49 ஒரு நாள் ஏறக்குறைய பதினொரு மணியளவில் அவனுக்கு சூரிய வெப்பம் தாக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் தன் தகப்பனோடு வயலில் இருந்தான். வேதாகமம் அவ்வாறு அது சூரிய வெப்பக் கடும் தக்குதல் என்று கூறவில்லை. ஆனால் அவன் “என் தலை நோகிறது, என் தலை நோகிறது” என்று அழ ஆரம்பித்தான். அது சுமார் பகல் பதினொரு மணி வேளையாயிருந்தது. அப்பொழுது அவன் தகப்பன் தன் வேலைக்காரனை வைத்து அவனை வீட்டிற்கு கொண்டு போகச் செய்தான். அவன் தன் தாயின் மடிமேல் பிற்பகல் மட்டும் இருந்து, இன்னுமாய் நோய்வாய்ப்பட்டு கடைசியில் மரித்தேப் போய்விட்டான்.

2450 இப்பொழுது நம்பிக்கை இழந்த நிலைக்குள்ளாவதற்கு பதிலாக…அப்பொழுது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் அவளை தனியே விடாமல், வந்து அழுது புலம்பிச் சென்று கொண்டிருந்தனர். ஆனால் நிதானம் பொருந்திய அந்தத் தாய் தன் இறந்த குழந்தையை எடுத்து, அந்தத் தீர்க்கதரிசிக்கு தான் கட்டிக் கொடுத்த அந்த சிறிய மேலறையிலே அவனுடைய கட்டிலின் மேல் வைத்தாள். பிறகு அவள் வேலைக்காரனை நோக்கி, “கழுதையின் மேல் சேனம் வைத்து ஏற்றி, நீ இதை ஓட்டிக் கொண்டு போ; நான் உனக்குச் சொன்னாலொழிய போகிற வழியில் எங்கும் நிறுத்தாதே” என்று கூறினாள். ஓ, என்னே! அதுதான். இது! 51 நாம் விவாதிப்பதற்கும், குழப்பிக் கொண்டிருப்பதற்குமான நேரமல்ல. அந்த நாளைக் கடந்த வேறொரு நாள் இது. நாம் சென்று கொண்டே இருப்போம். நாம் அங்கு சென்றடைய வேண்டும். நமக்கு ஒரு தேவை உள்ளது. 52 எனவே, அவள், “நீ முன்னே சென்று கொண்டே இரு. நான் உனக்கு கட்டளையிடும்வரை எங்கும் நில்லாதே” என்று கூறினாள். அவர்கள் எலியாவிடம் சென்றடையும் வரை அவர்கள் பிரயாணம் செய்தனர். 53 எலியா, ஒரு தேவனுடைய மனிதனாய் இருந்தான். கிறிஸ்துவைப் போல அல்ல; ஏனெனில் கிறிஸ்து எல்லாக் காரியங்களையும் அறிந்துளார், ஏனென்றால் அவர் தேவன். எலியா தேவனுடைய ஒரு பாகமாக இருந்தான். அது எலியாவிற்குள்ளிருந்த கிறிஸ்துவாயிருந்தது. அது தான் அந்நேரத்தின் செய்தியாய் இருந்தது. அந்த மணி நேரத்திற்குரிய கர்த்தருடைய வார்த்தையாய் அந்த தீர்க்கதரிசியோடு இருந்தது. 54 இயேசு அந்த எல்லாத் தீர்க்கதரிசிகளின் பரிபூரணமாய் இருந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் அவரை மாத்திரமே வெளிப்படுத்தினர். அதுதான் யோசேப்பு முதல், முப்பது வெள்ளிக்காசிலிருந்து, எவ்விடத்திலும் அவன்—அவன் கிறிஸ்துவை பிரதிநிதித்துவப்படுத்தினான். மோசேயும் அவ்வாறே செய்தான்!

2555 புறக்கணிக்கப்பட்ட ஒரு ராஜாவாக தாவீது மலையின் மேல் உட்கார்ந்து அழுதான். ஏனென்றால் அவன் புறக்கணிக்கப்பட்டான். எண்ணூறு ஆண்டுகள் கழித்து தாவீதின் குமாரன் மலையின் மீது அமர்ந்தார். அது தான் தாவீதிற்குள்ளிருந்த கிறிஸ்துவின் ஆவியாயிருந்தது. அவர்…என்னே! அவர் தாவீதின் வேரும் சந்ததியுமாயிருந்தார். ஆதலால் அவர் புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக “எருசலேமே, எருசலேமே, கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்க்கும் விதமாக உன்னை எத்தனை தரம் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்” என்று மலையின் மேல் அமர்ந்து கதறினார். அது என்ன? அது முன்பு இருந்த அதே கிறிஸ்துவாயிருந்தது. 56 தாவீது சங்கீதத்தை எழுதின போது அங்கே கதறியது கிறிஸ்துதான். “என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம். அவர்கள் என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப் போடுகிறார்கள்.” அது தாவீதுக்குள்ளிருந்து கிறிஸ்து பேசுவதாயிருந்த்அது, அது உண்மை. அவர் தான் வார்த்தையின் வெளிப்பாடாயிருந்தார். தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டிருந்த காரியங்களை நிறைவேற்றுவதற்கே கிறிஸ்து வந்தார். ஏனென்றால் வார்த்தையானது தீர்க்கதரிசிகளோடிருந்தது. 57 கடந்த இரவு வேத பாடத்தில் அவர் கூறினது போல அவரைக் குறித்து தீர்க்கதரிசிகள் உரைத்த யாவையும் நிறைவேற்றுவதற்காகவே அவர் வந்தார். ஏனென்றால் அவர்கள் வார்த்தையை உடையவர்களாக இருந்தனர். எலியா தேவனுடைய தீர்க்கதரிசியாகவும் அந்நாளின் வார்த்தையாகவும் இருந்தான்.

2658 ஆகையால் அந்த தீர்க்கதரிசி வந்து தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்தி, தான் அந்தக் குழந்தையின் மேல் படுத்து, அந்த குழந்தை உயிரடையும் வரை சூனேமிய ஸ்திரீ அந்த தீர்க்கதரிசியோடு தரித்திருந்தாள். 59 மார்த்தாள் வீட்டு வேலைகளிலும் பாத்திரங்கழுவுதலிலும் மற்றும் அநேக காரியங்களில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போதிலும் இந்தக் காரியங்களை அவள் அறிந்திருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கு தான் தன் உண்மைத் தன்மையைக் காண்பித்தாள். அவள் தனக்குள் என்ன இருந்தது என்பதை உண்மையாகவே காண்பித்தாள். அவள் அவரிடத்திற்கு உடனே சென்றாள். எலியாவிற்குள் தேவன் இருந்தாரானால், கிறிஸ்துவிற்குள்ளும் அவர் இருந்தாக வேண்டும். ஏனென்றால் அவர்தான் அந்த்அ நபராயிருந்தார் என்பதை அவர் நிரூபித்திருந்தார். ஆமென். நான் அந்த, அந்த தீர்மானித்தலை விரும்புகிறேன். அவள் அவரிடம் செல்கிறாள். அவள் அவரண்டை செல்ல வேண்டியதாயிருந்தது. அவள் அவரண்டை—அவரண்டைச் சென்றபோது, அவள் அங்கே அதைக் கண்டறிந்தாள். இப்பொழுது, நினைவிருக்கட்டும், அவர் ஒருபோதும் மாறாதவராயிருந்தார் என்று அவள் அறிந்திருந்தாள், அதாவது தேவன் தமது திட்டத்தை ஒரு போதும் மாற்றுவதில்லை. அவர் எலியாவிற்குள்ளிருந்து மரித்தவரை உயிரோடெழுப்ப முடிந்ததென்றால், அவர் கிறிஸ்துவிற்குள்ளிருந்து மரித்தவரை உயிரோடெழுப்ப முடியும். அவர் அதை இன்னும் செய்யாதிருந்த போதிலும் அவரால் செய்ய முடியும் என்பதை அவள் அறிந்திருந்தாள், ஏனென்றால் அது அதே தேவனாய் உள்ளதே.

2760 இன்னும் அவர் மாறாதவராயிருக்கிறார்! அவர் முன்பு இருந்தது போல் இன்றிரவும் தேவனாகவே உள்ளார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் மாறுவதேயில்லை. 61 அது அவருக்குள் இருந்தது என்று அவள் அறிந்திருந்தாள் என்று அவர் அறிந்திருந்தார். கவனியுங்கள், அடுத்த சில நிமிடங்களுக்குள் அது நிரூபிக்கப்பட்டது. அவளுடைய சகோதரனைக் குறித்து அவளிடம் ஏதோ ஒரு காரியத்தைக் கூறினபோது, அவள் “ஆண்டவரே அது நீர்…என்று விசுவாசிக்கிறேன்” என்று என்றாள். 62 அவர் “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். நான் இருக்கிறவராயிருக்கிறேன்,” மோசேயோடு கூட எரிந்து கொண்டிருந்த முட்புதரில் இருந்தவர் நானே. “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். நானே அந்த மதிலாயிருந்தேன். நான் இன்னமும் அப்படியே இருக்கிறேன். நான் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.” என்றார். அதாவது அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாயிருந்தார்; அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருக்கிறபடியால் அவர் பொய்யுரைக்க முடியாது, எனவே அவர், “நான் இருக்கிறவராகவே இருக்கிறேன். நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்ற கூறினபோது, அவள் இந்த மகத்தான உறுதியை உடையவளாயிருந்தாள்.

2863 அவள் “உலகத்தில் வருகிறவராகிய தேவ குமாரன் நீர் தான் என்று நான் விசுவாசிக்கிறேன். என் சகோதரன் மரித்து கல்லறையில் இருக்கிறான், அவன்…அவனுடைய சரீரம் இப்பொழுது அழுகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இப்பொழுதும் கூட நீர் என்ன கூறினாலும் அது நிறைவேறும்” என்று கூறினாள். உண்மையே! 64 அவர் என்ன கூறப்போகிறார் என்பதைக் கேட்கவே அவள் வாஞ்சித்தாள்! ஆமென். ஓ, மார்த்தாள், இன்றிரவு நாம் எங்குள்ளோம்? “ஒரு வார்த்தை மாத்திரம் கூறும், அப்பொழுது என் வேலைக்காரன் பிழைப்பான்.” அவர் கூறுவதை மாத்திரம் கேள்! அவர் அவ்வாறு பேசியுள்ளார் என்பதை அவர்கள் வந்து அவளுக்கு அறிவித்திருப்பார்கள். ஆனால் அவர் தாமே இங்கேயே இருந்தார். ஓ, தேவனே, அவர்கள் காணும்படியாக குருடான கண்களை திறந்தருளும். அவருடைய பிரசன்னத்தில் அவர் வார்த்தையைப் பேசும்போது, அது எப்பொழுதும் வெளிப்படுத்தப் படுகிறது. 65 அவள், “நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ, அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் அதை நான் கேட்கட்டும்!” என்று கூறினாள். அவர் வார்த்தையை பேச வேண்டும் என்று அவள் விரும்பினாள். அதைத்தான் அவள் கேட்க விரும்பினாள். அவர் அதைச் செய்வேன் என்று அவர் உரைப்பதை மாத்திரமே, அந்த வார்த்தையை அவள் கேட்க விரும்பினாள், அவ்வளவுதான் அவளுக்கு தேவையாயிருந்தது.

2966 அவர் அதை அப்பொழுதே செய்திருக்கக்கூடும். ஆனால், நீங்கள் பாருங்கள், பிதாவானவர் அவருக்கு காண்பித்திருந்த தரிசனத்தினால், அவர் கல்லறையினருகில் நிற்க வேண்டியதாயிருந்தது. ஓ, என்னே! உன்னுடைய விசுவாசத்திநால், அவர் கல்லறையினருகில் நிற்க வேண்டியதாயிருந்தது. ஓ, என்னே! உன்னுடைய விசுவாசத்தை பற்றிக்கொண்டிரு. தேவன் ஒவ்வொரு காரியத்தையும் சரியாக செய்து கொண்டு வருகிறார். எல்லாம் சரியாக அமைந்திருக்கும். அவள் கல்லறையண்டையில் செல்லும் மட்டும் சற்று பொறுத்திரு. 67 கவனியுங்கள், அவர் கூறுவதை அவள் கேட்க விருந்தாள், அவர் இன்னும்…எல்லா நம்பிக்கையும், எல்லாமே அற்றுப்போன வேளையில்; அவன் மரித்து கல்லறையில் அழுகிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் கூறுவதை அவள் கேட்பது மாத்திரமே அவள் தேவையாயிருந்தது. 68 இப்பொழுது அவர், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று கூறினபோது, அவள் அதை விசுவாசித்தாள். அவள் அதை விசுவாசித்தாள். இப்பொழுது, கவனியுங்கள், நடக்கக்கூடாத, இயலாத காரியங்களை அவள் விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது. அவர், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்று கூறினதை அவள் கேட்டபோது, அவரோ, “இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். 69 அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவ குமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறினாள். நான் அதை விரும்புகிறேன். எனக்கு அது பிடிக்கும்.

3070 இதை நான்—நான் இதற்கு முன்பே கூறியுள்ளேன். இதை மீண்டும் கூறுவது இப்பொழுது சரியாக இருக்கும். அண்மையில் நான் ஒரு ஸ்திரீயுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு சாதாரண மனிதனென்றும், ஒரு தீர்க்கதரிசி என்றும் கூறி, அவர் தேவன் என்பதையும், அவருடைய தெய்வத் தன்மையையும் விசுவாசிக்காத ஒரு குறிப்பிட்ட சபை இருந்ததை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். 71 உண்மையாக அவர் தேவனாயிருந்தார். அவர் மனிதனாயும் தேவனாயுமிருந்தார். பாருங்கள். அவர் வெளிப்படுத்தலாய் இருந்தார். இயேசு ஒரு சரீரமாகவும், ஒரு சிறுவனாகவும், ஒரு மனிதனாகவும் இருந்தார். தேவன் அவருக்குள் வாசம் செய்தார். தேவன் அவருக்குள் இருந்தார். அவர் தேவனும் மனிதனுமாக இருந்தார். அவர் ஒரு மனிதனாய் இருந்தார், அதே சமயத்தில் அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாயிருந்தார். நாம் இயேசுவைக் காணும்போது, நாம் தேவனைக் காண்கிறோம். அதைத்தான் அவர், “நீங்கள் என்னைக் காணும்போது பிதாவைக் காண்கிறீர்கள், நீங்கள் பிதாவையேக் காண்கிறீர்கள்” என்று கூறினார். காரணம் அவர் பிரதிபலிப்பாய் இருந்தார். ஏனென்றால், ஆமென், அவரே ஆதியில் இருந்த அந்த வார்த்தையாயிருந்தார், ஆமென்.

3172 அவர் தீர்க்கதரிசிகளை “தேவன்” என்று அழைத்தார். உங்களுக்கு அது தெரியுமா? அவர், “தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களை ‘தேவன்’ என்று அவர் சொல்லியிருக்க, நான் ‘என்னை தேவனுடைய குமாரன்’ என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?” என்று கேட்டார். 73 காரணம், அதே வார்த்தையானது, அவர் அங்கிருப்பார் என்று உரைத்தது, வார்த்தை மறுபடியும் வெளிப்பட்டுள்ளது. அவர்களோ இன்னமும் அதை விசுவாசிக்க மாட்டார்கள். 74 இந்த ஸ்திரீ என்னிடம் “என்னால் அதை உங்களுக்கு நிரூபிக்க முடியும்” என்று கூறினாள். மேலும், “நீங்கள் பிரசங்கிப்பதை நான் விரும்பிக் கேட்கிறேன். ஆனால் ஒரு காரியத்தை மிகைப்படுத்துகிறீர்கள்” என்று கூறினாள். அப்பொழுது, “நல்லது, அது என்ன”? என்று கேட்டேன். அதற்கு, “நீர் இயேசுவை பற்றி மிகப் பெருமையாகப் பேசுகிறீர்” என்றாள். 75 அப்பொழுது நான், “அவர் வரும்போது, அந்த ஒன்று மட்டுமே அவருக்கு எதிரானதாயிருந்தால் பரவாயில்லை” என்றேன். அவள்…மேலும், நான், “அவர் என்னிடத்தில் கண்டுபிடிக்கக் கூடிய பிழை அவ்வளவுதான் என்று நான் நம்புகிறேன்” என்றேன். மேலும் நான், “எனக்கு பத்தாயிரம் நாவுகள் இருந்தாலும் அவரைப் போதுமான அளவு புகழ்ந்து பேச முடியாது. ஓ, என்னே, அவர் அப்பேர்ப்பட்டவர்!” என்றேன். அப்பொழுது அவள், “ஆனால், நீங்கள், நீர் அவரை தேவனாக்குகிறீர்” என்றாள். 76 நான், “அவர் தேவனாயிருந்தார், அவர் அவ்வாறு இல்லையென்றால், அவர் உலகத்திலேயே மிகப்பெரிய வஞ்சகனாயிருப்பாரே” என்று கூறினேன். அதற்கு அவள், “அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார்” என்றாள். 77 அப்பொழுது, நான், “அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார். அது உண்மைதான். அவர் தேவனும்—திர்க்கதரிசியுமாய், வார்த்தையின் பரிபூரணமாயிருந்தார். ஒரு தீர்க்கதரிசிக்கு தேவனுடை வார்த்தை வரும், அதுதான் அவனை—அவனை தீர்க்கதரிசி ஆக்குகிறது— ஆக்குகிறது. ஆனால் அவரோ அந்த வார்த்தையின் பரிபூரணமாயிருந்தார்” என்றேன். 78 அதற்கு அவள், “உமக்கு என்னால் அதை நிரூபிக்க முடியும்” என்றாள். மேலும், “நீர் அவரை தெய்வீகத்தன்மை கொண்டவராகச் செய்கிறீர்” என்று கூறினாள். அப்பொழுது “அவர் தெய்வீகத்தன்மை கொண்டவராயிருந்தார்” என்று கூறினேன். அதற்கு அவளோ, “அவர் தெய்வீகத்தன்மை கொண்டவராக இருக்க முடியாது” என்றாள். அப்பொழுது நான், “அவர்…ஆனால் அவர் அவ்வாறு இருந்தார்” என்றேன். அதற்கு அவள், “நீர் வேதத்தை விசுவாசிப்பதாகக் கூறினீரே” என்றாள். அப்பொழுது நான், “நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறினேன்.

3279 அதற்கு அவள், “உம்முடைய வேதத்தைக் கொண்டே அவர் தெய்வீகத் தன்மை அற்றவர் என்பதை நான் நிரூபிப்பேன்” என்று கூறினாள். 80 அப்பொழுது நான், “அதைச் செய். வேதாகமம் அவ்வாறு கூறினால், அப்பொழுது நான் விசுவாசிப்பேன், ஏனென்றால் வார்த்தையே சரியானது என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றேன். 81 அதற்கு அவள், “பரிசுத்த யோவான் 11-ம் அதிகாரத்தில் லாசருவின் கல்லறைக்குச் செல்லும் வழியின் நடந்தது உமக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்டாள். அப்பொழுது, “நிச்சயமாகவே எனக்கு நினைவிருக்கிறது அம்மணி” என்றேன். 82 அதற்கு அவள், “சரி, கல்லறைக்குச் செல்லும் வழியில் அவர் அழுதார். வேதம் ‘அவர் கண்ணீர் விட்டார்’ என்று கூறியுள்ளது” என்றாள். அப்பொழுது நான், “நிச்சயமாக, அவர் கண்ணீர் விட்டார் என்றே வேதம் கூறியுள்ளது” என்றேன். அதற்கு அவளோ, “எப்படி அவர் தெய்வீகத் தன்மையை உடையவராக இருந்து கண்ணீர்விட முடியும்?” என்று கேட்டாள். அப்பொழுது நான், “அவர் மானிடனாயிருந்தார்” என்றேன். அதற்கு அவளோ, “மனிதத் தன்மையும், தெய்வீகத் தன்மையும் கொண்டவரா?” என்று கேட்டாள். 83 அப்பொழுது நான், “ஆம் பெண்மணியே, நீ அதைக் காணத் தவறுகிறாய். அவர் அழுகிறவர்களோடு அழுது கொண்டும், துக்கித்துக் கொண்டிருந்தவர்களோடு துக்கித்துக் கொண்டும் சென்ற ஒரு—ஒரு மனிதனாயிருந்தார், அது உண்மை, அவர் ஒரு மனிதனாயிருந்தார். ஆனால் அவர் தன் சிறிய மெலிந்த தேகத்தை நிமிர்த்தி, ‘லாசருவே வெளியே வா’ என்று கூறினபோது நான்கு நாட்களாக மரித்துக் கிடந்த ஒரு மனிதன் தன் காலூன்றி நின்றான். அது மனிதனைப் பார்க்கிலும் மேலான ஸ்தானத்தை எடுத்துக் கொண்டதே, அது மனிதனுக்குள்ளிருந்த தேவனாயிருந்தது” என்றேன். தேவனைத் தவிர ஒரு மனிதனை யார் எழுப்பக் கூடும்? அவரே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறாரே! அது உண்மை.

3384 அன்றொரு இரவு சமுத்திரத்திலே அவர் சோர்வுற்றவராக படகின் பின்னே படுத்துக் கொண்டிருந்த போது, பத்தாயிரம் பிசாசுகள் அன்றிரவு அவரை மூக்கடித்துவிடுவதாக சபதம் எடுத்தன. அச்சிறிய பழைய படகானது ஒரு குப்பியின் மேல் உள்ள மூடியைப் போன்று புயலார்ந்த சமுத்திரத்திலே தத்தளித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது அந்தப் பிசாசுகளோ, “நாம் அவரை இப்பொழுது பிடித்துவிட்டோம். அவர் உறக்கத்தில் இருக்கிறார். நாம் அந்த முழு கூட்டத்தையும் மூழ்கடித்து விடுவோம்” என்று எண்ணியிருந்தன. ஓ, அவர் ஒரு மனிதனாக சோர்வுற்றிருந்தார். ஆனால் அவர் எழுந்து கப்பற்பாயின் நுனிக்கயிற்றின் மேல் தன் காலை வைத்து சமுத்திரத்தைப் பார்த்து “இரையாதே, அமைதலாயிரு” என்று கூறினார். அப்பொழுது காற்றும் அலைகளும் அவருக்கு கீழ்படிந்தன. அது ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானதாயிருந்தது. 85 அவர் பசியாயிருந்தபோது ஒரு மனிதனாக, மலையை விட்டு கீழிறங்கி வந்து சாப்பிட ஒரு துண்டு அப்பமோ அல்லது வேறெதாவதோ, அல்லது அத்தி மரத்தில் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐந்தாயிரம் பேர்களை போஷித்தபோது, அது அந்த மனிதனுக்குள்ளிருந்த தேவனாயிருந்தது. அது உண்மை.

3486 ஓ, ஒரு பொருட்டாக கருதப்படாத ஒவ்வொரு மனிதனும் அதை விசுவாசித்தான், எல்லா புலவர்களும் அதை விசுவாசித்தனர். ஒரு புலவன் இவ்வாறு எழுதினதில் வியப்பொன்றுமில்லையே: ஜீவிக்கும் போது அவர் என்னை நேசித்தார்; மரித்த போது என்னை இரட்சித்தார்; அடக்கப்பண்ணப்பட்டபோது அவர் என் பாவங்களை அதி தூரம் கொண்டு சென்று விட்டார்; உயிர்த்தெழுந்தபோது அவர் இலவசமாய் என்றென்றுமாய் நீதிமானாக்கினார், என்றோ ஒரு நாள் அவர் வருகிறார், ஓ மகிமையான நாள்! 87 எட்டி பெரோனெட் அவருடைய பாடல்கள் விற்பனையாகவில்லை. அப்பொழுது ஒரு நாள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினிமித்தம் தள்ளாடி ஒரு பேனாவை எடுத்து, அவர் தொடக்க விழா பாடலாக எழுதினார், அவர் இவ்வாறு எழுதினார்: இயேசுவின் நாமத்தின் வல்லமையை எல்லோரும் போற்றுவோம்: தூதர்களும் சாஷ்டாங்கமாய் விழுந்து பணியட்டும்; ராஜரீக கிரீடத்தைக் கொண்டு வந்து, எல்லாவற்றிற்கும் கர்த்தராகிய அவரை முடிசூட்டுவோம்!(அல்லேலூயா!) 88 நிச்சயமாக அந்த விதமாகவே அவர் இருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். ஆம் ஐயா.

3589 இப்பொழுது அவள் அந்நாளின் நவீன கருத்துக்கு எதிராக நடக்க இயலாத காரியங்களை விசுவாசித்தாக வேண்டும். புதிய ஜீவனைக் காண, ஏதோ ஒரு காரியம் சம்பவிப்பதைக் காண அவ்வண்ணமே நீங்களும் கூட நடக்க இயலாதக் காரியங்களை விசுவாசிக்க வேண்டும். ஆனால் அவர் அடையாளங்கண்டு கொண்டிருந்தால்…அவர் வார்த்தை என்பதை அவள் அடையாளம் கண்டு கொண்டாள். அதன்பிறகு நடக்க இயலாத காரியங்கள் நடக்ககூடும். ஏனெனில் அவர் சிருஷ்டிகராயிருக்கிறார், அவர் கூறின ஒவ்வொன்றிற்கும் பின்னாலும் அவர் இருப்பார். 90 “விசுவாசிக்கிறவர்களால் எல்லாம் கூடும்.” அது அவருடைய வார்த்தையாயுள்ளது. ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையை எடுக்கும்போது, நடக்க இயலாத காரியங்கள் வெளிப்படுகின்றன. ஆம் ஐயா, தேவன் தம்முடைய வார்த்தை எடுக்கும்போது, நடக்க இயலாதவைகள் வெளிப்படுகின்றன. தேவன் அவ்வாறு இருக்கும் என்று கூறுகிறபோது, அப்பொழுது நீங்கள் அந்த வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு, என்ன நடக்கிறது என்றும், அதாவது, இயலாத காரியங்கள் நடப்பிக்கப்படுவதை கவனியுங்கள். அது நிச்சயமாக நடந்தேறும். 91 ஆனால் கவனியுங்கள், அவை எல்லாவற்றிலும் கூட, அவள் “இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்கு தந்தருளுவார்” என்று கூறினாள். அவரிடத்திலிருந்து வரப்போகின்ற அந்த வார்த்தையை அவளால் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவள் செய்ய வேண்டியதாயிருந்ததெல்லாம் அந்த வார்த்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்ததேயாகும். ஆம், அது தான் அவளுடைய அந்தகார நேரமாக இருந்தது. அதன்பின்னர் இயேசு வந்து அழைத்தார். ஓ அவர்கள் என்னே ஒரு காரியத்தை, ஒரு உயிர்த்தெழுதலைக் கண்டனரே! அந்தகார நேரங்கள் உண்டான இன்னும் சிலவற்றை நாம் நோக்கிப் பார்ப்போமாக.

3692 யோபு என் பெயரிடப்பட்ட ஒரு மனிதன் ஒரு காலத்தில் வாழ்ந்தான். வேதத்தில் உள்ள பழைய தீர்க்கதரிசிகளில் ஒருவன். அவன் ஒரு மகத்தான மனிதனாயிருந்தான். அவன்—அவன் கர்த்தரை நேசித்து, எப்படி செய்ய வேண்டும் என்று அவன் அறிந்திருந்த எல்லாவற்றையும் செய்திருந்தான். ஆதலால் சாத்தான் அவனை சலித்தெடுக்க வாஞ்சித்தான். எனவே ஒரு நாள் அவன் தேவனிடம் கூறினான். ஆம், சரியாகக் கூறினால், தேவன் அவனிடம், “சாத்தானே, நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். 93 அதற்கு அவன், “ஓ, பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன்” என்று கூறினான். 94 அப்பொழுது அவர், “என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை” என்று கூறினார். 95 அதற்கு அவன், “ஓ, நிச்சயமாகவே, நீர் அவனுக்கு எல்லாவற்றையும் அளிக்கிறீர். எல்லாவற்றையும் அவனுக்காக செய்கிறீர். அவன் ஒரு மகத்தான மனிதனாயிருக்கிறான். ஆனால் ஒரு முறை நான் அவனை ஆட்கொள்ளட்டும். அப்பொழுது அவன் போக்கையே மாற்றி விடுவேன். நான் அவனை உம் முகத்துக்கு எதிரே, உம்மை தூஷிக்கச் செய்வேன்” என்று கூறினான். 96 அதற்கு அவர் “உன்னால் அதைச் செய்ய முடியாது” என்றார். அதுவே அவர் ஒரு விசுவாசியின் மீது கொண்டுள்ள நம்பிக்கையாகும். ஏன்? அவர் முடிவில்லாதவர், அவர் நித்தியமானவர். துவக்க முதல் முடிவுவரை அவர் அறிந்திருக்கிறார். சாத்தானால் அதைச் செய்ய முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். ஏனென்றால் அவர் வார்த்தையாயிருக்கிறார், யோபு என்ன செய்வான் என்று அவர் அறிந்திருந்தார்.

3797 இப்பொழுது யோபை நினைவில் கொள்ளுங்கள். சாத்தான் அவனை பருக்களால் வாதித்தான். அவன் பிள்ளைகளைக் கொன்றான். அவனுக்கிருந்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான். அவனுடைய ஆரோக்கியம் போயிற்று, அவனைத் தேற்ற வந்தவர்களும் கூட ஒன்றும் செய்ய முடியாமல் அவனை ஒரு இரகசிய பாவி என்று குற்றஞ்சுமத்தினர். இந்த வயதான யோபு, அவன் மிகவும் இக்கட்டான அப்பேர்ப்பட்ட ஒரு நிலையினை அடைந்தான். 98 நீங்கள் முதாலவது இடுக்கத்திற்குள்ளாகச் செல்ல வேண்டும். நீங்கள் பாதையின் முடிவை அடைந்து விட்டீர்கள் எங்கின்ற ஒரு நேரத்திற்கு நீங்கள் வந்தாக வேண்டும். 99 யோபு பாதையின் முடிவை அடைந்து, “நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக, சூரியன் பிரகாசிக்காமல் இருப்பதாக. இரவில் சந்திரன் பிரகாசியாமல் இருப்பதாக. என்னுடைய பெயர் ஒருபோதும் கூறப்படாதிருப்பதாக” என்று கூறின அந்த இக்கட்டான சூழ்நிலையில், அப்பொழுதே இயேசு வந்தார். அவன் கீழ் நோக்கிப் பார்த்தான், அவன், “நான் ஒரு மனிதனைக் காண்கிறேன். ஒரு பூ மரித்து, அது வசந்த காலத்தில் மீண்டும் உயிரடைகிறது. ஒரு மரம் உதிர்ந்து போனாலும், தண்ணீரின் வாசனையால் அது மறுபடியும் துளிர்விடும்” என்றான். தாவர இனத்தைச் சேர்ந்த எல்லாம் மறுபடியுமாக உயிர் வாழ்வதை அவன் கண்டு, “ஒரு மனுஷன் படுத்துக்கிடக்கிறான். மனுபுத்திரன் ஜீவித்துப் போனபின் அவன் எங்கே?” என்று கூறினான். அவன் வயதான மனிதனாயிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். “மேலும், அவன் பிள்ளைகள் வந்து அவனுக்காக துக்கித்தாலும் அதை அவன் காணமுடியாது. ஓ, நீர் என்னை பாதளத்தில் ஒளித்து உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, எனக்கு ஒரு காலத்தை குறித்தருளும்.” என்று கூறினான். நாம் சென்று…என்று அவன் கூறினான். பிறகு அவன் இப்படி பேசிக் கொண்டே போகிறான். அவன் முடிவில் துயரத்தில் இருந்தான். “என்ன நடக்கும்? இலைகள், மரங்கள், பூக்கள் மறுபடியுமாக துளிர்த்து ஜீவிக்கின்றன. மற்றவைகளும் வருகின்றன. ஆனால் மனுஷனோ கீழே படுத்து ஜீவித்துப் போகிறான்!” அவன் துயரத்தில் இருந்தான். அந்த வயதிலே அவனுக்கு என்ன சம்பவிக்கக் கூடும் என்று அவன் அறியாதிருந்தான்.

38100 அவன் அதைக் கூறினபோது, அப்பொழுது இயேசு வந்தார். தேவன் அவன் தலையை வானத்தை நோக்கிப் பார்க்கும்படிச் செய்தார். அப்பொழுது இயேசு கடைசி நாளில் வருவதை அவன் கண்டான். 101 அந்த அந்தகார வேளையில் “தேவனை தூஷித்து ஜீவனை விடும்” என்று அவன் மனைவி கூறினபோது, அதே சமயத்தில் அவன் “நீ பயித்தியக்காரி பேசுகிறது போலப் பேசுகிறாய். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்” என்றான். அவனுடைய மனைவியும் கூட அவனை புறக்கணித்துவிட்டாள். அவனுடைய சபையும் அவனை புறக்கணித்து விட்டது. ஒவ்வொருவரும் அவனை புறக்கணித்துவிட்டனர். 102 அவன் எங்கு சென்று கொண்டிருக்கிறான் என்று அவன் அறியாதிருந்த அந்த அந்தகார நேரத்தில் அங்கே அவ்வழியில் இயேசு வந்தார். அதன் பிறகு அவன் “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். தோல் புழுக்கள் இச்சரீரத்தை அழித்தாலும், நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்” என்றான். அவனுடைய அந்தகார நேரத்திலே, அதன்பின்னரே இயேசு வந்தார். ஆம் ஐயா.

39103 இஸ்ரவேலிலே மோசே, மோசேக்கான அந்தகார நேரமானது வந்தது. அவன் கடமையின் பாதையில் சரியாய் இருந்தான்; அங்கே முட்செடியில் தேவனை சந்தித்த போது, “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” என்றார். அவன் யந்நே, யம்பிரேயின் எல்லாவிதமான போலி ஆள்மாறாட்டங்களினூடாகவும், அவனுடைய கிரியையை பாவனையாக செய்து காண்பிக்க முயன்றதினூடாகவும் சென்று போராடினான். இவை எல்லாவற்றிலும் அவன் தேவனுக்கு உண்மையாக நின்றான். அவன் கடைசியாக இஸ்ரவேலர் எல்லாரும் விசுவாசிக்கும்படி செய்தான். இதோ அவன் எகிப்தை விட்டு வெளிவந்து, “நீங்கள் இந்த மலையின் மேல் என்னை ஆராதிப்பீர்கள்” என்று தேவன் கூறின அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குச் சென்று கொண்டிருந்தான். அது தேவனுடைய வார்த்தையாயிருந்தது. அந்த மலைக்குத் தான் மோசே செல்ல வேண்டியதாயிருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆமென். தேவன் அவ்வண்ணமாய்க் கூறியிருந்தார். எந்த பார்வோனாலும் அவனைக் கொல்ல முடியாது. எந்த பிசாசும் அவனைக் கொல்ல முடியாது. எதுவும் அவனைக் கொல்ல முடியாது. அவன் அந்த மலைக்கு வந்து கொண்டிருக்கிறான். ஆமென்! அல்லேலூயா! நான் பக்திபரவசமடைகிறேன். அவன் அந்த மலைக்கு சென்று கொண்டிருக்கிறான். 104 அவ்வாறே நாமும் மகிமைக்குச் செல்லும் நம்முடைய பாதையில் இருக்கிறோம்! ஒன்றும் நம்மை தடுத்து நிறுத்தப் போவதில்லை. இல்லை ஐயா, தேவன் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்தப் போகிறார். என்ன நேர்ந்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எவ்வாறாயினும் அவர் அதை எப்படியாவது செய்யப்போகிறார். ஆம்.

40105 அவன் தன் கடமையில் பாதையில் சரியாய் இருந்தான். இங்கே அவன் மலைகளின் மத்தியில் சென்று கொண்டிருக்கிறான். அப்பொழுது அவன் தன் பின்னேயிருந்து வருகின்ற இரைச்சலைக் கேட்கிறேன். அது என்ன? ஈட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவர்களை நசுக்க வந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பார்வோனின் ரதங்கள். அங்கேயோ சிவந்த சமுத்திரம் அவன் பாதையை தடுத்திருந்தது. அவன் என்ன செய்தான்? அவன் இடுக்…அடைந்தான். அவன் ஒரு இடுக்கமான சூழ்நிலையை அடைந்தான். ஜனங்கள் எல்லோரும், “ஓ நாம் இதில் சிக்கிக் கொண்டோம். பார்வோன் தனது பட்டயங்களாலே நம்மை உருவக்குத்தி நம்மை கொன்று போடுவான். நமது குழந்தைகள் இங்கே வனாந்திரத்திலே சாகுமே” என்று கதறினார்கள். மோசேயோ, “ஓ தேவனே” என்று கதறினான். 106 அப்பொழுது இயேசு காட்சியில் வந்தார். அவர் அக்கினி ஸ்தம்பமாயிருந்தார். அது உண்மை. அவர் கீழே இறங்கி வந்தார், அவர் ஆபத்திற்கும், அவனுக்கும் நடுவில் தொங்கினார். ஆமென். அவன் நம்முடைய பயணத்தின் இடையே இருக்கிறார். அவர் ஒரு மத்தியஸ்தராக நடுவில் நிற்கிறார். ஆமென். அங்கே அவர் நின்றார். அதைக் குறித்து ஏதாவது செய்ய வேண்டுமென்று முயற்சித்து வந்து கொண்டிருந்த எகிப்தியர்க்கு அது இருளாயிருந்தது. அவர் கூட நடப்பவர்களுக்கோ அவர் ஒளியாய் இருந்தார். அதன்பின்னர் காலையில் காற்றானாது பலமாய் வீசத்துவங்கியது, அந்த இரவில் அவர் என்ன செய்தார்? அவர் அக்கினி ஸ்தம்ப உருவில் அங்கு வந்திருந்தார்.

41107 அதே அக்கினி ஸ்தம்பமாய் அவர் இன்னுமும் இருக்கின்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆம் ஐயா. அவர் பூமியில் இருந்த் போது “நான் தேவனிடத்திலிருந்து வந்த படியால் நான் தேவனிடத்திற்கு செல்லுகிறேன்” என்று அவர் கூறினார். 108 அவர் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து, மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, பரிசுத்த பவுல் தமஸ்குவிற்கு செல்லும் தன்னுடைய வழியில் அவன் அந்த அக்கினி ஸ்தம்பத்தால் கீழே தள்ளப்பட்டாள். அவன் ஒரு எபிரெயனாயிருந்தான் என்பதை ஞாபங்கொள்ளுங்கள். இல்லையெனில் அவன் இவ்வாறு கூறியிருக்கமாட்டான்…எனவே அவன், “ஆண்டவரே நீர் யார்?” என்று கேட்டான். ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் ஆண்டவர், ஏலோஹிம் என்று உள்ளது. “நான் துன்பப்படுத்துகின்ற நீர் யார்?” என்று கேட்டான். அதற்கு அவர் “நான் இயேசு” என்றார். 109 ஆமென்! அல்லேலூயா! அவர் துவக்கமும் முடிவுமாயிருக்கிறார். அவன் இன்னமும் மாறாதவராயிருக்கிறார். “இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாஅது. நீங்களோ என்னைக் காண்பீர்கள், நான் உங்களோடும் உங்களுக்குள்ளும் இருப்பேன்” என்றார். அதே அக்கினி ஸ்தம்பமாய், அதே வாக்குத்தத்ததினால் அதே காரியத்தை செய்கிற அதே தேவனாய், ஆமென், அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தினார். “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். இருந்தவரும், இருக்கிறவரும், வரப்போகிறவரும் நானே” ஆம், ஐயா, ஆம். அவர்கள் “எங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்.” என்றனர். 110 அதற்கு அவரோ, “அவர்களெல்லாரும் மரித்தார்கள். ஆனால் நான் இருக்கிறவராக இருக்கிறேன்” என்றார். மோசே…எரிகின்ற முட்செடியிலே இருந்தவர். அந்த இருக்கிறவராக இருந்தவர் . அவர் இன்றும் அதே இருக்கிறவராக இருக்கிறவர் . இருந்தவராக அல்ல, இருக்கிறவர் . நிகழ் காலம், எல்லா நேரத்திலுமே.

42111 மோசே பின்னுக்கு அந்த மூலையில் தள்ளப்பட்ட பின்னர், கிறிஸ்து கீழிறங்கி வந்தார் என்று நாம் இங்கே கண்டறிகிறோம். இப்பொழுது வேதம் “எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்” என்று உரைத்துள்ளது. கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தை! கிறிஸ்து அபிஷேகமாய், தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற லோகாஸாயிருந்தார். அந்த தூதன், வேத வாசகர் எவரும் அந்தத் தூதன் கிறிஸ்துவாயிருந்தது என்பதை அறிவர். பிறகு அவர் அங்கே அந்த வனாந்திரத்தில் இருந்து, அவர் காட்சியில் தோன்றி, அவர் வெளிப்பட வேண்டுமென்றிருந்த ரூபத்தில் வந்தார். தேவனுக்கு மகிமை! 112 அதே கிறிஸ்து தம்மை வெளிப்படுத்தி, அந்த ரூபத்திலேயே இன்றைக்கு வருகிறார். 113 அவர் அவர்களை வெளியே கொண்டு வருவேன் என்று அவர்களுக்கு கூறியிருந்தார். அதை அவர் செய்து கொண்டிருந்தார். அவர் தன்னுடைய வார்த்தைக்காக நிற்க, ரூபகாரப்படுத்த அங்கே வந்தார். அதன் பின்னர் அவர் வந்து, மார்த்தாளுக்கு அவர் செய்தது போல, அதன் பின்னர் அவர் அழைத்தார். அவர், “மோசே நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டு போங்கள் என்று இந்த ஜனங்களிடத்தில் சொல்” என்று கூறினார். அந்த அந்தகார வேளையில், சிவந்த சமுத்திரம் திறந்து வழி வகுத்தது, அவர்கள் அதைக் கடந்து தேவனுடைய வார்த்தை நிறைவேறத்தக்கதாக தங்கள் பிரயாணத்தில் சென்றார்கள். ஆம், மோசேயினுடைய அந்தகார வேளையில், அப்பொழுதுதான் இயேசு வந்தார். இப்பொழுது நமக்கு நேரமுள்ளது…அவர் மோசேயை அழைத்தார்.

43114 இன்னும் ஒரு சிறிய மனிதனைக் குறித்து உங்களது கவனத்தைக் கவர நாங்கள் விரும்புகிறோம். அவனுடைய பெயர் யவீரு என்பதாயிருந்தது. அவர்களைப் போன்ற அநேகர் இன்று உலகத்தில் உள்ளனர். அவன் ஒரு ரகசிய விசுவாசியாயிருந்தான். அவன் இயேசுவை நேசித்தான். அவன் அவரைக் குறித்து கேள்விப்பட்டிருந்தான். அவன் அவரை விசுவாசித்தான். ஆனால், நீங்கள் பாருங்கள், அவன் ஏற்கெனவே தன்னை ஒரு ஸ்தாபனத்தில் இணைத்துக் கொண்டிருந்தான். ஆம். அவன்-அவன்-அவன்-அவன்…அவனால் வெளியே வந்து அதை அறிக்கை செய்ய முடியவில்லை. அவன் அதை விசுவாசித்தான். ஆனால் அவனால் அதை அறிக்கை செய்ய முடியவில்லை, எனவே அவன் அவிசுவாசிகளுடன் இணைந்திருந்தான். ஆனாலும் அவன் அதை உண்மையாக விசுவாசித்தான். 115 ஒரு மனிதன் அவ்விதமான நிலையை அடையும்போது, சில நேரத்தில் தேவன் அவனை பலப்பரீட்சைக்கு கொண்டு வருகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இடுக்கமான சூழ்நிலையில் தான் நாம் உண்மையாகவே எப்படிப்பட்டவர் என்பதையும், நாம் நம்முடைய சுய ரூபத்தையும் வெளிப்படுத்துவோம். 116 ஆகையால் அங்கிருந்த அவன், அதாவது அவன் ஏற்கனவே அவிசுவாசிகளுடன் இணைந்திருந்தான், அவன் அங்கு சென்று தன் பெயரை புத்தகத்தில் பதித்து, இன்னும் அநேக காரியங்களை செய்தவனாய் இருந்தான். அவன் ஒரு ஜெப ஆலயத் தலைவனாய் இருந்தான், ஆகையால் அவனால்—அவனால் அறிக்கை செய்ய இயலவில்லை. ஏனெனில் அது அவனுடைய ஆகாரம் சீட்டாக இருந்தது. ஆனாலும் அவன் இன்னும் இயேசுவை விசுவாசித்தான்.

44117 ஒரு நாள் அவனுடைய சிறு குமாரத்தி சுகவீனமடைந்தாள். ஓ, என்னே, அவன், அப்படிப்பட்ட மனிதன் ஒரு மருத்துவரை அழைத்திருப்பான் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த மருத்துவர் வந்து பிள்ளையைப் பார்த்தார். ஆனாலும் அவருடைய காய்ச்சலானது இன்னும் மோசமடைந்து கொண்டேயிருந்தது. கொஞ்சங் கழித்து அவள் அதிகம் உஷ்ணத்தை அடைந்து, முடிவில் அவள் மரணத்தருவாயை அடைந்துவிட்டாள். அவன் துயரத்தில் இருந்தான். அவன் ஏதாவது செய்ய வேண்டியதாயிருந்தது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. எனவே அவன், “அவர் எங்கிருந்தாலும், அவரை மாத்திரம் நான் கண்டு பிடிக்கக் கூடுமானால் நலமாயிருக்குமே” என்று நினைத்தான். ஒரு தனிப்பட்ட நேர்காணலுக்காக நிக்கொதேமு செய்தது போல இரவு நேரம் வரும் வரை அவன் ஒருபோதும் காத்திருக்க வில்லை. அது செயல்படுவதற்கான நேரமாயிருந்தது. செயல்படுவதற்கான நேரம் உண்டாயிருந்தது, எனவே அப்பொழுதே அவன் செயல்பட்டாக வேண்டியதாயிற்று. 118 சகோதரனே, சகோதரியே, அதேபோன்று தான் இப்பொழுதும் உள்ளது என்று நான் கருதுகிறேன். செயல்படுவதற்கான நேரமே வந்து விட்டது. ஒன்று விசுவாசிக்க வேண்டும் அல்லது விசுவாசிக்கக் கூடாது என்னும் நேரம் வந்துள்ளது. அந்த வேறுபிரிக்கும் கோடானது ஒவ்வொரு மனிதனுக்கும் ஸ்திரீக்கும் வருகிறது. அது ஒவ்வொரு குழந்தையண்டைக்கும் வருகிறது. சில சமயங்களில் நீங்கள் அந்தக் அக்கோட்டைக் கடக்கும் போது, ஒரே ஒரு காரியம் தான் விடப்பட்டுள்ளது, நீங்கள் இரக்கத்திற்கும் நியாயத்தீர்ப்புக்கும் நடுவே கடந்து செல்லும்போது, நீங்கள் அந்தக் கோட்டை கடந்து செல்லும்போது, அது நியாயத்தீர்ப்பாயுள்ளது.

45119 அவன் இக்கட்டிற்குள்ளானான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. அங்கே அவனுடைய ஆசாரியர்களும், எல்லா ரபிக்களும், அவனைச் சுற்றி நின்றனர். அவனுடைய சபையோரும் அவனை சூழ நின்று, அவனுடைய சிறு குமாரத்தி மரித்துக் கொண்டிருப்பதை அங்கே கவனித்துக் கொண்டிருந்தார்கள். மருத்துவரும் வெளியில் நின்று கொண்டு, தன் கரங்களை மடக்கிக் கொண்டும், “எனக்குத் தெரிந்திருந்த எல்லா மருந்துகளையும் கொடுத்துவிட்டேனே. ஆனாலும்…” என்று கூறி கரத்தை அசைத்துக் காட்டிக் கொண்டிருந்தார். 120 பாருங்கள், அந்த எல்லா நேரத்திலும் இயேசுவானவர் காரியங்களை நடப்பித்துக்கொண்டேயிருந்தார். அந்த சிறிய மனிதனிலிருக்கும் சுய ரூபத்தை வெளியேக் கொண்டு வரும்படியான ஒரு நோக்கத்திற்காகவே இயேசு இதை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது கொஞ்சங் நேரம் கழித்து, அவன் தன் ஆசாரிய அங்கியையும் சிறிய கறுப்புத் தொப்பியையும் அணிந்து கொள்வதை என்னால் காண முடிகிறது. அப்பொழுது மற்றவர், “நீ எங்கே போகின்றாய்?” என்று கேட்கிறார்கள். 121 அதற்கு அவன், “நான்…அவர் அங்கு நதியண்டை இருக்கிறார் என்று நான் கேள்விப்பட்டேன். ஆதலால் அவரை நாடிச் செல்கிறேன்” என்றான். ஓ என்னே! அவன் சென்றான்!

46122 அந்த ஒரு துயரமான வேளையில் அவன் ஒரு முடிவை எடுக்க வேண்டியதாயிருந்தது. அவன் குழந்தையை இறந்து போக விட வேண்டும் அல்லது அது வார்த்தையின் வெளிப்படுத்தலாயிருந்தது என்பதை அவன் அறிந்து கொள்ள வேண்டும். அவன் ஒரு ஜெப ஆலயத்தலைவனாயிருந்தான். அவன் வார்த்தையை படித்திருந்த படியால், அது தேவனுடைய வெளிப்படுத்தலாயிருந்து என்று அவன் அறிந்திருந்தான். தேவன் கிறிஸ்துவிற்குள் இருந்து உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கி கொண்டார். அவன் அதை அறிந்திருந்தான். அவன் பிரச்சனைக்கு பலவந்தம்பண்ணப்பட்டான். அவன் ஒரு தவறை செய்ய வேண்டியதாயிருந்து, அதாவது தன் குழந்தையை மரித்துப் போக விட வேண்டும் அல்லது தன்னுடைய அறிக்கையை செய்ய வேண்டும் என்பதாயிருந்தது. அவன் அந்த துயரத்திற்குள்ளானபோது, கிட்டத்தட்ட இயேசு வந்ததே அந்த நேரமாயிருந்தது. அவன் அவரைக் காணச் சென்றான். அப்பொழுது அவன் கூறினான், அதாவது அவன், “நீர் என்ன சொல்கிறீரோ அதன்படியே நான் உம்மோடே நடப்பேன்” என்றான். அப்பொழுது வீதியிலே இதோ ஒரு தூதுவன் துக்கமான காரியத்தோடு வந்தான். யவீரு அவரை விசுவாசித்தான் என்ற தன்னுடைய அறிக்கையை செய்துவிட்டான். அவன் தன்னைத் தானே விலக்கிக் கொண்டான், பொதுமக்களின் பார்வையிலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு, அவன் இயேசுவின் பேரில் விசுவாசமாயிருப்பவனாயிருந்தான் என்பதை தெரியப்படுத்திவிட்டான்.

47123 இதோ ஒரு தூதுவர் வந்து “யாரையும் வருத்தப்படுத்தாதீர். ஏனெனில் உம்முடைய குமாரத்தி ஏற்கனவே மரித்துவிட்டாள். எனவே இனிமேல் வீணான காரியங்களைச் செய்யாதீர்” என்றான். 124 ஓ, அவனுடைய சிறு இருதயமானது நின்றுவிடுவது போலிருந்தது. ஆனால் அவர், “நான் உனக்குச் சொல்லவில்லையா? நீ தேவனுடைய மகிமையைக் காண வேண்டுமென்றால் பயப்படாதே. நீ எதைக் குறித்து பயப்படுகிறாய்? நான் வருவேன் என்று நான் ஏற்கனவே உன்னிடம் கூறியுள்ளேனே” என்று கூறின அந்த இயேசுவினுடைய கண்களை நோட்டமிட்டவனாய் நோக்கிப் பார்த்தான். 125 அவர் வருவதாக ஏற்கனவே சொல்லியிருந்தார். அவர் இதைச் செய்யப் போவதாக முன் கூட்டியே கூறியிருந்தார். அதை இங்கு அவர் செய்து கொண்டிருக்கிறார். ஆமென். கடந்த இரவு நாம் வாசித்து, பேசினது போல, கடைசி நாட்களில் அவர் காட்சியில் தோன்றி அவர் முன்பு செய்ததுபோல இந்த காரியங்களைச் செய்வார் என்று அவர் கூறினார். இங்கே அவர் அதை செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் எதைக் குறித்து பயப்படுகிறீர்கள்? 126 அவர் காட்சியில் வந்தபோது, அவர் மரித்துப் போயிருந்த அவளை உயிரோடெழுப்பினார் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். அவர் காட்சியில் வந்து, மரித்துப் போயிருந்த அவளை உயிரோடெழுப்பினார். வயோதிக குருடனான பர்திமேயு ஒரு சமயம் தன்னுடைய அந்தகார நேரத்தை அடைந்திருந்தான்.

48127 இயேசுவானவர் எரிகோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த் ஒரு முழு சுவிசேஷ வர்த்தக புருஷருடைய காலை சிற்றுண்டி கூட்டத்தில் அங்கே இருந்தார். அங்கே அவர் சகேயுவை சந்தித்திருந்தார். அவர் வீதியில் இருந்த ஒரு மரத்தில் அவனை சந்தித்திருந்தார். எனவே அவர்…அவர் எந்தக் காரியத்தையும் ஏற்பாடு செய்யவில்லை என்று நான் நிச்சயம் நம்புகிறேன். புரிகிறதா? ஆதலால் அப்பொழுது அவர் அங்கு வந்தபோது, அவர்—அவர் அவனை சந்தித்தபோது, சகேயு அவருடன் சென்றான். 128 வயோதிக குருடனான பர்திமேயு ஒரு சிறு பையனாய் இருந்த முதற்கொண்டு குருடனாக இருந்து வந்தான். ஆதலால் இயேசு அந்த வாசலின் வழியாய் வெளியே வருவார் என்று அவன் எண்ணினான். எனவே அவன் காத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் பெரும் இரைச்சலை கேட்டான், எல்லோரும் அருகில் வந்து கொண்டிருந்தனர். 129 அப்பொழுது அந்த ஆசாரியன் “ஏய், ஏய், நீ, நீ அங்கு மலையின் மீது போகிறாயே! …நீ மரித்தோரை உயிரோடெழுப்பினாய் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். கல்லறை முழுவதிலும் இங்கே மரித்தோர் எங்களிடத்தில் உண்டு. நீ மேசியாவாயிருந்தால், நீ மேசியாவாயிருந்தால், இங்கு வந்து இந்த மரித்தோரை உயிரோடேழுப்பும்” என்று கூறுவதை பர்த்திமேயு கேட்டான். 130 அதே பிசாசுதான் இன்னமும் மதத்தின் வடிவில், அதேவிதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும்? பார்த்தீர்களா? 131 “நீ ஒரு மேசியாவாயிருந்தால், நாங்கள்…நீ மரித்தவரை எழுப்புகிறாய்; இங்கு ஒரு கல்லறை முழுவதும் மரித்தோரை நாங்கள் உடையவர்களாயிருக்கிறோம். வாரும்” என்றனர். ஓ, எல்லோரும் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். “தீர்க்கதரிசிக்கு ஓசன்னா” என்று ஒருவன் சத்தமிட்டுக் கொண்டிருந்தான். மற்றொருவன் இது , அது அல்லது மற்றது என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தான். அப்பேர்ப்பட்ட ஒரு குழப்பம்! 132 இந்த வயதான குருட்டு மனிதன், “ஓ, நான் அவரை தவறவிட்டேன். அவர் அங்கே வெளியே வருவார். அவர் இவ்வழியாய் வருவார் என்று நான் எண்ணினேன்; ஆனால் நான் தவறான இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்து விட்டேனே” என்று எண்ணினான். அவன் கூச்சலிட்டான். மேலும் அவன், “அவர் வார்த்தையாயிருக்கிறார், அவர் தேவன்; அவர் அப்படித்தான் இருக்க வேண்டும்,” என்று எண்ணினான். எனவே, “ஓ இயேசுவே, தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்” என்றான். அந்த இக்கட்டான நேரத்திலே அவன் கூப்பிட்டான்.

49133 நீங்கள் இதை இங்கே குறித்துக் கொள்ள விரும்பினால் நலமாயிருக்கும், அப்பொழுது இயேசு எரிகோவில் இருந்தார். இயேசு இருந்த இடத்திலிருந்து நூற்று ஐம்பது கெஜம் தூரத்தில் அவன் உட்கார்ந்து கொண்டிருந்தான். ஆயிரக்கணக்கான ஜனங்கள் அவரை சூழ்ந்திருந்த வேளையில், அந்த மனிதனின் கூக்குரலை அவரால் கேட்டிருக்க முடியாது. இல்லை. ஆனால் அவர் அதை உணர்ந்தார். எனவே அவர் நின்றார். 134 நான், “அதன் பின்னர் இயேசு நின்றார்” என்ற தலைப்பில் வருகின்ற இந்த இரவுகளில் ஒன்றில் பிரசங்கிக்க விரும்புகிறேன். “அதன் பின்னர் இயேசு குனிந்தார்.” ஓ! 135 ஆனால் இயேசு நின்றபோது, அது என்னவாயிருந்தது? அவர் அவனை அழைத்தார். சீஷர்கள், “போதகர் வந்திருக்கிறார், சோர்ந்து போகாதே” என்றும் “அவர் உன்னை அழைக்கிறார், அவர் உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறார்” என்றும் கூறினார். அந்தக் கூட்டத்திலிருந்து அவனை வெளியே அழைத்தனர். அவர் அதே காரியத்தை இப்பொழுது செய்கிறார். அது உள்ளே ஆழமாகப் பதிகிறதா? புரிகிறதா? 136 “போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார்” அவர் குருட்டுத்தனத்திலிருந்து வெளிச்சத்திற்கு, இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் அவனை அழைத்தார், மரணத்திலிருந்து ஜீவனுக்குள் வந்தான். “போதகர் வந்திருக்கிறார் உன்னை அழைக்கிறார்.” அவர் அவனை அழைத்த போது அவனுக்கு மறுபடியும் அவனுடைய பார்வை அளித்தார்.

50137 ஒரு சமயத்தில் மலையின் மேல் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரி இருந்தாள். அவள் தன் பணத்தையெல்லாம் வைத்தியர்களுக்கு செலவு செய்திருந்தாள். அவள் எல்லாவற்றையும் விற்றாள் என்பதில் சந்தேகமேயில்லை. அவள் தன் விவசாய பண்ணையை அடகு வைத்து, விற்றேவிட்டாள். அவளால் முடிந்தளவு எல்லாவற்றையுமே வைத்தியர்களுக்காக செலவழித்திருந்தாள், ஆனால் எவருமே அவளுக்கு எந்த நன்மையும் செய்ய முடியவில்லை. அவள் தொடர்ந்து மோசமடைந்து கொண்டே சென்றாள். இரத்தப் பெருக்கோ நிற்கவில்லை. அவள் நிலைமை தொடர்ந்து இன்னும் இன்னும் மிகவும் மோசமடைந்து கொண்டே சென்றது. 138 ஒரு நாள் அவள் வசித்து வந்த அந்த மலையின் மேல் உட்கார்ந்து தைத்துக் கொண்டிருக்கையில், அவள் கீழிருந்த பள்ளத்தாக்கினை நோக்கிப் பார்த்தாள். அப்பொழுது அவள் ஒரு படகு உள்ளே வருவதைக் கண்டாள். “தீர்கதரிசிக்கு ஓசன்னா” என்று எல்லோரும் சத்தமிட்டு கொண்டே ஓடத் துவங்கினர்.

51139 அவள் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாள். விசுவாசம் கேள்வியினால் வரும். இப்பொழுது அவள், “நான் கீழே சென்று அவரை நோக்கிப் பார்ப்பேன்” என்று கூறினாள். 140 அவள் நடந்து அங்கே கீழே சென்றபோது, தேவனுடைய வார்த்தை மாம்சத்தில் வெளிப்பட்டுளதை அவள் முதலாவதாகக் கண்டாள். அவருடைய பேச்சைக் குறித்தும், அவருடைய தோற்றத்தைக் குறித்தும் ஏதோ இருப்பதையும், அது அவரே என்பதையும் அவள் அறிந்து கொண்டாள். ஆம் ஐயா. “ஓ, நான் ஏதோ ஒரு வழியில் அவருடைய கவனத்தை மாத்திரம் கவர முடிந்தால் நலமாயிருக்கும், நான் ஏதோ ஒரு முறையில் அவரை மாத்திரம் தொட முடிந்தால் நலமாயிருக்கும்” என்று எண்ணினாள். எனவே அவள் கூட்டத்தினூடே கழுவிச் சென்று, அவருடைய வஸ்திரத்தை அவள் தொட்டாள். 141 இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அவளுடைய விரலின் தொடுதலை அவர் உணரவில்லை. இல்லை ஐயா. ஏனென்றால் பாலஸ்தீனிய வஸ்திரமானது மிகவும் தளர்ந்த நிலையில் தொங்கும். அவர்…அவர்கள்… அப்பொழுது பேதுரு, “எல்லோரும் உம்மை தொட்டார்களே,” என்றான். 142 அதற்கு அவர், “ஆனால் இதுவோ ஒரு வித்தியாசமான தொடுதலாயுள்ளது. நான் பெலவீனமடைந்துள்ளதை என்னால் அறிய முடிகிறது” என்றார்.

52143 இயேசு வந்திருந்தார். அவளுடைய பணம் மற்றும் எல்லாம் போனது. ஆனாலும், இரத்தப் பெருக்கானது நிற்காமல், வைத்தியர்களாலும் அதை நிறுத்த முடியாமல் இருந்த அந்த அந்தகார வேளையில் இயேசு வந்தார். அவர் என்ன செய்தார்? அவர் அவளை அழைத்தார். அவர் அவளைக் கண்டு பிடிக்கும் வரை, சுற்றும் முற்றும் பார்த்து அவர், “உனக்கு பெரும்பாடு இருந்தது, ஆனால் அது இப்பொழுது நின்று விட்டது” என்றார். 144 “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” போதகர் வந்திருக்கிறார். அவர் உன்னை அழைக்கிறார். அவர் வந்திருக்கிறார், அவர் அழைத்தார். அவர் அவளை சுகத்திற்கு அழைத்தார்.

53145 கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீ, அதாவது அவளைக் கடந்த இரவு நாம் பேசினோம். அவளுக்கு எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிருந்தது. ஒரு வேளை அவளது ஐந்தாவது கணவன் அவளை கைவிட்டு விட்டு, அன்றிரவு தான் அவள் ஆறாவதாக ஒருவனைப் பற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும், மேலும் அவனைக் குறித்தும் அவள்—அவள் சிறிது சந்தேகம் கொண்டிருந்தாள். அவள் ஒழுக்கக் கேடானவனாய் இருந்தாள். அவள் ஒரு உண்மையான பெண்மணியாக இருக்க விரும்பினாள்; அவள் வேதத்தை வாசித்துக் கொண்டிருந்தாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 146 அவள் ஏறக்குறைய பதினொரு மணிக்கு அங்கே சென்று கொண்டிருந்தாள். அதிகாலையில் நல்ல ஒழுக்கமுள்ள பெண்கள் வரும்போது அவளால் வரமுடிய வில்லை. அவர்கள் ஜாடிகளில் தண்ணீர் நிரப்பி தங்கள் தலைகளின் மேல் வைத்துச் சென்றார்கள். எனவே அவளால் அவர்களோடு கலந்து வர முடியாது. அவர்கள், அவர்கள் அந்த நாளில் அதைக் குறித்த ஒரு பாகுபாட்டை உடையவர்களாயிருந்தனர், எனவே சரியும் தவறும் ஒன்று சேர்ந்து கலந்திருக்கவில்லை. ஒழுங்கங்கெட்டவர்கள் தங்களுடைய இடத்தில் தரிந்திருந்தனர், எனவே அவர்களால் மற்றவர்களோடு வர முடியாதிருந்தது. அவர்கள் அவளை வர அனுமதிக்க மாட்டார்கள். எனவே எல்லோரும் தங்களுடைய தண்ணீரைக் கொண்டு சென்ற பிறகு…அவள் அதைவிட சிறந்த ஒன்றிக்காக வந்தாள்.

54147 அதன் பின்னர் அவள் அங்கே இந்தப் பானையை தன் தலையின் மேல் வைத்துக் கொண்டு, அவள் சென்று கொண்டிருந்தபோது, “இப்பொழுது கடந்த இரவு நான் விவாகம் செய்த அல்லது கைப்பிடித்த மனிதனை நான் அவனைக் குறித்து சந்தேகித்துக் கொண்டிருக்கிறேன். அவன் ஒரு விதமான மனிதனாயிருக்கிறான், அவன் மிகவும் விநோதமாக செயல்படுகிறான். எனக்கோ—எனக்கோ அவனைக் குறித்து ஒன்றும் தெரியாது. அவனைக் குறித்து அறிய எனக்கோ எந்த ஒரு தருணமும் கிடைக்கவில்லை. நான் சமுதாயத்திலிருந்து புறம்பாக்கப்பட்டவள். என்னால் அந்த சபைகளுக்கும் செல்ல முடியாது, அவர்கள்…அவர்களைப் பாருங்கள். எனவே என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் துயரத்தில் இருக்கிறேன். நான் வேதாகமத்தை வாசித்துக் கொண்டு வருகிறேன்; நிச்சயமாகவே, ஒரு நாள் அந்த தீர்க்கதரிசி காட்சியில் வருவார். அப்படிப்பட்ட ஒரு காரியம் இல்லை என்றும், அது ஒருக்கால் நூறு ஆண்டுகளுக்குப் பிறகோ அல்லது ஆயிரம் ஆண்டுகள் கழித்தோ நடக்கலாம் என்றும் அவர்கள் கூறியிருப்பதையும் நான் அறிவேன். அதற்காக நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அது இன்னும் நிகழவில்லையே. ஆதலால் அதை நாம் இப்போது எதிர்ப்பார்ப்பதில்லை. எல்லாம் அவ்விதமே உள்ளன, ஓ, இல்லை, நமக்கு சபைகளும் மற்ற காரியங்களும் உள்ளன. இப்பொழுது அதைப் போன்ற எந்தக் காரியமும் நமக்குத் தேவையில்லை” என்று சிந்தித்துக் கொண்டிருந்திருப்பாள் என்பதில் சந்தேகமேயில்லை. எனவே அப்பொழுது அவள் அவ்வாறு சிந்தித்தவாறே சென்று கொண்டிருந்தாள். 148 நீங்கள் அவரைக் குறித்து நினைக்கும்போது, அப்பொழுது தான் அவர் உங்களுக்கு பிரசன்னமாகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடந்த இரவு அவர்கள் தங்களுடைய பாதையில் எம்மாவூருக்கு சென்று கொண்டிருந்ததை நாம் பார்த்தது போன்றேயாகும்.

55149 அந்த காரியங்களின் பேரில் அவள் சிந்தித்தபோது, “தாகத்துக்குத் தா” என்று ஒரு மனிதன் கூறுவதை அவள் கேட்டாள். 150 அதைக் குறித்து எனா? அவளுடைய ஒழுக்க நெறிமுறைகள் போய்விட்டிருந்த அந்தகார நேரமாய் அது இருந்தது. அவள் ஒருகால் ஒரு அழகான பெண்மணியாயிருந்து, ஜீவனத்திற்காக அவள் வீதியில் புறக்கணித்துத் தள்ளப்பட்டவளாயிருக்கலாம். சில சமயங்களில் அது அச்சிறிய பெண்ணின் தவறாயில்லாமலிருக்கலாம். அவளை அந்தவிதமாக வெளியே செல்ல விட்டு விட்ட அவளது பெற்றோரின் தவறாய் இருக்கலாம். எனவே அவள் அங்கிருந்தாள். ஒரு வேளை அவளது சுருள் முடி இப்படி தொங்கியிருக்கும்; அவள் வெறுமையாய், சோர்வுற்றவளாய், அவளிடத்தில் யாருமே ஒரு தொடர்பும் கொள்ளாதவர்களாய் இருந்த நேரத்தில் அவள் சென்று கொண்டிருந்தாள். அந்த இளம் பெண், ஒரு வேளை அதற்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கலாம். 151 எப்படி இருந்தாலும், அவள் வேதத்தை வாசித்திருந்து, அவள் அதை விசுவாசித்திருந்தாள் என்ற ஒரு காரியத்தை நான் அறிவேன். அங்கு அவளுடைய இருதயத்தில் ஒரு சிறிய வித்து இருந்து, “அக்காரியம் எப்போதாவது சம்பவிக்குமானல், அப்பொழுது அதை நான் அறிந்து கொள்வேன்” என்று கூறுகிறது. அவள் அதற்கு முங்குறிக்கப்பட்டிருந்தாள்.

56152 அந்த வயோதிக யூதாஸ் அங்கு நின்று, அவன் எதையோ செய்வதுபோல நடித்துக் கொண்டிருப்பதை நோக்கிப் பாருங்கள். அவனுடைய இருதயத்தின் ஆழத்தில் காரிருள் இருந்தது. இங்கு ஒளியானது அவனுடைய கிரியைகளில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவனுடைய இருதயத்தின் ஆழத்திலே அவன் அதை விசுவாசிக்கவில்லை. ஆகவே இங்கு இவள்…பாருங்கள், அந்த ஒளி அதன் கீழ் செல்ல முடியவில்லை. ஆனால் இதோ அவள் விசுவாசித்தாள், அவள் அதை விசுவாசித்தாள். ஆனால் அவளுடைய ஜீவியமானது இருளாயிருந்தது. அந்த ஒளி அவள் மீது விழுந்தபோது, அந்த இருளை அகற்றி விட்டது. ஆனால் இங்கு ஒளியானது பட்டபோது அதை முழுமையாக இருளாக்கியது. அதுதான் வித்தியாசமாகும். 153 பாருங்கள். அவள் அந்த நோக்கத்திற்காகவே பிறந்திருந்தாள். அவள், அவள் கூறினது, அதாவது, எத்தனைப் புருஷர்களை அவள் உடையவளாயிருந்தாள் என்பதை அவர் கூறினபோது, அவள்… என்ன நேர்ந்தது? அவள் உடனே உணர்ச்சிவசப்பட்டவளைப் போலானாள். அவள் துயரத்திற்குள்ளானாள். அப்பொழுது அவள், “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்போது இவைகளைச் செய்வார் என்பதை நான் அறிவேன்” என்றாள். 154 அப்பொழுது அவர் அவளை அழைத்தார். அதன் பின்னரே அவர் அவளை அழைத்தார். “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். அவள் அதை தேவனுடைய வார்த்தையின் மூலம் அடையாளம் கண்டு கொண்டாள். அவர் அவளை தன் பாவங்களிலிருந்து ஜீவனுக்கு அழைத்தார். அவள் பெயர் வேதாகமத்தில் உள்ளது. அவள் இன்றைக்கு சாவாமையுள்ள ஜீவனைப் பெற்றிருக்கிறாள். 155 அவர் அதே விதமாக உன்னையும் அழைக்க முடியும், ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அந்த… 156 ஆம், அவளுடைய ஒழுக்க நெறி, முறைகள் போய்விட்டிருந்தன, ஆனாலும் அவர் அந்த பகுத்தறிதலை உடையவராய் இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாள். அது மேசியாவாகத்தான் இருக்க வேண்டும் என்று அவள் அறிந்திருந்தாள். அப்பொழுது “நானே அவர், நானே அவர்” என்று இயேசு கூறினபோது அது அவர்தான் என்று அவள் அறிந்துக் கொண்டாள்.

57157 ஒரு சமயம் சீஷர்கள் படகிலே இருந்தபோது, எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிருந்தன. புயல், அவர்கள் இயேசுவை விட்டுவிட்டு புறப்பட்டுச் சென்றிருந்தபோது, புயலானது லாசருவின் வீட்டில் நிகழ்ந்தது போல ஏற்பட்டிருந்தது. அப்பொழுது எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிறுந்தன. அந்த பழைய படகானது தண்ணீரால் நிரம்பிவிட்டது. அப்பொழுது அவர்கள் கதறிக் கொண்டும், அழுதுக் கொண்டும் இருந்தனர், ஒரு வேளை ஜெபித்துக் கொண்டிருந்திருக்கலாம், அவ்வாறே தொடர்ந்து அவர்கள் சென்று கொண்டிருக்க மின்னல் அடித்துக் கொண்டிருந்தது, படகில் தண்ணீர் நிரம்பி வழிந்தது, பாய் மரத்தண்டுகள் கீழே விழுந்தன, துடுப்புகள் உடைந்து போயின. அவர்கள் ஒருவரையொருவர் பற்றிப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தனர். 158 அந்த உண்மையான அந்தகார வேளையில், அதன் பின்னரே இயேசு தனியாக நடந்து வந்தார். ஆனால் அவர் அவர்களுக்கு ஒரு நிழல் போன்றே காணப்பட்டார். அவர் ஒரு ஆவியைப் போல் பயமுறுத்தும் விதத்திலேயே காணப்பட்டார், எனவே அவர்கள் பயத்தால் கதறினார்கள். 159 இன்றைக்கும் காரியம் அந்த விதமாகவே உள்ளது. இயேசு உங்களுடைய அந்தகார நேரத்தில் வரும்போது, நீங்களோ அதைக் குறித்து பயப்படுகிறீர்கள். அது என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. 160 அது அவர்தான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே அவர்கள், “ஓ, அது ஒரு ஆவி” என்றனர். அவர்கள் அலறி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

58161 அதன்பின்னர் அவர் அவர்களை அழைத்து, “பயப்படாதிருங்கள், நான் தான்” என்றார். அந்த அந்தகார வேளையில், இயேசு அவர்களுக்கு உதவியாக வந்தார். அவர் எப்பொழுதும் அந்தவிதமாகவே செய்கிறார், அதாவது அந்தகார நேரத்திலேயே வருகிறார். அதன்பின்னர் இயேசு வந்து அவர்களிடத்திற்கு வந்து தம்மை வெளிப்படுத்தினார். பேதுரு “ஆண்டவரே, நீரேயானால் நான் ஜலத்தின் மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும்” என்று கூறினாள். இயேசு, “வா” என்றார். 162 நண்பர்களே, என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சீக்கிரத்தில் அவர் இந்த கடைசி நாட்களில் இருப்பவர்களுக்காக வருவார். இப்பொழுது சபையானது மறுபடியுமாக இந்த அந்தகார நேரத்தை அடைந்துள்ளது என்பது வினோதமாயுள்ளதல்லவா?

59163 நான் இங்கு ஒரு காரியத்தைக் கூறப் போகிறேன். இது ஒரு போதகமல்ல. நான் தீர்க்கதரிசனமாகக் கூறுகிறேன். என்ன நிகழ்ந்துள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? அது சீக்கிரமாக சம்பவிக்கப் போகின்றது, என்னுடைய வார்த்தையை குறித்து வையுங்கள். எல்லா ஸ்தாபனங்களும் அந்த உலக ஆலோசனை சபைகளின் சங்க ஐக்கியத்தில் சேரப் போகின்றன. அவைகள் அவ்வாறு சேரவில்லையென்றால், அப்பொழுது அந்த உலக ஆலோசனை சபைகளின் சங்க உதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆதலால் புறக்கணிக்கப்படுதல் இருக்கும், பிறகு யாரும் இச்சபைகளுக்கோ அல்லது எந்த சபைகளுக்குமே செல்ல முடியாது. உங்களுடைய சொந்த சபையிலிருந்து ஒரு முத்திரையைப் பெற்றாலொழிய நீங்கள் வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது. மிருகத்தின் முத்திரை, அது ஏற்கனவே இருந்தது போலவே அது மறுபடியும் வரப்போகின்றது என்பதை நீங்கள் கவனியுங்கள். சபையானது, ஆவிக்குரிய ஜனங்கள், அவர்களே அதை தெளிவாக புரிந்து கொள்கின்றனர். 164 பெந்தெகோஸ்தே ஜனங்களாகிய நீங்கள் எப்படியாயினும் இதை அடையாளங் கண்டு கொள்கிறீர்கள். நீங்கள் அதை உணர ஆரம்பித்துள்ளீர்கள். பெந்தெகோஸ்தே ஸ்தாபனங்களைச் சேர்ந்த அநேக ஸ்தாபன சபைகள், நான் உங்கள் பெயர்களைக் கூறத் தேவையில்லை. ஆனால் அவைகள் இந்த சமயத்தில் அதற்குள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அவ்வாறு சேர்ந்துவிட்டனர் என்று அவர்கள் சாட்சிபகர்ந்துள்ளனர். நீங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள் என்ன செய்ய வேண்டியவர்களாய் இருக்கப் போகிறீர்கள்? நீங்கள் உங்களுடைய சுவிசேஷ உபதேசமாகிய பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பறிகொடுத்துவிட வேண்டியவர்களாயிருக்கப் போகிறீர்கள். நீங்கள் உங்களுடைய வேதாகம கோட்பாட்டை பறிகொடுத்துவிட வேண்டியவர்களாயிருக்கப் போகிறீர்கள். 165 அந்த உறுப்பினர்கள் அதற்காக நிற்க போவதில்லை. உண்மையான மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் முதலாவதாக மரிப்பார்கள். அவர்கள் வார்த்தையினால் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் காரியம் வந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். ஆம் ஐயா.

60166 இது விநோதமாயில்லையா? இந்த மிகவும் அந்தகாரமான நேரத்தில், அதன் பின்னரே இயேசு வந்து அவர்களை அழைத்து “பயப்படாதே. நான் தான், நான் இன்னும் உங்களுடனே இருக்கிறேன். நான் என்னுடைய வார்த்தையை வெளிப்படுத்தவே இங்கிருக்கிறேன்” என்று கூறினார். அவர் அப்பொழுது இருந்தது போலவே, இப்பொழுதும் அவர் அவ்வண்ணமே இருக்கிறார். அவர் அதைச் செய்வதாக அவரே கூறினார். ஓ! என்னே! போதகர் வந்திருக்கிறார், நம்மை அழைத்திருக்கிறார். 167 அநேக சுகவீனமுள்ள ஜனங்கள் இங்கு உள்ளனர் என்பதில் சந்தேகமேயில்லை. அவர்கள் இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவரோ இனி உங்களுக்கான நம்பிக்கையேயில்லை என்று உங்களிடம் கூறியுள்ளார். நீங்கள் உங்களுடைய அந்தகாரமான நேரத்தில் இருக்கலாம். ஆனால், ஞாபங்கொள்ளுங்கள், போதகர் வந்து உங்களை அழைத்துள்ளார்.

61168 என்றோ ஒரு நாள், ஒரு நாள் போதகர் வந்து ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு பெயரையும் அழைக்கப்போகிறார். உன்னுடையது அங்கில்லையெனில், இப்பொழுதுதே அது அங்கிருக்க பிரயாசப்படு. ஏனெனில் அவர் வந்து அழைக்க போகிறார். கல்லறையில் உள்ளவர்களும் கூட அவருடைய சத்தத்தைக் கேட்டு உயிரடைவார்கள். போதகர் வந்து உன்னை அழைப்பார். உங்களுக்கு என்னுடைய அறிவுரை என்னவென்றால், இன்றைக்கு அவர் அழைத்துக்கொண்டிருக்கையில், பதிலளித்து அந்நாளுக்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள். 169 அவர் இங்கே இருக்கப் போகிறார் என்று அவர் வாக்களித்ததே, இந்தக் காலத்தின் வாக்குத்தத்தம். அவர் செய்த காரியங்களை, அவர் மீண்டும் செய்வார், இப்பொழுது மீண்டும் போதகர் வந்து உங்களை அழைக்கிறார்.

62170 நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. எனக்கு இங்கு இன்னும் கிட்டத்தட்ட ஆறு பக்கங்கள் உள்ளன, ஆனால் அதற்கு இப்பொழுது என்னால்—என்னால் செல்ல இயலாது. நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. நான் சீக்கிரமாக உங்களை விடுவதாக வாக்களித்தேன், ஆயினும் அதற்கு மேல் பதினைந்து நிமிடங்கள் கடந்துவிட்டன. 171 பரலோகப் பிதாவே, ஓ, கர்த்தாவே, அது மீண்டும் சம்பவிக்கட்டும். நான், “இயேசு வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார்” என்று இந்த எல்லாக் காரியங்களையும் கூறியுள்ளேன். அவர் வரும்போது, அவர் என்ன செய்கிறார்? அவர் அழைக்கிறார். ஆண்டவரே, அது மீண்டும் நடந்தேரட்டும். ஆவியின் ரூபத்தில் உள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய பரிசுத்த ஆவியானது இன்றிரவு ஜனங்களின் மத்தியில் வரட்டும். அவர் இன்றிரவு வந்து, தன்னை வெளிப்படுத்தட்டும், அதன் பின்னர் தன்னையே வெளிப்படுத்தட்டும். அவர்கள், அந்த ஜனங்கள் எப்படி விசுவாசித்தார்களோ அவ்வாறே நாங்களும் கூட விசுவாசிப்போம் ஆண்டவரே. இத்தருணத்தை ஒரு போதும் அடையாத அநேகர் ஒரு வேளை இங்கிருக்கலாம். நீர் தாமே அதை மீண்டும் அவர்களுக்கு அருள வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். ஏனென்றால் நாங்கள் அதை தேவனுடைய மகிமைக்காக இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.

63172 அதுதான் சகோதரியே, அதனை அப்படியே செய்யுங்கள். அது அருமையாயுள்ளது. அப்படியே இருக்கட்டும். ஓ, ஒவ்வொருவரும் மிகவும் அமைதியாயிருங்கள். 173 அவர் வந்திருக்கிறாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் வந்துள்ளார். அவர் வரும்போது, இன்னும் அவர் அழைக்கின்றாரா? இப்பொழுது நீங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்தால் நலமாயிருக்கும். நீங்கள் அப்படியே தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தால், தேவன் அதை அருளுவார். 174 இப்பொழுது பாருங்கள், ஜெப வரிசையை இங்கே அழைப்பதற்கு எனக்கு நேரமில்லை. கர்த்தருக்கு சித்தமானால் நான் அவர்களை இன்றிரவு அங்கே அழைக்கப் போகிறேன். போதகர் வந்திருக்கிறார். அவர் இக்கடைசி நாட்களில் தமது வார்த்தையை நிறைவேற்ற வந்திருக்கிறார். அப்பொழுது அவர் என்னவாயிருந்தாரோ அவ்வாறே அவர் இன்றும் உள்ளார். அன்று அவருடைய அடையாளம் அல்லது வெளிப்படுத்தல் என்னவாயிருந்ததோ, அதுதான் இன்றைக்கும் உள்ளது. ஏனென்றால் அவர் இன்னுமாய் தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையார் “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] தேவனுடைய வார்த்தையானது இருதயத்தின் யோசனைகளையும், எண்ணங்களையும் அறிகின்றதாய் இருக்கிறது. அப்பொழுது அவர் செய்த விதமாகவே, அவர் எப்பொழுதும் அதே விதமாகவே செய்துள்ளார். அவர் மாறாதவராய் இருக்கிறார். அவர் அதை இப்பொழுது செய்தால், நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? அது உங்களை அவரை விசுவாசிக்கச் செய்யுமா? 175 இப்பொழுது இங்கிருக்கும் ஜனங்களில், முதலாவதாக எனக்குத் தெரிந்தவர்கள், அதாவது நான் அறிந்துள்ளவர்கள் யாரவது இங்கு எங்காவது அமர்ந்துள்ளார்களா என்று நான் பார்க்கட்டும்.

64176 என்னை அறியாதவர்களாய் இங்கு சுற்றிலும் உள்ளவர்களே உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள்; உங்களை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் வியாதிப்பட்டிருந்தால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். எல்லோரும் என்று நான் யூகிக்கின்றேன். அது சரி, இப்பொழுது நீங்கள் விசுவாசியுங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள். சந்தேகப்படாதீர்கள். விசுவாசமுடையவர்களாயிருங்கள். தேவனை விசுவாசியுங்கள். 177 நீங்கள் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கும்படிக்கே நான் உங்களை கேட்டுக் கொள்ளப்போகிறேன். இப்பொழுது சுற்றும் முற்றும் அசைந்து கொண்டிருக்காதீர்கள். தயவு கூர்ந்து அவ்வாறு செய்யாதீர்கள். புரிகிறதா? புரிகிறதா? நீங்கள் ஆத்துமா, சரீரம் ஆவியாக இருக்கிறீர்கள். உங்களுடைய ஆவி…பரிசுத்த ஆவியானவரோ உண்மையாகவே வெட்கி ஒதுங்கும் சுபாவமுள்ளவராயிருக்கிறார்.

65178 அநேக ஆண்டுகளுக்கு முன்னர் பரிசுத்த ஆவியானவர் கூறினதாக, நான் இங்கு வரும் போது உங்களிடம் கூறினதை எத்தனைப் பேர் நினைவில் வைத்துள்ளீர்கள்? நான் ஜனங்களின் கையைப் பிடிக்கும் போது, இந்த பகுத்தறிதல் வர உள்ளது என்றும், அதன்பின்னர் போகும் என்றும் அவர் என்னிடம் கூறினார். நீங்கள் அதை நினைவில் வைத்துள்ளீர்களா? அதை நினைவில் கொண்டுள்ளீர்களா? ஆனால் அவர் “நீ ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படிச் செய்யக் கூடுமானால்” என்றார். அநேக நாட்கள், அநேக வருடங்களுக்கு முன் கூறினதை நினைவில் வைத்துள்ளீர்களா? [சபையார் “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] நீங்கள் விசுவாசிக்கத்தான் வேண்டும். 179 நான் ஒரு மனிதனைக் கண்டேன், அது இங்கு நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் அங்கு அமர்ந்திருந்தவர் என்றே நான் நம்புகிறேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர்…நான் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, அவரை கவனித்து வந்தேன். அவர் ஒரு முடமான மனிதனாயிருந்தார். அவர் தன்னுடைய கரங்களின் கீழே ஊன்று கோல்களை வைத்திருந்தார். நான் அழைப்பை விடுக்க ஆரம்பித்த போது, ஒரு கறுப்பு நிழலாக சாத்தான் அம்மனிதனிடத்திற்கு வந்தான். அதை என் சொந்த கண்களால் நான் கவனித்தேன். அப்பொழுது அவர் எழுந்து வெளியே சென்றார். எனவே அவர் எப்பொழுதுமே முடமாகவே இருப்பார், பாருங்கள். எனவே, அவர், அவர் அப்படியே அமர்ந்திருந்தால், அவர் அங்கேயே சுகமடைந்திருப்பார்…புரிகிறதா? ஆனால், ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அவன் சத்துருவிற்கு செவி கொடுத்தான் என்று நான் யூகிக்கிறேன். ஆனால் நீங்கள் நின்று அந்த நிழல்களை கவனித்து, அந்தக் காரியங்கள் எந்த ரூபங்களில் உள்ளன என்றும், அவைகள் எந்தவிதமாயுள்ளன என்றும் பார்த்து, அவைகள் எப்படி கிரியை செய்கின்றன என்றும் கவனித்தால் நலமாயிருக்கும். பாருங்கள். அவ்வாறே தான் இருக்கும்.

66180 இப்பொழுது என்னால் சுகப்படுத்த முடியாது. அந்த மனிதனால் உங்களை சுகமாக்க முடியும் என்று அவன் கூறினால், அவன் தவறாயிருக்கிறான். நீங்கள் ஏற்கனவே சுகமடைந்துவிட்டீர்கள். ஆனால் அது இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தை அடையாளங் கண்டு கொள்ளுதல் ஆகும். இப்பொழுது, அவரை மறுபடியும் காண்பேன் என்றும், அவர் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாதலால், மார்த்தாள் தன்னுடைய வாஞ்சையை பெற்றுக் கொள்வாள் என்றும் அவள் அறிந்துக் கொண்டிருந்தாளானால், அதைப் போன்ற விசுவாசத்தை இன்றிரவில் நம்மால் பெற்றுக் கொள்ள முடியாதா? நிச்சயமாகவே, நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர் வந்துள்ளார். அவர் வந்திருக்கிறார். அவர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் வந்துள்ளார். அந்த விதமாகத்தான் அவர் இருக்கிறார். இப்பொழுது நீங்கள் ஜெபியுங்கள். 181 பாருங்கள், இங்கே மேலே, இங்கு என் பக்கத்தில் நான் யாரையாவது நிறுத்தி ஜெபித்துக் கொண்டிருந்தால்: கட்டிடம் முழுவதுமே அநேக ஜனங்கள் ஜெபிக்கிறதை கவனித்தேன். நீங்கள் அதை கவனிக்க மாத்திரம் செய்ய வேண்டும். “சகோதரன் பிரான்ஹாமே…” என்று நீங்கள் கூற முடியாது. இல்லை ஐயா, என்னால்—என்னால் அதைச் செய்ய முடியாது. நீங்கள் அதை ஒரு சொப்பனமாகத் தான் காண முடியும். புரிகிறதா? நீங்கள் சொப்பனம் காணலாம். ஒருவேளை தேவன் என்னைக் குறித்த ஒரு சொப்பனத்தை உங்களுக்கு அளிக்கலாம், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், ஆனால் நீங்களாகவே அதைக் காண முடியாது. நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாமே, இப்பொழுது உம்மைக் குறித்த ஒரு சொப்பனத்தை நான் காணப் போகிறேன்” என்று கூற முடியாது. இல்லை, அதை உங்களால் செய்ய முடியாது. அதே போல என்னாலும் ஒரு தரிசனத்தை காண முடியாது. உங்களுக்கு ஒரு சொப்பனத்தை அருளுகின்ற அவர்தான், அந்த ஒருவர்தான் அதைச் செய்ய வேண்டும். ஒரு தரிசனமும் அந்தவிதமாகவே உள்ளது.

67182 இங்கே வரிசையின் கடைசியில் மூட்டு வீக்கத்தோடு ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். அவர் தன்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசிப்பாரேயானால், தேவன் அவரை அந்த மூட்டு வீக்கத்திலிருந்து குணமாக்குவார். ஐயா, அவர் அதைச் செய்வார் என்று நீர் விசுவாசிக்கிறீரா? வரிசையின் கடைசியில் அங்கே அமர்ந்திருக்கும் அந்த மெக்ஸிக்கோ மனிதனே, நீர் அதை விசுவாசிக்கிறீரா? சரி ஐயா. 183 உமக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த பெண்பணி, அவளுக்கும் கூட மூட்டு வீக்கம் உள்ளது. பெண்மணியே, தேவன் உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? (இதில் சத்தம் எதிரொலிக்கிறதா? ஜனங்களால் அதைக் கேட்க முடியாது என்று நான் ஐயமுறுகிறேன்.) நீங்கள் விசுவாசிப்பீர்களா? சரி. 184 அவளுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த மற்றொரு மெக்ஸிக்கோ பெண்மணியைக் குறித்து என்ன? அவள் ஒரு வயிற்றுக் கோளாறினால் அவதியுற்றுக்கொண்டிருக்கிறாள். பெண்மணியே, தேவன் உன் வயிற்றுக் கோளாறை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? 185 அவள் சுகத்தைப் பெற்றுக் கொண்டாள். அந்த ஒளி அங்கு கீழே செல்வதை நான் கண்டபோது, அது சம்பவித்துவிட்டது என்றே அது பொருட்படுத்துகிறது. ஆம். அதுதான் இது. அது அவளைத் தொட்டது. அங்கு தான் அது சுழன்றது [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] …அது அதைச் செய்கிறது. பார்த்தீர்களா? அவரால் விசுவாசத்தை காண முடியும் போதே! பாருங்கள், “அவர்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தமாக அவரால் அநேக காரியங்களை செய்ய முடியவில்லை.”

68186 இங்கு ஒரு பெண்மணி அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் பயமடைந்திருக்கிறாள். அவள் பயமடைந்திருக்க வேண்டும். அவளுக்கு புற்று நோய் பீடித்துள்ளது, அது மிகவும் மோசமாக உள்ளது. உன்னை எனக்குத் தெரியாது, ஆனால் தேவன் உன்னை அறிவார். இந்தப் புற்று நோயைக் குறித்தோ, அல்லது மற்ற வேறெதாவதைக் குறித்தோ தேவனால் எனக்கு கூற முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? என்னை நோக்கிப் பார். இங்கு அநேகர் ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். நீ பார், அதற்காகத்தான் நான் இதைக் கூறுகிறேன். எங்களை நோக்கிப் பார். இப்பொழுது, ஆம். நீ இந்த இடத்தைச் சேர்ந்தவள் அல்ல, இது உன்னுடைய வீடல்ல. நீ கலிபோர்னியாவிலுள்ள போர்ட்வில் என்று அழைக்கப்படும் ஒரு இடத்திலிருந்து வருகிறாய். அது உண்மை. நீ யார் என்பதை தேவனால் எனக்கு கூற முடியும் என்று நீ விசுவாசிக்கிறயா? அவர் அறிவார். உன்னுடைய பெயர் திருமதி. விந்த்தாம். அது உண்மை. இப்பொழுது விசுவாசி, அந்தப் புற்று நோய் உன்னைவிட்டு நீங்கி விடும். நீ விசுவாசிக்கக் கூடுமனால்? அதைத்தான் நீ செய்ய வேண்டும் என்று தேவன் கேட்கிறார். நீ விசுவாசிக்கக் கூடுமானால்! 187 உன் முழு இருதயத்தோடும் அதை நீ விசுவாசிக்கின்றாயா? இங்கு உள்ள இந்தப் பிரிவில் யாரோ ஒருவர், உன்னால் விசுவாசிக்க முடியாதா? போதகர் வந்து, உன்னை அழைத்திருக்கிறார். அவர் உன்னை மரணத்திலிருந்து ஜீவனுக்கு, சுகவீனத்திலிருந்து சுகத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்.

69188 இங்கே பின்னாலே அமர்ந்து கொண்டு தலையைத் தாழ்த்தி ஜெபித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் உள்ளார். அவர் உண்மையாகவே தனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கவில்லை. அவர் யாரோ ஒருவரைக் குறித்தே ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அது ஒரு—ஒரு சிறுமி. அது அவருடைய மகள். ஐயா, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு உங்களுடைய காலில் தொல்லை உள்ளது. உங்களுக்கு உங்களுடைய முட்டியில் தொல்லை உள்ளது. அது உண்மை. நீர் அழ வேண்டியதில்லை. அங்கே உம்பண்டையிருப்பது அவராகும். உம்முடைய மகள் ஒரு மருத்துவமனையில் இருக்கிறாள், அவள் இருக்கிறாளல்லாவா? காச நோய் காரியமாகவே. நீங்கள் விசுவாசியுங்கள். நீர் விசுவாசிக்கின்றீரா? போதகர் வந்திருக்கிறார், அவளை அழைக்கிறார். அவளுடைய தகப்பன் என்ற காரணத்தினால் நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீர் விசுவாசிப்பீரா? அவர் இன்றிரவு அவளையும், உங்களையும் சந்திப்பாராக. அது முற்றுப் பெறுவதாக. 189 ஒரு சிறுபையன், மாநிறம் கொண்ட முகத்தையுடைய ஒரு சிறிய பையன் இங்கிருக்கிறான். அவன் தோல் வியாதியினாலும், மூச்சுத் தடையுடன் கூடிய இருமலினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறான், ஒரு சிறிய மெக்ஸிகன் சிறுவன், அங்கு அமர்ந்திருக்கும் மெக்ஸிக்கன் பையன், அவன் இவ்விடத்தைச் சேர்ந்தவனல்ல. அவன் சான் ஜோஸிலிருந்து வருகிறான். மகனே நீ விசுவாசிக்கிறாயா? மற்றொரு காரியம், உன்னுடைய தகப்பனார் இங்கு உன்னோடு உள்ளார். அவர் ஒரு ஊழியக்காரர். அது உண்மை. உன்னுடைய பெயர் என்னவென்பதை தேவனால் என்னிடத்தில் கூற முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? அது உன்னை உண்மையாகவே பலமாக விசுவாசிக்கச் செய்யுமா? உன்னுடைய பெயர் ரூபன். இப்பொழுது விசுவாசி. ஊ—ஊம். தேவன் முழுமையாய் உன்னை சொஸ்தமாக்குவார். 190 போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார். ஓ பாவியே, ஓ, சுகவீனமான நபரே, போதகர் மானிடர்களில், விசுவாசிக்களுக்கிடையே வெளிப்படுத்தப்பட்டுள்ளதை நீ காணவில்லையா? தம்மை விசுவாசிக்கிற பிள்ளைகளை சுகத்திற்கு அழைக்கவே அவர் வந்திருக்கிறார். பாவியை மனந்திரும்புதலுக்குள் அழைக்கவே அவர் வந்துள்ளார். பின் வாங்கிப் போனவனே, சபை அங்கத்தினனே, போதகர் வந்திருக்கிறார். உன்னை அழைக்கிறார்.

70191 நீ அதை விசுவாசிக்கிறாயா? உன்னுடைய தேவைக்காக இப்பொழுதே நீ அதை விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிப்பாயானால், உன்னுடைய கையை உயர்த்தி “நான் என்னுடைய தேவைக்காக விசுவாசிக்கிறேன்” என்று கூறு. அதன்பின்னர் நீ இப்பொழுதே எழுந்து நின்று அதை ஏற்றுக் கொள். போதகர் வந்திருக்கிறார். உன்னை அழைக்கிறார். நீ யாராயிருந்தாலும் சரி. உனக்கு எந்த தேவையாயிருந்தாலும் சரி, போதகர் வந்திருக்கிறார், அவர் உன்னை அழைக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 192 அந்த பெண் ஊருக்குள் போய் “என்ன தவறாயிருந்தது என்று எனக்குச் சொன்ன ஒரு மனிதனை வந்துப் பாருங்கள்” என்றாள். நீங்கள் ஊருக்குள் செல்லவேயில்லை. நீங்களே வந்து அதைப் பார்த்துள்ளீர்கள். ஆதலால் போதகர் வந்திருக்கிறார். உன்னை அழைக்கிறார். 193 உங்களுடைய கரங்களை உயர்த்தி, அவரை ஸ்தோத்தரித்து, “கர்த்தராகிய இயேசுவே, நான் ஒரு பாவி; என்னை மன்னியும். நான் ஒரு பின்வாங்கிப்போனவன்; கர்த்தாவே என்னைத் திரும்ப சேர்த்துக் கொள்ளும், எனக்கு பரிசுத்த ஆவி தேவை; என்னை நிரப்பும்; நான் சுகவீனமாயிருக்கிறேன், என்னை சுகப்படுத்தும். நான் முடமாயிருக்கிறேன்; என்னை சுகப்படுத்தும்” என்று கூறுங்கள். போதகர் வந்திருக்கிறார் உன்னை அழைக்கிறார். இப்பொழுது உங்களுடைய கரங்களை உயர்த்தி, அவரைத் துதியுங்கள். ஆமென்.

71194 “நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன்” என்ற பாடலுக்கு எங்களுக்கு ஒரு சிறிய சுருதியைத் தாருங்கள். உங்களுக்கு அந்தப் பாடல் தெரியுமா? “நான் அவரைத் துதிப்பேன்.” உங்களுக்கு அது தெரியும், உங்களுக்கு தெரியுமல்லவா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன், ஓ, பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைத் துதிப்பேன்; ஜனங்களே நீங்கள் எல்லோரும், அவருக்கு மகிமையை செலுத்துங்கள், ஏனென்றால் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் போக்கியுள்ளது. 195 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர் இங்கிருக்கையில், இப்பொழுது நீங்கள் அவரிடத்தில் பாட விரும்பமாட்டீர்களா? அவர் கட்டிடத்தினூடாக ஒரு ஆவியாய் அசைவாடுகிறார். அவர் உங்களுடைய இருதயத்தை அறிந்திருக்கிறார், உங்களைக் குறித்த எல்லாவற்றையுமே அறிந்திருக்கிறார். நாம் அதை நம்முடைய முழு இருதயத்தோடு அவரண்டைப் பாடுவோமாக. நான் அவரைத் துதிப்பேன் (நீங்கள் அதைப் பாடும்போது உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள்), நான்… (இப்பொழுது அவரை அப்படியே துதியுங்கள்) அவரைத் துதிப்பேன். ஓ, பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைத் துதிப்பேன்; ஓ, ஜனங்களே நீங்கள் எல்லோரும் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், ஏனென்றால் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் போக்கிற்று. 196 ஓ, பெண்மணியே, சக்கர நாற்காலியிருக்கும் நீ, நீ இன்னும் சற்று சரியாக அவரை விசுவாசிப்பாயானால். “நான்…” இன்னும் ஒரு விசை நாம் அதைப் பாட முயற்சிப்போம். நான் ஒரு காரியத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன், ஓ, பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை துதிப்பேன்; ஜனங்களே நீங்கள் எல்லோரும் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், ஏனென்றால் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் போக்கிற்று. 197 இப்பொழுது நாம் அதை மீண்டும் பாடுகையில், திரும்பி யாருடைய கரத்தையாவது பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நாம் அதைப் பாடுகையில், “நான் அவரைத் துதிப்பேன்” என்று பாடுவோம். வாருங்கள் இப்பொழுது யாவரும் சேர்ந்து பாடுவோம். நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன், பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைத் துதிப்பேன்; ஜனங்களே நீங்கள் எல்லொரும் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், ஏனென்றால் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் போக்கிற்று.

72198 ஓ, பாவியான நண்பனே, இப்பொழுதே நீ இங்கு நடந்து வரமாட்டாயா? ஜனங்களே நீங்கள் எல்லோரும் வந்து அவருக்கு துதியை செலுத்துங்கள். அவரை இரட்சகராக அறிக்கை செய்ய விரும்புகிற ஜனங்களே நீங்கள் எல்லோரும், அவருடைய சமூகத்தில், பரிசுத்தவான்கள் ஆவியில் ஆராதித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் இங்கு வந்து நிற்கமாட்டீர்களா? “நான் இன்றிரவு சாட்சி கொடுக்க விரும்புகிறேன். நான் அவரைத் துதிக்க விரும்புகிறேன். நான் வர விரும்புகிறேன். அவரைக் குறித்து நான் வெட்கமடைவதில்லை. இங்கு அவர் பிரசன்னமாயிருக்கையில் நான் அவரை என்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன் என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறுங்கள். நாங்கள் அதைப் பாடுகையில் வாருங்கள். நான் அவரைத் துதிப்பேன், (நீங்கள் வரமாட்டீர்களா?) நான் அவரைத் துதிப்பேன், ஓ, பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவரைத் துதிப்பேன்; ஜனங்களே நீங்கள் எல்லோரும் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், ஏனென்றால் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் போக்கிற்று.

73199 ஓ, அது தான் பெண்மனியே, வா, வேறு யார் இன்னும் கிறிஸ்துவின் பிரசன்னத்திற்குள் வரப்போவது? சகோதரியே, இங்கே வாருங்கள், இங்கு நில்லுங்கள். 200 இன்னும் மற்ற நபர் யாராவது அவரை உங்களுடைய இரட்சகராக இப்பொழுதே வெட்கப்படாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்கள். அவர், “மனுஷர் முனபாக என்னைக் குறித்து நீ வெட்கப்பட்டால், என்னுடைய பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர் முன்பாகவும் உன்னைக் குறித்து நான் வெட்கப்படுவேன்” என்று கூறினார். இப்பொழுது நீ அவரைக் குறித்து வெட்கமடையாதிருப்பாயானால், அவர் இங்கிருக்கும் போதே, அவரை உன்னுடைய இரட்சகராக நீ ஏற்றுக் கொள்வாயானால்! நீ அவரை கண்டிருக்கிறாய். அது மிகப் பரிபூரணமானது, வார்த்தைதாமே அதை வெளிப்படுத்தினது. பரிசுத்தவான்கள் இப்பொழுது ஆராதித்துக் கொண்டிருக்கையில் வாருங்கள். நீங்கள் வரமாட்டீர்களா? 201 ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்கு ஒரு வயோதிகப் பெண்மணி வருகிறார்கள், மிகவும் வயதான பெண்மணி வருகிறார், நீங்கள் இப்பொழுது வரமாட்டீர்களா? நான்… (அதை இப்பொழுது பாடுங்கள்) …நான் அவரைத் துதிப்பேன்… 202 சரி, வாலிப ஜனங்களே, இதைச் சுற்றி வாருங்கள். துதியுங்கள், பெண்மணியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, அந்த விதமாகத்தான் அதைச் செய்ய வேண்டும். வாலிபர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. …பாவிகளுக்காக அடிக்கப்பட்ட; ஜனங்களே நீங்கள் எல்லோரும் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், ஏனென்றால் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் போக்கிற்று. 203 ஊழியக்காரர்கள் இப்பொழுது இந்த ஜனங்களிடத்தில் போய்க்கொண்டிருக்கையில், வேறு யாரேனும் இருந்தால் வரமாட்டீர்களா? பின்வாங்கிப்போனவரே, நீங்கள் வந்து “என் ஜீவியத்தைக் குறித்து நான் வெட்கமடைகிறேன்” என்று கூறுவீரா? அவர் இங்கிருக்கிறார். நீங்கள் என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கின்றீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். காரணம், இயேசு கிறிஸ்து நம் மத்தியில் இருக்கிறார். நீங்கள் வரமாட்டீர்களா? அவருக்கு மகிமையை செலுத்துங்கள்… (நீங்கள் வந்து அவருக்கு மகிமையை செலுத்துவீர்களா?) …ஜனங்களே, ஏனென்றால் அவருடைய இரத்தமே…கழுவியுள்ளது.

74204 மார்த்தாளே, இப்பொழுது நீ வந்து கொண்டிருக்கிறாயா அல்லது மரியாளுடன் நீ வீட்டிலேயே இருக்கப் போகின்றாயா? நீ ஏதோ ஒரு ஸ்தாபனத்தில் தங்கி “ஓ, என்னுடைய சபை இதை இந்த விதமாக விசுவாசிப்பதில்லை” எனக் கூறப் போகிறாயா? கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். நீ அங்கு அமர்ந்து அதைக் கூறப் போகிறாயா? அல்லது நீ வெளியில் வரப்போகிறாயா? “நல்லது, நான் உனக்குச் சொல்வேன், நான்…” இல்லை. இன்றைக்கே, இது தான் அந்த வேளையாயுள்ளது. யவீருவின் குமாரத்திக்கு நேர்ந்தது போல மரணம் உன்னை சுற்றி வட்டமிட்டுத் தொங்குகிறது. 205 இப்பொழுதே வா! பின்வாங்கிப்போனவனே, இப்பொழுதே வா. பாவியே, இப்பொழுதே வா, இதுதான் நேரம். போதகர் வந்திருக்கிறார். அவர் உன்னை அழைக்கிறார். அவர் உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறார். நீங்களோ, “நான் அதை எப்படி அறிவேன்?” என்று கேட்கலாம். அவர் என் சத்தத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் என் சத்தத்தை வியாதிகளையும், துன்பங்களையும், மற்றக் காரியங்களையும் கூற பயன்படுத்துவாரானால், அவர் பாவத்திற்காகவும் கூட அழைத்துக் கொண்டிருக்கிறார் என்று உனக்குத் தெரியவில்லையா? வெளியே வா! இப்பொழுதே வா, இதுவே நீ பெற்றுக் கொள்ளும் கடைசி தருணமாய் ஒரு வேளை இருக்கலாம்.

75206 இன்னும் ஒரு விசை, நண்பர்களே, இங்கு வர வேண்டியவர்கள் நிறையபேர் உள்ளனர். நான் இந்த விதமாக உங்களை அழைத்து, உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. அது சரியல்ல. நீங்கள் ஒருகால் சில வேளைகளில்… பரிசேயர்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் இரட்சிக்கப்படவில்லை. நீங்களும் அதேபோல நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுதே வாருங்கள். 207 நிச்சயமுடையவர்களாயிருங்கள்! அதை அரைகுறை சந்தேகத்தோடு ஏற்றுக் கொள்ளாதீர்கள், அவ்வாறு செய்யாதீர்கள். அதைக் குறித்து சிறிது சந்தேகம் உன் சிந்தையில் இருக்குமானால், அதற்காக வேறெந்த சந்தர்ப்பத்தையும் எடுக்காதே. இப்பொழுதே வா. ஊற்றானது திறந்திருக்கையில், பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கையில், இப்பொழுதே இதுதான் அந்த நேரமாயுள்ளது. போதகர் வந்திருக்கிறார். அந்த சிறிய சந்தேகத்தைக் குறித்துத்தான், அதாவது, “நீ சந்தேகித்துக் கொண்டிருக்கிறாய்” என்று அவர் உன்னிடம் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அதை விட்டுவிடு. இப்பொழுதே வா. போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார். அது உண்மை, அப்படியே வந்து கொண்டேயிரு, தொடர்ந்து வந்து கொண்டேயிரு. நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன், (நீங்கள் வந்து அவருக்கு துதியை செலுத்தமாட்டீர்களா?) பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை துதிப்பேன்; ஜனங்களே நீங்கள் எல்லோரும் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், ஏனென்றால் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் போக்கிற்று. 208 இப்பொழுது பாவிகள் அவரை உரிமை கோர வந்து கொண்டிருக்கையில், நாம் இப்பொழுது அதைப் பாடுகையில், ஜனங்கள் அவருக்கு துதி செலுத்தட்டும். உங்களுடைய கரங்கள் உயர்த்தியிருப்பதோடு, இப்பொழுது யாவரும் சேர்ந்து அவரைத் துதித்துப் பாடுவோம். நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன். பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை துதிப்பேன்! 209 அவருக்குத் துதியைச் செலுத்துங்கள்! இங்கு சுற்றிலும் உள்ள ஜனங்களே நீங்கள் ஜெபியுங்கள், உங்களை மன்னிக்கும்படி அவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள். அதைத்தான் அவர் செய்வார். போதகர் வந்திருக்கிறார், உங்களை அழைக்கிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 