COD 19 கேள்விகளும் பதில்களும்

64-0823M

நம நமமடய தலகள ஜபததககக வணஙககயல, சறற நரம நம நனற வணணமக இரபபமக. கரபயளள பதவகய தவன, எஙகள இரதயததன ஆழததலரநத இககல வளயல நஙகள உமகக நனற சலததகறம, ஏனனல எஙகள ஜபஙகளகக பதலளகக நர வலலவரயம சததமளளவரயம இரககறர. நர ஏறகனவ எஙகளகக சயதளளவகளககக எஙகள நனறயறதல நர ஏறறககளள வணடமனற நஙகள ஜபககறம. இககல வளயல எஙகளகக நர உதவ சயவர எனற மகநத எத

COD 19 கேள்விகளும் பதில்களும்

64-0823Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி1751964-08-23

COD 19 கேள்விகளும் பதில்களும்

64-0823Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி1751964-08-23

1 நாம் நம்முடைய தலைகளை ஜெபத்துக்காக வணங்குகையில், சற்று நேரம் நாம் நின்ற வண்ணமாக இருப்போமாக. கிருபையுள்ள பிதாவாகிய தேவனே, எங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து இக்காலை வேளையில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், ஏனெனில் எங்கள் ஜெபங்களுக்கு பதிலளிக்க நீர் வல்லவராயும் சித்தமுள்ளவராயும் இருக்கிறீர். நீர் ஏற்கனவே எங்களுக்கு செய்துள்ளவைகளுக்காக எங்கள் நன்றியறிதலை நீர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். இக்காலை வேளையில் எங்களுக்கு நீர் உதவி செய்வீர் என்று மிகுந்த எதிர்நோக்குதலுடன் நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம், இந்த கட்டிடத்தின் நுழைவாயில்களைவிட்டு நாங்கள் செல்லும்போது, நாங்கள் உள்ளே வந்ததைக் காட்டிலும் வித்தியாசமான ஒரு நபராக வெளியே செல்வோமாக. பரிசுத்த ஆவியானவர்தாமே இக்காலையில் எங்களை, எங்களுடைய தன்மைகளை வனைந்து, உம்முடைய ராஜ்யத்தின் பிரஜைகளாக எங்களை ஆக்குவாராக ஏனென்றால் நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (உட்காரலாம்.)

22 சற்று தாமதித்து இங்கு வந்ததற்காக வருந்துகிறேன், ஆனால் இக்கட்டிடத்துக்கு வருவதற்கு முன்பு, நான் சில காரியங்கள் செய்ய வேண்டியதாயிருந்தது, ஏராளமான சுகவீனமான ஜனங்களையும் மற்றும் நேர்காணல் பேட்டிகளையும் காண வேண்டியதாய் இருந்தது. 3 எனவே, இக்காலை வேளையில் இங்கு வந்து அருமையான ஜனங்களாகிய உங்கள் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எனவே எங்களுக்கு அருமையான பொருட்களை அனுப்பித் தந்த அந்த சபையோருக்கு…அதற்கு என் மனைவிக்காக வெகுமதியும் மற்றும்…எனக்கு மான் வேட்டையாடும் தன்னுடைய துப்பாக்கியை அனுப்பித் தந்த அந்த சகோதரனுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். கர்த்தர் அவரை ஆசீர்வதிப்பாராக. அவருடைய…அவருக்கு வயதாகிவிட்டதென்றும் அந்த துப்பாக்கியை அவர் இனி உபயோகிக்கப் போவதில்லை என்றும் கூறி, அதை நான் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினார்; எனவே அதற்காக நான்—நான் அதற்காக…அதற்கு நிச்சயமாகவே நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் உயிரோடிருக்கும் வரைக்கும், சகோதரனே, என்னால் உபயோகிக்க முடியும் வரைக்கும், அதை நான் வைத்திருப்பேன். உங்களைக் குறித்து நினைத்து உங்களுக்காக ஜெபம் செய்யாமல் அதை நான் கையில் ஒருபோதும் எடுக்கமாட்டேன்.

34 இப்பொழுது, நாம்…இன்றைக்கு அநேக காரியங்கள் செய்ய வேண்டியதாயுள்ளது, இங்கு நான் இருந்தபோது, சில கேள்விகளைப் பெற்றுக்கொண்டு, என் சபையோரின் இருதயங்களிலும், வெவ்வேறு நபர்களின் இருதயங்களிலும் என்ன உள்ளது என்பதைக் கண்டுகொள்ளலாம் என்று நான் எண்ணினேன். நான் நிச்சயம் கேள்விகளைப் பெற்றுக்கொண்டேன்! ஆயிரம் வருட அரசாட்சி தொடங்கும் வரைக்கும் பதிலளிக்க போதுமான கேள்விகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன! இத்தனை கேள்விகளைப் பெற்றுக்கொள்வேன் என்று நான் நினைக்கவேயில்லை. இங்கு ஏறக்குறைய நூறு கேள்விகளை நான்—நான் பெற்றுள்ளேன், இன்று காலையில் நூற்றுக்கும் அதிகமான கேள்விகள் வந்துள்ளன. எனவே நான் அவைகளுக்கு சரியான விதத்தில், ஒருபோதும் பதில் சொல்ல முடியாது என்றே நான் எண்ணுகிறேன், ஏனென்றால்…அவை—அவை நல்ல கேள்விகள், உண்மையிலேயே நல்ல கேள்விகள். 5 இப்பொழுது, சில கேள்விகளை பகிரங்கமாக எல்லோர் முன்னிலையிலேயும் படிக்க இயலாது, எனவே, உங்களுக்குத் தெரியும், அவர்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்…என்னால் சுற்றி வளைத்து சொல்ல முடியாதவைகளை…அவை குடும்ப பிரச்சினைகள் மற்றும்… நீங்கள் புரிந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இருவரையும் என்னைத்—என்னைத் தனியாக பேட்டிக் காண கேட்டுக்கொண்டிருக்கிறேன், அப்பொழுது நான் இவ்விஷயங்களைக் குறித்து அவர்களுடன் தனியாகப் பேசலாம். அவை கெட்ட காரியங்கள் அல்ல; அவை குடும்பத்தில் தீர்க்க வேண்டிய காரியங்கள், அது மனித இயல்பு மற்றும் நாம் போய்க் கொண்டிருக்கிற இந்த வாழ்க்கை ஓட்டத்தில்…நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த காலம் இவைகளை விளைவிக்கிறது, அதனுடன் இப்பிரச்சினைகள் தொடர்பு கொண்டுள்ளன மானிட குடும்பத்தில்; அவைகளுக்குப் பதிலளிக்கப்பட வேண்டும். எனவே, சிறந்த முறையில் நான் அவைகளுக்கு பதிலளிக்க என்னாலான ஒவ்வொரு காரியத்தையும் செய்வேன்.

46 சில நேரங்களில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அதற்கு ஒரு விதமாக நீண்ட நேரம் ஆகிவிடுகின்றது; ஆனால் அவைகளில் எந்த ஒன்றையும் விட்டுவிட எனக்கு மனதில்லை. அவை ஒவ்வொன்றுக்கும் என்னால் முடிந்த வரைக்கும் பதில் கூறுவேன். இப்பொழுது, அவைகள்…அவைகளை நான் இங்கே ஒரு பையில் வைத்திருக்கிறேன், அவைகளுக்கு பதிலளிக்க, எனக்குத் தேவைப்பட்டால், ஒரு வேதவசனத்தை அதில் குறித்து வைத்து அதை திரும்பவும் அந்த பையில் போட்டுவிடுவேன். நேற்று பகல் பூராவும், நேற்றிரவு பெரும்பாலான நேரத்திலும், அதன் பிறகு இன்று காலை விடியும் வரைக்கும் அவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்…இன்று காலையில் அவைகளைப் பார்க்கிலும் இரண்டு மடங்கு கேள்விகள் எனக்கு வந்து சேர்ந்துள்ளன. எனவே, கர்த்தருக்கு சித்தமானால், நாம் என்ன செய்வோமென்றால், என்னால் முடிந்த வரை நடுப்பகல் வரைக்கும் அவைகளுக்கு பதிலளித்து விட்டு, அதன் பிறகு நாம் கலைந்து சென்றுவிட்டு, மறுபடியும் இன்று மாலையில் வந்து, என்னாலான வரைக்கும் அவைகளை இன்றிரவு முடிக்க முயற்ச்சிக்கலாம் என்று நான் நினைக்கிறேன், என்னால் அவைகளை…நான் முடித்துவிட முடியுமா என்று பார்ப்பேன். ஒரேயடியாக இக்கேள்விகள் அனைத்துக்கும் பதிலளித்து உங்களை நான் தாமதிக்கும்படிக்குச் செய்து தண்டிக்க வேண்டியதில்லை. நீங்கள் வெளியே சென்று, ஓய்வெடுத்து, சற்று சுகபெலனோடு திரும்பி வர இது உங்களுக்கு நேரத்தை அளிக்கும் என்று நான் நினைக்கிறேன், உங்களால் முடியுமானால், ஒரு சிறு உறக்கம் அல்லது அதைப் போன்ற ஏதோ காரியத்திற்குப் பிறகு நீங்கள் மறுபடியும் வரலாம். உங்களால் வர முடியாமல் போனால், ஏன், சகோதரன் ஃபிரட் சாத்மன், இதை ஒலி நாடாவில் பதிவு செய்துகொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறதா? சரி, அது அருமையானது. ஆம், அவர்கள் அந்த அறையில் ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர், மேலும்—மேலும் இந்த ஒலிநாடா, இது சரியாக பதிவாகியிருந்தால், இந்த ஒலிநாடாவை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்; அது கேள்விகளும் பதில்களும் என்று பெயரிடப்பட்டு வைக்கப்பட்டிருக்கும், ஏனென்றால் சில கேள்விகள் மிகவும் கடினமானவைகளாக இங்கு உள்ளன மற்றும் ஏதோவொரு… அவைகள் பெரும்பாலும் சபையின் உபதேசங்கள் பேரிலானவைகளாக உள்ளன.

57 இப்பொழுது, சில நேரங்களில் இந்தக் கேள்விகளுக்கு பதிலுரைக்கையில் அவை கடினமானவை என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இங்கு நிற்பதற்கு அதிகமான கிருபை அவசியமாயுள்ளது, ஜனங்களாகிய நீங்கள் உங்களுக்காக நான் கொண்டுள்ள அன்பை நீங்கள் அறிந்திருந்தால் நலமாயிருக்கும். என்னால் அதை வெளிப்படுத்திக் கூற முடியவில்லை. அதை நான் என் பிள்ளைகளுக்கும் கூட வெளிப்படுத்துகிறதில்லை; என்னுடைய மனைவிக்காக நான் கொண்டுள்ள என்னுடைய—என்னுடைய ஆழமான அன்பைக் கூட நான் தெரிவிக்க வேண்டிய விதத்தில் தெரிவிப்பதில்லை, ஏனெனில் நான்—நான் அத்தகைய சுபாவமுள்ளவன், ஒரு நேர்க்கோட்டில் நான் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கிறேன். என் முழு அன்பையும் நான் வெளிப்படுத்தும் ஒரு காரியம் மாத்திரமே உண்டு: அது சர்வவல்லமையுள்ள தேவனுக்கே. எல்லாவற்றிற்கும் மேலாக நான்—நான் முதலில் அவரையே நேசிக்கிறேன். மற்ற ஜனங்களையும் நான் நேசிக்கிறேன், ஆனால் நான்—நான்…நான் அவர் பேரில் கொண்டுள்ள அன்பை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை; அதுவே முதன்மை ஸ்தானம் வகிக்கட்டும். ஆகையால், உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கையில், என் இருயத்தில் உங்கள் பேரில் அன்பைக் கொண்டவனாய் நான் பதிலளித்துக்கொண்டிருக்கிறேன்; ஆனால் எல்லா நேரத்திலும் எனக்கு முன்பாக ஒரு காரியம் உள்ளது: அது இயேசு கிறிஸ்து (புரிகிறதா?), அவர் அதற்கு பதில் கூறும் விதத்தில் உள்ளது.

68 சில நேரங்களில் நான் பதில் கூறுகையில்…அது புண்படுத்தக் கூடும், பிரிவை ஏற்படுத்தலாம், அவ்விதம் செய்ய நினைத்து நான்—நான் செய்வதில்லை. நான் கூறினதுபோன்று, கிறிஸ்துவை எனக்கு முன்பாக வைத்து, ஒரு நோக்கத்துடன் நான் இதற்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். அது அவர் என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும் என்பதை நான்…அவருக்கு நான் கணக்கொப்புவிக்க வேண்டும். எனவே என் முதல் அன்பு அவருக்கே; என் இரண்டாவது அன்பு ஜனங்களாகிய உங்களுக்கு, எனவே நான்… தம்முடைய சொந்த இரத்தத்தினால் அவர் கிரயத்துக்கு கொண்ட அவருடைய சபைக்கு. அவர் தம்மில் அன்புகூருகிறதை விட அதிகமாக உங்கள் பேரில் உண்மையில் அன்புகூருகிறார், ஏனெனில் அவர் தம்மையே உங்களுக்காக கொடுத்தார். நீங்கள் அவருடைய இரத்தத்தினால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்கள், அதை நான்—நான் எனக்குத் தெரிந்த வரையில் மிகவும் கவனமாகவும் உத்தமமாகவும் கையாளுகிறேன். ஆனால் அதன்பின்னர், அவ்விதம் செய்யும்போது சில நேரங்களில் நீங்கள், “அது மிகவும் கடுமையான குறிப்பு நான்…அதைப் பற்றி…அது நேரடியான தாக்குதல்” என்று நினைக்கக் கூடும். அவரை என் மனதில் கொண்டவனாய் (புரிகிறதா?) அது அவ்விதமாகத்தான் இருக்க வேண்டும் என்று மற்றவர்…எல்லோரும் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதைச் செய்கிறேன். ஜனங்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும் என்னும் உறுதிகொள்வதற்காகவேயல்லாமல் அது எதையும்—எந்தக்காரியத்தையும் புண்படுத்துவதற்காக அல்ல, ஒவ்வொருவரும் அதை அந்த வகையில் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது, இங்கு நம்முடைய சிந்தனைகளில் என்ன உள்ளது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். 9 இன்று காலையில் நீங்கள் எல்லோரும் கூடி வந்துள்ளதை நான் காண்கிறேன் மற்றும் எல்லாவிடங்களிலும் ஜன நெருக்கம் உள்ளது, மற்றுமொரு சபையில் ஜனங்கள் நிரம்பி வழிகின்றனர் என்று நான் நினைக்கிறேன். நம்முடன் தொடர்பு கொண்டுள்ள அந்த சபை ஒரு—ஒரு வானொலி அல்லது ஒரு—ஒரு தொலைபேசி இணைப்பைப் பெற்றுள்ளனர். அது…அந்த சபை இன்று காலையில் ஜனங்களால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது என்று, நான் கேள்விப்படுகிறேன். சகோதரன்…இல்லை வேறொரு சகோதரனின் ஒரு—ஒரு சபையில், இங்கிருந்து ஜனங்கள் அங்கு சென்றுள்ளதால் இவ்விதமான நிரம்பி வழிதலை அவர் பெற்றிருக்கிறார். அதன் விளைவாக இங்குள்ள நீங்கள் சுவற்றின் அருகில் நின்றுகொண்டிருக்க வேண்டியதில்லை.

710 இப்பொழுது இன்றிரவு, கர்த்தருக்கு சித்தமானால், நாம் ஒரு…நாம் இன்றிரவு நேரத்தோடே தொடங்குவோம். போதகரையும் மற்றும் அந்த—அந்த நிர்வாகக் குழுவினரையும் அவர்கள் விரும்பினால்…நான் அனுமதி கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்…இன்றிரவு சிறிது நேரத்தோடே தொடங்குவோம், ஏனெனில் ஜனங்கள், இங்கு வந்துள்ள அவர்களில் சிலர், அவர்கள் வீடு திரும்ப நீண்ட தூரம் காரோட்டிச் செல்ல வேண்டும். நான் கூடுமானால், ஒரு மணி நேரம் முன்பு தொடங்கி சீக்கிரம் முடித்துவிட நான் விரும்புகிறேன். எனவே நீங்கள்…நீங்கள் உண்டு முடித்த பிறகு ஆறு மணிக்குப் பிறகு அல்லது எந்த நேரத்திலும், ஏன், நான் தொடங்கிவிடுவேன். புரிகிறதா? நீங்கள் வழக்கமாக ஏழு முப்பது மணிக்கு தொடங்குகிறீர்கள், இல்லையா? நாம், நாம், நான் ஏழு மணிக்கெல்லாம் மேடையின் மேல் வந்துவிடட்டும். புரிகிறதா? அப்பொழுது எட்டு அல்லது எட்டு முப்பது மணிக்கு முடித்துவிடுவோமானால், நீங்கள் நேரத்தோடே வீடு திரும்பி நாளைய வேலைக்காக ஆயத்தப்படலாம், நாளை என்று ஒன்று இருக்குமானால். 11 இப்பொழுது, கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை அபரிமிதமாக ஆசிர்வதிப்பாராக, இந்த ஆராதனை முடிந்தவுடன் நான் உள்ளே சென்று மற்ற கேள்விகளுக்கு விடை கண்டு உங்களுக்கு அறிவிக்க முயல்வேன். நான் அவைகளை, வெறுமென ஒரு சிறு—சிறு குறிப்புகள் போன்றவைகளாக எழுதி வைத்துக் கொள்கிறேன், என்னால்—என்னால்…வேத வசனங்கள் மறந்துவிடுகின்றன. நான் அறையில் படித்துக் கொண்டிருக்கும்போது, (அதை எங்காவது குறிப்பிட வேண்டுமென்றால், அதை இங்கே எழுதி வைத்துக்கொள்கிறேன்) மேலும்—அதை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்கிறேன். ஆகையால், அதை ஒரு—நான் அதை ஒரு கலைக் களஞ்சியத்திலிருந்து எடுத்துக்கொண்ட ஒரு பகுதியோ, அல்லது ஏதோ ஒரு சொல் அல்லது பெயராக இருக்குமானால், அது எனக்கு முன்பாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. நிறைய புத்தகங்களை நான் கொண்டு வர வேண்டிய அவசியம் இருப்பதில்லை; அவைகளை எழுதி இங்கு வைத்திருக்கிறேன்.

812 இப்பொழுது, கேள்விக்கான விடை உங்களுக்கு திருப்தி அளிக்காமல் போனால், பாருங்கள், அப்பொழுது நான், ஒருக்கால், நான் ஒரு தவறு செய்திருக்கக் கூடும். புரிகிறதா? ஒருக்கால் நான்—நான்—நான் ஒரு தவறு செய்திருக்கக் கூடும், ஏனெனில் என் அறிவுக்கு எட்டின வரைக்கும் இவைகளுக்கு விடையளிக்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கான விடைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதகர்கள், அல்லது குறிப்பிட்ட சபையின் சபையோர் இதை அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்…இதை நான் விரும்பவில்லை… இது உங்கள் போதகத்துக்கோ அல்லது உங்கள்—உங்கள்—உங்கள் சபையாருக்கோ பாதகம் விளைவிக்குமானால், இது இங்கே கூடாரத்தில் எங்கள் போதகமாயுள்ளது என்பதை சபையோர் இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இதை நான் எந்த குழுவினரின் மேலும் சுமத்த விரும்பவில்லை. என் இருதயத்தில் நான்—நான்—நான் ஒரு கிறிஸ்தவனாயிருக்க விரும்புகிறேன், அதாவது நான் விசுவாசிப்பதைப் போதிக்கிறேன். நான் எதை உறுதியாய் விசுவாசிக்கிறேனோ, அதில் நிற்கிறேன். அதன் பேரில் நான் ஒப்புரவானால், நான் கிறிஸ்துவுக்கு ஒரு துரோகியாகவும், உங்களுக்கு ஒரு மாய்மாலக்காரனாகவும் இருப்பேன்; சத்தியம் எது என்று நான் விசுவாசிப்பதன் பேரில் நான்—நான் விசுவாசமுள்ளவனாய் நிற்க வேண்டும். ஆனால் மற்ற ஒவ்வொரு மனிதனுக்கும் அவ்விதமே செய்ய உரிமையுண்டு. தேவன் நம்மெல்லாருக்கும் நியாயாதிபதியாயிருக்கிறார்.

913 இப்பொழுது, நாம் தொடங்குவதற்கு, முன்பு, பால் பாய்ட் என்ற, ஒரு அருமையான வரலாற்றாசிரியரைக் குறிப்பிடலாம் என்று நான் எண்ணினேன். உங்களில் பலருக்கு அவரைத் தெரியும்; அவர் இக்கூடாரத்துக்கு வருபவர். அவர் எருசலேமுக்குச் சென்று உலக சந்தையைக் கண்டு விட்டு, இப்பொழுது தான் திரும்பி வந்தார். அவர் ஒரு—ஒரு தீர்க்கதரிசனப் போதகர், அவர் ஒரு வரலாற்றாசிரியர், மிகச் சிறந்தவர்களில் ஒருவர். அவர் மென்னோனைட் குழுவைச் சேர்ந்த ஒரு சகோதரன், அவர் அவ்வாறிருந்தார், மேலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு நண்பராகிவிட்டார். நான் தீர்க்கதரிசனத்தைக் குறித்து கூறுபவைகளை மிகவும் கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டு, அது நிறைவேறுகிறதா என்று கவனித்து வருகிறார். 14 இப்பொழுது, அவர் எனக்கு இங்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார் (அவர் மறுபடியுமாக இப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வந்திருக்கிறார்), அது இன்று காலையில், அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது என்று, நான் நினைக்கிறேன். அவர் தலைசிறந்த தீர்க்கதரிசனங்களைக் குறித்து இங்கே செய்தித்தாள்களில் ஒன்றில், அல்லது ஏதோ ஒன்றில் அல்லது மற்றதில் அவர் எழுதி வைத்திருக்கிறார். அவர் ஐந்தாவது காரியத்தை குறிப்பிடுகிறார், அதுதான் என்று நான் நினைக்கிறேன், அதாவது நான் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கண்ட விஞ்ஞானத்தின் சாதனை அல்லது சரியாக கூறினால், முன்னேற்றத்தைக் குறித்து அவர் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். உங்களில் எவரேனும் நினைவில் வைத்திருந்தால், அவைகளை நீங்கள் எழுதி வைத்திருக்கிறீர்கள். அவைகளை நான் புத்தகங்களில் எழுதி வைத்திருக்கிறேன். கர்த்தர் என்னிடம் சொன்ன…என்னிடம் சொல்லுகிற ஒவ்வொரு காரியத்தையும், நான் அதை எழுதி வைத்துக்கொள்கிறேன், அதைக் கீழே-…ஒரு முக்கியமான அல்லது அந்த காரியத்தை என்னால் ஜனங்களுக்கு சொல்ல முடியும்.

1015 இன்று காலையில் நான் நினைத்தேன், நாம் இதை தொடங்குவதற்கு முன்பு…இது பிரசங்கம் அல்ல, ஆனால் நமது இருதயங்களில் என்ன உள்ளதென்று ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்ள, இங்கு நாம் கூடி வந்திருக்கிறோம். சபை காலங்களின் வழியாக வந்துள்ள நாம், இவைகளை இப்பொழுது அலசிப் பார்த்து நாம் தெளிவுபடுத்திக் கொள்வோமாக. இப்படிப்பட்ட ஒன்று அல்லது இரண்டு கூட்டங்களுக்காக இங்கு தங்கியிருந்து, ஜனங்களின் இருதயங்களில் என்ன உள்ளது என்பதைக் கண்டுகொள்வது நலமென்று நான் எண்ணுகிறேன், அதன் பிறகு நாம் அங்கிருந்து செல்லலாம். உங்களுக்கு புரிகிறதா? அதன் பிறகு மீண்டும் ஒரு தொடர் கூட்ட ஆராதனைகளுக்காக…உள்ளே செல்லலாம். கர்த்தருக்கு சித்தமானால், கூடிய சீக்கிரத்தில், நீண்ட தொடர்ச்சியான ஆராதனைகளை இந்த கூடாரத்தில் வைக்க விரும்புகிறேன். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்கும்—அதாவது வெவ்வேறு பொருள்களின் பேரில்; ஒன்று, அவர் எனக்காக வரும் வரைக்கும் அல்லது அவரைச் சந்திக்க நான் செல்லும் வரைக்கும், இவ்விதம் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கலாம். புரிகிறதா? [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] 16 நான் 1993ம் ஆண்டில் கண்ட அந்த ஏழு காரியங்களைக் குறித்து பால் பாய்ட் இங்கு எழுதியிருக்கிறார், அது நடக்கவிருந்தது. அவர் வரலாற்றாசிரியராதலால், அவரால் முடிந்தளவு, அதை தொழில் நுட்பமாக, உன்னிப்பாக கவனித்து வருகிறார். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பதையும், அவர் கவனிக்கிறார். அநேக ஆண்டுகளுக்கு முன்பாக உரைக்கப்பட்டவை நிறைவேறி வருவதையும் அவர் காண்கிறார்: எவ்விதம் முசோலினி…அவனுக்கு என்ன நேரிடுமென்றும், ஹிட்லரைக் குறித்தும், அவனுக்கு என்ன நேரிடுமென்றும்; கம்யூனிஸம் எவ்வாறு பாசீசத்தையும் மற்றவைகளையும் மேற்கொள்ளும் என்றும்; சீக்ஃபிரிட் எல்லை எவ்வாறு கட்டப்பட்டு, அமெரிக்கர்கள் அங்கு படுதோல்வியடைவார்கள் என்றும் (இரண்டு ஆண்டுகள் முன்பு வரைக்கும் அவர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை, அந்த முற்றுகையைக் குறித்து ஜெர்மானிய படங்கள் உள்ளன; அவர்கள் உண்மையில் ஒரு படுதோல்வியை அடைந்தனர். அவர்கள்…அங்கு முழு சேனையையும் அவர்கள் இழந்தனர்); இன்னும் நடைபெற்ற மற்ற காரியங்களைக் குறித்துமே.

1117 மேலும் இப்பொழுது, “முடிவு காலம் வருவதற்கு முன்பு, இது நிறைவேறும் என்றும், மோட்டார் வாகனங்கள் முட்டை வடிவில் காணப்படும், அவை முட்டையைப் போன்ற வடிவில் அதிகமாகக் காணப்படும்” என்றும் கூட அது உரைக்கப்பட்டது. ஒரு அமெரிக்க குடும்பம் நெடுஞ்சாலையின் வழியாக காரில் செல்வதைக் கண்டேன்… அவர்கள் ஒருவருக்கொருவர் முகமுகமாய் உட்கார்ந்து கொண்டிருந்தனர், ஒரு மேசை இருந்தது, அவர்கள் சதுரங்க விளையாட்டு அல்லது சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர் என்பது, போன்று, காணப்பட்டது. மேலும் அவர்களுக்கு அந்த காரில் ஸ்டியரிங் என்ற உந்துவண்டி இயக்காழி சக்கரம் இருக்கவில்லை. அது ஏதோ ஒரு சக்தியினால், உந்துவண்டி இயக்காழி சக்கரம் இல்லாமலேயே ஓடிக் கொண்டிருந்தது. இங்குள்ள எத்தனை பேர் அதை நான் தீர்க்கதரிசனமாக இங்கே உரைத்ததை (புரிகிறதா?), நினைவில் வைத்திருக்கிறீர்கள்? 18 இப்பொழுது, அந்த உலக சந்தையில், அவர்கள் அந்த விதமான காரை விற்பனைக்கு வைத்துள்ளனர். இங்கே…அது இப்பொழுது விற்பனை செய்யப்படுகிறது; ஒரு பெரிய நிர்வாகம் அப்படிப்பட்ட அநேக கார்களை வாங்கியுள்ளது. அந்த கார், இதோ இங்குள்ளது. பால் பாயிட்டுக்கு அந்த தீர்க்கதரிசனம் ஞாபகத்துக்கு வந்தது, நான் உரைத்ததை அவர் எழுதி வைத்துக்கொண்ட புத்தகத்தில் படித்து பார்த்தார், அந்த காரையும் புகைப்படம் எடுத்தார். அது அப்படியே சரியாக முட்டை வடிவத்தில் உள்ளது, இரண்டு இருக்கைகள் இந்த பக்கமும், இரண்டு இருக்கைகள் அந்த பக்கமும் வைக்கப்பட்டு, சீட்டு விளையாடுவதற்கு ஒரு மேசை, சரியாக நடுவில் வைக்கப்பட்டுள்ளது.

1219 கர்த்தருடைய வார்த்தை முற்றிலும் பிழையற்றது. அது 1933-ல். அப்படியானால்…நாம் பார்ப்போம், கணக்கிட்டால் எத்தனை ஆண்டுகள்? முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இல்லையா? இது 1964-ம் ஆண்டு. ஆம், முப்பத்து…ஆம், முப்பத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு. முப்பத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு கர்த்தர் அதை என்னிடம் கூறினார், இதோ அது இங்குள்ளது. இங்குள்ள நிர்வாகம் ஏற்கனவே அவைகளுக்கு அனுப்பானை அனுப்பிவிட்டது; மேலும்—லாரி ஓட்டும் நிறுவனங்கள் மற்றும் அவைகளைப் போன்று லாரிகள் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளன. அவர்கள் தங்கள் தலைமை அலுவலகத்தில் இருந்துகொண்டே அந்த விதமாக அவைகளை இயக்கலாம், அதில் ஓட்டுநர் இருக்க வேண்டியதில்லை. இதோ அத்தகைய கார் ஏற்கனவே தயாராக்கப்பட்டு, மற்ற கார்களுடன் வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, அந்த புகைப்படம் பின்னால் உள்ள அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது, நீங்கள் தரிசனத்தைப் படித்து நம்முடைய தேவன் எவ்வளவு பிழையற்றவர் என்று காணலாம், எவ்விதம் அவருடைய வார்த்தை… அவர், “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தை ஒருபோதும் தவறுவதில்லை” என்று கூறியுள்ளார். 20 பாருங்கள், முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. உங்களுக்கு 1931-ம் வருட மாதிரி கார் ஒன்று—ஒன்று காண்பதற்கு எப்படியிருக்குமென்றும், அல்லது அது எதுவாக இருந்தாலும், அந்தக் கார் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்; அது ஒரு காலங்கடந்த பொருளைப் போல் காணப்படும். அதுவோ, “அது முட்டையைப் போல் காணப்படும், முட்டையைப் போல் இருக்கும்” என்று உரைக்கப்பட்டது. நிச்சியமாகவே, நான் அப்பொழுது கூறினதைக் கேட்டவர்களில், எவருமே இங்கில்லை, அவர்கள் இன்றைக்கு உயிரோடிருக்கவில்லை என்று, நான் நினைக்கிறேன். அது…காலங்கள் தோறும் நான் இதைக் குறித்து கூறி வந்ததை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ஆனால்…ஆம், இங்கு ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஏன், திருமதி. வில்ஸன், உங்களை அங்கு நான் பார்க்கவில்லை. அது எப்பொழுது நடந்ததென்று ஞாபகமிருக்கும். அந்த சமயத்தில் தான் அவள் சுகமடைந்தாள், அவள் காச நோயினால் மரித்துக் கொண்டிருந்தாள் (அந்த ஸ்திரீயும், அவள் கணவரும் மகளும் அவளுக்காக ஜெபம் செய்ய என்னிடம் வந்திருந்தனர்) அவள் இரத்தம் கக்கி, மூலையில் இரத்தம் தோய்ந்த தலையணை உறைகளும் மற்றவைகளும் நிறைந்திருந்தன. மருத்துவர், “அவளை பிழைக்க வைக்க ஒரு வழியும் இல்லை” என்று கூறிவிட்டார், மேலும்…அவள் மரிப்பதற்கு முன்பு ஏதோ ஒன்றை என்னிடம் கூற முயன்றாள், அப்பொழுது அவளுக்கு இருமல் உண்டாகி போர்வைகளின் மேலும் படுக்கை விரிப்புகளின் மேலும் இரத்தம் பீச்சிட்டு வெளி வந்தது. அவளை நான் படுக்கையிலிருந்து, அங்கிருந்த ஒரு குளிர்ந்த ஆற்றுக்கு அவளை கொண்டு சென்றேன், ஒரு பனிக்கட்டி தண்ணீரில், அவளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தேன். அது முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவள் இன்னும் உயிரோடிருந்து இன்றைக்கும், இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், திடகாத்திரமான, ஆரோக்கியமுள்ள பிள்ளைகள் இவ்வுலகைவிட்டுப் போய்விட்டபோதும் அவள் இருக்கிறாள். அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. “ஆச்சரியமான கிருபை, அதன் தொனி எவ்வளவு இனிமையானது, என்னைப் போன்ற ஈனனை அது இரட்சித்தது!” அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று இருக்கும்போது, அது எவ்வளவாக பிழையின்றி நிறைவேறுகிறது என்பதை அது காண்பிக்கிறது.

1321 [ஒரு ஸ்திரீ சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறாள்—ஆசி.] ஆம், அது—அது உண்மை, சகோதரியே. ஆம், ஐயா! ஸ்திரீகள்…கடைசி…ஸ்திரீகள் ஒழுக்கங்கெட்டவர்களாகிவிடுவார்கள் என்று நான் கூறினேன். இப்பொழுது, முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் எவ்விதம் உடுத்தினர் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் மிகவும் ஒழுக்கங்கெட்டவர்களாகி, முடிவில் அவர்கள் தெருக்களில் உள்ளாடைகள் போன்றவைகளை மட்டும் அணிந்து நடப்பார்கள் என்று கூறினேன். மேலும் நான், “அவர்கள் மிகவும் அவலட்சணமாயிருப்பார்கள் என்பதும் கூட, அப்பொழுது நிறேவேறும், அத்தியிலையைப் போல் காணப்படும் ஒன்றை அணிந்துகொள்வார்கள்” என்றேன். அதை நான் கண்டேன், அவர்கள் அதைப் பெற்றுவிட்டனர்; அவர்கள் அதை அணிகின்றனர். வெறுமனே—பெண்களின் ஒழுக்கம் மிகவும் தாழ்ந்து, கீழ்த்தரமாகும்! இதைக் காட்டிலும் இப்பொழுது நாம் தாழ்வடைய முடியாது; இதைக் காட்டிலும் நீங்கள் மோசமாக ஆக முடியாது. அவள் முடிவுக்கு வந்துவிட்டாள்! பாருங்கள், அவர்கள் முழுவதும் நிர்வாணிகளாகமாட்டார்கள். இல்லை, அவர்கள்… 22 ஒரு சிறு துணியும் உடுத்திராத பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு, அந்த ஜனங்களுக்கு நான் பிரசங்கித்திருக்கிறேன் (புரிகிறதா?), வாலிப ஆண்களுக்கும், வாலிப் பெண்களுக்கும், அவர்கள் எல்லோருமே, ஆனால் அவர்கள் நிர்வாணிகளென்று அறிந்திருக்கவில்லை. புரிகிறதா? அவர்களுக்கு அது தெரியவில்லை. இன்று ஸ்திரீகள் நடந்துகொள்ளும் விதத்தைக் காணும்போது…

1423 அன்றொரு இரவு நாங்கள் மலை பிரதேசத்தில் அப்பொது இருந்த என் நண்பர்களில் சிலருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன், அங்கு ஒரு—ஒரு வாலிப ஸ்திரீ…அவளுடைய குழந்தைக்கு அப்பொழுது தான் நான் ஜெபித்தேன்; அதற்கு வலிப்பு இருந்தது; அது சுகமடைந்தது. ஒரு சிறு, ஏழை குடும்பம், ஒரு பள்ளத்தில், வீட்டைச் சுற்றிலும் புகையிலை பயிரிடப்பட்டிருந்தது, வீட்டில் இரண்டு அறைகள், ஏழு எட்டு பிள்ளைகள்… அந்த ஸ்திரீ வேலை செய்கிறாள் (ஓ, என்னே!), ஒரு பரந்த கோடாலியை அங்கே வைத்துக்கொண்டு, மரங்களை வெட்டுவதும் இன்னும் மற்ற காரியங்கள் மற்றும்—மற்றும் தோட்டங்களைப் பண்படுத்துவதும், பெட்டியில் அடைப்பதும். அந்த ஏழை ஸ்திரீயை நான் பார்த்தேன், ஒரே உடுப்பை அவள் ஓரிரண்டு ஆண்டுகளாக உடுத்தியிருக்கிறாள், அது கிழிந்துபோயிருந்தது… மேடாவின் உடைகள் சிலவற்றை அடுத்த வாரம் அவளுக்கு கொண்டு போகலாம் என்றிருக்கிறேன். 24 மேலும்—மேலும் ஒரு சில சகோதரர்களும் நானும் அங்கு நின்றுகொண்டு, அந்த பெண் குழந்தைக்கு பாலூட்டுவதை கவனித்தோம். அவள் ஆடையிலிருந்து தன்னுடைய—தன்னுடைய—தன்னுடைய மார்பகத்தை வெளியே எடுத்து குழந்தைக்குப் பாலூட்டித் துவங்கினாள்; ஒரு நிமிடத்துக்கு அது எங்களுக்கு ஒரு விதமான வியப்பாயிருந்தது; அவ்விதம் தான் என் தாய் எனக்குப் பாலூட்டினார்கள்! அது முற்றிலும் உண்மை.

1525 பட்டை போல் ஒன்றை உடுத்திக் கொண்டு மார்பகங்களை வெளியே தள்ள வைக்கும் ஸ்திரீகளைக் காட்டிலும் அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீயின் மேல் எனக்கு மதிப்பு அதிகம் உள்ளது. அவ்விதம் அவர்கள் செய்வதனால், மானிடரைப் போலவே காட்சியளிப்பதில்லை. அவ்விதம் செய்ய அவர்களுக்கு ஒரு நோக்கம் உண்டு; அது இன உணர்ச்சியை தூண்டுவதாயும், தேவபக்தியற்ற செயலாகவும் உள்ளது. இப்படிப்பட்டவைகளை ஒரு பெண் உடுத்தி, தனக்கு இல்லாததை இருப்பதுபோல் காட்சியளிப்பதென்பது…நான்… ஏன், உண்மையில் பெண்களுக்கு அவ்விதம் இருப்பதில்லை; அது ஒருவிதமான ஹாலிவுட் செயல். இன உணர்ச்சியின் மூலம் மனிதரைக் கவர செய்வதற்கென பிசாசின் ஆவி இப்படிப்பட்ட ஸ்திரீகளின் மேல் இறங்குகின்றது. குழந்தைக்கு பாலுட்டவே பெண்களுக்கு மார்பகங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அது முற்றிலும் உண்மை. நாங்கள் கண்ட ஸ்திரீ பழங்குடியினர் வம்சத்தில் உள்ளவள், ஆனால் அவள் சரியான முறையைக் கடைபிடிக்கிறாள். அத்தகைய ஒன்றுக்கு எனக்கு அதிக மதிப்புண்டு, அவ்விதம் செய்யும் ஒரு பெண்ணின் மேல், ஏனெனில் அவள்… அப்படித் தான் அவள் தாய் அவளை வளர்த்தாள்; அந்த விதமாகவே…அவர்கள்—அவர்கள் ஒருபோதும்—அதற்கு எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. நீங்கள் மடோனா படத்தில் காண்பதைப் போல் குழந்தைக்கு அங்கு பாலூட்டப்பட்டது. ஜனங்கள் மாத்திரம் தங்கள் சிந்தையை அவ்விதம் சரியாக்கிக் கொள்வார்களானால், அது வித்தியாசமாயிருக்கும்.

1626 ஆனால் நீங்கள் வெளியே செல்ல வரும்போது ஒரு ரவிக்கை அல்லது அது போன்றவற்றை உடுத்திக்கொண்டு, அதன் பின்னர் உங்களை மேன்மையாக அங்கே காண்பிக்கும்படியாக கோடான பட்டை ஆடைகள் மற்றுமுள்ள காரியங்களோடு செல்வது, தேவபக்தியற்ற செயலாகவும் மற்றும் மனிதரைக் கவர்ச்சிக்கிறதுமாயிருக்கிறது… அது உங்கள் மேல் தங்கியுள்ள பிசாசின் ஆவி என்பதை நீங்கள் உணருகிறீர்களா? எனவே சகோதரியே, நீ அப்படி செய்ய வேண்டாம். நீ அதைச் செய்யாதே; அது ஹாலிவுட்டின் ஒப்பனையும் மற்றும் பிசாசின் ஒரு கண்ணியுமாயுள்ளது! நீங்கள் அவ்விதம் செய்யும்போது, மனிதர் உங்களைக் குறித்து தவறான அபிப்பிராயம் கொள்ளும்படி அது செய்கிறது; நீங்கள் அவ்விதம் செய்யும்போது, அந்த மனிதனுடன் நீங்கள் விபச்சாரம் செய்த குற்றத்துக்கு ஆளாகின்றீர்கள், ஏனெனில் உங்களை நீங்கள் அந்த விதமாக அவனுக்குக் காண்பித்தீர்கள். உங்களுக்கு இயற்கையாகவே அந்த விதமான உருவமைப்பு இருக்குமானால், உங்களால் அதைக் குறித்து ஒன்றும் செய்ய முடியாது, தேவன் உங்களை உண்டாக்கின விதமாகவே இருங்கள். புரிகிறதா? நீங்கள் இல்லாத ஒன்றை இருப்பது போல் காண்பிக்க முயற்சிக்காதீர்கள். மானிடரைப் போல தரித்திருங்கள். அது பயங்கரமானதல்லவா? சரி இது சிலர் கேட்டுள்ள கேள்விகளுக்கு ஒருக்கால் பதில்களாக இருக்கக் கூடும்.

1727 எங்கள் பிதாவே, நாங்கள் இயேசு கிறிஸ்துவுக்காகவும் மற்றும் வார்த்தையின் நேர்மைக்காகவும், இன்று உமக்கு நன்றி செலுத்துகிறோம். அந்த வார்த்தைகளை நீர் பிழையின்றி நிறைவேற்றிக்கொண்டு வருவதை நான் காணும்போது, சத்தியத்திலும் சத்தியத்தின் ஒவ்வொரு வார்ததையிலும் நிலைத்திருக்க நான் அதிகமாக தீர்மானம் செய்யும்படி என்னைத் தூண்டுகிறது. எனவே பிதாவே, இக்காலை வேளையில் எங்களை, இந்த அருமையான ஜனங்களை, நீர் ஆசீர்வதிக்குமாறு நான் ஜெபிக்கிறேன். இந்த ஒலிநாடா பலவிடங்களுக்கும் செல்லவிருக்கிறது என்றும், சற்று முன்பு நான் குறிப்பிட்டதை அவர்கள் கேட்பார்கள் என்றும் அறிந்தவனாய்… நான்…அது முன்கூட்டியே தீர்மானம் செய்து குறிப்பிடப்பட்ட ஒன்றல்ல; என் இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர். அது அப்பொழுது தான் என் சிந்தையில் எழுந்தது, அதை நான் கூறவேண்டுமென்று நீர் விரும்பினீர் என்று நான் விசுவாசிக்கிறேன். அதை நான் கூறிவிட்டேன், அது இப்பொழுது முடிந்துவிட்டது. மேலும்—மேலும் அது என் உறுதியான கருத்தும், நான் கூற வேண்டுமென்று நீர் விரும்பின் ஒன்றும் என்று நான் முற்றிலும் விசுவாசிக்கிறேன். 28 இதை இந்த தேசத்தின் எல்லாவிடங்களிலும் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள தேசங்களிலும் கேட்கும் ஒவ்வொரு ஸ்தீரியும்; அவள் தன்னைக் குறித்தே வெட்கப்பட்டு, என்ன நடந்துள்ளது என்பதைக் கண்டு, ஒரு நற்பண்புள்ள பெண்ணைப் போல் தன்னை உடுத்திக்கொண்டு, விபச்சாரம் செய்த குற்றத்துக்கு ஆளாகாதிருப்பாளாக! ஒரு மனிதனின் ஒரு பாகமாக, நீர் அளித்தபோது ஒரு அழகான, அருமையான சிருஷ்டியாக, அந்த விதமாகவே இருந்து அவனுடைய கவனத்தை கவரும்படிக்கு அதை அளித்து அவர்கள் இருவரும் ஒன்றாகும்படி செய்தீர், ஏனெனில் அவள் மனிதனிலிருந்து தோன்றியவள். ஸ்திரீயும் தன் அழகும் அவளுக்குள்ளதெல்லாம் தன் கணவருக்கே சொந்தம் என்பதை உணர வேண்டுமென்று நான் வேண்டிக்கொள்கிறேன். பிதாவே, இதை அருளுவீராக.

1829 இந்த கேள்விகளுக்கு நாங்கள் இப்பொழுது விளக்கம் அளிக்க முயற்சிக்கையில் நீர் எங்களுக்கு உதவி செய்யுமாறு நாங்கள் கேட்கிறோம். இவைகளைக் குறித்து எங்களுக்கு போதிய அறிவு இல்லை, ஆனால் கர்த்தாவே, உம்முடைய மகத்தான ஆவியானது வரட்டும், அதுவே எங்களுக்கு போதுமானதாயிருக்கிறது; அது அனேக இருதயங்களில் உள்ள கேள்விக்கு பதில் அளிப்பதாக. நீர் எங்களுக்கு இதுவரை கொடுத்துள்ளவைகளுக்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; சபை காலங்கள், முத்திரைகள் மற்றும்… ஓ, அந்த மகத்தான காரியங்களில் நீர் எங்களுடன் எவ்வளவாக ஈடுபட்டுள்ளீர், கர்த்தாவே அவை எங்களுக்கு மகத்தானதாய் உள்ளது, ஏனெனில் முடிவு காலம் நெருங்குவதை நாங்கள் காண்கிறோம். 30 இப்பொழுது,…ஜனங்களை நான் பரிசோதிக்க வேண்டும் என்றால் அது உம்முடைய ராஜ்யத்துக்கு செழிப்பானதாயிருக்குமென்று அல்லது செழிப்பாய் இருந்தது என்றே நான் எண்ணினேன். அநேக சமயங்களில் சிந்தனைகளைப் பகுத்தறியும்போது மற்றும் வெவ்வேறு காரியங்களைக் காண்பதால், அவர்களில் ஒருவர் பேரில் உங்களால் கவனம் செலுத்த முடியாது; எனவே யோசிக்கிறேன்—அவர்கள் தங்கள் இருதயத்தில் என்ன நினைத்தார்களோ அவைகளை எழுத நான் அனுமதிக்கிறேன். அவர்கள் ஒரு காகிதத் துண்டில் எழுதி அனுப்பியுள்ளதிலிருந்து அவர்களுடைய எண்ணங்களை இதனால் வெளிப்படுத்த முடிந்தால், அப்பொழுது நீர் எங்களுக்கு சரியான பதிலை அளிப்பீர். கர்த்தாவே, நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம். கர்த்தாவே, எங்கள் சமுகத்தில் வந்து, உட்பாதையில் மேலும் கீழும் நடந்து, ஒவ்வொரு கேள்வியுடனும் உமது சித்தத்தின்படி ஈடுபடுவீராக. இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] டெர்ரி, நான்…நானா…அது இன்னும் உள்ளே வருகிறதா, அங்கே சகோ-…நான் தொட்டேன்… இது அதை நிறுத்துமா, அல்லது ஏதாவது? அது தொந்தரவு செய்கிறதில்லை. நான் அதை என்னுடைய கையினால் தொடுகிறேன். எனக்கு தெரியாது.

1931 இப்பொழுது, நாம் தொடங்குகையில், நான் இப்பொழுது மறுபடியுமாக கூறுகிறேன், ஊழியக்காரர் அல்லது நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்கள், அல்லது இந்த ஒலிநாடாவைக் கேட்க நேர்ந்தால், நீங்கள்—நீங்கள்…ஒலிநாடா சரியாக: இது இந்த கூடாரத்தைச் சேர்ந்த இங்குள்ள மக்களின் இருதயங்களில் எழுந்த கேள்விகள். இங்கு எங்களுக்கு ஸ்தாபனம் என்பதே கிடையாது, ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்ளுதல் மட்டுமே. இது எங்களுடைய சிந்தனைகளுக்கு ஒரு தெளிவாக இருக்கும்…என்று நான் நம்புகிறேன், நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்ட பிறகு, நாம் என்ன செய்ய வேண்டுமென்றும், நாம் இன்னும் சிறப்பாக எவ்விதம் வாழ வேண்டுமென்றும் நாம் அறிந்துகொள்வோம். அவைகளைப் படிக்கையில், அவை எனக்கு ஒரு ஆசீர்வாதமாக இருந்தன என்பதை, நான் அறிந்திருக்கிறேன். 32 இப்பொழுது, நான் அவைகளை இங்கே ஒரு குவியலாக வைத்தேன், நான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்து, பன்னிரெண்டு மணிக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக, நான் முடித்துவிடுவேன். அதன் பிறகு, நாம் இன்று பிற்பகல் ஆறு முப்பது மணிக்கு திரும்பி வருவேன்.

20என்னிடமுள்ள முதல் கேள்வி, ஐந்து கேள்விகள் ஒரு வரிசையாக, ஒரு மஞ்சள் நிற துண்டு காகிதத்தில் தட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். 236. இது எதைப் பொருட்படுத்துகிறது? மத்தேயு 24:19: “அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!” வினோதமான காரியம் என்னவெனில், அதை அறியாமல், நான் ஸ்திரீயைக் குறித்த இதைக் கூறப்போவதாக இருந்தேன், இங்கே இந்த நேரத்தில் இது உள்ளது, முதல் கேள்வி. 33 இப்பொழுது, மத்தேயு 24:19. இயேசுவிடம் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. இவையே அந்தக் கேள்விகள்: ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு இடிக்கப்படுதல் எப்பொழுது சம்பவிக்கும்? மற்றும், உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? என்ற மூன்று கேள்விகள் அவரிடம்—அவரிடம் கேட்கப்பட்டன. அவர் மூன்று வெவ்வேறு விதங்களில் இதற்குப் பதிலளிக்கிறார், ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கிறார். ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு எப்பொழுது சம்பவிக்கும்? அவருடைய வருகையின் அடையாளம் என்ன? உலகத்தின் முடிவை குறித்து அடையாளம் என்ன? அவர் மூன்று வித்தியாசமான வழிகளில் இதற்குப் பதில் அளிக்கிறார். எப்பொழுது ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு சம்பவிக்கும் காலம் வரும் என்று அவர் அவர்களுக்கு சொல்லுகிறார்; அவருடைய வருகையின் அடையாளம் என்னவாக இருக்கும்; அதன் பின்னர், உலகத்தின் முடிவு. அநேக சமயங்களில், அவர் எப்படி பதிலளிக்கிறார் என்பதை, (புரிகிறதா?), நீங்கள் கூர்ந்து கவனிக்காமற்போனால், இப்பொழுது, நீங்கள் குழப்பமடைந்து, இவையனைத்தையும் ஒரே காலத்தில் பொருத்தி விடுவீர்கள்; அதன் விளைவாக உங்களுக்கு குழப்பம் உண்டாகும்.

2134 இப்பொழுது, இது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஒரு சம்பவம் என்று கருதும் ஏழாம் நாள் ஆசரிக்கும் நமது—நமது சகோதரரை அலட்சியம் செய்யவில்லை. ஏழாம் நாள் ஆசரிப்பு என்னும் பொருளுக்கு வருவோமானால்; “நீங்கள் ஓடிப்போவது மாரிக் காலத்திலாவது அல்லது ஓய்வு நாளிலாவது சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்,” என்னும்போது (புரிகிறதா?), அவர்கள் அப்பொழுதும் ஓய்வு நாளை ஆசரித்துக் கொண்டிருந்தனர். அந்த சகோதரரை குற்றப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, அவ்விதம் செய்வது கிறிஸ்தவ பண்பாய் இராது, ஆனால் இதை தெளிவுபடுத்துதற்காகவே. புரிகிறதா? 35 முழு கிறிஸ்தவ உலகமும் ஒரு மதிலுக்குள் எவ்விதம் ஒன்றாக கூடியிருக்க முடியும், மேலும் சுவர்கள் அப்பொழுது போல அவைகள் திறக்கப்படாமலும் மூடப்படாமலும் எப்படி இருந்திருக்க முடியும். புரிகிறதா? அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும், வெப்ப மண்டலத்தில் வாழ்பவர்களுக்கு அது கோடைகாலமானாலும் மாரி காலமானாலும் சரி. புரிகிறதா? அது இஸ்ரவேலருக்கு மாத்திரமானதாயிருந்தது. அந்த காலத்தில் தான் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராமல் போகும். “அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ” ஏனெனில் கர்ப்பவதிக்கு (புரிகிறதா?), ஓடிப்போவது கடினமாயிருக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடிப்போவது கடினம். ஏனெனில் அவர்கள் எருசலேம் நகரத்தைவிட்டு வெளி வந்து…யூதேயாவின் மலைகளுக்கு ஓடிப் போக வேண்டும்.

2236 இப்பொழுது, இதை தெளிவாக்க, இந்த ஒரு பொருளின் பேரில் நான் காலை முழுவதும் நிலைத்திருக்கக் கூடும்; ஆனால் என்னால் முடிந்த அளவு ஜனங்கள் புரிந்து கொள்ள முக்கியமான விஷயங்களை மட்டும் சொல்ல முயற்சிக்கப்போகிறேன், அதன் பிறகு அடுத்த கேள்விக்கு சென்றுவிடுகிறேன். 37 இப்பொழுது, இயேசு அவர்களிடம் என்ன கூறினார் என்றால்…“எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு நகரத்துக்கு திரும்பாதிருக்கக்கடவன், அவனுடைய வீட்டிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ள; நகரத்துக்கு திரும்பாதிருக்கக்கடவன், அவன் யூதேயாவுக்கு ஓடிப் போகக்கடவன், ஏனெனில் உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராத மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” என்றார். அவையனைத்தும் ரோம தளபதியான, தீத்து, எருசலேமை முற்றுகையிட்டபோது நிறைவேறினது, அவர்கள் நகரத்தை சுட்டெரித்து, மேலும் அங்கே…ஜனங்களைக் கொன்று போட்டு, இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து வாசல்களின் வழியாய் ஓடி…தெருக்களை அடைந்தது. அவன் அதை முற்றுகையிட்டான். அவன் எத்தனை ஆண்டுகளாக தன் சேனைகளுடன் நகரத்தைச் சுற்றிலும் பாளையமிறங்கி இருந்தான் என்று எனக்குத் தெரியவில்லை. ஜனங்கள், ஸ்திரீகள், தங்கள் சொந்த குழந்தைகளை சமைத்து தின்றனர், அவர்கள் மரங்களின் பட்டையையும், தரையில் விளைந்த புல்லையும் தின்றனர். அவர்கள் வார்த்தையை புறக்கணித்ததற்காகவே. அதன் காரணமாகவே இது நடந்தது. அப்பொழுது…

2338 இப்பொழுது, வார்த்தையை ஏற்றுக் கொண்டவர்கள், அந்த மகத்தான வரலாற்றாசிரியர், ஜோசிபஸ் எழுதுகிறது போல… அவன் அவர்களை நரமாம்ச பட்சிகள் என்றழைத்தான், அவர்கள் பிலாத்து சிலுவையில் அறைந்த நசரேயனாகிய இயேசு என்றழைக்கப்படும் ஒரு மனிதனின் உடலைத் தின்றுகொண்டிருந்தனர் என்று கூறியுள்ளான், அவர்கள் இரவில் அவருடைய உடலைத் திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்றும், அதை துண்டுகளாக வெட்டிப் புசித்தனர் என்றும் அவன் கூறுகிறான். (அவர்கள் இராப்போஜனம் ஆசரித்துக்கொண்டிருந்தனர், நீங்கள் பாருங்கள். அது அவர்களுக்குத் தெரியவில்லை.) இன்று நம்மைக் குறித்தும், மற்ற கிறிஸ்தவர்களைக் குறித்தும் கட்டுக் கதைகள் நிலவி வருவதைப் போல் அக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு கட்டுக்கதை பரவியிருந்தது. புரிகிறதா? அவர்கள் இத்தகைய காரியங்களைக் கூறுகின்றனர். ஆனால்… 39 இப்பொழுது, அந்த ஜனங்கள்…“நீங்கள் ஓடிப்போவது மாரிக்காலத்தில் சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டதன் காரணம், யூதேயா அப்பொழுது பனியினால் மூடப்பட்டிருக்கும். பாருங்கள், கிறிஸ்துமஸா? இப்பொழுது, பனி மூடியிருந்த அந்த மலைப் பிரதேசத்தில் இயேசு எவ்விதம் அக்காலத்தில் பிறந்திருக்க முடியும்? “நீங்கள் ஓடிப்போவது மாரிக்காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்.” பாருங்கள், ஏனெனில் ஓய்வு நாளில் எருசலேமின் வாசல்கள் மூடப்பட்டிருக்கும், அவர்கள் உள்ளே அவர்களுடைய கண்ணியில் அகப்பட்டுக் கொள்வார்கள். தீத்து வெள்ளிக்கிழமை பிற்பகலில் அங்கு அடைந்திருப்பான் என்றால், ஓய்வு நாளன்று அவர்கள் முற்றுகையிடப்பட்டிருப்பார்கள், ஏனெனில் வாசல்கள் மூடப்பட்டிருக்கும். வாசல்கள் ஓய்வு நாளில் மூடப்பட்டு அன்று திறக்கப்படாது. ஓய்வு நாளில் நகரத்துக்கு உள்ளே வருவதும் வெளியே போவதும் முடியாது.

2440 இப்பொழுது, என்ன நடந்ததென்று நீங்கள் பார்த்தீர்களா? அப்பொழுது அவர், “அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ” என்று கூறினார், (புரிகிறதா?) ஏனெனில் தப்பித்து ஓடுவதென்பது…வரலாற்றின்படி, இயேசுவையும் வார்த்தையையும் விசுவாசித்த ஒருவராவது அது எப்பொழுது நடக்கப் போகிறது என்பதை கவனிக்காமல் இருக்கவில்லை. அவர்கள் தப்பித்து, எருசலேமிலிருந்து யூதேயாவுக்குச் சென்றனர், மேலும்—மேலும் அவர்கள் ஜீவன் தப்ப ஓடினர், அவர்களில் ஒருவராவது… ஏனெனில் அவர்கள் தங்கள் மேய்ப்பரால் எச்சரிக்கப்பட்டு அந்த நேரம் வருவதற்காக காத்துக்கொண்டிருந்தனர். தீத்து வருகிறான் என்று அவர்கள் கேள்விப்பட்டவுடனே, அவர்கள் ஜீவன் தப்ப ஓடி, நகரத்தைவிட்டு வெளியேறினர்.

25இப்பொழுது, அடுத்த கேள்வி தொடர்கிறது. 237. மத்தேயு 24:24: “கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.” இவர்களை நாம் எவ்விதம் அடையாளம் கண்டு கொள்ளலாம்? 41 “எழும்புவார்கள்…” அதில் இப்பொழுது நீங்கள் வேறொரு காலத்துக்கு வருகிறீர்கள். புரிகிறதா? “கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி…” கள்ளக்கிறிஸ்து கள்ள அபிஷேகம் பெற்றவன், ஏனெனில் கிறிஸ்து அபிஷேகம் பண்ணப்பட்டவர். கிறிஸ்து என்றால் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று பொருள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? கள்ள அபிஷேகம் பெற்றவர்கள் இருப்பார்கள், அவர்கள் தங்களை தீர்க்கதரிசிகள் என்று அழைத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களை நீங்கள் எவ்விதம் அடையாளம் கண்டு கொள்வீர்கள்? வார்த்தையினாலேயே; அவர்கள் சரியா என்று, வார்த்தையினால், நீங்கள் அதை அறிந்துகொள்ளலாம். அவர்களை நாம் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது? வார்த்தையினால் தான். அவர்கள்…அவர்கள் வார்த்தையைக் கொண்டுள்ளதாக கூறிக் கொண்டு, அதன்பின்னர் வார்த்தையை மறுதலிப்பார்களானால், அவர்கள் என்ன செய்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அப்பொழுது அதில் ஒன்றுமே இல்லை. அவர்கள் பிணியாளிகளை சொஸ்தமாக்கலாம்; அவர்கள் குருடரின் கண்களைத் திறக்கலாம்; வார்த்தையை மறுதலிப்பார்களானால், அதிலிருந்து விலகியிருங்கள். அது என்னவாக இருந்தாலும் கவலைப்படாமல், அந்த வார்த்தையில் நிலைத்திருங்கள் (புரிகிறதா?), ஏனெனில் வூடு என்னும் பில்லி சூனிய சக்தியினால் சுகமாக்கப்படுதல் நடப்பதை—நடப்பதை நான் அநேக முறை கண்டிருக்கிறன்.

2642 இக்காலை வேளையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ள சகோதரன் சிட்னி ஜாக்சனும், சகோதரி ஜாக்சனும், இங்கு உட்கார்ந்திருக்கின்றனர். அவர் இங்கு நின்று கொண்டு அந்த பொருளை எடுத்துக்கொண்டு மாந்திரீக சக்தியினால் நடைபெறும் சிலவற்றை உங்களுக்கு எடுத்துக் கூற முடியும். ஏன் நிச்சயமாக, ஜனங்கள் விக்கிரகங்களிடம் வந்து சுகமடைகின்றனர். பாருங்கள், காரணம் ஏன்? 43 அன்றொரு நாள் நான் பிசாசினால் சுகமளிக்க முடியாது என்று கூறினதைக் கேட்டு, டாக்டர் ஹகர் என்பவர் என்னைப் பார்த்து கூச்சலிட்டார். அது, “உங்களைப்போல அனைவருக்கும் முன்னால் நிற்கும் ஒரு மனிதன், மேலும் அப்படிப்பட்ட மோசமான இறையியல்,” என்று கூறப்பட்டிருப்பதோடு, “பிசாசினால் குணப்படுத்த முடியாது என்று கூறுகிறதாயும்” கூறப்பட்டிருக்கிறது. “எங்களுடைய வீட்டின் அருகில் ஒரு ஸ்திரீ இடுப்பைச் சுற்றி ஒரு துணியைக் கட்டிக் கொண்டு, அங்கு செல்கிறாள்; அவளிடம் வரும் ஜனங்கள் அந்த துணியில் காசு போட வேண்டும்; அப்பொழுது அவள் அவர்களைக் கையினால் தேய்த்து, அவளுடைய தலையிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கி, அவர்களுடைய இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தத்தை எடுத்து மற்றும்—மற்றும் அந்த முடியில் பூசி, அவளுக்குப் பின்னால் அதை எறிந்துவிடுகிறாள்; அவள் பின்னால் பார்ப்பதில்லை, ஏனெனில் அவ்விதம் செய்தால் ஜனங்களுக்கு வியாதி திரும்ப வந்துவிடுமாம். மேலும், அவர்களில் முப்பது சதவிகிதம் குணமடைகின்றனர். அப்படியிருக்க பிசாசினால் சுகமளிக்க முடியாது என்று நீர் கூறுகிறீர்” என்றார்.

2744 நான், “ஓ, என்னே!” என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கு நான் இவ்விதம் திரும்பி எழுதினேன், நான், “அன்புள்ள ஐயா:” என்று எழுதினேன். நான், “ஒரு லூத்தரன் கல்லூரியின் தலைவர் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஒரு அனுபவத்தின் பேரில் தனது வேதசாஸ்திரத்தை ஆதாரமிடுவது விசித்திரமாயுள்ளது” என்றேன். பார்த்தீர்களா? “சாத்தான் சாத்தானைத் துரத்துவதில்லை என்று வேதம் கூறுகிறது. அத்துடன் அது முடிவு பெறுகிறது; இயேசு அவ்விதம். கூறியுள்ளார்” என்றேன். சாத்தான்…“அப்படியானால் இந்த ஜனங்கள் அதன் மூலம், அந்த மந்திரவாதியின் மூலம் எவ்விதம் சுகம் பெறுகின்றனர் என்று நீங்கள் வியக்கலாம், ஏனென்றால் ஜனங்கள் அந்த மந்திரவாதியின் மூலம் தேவனை அணுகுவதாக எண்ணுகின்றனர். சுகம் பெறுதல் விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டதேயல்லாமல், நீங்கள் எவ்வளவு நீதியுள்ளவர்கள் என்பதையோ, எவ்வளவு நல்லவர்கள் என்பதையோ, நீங்கள் எவ்வளவாக கற்பனைகளைக் கைக்கொள்கிறீர்கள் என்பதையோ, அல்லது அது வேறு எதையும் ஆதாரமாகக் கொண்டதல்ல, அது விசுவாசத்தையே ஆதாரமாகக் கொண்டது. ‘விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்!’ புரிகிறதா? நீங்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதை அது ஆதாரமாகக் கொண்டதல்ல. வேசிகள் மேடைக்கு வந்து உடனே சுகம் பெறுவதையும் மற்றும் பரிசுத்தவாட்டி ஒருத்தி மேடைக்கு வந்து சுகமடையாமல் செல்வதையும் நான் கண்டிருக்கிறேன். நிச்சயம்மாக, அது விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டது, ‘நீ விசுவாசித்தால்,’ நீதியின் அடிப்படையில் அல்ல.” 45 பிரான்சு நாட்டில் பாருங்கள் அங்கே அவர்கள் அந்த ஸ்திரீயின் கோவிலுக்கு சக்கர நாற்காலிகளில் சென்று சுகமடைந்து, நடந்து திரும்பி வருகின்றனர், அது முழுவதும் ஒரு மூடநம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டது, இறந்து போன ஒரு நபரை தொழுதுகொள்ளுதல் என்பது, இறந்தவர்கள் ஆவியுடன் தொடர்புகொள்ளும் செயலாகும். புரிகிறதா? அதேசமயத்தில் அவர்கள் சுகமடைகின்றனர், ஏனெனில் அவர்கள் தேவனை அணுகுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது, கத்தோலிக்க மக்களை நான் தரம் குறைவாக பேசுவதாக எண்ண வேண்டாம், நான் கத்தோலிக்க முறையையே தரம் குறைவாகப் பேசுகிறேன், நான் பிராடெஸ்டெண்டு முறையையும் (புரிகிறதா?), மற்றவைகளையும், செய்வதுபோல.

2846 இப்பொழுது, ஊழியக்காரரே, இது புண்படுத்தக் கூடும் என்று நான் அறிகிறேன், ஆனால் நான் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்; நான் என் இருதயத்திலிருந்து சத்தியத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன் (புரிகிறதா?) நான்—நான் விரும்புகிறேன்; கிறிஸ்துவுக்கு முன்பாக என் அறிவுக்கு எட்டின வரை. புரிகிறதா? அவையனைத்தும் மார்க்க முறைகளே, இந்த முறைகள் ஜனங்களை கட்டிப்போட்டுள்ளன… ஜனங்கள் சென்று மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே, கத்தோலிக்க ஸ்தாபனங்களை சேர்ந்துகொள்கின்றனர்; இவ்விதமான ஒரு முறையின் மூலம் அவர்கள் தேவனை அணுகுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். தேவன் அதை சில வேளைகளில் மதித்து, அவர்களுடைய விக்கிரகங்களின் மூலமாக அவர்களுடைய—அவர்களுடைய வியாதிகளை அவர்களைவிட்டு எடுத்துப்போடுகிறார். பாருங்கள், ஆப்பிரிக்காவின் பழங்குடி மக்கள் விக்கிரங்களின் மூலம் சுகம் பெறுகின்றனர் (புரிகிறதா?), ஆனால் அவர்கள் தேவனை அணுகுவதாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். 47 ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி, ஒரு கெட்ட ஸ்திரீயாயிருக்க விரும்பி, கத்தோலிக்க கன்னிமடத்தை சேருகிறாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவள் ஒரு நல்ல ஸ்தீரியாயிருப்பதற்கே அந்த கன்னிமடத்தை சேர்ந்துகொள்கிறாள். ஒரு மனிதன் கெட்ட மனிதனாக இருப்பதற்காக கத்தோலிக்க சபையைச் சேர்ந்துகொள்வதில்லை; ஒரு நல்ல மனிதனாக இருப்பதற்காகவே அங்கு போய் சேர்ந்துகொள்கிறான். நீங்கள்…“பாருங்கள், அது என்ன?” என்று நீங்கள் கேட்கலாம். அந்த…இந்தியாவிலுள்ள இந்தியர் அல்லது கெட்டவர்களாக இருப்பதற்காக இந்து மதத்தைச் சேர்ந்துகொள்வதில்லை.

2948 நான் ஜைனரின் கோயிலுக்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த பூசாரி என்னைப் பேட்டி கண்டார், அவர் போப்பைப் போல், ஒரு பெரிய தலையணையின் மேல் உட்கார்ந்துகொண்டு, கால்களை மடக்கிக்கொண்டு, வேதாகமத்தில் 23வது சங்கீதத்தை ஒப்பிட்டு எழுதும் அளவுக்கு கண்பார்வையுடன் தனது கால்விரல்களைப் பிடித்துக்கொண்டு ஒரு அங்குலத்துக்கும் குறைவான இரும்புத் துண்டின் மீது அவரது சாதாரணக் கண்பார்வையில்…கால் அங்குலத்திற்கு மேல் இல்லை. இப்போது, அதை எழுதுவது எந்த மனித தர்க்கத்திற்கும் அப்பாற்பட்டது, மேலும் அவர் அதை தனது இயற்கையான கண்ணால் பொறித்தார்; அவருக்கு நாற்பது வயது அல்லது அதற்கும் சற்று அதிகமாக இருக்கும். பார்த்தீர்களா? 49 ஏன் நிச்சயமாக, நீங்கள்—நீங்கள் இங்கேயே இருந்துகொண்டு, மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் செய்பவைகளைக் கேள்விப்படுகிறீர்கள்; நீங்கள் ஒரு முறை மிஷன் ஊழியக்களங்களுக்கு சென்று காண வேண்டும். உங்கள் கண்கள் திறக்கப்பட நீங்கள் காண வேண்டும்! புரிகிறதா?

3050 இப்பொழுது, அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற ஜைன மத சகோதரிகளை எண்ணிப் பாருங்கள்; அவர்கள்…அவர்கள் சமைப்பதில்லை; அவர்கள் உண்பதில்லை; அவர்கள் பிச்சையெடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள்…அவர்கள் தங்களுடைய கைகளினால் சிறு துடைப்பானை உண்டாக்கி, தெருக்களிலிருந்து எறும்புகளையும் மற்றவைகளையும் பெருக்கித் தள்ளிவிடுகின்றனர், ஒரு வேளை அவர்கள் தங்கள் பந்துக்களை மிதித்துவிடக்கூடும் என்று நம்புகின்றனர்; ஏனெனில் அவர்கள் மறுஜென்மத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர்; அவர்கள் எறும்புகளை மிதித்துவிடமாட்டார்கள், ஈக்களை கொல்லமாட்டார்கள், அல்லது ஒன்றையும் செய்யமாட்டார்கள்; விரலுக்கு அறுவை சிகிச்சை செய்ய அவர்கள் ஒரு கத்தியை கூட தண்ணீரில் கொதிக்க வைக்கமாட்டார்கள். ஒரு கிருமியைக் கொல்லாமல், மனிதன் சாகும்படி விட்டுவிடுவார்கள்; அந்த கிருமி ஒருவேளை…வேறு ஜென்மம் எடுத்த அவர்களுடைய உறவினனாய் இருக்கக் கூடும். புரிகிறதா? நீங்கள் மேலான, மேலான, மேலான ஜென்மம் எடுத்து; முடிவில், நீங்கள் மனிதனாகப் பிறந்து; ஒரு நல்ல மனிதனாக ஆகி, அந்த விதமாக தொடர்ந்து வந்து, நீங்கள் ஒரு தெய்வமாகி விடுகிறீர்கள். இவ்விதம் மேலும், மேலும் தொடர்ந்து வந்து, மேலும் நல்ல நல்ல ஜென்மம் எடுக்கிறீர்கள். 51 இப்பொழுது, அவர்கள் கெட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்விதம் செய்வதில்லை. அவர்கள் உத்தமமாக அதைச் செய்கின்றனர்; ஆனால் பாருங்கள், “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு.” ஜனங்களே, இன்று காலையில் இந்த கேள்விகளின் பேரில் ஒரு—ஒரு வகுப்பாக கூடியுள்ள உங்களிடம் எனக்குக் சொல்லத் தெரிந்த, ஒரே ஒரு காரியம் மாத்திரமே உண்டு, அது வார்த்தை, தேவனுடைய வார்த்தையாகும். அப்பொழுது இயேசு கிறிஸ்துவே அந்த வார்த்தை என்றும், அந்த வார்த்தை இப்பொழுது நமது மத்தியில் மாம்சமாகி, இந்தக் காலத்தில் அவர் என்ன செய்வாரென்று உரைத்துள்ளாரோ, அதை அப்படியே நிறைவேற்றிக்கொண்டு வருகிறார் என்பதை நீங்கள் விசுவாசிப்பீர்கள். சரி. இப்பொழுது, அவ்விதம்தான் அவர்களைக் நீங்கள் கண்டுகொள்வீர்கள், அவர்களுடைய சபையினால் அல்ல, அவர்களுடைய கோட்பாடுகளினால் அல்ல, அவர்களுடைய அடையாளங்களினால் அல்ல, அவர்களுடைய ஸ்தாபனங்களினால் அல்ல, எந்த சுகமாக்குதலினாலும் அல்ல, எந்த காரியத்தினாலும் அல்ல, ஆனால் வார்த்தையினாலே. புரிகிறதா?

31238. மத்தேயு 24:26 (அடுத்தது) ஒரு “குறிப்பிட்ட அறைவீட்டையும்” மற்றும் “குறிப்பிட்ட வனாந்திர இடங்களில்” என்பதைக் குறித்து பேசுகிறதே. அதன் அர்த்தம் என்ன? 52 அதன் அர்த்தம் என்னவென்றால் அந்திக் கிறிஸ்துக்களும், கள்ள அபிஷேகங்கள் போன்றவை இருக்கும். அந்தி- என்றால் என்ன? அந்தி- என்பது “எதிரானது” என்பதாகும். இதே சிருஷ்டிகள் வார்த்தைக்கு எதிராக இருப்பதாகும். “இவர்கள் வனாந்திரத்தில் இருப்பார்கள், அறைவீட்டுக்குள் இருப்பார்கள்.” ஆகையால் அவர், “அவர்கள் பின்னே போகாதிருங்கள். அவர்களிடமிருந்து விலகியிருங்கள்” என்றார். புரிகிறதா?

32இப்பொழுது, நான்காம் கேள்வி: 239. மத்தேயு 24:28: (அந்த நபர் தொடர்ந்து கீழே வந்து கொண்டிருக்கிறார். அவர் கையொப் பமிடவில்லை; ஆம், அவர் கையொப் பமிட்டிருக்கிறார். நான் உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன். இந்தப் பெயர்களை நான் அறிவிக்கப் போவதில்லை, ஏனெனில் அது அவசியமில்லை. புரிகிறதா?) மத்தேயு 24:28: “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.” பிணம் யார் மற்றும் கழுகுகள் யார்? 53 இப்பொழுது, அது ஒரு நல்ல கேள்வி, அதில் ஒன்றும் தவறில்லையே! பிணம் என்பது எது? கழுகுகள் தின்பதுதான் பிணம். இப்பொழுது, ஒரு தீர்க்கதரிசி, வேதத்தில் ஒரு கழுகாகக் கருதப்படுகிறான். ஒரு தீர்க்கதரிசிதான் கழுகு. தேவன்—தேவன் தம்மை ஒரு கழுகென்று அழைத்துக்கொள்கிறார், மற்றும் அப்படியானால், விசுவாசிகளாகிய நாம் “கழுகுக் குஞ்சுகள்.” உங்களுக்குப் புரிகிறதா? அவர்கள் தின்னும் பிணம் எது? வார்த்தை. வார்த்தை எங்கெல்லாம் உள்ளதோ, அங்கு பறவையின் இயல்பு வெளியரங்கமாகும். புரிகிறதா? ஒரு கழுகுக்கு, அதற்கு புது மாம்சம் தேவைப்படுகிறது, அது தனக்கு புதிய இறைச்சியை உடையதாய் இருக்க வேண்டும். அது ஒரு பருந்து அல்ல—அல்ல (புரிகிறதா?), அது ஒரு கழுகு. அதற்கு நீங்கள் ஸ்தாபன பொருளை தின்னக் கொடுக்க முடியாது; அதற்கு கழுகின் ஆகாரம் தேவைப்படுகிறது; அதுதான் மிகவும் புதிய மாம்சம், மோசே செய்தது அல்ல, வேறு யாரோ செய்தது அல்ல, சாங்கி, ஃபின்னி, நாக்ஸ், கால்வின் ஆகியோர் செய்தது அல்ல, ஆனால் இப்பொழுது, இந்த நாளுக்கென கொல்லப்பட்ட மாம்சம். அதுதான் இந்த வார்த்தையை உறுதிப்படுத்துவதற்கென்று மரித்த கிறிஸ்துவின் ஒரு பாகமாயுள்ளது. அதை தான் அவர்கள் புசிக்கின்றனர். இது புரிகிறதா? பாருங்கள், புரிகிறதா?

3354 நோவா என்ன செய்தான், மோசே என்ன செய்தான் என்பதல்ல, அவை திருஷ்டாந்தங்கள்: அவர்கள் என்ன செய்தனர் என்று நாம் படித்துக் கண்டு கொள்கிறோம். ஆனால் அவர் இப்பொழுது என்ன செய்வதாக வாக்களித்துள்ளார் என்பதே காரியம். அவர் முன் காலத்தில் அங்கு வார்த்தையாயிருந்தார்; அது அந்நாளுக்கான பிணம். வெஸ்லியின் நாளில் அது அந்நாளுக்கான பிணமாயிருந்தது; லூத்தரின் காலத்தில் அது அந்நாளுக்கான பிணமாயிருந்தது; ஆனால் நாம் அதற்கு திரும்பிச் செல்வதில்லை. அது ஏற்கனவே கெட்டுப்போய்விட்டது. மீதமுள்ளது சுட்டெரிக்கப்பட வேண்டும், இராப்போஜனப் பொருட்களும் கூட; அதை அடுத்த சந்ததிக்காக விட்டுவைப்பதில்லை. நீங்கள் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளும் போது, அதில் மீதியாக விடப்பட்டுள்ளதை, அடுத்த நாள் காலை வரைக்கும் கூட விட்டு வைக்கக் கூடாது; அதை சுட்டெரிக்க வேண்டும் என்று வேதம் உரைக்கிறது. எனவே முன்பு நடந்ததைக் குறிப்பிடுவதா? இல்லை, ஐயா! நமக்கு இன்று புது ஆகாரம் உள்ளது; அது தான் இந்நேரத்துக்கென வாக்களிக்கப்பட்டு, இந்நேரத்தில் வெளிப்பட்டுள்ள வார்த்தை. அங்கு தான் கழுகுகள் கூடுகின்றன, அங்கு தான் பிணம் உள்ளது. அதன் பேரில் நாம் நீண்ட நேரம் நிலைத்திருக்க முடியும், ஆனால் நான் கூறுவதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்று நிச்சயமுடையவனாய் இருக்கிறேன்.

34சரி, ஐந்தாம் கேள்வி. 240. எடுத்துக்கொள்ளப்படுதலின்போது மணவாட்டி ஓரிடத்தில் ஒன்றாக கூடியிருப்பாளா, அது மேற்கு பாகத்தில் இருக்குமா? 55 இல்லை, அது அங்கு இருக்க வேண்டியதில்லை. ஆம், மணவாட்டி ஓரிடத்தில் ஒன்றாக கூடியிருப்பாள். அது உண்மையே, ஆனால் உயிர்த்தெழுதல் வரைக்கும் அது நடக்காது. புரிகிறதா? “கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம்…” எபேசியர், இல்லை, இரண்டாம் தெசலோனிக்கேயர் 5-ம் அதிகாரம் என்று, நான் நினைக்கிறேன். “கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் (உலகம் பூராவிலும்) நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை (அவர்களைத் தடை செய்வதில்லை); தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள், பின்பு உயிரோடிருக்கும் நாமும் அவர்களோடே கூட எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம்.” எனவே, கர்த்தரைச் சந்திக்கச் செல்லும்போது, மணவாட்டி ஒன்று கூடியிருப்பாள். புரிகிறதா? அவள் ஒன்று கூடியிருப்பாள், ஆனால் நாம்…அவர்கள் எல்லோரும் இது போல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; ஏனெனில் மணவாட்டி உலகத்தைச் சுற்றிலும் ஆர்டிக் பிரதேசம் தொடங்கி வெப்பமான தேசம் வரையிலும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், வடக்கிலிருந்து தெற்கு வரையிலும் பூமியின் தூளில் நித்திரை செய்துகொண்டிருக்கிறாள்.

3556 இயேசு, “மனுஷகுமாரன் வரும்போது,” என்றார். ஏன், “அது கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிற மின்னல்போல் இருக்கும்” என்றார். முழு விஷயமே, ஒரு உயிர்த்தெழுதலாய் இருக்கும், ஒரு எடுத்துக்கொள்ளப்படுதலாய் இருக்கும், அவள் இங்கிருந்து போய்விடுவாள். அவரைச் சந்திக்க அவள் போவதற்கு முன்பு… 57 கர்த்தருடைய ஞானத்தைக் கவனியுங்கள். இப்பொழுது, நாம் கூறுவோமாக, உதாரணமாக, இதைக் கூறும்போது… கிருபையின் நினைவுகள் மூலமாகவும், வார்த்தையில் கொண்டுள்ள விசுவாசத்தின் மூலமாகவும், நான் “நாம்” என்று கூறுகிறேன். நான் உங்கள் எல்லாரோடும் என்னையும் மற்றும் நான்—உலகம் முழுவதும் உள்ள, கிறிஸ்துவின் சரீரத்துடன் இணைத்துக்கொள்கிறேன். நான்—அதை நான் விசுவாசிக்கிறேன். நான் “நாம்” என்று கூறும்போது, கிருபையினால் அதை நான்—நான் விசுவாசிக்கிறேன். விசுவாசத்தினால் அவருடைய கிருபையினால், எடுத்துக்கொள்ளப்படும் அந்த மக்களில் நாமும் இருப்போம் என்று நான் விசுவாசிக்கிறேன்.

3658 இப்பொழுது, நாம் உயிர்த்தெழும்போது, முதலாவது நடப்பது என்னவெனில்…உயிரோடிருப்பவர்கள் இங்கிருப்பார்கள்… முதலாவதாக உயிர்த்தெழுதல் நிகழும், நித்திரையடைந்தவர்களின் உயிர்த்தெழுதல். நித்திரையிலுள்ளவர்களை தட்டி எழுப்பும் நேரம் ஒன்றிருக்கும், இப்பொழுது பூமியின் தூளில் நித்திரை செய்துகொண்டிருப்பவர்கள், பாவத்தில் நித்திரை செய்துகொண்டிருப்பவர்கள் அல்ல, ஏனெனில் அவர்கள் தொடர்ந்து நித்திரை செய்துகொண்டிருப்பார்கள். இன்னும் ஆயிரம் ஆண்டு காலம் வரைக்கும் அவர்கள் தொடர்ந்து நித்திரையிலிருந்து எழும்புவதில்லை. ஆனால் அவர்கள் பூமியின் தூளில் நித்திரை செய்துகொண்டிருப்பவர்கள் முதலில் நித்திரையிலிருந்து எழுப்பப்படுவார்கள், அவர்கள்…இந்த அழிவுள்ள சரீரங்கள் கர்த்தருடைய எடுத்துக்கொள்ளப்படும் கிருபையினால் அழியாமையைத் தரித்துக் கொள்ளும். அதன் பிறகு நாம் எல்லோரும் ஒன்று கூடுவோம். அவர்கள் ஒன்றுகூடத் தொடங்கும்போது, உயிரோடிருக்கிற நாம் மறுரூபப்படுவோம். இந்த அழிவுள்ள சரீரங்கள் மரணத்தைக் காண்பதில்லை, ஆனால் சடுதியாக, நம்மை வேகமாக அடித்துக்கொண்டு செல்வது போன்ற ஒன்று உண்டாகும், அப்பொழுது நீங்கள் மறுரூபமடைவீர்கள். நீங்கள் ஆபிரகாமைப்போல், வயோதிபனிலிருந்து வாலிபனாகவும், வயோதிப ஸ்திரீயிலிருந்து வாலிப ஸ்திரீயாகவும் மாறி விடுவீர்கள். இந்த சடுதியான மாற்றம் என்ன? சற்று கழித்து நீங்கள்—நீங்கள் ஒரு சிந்தனையைப் போல் பிரயாணம் செய்வீர்கள், அப்பொழுது நீங்கள் ஏற்கனவே உயிர்த்தெழுந்தவர்களை காண முடியும். ஓ, என்ன ஒரு நேரம்! அதன் பிறகு நாம் அவர்களுடன் ஒன்றுசேர்ந்து அவர்களோடு கூட எடுத்துக்கொள்ளப்பட்டு, கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம்.

3759 உங்களுடைய மாமா தென் கென்டக்கியில் அடக்கம்பண்ணப்பட்டிருந்தால், அவர் இந்தியானாவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றோ, அல்லது இந்தியானாவில் அடக்கம்பண்ணப்பட்டிருந்தால், தென் கென்டக்கிக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றோ அவசியமில்லை. அவர் எங்கிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை…சமுத்திரத்தில் மரித்தவர் சமுத்திரத்திலிருந்து எழுந்திருப்பார்கள். விளையாட்டு அரங்கத்தில் சிங்கங்களினால் புசிக்கப்பட்டு அழிக்கப்பட்டவர்களும், அக்கினி சூளையில் போடப்பட்டு எலும்புகளும் சாம்பலானவர்களும் கூட, அவர்கள் அப்படியிருந்தும் உயிரோடெழும்புவார்கள்! அவர்கள் ரோமாபுரியில் இருந்திருந்தாலும், அல்லது ரோமாபுரியிலுள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்திருந்தாலும், அல்லது தென் பாகத்திலுள்ள வெப்பமான காடுகளில் இருந்திருந்தாலும், அல்லது பனி உறைந்துள்ள வடக்கு பாகத்தில் இருந்திருந்தாலும், அவர்கள் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, மறுரூபமடைந்து மேலே கொண்டு வரப்படுவார்கள்; உயிரோடிருப்பவர்கள் ஒரு நொடிப் பொழுதில், ஒரு இமைப்பொழுதில் மறுரூபமடைந்து, அவர்களோடு கூட எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

3860 ஆப்பிரிக்காவின் ஊழியக்களத்தில் மரித்துப்போன மிஷனரிமார்களைப் பாருங்கள். வடக்கிலுள்ள பனி உறைந்த இடங்களில் மரித்துப் போனவர்களைப் பாருங்கள். விளையாட்டு அரங்கங்களிலும், உலகம் முழுவதிலும், காங்கோ பிரதேசத்திலும் மரித்துப் போனவர்களைப் பாருங்கள். அவர்கள் எல்லாவிடங்களிலும் மரித்தனர், சீனாவில், ஜப்பானில், உலகெங்கிலும்; கர்த்தருடைய வருகை, எடுத்துக்கொள்ளப்படுதல் உலகம் முழுவதும் சம்பவிக்கும். 61 மாற்றத்தைக் கவனியுங்கள். “படுக்கையில் இரண்டு பேர் இருப்பார்கள்; நான் ஒருவனை எடுத்துக்கொண்டு மற்றவனை விட்டுவிடுவேன்,” அதே நேரத்தில், “இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்: நான் ஒருவனை எடுத்துக்கொண்டு மற்றவனை விட்டுவிடுவேன்,” ஒன்று பூமியின் இருளான பக்கம் மற்றது பூமியின் வெளிச்சமான பக்கம். புரிகிறதா? அது உலகம் முழுவதும் நடக்கப்போகும் எடுத்துக் கொள்ளப்படுதல். ஆம், சபையானது ஒன்று கூடியிருக்கும், ஆனால் அது உயிர்தெழுதலும் எடுத்துக்கொள்ளப்படுதலும் நிகழ்ந்த பிறகு. 62 இப்பொழுது, நீங்கள் அந்த விதமாக அதை காணவில்லை என்றால், ஏன், அதனால் இப்பொழுது பரவாயில்லை. நான் அதை கூறும்போது அதை நான் சரியாக கூறவில்லை; இதை நாம் ஒலிநாடாவில் பதிவு செய்கிறோம். உங்களுக்குப் புரிகிறதா? வேறு ஊழியக்காரர்கள் இதனுடன் ஒருவேளை இணங்காமலிருக்கலாம். அதனால் பரவாயில்லை.

39241. அன்புள்ள சகோதரன் பிரான்ஹாமே, என் கேள்வி ஞானஸ்நானத்தின் பேரில். ஒருவன் எப்பொழுது இரட்சிக்கப்படுகிறான்? ஒருவன் விசுவாசிக்கும்போதுதான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நாம் தண்ணீர் ஞானஸ்நானம் பெறாமலிருந்தாலும், அப்போஸ்தலர் 10:47-ல், கொர்நேலியுவின் விஷயத்தில் நடந்ததுபோல, நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வோமானால் இரட்சிக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். தமஸ்குவுக்குப் போகும் வழியில் பவுல் இரட்சிக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர், ஆனால் அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகும் அவனுடைய பாவங்கள் அவனில் குடி கொண்டிருந்ததாக அப்போஸ்தலர் 22:16 உரைக்கிறது. கொர்நேலியுவைப் போல ஒருவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, அவன் தண்ணீர் ஞானஸ்நானம் பெறாததால், அவனுடைய பாவங்கள் அவனில் நிலைத்திருக்குமா, அல்லது ஒருவன் பரிசுத்த ஆவியைப் பெற்றும் கூட, தண்ணீர் ஞானஸ்நானம் பெறாமல் பரலோகத்துக்குப் போக முடியாதா? 63 இப்பொழுது, என் விலையேறப் பெற்ற நண்பரே…இப்பொழுது, இந்த சகோதரன் கையொப்பமிட்டிருக்கிறார்; இவரை எனக்குத் தெரியாது, ஆனால் அவர் தன்னுடைய பெயரை கையொப்பமிட்டிருக்கிறார். ஆனால் நான்—நான் பெயர்களை அறிவிக்கப்போவதில்லை, ஏனெனில் அது அவசியமில்லை; பெயர்களை அறிவித்தால் மற்றவர்கள் அவர்களிடம் சென்று, “பாருங்கள். நான்—நான் இதில் மற்றும் அதில் உங்களுடன் இணங்க முடியாது” என்று கூறுவார்கள். புரிகிறதா? நான் எந்த ஒரு பெயரையும் அறிவிக்கமாட்டேன். பெரும்பாலான கேள்விகளில் கையொப்பமிடப்பட்டுள்ளது, ஆனால் நான்…அது எனக்காகவே. புரிகிறதா? இவைகளை நான் வைத்துக்கொள்ளும்படியாக, நான் இங்கு வைத்துவிடுகிறேன். ஆகையால் சில கேள்விகள் நீல நிறத்தில் எழுதப்பட்டுள்ளன; சில கேள்விகள் தட்டெழுத்திலும், வெவ்வேறு விதங்களிலும் உள்ளன. 64 இப்பொழுது, இங்கு முதலாவது கேள்வி: “நீங்கள் எப்பொழுது இரட்சிக்கப்படுகிறீர்கள்?” அடுத்து…இதைத் தொடர்ந்து, “தண்ணீர் ஞானஸ் நானம் பெறாமல் பாவங்கள் போக்கப்படக் கூடுமா, ஏனெனில் கொர்நேலியுவும் அவன் வீட்டாரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டபோது, அவர்கள் அப்பொழுது ஞானஸ்நானம் பெற்றிருக்கவில்லையே.” பவுல்…அவன் தமஸ்குவுக்குப் போகும் வழியில்…தன் அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகும், அவனும், கூட, தண்ணீர் ஞானஸ்நானம் பெறும் வரைக்கும் அவனுடைய பாவங்கள் அவனில் குடி கொண்டிருந்தது; ஏனெனில் இது என்ன கூறியுள்ளதென்றால் (நான் உறுதியாக அறிந்துகொள்வதற்காக இந்த வசனங்களையெல்லாம் படித்துப் பார்த்தேன்)… அது அப்படித்தான்…அவன், “எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஞானஸ்நானம் பெற்று, ஞானஸ்தானம் பண்ணப்படு, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன (மன்னிக்கப்பட்டன), மேலும்—மேலும் போய் கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்” என்றார்.

4065 அதன் பிறகு, “பரிசுத்த ஆவியின் அபிஷேகம்… ஒருவன் அதைப் பெற்றுக்கொண்டு, தண்ணீர் ஞானஸ்நானம் பெறாததால் அவனுடைய பாவங்கள் அவனில் நிலைத்திருக்க வாய்ப்புண்டா.” 66 “அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றிருந்தாலும், ஒரு நபர் பரலோகத்துக்கு செல்வதை நிச்சயப்படுத்திக்கொள்ள ஞானஸ்நானம் பெற வேண்டுமா; அதே சமயத்தில் அவர்கள் பரலோகத்திற்கு செல்ல உறுதி செய்யப்படுவதற்கு முன்னர், அவர்கள் தண்ணீரில் ஞானஸ்தானம் பண்ணப்பட்டு இருக்க வேண்டுமா?” இப்பொழுது, நான் நினைக்கிறேன்…இப்பொழுது, இந்த சகோதரனை எனக்குத்—எனக்குத் தெரியாது, இது மிகவும் நல்ல, புத்திசாலித்தனமான கேள்வி. இதை நாம் விரிவாகக் காண வேண்டும், ஏனெனில் இவைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமானதாகும். புரிகிறதா?

4167 இப்பொழுது, நான் நம்புவது என்னவெனில் இந்த சகோதரன் இது தான் உண்மை என்று என்னிடம் கூறுகிறார் அல்லது அது உண்மையென்று என்னைக் கூற வைக்கிறார் (அவர் ஒருக்கால் அவ்விதம் விசுவாசிக்கக் கூடும், எனக்குத் தெரியாது) மேலும்…இது வார்த்தையின் பேரில் உள்ள உண்மையான விசுவாசத்துக்கு, ஒரு—ஒரு சிறு முரண்பாடாக உள்ளதென்று நினைக்கிறேன். நான்… இந்த சகோதரன் அவ்விதம் கூறுவது போல் தோன்றுகிறது…இப்பொழுது, அதனால் பரவாயில்லை, சதோதரனே; நீங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கக்கூடும்; அது அருமையானது. இது ஒரு நல்ல கேள்வி என்று நான்—நான் எண்ணுகிறேன்…இதை நீங்கள் எழுதிக் கேட்டதற்காக எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்பொழுது, புரிகிறதா? மறுஜென்மத்துக்காக தண்ணீர் ஞானஸ்நானம் கொடுப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை (புரிகிறதா?), ஏனெனில் நீங்கள் அவ்விதம் செய்யும் போது, அது இரத்தத்தை அகற்றிவிடுகிறது. புரிகிறதா? மறுஜென்மம் நடந்துள்ளது என்பதைக் காண்பிக்கவே நீங்கள் தண்ணீர் ஞானஸ்நானம் பெறுகிறீர்கள். புரிகிறதா? அது வெளிப்புறத்தில்…அது மறுஜென்மம் அடைந்ததற்கு ஒரு அடையாளம். முழு காரியமே முன்குறித்தலை ஆதாரமாகக் கொண்டுள்ளது. புரிகிறதா? ஆனால் யார் இரட்சிக்கப்படுவார்கள் யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்று நமக்குத் தெரியாது; எனவே நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறோம். விசுவாசத்தினால் நாம் பிரசங்கித்துக்கொண்டே செல்கிறோம்.

4268 ஆனால் மறு ஜென்மம் அடைதல் என்னும் விஷயத்தில், அங்குதான் எனக்கு ஒருத்துவ சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டு. இந்த கேள்விகளின் ஒலி நாடாவை கேட்கும் ஒருத்துவ சகோதரரே, இது உங்கள் அலுவலகத்திலோ, அல்லது உங்கள் வீட்டிலோ, அல்லது ஒருத்துவ சகோதரரின் மத்தியிலோ கிடைக்க நேரிட்டால், என்னைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், இப்பொழுது, அதாவது நான்—நான் அப்படியே நாம் கருத்து வேற்றுமை கொண்டுள்ளதால்தான். 69 எனக்கும் என் மனைவிக்குமிடையே கருத்து வேற்றுமை உண்டு; நிச்சயமாக எங்களுக்கு உண்டு. அவளை நேசிப்பதாக நான் அவளிடம் கூறினால், அவள் அதை நம்பமாட்டேன் என்கிறாள். அப்படியானால்—அப்படியானால் எங்களுக்கிடையே நிச்சயம் கருத்து வேற்றுமை காணப்படுகிறது, ஆனால் நாங்கள் நிச்சியமாகவே நன்றாகத்தான் ஒன்று சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று, நான் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன். 70 இப்பொழுது கவனியுங்கள். அவளை நான் நேசிக்கிறேன் என்பதற்கு, நான் போதுமான அறிகுறிகளை அவளுக்கு காண்பிக்காமல் இருக்கக் கூடும். ஆனால் நான் வெளியே சென்று பிரசங்கித்து, பின்பு வீடு திரும்பி தூண்டிலை எடுத்துக்கொண்டு மீன்பிடிக்கச் சென்றுவிடுகிறேன். பார்த்தீர்களா? ஆனால் என் இருதயத்தின் ஆழத்தில் அவளை நான் நேசிக்கிறேன்; அவளை விட்டு பிரிந்திருக்க எனக்கு நிர்ப்பந்தம் ஏற்படுகிறது, அவ்வளவுதான். 71 இப்பொழுது, இதை கவனிப்பீர்களானால்…இப்பொழுது, நமக்கு கருத்து வேற்றுமை இருக்குமானால், அதனால் பரவாயில்லை; ஆனால் நீங்கள் பாருங்கள், தண்ணீர் பாவங்களைப் போக்குவதில்லை; அது நல் மனச்சாட்சியை வெளிப்படுத்தும் ஒன்றாயுள்ளது.

4372 இப்பொழுது, பவுல் அங்கு ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டதன் காரணம் என்னவென்று நான் நினைக்கிறேன் என்றால், ஏனென்றால் அது அதிகாரப்பூர்வமானது மற்றும் வேதத்தில் உள்ளபடி நாம் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த சம்பவத்துக்கு நான் உங்களைக் திரும்ப கொண்டு செல்ல விரும்புகிறேன்; கள்ளன் சிலுவையில் தொங்கினபோது… அவன் ஞானஸ்நானம் பெறாமலேயே மரித்தான், இருப்பினும் இயேசு அவனை அந்த நாளில் பரதீசில் சந்திப்பார் என்னும் வாக்குத்தத்தத்தை அவன் பெற்றுக்கொண்டான்; பரதீசில், இழக்கப்பட்டோரின் இடத்தில் அல்ல, ஏனெனில் முதன் முறையாக அவனுக்கு அந்த தருணம் அளிக்கப்பட்டது. 73 கொர்நேலியுவின் வீட்டில் இருந்தவர்கள் வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டபோது, அவர்களுடைய இருதயங்கள் அதே நிலையில் இருந்தன என்று நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை உயிர்ப்பித்தார், அது அவர்களுக்கு உயிர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆகையால்தான் பரிசுத்த ஆவியானவர் அந்நிய பாஷையில் பேசவும் தீர்க்கதரிசனம் உரைக்கவும் செய்கிறார். ஏற்றுக்கொள்ள விருப்பமுள்ள ஜனங்களின் இருதயங்களில் வார்த்தை விழுந்தது, அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டவைகளைக் கண்டனர். 74 அதுதான் இன்றைக்கு நாம் வாழும் இந்த நேரத்தில் எனக்கு புதிராக உள்ளது. அங்கு கூடியிருந்த ரோமர்களும் யூத…மற்றும் கிரேக்கர்களும், தரிசனம் நிச்சயமாக நிறைவேறினதை, அவர்கள் கண்ட பிறகு, பரிசுத்த ஆவி அவர்களுடைய இருதயங்களில் உணர்ச்சியூட்டி, பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழுந்தார். புரிகிறதா?

4475 உதாரணமாக…பாருங்கள், கொர்நேலியுவிடம், “போய் அழை…” என்று கூறினான். அவன் ஒரு நூற்றுக்கு அதிபதியாயிருந்தான், மற்றும் அது ஒரு நூறு என்பதிலிருந்து “நூற்றாண்டு” என்பது வருகிறது. அவன் நூறு பேர்களுக்கு மேல் அதிகாரம் வகித்தான். அவன் ஒரு ரோம நூற்றுக்கதிபதி; அவன் ஜெபித்துக் கொண்டிருந்தபோது அவன்—அவன் ஒரு தரிசனத்தைக் கண்டிருந்தான், ஒரு தேவதூதன் அவனிடத்தில் வந்தான். அவன் ஒரு நல்ல மனிதனாயிருந்தான். அவன், “நீ யோப்பா பட்டினத்துக்குப் போ. அங்கே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்பவனிடத்தில் சீமோன் பேதுரு என்னும் பெயர் கொண்ட ஒருவன் தங்கியிருக்கிறான். அவன் மேல் வீட்டில்…நீ அவனை அங்கு காண்பாய். அவன் வந்து வார்த்தையை உனக்குச் சொல்லுவான்” என்றான். 76 பாருங்கள், அந்த தரிசனம் மிகவும் தத்ரூபமாக இருப்பதாக அவன் எண்ணினான். “நான் உறங்கிய நிலையில் இருந்திருக்க முடியாது; நான் அந்த தேவதூதனை நேரடியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.” எனவே அவன் மிகவும் விசுவாசமுள்ள தனது போர்ச்சேவகரில் சிலரை அங்கு அனுப்பினான். 77 அங்கே, தேவன் அந்த அப்போஸ்தலனை வரிசையின் மறுபக்கத்தில் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அவர், “இப்பொழுது, எழுந்திரு” என்றார். அவன் சொன்னான்…அவன் மேல் வீட்டில் இருந்து கொண்டு…திருமதி பேதுரு இரவு உணவு ஆயத்தம் பண்ணுவதற்காக காத்துக்கொண்டிருந்தான். அவன் அங்கு மேல் வீட்டில் இருந்தபோது…அவன் வனாந்தர வழியாக, ஒருக்கால் நடந்து வந்த காரணத்தால், அந்த அப்போஸ்தலனுக்கு, மிகவும் பசித்தது. மேலும்—மேலும் அவன் இரவு உணவுக்கு சற்று முன்பு, மேல் வீட்டில் படுத்திருப்பது வழக்கம், இப்பொழுதும் அவ்விதம் செய்வது வழக்கமாயுள்ளது. இன்னமும் அதேக் காரியத்தை செய்கிறார்கள், கூரையின்மேல் படுத்துக்கொள்கிறார்கள், அவர்கள் ஏணியின் மேலேறி மற்றும் சில சமயங்களில் படிகள் மற்ற காரியங்களின் மூலம் ஏறி, கூரைக்குச் சென்று குளிர்ச்சியான மாலை வேளையில் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்.

4578 ஆனால் இந்த அப்போஸ்தலன் உறங்கிவிட்டான், அவன் உறங்கிக்கொண்டிருந்தபோது, உறக்கத்தையும் கடந்து ஞானதிருஷ்டியடைந்தான். அப்பொழுது அசுத்தமான ஜீவன்கள் நிறைந்த ஒரு துப்பட்டி இறங்கி வருகிறதைக் கண்டான், அவன் “எழுந்திரு, அடித்துப் புசி” என்று சொல்லும் ஒரு சத்தத்தைக் கேட்டான். அவன், “அப்படியல்ல, ஆண்டவரே, அசுத்தமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை” என்றான். 79 இப்பொழுது, பாருங்கள், அங்கு ஒரு தரிசனம் உண்டானது. இப்பொழுது, கவனியுங்கள்! அதற்கு அர்த்தம் உரைத்தாக வேண்டும். இப்பொழுது, பேதுரு ஒரு வேட்டை பயணம் மேற்கொண்டு, அவன் முன்பு புசித்திராத ஏதோ ஒரு வகை மிருகத்தைக் கண்டு, அவன் அதை புசிக்க முயற்சி செய்வதுபோல் அது தோன்றினது. அவன், “அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமாயிருக்கிற யாதொன்றையும் நான்—நான் ஒருக்காலும் புசித்ததில்லை” என்றான். 80 அவரோ, “நான் சுத்தமாக்கினவைகளை…சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே” என்றார். அவர், “எழுந்திரு, மூன்று பேர் உனக்காக வாசலில் காத்திருக்கிறார்கள். ஒன்றுக்கும் சந்தேகப்படாமல், போ” என்றார். அதே நேரத்தில் அவர்கள் கதவைத் தட்டிக் கொண்டிருந்தனர். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார்—ஆசி.]

4681 இப்பொழுது, புரிகிறதா? விசுவாசமுள்ள அந்த போர்ச்சேவகர், இந்த மனிதனை, அந்த தரிசனத்தின்படியே கண்டபோது… அவர்கள் தேவன் தரிசனத்தில் உரைத்த அதே மனிதனுடன் திரும்பி வருகின்றனர்…முன் பின் தெரியாதவன், அதிகம் அறியாத, ஒரு செம்படவன். ஆனால் அந்த சிறு கூட்டத்திற்கோ, இவனைக் கண்டு பிடித்தது மிகவும் முக்கியமான செயலாக இருந்தது. அவன் தரிசனத்தில் கண்ட அந்த இடத்திலே உள்ள, வீட்டுக்கு அவன் இங்கே வந்து கொண்டிருக்கிறான். கொரிநேலியு எல்லா ஜனங்களையும் வரவழைத்து அங்கு கூட்டி, “ஏன், நான் கண்ட அதே விதமாக உள்ளதே” என்றான். பின்பு பேதுரு எழுந்து நின்று அவர்கள் எவ்விதம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர் என்பதைக் குறித்து பிரசங்கிக்கத் தொடங்கினான், அவன் பேசிக்கொண்டிருக்கையில்…! அவர்கள் ஒரு தரிசனம் கிரமமாகவும் பரிபூரணமாகவும் நிறைவேறுகிறதைக் கண்டனர். ஒரு கூட்டம் புறஜாதி மக்கள் ஒரு தரிசனம் நிறைவேறுகிதைக் கண்டு, அவர்கள் எவ்விதம் ஜீவனைப் பெற வேண்டும் என்னும் சத்திய வசனத்தைக் கேட்டனர். அப்பொழுது அவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார்.

4782 அது இக்கூடாரத்துக்கு இக்காலை வேளையில் என்ன செய்ய வேண்டும்? வியாதியஸ்தர், அவதியுறுவோர், குருடர், செவிடர், ஊமையர், பாவி எல்லோருமே… பல்லாயிரக் கணக்கான காரியங்களில், ஒரு முறையாவது ஒரு அணு கூட தவறினதில்லை என்பதை, சற்று எண்ணிப் பாருங்கள்! ஏன், அது நமது இருதயங்களை அனல் மூட்ட வேண்டும்! 83 இப்பொழுது, இப்பொழுது, அவன், அவன் இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அப்பொழுது பேதுரு, “நம்மைப் போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறுதபடிக்கு, நாம் தண்ணீரை விலக்கலாமா” என்றான். அவர்களுடைய பாவங்கள் ஏற்கனவே போய் விட்டன என்று நான் விசுவாசிக்கிறேன், இல்லையெனில் பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்திருக்க மாட்டார்; அது முன்குறிக்கப்பட்ட ஒரு பாண்டமாய் இல்லாமற்போயிருந்தால், அவர் உள்ளே வந்திருக்கவேமாட்டார். அவர்கள் பின்தொடருவார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் அறிந்திருந்தான்…

4884 நான் நினைக்கிறேன் பவுல், மறுபடியுமாக ஞானஸ்நானம் பெற வேண்டிய காரணம் என்னவெனில், அவன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினான். அது உண்மை. அவர், தேவன் அறிந்திருந்தார், ஏனெனில் அவர், “நான் அவனைத் தெரிந்து கொண்டேன்” என்று கூறினார், அவர் அனனியா, தீர்க்கதரிசியிடம் கூறினார். சவுல் அங்கே ஒரு அறையில் கறுப்படைந்த முகத்துடனும் இருளடைந்த கண்களுடனும், அவன் மேல் முழுவதும் தூசி படிந்தவனாய் ஊக்கமாய் ஜெபித்துக் கொண்டிருப்பதை அவர் அறிந்தபோது, அவன் போகும் வழியில் அவனுக்கு பிரத்தியட்சமான அக்கினி ஸ்தம்பத்தினால் அவன் பார்வையிழந்தான், அவர், “அவன் புறஜாதிகளுக்கென்று நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்” என்றார். மூன்று நாட்கள் கழித்து தமஸ்கு நதியில் அனனியா அவனுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பான் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் அவனுடைய பாவங்கள் ஏற்கனவே போக்கப்பட்டன என்று நான் விசுவாசிக்கிறேன், ஆனால் உலகத்துக்கு காண்பிக்க அவன் இதை செய்ய வேண்டியதாயிருந்தது. ஆகையால்தான் நாமும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று நான் விசுவாசிக்கிறேன். முன் குறிக்கப்பட்ட வித்து இதை கண்டு கொள்ளும், அவர்கள் மாத்திரமே இதை கண்டு கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

4985 இப்பொழுது, திரித்துவ விசுவாசத்தில் உள்ள சகோதரரே, உங்களை நான் குற்றப்படுத்துவதாக எண்ண வேண்டாம், என் அருமை சகோதரனே, நான் கேள்விகளுக்குத் தான் பதிலுரைத்துக் கொண்டிருக்கிறேன். நான் அதைக் குறித்த என்னுடைய உண்மையான எண்ணங்களை மாத்திரமே அறிவிக்கிறேன். இந்த ஒலிநாடா என்றாவது ஒரு நாளில் ஆப்பிரிக்காவை அடையக் கூடும். அவருடைய வருகையின் நிழல்களில் நாம் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் எல்லோருமே அதை விசுவாசிக்கிறோம். எனக்கு தென் ஆப்பிரிக்காவில் பல விலையுயர்ந்த நண்பர்கள் உள்ளனர், டூப்ளெஸில் மற்றும் ஷோமான்ஸ், மற்ற யாவரும், ஏகர் போன்றவர், அவர்கள் ஆப்பிரிக்காவில் உள்ள அருமையான சகோதரர்கள். ஆனால் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மற்றெல்லாரை விட சிறப்பு ஸ்தானம் வகிப்பவர் ஒருவர் எப்பொழுதும் உண்டு. அவர்கள் எல்லோரையும் நான் இந்த சகோதரனைப் போலவே அருமையாய் நேசிக்கிறேன். அதைப் போலவே அருமையான, சகோதரன் ஜாக்சனும் அவருடைய மனைவியும் என் வாழ்க்கையில் எப்பொழுதுமே சிறப்பான ஒரு ஸ்தானம் வகித்து வருகின்றனர். அதை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை; அவர்—அவர் அங்கே நின்றார். இப்பொழுது, அங்கு என் நெருங்கிய நண்பர், ஜஸ்டிஸ் டூப்ளெஸிஸ், மற்றும் ஓ, இன்னும் பல அருமையானவர்கள், அருமையான ஆப்ரிக்கான்ஸ் சகோதரரும் சகோதரிகளும் உள்ளனர். 86 பாருங்கள், சகோதரன் ஜாக்சனும் அவருடைய மனைவியும் எனக்கு ஏன் சிறப்பாக உள்ளனர்? அவர் வேட்டையாடுபவர் என்னும் காரணத்தினாலா? இல்லை! ஏனெனில் எனக்கு அங்கே பல அருமையான வேட்டைக்கார நண்பர் உள்ளனர். அவர் ஏன் சிறப்பாக இருக்கிறார்? ஏன்? இவையனைத்துக்கும் பின்னால் உள்ள இரகசியம் மட்டும் உங்களுக்கு தெரிந்திருக்குமானால்! ஆனால் எனக்குத் தெரிந்த எல்லா இரகசியங்களையும் நான் ஜனங்களிடம் கூறுவதில்லை. பாருங்கள், கர்த்தர் சிட்னி ஜாக்சனிடம் இங்கு வரும்படியாக கூறின அதே நேரத்தில், “தென் ஆப்பிரிக்காவில் சிட்னி ஜாக்சனிடம் தொடர்புகொள்” என்று என்னிடம் ஏன் கூற வேண்டும்? சென்ற ஞாயிறன்று அவரும் அவருடைய மனைவியும், இங்கே அஸ்தமன நேரத்தில், இங்கே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். பாருங்கள், அந்த நோக்கத்துக்கென்று முன் குறிக்கப்படுதல். புரிகிறதா?

5087 இப்பொழுது, நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதனால் இரட்சிக்கப்படுகிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். உள்ளில் ஏதோ ஒன்று நடந்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதே தண்ணீர் ஞானஸ்நானம், ஏனெனில் தண்ணீருக்கு எந்த குணமும் இல்லை; அது ஒரு அடையாளம் மட்டுமே. நீங்கள் எப்பொழுது இரட்சிக்கப்படுவதாக நான் விசுவாசிக்கிறேன் என்றால்… 88 இப்பொழுது, அநேக ஜனங்கள் உள்ளனர் (இதை அந்த சகோதரனுக்கு தெளிவாக்க விரும்புகிறேன்)… இரட்சிக்கப்பட்டதாக கூறிக்கொள்ளும்…அநேக ஜனங்கள் உள்ளனர்; அநேகர் இயேசுவின் நாமத் தினால் ஞானஸ்நானம் பெற்றுள்ளனர்; அநேகர் அந்நிய பாஷையில் பேசி, பரிசுத்த ஆவியின் எல்லாவிதமான அடையாளங்களும் பெற்று, அதே சமயத்தில் இரட்சிக்கப்படாமல் உள்ளனர். அது உண்மை. “அந்நாளில் அநேகர் என்னிடம் வந்து, ‘கர்த்தாவே, உமது நாமத்தினாலே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன் அல்லவா?’ (பிரசங்கி) ‘உமது நாமத்தினாலே, நான், பிசாசுகளைத் துரத்தி, அநேக அற்புதங்களைச் செய்தேன் அல்லவா என்பார்கள்.’” அவர், “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே. என்னை விட்டு அகன்று போங்கள்’ என்பார்” புரிகிறதா? எனவே இக்காரியங்கள் அனைத்தும், இருப்பினும் அது—அது—அது தேவன்; அது அவருடைய கரங்களில் உள்ளது. ஆனால் அதை நான் காணும் போது… 89 நீங்கள், “பாருங்கள் அப்படியானால், மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி நீங்கள் ஏன் ஜனங்களை அழைக்கிறீர்கள்?” எனலாம். ஏனெனில் நான் தொடக்கத்தில் இருந்த மாதிரியைப் பின்பற்றுகிறேன். நாம் அந்த மூல வரைபடத்தை இழந்துபோகக் கூடாது.

5190 இப்பொழுது, அப்போஸ்தலனாகிய பவுல் அற்புதமான மனிதர்களாக இருந்த சில சீஷர்களை கண்டபோது நடந்ததை நாம் எடுத்துக் கொள்வோம். அவர்கள் இரட்சிக்கப்பட்டிருந்தனர் என்று நான் நம்புகிறேன், இருப்பினும் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்கவில்லை, அவர்கள் வேறு ஞானஸ்நானம் பெற்றிருந்தனர் (அப்போஸ்தலர் 19). பவுல் எபேசுவின் மேல் கரை வழியாக சென்றபோது, சில சீஷர்களைக் கண்டான். அவன் அவர்களிடம், “நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அவர்கள், “எங்களுக்கு பரிசுத்த ஆவியைக் குறித்து தெரியாது, பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றார்கள். அவன், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “நாங்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம், இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான் தான் எங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்” என்றார்கள். அது மிகவும் நல்ல ஒரு ஞானஸ்நானமே. 91 இந்த கண்டிப்பான அப்போஸ்தலனைக் கவனியுங்கள். அவன், “யோவான் உங்களுக்கு மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைதான் கொடுத்தான்” என்றான். பாவமன்னிப்புக்கென்று அல்ல, ஏனெனில் பலியானது அப்பொழுது கொல்லப்படவில்லை, அதற்கு ஏற்ற ஞானஸ்நானம்… அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றார்கள், பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்.

5292 இப்பொழுது, இது என்ன செய்தது? ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவர்கள் வேதவாக்கிய சத்தியத்தைக் கண்டவுடனே, அவர்கள் சத்தியத்துக்குள் நடந்து விசுவாசிக்கேற்ற பலனைப்பெற்றுக் கொண்டனர் என்பதை இது காண்பிக்கிறது: பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார், அவர்கள் அந்நிய பாஷையில் பேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, தேவனை மகிமைப்படுத்தினார்கள். இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? புரிகிறதா? அவர்களுக்கு ஏற்கனவே மிகுந்த சந்தோஷமும், சத்தமிடுதலும், தேவனைத் துதித்தலும் இருந்த பிறகு இதைச் செய்தனர். 93 வேதத்திலே அவர்களுக்கு அங்கே ஒரு பாப்டிஸ்டு பிரசங்கி இருந்தான்; அவனும் கூட ஞானஸ்நானம் பெற்றிருந்தான். ஆனால் அவன், வேதவாக்கியங்களைக் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று அவன் நிரூபித்துக் கொண்டு வந்தான். ஜனங்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிருந்தது, அவர்கள் அதைக் குறித்து மிகவும் களிப்புற்றிருந்தனர்; இருப்பினும் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை! அவர்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிற்று. பவுல் கலாத்தியர் 1:8-ல் “நான் உங்களுக்குப் பிரசங்கித்த இந்த சுவிசேஷத்தையல்லாமல், வானத்திலிருந்து வருகிற தூதன் வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்ட வனாயிருக்கக்கடவன்” என்றான். அது என்னவாயிருந்தாலும் கவலையில்லை.

5394 எனவே, இக்காரியங்களை அறிந்தவர்களாய்…இதை நீங்கள் ஒருக்கால் அறியாமலிருக்கலாம், என் சகோதரரே. ஆனால் இவைகளை அறிந்திருக்கும்போது, முதலாம் அஸ்திபாரத்தின் திட்டத்தை நிறைவேற்ற நான் தேவனுக்கு கட்டுப்பட்டு கடமைப்பட்டவனாயிருக்ககிறேன், ஏனெனில் போடப்பட்ட அஸ்திபாரமேயல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது; அது தான் அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளின் அஸ்திபாரம். தீர்க்கதரிசிகள் அதை முன்னுரைத்தனர், அப்போஸ்தலர் அதை நிறைவேற்றினர். கட்டிடம் முடிவு பெறும் வரைக்கும் அதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். 95 இப்பொழுது, நான் நம்புவது என்னவெனில், ஒரு மனிதன் தன் முழு இருதயத்தோடும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் அவன் இரட்சிக்கப்படுகிறான், அவனுடைய இருதயத்திலிருந்து, வெளிப்புறமான மனச்சாட்சியிலிருந்து அல்ல…

5496 பாருங்கள், நீங்கள்—நீங்கள் இரட்டை தன்மையுள்ளோர், ஒன்றில் மூன்று ஜனங்களாய், ஆத்துமா, ஆவி, சரீரம். இப்பொழுது, நான் நம்புவது என்னவெனில் உங்கள் வெளிப்புறமான புலன்கள், உங்கள்—உங்கள் ஆத்துமா…உங்கள் ஆத்துமா அல்ல, ஆனால் உங்கள் வெளிப்புற மனச்சாட்சி, உங்கள் புலன்கள்… வேறு விதமாகக் கூறினால், நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள்—நீங்கள் ஐம்புலன்களினால் இயக்கப்படுகிறீர்கள்: பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல். உங்கள் பூமிக்குரிய வீட்டுடன் தொடர்பு கொள்வதற்கு அவை உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன; பரலோக வீட்டுடன் தொடர்புகொள்ள அவை—அவை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. ஒரு மானிட சரீரத்தில் உண்மையில் ஆறு புலன்கள் உள்ளன, ஏனெனில் அவன் வேதத்தில் ஆறு என்னும் எண்ணாக இருக்கிறான். அவன் ஆறாம் நாளில் சிருஷ்டிக்கப்பட்டான், அவன் ஆறு என்னும் எண்ணாக இருக்கிறான், ஒரு மனிதன் அவ்வாறு இருக்கிறான். அவனுக்கு பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல், விசுவாசம் என்பவை உள்ளன. அவனுடைய விசுவாசமே அவன் போய் சேர வேண்டிய இடத்தை, அவன் எதை நோக்கிச் செல்கிறான் என்பதை நிர்ணயிக்கிறது. 97 இப்பொழுது, விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின், ருசிக்கப்படாதவைகளின், உணரப்படாதவைகளின், முகரப்படாதவைகளின், கேட்கப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. விசுவாசத்தினால், அவன் வார்த்தையை கிரகித்துக்கொள்ளும்போது. அது அவனை ஒரு பரிமாணத்துக்கு கொண்டு சென்று (புரிகிறதா?) அதை அவன் பெற்றுக்கொண்ட ஒன்றைப் போலாக்கி, அதை அவனுக்கு மிகவும் மெய்யானதாக்குகிறது. அது நிறைவேறும் என்று அவன் அறிந்துகொள்கிறான்.

5598 இப்பொழுது, தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்த இந்த கேள்விக்கும் அதே காரியம் தான். புரிகிறதா? இந்த ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவார்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார். பவுல், அவன் இந்த அறிக்கையை விடுத்தான், அதாவது, அவனுக்குப் போதிக்கப்பட்ட உபதேசமேயல்லாமல், வேறெந்த உபதேசத்தையும், எந்த மனிதனும், வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனும் கூட போதிக்கக் கூடாது என்றான்; எனவே, நான் ஒரு பிரசங்கியாக, ஒரு ஊழியக்காரனாக, ஒரு தீர்க்கதரிசியாக, அல்லது நான் என்னவாக இருந்தாலும், அல்லது வானத்திலிருந்து வந்த ஒரு தூதனாக இந்த அப்போஸ்தலன் செய்த ஒன்றுக்கு முரணான ஒன்றை போதிப்பேனானால், ஜனங்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று நான் கட்டளையிடாமற்போனால், நான் விசுவாசிப்பதாக உரிமை கோருபவைகளுக்கு வேதத்தின்படி ஒரு கள்ளச் சாட்சியாயிருப்பேன்.

5699 எனவே மாதிரியானது கொடுக்கப்பட்டு விட்டதென்று நான் நம்புகிறேன். வேதத்தில் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். ஒரு முறையாவது யாருமே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. பார்த்தீர்களா? யாருமே ஒருக்காலும் தெளிக்கப்படவில்லை; அவர்கள் அனைவரும் தண்ணீரில் முழுக்கப்பட்டனர். 100 எனவே நான் நம்புவது என்னவெனில் நீங்கள் உண்மையில்… உங்கள் கேள்விக்கு, விலையேறப்பெற்ற சகோதரனே, தேவன் உங்கள் இருதயத்தை அறிந்திருக்கிறார் என்று நான் விசுவாசிக்கும் போது… ஆயிரக்கணக்கானோர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருப்பார்கள். நீங்கள் உலர்ந்த பாவியாய் தண்ணீருக்குள் சென்று, ஈரமுள்ள பாவியாய் வெளியே வரக்கூடும். பாருங்கள், புரிகிறதா? ஆனால் உத்தமமான, உண்மையுள்ள விசுவாசியாய், நீங்கள் எல்லா விசுவாசத்திலும், தேவனுக்கு முன்பாக நல்மனச் சாட்சியிலும் நடந்து, அதைக் காணும்போது, நீங்கள் ஞானஸ்நானம் பெறுகின்றீர்கள்! ஆனால் உள்ளில் கிருபையின் ஒரு கிரியை நடந்து விட்டது என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்துவதே ஞானஸ்நானம் என்று நான் விசுவாசிக்கிறேன்.

57101 தேவன் பேழையைக் கட்டினது போன்று. “நோவா, அதற்குள், நீயும் உன் வீட்டாரும் உன் குடும்பத்தினரும் பிரவேசியுங்கள்” என்றார். அவர்கள் அதற்குள்ளே பிரவேசித்தனர். இப்பொழுது, ஒரு பேழை இல்லாமல் போயிருந்தால், தேவன் நோவாவை ஒரு மரக்கட்டையின் மேல் உட்காரச் செய்திருப்பார் அல்லது தண்ணீரின் மேல் நடக்கச் செய்திருப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். புரிகிறதா? ஆனால் அவன் உள்ளே பிரவேசிப்பதற்காக ஒரு பேழையை உண்டாக்கச் செய்தார், அதுவே அதை செய்வதற்கான வழியாயிருந்தது; அது தேவனால் அருளப்பட்ட வழியாயிருந்தது. தேவன் ஒரு மனிதனை கிருபையினால் இரட்சிக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை வெளிப்படையாக தெரிவிப்பதின் மூலம் அதற்குள் பிரவேசிப்பதே தேவனால் அருளப்பட்ட வழியாயுள்ளது, ஏனெனில் அவர்கள் அனைவரும் அந்த விதமாகத்தான் ஞானஸ்நானம் பெற்றார்கள். 102 நான் மற்ற நபரை குற்றப்படுத்திக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அது வெறும்…அதுதான் அது என்று நான் நினைக்கிறேன். தண்ணீர் ஒரு மனிதனை இரட்சிப்பதில்லை, அவன் இரட்சிக்கப்பட்டிருக்கிறான் என்பதை மாத்திரமே அது காண்பிக்கிறது; அது வெளிப்படையாக தெரியப்படுத்துதல். இப்பொழுது, அது ஒரு வேளை சரியில்லாமல் இருக்கலாம், சகோதரனே. அப்படி இருக்குமானால், பாருங்கள், நாம் அதை வேறொரு சமயம் பார்க்கலாம் அல்லது…சரி.

58242. ஆதியாகமம் 6:4-ல், ஜலப்பிரளயத்துக்குப் பிறகு, இராட்சதர் எங்கிருந்து வந்தனர்? 103 அது ஒரு நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி. அது ஒரு புத்திசாலித்தனமான கேள்வி. இந்த இராட்சதர் எங்கிருந்து வந்தனர்? நமக்குத் தெரிந்த வரையில், ஆதாம் ஒரு இராட்சதன் அல்ல, அவன் இராட்சதனாயிருந்தால், வேதம் அவ்வண்ணமாய்க் கூறியிருக்கும். அவன் ஒரு சாதாரண மனிதனாயிருந்தான். அவர்கள் எங்கிருந்து வந்தனர்? இப்பொழுது—இப்பொழுது, இது ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விஷயம் மற்றும் இப்பொழுது தான் இது எனக்கு கையில் கொடுக்கப்பட்டது. அது ஒரு பெரிய, கறுப்புத் தாளில் உள்ளது, மற்றும் இது ஒரு, அல்லது, வெள்ளைத் துண்டுத் தாளில், பெரிய, கறுப்பு எழுத்துக்களில் உள்ளது.

59104 இப்பொழுது, இந்த இராட்சதர்…நான் நினைக்கிறேன் இது ஒரு…அண்மையில் யாரோ ஒருவர் இங்கு…அது ஜோசிபஸாக இருக்கக்கூடும். ஊழியக்கார சகோதரர்களே, அது ஜோசிபஸ் என்று, இப்பொழுது நான்—நான் கூறிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் அது அவராக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது, அல்லது டாக்டர் ஸ்கோஃபீல்ட், அல்லது அவர்களில் சிலராக இருக்கலாம், தேசத்திலிருந்த இந்த இராட்சதர் உண்மையாகவே சாத்தானுடைய கதைக்கு செவிகொடுத்து விழுந்து போன தேவனுடைய ஆவிகள் என்று கூறியுள்ளார், பரலோகத்தில்…அவன் சொன்னதற்கு…அது மிகாவேல்…பரலோகத்தில் மிகாவேலுக்கு எதிராக ஒரு யுத்தத்தை எழுப்ப முயற்சித்து…கீழே தள்ளப்பட்டனர். இந்த தேவபுத்திரர் மனுஷகுமாரத்திகளைக் கண்டனர், அவர்கள் அந்த சமயத்தில் இராட்சதர்களாக மாம்ச உருவெடுத்து வந்தனர் என்கின்றனர். அவ்விதம் நீங்கள் செய்தால், நீங்கள் சாத்தானை ஒரு சிருஷ்டிகராக ஆக்கிவிடுவீர்கள். நீங்கள் அவ்விதம் செய்ய முடியாது.

60105 ஏழாம் நாள் ஆசரிப்பு கூட்டத்தாரைச் சேர்ந்த டாக்டர் ஸ்மித் பலி ஆட்டைக் குறித்துக் கூறினது போல. அவர் சொன்னார் ஒரு ஆடு…அவர்கள் பலியிடும் நாளில் இரண்டு ஆடுகளை கொன்றனர், அதாவது பாவநிவிர்த்தி நாளின்போது, ஒரு ஆடு கொல்லப்பட்டது மற்றும் மற்ற ஆடு அவிழ்த்துவிடப்பட்டது. கொல்லப்பட்ட ஆடு, நமது பாவங்களைச் சுமந்து மரித்த இயேசுவுக்கு அடையாளமாயுள்ளது என்றும், அவிழ்த்துவிடப்பட்ட ஆடு பிசாசைக் குறிக்கிறதென்றும், அது நமது பாவங்களை சுமந்து கொண்டு அதனுடன் நித்தியத்துக்கு செல்கிறதென்றும் அவர் கூறினார். இப்பொழுது, நீங்கள் பாருங்கள், எந்த…என் கருத்தின்படி…இது ஏழாம் நாள் ஆசரிப்பு சகோதரனுக்கு கிடைக்க நேர்ந்தால், நான் அந்த மகத்தான மனிதன் டாக்டர் ஸ்மித்தைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. ஓ, அவர் சாமர்த்தியமுள்ள, புத்திசாலியான, அருமையான, பண்புள்ள கிறிஸ்தவர், ஒரு விசுவாசி; ஆனால் என்னைப் பொறுத்த வரையில், நீங்கள் பாருங்கள், அது அர்த்தமற்றது. அவ்விதம் நீங்கள் செய்வீர்களானால், அப்பொழுது நீங்கள் பிசாசுக்கு பலியிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அந்த இரண்டு ஆடுகளுமே கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளன. அவர் நமது பாவங்களுக்காக மரித்து, நமது பாவங்களை வெகு தூரம் சுமந்து சென்றுவிட்டார்; இரண்டுமே கிறிஸ்துதான்.

61106 எனவே இந்த இராட்சதர் மாம்ச உருவெடுத்து இங்கு தோன்றினவர்கள் அல்ல. அவர்கள் காயீனின் புத்திரர், காயீனின் தகப்பன் சர்ப்பம், அவன் எல்லா வகையிலும் ஒரு மனிதனைப் போலவே காணப்பட்டான், ஆனால் அவன் ஒரு மிகப் பெரிய, பெரிய உருவம் கொண்டவன், ஒரு சாதாரண மனிதனைக் காட்டிலும் பெரிய உருவம் படைத்தவன். அங்கிருந்து தான் அந்த குமாரர் தோன்றினர், ஏனென்றால் அவர்கள் காயீனின் புத்திரர், ஏனென்றால் அவர்கள் கானான் தேசத்திலிருந்த கானானியர், அங்கிருந்து தான் அவர்கள் தோன்றினர்; அங்குதான் காயீன் சென்றான். அது…பாருங்கள், அது சர்ப்பத்தின் வித்தையும் கூட நிரூபிக்கிறது. அவர்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு ஜாதியார். அவர்கள் சர்ப்பத்தின் வித்துக்கள். புரிகிறதா? 107 இப்பொழுது, அந்த—அந்த சர்ப்பத்தின் வித்தைப் பற்றிய ஒரு கேள்வி இங்குள்ளது, எனவே அதற்கு நாம்—நாம் வரப்போகிறோம். இதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். புரிகிறதா? இப்பொழுது, இது உங்களுக்கு ஒரு பின்னணியை அளிக்கும்.

62108 பாருங்கள், அவர்கள்—அவர்கள் கானானியராயிருந்தனர், இந்த இராட்சதர்; அவர்கள் காயீனின் புத்திரர், காயீன் சர்ப்பத்தின் குமாரன். சர்ப்பம் ஒரு இராட்சத மனிதன், பெரிய, பயங்கரமான உருவம் படைத்த ஒரு நபர், அவன் ஊரும் பிராணி அல்ல, அழகுள்ளவன். அவன் வெளியின் எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் மிகவும் தந்திரமுள்ளவனாயிருந்தான். அவன் ஒருவன் மாத்திரமே… 109 பாருங்கள், ஒரு மிருகத்தின் மரபு அணுக்கள் ஒரு ஸ்திரீயில் செலுத்தப்பட்டால், அது கருத்தரிக்காது. அவர்கள் மீண்டும் மீண்டும் முயன்று பார்த்து விட்டனர்; அது ஸ்திரீயின் உயிரணுவோடு சேர முடியாது. இப்பொழுது, அவர்களால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வாலில்லாக் குரங்கை எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது ஒரு மனிதக் குரங்கை: அவை மனித உருவுக்கு மிகவும் நெருங்கினவைகளாக உள்ளன். தேவன் தமது மகத்தான படிப்படியான சிருஷ்டிப்பில் மீனை உண்டாக்கத் துவங்கினார்; அதன் பிறகு பறவைகளை உண்டாக்கினார்; அதன் பிறகு மற்ற காரியங்களை, மிருகங்களை உண்டாக்கினார், அவை படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்து, ஒரு வாலில்லாக் குரங்கு, பிறகு ஒரு குரங்கு, ஒரு மனிதக் குரங்கு, அதன் பிறகு சர்ப்பத்தின் உருவம், பிறகு சர்ப்பத்திலிருந்து மனிதன் வரை உருவாக்கப்பட்டன.

63110 மனிதனுக்கு அடுத்தபடியாக இருந்த இந்த மிருகம் எது என்று கண்டறிய மனிதகுலம், விஞ்ஞானம், எலும்புகளை தேடிப் பார்க்க முயன்றது. மனிதனும் ஒரு மிருகமே. மனிதனின் மாம்ச பாகம் மிருகத்தின் மாம்சமே; அது நமக்குத் தெரியும். நாம் குட்டிப் போட்டு பாலூட்டும் மிருக இனத்தை சேர்ந்தவர்கள், அது சூடான இரத்தம் கொண்ட மிருகம்; அது நமக்குத் தெரியும்! ஆனால் வித்தியாசத்தை உண்டுபண்ணுவது எது? மிருகத்துக்கு உள்ளில் ஆத்துமா கிடையாது, ஆனால் மனிதனுக்கோ உண்டு. மிருகத்துக்கு நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் தெரியாது. 111 ஒரு பெண் நாய்க்கு அது உடை உடுக்க வேண்டுமென்று தெரியாது, அப்படி தெரிந்திருந்தாலும்…அது குட்டை கால் சட்டையை உடுத்திக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. அப்படியே ஒரு பெண் பன்றியும், நாமோ விழுந்து போன மானிட வர்க்கம். புரிகிறதா?

64112 இப்பொழுது, அங்கிருந்து தான்—அங்கிருந்துதான் அது வருகிறது. அங்கிருந்து தான் இந்த இராட்சதர் தோன்றினர். அவர்கள் சர்ப்பத்தின் புத்திரர். 113 பாருங்கள், அவன் ஏவாளை அந்த நிலையில் கண்டபோது, அவன்…சாத்தான் சர்ப்பத்துக்குள் புகுந்து அதை செய்யத் தூண்டினான்… பாருங்கள், ஆதாம் அதை அதுவரைக்கும் கண்டுபிடிக்கவில்லை. இந்த சொற்களை எவ்விதம் சொல்வதென்று எனக்குத்—எனக்குத் தெரியவில்லை. இங்குள்ள உங்கள் மத்தியில் அதை கூறினால் பாதகமில்லை, ஆனால் யாராகிலும் ஒருவர் அதை குறை கூற வாய்ப்புண்டு. உங்களுக்குத் தெரியும், குறை கூற அவர்கள் ஏதாகிலும் ஒன்றைக் கண்டுபிடிக்க எப்பொழுதும் முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் பாருங்கள், ஆதாம் தன் மனைவியாகிய, ஏவாளை அறியவில்லை. அவன் அந்த இடத்துக்கு வரவில்லை, சாத்தான் அங்கே அவனை மடங்கடித்தான். புரிகிறதா? அவள் கர்ப்பம் தரித்த பிறகு, ஆதாம் அவளை அறிந்தான். இந்த அடுத்த கேள்வியில் அல்லது இக்கேள்விகளில் ஒன்றில் அதற்கு நாம் வருவோம். அந்த கேள்வி எங்குள்ளதென்று எனக்குத் தெரியவில்லை; நாம்…அதை இப்பொழுது இங்கு சற்று முன்பு கண்டேன். இப்பொழுது, ஆனால் அதிலிருந்து தான் இராட்சதர் தோன்றினர்.

65243. அன்புள்ள சகோதரன் பிரான்ஹாமே, உண்மையான, மறுபடியும் பிறந்த விசுவாசிகளின் குமாரர் குமாரத்திகள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்களா? 114 இல்லை, சகோதரனே; இல்லை, அவர்கள் நிச்சயமாக இரட்சிக்கப்படமாட்டார்கள். பாருங்கள், டேவிட் டூப்ளெஸிஸ் குறிப்பிட்ட இதை நான்—நான் அடிக்கடி எடுத்துக் கூறுவது வழக்கம். “தேவனுக்கு பேரப்பிள்ளைகள் கிடையாது (புரிகிறதா?), குமாரரும் குமாரத்திகளும் மாத்திரமே” பாருங்கள், அவர்களும் தங்கள் தாய் தந்தையர் ஆவியில் பிறந்தது போலவே பிறக்க வேண்டும். புரிகிறதா? அதுதான் ஒரு மனிதனை ஒரு புது நபராக்குகிறது, அவன் மறுபடியும் பிறப்பதனாலே. அவனுடைய முதல் பிறப்பு ஒரு மாம்சப்பிரகாரமான மனிதனை பூமிக்கு கொண்டு வருகிறது; அவனுடைய இரண்டாம் பிறப்பு பரலோகத்தின் ஆவிக்குரியப்பிரகாரமான மனிதனை அவனுக்கு கொண்டு வருகிறது. புரிகிறதா? அது அவனை மாற்றுகிறது, அவனுடைய ஆத்துமாவை, அவனுடைய வெளிப்புற மனச்சாட்சியையோ, வெளிப்புறத் தோற்றத்தையோ, அவனுடைய புலன்களையோ அல்ல; அவன் இன்னும் உணருகிறான், முகர்கிறான், ருசிக்கிறான், கேட்கிறான்; ஆனால் அவனுடைய உள்ளான பாகங்கள், அவனுடைய விருப்பங்கள், அவனை இயக்குபவை, தேவனுக்கென்று மாற்றப்பட்டிருக்கிறது. புரிகிறதா?

66115 இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், இது நடக்கக் கூடிய ஒரே வழி இதுதான்; அது ரோம் நூற்றுக்கதிபதியின் காலத்தில் இருந்தது போலவே; தேவன் சிறைச் சாலையை பூமியதிர்ச்சியினால் அசைத்த காரணத்தால், அந்த ரோமப் போர்ச்சேவகன் கத்தியை உருவி தன்னைக் கொலை செய்துகொள்ள முயன்றபோது; பவுல் அந்த ரோமனிடத்தில், அவனும் சீலாவும், அவன், “உனக்கு கெடுதி ஒன்றும் செய்து கொள்ளாதே, நாங்கள் எல்லோரும் இங்கே தான் இருக்கிறோம், எழுந்திரு!” என்றான். அவன் என்ன செய்ய வேண்டுமென்று அறிய விரும்பினான். அப்பொழுது அவன், “நீ எழுந்து ஞானஸ்நானம் பெற்று, கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடு…அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றான். புரிகிறதா? வேறு விதமாகக் கூறினால், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.” 116 இப்பொழுது, எப்படி? உன் வீட்டார் நீ விசுவாசிக்கும் விதமாகவே விசுவாசிப்பார்களானால் நலமாயிருக்கும். புரிகிறதா? நீங்கள் ஜெபித்து உங்கள் பிள்ளைகளை தேவனிடத்தில் ஒப்புவித்து, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று விசுவாசித்து தேவனைப் பற்றிக்கொண்டிருங்கள்.

67117 என் மகள் ரெபேக்காள் விஷயத்தில் சற்று முன்பு தான் அந்த அனுபவத்தைக் கடந்து வந்தேன். புரிகிறதா? அதைத் தேவனிடத்தில் ஒப்புவியுங்கள். அவளுக்கு ஒரு “வாலிபப் பருவமான,” வயதின்போது, நாங்கள் அங்கே முதலில் வெளியே சென்றிருந்தபோது அவள் வேறொரு பெண்ணுடன் மற்றொரு பெண்ணின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாள், அவ்வாறு சென்று…ஏதோ ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று இசை பயின்று வந்தாள்… இந்த பெண்…நான் ஒரு நாள் வீட்டுக்கு வந்த போது, இங்கே இந்த பெண் பியானோவில் ராக் அண்டு ரோல் இசை வாசித்துக்கொண்டிருந்தாள். பாருங்கள், கண்டிக்க அதுவே எனக்கு மட்டுமீறினதாயிருந்தது! எனவே நான் அவளிடம் இனிமேல் அங்கு போகக் கூடாது என்று சொல்லிவிட்டேன். பார்த்தீர்களா? அப்பொழுது அவள், “பாருங்கள், நான் இசை பயிலும்படி செல்ல அந்த ஒரு இடம் மாத்திரமே உள்ளது” என்றாள். (“வாலிபப் பருவத்தினர்” எப்படி உணர்ச்சிவசப்படுவார்கள் என்று உங்களுக்குத் தெரியும்). 118 நான் சொன்னேன்…ஒவ்வொரு வாலிபப் பிள்ளையும் அதை கடக்க வேண்டியவர்களாயுள்ளனர். ஏறக்குறைய நாம் எல்லோருமே அந்த வயதை கடந்து வந்திருக்கிறோம். நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள்; நானும் கடந்து வந்திருக்கிறேன். அவர்களுடைய சிந்தனைகளை நாம் சிந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

68119 எனவே அப்பொழுது, இது நடந்து சில நாட்கள் கழித்து அவளுடைய தாய் அவளை ஏதோ ஒன்றுக்காக கண்டித்தபோது, அவள் எதிர்த்துப் பேசினாள். இப்பொழுது, அது ரெபேக்காளின் குணமே அல்ல. அவள் கதவை படாரென்று மூடி, பொருட்களை சுவற்றிலிருந்து கிட்டத்தட்ட கீழே தள்ளி பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டாள். 120 இப்பொழுது, நான் என் பெல்ட்டைக் கழற்றி, அவளுக்குப் பின்னால் முற்றத்துக்கு சென்று, அவளை இழுத்துக்கொண்டு வந்திருக்க வேண்டும் என்பதுபோல, தோன்றுகிறது. புரிகிறதா? ஆனால் நான், “ஒரு நிமிடம். பொறு, பதினெட்டு வயது பெண்ணின் சிந்தனைகளை நான் எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று நினைத்தேன். புரிகிறதா? “இப்பொழுது,” நான், “அம்மா, எனக்கு அது தெரியும்…” மேடா, அவள் அழத் தொடங்கினாள். நான், “உன்னால் முடிந்த எல்லாவற்றையும் நீ செய்துவிட்டாய் என்பதை நான் அறிவேன்; நானும் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டேன். இப்பொழுது, அது நம்முடைய கைகளை மீறிப் போய்விட்டால், நாம் அடுத்த நடவடிக்கைதான் எடுக்க வேண்டும்” என்றேன். 121 அன்றொரு நாள் ஒரு பெண்மணி மிகவும் இனிமையாக எழுதியிருந்தாள் (அது இங்குள்ள கேள்விகளில் ஒன்று), “சகோதரன் பிரான்ஹாமே, நீர் மேசியா அல்லவா அல்லது நீர் மேசியாவா?” என்று கேட்டிருந்தார்கள். நான், “இல்லை, அம்மணி” என்றேன். அவள், “நீர் எங்கள் மேய்ப்பன் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், ஆனால் நீர் எப்பொழுதுமே அந்த மகத்தான மேய்ப்பரை சுட்டிக் காட்டுகிறீர்” என்றாள். நான், “அது உண்மை; அது உண்மை” என்றேன். பார்த்தீர்களா? 122 நான், “சரி பார், தேனே, இப்பொழுது, நீ எனக்கு செவிகொடுக்க வேண்டும். இதைச் செய்வது உனக்குக் கடினம்; நான் உன் கணவன். ஆனால் சில ஆலோசனையான வார்த்தைகளுக்காக ஜனங்கள் தேசம் எங்கிலுமிருந்து காரோட்டி வருகின்றனர். இப்பொழுது, நீ…அன்றொரு நாள் நான் அவளிடம் பேசினேன், அவளோ என்னிடமிருந்து நடந்து சென்றுவிட்டாள்” என்றேன்.

69123 இப்பொழுது, பெக்கி அவ்விதம் என்னிடம் நடந்துகொண்டதேயில்லை. பார்த்தீர்களா? அவளுடைய தாய் அதைக் குறித்து ஏதோ ஒன்றை சொன்னபோது, அவள், “என் வாழ்நாள் முழுவதும் நான் சுவற்றில் வைக்கப்பட்டுள்ள மலரைப் போல் இங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?” என்று சொல்லிவிட்டு கதவை படாரென்று மூடினாள். டமால்! அவள் படாரென்று கதவை மூடிவிட்டு வெளி நடந்தாள். அது பிசாசாயிருந்தது. 124 அவள் இரண்டு வயது வரைக்கும் அழுது கொண்டேயிருப்பது, எனக்கு ஞாபகம் வருகிறது. நாங்கள் உண்பதற்கு ஒரு உணவு விடுதிக்குப் போனால், மேடா உண்ணும்போது, நான் அவளைத் தூக்கிக்கொண்டு தெருவில் நடப்பேன். நான் உண்ணும்போது, மேடா அவளைத் தூக்கிக்கொண்டு தெருவில் நடப்பாள். அவள் எப்பொழுதும் அழுதுகொண்டேயிருப்பாள். ஒரு நாள் இங்கே கனடாவில் அவள் இரவு முழுவதும் அழுதுகொண்டிருந்தாள், எனக்கு ஓய்வெடுக்க முடியவேயில்லை; நான் அங்கு நின்றுகொண்டு… இப்பொழுது. ஏதோ ஒன்று என்னிடம், “அது உன் ஊழியத்தை கெடுக்க வந்த பிசாசு” என்றது. 125 நான், “அந்த குழந்தையை என் கையில் கொடு” என்றேன். அப்பொழுது நான், “சாத்தானே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, நீ உன்னுடைய கரங்களை அவளை விட்டு நீக்கிப் போடு” என்றேன். அவள் உடனே அழுகையை நிறுத்தினாள், அதன் பிறகு அவள் அழுவதேயில்லை. எனக்கிருக்கும் மிகவும் அமைதியான பிள்ளை அவளே. அந்த நேரம் முதற்கொண்டு அது போய்விட்டது. நீங்கள் அதை செய்ய வேண்டும்…நீங்கள் அதை செய்வதற்கு முன்பு அதை உங்களுக்குள் பெற்றிருக்க வேண்டும்! அதன் பிறகு அவள்…அதன்பின்னர் அதாவது…அவள் அதைத் தொடங்கினாள். நான் மேடாவை ஒரு மணிநேரம் தனியே அழைத்துச் சென்றேன். நான், “மேடா, உன்னுடைய முயற்ச்சியை விட்டுவிடு” என்றேன். “நானா? அவள் என் மகள்!” என்றாள். 126 நான், “அவள் என் மகளும் கூட அல்லவா?” என்றேன். சரி. நான், “அவள் இக்காலை வேளையில் மரணத்தருவாயில் இருந்தால், அவள் போய் சேர வேண்டிய நித்திய ஸ்தலத்துக்காக அவளை நீ தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். அவள் உலகத்தில் செய்ய வேண்டிய பயணத்துக்காக நாம் ஏன் அவளை தேவனிடம் இப்பொழுது ஒப்புவிக்கக் கூடாது?” என்றேன். அவள், “சரி, அவள் என் மகள்!” என்றாள். நான், “அவள் என் மகளும் கூட” என்றேன். நான், “இப்பொழுது நீ உன்னுடைய…” என்றேன். அவள், “நான் அவளிடம் ஒன்றும் சொல்லக் கூடாதா என்ன?” என்றாள். 127 நான், “நான் அப்படிச் சொல்லவில்லை. அவளைத் திட்டுவதை நாம் நிறுத்திவிடுவோம், அவளுக்கு புத்திமதி மட்டும் கூறுவோம். அவளுக்கு ஒரு நண்பர் தேவை, நீ தான் அவளுக்கு நண்பண், நீயும் நானும். நாம் அவளுடைய பெற்றோர்” என்றேன்.

70128 இந்த பிள்ளைகளுக்கு இன்றைக்கு ஒரு நண்பர் தேவை. அவர்களுக்கு ஒரு தாயாரும், இரவு முழுவதும் மதுக்கடைகளுக்கு ஓடுவதற்கு பதிலாக வீட்டில் தங்கி அவர்களைப் பேணிக் காக்கும் தந்தையும் இருப்பார்களானால், இளைஞர்களின் குற்றம் என்று ஒன்று இருக்கவே இருக்காது—இருக்காது. புரிகிறதா? 129 அவர்கள் வேதத்தைவிட்டு விலகிவிட்டனர்; அவர்கள் எல்லோரும் ஆலயத்துக்குச் சென்று பங்கோ விளையாட்டுகள் போன்றவைகளை விளையாடுகின்றனர்…பார்த்தீர்களா? நீங்கள் சாத்தானின் இருப்பிடமாகிய ஹாலிவுட்டைப் போல் உங்களை மெருகேற்றிக் கொள்ள விரும்புகிறீர்கள். நீங்கள் ஹாலிவுட் இந்த நவநாகரீக திரைப்பட துறையை சபைக்குள் கொண்டு வரக் கூடாது, நீங்கள்…அதாவது நீங்கள் சபையை ஹாலிவுட்டிற்கு கொண்டு வருவதையே நான் குறிப்பிடுகிறேன். நீங்கள் ஹாலிவுட்டை உங்கள் நிலைக்குக் கொண்டு வரவேண்டும். புரிகிறதா? அவர்களுடைய நிலைக்கு நீங்கள் செல்லக் கூடாது, அவர்கள் இங்கே உங்கள் நிலைக்கு வரட்டும். அவர்களுக்கு ஒன்றுமே தெரியாத ஒன்று நம்மிடம் உள்ளது.

71130 எனவே நாங்கள் அங்கேயே முழங்கால்படியிட்டு அவளை தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்தோம். நான், “அவளுக்கு இன்னும் சில நாட்களில், பதினெட்டு வயதாகிறது என்பதை நான் அறிவேன், மேலும் அவள்…அந்த வயதுள்ள ஒரு பெண் ஆண் நண்பர்களை குறித்து சிந்திக்கத் தலைபடுவாள், நாமோ அவளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறோம்” என்றேன். நான், “அவள் இப்பொழுது மணம் புரிந்துகொள்ள நான்—நான் விரும்பவில்லை. அவளை இங்குள்ள அலுவலகத்தில் சேர்த்து, அவள் வேலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். அவள் ஆவியில் நிறைந்திருப்பதைக் காண விரும்புகிறேன் மற்றும்—மற்றும் அவ்விதமாக வாழ” என்றேன். அவள்…சரி, நாங்கள் எல்லோரும் அதையே விரும்பினோம். அவள், “பாருங்கள், நாம் அதை செய்ய முடியாது” என்றாள். “அவள் அதைக் கேட்கமாட்டாள்” என்றாள். 131 நான், “ஒரு நிமிடம் பொறு! நம்மால் முடிந்த வரை அவளை நாம் வளர்த்து வந்தோம். இப்பொழுது அவளைத் தேவனுடைய கரங்களில் வைப்போம், அவளை அவரிடம் ஒப்புக் கொடுப்போம்” என்றேன். மேலும் நான், “அப்பொழுது அவள் ஏதாவதொன்றைச் செய்தால், ‘பெக்கி, அன்பே, நீ அதைச் செய்வதை உன் அம்மா விரும்பவில்லை, இருந்தாலும் நான் உனக்கு சிநேகிதி; நான் உன் கூடவே இருப்பேன்’ என்று சொல். புரிகிறதா? நீ அவளை நேசிக்கிறாய் என்பதை அவள் அறியட்டும். அவள் வேறு யாரையாகிலும் நேசிக்கத் தலைப்பட்டால், அது ஒருவேளை தவறான ஸ்திரீயாக இருக்கக் கூடும்.” புரிகிறதா? நான், “அவளை சிநேகிக்கும் ஸ்திரீ நீயாக இருக்கட்டும்” என்றேன். நான், “தேனே, இது கொடூரமாக தொனிக்கலாம், ஆனால் ஜனங்கள் எல்லாவிடங்களிலுமிருந்து வந்து, தனிப்பட்ட விதத்தில் பேட்டி காண்கின்றனர்” என்றேன். நான், “நான் உனக்கு மிகவும் பழகினவனாகிவிட்டேன்; நாம் கணவனும் மனைவியுமாயிருப்பதால், நாம் ஒருவருக்கொருவர் மிகவும் பழகினவர்களாகிவிட்டோம், ஆனால் நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இது கர்த்தருடைய நாமத்தில் என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும்!” என்றேன். எனவே அவள், “சரி” என்றாள். நாங்கள் முழங்கால்படியிட்டு அவளைத் தேவனிடம் ஒப்புக்கொடுத்தோம். அவளை நாங்கள் இனிமேல் ஒன்றும் செய்யப்போவதில்லை என்று கூறினோம். அன்று பிற்பகல் அவள் உள்ளே வந்தாள்: அவள், “சரி, அங்கே நான் போகக் கூடாது என்று நீங்கள் இப்பொழுதும் சொல்லுகிறீர்களா!” என்று கேட்டாள். 132 மேடா, “இல்லை, நான் அதைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை” என்றாள். “நீ அதை செய்வது உன் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை, என்பது உனக்குத் தெரியும்; நீ அங்கே பூகி ஓகி இசையை, அது என்னவாயிருந்தாலும், அங்கே அந்தப் பெண்ணோடு, வாசித்துக் கொண்டிருந்ததை உன் அப்பா கேட்டபோது, அது அவரைக் கொன்றுவிடுவது போலிருந்தது என்பது உனக்குத் தெரியும்” என்றாள். “இப்பொழுது, அதை நீ செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை, எங்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை பெக்கி, ஆனால் அதை நாங்கள் கர்த்தரிடம் சமர்ப்பித்து விட்டோம். நாங்கள் உன்னை நேசிக்கிறோம் என்பதை நீ அறிய வேண்டும். நீ என்ன செய்த போதிலும், நாங்கள் உன்னை அப்பொழுதும் நேசிப்போம்” என்றாள். அவள் கூச்சலிட்டு, “நான் எப்படியும் போகத்தான் போகிறேன்!” என்றாள். “சரி, அன்பே” என்றாள். எனவே போகப் புறப்பட்டாள். “சரி, நீ திரும்பி வரும்போது, இரவு உணவை ஆயத்தமாக வைத்திருக்கிறேன்” என்றாள். அவள் போகவேயில்லை! இல்லை, அன்று முதல் அவள் போகவேயில்லை. பார்த்தீர்களா? 133 அதற்கு பிறகு சற்று கழித்து அவள் ஜார்ஜை சந்தித்தாள்; ஜார்ஜ் ஒரு கிறிஸ்தவன். அப்பொழுது அத்துடன் அது—அது முடிவு பெற்றது. 134 அன்றொரு நாள் அவள் அதைக் குறித்து திருமதி உட்டிடம் சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவள், “ஓ, எனக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது” என்றாள். “அப்பாவும் அம்மாவும் என்னைக் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்” என்றாள். “மிகுந்த கோபம் வந்துவிட்டது” என்றாள். ஆனால் அது—அது எங்களுக்கு மிகுந்த கோபமாக காணப்பட்டது; அதைக் காட்டிலும் நாங்கள் அதிக கோபமடைய விரும்பவில்லை. புரிகிறதா? அதை அப்படியே விட்டுவிட்டோம். சரி.

72244. சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் எங்களுடைய…என்ன நினைக்கிறீர்கள். (ஓ, ஓ! இந்த ஒன்றை நான் படித்த ஞாபகம் உள்ளது. நான்…அதற்கு பிறகு பதிலளிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன், ஆனால் அதை இப்பொழுதே படித்துவிடுவது நல்லது. அது ஏதோ ஒரு ஸ்திரீயின் கையெழுத்து. அவள் கென்டக்கியிலிருந்து வந்தவளாக இருக்க வேண்டும், ஏனெனில் அவளிடம் இங்கு ஒரு—ஒரு காஸ்மாஸ் போர்ட்லாண்டு சிமெண்டு டிக்கெட் உள்ளது.) சகோதரன் பிரான்ஹாமே, சபையிலுள்ள நமது சகோதரிகள் இப்படிப்பட்ட குட்டை உடைகளை உடுத்துவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது நமது சாட்சியைக் குலைப்பதுடன் நமது சபையிலுள்ள இளைஞர்களுக்கு ஒரு தவறான உதாரணமாயிருக்குமல்லவா? …காண்பதற்கு…ஒரு வாலிபமான வளர்ந்த ஒரு ஸ்திரீ அவ்வளவு குட்டை உடை உடுத்தினால், அவள் நடக்கும்போது அவளுடைய முழங்கால் காணப்படுகிறது. 135 நீங்கள் யாராயிருந்தாலும், சகோதரியானாலும் அல்லது சகோதரனானாலும், நீங்கள் யாராயிருந்தாலும், நீங்கள் கூறுவதை நான் நூறு சதவிகிதம் ஆமோதிக்கிறேன். அது ஒரு அவமானம், அதைக் குறித்து நான் என்ன செய்ய முடியுமென்று சொல்லுங்கள்! அதை எப்படி போதிக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்த வரை அதைக் குறித்து நான் மிகவும் கடினமாக போதிக்கிறேன்; அவர்கள் அதை அதே விதமாக செய்கிறார்கள். எனவே அது அவர்களுடைய நியாயத்தீர்ப்பாயுள்ளது, ஏனெனில் வார்த்தை புறப்பட்டு சென்றுவிட்டது. ஆம், நான் நிச்சயமாக சருமத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த உடைகளுக்கு எதிராயிருக்கிறேன்… நான் என் மகள்கள், பெக்கி மற்றும் சாராளிடம் கண்டிப்பதுண்டு. அவர்கள் எவ்வளவு சிறியவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, நான்…அதாவது…நான் இல்லாத நேரத்திலும் அவர்களிடமும் சண்டையிடுகிறேன். அவர்களும் கூட அவர்களுடைய உடைகளை…மேடா ஒவ்வொரு நாளும் அதைக் குறித்து பெக்கியிடம் மிகவும் கண்டிப்பாக இருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். பார்த்தீர்களா? மேலே ஏறியிருக்கும் உடுப்புகள்…சிறு பிள்ளைகளிடம், அதை நீங்கள் எதிர்பார்க்க முடியாது, அவர்களை நீங்கள் திருத்த வேண்டும்; ஆனால் ஒரு ஸ்திரீ அவ்விதம் செய்யும்போது, அங்கு ஏதோ தவறுள்ளது. புரிகிறதா?

73136 உங்கள் மனது இப்பொழுது நோக வேண்டாம். நான் கேள்விகளுக்குத் தான் பதிலளித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் இருதயத்திலிருந்து நீங்கள் என்னிடத்தில் கேட்கிறீர்கள்; நான் என் இருதயத்திலிருந்து உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இதற்கு ஒரு தீர்வுகாண முடியுமென்றால், நான்—தயவு கூர்ந்து என்னிடம் சொல்லுங்கள், நான் நிச்சயம் செய்வேன், அதைக் குறித்து ஏதாகிலும் என்னால் செய்ய முடியுமானால் நலமாயிருக்கும். 137 அன்றொரு நாள் ஒருவர் என்னிடம் கறியதுபோல, “பாருங்கள், நான் உங்களுக்கு சொல்லுகிறேன், சகோதரன் பிரான்ஹாமே,” “ஆதாமும் ஏவாளும் என்ன…நான் உங்களுக்குச் சொலலுகிறேன்” என்றார். “அது சரியாக அந்த விதமாகத்தான் இருந்தது; அவர்கள் ஒரு ஆப்பிள் பழத்தைத்தான் புசித்தார்கள்!” என்றார். அவர்கள் இப்பொழுது அதை மாற்றிவிட்டதாகக் காண்கிறேன்; அவர்கள் என்ன புசித்தார்கள் என்று சொல்லுகிறார்கள்? அதற்கு ஏதோ ஒன்றாக அழைக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன்? [ஒரு சகோதரன், “ஏப்ரிகாட்” என்கிறார்—ஆசி.] ஏப்ரிகாட், ஆம், அவர்கள் புசித்தது ஒரு ஏப்ரிகாட் பழமாயிருந்தது. சரி, ஏப்ரிகாட் பழம் அவர்கள் நிர்வாணமாயிருப்பதை உணர வைக்குமானால், அவர்களுக்கு ஏப்ரிகாட் பழத்தைக் கொடுக்க நேரம் வந்துவிட்டது. புரிகிறதா?

74245. சகோதரன் பிரான்ஹாமே, இந்நாளுக்கான தேவனுடைய செய்தியை நான் ஏற்றுக்கொண்டு விட்டேன், எங்கள் மகனும் கூட. நாங்கள் இருவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். என் கணவர்—என் கணவர் செய்தியை ஏற்றுக் கொள்ளவில்லை மற்றும் அவர் இந்த செய்தியை எதிர்த்துப் போராடுகிறார். எங்கள் மகனை அவர் வசீகரித்து அவனை மெதோடிஸ்டு சபைக்குக் கொண்டு செல்கிறார். நமது கூடாரத்தில் ஆராதனை இல்லாதபோது அவருடன் நான் அந்த சபைக்குச் செல்ல வேண்டும் என்கிறார். அவருடன் நான் செல்வது சரியா, அல்லது அந்த ஸ்தாபனத்திலிருந்து விலகியிருத்தல் நலமாயிருக்குமா? 138 பாருங்கள் இப்பொழுது, அருமை சகோதரியே…அவள் எந்தப் பெயரையும் கையொப்பமிடவில்லை, ஆனால் ஒருக்கால் உன் கேள்விக்கான பதிலை நீ கேட்டுக் கொண்டிருக்கலாம்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கவில்லையென்றால், நீங்கள் அதை ஒலிநாடாவில் கேட்பீர்கள். உன் கணவருடன் போ, ஆனால் அவர்கள் செய்துகொண்டிருப்பதில் நீ பங்குகொள்ளாதே. பாருங்கள், உன் கணவரை நீ நேசிக்க வேண்டியவளாயிருக்கிறாய், அன்புதான் அதைச் செய்கிறது. நீ உண்மையில் உப்புத்தன்மை கொண்டவளாயிரு; அவருக்குள் ஏதாகிலும் இருக்குமானால், அவர் தாகமடைவார். 139 அவர்களுடைய ஸ்தாபனத்தைச் சேராதே. அவர், “அந்த ஸ்தாபனத்திலிருந்து விலகியிரு” என்றார். அதை சேராதே; ஆனால் அதற்குப் போ. உனக்கு முழு ரொட்டி கிடைக்க வில்லையென்றால், பாதி ரொட்டியைப் பெற்றுக் கொள்; பாதி ரொட்டி கிடைக்கவில்லையென்றால், ஒரு துண்டு ரொட்டியைப் பெற்றுக்கொள். பாருங்கள், புரிகிறதா? ஆனால் அவ்விதம் செய்வதன் மூலமாகவே, உன் கணவரை நீ ஆதாயப்படுத்த முடியும். கர்வமாக இராதே. அப்பொழுது அவர் பெற்றுள்ள அந்த அளவு கர்வத்தையே நீயும் பெற்றிருக்கிறாய் என்பதை அவர் அறிந்துகொள்வார். புரிகிறதா? ஆனால் அவருக்கு இல்லாதது ஒன்று உனக்கு உள்ளதாக நீ காண்பிக்க முடியும்போது, உன்னைப் போல் இருப்பதற்கு அது அவரைத் தாகமடையச் செய்யும். புருஷன் பரிசுத்தமாக்கப்பட்ட தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான். 140 இது ஒரு புத்திமதி மட்டுமே. எனவே நான்—நான் இதன் பேரில் என்னால் நீண்ட நேரம் பேச முடியும், ஆனால் எத்தனை கேள்விகளுக்கு நம்மால் பதிலளிக்க முடியுமோ அத்தனைக்கும் பதிலளிக்க விரும்புகிறோம், ஏனென்றால் எனக்கு இன்னும் இருபத்திரண்டு நிமிடங்கள் மட்டுமே உள்ளதாகக் நான் காண்கிறேன். சரி.

75246. சகோதரன் பிரான்ஹாமே, நீர் போதிக்கும் செய்தியை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். அது என் ஆத்துமாவை சிலிர்க்க வைக்கிறது; எனினும், என் மனைவியும் மகனும் வார்த்தையில் களிகூருவதில்லை. அவர்களுடைய உலகப்பிரகாரமான பழக்கங்களிலிருந்து தங்களைப் பிரித்துக் கொள்ள அவர்களுக்கு மனமில்லை. நமது—நமது குடும்பங்களை நாம் உரிமை கோரி தேவனிடம் கேட்க வேண்டுமென்று நீர் கூறினீர். அவர்கள் வார்த்தைக்காக அல்லது வார்த்தையில் வாழாமலிருப்பதைக் காணும்போது, அதை செய்வது எனக்கு கடினமாயுள்ளது. நான் கடைபிடிக்க வேண்டிய வழி எது, ஐயா? அவர்களை நான் உரிமை கோரி விசுவாசிப்பதா, அல்லது நான் “பிதாவே, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்று ஜெபித்து, இப்பொழுது நான் இருக்கும் இந்த நிலையில் திருப்தியடைவதா? உம்முடைய புத்திமதியை நான் பாராட்டுவேன், சகோதரன் பிரான்ஹாமே. 141 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரனே அல்லது சகோதரியே, நீங்கள் யாராயிருந்தாலும். அவர்களை நான்—நான் கர்த்தரிடத்தில் ஒப்புவித்துவிடுவேன். நான்…பாருங்கள், ஏனெனில், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.” புரிகிறதா? இப்பொழுது, ஜனங்களாகிய நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம்…

76142 அந்த தங்கும் விடுதி ஆட்களை நான் சென்று சந்தித்தபோது அது என் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கும்படி செய்தது. அந்த… நான் திரு. பெக்கரிடம் சென்றிருந்தேன். அவர், “பில்லி, உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் உங்கள் சபையோர் அனைவருக்கும் நான் உணவளிக்கிறேன்” என்றார், ப்ளூ போர் என்னும் அந்த உணவு விடுதி ஒவ்வொரு ஞாயிறன்றும் ஏறக்குறைய முன்னூறு பேர்களுக்கு உணவு அளிக்கிறது! புரிகிறதா? நான் இங்கு சென்றிருந்தேன் மற்றும் இங்குள்ள அந்த நபர், பண்னை வீட்டில் உள்ள நற்பண்பு கொண்ட அவர், மிகவும் அருமையானவர். நான் அவரைச் சந்தித்தேன். அவர் கூறினார்… நான், “பாருங்கள், அது உண்மையில் அருமையாக இருந்தது” என்றேன். நான், “நீங்கள் அந்த ஆபாசமான காரியங்களையும், மற்ற காரியங்களையும் விலக்கியிருப்பதைக் குறித்து உங்களைப் நான் பாராட்டுகிறேன்” என்றேன். அவர், “ஆம், ஐயா, சகோதரன் பிரான்ஹாமே” என்றார். நான், “அவருக்கு என்னை எப்படித் தெரியும்?” என்று கேட்டேன். பார்த்தீர்களா? நான், “என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன். அவர், “உங்களை எனக்குத் தெரியும்” என்றார். “உங்கள் சபையோர் அனைவருக்கும் நான் ஒவ்வொரு ஞாயிறன்றும் உணவு தருகிறேன்…பாருங்கள்” என்று கூறி, அவர், “நான் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்: அவர்கள் மிகவும் அருமையான ஜனங்கள். அவர்கள் அருமையான ஜனங்கள்!” என்றார். 143 இப்பொழுது பாருங்கள், அது எனக்கு நல்லுணர்வை அளித்தது. நீங்கள் என் பிள்ளைகள். புரிகிறதா? என் பிள்ளைகள் அழகாகவும் அருமையாகவும் நடந்துகொள்வதை நான் கேள்விப்படும்போது, அது அப்பாவுக்கு மிகுந்த நல்லுணர்வைத் தருகிறது. புரிகிறதா? எனவே நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

77144 இப்பொழுது, இப்பொழுது, அம்மா, எப்பொழுது…என் சகோதரியே, உன் கணவர் உன்னை மெதோடிஸ்டு சபைக்கு அவருடன் கூட செல்ல அழைப்பாரானால், நீ போ. உனக்கு ஒருக்கால் முழு ரொட்டியும் கிடைக்காது, ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதாக கூறினால், அதை விசுவாசி, ஏனெனில் நாமும் கூட அதை விசுவாசிக்கிறோம். அவர்கள் வழி விலகி வெறித்தனமாக வேறு காரியங்களுக்குச் செல்வார்களானால், வெறுமனே—வெறுமெனே அவர்கள் போகட்டும், ஆனால் நீங்கள் அவ்வளவு ரொட்டியை மாத்திரம் சாப்பிடுங்கள். புரிகிறதா? அதில், அதன் மூலம் உன் ஜீவியத்தின் இனிமையினால் மற்றவர்கள் பேரில் நீ கொண்டுள்ள அக்கறையையும் காண்பிக்கிறாய்… இந்த நற்பண்புகள் உனக்கு இல்லாமல் போனால், அருமை சகோதரியே, அது உனக்குக் கிடைக்கும் வரைக்கும் ஜெபித்துக்கொண்டிரு, நீ ஒன்றையும் செயற்கையாக பாவனை செய்து கொள்ள வேண்டாம், ஏனெனில் நீ அவ்விதம் செய்யும்போது, அது உண்மையான ஒன்றாக இருக்காது. உன் கணவரால் அதை சொல்ல முடியும். ஆனால் நீ, நீ உண்மையில் ஜெபித்து உன் வாழ்க்கை இரட்சகரின் உப்பினால் நிறைந்திருக்கும் நிலையை அடையும்போது, அது தொடர்பை உண்டாக்கும். “நான் உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்வேன்.” நானாயிருந்தால் போவேன்; ஆனால் மிகவும் ஜாக்கிரதையாயிரு. அவர்களுடைய சபையை சேர்ந்துவிடாதே! தயவு செய்து அதை மட்டும் செய்துவிடாதே; அவர்களுடைய சபையை சேர்ந்துவிடாதே, ஆனால் அங்கு போ!

78247. சகோதரன் பிரான்ஹாமே, இந்த கேள்வி இங்குள்ள எங்கள் பலருக்கு ஒருவிதமான குழப்பமாயுள்ளது. ஒன்று (என்னை மன்னிக்கவும்) சில ஒலி நாடாக்களில் மணவாட்டி எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு யூதர்கள் மட்டும் இரட்சிக்கப்படுவதாக நீர் கூறியிருக்கிறீர். (மேலும் அதில் குறுக்கே ஒரு கோடு உள்ளது.) எடுத்துக்கொள்ளப்படுதலில் போகாதிருக்கிற புறஜாதிகளைக் குறித்து தயவுகூர்ந்து முழுவதுமாக விளக்கவும். எடுத்துக்கொள்ளப்படுதலில் விடப்பட்ட புறஜாதிகள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சென்று தங்கள் ஜீவனை இயேசுவின் சாட்சியினிமித்தம் கொடுத்தார்கள் என்று நீர் கூறினீர் என்று எண்ணினேன். அவர் புறஜாதிகளிலிருந்து யூதரிடம் திரும்பும்போது…புறஜாதிகள் இரட்சிக்கப்பட அப்பொழுது புறஜாதிகள் இரட்சிக்கப்படுவதற்கு வேறு தருணமே இருக்காதா, இரட்சிக்கப்பட்டிருக்கிற புறஜாதிகள், ஆனால் கடைசி கால சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சென்று முடிவில் இரட்சிக்கப்படுவார்கள். இது சரியா? தயவு செய்து விளக்குங்கள், ஏனெனில் மிகவும் சிறிய எண்ணிக்கையே எடுத்துக்கொள்ளப் படுதலில் செல்வார்கள் என்று நீர் கூறியிருக்கிறீர். கர்த்தரில் விசுவாசம் கொண்டுள்ள—இப்பொழுது கர்த்தரில் விசுவாசம் கொண்டிருக்கிற ஜனங்களை குறித்து என்ன மற்றும்…நீர் பிரசங்கிக்கும் விதமாக இந்த கடைசி காலச் செய்தியை விசுவாசிக்காத ஜனங்களைக் குறித்தென்ன? அவர்கள் இரட்சிக்கப்படுவார்களா? அந்த சகோதரி தன் பெயரைக் கையொப்பமிட்டிருக்கிறாள். 145 இப்பொழுது, இது மிகவும் நல்ல கேள்வி. இப்பொழுது, முதலாவதாக, உபத்திரவ காலத்தின்போது…உபத்திரவ காலத்தில் புறஜாதியாரின் நாட்கள் முடிவடைந்திருக்கும் என்று நான் கூறியதன் பேரில் தான் குழப்பம் நேர்ந்துள்ளது. இப்பொழுது, நான் காணமுடியாதது என்னவெனில், வேதத்திலுள்ள புறஜாதியினர்… புறஜாதி மணவாட்டி, மணவாட்டி, இப்பொழுது புறஜாதி சபை அல்ல, புறஜாதி சபை உபத்திரவ காலத்தின் வழியாக செல்லும் (புரிகிறதா?), ஆனால் அவர்களுடைய… பாருங்கள், மணவாட்டி தெரிந்து கொள்ளப்பட்டவள்; அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வதைத் தவிர வேறு எதன் வழியாகவும் செல்வதில்லை. அவர்கள் மறுரூபமடைந்து, இவ்வுலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். புரிகிறதா? இப்பொழுது, இதை நான் இங்குள்ள மற்றொரு கேள்வியில் விளக்கி, லூத்தரிலிருந்து படிப்படியாகக் கொண்டு வருகிறேன், அப்பொழுது அதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள்; அது சரீரத்தின் முதிர்ச்சியடைதலாயுள்ளது. புரிகிறதா? 146 இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, விடப்பட்ட யூதர்களுக்கு, எலியா மற்றும் மோசே ஆகிய, இரண்டு தீர்க்கதரிசிகளால் பிரசங்கிக்கப்படும்.

79147 இப்பொழுது, ஊழியக்கார சகோதரரே, இது என் சொந்த கருத்து, பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினதாக நான் உணருகின்ற என் சொந்த முறை. 148 இப்பொழுது, அடுத்தபடியாக யூதர்களுக்கு, இல்லை, புறஜாதி, தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டி காலங்கள் தோறும் தெரிந்துகொள்ளப்பட்ட புறஜாதி மணவாட்டியுடன் கூட ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுதலே, ஆகாயத்தில் கிறிஸ்துவின் சமுகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுதல். மரித்தோர் உயிர்த்தெழுகின்றனர்; உயிரோடிருப்பவர் மறுரூபமடைகின்றனர்; அவர்கள் ஒன்று சேர்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டு கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்கின்றனர். பிறகு, ஏனெனில்… 149 மகிமையில் கலியாண விருந்துக்குப் பிறகு, இயேசு, அவர்கள் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, இயேசு பூமிக்குத் திரும்பி வந்து தமது ஜனங்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார், யோசேப்பு தன் சகோதரருக்கு தன்னை வெளிப்படுத்தினது இதற்கு முன்னடையாளமாயுள்ளது. யோசேப்பைத் தவிர, அவனுடைய மனைவி, வேறு எந்த புறஜாதியும் அங்கிருக்கவில்லை, யோசேப்பு தன்னை தன் சகோதரருக்கு வெளிப்படுத்தினபோது. இதை எல்லோரும் இப்பொழுது புரிந்துகொண்டீர்களா?

80150 அவன் அனுப்பிவிட்டான்…அவனுடைய மனைவியும் கூட அப்பொழுது அரண்மனையில் இருந்தாள், அந்த நேரத்தில் மணவாட்டி மகிமையில் அரண்மனையில் இருப்பாள் என்பதற்கு இது எடுத்துக்காட்டாய் உள்ளது. கலியாண வைபவமாகிய மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசு தம்மை யூதர்களுக்குத் தெரியப்படுத்துகிறார், (புரிகிறதா?) மற்றும்—மற்றும்—மற்றும் யாக்கோபின் இக்கட்டுக்காலம், அந்த மூன்றரை ஆண்டுகள், தானியேலின் எழுபதாம் வாரத்தின் முடிவு. மேசியா அந்த வாரத்தின் நடுவில் சங்கரிக்கப்பட வேண்டும்…அவர் மூன்றரை ஆண்டுகள் தீர்க்கதரிசனம் உரைத்து அதன் பிறகு சங்கரிக்கப்பட்டார். பிறகு மோசேக்கும் எலியாவுக்கும், அவர்களுடைய தீர்க்கதரிசிகளுக்காக இன்னும் மூன்றரை ஆண்டுகள் விடப்பட்டுள்ளன, தானியேல் கூறின வண்ணமாக; ஜனங்களின் மேல் குறிக்கப்பட்ட அந்த எழுபது நாட்கள் முடிவடைந்த பிறகு, எழுபதாவது நாட்களில் முடிவிலே, இயேசு அவர்களுக்கு தம்மை வெளிப்படுத்த வேண்டும். அவர் யூதர்களுக்கு வரவேண்டிய அதிபதி. புரிகிறதா?

81151 இப்பொழுது, பிறகு அந்த நேரத்தில்…பாருங்கள், புறஜாதி மணவாட்டி பரலோகத்தில் இருக்கிறாள், அந்த நேரத்தில், நித்திரையடைந்துள்ள கன்னிகை, புறஜாதி கன்னிகை, இரட்சிக்கப்படுவதில்லை; அவள் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டுவிட்டாள், ஆனால் மணவாட்டியில் இராதபடிக்கு அவள் புறக்கணிக்கப்பட்டாள். அவள் சுத்திகரிப்புக்காக உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்கிறாள், ஏனெனில் அவள் தனக்கு சுத்திகரிப்புக்கான, வார்த்தையாகிய, கிறிஸ்துவை புறக்கணித்துவிட்டாள். அவளுடைய செய்கைகளுக்காக அவள் பாடுபட வேண்டும், ஆனால் வார்த்தையாகிவிட்ட மணவாட்டியோ, கிறிஸ்து முழுவதுமாக அவளுக்காக பாவநிவிர்த்தி செய்துவிட்டார், ஏனெனில் அவரே வார்த்தையாயிருக்கிறார். சரீரம் கிழிக்கப்பட்டது, அந்த சரீரம் கிழிக்கப்பட்ட போது, மணவாட்டி அந்த சரீரத்தில் இருந்தாள், ஏனெனில் அது எல்லாமே வார்த்தையாயுள்ளது! ஆமென்! உங்களுக்கு இது புரிகிறதா?

82152 இயேசு அந்த சரீரத்தில் பாடுபட்டபோது, அவர் பாடுபட்டார்…ஏனெனில் ஒரு மனுஷனும் ஒரு மனுஷியும் ஒரே நபர். ஏவாள் ஆதாமிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாள், சபையும்…என்ன நடந்தது? தேவன் ஆதாமின் விலாவைத் திறந்து அவனுக்கு உதவியாயிருக்க அங்கே மணவாட்டியை, வெளியே எடுத்தார். அவ்வாறே தேவன் கல்வாரியில் இயேசுவின் விலாவைத் திறந்து மணவாட்டியை வெளியே எடுத்தார். பார்த்தீர்களா? இயேசு கல்வாரியில் மரித்தபோது…சரீரம் மரிக்கும் வரைக்கும், மணவாட்டி அந்த சரீரத்திலிருந்து வெளியே எடுக்கப்படவில்லை என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அவர் ஏற்கனவே மரித்துவிட்டார், அவருடைய கால்களை அவர்கள் முறிக்கவிருந்தனர். தீர்க்கதரிசி, “அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று சொன்னான். எனவே அவருடைய ஒரு காலை முறிக்க அவர்கள் சுத்தியலைக் கையிலெடுத்தனர், அப்பொழுது ஒரு மனிதன் ஒரு ஈட்டியுடன் சென்று அவருடைய இருதயத்தில் குத்தினான்; அப்பொழுது தண்ணீரும் இரத்தமும் வெளிவந்தது; அவர் ஏற்கனவே மரித்திருந்தார். அவருடைய சரீர மரணத்தின் மூலமாய் அவள் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டாள், எனவே மணவாட்டிக்கு பாடனுபவிக்கும் உபத்திரவ காலம் ஒருக்காலும் இருப்பதில்லை. புரிகிறதா? அவள் உள்ளே சென்றுவிடுகிறாள். ஆனால் அவர் பேரில் விசுவாசம் கொண்டு ஸ்தாபன கோட்பாடுகள் போன்றவற்றை ஏற்றுக்கொண்டுள்ள புறஜாதி சபை, இன்னமும்…

83153 இந்த பரிதாபமான நபர்: “என் கணவனும் மகனும், அவர்கள் இன்னும் உலகத்தின் காரியங்களில் அன்பு கொண்டுள்ளனர் மற்றும் அந்த காரியங்களைப் போன்று…” என்று கூறினதுபோல. பாருங்கள், அவர்கள் அந்த மீட்பை ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனென்றால் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளும்போது, அது உங்களைத் தானாகவே சுத்திகரிக்கிறது. “தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான்.” அவனுக்கு உலகத்தின் காரியங்களின் பேரில், வாஞ்சையே இல்லை. 154 இயேசு, “ஒருவன் உலகத்திலும் (இப்பொழுது காஸ்மாஸ் ), உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால், அவனிடத்தில் தேவனின் அன்பு இல்லை” என்று கூறினார். அப்படிப்பட்டவனுக்கு மணவாளனின் மேல் அன்பில்லை. புரிகிறதா? எனவே, அவள் தண்டனையை அனுபவிக்க வேண்டியதாயுள்ளது, மற்றும் இல்லை… அவள் அந்த நேரத்தில் இரட்சிக்கப்படுவதில்லை; அவள் நித்திய மரணத்திலிருந்து இரட்சிக்கப்படுகிறாள்; ஆனால் சுத்திகரிப்புக்கென்று அவள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? இப்பொழுது, இப்பொழுது, அங்கே, அந்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுவிட்டதென்று நான் எண்ணுகிறேன். 155 வேறெதாவது இங்குள்ளதா என்று, நாம் பார்ப்போமாக.

84தயவுகூர்ந்து விளக்குங்கள், ஏனெனில் ஒரு சிறு எண்ணிக்கையே எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லும் என்று நீர் கூறியிருக்கிறீர். அதாவது இவர்கள் பூமியில் உயிரோடிருந்து மறுரூபமடையப்போகின்றவர்கள். இயேசு, “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்று கூறியுள்ளார். இப்பொழுது கர்த்தரை விசுவாசித்து மற்றும்…நீர் பிரசங்கிக்கும் விதமாக விசுவாசியாதவர்களைக் குறித்தென்ன (அவர்கள் இதை விசுவாசிக்க வேண்டியதில்லை. நான் பிரசங்கிக்கும் விதமாக அவர்கள் விசுவாசிக்க வேண்டியதில்லை. புரிகிறதா? அவர்கள் அதை விசுவாசிக்க வேண்டியதில்லை.) கடைசிக் காலச் செய்தியை…அவர்கள் இரட்சிக்கப்படுவார்களா? 156 ஆம், அவர்கள் கர்த்தரை விசுவாசிப்பார்களானால். புரிகிறதா? அவர்கள்—அவர்கள் இணங்காமல், “அவர் வார்த்தை என்று நான் விசுவாசிக்கிறதில்லை. இது சரியென்று நான் விசுவாசிக்கிறதில்லை. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் பேரில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்பார்களானால், அவர்கள் எதை நோக்கிச் செல்கின்றனர் என்பதை அது காண்பிக்கிறது, உபத்திரவ காலத்தை நோக்கியேயாகும். ஆனால் வார்த்தையை அதன் முழுமையில் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள், அதை நான் பிரசங்கிப்பதனால் அல்ல, வேதம் அவ்விதம் உரைக்கிறது. அதை ஏற்றுக்கொள்கிறவர்கள் விடுதலையடைகின்றனர், ஏனெனில் அவர்கள்…வார்த்தை ஏற்கனவே நியாயந் தீர்க்கப்பட்டுவிட்டது.

85157 இப்பொழுது, ஏற்கனவே ஒன்றுக்கு தண்டனைக்கான கிரயம் செலுத்தப்பட்டிருந்தால், நீதியுள்ள நியாயாதிபதி அதற்காக ஒரு மனிதனை இரு முறை நியாயந்தீர்க்க முடியுமா? நான் அடகு கடையில் இருந்து, நீங்கள் அங்கு வந்து, “இவனை நான் மீட்கப்போகிறேன்” என்று சொல்லிவிட்டு; நீங்கள் போய் என் மீட்புக்கான கிரயத்தை நீ செலுத்திவிடுவீர்களேயானால் (அதுவே நான் அடகு கடையிலிருந்ததனால் உண்டான தண்டனை), நீங்கள் என்னுடைய மீட்பிற்காக கிரயம் செலுத்தும்போது, அடகு கடையின் சொந்தக்காரன் அதை எப்படி மறுபடியும் கேட்க முடியும்? நான் மறுபடியும் என்னை விற்றுப்போட்டாலொழிய. அங்குதான் காரியம். வார்த்தையின் பரிபூரணத்தை நான் புறக்கணிக்கும்போது, நான் மீண்டும் அடகு கடைக்குச் சென்றுவிடுகிறேன். பாருங்கள், புரிகிறதா? அதன் பிறகு என்னால் கூடுமானால், என்னுடைய வழியில் போராடிக்கொண்டு வெளியே வருவேன். ஆனால் அவர் என்னை மீட்டுக்கொண்டார். சரி. நான் அதை நம்புகிறேன்…இன்னும் எத்தனையோ கேள்விகள் இங்குள்ளன, அவைகளைப் பார்க்க விரும்புகிறேன்… [ஒலிநாடாவின் காலியிடம்—ஆசி.]

86248. …இந்த மூன்றாம் இழுப்பு வார்த்தையை உரைத்தல். நீர் வார்த்தையை உரைப்பீரென்றால் ஒருவன் முழுவதுமாக சரீர மீட்படைந்து, உயிர்த்தெழுதலில் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்வதற்கு முற்றிலும் ஆயத்தமாயிருக்க சாத்தியம் உண்டு என்பது போல் தோன்றுகிறது, மனுஷ குமாரன். இது அப்படித்தானா, இல்லையா? நீங்கள் சரியான விதத்தில் நெருக்கப்பட்டால், இதை செய்வீர்களா? “இவைகளுக்கெல்லாம் (அதில் மேற்சொன்ன ஒன்றே உள்ளது) —இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்பீர்கள் அல்லவா”? (லூக் 21:36). 158 இப்பொழுது, என்—என் அருமை நண்பனே. புரிகிறதா? இப்பொழுது, நீங்கள்—நீங்கள்—நீங்கள் ஒரு நல்ல வாக்கியத்தை சொல்லியிருக்கிறீர்கள். ஆம், ஐயா! ஆம், ஐயா! இப்பொழுது, அது அப்படித்தான் இருக்கும். நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம்…” என்று கூறியிருக்கிறீர்கள். வேறு விதமாகக் கூறினால், இது தான் நான்…நான் நினைக்கவில்லை அது…என்னால் கூடுமென்று…நான் நம்புவது, நான்… நீர் கூறினதை மெருகேற்றவில்லை, ஆனால் இதை ஜனங்களுக்கு சிறிது அதிகமாக தெளிவுபடுத்த முடியுமென்று நான் நம்புகிறேன். புரிகிறதா? நீங்கள் இவ்வாறு விசுவாசிக்கும் காரணம், அவர் என்னிடம் கூறி உரைக்கப்பட்ட வார்த்தைகளினால் நிகழ்ந்தவைகளைக் கண்டதனாலே. நீங்கள் எல்லாரும், அணில்கள் சிருஷ்டிக்கப்பட்டதையும், மற்ற காரியங்கள் செய்யப்பட்டதையும் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் அது தேவன் தமது இராஜ்யாதிபத்தியத்தினால் அளித்த ஒன்று என்பதை, நீங்கள் கவனித்தீர்களா! நான் அவரிடம், “கர்த்தாவே, இதை நான் செய்யட்டும், இந்தக் காரியங்களை இவ்விதம் உரைத்து, அங்கே இந்த காரியங்களைச் செய்யட்டும்” என்று ஒருபோதும் கேட்கவில்லை. அவரிடத்தில் நான் அதை ஒருபோதும் கேட்கவேயில்லை. அவர் தமது தெய்வீக சித்தத்தின்படி என்னிடம் வந்து, “நீ போய் இதை செய்” என்றார். புரிகிறதா? நான் அதைக் குறித்து ஒன்றுமே கேட்கவில்லை. மோசே எகிப்துக்கு போக வேண்டுமென்று ஒருபோதும் கேட்கவில்லை, ஆனால் தேவன் தான் அவனை எகிப்துக்கு அனுப்பினார். புரிகிறதா?

87159 இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் என்னிடம் ஒரு தரிசனத்தில் வந்து, “இந்த குறிப்பிட்ட-குறிப்பிட்ட நபரிடம் சென்று அவர்கள்—அவர்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்தை மேற்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர், அவர்களால் அதைச் செய்ய முடியாது. (அவர்கள் புகைபிடிக்கின்றனர்; அவர்கள் குடிக்கின்றனர்; அவர்கள் பொய் சொல்கின்றனர், திருடுகின்றனர், அல்லது விபச்சாரம் செய்கின்றனர், அது எதுவாயிருந்தாலும்; அல்லது அவர்கள் இச்சையுள்ள ஆவியைப் பெற்றுள்ளனர்.) நீங்கள் அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று, ‘ஆவியே, அங்கிருந்து வெளியே வா; சிறைப்பட்ட இவரை விடுதலையாக்குகிறேன் என்று சொல்’ என்று சொல்வாரானால் நலமாயிருக்கும்.” அது நடக்குமா? நிச்சயமாக! ஆம், உண்மையாகவே, அது நிச்சயமாக நடக்கும்; அது நடக்கும். ஆனால் இப்பொழுது, என் சொந்த ஊகத்தினால் …இப்பொழுது, ஊகித்தல் என்பது…“அதிகாரம் பெறாமல் செய்யத் தைரியப்படுவது” என்று பொருள்படும். புரிகிறதா? இந்த நபருக்கு உதவி செய்ய நான் அங்கு செல்கிறேன்; அது சரியாயிருக்கும் என்று நான் ஊகிக்கிறேன். புரிகிறதா? அப்படியானால் எனக்குத் தெரியாது; அவர்கள் மேல் நான் கர்த்தருடைய நாமத்தை சொல்லி அழைக்க முடியும்; அவர்களுக்காக என்னால் ஜெபிக்க முடியும், எனக்கு விருப்பமான எதையும் செய்ய முடியும்.

88160 இன்று காலையில் விருப்பமானதைச் செய்ய எனக்கு அனுமதி இருக்குமானால்…சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கிற இந்த ஸ்திரீயுடன் சற்று முன்பு தான் எனக்கு—எனக்கு பேட்டி ஒன்று இருந்தது. இந்த கூட்டத்துக்கு இன்று வருவதற்காக, அவளை சிக்காகோவிலுள்ள அவளுடைய வீட்டிலிருந்து கொண்டு வருவதற்காக, தீயணைக்கும் பிரிவினரின் உதவியை அவர்கள் நாட வேண்டியதாயிருந்தது; அப்படியிருக்க தெருவின் மறுபக்கத்திலுள்ளவர்கள் கூட்டங்களுக்கு வருவதில்லை. பார்த்தீர்களா? 161 நான் என்ன செய்வேன்? அது என் அதிகாரத்திலிருக்குமானால்…அது… அதைச் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு, ஆனால் அதைச் செய்வதற்கான கட்டளைக்காக நான் காத்திருக்க வேண்டும். புரிகிறதா? அதைச் செய்ய நான் தேவனிடத்திலிருந்து அதிகாரம் பெற்றிருக்கிறேன்; ஆனால் இப்பொழுது, அவர் கட்டளை கொடுக்கும்போது, அவள் குணமடைந்து வீடு செல்வாள். புரிகிறதா? அது உண்மையென்று எனக்குத் தெரியும். புரிகிறதா? நான்—நான் எந்த காரியத்தில் இருந்தாலும் அதன் பேரில் இன்று காலை நான் மரிக்கவும் ஆயத்தமுள்ளவனாயிருக்கிறேன். புரிகிறதா? அது உண்மை. 162 ஆனால் முதலாவதாக, நீங்கள் பாருங்கள், அது எல்லாமே…எவருமே செய்ய முடியாது, இயேசுவும் கூட, “குமாரன் தாமாய் எதையும் செய்ய முடியாது, பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” என்று கூறியுள்ளார். அது நமக்குத் தெரியும். பரிசுத்த யோவான் 5:19, சரி. “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அவையேயன்றி வேறென்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார். அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.” சரி.

89249. பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தரிசனத்தில் இந்தியானாவிலுள்ள, காரிடன் அருகில், பெரிய அற்புதம் நடக்கும் என்று கண்டீர்களே, அது நிறைவேறிவிட்டதா? 163 இந்த கேள்வி எனக்குக் கிடைத்தபோது என் புத்தகத்தில் நான் தேடிப் பார்த்து ஒரு கேள்விக் குறியை இட்டேன். இப்பொழுது, இந்த கேதுரு மரங்கள் எங்கிருக்கும் என்று…நான் கவனிக்க வேண்டிய நேரம் ஓன்றிருந்தது… நீங்கள் அங்குள்ள மலையிலிருந்து தொடங்கி, மறுபக்கத்தில், காரிடனுக்குப் போகும் வழியில், நீங்கள் நியூ ஆல்பனியிலுள்ள மலையின் உச்சியை விட்டு வந்த பிறகு, எனக்கு நேரிட வேண்டிய ஒரு பயங்கர விபத்துக்காக நான் அந்த கேதுரு மரங்களை கவனிக்க வேண்டும் என்பதாய் இருந்தது. ஆனால் தேவனுடைய கிருபையினால், அப்பொழுது விஸ்கியை ஒரு குப்பியிலிருந்து குடித்துக்கொண்டிருந்த ஒரு இளம் பெண் கொல்லப்பட்டபோது, நான் அதிலிருந்து தப்பித்துக்கொண்டேன்; அந்த குப்பி அவள் வாயிலிருந்தவாறே அவளுடைய தொண்டை அங்கேயே அறுபட்டது, பதினாறு வயது பெண், அந்த நேரத்தில் நான் அங்கிருந்தேன். புரிகிறதா? இப்பொழுது, நீங்கள் குறிப்பிட்டது ஒருக்கால் அதுவாக இருக்கக் கூடும். அதை நான் படித்தேன்.

90164 மேலும், சகோதரன் பீன்ப்ளாஸ்ஸம் என்பவரின் இடத்தில் எனக்கு அந்த கூட்டம் இருந்தபோது… அது ஒருக்கால் அதுவாக இருக்கலாம். அது ஜார்ஜி கார்டர் என்பவரின் இடத்தில் நடந்த கூட்டமாயிருக்கலாம். புரிகிறதா? அங்கு வேறொன்று நடந்தது. அங்கு நான்கு அல்லது ஐந்து இருந்தது…நிறைவேறாத ஒன்றையும் நான் கண்டதில்லை. இதை எழுதின நபர் எனக்கு மறுபடியும் எழுதி அந்த நேரத்தில் நான் என்ன கூறினேன் என்று தெரிவிப்பாரானால், அதை நான் படித்து அறிந்துகொள்வேன். புரிகிறதா? அந்த தரிசனத்தைக் குறித்து நான் என்ன சொன்னேன் என்று எனக்குத் தெரிவிப்பீர்களானால்… ஏனெனில் நான் புத்தகத்தில் எழுதி வைத்திருப்பவைகள் நான் தரிசனத்தில் கண்டவைகளையே, இங்கே அது இவ்விதம் நடந்தது. அதைத் தவிர வேறெந்த குறிப்பிட்ட, எனக்குத் தெரியாத, வேறொன்றையும் நான் எழுதி வைக்கவில்லை.

91165 பிறகு வேறொன்றும் நடந்தது; அது அந்த நேரத்தில் எனக்கு விரோதமாக மிகவும் குற்றம் கண்டுபிடித்த ஓமர் ப்ரைஸ் என்பவரின் மனமாற்றமாகும். உங்களுக்குத் தெரியும், அவர் இந்த கூடாரத்துக்கு வந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ் நானம் பெற்றுக்கொண்டார். ஓ, அதன் பேரில் அவர் என்னை கடுமையாக எதிர்த்தார்; இரவு நேரத்தில் அவருடன் கூட இருந்தேன். அவரோடு கூட இருந்து அவரை நேசித்துக்கொண்டேயிருந்தேன்; ஆனால் முடிவிலே அவர் வந்தார், ஏனெனில் அவர் வருவாரென்று கர்த்தர் என்னிடம் உரைத்திருந்தார், எனவே நான்—நான் அதிலே நிலை கொண்டிருந்தேன். புரிகிறதா? 166 எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற இந்த பிரசங்கியாரின் விஷயத்திலும் அதேதான். ஒரு முறை நான் க்ளார்க்வில்லில் அவருக்காக அந்த மெதோடிஸ்டு சபையில், பேசுவதற்காக சென்றிருந்தேன், அவர் முழுக்க முழுக்க மெதோடிஸ்டாக இருந்தார் என்பதையே, நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். நான் இங்கு திரும்பி வந்தேன்; நான், “என்றாகிலும் ஒரு நாள் அவருக்கு நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பேன்” என்றேன். நான் அவ்வாறே ஞானஸ்நானம் கொடுத்தேன்; அது சகோதரன் நெவில்!

92250. அழகுபடுத்தும் கடை ஒன்றை—ஒன்றை நான் வைத்து நடத்துவது தவறா—வைத்து நடத்துவது தவறா? நான் அழகுபடுத்தும் தொழிலை செய்பவள், கிறிஸ்தவ பெண்கள் தங்கள் தலைமுடியைக் கத்தரித்துக் கொள்வதை நான் ஆதரிப்பதில்லை; நான் மற்றவர்களின் தலை முடியைக் கத்தரித்து மற்றும் (அது சா-ய-ம் என்று நான் நினைக்கிறேன், சாயம், நிறம் மாற்றுதல் என்று பொருள்படுகிறது, நான் நினைக்கிறேன், அப்படித்தானே?) நிறமும் கூட. 167 அருமை சகோதரியே, உனக்கு என்ன சொல்வதென்று எனக்குத்—எனக்குத் தெரியவில்லை. கவனியுங்கள், ஸ்திரீகள் தங்கள் தலைமுடிக்கு, சாயம் போடுவதைக் குறித்து என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. அதற்கு விரோதமான வேதவசனம் எதுவும் எனக்கில்லை; நான் வேதவசனத்தில் மட்டுமே நிலைகொண்டிருக்க வேண்டும். புரிகிறதா? அவ்விதம் அவர்கள் செய்யக் கூடாது என்று வேதம் உரைக்கவில்லை. அவள் நீண்ட தலைமுடியை உடையவளாயிருக்க வேண்டும் என்று தான் வேதம் போதிக்கிறது. அதற்கு பிறகு, எங்கே போவதென்று எனக்குத் தெரியவில்லை. புரிகிறதா? அதைக் குறித்து எனக்கு—எனக்கு ஒன்றும் தெரியாது.

93168 இப்பொழுது, எனக்கு நெருங்கிய நண்பரான ஒரு போதகர், இங்கு எங்கோ இருக்கிறார் என்பதை நான் அறிவேன், அன்றொரு நாள் நாங்கள் ப்ளூ போர் என்னும் விடுதிக்கு நடந்து சென்று, உணவு அருந்தினோம். அவர் என்னிடம், “என் மனைவி உமக்கு முன்னால் வர வெட்கப்படுகிறாள்” என்றார். அவள் மிகவும் பரிசுத்தமுள்ள, தேவபக்தியுள்ள, ஸ்திரீ, அவள் ஒரு—ஒரு நற்பண்பு கொண்டவள், பாட்டியாகிவிட்டவள், மேலும்… ஆனால் அவள் நல்லவள், சுத்தமுள்ளவள், உண்மையிலேயே…என் மனைவிக்கு இவள் மேல் அலாதி பிரியம். மேலும்—மேலும் அவள் ஒரு உண்மையான, உண்மையான ஸ்திரீ. அவள்…அவள் இங்கு உட்கார்ந்திருக்கிறாளோ என்று எனக்குத் தெரியாது; அவள் இங்கிருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். அவளுடைய கணவர் இங்கிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் என்னிடம் கூறினார்; அவர், “உங்கள் பிரசங்கத்தைக் கேட்ட பிறகு அவள் தலைமுடியை நீளமாக வளர்க்கத் தொடங்கிவிட்டாள். அது சரியென்று அவள் அறிந்துகொண்டாள், ஆனால்,” என்றார், “அவள் தலைமுடிக்கு சில சாயங்களை உபயோகித்து வந்தாள்; அவள் உமக்கு முன்பாக வருவதற்கு முன்பு அதையெல்லாம் போக்கிவிட்டு வரவேண்டுமென்று மிகவும் பிரயாசப்படுகிறாள்” என்றார்.

94169 இப்பொழுது பார், அருமை சகோதரியே, அதை நான் மிகவும் மதிக்கிறேன். அவ்விதம் செய்யும் ஸ்திரீயின் மேல் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. சில ஸ்திரீகள் தங்கள் தலைமுடியை எல்லா விதங்களிலும் அலங்கரித்துக்கொண்டு, உங்கள் கால்களில் துப்பி கர்வம் கொண்டவர்களாய், எந்த மரியாதையும் கொடுக்காமல் நடக்கின்றனர், இயேசு, “அவர்களுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” என்றார். புரிகிறதா? உனக்குள்ள அதை நான் மதிக்கிறேன், அதற்காக தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். 170 ஆனால், சகோதரியே, அதைப் போன்று தலைமுடிக்கு சாயம் போடும் விஷயத்தில், எனக்கு—எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அதை வேத வசனத்தைக் கொண்டு என்னால்—என்னால் ஆதாரப்படுத்த முடியாது, எனவே நான்…அது உன்னை பொறுத்தது. உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள், அதை நீங்கள் செய்ய விரும்பினால், அதனால் எனக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லை. எனக்குத் தெரிந்த வரையில், என் சபையில் அந்த வழக்கம் கிடையாது. நீங்கள் செய்ய விரும்பினால்…வேதத்தில் இல்லாத எந்த ஒன்றும், நல்லது, நீ…அது உன்னைப் பொறுத்த விஷயம். உங்களுக்கு புரிகிறதா? ஆனால் என் ஆலோசனையை உங்களுக்குத் தருவேன், நீங்கள் பாருங்கள், எனக்குத் தெரிந்த வரையில்… அழகாகக் காணப்பட வேண்டுமென்பது ஸ்திரீயின் இயல்பு என்று, உனக்குத் தெரியும்; அவள் அந்த விதமாக இருப்பதாக கருதப்படுகிறாள்.

95171 மானிட வர்க்கத்தைத் தவிர மற்றெல்லா வர்க்கத்திலுமே, ஆண்தான் மிகவும் அழகுள்ளது என்பது, உங்களுக்குத் தெரியும். பறவை, பசு, எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். மாட்டின் இனத்தை எடுத்துக் கொள்வோம். எது மிகவும் அழகுள்ளது, சுருங்கிப் போன கொம்பையுடைய பசுவா அல்லது பெரிய காளையா? ஒரு மானை எடுத்துக்கொள்ளுங்கள்; எது மிகவும் அழகுள்ளது, பெண் மானா அல்லது ஆண் மானா? ஒரு கூட்ட கலைமான்களை எடுத்துக்கொள்வோம்; எது மிகவும் அழகுள்ளது, ஆணா அல்லது பெண்ணா? நீர் எருமை, நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அதை பறவை இனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்—எடுத்துக்கொள்ளுங்கள்; கோழிகளில் எடுத்துக்கொள்ளுங்கள், சேவலா அல்லது கோழியா? அதை பறவையில் எடுத்துக்கொள்ளுங்கள், சிறிய…பெரிய அழகான சேவலா அல்லது தன்னுடைய கூட்டிலே முட்டைகளை இட்டு தன்னுடைய முட்டைகளை குஞ்சு பொறிக்கும் புள்ளி சிறகுகளைக்கொண்ட சிறியப் பெட்டைக்கோழியா? புரிகிறதா? வர்க்கங்கள் அனைத்திலும், எப்பொழுதும் ஆண்தான் மிகவும் அழகுள்ளது, ஆனால் மானிட வர்க்கத்தில் மாத்திரம் பெண் தான் மிகவும் அழகுள்ளவள். ஏன்? அவள்தான் வீழ்ச்சி உண்டாக காரணமாயிருந்தாள். சாத்தான் அவளை அங்கேயே தெரிந்துகொண்டான், அழகு பிசாசினால் உண்டானது. புரிகிறதா?

96172 சாத்தான் தான் தேவதூதர்களிலேயே மிகவும் அழகுள்ளவன். அவன் சிங்காசனத்தை மூடிக் கொண்டிருந்த கேரூபின். ஸ்திரீ முன்னைக்காட்டிலும் இப்பொழுது எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறாள் என்று பாருங்கள். எத்தனை பேர் பியர்ல், இல்லை பியர்ல் பிரையனைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? நாங்கள் உங்களுடைய கரங்களை, வயோதிக ஐனங்களாகிய உங்களில் சிலரை காணட்டும். நிச்சயமாக. புரிகிறதா? அவள் அமெரிக்காவிலேயே மிகவும் அழகுள்ள பெண் என்று கருதப்பட்டவள். இன்று தெருவில் காணும் எந்த ஒரு இளம் பெண்ணும் இப்பொழுது அவளைக் காட்டிலும் இரட்டிப்பாக அழகுள்ளவளாயிருக்கிறாள். ஏன்? அதைதான் வேதம் உரைத்துள்ளது: “தேவ குமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு…” அந்த துரோகிகளின் ஒரு கூட்டம் தான் பூமிக்கு ஜலப்பிரளயம் அனுப்பப்பட காரணமாயிருந்தனர், தேவன் மானிட வர்க்கம் முழுவதையும் அழித்துபோட்டார். புரிகிறதா? அது முற்றிலும் சரியே. இன்றைக்கு எல்லாமே ஹாலிவுட்டையும், அழகையும், அது போன்றவைகளையும் மற்றும்—மற்றும் அழகையும் மற்றும் அதைப் போன்ற காரியங்களையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது, ஆனால் அழகு என்பது இருதயத்தில் மறைந்திருக்கிற ஒன்றேயன்றி (பார்த்தீர்களா?) அது வெளிப்புற தோற்றம் அல்ல. அவர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளட்டும், ஆனால் புறம்பான அலங்கரிப்பினால் அல்ல, ஆனால் உள்ளான, சாந்தமும், அமைதலுமுள்ள ஆவியே. அதுதான்—அதுதான் கிறிஸ்தவன். எனவே இப்பொழுது, உங்களுடைய கேள்விக்கு, சகோதரியே, உங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்பொழுது, இந்த கேள்வியுடன் இப்பொழுது நான் நிறுத்திக்கொள்ளலாம் அல்லது இன்னும் முப்பது நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம், மற்றும் அதன்பின்னர்…முப்பது நிமிடங்கள்…? எத்தனை பேர் இன்னும் முப்பது நிமிடங்கள் தங்கியிருக்க முடியும், அப்படியானால் அது இன்றிரவு நமக்கு இன்னும் சிறிது நேரத்தைத் தருமா? பாருங்கள், நான் விரைவாக முடிக்க உள்ளேன்.

97251. சகோதரன் பிரான்ஹாமே, முதலாம் தீமோத்தேயு 2:9-ன்படி ஒரு ஸ்திரீ தன்னுடைய முடியைப் பின்னக்கூடாதா? பின்னல் முடி என்பதன் பொருள் “பின்னப்பட்ட” என்று அர்த்தமா? 173 இப்பொழுது பார், சகோதரியே, இப்பொழுது இது…போன கேள்வியைத் தொடர்ந்து இது வந்ததைக் குறித்து நான்—நான் மகிழ்ச்சியடைகிறேன். அதை நான் அங்கே பொருத்தவில்லை, ஆனால் அது தானாகவே—அது தொடர்ந்தது நல்லது. கவனியுங்கள், அந்நாளில் பின்னப்பட்ட தலைமுடி ஒரு தெருப் பெண்ணுக்கு அடையாளமாயிருந்தது; அவள் அதைதான் செய்தாள், தன் தலைமுடியைப் பின்னினாள். பவுல் கிறிஸ்தவர்களுக்கு “இப்பொழுது, அந்த அலங்கரிப்பு, முடியைப் பின்னுதலினால் உங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டாம்…” என்றான், (அல்லது “பின்னப்பட்ட” மற்றும் “பின்னல்” அதே காரியமாய் இருக்கிறது), தங்களுடைய தலை முடியை பின்னுவது, ஏனெனில் அது உலகில் உள்ள மற்றவர்களைப் போல் காட்சியளித்தது. 174 இப்பொழுது, நீங்கள் உலகத்தாரைப் போல் காணப்படவோ அல்லது நடந்துகொள்ளவோ கூடாது! புரிகிறதா? ஸ்திரீகள் அவர்களை விட வித்தியாசமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். புரிகிறதா? இல்லை, இப்பொழுது, பின்னிய தலைமுடி… இப்பொழுது, இன்றைக்கு பின்னிய தலைமுடி அழகாயும், உலகத்தின் நாகரீகத்துக்கு மிகவும் அப்பாற்பட்டதாயும் உள்ளது. இப்பொழுது, ஸ்திரீகள் இன்று தங்கள் தலைமுடியை அலங்கரித்துக்கொள்ளும் விதத்தை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்… உங்கள் தலைமுடியை நீங்கள் எந்த விதத்திலும் வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால் உலகத்தாரைப் போல் மட்டும் காணப்படாதீர்கள்! புரிகிறதா? உலகத்தாரைப் போல் காணப்படாதீர்கள் அல்லது அவர்களைப்போல் உடுத்திக்கொள்ளாதீர்கள்! அவர்கள் குட்டை கால் சட்டைகளை அணிந்து கொண்டால், நீங்கள் உடைகளை அணிந்து கொள்ளுங்கள். அவர்கள்—அவர்கள் தங்கள் தலைமுடியை கத்தரித்துக்கொண்டால்…அது குட்டையாக வெட்டிக்கொண்டால், மற்றும் எப்போதும் அவர்கள் என்ன செய்தாலும்… நீங்கள்—நீங்கள்—நீங்கள் உங்கள் தலைமுடியை வளரும்படி விட்டுவிடுங்கள். புரிகிறதா?

98175 மேலும் பின்னுதல்—ஆனால் பின்னப்பட்ட…அதுதான் கேள்வியாய் இருந்தது: பின்னப்பட்ட என்பதன் பொருள்… பின்னப்பட்டது என்பதன் பொருள் “பின்னப்பட்டதா”? ஆம், அது சரி. இப்பொழுது, தெருவில்… 176 இப்பொழுது, “பின்னப்பட்ட” தலைமுடி என்றால் என்ன அர்த்தம் என்பதை கண்டுபிடிக்க நான் பல ஆண்டுகளுக்கு முன்பே அகராதியைத் தேடினேன். புரிகிறதா? ஸ்திரீ, உண்மையில், முன் காலத்து ஸ்திரீகள், தங்கள் தலைமுடியை பின்னால் இழுத்து அதைக் கட்டினார்கள், ஏறக்குறைய இன்று அவர்கள் குதிரை வாலைப் போல. அவர்கள் எல்லாவிடங்களுக்கும் அவ்விதமே சென்றனர்…அவர்கள் அங்கிகளை உடுத்திக்கொண்டனர், ஆனால் வீதியில் உள்ள ஸ்திரீ தன் தலைமுடியை தலையிலிருந்து பின்னி, அதை இப்படி சுற்றிவிட்டு, தலையில் அந்தவிதமாக பூ வைத்துக் கொள்வது வழக்கம், அது ஒரு விதமான வீதியில் சுற்றித் திரிபவள்; இன்றைக்கு நாம் சுற்றித் திரிபவளைக் காண்பது போல, அவள் உடுத்தும் விதம். நான் சுற்றித் திரிபவள் என்று அழைக்கிறேன், ஏனெனில் நான் வயதானவன். என் காலத்தில் அவர்கள் அவ்விதம்தான் அழைப்பார்கள். இன்றைக்கு அவர்கள் என்னவென்று அழைக்கின்றனர்? நான்…எனக்குத் தெரியாது. சிக்ஸ் அல்லது அப்படி ஏதோ ஒரு அல்லது மற்றொரு பெயரால். எனவே…அது என்னவானாலும். அவர்களுக்கு நீங்கள் எந்த விதமான ஒரு பெயரைக் கொடுத்தாலும், அவர்கள் அதை விரும்புவார்கள்.

99252. சகோதரன் பிரான்ஹாமே, உங்கள் ஒலிநாடாக்களில் ஒன்றில் நோவா தன் குடும்பத்தாரை இரட்சித்தான் என்று கூறியிருக்கிறீர்கள். ஒரு தாய் தன் குடும்பத்தினருக்காக அதே விசுவாசம் கொள்ளலாம் என்பது அதன் அர்த்தமா? நான் விசுவாசித்தால் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று அர்த்தமா? 177 இப்பொழுது, அது…ஆம், அது ஒருவிதத்தில்…இதற்கு நான் இப்பொழுது எவ்விதம் பதில் கூறுகிறேன் என்பதை நீங்கள் கவனமாய் கேட்க வேண்டும். புரிகிறதா? முதலாவதாக, “நீங்கள் கூறியிருக்கிறீர்கள்…(இப்பொழுது, நான் அதைப் பார்க்கட்டும்.) உங்கள் ஒலிநாடாக்களில் ஒன்றில், நோவா தன் குடும்பத்தாரை இரட்சித்தான் என்று கூறியிருக்கிறீர்கள்.” ஏன்? ஏனெனில் அவர்கள் விசுவாசித்தனர். அதுதான் ஏனெனில் அவர்கள் அவனுடைய செய்தியை விசுவாசித்தனர். 178 “ஒரு தாய் தன் குடும்பத்தினருக்காக அதே விசுவாசம் கொள்ளலாம் என்பது அதன் அர்த்தமா?” ஆம், சகோதரியே! ஒரு தாயின் இருதயம் தன் மக்களுக்காக கூக்குரலிடுவதை என்னால் காண முடிகிறது. “நாம் விசுவாசித்தால் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று அர்த்தமா?” ஆம், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களானால். அது உண்மை.

100179 அந்த பிலிப்பு பட்டினத்து சிறைச்சாலைக்காரனை ஞாபகம் கொள். உங்கள் இருவருக்குமாக விசுவாசி… உன் சொந்த இரட்சிப்புக்காக உனக்கு போதிய விசுவாசம் இருக்குமானால், உன் ஜனங்களின் மேல் கிரியை செய்வதற்கென அதே விசுவாசம் உனக்கு ஏன் இருக்கக் கூடாது? விசுவாசம் என்பது என்ன? அது காணக் கூடாத ஒரு சக்தி. புரிகிறதா? அது என்ன—என்ன—அது ஒரு ஆவி. பரிசுத்த ஆவி விசுவாசத்தைக் கொண்டு வருகிறது. புரிகிறதா? அது காணக்கூடாத ஒரு சக்தி. 180 நான் ஏன் வியாதியஸ்தரின் மேல் கைகளை வைக்கிறேன்? புரிகிறதா? அந்த நபருக்குள் இருக்கும் அந்த ஆவியுடன் என்னால் தனிப்பட்ட விதத்தில் தொடர்புகொள்ள முடியுமானால், ஏதாவதொன்று நிகழும். புரிகிறதா? இங்கு பரிசுத்த ஆவியானவர் நின்று கொண்டிருக்கிறார்; அவர் இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துவார். கடைசி காலத்தில் அவர் என்ன செய்வதாக வாக்களித்துள்ளாரோ, அவர் அதை அப்படியே செய்வார். ஜனங்கள் அதை விசுவாசிக்கின்றனர்; அவர்கள் அதைக் கண்டு, “ஆம், ஐயா, அதை நான் விசுவாசிக்கிறேன்” என்கின்றனர். 181 இப்பொழுது, உங்களுக்கு நான் மிகவும் சாதாரணமாக ஆகிவிடாமல் போனால் (புரிகிறதா?), இது சாதாரண ஒன்றாக ஆகிவிடுகிறது. நீங்கள் ஒரு நாள் ஜெபவரிசையில் கடந்து வருகிறீர்கள், அடுத்த நாளும் கடந்து வருகிறீர்கள். புரிகிறதா? அது—அது தற்செயலாய் நடந்தால் என்பதைப் போல. நீங்கள் முதலாவதாக அதையே விசுவாசிப்பது கிடையாது (புரிகிறதா?), ஏனெனில் நீங்கள் உண்மையாக விசுவாசித்த உடனே… அந்த ஸ்திரீ, “நான் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால், முழுவதும் சொஸ்தமாவேன்” என்றாள், அவள் அதைச் செய்தாள். பார்த்தீர்களா? “நான் மறுபடியும் அதை முயற்சி செய்யட்டும்” என்று அவள் சொல்லவில்லை. புரிகிறதா? அவள் அதை விசுவாசித்தாள். புரிகிறதா? அது—அது…

101182 இப்பொழுது, உன்னிலுள்ள எல்லாவற்றோடும் நீ மட்டும் உன் குடும்பத்துக்காக விசுவாசிப்பாயானால்… 183 இப்பொழுது, இங்குள்ளது போல, என்னை உந்துவது எது? என் கையிலுள்ள பலம் எது—எது? அது நிச்சயமாக என் தசைகள் அல்ல, அது என் ஆவி. நிச்சயமாக, அந்த ஆவியை எடுத்துப் போடுங்கள், அப்பொழுது தசை என்ன செய்ய முடியும்? அது முடிந்தளவு செத்ததாய் இருக்கும். புரிகிறதா? அது அழுகிப்போகும், ஆனால் அது…பாருங்கள், ஆவிதான் பலத்தை அளிக்கிறது. 184 சிம்சோனைப் பாருங்கள். இந்த இரண்டு கம்பங்களுக்கும் இடையே இருக்கக் கூடிய அவ்வளவு பெரிய கதவுகளை உங்களில் அநேகர் கண்டிருப்பீர்கள். ஏன், ஒரு சிங்கத்தை சுக்குநூறாகக் கிழிக்கக் கூடிய ஒரு பெரிய உருவங்கொண்ட மனிதன், சகோதரன் ஜாக்சன். தானியக் களஞ்சியத்தின் கதவைப் போல் அவ்வளவு அகலமுள்ள தோள்களைக் கொண்டிருந்த…ஒரு மனிதனின் மேல் சிங்கம் குதித்தது, ஏன் நிச்சியமாக, அது மர்மமாக இருக்காது; ஆனால் அதிசயம் என்னவென்றால், அவன் சுருண்ட தலைமுடியைக் கொண்ட, சிறு உருவம் கொண்ட, நபராக, கிட்டத்தட்ட, பெண்மைத்தனம் கொண்ட, அம்மாவின் சிறிய மகனாயிருந்தான், பெண்ணின் தலைமுடி சுருள்கள் போல் ஏழு சுருள்கள் அவனுக்குப் பின்னால் தொங்கிக்கொண்டிருந்தன. ஆனால் நீங்கள் கவனித்தீர்களா, கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கும் வரைக்கும், அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கினபோது, அந்த சிங்கம் அவனை நோக்கி ஓடி கெர்ச்சித்தபோது, அதை துண்டு துண்டாக கிழித்துப்போட்டான். அது சிம்சோன் அல்ல. அது கர்த்தருடைய ஆவி.

102185 இப்பொழுது, அவன் எவ்விதம் அந்த வனாந்தரத்தில் உலர்ந்து வெளுத்துக் கிடந்த, கழுதையின் தாடையெலும்பை எடுத்து… அந்த பெலிஸ்தியரின் தலைச்சீராக்கள் ஒரு அங்குலம் கனம் பித்தளையினால் செய்யப்பட்டிருந்தன. பாருங்கள், அந்த தாடையெலும்பை நீங்கள் எடுத்து அந்த தலைச்சீராக்களின் ஒன்றின் மேல் அடித்தால், அது ஆயிரம் துண்டுகளாக நொறுங்கி விடும். அது உங்களுக்கு தெரியும். அவர்கள் அந்த தாடையெலும்பைக் கொண்டு அடிப்பார்களானால்… ஆனால் அங்கே பாருங்கள், அவன் அந்த தாடையெலும்பைத் தன் கையில் பிடித்து அங்கு நின்றுகொண்டு ஆயிரம் பெலிஸ்தியரை மடங்கடித்தான்; மற்றவர்கள் மலைக்கு ஓடிப் போய்விட்டனர். அவன், “வாருங்கள், உங்களுக்கும் இந்த கதி வேண்டுமா?” என்று கேட்டான். அப்பொழுதும்—அப்பொழுதும் அவன் அந்த தாடையெலும்பை கையில் பிடித்துக்கொண்டிருந்தான்! அது என்ன? கர்த்தருடைய ஆவி அவன் மேல் இறங்கினது. புரிகிறதா? 186 எனவே, அது கர்த்தருடைய ஆவியே. உன் சொந்த இரட்சிப்புக்காக விசுவாசிக்க உனக்குள் கர்த்தருடைய ஆவி இருக்கும்போது, அதை உன் குடும்பத்தின்மேல் வைத்து, “இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அவர்களை உரிமை கோருகிறேன்; அதைநான் உரிமை கோருகிறேன்! தேவனே, அவளை நீர் எவ்விதம் அதை செய்ய வைக்கப் போகிறீர் என்று எனக்குத் தெரியாது, அவனை நீர் எவ்விதம் அதை செய்ய வைக்கப் போகிறீர் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அதை நான் விசுவாசிக்கிறேன். அதை விசுவாசிக்கிறேன், கர்த்தாவே! என் அவிசுவாசம் நீங்க உதவிச் செய்யும்” என்று சொல். அதை உரிமை கோரி என்ன நடக்கிறதென்று கவனி. அது அதை செய்யும்.

103253. மணவாட்டிக்கு—இயேசு வருவதற்கு முன்பு மணவாட்டி, பின் மாரி காலத்திலிருந்தது போல, அற்புதங்களைச் செய்வதற்கும், மரித்தோரை உயிரோடெழுப்புவதற்கும் மற்றவைகளைச் செய்வதற்கும் பரிசுத்த ஆவியின் அனைத்து வல்லமையையும் பெற்றிருப்பாளா—அல்லது இந்த பின்மாரி இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்களுக்கு மாத்திரமா? எல்லா ஊழியக்காரர்களும் இதைப் பெற்றிருப்பார்களா, அல்லது அவருடைய வருகைக்காக மட்டும் நாம் காத்திருக்கிறோமா? 187 ஆம். பாருங்கள், நண்பனே, நான்—நான்—நான் ஒரு வேதபண்டிதன் அல்ல. நான் ஒரு வேதபண்டிதன் அல்ல; எனவே, வேதத்தைக் குறித்து எனக்குத் தெரிந்த அனைத்தையும் நான் நிழல்களையும் முன்னடையாளங்களையும் கொண்டு போதிக்க வேண்டியவனாயிருக்கிறேன். நீங்கள் என்னை முன்னடையாளக்காரன் என்று அழைக்கலாம். ஆனால் நான் அந்த சுவற்றை நோக்கிக் கொண்டிருக்கிறேன், என்னை நான் கண்டதேயில்லை என்று வைத்துக்கொள்வோம்; நான் காணும்போது, எனக்குத் தலை, காதுகள், கைகள் உள்ளதாக அறிந்து, என்னை நான் காண முடிந்தால், மேலும்…நான் என்னை பார்த்தால் நான் எப்படி இருப்பேன் என்பதை பற்றி எனக்கு ஏதாவது தெரியும். புரிகிறதா? ஒரு கண்ணாடியில் என் உருவம் பிரதிபலிப்பதை நான் கண்டால், நான் நின்று கொண்டு என்னையே நான் காணமுடிந்தால் எப்படியிருப்பேன் என்பதை நான் அறிந்து கொள்கிறேன். 188 இப்பொழுது, வேதத்தையும் நான் அவ்விதமாகவே கருதுகிறேன். “இவையனைத்தும்” ரோமர் 26 “நமக்கு திருஷ்டாந்தங்களாக வைக்கப்பட்டுள்ளன” என்று வேதம் உரைத்துள்ளது. நாம் பின்னோக்கிப் பார்த்து, சந்திரன் சூரியனைப் பிரதிபலிப்பதுபோல, அது என்னவென்று நாம் அறிந்துகொள்ளலாம். நான் சூரியனைக் கண்டதேயில்லை என்றால், அது எப்படியிருக்கும் என்று நாம் அறிந்துகொள்கிறோம், நாம் சந்திரனை நோக்கி, சூரியன் அதைக் காட்டிலும் பெரிதாயிருக்கும் என்று அறிகிறோம். பாருங்கள், அது போன்று பழைய ஏற்பாட்டின் சம்பவங்களை நீங்கள் காணும்போது, அவை புதிய ஏற்பாட்டின் சம்பவங்களைப் பிரதிபலிப்பதாயுள்ளன.

104189 இப்பொழுது, இங்கே, என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிப்பது என்னவெனில், நான்…நாம், அல்லது இந்த நாட்கள்… நாம் இல்லையென்றால், வேறு யாரோ இருக்கிறார்; அப்படித்தான் இருக்க வேண்டும். காலம் முடிவடைந்துவிட்டது; நாம் முடிவில் இருக்கிறோம். 190 ஒவ்வொன்றும்…உலகமானது…தேவன் உலகத்தை ஆறாயிரம் ஆண்டுகளில் சிருஷ்டித்து, ஏழாயிரம் ஆண்டில் ஓய்ந்திருந்தார். அந்த நேரத்தில் இப்போது மனிதன் ஒருபோதும் உயிரோடு இருப்பதில்லை என்று அவர் கூறினார், ஒரு—ஒரு வருடம், இல்லை—இல்லை, அந்த நாளில், “நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” ஆதாம், இல்லை, வேதத்தின்படி மெத்தூசலாதான் மிகவும் நீண்ட காலம் வாழ்ந்தவன், அவன் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்; அவன் அந்த ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழவில்லை. ஆனால் மனிதன் தண்டனைக்கான கிரயம் செலுத்தப்பட்டாகிவிட்டது என்பதைக் காண்பிக்க, ஆயிரம் வருட அரசாட்சியின்போது, ஆயிரம் ஆண்டு காலம் உயிர் வாழ்வான். மனிதன் அப்பொழுது என்றென்றைக்கும் உயிர் வாழ்வான்; நாள் என்பது முடிவடைந்திருக்கும்; காலம் என்பது முடிவடைந்திருக்கும்; அவர்கள் நித்தியத்தில் இருப்பார்கள்.

105191 இரண்டு மூன்று ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்பு நான் அளித்த பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால இருப்பிடம் என்னும் செய்தியின் பேரில் எனக்கு பல கடிதங்கள் வந்துள்ளன. அது நிச்சயம் அநேகருக்கு பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது. அதாவது…எனக்கும் கூட. அதிலிருந்து நான் மீளவில்லை.

106192 இப்பொழுது கவனியுங்கள். இதன் பேரில் (புரிகிறதா?) ஆபிரகாம் கண்டான்…இப்பொழுது, அவர் ஆபிரகாமுடன் ஈடுபட்ட விதமாக, அவனுடைய சந்ததியுடனும் ஈடுபட வேண்டும். இப்பொழுது, இந்நாட்களில் ஒன்றில், நான் எப்பொழுதாகிலும் திரும்பி வரும்போது, அதை இன்னும் விரிவாக எடுத்து, ஆபிரகாமின் வாழ்க்கையில் இருந்த வெவ்வேறு கட்டங்களை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அவர் ஆபிரகாமுடன் ஈடுபட்ட விதமாகவே, லூத்தருடனும், வெஸ்லியுடனும், வழிவழியாக இக்காலம் வரையிலும் உண்டாயிருந்த சபைகளுடன் ஈடுபட்டிருக்கிறார். அவர் எவ்வாறு ஆபிரகாமுக்குப் பிரத்தியட்சமானார்; எவ்வாறு சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் அவர் அவனுடன் உடன்படிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார், அது பிலதெல்பியா சபையின் காலம். ஆம், ஐயா, அது இரத்தத்தின் காலம், லூத்தர்…வெஸ்லியன் காலம். 193 அதன் பிறகு பெந்தெகொஸ்தே காலத்தை கவனியுங்கள். அவர் அங்கு வந்த பிறகு, அவர் எல்ஷடாய் அதாவது, “என் மார்பகத்தின் பாலைக் குடி” என்னும் வாக்குத்தத்தத்தை அருளினார். கேள்வி என்னவெனில்: உன்னால் பாலைக் குடிக்க முடியுமா? அது பெந்தெகொஸ்தேயினருக்கு முன்பாக வைக்கப்பட்டது. புரிகிறதா? உன்னால் பாலைக் குடிக்க முடியுமா? அவர்கள் அதைச் செய்யவில்லை; அவர்கள் வெளி வந்த ஸ்தாபனத்தின் ஒரு—ஒரு மார்பகத்தைப் பிடித்து அதன் பாலைக் குடித்தனர். ஆனால் வித்தோ, உண்மையான வித்தோ, தேவனுடைய மார்பகத்தின் பாலைக் குடிக்கும்.

107194 அத்தனை ஆண்டுகளாக அவர்கள் காத்திருந்த, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பு அவர்கள் பெற்றுக்கொண்ட கடைசி அடையாளம் என்ன? தேவன் ஒரு மனித உருவில் அங்கு நின்றுகொண்டு சாராளின் இருதயத்திலுள்ள சிந்தனைகளைப் பகுத்தறிந்தாரா (சாராள் சபையாக, சபைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறாள்), அவருக்குப் பின்னால் இருந்த சபையின் சிந்தனைகளை அவர் பகுத்தறிந்தார். அது சரியா? அதற்கு பின்பு உடனே, சாராள் ஒரு வாலிப ஸ்திரீயாகவும், ஆபிரகாம் ஒரு வாலிபனாகவும் மாறினான்; வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனாகிய ஈசாக்கு காட்சியில் கொண்டு வரப்பட்டான். 195 எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு சபைக்கு நிகழ வேண்டிய கடைசி காரியத்தை நீங்கள் கண்டு கொண்டிருக்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அது முற்றிலும் உண்மை. அதை நான் விசுவாசிக்கிறேன். மாரி முடிந்துவிட்டது. வெளிப்படுத்தின விசேஷம் முதல் மூன்று அதிகாரங்களைப் படித்தால் சபைக்கு என்ன வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். அதுதான் சபைக்கு, அங்கே வாக்களிக்கப்பட்டுள்ளது, சபை காலங்களுக்கு. 196 அன்றொரு நாள் நாம் எக்காளங்களைப் பிரசங்கிக்கத் தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர், “அது இதைச் சேர்ந்ததல்ல என்று உரைத்ததை நீங்கள் கவனித்தீர்கள்.” பாருங்கள், பார்த்தீர்களா?

108197 இப்பொழுது, பின் மாரி, ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்கள், இல்லை, அதுவல்ல…அது…அவர்கள் மாட்டார்கள்…அது—அது எலியாவும் மோசேயும் வரும்போது… அப்பொழுதுதான் அற்புதங்கள் நடக்கும். ஜனங்கள், பெந்தெகொஸ்தேயினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், அற்புதங்கள், அங்குதான், அவர்கள் கீழ் தான் நடக்கும். பாருங்கள், அது எலியாவினுடையதும், மோசேயினுடையதும். அவர்கள் தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளால் வாதிப்பார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாளிலே மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைப்பார்கள். தேவன் முன்பு செய்ததுபோல, நின்றுகொண்டு அவர்களுக்காக யுத்தம் பண்ணுவார், அவர் எகிப்தில் செய்தவிதமாகவே, அவர்களை பலத்த கரத்தினால் (புரிகிறதா?), உலகத்தின் “தத்துவங்களிலிருந்து” வெளியே கொண்டு வருவார். அவர் அதைச் செய்வார், ஆனால் அதுவல்ல…

109198 நாம் கர்த்தருடைய வருகைக்கு காத்திருக்க மட்டும் செய்ய வேண்டும். காத்திருக்க மட்டும் செய்யுங்கள்; உங்கள் தீவட்டிகளை சுத்தம் பண்ணி வைத்திருங்கள், அதை எண்ணெயினால் முழுவதும் நிரப்புங்கள். ஒவ்வொரு மணி நேரமும் ஜெபித்துக் கொண்டிருங்கள், ஒவ்வொரு நாளும் அல்ல, ஒவ்வொரு மணி நேரமும். உங்களை ஆயத்தமாக வைத்திருங்கள்; ஆயத்தமாயிருங்கள்: இனிமையாயிருங்கள், விழித்துக் காத்திருங்கள். ஓ, அந்த மகிழ்ச்சியான ஆயிரம் வருட அரசாட்சியின் நாள் வரக் காத்திருக்கிறோம், அப்பொழுது, நமது ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தர் வந்து காத்திருக்கும் தம் மணவாட்டியை எடுத்துக்கொள்வார்; ஓ, என்னே—ஓ, நான் உழைத்து, விழித்து, ஜெபித்துக் கொண்டிருக்கையில், என் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்குகிறது, ஏனெனில் நம்முடைய கர்த்தர் மறுபடியும் பூமிக்கு வருகிறார். அதுதான்; அதுதான் இந்நேரத்தில் சபையின் நம்பிக்கை.

110254. ஞானஸ்நானத்துக்கு “இயேசு கிறிஸ்துவின்” நாமம் சரியா, அல்லது அது “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்” நாமம் என்றிருக்க வேண்டுமா? 199 இரண்டில் ஏதாவதொன்றை உபயோகிக்கலாம். நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தை உபயோகிக்கிறேன் (புரிகிறதா?), ஏனெனில் அவர் நம்முடைய கர்த்தர் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, சில சகோதரர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதைக் குறித்து, எனக்கு—எனக்கு கருத்து வேறுபாடு உண்டு (புரிகிறதா?), ஏனெனில் இயேசு என்னும் பெயர் கொண்ட பல நண்பர்கள் எனக்குள்ளனர், மெக்ஸிகோவிலும், மற்றும்—மற்றும் இத்தாலியிலும், இன்னும் மற்றவிடங்களிலும் பல—பல போதகர் நண்பர்கள். அவர்கள் அவர்களை இயேசு என்ற பெயரால் அழைக்கின்றனர், எனவே ஞானஸ்நானத்தில் இயேசு என்னும் நாமம் போதாது. அவர் கிறிஸ்துவாகிய இராட்சகராகப் பிறந்தார், அவர் இரட்சகராகப் பிறந்தார், கிறிஸ்துவாக, அபிஷேகம் பண்ணப்பட்டார். எட்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு இயேசு என்னும் நாமம் பெயரிடப்பட்டது. பார்த்தீர்களா? அப்படியானால் அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அப்படித்தான் அவர் இருந்தார். சரி.

111255. சகோதரன் பிரான்ஹாமே, விவாகமும் விவாகரத்தும் என்னும் பிரச்சினையின் பேரில் இந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்த கர்த்தர் உமக்கு அனுமதி அளிப்பாரா? கேள்வி: ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை விவாகம் செய்துகொண்ட பிறகு, அவள் அவனை விவாகரத்து செய்துவிட்டு வேறொருவரை மணந்து கொள்ளலாமா? இருவருமே வேறொருவரை விவாகம் செய்து கொண்டால், அவர்கள் இருவருமே விபச்சாரம் செய்கிறவர்களாகிவிடுவார்களா? இது சர்ப்பத்தின் வித்துடன் இணையும் என்று நீர் கூறினீர். அது எப்படி? 200 இப்பொழுது, இங்கே—இங்கே நமக்குள்ள இந்தக் கேள்வித் தொகுப்பிலேயே இது மிகவும் வஞ்சகமான கேள்விகளில் ஒன்றாகும், இது இன்றைக்கு உலகில் அதிகமாக பிரச்சினைக்குரிய கேள்வியாகும். இப்பொழுது, நான் சொல்வதைக் கேளுங்கள், இதற்கு எனக்கு ஒரு காரணம் உண்டு. இன்று காலையில் விவாகமும் விவாகரத்தும் என்பதை குறித்து சரியான காரியத்தை இந்த சபைக்குக் கொண்டு வந்து அதை ஒலிநாடாவில் பதிவாக்கி, மற்றவர்கள் அதைக் கேட்பார்களானால், அது தேசத்திலுள்ள ஒவ்வொரு சபையையும் உடைத்துப் போடும். புரிகிறதா? அது உண்மை.

112201 இப்பொழுது, எனக்குதவி செய்யும், வேதாகமம் என் முன்னில் இதோ வைக்கப்பட்டுள்ளது, இந்த கேள்வியின் பேரில், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் உடையவனாயிருக்கிறேனே! இதைக் குறித்து தர்க்கம் செய்யும் இரு சாராருமே தவறாயிருக்கின்றனர். ஏற்கனவே விவாகமானவர்களை மறுபடியும் விவாகம் செய்கிறவர்கள், இருவருமே தங்கள் செயலில் தவறு செய்கின்றவர்களாயிருக்கின்றனர், ஆனால் இதற்கு இடையில், பாதையின் நடுவில் சத்தியம் உள்ளது. நான் விரும்பவில்லை…நான் ஒரு செய்தி ஒலிநாடாவைத் தயாரிக்கப்போகின்றேன், எனக்கு ஏதாவது நேரிடும் பட்சத்தில், நான் போய்விட்ட பிறகு (புரிகிறதா?) அதை சகோதரர்கள் அப்பொழுது சபைகளுக்கு போட்டுக் காட்டலாம். ஆனால் நான்—நான் அதன் பேரில் ஒரு ஒலிநாடாவை தயாரித்து அது எங்குள்ளது என்பதை உங்களுக்கு சபையில் காண்பிக்க விரும்புகிறேன்; ஆனால் நான் கர்த்தரால் வழி நடத்தப்படுவதை உணரும் வரைக்கும், அதைக் குறித்து ஒன்றையும் சொல்ல மாட்டேன். ஆனால் இப்படிப்பட்ட காரியங்களில் நான் கர்த்தரால் வழிநடத்தப்பட வேண்டும் என்று நான் உணருகிறேன்; நான் வழிநடத்தப்படாமல் போனால், நான் நன்மை செய்வதைக் காட்டிலும் அதிக சேதத்தை விளைவிப்பேன். புரிகிறதா?

113202 இப்பொழுது, இதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கேள்வி: “ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் அவனை விவாகரத்து செய்துவிட்டு வேறொருவரை மணந்து கொள்ளலாமா; இருவருமே வேறொருவரை விவாகம் செய்து கொண்டால், அவர்கள் இருவருமே விபச்சாரம் செய்கிறவர்களாகிவிடுவார்களா?” இப்பொழுது, என் நண்பனே, உங்கள் மனதை நோக வைக்க நான் விரும்பவில்லை, ஆனால் அதுதான் உண்மை. இயேசு, “தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்” என்று கூறியுள்ளார். புரிகிறதா? அதை நான்—நான் கூற விரும்பவில்லை, ஆனால் அதுதான் உண்மை. 203 “இது சர்ப்பத்தின் வித்துடன் இணையும் என்று நீர் குறிப்பிட்டிருந்தீர்.” புரிகிறதா? நான் அதை அவ்விதம் கூறினதாக எனக்கு ஞாபகமில்லை, ஆனால் நான் ஒருக்கால் எங்காவது கூறியிருக்கக் கூடும், அதைக் குறித்து ஏதாவது கூறியிருக்கக் கூடும்.

114204 அன்றொரு நாள், நான் ஒன்றைக் குழப்பிக் கொண்டது போல, அதை நான் கேட்க நேர்ந்தது, அது… அதை நான் அந்த நேரமே கண்டுபிடித்துவிட்டேன்; அது ஒலிநாடாவில் பதிவாகியுள்ளது. அதை நான்—நான் ஒருக்கால் அதிலிருந்து கேட்பேன். நான் ஏழு எக்காளங்களைக் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, அதை நான் ஏழு எக்காளங்கள் என்று கூறினேன். நான் பெந்தெகொஸ்தே பண்டிகையை குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன். பெந்தெகொஸ்தே பண்டிகையிலிருந்து ஏழு…எக்காளங்கள் வரை, ஏழு ஓய்வு நாட்கள். பஸ்கா பண்டிகைக்கும் பெந்தகோஸ்தேவுக்குமிடையே ஏழு ஓய்வு நாட்கள் (உங்களுக்குப் புரிகிறதா?), அதற்கு ஐம்பது நாட்கள் ஆனது. புரிகிறதா? ஆனால் அதை நான் குறிப்பிட்டுக்கொண்டிருந்தபோது, நான், “அது ஏழு சபை காலங்களை பொருட்படுத்துகிறது” என்றேன். 205 ஒலிநாடாவில், நீங்கள் அதை அல்லது ஏதாவது பெற நேர்ந்தால், அது அந்த ஒலிநாடாவிலே இருக்க வேண்டும், அதாவது ஏழு மாதங்கள் கழித்து எக்காளப் பண்டிகை வருகிறது, அது ஏழு சபைக் காலங்களைக் குறிக்கிறது என்று இருக்க வேண்டும், ஏழு மாதங்கள், ஏழு ஓய்வு நாட்கள் அல்ல. ஏழு ஓய்வு நாட்கள் என்பது…அதை நான் அங்கு விளக்கியிருக்கிறேன். நான் ஏழு ஓய்வு நாட்கள் என்று கூறினேன், அதைப் போல, ஆனால் நான் அதே கருத்தை பஸ்கா பண்டிகைக்கு, இல்லை, பெந்தெகொஸ்தே பண்டிகைக்கு ஏழு மாதங்களுக்கு பிறகு என்பதற்கும் கொண்டு சென்றுவிட்டேன், அந்த பண்டிகையின்போது கதிர் கொண்டு வரப்பட்டு, அசைவாட்டப்படுகிறது. அப்படியானால்—அப்படியானால் பாருங்கள்…நீங்கள் இதை ஞாபகம் கொள்ளுங்கள், அந்த நேரத்துக்குப் பிறகு கதிர் அப்பமாக மாறுகிறது. புரிகிறதா? அந்த கதிர்…ஒரு கதிர், அதன் பிறகு எல்லாமே அப்பத்துக்குள் சென்றுவிடுகிறது. ஓ, அதில் பெரிய போதகம் அடங்கியுள்ளது; அதன் ஓரத்தைக் கூட நான் தொடவில்லை. ஆனால் அதை நீங்கள் ஒலிநாடாவில் கேட்க நேர்ந்தால், ஞாபகங்கொள்ளுங்கள், வேதத்தை திறந்து பாருங்கள். நீங்கள் பாருங்கள், அதற்கு பிறகு ஏழு மாதங்கள் கழித்தாகும். ஏழு மாதங்களை எண்ணுங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், மற்றும் ஜூலை; அது ஜூலை மாதம், ஏழு மாதங்கள், அது ஏழு சபை காலங்கள் முழுவதையும் குறிக்கிறது. ஏதாவதொரு போதகர் அதை கண்டு பிடிக்கக் கூடும், அப்பொழுது நீங்கள் அதைக் கூறுவீர்கள், நீங்கள் பாருங்கள். சரி.

115206 இப்பொழுது, இங்கே இதன் பேரில், நாம் ஒருவாறு…நீங்கள்…இதை நான் கூறுகிறேன். இதை நான் கூறட்டும், கர்த்தர் அல்ல, இதை நான் கூறுகிறேன். இந்த நேரத்தில் உங்களுக்கு மறுபடியும் விவாகமாயிருந்து, நீங்கள் இருவருமே இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, நீங்கள் ஒருவரை ஒருவர் நேசித்து, பிள்ளைகளைப் பெற்றிருப்பீர்களானால் (இப்பொழுது, இது நான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தர் அல்ல. புரிகிறதா?), நீங்கள் தொடர்ந்து ஒன்றாக வாழுங்கள்; சந்தோஷமாயிருங்கள்; ஏனெனில் உங்கள் முதல் மனைவியுடன் நீங்கள் வாழ முடியாது, அப்படி வாழ முடிந்திருந்தால் இவளை நீங்கள் விவாகம் செய்து கொண்டிருந்திருக்கமாட்டீர்கள். அப்படியானால் இவளை நீங்கள் விட்டு உங்கள் முதல் மனைவியிடம் செல்வீர்களானால், நீங்கள் முதலில் செய்ததைவிட இன்னும் மோசமான காரியத்தை செய்பவராகிவிடுவீர்கள். புரிகிறதா? எனவே நீங்கள் பாருங்கள், நீங்கள் எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள்; அதிலிருந்து மீள வழியேயில்லை. நான் வேதத்திலிருந்து உண்மையில் ஒரே ஒரு வழியைத் தான் எடுத்துக் கூற முடியும்; நீங்கள் இருவருமே தனியாக வாழுங்கள். புரிகிறதா? 207 இப்பொழுது, ஆனால்…இந்த ஒரு வழியைத் தான் இப்பொழுது நான் கூற முடியும், ஆனால் வேறொரு காரியம் அதில் உள்ளது, அதை இப்பொழுது என்னால்—என்னால் உங்களிடம் கூற முடியாது, “இது நான் அல்ல, ஆனால் கர்த்தர், தொடர்ந்து வாழுங்கள்” என்று நான் கூறக் காரணம். இதை நீங்கள் ஒரு ஒலிநாடாவில் பதிவு செய்ய நேர்ந்து, என்றாகிலும் ஒரு நாள், இதைக் குறித்து நான் மறுபடியும் பேச நேர்ந்தால், இதை நான் கூறிய விதத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், அதை நான் எவ்விதம் அப்பொழுது கூறினேன் என்பதை, நீங்கள் கேட்டு அறிந்துகொள்ள முடியும் (புரிகிறதா?), அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

116256. சகோதரன் பிரான்ஹாமே, நம்முடன் வேற்றுமை கொண்டிருக்கும், மற்ற சபைகளுக்கு நாம் போகலாமா? 208 நிச்சயமாக, ஆம்! அவர்கள் இயேசுவுடன் வேற்றுமை கொண்டிருந்தபோதிலும், அவர் அங்கு சென்றார். போங்கள். “நம்முடன் வேற்றுமை கொண்டிருக்கும் மற்றொரு சபைக்கு நாம் செல்லலாமா?” என்று கூறுகிறதை, இங்கு நாம் கவனிக்கிறோம். நிச்சயமாக, நான்…நான் கடற்கரையில் உள்ள ஒரே ஒரு கூழாங்கல் அல்ல, உங்களுக்குத் தெரியும். தேவபக்தியுள்ள மற்ற மனிதர் எல்லாவிடங்களிலும் உள்ளனர். அவர்களில் நானும் ஒருவன் என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? ஆனால் நீங்கள் இங்கு வந்து… 209 அன்றொரு நாள் இது போன்ற ஒன்றைக் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. அரிசோனாவிலுள்ள ஒரு—ஒரு குழு இதைக்குறித்து என் கவனத்தை ஈர்த்தது. பார்த்தீர்களா? போதகர் குழு ஒன்று என்னிடம், “சகோதரன் பிரான்ஹாமே, உங்களுக்கு விரோதமாக எங்களுக்குள்ள ஒரே ஒரு காரியம் (பல காரியங்களில் ஒன்று என்னவெனில்) உங்களுடன் இங்கு வரும் மக்களை, வேறெந்த சபைக்கும் போக வைக்க எங்களால் முடியவில்லை.” “அவர்களுக்கு பிள்ளைகள் மற்றும் ஒவ்வொரு காரியமும் உள்ளது; ஆனால் அவர்கள் சபைக்குச் செல்ல மறுக்கின்றனர்” என்றனர். “சரி, எங்கள் சபைக்கு வருவதற்கு—வருவதற்கு அவர்கள் வரவேற்கப்படுகின்றனர் என்று நாங்கள் சொன்னோம்” என்றனர்.

117210 இப்பொழுது, நீங்கள் அவர்களுடைய சபைகளில் சேர்ந்துகொள்ள உங்களை வற்புறுத்துகின்றனர் என்பதை நான் அறிவேன், ஆனால் நீங்கள் சேரவேண்டிய அவசியமில்லை; உங்கள் பிள்ளைகளை எங்காவது ஞாயிறு பள்ளிக்கு அனுப்புங்கள்! நீங்கள் சபைக்குச் செல்லுங்கள்; ஞாயிற்றுக்கிழமையில் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கவோ, மீன் பிடிக்கவோ, வேட்டைக்கோ செல்லாதீர்கள். நீங்கள், “பாருங்கள். நான் சட்டதிட்டங்களை கடைபிடிக்கும் ஒருவன் அல்ல” எனலாம். பாருங்கள், நீங்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அவமதிக்காமல், சிறிது காலம் அவ்விதம் இருப்பது நல்லது. நீங்கள் எங்காகிலும் சபைக்குச் செல்லுங்கள்! 211 நான்—நான் போவேன் என்றால்…எனக்குக் கிடைக்கவில்லை என்றால்… நான் விசுவாசிப்பவைகளில் ஒரே ஒரு காரியத்தை மாத்திரம் கூறுவதாக நான் அறிந்துள்ள ஒரு குறிப்பிட்ட சபைக்கு நான் செல்வேன் என்றால்; அவர்கள் இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதாக கூறுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அதைக் கூறினர் (நான் அதை சந்தேகிக்கிறேன்), நான் அங்கு சென்று அவர்கள் அதைக் கூறுவதைக் கேட்பேன். ஒருக்கால் நீங்கள் சொல்லலாம்…அது இந்த சபை, அடுத்த சபை பாப்டிஸ்டைப் போல் ஏதோ ஒரு சபை. அவர்கள், “ஆம், உங்களுக்கு ஒரு அனுபவம் உண்டாயிருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்” என்பார்கள். நான்—நான் அவர்களோடு அதை ஒப்புக்கொள்வேன். அப்பொழுது நான் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறேன்; அத்துடன் எனக்கு அனுபவம் உண்டாயிருக்க வேண்டும் என்றும் நான் விசுவாசிக்கிறேன். சரி. 212 அதன் பிறகு, அங்கு அசெம்பிளீஸ் ஆப் காட் சபை உள்ளதென்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது, அவர்கள் விசுவாசிப்பது என்னவெனில்…பாருங்கள், நான் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து இப்பொழுது மூன்று அல்லது நான்கு துண்டு ரொட்டி சாப்பிட என்னால் முடிகிறது. (புரிகிறதா?), ஏனெனில் அவர்களால் விசுவாசிக்க முடிந்தது…

118213 அன்றொரு நாள், இதே நபர் என்னிடம் வந்து அதைக் குறித்து அறிய விரும்பினதுபோல, அவர், “நீங்கள் சொன்னீர்கள்…” என்றார். (அங்குள்ள இந்த போதகர், அங்குள்ள இந்த நபர் அதை விவாதிக்க விரும்பினார். பாவம் சகோதரன், அவர் அப்படிப்பட்ட ஒரு மாயையில் இருக்கிறார்.) அவர், “பாருங்கள். சகோதரன் பிரான்ஹாம்,” என்று கூறி, பாருங்கள், அவர், “அவர் அசெம்பிளில் ஆப் காட் சபையாகிய உங்களுக்கு விரோதமாய் இருக்கிறார்” என்றார். இந்த ஒலிநாடாவை ஒரு அசெம்பிளீஸ் போதகர் யாராகிலும் கேட்க நேர்ந்தால், நான் எப்பொழுது அசெம்பிளீஸ் ஆப் காட் மனிதருக்கு விரோதமாகவோ, அல்லது வேறெந்த மனிதருக்கும் விரோதமாகவோ இருந்திருக்கிறேன் என்று நீங்கள் என்னிடம் கூறும்படி விரும்புகிறேன். ஏன் அவ்விதமான கருத்து, நான் கிறிஸ்துவுக்காக பெற்றெடுத்த என் ஏழரை லட்சம் பிள்ளைகளை உங்களிடம் அனுப்பியிருக்கிறேன் என்று உங்கள் தலைமை அலுவலகமே ஒப்புக்கொண்டுள்ளதா? அப்படியிருக்க, நான் அசெம் பிளீஸ் ஆப் காட் சபைக்கு விரோதமாயிருக்கிறேன் என்று கூறுவது எப்படி? நான் ஏன் ஒருத்துவக்காரருக்கு விரோதமாக இருக்கப்போகிறேன்? நான் ஒருத்துவக்காரருக்கோ, அசெம்பிளீஸ் ஆப் காட் சபைக்கோ, சர்ச் ஆப் காட் சபைக்கோ விரோதமானவன் அல்ல! மனிதரைப் பிரிக்கும் ஒவ்வொரு முறைமைக்கும் நான் விரோதமானவன்!

119214 பாருங்கள், நான் அசெம்பிளீஸ் சபைக்கு அவர்களுடைய எண்ணிக்கையின்படியே, என் பிள்ளைகளில் ஏழரை லட்சம் பேரை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அவ்வளவு கெட்டவர்களாக இருந்தால், நான் ஏன் அதை செய்ய வேண்டும்? ஏன்? அவர்களை ஒருத்துவக்காரரிடமோ அல்லது…பெந்தெகொஸ்தே விசுவாசம் கொண்டுள்ள யாரிடமோ அனுப்புவதே மிகவும் சிறந்தது என்று நான் எண்ணுகிறேன், ஏனெனில் அவர்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டுள்ளனர்; இயற்கைக்கு மேம்பட்டவைகளில் அவர்கள் விசுவாசம் கொண்டுள்ளனர்; பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் அவர்கள் விசுவாசம் கொண்டுள்ளனர். அதுவே சிறந்தது…அவர்கள் எல்லோரையும் என்னால்—என்னால் இங்கு கொண்டு வரமுடியாது; அவர்கள் உலகெங்கிலும் உள்ளனர். எனக்கு உலகம் முழுவதிலும் நண்பர்கள் உள்ளனர், நான் கிறிஸ்துவுக்காக பெற்றெடுத்த பிள்ளைகள். அவர்களை மிகச் சிறந்த…அனுப்புகிறேன். நான் பீட அழைப்பு கொடுக்கும்போது, நான் கூறுவதைக் கேட்டிருக்கிறீர்களா? நான் கூறுவது… அவர்களை எழுந்து நிற்கச் செய்து, அவர்களை இரட்சிப்படையச் செய்த பிறகு, நான், “இப்பொழுது, உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஏதாகிலும் ஒரு நல்ல முழு சுவிசேஷ சபைக்குச் சென்று அதை உங்கள் சபையாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறேன். அவ்விதம் நான் கூறுவதை உங்களில் எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? நிச்சயமாக, நிச்சயமாக. பாருங்கள், அப்படியானால் நான் ஏன் அவர்களை அங்கு அனுப்ப வேண்டும்? என் சொந்த பிள்ளைகளை மரணத்துக்கு அனுப்ப நான் என்ன ஒரு மாய்மாலக்காரனா? நான் அப்படி செய்யாதிருப்பேனாக. இல்லை, ஐயா!

120215 உங்களால் போக முடியாவிட்டால்…உங்களால் இந்த கூடாரத்துக்கு வர முடியாவிட்டால் எங்காவது ஒரு சபையைத் தெரிந்துகொண்டு; அங்கு போங்கள். அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ரொட்டியின் எந்த பாகத்தைப் பரிமாறுகிறார்களோ, அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் வார்த்தைக்கு முரண்பாடாகும்போது, காரணம், நீங்கள் அதை விட்டுவிடுங்கள். புரிகிறதா? அது உண்மை. அவர்களை அதை ஒத்துக்கொள்ள வைக்க என்னால் முடியாது, ஆனால் அதுதான் முற்றிலும்…நிச்சயமாக, நீங்கள் சபைக்குப் போங்கள். சபை கதவு எங்கு திறவுண்டாலும், நீங்கள் முடிந்த வரையில் அங்கு விரைந்து செல்லுங்கள். அவர்கள் விசுவாசிக்காமல் போனால், பாருங்கள்…இப்பொழுது, நீங்கள் பங்குகொள்ள வேண்டியதில்லை. அவர்களைச் சேராதீர்கள், அந்த சபைகளில் ஏதொன்றையும் சேர்ந்துகொள்ளாதீர்கள்; ஆனால் அவர்களிடம் செல்லுங்கள்; அவர்களிடம் ஐக்கியம் கொள்ளுங்கள். அது கர்த்தருடைய சித்தம் அல்ல என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக செய்வாரென்று அவர் கூறியுள்ளாரே! ஒருக்கால் இரட்சிக்கப்பட வேண்டிய ஒரு ஆத்துமா அங்கு இருக்கக் கூடும், அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யலாம். புரிகிறதா? அங்கு செல்லுங்கள். கர்வமாக செல்ல வேண்டாம், இனிமையாக செல்லுங்கள்; அப்பொழுது ஜனங்கள், “அப்படிப்பட்ட ஒரு கிறிஸ்தவ பெண், ஒரு கிறிஸ்தவ தம்பதிகள்; அப்படிப்பட்ட ஒரு கிறிஸ்தவ பையன் அல்லது பெண். என்னே, நான் விரும்புவது…மகனே, அவர்களுக்கு ஏதோ ஒன்று உள்ளதுபோல் அவர்கள் உண்மையில் நடந்துகொள்ளுகிறார்கள்” என்று சொல்லத் துவங்குவார்கள். புரிகிறதா? “அது என்ன?” என்பார்கள். “இதுதான் அது.” அப்பொழுது அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஆனால் நீங்கள் உப்பாயிருங்கள், அப்பொழுது அவர்களுக்கு தாகமுண்டாகும்.

121257. அன்புள்ள சகோதரன் பிரான்ஹாமே: பரிசுத்த ஆவி உள்ள அனைவரையும் அடையாளங்கள் தொடர வேண்டுமென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு அவ்வாறு உரைத்துள்ளார், மாற்கு 16-ம் அதிகாரம். அப்படியானால், தங்களுக்குள் இருக்கும் எல்லாவற்றைக் கொண்டும் செய்தியை விசுவாசித்தும், இந்த அடையாளங்களைப் பெற்றிராத மக்களைக் குறித்தென்ன? அவர்கள் அவிசுவாசிகளா அல்லது அவர்களுக்கு பரிசுத்த ஆவி தேவையா? அப்படியானால், பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக் கொள்வதென்று தயவுகூர்ந்து இன்றைக்கு எங்களுக்கு அறிவுரை கூறுங்கள். எங்கள் நாளுக்கு நீர் தேவனுடைய வாயாக இருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். உங்கள் சகோதரன். 216 என் சகோதரனே, என்னை உங்களுடைய—உங்களுடைய சகோதரனாக பாவிப்பதற்காக, உமக்கு நன்றி, அது மிகவும் நல்ல ஒரு கேள்வி என்று நான் நினைக்கிறேன். நண்பர்களே, ஆம், இந்த விஷயத்தில் நாம் சிறிது தளர்ந்திருக்கிறோம். கூடுமானால் இதைக் குறித்து சற்று நீண்ட நேரம் பேச எனக்கு விருப்பமுண்டு. பார்த்தீர்களா? அது தளர்ந்துள்ளது. பாருங்கள்! உங்களில் சிலர்…புரிகிறதா? எப்பொழுதென்றால், ஒரு அனுபவத்தை பெறாமல் நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ள முடியாதபடியால் அது சம்பவிக்கிறபோது… இப்பொழுது, நீங்கள் “வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தின் உறுப்பையும்,” விசுவாசிப்பீர்களானால்…நீங்கள் அதனுடைய ஒவ்வொரு உறுப்பையும் விசுவாசிப்பதாகக் கூறுகிறீர்கள், அப்படியானால் வார்த்தையானது அங்கு கிடந்து பரிசுத்த ஆவி அதை செயல்படுத்துவதற்காக காத்துக்கொண்டிருக்கிறது; அந்த மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க வேண்டியதாயுள்ளது. 217 இங்கு திரியுடன் கூடிய மெழுகுவர்த்தி உள்ளது, மெழுகுவர்த்திக்கு வேண்டிய மெழுகும், அதற்கு தேவையான அனைத்தும் அதில் உள்ளது; ஆனால் நெருப்பு அதன் மேல் வைக்கப்பட்டு அது கொளுத்தப்படும் வரைக்கும், அது எந்த ஒளியையும் தராது. அந்த மெழுகுவர்த்தி எவ்வளவு முழுமையாக இருந்தாலும், அது எவ்வளவு நன்றாக எரியக் கூடியதாயிருந்தாலும், அது கொளுத்தப்பட வேண்டும், அப்பொழுது அது எரிகிறது. நீங்கள் விசுவாசித்து, பரிசுத்த ஆவி என்னவென்றும் அது கொடுக்கக் கூடிய கனிகளாகிய, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம் ஆகியவைகளைக் குறித்து நீங்கள் போதிக்கப்பட்டு அறிந்திருந்தபோதிலும், அக்கினி அனுபவத்துடன் பரிசுத்த ஆவி இறங்கி வந்து அந்த மெழுகுவர்த்தியை பற்ற வைக்காவிட்டால், அப்பொழுது நீங்கள்—நீங்கள்…நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லை. புரிகிறதா? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க, அந்த அனுபவத்தைக் கொண்டவர்களாயிருக்க வேண்டும்.

122258. நான் ஒரு தொழிற்சங்க உறுப்பினன். ஒரு கிறிஸ்தவன் அதில் சேர்ந்திருப்பது தவறா? “சத்தியம் பண்ணாதே—சத்தியம் பண்ணாதே” என்று வார்த்தை உரைக்கிறது. தொழிற்சங்கத்தின் சட்டப்பிரமாணத்தை கடைபிடிப்போமென்று நாங்கள் ஆணையிட வேண்டும். நான் ஒரு கிறிஸ்தவனானது முதற்கொண்டு, நான் தீவிரமாக அதில் ஈடுபடவில்லை, ஆனால் என் சந்தாவை இப்பொழுதும் செலுத்திக் கொண்டு வருகிறேன்.

123259. யூதாஸ்காரியோத்தின் பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டதா, அல்லது அது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் முதற்கண் இடம் பெற்றிருந்ததா? 218 சரி. தொழிற்சங்கத்தைக் குறித்து, உங்கள் வேலையைக் குறித்து எனக்குத் தெரியும்… உங்களுக்கு தொழிற்சங்கங்களும் மற்றவைகளும் உள்ளன… நீங்கள் வேலையில் நிலைத்திருக்க வேண்டுமானால், நீங்கள் அதில் சேர்ந்திருக்க வேண்டும். அது முற்றிலும் உண்மை. அதை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால் அதில் கவனமாயிருங்கள் (புரிகிறதா?), ஏனெனில் இந்நாட்களில் ஒன்றில் அது தொழிலிலிருந்து மதத்துக்கு வந்துவிடும். புரிகிறதா? இப்பொழுது, நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், எல்லாமே ஒன்றினைவதற்கு அது ஒரு முன்னோடி என்பதை ஞாபகம்கொள்ளுங்கள். உங்களால் வேலை செய்ய முடியாது; நீங்கள் வேலையில் நிலைத்திருக்க அவர்கள் விடமாட்டார்கள்; நீங்கள்—நீங்கள் இந்த தொழிற்சங்கத்தில் சேர்ந்திருந்தாலொழிய, நீங்கள்—நீங்கள் ஒரு, “தொழிற்சங்கத்தில் சேராத மாற்றுத் தொழிலாளியாய்” இருக்கிறீர்கள். 219 இப்பொழுது நினைவிருக்கட்டும், இளைஞர்களே, சகோதரன் பிரான்ஹாம் கூறுவதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என் சொற்கள் இரும்பு பேனாவில் ஒரு—ஒரு—ஒரு இரும்பு மலையின் மேல் பொறிக்கப்படட்டும்! கர்த்தர் உரைக்கிறதாவது, அதே காரியம் மத விஷயத்திலும் நிகழும். நீங்கள் ஏதோ ஒரு விதமான ஸ்தாபனத்தைச் சேர்ந்திருக்க வேண்டும், இல்லையென்றால் உங்களால் கொள்ளவோ அல்லது விற்கவோ முடியாது. எனவே மிகவும் ஜாக்கிரதையாயிருங்கள், சகோதரனே. அது தொழிலோடு மட்டும் இருக்கட்டும், அதை கவனித்து வாருங்கள்; இது ஒரு எச்சரிக்கை!

124220 “யூதாஸ்காரியோத்தின் பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டதா, அல்லது அது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் முதற்கண் இடம் பெற்றிருந்ததா?” ஆம், அது இடம் பெற்றிருந்து பின் கிறுக்கப்பட்டது. புரிகிறதா? ஏனெனில் மத்தேயு 10-ம் அதிகாரத்தில், இயேசு யூதாஸையும் மற்றவர்களையும் அழைத்து, அவர்களுக்கு அசுத்த ஆவிகளின் மேல் அதிகாரம் கொடுத்தார். அவர்கள் சென்று பிசாசுகளைத் துரத்தினார்கள், இயேசு, “சாத்தான் வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்” என்றார். அது சரியா? அவர்கள் திரும்பி வந்தனர், அந்த சீஷர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அவர்கள் களிகூர்ந்து கொண்டிருந்தனர்: அவர், “பிசாசுகள் உங்களுக்குக் கீழ்படிகிறதற்காக…நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” என்றார். புரிகிறதா? அது உண்மை. யூதாஸ்காரியோத்தும் அவர்களுடன் கூட இருந்தான்! பார்த்தீர்களா? 221 எனவே ஞாபகம் கொள்ளுங்கள், நியாயத்தீர்ப்பின்போது, கவனியுங்கள். நியாயாசனத்தில், “நியாய சங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகம் திறக்கப்பட்டது, அதன்படியே ஒவ்வொரு மனிதனும் நியாயத்தீர்ப்படைந்தான்.”

125222 இப்பொழுது, அங்குதான் காரியமே உள்ளது, சற்று முன்பு நாம் பார்த்த கேள்வி. புரிகிறதா? நியாயாசனத்தில் இயேசு. இயேசு, சபை, மணவாட்டி, எடுத்துக்கொள்ளப்பட்டு மகிமையில் பிரவேசித்து, கலியாணம் செய்தவளாய், பூமிக்குத் திரும்ப வந்து, ஆயிரம் வருடம் வாழ்கிறாள். ஆயிரம் வருடம் முடிவடையும்போது, சாத்தான் தன் காவலிலிருந்து கட்டவிழ்க்கப்பட்டு விடுதலையாகிறான், அவன் ஒரு தேவதூதனால் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான், ஒரு நீண்ட இரும்பு சங்கிலியினால் அல்ல, ஆனால் சூழ்நிலை என்னும் ஒரு சங்கிலியினால், அவனுடைய பிரஜைகள் அனைவரும் நரகத்தில் இருந்தனர். பூமியில் உயிரோடெழுப்பப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டு இயேசுவோடு கூட இருப்பார்கள். இந்த ஆயிர வருட காலத்தில், சாத்தானால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதன் முடிவில், இரண்டாம் உயிர்த்தெழுதல்… “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தமுள்ளவனுமாயிருக்கிறான்; இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை.” 223 இப்பொழுது கவனியுங்கள், இந்த இரண்டாம் உயிர்த்தெழுதலில், அவர்கள் உயிரோடெழுகையில், சாத்தான் தன் காவலிலிருந்து கொஞ்சக் காலம் விடுதலையாக்கப்படுகிறான்; பிறகு நியாயசங்கம் உட்கார்ந்தது. இப்பொழுது கவனியுங்கள், இயேசு மணவாட்டியுடன் கூட, ராஜாவும் ராணியுமாய், சிங்காசனத்தில் அமருவார்கள், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு; அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன, பாவிகளின் புத்தகங்கள். வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது, அது ஜீவ புத்தகமாக இருந்தது; அப்பொழுது ஒவ்வொருவரும் அதன்படி மணவாட்டியினால் நியாயத்தீர்ப்படைகின்றனர். “அறியீர்களா (சட்டத்திற்கு முன்பாக இந்த சிறு விவகாரங்களை கொண்டு போய்), பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?” பாருங்கள், புரிகிறதா? சரி.

126260. வெளிப்படுத்தின விசேஷம் 20:4-ல் குறிக்கப்பட்டுள்ள கூட்டத்தினர் யாரென்று தயவுகூர்ந்து விளக்குவீர்களா? அவர்கள் முன் காலத்தில் இருந்த மணவாட்டியின் பாகமா, அல்லது வருங் காலத்தில் உள்ளவர்களா? 224 அவர்கள் முன்காலத்திலும் இப்பொழுதும் உள்ள மணவாட்டி முழுவதுமே. அவர்கள் முழுவதுமே மணவாட்டி, ஏனெனில் அவர்கள் ஆயிரம் வருட காலத்தில் வாழ்கின்றனர். சரி.

127261. நீங்கள் தயவுகூர்ந்து… (பாருங்கள், இதுவும் சரியாக அதே கேள்விதான்.) … வெளிப்படுத்தின விசேஷம் 20:4, இவர்கள் மிருகத்தையாவது, அதின் சொரூபத்தையாவது வணங்காமல் அவனுடைய முத்திரையைத் தரித்துக்கொள்ளாமல், இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்ட ஆத்துமாக்களா (ஓ, அவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பதை நான் காண்கிறேன். இப்பொழுது தான் இது என்னிடம் கொடுக்கப்பட்டது, என் கையில் கொடுக்கப்பட்டது.) … அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளதே. துன்புறுத்தப்படுவது மணவாட்டி என்பதால் இது குழப்பமாக உள்ளது, இல்லையென்றால், வேறு யார் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாள முடியும்? இவர்கள்—இவர்கள்…இவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களாக இருக்கக் கூடுமா? இல்லை, இல்லை! அவர்கள் மணவாட்டியே. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், ஞாபகம் கொள்ளுங்கள், அவர்கள்… 225 நீர், “அவர்கள் இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்கள்…” என்று கூறினீர். இப்பொழுது, நீங்கள், “இவர்கள்…மிருகத்தை வணங்கவில்லை…” என்று கூறுகிறீர்கள். நிச்சயமாக! நீங்கள், “மிருகம் இனியல்லவா வரப் போகிறான்” என்று கேட்கிறீர்கள். 226 மிருகம் எப்பொழுதுமே இருந்து வருகிறான்; மிருகம்தான் அவர்களை கெபியிலும், ரோமாபுரியிலிருந்த அரங்கத்திலும் சிங்கங்களுக்கு இரையாகக் கொடுத்தான். அது அந்திக்கிறிஸ்து; அங்கு மிருகம் ஒருவிதமான மதத்தை உருவாக்கினான். அது சரியாக, ஏறக்குறைய, ஒரு மாதிரி. ரோம சபையானது வேதத்திலிருந்து விலக்கப்பட்டது, அதன் பிறகு… அவர்கள் அதைச் செய்தபோது, அவர்கள் அதை ஒரு ஸ்தாபனமாகச் செய்து ஒரு நிறுவனத்தை உண்டாக்கி, அதை உலகம் முழுவதுமுள்ள ஒரு—ஒரு ஸ்தாபன சபையாக்கினார்கள், அதை வணங்காத அனைவரும் நிர்மூலமாக்கப்பட்டனர். புரிகிறதா? அதுதான். 227 அவர்கள் அப்பொழுது இருந்த மணவாட்டியின் ஒரு பாகம்… இப்பொழுது, சரீரமானது ஒரு மரத்தைப் போல் வளர்ந்து, தலைக்கு வந்துவிட்டது. புரிகிறதா? எல்லோருமே, துன்புறுத்தப்பட்டு இரத்த சாட்சிகளாக மரித்தவர்களும், மற்றவர்களும்… 228 ஆனால் இயேசு நதியின் இக்கரையில் நமக்கு சமாதானத்தை அருளியிருக்கிறார், அந்த கோத்திரங்களுக்கு செய்ததுபோல…அவர்கள் (பார்த்தீர்களா?) கடந்து செல்லவில்லை. இப்பொழுது.

128262. அவருக்கு நான் என்ன செய்ய முடியும்? பண்ணையில் தந்தைக்கு தொடர்ந்து (ஓ!) உதவி செய்ய வேண்டுமா? என் ஜீவனத்துக்கு…நான்…என்ன செய்வேன்…? அவன் தன் பெயரைக் கையொப்பமிட்டுள்ளான். ஆம், என் சகோதரனே…அவன் பெயர் அங்கு எழுதப்பட்டுள்ளது. யாரென்று எனக்குத் தெரியவில்லை… இது, “சகோதரன் பிரான்ஹாமே…” என்று கூறி, “அவருக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று தொடர்ந்து கேட்கப்படுகிறது. 229 இப்பொழுது, இது ஏதோ ஒரு பையன் தன் தந்தைக்காக கேட்டிருக்கலாம். பாருங்கள், என் அருமை சகோதரனே, உன் தந்தையை நீ கவனித்துக்கொள்ளுகிறபோது நீ பாக்கியவானாயிருப்பாய், ஏனெனில் உன்னை கவனித்துக்கொள்ள முடியாத நிலையில் நீ இருந்தபோது, உன் தந்தை உன்னை கவனித்துக்கொண்டார். வாக்குத்தத்தத்தைக் கொண்டுள்ள முதலாம் கற்பனை, வாக்குத்தத்தத்தைக் கொண்டுள்ள முதலாம் கற்பனை: “பூமியில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு கர்த்தர் நீடித்த நாட்களை உனக்குக் கொடுப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.” புரிகிறதா? ஆம், உன்னால் முடிந்த எந்த விதத்திலாவது உன் தந்தைக்கு உதவியாயிரு. அவர் மிகச் சிறந்ததைப் பெற்றுக்கொள்கின்றாரா என்பதைப் பார்த்துக்கொள்.

129263. காயீன் சர்ப்பத்தின் வித்து என்று நீங்கள் கூறினீர்கள். அப்படியென்றால் ஏவாள், “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” என்று கூறக் காரணம் என்ன? இதோ நாம் பார்க்கலாம். இதற்கு பதிலளிக்க பகல் உணவு முடியும் வரைக் காத்திருப்பது நல்லது. ஆம், பகல் உணவு வரைக் காத்திருந்து பிறகு இதற்கு நான் பதிலளிக்கிறேன். ஓ, இதை விளக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ளப் போகிறது. சரி.

130264. அன்புள்ள சகோதரன் பிரான்ஹாமே: ஏசாயா 2:2-ல் கூறப்பட்டுள்ள “கடைசி நாட்களில் கர்த்தருடைய…பர்வதம், கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி வருவார்கள்” என்று வசனத்தை எனக்கு விளக்குவீர்களா? 230 ஆம், போன ஞாயிறுக்கும் முந்தின ஞாயிறு, அதை விளக்கினேன். புரிகிறதா? கர்த்தருடைய ஆலயம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்படும், எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி வருவார்கள். பெரிய…உங்களிடம் இல்லாமற்போனால்… மணவாளன் மற்றும் மணவாட்டியின் வருங்கால இருப்பிடம் என்னும் ஒலிநாடா உங்களிடம் இருந்தால், அது இதை சரியாக விளக்குகின்றது. ஓ, என்னே! இப்பொழுது நான் முடித்துவிடுவது நலம். ஏனெனில், என்னே, ஓ என்னே, சகோதரனே, இங்குள்ள கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்லி முடிக்க முடியாது. வயூ!

131265. சகோதரன் பிரான்ஹாமே… (இது என்னவென்று பார்ப்போம்.) சகோதரன் பிரான்ஹாமே, உமது செய்தியைப் பின்பற்றுபவர்கள், நீரே இந்நாளின் மேசியா என்று பொதுவாக விசுவாசிக்கின்றனர். அது அப்படித்தானா? 231 இல்லை, ஐயா! சகோதரன் பிரான்ஹாமே, எங்களுக்கு வெளிப்படையாகக் கூறும். நீர் யாரென்று உம்மைத் தெரியப்படுத்த நீர் தயங்குவதாக தோன்றுகிறது, தேவன் உமக்கு அளித்துள்ள இத்தனை மகத்தான ஊழியத்தில், நீர் வேதத்தில் எங்காவது அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டுமென்று நாங்கள் அறிந்திருக்கிறோம்.

132266. எண்—எண் 2: முதல் முறை நீர் அரிசோனாவுக்குச் சென்ற நோக்கத்தை எங்களிடம் கூறினீர். ஏனென்று எங்களிடம் கூறினீர், அது நிறைவேறினது, ஆனால் நீர் மறுபடியும் ஏன் அங்கு சென்றீர் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. 232 முதலாவதாக, நான் மேசியா அல்ல! புரிகிறதா? மேசியா இயேசு கிறிஸ்துவே, ஆனால் நாம் “குட்டி மேசியாக்கள்,” நாம் ஒவ்வொருவரும். மேசியா , மேசியா என்றால் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று பொருள். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது; எனக்குள்ளோ அவருடைய ஆவியின் ஒரு பாகமே வாசமாயுள்ளது, அதுவே உங்களுக்குள்ளும் வாசமாயுள்ளது. சில காரியங்களை அறிந்துகொள்ள, முன்கூட்டியே காண எனக்கு ஒரு வரம் அளிக்கப்பட்டுள்ளது. நான் இன்னும் உங்கள் சகோதரனே. பார்த்தீர்களா? நான்…மேசியா அல்ல; நான் உங்கள் சகோதரன் (புரிகிறதா?), மந்தைக்கு ஒரு மேய்ப்பன் மாத்திரமே… நான் மேசியாவென்று உங்களிடம் கூறுவேனானால், நான் ஒரு பொய்யனாயிருப்பேன். புரிகிறதா? நான் பொய்யனாயிருக்க விரும்பவில்லை. 233 “இப்பொழுது, முதல் முறை நான் ஏன் அரிசோனாவுக்குச் சென்றேன்?” அதை நீங்கள் புரிந்துகொண்டீர்கள். நான் கர்த்தருடைய நாமத்தில் அங்கு சென்றேன், ஏனெனில் ஒரு தரிசனத்தின் மூலமாக அங்கு நான் அனுப்பப்பட்டேன். நான் இரண்டாம் முறை அங்கு சென்றது ஒரு நோக்கத்துக்காகவே. அதை பற்றி அப்படியே விட்டு விடுங்கள். நான் எதற்காகப் போனேன் என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் என்னால் கூற முடியாது. நீங்கள்…பிசாசுக்குத் தெரியாது, என் இருதயத்திலுள்ளபோது அவனால் அதை அறிந்துகொள்ள முடியாது. அதை நான் வெளிப்படையாகக் கூறினால், அப்பொழுது அவனால் அறிந்துகொள்ள முடியும், ஆனால் அவன்…என் இருதயத்தில் உள்ள வரைக்கும் அவன் அறிந்துகொள்ள முடியாது. நான், “அது நிறைவேறும் வரைக்கும் காத்திருங்கள்!” என்று கூறுவேனானால்…ஞாபகம் கொள்ளுங்கள், இந்த ஒலிநாடாவை வைத்திருங்கள்; ஒரு நோக்கத்துக்காகவே நான் அரிசோனா சென்றிருக்கிறேன். என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள். புரிகிறதா? நீங்கள் செய்ய நான் கூறுவதை மட்டும் செய்யுங்கள் (புரிகிறதா?), நான் சொல்வதை மட்டும் அப்படியே—அப்படியே செய்யுங்கள். புரிகிறதா?

133267. சகோதரன் பிரான்ஹாமே, உங்களிடம் கேட்க விரும்பும், சில கேள்விகள் எனக்குண்டு. எல்லாவற்றையும் விற்க நீர் ஜனங்களுக்கு ஆலோசனை கூறினதாக…ஜனங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். (அதையும் கூட நான் தனியே விட்டு விடுவது நலமாயிருக்கும். நாம் பார்ப்போம். சரி, முடிக்க வேண்டிய நேரம் ஏற்கனவே கடந்துவிட்டது. பகல் உணவுக்குப் பிறகு இதை நாம் பார்ப்போம், ஆனால் இதற்கு நான்—நான் பதிலளிப்பேன் அல்லது என்னால் முடிந்த வரையில் இதற்கு பதிலளிக்க முயல்கிறேன். எனக்குத் தெரியாது; இது இப்பொழுது தான் என் கையில் கொடுக்கப்பட்டது. புரிகிறதா? பில்லி சில கேள்விகளை அங்கே—அங்கே கதவண்டையில் என்னிடம் கொடுத்தான். புரிகிறதா?) ஜனங்கள் தங்கள் வீடுகள் அனைத்தையும் விற்று உம்மை அரிசோனாவுக்குப் பின் தொடரவேண்டுமென்றும், இல்லையென்றால்—இல்லையென்றால் அவர்கள் எடுத்துக்கொள்ளப்படுதலில் போகமாட்டார்கள் என்றும் நீர் ஆலோசனைக் கூறினதாக ஜனங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது உண்மையா? 234 அது பொய். பார்த்தீர்களா? உ- ஊ! …அல்லது நாங்கள் எங்கள் வீடுகளை விற்க வேண்டுமா, அல்லது நீர் எப்பொழுதாவது இதைச் சொன்னீரா?

134235 இல்லை, ஐயா! நான் அதைக் கூறவேவேயில்லையே! ஏதேனும் இருந்தால், அவ்விதம் செய்ய வேண்டாம் என்று நான் ஜனங்களுக்கு ஆலோசனை கூறினேன். ஊ-ஊ! நினைவிருக்கட்டும், நான் அங்கு சென்ற சமயத்தில் “ஜூனி” ஜாக்சன் கண்ட சொப்பனம் ஞாபகம் உள்ளதா? “ஜூனி” இதை சொப்பனத்தில் கண்டதாக…எத்தனை பேருக்கு அந்த சொப்பனமும், தேவன் எவ்விதம் அதன் அர்த்தத்தை உரைத்தார் என்பதும் ஞாபகமுள்ளது? அந்த பெரிய மலை, நாங்கள் அதன்மேல் நின்று கொண்டிருந்தோம், அங்கு மங்கிப்போன எழுத்துக்கள் இருந்தன. அதற்கு நான் அர்த்தம் உரைக்க முயன்றுகொண்டிருந்தேன், என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நான்—நான் அவர்களுக்கு நான் அதன் அர்த்தத்தை உரைத்துக் கொண்டிருந்தேன். அதன் அர்த்தம் அனைத்தையும் நான் உரைத்து முடித்த பின்பு, அதன் அர்த்தம் அனைத்தையும் நான் உரைத்து முடித்த பின்பு, என் கையை நீட்டி (இப்பொழுது அவருடைய சொப்பனத்தில்) ஒரு விதமான ஒரு, கடப்பாறையைப், போன்றதை, எடுத்து மலையின் உச்சியை உடைத்து உள்ளே பார்த்தபோது, அது பனி வெண்மையாய் இருந்தது, சலவைக் கல் போல். ஆனால் அதில் ஒன்றும் எழுதப்படவில்லை, நான், “நீங்கள் எல்லோரும் இங்கு தங்கியிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருங்கள், நான் போகிறேன்” என்றேன்.

135236 அப்பொழுது “ஜூனி”…எல்லோரும் மேலே சென்றனர். எல்லா சகோதரர்களும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர், வேறொருவர்… அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, அவர்கள். “பாருங்கள், உங்களுக்கு என்ன தெரியும்? அதில் இங்கே ஒன்றுமே எழுதப்பட்டிருக்கவில்லை,” அவர் வெளியே எழுதப்பட்டிருந்ததை படித்தார். “இதில் ஏன் ஒன்றும் எழுதப்பட்டிருக்கவில்லை? எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றனர். 237 ஜூனியர் திரும்பி பார்த்தபோது, நான் மேற்கே, சூரிய அஸ்தமனத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார், நான் ஒரு மலையைக் கடந்து, மற்றொரு மலையைக் கடந்து, மிகவும் வேகமாக சென்று கொண்டிருந்தேனாம், அப்படியே… பின்பு அவர்கள் திரும்பிப் பார்த்து நான் போய்விட்டதாக கண்டனர்; அவர்களிடம் நான் அங்கு தங்கியிருக்க கூறியிருந்தபோதிலும், அவர்களில், ஒரு பெரிய கூட்டம் நான் சென்ற வழியை நோக்கிப் புறப்பட்டு, அவர்கள் அங்கு சென்று அதை செய்ய வேண்டுமென்று விரும்பினர். அங்கேயே தங்கியிருங்கள், அங்கேயே தங்கியிருங்கள்; இதுவே அந்த இடம் என்று கூறியிருந்தேன்.

136238 அதன் பிறகு, அதை நான் செய்தபோது, பிறகு, நான் சரியாக சென்றேன்; அதன் பிறகு சிறிது கழிந்து, கர்த்தருடைய தூதன் எனக்குப் பிரத்தியட்சமாகி, “அரிசோனாவுக்குப் போ” என்றார். அந்த வெடிச் சத்தம் அங்கு உண்டானதைக் கேட்டு அங்கு சென்றேன், அது என்ன? அந்த பையன் சரியாக அப்படியே அந்த சொப்பனத்தைக் கண்டு, கர்த்தரும் சரியான… “நான் ஏதோ ஒன்றுக்காக அங்கு செல்கிறேன்” என்று நான் கூறினதை நினைவில் கொள்ளுங்கள். அங்கு நான் சென்றபோது, அது ஏழு முத்திரைகளின் இரகசியமாயிருந்தது, அது கர்த்தருடைய பர்வதத்தின் உள்ளே முத்தரிக்கப்பட்டிருந்தது. ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு, நான் திரும்பி வந்தேன். புரிகிறதா? 239 இல்லை, நீங்கள் அவ்விதம் செய்யக் கூடாது. நீங்கள் போக விரும்பினால், அது உங்கள் விருப்பம். நிச்சியமாகவே, நான்…என்னே, நீங்கள் எங்கு சென்றாலும் எனக்கு கவலையில்லை, ஆனால் அதைச் செய்யும்படி, மணவாட்டி அங்கிருந்து போகப்போகிறாள் என்று எண்ணி, அதற்காக அங்கு செல்வீர்களானால், நீங்கள் தவறு செய்கின்றீர்கள்.

137240 “மேலும் ஜனங்கள் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்…நான் (அந்த கேள்வியை நான் பார்க்கட்டும்…அதை எங்கோ தவறாக கூறிவிட்டேன். நாம் பார்ப்போம்.)…எடுத்துக் கொள்ளப்படுதல். அது உண்மையா அல்லது நாங்கள் எங்கள் வீடுகளை விற்க வேண்டுமா, அல்லது நீர் எப்பொழுதாவது இதைச் சொன்னீரா?” இல்லை, நான் ஒருபோதும் கூறவில்லை. நான் கூறவில்லை…ஜனங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கியிருந்து…இயேசு வரும் வரைக்கும் தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்க நான் ஜனங்களுக்கு எப்பொழுதும் ஆலோசனை கூறினதுண்டு. நான் உங்களிடம் அநேக முறை இதை கூறினதற்கு, இந்த ஒலிநாடா ஒரு ஞாபகச் சின்னமாக இருக்கட்டும்; இந்த நாள் ஒரு ஞாபகார்த்தமான நாளாயிருக்கட்டும்; என் சொல் ஞாபகமூட்டுவதாயிருக்கட்டும்; நான் ஒருபோதும், ஒருமுறையாவது, யாரிடத்திலுமே எப்போதும், எப்போதும் மனமாற்றமடையச் செய்ய சொல்லவேயில்லை, இந்த சபைக்கு வரும்படி நான் யாரையும் எப்போதும் முயற்சித்தது இல்லை! நான் ஒருபோதும்…அவர்கள் தங்கள் சொந்த சபையை விட்டு தங்கள் பொருட்களை விற்கும்படி நான் கூறினதேயில்லை, நான் ஜனங்களிடம் தேவன் அவர்களை அழைக்கும் வரைக்கும் அவர்கள் கிறிஸ்தவராக நிலைத்திருந்து அவர்கள் உள்ள இடத்திலேயே தங்கியிருக்க நான் எப்பொழுதும் ஆலோசனை கூறி வந்திருக்கிறேன் என்பதை தேவன் அதை அறிவார். அது எல்லோருக்கும் தெரியும். அங்கேயே தங்கியிருங்கள்! ஆனால் இப்பொழுதோ, நான் ஜனங்களிடம் இவ்விதம் கூறுவேனானால்… யாராகிலும் ஒருவர், “சரி, நான் அங்கு வரவேண்டுமென்று விரும்புகிறேன். அங்கு தங்க வேண்டுமென்று…” என்கிறார். நீங்கள் போக விரும்புகிற எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், அதனால் பரவாயில்லை. நீங்கள் எங்கு சென்றாலும் எனக்கு கவலையில்லை; அது என் வேலையல்ல. 241 ஆனால் இப்பொழுது, இவ்விதம் எண்ணுவது…பாருங்கள், அது என்ன செய்கிறது? அது ஒரு கொள்கையை துவக்குகிறது, (புரிகிறதா?), அப்பொழுது நான் தொல்லையில் அகப்பட்டுக் கொள்கிறேன். அங்கு ஒரு கூட்டத்தினர் விரைவில் தர்மத்தை நம்பியிருக்கப் போகின்றனர். அப்படியானால் அது என்னவாயிருக்கப்போகிறது? “நாங்கள் மணவாட்டியின் எடுத்தக் கொள்ளப்படுதலுக்காக இங்கு வந்திருக்கிறோம்.” அதற்காகவே செய்தித்தாள்கள் காத்துக் கொண்டிருந்தன! அவர்கள் தர்மத்தை நம்பியிருக்கத் தொடங்கி தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையை அடைவதை வெளியிட அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அவர்கள் என்ன செய்யப்போகின்றனர்.

138242 “சரி, நாங்கள் சகோதரன் பிரான்ஹாமை பின்தொடர்ந்து இங்கு வந்தோம். அவ்விதம் கருதப்பட்டது…” அதைக் குறித்து என்னால் முடிந்தளவு நான் மிகவும் குற்றமற்றவனாயிருக்கிறேன். அருமையான, இனிமையான ஜனங்கள், அவர்களை—அவர்களை நான் எப்படியும் நேசிக்கிறேன் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர், அவர்கள் தவறு செய்த போதிலுமே. அவர்கள்…ஏன், அந்த…அவர்கள்…அவர்களை எப்படியும் நான் நேசிக்கிறேன். புரிகிறதா? அவர்களை நான் நேசிக்கிறேன்; அவர்கள் என் பிள்ளைகள்; ஆனால் நான் அவர்களிடத்தில் என்ன சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு, அவர்கள் எனக்கு செவிகொடுக்க மாட்டார்கள். நான் கர்த்தருடைய நாமத்தில் ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்று நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், அவர்களோ அதை என்னை செய்யவிடுவதில்லை. புரிகிறதா? அவர்கள் என் சார்பில் இருப்பதற்கு பதிலாக உண்மையில் எனக்கு விரோதமாக சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் செய்வது… 243 எப்பொழுதாகிலும் ஒரு செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டுமென்றால், இது இங்கே இந்த கூடாரத்தில்தான் பிரசங்கிக்கப்படும்; நான் எதைச் செய்ய வேண்டுமென்றாலும், நான் இங்கு வந்து, உங்களுக்கு முதலில் இந்த கூடாரத்திலிருந்து எடுத்துரைப்பேன் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? அது என் வாக்குறுதி!

139268. மேலும், நான் கேள்விப்பட்டது, அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ அப்பத்தைக் குறித்து, நீர் எழுதின ஒரு புத்தகத்தின் பேரில் ஒரு போதகம் பரவியுள்ளது… நாங்கள் எல்லோரும் உம்முடன் இருக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் நாங்கள் எடுத்தக்கொள்ளப்படுதலை இழந்துவிடுவோம் என்றும் அவர்கள் அதை வியாக்கியானம் செய்கின்றனர். 244 பாருங்கள், அந்த புத்தகம் தவறு. ஜீவ அப்பம் என்னும் தலைப்பு கொண்ட அந்த புத்தகம், அது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது. அது உலகம் முழுவதும் உள்ள சபையை போஷிப்பதற்காக, எல்லாவிடங்களிலுமே. பாருங்கள், அதைக் குறித்த தொல்லை என்னவெனில்… இப்பொழுது, இப்பொழுது, ஜனங்களாகிய நீங்கள், நீங்கள் திடமாயிருக்கிறீர்கள், ஆனால் இது நடக்க வேண்டும், அது ஒவ்வொரு கூட்டத்தையும் தொடர்கின்றது. அந்த—அந்த… அண்மையில் இங்கே நான் மார்டின் லூத்தரைப் பற்றி படித்துக்கொண்டிருந்தேன், நம்மை அதனுடன் ஒப்பிடுவதற்காக அல்ல; அதைப் போன்று இதுவும் ஒரு சீர்த்திருத்தமே. அந்த—அந்த கேள்வி என்னவெனில்…அந்த வரலாற்று ஆசிரியர்கள், அவர்கள், “மார்டின் லூத்தர் கத்தோலிக்க சபையை எதிர்த்துப் போராடி தப்பிக்க முடிந்தது என்பதை நினைப்பது ஒரு அற்புதமான காரியமாய் உள்ளது. அது ஒரு ஆச்சரியமான செயல்தான், ஆனால்,” என்று கூறி, “மார்ட்டின் லூத்தரைக் குறித்த மிக அற்புதமான காரியம் அதுவல்ல. அவருடைய கூட்டங்களைத் தொடர்ந்த மூட பக்தி வைராக்கியத்துக்கு மேல் தன் தலையை உயர்த்தி எப்படி வார்த்தைக்கும் அவருடைய அழைப்புக்கும் அவரால் உண்மையாயிருக்க முடிந்தது என்பதே…” என்று கூறியுள்ளனர். புரிகிறதா? 245 இல்லை, ஐயா! உங்கள் சொந்த கருத்தை…நான் கூறினதில் எந்த மனிதனாவது அல்லது ஸ்திரீயாவது எதையாகிலும் நுழைத்தால், நான் கூறுகிறதற்கு முரணானதை நம்பாதீர்கள். அவர்களுக்குத் தெரிவதில்லை…அவர்கள் சொல்கின்றனர்…அவர்கள்…

140269. மேலும் விற்று அரிசோனாவிலுள்ள, சியரா விஸ்டாவில் குடியேறின குடும்பங்கள், தலைப்பிடப்பட்ட உங்களுடைய ஒலிநாடாக்கள் ஒன்றிலிருந்து அவர்கள் (அப்படியே ஒரு நிமிடம்) சிறு பெத்லகேம்—சிறு பெத்லகேம், என்ற செய்தியிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுதல் அரிசோனாவில் நிகழும் என்று வியாக்கியானித்துள்ளனர். அங்கு செல்ல அவர்களுக்கு நீர் ஆலோசனை கூறினீரா? 246 நிச்சயமாக நான் அவ்விதம் செய்யவில்லை. அவர்கள் அதைக் குறித்து எனக்கு கடிதம் எழுதினபோது, கனெக்டிகட்டிலுள்ள யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒரு இடம், நான் அந்த கடிதத்திற்கு திருப்பி பதில் அளித்துவிட்டு, “நீங்கள் உங்கள் வாழ்நாளிலேயே மிகவும் மோசமான தீர்மானத்தை செய்திருக்கிறீர்கள். அப்படி ஒன்றும் செய்துவிடாதீர்கள்” என்று எழுதினேன். பாருங்கள், உங்களால் முடியாது…பாருங்கள், ஜனங்களாகிய நீங்கள், இதை ஞாபகம் கொள்ளுங்கள்,… இப்பொழுது, அவ்விதம் செய்ய நான் ஜனங்களிடம் கூறுகிறதில்லை என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்; அவ்விதம் செய்ய வேண்டாமென்று அவர்களிடம் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் பாருங்கள், அது கூட்டத்தைத் தொடர வேண்டியதாயுள்ளது. ஜனங்கள் என்னை மேசியா என்று ஏன் அழைக்கின்றனர்? ஜனங்கள் ஏன்…? அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு…பாருங்கள், அங்குள்ள ஒருவர் அன்றொரு நாள் என்னிடம் ஒன்றைக் காண்பித்தார், அவரிடம் ஒரு சிறு காரியம் இருந்தது மற்றும் அவர் தொடர்ந்து…செய்துகொண்டு, எல்லோரும் என் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று ஜனங்களிடம் கூறினார். அது என்னை அந்திக்கிறிஸ்துவாக்கிவிடும்! ஆனால் இத்தகைய காரியங்களை நான் ஆதரிப்பவன் அல்ல, ஜனங்களாகிய நீங்கள் அனைவரும் அதை அறிந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் பாருங்கள், இது வரவேண்டியதாயுள்ளது…அது செய்தி உண்மையென்பதை அடையாளம் காட்டுகிறது. 247 அவர்கள் கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியான யோவானிடம் வந்து, “நீர் மேசியாதானே” என்று கேட்கவில்லையா? அவன், “நான் அல்ல! அவருடைய பாதரட்சைகளை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரன் அல்ல. அவரை நோக்கிப்பார்ப்பதற்கும் கூட நான் பாத்திரன் அல்ல” என்றான். பார்த்தீர்களா? ஆனால் அவன், “எனக்கு பின் ஒருவர் வருகிறார்…” என்றான்.

141270. இப்பொழுது, சகோதரன் பிரான்ஹாமே, நாங்கள் ஏதாவதொன்றை இழந்து விட்டிருக்கிறோமா? நீர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று நம்புவதாக இந்த ஜனங்கள் உரிமை கோருகின்றனர். (ஆனால் அவர்கள் அவ்விதம் செய்வதில்லை! அவர்கள் அதை நம்புவதில்லை. அவர்களுடைய செய்கைகள் அவர்கள் நம்புவதில்லை என்பதைக் காண்பிக்கிறது.) இந்தக் காரியங்களைக் குறித்து உம்முடைய நேரடியான விடை; ஆமாம் அல்லது இல்லை என்பதை நான் அறிய விரும்புகிறேன் (நீர் அதைப் பெற்றுக்கொள்வீர்! சரி.) அது உண்மையானால், நாங்கள் ஆயத்தமாகி அங்குள்ள மற்றவர்களுடன் சேர்ந்துகொள்ள விரும்புகிறோம். உ-ஊ. மீதமுள்ளவர்கள்… இந்த கேள்விகளுக்கான உம்முடைய விடைகளுக்காக உமக்கு நன்றி, கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால், இந்த ஞாயிறன்று இந்த விடைகளைக் கேட்பதற்காக காத்திருப்பேன். 248 ஓ, என்னே! சரி, சகோதரனே, சகோதரியே, நான்—நான் அவ்விதம் கூறினதில்லை, கூறுவதுமில்லை என்பது…புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதென்று நம்புகிறேன். இப்பொழுது, ஜனங்கள்…ஓ, நிச்சியமாகவே, நீங்கள் அரிசோனாவுக்கு வந்து வாழ விரும்பினால்… இப்பொழுது, ஒருக்கால் இந்த முதலாம் ஆறு மாதத்தில், நான் அரிசோனாவில் தங்கியிருப்பேன். நான் இங்கு திரும்பி வர வேண்டும். நான்…அங்கு தங்க எனக்கு—எனக்கு விருப்பம்; பிள்ளைகளின் உடல் நலம் தேறியுள்ளது, மற்றெல்லாமே. நான்—நான் அங்கு சிறிது காலம் தங்க விரும்புகிறேன், அங்கு தங்குவதற்கு எனக்கு ஒரு நோக்கமுண்டு. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இது ஒலிநாடாவில் பதிவாகிறது, கர்த்தர் உரைக்கிறதாவது, இப்பொழுது நான் செய்துகொண்டிருப்பதைச் செய்வதற்கு எனக்கு ஒரு நோக்கம் உண்டு; எனக்கு நோக்கமுண்டு என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஆனால் அது என்னவென்று உங்களிடம் நான் கூறமாட்டேன். 249 வீடுகளை விற்க வேண்டாம் என்று நான் ஏன் கூறுகிறேன் என்றால்? நீங்கள் அங்கு வந்து ஏதோ ஒன்றை இழந்துவிட்டதாகக் காண்பீர்கள், நீங்கள் ஒன்றுமே முடியாத நிலைக்கு வந்துவிடுவீர்கள். அப்படிச் செய்யாதீர்கள். நான் சிறிது காலம் மட்டுமே அரிசோனாவில் தங்கியிருப்பேன். ஏன்? இப்பொழுது என்னால் அங்கிருந்து வெளியே வர இயலாது.

142250 அங்கு ஜனங்கள் தங்கி தர்மத்தில் வாழ நான் செய்துவிட்டால், என்ன நடக்கும்? ஆகையால், அதைதான் ஸ்தாபனங்களும் மற்றவைகளும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. “ஆஹா, அவருடைய நோக்கம் என்னவென்று நான் உங்களிடம் சொன்னேனே, மற்றுமொரு தீர்க்கதரிசிகளின் கூட்டம், அல்லது ஏதோ ஒன்று!” என்பார்கள். புரிகிறதா? அங்குதான் காரியமே உள்ளது, அதைத்தான் அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஜனங்களுக்கு, அவர்களுக்கு நான் உத்திரவாதி; நான் செய்யச் சொன்னதை அவர்கள் செய்யவில்லை என்றாலும், அவர்கள் சரியாக செய்துள்ளது… நீங்கள், “அவர்கள் எப்படியோ போகட்டும்; நீர் செய்ய வேண்டாம் என்று சொன்னதை அவர்கள்—அவர்கள் செய்துவிட்டனர்!” எனலாம். என் இருதயம் அதற்கு இடம் கொடுக்காது. நான் இன்னும் அவர்களை பின்தொடர விரும்புகிறேன். அவர்கள் என் பிள்ளைகள். அவர்களை நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்போது, அவர்களை ஒருவேளை நான் சிறிது கடிந்துகொள்ளக்கூடும், ஆனால் நான்—ஆனால் நான்—நான் நிச்சயம் அவர்களை பின் தொடரப்போகிறேன். நான் எப்படி அதை அங்கு செய்யப்போகிறேன்? 251 அவர்கள், “வார்த்தையைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம்” என்றனர். அவர்களை அங்கே அனுப்புவதற்கு எனக்கு ஒரு சபை கிடையாது. அவர்கள் அங்கு செல்லும் சபைகள் மற்ற இடங்களில் நீங்கள் விட்டுப் பிரிந்த சபைகளைப் போலவே இருக்கும், ஒருவேளை இன்னும் மோசமாக இருக்க வகையுண்டு. புரிகிறதா? அவர்கள் எப்படியும் அந்த சபைகளுக்கு செல்லமாட்டார்கள். அவர்களுக்குப் பிரசங்கிக்க எனக்கும் ஒரு சபையும் இல்லை. அதுவுமல்லாமல் என் பிள்ளைகளை நான் அரிசோனாவுக்கு வெளியே கொண்டு செல்ல தகப்பன் என்னும் முறையில் நான் கடமைபட்டிருக்கிறேன், அங்கே…

143252 நான் உங்களை ஒன்று கேட்கிறேன். சென்ற வருடம் இந்த சபையில் முப்பதுக்கும் அதிகமான செய்திகளை பிரசங்கித்தேன். இந்த ஐந்து ஆண்டுகளில், வெளியே இருந்தபோது, நான் அரிசோனாவுக்கு சென்றது முதற்கொண்டு, மற்ற நேரங்களில், நான் ஐந்து ஆண்டுகளில் பிரசங்கித்ததைக் காட்டிலும், ஒரு ஆண்டில் இங்கே இந்த சபையில் அதிகம் பிரசங்கித்திருக்கிறேன் (நிச்சயமாக!), இதுவே என் வீடு; இதுவே என் தலைமை அலுவலகம்; இங்குதான் எங்கள் அமைப்பு உள்ளது. இப்பொழுது, என்ன நடந்த போதிலும், அதை மனதில் கொள்ளுங்கள். இப்பொழுது, நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், ஒன்றை கிரகித்துக்கொள்வீர்கள். என்ன நடந்தபோதிலும், அதுதான் எங்கள் தலைமை அலுவலகம், இந்த இடம்தான்! அதை மனதில் கொண்டவர்களாய், என்றாகிலும் ஒரு நாள் இந்த ஒலிநாடாவைத் திரும்பவும் கேட்டு, நான் தீர்க்கதரிசனம் உரைத்ததை நீங்கள் கேட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சரி, அதை ஞாபகம் கொள்ளுங்கள்! 253 நீங்கள்…நீங்கள் விட்டுவிட்டு சபைக்கு வருவீர்களானால், அதை கண்டுபிடிக்க அங்கு செல்லாதீர்கள், ஏனெனில் அங்கு நான் இருக்கமாட்டேன். எனக்குப் போக இடமில்லை; எனக்குப் பிரசங்கம் செய்ய இடமில்லை. அவர்களுடைய சபைகளில் நான் பிரசங்கிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. எனக்கு எந்த ஒரு இடமுமில்லை, அந்த மனிதர்களிடம் நான் வாக்குக்கொடுத்தேன் அங்கு நான் வரும்போது… இங்கு வந்து நான் ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டி, அவர்களுடைய சபைகளை காலியாக்கிவிடுவேன் என்று அவர்கள் அனைவரும் பயந்தனர். ஆனால் அதுவல்ல என் வாழ்க்கையின் நோக்கம். புரிகிறதா? நான்—நான் ஜனங்கள் இரட்சிப்படைய உதவி செய்கிறேன். அது அவர்களைப் பொறுத்தது. அந்த சமாரியன் அந்த மனிதனை சத்திரத்துக்கு கொண்டு சென்றதுபோல், அதன் பிறகு அவர்கள் தங்களை கவனித்துக் கொள்ளட்டும். நான் சபைகளை உடைப்பதற்காக இங்கில்லை, கிறிஸ்துவுக்காக மனம் மாறினவர்களைப் பெறவே நான் இங்குள்ளேன்! புரிகிறதா? அவர்கள் தங்கள் சொந்த வழியில் வியாக்கியானம் செய்து…மற்றும்…நான் கூறுவதை கூறாதபோது. புரிகிறதா? அது ஜனங்களிடையே என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளும்படி செய்கிறது (புரிகிறதா?)

144254 அந்த தரிசனம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? எத்தனை பேருக்கு ஜூனியர் ஜாக்சனின் சொப்பனம் ஞாபகமுள்ளது? அவர்கள் அனைவரும் அதை அப்படியே பின்பற்றுகிறார்கள். அது என்னவாயிருந்தது? நான் அங்கு போயிருக்கும்போது, இங்கு தங்கியிருங்கள்! புரிகிறதா? அர்த்தத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வந்தேன். 255 இப்பொழுது, என் இருதயத்தில் ஏதோ ஒன்றுள்ளபடியால் அதைச் செய்ய நான் கர்த்தரால் எச்சரிக்கப்பட்டிருக்கிறேன், அது இந்த சபையைக் குறித்து, இந்த கூடாரத்தைக் குறித்து செய்யப்பட வேண்டிய ஒன்று; நான் அங்கு அல்லது வேறெங்காவது சிறிது காலத்துக்குச் செல்ல வேண்டும். அது ஒரு நோக்கத்துக்காக, ஒரு பெரிய நோக்கத்துக்காக, அந்த நோக்கத்தைக் குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், நான், “வீணாகப் பேசிக் கொண்டிருக்கவில்லை” என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், நான் அவ்விதம் நடந்துகொள்வதாக எண்ண வேண்டாம். நான் கர்த்தருடைய சித்தத்தின்படி செயல்படுகிறேன், எனக்குத் தெரிந்த வரைக்கும் நான் செயல்பட்டு வருகிறேன். புரிகிறதா? ஆகையால்தான் நான் கூறுவதை நீங்கள் விசுவாசிப்பீர்களானால், அப்பொழுது நான் செய்யச் சொல்வதை செய்யுங்கள் (புரிகிறதா?), நான் சொல்வதற்கு செவிகொடுத்து என்னை உங்கள் சகோதரனாக நம்புங்கள். நான் ஒரு தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், என் சொற்களுக்கு தவறான அர்த்தம் உரைக்காதீர்கள்! 256 ஏதாவதொன்று இருக்குமானால், எனக்கு உதவி செய்வாராக, நீங்கள் அறிய வேண்டியது ஏதாவதொன்றை தேவன் என்னிடம் கூறுவாரானால், அதை நான் அப்படியே உங்களுக்கு எடுத்துரைப்பேன் என்பதை தேவன் அறிவார். அதனுடன் எதையும் கூட்டாதீர்கள், அல்லது அதிலிருந்து எதையும் எடுத்துப்போடாதீர்கள்; நான் சொன்னவிதமாகவே அதை செய்யுங்கள் (புரிகிறதா?), ஏனெனில் என் இருதயத்திலுள்ளதை எனக்குத் தெரிந்த வரைக்கும் சிறப்பாக உங்களிடம் கூறுகிறேன். புரிகிறதா? அதை நீங்கள் விசுவாசியுங்கள். அதைக் குறித்து நான் என்ன கூறுகிறேனோ அதை அப்படியே—அப்படியே ஏற்றுக்கொண்டு. அதை அப்படியே போகவிட்டுவிடுங்கள். சரி. 257 எனவே இப்பொழுது, என் பிள்ளைகள் ஏதாவது உண்ண, அவர்களை நான் இங்கே கொண்டு வரவேண்டும். அவர்கள் அந்த வனாந்தரத்தில் பட்டினி கிடக்கின்றனர்.

145258 அன்றொரு நாள் ஒரு போதகர் என்னிடம் வந்து, “சகோதரன் பிரான்ஹாமே, இதுவரை கண்டிராத மிகவும் மோசமான கொள்கையை அவர்கள் உடையவர்களாயிருக்கின்றனர்” என்றார். “அவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலையிலும் வெளியே செல்கின்றனர்; அவர்கள் வேலைக்குப் போகமாட்டோம் என்கின்றனர், ஏனெனில் அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு மிகவும் அருகாமையில் உள்ளனராம்” என்றார். அவர்கள் வேலைக்கு செல்வதில்லை. பாருங்கள், நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவேயில்லை என்பதை அது காண்பிக்கிறது. புரிகிறதா? உண்மை. (இந்த ஒலிநாடா அங்கும் செல்கின்றது!) எனவே, ஆம், ஐயா! நீங்கள் எறும்பிடமிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று, வேதம் உரைக்கிறது என்று, உங்களுக்குத் தெரியும். அவர்கள் வேலை செய்யாவிட்டால், சாப்பிடக் கூடாது. எனவே அது—அது முற்றிலும் உண்மை. இங்கே—இங்கே, இவற்றில் ஒன்றை கையிலெடுத்தேன்.

146271. இது… (எனக்குத் தெரியவில்லை. பாருங்கள், இது வித்தியாசமாயுள்ளது—இது மற்ற கேள்விகளைக் காட்டிலும் வித்தியாசமான கையெழுத்தைக் கொண்டுள்ளது. உங்களுக்கு காண்பிக்க, இது போன்ற எட்டு அல்லது பத்து கேள்விகள் உள்ளன என்று நான் எண்ணுகிறேன். பார்த்தீர்களா?) மிகவும்—மிகவும் பரிபூரணமான சபை அரிசோனாவிலுள்ள, டூசானில் இருக்கப்போகின்றதா? நான் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறேன். நாங்கள் டூசானுக்கு வந்துவிடலாமா? 259 இது மற்ற—மற்ற கையெழுத்து அல்லவே அல்ல. அது…நான்…இங்கு சுற்றிலும் பாருங்கள்; இந்த ஒரு விஷயத்தின் பேரில் எத்தனை கேள்விகள் உள்ளதென்று உங்களுக்குக் காண்பிப்பேன். எனக்குத் தெரியவில்லை…என்னால்—என்னால் அவைகளை கண்டுபிடிக்க முடியவில்லையென்று, நான் நினைக்கிறேன். இங்கு—இங்கு…இவைகளில் சிலவற்றில், “உங்களுக்கு நான் தெரியப்படுத்துகிறேன்” என்று நான் எழுதி வைத்திருக்கிறேன்.

147272. சகோதரன் பிரான்ஹாமே, தயவுகூர்ந்து… (இதைப் பார்ப்போம்.) நாம் வாழும் இந்நேரத்துக்கான, மேலும், தீர்க்கதரிசி நீர் என்பதை அறிந்துள்ளோம் …மற்றும்—மற்றும்…நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நேரத்துக்கான தீர்க்கதரிசி (அதுதான் அது) , தேவனுடைய மக்கள் உம்முடன் அரிசோனாவுக்கு ஓடிப்போக வேண்டிய நேரம் ஒன்று வருமா? அப்படியானால், அந்த நேரம் வரும்போது எங்களுக்குத் தெரிவிப்பீரா? 260 நிச்சயமாகத் தெரிவிப்பேன். நான் உங்களுக்குத் தெரிவிப்பேன். நான் உங்களுக்குத் தெரிவிப்பேன். இப்பொழுது பாருங்கள், இங்கு இரண்டு வெவ்வேறு கையெழுத்துக்கள் உள்ளன, வித்தியாசமான இருவர். புரிகிறதா? இது ஒரு கையெழுத்து, இது வேறொரு கையெழுத்து. புரிகிறதா? இதுவே சபையின் மனதில் உள்ள, ஒன்றாக இருக்க வேண்டும். புரிகிறதா? பாருங்கள், இதை நாம் தீர்த்துவிடுவோம். என்னால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்ப்போம்…நாம் பார்ப்போம்.

148273. சகோதரன் பிரான்ஹாமே… (இது வேறொன்று, முற்றிலும் வித்தியாசப்பட்டது.) சகோதரன் பிரான்ஹாமே, மணவாட்டி மற்றும் மணவாளனின் வருங்கால இருப்பிடம் என்னும் உம்முடைய செய்தியில் அந்த இடம் (இல்லை, இது வித்தியாசமானது.), கூடாரத்திலிருந்து ஆயிரத்தைந்நூறு மைல்கள் இருக்குமென்றும், அது ஒவ்வொரு பக்கமும் எழுநூறு மைல் கொண்ட, சதுரமாயிருக்கும் என்றும், நீர் சொன்னதாக சிலர் புரிந்து கொண்டுள்ளனர் (வேறுவிதமாகக் கூறினால், நடுவில் உள்ள கூடாரம் ஒவ்வொரு பக்கமும் எழுநூறு மைல்கள் இருக்கும், ஆயிரத்தைநூறு மைல்கள். ஓ!), ஒவ்வொரு பக்கமும். அது உண்மையா? நான் இந்த இடத்துக்கு வெளியே வாழ்கிறேன்; அதற்குள்ளே நான் வந்துவிட வேண்டுமா? (ஓ!) 261 இல்லை, தேனே, அதை செய்யாதே. பார்! இப்பொழுது, ஜனங்கள் தவறாகப் புரிந்து கொள்வது எவ்வளவு எளிதாயுள்ளது? அந்த செய்தியை நான் பிரசங்கித்தபோது, எத்தனை பேர் இங்கிருந்தீர்கள்? நான் என்ன சொன்னேன் என்றால் நான் புதிய எருசலேமை அளந்து கொண்டிருந்தபோது, அது ஆயிரத்தைநூறு மைல் சதுரமாக இருக்கும் என்றேன். அது ஏறக்குறைய மேய்ன்னிலிருந்து பிளாரிடா வரைக்கும், மிசிபியின் மேற்கே அறநூறு மைல் பரப்பாயிருக்கும் என்றும், அந்த பரப்பு ஆயிரத்தைந்நூறு மைல் சதுரமாயிருக்கும் என்றேன். என் கருத்தின்படி, அது ஆபிரகாம் அந்த நகரத்தை தேடிக்கொண்டிருந்த அந்த இடத்தில் இருக்குமென்றும், அப்பொழுது சமுத்திரம் இனி இராதென்றும் சொன்னேன். சமுத்திரம் இனி காணப்படாது என்று வேதம் கூறியுள்ளது, பூமியின் முக்கால் பாகம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. சமுத்திரம் இனி இராது; எனவே, அது அப்படிப்பட்ட ஓரிடத்தில் இருக்கும் ஒரு மிகப் பெரிய நகரமாயிராது. அது அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறதும், அங்கே தேவன் பிறந்த சிறு இடமுமாகிய பெத்லகேமில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். அது அஙகே பாலஸ்தீனாவில் இருக்குமென்றும், அது அங்கு பூமியிலிருந்து எழும்பி அந்த மலையாயிருக்குமென்றும் நம்புகிறேன்.

149262 ஆனால், அருமை நண்பரே, அதற்கும் இந்த கூடாரத்துக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. புரிகிறதா? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, பவுல், பரிசுத்தவான்கள் அனைவரும் உலகம் முழுவதும் மரித்தனர், சுட்டெரிக்கப்பட்டனர், தண்ணீரில் முழுக்கி மரித்தனர், சிங்கங்களுக்கு இரையாயினர், எல்லாவிதத்திலும் மரித்தனர்; அவர்கள் உலகத்தின் ஒவ்வொரு மூலை, முட்டு, முனையிலிருந்தும் எழும்பி வருவார்கள். நான் அங்கிருப்பேன் என்று நம்புகிறேன். நான் எங்கிருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது எங்கிருந்தாலும், நான் அந்த கூட்டத்தில் இருப்பேனென்றால், அங்கு நான் இருப்பதற்கு எதுவும் என்னை தடை செய்ய முடியாது! புரிகிறதா? நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நான் இருக்க வேண்டிய ஒரே இடம் கிறிஸ்துவுக்குள், கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களை தேவன் அவரோடு கூட கொண்டு வருவார். அது எங்கிருந்தாலும் எனக்கு கவலையில்லை, அவர் கொண்டு வருவார்…என்னை இயேசுவுக்குள் அடக்கம் செய்யுங்கள்.

150263 முன்காலத்து தீர்க்கதரிசிகளை அங்கே பாருங்கள். அவர்கள் முதலாம் உயிர்த்தெழுதல், முதற்பலன்கள், பாலஸ்தீனாவில் இருக்கும் என்று நேரடியான அர்த்தத்தில் அறிந்திருந்தனர். ஆபிரகாம் ஒரு இடத்தை வாங்கி, அவன்…இல்லை…அங்கு சாராளை அடக்கம் செய்தான். அவன் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு அவனுடைய தகப்பனார் மற்றும் தாயாரின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டான். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு இஸரவேலில்…எகிப்தில் மரித்து, பாலஸ்தீனாவுக்கு கொண்டு வரப்பட்டான். அதன்பின்னர், யோசேப்பும் கூட அங்கு மரித்தான். அவர்கள் யோசேப்பினுடைய எலும்புகளை இங்கு கொண்டு வந்தனர், ஏனெனில் அவன், “செய்ய…” யோசேப்பு…யாக்கோபை, அங்கே எகிப்தில் அடக்கம் பண்ணக் கூடாதென்றும், அவனை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு திரும்பக் கொண்டு வரவேண்டும் என்றும் கூறினான். யோசேப்பு, “என்றாவது ஒரு நாள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை சந்திப்பார். என்னை…அப்பொழுது என் எலும்புகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு என் தகப்பனுடன் அடக்கம் பண்ணப்படட்டும்” என்றான். அவர்கள் அவ்விதமே செய்தனர், ஏனெனில், அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியால், உயிர்த்தெழுதலின் முதற்பலன்கள் பாலஸ்தீனாவில் இருக்கும் என்பதை அறிந்திருந்தனர்.

151264 இப்பொழுது, வேதம் கூறியுள்ளதோ…நீங்கள் என்னைத் தீர்க்கதரிசி என்று அழைப்பீர்களானால், நான் அவ்விதம் என்னைக் கூறிக்கொள்ளவில்லை; ஆனால் நீங்கள் என்னைத் அவ்வாறு அழைப்பீர்களானால், ஞாபகம் கொள்ளுங்கள், இதை உங்களுக்கு தீர்க்கதரிசியின் நாமத்தினால் உரைக்கிறேன் (புரிகிறதா?), உயிர்த்தெழுதலும் எடுத்துக்கொள்ளப்படுதலும் பொதுவாக உலகம் முழுவதிலும் நிகழும்! நீங்கள் எங்கே இருந்தபோதிலும் கவலைப்பட வேண்டியதில்லை, அந்த நேரம் வரும்போது, அவரைச் சந்திக்க நீங்கள் எடுத்துக் கொள்ளப்படுவீர்கள்! அவ்வளவுதான்! நீங்கள் எங்கிருந்தபோதிலும் கவலைப்பட வேண்டியதில்லை, உங்களை எதுவும் நிறுத்த முடியாது. அவர்களில் ஒருவனாக, நான் அங்கிருப்பேன் என்று மாத்திரமே நான் நம்புகிறேன். நான் அவர்களில் ஒருவனாக, அது போன்று—நீங்கள் ஒவ்வொருவரும் அங்கிருப்பீர்கள் என்று மாத்திரமே நம்புகிறேன் மற்றும் தேவனுக்குள் நம்புகிறேன். இப்பொழுது, நமக்கு இன்னும் ஒரு கேள்விக்கான நேரமுண்டா? அப்படியானால் ஏறக்குறைய (பார்த்தீர்களா?), மணி ஒன்று ஆகப்போகிறது.

152274. அன்புள்ள சகோதரரன் பிரான்ஹாமே: என் மனைவியும் நானும் பிரிந்துவிட்டோம். அவள் என் மேல் விவாகரத்து வழக்கு தொடுத்திருக்கிறாள். அவள் கிறிஸ்தவள் அல்ல, நான் செய்தியை விசுவாசிக்கிறேன் மற்றும் அவள் இரட்சிக்கப்பட்டு விசுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் (அது அருமையானது அல்லவா? அதுதான் உண்மையான கிறிஸ்தவனின் ஆவி. புரிகிறதா?) விசுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு இரண்டு பையன்கள் இருக்கின்றனர், (தங்களுடைய பெயரைக் கையொப்பமிட்டுள்ளார்.) 265 சகோதரனே, பாருங்கள், இதை உங்களிடம் கூறட்டும், அவள் உங்கள் மேல் விவாகரத்து வழக்கு தொடுக்கப்போகிறாள். அது சாத்தான். பார்த்தீர்களா? நீங்கள் அதை செய்யக் கூடாது. ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருந்து, அந்த ஸ்திரீக்கு இடறலாக நீங்கள் இவ்வுலகில் ஒன்றுமே செய்யவில்லையென்றால், அப்பொழுது அதைச் செய்வது சாத்தானே. உங்களைப் பிரித்துவிட மாத்திரமே அவன் முயற்சி செய்கிறான். 266 இப்பொழுது, அவள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் ஒருத்தியாக இருந்தால், அவள் அவரிடம் வருவாள். அவள் அவ்வாறு இல்லையென்றால், அவளைக் குறித்து கவலைப்படுவதனால் பிரயோஜனமில்லை. ஆகையால் அப்படி செய்தால்…நீங்கள் கவலைப்பட்டால் அது உங்கள் உடல் நலத்தைப் பாதிக்கும், அதைதான் சாத்தான் செய்ய விரும்புகிறான். அவன் உங்களுக்கு, எதிராக கிரியை செய்கிறான் என்று, நான் அறிகிறேன். எனவே நீங்கள் எல்லாவற்றையும் தேவனிடத்தில் ஒப்புவித்து உங்களால் முடிந்த வரைக்கும் சந்தோஷமாக தேவனுக்கு சேவை செய்து கொண்டிருங்கள். மற்ற எல்லாவற்றையும் தேவன் பார்த்துக்கொள்வார். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.” முழங்கால்படியிடுங்கள்; நான் உங்களுடன் ஜெபிப்பேன் அல்லது எதையும் செய்வேன். இந்த காரியத்துக்காக நானும் ஜெபிப்பேன். நீங்கள், “தேவனாகிய கர்த்தாவே, அவளை நான் நேசிக்கிறேன்; அவள் என் பிள்ளைகளுக்குத் தாய்” என்று கூறி, (அவள் அவ்வாறு இருப்பாளானால்) “கர்த்தாவே, முழு காரியத்தையும் நான்—நான்—நான் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் செய்கிறதை நீர் அறிவீர்; ஆனால் இதற்கு மேல் என்னால் செல்ல முடியவில்லை. அவள் எப்படியும் என்னை விவாகரத்து செய்துவிடப்போகிறாள். நான் ஒன்றுமே செய்திருக்கவில்லை; நான் எதையாகிலும் செய்திருந்தால், அதை எனக்கு வெளிப்படுத்தும்; நான் சென்று அதை சரி செய்து கொள்கிறேன். நான் எதையும் செய்வேன்” என்று கூறுங்கள். அதை கர்த்தரிடம் ஒப்புவித்து அதை மட்டும் விட்டுவிடுங்கள், அதை அப்படியே விட்டுவிடுங்கள். ஒன்றுமே நடக்காதது போல்—போல் நீங்கள் தொடர்ந்து வாழுங்கள். தேவன் மற்றவைகளைப் பார்த்துக்கொள்வார்.

153275. இப்பொழுது: சகோதரன் பிரான்ஹாமே, ஜனங்கள் அரிசோனாவில் குடியேற வேண்டுமாமே (ஓ; மறுபடியும்!), இதெல்லாம் என்ன? இதை விளக்குங்கள். இது வேறுவிதமான கையெழுத்து. பாருங்கள், பார்த்தீர்களா? சரி, நாம் ஏற்கனவே அது என்னவென்று (புரிகிறதா?), விளக்கிவிட்டோம்.

154276. சகோதரன் பிரான்ஹாமே, ஆதி அப்போஸ்தல சபையைப் போல, மணவாட்டி உபத்திரவத்தின் வழியாக கடந்து செல்வாளா? 267 இல்லை, சில நிமிடங்களுக்கு முன்பு அதை விளக்கினேன். இல்லை, அடுத்தபடியாக இப்பொழுது ஒரு எடுத்துக்கொள்ளப்படுதல். ஞாபகம் கொள்ளுங்கள், நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இருக்கிறோம்; நாம் எல்லையில் இருக்கிறோம். இஸ்ரவேலின் அணிவகுப்பு உங்களுக்குப் புரிகிறதா?

155277. எந்தவிதமான குடும்பக் கட்டுப்பாட்டு முறையையும் கையாளுவது நியாயமா? 268 இதை நான் பிற்பகல் வரை விட்டு வைப்பது நல்லது (புரிகிறதா?), ஏனெனில் அது…அதன் பேரில் சிறிது பேச நான் விரும்புகிறேன்—நான் விரும்புகிறேன்.

156278. சகோதரன் பிரான்ஹாமே, நான்… (என்னால் கூடுமானால் இன்னும் 3 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்வேன். இங்கே சிறியது ஏதாவதொன்றை நான் எடுத்துக்கொள்கிறேன்.) என்னை இயேசுவுக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுக்க முடியவில்லை. எனக்குப் பொல்லாத ஆவி உள்ளதா? 269 அங்கே மீதியான நேரத்தை நான் இதன் பேரில் செலவிடட்டும். உங்களை இயேசுவுக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுக்க முடியவில்லையா? அவர்கள்…பாருங்கள், அது ஆணா, பெண்ணா என்று எனக்குத் தெரியவில்லை; அது யாரென்று என்னால் சொல்ல முடியவில்லை. தேவன் அதை அறிவார். 270 உங்களை இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்க முடியவில்லை. ஏன்? காரியம் என்ன? நீ ஒரு ஸ்திரீயானால், ஒரு மனைவியாயிருக்க உன்னை உன்னை கணவருக்கு, உன்னை முழுவதும் சமர்ப்பிக்க வேண்டுமல்லவா? உனக்கு விவாகமானபோது நீ நற்பண்பு கொண்ட இளம்பெண்ணாய் இருந்தாய், நீ நற்பண்பு கொண்டவளாயிருந்து, அவ்விதம் நிலைத்திருக்க உன் வாழ்க்கையில் போராடி வந்தாய். ஆனால் ஒரு நாள் நீ நேசிக்கும் ஒரு மனிதனைக் கண்டுபிடித்தாய். நீ முழுவதும் அவருடையவளாகி விட்டாய். நீ உன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் எதிராக போராடி, நற்பண்பு கொண்டவளாய், சுத்தமாக, நல்லொழுக்கமாக வாழ முயன்றாயே; இப்பொழுது, நீ அது அனைத்தையும் ஒரு மனிதனிடம் சமர்ப்பித்துவிடுகிறாய். அது சரியா? உன்னை முழுவதுமாக அவருடைய கரங்களில் ஒப்படைத்துவிட்டாய்; நீ அவருடையவளாகிவிடுகிறாய். நீ நாணயத்திலும், ஒழுக்கத்திலும், அது போன்ற ஒவ்வொரு காரியத்திலும் உறுதியாக நின்றிருந்த இவ்வனைத்தையும், இப்பொழுது ஒரு மனிதனிடம் கொடுத்துவிடுகிறாய், ஏனென்றால் அந்த மனிதரிடம் உன்னை ஒப்புக்கொடுக்கிறாய். அதையே நீ இயேசு கிறிஸ்துவுக்கு செய்யக்கூடாதா என்ன? அந்தவிதமாக உன்னை சமர்ப்பித்து விடு, “எனக்குள்ள எல்லாவற்றையும், என் எல்லா சிந்தையையும், என் எல்லா எண்ணங்களையுமே.” நிச்சயமாக. 271 நீ பொல்லாத ஆவியால் பீடிக்கப்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை; அந்த விதமான எண்ணங்களினால் அந்த பொல்லாத ஆவி உன்னை அபிஷேகித்து, நீ தேவனுக்கு உன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுக்க முடியாது என்று நினைக்கும்படி செய்கிறது என்றே நான் நினைக்கிறேன். அப்பொழுது…உனக்கு ஒன்றை நான் காண்பிக்கட்டும். நீ ஏன் உன்னை அவருக்கு ஒப்புக் கொடுக்க விரும்புகிறாய் ? ஏனெனில் நீ ஒப்புக்கொடுக்க வேண்டும்மென்று ஏதோ ஒன்று உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறது. நீ உன்னையே ஒப்புக்கொடுக்க வேண்டுமென்பதற்கு அது ஒரு மிக நல்ல அடையாளம்.

157272 இப்பொழுது, நீ செய்ய வேண்டியதெல்லாம், சகோதரனே அல்லது சகோதரியே (ஒருக்கால் ஒரு வாலிப நபராக அல்லது வயோதிபமாக, எதுவாகவோ இருக்கலாம்), நீ கூறியிருக்கிறாய்… அவர்கள் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியவில்லை என்பதை கண்டறிய முடியவில்லை. அப்படியே உங்களை ஒப்புக்கொடுத்துவிடுங்கள். “கர்த்தாவே, என் சிந்தனையையும், எனக்குள்ள எல்லாவற்றையும், நான்—நான் உமக்குக் கொடுக்க விரும்புகிறேன். என் ஜீவியத்தை, சேவிக்கும் ஒரு ஜீவியமாக் கொடுக்கிறேன். கர்த்தாவே, என்னை எடுத்து, நான் உள்ளவாறே என்னை உபயோகிப்பீராக.” அது அப்படிப்பட்ட ஒரு எளிதான காரியம்; நான் விரும்புவதோ சபை உண்மையாகவே…முடிந்தால் இப்பொழுது இந்த கூடாரத்திலுள்ளவர்கள் இந்தக் கேள்விகளினால் பயனடைகிறீர்கள் என்று நான் நம்புகிறேன்… இவைகள் உங்களுக்குப் பிடிக்கிறதா? சரி. அது ஒரு சிறு உதவியாயிருக்கும். 273 இப்பொழுது பாருங்கள், சபையோர் இந்த காரியங்களைக் கேட்டால் (உங்களுக்குப் புரிகிறதா?), அவர்கள் இதை , அல்லது அதை மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வேண்டுமா: என்று இந்தக் காரியங்களைக் கேட்டால் நலமாயிருக்கும். என்னால் முடிந்த வரைக்கும் அவைகளுக்கு பதிலளிக்க நான் முயற்சிப்பேன். உங்களுக்கு நான் தவறான ஆலோசனை அளித்திருந்தால், அவ்விதம் செய்ய வேண்டுமென்று என் இருதயத்தில் நான் எண்ணவில்லை. என் சொந்த கருத்துக்களையும் மற்ற காரியங்களையும் நிலை நிறுத்துவதற்காக நான் ஏதேனும் தவறாக கூறினால், இல்லை…அதை செய்வது அல்லது உங்களுக்கு அதை சொல்வது தவறு என்று அறிந்திருந்தும்—அறிந்திருந்தும் அதைக் கூறினால், நான் மிகவும் ஒரு இழிவான மாய்மாலக்காரனாயிருப்பேன். அது உண்மை. ஆனால் என் இதயத்திலிருந்து, நான் தவறாயிருந்தால், தேவன் அறிவார் (புரிகிறதா?) எனக்குள்ள எல்லாவற்றைக் கொண்டும் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் அவ்விதம் செய்துள்ளேன்.

158274 இந்த ஒலிநாடா செல்லவிருக்கும் தேசத்திலுள்ள ஊழியர்களே, உங்களைப் புண்படுத்துவதற்காக இவைகளை நான் கூறவில்லை. உங்களை நான் நேசிப்பதால் நான் இதைக் கூறினேன். புரிகிறதா? நான் உண்மையாகவே, என் முழு இருதயத்தோடு…அது… இப்பொழுது, உங்களுக்குத் தெரியாத ஒன்று எனக்குத்—எனக்குத் தெரியும் என்று—என்று காண்பிக்க நான் முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை. என் சகோதரனே, அதுவல்ல இது. உங்களை நான் நேசிக்கிறேன் என்பதனால் மாத்திரமே தான் இதை செய்துகொண்டிருக்கிறேன், நான்—நான்—நீங்களும் என்னை நேசிக்கிறீர்கள் என்று, நான் நம்புகிறேன். 275 நான் ஒரு பழைய படகில் ஆற்றில் சென்றுகொண்டிருப்பதை நீங்கள் கண்டால், இங்கே இந்த ஆற்றில், இப்பொழுது நாம் இங்கே இருக்கிறதற்கு அருகில், இங்கே கூடாரத்தண்டை, ஒஹையோ நதியில் கண்டால் எப்படி இருக்கும்; அதில் வெள்ளப்பெருக்கு உள்ளதென்றும்; எனக்கு கீழே நீர்வீழ்ச்சி உள்ளதென்றும் வைத்துக்கொள்வோம். இந்தப் படகு அந்த நீர்வீழ்ச்சியில் செல்ல முடியாதென்று உங்களுக்குத் தெரியும்; அதனால் செல்லவே முடியாது. நான் அங்கே தலையை பின்னால் சாய்த்துக்கொண்டு, பாடிக்கொண்டு, இளைப்பாறிக்கொண்டு, கீழே சென்றுகொண்டு, அதில் மிதந்துகொண்டு, நிதானமாக, அந்த ஆற்றை அடைந்துகொண்டிருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம்; அங்கே அந்த இடத்தை அடைந்தவுடனே, படகு சேதமடைந்துவிடுமென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் என்னை நேசிப்பீர்களானால், நீங்கள் கூச்சலிடுவீர்கள், அல்லது ஒரு படகில் குதித்து, வேகமாக அங்கே வந்து, என் தலையை ஏதாவதொன்றைக் கொண்டு தட்டி, அதிலிருந்து என்னைக் காப்பாற்றுவீர்கள். “சகோதரன் பிரான்ஹாமே, உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா! நீர்வீழ்ச்சி அங்கு உள்ளதே!” என்பீர்கள். 276 அப்பொழுது நான், “ஓ, வாயை மூடுங்கள்! என்னை விட்டுவிடுங்கள்!” என்று கூறிவிட்டால் என்னவாகும். நீங்கள் என்னை அப்பொழுதும் எப்படியும் நேசிக்கிறீர்கள். என்னைக் காப்பாற்ற உலகிலுள்ள எதையும் நீங்கள் செய்வீர்கள்; என்னை நீங்கள் பிடித்துக்கொள்வீர்கள்; நீங்கள்—நீங்கள் படகை உடைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதையும் செய்து, என்னை அதிலிருந்து வெளியே தூக்கிக் காப்பாற்றுவீர்கள், ஏனெனில் நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்; என்ன நடக்கப்போகிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

159277 சகோதரனே, அந்த ஸ்தாபனத்துக்கு அதுதான் நடக்கப் போகிறதென்பதை நான் அறிந்திருக்கிறேன். அவள் அந்த பேரலையிலிருந்து தப்ப முடியாது. புரிகிறதா? நீங்கள் நேராக உலக சபைகளின் ஆலோசனை சங்கத்துக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்; இப்பொழுது, நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இப்பொழுது நாங்கள் உள்ளதுபோல அதைவிட்டு வெளி வர வேண்டும். எனவே, அதுவே சரியாக உள்ளது, நீங்கள் உங்களுடைய விருப்பத்தை தெரிந்துகொள்ள வேண்டும். நான்—நான் பொருட்படுத்தி கூறவில்லை…நான் படகை உடைக்க விரும்புகிறேன், சரி; நான் என்னால் முடிந்த எதையும் செய்ய விரும்புவேன், உங்களைப் புண்படுத்த அல்ல, சகோதரனே, நீங்கள் செய்வது தவறென்று உங்களைத் தட்டியெழுப்பி உணர்த்தவே. அதை செய்யாதீர்கள்! 278 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்து, உலகிலுள்ள எந்த மனிதனும் வேதவாயிலாக அது தவறென்று குற்றப்படுத்த முடியாது. எந்த மனிதனுமே அதை குற்றப்படுத்த முடியாது. அதற்கு எதிராக ஒரு வேதவசனமும் இல்லை…ஜனங்களே நீங்கள், நீங்கள் சகோதரரே, நினைவிருக்கட்டும், சற்று நினைவில் கொள்ளுங்கள், வேதத்தை ஆராய்ந்து பாருங்கள்; புதிய ஏற்பாட்டில் எவராவது எப்போதாவது அப்படி எங்காவது ஞானஸ்தானம் பெற்றதாக ஒரு இடத்தை கண்டுபிடியுங்கள் (பழைய ஏற்பாட்டில் அவர்கள் ஞானஸ்தானம் பண்ணப்படவில்லை, ஆனால் புதிய ஏற்பாட்டில்), கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தவிர வேறு எந்த விதத்திலாவது எப்போதாவது எவராவது ஞானஸ்தானம் பண்ணப்பட்டார்கள் என்று கண்டறியுங்கள்; அதன் பின்னர் அதை என்னிடத்தில் வந்து காண்பியுங்கள். இல்லையெனில் போய் வரலாற்று நூலைத் தேடிப் பார்த்து கடைசி அப்போஸ்தலனுடைய மரணத்துக்குப் பிறகு நூறு ஆண்டுகள் வரைக்கும் அவர்கள் எந்தவிதமான ஞானஸ்நானம் கொடுத்து வந்தனர் என்பதைக் கண்டறியுங்கள்… கத்தோலிக்க சபைதான் அந்த ஞானஸ்நானத்தை தொடங்கினது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில், அவர்களுடைய பிரமாண புத்தகம் அவ்விதம் செய்யக் கூறுகிறது.

160279 இங்கு புனித இருதய ஆலயத்திலுள்ள, ஒரு குருவானவர் என்னைப் பேட்டி கண்டபோது, அவர் அதைதான் கூறினார். கத்தோலிக்க சபை வழக்கமாக அந்தவிதமாகத்தான் ஞானஸ்நானம் கொடுத்து வந்தது என்றார், இந்த ப்ரேஸியர் பெண்ணுக்கு எந்த விதத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று பேராயர் அறிய விரும்புவதாக அவர் கேட்டபோதே. அவர், “இந்த வாக்குமூலத்தின் பேரில் சத்தியம் பண்ணுவீர்களா?” என்று கேட்டார். அதற்கு நான், “நான் சத்தியம் பண்ணுவதில்லை” என்றேன். அவர், “பேராயர் நீங்கள் சத்தியம் பண்ணவேண்டும் என்கிறார்!” என்றார். 280 நான், “பேராயர் என் வார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அதை நம்ப வேண்டாம், அவர் விரும்புகிற ஒன்றை செய்யட்டும்” என்றேன். புரிகிறதா? நான், “சத்தியம் பண்ணக்கூடாது என்று வேதம் உரைக்கிறது” என்றேன். மேலும் அவர், “பாருங்கள், உ…” என்றார். அவர், “அந்த…” என்றார். 281 நான், “அவளுக்கு நான் கிறிஸ்தவ தண்ணீர் ஞானஸ்நானத்தைக் கொடுத்தேன், அவளை நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்பிரிங் தெருவின் கீழே தண்ணீரில் முழுக்கினேன்” என்றேன். குருவானவர் அதை எழுதிக் கொண்டு, அவர், “அந்த விதமாகத்தான் கத்தோலிக்க சபை முன்பு ஞானஸ்நானம் கொடுத்தது” என்றார். நான், “எப்பொழுது?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அப்போஸ்தலர்களின் நாட்களில்” என்றார். நான், “அவர்களை கத்தோலிக்கர் என்றா அழைக்கிறீர்?” என்றேன். அவர், “நிச்சயமாக, அவர்கள் கத்தோலிக்கரே” என்றார். 282 நான், “அப்படியானால் உம்மைவிட நான் மேலான கத்தோலிக்கன். அவர்களுடைய உபதேசத்தை நான் பின்பற்றுகிறேன்” என்றேன். அது உண்மை. பாருங்கள், புரிகிறதா? அவர்கள் அவ்விதம் உரிமை கோருகின்றனர், ஆனால் அது அப்படியல்ல. 283 கத்தோலிக்க சபை ரோமாபுரியிலுள்ள, நிசாயாவில் கான்ஸ்டன்டைன் அரசனின் கீழ், ஸ்தாபிக்கப்பட்டது, அப்பொழுது சபையும் நாடும் ஒன்றாக இணைந்தன, மற்றும்—மற்றும் நாடு சபைக்கு சொத்துக்களையும், மற்றவைகளையும் கொடுத்தது; அவர்கள் உண்மையில் ஆயிரம் வருட அரசாட்சியின் காலத்தில் இருப்பதாக எண்ணினர். அவர்கள் ஆயிரம் வருட அரசாட்சியை எட்டிவிட்டதாக எண்ணினர். அது சாத்தானின் ஆயிர வருட அரசாட்சியாயிருந்தது. அது முற்றிலும் உண்மை. நீங்கள் அதை நம்பாதீர்கள். ஆம், ஐயா!

161284 இப்பொழுது, ஆனால்…அவர்களிடையே சமரசம் ஏற்பட்டபோது, அல்லது…ஒரு—ஒரு விக்கிரகத்தை வைத்துக்கொள்வதற்கு பதிலாக, அவர்கள் வீனஸ் சிலையை எடுத்துப்போட்டு—எடுத்துப்போட்டு, மரியாளின் சிலையையும், ஜூபிடர் சிலையை எடுத்துப்போட்டு, பவுல் அல்லது பேதுருவின் சிலையையும் வைத்துக்கொண்டனர். அங்கே ரோமாபுரியிலுள்ள, அந்த வாடிகனில் அங்கே, வாடிகன் நகரத்தில், இப்பொழுது பத்தொன்பது அடி உயரமுள்ள ஒரு பேதுருவின் சிலை உள்ளது, அவர்கள் அதை முத்தமிட்டு, மூன்று கால்விரல்களை அந்த சிலையிலிருந்து எடுத்துவிட்டதாகக் கூறுகின்றனர். பார்த்தீர்களா? ஒவ்வொரு காரியமும் ஒரு… 285 கீழே…ஒரு நாள் காலை அங்கே, நானும் பில்லியும் அங்குள்ள ஒரு ஆலயத்துக்குச் சென்றோம், அவர்கள் சாமியார்களை புதைத்து அவர்களுடைய சரீரங்கள் மண்ணில் அழுகும்படி விட்டுவிட்டுள்ள அங்குள்ள அடித்தளத்துக்குச் நாங்கள் சென்றோம், அங்கே, அதன்பின்னர் அவர்கள் அந்த எலும்புகளை எடுத்து விளக்கு அமைப்புகளை உண்டாக்குகின்றனர், அந்த கையெலும்பு இப்படி தொங்கிக் கொண்டிருக்கிறது, மண்டை ஓடுகளும் கூட; ஜனங்கள் அங்கு வந்து, மரித்தோரின் மண்டை ஓடுகளின் மூலம் ஆசிர்வாதம் பெற எண்ணி, அவைகளைத் தேய்த்து வெண்மையாக்கியுள்ளனர். அது ஒரு வகையில் மரித்தோரின் ஆவியுடன் தொடர்பு கொள்ளுதல். பார்த்தீர்களா?

162286 அது அங்குதான், ரோமாபுரியில், தொடங்கினது, அங்குதான் மிருகத்தின் சிங்காசனம் உள்ளது, அதிலிருந்துதான் தாய் வேசி தோன்றினாள். அவளுடைய குமாரத்திகளும் அவளைப் போலவே வேசிகளே, ஏனெனில் அவள் உலகம் முழுவதற்கும் உக்கிர கோபமாகிய மதுவை, அவளுடைய சாட்சியைக் குடிக்கக் கொடுக்கிறாள், அது பூமியின் கசப்புடன் கலந்துள்ளது. அவளுக்கு ஒரு சாட்சி உள்ளது. அவள், “நான் ஒரு கன்னிகையாக, இல்லை, நான்—நான் ஒரு விதவையாக உட்கார்ந்திருக்கிறேன், (நான் பொருட்படுத்துவது) எனக்கு ஒரு குறைவுமில்லை” என்கிறாள்; அவள் பரிதபிக்கப்படத்தக்கவளும், நிர்ப்பாக்கியமுள்ளவளும், குருடாயும், தரித்திரமாயும் இருப்பதை, அறியாமல் இருக்கிறாள். அதுதான். அது கத்தோலிக்க சபைக்கு மட்டுமின்றி ஒவ்வொரு பிராடெஸ்டெண்டு ஸ்தாபனத்துக்கும் பொருந்தும்! ஆனால் இந்த குழப்பம் அனைத்தின் மத்தியிலும், தேவனாகிய கர்த்தரை தங்கள் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், சிந்தையோடும் அன்புகூரும் விலையேறப்பெற்ற ஜனங்கள் உள்ளனர். அவர்கள் சரியென்று நினைக்கின்றனர். அவர்கள் செய்வது சரியென்று நினைக்கின்றனர். தேவனே உன்னத நியாயாதிபதியாயிருப்பார்.

163287 என்னைப் பொறுத்தவரையில், கத்தோலிக்க சபை கூறுவதுபோல், தேவன் உலகத்தை சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரானால், என்னை பேட்டி கண்ட மனிதனிடம் நான் கேட்டேன்: அவர், “தேவன் உலகத்தை சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பார்” என்றார். நான், “எந்த சபையைக் கொண்டு?” என்று கேட்டேன். அவர், “கத்தோலிக்க சபையைக் கொண்டு” என்றார். 288 நான், “எந்த கத்தோலிக்க சபையைக் கொண்டு? அவர்கள் ஒருவரோடொருவர் வேறுபாடு கொண்டுள்ளனரே” என்றேன். எந்த சபையைக் கொண்டு? கிரேக்க வைதீக சபையைக் கொண்டா அல்லது ரோம சபையைக் கொண்டா? அல்லது எந்த சபையைக் கொண்டு அவர் நியாயந்தீர்க்கப்போகிறார்? அவர் பிராடெஸ்டெண்டு சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரானால், அது எந்த ஒன்று? மெத்தோடிஸ்டா, பாப்டிஸ்டா, லுத்தரனா, பெந்தெகொஸ்தேயினரா; அவர் இதை யாரை கொண்டு நியாயந்தீர்க்கப்போகிறார்? அவர் உலகத்தை இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நியாயந்தீர்ப்பார் என்று வேதம் உரைக்கிறது, இயேசு கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். எனவே என்னைப் பொறுத்த வரையில், அவர் உலகத்தை தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்ப்பார். அது உண்மை. அவருடைய நியாயத்தீர்ப்புகள் இப்பொழுது பூமியில் உள்ளதென்று நான் விசுவாசிக்கிறேன், நான் விசுவாசிக்கிறேன்… இந்த அவிசுவாசம் கொண்ட உலகத்தின் மேல் ஊற்றப்படவிருக்கும் தேவனுடைய கோபாக்கினையினின்று தப்பித்துக்கொள்ள நம்முடைய முழு இருதயத்தோடும் அவரைத் தேடுவோமாக; அதிலிருந்து தப்ப ஒரு வழியும் இல்லை.

164289 இவ்வுலகத்துக்கு இரட்சிப்பு இனி ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும் வரவே வராது. அவர்கள் கிருபைக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையே உள்ள கோட்டை தாண்டிவிட்டனர். அது… நீங்கள் அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒரு ஆபிரகாம்லிங்கனை வைக்கலாம், இருப்பினும் இந்த “ரிக்கிகளையும்” மற்றும் “எல்விஸ்களையும்” தேவனிடம் திருப்ப முடியாது. 290 நீங்கள் செய்தித்தாளில் பார்த்தால் (அது என்னிடம் உள்ளது. நீங்கள் இன்றிரவு அதைக் காண விரும்பினால், அதை உங்களுக்கு பிற்பகல் கொண்டு வருகிறேன்), ஒரு பிரஸ்பிடேரியன் சபையில் (நீங்கள் அதை செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள்) ஒரு பிரஸ்பிடேரியன் சபையில் ஆராதனைகளுக்கும் இல்லை ராக் அண்டு ரோல் இசையோடு அவர்கள் இராப்போஜனத்துக்கு செல்கின்றனராம். போதகர் அங்கு நின்றுகொண்டு இசைக்கேற்ப இப்படி கைகொட்டுகிறாராம்; அவர்கள் சிலுவையில் அறைதல் போன்றவைகளை ஒரு பிரஸ்பிடேரியன் சபையில் “அதை ஒரு கேலித்தனமான நடனமாக ஆட” ஒரு ராக் அண்டு ரோலாக செய்து காட்டுகின்றனராம். 291 இந்த கீழ்த்தரமான, கூச்சலிடுகின்ற, அசுத்தமான பீட்டல்ஸ் என்று அழைக்கப்படுகின்ற, பாடல் குழுவினர், அவர்கள் மனிதரைவிட கீழ்த்தரமாகி வண்டுகள் ஆக வேண்டும் போன்றாகிவிட்டனர்… ஒரு வாரத்துக்கு முன்பு அவர்கள் செயின்ட் லூயிஸில் ஒரு லட்சம் டாலர்கள் ஒப்பந்தத்தை வேண்டாமென்று தள்ளிவிட்டனர்; அத்துடன் அவர்கள் நிறுத்திவிடவில்லை. அவர்கள் இங்கு வந்திருக்கின்றனர், ஒரு அற்பமான கூட்டம், ஆங்கிலேய துரோகிகள் தங்கள் தலை மயிரை வளர்த்து கண்களின்மேல் விட்டுக் கொண்டுள்ளனர். இப்பொழுது அவர்களுக்கு சொந்தமான மார்க்கம் ஒன்றை தொடங்கவிருக்கின்றனர். அதை நீங்கள் லுக் என்ற பத்திரிக்கையில் கண்டிருப்பீர்கள். பார்த்தீர்களா?

165292 ஓ, இவ்வுலகம் எவ்வளவாய் கறைபட்டுள்ளது. அதற்கு எந்த நம்பிக்கையும் கிடையவே கிடையாது; அவர்கள் விவேகத்தையும் பொதுவான அறிவையும் இடையே—இடையே பிரிக்கும் கோட்டை கடந்துவிட்டனர், இடையே இரட்சிக்-… 293 மனிதனால் நிதானித்துப் பார்க்க முடியவில்லை. நமக்கு முன்பிருந்த மனிதர்களைப் போல இப்பொழுது நமக்கில்லை. பாட்ரிக் ஹென்றி எங்கே? ஆபிரகாம் லிங்கன், தங்கள் உறுதிப்பாட்டில் திடமாயிருந்த மனிதர் எங்கே?. 294 இங்கே இந்த பைத்தியக்கார பெண்களை எழுந்து அடக்கக்கூடிய அந்த மனிதன் எங்கே, இந்த மனிதருக்கு முன்பாக…தங்களுடைய உடைகளைக் களைந்து: மேலும் அப்பொழுது அங்கு ஒரு கூட்ட நிர்வாணிகளை அங்கே வெளியே ஓட வைத்து, ஏதாவதொரு பையன் அவர்களில் ஒருத்தியை அவமதித்தால் அவனை சிறைச்சாலையில் போடுவதெங்கே? உங்கள் விவேகம் எங்கே? சாதாரண அறிவு என்றால் என்ன? அவள் அவ்விதம் நிர்வாணமாயிருந்தால், அவளை ஒரு நாய்போல் போகவிட்டுவிடுகிறீர்கள். ஆம், ஐயா! அவளுக்கு சாதாரண ஒழுக்கம் கூட…இல்லையே…அதை நிறுத்த நாட்டின் சட்டங்கள் எங்கே?

166295 இங்கே கென்டக்கியிலுள்ள லூயிவில்லில், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஸ்திரீ…தன் பெயர் செய்தித்தாளில் வரவேண்டுமெனும்…நோக்கத்துடன், ஒரு சிறிய துண்டு ப்ளாஸ்டிக் குளியல் ஆடையை உடுத்துக்கொண்டு, ப்ரவுன் உணவகத்திலிருந்து வெளியே நடந்து வந்தாள்; ஒரு காவற்காரன் அவளை நிறுத்த முயன்றான், அவளோ நிற்காமல்; அவனைப் பார்த்து சிரித்தாள். அவளை நிறுத்த அவன் ஒரு துப்பாக்கியை அவளை நோக்கி நீட்டினான்; அவளைக் காருக்குள் அவன் தள்ளி, ஒழுக்கங்கெட்ட விதத்தில் உடுத்தியிருந்ததற்காக, அவளை காவல் நிலையத்தில் சந்திக்கும்படி செய்தான், அவள் போய் சந்தித்து…அவர்கள் அதைக் குறித்து என்ன செய்தார்கள் தெரியுமா? போலீஸ்காரனை வேலையைவிட்டு நீக்கினார்கள். 296 அழுகிப்போன இந்த தேசத்துக்கு தேவன் உதவி புரிவாராக! நீங்கள் தவறு செய்யாமல் தண்டிக்கப்பட முடியாது. நாம் ஒருக்கால் தண்டனையடையாமல் இருக்கக் கூடும், ஆனால் நம்மால் மேலே ஏறிச் செல்ல முடியும்; அங்குதான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.

167297 கர்த்தராகிய இயேசுவே, அந்த மகத்தான மேய்ப்பர் வந்து இதிலிருந்து எங்களைக் கொண்டு செல்லட்டும், கர்த்தாவே. நாங்கள் அவருக்காக காத்திருக்கிறோம். அந்த நேரத்துக்காக நாங்கள் விழித்திருக்கிறோம். உலகம் இவ்வளவு இழிவான நிலையில் உள்ளதை நாங்கள் காணும்போது, அது இவ்விதம் இருக்கும் என்று நீர் உரைத்தீர். இந்த நேரங்கள் இங்கு உண்டாகும் என்று உம்முடைய மகத்தான தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளனர். நாங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறோம், கர்த்தாவே; நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். 298 இப்பொழுது, தேவனே, இந்த வார்த்தையை எங்களுக்கு வியாக்கியானம் செய்ய, தீர்க்கதரிசிகளை எங்களுக்குத் தரவேண்டுமென்று, நாங்கள் ஜெபிக்கிறோம், அப்பொழுது நாங்கள் அது சரியா தவறாவென்று அறிந்துகொள்வோம். கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புவதை நாங்கள் காண்கிறோம்; அவர்கள் வனாந்தரங்களில், சால்ட் லேக் நகரத்தில், தேசத்தின் எல்லா பாகங்களிலும், எல்லாவிதமான வனாந்தரங்களிலும், எல்லாவிதமான இரகசிய அறை வீடுகளிலும்; எல்லாவிதமான தெய்வீக பிதாக்கள் மற்றும் அது போன்ற, எல்லாவிடங்களிலும் உள்ளனர். 299 இந்த ஏழை கறுப்பு நிற சகோதரர்களையும், சகோதரிகளையும் இப்பொழுது அங்கு காண்கையில்; அவர்கள் ஒருமைப்பாட்டை விரும்பினர். அவர்களுக்கு அது கிடைத்தவுடனே…அது உண்மை; அது அவர்களுக்கு கிடைக்க வேண்டும்; அவர்கள் சகோதரரும் சகோதரிகளுமாவர். இப்பொழுது, அவர்களுக்கு அது கிடைத்துவிட்ட பிறகு, அவர்கள் முன்னைவிட மோசமாகிவிட்டனர். அது கம்யூனிஸ்டுகளால் ஊக்குவிக்கப்பட்டது என்பதை அது காண்பிக்கிறது. ஓ, தேவனே, அந்த எளிய மனிதர்களால் அதை காண முடியவில்லையா? அது மாத்திரம் செய்யப்பட்டால்…பாருங்கள், அது செய்யப்பட வேண்டும், கர்த்தாவே.

168300 வாரும், அதுதான் எங்களுக்கு வேண்டும். பிதாவே, நீர் வருவீராக. நாங்கள் காத்திருக்கிறோம். வாரும், கர்த்தாவே. எங்களை உமது கரங்களில் அணைத்துக்கொள்ளும். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். இந்த உலகத்தில் நியாயம் என்பதே இல்லை—இல்லை. ஒன்று மற்றொன்றுக்கு விரோதமாக இழுக்கிறது, இருப்பினும் அது பூச்சிகளால் அரிக்கப்பட்டு…சாரமில்லாததாய் இருக்கிறது. சரீரம் முழுவதுமே நொதிக்கிற இரணமாய் உள்ளது என்று நீர் கூறியிருக்கிறீர். உண்மையாகவே, ஒவ்வொரு போஜன பீடமும் வாந்தியினால் நிறைந்திருக்கிறது. நீர், “யாருக்கு உபதேசத்தை உணர்த்துவேன்? யாருக்கு அந்நாளில் அறிவை உணர்த்துவேன்?” என்று கேட்டீர். போஜன பீடம் முழுவதும் வாந்தியினால் நிறைந்திருக்கிறது. அதை நாங்கள் காண்கிறோம், கர்த்தாவே. அந்த நேரம் இங்குள்ளதைக் காண்கிறோம். தயவுகூர்ந்து எங்களுக்கு உதவி செய்வீராக. 301 அன்புள்ள தேவனே, ஜனங்கள் அரிசோனாவுக்கு வருவதைக் குறித்து அநேக கேள்விகள் இங்கிருந்தன. ஓ, அன்புள்ள தேவனே, அந்த அருமையான, விலையேறப்பெற்ற ஜனங்கள்…அங்கே அவர்கள் இந்த ஒலிநாடாவைக் கேட்பார்கள். அவர்கள் எங்கு வாழவேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிட நான் சர்வாதிகாரியல்ல என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்களாக. அவர்கள் அதை தெளிவாக புரிந்துகொள்ளட்டும். அவர்கள் அந்த தேசத்தை நேசிக்கின்றனர் என்றால், நானும் கூட நேசிக்கிறேன், அவர்கள் அங்கேயே இருக்கட்டும், பிதாவே. ஆனால் எடுத்துக்கொள்ளப்படுதல் அங்குதான் நிகழ வேண்டுமென்றும், அங்கு மாத்திரமே அல்லது அவர்கள் என்னுடன் கூட இருக்க வேண்டும் என்றும் அவர்கள் போதிக்கும்போது, ஒரு பரிதாபமான, தகுதியற்ற, அசுத்தமான பாவி, தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டவன், அப்படிப்பட்ட என்னுடன் கூட இருக்க வேண்டுமா… கர்த்தாவே, நான் பவுலுடன் கூட இருக்க விரும்புகிறேன்—இருக்க விரும்புகிறேன்; அவன் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்வான் என்று எனக்குத் தெரியும். மேலும் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருடன், அவர்கள் பாலஸ்தீனாவில் எங்கோ அடக்கம்பண்ணப்பட்டுள்ளனர். என் பெயரை உலகத்தோற்ற முதல் அந்த புத்தகத்தில் நீர் எழுதியிருப்பீரானால், நான் அவர்களுடன் செல்வேன் என்று அறிந்திருக்கிறேன். நான் அங்கிருப்பேன். தேவனே, இவர்கள் ஒவ்வொருவரும் அங்கிருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இவர்களையெல்லாம் நான் ஓரிடத்தில் கூட்டிச் சேர்க்க எனக்குதவி செய்யும், அங்கு அவர்கள்… மகத்தான போதகர்களாகிய சகோதரன் நெவில், மற்றும் சகோதரன் காப்ஸ் மற்றும்—மற்றும் இங்குள்ள சகோதரர்களாகிய எல்லோரும்: “ஜூனி,” சகோதரன் ரட்டல், ஓ, ஜே. டி., அவர்கள் எல்லோரும்—அவர்கள் எல்லோரும்; சகோதரன் காலின்ஸ், சகோதரன் பீலர், மற்றும் சகோதரன் பாமர், ஆகியோரின் செய்திகளை கேட்க வேண்டுமென்று விரும்புகின்றனர்… தேவனே, நீர் இதை இவர்களுக்கு அருளுவீராக என்று நான் ஜெபிக்கிறோம்… அவர்கள் உண்மையில் செய்தியைக் கேட்கும் இந்த இடத்துக்கு வருவார்களாக, அவர்கள் அதைக் கேட்க விரும்பினால், அந்த வனாந்தரத்துக்கு அவர்கள் ஓடிப்போக வேண்டாம். அவர்கள் செய்யக் கூடாது என்று வேதம் கூறியுள்ளதை அவர்கள் அப்படியே செய்ய முயல்கின்றனர். “அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால்; அதை நம்பாதீர்கள்! இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால், அதை நம்பாதிருங்கள்!” கர்த்தாவே, என்னால் முடிந்த வரைக்கும் அவர்களை எச்சரிக்க நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் இவையெல்லாம் அந்த நேரம் அருகாமையிலுள்ளது என்பதை இப்பொழுது காண்பிக்கிறது. சாயங்கால நிழல்கள் விழுந்துகொண்டிருக்கின்றன.

169302 நான் இரக்கத்துக்காக ஜெபிக்கிறேன், கர்த்தாவே. என்மேல் இரங்கும்; எனக்குதவி செய்யும். பிதாவே, இது என்னை பதட்டமடையச் செய்கிறது. நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நான்—நான் என் ஜீவனை முத்தரிக்க விரும்பவில்லை… இங்கு என் வேலை அனைத்தும் ஏதோ ஒரு மதவெறி கொண்டவன் ஒரு கூட்டத்தை அல்லது ஒரு கொள்கையினரை எங்காவது ஒரு வனாந்தரத்துக்கு கொண்டு செல்லும்படி செய்துவிடுமோ என்று பயப்படுகிறேன். கர்த்தாவே, என் பெயர் அவ்விதம் கெட்டுப்போகவிடாதேயும். நான் இதற்காக கடுமையாக போராடினேன். என்னால் முடிந்த வரையில் நான் உத்தமமாய் இருக்கிறேன். தேவனே, அது நடக்கவிடாதேயும். எனக்கு எந்த விதத்திலாவது உதவி செய்யும். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை; நான் உம் பேரில் சார்ந்திருக்கிறேன், எனக்கு உதவி செய்யும். நீர் என்னை செய்யும்படி சொல்கிற எந்த காரியத்தையும் நான் செய்வேன். நான் உம்முடைய ஊழியக்காரன்; இவர்கள் உம்முடைய பிள்ளைகள். கர்த்தாவே, இந்த… இந்த ஜனங்களில் பெரும்பாலோர், நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது பேர், கர்த்தாவே, உண்மையில் திடமானவர்கள். அவர்கள் விசுவாசிக்கின்றனர்; அவர்கள் அறிந்திருக்கின்றனர்; அவர்கள் புரிந்துகொள்கின்றனர். அது நானல்ல என்று அவர்களுக்குத் தெரியும்; ஆனால் ஒவ்வொரு எழுப்புதலையும் இக்காரியங்கள் தொடர வேண்டியதாயுள்ளது என்பதை நான் அறிகிறேன், இது அதற்கு விலக்கு அல்ல. எனவே எங்களுக்கு இப்பொழுது உதவி செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன். 303 கர்த்தாவே, நாங்கள் சிறிது பகல் உணவு அருந்த இன்று செல்லும்போது, எங்களுக்கு உதவி செய்வீராக. நாங்கள் ஒருமித்து ஐக்கியம் கொள்வதை ஆசீர்வதிப்பீராக. பிற்பகலில் நேரத்தோடு எங்களை மறுபடியும் இங்கு கூட்டிச் சேரும். அநேகர் இப்பொழுது தங்கள் வீட்டுக்கு போகவேண்டும், கர்த்தாவே. அவர்கள் தங்களுடைய—தங்களுடைய வீட்டுக்கு செல்ல வேண்டும், நீர் அவர்களுக்கு உதவி செய்யும்படி நான் ஜெபிக்கிறேன். அவர்களுடைய மற்ற கேள்விகளுக்கு அளிக்கப்படுகின்ற பதில்களைக் கேட்க, கர்த்தாவே, அவர்களுக்கு ஏதோ ஒரு வழி உண்டாவதாக. ஒருக்கால் அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படாமல் இருக்கலாம். நீர் அவர்களுக்கு உதவு செய்யுமாறு நான் ஜெபிக்கிறேன், கர்த்தாவே. 304 இந்த கேள்விகளுக்கு இன்றிரவு நான் வேகமாக பதிலளிக்கவும் மற்றும் என்னால் முடிந்தவரை அவை ஒவ்வொன்றையும் எடுத்து பதிலளிக்கவும் எனக்கு உதவி செய்வீராக. நாங்கள் மறுபடியும் பிற்பகல் இங்கு சந்திக்கும் வரையில், நீர் எங்களை ஆசீர்வதிப்பீராக. இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

170நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 305 அங்கே எழுதி வைத்தேன், எனக்கு முன்னால் எப்பொழுதும் இருக்கும்படிக்கு நான் அதை எழுதினேன்: “இந்த கேள்விகளுக்கு நான் பதிலளித்துக்கொண்டிருக்கையில், கிறிஸ்து எனக்கு முன்னால் இருக்கிறார்.” என் இருதயத்திலிருந்து இதை கூறினேன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு உதவி செய்ய, எல்லாமே, என் இருதயத்திலிருந்து எழுகிறது. அவர்களில் சிலர் தங்கள் பொட்டலங்களைப் பெற்றுக்கொள்ள இங்கு வரக்கூடும்.

171306 அன்புள்ள தேவனே, இங்கு உறுமால்கள், பொட்டலங்கள் இங்கே கிடக்கின்றன. இது வியாதிப்பட்டோரிடமும் அவதியுறுவோரிடமும் செல்கின்றது. வார்த்தையை எழுதியவரும், அதன் மகத்தான வியாக்கியானியுமான பரிசுத்த ஆவியானவர்தாமே, ஆராதனையின் இந்த பாகத்தின்போது இப்பொழுது அருகில் வந்து, இந்த துணிகளை ஆசீர்வதிப்பாராக. கர்த்தாவே, என்னைக் குறித்து நான் சிந்திக்கையில், அநேகருக்கு மரணத்துக்கும் ஜீவனுக்கும் இடையே நிற்கின்ற இந்த உறுமால்களின் குறுக்கே என் அசுத்தமான சரீரத்தை வைக்க நான் எம்மாத்திரம்? ஓ, தேவனே, எனக்கு நடுக்கம் உண்டாகிறது. ஆனால் அதே நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கையில்…நீர் என்னைக் காண்பதில்லை, என் சத்தத்தை மட்டுமே கேட்கிறீர். அது கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் மூலம் அங்கு வருகிறது. இப்பொழுது, அவருக்கு நீர் உத்தரவு அருளினதுபோலவே எனக்கும் அருளுவீர் என்று நான் விசுவாசித்துக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் அவர் எனக்கு முன்பாக சென்று உன்னதமானவருடைய வலது பாரிசத்தில், அங்கே மேலே, வீற்றிருக்கிறார். அவருடைய இரத்தம் பாவநிவிர்த்திக்காக அங்கு இருக்கின்றது, அந்த இரத்தத்தால் நான் மூடப்பட்டிருக்கிறேன். 307 அவர்களை நீர் சுகமாக்குவீர் என்று நான் விசுவாசிக்கிறேன், கர்த்தாவே, ஏனெனில் அவர்கள் தேவையுள்ளவர்களாய் இருக்கின்றனர். இல்லையென்றால் அவர்கள் இவைகளை இங்கு வைத்திருக்கமாட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் குணமாக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். என்னை நான் அவைகள் மீது வைக்கையில்…அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து எடுத்ததாக கூறப்பட்டுள்ளது… கர்த்தாவே, அவனும் கூட கிருபையினால் இரட்சிக்கப்பட்ட, ஒரு பாவியே. அவன் ஜனங்களைக் கடிந்துகொண்டபோதிலும், அவர்கள் அவனை விசுவாசித்தனர், ஆனால் அவன் மேய்ப்பன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவன் உம்மிடத்திலிருந்து அனுப்பப்பட்டவன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்…ஏனெனில் அவனுடைய ஊழியத்தின் மூலம் நீர் உம்மை நிரூபித்தீர். தேவனே, இந்த ஜனங்கள் இன்றைக்கு அதே காரியத்தை விசுவாசிக்கின்றனர். அவர்களுக்கு இப்பொழுது நீர் உதவிசெய்து அவர்கள் ஒவ்வொருவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் சுகமாக்குவீராக. ஆமென்.

172308 நீங்கள் பசியாயிருக்கிறீர்களா? சரி. நான் இன்னும் அநேக கேள்விகளுக்காக பசியுள்ளவனாயிருக்கிறேன். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” இப்பொழுது, நான் ஒருக்கால்…இந்த கேள்விகளில் சிலவற்றிற்கு, நான் ஒருக்கால் சரியாக பதில் அளித்திருக்கமாட்டேன்; ஆனால் என்னால் முடிந்த வரையில் நான் சிறப்பான பதில்கள் அளித்துவிட்டேன். இன்றிரவு, நான் ஏழு மணிக்கு தொடங்க முயற்சி செய்கிறேன். சரி, ஆராதனை ஆறு முப்பது மணிக்கு தொடங்கும். உங்களால் தங்க முடியுமானால்…நீங்கள் தங்க முடியாவிட்டால், உங்கள் நிலைமை எங்களுக்குப் புரிகிறது; அதனால் பரவாயில்லை. ஆனால் இன்றிரவு என்னால் முடிந்த வரையில் இவை ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்க முயற்சி செய்கிறேன். நான் சந்திக்கும் வரை தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நாம் எழுந்து நின்று, நம்முடைய கலைந்து செல்லும் பாடலான இந்த நல்ல பாடலை பாடுவோமாக, இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல். சரி. இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், துயரமும் துக்கமும் உள்ள பிள்ளையே; [சகோதரன் பில்லிபால் சகோதரன் பிரான்ஹாமிடத்தில் பேசுகிறார்—ஆசி.] ( …?… அவர்கள் காணிக்கை எடுத்தனர் …?… இந்த காலையில் …?… ) …நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்.

173309 இந்த அறிவிப்பைச் செய்ய விரும்புகிறேன். இன்று காலை அன்பின் காணிக்கை எடுத்ததாக பில்லி இப்பொழுது என்னிடம் கூறினான் (பார்த்தீர்களா?), நிறைய அன்பின் காணிக்கை கிடைத்துள்ளதாக அவன் கூறினான். அவன் சென்று அங்கே கட்டிடத்தின் பின்னால் நிற்கும்படி சொல்லியிருக்கிறேன். இங்கே ஆயத்தமாக வராத ஜனங்களுக்கு, உங்கள் பகல் உணவுக்கு பணம் இல்லாதவர்களுக்கு, பில்லி உங்களுடைய பகல் உணவுக்காகவும் மற்றும் உங்களுடைய விடுதியில் தங்குவதற்காக அல்லது சுற்றுலா உணவக விடுதியில் செலுத்த வேண்டிய தொகைக்காகவும், அது என்னவாய் இருந்தாலும், பணம் கொடுப்பான். நீங்கள் அதை பெற்று இப்பொழுது செலுத்திவிடுங்கள். நீங்கள்…உங்களால் தங்க முடியுமானால்… பில்லி உங்களை அங்கே பின்பக்கத்தில் சந்தித்து உங்கள் பெயரையும் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்பதையும் குறித்துக்கொள்வான், இன்று காலை எடுக்கப்பட்ட அன்பின் காணிக்கையிலிருந்து நாங்கள் உங்கள் பகல் உணவுக்காகவும், சுற்றுலா உணவக விடுதியில் தங்கினதற்காகவும் நாங்கள் பணம் செலுத்திவிடுவோம். நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! 