COD 21 கேள்விகளும் பதில்களும்

64-0830M

நம நமமடயத தலகள வணஙகவமக. கரததரகய இயசவ, உமத சமகததல வரவதறக கடதத தரணததறககவம, இநத ஐககயததன நரததகககவம, கறஸத இயசவககள இஙக உனனதஙகளல உடகரநதரபபதறககவம இககல வளயல உமகக நனறயளளவரகளயரககறம. இபபழத, கரததவ, உமமக கறதத நஙகள பசமபத, எஙகளடன தடரநத இரகக வணடமனற ஜபககறம. உமத வரததயயம மறறம எஙகளகக நர சயதளள வககததததஙகளயம நஙகள நககப பரகக

COD 21 கேள்விகளும் பதில்களும்

64-0830Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி1861964-08-30

COD 21 கேள்விகளும் பதில்களும்

64-0830Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி1861964-08-30

1 நாம் நம்முடையத் தலைகளை வணங்குவோமாக. கர்த்தராகிய இயேசுவே, உமது சமூகத்தில் வருவதற்கு கிடைத்த தருணத்திற்காகவும், இந்த ஐக்கியத்தின் நேரத்துக்காகவும், கிறிஸ்து இயேசுவுக்குள் இங்கு உன்னதங்களிலே உட்கார்ந்திருப்பதற்காகவும் இக்காலை வேளையில் உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, கர்த்தாவே, உம்மைக் குறித்து நாங்கள் பேசும்போது, எங்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். உமது வார்த்தையையும் மற்றும் எங்களுக்கு நீர் செய்துள்ள வாக்குத்தத்தங்களையும் நாங்கள் நோக்கிப் பார்க்கையில், எங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியினால் நிறைவதாக. எங்கள் மேய்ப்பரையும், எங்கள் கூட்டாளிகளையும், உமக்கென்று நாங்கள் நியமித்துள்ள இந்த ஒன்றுகூடும் சிறிய இடத்தில் எங்களை சந்திப்பதற்கென இங்கு வருகின்ற சகோதரர சகோதரிகள் அனைவரையும் ஆசிர்வதிப்பீராக. இந்த நாள் முழுவதும் நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் நீர் எங்களை ஆசிர்வதிக்குமாறு நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதை கேட்கிறோம். ஆமென். உட்காரலாம். (சகோதரனே …?… எனக்கு உங்களுடைய புத்தகம் கிடைத்துவிட்டது.)

22 இது எனக்கு சற்று ஒருவிதமான சிறு இளைப்பாறுதலாயிருக்கிறது. இங்கு எனக்கு ஆராதனைகளும், பேட்டிகளும் உண்டாயிருந்தன; நான் பேட்டிகளை நடத்த வேண்டும் அல்லது—அல்லது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதாய் இருந்தது. இன்று காலையில் எனக்கு கிடைக்கப் பெற்ற ஏறக்குறைய எல்லாமே தரிசனங்களே, நான் ஒருவிதமான… நான் பில்லியிடம், சகோதரன் நெவிலுக்கு அதிக வேலை இராவிடில், நான் இந்த கேள்விகளை எடுத்துக்கொண்டு அவைகளுக்கு பதிலளித்து, என் சிந்தையை சற்று இளைப்பாறப்பண்ணுவேன் என்று கூறினேன். இந்த தரிசனங்கள்—அவைகள்…ஒரு விதமாக, இது…என்னை ஒரு விதமாக நெருக்குகிறது. ஆனால் ஜனங்களுக்கு அது உதவப்பட்டது; அதுவே முக்கியமான காரியம். முக்கியமான காரியம் என்னவெனில், அவர்களுக்கு உதவப்பட்டது; அதுவே—அதுவே அதன் நல்ல பாகம். எனவே, இன்று பிற்பகலில், நான் சற்று முன்னதாகவே அவைகளை எடுத்துக் கொள்ளப்போகிறேன், அதனால் இன்று பிற்பகல் என்னுடைய சிறந்த, நேர்காணல்களை நான் தொடங்க முடியும்.

33 இக்காலையில் நமது நண்பர்களைக் காண்பதில் நமக்கு மகிழ்ச்சியுண்டாகிறது மற்றும்…இப்பொழுது, இந்த…இதற்காக நீங்கள் பில்லியின் மீது வருத்தப்பட வேண்டாம். எனவே அப்படியானால்…இந்த கேள்விகளுக்கு நான் தொடர்ந்து பதிலளிப்பதாக இருந்தால், பில்லி ஜனங்களுக்கு தெரிவிப்பதாக இருந்தது. கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு ஒருக்கால் ஒரு—ஒரு மணி நேரம், கிடைக்குமென்று நான் எண்ணினேன். என்னுடைய சில…நான் விரும்புவது…எனக்கு விட்டுவிட பிரியமில்லை; என் எழுதும் பலகையை நான் சுத்தமாகத் துடைக்க விரும்புகிறேன். பார்த்தீர்களா? இந்த கேள்விகள் போன்றவைகள், இவைகளை நான்—நான்—நான் செய்து முடித்து விட்டேன் என்று நான்—நான் கூற விரும்புகிறேன். என் மனதில்…எனக்கு மிக அதிகமான காரியங்கள் உள்ளன; அது என்னை நரம்பு தளர்ச்சியாக்குகிறது. நான் எதைக் குறித்தும் நரம்பு தளர்ச்சியடைய விரும்பவில்லை; இந்நாட்களில் ஒன்றில் நான்—நான் மகிமைக்கு வீடு செல்லப்போகிறேன்.

44 இரண்டு நாட்களுக்கு முன்பு என் பழைய நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார், “ஒரு கைப்பெட்டியில் வாழ்வதை குறித்து நான் மிகவும் சோர்வடைந்து கொண்டிருக்கிறேன்” என்றார். நான், “அன்புள்ள சகோதரனே, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்; நான் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் வீட்டை விட்டு பிரிந்து வந்த துயரத்தில் இருக்கிறேன். இருபது ஆண்டுகளாக எனக்கு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற அந்த ஆவல் இருந்து வருகிறது, ஆனால் செல்வதற்கு தான் எனக்கு எந்த ஒரு வீடும் இல்லை” என்றேன். அது உண்மை. அது உண்மை. அவ்விதம் கூறுவது ஒரு மோசமான காரியமாய் உள்ளது. நான் உட்கார்ந்து கொண்டு, எங்கோயுள்ள வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று அழ முடியும். ஆனால் செல்வதற்கோ எனக்கு எந்த ஒரு வீடும் இல்லை. நான் எங்கு சென்றாலும், நான் சில நாட்கள் கூட அங்கு தங்க முடியாது; நான் வேறிடத்துக்கு செல்ல ஆயத்தமாயிருப்பேன். நான்…நான் அந்த விதமாக இருந்து வந்திருக்கிறேன்; நான் அந்த விதமாக பிறந்திருக்கிறேன். என் மனைவி என்னை “அமைதியற்ற காற்று” என்று அழைக்கிறாள். நான்—நான் இங்கும் அங்குமாக இருக்கிறேன். அவ்விதம் உள்ளது ஒரு மோசமான நிலையாகும், ஆனால் என் ஊழியத்தின் நிமித்தம் நான் அவ்விதம்தான் இருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். ஆனால் உங்களில் அநேகர் மெச்சிக்கொள்கிறீர்கள்…பாருங்கள், தேவனுக்காக எதைச் செய்தாலும் நாம் மெச்சிக்கொள்கிறோம், ஆனால் நீங்கள் ஒருபோதும்…

55 இப்பொழுது, இன்று காலையில் நாம் வீட்டில் தங்கியுள்ள ஒரு கூட்ட மக்களாய் இருக்கிறோம். பார்த்தீர்களா? ஆனால் நான்—நான் வீட்டைவிட்டுப் பிரிந்த துயரத்தில் இருக்கிறேன். நான் வீடு செல்ல விரும்புகிறேன், ஆனால் எங்கு செல்ல வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள், “அங்கே அரிசோனாவில் உள்ள உங்கள் குடும்பத்தினரிடத்தில் நீங்கள் செல்வதைக் குறித்து என்ன?” எனலாம். நான் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்றாக இருப்பேன், அதன்பிறகு நான் வேறு எங்காவது செல்ல வேண்டும். அங்கு நான் சென்றால், அப்பொழுது நான் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்றாயிருப்பேன், அதன்பிறகு எனக்கு வேறெங்காவது செல்ல வேண்டும். எனவே எனக்கு செல்வதற்கு வீடு ஏதுமில்லை, நான் வீட்டைக் குறித்த நினைவுள்ளவனாயிருக்கிறேன். 6 பாருங்கள், ஒரு வீடு உண்டு. என்றாவது ஒரு நாள் நான்—நான் அந்த வீட்டிற்குச் செல்லுவேன், ஆனால் முதலில் நான் உங்களுக்கு உதவி செய்தாக வேண்டும். புரிகிறதா? அதற்காகவே நான் இங்கிருக்கிறேன், உங்களுக்கு உதவி செய்யவே. உங்களுக்கு இனி ஒருபோதும் நான் உதவி செய்ய இயலாது என்னும், அந்த நேரம் வரும்போது, அப்பொழுது நான்—நான் வீடு செல்ல விரும்புகிறேன். அப்பொழுது நான் உண்மையாகவே வீடு செல்ல விரும்புகிறேன். நான் மிகவும் விரும்பப்போகும் ஒரு ஸ்தலம் எங்கோ உள்ளது, அங்கிருந்து திரும்பி வர எனக்குப் பிரியமிராது.

67 நான் ஜெபர்ஸன்வில்லை விட்டுச் சென்றிருப்பேன்; நான் சில வாரங்கள் விட்டுச் சென்றிருப்பேன்; ஆனால் நான் திரும்பி வர விரும்புவேன். நான் அரிசோனாவுக்குச் செல்கிறேன்; அது மிகவும் அற்புதமானது என்று நான் எண்ணுகிறேன்; நான் மீண்டும் திரும்பி வர விரும்புகிறேன். நான் வேறெங்காகிலும் செல்கிறேன்; ஆனாலும் நான் மீண்டும் திரும்பி வர விரும்புகிறேன். நான் இங்கு செல்கிறேன், அங்கும் செல்கிறேன், மேலும் நான்…அதன்பின்னர் நான் இங்கு திரும்பி வர வேண்டுமென நினைக்கிறேன். நான் இங்கு வருகிறேன்; நான் இங்கு சில நாட்கள் தங்கியிருந்து, நான் உங்கள் எல்லோரையும் காண்கிறேன்; நான் வேறெங்காகிலும் செல்ல விரும்புகிறேன். பாருங்கள், என் பிள்ளைகள் உலகெங்கிலும் சிதறியுள்ளனர், மேலும் நான்—நான்…அவர்களை நான் கிறிஸ்துவுக்கென்று பெற்றெடுத்துள்ளேன். மேலும் நான்…அப்படியானால் எனக்கு வீடு எதுவுமில்லை. இந்நாட்களில் ஒன்றில் அவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்ட விரும்புகிறேன், பாருங்கள், பிதாவானவர் அவ்விதம் செய்வார், அப்பொழுது நாம்—நாம் ஒருபோதும் அலைந்து திரிய வேண்டிய அவசியமிராத ஒரு வீடு உண்டாகும். புரிகிறதா? சுற்றித் திரிவதனால் களைப்பு உண்டாகிறது மற்றும் தங்குவதற்கு இடம் ஏதுமில்லை.

78 அத்தகைய ஒரு ஊழியம் உங்களை அவ்விதம் செல்ல அழைத்தாலொழிய, நீங்கள் ஒருபோதும் அலைந்து திரிகிற ஒருவராக இருக்காதீர்கள் என்பதே, நான் எவருக்கும் அளிக்கும் ஆலோசனையாகும் (புரிகிறதா?), ஏனெனில்… இந்த பூமியில் எனக்கு ஒரு இடம் இருந்து, அங்கு நான் சென்று “இது என் வீடு!” என்று என்னால் சொல்ல இயலுமானால், அதற்காக இன்று காலையில், நான்—நான் எதையும் கொடுப்பேன். நான்—நான்…எனக்கு அது இருக்குமானால், நான் பத்து லட்சம் டாலர்கள் தருவேன். “ஆஹா, இதை நான் மிகவும் நேசிக்கிறேன்; இதை நான் இனி விட்டுச் செல்ல எனக்குப் பிரியமில்லை” என்று என்னால் சொல்லக் கூடிய ஒரு இடம் இருக்குமானால், அதற்காக நான்—நான் எதையும் தருவேன். ஆனால் அதை என்னால்—என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. 9 நான் ஆபிரகாம் இருந்ததைப்போல் இருக்கிறேன்; நான் ஒரு நகரத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். புரிகிறதா? அதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் அது உள்ளதென்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த பூமியில் எந்த ஒரு இடத்திலும் என்னை பொருத்திக்கொள்ள என்னால் நிச்சயமாக முடியாது. அப்படி தோன்றவில்லை… அருமையான ஜனங்கள், அருமையான இடங்கள், நீங்கள் இங்கு சென்றால், அது மிகவும் ஈரமாக உள்ளது; அங்கு சென்றால், அது மிகவும் உலர்ந்துள்ளது; அங்கு மேலே சென்றால், அது மிகவும் குளிராயுள்ளது; கீழே சென்றால் அது மிகவும் வெப்பமாயுள்ளது. பார்த்தீர்களா? நீங்கள்…இடம் எதுவுமில்லை; அது வீடேயல்ல. உங்களுடைய தோளில் விழுந்து அழுது, என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, ஆனால் நான்… பாருங்கள், நாம் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஆமென்! எல்லாவற்றிற்கும் நன்றியுள்ளவர்களாயிருங்கள். நான் அவ்விதமாக இருப்பதன் காரணத்தால், நான் அவ்விதமாக இருக்கிறேன். நான் உள்ளவிதமாக தேவன் என்னை படைத்தார். அவர் என்னை உண்டாக்கின விதமேயல்லாமல், சோகமுடையவனாய், அவ்விதமான தன்மைகளை உடையவனாய் இருப்பதைத் தவிர வேறு எவ்விதமாகவும் என்னால் இருக்க முடியாது. நான் உதவியாயிருக்க எந்தவிதமாக அவர் என்னை இங்கு அனுப்பியிருக்கிறாரோ, அந்த விதமாகவே என்னால் இருக்க முடியுமென்று அவர்கள் என்னிடம் சொல்கின்றனர். நான் அந்தவிதமான ஒரு நபராகவே இருக்க விரும்புகிறேன். நான் அப்படி இருக்க வேண்டுமென்றால், நான் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். தேவனுடைய ராஜ்யத்தின் சித்தம், அல்லது தேவனுடைய சித்தம் எதுவாக இருந்தாலும், அவ்விதமாகவே நான் இருக்க விரும்புகிறேன்.

810 இப்பொழுது, நாம் மறுபடியும் ஜெபம் செய்வோம். கர்த்தராகிய இயேசுவே, இந்த கேள்விகள் எங்களுக்கு முன்பாக கிடக்கின்றன, பிதாவே. இவைகளுக்கு என்னால் விடையளிக்க இயலாது, கர்த்தாவே. இந்த கேள்விகளுக்கு விடையளிக்க எனக்கு—எனக்கு போதிய ஞானம் கிடையாது, ஆனால் நீர் எல்லாவற்றிற்கும் போதுமானவராயிருக்கிறீர் என்றும், இது ஜனங்களின் இருதயங்களில் உள்ளது என்றும் நான் அறிந்திருக்கிறேன். அவர்களுடைய அழுத்தத்தை நீக்க என்னை உபயோகியும், கர்த்தாவே, பிதாவே, அவ்விதம் செய்யமாட்டீரா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இதை கேட்கிறேன். ஆமென்.

9இப்பொழுது, நாம் தொடங்கப்போகிறோம்…அவர்கள் இதை ஒலிநாடாவில் பதிவு செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன், எனவே இது ஒரு…அதனால் பரவாயில்லை என்று, நான் எண்ணுகிறேன். 11 இப்பொழுது, ஒரு காரியம் என்னவெனில்…கேள்விகளைக் குறித்து நான் கவலைப்படுவதற்கு காரணம் என்னவெனில், எப்பொழுதும் அழகான ஒரு காரியம்…சரியாகக் கூறினால், கடுமையான காரியம் ஒன்று உண்டு, அது எப்பொழுதும் என்னை தொல்லைப் படுத்துகிறது; அதுதான் விவாகமும் விவாகரத்தும் என்பதன் பேரில் உள்ள கேள்விகளுக்கு விடையளிப்பதே. ஒ என்னே, தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள், ஒரு சகோதரன் ஒரு கம்பளியால் தன்னை போர்த்துக்கொண்டு, என் முற்றத்தில் இரவு பன்னிரண்டு மணியிலிருந்து அடுத்த நாள் விடியும் வரைக்கும் உட்கார்ந்து கொண்டிருந்தார். போதகர்கள் எல்லாவிடங்களிலுமிருந்தும் தொலைபேசியில் கூப்பிடுகின்றனர், இரண்டு மூன்று முறை விவாகம் செய்தல் போன்றவை. ஊழியங்கள்… உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அதன் பேரில் இன்னும் அநேக கேள்விகள் இங்குள்ளன என்று, நானறிவேன். அவைகளை நான் ஆராய்ந்து பார்க்கவில்லை, ஆனால் இங்கே அவற்றில் பல இன்னும் உள்ளன.

1012 இதை சற்று ஞாபகம் கொள்ளுங்கள்! விவாகம் செய்து, விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் விவாகம் செய்துகொண்ட ஜனங்களாகிய நீங்கள் எனக்கு ஒரு காரியத்தை வாக்களியுங்கள். புரிகிறதா? நீங்கள் என் மேல் உங்கள் நம்பிக்கையை வைத்திருக்கிறீர்கள். (இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படவில்லை என்று நான்—நான் எண்ணுகிறேன். நான் இல்லை…) நீங்கள்—நீங்கள்—நீங்கள்…நான் தேவனால் அனுப்பப்பட்ட உங்கள் தீர்க்கதரிசி, உங்கள் ஊழியக்காரன் என்று என்னை நீங்கள் விசுவாசித்தால், அப்பொழுது இதற்கான என்னுடைய வார்த்தையை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா, அவ்விதம் செய்வீர்களா? இப்பொழுது நீங்கள் உள்ள விதமாகவே தொடர்ந்து வாழுங்கள். நீங்கள் அது போன்ற எதையும் செய்ய முயல வேண்டாம். ஆனால் தொடர்ந்து, அந்த விதமாகவே வாழ்ந்து, சந்தோஷமாக வாழுங்கள், உங்களுக்கு…நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால், நீங்கள் தொடர்ந்து கிறிஸ்துவுக்காக வாழுங்கள்; உங்களை இரட்சிக்க அவருக்கு ஒரு காரணம் இருந்தது. 13 இப்பொழுது, நான் திரும்பி வரும்போது, கர்த்தருக்கு சித்தமானால், அதை உங்களுக்கு வேதத்திலிருந்து விளக்கிக் காண்பிப்பேன். புரிகிறதா? நீங்கள் சோர்ந்து போகாதீர்கள். அநேக மனிதர் என்னிடம், “பாருங்கள், என்னுடைய மனைவியை நான் நேசிக்கிறேன், ஆனால் நான்… நான் அவளை விட்டுப்பிரிய வேண்டும்; ஏனெனில் எடுத்துக்கொள்ளப்படுதலை இழந்துபோக நான்—நான் விரும்பவில்லை” என்று கூறினர். நீங்கள் அவ்விதம் செய்யாதீர்கள்! இந்த பொருளின் பேரில் நான் சொல்வதை (புரிகிறதா?) நீங்கள் கேட்கும் வரைக்கும், நீங்கள் இப்பொழுது உள்ள விதமாகவே இருங்கள். அதன் பிறகு நான்…இதை நான் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் விளக்க முடியாது; இதை விளக்க சிறிது நேரம் தேவைப்படும், ஏனெனில் அது வேதவசனமாக இருக்க வேண்டும். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அது சரியல்ல.

1114 இயேசு இங்கு இந்தக் கேள்விகளுக்கு கூறியதை நான் அறிவேன், “வேசித்தன முகாந்திரத்தினாலொழிய தன் மனைவியை வேறு காரணத்தினால் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணுகிறவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான், அப்படித் தள்ளிவிடுகிறவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்”: இந்தக் காரியங்களை, அதைக் கூற அவருக்கு ஒரு காரணமிருந்தது. அவர் தேவன்; அது அவருடைய வார்த்தை. 15 இப்பொழுது, நாம் தொடக்கத்திற்கு சென்று, இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன என்று கண்டுபிடிப்போமாக, நீங்கள் பாருங்கள், அதன்பின்னர் நாம் இவைகளைக் கொண்டு வருவோம். ஆனால் நாம் அவ்விதம் செய்யும் வரைக்கும், நீங்கள் கிறிஸ்தவர்களானால், இப்பொழுது நீங்கள் உள்ளபடியே இது வரைக்கும் நீங்கள் செய்து வந்தபடியே, தொடர்ந்து வாழுங்கள். நீங்கள் கிறிஸ்தவ தம்பதிகளாயிருந்து, நீங்கள் விவாகம் செய்து, பிள்ளைகள் இருக்குமானால், அதைப் போன்ற காரியங்கள் இருக்குமாயின், உங்களைப் பிணைக்கும் சிறு இணைப்புகள் இருக்குமானால், உங்கள் மனைவியையோ அல்லது கணவனையோ விட்டுப் பிரிந்து விடாதீர்கள். அப்படிச் செய்யாதீர்கள். புரிகிறதா? இந்த பொருளின் பேரில் நான் மீண்டும் பேசுவதைக் கேட்கும் வரைக்கும் காத்திருங்கள். அதை நீங்கள் எனக்கு வாக்களிப்பீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! இப்பொழுது, நீங்கள் என்னை நம்பும்படிக்கு என்னில் நம்பிக்கை வைத்துள்ளீர்கள். இப்பொழுது, இது வரைக்கும் நீங்கள்—நீங்கள் என்னை விசுவாசித்து வந்திருக்கிறீர்கள்; இந்தப் பொருளின் பேரில் இன்னும் சிறிது கூட என்னை விசுவாசியுங்கள். இப்பொழுது—இப்பொழுது, நாம் பார்ப்போமாக. இன்று காலையில் உண்மையில் சில நல்ல கேள்விகள் என்னிடம் உள்ளன, சில…

12325. மணவாட்டியில் செல்லுகின்ற அனைவருமே கூடாரத்தின் ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் பரப்புக்குள் வாழ வேண்டுமா (இதற்கு சென்ற ஞாயிறு நான் விடை கூறினேன் என்று நான் நினைக்கிறேன். இவைகளைப் பொறுக்கியெடுத்து என்னால் முடிந்த வரையில் உபயோகிக்க வேண்டும்.) —“மணவாட்டியின் வருங்கால இருப்பிடம்” என்னும் செய்தியின் இரண்டாம் ஒலிநாடாவில் தொனிப்பதுபோல், ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் பரப்புக்குள் வாழ வேண்டுமா? எடுத்துக்கொள்ளப்படுதலின்போது மணவாட்டி உலகின் எல்லா பாகங்களிலிருந்து வருவாள் என்று நான் எப்பொழுதும் எண்ணியிருந்தேன். நான் தவறா? 16 இல்லை, என் அருமை நண்பனே, நீர் தவறல்ல, நீர் கூறினது சரியே. இப்பொழுது, நீங்கள் அவ்விதம் நினைக்கத்தக்கதாக நான் ஒலிநாடாவில் ஏதாகிலும் கூறியிருந்தால்… இப்பொழுது, நான் அவ்விதம் கூறவில்லை…இவையெல்லாம் எனக்கு இப்பொழுது புதிதாக உள்ளன, இந்த கேள்விகள் என்னவென்று நான் பார்க்கவில்லை. உங்களுக்குப் புரிகிறதா? இந்தப் புதிய கேள்வித் தொகுப்புகளை நான் போன ஞாயிறன்று பெற்றுக்கொண்டேன், இவைகளை இந்த காகித உறையில் போட்டு, அங்கு வைத்துவிட்டேன்.

1317 இப்பொழுது, இதில்…இல்லை, மணவாட்டி எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் இருக்க வேண்டியதில்லை. அவர்கள் அநேகர் பூமியின் தூளில் இருப்பார்கள். அவர்கள் உலகம் முழுவதிலும் இருப்பார்கள்; அவர்கள் வடக்கில் பனியினால் உறைந்திருப்பார்கள், வெப்பமான காடுகளின் மண்ணில் இருப்பார்கள், உலகம் பூராவிலும் இருப்பார்கள். ஆனால் தேவ எக்காளம் முழங்கும்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருந்து, நித்திரையினின்று விழித்து, அவர்கள் எங்கிருந்தபோதிலும் பூமியின் தூளிலிருந்து வெளியே வருவார்கள். இப்பொழுது, இதில், உயிர்த்தெழுதல் உலகம் முழுவதும் நடக்கும். புரிகிறதா? எல்லாவிடங்களிலிருந்தும், பூமியின் உருண்டையில் உள்ள கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒவ்வொருவரும், அவர் வரும்போது அவரோடு கூட வருவார்கள் (புரிகிறதா?), நீங்கள் எங்கிருந்தாலும் சரி. 18 ஆதி காலத்து இரத்த சாட்சிகளின் நாட்களில் இருந்த அரங்கத்தை எண்ணிப் பாருங்கள், அந்த கிறிஸ்தவர்கள் சிங்கங்களின் கெபியில் எறியப்பட்டனர், அந்த சிங்கங்கள் அந்த கிறிஸ்தவர்களைக் கொன்று அவர்களுடைய உடல்களைப் புசித்தன. புரிகிறதா? அவர்கள் சிதறப்பட்டிருந்தனர், அவர்களுடைய உடல்கள் பூமியின் மீது சிங்கங்களின் கழிவுப் பொருட்களில் இருந்தன. அது எங்கிருந்தபோதிலும், உங்களால்…பாருங்கள், நீங்கள் காணக்கூடாத ஒரு பொருளினால் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள், தேவன் அந்த—அந்த பொருளை உங்களுக்குத் திரும்ப அளிப்பார். புரிகிறதா?

1419 இப்பொழுது, நீங்கள் ஒரு—ஒரு இரத்த அணுவை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஒரு இரத்த அணுவை நீங்கள் பிளந்தால், அது ஒரு இரத்த அணுவுக்குள் ஒரு—ஒரு இரத்த அணுவாக, பிறகு அணுவாக, மூலக்கூறாக பிளந்து, அந்தவிதமாக தொடர்ந்து சென்று, முடிவில் காணக்கூடாததாக ஆகிவிடும். அது நீங்கள் தொடக்கூடிய, ஒரு இயற்கை பொருளிலிருந்து, வாயுக்களாகவும்; வாயுக்களிலிருந்து அமிலங்களாகவும்—அமிலங்களிலிருந்து வாயுக்களாகவும் ஆகிவிடலாம், அந்தவிதமாக ஆகி, கடைசியாக ஒரு சிறு காரியத்தில் முடிவடைகிறது, அதுதான் ஆவி. இந்த வாயுக்களில் குடிகொண்டிருந்த இந்த ஆவி…அது அதே வாயுக்களாக இருக்காது, ஆனால் நீங்கள் எந்தவிதமான தோற்றத்தை இப்பொழுது உடையவர்களாக இருக்கிறீர்களோ, அது அப்படியே மறுபடியும் இருக்கும். புரிகிறதா? ஆவி அதை கட்டுப்படுத்தியிருந்தது. 20 இப்பொழுது, வேறு வார்த்தைகளில் கூறுவோமானால், நீங்கள் வாலிபனாகவோ அல்லது வாலிபப் பெண்ணாகவோ ஆகும்போது, அந்தவிதமாக, தேவன் உங்களை ஒரு படமெடுக்கிறார்…இப்பொழுது, நீங்கள் எவ்வளவு வயோதிபனாகி சுருக்கம் விழுந்தபோதிலும், எவ்வளவாக உருக்குலைந்தாலும், அது என்னவாக இருந்தாலும், அது மீண்டும் பழைய நிலைக்கு வரும். அந்த சரீரம் அழிக்கப்பட்டு, உருக்குலைந்து, சுட்டெரிக்கப்பட்டு, சிங்கங்களுக்கு இரையாகி, அவ்விதம் என்னவானபோதிலும், அது வாயுக்களால், பூமியிலுள்ள பதினாறு மூலப்பொருட்களால் உண்டாக்கப்பட்டது. அது கால்சியம், பொட்டாஷ், பெட்ரோலியம், இயலுலக ஒளி போன்ற அனைத்தும் ஒன்று சேர்ந்து அந்த சரீரம் உண்டாக்கப்பட்டது. இப்பொழுது, என்னவானாலும், அது…பூமி அனைத்துமே அவைகளால் நிறைந்துள்ளது.

1521 ஆனால் இப்பொழுது, இந்த படம் தான் முக்கியமான காரியம். உயிர்த்தெழுதலின்போது, அந்த வாயுக்களும், அமிலங்களும் அவைகளுக்குரிய இடத்தில் மீண்டும் வந்து அந்த படத்தை மறுபடியும் உண்டாக்குகிறது. இப்பொழுது, இந்த படமானது உங்களுக்கு பதினாறு, அல்லது பதினெட்டு, அல்லது இருபது வயதாயிருந்தபோது நீங்கள் காண்பதற்கு சிறந்தவர்களாயிருந்தபோது எடுக்கப்படவில்லை. அது எப்பொழுது எடுக்கப்பட்டது? உலகத்தோற்றத்திற்கு முன்பே, அது தேவனுடைய மகத்தான கோப்பில் வைக்கப்பட்டது. அதன் பிறகு, அது செய்த ஒரே காரியம், நீங்கள் உங்களுடைய தெரிந்துகொள்ளுதலை செய்வதற்காக அது உங்களுக்கு அளிக்கப்பட்டது. புரிகிறதா? அப்பொழுது நீங்கள் தேவனுடைய ஊழியக்காரராகின்றீர்கள். அவர் அதை முன்னறிதல், அவரை மீட்பராகச் செய்கின்றது, அதைக் குறித்து நாம் ஏற்கனவே பார்த்தோம். 22 அப்பொழுது அந்த படம் முற்றிலுமாக…இது நிழற்படம். இப்பொழுது நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது வாழ்க்கையின் நிழற்பட பாகம். எந்தக் காரியத்திலும், ஓர் நிழற்படம் என்று ஒன்று இருந்தால், ஒரு நிழற்படம் இருப்பதற்கு முன்பே ஒரு நிஜப்படம் இருக்க வேண்டும். எந்தக் காரியத்திலும், ஓர் நிழற்படம் என்று ஒன்று இருந்தால், ஒரு நிழற்படம் இருப்பதற்கு முன்பே ஒரு நிஜப்படம் இருக்க வேண்டும். இது உண்மையான காரியம் அல்ல; இது வரப் போகும் உண்மையான காரியத்துக்கு ஒரு முன்நிழலாக மாத்திரம் உள்ளது. நீங்கள் இப்பொழுது இதைப் புரிந்துகொண்டீர்களா? 23 எனவே, அவர்கள் உங்களுக்கு என்ன செய்வார்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை; அவர்களால் அந்த சுயவிவரப் படத்தை அழிக்க முடியாது, அந்தப் படம் தேவனுடைய மகத்தான காட்சிக் கூடத்தில் அங்கே உள்ளது. அது அதை அழிக்க முடியாது, அது பரலோகத்தில் உள்ளது. அதை நீங்கள் சுட்டெரிக்கலாம், சிங்கங்களுக்கு இரையாக கொடுக்கலாம், நீங்கள் அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; இரண்டை இரண்டால் பெருக்கினால் நான்கு என்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அது மீண்டும் தோன்றும். தேவன் அதை நிச்சயமாக உரைத்திருக்கிறார், அது மீண்டும் தோன்றும். எனவே, நீங்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை…

1624 இப்பொழுது, நான்…நான் நினைக்கிறேன் நீங்கள் ஒலிநாடாவைப் போட்டுக் கேட்பீர்களானால்…(இந்தக் கேள்வியை யார் எழுதினார் என்று தெரியவில்லை; அதில் பெயரை கையொப்பமிடவில்லை, ஒரு சிறு காகிதத் துண்டு குறிப்பேடு புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்டு, ஊதா மையினால் எழுதப்பட்டுள்ளது. அது ஒரு—ஒருகுறிப்பேடு புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.) ஆனால் இதை, ஞாபகம் கொள்ளுங்கள், இந்த கேள்வியில் இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், ஒலிநாடாவில், நான் இதை கூறினேன், இதன் பேரிலான ஏதோ ஒரு காரியம் என்னவென்றால் (இந்த ஒலிநாடாவை நீங்கள் மற்ற ஒன்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இப்பொழுது வார்த்தைக்கு வார்த்தை ஒரே விதமாக இருக்காது); நான், “உதாரணமாக, இன்று காலை நாம் இங்குள்ளோம். நாம் காண வாஞ்சிக்கும் நகரம் ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரமாயிருக்கும்” என்றேன். நான், “அதன் பரப்பு ஏறக்குறைய மேய்ன்னிலிருந்து ஃபிளாரிடா வரைக்கும், கிழக்கு சீபோர்ட்டிலிருந்து எண்ணூறு மைல் மிஸிஸிபி நதிக்கு மேற்கேயும் ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரமாயிருக்கும்” என்றேன். நான், “அதைக் குறித்து யோசித்துப் பாருங்கள், இன்று காலையில் இங்கு, உட்கார்ந்து கொண்டிருக்கும் மக்கள் அதாவது—அதாவது அவ்வளவு தூரத்திலிருந்து, ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரத்திலிருந்து வந்துள்ளனர்” என்றேன். இப்பொழுது, அந்த ஆலயம் பூமியில் எங்கிருக்கும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அது தற்பொழுது பாலஸ்தீனா உள்ள இடத்தில் இருக்கும் என்னும் கருத்து எனக்குண்டு. அது அநேகமாக அங்கு மலையின் உச்சியில் இருக்கும். அதுவோ அது வரையில் சென்றடையும். உண்மையாகவே, அப்பொழுது சமுத்திரம் இருக்காது. பாருங்கள், இந்த உலகின் சுற்றளவு இருபத்தைந்தாயிரம் மைல்கள் சுற்றளவில் உள்ளது, எனவே ஆயிரத்து ஐந்நூறு மைல் ஒன்றும் அதிகமல்ல. ஆனால் இந்த மகத்தான நகரம் ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரமுள்ளதாய் மலையின் மேல் இருக்கும்.

1725 எருசலேமிலுள்ள சீயோன் மலையையும் அந்த நகரங்களையும் குறித்த தீர்க்கதரிசனங்களின் நிமித்தமாகவே அவ்விதம் நான் அதை விசுவாசிக்கிறேன். அங்குதான் தீர்க்கதரிசியாகிய ஆபிரகாம், தேவன் கட்டி உண்டாக்கின அந்த நகரத்துக்காக காத்திருந்தான். அந்த தேசத்தில் அவன் அந்த நகரத்தை எதிர் நோக்கியிருந்தான். அந்த தேசம் எங்குள்ளதோ அங்குதான் அது இருக்கும் என்று நான் நம்புகிறேன். 26 அந்த தேசத்தை, நீங்கள் அதை வரைபடத்தில் கண்டுபிடிக்க முடியாது. அது ஒரு சிறு புள்ளியைப் போல் உள்ளது. ருஷியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், தென் அமெரிக்கா போன்ற நாடுகளைப் பாருங்கள், அங்குள்ள அந்த இடங்கள் அனைத்தும்… தேவன் ஏன் அந்த ஒரு இடத்தின் மேல் (புரிகிறதா?), அந்த ஒரு இடத்தைக் குறித்து அவ்வளவு வைராக்கியமுள்ளவராய் இருந்தார்? அதுதான் கேள்வி. அதை என்னால் நிரூபிக்க முடியாது, ஆனால் அப்படித்தான் எனக்குத் தென்படுகிறது. ஆனால் அது எங்கிருந்தாலும், அதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம், எனவே அதற்காக நாம் கர்த்தரைத் துதிப்போம்.

1827 இப்பொழுது, கூடாரத்தை சுற்றிலும் அது ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் இருக்கும் என்று நான் கூறினதாக—நான் கூறினதாக… நீங்கள் அபிப்பிராயம் கொண்டிருந்தால், அது தவறான அபிப்பிராயம் (உங்களுக்குப் புரிகிறதா?), ஏனெனில் அது அவ்வாறு இருக்காது. இந்த கூடாரம்…இது அழிந்து போக வேண்டிய ஒரு சிறு இடம். மேலும்—மேலும் உலகமானது சுட்டெரிக்கப்படும், அப்பொழுது இவையனைத்தும் ஒழிந்துபோகும். இந்த இந்தியானா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் அனைத்தும் எரிமலைக் குழம்பினால் வெந்து உருகிப்போகும். புரிகிறதா? எல்லா பாவமும், எல்லா வியாதிகளும், எல்லா கிருமிகளும், மற்றெல்லாம் அழிக்கப்படும். “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன், முந்தின…” 28 சிந்தித்துப் பாருங்கள்! தேவன் ஆறாயிரம் ஆண்டுகளாக இந்த உலகத்தை கட்டிக்கொண்டு வந்தார், அவர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, இதை உருவாக்கினார். அவர் எவ்விதம் அதை செய்தார்? வேதம், “அவர் தோன்றப்படாதவைகளினால் அதை உண்டாக்கினார்” என்று உரைத்துள்ளது; அதாவது, அவர் பூமியை இந்தவிதமாக உண்டாக்கினார். இப்பொழுது கவனியுங்கள்; இது அழகாயுள்ளது. சிருஷ்டி கர்த்தர் பூமியை ஒரு நோக்கத்துக்காக உண்டாக்கினார் (சாத்தான் அதை அசுசிப்படுத்தினான்), இங்கு விடப்பட்டுள்ளதை மீட்பதற்காக அவர் கீழே இறங்கி வந்தார். அவர் வேறெங்கோ சென்று இப்பொழுதும் தம்முடைய சிருஷ்டிப்பின் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

1929 இப்பொழுது, பூமியை உண்டாக்க அவருக்கு ஆறாயிரம் ஆண்டுகள் பிடித்தது, ஆனால் பூமிக்கு வரவிருக்கும் அந்த நகரத்தை சிருஷ்டிக்க அவர் இரண்டே நாட்கள் எடுத்துக் கொள்வார். அவர்…“என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன். நான் போய் ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன் (பளிங்கான பொன்னால் நான் ஒரு நகரத்தைக் கட்டப்போகிறேன், வீதிகளில் பொன் தளம் போடுவேன்).” என்ன ஒரு அழகான இடம். அவர் எங்கு அதை பெறுவார்? மற்ற பூமிகளில் அல்லது சந்திரன்களில், அல்லது நட்சத்திரங்களில் பொருட்கள் உண்டா? அவருக்கு அவை தேவையில்லை, அவர் ஒரு சிருஷ்டி கர்த்தர். அவர் நகரத்தைக் கட்ட சென்றிருக்கிறார். ஆமென்! அது எனக்கு போதுமானது, அது உங்களுக்கும் அவ்வாறுள்ளதல்லவா? அது நல்லது. அவர் இதைக் கட்டி, இதை நான் மகிழ்ச்சியுடன் அனுபவித்தால், அவர் இந்த புதிய ஒன்றைக் கட்டும்போது அது எப்படிப்பட்டதாய் இருக்கும்? ஓ என்னே, என்ன ஒரு அற்புதமான காரியம். அந்த நகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சரி.

20326. சகோதரன் பிரான்ஹாமே, நான் கர்த்தரை நேசிக்கிறேன், ஆனால் கடந்த ஆண்டில் ஒரு பிரச்சினையை நான்—நான் சந்திக்க நேர்ந்ததுள்ளது. சில நேரங்களில் எனக்கு ஏறக்குறைய மனநிலைக் கோளாறு ஏற்பட்டுவிட்டதோ என்பதுபோல் தோன்றுகிறது. அது என்ன? தயவு செய்து எனக்காவும் என் கணவருக்காகவும் ஜெபிக்கவும். 30 சரி, அங்கு ஒன்றும்…இன்று காலையில் ஜனங்களாகிய உங்களில் சிலருக்கு நேர்முகப் பேட்டி இருந்தவிதமாக, இந்த நபருக்கும் இருந்திருந்தால், அது என்னவென்பதை, அது என்னவாயிருப்பினும், அது வெளியே இழுத்துக்கொண்டு வந்திருக்கும். புரிகிறதா? அது என்னவென்பதை தேவன் வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் இப்பொழுது, நீ யாரென்று எனக்குத் தெரியாது, நீ இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை; அது வெறுமனே, “கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரி” என்று கூறப்பட்டிருக்கிறது. 31 இப்பொழுது, இப்பொழுது, அது…நீ ஏதாகிலும் ஒரு தவறைச் செய்து, அது உன்னைத் தொல்லைப்படுத்துகிறதென்றால், அப்பொழுது நீ வேதத்துடன் அதை ஒப்பிட்டுப் பார்த்து, என்ன செய்ய வேண்டும் மென்பதை அறிந்துகொள். ஆனால் நீ ஒன்றுமே செய்யாதிருந்து, எதுவுமே உன்னைக் குற்றப்படுத்தாதிருந்தால், ஒருக்கால் அது உன் நரம்புத்தளர்ச்சி சம்பந்தமானதாக இருக்கக் கூடும். புரிகிறதா? அநேக காரியங்கள் நடந்திருக்கக் கூடும்; ஒருக்கால் உன் முன் கால வாழ்க்கையில் ஏதாகிலும் தொல்லை நேர்ந்திருக்கக்கூடும். ஒருக்கால் இங்குள்ள ஒரு—ஒரு ஸ்திரீக்கு அது ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நிற்கும் நேரமாயிருக்கக் கூடும். அப்பொழுது அவளோடுள்ள எல்லாமே தவறாயிருக்கிறது, அவளுக்கு ஒன்றும் தவறாயிருக்கவில்லை, இருப்பினும் எல்லாமே அவளுக்கு தவறாயிருக்கிறது. அவள் நடிக்கவில்லை, அவள் உண்மையில் அவ்விதம் உணருகிறாள்; அது உண்மையானதைப் போலவே இருக்கும். நரம்புத்தளர்ச்சியுள்ள எவரும் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுடன் இணங்காமலிருக்க வேண்டாம்.

2132 கணவன்மார்களே உங்கள் மனைவிமார்கள், அவர்கள் வாழ்க்கையின் அந்த நேரத்தை அடையும்போது, நீங்கள்… அவள் எப்பொழுதாகிலும் உங்கள் இருதயத்துக்கு இனியவளாக இருந்திருப்பாளானால், அவள் சரியாயிருக்க விட்டுவிடுங்கள், ஏனெனில் அவளுக்கு நீங்கள் தேவை. அவளுக்கு உண்மையில் உங்கள் உதவி தேவையாயுள்ளது; அவளுக்கு உதவி செய்ய யாராகிலும் அவளுக்குத் தேவைபடுகிறது, அவளைப் புரிந்துகொள்ளுங்கள். அவளுடன் பேசுங்கள், அவள் உங்கள் இருதயத்துக்கு இனியவளாயிருந்ததுபோல—போல—போல அவளை உங்கள் கரங்களில் தழுவிக் கொள்ளுங்கள், அவள் அவ்விதமாகத்தான் உங்களுக்கு இருக்க வேண்டும். மேலும்—மேலும் அவளைப் புரிந்துகொள்ளுங்கள், ஏனெனில் அவள் தன் முழு அமைப்பும் மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் இருக்கிறாள், நீங்கள் அந்நேரத்தில் அவளிடம் மிகவும் நல்லவராக இருக்க வேண்டும். 33 அங்குதான் திரு. ராக்ஃபெல்லர் ஒரு மிகப் பெரிய தவறைச் செய்தார் என்று நான் நினைக்கிறேன். அவர் தேசத்தின் மக்களால் நேசிக்கப்பட்டார், அவர் ஒருக்கால் நமது அடுத்த ஜனாதிபதியாக ஆகியிருக்கக் கூடும். ஆனால் அவருடைய மனைவிக்கு ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நிற்கும் நேரம் வந்தபோது, அந்த கட்டத்தை அவள் அடைந்தபோது, அவர் அவளை விட்டுப் பிரிந்து தன் பெண் செயலாளரை மணந்து கொண்டார், என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்தீர்களா? உண்மையில் நல்லவிதமாக நிதானிக்கும் அமெரிக்கர்கள் இன்னும் உள்ளனர் என்பதை அது காண்பிக்கிறது. இப்பொழுது, எனக்கு திரு. கோல்ட் வாட்டரை பிடிக்கும், இல்லை—இல்லை, திரு. ராக் ஃபெல்லரைப் பிடிக்கும் என்று நான் நினைக்கிறேன், அவர் ஒரு…எனக்கு திரு. கோல்ட் வாட்டரையும் கூட பிடிக்கும்; எனக்கு எல்லோரையும் பிடிக்கும். ஆனால் நான்—நான் விரும்பவில்லை…உங்களில் சிலர்—அங்கு உட்கார்ந்திருக்கும் என்னுடைய சில குடியரசு கட்சியின் சகோதரர்கள் நான் கூறுகிற இதைக் கேட்பார்கள், நான்…

2234 கவனியுங்கள், நான் ஒரு அரசியல்வாதி அல்ல, நான்—நான் ஒரு கிறிஸ்தவனாயிருக்க விரும்புகிறேன். புரிகிறதா? இது அரசியலுக்கான ஒரு இடமல்ல. புரிகிறதா? முழு காரியமும் எப்படியும், அந்த வழியே சென்றுவிட்டது, ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பது நித்தியத்தைக் குறித்ததாகும். ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சியானாலும்…ஒ, அது அப்படிப்பட்ட ஒரே குழப்படியாயுள்ளது; அது ஒருபோதும் மீட்கப்பட்ட முடியாது. அது முடிந்து போய்விட்ட ஒன்று, எனவே அதைக் குறித்து வாக்குவாதம் செய்யாதீர்கள். செய்ய வேண்டிய காரியம் என்னவெனில் இந்த ராஜ்யத்துக்காக வாழ்வதேயாகும். “நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை: வரப் போகிறதையே நாடித் தேடுகிறோம்.” ஆமென்! அது உண்மை. ஆம், ஐயா! 35 எனவே அரசியல், வேலிக்கு ஒரு பக்கம் உள்ளது, நான் மறு பக்கத்தில் இருக்கிறேன். நான், “நான்—நான் ஒரு முறை வாக்களித்தேன்; அது கிறிஸ்துவுக்காகவே; நான் நிச்சயம் ஜெயிப்பேன்” என்று கூறினேன். அது உண்மை. புரிகிறதா? உங்களுக்கு ஒரு வாக்கு வந்து கொண்டிருக்கிறது. புரிகிறதா? தேவன் உங்களுக்காக வாக்களித்தார், பிசாசு உங்களுக்கு எதிராக வாக்களித்தான். இப்பொழுது, நீங்ள் எந்தவிதமாக வாக்களித்தீர்களோ அந்த வழியாகவே வெளிவருவீர்கள். 36 எனவே இப்பொழுது, நான் நினைப்பது என்னவெனில் இந்த நபர்…அது நரம்புதளர்ச்சி மட்டுமே என்றுதான் நான் நினைக்கப்போகிறேன். உன்னை ஒன்றும் குற்றப்படுத்தாமல் இருக்குமானால், நீ தொடர்ந்து சென்று, “சாத்தானே, என்னை விட்டுப் போ!” என்று சொல். தொடர்ந்து முன் செல். நீ தைரியமாக நின்று, தேவனுக்காக வாழ்வாயாக.

23327. இப்பொழுது. விவாகரத்துக்குப் பிறகு மறுபடியும் விவாகம் செய்துகொள்ள அனுமதி வழங்கும் ஏதாகிலும் ஒரு நிலைமை, (இப்பொழுது, இது ஒரு…என்று நான் காண்பேன். இதன் பேரில் இரண்டு மூன்று கேள்விகள் அடங்கியுள்ளன என்று நான் நினைக்கிறேன்.)— வேதத்தின்படியுண்டா? முன்பு விவாகமாகியிருந்து…இப்பொழுது விவாகமான நிலையில் இல்லாமல் இருந்தால், அது…மீண்டும் விவாகம் செய்து கொள்வதற்கென அனுமதி வழங்கும் விவாகரத்துக்கான ஆதாரம் ஏதாகிலும் உண்டா? நான்—நான் (வா-ங்-கி-…) இதற்கான விடையைப் பெற (ஆம்!) நான் அந்த…ஒலிநாடாவை வாங்கிக்கொள்வேன். உங்களுக்கு மிக்க நன்றி. நான் ஞாயிறன்று இதை எதிர்பார்ப்பேன். 37 பாருங்கள் இப்பொழுது, இதை நான் கூறியுள்ளேன், நீங்கள் பாருங்கள். வேண்டாம்—வேண்டாம்…நான்—நான்…இவையெல்லாம் நேராக்கப்படும் ஒரு நிலையை (உங்களுக்கு புரிகிறதா?) நாம் அடையும் வரைக்கும்…நாம்…இப்பொழுது இதை நான் விட்டுவிடுகிறேன். இப்பொழுது, நீங்கள் இதை ஞாபகம் கொள்ளுங்கள், அது தேவனுக்கு சித்தமானால், நான் திரும்பி வந்தவுடன். அடுத்த முறை நான் வரும்போது, கர்த்தருக்குச் சித்தமானால், இந்த பொருளின் பேரில் நான் பிரசங்கிப்பேன். புரிகிறதா? இப்பொழுது…அப்பொழுது, அதை நாம் எப்படியும் ஒலிநாடாவில் பதிவு செய்வோம். அது—அது நோக்கப்பண்ணினால், அது நோகப்பண்ணும்; அது தெளிவாக்கினால், அது தெளிவாக்கும். ஆனால் நீங்கள் தைரியமாயிருங்கள். புரிகிறதா?.

24328. அன்புள்ள சகோதரன் பிரான்ஹாமே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட ஒருவருக்கு அடையாளங்கள் தொடராமல் இருப்பது சாத்தியமா…நாம் வருங்காலத்தில் ஆவியானவர் நியமித்துள்ள சூழ்நிலைகளுக்காக காத்திருக்க வேண்டுமா? 38 இப்பொழுது, இது ஒரு குழப்பமான கேள்வி போன்று தொனிக்கக் கூடும், ஆனால் இது ஒரு நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி. பார்த்தீர்களா? இப்பொழுது, இங்கு எனக்கு ஒரு சிறு தருணத்தை அளிக்கிறது, அதாவது அது என்னுடைய—என்னுடைய குடும்பத்தோடு இப்பொழுது இங்கே கிரியை செய்து கொண்டிருப்பதையும் நான் கண்டறிகிறேன் (புரிகிறதா?) நான் உங்களை, என்னுடைய குடும்பமாக, நாம் இருக்கும்…நமது ஒலிநாடாக்கள் செல்லுகின்ற உலகிலுள்ள குடும்பமாகவே பொருட்படுத்திக் கூறுகிறேன்.

2539 இப்பொழுது, என் சபையோரில் பெரும்பாலார் பெந்தெகொஸ்தேயிலிருந்து வந்த ஜனங்களாயுள்ளனர், ஏனெனில் ஸ்தாபனங்களின் வரிசையில் பெந்தெகொஸ்தே தான் நாம் கொண்டுள்ள கடைசி செய்தியாய் உள்ளது. என்னைப் பொறுத்தவரையில், மற்ற ஸ்தாபன சபைகளைக் காட்டிலும் நான் இவர்களுடன்தான் அதிகமாக நிச்சயம் இணங்குகிறேன். நான் பெந்தெகொஸ்தேயைப் பற்றிக் கொண்டிருப்பதன் காரணம் என்னவெனில், அதுவே…பின்னால் வந்த செய்தி. நான் கிறிஸ்துவினிடம் கொண்டு வரும் என்னுடைய மனமாற்றமடைந்த யாவரையும், நான் அவர்களை ஏதோ ஒரு பெந்தெகொஸ்தே சபைக்கு செல்லும்படி அங்கு வழி நடத்துகிறேன். இருப்பினும் நான் எல்லா வகையிலும், எனக்குத் தெரிந்த வரையில், அவர்கள் ஸ்தாபனமாயிருப்பதால், அவர்கள் வேதத்தின்படி தவறு செய்கின்றனர் என்றும், ஒளியை அவர்களுக்கு முன்பாக வைத்தபோது அந்த ஒளியில் நடக்க அவர்களுக்குப் பிரியமில்லை என்றும் அவர்களைக் குற்றஞ்சாட்டியிருக்கிறேன். ஆனால் அதேசமயத்தில், உலகிலுள்ள எந்த ஒரு சபையையாவது தெரிந்துகொள்ள இன்று என்னிடம் கூறப்பட்டால், ஸ்தாபன சபைகளைப் பொறுத்தவரையில் நான் பெந்தெகொஸ்தே சபையையே தெரிந்து கொள்வேன். ஆனால் தனிப்பட்ட நபர்கள், ஆண்களும் பெண்களும் என்று வரும்போது, உத்தமமான கிறிஸ்தவர்கள் எல்லா ஸ்தாபனங்களிலும் உள்ளனர்: மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லுத்தரன்கள் போன்றவர். ஆனால் நான் ஜனங்கள் இருக்கின்ற இந்த முறைமைகளைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன், தனிப்பட்ட நபரைக் குறித்தல்ல, ஆனால் இந்த ஜனங்கள் தங்களுடைய ஸ்தாபனத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் முறைமைகளளைக் குறித்தேயாகும். இதை அவர்கள் இப்பொழுது தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் (புரிகிறதா?), அதாவது நான்—நான் நினைக்கிறேன் ஜனங்கள்… அவர்கள் ரோமன் கத்தோலிக்கர், யேகோவா சாட்சி, வைதீக யூதர், யாராயிருந்தாலும், எனக்குக் கவலையில்லை; ஆனால் தனிப்பட்ட நபர்களான அவர்களையும் இரட்சிப்பதற்கென கிறிஸ்து மரித்தாரே.

2640 இப்பொழுது, நான்…அவர்கள் இருக்கின்ற அவர்களுடைய முறைமைகளுடன் இணங்குகையில்… மெதோடிஸ்டுகள், அல்லது பிரஸ்பிடேரியன், அல்லது இன்னும் அது போன்ற ஸ்தாபனங்களில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பாப்டிஸ்டு ஸ்தாபனத்திலும் உண்டு என்று நான் நம்புகிறேன். அவர்கள் கிறிஸ்தவர்கள், உண்மையான விசுவாசிகள். ரோமன் கத்தோலிக்க சபையிலும், கர்த்தரை உண்மையாக நேசிக்கும் உத்தமமான ஆண்களும் பெண்களும் உள்ளனர். அவர்கள் தவறாயிருக்கும்படிக்கு அந்த சபையை சேர்ந்துகொள்கிறதில்லை, அவர்கள் சரியாயிருக்கவே சேர்ந்துகொள்கிறார்கள். ஆனால் அங்குள்ள அந்த முறைமையோ அவர்களுடைய சிந்தையை தவறான வழியில் நடத்துகிறது. நான் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கும் ஒரு நேரம் எப்பொழுதாகிலும் வருமானால், உங்களை நான் வஞ்சித்து ஒரு முறைமைக்குள் உங்களைக் கொண்டு வந்துவிட்டவனாயிருப்பேன்; அது எனக்கு தூரமாயிருப்பதாக. உங்களை வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவினிடம் வழிநடத்த தேவன் என்னை சரியான மன நிலையில் வைப்பராக. அந்த வார்த்தையோடு நிலைத்திருங்கள். புரிகிறதா?

2741 ஆனால் இப்பொழுது, இங்குள்ள இந்த நபர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருந்தும் அடையாளங்கள் தொடராமலிருக்க சாத்தியம் உண்டா என்னும் கேள்வியைக் கேட்டிருக்கிறார். இப்பொழுது அது…நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாயிருந்தால், நீங்கள்…அதாவது நீங்கள் முதலில் ஒரு மானிடனாக சாதாரண மானிடாகப் பிறந்து… இப்பொழுது, நான் இதற்கு ஒரு—ஒரு— சிறுவர்களுக்கு உரைப்பதுபோல் விடையளிக்கிறேன். ஆனால் நீங்கள் சாதாரண ஒரு மானிடனாகப் பிறந்தால், ஒரு சாதாரண ஒரு மானிடன் செய்யும் கிரியைகளை நீங்கள் செய்வீர்கள். அது சரியா? 42 நீங்கள் ஒரு மானிடனாகப் பிறக்கும்போது, மானிட இயல்பு உங்களைத் தொடருகிறது. நீங்கள் ஒரு மரத்தில் வசித்து, ஒரு பறவையைப் போல, அல்லது—அல்லது—அல்லது அதைப் போன்ற எதோ ஒன்றாக பறந்து செல்ல முயற்சி செய்யமாட்டீர்கள். அது—அது மானிட இயல்பு அல்ல, அது மனிதனின் சாதாரண செயல் அல்ல. ஒரு மனிதனின் வழக்கமான செயல், அவன் வேலை செய்து…மணம் புரிந்து, குடும்பம் அமைத்து, இப்படிப்பட்ட செயல்களைப் புரிவதே. அது வழக்கமான, வழக்கமான மானிட இயல்பு, ஏனெனில் நீங்கள் அந்தவிதமாக பிறந்திருக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாகப் பிறந்திருந்தால், தேவனுடைய ஆவியினால் பிறந்திருந்தால், நீங்கள் கிறிஸ்துவின் தன்மைகளைப் பெற்றுக்கொண்டிருப்பீர்கள். உங்களுக்குப் புரிகிறதா?

2843 இப்பொழுது, ஒவ்வொரு நாளும் இங்கு உட்கார்ந்துகொண்டு போதகத்தைக் கேட்கும் ஜனங்கள் கொண்ட இந்த சபையோரை, நாம் இன்று காலையில் எடுத்துக் கொள்வோமானால், நீங்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள், ஏனெனில் நீங்கள்—நீங்கள் வித்தியாசப்பட்டவர்கள், நீங்கள்—நீங்கள் வித்தியாசமாக உண்டாக்கப்பட்டவர்கள், உங்களுக்கு—உங்களுக்குப் பசி வெவ்வேறு விதமாக இருக்கும்; நீங்கள்—நீங்கள் வித்தியாசமாக உண்கிறீர்கள்; ஆனால் நீங்கள் அனைவரும் உணவே உண்கிறீர்கள். ஆனால் இப்பொழுது… ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் காண்பதற்கு மற்றவரைப்போல இருந்தாலும், நீங்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்கள். கிறிஸ்தவர்களும் அதேக் காரியத்தைச் செய்கிறார்கள். நீங்கள், “இப்பொழுது, எல்லாரும்…” என்று கூற முடியாது. எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா, எல்லாரும் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்களா, எல்லாரும்…? புரிகிறதா? 44 இந்தக் காரியங்களை நீங்கள் கவனிக்க வேண்டும், ஏனெனில் ஒரு கிறிஸ்தவன் அந்த—அந்த பழக்கங்களைப் பெற்றுக்கொள்கிறான்; அவர்கள் ஒரு கிறிஸ்தவனைப் போல் வாழ்கின்றனர். இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்” என்றார். கவனியுங்கள்: “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள் அல்லது…சாவுக்கேதுவானவைகளைக் குடிப்பார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்.” மேலும்—மேலும் இவைகள் உண்மையில் கிறிஸ்தவர்களைத் தொடருகின்றன.

2945 இப்பொழுது, இந்த நபர் மிகவும் நல்ல ஒரு காரியத்தை இங்கு கூறியிருக்கிறார்: “…அல்லது நாம் வருங்காலம் வரைக்கும், அல்லது பரிசுத்த ஆவியானவர் நியமித்துள்ள சூழ்நிலைகளுக்காக காத்திருக்க வேண்டுமா?” அது எனக்குப் பிரியம். பார்த்தீர்களா? இப்பொழுது உங்களுக்கு அதன் கருத்து புரிகிறதா? அதை பரிசுத்த ஆவியானவர் நியமிக்கும்போது! தேவன் காரியங்களை நியமிக்கிறார். அங்கு, பெந்தெகொஸ்தே ஜனங்கள் மட்டும் முயற்சி செய்வார்களானால் (இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்கள்), எல்லோரும் அந்நிய பாஷைகள் பேச வேண்டும் என்னும் உங்கள் கருத்தை வலியுறுத்துவதன் பேரில் நான் ஏன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அது சரியென்று எனக்குத்—எனக்குத் புரியவில்லை, ஏனெனில் அது… எனக்கு செர்ரி பை பழ பணியாரம் பிடிக்கும், ஆனால் தேவை இல்லை, நான் ஒரு மானிடன், ஆனால் நான் உங்களிடம், “நீங்கள் செர்ரி பை பழ பணியாரம் சாப்பிடாவிட்டால், நீங்கள் மானிடர் அல்ல” என்று கூற முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை. புரிகிறதா? செர்ரி பை பழ பணியாரம் சாப்பிடுவது என்பது ஒரு மானிடனின் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். புரிகிறதா? அதன் பேரில் நீங்கள் என்னிடம் இணங்காமல் இருக்கலாம். ஆனால்—ஆனால் அது—அது உண்மை. இப்பொழுது, ஒருவன் இதை புசிக்கிறான், மற்றவன் வேறொன்றை செய்கிறான்.

3046 இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் இந்த உத்தியோகங்களை நியமிக்கிறார், ஆனால் நீங்கள் அதற்கு உள்ளே உங்களை உந்திக் கொள்ள முயற்சித்தால்… நீங்கள் செர்ரி பை பழ பணியாரத்தை உண்ண வேண்டும் என்று நான் உங்களிடம் கூறி, ஆனால் செர்ரி பை பழ பணியாரத்தை உண்பது உங்களுக்கு வாந்தி உண்டாக்கினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் வாந்தி எடுத்து, மறுபடியும் செர்ரி பை பழ பணியாரத்தை உண்டு, மறுபடியும் வாந்தி எடுப்பீர்களா, மேலும் …?… புரிகிறதா? நீங்கள்—நீங்கள்—நீங்கள் உங்களுக்கே கேடு விளைவித்துக்கொள்கிறீர்கள், ஆவிக்கு முரணான ஏதாவதொன்றை நீங்கள் செய்ய உங்களை நிர்ப்பந்தம்பண்ணிக் கொள்ளும்போதும் நீங்கள் அந்தவிதமாகவே செய்ய முயற்சிக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் அவர் ஒரு குறிப்பிட்ட காரியத்தை உங்களுக்கென நியமித்திருக்கிறார். உங்களுக்கு அது புரிகிறதா? புரிகிறதா? 47 நீங்கள் ஆவியினால் நிறையப்படும்போது, எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த அடையாளங்களில் இது ஒன்றாகும்: அதாவது நீங்கள் கிறிஸ்துவில் மிகவும் அன்புகூர்ந்து அவர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று விசுவாசிப்பீர்கள். புரிகிறதா? அதுவே பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள் என்பதன் அத்தாட்சியாகும். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தினால் நிறைந்திருக்கும், மேலும்—மேலும் ஓ, என்னே, ஒவ்வொரு காரியமும் முன்பு இருந்ததைவிட (புரிகிறதா?) வித்தியாசமாயிருக்கும். அதுதான் பரிசுத்த ஆவி.

3148 இப்பொழுது, இந்த வரங்கள் பரிசுத்த ஆவியில் உள்ளன. இப்பொழுது, இன்று காலையில் இங்குள்ள இந்த சபையோர், இந்த… இது நல்ல, ஜனங்களால் நிறைந்துள்ள நெருக்கமான சபை…(உண்மையாகவே, அறைகள், ஜனங்களால் நிறைந்து நிரம்பி வழிகின்றன.) ஆனால் இந்த…இது ஒரு…(இந்த கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கப்போகிறோம் என்று அறிவிக்காமலேயே இந்த ஜனங்கள் வந்துள்ளனர்.) கவனியுங்கள், இங்குள்ள ஒவ்வொரு நபரும் பரிசுத்த ஆவியுடன் பரிபூரணமாக இசைந்து, நீங்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, பரிசுத்த ஆவியுடன் இசைவாக இணைந்திருப்பீர்களானால், இந்த அடையாளங்கள் எல்லா நேரங்களிலும் உங்கள் மத்தியில் பெருகிக்கொண்டேயிருக்கும் (புரிகிறதா?); அது தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கும். ஆனால் குழப்பம் இருக்கும்போது, நாம் உட்கார்ந்திருக்கும் இந்த இடத்தில், கருத்து வேற்றுமை இருக்குமானால், பரிசுத்த ஆவியால் அசைவாட முடியாது. உங்களுக்குப் புரிகிறதா? அது ஜனங்களின் மூலமாய் இயங்க முடியாது. புரிகிறதா?

3249 அங்கே, நான், “நீங்கள் ஒவ்வொருவரும் அந்நிய பாஷையில் பேசினீர்களா? என்று கேட்டால், “ஆம்.” “பாருங்கள், நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள்.” “நீங்கள் அந்நிய பாஷையில் பேசினீர்களா?” “இல்லை.” 50 “அப்படியானால் நீங்கள் அதை பெற்றுக்கொள்ளவில்லை.” இப்பொழுது நான் என்னை ஒரு நியாயாதிபதியாக்கிக்கொள்கிறேன். தேவனே இந்த காரியங்களுக்கு நியாயாதிபதியாயிருக்கிறார். 51 ஆனால் கவனியுங்கள், இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்” என்று கூறினார். புரிகிறதா? விசுவாசிக்கிற குழுக்கள், அவர்கள் மூலமாக பரிசுத்த ஆவியின் முழு சுபாவமும் பாய்ந்தோடுகிறது, அவர்கள் அனைவரும் அன்பினால் நிறைந்தவர்களாய் உள்ளனர், சந்தோஷத்தினால், மேலும்—மேலும் உண்மையாகவே நிரப்பப்பட்ட ஒரு பெரிய தேவனுடைய ஜனக் கூட்டமாக இருக்கின்றனர். பாருங்கள், அதுதான் பரிசுத்த ஆவி. அப்பொழுது அங்கு, அவர்கள் தங்களுக்கு அந்நிய பாஷைகள் உண்டாகும் தருணத்தில் அந்நிய பாஷைகள் பேசுகின்றனர் (ஏன்), அல்லது அதற்கான அவசியம் உள்ளபோது, அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசுகின்றனர். ஒரு தீர்க்கதரிசனம் உண்டாகுமானால், அதை உரைக்கின்றனர். ஓ, அது ஒவ்வொரு முறையும் மிகவும் பரிபூரணமாக அமைந்துள்ளது.

3352 இன்று காலையில் நேர்முகப் பேட்டிக்காக உள்ளே வந்த அந்த பதினைந்து அல்லது இருபது பேர்களைக் குறித்து சொல்லப்பட்ட ஒரு வார்த்தையும் தவறாகப்போகவில்லை, அவர்கள் முற்றிலும் அந்நியர்கள். என்ன…பரிசுத்த ஆவியானவர் அங்கே ஆழமாய் ஆய்ந்து, அவைகளை அறிந்துகொண்டு, அவைகளை வெளியேக் கொண்டு வந்து, அதை அவர்களிடம் கூறினார். பாருங்கள், புரிகிறதா? அங்கு ஒரு பிழையும் இருக்கவில்லை. இது என்ன, இது என்னவாயிருந்தது, அது என்னவாய் உள்ளது, இதற்கு என்ன செய்யப்பட வேண்டியதாய் உள்ளது, அதைப் போன்ற காரியங்களை, அவர்கள் என்ன செய்துள்ளார்கள், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் சரியாக அவர்களுக்குக் கூறினார். புரிகிறதா? அது அப்படியே…அது ஒழுங்கில் அமைத்தது. இப்பொழுது, அவர்கள் அதன்படி செயல்பட வேண்டும்.

3453 அன்றொரு நாள் இரவு நான் ஒரு தம்பதிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன், நாங்கள் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு—ஒரு வீட்டுலே நான் இருந்தேன், அப்படியே—நாங்கள் மேசையைக் சுற்றிலும் உட்கார்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது திடீரென்று பரிசுத்த ஆவியானவர் எங்கள் மத்தியில் இறங்கினார், அப்பொழுது நான் அங்கிருந்த ஒருவரிடம், “நான் ஒரு குறிப்பிட்ட மனிதனைக் காண்கிறேன், மேலும் அவர்கள்…அவர் சில காரியங்களைக் குறித்து தன்னுடைய மனதில் குழப்பமுற்றிருக்கிறார்,” மேலும் நான், “நானோ பகுத்தறிதலில் அது குழப்பம் என்பதைக் கண்டேன்” என்றேன். நான், “இப்பொழுது, அது இப்பொழுது இங்கேயே உள்ளது” என்றேன். நான், “நீர் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர் என்று எனக்குத் தெரியும்” என்றேன். நான் சுற்றி வளைத்து, அந்த மனிதனின் மனதில் இருந்த ஒவ்வொரு கேள்விக்கும் அவரிடம் பதில் சொன்னேன், அவரைத் தவிர…வேறு யாருக்குமே நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று தெரியவில்லை. பார்த்தீர்களா? ஆனால் அவர் அதைப் புரிந்துகொண்டார். அது குறித்து யாவும் என்னவாயிருந்தது என்பதை அவர் அறிந்துகொண்டார். உங்களுக்குப் புரிகிறதா? அது அவருக்கு என்னவாயிருந்தது? அவருடைய மனதில் என்ன இருந்தது என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார் என்று அவருக்குக் காண்பித்து, அவருக்கு உறுதிப்படுத்தினது. உங்களுக்குப் புரிகிறதா? அதை நான் அங்கிருந்து மற்றவர்களுக்கு கூற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நான் கூறுவதை இப்பொழுது அந்த மனிதன் இங்கு கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்பொழுது, அது உண்மை. இப்பொழுது, அது எப்படியென்பதை நீங்கள் பார்த்தீர்களா? அது ஒரு உறுதிப்பாடு.

3554 இப்பொழுது, முழு சபையும் இப்படி இசைவாய் செயல்பட்டால், அப்பொழுது நமது மத்தியில் நாம் பிசாசுகளைத் துரத்துவோம், சர்ப்பங்களை எடுப்போம், சாவுக்கேதுவானவைகளைக் குடிப்போம், எல்லாவிதமான காரியங்களும் நடந்து கொண்டிருக்கும். ஆனால் அதை தனிப்பட்ட நபர்களின் மேல் நீங்கள் கட்டாயப்படுத்த முயன்றால், அப்பொழுது நீங்கள் உங்களை…அது மறுபடியும் பெந்தெகொஸ்தேயாகிவிடுகின்றது. அப்பொழுது நீங்கள் பாபிலோன், குழப்பத்தை பெற்றுக்கொள்கிறீர்கள். உங்களால் அதை நியாயந்தீர்க்க முடியாது. புரிகிறதா? நமது இருதயங்கள் சந்தோஷத்தினாலும், மகிழ்ச்சியினாலும் நிறைந்திருக்கின்றன, ஓ, என்னே, பறவைகள் பாடுகின்றன, அந்த… எல்லாமே அருமையாக இருக்கும், என்னே, தேவனுடைய ஆவியினால் நிறைந்திருக்கும், நாம் இயேசுவில் மிகவும் அன்புகூர்ந்து, இரவு முழுவதும் ஜெபிக்க விரும்புகிறோம். 55 இப்பொழுது, இந்த கூட்டத்தை நான் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை, அல்லது என்னையும் உங்கள் முன்னிலையில் தர்மசங்கடத்தில் ஆழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் எதிர்பார்ப்பதோ, இன்று காலையில் நான் இக்கூட்டத்தில் யாருக்கெல்லாம் பரிசுத்த ஆவி உள்ளதென்று கேட்டால், ஒருக்கால் உங்களில் தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் உங்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதென்று கரங்களை உயர்த்தக்கூடும். அதன் பிறகு நான் உங்களுக்கு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதற்கான வேத அத்தாட்சியை கொடுத்தால், ஒரே, ஒரு வேத அத்தாட்சி; ஒன்றிரண்டு கைகளும் உயர்த்தப்படுமா என்பது எனக்கு சந்தேகம்தான். பாருங்கள், புரிகிறதா? முடிந்தால்…ஆனால் அவ்விதம் நீங்கள் செய்யும்போது (புரிகிறதா?), அந்த விதமான ஓரிடத்தில் உங்களை கட்டி விடுதல், நீங்களும் கூட உங்களுடைய சபையோரை புண்படுத்துகிறீர்கள். ஆனால் நீங்கள் அவர்களைக் குழந்தை பருவத்தை விட்டு பக்குவமடைந்த பருவத்துக்கு கொண்டு வர வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். புரிகிறதா?

3656 அன்றொரு நாள் இங்கே இருந்த, யாரோ ஒருவர் எழுதின கேள்வியைப்போல, ஜூனியர் ஜாக்சனைப் பற்றி ஏதோ ஒன்றைக் கூறினார்…அதைக் குறித்து ஏதோ ஒன்றைக் கூறினார். யாரோ ஒருவர் அங்கே சென்றாராம், அப்பொழுது அவர்கள், “நீர் ‘உபயோகமற்ற நபரிடத்திற்கு’ செல்கிறீர்” என்றனராம், அல்லது ஏதோ ஒன்று அல்லது அதைப்போன்று மற்ற ஏதோ ஒன்று. சகோதரன் ஜாக்சன்…ஏனெனில் சகோதரன் ஜாக்சன் சபையில், அவர்கள் சபையில் அந்நிய பாஷைகளில் பேச அனுமதிக்கின்றனர். எங்கெல்லாம் அவர்கள் ஆவியை உணர்ந்து அந்நிய பாஷைகளில் பேச விரும்புகிறார்களோ, அவர்கள் அதை செய்கின்றனர். பாருங்கள், அது சகோதரன் ஜாக்சனின் சபை. முற்றிலும் சரி. அதற்கு விரோதமாக, எனக்கு ஒன்றுமில்லை. சகோதரன் ஜாக்சன் என் சிறந்த நண்பர்களில் ஒருவர், அவர் உண்மையான தேவபக்தியுள்ள மனிதன், அவர் தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார், நாங்கள் சகோதரர். இப்பொழுது, அவர் என் செர்ரி பழ பணியாரத்தை புசிக்க வேண்டியதில்லை, என்னால் முடிந்தால்…அல்லது நானும் அவருடைய ஆப்பிள் பழ பணியாரத்தை புசிக்க வேண்டியது இல்லை (புரிகிறதா?), ஆனால் நாங்கள் இருவருமே பழ பணியாரத்தை புசித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இருவரும் இச்செய்தியை முற்றிலுமாக விசுவாசிக்கிறோம். அது சபையின் ஒழுங்கு. நான், “என் சபை ஒன்றாக வர முயல வேண்டுமென்று விரும்புகிறேன்” என்றேன். நான் கூறினேன்…இங்கு நாம் அதை செயல்படுத்த தொடங்கும்போது, அந்நிய பாஷையில் பேசுவது போன்றவை, நான் கூறினேன்…ஒருவர் என்னிடம், “இப்பொழுது, சகோதரன் பிரான்ஹாமே, இதெல்லாம் உண்மையானதுதானா?” என்று கேட்டார்.

3757 நான், “நான் நியாயாதிபதி அல்ல” என்றேன். நான், “உங்களிடம் என்னவென்று சொல்லுகிறேன், இதை நாம் ஓரிடத்துக்கு கொண்டு வருவோம். சிறிது காலம் இவ்விதமே இருக்க விட்டுவிட்டு, அதன்பேரில் அளிக்கப்படும் வார்த்தை வரும் வரைக்கும் இதை ஒரிடத்திற்கு கொண்டு வருவோம். அதன் பிறகு அதை கவனித்து வருவோம். அது பரிசுத்த ஆவியாக இருந்தால், அது வார்த்தையுடன் ஒத்துப்போகும்; இல்லையென்றால், அது ஒத்துப் போகாது” என்றேன். புரிகிறதா? அந்த ஒரு விதத்தில் மட்டுமே அது என்னவென்று உங்களிடத்தில் சொல்ல முடியும்; அப்பொழுது அது—அது தன்னை தானே நியாயந்தீர்த்துக்கொள்ளும். உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள், அது—அது பரிசுத்த ஆவியாக இல்லாமற்போனால், அது ஒழிந்துபோய்விடும், அது போய்விடும். புரிகிறதா? ஆனால் அது பரிசுத்த ஆவியாக இருக்குமானால், அது சாந்தமாக சரியாக ஒழுங்கைப் பின் தொடரும், ஏனெனில் அதுதான் அது; அது பரிசுத்த ஆவி தன் சொந்த ஒழுங்கில் செல்வதாகும்.

3858 இப்பொழுது, அந்நிய பாஷைகள் பேசுவது போன்றவைகளில், நீங்கள் ஒவ்வொருவரும் அந்நிய பாஷை பேச வேண்டுமென்று விரும்புகிறேன். நான் நிச்சயம் விரும்புகிறேன். அநேக சமயங்களில், நல்ல கிறிஸ்தவர்கள்… 59 நீங்கள் பாருங்கள், அது அந்த திட்டத்தில் இருந்தது என்று உங்களிடம் கூறினால்…நான் ஒருவரைக் கண்டேன்… திட்டம் அல்ல, என்னை மன்னிக்கவும், இன்று காலை நடந்த பேட்டியில். ஒரு நபர் (அவர்கள் இப்பொழுதும் இந்த கட்டிடத்தில் இருக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன்) அதாவது அவர்கள்… அந்நிய பாஷைகள் பேசும் விஷயத்தில்…அந்த நபர் உத்தமமான ஒருவர், உண்மையான ஒருவர், அவர்கள் சரியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதன் அத்தாட்சி அந்நிய பாஷை பேசுவதல்ல என்று நான் கூறினதை அவர்கள் கேட்டனர், அது அதுவல்ல, ஆனால் அந்நிய பாஷை பேசவோ அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கவோ தேவனிடம் கேட்கும்படி அந்த நபரிடம் நான் ஆலோசனை கூறினேன், ஏனெனில் அது அவர்களுடைய சுபாவம்.

3960 முதலாவதாக, நான் அந்த நபரிடம் சென்று அவர் பிறந்த இடத்தையும், அவர் எந்த அடையாளத்தின் கீழ் பிறந்தார் என்றும் அறிந்து கொண்டேன், அவருடைய பிறப்பு என்னவென்று கூற முடிந்தது. அவர்களுடைய இயற்கையான சுபாவம் எதுவோ, அது அவர்களை ஒரு குறிப்பிட்ட வழியில் அமைக்கிறது. அதன்பின்னர், அவர்கள் மறுபடியும் பிறந்தவுடனே, அவர்கள் இங்கு வேறொரு சுபாவத்தை அடைகின்றனர். அதன் பிறகு, நீங்கள் அந்த சுபாவத்துக்குள் ஊடுருவிப் பார்ப்பீர்களானால், அதாவது உள்ளில், உள்ளேயிருக்கும் மனச்சாட்சியில்… வெளிப்புற மனச்சாட்சி உங்களை ஒரு வழியில் நடத்துகிறது; அது உங்கள் இயற்கை பிறப்பு. அதன்பின்னர், அப்பொழுது அவர்கள் ஏதோ ஒன்றை உண்டாக்க அது அவர்களுக்கு எதை அளிக்கிறது? அது அவர்களை ஒரு பிளவுபட்ட நிலையில் வைக்கிறது. அப்பொழுது அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை. அவர்கள், “கர்த்தர் என்னை இதை செய்யச் சொல்லுகிறார்” என்பார்கள். 61 ஆனால் உள்ளேயிருப்பதோ, “ஓ, அது—அது—அது—அது வேத வாக்கியங்களுடன் ஒத்துப்போகிறது என்று எனக்குத்—எனக்குத் தெரியும்” என்கிறது. அவர்கள் அதை செய்யத் தொடங்குவார்கள், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, வெளிப்புறத்திலுள்ள சாத்தான் அதில் எல்லாவிதமான குறைகளையும் அவர்களுக்குக் காண்பிப்பான். அப்பொழுது அவர்கள், “நல்லது, நான் நினைக்கிறேன், நான்…” என்பார்கள். பாருங்கள், புரிகிறதா? அவர்கள் சாத்தானுக்கு செவி கொடுக்கின்றனர். புரிகிறதா? நீங்கள் உள்ளேயிருக்கிற அந்த ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும், உங்களுக்கு உள்ளேயிருப்பதுதான் வேதப்பிரகாரமானது. சாத்தானை எங்கேயும் நிற்கவிடாதீர்கள். அது… அங்கு நின்றுகொண்டு உங்களை அந்தவிதமாக தவிடுபொடியாக்கிக் கொண்டிருப்பதே அவனுடைய கடமை. ஆனால் அவனுக்குச் செவிகொடுக்காதீர்கள். 62 ஆனால், அந்த நபரிடம், நான் அவர்களிடம் கூறினேன். அவர்கள், “இப்பொழுது பாருங்கள், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட நிச்சயத்தை மட்டும் உடையவனாயிருந்தால்” என்று கூறினர். புரிகிறதா? ஒரு பண்புள்ள நபர், பரிசுத்த ஆவியுடன் உத்தமமான விசுவாசமுள்ள நபர், ஆனால் அவளுக்காக, “பிதாவே, நான் ஏதாவது ஒன்றின் மேல் நிற்க இதை எனக்களியும்” என்று கூறுவது நலமாயிருக்கும்.

4063 இப்பொழுது, நான் அதை அவ்விதம் போதித்தால், அந்த நபர் பெற்றுக்கொண்டதை பெறாமலேயே ஜனங்கள் அதை பற்றிக்கொள்வார்கள். புரிகிறதா? பரிசுத்த ஆவியானவர் அந்நியபாஷைகளில் பேசுகிறார், ஆனால் அது அந்நிய பாஷையில் பேசுவதற்கு முன்பு நீங்கள் முதலில் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க வேண்டும். இப்பொழுது உங்களுக்கு அது புரிகிறதா? எனவே, நீங்கள் அந்நிய பாஷையில் பேசும் வரத்தை மட்டும் பிடித்துக்கொண்டால்… 64 இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அது ஒரு உண்மையான வரமாயிருக்கலாம்; அது உங்களுக்குள் பரிசுத்த ஆவி அந்நிய பாஷையில் பேசுவதாயிருக்கலாம், இருப்பினும் நீங்கள் இழக்கப்பட்டு நரகத்துக்கு போகக் கூடும். வேதம் அவ்வாறு உரைத்துள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அதன் பேரில்தான் வேதவாக்கியத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? அதற்கான வேதவசனம் உங்களுக்கு வேண்டுமானால், உங்கள் கைகளையுயர்த்துங்கள். “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும்…” அது சரியா? அர்த்தம் உரைக்கக் கூடியதும் அர்த்தம் உரைக்கக் கூடாததுமாகிய, இரண்டுமே, உண்மையான பரிசுத்த ஆவி பாஷைகள். “நான் ஒன்றுமில்லை,” பாருங்கள், மற்றது அதனுடன் இணைந்திருந்தாலொழிய. இதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் (புரிகிறதா?), எனவே இது இல்லாமல் அதற்குப் பிறகு அதை அடைய வேண்டாம். இதை முதலில் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது அது உண்மையாகவே அதைப் பின்தொடரும்.

4165 இப்பொழுது, மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது. சூரியன் தீயோர் மேலும் நல்லோர் மேலும் பிரகாசிக்கிறது. பயிரை முதிர்வடையச் செய்ய மழை பெய்கிறது; அதே மழை, களையையும் கூட முதிர்வடையச் செய்கிறது. பரிசுத்த ஆவி ஒரு கூட்டம் ஜனங்களின் மேல் விழுந்து, அந்நிய பாஷை பேசி, அதை உண்மையாக்கக் கூடும், அது ஜனங்களின் மத்தியில் படர்ந்து, அவர்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும்படி செய்து, அது உண்மையாயிருக்கக் கூடும். அது முற்றிலும் உண்மை! 66 நீங்கள் ஒரு—ஒரு மந்திரவாதியிடம் அல்லது பிசாசு கருவியாக உபயோகித்து அவன் மூலம் பேசும் ஒருவனிடம் செல்வீர்களானால், அவர்கள் முற்றிலும் உண்மையான ஒன்றைக் கூற முடியும். சவுலினிடத்தில் பேசின எந்தோரின் மந்திரவாதியைப் பாருங்கள். அது முற்றிலும் உண்மையாயிருக்கக் கூடும்; இருப்பினும் அதுவல்ல அது. அவர்கள் மந்திரவாதிகள். அந்நிய பாஷைகளில் பேசுகின்றனர், பிசாசுகள் அந்நிய பாஷைகள் பேசி, அந்நிய பாஷைகளில் எழுதுவதை நான் கண்டிருக்கிறேன். அது எந்தக் காரியத்தையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் உண்மையான காரியம் மீண்டும் அந்த வார்த்தையே. அந்த வார்த்தைக்கு திரும்பி வாருங்கள்! 67 எனவே, நீங்கள் வார்த்தை இல்லாமலே இவைகளைச் செய்யக்கூடும். ஆனால் நீங்கள் வார்த்தையைப் பெற்றுக்கொண்டு, அது இதை செய்யும்போது, அப்பொழுது அது அப்படியே நிறைவேறுவதைக் கவனியுங்கள், அதுவே சரியான காரியம். புரிகிறதா? அப்பொழுது நீங்கள் சரியாக ஒழுங்கில் இருக்கிறீர்கள்.

4268 ஆம், பரிசுத்த ஆவியானவர், அவருடைய தெய்வீக ஞானம் நியமித்துள்ளபடியே இந்த ஜனங்களை உபயோகிக்கிறார். ஆனால் முதலாவது காரியம்… 69 இப்பொழுது என்ன? இங்கு ஒரு நிமிடம் உங்களுக்கு ஒரு சிறு திரித்தலை நான் அளிக்கட்டும். நான், “எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள்?” என்று கேட்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் எல்லோருமே உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்கள். நான், “சரி, நீங்கள் பெற்றிருக்கிறீர்களா என்று பார்க்கப்போகிறேன்” என்று கூறுவதாக வைத்துக்கொள்வோம். பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தவர்கள் நகரத்தில் நடக்கும் அருவருப்புகளினிமித்தம் இரவும் பகலும் பெருமூச்சுவிட்டு கதறி அழுதனர் என்று வேதம் உரைத்துள்ளது. இப்பொழுது, எத்தனை கரங்கள் உயரும்? உங்களில் எத்தனை பேர் தேவனுடைய வல்லமையினால் நிறைந்து, மகிழ்ச்சியினால் பொங்கி, இரவில் இளைப்பாற முடியாமல், இழக்கப்பட்ட ஜனங்களுக்காக பரிதபித்து, அருவருப்புகளின் நிமித்தம் இரவும் பகலும் கதறி அழுகிறீர்கள்? நீங்கள் அவ்வாறு செய்யமாட்டீர்கள்…புரிகிறதா? நகரத்தில் அப்படிப்பட்ட யார் இருக்கின்றனர்? அப்படிப்பட்டவர் எத்தனை பேர் சபையில் இருக்கின்றனர்? அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சியாயிருந்தது என்று வேதம் உரைத்துள்ளதது.

4370 அவர் அடையாளம் போடுகிற தூதர்களிடம் (எசேக்கியல் 9-ம் அதிகாரம், அது சரி), அவர், “எடுத்துக்கொண்டு…நீ நகரம் எங்கும் உருவப் போய் அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு. மீதியானவர்களை, சங்காரத் தூதன் மீதியானவர்களை சங்கரித்து கொன்று போடட்டும்” என்றார். அவர்கள் எத்தனை அங்கத்தினர்களாயிருந்தாலும் அவர்கள் என்ன செய்திருந்தபோதிலும், அவர், “போடு…” என்றார். அப்பொழுது கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்து வெள்ளையங்கி தரித்திருந்த ஒரு புருஷன் (அது பரிசுத்த ஆவியை பிரதிநிதித்துவப்படுத்தியது) புறப்பட்டுப் போய் நகரத்திற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டு அழுகிற எல்லார் மேலும் அடையாளம் போட்டான். இப்பொழுது, நீங்கள் கூறலாம்…அவர் மேலும் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள். “முதியோரையும், வாலிபரையும் கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் எல்லாரையும் சங்கரித்துக் கொன்று போடுங்கள்!” என்றார். குழந்தைகளையும் கூடவா? ஆம்! 71 யோசுவா கானான் தேசத்துக்குள் பிரவேசித்த போது, அவன், “நீங்கள் யாரையும் உயிரோடுவிடாதீர்கள். அது ஒரு சிறு குழந்தையாயிருந்தாலும், ஒரு சிறு அமலேக்கியன், அல்லது ஒரு எமோரியனாயிருந்தாலும், அதைக் கொன்றுபோடுங்கள்! அவன் வளர்ந்து பெரிய அமலேக்கியன் ஆவான் என்பதை, ஞாபகம் கொள்ளுங்கள்; அவன் பாளயத்தை அசுசிப்படுத்துவான்” என்றான். அது போன்று தேவனுடைய வசனத்துடன் இணங்காத சிறு காரியங்கள் வரும்போது, அந்த காரியத்தை ஒழித்துவிடுங்கள். அது எந்த ஸ்தாபனத்தை சேர்ந்ததாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. 72 நீங்கள், “பாருங்கள், அவர்கள் நல்லவர்கள்…” எனலாம். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை! அவர்கள் அந்த வார்த்தைக்கு முரணாயிருப்பார்களானால், அந்த காரியத்தை உங்களை விட்டு அகற்றிவிடுங்கள். அது வளருகின்ற ஒரு சிறு அமலேக்கியன். காண்பதற்கு அழகாகவும் களங்கமில்லாதவனைப் போவும் காணப்படலாம்; அது சரியாயுள்ளது போல் காணப்படலாம், ஆனால் அதனுடன் எந்த தொடர்பும் கொள்ளாதீர்கள். நீங்கள் அதிலிருந்து விலகியிருங்கள். 73 “பாருங்கள், சகோதரன் பிரான்ஹாமே, நான்—நான் இங்கே போகிறேன், ஏனென்றால்…பாருங்கள், நான்…இல்லை.” நீங்கள் இதை மட்டும் ஞாபகம் கொள்ளுங்கள், எந்த அமலேக்கியனானாலும், அது வார்த்தையை மறுதலிக்கிற எதுவாயிருந்தாலும், அதை விட்டு விலகியிருங்கள்; அதனுடன் யாதொரு சம்பந்தமும் கொள்ளவே வேண்டாம்! அது உண்மையென்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அது நிச்சயமாக உண்மையே. புரிகிறதா? அதைவிட்டு விலகியிருங்கள்!

4474 நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டு அழுகிறவர்கள்…நீங்கள் அதை எங்கு காண்கிறீர்கள்? அந்நிய பாஷைகளில் பேசுகிற பத்தாயிரம் பேர்களில் உண்மையில் பாவத்துக்காக பாரப்பட்டு ஒருவராவது… ஒரு மணி நேரம் கூட ஜெபிக்க முடியாதவர்களை நான் உங்களுக்கு காண்பிக்க முடியும். ஆனால் வேதம் அதை உரைத்துள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா… நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் மட்டும் அடையாளம் போடு என்றுதானே? அதை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? நிச்சயமாக. அது ஜனங்களை அடையாளமிடுவதற்காக புறப்பட்டு வருகிற பரிசுத்த ஆவியாயிருந்தது, அவர் சங்காரத் தூதனிடம், “புறப்பட்டுப் போய், நெற்றிகளில் அடையாளமில்லாத எல்லாரையும் சங்கரித்துக் கொன்று போடு” என்றார். தேவனுடைய அடையாளம் பரிசுத்த ஆவி, அதுதான் தேவனுடைய முத்திரை. 75 இப்பொழுது, அவ்வளவு அக்கறை கொண்டுள்ள ஜனங்கள் எங்கே? ஜனங்களாகிய நீங்கள் சபையில் மேலும் கீழும் குதித்து அழுவதை என்னால் கேட்க முடியும்; கூச்சலிட்டு கட்டிடம் முழுவதும் ஓடுகின்ற மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும்; தீர்க்கதரிசனம் உரைத்து, அது நிறைவேறுகின்ற மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும்; அந்நிய பாஷைகள் பேசுகிறவர்களையும், மற்றும்—மற்றும் கட்டிடத்தில் மேலும் கீழுமாக ஓடுகிறவர்களையும், உண்மையாகவே காரியங்களுக்கு அர்த்தம் உரைத்து, அது நிறைவேறுகின்றதை மக்களாகிய உங்களுக்கு என்னால் காண்பிக்க முடியும்; ஆனால் நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டு அழுகிற நபர் எங்கே? அந்த பாரப்பட்ட ஆத்துமா எங்கே? நீங்கள் அதன் பேரில் புதிதாக தொடங்கலாம். நான் கூறுவது விளங்குகிறதா?

4576 இப்பொழுது, என்னால் முடிந்த அளவுக்கு ஜனங்களாகிய உங்களுக்கு நான் எடுத்துக் கூறி ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை நடத்துவதுபோல் உங்களை நடத்தி வந்திருக்கிறேன். நீங்கள் என் பிள்ளைகள்; நான் பிரசங்கிக்கும் இந்த சுவிசேஷத்தின் மூலம் உங்களை நான் கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்தேன். புரிகிறதா? நீங்கள் முற்றிலும் முதிர்ந்த பிள்ளைகளாக, அதாவது—அதாவது பிள்ளைகளாக வேண்டுமென்று நான்—நான்—நான் விரும்புகிறேன். பவுல் கூறினவண்ணமாக, அந்த நாளில் உங்களை நான் “ஒரு கற்புள்ள கன்னியாக” கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்க நான் விரும்புகிறேன். உங்கள் இருதயம் “ஆமென்” என்று சொல்லி ஆமோதிக்காதது எதுவும் அந்த வார்த்தையில் கிடையாது. 77 பாவம் பெற்றிராத…நிச்சியமாகவே நீங்கள் தவறான காரியங்களைச் செய்வீர்கள், ஆனால் மற்றொன்று, முதலாவது காரியம் உங்களை கண்டிக்கும்போது, “பிதாவே, என்னை மன்னியும்” என்கிறீர்கள்.

4678 இதை நான் கூறப்போகிறேன். சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு நபரை நான் உற்று நோக்கினேன். அன்றொரு நாள் ஒரு அருமையான வாலிபப் பையனால் இது என்னிடத்தில் கேட்கப்பட்டது. நாங்கள் அணில் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். அன்று காலையில் எனக்கு ஐந்து அணில்கள் கிடைத்தன; அந்த பிற்பகலுக்காக ஒன்றை நான் விட்டுவிட்டேன். கென்டக்கி நாட்டில் நீங்கள் ஆறு அணில்களை மட்டுமே சுட்டு எடுத்துக்கொள்ளலாம்; அதுதான் அங்குள்ள வரம்பு. எனவே இந்த குறிப்பிட்ட நபர் என்னிடம், “எனக்கு ஒன்பது அணில்கள் கிடைத்தன” என்றான். கிறிஸ்தவ வாலிபன், அருமையான பையன். நான் அவனிடம், “நீ தவறு செய்துவிட்டாய். நீ தவறு செய்தாய்!” என்றேன். அவன், “பாருங்கள்…” என்றான். 79 நான், “இன்று காலையில் எனக்கு ஐந்து அணில்கள் கிடைத்தன, ஒன்றை நான் பிற்பகல் வரைக்கும் விட்டு வைத்தேன். அந்த ஒரு அணிலை நான் சுட்டு வீழ்த்திவிட்டு, மரத்தின் மேல் பார்த்தபோது, அங்கு ஐந்து அல்லது ஆறு அணில்கள் உட்கார்ந்து கொண்டிருப்பதை என்னால் எண்ண முடிந்தது, அவைகளை நான் கண்ணால் பார்த்தேன், ஆனால் அவைகளை விட்டுவிட்டு நான் நடந்து சென்றுவிட்டேன” என்றேன். நான், “அண்மையில் இங்கு நான் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஏறக்குறைய பதினைந்து அல்லது இருபது அணில்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். நான் வரம்பு வரைக்கும் பெற்றுக் கொண்டு, மீதியானவைகளை விட்டுவிட்டு, அங்கிருந்து நடந்து வந்துவிட்டேன்.” நான், “இந்த நாட்டுக்கு நான் வந்து, பையன்களாகிய உங்களிடம் நான் பிரசிங்கிக்கும்போது, இங்குள்ள ஜனங்களாகிய உங்களுக்கு, சரியான காரியத்தை செய்ய பிரசங்கிக்கிறேன், நான் வாழும் வாழ்க்கை உங்களுக்கு உதாரணமாயிருக்க வேண்டும்” என்றேன். கிறிஸ்தவ மார்க்கம் என்பது நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதல்ல, நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது; அது ஒரு உதாரணம். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். நான், “அப்பொழுது, நியாயப்பிரமாணம் கூறுகிறதோ…இயேசு, ‘இராயனுடையதை இராயனுக்கு செலுத்து’ என்றார். நீ வேக சட்டத்தை அங்கே மீறினால், என்ன செய்கிறாய்? நீ தவறு செய்கிறாய்; நீ பாவம் செய்கிறாய். இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்து” என்றேன். 80 நீங்கள், “பாருங்கள், அந்த சட்டம் தவறு” எனலாம். அது தவறாயிருந்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இயேசுவின் கட்டளையை மீறுவது தவறாகும். நீங்கள் இராயனுடையதை இராயனுக்கு செலுத்தாமற்போனால், அப்பொழுது நீங்கள் செய்யக் கூடாது என்று இயேசு உங்களிடம் சொன்னவைகளை நீங்கள் செய்கின்றவர்களாயிருப்பீர்கள், அப்பொழுது பாவத்தின் கட்டளையை மீறினவர்களாயிருப்பீர்கள். அது சரியா? 81 நாம் எல்லோருமே குற்றவாளிகளாயிருக்கிறோம்; அதை நாம் செய்கிறோம். ஆனால் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று காணும்போது, அதை நிறுத்திவிடுங்கள்! ஜனங்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றனர்; ஜனங்கள் சபைக்குச் செல்லமாட்டார்கள், ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர்கள் கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

4782 எனவே, கிறிஸ்துவை உங்கள் இருதயத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்; அதுதான் உண்மையான…கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும் ஒன்றே. பரிசுத்த ஆவி, கிறிஸ்து என்றால் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று பொருள். பரிசுத்த ஆவி என்பது அந்த அபிஷேகமே, நீங்கள்தான் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். புரிகிறதா? உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துதான் உங்களை அபிஷேகிக்கிறார். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? 83 அப்பொழுது நீங்கள் சரியான காரியத்தைப் பெற்றுள்ளீர்கள். அப்பொழுது அவர் உங்களை உபயோகிக்க விரும்பும் எந்த விதத்திலும் அவரால் உங்களை உபயோகிக்க முடியும், ஏனெனில் நீங்கள் அந்த சரீரத்தில் இருந்துகொண்டு அந்த வரங்களில் எந்த ஒன்றையும் பெற்றுக்கொள்ள முடிந்தவர்களாயிருக்கின்றீர்கள். ஆனால் பாருங்கள், சரீரத்தின் வெளிப்புறத்தில் இருந்துகொண்டு இந்த வரங்களில் ஒன்றை பெற்றுக் கொண்டால், அது உங்களுக்கு எந்த நன்மையும் பயக்காது. “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை. நான் விசுவாசமுள்ளவனாயிருந்து, தேவனுடைய சகல இரகசியங்களையும் அறிந்திருந்தாலும், எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை. நான் என்னுடைய சரீரத்தை ஒரு தகனபலியாக சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், நான் ஒரு மலையைப் பெயர்க்கத்தக்கதாகச் விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், நான் ஒன்றுமில்லை.” புரிகிறதா? இப்படிப்பட்ட காரியங்களின் மேல் சார்ந்திராதீர்கள். பரிசுத்த ஆவி ஒரு நபர்; அது தேவன், உங்களுக்குள் இருக்கும் தேவன், ஒருநபர், தேவன், உங்கள் சரீரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்பவர். நீங்கள் மாற்றப்பட்டிருக்கிறீர்கள்; நீங்கள் ஒரு புது சிருஷ்டி. ஏதாகிலும் ஒரு சிறு தவறு இருந்தாலும், அவர் உங்களிடம் அது தவறென்று கூறுவார், அப்பொழுது அதை விட்டு விலகுங்கள், அதைச் செய்யாதீர்கள். “பிதாவே, அதைச் செய்ய வேண்டுமென்று நான் நினைக்கவில்லை, நீர் என்னை மன்னியும்.” புரிகிறதா? அது—அது தான் பரிசுத்த ஆவி.

4884 நீங்கள் எவ்வளவாக அந்நிய பாஷையில் பேசினாலும், நீங்கள் எவ்வளவாக ஓடினாலும், நீங்கள் எவ்வளவாக குதித்தாலும், நீங்கள் எவ்வளவாக இதை, அதை; மற்றதை செய்தாலும் எனக்குக் கவலையில்லை. புரிகிறதா? நீங்கள் என்ன செய்தாலும், நீங்கள் செய்யும் தவறான காரியங்களினிமித்தம் உங்களை கண்டித்துணர்த்தும் பரிசுத்த ஆவி அங்கு இல்லாமற்போனால், அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்தாது. 85 இப்பொழுது, ஆகையால்தான் இங்குள்ள இந்த நபர் சரியாயிருக்கிறார். பரிசுத்த ஆவி அதை செய்யட்டும். ஆனால் இப்பொழுது (உங்களுக்குப் புரிகிறதா?), இப்பொழுது, இது நேரிட காரணமாயிருப்பது… இதை நான் அன்போடும், அன்பினால் தெளித்தும் மற்றும்—மற்றும் வார்த்தையினால் அபிஷேகம் பண்ணப்பட்டும் கூறட்டும். புரிகிறதா? உண்மையான பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருக்குமானால், அதை சந்தேகிக்க மாட்டீர்கள். அதை நீங்களாகவே அறிந்திருப்பீர்கள், அது உங்களுக்கும் தேவனுக்குமிடையே உள்ள தனிப்பட்ட விவகாரம். புரிகிறதா? ஏதோ ஒன்று நடந்துள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், வேறெதாவது—வேறெதாகிலும் இருந்தாலும், நீங்களே, நீங்களே அந்த மாறுதல். புரிகிறதா? நீங்கள்தான் அந்த மாறுதலை உங்களில் உண்டாக்கிக்கொண்டீர்கள், அதை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் அந்நிய பாஷை பேசினாலும், நீங்கள் குதித்தாலும், கூச்சலிட்டாலும், அல்லது வேறெந்த காரியமானாலும், தேவன் உங்களுக்குள் ஜீவிக்கிறார் என்றும், நீங்கள் உங்கள் சொந்த சிந்தையில் நடக்கவில்லை என்றும், கிறிஸ்துவின் சிந்தையே அந்த வார்த்தையுடன் உங்களை நடத்துகிறதென்றும், அவ்விதம் தான் அது முற்றிலுமாக நடக்கிறதென்றும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

4986 இப்பொழுது! ஆனால் நான்…ஜனங்கள், “பாருங்கள் அப்படியானால், சகோதரன் பிரான்ஹாமே, நாங்கள் அந்நிய பாஷையில் பேச வேண்டும் என்பதில் உமக்கு நம்பிக்கையில்லையா?” என்று கேட்கலாம். பார்த்தீர்களா? அப்படியானால் நான் இப்பொழுது கூறியுள்ளதை நீங்கள் சரியாக எதிர்மாறான நிலையில் தவறாக புரிந்துகொள்கிறீர்கள். நிச்சயமாக, நீங்கள் அந்நிய பாஷையில் பேச வேண்டுமென்பதை நான் நம்புகிறேன். ஜனங்களாகிய உங்களில் சிலர்…புரிகிறதா? ஆனால் நீங்கள் இவைகளைப் பெறுகிறீர்கள், மற்றும்…கூடாரத்தை சுற்றிலும் இங்கே ஆயிரத்து ஐநூறு மைல்கள் என்ற விதமாக நான் இவைகளைப் பெறுகிறேன், (உங்களுக்குப் புரிகிறதா?), என்னும் விஷயத்தைப்போலவே உள்ளது. அப்படியே, இது உங்களுக்குப் புரியவில்லை என்றால், அப்பொழுது என்னைக் கேளுங்கள். புரிகிறதா? உங்களுக்குப் புரியவில்லை என்றால், எனக்கு கடிதம் எழுதிக் கேளுங்கள். நான் இங்கு என்ன சொல்கிறேனோ, அதை அப்படியே சொல்லுங்கள். புரிகிறதா? நான்…நீங்கள்…பவுல் கூறினதுபோல, “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.” உங்களுக்குப் புரிகிறதா? அப்பொழுது நான் தவறென்று நீங்கள் கண்டால், அப்பொழுது என்னிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள், பாருங்கள், அவ்வளவுதான், ஏனெனில் நான்—நான் தவறு செய்கின்ற நபராயிருப்பேன். புரிகிறதா?

50329. தயவு கூர்ந்து விளங்குங்கள். சகோதரன் பிரான்ஹாம் ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவர் என்றும், அவரால் சிருஷ்டிக்க முடியும் என்றும், இயேசு காண்பதற்கு சகோதரன் பிரான்ஹாமைப் போலவே இருக்க வகையுண்டு என்றும் ஜனங்கள் கூறுகின்றனர். 87 இப்பொழுது, நான்…இந்த நபர் இதைக் கூறினார். அது யாராயிருப்பினும், எனக்குத் தெரியாது. ஆனால் நான் உங்கள் சகோதரனே. புரிகிறதா? இயேசு உங்களுடைய இரட்சகர். நான் உங்களுடைய இரட்சகராக இருக்க முடியாது, ஏனெனில் அவர் உங்களை ஏற்கனவே இரட்சித்துவிட்டார். இப்பொழுது, அங்கு நீங்கள் உண்மைக்கு மிக அருகில் இருக்கிறீர்கள், ஆயினும் நீங்கள் உண்மைக்கு மிகத் தொலைவில் இருக்கிறீர்கள், அதாவது இந்த நபரிடம் இவ்விதம் கூறிய அந்த நபர். இப்பொழுது, இது ஒரு…இது ஒரு ஸ்திரீயின் கையெழுத்துபோல் எனக்கு தோன்றுகிறது, மிகவும் அழகான கையெழுத்து. இது ஒரு ஸ்திரீயின் கையெழுத்து என்று நான் கூறலாம் அல்லவா? சகோதரன் காப்ஸ், இது ஸ்திரியின் கையெழுத்து என்று நீங்களும் நினைக்கிறீர்கள் அல்லவா? அழகான கையெழுத்து. அது யாரென்று எனக்குத் தெரியாது. பார்த்தீர்களா?

5188 இப்பொழுது, “சகோதரன் பிரான்ஹாமே, காண்பதற்கு இயேசு உங்களைப் போல் இருக்க வகையுண்டா, அல்லது நீங்கள் இயேசுவா, அல்லது அப்படி ஏதாவது இருக்க முடியுமா?” வார்த்தையின் ஒரு விதத்தில், அது முற்றிலும் உண்மையே; வார்த்தையின் மற்றொரு விதத்தில் அது அந்திக்கிறிஸ்து. அது உண்மைக்கும் தவறுக்கும் உள்ள வித்தியாசம். என்னை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நபராகச் செய்வது, அந்திக்கிறிஸ்து (புரிகிறதா?), ஏனெனில் உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்து கொண்டிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் அந்த நபர், மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மறுபடியும் வருவார். ஆனால் அவருக்குள் இருந்த அவருடைய ஜீவன் என் மேலும், அவரைப் பெற்றுள்ள உங்கள் மேலும் தங்கியிருக்கும் விஷயத்தில், அது முற்றிலும் உண்மை; அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவாகிவிடுகின்றீர்கள். 89 மேசியானிக்களின் பேரில் நான் அளித்த செய்தி உங்களுக்கு ஞாபகமுள்ளதா? புரிகிறதா? நீங்கள்… மேசியா என்னும் சொல்…“அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்னும் அர்த்தம் கொண்டது. இப்பொழுது, நீங்கள், உங்களுக்கு பரிசுத்த ஆவி இருக்குமானால், நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவராகிவிடுகின்றீர்கள். புரிகிறதா? அங்கு எல்லாவிதமான அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் உள்ளனர்.

5290 இப்பொழுது கவனியுங்கள், அது ஒரு வேதப்பிரகாரமாக அபிஷேகம் பண்ணப்பட்டவராக இருந்தால். அவர்களில் அநேகர் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்…புரிகிறதா? இது முழுவதுமே ஒரு பெரிய கதம்பமாக இருப்பதால்…எல்லாவிதமாகவும் கலந்துள்ள ஒன்றாக உள்ளது; மேலும்—மேலும்… சாத்தான் தன் சூழ்ச்சிகள் அனைத்தோடும் வந்து அதை முற்றிலுமாக, கிட்டத்தட்ட முற்றிலுமாக பாவனை செய்துவிடுகிறான். நீங்கள் முழுவதும் நிச்சயமாயிருக்க ஒரே ஒருவழி உண்டு; வார்த்தையை வார்த்தையின் மூலம் ஒப்பிட்டுப் பாருங்கள், ஒவ்வொரு வார்த்தையாக ஒப்பிட்டுப் பாருங்கள்! அந்த ஒரு வழியில்தான் உங்களால் முடியும். 91 ஆனால் வில்லியம் பிரான்ஹாம், என்னும் ஒரு—ஒரு நபராகிய நானோ, அல்லது—அல்லது வேறெந்த மனிதனோ அல்லது ஸ்திரீயோ நமது இரட்சகராகிய, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக இருப்பதென்பது, ஒரு தவறாகும். ஆனால் அவருடைய ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, அவருடைய ஜீவன் உங்களுக்குள் வருவதென்பது…

5392 அது மிகவும் அழகாக எலியாவிலும் எலிசாவிலும் முன்னடையாளமாக காட்டப்பட்டுள்ளது, எலிசா மேலே எடுத்துக்கொள்ளப்பட்டான், அந்த வயதான தீர்க்கதரிசியாகிய, எலியா, பரலோக வீடு சென்றான். அவன் மிகவும் களைப்புற்றிருந்தான்; அங்கே ஆற்றின் அப்பால் அவனை, பரம வீட்டிற்கு கொண்டு செல்ல, அவனை…அக்கினி குதிரைகளால் பூட்டப்பட்ட ஒரு இரதம் இருந்தது, எலியாவும் எலிசாவும் நதியைக் கடந்தபோது, அப்பொழுது நீங்கள் கவனித்தீர்களா? தீர்க்கதரிசிகளின் புத்திரர் அங்கிருந்துகொண்டு அவர்களை கவனித்துக் கொண்டிருந்தனர். எலியா தன் சால்வையை எடுத்து, அதாவது, நதியை அடித்தான். அவன் அவ்விதம் செய்தபோது, அது பிரிந்தது; அவன் அதன் வழியாகக் கடந்து சென்றான். அவன் அந்த இளம் தீர்க்கதரிசியை நோக்கி, “என்னை எதற்காக—எதற்காக பின்தொடர்ந்துகொண்டிருக்கிறாய்? உனக்கு என்ன—என்ன—என்ன வேண்டும்?” என்று கேட்டான். 93 அதற்கு அவன், “உம்முடைய ஆவியின் இரட்டிப்பான பங்கு என் மேல் வரவேண்டும்” என்றான். அந்த வல்லமையுள்ள தீர்க்கதரிசியின் இரட்டிப்பான பங்கு என் மேல் வருமா? அவன், “நீ கடினமான ஒரு காரியத்தைக் கேட்டிருக்கிறாய்; ஆனால் நான் போகையில் என்னைக் காண்பாயானால், அப்பொழுது அது உன் மேல் வரும்” என்றான். எனவே அவன் அந்த தீர்க்கதரிசியை எப்படி கவனித்திருப்பான் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியும்.

5494 இப்பொழுது, அந்நாளிலே, அந்த தீர்க்கதரிசி வார்த்தையாயிருந்தான், ஏனெனில் அவன் உலகத்துக்கு வார்த்தையின் வெளிப்படுத்துதலாக இருந்தான். புரிகிறதா? ஒரு மகத்தான ஊழியம் வர வேண்டியதாயிருந்ததை அவன் அங்கு அறிந்திருந்தான், ஏனென்றால் அதற்கு ஒரு மகத்தான காரியம் அவசியமாயிருந்தது. இயேசு இவ்வுலகில் இருந்தபோது, அவர் எலியாகவாக இருந்தார். “நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள்.” இப்பொழுது, நீங்கள் அதை எவ்விதம் செய்யப்போகிறீர்கள்? அவரைக் கவனியுங்கள்! அவர் யார்? வார்த்தை! புரிகிறதா? அவரைக் கவனியுங்கள்!

5595 இப்பொழுது, அது சிருஷ்டிப்பின் காரியங்களுக்கு வரும்போது, அது உண்மை. இயேசு நேரடியாக எதையும் சிருஷ்டித்து உருவாக்கவில்லை. அவர் ஒரு பொருளை முதலில் எடுத்தார். அவர் தண்ணீரை முதலில் எடுத்து, திராட்சரசம் உண்டாக்கினார். அவர் அப்பத்தை எடுத்து அதிக அப்பங்களை உண்டாக்கினார். அவர் மீன்களை எடுத்து அதிக மீன்களை உண்டாக்கினார். ஆனால் இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகள் செய்யப்படுமென்று அவர் வாக்களித்தார். புரிகிறதா? உங்களுக்குப் புரிகிறதா? இப்பொழுது, ஏன்? அவர் இங்கே இங்கிருந்ததைக் காட்டிலும் மிகவும் பொல்லாங்கான நாளாய் இது உள்ளது. புரிகிறதா? அது இன்னும் அவரே, ஆனால் அவர் உங்கள் சரீரமாகிய கூடாரத்தை உபயோகிக்கிறார். புரிகிறதா? 96 உங்களில் இருக்கும் இந்த நபர், அது உங்களுடைய பிறப்பு… நீங்கள் ஜான் டோ; நீங்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பிறந்தீர்கள், மற்றும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தீர்கள்; ஒரு குறிப்பிட்ட காரியத்தின் கீழ் நீங்கள் பிறந்தீர்கள், அது உங்களுடன் சம்பந்தப்பட் டுள்ளது. நிச்சயமாக சம்பந்தப்பட்டுள்ளது!

5697 எனக்குத் தெரியும் நான் முன்பு…அப்பா, “இந்த காலத்தில் நான் உருளைக் கிழங்குகளை நட முடியாது, ஏனெனில் சந்திரன் இப்பொழுது சரியாக இல்லை. பில்லி, நீ உருளைக் கிழங்குகளை நடமுடியாது” என்று சொல்வது வழக்கம். 98 அதற்கு நான், “நான் உருளைக் கிழங்குகளை சந்திரனில் நடவில்லை, இங்குள்ள தரையில் தானே நடுகிறேன்!” என்றேன். அவர், “சரி புத்திசாலியே, போய் செய்! நீ முட்டிக்கொண்டு உனக்கு தலையில் சில வீக்கங்கள் வந்தால் தான் நீ ஏதாவது கற்றுக்கொள்வாய்” என்றார். நான் அவ்வாறே பெற்றுக்கொண்டேன். நான் பெற்றுக்கொண்டேன். 99 நான் உங்களிடம் சொல்வேன்: ஒரு பலகையை எடுத்து அமாவாசையின் போது வெளியிலுள்ள புல்லின் மேல் வைத்து என்ன நடக்கிறது என்று கவனித்து பாருங்கள். அந்த புல் உடனே காய்ந்துபோகும். பெளர்ணமியின்போது வைத்துப் பாருங்கள்; ஒரு வாரமாக அதை நீங்கள் அங்கேயே வையுங்கள்; அது புல்லுக்கு ஒரு கெடுதியும் செய்யாது.

57100 சந்திரன் மாறுகையில், அந்த சமுத்திரத்தைக் கவனியுங்கள். அந்த அலை…சந்திரன் பூமியிலிருந்து கோடிக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், சந்திரன் மறையும்போது, பேரலையும் அதை தொடர்ந்து மறைந்துவிடுகிறது. அது மட்டுமல்ல, கென்டக்கி நாட்டில் உப்புத் தண்ணீர் கிடைக்கும் வரைக்கும் ஒரு இரும்புக் கம்பியை நிலத்தின் கீழ் அடியுங்கள்; அந்த குழாயை கவனித்துக் கொண்டே வாருங்கள், சந்திரனின்…அது எவ்வளவு ஆழம் உள்ளது என்று பாருங்கள். அலை உள்ளே வரும்போது சந்திரன் மறையும்போது அது பூமிக்கடியில் எவ்வளவு கீழே போய் விடுகிறது என்பதைப் பாருங்கள். நிச்சயமாக! 101 நீங்கள் பூமிக்கு மேலே வளருகின்ற ஒன்றை நடுகிறீர்கள். அமாவாசையின்போது, அதை நட்டால் அது முள்ளங்கி அல்லது சிவப்பு முள்ளங்கியைப் போல பூமிக்கு கீழே இறங்கிவிடுவதைப் பாருங்கள். நீங்கள் அதையே வேறு வழியில் நட்டால் அது நிலத்துக்கு மேலே படர்வதை கவனியுங்கள். நிச்சயமாக, இது ஏதோவொரு காரியத்தை செய்ய வேண்டும்.

58102 ஆரோன் ஏன் தன்னுடைய மார்க்கவசத்தில் அந்த கோத்திரப் பிதாக்களின் ஒவ்வொரு பிறப்பு கற்களையும் வைத்திருந்தான்? அந்த தாய்மார்கள் கூறினதை கவனியுங்கள். பிரசவ வேதனையிலிருந்த அந்த எபிரேயத் தாய்மார்கள் பிள்ளைகள் பிறக்கும்போது கூறினது, அது அவர்களுக்கு பெயரைச் சூட்டினது; அது அவர்களுடைய பிறப்பை அறிவித்தது; அது அவர்களுடைய சொந்த தேசத்தில் அவர்களை வைத்தது; அது அவர்களை நித்தியத்துக்கு அமைத்தது. 103 இந்நாட்களில் ஒன்றில் நான் உள்ளே வந்து சிறிது காலம் இங்கு தங்க நேரிடும்போது, அந்த பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். நிச்சயமாக! பிறகு யாக்கோபைக் கவனியுங்கள், அவன் அங்கு மரித்துக்கொண்டிருந்தபோது, அவன் கைகளை கோத்திரப் பிதாக்களின் மேல் வைத்து அவர்களை ஆசீர்வதித்தபோது, அவர்கள் எங்கிருப்பார்கள் என்பதை சரியாகக் கூறினான். அது அவர்களுடைய பெயரின்படியும், அவர்களுடைய பிறப்பின்படியும் சரியாக அமைந்திருந்தது. நிச்சயமாக, அது உங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது.

59104 இப்பொழுது, அது உங்களுடைய பிறப்பின் பாதை; அதற்கேற்றவாறுதான், மாம்சப்பிரகாரமான மனிதரும் ஸ்திரீகளாகிய நீங்களும் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது, அது வெளிப்புறமான மனசாட்சி அல்ல. வெளிப்புறத்தில் நீங்கள் பார்த்து, உணர்ந்து, முகர்ந்து, காதுகளினால் கேட்கிறீர்கள், ஆனால் உங்கள் உள்ளில் உள்ளதுதான் நிஜமான நீங்கள். இப்பொழுது, இங்குள்ள வெளிப்புறத்தில், சாத்தான் உங்களை சோதித்து, எல்லா வகைகளிலும் உங்களை கீழே விழத்தள்ளுகிறான்; ஆனால் உள்ளில் உள்ள இங்கேயோ அவனை நீங்கள் அனுமத்திலாலொழிய அவனால் ஒன்றும் செய்ய இயலாது. ஏனெனில் இங்கு உள்ளில் நீங்கள் விசுவாசத்தை பெற்றுள்ளீர்கள், விசுவாசம் வெளிப்புற மனசாட்சியின் மூலம் வருவதில்லை, அது சிந்திக்கிறது. ஆனால் விசுவாசத்தில் அவ்விதம் சிந்தித்தல் எதுவுமில்லை. அதை நீங்கள் தேவனிடத்திலிருந்து பெற்றிருக்கிறீர்கள், அது அங்குள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது எவ்வளவு தவறாகக் காணப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை, அது சரியென்று நீங்கள் அப்பொழுதும் அறிந்திருப்பீர்கள்; அது கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் என்பதாகும். புரிகிறதா? எதுவுமே அதைத் தொல்லைபடுத்தப் போவதில்லை. அதை எதுவுமே தொல்லைப்படுத்த முடியாது; அது நேராக சென்று கொண்டிருக்கிறது. கடினம் என்பது அதற்கு கிடையவே கிடையாது; அது களத்தினூடாக செல்லும், ஏனெனில் அது வார்த்தையாயுள்ளது. வார்த்தை என்பது பட்டயம், அது வெட்டுகிறது…அந்த பட்டயம் வெட்டி தன்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துக்கொள்கிறது. நீங்கள் பார்த்தீர்களா? அந்த வார்த்தையாகிய பட்டயத்தைப் பிடிக்க விசுவாசம் என்னும் கரம் தேவைப்படுகிறது. அந்த விசுவாசம் எப்படி இருக்க வேண்டுமென்றால்…

60105 இப்பொழுது, பாருங்கள், அந்த உட்புற மனசாட்சியில்…இது உட்புறம்; இது வெளிப்புறம். சத்தியம், அது இங்கு உட்புறத்தில், வெளிப்படுகிறது; இங்கே வெளியே, அது சிந்தித்தலாயுள்ளது. இப்பொழுது, “நாம் எல்லோரும் சென்று அசெம்பிளீஸ் சபையை சேர்ந்துகொள்ளலாம்” என்று நாம் கூறினால் அது நியாயமாகத் தோன்றவில்லையல்லவா? இப்பொழுது, எனக்கு அசெம்பிளீஸ் ஆப் காட் சபை பிடிக்கும், எனக்கு ஒருத்துவம் சபை பிடிக்கும், எனக்கு எல்லா சபைகளுமே பிடிக்கும். “ஏன் நாம் எல்லோரும் சென்று அவர்களுடன் இணைந்துகொள்ளக் கூடாது, அது ஒருக்கால் நமக்கு நன்மை பயக்கும்.” அது வெளிப்புறத்தில் ஒரு காரணமாக உள்ளது. ஆனால் உள்ளிலோ, அதை கவனியுங்கள். நீங்கள் இங்கே வெளியே பார்க்கும்போது, அப்பொழுது, இது—இது ஒத்துப்போகும்…அசெம்பிளீஸ் சபையைப் பாருங்கள். அவர்கள் செய்யும் அநேக காரியங்கள் அவை—அவை வேதப்பிரகாரமானவை என்று நான் நம்பவில்லை, அவை வேதப்பிரகாரமானவை அல்ல என்பதை அவர்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க முடியும். ஆனால் அதில் அநேகருடைய சிந்தைகள் ஈடுபட்டுள்ளன. அசெம்பிளீஸ் சபையை சேர்ந்த ஆயிரக்கணக்கான சகோதரர்களும் சகோதரிகளும் இதை, வார்த்தையை விசுவாசிக்கின்றனர், அவர்கள் அசெம்பிளீஸ் போதனை சரியாயிருக்கும் என்று கற்பிப்பதை நம்புகிறதில்லை. ஆனால் அவர்கள் வலையில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

61106 பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், ஒருத்துவக்காரர்கள், மற்றும் அவர்கள் எல்லோருமே, அவர்கள் அங்கே ஒரு கூட்டம் மனிதர்களாக ஒன்று சேர்ந்து அந்த வலையில் இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் அதை சிந்திக்கின்றனர். மேலும் ஒரு மனிதனைப் பற்றி அதிகமான கெளரவம் உண்டு. இங்கு ஒரு பேராயர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், பொதுவான மேற்பார்வையாளர்; அவர் ஏதாவதொன்றைச் சொன்னால், ஒரு சிறு நபர் என்ன சொல்லப் போகிறார்? அவர் ஏதாவதொன்றைச் சொல்ல பயப்படுவார். “நான் உம்மோடு உடன்படுகிறேன். ஆம், அது சரிதான்! உ-ஊ! ஆம், பேராயர், அல்லது—அல்லது போதகர், நீங்கள்…அது முற்றிலும் சரி.” அவர் அவருடன் ஒத்துப்போகிறான். 107 இங்கு, தெருவில் உள்ள ஒரு குடிகாரனை நாம் எடுத்துக்கொள்வோமாக, தெருவில் செல்கின்ற ஒரு சாதாரண குடிமகன் அவனைக் காணும்போது, “அவன் ஊர் சுற்றும் வயோதிகன், அவனோ ஒன்றுமற்றவன்” என்பான். ஆனால் அந்த குடிகாரனை இங்கு நீங்கள் கொண்டு வந்து, அவனைக் காவல் துறையில் சேர்த்து, அவனுக்கு ஒரு அடையாள சின்னத்தைக் குத்தி, அவன் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுங்கள். “காலை வணக்கம், ஜான். உம்மை மறுபடியும் காண்பதில் மகிழ்ச்சி!” என்பீர்கள், பார்த்தீர்களா? ஒருவருக்கொருவர் மரியாதை. 108 இயேசு, “நீங்கள் இந்தவிதமான மரியாதை கொண்டிருப்பீர்களானால், உங்களுக்கு எப்படி விசுவாசம் இருக்கும்?” என்றார், அந்த மாதிரியாக, உங்களுக்குத் தெரியும், எங்களிடத்தில் கேளுங்கள், ஒருவரை மதித்தல்…அங்கே அந்த வசனம் எப்படி உள்ளது என்பது அப்படியே எனக்கு நினைவில் இல்லை. ஆனால், நீங்கள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்த விரும்பும்போது. புரிகிறதா? அதை செய்ய முடியாது. 109 ஒரு ஸ்தாபனத்தில் மனிதர் ஒன்று கூடும்போது, அவர்கள் உட்காருகின்றனர்; சிறிய நபர் ஏதாவது சொல்ல பயப்படுகின்றான், ஏனெனில் பேராயர் இவ்விதம் உரைத்துள்ளார், துணைப் போதகர் இவ்விதம் உரைத்துள்ளார். ஆனால் அந்த மனிதனை அவமதிக்க வேண்டாம், அவர் ஒரு நல்ல மனிதன் என்று நம்புங்கள்; ஆனால் எப்பொழுதும் நினைவிருக்கட்டும், தேவனுடைய வார்த்தையே சரியென்றும் அதற்கு முரணான மற்ற எல்லாமே தவறாகும். “என் வார்த்தையே சத்தியம், மற்றெந்த மனிதனுடைய வார்த்தையும் பொய்.” அதைக் கண்டீர்களா? அதைத்தான் நாம் செய்ய விரும்புகிறோம், அதையே விசுவாசிக்கிறோம்.

62110 இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நாம் வார்த்தை அல்ல, ஆயினும் நாம் வார்த்தை. உ-ஊ! இப்பொழுது உங்களுக்கு இது புரிகிறதா? இயேசு தேவன் அல்ல, ஆயினும் அவர் தேவன். அவர் ஒரு மனிதன், ஆயினும் அவர் தேவன். அவரால் அழ முடிந்தது, அதேசமயத்தில் அவர் மரித்தோரை உயிரொடெழுப்பினார். மரித்த ஒரு மனிதனுக்காக அவரால் அழுது அவனை உயிரொடெழுப்ப அவரால் முடிந்தது. அவர் யேகோவா-யீரே, யேகோவா-ரப்பா, யேகோவா மனாசே; அவர் முழுவதுமாக, யேகோவாக இருந்தார். அவர் யேகோவா, அதேசமயத்தில் அவர் ஒரு மனிதனாயிருந்தார். அவர் பூமிக்கு சொந்தக்காரர், அவர் பூமியை படைத்தவர், ஆயினும் அவருக்குத் தலை சாய்க்க இடமில்லை. அவர், “நான் உண்டாக்கின பறவைகளுக்குக் கூடுகள் உண்டு, ஆனால் நானோ என்னுடைய தலையை சாய்க்க ஒரு இடத்தைக் கூட பெற்றிருக்கவில்லை. நான் உண்டாக்கின, நரிகளுக்கு, தரையில் குழிகள் உண்டு, ஆனால் எனக்கோ என்னை அடக்கம் பண்ணப்படக்கூட இடமில்லை” என்றார். அது உண்மை. அவரை அடக்கம்பண்ண அவர் வேறொருவரின் கல்லறையை கடன் வாங்க வேண்டியிருந்தது.

63111 அவர் ஒரு ஸ்திரீக்குள்ளிருந்த கர்ப்பப்பையை உண்டாக்கினவர். ஆனால் பிறப்பதற்கு அவருக்கு கர்ப்பப்பை இருக்கவில்லை; அவர் ஒரு கர்ப்பப்பையை கடன் வாங்க வேண்டியிருந்தது. அவர் பூமியை சிருஷ்டித்திருந்தும் அடக்கம் பண்ணப்பட்டுவதற்கு அவருக்கு ஒரு இடம் இல்லாதிருந்தது. அவரை அடக்கம்பண்ணுவதற்காக அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புக்கு இருந்த பிரேதக் குழியை…கடன் வாங்க வேண்டியிருந்தது. பார்த்தீர்களா? அவர்கள்—அவர்கள்—ஓரிடத்தை கடன் வாங்க வேண்டியிருந்தது, இருப்பினும் அவர் தேவன், அவர் தேவன் என்பதை நிரூபித்தார். 112 இப்பொழுது, உங்களுக்குப் புரிகிறதா? நாம்…அல்ல, நாம் மேசியானிக்கள், ஆனால் அந்த இயேசு அல்ல. அவர் நம்முடைய பிதா; நாம் அவருடைய ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறோம், ஆகையால் தான் அவருடைய ஜீவன்… அது ஜனங்களை அவ்விதம் நம்பச் செய்கிறது. பாருங்கள், நீங்கள் உட்கார்ந்துகொண்டு சிந்திக்காவிட்டால், “பாருங்கள், இந்த நபர் மேசியாதான்” நிச்சயம் அவர்தான் என்று ஜனங்கள் நம்பும்படி செய்கிறது. “இங்குள்ள இந்த ஒருவர் ஒருக்கால் இருக்கக்கூடும்.” அவர்கள் இருவருமே. பார்த்தீர்களா? “பாருங்கள், அவர்கள் இரண்டு பேர் எவ்விதம் இருக்க முடியும்?” அங்கு ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். புரிகிறதா? 113 ஆனால் நீங்கள் பாருங்கள், பெந்தெகொஸ்தே நாளில் அவருடைய ஜீவன் வெவ்வேறாகப் பிரிந்தது. அந்த அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்தபோது, அது அக்கினி நாவுகளாகப் பிரிந்து அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது, தேவன் ஜனங்களின் மத்தியில் தம்மை பிரித்துக்கொள்ளுதல், ஏனெனில் கணவனும் மனைவியும் ஒருவர் போல, சபையும் கிறிஸ்துவும் ஒருவரே.

64330. சகோ.பிரான்ஹாமே, நான் என் மனைவிக்காக உண்மையில் அக்கறை கொண்டிருக்கிறேன் என்பதை எவ்வாறு அவளுக்குக் காண்பிக்க முடியும்… அல்லது வார்த்தையில் நிலைநின்றா (அதாவது)— வார்த்தையில் நிலைத்து—நிலைத்து நின்றா, ஆனால் இன்னும் இது போன்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது: “நீ விசுவாசிப்பதை அல்லது பிரசங்கிப்பதை ஏன் செயல்படுத்தக் கூடாது?” 114 பாருங்கள் அப்படியானால், மனைவியானால், இதைக் கூற…மனைவிக்கு உரிமை இருக்கும்போது அவள் இதை உங்களிடத்தில் கூறினால், நீங்கள் சரிபடுத்திக்கொள்வது நலம். பாருங்கள், புரிகிறதா? அப்படியானால் அவள்—அவள் பொல்லாதவளாய் இருக்க இதைக் கூறுவாளானால், நினைவிருக்கட்டும், வேதம், “இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், உன்னுடைய கழுத்தில் எந்திரக் கல் கட்டப்பட்டு நீ சமுத்திரத்தில் தள்ளுண்டு போவது உனக்கு நலமாயிருக்கும்.” இப்பொழுது, அதுதான் உங்களுடைய …?… 115 ஒருக்கால் இந்த மனைவி அந்த விதமானவளாய் இல்லாமல் இருக்கக்கூடும். அவள் வித்தியாசமான ஒருவளாய் இருக்கலாம். அவள் ஒரு நல்ல நபராய் இருக்கக் கூடும். நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பார்க்க அவள் உங்களை பரிசோதித்துக்கொண்டிருக்கலாம்.

65116 இப்பொழுது, நீங்கள் அவளுடன் அன்பில் நிலைத்திருங்கள், அவள் இயேசுவை உங்களில் காணட்டும். நீங்கள் அதைச் செய்யுங்கள். புரிகிறதா? நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். சில…இக்காலையில் ஒரு நபரைக் குறித்து ஒரு சிறு உதாரணத்தை அளிக்க விரும்புகிறேன்… ஒரு சமயம் இந்த ஸ்திரீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டாள். அவள் மிகவும் ஒரு இனியவளாயிருந்தாள். அவர்கள்…அவள் கூறினாள்…பாருங்கள், அவள் ஒரு கடினமான வாழ்க்கையை உடையவளாயிருந்தாள், அவளுடைய கணவன் ஒரு குடிகாரனாயிருந்தான். எனவே, அவள் அப்படியே தொடர்ந்து இருந்து வந்தாள்; அவள் அவனோடு சகித்துக்கொண்டே வந்தாள். அவன், “தேனே, நீ சபைக்குச் செல்ல விரும்பினால், போய் வா!” என்று கூறுகிறான். ஆனால் இப்பொழுது, அவனோ இங்கே உள்ள, பழைய ப்ரவுன் டெர்பி, மதுக்கடைக்கு சென்றான். எனவே இவ்விதம் இருந்து வந்தனர். எனவே அவர்கள் எல்லா நேரத்திலும் அங்கேயே இருந்தனர், இந்த மதுக்கடை முன்பு போனிஃப்பர் என்று அழைக்கப்பட்டது. பழங்காலத்தவராகிய உங்களில் அநேகருக்கு அங்கே மூலையில் இருந்த போனிப்பர் ஞாபகமிருக்கும்… இது இப்போது பிரவுன் டெர்பி என்று அழைக்கப்படுகிறது, நான் நம்புகிறேன்.

66117 எனவே, அங்கே கிடந்தபோது, முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, ஒரு இரவு சபையைக் குறித்தும் கிறிஸ்தவர்களைக் குறித்தும் ஒரு கேள்வி எழுந்தது. அங்கு உட்கார்ந்துகொண்டிருந்த குடிகாரர்களில் ஒருவன், “இனிமேல் கிறிஸ்தவர்கள் என்ற அப்படிப்பட்டவர்கள் யாருமே கிடையாது. அப்படி யாருமே கிடையாது. இந்த கூட்டம் அனைத்தும் மாய்மாலக்காரரே” என்றான். “அவர்கள் இங்கு புகைபிடித்துக் கொண்டும் குடித்துக்கொண்டும், நாம் செய்கிறதையே செய்து கொண்டிருக்கிறார்களே” என்று கூறி, “தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறதை நீங்கள் காண்கிறீர்களே. அப்படி யாருமே கிடையாது” என்றானாம். 118 இந்த குடிகாரன் உடனே எழுந்து நின்று, “ஒரு நிமிடம் பொறுங்கள்! எனக்குத் தெரிந்த அப்படிப்பட்ட ஒருத்தி இருக்கிறாள்” என்றானாம். அவர்கள், “அது யார்” என்று கேட்டனர், அவன் “அது என் மனைவி” என்றானாம். புரிகிறதா? அவள் உப்புத்தன்மை கொண்டவளாயிருந்தாள். அவன் அதை எந்நேரமும் கிரகித்துக்கொண்டே வந்தான். மற்றவனோ, “அவளுக்கு இறுக்கம் நேரிட்டால், நான் பந்தயம் கட்டுகிறேன்…” என்றானாம். இவனோ, “இல்லை, அவள் அப்பொழுதும் ஒரு கிறிஸ்தவளாகவேயிருப்பாள்; அதை நான் நிரூபித்துக் காட்டுவேன்” என்றானாம். “நாம் என்ன செய்யலாம் என்று நான் உங்களுக்கு சொல்வேன்; நாம் வீட்டுக்குப் போவோம், அவள் கிறிஸ்தவளா இல்லையா என்பதை நான் உங்களுக்கு காண்பிப்பேன்” என்றான். “நாம் வீட்டுக்குச் சென்று, இப்பொழுது, நாம் உண்மையாகவே குடித்தவர்களைப்போல் இருப்போம். நாம் உண்மையாகவே குடித்தவர்களைப்போல நாம் நடிக்கப்போகிறோம்” என்றானாம். வீட்டுக் கதவைத் தட்டி, எல்லோருமே தள்ளாடிக்கொண்டு உள்ளே வந்தனர் மேலும்—மேலும்… “ஏன் இந்த வழியில் நாற்காலி வைக்கப்பட்டிருக்கிறது?” என்றான் மற்றும் ஒவ்வொரு காரியமுமே. அவள் அவர்கள் அனைவருக்கும் ஒரு நாற்காலியை அமைத்தாள் மற்றும் (அவனுடைய விருந்தினர்கள், உங்களுக்கு தெரியும்)—மேலும் அவர்களை எவ்வளவு வரவேற்க முடியுமோ அந்த அளவிற்கு வரவேற்கும் முயன்றாள். அவன், “நீ எங்களுக்கு இரவு உணவு சமைத்து தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றான். எனவே அவர்கள்…அவள் சென்று சிலவற்றை ஆயத்தம் செய்தாள். “எங்களுக்கு பன்றி இறைச்சியும் முட்டைகளும் வேண்டும்” என்றான். வீட்டில் அவை உண்டு என்று அவன் அறிந்திருந்தான், எனவே அவள் பன்றி இறைச்சியும் முட்டைகளும் சமைத்துக் கொண்டு வந்தாள். அவன் அங்கே மேசையின் அருகில் வந்து, அவைகளைப் பார்த்துவிட்டு அவனுடைய தட்டை எடுத்து, அதில் வைக்கப்பட்டிருந்த உணவை தரையில் ஓங்கியடித்து, “இந்தவிதமாக முட்டைகளை சமைத்தால் எனக்குப் பிடிக்காது என்று, உனக்குத் தெரியுமே. வாருங்கள், இங்கிருந்து நாம் போவோம்” என்று கூறினான். அந்தவிதமாக—அந்தவிதமாகவே செய்தான்.

67119 அவர்கள் வெளியே சென்று அங்கு உட்கார்ந்துகொண்டனர், உங்களுக்கு தெரியுமா. அவள் வெளியே வந்தாள்; அவள், “அன்பே, அதை நான் சரியாக சமைக்கவில்லை என்பதற்காக நான்—நான் வருந்துகிறேன்; நான் உங்களுக்காக வேறு முட்டைகளை சமைத்துத் தருவேன்” என்றாள். 120 “ஓ, முட்டாள்தனம், அந்த விதமாக முட்டைகளை சமைப்பது முதலாவது எனக்கு பிடிக்காது என்று உனக்குத் தெரியுமே” என்று இவ்விதமாக அவளைத் திட்டிக் கொண்டேயிருந்தான். அவர்கள் அங்கு வெளியே சென்று, உட்கார்ந்துகொண்டு, அவர்கள் குடித்தவர்களைப்போல் நடித்துக் கொண்டிருந்தனர். அவள் தன்னையே கண்டனம் செய்துகொண்டு, மிருதுவான குரலில் பாடுவதை அவர்கள் கேட்டனர்: இயேசு சிலுவையை தனியே சுமக்க, உலகிலுள்ள அனைவரும் சும்மாயிருக்க வேண்டுமா? ஒவ்வொருவருக்காகவும் ஒரு சிலுவையுண்டு. எனக்கும் ஒரு சிலுவையுண்டு. மரணம் என்னை விடுவிக்கும் வரைக்கும், பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலுவையை சுமப்பேன். ஒரு குடிகாரன் மற்றொரு குடிகாரனைப் பார்த்துக்கொண்டு, “அவள் உண்மையில் கிறிஸ்தவள், அவள் அதைப் பெற்றிருக்கிறாள்!” என்றானாம். அந்த ஸ்திரீ அவளுடைய கணவனையும், அங்கிருந்த மற்ற அனைவரையும் கிறிஸ்துவினிடம் அன்றிரவு வழிநடத்தினாள். பார்த்தீர்களா? ஏன்? பார்த்தீர்களா? உண்மையில் இனியவராயிருங்கள். ஞாபகம் கொள்ளுங்கள், அதைக் குறித்து எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். 121 எனவே, சகோதரியே, அல்லது சகோதரனே, அது யாராயிருந்தாலும், அல்லது சகோதரனே, அது இங்குள்ளது, ஏனென்றால் அவன் தன்னுடைய மனைவியைக் குறித்து கேட்டார், நீங்கள் உப்புத்தன்மை கொண்டவராயிருங்கள்; தாகமடைவதற்கு அவளுக்குள் ஏதாகிலும் இருக்குமானால் அவள் தாகமடைவாள். அவ்வாறில்லையென்றால், ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் தவறான நபரைப் பெற்றிருந்தால், நீங்கள் ஆயிர வருட அரசாட்சியின்போது சரியான ஒன்றைப் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள்; எல்லா தவறுகளும் அங்கு சரியாக்கப்படும்.

68331. சகோதரன் பிரான்ஹாமே, நீர் அங்கு பிரசங்கம் பண்ணினாலொழிய, மணவாட்டி எந்த சபைக்கும் செல்லக்கூடாது, அல்லது இந்த கூடாரத்திற்கு, வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த கூடாரத்திற்கு மட்டும் வரலாம் என்று நீர் போதிக்கிறீரா? ( அல்லது என்றுள்ளது, இதன் பொருள் “மற்ற வார்த்தைகள்.”

69332. மேலும், வேலை செய்தல், மீன் பிடித்தல் போன்ற விஷயத்தில் நாம் ஞாயிற்றுக்கிழமையையும் விடுமுறைகளையும் ஆசரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீர் போதிக்கிறாரா? அல்லது …(அது ஞாயிற்றுக்கிழமை என்று நான் கூறுவேன். அது எனக்கு ஞாயிற்றுக்கிழமை என்பது போல் தான் காணப்படுகிறது. அல்லது கீழ் பாகத்தில் அதைப் போன்று காணப்படுகிறது…இல்லை ஞாயிற்றுக்கிழமை, அது விடுமுறைகள் அல்லது ஞாயிற்றுக்கிழமைகள் என்று நான் நினைக்கிறேன். ஆம், ஞாயிற்றுக்கிழமைகள், அப்படித்தானே அது காணப்படுகிறது? பரிசுத்த நாட்கள்—பரிசுத்த நாட்கள், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பரிசுத்த நாட்களும்.) 122 இல்லை! நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். புரிகிறதா? அதை மறுபடியும் படித்து அதற்கு ஒவ்வொன்றாக பதிலளிக்கட்டும். மணவாட்டி எந்த சபைக்கும் செல்லக் கூடாது என்றும் நீர் அங்கு பிரசங்கம்—பிரசங்கம் பண்ணினாலொழிய அல்லது, மற்றபடி, இந்த கூடாரத்திற்கு மட்டும் வரலாம் என்று நீர் போதிக்கிறீரா? 123 இல்லை! நான் அவ்விதம் போதிப்பதில்லை. அதை நான் நம்புவதில்லை; நான் அதை நம்புவதில்லை. இங்கு நாடெங்கும் பரவியுள்ள ஊழியக்காரர்களை நாம் பெற்றுள்ளோம், அவர்கள் அந்த மணவாட்டியின் பாகம் என்று நான் நம்புகிறேன். ஒரு ஆணோ அல்லது பெண்ணோ அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வார்த்தையை போதிக்கிற சபைக்கு செல்லலாம் என்று நான் நம்புகிறேன். நான் நினைக்கிறேன், அவர்கள் முழு வார்த்தையைப் போதிக்கவில்லையென்றால், முழு வார்த்தையை போதிக்கின்ற மற்ற இடத்தில் உள்ள எந்த சபைக்கும் உங்களால் போக முடியவில்லையென்றால், அவர்கள் முழு வார்த்தையை பிரசங்கிக்கும் இடத்திற்கு நீங்கள் செல்லும் வரையில் அவர்கள் பாதி வார்த்தையைப் பிரசங்கிக்கிற அந்த இடத்திற்குச் செல்லுங்கள். நீங்கள் என்ன செய்த போதிலும், சபைக்குச் செல்லுங்கள். அதைச் செய்யுங்கள்.

70எந்த பரிசுத்த நாளையும், அல்லது—அல்லது வேலை செய்தல், அல்லது வேலை செய்தல் போன்ற, அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்பிடித்தல் போன்ற விஷயத்தில் நாம்—நாம் ஞாயிற்றுக்கிழமையை அனுசரிக்க வேண்டிய…அவசியமில்லை என்று கூட நீர் போதிக்கிறீரா? 124 நீங்கள் ஞாயிற்றுக்கிழமையில் சபைக்குப் போவதற்கு பதிலாக, மீன் பிடித்தல், வேட்டையாடுதல், வேலை செய்தல் போன்றவைகளை செய்தால் அது பாவம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் தேவனுடைய கட்டளைகளை மீறுகிறவர்களாய் இருப்பீர்கள். “அப்படி ஒரு கட்டளை உள்ளதா?” ஆம், ஐயா! பழைய ஏற்பாட்டில் ஒய்வு நாள் ஒரு முன்னடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அது அனைத்தும்…நீங்கள் ஓய்வு நாளை ஆசரிக்க வேண்டும் என்பதற்காக இயேசு வரவில்லை. பழைய ஏற்பாட்டின் ஓய்வு நாள் சனிக்கிழமை, அது வாரத்தின் முடிவு. ஞாயிற்றுக்கிழமை எட்டாம் நாள், அல்லது வாரத்தின் முதலாம் நாள், அந்த நாளில்தான் இயேசு உயிரோடெழுந்தார். 125 அது சரியென்று நான் நினைக்கவில்லை…இப்பொழுது நீங்கள் தொலைவில் உள்ள ஒரு வனாந்தரத்தில் எங்காவது சென்றிருந்தால், நீங்கள் அங்கே வெளியில் ஒரு வேட்டைப் பயணத்தில் இருக்கிறீர்கள், அதை சுற்றிலும் சபை எதுவுமில்லை என்றால், அதுபோன்று எந்த காரியமாயின், உங்களால் ஒன்றும் செய்ய முடியாது; அப்பொழுது நீங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தால், அதனால் பரவாயில்லை என்று நான் எண்ணுகிறேன். ஆனால் நீங்கள் நகரில், அல்லது சபை நடந்துகொண்டிருக்கும் இடத்துக்கு அருகாமையில் இருந்தால், நீங்கள் எப்படியாவது, எங்காவது சபைக்கு சென்றே ஆக வேண்டும். 126 நான் நினைக்கிறேன், வேலை செய்யும் விஷயத்தில், காளை குழியில் விழுந்துவிட்டால், அல்லது ஏதாவதொன்றை ஞாயிற்றுக்கிழமையன்று செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நீங்கள் போய் அதைச் செய்யுங்கள், உங்களால் தவிர்க்க முடியாத ஏதோ ஒரு காரியமாயிருந்தால், அது அந்த விதமாக செயல்பட வேண்டும். ஆனால் நீங்கள் அதை செய்தால், அதை செய்ய ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருந்தால், அல்லது அதை அந்தவிதமாக நீங்கள் செய்தால், அப்பொழுது நீங்கள் தவறாக இருக்கிறீர்கள். புரிகிறதா? நாம் அவ்விதம் செய்யக் கூடாது, நாம் பரிசுத்த நாளுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.

71127 இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், எங்காவது, எந்த இடத்திலாவது சபைக்குச் செல்லுங்கள். ஆயினும்…என்னால்—என்னால் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபன சபையை கூற முடிந்தால், ஆனால் நான் அதைச் செய்ய மாட்டேன், ஏனென்றால் இந்த சபை, அவர்கள் போதிப்பதாக நான் அறிந்துள்ள ஒரே ஒரு காரியம் என்னவெனில், அவர்கள் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று அவர்கள் விசுவாசிப்பதாக கூறுகின்றனர் என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள், நானும் அதை செய்கிறேன். அவர்களுடைய மற்ற போதகம் அனைத்தும்…தண்ணீர் பாவங்களை போக்குகிறது…என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். இப்பொழுது, அவர்கள் ஒருத்துவக்காரர் அல்ல; அவர்கள அதே காரியத்தை செய்கிறார்கள், ஆனால் நான் அவர்களை குறித்துச் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. தண்ணீர் மூலம்தான் அந்த—அந்த மறுஜென்மம் என்பதை அவர்கள் விசுவாசிக்கின்றனர். நான் அதை விசுவாசிப்பதில்லை. அவர்கள், ஓ, அவர்கள், எங்காகிலும் தெய்வீக சுகமளித்தல் காணப்பட்டால் அது பிசாசினால் உண்டானது என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். அவர்கள் விசுவாசிப்பது அனைத்தும்…அவர்களிடம் உள்ள ஒரே காரியம்—அவர்களிடத்தில் உள்ள ஒரே காரியம் என்னவெனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் அந்த புத்தகத்தில் உங்கள் பெயரைப் பதிவு செய்வதே. உங்கள் பெயர் அங்கு பதிவு செய்யப்படாவிட்டால், நீங்கள் இழக்கப்படுவீர்கள். இப்பொழுது, நான் அவ்விதம் விசுவாசிப்பதில்லை. ஆனால் உங்களுக்குப் போக வேறெந்த சபையும் இல்லாமற்போனால் (அவர்களைக் குறை கூற நான் அங்கு செல்லமாட்டேன்), ஆனால் நான் யார் பக்கத்திலாவது உட்கார்ந்திருக்கும்போது என் இருதயத்திலுள்ள கிறிஸ்து அங்குள்ள யாரிடத்திலாவது பாதிப்பை உண்டுபண்ணுவார் என்னும் அந்த நோக்கத்துடன் செல்வேன். அவர்கள் மத்தியில் செல்லுங்கள், ஆனால் அவர்கள் அவிசுவாசத்தில் பங்குகொள்ளாதீர்கள்.

72333. சகோதரன் பிரான்ஹாமே, நான் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று நான் அறிய விரும்புகிறேன். என் குடும்பம் இரட்சிக்கப்பட வேண்டுமென்று நான் பாரப்பட்டிருக்கிறேன். அந்த சகோதரி அவருடைய பெயரை கையொப்பமிட்டுள்ளாள். 128 நீ பரிசுத்த ஆவியைப் பெற விரும்பினால், உன்னிடம் ஒன்றை நான் கூறட்டும், என்னுடைய அருமை சகோதரியே, நீ இங்கு இருப்பாயானால். மேலும்—மேலும்—நான்…(சகோதரன் நெவில், இது இங்குள்ள சபையின் ஒரு அங்கத்தினரா? கீழே …?… ) எனக்கும்—எனக்கும் கூட அவர்களை ஞாபகமில்லை. ஆனால் நீ இங்கு இருப்பாயானால், சகோதரி பெ-ள, நீங்கள் இங்கு இருப்பீர்களானால், இதை நான் உன்னிடம் கூறட்டும். வேதம், “நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்…” என்று உரைத்துள்ளது. அதை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பும் காரணத்தினாலேயே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள். புரிகிறதா? இப்பொழுது, ஞாபகங்கொள், நீ—நீ—நீ அதைப் பெற்றுள்ளாய் என்பதல்ல, ஆனால் அதற்காக பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், “அவர்கள் திருப்தியடைவார்கள்.” அதனோடு நிலைத்திரு. 129 “என் குடும்பத்துக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” உனக்கு நீ உபயோகிக்கிற அதே விசுவாசத்தை உன் குடும்பத்துக்கும் உபயோகிப்பாயாக. அவர்களை கர்த்தரிடத்தில் ஒப்புவித்து அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று உன் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாயாக. அது அவ்வாறு இருக்கட்டும்…அது இங்குள்ள உன் மாம்சசிந்தையில் வருவதற்கு இடங்கொடாதே. அது உள்ளில் உள்ள, அந்த உள்ளுணர்வில் ஆழமாய் இறங்கட்டும், அப்பொழுது அவர்கள் உன்னுடையவர்களாகிவிடுவார்கள். அதை நீ அங்கு ஆழமாய் இறங்கவிட்டிருக்கும்போது, தேவன் அவர்களை உனக்கு கொடுத்துவிட்டார். 130 இங்குள்ள உன் இருதயத்தில் நீ எதையாகிலும் கொண்டிருந்து, நீ ஜெபம்பண்ணும்போது அதை கேட்பாயானால், நீ கேட்டதை பெற்றுக்கொண்டாய் என்று விசுவாசிப்பாயாக. இப்பொழுது, அதை நீ ஒருக்காலும் இனி சந்தேகிக்க முடியாது. நீ ஒரே நேரத்தில் அதை விசுவாசிக்கவும் சந்தேகிக்கவும் முடியாது. எத்தனை பேருக்கு அது தெரியும்? நீ ஒரே நேரத்தில் அதை விசுவாசிக்கவும் சந்தேகிக்கவும் முடியாது. நீ கேட்டுக்கொண்டதை பெற்றுக் கொண்டாய், நீ அதைப் பெற்றுக்கொண்டாய் என்று விசுவாசிக்க வேண்டும், அப்பொழுது அது உனக்குக் கொடுக்கப்படும் என்று அவர் உரைத்தார். எனவே, உன் குடும்பத்துக்காக நீ விசுவாசிப்பாயாக, அவர்கள் அதைப் பெற்றுக்கொள்வார்கள்.

73334. சகோதரன் பிரான்ஹாமே, நீர் எக்காளங்களைக் குறித்து—பிரசங்கிக்கப் போகாததனால்—எங்கள் மகனைக் குறித்தென்ன? அவனையும் ஏழு எக்காளங்களையும் இணைத்து எனக்கு நீர் தொலைபேசியில் அளித்த வாக்குறுதி ஞாபகமுள்ளதா? 131 எனக்கு அது ஞாபகமில்லை. அது என்னவாயிருந்தது என்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அது என்னவாயிருந்தாலும், அது என்னவென்று நீங்கள் பில்லி பாலுக்குத் தெரியப்படுத்துங்கள். நான் என்ன வாக்களித்திருந்தாலும், அதை நான் செய்வேன். எனக்கு ஞாபகமில்லை. உங்களுக்குத் தெரியும், நான்… சில நேரங்களில் நான், ஒரே இரவில் முப்பது அல்லது நாற்பது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கிறேன், நீங்கள் பாருங்கள், நான் இங்கிருக்கும்போது, இவ்வாறு ஒவ்வொரு இரவும் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டேயிருப்பதால், அது என்னவென்று ஞாபகம் இருப்பதில்லை. என் கத்தோலிக்க சகோதரியையும் சகோதரனையும் குறித்தென்ன? உங்களுக்கு நன்றி.

74132 ஓ, இந்த நபர் நகரத்துக்கு புறம்பே இருந்து வருகிறவள், தொலைவிலுள்ள டெக்ஸாஸிலிருந்து. நான்…பாருங்கள், சகோதரியே, நீ—நீ டெக்ஸாஸை சேர்ந்தவளாயிருந்து, இந்த ஒலிநாடாவை நீ பெற நேர்ந்தால் அல்லது ஒரு ஒலிநாடா இருந்தால், இதை பதிவு செய்த ஒலிநாடா இருக்காது என்று நான் எண்ணுகிறேன், ஆனால் அது இருக்கமானால்…(அவர்கள் ஒரு ஒலிநாடாவில் பதிவு செய்கின்றனரா? நீங்கள் இதைப் பதிவு செய்கின்றீர்களா?) சரி, அவர்கள்…இந்த ஒலிநாடா…அப்படியானால் என்னவென்று நான் உங்களிடம் சொல்கிறேன். நீ…இந்த ஒலிநாடாவில், இதை நீ கேட்கும்போது, “எங்கள் மகனையும் ஏழு எக்காளங்களையும் குறித்தென்ன?” என்பதை ஞாபகங்கொள். ஏழு எக்காளங்களைக் குறித்து பேசும்போது அவனை நான் காண்பேன் என்று வாக்களித்திருந்தாலொழிய, அதைக் குறித்து எனக்கு ஞாபகமில்லை. நான் அதன் பேரில் பிரசங்கித்திருந்திருந்தால், நான் அவனைக் கண்டிருப்பேன்; ஏனெனில் நான் ஏழு எக்காளங்களின் பேரில் பிரசங்கிக்கவில்லை, நான் எக்காளங்களின் பண்டிகை என்னும் பொருளின் பேரில்தான் பிரசங்கித்தேன். அதைக் குறித்து புரிந்துகொண்டாய். 133 “என் கத்தோலிக்க சகோதரியையும் சகோதரனையும் குறித்தென்ன? உங்களுக்கு நன்றி!” நான் உன்னிடம் சொல்லுகிறேன், திருமதி கா-ர்-னி-ல்-ஸ-ன்…அந்தப் பெண்மணி இங்கு இருப்பாளானால், இன்று காலையில் பில்லி பாலைப் பாருங்கள். மேலும்—இல்லையென்றால், பாருங்கள், அது என்னவென்று எனக்குப்—எனக்குப்—எனக்குப்—எனக்குப் புரியவில்லை (உங்களுக்குப் புரிகிறதா?); அது ஒரு கேள்வி. அது என்னவென்று என்னால்—என்னால் அறிந்துகொள்ள இயலவில்லை (புரிகிறதா?), ஏனெனில் நான் அவளுடைய மகனைக் குறித்தும், எக்காளங்களைக் குறித்தும், ஒரு கத்தோலிக்க சகோதரியைக் குறித்தும் ஏதோ ஒன்றை வாக்களித்திருக்கிறேன்; அது—என்—என்—நினைவில் இப்பொழுது இல்லை. பில்லியைப், பார். இது…இது ஒரு ஜெப வேண்டுகோள். அது அந்த நபரின் பெயரைக் கூறிவிட்டு, “தலைவலியும் எலும்பு உட்புழை என்ற சைனஸ்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது வெறும்…அவர்களுக்காக ஜெபம்பண்ணும்படி கேட்கின்றனர் என்று, நான் எண்ணுகிறேன். சரி.

75335. விவாகமும் விவாகரத்தும் என்பதை தயவுகூர்ந்து விளக்கவும். (அதை நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன். ஒரு தாளில் ஏழு கேள்விகள், எட்டு கேள்விகள் உள்ளன.) விவாகமும் விவாகரத்தும் என்பதை தயவுகூர்ந்து விளக்கவும். நான் விளக்கிவிட்டேன்.

76336. இப்பொழுது மோசேயும்—எலியாவும் பூமியில் இருக்கின்றனரா? இப்பொழுது மோசேயும்-எலியாவும் பூமியில் இருக்கின்றனரா? அவர்கள் அமெரிக்காவில் உள்ளனரா? 134 இல்லை! புரிகிறதா? இல்லை, அவர்கள் இங்கில்லை; சபை எடுத்துக்கொள்ளப்படும் வரைக்கும் அவர்கள் இங்கிருக்கமாட்டார்கள், அப்பொழுது மோசேயும் எலியாவும்…அதை எத்தனை பேர் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? சரி. நாம் பார்ப்போமாக. இதில் அவர்கள் எந்த பெயரையும் கையொப்பமிடவில்லை, எனவே…சரி. இந்த கேள்விகளை யார் கேட்டிருந்தாலும்…ஏழு கேள்விகள் உள்ளதென்று நான் நினைக்கிறேன்; நான் ஏழு என்று…குறித்திருக்கிறேன். சரி.

77337. “இயேசு” என்னும் நாமத்திற்கும் “இயேசுவின் நாமம்” என்பதற்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கவும். (ஒரு நிமிடம் பொறுங்கள்.) “இயேசு” என்னும் நாமத்திற்கும் “இயேசுவின் நாமம்” என்பதற்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கவும். 135 பாருங்கள், அவை ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட்டால் அவை இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும் (புரிகிறதா?), ஒரே நபருக்கு இயேசு என்ற நாமமும், இயேசுவின் நாமமும் பொருந்தும். இயேசுவின் நாமமும் மற்றும் இயேசு என்ற நாமம்—நாமம் அவர் யாராயிருக்கிறார். இயேசுவின் நாமம் அந்த நபரைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறது, எனவே அதுவும் அதேதான்… நான் நினைக்கிறேன் அது…அது சரியென்று தோன்றுகிறதல்லவா? புரிகிறதா? இயேசு என்னும் நாமம் அந்த நபரே, இயேசுவின் நாமம் நீங்கள் அந்த நபரைக் குறிப்பிடும்போது. புரிகிறதா? 136 உதாரணமாக, என் பெயர் வில்லியம். அது நான். சரி. இப்பொழுது, நீங்கள் கூறலாம்…நான் பேசிக்கொண்டிருக்கிறேன்… வில்லியத்தின் நாமம் என்னும்போது, அப்பொழுது நீங்கள் என்னைக் குறிப்பிடுகின்றீர்கள். அது என்னுடைய பெயர். புரிகிறதா? இப்பொழுது.

78338. வெவ்வேறு யுகங்களில் கர்த்தருடைய நாமம் மாறிப்போனதா? 137 ஆம், ஆம்! அது ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது—அவர் இருக்கிறேன் என்று அழைக்கப்பட்டார். அவர் யேகோவா என்று அழைக்கப்பட்டார், அவர் அநேக முறைமைகள் மாற்றியிருக்கிறார். அது மாறின கடைசி முறை, தேவன் மாம்சமாகி மனித நாமத்தைக் கொண்டிருந்தபோது. 138 யேகோவா, இருக்கிறேன் , இவையனைத்தும், ஒரு நாமத்துக்கான பட்டப் பெயர்கள். புரிகிறதா? நீங்கள் யேகோவாவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தால், அது இயேசுகிறிஸ்துவின் நாமமாக இருக்க வேண்டும். நீங்கள் யேகோவா-ராஃபா, யேகோவா-மனாசே, யேகோவா-யீரே, அந்த எல்லா நாமத்திலும் ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டுமானால், அது இயேசு கிறிஸ்துவின் நாமமாக இருக்க வேண்டும். இருக்கிறேன் என்பவர் இயேசு கிறிஸ்துவே. 139 ஞாபகம் கொள்ளுங்கள், அன்றொரு நாள் அவர் அங்கு நின்றுகொண்டு, அவர், “நீங்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தீர்கள் என்று சொல்லுகிறீர்கள்…” என்றார். “எங்கள் பிதாக்கள் மன்னாவைப் புசித்தார்கள்.” அவர், “அவர்கள் மரித்தார்கள்!” என்று கூறினார். 140 அவர்கள், “பாருங்கள், நீ பைத்தியம் பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்துகொண்டோம், ஏனென்றால் உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை, நீ ஆபிரகாமைக் கண்டதாக சொல்லுகிறாயே” என்றனர். அவர், “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் ” என்றார். பார்த்தீர்களா? அவர் இருக்கிறேன் என்பவராக இருந்தார். தேவனுக்கு சொந்தமாயிருந்த எல்லா பட்டப்பெயர்களும் நாமங்களும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனித நாமமாக ஆனது. சரி.

79339. இப்பொழுது: முத்திரைகள் திறக்கப்பட்டபோது காலம் முடிவுறுகிறது என்றால், அப்பொழுது…காலம் முடிவுற்றது என்றால் (என்னை மன்னிக்கவும்) முத்திரைகள் திறக்கப்பட்ட போது, அப்பொழுது ஆயிரம் வருட அரசாட்சியும் கூட—அப்பொழுது ஆயிரம் வருட ஆட்சியும் கூட முடிந்திருக்க வேண்டுமே, இல்லையா? 141 இல்லை, இல்லை! முத்திரைகள் திறக்கப்பட்டபோது, காலம் முடிவுறவில்லை. அதை தவறாகப் புரிந்துகொண்டீர்கள். அப்பொழுது என்ன நடந்ததென்றால், இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டன, காலம் முடிவுறவில்லை. புரிகிறதா? கவனியுங்கள். இப்பொழுது உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள், நீங்கள் இதை ஒலிநாடாவிலிருந்து பெறுவீர்களானால், ஒலிநாடாவைப் போட்டுக் கேளுங்கள். புரிகிறதா?

80142 காலம் ஒருபோதும் முடியவில்லை…இந்த கேள்வியைக் கேட்டவர், ஏதாவது இல்லை ஆயிரம் வருட அரசாட்சி முடிவடைந்துவிட்டது என்னும் நம்பிக்கை கொண்ட கூட்டத்தாரில் ஒருவராக இருக்க வேண்டும். காரணம் புரிகிறதா? சபையானது வீடு சென்று பூமிக்குத் திரும்ப வந்த பிறகு நமக்கு ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். புதிய வானம் புதிய பூமியின்போது காலம் முடிவடைகின்றது. 143 இப்பொழுது, ஆயிரம் வருட அரசாட்சியின் காலம் புதிய வானமும் புதிய பூமியும் அல்ல. ஆயிரம் வருட அரசாட்சிக்கு பிறகும் பாவம் இருக்கும். ஆயிரம் வருட அரசாட்சி, நோவா பேழைக்குள் பிரவேசித்து, தண்ணீருக்கு மேலே உயர்த்தப்பட்டு, மற்ற பக்கத்தில் காமையும் மற்றவர்களையும் கொண்டு வந்ததற்கு முன்னடையாளமுள்ளது. பாவமும் கூட பேழைக்கு வெளியே வந்தது. புரிகிறதா? 144 ஆனால் ஏனோக்கோ, மேலே எடுத்துக்கொள்ளப்பட்டான், அவன் மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட மணவாட்டிக்கு முன்னடையாளமாயிருக்கிறான், மற்ற பக்கத்தில் கொண்டு வரப்பட்டவர்களுக்கு அல்ல. எனவே பாவம் ஆயிரம் வருட அரசாட்சியின் மறு பக்கத்திலும் இருக்கும், ஆனால் ஆயிரம் வருட அரசாட்சியின்போது அல்ல. புரிகிறதா? ஆயிரம் வருட அரசாட்சியின்போது சமாதானம் நிலவும். பார்த்தீர்களா? ஆனால் ஆயிரம் வருட அரசாட்சியின் மறு பக்கத்தில் பாவம் ஒழித்துத் தீர்க்கப்படும், அதன்பிறகு காலம் என்பது மறைந்துவிடும். 145 இப்பொழுது, பரிசுத்த ஆவியால் அருளப்பட்ட ஏழு முத்திரைகள் திறக்கப்படுதல், நமக்கு முன்பிருந்த காலங்களில் விடப்பட்டிருந்தவைகளை நமக்கு தெரியப்படுத்துவதற்காகவே.

81146 இப்பொழுது, ஒரு பெரிய வேத பண்டிதர் அதன் பேரில் என்னை மடக்கப் பார்த்தார், அவர், “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள்…என்றாகிலும் ஒரு நாள் தேவன் அந்த ஏழு முத்திரைகளில் அடங்கியுள்ள இரகசியத்தை உமக்கு வெளிப்படுத்துவார். அவை நாம் இதுவரைக்கும் அறிந்திராத ஒன்றாக இருக்கும், அது வேதத்திலும் கூட எழுதப்பட்டிராத ஒன்றாக இருக்கும்” என்றார். இல்லை, இல்லை! அது அப்படியிருக்காது, ஏனெனில் நீங்கள் அவ்விதம் செய்வீர்களானால், அது ஒரு…அவ்விதம் நான் அதை உங்களிடம் கூறினால், நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாயிருப்பேன், ஏனெனில் (உங்களுக்குப் புரிகிறதா?) இந்த வார்த்தை…அங்கு…எல்லாமே அதனுடைய—அதனுடைய… இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு முழுவதும் இந்த வார்த்தையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புரிகிறதா? ஏழு முத்திரைகள் ஏழு சபைகளைக் குறித்ததாயிருக்குமானால், அது ஏற்கனவே முடிந்துவிட்ட ஒன்றாக இருக்க வேண்டும், ஏனெனில் நாம் லவோதிக்கேயாசபையின் காலத்தில் இருக்கிறோம். இந்த ஏழு முத்திரைகள் அவர்கள் முன் காலத்தில் கூறாமல் விட்டவைகளை வெளிப்படுத்துவதாயுள்ளன, அவர்கள் விட்டவைகளை அது திறந்து கொடுத்தது; லூத்தர் விட்டவைகளை; வெஸ்லி விட்டவைகளை; நமது காலம் வரைக்கும் இருந்து வந்த சீர்திருத்தக்காரர்கள், பெந்தெகொஸ்தேகாரர்கள் விட்டவைகளை.

82147 இப்பொழுது, அடுத்தபடியாக எஞ்சியிருப்பது சபை எடுத்துக் கொள்ளப்படுதலும், மோசேயும் எலியாவும் திரும்ப வருதலும், மணவாட்டியும் மணவாளனும் பூமியில் ஆயிரம் வருட காலம் அரசாட்சி செய்தலும், அதன் பிறகு நியாயத்தீர்ப்பும், பிறகு பாவம் முழுவதுமாக அழிக்கப்படுதலும். அப்பொழுது காலம் என்பது இருக்காது. 148 இப்பொழுது முடிவடைய…வில்லை…முத்திரைகள் காலத்தை ஒருபோதும் முடித்துவிடவில்லை. ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பிறகு நேரங்களும் காலங்களும். இல்லை! ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பிறகும் காலம் என்பது இருக்கும்.

83340. ஆயிரம் வருட அரசாட்சி என்பது ஆயிரம் வருடங்களாக இருக்குமா? அது ஒரு சந்ததியின் காலமாக இருக்கக் கூடாதா? 149 இல்லை! வேதத்தில் ஒரு சந்ததிக்கு நியமிக்கப்பட்ட காலம் நாற்பது ஆண்டுகளே. ஆனால் வேதமோ, “அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்” என்று உரைக்கிறது. அது பூமியில் ஆயிரம் வருட காலமாக இருக்கும், ஏனெனில் பூமியில் நாம் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள், உதாரணமாக தேவனுக்கு ஒரு நாளை போன்றே இருக்கும். தேவனுடைய கணக்கின்படி, பூமியில் ஆயிரம் வருடம் அவருக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே. இதை எத்தனை பேர் புரிந்துகொண்டீர்கள்? 150 எனவே, சபை பாவத்துக்கு எதிராக பாடுபடாத ஓய்வு நாளாக இது உள்ளது. சாத்தான் சிறிது காலத்திற்கு, ஆயிரம் வருடங்களுக்கு கட்டப்பட்டிருப்பான், ஏனெனில் அவனுடைய பிரஜைகள் அனைவரும் அப்பொழுது நரகத்தில் இருப்பார்கள், அவனுடைய… பூமியிலுள்ள சபை மீட்கப்பட்டு கிறிஸ்துவின் சமூகத்தில் இருக்கும், எனவே அவனுக்கு கிரியை செய்ய ஒன்றும் இருக்காது. எனவே, நான் ஏற்கனவே கூறினபடி, அது ஒரு சங்கிலியாக இருக்காது, ஒரு நீண்ட சங்கிலியாக, அது சூழ்நிலை என்னும் சங்கிலி; அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அவன் உதவியற்றவனாகவும் நம்பிக்கையற்றவனாகவும், அவனுடைய பிரஜைகள் உயிரோடெழ காத்துக் கொண்டிருப்பான்; அப்பொழுது அவர்கள் செம்மறியாடுகளும் வெள்ளாடுகளுமாக பிரிக்கப்படுகின்றனர்.

84341. கர்த்தருடைய நாமம் உண்மையில் சாலொமோன்தானா அல்லது இல்லையா என்று அவனிடத்தில் சோதித்து—அவனிடத்தில் சோதித்து தனக்குத் தானே அறிந்து கொள்வதற்காகத் தானே சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனிடம் வந்தாள் அல்லவா? (நான் அதைப் புரிந்து கொண்டதாக நினைக்கவில்லை. சற்று காத்திருங்கள்.) கர்த்தருடைய நாமம் உண்மையில் சாலொமோன்தானா அல்லது இல்லையா என்று அவனிடத்தில் சோதித்து—அவனிடத்தில் சோதித்து தனக்குத் தானே அறிந்து கொள்வதற்காகத்தானே சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனிடம் வந்தாள் அல்லவா? (நான்—நான் இந்த ஒன்றை புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். அப்படியே…ஒரு நிமிடம் என்னை மன்னிக்கவும். நான் அதை மீண்டும் வாசிக்கட்டும்.) கர்த்தருடைய நாமம் உண்மையில் சாலொமோன்தானா அல்லது இல்லையா என்று அவனிடத்தில் சோதித்து தனக்குத்தானே அறிந்து கொள்வதற்காகத் தானே சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனிடம் வந்தாள் அல்லவா? 151 இல்லை! தேவனுடைய நாமம் சாலெமோன் தானா என்று அறிந்துகொள்வதற்காக அவள் சோதிக்கவில்லை. சாலொமோன் ஒரு ராஜாவாயிருந்தான். அவள் வந்து, அவள் கூறினாள், அவள்—அவள், “மெய்யாகவே தேவன் அவருடைய ராஜாவோடும் அவருடைய ஜனங்களோடும் இருக்கிறார்” என்றாள். புரிகிறதா? அவள் வந்து, சோதித்தாள்…அவள் சாலொமோனுக்கு இருந்த வரங்களை சோதித்தாள், ஏனென்றால் அவளுடைய இருதயத்தில் மறைந்திருந்தவைகளை சாலொமோன் அவளுக்கு வெளிப்படுத்தினான், அது அவன் பூமியில் தேவனுடைய ராஜாவாக இருந்தான் என்பதைக் காண்பித்தது.

85152 நீங்கள் ஞாபகம் கொள்ளுங்கள், நான் நினைக்கிறேன், கீழே உள்ள… அவள் வாழ்ந்த சேபா தேசத்தில், அங்கிருந்தே வருகிறாள், அவள் அங்கிருந்தே வருகிறாள், ஜனங்கள் வந்து, உங்களுக்குத் தெரியுமா, அங்கு நடக்கிற மகத்தான காரியங்களைக் குறித்தும், அவர்களுடைய ராஜாவை அபிஷேகம் செய்துள்ள தேவன் ஒருவர் அங்கிருக்கிறார் என்றும்…எவ்வாறு அந்த ராஜா தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள். சாலொமோனின் நாமம், அல்லது தேவனுடைய நாமம் சாலொமோன் என்று அவள் கருதினதாக நான் நினைக்கவில்லை, ஏனெனில் அவள் அவ்வாறு நினைத்திருந்தால், அது அவளை மீண்டும் ஒரு அஞ்ஞானியாக்கிவிடும். புரிகிறதா? எனவே, ஒருக்கால் அவள்—அவள் அவ்விதம் செய்திருக்க கூடும். அவளுடைய இருதயத்தில் அவள் தேவன்தான் சாலொமோன், சாலொமோன் தான் தேவன் என்று எண்ணியிருக்கக்கூடும், ஏனெனில் அவள் ஒரு அஞ்ஞானியாயிருந்தாள். ஆனால் சாலொமோன் ஒரு—ஒரு பகுத்தறியும் வரத்தினால்; அந்த காலத்தில், அது ஞானம், என்றழைக்கப்பட்டது. அவன் அதைப் பகுத்தறிந்தான். தேவன் சாலொமோனோடு இருந்தார் என்பதை அவள் அறிந்துகொண்டாள், ஏனென்றால் அப்பொழுது… அவர்கள்…அவள் கண்டுகொண்டாள்…அவள் தன்னுடைய சிந்தையில் அந்த எண்ணத்தோடு வந்திருப்பாளானால்…

86153 இங்கு இந்த கேள்வியைக் கேட்ட நபர், “உண்மையில் சாலொமோன்…உண்மையில் கர்த்தருடைய நாமம் சாலொமோன் என்பது அவளுக்குத் தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார். பாருங்கள், சாலொமோன் கர்த்தர் அல்ல; அவள் அதை ஜனங்களிடமிருந்து அறிந்துகொண்டாள், ஏனெனில் அவர்கள் யேகோவாவை தொழுதுகொண்டனர், அங்கு அந்த மகத்தான உடன்படிக்கை பெட்டி இருந்தது, அந்த மகத்தான உடன்படிக்கை, அந்த உடன்படிக்கை பெட்டிக்குள் கர்த்தருடைய கட்டளைகள் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் சீனாய் மலையைக் குறித்தும், அவர்கள் சென்ற வெவ்வேறு இடங்களைக் குறித்தும் அவளிடம் கூறினார்கள். அப்பொழுது, அந்த கட்டளைகளை அளித்த தேவன்—அநத தேவன் இந்த மனிதனுக்குள் இருந்தார் என்பதை அவள் அறிந்துகொண்டாள், ஏனெனில் தேவனுக்கு மட்டும் உரியதான சிந்தனைகளைப் பகுத்தறிதல் இவனிடம்—இவனிடம் இருந்தது. பார்த்தீர்களா? எனவே தேவன் சாலொமோனுக்குள் இருந்தார் என்பதை—என்பதை அவள் அறிந்துகொண்டாள். ஆனால் இப்பொழுது, கேள்வி கேட்டவர் இந்தவிதமாகத்தான் கேட்டிருக்கக் கூடும். ஆனால், “கர்த்தருடைய நாமம் உண்மையில் சாலொமோன் என்பதை அவள் அறிந்திருந்தாளா?” ஒருக்கால் அவர் தன் மனதில் இருந்தவிதமாகவே அதை எழுதவில்லை. உங்களுக்குப் புரிகிறதா? எனவே “கர்த்தர் சாலொமோனுக்குள் இருந்தார்” என்பதை அவர்கள் கூறியிருக்கலாம்—இந்தவிதமாகக் கூறியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆம், நிச்சயமாக கூறியிருப்பார்கள். காரணம் அதுதான் கேள்வி என்றால், நிச்சயமாக! அவள் தேவனை அறிந்திருந்தாள், ஏனென்றால் அவள் அதை குறிப்பிட்டாள். அவள் வேறெந்த தேவனையும் வழிபட மறுத்துவிட்டாள். நான் நினைக்கிறேன் அவள்—அவள் கூறினாள் அவள் எப்பொழுதும்…அவள் ஏனென்று அறிந்துகொண்டாள்…அவள் கேட்க வேண்டியதையெல்லாம் கேட்டுவிட்டாள்; கேட்க அவளுக்கு வேறு கேள்விகள் எதுவும் இருக்கவில்லை. சாலொமோன் முழு காரியத்தையும் அவளுக்கு வெளிப்படுத்தினான், தேவன் அவனோடு கூட இருந்தார் என்பதை அவள் அறிந்துகொண்டாள்.

87342. நாங்கள்—நாங்கள் இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் பதிவு செய்யும் நீதிபதியால் விவாகம் செய்து வைக்கப்பட்டோம். அது தவறா? 154 ஆம், அவ்விதம் நீங்கள் செய்தது தவறாகும். விவாகம் என்பது தேவனுடைய வீட்டுக்கு உரிய ஒன்று. ஆனால் உங்களுக்கு ஏற்கனவே விவாகமாகிவிட்டதால், நீங்கள் எப்பொழுது உண்மையில் விவாகம் செய்துகொள்கிறீர்கள் என்றால்: நீங்கள் ஒருவருக்கு ஒருவர் விவாக வாக்குறுதி அளித்தபோதே, அதாவது நீங்கள்…நீங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதாக ஒருவருக்கொருவர் வாக்களித்துக் கொள்ளும்போதே நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள். திருமணம் பதிவு செய்யும் நீதிபதி உங்களுக்கு விவாக சான்றிதழ் கொடுத்து, விவாகமாகாமல் நீங்கள் கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு பதிலாக, சட்டப் பூர்வமாக நீங்கள் கணவனும் மனைவியுமாக வாழும்படி செய்கிறார். ஆனால் நீங்கள் அந்த பெண்ணுக்கு வாக்களித்து, இது…அவளும் உங்களுக்கு உண்மையாக வாழ்வதாகவும், உங்களை கணவனாக ஏற்றுக்கொள்வதாகவும் வாக்களிக்கும்போதே உங்களுக்கு விவாகமாகிவிடுகிறது. உங்களுக்கு ஞாபகமுள்ளதா, அதை நான் போன வாரம் விளக்கிக் காண்பித்தேன். அது போன வாரம் என்றுதான் நினைக்கிறேன். புரிகிறதா? நீங்கள் அவளுக்கு வாக்களித்தபோது. புரிகிறதா? 155 வேதாகமத்தில் பழைய—பழைய ஏற்பாட்டிலும் கூட, ஒரு மனிதன் விவாகம் செய்துகொள்ள ஒரு பெண்ணுக்கு நியமிக்கப்படும்போது, (அதைக் குறித்த கட்டளைகள் உங்களுக்கு தெரியும். ஏன், அதை மீறினால், அது விபச்சாரத்துக்கு சமானம். நிச்சயமாக!) அவன் வாக்களித்தால், அவ்வளவுதான்.

88156 அன்றொரு நாள், “ரத்து செய்யப்பட்டது—ரத்து செய்யப்பட்டது—ரத்து செய்யப்பட்டதும் ஒரு விவாகரத்தைப் போன்றதா?” என்னும் கேள்வி கேட்கப்பட்டது. புரிகிறதா? நண்பர்களே, இவ்விதமான கேள்விகளை நீங்கள் என்னைக் கேட்கும்போது, அது எனக்கு என்ன செய்கிறது என்பதை நீங்கள் அறிவதில்லை. இரண்டு மூன்று முறை விவாகமான என் நண்பர்கள் பலர் இங்கு உட்கார்ந்துகொண்டிருக்கின்றனர். நான் என் சொந்த மகன் பில்லி பாலையும் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் உணருகிறீர்களா? நான் பில்லி பாலை மட்டும் சும்மா விட்டுவிடுவேனா? இல்லவே இல்லை! பில்லி பால் ஒரு பெண்ணை விவாகம் செய்துகொண்டு, என்னிடம் வந்து, “அப்பா, நான் விவாகம் செய்து கொள்ளப்போகிறேன்” என்றான். 157 நான் என் காரைக் கழுவிக்கொண்டிருந்தேன்; நான், “உன் தலையை சுவற்றில் மோதிக்கொள்” என்று சொல்லிவிட்டு, என் காரைக் கழுவிக்கொண்டேயிருந்தேன். அவன், “நான் விவாகம் செய்துகொள்ளப்போகிறேன்” என்றான். நான், “ஓ, போ” என்று சொல்லிவிட்டு, அந்த விதமாகவே தொடர்ந்து காரைக் கழுவிக்கொண்டிருந்தேன். அவன் தன் தாயிடம் சென்று சொன்னான், அவனுடைய தாயோ அவனைப் பார்த்து கேலியாக சிரித்தாள். அவன் என்ன செய்தான் தெரியுமா? பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறு பெண்ணுடன் அவன் ஓடிப்போய் விவாகம் செய்துகொண்டான். நாங்கள் அந்த விவாகத்தை அந்த பெண்ணின் தகப்பனும் நானுமாக சேர்ந்து ரத்து செய்தோம். நாங்கள் அந்த விவாகத்தை ரத்து செய்தோம், இருப்பினும் அவன் விவாகம் செய்துகொண்டதாகவே கருதப்பட வேண்டும். அவன் என் பையன், அவன் இங்கு உட்கார்ந்து கொண்டு நான் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். இப்பொழுது, அது முற்றிலும் உண்மை. 158 அவன் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிற அந்த பெண்ணுடன் என்னிடம் வந்து, என் மருமகள். என் பேரன்…அவன், “அப்பா, எனக்கு விவாகம் செய்து வைப்பீர்களா?” என்றான். 159 நான் “முடியவே முடியாது” என்று சொல்லிவிட்டேன். அது என் சொந்த மகன். அவனை நான் தூக்கி சுமந்து, என்னால் முடிந்த எல்லாவற்றையும் அவனுக்குச் செய்து, அவனுக்கு நான் தாயும் தகப்பனுமாய் இருந்து வந்திருக்கையில், இது என் இருதயத்தை ஊடுருவிக் குத்தவில்லை என்றா நினைக்கிறீர்கள்? அதை கூறுவது என்னைக் கொல்லவில்லை என்றா நினைக்கிறீர்கள்? ஆனால் அது உண்மை. நிச்சயமாக! என் மகன் இங்கு உட்கார்ந்துகொண்டு கேட்டுக்கொண்டிருக்கிறான்…என் மருமகளும் என் சிறு பேரனும் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்… ஆனால் அது தவறென்று நான் அவனிடம் சொல்கிறேன் (புரிகிறதா?), ஏனெனில் நான் கூறியாக வேண்டும். அந்த வார்த்தைக்கு நான் கடமைபட்டவனாயிருக்கிறேன்.

89160 நான் கேட்கிறேன், நீங்கள் திருமணம் பதிவு செய்யும் நீதிபதியினால் விவாகம் செய்து வைக்கப்பட்டீர்களா? நீங்கள் சபை மூலமாக, போதகர் மூலமாக விவாகம் செய்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவே ஒரு கிறிஸ்தவன் செய்யக் கூடிய நாணயமான காரியம். ஆனால் நீங்கள் ஏற்கனவே அந்த வாக்குத்தத்தத்தை, அந்த பொருத்தனையை செய்துகொண்டு, இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பு விவாகம் செய்துகொண்டதால், அதனால் பரவாயில்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள், “பாருங்கள். நான்…” எனலாம். 161 ஒருக்கால், “நான் வந்து, மீண்டும் விவாகம் செய்துகொள்ள வேண்டுமா?” என்னும் கேள்வி எழலாம். உங்களுக்குப் பிரியமானால் செய்யுங்கள். உங்கள் விசுவாசத்துக்கு இடையூறாக இருக்கும் எதையும் மனதில் வைக்காதீர்கள். ஏனெனில் அப்படிப்பட்ட ஏதாகிலும் இருந்தால், நீங்கள் இங்கிருந்து முன்னேற முடியாது; நீங்கள் இங்கேயே நின்றுவிடுவீர்கள். அந்த கேள்விக் குறி வரும்போது, இந்த இடத்திலேயே, நீங்கள் முடிந்துவிடுவீர்கள். ஆனால் இப்பொழுது, என்னைப் பொறுத்தவரையில், அதனால் பரவாயில்லை. 162 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனக்கு ஞானஸ்தானம் கொடுத்த அந்த மனிதரே என்னை சபையைவிட்டு வெளியேற்றினார், ஏனென்றால் நான் பெண் பிரசங்கிகளின் பேரில் அவரோடு உடன்படவில்லை. அது என்னை மீண்டும் ஞானஸ்தானம் பெற செய்யவில்லை. புரிகிறதா? நிச்சயமாக இல்லை. பார்த்தீர்களா? பரவாயில்லை.

90163 ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், இந்த காரியங்கள் என்னை வெட்டிக் கொண்டிருக்கின்றன. எனக்கு நெருங்கிய நண்பர்கள் இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள், புருஷர்களும் ஸ்திரீகளும் தங்களுடையதை எடுத்து…அவர்களுடைய… நான் அவர்களிடத்தில் கேட்டால் அவர்கள் தங்களுடைய கண்ணையும் பிடுங்கி எனக்குக் கொடுப்பார்கள் (ஆம், ஐயா!), அவர்கள் இருமுறை விவாகமானவர்கள், சிலர் மூன்று முறையும் கூட, அவர்கள் இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். நான் நேசிக்கின்ற என் சொந்த மகன், என் சொந்த பேரன், மற்றும் என் மருமகள்… பில்லியைப் பாருங்கள், நான் எப்படி அவனுக்கு ஆதரவாக நின்றேன் மற்றும் அவன் எப்படி எனக்கு ஆதரவாக நின்றான், ஆனால் உண்மையைச் சொன்னாலும் சொல்லாமற்போனாலும், உண்மை உண்மைதான். 164 எனக்கு…இன்று நான் வெளியே சென்று, அசெம்பிளீஸ் ஆப் காட் சபை அல்லது வேறு சபையிலுள்ள ஜனங்களை அழைத்து, “நான்…நான்…சொன்னதெல்லாம் தவறு, அந்த வார்த்தையுடன் நான் நிலைத்திருக்கப்போவதில்லை, நான் உங்களுடன் நிலைத்திருக்கப்போகிறேன்” என்று என்னால் கூற முடியும். அவ்விதம் நான் செய்தால், இந்த தேவனுடைய வரத்தைக் கொண்டு நான் வெகு விரையில் மிகவும் பிரபலமான ஒருவனாகிவிட முடியும். எனக்குள்ள செல்வாக்கு அனைத்தையும் இந்த ஸ்தாபனங்களில் ஒன்றுக்கு அளித்தால், அவர்கள் மத்தியில் எனக்கு பெரிய பெயர் கிடைக்கும். அவர்கள் மத்தியில் எனக்கு பெரிய பெயர் கிடைக்க வேண்டுமென்ற கவலை எனக்கில்லை. அவர்களை நான் நேசிக்கிறேன், அது உண்மை. ஆனால் நான் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும். அவ்விதம் நான் செய்தால், நான்—நான்—நான் ஒரு மாயமாலக்காரனாக இருப்பேன்.

91165 இங்கு நான் நின்றுகொண்டு, ஒரு பெண்ணுக்கு வாக்களித்த என் சொந்த மகன் இங்கு உட்கார்ந்திருக்கையில், நான் உண்மையைக் கூறாமல்போனால்…நான் ஒரு மாய்மாலக்காரனாயிருப்பேன். அவனுக்கு அந்த திருமண வைபவம் நடந்திராமற்போனாலும், அவன் அந்த ஸ்திரீயுடன் வாழ்ந்து, அல்லது அவளுடன் உறங்கி, அந்தப் பெண்ணோடு, அல்லது அது என்னவாயிருந்தாலும், அவன் அவளுக்கு வாக்களித்தபோது, அவன் அவளை மணந்துகொண்டான், அது பில்லி பாலாயிருந்தாலும் வேறு யாராயிருந்தாலும். அது முற்றிலும் உண்மை! அவன் வாக்களித்தபோதே அவன் மணந்துகொண்டான். அது நானாயிருந்தாலும், அதுவேதான். 166 நாம் நேர்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். நான் என் மகனுடன் நேர்மையுள்ளவனாயிராமற் போனால், உங்களுடன் நேர்மையுள்ளவனாயிருக்க முடியாது. நான் உங்களோடு நேர்மையாக இல்லாவிட்டால், நான் தேவனோடு நேர்மையாக இருக்கமாட்டேன். நான் உங்களிடம் கூறுவது என் உண்மையுள்ள கருத்து என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதிலிருந்து எதையும் உண்டாக்கிவிடாதீர்கள், நான் சொன்னவிதமாகவே அதை சொல்லுங்கள் (புரிகிறதா?), ஏனெனில் நான் உங்களுக்கு உண்மையையே சொல்லப்போகிறேன்.

92167 இப்பொழுது, நான் உங்களிடம் இவ்விதமாக அடிக்கடி பேசுவதில்லை, ஏனெனில் நீங்கள் என் பிள்ளைகள், அவ்விதமே உங்களை நான் அழைக்கிறேன். நான் சுவிசேஷத்தின் மூலம் உங்களை கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்தேன். நாம் இங்கு ஒன்றாய் இருக்கும்போது, நம்முடைய சொந்த குழு இங்கு உட்கார்ந்துகொண்டிருக்கும்போது, நான்—நான் உங்களை சிறிது கடிந்துகொள்கிறேன். ஆனால் நான் இதை உங்களிடம் கூற விரும்புகிறேன்: நீங்கள் என்னிடம் வந்து ஏதாவதொன்றை கேட்பீர்களானால், எனக்குத் தெரிந்ததை உங்களுக்குச் சிறந்த முறையில் எடுத்துரைப்பேன்! அது வார்த்தையில் இருக்குமானால், அது என்னைக் குற்றப்படுத்தினாலும் எனக்குக் கவலையில்லை, என்னிடமிருந்தும் அநேக காரியங்கள் அகற்றப்பட வேண்டியதாயுள்ளது. நிச்சயமாக! 168 நீங்கள் என்னிடம் ஏதாவதொன்றைக் கேட்கும்போது நான் உங்களிடம் சொல்லபோகிறேன். உங்களுக்கு நான் ஏதாவதொன்றைக் கூறினால், உங்களுக்கு நான் சத்தியத்தையே கூறப்போகிறேன். அவ்விதமாகவே வாழ நான் எப்பொழுதும் முயன்று வந்திருக்கிறேன். அவ்விதமாவே நான் வாழ்ந்து அவ்விதமாகவே நான் மரிக்க விரும்புகிறேன், எவரிடத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கவே.

93169 அண்மையில் ஒரு இளம் பெண் என்னிடம் வந்தாள்; அந்த ஸ்திரீ இப்பொழுது இங்கில்லை. டாம் சிம்ப்ஸன், உங்களில் பலருக்கு அவரைத் தெரியும். டாம் அருமையான நபர்; அவருடைய ஜனங்கள் யாரும் இங்கில்லை. இங்கிருக்கும் ஃபிரட்டைத் தவிர அவர்கள் எல்லோரும் திரும்பிப் போய்விட்டனர் என்று நான் நினைக்கிறேன். நான்…பிரட் சாத்மன், அவர் இங்கிருக்கிறாரா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை ஆனால் அவர்கள் இருக்கிறார்கள் என்று நான்—நான் நினைக்கிறேன். ஆனால் டாம் சிம்ப்ஸன், அவர்கள்…அவர் ஃபிரட்டுடன் கூட கனடாவிலிருந்து வந்தவர். அவர்கள்…உங்களுக்கு நமது தர்மகர்த்தா, ஃபிரட்டைத் தெரியும். 170 சகோதரன் டாம்மை, உங்களில் பலருக்கு இங்குள்ள அவரைத் தெரியும். டாம் அருமையான ஒரு மனிதன்; அவர் சிறந்த நபர்; திருமதி சிம்பஸனும் கூட. அவள் மட்டும் நான் சொல்வதற்கு செவிகொடுத்தால், அவள் மீண்டும் நடப்பாள். அவள் ஊனமுற்றவளாய் சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள். அவள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டதை அவள் மட்டும் செய்வாளானால், அவள் நடப்பாள். அது உண்மையா என்பதை நீங்கள் கவனித்து அறிந்துகொள்ளுங்கள். புரிகிறதா? இப்பொழுது. அவள் அதை எதிர்பார்த்தால், அவள் என்ன செய்ய வேண்டுமென்று கூறப்பட்டதோ, அவள் அதை செய்ய வேண்டும்.

94171 அவளுடைய பெண்களில் ஒருத்தி, இனிமையான சிறு பெண்கள்…நான்…அவர்கள் சிறுமிகளாயிருந்தபோது, அவர்களை என் தொடையின் மேல் வைத்து அவர்களுடன் விளையாடுவது வழக்கம். இப்பொழுது அவர்கள் பெரியவர்களாகிவிட்டனர்; அவர்கள் ஏறக்குறைய ஸ்திரீகள், பத்து பன்னிரண்டு வயதுடையவர்கள். எனவே, அவர்களில் ஒருத்தி என்னிடம் வந்து, “சகோதரன் பிரான்ஹாமே, நான் ஒரு சொப்பனம் கண்டேன்” என்றாள். அவள் என்னிடம் அந்த சொப்பனத்தை உரைத்தாள். அவள், “அது எதைப் பொருட்படுத்துகிறது?” என்று கேட்டாள். நான், “தேனே, எனக்குத் தெரியாது. நான் ஜெபிப்பேன், கர்த்தர் எனக்கு அதை அருளுவாரானால், நான் உன்னிடம் சொல்லுவேன்” என்றேன். 172 அவள், “சரி!” என்றாள். சில நாட்களுக்குப் பிறகு அவள் திரும்பி வந்து, “அந்த சொப்பனத்துக்கு அர்த்தம் கிடைத்துவிட்டதா?” என்று கேட்டாள். நான், “இல்லை, தேனே, எனக்குக் கிடைக்கவில்லை; அவர் எனக்கு அதை வெளிப்படுத்தித் தரவில்லை” என்றேன். 173 கிட்டத்தட்ட ஓரிரண்டு வாரம் கழித்து அவள் திரும்பவும் வந்து, “சகோதரன் பிரான்ஹாமே, அந்த சொப்பனத்தைக் குறித்தென்ன?” என்று கேட்டாள். நான், “எனக்குத் தெரியவில்லை” என்றேன். பாருங்கள், அவள் ஏமாற்றமடைந்ததுபோல் காணப்பட்டாள். நான்…

95174 இதை ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் என்னிடம் உங்களுக்கு சொல்லும்படிக்கு ஏதாவதொன்றைக் கேட்டு, அதை நான் தேவனிடத்திலிருந்து பெறவில்லையென்றால், எனக்கும் கூட ஏமாற்றம் உண்டாகிறது. ஆனால் நான் மாய்மாலக்காரனாக அல்லது பொய்யனாக இருக்க மாட்டேன், உங்களிடம் நான் உண்மையே கூறப்போகிறேன். அவர் என்னிடம் சொல்வாரானால், நான் உங்களுக்கு சொல்வேன்; அவர் கூறாமற்போனால், நானும் கூறமாட்டேன். அவ்வளவுதான் என்னால் செய்ய முடியும். அவ்விதமாக நீங்கள் என்னை நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 175 இப்பொழுது, அந்த சொப்பனத்தின் அர்த்தம் என்னவென்று என் மனதில் அறிந்திருந்தேன், ஆனால் அது எப்படித் எனக்குத் தெரியும். அதை நான் மறுபடியும் காண வேண்டும். கர்த்தருடைய நாமத்தில் நான் சொப்பனத்துக்கு அர்த்தம் உரைத்து, அது அவ்விதமாக இருக்கவில்லை என்று எப்பொழுதாவது எந்த ஒரு இடத்திலுள்ள யாருமே தன் விரலைச் சுட்டிக்காட்டி என்னைக் குற்றப்படுத்த முடியாது. ஆம், ஐயா! நான் கர்த்தருடைய நாமத்தில் உரைத்ததொன்றும், அதேவிதமாக நிறைவேறாமல் போனதில்லை, ஏனெனில் நான்—நான்…அது அவர். அப்பொழுது அது என் பொறுப்பல்ல, அது அவராய், அவருடைய பொறுப்பாகிவிடுகிறது.

96176 நான், “பார். ட்ரூடி, நாம் அரிசோனாவுக்குப் போய்க்கொண்டிகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நீ அங்கு அடைந்த பிறகு நான் உன்னிடம் வந்து, ‘ கர்த்தர் உரைக்கிறதாவது; உன் சிறிய தம்பி…’? குட்டி ஜானி, அவனுடைய வயிறு எப்பொழுதும் திறந்திருக்கிறது என்று நான் கேலி செய்வது வழக்கம்.” நான், “அவன் தெருவில் விபத்துக்குள்ளாகி மரித்துப் போனால் எப்படியிருக்கும்? நான், ‘என்ன நடக்கப்போகிறதென்று உனக்குத் தெரியுமா? அவன் தெருவில் விபத்துக்குள்ளாகப்போகிறான்.’ நீ என்னிடம் வந்து, மேலும்—மேலும் நீர் கூறப்போகிறதோ, ‘சகோதரன் பிரான்ஹாமே…’ சரியாக கூறினால், ‘போய், அவனை சகோதரன் பிரான்ஹாமிடம் கொண்டு செல்லுங்கள்,’ என்பாய். அதன் பிறகு நீ என்னைத் தேடிக்கொண்டு வந்து, அப்பொழுது நான் வெள்ளை சூட் அணிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுடன் படிக்கட்டில் நின்று பேசிக்கொண்டிருப்பேன். அப்பொழுது நான் குட்டி ஜானியின் மேல் என்னுடைய கரங்களை வைக்கப்போகிறேன்; அவன் மீண்டும் உயிரடைந்து நலமடையப்போகிறான்” என்று சொன்னேன். இப்பொழுது, “அதன்பிறகு நீங்கள் அதேவிதமாக நீ மேற்கு பிரதேசத்துக்கு செல்கிறாய், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒரு நாள் உன் தாயார் கதறுவதையும், உன் தந்தை கதறுவதையும் நீ கேட்கிறாய், பாருங்கள், ஜானி விபத்துக்குள்ளாகிவிட்டான். நீ என்ன செய்வாய்?” என்று கேட்டேன். பார்த்தீர்களா? நீங்கள் என்னை நம்புகிறீர்கள். புரிகிறதா? உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் எதையும் ஊகித்து உங்களிடம் கூறப்போவதில்லை: உங்களிடம் நான் உண்மையைக் கூறப்போகிறேன், இல்லையென்றால் உங்களிடத்தில் ஒன்றையும் கூறமாட்டேன். நான், “அதன் பிறகு நீ என்னிடம் வந்து, ‘ஓ, குட்டி ஜானி…’ அல்லது, உன் தாயிடம் வந்து, ‘ஓ, குட்டி ஜானி விபத்துக்குள்ளானான். அவன் மரித்துப்போனான்! அவன் மரித்துப்போனான்!’” என்று கூறுகிறாய் என்று வைத்துக்கொள்வோம்.

97177 “மருத்துவர் வருகிறார், அவனுடைய கண்களை திறந்து பார்க்கிறார், அவனுடைய இருதயத்தை, அவனுடைய மூச்சை பரிசோதிக்கிறார். ‘அவன் இறந்துவிட்டான், அவனை சவக் கிடங்குக்கு கொண்டு செல்லுங்கள்’” என்கிறார். “நீ என்ன செய்வாய்? அப்பொழுது நீ, ‘ஒரு நிமிடம் பொறுங்கள்! ஒரு நிமிடம் பொறுங்கள்! அவனை என்னுடைய கரங்களில் ஏந்திக்கொள்கிறேன்; நாம் நடப்போம்’” என்கிறாய். ஆமென்! “‘ட்ரூடி, நீ எங்கே போகிறாய்?’” “‘எனக்குத் தெரியாது.’” “‘உன் கரங்களில் என்ன?’ மரித்துப் போய்விட்ட உன்னுடைய குட்டித் தம்பியை நீ உன்னுடைய கரங்களில் ஏந்திக்கொண்டிருக்கிறாய். நீ தெருவில் நடந்து சென்று கொண்டேயிருக்கிறாய். ஜனங்கள், ‘அந்தப் பெண்ணுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?’” என்று கேட்கின்றனர். இல்லை, ஐயா! அவள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டிருக்கிறாள். என்ன நடக்கப்போகிறது? 178 “முதலாவதாக என்ன தெரியுமா, நீ உன் தகப்பனிடமும் தாயினிடமும், ‘பொறுங்கள், நாம் சகோதரன் பிரான்ஹாமைக் கண்டு பிடிப்போம். அவர் வெள்ளை சூட் அணிந்துள்ள ஒரு மனிதனுடன் படிக்கட்டுகளில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருப்பார். அதோ அவர் அங்கு நின்று கொண்டிருக்கிறார். என்ன நடக்கிறதென்று பாருங்கள்’ என்பாய். உன் மனதில் எவ்வித சந்தேகமுமில்லை. நீ அங்கே நடந்து வந்து, ‘சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் என்னிடம் என்ன கூறினீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?’” என்பாய். “ஆம், ட்ரூடி. ‘ஜானி எழுந்திரு!’” அவன் குதித்தெழுந்து தெருவில் ஓடிப்போவான்.

98179 “ஆனால் நான் என் மனதில் சரியென்று படும் சில காரியங்களை ஊகித்து உங்களிடம் கர்த்தர் உரைக்கிறதாவது என்று சொல்லிவிட்டு, அது தவறாயிருந்து, அது நடக்காமற்போனால், அது நிறைவேறாமற்போனால்; அப்பொழுது அந்தக் குட்டி பையனைக் குறித்து நீ பயம் கொண்டிருப்பாய். அவனைக் கொண்டு வர வேண்டுமா வேண்டாமா என்று உனக்குத் தெரியாது.” 180 உங்களுக்கு உதவி செய்ய தேவன் என்னை இங்கு அனுப்பினார், நான் உங்களுக்கு ஒரு உதவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது வெட்டினாலும், நோகப்பண்ணினாலும், அது என்ன செய்தாலும் பொருட்படுத்தாமல், எப்படியும் அதை நான் கூறியே ஆக வேண்டும்.

99181 ஆனால் இப்பொழுது விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தில், நான் அதைக் குறித்துப் பேசுவதை நீங்கள் கேட்கும் வரைக்கும் அமைதியாயிருங்கள் என்று ஒரு சகோதரனைப்போல உங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். கேட்கிறதா? நீங்கள் தற்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிற விதமாகவே வாழ்ந்துகொண்டிருங்கள். (நான் இதன் பேரில் அங்கே அதிக நேரம் எடுத்துவிட்டேன்). 182 “நாங்கள் இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பு விவாகம் செய்துகொண்டோம் (ஆம்)…திருமணம் பதிவு செய்யும் நீதிபதியால்.” அருமை சகோதரியே, அருமை சகோதரனே, ஒரு முறை விற்பனையாளன் ஒருவர் என்னிம் இதைக் கூறினார் (அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்தார்) கனெக்டிகட் என்னுமிடத்தில் அல்லது அங்கிருந்த ஏதோ ஓரிடத்தில் ஒரு சபைக்குள் நடந்து சென்றாராம், அது ஒரு மிகப்பெரிய சபை, ஜெபிப்பதற்காக உள்ளே நுழைந்தார். அது…அவர் ஒரு பெந்தேகோஸ்தேகாரனாக இருந்தார், ஆனால் அவர் ஜெபிக்கும்படி அங்கே உள்ளே சென்றார். அவர் அங்கே உள்ளே சென்று ஜெபிக்கும்படி சபையில் முழங்காற்படியிட்டதாகக் கூறினார்…அவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பிரயாணம் செய்துகொண்டிருந்ததாகவும், களைப்புற்றிருந்ததாகவும் வீட்டைக் குறித்து ஒரு விதமான ஏக்கங்கொண்டிருந்ததாகவும் கூறினார், அவர் ஒரு விற்பனையாளராக இருந்தார், அவர் தொழிற்சாலைகளுக்கு தேவையான…பொருட்களை, விற்பனை செய்துகொண்டே செல்பவர் என்றும் கூறினார். அவர் அங்கே ஏதோ ஒன்றை வாங்குவதற்காக அந்தப் பக்கம் சென்றிருந்தபோது, அப்பொழுது அவர் இந்த சபையின் அருகில் வந்தாராம், “நான் போவேன்…நான் உள்ளே போய் ஜெபம்பண்ணுவேன்” என்று நினைத்துக்கொண்டாராம். கதவுகள் திறந்திருந்தன; எனவே அவர் உள்ளே சென்றாராம். அங்கு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை, அவர் முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணத் தொடங்கினார். அவர் ஏறக்குறைய ஒரு மணி நேரமாக, அங்கு ஜெபித்துக்கொண்டிருந்த பிறகு, கதவுகள் படாரென்று அடைக்கப்படும் சத்தத்தை நேரடியாக அல்லது அதைப் போன்று ஏதோ ஒன்றை அவர் கேட்டாராம்; அது ஒருவேளை சபையின் ஒரு பாதுகாவலராக அல்லது அதைப்போல யாரோ ஒருவராக இருக்கலாமென்று அவர் எண்ணினாராம். சிறிது நேரம் கழித்து அவர் கவனித்ததாகவும், இங்கே வந்த…யாரோ பேசுவதை அவர் கேட்டதாகவும், கூறினார். அவர் அங்கே மெல்ல நழுவிப் பார்த்தபோது, அது சபை பாதுகாவலனா என்று கண்டுகொள்ள, சுற்றும் முற்றும் பார்த்தாராம். அங்கு ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் பீடத்துக்கு முன்பாக நின்றுகொண்டு ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டிருந்து, “அன்பே, உன்னை நான் சட்டப்படி விவாகமான என் மனைவியாக ஏற்றுக்கொள்ளுகிறேன்” என்றாராம். பார்த்தீர்களா? அவளும், “அன்பே, உம்மை நான் சட்டப்படி விவாகமான, என் கணவனாக ஏற்றுக்கொள்கிறேன்” என்றாளாம். “ஏன்,” அவனோ, “இது ஒரு வினோதமான காரியமாக உள்ளதே,” என்றானாம், இந்த பெந்தகோஸ்தேக்காரன், கூறினான், அவன், “இந்த மனிதனும் ஸ்திரீயும் ஒரு பிரசிங்கியாரே இல்லாமல் விவாகம் செய்துகொள்கின்றனரே” என்றானாம். பார்த்தீர்களா? எனவே அவர் உட்கார்ந்துகொண்டு; அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக வாழ்வார்கள் என்றும், மரணம் தவிர வேறொன்றும் அவர்களைப் பிரிக்காதென்றும் அவர்கள் பொருத்தனை செய்து முடிக்கும் வரைக்கும் காத்திருந்தாராம்; அதன் பிறகு அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கை போட்டு, ஒருவரையொருவர் முத்தமிட்டு, சிரித்துக்கொண்டே வெளியே நடந்தனராம். அப்பொழுது அவர், “ஒரு நிமிடம்!” என்றாராம். அவர், “இது என்னவென்று அறிந்துகொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன்; நான் ஒரு அந்நியன்” என்றாராம். “நீங்கள் இருவரும் விவாகம் செய்து கொண்டீர்களா?” என்று கேட்டாராம். அவர்கள் “ஆம்!” என்றனராம். “ஒரு பிரசங்கியாரும் இல்லாமலா?” அப்பொழுது அவர், “இல்லை!” என்றாராம். மேலும், “எங்களுக்கு விவாகமாகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டது” என்றாராம். அவர், “நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே பீடத்துக்கு முன்பாக நாங்கள் விவாகம் செய்து கொண்டோம், ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விவாகத் தினத்தன்று நாங்கள் இங்கு வந்து எங்கள் விவாகப் பொருத்தனைகளை புதுப்பித்துக்கொள்கிறோம்” என்றாராம். அது ஒரு நல்ல யோசனை. பார்த்தீர்களா? 183 ஆனால் விவாகம் செய்துகொள்ளுதலைப் பொறுத்த வரையில், நீங்கள் அவளுக்கு வாக்களிக்கும்போதே, அவள் உங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்கிறாள்; நீங்களும் அவள் வார்த்தையை ஏற்றுக்கொள்கிறீர்கள்; தேவன் உங்கள் இருவருடைய வார்த்தையையுமே ஏற்றுக்கொள்கிறார். புரிகிறதா? ஆனால் நீங்கள் வெறுமனே வாக்கு கொடுக்காதீர்கள்… [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.]

100343. அவர்கள் அதைக் கத்தரிக்கும் போது…முன் பாகத்தில் தலை முடியைக் கத்தரித்தால், அது நீண்ட தலைமுடியாகக் கருதப்படுமா? (இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள், இதை நான் இங்கு புரிந்துகொள்ளட்டும்.) அவர்கள்…அது நீண்ட தலைமுடியாக 184 பாருங்கள், நான்—நான்…ஒருக்கால் அவர்கள்: “அவர்கள் தலைமுடியை முன்பாகத்தில் கத்தரிக்கும்போது, அது அப்பொழுதும் நீண்ட தலைமுடியாக கணக்கிடப்படுமா?” என்னும் அர்த்தத்தில் இதைக் கேட்டிருக்கக் கூடும். அது ஒருபோதும் இனி நீண்ட தலைமுடியாக கணக்கிடப்படாது, ஏனெனில் அவர்கள் அதை கத்தரித்துவிட்டார்கள். புரிகிறதா? ஆனாலும் ஒரு மனிதன் தன் நீண்ட கால் சட்டையை மூன்று முறை வெட்டி அப்பொழுதும் அது மிகவும் குட்டையானதாக இருந்ததுபோல. என்ன சொல்கிறீர்கள்? என்ன சொல்கிறீர்கள்? [சகோதரன் பிரான்ஹாம் யாரோ ஒருவரிடம் பேசுகிறார்—ஆசி.] ஓ, அதைக் குறித்துதான் அவர்கள் கேட்டிருக்கிறார்களா? என் சிறிய மகளை நான் கேலி செய்வதுண்டு, அவள் கூறினாள்… அவைகளை நான் “பூம்ஸ்” என்று அழைப்பதுண்டு, பாங்ஸ், அது என்ன பெயரானாலும், இப்படி முன்பாகத்தில் கத்தரித்துவிடுதல், அது உங்களுக்குத் தெரியும். 185 பாருங்கள், நான் நினைக்கிறேன், முன் பாகத்தில் தலை முடியைக் கத்தரித்துக் கெண்டிருக்கும் சிறு பெண்பிள்ளைகள்… நீங்கள், ஒருக்கால் உங்களுடைய தாயார் அதைக் குறித்து உங்களிடம் கூறக் கூடும், பாருங்கள், நீங்கள் அவ்விதம் கத்தரித்துக்கொள்ள வேண்டுமென்று அவள் விரும்பினால். இருபத்தைந்து வயதைக் கடந்த பெண் முன் பாகத்தில் தலைமுடியைக் கத்தரித்துக்கொண்டு ஒரு விதமாக—விதமாக சிறு பெண்ணைப் போல் காணப்பட விரும்பினால், அவள் பின்நோக்கிப் பார்க்கும் கண்ணாடி வழியாக ஏற்கனவே கடந்து வந்ததை பின்நோக்க முற்படுகிறது போன்றுள்ளது என்றே நான் நினைக்கிறேன். சகோதரியே, நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்பதை பார், நீ ஏற்கனவே கடந்து வந்ததை அல்ல. புரிகிறதா?

101186 இப்பொழுது, ஆனால் தலைமுடியைக் கத்தரித்துக் கொள்ளுதலில், நான்—நான்—நான்—நான் இதை உங்களிடம் சொல்வேன். நீங்கள் இவ்வளவுதான் கத்தரித்துக்கொள்ள வேண்டும், இதற்கு மேல் கத்தரிக்கக் கூடாது என்பதை ஆதரிக்கும் எந்த வேத வசனமும் எனக்கு—எனக்கு—எனக்கு இல்லை—இல்லை. அதற்கு என்னிடம்—என்னிடம் எந்த வேத வசனமும் கிடையாது, சகோதரியோ, அல்லது சகோதரனோ, அது யாராயிருந்தாலும், என்னால்—என்னால் அதை உங்களிடம் கூற முடியாது. 187 நான் ஒரு காரியத்தைக் கூறுகிறேன். நான் விரும்பினது…இப்பொழுது, என் மகள்கள் ரெபேக்காள் மற்றும் சாராளும் கூட அவ்விதம் கத்தரித்துக் கொண்டுள்ளனர் என்பதை நான் அறிவேன், அவர்கள் முன் பாகத்தில் தங்களுடைய தலைமுடியைக் கத்தரித்துக்கொண்டு, பின்பாகத்தில் இங்கே தலைமுடியை பின்னியிருப்பதை நான் கண்டிருக்கிறேன், முன்பாகத்தில் தலைமுடியை இவ்விதம், வாரிவிட்டுக் கொள்வார்கள். நான்—நான் இல்லை, நான்—நான்…இப்பொழுது, அவர்களின் சார்பாக நான் பேச வரவில்லை. புரிகிறதா? இல்லை, ஐயா! என்னைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் தலைமுடியில் ஒரு கத்தரிக்கோலைக் கூட வைக்காமல் இருந்திருந்தால் நலமாயிருக்கும். ஆனால் தலைமுடி இவ்விதம் நீளமாக தொங்கிக்கொண்டிருந்து, தங்கள் கண்களின் மேல் விழாதபடி முன் பாகத்தில் மட்டும் ஒருக்கால் சிறு பெண்பிள்ளைகள் கத்தரித்துக்கொண்டால்… நான்—நான் அதை அறிய மாட்டேன் …?… அது தவறு என்று நான் நினைக்கமாட்டேன். புரிகிறதா? நான்…ஆனால் நீங்கள்…உங்களால் முடிந்தால், நான்…சகோதரிகளாகிய நீங்கள், உங்களால் முடிந்தால், கர்த்தர் அதை எவ்விதம் உண்டாக்கியிருக்கிறாரோ அவ்விதமே அதை விட்டுவிடுவதை நான் விரும்புவேன். புரிகிறதா?

102188 நிச்சயமாகவே, பெண்கள் அழகாக காணப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர் என்று அறிவேன்; அது இயல்பு, அதாவது—அவர்கள் அப்படித்தான் காணப்பட வேண்டும். புரிகிறதா? அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். எனவே, அது அருமையானதுதான், ஆனால் வேண்டாம்—வேண்டாம்…மற்றபடி இந்தவிதமாக, உலகத்தைப் போன்று காணப்பட வேண்டாம் (புரிகிறதா?); உலகத்தாரின் மாதிரியைப் பின்பற்றாதீர்கள். தவறான காரியங்கள்…அதை நீங்கள் அவ்விதம், கத்தரித்துக்கொள்ள விரும்பினால், இப்பொழுது உங்களுடைய தலைமுடியை கத்தரிக்காதீர்கள். உங்கள் தலைமயிர் பின்னப்பட்டு நீளமாக தொங்கிகொண்டிருந்தால், அல்லது—அல்லது உங்களுடைய தலைமுடியில் இது என்னவாக இருந்தாலும், நீங்கள் அதை நீளமாகவே விட்டுவிடுங்கள். உலகத்தாரை போன்று காணப்படும்படிக்கு அதை வெட்டிக்கொள்ளாதீர்கள். நீங்கள் சிறுமிகளாக இருக்கும் பட்சத்தில்…

103189 நியூயார்க்கில் இருக்கும் என் மாமனுக்கு அங்கே ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்கு மிகவும் அழகான தலைமுடி இருந்தது. அது அடரந்த பழுப்பு நிற தலைமுடி மற்றும் அவள் தலைமுடியை பின்னிவிடுவது வழக்கம்…என் தாயார் முன்பெல்லாம்… அவளது பின்னின தலைமுடி அவளுடைய முழங்கால்கள் வரை நீண்டிருக்கும். இந்த சிறுமிக்கும் அதேவிதமான பின்னின தலைமுடி இருந்தது; அவளுடைய பெயர் ஜாக்குலின். அவள் அதன் ஒரு பாகத்தை இப்படி நீளமாக வாரிவிட்டு இதை இப்படி கத்தரித்துக்கொண்டிருப்பாள். நான்…அது ஏறக்குறைய பதினைந்து, பதினெட்டு, இருபது ஆண்டுகளுக்கு முன்பு. அவள் ஏன் தலைமுடி முழுவதையும், இப்படி பின்னால் வாரிக்கொள்ளவில்லை, அது இந்த நவீன நவநாகரிக பாடல் குழுவினர் வைத்திருப்பது போன்று இருப்பதைக் காட்டிலும் இன்னும் அழகாயிருந்திருக்குமே என்று நான் வியந்ததுண்டு, உங்களுக்குத் தெரியுமா. மேலும் ஒரு…ஓ, அது உண்மை; நானாயிருந்தால் அவ்விதம் செய்யமாட்டேன். நவநாகரிக பாடல் குழுவினரைப் போல் காணப்படும் எதுவும், உலகத்தாரைப் போல் தோற்றமளிக்கும், எனவே…அதை அப்படியே விட்டுவிடுங்கள். ஆம்!

104344. நீங்கள் பிரசங்கிக்கும் இந்த சத்தியத்தைப் போல, சத்தியங்களை, வேதாகமத்தில் நானும் என் கணவனும் ஒரே மாதிரியாக பார்க்கவில்லை. அவருக்குப் புரியவுமில்லை. அவர்களுடைய உபதேசங்களை நான் விசுவாசிக்காதபோது நான் அவருடன் அந்த சபைகளுக்கு செல்ல வேண்டுமா? இதைக் குறித்து நான் அதிக கலக்கமடைந்துள்ளேன். 190 ஆம்! இந்த கணவனுக்கு நீ மனைவியாயிருப்பாயானால், அவர் உன்னைக் குற்றப்படுத்தவில்லை, நீ—நீ அவரைக் குற்றப்படுத்தக் கூடாது (புரிகிறதா?), ஏனெனில், புருஷன் மனைவியினால் பரிசுத்தமாக்கப்படுகிறான். புரிகிறதா? நான் நினைக்கிறேன், அவர் ஏதாகிலும் ஒரு ஸ்தாபன சபைக்குச் அல்லது அதைப் போன்ற எதோ ஒன்றிற்கு சென்று, நீ அவருடன் செல்ல வேண்டுமென்று அவர் விரும்பினால்…உனக்குப் புரிகிறதா? நீ வேண்டாமென்று…பார், அங்குள்ள எதுவும் உனக்கு கேடுண்டாக்க முடியாது, ஏனெனில் அவர்கள் போதிக்கிறதற்கு எதற்கும் நீ செவிகொடுக்கப் போவதில்லை, ஏனெனில் அவர்களுடைய போதகத்தை நீ விசுவாசிப்பதில்லை என்று நீ இங்கு கூறியிருக்கிறாய். பார்த்தாயா? எனவே அது உனக்கு கெடுதி விளைவிக்காது, ஆனால் நீ உன் கணவருக்கு மரியாதை செலுத்துகிறாய். அவருக்கு உன்னை ஒப்புக்கொடுக்கிறாய், ஒருக்கால் அவ்விதம் செய்வதனால் நீ—நீ… அவர்கள் இந்த காரியங்களை அங்கு போதிப்பார்களானால்…உனக்கு அதைக் காட்டிலும் மேலான காரியங்கள் போதிக்கப்பட்டுள்ளது; நீ உப்புத்தன்மை கொண்டவளாய் இருப்பாய்; அவர் உன்னைக் கண்டு கர்த்தரிடத்தில் வருவார். நான் மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், ஒ என்னே இது, மணி என்னவென்று பாருங்கள்!

105345. சகரியா 4-ம் அதிகாரமும், வெளிப்படுத்தல் 11:3-12-ம், குறிப்பிடுவது ஒரே நபரையா? சகரியா 4:12-14 மற்றும் வெளிப்படுத்தல் 11:4-ம் பார்க்கவும். அவர்கள் தங்கள் பெயரை அதில் கையொப்பமிட்டுள்ளனர், இங்குள்ள இந்த சபையின் சகோதரனும் சகோதரியும். 191 நாம் சகரியா 4-ஐ பார்ப்போம். ஓ, ஆம், அது அந்த இரு ஒலிவ மரங்கள். ஆம். அந்த இரு ஒலிவ மரங்கள், வெளிப்படுத்தல் 11…ஓ, ஆம், அதுதான். அதே காரியம். அது அவர்கள் இருவரும். அது—அது மோசேயும் எலியாவும், இரு ஒலிவ மரங்கள். எங்களுடைய…ஜெபிக்கவும். அது ஒரு ஜெப விண்ணப்பம். நான் வருந்துகிறேன், இதை…முன்னால் படிக்க முடியாது, அது குடும்ப உறவுகளைப் பற்றியது. ஆம், அங்குள்ளதுடன் இதை சேர்த்துவிடுகிறேன். இதை எல்லோருக்கும் முன்பாக படிக்க முடியாது. எப்படியும், அவர்கள் தனிப்பட்ட பேட்டிக்கு வருகின்றனர், எனவே—எனவே…

106346. சகோதரன் பிரான்ஹாமே, இது தவறா… (இது என்ன கூறுகிறது? என்ன தவறு? ஞாயிற்றுக் கிழமையிலா? வேலை செய்வதா?) ஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்வது தவறா? 192 இதை சற்று முன்புதான் விளக்கினேன். மாடு குழியில் விழுந்துவிட்டால், அதை தூக்கி வெளியே எடுக்கலாம், ஆனால் அதை ஞாயிறன்று வெளியே எடுப்பதற்காக அதை குழியில் தள்ளிவிடாதீர்கள்! சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அடுத்த ஞாயிறு இங்கு பிரசங்கம் செய்வீர்களா? 193 அது ஒரு கேள்வி மட்டுமே. இல்லை, சகோதரியே, சகோதரனே, அது யாராயிருந்தாலும். இப்பொழுது, இவை இங்கு உள்ளன. அவைகளை வைத்திருக்க—வைத்திருக்க வேண்டும், அல்லது யாராவது அவைகளை உறையில் போட்டிருப்பார்கள். சகோதரனே…இது உங்களுக்கு, சகோதரன் காப்ஸ். “நீங்கள் நாம் ஒருக்காலும் வயோதிபமாவதில்லை என்னும் பாடலைப் பாடுவீர்களா?” நான் இதை உள்ளே வைத்திருக்க வேண்டும்…நான் அவைகளை மற்ற சிலவற்றோடு கலந்துவிட்டேன்.

107347. சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் ஏன் வேதத்தில் (கு-றி-ப்-…) குறிப்பிடப்படவில்லை என்று ஒருவர் அறிய விரும்புகிறார். நீங்கள் ஆபகூக் 2:1-4 என்று நான் விசுவாசிக்கிறேன். (அதை எடுங்கள், சகோதரன் நெவில், ஆபகூக் 2:1-4) அவர்கள் இதைப் படிக்கட்டும் மற்றும் இதை ஆய்ந்து படிக்கட்டும், 3-ம் அதிகாரம்…நான்கு அதிகாரங்களில் உள்ள பெயர்களும் முன்னடையாளங்களும், நீங்கள்தான் என்று நம்புகிறேன்—நம்புகிறேன். 194 இப்பொழுது, அவர் அதை தேடிக் கொண்டிருக்கும்போது, அது ஆபகூக் 2:1-4. சகோதரனே அல்லது சகோதரியே, இந்த கேள்வியைக் கேட்டது யாராயிருந்தாலும் (பெயர் எதுவுமில்லை), அது நல்லது, இது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டுமென்று நான்—நான் விரும்புகிறேன். உங்கள் இருதயத்தில் என்ன உள்ளதென்று நான் அறிந்துகொள்வேன் (புரிகிறதா?), அதன்பிறகு நான் உங்களிடம் சொல்வேன். இல்லை. புரிகிறதா? உங்களுடைய பெயர் வேதத்தில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, பாருங்கள். ஆனால், நீங்கள் பாருங்கள், நீங்கள் வேதத்தில் உள்ள வரைக்கும், அங்கே…நீங்கள் கிறிஸ்துவுக்குள் உள்ள வரைக்கும், நீங்கள் வேதத்தில் இருக்கின்றீர்கள்; நீங்கள் அவருக்குள், நீங்கள் பாருங்கள், வேதத்தில் இருக்கிறீர்கள். பார்த்தீர்களா?, நீங்கள் கிறிஸ்துவுக்குள் உள்ள வரைக்கும், அப்பொழுது நீங்கள் வேதத்தின் பரிபூரணத்தில் இருக்கிறீர்கள். புரிகிறதா? நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது உங்கள் முழு நிலையில் இருக்கிறீர்கள். எல்லோரும் அதை புரிந்து கொண்டீர்களா?

108195 நீங்கள் அதை வைத்திருக்கிறீர்களா, சகோதரன் நெவில்? என்ன? ஆம். ஆபகூக்—ஆபகூக்…இதை நான் வாசித்திருக்கவில்லை. இந்தக் காலையில், இது இங்கே வைக்கப்பட்டிருந்தது, நான் நினைக்கிறேன். ஆபகூக் 2:1-4. அதுதான் இது. ஆபகூக் 2—ஆபகூக் 2, 1 முதல் 4 வசனங்கள்: நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக்—என்னைக் …என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும் படிக்குப் பலகைகளிலே தீர்க்கமாக வரை. குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.

109196 சரி, இப்பொழுது, நான்—நான் நினைக்கிறேன் இதைக் கேட்ட இந்த அருமையான நபர்…உங்களுக்கு புரிகிறதா? இது என்னை நேசிக்கின்ற யாரோ ஒருவர், இல்லையென்றால் அவர் இதை எழுதியிருக்கமாட்டார். பார்த்தீர்களா? இப்பொழுது, நான் கூற முடியாது என்…வேதம் என் பெயராகிய, வில்லியம் பிரான்ஹாம் என்பதை கூறவில்லை, அல்லது அது யாராயிருந்தாலும் உங்கள் பெயரையும், நாம் எப்படியும் அவருக்குள் இருக்கிறோம். இவைகள்… 197 இப்பொழுது, வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நன்றாகத் தெரிந்த சில பாகங்கள், குறிப்பிட்ட காரியங்களை உரைப்பதை நீங்கள் காணலாம். உங்களுக்குப் புரிகிறதா? இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், வேதத்தில் சரித்திரம் மீண்டும் நிகழ்கிறது. புரிகிறதா? இப்பொழுது ஒன்றிற்காக ஒரு வேதவாக்கியத்தை நாங்கள் உங்களுக்கு தருவோமாக. (உங்களில் பலர் இதை எழுதிக்கொள்வதைக் நான் காண்கிறேன்.) இப்பொழுது, பரிசுத்த மத்தேயுவின் 3-ம் அதிகாரத்தில், அது, “‘எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்’…என்று உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது” என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது, உங்களுக்கு ஒரு—ஒரு ஸ்கோஃபீல்ட் அல்லது வேறெந்த ஒத்துவாக்கிய வேதாகமமாவது இருக்குமானால், நீங்கள் ஒத்து வாக்கியங்களை அங்கே தொடர்ந்து பார்த்துக்கொண்டே வருவீர்களானால், அது யாக்கோபை, இஸ்ரவேலை எகிப்திலிருந்து வரவழைத்த வேத வசனத்துக்கு உங்களை கொண்டு சேர்க்கும். பார்த்தீர்களா? யாக்கோபு அவர் எகிப்திலிருந்து வரவழைத்த அவருடைய குமாரன்; இயேசுவும் கூட அவர் எகிப்திலிருந்து வரவழைத்த அவருடைய குமாரன். எனவே (புரிகிறதா?) தேவனுடைய வார்த்தை ஒருபோதும் முடிவு பெறுவதில்லை. பாருங்கள், நாம் வேதத்தில் நம்மை வெவ்வேறுவிதமாக அடையாளம் கண்டுகொள்கிறோம்… கிறிஸ்தவ குணாதிசயங்களோடு உங்களை அடையாளம் கண்டுகொள்ளுதலின் பேரில் நான் அரிசோனாவிலுள்ள, பீனிக்ஸில் பிரசங்கித்தது எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? ஆம், உங்கள் அநேகரிடம் அந்த செய்தியின் ஒலிநாடா உள்ளது. பார்த்தீர்களா? கிறிஸ்தவ குணாதிசயத்தோடு அடையாளம் கண்டு கொள்ளப்படுதல். புரிகிறதா? நீங்கள் கிறிஸ்தவர்களாயிருக்கும் பட்சத்தில், நீங்கள் விரும்பும் எந்த இடத்திலும் உங்களை வேதத்தில் அடையாளம் கண்டுகொள்ள இயலும். நீங்கள் கிறிஸ்தவரல்லாத போதிலும், நீங்கள் உங்களை நீங்கள் வேதத்தில் அடையாளம் கண்டுகொள்ளலாம். புரிகிறதா? எனவே அது உங்களுக்கு உதவியாயிருக்குமென்று நான் நினைக்கிறேன். என்னால் முடிந்த வரையில் எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமோ அத்தனைக்கும் பதிலளிக்க விரும்புகிறேன்.

110348. சகோதரன் பிரான்ஹாமே, கிருபை முடிந்துவிட்டதென்றும் இனிமேல் வேறு யாரும் இரட்சிக்கப்பட முடியாதென்றும் சிலர் கூறுகின்றனர். இப்பொழுது, இது உண்மையா? (இந்த ஒன்றை நான் பெற்றுக்கொண்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.) நாங்கள் விழித்திருந்து ஜெபிக்கிறோம்…நாங்கள் ஜெப வரிசைகளை கவனித்துக் கொண்டு வருகிறோம், சிலர் இன்னும் கிருபையைப் பெறுகின்றனர் என்பதுபோல் தோன்றுகிறது. இப்பொழுது, இது முதல் கேள்வி, உங்களிடம் இரண்டு கேள்விகள் உள்ளன. 198 “கிருபை முடிந்துவிட்டதா?” அப்படி ஒரு போதும் நினைக்காதீர்கள்! புரிகிறதா? நீங்கள் எடுத்துக்கொள்ளப்படும் வரைக்கும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருங்கள். புரிகிறதா? 199 “ஜெப வரிசைகளில் சிலர் கிருபை பெறுவதை நாங்கள் கவனிக்கிறோம்.” நிச்சயமாக! இரக்கங்கள், கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பார்த்தீர்களா? நீங்கள் அதை எங்கே பெற்றீர்கள், இந்த எண்ணம் இடையில்…இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் பாருங்கள், இந்த வேத வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் சரியான இடத்தில் பொருத்த எனக்கு நேரமில்லை, (உங்களுக்குப் புரிகிறதா?), இவை ஒவ்வொன்றையும் சரியான இடத்தில் பொருத்த. அவர்கள்…ஜெப வரிசையில் நீங்கள் கிருபையைப் பெறுகின்றீர்கள், நிச்சயமாக. 200 இயேசு இன்று பிற்பகல் வரப்போகிறார் என்று நான் அறிந்திருந்தால், இப்பொழுது நான் செய்துகொண்டிருப்பதை அப்பொழுதும் செய்து கொண்டிருப்பேன் (புரிகிறதா?), அதை அப்படியே தொடர்ந்து செய்துகொண்டிருப்பேன். கிருபை எப்பொழுதும் திறந்துள்ளது. புரிகிறதா?

111201 இப்பொழுது, ஏழு சபை காலங்கள் முடிக்கப்பட்டு, ஏழு முத்திரைகளும் திறக்கப்பட்டுவிட்டன என்பதை குறித்த இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். புரிகிறதா? ஏழு முத்திரைகள், என்ன நடக்கிறது…என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தினது. ஏழாம் சபை காலம், நாம் ஏழாம் சபை காலத்தின் முடிவில் இருக்கிறாம். நான் முடிவு என்று கூறும்போது, இந்த மணி நேரத்தில், இந்த நிமிடத்தில் என்னும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. உங்களுக்கு ஞாபகமுள்ளதா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்திலேயே, வேதம் என்ன உரைத்ததென்றால், பவுல், “காலம் சமீபமாயிருக்கிறது” என்று கூறினான். அது தேவனுடைய நேரத்தின்படி எவ்வளவு காலமாயிருந்தது என்று நீங்கள் உணருகிறீர்களா? அது நேற்றாயிருநதது. என் காலத்தின்படி, அது இரண்டாயிரம் ஆண்டுகள். பார்த்தீர்களா? காலம் சமீபமாயிருக்கிறது. புரிகிறதா? சமீபமாயிருக்கிறது என்று தேவன் அழைப்பது, நாம் சமீபமாயிருக்கிறது என்று அழைப்பது போன்ற ஒன்றல்ல. புரிகிறதா? 202 எனவே தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டேயிருங்கள், தொடர்ந்து ஜெபித்துக்கொண்டேயிருங்கள், தொடர்ந்து…தேவன் இன்னும் கிருபையை திறந்துதான் வைத்திருக்கிறார்; உங்களால் முடிந்தவரை அதற்குள் வேகமாக பாய்ந்தோடுங்கள். நிறுத்துவதற்கு நேரம் வரும்போது, தேவன் அதை நிறுத்துவார். புரிகிறதா?

112349. இப்பொழுது. சகோதரன் பிரான்ஹாமே, உம்மைத் தவிர வேறு யாரும் பிரசங்கம் பண்ணக் கூடாதென்பது உண்மையா? நாங்கள் கண்டிருக்கிறோம்—நீர் மனிதரை அபிஷேகித்து போதகர்களாக நியமிப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அவர்கள் பிரசங்கம் பண்ணக் கூடாதென்றால்…நீர் அவ்விதம் செய்திருக்கமாட்டீர் என்று நாங்கள்—நாங்கள் நம்புகிறோம். 203 இரக்கம்! சகோதரனே, சகோதரியே, என்னைத் தவிர வேறு யாருமே பிரசங்கிக்கக் கூடாதென்று யார் உங்களுக்குச் சொன்னார்களோ, அப்படியானால் நான் தேவனுக்கு மிகவும் மோசமான பிரஜையாயிருப்பேன். இல்லை! தன் வாழ்க்கையில் தேவனுடைய அழைப்பை உணரும் ஒவ்வொரு மனிதனும் அல்லது…ஊழியத்தில் பிரவேசித்து பிரசங்கம் பண்ணத் தொடங்க வேண்டும்; அவர்கள் நமக்குத் தேவை. 204 சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தேவனுடைய மனிதர் உலகெங்கிலும் அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளனர். புரிகிறதா? நான் கடற்கரையில் உள்ள அநேக பெரிய கற்களின் மத்தியில் ஒரு சிறு கூழாங்கல் மட்டுமே. பார்த்தீர்களா? எனவே நான்…பிரசங்கிப்பதற்கு என்னைக் காட்டிலும் அதிகம் தகுதி வாய்ந்த, மற்றவைகளை அதிகம் பெற்றுள்ள அநேகர் உள்ளனர்; நான் இங்கு கிடக்கின்ற மிகவும் சிறிய, எளிமையான நபர். களஞ்சியம் முழுவதிலுமுள்ள கோதுமையில் நான் ஒரு சிறு கோதுமை மணியே. புரிகிறதா? எனவே அது ஒரு…நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா! 205 தேவனால் அழைக்கப்பட்ட எந்த ஒரு மனிதனும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டியது அவசியம்.

113350. எப்படி ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய அன்பில் ஆழமாகச் செல்ல முடியும்? 206 வார்த்தையை படித்து ஜெபிப்பதே. தேவனுடைய வார்த்தையை படித்து ஜெபியுங்கள். நான் வேகமாக செல்லப் போகிறேன், என்னால் கூடுமான வரையில் கேள்விகளுக்கு பதிலளிக்கப்போகிறேன். ஒரு கேள்வியை நான் அனுப்பியிருந்தேன், ஆனால் அதை (த-வ-றா-…) தவறாகக் கேட்டுவிட்டேன். நகரத்தை விட்டுச் செல்லும் முன்பு சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை நடத்துவீர்களா என்று நான் அறிய விரும்புகிறேன். இல்லையெனில்…உம்மிடத்தில் நான் ஒரு தனிப்பட்ட பேட்டியை ஒன்றைப் பெறுவது…எப்படி? 207 இப்பொழுது, இந்த நபர் காலையில், பேட்டியில் வந்திருந்தார் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாகவே, நாங்கள் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை நடத்தினோம்; எங்களுக்கு ஒரு சுகமளிக்கும் ஆராதனையும் கூட இருந்தது.

114351. சகோதரன் பிரான்ஹாமே, முதலாம் கொரிந்தியர்—முதலாம் கொரிந்தியர் 11—11ம் அதிகாரம், 4 முதல் 6 வசனங்களை தயவு கூர்ந்து விளக்கவும். இது தலைமுடியைத்தவிர (வே-று-…) வேறு-வேறு (மு-க்-…) ஒரு முக்காட்டைக் குறிக்கவில்லையா, அல்லது நமக்குத் தேவையான ஒரே முக்காடு நீண்ட தலைமுடி மட்டுமா? 208 முதலாம் கொரிந்தியர் 11-ம் அதிகாரத்தை நான் எடுத்துக்கொள்கிறேன், நாம் பார்ப்போம். முதலாம் கொரிந்தியர் 11:4. அது, “நாம் ஜெபிக்கும்போது…” என்று உரைக்கிறது. ஓ, ஆம், அவன்…அவர்கள் அதை இங்கு கூறியுள்ளனர். அவர்கள், “ஜெபிக்கும்போது அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கும்போது, நமது தலைமுடியை நாம் எடுத்துவிடலாமா—நாம்…” என்று கூறுகிறார்கள். நாம் பார்ப்போம், அவர்கள் இங்கு ஒன்றை கோடிட்டுள்ளனர். தீர்க்கதரிசனம் உரைக்கும்போது—தீர்க்கதரிசனம் உரைக்கும்போது, நமது தலைமுடியை நாம் எடுத்துவிடலாமா…? உம். நீங்கள்—நீங்கள் கூறினது: நாம் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது, தலைமுடியை எடுத்துவிடலாமா அல்லது போட்டுக்கொள்ளலாமா? 209 நீங்கள்—நீங்கள் போலித் தலைமுடியை அணிந்திருப்பீர்களானால், நீங்கள் அவ்விதம் செய்யலாம், ஆனால் நான்—நான்…அல்லது இந்த நவ நாகரீக பாடல் குழுவினர் அணியும் போலித் தலைமுடியை அணிந்திருப்பேனானால், அல்லது அதைப் போன்று ஏதோ ஒன்றை, ஆனால்… நான் அதில் சரியாக காட்சியளிக்கக் கூடுமானால், நானும் கூட ஒருக்கால் ஒன்றை அணிந்துகொள்வேன், ஆனால் அது…நவநாகரிக்க பாடல் குழுவினர் அணியும் ஒரு போலித் முடியையல்ல, ஆனால் ஒரு—ஒரு போலித் தலைமுடியை.

115210 ஆனால் அதனால் பரவாயில்லை. உங்களுக்குத் தலைமுடி இல்லாமல் இருந்து, நீங்கள் ஒன்றைப் பெற விரும்புவீர்களானால். உங்களால் அதை செய்ய முடியுமானால், அதனால் தவறொன்றுமில்லை. ஆம், ஐயா! ஒரு ஸ்திரீக்கு, தலைமுடி போதுமான அளவுக்கு நீளமாக இல்லையென்றால், அவள் போலித் தலை முடி போன்ற தலைமுடியை அதனுடன் இணைத்துக்கொள்ள விரும்பினால், அதைப் போட்டுக் கொள்ளுங்கள், சகோதரியே, என்று நான் கூறுவேன். 211 ஒரு மனிதனுக்கு பயங்கர ஜலதோஷம் பிடித்து, ஏதாவதொரு விதத்தில்…அதை தடுக்க விரும்பினால்…தன் மனைவிக்கு நன்றாக காணப்பட விரும்பினால், அவர் ஒரு போலித் தலைமுடியை அணிந்துகொள்ள விரும்பினால், அதைச் செய்யுங்கள். ஆம் உண்மையாகவே. அதனால் தவறொன்றும் இல்லை (இல்லை, ஐயா!) நீங்கள் பல் கட்டிக்கொள்வது, அல்லது செயற்கை கை வைத்துக்கொள்வது, அல்லது மற்ற எந்தக் காரியத்தையும் போலவே. இயற்கையாகவே உங்களிடமிருந்து ஏதோவொன்றை—ஏதாவதொன்றை எடுத்துவிட்டிருக்க இவை அதற்கு பதிலாக எளிதாக நமக்கு கிடைக்கிறதென்றால், அதை செய்யுங்கள். அது முற்றிலும் சரி. ஆனால் அது இங்கு என்ன கூறுகிறதென்றால், “ஜெபிக்கும்போது அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கும்போது, நாம் தலை முடியை எடுத்துவிடவும் போட்டுக்கொள்ளவும் செய்யலாமா? உண்மையாகவே இதன் அர்த்தம் என்ன?”

116212 சரி, சகோதரன் நெவில், படியுங்கள்…4—4 முதல் 6 வசனங்கள், சரி, சரி. ஜெபம் பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக் கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான். (அதாவது, அவனுக்கு நீண்ட தலைமுடி இருக்கமானால். சரி.) ஜெபம் பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக் கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும், தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்:…(அது அவளுடைய கணவன்.) அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப் போடக்கடவள்… (அவள் தலைமயிரை குட்டையாக வெட்டிக்கொள்ள விரும்பினால், அதை முழுவதும் சிரைத்துவிடக்கடவள். புரிகிறதா? அவளுக்கு முடியாதென்றால்…) தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக் கொண்டிருக்கக்கடவள். 213 அங்கு தலைமயிரை எடுத்து விடுவதையும் போட்டுக் கொள்வதையும் குறித்து எதுவும் சொல்லப்பட்டதாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஸ்திரீகள் விரும்புகிறபடி… அவள் தலைமயிரை கத்தரித்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னால், அதை முழுவதுமாக சிரைத்துப்போடக்கடவள் என்றுதான், அவர் கூறுகிறார். புரிகிறதா? ஏனெனில், அவள் தலைமயிரை வைத்துக்கொள்ள விரும்பாமற்போனால்; ஏனெனில் தலைமுடிதான் அவள் முக்காடு. ஆனால் ஒரு மனிதன் தன் தலையை மூடிக்கொண்டால், ஸ்திரீயைப் போல் நீண்ட தலைமுடியை வைத்துக்கொண்டு பிரசங்க பீடத்தில் நின்றால், அங்கு அவன் ஸ்திரீயைப்போல் காணப்படுவான். புரிகிறதா? ஆகையால் அவன் அவ்விதம் வைத்துக்கொள்ளக் கூடாது. புரிகிறதா?

117214 அதாவது—தலைமுடியை எடுத்துவிடுவதும் போட்டுக்கொள்வதும் என்பதை என்ன அர்த்தத்தில் கூறியிருப்பார் என்றால்… ஒரு—ஒரு மனிதன் தன் தலையை முக்காடிட்டுக் கொண்டு தீர்க்கதரிசனம் உரைப்பதென்றால் அவன் அந்த முக்காட்டை எடுத்துவிட வேண்டும் என்று தவறாக புரிந்துகொண்டிருக்கக் கூடும் என்று நான் நினைக்கிறேன். புரிகிறதா? இல்லை. அவனுக்கு நீண்ட தலைமுடி இருந்தால் என்று அல்ல, அவன் தலையை மூடிக்கொண்டதாக, அது அர்த்தமாகிறது… இப்பொழுது, இந்த கேள்வியைக் கேட்டவரே, நீங்கள் இன்னும் சிறிது கீழே வாசிப்பீர்களானால், ஸ்திரீக்குத் தலை புருஷன் என்பதாக நீங்கள் கண்டு கொள்ளலாம். எத்தனை பேருக்கு அது தெரியும்? புருஷனின் தலை கிறிஸ்து; எனவே, கிறிஸ்துவுக்காக ஒரு மனிதன் தன் தலைமுடியைக் கத்தரித்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் அவருக்குள் மனிதன், ஸ்திரீ, எல்லாருமே உள்ளனர். அவர் தகப்பன், தாய், சகோதரி எல்லாமுமாய் இருக்கிறார். ஆனால் ஒரு மனிதனுக்குள் ஆண்மை மட்டுமே உள்ளது. எனவே, அவன் கிறிஸ்துவின் நிமித்தம் அதை கத்தரித்துவிட வேண்டும்; ஆனால் ஸ்திரீக்குள் பெண்மை மட்டுமே உள்ளது, எனவே அவள் தன் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும்; ஏனெனில் அவளுடைய புருஷன் அவளுக்கு மேல் இருக்கிறான். அவன் அவளுடைய ஆண்டவன், அவளை ஆளுகை செய்பவன்; எனவே, அவள் நீண்ட தலைமுடியை வைத்திருக்க வேண்டும். 215 பிறகு அவள் அதை கத்தரித்துவிட வேண்டுமென்று, அவள் அதை கத்தரித்துவிட வேண்டுமென்று கூறினால், அப்பொழுது அதை முழுவதும் சிரைத்துவிடக்கடவள். ஆனால் அழகாக காணப்பட வேண்டிய ஒரு ஸ்திரீக்கு, தன் தலைமுடியை சிரைத்துக் கொள்வது வெட்கமாகவோ அல்லது அவமானமாகவோ இருந்தால், அவள் தன் தலையை மூடிக்கொள்ளக்கடவள்; அவள் நீண்ட தலைமுடியை வைத்துக்கொள்ளக்கடவள். புரிகிறதா? எனவே அது…எவருக்குமே…இது எல்லாருக்கும் விளங்குகிறதா? நான் பொருட்படுத்துவது, அது சரியாக தொனிக்கிறதா? அப்படியானால், அது விளங்கினால், அது உங்களுக்கு விளங்கிவிட்டால் “ஆமென்,” என்று கூறுங்கள். புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] . சரி.

118352. சகோதரன் பிரான்ஹாமே (நமக்கு இன்னும் பத்து நிமிடம் மட்டுமே உள்ளது.)— சகோதரன் பிரான்ஹாமே, நாங்கள் வாழுமிடத்தில் பிரசங்கி எவருமில்லை, ஆனால் ஞாயிறு இரவு மட்டும் நாங்கள் ஒலிநாடா ஆராதனை நடத்துகிறோம். எங்கள் பிள்ளைகளை ஞாயிறுபள்ளிக்காக வேறொரு சபைக்குக் கொண்டு செல்ல வேண்டுமா? ஒலிநாடா ஆராதனைகள் போதுமானதா? 216 சரி, உங்கள் பிள்ளைகள் சென்றுகொண்டிருக்கிற வழியிலேயே அது இருக்கட்டும். புரிகிறதா? இப்பொழுது, நீங்கள் பெற்றுள்ள உங்களுடைய பிள்ளைகள், அவர்கள் இளமைப் பருவமாயிருக்கிறார்கள்; அவர்கள்—அதாவது அவர்கள்—அவர்கள் அறியத்தகாததை திணிக்கின்ற அங்கு உள்ள ஏதாவது ஒரு கூட்டத்தாரிடையே நீங்கள் அவர்களைக் கொண்டு செல்வீர்களென்றால்; நான் அவ்விதம் செய்யமாட்டேன். அவர்கள்—அவர்கள் ஒலிநாடாக்களின் வாயிலாக போதுமானதை அறிந்து கொள்வார்களானால்…நீங்கள், நீங்கள் அவர்களை ஒரு கத்தோலிக்க சபைக்கு கொண்டு சென்றால், அவர்களை கத்தோலிக்க சபைக்கு அழைத்துச் சென்றால், அத்தகைய வேறொரு சபைக்கோ கொண்டு செல்கின்றீர்கள் என்று கூறுவதாக, வைத்துக்கொள்வோம்; அந்த ஆலோசனையை நான் உங்களுக்கு கூறமாட்டேன். புரிகிறதா? அவர்கள்… 217 ஆனால் இப்பொழுது, அங்கு ஒரு அருமையான சிறிய சபை உங்களுக்கிருந்து அவர்கள் ஒருக்கால் உங்களுடன் இரண்டு மூன்று காரியங்களில் ஒத்துப் போகாமல் இருந்தாலும், உங்கள் பிள்ளைகள் அங்கு ஞாயிறு பள்ளிக்கு செல்ல விரும்பினால், அவர்கள் முழு சுவிசேஷ ஜனங்களாக இருந்து, அல்லது ஏதாவது இருந்தாலும், பாருங்கள், அது முற்றிலும் சரி. ஆனால், பாருங்கள், ஆனால் நீங்கள் ஒரு இடத்தை அடைவீர்களானால்…உங்கள் பிள்ளைகள் அதை எவ்விதம் எடுத்துக்கொள்கின்றனர் என்பதைப் பொறுத்தது. புரிகிறதா? உங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்றும், என்னவென்றும், அவர்கள் அதற்கு எப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் கவனித்து வாருங்கள்.

119353. நாம் பார்ப்போமாக. உங்களுக்கு போக ஒரு சபை இல்லாவிட்டால், நீங்கள் ஒலிநாடாக்கள் மட்டும் கேட்கலாமா? ஆம்! அது…நான்—நான்…அது நன்றாயிருக்கும்.

120354. உங்கள் பிள்ளைகள் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு அவர்களுக்கு ஒரு அனுபவம் தேவையா? அவர்கள் கடைசி கால செய்தியைப் புரிந்துகொண்டால், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனரா? 218 ஒவ்வொருவரும் ஒரு அனுபவத்தை பெற்றிருக்க வேண்டுமே! நீங்கள் செல்லும் அதே வழியைத் தவிர வேறு வழியில் உங்கள் பிள்ளைகள் செல்ல முடியாது. புரிகிறதா? அவர்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும். தேவனுடைய ராஜ்யத்தில் பேரப்பிள்ளைகள் கிடையாது; அவர்கள் அனைவரும் பிள்ளைகளே. அவர்கள் அதைப் பெற்றிருக்க வேண்டும், நீங்கள் பெற்றிருப்பது போலவே, உட்பிரவேசிப்பதற்கு அவர்கள் தேவனிடம் ஒரு அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். நான் புரிய வைத்துவிட்டேன் என்று நம்புகிறேன். அது…

121355. அன்பான அன்புக்குரியவர்களே: (நாம் பார்ப்போமாக.) எபேசியர் 4-ம் அதிகாரம் 11 முதல் 13 வசனங்களில், உரைக்கப்பட்டுள்ளபடி (நாம் பார்ப்போம்.)— ஒலிநாடாக்களின் மூலமாக நாம் பரிசுத்தவான்களின் சீர்பொருந்துதல் அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோமா, அல்லது நாங்கள் சீர்பொருந்துவதற்கு எங்களுக்கு உதவ, நாங்கள் ஆவியின் வரங்களும் சபையின் வெவ்வேறு உத்தியோகங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்ற சபைக்கு வர வேண்டுமா? எங்களுடைய இருதயங்கள் கர்த்தருடைய வார்த்தை அனைத்தையும் விசுவாசித்துள்ளன. 219 இப்பொழுது இந்த நபர் ஓரிகானைச் சேர்ந்தவர். இப்பொழுது, என் அருமை…இது யாரென்று எனக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். புரிகிறதா? அது…ஓ, ஆமாம், எனக்குத் தெரியும், எனக்கு நிச்சயமாகத் தெரியும். உங்களுடைய—உங்களுடைய பையன்… அந்த நபர் இங்கு இருப்பாரானால், நீங்கள் இருப்பீர்கள்…என்று எனக்குத் தெரியும். நீங்கள் இருக்கவில்லையென்றால், அது கடந்த ஞாயிற்றுக்கிழமையாக இருந்திருக்கலாம். புரிகிறதா? இது கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்களுடைய—உங்களுடைய மகன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார், பாருங்கள், அது…அவர் கட்டுப்படுத்துகிறார்…அவர்தான்… உங்களுடன் ஓரிகானில் மான் வேட்டைக்கு செல்ல எனக்கு அழைப்பு விடுத்தார் என்று நான் நினைக்கிறேன், அங்கு…அது சரியென்று நான் எண்ணுகிறேன். இப்பொழுது, எனக்கு இந்த நபரை கடிதம் மூலமாகத் தெரியும்…எனவே… இல்லை! சீர்பொருந்துதலுக்காக அவர்கள் இந்த சபைக்கு வர விரும்புகின்றனர். புரிகிறதா? அதாவது நாங்கள்—நாங்கள் இங்குள்ள இந்த சபையில் ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்கிறோம், ஆனால் சீர்பொருந்துதல் நமக்கும் தேவனுக்குமிடையே உண்டாகின்றது. கிறிஸ்துவின் இரத்தமே நம்மை பரிசுத்த ஆவியில் பரிபூரணப்படுத்துகிறது.

122220 இப்பொழுது, சபையில், “…வரங்கள் இயங்குகின்றன” என்று அவர் கூறியுள்ளார். இப்பொழுது, இங்கு நிறைய வரங்கள் இயங்குவதை நாங்கள் உடையவர்களாக இருக்கவில்லை, ஆனால் அவைகளில் சில எங்களிடையே காணப்படுகின்றன. எங்களிடையே அந்நிய பாஷை பேசும் வரங்களும், மற்றும்—மற்றும் தீர்க்கதரிசனம் உரைக்கும் வரங்களும் உள்ளன (இரண்டு அல்லது மூன்று வரங்கள்). 221 இங்குள்ள நம்முடைய சகோதரன் ஹிக்கின்பாதம், அவர் எங்கிருந்தாலும், அவருக்கு அந்நிய பாஷைகளில் பேசும் வரம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். சகோதரன் ஜூனியர் ஜாக்சன் நம்முடன் இருக்கிறார், அவரும் அந்நியபாஷைகளில் பேசுவார். பிறகு பாஷைக்கு அர்த்தம் உரைக்கும் இரண்டு அல்லது மூன்று பேர் நமக்குள்ளனர். நம்முடைய போதகர், இங்குள்ள சகோதரன் நெவிலும் கூட, அந்நிய பாஷை பேசுகிறார் மற்றும் சில நேரங்களில் தீர்க்கதரிசனமும் உரைக்கிறார், மேலும் கர்த்தர் அவர் மேல் கொண்டு வருகிற… 222 அன்றொரு நாள் அவர் ஒன்றை கூறினார். நான் சென்றிருந்த ஒரு வீட்டில் அவர் தொலைபேசியில் கூப்பிட்டு, அவர் ஒரு நபரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்ததாகவும், குடிகாரன் ஒருவனின் வாழ்க்கையில்…ஒரு பெரிய மாறுதல் உடனே உண்டாகும் என்றும் அவர்களிடம் கூறினார் அல்லது அப்படி ஏதோ ஒன்று. அந்த மனிதன் குடிபழக்கம் உள்ளவர்களை சீர்திருத்தம்பண்ணும் விடுதியிலிருந்து இன்னும் குடிகாரனாகவே வெளியேறினான், அறுபத்தெட்டு நாட்களாக மதுவைத் தொடக்கூட இல்லை, அல்லது அதற்கான மருந்து ஒன்றும், அல்லது அதற்கான எதையும் சாப்பிடவேயில்லை. அது சகோதரன் நெவில் அவர்கள் பேரில் தீர்க்கதரிசனம் உரைத்ததாகும். 223 எனவே நாங்கள்…எங்கள் மத்தியில் சில வரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றதை நாங்கள் உடையவர்களாக இருக்கிறோம், உங்களில் எவருடனும் நாங்கள் ஐக்கியங்கொள்ள மிக்க மகிழ்ச்சியாயிருப்போம், அதற்கான ஒரு வழி இருக்குமானால், அதாவது நீங்கள் வேலை செய்துகொண்டிருந்தால், அல்லது எங்களிடம் வந்து ஐக்கியம் கொள்ள விரும்பினால், எங்களால் எதை செய்ய முடிந்தாலும், அதைக் குறித்து நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைவோம். புரிகிறதா? ஆனால் இப்பொழுது பரிபூரணப்படுதல் கிறிஸ்துவுக்கே உரியது. இப்பொழுது, இன்னும் ஒன்று அல்லது இரண்டைக் குறித்து நாம் பார்ப்போமாக.

123356. சகோதரன் பிரான்ஹாமே, சகோதரன் ஆர்கன்பிரைட் மூலம் எடுக்கப்பட்ட படத்தை தயவாய் விளக்குவீர்களா? கேள்வி ஒன்று: சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கிற இரண்டாம்—இரண்டாம் படம், உங்களைச் சுற்றியுள்ள ஒளி, வார்ப்பூட்டு, போன்றவை. 224 இப்பொழுது பாருங்கள், நான் என்னவென்று உங்களுக்கு சொல்கிறேன். அவர்கள் தங்கள் பெயரைக் கையொப்பமிட்டுள்ளனர், அவர்கள் இப்பொழுது இங்கில்லை. நாம் அதை புரிந்துகொள்கிறோம். அது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி ஜாக்சன்; அவர்கள் திரும்பிப்போய்விட்டனர். எனவே நாம் அதை புரிந்துகொள்கிறோம்; நாம் அதை விளக்கியுள்ளோம்.

124357. சபையானது…எப்பொழுது சபையானது…யார் (நே-ர-…) உபத்திர காலத்தில் மரித்த சபை எப்பொழுது உயிரோ…உயிரோடெழுந்திருக்கும்? அவர்களும் தேவ பக்தியில்லாதவர்கள் உயிரோடெழும் வரைக்கும் காத்திருப்பார்களா? அவர்கள் ஆயிரம் வருட அரசாட்சியின்போது மறுபடியும் உயிரோடிருப்பார்களா? 225 இப்பொழுது, அது ஒரு நல்ல கேள்வி. என்னால் இதற்கு கொடுக்கக் கூடிய நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் பெற இது தகுதி வாய்ந்தது, ஆனால் நான்…பார்த்தீர்களா? எனக்கு நேரமில்லை…நான் காலையில் தொடங்கி இரண்டு மணி நேரமாகியும், இன்னும் மூன்றில் இரண்டு பாகம் கேள்விகள் உள்ளன. எனவே அநேக கேள்விகளுக்கு பதிலைப் பெற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கு புரிகிறதா? என்னால் எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமோ, அவைகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன், அவை எங்குள்ளது என்று காணாமலேயே. அறிந்துகொள்ளப்பட வேண்டிய சில நல்லவைகள் இங்கே உள்ளன என்பது எனக்குத் தெரியும், சர்ப்பத்தின் வித்து போன்றவை மற்ற காரியங்களுக்கு விளக்கப்பட வேண்டும்; ஆனால் நான் துரிதப்பட்டு, இதற்குள் உண்மையாகவே வேகமாகப் விளக்கப்போகிறேன்.

125226 “உபத்திரவ காலத்தில் மரித்த சபை (புரிகிறதா?) உயிர்தெழுதலில் இருக்குமா?” இரண்டாம் உயிர்த்தெழுதலில், இரண்டாம் உயிர்த்தெழுதலில். 227 “அவர்களும் தேவபக்தியில்லாதவர்கள் உயிரோடெழும் வரைக்கும் காத்திருக்க வேண்டுமா?” நீதியுள்ளவர்களும் அநீதியுள்ளவர்களும் ஒரே நேரத்தில் எழுந்திருப்பார்கள். 228 “அவர்கள் ஆயிரம் வருட அரசாட்சியின்போது மறுபடியும் உயிரோடிருப்பார்களா?” இல்லை! மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இப்பொழுது, இது மிகவும் சுருக்கமான பதில், ஆனால் நான் உறுதிகொண்டிருக்கிறேன்…

126358. கிறிஸ்துவுக்குள் விடுதலை மற்றும் சுதந்தரம் என்று பவுல் கூறுவதன் அர்த்தம் என்ன? நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கப்படுதல் எப்படி? 229 சரி, நீங்கள் நியாயப்பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. கூறப்போனால், உதாரணமாக, இங்கு அதே காரியம்; இதை நான் இயற்கை வழியில், வேகமாக விளக்குவேன். உதாரணமாக, இங்கே கூறுகிறதோ, வீதியில் செல்லும்போது, ஒரு மணி நேரத்துக்கு நீங்கள் முப்பது மைல்கள் வேகத்தில் செல்லலாம் என்பதாகும். சரி இப்பொழுது. இப்பொழுது நான் தெருவில் மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் சென்றால், அப்பொழுது நான் பிரமாணத்தினால் குற்றவாளியென்று தீர்க்கப்படுகிறேன். ஆனால் நான் தெருவில் மணிக்கு முப்பது மைல் மட்டும் செல்வேனானால், நான் பிரமாணத்தின் கீழ் இல்லை. புரிகிறதா? அதுதான் கிறிஸ்துவுக்குள் சுதந்தரம் (புரிகிறதா?) அதே காரியம். 230 நீங்கள் செய்யாத வரைக்கும்…பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல, நான் திருடாமல், பொய் சொல்லாமல், புகை பிடிக்காமல், விபச்சாரம் செய்யாமல், இவை ஒன்றையும் அங்கே நான் செய்யாமலிருந்தால், நான் பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவன் அல்ல. புரிகிறதா? நான் நியாயப் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறேன்; நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன்.

127359. குடும்பக் கட்டுப்பாட்டைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 231 இன்று காலையில் நடந்த பேட்டிகளில் இது போன்ற சில கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. அந்த காரியங்களின் பேரில், (புரிகிறதா?) அந்த காரியங்களின் பேரில் உங்களிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசுவது நலமாயிருக்கும். ஏனெனில் நான் கூற வேண்டிய சொற்களும் காரியங்களும், இதை நான்…நான் கணவன் மனைவியாக இருந்தால் கூறுவேன்… 232 இதை சரியான முறையில் செய்வதற்குரிய வாய்ப்புண்டு. இதை நான் பொதுவாகக், கூட, கூறுகிறேன். ஒரு ஸ்திரீயின் வாழ்க்கையில், அவள் கருத்தரிக்க இயலாத எத்தனையோ நாட்கள் உண்டு. உங்களுக்குப் புரிகிறதா? சரி. ஏன்… 233 இப்பொழுது, சில நேரங்களில் ஒரு—ஒரு குழந்தை ஒரு ஸ்திரீயையே மரிக்கச் செய்திடும்; அவளுக்கு குழந்தை உண்டானால், அது அவளை மரிக்கச் செய்திடும். எனவே அதன்பேரில் நீங்களும் கூட கவனமாயிருக்க வேண்டும். புரிகிறதா? எனவே அதைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள். புரிகிறதா? பாருங்கள், அது உயிரைத் தோன்றச் செய்தல், நீங்கள் பூமியில் எதை தோன்றச் செய்கிறீர்களோ அதைப் பொறுத்தது. 234 உங்களுடைய மனைவி வியாதிப்பட்டவளாயிருந்து, மற்றொரு, ஒரு குழந்தையை கருத்தரித்தால், அது அவளைக் கொன்றுவிடுமானால், அதை நான்—நான்—நான் செய்யவேமாட்டேன். நீங்கள் அவ்விதம் செய்ய கர்த்தர் விரும்புவார் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த காரியங்களின் பேரில் நீங்கள்—நீங்கள் என்னிடம் தனியே வாருங்கள்; தனிப்பட்ட முறையில் அதைப் பேட்டி காணுங்கள். உங்களிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசட்டும், (உங்களுக்குப் புரிகிறதா?) மேலும் என்னால் உணர முடியும்…

128235 பாருங்கள், தனிப்பட்ட ஒவ்வொருவரும், அவர்கள் என்னிடம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்களா அல்லது இல்லையா என்று என்னால் கூற முடியும். புரிகிறதா? அவர்கள் என்னிடம் வேறுபட்டக் காரியங்களைக் சொல்கிறார்கள். நான் உங்களை தனிப்பட்ட முறையில்…பார்த்தீர்களா? ஏனெனில் நீங்கள் அதை இவ்விதமாக தெரியப்படுத்துகிறீர்கள், உங்களுக்குத் தெரிவதில்லை. அது ஏனென்றால், ஒரு தனிப்பட்ட நபர் அதில் ஈடுபட்டிருக்கிறார் மற்றும் அப்படிப்பட்ட காரியங்கள்; அதை என்னால் சொல்ல முடியும், நீங்கள் உண்மையை சொல்லிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது இல்லையா என்றே. பார்த்தீர்களா?

129360. சாத்தான் ஏன்—ஏன் வெளிப்படுத்தின விசேஷம் 20:3-ன் படியும், மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 20:27-ன் படியும் அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது தன் காவலிலிருந்து கொஞ்சக் காலம் விடுதலையாக வேண்டும்? 236 அவன் ஏன் விடுதலையாக வேண்டும்? இரண்டாம் உயிர்த்தெழுதலின்போது அவனுடைய ஜனங்களை ஒன்று சேர்க்க, ஏனெனில் சாத்தான் நியாயத்தீர்ப்பிலும் கூட நிற்க வேண்டும். புரிகிறதா? அவன் குற்றவாளியென்று தீர்க்கப்பட வேண்டும். ஓ, என்னே, இது கேள்விகள் நிறைந்த ஒரு—ஒரு புத்தகமாக உள்ளது. நான் நினைக்கவில்லை…இங்கு வேறொரு கடிதம் நிறைய கேள்விகள் உள்ளன. நான் உண்மையாகவே சிலவற்றை, உண்மையாகவே, இப்பொழுது இங்கே துரிதமாக பார்க்கட்டும்.

130361. சகோதரன் பிரான்ஹாமே, அப்போஸ்தலர் 9-ம் அதிகாரம் 7-ம் வசனத்தையும், அப்போஸ்தலர் 20…22-ம் வசனத்தையும் தயவு கூர்ந்து விளக்குங்கள். (சகோதரன் நெவில், நீங்கள் அதை எனக்காக எடுப்பீர்களா.) அப்போஸ்தலர் 9-ம் அதிகாரம் 7-ம் வசனத்தை விளக்குங்கள். 237 இப்பொழுது, அவர் அதை எடுத்துக் கொண்டிருக்கும்போது, வேறொரு கேள்விக்கு வேகமாக பதிலளிக்க முடியுமா என்று நான் பார்ப்பேன். நீங்கள் களைப்படைந்து கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் களைப்புற்றிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மணவாட்டி மறுரூபப்படுதலின் இரகசியத்தை தயவு கூர்ந்து விளக்கவும். அது எப்படி எங்கே நடக்கும், மணவாட்டி எந்த இடத்துக்கு, செல்கிறாள். இவை அருமையான கேள்விகள் அல்லவா? இவை உண்மையில் அருமையான கேள்விகள். இங்கு என்னால் நாள் முழுவதும் நின்றுகொண்டு… இப்பொழுது ஒரு நிமிடம், வசனம்… அப்போஸ்தலர் 9-ம் அதிகாரம் 7-ம் வசனம். உங்களுக்கு நன்றி, சகோதரன் நெவில். 9 வசனம் 7: அவனுடனே கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள்.

131238 இப்பொழுது, நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். புரிகிறதா? இப்பொழுது, அடுத்த இடத்தில் கூறப்பட்டுள்ளதோ அவர்கள்…நேர்மாறாக உள்ளது. இப்பொழுது, அங்கு என்ன நடந்ததென்று எனக்குத்—எனக்குத் தெரியாது. என்னால் உங்களுக்கு கூற இயலாது, ஏனெனில் அடுத்த இடத்தில் அவர்கள் கேட்டார்கள் என்று உள்ளது. ஓரிடத்தில், அவர்கள் அதை காணவில்லை என்றும், அடுத்த இடத்தில், அவர்கள் அதைக் கண்டார்களேயன்றி அதைக் கேட்கவில்லை என்று உள்ளது. இதை எத்தனை பேர் முன்பு வேதத்தில் கண்டிருக்கிறீர்கள்? நான் கண்டிருக்கிறேன், ஆனால் என்னால் அதை விளக்க இயலாது. புரிகிறதா? நான்…கர்த்தர் அதை எனக்கு வெளிப்படுத்த வேண்டும். சற்று முன்பு நான்—நான் உங்களிடத்தில் சொன்னேன், நான் உங்களோடு நேர்மையாக இருக்க வேண்டும். புரிகிறதா? எனக்குத் தெரியாது. நான் வருந்துகிறேன். என்னால்—என்னால் அதை விளக்க முடியாதென்றால், என்னால் விளக்க முடியாதென்று உங்களிடம் கூற நான் போதிய அளவுக்கு உண்மையுள்ளவனாயிருப்பேன். ஆனால் எனக்குத் தெரியாதபோது—அதற்கு நான்—நான் அதை சமாளிக்கமாட்டேன். 239 என்னால் அதை விளக்க முடியாது, ஏனெனில் ஓரிடத்தில் அவர்கள் வெளிச்சத்தைக் கண்டார்கள் என்றும் ஆனால் சத்தத்தைக் கேட்கவில்லை என்றும், அல்லது அப்படி ஏதோ ஒன்று: அடுத்த இடத்தில், அவர்கள் கண்டனர்… சத்தத்தைக் கேட்டனர் வெளிச்சத்தையோக் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. என்னால் அதை விளக்க இயலாது. புரிகிறதா? என்ன நடந்தென்று எனக்குத்—எனக்குத் தெரியாது, கர்த்தர் எனக்கு அதை வெளிப்படுத்தும் வரைக்கும் எனக்குத்—எனக்குத் தெரியாது; விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தைக் குறித்து என்னால் உங்களால் கூற முடியாதிருந்தது போல. அவர் அதை எனக்கு வெளிப்படுத்தும் வரைக்கும் நான் அறிந்திருக்கவில்லை.

132240 இன்று காலையிலும் கூட, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த, தேவனாகிய கர்த்தர் இது உண்மையென்று அறிவார், இந்தக் காலையில் அவர் விவாகமும் விவாகரத்தும் என்பதன் பேரில் என்னிடம் கூறி, முழு காரியத்தையும் முடித்துவிட்டார். அது உண்மை. ஆகையால்தான் நான் கூறுகிறேன், இவையெல்லாவற்றையும் நான் ஒன்றாக சேர்க்கட்டும். ஆராய்ந்து… 241 சர்ப்பத்தின் வித்தைப் போன்ற அந்தக் காரியங்களில் ஒன்று, எனக்கு முன்பாக வைக்கப்பட்டபோது, என்னால்—என்னால் அதை புரிந்துகொள்ள இயலவில்லை, ஒன்றுமே புரியவில்லை; ஆனாலும் அதை நான் பின்தொடர்ந்து கொண்டே வந்தேன், முதலாவதாக உங்களுக்குத் தெரியுமா…அப்பொழுது உங்களையே விலக்கிக்கொள்ள வேண்டும், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதைத் திறந்து கொடுக்கத் தொடங்குகிறார். இப்பொழுது, அதைக் குற்றப்படுத்த எவராவது முயற்சிக்கட்டும் பார்க்கலாம். புரிகிறதா? அதைச் செய்ய முடியாது.

133362. மணவாட்டி மறுரூபப்படுதலின் இரகசியத்தை தயவு கூர்ந்து விளக்கவும். 242 அது ஒரு மாறுதல் மட்டுமே, பாருங்கள், நம்முடைய சரீரங்கள். நம்முடைய என்று நாம் கூறுவோமாக. அதை நான் கூறும்போது என்ன குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரிகிறதா? நான் அவபக்தியாய் இருக்க வேண்டும் என்று பொருட்படுத்தவில்லை. நம்முடையவைகளில் என்று நான் பொருட்படுத்தி கூறவில்லை; நான் இந்த சபை மட்டும் என்று கூறவில்லை; ஒவ்வாரு விசுவாசியும் என்றுதான் நான் கூறும்படி குறிப்பிடுகிறேன். 243 ஆபிரகாம், அவன் ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர்நோக்கிக்கொண்டிருந்தான், அது அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்தது. அது சரியா? சபையும் ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. மணவாட்டி (அது சரியா?), மணவாட்டி அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாள். 244 சாராளுக்கும் ஆபிரகாமுக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பு, அவர்களுடைய சரீரங்கள் மாற வேண்டியதாயிருந்து. அது சரியா? 245 ஒரு குழந்தையைப் பெறுவதற்கு அவள் மிகவும் வயது சென்றிருந்தாள். அவளுடைய மார்பகத்தில் பால் சுரப்பிகள் இருக்கவில்லை; அவளுடைய மார்பகம் உலர்ந்துபோயிருந்தது. அவளுடைய கர்ப்பப்பை கருத்தரிக்க முடியாத நிலையில் இருந்தது; அவள் மலடியாயிருந்தாள். அவளுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதிருந்தது; பிரசவ வேதனையைத் தாங்கிக்கொள்ள அவளுடைய இருதயம் மிகவும் வயது சென்றதாயிருந்தது. எனவே என்ன நடந்தது? தேவன் அவளை மீண்டும் இளம் பெண்ணாக மாற்றினார். அவர் ஆபிரகாமுக்கும் அதே காரியத்தைச் செய்தார், ஏனெனில் அவனுடைய சரீரம் செத்துப் போயிருந்தது என்று அவர் கூறினார். புரிகிறதா? அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனைப் பெற்றுக்கொள்வதற்கென அவர் அவர்களுடைய சரீரத்தை மாற்ற வேண்டியதாயிருந்தது. 246 நாமும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த சரீரங்களில், நமக்கென இன்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள குமாரனைப் பெற முடியாது; இந்த சரீரங்கள் பாவமுள்ளவை.

134247 முதலாம் மனச்சாட்சி, பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல் என்னும் புலன்களைக் கொண்ட இந்த சரீரத்தை கட்டுப்படுத்துகிறது, அது நம்மெல்லாரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது; நாம் தர்க்க அறிவையும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும் உபயோகிக்கிறோம். ஆனால் மறுபடியும் பிறந்ததனால் உண்டான அந்த புது சரீரமோ (இந்த முதலாம் மனச்சாட்சி அல்ல, அது கடந்து போகும்)… அது ஜீவிக்கின்ற உள்ளில் உள்ள ஒன்று. இதைப் புரிந்துகொண்ட ஒவ்வொருவரும் “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] 248 அது இந்த வெளிப்புறத்தில் உள்ள பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல் அல்ல. அதுவல்ல. அது மரணத்துக்குக் கீழ்ப்பட்டுள்ளது மற்றும் அது மரித்துவிடும், ஆனால் உங்களுக்குள் இருக்கும் அந்த பாகம், இங்கே கீழே, ஆழத்திலே உள்ளது, அதுதான், மரிக்கவே முடியாத அந்த நபர். புரிகிறதா? அந்த நபரிலிருந்துதான், இந்த புதிய பிறப்பின் மூலமாக புது ஜீவன் தொடங்குகிறது; நீங்கள் இருக்கிற இந்த நபரின் சாயலில் வேறொரு நபரை, அந்த ஜீவனைச் சுற்றிலும் உண்டாக்குகிறது. உங்களுக்கு இது புரிகிறதா?

135249 எனவே அது இங்கு மறைவாக உள்ளது, அது என்ன? உலக தோற்றத்துக்கு முன்பு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை. அங்கே சுற்றியுள்ள, இது எதிர்மறையை மாத்திரமே பிரதிபலிக்கிறது; அது நேர்மறையை பிரதிபலிக்கும், அந்த வார்த்தை. புரிகிறதா? அதே காரியம் தான்…அல்லது மணவாட்டி மறுரூபப்படுதலும் அதே காரியமாகத்தான் இருக்கும். உங்களுக்குள் இருக்கும் அந்த வார்த்தை, அந்த வார்த்தையை சுற்றிலும் ஒரு சரீரம் உருவாகும், அதேக் காரியம் சாராளுக்கு நேர்ந்தது. 250 அதற்கு முன்பு…அவள் பெற்றிருந்த அந்த பழைய சரீரம், அந்த முதல் சரீரம், ஒரு குமாரனைப் பெறுவதற்காக மாற வேண்டியதாயிருந்தது. உங்களுக்கு இது புரிகிறதா? அந்த சரீரத்தினால் அதை செய்ய முடியவில்லை, அது போன்று நம்முடைய இந்த சரீரமும் அதை செய்ய முடியாது. எனவே குமாரனைப் பெற்றுக்கொள்ள இதுவும் அதே விதமாக மாற வேண்டும்.

136363. அது எப்படி எங்கே நடக்கும், எப்பொழுது…மணவாட்டி எங்கே…எங்கே செல்கிறாள்? 251 அது மகிமைக்கு, பரலோகத்துக்கு, கலியாண விருந்துக்கு செல்கிறது, ஈசாக்கும் ரெபேக்காளும் அதற்கு முன்னடையாளமாயுள்ளனர், ஈசாக்கை சந்திக்க ரெபேக்காள் புறப்பட்டுச் சென்றபோது. ஆபிரகாமிடமிருந்து புறப்பட்டுச் சென்ற செய்திக்கு எலியேசர் எடுத்துக்காட்டாய் இருக்கிறான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். கிறிஸ்-…ஈசாக்குக்காக ஒரு மணவாட்டியை கண்டு பிடிக்க எலியேசர் புறப்பட்டுச் சென்றான். அவன் குளிர்ச்சியான சாயங்கால வேளையிலே அழகான ரெபேக்காளை, ஒரு தண்ணீர் குடம் சுமந்துகொண்டு வருகின்ற கறுப்பு நிறத்-தோலைக்கொண்ட பெண்ணாக எலியேசர் கண்டான். எலியேசர், “தேவனாகிய கர்த்தாவே, இப்பொழுது என் பிரயாணத்தை வாய்க்கச் செய்து என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு வெற்றியைத் தருவீராக” என்று கூறி, ஜெபம்பண்ணினான். 252 அவன், “போ, அவனை பெலிஸ்தியருக்கு மத்தியில் அழைத்துச் செல்லாதே; அவளை அங்கிருந்து எடுக்காதே” என்றான். இங்கே அவனுடைய ஜனத்தார் மத்தியிலிருந்து எடு, கிறிஸ்துவின் மணவாட்டிக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள இரத்த சம்பந்தமான உறவு என்பதையே இது காண்பிப்பதாய் உள்ளது, ஏனெனில் ரெபேக்காளும்—ஈசாக்கும் இரத்த சம்பந்தமான உறவினர்.

137253 எனவே அவன் புறப்பட்டுச் சென்றான், அப்பொழுது இந்த அழகான ரெபேக்காள் வெளியே வந்து தண்ணீர் மொண்டாள்; அவன் ஜெபித்தபடியே; அப்பொழுது ஒட்டகங்கள், இன்னும் எல்லாவற்றிற்கும் மொண்டு வார்த்தாள். அதன் பிறகு, நீங்கள் ரெபேக்காளை கவனிப்பீர்களானால்…முடிவான தெரிந்துகொள்ளுதல் ரெபேக்காளிடத்திற்கே வர வேண்டியதாயிருந்தது. அவன் அந்தப் பெண்ணிற்காக தகப்பனிடத்தில் கேட்டான்; அவன் பெண்ணிற்காக தாயிடமும் கேட்டான்; மேலும் அவர்களால் இணங்க முடியவில்லை. அவள் சிறிது காலம் தங்கியிருக்க வேண்டுமென்று விரும்பினர். அவன், “என் பணியில் என்னைத் தடை செய்யாதீர்கள்” என்றான். 254 அப்பொழுது ரெபேக்காள் தெரிந்துகொள்ளுதலை செய்ய வேண்டியதாய் இருந்தது, ஏனென்றால் அவன், “அவள்தான் பெண்; அவளே தெரிந்துகொள்ளுதலை செய்யட்டும்” என்றான். 255 அவளைக் கேட்டவுடனே, வேகமாக அவள் மனதில் தீர்மானித்தாள்; அவள், “நான் போகிறேன்” என்றாள். அவள் ஓட்டகத்தின் மேலேறி ஈசாக்கைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றாள்… பாருங்கள், அவள் தண்ணீர் வார்த்த அதே ஒட்டகம் அவளை தன் மணவாளனிடம் கொண்டு சென்று, அவளுடைய வெற்றி அனைத்துக்கும் காரணமாயிருந்தது. அதே ஒட்டகம், அதே வல்லமை (அந்த மிருகம் வேதத்தில் வல்லமைக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது)… அவ்வாறே நாம் தண்ணீர் வார்த்து துதியை ஏறெடுக்கும் அதே வல்லமை (ஆமென்! புரிகிறதா?), தண்ணீர், ஜீவன், துதிக்கும், அந்த வார்த்தையே, மணவாளனைச் சந்திக்க நம்மை மகிமையின் தேசத்துக்கு கொண்டு செல்கிறது. ஆம். ஐயா! ஆமென்! அந்த மகிழச்சியான ஆயிரம் வருட அரசாட்சி நாள் வரக் காத்திருக்கிறோம், அப்பொழுது ஆசிர்வதிக்கப்பட்ட நமது கர்த்தர் வந்து, காத்திருக்கும் தம்முடைய மணவாட்டியை எடுத்துச்செல்வார்.

138256 ஞாபகம் கொள்ளுங்கள், ஈசாக்கு தன் கூடாரத்தைவிட்டுப் புறப்பட்டு வந்து பிற்பகலில் வயலில் தியானித்துக் கொண்டிருந்தான். (ஆமென்!) ரெபேக்காள் வருவதை அவன் கண்டபோது…அவள் அவனை கண்டதில்லை மற்றும் அவனும் அவளைக் கண்டதில்லை, ஆனால் அது கண்டதும் காதலாய் இருந்தது. அவள் அவன் மேல் அன்பு கொண்டாள். அவனும் அவள் மேல் அன்பு கொண்டான், அவள் கூட திரையிட்டுக்கொண்டாள். ஆமென்! ஓ, என்னே! 257 கவனியுங்கள், அவள் அவனைக் கண்டபோது, அவள் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கினது. அவள் யாரை விவாகம் செய்து கொள்ளப் போகிறாள் என்று அறிந்திருக்கவேயில்லை, ஆனால் விசுவாசத்தினாலே. ஆமென்! மேலும்—மேலும்—நினைவிருக்கட்டும், இயேசு ராஜ்ஜியத்தைவிட்டு புறப்படும்போது, நாம் அவரை மகிமையில் சந்திக்கமாட்டோம், நாம் அவரை வானத்துக்கும் பூமிக்கும் இடையே, ஆகாயத்தில் சந்திக்கிறோம், அங்கே அது நம்மை மீட்பதற்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவன் ரெபேக்காளை, அவளுடைய வீட்டிற்கும் தன்னுடைய வீட்டிற்கும் இடையே சந்தித்தான். ஆமென்! அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவளை விவாகம் செய்துகொண்டு, தன் தகப்பனுக்கிருந்த சர்வத்துக்கும் சுதந்தரவாளியானான். ஆமென்! ஓ, பரிபூரணமாயுள்ளது, மிகவும் பரிபூரணமாயுள்ளது. சரி. கேள்வி: தேவன் மனிதனையும் மனைவியையும் பிரிக்கிறாரா…?

139258 இந்த ஒன்றை நான்—நான் படிக்காமல் விட்டுவிடுவது நலம். புரிகிறதா, பார்த்தீர்களா? அதற்கு ஒரு—அதற்கு ஒரு…ஒரு வார்த்தை சொல்ல நேரிடும். உங்களுக்குப் புரிகிறதா? உங்கள் எல்லோரையும் எனக்குத் தெரியும், ஆனால் இவைகள்—இவைகள்—இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது (உங்களுக்குப் புரிகிறதா?), எனவே நான்—நான் விட்டுவிடுவது நலம். அது எதைக் குறித்தது என்றால்…இந்த கேள்வியை எழுதின நபரே, உங்களுக்கு அது என்னவென்று தெரியும்; உங்களை நான்—நான் ஒரு தனிப்பட்ட பேட்டியில் காண்பது நலம். புரிகிறதா? நான் நல்லது அல்ல…அதை படிப்பது உண்மையாகவே நன்றாயிருக்காது என்று நான் எண்ணுகிறேன். புரிகிறதா? அது—அது பரவாயில்லை, அந்த நபர், இந்த கேள்வியைக் கேட்டதில் எந்த தவறுமில்லை; அவர்கள் ஒரு நியாயமான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறார்கள், ஆனால் அதற்கு ஒரு தனிப்பட்ட பேட்டியில் அவரைக் கண்டு விடையளிப்பது நலமென்று நான்—நான் கருதுகிறேன். நீங்களும் அவ்வாறு கருதுவீர்கள் அல்லவா? அது யாராயிருந்தாலும்…அது யாராயிருந்தாலும் உங்களுக்குத் தெரியும், நீங்கள் யாராயிருந்தாலும்.

140259 ஓ. என்னே! ஓ, சபையோரே, நமது நேரத்தை நாம் எப்பொழுதோ கடந்துவிட்டோம். நாம்—நாம் முடித்துவிட்டு, பகல் உணவு அருந்தச் செல்வது—செல்வது நலம். நான் இன்னும் எவ்வளவு நேரம் இங்கு கழிக்கலாம்…என்று நீங்கள் விரும்புகிறீர்கள்…இங்கே விசிறி உள்ளதா? [யாரோ ஒருவர், “நாள் முழுவதும்” என்கிறார்.—ஆசி.] ஓ, என்னே, என்னே! வெறுமனே ஒரு—வெறுமனே ஒரு, ஆம், வெறுமனே ஒரு, இன்னும் சிறிது நேரம். யாருக்காகிலும் உடனே செல்ல வேண்டுமென்ற அவசியம் இருக்குமானால், உங்கள் இரவு உணவு கரிந்து போகும்படிவிடாதீர்கள். ஆனால் நீங்கள்—நீங்கள்…மேலும்—மேலும் நான் அநேகமாக ப்ளு போர் அல்லது ப்ரையார்ஸ், அல்லது வேறெந்த இடத்திலாகிலும் உணவு உண்பேன், அவர்கள் நம்மை அநேகமாக தொல்லைப்படுத்தமாட்டார்கள். நீங்கள் போக வேண்டுமென்றால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக; எனக்குப் புரிகிறது. புரிகிறதா? நான் இது குறித்து எடுத்துக்கொள்ளப்போகிறேன், இங்கு வைக்கப்பட்டுள்ள இவைகளுக்கு மட்டுமே, அவ்வளவுதான் நான் விடையளிக்கப்போகிறேன். அதன் பிறகு நான்—நான், இவைகளுக்கு சரியாக, சுமார், கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டு, அதன்பின்னர் நான் போகப், போகப்போகிறேன்.

141364. ஸ்-தா-ப-ன-… மனிதர்களை விவாகம் செய்துள்ள இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு மற்றும் அவர்கள் இந்த செய்தியை விசுவாசிக்கிறார்கள். அவர்கள்…ஸ்தாபனங்களில், (அது உண்மை.), மேலும் அவர்களின் இந்த செய்தியை விசுவாசித்து, இதற்கென்று உறுதியாக நிற்கின்றனர், மற்றும்…பெற்றுள்ளனர். அவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் எதிர்ப்பைப் பெற்றுள்ளனர். நாங்கள் என்ன செய்ய வேண்டும்? 260 நீங்கள் உறுதியாய் நில்லுங்கள்! முற்றிலுமாக. உங்கள் நிறத்தைக் காண்பியுங்கள். அதுதான்; அவர்களுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். வேண்டாம், ஐயா! நீங்கள் அவர்கள் மத்தியில் சென்று, ஐக்கியம் கொள்ள வேண்டாம், அல்லது அப்படி ஒன்றும் செய்ய வேண்டாமென்று, நான் கூற வரவில்லை, உங்களால் ஐக்கியம் கொள்ள முடியும் வரை; ஆனால் அவர்கள் உங்கள் ஆகாரத்தை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்களானால், ஒரு புறா ஒரு பருந்துடன் ஆகாரம் புசிக்க முடியாது என்று, உங்களுக்குத் தெரியும்.

142365. சகோதரன் பிரான்ஹாமே, தயவு கூர்ந்து மாற்கு 13:27-ஐ விளக்குவீர்களா? சகோதரன் பிரான்ஹாம், வெளிப்படுத்தின விசேஷம் 20:7 மற்றும் 9-ல், கூட, கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்களோடு யுத்தம் பண்ணும் ஜனங்கள்…யார்? அவர்கள் எங்கிருந்து வருகின்றனர்? நோவாவின் குடும்பத்தைப் போல கொண்டு செல்லப்படுவார்களா? 261 வெளிப்படுத்தல் 13 இல்லை…இல்லை. மாற்கு 13:27, சகோதரன் நெவில். வெளிப்படுத்தல் 20. சகோதரன் காப்ஸ், நீங்கள் உங்களுடைய வேதாகமத்தை வைத்துள்ளீர்களா? வெளிப்படுத்தல் 20, அது 7 முதல் 9 வசனங்கள் என்பது போல் தான் தோன்றுகிறது. நான் நினைக்கிறேன், அவர்கள் அதை எடுத்துக் கொண்டிருக்கும்போது… இதோ, அவர் இங்கு அதை எடுத்து விட்டார். வெளிப்படுத்தின விசேஷம், அது இப்பொழுது என்னவாயிருந்தது? மாற்கு 13:27, 13:27. அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனை மட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார். பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனை மட்டுமுள்ள… 262 அது உயிர்த்தெழுதலை, மறுரூபப்படுதலை, மேலே செல்வதைக் குறித்துப் பேசுகிறது, அவர் கூட்டிச் சேர்ப்பதற்காக. தமது தூதர்களை அனுப்புவார். இந்த தூதர்கள் யாரென்று நீங்கள் எப்பொழுதாகிலும் நினைத்ததுண்டா? ஹூ? செய்தியாளர்கள். அவர் அவர்களை கூட்டிச் சேர்ப்பார், ஒன்றாக கூட்டுவார் (புரிகிறதா?), அவர்களை, பூமியின் கடைமுனை முதற்கொண்டு வானத்தின் கடைமுனை மட்டுமுள்ள திசைகளிலிருந்து கொண்டு வந்து, பூமியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள வார்த்தையாகிய அவர்களை ஒன்றாக கட்டி இணைப்பார். புரிகிறதா? இது புரிகிறதா? வார்த்தை உரைக்கப்பட்டது; இதோ அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புரிகிறதா? சரி, சகோதரன் காப்ஸ், நாம் பார்ப்போம். அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, 263 சரி. சற்று முன்பு தான் அதை விளக்கினேன், நான், அவன் எவ்வாறு ஆயிரம் வருஷம் முடியும்போது காவலிலிருந்து விடுதலையாவான் என்று விளக்கினேன் அல்லவா? சரி, வேறொரு கேள்வி இங்குள்ளது. ஒரு நிமிடம்.

143366. சகோதரன் பிரான்ஹாமே, நடந்த காரியங்கள் தேவனால் உண்டானதா, அல்லது நானே உண்டாக்கிக்கொண்டதா, (சோ-தி-…) சோதிக்கப்பட்ட போது…? அது என்ன…? (உங்களால் படிக்க முடிகிறதா என்று பாருங்கள். அது நல்ல கையெழுத்து, ஆனால் என் கல்வி குறைவாக உள்ளது. அது அங்கே என்ன சொல்லுகிறது? …?… என்னால் இதற்கு விடையளிக்க முடியுமென்று நான்—நான் நினைக்கவில்லை. சகோதரன் காப்ஸ் அல்லது எனக்கு என்ன எழுதியிருக்கிறதென்று…படிக்க முடியவில்லை,) அது என்ன…? (அது—அது…அவ்வாறு இருந்தாலொழிய, அது ஒரு செவிலியராக இருந்திருந்தால். (செவிலியர் பணியைக் குறித்து ஏதோ ஒன்று.) நான் செவிலியர் பணியை விட்டு நின்றது தேவனால் உண்டானதா, அல்லது அது என் தவறா? 264 எனக்குத் தெரியாது. அதை நான் தனிப்பட்ட பேட்டியில் காண்பது நலமாயிருக்கும். புரிகிறதா? இப்பொழுது, செவிலியர் பணி நியாயமான ஒன்று, செவிலியராக இருப்பது. நான் கூறவுள்ளதோ…இப்பொழுது, அந்த நபர் ஒன்றும் கூறவில்லை…அதற்கு விடையளிக்கக் கூடாது என்பதற்காக அந்த கேள்வியை நான் எறிந்துவிடவில்லை, ஏனெனில் உங்கள் கேள்வி உங்களுக்கும் அல்லது என் கேள்வி எனக்கும் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ, அப்படித்தான் இந்த கேள்வியும் இந்த ஸ்திரீக்கு முக்கியம் வாய்ந்தது. புரிகிறதா? ஆனால் இப்பொழுது, அது ஒரு—அது ஒரு—ஒரு செவிலியராக இருக்குமானால், நீ வேலை செய்யக் கூடாது என்று நினைத்து செவிலியர் பணியை விட்டு நீங்கிவிட்டாய்… பாருங்கள், செவிலியர் பணி இரக்கத்துடன் செய்யப்படவேண்டிய ஒன்று என்று நான் கருதுகிறேன். புரிகிறதா? ஒரு மருத்துவரைப்போல, ஏதோ ஒரு காரியத்தை செய்வதை குறித்து நீங்கள் நினைக்க வேண்டும்.

144265 ஒரு மருத்துவர், ஒரு நல்ல மருத்துவர், ஒரு உண்மையான மருத்துவர், ஒரு மனிதனிடம் ஒரு பைசா இருந்தாலும் இல்லாமற்போனாலும், அவனுக்கு சிகிச்சை அளிப்பார். புரிகிறதா? ஒரு ஊழியக்காரன், யாரேனும், நம்முடைய சேவை ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் ஒருவருக்கொருவர் வாழ்க்கையை சிறிது மேம்படுத்த வேண்டும். 266 நான்…இந்த சபையிலிருந்து வார்த்துக்கு நூறு டாலர் நான் ஒரு ஊதியமாக பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர்கள் என்னிடம் கூறினபோது, ஏன், அது என்னைக் கொல்வது போன்றிருந்தது—போன்றிருந்தது. இப்பொழுது…எனக்குத் தெரியும், திருமதி. வில்ஸனும், ஒருக்கால் அவர்களுடைய மகனும், இங்கு உட்கார்ந்திருக்கிற மற்றவர்களும், அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை ஞாபகம் வைத்திருப்பார்கள், இங்கு நான் பதினேழு ஆண்டுகள் பிரசங்கித்து, என் ஜீவியத்தில் ஒரு காசு கூட வாங்கிக்கொள்ளவில்லை. என்னால் சம்பாதிக்க முடிந்த, சிறு தொகையுைம் கூட, நான் இதற்கே கொடுத்துவிட்டேன். பார்த்தீர்களா? இந்த கூட்டங்களில் நான் பங்கு கொள்ள வேண்டுமானால், நான் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கூறினபோது, அது என்னை அழித்துவிடும்போல எனக்குத் தோன்றினது. புரிகிறதா? அதைப் பெற்றுக்கொள்வதில் தவறில்லை, ஆனால் என்னைப் பொறுத்தவரையில் (உங்களுக்குப் புரிகிறதா?), எனக்கு எதுவுமே, எந்த பணமுமே வேண்டாம். எனக்குத் தேவையான ஒரேக் காரியம்—உங்களுடைய—உங்களுடைய நட்பும், நம்மிடத்தில் உள்ள தேவனுடைய தயவுமே. 267 உங்களை நான்—நான் நேசிக்கிறேன் (பார்த்தீர்களா?), உங்களை நான் நேசிக்கிறேன், நீங்கள் சரியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்; நானும் கூட சரியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் என்னை நம்ப வேண்டுமென்று நான்—நான் விரும்புகிறேன்; நானும் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியுடன் வருவீர்களானால், நான் உங்களிடம் உண்மையுள்ளவனாயிருக்க விரும்புகிறேன். நான்—நான் உங்களிடம் கர்த்தருடைய நாமத்தில் எதையாகிலும் உரைத்தால், நான் உங்களிடம் என்ன செய்யக் கூறினேனோ, அதை நீங்கள் அப்படியே செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதிலிருந்து ஒரு—ஒரு துளிக்கூட மாறாதீர்கள், அப்பொழுது நாம் சரியாக இணைந்து செல்வோம் என்று நான் எண்ணுகிறேன். புரிகிறதா? பிறகு, மற்றவர்கள்…

145268 எனவே இப்பொழுது, அது செவிலியர் பணியாயிருக்குமானால்…நான் நினைக்கிறேன், நீ உன் இருதயத்தில் ஒரு செவிலியராக…எல்லோருமே ஒரு செவிலியராகிவிட முடியாது. செவிலியர் என்பவள் சாந்த குணமுள்ளவளாயும், ஜனங்களிடம் தயவாயும் நடந்துகொள்ள வேண்டும், ஓ, ஒரு உண்மையான செவிலியர்…நான் நினைக்கிறேன். நீங்கள் எப்பொழுதாகிலும் வியாதிப்பட்டு அல்லது ஏதோ ஒன்றிற்காக ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால், உங்களை செளகரியமாக, அல்லது அப்படிப்பட்ட ஏதோ ஒன்றாக அல்லது மற்ற விதத்தில்…வைத்துக்கொள்ளும் ஒரு உண்மையான அருமையான செவிலியரை அப்பொழுது காணலாம். 269 நான் சுடப்பட்ட அந்த சமயத்தில் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது; அப்பொழுது நான் மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு வயோதிக செவிலியர் இருந்தாள், அவளை நான் “இனிய ஊறுகாய்” என்று அழைத்தேன், ஏனெனில் அவள் எப்பொழுதுமே வாயில் ஊறுகாயை வைத்து, தின்றுக்கொண்டிருப்பாள். எல்லா நேரங்களிலும் அப்படித்தான். அப்பொழுது எனக்கு வயது பதினான்கு மட்டுமே, நான் சுடப்பட்டேன். அவள் ஒரு சிறு உருவம் படைத்தவள், அவள்…கால்களில் குண்டு பாய்ந்து, இரண்டு கால்களிலுமே இப்படி தசை பிய்ந்து வந்திருந்தது, அவள் ஒரு தலையணையை இங்கேயும் ஒரு தலையணையை அங்கேயும் வைப்பாள்; அவள் எந்நேரமும் எனக்கு உதவி செய்து கொண்டேயிருப்பாள். (நான் அப்பொழுது சிறு பையன்) அவள்—அவள் என்னிடம் தயவாயும் நல்லவளாகவும் நடந்துகொண்ட காரணத்தால், அவளை விவாகம் செய்து கொள்ளலாம் என்று எப்பொழுதும் நான்—நான் எண்ணினேன். பாருங்கள் நான்…அது…நீங்கள் பாருங்கள், அது ஏதோக்காரியம் செய்ய வேண்டும் என்பதையே (புரிகிறதா?) பொருட்படுத்துகிறது.

146367. நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். எண் ஒன்று: பெண்கள் அணியும் பைஜாமாக்கள்… (இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள்; இதை நான் படிக்கட்டும் …?… இல்லை, இது சரியாயிருக்கும்.) பெண் அணியும் பைஜாமாக்கள் ஒரு ஆணின் உடைகளாகுமா? 270 இப்பொழுது, இவர்கள் என்னை கடினமான கேள்வி கேட்க முடியாதென்று என்னிடம் கூறாதீர்கள். எனக்குத் தெரியாது. அதைக் குறித்து நீங்களே தீர்மானித்துகொள்ளும்படி உங்களை விட்டுவிடப்போகிறேன். அதை அணிந்துகொண்டு நீங்கள் ஜனங்களுக்கு முன்பாக இங்கும் அங்கும் நடக்கக் கூடாது; அது எனக்குத்—எனக்குத் தெரியும். எனவே அந்தவிதத்தில் அது சரியல்ல, ஆனால்…அதை அணிந்துகொண்டு படுக்கைக்குச் செல்லும் விஷயத்தில், எனக்குத்—எனக்குத்—எனக்குத் தெரியாது. அந்த ஒன்றையும் கூட நான் ஆதாரப்படுத்தப்போகிறேன். எனக்குத் தெரியாமலிருந்தால், நான் உண்மையுள்ளவனாயிருப்பேன் என்று நான் உங்களிடம் கூறினேன். அதைக் குறித்து நீங்கள் என் சொந்த கருத்தை அறிய விரும்பினாலொழிய, (சரி), என் சொந்த கருத்தை அதில் நான் நுழைக்கப்போவதில்லை. அது உங்களுக்கு வேண்டுமானால், நான் உங்களிடம் கூறுவேன். புரிகிறதா? இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இது அல்ல…அது—அது…இது—இது கோடிக்கணக்கான மைல்கள் தவறாயிருக்கக் கூடும். இரவில் ஒரு நீண்ட ஆடை அணிந்து கொள்வது நலமென்று நான் கருதுகிறேன். ஆனால்—ஆனால்—ஆனால்…ஆனால் அது உங்களைப் பொறுத்தது. இப்பொழுது, என்னால் முடியாது—அதை என்னால் உங்களிடம் கூற இயலாது, ஏனெனில் அதை என்னால் ஆதாரப்படுத்த முடியவில்லை. இப்பொழுது, அது—அது—அது நான், அவரல்ல என்பது, நினைவிருக்கட்டும். புரிகிறதா?

147368. ஸ்திரியின் தலைமுடியின் முனையை கத்தரிப்பது தவறா? சில நிமிடங்களுக்கு முன்புதான் நாம் அதைக் குறித்துப் பார்த்தோம் என்று நான் நினைக்கிறேன் (புரிகிறதா?), ஏனென்றால் சிறு… சிறு சிறு தலைமுடி முன்னால் இப்படி தொங்கிக்கொண்டிருப்பதை அவர்கள் அவைகளை—அவைகளை என்னவென்று அழைக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன்…

148369. சகோதரன் பிரான்ஹாமே, ஏழு சபை காலங்களின் ஒலிநாடாக்கள் ஒன்றில் நீங்கள் யூதாஸ் நீதிமானாக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டான் என்று கூறியிருக்கிறீர்கள். அவை உண்மையான… (இது ஒரு நல்ல கேள்வி.)… அனுபவத்தை…விளக்கவும், அவன் பெற்றுக்கொண்ட கிருபையின் அனுபவங்கள் உண்மையானவையா? நீங்கள் மேலும், யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்ததாகக் கூட கூறியிருக்கிறீர்கள், அதேசமயத்தில், அவன் பாதாளத்துக்குச் சென்று இழக்கப்பட்டான் என்று நாமறிவோம். ஒரு நபரின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருக்கும்போது, அவன் எப்படி இழக்கப்பட முடியும்? அல்லது அவர்கள் முடிவில் இழக்கப்படுவார்கள் என்று தேவன் அறிந்த பிறகும், அந்த நபர்களின் பெயர்களை ஏன் அவர் ஜீவபுஸ்தகத்தில் எழுதி வைக்க வேண்டும்? 271 இப்பொழுது, இது ஒரு நல்ல கேள்வி, இல்லையா? இப்பொழுது, இது நன்றாக இருக்கும். இப்பொழுது, இதற்கு விடையளிக்க நான் கர்த்தர் பேரில் சார்ந்திருக்க வேண்டியதாயிருக்கும், ஏனெனில் அவ்வாறில்லாவிடில் நான் இதை தேடிப்பார்த்துக் கொண்டிருப்பேன், சரியாக கூறினால், ஆராய்ந்துகொண்டிருப்பேன். கவனியுங்கள்! முதலாவது…நம்முடைய சபைக் காலங்களில், யூதாஸ் தன்னுடைய பெயரை ஜீவபுஸ்தகத்தில் கொண்டிருந்தான் என்று நான் கூறினேன். அது உண்மை. அது நமக்குத் தெரியும், ஏனெனில் இயேசு அவர்கள் எல்லோரையும் வெளியே அனுப்பி (மத்தேயு 10-ம் அதிகாரம்), பிசாசுகளைத் துரத்தவும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் அவர்களிடத்தில் சொன்னார், இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்; பிசாசு அவர்களுக்குக் கீழ்படிகிறதனாலே அவர்கள் சந்தோஷத்தோடு திரும்பி வந்தனர். அது சரியா? இயேசு அவர்களிடம் கூறினதாவது, அவர் அவர்களுடைய நாமங்களைக் கூறினார் (அவர்கள் யாரென்றும், எத்தனை பேர் அனுப்பப்பட்டனர் என்றும்); அவர்கள் திரும்பி வந்தனர் மற்றும் அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்தும் அவர்களில் ஒருவன்…பார்த்தீர்களா? அவர்கள் சந்தோஷத்தோடே திரும்பி வந்தனர், ஏனெனில் பிசாசுகள் அவர்களுக்குக் கீழ்படிந்தன. இப்பொழுது, பாருங்கள், அவர்களுடைய மனப்பான்மை அங்கு தவறாயிருந்தது. புரிகிறதா? ஒரு பிசாசை அசைக்க உங்களுக்கு வல்லமை இருப்பதனால், நீங்கள் சந்தோஷப்பட வேண்டாம். புரிகிறதா? நீங்கள் அதைச் செய்யக்கூடாது, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்குப் போதுமான கிருபையைப் பெற்றிருப்பதால் நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். பாருங்கள், புரிகிறதா? நீங்கள் சந்தோஷப்பட வேண்டாம்…அந்த விதமாகத்தான் ஜனங்கள்…

149272 வழக்கமாக வரங்களைப் பெற்றுள்ள ஜனங்கள் வரங்கள் பெற விரும்பாதவர்களே. புரிகிறதா? பவுல் அதை விட்டு ஓடிப் போக முயன்றான், மோசேயும் அதையே செய்தான். அப்படிப்பட்ட பெரிய தலைவர்கள் அவர்களுடைய வேலையைவிட்டு ஓடிப்போக முயல்கின்றனர்; அவர்களுக்கு முன்னால் என்ன வைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். தேவன்… பாருங்கள், “ஓ, கர்த்தாவே, என்னை வல்லமையினால் நிரப்பும், நான் இங்கு செல்வேன், நான் பிசாசுகளைத் துரத்துவேன் என்று” சதா கூறும் ஒரு மனிதனை நீங்கள் எடுத்துக்கொள்வீர்களானால். அவன் அதை ஒருபோதும் செய்யவேமாட்டான். அப்படிப்பட்ட எவனையும் நம்பக் கூடாது என்பதை தேவன் நன்கு அறிந்திருக்கிறார். புரிகிறதா? அவன் அதை ஒருபோதும் செய்யவேமாட்டான். 273 அது அதனுடன் எவ்வித தொடர்பும் வைக்க விரும்பாத நபராக உள்ளது. உங்களுக்குப் புரிகிறதா? அநதவிதமான நபரை தேவன் எடுத்து ஏதோ ஒரு சமயத்தில் எதையாகிலும் போதிக்க முடியும். உங்களுக்குப் புரிகிறதா? எனவே, அதன்பின்னர், யூதாஸ் சந்தோஷத்தோடே திரும்பி வந்தான், அவர்கள் அனைவருமே, அவர்களுடைய பெயர்கள்… அவர், “பிசாசுகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்கு நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காக…சந்தோஷப்படுங்கள்” என்றார். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், தானியேலின் புத்தகத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். வேத-…புரிகிறதா? உங்களுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருப்பதனால் (அது பரலோகத்தில் இருப்பதனால், உங்கள் பெயர் அடையாளங் கண்டு கொள்ளப்பட்டதனால்), நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று அர்த்தமல்ல. புரிகிறதா? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் இரட்சிக்கப்படவில்லை. அதை ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் மறைமுகமாக இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். புரிகிறதா? நீங்கள்…இல்லை.

150274 நீங்கள் என்னிடம் ஒரு—ஒரு கருவேல மரத்தைக் கேட்டு நான் உங்களுக்கு கருவாலிக் கொட்டையைக் கொடுத்தால், மறைமுகமாக, உங்களுக்கு ஒரு கருவாலி மரம் கிடைத்துள்ளது, ஆனால் அது இன்னும் வளரவில்லை. ஆகையால்தான் நான் நித்திய பாதுகாப்பில், நான் விசுவாசிக்கும் விதமாக விசுவாசிக்கிறேன். நான்—நான் ஒரு தானிய வயலைக் கேட்டு, தானியக் கதிர்கள் இவ்வளவு உயரத்தில் வளர்ந்திருப்பதை நான் காணும்போது, மறைமுகமாக, நான் ஒரு தானியம் நிறைந்த வயலைப் பெற்றிருக்றேன். அது இன்னும் வளரவில்லை, ஏதாகிலும் ஒன்று நடக்கும். புரிகிறதா? இப்பொழுது, நீங்கள் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு பரிசுத்தமாக்கப்படுதலின் வழியாக நீங்கள் உங்களுடைய பாதையில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உண்மையாகவே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுக்கொள்ளும்போது, நீங்கள் இராஜ்யத்தில் இருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள், “சகோதரன் பிரான்ஹாமே, அது உண்மையா?” என்று கேட்கலாம்.

151275 இப்பொழுது, வேதவாக்கியத்தை உங்களுக்கு அளிக்க இப்பொழுது எனக்கு நேரமில்லை; நீங்கள் வீடு திரும்பின பிறகு அதைப் பாருங்கள், ஏனெனில் எனக்குத் தெரியவில்லை…என் சிந்தை. அதை எடுப்பதற்கு இங்கே என்னுடைய ஒத்துவாக்கிய அகராதியில் திருப்பி தேடிப் பார்க்க வேண்டும். இயேசு, இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டிருந்த பேதுருவிடம்…அவன் இயேசுவை விசுவாசித்தான், பரிசுத்தமாக்கப்பட்டிருந்தான். பரிசுத்த யோவான் 17:17, இயேசு, “உம்முடைய சத்தியத்தினாலே, பிதாவே, அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” என்றார். அவரும் வார்த்தையையும் ஒன்றுதான். அவர்கள் வார்த்தையாகிய, சத்தியத்தினூடாக, சத்தியத்தினூடாக, மறைமுகமாக, பரிசுத்தமாக்கப்பட்டிருந்தனர். பிறகு, இயேசு யூதாஸிடம், இல்லை—இல்லை, பேதுருவிடம், அவன் மறுதலித்த அந்த இராத்திரியில், அவர், “நீ குணப்பட்ட பின்பு, உன் சகோதரனை ஸ்திரப்படுத்து,” என்றார், நீ குணப்பட்டப் பின்பு.

152276 அந்த மனிதன் அவரை மூன்று ஆண்டு காலமாக பின்பற்றி அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது, அவன் பிசாசுகளைத் துரத்தி மகத்தான கிரியைகளைச் செய்து, சொஸ்தமாக்கி, எல்லாவிதமானவைகளை…செய்து, வார்த்தையைப் பிரசங்கித்து, எல்லாவற்றையும் செய்தபோதிலும், இன்னும் குணப்படவில்லை. பாருங்கள்…நீங்கள் அந்த குணப்படுதலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். புரிகிறதா? 277 குழந்தையானது…முட்டைக்கும் ஆண் விந்தணுவுக்கும் அல்லது மரபணுவுக்குமிடையே அந்த செயல் நடந்த பிறகு… ஆனால் அவர்கள்…அந்த செயல் நடந்த பிறகு, குழந்தை, மறைமுகமாக உள்ளது. அதன் பிறகு உடல் வளர்கிறது, இரண்டாம் கட்டம்; ஆனால் அந்த குழந்தை இங்கு பிறக்க வேண்டும், அப்பொழுது அது ஜீவ சுவாசத்தைப் பெறுகிறது. அதுவரைக்கும் அது ஜீவ சுவாசத்தை பெறவில்லை. ஆனால் நீங்களோ, “ஓ, அது உயிரோடிருக்கிறது!” என்கிறீர்கள், இல்லை, அது இல்லை! அந்த சிறு நரம்புகள், தசைகளை அசைகின்றன. புரிகிறதா? குழந்தை பிறக்கும் வரைக்கும் ஜீவனைப் பெற்றிருக்கவில்லை. நீங்கள் குதிக்கலாம், அசைக்கலாம், ஆனால் நீங்கள் பெற்றிருக்கவில்லை…பாருங்கள், புரிகிறதா? நீங்கள் பிறக்க வேண்டும். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று உங்களுக்கு தெரிகிறதா? சரி.

153278 இப்பொழுது, இப்பொழுது, அவர் அப்பொழுது கூறினதை எடுத்துக்கொண்டால்…“யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்ததாக கூறியிருக்கிறீர்கள், இருப்பினும், அவன் பாதாளத்துக்குச் சென்று இழக்கப்பட்டான் என்று நாமறிவோம். ஒரு நபரின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருக்கும்போது, அவன் எப்படி இழக்கப்பட முடியும்?” இப்பொழுது, இந்த அருமையான நபருக்கு இங்கே நான் இன்னும் ஒரு சிறு காரியத்தை இங்கு கூறட்டும். 279 இப்பொழுது கவனியுங்கள், தானியேல் கண்டதாக வேதம் உரைக்கிறது…தானியேல், முதலாம் வெளிப்படுத்தல் புத்தகத்தை அவன்—அவன் எழுதினான். நாம் கவனிப்பது என்னவெனில், தரிசனத்தில் அவன் நீண்ட ஆயுசுள்ளவர் முன்பாக கொண்டு வரப்பட்டான், அவருடைய சிரசின் மயிர் பஞ்சை போல் வெண்மையாயிருந்தது. எத்தனை பேருக்கு அதைப் படித்தது ஞாபகமுள்ளது? வெளிப்படுத்தின விசேஷத்தில் யோவானும் அதே காரியத்தைக் கண்டான், வெளிப்படுத்தின விசேஷம் 1-ல், என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவர் அங்கு நின்றுகொண்டிருந்தார்; அவருடைய சிரசின் மயிர் பஞ்சைப் போல் வெண்மையாயிருந்தது, அவருடைய பாதங்கள் அது காணப்பட்ட விதமாக இருந்தன—நீண்ட ஆயுசுள்ளவர். நீண்ட ஆயுசுள்ளவர் என்றால், அவருக்கு காலம் என்பதே கிடையாது; அவர் நித்தியமானவர். அவர் வந்தார்…இப்பொழுது கவனியுங்கள்! பரிசுத்தவான்கள் பூமிக்கு வந்தனர் அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும், வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது, ஒரு புத்தகம். அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு வந்தனர், மற்றும்…அவர் வந்தார், அவருடன் கோடாகோடி பேர் வந்தனர். அது சரியா? அவரைச் சேவித்தனர், மணவாட்டி, ராணியும் ராஜாவும்…

154280 வீட்டில் உள்ள உங்கள் சிறு ராணி யார்? அவள் உங்களுக்கு உணவு பரிமாறி சேவை செய்கிறாள். அது சரியா? (உங்களுக்கு இப்பொழுது நேரமாகிறது.) ஆனால் அவள்—அவள் உங்களுக்கு சேவை செய்கிறாள். அதுதான் மணவாட்டியும் வார்த்தையாகிய, கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறாள். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” புரிகிறதா? அவள் ராஜாவுக்கு வார்த்தையை ஊழியம் செய்கிறாள், அவள் வாழ்ந்துகொண்டிருக்கிற காலத்தில் அவருடைய வாக்களிக்கப்பட்டுள்ள வார்த்தையை வெளிப்படுத்துபவளாயிருக்கிறாள். ஆமென்! ஆ, நான் அப்பொழுது ஒன்றைக் கூறினேன், நீங்கள் புரிந்துகொள்ளவில்லை, ஆனால்… 281 கவனியுங்கள்! ஓ, என்னே! அது நல்ல ஒன்று. பார்த்தீர்களா? இந்தக் காலத்தில், வார்த்தைக்கு ஊழியம் செய்தல். இப்பொழுது கவனியுங்கள்! அவள் வந்தாள்…அவர் வந்தார், ஆயிரமாயிரம் பேர் அவரிடம் வந்தனர்; நியாய சங்கம் வைக்கப்பட்டது, புத்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது; அவர்கள் அதன்படி நியாயந்தீர்க்கப்பட்டனர். வந்த இவர் யார்? நியாயத்தீர்ப்புக்கு வர அவசியமில்லாத மணவாட்டி, அவள் நியாயத்தீர்ப்பிலிருந்து விடு பட்டிருக்கிறாள்.

155282 ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது, ஜீவபுஸ்தகத்தில் தங்களுடைய பெயரைக் கொண்டிருந்தவர்கள் அந்த புத்தகத்திலிருந்து நியாயம் தீர்க்கப்பட வேண்டியதாய் இருந்தது. யூதாஸ்காரியோத்து தன்னை ஒரு விசுவாசியென்று காண்பித்துக்கொண்டான், அவனுடைய பெயர் மற்ற பெயர்களுடன் கூட ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது சரியா? அவன் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டதாக உரிமை கோரினான். அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. எனவே அவன்…ஏன், அவன் ஜீவ வார்த்தையை முப்பது வெள்ளிக் காசுக்கு ஏன் காட்டிக் கொடுத்தான் என்பதற்காக நியாயத் தீர்ப்படைய வேண்டும். சிலர் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, இன்னும் மற்றவர்களாக இருக்க விற்றுப்போடுகிறார்கள். அவன் ஜீவ புஸ்தகத்திலுள்ள அவனுடைய பங்கை விற்றுப்போட்டான். அவன் நியாயத்திற்கு…அவன் அங்கே…நிறுத்தி வைக்கப்பட்டு, வார்த்தையினால், அதன் மூலம் நியாயந்தீர்க்கப்பட வேண்டும். புரிகிறதா? அந்த காரணத்தினால் தான் யூதாஸ் அதைச் செய்ய வேண்டியதாக இருந்தது. புரிகிறதா? யூதாஸ் நியாயத்தீர்ப்பிற்கு வர வேண்டும். அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்தது, அதன் காரணமாக அவன் இரட்சிக்கப்பட்டான் என்று அர்த்தமல்ல. அவன் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டும்.

156283 நித்திரையடைந்த கன்னிகைகளும் அதே—அதே காரியங்களுக்காக அங்கு நிற்க வேண்டும். கவனியுங்கள், இயேசு பரிசுத்த யோவான் 5:24-ல், “என் வசனத்தைக் கேட்டு” என்று கூறினார். அதாவது அதை ஏற்றுக்கொள்கிறவன்; அது பிரசங்கம் பண்ணப்படுவதைக் கேட்டு “முட்டாள்தனம்” என்று சொல்லிவிட்டு செல்பவன் அல்ல. புரிகிறதா? “என் வசனத்தைக் கேட்டு, என்னை வார்த்தையைக் கேட்டு அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு (பாவனையாக-விசுவாசிக்கிறவன் அல்ல, உண்மையாக விசுவாசிக்கிறவனுக்கு) நித்திய ஜீவன் உண்டு (வார்த்தையாயிருந்த) அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல்; ஆனால் இருக்கிறான்” (இறந்த காலம்) “மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்று கூறினார். புரிகிறதா? அதுதான் இது.

157284 எனவே யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்தது (அது முற்றிலும் உண்மை), ஆனால் அவன் ஆக்கினைத் தீர்ப்படைந்தான், ஏனெனில் அவன் என்ன செய்தான்? தன் பிறப்புரிமையை விற்றுப்போட்டான். ஏசா தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்த குடும்பத்தில் பிறந்தான். மூத்த மகனுக்குதான் சேஷ்ட புத்திரபாகம் இருந்தது. எத்தனை பேருக்கு அது தெரியும்? ஒரு தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மூலம், ஏசாவின் பெயர் சேஷ்ட புத்திரபாகம் பெற்றிருந்தவரின் பெயர்கள் அடங்கிய புத்தகத்தில் இருந்தது, (அது சரியா?), ஆனால் அவனோ காட்டுக் காய்கள் அல்லது பட்டாணிகளை கொண்ட ஒரு பானை கூழுக்காக அதை மாற்றிக்கொண்டான். பசியாயிருந்த அவனுடைய வயிற்றை நிரப்புவதற்கென்று, அவனுடைய ஆகாரச் சீட்டுக்காக அவன் தன் சேஷ்ட புத்திர பாகத்தை மாற்றிக்கொண்டான் மற்றும் அதன் விளைவாக மனம்மாறுதலைக் கண்டடைய முடியாமற் போயிற்று. 285 தேசத்தை வேவு பார்க்க…சென்ற அந்த வேவுக்காரர்கள், திரும்பி வந்து யோசுவாவும் காலேபும் கொண்டு வந்த திராட்சை பழங்களையும் தின்றனர். இருப்பினும், அவர்கள் என்ன செய்தனர்? தங்கள் சேஷ்ட புத்திர பாகங்களை விற்றுப்போட்டனர்.

158286 இயேசு கூறினார், இல்லை கிறிஸ்துவின் ஏவுதலினால் பவுல் 6-ம் அதிகாரத்தில்: “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம் ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்த்தும்; மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புவதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்று உரைத்திருக்கிறான், “மேலும் அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்ட, உடன்படிக்கையின் இரத்தத்தை, அசுத்தம் என்று எண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவர்கள்…” அந்த நபர் திரும்பி வருவது கூடாத காரியம். 287 அவர்கள், யோசுவாவும் காலேபும் தவிர, மற்றவர் ஒவ்வொருவரும் வனாந்தரத்தில் மரித்து அழிந்துபோயினர், அதேசமயத்தில் அவர்கள் விசுவாசிகளே, அதேசமயத்தில் அவர்களுடைய பெயர்கள் புத்தகங்களில் இருந்தன.

159288 இங்கே, பவுல் பேசுகையில், ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படும் ஒரு இடத்திற்கு வந்து (இரத்தம் பரிசுத்தம் செய்கிறது; எபிரெயர்13:12 மற்றும் 13 இரத்தம் பரிசுத்தம் செய்கிறதாக கூறுகிறது), அதன்பிறகு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் வாசல் வரைக்கும் வந்து, கெளரவம் அல்லது ஸ்தாபனத்தின் காரணமாகவோ அதற்குள் நடக்க மறுத்தால், “அந்த நபர் இழக்கப்பட்டு மற்றும் ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாது” என்று கூறினான். (புரிகிறதா?); ஏனெனில் அவனை அந்த இடத்துக்கு அழைத்து வந்து அதை அவனுக்குக் காண்பித்த கிருபையின் ஆவியை அவன் நிந்தித்து, அங்கிருந்து திரும்பி, சென்றுவிடுகிறான். அவன் சிலுவையில் அறையப்பட்ட இரத்தத்தின் உடன்படிக்கையை…எண்ணி, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை அசுத்தம் என்று எண்ணுகிறான். ஏனெனில் அந்த இரத்தம்தான் அவனை இரட்சித்து, அவனை நீதிமானாக்கி, அவனை பரிசுத்தப்படுத்தி, அவனை பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வரைக்கும் கொண்டு வந்தது. அவனோ அதை விட்டு விலகி, நடந்து சென்றுவிடுகிறான்…

160289 இப்பொழுது, அந்த மாதிரியைக் கவனியுங்கள். நான் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறேன், ஆனால் பாருங்கள்! யூதாஸ்காரியோத்து அதே பாதையைத் தொடர்ந்தான். அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதன் மூலம் நீதிமானாக்கப்பட்டான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு, ஆவிகளைத் துரத்த அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்படடிருந்தது; அவனுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவன் பெந்தெகொஸ்தேவுக்கும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்கும், வார்த்தையின் முழுமைக்கும் வந்தபோது, அவன் தன் உண்மையான நிறத்தைக் காண்பித்தான். கானானுக்குச் சென்ற வேவுகாரர்களும் சரியாக அதைதான் செய்தனர்; ஏசாவும் சரியாக அதைதான் செய்தான். 290 அதையேதான் சாத்தானும் ஏவாளுக்கு ஏதேன் தோட்டத்தில் செய்தான்: “நிச்சயமாக தேவன் செய்யமாட்டார்…” அவள், “தேவன் கூறினார்…” என்றாள். அவன், “ஆம், அது அதைக் கூறுகிறது என்று எனக்குத் தெரியும்; அது இதைக் கூறுகிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் நிச்சயமாக…” என்றான். பாருங்கள், காலங்கள்தோறும் அதே காரியம்தான், அது இன்றைக்கும் அவ்வண்ணமாகவே உள்ளது.

161291 சபையானது நீதிமானாக்கப்படுதலை, மார்டின் லூத்தர் மூலமாக; பரிசுத்தமாக்கப்படுதலை, வெஸ்லியின் மூலமாகவும் பின் தொடர்ந்து வந்தது. ஆனால் அது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறும் நேரத்தை அடையும்போது, அவர்கள் தங்கள் சுய நிறத்தைக் காண்பிக்கின்றனர்; அதனுடன் அவர்கள் எந்த சம்பந்தமும் கொள்ளப் பிரியப்படவில்லை. நசரீன்கள், யாத்திரீக பரிசுத்தர், சர்ச் ஆஃப் காட் என்ற சபையினர், இவர்கள் அனைவரும் பரிசுத்தமாக்கப்படுதலில் நம்பிக்கை கொண்டுள்ளனர், அதில் உங்கள் விரலைச் சுட்டிக் காட்ட முடியாது; அது உண்மை. ஆனால் எல்லைக் கோட்டுக்கு அது வரும்போது, புதிய பிறப்பைப் பெற பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அந்த கட்டத்தை அது அடையும்போது, பிசாசு என்ன செய்வான்? வந்து அதைத் திரித்துவிட முயற்சிக்கிறான். ஓ, அவன்…அங்கிருந்து ஜனங்களை விலக்கிவிட தனக்குத் தெரிந்த அதிகாரத்தைக் கொண்டு தடுக்க அவன் எதையும் செய்வான். 292 அவர்கள் அதை சுற்றி வளைத்து, “நீங்கள் அந்நிய பாஷை பேச வேண்டும். உங்களுக்கு உணர்ச்சி உண்டாக வேண்டும். நீங்கள் இதை செய்ய வேண்டும்” என்று கூறுகின்றனர். நீங்கள் அதற்குள் பிறக்க வேண்டும். பரிசுத்தமாக்கப்படுதலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் ஒரே காரியம்தான் என்று எவரும் உங்களிடம் சொல்ல அனுமதிக்காதீர்கள், ஏனெனில் அது அப்படியல்ல! நிச்சயமாக அல்ல! பின்னால் உள்ள நசரீன், “அது அப்படியல்ல” என்று இங்கே கூச்சலிடுவதைக் கேளுங்கள். புரிகிறதா? அவ்விரண்டுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை அவன் அறிந்துள்ளான், ஏனெனில் அதில் நிச்சயமாக வித்தியாசம் உண்டு. சகோதரன் காப்ஸ், நம்முடைய தீரமுள்ள சகோதரன். புரிகிறதா?

162293 நிச்சயமாக, நசரீன்கள்…அருமையான, பக்தியான ஜனங்களாகிய அவர்களுக்கு விரோதமாக யாரும் ஒரு வார்த்தையும் கூற முடியாது; அவர்கள் எப்படி அருமையாக இருக்க முடியுமோ அந்த அளவிற்கு அவர்கள் அருமையாக இருக்கிறார்கள். சர்ச் ஆஃப் காட் சபையினர், நசரீன்கள், சுயாதீன மெதோடிஸ்டு, இந்த ஜனங்கள் அனைவரும் உண்மையானவர்கள், ஆனால் ஆவியின் கிரியைகளுக்கு அது வரும்போது, அவர்கள், “ஓ, ஓ, அது பிசாசு” என்று கூறுகிறார்கள். அவர்கள் அங்கு என்ன செய்தார்கள்? பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் தேவதூஷணம் சொல்கின்றனர். அவர்கள் அதைச் செய்யும்போது… 294 இப்பொழுது, தேவதூஷணம் என்றால் என்ன? அதற்கு மன்னிப்பே கிடையாது. அது சரியா? “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், பரம ஈவுகளை ருசிபார்த்தவர்கள்.” பெற்று…தேவனுடைய பரிசுத்தமாக்கப்படுதலை ருசிபார்த்து—ருசிபாரத்து, புகை பிடித்தல், அசுத்தமான பெண்கள், அத்தகைய எல்லாவிதமான வாழ்க்கையினின்றும் சுத்திகரிக்கப்பட்டிருத்தல். “பரம காரியங்களை ருசிபார்த்தவர்கள்.” அந்த திராட்சை குலையிலிருந்து ஒரு பாகத்தை ருசித்த அந்த வேவுகாரர்கள் போல் எல்லைக்கோடு வரைக்கும் வருவதைக் கண்டு. ஆனால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் தங்கள் ஸ்தாபனங்களிலிருந்து விடுபட்டு இதற்குள் கடந்து வரவேண்டும். புரிகிறதா? கூறுவதே…புரிகிறதா? “பரம ஈவுகளை ருசிபார்த்தும்; தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டிருந்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்று எண்ணுகிறவர்கள்.”

163295 ஒரு விசுவாசி என்னும் முறையில் உங்கள் பெயர் அந்த புத்தகத்தில் எழுதப்படும்போது, அது பரிசுத்தமாக்கப்படுதல் என்பதாகும். உங்களுடைய வார்த்தை…உங்களுடைய பெயர் அவருடைய இரத்தத்தினால் எழுதப்படுகிறது. புரிகிறதா? பரிசுத்தமாக்கப்படுதல் அதை செய்கிறது; நீங்கள் மேலே வருகிறீர்கள், அவர் உங்களை இதுவரைக்கும் நம்பின பிறகு, அப்பொழுது மேலே வந்து…அவர்கள், “பாருங்கள், அது அவருக்குத் தெரியுமா?” என்று கேட்கிறார்கள். 296 ஆம், அவர் அதை அறிந்திருந்தார். நீங்கள் அதை செய்யமாட்டீர்கள் என்று தொடக்கத்திலேயே அவர் அறிந்திருந்தார். யூதாஸ் அதைச் செய்யமாட்டான் என்று அவர் அறிந்திருந்தார். அவர் அவனை தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்தார்; அவன் கேட்டின் மகனாயிருந்தான். ஆனால் இந்தக் காரியங்கள் நிறைவேற வேண்டும். புரிகிறதா? வார்த்தையானது நிறைவேற வேண்டும், அனைத்துமே, அவை முன்னடையாளங்களாகவும் சாயல்களாகவும் இருந்தபோதிலும். ஓ, என்னே! நாம் அதில் மணிக்கணக்கில் நிலைத்திருக்கலாம்.

164370. சகோதரன் பிரான்ஹாமே, நீர் எழுபது சபை வாரங்களின் பேரில் செய்தி அளித்தபோது… (என்னை மன்னிக்கவும்.) தானியேலின் எழுபது வாரங்களின் பேரில், முழு—கடைசி முழு வாரமும் அல்லது கடைசி ஏழு வருடங்கள் மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படுதலில் எடுக்கப்படும்போது தொடங்குகிறது என்று நீர் கூறினீரென்று நான் நினைக்கிறேன். 297 இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை! நீங்கள் அதை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் (புரிகிறதா?) முழு ஏழு வாரங்கள் அல்ல. இயேசு இவ்வுலகில் வந்தபோது அந்த—அந்த வாரம் தொடங்கினது. அவன், “மேசியா, அதிபதி, வந்து தீர்க்கதரிசனம் உரைப்பார், அந்த ஏழு வாரங்களுக்கு மத்தியில் அவர் அறுப்புண்டுபோவார்” என்றான். இயேசு சரியாக மூன்றரை ஆண்டு காலம் பிரசங்கித்தார், அதாவது எழுபது வாரங்களில் பாதி, ஏழு நாட்கள், வாரம்—வார நாட்கள். புரிகிறதா? இன்னும் மூன்றரை ஆண்டுகள் விடப்பட்டுள்ளது. 298 இப்பொழுது, மோசேயும் எலியாவும் பூமிக்கு வரும்போது அது வெளிப்படுத்தின விசேஷம் மற்றும் சகரியாவிலும் காணப்படுகிறது… (சகோதரன் கூமர், உங்களுடைய—உங்களுடையதும் மற்றும் சகோதரி கூமரின் கேள்வியும் அங்கே ஒரே விதமாக இருந்தது.) இப்பொழுது, அவர்கள்…சகரியா 4 மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 11-லும், இந்த இரு ஒலிவ மரங்கள், அது மோசேயும், எலியாவும், அவர்கள் பூமிக்கு வரும்போது சரியாக ஆயிரத்து இருநூற்று அறுபத்தி நான்கு நாட்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். அது என்ன? சரியாக மூன்றரை வருடங்கள். அது சரியாக அதே காரியம்தான். இல்லை…புரிகிறதா? இதை கேட்ட அருமையான நபர் யாராயிருப்பினும். மிக, மிக, அழகாக, தாளில் வேத சம்பந்தமான தலைப்புடன், எழுதப்பட்டு—எழுதப்பட்டு இங்கே கோடுகளும் மற்ற காரியங்களும், அது மிகவும் அருமையாக உள்ளது. இது மிக அருமையான ஒரு கேள்வி, ஆனால் (புரிகிறதா?) நான் கூறினதை, நீங்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. முழு எழுபது வாரங்களும் இங்கு முடிவடையும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. மேசியா அறுப்புண்டு போகிறார். இதை நான் இங்கு பிரசங்கித்தது எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? நிச்சயமாக! புரிகிறதா? ஏழு வாரங்கள்.

165371. அப்பொழுது முதற்கொண்டு, முதல் மூன்றரை ஆண்டுகள் இயேசுவின் ஊழியத்தின்போது நிறைவேறினதுபோல் தோன்றுகிறது (பாருங்கள், இங்கு அதை நீங்கள் சரியாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.) இயேசுவைக் குறித்து, ஆனால் வெளிப்படுத்தவும், “வாரத்தின் மத்தியில்” என்று கூறப்படுவது அந்திக்கிறிஸ்து தான் செய்த உடன்படிக்கையை முறிப்பதை குறிப்பிடுவதுபோல் தோன்றுகிறது… (இல்லை, அந்த அந்திக்கிறிஸ்து தன்னுடைய கடைசி மூன்றரை ஆண்டுகள் முடிவில்தான் தன் உடன்படிக்கையை முறிக்கிறான். பார்த்தீர்களா?) தானியேலின் செய்தி ஒலிநாடாவை நான் புரிந்துகொண்டபடி, இயேசு எருசலேமுக்குள் கி.பி. 30-ம் ஆண்டில் சவாரி செய்து சென்றபோது, முதல் அறுபத்தொன்பது வாரங்கள் முடிந்துவிட்டன, எனவே அவருடைய ஊழியத்தின் அந்த மூன்றரை ஆண்டுகள் அறுபத்தொன்பது வாரங்களில் சேர்க்கப்படும்; கடைசி முழு வாரங்கள்—கடைசி முழு வாரம் அல்லது ஏழு ஆண்டுகள் இனிமேல் நிறைவேற வேண்டும் மற்றும் அது எடுத்துக் கொள்ளப்படுதலின்போது தொடங்கும். இதை தயவுகூர்ந்து எனக்கு தெளிவாக்கவும். 299 உங்களுக்குத் தெரியுமா, சகோதரனே, சகோதரியே, இந்தக் கேள்வியைக் கேட்டவர் யாராயிருந்தாலும். மிகவும் அருமையானது (புரிகிறதா?), ஆனால் நான் கூறினதை நீங்கள் சிறிது தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். புரிகிறதா? இப்பொழுது, அந்த…இயேசு எருசலேமுக்குள் வந்தபோது (அது முற்றிலும் உண்மை), அதுவே முடிவாயிருந்தது… புரிகிறதா? அவர் அங்கிருந்து நேராக சென்று சிலுவையிலறையப்பட்டார். புரிகிறதா? அவர்—அவர் எழுபதாவது வாரங்களின் பாதியாகிய மூன்றரை வருடங்களையே தீர்க்கதரிசனமாக உரைத்தார். இப்பொழுது, அவர் அறுப்புண்டு போனார், அவருடைய ஆத்துமா ஒரு பலியாக செலுத்தப்பட்டது. இப்பொழுது, அப்பொழுது இன்னும் வர வேண்டியது…இந்தக் கடைசி நாட்களில், இன்னும் மூன்றரை ஆண்டுகள் யுதர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. மேலும் இந்த…இந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்காக சபை, பரிசுத்தவான்களின் ஒன்று கூடுதல் உண்டாயிருந்தது. 300 இப்பொழுது, இவையனைத்தையும் நான் பார்க்கப்போவதில்லை, சகோதரனே—சகோதரனே, சகோதரியே.

166372. தயவுகூர்ந்து முதலாம் கொரிந்தியர், 7-ம் அதிகாரம் 1 முதல் 9 வசனங்களை நீர் விளக்குவீரா? (சகோதரன் நெவில், அதை எடுங்கள், முதலாம் கொரிந்தியர், 7, வசனம் 1, இப்பொழுது.)

167373. ஒவ்வொரு உண்மையான விசுவாசியும் பரிசுத்த யோவான் 14:12-ல் இயேசு கூறின, அந்த கிரியைகளை செய்வானா (சரியாக இல்லை, இல்லை!): பிணியாளிகளை சொஸ்தப்படுத்தி, பிசாசுகளைத் துரத்தி, மரித்தோரை எழுப்புதல் (அது பரிசுத்த யோவான் 14-ல் அல்ல என்று நான் நினைக்கிறேன், ஆனாலும் பரவாயில்லை. அது மாற்கு 16), அல்லது—அல்லது—அல்லது இதை செய்வது எலியா மட்டும்தானா? உண்மையாகவே விசுவாசிக்கிற…உண்மையாகவே…ஒரு விசுவாசி இவை…அனைத்தையும் செய்ய வேண்டுமா? அவன் ஒரு உண்மையான விசுவாசியாயிருந்தால், மரித்தோரை உயிரோடெழுப்பி மகத்தான அற்புதங்களை செய்வானா? 301 இப்பொழுது, இது விசுவாசிகளின் மத்தியில் உள்ளது. புரிகிறதா? ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த வரங்கள் அனைத்தும் இருக்காது, ஒரு மனிதன் இதைச் செய்வான் என்று அர்த்தமல்ல; அது ஒரு கூட்ட ஜனங்களாயிருக்கும். உதாரணமாக, இந்த சபையில் இங்கே ஒரு சிறு பெண், அல்லது ஒரு சிறு பையன், அல்லது நாம் அதிகமாக நேசிக்கும் யாராகிலும் இருந்து, ஜீவனனானது அவர்களைவிட்டுப் பிரிந்துபோனது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது முழு சபையும் ஒன்று கூடி, அவர்கள் ஜெபம்பண்ணி உபவாசித்து: “கர்த்தாவே, அந்த பிள்ளையின் மேல் இரக்கமாயிரும்” என்று கூறும். பார்த்தீர்களா? தேவன் அதை உயிரோடெழுப்பக்கூடும். 302 எத்தனை பேர் நிசாயா பிதாக்கள் இன்னும் மற்ற புத்தகங்களை எப்போதாவது படித்திருக்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியுமா, அப்படித்தான் அவர்கள் ஆதிகாலத்து சபையில் செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, சில நேரங்களில் போதகரையும் கூட, இன்னும் மற்றவர்களையும் உயிரோடெழுப்பினதுண்டு, அதை செய்வது பொருத்தமானது என்று தேவன் காண்பாரானால்; அவர்கள் அதை செய்தனர்.

168374. சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லாமற் போனாலும், அவள் சுத்திகரிப்புக்காக உபத்திரவகாலத்தின் வழியாக சென்று இரட்சிக்கப்படுவாள் என்று நீர் போதித்தீரென்று நான் நினைக்கிறேன். அப்படியானால் மரித்தோரைக் குறித்தென்ன, அவர்கள் எவ்விதம் சுத்திகரிக்கப்படுவார்கள்? 303 சரி, இதை பெற்றிருக்கிறவர்கள்…மணவாட்டிக்கு சுத்திகரிப்பு அவசியமில்லை; அவள் ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்டுவிட்டாள். முன் காலத்தில் அங்கே மரித்துப்போனவர்கள், கடந்து செல்கிற இவர்கள்…புரிகிறதா? இங்குள்ள இந்த சபை பெற்றுள்ள வெளிச்சத்தை அவர்கள் ஒருபோதும் பெற்றிருக்கவில்லை; அவர்கள் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்த மாக்கப்படுதல் போன்றவைகளின் கீழ் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பெற்றிருந்த வெளிச்சத்தில் அவர்கள் வாழ்ந்தனர், ஒருவேளை அவர்கள் ஒரு—ஒரு வழியில் துன்பம் அனுபவித்திருக்கக் கூடும், அவர்களுடைய உபத்திரவத்தில், அவர்கள் என்னவெல்லாம் அனுபவித்தனர். ஆனால் இப்பொழுது, இந்தவிதமான இந்த எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தில் (புரிகிறதா?), இப்பொழுது, (இந்த மணவாட்டியின் தலைப் பாகத்தை புறக்கணிக்கின்றவர்கள்) இந்த புத்தியில்லாத கன்னிகை மணவாட்டி அவளை புறக்கணித்ததற்காக துன்பப்பட வேண்டிய ஒரு நேரம் உண்டாயிருக்கும், ஏனென்றால் முன் காலத்தில் இருந்தவர்களுக்கு, இன்றைக்கு உங்களுக்கு சுவிசேஷமானது தெளிவாகப்பட்டதுபோல தெளிவாக்கப்படவில்லை. புரிகிறதா? நீங்கள் அதை மிகத் தெளிவாகக் காண்கிறீர்கள். அந்த ஆண்டுகளில் உங்களுக்கு இருந்தது யாவுமே மற்றும் உதாரணங்கள் அளிக்கப்பட்ன, முத்திரைகள் திறக்கப்பட்டுவிட்டன, சபை காலங்கள் உங்களுக்கு முன்பாக வெளிப்படையாக வைக்கப்பட்டது, எல்லாமே அவ்விதமாக தெளிவாக்கப்பட்டுவிட்டது. அது அவ்வளவு தெளிவாயுள்ளதால், அதை நீங்கள் காணத் தவற முடியாது. புரிகிறதா? இவையனைத்துக்கும் பிறகு, நீங்கள் முழுவதுமாக இதைப் புறக்கணிப்பீர்களானால், செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, அதற்காக துன்பம் அனுபவிக்க வேண்டும்.

169304 அதை எடுத்துவிட்டீர்களா, சகோதரன் நெவில்? அது எதைக் குறிக்கும் ஒன்று? நான்…இப்பொழுது முடித்துவிட்டு போய்விடுவது நல்லது, ஏனெனில் நேரம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் புரிகிறதா? நான்…ஏழு—ஏழு, ஒன்பது …நாம் பார்ப்போமாக. ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால் விவாகம் பண்ணக்கடவர்கள்; வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம், 305 சரி. அது அசுத்தமான வாழ்க்கையாக உள்ளது. ஒரு மனிதன், ஒரு பையன், பெண், அவர்கள் ஒன்றாக செல்லும்போது, அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிந்திருக்கும்போது அல்லது ஏதோ காரியம் அல்லது மற்றது நீங்கள் போய் விவாகம் செய்துகொள்ளுங்கள். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு—உங்களுக்கு விளங்குகிறது என்று நான் நினைக்கிறேன், நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் அல்லவா? புரிகிறதா? அங்கே ஒரு அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்காதீர்கள், ஏனெனில் அது சரியல்ல. உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் ஒரு கிறிஸ்தவாரயிருந்தால், அது ஒரு விதத்தில் உங்கள் சகோதரி. இப்பொழுது, அது உலகமாயிருக்குமானால், அந்த உலகமானது; ஒன்றை ஒன்று பட்சிக்கிறது. ஆனால் நீங்கள் கூட சென்று கொண்டிருக்கிற இந்த பெண், அது உங்கள் சகோதரியும் கூட. அது வரப்போகிற உங்களுடைய—உங்களுடைய பிள்ளைகளுக்குத் தாய். அவளுடன் ஒரு அசுத்தமான வாழ்க்கை வாழாதீர்கள், நீங்கள் ஒரு பண்புள்ள கிறிஸ்தவர் என்பதை அவளுக்குப் காண்பியுங்கள். நற்பண்புள்ள கிறிஸ்தவர் வாழ வேண்டிய விதத்தில் வாழுங்கள். புரிகிறதா? அவளை உங்கள் சகோதரிபோல நடத்துங்கள், நீங்கள் அவளை விவாகம் செய்து கொண்ட பிறகும், அதேபோல் அவளை நடத்துங்கள்.

170306 இதற்கு நான் இப்பொழுதே பதில் கூறிவிடலாம். பெந்தெகொஸ்தே ஜனங்கள், பரிசுத்த ஜனங்கள், அவர்கள் விவாகம் செய்துகொண்டிருந்த போதிலும், அவர்கள் ஆபாசமான வாழ்க்கை வாழ்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. இல்லை, ஐயா! சில ஆபாசமான காரியங்கள்—அவை மிகவும் பயங்கரமானவை… சில நேரங்களில் அப்படிப்பட்டவர்களை நான் இங்கு சந்திக்கிறேன்…இப்பொழுது இன்று காலையில் அல்ல, அதை நான் கூறிக்கொண்டிருக்கவில்லை, ஆனால் நான் பொருட்படுத்திக் கூறுவது சில நேரங்களில் நான் கலிபோர்னியாவுக்கும் வெவ்வேறு இடங்களுக்கும் சென்றிருக்கும்போது. அங்கு நான் போதகர்களை சந்திக்கிறேன், அங்கே சிந்தனைகளைப் பகுத்தறிதலின் மூலமாக அறியும்போது, அவர்களை என் முழங்கால்களின் மேல் கிடத்தி, அவர்களுக்கு “சுவிசேஷ ஊக்கப்படுதலின் அடியைக்” கொடுக்கலாம்போல எனக்குத் தோன்றுகிறது. ஆம், ஐயா! என்னே, ஒரு மனிதன் தன்னுடைய சிறிய மனைவியிடம் ஆபாசமாக, அசிங்கமாக நடந்துகொள்ள முயல்வதைக் காணும்போது, அதாவது ஒரு… நான் என்ன கூறுகிறேன் என்று விளங்குகிறதா. தேவனுடைய மனிதன் என்னும் முறையில் நீங்கள் உங்களைக் குறித்து வெட்கப்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன்… நீங்கள் ஒரு கணவனாக இருங்கள்; ஒரு இனியவராக இருங்கள். நீங்கள் அவளை எப்பொழுதும் மதிப்பதுபோல மதியுங்கள். இந்த அர்த்தமற்ற…பாலுணர்ச்சி புத்தகங்களில், அதாவது இந்த பாலுணர்ச்சி புத்தகங்களில் காணப்படும் முட்டாள்தனமான காரியங்களில், இவைகளில் கவனம் செலுத்தாதீர்கள், நீங்கள் படிக்கும் அவ்விதமான ஆபாசமான காரியங்களில், அந்த ஆபாசமான காரியத்தை, அது போன்ற ஒவ்வொரு காரியத்தையும். அந்த அசுத்தமானதை உங்கள் சிந்தையிலிருந்து எடுத்துப் போடுங்கள்.

171307 நீங்கள் பரிசுத்தத்தை பெற்றுள்ளதாக கூறிக் கொள்ளும்போது ஒரு ஆபாசமான சம்பாஷணையும் உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது என்று வேதம் கூறியுள்ளது. அந்த சிறிய பெண்மணியை உங்களுடைய இளமையான இனிய இருதயத்தை போன்று அவளை நடத்துங்கள். அவளுக்கு அறுபது வயது என்றாலும், அப்பொழுதும் அவளிடம் அதேவிதமாக இருங்கள். நீங்கள் அவளுக்கு தீரமான ஆண் நண்பனாக இருங்கள்; ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் அதுதான். இந்த புதிதான காரியங்கள் ஒன்றையும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம், நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று நான் அறிந்திருக்கிறேன்… நீங்கள் ஒரு கணவனாக, ஒரு உண்மையுள்ள சகோதரனாக, உண்மையுள்ள கிறிஸ்தவனாக இருங்கள். அது தொனிக்கிறதென்று எனக்குத் தெரியும்…ஆனால் அந்த…நீங்கள் என் பிள்ளைகள். உங்களிடம் கூற விரும்புவதை நான் கூற எனக்கு உரிமையுண்டு. உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் என் பிள்ளைகள்; நீங்கள் சரியாக வாழுங்கள். 308 ஸ்திரீகளாகிய நீங்களும், உங்கள் கணவனிடம் சரியான விதத்தில் வாழுங்கள். கணவன்மாராகிய நீங்களும், உங்கள் மனைவிமார்களிடம்…சரியான விதத்தில் வாழுங்கள். நீங்கள் மிக மிக அருமையாக இருந்து ஒருவருக்கொருவர் மதிப்பு செலுத்துங்கள்…உங்களுடைய—உங்களுடைய குடும்ப உறவு மற்றும் அதைப் போன்றவை, அது மிகவும் பயபக்தியாயும், தேவ பக்தியுடையதாயுமிருக்க, நீங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப் போங்கள். நீங்கள் தள்ளியும், திணித்தும், மற்றும்—மற்றும் ஆபாசமாகவும் அவலட்சணமாகவும் நடந்து கொள்ளாதீர்கள்.

172309 புரிந்துகொள்ளுங்கள், உங்கள் மனைவியுடன் உரையாடுங்கள். உங்களுக்கு ஒரு சுபாவமும் அவளுக்கு வேறொரு சுபாவமும் இருந்தால், அவளிடம் அதைக் குறித்து பேசுங்கள். சகோதரியே, நீயும்—நீயும் அதையே அவரிடம் செய்ய முயற்ச்சி செய். அதேவிதமாக… ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, உண்மையான நற்பண்புள்ள கிறிஸ்தவராகவும், உண்மையான கிறிஸ்தவ பெண்மணிகளாக இருந்து—இருந்து, ஒருவருக்கொருவர் சகோதரனாயும் சகோதரியாயும் இருங்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று, எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருங்கள், நீங்கள் ராஜரீக குடும்பத்தில் பிறந்தவர்கள். நீங்கள் ராஜரீக இரத்தத்தைக் உடையவராய் இருக்கிறீர்கள்; உங்களுடைய இரத்தத்தைக் காட்டிலும் உயர்ந்த இரத்தம் இவ்வுலகில் எதுவுமில்லை. அது உண்மை! ராஜரீக இரத்தம் தன்னை யாரென்று காண்பிக்கிறது. அதுதான் அது, அது ராஜரீகம். அதை விசுவாசிக்கிறவர்கள் எல்லோரும் “ஆமென்” என்று சொல்லுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] ஆம், ஐயா! நீங்கள் யாரென்று காண்பியுங்கள். நான் ஒரு…நான்…நான் ஒரு ராஜாவின் மகன், நான் ஒரு ராஜாவின் மகன். என் மனைவி ராஜாவின் குமாரத்தி. நான் அந்த ராஜகுமாரத்தியை எப்படி நடத்துவேன்? அவள் அந்த ராஜகுமாரனை எப்படி நடத்துவாள்? நான் என்ன கூறுகிறேன் என்று விளங்குகிறதா? நீங்கள் உண்மையாகவே உண்மையுள்ளவர்களாயிருங்கள்.

173375. மணவாட்டி இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு பரிசுத்த ஆவியின் ஒரு அசைவு இருந்து, அவளால் அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்படுமா, அல்லது அவருடைய பிரத்தியட்சமாகுதலுக்காக நாம் காத்திருக்கிறோமா? 310 அந்த ஒன்றின் பேரில் நான் முடித்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று, நான் நினைக்கிறேன், ஏனெனில் பதில் சொல்வதற்கு இன்னும் அநேகம் உள்ளன. அதிக நேரமாகிவிட்டது. இப்பொழுது நேரம் ஒரு மணிக்கு இருபது நிமிடங்கள் உள்ளது, இங்கு இன்னும் அவைகளில் முப்பது அல்லது ஒருவேளை நாற்பது இருக்கக் கூடும், இருக்கலாம். எனக்கு உள்ள நேரத்தில் நான் இதற்கு சிறந்த முறையில் பதிலளிப்பேன். நான்…மூன்று நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறேன். மற்ற இவைகளுக்கு என்னால் முடியும்போது எடுத்துக் கொள்வேன். புரிகிறதா? எப்பொழுது என்னால் இவைகளை எப்போது எடுத்துக்கொள்ள முடியும்மென்று எனக்குத் தெரியவில்லை; என்னால் முடிந்தவரையில் அதை சிறப்பாக செய்வேன். நீங்கள் இவைகளை அனுபவித்து மகிழ்கின்றீர்களா? நான்…அது எனக்கும் கூட உதவியாயுள்ளது. புரிகிறதா? இங்கு வந்து இவைகளை இந்த விதமாக எடுக்கும்போது, முன்பு பார்க்காமல் பொறுக்கி எடுக்கும்போது (உங்களுக்குப் புரிகிறதா?), உங்களால் பதில் கூற இயலாத சில கேள்விகள் கிடைத்துவிடுகின்றன, மேலும்—மேலும் நான-நான் எடுப்பேன் என்று…நம்பியிருந்தேன். சர்ப்பத்தின் வித்தைக் குறித்த ஒரு கேள்வி இங்குள்ளது என்று எனக்குத் தெரியும். நான் மிகவும் ஆவலாக அதற்கு பதில் கூற விரும்பினேன்; நான் அதை விவரிக்க வேண்டுமென்று விரும்பினேன். புரிகிறதா? ஆனால் அதை எடுக்கத் தவறிவிட்டேன் என்று நான் நினைக்கிறேன், எனவே நான்… ஒருக்கால் அதை அந்தவிதமாக செய்வது கர்த்தருக்குப் பிரியமில்லை போலும், ஆனால் அது சர்ப்பத்தின் வித்தின் பேரில். அந்த ஒலி நாடாவைக் கேட்கிறவர்கள் ஒருக்கால், “பாருங்கள், அவர் விட்டுவிட்டார், அதற்கு பதில் கூறாமல் விட்டுவிட்டார்” என்று கூறுவார்கள். அதற்காக எத்தனை பேர் இன்னும் இரண்டு நிமிடங்கள் சகித்துக்கொள்வீர்கள்? ஹூ? சரி.

174311 இப்பொழுது பொறுங்கள், முதலாவதாக இந்த ஒன்றுக்கு நான் பதில் கூறட்டும். நாம் பார்ப்போமாக! “…நடைபெறுமா?” இல்லை. இதுதான் இங்குள்ள இந்த கேள்வி: “மணவாட்டியினால் அற்புதங்கள் செய்யப்படுமா?” ஆம், ஐயா. அது இப்பொழுது செய்யப்பட்டு வருகிறது. அது உண்மை! பார்த்தீர்களா? ஆனால் அந்த மகத்தான ஏதோ காரியத்தை எதிர்பார்க்காதீர்கள், அல்லது மழை பெய்யாதபடிக்கு, வானங்களை வானங்களை அடைத்தல். அது யூதர்களுக்கு செல்லவிருக்கிறது. புரிகிறதா? அது இங்கு சம்பந்தப்பட்டதல்ல; அது மோசேயும் எலியாவும் யூதர்களிடம் செல்லுதல், அது இந்த சபைக்கு அல்லவே அல்ல. நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் முதல் மூன்று அதிகாரங்களைப் படியுங்கள்; சபை என்னவென்று அங்கு புரிந்துகொள்வீர்கள். சபைக்கு அவ்வளவுதான். அது மணவாட்டியுடன் திரும்ப வரும்போது, அவள் திரும்ப வரும்போது…படியுங்கள்… சபையைக் குறித்து நீங்கள் அறிய வேண்டுமானால், அதனுடன் சம்பந்தப்பட்டுள்ளது எதுவென்று, வெளிப்படுத்தின விசேஷம் முதல் மூன்று அதிகாரங்களைப் படித்துவிட்டு, அங்கிருந்து 19-ம் அதிகாரத்துக்கு சென்று அதிலிருந்து தொடங்கி படியுங்கள். அங்கு நீங்கள் மணவாட்டியை காணலாம். அங்கே அதனுடைய மற்றது யூதரிடம் உள்ளது.

175312 இப்பொழுது, சர்ப்பத்தின் வித்து. அதை என்னால் இங்கு கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் நீங்கள் பாருங்கள், இவை இங்கு ஒரு பெரிய குவியலாக உள்ளன. ஆனால் அந்த நபர், “அது சர்ப்பத்தின்—சர்ப்பத்தின் வித்தாயிருக்குமானால்…” பாருங்கள், அந்த ஸ்திரீ. “அவள்—அவள் கர்த்தரிடத்திலிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன், அவள் அவ்வண்ணமாய்க் கூறினாளே” என்று கூறினார். பாருங்கள், அவள் கர்த்தரிடத்திலிருந்து எவ்விதம் அவனைப் பெற்றாள் என்று, போன ஞாயிறு விளக்கினேன் என்று நான் நினைக்கிறேன். அவளுக்கு அது கிடைத்திருக்குமானால், அது கர்த்தரிடமிருந்துதான் அவளுக்கு கிடைத்திருக்க வேண்டும், பாருங்கள், ஏனெனில் அது கர்த்தரிடமிருந்துதான் வரவேண்டியதாயிருந்தது, ஏனெனில் தேவனுடைய பிரமாணம், அது—அது தேவனுக்கு கீழ்படியும், சரியாக. 313 சூரியன் பிரகாசிக்க வேண்டுமென்று அவர் நியமித்தார், அது பிரகாசிக்கிறது. மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்ய வேண்டுமென்று அவர் நியமிக்கிறார்; அது அதை செய்கிறது. வயலில் விதைக்கப்படும் விதைகள், நல்லவையானாலும் கெட்டவையானாலும், வளர்ந்து மேலே வரும்; ஏனெனில் அது ஒரு விதை. ஒரு விதை நடப்பட்டால், எதையும் பொருட்படுத்தாமல்… இந்த சர்ப்பம் தன் விதையை நடக்கூடிய ஒரே வழி, அந்த மிருகம் மட்டுமே மானிட வர்க்கத்துக்கு அடுத்தபடியாக இருந்தது. ஏனெனில் மானிட வர்க்கத்தின் தோற்றத்தின்போது, மனிதன்…தேவன் பூமியின்மேல் அசைவாடினபோது…அவர் பறவைகளைத் தோன்றச் செய்யத் தொடங்கினார், மேலும்…பறவைகளிலிருந்து அவர் வெவ்வேறானவைகளை தோன்றச் செய்து, பிறகு வாலில்லாக் குரங்கு, வாலில்லாக் குரங்கிலிருந்து சர்ப்பம்.

176314 இப்பொழுது, அவர் இந்த சந்ததியை குழப்பும் வகையில் (அது அவ்விதம் செய்யப்பட வேண்டியதாயிருந்தது) அந்த சர்ப்பத்தை மாற்றிப்போட்டார், இவர்கள் பாதி மனிதனும் பாதி மிருகமுமாயிருந்த ஏதோ ஒரு மிருகத்தைப் போல் காணப்படும் ஒரு எலும்பைக் கண்டு பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர், அங்கிருந்துதான் மனிதன் தோன்றினான் என்று கூறுவதற்கு…அவர்கள் வாலில்லாக் குரங்குக்குப் பிறகு இதை இழந்துபோயினர்; குரங்குக்கு மாத்திரம் அறிவு என்பதே கிடையாது. குரங்கு ஒரு ஆத்துமாவை பெற்றிருக்கவில்லை; அதனால் சிந்திக்க முடியாது. அது அப்படியே…அது—அது…வெறுமனே ஒரு—ஒரு சத்தம், அதனால் உண்டாக்க முடியும்…ஒரு குதிரை, “கீ,” “ஹா,” என்று அப்படி ஏதோ ஒரு சத்தமிடுகிறது. ஒரு நாயிடம், “இங்கு வா, ஃபீடோ, ஒரு வித்தைக் காட்டு. இதைத் தாண்டு!” என்றால். தடுப்புகளையும் மற்றும் அதைப்போன்ற காரியங்களையும் வைத்தால், அது உணர்ச்சியினாலும், கேட்பதனாலும், அப்படிப்பட்ட காரியங்களினாலும், செயல் புரிகிறது; ஆனால் அவைகளால் சிந்தித்து புரிந்து கொள்ள முடியாது. அவை நிர்வாணமாயுள்ளன என்பது அவைகளுக்குத் தெரியாது, அதைப் போன்று, அவைகளுக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள, வித்தியாசம் தெரியாது. அவைகளுக்கு எந்தவித பிரமாணமும் கிடையாது …?… புரிகிறதா? அவைகளால் அதைச் செய்ய முடியாது. மனிதன் ஒருவன் மட்டுமே. மானிட வர்க்கத்துக்கு அடுத்தபடியாக இருந்தது சர்ப்பமே. பூமியிலுள்ள எல்லா மிருகங்களைக் காட்டிலும் அது மிகவும் தந்திரமுள்ளதாய் இருந்ததாக வேதம் உரைத்துள்ளது. சாமர்த்தியமுள்ளது, அவன்—அவன்—அவன் கிட்டத்தட்ட ஒரு ஆத்துமாவை உடையவனாய் இருந்தான். அவனுக்கு ஒரு ஆத்துமாவுக்கான ஒரு இடம் இருந்தது. ஆனால் அவன் என்ன செய்தான்? அவன் தேவனை வஞ்சிக்க, முயற்சித்து, சாத்தானுக்கு விற்றுப்போட்டான். இவ்வளவு தூரம் நான் சொன்னதை எத்தனை பேர் புரிந்துகொண்டீர்கள்?

177315 சாத்தான், சர்ப்பத்துக்கு, கிட்டத்தட்ட ஒரு ஆத்துமா இருந்தது. அவர்கள் அந்த எலும்புகளைத் தேடுவார்கள் என்று தேவன் அறிந்திருந்தார், மனிதனைப்போல் காணப்படும் எந்த ஒரு எலும்பும் பாம்பில் இப்பொழுது இல்லை. அது…அது சபிக்கப்பட்டது. அது முன்பு மனிதனைப்போல் காலூன்றி நின்றிருந்தது. 316 கவனியுங்கள், அப்பொழுது அந்த வித்து, அது மனித வித்துக்கு அடுத்தபடியாக இருந்தது… சாத்தான்தானே, அந்த ஆவி, அந்த ஒரு வித்து மட்டுமே ஸ்திரீயை கர்ப்பந்தரிக்கச் செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தான்; மனித குரங்கால் அதை செய்ய முடியாது. அவர்கள் அதை கலந்து என்னவெல்லாமோ செய்து பார்த்தனர்; அது அதனைச் செய்யாது. மனித குரங்கில் இருந்த உயிரணு ஸ்திரீயின் முட்டையின் இடத்திற்கு வரமுடியாதென்று அவன் அறிந்திருந்தான். ஆனால் சர்ப்பத்தின் வித்து அதைச் செய்யுமென்று அவனுக்குத் தெரியும், எனவே அவன் சர்ப்பத்துடன் ஈடுபடத் தொடங்கினான்.

178317 இந்த செயலைப் புரிய முடியும் என்று ஆதாம் அறிந்திருக்கவேயில்லை. புரிகிறதா? அவள் ஒரு பெண்ணாக உண்டாக்கப்பட்டிருந்தாள். நிச்சயமாக, அவள் அதற்கு பின்னர் வந்திருப்பாள்; ஆனால் நீங்கள் பாருங்கள், தம்மை இரட்சகராக காண்பிக்க வேண்டும் என்னும் தேவனின் இராஜாதிபத்தியம்—மற்றும்—மற்றும் அதைப் போன்ற, நான் அதை அநேக முறைகள் விளக்கியிருக்கிறேன். ஆனால் சாத்தான் இதை அறிந்திருந்தான், ஏனென்றால் அவன் அவளிடம் இந்த சர்ப்பத்தின் ரூபத்தில் வந்தான், அது மிருகமாயிருந்தது; மேலும் ஒரு—ஒரு மிருகமாக, அவளிடத்திற்கு வந்தான். அவள் முதலாவதாக சாத்தானால் கருத் தரிக்கப்பட்டாள். 318 நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த செயல் இருமுறை மட்டுமே செய்யப்பட்டது, ஆனால் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவள் இரட்டை பிள்ளைகளை பிரசவித்தாள். ஒருவன் சர்ப்பத்தின் வித்தாயிருந்தான்; மற்றவன் ஆபேல். அவள் தன் கணவனை வசீகரித்து சொன்னதோ…பார்த்தீர்களா? அவள் தன் கணவனிடம் அது என்னவென்று காண்பித்தாள், அதன்பிறகு அவனும் அவளுடன் கூட வாழ்ந்தான், அதன் மூலமாக அவள் இந்த பிள்ளையைப் பெற்றெடுத்தாள். இரு வெவ்வேறு நபர்களால் அவள் இரட்டை பிள்ளைகளை கருத்தரித்தாள் என்பதை உங்களுக்கு காண்பிக்க…நான் விரும்புகிறேன்…அவள் ஒரு…அதாவது அவள் கன்னிகையான ஸ்திரீ.

179319 அவர்கள் இருக்கிறார்கள், பாருங்கள், அவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இங்கே பார்ப்பது போல. ஆபிரகாம் தன் சொந்த சகோதரியை மணந்துகொண்டான். ஏன், இன்று ஒருவன் தன் சகோதரியை மணந்தால், அவனுக்குப் பிறப்பது மூடப் பிள்ளைகளாக இருக்கும். புரிகிறதா? ஆனால் மானிட…இங்கு யாக்கோபு…இல்லை—இல்லை ஈசாக்கு தன்னுடைய நெருங்கின உறவான ரெபேக்காளை மணந்துகொள்கிறான், சொந்த இரத்த சம்பந்தமான உறவினர், இரத்த சம்பந்தமான உறவு, பாருங்கள், ஆபிரகாமின் சகோதரனின் பிள்ளை. 320 கவனியுங்கள், இப்பொழுது கவனியுங்கள், இதன் பேரில், பாருங்கள், அங்கே…மானிட வர்க்கம் மிகவும் பலமுள்ளதாயிருந்தது. இப்பொழுது, அது எப்பொழுதுமே வழிவழியாக இரட்டை பிள்ளைகளாக இருந்து வந்துள்ளது நீங்கள் கவனிப்பீர்களானால் நலமாயிருக்கும். அங்கு…காயீனும் ஆபேலும் இரட்டை பிள்ளைகள், ஏசாவும் யாக்கோபும் இரட்டை பிள்ளைகள். இயேசுவும் யூதாஸும் ஒரே கோத்திரத்திலிருந்து, ஒரே சபையிலிருந்து வந்தவர்கள். மேலும்…பரிசுத்த ஆவியும் அந்திகிறிஸ்துவும் கூட இரட்டை பிள்ளைகளே, “கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக மிகவும் நெருக்கமாக இருக்கும்.” நீங்கள் இதைப் புரிந்துகொண்டீர்களா? சரி.

180321 இப்பொழுது இதை நீரூபிக்க, நீங்கள் யூதா நிரூபத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்…அது 17-ம் வசனம் என்று நான் நினைக்கிறேன், அல்லது யூதா 14-ம் வசனத்தில் கூறப்பட்டதோ… இப்பொழுது, இப்பொழுது, இதைக் கவனியுங்கள். நான் முடித்துவிடுவேன். கவனியுங்கள். மற்றெல்லாவற்றையும் விட்டுவிட்டு இதை சரியாக பொருத்த முதலாவதாக அவர், “உன் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்” என்றார். புரிகிறதா? இப்பொழுது, அவளுக்கு ஒரு வித்து இருக்கவில்லை. எனவே, அவள் பெற்றுக்கொண்ட இந்த வித்து எப்படியென்றால் அது சாத்தானின் வித்தாயிருந்தது. காயீன் சாத்தானின் குமாரனாயிருந்தான். அவளுக்கு வித்து இல்லாதிருந்தது, எனவே அவள் அதை இன சேர்க்கையின் மூலம் பெற்றுக்கொண்டாள். அவள் அவ்விதம் பெற்றுக்கொண்டபோது, அது தேவனுடைய சத்துருவால் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு, தேவன் அவளுக்கு ஒரு வித்தைக் கொடுத்தபோது, அதில் இனச்சேர்க்கை சம்பந்தப்பட்டிருக்கவேயில்லை. உங்களுக்கு இது விளங்குகிறதா? அடிமைப் பெண்ணும் அவளுடைய பிள்ளையும் புறக்கணிக்கப்பட்டனர், ஏனெனில் சுயாதீனப் பெண்ணுடனும் அவள் பிள்ளையுடனும் இவர்கள் சுதந்தரவாளியாயிருப்பதில்லை.

181322 கவனியுங்கள், பிறகு அவளுக்கு கிறிஸ்து என்ற ஒரு வித்து கொடுக்கப்பட்டது. அவளுடைய முட்டை…இப்பொழுது, பிராடெஸ்டெண்டுகள் அது கன்னியின் மூலம் பிறந்த செந்நிற இரத்த அணு என்று நம்புகின்றனர், அது சிருஷ்டிக்கப்பட்ட தேவனுடைய இரத்தம் என்றும் அதில் உயிரணு உண்டாயிருந்தன என்றும், ஆனால் முட்டை அவளுடையது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இல்லை, ஐயா! ஒரு உணர்ச்சிவசப்படுதல் இல்லாமல் அந்த முட்டை அந்த குழாயின் வழியாக கருப்பைக்குள் வர முடியாது. அப்படியானால் ஒரு—ஒரு ஆவியாகிய தேவன், ஒரு ஸ்திரீயுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்டார் என்று நீங்கள் கூறுவதுபோல் ஆகிவிடுகிறது. அது எப்படி செய்யப்பட முடியும்? அது முழுவதும் தேவனுடைய சிருஷ்டிப்பினால் உண்டான காரியம், முட்டை, உயிரணு இரண்டுமே. 323 அவர் தேவனுடைய குமாரன், மரியாளின் குமாரன் அல்ல, ஏனென்றால் அவர் அவளை தாய் என்று ஒருபோதும் அழைக்கவில்லை. “ஸ்திரீயே,” என்றுதான் அவர் அழைத்தாரேயன்றி, தாய் என்றல்ல. அவள் அவருடைய தாய் அல்ல. அது தேவனுடைய குமாரன், தேவன் ஒருவரே. இது புரிகிறதா?

182324 இப்பொழுது, இதை நிரூபிக்க, ஆணித்தரமாகப் பதிய வைக்க, வேறொரு காரியம், யாராகிலும் உங்களிடம் இவ்விஷயத்தில் சர்ச்சை உண்டாக்குவார்களானால், இங்கே யூதாவின் நிரூபத்துக்கு திரும்பிச் செல்லுங்கள், அது 17-ம் வசனம் என்று நான் நினைக்கிறேன் (அது 14-ம் வசனம் அல்லது 17-ம் வசனம்), அவன், “இப்பொழுது, ஏனோக்கு…” நான் அதைப் படிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுக்கு அவ்வளவு நேரம் உண்டா? நாம்—நாம்…அப்படியானால் அதை நான் எடுத்து…அப்பொழுது நான் அறிந்துகொள்வேன், ஏனெனில் ஒலிநாடா பதிவாகிக்கொண்டிருக்கிறது, நாம்—நாம் இப்பொழுது இதில் இதை கலந்துவிடலாம். இது ஒரு…14-ம் வசனமா என்று நான் பார்க்கட்டும்: ஆதாமுக்கு ஏழாந் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக் குறித்து: இதோ…ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.

183325 இப்பொழுது, ஆதியாகமம் 5-ம் அதிகாரத்துக்குச் செல்லுங்கள், (அதுதான் என்று நான் நினைக்கிறேன்), பிறகு லூக்கா சுவிசேஷ புத்தகத்துக்கும் கூட செல்லுங்கள் (நான் அதை கண்டுபிடிக்க விரும்புகிறேன்; இதையெல்லாம் நான் இங்கு எழுதி வைத்திருந்தேன், நான் அதை இங்கே கண்டுபிடிக்க முடிந்தால் நலமாயிருக்கும்) அங்குள்ள வம்ச வரலாற்றில் நீங்கள் கண்டறிவீர்கள், வேதத்தில் எங்குமே இல்லை…ஆயினும்…பாருங்கள்! நோவா…ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந்தலை முறையானால், வேதம், “ஆதாம், அதன் பிறகு அவனுடைய குமாரன் சேத்,” என்றுரைக்கிறது, ஏனெனில் காயீன் ஆதாமின் சந்ததி அல்ல. அது ஆதாம் சேத்தைப் பெற்றான், சேத், யாரேதைப்…பெற்றான் என்று கூறப்பட்டுள்ளது; யாரேத் பெற்றான், இப்படி வழிவழியாக ஏனோக்கு வரைக்கும்; ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந் தலைமுறை. தேவனுடைய வம்ச வரலாறுகளில் காயீன் ஒருவனாக கருதப்பட்டதாக எங்கும் கூறப்படவில்லை.

184326 இப்பொழுது, அது அப்படித்தானா இல்லையாவென்று பார்த்து கண்டறியுங்கள்; அதை ஆராய்ந்து பாருங்கள். லுக்காவும் வந்து அதற்கு மீண்டும் பெயரிட்டு, ஆதாமிலிருந்து குறிப்பிடுகிறான். முழுமையாகவே ஒரு முறையாவது காயீனின் பெயர் கூறப்படவில்லை. ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந் தலைமுறையானால் (புரிகிறதா?), காயீன் அதில் எங்கு வருகிறான்? ஏனெனில் வேதம் வம்ச வரலாறுகளில், ஆதாம் தன் குமாரனாகிய, சேத்தைப் பெற்றான். சேத் யாரேதைப் பெற்றான், யாரேத் இன்னார்-இன்னாரைப் பெற்றான் என்று, வழிவழியாக உரைக்கிறது; ஒருமுறையாவது காயீனின் பெயர் கூறப்படவில்லை. அப்படியானால் அவன் ஆதாமின் குமாரனாக இருக்க முடியாது. எனவே அவன் சர்ப்பத்தின் குமாரனாக இருக்க வேண்டும், இனச்சேர்க்கை இல்லாமல் அவன் குமாரனாக பிறந்திருக்க முடியாது. ஆமென்! அவன் அப்படியில்லாவிட்டால், அவன் கன்னிகையின் மூலம் பிறந்திருக்க வேண்டும், அப்பொழுது அவன் தேவனுடைய குமாரனாக ஆகிவிடுவான். அவர்கள் ஒரு முறையாவது இதை தவறவிடக் கூடாதென்று நான் விரும்புகிறேன்.

185327 இப்பொழுது, இதை வெளிப்படுத்தின அதே தேவன் தான், உங்களுடைய விவாகமும் விவாகரத்தும் என்பதைப் பற்றியும் என்னிடம் சொன்னார். அவர் இந்த காரியங்களைக் கூறும்போது, என் சகோதரனே, சகோதரியே…நான் உங்கள் சகோதரன், ஒரு மனிதன். ஆனால் அவர் அதைக் கூறுகிறபோது, அது இங்கு உள்ளே பதியும்போது, என்னால் அதை உங்களிடம் விவரிக்க முடியவில்லை. அதை நான் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் என்னால் முடியாது. ஆனால் அது ஒரு முறையாவது தவறாய் போனதில்லை. இருப்பினும், என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லையென்றாலும், அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றாலும், அதை நான் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறேன்; அதன்பிறகு அவர் அதை வெளிப்படுத்தத் தொடங்குகிறார், அப்பொழுது அது அப்படியே—அது அப்படியே என்னை திகைப்பில் ஆழ்த்துகிறது. அது அங்கேயே உள்ளது, ஆனால் அதை நான் புரிந்துகொள்ளவில்லை. உங்களுடைய—உங்களுடைய கல்வி புறக்கணிக்கப்படுகிறது, உங்களுடைய தர்க்க அறிவுகள் புறக்கணிக்கப்படுகின்றன, மற்றெல்லாமே; அவ்விதமாகத்தான் காயீனும் புறக்கணிக்கப்பட்டான். இப்பொழுது, நாம் இங்கே ஆதியாகமத்துக்குத் திரும்பிச் சென்று படிக்கத் துவங்க நேரமிருந்தால்… அதை நான் எடுத்து இங்கே கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கட்டும். என்னால் கண்டு பிடிக்க முடியுமா அல்லது இல்லையாவென்று நிச்சயமாக—எனக்குத் தெரியவில்லை. திருமதி வுட், அதை நான் அன்றொரு நாள் உங்களுக்குள் காண்பித்துக்கொண்டிருந்தது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அது என்ன…அது 5-ம் அதிகாரமா? 5-ம் அதிகாரம், உ, ஊ. சரி. ஆதாமின் வம்சவரலாறு; தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாட்களிலே… தேவ சாயலாக சிருஷ்டித்தார். அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசிர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார். ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத், குமாரர்களைப்…பெற்று— மற்றும் பெற்று—பெற்று தன் சொந்த ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச்…என்று பேரிட்டான் (காயீனா? ஹ-ஹ-ஹ-ஹ-ஹ! அவனுடைய பெயரை என்ன வென்று அழைத்தான்? சேஷ்ட புத்திரபாகத்தைப் பெற்ற முதற்பேறானவன் எங்கே—எங்கே? அவனுடைய பெயர் இங்கு சொல்லப்படவும் இல்லை. சேத் அவனுடைய குமாரனாயிருந்தான்.)

186328 இப்பொழுது, நாம் இங்கு மறுபடியும் வந்து அங்கு என்ன கூறப்பட்டதென்று காண்கிறோம்…காயீன் ஆபேலைக் கொன்றுபோட்டதனால், ஏவாளுக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டான். நாம் தொடர்ந்து படிக்கையில் இதைக் கவனியுங்கள். ஆதாம் சிருஷ்டிக்கப்பட்ட நாட்களில்… ஆதாம் நூற்று முப்பது வயதானபோது—நூற்று முப்பது வயதானபோது தன் சாயலாகத், தன் ரூபத்தின்படியே, ஒரு குமாரனைப் பெற்று— ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்; ஆதாம் சேத்தை பெற்றபின், எண்ணூறு வருஷம் மற்றும்…வருஷங்கள் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான் . ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான். சேத் நூற்றைந்து வயதான போது ஏனோசைப் பெற்றான்.… (இப்படி வழிவழியாக போய், ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாவதாக, ஏழாந் தலை முறையாய் பிறக்கிறான்.) இப்பொழுது, அது லூக்காவில் எங்குள்ளது என்று எனக்கு ஞாபகமில்லை. திருமதி வுட், அந்த பாகத்தையும் கூட குறித்து வைத்திருக்கிறீர்களா? அவர்களும் நானும்…அன்றொரு நாள் அவளுக்கு நான் காண்பித்துக் கொண்டிருந்தேன்…என்ன சொல்லுகிறீர்கள்? [சகோதரன் பிரான்ஹாம் சகோதரி வுட்டுடன் உரையாடுகிறார்—ஆசி.] சகோதரி வுட், நீங்கள் கூறுவது சரி என்று நான் நினைக்கிறேன். அதை நாங்கள் அவளுடைய வேதாகமத்தில் அங்கே கோடிட்டு வைத்திருந்தோம், நாங்கள் இருந்த, இல்லை, நான் அவளுக்குக் காண்பித்துக் கொண்டிருந்தபோது. இதோ அது உள்ளது, ஆம், வம்ச வரலாறுகள். சரி.

187329 இப்பொழுது, இங்கு நீங்கள் கவனிப்பீர்களானால்…லூக்கா 3-ம் அதிகாரத்தில் அதையே நாம் காண்கிறோம். “…குமாரர் முதலான…மற்றும் நோவா, ஒரு லாமேக்கு, லாமேக்கு மெத்தூசலாவின் குமாரர், மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோஸின் குமாரன்; ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.” காயீன் எங்கிருந்து இங்கு தோன்றினான்? முதற்பேறான, காயீன் எங்கே? சேஷ்ட புத்திர பாகம் அவனுக்குத்தான்; அவன் எங்கிருந்து வந்தான்? அவன் சாத்தானின் வித்தாயிருந்தானேயல்லாமல், தேவனுடைய வித்தல்ல. ஆதாமின் வித்தும் அல்ல, ஏனெனில் ஆதாமின் குமாரனின் பெயர் சேத். சர்ப்பத்தின் வித்தாகிய, காயீன், அது சர்ப்பம் அவனுடைய மற்றொரு குமாரனாகிய, இயேசுவை கொன்றுபோட்டதற்கு ஒரு முன்னடையாளமாகவும் சாயலாகவும் உள்ளது. வம்சவரலாறுகளில் சேத் அவனுடைய இடத்தை எடுத்துக்கொண்டான், அது உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது, தேவனுடைய வம்ச வரலாறுகள் இவ்விதம் தொடர்ந்து கொண்டே செல்லுகிறது.

188330 யாராகிலும் ஒருவர் அவனை அங்கே இப்பொழுது அந்த வம்ச வரலாற்றில் பொருத்தி, அவன் சர்ப்பத்தின் வித்தல்ல என்று கூறுவதைக் காண விரும்புகிறேன். அவன் தேவனுடைய வம்ச வரலாறுகளில் அங்கீகரிக்கப்படவில்லை, மனித வம்ச வரலாறுகளிலும், ஆதாமின் வம்ச வரலாறுகளிலும், மற்றெந்த வம்ச வரலாறுகளிலுமே. அது சரியா? இதை விசுவாசிக்கிற எத்தனை பேர், “ஆமென்” என்று கூறுவீர்கள். [சபையோர் “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] நிச்சயமாக. அவன் அதில் இருக்கவில்லை; அவன் சர்ப்பத்தின் வித்தேயன்றி ஆதாமின் வித்தல்லவே! 331 அது ஆதாமின் குமாரன் என்று அவள் கூறினாள். அவன் ஆதாமின் குமாரன் அல்ல. அவள், “கர்த்தரால் நான் ஒரு மனுஷனைப் பெற்றேன்” என்றாள். அவள் அவ்விதம்தான் கூற வேண்டும். அது ஒரு வித்தாயிருந்து, ஆனால் அது சர்ப்பத்தின் வித்தாயிருந்து. புரிகிறதா? 332 நடந்த இந்த இனச்சேர்க்கை செயலை நீக்கிப்போட அவர் ஒரு கன்னிகையின் மூலம் வர வேண்டியதாயிருந்தது. ஆதாம் இங்கு பூமியில் வைக்கப்பட்டான், ஆனால் அவன்—அவன் தகப்பனாயிருக்க வேண்டும் என்பதை அவன் ஒரு போதும் கண்டுகொள்ளவேயில்லை. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா? சாத்தான் இதை அறிந்தவனாய், ஆதாம் ஏவாளை அடைவதற்கு முன்பு அவன் அடைந்துவிட்டான். அங்குதான் முழு காரியமும் இன்று அடங்கியுள்ளது. சகோதரனே, அதுதான் விவாகமும் விவாகரத்தும் போன்றவைகளையும் மற்றவைகளையும் இன்று பிரச்சனைக்குள் ஆழ்த்தியுள்ளது. அது மிகவும் பரிதாபகரமானது. புரிகிறதா? ஆனால் நான்…தேவன் ஒரு வழியை உண்டுபண்ணிவிட்டார், அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.

189333 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர் அற்புதமானவர் அல்லவா? இப்பொழுது, சர்ப்பத்தின் வித்து என்பது சரியா? ஒலிநாடாவைக் கேட்கிற யாராகிலும்…இதைக்குறித்து விவாதிக்க நான் பயந்துவிட்டேன் என்று நினைக்கக் கூடும் என்று நான் எண்ணினேன். உங்களுக்குப் புரிகிறதா? எனவே அவர்கள், “ஏன், அவர் இரண்டு முறை அதைக் குறித்து ஒன்றும் கூறாமல் விட்டுவிட்டார், மற்ற கேள்விகளுக்கு போய்விட்டார். அதை விவாதிக்க அவர் பயப்பட்டார்” என்று கூறக்கூடும். நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. கர்த்தர் அதில் உள்ள வரைக்கும், அது சரியானதே. உங்களுக்கு என்னவென்று தெரியுமா? அந்த நேரத்தில் நான் கவனித்த அந்த கழுகு தன்னுடைய செட்டைகளை உணர்ந்ததை நான் கூறினதுபோல, உங்களுக்கு தெரியும். நான், “உனக்கு என்னைக் குறித்து பயமில்லையா?” என்று நினைத்துக் கொண்டேன். நான் துப்பாக்கியை அங்கே வைத்திருந்தேன்; நான், “என்னால் உன்னை சுட்டு விழ்த்த முடியும்” என்றேன். அதை என்னால் சுட்டு வீழ்த்த முடியாது என்பதை அது அறிந்திருந்தது; நான் அந்த துப்பாக்கிக்கு அதிக தூரத்தில் இருந்தேன். நான், “நீ பயப்படுகிறாயா?” என்றேன். அது தன் பெரிய கண்களினால் என்னை உற்றுப் பார்த்தது. அங்கு ஒரு சிறு அணில் உட்கார்ந்துகொண்டு, “சா, சா, சா, சா, சா, சா; உன்னை நான் துண்டு துண்டாக கிழித்துவிடுவேன், உன்னை துண்டு துண்டுகளாக கிழித்துவிடுவேன்!” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அந்த கழுகு அந்த அணில் போட்ட சத்தத்துக்கு எந்த கவனம் செலுத்தவில்லை, ஆனால் அது போடும் சத்தத்தைக் கேட்டு அதற்கு அலுத்துப்போனது. எனவே சற்று கழித்து, அது தன் செட்டைகளை அடித்து, அப்படியே வெளியே சென்று, தன்னுடைய செட்டைகளை விரித்தது. ஒரு சுற்று சுற்றி வந்தது, அதன் செட்டைகளை எவ்விதம் உபயோகிப்பது என்பதை அது அறிந்திருந்தது, அது பறந்து, கண்ணுக்கெட்டாத உயரத்துக்கு சென்றுவிட்டது. பார்த்தீர்களா? அது ஒரு சிறு உருவமாக, ஒரு சிறு புள்ளிபோல் ஆவதை நான் கண்டேன்.

190334 சகோதரன் ஃபிரட், நான் உங்களுக்குக் காண்பித்தேன் என்று நான் நினைக்கிறேன். சகோதரன் ஃபிரட் இப்பொழுது பின்னால் உட்கார்ந்து கொண்டு அவர், “ஆமென்” என்று சற்று முன்பு சத்தமிட்டபோது. சகோதரன் வுட், சற்று முன்பு நான்—நான் அங்கே அந்த இடத்தை உங்களுக்கு காண்பித்தேன் என்று நினைக்கிறேன், நீங்கள் எங்கிருந்தாலும், அங்கே மலைகளின் மேலே, அங்கேதான் அது சம்பவித்தது. அந்த கழுகை நான் கண்டேன். நான்…புயல் அடித்ததனால் அது இறங்கி வருவதற்கு நிர்ப்பந்தம் உண்டானது, நான் இந்த மரத்தின் பின்னால் நின்றுகொண்டிருந்தேன். 335 (சற்று கழிந்து) நான் கலைமானை வேட்டையாடினேன், அது அக்டோபர் மாதம், பனியும் மற்ற காரியங்களும் இருந்தன. இங்குள்ள சகோதரன் ஜானும் மற்றவர்களும், சென்ற இலையுதிர் காலத்தின்போது எங்களுடன் அங்கு வந்திருந்தனர், அந்த இடம் கோரல் சிகரத்தின் உச்சியில் இருக்கிறது.

191336 அங்கு நான் நின்றேன், இந்த மரத்தின் பின்னால் நான் நின்றேன். சிறிது பனியும் சிறிது மழையும் பெய்கிறதுமாயிருந்தது, அங்கு நான் நின்றுகொண்டிருந்தேன். அங்கே நின்ற அந்த கழுகு, அது கீழே இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது அங்கு பறந்துகொண்டிருந்தது, பெரிய, மிகப் பெரிய உருவம் படைத்த, ஒரு பழுப்பு நிறக் கழுகு. அது ஒரிடத்தில் உட்கார்ந்து சுற்று முற்றும் பார்த்தது, நான், “நல்லது…” என்று எண்ணினேன். நான்—நான் உண்மையாகவே மிகவும் நல்ல ஒரு—ஒரு தருணம் அனுபவித்துக் கொண்டேயிருந்தேன். நான் “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா!” என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தேன். நான் மரங்களைச் சுற்றி சுற்றி வந்து, அவ்வாறு கூச்சலிட்டுக் கொண்டிருந்தேன். நான் அங்கு நோக்கிப் பார்த்தேன்; அப்பொழுது என்னால் ஒநாய் ஊளையிடும் சத்தத்தைக் கேட்க முடிந்தது. அவைகள் எவ்வாறு ஊளையிடும் என்று உங்களுக்குத் தெரியும். 337 சென்ற ஆண்டு அங்கு…மழை பெய்யத் தொடங்குவதற்கு சற்று முன்பு, அவைகள் ஊளையிடத் தொடங்கின; அது ஒரு சிறிய ஓநாய், உங்களுக்கு தெரியுமா. அந்த ஊளையிடும் சத்தத்தைக் கேட்க எனக்கு மிகவும் பிரியம்.

192338 அப்பொழுது என்னால் கலைமான், “வீஹீ, ஊ,” என்று இடும் சத்தத்தை கேட்க முடிந்தது. உடனே அதன் ஜோடி மற்ற பக்கத்தில் சத்தமிட்டு பதிலளிக்கும். (அடுத்த வாரம், அதற்கும் அடுத்த வாரம், கர்த்தருக்குச் சித்தமானால், நான் அவைகளை வேட்டையாடச் செல்வேன்.) எனவே அப்பொழுது, இச்சத்தத்தை அங்கு கேட்கும்போது, ஓ அங்கு தெய்வீகப் பிரசன்னமாக இருக்கும். ஓ, நான்—நான்…அந்த—அங்குள்ள என் ஆலயத்தில் நான் பேசுகிறேன், அங்கு நான் அவருடன் உரையாடிவிட்டு, பிறகு கீழே இறங்கி வந்து, உங்களிடம் பேசுகிறேன். பார்த்தீர்களா? 339 அங்கு மேலே, ஓ, அது மிகவும் அற்புதமாயுள்ளது, அங்கு நான் இளைப்பாறுகிறேன். அங்கு நின்றுகொண்டு, நான், “ஓ, தேவனே…” என்று எண்ணினேன். நான் பார்த்தபோது, அப்பொழுது மழை பெய்யத் தொடங்கினது, பசுமையானவைகளின் மேல் பனி உறைந்திருந்தது, ஒரு வானவில் கோரல் சிகரத்திலிருந்து ஆட்டு மலை வரைக்கும் வானத்தில் அவ்வளவு பெரிதாக அந்த வழியாகவும், அந்த பக்க வழியாககவும் வியாபித்திருந்தது. நான், “ஓ, தேவனே, இங்கு பாரும், உம்” என்று எண்ணினேன். நான், “இதோ நீர், அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறீர். இதோ அது இங்கே அங்கே, கீழே வந்திருக்கிறது. நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர், நீரே ஏழு சபையின் காலங்கள், ஏழு பொன் குத்து விளக்குகள். அதிலெல்லாம் நீர் இருக்கிறீர், தேவனே, நீர் எவ்வளவு அற்புதமானவர்” என்று எண்ணினேன்.

193340 நான் இவ்வாறு சத்தமிட்டுக் கொண்டே, நான் என் துப்பாக்கியை கீழே வைத்தேன்; நான் மரத்தைச் சுற்றி சுற்றி வந்து, “தேவனுக்கு மகிமை! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று அந்த விதமாக சத்தமிட்டுக் கொண்டிருந்தேன். நான் தனியாக அங்கே ஒரு அருமையாக தருணம் அனுபவித்துக் கொண்டிருந்தேன், கர்த்தரும் நானுமே, என்பதை நீங்கள் அறிவீர்கள். 341 சிறிது நேரம் கழித்து அந்த கழுகு புதர்களுக்கு வெளியே வந்து என்னை உற்று நோக்கினது. நான், “பார், உனக்கு சத்தமிடுவது பிடிக்கவில்லையா?” என்று எண்ணினேன். நான், “வயோதிக கழுகே, உன்னை உண்டாக்கின அதே தேவனைத் தான் நான் தொழுதுகொண்டிருக்கிறேன்” என்றேன். புரிகிறதா? அது தன் பெரிய சாம்பல் நிறக் கண்களை சிமிட்டி, அவ்விதம் சத்தமிட்டுக் கொண்டிருக்கிற என்னை உற்றுப் பார்த்தது. 342 ஒரு சிறு, தேவதாரு மர அணில் (யாராகிலும் எப்பொழுதாகிலும் மலைகளில் வேட்டையாடி இருந்தால், அது—அதுதான் காட்டுக்கு காவல்காரன்), அங்கு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு தாவிக் கொண்டிருந்தது (சற்று வயோதிகமான ஒரு சிறிய அணில், பெரிதாக ஒன்றும் செய்வதற்கான ஒரு அமைப்பை அது பெற்றிருக்கவில்லை, ஆனால், ஓ, என்ன இரைச்சல்)—அது மேலே தாவி, மேலும் கீழும் தாவிக்கொண்டு, உங்களுக்கு தெரியுமா, “யா, யா, யா, யா, யா, யா—யா, யா, யா, யா, யா, யா” என்று அந்த விதமாக தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது.

194343 கழுகு அதை கவனித்துக் கொண்டிருந்தது; அதன் பிறகு அது என்னை உற்றுப் பார்த்தது. நான், “என்னே, கர்த்தாவே, பாரும், அப்படிப்பட்ட ஒன்றிற்காக நீர் ஏன் நிறுத்தினீர்?” என்று நினைத்தேன். பார்த்தீர்களா? நான், “காரணம், உமக்குத் தெரியும், உம்மை நான் தொழுதுகொண்டிருந்தேனே. அந்த கழுகில் நான் ஏதோ ஒன்றைக் காண வேண்டுமென்று நீர் விரும்புகிறீரா?” என்றேன். அப்படியானால் நான், “அதை நான் ஆழ்ந்து படிப்பேன், அல்லது இந்த சிறு தேவதாரு மர அணிலில் ஏதோ ஒன்று உள்ளதா?” என்று கேட்டேன். அங்கு நான் நின்றுகொண்டு இரண்டையும் கூர்ந்து கவனித்தேன்; நான், “இந்த கழுகை சற்று ஆராய்ந்து பார்க்கலாம்” என்று எண்ணினேன். நான், “அதில் நான் ஒரு காரியத்தை கவனித்தேன், அது பயப்படவேயில்லை” என்றேன். அது பயப்படவேயில்லை என்பது எனக்குப் பிரியம். அந்த மிகப் பெரிய பறவை, அங்கு நின்று கொண்டிருந்தது; அப்பொழுது நான் “என்னவென்று உனக்குத் தெரியுமா?” என்றேன். (என் துப்பாக்கி ஒரு மரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.) நான், “உன்னை என்னால் சுட்டு விழ்த்த முடியும் என்று உனக்குத் தெரியுமல்லவா?” என்றேன். அது அதைக் காட்டிலும் அதிகம் அறிந்திருந்தது; அது ஒரு காரியத்தை அறிந்திருந்தது; அதாவது அதை நான் செய்யமாட்டேன் என்பதே; அதை நான் அதிகமாக மனதில் பாராட்டிக்கொண்டிருந்தேன். புரிகிறதா? அது அங்கு நின்று கொண்டிருந்தது, அது சிறிதும் கூட பயப்படவில்லை. 344 நான், “உன்னை என்னால் சுட்டு வீழ்த்த முடியும்” என்று எண்ணினேன். இப்பொழுது, அதை நான் கவனித்துக்கொண்டே வந்தேன்; அது என்னை இப்படி உற்று சுற்றும் முற்றும் பார்த்தது. அது தொடர்ந்து தன்னுடைய செட்டைகளை, அசைத்துக்கொண்டிருந்தது, உங்களுக்குத் தெரியும். அவைகள் எப்படி தங்களுடைய செட்டைகளை, அந்தவிதமாக விரிக்குமென்று, நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பெரிய அகலமான இவ்வளவு நீள செட்டைகள், உங்களுக்குத் தெரியும், அது ஒரு பெரிய உருவம் படைத்ததாயிருந்தது. அது அங்கு உட்கார்ந்துகொண்டிருந்தது, அதை நான் உற்று நோக்கினேன். (இந்த காரியங்களை நான் அறிந்துகொள்வதற்கு முன்பே அது இருந்தது; இது அநேக ஆண்டுகளுக்கு முன்பாயிருந்தது, ஒருக்கால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம்.)

195345 அதை நான் கவனித்தேன்; சிறிது கழித்து, அதை நான் பார்த்தேன்; நான், “அது என்ன—அது என்ன…அதற்கு பயமேயில்லை, எனவே அதை நான் பாராட்டினேன். ஆனால் அந்த வயதான கழுகுக்கு என்ன தேவபக்தி உள்ளது?” என்று நினைத்துக்கொண்டேன். அந்த பெரிய, பெரிய, கொக்கி அலகு இப்படி வெளியே வந்து, அதன் கண்களும் பெரிதாயுள்ளன. நான், “ஆஹா, அது ஒரு உண்மையான பறவை” என்று எண்ணினேன். 346 இப்பொழுது. யாருமே…ஒரு பருந்து, அது இதைப் பின்தொடர் முயன்றால், அது சுக்குநூறாகிவிடும். அதை எதுவுமே பின்தொடர முடியாது. இல்லை, இல்லை! அதைச் செய்ய ஒரு விமானம்தான் தேவைப்படும். ஆம், ஐயா! எந்தப் பறவையும் இதனைப் பின்தொடர முடியாது, எனவே, அது மிகவும் உயர பறக்கிறது. பிறகு, அது கண்களைப் பெற்றுள்ளது; அது அங்கு மேலே சென்ற பிறகும், அதனால் கீழே தரை வரைக்கும் கூட, வெகு தொலைவில் இருந்தும் பார்க்க முடியும். 347 இப்பொழுது, யேகோவா தம் தீர்க்கதரிசிகளை கழுகுகளுக்கு ஒப்பிடுகிறார் (பார்த்தீர்களா?); அவர் அவர்களை இப்படி உயர தூக்குகிறார். அவர்கள் விசேஷமாக உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். நாம் பார்ப்போம். முன் குறிக்கப்பட்டு, அந்த நோக்கத்துக்காக பிறந்து (புரிகிறதா?), இப்படி மேலே உயர்த்தப்படுகின்றனர். அதன்பிறகு நீங்கள்…நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று உங்களால் காண முடியாமற்போனால், அங்கு நீங்கள் மேலே போவதனால் என்ன பயன்? புரிகிறதா? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறியாமற்போனால் அந்த இடத்துக்கு போவதனால் என்ன பயன்? பாருங்கள், புரிகிறதா? 348 நீங்கள் மேலும் கீழும் குதித்து, கூச்சலிட்டு, அந்நிய பாஷைகள் பேசினாலும், இதெல்லாம் என்னவென்று நீங்கள் அறியாமற்போனால் என்ன பயன்? பாருங்கள், புரிகிறதா? நீங்கள் அங்குள்ளபோது, நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். புரிகிறதா?

196349 எனவே, அந்த கழுகை நான் கவனித்தேன், உங்களுக்கு தெரியுமா, அது அங்கு அசைந்து கொண்டிருந்தது. நான் தொடர்ந்து…அதை நான் கண்டு ரசித்தேன்; அது அப்பேர்ப்பட்ட ஒரு அழகான பறவை. இருப்பினும், அது அநேகமாக என்னுடைய மான் இறைச்சியையும் மற்றும் நான் வைத்துள்ளவைகளையும்…புசித்திருக்கக் கூடும். அதை நான் கவனித்தேன், சற்று கழிந்து நான், “உங்களுக்குத் தெரியுமா, அது என்ன—என்ன…” என்று எண்ணினேன். 350 சிறிது கழிந்து அதற்கு களைப்புண்டானது, அது என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததனால் அதற்கு களைப்புண்டாயிற்று என்று எனக்குத் தோன்றவில்லை, அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அந்த சிறு அணில் போட்ட சத்தத்தைக் கேட்டுதான் அதற்கு அலுப்பு உண்டாயிற்று என்று எனக்குத் தோன்றினது. இன்று பாளையத்தில் அவைகள் அநேகம் நம்மிடம் உள்ளன. உங்களுக்கு தெரியுமா? புரிகிறதா? “சா, சா, சா! அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன! தெய்வீக சுகமளித்தல் என்று அப்படிப்பட்ட காரியமே கிடையாது, இந்த காரியங்களையெல்லாம் இனிமேல் பெற்றுக்கொள்வதில்லை!” புரிகிறதா? பூமிக்குரிய அந்த சிறு அணில் மரத்தின் கிளையில் உட்கார்ந்துகொண்டு. “நீ இதை சேர்ந்திருக்க வேண்டும். நாங்கள்—நாங்கள்—நாங்கள்தான்.” என்று சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. புரிகிறதா? அங்கு உட்கார்ந்து ஓயாமல் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறது. ஓ, அதன் உடல் அதிர்ந்தது, அது தன் உடலை மிக அதிகமாக குலுக்கிக் கொண்டிருந்தது. 351 அணில் இடும் சத்தத்தைக் கேட்டு அதற்கு அலுத்துப்போனது, அது அங்கிருந்து ஒரு மிகப் பெரிய, பெரிய தாவு தாவினதால், அது உட்கார்ந்துகொண்டிருந்த மரக்கிளை, அந்தவிதமாக ஆடியது. அது அங்கிருந்து பறந்து சென்றது. பாருங்கள், அது செட்டைகளை அடித்துக்கொண்டு அந்த மரத்திலிருந்த இடைவெளி வழியாய் பறந்து சென்றது. அது அவ்விதம் செய்தபோது, அதை நான் கவனித்தேன். புரிகிறதா? அது பயப்படவேயில்லை, ஏனெனில் தேவனால் அதற்கு அளிக்கப்பட்ட அந்த செட்டைகளின் பிரசன்னத்தை அதனால் உணர முடிந்தது. அந்த செட்டைகள் அதை எந்த விதமான ஆபத்திலிருந்தும் விலக்கிக்கொண்டு செல்லும் என்பதை அது அறிந்திருந்தது. புரிகிறதா?

197352 எனவே, அந்தவிதமாகத்தான் நாமும் உணர விரும்புகிறோம். இதுதான் வார்த்தை; இந்த வார்த்தையை எழுதினவரே என் செட்டைகள். வார்த்தையைக் குறித்து எனக்கு பயமில்லை; அது உங்களை அங்குள்ள எந்த ஆபத்தின் வழியாகவும் கொண்டு செல்லும். அது நேராக வெட்டி வழியை உண்டாக்கிக்கொண்டே செல்லும் ஒரு பட்டயமாயுள்ளது. அதைக் குறித்து நீங்கள் ஒருபோதும் கவலைப்படவே வேண்டாம். புரிகிறதா? 353 அதன்பிறகு, அதை நான் கவனித்தேன். அது செட்டைகளை அடிக்கவில்லை, அது செட்டைகளை விரித்தது. பார்த்தீர்களா? அதாவது, ஒவ்வொரு முறையும் காற்று அடித்தபோது, அது உயர, உயர, உயர எழும்பிச் சென்றது. அங்கு நான் நின்றுகொண்டு, என்னுடைய கைகளை கட்டினவண்ணமாய், அது சிறு புள்ளி போலாகி என்னால் காண முடியாமற்போகும் வரைக்கும் அதையே உற்று நோக்கினேன். நான், “தேவனே, அதுதான் இது” என்று எண்ணினேன். ஓடிப்போய் இதை சேர்ந்துகொள், அதை சேர்ந்துகொள், இதை, அதை, மற்றதை செய் என்றல்ல அது; அது செட்டைகளை விரித்தல் மட்டுமே (புரிகிறதா?); விசுவாசம் என்னும் உங்கள் செட்டைகளை தேவனுடைய வார்த்தைக்குள் எவ்விதம் பொருத்துவது என்பதை அறிந்திருந்து, இங்கும் அங்குமுள்ள இந்த அர்த்தமற்ற வீண் பேச்சுகள் அனைத்தினின்றும் பறந்து செல்வதே. ஆம்! “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகள் ஒருக்காலும் ஒழிந்துபோவதில்லை.”

198354 இப்பொழுது, நான் இந்த பிற்பகல் மீண்டும் உங்களில் சுமார் இருபது பேரை பேட்டிக்காக வைத்துள்ளேன். இப்பொழுது, நீங்கள்…இந்த பிற்பகலுக்கான பேட்டிகளுக்கே. ஏன், நீங்கள் பில்லியைப் பாருங்கள், ஏனெனில், நான் அவர்கள் அனைவரையும் பேட்டி கண்டு முடிப்பதற்கென, அவர்கள் சிறிது நேரத்தோடே தொடங்கப்போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். என்னால் முடியுமானால், அவர்கள் ஒவ்வொருவரையும் என்னாலான வரையில் பேட்டி கண்டு முடிக்க விரும்புகிறேன். இதை நான் செய்தேன், காரணம் இல்லை…பில்லிக்கு இது தெரியாது, பாருங்கள், ஆனால் இன்று காலை நான் கண்ட ஏறக்குறைய இருபது தரிசனங்களின் விளைவாக என் சிந்தை இறுக்கமடைந்திருந்தது, நீங்கள் பாருங்கள், அது வரை…அல்லது அது என்னவாயிருந்தாலுமே. அது உங்களை ஒருவிதமான… பில்லி, “நீங்கள் ஏன் வெளியே போய் சிறிது…இளைப்பாறி, வெளியே போய், அங்கு சில கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடாது?” என்றான். நான், “சகோதரன் நெவில் தன் செய்தியை ஆயத்தமாக வைத்திருப்பாரே” என்றேன். அவன், “நான் போய் அவரிடம் சொல்வேன்” என்றான். அவன் புறப்பட்டுப் போனான். சகோதரன் நெவில், “வாருங்கள்!” என்றார். எனவே அப்பொழுது, நான் எழுந்து இங்கு வந்தேன். அவர்களில் சிலர் இந்த பிற்பகலுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். உங்களை நான் ஒரு மணி வரைக்கும் பிடித்து வைத்துக் கொண்டதற்கு வருந்துகிறேன், ஆனால் நான்…நாளை கழித்து நான் செல்ல வேண்டும், எனவே அரிசோனாவுக்குத் திரும்பி செல்ல வேண்டும்.

199355 ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த முறை நான் திரும்பி வரும்போது, நான் உங்களுக்கு, அதைக் குறித்து…பிரசங்கிக்க விரும்புகிறேன். உங்களுக்கு வேதத்தில் விவாகமும் விவாகரத்தும் என்பதன் தன்மையைக் காண்பிப்பேன். இது…இப்பொழுது…பிறகு, பிறகு அதை விட்டுவிட்டு…அது உண்மையில் எப்படி உள்ளதோ, அதை அப்படியே முன் வைக்க விரும்புகிறேன், அப்பொழுது முதற்கொண்டு நீங்கள் அதை புரிந்துகொள்வீர்கள். எனவே அந்த நேரம் வரைக்கும், தைரியமாயிருங்கள்; கர்த்தர் உங்களை அபரிமிதமாய் ஆசிர்வதிப்பாராக. நாம் நிற்கலாமா? [ஒரு ஸ்திரீ தீர்க்கதரிசனம் உரைக்கிறாள். ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், (நீங்கள் நேசிக்கிறீர்களா?) முந்தி அவர் என்னை நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 356 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? இப்பொழுது, நாம் மறுபடியும் பாடும்போது, நாம் ஒருவரோடொருவர் கரங்களைக் குலுக்குவோமாக. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், முதலில் அவர் என்னை நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 357 ஓ, அது அற்புதமானதல்லவா? ஓ, என்னே! ஆசிர்வாதம் கூறப்பட்ட பின்பு, தனிப்பட்ட பேட்டிகளை விரும்பும் ஜனங்களாகிய உங்களிடம், பில்லி ஏதோ ஒன்றைக் கூற விரும்புவதாக அறிவிப்பு விடுக்கும்படி என்னிடம் கூறினான். உங்களுக்குப் புரிகிறதா? இன்னும் சில நிமிடங்களில் அவன் உங்களை சந்திக்க விரும்புகிறான். ஆனால் இப்பொழுது, அவரை தொழுதுகொள்ள வேண்டும்போல், எனக்கு தோன்றுகிறது. இவை…அவரை ஆவியில் தொழுதுகொள்ள உங்களுக்கு பிரியமல்லவா? ஹு-ஹூ. சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே.

200358 ஓ, அது அற்புதமானதல்லவா? ஓ, அவரை நான்—நான் நேசிக்கிறேன். என் இருதயத்தில் நான் அவரை நேசிக்கிறேன், என் இருதயத்தை நான் அறிந்திருந்தால். நீங்களும் கூட அவரை நேசிக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். எனவே நாம் ஒருமித்து அவருடைய பிள்ளைகளாயிருக்கிறோம். நாம் ஒருவரிலொருவர் அன்புகூருகிறோம். இப்பொழுது, உங்களிடத்தில் அன்புகூராமல், அவரிடத்தில் நான் அன்புகூர முடியாது. அவரிடத்தில் நான் அன்பு கூருவதாக சொல்லிவிட்டு உங்களிடத்தில் நான் அன்பு கூராமற்போனால், நான் ஒரு பொய்யன் என்று வேதம் உரைத்துள்ளது. புரிகிறதா? நான்…நீங்கள்—நீங்கள் என்னில் அன்புகூர வேண்டும் அல்லது என் குடும்பத்தாரிடத்தில் அன்பு கூர வேண்டுமென்றிருந்தால்… இவ்விரண்டில், நீங்கள் எதைச் செய்ய வேண்டுமென்றால், என்னிடத்தில் அன்பு கூருவதோ அல்லது என் குடும்பத்தினரிடத்தில் அன்பு கூருவதோ என்றால்; நீங்கள் என்னுடைய குடும்பத்தை நேசிக்கிறீர்கள். நீங்கள் என்னில் அன்புகூருவதைவிட பில்லி பாலிடத்தில் அன்பு கூருவதையே நான் விரும்புவேன். அந்தவிதமான ஒரு தீர்மானம் செய்ய வேண்டிய நேரம் வருமானால், நீங்கள் அப்படி செய்ய வேண்டுமென்று நான் விரும்புவேன். நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், ஏனெனில் பில்லி ஒரு ஊழியக்காரரன் அல்ல. ஆனால் நீங்கள் எனக்கு செவி கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் உங்களுக்கு சொல்லுகிறேன்; ஆனால்…நீங்கள் யாரையாவது நேசிக்க விரும்பினால், அவர்களை உண்மையாகவே நேசியுங்கள், நீங்கள், “நான் உங்களையா அல்லது பில்லியை நேசிக்க வேண்டுமா” என்று கூறுவீர்களானால், நீங்கள் பில்லியை நேசியுங்கள். புரிகிறதா? தேவனும் நம்மைக் குறித்து அதேவிதமாகவே உணர்வு கொண்டிருக்கிறார். நம்மால் முடியாது…அப்பொழுது நீங்கள் என்னை நேசிக்காமல் பில்லியை நேசிக்க முடியாது என்று நான் அறிந்துகொள்வேன், ஏனெனில் அவன் என்னில் ஒரு பாகமாயிருக்கிறான். புரிகிறதா? எனவே நான் உங்களிடத்தில் அன்பு கூராமல் தேவனிடத்தில் அன்புகூர முடியாது, ஏனெனில் நீங்கள் தேவனுடைய பாகமாயிருக்கிறீர்கள். நாம் ஒருவரிலொருவர் அன்பு கூருகிறோம். ஓ, அது மிகவும் அற்புதமானது என்று நான் எண்ணுகிறேன். நம்மை ஒரு இறுக்கத்தில் ஆழ்த்தின, இந்த காரியங்களுக்கு நாம் பதில் கூறி முடித்த பின்பு இந்த பாடல்கள் மிகவும் அருமையாயுள்ளன என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் அல்லவா? உம், ஊம், ஓ, மிகவும் தத்ரூபமாயிருக்கிறது. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், முதலில் அவர் என்னை நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. ஓ, அவர்கள் கிழக்கிலிருந்தும் மற்றும் …வருவார்கள். 