வெடிப்புள்ள தொட்டிகள்

65-0123

கரததவ, நன வசவசககறன, கரததவ, நன வசவசககறன, யவம கககடடம, கரததவ, நன வசவசககறன. நம அபபடய சறற நரம நனற நமமடய தலகளத தழததவமக. 2 கரததரகய இயசவ, நஙகள வசவசககனற, இதப படவதன மலம, உமகக வளபபடதத, எஙகளடய தழமயன வழயல நஙகள மயறசததக கணடரககறம. கரததவ, இபபழத, நர எஙகளகக ஜவ அபபதத தடரநத படட, எஙகளகக தவயளளவகள, உமமடய வரததயலரநத எஙகளககத

வெடிப்புள்ள தொட்டிகள்

65-0123பீனிக்ஸ் அரி861965-01-23

வெடிப்புள்ள தொட்டிகள்

65-0123பீனிக்ஸ் அரி861965-01-23

1 கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், யாவும் கைக்கூடிடும், கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன். நாம் அப்படியே சற்று நேரம் நின்று நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 2 கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் விசுவாசிக்கின்ற, இதைப் பாடுவதன் மூலம், உமக்கு வெளிப்படுத்த, எங்களுடைய தாழ்மையான வழியில் நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, இப்பொழுது, நீர் எங்களுக்கு ஜீவ அப்பத்தை தொடர்ந்து பிட்டு, எங்களுக்கு தேவையுள்ளவைகளை, உம்முடைய வார்த்தையிலிருந்து எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

23 உட்காருங்கள். ஆமென் என்னும் எல்லாவற்றிற்கும் போதுமான வார்த்தையை இப்பொழுது உரைத்த பிறகும், தேவனுடைய மகத்தான ஆசிர்வாதங்கள் சபையோரின் மேல் தங்கியிருக்குமென்று நான் உறுதியாய் நம்புகிறேன். 4 நான் இந்தக் காலையில் அமர்ந்து ஆராதனையை கூர்ந்து கவனித்திருக்கிறேன், ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ள, சாட்சிகளில் மகிழ்ந்தனர். இங்கு வந்துள்ள பாப்டிஸ்டு சகோதரன் புதியதாக வருபவர்களைக் கேட்க, ஒரு சிறு தவறாக நினைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறார். எனவே நான்—நான் நிச்சயமாகவே மானிடரைப் பாராட்டுகிறேன், போதுமான மானிடராய் இருக்கக் கூடிய ஒருவரை, அல்லது—அல்லது அவர் ஒரு தவறு செய்துவிட்டதாக அவர் நினைத்தால். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை, அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தது என்னிடத்தில் அல்ல, அது தேவனிடத்திலாயிருந்தது. எனவே நான்—நான் அதைப் பாராட்டுகிறேன், பாருங்கள். தேவன் எங்களுடைய சகோதரனையும், அவருடைய சுவிசேஷக சகோதரனையும் ஆசீர்வதிப்பாராக. 5 என்னே, அந்த பாப்டிஸ்டு, உங்களுக்குத் தெரியும், நானும் முன்பு பாப்டிஸ்டு சபையைச் சார்ந்தவன். நான் மிஷினரி பாப்டிஸ்டு சபையில் ஒரு அங்கத்தினனாக இருந்தேன். நான் ஜனங்களுக்கு மத்தியில் வரும்போது, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். நான் அதே விதமாக உணர்ந்தேன், நான்—நான் அறியாத ஏதோ ஒரு காரியம் நிறைந்திருந்தது.

36 பெந்தேகோஸ்தேயினரைக் கண்ட என்னுடைய முதல் அனுபவத்தை நான் நினைவுகூருகிறேன், அது மிக்சிகனில் உள்ள டோவாகியாக் என்ற இடத்திலாயிருந்தது… நான் உங்களுடைய மன்னிப்பை வேண்டிக்கொள்கிறேன், நான் ஒரு மீன்பிடிக்கும் பயணத்திற்காக டோவாகியாக்கில் இருந்து, டோவாகியாக்கிலிருந்து இந்தியானாவிற்கு வந்து கொண்டிருந்தேன். எனவே நான் கார்களிலும் மற்ற காரியங்களிலும் “இயேசுவின்” பெயர்களைக் கண்டேன். நான் அந்த நாளில் அவர்களுடைய ஆராதனைகளைக் கேட்டேன். அடுத்த நாள் ஒரு சில வார்த்தைகளைக் கூற மேடைக்கு வரும்படி அவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டனர், நான் சென்றேன். மேலும் நான்…நான் எந்த சபையைச் சேர்ந்தவன் என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள், நான் ஒரு பாப்டிஸ்டு என்று அவர்களிடம் கூறினேன். 7 அந்த இரவு அவர்கள் ஒரு கறுப்பு நிற மனிதனை பிரசங்கிக்கப் ஏற்பாடு செய்யப்போவதாயிருந்தனர், அவருக்கு எண்பது வயதிற்கு மேல் இருந்திருக்க வேண்டும், அவர் மேடைக்கு வந்தார். அந்த வயோதிக நபரை, அவர்கள் ஏறக்குறைய அவரை கைபிடித்து வழிநடத்த வேண்டியதாயிருந்தது. அவர் வெல்வெட் காலர் அணிந்த ஊழியர்களின் அந்த நீண்ட அங்கிகளில் ஒன்றை அணிந்திருந்தார், அவருடைய தலையின் பின்புறம் சுற்றிலும் வெள்ளைமுடி இருந்தது. நான், “இங்குள்ள இந்த மனிதர் யாவரும் வேத பண்டிதர்களாயயும், மகத்தான மனிதர்களாயும் இருக்கும்போது, இப்படிப்பட்ட ஒருவர் ஆராதனை நடத்த அவர்கள் எப்படி அனுமதித்தனர்? பாருங்கள், அந்த வயோதிகர் எங்காவது ஒரு நாற்காலியில், உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்” என்று நினைத்தேன்.

48 இயேசு இங்கே பூமியில் செய்திருந்ததைக் குறித்து அவர்கள் அந்த நாளில் பிரசங்கித்துக் கொண்டிருந்தனர். மேலும், ஆனால் அவர் தன்னுடைய, பாடப்பொருளை எடுத்துக்கொண்டதோ, அது யோபு:7, 20-ல் இருந்து வந்துள்ளது என்று நான் நினைக்கிறேன், அது அந்த வேதவாக்கியம் என்று எனக்குத் நிச்சயமாகத் தெரியவில்லை. இருப்பினும், இது மேற்கோள், அல்லது அதன் ஏதோ ஒரு பகுதி, “நான் உலகத்தை அஸ்திபாரப்படுத்தும்போது, தேவபுத்திரர் கெம்பீரித்தபோது, விடிவெள்ளி நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடினபோது நீ எங்கேயிருந்தாய்?” அவர்கள் பூமியில் நடந்தவைகளைக் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர் பரலோகத்தில் நடந்தவைகளைக் குறித்துப் பேசினார். 9 எங்கோ, அவர் பேசிக் கொண்டிருந்த சுமார் ஐந்து நிமிடங்களில், கர்த்தருடைய ஆவியானவர் அவரைத் தொட்டார், அவர் தரையில் குதித்து, அவருடைய குதிங்காலை ஒன்று சேர்த்து ஓசையெழப்பினார். என்னே, அங்கு அதிக இடம் இருந்தது, கிட்டத்தட்ட இந்த மேடையில் பாதியளவுதான் இருந்தது; அவர் நடந்து சென்று, “நான் பிரசங்கிக்க போதிய இடம் உங்களிடம் இங்கு இல்லையே” என்றார். 10 பாருங்கள், அப்பொழுது எனக்கு சுமார் இருபது வயது இருக்கும். நான், “அந்த வயோதிக மனிதனுக்கு அது அவ்விதம் செய்யுமானால், அது எனக்கு என்ன செய்யும்?” என்று எண்ணினேன். பார்த்தீர்களா?

511 நம்முடைய புதிய சகோதரர்களுக்காக ஒவ்வொரு காரியத்தையும் ஒழுங்காக வைத்துக் கொள்வதன் காரணமாக, நம்முடைய ஐக்கியத்திற்குள் அவர்களை நிச்சயமாக வரவேற்கிறோம். நான் காண்கிறேன், இங்கு கத்தோலிக்க குருவானவர் ஒருவர் அமர்ந்திருப்பதாக அவர்கள் கூறினர் என நான் நினைக்கிறேன், நான் நினைக்கிறேன்; நிச்சயமாகவே, என்னுடைய ஜனங்கள் அயர்லாந்துக்காரராயிருக்கிறபடியால், அவர்கள் கத்தோலிக்கர். எனவே இன்னும் இருவர், பாப்டிஸ்டுகளும் மற்றவர்களும் இருந்தனர். நீங்கள் சற்று முன்பு, ஒரு சிறு குழப்பமடைந்திருக்கலாம். சகோதரர்கள் எவருமே அதைக் குறித்து பேசாததை நான் கவனித்தேன், ஆனால் நான் அதை திருத்த முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். சகோதரன் ஷகாரியன்… இங்குள்ள அந்த அருமையான பேச்சாளர், கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது என்பதை அறிந்தவராய், சந்தோஷத்தினால் நிரப்பப்பட்டப் பிறகு, அவர்—அவர் அந்நிய பாஷையில் எங்களிடத்தில், பேசினார். நமக்கு அர்த்தம் சொல்லுகிற வியாக்கியானிகள் உண்டு. அதற்கு, வேதம், “அர்த்தம் சொல்லுகிறவன் இல்லையென்றால், அவர்கள் பேசாமலிருக்கக்கடவர்கள்” என்று கூறுகிறது. ஆனால் அவர்கள் அந்நிய பாஷையில் பேசி, அதற்கு அர்த்தம் உரைத்தால், அது தீர்க்கதரிசனமாகிவிடுகிறது. எனவே ஒரே நேரத்தில் இருவருக்குள்ளும் சிறு குழப்பம் உண்டானது. இப்பொழுது, அது சற்றும் குழப்பத்தை உண்டாக்கவில்லை, பாருங்கள்; ஏனென்றால் அவர்களில் ஒருவன் அதற்கு அர்த்தம் உரைத்துக் கொண்டிருந்தான், மற்றொருவன் தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தான். பார்த்தீர்களா? எனவே அது…

612 நான் நம்முடைய சகோதரர்களுக்கு புரிய வைப்பேன் என்று நான் எண்ணினேன், அவர்கள் புரிந்துகொள்ளாமலிருந்தால், அவர்களில் ஒருவர் சரியாக…இரண்டு பேரும் எடுத்துக் கொண்ட காலவரையை கவனித்தீர்களா? மற்றவரும் கூட, ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார், தேவனுடைய ஆவியானவர் அந்த ஒருவர் மூலம் தீர்க்கதரிசனம் உரைத்துக்கொண்டிருந்தார்; அர்த்தம் உரைத்ததோ, மற்றவர் அதற்கு அர்த்தம் உரைத்துக்கொண்டிருந்தார். உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டுமென்று கருதி…நாங்கள்…சில நேரங்களில், மாமிச சிந்தை… இன்று காலை நம்முடைய விலையேறப்பெற்ற சகோதரன் மன்னிப்பு கேட்டவிதமாகவே. இதை புரிந்து கொள்ளாத நபருக்கு இது ஒரு குழப்பமாகவே உள்ளது. ஆனால் நாம் இருக்கிற யுத்தத்தில், நீண்ட காலமாக போர்வீரராக இருக்கும் எங்களுக்கு, ஏன், இந்த காரியங்கள் என்னவாக இருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். எனவே அது சரியாக இருக்குமானால், இதைக் குறித்து ஏதாவது விளக்கம் தெரிவிக்கலாமென்று என்று நான் நினைத்தேன்.

713 இப்பொழுது, இதை கூறுவதற்கு இது இடமில்லையென்று நான்—நான் அறிவேன். ஆயினும் இங்குள்ள ஒவ்வொருவரும் ஏதாவதொரு காரியத்தைச் சொன்னதால், நானும்… உங்களுக்குத் தெரியும், அந்த நபர் கூறினார், அந்த வயோதிப கறுப்பு மனிதன், “நான் பிரசங்கம் செய்ய இங்கு போதிய இடத்தை நீங்கள் வைக்கவில்லை” என்று கூறினார். நான் பிரசங்கம் செய்ய எனக்கு நீங்கள் போதிய நேரம் வைக்கவில்லை. [சபையோர் கை கொட்டுகின்றனர்—ஆசி.] சரியாகக் கூறினால் நீண்ட நேரம் பிரசங்கம். 14 ஒருநாள் ஒரு மனிதன் கூறினார், அதாவது, “ஒருவர் இருபது ஆண்டு காலமாக ஒரு சபையில் போதகராக இருந்து வந்தாராம். ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் தன்னுடைய சபையில் அவர் எப்பொழுது சரியாக முப்பது நிமிடம் பேசுவது வழக்கம்” என்றார். ஆனால் அவர், “இந்த ஞாயிறு காலை, அவர் மூன்று மணி நேரம் பிரசங்கம் செய்தேன்” என்றாராம். 15 எனவே மூப்பர் குழு அவரையழைத்து, “போதகரே, உம்மை நாங்கள் உண்மையாகவே பாராட்டுகிறோம்” என்றனராம். “நீர் எப்பொழுதுமே வேதாகமத்துக்காகவும் அதன் உரிமைக்காகவும் நிற்பவர் என்பதை அறிவோம்” என்றார்களாம். அப்பொழுது, “நாங்கள் தேவனுக்கு முன்பாக சுத்தராக இருக்க வேண்டுமென்பதற்காக நீர் எப்பொழுதும் எங்களைத் திருத்தி வருகிறீர். அதற்காக உம்மை நாங்கள் உண்மையாகவே பாராட்டுகிறோம், நீர் தேவனுடைய ஊழியக்காரரென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இன்று காலை நீர் அளித்த செய்தியை நாங்கள் நிச்சியமாகவே மெச்சுகிறோம். ஆனால்,” என்று கூறி, “ஒரே ஒரு காரியத்தை குறித்து மாத்திரமே நாங்கள் உம்மைக் கேட்க விரும்புகிறோம்” என்றனர். “ஒரு மூப்பர் குழுவாகிய, நாங்கள் உங்களுக்கு ஒரு காலவரையை குறித்திருந்தோம்” என்றனர். மேலும், “ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் சரியாக முப்பது நிமிடம் மாத்திரமே நீர் பிரசங்கம் செய்து வந்தீரே, இன்று மாத்திரம் நீர் ஏன் மூன்று மணிநேரம் எடுத்துக்கொண்டீர்?” என்று கேட்டனர். இப்பொழுது, நினைவிருக்கட்டும், “நீர் செய்யும் ஒவ்வொன்றையும் நாங்கள் பாராட்டுகிறோம். அது சரியாயிருந்தது” என்றனர். அது அந்த வயோதிகனை நன்றாக உணரச் செய்வதற்காக என்பதை, நீங்கள் அறிவீர்கள்.

816 அவர், “சரி, சகோதரரே, அது எப்படி இருக்கிறது என்பதை நான் உங்களுக்கு சொல்லுவேன்” என்றார். “ஒவ்வொரு நாள் காலையிலும் நான் செல்லும்போது…நான் பிரசங்க பீடத்திற்கு அழைக்கப்படும்போது,” என்று கூறி, “நான் என்னுடைய வாயில் அந்த லைஃப் சேவர் என்ற சிறு மிட்டாய்களில் ஒன்றை போட்டுக் கொள்வேன்,” என்றும், மேலும் அவர், “நான் அதை உறிஞ்சி சாப்பிட்டுவிடுவேன்” என்றார். மேலும், “அந்த லைஃப் சேவர் மிட்டாய் கரைந்து போய்விடும்பொழுது,” என்று கூறி, “அதற்கு முப்பது நிமிடம் தேவைப்படுகிறது” என்றும் கூறி, “அப்பொழுது நான் பிரசங்கத்தை முடித்துவிடுவேன்” என்றும் கூறினார். அவர், “உங்களுக்குத் தெரியுமா, இந்தக் காலை, நான் சற்று நீண்ட நேரம் எடுத்துக்கொண்டேன் என்று எண்ணினேன். நான் அதை வெளியே துப்பினபோது அது நான் என் வாயில் போட்டிருந்த ஒரு பொத்தானாய் இருந்தது” என்று கூறினார். 17 அதைப்போல நான் வாயில் எதையும் போட்டுக் கொள்ளப்போவதில்லை, எனவே நான் நம்முடைய சட்டைப் பையில் சில பொத்தான்களை வைக்க மாட்டோம் என்று நம்புகிறோம். ஆனால் நாமோ…அது இங்கே தேவ தூஷணமாகத் தென்படவில்லையென நான் நினைக்கிறேன். ஆனால் நான்…தேவனுக்கும் கூட ஒரு நகைச்சுவை மனப்பான்மை உண்டு என்பது, உங்களுக்குத் தெரியும். 18 எனவே நாங்கள் இங்கு இருப்பதற்காகவும் இந்த நேரத்தில் ஐக்கியத்தில் பங்கு கொள்வதற்காகவும், மேலும்—மேலும் என்னுடைய சொந்த எளிய முறையில், மீண்டும் ஒருமுறை ஜீவ அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்படியான இந்த மகத்தான சிலாக்கியத்திற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். வேத பண்டிதர்கள் என்ற முறையில், நேற்றிரவு இங்கிலாந்திலிருந்து வந்திருந்த அந்த மனிதன் இங்கு பேசினதை நான் அறிவேன்; என்னே, என்னுடைய ஏழாம் வகுப்பு கல்வியோடு, அதைப் போன்ற ஒரு நபருக்கு பிறகு நான் பிரசங்கிப்பதை வெறுக்கிறேன். ஆனால் தேவன் என்னுடைய இதயத்தில் உள்ள அர்த்தத்தை உங்களுக்கு விளக்குவார் என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? என்னுடைய வார்த்தைகள் சரியானதாய் இருக்கவில்லையென்றாலும், என்னுடைய நோக்கங்கள் சரியானதாயிருக்கின்றன என்றே, நான்—நான் நம்புகிறேன்.

919 இப்பொழுது நாம் வேதத்தில் வாசிப்போமாக. உங்களில் அநேகர் அதை பின்தொடர்ந்து பார்க்க விரும்புகிறீர்கள். நான் இந்தக் காலையில், தீர்க்கதரிசி, எரேமியாவின் புத்தகத்திலிருந்து ஒரு சில நிமிடங்கள், வாசிக்கப் போகிறேன், 2-ம் ஆதிகாரம், 1-ம் வசனத்திலிருந்து இப்பொழுது துவங்கப்போகிறேன். கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக்குக் கூப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால்; விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றி வந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த தேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இஸ்ரவேல் கர்த்தருக்குப் பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள் மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார். யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப் பண்ணிவனரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுள்ள வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல், என்னை விட்டு தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்? செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள். கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம் பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக் கொண்டு தீர்க்கதரிசனஞ் சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள். ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் கித்தீமின் தீவுகள் மட்டும் கடந்து போய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும், எந்த ஜாதியாவது தேவர்களல்லாதவர்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள். வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத் தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்.

1020 கர்த்தர் தம்முடைய வார்த்தைகளின் வாசிப்பிற்கு தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. நான் அதிலிருந்து வெடிப்புள்ள தொட்டிகள், என்னும் ஒரு பொருளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 21 இன்று காலை, இந்த வேத வாக்கியத்தை வாசிக்கையில்; அது, வேதவாக்கியங்கள் யாவும் தேவனுடைய ஆவியின் ஏவுதலினால் அருளப்பட்டிருக்கின்றன. நாம் சீர்திருந்துவதற்கும் புரிந்து கொள்வதற்குமே கர்த்தருடைய வீட்டிற்கு வருகிறோம். சில நேரத்தில் நாம்…வழியில் ஏதாவது சிறு காரியத்தை காண்கிறோம். 22 இந்த இராணுவ வீரர், சற்று முன்னர், எங்களிடத்தில் பேசிக்கொண்டிருந்ததுபோது சில குறிப்பிட்ட காரியங்களை கூறிக் கொண்டிருந்தார், ஒருவேளை வேறு ஏதோ தேசத்தில் ஒரு குறிப்பிட்ட ஏவுகணை அல்லது—அல்லது அந்த யோசனையின் ஏதோ ஒன்று இருக்கலாம், நாம் ஒரு இராணுவ மூலோபாயத்தில் அதை எதிர்க்க ஏதாவது ஒன்றைக் கண்டறிய வேண்டும். 23 பாருங்கள், அதே காரியம் ஒரு சபைக்குள்ளாக, ஒரு சபைக்கு சென்று, அங்கே ஒரு மனிதன் பிரசிங்கத்துக் கொண்டிருக்கிறான், அல்லது அவர் ஊழியத்தில் ஒரு சுவிசேஷராக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவன் கிளர்ச்சிகளைக் காணும்போது, அது தொடங்கி நடந்துகொண்டிருக்கிற ஒன்று, அவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கிற, அதனுடைய ஆரம்பத்திலோ அல்லது அது என்னவாக இருந்தாலும்; அவர் ஒரு தேவனுடைய ஊழியக்காரனாக இருப்பாரானால், அந்த காரியத்தை ஜனங்களுடைய சிந்தையிலிருந்து வெகு தூரத்திலே தடுத்து நிறுத்துவது அந்த மனிதன் தான், அவர்கள் அதிலிருந்து விலகிக்கொள்வதற்காகவே. நாம் அது போன்ற இடங்களுக்குள் செல்வதற்காக, அது சம்பவிக்க நாம் விரும்புகிறதில்லை.

1124 இப்பொழுது, இங்கு எரேமியாவின் காலத்தில், அவனுடைய தீர்க்கதரிசனம், ஏசாயா—ஏசாயா மரித்து ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் கழித்து அது நிகழ்ந்தது. அறுபது ஆண்டு காலமாக அவர்களுக்கு ஒரு பெரிய தீர்க்கதரிசி இருக்கவில்லை. ஆபகூக் மற்றும் சில சிறிய தீர்க்கதரிசிகள் இருந்தனர், ஆனால் ஏசாயா தான் கடைசி பெரிய தீர்க்கதரிசி. ஜனங்கள், இந்த நேரத்தில், அவர்களை வெளியே அழைக்க யாருமே இல்லாதிருந்தனர். அவர்கள் வழி விலகிப்போயிருந்தனர். அதேசமயத்தில், அவர்கள் தேவனுடைய ஜனங்களாயிருந்தனர், அதாவது—அதாவது அவர்கள் இப்பொழுது இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தனர், அந்த சமயத்தில் தான், அவர்களுக்குத் தீர்க்கதரிசனம் உரைக்க எரேமியா தோன்றினான். எரேமியாவும் கூட… சிறைபிடிக்கப்படும் முன்பு அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான், அவனும் சிறைபிடிக்கப்பட்டு, அவர்களுடன் கொண்டு செல்லப்பட்டான். 25 அதன்பின்னர், உண்மையாகவே, எரேமியாவுக்குப் பிறகு தானியேல் தோன்றினான். அவர்கள் எழுபது ஆண்டு காலம் அங்கிருக்க வேண்டுமென்று, வேத வாக்கியங்களின் மூலமாக, அறிந்துகொண்டதாக தானியேல் கூறினான். 26 உண்மையாகவே, அவர்களுக்கு மத்தியில் வேறொரு தீர்க்கதரிசி இருந்தான், அவன் இந்த நுகத்தை, அதைத் தன்னுடைய கழுத்தில் போட்டு, அது ஒரு சிறிய காரியமாயிருக்கும், அதாவது இரண்டு ஆண்டுகளுக்குள், பாருங்கள், தேவன் அவர்கள் எல்லோரையும் திரும்பக் கொண்டு வரப்போகிறார் என்று கூற விரும்பினான், ஆனால் எரேமியா அதிலிருந்து வித்தியாசமாக அறிந்திருந்தான். தவறாக தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசிக்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் அறிவோம், அவன் அதே ஆண்டில் மரித்துப்போனான். எனவே தேவன் அவனை நிலைத்திருக்க அனுமதிக்கவில்லை.

1227 இப்பொழுது அந்த நாளில் இருந்த ஜனங்களின் நிலைமைகளையும் கூட நாம் கவனிக்கிறோம். இப்பொழுது நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்று நான் விரும்புகிறேன், நான்—நான்…சில வேதவாக்கியங்களையும், சிறு குறிப்புகளையும் நான் இங்கே கூற விரும்புகிறேன். 28 வழக்கமாக நான் என்னுடைய வேத வாக்கியங்களையும் மற்ற காரியங்களையும் எழுதி வைக்க வேண்டியதில்லை. ஆனால் நான் இரண்டாம் முறை இருபத்தைந்து வயதை கடந்த பிறகு, பாருங்கள், நான்—எனக்கு முன்பு போல் ஞாபகமில்லை, எனவே நான் ஒரு வேதவாக்கியத்தை எழுதி வைத்துக்கொண்டு, அதிலிருந்து, நான் எங்கே போகப் போகிறேன் என்பதை அறிந்துகொள்வேன். அதன்பின்னர் வியாதியஸ்தருக்காக அதிக நேரம் ஜெபித்து, வெளியே சென்று, நான் செய்ய வேண்டியதைப் போன்று உண்மையாகவே படிப்பதற்கு எனக்கு நேரமில்லை.

1329 இப்பொழுது, ஆனால் இந்த நாளின் இந்த மகத்தான தீர்க்கதரிசி, எரேமியா, அவன் ஆமோஸ் மற்றும் எழும்பின மற்ற அநேக தீர்க்கதரிசிகளின் ஒழுங்கின்படி இருந்தான். அவன் தேசத்தின் நிலைமைகளைக் கண்டபோது, அவன் கலக்கமடைந்தான். இப்பொழுது அங்கிருந்த இடங்கள்… 30 சில சமயங்களில் நீங்கள் ஒரு தேசத்தைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், அது ஒரு—ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு பிரதிபலிப்பதாக உள்ளது என்று நினைக்கலாம். அது அதுவல்ல. அது தேசத்தின் ஒட்டுமொத்த காட்சியாயுள்ளது. எரேமியாவின் நாட்களில் இருந்ததைப் போன்றே இன்றைக்கும் ஒப்பிடக்கூடிய ஒரு—ஒரு நிலைமையை நாம் காண்கிறோம், அந்த தேசமே, ஏறக்குறைய, விக்கிரகாராதனைக்குள்ளாகி; தேவனை விட்டு, விலகிப் போய்விட்டது என்றே, நான் கூறுவேன். அதைச் செய்வதன் மூலம், அது பிரசங்க பீடத்தின் பலவீனமாக இருந்து வருகிறது. ஏனென்றால், பிரசங்க பீடம் சரியாக, தேவனுடைய வார்த்தையோடு தரித்திருந்தால், தேவன் இங்கே நம் மத்தியில் அசைவாடிக்கொண்டிருப்பதுபோல ஒவ்வொரு சபையிலும் இருப்பார். ஆனால் அவர்கள் அதிலிருந்து விலகிச் சென்றுவிட்டனர். அந்தக் காரியத்தைக் குறித்துதான் இன்று காலையில் நான்—நான் பேச விரும்புகிறேன். இப்பொழுது அது ஒவ்வொரு காலத்திலும் முற்றிலும் உண்மை என்பதை நாம் கண்டறிகிறோம்.

1431 அது ஆமோஸ் என்று நான் நினைக்கிறேன், சற்று முன்பு நான் அவனைக் குறிப்பிட்டேன், அதாவது அவன் “ஒரு தீர்க்கதரிசி அல்ல, ஒரு தீர்க்கதரிசியின் குமாரனும் அல்ல” என்று கூறினான். ஆனால், “சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்?” என்று கூறினான். 32 எவரேனும் ஒரு உண்மையான சிங்கம் வனாந்திரத்தில் கெர்ச்சிக்கும் சத்தத்தைக் கேட்டால், இங்கே மிருகக்காட்சி சாலைகளில் உள்ள கூண்டுகளில் பூனைப் போன்று கத்துவதை நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் ஒரு சிங்கம் வனாந்திரத்தில் கர்ஜிக்கும்போது, ஒவ்வொரு காரியமும் செவிகொடுக்கிறது. நான் அவைகளை வேட்டையாட, காட்டில் காத்திருந்திருக்கிறேன். அவன் மிருகங்களின் ராஜாவாயிருக்கிறான், மேலும், அந்த சிங்கம் கெர்ச்சிக்கும்போது, வண்டுகள் கூட சத்தத்தை கீச்சிடுவதை நிறுத்திவிடுகின்றன, ஒவ்வொன்றும் அவ்வாறே செய்கின்றன. குள்ளநரிகள் மற்றும் கழுதைப் புலிகள், மற்ற மிருகங்கள், பெரிய வகைக் குரங்குகள், குரங்குகள், வண்டுகள் போன்றவற்றின் சத்தங்களால் உங்களால் யோசிக்கக் கூட முடியாது; ஆனால் தூரத்திலே ஒரு சிங்கம் கெர்ச்சிக்கக்கட்டும், எல்லா வண்டுகளும் சத்தமிடுவதை நிறுத்திவிடும். பாருங்கள், எல்லாமே அதைக் குறித்து பயப்படுகின்றன. அதே சமயத்தில் அநேக காரியங்கள் அதைக் கொல்லக்கூடும், ஆனால் அது மிருகங்களுக்கு மத்தியில் ராஜாவாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. 33 அவன், “சிங்கம் கெர்ச்சிக்கும்போது, யார் பயப்படாதிருப்பான்?” என்று கேட்டான். அவன், “அப்படியானால் தேவன் உரைத்திருக்கிறார், யார் தீர்க்கதரிசனம் உரைக்காமல் இருக்க முடியும்?” என்று கேட்டான். 34 அந்த நிலைமை இன்றைக்கு மீண்டும் அந்த சவாலை சந்திக்கிறது என்று நான் நினைக்கிறேன். தேவன் உரைத்திருக்கிறார். பார்த்தீர்களா? நாம் சுவற்றில் கையெழுத்தைக் காண்கிறோம், எனவே தீர்க்கதரிசனம் உரைப்பதும் மற்றும் நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்பதைக் காண்பதும் மிகவும் சுலபமாயுள்ளது.

1535 நாம் தேவனை ஸ்தாபனங்களின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும், கத்தோலிக்க மார்க்கத்திலிருந்தும், பிராட்டஸ்டன்ட் சபைகள் மூலம், புத்தர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து இன்னும் என்னென்னவற்றிலிருந்தோ, அவர் தம்முடைய ஜனங்களை ஒன்று சேர்க்கிறார், அவர்களை ஒன்று சேர்க்கிறார். இந்த நாள் வருவதைக் காண நான்—நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது நாம்…இது—இது ஒரு மகத்தான நாளாய், மகத்தான சிலாக்கியங்களில் ஒன்றாயுள்ளது. 36 அதாவது, நான் அறிந்துகொள்ள வேண்டியதாயிருந்தால், உலகம் உண்டாவதற்கு முன்பே, நாம் தேவனுடைய ஒரு பாகமான ஆத்துமாக்களாக இருந்தபோது, நாம் அவ்வாறு இருக்கையில், நாம் உலகத்தோற்றத்துக்கு முன்னே அவரோடிருந்தோம். ஏனென்றால் ஒரே ஒரு நித்திய ஜீவன் தான் உண்டு, அது தேவன். நாம் அவருடைய ஒரு பாகமாக இருக்கிறோம். நாம் அறிந்துகொள்ளத்தக்கதாக, சிந்திக்கக் கூடிய ஒரு ஜீவியத்தை உடையவர்களாயிருக்கவில்லை; ஆனால் நாம் உலகத்தோற்றத்திற்கு முன்னே நாம் என்னவாயிருந்தோம் என்பதைக் குறித்த அவருடைய சிந்தையில் இருந்தோம். ஏனென்றால், என்னுடைய மகன் என்னுடைய ஒரு பாகமாயிருக்கிறதுபோல, நான் என்னுடைய தகப்பனின் பாகமாயிருக்கிறது போன்றே, நாமும் அவருடைய ஒரு பாகமாயிருக்கிறோம். நாம் தேவனுடைய முன்னறிவினால் அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். 37 அங்கே முன்னமே, இப்பொழுது நான் அறிந்துள்ளபடி நான் அறிந்து கொள்ள முடிந்திருந்தால், முழு காலத்தையும் பார்த்திருந்தால், அப்பொழுது அவர் என்னிடத்தில், “நீ எந்த நேரத்தில் ஜீவிக்க விரும்புகிறாய்?” என்று கேட்டிருப்பார். உலக சரித்திரம் முடிவடைவதற்கு முந்தின நேரத்தில், இந்த நேரத்தில் என்றே நான் கூறியிருப்பேன், வரப்போகும் தேவனுடைய இராஜ்ஜியம் பூமியில் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இது எல்லா காலங்களைக் காட்டிலும் மிகவும் மகிமையான நேரம் என்று நான் நினைக்கிறேன்.

1638 தேவன் அவனை நியமித்து, வெளியே அனுப்பினபோது, இஸ்ரவேலர் தீர்க்கதரிசியினால் குற்றஞ்சாட்டப்படுகின்றனர் என்பதை நாம் இங்கே கண்டறிகிறோம், அவர்கள் இரு பெரும் பாவங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் செய்திருந்த அந்த இரண்டு காரியங்களின் பேரில் நாம் பேச விரும்புகிறோம். மேலும், அதிலிருந்து, நாம் அதனால் பயனடைய விரும்புகிறோம். இப்பொழுது, அவர்கள் ஜீவத் தண்ணீரின் ஊற்றாகிய தேவனை விட்டு விலகி, தங்களுக்குத் தண்ணீர் தொட்டிகளை வெட்டியெடுத்திருந்தனர். தேவன் அவர்களுக்கு அளித்திருந்த காரியத்திலிருந்து அவர்கள் விலகிச் சென்று, அவர்கள் தாங்களாகவே செய்திருந்த ஏதோ ஒரு காரியத்தை தாங்களே வெட்டிக்கொண்டார்கள். இந்த நீர்த்தேக்க தொட்டிகளில், அவன் வைத்திருந்த, அவைகள் உடைந்து, அவைகள் கசிந்து கொண்டிருந்தன என்பதை, நீங்கள் கவனியுங்கள்.

1739 இப்பொழுது, ஒரு உடைந்த தொட்டியில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாது. அது வெளியே கசிந்துவிடும். நான் ஒரு பண்ணையில் வளர்க்கப்பட்டேன், ஒரு பழைய தொட்டி என்னவென்பதையும், நாம் அதைக் கையாள்வது மிகவும் கடினம் என்பதையும் நான் அறிவேன். 40 இந்த கசிவுத் தொட்டியானது இந்நாளைக் குறித்த, ஒரு—ஒரு அருமையான காட்சியாக இருக்கிறது என்று, நான் நினைக்கிறேன், (நம்முடைய) நாம் செய்ய முயற்சித்த ஒவ்வொரு காரியமும், மனிதனை ஒன்று சேர்க்க, ஜனங்களை ஒன்று சேர்க்க, சபைகளை ஒன்று சேர்க்க, அது எப்பொழுதுமே அறிவாற்றல் கொண்ட சோதனைகளின் களமாகவே இருந்து வருகிறது. நாம் எல்லா மெத்தோடிஸ்டுகளையும் பாப்டிஸ்டுகளாக மாற்ற முயற்சித்துள்ளோம், நேர்மாறாகவும், பல்வேறுபட்ட ஸ்தாபனங்கள் உள்ளன. அது துவக்கத்தில், தேவனுடைய திட்டமல்ல.

1841 சந்திக்கக்கூடிய ஒரே ஒரு ஸ்தலம் மாத்திரமே தேவனுக்கு உண்டு. அவர் அங்கு யாத்திராக புத்தகத்தில், “என் நாமத்தை வைக்க ஒரு ஸ்தலத்தை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன், அந்த ஸ்தலத்தில் மாத்திரமே நான் ஜனங்களை சந்திப்பேன்” என்று கூறினார். அவருடைய நாமம் விளங்க அவர் ஒரு ஸ்தலத்தை தெரிந்து கொண்டார். தமது நாமத்தை அவர் எங்கு வைத்திருந்தாரோ, அங்கு தான் அவர் இஸ்ரவேல் ஜனங்களை சந்தித்தார். இன்றைக்கு தமது சபையை சந்திக்கிற ஒரு ஸ்தலத்தை அவர் பெற்றிருக்கிறார், அந்த நாமத்தை அவர் தெரிந்துகொண்டார், அந்த நாமம் தான் இயேசு கிறிஸ்து. அங்கே தான் உண்மையான விசுவாசி இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது, அவர் அவனை சந்திக்கிறார். தமது நாமத்தை வைக்க அவ்விடத்தை தான் தேவன் தெரிந்துகொண்டார். நீங்கள், “தேவனுடைய நாமமா?” எனலாம். 42 அவர், “நான் பிதாவின் நாமத்தினாலே வந்தேன்” என்றார். எனவே அங்கு தான் தேவன் தம்முடைய நாமத்தை வைத்தார், அது கிறிஸ்துவுக்குள் இருந்தது. கிறிஸ்துவில் தான் நாம் அனைவரும் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் ஒன்று கூடி, உண்மையான, உண்மையான ஐக்கியங் கொள்ளமுடியும்.

1943 மனிதனை எந்தவிடத்தில் சந்திக்க வேண்டுமென்று தேவன் தொடக்கத்திலேயே ஏதேன் தோட்டத்தில் தமது திட்டத்தை வகுத்தார், அது அறிவார்ந்த புரிந்து கொள்ளுதலின் பேரில் அல்ல; அது அப்படி இருந்திருந்தால், ஏவாள் அவருடைய திட்டத்தோடு சரியாக இணங்கியிருந்தாள் என்றாகிவிடுமே. ஆனால், “நிச்சயமாக, தேவன் அப்படி செய்யமாட்டார்,” என்னும் சாத்தானின் புத்தி கூர்மையான கருத்தை அவள் ஏற்றுக் கொண்டாளென்று நாமறிவோம், ஆனால் தேவனோ அப்படி செய்வார் என்று அவர் கூறினாரே! ஆகவே அவர் மீட்பிற்கான இடத்தை தெரிந்து கொண்டார், அது இரத்தத்தின் மூலமேயன்றி, நுண்ணறிவின் கருத்தின் அடிப்படையில் அல்ல. 44 எனவே நாம் ஆகாயத்தில் மாத்திரமே சிலம்பம் பண்ணிக் கொண்டிருக்கிறோம், ஆனால் ஜனங்கள் அதைச் செய்ய முயற்சிப்பது மானிட சுபாவமாய் உள்ளது. நமக்கு நேரமிருந்தால், நாம் அதை பல கூறுகளாக விளக்கலாம், ஆனால் அந்தப் பொத்தான் எனக்குத் தேவையில்லை. எனவே நாம், “கசிவுத் தொட்டிகளை” முடிந்த அளவு எளிமையாக விளக்கிக் கூற முயற்சிப்போம். அது—அது மறுபடியும் நிகழ்ந்துள்ளது என்பதை நாம் கண்டறிகிறோம். அது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நம்முடைய காலத்தை குறித்த நம்முடைய எல்லா முயற்சியையும் குறித்த அதே காட்சியாக உள்ளது. 45 இயேசு கிறிஸ்துவின் நாமத்தை உச்சரிக்கும் தேவனுடைய ஊழியக்காரர் எவரும் ஒவ்வொரு முயற்சியையும் அலட்சியப்படுத்துவதில்லை. அவருடைய நாமத்தை பயபக்தியோடும் மரியாதையோடும் அழைப்பதற்காக அவர் கனப்படுத்தப்பட வேண்டும். இந்த கடைசி நாட்களில் பூமியெங்கும் பரவியுள்ள மகத்தான சுவிசேஷ முறைமைகள், போன்றவைகளின் மூலமாக, நாம் ஜனங்களை இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தின் கீழ் கொண்டு சேர்க்கும் வரையில், நாம் இன்னமும் அவர்களை ஒருமனதோடு ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று, நான் நினைக்கிறேன். அந்த ஓரிடத்தில் மாத்திரமே நாம் எப்போதும் பாதுகாப்பாக இருப்போம்.

2046 அண்மையில் கிழக்கு பாகத்திலுள்ள ஒருவர் என்னிடம் தொலைபேசியில், “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அரிசோனாவுக்குச் செல்வதாகவும், அங்கு பாதுகாப்பான ஒரு—ஒரு இடத்தை நீர் அமைத்துள்ளதாகவும் நான் கேள்விப்படுகிறேன்” என்றார். செய்தியானது எப்படி வந்ததென்றும், அலாஸ்காவில் என்ன நேரிடுமென்று கர்த்தர் என்னிடம் சொன்னார் என்பதையும், எப்படி கலிபோர்னியா முழுவதிலும் அது நேரிடுமென்றும், அது அவ்வாறு இருந்து வருகிறதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர்கள், “இப்பொழுது அதுவும் மற்றும் ஒவ்வொரு காரியமும் குலுங்கினால், பாதுகாப்பான மண்டலம் எங்கு தான் உள்ளது?” என்று கேட்டனர். 47 நான், “எனக்குத் தெரிந்த பாதுகாப்பான மண்டலம் ஒன்று மாத்திரமே. அது கிறிஸ்துவுக்குள் உள்ளது. கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள்…” என்றேன். அது ஒன்றை மாத்திரமே நானறிவேன்.

2148 இப்பொழுது எரேமியா, “புலம்பும் தீர்க்கதரிசி” என்றும் கூட, அழைக்கப்பட்டான். காரணம், நான் நினைக்கிறேன், அது இந்த தீர்க்கதரிசியைப் புலம்பச்—புலம்பச் செய்தது, சரியாக கூறினால், அவன் தீர்க்கதரிசியாயிருந்த காரணத்தால் (தேவனுடைய வார்த்தை அப்படிப்பட்ட தீர்க்கதரிசிகளிடம் வருகிறது), ஜனங்கள் தங்கள் பாரம்பரியங்களைக் கடைபிடித்து, அதே சமயத்தில் அவர்கள் போகும் வழி சரியென்று எண்ணியிருந்ததை அவன் கண்டான், அவர்களைத் திருத்த ஒரு வழியும் இல்லை. 49 ஏனென்றால், அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்படப் போகிறவர்களாக இருந்தனர், ஏனென்றால் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுக்கிறீர்கள் என்பதை நாம் அறிவோம், நீங்கள் யாராயிருந்தாலும், நீங்கள் என்னவாய் இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. நாம் ஒரு தேசமாக அறுத்துள்ளோம், இல்லை, விதைத்துள்ளோம், சரியாக கூறினால், நாம் அறுக்க வேண்டும். கர்த்தருக்குச் சித்தமானால், நான் நாளை, பிற்பகல், பிரசவ வேதனைகள் என்பதன் பேரில் பேசவிருக்கிறேன்; நான்—நான் அங்கே அதைக் குறித்துப் பேசுவேன், அதாவது நாம் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. நாம் விதைத்துள்ளதை நாம் அறுத்தாக வேண்டும். 50 தாறுமாறாக்கப்பட்ட கிறிஸ்தவ மார்க்கத்தை அனுசரிக்கும் நம்மை இன்றைக்கு தேவன் தப்பவிடுவாரானால், கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கப்படுகின்ற இந்த காரியங்களில் ஜனங்களை தாறுமாறாக்கிக் கொண்டிருக்கிறோம், சகோதரன் மூர் ஒரு முறை கூறினது போல, “அவர் சோதோம் கொமோராவை மறுபடியும் எழுப்பி, அதை தீக்கிரையாக்கினதற்காக அதனிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறார்.” அது உண்மை, ஏனெனில் தேவன் இன்னும் நீதியுள்ளவராயிருக்கிறார். அங்கே அநீதி உண்டாயிருக்கிறது; அது—அது அவருடைய பரிசுத்தத்துக்கும் வார்த்தைக்கும் அநீதியாகிக் கொண்டிருக்கும்போது அவர் ஜனங்கள் விதைத்ததை அவர்களே அறுக்கும்படிக்குச் செய்கிறார், நாம் அதை செய்தாகத்தான் வேண்டும்.

2251 இப்பொழுது அவர்கள் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை விட்டுவிட்டு, தங்களுக்கு தொட்டிகளை வெட்டிக் கொண்டார்கள் என்பதைக் கவனியுங்கள். 52 இப்பொழுது இங்குள்ள சிலருக்கு ஒரு தொட்டி என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கலாம். ஒரு நீர் தொட்டி என்பது ஒரு கிணற்றின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முயற்சிக்க ஒரு மனிதனால் உண்டாக்கப்படுகின்றதே ஒரு தொட்டியாகும். அது யாரோ ஒருவர் தோண்டினதால் உண்டானது. எத்தனை பேருக்கு ஒரு தொட்டியென்றால் என்னவென்று தெரியும்? சரி. இன்று காலை கிராமப்புறத்திலிருந்து வந்துள்ள அநேகர் இங்குள்ளனர். எனவே அவர்கள்…நான் தங்கியிருந்த இடத்திலிருக்கும் பழைய தொட்டி என் நினைவுக்கு வருகிறது, அது எப்படி காணப்பட்டது, அதிலுள்ள தண்ணீரைக் குடிக்க நான் எப்பொழுதுமே பயந்ததுண்டு. அது ஒரு—ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட தொட்டியாயிருந்தது. அதன் பேரில் ஒருபோதும் சார்ந்து இருக்க முடியாது. நீங்கள் ஒரு தொட்டியின் மேல் சார்ந்து இருக்க முடியாது.

2353 இப்பொழுது மனிதன் செய்கிற எந்த காரியமும் வழக்கமாக நல்லதல்ல. ஆனால் கர்த்தர் காலத்தை அதனுடைய சுழற்சிக்குள் வைத்துள்ளது போன்றே உள்ளது, பூமியை சுழல்கிறது; அது ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், பிழையின்றி சுற்றி வருகின்றது, சூரியன் அஸ்தமிக்க, ஒருபோதும் தவறுகிறதில்லை. ஆனால் நம்மிடமுள்ள சிறந்த கடிகாரங்களும் கூட, ஒரு மாதத்தில் எத்தனையோ நிமிடங்கள் தவறிப் போகின்றன என்பதில், சந்தேகமேயில்லை. ஆனால், நீங்கள் பாருங்கள், தேவன் செய்கிற ஒவ்வொரு காரியமும் பரிபூரணமாக இருக்கின்றன, மனிதன் செய்கிறது பரிபூரணமற்றதாயுள்ளது. எனவே நீங்கள் பரிபூரணமாக இருக்க முடியும்போது, ஏன் மனிதன் செய்கிறதை ஏற்றுக் கொள்கிறீர்கள்?

2454 பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நம்மைக் குறித்து நான் எப்பொழுதுமே கூறி வந்துள்ளேன். பாருங்கள், நாம்—நாம் உண்மையாகவே தேவனுடைய ஒழுங்கிலிருந்து நாம் விலகினவர்கள் அல்ல என்று, நாம் அறிவோம், அவ்வாறு இருக்கிறோம் என்று நாம் நம்புகிறதில்லை. ஆனால் நமது மத்தியில் வேறொருவரை பாவனை செய்ய முயற்சிக்கிற ஜனங்கள் உள்ளனர் என்று நமக்குத் தெரியும். அது மனித இயல்பு. அவர்கள் அப்படி செய்ய முயற்சிப்பார்கள். அவர்கள் அதை வேதத்திலும் கூட செய்தார்கள், “ஒருவன், ‘நான் பவுலைச் சேர்ந்தவன்’ என்றான், மற்றொருவன், ‘நான் சீலாவைச் சேர்ந்தவன்’” என்றான். ஆனால் வேறொருவன் செய்ததை அல்லது செய்து கொண்டிருப்பதை அவர்களும் பாவனை செய்ய முயன்றனர். 55 ஆகாயம் முழுவதும் உண்மையானவைகளால் நிரம்பியிருக்க, “வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்” என்றி ருக்கும்போது, நீங்கள் ஏன் ஒரு போலியான பாவனையை ஏற்றுக் கொள்ளவேண்டும்? நீங்கள் ஏன் வித்தியாசமாயிருந்த ஏதோ ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்? வேதாகமம் தேவனுடைய கலப்படமில்லாத வார்த்தையாக அமைந்திருக்கும்போது, நீங்கள் ஏன் மனிதனுடைய பிரமாணங்களையும் கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்? கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்தின விசேஷம் 22:18-ல் கூறியிருக்கும்போது, நீங்கள் ஏன் கூட்டவோ அல்லது எடுத்துப் போடவோ முயல்கிறீர்கள், “இதனுடன் ஒருவன் எதையாகிலும் கூட்டினால், அல்லது இதிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்” என்றுள்ளதே?

2556 தேவன் முதலில் மானிட வர்க்கத்தை…பூமியில் அமைத்தபோது, அவர்கள் அவருடைய வார்த்தையினால் ஜீவிக்கிறார்கள் என்று அவர் அவர்களிடம் கூறினார். இப்பொழுது தேவனுடைய வார்த்தை ஒரு சங்கிலியைப் போன்றது, நீங்கள் அதைக் கொண்டு நரகத்தைக் கடந்து செல்கிறீர்கள்; அதனுடைய சங்கிலி அதனுடைய மிகச் சிறந்த பலவீனமான இணைப்பில் மாத்திரமே உள்ளது, மேலும் அதனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் நாம் காத்துக்கொள்ள தேவன் விரும்புகிறார். இப்பொழுது அதுவே வேதாகமத்தின் முதல் காரியமாயிருந்தது; ஒரு வார்த்தையை மீறினதற்காக, மானிட வர்க்கத்தை மரண இருளுக்குள் தள்ளிவிட்டது. 57 இயேசு வேதத்தின் மத்தியில் வந்து, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று அவர் கூறினார். வார்த்தைகளின் ஒரு பாகத்தையோ அல்லது நூற்றுக்கு தொண்ணூற்றொன்பதையோ அல்ல; ஆனால் ஒவ்வொரு வார்த்தையும், ஏவாளும் ஆதாமும் இருந்தது போல. 58 வேதாகமத்தின் கடைசியில் வெளிப்படுத்தின விசேஷம் 22:18-ல், அவர், “எவனாகிலும் இதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால் அல்லது இதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால்!” என்று கூறினார். 59 இது தேவனுடைய சொந்த கருத்தாய் இருக்கும்போது, நாம் ஏன் இங்கே யாரோ ஒருவருடைய கருத்துக்களை புகுத்த வேண்டும்? அவர் கூறினதை நாம் எடுத்துக்கொள்ள விரும்புகிறோம். “எந்த மனுஷனுடைய வார்த்தையும் பொய், என்னுடையதே சத்தியம்” என்றும் கூட எழுதப்பட்டுள்ளது.

2660 அதுதான் இந்த தீர்க்கதரிசியோடுள்ள காரியமாயிருந்தது. எரேமியாவின் நாட்களில், அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான், அவன் கர்த்தருடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். இந்த நபர் அதற்கு ஏதோ ஒன்றை புகுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார். இப்பொழுது, அதன் பேரில் சார்ந்திருக்க முடியாது. நான் இப்பொழுது இந்த தொட்டிகளை நாம் எடுக்க முயற்சித்துள்ள இந்த அமைப்புகளுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறேன், தேவனுடைய மூல வார்த்தையின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். 61 ஏனென்றால் அதனுடைய ஸ்தானத்தை ஒன்றுமே எடுத்துக்கொள்ள முடியாது. அது தேவனாயிருக்கிறது. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” எபிரெயர் 13:8, “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறியுள்ளது. அதிலிருந்து நாம் எப்படி விலகிச் செல்ல முடியும்? அது சத்தியமாயிருக்க வேண்டும். அவர் மாறாதவராயிருக்கிறார். அவர் ஒவ்வொரு கொள்கையிலும் மாறாதவராயிருக்கிறார். 62 அந்தக் காரணத்தினால்தான் பாப்டிஸ்டுகளும், மெதோடிஸ்டுககளும், கத்தோலிக்கர்களும், பிரஸ்பிடேரியன்களுமாகிய நீங்கள் அந்த பிரசன்னத்தை அனுபவித்து மகிழ்கின்றீர்கள். எங்கோ, உங்களுக்குள், நீங்கள் தேவனை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். ஒருக்கால் எப்போதாவது ஒரு அறிவாற்றல் கொண்ட வழியில், ஒருக்கால் நீங்கள் தேவனுடைய வல்லமையை உணர்ந்திருக்கலாம், நீங்கள் ஒரு தேவனுடைய ஊழியக்காரராயிருக்கலாம்; ஆனால் நீங்கள் உண்மையாகவே தேவனுக்குள் வந்து, ஒரு தேவனுடைய குமாரனாக அல்லது ஒரு குமாரத்தியாக, அவரில் உள்ள உங்களுடைய ஸ்தானத்தை அடையாளங்கண்டு கொள்ளும்போது, அதுவே உங்களுக்கு அந்த மகத்தான சிலிர்ப்பைக் கொண்டு வருகிறது, அதாவது நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவன் எண்ணியிருந்தார்.

2763 இப்பொழுது நாம் பரிசுத்த மாற்கு 16-ம் அதிகாரத்தில், இயேசு, “நீங்கள் உலகமெங்கும் போய், உபதேசியுங்கள்” என்று கூறவில்லையா. அவர், “போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்றார் என்பதை கவனிக்கிறோம். சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல், பரிசுத்த ஆவியின் வல்லமையை நிரூபித்துக் காட்டுதலாய் உள்ளதே! “நீங்கள் உலகமெங்கும் போய், பரிசுத்த ஆவியின் வல்லமையை நிரூபியுங்கள்.” 64 இந்தியாவில் உள்ள பம்பாயில் நடைபெற்ற கூட்டத்திற்கு…ஆதரவளித்தவர்களில் ஒருவரான ஒரு சகோதரனிடம் பேசிக்கொண்டிருந்தேன், தென் ஆப்பிரிக்காவிலும், பல்வேறு இடங்களிலும், அங்கே மிஷனரிமார்கள் அதை ஒரு வார்த்தையாக அல்லது ஒரு அறிவாற்றல் கொண்ட கருத்தாக போதித்திருந்தனர். ஆனால் ஒரு நாள் கூட்டத்தில் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தபோது, அவர்கள் நின்று கொண்டிருந்த அதே இடத்தில், ஒரே பீட அழைப்பில், முப்பதாயிரம் பழங்குடியினரை இரட்சித்தார். அங்கே நின்றுகொண்டிருந்த ஸ்திரீகள், அவர்கள் உலகத்திற்கு வந்தபோது நிர்வாணமாயிருந்தது போலவே, கிட்டத்தட்ட அவர்கள் நிர்வாணமாயிருந்தனர், கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தின அதே நிமிடத்தில்… 65 பரிசுத்த ஆவியானவர் அந்த ஸ்தலத்தின் மேல் இறங்கி ஒரே நேரத்தில் சக்கர நாற்காலிகளிலும், கட்டில்களிலும், நீண்ட படுக்கைகளிலும் இருந்த, இருபத்தையாயிரம் பேரை, குணமாக்கினார். நகரத்தின் நகராண்மைத் தலைவர் அடுத்த நாள், வீதியில் இந்த வாகனங்கள் பார சுமைகளை ஏற்றிச் செல்வதைப் பார்க்கும்படி என்னிடம் கூறினார்.

2866 அந்த ஸ்திரீகள் தாங்கள் நிர்வாணமாயிருந்ததை அறியாமல், அங்கே நிர்வாணமாக நின்றுகொண்டிருந்தனர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை தொட்டவுடனே, அவர்கள் தங்களுடைய புருஷர்களின் பிரசன்னத்திலிருந்து விலகிச் சென்று தங்களுடைய கரங்களை வைத்து மறைத்தனர். 67 தேவனுடைய பிரசன்னத்தில், அமெரிக்காவில் உள்ள நாம் எப்படி நம்மை ஒரு கிறிஸ்தவ தேசமாக அழைத்துக் கொள்கிறோம் என்று நான் வியப்புற்றுக் கொண்டிருக்கிறேன்; ஒவ்வொரு வருடமும் நாம், நம்முடைய ஸ்திரீகள் அதிகமாக ஆடைகளைக் களைகின்றனர். நீங்கள் அதிகமாக ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் அதிகமாகத் தரித்துக்கொள்ளும்போது, நீங்கள் உங்களுடைய சொந்த நிலைமைகளைக் குறித்து அதிக உணர்வுள்ளவர்களாயிருப்பீர்கள். சில சமயங்களில் தெருவில் ஜனங்கள் நடந்துகொள்ளும் விதத்தை நான் காணும்போது, அது மனதளவில் சரியாக இருக்கிறதா என்று நான் வியப்புறுகிறேன். அவர்கள் அதை உணரும்போது, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்கள் தங்களை பிசாசின் தூண்டிலாக ஆக்கிக்கொண்டு, ஆத்துமாக்களை நரகத்திற்கு அனுப்புகின்றனர். அது உண்மை. ஆனால் உலகம் எரேமியாவின் நாட்களில் இருந்தது போன்ற ஒரு அழிவில் உள்ளது.

2968 இப்பொழுது நீர் தொட்டிக்கு திரும்புவோம். இப்பொழுது, இந்த நீர்த்தேக்கம் தன்னையே நிரப்பிக்கொள்ள முடியாதபடியால், அதை சார்ந்திருக்க முடியாது. அது அதை நிரப்ப உள்ளூர் மழையை, உள்ளூர் மழையை அல்லது உள்ளூர் எழுப்புதல்களை சார்ந்திருக்க வேண்டும், இங்கே ஒரு சிறு எழுப்புதலும், அங்கே ஒரு சிறு எழுப்புதலும், அல்லது அதை நிரப்பும்படிக்கே. எனவே அதன் பேரில் சார்ந்திருக்க முடியாது. அது தன்னை நிரப்பிக் கொள்ள முடியாது. அது தனக்குத் தானே போதாமையாயிருக்கிறது. அது அதைச் செய்ய முடியாது. அதை நிரப்ப, மழையையே சார்ந்திருக்க வேண்டும். 69 அதன்பின்னர் அதற்கு—அது அதனுடைய மழையை எங்கிருந்து பெறுகிறது, அது அதனுடைய தண்ணீரை, தொட்டியில் பெறுகிறது என்பதை நாம் கவனிப்போம். அது களஞ்சியங்களின் உச்சியிலிருந்து, கொட்டகைகளிலிருந்து புறப்பட்டு வருகிறது, அங்கே தூசியானது வீசுகின்ற எல்லா அழுக்குகளையும், அது நேராக மழை நீருக்குள்ளாக வந்து, மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு தொட்டிக்குள்ளாக, சரியாக கீழே இறங்குகிறது. அது ஏறக்குறைய ஒரு சாக்கடைக் கால்வாய் போன்றதாகிவிடுகிறது. அது தொழுவத்தின் உச்சியிலிருந்து எல்லா மிருகங்களையும் கழுவி, கொட்டகையிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது, அது போன்றவைகளினால், நிரம்புகிறது. காற்று வீசி தூசி போன்றவற்றை தொழுவத்திற்குள் கொண்டு வருகிறது, அதன்பின்னர் உள்ளூர் மழையானது வந்து, அந்த மழையானது அதைக் கழுவிவிடுகிறது. 70 அதன்பின்னர் தண்ணீர் மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு தொட்டியின் மூலம் ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு துவாரத்தின் மூலமாக, மனிதனால் உருவாக்கப்பட்ட தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பின்னர் அது அங்கு செல்லும்போது, அது அசுத்தமாயும், மிகவும் அசுத்தமாயும், நீங்கள் அதன் மேல் ஒரு வடிகட்டி துணியை வைக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் அதை குடிக்க முடியாது. இப்பொழுது, பாருங்கள், அது கூரையிலிருந்து ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட தொட்டியின் மூலம், மனிதனால் உண்டாக்கப்பட்ட துவாரம், ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட தொட்டியில் கழுவிக் கொண்டிருக்கிறது. அதன்பின்னர் ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட வடிகட்டியை அதன் மேல் பொருத்தி, அதில் சில பூச்சிகள் விழாமல் தடுக்கப்படுகின்றன.

3071 இப்பொழுது, மனிதனால் உண்டாக்கப்பட்ட இந்த ஸ்தாபனத்தில்…அல்லது, தொட்டியில், அங்கே தண்ணீர் தங்கிய ஒரு சில நாட்களுக்குப் பிறகு, இவைகளை நாம் கவனிக்கிறோம். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். சரி. அது—அது எல்லாவிதமான வேத சாஸ்திரங்களும், மற்ற காரியங்களும் அதற்குள் கழுவப்பட்ட பிறகு, இப்பொழுது அது ஒரு சில நாட்கள் அங்கே நிற்கும்போது, அது தேக்கமடைகிறது என்பதை நாம் கண்டறிகிறோம். 72 எவருமே சபையின் சரித்திரத்தில், தேவன் ஏதோ ஒரு செய்தியை, ஒரு செய்தியை அனுப்பும்போது, அது தேவனிடத்திலிருந்து புதியதாக மாறும்போது, அதன்பின்னர் அந்த—அந்த ஸ்தாபகரின் ஜீவியத்திற்குப் பிறகு (அல்லது அது என்னவாயிருந்தாலும், நீங்கள் அவரை சீர்திருத்தக்காரர் என்று அழைக்கலாம் அல்லது அதைக் குறித்து நீங்கள் என்ன கூற விரும்பினாலும்) அவனுடைய மரணத்திற்குப் பிறகு, அவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி, அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் அதிலிருந்து ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டவுடனே, அது அங்கேயே மரித்துவிடுகிறது. அது மீண்டும் ஒருபோதும் எழும்புவதில்லை. அது காலங்கள் தோறும், உண்மையாகவே, அவ்வாறே நிகழ்ந்து வந்துள்ளது.

3173 இங்கே அமர்ந்துள்ள இந்த கத்தோலிக்க பாதிரியாருக்கு மரியாதை செலுத்துகிறேன்; தேவன் சபையை ஸ்தாபித்தபோது…இல்லை, அதை ஸ்தாபனமாக்கவில்லை, தேவன் ஒருபோதும் ஒரு சபையை ஸ்தாபனமாக்கவில்லை. அவர் அந்த விதமான ஒரு பணியில் இல்லை. அவர் பிறப்பில் இருக்கிறார், ஸ்தாபனத்தில் அல்ல. எனவே, தேவன் பெந்தேகோஸ்தே நாளில் சபையை ஆரம்பித்தபோது. அதன்பின்னர் ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் அவர்கள் அதை ஸ்தாபனமாக்கினர், அங்கேதான் அது தன்னுடைய வல்லமையை இழந்தது. 74 அதன்பின்னர் நாம் லூத்தரன் சீர்திருத்தத்திற்கு வந்தோம், அது ஒரு மகத்தான காரியமாயிருந்தது. “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்ற தேவனுடைய வார்த்தை அருளப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அணிவகுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு லூத்தரன் சபையை உண்டாக்கிக் கொண்டு, இந்தக் குழுவிலிருந்து தங்களை பிரித்துக் கொண்டனர், அதன்பின்னர் அது மரித்துப் போனது.

3275 அதன்பின்னர் தேவன் ஜான் வெஸ்லியை, பரிசுத்தமாகுதலோடு, கிருபையின் இரண்டாம் கிரியையின் செய்தியோடு எழுப்பினார், அது ஒரு அற்புதமான காரியமாயிருந்தது. ஆனால் வெஸ்லி மற்றும் ஆஸ்பரிக்கு பிறகு, அவர்கள் அதை ஸ்தாபனமாக்கினர், அது மரித்துப் போய்விட்டது. 76 அதன்பின்னர் பெந்தேகோஸ்தேக்கள் வரங்களின் திரும்பளித்தலோடு தோன்றினர். அவர்கள் நன்றாக இருந்தனர், என்ன நடந்தது? அது ஸ்தாபனமாகி, அது மரித்துப்போனது. சரியாக. 77 இப்பொழுது இவை எல்லாவற்றின் மத்தியிலும், ஒவ்வொரு தலைமுறையிலிருந்தும் மீதியானவர்களை தேவன் இன்னமும் அழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் நிச்சயமாகவே இருக்கிறார். இது நாம் வெளியே வந்து, ஒன்று கூடும் நேரமாய் உள்ளது. அந்தவிதமாகத்தான் நான் நினைக்கிறேன், முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களும் இந்த சுவர்களை தகர்ப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளனர், “எங்களுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் ஒன்று கூடி, ஒரு ஸ்தாபனத்தின் கீழ் அல்ல, ஒரு கோட்பாட்டின் கீழ் தேவனை தொழுதுகொள்வோமாக” என்கின்றனர். அது ஒரு ஸ்தாபனமாக இருந்தால், நான் இந்த மேடையை விட்டு இப்பொழுதே சென்றுவிடுவேன். எனக்கு அதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது.

3378 அது என்னவெனில், அது ஒரு ஐக்கியமாயிருக்க வேண்டும், ஏதோ ஒரு கோட்பாட்டின் ஐக்கியம் அல்ல, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால், கிறிஸ்துவுக்குள் ஐக்கியங்கொள்வதே. அந்தக் காரியமே ஜீவனைக் கொண்டு வருகிறது, அது பிறப்பைக் கொண்டு வருகிறது. 79 பிறப்பு வருவதற்கு முன்பே, பிறப்புக்கு முன்னரே மரணம் இருக்க வேண்டும் என்பதை நாம் உணருகிறோம். ஒரு பிறப்பு ஒரு அலங்கோலமாக இருக்கிறது, அது எந்தவிதமான ஒரு பிறப்பாக இருந்தாலும் நான் கவலைப்படுகிறதில்லை. அது ஒரு பன்றி அடைக்கும் பட்டியில் இருக்குமானால், அல்லது—அல்லது அது எங்கேயிருந்தாலும், அது ஒரு அலங்கோலமாக இருக்கிறது. புதிய பிறப்பும் அவ்வாறே உள்ளது, நீங்கள் சாதாரணமாக நீங்கள் செய்ய நினைக்காத காரியங்களையே அது உங்களைச் செய்ய வைக்கிறது. ஆனால் நீங்கள் உங்களுக்கு மரிக்க ஆயத்தமாகும்போது, அப்பொழுது நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக, மீண்டும் பிறக்கிறீர்கள், அப்பொழுது காரியங்கள் திறக்கப்பட்டு, ஜீவியம் உங்களுக்கு ஒரு புதிய காட்சியாக மாறுகிறது, ஏனென்றால் நீங்கள் இயேசு கிறிஸ்து என்னும் நபரை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களேயன்றி, ஏதோ ஒரு வேதசாஸ்திரத்தையோ அல்லது ஏதோ ஒரு கோட்பாட்டையோ அல்ல. 80 இல்லை, எழுதப்பட்ட வார்த்தைக்கு கூட, அது பரிசுத்த ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். நீங்கள் எவ்வளவுதான் வேத சாஸ்திரத்தை பெற்றிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது அங்கே மரித்துக் கிடக்கிறது. நான் ஒரு கைப்பிடி அளவு கோதுமையைப் பெற்றுக்கொள்ளலாம்; அது உயிர்ப்பிக்கப்படக் கூடிய செயல்முறைக்குள் செல்லும் வரை, கோதுமை ஒருபோதும் ஜீவிக்காது. நீங்கள் ஒரு வேதபாண்டியத்திய பட்டம், பிஎச்., எல்.எல்., நீங்கள் என்ன வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்; ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதன்மேல் வந்து, தேவனோடு ஒரு தனிப்பட்ட அனுபவமாக, அதை உங்களுக்கு உயிர்ப்பிக்கும் வரை பிரயோஜனமேயில்லை, அப்பொழுது கோதுமை எந்த நன்மையையும் செய்யாது. உங்களுடைய கற்றல் வீணாயிருக்கிறது.

3481 அன்றொரு இரவு இங்கே இந்த ஆங்கிலேயர் கூறினதுபோல, நான் அதைக் குறித்து மிகவும் வியப்படைந்தேன். பவுலைப் போல, அவன் பெற்றிருந்த எல்லா கல்வியறிவையும், அவன் கிறிஸ்துவைக் கண்டறிய, அவன் அறிந்திருந்த எல்லாவற்றையும் மறந்து, அவன் செய்யமாட்டான் என்று அவன் நினைத்திருந்த காரியங்களைச் செய்கிறான். 82 ஆனால் அந்த விதமாகவே தேவன் செய்கிறார், அவர் நம்முடைய கல்வி முறையில் நம்மை தாழ்த்துகிறார். நான் அறியாமையை ஆதரிக்க முயற்சிப்பதுபோல அல்ல, ஆனால் நான் உங்களுக்கு வித்தியாசத்தைக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். கல்வி ஒருபோதும் ஜீவனைக் கொண்டு வர முடியாது. ஜீவனைக் கொண்டுவர தேவனுடைய ஆவியே தேவைப்படுகிறது. அந்த ஜீவன் அறிவாற்றல் கொண்ட எழுப்புதலிலிருந்து தோன்றக்கூடாது. அது வேதாகமத்திலிருந்து வெளிவர வேண்டும், வார்த்தை எழுப்புதல், அந்த வார்த்தை நேற்றும் இன்றும் என்றும் மாறாததாய் இருக்கிறது. அது இன்றைக்கு விழும்போது, உயிர்ப்பிக்கும்போது, அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் நீங்கள் பெற்றிருந்த அதே பலன்களையே நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். சரியாக. அது எப்பொழுதும் இருந்து வருகிறது, அது எப்பொழுதும் அவ்வாறே இருக்கும், ஏனென்றால் அது தேவனுடைய ஆவியானவரே சூழ்நிலையை ஒழுங்குபடுத்துகிறார்.

3583 காரியங்களைச் செய்ய சூழ்நிலை தேவைப்படுகிறது. அந்தக் காரணத்தினால்தான் புருஷராகிய உங்களுக்கு எப்பொழுதுமே, “உங்களுடைய பிள்ளைகளை இங்கே கொண்டு வாருங்கள்” என்று போதிக்கப்படுகின்றீர்கள். பாருங்கள், நிச்சயமாக அது உண்மை. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, என்னுடைய மகள் ரெபேக்காள் உள்ளே வந்து அமர்ந்திருந்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். நான் ஒரு ஸ்திரீயைப் பார்த்து கண் சிமிட்டுவதை உங்களில் சிலர் பார்த்தீர்கள், அது என்னுடைய மகள், அவள் உள்ளே வந்து அமர்ந்தாள். அவள் ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதனால்தான் அவள் இங்கே கூட்டத்தில் இருக்கிறாள். அதன் நோக்கமும் அதுதான். அதற்கு சூழ்நிலையே அவசியமாயிருக்கிறது. 84 வயோதிக வேத பண்டிதர் பாஸ்வர்த், “நீங்கள் ஒரு கோழி முட்டையை எடுத்து அதை ஒரு நாய்க்குட்டியின் கீழ் வைத்தால், அது ஒரு கோழிக்குஞ்சு பொறிக்கும்” என்று கூறுவது வழக்கம். ஏன்? ஏனென்றால் அது ஒரு முட்டை சரியான சூழ்நிலையைப் பெற்றுள்ளது. 85 நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டாகவோ, பாப்டிஸ்டாகவோ, பிரஸ்பிடேரியனாகவோ இருந்தாலும் எனக்குக் கவலையில்லை; சரியான சூழ்நிலையில், அது புதிதாகப் பிறந்த ஒரு தேவனுடைய பிள்ளையை பிறப்பிக்கும். நீங்கள் எந்த ஸ்தாபன அடையாளத்தை உடையவர்களாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, சூழ்நிலையே அதைச் செய்கிறது.

3686 நான் மாடு மேய்ப்பதுண்டு. நாங்கள் அவைகளை காட்டிற்குள் கொண்டு சென்றபோது, வனக்காவலரை நான் கவனித்தேன், பண்ணைகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களிலிருந்து வெளியேற்றி—வெளியேற்றி, அவைகளை காடுகளில் ஓட்டினர். அவன் அங்கே நின்று கொண்டு, அவைகள் வாசலருகே செல்லும்போது, அந்த தடுப்பு வேலியினூடாக கவனித்துக் கொண்டிருப்பான். அவன் பெயர் அடையாளங்களுக்கு ஒருபோதும் அதிக கவனம் செலுத்தவில்லை, ஏனென்றால் எல்லாவிதமான அடையாளச் சின்னங்களும் அங்கு சென்றன. ஆனால் ஒரு காரியத்தை அவன் கவனித்தான். அது ஹியர்ஃபோர்ட் இனத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டும், இல்லையென்றால் அது அந்த காட்டுக்குள் செல்ல முடியாது, ஏனென்றால் அது ஹியர்ஃபோர்ட் சங்கம் தான் அந்தக் காட்டில் மேய்கிறது. இனவிருத்தியை சரியாக வைத்துக்கொள்ள, அதற்கு ஒரு இரத்த அடையாள அட்டை இருக்க வேண்டும். 87 நியாயத்தீர்ப்பின் நாளிலும் அந்த விதமாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தேகோஸ்தே அல்லது பிரஸ்பிடேரியனா என்று அவர் என்னைக் கேட்கப்போவதில்லை, ஆனால் அவர் இரத்தத்தின் முத்திரையைத் பார்க்கப் போகிறார். “இரத்தத்தை நான் காணும்போது, நான் உங்களைக் கடந்து போவேன்.” அதுதான் காரியம்.

3788 எனவே இந்த தொட்டிகளில் நாம் கண்டறிவது, அவைகள் தேங்கி சிறிது நேரம் கழித்து, அவைகள்…அவைகள் உபயோகமற்றதாகி, அவைகள் தேங்கிக் கிடக்கின்றன. அது தவளைகள், பல்லிகள், பாம்புகள், பூச்சிகள், கிருமிகள், இன்னும் அதிகமானவைகளுக்கு உறவிடமாகின்றன, ஏனென்றால் அது அதற்குள் தள்ளப்பட்ட ஒரு தேக்கமான நிலையில் உள்ளது. ஒரு தொழுவத்தின் மேற்கூரையிலிருந்தோ அல்லது கொட்டகைக்கு அருகாமையிலுள்ள ஒரு வீட்டிலிருந்தோ அல்லது அழுக்கு எங்கிருந்தாவது கழுவி வரும்போது, என்ன விதமான பூச்சிகள், கிருமிகள், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியமும் இந்த தொட்டியில் கழுவி தள்ளிவிடப்படுகிறதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

3889 இப்பொழுது, அது மனிதனால் உண்டாக்கப்பட்ட எந்த விதமான முறைமைக்கும் ஒரு பரிபூரண உதாரணமாக உள்ளது. அவன் துவக்கத்திலேயே ஒரு தோல்வியுற்றவனாக இருக்கிறான். அந்தக் காரணத்தினால்தான் அவனுக்கு ஒரு இரட்சகர் தேவை. அவனால் தன்னை இரட்சித்துக் கொள்ள முடியவில்லை, அதற்காக அவனால் ஒன்றுமே செய்ய முடியாது. அவன் துவக்கத்திலேயே இழக்கப்பட்டிருக்கிறான். அவன் உலகத்தில் பிறந்து, பாவமுள்ளவனாயிருக்கிறான், அவன் பொய்களைப் பேசி உலகத்திற்கு வருகிறான். அவன் துவக்கத்திலேயே ஒரு பொய்யனாய் இருக்கிறபடியால், அவன் எப்படி உலகத்தில் தனக்காக எதையும் செய்து கொள்ள முடியும்? ஒரு பரிசுத்த மனிதனாய் எப்படி இருக்க முடியும்? 90 பரிசுத்த மனிதன் என்று யாரும் இல்லை. பரிசுத்த சபை என்ற ஒன்று கிடையாது. அது ஒரு பரிசுத்த ஆவி! ஒரு பரிசுத்த சபை அல்ல, ஒரு பரிசுத்த ஜனங்கள்; அது ஜனங்களின் மத்தியில் ஒரு பரிசுத்த ஆவியாய் உள்ளது, அதுதான் அது. ஆமென். பேதுருவும் மற்றவர்களும் நின்றிருந்தது ஒரு பரிசுத்த மலையல்ல; அந்த மலை பரிசுத்தமாயிருக்கவில்லை. ஆனால் மலையின் மேல் உள்ள பரிசுத்த தேவன் அதை பரிசுத்தமாக்கினார். ஒரு பரிசுத்த நபர் அல்ல; அது அந்த நபரில் உபயோகிக்கப்படும் பரிசுத்த ஆவியாகும், அது பரிசுத்தமாக்குகிறது. நபர் அல்ல; ஆனால் பரிசுத்த ஆவி என்னும் நபர்! அது மனிதன் அல்ல; ஏனென்றால் அவன் ஒரு மனிதன், “பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவனாய் உலகத்திற்கு வந்தான்.”

3991 மனிதனால் உண்டாக்கப்பட்ட எந்த முறைமையும் அவனை சரியாக அதற்குள் வைத்திருக்கும். அவன் அறிவாற்றல் கொண்ட, அறிவுப்பூர்வமான கண்களிலிருந்து, அவர்கள் நினைக்கும் காரியத்தை குருடாக்கி, “நான் சபையைச் சேர்ந்தவன், என்னுடைய பெயர் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. நான் இதைச் செய்திருக்கிறேன். என்னுடைய தகப்பனார் இது போன்றவராயிருந்தார்.” அது சரிதான்; அதற்கு எதிராக ஒன்றும் கூற முடியாது. ஆனால் அப்படியிருந்தும், நண்பனே, இயேசு, “ஒரு மனிதன் மறுபடியும் பிறவாவிட்டால், அவன் காணக்கூட முடியாது” என்று கூறினார், பாருங்கள், அங்கே, அவன் தன்னுடைய கண்களினால் காண்கிறான் என்று அர்த்தமல்ல, ஆனால், “பரலோக இராஜ்ஜியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.” நீங்கள் பிறக்கும் வரை! 92 இந்த பாப்டிஸ்டு சுவிசேஷகர் எப்படியிருப்பார், அங்கே நின்று கொண்டு அதை விமர்சித்து, பரிகசித்துக்கொண்டிருந்த அந்த மனிதன் எப்படி இருப்பான்? பாருங்கள், அதைப் பெற்றுக் கொள்ளக் கூட அவனுக்குள் ஒன்றுமில்லை; ஆனால் தேவன் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது, பாருங்கள். தேவன் அவனுக்கு பரிசுத்த ஆவியை அளித்தார். இது மாய்மாலமல்ல, இது வார்த்தையாயுள்ளது என்று அவர் வெளிப்படுத்தினார். அவன் அதை ஒரு பள்ளிக்கூட யோசனையிலிருந்து மாத்திரமே கேட்கிறான், அவர்கள் தேவனுடைய எல்லா ஆசீர்வாதங்களையும் எடுத்துக்கொண்டு, கடந்துபோன ஒரு நாளில் அதை வைக்க முயற்சிக்கிறார்கள்.

4093 அண்மையில் இங்கே ஒரு வாலிப பாப்டிஸ்டு பிரசங்கியார், இந்தக் காலையில் இங்கே அமர்ந்திருக்கிறார்; அவர் என்னிடத்தில் வந்து, “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் செய்துகொண்டிருக்கிற ஒரு காரியம் தவறாயுள்ளது” என்றார். நான், “எனக்கு உதவி செய்யும்” என்றேன். 94 மேலும் அவர், “நீங்கள், நீங்கள் உத்தமமானவர், ஒரு நல்ல நபர் என்று நான் நினைக்கிறேன், ஆனால்…” என்றார். அதற்கு நான், “உங்களுக்கு நன்றி, ஐயா” என்றேன். அதற்கு அவர், “ஆனால் நீ தவறு செய்துகொண்டிருக்கிற ஒரு காரியம் உண்டு” என்றார். நான், “கர்த்தர் ஒரு காரியத்தை மட்டும் தவறாக கண்டறிகிறார் என்று நான் நம்புகிறேன்” என்றேன். 95 மேலும் அவர், “சரி, அங்கே…நீர் செய்துகொண்டிருப்பது தவறு” என்றார். மேலும், “நீர் உலகத்திற்கு ஒரு அப்போஸ்தல ஊழியத்தை அறிமுகப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறீர், மேலும், அப்பொழுதே அப்போஸ்தலருடைய அப்போஸ்தல ஊழியம் முடிவுற்றுவிட்டது” என்றார். 96 நான், “ஒரு பாப்டிஸ்டுக்கு ஒரு பாப்டிஸ்டு என்ற முறையில், நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றேன். “என்ன?” என்று கேட்டார். 97 நான், “தேவனுடைய வார்த்தையானது, அதனுடைய ஒவ்வொரு துணுக்கும், ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அவர், “ஏன், நிச்சயமாக” என்றார். 98 அப்பொழுது நான், “அப்பொழுது, அவர், ‘ஒரு வார்த்தையையும் கூட்ட வேண்டாம் அல்லது ஒரு வார்த்தையை எடுத்துபோட வேண்டாம்’ என்று கூறினார். ஏனென்றால்.” அப்பொழுது நான், “ஒரு தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் கொண்டு, அப்போஸ்தல ஆசீர்வாதம் ஜனங்கள் மீது எங்கே உண்டானது என்று நான் உங்களுக்குக் காண்பிப்பேன், இப்பொழுது தேவனுடைய வாக்குத்தத்தத்தையும், அது ஜனங்களை விட்டுச் சென்றதையும் நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். பாருங்கள், உங்களால் வார்த்தையில் அதை தோற்றுவிக்க முடியவில்லையென்றால், அப்பொழுது—பிறகு அதைக் குறித்து மறந்துவிடுங்கள், பாருங்கள்,” என்றேன். நான், “ஏனென்றால் அது இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது” என்றேன்.

4199 அவர் ஒரு சில நிமிடங்கள் ஒன்றுமே பேசவேயில்லை. எனவே நான், “பாருங்கள், அப்படியானால், சகோதரனே, நான் இதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் அப்போஸ்தல செய்தியை அறிமுகப்படுத்தினார். அது உண்மை என்பதை நாம் யாவரும் அறிவோம், ஏனென்றால் இயேசு அவனுக்கு அளித்திருந்த, இராஜ்ஜியத்திற்கான திறவுகோல்களை அவன் உடையவனாயிருந்தான். இப்பொழுது அவன் என்ன கூறினான் என்பதைக் கவனியுங்கள். அவன், ‘நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது’ என்றான். அப்படியானால் அவர் அதை வெளியே எடுத்துப்போட்ட ஒரு இடம் இருக்குமானால், பெந்தெகொஸ்தே நாளில் பேதுருவின் வார்த்தைகளுக்கு என்ன நேர்ந்தது?” பார்த்தீர்களா? இல்லை, அது ஒருபோதும் முடிந்துவிடுவதில்லை! அருமையான மரிக்கும் ஆட்டுக்குட்டியே, உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தம் அதனுடைய வல்லமையை ஒருபோதும் இழந்து போகாது, முழு தேவனுடைய சபையும் மீட்கப்படும் வரைக்கும் இனி பாவம் செய்யாதபடி, இரட்சிக்கப்படுங்கள். அதன்பின்னர் ஒரு உன்னதமான, இனிமையான பாடலில், இரட்சிக்கும்படியான உம்முடைய வல்லமையை நான் பாடுவேன், இந்த பரிதாபமான உதடுகளின் பேச்சும், பரியாச நாவுகளின் பேச்சும் அமைதியாக கல்லறையில் கிடக்கும்போதே. 100 அதை விசுவாசிக்கவும், அதை பற்றிக்கொள்ளவும், நாங்கள் யாவரும், அதனோடு நிற்கவும் தேவனே உதவி செய்யும், ஏனென்றால் அது சுவிசேஷ சத்தியமாயிருக்கிறது! ஆம், ஐயா.

42101 ஒரு ஞானமுள்ள மனிதன் இந்தக் காரியங்களை ஒருபோதும் நோக்கிப் பார்க்கக் கூடாது. அவைகள் கிரியை செய்யாது என்பதை அறிவோம். அவைகள் ஒருபோதும் கிரியை செய்ததில்லை. ஒரு ஸ்தாபன மார்க்கமும், ஒரு ஸ்தாபன அனுபவமும் தேவனுடைய பிரசன்னத்தில் ஒருபோதும் கிரியை செய்யாது. அது கலப்படமில்லாமல் தேவனிடத்திலிருந்து வரவேண்டும். அது தேவனால் ஒருபோதும் உபயோகப்படுத்தப்பட்டதேயில்லை, தேவன் அப்படிப்பட்ட ஒரு முறைமையை இதற்கு முன்பு உபயோகித்ததில்லை. இப்பொழுது நீங்கள், ஓ, நீங்கள் அங்கத்தினர்களையும், அதைப் போன்ற காரியங்களையும் பெற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் நான் அசலான தேவனுடைய வித்தை, பெந்தெகொஸ்தே நாளில் விழுந்தது போன்ற ஆசீர்வாதத்தை குறிப்பிடுகிறேன், அது ஸ்தாபனத்தின் மூலம் ஒருபோதும் வரவில்லை; அது ஒரு பிறப்பினால், மீண்டும் பிறப்பதனால் வருகிறது.

43102 நாம் இஸ்ரவேலரை உதாரணமாக எடுத்துக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம், அவர்கள் அவ்வாறு இருந்து வருகின்றனர். கவனியுங்கள், “அவர்கள் தங்களுக்கு அருளப்பட்ட ஊற்றாகிய, அவரை விட்டுவிட்டு, தாங்களே தொட்டிகளை வெட்டிக்கொண்டனர்.” ஒரு—ஒரு—ஒரு—ஒரு காரியத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா, ஒரு மனிதன் ஆர்டீசியின் ஊற்றண்டையில், குடித்துவிட்டு, அதன்பின்னர் அவனுக்கு ஒரு தொட்டியை உண்டாக்கி, பாருங்கள், அதிலிருந்து குடிக்க விரும்புவானா? இப்பொழுது அதைத்தான் தீர்க்கதரிசி கூறினான், அதைத்தான் தேவனுடைய வார்த்தை கூறியுள்ளது. அதைத்தான் தேவன் தீர்க்கதரிசியிடம் கூறினார். “நீங்கள் என்னை விட்டு, ஜீவத் தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டீர்கள்; நீர் தொட்டிகளை வெட்டினபோது, அவைகள் உடைக்கப்பட்டு, கசிந்துகொண்டிருக்கின்றன” என்றான்.

44103 பாருங்கள், ஏதோ ஒன்று, அவர்கள் தங்களால் கட்டுப்படுத்தக் கூடிய ஏதோ ஒரு காரியத்தை விரும்பினர், அல்லது அவர்கள் செய்திருந்ததைக் காண்பிக்க விரும்பினர். அது—அது ஸ்தாபன மார்க்கத்தின் முட்டாள்தனமாகும். அது எப்பொழுதுமே முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது, அவர்கள் தாங்களாகவே அதில் ஏதோ ஒரு காரியத்தை உடையவர்களாயிருக்க வேண்டும். அவர்கள் இந்த எல்லா முறைமைகளையும், சங்கங்களையும், மற்றக் காரியங்களையும் உடையவர்களாயிருக்க வேண்டும், “நான் இப்பொழுது இதை சேர்ந்தவன்.” தாழ்மையான தேவனுடைய பிள்ளைகளாக இருப்பதற்கு பதிலாக, அவர்கள் தங்களுக்கு காண்பிக்கக் கூடிய ஏதோ ஒரு காரியத்தையே விரும்புகிறார்கள். தேவனை அவருடைய வழியில் செய்ய அனுமதிப்பதற்குப் பதிலாக, அவர்கள் அதை தங்களுடைய வழியில் செய்ய விரும்பினர். அந்தவிதமாகத்தான் முறைமைகள் இன்றைக்கு சபையைப் பெற்றுள்ளன. இல்லை…ஒவ்வொரு முறைமையும், ஒருவன் அதை இந்த விதமாக விரும்புகிறான், ஒருவன் அதை அந்த விதமாக விரும்புகிறான். நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டாக இருந்தால், நீங்கள் இந்த விதமாக இருக்க வேண்டும். ஒரு பாப்டிஸ்டு, இந்த வழியில். ஒரு பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கர், இன்னும் என்னவெல்லாம் இருந்தாலும், அவர்கள் தங்களுடைய முறைமைகளைப் பெற்றுள்ளனர். அதற்கு எதிராக ஒன்றுமில்லை, ஆனால் நான் பேசிக்கொண்டிருப்பது அதைக் குறித்து அல்ல. 104 மனிதன் அதைச் செய்ய அவனுடைய வழியை விரும்புகிறான், தேவன் அதைச் செய்ய தம்முடைய வழியை வைத்திருக்கிறார். மேலும் அவர், “நீ உன்னுடைய வழியைப் பற்றிக்கொண்டிருக்கிறாய், ஒரு உடைந்த தொட்டியை; என் வழியை, ஜீவ வழியை ஏற்றுக்கொள்ளமாட்டாய்” என்று கூறினார். 105 இன்றைக்கும் அதே காரியம் தான் உள்ளது. அது சிறிதளவு கூட மாறவில்லை. ஒரு மனிதன் தூய சுத்தமான நீர் கொப்பளிக்கும் ஆர்டீஷியன் ஊற்றை விட்டுவிடுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நினைத்துப் பாருங்கள், அதன்பின்னர் அவன் தானே உண்டாக்கிக் கொண்ட ஒரு உடைந்த தொட்டியண்டை செல்ல விரும்பினான், ஒரு தொட்டியைத் தோண்டி, தொழுவத்தின் மேல் உள்ள அந்த குப்பையை அதில் கழுவி, அதன்பின்னர் அதிலிருந்து குடிக்க வேண்டும். நிச்சயமாகவே அந்த நபருக்கு மனதளவில் ஏதோ கோளாறு உள்ளது.

45106 வேதத்தின் ஒரு—ஒரு மதசம்பந்தமான கருத்தை ஒரு மனிதன் பற்றிக்கொள்ளும்போது, வேதவாக்கியத்தை ரூபகாரப்படுத்தி அதை உங்களுக்கு உண்மையாக்குகிற பரிசுத்த ஆவியை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அந்த நபரோடு ஏதோ ஆவிக்குரிய கோளாறு உள்ளது. அது முற்றிலும் உண்மை. நிச்சயமாக, பரிசுத்த ஆவியானவர்! ஒவ்வொருவரும் சரியென்று கருதுகிற, தங்களுடைய வேதாகமத்திற்கு ஒரு வியாக்கியானத்தை உடையவர்களாயிருக்கிறார்கள். தேவனுக்கு உங்களுடைய உதவி தேவையில்லை. உங்களுடைய வியாக்கியானம் தேவனுக்குத் தேவையில்லை. 107 தேவன் தம்முடைய சொந்த வியாக்கியானியாயிருக்கிறார். தேவன் வியாக்கியானத்தை அவர் அளிக்கும் விதமாகவே—அவர் கூறுகிற விதமாகவே அதைச் செய்கிறார். கர்த்தர் ஆதியிலே, “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று கூறினார், வெளிச்சம் உண்டானது. அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. அதைத்தான் தேவன் செய்தார். “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்று அவர் கூறினார். அவள் கர்ப்பவதியானாள். அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. அவர் “மாம்சமான யாவர் மேலும் தமது ஆவியை ஊற்றுவதாக” கூறினார். அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை ரூபகாரப்படுத்தி, அதை வெளிப்படுத்தி, அதை நிரூபிப்பதன் மூலம் வியாக்கியானிக்கிறார்.

46108 அந்தவிதமாகத்தான் ஒரு தீர்க்கதரிசி தேவனால் உண்டானவன் என்று நிரூபிக்கப்பட்டான். அவர், “உங்களுக்குள்ளே ஒருவன் ஆவிக்குரியவனாயிருந்தால், அல்லது ஒரு தீர்க்கதரிசியானால், கர்த்தராகிய நான் தரிசனங்களில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனங்களின் மூலமாக அவனிடத்தில் பேசுவேன். அவன் கூறினது நிறைவேறும், அப்பொழுது அவனுக்குப் பயப்படுங்கள்; ஆனால் அது நடக்கவில்லையென்றால், அதைச் செய்யாதீர்கள்” என்று கூறினார். 109 தேவன் தம்முடைய வார்த்தையைப் பேசும்போது, மனிதன், “வார்த்தை இதுதான் ” என்று கூறும்போது, அதேக் காரியம்தான் அது. அது அந்த விதமாக சம்பவிக்கிறது, அப்பொழுது அது தேவன் அதைச் செய்கிறதாயுள்ளது. 110 ஆனால் அவன், “அது இந்த விதமாக, நாட்கள் கடந்துவிட்டன” என்று கூறினால், அது ஏன் எல்லா… அவன் தன்னுடைய கையை நீட்டி, பட்டினியாய் கிடக்கிற, பசியுள்ள பிள்ளைகளிடத்திலிருந்து; அப்பத்தை எடுத்துப்போடுகிறான். இந்த ஆர்ட்டீசியன் ஊற்று அங்கிருந்தபோது, நீங்கள் ஏன் ஒரு தொட்டியிலிருந்து தண்ணீர் குடிக்க விரும்புகிறீர்கள்? 111 இப்பொழுது ஜீவ ஊற்று என்றால் என்ன? ஜீவ ஊற்று, ஜீவத் தண்ணீர் ஊற்று என்றால் என்ன? ஒரு ஆர்ட்டீசியன் ஊற்று, நாம் அதை அதற்கு ஒப்பிடுவோம்.

47112 இப்பொழுது ஒரு தொட்டிக்கும், ஒரு ஜீவத்தண்ணீரின் ஊற்றுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அங்குள்ள ஒரு பழைய உடைந்த தொட்டியில் பூச்சிகள், பல்லிகள், தவளைகள், கிருமிகள், இன்னும் என்னென்ன உள்ளன என்று, பாருங்கள். 113 இங்கே ஒரு ஆர்டீசியன் ஊற்று உள்ளது. இப்பொழுது இதைக் கவனியுங்கள். அது தனக்குத்தானே நிரப்பிக்கொள்கிறது. நீங்கள் எந்த பெரிய முறைமைகளையும் பெற்று, அதற்குள் ஏராளமான பணத்தை கொண்டு வர வேண்டியதில்லை. நீங்கள் ஏராளமான அங்கத்தினர்களை சேர வேண்டியதில்லை. அது அதனுடைய அங்கத்தினர்களுக்கு, அவர்களுக்குள் இருக்கும் ஜீவ ஆவியின் செயல்பாட்டிற்கு துணைபுரிகிறது. 114 அதிலிருந்து வருகிற புதிய, தூய, சுத்தமான, தண்ணீரைக் கவனியுங்கள். நாற்பது, ஐம்பது வித்தியாசமான சிந்தைகளால் ஆவணப்படுத்தப்பட்டு, தேங்கி நிற்கும் ஏதோ ஒரு தொட்டியல்ல, “ இது சரி, அது சரி, இந்த கருத்தாக்கம்” என்று கூறி, வாக்களித்து, கூப்பிட்டு, அவர்கள் செய்யும்போது, அதன்பின்னர் அதிலிருந்து ஒரு ஸ்தாபனத்தை உருவாக்குகிறார்கள். இதுவோ தூய்மையான, சுத்தமான, கலப்படமற்ற தேவனுடைய வார்த்தையாய், தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது. இதுவோ ஒரு உண்மையான ஆர்ட்டீசியன் ஊற்று. 115 கவனியுங்கள், அதனுடைய வல்லமையின் இரகசியம் அதற்குள்ளே உள்ளது. மனிதனால் அதைக் கண்டறிய முடியாது. அதற்குக் கீழே ஒருவிதமான அழுத்தம், அதை மேலே தள்ளுகிறது.

48116 நான் இந்தியானாவின் மாநில வனவேட்டை கண்காணிப்பாளராக இருந்தபோது, நான் வழக்கமாக ஹாரிஸன் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட கிணறு, ஒரு ஊற்று வழியாக செல்வது வழக்கம். அது எப்பொழுதுமே கொப்பளித்துக் கொண்டேயிருந்தது. ஓ, அது மிகவும் மகிழ்ச்சியான காரியமாயிருந்தது போன்று காணப்பட்டது. தரையில் பனியிருந்தாலும், பனிக்கட்டி உறைந்திருந்தாலும், அது எவ்வளவு குளிராயிருந்தாலும், அது அப்பொழுதும் கொப்பளித்துக்கொண்டிருந்தது; அங்கே பண்டைய மனிதனால் உண்டாக்கப்பட்ட குளங்கள், தொட்டிகள், தவளைகள் மற்றுமுள்ள யாவும் அங்கே உறைந்து போய்விட்டன. 117 அது எதைக் காண்பிக்கிறதென்றால் எந்த ஸ்தாபனமும், ஒரு சிறு ஆவியின் பற்றாக்குறை அல்லது ஒரு சிறு சூழ்நிலை மாற்றத்தினூடாக, உறைந்து போய்விடும். ஆனால் தேவனுடைய ஆர்ட்டீசியன் ஊற்று, அவர்—அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், அது அதிலிருந்து கொப்பளிக்கும் மற்றும் அதிலிருந்து வெளியே தள்ளப்பட்ட எல்லா காரியங்களையும் தடுத்து நிறுத்துகிறது. அங்கே துவக்கத்தில் உள்ளே எதுவும் இல்லை. எந்தக் காரியமும் அதற்குள் சென்றால், அது அதை வழியிலிருந்து தள்ளிவிடும்.

49118 அந்த காரியம் அந்த விதமாக கொப்பளித்துக்கொண்டிருந்தது, ஒரு நாள், அங்கே உட்கார்ந்து, நான், “நான் அந்த ஊற்றிடம் ஒரு நிமிடம் பேசுவேன் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினேன். நான் என்னுடைய தொப்பியைக் கழற்றிவிட்டு, “நீ எதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறாய்? நீ எதைக் குறித்து இவ்வாறு கொப்பளித்துக் கொண்டிருக்கிறாய்? எப்பொழுதாவது ஒருமுறை, மான்கள் உம்மிடத்திலிருந்து குடிப்பதனால் இருக்கலாம்” என்றேன். அதனால் பேச முடிந்திருந்தால், அது, “இல்லை” என்று கூறியிருக்கும். அப்பொழுது நான், “ஒருவேளை நான் உம்மிடத்திலிருந்து பானம் பண்ணுகிறேன் என்ற காரணத்தினால் இருக்கலாம்” என்றேன். “இல்லை, அதுவல்ல அது.” 119 நான், “உன்னை அவ்வளவு தூய்மையாகவும், சுத்தமாகவும் ஆக்கிக்கொண்டிருப்பது எது? உன்னை எப்பொழுதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கச் செய்து, உன்னை உறையச் செய்யவே முடியாதது எது? நீ ஆகாயத்தில் பீறிட்டடித்துக் கொண்டிருக்கிறாய், மாசில்லாத, சுத்தமான தண்ணீர்” என்றேன். 120 அது என்னிடத்தில் பேசியிருந்தால், அந்த ஊற்று என்ன கூறியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? அது, “சகோதரன் பிரான்ஹாம், நான் கொப்பளித்துக் கொண்டிருக்கவில்லை, எனக்குப் பின்னால் ஏதோ ஒன்று கொப்பளித்துக்கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கும். அந்த விதமாகத்தான் அது உள்ளது…அது போதுமான வார்த்தையல்ல, ஆனால் நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

50121 அது அந்தவிதமாகவே ஒரு மறுபடியும் பிறந்த அனுபவத்தோடு உள்ளது. உங்களால் அதை அடக்கி வைக்க முடியாது. அது உங்களுக்குள்ளே உள்ள ஒரு—ஒரு ஊற்றுத் தண்ணீராய், நித்திய ஜீவனுக்குள் கொப்பளித்துக்கொண்டிருக்கிறது. பாருங்கள், அதைக் குறித்த ஒரு காரியம் உண்டு, அதனோடு நீங்கள் எந்த சம்மந்தமும் கொண்டிருக்கவில்லை. மனிதனால் உண்டாக்கப்பட்ட தொட்டிகள் உறைந்து போகலாம், அவைகள் எழுப்புதலுக்காக கெஞ்சிக் கேட்கலாம். ஆனால் அந்த ஊற்றின் கீழ் உள்ள ஒரு மனிதன், அந்த ஊற்றில் இரவும் பகலும் ஜீவிக்கிறான்! இல்லை, நீங்கள் உள்ளூர் மழைக்காகவும், உள்ளூர் எழுப்புதல்களுக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் அதில் நிறைந்திருக்கிறீர்கள். “நான் அவனுக்கு ஜீவ ஊற்றை, அவனுக்குள் கொப்பளிக்கும்படி கொடுப்பேன்.” அதில் ஏதோ ஒன்று உண்டு, அது ஒவ்வொரு நாளும் புதியதாயும், சுத்தமானதாயும். அது உங்களுடைய இருதயத்திலும் வாயிலும் உள்ள கலப்படமற்ற தேவனுடைய வார்த்தையாய், தன்னை ரூபகாரப்படுத்திக்கொண்டு, தனக்காகவே பேசுகிறதாயுள்ளது. மழை பெய்தாலும், பனி பெய்தாலும், அது என்ன விதமான காலநிலையாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் இன்னமும் மகிழ்ச்சியாயிருக்கிறீர்கள், ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அங்கே கொப்பளித்துக்கொண்டிருக்கிறார். அது மறைவான வல்லமையாயுள்ளது. கவனியுங்கள். ஓ, அதனுடைய இரகசியம் அதற்குள் இருக்கிறது.

51122 குடித்து, அதனுடைய பொருளை உபயோகிக்கும் எவருக்கும் அது இலவசமாய் கொடுக்கிறது. இப்பொழுது நீங்கள், “பாருங்கள், இப்பொழுது நான் மெத்தோடிஸ்டு சபைக்குச் செல்ல வேண்டும் ஏனென்றால் நான் ஒரு மெத்தோடிஸ்டு, ஒரு எழுப்புதலுக்காவே. நான் இங்கு செல்ல வேண்டும், ஆனால் (என்றாலும்) நான் ஒரு பெந்தேகோஸ்தேவிற்கு செல்ல வேண்டும், ஏனென்றால் நான் ஒரு பெந்தேகோஸ்தே எழுப்புதல்காரன்” என்று கூற வேண்டியதில்லை. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் பொங்கி வருகிற அந்த ஊற்றுத் தண்ணீரை உடையவர்களாயிருக்கும்போது, அந்த ஊற்றிலிருந்து, நீங்கள் அங்கே குடித்துக்கொண்டிருக்கும்போது, எந்த வித்தியாசமும் இல்லை, அதனால் வருகிற எந்தக் காரியத்தையும் நீங்கள் அளிக்கிறீர்கள். நீங்கள் ஒரு கத்தோலிக்கருக்கும், ஒரு புராட்டஸ்டெண்டுக்கும், ஒரு யூதனுக்கும், ஒரு நாத்திகனுக்கும் அல்லது அது என்னவாயிருந்தாலும், ஜீவனைக் குறித்த ஒரு நம்பிக்கையை அளிக்க மனப்பூர்வமாயிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையாகவே, உண்மையாகவே உங்களுக்குள் ஏதோ ஒன்றைப் பெற்றிருக்கிறீர்கள், அது அதைச் செய்துகொண்டிருக்கிறது.

52123 நீங்கள் அதைக் குறித்த மற்றொரு காரியத்தைக் கவனியுங்கள், நீங்கள் அதை உந்தித்தள்ள வேண்டியதில்லை. நீங்கள் அதை இழுத்து, அதை உந்தித்தள்ள வேண்டியதில்லை. அது என்னை சுகவீனப்படுத்துகிற அளவுக்கு, ஏதோ ஒன்றை உந்தித்தள்ளுகிற அளவுக்கு அதைக் குறித்து நான் அதிகம் கண்டிருக்கிறேன். ஒரு கூட்ட இசையை இசைத்து, மேலும் கீழும் குதித்து, அல்லது—அல்லது நகரத்தில் ஒரு பெரிய புத்தகக் கூட்டம், மற்றும் “இந்த காலத்தின் மனிதன்” என்ற மகத்தான பெரிய அடையாளங்கள் போன்றவை தேவையில்லை. 124 இந்த நேரத்துக்கென ஒரே ஒரு மனிதன் தான் உண்டு, அது இயேசு கிறிஸ்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். தேவனிடத்திலிருந்து வந்த ஒரே ஒரு செய்தியாளர் மாத்திரமே உண்டு, அது—அது இயேசு கிறிஸ்து. ஆம், ஐயா. 125 நீங்கள் இதை மேலே உயர்த்தவோ அல்லது அதை கீழே இழுக்கவோ வேண்டியதில்லை. இல்லையென்றால், நீங்கள் அதில் சேர வேண்டியதில்லை. நீங்கள் அதை சுதந்திரமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆமென். “ஜீவத்தண்ணீரின் ஊற்று நானே; நீ போய் சுயமாகவே சில தொட்டிகளை உருவாக்கிக்கொள்ள, என்னை விட்டுவிட்டாய்.” இப்பொழுது நீங்கள் அதை உந்தித்தள்ளவோ, அதை உந்தித்தள்ளவோ, அதை இழுத்து, அதனோடு சேர்ந்துகொள்ளவோ, அதை தோண்டியெடுக்கவோ, வேறெதுவும் தேவையில்லை. நீங்கள் அதை சுயாதீனமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

53126 அதனுள் என்ன சென்றுவிட்டது என்றும், அதனுள் என்ன செல்லும் என்றும் உங்களுக்கச் சொல்ல, ஒரு வடிகட்டிக் கந்தையாகிய மனிதனால் உண்டாக்கப்பட்ட எந்த வேத சாஸ்திரமும் உங்களுக்குத் தேவையில்லை. தேவையேயில்லை. மனிதனால் உண்டாக்கப்பட்ட ஏதோ ஒரு கல்வி முறையின் வேத சாஸ்திரம், இதில் சுயநீதி மார்க்கம், இதில், அல்லது மத சம்பந்தமான ஏதோ ஒரு தொட்டியில்; உங்களுக்கு அது தேவையில்லை. அது அங்கே இருக்க வேண்டியதில்லை. நீங்கள் அதன் மேல் ஒரு துணியை வைத்தால், அது ஆகாயத்தில் வீசி எறிந்துவிடும். அதற்கு இதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. அது தனக்குத் தானே உதவிசெய்து கொள்கிறது! அது தேவனுடைய வல்லமை ஜீவனுக்குள் துளிர்விடுவதாகும். ஒரு மனிதன் ஏன் அதைப் போன்ற ஒரு காரியத்தை விட்டுவிட்டு, ஒரு முறைமையில் சேர்ந்துகொள்வதை என்னால் விவரிக்க முடியவில்லை. அதற்கு வடிகட்டிக் கந்தைத் துணிகள் தேவையில்லை. அதற்கு அது தேவையில்லை. அதற்கு தேவை இல்லை…அதன் நிரப்புதலுக்காக உள்ளூர் மழையை சார்ந்திருக்க வேண்டியதில்லை. அது எல்லா நேரத்திலும் நிறைந்துள்ளது. ஆமென்.

54127 ஒரு மனிதன், “நான் இன்றைக்கு மனவருத்தத்தில் இருக்கிறேன்” என்று அவர்கள் கூறுவதை நான் கேட்கிறேன். ஓ, என்னே! 128 ஓ, காரியங்கள் சரியாக நடந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்வதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரே என் ஜீவன். ஆமென். அவரே நம்முடைய ஜீவனாயிருக்கிறார். அவரே ஜீவன், நிறைவான ஜீவன். ஆம், ஐயா. மேலும்—மேலும் அது நமக்காக என்ன செய்கிறது என்பதைப் பாருங்கள். அதனுடைய வல்லமையும், தூய்மையும் அதற்குள் இருக்கிறது. அதற்கு நீர்த்தேக்க தொட்டியிலிருந்தும் அல்லது வேறு எந்த அமைப்பிலிருந்தும் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. 129 யாரோ ஒருவர், “சரி, உங்களுடைய ஐக்கிய அட்டை என்ன? நீங்கள் ஒரு நல்ல பாப்டிஸ்டாக இருக்கிறீர்களா என்று பார்ப்போம். உங்களிடம் ஒரு அட்டை இருக்கிறதா என்று நான் பார்க்கிறேன்” என்றார். அல்லது—இல்லை, “…ஒரு நல்ல பெந்தெகொஸ்தே…நீங்கள் ஒருத்துவ…இருத்துவ…மூன்று தன்மையை உடையவராயிருந்தால்.” அல்லது—அல்லது “…இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.” பாருங்கள், அதற்கு எந்த துவக்கமும் தேவையில்லை. அது எப்பொழுதுமே போய்க் கொண்டிருக்கிறது. ஆம். 130 உங்களுக்குத் தெரியும், நான் முன்பு இந்த பழைய தொட்டியை வைத்திருந்தேன், நான் இந்த பழைய உறிஞ்சும் விசைக் குழாய் மூலம் தண்ணீரை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் ஊற்றி, அதை அங்கிருந்து வெளியேற்ற வேண்டியதாயிருந்தது; உங்களுக்குத் தெரியும், அதில் இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி, அதில் பூச்சிகளையும் மற்ற காரியங்களையும் வெளியேற்ற, ஒரு கூட்ட பூச்சிகளையும் மற்ற காரியங்களையும் வெளியேற்றினேன். அந்தவிதமாகத்தான் இந்த முறைமையான சில எழுப்புதல்கள் உள்ளன. 131 ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம், “இரத்தத்தால் நிறைந்த ஊற்று உண்டு, அங்கே பாவிகள் வெள்ளத்தில் மூழ்குகிறார்கள்!” நீங்கள் சபை அங்கத்தினர்களை உண்டாக்குகிறதில்லை; அவர்கள் அந்த ஊற்றண்டை வரும்போது, நீங்கள் அவர்களை கிறிஸ்தவர்களாக்குகிறீர்கள். 132 நீங்கள் ஏன் ஜீவத் தண்ணீர்களின் ஊற்றை விட்டு, அப்படிப்பட்ட சாக்கடைக் குளத்தில் பருக வேண்டும்?

55133 உந்துதல் இல்லை; அதனுடைய வல்லமை அதற்குள் இருக்கிறது. அதற்கு துவக்கமே தேவையில்லை, ஆம் ஐயா, ஏனென்றால் (தனக்கே) அதனுடைய சொந்த ஜீவன் அதற்குள் இருக்கிறது. அந்தவிதமாகத்தான் தேவனுடைய வித்து ஒரு மனிதனுடைய இருதயத்தில் உள்ளது. தேவனுடைய ஜீவன் தனிப்பட்ட நபர்களுக்குள் உள்ளது, சபையில் அல்ல, அது உங்களுக்குள் இருக்கிறது, அது உங்களுக்குள் இருக்கிறது, நீங்கள்தான் உங்களுக்குள் ஜீவ உயிரணுவை உடையவர்களாயிருக்கிறீர்கள். 134 அதன் ஒரு சுவை மாத்திரமே எல்லாவிதமான குருமார்களையும் நம்ப வைக்கிறது. அது என்னவாயிருந்தாலும் கத்தோலிக்க பாதிரியாரிடம் கேளுங்கள், பாப்டிஸ்டைக் கேளுங்கள். இந்த மகத்தான புதுவிதமான ஆர்ட்டீசியன் தண்ணீரை ஒரே ஒரு முறை ருசி பாருங்கள், நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், அது சத்தியம் என்று உறுதியாக நம்பவைக்கிறது. உங்களுடைய பசியுள்ள ஆத்துமா, எப்படியும், அது எப்படியும், தாகமுள்ளவர்களை நம்ப வைக்கிறது. இப்பொழுது நீங்கள் தாகமாயிருக்கவில்லையென்றால்… இந்த சிறிய பாப்டிஸ்டு, அவன் துவக்கத்தில் தாகமாயிருக்கவில்லை; ஆனால் அவனுக்கு தாகம் எடுத்தபோது, தண்ணீர் மிகவும் ருசியாக இருந்தது. அது உண்மை, ஆனால் நீங்கள் தாகமடையத்தான் வேண்டும், “தாகமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்று இயேசு கூறினார். “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாயிருக்கும்போது, நீங்கள் பாக்கியவான்கள், ஏனென்றால் நீங்கள் திருப்தியடைவீர்கள்.” ஆமென். நண்பனே, இயேசு அதைக் கூறினார். ஆம், ஐயா, தாகமாயிருக்கிறவர்களுக்கு அது ஆசீர்வதிக்கப்பட்ட ஊற்றாயிருக்கிறது.

56135 ஏன் எவரேனும் அதை ஒரு சதுப்பு நிலத் தண்ணீராக மாற்றிக்கொள்ள வேண்டும்? ஒரு ஆர்ட்டீசியன் ஊற்றை பூச்சிகள் நிறைந்ததாயும், மனிதனால் உண்டாக்கப்பட்ட எல்லாவிதமான கோட்பாடுகளின் மாசுபாடுகளாலும் நிறைந்த, ஒரு சதுப்பு நிலத் தண்ணீராக மாற்ற நீங்கள் எப்படி விரும்புகிறீர்கள், தேவன், “அவருடைய வார்த்தையோடு ஒன்றைக் கூட்டுதல், அல்லது அவருடைய வார்த்தைகளில் ஒன்றை எடுத்துப் போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்” என்று கூறினாரே? 136 ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த வார்த்தையை ரூபகாரப்படுத்துவதாக தேவன் வாக்குத்தத்தம் செய்தபோது, “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது,” ஏதோ ஒரு பழைய மன்னாவிலிருந்து, அநேக ஆண்டுகளாக மாசுபடுத்தப்பட்ட ஏதோ ஒரு முறைமையான விசைக் குழாயை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும்? ஒரு வேளை மன்னா சரியாக இருந்திருக்கலாம், அதற்கு விரோதமாக ஒன்றுமில்லை, மார்டின் லூத்தரின் நாட்களிலும், இந்த நாட்களிலும், அதன் நாட்களிலும், மற்ற சீர்திருத்தக்காரர்களின் நாட்களிலும், அதைக் குறித்து ஒன்றுமேயில்லை; ஆனால் அது நீண்ட காலத்திற்கு முன்பே விழுந்த மன்னாவாகும். 137 நாம் வேதாகமத்தில் கவனிப்போமேயானால், அவர்கள் ஒவ்வொரு நாளும் அதை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அவர்கள் புதியதாக பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. அது கொஞ்சம் பழமையான பிறகு, அது அழுகிப் போனது. அது உடைந்து போகாமல் அழுக முடியாது. அதை அழுகிப்போகச் செய்ய அதில் நுண்ணுயரிகள் அல்லது ஏதோ இருக்க வேண்டும். அது அவ்வண்ணமாகவே உள்ளது என்பதை நாம் அறிவோம். 138 முறைமைகளும் அவ்வண்ணமே! அது ஒரு மகத்தான எழுப்புதலிலிருந்து மற்றொன்றுக்கு அங்கே கிடந்து, அது மாசுபடுத்தப்பட்டு, பிழைகள் நிறைந்ததாகி, நாங்கள் வழக்கமாக அழைக்கிறபடி, சிறிய வால்கள் நிறைந்த ஒரு தொட்டியைப் போல, அங்கே சிறிய பூச்சிகள் நீண்ட காலமாக நெளிந்து கொண்டிருந்தன.

57139 இன்றைக்கு அநேகருடைய அனுபவத்தோடுள்ள காரியமும் அதுதான். அவைகள்—அவைகள் நெளியும் வால்கொண்ட கிருமிகளால் முழுவதுமாக நிறைந்து, ஒன்றிலிருந்து ஒன்றிற்கு நெளிந்து, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு, அதில் உண்மையே இல்லாத கதைகளை கூறுகின்றன. அது உண்மை, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நெளிந்து செல்கின்றன. “நான் ஒரு மெத்தோடிஸ்டு; நான் பாப்டிஸ்டில் சேர்ந்தேன். நான் ஒரு கத்தோலிக்கன்; நான் இப்படி இருக்கப் போனேன். நான் அவ்விதமாக இருக்கவே சென்றேன்.” அவை அசைந்து செல்லும் வால்களாகும். 140 ஓ, முழு காரியத்தையும் மறந்துவிட்டு, ஊற்றண்டை வாருங்கள் (ஆமென்!), என்றென்றும் ஜீவிக்கிற கிறிஸ்துவின் பிரசன்னமாகிய ஆர்ட்டீசியன் ஊற்று! அவர் வற்றாத ஜீவ ஊற்றாய் இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அவரிடத்திலிருந்து அதிகமாக அதைப் பெற்றுக் கொள்ள, மேலும் அது புத்துணர்ச்சியடைகிறது, மேலும் அது குளிர்ந்து போகிறது, மேலும் அது சிறந்ததாகிறது, மேலும் அது இனிமையாக ருசிக்கிறது. நான் இப்பொழுது முப்பத்தி மூன்று வருடங்களாக அவரை சேவித்துக் கொண்டிருக்கிறேன், ஒவ்வொரு நாளும் அதற்கு முந்தின நாளைக் காட்டிலும் இனிமையாக வளர்ந்து வருகிறது. நான் ஒருபோதும்…இந்தத் தண்ணீரை நாம் பருகினால் நீங்கள் ஒருபோதும் தாகமடையமாட்டீர்கள் என்று அவர் கூறினார். அது எவ்வளவு மகத்தானது என்பதை கவனியுங்கள். ஓ! 141 இன்றைக்கு அநேகர் செய்வதுபோலவே இஸ்ரவேலர் செய்தனர், அவர்கள் ஜீவத் தண்ணீர் ஊற்றுகளை விட்டுவிட்டு, தாங்களாகவே தொட்டிகளைத் தோண்டுகிறார்கள்.

58142 இப்பொழுது தேவனுடைய கிருபை என்ன என்பதைக்க் குறித்து, சற்று நேரம் பேசுகிறோம். நாம் சட்டங்களையும், துணை விதிகளையும் உடையவர்களாயிருக்கிறோம், “நீங்கள் இந்த நியமத்திற்கேற்றபடி அளக்கவில்லையென்றால்…நான் மார்க்க சம்பந்தமான ஒரு அளவுகோலை வைத்திருக்கிறேன்; நீங்கள் சரியாக அதை அளக்கவில்லையென்றால், நீங்கள் அளக்க வேண்டும், இல்லாவிடில் நீங்கள் உள்ளே வரமுடியாது” என்று கூறலாம். ஆனால் தேவன் கிருபையினால் நம்மை இரட்சிக்கிறார், ஒரு அளவுகோலினால் அல்ல. பார்த்தீர்களா? ஆனால் தேவனோ இப்பொழுது கிருபையைக் குறித்து பேசுகிறார், எப்படி இது சம்பவித்தது, இந்த அளவுகோலிலிருந்து, அவரிடத்திலிருந்து பானம்பண்ணுதல்… 143 முறுமுறுத்தல், இஸ்ரவேலர் முறுமுறுத்தல். கவனியுங்கள், அவர், “நான் மறுபடியும் உங்களை சந்திப்பேன்” என்றார். வேதத்தில் கவனியுங்கள். கவனியுங்கள், அவர் அவர்களை மீண்டும் சந்திக்கும்படி சோதிக்கப்போகிறார். இஸ்ரவேலர் சிவந்த சமுத்திரத்தண்டையிலே, முறுமுறுத்துக் கொண்டிருந்தனர், ஒரு சுயாதீனமான ஜனமாயிருக்க, தேங்கின எகிப்தியரின் தண்ணீரினூடாக அவரைப் பின்பற்றும்படி அழைக்கப்பட்டனர். அவர்கள் அடிமைகளாயிருந்தனர். அவர்கள் அவரோடு ஒரு சுயாதீன ஜனமாக இருக்கும்படி அழைக்கப்பட்டனர். சவக்கடல், சவக்கடல் வழியாக வெளியே வாருங்கள்; சிவந்த சமுத்திரம், சரியாகக் கூறினால், அதன் வழியாக வெளியே வந்து, ஒரு வனாந்திரத்திற்குள் பிரவேசிக்க, விருத்தசேதனம் இல்லாமல், ஆள்மாறாட்டம் செய்ய முயற்சிப்பவர்களுக்கும், ஆள்மாறாட்டம் செய்கிறவர்களுக்கும் இடையே ஒரு பிரிவினைக் கொண்டு வருவதற்காகவே.

59144 ஓ, அதுதான் தொல்லைக்குக் காரணமாயிருந்தது. பார்வோனும் அவனுடைய சேனையும், அவர்கள் ஒவ்வொருவரும் மன…இல்லை சமுத்திரத்தில் அழிந்துபோயினர். மானிட வர்க்கம் இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையினால் நடப்பதை அவர்கள் கண்டனர், எனவே அவர்கள், ஆசீர்வாதத்தில் சேர்க்கப்படாமல், பின்தொடர்ந்து வந்து அதை பாவனை செய்ய முயன்றனர், அவர்கள் அதைச் செய்தபோது, அவர்கள் அழிந்து போனார்கள். அது மாம்சபிரகாரமான ஒப்பீடு. 145 அதைச் செய்ய முயற்சிக்கும் ஒரு மனிதன், ஏதோ ஒன்றை ஆள்மாறாட்டம் செய்ய முயற்சிக்கும்போது, அப்பொழுது அவன் ஒரு உண்மையான கிறிஸ்தவனை மாம்சப்பிரகாரமாக ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

60146 அங்குள்ள என்னுடைய இந்திய சகோதரனுக்கு அது தெரியும். பம்பாயைச் சுற்றி வந்தால், அங்குள்ள ஜனங்களை நீங்கள் காண்பீர்கள், இந்துக்கள் கூர்முனைகொண்ட ஆணியின்மேல் படுத்துக்கொண்டு,…கண்ணாடியின் மேல் நடந்து, அக்கினியின் மேல் நடந்து, அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பிக்க… அது அங்கே காட்டில் உள்ள ஒரு மனிதனின் மாம்சபிரகாரமான ஆள்மாறாட்டங்கள், தன்னுடைய தெய்வத்திற்காக ஒரு தியாகத்தை செய்துகொண்டிருப்பதாகும். 147 எல்லா மதசம்பந்தமான வாழ்க்கைக்கு மத்தியிலும், மாம்சபிரகாரமான ஆள்மாறாட்டங்கள், யாரோ ஒருவர் மற்றவரைப் போல இருக்க முயற்சிப்பதை நாம் கண்டறிகிறோம். வார்த்தையாயிருந்த இயேசு கிறிஸ்துவைப் போல நீங்கள் இருக்க வேண்டுமென்ற ஒரே ஒரு உதாரணம் மாத்திரமே உண்டு. அப்பொழுது தேவனுடைய வார்த்தை உங்களிடத்தில் வரும்போது, அது அதேவிதமாகவே இருக்கும்.

61148 ஆனால் தேவன் அவர்களை எப்படியோ வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழி நடத்திச் சென்றார். அவர்கள் தங்களுடைய யாத்திரையில் வனாந்திரத்தினூடாக புறப்பட்டுச் சென்றபோது, அவர்கள் ஒவ்வொரு தொட்டியையும் கண்டனர், அவர்கள் பிரிந்த பிறகு, ஒவ்வொரு தொட்டியும் அவர்களுக்கு வறண்டு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். 149 சகோதரனே, நீங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் இந்த பயணத்தை துவங்கும்போது, நீங்களும் அதே காரியத்தைக் காண்பீர்கள். கதவுகள் மூடப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். அந்த சிறிய பிரசங்கியார் ஒரு ஆங்கிலிகன் அல்லது என்னவாயிருந்தாலும் அவன் கூறினது போன்றே, முதலாவதாக நீங்கள் அறிவீர்கள், அவனுடைய சபை அவனை புறம்பே தள்ளிவிட்டது. பாருங்கள், அவன் இருந்த வரை அநேகர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர், அதுவே அதன் முடிவாயிருந்தது.

62150 நாம்…இஸ்ரவேலர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு தங்களுடைய பயணத்தில் உதாரணங்களாக அதே காரியத்தைக் கண்டனர். தொட்டிகள் யாவும் வறண்டு போயிருந்தன. ஆம், அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தைக்கு கீழ்படிந்த அவர்களுடைய பயணத்தில், அவர்களுடைய பயணத்தில், தொட்டிகள், வறண்டு போனதை அவர்கள் கண்டனர். இப்பொழுது அவர்கள் பயணத்திற்காக, தொட்டி—தொட்டிகளை சார்ந்திருக்க முடியாது என்பதை அவர்கள் கண்டறிந்தனர். 151 நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து பிரயாணம் செய்யப் போவதாயிருந்தால், இதையும், அதையும் சேர முயற்சித்தால், அதை ஆதரிக்கும் ஒரு தொட்டி கூட உலகில் இல்லை என்பதை நீங்கள் கண்டறியப் போகிறீர்கள். இல்லவே இல்லை. நீங்கள் ஒரு தனிப்பட்ட நபர். தேவன் உங்களை வழி நடத்த விரும்புகிற விதமாகவே உங்களை வழிநடத்துகிறார். அதன்பின்னர், இன்றைக்கும் அதே காரியத்தை நாம் கண்டிருக்கிறோம், எல்லா தொட்டிகளும் வறண்டுவிட்டன.

63152 ஆனால் வாக்குத்தத்தம், தம்முடைய ஜனங்களுக்கு தம்முடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்ளும் தேவனுக்கு எப்பொழுதுமே உண்மையாயிருக்கிறது. அவர்களுக்கு தேவையாயிருந்த எல்லாவற்றையும் அளிப்பதாக அவர் வாக்குப்பண்ணினார், எனவே அவர் அதைச் செய்தார். வெறுமையான, வறண்ட தொட்டிகளுக்கு மத்தியில், அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள்; இஸ்ரவேலர் வனாந்திரத்தில் முறையிட்டுக் கொண்டிருந்தனர். அவர் தம்முடைய ஊழியக்காரன்-தலைவர் தீர்க்கதரிசி மோசேயை ஒரு பக்கமாக அழைத்து, அவருடைய விசுவாசிகளான பிள்ளைகள் அழிந்துபோகாதபடிக்கு, அடிக்கப்பட்ட கன்மலையண்டையிலே ஜீவத்தண்ணீரின் ஊற்றைத் திறந்து கொடுத்தார். 153 இந்நாளில், அது எனக்கு கிருபையைக் குறித்து பேசுகிறது. நாம் தகுதியற்றவர்கள். நாம் அந்தவிதமாக செய்திருக்கிறபடியால், நாம் அந்தவிதமாக வாழ்ந்திருக்கிறபடியால், நாம் தகுதியற்றவர்களாயிருக்கிறோம். 154 ஆனால் தேவனே, இந்தக் காலையில் இங்கே, பாருங்கள், இந்த நாளில், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கர், மற்றும் எல்லோருக்கும், அவர் ஒரு ஊற்றைத் திறந்திருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை எபிரெயர் 13 நிரூபிக்கிறது. எனவே அது—அது உண்மையாகிறது, யோவான் 3:16, “ஏனெனில், தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன், எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” 155 இரண்டு நோக்கங்களுக்காக அது உயர்த்தப்பட்டது, ஜனங்கள் முறுமுறுத்து பாவம் செய்துகொண்டிருந்த காரணத்தால், அவர்கள் பாம்புகளால் கடிக்கப்பட்டு மரித்துக் கொண்டிருந்தனர்; அவர்களுடைய பாவ மன்னிப்புக்காகவும், அவர்களுடைய சுகவீனத்தை சுகப்படுத்துதலுக்காவுமே. 156 இன்றைக்கு நம்முடைய இரட்சிப்பிற்காகவும், நம்முடைய சுகமளித்தலுக்காகவும், சரீரப்பிரகாரமான சுகமளித்தலுக்காகவும் திறக்கப்பட்ட அதே ஊற்றுதான். “ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.”

64157 வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தையினால் அடிக்கப்பட்ட அந்த கன்மலை கட்டளையிட்டபோது, அது தூய சுத்தமான தண்ணீரைப் பொழிந்து கொண்டிருந்தது; தேக்கமடையாமல், மாசுபடுத்தப்பட்டதல்ல, ஆனால் தேவனுடைய சொந்த பிரசன்னம். சுத்தமான தண்ணீர், அது குடித்த யாவரையும் காப்பாற்றினது. இப்பொழுது அது உண்மை என்பதை நாம் அறிவோம், ஏனென்றால் நாம் அதை பழைய ஏற்பாட்டில் ஒரு மாதிரியாக வாசிக்கிறோம். 158 இப்பொழுது, நீங்கள் அதை இழுத்து, அதை உந்தித்தள்ள, அதனுடன் சேர்ந்து, அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேதாகமப் பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை. அங்கே அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள், பாருங்கள், “ஓ, பாருங்கள், நீங்கள், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தால், நாங்கள் அதை விசுவாசிக்கிறோம், ஆனால் நீங்கள்—நீங்கள் அதை இந்தவிதமாகச் செய்யுங்கள்.” 159 ஆனால், நீங்கள் பாருங்கள், அதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பயன்படுத்துகிறதில்லை; பரிசுத்த ஆவியானவர் உங்களை உபயோகிக்கிறார், பாருங்கள். பாருங்கள், நீங்கள் பரிசுத்த ஆவியை உபயோகிக்கிறதில்லை. பரிசுத்த ஆவியானவர் உங்களை ஆட்கொண்டார். ஒரு வரம் என்பது நீங்கள் ஒரு கத்தியை எடுத்து, ஒரு பென்சிலை அதைக் கொண்டு கூர்மைப்படுத்துவது போல அல்ல. அது உங்களை தேவனுக்கு சமர்ப்பித்து, பரிசுத்த ஆவியானவர் உங்களை உபயோகிக்கும்படியாக உங்களை வழியிலிருந்து விலக்கிக் கொள்வதாகும்.

65160 கவனியுங்கள், அவர்கள் அதை ஒருபோதும் இறைக்கவோ அல்லது அதை இழுக்கவோ வேண்டியதில்லை, அல்லது அவர்கள், “இப்பொழுது இந்த தண்ணீரை நாம் எப்படி உபயோகிப்பது?” என்று ஒருபோதும் கேட்க வேண்டியதில்லை. ஏனென்றால் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் தாகமாயிருந்தனர். அதனோடு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 161 எனவே ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ, என்னவாயிருந்தாலும், அவன் எந்த கோட்பாட்டையோ அல்லது ஸ்தாபனத்தையோ சார்ந்திருந்தாலும். அவன் தேவனுக்காக தாகமாயிருந்தால், அவன் இந்த ஆங்கிலிகன் சகோதரன் செய்தது போல, அல்லது நேற்றிரவு, பிரிட்டிஷ் சகோதரன், ஆங்கிலிகன் சபைக்கு திரும்பிச் சென்று, அந்நிய பாஷைகளில் பேசுதல், அவன் பெற்றுள்ள இந்த மகத்தான வரத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்றும், அவன் இதை எப்படி செய்ய வேண்டும் என்றும் கேட்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் முதலாவதாக, அவனை வெளியே உதைத்துத் தள்ளுவார்கள். பார்த்தீர்களா? அவன் தாகமாயிருந்தான், எனவே தேவன் அவனை நிரப்பினார். அவ்வளவுதான். அது தாகமாயுள்ளது, அப்பொழுது அவர் அதை நிரப்புகிறார். 162 நீங்கள் எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டியதில்லை, அதனோடு என்ன செய்ய வேண்டும் என்று யாரோ ஒருவர் உங்களுக்குக் கூற வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறவிதமாகவே தேவன் ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் வழிநடத்துகிறார். நீங்கள் ஒரு தனிப்பட்ட நபர், நீங்களே. நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாயிருக்கிறீர்கள். உங்களுடைய இடத்தை யாரும் எடுக்க முடியாது. யாரிடமாவது செல்ல வழியேக் கிடையாது, நான் “அதைக் கொண்டு இதைச் செய்ய வேண்டும்” அல்லது நான் “அதைக் கொண்டு அதைச் செய்ய வேண்டும்” என்று கூறலாம். இல்லை ஐயா. தேவன் அதை அவர் விரும்பும் விதமாகவே—அந்தவிதமாக உபயோகிக்கிறார். நீங்கள் தாகமாயிருக்கும்போது, நீங்கள் பருகுவதற்கு போதுமான அளவு அறிந்திருக்கிறீர்கள்.

66163 இந்தக் காலையில் நீங்கள் தாகமாயிருந்தால், அதிலிருந்து பானம்பண்ணுங்கள், நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான். தேவன் அவர்களுடைய தாகத்திற்கு ஒரு வழியை அளித்திருந்தார், தாகமாயுள்ள பிள்ளைகள் தம்மில் இலவச பங்கெடுக்கும்படியாக. இந்த காலையில் பசியாயும், தாகமாயுமிருக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும், ஸ்திரீக்கும் தேவன் ஒரு வழியை அருளியிருக்கிறார். ஒருக்கால் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற ஜனங்கள் ஒருபோதும் இரட்சிக்கப்படாதிருக்கலாம். இரட்சிக்கப்படும் தருவாயில் உள்ள ஜனங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். 164 இங்கே சபை அங்கத்தினர்களாக அமர்ந்துள்ள ஜனங்கள், நீங்கள் சரியானதை செய்ய விரும்புகிறீர்கள், ஆனால் நீங்கள் ஒரு தொட்டியிலிருந்து குடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் இந்த சத்தியங்களை உங்களுக்கு ஒருபோதும் கூறமாட்டார்கள். 165 வரவேண்டிய ஒரே காரியம், தேவனுடைய வாக்குத்தத்தத்தை எடுத்துக்கொண்டு, அந்த ஊற்றண்டை வருவதேயாகும், அப்பொழுது அவர் தாகத்தை தணிப்பார். “இந்த ஊற்றிலிருந்து பானம்பண்ணுகிறவனுக்கு இனி ஒருபோதும் தாகமுண்டாகாது.”

67166 இப்பொழுது கவனியுங்கள், இந்த தண்ணீரை கிருபையினால் பெற்றுக்கொண்ட அவருடைய—தம்முடையவர்களை அவர் எப்படி—எப்படி விடுவித்தார், ஒரு கல்வி முறையின் மூலமாகவோ அல்லது ஒரு கல்வித் தொட்டியின் மூலமாகவோ அல்ல. அவர் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்துகிறார், அது ஜீவனை அளிக்கும் ஆதாரமாக இருக்கிறது. நீங்கள் அந்த வார்த்தையையும், அவருடைய தண்ணீரையும், நீங்கள் ஜீவனைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று இங்குள்ள எத்தனை பேருக்குத் தெரியும்? 167 உதாரணமாக, நாம் மற்றுமொரு அல்லது இரண்டு உதாரணங்களை எடுத்துக்கொள்வோம், அதன்பின்னர் நான் இன்னும் சிறிது நேரத்தில் முடிக்கப் போகிறேன். நான்—நான் அந்த பொத்தானை எங்காவது வைத்திருக்க வேண்டும். ஆனால் கவனியுங்கள். நான் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கிறேன், ஆனால் நான் அதைச் செய்ய வேண்டுமென்று கருதவில்லை. பாருங்கள், நாம் இரண்டு நபர்களை, ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோமாக.

68168 நாம் யாக்கோபின் தொட்டியிலிருந்த அந்த ஸ்திரீயை ஒரு ஆழ் கிணற்றண்டை அழைத்துச் செல்வோம். அவள் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தாள். அந்த ஸ்திரீக்கு தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான், அவள் தண்ணீர் எடுக்க வந்த இந்த தொட்டியண்டையிருந்தாள். அப்பொழுது அங்கே அந்த அகல் பரப்புக் காட்சியில், அவள் கிணற்றிற்கு எதிரேயிருந்த அந்த சிறு கட்டிடத்தில் அங்கே ஒரு யூதன், ஒரு மனிதன் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அவள் ஒரு சமாரியராயிருந்தாள், அது ஒரு சீகார் பட்டணம். இந்த மனிதன், இந்த யூதன் வழக்கத்திற்கு மாறான வார்த்தையை இந்த ஸ்திரீயினிடத்தில் பேசியதை நாம் காண்கிறோம், “எனக்குத் தண்ணீர் கொண்டு வா” என்றார் என்று நாம் கண்டறிகிறோம். 169 அவள் இப்பொழுது, “எங்களுக்கு பிரிவினை உண்டு. அப்படிப்பட்ட ஒரு கேள்வியை நீர் என்னிடம் கேட்பது சரியல்ல—சரியல்ல; நீர் ஒரு யூதனாயிருக்கிறீர், நான் ஒரு சமாரியன்” என்றாள். 170 அவர், “ஆனால் நீ யாரிடத்தில் பேசிக்கொண்டிருந்தாய் என்பதை அறிந்திருந்தாயானால், நீயே என்னிடத்தில் குடிக்கக் கேட்டிருப்பாய், நான் உனக்குத் தண்ணீர் தருவேன், நீ இந்த தொட்டியண்டை வந்து அதை பருக வேண்டியதில்லை; அது உங்களுக்குள்ளே கொப்பளிக்கும் ஒரு நீரூற்றாய் இருக்கும்” என்றார். இது சத்தியம் என்று நீரூபிக்கப்பட்டதை அவள் கண்டபோது கவனியுங்கள்!

69171 இப்பொழுது, முதலாவது, எந்த மனிதனும் அதைக் கூறியிருக்க முடியும். ஆனால் அவளோ, “நீங்கள் எருசலேமில் தொழுதுகொள்ளுகிறீர்கள் என்றும், நாங்கள் இந்த மலையில் தொழுதுகொள்ளுகிறோம் என்றும் கூறுகிறீர்கள்” என்றாள். 172 அவர், “இரட்சிப்பு யூதர்களுடையது. நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்பதை நாம் அறிவோம். ஆனால்,” என்று கூறி, “நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூறட்டும்,” இந்தவிதமான வார்த்தைகளில் கூறினால், “இந்த மலையிலோ அல்லது எருசலேமிலோ அல்ல. மனுஷன் ஆவியோடும், உண்மையோடும் தேவனைத் தொழுதுகொள்ளும் காலம் வருகிறது, பிதா இப்படிப்பட்டவர்களைத் தேடுகிறார்” என்றார். அவர், “போய் உன்னுடைய புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். கவனியுங்கள், இங்கே அது அதை நிரூபித்துள்ளது. அவள் எந்த ஊற்றில் இருந்தாள் என்பதை இங்கே காண்பிக்கிறது. “போய் உன்னுடைய புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். அவள், “எனக்கு புருஷன் இல்லை” என்றாள். 173 அதற்கு அவர், “நீ கூறினது உண்மையே” என்றார். பாருங்கள், அவர் அவளிடத்தில் கேட்டுக்கொண்டதற்கும், “போய் உன்னுடைய புருஷனை அழைத்துக் கொண்டு வா” என்று கூறினதற்கும் அது ஒரு அப்பட்டமான முரண்பாடாய் காணப்பட்டது. “எனக்கு புருஷன் இல்லை” என்றாள். 174 அதற்கு அவர், “நீர் கூறினது உண்மையே” என்றார். “ஏனென்றால் உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தனர், இப்பொழுது நீ வாழ்ந்து கொண்டிருக்கிறவன் உன்னுடையவன் அல்ல” என்றார்.

70175 அந்த ஸ்திரீ அக்காலத்திலிருந்த ஆசாரியர்களிடமிருந்து எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறாள் என்பதைக் கவனியுங்கள்! அக்காலத்திலிருந்த ஆசாரியர்களும் அதேக் காரியம் சம்பவிப்பதைக் கண்டு, “அது ஒரு பிசாசு, ஒரு மனோத்தத்துவம் அல்லது—இல்லை ஒரு பெயல்செபூல்” என்றனர். பாருங்கள், வார்த்தை அதை வாக்குத்தத்தம் செய்ததை அவர்கள் காணத் தவறினர். 176 ஆனால் அந்த சிறிய ஸ்திரீ எந்த ஆசாரியரைக் காட்டிலும் வேதத்தை நன்கு அறிந்திருந்தாள். அவள், “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். மல்கியா முதற்கொண்டே எங்களுக்கு நானூறு வருடங்களாக ஒரு தீர்க்கதரிசி கூட இல்லை. ஆனால்,” என்று கூறி, “நாங்கள் ஒருவரை எதிர்நோக்கியிருக்கிறோம், மேசியா ஒருவர் வருகிறார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர் வரும்போது, அவர் இதைத்தான் செய்வார்” என்றாள். இயேசு, “நானே அவர்” என்றார். ஆமென். 177 நீங்கள் கவனித்தீர்களா, அவள் தன்னுடைய வாளியை யாக்கோபின் நீர்த்தேக்கத் தொட்டியில் விட்டுவிட்டு, நகரத்திற்குள் ஓடினாள்; முழுமையான ஆர்ட்டீசியன் ஊற்று! அது பரிபூரணமாக ரூபகாரப்படுத்தப்பட்டதை அவள் கண்டிருந்தாள், அவரே அந்த ஜீவ ஊற்றாயிருந்தார். நான் அவளை உங்களுக்கு அறிமுகப்படுத்தட்டும். அவர் ஜீவ வார்த்தையாக நிரூபிக்கப்பட்டபோதே; அவள் அதை விட்டுவிட்டாள். அவள் அதை விட்டுவிட்டாள்; வனாந்திரத்தில் அடிக்கப்பட்ட, அதேக் கன்மலை அப்பொழுது இருந்ததாக, நிரூபிக்கப்பட்டதைக் கண்டறிந்தாள்.

71178 நாம் அதிகப்படியாக பேசிக்கொண்டிருக்கிற, கடந்த நாட்களில் இருந்த அதே தேவன், அவர் இப்பொழுது இங்கே பிரசன்னமாயிருக்கிறார் என்று நான் கூறட்டும்; ஏதோ ஒரு வேத சாஸ்திர புரிந்துகொள்ளுதலினால் அல்ல, ஆனால் அவருடைய ரூபகாரப்படுத்துதலைக் குறித்த ஒரு தனிப்பட்ட அறிவினால் இந்த கடைசி நாட்களில் அவர் தம்முடைய சபையின் மேல் பரிசுத்த ஆவியை பொழியச் செய்வார். அவர் “நான் இருந்தேன்” என்பதல்ல. அவர் இன்னமும் “இருக்கிறேன்,” நிகழ்காலமாக, எப்பொழுதும் இருக்கிறார். 179 அப்பொழுது அந்தத் தொட்டி அதனுடைய ருசியை இழந்துவிட்டது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் தேவனுடைய வல்லமைக்குள் விழுகிற ஒவ்வொரு மனிதனுக்கும் அவ்வாறே செய்கின்றது, ஸ்தாபன முறைமைகள் தங்களுடைய சுவையை இழக்கின்றன. தேக்கமடைந்துள்ள தவளைகள், பல்லிகள், பூச்சிகள் போன்றவற்றை நீங்கள் இனிமேல் விரும்பமாட்டீர்கள். நீங்கள் உங்களுடைய ஆத்துமாவில் ஒவ்வொரு மணி நேரமும் புதியதாக தேவனுடைய வார்த்தையை, தூய்மையான, புதிய ஒரு ஊற்றிலிருந்து குடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுதும் அதே விதமாகவே, வார்த்தை சத்தியம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கும்போது, அது சரியில்லையா என்று ருசித்துப் பாருங்கள். 180 நீர்த்தேக்கத் தொட்டி தன்னுடைய காலத்தில் நன்கு உபயோகிக்கப்பட்டிருந்தபோதிலும்; ஆனால், நீங்கள் பாருங்கள், அங்கே ஜீவ ஊற்று இருந்ததால், ஆவிக்குரியப்பிரகாரமாக குடிப்பதற்காக, யாக்கோபின் கிணறு உபயோகப்படவில்லை. அவர்கள் அந்த கிணற்றிலிருந்து குடித்தால், சரியாயிருக்கும்; ஆனால் இப்பொழுது ஜீவ ஊற்று தாமே அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார்.

72181 இப்பொழுது நாம் பெற்றுள்ள முறைமைகளும், ஸ்தாபன அமைப்புகளும் நமக்குத் தேவையில்லை. நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். தேவன் இந்த கடைசி காலத்தில் அவர் செய்யப் போவதாக வாக்களித்துள்ளார். வார்த்தையின்படி அது நிறைவேறுவதை நாம் காண்கிறோம். இராணுவ பலம் வாய்ந்த ஒரு மனிதன் எழுந்து நின்று, நடுங்கிக் கொண்டு, அவர்கள், “ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகிறது” என்று கூறுவதை நாம் கேட்கிறோம். ஏதோ ஒன்று சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்று பரிசுத்த ஆவியானவர் நம்மை எச்சரிப்பதை நாம் உணருகிறோம். ஒவ்வொரு காரியமும் ஒழுங்கில் அமைந்திருப்பதை நாம் காண்கிறோம். ஆதலால் அந்த முறைமையை விட்டுவிட்டு ஊற்றண்டைக்கு வாருங்கள். ஆம், ஐயா. 182 அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றினது, ஆனால் இப்பொழுதோ அவள் ஊற்றையே முகமுகமாய் பார்த்தாள்.

73183 யோவான் 7:37-38-ல், இயேசு கூடாரப் பண்டிகையின் கடைசி நாட்களில் கூறினார் (அவர் என்ன கூறினார்?), “ஒருவன் தாகமாயிருந்தால், அவன் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.” சரியாக ஒரு கூட்ட வேதபண்டிதர்களின் மத்தியிலே! “ஒருவன் தாகமாயிருந்தால், அவன் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். அவனுடைய உள்ளத்திலிருந்து ஜீவனுள்ள தண்ணீர் ஆறுகள் ஓடும் என்று வேதம் உரைத்துள்ளது” என்றார். 184 அங்கே ஜீவனுள்ள ஊற்று உள்ளது. அந்த ஊற்றைத்தான் இன்றைக்கு ஜனங்கள் கைவிட்டிருக்கின்றனர். ஏனெனில் கோட்பாட்டின்படி அவர்கள் ஜீவத்தண்ணீரின் ஊற்றை விட்டுவிட்டனர். அவரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தட்டும். அவர், எனக்கு…நான் முடிக்கப் போகிறேன். 185 அவரே, என்னைப் பொறுத்தவரையில், ஆகார் மற்றும் பிள்ளை வனாந்திரத்தில் மரித்துக் கொண்டிருந்தபோது, அவளுடைய ஜீவனை இரட்சித்த அந்த ஊற்று. 186 ஏசாயா 32-ல் அவர் அந்தக் கன்மலையாயிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன், அவர் ஒரு வறண்ட தேசத்தில் அந்தக் கன்மலையாயிருக்கிறார். அவர் புயல் காலத்தில் அடைக்கலமாயிருக்கிறார். 187 சகரியா 13-ல், அவரே தாவீதின் வீட்டில் பாவத்திற்காக திறந்த ஊற்றாயிருக்கிறார். அவர் அப்படித்தான் இருப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் விரும்பவில்லையா? 188 சங்கீதம் 36:9-ல் அவர் தாவீதின் ஜீவ ஊற்றாயிருக்கிறார். அவர் தாவீதின் அமர்ந்த தண்ணீர்களும், பசுமையான புல்லுள்ள இடங்களுமாயிருக்கிறார். தாவீதுக்காக, அவர் ஆற்றங்கரையிலுள்ள தண்ணீராயிருக்கிறார்.

74189 ஆதியாகமம் 17-ம் அதிகாரத்தில் அவர் ஆபிரகாமின் பாலூட்டும் மார்பகமாக, எல் ஷடாயாக இருக்கிறார். ஆனால் அவனுடைய ஜீவன் அவனை விட்டுப் போய்விட்டபோது, அவன் இன்னமும்…தேவன் கூறினார். 190 “நூறு வயது நிரம்பிய ஒரு மனிதனுக்கு இந்தக் காரியம் எப்படி இருக்கும்? எனக்கு வயதாகிவிட்டது, என் மனைவிக்கும் வயதாகிவிட்டதே, இந்தக் காரியங்கள் எப்படி இருக்க முடியும்?” 191 அவர், “நான் எல் ஷடாய்” என்றார். இப்பொழுது, எல் என்பது “இந்த” என்றும், ஷடாய் என்பது “மார்பகம்” என்றும், ஷடாய் என்பது பன்மையாகும், அது “மார்பகங்கொண்ட தேவன்” என்று பொருள்படுகிறது. 192 ஒரு குழந்தை சுகவீனமாயிருந்து, வேதனைப்பட்டு, அதனுடைய பெலன் அதிலிருந்து போய்விட்டது போல, தாயினுடைய மார்பின் மேல் சாய்ந்து, அதனுடைய பெலனை பின்னால் போஷிக்க வேண்டும். நிச்சயமாக. அது மட்டுமின்றி…அது பாலூட்டிக்கொண்டிருக்கும்போது, அது இனிமேல் வருத்தப்படுவதில்லை. தாயினுடைய மார்பகத்தில், அது தன்னுடைய பெலத்தைப் பெற்றுக்கொண்டிருக்கையில், அது திருப்தியடைகிறது. 193 தேவனுடைய வாக்குத்தத்தத்தை தன் இருதயத்தில் ஏற்றுக்கொண்ட எந்த மனிதனும், “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது,” அதற்கு எதிராக படுத்து, உங்களுடைய பெலனை பின்னாக போஷித்துக்கொள்ளுங்கள். குழப்பமுள்ள பிள்ளையே, அதை விசுவாசியுங்கள்! அது விசுவாசிகளுக்கானதாயுள்ளது.

75194 விசுவாச புலவனுக்கு, புலவர்கள் நம்மைக் கண்டறிந்த அநேக பாடல்களைக் குறித்து என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. அவர்களில் ஒருவர் ஒரு சமயம், அவர்: இரத்தத்தினால் நிறைந்த ஒரு ஊற்று உண்டு, இம்மானுவேலின் நரம்புகளிலிருந்து எடுக்கப்பட்டது, பாவிகள் வெள்ளத்தில் மூழ்கினபோது, தங்களுடைய எல்லா குற்றமுள்ள கறைகளையும் போக்குகின்றனர். அந்த மரிக்கும் கள்ளன் அதைக் கண்டு களிகூர்ந்தான் அவனுடைய நாளில் அந்த ஊற்று; நான் அவனைப் போல இழிவான வனாயிருந்தாலும், என்னுடைய எல்லா பாவங்களையும் கழுவும். அது முதற்கொண்டு நான் விசுவாசத்தினால் அந்த ஓடையைக் கண்டேன் உம்முடைய காயங்களிலிருந்து பாய்ந்தோடுகிற, மீட்பின் அன்பே என்னுடைய கருப்பொருளாக இருந்து வருகிறது, நான் மரிக்குமளவும் அவ்வாறே இருக்கும்.

76195 என்னைப் பொறுத்தவரையில், அவர் தீட்டுக்கழிக்கும் வார்த்தையின் ஜலமாயிருக்கிறார், அது அவருடைய வார்த்தைக்கு முரணாயிருக்கிற ஒவ்வொரு காரியத்திலிருந்தும் உங்களை பிரிக்கிறது. அந்த ஊற்றாக அவர் இருப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா. அதாவது, அது மனிதனால் உண்டாக்கப்பட்ட தொட்டிகளிலிருந்து, ஜீவத்தண்ணீரின் ஊற்றுக்கென்று என்னை பிரித்த தண்ணீராய் உள்ளது. ஓ, நண்பனே, என்னால்…அவர் நமக்கெனவுள்ள காரியங்களை நீங்கள் தொடர்ந்து கூறிக்கொண்டே போகலாம்! அவர் அல்பா, ஓமெகா. அவரே துவக்கம், அவரே முடிவு. அவர் இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர். அவர் தாவீதின் வேரும் சந்ததியுமாயிருக்கிறார். அவர் விடிவெள்ளி நட்சத்திரம். எல்லாவற்றிலும் அவரே என்னுடைய சகலமுமாயிருக்கிறார்.

77196 மேலும், சகோதரனே, சகோதரியே, நீங்கள் ஒரு—ஒரு…உங்களுடைய வாழ்நாள் முழுவதும், மனிதனால் உண்டாக்கப்பட்ட இந்த சிறிய தொட்டியிலிருந்து குடித்திருக்கவில்லையென்றால், ஏன் இந்தக் காலையில் அந்த குளத்தை விட்டுவிட்டு, இந்த ஊற்றண்டைக்கு வரக்கூடாது? 197 நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. உங்களுடைய தலைகள் வணங்கியிருப்பதோடு… [ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பாடத் துவங்குகிறாள். ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] …என்னுடைய கருத்துப்படி, பீட அழைப்பு. இப்பொழுது எத்தனை பேர்? 198 நான்—நான் முழுவதுமாக பதட்டமடைந்தேன், நான்—நான் உங்களை அதிக நேரம் வைத்திருந்தேன், எனவே நான் என்னுடைய செய்தியை துண்டு துண்டாக வெட்டினேன். ஆனால் நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன். பாருங்கள், இந்த நாளில் தேவனோடு சரிப்படுத்திக்கொள்வதைக் காட்டிலும் முக்கியமானது வேறொன்றுமில்லை; பாருங்கள், நம்முடைய இரவு உணவு, அது என்னவாயிருந்தாலும், என்னவாயிருந்தாலும் சரி. கர்த்தர் இங்கே இருக்கிறார். இப்பொழுது, இந்த நேரம் முதற்கொண்டு, நான் என் வாழ்க்கையில் ஏறக்குறைய ஒருமுறை மாத்திரமே அதைக் கேட்டிருக்கிறேன். 199 இப்பொழுது எப்படி…இங்குள்ள நீங்கள் எல்லோரும், “எத்தனை பேர்” என்றல்ல. அதிலிருந்து குடிக்க விரும்புகிற நீங்கள் யாவரும் ஜெபத்திற்காக அப்படியே ஒரு நிமிடம் எழுந்து நில்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

78200 இப்பொழுது இங்கு நின்று கொண்டிருக்கும் எத்தனைபேர், இந்தவிதமாக உயர்த்தப்பட்ட கரத்தினால், “தேவனே, என்னை நிரப்பும், இந்த ஊற்றிலிருந்து நான் பருகட்டும். நான் சரியானதைச் செய்திருக்கவில்லை, ஆனால் அதற்காக நீர் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான்—நான் விரும்புகிறேன். நீர் என்னுடைய பாவங்களைக் கழுவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இந்த நாள் முதற்கொண்டு…” என்று கூறுவீர்களா? சற்று பாருங்கள்! என்னே! இரத்தத்தினால் நிறைந்த ஒரு ஊற்று உண்டு, இம்மானுவேலின் நரம்புகளிலிருந்து எடுக்கப்பட்டது, பாவிகள் வெள்ளத்தில் மூழ்கினர், தங்களுடைய எல்லா குற்றமுள்ள கறைகளையும் போக்குகின்றனர். தங்களுடைய எல்லா குற்றமுள்ள கறைகளையும் போக்கிக்கொள்ள, தங்களுடைய எல்லா குற்றமுள்ள கறைகளையும் போக்குகின்றனர்; பாவிகள் வெள்ளத்தில் மூழ்கினர், தங்களுடைய எல்லா குற்றமுள்ள கறைகளையும் போக்குகின்றனர். 201 இப்பொழுது, ஒரு கிறிஸ்தவ விசுவாசியாகிய நீங்கள், கிறிஸ்துவை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, ஆனால் நீங்கள் இன்னும்…இப்பொழுது நீங்கள் பெற்றிருக்கவில்லையென்றால், அது ஊற்றாகும். இம்மானுவேலின் நரம்புகளிலிருந்து வந்த அந்த ஊற்றைக் குறித்து மாத்திரமே எனக்குத் தெரியும். இப்பொழுது, இங்குள்ள உங்களில் அநேகர்…

79202 அன்றொரு இரவு இந்த சிறிய கழுகு கோழிக் குஞ்சுகளோடு தொழுவத்தில் நடந்து சென்றதைக் குறித்து நான் பேசிக்கொண்டிருந்தது போன்றே இது உள்ளது. அதற்கு கோழிக்குஞ்சுகளைத் தவிர வேறொன்றும் தெரியாது, ஆனால் கோழிக் குஞ்சுகளிலிருந்து அதைக் குறித்த ஏதோ ஒன்று வித்தியாசமாயிருந்தது என்பதை அது அறிந்திருந்தது. அப்பொழுது அதனுடைய தாய் அதனை தேடி வந்தது, அது மேலிருந்து கூச்சலிட்டது. அது ஒரு கழுகின் அழைப்பாயிருந்தது. பாருங்கள், அது துவக்கத்திலேயே ஒரு கழுகாயிருக்க வேண்டியதாயிருந்தது, இல்லையென்றால் அது அந்த அழைப்பை ஒருபோதும் அடையாளம் கண்டுகொண்டிருக்காது. பாருங்கள், அவர்… 203 அங்கே ஏதோ ஒன்று முளைப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், இல்லையென்றால் அது ஒருபோதும் ஜீவனை உற்பத்தி செய்ய முடியாது. தேவனுடைய வார்த்தையாகிய வித்து உங்களுக்குள் இருக்குமானால், பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது இங்கே அதை முளைப்பித்து, அதை உங்களுக்கு ஒரு நிஜத்திற்குக் கொண்டு வருகிறார்.

80204 பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமலிருக்கிற இங்குள்ள எத்தனைபேர், நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? சுற்றிலும், எல்லா இடங்களிலும், உண்மையான நேர்மையானவர், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லையென்றால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லையென்றால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும், அப்படியே ஒரு நிமிடம், உங்களுடைய கரத்தை உயர்த்தியிருங்கள். 205 இப்பொழுது நான் விரும்புகிறேன், நீங்கள் சுற்றி நின்று அவர்களை நோக்கிப் பார்க்கிறீர்கள், யாராவது உங்களுடைய கரங்களை அவர்கள் மேல் வைக்க நான் விரும்புகிறேன். 206 பரிசுத்த ஆவி வேண்டுமென்கிற உங்கள் ஒவ்வொருவரையும் இப்பொழுதே நிரப்புவார் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது உணவு விடுதியில் உள்ள உணவைக் குறித்து நினைக்க வேண்டாம். நாம் இங்கே இந்த ஆகாரத்தைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போமாக. இந்த ஒருவரே. இதுதான் ஜீவன். பாருங்கள், இதுதான் ஜீவன். 207 இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் திரும்பி ஒருவர் மேல் ஒருவர் கரங்களை வையுங்கள். “அவர்கள் தங்கள் கைகளை அவர்கள் மேல் வைத்தனர்!” இப்பொழுது உங்களுடைய கரத்தில் உள்ள அந்த நபருக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்… 208 இப்பொழுது வெளியே செல்வதைக் குறித்து நினைக்க வேண்டாம். வேறெதைக் குறித்தும் நினைக்க வேண்டாம். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இங்கே ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் நிரப்புகிறார் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய இருதயத்தைத் திறந்து, தொட்டியிலுள்ள தண்ணீரையெல்லாம் வெளியே தள்ளிவிட்டு, “ஜீவ ஊற்றே, எனக்குள்ளாக வாரும். தேவனாகிய கர்த்தாவே, உமது நன்மையினாலும், இரக்கத்தினாலும் என்னை நிரப்பும்” என்று கூறுங்கள்.

81209 கர்த்தராகிய இயேசுவே, அந்த வற்றாத ஊற்றே! தேவனே, நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் நிரப்ப வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் இங்கே விழுவாராக. தேவனே, நாங்கள் மற்ற எந்தக் காரியத்தைக் குறித்தும் எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும் என்று, நான் ஜெபிக்கிறேன்; பரிசுத்த ஆவியானவர் எங்கள் மத்தியில், இப்பொழுது, ஜீவத்தண்ணீரை இலவசமாக, எல்லாவிடங்களிலிருந்தும், எங்களுக்குத் தாரும். ஓ தேவனே, அதை அருளும். கர்த்தாவே, தொடர் ஜெபமும் பாடலும் ஒன்றோடொன்று, இணைந்திருக்கையில், அது உம்முடைய பிரசன்னம், உம்முடைய தெய்வீக பிரசன்னம் என்பதை அறிந்திருக்கிறோம். நாங்கள் ஊற்றண்டைக்கு வர விரும்புகிறோம். எங்களுக்கு உண்மையான, அசலான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வேண்டும். கர்த்தாவே, இந்த ஜனங்கள் அதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது இந்த சரியான தருணத்தில், அவர்கள் இந்த தேவனுடைய நன்மையினால் நிரப்பப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஓ தேவனே, அதை அருளும். உம்முடைய பிள்ளைகளின் ஜெபத்திற்கு செவிகொடும். நீர் அவர்களுடைய சரீரத்தின் மேல் வருவீராக, தேவனுடைய வல்லமையும், பரிசுத்த ஆவியும் அவர்கள் மேல் வியாபிப்பதாக. தேவனே, அதை அருளும். 210 ஓ, புத்துணர்ச்சியூட்டுதலுக்காகவும், பரலோகத்தின் வல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னத்திற்காகவும், எங்கள் மத்தியில் நிற்கிறதற்காகவும் நாங்கள் உமக்கு எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம்! கர்த்தாவே, இந்த மத்தியான வேளையிலே எங்களை போஷித்தருளும்! கர்த்தாவே, உம்முடைய மேஜையிலிருந்து எங்களுக்கு ஆகாரம் வேண்டும். கர்த்தாவே, இப்பொழுதே எங்களை போஷியும். எங்களுடைய ஜீவியங்களில், பரிசுத்த ஆவியினால் எங்களை போஷித்தருளும். பசியுள்ள எங்களுடைய ஆத்துமாக்கள் தாகமாயிருக்கின்றன. பாடலின் வியாக்கியானத்தில் நீர் கூறினதுபோல, “அது வறண்ட நிலத்தில் தண்ணீரைப் பொழியும்”. கர்த்தாவே, அது சம்பவிக்கட்டும். உம்முடைய வார்த்தைகள் உம்முடைய பிள்ளைகளின் இருதயங்களில் வெளிப்படுவதாக, “வறண்ட, வறண்ட நிலத்தில் தண்ணீர் உள்ளது.” நித்திய தேவனே, உம்முடைய ஊழியக்காரனின் ஜெபத்திற்கு செவிகொடுத்து, அந்த ஆசீர்வாதங்களை எங்களுக்குத் தாரும். ஆமென். ஓ, நான் எவ்வளவாய் இயேசுவை நேசிக்கிறேன்,

82211 இப்பொழுது அவரைத் துதித்துக் கொண்டேயிருங்கள். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார் என்பதைக் கண்டறியுங்கள். நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளவில்லையென்றால், அது உங்களுடைய தவறாயுள்ளது. …நான் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன், “இவைகளைப் பார்க்கிலும் நீ அதிகமாய் என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” …இயேசுவை நேசி, ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார். ஓ, நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்…(தேவனுக்கு ஸ்தோத்திரம்!) ஓ, நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்…(அவர் இந்த நிமிடத்தில் வருவாரானால் என்னவாகும்?) ஓ, நான் எவ்வளவாய் இயேசுவை நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார். நான் அவரை ஒருபோதும் கைவிடமாட்டேன், நான் அவரை ஒருபோதும் கைவிடமாட்டேன், நான் அவரை ஒருபோதும் கைவிடமாட்டேன், ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார். அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன் அவர்; ஓ, என்னை இரட்சித்து, எல்லா பாவத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் என்னைக் காத்துக் கொள்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவருடைய ஸ்தோத்திரம்… 212 இப்பொழுது நாம் அதை அவரிடத்தில் பாடுவோமாக! அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன் அவர்; ஓ, என்னை இரட்சித்து, எல்லா பாவத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் என்னைக் காத்துக் கொள்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்!

83213 அதை உணருகிற யாவரும் “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஓ, அல்லேலூயா! இப்பொழுது சில ஜனங்கள் பரிசுத்த ஆவியோடு வருவதை நான் காண்கிறேன். நான் ஒரு காலத்தில் இழக்கப்பட்டேன், இப்பொழுது நான் கண்டெடுக்கப்பட்டேன், ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து விடுதலையாகிறேன், இயேசு விடுதலையையும், ஒரு முழு இரட்சிப்பையும் அளிக்கிறார்; என்னை இரட்சித்து, எல்லா பாவத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் என்னைக் காத்துக்கொள்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், துதி… நாம் இப்பொழுது நம்முடைய கரங்களை உண்மையாகவே உயர்த்துவோமாக… ஓ, அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஒரு ஆலோசனைகர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன் அவர்; ஓ, என்னை இரட்சித்து, எல்லா பாவத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் என்னைக் காத்துக் கொள்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்! 214 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஓ, அற்புதம்! அந்த இரத்தத்தினால் நிறைந்த அந்த ஊற்றுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, அங்கே பாவிகள் எல்லா மனித பயத்தையும், எல்லா ஆக்கினைத்தீர்ப்புகளையும் இழந்து, அவருக்குள் சுயாதீனமாயிருக்கிறார்கள். அல்லேலூயா! ஓ, என்னே, அது உண்மையாகவே அற்புதமானது! 215 இப்பொழுது நாம் அதை மீண்டும் பாடுகையில், நாம் மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, கத்தோலிக்கர், பிரஸ்பிடேரியன் எல்லோரையும் பாடவிடுவோம், நாம் இதைப் பாடும்போது, “அற்புதம், இயேசு எனக்கு இருக்கிறார்” என்று பாடும்போது, நாம் அப்படியே திரும்பி ஒருவரோடு ஒருவர் கரங்களைக் குலுக்குவோமாக, ஒரு நல்ல பழைய கலப்பாயுள்ளது. உங்களுக்குத் தெரியும், நான், அதைத்தான் நான் விரும்புகிறேன். வாருங்கள், இப்பொழுது நாம் அதைச் செய்யும்போது, நாம் அதைப் பாடுவோமாக. ஓ, அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு,

84216 [சகோதரன் டீமாஸ் ஷகாரியன் சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார், “சகோதரன் பிரான்ஹாம், ஜனாதிபதி ஜான்சன் பற்றி எனக்கு இப்போதுதான் தகவல் கிடைத்தது, மாரடைப்பினால் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசெல்லப்பட்டார், ஒரு வேளை நாம் அவருக்காகவும், நம்முடைய தேசத்திற்காகவும் ஜெபிக்க வேண்டும்.” யாரோ ஒருவர், “நாம் ஒரு நிமிடம் பொறுத்திருப்போம்” என்கிறார்.—ஆசி.] அற்புதம், இயேசு, (அது உண்மை.) ஓ, ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, 217 [சகோதரன் ஷகாரியன் மீண்டும் சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார், “என்னை மன்னிக்கவும், என்னை மீண்டும் மன்னிக்கவும், நீங்கள் ஒரு நிமிடம் இறங்க விரும்புகிறீர்களா?” சகோதரன் ஏர்ல் ப்ரிக்கெட் அற்பும் என்ற பாடலைப் பாடுவதில் சபையோரை வழிநடத்துகிறார். ஒலிநாடாவில் காலி இடம். சபையோர் ஒரு ஜீவ நதி உண்டு என்று பாடுகின்றனர். ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] வேதம், “அதிகாரத்திலுள்ளவர்களுக்காக ஜெபியுங்கள்” என்று கூறியுள்ளது.

85218 எங்கள் பரலோகப் பிதாவே, எங்களுடைய தேசத்தின் தலைவரான, எங்களுடைய ஜனாதிபதியின் தேவை மிகுந்த நிலையில் நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம். கர்த்தாவே, அவர் இதை ஒருபோதும் அறியாதிருக்கலாம், ஆனால் நீர் அதை அறிந்திருக்கிறீர். சகோதரன் ஜான்சன் உம்மில் ஒரு விசுவாசி என்று அறிக்கையிடுகிறபடியால், நான் அவருக்காக ஜெபிக்கிறேன். பிதாவே, ஒரு மாரடைப்பு அவரைத் தாக்கியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். தேவனே, இவருடைய ஜீவனைக் காக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் இப்பொழுது ஏற்கெனவே, ஒரு—ஒரு தேசிய நெருக்கடியில் இருக்கிறோம். கர்த்தாவே, உம்முடைய ஆவி அவர் மேல் வரட்டும். இப்பொழுதே, அவர் மருத்துவமனையிலோ அல்லது அவர் எங்கிருந்தாலும், உம்முடைய ஆவியானது அந்த வால்டர் ரீட் மருத்துவமனைக்கு வந்து, அவருடைய சரீரத்தைத் தொட்டு, அவருடைய ஜீவனை காக்கட்டும். கர்த்தாவே, நாங்கள் அறிந்துகொள்வதைக் காட்டிலும் அந்த மனிதன் அதிக அழுத்தத்தின் கீழ் இருக்கிறார். எனவே தேவனே, விசுவாசிகள் என்ற முறையில், இந்த தேசத்தின் ஒரு பாகமாக, நாங்கள் எங்கள் தலைவருக்காக ஜெபிக்கிறோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த மகத்தான வேளையில், நீர் அவருக்கு ஒரு நீட்டிக்கப்பட்ட ஜீவனை அருளும். ஆமென். 